Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

Notifications
Clear all

Banana Ladoo  

  RSS

Kokila Balraj
(@kokila-balraj)
Active Member Contributor
Joined: 10 months ago
Posts: 16
08/02/2020 1:53 pm  

வாழைப்பழ லட்டு

தேவையான பொருட்கள்:

வாழைப்பழம்: 2

நாட்டுச்சர்க்கரை: 1½ டேபிள் ஸ்பூன்

தேங்காய் துருவல்: 2 டேபிள் ஸ்பூன்

அரிசி (any): 1/2 டேபிள் ஸ்பூன்

முந்திரி: 5

நெய்: 1 டீஸ்பூன்

செய்முறை:

வாழைப்பழத்தை இட்லி தட்டில் வைத்து 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.

அரிசியை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து, மிக்ஸியில் பொடித்து, சலித்து எடுத்துக்கொள்ளவும் (1 டேபிள் ஸ்பூன்).

வாணலியில் நெய் விட்டு முந்திரியை வறுக்கவும்.

அதே வாணலியில் தேங்காய் துருவல் சேர்த்து லேசாக வறுத்தெடுக்கவும்.

வேக வைத்த வாழைப்பழத்துடன், நாட்டுச்சர்க்கரை, பொடித்த அரிசி, தேங்காய் துருவல், முந்திரி சேர்த்து பிசைந்து உருண்டையாக பிடித்து தேங்காய் துருவலில் பிரட்டி எடுக்கவும்.

வாழைப்பழ லட்டு தயார்.


Quote




Share: