Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

Notifications
Clear all

Carrot Cashew Kheer  

  RSS

Kokila Balraj
(@kokila-balraj)
Active Member Contributor
Joined: 1 year ago
Posts: 16
16/12/2019 11:48 am  

தேவையான பொருட்கள்:

கேரட்: 1 கப்

காய்ச்சிய பால்: 1/2 கப்

சர்க்கரை: 1-1(1/4) கப்

வெண்ணிலா எசென்ஸ்: 1 துளி

முந்திரி: 10

தேங்காய்: 3 டேபிள் ஸ்பூன்

பாதாம்: 10

உலர்ந்த திராட்சை: 10

நெய்: 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

கேரட், முந்திரி (5) இரண்டையும் குக்கரில் போட்டு அவை மூழ்கும் அளவு நீர் விட்டு 15 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும். ஆறிய பின் மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் 1 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு முந்திரி, தேங்காய், பாதாம், உலர்ந்த திராட்சை போட்டு வறுத்த பின் அதில் காய்ச்சிய பாலை விட்டு கொதித்ததும், சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை கரைந்ததும் அரைத்த விழுதை சேர்த்து ஒன்றாக சேர்ந்து வரும் வரை கொதிக்க விட்டு எசென்ஸ் சேர்த்து இறக்கினால் கேரட் கேஷ்யூ கீர் தயார்.

நன்றி


Quote




Share: