Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

Notifications
Clear all

Badhusha  

  RSS

Kokila Balraj
(@kokila-balraj)
Active Member Contributor
Joined: 1 year ago
Posts: 16
16/12/2019 11:45 am  

தேவையான பொருட்கள்:

மைதா 1: கப்

சர்க்கரை: 1 கப்

வெண்ணை: 1/4 கப்

பேக்கிங் பவுடர்/ஆப்ப சோடா: 1 பின்ச்

கெட்டித் தயிர்: 2 டீ ஸ்பூன்

எசென்ஸ்: 1 துளி

குளிர்ந்த நீர்: மாவு பிசைய தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் பேக்கிங் பவுடர், மைதா, வெண்ணை, தயிர் சேர்த்து பிரட் தூள் பதத்திற்கு கலக்கவும். பின் குளிர்ந்த நீர் தெளித்து மாவை மென்மையான பதத்திற்கு பிசையவும். பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி இரண்டு உள்ளங்கைகளுக்கு நடுவே வைத்து அழுத்தவும். இதை சூடான எண்ணெயில் போட்டு மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக பொரிக்கவும். அதே சமயம் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து மூழ்கும் அளவு நீர் விட்டு 2 கம்பி பதத்திற்கு பாகு காய்ச்சவும். பாகில் சிறிது எசென்ஸ், உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப, சேர்க்கவும். பொரித்த பாதுஷாவை பாகில் தலா 2 நிமிடங்கள் இரு பக்கமும் ஊற வைத்து எடுத்தால் பாதுஷா தயார்.

நன்றி


Quote




Share: