Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

ஸகியின்"என்னை தீண்ட...
 
Notifications
Clear all

ஸகியின்"என்னை தீண்டாதே என் ஜீவனே🔥" கதை திரி  

  RSS

Jade Javid
(@jadejavid)
Trusted Member Writer
Joined: 7 months ago
Posts: 68
11/09/2020 4:59 am  

 

     Hii Friends👋👋  ❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤ என்னோட முதல் கதைக்கு Support பன்ன என்னோட எல்லா Readers friendsku ரொம்ப ரொம்ப  நன்றி.. இதோ நம்ம அடுத்த கதை இதுக்கும் உங்க Encourage and support எனக்கு ரொம்ப முக்கியம்.. உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி பாகம்-2 கதையுடைய பெயர் என்னை தீண்டாதே என் ஜீவனே🔥            

 

கதையின் கதாபாத்திரங்கள்👇

நம்ம ஓல்ட் ஹீரோ ஹீரோயின்ஸ்ஸூம் இருக்காங்க (ஆர்யன் ஆருத்ரா தவிர) ..அவங்களோட வாரிசுங்க தான் இந்த கதையோட ஹீரோ ஹீரோயின்ஸ் Friends😁

ஆர்யன் & ஆருத்ராவோட முதல் பொண்ணு தான் நம்ம கதையோட ஹீரோயின். இன்னொரு பொண்ணும் இருக்கு அவங்க தான் கதையோட செகன்ட் ஹீரோயின் பட் நா பெயர் சொல்ல போறதில்லை காய்ஸ் அது சஸ்பென்ஸ்..😉      
                                            
ஆதி & கயல்             -     அரவிந்த்
                                          அனாமிகா

ஹரி & ரியா              -     வேலு நாச்சியார் (நம்ம ஹரி அவன் பாட்டி நியாபகத்துல அவன் பாட்டி பேரையே வச்சிட்டான் பயபுள்ள😄)

அபி & ஆதிரா          -     தேவ்தாஸ் (நம்ம அபிக்கு தேவ்தாஸ் கெரக்டர்னா ரொம்ப புடிக்கும் காய்ஸ்😄😄)

நம்ம சித்து & துர்கா கதைல இருக்காங்க ஆனா அவங்க ரொம்ப பாவம் அவங்களுக்கு குழந்தை இல்லை.. பட் ஆர்யா ஆருத்ராவோட இரண்டாவது பொண்ணு  தான் அவங்க செல்ல குழந்தை..
   
நம்ம கதையோட மெய்ன் ஹீரோயின் ரொம்ப டெர்ரர் ஆன பொண்ணு ..நம்ம ஹீரோ பத்தி நா சொல்ல போறது இல்லை..ஹீரோ பேரு and நம்ம ஹீரோ பத்தி கதைல பாருங்க😉 பட் நம்ம ஆர்யா பையா மாதிரி சமத்து பையன் இல்லை காய்ஸ் இவன் ஹீரோயின விட ரொம்ப ரொம்ப டேன்ஜர்😜..
##################

முன்னோட்டம்

         "சென்னையின் CBI ஹெட் ஓஃபீஸர் மிஸ்டர் ஆர்யன் சக்கரவர்த்தியும் அவர் மனைவியும் XXXX என்ற இடத்தில் கொலை  செய்யப்பட்ட சம்பவம் மக்களிடத்தில் பரபரப்பாக இருக்க இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாரென்று தெரியாது சென்னை நகரமே பரபரப்பாக உள்ளது.."

           என்று பத்திரிகையில் முக்கிய செய்தியாக குறிப்பிடப்பட்டிருக்க அந்த பதினைந்து வருடங்களுக்கு முன் வந்த பத்திரிகையை தன் கையில் உள்ள பேனாவால் ஆக்ரோஷமாக குத்திக் கிழித்துக் கொண்டிருந்தாள் அவள்..

பார்ப்பதற்கே ருத்ரதேவியாக இருந்தவளின் செய்கையை நிறுத்தும் வண்ணம் தொலைபேசி அழைப்பு வர அதை ஏற்று காதில் வைத்தவள் மறுமுனையில் கேட்ட கேள்விக்கு,
           "நாளைக்கே இந்தியாலே இருப்பேன்.." என்று மட்டும்  இறுகிய குரலில் சொல்லி அழைப்பை துண்டித்தவள்,
தன் எதிரே இருந்த சுவற்றிலுள்ள புகைப்படத்தை பார்த்து கோபம் ஏகத்துக்கும் எகிற கோபத்தை கட்டுப்படுத்த வழி தெரியாது தன் தலைமுடியை தானே "ஆஆ" என அந்த அறையே அதிரும் வண்ணம் கத்தி பிய்த்துக் கொண்டாள் நம் நாயகி..
----------------------------------------------------------------------

        "ஏன் டி என்னை விட்டு போன.. இப்போ எங்க இருக்க டி.. என்னால முடியல டி நீ இல்லாம.." என தன் தொலைபேசியிலிருந்த புகைப்படத்தை கண்கள் கலங்க பார்த்தவாறு மது அருந்திய வண்ணம் போதையில் புலம்பிக் கொண்டிருந்தான் நம் நாயகன்..

அவனுக்கு அவன் கையில் வைத்திருந்த மது  தந்த போதையை விட அவனவளே அவனுக்கு தேவையாக இருந்தாள். ஏதேதோ பிதற்றிக் கொண்டிருந்தவன் பின் முகத்தை தீவிரமாக்கி,
          "என்னை விட்டு போயிட்டல்ல டி.. நீ எந்த மூலைல இருந்தாலும் உன்னை தேடி வருவேன் டி.. நீ எனக்கு சொந்தமானவ..  உன்ன அவ்வளவு சீக்கிரம் விட்டுக் கொடுத்துற மட்டேன்..எனக்கு நீ வேணும்.. " என ஆக்ரோஷமாக கத்தியவன் எண்ணிற்கு அவன் நண்பனிடமிருந்து குறுந்தகவல் வர அதை பார்த்தவன் இதழ்கள் விரிய கண்கள் மின்னியது..

       "உனக்காக வரேன் டி பேபி.." என மனதில் நினைத்துக் கொண்டான் அந்த காதல் கள்வன்.
------------------------------------------------------------------------

       தன் எதிரே உள்ளவன் வைத்த புகைப்படத்தில் உள்ளவளை யாரென்று தெரியாது குழப்பமாக பார்த்துக் கொண்டிருந்தார் ராஜ் தீப்.. 

தனக்கு வந்த வெளிநாட்டு எண் அழைப்பை  ஏற்றவர் மறுமுனையில் யாரென்று தெரிய,
            "வூ இஷ் ஷீ (Who is she..) " என கேட்க,

மறுமுனையில் இருந்தவனோ,
           "அவ பேரு *****.. அவ பத்தின டீடெய்ல்ஸ் என் ஆளு உன் கிட்ட கொடுப்பான்.. " என அவன் சொன்ன மறுநொடி எதிரில் இருந்தவன் ஒரு ஃபைலை அவர் முன்னாடி வைத்தான்.

        "எனக்கு அவ வேணும்.. நாங்க ட்ரை பன்னோம் பட் அவன் குறுக்க வந்ததால எதுவுமே பன்ன முடியல.. இரண்டு மாசம் தான் டைம்.. அதுக்குள்ள வேலைய முடிச்சிட்டு எனக்கு கோல் பன்னு.." என மறுமுனையில் கூறியவன் அடுத்த நொடி அழைப்பை துண்டித்திருந்தான்.
     
############

          Friends இந்த கதைய உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி பாகம் 01 மாதிரி இல்லாம வித்தியாசமா எழுத ட்ரை பன்னிருக்கேன் கிட்டதட்ட
🔥VILLAIN KID VS HERO KID🔥 மாதிரி கதை இருக்கும்.. இன்னும் புது கதாபாத்திரங்களும் திருப்பங்களும் கதைல இருக்கு.. 2020-09-14 monday 1st ud post pannuwean guys.. ஆரம்பத்துல monday, wednesday and friday ud போடுறேன் அதுக்கம்றம் Daily Post பன்ன ட்ரை பன்றேன்.. இந்த கதைக்கும் உங்க ஆதரவை ஊக்குவிப்பை கொடுங்க நண்பர்களே..😍😍

eppawume pola marakama unga comments a solluga.. unga commentskaga wait pannikite iruppean friends so enaya eamathirathiga..😁😁 மீ பாவம்..

Keep motivating me Guys🔥

- ZAKI🔥                 

 

                     

 

Zakiya


Jade Javid
(@jadejavid)
Trusted Member Writer
Joined: 7 months ago
Posts: 68
14/09/2020 5:39 am  

   
        Hii guys.. Storyoda 1st ud post pannitean.. new readers direct a indha storyki wandhiganna idhoda 1st part ❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤ Story a read pannitu indha story read panniganna characters patthi innum therijikalam.. ok namma storykulla pogalam friends👇
----------------------------------------------------------------------

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி பாகம் 2❤ என்னை தீண்டாதே என் ஜீவனே🔥

                    தீண்டாதே 01🔥

ஆர்யன் ஆருத்ரா திருமணம் நடைப்பெற்று இருபத்தைந்து வருடங்களுக்கு பிறகு,

அமெரிக்காவில்,
     நிவ்யோர்க் சிட்டி,

                ஊரெங்கும் வெள்ளை பனியால் மூடியிருக்க குளிருக்கு இதமாக ஜெக்கெட் அணிந்து அந்த இயந்திர தொழிநுட்ப உலகத்தில் மக்கள் பம்பரம் போல் ஓடிக்கொண்டிருந்தனர். ஆனால், அந்த இருட்டு அறையிலோ சுவற்றில் ஒரு  சிவப்பு நிற ட்யூப்லைட் மட்டுமே ஒளிர்ந்துக் கொண்டிருந்தது.

  "சென்னையின் CBI ஹெட் ஓஃபீஸர் மிஸ்டர் ஆர்யன் சக்கரவர்த்தியும் அவர் மனைவியும் XXXX என்ற இடத்தில் கொலை  செய்யப்பட்ட சம்பவம் மக்களிடத்தில் பரபரப்பாக இருக்க இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாரென்று தெரியாது சென்னை நகரமே பரபரப்பாக உள்ளது.."

           என்று பத்திரிகையில் முக்கிய செய்தியாக குறிப்பிடப்பட்டிருக்க அந்த பதினைந்து வருடங்களுக்கு முன் வந்த பத்திரிகையை தன் கையில் உள்ள பேனாவால் ஆக்ரோஷமாக குத்திக் கிழித்துக் கொண்டிருந்தாள் அவள்..

கண்கள் சிவந்து இரத்தக்களறியாக இருக்க, கோபத்தில் முகம் சிவந்து கலைந்த தலைமுடி என்று பார்ப்பதற்கே ருத்ரதேவியாக இருந்தவளின் செய்கையை நிறுத்தும் வண்ணம் தொலைபேசி அழைப்பு வர அதை ஏற்று காதில் வைத்தவள் மறுமுனையில் கேட்ட கேள்விக்கு,
           "நாளைக்கே இந்தியாலே இருப்பேன்.." என்று மட்டும்  இறுகிய குரலில் சொல்லி அழைப்பை துண்டித்திருந்தாள்.

     அந்த சிறிய வெளிச்சத்தில் தன் எதிரே இருந்த சுவற்றிலுள்ள புகைப்படத்தை பார்த்தவளுக்கு கோபம் ஏகத்துக்கும் எகிற கோபத்தை கட்டுப்படுத்த வழி தெரியாது தன் தலைமுடியை தானே "ஆஆ.." என அந்த அறையே அதிரும் வண்ணம் கத்தி பிய்த்துக் கொண்டாள் நம் நாயகி.. 
----------------------------------------------------------------

இந்தியா,
    சென்னை நகரம்,

          இருபத்தைந்து வருடங்களுக்கு முன் ஐந்து தோழிகளும் ஆடவர்களின் உதவியோடு கட்டிய ஆசிரமம் இப்போது பல இடங்களில் பல கிளைகளாக விருத்தி செய்யப்பட்டு சிறுவர்களுக்கு மட்டுமன்றி பிறந்தவுடன் குப்பையில் வீசப்படும் கைக்குழந்தை தொடக்கம் தான் பெற்ற பிள்ளைகளாலே வீட்டிலிருந்து துரத்தி விடப்படும் முதியோர்கள் வரை ஆதரவளிக்கும் சுவர்க்கமாக உள்ளது.

         தொழிநுட்பம் வளர வளர ஆசிரமத்திலுள்ள வசதிகளும் மேலும் விருத்தி செய்யப்பட்டிருக்க தங்களுக்கான ஆசிரம நிர்வாக அறையில் தங்கள் முன் சுவற்றில் இருந்த ஆர்யன், ஆருத்ரா, தியாவுடைய ஆளுயர படங்களையே கண்கள் கலங்க பார்த்துக் கொண்டிருந்தனர் கயல், துர்கா, ஆதிரா. அப்போது சரியாக யோசனையூடே உள்ளே வந்தனர் அபி, சித்து, ஆதி (வயசானாலும் நம்ம ஹீரோ ஹீரோயின்ஸ்ஸோட அழகும், ஸ்டைலும் அவங்கள விட்டு போகவே இல்லை நம்ம சூப்பர் ஸ்டார் மாதிரி)

           "நாளைக்கு காலைல இங்க இருப்பாளாம்.. இனிமே இங்க தான்.." என சித்து சொல்ல திடுக்கிட்டு திரும்பினர் மூன்று பேரும்.

           "யாரைக் கேட்டு அவள இங்க நீங்க வர சொன்னிங்க.." என்று துர்கா பதட்டத்தில் கத்த,

            "என்ன பேசுறீங்க.. இன்னும் எவ்வளவு நாள் தான் அவ அங்கேயே இருப்பா.. அவ ஸ்டடீஸ் முடிஞ்சே ஆறு மாசத்துக்கு மேல ஆகுது.. ஆரம்பத்துல இங்க வர சொல்லி சொன்னப்போ கூட வர முடியாதுன்னு தான் சொன்னா.. இப்போ அவளா தான் இங்க வரனும்னு ஆசைப்படுறா.. அதான் எங்ககிட்டயும் கேட்டா நாங்களும் சரின்னு சொல்லிட்டோம்.." என அபி கூறியதில்,

மூன்று பேரையும் கூர்மையாக பார்த்த கயல்,
          "உங்க கிட்ட பர்மிஷன் கேட்டாளா.. இல்ல..அதான் முடிவா சொன்னாளா.." என கயல் அவளை நான் அறிவேன் என்ற ரீதியில் கேட்டு வைக்க,

          "அவளோட முடிவா தான் சொன்னா.." என ஒருவர் முகத்தை ஒருவர் தயக்கமாக பார்த்தவாறே கோரஸாக கூறினர் ஆடவர்கள் மூவரும்..

           "அவ இங்க வர்றது எனக்கு சரியா படல.."   என துர்கா கலங்கிய முகமாக யோசனையாக சொல்ல,

           "அவ நம்ம பொண்ணு துகி... நாம வளர்த்த பொண்ணு" என சித்து பேசியதை குறிக்கிட்ட துர்கா,
          "அவ ஆருத்ராவோட இரத்தம் அத மறந்துட்டிங்களா.." என சத்தமாக அதே சமயம் அழுத்தமாக கேட்டாள்.

            "ஆர்யன் ஆருத்ரா சாகும் போது அவங்க பக்கத்துல இருந்திருக்கா.. நடந்ததை கண்ணால பார்த்திருக்கா.. அந்த சின்ன வயசுலயே அவ பன்ன காரியத்தை மறந்துட்டிங்களா.. அதை இப்போ நினைச்சாலும் எனக்கு பதறுது.. அவள சமாதானப்படுத்தி கௌத்தம் கூட நிவ்யோர்க் அனுப்புறதுக்குள்ள நாங்க பட்ட பாடு எங்களுக்கு தான் தெரியும்.." என ஆதிரா அன்று நடந்ததை நினைத்து மனவேதனையுடன் சொல்ல,

            "அதுக்கப்றம் எங்க கூட பேசுறதையே நிறுத்திட்டா.. இப்பவும் அவளாவே இங்க வரனும்னு முடிவு பன்னிருக்கான்னா அதுக்கு பின்னாடி ஏதோ ஒன்னு இருக்கு.. அவ காரணம் இல்லாம எதுவும் பன்ன மாட்டா.."என கயல் தீவிரமாக சொன்னாள்.

            "அதான் நாங்க கூட இருப்போமே.. நாங்க என்ன அவ என்ன பன்றா ஏது பன்றான்னு பாத்துக்காமலா இருக்க போறோம்.. அவ அதிகமா தேவ் கூட தான் பேசுவா அவன் கிட்ட சொன்னா அவனே பாத்துப்பான்.. அவ என்ன பன்ன நினைச்சாலும் எங்கள மீறி தான் பன்னியாகனும்.." என ஆதி சொன்னதில் ஏளனமாக சிரித்தனர் மூன்று பெண்களும்..

          "அவள கன்ட்ரோல் பன்ன முடியும்னு நினைக்கிறீங்களா.." என்று கயல், ஆதிரா, துர்கா ஒருசேர கேட்க, அது ஆடவர்கள் மூவருக்குமே சந்தேகம் தான்.

         "சரி விடுங்க.. டாக்டர் கிட்ட விசாரிச்சிங்களா.. கௌத்தம் என்ன சொன்னான்.. இன்னும் கௌன்ஸ்லிங்(Counseling) போக தானே செய்றா.." என மற்றவர்களுடன் வெளியில் நடந்தவாறே துர்கா கேட்க,

        "அது வந்து.. கேட்டா போறேன்னு தான் சொல்றா.. பட் அவ கௌன்ஸ்லிங் வந்தே இரண்டு வருஷத்துக்கு மேல ஆகுதுன்னு டாக்டர் சொன்னாரு.. என்ட், முதல்ல கௌத்தம் கூட இருக்கப்போ அவன் பாத்துகிட்டான் அதுக்கப்றம் தனியா தான் இருப்பேன்னு அடம் பிடிச்சா.. சரின்னு தனியா ஃப்ளேட்(Flat) வாங்கி கொடுத்ததுக்கு அப்றம் அவ என்ன பன்றா ஏது பன்றான்னு கௌத்தமால கூட தெரிஞ்சிக்க முடியல.. " என தயக்கமாக சித்து சொல்ல,

           "ஒரு நாள் அவ ஃப்ளேட்கே போய் கௌத்தம் கம்பிள் பன்னி கௌன்ஸ்லிங் அனுப்பி வைச்சு  என்ன பன்றான்னு பின்னாடி ஃபோலோ பன்னி போய் பார்த்தா ஒரு பார்க்ல போய் உட்கார்ந்துகிட்டு ரொம்ப நேரமா ஒரு இடத்தையே வெறிச்சு பார்த்துகிட்டு இருக்குறதா சொன்னான்.." என ஆதி சொல்ல, விழி விரித்து நின்றனர் மூன்று பெண்களும்.

           "இப்போ எதுக்கு டென்ஷன் ஆகுறீங்க.. முதல்ல அவ இங்க வரட்டும் அதுக்கப்றம் அவ கிட்ட பேசி பார்க்கலாம்.." என அபி சொல்ல கலக்கம் நிறைந்த முகத்துடன் யோசனையினூடே தலையாட்டியவர்கள் ஒரு பெருமூச்ச விட்டவாறு ஆடவர்களுடன் காரில் ஏறி வீட்டை நோக்கி புறப்பட்டனர்.
-------------------------------------------------------------------

அடுத்த நாள் காலை,
   சென்னை விமான நிலையத்தில்,

            விமான நிலையத்தில் மக்கள் அறிவிப்புக்கேற்ப ஆனந்த கண்ணீரிலும் சோகக் கண்ணீரிலும் மூழ்கி போவதும் வருவதுமாக பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க சித்து, துர்கா, கயல், ஆதி அங்கும் இங்கும் கண்களை சுழலவிட்டவாறு தாம் எதிர்ப்பார்த்தவளுக்காக காத்துக் கொண்டிருந்தனர்.

  சரியாக தூரத்தில் வருபவளை ஆதி பார்த்துவிட உதடு முழுக்க புன்னகையுடன் "மித்ரா.." என்று சொன்னதும் தான் தாமதம் சட்டென்று ஆதியின் புறம் திரும்பிய மற்ற மூவரும் ஆதியின் பார்வை செல்லும் திசையை நோக்கி தங்கள் பார்வையை திருப்பினர்.

ஆகாய நீல நிறத்தில் முட்டு வரையேயான ஸ்லீவ்லெஸ் ஃப்ரொக் அணிந்து தன் நீண்ட கருங்குழலை முன்னாடி ஒருபுறம் விரித்து போட்டு, ஐந்தடி மொடர்ன் மங்கை ஹீல்ஸ் அணிந்து சற்று உயரமாக நிமிர்வாக வர உதட்டில் ஒரு சிறு புன்னகை கூட இல்லை. ட்ரோலியை இடது கையால் தள்ளியவாறு வலது கையால் தான் அணிந்திருந்த கூலிங் க்ளாசை கழட்டியவாறு அவர்களை நோக்கி வர அவளை பார்த்த கயல், துர்காவுக்கு கண்களில் கண்ணீரே வந்து விட்டது.

ஆருத்ராவின் மறு சாயலாக பிறந்திருந்தவள் ஆருத்ராவுடைய நிமிர்வான நடை, அழுத்தமான எதிரில் நிற்பவர்களை எடை போடும் கழுகுக் கண்கள், சிரிப்பே இல்லாத அழுத்தமான உதடுகள், இறுகிய முகம் என்றிருக்க அவள் ஆருத்ராவின் மகள் தான் என்பதற்கு DNA டெஸ்ட்டே தேவையில்லை என்பதை போல் இருந்தாள் நம் நாயகி மித்ரா.

            "வெல்கம் ஹோம் மித்ரா மா.." என்று அருகில் வந்தவளை பார்த்து சித்து கூறி வாஞ்சையுடன் அவள் தலையை தடவ எந்தவித உணர்ச்சிகளையும் முகத்தில் பிரதிபலிக்காது சிறு தலையசைப்பை மட்டுமே பதிலாக கொடுத்தாள் மித்ரா.

          "பார்க்க அப்பிடியே உன் அம்மா ருத்ரா போலயே இருக்க மா.." என உணர்ச்சிவசப்பட்டு கூறிய கயலுக்கு அப்போது தான் நினைவில் வந்து தன் நாக்கை கடித்தவாறு ஆதியை ஓரக்கண்ணால் பார்க்க அவனோ அவளை மூக்கு விடைக்க முறைத்துக் கொண்டிருந்தான்.

இங்கு மித்ராவின் முகமோ இறுகிப் போயிருக்க அதை மாற்ற எண்ணிய துர்காவோ,
               "சரி சரி விடுங்க.. இப்படியே பேசிக்கிட்டு நின்னுகிட்டு இருந்தா சரியா.. வாங்க வீட்டுக்கு போகலாம்.. எல்லாரும் உனக்காக தான் வெயிட்டிங் மா.." என்று சொல்ல அவளும் எதுவும் பேசாது முன்னே நடக்க கயல், ஆதி, துர்கா, சித்து தான் "ஸப்பாஹ்ஹ்.." என பெருமூச்சுவிட்டவாறு அவள் பின்னாளே நடந்தனர்.

கார் வீட்டை நோக்கி புறப்பட போகும் வழியெல்லாம் கார் கண்ணாடி வழியாக வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தாள் மித்ரா.திடீரென,
              "காரை ஆசிரமத்திற்கு விடுங்க.." என்று சொல்ல,

ஒரு நிமிடம் வண்டியை சடன் ப்ரேக் போட்டு நிறுத்திய ஆதி திரும்பி,
              "இப்போ தானே மா வந்திருக்க.. முதல்ல வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடு.. நாளைக்கு.." என்று சொல்ல வர,

     அதை குறிக்கிட்டவள், "எனக்கு இப்போயே போயாகனும்.." என்று ஆதியின் பேச்சுக்கு இது தான் என் முடிவு என்பது போல் முற்றுப்புள்ளி வைக்க, அவனோ திரும்பி கயலையும் துர்காவையும் பார்க்க அவர்களும் வேறு வழியில்லாமல் கண்ணாலே ஆதியிடம் போகுமாறு சைகை செய்ய  இருபக்கமும் சலிப்பாக தலையாட்டியவாறு சரி என ஆசிரமத்தை நோக்கி வண்டியை செலுத்தினான் ஆதி.

         வாசலில் நின்ற வாட்ச்மேன் இவர்களின் காரை பார்த்ததும் கேட்டை திறந்துவிட காரை உள்ளே சென்று நிறுத்தியவுடன் வண்டியிலிருந்து இறங்கியவள் அங்கிருந்த ஒரு பெரிய மரத்தின் அடியிலுள்ள பென்ச்சில் போய் உட்கார்ந்து கொண்டாள். பதினான்கு வருடங்களுக்கு பிறகு அவள் இந்தியாவில் தன் முதல் அடியை வைத்த கணமே உலை களமாக கொதிக்க ஆரம்பித்த மனது ஆசிரமத்தில் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டு முகம் முழுக்க சிரிப்புடன் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை  கண்டதும் சற்று சாந்தமானது போல் இருந்தது.

         "மமா ஏன் இந்த குழந்தைங்க இங்க இருக்காங்க.. நா உங்க கூட தானே இருக்கேன்.. அவங்க ஏன் அவங்க மமா கூட இல்லை.." என ஆசிரமத்தில் இருந்த குழந்தைகளை பார்த்துக் கொண்டே  ஆருத்ராவுடன் நடந்தவாறு புரியாது எட்டு வயது மித்ரா கேட்க,

         "அது வந்து பொம்மு குட்டி.. அவங்களுக்கு அம்மா அப்பா எல்லாமே நாங்க தான்.. கடவுள் அவங்கள நாம தான் பொறுப்பா எல்லாமா இருந்து பாத்துக்கனும்னு சொல்லிருக்காரு.. சோ நீயும் அவங்க மேல ரொம்ப பாசமா இருக்கனும்.. மமா இல்லைன்னாலும் நீ என் இடத்துல இருந்து அவங்கள பாத்துக்கனும் புரியுதா.." என தன் மகளின் உயரத்திற்கு முட்டி போட்டு அமர்ந்து அவள் தலையை வருடியவாறு ஆருத்ரா சொல்ல,

           "ப்ரோமிஸ் மா.. நா பத்திரமா பார்த்துப்பேன்.." என குட்டி இதழ்களை விரித்து சிரிப்புடன் கூறியவள் தன் அம்மாவுக்கு பின்னால் எட்டி பார்த்து
"ஆரா.." என கத்தியவாறு குதூகலமாக ஆருத்ராவை தாண்டி ஓட,

ஆருத்ராவுக்கு பின்னால் தன் பேன்ட் பாக்கெட்டில் கையை விட்டவாறு இவ்வளவு நேரம் அமைதியாக மெல்லிய சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த ஆர்யன் தன் மகள் தன்னை நோக்கி தூள்ளி குதித்து வருவதை கண்டு "என் பொம்மு குட்டி..." என உற்சாகமாக கத்தியவாறு அவளை தூக்கி ஒரு சுற்று சுற்றினான்.

இதை ஆருத்ராவோ இடுப்பில் கை வைத்து இருபக்கமும் தலையாட்டியவாறு சிரித்துக் கொண்டு பார்க்க தன் அப்பா தன்னை சுற்றுவதில் உற்சாகமாகிய ஆர்யன் ஆருத்ராவுடைய பொம்மு குட்டி வாய்விட்டு சிரித்தவாறு இருந்தாள்..

அன்று தன் தாய் தந்தையுடனான இங்கிருந்த சந்தோஷமான நினைவுகள் மித்ராவை வாட்ட அந்த நினைவுகளை நினைத்து பார்த்தவளுக்கு அப்போது வாய்விட்டு சிரித்த சிரிப்பில் இப்போதும் இதழோரம் மெல்லிய புன்னகை தோன்றாமலில்லை.. அடுத்த நொடியே மனம் வேதனையில் கசிய அந்த நினைவுகளும் பழைய ரணங்களை மேலும் மேலும் கிளறி விட கண்களை இறுக்க மூடி தன் கலக்கமான முகத்தை வெளியில் காட்ட விரும்பாது தலையை குனிந்து கொண்டிருந்தாள் அவள்.

   மித்ரா கண்களை இறுக மூடிக் கொண்டு தலையை குனிந்தவாறு அமர்ந்திருக்க
       'மித்ராவை இங்கிருந்து அனுப்பி தப்பு செய்து விட்டோமோ..' என அவளை பார்த்தவாறு நின்றுக் கொண்டிருந்த கயல், ஆதி, சித்து, துர்காவுக்கு தான் மனதில் ஏதோ  பாரம் ஏறியது போன்று இருந்தது.

தொடரும்..🔥
--------------------------------------------------------------------

          ennoda 2nd noveloda 1st ud post pannitean.. wait pannikite iruppean innaiki ud epidinnu marakama unga comments a solliruga friends..
              thanks for ur support and love😍
                 keep supporting me guys🔥

-ZAKI🔥

 

Zakiya


ReplyQuote
Jade Javid
(@jadejavid)
Trusted Member Writer
Joined: 7 months ago
Posts: 68
16/09/2020 6:19 am  

                      தீண்டாதே 02🔥

            கண்களை இறுக மூடிக் கொண்டு தலை குனிந்தவாறு அமர்ந்திருந்த மித்ரா தோளில் தொடுகையை உணர்ந்து தன்னை  சமன்படுத்தியவாறு நிமிர்ந்து பார்க்க, அவளை தொட்டு சுயநினைவுக்கு கொண்டு வந்த கயல்,
              "போலாமா டா.. உன் ஃப்ரென்ட்ஸ் உனக்காக வெயிட் பன்றாங்க.. இப்பவே ஏகப்பட்ட கோல்ஸ்.." என சொல்ல சரியென தலையாட்டி விட்டு எழுந்தவள் காரில் அமர வண்டி வீட்டை நோக்கி புறப்பட்டது.

பெரிய கேட்டை தாண்டி கார் உள்ளே செல்ல நேர்த்தியாக பராமரிக்கப்பட்ட பூக்கள் நிறைந்த தோட்டத்திற்கு நடுவே ஒரு மாளிகை போன்று இருந்த  வீடு மித்ராவிற்கு அவள் தாய் தந்தையுடனான நினைவுகளை கிளறிவிட அவள் கண்கள் கூட லேசாக கலங்கியது. இறுகிய முகத்தோடு பெருமூச்சுவிட்டவாறு கண்ணீரை உள்ளிழுத்து அடக்கியவள் காரிலிருந்து இறங்க வெளியெ ஆரத்தி தட்டுடன் நின்றுக் கொண்டிருந்தாள் ஆதிரா.

தன் நண்பியின் மகளை பல வருடங்களுக்கு பிறகு கண்ட ஆனந்தத்தில் கண்கள் கலங்க அவளுக்கு ஆரத்தி எடுத்து நெற்றியில் முத்தமிட மித்ராவுக்கோ எல்லாருடைய பாசமும் மனதுக்கு நெகிழ்ச்சியாக இருந்தாலும் அவர்கள் மேலும் ஆத்திரம் மலையளவு இருந்ததால் பாசத்தை வெளிக்காட்டாது இறுகிய முகத்தோடே இருந்தாள் அந்த மங்கை.

அபியோ அவள் அருகில் வந்து அவள் கன்னத்தை தட்டி,
             "எப்போவும் சந்தோஷமா இரு மித்ரா ரா.. எல்லாத்தையும் மறந்துட்டு.." என அழுத்தி சொல்ல அவளோ முகத்தில் எந்த உணர்வையும் காட்டாவிடினும் உள்ளுக்குள்ளே விரக்தியாக சிரித்து கொண்டாள்.

வீட்டிற்குள் எல்லாரும் வர மொத்த வீடும் விளக்குகள் அணைக்கப்பட்டு இருட்டாக இருந்ததில் வாசலிலே நின்றவாறு குழம்பிப் போய் பார்த்துக் கொண்டிருந்த மித்ரா ஒரு அடி வீட்டினுள்ளே வைக்க திடீரென பல வண்ண விளக்குகள் ஒளிரப்பட்டு "WELCOME HOME MITHRA" என்ற எழுத்துக்களோடு அலங்கரிக்கப்பட்டிருந்த வீட்டை பார்த்தவளின் விழிகளோ ஆச்சரியத்தில் விரிந்து கொண்டது.

"வெல்கம் டார்லிங்.." என கத்தியவாறு ஓடிக் கொண்டு வந்த தேவ்(ஆதிரா அபியின் மகன்) அவளை அணைத்து கொள்ள, பின்னால் அரவிந்த் (ஆதி கயலின் மகன்) அவளை ஆர்வமாக பார்க்க, வேலுநாச்சியார் (ஹரி ரியாவின் மகள்)  "மிஸ் யு டி" என கூறியவாறு அவளை மறுபுறம் அணைத்து கொண்டாள். நேரில் பார்த்த நியாபகம் இல்லாவிடினும் தொலைபேசியில் பேசியிருந்ததாலும் வீட்டில் மித்ராவை பற்றி பேசுவதாலும் எப்போது அவளை பார்ப்போம் என ஆர்வத்தில் இருந்தவள் அவளை நேரில் பார்த்ததில் சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருந்தாள் அனாமிகா (ஆதி கயலின் மகள்).

       "ஐ அம் சோரி மித்ரா.. நா ஏர்போர்ட் வர தான் இருந்தேன்..பட் வீட்ல சப்ரைஸ் பன்னலாம்னு தேவ் தான் சொன்னான்.. அதான்.. நீ ஹேப்பி தானே.." என அரவிந்தோ ஆர்வமாக கேட்டவாறு அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்..

சிறுவயதில் மித்ராவை நேரில் பார்த்தது அப்போதே மித்ரா மீது அரவிந்திற்கு ஒரு ஈர்ப்பு இருக்கவே செய்தது.. மித்ரா அமெரிக்கா சென்ற போது வீட்டில் அழுது ஆர்ப்பாட்டமே செய்து விட்டான்.. அவ்வப்போது பெரியவர்கள் வற்புறுத்தலால் அவள் அனுப்பி வைக்கும் புகைப்படங்கள் கௌத்தம் அனுப்பி வைக்கும் புகைப்படங்களுடன் பேசிக் கொண்டும் அவளை ரசித்துக் கொண்டுமே காலத்தை ஓட்டினான். ஆனால் இன்று நேரில் தங்கச்சிலை போல் வந்து நிற்பவளை கண்டதும் மனம் முழுக்க பட்டாம்பூச்சி பறப்பது போல் உணர்ந்தவன் அவளையே தான் ரசனையாக பார்த்துக் கொண்டிருந்தான்.

          "எங்க சப்ரைஸ் உனக்கு பிடிச்சிருக்கு தானே மித்ரா.. இனி நாம ஒன்னா ஊரு சுத்தலாம்.. ஜோலியா இருக்கலாம்.." என வேல் உற்சாகமாக சொல்ல,

ஒரு முறை வீட்டின் அலங்காரத்தை சுற்றி பார்த்தவள் எல்லாருக்கும் பொதுவாகவே,
           "தேங்க்ஸ்.." என சொல்லி விட்டு அறை நோக்கி செல்ல தம் புது நாயகர்கள் நாயகிகளுக்கு தான் சப்பென்றானது..

பெரியவர்களோ அவளுடைய இந்த ஒட்டாத தன்மையில் ஒருவித மனவேதனையில் பார்க்க அறை நோக்கி சென்றுக் கொண்டிருந்தவள் "அக்கா.." என்ற குரலில் நின்று சட்டென்று திரும்பி பார்க்க தன் முன்னால் நின்றிருந்தவளை கண்டவளது கண்கள் கரித்துக் கொண்டு வந்தது.

அவளருகே வேகமாக சென்றவள் தன் அப்பாவின் மறுசாயலில் இருந்தவளது கன்னத்தை வருடி,
         "எப்பிடி இருக்க குட்டிமா.." என்று மென்மையாக கேட்க, அவள் கேட்ட குரலிலே சுற்றி இருந்தவர்கள் வியக்கத்தான் செய்தனர்.

அவள் தான் ஆர்யன் ஆருத்ராவின் இரண்டாவது மகள் ஆராதியா.. மித்ராவை விட நான்கு வயது இளையவள்.. குணத்தில் மித்ராவுக்கு எதிர்துருவமாக இருப்பவள்.. மித்ரா கொழுந்து விட்டு எரியும் நெருப்பு என்றால் தியாவோ குளிர்விக்கும் பனி போன்று.. ஆருத்ராவுடைய மொத்த கோபத்தையும் குத்தகைக்கு வாங்கியது போல மித்ரா இருக்க ஆர்யனின் மொத்த நிதானத்தையும் சொந்தமாகவே வாங்கியது போல அவ்வளவு சாந்தமாகவும் நிதானமாகவும் இருப்பாள் ஆராதியா..

      வந்ததிலிருந்து ஒரு வார்த்தையை விட அதிகமாக பேசாது இறுகிய குரலில் பதிலளித்துக் கொண்டும் இறுகிய முகத்தோடு இருந்தவள் தன் தங்கையை கண்டதும் கண்களில் உணர்ச்சியை வெளிப்படுத்தியது மட்டுமில்லாமல் இவ்வளவு  மெல்லிய குரலில் அவளாகவே கேள்வி கேட்பதில் பெரியவர்கள் ஆச்சரியமாக பார்த்தார்கள் என்றால் சிறியவர்களோ "ஆஆ.." என வாயை பிளந்து பார்த்துக் கொண்டு இருந்தனர்.

        "நல்லா இருக்கேன்கா.." என கூறியவாறு அவளை அணைத்துக் கொண்டவள் அழுதுக் கொண்டே "நீ எப்படி இருக்ககா.." என்று அழுதுக் கொண்டே கேட்ட தங்கையினை பாசத்தோடு பார்த்தவள் "ம்ம்.." என்று மட்டும் சொல்லி விட்டு அவள் பக்கத்திலிருந்த அனாமிகாவின் கன்னத்தையும் லேசாக தட்டி விட்டு செல்ல அவளுக்கோ ஒரே குஷி தான்..

தன் அறைக்கு சென்று அங்கு சுவற்றில் மாட்டியிருந்த ஆர்யன் ஆருத்ராவின் புகைப்படத்தை பார்த்த மித்ராவுக்கோ கண்கள் சிவப்பேற தாடை இறுக அந்த படத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். தன் அம்மா அப்பா உடனான கடைசி நினைவுகள் அவள் நினைவுகளை ஆக்கிரமிக்க தன் தலையை பிடித்துக் கொண்டு அப்பிடியே முட்டி போட்டு அமர்ந்தவள் தன் கோபம், மன அழுத்தம் எல்லா தன்னை மீறி கடந்து செல்வதை உணர்ந்து வேகமாக சென்று தான் கொண்டு வந்திருந்த பையினுள் கையை விட்டு என்டிடிப்ரஷன் மாத்திரையை போட்டவள் சிறிது நேரம் கட்டிலிலே எதுவும் செய்ய தோணாது அமர்ந்திருந்தாள்.
------------------------------------------------------------------

அதே சமயம்,

           "மது ஏன் டி என்னை விட்டு போன.. இப்போ எங்க இருக்க டி நீ.. என்னால முடியல டி நீ இல்லாம.." என தன் தொலைபேசியிலிருந்த புகைப்படத்தை கண்கள் கலங்க பார்த்தவாறு மது அருந்திய வண்ணம் போதையில் புலம்பிக் கொண்டிருந்தான் நம் நாயகன்..

அவளுடனான நினைவுகள் அவனை வதைக்க மூக்கு முட்ட குடித்துக் கொண்டிருந்தவனுக்கு அவன் கையில் வைத்திருந்த மது  தந்த போதையை விட அவன் மதுவே அவனுக்கு தேவையாக இருந்தாள். ஏதேதோ பிதற்றிக் கொண்டிருந்தவன் பின் முகத்தை தீவிரமாக்கி,
          "என்னை விட்டு போயிட்டல்ல டி.. நீ எந்த மூலைல இருந்தாலும் உன்னை தேடி வருவேன் டி.. நீ எனக்கு சொந்தமானவ..  உன்ன அவ்வளவு சீக்கிரம் விட்டுக் கொடுத்துற மட்டேன்..என் மது எனக்கு வேணும்.. " என ஆக்ரோஷமாக கத்தியவன் எண்ணிற்கு அவன் நண்பனிடமிருந்து குறுந்தகவல் வர அதை பார்த்தவன் இதழ்கள் விரிய கண்கள் மின்னியது..

       உடனே ஒரு எண்ணிற்கு அழைப்பை எடுத்தவன் மறுமுனையில் அழைப்பை ஏற்றவுடன்,
           "இன்னும் இரண்டு நாள்ல நா இந்தியால இருப்பேன் டாட்.. சோ என்னை ரிசீவ் பன்ன ரெடியா இருங்க.." என கூறி மறுமுனையில் பதிலை கூட எதிர்பாராது அழைப்பை துண்டித்திருந்தான்.

தான் கிளம்புவதற்கான டிக்கெட் தொடர்பான ஏற்பாடுகளையும் அடுத்தடுத்தென்று செய்ய ஆரம்பித்து
   "உனக்காக வரேன் டி மது பேபி.." என அந்த காதல் கள்வன் மனதில் நினைத்துக் கொள்ள அவனவளோ மருந்தின் வீரியத்தில் இங்கு மனம் மழுக்க ரணத்துடன் உறங்கியும் இருந்தாள்.
------------------------------------------------------------------

மித்ரா வீட்டில்,

மித்ராவை சாப்பிட  அழைக்க வந்த கயல்,
             "மித்ரா மா என்னை பன்னிக்கிட்டு இருக்க.. இன்னைக்கு காலைல தான் வந்த நல்லா ரெஸ்ட் எடுக்க வேண்டியது தானே.." என அவள் பக்கத்தில் அமர்ந்து அக்கறையாக கேட்க,

அப்போது தான் எழுந்து குளித்து உடை மாற்றி தனது லேப்டாப்பில் மும்முரமாக வேலை செய்துக் கொண்டிருந்த மித்ரா திரையிலிருந்து பார்வையை திருப்பாமலே,
           "முக்கியமான வேலை ஆன்ட்டி.. டென் மினிட்ஸ் தான்.." என்று  சொல்ல,

அவளுடைய ஆன்ட்டி என்ற அழைப்பு கயலுக்கு ஒருமாதிரி சங்கடத்தை உணர்த்தினாலும் 'எப்படியும் இவளிடம் கேட்பதற்கு அமைதியாக இருப்பதே மேல்..' என நினைத்துக் கொண்டாளோ என்னவோ மித்ராவை யோசனையுடன் ஒரு பார்வை பார்த்தவாறு,
            "கீழ எல்லாரும் டைனிங் டேபிள்ல உனக்காக வெயிட் பன்றாங்க.. சீக்கிரம் வா மா.. சாபிட்டுட்டு வேலைய பாரு.." என்று சொல்லி விட்டு நகர, அடுத்த ஐந்து நிமிடத்தில் தனது லேப்டாப்பை மூடியவள்  எழுந்து கண்ணாடியில் தன்னை ஒரு நிமிடம் பார்த்து விட்டு ஒரு பெருமூச்சை விட்டவாறு தன்னை தானே சமன்படுத்தி கீழே சென்றாள்.

எல்லாரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட மேசையிலிருந்த அத்தனை உணவுகள் மித்ரா சிறுவயதில் விரும்பி சாப்பிடும் உணவுகளாக இருக்க அத்தனையையும் பார்த்தவள் எதுவும் பேசாது அமைதியாகவே வந்து அமர்ந்து கொண்டாள். கயல் அவள் தட்டில் சாதத்தை வைக்க போக அதை கை நீட்டி தடுத்தவள்,
           "ஆன்ட்டி.. நா டையட்ல இருக்கேன்.." என்று கூற,

           "என்ன மா நீ.. இந்த வயசுல நல்லா சாப்பிடாம டையட் அப்பிடி இப்பிடி இருக்க.. இன்னைக்கு ஒரு நாள் சாப்பிடு.. நாளைல இருந்து உன் டையட்ட கன்டின்யூ பன்னு.." என துர்கா சொல்ல,

         "ஐ அம் சோரி.." என்று சொன்னதிலே அவள் முடிவு அது தான் என்பதை புரிந்து கொண்ட கயல் திரும்பி தன் தோழியை பார்க்க,

ஆதிராவோ, "சரி மா.. கொஞ்சம் வெயிட் பன்னு.. இதோ ஓட்மீல் கொண்டு வரேன்.." என்று கூறி சென்று விட்டாள். அவர்களுக்கு கூட அவள் ஏன் இப்படி நடந்து கொள்கிறாள் என்பது சுத்தமாக தெரியவில்லை. பதினைந்து வருடங்களுக்கு முன் அவர்கள் பார்த்த மித்ராவுக்கும் இப்போது கண் முன் இருக்கும் மித்ராவுக்கும் மலையளவு வித்தியாசம் இருக்க வெளிநாட்டில் வளர்ந்த பிள்ளை, சிறுவயதிலே இழப்பை பார்த்தவள் அதனால் தானோ என்று தப்பாக  கணக்கு போட்டு விட்டனர். இவள் இவர்களிடத்தில் ஒதுக்கம் காட்டுவதற்கு கூட இவர்களும் ஒரு காரணம் தான் என்று மித்ரா சொல்லும் வரை அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

             "என்ன டார்லிங் நீ.. இந்த வயசுல சாப்பிடாம பொக்கை வாய் அப்பத்தா ஆகின அப்றமாவா சாப்பிட போற.. நல்லா சாப்பிட்டு என்னை மாதிரி ஃபிட்டா இருக்க வேணாம்.." என தேவ் அவனை சிலாகித்துக் கொள்ள,

வாயை பொத்திக் கொண்டு சிரித்த அனா,
            "யாரு நீனு.. அவசரத்துல பிசைஞ்சு போட்ட கருகின போண்டா மாதிரி இருந்துகிட்டு  ஃபிட்னஸ்ஸ பத்தி நீ க்ளாஸ் எடுக்குறியா.." என கிண்டல் செய்ய,

அவள் சொன்னதில் எல்லாரும் சிரிக்க, அவளை மூக்கு விடைத்த முறைத்த தேவ்,
           "வர வர உன் வாய் கொழுப்பு ரொம்ப கூடிப் போச்சு.. உன்ன விட வயசுல பெரியவன் டி.. கொஞ்சமாச்சும் மாமான்னு மனசுல மரியாதை இருக்கா.. சரியான அடங்கா பிடாரி.." என திட்ட,

           "அட போடா தாஸுப் பயலே.. மாமாவாம் மாமா கோமா... " என அனா நக்கலாக சொல்லி சிரித்ததில் உச்ச கட்ட கோபத்திற்கே சென்றான் தேவ் என்கின்ற தேவ்தாஸ்.

அப்படியே திரும்பி தன் அப்பா அபியை பார்த்தவன்,
             "யோவ் அப்பா.. உனக்கு வேற பெயரே கிடைக்கலையா.. வச்ச தான் வச்ச நல்லா வச்சயா எனக்கு.. ஒருத்தியும் செட் ஆக மாட்டிக்குறா.. இதோ இந்த சில்வண்டெல்லாம் கலாய்க்குற அளவுக்கு என் ஃபேட்(Fate) அமைஞ்சிருச்சி.." என மூக்கு விடைக்க முறைத்தவாறு சொல்ல,

              "டேய் மகனே.. அது என்ன சாதாரண பெயரா.. அந்த பெயருக்கு பின்னாடி எப்பிடி ஒரு லவ் ஸ்டோரி இருக்கு தெரியுமா டா.. நீ வேணா பாரு ஒரு நாள் இல்ல ஒரு நாள் உனக்கு பார்வதி மாதிரி ஒரு பொண்ணு கிடைக்க போறா.." என அபி உணர்ச்சி பூர்வமாக சொல்ல,

அதில் தன் அப்பாவை ஒற்றை புருவத்தை தூக்கி பார்த்தவன்,
              "எதுக்கு.. என்னை அம்போன்னு விட்டுட்டு போயி நானும் முகம் முழுக்க தாடிய வளர்த்து ரோட்ல லோலோன்னு திரியுறதுக்கா.." என கேட்க, இதைக்கேட்ட அங்கிருந்த அனைவருக்குமே சிரிப்பு முட்டி கொண்டு வர மித்ராவுக்கு கூட தேவ்வின் அலப்பறையில் லேசாக இதழோர சிரிப்பு எட்டிப்பார்க்க தான் செய்தது.

தன் பக்கத்தில் தன்னையே புன்சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த தங்கையை பார்த்த மித்ரா,
            "எப்போ கொலேஜ் ஸ்டார்ட் குட்டிமா .. இப்போ என்ன இன்ஸ்ட்ரியூமன்ட் (Instrument) கத்துகிட்டு இருக்க.." என்று  அக்கறையாக கேட்க,

            "பியானோக்கா.. அனா கூட " என்று சொல்ல அதற்கு ஒரு தலையசைப்பை மட்டுமே வழங்கியவள் சாப்பிட்டு முடித்து எழுந்து சென்று விட்டாள். ஆராதியா, அனாமிகா இருவருமே மியூசிக் ஸ்டுடன்ட்ஸ்.. அவர்களுக்கு இசையிலேயெ ஆர்வம் அதிகமாக இருந்ததால் சென்னையில் பிரபல மியூசிக் கொலேஜில் அவர்களை சேர்த்துவிட்டிருக்க ஒரு வருடமாக அங்கு தான் எல்லா விதமான இசைகளையும் பயின்று வருகின்றனர்.

சிறிது நேரம் தன் அறை பெல்கனியில் யோசனையோடு இருந்த மித்ரா ஒரு முடிவோடு சென்றது வீட்டிலிருந்த ஆடவர்களின் ஓஃபிஸ் ரூமிற்கு தான்.

அங்கு சென்றவள் அறை கதவை தட்டி விட்டு உள்ளே செல்ல அங்கு ஏற்கனவே கயல், ஆதி, சித்து,  துர்கா பேசிக் கொண்டிருந்தனர்.

இவளை கண்ட ஆதி,
            "உள்ள வா மித்ரா மா.." என்று புன்னகைத்தவாறே அழைக்க,

            "சின்ன வயசுல இந்த ரூம்க்குள்ள தான்  உன்னோட தியாவோட சேட்டையே.. உன் பின்னாடி ருத்ரா ஓடுவான்னா தியா பின்னாடி துகி அலைஞ்சிக்கிட்டு இருப்பா.. பல வருஷம் கழிச்சு இப்போ தான் இந்த ரூம்க்குள்ள வந்திருக்க.." என்று சித்து சிரிப்புடன் சொல்ல,

அவர்கள் பேசுவதையெல்லாம் கொஞ்சம் கூட கண்டுக் கொள்ளாது அவர்கள் முன் நின்ற மித்ரா அவர்களையே அழுத்தமாக பார்த்தவாறு,
              "அம்மா ஆரம்பிச்ச சொஃப்ட்வெயார் சொல்யூஷன்ஸ்ஸ இனி நானே நடத்தலாம்னு இருக்கேன்.." என்று சொல்ல, இதைக் கேட்ட நால்வரும் வந்ததும் வராததுமாக அவள் இப்படி பேசியதில் அவளையே அதிர்ந்து பார்த்தனர்.
 

❤தொடரும்❤
------------------------------------------------------------------

            thank u so much for ur love and support guys.. ❤❤❤
           Keep motivating me🔥

- ZAKI🔥

 

Zakiya


ReplyQuote
Jade Javid
(@jadejavid)
Trusted Member Writer
Joined: 7 months ago
Posts: 68
18/09/2020 4:50 am  

                      தீண்டாதே 03🔥

        மித்ரா பிறந்த பிறகு ஆருத்ரா ஆசைப்பட்ட படி அவள் ஒரு IT கம்பனி ஆரம்பித்திருக்க அவளின் உழைப்பினாலும் முயற்சியினாலும் புத்தி சாதூரியத்தினாலுமே அடுத்த மூன்று வருடத்தில் கம்பனி உச்ச வெற்றி அடைந்தது. இதற்கு அவள் தோழிகளும் துணையாக இருக்க அவளுக்கு அதுவே பெரிய பலமாக இருந்தது. ஆருத்ராவிற்கு பிறகு ஆசிரமத்தையும், தியாவின் கனவு பாடசாலையையும் ஆதிரா, ரியா, துர்கா பார்த்துக் கொள்ள கம்பனி பொறுப்பை கயல் ஏற்றுக் கொண்டாள்.

இப்போது மித்ரா சட்டென இப்பிடி கேட்டதில் அவளை குழப்பமாக பார்த்த கயல்,
           "மித்ரா இன்னைக்கு காலைல தான் வந்திருக்க.. கொஞ்ச நாள் நல்ல ஊரு சுத்தி பாரு.. பசங்க கூட ஜாலியா இரு.. இப்போவே கம்பனி பொறுப்பை ஏத்துக்கனுமா.." என்று அக்கறையாக கேட்க,

            "ஆமா மா.. கம்பனி நல்லா தான் போயிக்கிட்டு இருக்கு.. இப்போவே நீ அந்த பொறுப்பை ஏத்துக்கனும்னு அவசியமில்லை.. ஒரு மாசம் ஹேப்பியா இரு.. அதுக்கப்றம் உன் அம்மாவோட கம்பனி முழு பொறுப்பும் உனக்கு தான்.." என ஆதி சொல்ல,

இருபுறமும் 'இல்லை' என்ற ரீதியில் தலையாட்டியவள் தன் ஜீன்ஸ் பாக்கெட்டுக்குள் கையை விட்டவாறு,
            "இன்னும் இரண்டே நாள்ல கம்பனியோட முழு பொறுப்பும் எனக்கு வந்தாகனும்.. என்ட் ஹேப்பி..." என ஹேப்பி என்ற வார்த்தையை அழுத்தம் கூட்டி இழுத்தவள்,
           "அதை நா அனுபவிக்கிற நேரம் இன்னும் வரல அங்கிள்.." என்று தீவிரமாக சொல்ல, அவள் எதிரே இருந்த நான்கு பேருக்கு தான் அவள் பேச்சு குழப்பத்தை தத்தெடுத்தது.

ஒரு பெருமூச்சை விட்ட துர்கா கயலிடம்,
          " அவ சொல்றதும் சரி தானே கயல்.. அவ கம்பனிய பொறுப்பெடுத்தா நீயும் எங்க கூட வந்து ஆசிரம வேலைய பார்க்கலாம்ல.. உனக்கும் அந்த கம்பனி டென்ஷன்லிருந்து கொஞ்சம் ரிலீஃப் ஆன மாதிரி இருக்கும்.. நாமளும் ஒன்னா வேலை பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு.."  என்று சிரித்தவாறு சொல்ல,

         "அப்போ கயல் கம்பனில ஒரு சின்ன பார்ட்டி மாதிரி வச்சி ஸ்டாஃப்ஸ்க்கு அவங்க புது எம்.டி ய இன்ட்ரோ பன்னிரு.. எல்லாருக்கும் மித்ரா பத்தியும் தெரிஞ்ச மாரிரி இருக்கும்ல.." என சித்து சொல்ல,

         "அதுவும் சரி தான் சித்து.. அப்போ இன்னைக்கே ரவிகிட்ட(கயலின் P.A) சொல்லி பார்ட்டிக்கான அர்ரேன்ஜ்மென்ட்ஸ்ஸ பன்ன சொல்றேன்.." என கயல் கூறிக் கொண்டிருக்கும் போதே,

அதை குறுக்கிட்ட மித்ரா,
           "அதெல்லாம் ஒன்னு தேவையில்லை ஆன்ட்டி.. நா கம்பனி வந்த அன்னைக்கு ஒரு மீடிங் வச்சி சொல்லிக்கலாம்.. எனக்கு இந்த பார்ட்டில எல்லா இன்ட்ரெஸ்ட் இல்லை.."  என்று சலிப்பாக சொல்ல பெரியவர்களோ இருபுறமும் சலிப்பாக தலையாட்டிக் கொண்டனர்.

வேறுவழியில்லாமல் "சரி.." என கோரஸாக சொல்ல தலையாட்டி விட்டு நகர போனவளை "மித்ரா கௌன்ஸ்லிங் போயிக்கிட்டு இருக்க தானே.." என்ற ஆதியின் குரல் தடுத்து நிறுத்த,

சற்று நேரம் திருதிருவென விழித்தவள் அவர்கள் புறம் திரும்பாமலே,
           "யாஹ் அங்கிள்.." என்று இறுகிய குரலில் சொல்லி விட்டு வெளியேறி விட்டாள்.

            "எனக்கு நம்ம மித்ராவ நினைச்சாலே ரொம்ப வேதனையாக இருக்கு சித்.. ஏன் இப்பிடி நடந்துக்குறான்னு ஒன்னுமே புரிய மாட்டேங்குது.. சின்ன வயசுல என் கூடவே தான் இருப்பா.. இப்போ உரிமையா கூட கூப்பிட மாட்டேங்குறா.." என துர்கா அவள் போன திசையையே பார்த்துக் கொண்டு கண்கலங்கியவாறு மனவேதனையில் சொல்ல,

           "எல்லா சரியாகும் துகி.." என அவளை லேசாக அணைத்துக் கொண்டான் சித்தார்த்.

          "ஆருத்ராகிட்ட ஒரு விஷயத்தை சொல்லி அவ பலவிதமா கேக்குற பத்து கேள்விக்கு பதில் சொல்லி முடிக்கிறதுக்குள்ள உயிர் போய் திரும்பி வந்த மாதிரி இருக்கும்.. மித்ரா கூட பேசும் போது கூட அப்பிடியே தான் இருக்கு கயல்.. இவ என்ன நினைக்கிறான்னு கூட தெரிஞ்சிக்க முடியல.." என்று ஆதி பெருமூச்சு விட்டவாறு சொன்ன விதத்தில்,

வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்த கயல்,
            "அவ ஆருத்ராவோட பொண்ணு பா.." என்று சொல்ல, 'இவ என்ன பன்ன காத்திருக்காளோ..' என்று நினைத்து நெற்றியை விரலால் நீவி விட்டவாறு யோசித்துக் கொண்டிருந்தான் ஆதி..

தன் அறைக்கு வந்த மித்ரா அறை பால்கெனியில் நின்றுக் கொண்டிருக்க "மித்ரா.." என்ற தேவ்வின் குரலில் சட்டென திரும்பி பார்த்தவள் தன் எதிரே நின்றிருந்த தேவ்வையே அழுத்தமாக பார்த்தவாறு,
          "தேவ் உன்னால எனக்கு ஒரு காரியம் ஆகனும்.."என்று சொல்ல,

'அடி ஆத்தீதீ இவள பத்தி தெரிஞ்சும் இவ ரூம் பக்கம் வந்து சிக்கிக்கிட்டோமே...' என மனதில் நினைத்தவாறு அவளையே புரியாமல் நோக்கினான் தேவ்.

வேறுபுறம் பார்வையை பதித்தவாறு முகத்தை தீவிரமாக வைத்துக் கொண்டவள்,
             "எனக்கு R.D group of companies ஓட Chairman மிஸ்டர் ராஜ்தீப், அவனோட பிஸ்னஸ் பார்ட்னர் திலகன் இவங்க இரண்டு பேரோட டீடெய்ல்ஸ்ஸும் வேணும்.. அவங்களோட பர்சினல் லைஃப் என்ட் அவங்க பன்ற எல்லா தொழில் பத்தியும் தெரிஞ்சாகனும்.." என்று சொல்லியதில் தேவ் இற்கு தான் தூக்கி வாரிப்போட்டது.. அவளை பற்றி முழுதும் அறிந்த ஒருவன் அல்லவா அவன்.

அவன் மிரட்சியுடன் பார்த்தவாறு ஏதோ சொல்ல வர அதற்குள் மித்ரா,
           "என்ட் முக்கியமா மினிஸ்டர் சப்தகிரியோட டீடெய்ல்ஸும் எனக்கு வேணும் தேவ்.. இன்னும் ஒன் வீக்ல அவங்க மூனு பேர பத்தின ஃபைல்ல் எனக்கு நீ ரெடி பன்னி கொடுக்கனும்.." என்று சொல்ல அவனுக்கு மேலும் அதிர்ச்சி தான்.

          "மித்ரா இது நமக்கு தேவையில்லாதது.. நீ பன்ற எதுவும் எனக்கு சரியா படல.." என தேவ் மெதுவாக புரிய வைக்க முயல,

அவனை கூர்மையாக பார்த்தவள்,
            "எது நமக்கு தேவையில்லை தேவ்..ஹான்.. எனக்கு வேணும் அவ்வளவு தான்.." என்று மித்ரா ஆக்ரோஷமாக கத்த அவனுக்குமே அவள் கத்தலில் சற்று பயம் எட்டி பார்க்க தான் செய்தது. சற்றும் நிதானமே இல்லாத அவளுடைய கோபத்தின் உச்சகட்டத்தை நேரில் பார்த்திருக்கிறான் அல்லவா...

       தேவ் உம் அரவிந்த் உம் தனியார் டிடெக்டிவ் ஏஜன்சி நடத்தி வருகின்றனர். ஒருவரை பற்றிய தகவல்களை சேகரிப்பதிலிருந்து பொலிஸ் டிபார்ட்மென்ட்டிற்கு தேவையான ஆதாரங்களை மறைமுகமாக வழங்குவதில் அவர்களை மிஞ்ச ஆள் இல்லை.. அந்தளவிற்கு சென்னையிலேயே மிக பிரபலமான டிடெக்டிவ்ஸ்.. இன்னும் சொல்ல போனால் நம்ம ஓல்ட் ஹீரோஸ் ஹேன்டில் பன்னும் சில கேஸ்களுக்கு தேவையான ஆதாரங்களை சேகரிக்கும் வேலையில் இவர்களே மறைமுகமாக செயற்படுகின்றனர்.

            "என்னால முடியாது மித்ரா இதுல நீ ஏதாவது ஏடாகூடமா பன்ன போய் அது உனக்கே பிரச்சினையா அமையலாம்.. நீ டீடெய்ல்ஸ் கேட்டிருக்க மூனு பேருமே சென்னையில பெரிய ஆளுங்க.. பழசையே நினைச்சிக்கிட்டு இன்னும் எவ்வளவு நாள் தான் இப்பிடியே இருக்க போற.. வேணாம் மித்ரா.. விட்டுறு.." என தேவ் கிட்டதட்ட கெஞ்ச அதற்கெல்லாம் சளைத்தவளா அவள்.

ஒற்றை புருவத்தை தூக்கி அவனை பார்த்தவள்,
          "உன்னால முடியாதுல்ல ஓகே.. இதை தனியா எப்பிடி ஹேன்டில் பன்னனும்னு எனக்கு தெரியும்.. சோ, கெட் அவுட்.." என்று கத்த,

இடுப்பில் ஒற்றை கையை ஊன்றி மறு கையால் தலையை அழுந்த கோதிய தேவ் "இவள..." என பல்லை கடித்துக் கொண்டு,
         "சரி.. சரி.. செஞ்சி தொலைக்கிறேன்.. பட் வன் கன்டிஷன் நீ என்ன பன்னாலும் என்கிட்ட சொல்லிட்டு தான் இல்லை இல்லை என்கிட்ட சொல்லி என் கூட தான் செய்யனும்.. தனியா முந்திரி கொட்டை மாதிரி மூக்கை நுழைக்க போறதில்லை புரியுதா.." என அடக்கப்பட்ட கோபத்தில் கேட்க,

மித்ராவும் மார்புக்கு குறுக்கே கைகளை கட்டியவாறு அவன் புறம் பார்வையை திருப்பாமலே "சரி.." என்று சொல்ல,

'இவக்கிட்ட எந்த பச்ச மண்ணு சிக்கிக்க போகுதோ.. அந்த ஜீவனுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.." என்று மனதில் நினைத்தவனுக்கு தெரியவில்லை.. அந்த ஒரு ஜீவனால் மட்டுமே இந்த சண்டி ராணியை அடக்க முடியும் என்று.

அப்போது சரியாக அரவிந்தும்,  வேலுவும் உள்ளே வர அரவிந்தை பார்த்த தேவ்,
        "அடடே நீங்களா.. வாங்க வாங்க.. என்ன விஷயமா வந்திருக்கீங்க.." என கேலியாக கேட்க,

அவனை முறைத்த அரவிந்த் பின் மித்ராவின் புறம் திரும்பி,
         "அது வந்து மித்ரா.. நாம சின்ன வயசா இருக்கும் போது ஒன்னா வெளில போனது.. எவ்வளவு நாள் ஆச்சு.. அதான் நாளைக்கு நாம வேணா வெளில எங்கயாச்சும் போயிட்டு வரலாமா..ரெஸ்டோரென்ட் ஓர் பீச்.." என்று ஆர்வமாக கேட்க,

        "நொட் இன்ட்ரெஸ்டெட் (Not interested)" என்று ஒற்றை வார்த்தையில் முடித்தவளை பார்த்த அரவிந்த்தின் முகம் வாடி போக மித்ராவோ அதை எல்லாம் சட்டை செய்யவே இல்லை..

வேலுவின் புறம் பார்வையை திருப்பியவள்,
           "வேல் இப்போ என்ன பன்னிக்கிட்டு இருக்க.. ட்ரைனிங் எல்லாம் முடிச்சாச்சா.." என அறையிலிருந்த சோஃபாவில் அமர்ந்தவாறு மித்ரா கேட்க,

            "இப்போ தான் என்கிட்ட பேசனும்னு உனக்கு தோணிச்சா மித்ரா.." என செல்லமாக அவளை முறைத்த வேல், "சரி விடு..நெக்ஸ் வீக் தான் ட்யூட்டில ஜாய்ன் பன்றேன்.. எனக்கும் எங்க அப்பா மாதிரி பெரிய CBI ஆகனும்.." என உணர்ச்சி பொங்க பேசிக் கொண்டிருந்தவள்   'ப்ரூ..ப்ரூ..' என்ற சத்தத்தில் கஷ்டப்பட்டு வாயை பொத்தி சிரிப்பை அடக்கிக் கொண்டிருந்த தேவ்வை புரியாமல் பார்க்க அரவிந்த் மித்ரா கூட அவனை தான் புருவத்தை சுருக்கி பார்த்துக் கொண்டிருந்தனர்.

எல்லாரும் தன்னை பார்ப்பதில் வாய்விட்டு வயிற்றை பிடித்துக் கொண்டு சத்தமாகவே சிரித்த தேவ் வேலிடம்,
           "வேல் நா ஒன்னு கேள்வி பட்டேன் உண்மையா.. விவேக் சார் கோர்ட்ல ஊருகா வித்த மாதிரி உங்க அப்பாவும் வர்ற கேஸ்ஸ தனியா ஹேன்டல் பன்ன பயந்து CBI ஓஃபீஸ்ல உங்க தாத்தாவோட ஊறுகாவ விக்கிறாறாமே.. நிஜமாவா வேல்.. இல்ல உழவுத்துறை தகவல் கிடைச்சது அதான்.." என சிரிப்பை அடக்கிக் கொண்டு ஆச்சரியப்படுவது போல் கேட்டவனை ஏகத்துக்கும்  முறைத்து தள்ளளினாள் வேலு நாச்சியார்.

          "டேய் என் அப்பாவையே கிண்டல் பன்றியா.. பாரு ஒரு நாள் இல்ல ஒரு நாள் நானும் பெரிய போலிஸாகி.." என சொல்லிக் கொண்டிருந்தவளை இடைவெட்டி  "எது.. கோமெடி போலிஸா.." என தேவ் கேட்டு சிரிக்க அவனை அடிக்க போன வேலுவின் கையை பிடித்து தடுத்தான் அரவிந்த்.

        "டேய்ய் சும்மா தான் இரே.. ஏன் நச்சுவ கிண்டல் பன்னிக்கிட்டே இருக்க.." என்று தேவ்வை திட்ட நம்ம வேலுவோ அவனையே காதல் பொங்க பார்த்துக் கொண்டிருந்தாள்.. ஆம் வேல் சிறுவயதிலிருந்து அரவிந்தை காதலிக்கிறாள். இது முட்டாள் அரவிந்திற்கு சுத்தமாக தெரியாது.. மித்ரா அரவிந்தை தவிர மற்ற நான்கு இளசுகளுக்குமே இது தெரியும்.. ஆனால் தெரிந்தது போல் காட்டிக் கொள்வதில்லை.

அரவிந்தையே காதலாக பார்த்தவாறு,
          "தேங்க்ஸ் அவிந்த்.." என்று வேல் சொல்ல,

அவள் தலையில் தட்டிய தேவ்,
           "சின்ன வயசுல தான் உனக்கு வராது அதனால அவன் பின்னாடி அவிந்த் அவிந்துன்னு சொல்லிக்கிட்டு திரிஞ்ச.. இப்போ தான் வாய் மும்பை வரைக்கும் நீளுதே.. அப்பவும் அப்பிடியே கூப்பிட்டுக்கிட்டு இருக்க .." என கிண்டலாக தேவ் கேட்க,

அவனை முறைத்த அரவிந்த் வேலுவின் தோல் மேல் கையை போட்டு,
              "எனக்கு என் நச்சு என்னை இப்பிடி கூப்பிடுறது தான் பிடிச்சிருக்கு.. உனக்கென்ன டா வெண்ண.." என்று திட்ட,

தேவ் வேலுவை சீண்டும் போது இவன் அவளுக்கு ஒவ்வொரு தடவையும் சபோர்ட் செய்கிறேன் பேர்வழி என்று வருவதையும் அதற்கு அவளின் காதல் லுக்கையும் பார்த்து சலித்தவன் எப்போதும் போல் இப்போதும் மனதில்,
       'க்கும்..நாங்க எதாச்சும் அவள சொன்னா மட்டும் சாருக்கு மூக்கு வேத்துரும்.. பட் இந்த கிறுக்கி அவன அப்பட்டமா சைட் அடிச்சிக்கிட்டு இருக்கா அதெல்லாம் இந்த லூசுப்பையனுக்கு தெரியாது..' என நொந்து விட்டு நகர போனவன் அப்போதும் வேலுவின் அரவிந்த் மீதான பார்வையையும் அவன் அதெல்லாம் கண்டு கொள்ளாது சோஃபாவில் ஃபோனை நோண்டிக் கொண்டிருந்த மித்ராவையே பார்த்துக் கொண்டிருப்பதை கண்டு காண்டானவன்
       'அப்பிடியே அம்மாவுக்கு தப்பாத புள்ள." என்று வேலுவுடன் சேர்த்து தன் அத்தை ரியாவையும் மனதில் வறுத்தெடுத்தவாறு வேலு கதற கதற வெளியே இழுத்துக் கொண்டு சென்றான்.

இரண்டு நாட்கள் கழித்து,

        "AARA SOFTWARE SOLUTIONS" என்ற பெயர் பலகை பொன் எழுத்துக்களால் மின்ன கண்ணாடியிலான பல அடுக்கிலான கட்டிடத்தின் முன் 'க்ரீச்ச்..' என்ற சத்தத்தில் தன் காரை நிறுத்திய மித்ரா  தன் கூலரை ஸ்டைலாக கழட்டியவாறு காரிலிருந்து இன்று தன் கம்பனியில் தன் முதல் அடியை வைக்க அதேசமயம் அவளை ஆட்டிப்படைக்கவென சென்னையில் தரையிறங்கிய விமானத்திலிருந்து தன் கூலரை ஸ்டைலாக மாட்டியவாறு இந்தியாவில் தன் முதல் அடியை வைத்தான் ஹர்ஷா.. நம் கதாநாயகன் ஹர்ஷமித்ரன்..

 
தொடரும்🔥
------------------------------------------------------------------------

      Don't forget to give ur comment guys.. thanks for ur love and support 😍😍
        Keep motivating me with ur comments🔥

-ZAKI🔥
    

 

Zakiya


ReplyQuote
Jade Javid
(@jadejavid)
Trusted Member Writer
Joined: 7 months ago
Posts: 68
20/09/2020 5:57 am  

                    தீண்டாதே 04🔥

           அந்த பரபரப்பான சென்னை விமான நிலையத்தில் தன் கண்களை அங்கும் இங்கும் சுழலவிட்டவாறு தன் பையனுக்காக காத்துக் கொண்டிருந்தவர் திடீரென தனக்கு வந்த தொலைபேசி அழைப்பில் அழைப்பை ஏற்று திரும்பி நின்று பேசிக் கொண்டிருக்க திடீரென பின்னால்,

          "என்ன மிஸ்டர் ராஜ் தீப் பையன பொறுப்பா ரிசீவ் பன்னாம இப்பவும் உங்க எக்ஸ் கேர்ள் ஃப்ரென்ட் கூட ஃபோன்ல  கடல போட்டுகிட்டு இருக்கீங்க.." என்ற குரலில் பேசிக் கொண்டிருந்த ராஜ்தீப் சட்டென திரும்பி பார்க்க கைகளை மார்புக்கு குறுக்கே கட்டியவாறு குறும்புப் புன்னகையுடன் நின்றிருந்த நம் நாயகன் அவர் தன்னை பார்த்ததும் கண் சிமிட்டி வசீகரமான ஒரு புன்னகையை சிந்தினான்.

தன் மகனை கண்டவர் மலர்ந்த முகத்துடன்   
       "ஹர்ஷா வெல்கம் ஹோம் டா.." என உற்சாகமாக கூறியவாறு ஆரத்தழுவிக் கொள்ள, அவரை அணைத்துக் கொண்டு
         "தேங்க்ஸ் டாட்.." என்று புன்னகையுடன் சொன்னான் ஹர்ஷமித்ரன் நம் நாயகன்..

அவன் வயிற்றில் செல்லமாக குத்தியவர்,
            "டிகிரி முடிஞ்சி ஆறு மாசத்துக்கு மேல ஆச்சு.. இப்போ தான் உனக்கு வீட்டுக்கு வரனும்னு தோணிச்சா.. ம்ம்.. என்ன டா மேட்டர்.." என்று குறும்பாக கேட்க,

அதில் சிரித்தவன்,
             "அது வந்து டாட்.. எனக்கு சொந்தமான ஒன்னு என்கிட்ட இருந்து தப்பிச்சிருச்சி.. அதான் தேடி வர வேண்டியதா போயிருச்சு.." என குதர்க்கமாக பேசியவனை குறுக்கிட்டவர்,

            "தப்பிச்சிருச்சா.. இல்ல.. நீ தொலைச்சிட்டியா.." என ராஜ்தீப்பும் அவன் வயதுக்கு ஏற்றவாறு கிண்டல் செய்ய ,

              "இந்த ஹர்ஷா எப்பவும் அவனுக்கு சொந்தமானதை ஈஸியா தொலைச்சிற மாட்டான் டாட்..." என தீர்க்கமான சொன்ன மகனை பார்த்த ராஜ்தீப்பிற்கு அவன் பேசுவது புரியாவிட்டாலும் இருபக்கமும் தலையாட்டி பெருமூச்சு விட்டவாறு,

             "ஏதோ ஒன்னு அதான் வந்துட்டல்ல.. அது போதும்.. சரி டா வா போகலாம்.." என்று கூற அங்கிருந்து  இருவரும் வெளியெற எத்தனிக்க போகும் வழியில் தங்களை சுற்றி இருப்பவர்களை ராஜ்தீப் பார்த்ததில் மொத்த இளம் பெண்களின் பார்வையும் ஏன் சில ஆண்களின் பார்வையும் கூட ஹர்ஷா மீது இருப்பதை கவனித்தார். அவனோ அதை எல்லாம் கண்டும் காணாதது போல் இடது கையை பேன்ட் பாக்கெட்டுக்குள் விட்டு வலது கையால் ஃபோனை நோண்டியவாறு வாயில் சுவிங்கத்தை மென்றவாறு அருகே நடந்து வர தன் மகனை மேலிருந்து கீழாக அளவிட்டார் ராஜ்தீப்.

         கருப்பு நிற ஷார்ட், கருப்பு ஜீன்ஸ் அணிந்து வெள்ளைகார பெண்ணிற்கும் இந்திய குடிமகனுக்கும் பிறந்தவன் போல் சிவந்த நிறத்தில், ஆறடி உயரத்திற்கும் சற்று அதிகமான உயரத்தில், தேக்கு மரம் போன்று வலுமையான கட்டுக்கோப்பான சிக்ஸ்பேக் படிக்கட்டு தேகம், கூர்மையான சிறிய கண்கள், கூர் நாசி, எப்போதும் புன்னகை தவழும் உதடுகள் அலைஅலையான கருப்பு கேசம், நேர்த்தியாக ட்ரிம் செய்யப்பட்ட மீசை ஃப்ரென்ச் பியர்ட் என்று எப்போதும் குறும்புப் பார்வையுடன் முகமே ஒருவித அழகுடன் ஜொலித்துக் கொண்டிருக்க கம்பீரமான ஆணழகனாக நடந்து வந்த தன் மகனை ராஜ்தீப் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

அவர் பார்வையை உணர்ந்தவனோ அவர் புறம் பார்வையை திருப்பாமலே,
           "என்ன டாட் உங்க பையன ரொம்ப தான் சைட் அடிக்கிறீங்க.." என கேலியாக கேட்க,

            "நா மட்டுமா.. இங்க இருக்குற மொத்த பேரோட கண்ணும் உன் மேல தான் டா.." என்று ராஜ்தீப் பெருமையாக சொல்ல, தன் கோலரை ஸ்டைலாக தூக்கி விட்டவன்,
            "அய்யாவோட முகராசி அப்பிடி பா.." என்று சொல்லி சிரித்தவாறு காரில் ஏற அவரும் அவனுடன் சேர்ந்து சிரித்தவாறு வண்டியில் வீட்டை நோக்கி புறப்பட்டனர்.
---------------------------------------------------------------------
   
   இங்கு கம்பனிக்கு வந்த மித்ராவை ஸ்டாஃப் மீடிங் வைத்து கயல் எல்லாருக்கும் அறிமுகப்படுத்த மித்ராவும் தான் பேச வேண்டிய சில வார்த்தைகளை பேசி தன் நிமிர்வினாலும் ஆளுமையான பேச்சினாலும் தன் முன் இருந்தவர்களை வியக்க வைத்தாள் என்றால் கயலுக்கோ ஆருத்ராவே பேசுவது போல் இருந்தது.

அதன் பின் கயலும் ஓஃபீஸில் உள்ளவர்களை மித்ராவுக்கு அறிமுகப்படுத்தி கம்பனி பற்றிய தகவல்களையும் கூறி சிலபல அறிவுரைகளை சொல்லி விட்டு ரவியை அவளுக்கு உதவியாக வைத்து விட்டு செல்ல மித்ராவோ தான் அடுத்து செய்ய வேண்டிய காரியங்களில் பம்பரம் போல் சுழன்று அந்நாளை கழித்தாள்  என்றால் பயணம் செய்த களைப்பில் ஹர்ஷா தூங்கியே இருந்தான்..

அடுத்த நாள்,
          காலை,
 
            " அடியே கொள்ளுதே..
                   அழகோ அள்ளுதே..    
            உலகம் சுருங்குதே..
                    இருவரில் அடங்குதே.."

          என்ற குரலில் பதறியடித்துக் கொண்டு எழுந்த ஹர்ஷா மணியை பார்க்க நேரம் பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. தன் வலது காதில் சிறுவிரலை விட்டு குடைந்தவன்,
            "யார்ரா அது.. காலங்காத்தால பாடி இல்ல இல்ல கூவி உயிரை வாங்குறது.." என பல்லை கடித்துக் கொண்டு வாய்விட்டு புலம்பியவாறு கட்டிலிலிருந்து தாவி குதித்து அறையிலிருந்து வெளியேறி ஹோலை மாடியிலிருந்து பார்த்தவன் கண்களில் சிக்கினான் அவன்.

       "அனிருத்து..." என கத்தியவாறு ஹர்ஷா மாடிப்படிகளில் தாவி ஓடி வர அவனும் ஹர்ஷாவின் குரலில் தன் பாடலை நிறுத்தி திரும்பி பார்த்து   "அச்சு ப்ரோ.." என்று கத்தியவாறு சோஃபாவுக்கு மேலால் தாவி குதித்து ஓடி வந்து ஹர்ஷாவின் இடுப்பிலே தாவி உட்கார்ந்து கொண்டான். இவர்களின் கூத்தை பார்த்த அங்கிருந்த வேலையாட்கள் சிரிக்கவும் முடியாமல் சிரிப்பை அடக்கவும் முடியாமல் பெரும்பாடுபட்டார்கள் என்றால் சோஃபாவில் உட்கார்ந்திருந்த ராஜ்தீப்போ வெளிப்படையாக தலையிலே அடித்துக் கொண்டார்.

அவன் தான்  அனிருத் ஹர்ஷாவுடைய சித்தப்பா மகன்.. ஹர்ஷாவுடைய சித்தப்பா ரகுநந்தன் அவரின் மனைவி மாலினி லண்டனில் செட்ல் ஆகி இருக்க அங்கேயே பிறந்து வளர்ந்தவன் தமிழ் பேசினாலே மழலை பேசுவது போல் தான் இருக்கும்.. தமிழில் நிறைய வார்த்தைகள் வராது தமிழையே கொலை செய்து விடுவான். இவனுக்கு எந்த நேரத்தில் அனிருத் என பெயர் வைத்தார்களோ இசையில் ஈடுபாடு அதிகம் இருந்தவன் லண்டனில் மியூசிக் ஸ்டுடன்ட் ஆக இருந்து இப்போது ஹர்ஷா இந்தியா வர போகிற தகவல் கேள்வி பட்டதுமே "தான் அண்ணனோடு தான் இருப்பேன் இந்தியாவில் தான் மியூசிக் கத்துப்பேன்" என்று அடம்பிடித்து அடுத்த ஃப்ளைட்லயே தன் பெரியப்பா வீட்டிற்கு ஓடி வந்துவிட்டான்.

அவனை தன் இடுப்பிலிருந்து இறக்கியவன்,
         "சித்தப்பா எப்பிடி டா உன்ன விட்டாரு.. அதுக்கு வாய்ப்பில்லையே.. உன் சேட்டை தெரிஞ்சே உன்ன தனியா விட மாட்டாரே.." என்று ஹர்ஷா சந்தேகமாக கேட்க,

        "ஹோ கோட்.. அவர் எங்க விட்டாரு.. ஸ்டார்ட்டிங் விடமாட்டேன்னு ரொம்ப அடமென்ட் (Adamant) ஆ இருந்தாரு.. நா தான் வோல் டே (Whole day) அவர் காதுல எனக்கு தெரிஞ்ச மொத்த தமிழ் சோங்க்ஸ்ஸையும் பாடி காட்டி சம்மதிக்க வச்சேனா பாருங்க.." என்று அனிருத் கோலரை தூக்கி விட்டுக் கொண்டு பெருமையாக சொல்ல,

அதில் குழம்பிய ஹர்ஷா,
           "என்னது.. பாட்டு பாடி சம்மதிக்க வச்சியா புரியல்லையே.." என்று கேட்டதில்,

அனிருத் பதில் சொல்வதெற்கு  முன்னே குறுக்கிட்ட ராஜ்தீப்,
           "இதுல என்ன டா சந்தேகம் உனக்கு.. இப்போ கூட இவன் பாட்டை கேட்டு தானே அலறி அடிச்சிட்டு ஓடி வந்த.. சாத்தான் அங்கேயும் அதை தான் பன்னிருக்கு அதான் ரகு ஒரு கட்டத்தில முடியாம மூட்டை முடிச்ச கட்டி பார்சல் பன்னி இங்க அனுப்பி விட்டுட்டான்.." என்று கேலியாக சொல்லி சிரிக்க,

இதைக் கேட்ட ஹர்ஷாவும் "அனிருத்.. ஆளுக்கு ஏத்த பேர் தான்.." என்று அவன் பெயரை அழுத்தி கூறி கிண்டலாக சிரித்தான் என்றால் அவர்களை முறைக்க முயன்று பின் தானுன் சிரித்து விட்டான் அனிருத்.

        "ப்ரோ என்னை சென்னையில பெஸ்ட் மியூசிக் கோலேஜ்ல சேர்த்து விடு.." என்று அனிருத் சொல்ல,
   
அவனை நமட்டு சிரிப்புடன் பார்த்த ஹர்ஷா,
           "ஓகே ஓகே.. டாட் இவன் க்ளாஸ்ல ஜொய்ன் பன்றதுக்கான ஃபோமலிட்டீஸ்ஸ பாருங்க.." என்று சொல்லி விட்டு தன் தாத்தாவை பார்க்க அவரின் அறையை நோக்கி சென்றான்.

வாசல் வரை சென்றவன் ஒரு பெருமூச்சு விட்டவாறு,
            "ஐ அம் சாரி தாத்தா.. நேத்து ரொம்ப டயர்ட் அதான் உங்கள பார்க்க வர முடியல.." என்று கெஞ்சிக் கொண்டே உள்ளே சென்றவன் வீல்ச்சேரில் உட்கார்ந்து தன் கையில் ஒரு ஃபோட்டோவை பார்த்தவாறு கலங்கிய கண்களோடு இருக்கும் தன் தாத்தா துருவேந்திரனை பார்த்தவனுக்கு எப்போதும் போல் மனது பிசைய ஆரம்பித்தது.

அவர் அருகில் சென்றவன் முட்டி போட்டு அமர்ந்து,
             "நானும் சின்ன வயசுல இருந்து பார்க்குறேன்.. எப்பவும் இந்த ஃபோட்டோவையே பார்த்துகிட்டு கண்கலங்கி கிட்டு இருக்கீங்க.. இந்த ஃபோட்டோல இருக்குறவங்க யாரு தாத்தா இப்பவாச்சும் சொல்லலாமே.." என்று கெஞ்சுதலாக கேட்க,

அவன் புறம் பார்வையை திருப்பியவர் அவன் கன்னத்தை வருடியவாறு,
           "இது உன் அத்தை ஹர்ஷா.." என்று சொல்ல அவன் கண்களோ ஆச்சரியத்தில் விரிந்து கொண்டது.

            "என்னது அத்தையா.. ஆனா நா இவங்கள பார்த்ததே இல்லையே.. இப்போ எங்க இருக்காங்க.. ஒருவேள உங்ககிட்ட ஏதும் சண்டை பிடிச்சு வீட்டை விட்டு ஏதும் போயிட்டாங்களா என்ன.." என அவன் தெரிந்தும் கொள்ளுள் ஆர்வத்தில் கேட்க,

இல்லை என தலையாட்டியவரை பார்த்தவன் சற்று யோசித்து விட்டு,
              "அப்போ இவங்க எங்க இருக்காங்கன்னு சரி சொல்லுங்க.. நா இவங்கள சமாதானம் பன்னி கூட்டிட்டு வரேன்..உங்களுக்காக தாத்தா.." என்று அவரை சமாதானம் செய்யும் நோக்கில் பேச அதற்கு ஒரு விரக்தியான புன்னகையை மட்டுமே பதிலாக கொடுத்தவர் தன் வீல் ச்சேருடன் அங்கிருந்து நகர்ந்து போக,

அவர் செய்கையில் குழம்பியவன் அந்த ஃபோட்டோவையே பார்த்தவாறு,
            "முதல்ல இதை டிடெக்டிவ் ஏஜென்சில கொடுத்து இவங்கள பத்தி விசாரிக்க சொல்லனும்.." என மனதில் குறித்து கொண்டவன் அந்த ஃபோட்டோவில் கம்பீரமாக நின்றுக் கொண்டிருந்தவளை உற்று நோக்க அந்த முகம் அவனுக்கு நன்கு பரீச்சியமானது போல் தோன்ற தவறவில்லை..

   
ஒரு வாரம் கழித்து,

            "வேல் ஹரியும், ரியாவும் எப்போ ஊரிலிருந்து வர்றாங்க.." என வேலைக்கு செல்ல ஆயத்தமாகி டைனிங் டேபிளில் சாப்பிட அமர்ந்த வேலிடம் ஆதிரா கேட்க,

            "இப்போதைக்கு வர ஐடியா இல்லை அத்தை.. பாட்டிக்கு உடம்பு முடியலல்ல அதனால அம்மா அவங்க கூட இருக்காங்க.. அம்மா அங்க இருக்குறதால.." என்று கூறவந்தவளை இடை வெட்டி,

           "உன் அப்பா அங்கேயே டேரா போட்டுட்டாரு அதானே..." என்று கயல் சிரிப்புடன் சொல்ல,

           "அதே.. அதே.." என சிரித்துக் கொண்டு தலையாட்டினாள் வேல்.

இவர்கள் பேசிக் கொண்டிருக்க திடீரென,

            "என்ன தான் டி நினைச்சிக்கிட்டு இருக்க உன் மனசுல.. யாரு டி அவன்.." என்ற தேவ்வின் குரலில் ஹாலில் இருந்தவர்கள் சட்டென சத்தம் வந்த திசையை நோக்கி திரும்பி பார்க்க அங்கு தேவ்வோ காச் மூச் என அனாவிடம் கத்திக் கொண்டு வர அவளோ அதை எல்லால் சட்டை செய்யாது வாயில் லொல்லிப்பப்பை சப்பிக் கொண்டு படிகளில் தாவி குதித்து வந்துக் கொண்டிருந்தாள்.

             "ஏய்ய் நானும் கேட்டுக்கிட்டு இருக்கேன்.. பொம்பள புள்ளையா அடக்க ஒடக்கமா இருக்காம அவன் கூட பைக்ல ஊர் சுத்திகிட்டு இருக்க..உன்னால குடும்ப மானமே போகுது.." என தேவ் அவளை திட்ட,

            "ஆமா டா என்னால குடும்ப மானம் போகுது.. நீ அப்பிடியே எவரெஸ்ட் உச்சியில இந்திய கொடியை நாட்டி நாட்டுக்கும் வீட்டுக்கும் பெருமை சேர்த்து தந்துட்ட.. போடா போடா என் டொமேட்டோ.." என்று இவளும் பதிலுக்கு வார,

அதில் கோபத்தின் உச்சத்திற்கே சென்றவன்,
              "உன்னெல்லாம் எவன் கட்டிக்கிட்டு வாழ்க்கை ஃபுல்லா வாங்கி கட்டிக்க போறானோ.. ஆக்ச்சுவல்லி( Actually) உன்ன கட்டிக்கிறதும் எருமை மாட்ட கட்டிக்கிறதும் ஒன்னு தான்.. இரண்டுமே என்ன பேசினாலும் காதுக்கே வாங்கிக்கிறது இல்லை.. குட்டிச்சாத்தான்.. குட்டிசாத்தான்.." என்று திட்டி சலித்து கொள்ள,

             "ஹாஹாஹா.. என்னை கட்டிக்கயாச்சும் எவனாவது வருவான்.. உனக்கெல்லாம் கல்யாணம் ஆகுறதே டவுட் தான்.." என்று அனா அவனை கேலி செய்ய,

           "ஏன் ஏன் ஏன்.. என்ன என்னை வெறுப்பேத்துறியா.. நீ வேணா பாரு.. ஹைட்டா வைட்டா நச்சுன்னு ஒரு ஃபிகர உஷார் பன்னி கல்யாணம் பன்னிக்கல்ல.. என் பேரு தேவ் இல்லை டி.." என அவன் சவாலாக சொல்ல,

            "போடா தாஸு.. நீ எல்லாம் உன் அப்பா உன் அம்மா கால்ல விழுந்து கல்யாணம் பன்ன மாதிரி எவ கால்லயாவது விழுந்து கல்யாணம் பன்னா தான் உண்டு.." என அனா சிரிப்புடன் சொல்ல,

சாப்பிட்டு கொண்டிருந்த அபியோ,
              "யாரு டா அது நம்மள வெளிப்படையா பங்கம் பன்றது.." என சட்டென நிமிர்ந்து பார்க்க ஆதிராவோ வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்தாள்.

கயலோ கன்னத்தில் கை வைத்தவாறு அனாவையே பார்த்து கொண்டு,
             "என் பொண்ணு என்னை மாதிரியே இருக்கால்ல சிடுமூஞ்சி.." என்று உணர்ச்சி பொங்க தன் பக்கத்திலிருந்த ஆதியிடம் சொல்ல,

அவள் தலையில் நங்கென்று ஒரு கொட்டு வைத்தவன்,
             "எனக்கு பிரச்சினையே அதான் டி ராட்சசி.." என்று தான் பெத்த மகராசியை மூக்கு விடைக்க முறைத்து விட்டு நகர்ந்தான் ஆதி.

அப்போது சரியாக தன் அறையிலிருந்து ரெடி ஆகி மித்ரா படிகளில் இறங்கி வரவும் தியா வரவும் சரியாக இருந்தது. டைனிங் டேபிளில் அமர்ந்தவள் தன் தங்கையிடம்,
            "கொலேஜுக்கு கிளம்பிட்டியா தியா.." என்று சாப்பாட்டை எடுத்து வைத்தவாறே கேட்க,

            "ஆமாக்கா.. நீயே என்னை ட்ரோப் பன்றியா.." என கண்கள் மின்ன தியா கேட்டதில்,

சாப்பாட்டை வாயில் வைக்க போனவள் அப்பிடியே ஒரு நொடி நின்று சற்று யோசித்துவிட்டு,
             "எப்பவும் போல போ தியா.. இன்னொரு நாள் பார்க்கலாம்.." என்று இறுகிய முகமாக சொல்ல தியாவின் முகமே சுருங்கி விட்டது.

கம்பனிக்கு வந்ததிலிருந்து இந்த ஒரு வாரமாக எந்த ஒரு ஆட்டத்தையும் ஆரம்பிக்காது அமைதியாக இருந்தவள் இன்று ஓஃபிஸிற்கு கிளம்பி சென்றவுடன் RD software developmentsற்கு எதிராக தன் முதல் அடியை கச்சிதமாக செயற்படுத்தினாள் மித்ரா.

தொடரும்..🔥
------------------------------------------------------------------ 

 don't forget to give ur comments guys..
           keep motivating me..😍😍

-ZAKI🔥

 

Zakiya


ReplyQuote
Jade Javid
(@jadejavid)
Trusted Member Writer
Joined: 7 months ago
Posts: 68
22/09/2020 5:24 am  

                  தீண்டாதே 05🔥

மியூசிக் கொலேஜில்,

அனைத்து மாணவர்களும் க்ளாசில் ஆசிரியர் சொல்லும் குறிப்புக்களை எழுதிக் கொண்டிருக்க திடீரென,
            "மே ஐ கம் இன் சார்.." என்று வாசலில் கேட்ட குரலில் எல்லாருமே ஒருசேர திரும்பி பார்த்தனர்.

தியாவும் அனாவும் வாசலில் நின்றிருந்தவனை ஆர்வமாக பார்க்க அவனோ ஆசிரியரின் அனுமதியோடு உள்ளே வந்தவன் தன்னை ஆசிரியருக்கு புது மாணவன் என்ற ரீதியில் அறிமுகப்படுத்தி விட்டு அனைத்து மாணவர்கள் மத்தியில் தன்னை அறுமுகப்படுத்தும் பொருட்டு,
         "ஹாய்ய் காய்ஸ் ஐ அம் அனிருத்.." என்று சொல்ல தியாவோ 'க்ளுக்..' என சிரித்து விட்டாள்.

சட்டென கேட்ட சிரிப்பு சத்தத்தில் அவளை பார்த்தவன் உதட்டில் மென் புன்னகையை படரவிட்டவாறு தனக்கான இடத்தில் சென்று அமர்ந்து கொள்ள,  இசை தொடர்பான நுட்பங்கள் பற்றி ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்க அதை தீவிரமாக கவனித்துக் கொண்டிருந்த தியாவோ ஏதோ ஊசி துளைக்கும் பார்வையை உணர்ந்து திரும்பி பார்க்க இவள் பார்ப்பதை உணர்ந்த அனிருத் சட்டென ஆசிரியர் பக்கம் தன் பார்வையை திருப்பிக் கொண்டான்.

இதே போல் இரண்டு மூன்று தடவைக்கு மேல் அனிருத் பார்ப்பதும் இவள் பார்த்தவுடன் திரும்பிக் கொள்வதுமாக விளையாட்டு காட்ட தன் பக்கத்திலிருந்த அனாமிகாவை சுரண்டிய தியா அவள் காதருகில் ரகசியமாக,
            "அனா அந்த பையன் என்னையே பார்க்குறான் டி.." என கிசுகிசுக்க,

அவளோ தியாவின் புறம் பார்வையை திருப்பாமலே,
         "உன்னையா.. எவன் டி அவன்.." என்று மெதுவாக கேட்டாள்.

அவளும் ஆசிரியரை கவனித்தவாறே,
           "அதான் டி இன்னைக்கு புதுசா வந்த பையன் அனிருத்.. அவன் தான்.." என்று சொல்ல அனாவோ சட்டென திரும்பி தியாவை பார்த்து விட்டு திரும்பி அவனை ஒரு பார்வை பார்க்க அனிருத்தோ இவர்களை பார்த்து "ஹாய்ய்.." என கை அசைத்து காட்டினான்.

அதில் விழிவிரித்த அனா தியாவிடம்,
           "ஆமா டி.. வந்து முழுசா ஒரு நாள் கூட ஆகல.. அதுக்குள்ள நம்மகிட்ட வாலாட்டுறான்.. க்ளாஸ் முடியட்டும் அப்றம் அவனை கவனிச்சிக்கலாம்.." என்று சொல்ல,  தியாவும் "ம்ம்.." என்று சொல்லியவள் அதன் பிறகு அவன் பார்ப்பதை உணர்ந்தும் அவன் புறம் பார்வையே திருப்பவில்லை.

அன்றைய நாளுக்கான வகுப்பு முடிய அனிருத்தை பற்றி சுத்தமாக மறந்த தியாவும் அனாவும் வீட்டுக்கு செல்வற்காக தங்கள் வண்டியை நோக்கி செல்ல,
            "ஹாய்ய் க்யூட்டீஸ்.." என்ற அனிருத்தின் குரலில் சட்டென நின்று திரும்பி பார்த்தனர்.

அவனோ அவர்கள் அருகில் வந்து இடது கையை தன் ஜீன்ஸ் பாக்கெட்டுக்குள் விட்டவாறு மற்ற கையால் தனது தோள் பேக்கை பிடித்தவாறு,
            "ஹாய்ய் ஐ அம் அனிருத்.. மே ஐ நோ யுவர் ஸ்வீட் நேம்ஸ்.." என்று கேட்க,

அவனின் நுனி நாக்கு ஆங்கிலத்தில் அவனை மேலிருந்து கீழாக ஒரு மார்கமாக பார்த்த அனா,
            "ஏய்ய் என்ன.. அப்பிடியே லண்டன்ல இருந்து உன்ன பார்சல் பன்னி இங்க அனுப்பி விட்டுட்டாங்களா.. பெரிய வெள்ளைக்கார துரை மாதிரி இங்லிஷ்ல தத்தபித்தன்னு பேசிக்கிட்டு இருக்குற.." என கிண்டலாக சொல்ல,

           "ஹேய்ய் எப்பிடி கண்டுபிடிச்ச.. நிஜமாவே ஐ அம் ஃப்ரொம் லண்டன்.." என்று சிரித்த முகமாக சொல்ல, தியாவோ மனதில் 'ஓஹோ.. இவன் நிஜமாவே வெளிநாட்டு பார்ட்டி தானா..' என சலிப்பாக நினைத்துக் கொண்டாள்.

           "வாவ்வ் நீ லண்டனா.. நாங்கெல்லாம் ஒருத்தரோட முகராசியை வச்சே ஆள எடை போடுவோம்ல.. நம்ம திறமை அப்புடி.."  என அனா பெருமையாக கோலரை தூக்கி விட்டுக் கொள்ள அதில் அனிருத்தும் பதிலுக்கு பேச என இருவரும் அடுத்தடுத்தென்று ஏதோ நீண்ட நாட்கள் பழகியது போன்று 'டா' போட்டு பேசும் ரேஞ்சிற்கு சென்றுவிட்டனர்.

இதில் அனிருத் அனாவிடம் வளவளத்துக் கொண்டிருந்தாலும் அவன் பார்வையோ அதிக ஒப்பனை இல்லாமல் மஞ்சள் நிற சுடியில் தேவதை போல் இருக்கும் தியாவிடமே அடிக்கடி பதிந்து மீண்டது. அனிருத் தன்னை பார்ப்பதை உணர்ந்த தியாவோ அனாவிடம்,
           "அனா நா வண்டி பக்கத்துல போய் வெயிட் பன்றேன்.. நீ சீக்கிரம் பேசிட்டு வா.." என்று சொல்லி விட்டு நகர, அவனோ செல்லும் அவளையே தான் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் பார்வையை உணர்ந்த அனா போகும் தியாவையும் அனிருத்தையும் மாறி மாறி பார்த்து,
           "ஏய்ய் என்ன லுக்கு வேற மாதிரி இருக்கு.. எங்க அப்பா மாமா எல்லா யாருன்னு தெரியுமா.. CBI ஓஃபீஸர்.. அவகிட்ட வாலாட்டுற வேலை எல்லாம் வச்சிக்காத.. அதுவும் அவ அக்கா ரொம்ப டெர்ரர் உன் கண்ண நோண்டிபுடுவாங்க நோண்டி.. பீ க்யார்ஃபுல்.." என்று மிரட்டும் தோரணையில் சொல்ல,

அதில் ஒற்றை கண்ணை சிமிட்டி சிரித்தவன், "லெட்ஸ் ஃப்ரென்ட்ஸ்.. " என்று கையை நீட்ட, அனாவும் அனிருத்தின் வெளிப்படையான கலகலப்பான பேச்சில் கவரப்பட்டு "ஃப்ரென்ட்ஸ்.." என்று அவனுடன் கை குலுக்கினாள்.

"ஓகே பாய்ய் டா லண்டன்.. நாளைக்கு பார்க்கலாம்.." என்று சொல்லி விட்டு அனா தியாவை நோக்கி ஓட அப்போது தான்அனிருத்திற்கு  தான் இன்னும் அவர்களிடம் பெயரையே கேட்கவில்லை என நினைவு வர,
         "ஹேய் ஹேய் உங்க பேர சொல்லவே இல்லையே.." என்று  கத்தி கேட்டதில்,

அனாவும் தூரத்திலிருந்தே,
            "என் பேரு அனாமிகா.. அவ ஆராத்யா.." என்று சிரித்தவாறு சொல்லிவிட்டு போக, தங்கள் வண்டியில் செல்லும் தியாவையே பார்த்துக் கொண்டிருந்தவன் இதழ்களோ தியாவை நினைத்து, "ஏன்ஜல்.." என முனுமுனுத்துக் கொண்டது.
--------------------------------------------------------------

ஆரா Software solutions,

          இங்கு ஓஃபீஸில் இருந்த மித்ராவோ லேப்டாப்பில் தன் வேலையை பார்த்தவாறே ஒரு எண்ணிற்கு அழைப்பை எடுக்க மறுமுனையில் அழைப்பு ஏற்கப்பட்டவுடன் அந்த நபரிடம்,
             "சொன்ன வேலை என்னாச்சு.." என கேட்க,

மறுமுனையிலோ,
             "நீங்க சொன்ன மாதிரி பன்னிட்டேன் மேடம்.. இப்போ எல்லாமே அவங்க கை மீறி போயிருச்சி.. அந்த க்ளைன்ட் ப்ரோஜெக்ட் அ கேன்சல் பன்னிட்டாங்க.." என்று சொல்ல,

          "க்ரேட்.." என்று மட்டும் சொன்னவள் பின் சிறிய மௌனத்திற்கு பிறகு"கேஷ் டெபோசிடட்(Cash deposited) " என்று சொல்லி அழைப்பு துண்டித்து தன் முதல் அடியை கச்சிதமாக முடித்ததில் ஏற்பட்ட வெற்றிப்புன்னகையை தலைமுடியை கோதி இதழுக்குள் அடக்கியவாறு வேலையில் மும்முரமானாள்.

அவளை எதிரே இருந்து பார்த்துக் கொண்டிருந்த ரவி,
            "மேடம்.." என்று தயங்கியவாறு அழைக்க, மித்ராவோ லேப்டாப்பில் பார்வைவை பதித்தவாறு, "ம்ம்.." என்று மட்டும் அவன் பேசுவதற்கு அனுமதி அளித்தாள்.

           "அது வந்து மேடம்.. இப்போ வரைக்கும் அந்த கம்பனிக்கும் நம்ம கம்பனிக்கும் எந்த பிரச்சினையும் இல்லை.. இப்போ நீங்க பன்றதால இரண்டு கம்பனிக்குள்ள தேவையில்லாத பிரச்சினைய.." என்று அவன் சொல்லி முடிக்கும் முன்பே தன் வேலையை நிறுத்தி அவனை நிமிர்ந்து அவள் பார்த்த பார்வையே அவன் பேச்சை தடுத்து நிறுத்தியிருந்தது..

தன் கதிரையில் லாவகமாக சாய்ந்து அமர்ந்தவள் 'மேல சொல்லு..' என்ற ரீதியில் ஒரு பார்வை பார்க்க அவனோ தயக்கமாக,
            "இல்லை மேடம் சும்மா செவனேன்னு போற வம்ப நாமளே விலைக்கு வாங்குறது போல இருக்கு.. அவங்களும் நமக்கு ஈக்குவலான சென்னையில ரொம்ப பெரிய கம்பனி தான்.. எதும் பிரச்சினை.." என்று தட்டுத்தடுமாறி ரவி சொல்லி முடிக்க,

அவனை உற்று நோக்கியவள்,
            "மிஸ்டர் ரவி ஒரே கேள்வி தான்.. இங்க நீங்க எம்.டியா இல்ல.." என்று இழுக்க ரவியோ சட்டென்று, "நீங்க தான் மேடம்.." என்று பதட்டமாக சொல்ல,

          "புரியுதுல்ல.. அப்போ மைன்ட் யுவர் ஓன் பிஸ்னஸ் ஓகே.. நா சொல்ற வேலைய நீங்க செய்தா மட்டும் போதும்.." என்று மித்ரா பல்லை கடித்துக் கொண்டு சொல்லி விட்டு மீண்டும் லேப்டாப்பில் பார்வையை பதிக்க,

அவனோ வாயை வைத்து சும்மா இல்லாமல் மீண்டும், "ஒரு வார்த்தை கயல் மேடம்கிட்ட.." என்று சொல்லி முடிக்கவில்லை விழியை மட்டும் உயர்த்தி அவனை உக்கிரமாக முறைத்தாள் மித்ரா.

           "ரவி உங்களுக்கும் ஃபேமிலி, கஷ்டம், நஷ்டம்னு எல்லா இருக்கும்னு நினைக்கிறேன்.. உங்க வேலைய மட்டும் நீங்க பார்த்தா எல்லாம் நல்லதாவே நடக்கும்.. அதிகப்பிரசங்கித்தனமா வீட்ல சொன்னிங்க அப்றம் இங்கேயும் வேலை போய் வேற எங்கேயும் வேலை  தேட முடியாதபடி பன்னிருவேன்.. புரியுதா.. ஜஸ்ட் கெட் அவுட் ஃப்ரொம் ஹியர்.." என்று ஆரம்பத்தில் அவனை அழுத்தமாக பார்த்தவாறு ஒவ்வொரு வார்த்தையாக அழுத்தி சொல்லியவள் இறுதியில் பெண் சிங்கமாக கர்ஜிக்க அவனோ விட்டால் போதுமென அறையை விட்டே ஓடி விட்டான்..
----------------------------------------------------------------

அன்று மாலை,
       ஹர்ஷா வீட்டில்,

  ஒரு வாரமாக தன் நண்பர்கள் மூலம் தன் மதுவை பற்றி விசாரித்தவன் அவளை தேடி தேடி ஒரு தகவலும் கிடைக்காது களைத்து போய் ஒரு கட்டத்தில் எப்போதும் போல் அவள் ஃபோட்டோ உடனே புலம்ப ஆரம்பித்து விட்டான் நம் ஹீரோ..

"மது.." என்ற பெயரை அழுத்தி சொன்னவன் " இந்த பெயரை தவிர உன்ன பத்தி வேற எதுவுமே தெரிஞ்சிக்காம முட்டாள் மாதிரி இருந்திருக்கேன் டி.. எங்க தான் டி இருக்க.. இப்போ என்ன பன்னிக்கிட்டு இருக்க.. அய்யோ இப்பிடி தனியா என்னை புலம்ப விட்டுட்டியே மோகினி.." என அவள் ஃபோட்டோவை பார்த்து தலையை பிய்த்துக் கொண்டிருந்தவனுக்கு ஒரு கட்டத்தில் தலை வலியே வந்து விட்டது.

அறையிலிருந்து வெளியே வந்தவன் மாடியிலிருந்து பார்க்க ஹோலில் அவன் தந்தை ராஜ்தீப் தலையில் கை வைத்தவாறு சோஃபாவில் டென்ஷனாக அமர்ந்திருக்கும் காட்சியே கண்ணில் பட்டது.

யோசனையோடு புருவத்தை நெறித்தவன் மாடியிலிருந்து இறங்கி அவர் அருகில் சென்று அமர்ந்து,
           "என்னாச்சு டாட் ஏன் ஒரு மாதிரி டென்ஷனா இருக்கீங்க.." என்று அவர் தோளில் ஆறுதலாக கை வைத்தவாறு கேட்க,

அவரும் பெருமூச்சுவிட்டவாறு,
          "உனக்கே தெரியும் ஹர்ஷா.. எனக்கு மத்த எல்லா பிஸ்னஸ்ஸ விட நம்ம சொஃப்ட்வெயார் கம்பனி எவ்வளவு முக்கியம்னு.. இதுவரைக்கும் எந்த பிரச்சினையும் இல்லாம நல்லா தான் போயிக்கிட்டு இருந்திச்சு.. பட், முதல் தடவை ஒரு பெரிய ப்ரோஜெக்ட் மொத்தமா சொதப்பிருச்சி.." என்று சொல்ல,

அவனோ திகைத்து பார்த்து,
        "வாட்.. என்ன டாட் சொல்றிங்க.. என்னாச்சு.. எப்பிடி ப்ரோஜெக்ட் சொதப்பிச்சு.. நீங்க தான் எதையும் ஒன்னுக்கு இரண்டு தடவை அலசி ஆராய்விங்களே.. அப்றம் எப்பிடி.." என்று கேட்க,

          "தெரியல.. ஆனா நேத்து நைட் கூட அந்த ப்ரோஜெக்ட் சரியா தான் இருந்துச்சி.. இன்னைக்கு மோர்னிங் க்ளைன்ட்கிட்ட ஒப்படைக்க எல்லா பக்காவா ரெடி பன்னிருந்தேன்.. அதுக்குள்ள என்னாகியிருக்கும்.. எனக்கு ஒன்னுமே புரியல.." என ராஜ்தீப் குழம்பியவாறு சொல்லியதில்,

சற்று யோசித்த ஹர்ஷா,
           "டேட் கேமரா ச்செக் பன்னிங்களா..உங்களுக்கு யார் மேலயாச்சும் சந்தேகம் இருக்கா.." என்று கேட்க,

அவரோ இல்லை என தலையாட்டி, " கேமரா ச்செக் பன்னதுல யாரு மேலயும் சந்தேகப்படுற மாதிரி இல்லை ஹர்ஷா..பட், கண்டிப்பா நம்ம கம்பனிலயே இருந்துகிட்டு நமக்கு எதிரே யாரோ இதை பன்னிருப்பாங்கன்னு தான் எனக்கு தோணுது.. அது யாருன்னு தான் தெரியல.." என பல்லை கடித்துக் கொண்டு கூறினார் ராஜ்தீப்..

ஒரு முடிவெடுத்த ஹர்ஷா,
           "டாட் நாளைல இருந்து நா கம்பனிக்கு வரேன்.. அது யாருன்னு நா கண்டுபிடிக்கிறேன்.." என்று தீவிரமாக சொல்ல,

          "இவ்வளவு நாளா இதை நீதானே பார்த்துகிட்ட ஹர்ஷா.. படிச்சிக்கிட்டே கம்பனிய பொறுப்பெடுத்து யு.எஸ்ல இருந்தே எல்லா ப்ரோஜெக்ட்ஸ்ஸயும் சரியா தான் கவனிச்சிக்கிட்டு வந்த.. இப்போ ஒரு ஆறு மாசமா தான் இதை நா பார்த்துக்குறேன்.. நீ கொஞ்ச நாள் ரெஸ்ட் எடு பா.. அதுக்கப்றம் கம்பனிக்கு வந்தா போதும்.." என்று ராஜ்தீப் மறுக்க,

          "இல்ல டாட்.. நா நாளைக்கே கம்பனிக்கு வரேன்.. புல்லா இருக்கும் போதே புடிங்கி எறியுறது தான் நமக்கு நல்லது.. நானும் வீட்ல சும்மா தானே இருக்கேன்.. எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லை டாட்.." என்று ஹர்ஷா சொன்னதற்கு தன் மகனை மெச்சுதலாக ஒரு பார்வை பார்த்தவர்,
            "என்னோட மொத்த சந்தோஷமும் பெருமையும் நீதான் கண்ணா.." என கூறியவாறு அவனை அணைத்து கொள்ள, "லவ் யு பா.." என தன் தந்தையை புன்னகையுடன் அணைத்துக்  கொண்டான் ஹர்ஷா.

அதே சமயம்,

இங்கு மித்ராவோ தனது அறையில் கண்கள் சிவக்க தந்தையினதும் மகனிதும் பாச நெருக்கத்தை பார்த்து பொறுக்க முடியாது,

          "என் சந்தோஷத்தை அழிச்சிட்டு என்னை அநாதையா தவிக்க விட்டுட்டு நீ எப்பிடி டா சந்தோஷமா இருக்கலாம்.. உன் மகன் தானே உன் சந்தோஷம்.. உன் மகன வச்சே ஆடுறன் டா ஆட்டம்.. நீ சாகுற ஒரு நொடி முன்னாடி ஏன் இந்த பாவத்தை செய்து தொலைச்சேன்னு நினைக்கிற அளவு வக்கல நா ஆருத்ராவோட பொண்ணு  இல்லை டா.." என கோபத்திலும் ஆத்திரத்திலும் தன் அறையிலிருந்து மொத்த பொருட்களையும் தூக்கி போட்டு நொறுக்கிக் கொண்டிருந்தாள் அந்த அக்னி பாவை.

அவசரமாக தன் தொலைபேசியில் தேடி எடுத்து ஒரு எண்ணிற்கு அழைப்பை எடுத்தவள் அடுத்து செய்ய வேண்டிய தன் மொத்த ப்ளானையும் கூறி,

         "சொன்னது சொன்ன மாதிரி நடக்கனும்.. எதுவும் மிஸ் ஆகிற கூடாது.. அடுத்தடுத்துன்னு நா கொடுக்குற அடியில தன்னை சுத்தி என்ன நடக்குதுன்னே தெரியாம அவன் குழம்பித் தவிக்கனும்.. சீக்கிரம் வேலைய முடிச்சிட்டு இன்ஃபோர்ம் பன்னு.." என்று சொல்லி அழைப்பை துண்டித்தவள் அறியவில்லை தான் அழிக்க நினைப்பவன் முன் அரணாக தன்னவனே தன்னை எதிர்த்து நிற்க போகிறான் என்று..

தொடரும்..🔥
-------------------------------------------------------------------          
        frnds ud epidinnu unga comments a solluga.. thank u so much for ur love and support😍😍
          Keep motivating me with ur comments Guys..❤❤

-ZAKI🔥

 

Zakiya


ReplyQuote
Jade Javid
(@jadejavid)
Trusted Member Writer
Joined: 7 months ago
Posts: 68
24/09/2020 5:22 am  

                      தீண்டாதே 06🔥

           "பொம்மு குட்டி அம்மா சொல்லுங்க.. .அம்ம்ம் மா.. சொல்லு டா.. ப்ளீஸ் அம்மா சொல்லு டா.."  என ஆருத்ரா குழந்தையிடம் கெஞ்சிக் கொண்டிருக்க,

          "நீ வேணா பாரு ஆரு.. என் பொம்மு குட்டி அப்பான்னு தான் சொல்லுவா.. நீ சொல்லு செல்லம் அப்ப்பாஆஆ.. சொல்லு.." என்று ஆர்யன் ஒரு பக்கம் குழந்தையிடம் தன்னை அப்பா என்று அழைக்க சொல்லி கெஞ்சிக் கொண்டிருக்க,

            "குழந்தை எப்பவுமே முதல்ல அம்மான்னு தான் சொல்லும் ஆரா.. நீ வேணா பாரு அவ அம்மான்னு தான் சொல்ல போறா.." என ஆருத்ரா கூறியதற்கு அவளை போலியாக முறைத்தவன்,

            "ஆனா, என் பொண்ணு அப்பான்னு தான் சொல்வா.. அவ அப்பா செல்லம்.. நீ தான் வயித்தெறிச்சல்ல குமுற போற.." என தன் மனைவியை வம்பிழுக்க,

அந்நேரம் இருவரையும் மலங்க மலங்க பார்த்துக் கொண்டிருந்த அந்த ஒரு வயது சின்ன மொட்டு தன் பிஞ்சு கைகளை ஆர்யனின் புறம் நீட்டியவாறு, "ப்ப் ஆஆ.." என்று சொல்ல ஆர்யனுக்கோ சந்தோஷம் தாளவில்லை.

"என் பட்டு என்னை அப்பான்னு கூப்பிட்டுட்டா.."என கத்தியவாறு உற்சாகத்தில் குழந்தையை தூக்கி போட்டு பிடிக்க ஆருத்ராவுக்கோ தன்னவனின் சந்தோஷத்தை பார்த்து கண்களே கலங்கி விட்டது. குழந்தையை சுற்றியவன் தன் காதல் மனைவியையும் இழுத்து சுற்றியதோடு அந்த வீடியோ நிற்க,

லேப்டாப்பில்  அதை பார்த்துக் கொண்டிருந்த மித்ராவுக்கோ தன் தாய் தந்தையின் அன்றைய பூரிப்பு தனக்கும் தொற்றிக் கொண்டது போல் அவள் அழுத்தமான இதழ்களிலும் கீற்றாக ஒரு மெல்லிய புன்னகை தோன்றியது. அந்நேரம் அவள் முகத்தை பார்த்த எவரும் இது மித்ரா தான் என்று அடித்து கூறினாலும் நம்ப மாட்டார்கள்.. இறுகிய முகம் அந்தளவு மென்மையாக இருந்தது.

கண்களிலிருந்து ஒரு சொட்டு கண்ணீர் விழ. "அக்கா உள்ள வரலாமா.." என்ற தியாவின் குரலில் கண்களை துடைத்துக் கொண்டவள் லேப்டாப்பை மூடி வைத்து விட்டு "உள்ள வா தியா.." என்று சொன்ன மித்ரா நிஜமாகவே தன் முகத்தை சாதாரணமாக மாற்ற அரும்பாடு பட்டாள் என்று தான் சொல்ல வேண்டும்..

உள்ளே வந்த தியா,
           "அக்கா..." என்று எப்போதும் போல் தன் அக்காவையே ஆர்வமாக பார்த்தவாறு நிற்க,

           "வெயிட் தியா.." என்றவள் தன் பீரோவிலிருந்து ஒரு பார்சலை எடுத்து அவளிடம் நீட்ட அதை புரியாமல் வாங்கி பிரித்து பார்த்த தியா அதில் தனக்கு மிகவும் பிடித்த வயலின் இருப்பதை பார்த்து உற்சாகமாக,
           "வாவ்வ் சூப்பர்கா.. ஐ லவ் இட்.. ரொம்ப தேங்க்ஸ் கா.." என்று துள்ளி குதித்தவள் தன் அக்கா தனக்கு முதல் தடவை பரிசு தந்த சந்தோஷத்தில் அவளை தாவி அணைக்க முகத்தில் எந்த வித உணர்ச்சியையும் காட்டாது சிலை போலே நின்றாள் மித்ரா.

           "அக்கா நீயும் சின்ன வயசுல வயலின் வாசிக்க கத்துக்கிட்டன்னு அத்தை சொன்னாங்க.. எனக்காக ஒரு தடவை வாசிச்சு காட்டுக்கா.." என தியா கெஞ்சலாக கேட்க,

          "ஐ அம் சொரி தியா .. " என்று மித்ரா தனக்கு இதில் விருப்பமில்லை என்பதை வெளிப்படையாக சொல்லி விட அதில் முகத்தை சுருக்கி நின்ற தங்கையை பார்த்தவள்,
            "கொலேஜுக்கு கிளம்பலையா தியா.." என கேட்க,

           "போகனும் கா.." என்று வாடிய மலராக சொன்னவள் திரும்பி நடக்க போக அவளது சோகம் மித்ராவின் மனதை பிசைந்தது போல
           "சீக்கிரம் ரெடி ஆகு.. நானே உன்னையும் அனாவையும் ட்ரோப் பன்றேன்.." என சொல்லி விட்டு குளியலறைக்குள் புகுந்து கொள்ள தியாவுக்கோ ஒரே குஷி தான்.. துள்ளி குதித்து ஓடியவள் அடுத்த பத்து நிமிடத்தில் ரெடி ஆகி ஹோலில் ஆஜராகியிருந்தாள்.

            அனாமிகாவுக்கும் மித்ராவுடன் செல்வதில் ஆர்வமாக இருக்க இருவரையும் கொலேஜுக்கு அழைத்துச் சென்றவள் போகும் வழியெல்லாம் எதுவுமே பேசாது இறுகிய முகத்தோடு இருந்தாள். கொலேஜ் வாசலில் அனாவும் தியாவுடன் இறங்கியவுடன் தியா தன்னிடம் ஒரு அன்பான வார்த்தைக்காக ஏக்கமாக பார்ப்பதையும் கூட உணராது ட்ரைவரிடம் வண்டியை எடுக்குமாறு கூறி கார் கண்ணாடியை மூடி விட்டாள் மித்ரா.. இதில் முகம் சுருங்கி கண்கள் கலங்க நின்றுக் கொண்டிருந்த தியாவை சமாளிப்பதற்கு அனாவுக்கு தான் போதும் போதும் என்றாகிவிட்டது.

தன் காரை சரியாக AD டிடெக்டிவ் ஏஜன்சி முன் நிறுத்த சொன்னவள் ஓஃபீஸ் வாசலில் கார் நிறுத்தப்பட்டவுடன் இறங்கி மின்னல் வேகத்தில் உள்ளே சென்று தேவ்வின் கேபினை திறந்து கொண்டு அவன் முன் முறைத்துக் கொண்டு நிற்க, அப்போது தான் மேசையில் சாய்ந்தவாறு ஒரு க்ளைன்ட் தொடர்பாக ஃபைலை பார்த்துக் கொண்டிருந்தவன் இவளின் அதிரடி வருகையில் திடுக்கிட்டு இவளையே மிரட்சியுடன் பார்த்தவாறு நின்றான்..

தன்னை சுதாகரித்தவன்,
         "மித்ரா நீ இங்க.." என்று தன் கேள்வியை கேட்டு முடிக்கவில்லை,

          "சொன்ன வேலை என்னாச்சு தேவ்.." என மித்ரா குறுக்கிட்டு அவனிடம் அழுத்தமாக கேட்டதில், தேவ் தான் மனதில் 'க்கும்.. கிராதகி அவ காரியத்துல மட்டும் கண்ணா இருக்கா..' என மனதில் நொடிந்து கொண்டவாறு அவள் முன் இருந்த மேசையில் மூன்று ஃபைல்களை தூக்கி போட்டான்.

ராஜ்தீப், திலகன், மினிஸ்டர் சப்தகிரி பற்றிய மொத்த தகவல்களும் இருக்கும் அந்த ஃபைல்களை எடுத்து பார்த்தவள் கண்களோ மின்ன, அவள் கண்கள் கூறிய செய்தியே தேவ்விற்கு தப்பா தான் தோன்றியது.

        "மித்ரா ராஜ்தீப் பத்தி டீடெய்ல்ஸ் கலெக்ட் பன்னும் போது அவன் வெளியுலகத்துக்கு தெரியாம பன்ற சில பிஸ்னஸ் பத்தியும் தெரிஞ்சிக்க முடிஞ்சது.. அதுல ஒன்னு தான் பதினைஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ஆர்யன் மாமா ஹேன்டல் பன்ன கேஸ்.. என்னால அவனுக்கு எதிரா சில எவிடென்ஸ் கூட கலெக்ட் பன்ன முடிஞ்சது.. இதை அப்பா கிட்ட கொடுத்து அவனுங்களுக்கு சரியான தண்டனைய வாங்கி கொடுக்கலாம்.." என தேவ் பேசிக் கொண்டே செல்ல,

அவன் பேசியதை பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தவள் கடைசியாக அவன் பேசியதில் புருவத்தை உயர்த்தி ஏளன சிரிப்போடு மார்புக்கு குறுக்கே கைகளை கட்டியவாறு,
              "இதை நாம பொலிஸ்கிட்ட ஒப்படைச்சி அவன உள்ள தூக்கி போட்டு டிபார்ட்மென்ட்ல இருக்க அவன் ஆளுங்க அடுத்த பத்து நிமிஷத்துல அவன முழு மரியாதையோட ரிலீஸ் பன்னி வீட்டு வாசல் வரை கொண்டு போய் விட்டு திரும்பவும் அவன் என் கண்ணு முன்னாடி நடைமாடிக்கிட்டு இருப்பான்.. அதை என்னை கையாளாகாதவளா பார்த்துக்கிட்ட இருக்க சொல்றியா.." என்று ஆரம்பத்தில் நிதானமாக ஆரம்பித்து கர்ஜனையில் முடிக்க தேவ் தான் சற்று ஆடிப்போய்விட்டான்.

           "அவன ஜெயில்ல தூக்கி தான் போடனும்னா அதை நா எப்போவோ பன்னிருப்பேனே.. அவனுங்களுக்கு இதெல்லாம் தண்டனை கிடையாது.. அவனுங்கள என்ன பன்னனும்னு நா முடிவு பன்னிட்டேன்.." என்று மித்ரா கண்களில் மொத்த பழி வெறியையும் தாங்கி சொல்ல,
அதில் தேவ்விற்கு தான் கோபம் உச்சத்தை தொட்டது.

            "பைத்தியம் மாதிரி உளராத மித்ரா.. நம்மகிட்ட எவிடென்ஸ் இருக்கு.. லீகலா இதுக்கு என்ன ஏக்ஷன் எடுக்கனுமோ அப்பாகிட்ட சொல்லி அதை நா பாத்துக்குறேன்.. சும்மா சைக்கோ மாதிரி பழிவாங்க போறேன் பேர்வழின்னு  பிரச்சினைல போய் மாட்டிக்காத.." என்று கத்திய தேவ்வை பார்த்த மித்ராவிற்கு கோபத்தில் முகம் சிவக்க,

      "உன்னால முடிஞ்சா என்னை தடுத்து பாரு.." என்று அவனை எதிர்த்து தன்னால் எதுவும் செய்ய முடியாது என்ற ரீதியில் அவள் திமிராக பேசியதில் சுர்ரென்று ஏற்பட்ட கோபத்தை அடக்க வழி தெரியாது தன் நெற்றியில் தானே வெளிப்படையாக அடித்துக் கொண்டான் தேவ்தாஸ்.

     "தேவ்.." என்று கத்தியவாறு உள்ளே வந்த அரவிந்த் அங்கு மித்ரா இருப்பதை பார்த்து குதூகலமாகி,
             "மித்ரா நீ இங்க என்ன பன்ற.. ஏதும் முக்கியமான விஷயமா.. வீட்லயே சொல்லிருக்க வேண்டியது தானே.. எதுக்கு இங்க எல்லாம் வந்துகிட்டு.." என அக்கறையா கேட்க,

இதைப் பார்த்த தேவ்வோ, "ஆண்டவா..இவன் வேற தனியா பெஃபோர்மன்ஸ் பன்னிகிட்டு இருக்கானே.." என வாயுக்குள் முனுமுனுக்க சரியாக அந்நேரம் வேலுவும் தேவ்வின் கேபினுக்குள் நுழைந்தாள்.
 
அவளை பார்த்த தேவ்,
           "வா மா மின்னல்.. நீ என்ன மா பன்ற இங்க.." என கிண்டலாக கேட்க,

            "இல்ல.. இந்த பக்கம் ஒரு முக்கியமான கேஸ் விஷயமா இன்வெஸ்டிகேஷனுக்கு சீனியர் ஓஃபீஸரோட வந்தேன்.. அதான் அப்பிடியே உங்களையும் பார்த்துட்டு போகலாமேன்னு.." என்று கூறி வேல் இழுக்க,

           "உன் மாமா மேல அவ்வளவு பாசமா வேலு டார்லிங்.." என தேவ் கிண்டலாக அரவிந்த்தை கண்ஜாடை காட்டி கேட்டதில் அவனை கண்களாலே மிரட்டினாள் வேல்.

           "அது ஒன்னு இல்ல அரவிந்த்.. உங்க ஓஃபீஸ்ஸ பார்க்கலாமேன்னு தான்.. சரி நா கிளம்புறேன்.." என்று நகர போன மித்ரா
"நா வேணா உன்ன ட்ரோப் பன்னவா.." என்று கேட்ட அரவிந்த்தை மேலும் கீழும் 'லூசா நீ..' என்ற ரீதியில் ஒரு பார்வை பார்த்து விட்டு நகர்ந்து போக,

தேவ் தான் 'காதலுக்கு கண்ணில்லன்னு சொல்வாங்க புத்தி கூடவா மழுங்கி போயிரும்..' என மனதில் நினைத்தவாறு,
         "அறிவு கெட்டவனே.. அவ்வளவு பெரிய கம்பனிய வச்சி மேய்க்கிறா.. சொந்த வண்டில வராம நடந்தா ஓஃபீஸுக்கு வந்திருப்பா.. " என கூறி தலையிலடித்துக் கொள்ள, அரவிந்த்திற்கு அப்போது தான் மண்டையில் உரைக்க 'ஹிஹிஹி..' என அசடுவழிந்தவாறு தன் அறைக்கு சென்றான்.

இங்கு வேலுவுக்கோ அரவிந்த்தின் நடவடிக்கையில் மித்ரா வந்த பிறகு வித்தியாசம் தெரிய முகம் சுருங்கி யோசித்துக் கொண்டிருந்தவள் தோள் மேல் கை போட்ட தேவ்,

            "வேலு நம்ம இரண்டு பேருக்கும் நம்ம பேருல தான் பிரச்சினைன்னு நினைக்கிறேன்.. வேணா நாம போய் நம்ம பேர மாத்திரலாமா.. அப்றம் பாரு எதிர்நீச்சல் சிவகார்த்திகேயன் மாதிரி அதுக்கப்றம் வாழ்க்கை அமோகம் தான்.. என்ன சொல்ற.." என்று கேட்க,

           "வேணாம் டா.. அப்பா மாமாவுக்கு தெரிஞ்சது பிரச்சினை ஆகிறும்.. அதுமட்டுமில்லாம இது என் தாத்தாவோட அம்மா பேரு.. ரொம்ப தெய்வீகமான பேராம்.. இதுல எதாவது திருகுதாளம் பன்ன போய் சாமி குத்தம் ஆகிருச்சினா சாமி கண்ண குத்திடும்.." என்று வேலு சொல்ல, தேவ்விற்கு தான் அய்யோ என்றாகிவிட்டது.

           "நீ நிஜமாவே பொலிஸ் தானா.. உன்னெல்லாம் திருத்தவே முடியாது.." என்று தலையிலடித்து விட்டு செல்ல,

வேலுவோ, "டேய்ய் நா அவிந்த் அ கரெக்ட் பன்ன ஐடியா கொடுத்துட்டு போடா.." என்று அவன் பின்னாலே கத்திக் கொண்டு ஓடினாள்.

இன்றோடு ஹர்ஷா தன் தந்தையின் RD Software developments கம்பனியை பொறுப்பேற்று சில நாட்கள் கடந்திருக்க தன் ஓஃபிஸில் தங்களுக்கு எதிராக செயற்படும் ஸ்பையை அவனால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. 'எப்படியும் பட்சி ஒருநாள் சிக்காமலா போகும்..' என்று தன் கழுகு கண்களை கொண்டு காத்திருந்தவன் சிந்தனையை கலைக்கும் விதமாக தொலைபேசி ஒலிக்க அதை ஏற்று காதில் வைத்தவன் மறுமுனையில் சொன்ன செய்தியில் "வாட்.." என்று உச்ச கட்ட அதிர்ச்சிக்கு சென்று விட்டான்.

ஓஃபீஸிலிருந்து கிளம்பியவன் தன் காரில் மின்னல் வேகத்தில் பறந்து RD கன்ஸ்ட்ரக்ஷன் இனால் தற்போது கவர்மென்ட் டென்டரினால் ஒப்படைக்கப்பட்ட புது பில்டிங் கட்டப்பட்டிக் கொண்டிருக்கும் சைட்டுக்கு வந்து நிற்க, காரிலிருந்து இறங்கியவன் அங்கு டென்ஷனாக ச்சீஃப் இன்ஜினியரிடம் கத்திக் கொண்டிருக்கும் தன் அப்பாவிடம் வேக எட்டுக்களுடன் சென்று நின்றான்.

        "என்னாச்சு டாட்.. எப்பிடி பில்டிங் ஓட டிசைன் மாறிச்சு.." என்று கேட்ட ஹர்ஷாவை பார்த்த ராஜ்தீப்பிற்கு அப்போது தான் சற்று தெம்பு வந்தது போல் இருந்தது..

         "தெரியாது ஹர்ஷா.. என்ன நடக்குதுன்னு ஒன்னுமே புரியல.. இப்போ தான் ப்ரோஜெக்ட் கென்சல் ஆனதால வந்த நஷ்டத்தை ஈடு செய்ய முடிஞ்சது.. அதுக்குள்ள இப்போ.." என்று சொன்னவரின் குரலிலிருந்த கோபம் அப்பட்டமாக தெரிந்தது.

         "டாட் ஒருவேள உங்க ஓப்போஸிட் கம்பனிங்க யாராவது.." என்று ஹர்ஷா இழுக்க,

         "நாம எதிரிய எப்போ ஹர்ஷா விட்டு வச்சிருக்கோம்.. நீ சொன்ன மாதிரி தான் புல்லா இருக்கும் போதே அதை புடுங்கி எடுத்துரனும்.. நம்ம கம்பனியோட மோத யாருக்கு தைரியம் இருக்கும்.." என்று ராஜ்தீப் அந்த நேரத்திலும் பெருமையாக சொல்ல,

       "சொல்ல முடியாது பா.. சீக்கிரம் நமக்குள்ள இருந்துகிட்டு நமக்கு எதிரா செயற்படுறவங்கள கண்டுபிடிக்கனும்.. இதுல வர்ற நஷ்டத்தை நீங்க அடுத்த ப்ரோஜெக்ட்ல மீட்டெடுத்துருவீங்கன்னு எனக்கு தெரியும் டாட்.. டோன்ட் வொர்ரி.. மொதல்ல நீங்க டென்ஷன் ஆகாதீங்க.. இனிமே நா பாத்துக்குறேன்.." என்று சொன்ன ஹர்ஷா ச்சீஃப் இன்ஜினியரிடம் என்ன செய்ய வேண்டும் என்று தகவல்கள் கூறியவன் தன் P.A வருணிடம் CCTV கேமராவை ச்செக் செய்யுமாறு சொல்லிக் கொண்டிருக்க ஏதோ ஊசி துளைக்கும் பார்வையை உணர்ந்தவனுக்கு இனம் புரியாத உணர்வு மனதில் தோன்ற "மது.." என்று வாயில் முனுமுனுத்தவாறு சட்டென்று திரும்பி பார்த்தான்..

ஹர்ஷா இருக்கும் சைட்டுக்கு எதிரே ஒரு கார் நிறுத்தப்பட்டிருப்பதை பார்த்தவன் தன் பக்கத்திலிருந்த வருணிடம்,
           "அது யாரோட கார் வருண்.." என்று அதையே பார்த்தவாறு கேட்க,

            "அது ஆரா சொஃபௌட்வெயார் சொல்யூஷன்ஸ் எம்.டி ஓட கார் சார்.. அடிக்கடி பார்த்திருக்கேன்.. அதனால தெரியும்.. பட், சார் இப்போ புது எம்.டி வந்திருக்காங்களாம் யாருன்னு தான் தெரிய மாட்டேங்குது.." என்று வருண் ஹர்ஷாவிடம் யோசனையாக சொல்லிக் கொண்டிருக்க இவ்வளவு நேரம் நின்றிருந்த கார் நகர்ந்து சென்றதில் யோசனையாக புருவத்தை சுருக்கியவன் அடுத்து ஆக வேண்டிய வேலையை செய்ய ஆரம்பித்தான்.

இங்கு மித்ராவோ ஹர்ஷாவை பார்த்துக் கொண்டிருந்தவள் தன் திட்டம் சரியாக செயல்படுவதில் வெற்றிப் புன்னகை ஒன்றை இதழில் படரவிட்டவாறு காரை ஸ்டார்ட் செய்ய அவள் இதழ்களோ,
             "சீ யு சூன் மித்து.." என்று சொல்லிக் கொண்டது.

தொடரும்..🔥
---------------------------------------------------------------------

  Thank u so much for ur love and support guys..😍😍
         Keep motivating me with ur comments🔥

-ZAKI🔥
      

 

Zakiya


ReplyQuote
Jade Javid
(@jadejavid)
Trusted Member Writer
Joined: 7 months ago
Posts: 68
27/09/2020 8:12 pm  

                    தீண்டாதே 07🔥

       கண்ணழகா  காலழகா..
           பொன் அழகா பெண் அழகா..
     எங்கேயோ தேடி செல்லும் விரலழகா
        என் கைகள் கோர்த்து கொள்ளும் விதமழகா..

             என்ற பாடலை தியா தன் மயக்கும் குரலால் எதிரே உள்ளவர்களை கட்டிப்போட்டு மயக்கிய வண்ணம் பாடிக் கொண்டிருக்க அனிருத்தோ அவள் காந்த குரலில் மெய்மறந்து அவளையே விழி அகலாது பார்த்தவாறு இருந்தான். வகுப்புக்கு இன்னும் ஆசிரியர் வராததால் மாணவர்கள் அரட்டை அடிக்க அப்போது தான் விளையாட்டாக தியாவை பாட சொல்ல அவளும் பாட ஆரம்பித்தது.

பின் எப்போதும் போல் அவர்களுக்கான வகுப்புக்கள் நடைபெற மதிய இடைவேளையின் போது சிரித்து பேசிக் கொண்டிருந்த அனா தியா இருந்த இருக்கை முன் இருந்த இருக்கையில் துள்ளிக் குதித்து இருக்கையின் சாய்வு பக்கம் திரும்பி உட்கார்ந்து அவர்களை பார்ப்பது போல் வந்தமர்ந்தான் அனிருத்.

அவன் திடீர் வருகையில் திடுக்கிட்ட அனா,
            "டேய்ய் டேய்ய் டேய்ய் குரங்குப்பயலே.." என்று திட்ட அவனோ அதை எல்லாம் காதில் கூட வாங்கவில்லை.

அவள் திட்டியதில் வாயைப் பொத்திக் கொண்டு சிரித்த தியாவை பார்த்தவன் அவள் சிரிப்பு தனக்கும் ஒட்டிக் கொண்டது போல் அவளையே புன்னகையுடன் பார்த்தவாறு,
          "இன்னைக்கு ரொம்ப அழகா பாடின... யு ஹேவ் அ ப்ரைட் ஃப்யூச்சர்.. ஓவ்சம்  வொய்ஸ் (Awesome voice).. " என்று சொல்ல தியாவுக்கோ நிஜமாகவே சந்தோஷம் தாளவில்லை.. மெல்லிய புன்னகையை மட்டும் சிந்தியவள் "தேங்க்ஸ்.." என்று ஒற்றை வார்த்தை மட்டுமே பதிலாக கொடுத்தாள்.

அப்போது அனாவிற்கு தொலைப்பேசியில் குறுஞ்செய்தி வர அதைப் பார்த்தவள் இருவரிடமும் திரும்பி,
           "சரி வாங்க க்ளாஸ் ஸ்டார்ட் ஆக முன்னாடி வெளில போயிட்டு வரலாம்.." என்று சொல்லியவாறு அவள் முன்னே அவசரமாக நடக்க அனிருத்தும் தியாவும் அவள் பின்னாலேயே சென்றனர்.

வெளியில் வந்த அனாவை கண்ட ஒருவன்,
      "ஹாய்ய் அனா.." என்று கூப்பிட்டவாறு 'வா' என்ற ரீதியில் சைகை செய்ய, " வெயிட் காய்ஸ்.." என்று கூறியவாறு அவனிடம் ஓடினாள் அனா.

போனவள் அப்பிடியே அவனுடனும் அவன் நண்பர்களுடன் சிரித்து சிரித்து பேசியவாறு நிற்க அவர்களை பார்த்து முகத்தை சுழித்துக் கொண்டு நின்ற தியாவை பார்த்த அனிருத்,
         "ஏன்ஜல் வு இஸ் தட்(Who's that).. அவ போய் ஃப்ரென்ட் ஆஆ.." என்று சந்தேகமாக கேட்க,

         "அப்படி எல்லாம் இல்லை.. ஜஸ்ட் ஃப்ரென்ட் தான்.." என்ற தியாவின் முகத்தில் அப்பட்டமாக எரிச்சல் வெளிப்பட்டது.

அனாவோ அங்கிருந்துக் கொண்டே,
         "தியா நீ க்ளாசுக்கு போ.. க்ளாஸ் முடியிரதுக்குள்ள நா வந்துருவேன்.. அப்படியும் நா வரலன்னா நீ வண்டிய எடுத்துட்டு வீட்டுக்கு போயிருடி.. ஓகே பாய்ய்.."  என்று கத்தி விட்டு அவனுடன் காரில் ஏறி செல்ல,

அதைப் பார்த்த அனிருத்தோ,
          "ஹே அங்க பாரு அவ அவங்க கூட கிளம்பி போறா.." என ஆச்சரியமாக கேட்க,

             "அவ அப்பிடி தான் நாங்களும் எத்தனையோ முறை சொல்லிட்டோம்.. கேக்க மாட்டேங்குறா.. ஃப்ரென்ட் ஃப்ரென்ட்னு அவன் பின்னாடி சுத்திகிட்டு இருக்கா.." என்று தியா கடுப்பாக சொல்ல,

          "அப்போ வீட்ல சொல்ல வேண்டியது தானே.." -அனிருத்

          "மாமாவுக்கு இந்த விஷயம் தெரியாது.. தெரிஞ்சா பெரிய பிரச்சினை ஆகிறும்.. அவங்க என்ன ஃப்ரீடம் கொடுத்தாலும் இந்த மாதிரி பன்ன அல்லோவ் பன்ன மாட்டாங்க.. இவ பன்றது தெரிஞ்சா வெளிலயே விட மாட்டாங்க.." என்று சொல்ல,

          "என்ன பொருத்த வரைக்கும் நீ வீட்ல சொல்றது தான் சரின்னு தோணுது.. ஏன்னா இவனுங்க மூஞ்ச எல்லாம் பார்த்தா அவ்வளவு நல்லவனுங்க மாதிரி தெரியல.." என்று அனிருத் வடிவேல் பாணியில் சொல்ல,

அதில் லேசாக சிரித்த தியா,
              "எனக்கும் அப்பிடி தான் தோணுது.. சரி வா க்ளாசுக்கு போலாம்.." என்று கூறி விட்டு அவள் செல்ல முதன் முறையாக தியா அவனுடன் தயக்கமின்றி பேசியதில் அவனுக்கு உச்ச கட்ட ஆச்சரியமாக இருக்க அதை சொல்லி கெடுக்க விரும்பாமல் அவளை ரசித்தவாறே அவளுடன் சேர்ந்து நடந்தான் அனிருத்.
-------------------------------------------------------------------

      "மச்சான் டேய்.. டிக்கெட் கிடைச்சதா டா.." என்று தேவ் தியேட்டரில் இருந்து கத்த டிக்கெட் கௌன்ட்டரில் இருந்த அவன் நண்பனோ டிக்கெட்டை வாங்கி விட்டு அங்கிருந்தே கைகளை உயர்த்தி 'டொன்டடொய்ன்...' என்று கத்தியவாறு தூக்கி காட்டினான்.

      "சூப்பரூஉஉ.." என்று வெற்றிக்குறி  போட்ட தேவ், "எவ்வளவு நாள் தான் வேலை வேலைன்னு அலைஞ்சிகிட்டு இன்னைக்கு ஒரு நாள் செம்மையா என்ஜோய் பன்றோம்.." என்று பேசியவாறு தன் நண்பனுடன் தங்களுக்கான இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

படமும் ஆரம்பமாக பொப்கோர்ன் சாப்பிட்டவாறு சீட்டின் நுனியில் உட்கார்ந்து ஆர்வமாக பார்த்துக்  கொண்டிருந்த தேவ்வை சுரண்டிய அவன் நண்பன்,
          "டேய்ய் அங்க பாரு டா.. அந்த பொண்ணுஉஉ.." என்று இழுத்தவன் யோசித்தவாறே,
            "உங்க வீட்டு பொண்ணு மாதிரி இருக்கு.. ஒரு பையன் கூட வந்திருக்கா.." என்று சொல்ல,

தேவ்வோ திரையிலிருந்து பார்வையை திருப்பாமலே,
           "போடா வெங்காயம்.. எங்க வீட்டு பொண்ணுங்க எல்லாம் சொக்க தங்கம் டா.. ஒழுக்கத்துக்கு மறுபெயரே அவங்க தான்.. அவங்கள போய் பையன் கூட வந்திருக்கான்னு கதையடிக்கிற.. கன்னத்துல போட்டுக்கோ.." என்று சொல்ல,

          "இல்ல மச்சான் அந்த பொண்ணு பார்க்க அப்பிடியே உன் கசின் அனாமிகா மாதிரியே இருக்கா.. அதான்ன்..." என அவன் நண்பன் சொல்ல,

சட்டென அவன் புறம் பார்வையை திருப்பிய தேவ்,  'அந்த குட்டிச் சாத்தானா.. அப்போ வாய்ப்பிருக்கு.." என நினைத்தவாறு தன் நண்பன் பார்வை செல்லும் திசையை நோக்க சிப்ஸ்ஸை சாப்பிட்டவாறு பக்கத்தில் உள்ளவனை அடித்து சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருந்தது சாட்சாத் அனாமிகாவே தான்.

அதைப்பார்த்தவனுக்கோ கோபம் ஏகத்துக்கும் எகிற,
           'குடும்ப மானத்தை வாங்குறதுக்குன்னே அலையுறா.. இவள பெத்த அந்ந இரண்டு முட்டா பீசுங்கள தான் சொல்லனும்.. செல்லம் கொடுத்து கெடுத்து வச்சிருக்குதுங்க.. கேட்டா டாட்ஸ் லிட்டில் பிரின்ஸஸ்னு சொல்லி ஊர ஏமாத்த வேண்டியது.. அய்யோ அய்யோ...' என நினைத்து மானசீகமாக தலையிலடித்துக் கொண்டவன், அவள் அந்த பையனுடன் சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருப்பதை அதற்கு மேல் பார்க்க முடியாது,
          "வா டா மச்சான் போகலாம்.. இவ வீட்டுக்கு தானே வந்தாகனும்.. அப்போ கவனிச்சிக்கிறேன்..." என்று தன் நண்பனை இழுத்துக் கொண்டு தன் அத்தை மகளை முறைத்தவாறே சென்றான் தேவ்.
----------------------------------------------------------------

ஹர்ஷா வீட்டில்,

            ஓஃபீஸிலிருந்து வீட்டுக்கு வந்த ஹர்ஷா அப்போது தான் குளித்து உடை மாற்றி கட்டிலில் அமர்ந்தவன் எப்போதும் போல் தன்னவளின் படத்தையே பார்த்தவாறு திரையில் தெரிந்த அவள் முகத்தை விரலால் வருடியவன்,
       "எவ்வளவு நாள் தான் என்கிட்ட இருந்து ஒழிஞ்சிக்கிட்டு இருக்கன்னு நானும் பார்க்குறேன்.. பட், என்னமோ தெரியல டி நீ என் பக்கத்துல இருக்குற மாதிரி தோணுது.. என்னை பார்த்துகிட்டே இருக்குற மாதிரி மது.. சரியான மோகினி டி நீ.." என மானசீகமாக தன்னவளுடன் பேசியவாறு ஹர்ஷா இருக்க,

அப்பொழுது சட்டென கதவை திறந்து கொண்டு ஓடி வந்த அனிருத் கட்டிலில் தாவி குதித்து, "ப்ரோ..." என கத்தியவாறு ஹர்ஷா அருகில் அமர்ந்தவன் அவன் தொலைபேசி திரையில் தெரிந்தவளை பார்த்து,
         "வாவ்வ்.. ஷீ லுக்ஸ் கோர்ஜியஸ்.." என கூறி விழிவிரித்தவன் தன் அண்ணணிடம்,
          "யாரு ப்ரோ இவங்க.." என்று கேட்க, ஹர்ஷாவோ திரையிலிருந்து பார்வையை விலக்காமல் தன்னவளை பார்த்து இதழ்விரித்து சிரிக்க அதிலே அவனுக்கு புரிந்து விட்டது.

          "நிஜமாவா ப்ரோ.. நீ லவ் பன்றியா.. சூப்பர்... அண்ணி ரொம்ப அழகா இருக்காங்க.. வட்ஸ் ஹெர் நேம்.. எங்க இருக்காங்க.. எப்போ ப்ரோ கல்யாணம்.. இந்தியன் வெடிங் எல்லா நா போனதே இல்லை.. ப்ளீஸ் சீக்கிரம் கல்யாணம் பன்னிக்கோ.." என்று பேசிக் கொண்டே அனிருத் செல்ல,

ஹர்ஷாவோ தன்னவளையே பார்த்தவாறு,
"மது.." என்று மட்டும் சொன்னான்.

       "மதுவா.. தமிழ் பொண்ணா.. இந்தியனா.. எங்க இருக்காங்க.." என்று அனிருத் கேட்டதற்கு,

'ஆம்' என்ற ரீதியில் மேலும் கீழும் தலையாட்டியவன், "அவ எங்க இருக்கான்னு தெரியல.." என்று சொல்ல அனிருத்திற்கு ஒரே குழப்பம் தான்.

அவனை பக்கவாட்டாக திரும்பி அனிருத்தின் முகத்திலுள்ள குழப்ப ரேகைகளை பார்த்த ஹர்ஷா தன் மனதில் உள்ள மொத்த பாரத்தையும் கொட்டி விடும் நோக்கில் நடந்தது அனைத்தையும் சொல்ல
அனிருத்தோ "வாட்..." என அதிர்ந்தே விட்டான்.

        "என்ன ப்ரோ சொல்ற நிஜமாவா.. அப்போ அவங்க எங்க இருக்காங்கன்னு கூட உனக்கு தெரியாதா.." என்று அதிர்ச்சியாக கேட்க,

இல்லை என்று யோசனையாக தலையை ஆட்டியவன் பின் தீவிரமாக, "சீக்கிரம் கண்டுபிடிச்சிருவேன் டா.. அப்பிடி இல்லைன்னா அவளே என்னை தேடி வருவா.. இல்ல,  அவளே என்னை அவகிட்ட வர வைப்பா.. என் மது டா அவ.." என்று பேசியவனை பார்த்த அனிருத்திற்கு அவன் பேசியது ஒன்றுமே புரியவில்லை.

       "ப்ரோ நா ஒன்னு கேட்டா தப்பா நினைக்க  மாட்டியே.. உனக்கு நிஜமாவே அவங்க மேல கோபம் இல்லையா..." என்று அனிருத் கேட்டதில் வாய்விட்டு சிரித்தவன்,
        "அவ மேல ஏன் டா நா கோபப்பட போறேன்.. என் உயிர் டா அவ.. அவ மேல கோபப்படுறதும் என்னை நானே தண்டிக்கிறதும் ஒன்னு தான்.. என்னைக்கும் அவ மேல தப்பு இருக்காது.. என் மது தப்பு பன்றவ இல்லை.." என்று கூறியவனின் கண்களில் தெரிந்த காதலில் அனிருத் வியந்து தான் போனான்.

இருந்தும் பேச்சை மாற்றி எண்ணி,
          "லீவ் இட் டா.. இப்போ உன் ப்ரோஜெக்ட் எப்பிடி போயிக்கிட்டு இருக்கு.." என்று அவன் கவனத்தை திசை திருப்ப,

தன் உடன்பிறவா தம்பியின் எண்ணத்தை அறிந்தும் அதை வெளிக்காட்டாமல் மெல்லிய சிரிப்புடன்,
            "சூப்பரா போயிக்கிட்டு இருக்கு டா.. ரொம்ப பெரிய டீல்.. அன்னைக்கு அந்த யு.எஸ் ப்ரோஜெக்ட் கென்சல் ஆகியும் இந்த க்ளைன்ட் இப்போ வரைக்கும் நம்ம கம்பனி மேல இருக்குற நம்பிக்கையில நம்மகிட்டயே ப்ரோஜெக்ட் ஒப்படைச்சிருக்காங்க.. இந்த ப்ரொஜெக்ட் மட்டும் சக்ஸஸ் ஆகிருச்சின்னா கம்பனிக்கு பெரிய ப்ரோஃபிட் இருக்கு.." என்று ஹர்ஷா சொல்ல,

         "நீ எப்பவும் க்ரேட் தான் டா.. இதெல்லா நீ அசால்ட்டா பன்னிருவ.. என்ட், ஏதோ ஸ்பை இருக்காங்க அப்பிடி இப்பிடின்னு அன்னைக்கு சொல்லிக்கிட்டு இருந்த அது யாருன்னு கண்டுபிடிச்சிட்டியா.." என அனிருத் கேட்க,

        "நோ டா..பட் அவன அனுப்பினவங்க மட்டும் என் முன்னாடி வந்தாங்க.. இந்த ஹர்ஷா யாருன்னு அப்போ தெரிஞ்சிக்குவாங்க.. என்கிட்டயே மோதுறாங்கல்ல.." என கண்களில் அனல் பறக்க கூறியவனை சமாதானப்படுத்திய அனிருத் ஏதேதோ பேசி அவனை திசைதிருப்பி சிரித்துக் கொண்டிருந்த அதே சமயம்,

இங்கு மித்ராவோ,

          "வாவ்வ்.. நிஜமாவே நீ க்ரேட் தான் மித்து.. அடுத்தடுத்தென்று அடி விழுந்தாலும் ஈஸியா ஓவர்கம்(Overcome)  பன்னி வந்துருவ.. பட், என்ன பன்றது பேபி அவன் மகனா போயிட்டியே வேற வழி.. ச்சு..ச்சு..ச்சு.." என்று உச்சிக் கொட்டியவள்,
           "நாம சந்திக்க வேண்டிய நேரம் வந்தாச்சு மித்து.." என மானசீகமாக தன்னவனிடத்தில் பேசிய மித்ரா தன் அடுத்த ப்ளானை பக்காவாக தீட்டினாள்.

  கதிரவன் எதற்கும் காத்திராமல் தன் செங்கதிர்கள் கொண்டு பூமித்தாயை அரவணைக்க அந்த காலை பொழுது அழகாக புலர்ந்தது.

       "அம்மா கோஃபி.." என்று கத்தியவாறு சோஃபாவில் காதில் ஹெட்ஃபோனுடன் அமர்ந்த அனாமிகாவை மாடிப் படிகளில் இறங்கி வந்துக் கொண்டே பார்த்த தேவ் அவள் அருகில் அமர்ந்து அவள் காதில் இருந்த ஹெட்ஃபோனை பிடிங்கி விட அவளோ அவனை திரும்பி 'வந்துட்டான் காட்டெருமை..' என நினைத்தவாறு உதட்டை சுழித்த வண்ணம் எரிச்சலாக பார்த்தாள்..

        "யாரு டி அவன்.." என தேவ் கேட்க,

  "எவன்.." என தன் ஃபோனை நோண்டியவாறே எதிர் கேள்வி கேட்ட அனாவை பார்த்தவனுக்கோ கோபம் ஏகத்துக்கும் எகிறியது.

அப்போதும் பொறுமையை இழுத்து பிடித்து,               
         "அதான் மேடம் நேத்து ஒருத்தன் கூட தியேட்டர்ல கெக்கபெக்கேன்னு சிரிச்சிகிட்டு படம் பார்த்திங்களே.. அவன சொல்றேன்.." என தேவ் சொல்ல,

         "கழுகு கண் தான் இவனுக்கு.. நாம என்ன பன்னாலும் கண்டுபிடிச்சிருரான்.." என நினைத்த அனா சமாளிக்கும் பொறுட்டு,
           "ஹிஹிஹி.. என் ஃப்ரென்ட்டு.. என்ட் நீ வந்திருந்தியா தாஸு சொல்லவே இல்ல.. யாரோட டா  உன் ஓஃபீஸில் வேலை பாக்குற அந்த மேனாமினிக்கி மேனகா கூட. தானே.. ஐ நோ.. ஐ நோ.." என்று சொல்லி சிரிக்க,

அதில் அவளை மூக்கு விடைக்க முறைத்தவன்,
             "செருப்பு.. சொல்றத கேக்கவே கூடாதுன்னு முடிவு பன்னிட்டியா நீ.. அவன் மூஞ்ச பார்த்தலே குழந்தைங்ககிட்ட மிட்டாய் பிடிங்கி சாப்பிடுறவன் மாதிரி இருக்கான்.." என கோபமாக பேசியவனை சலிப்பாக பார்த்தவள்,
            "ஆமா.. அவன் மூஞ்சி சரியில்லை.. உன் மூஞ்சு மட்டும் பின்னாடி ஒளிவட்டத்தோட ஜொலிக்குதோ.. எப்பவாச்சும் உன் மூஞ்சிய கண்ணாடில பார்த்திருக்கியா டா வெங்காயம்.." என்று பதிலுக்கு அனா பேச,

         'லூசா இவ.. நா என்ன சொல்றேன்.. இவ என்ன பேசுறா..' என நினைத்த தேவ் அவளை முறைத்துக் கொண்டே,
           "சரியான கெட்ட பொண்ணு டி நீ.." என்று திட்ட,

அதில் திரும்பி தேவ்வை சட்டென பார்த்தவள் பின் எதிரே தனக்கும் இவளுக்கும் சம்மந்தமில்லை என்ற ரீதியில் நிமிராமல் ஃபோனை நோண்டிக் கொண்டிருந்த தன் அண்ணனை பார்த்தவள் "அண்ணா..." என்று அழைக்க அரவிந்தோ நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.

'என்ன பன்றா இவ..' என்ற ரீதியில் தேவ் அவளையே பார்த்திருக்க, "அண்ண்ணாஆஆ..." என்று அழுத்தமாக கத்தி அனா அழைத்ததும் நிமிர்ந்து புருவத்தை சுருக்கியவாறு அவளை புரியாமல் பார்த்தான் அனிருத்.

அவளோ கண்கள் கலங்க "அண்ணாஆ..." என்று மீண்டும் அழைக்க அரவிந்தோ தன் பின்னாடி யாராவது இருக்கிறார்களா என பார்த்தவன் பின் யாரும் இல்லை என உறுதி செய்து விட்டு "என்னையா.." என சந்தேகமாக கேட்க,

        "உங்கள தான் அண்ணா.. அண்ணா.." என அவள் பாசக்குரலில் பேச,

அதில் அரவிந்தோ, "நா.. நா அண்ணனா.." என சந்தோஷத்தில் உணர்ச்சிவப்பட்டு  "சொல்லு டா தங்கச்சி மா.." என்று உருகும் குரலில் கேட்க,

          "நா கெட்ட பொண்ணா அண்ணா.." என்று கேட்ட தன் தங்கையை பார்த்தவன் சிவாஜி சேர் ரேன்ஜ்ஜில்,
          "யாரு டா அப்பிடி சொன்னது.. நீ எங்க லிட்டில் பிரின்ஸஸ் டா.. சொன்னவன் கெடக்குறான் உருப்படாத தருதலை பையன்.." என்று சொல்ல இந்த கூத்தை பார்த்துக் கொண்டிருந்த தேவ்விற்கு தான் நெஞ்சே அடைத்து விட்டது..

         "அடப்பாவத்த.. உலக நடிப்பு டா சாமி.." என்று வாயில் கை வைத்துக் கொண்டவன்,
          "இன்னும் ஒரு செகன்ட் நா இங்க இருந்தாலும் இதுங்க வைப்ஸ்(Vibes) நமக்குள்ள ஏறிரும்.. முடியல டா எப்பா.." என்று வாய்விட்டே புலம்பியவாறு தலைதெறிக்க அவன் ஓட அவன் சென்ற திசையையே வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்தவாறு பார்த்துக் கொண்டிருந்தாள் தேவ்வின் குட்டிச்சாத்தான்.

தொடரும்..🔥
------------------------------------------------------------------

-ZAKI🔥

 

Zakiya


ReplyQuote
Share: