Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

Notifications
Clear all

Melting Mysore Paak  

  RSS

Kokila Balraj
(@kokila-balraj)
Active Member Contributor
Joined: 8 months ago
Posts: 16
16/12/2019 11:43 am  

தேவையான பொருட்கள்:

கடலை மாவு: 1 கப்

சர்க்கரை: 1 கப்

உருக்கிய நெய்: 1(1/2) கப்

தண்ணீர்: 1/4 கப்

செய்முறை:

நான்ஸ்டிக் கடாயில் கடலை மாவை லேசாக வாசனை வரும் வரை மிதமான தீயில் வறுக்கவும். வறுத்த மாவை ஆற வைத்து கட்டி இல்லாமல் சலித்து எடுக்கவும். அதே கடாயில் சர்க்கரை சேர்த்து தண்ணீர் விட்டு பாகு ஒரு கம்பி பதம் வரும் வரை வைக்கவும். ஒரு பாத்திரத்தில் 1 கப் நெய் விட்டு கொஞ்சம் கொஞ்சமாக கடலை மாவை சேர்த்து கட்டி இல்லாமல் கரைக்கவும். கரைத்த மாவை சர்க்கரை பாகில் சேர்த்து கை விடாமல் கலக்கவும். சேர்ந்து வரும் போது இடைவெளி விட்டு மீதமிருக்கும் 1/2 கப் நெய்யை சிறிது சிறிதாக சேர்க்கவும். சேர்த்த நெய் முழுதும் உள்வாங்கி குமிழ் விடும் போது அடுப்பை அணைக்கவும். இந்தக் கலவையை நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறிய பின் வேண்டிய வடிவத்தில் வெட்டி எடுத்தால் சுவையான மெல்ட்டிங் மைசூர் பாக் தயார்.

நன்றி


Quote




Share: