முந்திரி பர்பி
தேவையான பொருட்கள்:
முந்திரி: 1 கப்
நெய்: 1½ டீஸ்பூன்
சர்க்கரை: 1 கப்
தண்ணீர்: ¾ கப்
ஏலக்காய்/எசென்ஸ்: 2/1 துளி
செய்முறை:
முந்திரி பருப்பை மிக்ஸியில் நைசாக பொடிக்கவும். கடாயில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு, சர்க்கரை கரைந்ததும் ஏலக்காய் /எசென்ஸ் சேர்க்கவும். அரைத்த முந்திரியை சிறிது, சிறிதாக சேர்த்து கை விடாமல் 7-8 நிமிடங்கள் குறைந்த தீயில் வைத்துக் கிளறவும். கலவை சுருண்டு வரும் போது சிறிது நெய் விட்டு கிளறி இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறிய பின் வேண்டிய வடிவத்தில் வெட்டி எடுத்தால் சுவையான முந்திரி பர்பி தயார்.