Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

ஸகியின்"என்னை தீண்ட...
 
Notifications
Clear all

ஸகியின்"என்னை தீண்டாதே என் ஜீவனே🔥" கதை திரி  

Page 2 / 3
  RSS

Jade Javid
(@jadejavid)
Trusted Member Writer
Joined: 8 months ago
Posts: 84
05/10/2020 5:05 am  

                    தீண்டாதே 10🔥

        அந்த புகைப்படத்தை பார்த்தவளுக்கு பத்து வருடங்களுக்கு மேல் தன்னுள் புதைக்கப்பட்டிருந்த அத்தனை ரணங்களும் காயங்களும் வெளியில் வந்து அவள் மனதை குத்தி கிழிக்க சற்றும் இமைக்காது அப்புகைப்டத்தில் உள்ளவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் மித்ரா.

தன்னுடைய புத்தகத்தை எடுத்து விட்டு நிமிர்ந்தவன் அவள் கையில் உள்ளதை பார்த்து மெல்லிய புன்னகையுடன் அவளுடைய கையிலிருந்து அதை எடுத்து,
         "இது நா சின்ன வயசா இருக்கும் போது தாத்தா வீட்ல என் ஃபேமிலியோட எடுத்துக்கிட்டது..  அது தான் என் அப்பா.. ஐ ரியல்லி மிஸ் மை ஹோம்.." என்று சொல்லிக் கொண்டிருந்தவனுக்கு அப்போது தான் தன் வேலை நியாபகம் வர
        "ஹோ ஷிட்.. ஐ ஹேவ் டு கோ மது.. பை டார்லிங்.. சீ யு.." என கூறியவாறு எழுந்து வேகமாக ஓடினான்.

       இங்கு மித்ராவோ அசைவே இல்லாத உயிரற்ற சிலை போல் இருந்தவள் பின் சுயவுணர்வு பெற்று தன் உணர்ச்சிகளை போகும் வழியெங்கும் அடக்கியவாறு ஓடினாள் வொஷ்ரூமை நோக்கி..  உள்ளே சென்றவள் கதவை அடைத்து விட்டு தன் கையிலிருந்த புத்தகத்தையும் அப்படியே கீழே போட்டு அங்கிருந்த கண்ணாடியின் முன் உடைப்பெடுத்து அழுதே விட்டாள்.

சிறுவயதில் தன் வாழ்க்கையில் நடந்த அந்த கசப்பான சம்பவத்திற்கு பிறகு இப்போது வரை கௌன்ஸ்லிங் சென்றுக் கொண்டிருந்தவள் அதில் பெற்றுக் கொண்ட சிகிச்சையின் மூலமே அந்த நினைவுகளை தன்னுள்ளே புதைத்து கொண்டாள். அந்த சம்பவத்திற்கு பிறகு எல்லாரிடமும் சிரித்து பேசும் தன் இயல்பை குறும்புத்தனத்தை இழந்திருந்தாலும் தான் உண்டு தன் வேலை உண்டு என சாதாரணமாகவே இருந்தாள்.

எப்போது அப்புகைப்படத்தில் உள்ளவனை பார்த்தாளோ புதைக்கப்ட்ட அனைத்தும் வெளியில் வந்திருக்க தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாது அழுது தீர்த்தவள் கண்ணாடியின் முன் இருந்தவாறே தண்ணீரை தன் முகத்தில் அடித்து தன்னுள் கொழுந்து விட்டு எரிந்துக் கொண்டிருக்கும் அக்கினியை ஆசுவாசப்படுத்த முயற்சி செய்துக் கொண்டிருந்தாள் அந்த மங்கை.

அழுகை குறைந்திருந்தாலும் பழிவாங்கும் வெறி மனதை ஆக்கிரமிக்க சிவந்த முகத்தில் இருந்து நீர் சொட்டு சொட்டாக விழ  கண்கள் சிவந்து பற்களை கோபத்தில் நறநறவென கடித்த வண்ணம் அவள் இருந்த தோற்றமே ஒருவித பயத்தை தான் கொடுத்தது.

அன்று நடந்த நிகழ்வும் அந்த மூன்று ராட்சசன்களும் அவள் கண்முன் தோன்ற இத்தனை வருடம் தான் எதற்காக காத்திருந்தேனோ அது நடந்தது போல் தன் எதிரியை கண்டுவிட்ட மிதப்பில் அவள் இதழில் வெற்றிப் புன்னகை தோன்ற கைகளை ஊன்றி கண்ணாடியில் தன்னை தானே பார்த்து சிரித்துக் கொண்டவளுக்கு அடுத்து தான் செய்ய வேண்டிய திட்டம் மூளையில் உரைக்க
         "அச்சோ மித்து பேபி நீ அவனுக்கு மகனா பொறந்து ரொம்ப பெரிய தப்பு பன்னிட்டியே.. இப்போ பாரு.. நீ தானே கஷ்டபட போற பேபி.. ச்சு.. ச்சு..ச்சு.."  என தன்னவனுடனே மானசீகமாக பேசிக் கொண்டாள் மதுமித்ரா.

இத்தனை வருடங்களாக கௌத்தமின் வீட்டில் இருந்தவள் முதல் வேலையாக தான் தனியே தங்கிக் கொள்வதாக கூற கௌத்தமிற்கோ இதில் சுத்தமாக உடன்பாடில்லை.

       "நோ மித்ரா.. நீ தனியா போய் தங்கிக்கிறது எங்களுக்கு சரியா படல.. இங்க என்ன குறை மா.. யாராச்சும் எதாச்சும் சொன்னாங்களா.." என கௌத்தமின் மனைவி அனு அக்கறையாக கேட்க, கௌத்தமோ எதுவும் பேசாது அவளை தான் மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிய வண்ணம் பார்த்துக் கொண்டிருந்தான்.

       "ப்ளீஸ் மித்ரா அக்கா போகாதீங்க.. நீங்க இல்லைன்னா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும் ப்ளீஸ்.. ப்ளீஸ்.." என கௌத்தம் அனுவின் மகள் அக்ஷரா கெஞ்ச,

        "நா போகனும் அவ்வளவு தான்.. ஐ ஜஸ்ட் வோன்ட் டு பி அலோன்.." என கூறியவள் யாரையும் பாராது விறுவிறு என தனதறைக்கு சென்று அடைந்துக் கொண்டாள்.

வேறுவழியில்லாமல் இந்தியாவில் இருக்கும் நம்ம ஓல்ட் ஹீரோ ஹீரோயின்ஸ்ஸிற்கு அழைத்து மித்ராவின் கூத்தை கௌத்தம் சொல்ல அவர்களும் அவள் பிடிவாதம் புரிந்து, 'எல்லாம் வயசுக் கோளாறு..' என தாங்களே தப்பாக கணக்கு போட்டு சமாளித்தவாறு சம்மதிக்க அடுத்த ஒரு வாரத்தில் கௌத்தம் வாங்கியிருந்த புது ஃப்ளட்டுக்கு சென்று விட்டாள் மித்ரா.

அவள் போகும் போது கூட, பல அறிவுரைகளை கௌத்தமும் அனுவும் கூற அதில் ஒன்றாக " வீகென்ட் கௌன்ஸ்லிங் போக மறந்துடாத மித்ரா.." என்று பல தடவை சொல்லிக் கொண்டனர். ஆனால் அவள் திட்டத்தில் அவள் எடுத்த முதல் அடியே கௌன்ஸ்லிங் போகாமல் இருப்பது தான்.. எந்நேரமும் தன்னுள் இருக்கும் காயங்கள் தனக்குள்ளே இருக்க வேண்டும் உலைகளமாக கொதிக்கும் தன் மனம் அணையவே கூடாது என அப்போதே முடிவு செய்து விட்டாள்.

அதன் பிறகு வந்த நாட்கள் வகுப்பில் இருக்கும் போது ஹர்ஷாவையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருப்பவள் அவன் உணர்ந்து திரும்பி இவளை பார்த்ததும் முகத்தை திருப்பி கொள்வாள். இதை பல தடவை கவனித்தவனோ மனதில்,
       'மது ஏன் நம்மல இப்பிடி பார்க்குறா.. ஒருவேள என்மேல எதாச்சும்.." என நினைக்கவே அவனுக்கு குதூகலமாக தான் இருந்தது.

இதுவரை எந்த பெண்ணின் மீதும் ஈடுபாடு இல்லாமல் இருந்தவனுக்கு முதல் தடவை மித்ராவை பார்த்தவுடனே அவளுடைய நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு பேசும் தோரணையிலிருந்து அவள் திமிரு, நிமிர்வு பிடித்து விட அவளை சீணடுகிறேன் பேர்வழி என அவளுடன் பழக நினைத்தான்.  அவன் சீண்டி விளையாடும் போது அவள் முறைப்பிலிருந்து தப்பிக்க அவள் பார்க்காத நேரம் அவளை ரசிப்பவன் மித்ராவும் அவனை பார்ப்பதை உணர்ந்து அப்பட்டமாகவே சைட் அடிக்க ஆரம்பித்து விட்டான் ஹர்ஷா.

அதுவும் எப்போதும் தனக்கான ஒரு வட்டத்துக்குள் யாரையும் நெருங்க விடாது இறுகிய முகமாக இருக்கும் மித்ரா மீது ஒருவித சுவாரஸ்யம் அவனுக்கு தோன்ற தான் செய்தது. ஆனால் தன்னை பார்க்கும் அந்த மீன்விழியாளின் பார்வையில் காதல் இருக்கிறதா என அறியாமல் விட்டுவிட்டான் அந்த காதல் மன்னன்.
      
அன்று,        
   
        ஹர்ஷாவின் நண்பன் ஒருவன் அவனுடைய பிறந்த நாளிற்காக டிஸ்கொதேவில் பார்ட்டி ஏற்பாடு செய்திருக்க அவனுடைய வகுப்பிலிருந்த அத்தனை பேரையும் அழைத்து இருந்தான்.  ஒரு பக்கம் பார் இருக்க மறுபுறம் ஸ்டேஜ் போடப்பட்டு டிஜே பாடல்கள் ஒலிக்க நெருங்கியவாறு இளைஞர் யுவதிகள் நடனம் ஆட வண்ண வண்ண விளக்குகள் அந்த ஸ்டேஜை அலங்கரிக்க என அந்த பார்ட்டியே கலை கட்டியது.

நம் நாயகனோ அங்கிருந்த ஸ்டேஜில் தன் நண்பர்கள் மத்தியில் ஸ்டைலாக ஆடிக் கொண்டிருக்க அங்கிருந்த பெண்கள் வேண்டுமென்றே அவன் மீது உரசினாலும் அவர்கள் புறம் திரும்பி தன் மீது உரசும் பெண்களுடனும் எந்தவித சலனமுமின்றி ஹர்ஷா ஆடிக் கொண்டிருக்க அவனை ஏளனப் புன்னகையுடன் பார்த்தவாறு ஓரத்தில் ஒரு இருக்கையில் அமர்ந்திருந்தாள் நம் நாயகி..

அவளோ கண்களை சற்றும் சிமிட்டாது ஹர்ஷாவையே பார்த்திருக்க எதேர்ச்சையாக அவள் புறம் திரும்பியவன் மித்ரா இருப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டவன் அவள் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதில் பரவசமாகி ஆடியவாறே ஒற்றை புருவத்தை உயர்த்தி கண்களாலே 'என்ன' என்ற ரீதியில் கேட்டான் ஹர்ஷா.

அவளோ அவனை பார்த்தவாறே ஜூஸை அருந்திய வண்ணம் தன் கன்னக்குழி தெரிய சிரித்து வைக்க முதலில் அதிர்ச்சியில் விழி விரித்தவன் பின் மித்ரா முதல் தடவை அவனை பார்த்து சிரித்ததில் இல்லை இல்லை அவள் சிரித்தே இப்போது தான் பார்க்கிறான் அவன். அந்த ஆச்சரியத்துடன் தன் முத்துப்பற்கள் தெரிய சிரித்தவாறு தன் நண்பர்களிடம் சொல்லிவிட்டு அவளை நோக்கி ஆர்வமாக வந்தவன் அவள் பக்கத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்து சாய்ந்தவாறு மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு மித்ராவையே குறும்பாக பார்த்துக் கொண்டிருந்தான் மித்ரன்.

மித்ராவோ தன் பக்கத்தில் அமர்ந்திருந்தவனை புருவத்தை நெறித்தவாறு ஜூஸை அருந்திய வண்ணண் கேள்வியாக பார்க்க, "ட்ரிங்க் பன்ன மாட்டியா.." என ஜூஸை கண்களால் காட்டிய வண்ணம் கேட்டான் ஹர்ஷா.

      "இன்ட்ரெஸ்ட் இல்லை.." என சொன்னவள் பின் முகத்தை சுழித்தவாறு,
        "ரொம்ப தான் அந்த பொண்ணுங்க கூட உரசிக்கிட்டு ஆடுற.." என்று நக்கல் தொனியில் கேட்டவளுக்கு ஹர்ஷா தன் எதிரியின் மகன் என்பதும் மீறி அவன் அவர்களுடன் ஒட்டிக் கொண்டு ஆடியதில் சற்று கோபம் எட்டிப் பார்க்க தான் செய்தது.

        "ஹாஹாஹா..." என வாய்விட்டு சிரித்தவன், "நீ டான்ஸ் பன்னலையா.." என்று அதே சிரிப்புடன் கேட்க,

அதற்கும் 'நொட் இன்ட்ரெஸ்டட்..' என கூறுவாள் என எதிர்ப்பார்த்தவன் அடுத்த அவள் கேட்ட கேள்வியில் "வாட்.." என்று அதிர்ந்து விட்டான்.

       "ஷெல் வீ டான்ஸ்.." என அவள் கேட்டவாறு எழுந்து நிற்க அவனோ நிஜமாகவே மித்ராவை புரியாத புதிரை பார்ப்பது போல தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவளை பார்த்தவாறே எழுந்து நின்றவன் கைகளை பற்றி இழுத்து சென்றவள் ஸ்டேஜில் நடுவிற்கு கூட்டிச் சென்று அவன் கழுத்தை கட்டிய வண்ணம் அவனையே பார்த்தவாறு ஆட ஹர்ஷா தான் அவள் கேட்டதிலே அதிர்ச்சியிலிருந்து மீளாதவன் இப்போது மித்ரா தன்னை கட்டிக் கொண்டு ஆடுவதில் மேலும் விழிவிரித்து அவளை பார்த்தான்.

கொஞ்ச நாட்களே அவளை பார்த்திருந்தாலும் மித்ராவை பற்றி ஓரளவு ஊகித்து வைத்திருந்தான் ஹர்ஷா. யாருடனும் நெருங்காமல் ஒதுங்கி இறுகிய
முகத்துடன் அலைபவள் இப்போது தன்னுடன் கன்னக்குழி தெரிய சிரித்த வண்ணம் ஆடினால் அவனுக்கு தூக்கி வாரிப்போடாதா என்ன..

ஆனாலும் அவன் கைகள் அவள் கொடியிடையை வளைத்திருக்க அவனும் சிறிது நேரத்தில் தன் குழப்பம் அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு அவளுடன் மேலும் நெருங்கி அவள் நெற்றியுடன் தன் நெற்றியை முட்டியவாறு அவள் கயல்விழிகளை பார்த்தவாறே இதழில் உறைந்த புன்னகையுடன் ஆடிக் கொண்டிருந்தான்.

இருவரின் கண்களுமே மோதிக் கொள்ள ஒரு கட்டத்தில் மித்ராவுக்கோ தன் காயங்களை குளிர்விக்கும் நிலவு போன்று அவன் பார்வையின் வீச்சு தோன்ற அது தந்த இதமான உணர்வில் அவன் கண்களில் ஊடுறுவி சென்றவள் அதில் எதை தேடினால் என அவளுக்கே தெரியவில்லை. அவள் ஊடுறுவும் பார்வையில் தன்னை தொலைத்தவன் உணர்ச்சிகள் அவள் ஸ்பரிசத்தில் அலை கடல் போல் மேலெழ புதிதாக உணரும் இச்சுகமான உணர்ச்சியை கட்டுப்படுத்த வழி தெரியாது அவளிடமே சரணடைந்தான் ஹர்ஷா.

சுற்றி இருப்பவர்களையும் மறந்து செவிப்பறையை கிழிக்கும் டிஜே பாடல் சத்தத்தையும் உணராது அவளை தன்னுடன் மேலும் நெருக்கியவாறு அவள் கன்னத்தில் தன் இதழால் ஹர்ஷா கோலம் பட, ஏற்கனவே வேறு உலகில் மிதந்துக் கொண்டிருந்த மித்ராவுக்கு அவனுடைய இதழ் ஸ்பரிசம் இதத்தை கொடுக்க கண்களை மூடிக் கொண்டவள் மெல்லிய புன்னகையுடன் அதை ரசிக்க ஆரம்பித்தாள்.

அவனோ கன்னத்தை உரசியவாறு அவள் இதழ் நோக்கி வர கட்டுப்பாட்டை இழந்து அவனிடம் தொலைந்திருந்தவள் கண்முன் திடீரென ஆர்யன் ஆருத்ரா விம்பம் தோன்ற அவனை உதறி தள்ளி விட்டு விலகி நின்றவளுக்கு இதயம் வேகமாக துடித்தது..

'என்ன காரியம் பன்னிட்ட மித்ரா..' என அவள் தன்னை தானே கடிந்து கொள்ள, திடீரென அவள் தள்ளியதில் நிகழ்காலத்திற்கு வந்தவன் "ச்சே.." என சலித்தவாறு அவளை முத்தமிட முடியவில்லை என்ற ஆத்திரத்தில் எழுந்த கோபத்தை அடக்க தலைமுடியை அழுந்த கோதி தன்னை சமன் செய்தவன் அவளை நிமிர்ந்து உதட்டை பிதுக்கியவாறு ஏக்கமாக பார்க்க அவளோ கண்களை அங்கும் இங்கும் சுழலவிட்டவாறு பதட்டமாக இருந்தாள்.

அவள் மனதிலோ, 'ச்சே.. என்னை நினைச்சா எனக்கே அருவறுப்பா இருக்கு.. இவ்வளவு வீக்காடி நீ.. அதுவும் போயும் போயும் அவன் மகன்கிட்ட உன் சுயநினைவை இழந்து நிக்கிற..' என நினைத்தவாறு மானசீகமாக தன் தலையிலே அடித்துக் கொண்டாள்.

ஹர்ஷா தன்னையே விழுங்குவது போல் பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்த மித்ரா,  'எதுக்கும் இவன் கண்ண பார்க்காம அலெர்ட்டா இருந்துக்க மித்ரா.. நம்மளையே ஈஸியா மயக்கிட்டான் பாவி.." என மனதில் நினைத்தவாறு,
        "வெளில போலாமா மித்து.." என கேட்க, அங்கு இருக்கும் சத்தத்தில் அவனுக்கு சுத்தமாக அது கேட்கவில்லை.

மறுபடியும் அவனை நெருங்க தயங்கியவள், 'சில விஷயத்தை தெரிஞ்சக்கனும்னா இதை பன்னி தான் ஆகனும்..' என தனக்குத் தானே சமாதானம் கூறியவாறு அவனை நெருங்கி சற்று அவன் உயரத்திற்கு எம்பி அவன் காதருகில் "வெளில போலாமா.." என உரக்க கேட்க,

அவனும் சுற்றி முற்றி பார்த்து விட்டு 'சரி..' என தலையாட்டியவன் அவள் கைகளை பிடித்து இழுத்து கொண்டு வேற எந்த ஆணின் மேலும் அவள் இடித்து விடாது அவளை வெளியில் அழைத்து வந்து தான் பிடித்திருந்த கையை விடுவிக்க அப்போது தான் சற்று நிம்மதியாகவே இருந்தது மித்ராவுக்கு..

     ஏனோ அவளுக்கும் புரியவில்லை.. இதுவரை எந்த ஆணையும் தன்னை நெருங்க விடாதவள் காதல் என்ற பெயரில் பின்னால் வருபவர்களை எரித்து விடுவது போல் பார்க்கும் பார்வையிலேயே ஓடிவிடுவர். இப்போது ஹர்ஷாவுடன் ஒரு திட்டத்துடன் பழகினாலும் தன்னவனின் மூச்சு காற்றிலே இலகுவாக தன்னிலை இழக்க ஆரம்பித்து விடுகிறாள் அவனின் மது.

ஹர்ஷா அந்த சாலையில் முன்னே நடக்க அவனை விட்டு சற்று தள்ளியே பக்கத்தில் நடந்து வந்துக் கொண்டிருந்தாள் மித்ரா. அவள் விலகி நடப்பது அவனுக்கு கோபத்தை தூண்ட அவளை இழுத்து தன்னுடன் நிற்க வைத்தவன் எதுவுமே தெரியாதது போல் நடக்க அவளுக்கு உள்ளுக்குள் கோபம் ஏகத்துக்கு எகிறினாலும் அதை வெளிக்காட்டும் சமயம் இது இல்லை என அமைதியாகவே வந்தாள்.

        "நா உன்கிட்ட ஒன்னு கேட்கவா.." என்ற ஹர்ஷா கேட்டதில் மித்ரா அவனை கேள்வியாக பார்க்க,
       
        "ஏன் என்னை வச்ச கண்ணு வாங்காம பார்த்துகிட்டே இருக்க.. டு பி ஃப்ரான்க் நா பார்க்கிறேன்னா அது உன்ன சைட் அடிக்கிறேன்.. அப்போ நீயும்.." என குறும்பாக சிரித்தவாறு கேட்டவனது கேள்வியில் வராத வெட்கத்தை வரவழைத்தவள் இதழ் புன்னகையில் விரிய வேறுபுறம் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

அவனும் அவள் நிஜமாகவே வெட்கத்தில் முகத்தை திருப்பிக் கொள்வதாக தப்புக் கணக்கு போட அவன் மனதில் இனம் புரியாத உணர்வு தோன்ற அடுத்த சில நொடிகள் மௌனமாகவே கழிந்தது.

அம்மௌனத்தை தன் கேள்விக்காக கலைத்தவள்,
       "ஆமா மித்து.. அன்னைக்கு உன் ஃபேமிலி ஃபோட்டோ காட்டினல்ல.. அதுல உன் அப்பா மட்டும் தானே இருந்தாரு.. உன் அம்மா எங்க.." என தெரிந்துக் கொள்ளும் ஆர்வத்தில் கேட்க, அவன் முகமோ சற்று கலங்கிப் போனது.

அவன் கலங்கிய முகத்தை பார்த்தவளுக்கு மனதில் ஒரு வலி தோன்றி மறைய, 'ச்சே ஏதோ தப்பா கேட்டுட்டேன் போலயே..' என நினைத்தவாறு,
      "சோரி மித்து.. நா எதுவும்.." என அவள் இழுக்க,

தன் ஆறுதலுக்காக அவள் கையை இறுகப் பற்றியவன்,
         "ச்சே ச்சே அப்படி எல்லாம் இல்லை மது.. என்னை பெத்தவங்க அவுஸ்ட்ரேலியன்.. என் அப்பா இங்க தான் படிச்சாரு.. படிக்கிறப்பவே அவங்க கூட வாழ்ந்து இருக்காரு.. அவங்க என்னை பெத்துட்டு எங்கப்பா கையில கொடுத்துட்டு வேற வாழ்க்கைய தேடி போயிட்டாங்க.. எங்க அப்பாவோட தாத்தா ரொம்பவே ஜாதி மதம்னு பார்ப்பாரு.. அந்நேரம் என்னை கொண்டு போயிருந்தா அப்பாவ கொல்ல மாட்டாரு.. அவர் மூலமா உருவான என்னை தான் வெட்டிப் போட்டிருப்பாரு.. என்ன தான் என்னை பெத்தவ விட்டு போயிருந்தாலும் என் அப்பா என் மேல உயிரையே வச்சிருந்தாரு..

      என் அப்பாவ என் தாத்தா எவ்வளவு தடவை இந்தியா வர சொல்லியும் ஏதேதோ காரணம் காட்டி இங்கேயே என்னையும் பார்த்துகிட்டு என் தாத்தாவோட அமெரிக்காவுல இருக்கிற பிஸ்னஸ்ஸையும் பார்த்துகிட்டு இங்கேயே இருந்துட்டாரு.. கொஞ்ச நாள் கழிச்சு என் அப்பாவோட  தாத்தா இறந்த செய்தி கேட்டதும் என்னை கூட்டிக்கிட்டு இந்தியா போக அவங்க கூட இருந்தவங்க ரொம்ப பிரச்சினை பன்னிட்டாங்களாம்.. அப்போ என் தாத்தா தான் எல்லா பிரச்சினையையும் சோல்வ் பன்னாரு.. அவரு ரொம்ப நல்லவரு.. எங்க அப்பா கூட லைட்டா ஜாதி ஸ்டேட்டஸ்னு பேசுவாரு.. பட் தாத்தாக்கு அதெல்லாம் சுத்தமா புடிக்காது.." என கூறிக் கொண்டிருந்தவன் கண்கள் தன் வீட்டை நினைத்து கலங்க மித்ராவோ அவளே அறியாமல் அவன் கைகளை இறுகப் பற்றிக் கொண்டாள்.

          "யு நோ வட் மது என் அப்பாக்கு என் மேல ரொம்ப பாசம்.. எனக்காக இன்னொரு கல்யாணம் கூட பன்னிக்கல்ல தெரியுமா.." என கண்கள் மின்ன கூறியவனை பார்த்தவளுக்கு  முகம் இறுகி போக அவன் கையிலிருந்து தன் கையை விடுவித்து வேறுபுறம் திருப்பிக் கொண்டாள்.

அதைக் கவனிக்காதனோ,
           "மது பொதுவாவே நா என்னை பெத்த அந்த லேடிட ஜாடைல தான் இருக்கேன்.. முதல் தடவை என்னை பார்க்குற யாரும் என்னை இந்தியன்னு கண்டுபிடிக்கவே மாட்டாங்க.. நீ எப்பிடி கண்டுபிடிச்ச.."  என ஆர்வமாக ஹர்ஷா கேட்க,

அதில் உதட்டை பிதுக்கியவாறு "தெரியல.." என சொல்லி சிரித்தவள் தலையில் செல்லமாக தட்டியவன்,
        "உன் அப்பா அம்மா எல்லாம் என்ன பன்றாங்க மது.. நீயும் இந்தியாவா.." என கேட்க, அவளது முகம் இறுகியதை அவன் கவனிக்க தவறில்லை.

         "நா சின்ன வயசுல இருக்கும் போதே அவங்க இறந்துட்டாங்க.." என இறுகிய குரலில் சொல்லியவள் மனதில் 'அதுக்கு காரணமே உன் அப்பா தான் டா..' என சொல்லிக் கொண்டு நாவு வரை வந்த வார்த்தைகளை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டாள் மித்ரா.

அவளை லேசாக அணைத்தவன் அவள் முந்நேற்றியில் விழுந்த சிறு முடிகளை காதோரம் ஒதுக்க ஏதோ எரிமலையாக கொதித்துக் கொண்டிருந்த மனமோ அவன் அணைப்பில் மித்ராவுக்கு சற்று தணிவது போல் இருக்க அது அவளுக்கே ஆச்சரியமாகத் தான் இருந்தது.

அவளோ அவன் கண்களையே தன்னை மறந்து பார்க்க ஹர்ஷாவுடன் சிரிப்புடன் அவள் கண்களோடு தன் கண்களை கலக்க விட்டவாறு "என் மது.." என அவளுக்கு கேட்கும் வண்ணம் சொல்லிக் கொண்டான்.

திடீரென ஒரு கார் அவர்கள் முன் வந்து நிற்க அதிலிருந்து இறங்கியவர்கள் தன் கையிலிருந்த தொலைபேசியில் இருந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு மித்ராவை பார்த்து,
       "காய்ஸ் தெயார் ஷீ இஸ்.." என ஆங்கிலத்தில் அந்த வெள்ளைக்காரன் சொல்ல அச் சத்தத்திலேயே தன்னிலை பெற்று அவர்கள் புறம் சட்டென திரும்பியவர்கள் அவர்களை புரியாமல் நோக்க அங்கிருந்த ஒருவனோ மித்ராவை பார்த்தவாறே அவர்களை  நெருங்க  அவளை தன்னுடன் இறுக்கி அவளுக்கு அரணாக நின்றான் ஹர்ஷா..

தொடரும்..🔥
-----------------------------------------------------

-ZAKI🔥

 

Zakiya


ReplyQuote
Jade Javid
(@jadejavid)
Trusted Member Writer
Joined: 8 months ago
Posts: 84
07/10/2020 5:57 am  

                 தீண்டாதே 11🔥

        மித்ராவுக்கோ அவர்கள் தன்னை காட்டி ஏதோ சொல்லி தன்னை நோக்கி வருவதில் பதட்டம் மனதை கவ்விக் கொள்ள ஹர்ஷாவின் சட்டை கோலரை இறுகப் பிடித்தவாறு அவள் நிற்க அந்த நபரோ ஹர்ஷாவை பொருட்டாகவே நினைக்காமல் மித்ராவை தொட வந்தான்.

அவளோ, "மித்து மித்து போலாம் மித்து.. பயமா இருக்கு.." என பதட்டத்தில் கூறியவாறு அவனை இழுக்க ஹர்ஷாவோ சற்றும் அசைந்த பாடில்லை.

அருகே வந்த அந்த வெளிநாட்டவன் ஹர்ஷாவை தள்ளிவிடுவதற்கு அவன் தோள் மேல் கை வைக்க போன அடுத்த நொடி "ஆஆ.." என்ற கத்தலுடன் தூர சென்று விழுந்திருந்தான் அவன்.

ஹர்ஷா அவன் நெஞ்சில் உதைத்த உதையில் அவன் தூர சென்று விழுந்திருக்க மித்ராவோ விழுந்தவனை பார்த்து விட்டு அதே மிரட்சியுடன் ஹர்ஷாவை நிமிர்ந்து பார்க்க அவனோ கண்கள் சிவக்க தாடை இறுகிப் போய் கை நரம்புகள் புடைக்க இருந்த கோலம் அவளுக்கே மனதில் கிளியை ஏற்படுத்தியது.

மதுவிடமிருந்து விலகியவன் அவர்களை நோக்கி வர  விழுந்தவனை தவிர அவனுடன் வந்த மற்றவர்களோ ஹர்ஷா ரௌத்திரமான முகத்துடன் முன்னோக்கி வருவதில் இரண்டு அடி பின்னாலே அன்னிச்சையாக நகர்ந்தனர். இருந்தும் தங்களுக்கு கொடுத்த வேலையை செய்யாவிடின் அவர்களின் தலைவன் அவர்களை தொலைத்து விடுவான் என்ற பயத்தில் மித்ராவை நோக்கி வர அவர்கள் தன்னை எதிர்க்க வருவதில் வெறியானவன் அவர்களை புரட்டி எடுக்க அவனின் ஒவ்வொரு அடியிலும் அலறி விட்டனர் அவர்கள்.

ஹர்ஷாவை விழி விரித்து மித்ரா பார்த்துக் கொண்டிருக்க வந்தவர்களில் ஒருவன் அவள் எதிர்பாராத சமயம் அவள் வாயை பொத்தி அவள் ஓட விடாமல் பிடித்து இழுத்து கொண்டு செல்ல மித்ராவின் "ம்ம்.. ம்ம்.." என்ற முணங்கலில் சட்டென திரும்பி பார்த்த ஹர்ஷாவுக்கு அந்த அடியாளின் மேல் கோபம் ஏகத்துக்கும் எகிறியது. வலது கையில் இருந்த தன் காப்பை ஏற்றி விட்டவாறு அவனை நோக்கி வேக எட்டுக்களுடன் வந்தான் ஹர்ஷா.

அவர்களை மின்னல் வேகத்தில் நெருங்கி மித்ராவின்   கையை பிடித்து அவன் புறம் இழுத்தவன் அந்த அடியாளின் நெஞ்சில் கை வைத்து தள்ளி,
        "என் மதுவை தொட்டுட்டல்ல.. " என கேட்டவாறு அவனை நோக்கி வந்தவன் மித்ராவை அந்த அடியாளின் முன் நோக்கி தள்ளி, "இப்போ தொடு டா.." என கூறியவாறு நெருங்க அவனோ ஹர்ஷாவின் அடியின் பயத்திலே ஓட ஆரம்பித்து விட்டான்.

ஹர்ஷாவோ துரத்திச் செல்ல அதற்குள் வண்டியில் ஏறி இருந்த மற்றவர்கள் அந்த அடியாளையும் ஏற்றி வண்டியை மின்னல் வேகத்தில் செலுத்த துரத்தி வந்தவன் "ச்சே.." என்று அவர்களை பிடிக்க முடியவில்லை என்ற கோபத்தில் தரையில் காலை உதைத்து தன்னை ஆசுவாசப்படுத்த முயல அப்போது தான் மித்ரா நியாபகம் வந்து அவளை திரும்பி பார்த்தான்.

அவளோ , "மமா.. மமா.." என்று பயத்தில் பிதற்றிக் கொண்டு தரையையே வெறித்தவாறு நின்றுக் கொண்டிப்பதை கண்டவன் அவள் அருகில் வேகமாக ஓடி வந்து மித்ராவை இழுத்து இறுக்கமாக அணைத்து,
         "ரிலாக்ஸ் மது.. ரிலாக்ஸ்.." என முதுகை நீவி விட்டவாறு ஆறுதல்படுத்த அவளோ அவன் நெஞ்சில் புதைந்து கொண்டு அழுக ஆரம்பித்து விட்டாள். அவனும் அவளை இறுக அணைத்துக் கொள்ள சிறிது நேரத்தில் அவன் அணைப்பே அவள் பதட்டத்தை குறைக்க எதுவுமே பேசாது அவனை ஒட்டிக் கொண்டு மௌனியாக இருந்தவளை அவனும் எதுவும் கேட்காது அவள் வீட்டு முகவரியை மட்டும் கேட்டுக் கொண்டவன் தன் வண்டிலே அழைத்துச் சென்று அவள் தங்கியிருக்கும் ஃப்ளேட்டின் முன் வண்டியை நிறுத்த இறங்கியவள் அவனை திரும்பி பார்த்து, "தேங்க்ஸ்.." என்று மட்டும் சொல்லி விட்டு திரும்பி பார்க்காது சென்று விட்டாள்.

அவனோ அவளை பெருமூச்சு விட்டவாறு பார்த்து வண்டியை  தன் வீட்டை நோக்கி விட போகும் வழியெங்கும் அவனுக்கு ஒரே யோசனை தான் 'யார் அவர்கள்..' என்று..

அடுத்த மூன்று நாட்கள் மித்ரா கல்லூரிக்கு வராது இருக்க ஹர்ஷா தான் மித்ராவை காணாது தவித்துப் போனான்.. வீட்டிற்கு சென்று பார்ப்போமா என்று பல தடவை யோசித்து அவளுக்கு என்ன பிரச்சினை என்று தெரியாது குழம்பிப் போனவன் அவள் மேல் தனக்கு இருக்கும் காதலையும் அப்போதே புரிந்து கொண்டிருந்தான்.

அடுத்த நாள் காலை,

        தன் காரில் முன் பக்க சீட்டில் அமர்ந்தவாறு தன் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தவன் எதேர்ச்சையாக திரும்ப மித்ரா ஃபோனை நோண்டியவாறு வருவதை பார்த்தவனுக்கோ சந்தோஷம் தாளவில்லை. காரிலிருந்து தாவி குதித்தவன் அவளை நோக்கி ஓடி வந்து அவள் முன் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க நிற்க அவளோ கண்களை அகல விரித்து "வாட் ஹேப்பன்ட்.." என்று கேட்டவாறு ஹர்ஷாவையே புரியாமல் பார்த்தாள்.

அவனோ இடுப்பில் கை வைத்து மூச்சு வாங்கியவாறு சட்டென்று "ஐ மிஸ் யு மது.." என்று சொல்லி அவளை தாவி கட்டியணைக்க அவளுக்கு தான் அதற்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.

அவனிடமிருந்து தன்னை பிரித்து  "அது.. அது வந்து.." என திக்கித் திணறியவள் கண்களுக்கு அப்போது தான் அவனின் முழங்கையில் போடப்பட்டிருந்த கட்டு தென்பட உள்ளுக்குள் பதறியவள் வெளியிலும்,
         "என்னாச்சு மித்து.. எப்பிடி அடிபட்டிச்சு.." என பதட்டமாக கேட்க,

அவள் பதட்டத்தை ரசித்தவன் , "ஒன்னுஇல்லை மது.. சின்ன அடி தான்.." என சமாளிக்க,

       "இப்போ சொல்ல போறியா இல்லையா மித்து.." என மித்ரா உரிமையாக கடிந்து கொள்ள அவளின் தனக்கான அழைப்பில் மனம் குளிர்ந்தவன் அவளை நெருங்கி அவள் முந்நெற்றி முடியை காதோரம் ஒதுக்கி விட்டவாறு,
          "ஒன்னு இல்ல டா.. அன்னைக்கு உனக்காக சண்டை போடும் போது சின்னதா கைல அடி பட்டிருச்சி அவ்வளவு தான்.." என மென்மையாக சொல்ல மித்ராவோ மொத்தமாக அவன் மதுவாவே மாறியிருந்தாள்.

தன்னை காப்பாற்ற போய் அவனுக்கு காயம் ஏற்பட்டதில் கலங்கியவள் அவனை அதே கலங்கிய கண்களோடு ஏறிட்டு பார்க்க அவனோ பக்கென்று சிரித்து விட்டான். அவன் சிரித்ததில் காண்டானவள் அவனை நெருங்கி அவன் நெஞ்சில் இரண்டு மூன்று அடி அடித்து வாய்க்குள் அவனை அர்ச்சித்து முணுமுணுத்தவாறு முகத்தை திருப்பிக் கொண்டு கோபத்தில் செல்ல, ஹர்ஷாவோ "அச்சோ பேபி.. வெயிட் .." என கத்தியவாறு அவள் பின்னாலே ஓடினான்.

வகுப்பில் அவள் பக்கத்தில் உட்கார்ந்தவன் அவள் கையை தன் அழுத்தி பிடிக்க அவனோ அவனை நோக்கி திரும்பி,
          "சோரி மித்து.. என்னால தான்.." என்று ஏதோ சொல்ல வர அவள் உதட்டின் மேல் விரல் வைத்து தடுத்தவன்,
           "நா உனக்காக பன்றதுக்கு சோரி, தாங்க்ஸ் சொல்லிக்கிட்டு திரிஞ்ச கொன்னுறுவேன் பாத்துக்க.." என செல்லமாக மிரட்ட அவளோ அதே கலக்கத்துடன் அவன் காயம் ஏற்பட்ட கையையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவள் மனநிலையை மாற்ற எண்ணி,
            "அவங்கள உனக்கு முன்னாடியே தெரியுமா மது.." என ஹர்ஷா கேட்டதற்கு மித்ராவோ 'இல்லை' என்ற ரீதியில் இருபக்கமும் தலையாட்ட யோசனையில் புருவத்தை சுருக்கியவன்,
           "அவங்கள பார்த்தா எனக்கு சரியா படல மது.. ஏதோ ப்ளான் பன்னி உன்னை நெருங்கினது போல இருந்துச்சி.. ப்ளீஸ் பீ கெயார் ஃபுல் டா.." என அக்கறையாக சொல்ல அவனின் ஒவ்வொரு வார்த்தைக்கும் வசியம் செய்யப்பட்டவள் போல் 'சரி.. சரி.." என தலையாட்டிக் கொண்டிருந்தாள் மித்ரா.

அவன் மெலிதாக சிரிக்க அவனை நிமிர்ந்து பார்த்தவள்,
            "ஏன் எனக்காக நீ அவங்க கூட சண்டை போட்ட மித்து.. அதனால தானே உனக்கு அடிபட்டிருச்சி.." என சொன்னவளின் கன்னத்தை தாங்கியவன்  அவளை மேலும் நெருங்கி,
           "என் பேபிய அவ்வளவு சீக்கிரம் இன்னொருத்தன தொட விட்டுறுவேனா.. என் மது டி நீ.." என சொன்ன ஹர்ஷாவின் கண்களில் தெரிந்த தீவிரத்தில் மித்ரா தான் ஆடிப் போய் விட்டாள். 'என்ன இவன் இப்பிடி எல்லாம் பேசுறான்..' என நினைத்தவளுக்கு அவளது திட்டம் வேறு திசையில் செல்வதில் அய்யோ என்றாகிவிட்டது.

அவன் பார்வை வீச்சை தாங்காது மித்ரா முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொள்ள ஹர்ஷாவும் குறும்புப் புன்னகையுடன் அவளையே தான் கன்னத்தில் கை வைத்து ரசித்துக் கொண்டிருந்தான்.

அதன் பிறகு வந்த நாட்கள் வேகமாக நகர ஹர்ஷாவும் மித்ராவும் நன்றாகவே ஒன்றி விட்டனர். ஒன்றி விட்டார்கள் என்று சொல்வதை விட கல்லூரியில் அவளை தனித்து விடாது அவள் கூடவே சுற்றி கொண்டு அவளை ஒட்டிக் கொண்டு திரிந்தான் ஹர்ஷா என்று தான் சொல்ல வேண்டும்.. அவள் கூடவே சேர்ந்து சாப்பிடுவது எங்கு சென்றாலும் "மது.. மது.." என்று அவளை கூட்டு சேர்ப்பது என  ஹர்ஷா இருக்க ஆரம்பத்தில் அவனை முடிந்த மட்டும் தவிர்த்தவள் பின் தடுக்க முடியாது அவனை பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்துக் கொள்ள ஆரம்பித்து விட்டாள் மித்ரா.

சில நேரம் அவன் மதுவாக அவனிடம் நெருங்குபவள் அடுத்த நோடி சில நினைவுகள் கண்முன் தோன்றி மித்ராவாக மாறி அவன் பக்கம் சாயும் தன்னை நினைத்து தனக்கு தானே கடிந்து கொள்வாள். ஹர்ஷாவுக்கும் இது தெரியாமல் இல்லை.. தன்னிடம் நெருங்குவதும் திடீரென தன்னை விட்டு ஒதுங்கி இருப்பதுமாக மித்ரா தவிப்பது அவனுக்கு புரியத் தான் செய்தது.

இவ்வாறு ஹர்ஷாவும் மதுவும் பழகி ஆறு மாதங்களுக்கு மேல் ஆகியிருக்க,

அன்று,

      அந்த பெரிய க்ரௌன்டில் யுனிவெர்ஸிடி லெவல் ஃபுட்போல்  டோர்னமென்ட் (football tournament) நடக்க இருக்க ஸ்டேடியத்தை சுற்றி உள்ள இருக்கையில் மாணவர்கள் தத்தமது யுனிவெர்ஸிடி ஃபுட்போல் டீமிற்கு ஆதரவை தெரிவிக்கும் வண்ணம் துள்ளிக் குதித்து கத்திக் கொண்டு கரகோஷம் எழுப்பிக்கொண்டு இருந்தனர்.

இரு யுனிவெர்ஸ்ஸிடி அணிகளும் ஸ்டேடியத்துக்குள் நுழைய அணித் தலைவனாக முதலில் வந்த ஹர்ஷாவை பார்த்த மாணவர்கள் "ஹர்ஷா.. ஹர்ஷா.." என்று கத்தி கரகோஷம் எழுப்ப ஒருபக்கம் இவர்களின் கத்தலில் ஸ்டேடியமே அதிர்ந்து விட்டது.

அவன் நிறத்திற்கு ஏற்ற அந்த சிகப்பு நிற ஜேர்சியில் ஆணழகனாக இருந்தவனை அங்கிருந்த அத்தனை பெண்களும் வாயில் வோட்டர் ஃபோல்ஸ் வழிய பாத்திருக்க அவனோ அவர்கள் புறம் திரும்பி ஸ்டைலாக இரு விரல்களை தன் உதட்டில் வைத்து பறக்கும் முத்தத்தை வழங்க அவர்களோ கத்தி கூச்சலிட்டனர்.

இதில் எதுவும் ஈடுபாடு இல்லாது ஹர்ஷாவின் வற்புறுத்தலில் வந்திருந்த மித்ராவும் அவன் அசத்தும் அழகில் சைட் அடிக்க அவன் பெண்களின் புறம் முத்தம் அனுப்பியதில் 'ரொம்ப தான் இவன்..' என நினைத்து அவனை ஏகத்துக்கும் முறைத்து தள்ளினாள். ஏனோ இனம் புரியாத கோபம் அவளுள் உருவாவதை அவள் உணரத் தான் செய்தாள்.

மேட்ச் ஆரம்பமாக குறித்த நேரத்திற்குள் அதிக கோல்களை போட்டு ஹர்ஷாவின் அணியே வெற்றி பெற மித்ரா கூட வியர்வை சொட்ட சொட்ட அவன் ஆடிய  வெறித்தனமான ஆட்டத்தில் தன்னை மறந்து அவனை ரசித்துக் கொண்டிருந்தாள். ஹர்ஷாவின் அணி வெற்றிக் கோப்பையை தூக்க திடீரென மைக்கில் இதையெல்லாம் அறிவித்துக் கொண்டிருந்தவரின் கையிலிருந்து ஹர்ஷா மைக்கை வாங்கியதில் எல்லாருமே அவனை புரியாமல் பார்த்து வைத்தனர்.

மித்ராவும் 'என்ன பன்றான் இவன்..' என்ற ரீதியில் புருவம் சுருக்கி யோசனையாக பார்க்க மைக்கை வாங்கியவன் நடு ஸ்டேடியத்தில் நின்று அங்கு பெண்களுக்கு நடுவே தன்னையே பார்த்துக் கொண்டிருந்த மித்ராவை பார்த்தவாறு,
          "என் வாழ்க்கையில நிறைய பொண்ணுங்க க்ரோஸ் பன்னி போயிருக்காங்க.. ஆனா அந்த ஃபீல் என்ட் லவ் உன்கிட்ட மட்டும் தான் நா உணர்ந்திருக்கேன் மது.. நீ எப்பவும் என் கூடவே இருக்கனும்.. என்னை லவ் பன்னிக்கிட்டே என்னை குழந்தை மாதிரி பாத்துக்க நீ வேணும் டி.. அம்மாகிட்ட உணராத பாசத்தை நீ எனக்காக பதறும் போது உன்கிட்ட உணருரேன் டி..

       உன்னை நா நிறைய லவ் பன்னனும்.. என் மொத்த லவ்வையும் உன்கிட்ட கொட்டனும்.. உனக்கு இதுவரைக்கும் கிடைக்காத சந்தோஷத்தை நா உனக்கு கொடுக்கனும்.. உன்னை நல்லா பாத்துப்பேன்.. அடி திட்டு எல்லாமே வாங்கிப்பேன்.. உனக்காக என்ன வேணாலும் பன்ன தயாரா இருக்கேன்.. உன் மித்துவ ஏத்துப்பியா மது.. ஐ லவ் யு பேபி.. ஐ லவ் யு அ லொட்.." என  எல்லாருக்கும் மத்தியில் அவன் ப்ரோபோஸ் செய்ய மொத்த மாணவர்களும் 'ஹூஹூஹூ...'  என கத்தி ஹர்ஷாவையே வெட்கப்பட வைத்து விட்டனர்.

இதைக் கேட்ட மித்ராவோ இவன் இப்பிடி திடீரென செய்வான் என எதிர்ப்பார்க்காதளாய் ஆடிப்போய் என்ன சொல்வதென தெரியாயல் திருதிருவென விழித்துக் கொண்டு நிற்க மித்ரா இருக்கும் இருக்கையை நோக்கி ஓடி வந்தவன் அவள் அருகில் சென்று ஒற்றை காலை மடக்கி ப்ரோபோஸ் செய்வது போல் அமர்ந்தவன்,
           "ஐ லவ் யு மது.. வில் யு மேரி மீ.." என கையை நீட்டியவாறு கேட்க, சுற்றி இருந்தவர்களோ மதுவை சரி என சொல்ல சொல்லி அவள் காதருகில் கத்தி கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர்.

அவனோ அண்ணார்ந்து அவளையே பார்த்தவாறு இருக்க அவனை குனிந்து பார்த்தவளுக்கோ அவள் கண்களில் புரண்டோடும் அளவு கடந்த காதலில் திக்கு முக்காடி போனது... அவளுக்கு 'இல்லை' என்று சொல்லவே மனமில்லாது அவனுக்கு கட்டுப்பட்டவள் போல் அவன் கண்களையே பார்த்துக் கொண்டு தானாகவே 'சரி..' என தலையாட்டியவாறு அவன் கையுடன் தன் கைகளை கோர்க்க உச்சகட்ட சந்தோஷத்தில் எழுந்து நின்றவன் தன் நண்பனை பார்த்தான்.

அவனும் ஹர்ஷா ஏற்கனவே கொடுத்திருந்த செயினை அவன் கையில் கொடுக்க அவனும் மித்ராவின் கண்களையே பார்த்தவாறு அவள் கழுத்தில் அணிவித்துக் கொண்டே,
           "இனி உனக்கு புடிச்சிருக்கோ இல்லையோ இந்த ஹர்ஷமித்ரனை விட்டு நீ எங்கேயும் போக முடியாது மதுமித்ரா.. நீ எனக்கு மட்டும் தான் சொந்தம் பேபி.." என்று தீர்க்கமாக கூறியவன் கண்களில் இனி ஒருபோதும் யாருக்காகவும் அவளை விட்டுக் கொடுக்க போவதில்லை என்ற தீவிரம் அப்பட்டமாகவே தெரிந்தது.

இதை உணர்ந்த மித்ராவுக்கு கூட அவன் காதலின் ஆழம் புரியத் தான் செய்தது. அவள் இரு கன்னங்களை தன் கைகளால் தாங்கியவன் அவள் எதிர்பாராத சமயம்,
      "ஐ லவ் யு மது.." என்று கூறியவாறு அவளின் செவ்விதழை தன் வன்மையான இதழ்களால் சிறைபிடிக்க மித்ராவின் விழிகளோ தெரித்து விடும் என்பது போல் அதிர்ச்சியில் விரிந்துக் கொண்டது.

சுற்றி இருந்தவர்கள் கத்தி கூச்சலிட ஹர்ஷாவோ அவளின் இதழில் மூழ்கி விட மித்ராவோ நடந்ததை ஊகிக்கவே முடியாத நிலையில் இருந்தாள். அன்றைய நாள் மித்ராவை இழுத்துக் கொண்டு முழு சிட்டியையும் அவன் சுத்த ஹர்ஷாவுக்கு சந்தோஷமாக அந்த நாள் கழிந்தது என்றால் மித்ராவுக்கு தான் 'தான் எப்பிடி அவன் காதலையும் முத்தத்தையும் எந்த எதிர்ப்புமின்றி ஏற்றேன்' என்று குழப்பமே மிஞ்சியது.

அடுத்து வந்த நாட்கள் ஹர்ஷா மித்ராவை விட்டு விலகாது அவள் பின்னாடியே வால் போல் சுற்றிக் கொண்டு இருப்பதுமாக முழு நேர வேலையாக அதையே பார்த்துக் கொண்டிருக்க மித்ராவுக்கு ஒருபுறம் அவன் காதல் தந்த இதத்தை மனம் வேண்டினாலும் மறுபுறம் ஏற்க முடியாமல் தவித்து தான் போனாள்.

இவ்வாறு தன்னுள் மித்ராவை புதைத்து விட்டு ஹர்ஷாவின் மதுவாவே சிலசமயம் மாறுபவள் பார்க்குக் காதல் பார்வையில் அந்த காதலனும் தொலைந்து தான் போவான். அவள் அருகில் இருக்கும் போது தன்னிலை தொலைப்பவன் அவளை சிறு சிறு முத்தங்களால் மூழ்கடிக்க அவள் அவன் முத்தத்திற்கு இசைந்து கொடுக்காவிடினும் அவன் முத்தங்களை எந்த எதிர்ப்புமின்றி ஏற்றுக் கொள்வாள்.

இந்த ஒரு வருடத்தில் அவளை விட்டு சற்றும் பிரியாது அவளுக்கு வரும் ஆபத்தை கூட தூசு போல் தட்டிவிட்டு அவளுக்கு அரணாக ஹர்ஷா இருக்க அங்கு மித்ராவை கடத்த திட்டம் போட்டவர்களுக்கோ ஹர்ஷாவை மீறி எதுவுமே செய்ய முடியாத நிலை.

இவ்வாறு ஒரு வருடம் கழிந்து அவர்களுக்கான கடைசி பரீட்சையும் முடிய, மித்ராவின் படிப்பு முடிந்ததில் பல வருடங்கள் கழித்து சித்து அவளை இந்தியாவுக்கு அழைக்க ஹர்ஷாவின் காதலை விட்டு போக மனம் இடம் கொடுக்காது ஏதேதோ சாட்டு சொல்லி அவள் நிவ்யோர்க்கிலே இருந்தாள் என்றால் அவளை சாக்காக வைத்து அங்கேயே டேரா போட்டான்  ஹர்ஷா.

அன்று,

          தேவ் இவளை பார்க்க அமெரிக்கா வர  மித்ரா இருந்த நிலையை பார்த்து அவன் இதயமே நின்று துடித்து விட்டது. அப்போது தான் அவன் வந்த நாள் எத்தகைய நாள் என்பது புரிய அவளை ஒருவாறு சமாளித்து மூன்று நாட்கள் மித்ராவுடன் இருந்து விட்டே இந்தியாவுக்கு திரும்பினான்.  இந்த மூன்று நாட்களில் ஒருவருடமாக ஹர்ஷாவின் காதலினால் உள்ளுள் புதைந்து இருந்த மொத்த காயங்களும் மீண்டும் மனதை ஆக்கிரமிக்க இறுகிய முகத்தோடு இருந்த மித்ராவுக்கு தான் இத்தனை நாட்கள் காதல் மயக்கத்தில் இருந்ததை நினைத்து தன் மேலே வெறுப்பு சூடிக் கொண்டது.

ஆத்திரம் அதிகரிக்க அறையிலிருந்த மொத்த பொருட்களையும் ஆக்ரோஷமாக உடைத்தவள்,
          "எவ்வளவு தைரியம் இருந்தா உன்கிட்ட என்னை மயக்க பார்ப்ப டா.. அவன் புள்ள தானே டா நீ.. எப்பிடி டா.. எப்பிடி நா என்னை மறந்து நா பன்ன வேண்டியதை மறந்து முட்டாள்மாதிரி உன் மயக்கத்துல இருந்திருக்கேன்..ச்சே.." என பொருட்களை தூக்கி எறிந்து ஆவேசமாக கத்தினாள்.

       "தப்பு பன்னிட்ட மித்து.. ஆரம்பத்துல உன் கூட பழகி எனக்கு தேவையானதை தெரிஞ்சிக்கிட்டா போதும்னு இருந்தேன்.. இந்த லவ் ட்ராமா இதை நா ஆரம்பிக்கல.. அவன் மகனா இருந்துகிட்டு என்னை உன்னை காதலிக்க வச்சி ரொம்ப பெரிய தப்பு பன்னிட்ட உன் அப்பா பன்னதுக்கு நா தண்டனை கொடுத்தே ஆகனும்.. இதுல நீ  தவிக்க போறதை நினைச்சா தான் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு மித்து.. ஐ அம் சோ சொரி பேபி.." என தான் அவன் பக்கம் சாய்ந்ததுக்கு அவனையே குற்றம் சாட்டியவள் தான் செய்ய போவதற்கு அவனிடமே மன்னிப்பு கேட்டுக் கொண்டு கண்கள் சிவக்க தலைமுடி கலைந்து பைத்தியம் போல் பிதற்றிக் கொண்டிருந்தவள் எண்ணிற்கு அழைப்பு வர அதில் மித்து என்று ஒளிர்ந்ததை பார்த்தவள் இதழ்களோ வன்மமாக முறுவலித்துக் கொண்டது.

அதை ஏற்று மித்ரா காதில் வைக்க ஹர்ஷாவோ,
         "மது பேபி.. என்னை ரொம்ப மிஸ் பன்னியா டா.. நா ரொம்ப உன்ன மிஸ் பன்னேன் டா.. சோ சொரி டா.. முக்கியமான ப்ரோஜெக்ட் மா அதான் பேசவே முடியல.. உனக்கு தான் தெரியும்ல நா எங்க அப்பாவோட சொஃப்ட்வெயார் கம்பனிய இங்க இருந்துக்கிட்டே பார்த்துக்குறேன்னு.. எனக்கு உன்ன பார்க்கனும் போலவே இருக்கு டா.. மீட் பன்னலாமா.." என ஹர்ஷா கேட்க,

"என் அப்பா முதல்ல ஸ்டார்ட் பன்ன கம்பனியே எங்க சொஃப்ட்வெயார் கம்பனி தான் மது.. அது அவருக்கு ரொம்ப முக்கியம் அதுக்காக அவர் எவ்வளவு உழைச்சிருக்காரு தெரியுமா. அதனால தான் எங்க கம்பனி சென்னையிலே நம்பர் வன் ஆ இருக்கு.." என ஹர்ஷா இதற்கு முன் ஒருநாள் அவன் தந்தை பற்றி பேசியது மித்ராவுக்கு நினைவு வர அவள் மூளையில் திடீரென ஒரு மின்னல் வெட்டியது.

வெற்றிப்புன்னகையை சிந்தியவள்,
            "மீட் பன்னலாம் மித்து.. அதுவும் உன் ஃப்ளேட்ல.." என கொஞ்சும் குரலில் சொல்ல மறுமுனையில் இருந்த ஹர்ஷாவுக்கோ தன் மதுவா இப்படி சொன்னது என நம்ப முடியாமல் "கம் அகைன்.." என ஆச்சரியமாக கேட்டு வைத்தான்.

          "மீட் பன்னலாம் அதுவும் உன் வீட்டுலன்னு சொன்னேன்.. எப்போ வர மித்து.." என கேட்க ஹர்ஷாவுக்கோ அது சுத்தமாக சரியாக தோணவில்லை.

        "இல்லை மது வேணாம்.. வெளில எங்கயாச்சும் போகலாம்.." என ஹர்ஷா அவள் கூறியதை மறுக்க,

அதில் எரிச்சலடைந்தவள்,
         "நோ மித்து என் லேப்டொப்ல ஒரு சின்ன பிரச்சினை.. உன் லேப்ல தான் அதை பன்னனும்.. ஒரு முக்கியமான வேலை இருக்கு அதான்.. உன் வீட்ல வச்சி அதை பன்னிட்டு அப்பிடியே வெளில போகலாமே.. " என மித்ரா கேட்க,

    "அது.. அது வந்து சரி மது.. உனக்கு எப்ப தோணுதோ அப்போ வீட்டுக்கு வா.." என சற்றும் உடன்பாடில்லாமலே கூறினான் ஹர்ஷா. அவனுக்கு தான் தெரியுமே அவனைப் பற்றி.. அவள் பக்கத்தில் இருந்தாலே தன்னை தொலைப்பவன் தனிமையில் இருந்தால் ஏடாகூடமாக ஏதாவது ஆகிவிடும் என்ற பயத்திலே அவன் மறுக்க மித்ராவோ தன் திட்டத்தை நிறைவேற்ற அந்த சந்தர்ப்பத்தையே எதிர்ப்பார்த்தாள்.

            "ஓகே மித்து இன்னும் த்ரீ டேய்ஸ்ல வீட்டுக்கு வரேன்.. ஐ லவ் யு பேபி.. " என்று கூறியவாறு அழைப்பை துண்டித்தவள் தனக்கு தெரிந்த ஒருவர் மூலமாக இந்தியாவுக்கு இன்னும் மூன்று நாட்களில் செல்வதற்கு ஏற்பாடுகளை செய்து விட்டு ஒரு எண்ணிற்கு அழைத்து தனக்கு தேவையானதை சொல்லி,
       "இன்னும் இரண்டே நாள்ல நா சொன்னது என் கைக்கு வந்தாகனும்.." என்று சொல்லிவிட்டு அழைப்பு துண்டித்தவளுக்கு ஒரு புறம் கோபம் கொழுந்து விட்டு எரிந்தாலும் மறு புறம் ஒருவித தவிப்பு இருக்கத் தான் செய்தது.

தொடரும்..🔥
-----------------------------------------------------

-ZAKI🔥

 

Zakiya


ReplyQuote
Jade Javid
(@jadejavid)
Trusted Member Writer
Joined: 8 months ago
Posts: 84
09/10/2020 5:19 am  

                    தீண்டாதே 12🔥

 

மூன்று நாட்கள் கழித்து,

காலை,

        கோலிங் பெல் சத்தத்தில் லேப்டொப்பில் வேலை செய்துக் கொண்டிருந்த ஹர்ஷா எழுந்து சென்று சோம்பலை முறுக்கியவாறு கதவை திறக்க எதிரே நின்றிருந்தவளை பார்த்து இதழ்கள் தானாகவே மென்னகை புரிந்தது ஹர்ஷாவுக்கு..

"மது பேபி.." எனக் கூறியவாறு அவளை இறுக்கி அணைத்தவன் "ஐ லவ் யு டி.. ரொம்ப மிஸ் பன்னேன்.." என்று புலம்ப மித்ராவுக்கு தான் அவன் இறுகிய அணைப்பில் இடுப்பு எலும்பே முறிந்து விடும் போல் இருந்தது. அவன் அணைப்பில் திணறி மெதுவாக அவனிடமிருந்து விலக முயற்சித்தவாறு,
           "உள்ள கூப்பிட மாட்டியா மித்து.." என சிரிப்புடன் கேட்க,

          "அச்சோ உள்ள வா பேபி.. என்ட், பெரியவங்க சொல்வாங்க புருஷன் வீட்டுக்குள்ள வரும் போது வலது காலை எடுத்து வைச்சு வரனும்னு..  நீயும் அப்பிடியே வா மது.." என்று ஹர்ஷா ஆர்வமாக சொல்ல,

'க்கும்.. ரொம்ப முக்கியம்..' என மனதில் அவனை வறுத்தெடுத்தவள் வெளியே,
       "ஹிஹிஹி சரி மித்து..." என இழித்தவாறு அவனுடன் வலது காலை எடுத்து வைத்தே உள்ளே சென்றாள் மித்ரா.

மித்ரா வீட்டை சுற்றி பார்த்தவாறு சோஃபாவில் அமர அவள் அருகில் அமர்ந்தவன் பக்கவாட்டாக திரும்பி அவளையே கண் இமைக்காது பார்த்துக் கொண்டிருந்தான். ரோயல் ப்ளூ டீஷர்ட், ப்ளூ ஜீன்ஸ் சகிதம் இருந்தவள் எப்போதும் போல தலைமுடியை ஒருபுறம் விரித்து போட்டு தன் ஃபோனை மும்முரமாக நோண்டிக் கொண்டிருக்க ஏதோ ஒரு உணர்வில் திடீரென ஹர்ஷாவின் புறம் திரும்பியவள் அவன் பார்வையை பார்த்து கொஞ்சம் பதட்டமாகத் தான் செய்தாள்.

            'என்ன இவன் இப்பிடி நம்மள வெறிக்க வெறிக்க பார்த்துகிட்டு இருக்கான்.. வேலை முடியுற வரைக்கும்  இவன்கிட்ட கொஞ்சம் அலெர்ட்டாவே இரு மித்ரா..' என தனக்குத் தானே கூறிக் கொண்ட மித்ரா,
          "மித்து உன் லேப் அ கொஞ்சம் கொடுக்குறியா.."  என்று கேட்க அவனோ தன் லேப்டாப்பை எடுத்து அவளிடம் நீட்ட அவளோ அவன் பார்ப்பதை உணர்ந்தே அவன் புறம் பார்வையை திருப்பாது வேலை செய்வது போல் பாவனை செய்துக் கொண்டிருந்தாள்.

ஹர்ஷாவோ வழக்கம் போல முட்டியில் கையை ஊன்றி கன்னத்தில் கை வைத்து ரசித்துக் கொண்டிருக்க அவனை இங்கிருந்து விரட்ட என அவன் புறம் திரும்பாமலே திரையில் பார்வையை பதித்தவாறு,
             "மித்து வீட்டுக்கு வந்தவங்களுக்கு சாப்பிட எதுவும் கொடுக்க மாட்டியா.." என கேட்க,

          "ஹோ கோட்.. டூ மினிட்ஸ் மது.. எப்படியும் ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டிருக்க மாட்ட கொஞ்சம் வெயிட் பன்னு தோசை பன்னி தரேன்.." என கூறியவாறு அவன் எழுந்து சமையலறைக்குள் செல்ல அவன் கிட்ச்சனிள் நுழைவதை கவனித்தவள் அவன் சென்று மறைந்த அடுத்த நொடி அவன் லேப்டொப்பை அலச ஆரம்பித்து விட்டாள்..
           
 அதில் ஒரு ஃபோல்டரை திறக்க அதில் பாஸ்வார்ட் போடப்பட்டிருப்பதை பார்த்தவள்,
           "இதுக்குள்ள என்ன இருக்கும்.. ஒருவேள இவன் கம்பனி பத்தின சீக்ரெட் டீடெய்ல்ல் எல்லாம் இதுக்குள்ள தான் வச்சிருப்பானோ.. இருக்கலாம் இருக்கலாம்.. பட் பாஸ்வார்ட் போட்டிருக்கானே.. என்னவா இருக்கும்.." என அவள் சில நொடிகள் கூட யோசிக்கவில்லை அடுத்த நொடியே,
         "அப்பிடி என்ன பெருசா பாஸ்வார்ட் வைச்சிருக்க போறான்.." என ஏளனமாக சிரித்தவாறு 'மதுமித்து' என அவள் டைப் செய்ய அந்த ஃபோல்டர் திறந்தது.

        "ஹோ பேபி.. உனக்கு உன் மது பேபி மேல எம்புட்டு லவ்வு. அச்சோ.. அச்சோ.." என வெளியில் ஏளனமாக சிரித்துக் கொண்டாலும் உள்ளுக்குள் ஏதோ அவன் காதலை நினைத்து கர்வமாக தான் இருந்தது மித்ராவுக்கு.

தன் நினைப்பை விட்டவாறு அவள் பார்க்க அதில் அவர்கள் கம்பனியின் சில ப்ரோஜெக்ட் பற்றிய தகவல்களிலிருந்து அவர்கள் கம்பனி பற்றிய பல தகவல்கள் அதில் இருந்தது. அதைப் பார்த்தவள் இதழ்களோ வெற்றிப் புன்னகை சூடிக் கொள்ள அதே நேரம் ஹர்ஷாவும் கிட்ச்சனிலிருந்து,

          "பேபி இங்க கொஞ்சம் வா.." என்று அழைக்க,

அதில் எரிச்சலடைந்தவள், 'இவன் ஒருத்தன் நேரம் காலம் தெரியாம..' என மனதில் புலம்பியவாறு கிட்ச்சனுக்கு சென்று அவன் சமைக்கும் விதத்தை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருக்க,

            "பேபி நீ அதிக காரம் சாப்பிடுவல்ல.. சட்னி ரொம்ப ஸ்பைஸியா தான் பன்னியிருக்கேன்.." என ஹர்ஷா சொல்ல,

பூம்பூம் மாடு போல் எல்லா பக்கமும் தலையாட்டியவள்,
         "உனக்கு இதெல்லாம் பன்ன தெரியுமா மித்து.." என ஆச்சரியமாக அவன் செய்வதையே பார்த்தவாறு மித்ரா கேட்க,

       "எனக்கு வெளில சாப்பிடுறது ஒத்துக்காது பேபி.. அதான் சில டிஷெஷ்  மட்டும் வீட்லயே சமைக்க கத்துக்கிட்டேன்..." என சொன்ன ஹர்ஷா பின் அவனே தொடர்ந்து,
         "பட் நா ரொம்ப பாவம் மது.." என பாவம் போல் சொன்னவனை கேள்வியாக பார்த்தாள் மித்ரா.

        "என் பொண்டாட்டிக்கு தான் சுத்தமா சமைக்க தெரியாதே.." என்று ஹர்ஷா நமட்டு சிரிப்புடன் கேலியாக சொல்ல,
          "அதெல்லாம் சீக்கிரம் கத்துக்குவாங்க மித்து.." என சாதாரணமாக சொன்னவளுக்கு அவன் தன்னை தான் சொல்கிறான் என சுத்தமாக தெரியவில்லை.

சட்டென செய்த வேலையை நிறுத்தி அவளை திரும்பி புருவம் சுருக்கி பார்த்தவன்,
       "பேபி நா உன்னை தான் சொல்றேன்.." என சிரித்தவாறு சொல்ல,

       'எது நானா.. அய்யோ மித்ரா சொதப்புறியே டி.. சரி சமாளி..' என நினைத்தவாறு,
         "மித்து நானும் என்னை தான் சொன்னேன்.. பட் டங்க் ஸ்லிப் ஆகி கத்துக்குவேன்னு சொல்றதுக்கு பதிலா கத்துக்குவாங்கன்னு சொல்லிப்புட்டேன் ஹிஹிஹி.." என இழித்து சமாளிக்க,

எட்டி அவள் சிரிக்கும் போது தெரிந்த கன்னக்குழியில் தன் விரல் வைத்து  அழுத்தியவன்,
        "ரொம்ப அழகா இருக்க டி சிரிக்கும் போது.. என்னால என்னையே கன்ட்ரோல் பன்ன முடியல.." என கூறியவாறு தன் வேலையை ஹர்ஷா தொடர ஏனோ மித்ராவுக்கு தான் கன்னங்கள் சிவந்து ஒரே வெட்கமாகி போனது.

அடுத்த ஐந்து நிமிடத்தில் இருவருக்கும் சேர்த்து தோசை சுட்டிருந்தவன் உணவுத் தட்டில் வைத்து டைனிங் டேபிளில் அமர்ந்திருந்த மித்ராவின் அருகில் அமர்ந்து அவனே தோசையை பிய்த்து சட்னியில் தொட்டு உட்டி விட போக, அவளுக்கோ அவளையும் மீறி கண்கள் கரித்துக் கொண்டு வந்தது.

கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டு தன்னை கட்டுப்படுத்தியவள்,
           "அது.. அதெல்லால் வே.. வேணாம் மித்து.. நானே சாப்பிடுறேன்.." என மறுக்க,

           "நீ என் குழந்தை மாதிரி டி செல்லக்குட்டி.. எனக்கு ஊட்டனும்னு ஆசையா இருக்கு.. ப்ளீஸ் வேணாம்னு சொல்லாத.." என கண்களால் கெஞ்சியவாறு அவள் வாயருகே சாப்பாட்டை கொண்டு செல்ல மறுக்க முடியாது அவன் ஊட்டி விட்டதை வாங்கி கொண்டவளுக்கு தன் முன்னே தன் அம்மா அப்பாவே இருப்பது போல் இருந்தது.

தனக்கு அம்மா அப்பாவின் பாசத்தை இத்தனை வருடங்கள் கழித்து காட்டுபவனுக்கு தான் துரோகம் செய்கிறோமே என்று அவள் மனதில் யோசித்துக் கொண்டிருக்க அதே நேரம் ஹர்ஷாவும்,
       "மது எனக்கும் ஊட்டி விடு டி.. என்னோட அம்மாவும் நீ தானே.." என சொன்னவனை பார்த்தவளுக்கு தன்னையும் மீறி கண்களில் ஒரு சொட்டு கண்ணீர் வெளியே வந்து விட்டது.

மனதிற்குள்ளேயே மித்ராவுக்கும் மதுவுக்குமிடையே காதல் ,  பழி வெறி எனும் உணர்வுகளை வைத்து யுத்தமே நடைந்துக் கொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.  முடிந்த மட்டும் தன் நோக்கத்தை நிறைவேற்ற மதுவை தனக்குள்ளே புதைத்து கொண்டவள் மித்ராவாக அவனுக்கு ஊட்டி விட ஹர்ஷாவுக்கோ பல வருடங்கள் கழித்து ஊட்டி விட்டு சாப்பிடுதில் ஒரே குஷி தான்.

இவ்வாறு இருவரும் ஒருவருக்கொருவர் ஊட்டி விட்டே சாப்பிட்டு முடிக்க சோஃபாவில் ஃபோனை நோண்டியவாறு இருந்தவளின் அருகில் அமர்ந்தவன் தனிமையில் அவளை பார்க்க பார்க்க அவள் அருகாமையில் தன்னுள் எழும் உணர்ச்சிகளை அடக்க பெரும்பாடுபட்டு தான் போனான்.

'அய்யோ இதுக்கு தான் வேணாம்னு சொன்னேன்.. என்னை படுத்துறாளே..' என மானசீகமாக புலம்பியவன் தன் எண்ணம் போகும் போக்கை உணர்ந்து தன்னை கட்டுப்படுத்தியவாறு,
           "லேப்ல ஏதோ வேலை பார்க்கனும்னு சொன்னியே.. முடிச்சிட்டியா மது.. வெளில போலாமா.." என கேட்க,

       "யாஹ் ஐ அம் டன் பேபி.. பட் வீட்லயே இருக்கலாமே.." என கொஞ்சும் குரலில் மித்ரா கேட்க, அவனுக்கு தான் 'அய்யோ.. அய்யோ..' என்று எங்கேயாவது முட்டிக் கொள்ளலாம் போல் இருந்தது.

'நம்ம ஃபீலிங்க்ஸ்ஸ புரிஞ்சிக்காம கண்ணு முன்னாடி இப்பிடி செதுக்கி வைச்ச தங்க சிலையாட்டம் இருக்காளே..' என மனதில் நினைத்தவன் இதற்கு மேல் முடியாது என அவளை நெருங்கி அமர்ந்து,
       "மது பேபி.." என்று ஒரு மார்கமான குரலில் அழைக்க,

"ம்ம்.." என்று சொன்னவள் சற்றும் அவன் புறம் பார்வையை திருப்பவில்லை. அவள் பார்வை ஃபோன் திரையில் இருந்தாலும் அவள் சிந்தனை மொத்தமும் எப்பிடி அவனுக்கு தெரியாமல் வேலையை முடிப்பது என்பதிலே இருந்தது.  ஆனால் நம் நாயகனோ இத்தருணத்தை ரொமேன்டிக் சீனாக மாற்ற அல்லவா முயற்சி செய்துக் கொண்டிருக்கிறான்.

அவள் திரும்பாமல் இருந்ததில் உதட்டை  பிதுக்கியவன் அவள் தாடையை பிடித்து தன் புறம் திருப்பி அவள் கண்களோடு தன் கண்களை கலக்க விட மித்ராவோ புரியாமல் அவனை மேலும் உசுப்பேத்தும் விதமாக புருவத்தை உயர்த்தி கண்களாலே 'என்ன' என்று கேட்டாள்.

அதில் இன்னும் தன்னை தொலைத்தவன் அவள் இதழை வருடி தன் இதழை அவள் இதழ் நோக்கி கொண்டு சென்றவாறு அவளை நெருங்க,
     'அடி ஆத்தீதீதீ...' என விழிவிரித்தவள் சட்டென தன் தலையை குனிந்துக் கொண்டாள்.

அவளின் செய்கையில் அது வெட்கம் என்று நினைத்தவன் மெல்லியதாக புன்னகைத்தவாறு அவள் முகத்தை தன் முகம் நோக்கி நிமிர்த்தி,
            "ப்ளீஸ் மது.. ஒன்னே ஒன்னு.." என கிறக்கமான குரலில் கேட்க,

அவனை மிரட்சியுடன் பார்த்தவாறு எச்சிலை விழுங்கிக் கொண்டவள், மனதிலோ,
            'அய்யோ. இவனுக்கு மொதல்லயே நாம கொண்டு வந்ததை கலந்து கொடுத்திருக்கனும்.. குசும்பு புடிச்சவன்..' 
என்று நினைத்தவாறே,
            "மித்.. மித்து  நா வேணா உனக்கு ஜூஸ் போட்டு எடுத்துட்டு வரட்டா.." என்று எஸ்கேப் ஆக எண்ணி மித்ரா திக்கித்திணறி கேட்க,

           "இப்போ தானே மது சாப்பிட்டிருக்கோம்.. என்ட், அப்பிடியே எனக்கு ஜூஸ் வேணும்னாலும் அது தான் என் மதுக்கிட்ட இருக்கே.." என ஹர்ஷா அவள்  இதழ்களை பார்த்தவாறே கூற,

'இவன் அடங்க மாட்டான் போலயே..' என மனதில் பொறுமியவள்,
         "நோ மித்து எனக்கு இப்போ ஜூஸ் குடிச்சே ஆகனும்.. நீ இங்கேயே இரு.. ஒரு ஃபைவ் மினிட்ஸ்ல கொண்டு வரேன்.." என அவனிடமிருந்து கஷ்டப்பட்டு விலகியவள் கிட்ச்சனுக்குள் ஓடி சென்று 'ஹப்பாடா.. இவன் அலப்பறை தாங்க முடியல ஆண்டவா..' என  வாய்விட்டே புலம்பியவாறு அவன் வருகிறானா என கிட்ச்சன் வாயிலில் பார்த்தவள் ஜூஸை தயார் செய்து தன் ஜீன்ஸ் பாக்கெட்டிலிருந்த மயக்க மருந்தை அவன் ஜூஸில் கலந்தாள்.

மயக்க மருந்து கலந்திருந்த ஜூஸ் க்ளாசை அவனிடம் கொடுத்தவள் அவன் குடித்து முடிக்கும் வரை ஓரக் கண்ணால் பார்த்தவாறே இருக்க,  அவன் முழுவதும் குடித்து விட்டு,
          "சூப்பரா இருக்கு மது.."  என்று கூறியவாறு க்ளாசை டீபாயில் வைத்து விட்டு அவளை மையலுடன் நோக்க, மித்ரா தான் 'அய்யோ ஈஸ்வரா என்னை காப்பாத்து..' என கடவுளையே வணங்கிராதவள் ஹர்ஷாவிடமிருந்து தப்பிக்க முதன் முதலில்  மனதில் வேண்டுதல் வைத்தாள்.

ஹர்ஷாவோ குறும்புப் புன்னகையுடன் அவளை மெல்ல மெல்ல நெருங்க, அவனை விழிவிரித்து பார்த்தவாறே சோஃபாவிலிருந்து எழுந்தவள்,
         "மித்து இது.. இதெல்லாம் வேணாமே.." என திக்கித்திணறி சொல்லியவாறு பின்னோக்கி நடக்க அவனோ அதை எல்லாம் காதில் கூட வாங்கவில்லை.

அடுத்த இரு நொடியில் அவளை நோக்கி வந்தவனுக்கு தலை சுற்ற அவனில் மாற்றத்தை பார்த்தவளோ பின்னோக்கி நகர்ந்து  தான் எதிர்ப்பார்த்தது போல் நடப்பதில் கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக் கொண்டு குறும்புப் புன்னகையுடன் சுவற்றில் முட்டி சாய்ந்தவாறு நின்றுக் கொண்டிருந்தாள் மித்ரா.

அவன் கால்கள் தானாகவே தடுமாற தலையை சிலிப்பி விட்டவாறு அவளை நெருங்கியவன் தன்னை சிரிப்புடன் அசால்ட்டாக பார்த்துக் கொண்டிருந்தவளின் தாடையை இறுகப் பற்றி,
            "என்னை மயக்குற மோகினி டி நீ.." என்று கூறியவாறு அவள் இதழை நெருங்க கண்கள் சொருகி அவள் மேலே சரிந்து விட்டான் ஹர்ஷா.

அவனை தாங்கிக் கொண்டவள் அந்த முரட்டு ஆண்மகனின் பாரம் தாங்காது கஷ்டப்பட்டு தாங்கி சென்று அவனை பக்கத்திலிருந்த சோஃபாவில் படுக்க வைத்தவள் சிறிது நேரம் அவனையே கண்வெட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அடுத்த நொடி தாமதிக்காமல் ஹர்ஷாவின் ஃபோனையும், லேப்டொப்பையும் எடுத்தவள் தன் திட்டத்தை செயல்படுத்த ஆயத்தமானாள். அவனது லேப்டாப்பிலிருந்து தனது பென்ட்ரைவிற்கு ஹர்ஷாவின் கம்பனி தொடர்பாக மொத்த தகவல்களையும் மாற்றம் செய்து எடுத்தவள் ஹர்ஷாவின் லெப்டாப்பின் பின்புற பார்ட்டை கழட்டி அதில் தான் கொண்டு வந்திருந்த ஹேக்கிங் ச்சிப்பை பொருத்தி ஹர்ஷாவின் தொலைப்பேசியின் மொத்த கட்டுப்பாடையும் தன் தொலைப்பேசியின் கட்டுப்பாடிற்கு கொண்டு வந்திருந்தவள் இதழ்கள் வெற்றிப் புன்னகை புரிந்தது.

தான் வந்த வேலை முடிந்ததில் ஹர்ஷாவுக்கு எதிரே வந்தவள் முகத்தில் எந்த சலனமுமின்றி மயக்க நிலையில் இருந்தவனை பார்த்து,
           "ஐ அம் சோரி பேபி.. எனக்கு தேவையான எல்லாமே நீயே காட்டி கொடுத்துட்ட..  உன் அப்பாவுக்கு அவன் தொழில்னா ரொம்ப உயிர்ல.. முதல் அடியா அதுல என் விளையாட்ட ஆரம்பிக்குறேன்.. அதுக்கப்றம் உன் பாசமான தந்தையை துடிக்க வைச்சு கொல்றேன் டா.. அவன மட்டும் இல்ல அந்த மினிஸ்டர் என்ட் அந்த திலகன் எல்லாருமே பன்ன தப்புக்கு தண்டனையை அனுபவிக்க போறாங்க.. ஆனா என்ன, இதுல ஒரு சின்ன எலியாட்டம் என் பொறில நீ மாட்டிக்கிட்ட பட் பரவாயில்லை ஆனா ஊனா கிஸ் பன்னி கடுப்பேத்தினல்ல அனுபவி.. அவன் மகனா பொறந்திட்டு நீயும் சந்தோஷத்தை அனுபவிக்க கூடாதே பேபி.. பாய்ய் மித்து ஐ வில் மிஸ் யு.. பட் சீக்கிரம் உன்னை சந்திக்கிறேன்.." என கொஞ்சலாக கூறிய மித்ரா தன் பேக்கை தோளில் மாட்டியவாறு கதவு வரை செல்ல அவள் மனதோ ஏதோ நெருடலாகவே இருந்தது.

ஏனோ அவள் கால்கள் செல்ல மறுக்க இத்தனை நேரம் மித்ராவாக இருந்தவளிடமிருந்து அவன் மது உடைப்பெடுத்து வெளியில் வர மித்ராவுக்கு தன் மேலேயே கோபம் ஏகத்துக்கும் எகிறியது.  ஹர்ஷாவை திரும்பி பார்த்தவளுக்கு இதற்குமேல் முடியாமல் போக அவனருகில் ஓடியவள் முட்டி போட்டு அமர்ந்து அவன் தலையை கோதி அவன் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டாள் அவனின் மதுவாக..

தான் ஏன் இவ்வாறு மதில் மேல் பூனை போல் தவிக்கிறேன் என்று அவளுக்கும் தெரியவில்லை. அவன் முகத்தை நெருங்கி சிறிது நேரம் விழி அகலாது பார்த்தவள் கண்களை இறுக மூடிக் கொண்டு ஒருபெருமூச்சு விட்டவாறு தன்னை நிலைப்படுத்தி இறுகிய முகத்துடன் அங்கிருந்து விறுவிறுவென வெளியேறினாள்.

அந்த நாள் நிவ்யோர்க் நேரம் படி பகல்  மித்ரா இந்தியா சென்றிருக்க நடந்தது அனைத்தையும் நினைத்து பார்த்தவளுக்கு கண்கள் கலங்கி இருக்க கஷ்டப்பட்டு கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டு ஹர்ஷா காதலை சொல்லும் போது அணிந்திருந்த செயினை வருடியவாறு சிறிது நேரம் இருந்தவள் எப்போதும் போல் தூக்க மாத்திரையை போட்டு தனக்கு நேராக இருந்த தன் தாய் தந்தை தான் பிறந்தவுடன் தன்னை கையில் ஏந்தியவாறு தன் கன்னத்தில் முத்தமிடுவது போல் இருந்த ஆளுயர புகைப்படத்தை பார்த்தவாறே உறங்கிப் போனாள்.

ஆனால் இங்கு பால்கெனியில் பேன்ட்பாக்கெட்டுக்குள் கையை விட்டவாறு நிலாவை வெறித்துக் கொண்டிருந்த ஹர்ஷாவுக்கோ அவன் மதுவை நினைத்து கண்களில் கண்ணீரே வந்து விட்டது. அங்கு இந்திய மணி நேரம் படி காலை மித்ரா  இந்தியாவை அடைந்திருக்க இது எதுவும் அறியாத ஹர்ஷா நிவ்யோர்க் நேரம் படி அவள் இந்தியாவுக்கு பறந்துக் கொண்டிருந்த சமயமே மயக்கத்திலிருந்து விழித்திருந்தான்.  தலை பயங்கரமாக வலிக்க என்ன நடந்ததென்று கூட அவனால் உணர முடியவில்லை.

தன் முன் டீபாயில் க்ளாசுக்கு கீழ் காற்றுக்கு அங்கும் இங்கும் பறந்துக் கொண்டு இருந்த பேப்பர் தெரிய அதை எடுத்தவன் அதில் 'குட் பை மித்து..' என எழுதியிருப்பதை பார்த்து விரலால் நெற்றியை நீவி விட்டவன்,
         "என்னாச்சு எனக்கு.. ஏன் தலை பயங்கரமா வலிக்குது.. மது.. மது எங்க போனா... " என தனக்குத் தானே பேசிக் கொண்டு "மது.. மது.." என்று அழைக்க அவனை சுற்றி குண்டூசி விழுந்தால் கூட சத்தம் வரும் அளவிற்கு அவ்வளவு அமைதியாக இருந்தது.

எழுந்து தன் முன் சுவற்றில் இருந்த மணிக்கூட்டில் அவன் நேரத்தை பார்த்தவன் கண்களோ அதிர்ச்சியில் விரிந்து கொண்டது. மித்ரா காலை எட்டு மணிக்கே வந்திருக்க ஆனால் இப்போது நேரம் எட்டு என்று காட்டுவதில் குழம்பிய அவனுக்கு ஏதோ தன்னை சுற்றி தவறாக நடக்கிறது என்பது தெளிவாக புரிந்தது.

அப்பிடியே சோஃபாவில் தொப்பென அமர்ந்து,
        "என்ன நடக்குது இங்க.. நா எப்போ தூங்கினேன் என் கூட மதுவும் இருந்தாளே..  அவ இருக்கும் போது நா தூங்கினதா எனக்கு நியாபகமே இல்லையே.. காலைல தூங்கி ராத்திரி எழுந்திருக்கோம் பேசாம மதுகிட்டயே கேட்டுறலாம்.. "  என இடது கையால் தலைமுடியை பிடித்தவாறு வலது கையால் மித்ராவின் எண்ணிற்கு அழைக்க அந்த எண்ணை அடைய முடிந்தால் தானே..

உடனே தன்னை சுத்தப்படுத்தி உடை மாற்றிக் கொண்டு மித்ராவின் தங்கியிருக்கும் அபார்ட்மென்ட்டை  நொக்கி சென்றான். அங்கு அவள் தங்கியிருந்த ஃப்ளேட் பூட்டப்பட்டிருக்க உள்ளே யாரும் இருப்பதற்கான அடையாளமும் இல்லை.  ஹர்ஷா கதவின் முன் கலக்கமான முகத்துடன் நின்றிருக்க அச்சயம் மித்ரா தங்கியிருந்த ஃப்ளேட்டின் எதிர் ஃப்ளேட்டில் தங்கியிருந்த பெரியவர் வெளியில் வர ஹர்ஷாவை கண்டவர்,
        "யாருப்பா நீ.. இங்க இருந்த பொண்ணு உனக்கு ரொம்ப வேண்டப்பட்டளா.. மதியம் தான் அந்த பொண்ணு வீட்டை பூட்டிட்டு லக்கேஜ்ஜோடு போறதை பார்த்தேன்.." என்று சொல்ல ஹர்ஷாவுக்கோ ஒன்றுமே புரியவில்லை.

"தேங்க்ஸ்.." என்று மட்டும் கூறியவன் தன் காரில் அமர்ந்து கண்ணை மூட்டி சீட்டில் சாய்ந்தவாறு,  "மது எங்க டி போன.." என்று புலம்பியவனுக்கு தானே தெரியும் அவள் அவனை விலகி சென்ற இந்த கொஞ்ச நேரத்திலே அவன் துடித்த துடிப்பு.

அப்போதே தனக்கு தெரிந்த நண்பன் ஒருவனிடம் விஷயத்தை கூறியவன் அவனின் பதில் அழைப்புக்காக காத்திருக்க என்ன நடந்தது ஏன் மது சொல்லாமல் கொல்லாமல் விட்டுச் சென்றாள் என்று யோசனையே அவனை பைத்தியம் பிடிக்க வைத்தது. ஒரு கட்டத்திற்கு மேல் அவனின் மதுவின் நினைவு அவனை வாட்ட மூக்கு முட்ட குடித்து கொண்டு மதுவின் புகைப்படத்தை பார்த்தவாறே புலம்பிக் கொண்டிருந்தவனுக்கு சரியாக அவன் நண்பனிடமிருந்து மித்ரா மதியம் இந்தியா சென்றது தெரிய வர இத்தனை நாள் தன் அப்பா அழைத்தும் மித்ராவை விட்டு போக மனமில்லாது இருந்தவன் தன்னவளை தேடி தன்னவளுக்காகவே இந்தியா வந்து சேர்ந்தான்.

ஆனால் இதில் அவனே எதிர்ப்பார்க்காத ஒன்று அவன் மதுவே அவனுக்கு எதிரியாக அவனுக்கு எதிரே அவனை எதிர்த்து நிற்பாள் என்று.. அதுவும் தன் அப்பாவை பழிவாங்க அவள் காதலித்ததாக கூறியதில் மொத்தமாக குழம்பிப் போனான் என்று சொல்வதை விட தன்னவள் தன் காதலை ஏமாற்றி விட்டாள் தன் நம்பிக்கையிலே விளையாடிவிட்டாள் என்று நினைக்கையில் மொத்தமாக நொறுங்கிப் போனான் ஹர்ஷா.

நிலாவையே வெறித்தவாறு,
          "உனக்கு என்னாச்சு டி.. என் மது எங்க டி.. நீ என் மது இல்லை.. நீ அவ இல்லை.. எனக்கு என் மது வேணும்.." என மானசீகமாக புலம்பிய அந்த ஆண்மகனின் கன்னங்களிலும் நிற்காது ஓடுகின்றது கண்ணீர் கோடுகள்..

தொடரும்..🔥
------------------------------------------------------

-ZAKI🔥

 

Zakiya


ReplyQuote
Jade Javid
(@jadejavid)
Trusted Member Writer
Joined: 8 months ago
Posts: 84
12/10/2020 6:14 am  

                   தீண்டாதே 13🔥

 

அடுத்த நாள்,

        கதிரவன் எந்தவித ஆர்ப்பாட்டமுமின்றி நிலா மகளை தூங்க வைத்து விட்டு தன் பூமித் தாயை காண தன் செங்கதிர்களை சிதறவிட்டு எழ மித்ராவின் வீடே தேவ்வின் அலறலால் ரணகளமாக இருந்தது.

        "அய்யோ.. ஆது மம்மி என்னை விடு.. ஆஆ.. " என தன்னை கட்டையினால் வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கும் ஆதிராவிடம் தேவ் கதறியவாறு கெஞ்சிக் கொண்டிருக்க அப்போது தான் தன் அறையிலிருந்து வெளியே வந்த மித்ரா தேவ்வின் சத்தத்தில் மாடியிலிருந்து ஹோலை எட்டிப் பார்த்தாள்.

           "டேய்ய் எவ்வளவு தைரியம் இருந்தா இப்பிடி ஒரு காரியம் பன்னுவ..  உண்மைய சொல்லு டா.." என ஆதிரா அவனை வெளுக்க, "அவனை விடு ஆதிரா.." என தேவ்வை ஆதிராவிடமிருந்து காப்பாற்ற கயலும் துர்காவும் அரும்பாடுபட்டுக் கொண்டிருக்க நம்ம ஓல்ட் ஹீரோஸோ தட்டிலே தலையை புதைத்து சாப்பிடுவதிலே குறியாக இருந்தனர். அவளை தடுக்க போய் தாங்கள் வாங்கி கட்டிக் கொள்ள அவர்கள் என்னை முட்டாபீஸுகளா...

        "ஆது அத்தை அந்த கட்டையால அவன் வாயிலே ஒரு போடு போடுங்க.. சார் ஓஃபீஸ்லயும் எல்லா பொண்ணுங்க கூடவும் டிஸ்கஷன்னு பேருல வழிஞ்சிக்கிட்டு தான் இருக்காராம்.. உழவுத் துறை தகவல்.." என  ஆதிராவிடம் மாட்டிவிட்டவள் தேவ்வின் புறம் திரும்பி ' மாட்டுனியா தாஸுப்பயலே..'  என அனா நாக்கை துருத்தி பழிப்பு காட்ட,

           "ஹே குட்டிச்சாத்தான்.. உன்ன அப்றமா கவனிச்சிக்கிறேன் டி .. போட்டா கொடுக்குற இரு உன்ன ஒரே போடா போடுறேன்.. "   என பல்லை கடித்த வண்ணம் தேவ் அவளை திட்ட,

அவன் முதுகில் ஒரு அடி வைத்த ஆதிரா,
            "அவளை ஏன்டா திட்டுற.. என் மருமக என்ன தப்பா சொல்லிட்டா.. நா பாக்குற பொண்ண தான் கல்யாணம் பன்னுவேன்னு அன்னைக்கு என் தலை மேல அடிச்சி சத்தியம் பன்னிட்டு இப்போ ஊர்பொறுக்கி மாதிரி பொண்ணுங்க பின்னாடி சுத்திகிட்டு இருக்க.." என ஆதிரா  பொய்யாக கண்ணை கசக்க,

          "அய்யோ அம்மா நீ ஏதோ என்னை ப்ளே போய் ரேன்ஜ்க்கு பேசுற.. அதுல எல்லாம் அப்பா தான் மா ஸ்டார்.. நா எல்லாம் வர்த்தே(Worth) இல்லை.. நம்பு ஆது பேபி" என தேவ் தன் அம்மாவை கொஞ்ச, வெடக்கென தன் செல்வ புத்திரனை அபி நிமிர்ந்து பார்த்து முறைக்க ஆதிக்கும் சித்துவுக்கும் இவர்களின் கூத்தில் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.

         "அப்போ யாரு டா அந்த  ஸ்ரீனி..  " என இடுப்பில் கை வைத்து முறைத்தவாறு ஆதிரா கேட்க,

முதலில் திருதிருவென விழித்தவன் பின்,
          "அச்சோ தாயே அது ஸ்ரீனி இல்லை ஸ்ரீனிவாசன் நா ஷார்ட்டா ஸ்ரீனின்னு கூப்பிடுவேன் அவ்வளவு தான்.. ஹிஹிஹி.." என தேவ் சமாளிக்க அனாவோ, 'அடப்பாவி என்ன நடிப்புடா..' என வாயில் கை வைத்துக் கொண்டாள்.

அவனை ஏகத்துக்கும் முறைத்த ஆதிரா,
             "ஆமா டா அந்த பையன் காலைல கோல் பன்னி உன்கிட்ட பத்து கிஸ் கேக்குறான்.. பொய்யா சொல்ற பொய்யு.." என அடிக்க போக,

     "அம்மாஆஆ..." என ஆவேசமாக கத்தினான் தேவ். அவன் சத்தத்தில் எல்லாரும் அவனை புரியாமல் நோக்க,
        "அப்பா பன்ன தப்ப நா பன்ன மாட்டேன் மா.. வீட்டுக்கு அடக்க ஒடக்கமான பொண்ண தான் நா கட்டிக்குவேன்.. அதுவும் உன் சம்மதத்தோட.." என கூறிவிட்டு மெதுவாக இரண்டு அடிகள் பின்னால் நகர்ந்து ஓட ரெடியாக நிற்க,  அபிக்கோ புறை ஏறிவிட்டது.

முதலில் புரியாது 'சரி' என தலையாட்டியவளுக்கு அப்போது தான் மூளைக்கு உரைக்க "டேய்ய் உன்ன.." என அவனை துரத்தி துரத்தி அடி வெளுக்க ஆரம்பித்து விட்டாள் ஆது பேபி.

இவர்களின் கூத்தில் எல்லாருமே வயிற்றை பிடித்துக் கொண்டு சிரிக்க மித்ராவுக்கு கூட மெல்லிய சிரிப்பு அவளின் இறுகிய இதழில் எட்டிப் பார்க்க தான் செய்தது.

எதேர்ச்சையாக மாடியை பார்த்த கயல் மித்ரா அங்கு நிற்பதை பார்த்து,
           "மித்ரா மா கீழ வா டா.. அங்கேயே எதுக்கு நின்னுகிட்டு இருக்க.." என அழைக்க,

புன்னகையை இதழுக்குள் மறைத்துக் கொண்டு கீழே இறங்கி வந்தவள் அனாவிடம்,
       "தியா எங்க அனா.." என கேட்க,

        "கொலேஜ் போக ரெடி ஆகிக்கிட்டு இருக்கா மித்ராக்கா.." என்று புன்னகையுடன் சொல்ல தலையசைத்து விட்டு ஹோலில் அனா தியாவுக்காக வீட்டிலே செய்திருந்த மியூசிக் ரூமை நோக்கி சென்றாள் மித்ரா.

அறையை திறந்து உள்ளே சென்றவளுக்கு ஏகப்பட்ட இசைக் கருவிகள் கண்ணில் பட சரியாக அவள் கண்ணில் சிக்கியது பொலித்தீன் உறையால் மூடப்பட்டிருந்த அந்த மியூசிக் கீபோர்ட்.

அதன் அருகில் சென்றவள் அதை மூடியிருந்த உறையை தூக்கி எறிந்து விட்டு கீபோர்ட்டை தன் கைகளால் வருட அவள் நினைவுகள் முதன் முதலில் அதை தொட்ட நினைவுக்கு சென்றது.

ஒன்பது வயது மித்ரா தன் தந்தை தனக்கு பிறந்த நாள் பரிசாக வாங்கி தந்த கீபோர்டை சுத்தி சுத்தி வந்து தொட்டுப் பார்த்துக் கொண்டும் அதன் கீய்ஸ்ஸை ப்ளே செய்துக் கொண்டும் இருக்க அப்போது "பொம்மு குட்டி.. என்ன பன்றிங்க.." என்ற ஆர்யனின் குரலில் திரும்பி பார்த்து
           "ஆரா இதை வச்சி நா எப்பிடி விளையாடுறது.. என் ஹைட்க்கு மேல இருக்கு.." என கூறி உதட்டை பிதுக்கினாள் குட்டி மித்ரா.

ஒரு இருக்கையில் அமர்ந்து கீபோர்ட்டை தன் எதிரில் வைத்து மித்ராவை தன் மடியில் அமர்த்தியவன்,
             "என் பொம்மு குட்டியோட ஆரா இருக்கப்போ எதுக்கு வொர்ரி.. அப்பா கத்துக் கொடுக்குறதை சரியா கத்துப்பிங்களாம்.. அப்றம் அப்பாக்கு இதை ப்ளே பன்னி காட்டுவிங்களாம்.." என தன் மகளின் கன்னத்தில் முத்தம் வைத்து கொஞ்சியவாறு ஆர்யன் இசைத்து காட்டி மித்ராவின் பிஞ்சு விரல்களை பிடித்து கீய்ஸ்ஸை அழுத்தி அவளோடு சேர்ந்து இசைக்க மித்ராவுக்கோ சந்தோஷம் தாளவில்லை.

         "ஆரா சூப்பரா இருக்கு.. நாம தியாவுக்கும் சொல்லி கொடுக்கலாம்.." என்று அவள் கூறிக் கொண்டிருக்கும் போதே ஐந்து வயது ஆராதியா "ப்பா ஆஆ.." என கத்தியவாறு வெளியிலிருந்து ஓடி வர மித்ராவை ஒரு கையில் தூக்கிக் கொண்டு தியாவை மறுகையில் தூக்கியவன் இருவரையும் கையில் வைத்து சுற்ற இரண்டு குட்டி மலர்களும் ஆர்யனை இறுக்கிப் பிடித்தவாறு தன் அப்பாவுடன் விளையாடுவதில் சந்தோஷத்தில் கத்தி  கூச்சலிட்டனர்.

கீபோர்ட்டை வருடியவாறு அன்றைய நினைவுகளை நினைத்தவள் அதன் எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்து அதை இசைக்க தொடங்க கீபோர்ட்டின் இசை சத்தம் கேட்டு ஹோலிலிருந்த அனைவருமே அறையை எட்டிப் பார்த்தனர்.

    How i wish that i could tell you
       It's to you that i would run
   You were the place that i could always rest my head..
        When my world had come undone..

    'Cause I've been wresting with my demons..
       Telling me i have no choice
     How i wish that i could lean upon you know
       Amidst the chaos and the noise

     Your light buried the dark
          A constant unwavering heart..

என மித்ரா அந்த ஆங்கில பாடலை பாடியவாறு கீபபோர்ட்டை இசைக்க பின்னால் இருந்த மொத்த குடும்பமுமே அவள் இசையிலும் குரலிலும் மெய் மறந்து  தான் இருந்தனர். மித்ராவுக்கு நன்றாக கீபோர்ட் இசைக்க தெரியும் என்று கூட அவர்களுக்கு இப்போது தான் தெரியும்.

நினைவுகள் தந்த இதத்தில் மனம் லேசாகும் வரை கீபோர்ட்டை இசைத்தவள் சட்டென்று நிறுத்தி விட்டு ஏதோ உந்துதலில் பின்னால் திரும்பி பார்க்க எல்லாரும் தன்னையே பார்ப்பதை கண்டவள் எழுந்து நின்று திருதிருவென முழித்துக் கொண்டு நின்றாள்.

தியாவோ ஓடி வந்து அவளை அணைத்து,
           "அக்கா சூப்பரா பாடுற.. உனக்கு கீபோர்ட் கூட ப்ளே பன்ன தெரியுமா.. செம்மையா இருந்துச்சிக்கா.." என்று உற்சாகத்தில் துள்ள,
   
          "டார்லிங் உனக்குள்ள இப்பிடி ஒரு திறமையா..வாவ்வ் இந்த குட்டிப்பிசாசும் தான் இருக்கே பாட சொன்னா கதறும்.." என அந்த தருணத்திலும் அனாவை வார அவன் இடுப்பில் நறுக்கென கிள்ளினாள் அனாமிகா.

தேவ்வின் தலையில் நங்கென்று கொட்டிய  ஆதி மித்ரா அருகில் சென்று அவள் தலையை வருடியவாறு,
           "ரொம்ப அழகா வாசிச்ச டா.. அப்படியே உன் அப்பா மாதிரி.. ஆர்யன் கூட ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருந்தா மியூசிக்ல தான் ரொம்ப இன்ட்ரெஸ்ட் காட்டுவான்.. அவன் பொண்ணுங்களும் அப்படியே இருக்கீங்க.." என்று சொல்ல,

பதிலுக்கு ஒரு புன்னகை கூட சிந்தாமல் அறையை விட்டு விறுவிறுவென வெளியேறியவள் ஓஃபீஸிற்கு கிளம்பி சென்றிருக்க,
            "சாப்பிட்டு போ மித்ராமா.." என்று துர்கா கத்திய கத்தலை கூட அவள் காதில் வாங்காமல் சென்றிருக்க இதைப் பார்த்துக் கொண்டிருந்த மற்றவர்களுக்கு தான் ரொம்ப கஷ்டமாகிப் போனது.

ஓஃபீஸிற்கு வந்தவள் தன் இருக்கையில் அமர்ந்து சாய்ந்து கண்ணை மூடியவாறு தன்னை தானே சமாதானப்படுத்த முயற்சி செய்துக் கொண்டிருந்தவள் அந்த முயற்சியில் வெற்றியும் பெற்று தன் அடுத்த வேலையை கவனிக்க ஆரம்பித்தாள்.

RD சொஃப்ட்வெயார் டெவலப்மென்ட் இன் நடவடிக்கைகளை பார்க்க ஹர்ஷாவின் லேப்டாப்பை ஹேக் செய்திருந்தவள் அதை தன் லேப்டாப் மூலமாக பார்க்க முயற்சி செய்ய அது பார்க்க முடியாதவாறு ரொம்பவே செக்யூர்ராக(Secure) இருக்க மித்ராவுக்கு எல்லாமே புரிந்து போனது. இது ஹர்ஷாவுடைய வேலை தான் என்று. அவனும் அவளுடன் அத்துறையை படித்தவன் தானே.. யுனிவெர்ஸ்ஸிடி டோப்பராக இருந்தவன் இவளை பற்றி தெரிந்த பிறகு இவள் செய்த தில்லாலங்கடிகளை பற்றி தெரியாமல் இருந்திருப்பானா என்ன.. அப்போதே முதல் வேலையாக தன் லேப்டாப் மற்றும் ஃபோனை ஹேக் செய்யாதவாறு செக்யூர்ராக இருக்க என்ன செய்ய வேண்டுமோ  அதை எல்லாம் பக்காவாக செய்து விட்டான்.

'ஷீட்..' என இருக்கையின் பிடியில் கைகளை கோபத்தில் அடித்துக் கொண்டவள் தன் பிஏ ரவியை அழைத்து மொத்த கோபத்தையும் அவன் மேலேயே கொட்ட தொடங்கினாள்.

        "இந்த ப்ரோஜெக்ட்டோட டெட்லைன் இன்னைக்கு சொல்லியிருந்தோம்.. ஆனா இன்னும் ரிபோர்ட் சப்மிட் பன்னல்ல.. நாளைக்கு காலைல என் டேபிள்ல அந்த ப்ரோஜெக்ட் சம்மந்தமான ஃபைல் இல்லைன்னா உன்ன வேலைல இருந்து தூக்கிருவேன்.." என மொத்த கோபத்தில் அவள் கர்ஜிக்க இதில் ரவிக்கு தான் தூக்கி வாரிப்போட்டது.

         'இதுவரைக்கும் கயல் மேடம் கூட நம்மள இப்பிடி திட்டினது இல்லை.. இவங்க நம்ம வேலைக்கே உலை வச்சிருவாங்க போலயிருக்கே.. பெருமாளே..' என மானசீகமாக புலம்பியவாறு அவன் அறையை விட்டு வெளியேற சரியாக மித்ராவுக்கு ஒரு புது எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.

நெற்றியை நீவி விட்டவாறு சலிப்பாக அழைப்பை ஏற்று காதில் வைத்தவள், "ஹெலோ.." என்று மித்ரா சொன்னது தான் தாமதம்,

மறுமுனையில் ஹர்ஷாவோ "மது பேபி.." என்று சொல்ல திடுக்கிட்டு காதில் இருந்து ஃபோனை எடுத்து திரையை பார்த்து,
       "அய்யோ.. இவனா ச்சே.." என்று கடுப்பாக நினைத்தவாறு அழைப்பை துண்டித்திருக்க, ஹர்ஷாவோ  'விடுவேனா நானு..' என்ற ரீதியில் அடுத்தடுத்தென்று அவள் அழைப்பை துண்டிக்க துண்டிக்க அழைத்துக் கொண்டே இருந்தான்.

ஒருகட்டத்தில் பொறுக்க முடியாமல் அழைப்பை ஏற்றவள் எதுவுமே பேசாது பல்லை கடித்துக் கொண்டு அமைதியாக இருக்க மறுமுனையில் இருந்த ஹர்ஷாவோ,
         "என்னடி என் மோகினி.. ரொம்ப தான் டி உனக்கு கொழுப்பு.. எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தா என் கோலையே அட்டென் பன்னாம கட் பன்னுவ.." என குறும்பான மிரட்டலுடன் கேட்க,

அவன் தன்னை மோகினி என்றதில் கடுப்பானவள்,
           "டேய் யாரு டா மோகினி.. நீ தான்டா மோன்ஸ்டெர்.. என்ன டோர்ச்சர் பன்ற மோன்ஸ்டெர்.. " என மித்ரா ஆவேசமாக கத்த,

        "ஹாஹாஹா  அய்யோ மது பேபி வை இவ்வளவு ஆவேசம்.. ச்சில் மா.. அப்றம் இந்த வயசுலையே பிபி ஏறிற போகுது.. அப்றம் உன் மோன்ஸ்டெர் அதோட மோகினி இல்லாம ரொம்ப தவிச்சி போயிற மாட்டான்.." என்று நக்கலாக கேட்டவனின் குரலில் அவளுக்கு நிஜமாகவே பிபி எகிறத் தான் செய்தது.

         "ஃபோன வை டா ராஸ்கல்.. இப்போ இப்பிடி வெட்டியா பேசி என்னை வெறுப்பேத்த தான் கோல் பன்னியா.." என்று அவள் கத்தியதில் சிரித்தவன்,
          "எனக்கும் உன்ன கொஞ்சனும்னு ஆசையா தான் இருக்கு.. பட் நீதான் பிடி கொடுக்க மாட்டிக்கிறியே பேபி.. வேணா ஒன்னு பன்னலாம்.. முதல்ல இருந்து ஸ்டார்ட் பன்னலாமா.." என்று ஹர்ஷா கேட்க,

          "உனக்கு என்ன அமீனீசியாவா டா.. உன்ன தான் சுத்தமா புடிக்கலைன்னு சொல்லிட்டேனே.. என் நேரம்.. நா நினைச்சதை அடைய என்ன எல்லாம் பன்ன வேண்டி இருக்கு.. இங்க பாரு என்கிட்ட இப்பிடி பேசுற வேலை எல்லாம் வச்சிக்காத.. உன் அப்பன் உயிரு என் கைல இருக்கு டா.. இப்போ நா நினைச்சா கூட அவன என்ன வேணா பன்ன முடியும்.. அதை மறந்துட்டு என்கிட்ட ஃப்ளர்ட் (Flirt) பன்னிகிட்டு இருக்க.. உன் கம்பனியையும் உன் அப்பனையும் காப்பாத்துற வழிய பாரு.." என்று மித்ரா பேசியதில் எழுந்த கோபத்தை கை முஷ்டியை இறுக்கி அடக்கியவன்,

             "உன் மித்துவ நீ சரியா புரிஞ்சிக்கல  மது.. நா நினைச்சா உன்ன என் இஷ்டத்திற்கு ஆட்டி வைக்க முடியும்.. பட் இப்போ வேணாம் கொஞ்ச நாள் ஃப்ரீ ஆ இரு.. அப்றம் நீ மூச்சு விடனும்னா கூட அது என் பர்மிஷனோட தான் இருக்கும்.." என்று பல்லை கடித்துக் கொண்டு ஹர்ஷா பேச,

      "இடியட்.." என்று கத்தியவாறு அழைப்பை துண்டித்தவள் ஆத்திரத்தில் தன் மேசையிலிருந்த ஃபைல்களை தூக்கி எறிந்து மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க நின்றுக் கொண்டிருந்தாள்.

        "ஹவ் டெயார் இஷ் ஷீ..  என்னையே கன்ட்ரோல் பன்னுவானாமே.. எப்பிடி அவன் அப்பிடி பேசலாம்.. முதல்ல இவனுக்கு ஒரு முடிவு கட்டனும்.. இவன் டோர்ச்சர் தாங்க முடியல.. என்ன பன்னலாம்.. என்ன பன்னலாம்.." என அறையிலே குறுக்கும் நெடுக்குமாக நடந்தவாறு அவள் யோசிக்க சரியாக அவள் தலைக்கு மேலே ' ஐடியா' என்ற பல்பு எரிந்தது.

     'இது சரியா வருமா.. பட் ரொம்ப சின்னபுள்ளதனமா இருக்குமே.. அவன் நம்புவானா.. எதுக்கும் ட்ரை பன்னி பார்க்கலாம்..' என மனதில் நினைத்தவள், உடனே ரவிக்கு அழைத்து அறைக்கு வர சொன்னவள் ரவி வந்தவுடன்,
   
         "ரவி நீங்க ஒரு ஆளுக்கு ஏற்பாடு பன்னனும்.." என்று சொல்ல,

தனது பாஸ் அழைத்து தலையும் புரியாமல் வாலும் புரியாமல் இப்பிடி சொன்னதில் 'ஙே..' என்று விழித்து பார்த்துக் கொண்டிருந்தான் ரவி.

ஆனால் மித்ராவோ அதை எல்லாம் கண்டுக் கொள்ளாமல்,
          "அந்த ஆள் பார்க்க வாட்டசாட்டமா பொலிஸ் மாதிரி இருக்கனும்.. முக்கியமா அவனுக்கு நல்லா நடிக்க தெரிஞ்சிக்கனும்.. உங்களுக்கு ஒரு நாள் தான் டைம் அதுக்குள்ள அப்பிடி ஒருத்தரை தேடி கண்டுபிடிச்சு கூட்டிட்டு வாங்க.. " என்று சொல்லி விட்டு ஏதேதோ யோசனையில் மீண்டும் குறுக்குக் நெடுக்குமாக கொண்டிருந்தவளை பார்த்த ரவிக்கு தான் எங்கேயாவது போய் முட்டிக் கொள்ளலாம் போல் இருந்தது.

          'இவங்க ஒருவேள லூசா இருப்பாங்களோ..' என்று அவன் நினைக்காமலுமில்லை.. இதில் மித்ராவின் மிரட்டல் வேறு நினைவில் வந்து தொலைக்க உடனே மித்ரா சொன்ன வேலையை செய்ய அடித்து பிடித்து ஓடினான் ரவி.

தொடரும்..🔥
-----------------------------------------------------

-ZAKI🔥
    
      

 

Zakiya


ReplyQuote
Jade Javid
(@jadejavid)
Trusted Member Writer
Joined: 8 months ago
Posts: 84
14/10/2020 5:51 am  

                     தீண்டாதே 14🔥

 

மியூசிக் கொலேஜில்,
   
        மதியம் உணவு இடைவேளையின் போது தியா, அனா, அனிருத் கேன்டீனில் ஒரு டேபிளில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். இப்போதெல்லாம் அனிருத் தியாவை அப்பட்டமாக சைட் அடித்தாலும் அதை அவளோ கண்டும் காணாதது போல் இருக்க அனா தான் அனிருத்தின் அப்பட்டமான வழிசலில் தலையிலே வெளிப்படையாக அடித்து கொள்வாள்.

சாப்பிட்டு முடித்த தியா,
          "வெயிட் வோஷ்ரூம் போயிட்டு வரேன்.. " என்று சொல்லி விட்டு செல்ல அந்த வழியாக சென்றுக் கொண்டிருந்தவனை ஒரு வலிய கரம் அங்கிருந்த ஒரு அறைக்குள் இழுத்துக் கொண்டதில் அந்த திடீர் செய்கையில் மிரட்சியுடன் எதிரில் இருப்பவனை பார்த்தாள் தியா.

அவனோ அவள் முழங்கையை இறுக்கமாக பிடித்த வண்ணண் அவளை நெருங்கி நிற்க அவன் கையிலிருந்து தன் கையை விடுவிக்க முயற்சித்தவாறே,
           "என்ன பன்ற கார்த்தி என்னை விடு.. ஏன் இப்பிடி பிஹேவ் பன்ற.." என்று கத்த அவள் கத்தலை எல்லாம் அவன் பொருட்டாகவே எடுக்கவில்லை.

         "என்ன டி நினைச்சிகிட்டு இருக்க.. நானும் எவ்வளவு நாள் தான் உன் பின்னாடியே சுத்திகிட்டு இருக்க.. இப்போ சொல்லு டி.." என அவன் அவள் கையை மேலும் அழுத்தியவாறு சீற,

அவளுக்கு அவன் பிடித்திருந்த பிடியில் அழுகையே வந்துவிட்டது.
           "ப்ளீஸ் என்னை விடு.. எனக்கு தான் அப்போவே பிடிக்கலைன்னு சொல்லிட்டேனே.. விடு என்னை.." தியா கண்கலங்க சொல்ல அவனுக்கோ அவள் பதிலில் கோபம் ஏகத்துக்கும் எகிறியது.

அவளை தன் பக்கம் இழுத்து நெருங்கி நிற்க வைத்தவன்,
           "ஏய் என்ன டி.. நீ இப்பிடி சொன்னா உன்ன விட்டுறுவேனா.. உன்ன எப்பிடி எனக்கு சொந்தமாக்கனும்னு எனக்கு தெரியும் டி.." என சொன்னவன் அவள் இதழ் நோக்கி குனிய அவளுக்கோ அவன் பிடியிலிருந்து விலக கூட முடியவில்லை.

அவனை கண்கலங்க கண்ணீரோடு பார்த்தவாறு, "ப்ளீஸ் என்னை விடு.." என அவள் கத்த, அவனோ தியாவை இன்று முத்தம் கொடுத்தே ஆக வேண்டும் என்ற ரீதியில் அவளை நெருங்க தியாவோ முகத்தை திருப்பிக் கொண்டு,
          "ஹெல்ப் ப்ளீஸ்.. அனா.." என்று கத்த அவள் தாடையை இறுகப் பற்றி தன்னை நோக்கி நிமிர்த்தி அவளை முத்தமிட சென்ற அடுத்த நிமிடமே தரையில் சுருண்டு விழுந்து கிடந்தான் கார்த்தி.

தியாவோ விழுந்து கிடந்த கார்த்திக்கை ஒரு பார்வை பார்த்து விட்டு திரும்ப சரியாக அதே நேரம் அனிருத்தோ கோபத்தின் உச்சியில் அவளை தாண்டி மின்னல் வேகத்தில் சென்று அவனை வெளு வெளு என வெளுத்துக் கொண்டிருந்தான்.

        "அப்பிடி தான் டா லண்டன்.. அவன் வாயிலேயே குத்து.." என அனாவோ பின்னாலிருந்து அவனுக்கு இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்தவாறு உசுப்பேத்தி விட தியா தான் பயத்தில் உறைந்தே விட்டாள். எப்போதும் அதிர்ந்து கூட பேசாத அந்த மென் பாவைக்கு இவனின் திடீர் அதிரடியில் அசைய கூட முடியவில்லை.

அவளருகில் சென்று அவளை அணைத்துக் கொண்ட அனா,
         "அச்சோ தியா ஏன் இப்பிடி இருக்க.. அவன் செவிட்டுலயே ஒன்னு விட்டிருக்க வேணாம்.. சரி விடு அதான் நாங்க வந்துட்டோம்ல.." என்று அவளை சமாதானப்படுத்த,

       "என.. எனக்கு ரொம்ப பயமா.. பயமா இருந்துச்சி.." என்று அழுதவாறே அனாவை இறுகி அணைத்துக் கொண்டாள் தியா.

திரும்பி தியாவை பார்த்த அனிருத்திற்கு அவள் அழுகையை பார்க்க மேலும் மேலும் கோபம் எகிற அவன் அடித்த அடியில்,
        "தெரியாம பன்னிட்டேன் மா.. என்னை விட சொல்லு.." என்று தியாவிடமே கெஞ்ச ஆரம்பித்து விட்டான் கார்த்தி.

"அய்யய்ய்யோ.." என்று ஓடி சென்று அனா,
         "டேய் போதும் டா அவன விடு.. செத்துற போறான்.." என்று அனிருத்தை பிடித்து இழுக்க,

அனாவை தள்ளி விட்டவன்,
           "இவன இன்னைக்கு சும்மா விடக் கூடாது அனா.. எவ்வளவு தைரியம் இருந்தா கூடப் படிக்கிற பொண்ணுகிட்டேயே இப்பிடி நடந்துப்பான்.." என கத்தியவாறு அவனை மேலும் அடிக்க சென்றவனை தியாவின் குரலே தடுத்தது.

         "போதும் ரித்து அவனை விடு.. ப்ளீஸ்.." என தியா சொல்ல, அவளை ஒரு பார்வை பார்த்தவன் தன்னிடம் அடிபட்டு "ஆஆ.. அம்மா.." என்று கீழே சுருண்டு கத்திக் கொண்டிருந்தவனிடம் ஒற்றை விரலை நீட்டி எச்சரித்து தியாவை தரதரவென இழுத்துக் கொண்டு வெளியே சென்றான் அனிருத்.

அவளோ அவனை விழி விரித்து பார்க்க,
          "அறிவில்லை உனக்கு..  உன்கிட்ட தப்பா நடந்துக்க ட்ரை பன்றான்னா செருப்ப கழட்டி அடிக்காம ஹெல்ப் ஹெல்ப்னு கூவிகிட்டு இருக்க.. இதே நாங்க வராம இருந்திருந்தா என்ன நடந்திருக்கும்.. முட்டாள்..  முட்டாள்.. " என அவன் திட்ட தொடங்க தியாவுக்கோ அவன் தன்னை திட்டுவதில் கண்கள் கரித்துக் கொண்டு வந்தது.

உதட்டை பிதுக்கிக் கொண்டு விம்மி விம்மி அழுதவளை பார்க்க அனிருத்திற்கே பாவமாக இருக்க அவள் கையை தன் இரு கைகளிலும் பொத்திக் கொண்டு அதில் அழுத்தம் கொடுத்து,
              "சரி சோரி அழாத.. இதுக்கப்றம் இப்பிடி எதாச்சும் நடந்தா போல்ட்டா ஃபேஸ்  பன்னு ஏன்ஜல் ஓகேவா.." என மென்மையாக சொல்ல,

தியாவும் "தேங்க்ஸ் ரித்து." என திக்கித்திணறி சொல்லி முடித்ததில் அவளுடைய செல்ல அழைப்பில் அனிருத்திற்கோ குதூகலமாகிப் போனது.

          "செம்ம டா நீ.. பேருக்கும் ஆளுக்கும் சம்மந்தமே இல்லை போ.. என்ன மா அடி வெளுக்குற.. சான்ஸ்ஸே இல்லை.." என அனா அனிருத்தை புகழ்ந்து தள்ள,

தன் சட்டை கோலரை பெருமையாக தூக்கி விட்டவன்,
           "ஹே யு நோ வட்.. நா லண்டன்ல கிக் போக்ஸிங் ட்ரைனிங் போனேன்.." என்று சொல்லியதில்,

அனாவோ, "வாவ்வ்.. அனிருத்துன்னு பேர வச்சிகிட்டு அர்னால்ட் மாதிரி இருக்க டா.. அசத்துற லண்டன்.." என வாயைப் பிளந்துக் கொண்டு சொல்ல அப்போது தான் தியாவும் அனிருத்தை முதன் முதலாக மேலிருந்து கீழாக அளவிட்டாள்.

ஆறடி உயரத்தில் லண்டனிலே பிறந்து வளர்ந்தாலும் அந்நாட்டு நிறத்தில் இல்லாமல் நம் நாட்டு இளைஞர்கள் போல் மஞ்சள் நிறத்தில் புன்னகையை தாங்கி நிற்கும் கண்கள், புன்னகை தவழும் உதடு, ஆங்காங்கே ப்ரௌன் நிற ஹெயார் கலர் செய்திருந்த சுருள் கேசம், தேக்கு மரம் போன்ற வாட்டசாட்டமான கட்டுக்கோப்பான உடல், அவன் ஜிம்போடியை இறுக்கி அவனின் உடல் படிக்கட்டுக்களை வெளிச்சம் போட்டு காட்டுவது போல் ஷார்ட் அணிந்திருந்தவனை தியாவோ அப்போது தான் முதல் தடவை பார்ப்பது போல் ரசனையாக பார்த்துக் கொண்டிருக்க அவள் பார்வையை கண்டு கொண்ட அனிருத்தின் இதழ்களோ பெரிதாகவே விரிந்து கொண்டது.

           "என்ன ஏன்ஜல் என்னையே வச்ச கண்ணு வாங்காம பார்க்குற.. சைட் அடிக்கிறியா.." என அனிருத் குறும்பாக கேட்க, தியாவுக்கு தான் ஒரே வெட்கமாகிப் போனது.

         "அப்.. அப்பிடி எல்லாம் இல்லையே.." என்ன தடுமாற்றத்துடன் கூறிவிட்டு தியா தலை குனிந்து கொள்ள, அனாமோ "க்கும்.. க்ளாசுக்கு போவோமா ஏன்ஜல்.." என கிண்டல் தொனியில் தியாவிடம் கேட்க அவளும் அனா கேட்ட விதத்தில் மெல்லிய புன்னகையை சிந்தி அனிருத்தை ஒரு பார்வை பார்த்து விட்டு முன்னே செல்ல அவனும் குறும்பாக சிரித்துக் கொண்டு அவளை ஓரக்கண்ணால் பார்த்தவாறு அவள் பின்னாலே சென்றான்.
----------------------------------------------------------------

அதே சமயம்,

அந்த ரெஸ்டோரென்ட்டில்,

            "ஹெலோ மிஸ்டர் தேவ்.. " என தன் முன்னால் இருந்தவனிடம் கை குலுக்க கை நீட்ட அவன் எதிரில் இருந்த தேவ்வும்  புன்னகை முகமாக கை குலுக்கி,
            "சோரி மிஸ்டர் ஹர்ஷமித்ரன்.. உங்கள ரொம்ப நேரம் வெயிட் பன்ன வச்சிட்டேனோ.." என்று தேவ் கேட்க,

        "தட்ஸ் ஓகே தேவ்.. என்ட் நீங்க என்னை ஹர்ஷான்னே கூப்பிடலாம்.." என்று சொன்னவன் அவள் முன் ஒரு கவரை வைத்தான்.

தேவ் புரியாமல் பார்க்க அவன் புறம் தள்ளிய ஹர்ஷா,
          "அதுல இரண்டு பேரோட ஃபோட்டோஸ் இருக்கு.. எனக்கு அவங்களை பத்தி டீடெய்ல்ஸ் தெரிஞ்சாகனும்.." என சொல்ல,

கவரை பிரித்து அதிலிருந்த ஃபோட்டோவை பார்த்தவனுக்கு அதிர்ச்சியில் கண்கள் விரிந்து கொண்டது. அவன் கண் சிமிட்டாது அதையே பார்த்துக் கொண்டிருக்க அவனை சொடக்கி நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தான் ஹர்ஷா.

'இவனுக்கு எதுக்கு மித்ரா பத்தி தெரிஞ்சிக்கனும்.. அப்றம் இந்த ஃபோட்டோ.." என்று தேவ் மனதில் நினைத்து யோசனையில் நெறித்த புருவத்துடன் ஹர்ஷாவை பார்க்க, ஒரு ஃபோட்டோவை காட்டிய ஹர்ஷா,
          "தேவ் இது எங்க அத்தை.. பட் இவங்க எங்க கூட இல்லை.." என அவன் அத்தை பற்றி அவன் தாத்தா சொன்ன சில தகவல்களை கூறியவன் அடுத்து மித்ராவின் ஃபோட்டோவை காட்டி,
          "இவ பேரு மதுமித்ரா.. ஆரா சொஃப்ட்வெயார் சொல்யூஷன்ஸோட எம்.டி..  இவ எனக்கு ரொம்ப முக்கியம் தேவ்.. மது வாழ்க்கையில ஏதோ நடந்திருக்கு அதுக்கும் என் அப்பா ராஜ்தீப்க்கும் ஏதோ சம்மந்தம் இருக்கு..   அதை பத்தி தெரிஞ்சாகனும்.." என சொல்ல அவன் அப்பா தான் ராஜ்தீப் என்று தெரிஞ்சதில் ஆடிப் போய்விட்டான் தேவ்.

'இவனை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே' என ஹர்ஷாவை பார்த்ததிலிருந்து யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு இப்போது தான் ராஜ்தீப் பற்றிய விவரம் சேகரிக்கும் போது ஹர்ஷாவின் டீன் ஏஜ் வயது புகைப்படத்தை பார்த்தது நினைவிற்கு வந்தது.

"எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை.. எனக்கு சீக்கிரம் மது பத்தி டீடெய்ல்ஸ் தெரிஞ்சாகனும்.. எத்தனை நாளைக்குள்ள உங்களால டீடெய்ல்ஸ் கண்டுபிடிக்க முடியும்.." என்று கேட்க, இப்போது தன் மனநிலையை இவனிடம் காட்டுவது நல்லதிற்கில்லை என்பதை புரிந்து கொண்ட தேவ் அந்த இரு ஃபோட்டோக்களையும் கவரில் போட்டவாறே,
         "சீக்கிரம் டீடெய்ல்ஸ் கலெக்ட் பன்னிட்டு உங்களுக்கு இன்ஃபோர்ம் பன்றேன் ஹர்ஷா.." என்று தேவ் சொல்ல,

தன் உயரத்திற்கு எழுந்து நின்ற ஹர்ஷா
          "தேங்க்ஸ் தேவ்.. சீக்கிரம்  வேலைய முடிச்சிட்டு இன்ஃபோர்ம் பன்னுங்க.. வில் சீ.." என்று சொல்ல தேவ் எழுந்து  அவனுடன் கைகுலுக்கி விட்டு  ஹர்ஷா அங்கிருந்து  நகர்ந்த அடுத்த நொடி அந்த கதிரையிலேயே தொப்பென்று அமர்ந்து விட்டான்.

      'என்ன டா நடக்குது இங்க.. இவங்க இரண்டு பேரையும் இவனுக்கு எப்பிடி தெரியும்.. அதுவும் உறவுமுறை வேற சொல்லி கூப்பிடுறான்.. அதுவும் ராஜ்தீப்போட பையனுக்கும் மித்ராவுக்கும் என்ன சம்மந்தம்.. அந்த சண்டி ராணி என்கிட்ட ஏதோ மறைக்குறா அது மட்டும் தெளிவா தெரியுது.. சீக்கிரம் எல்லாத்தையும் கண்டுபிடிக்குறேன்.." என தலையை கைகளால் தாங்கியவாறு புலம்பிக் கொண்டிருந்தான் தேவ்.

வெளியே வந்த ஹர்ஷா தன் காரை திறக்க போக, அப்போது ஆறடிக்கும் மேல் உயரத்தில் ஆஜானுபாகுவான ஒருவன் அவன் தோளை தொட அவனை பக்கவாட்டாக திரும்பி மேலிருந்து கீழ் அளவிட்டவாறு ஹர்ஷா நோக்க அந்த புதியவனோ ஹர்ஷாவின் தோளை அழுத்தமாக பிடித்தவாறு திருப்பி,
       "டேய் எவ்வளவு தைரியம் இருந்தா எங்க வீட்டு பொண்ணுகிட்டேயே வம்பிழுப்ப.. உனக்கெல்லாம் உள்ள வைச்சு முட்டிக்கு முட்டி தட்டினா தான் புரியும்.." என எகிற,

அவன் கையை தன் தோளிலிருந்து தட்டி விட்டவன்,
          "ஹெலோ யாரு நீ மொதல்ல அதை சொல்லு.. என்னை பார்த்தா உனக்கு பைத்தியக்காரன் மாதிரி தெரியுதா.. ஆமா எவ அவ.. உன் வீட்டு பொண்ணு.." என்று கேட்ட ஹர்ஷாவுக்கு  'இவனை எங்கேயோ பார்த்திருக்கேனே' என்ற வசனம் இந்த புதியவனை நோக்கி மனதில் தோன்றாமலுமில்லை..

       "என்ன டா ஏதும் தெரியாத மாதிரி கேக்குற.. மித்ராவ தெரியாதா உனக்கு.. அவ மாமா CBI னு தெரியாம வாலாட்டுற.. " என அவன் சொல்ல,

'மித்ரா' என்ற பெயரை அவன் சொன்னதும் தான் தாமதம் 'உஃப்ப்ப்..' என பெருமூச்சு விட்ட ஹர்ஷா தன் வலது புருவத்தை விரலால் நீவி விட்டவாறு அவனை வில்லத்தனமான ஒரு புன்னகையுடன் பார்க்க,

'அச்சோ நம்மள கண்டுபிடிச்சிட்டானோ..' என உள்ளுக்குள் அந்த புதியவன் பதறினாலும் அதை வெளியில் காட்டாமல்,
       "பேசிக்கிட்டு இருக்கேன் உன் பாட்டுக்கு சிரிக்கிற.." என ஓவர் பெஃபோமன்ஸ் காட்டியவாறு ஹர்ஷாவை அடிக்க கையை ஓங்க இடது கையால் அவன் கையை பிடித்த ஹர்ஷா  "ச்சு.. ச்சு.. ச்சு.." என உச்சு கொட்டியவாறு  வலது கையை மடக்கி அவன் மூக்கிலே ஒரு குத்து விட்டேன்.

"அய்யோ.. அம்மா.." என கத்தியவாறு மூக்கை பிடித்து தன் கையை பார்த்த அந்த புதியவனோ விழிவிரித்து,  "அய்யோ.. ப்ளட்டூடூ.." என அலற, ஒற்றை புருவத்தை தூக்கி முறைப்புடன்  தனது வலது கை காப்பை மேலே உயர்த்தியவாறு அவனை நெருங்கினான் ஹர்ஷா.

மித்ரா ஓஃபீஸில்,

    ஒரு முக்கியமான ப்ரோஜெக்ட் பற்றி மீட்டில் ஹோலில் தன் முன் இருந்தவர்களிடம் விளக்கிக் கொண்டிருந்தாள் மித்ரா.

திடீரென 'டமார்' என்ற கதவு திறக்கும் சத்தத்தில் ஒருசேர எல்லாரும் அத்திசையை நோக்க புயல் போல் உள்ளே வந்த ஹர்ஷாவை பார்த்த மித்ராவுக்கோ இதயம் படபடவென அடித்துக் கொண்டது. என்ன தான் மற்றவர்கள் முன் தைரியமாக கெத்தாக இருந்தாலும் தன்னவனிடத்தில் மாத்திரம் தன் ஒட்டு மொத்த தைரியம் செயலிழப்பதை அவள் உணரத்தான் செய்தாள்.

விறுவிறுவென மித்ராவிடம் வந்தவன் அங்கு இருந்தவர்களிடம் வெளியே போகும் படி ஒற்றை விரலை வாசல் புறம் நீட்டி கண்களால் சைகை காட்ட மித்தாவுக்கு வந்ததே ஒரு கோபம்,
         "டேய் என் ஓஃபீஸ்க்கே வந்து என் ஸ்டாஃப்ஸ்ஸையே ரூல் பன்ற..  உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கனும்.. மரியாதையா இங்க இருந்து போயிரு.." என மித்ரா ஒற்றை விரலை நீட்டி எச்சரிக்க,
அவள் நீட்டிய விரலை பிடித்து ஹர்ஷா  மடக்க, "ஆஆ.. விடு டா.." என்று கத்தியவாறு தன் மற்ற கையால் அவனை அடித்தாள் மித்ரா.

இந்த கூத்தை மிரட்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தவர்களின் பக்கம் திரும்பியவன்
              "வெளில போங்கன்னு சொன்னேன்.. புரியலையா.." என பல்லை கடித்துக் கொண்டு கர்ஜிக்க அதன் பிறகு அவர்கள் அங்கு இருந்தால் தானே..

அவர்கள் சென்ற அடுத்த நொடி அவள் விரலை விட்டவன் சற்றும் அவள் எதிர்ப்பார்க்காத சமயம் அவளை இழுத்து அவள் இதழை தன் இதழால் சிறை செய்திருந்தான் ஹர்ஷா. மித்ராவோ அவன் மார்பிலே அடித்து விலக முயற்சிக்க அதையெல்லாம் தூசி போல் தட்டியவன் அவள் திமிற திமிற அவளின் இதழ் தேனை குடித்து விட்டே மெதுவாக விலகினான்.

அவன் விலகிய அடுத்த நொடி மித்ராவுக்கோ அவன் தன்னை முத்தமிட்டதில் கோபம் தலைக்கு ஏறியதில் அவனை அடிக்க கையை ஓங்க அவள் ஓங்கிய கையை பிடித்து அவள் முதுகுக்கு பின்னே முறுக்கி ஹர்ஷா சிரிக்க,
     
       "என்னை விடு ஹர்ஷா.. இதுக்கெல்லாம் சேர்த்து வைச்சு நீ அனுபவிக்க போற டா.." என மித்ரா பல்லை கடித்துக் கொண்டு கத்துவதை பொருட்படுத்தாமல் அவளை பின்னாலிருந்து அணைத்தவாறு நின்றுக் கொண்ட ஹர்ஷா அவள் காது மடலில் தன் இதழ் உரச,
             "என்கிட்ட உன் திமிற காட்டாத பேபி.. இப்போ உன் எதிர்ல இருக்குறது உன்கிட்ட மயங்கி கிடந்த  உன் மித்து இல்லை.. ஹர்ஷா.. ஹர்ஷமித்ரன்.. என்கிட்டயே கை ஓங்குறல்ல.. இதுக்கப்றம் என் முன்னாடி உன் விரலயாச்சும் உயர்த்தி பாரு தொலைச்சிருவேன் உன்ன.." என்று கோபத்துடன் அடக்கப்பட்ட சிரிப்புடனே மிரட்ட மித்ராவுக்கு கூட அவன் மிரட்டும் தொனியில் அடி வயிற்றில் பயபந்து உருளத் தான் செய்தது.

அவன் பிடி வலியை கொடுக்க வலியில் முகம் சுருக்கியவளை கண்டு அவன் முறுக்கியிருந்த கையை விட வலியில் தன் முழங்கையை பரபரவென தேய்த்துக் கொண்டவள் அவனை அனல் தெறிக்கும் விழிகளுடன் ஏறிட்டு பார்க்க ஹர்ஷாவோ ஒற்றை கண்ணை சிமிட்டி குறும்பாக சிரித்தவாறு,
            "என்ன பேபி.. நீயும் பெரிய வில்லி ரேன்ஜ்க்கு பேசின பேச்சை பார்த்து நா கூட கொஞ்சம் பதறிட்டேன்.. ஆனா சீரியல் வில்லிங்க மாதிரி சின்னபுள்ள தனமா ஒரு ஸ்கெட்ச் போட்டு அதுவும் இந்த ஹர்ஷாகிட்ட.. அய்யோ.. அய்யோ.. " என கேலியாக சொல்லியவாறு அவன் வாய்விட்டு சிரிக்க மித்ராவுக்கு தான் முகம் கருத்து விட்டது.

ஏதும் பேசாது அவனையே அழுத்தமாக பார்த்தவாறு அவள் நிற்க அவளை மேலும் நெருங்கியவன் அவள் மூச்சு காற்று படும் தூரத்தில் நின்றுக் கொண்டு,
             "இனிமே ப்ளான் பன்றேன்னா என் ரேன்ஜ்க்கு பன்னு பேபி.. இப்பிடி எல்லாம் கோமெடி பன்னிகிட்டு இருக்காத.. முடியல என்னால.." என்று குறும்பாக சொன்னவன்,

பின் முகத்தை தீவிரமாக்கி அவள் தாடையை பிடித்து தன்னை நோக்கி நிமிர்த்தியவன்,
               "உனக்கு புடிச்சிருக்கோ இல்லையோ நீ என் கூட தான் இருந்தாகனும்.. இதை நா அன்னைக்கே சொல்லிட்டேன்.. இதுக்கப்றம் இப்பிடி எல்லாம் லூசு தனமா ப்ளான் போட்டு என்னை எதாவது பன்னுறேன்னு பேருல கிறுக்குத்தனம் பன்னிகிட்டு இருந்த இப்பிடி எல்லா உன்னை விட்டு வைக்க மாட்டேன்.. புரியுதா.." என சொல்ல அவனவளோ அவனை தான் உக்கிரமாக முறைத்துக் கொண்டிருந்தாள்.

நம்ம ஹீரோவோ தன்னவள் முறைப்பதிலும் கூட தன்னை ரசிப்பதாக  நினைத்து வசீகரமான புன்னகையை சிந்தி அவள் நெற்றியில் அழுந்த முத்தமிட்டு,
            "லவ் யு மோகினி.." என்று சொல்லி அவள் கன்னத்தை தட்டி விட்டு சென்றான்.

வெளியே வந்த ஹர்ஷா வாசலில் கையை கட்டிய வண்ணம் பவ்யமாக நின்றிருந்த தன்னை மிரட்ட வந்தவனை பார்த்து இடுப்பில் கையை குற்றி முறைக்க,

          "சார் என்னை மன்னிருச்சிருங்க.. இப்பிடி நடிச்சா பணம் தரேன்னு சொன்னாங்க அதான்.." என்று தயங்கியவன் பின் ஆச்சரியமாக, "ஆனா, என்னை எப்படி சார் கண்டுபிடிச்சிங்க.." என தன் சந்தேகத்தை கேட்க,

        "என் ஃப்ரென்ட் கிஷோர் வீட்டு ட்ரைவர் தானே டா நீனு.." என்று மார்புக்கு குறுக்கே கையை கட்டிய வண்ணம் ஹர்ஷா கேட்ட விதத்தில்,
"ஹிஹிஹி.." என்று அசடுவழிந்தவன்,
        " தயவு செஞ்சு இதை பத்தி ஐயாக்கிட்ட சொல்லிராதீங்க சார்.." என்று அவன் கெஞ்ச, அவன் கெஞ்சும் தோரணையில் ஹர்ஷாவிற்கு சிரிப்பு வந்ததில் தன் முத்துப்பற்கள் தெரிய சிரித்தவாறே  நகர, இந்த புதியவனோ மனதில்,
      'ஹப்பாடா.. ஆனாலும் இந்த ஆளு என்னா அடி அடிக்கிறாரு.. நமக்கே இப்பிடின்னா இதை பன்ன சொன்ன மேடம்க்கு என்ன சேதாரமோ..' என அவன் புலம்பிக் கொண்டிருக்க மீடிங் ஹோலில் மித்ராவோ உச்ச கட்ட கோபத்தில் குறுக்கும் நெடுக்குமாக நடந்துக் கொண்டிருந்தாள்.

அவளுக்கோ ஹர்ஷாவின் பேச்சில் பிபி ஏகத்துக்கும் எகிற மேசையிலிருந்த மொத்த பொருட்களையும் தட்டி விட்டவள் அவன் முத்தமிட்ட இடத்தை அழுந்த துடைத்து "மோன்ஸ்ட்டெர்.. மோன்ஸ்ட்டெர்.." என்று ஹர்ஷாவை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தாள்.

தொடரும்..🔥
-----------------------------------------------------

-ZAKI🔥

 

 

Zakiya


ReplyQuote
Jade Javid
(@jadejavid)
Trusted Member Writer
Joined: 8 months ago
Posts: 84
16/10/2020 7:07 am  

                   தீண்டாதே 15🔥

 

ஹர்ஷா வீட்டில்,

          அப்போது தான் ஓஃபீஸிலிருந்து வந்த ஹர்ஷா குளித்து உடை மாற்றி அனிருத்தை தேடி செல்ல அவனோ தன் கையிலிருந்த கிட்டாரை வாசித்தவாறு அறையிலிருந்த சோஃபாவில் சாய்ந்து கனவுலகத்தில் மிதந்து கொண்டிருந்தான்.

அவன் பக்கத்தில் போய் நின்று அவனை ஹர்ஷா உற்று நோக்க அவனோ ஹர்ஷா தன் எதிரில் இருப்பதை கூட உணராது ஏதோ பாடலை முணுமுணுத்தவாறு தனியாக சிரித்துக் கொண்டிருக்க கடுப்பான ஹர்ஷா டீபாயில் இருந்த தண்ணீர் க்ளாசை அவன் மேல் ஊற்றவே பதறி அடித்துக் கொண்டு கனவிலிருந்து நிகழ்காலத்திற்கு வந்தான் அனிருத்.

தன் எதிரில் கைகளை கட்டி முறைத்துக் கொண்டு நின்றவனை கண்டு "ஹிஹிஹி.." என அசடுவழிந்தவாறு அனிருத் இழித்து வைக்க,

         "என்ன டா நா வந்தது கூட தெரியாம ட்ரீம்ல இருக்க.. யாரந்த பொண்ணு.." என்று குறும்பாக கேட்டவாறு அவன் பக்கத்தில் அமர்ந்தான் ஹர்ஷா.

"தெய்வமே.. ஹவ்வ் (How) .." என்று அனிருத் ஆச்சரியமாக கேட்க,

"பதில சொல்லு டா.." என்று ஹர்ஷா சிரித்தவாறு கேட்டதில் அப்படியே மீண்டும் கனவுலகத்திற்கு சென்ற அனிருத்,
            "என் க்ளாஸ் தான் ப்ரோ.. ரொம்ப அழகா இருப்பா.. அவ்வளவு சொஃப்ட் கெரக்டெர்.. நல்ல பொண்ணு ப்ரோ.." என ஆராதியாவை மனதில் நினைத்தவாறு புன்னகையுடன் சொல்ல,

     "என்ன டா லவ்வா.." என ஹர்ஷா அவன் தலையை தட்டி கேட்டதில்,

       "அச்சோ ப்ரோ.. லவ் அதெல்லாம் தெரியல.. பட் ஐ லைக் ஹெர்.. அவக்கூட பேசிக்கிட்டே இருக்கனும்னு தோணுது.. பட் என் ஏன்ஜல் பேசுறதுக்கே காசு கொடுக்கனும் போல.." என கூறியவாறு அனிருத் பெருமூச்சு விட,

ஹர்ஷாவுக்கோ அவன் மனது அப்பட்டமாக தெரிந்தது.. சிரித்தவாறு, 
         "ஓஹோ.. ஏன்ஜல்.. ம்ம்ம்.. ம்ம்.. நடத்து நடத்து.." என கேலி செய்ய அனிருத்தோ மீண்டும் கிட்டாரை எடுத்து ஃபீல் பன்னி ஒரு பாட்டை பாட ஆரம்பிக்க அறையிலிருந்து அடித்து பிடித்து ஓடி வந்து விட்டான் ஹர்ஷா.

இவர்கள் இங்கு பேசிக் கொண்டிருந்த சமயம் ஹோலிலோ,

ராஜ்தீப் அமர்ந்து சில ஃபைல்களை பார்த்துக் கொண்டிருக்க வாசலில் நின்ற கார் சத்தத்தில் வாசலை பார்க்க அங்கு வந்த இருவரை பார்த்தவரின் முகமோ பிரகாசமானது.

          "வாடா திலகா.. எப்படி டா இருக்க.. என்ன மினிஸ்டர் சார் நீங்க இந்த பக்கம்.." என கூறியவாறு தன் வீட்டுக்கு வந்த தன் நண்பர்கள் மற்றும் பிஸ்னஸ் பார்ட்னர்ஸ் மினிஸ்டர் சப்தகிரி மற்றும் திலகனை அணைத்து கொண்டார்.

சோஃபாவில் மூவரும் அமர்ந்திருக்க,

          "என்ன டா ராஜ் நம்ம பிஸ்னஸ் எப்படி போய்கிட்டு இருக்கு.. இப்போ வரைக்கும் எந்த பிரச்சினையும் இல்லையே..." என சப்தகிரி கேட்க,

          "அதெல்லாம் கரெக்டா தான் டா போய்கிட்டு இருக்கு.. பட் இப்போ ஒரு சின்ன சிக்கல் அவ்வளவு தான்.." என ராஜ்தீப் யோசனையாக சொல்ல,

        "என்னாச்சு அந்த ஜேக்கப் எதாவது பிரச்சினை பன்றான்னா.." என கோபமாக கேட்டார் திலகன்.

        "அதை அப்றம் சொல்றேன்.. நீ எப்போ இந்தியாவுக்கு வந்த..  மொதல்ல அதை சொல்லு.." என்று ராஜ்தீப் கேட்டதற்கு,

     "இன்னைக்கு காலைல தான் டா.. பிஸ்னஸ்னஸ் விஷயமா வர வேண்டியதா போயிருச்சி.. இப்போ நீ சொல்லு.. என்ன பிரச்சினை போலிஸ்ல எதாச்சும் பிரச்சினை பன்றாங்களா.. அதெல்லாம் கொடுக்க வேண்டியதை கரெக்டா கொடுத்துக்கிட்டு தானே இருக்கோம்.. அப்படி ஏதும் பிரச்சினை இருந்தாலும் அதை நம்ம மினிஸ்டர் சார் தான் பார்த்துப்பாரே.." என திலகன் ராஜ்தீப்பிடம் ஆரம்பித்து சப்தகிரியிடம் முடிக்க,

         "எவனுக்கும் நம்ம விஷயத்துல தலையிடுற தைரியம் இல்லை.. எவனாலையும் நம்மள தடுக்கவும் முடியாது.." என சப்தகிரி  பெருமையாக சொல்ல,

            "இப்போ பிரச்சினை அது இல்லை.. எப்போவும் ஜேக்கப் பொண்ணுங்கள அவனுக்கு வர்ற க்ளைன்டுக்கு தான் கேப்பான்.. திஸ் டைம் ஒரு பொண்ண அவனுக்காக கடத்த சொல்லியிருக்கான்.. பட் அந்த பொண்ண கடத்துறதுல தான் சிக்கலே.." என ராஜ்தீப் சொல்ல மற்ற இருவரும் புரியாமல் பார்த்தனர்.

           "மிடில் க்ளாஸ் பீப்பளால(People)  நம்மள எதிர்த்து எதும் பன்ன முடியாதுன்னு நம்மளும் மிடில் க்ளாஸ் பொண்ணுங்க அநாதை பொண்ணுங்கள தான் கடத்துறுவோம்.. பட் இந்த பொண்ணு கொஞ்சம் பெரிய இடம்.. அதான் யோசிக்கிறேன்.. நம்ம ஆளுங்க ஃபோலோ பன்ன தான் செய்றாங்க.. இப்போ வரைக்கும் எதுவும் பன்ன முடியல.." என ராஜ்தீப் சலிப்பாக சொல்ல,

           "சீக்கிரம் வேலைய முடிச்சிறு.. உன்னால முடியலன்னா சொல்லு என் ஆளுங்கள வைச்சி இதை நா பாத்துக்குறேன்..  பொண்ணுங்கள கரெக்ட் டைம்க்கு அனுப்பலன்னா நம்ம தலை தான் உருளும்.." என சப்தகிரி சொல்ல,

"யாரந்த பொண்ணு.." என திலகன் கேட்டதற்கு,
"பேரு மதுமித்ரா.." என்று சொன்ன ராஜ்தீப் அவள் ஃபோட்டோவை காட்டி மித்ரா பற்றிய சில தகவல்களை சொன்னார்.

          "இதை நானும் திலகனும் பார்த்துக்குறோம்.. நீ நம்ம மத்த க்ளைன்ட்ஸ்ஸ கவனி.. அந்த ஜேக்கப் கூட பேசினாலே டென்ஷன் தான்.. நேரத்திற்கு முடிக்கலைன்னா நமக்கு அவன் செட்ல் பன்ன வேண்டியதையும் தராம போயிருவான்.." என சப்தகிரி சலித்தவாறு சொல்லிக் கொண்டிருக்க சரியாக, "என்ன செட்ல்மென்ட் அங்கிள்.." என்ற குரலில் திடுக்கிட்டு மூன்று பேருமே ஒருசேர திரும்பி பார்த்தனர்.

மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக் கொண்டு அவர்களை கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தான் ஹர்ஷா. அவனை எதிர்ப்பார்க்காத ராஜ்தீபிற்கு நெஞ்சில் நீர் வற்றி போக 'எதாவது கேட்டு விட்டதோ..' என்ற பயத்தில் எச்சிலை விழுங்கியவாறு அவனையே மிரட்சியுடன் அவர் பார்த்திருக்க,

சப்தகிரியோ சமாளிக்கும் பொருட்டு,
            "அது.. அது ஒன்னுஇல்ல ஹர்ஷா எலெக்ஷன் வருதுல்ல அதான் செட்ல்மென்ட்.." என்று என்ன சொல்வதென தெரியாமல் இழுக்க,

வாய்விட்டு சிரித்தவன்,
           "இந்த ஜென்மத்துல நேர்மையா அரசியல் பன்ன கூடாதுன்னு முடிவு பன்னிடிங்க.. " என்று நக்கலாக கூறி சிரிக்க, அவனின் சாதாரணமான பேச்சில் தான் மற்ற மூவருக்கும் போன உயிர் திரும்பி வந்தது போல் 'ஹப்பாடா..' என்றிருந்தது.

பெருமூச்சு விட்ட சப்தகிரி எழுந்து,
          "நீ அமெரிக்கா போறதுக்கு முன்னாடி உன்னை கடைசியா பார்த்தது.. இப்போ தான் பார்க்குறேன்..எப்படி பா இருக்க.."
என கூறியவாறு அணைத்து கொள்ள,

          "பார்த்தா எப்படி தெரியுது.." என தன் முறுக்கேறிய உடலுடன் தன் முழு உயரத்திற்கு நிமிர்ந்து நின்று  பேன்ட் பாக்கெட்டுக்குள் கையை விட்டு ஒற்றை புருவத்தை உயர்த்தியவாறு குறும்பாக ஹர்ஷா கேட்டதில்,

          "ஐ அம் டேம்ன் ஷுவர் ராஜ் எனக்கொரு பொண்ணு இருந்திருந்தா உன் பையனை தூக்கிட்டு போய் என் பொண்ணுக்கு கட்டி வச்சிருப்பேன்.. பிரம்மன் ஓவர் டைம் எடுத்து செதுக்கின சிலையாட்டம் இருக்கான் உன் மகன்.. ரியலி யு லுக் ஸ்மார்ட் ஹர்ஷா.." என்று கூறியவாறு ஹர்ஷாவின் வயிற்றில் அவர் செல்லமாக குத்த,

         "அய்யோ அங்கிள் அப்படி எல்லா விபரீதமா முடிவு எடுத்துராதீங்க.. ஐ அம் ஓல்ரெடி கம்மிடெட்.." என தன் வயிற்றை தடவியவாறு தன் அப்பாவின் பக்கத்தில் அவன் அமர,

  திலகனோ,
             "என்ன டா உன் பையன் ஏதோ சொல்றான்.. அப்போ மருமக ரெடி தானா.." என கிண்டலிக்க ராஜ்தீப்போ உதட்டை பிதுக்கி தெரியாது என்பது போல் தோளை குலுக்கினார்.

சிறிது நேரம் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தவன் டிவியை ஒன் செய்ய அதில் கூறிய செய்தியை கேட்டு ஹர்ஷாவுடைய கண்கள் சிவக்க தாடை இறுக கைகளை மடக்கி உள்ளங்கையில் அழுத்தம் கொடுத்தவாறு தன் கோபத்தை கட்டுப்படுத்தினான்.

ஆனால் இதைப் பார்த்துக் கொண்டிருந்த ராஜ்தீப், திலகன், சப்தகிரிக்கு அவனுடைய கோப முகத்தை கண்டு 'இதற்கு காரணம் தாங்கள் தான் என்று தெரிந்தால் தங்களுடைய நிலைமை.." என்ற ரீதியில் மிரட்சியுடன் பார்த்தவாறு தங்கள் முக பாவனைகளை ஹர்ஷா பார்க்காதவாறு மறைக்க பெரும்பாடுபட்டனர்.

அதே சமயம்,

    "நேற்று சென்னையில் ஒரு இளம்பெண்
கடத்தப்பட்ட நிகழ்வு சென்னையே பரபரப்புக்கு உள்ளாகியுள்ளது. இதற்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க பொலிஸ்துரையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட  சென்னை உட்பட பல மாவட்டங்களிலுள்ள மகளிர் சங்கங்களினால் பல போராட்டங்கள் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது."

என்ற செய்தி அறை தொலைக்காட்சியில் ஓட கோபத்தில் பற்களை நரநரவென கடித்த வண்ணம் சோஃபாவில் அமர்ந்து அந்த செய்தியை பார்த்துக் கொண்டிருந்தாள் மித்ரா.

அப்போது கதவை தட்டி உள்ளே வந்த தேவ்,
         "மித்ரா இன்னைக்கு காலைல தான் திலகன் கனடால இருந்து வந்திருக்கான்.." என்று சொல்ல,

"ஐ நோ தேவ்.." என கூறியவாறு அவனை நிமிர்ந்து பார்த்தவள் இதழ்கள் வெற்றிப் புன்னகை புரிந்தது.

அவள் சிரிப்பே அவனுக்கு பீதியை கிளப்ப,
           "ஒரு மாசம் இங்க தான் இருக்க போறான்.. இப்போ என்ன பன்றதா முடிவு பன்னியிருக்க மித்ரா.." என்று மெதுவாக இழுத்து இழுத்து தேவ் கேட்க,

            "ஒரு மாசம் இருக்குல்ல தேவ்.. அவன் திரும்ப கனடா போறதுகுள்ள அவன தூக்கியாகனும்.. நீ நா சொல்றதை மட்டும் செய்தாலே போதும்.." என மித்ரா சொல்ல,

இவளை என்ன சொல்லி சமாளிப்பது என்று புரியாமல் தவித்தவன்,
             "மித்ரா கடைசியா கேக்குறேன் வேணாமே.. அவங்க பத்தின எவிடென்ஸ் கலெக்ட் பன்னி அப்பா மாமாகிட்ட கொடுக்கலாம்.. அவங்க பாத்துப்பாங்க.." என்று அவளுக்கு மீண்டும் புரிய வைக்க முயல, அவன் முறைத்த முறைப்பில்  கப்சிப் என்று  வாய் மூடிக் கொண்டான் தேவ்.

பெருமூச்சுவிட்ட தன்னை நிதானப்படுத்தியவள்,
          "இங்க பாரு தேவ் நேத்து ஒரு பொண்ண கடத்தியிருக்கானுங்க.. நம்ம தியாவோட வயசு தான்.. அந்த பொண்ணு எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பா.. அவ குடும்பம் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும்.. இதை தடுக்க தானே என் ஆரா அவ்வளவு போராடினாரு.. ஆனா, என்ன பன்னாங்க என் கண்ணு முன்னாடி என் அம்மா அப்பாவ..."  என அதற்கு மேல் பேச முடியாமல் எதிரில் டீபாயின் மேலே இருந்த பூச்சாடியை தூக்கி ஆக்ரோஷத்தில் சுவற்றில் தூக்கி வீச தேவ் தான் ஆடிப்போய் விட்டான்.

         "இவனுங்ககிட்ட பணம், பதவி, அதிகாரம் மூனுமே இருக்கு.. இவங்க தான்னு தெரிஞ்சும் டிபார்ட்மென்ட்ல மூடி மறைச்சிருக்காங்க.. இந்த விஷயம் மாமாக்கு தெரிஞ்சும் அவங்களால எதுவுமே செய்ய முடியாத நிலை..  அப்போவே நம்மள வைச்சி மிரட்டியிருக்காங்க இப்போ அவங்க ஏக்ஷன் எடுக்க போய் எங்க அது அவங்க  குழந்தைங்க உயிருக்கு அதாவது நம்ம உயிருக்கு தேவ்  ஆபத்தா முடிஞ்சிருமோன்னு தான் அவ்வளவு கோபத்தையும் மனசுல புதைச்சிகிட்டு இருக்காங்க..  இப்படிபட்டவங்கள சும்மா விடக் கூடாது தேவ்.. கொன்னு போடனும்.."
          என அவள் ஆவேசமாக கத்தியவாறு மூச்சு வாங்கியவாறு தரையில் மண்டியிட்டு அமர அவளின் நிலையை புரிந்து கொண்டவனோ அவள் கபோர்ட்டில் என்டிடிப்ரஷன் மாத்திரையை தேடி எடுத்து அவளுக்கு கொடுத்து சோஃபாவில் அமர வைத்தான்.

தலையை பின்னால் சாய்த்து கண் மூடி இருந்தவளை பார்த்த தேவ்விற்கு மனது பிசைய,  'எத்தனை நாளைக்கு இந்த மெடிசின்ன எடுத்துக்குவா.. சீக்கிரம் இவள கௌன்ஸ்லிங் கூட்டிட்டு போகனும்.. பட் எப்படி..' என மனதில் நினைத்தவாறு அவளை மடியில் படுக்க வைத்து அவள் தலையை ஆறுதலாக வருடி விட்டான் அந்த தோழன்.

அடுத்த நாள்,

            'இந்த ஹர்ஷா ஏன் மித்ரா பத்தி கேட்டான்.. அவனுக்கும் மித்ராவுக்கும் என்ன சம்மந்தம்.. இதை பத்தி மித்ராகிட்ட கேட்போமா.. வேணாம் வேணாம்.. அப்றம் என்கிட்ட அவள பத்தி டீடெய்ல்ஸ் கேட்டான் என்றதுக்காகவே அவனையும் லிஸ்ட்ல சேர்த்துக்குவா.." என்று தன் கேபிளில் அமர்ந்து யோசித்துக் கொண்டிருந்த தேவ்விற்கு வட்ஸ்அப்பில் சில ஃபோட்டோஸ் வந்திருக்க அதை எடுத்து பார்த்தவனுக்கோ மனது உலைகளமாக கொதித்தது.

"இவள..." என பற்களை கடித்துக் கொண்டு உடனே அனாவுக்கு அழைக்க மறுமுனையிலோ அழைப்பு துண்டிக்கப்பட 'விடா முயற்சி விஷ்வரூப வெற்றி..' என தனக்குத்தானே சொல்லியவாறு மீண்டும் மீண்டும் அழைத்துக் கொண்டு இருக்க ஒரு கட்டத்தில் முடியாமல் அவளும் அவன் அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.

          "என்ன டி கொழுப்பா.. கோல் பன்ன பன்ன கட் பன்னிகிட்டே இருக்க.. உனக்கு எத்தனை தடவை சொல்றது.. அவன்கூட பழகாதன்னு.. கேட்க மாட்டியா நீ.." என்று தேவ் காட்டுகத்து கத்த,

மறுமுனையில் அனாவோ,
            "ஸப்ப்பாஹ்ஹ்ஹ்... எதுக்கு இப்பிடி கத்துற காது கொய்யுன்னுது..  இப்படியே கத்துகிட்டே இரு அப்றம் பிபி எகிறி மண்டைய போட போற ஜாக்கிரதை.." என்று சிரிப்புடன் சொல்ல,

            "நா மண்டைய போடுறேன்னோ இல்லையோ.. நீ மட்டும் என் எதிர்ல இருந்த உன் மண்டைய பொலப்பேன்.." என கர்ஜித்தவன்,
            "சொல்லு டி.. அவன் கூட பைக்ல போற அளவுக்கு தைரியம் வந்துருச்சா.. இப்ப எங்க இருக்கன்னு எனக்கு நல்லாவே தெரியும்.. இரு டி வரேன்.." என்று கோபத்தில் கத்திய தேவ்வை கொஞ்சம் கூட சட்டை செய்யவில்லை அவன் மாமாப் பொண்ணு..

          "என்னை உன்கிட்ட போட்டு கொடுக்குற உன் உழவுத்துறை மட்டும் என் கையில சிக்கினான் சட்னி தான் அவன்..  மூடிட்டு ஃபோன வை டா மூதேவி.." என்று கத்திவிட்டு அனா அழைப்பை துண்டித்திருக்க,

          "ஆஆ.." என்று கத்தி கோபத்தை கட்டுப்படுத்திய தேவ், 'இவளுக்கு எல்லா சொல்லி புரிய வைக்க முடியாது.. பட்டா தான் திருந்துவ.. அப்போ வரட்டும் இவ்வளோ பேசின அவ வாய்லயே குத்துறேன்..' என மனதில் அனாவை வறுத்தெடுத்தவன் கையை மேசையில் ஊன்றி நெற்றியை விரலால் நீவி விட்டவாறு கண்மூடி அமர்ந்திருக்க,

திடீரென கதவு திறந்த சத்தத்தில் கண் திறந்து நிமிர்ந்து பார்க்க தன் எதிரில் வந்துக் கொண்டிருந்தவளை பார்த்தவனுக்கோ, 'அய்யோ ராமா எனக்கு ஏன் இந்த சோதனை..' என நினைக்காமல் இருக்க முடியவில்லை.

அவன் வெளிப்படையாகவே தலையிலடித்துக் கொள்ள அவன் எதிரில் அமர்ந்த வேல் "ஹிஹிஹி.." என்று இழித்து வைக்க, அவளை மூக்கு விடைக்க முறைத்தவன்,
             "உனக்கு CBI ஓஃபீஸ்ல வேலையே இல்லையா.. எப்போ பாரு எங்க ஓஃபீஸ சுத்தியே ரவுண்ட்ஸ் போயிக்கிட்டு இருக்க.."  என தேவ் கடுப்பாக கேட்க,

            "அது ஏன்னு உனக்கு தெரியாதா செல்லகுட்டி.." என தேவ்வின் கன்னத்தை வேல் எட்டி கிள்ள,  "ஆஆ வலிக்குதுடி.." என கத்தி கன்னத்தை தடவியவாறு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க கோபமாக அவளை பார்த்தவனை கண்டுக்காது,

            "டேய்ய் அவிந்த்கிட்ட எப்படியாச்சும் என் லவ்வ சொல்லனும் டா.. பட், எப்படிதான்னு தான் தெரியல.. என்ன தான் சின்ன வயசுல இருந்து ஒன்னா வளர்ந்தாலும் ரொம்ப பயமா இருக்கு டா.." என வேல் ஒருவித வெட்கத்துடனே சொல்ல,

அவளை சலிப்பாக பார்த்த தேவ் மனதிலோ,
        'இவ அவிந்த் அவிந்த்னு அவன் பின்னாடி சுத்திகிட்டு இருக்கா.. அவன் என்னடான்னா அந்த சண்டி ராணி பின்னாடி சுத்திகிட்டு இருக்கான்.. அவ என்னடான்னா எனக்கே தெரியாம ஏதோ தில்லாலங்கடி வேலை பன்னி வைச்சிருக்கா.. அவ போட்டுத் தள்ள போறவனோட பையன் அவள பத்தியே டீடெய்ல்ல் கேக்குறான்.. இதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ.. ராமா.. " என மானசீகமாக தேவ் புலம்ப அடுத்து வேலு கேட்ட கேள்வியில் தேவ்விற்கு தான் எங்கேயாவது தலையை கொண்டு போய் முட்டிக் கொள்ளலாம் போலிலிருந்தது.

தொடரும்..🔥
-----------------------------------------------------

-ZAKI🔥
 
      

 

Zakiya


ReplyQuote
Jade Javid
(@jadejavid)
Trusted Member Writer
Joined: 8 months ago
Posts: 84
19/10/2020 7:17 am  

                   தீண்டாதே 16🔥

 

          "தேவ் வெலன்ட்டைன் டே (Valentine day) வருதுல்ல அவிந்த்துக்கு என்ன கிஃப்ட் கொடுக்கலாம்.." என்று தீவிரமாக கேட்க, தேவ்வோ அவன் முன் இருந்த மேசையில் "அய்யோ.. அய்யோ.. அய்யோ.." என்று வெளிப்படையாகவே முட்டிக் கொண்டான்.

வேலுவோ 'என்ன பன்றான் இவன்..' என்ற ரீதியில் அவனை புரியாமல் பார்த்துக் கொண்டிருக்க அவளை உக்கிரமாக முறைத்தவன்,
           "ஏம்மா முதல்ல அவன்கிட்ட உன் லவ்வ சொல்லு.. அதை அவன் எக்செப்ட் பன்னிகிட்டா எப்பிடி எக்செப்ட் பன்னிகிட்டா.." என்ற வசனத்தை அழுத்தி சொல்லி, "அதுக்கப்றம் இந்த கிஃப்ட் ப்ளாஹ் ப்ளாஹ் பத்தி யோசிக்கலாம்.. அதுக்குள்ள உனக்கென்ன அவசரம்.." என தேவ் கடிந்து கொள்ள,

          "போடா தாஸு என் அவிந்த் என்னை வேணான்ணு சொல்ல மாட்டான்.. அவ மனசுலையும் நா இருக்கேன்.. பட் அதை அவன் இன்னும் புரிஞ்சிக்கல.. அவ்வளவு தான்.. நா சொன்னா உடனே ஏத்துக்குவான்.. அப்றம் பாரு சிங்களா சுத்திகிட்டு இருக்குற உன் முன்னாடி நாங்க ஒன்னா கடல போட்டு வெறுப்பேத்துறோமா இல்லையான்னு.." என வேல் சொடக்கு போட்டு சொல்ல, தேவ்விற்கு தான் அவளை நினைத்து பாவமாக இருந்தது.

        'அவன போய் இவ்வளவு லவ் பன்றாளே.. பட் அவன் என்னடான்னா அவன கொஞ்சம் கூட கண்டுக்காத அவ பின்னாடி சுத்திகிட்டு இருக்கான்..  பேசாம அரவிந்த் பத்தி இவக்கிட்ட சொல்லலாமா.. பட் ரொம்ப உடைஞ்சி போயிருவாளே..' என தேவ் யோசித்துக் கொண்டிருக்க, வேலுவோ அவளவனிடம் எப்பிடி காதலை சொல்வதென அவனை நினைத்து கனவு கண்டுக் கொண்டிருக்க,

இங்கு அரவிந்த்தோ அவன் அறையில் மித்ராவிடம் தன் காதலை எப்பிடி சொல்லவதென யோசித்துக் கொண்டிருந்தான். "மித்ராகிட்ட நேருல சொல்லவே பயமா இருக்கே.. பேசாம தேவ்கிட்ட சொல்லி ஹெல்ப் கேக்கலாமா.. வேணாம் வேணாம்.. அந்த அரைமென்டல் சொதப்பினாலும் சொதப்பிறும்.. அப்போ அனா.. அச்சோ அது அப்பாக்கிட்டயே டிரெக்டா நம்மள போட்டு கொடுத்துரும்.. தியா.." என நாடியில் கை வைத்து யோசித்ததவன், "வேணாம் அவ அக்காவ லவ் பன்றேன் தங்கச்சி அவ எப்பிடி நமக்கு மாமா வேலை பார்ப்பா.. இப்போ என்ன தான் பன்றது.. வாவ்வ்வ் சூப்பர் ஐடியா இதுக்கு நம்ம நச்சு தான் சரி.. அவ தான் நம்மள புரிஞ்சிக்கிட்டு நம்மள பத்தி மித்ராகிட்ட நல்ல விதமா எடுத்து சொல்லி புரிய வைச்சி பக்கா மாமாவா நமக்கு ஹெல்ப் பன்னுவா.. சீக்கிரம் நச்சுகிட்ட இதை பத்தி பேசியாகனும்.." என்று யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு தெரியவில்லை தான் அவள் மனதை மொத்தமா சிதைக்க போகிறோம் என்று..

அன்று,

       வேலை விடயமாக வெளியே வந்த மித்ரா வேலையை முடித்து விட்டு ஓஃபீஸை நோக்கி தானே காரை ஓட்டிக் கொண்டு செல்ல சைட் கண்ணாடி வழியாக அவள் கண்களில் சிக்கியது அந்த வெள்ளை நிற கார்.

கொஞ்ச நாட்களாக அந்த கார் தன்னை பின்தொடர்வதை மித்ராவும் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறாள். ஆனால் ஆரம்பித்தில் அதை பெரிதாக கண்டுகொள்ளாதவள் இப்போது தன்னை பின்தொடர்வதை கண்டதும் சந்தேகம் ஏற்பட காரை ஓரமாக நிறுத்தி விட்டு சீட்டில் சாய்ந்தவாறு கண்ணாடி வழியாக அந்த காரையே நோட்டமிட்ட ஆரம்பித்தாள்.

அந்த காரும் அவள் காரை நிறுத்தியுள்ள இடத்திலிருந்து சற்று தள்ளி நிறுத்தி அங்கேயே காத்திருக்க ஒருகட்டத்தில் பொறுமையிழந்தவன் காரிலிருந்து இறங்கி அந்த காரை நோக்கி வேக எட்டுக்களுடன் செல்ல உடனே சுதாகரித்த அந்த காரில் உள்ளவன் வேகமாக காரை திருப்பி வந்த வழியாக காரை செலுத்தினான்.

ஆனால் மித்ராவோ அந்த கார் நம்பரை குறித்துக் கொண்டவள் உடனே தேவ்விற்கு அந்த நம்பரை அது யாரென்று விசாரிக்க சொல்லி அனுப்பியவள்  தன் சீட்டில் அமர்ந்து பெருமூச்சுவிட்டவாறு,  'யாரா இருக்கும் நம்மள ஃபோலோ பன்றது.. ஒருவேள அந்த மோன்ஸ்ட்டெர் ஆஆ..'  என்று அவள் யோசித்து முடிக்கவில்லை சரியாக அவளை தொலைப்பேசியில் அழைத்திருந்தான் அவளின் மோன்ஸ்டெர்.

         'அய்யோ இவனா ச்சே..' என சலித்தவாறு அழைப்பை ஏற்று காதில் வைத்தவள் ஏதும் பேசாது அமைதியாக இருக்க எதிர்முனையிலும் அமைதியாக இருந்ததில் குழம்பியவள் சற்று நேரம் பார்த்து அப்போதும் எந்த பதிலும் இல்லாமல் போக,
          "ஹெலோ.." என்று எரிச்சலாக சொன்னதும் தான் தாமதம் "மது பேபி.." என்ற ஹர்ஷாவின் குரலில் அவள் கோபமும்  ஏகத்துக்கு எகிறியது.

       "இப்போ எதுக்கு டா கோல் பன்ன.. உனக்கெல்லா வேற வேலையே இல்லையா.. என்னை ஏன் இப்பிடி டோர்ச்சர் பன்ற.. இதுக்கப்றம் என்கிட்ட வாலாட்டுன உன் அப்பாவோட சேர்த்து உன்னையும் போட்டு தள்ள ஸ்கெட்ச் போடுவேன் பாத்துக்க.. மூடிட்டு ஃபோன வை டா ராஸ்கல்.." என்று அவள் துண்டிக்க போக,

அவள் பேசியதில் ஆத்திரமாக வந்தாலும் தன்னை கட்டுப்படுத்தியவன் நிதானமாக,
          "பேபி இப்போ நா உன் ஓஃபீஸ்ல உன் கேபின்ல உன் ச்செயார்ல தான் சுத்திகிட்டு இருக்கேன்.. வைட்டிங் ஃபோர் யு டார்லிங்.." என்று சொல்லியதில் வெகுண்டவள்,
             "ஹவ் டேர் யு.. உன்ன.. உன்ன.. இரு டா.. அங்கேயே இரு.. இதோ.. இதோ வரேன் டா.. உன்ன என்ன பன்ன போறேன் பாரு.." என்று அழைப்பை துண்டித்தவள் காரை மின்னல் வேகத்தில் செலுத்தி ஓஃபீஸை நோக்கி பறக்க விட்டாள்.

ஓஃபீஸின் முன் காரை நிறுத்தி காரிலிருந்து இறங்கியவள் அங்கு ஹர்ஷாவின் காரை பார்த்ததில் புசுபுசுவென கோபம் ஏற இருக்குற கோபத்தை எல்லாம் சேர்த்து  காரின் முன்பக்கம் காலால் ஒரு உதைவிட்டு ஓஃபீஸிற்குள் விறுவிறுவென சென்றாள்.

அங்கு ரிசப்ஷனில் இருந்த காயத்ரியை பார்க்காமல்,  "காயத்ரி கம் டு மை கேபின்.." என்று கூறியவாறு கடந்து செல்ல அவளுக்கு தான் தூக்கி வாரிப் போட்டது.

தன் அறைக் கதவை திறந்துக் கொண்டு சென்றவள் அங்கு தன் இருக்கையில் சாவகாசமாக அமர்ந்து ஃபோனில் கேம் விளையாடிக் கொண்டிருந்த ஹர்ஷாவை பார்த்ததும் கோபம் தலைக்கேற அதுவும் அவன் தான் வந்தும் கண்டும் காணாதது போல் இருந்ததில் பிபி எகிற மேசையிலிருந்த பொருட்களை ஆவேசமாக தட்டி விட்டாள் மித்ரா.

அந்த சத்தத்திலும் நிதானமாக விழியுயர்த்தி பார்த்தவன் தன்னவளின் கோபம் கண்டு வந்த சிரிப்பை கட்டுப்படுத்தியவாறு,
          "யு லுக் சோ ஹோட்(Hot) பேபி.." என்று குறும்பாக சொல்ல அவளோ அவனை பார்வையாலேயே எரித்துக் கொண்டிருந்தாள்.

அப்போது சரியாக ரிசப்ஷனில் இருந்த காயத்ரியும் கதவை தட்டி அனுமதி கேட்டு உள்ளே வர மித்ராவோ கைகளை கட்டி அவளை முறைத்தவள்,
          "இந்த ஓஃபீஸ்ல நீ வேலை பார்க்குறதுக்காக தான் சம்பளம் கொடுக்குறது.. இப்படி தான் கண்ட கண்ட நாயுங்கள என் ஓபீஸ்குள்ள அதுவும் என் ரூம்குள்ள என் பர்மிஷன் இல்லாம விடுவியா.." என அவள் கத்திய கத்தலில் ஒரு நிமிடம் அந்த பெண் நடுங்க ஹர்ஷாவுக்கு அவள் வார்த்தையில் மனது லேசாக வலித்தாலும் அதை முகத்தில் காட்டாமல் புன்னகை முகமாகவே தன் மதுவை பார்த்துக் கொண்டிருந்தான்.

             "இல்ல மேம் அவர் தான்.." என காயத்ரி ஏதோ சொல்ல வர, "ஷட் அப்.." என்று மித்ரா கத்தியதில் கப்சிப் என வாயை மூடிக் கொண்டாள் அந்த அப்பாவி ஜீவன். 

       "ஐ டோன்ட் வோன்ட் எனி ஸ்டுபிட் ரீசன்ஸ்.. இதுக்கப்றம் இந்த மாதிரி எதாச்சும் நடந்துச்சுன்னா இந்த கம்பனில நீ வேலை பார்க்க முடியாது.. கொட் இட்.." என்று மித்ரா கேட்க காயத்ரியோ கண்கலங்க நின்ற தோரணையில் ஹர்ஷாவுக்கே பாவமாகிப் போனது.

மித்ராவின் அருகில் வந்தவன்,
           "சிஸ்டர் நீங்க போங்க.. இவள நா பாத்துக்குறேன்.." என மித்ராவிடம் பார்வையை பதித்தவாறே சொல்ல, மித்ராவோ கைகளை கட்டி ஹர்ஷாவை அழுத்தமாக பார்க்க, இருவரும் ஒருவருக்கொருவர் சலிக்காமல் கண்களாலேயே முறைத்துக் கொண்டு நின்றனர்.

காயத்ரி தான் இருவரின் நடுவில் மாட்டிக் கொண்டு திருதிருவென முழித்துக் கொண்டு நிற்க, ஹர்ஷாவோ அவள் புறம் திரும்பியவன் ஒற்றை புருவத்தை உயர்த்தி,  "போன்னு சொல்றேன்ல.." என கர்ஜிக்க, அவன் அதட்டலில் பயந்தவள் மித்ராவை  திரும்பி பார்த்தவாறே வெளியேறினாள்.

அவள் சென்ற அடுத்த நொடி தன்னவளை இழுத்து தன் கைவளைவுக்குள் கொண்டு வந்த ஹர்ஷா,
             "என்ன டி ரொம்ப தான் ஆடுற.. நானும் பார்த்துகிட்டே இருக்கேன் அந்த பொண்ண ஓவரா மிட்டுற.. அதுவும் என்னை நாயுன்னு வேற சொல்ற.. ம்ம்.. பட்  என் அழகு மோகினி நாய்க்கு வாலாட்டவும் தெரியும்.. அட் த சேம் டைம் கடிச்சி குதறவும் தெரியும்.. சோ என்கிட்ட அடங்கியே இரு பேபி.." என்று சிரித்தவாறு மிரட்டும் தோரணையில் சொல்ல, மித்ராவோ இமை வெட்டாது அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவள் இடையை தன் இடது கையால் வளைத்து பிடித்திருந்தவன் வலது கையால் அவள் இதழை வருடியவாறு,
            "நா உன்னை நெருங்குறத யாராலையும் தடுக்க முடியாது என் செல்ல குட்டி.. சோ சும்மா அடுத்தவங்கள மிரட்டாம உன் மித்துவ எப்பிடி சமாளிக்கிறதுன்னு யோசி.." என கிண்டலாக சொல்ல,

உதட்டை சுழித்தவள்,
           "இப்போ எதுக்கு இங்க வந்த..உன் கம்பனில உனக்கு வேலையே இல்லையா.. எப்ப பார்த்தாலும் என்னை ஃபோலோ பன்னிகிட்டு என் பின்னாடியே சுத்திகிட்டு இருக்க.." என மித்ரா திட்ட,

            "என் மதுவ பார்க்கனும்னு தோணிச்சி அதான் உடனே கிளம்பி வந்துட்டேன்.. என்ட், என்ன சொன்ன ஃபோலோ பன்றேனா.. அதுக்கு அவசியமே இல்லையே டார்லிங்.." என ஹர்ஷா பேசியதை இடைவெட்டியவள்,

        "பொய் சொல்லாத இன்னைக்கு கூட உன் ஆளுங்கள வச்சி என்னை ஃபோலோ பன்னல.. நா பார்த்ததும் அப்பிடியே தப்பிச்சு ஓடிட்டானுங்க.. இடியட்ஸ்.." என்று மித்ரா சொன்னதில் யோசனையாக புருவத்தை சுருக்கிய ஹர்ஷா,
           "மது எப்போதிலிருந்து உன்ன ஃபோலோ பன்றாங்க.." என்று கேட்டதில்,

           "நீயே ஃபோலோ பன்னிட்டு ஏதும் தெரியாத மாதிரி வேற கேக்குற.. என்ன விளையாடுறியா.." என மித்ரா கத்தியதில் தான் பிடித்திருந்த அவள் இடையில் அழுத்தம் கூட்டியவன்,
            "கே..ட்டதுக்கு மட்டும் பதில் சொ..ல்லு.. எதிர்..த்து பேசாத.." என வார்த்தைகளை ஹர்ஷா  அழுத்தி சொல்ல, அவன் மிரட்டிலில் தானாகவே அவள்  உதடுகள் அசைந்தது.

          "நா இந்தியா வந்ததிலிருந்தே.." என்று மித்ரா சொல்ல ஹர்ஷாவுக்கு தான் குழப்பம் சூடிக் கொண்டது. ஏற்கனவே அமெரிக்காவில் வைத்தே அவளை கடத்த இரண்டு முறை எடுத்த முயற்சியிலும் அவளை காப்பாற்றியதே ஹர்ஷா தான்.

இப்போதும் அவள் இந்தியா வந்ததிலிருந்தும் இப்படி நடப்பதில் குழப்பம் சூழ்ந்து கொள்ள அவளை விட்டு நெற்றியை விரலால் நீவி விட்டவாறு யோசித்தவன் மீண்டும் மித்ராவை நெருங்கி அவளை இறுக அணைத்து,
         "மது வெளில போகும் போது கெயார்ஃபுல்லா இரு டா.. உன்ன இதுவரைக்கும் ஃபோலோ பன்றது நா இல்லை.. பட் இனி உன்ன ஃபோலோ பன்றது தான் என் வேலையே.. " என சொல்ல மித்ராவோ விழிவிரித்து அவனை பார்த்தாள்.

ஹர்ஷாவோ அதை எல்லாம் சட்டை செய்யாது அவள் கன்னத்தை தாங்கி,
               "மறுபடியும் சொல்றேன் மது.. பீ கெயார்ஃபுல்.. நா உன்ன எப்போவும் வோட்ச் பன்னிகிட்டே தான் இருப்பேன்.. என் மதுக்கு ஒரு ஆபத்துன்னா அது என்னை மீறி தான்.. அவ்வளவு சீக்கிரம் உனக்கு எதும் ஆக விடமாட்டேன்." என அவள் நெற்றியோடு நெற்றி முட்டி சொன்னவன் அவள் இதழில் அழுந்த முத்தமிட்டு கன்னத்தை தட்டி யோசனையூடே வேக நடையுடன் அறையிலிருந்து வெளியேற மித்ராவுக்கு தான் ஒன்றும் புரியவில்லை.

அவன் அணைப்பில் சிலை போல் இருந்தவளுக்கு அவன் ஸ்பரிசம் ஒரு பாதுகாப்பு உணர்வை கொடுக்க அதை மனம் எதிர்ப்பார்த்து ஏங்கினாலும் அடுத்த நொடி கண்களை மூடி தன்னை சமன்படுத்திக் கொண்டாள் மித்ரா.

அன்று இரவு,

மித்ரா ஒரு எண்ணிற்கு அழைப்பை எடுத்தவள் மறுமுனையில் அழைப்பு ஏற்கப்பட்டவுடன்,
           "சிட்டில மோல் கட்ட போறதுக்கான வெளிநாட்டு டென்டர்கான கொட்டேஷன் ஆர்.டி கன்ஸ்ட்ரக்ஷன் சப்மிட் பன்னிட்டாங்களா.."என்று கேட்க,

மறுமுனையிலோ,
            "இல்ல மேம் இன்னும் த்ரீ டேய்ஸ்ல  சப்மிட் பன்னுவாங்க.. இது ரொம்ப பெரிய ப்ரோஜெக்ட் மேம்.." என சொல்ல,

இதழுக்குள் சிரித்துக் கொண்டவள்,
           "ஆர்.டி கன்ஸ்ட்ரக்ஷன் கோட் பன்னிருக்க கொட்டேஷன் அம்மௌன்ட் எனக்கு தெரிஞ்சாகனும்.." என சொன்னவள் அடுத்து தன் ப்ளானை மொத்தமாக விளக்க,

          "ஷுவர் மேம்.. வேலையை முடிச்சிட்டு உங்களுக்கு கோல் பன்றேன்.." என கூற அழைப்பை துண்டித்த மித்ரா,
            "பீ ரெடி ராஜ்தீப்.. இந்த லொஸ்ட்ல(Lost)  இருந்து எப்படி உன் புள்ள உன் காப்பாத்துறான்னு நானும் பார்க்குறேன்.." என மீண்டும் தன்னவனுக்கு எதிராக திட்டத்தை தீட்டினாள் மதுமித்ரா.

அடுத்த நாள்,

            தன் போலிஸ் யுனிஃபோர்மை அணிந்து கண்ணாடியின் முன் கம்பீரமாக நின்ற தன் தோற்றத்தை பார்த்து திருப்திபட்ட வேல் ஒரு பெருமூச்சுவிட்டவாறு கிளம்ப எத்தனிக்க அவள் தன் அறைக் கதவை திறக்கவும் வெளியிலிருந்து அரவிந்த் கதவை தட்ட போகவும் சரியாக இருந்தது.

தன்னவனை பார்த்தவளுக்கு முகம் தானாக மலர, "அவிந்த்." என்று உற்சாகமாக கூற,

அவளை மேலும் கீழும் பார்த்த அரவிந்தோ,
        "இந்த ட்ரெஸ்ல மாஸ்ஸுப் பொண்ணா இருக்க  நச்சு.." என்று சொல்ல அவளுக்கு தான் அவன் கூற்றில் ஒரே வெட்கமாகிப் போனது.

"உள்ள வா அவிந்த்.. என் கூட ஏதாச்சும் பேசனுமா.."  என அரவிந்த் தயங்கிக் கொண்டே இருப்பதை பார்த்து சரியாக கவனித்தவள் அக்கறையாக கேட்க,

"ஆமா நச்சு.. லைஃப் மேட்டர்.." என்று அவன் சொல்ல அவளுக்கு தான் உள்ளுக்குள் பரவசமாகிப் போனது. 'ஒருவேள அவிந்த் நம்மகிட்ட லவ் சொல்ல வந்திருப்பானோ.. அச்சோ ஒரே பதட்டமா இருக்கே..' என அவள் தப்பாக மனதில் கணித்துக் கொண்டு,
         "அவி.. அவிந்த் என்ன.. என்ன சொல்லனும்.." என வேல் கண்களை அங்கும் இங்கும் அலைபாயவிட்டவாறு ஒருவித தடுமாற்றத்துடன் கேட்க,

       "அது வந்து நச்சு.. எனக்கு உன்ன விட்டா யாரும் இல்லை.. நீ தான் எனக்கு ஹெல்ப் பன்னனும்.. எனக்காக செய்வல்ல.. உன் அவிந்த்காக.. முடியாதுன்னு மட்டும் சொல்லிராத.." என்று கூற அவளுக்கு தான் ஒன்றுமே புரியவில்லை.

புருவ முடிச்சுகளுடன் அவள் அவனை புரியாமல் நோக்க,
           "அது.. அது நச்சு.. நா மித்ராவ லவ் பன்றேன்.. நீ தான் என் மனசுல இருக்குறத அவகிட்ட சொல்லி புரிய வைக்கனும்.. ப்ளீஸ் நச்சு மா.. என் செல்லகுட்டில.." என்று சொல்லி அவள் மனதில் வலிக்க வலிக்க ஈட்டியை இறக்க வேலுவுக்கோ உலகமே தலைகீழாக சுற்றுவது போல் இருந்தது.

சிறுவயதிலிருந்து அனுஅனுவாக காதலித்த தன்னவன் வேறு பெண்ணை காதலிக்கிறான் என்பதை கேட்டதுமே அவள் மனது சுக்கு நூறாக உடைந்து போக வாயில் வார்த்தை வராமல் அழுகையில் தொண்டை அடைத்தது வேலுவுக்கு.

அவள் பேசாமல் சிலை போல் நின்றதில் அவளை உலுக்கியவன்,
           "நச்சு என்னாச்சு.. ஏன் எதுவும் பேசமாட்டிக்கிற.." என்று கேட்க,

கண்ணீரை சிரமப்பட்டு கட்டுப்படுத்தியவள் தொண்டையை செறுமிக் கொண்டு,
           "டோன்ட் வொர்ரி அவிந்த்.. நா மித்ராகிட்ட இதை பத்தி பேசுறேன்.. " என்று குரல் கமர சொல்ல அரவிந்த்தால் அவள் முக மாற்றத்தையும் குரல் மாற்றத்தையும் கூட புரிந்துக் கொள்ள முடியவில்லை.

அவளை தாவி அணைத்தவன்,
             "ரொம்ப தேங்க்ஸ் நச்சு செல்லம்.. இதுக்கு தான் நீ வேணுங்கிறது.. எப்படியாச்சும் அவகிட்ட சொல்லி சம்மதம் வாங்கிறு டா.. அதுக்கப்றம் அப்பா அம்மா கிட்ட சொல்லிக்கலாம்.. அகைன் தேங்க்ஸ் அ லொட் நச்சு.." என்று குதூகலமாக சொன்னவன் அறையை விட்டு வெளியேறி இருக்க,

அன்று ரியா ஹரி தன் அத்தைப் பொண்ணை தான் காதலிப்பதாக சித்து சொல்லிய போது தன் காதலை இழந்து விட்டதில் எப்படி நொறுங்கிப் போய் தரையையே வெறித்தவாறு சிலை போல் இருந்தாளோ இன்று அவள் மகளும் அதே நிலையில் எந்த உடையில் தன்னை கம்பீரமாக நினைத்தாளோ அதே உடையில் தன் காதலை இழந்து விட்ட வேதனையில் கண்கலங்க சிலை போல் நின்றிருந்தாள்.

சிறிது நேரம் கழித்தே வேல் எனும் சிலைக்கு உயிர் வர அப்பிடியே தரையில் மண்டியிட்டு அமர்ந்தவள்,
             "ஏன் அவிந்த் உனக்கு என்னை பிடிக்கல.. சின்ன வயசுலிருந்தே உன்ன ரசிச்சிகிட்டு உன் கூடவே உன் பெயரையே சொல்லிகிட்டு உன் பின்னாடியே திரிஞ்சேனேடா..என் மனசு உனக்கு கொஞ்சம் கூடவா புரியல.. நா போலிஸ்ஸாக முடிவெடுத்தது கூட உன் வார்த்தைக்காக தானே டா.. 'என் நச்சு அப்பா மாதிரி பெரிய போலிஸ்ஸா வருவான்னு' சின்ன வயசுல நீ எதார்த்தமா சொன்னத நா என் ஆழ் மனசுல செதுக்கி வச்சி இப்போ இப்பிடி இருக்கேன்..

        ஏன் டா என் காதலை இப்பிடி கொன்னுட்ட.. நீ இல்லாம நா எப்பிடி டா இருப்பேன்.. நீ தானே டா எனக்கு எல்லாமே.. உன்ன காதலிச்சவளையே உன் காதலுக்கு துணையா இருக்க சொல்றியே.. என்னால முடியல டா.." என்று கதறி அழுதவள் நிமிர்ந்து சற்று நேரத்திற்கு முன் தன் கம்பீரமாக நின்று திருப்திபட்ட அந்த கண்ணாடியை பார்க்க அவள் அழுது சிவந்த முகமே அவளை பலவீனமாக காட்டியது.

அவள் அணிந்திருந்த காக்கி உடை கண்ணீரால் நனைந்திருக்க தன்னை நிதானப்படுத்தி எழுந்து நின்றவள் கண்ணீரை அழுந்த துடைத்து முகத்தை தண்ணீரால் அடித்து கழுவி கடமையை செய்ய உணர்ச்சிகளை உள்ளுக்குள் அடக்கியவாறு இறுகிய முகமாக வெளியேறினாள் வேலு நாச்சியார்.

தொடரும்..🔥
------—---------------------------------------

-ZAKI🔥

          
 

 

Zakiya


ReplyQuote
Jade Javid
(@jadejavid)
Trusted Member Writer
Joined: 8 months ago
Posts: 84
20/10/2020 6:06 pm  

                  தீண்டாதே 17🔥

 

மியூசிக் கொலேஜில்,

         "ஹேய் என்ன டி இவ்வளவு சீக்கிரம் இன்னைக்கு விட்டுட்டாங்க.. இப்போ என்ன தான் பன்றது.." என தியா புலம்பிக் கொண்டிருக்க,

அனாவோ அவள் புலம்பலை காதில் வாங்காமல் தொலைப்பேசியில்,

      "வினய் சீக்கிரம் வா.. இப்போ எங்க இருக்க..

மறுமுனையில்,----------------------------------

       ஓகே ஒகே.. ஐ வில் வைட்.." என பேசிக் கொண்டிருந்தவள் தனக்கெதிரே தியா தன்னை முறைப்பதில்,
         "வினய் கொலேஜ் பக்கம் வந்ததுக்கு அப்றம் கோல் பன்னு.." என்று சொல்லி விட்டு அழைப்பை துண்டித்து ஒற்றை புருவத்தை உயர்த்தி 'என்ன' என்ற ரீதியில்  இடுப்பில் கை குற்றி கேட்டாள் அனா.

       "சொன்னா மட்டும் கேக்கவா போறா.." என வாயுக்குள்ளே முணுமுணுத்தவாறு தியா அமைதியாக இருக்க,

இவ்வளவு நேரம் அனா பேசிக் கொண்டிருந்ததை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த அனிருத்,
         "அனா இஃப் யு டோன்ட் மைன்ட் நா ஒன்னு சொல்லவா.." என்று கேட்க, அவளோ "வாட்.." என புரியாயல் புருவத்தை நெறித்தவாறு கேள்வியாக நோக்க,

          "இல்ல. உன்ன கொலேஜ்ல அடிக்கடி பிக்அப் பன்ன ஒருத்தன் வரானே.. இப்போ கூட நீ ஏதோ நேம் சொன்ன.."என அனி யோசிக்க அனாவோ "வினய்.." என்று சொல்லியதில்,

        "ஹான் அதான் அதான்.. எனக்கு அவன பார்க்கவே சரியா படல அனா.. நீ எதுக்கும் அவன்கிட்ட ரொம்ப கெயார்ஃபுல் இருக்குறது நல்லதுன்னு தோனுது.. ஏஸ் அ  ஃப்ரென்ட் ஆ என்னோட ஒபீனியன சொன்னேன்.. தட்ஸ் இட்.." என அனி சொல்லி முடிக்க,

         "அய்யோ லண்டன் நீயுமா.. ஏன் எல்லாரும் அவன தப்பாவே நினைக்கிறீங்க.. இதுல அந்த முட்டாபய தாஸு போய் அவன என் கூட பழக கூடாதுன்னு மிரட்டிட்டு வந்திருக்கான்.. அவன் ரொம்பவே நல்லவன்.." என கூறியவள் அனிருத்தை கூர்மையாக பார்த்து,
          "ஏன் உன்கூட எங்களுக்கு இப்போ ரீசன்ட்டா தான் பழக்கமாகிச்சு.. அவன் கூட ஆறுமாசமா பழகுறேன்.. அப்போ உன்னையும் நாங்க அந்த மாதிரி நினைச்சிக்க முடியுமே.." என அவள் கூறியதில் அனிருத்திற்கு ஒரு மாதிரி சங்கடமாக போக அவன் முகமே வாடிப் போய் விட்டது.

அனா கூறியதிலும் அதில் அனிருத்தின் முகம் வாடியதிலும் வெகுண்ட தியா,
           "ஷட் அப் அனா.. ஒருத்தரோட பார்வைய வைச்சே ஆள எடை போட்டுற முடியும்.. இப்போ வரைக்கும் ரித்து எங்கள தப்பான பார்வைல பார்த்ததே கிடையாது.. ஆனா அந்த வினய் அவனும் அவன் திருட்டு முழியும்.. இது உனக்கு புரியவும் போறது இல்ல.. " என கூறிக் கொண்டிருக்கும் போதே அனாவின் தொலைப்பேசி அலற,

அதை கவனித்த தியா,
                "போடி.. உன் உத்தமன்  வந்துட்டான்.. போய் அவன் பின்னாடி சுத்திகிட்டு இரு.. நீயெல்லாம் பட்டா தான் திருந்துவ.. " என கடிந்து விட்டு அனிருத்தின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு செல்ல போகும் அவர்களை முறைத்து பார்த்த அனா "ச்சே.." என முகத்தை திருப்பிக் கொண்டு சென்று விட, இங்கு தியாவோ அனிருத்தை கொலேஜ் கேன்டீனிற்கு இழுத்து வந்திருந்தாள்.

அங்கு ஒரு டேபிளில் அமர்ந்திருந்தவளுக்கு அனா அனிருத்தை வினய்யோடு ஒப்பிட்டு அப்படி பேசியதில் கோபம் கட்டுக்கடங்காமல் வர முயன்று தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு வாயுக்குள்ளே அனாவுக்கு பல அர்ச்சனைகளை வழங்கியவாறு தியா அமர்ந்திருக்க அவளுக்கு எதிரே அவளையே புன்சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் அனிருத்.  தியா முதன்முதலில் தனக்காக பேசியதில் உள்ளுக்குள் பரவசமாக உணர்ந்தவனுக்கு மனதுக்குள் சில்லென்று தென்றல் வீச உச்ச கட்ட சந்தோஷத்தில் மூழ்கியிருந்தவன் அவளையே ரசனையாக பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் மைவிழியாள் அவனை மெக்னெட் போன்று ஈர்க்க, பிறைநெற்றி, கூர்நாசி, குட்டி சிவந்த இதழ்கள், காதில் குட்டி ஜிமிக்கி என மஞ்சள் நிற பாவை தன் இடை வரையான கூந்தலை பின்னிட்டு ஒரு பக்கம் விட்டு அவள் அணிந்திருந்த சிவப்பு நிற அனார்கழியில் ஃபெயாரி டேல் கதையில் வரும் இளவரசி போலவே அவன் கண்களுக்கு தெரிந்தாள் தியா.

அவனோ அவளையே ரசித்துக் கொண்டு இருக்க திடீரென,
         "ஐ அம் சோரி ரித்து.. அவ பேசினதுக்கு நா உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன்.. அவ எப்பவுமே இப்படி தான்.. யோசிக்காம பேசிறுவா  அப்றம் அதை நினைச்சு ஃபீல் பன்னுவா அப்படியே எங்க கயல் அத்தை மாதிரி.." என தியா ஒருவித வருத்தத்துடன் சொல்ல அவள் குரலிலே அவளது மனதை புரிந்துக் கொண்டான் அனிருத்.

       "அச்சோ விடு ஏன்ஜல்.. அவ என் ஃப்ரென்ட்  அவ சொல்றதுல தப்பு இல்லை.. நா உங்க கூட இப்போ தானே பழகியிருக்கேன்.." என பேசியவனை குறுக்கிட்ட தியா,

          "நோ ரித்து.. அவ அப்பிடி பேசியிருக்க கூடாது.. உன்ன பத்தி எனக்கு நல்லாவே தெரியும்.. அவ எப்படி அப்பிடி பேசலாம்.. அதான் கோபத்துல திட்டி விட்டுட்டேன்.. உனக்கு ஒன்னு தெரியுமா.. எனக்கு கோபமே வராது.. இன்னைக்கு உன்ன அப்படி பேசினதும் என்னால என் கோபத்தை கன்ட்ரோல் பன்னிக்கவே முடியல.. " என தியா வருத்தமாக சொல்ல தன் அமர்ந்திருந்த கதிரையிலிருந்து எழுந்து அவள் அருகில் அமர்ந்தான் அனிருத்.

            "நீ நிஜமாவே எனக்காக தான் கோபப்பட்டியா.." என தெரிந்தும் தெரியாதது போல் ஒரு ஆர்வத்தில் கேட்க, அவளும் அவன் வார்த்தையின் அர்த்தத்தை புரிந்து கொள்ளாமல் உதட்டை பிதுக்கியவாறு ஆம் என்று மேலும் கீழும் தலையாட்ட அவள் கன்னத்தை தொட்டு தன் பக்கம் திருப்பியவன் அவள் கண்களோடு தன் கண்களை கலக்க விட்டவாறு,
             "தேங்க்ஸ் ஆரா.. " என்று சொல்ல அவளுக்கோ கண்களில் கண்ணீர் தழும்பி நின்று விட்டது.

அவன் கண்களையே பார்த்தவள் மெதுவான குரலில்,
            "என் அம்மா என் அப்பாவ அப்பிடி தான் கூப்பிடுவாங்க ஆரான்னு.." என தழுதழுத்த குரலில் சொல்ல அதில் மெல்லிய புன்னகையை சிந்தியவன் அவள் கன்னத்தை லேசாக வருடி அவளையே ரசித்தவாறு பார்க்க அவன் வருடலில் கூச்சத்தை உணர்ந்தவள் சட்டென சுதாகரித்து விலகி அமர அனிருத்துக்கும் சற்று வெட்கமாகிப் போனது.

எதுவும் பேசாமல் என்ன செய்வதென தெரியாமல் குனிந்து ஃபோனை நோண்டுவது போல் பாவனை செய்தவன் ஓரக்கண்ணால் அவளை பார்க்க அதே நேரம் அவளும் ஓரக் கண்ணால் அவனை பார்க்க இருவரின் பார்வைகளுள் மோதிக் கொண்டதில் சட்டென திரும்பிக் கொண்ட இருவரின் இதழ்களுமே பெரிதாக விரிந்து கொண்டது.

      "ஏன்ஜல் உன் அம்மா அப்பா என்ன பன்றாங்க.. உன் கூடவா இருக்காங்க.." என தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் அனிருத் கேட்க,

அவன் கேள்வியில் முகம் வாடியவள்,
         "எனக்கு ஆறு வயசா இருக்கும் போதே அவங்க இறந்துட்டாங்க.. " என சொல்ல அதை அவள் சொல்லும் போதே அவள் குரல் வேதனையில் கசிவதை உணர்ந்தவன் அவள் கை மேல் தன் கையை வைத்து அழுத்தி "சோரி ஏன்ஜல்.." என்று சொல்ல,

சற்று நிதானித்தவள் பின் உற்சாகமாக,
              "ஆனா என்னோட சித்து அப்பாவும் துகி அம்மாவும் அந்த கஷ்டத்தையே என்னை உணர விடல.. என்ட் என்னோட அக்கா அவங்க தான் எனக்கு எல்லாமே.. ஆரா சொஃப்ட் வெயார் சொல்யூஷன்ஸ் கம்பனியோட எம்.டி தான் அவங்க.." என்று சொல்ல,

     "ஹே எனக்கு கூட ஒரு அண்ணா இருக்காங்க.. பட் பெரியப்பா சன்.. ஆனா சொந்த அண்ணா மாதிரி.. அவன் கூட இருக்கனும்னு தான் நா லண்டன்ல இருந்து வந்ததே.." என அனிருத் சிரிப்புடன் சொல்ல,

          "நீ உன் ஃபேமிலி என்ட் ஃப்ரென்ட்ஸ் அ ரொம்ப மிஸ் பன்றியா ரித்து.." என தியா கூறியதற்கு விரக்தியாக சிரித்தவன்,

        "மிஸ் பன்னனும்னா நாங்க அவங்க கூட ரொம்ப அட்டேச் ஆகியிருக்கனும் ஏன்ஜல்.. என் கூட தான் அப்பிடி யாரும் அவ்வளவு இன்டிமேட்டா(intimate) பழக மாட்டாங்களே.. வீட்ல அப்பா அம்மா இரண்டு பேருமே காலைலயே ஓஃபீஸ் கிளம்பி போயிருவாங்க.. தனியா தான் இருப்பேன்.. ரொம்ப லோன்லியா ஃபீல் பன்னுவேன்.. அப்போ தான் என் தனிமைய போக்கிக்க மியூசிக்ல இன்ட்ரெஸ்ட் காமிச்சேன்..

ஃப்ரென்ட்ஸ் எல்லாருமே ஏதோ ஒரு ரீசன்காக தான் பழகினாங்க.. எக்ஸ்பெக்டேஷன் இல்லாத ரிலேஷன்ஷிப்ப நா பார்த்ததே இல்லை ஏன்ஜல் எக்ஸெப்ட்(except) மை ப்ரோ.. அதான் அவன் இந்தியா வந்துட்டான்னு தெரிஞ்ச அடுத்த செகன்ட் அவ்வளவு அடம்பிடிச்சு நானும் இங்க வந்துட்டேன்.." என அவன் பேசிக் கொண்டே போக தியாவுக்கோ அவன் தனிமையை தான் போக்கினால் என்ன என்று இருந்தது.

தியாவோ எதும் பேசாது அமைதியாக இருக்க அனிருத்தோ சட்டென திரும்பி அவள் கையை பிடித்தவாறு,
           "ஏன்ஜல் நீ என் கூட எப்பவும் இருப்பியா.." என கண்கள் மின்ன ஏதோ எதிர்ப்பார்ப்புடன் சிறு குழந்தை போல் கேட்க, அவளுக்கோ என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.

அவன் தன்னிடம் கேட்ட விதத்தில் இறக்கையே இல்லாமல் வானத்தில் பறப்பது போன்று அவளுக்கு தோன்ற அவனையே உற்று நோக்கியவள் ஏதோ சொல்ல வர அதற்குள் அவள் ஃபோன் அலறியதில் எடுத்து காதில் வைத்து பேசியவள்,
            "ரித்து டைம் ஆகிட்டு.. நான் வீட்டுக்கு கிளம்புறேன்.. நாளைக்கு பார்க்கலாம்.." என்று சொல்லி விட்டு எழ அவனுக்கு தான் முகமே சோர்ந்து விட்டது.

அவன் வாடிய முகத்தை பார்த்தவளுக்கு சிரிப்பு வர சற்று குனிந்து அவன் தலைமுடியை செல்லமாக கலைத்து விட்டு,
          "பாய் டா லண்டன்.." என கிண்டலாக சொல்லி விட்டு செல்ல போகும் அவளையே பார்த்தவன் இதழ்கள் வெட்கச் சிரிப்பில் விரிய தன் பின்னந்தலையில் தானே தட்டிக் கொண்டு சிரித்துக் கொண்டான் அனிருத்.

அன்று இரவு,

             "மித்ரா அந்த கார் நம்பர் அ வச்சி அதோட ஓனர் யாருன்னு பார்த்ததுல அந்த மினிஸ்டர் சப்தகிரியோட பேருல தான் கார் ரிஜிஸ்டர் ஆகியிருக்கு.." என தேவ் மித்ராவிடம் மொட்டைமாடிக்கு நடந்தவாறே சொல்ல,

சட்டென திரும்பி தேவ்வை பார்த்தவள்,
          "சப்தகிரியா.. அவன் எதுக்கு என்னை ஃபோலோ பன்றான்.." என புரியாமல் கேட்டாள் மித்ரா.

          "எனக்கு தெரியல மித்ரா.. நீ ரொம்ப கெயார்ஃபுல்லா இரு.. எனக்கு சந்தேகமாவே இருக்கு.. ஒருவேள.." என தேவ் மனதில் ஒன்றை நினைத்து யோசனையுடன் இழுக்க,

சற்று யோசித்தவாறு புருவத்தை நெறித்தவள் அவன் கூற வந்ததை புரிந்தது போல்,
            "கரெக்ட் தேவ்.. அதே தான்.. எதுக்கும் அவன் ஆளுங்கள வோட்ச் பன்ன ஆளுங்கள ஏற்பாடு பன்னு.. இபௌபோ என் வழிலயே குறுக்க வரான்.." என மித்ரா இறுகிய குரலில் சொல்ல,

        "மித்ரா இதையாச்சும் அப்பாகிட்ட சொல்லலாம்.. அவனுங்க ஃபோலோ பன்றாங்கன்னா அதுல ஏதோ ஆபத்து இருக்கு.. சொல்றத புரிஞ்சிக்கோ.."என தேவ் சொல்ல,

அவனை அலட்சியமாக பார்த்தவள்,
             "எந்த ஆபத்தும் என்னை நெருங்க முடியாது தேவ்.. சோ டோன்ட் கெட் பேனிக்(panic).. இந்த விஷயம் வீட்ல யாருக்கும் தெரிய கூடாது.. தட்ஸ் இட்.." என்று சொன்னவளுக்கோ மனதில் ஹர்ஷாவின் முகமே வந்து போனது.. அவளுக்கு தான் தெரியுமே ஹர்ஷாவை மீறி அவளை யாரும் அவ்வளவு சுலபமாக நெருங்க முடியாது என்று..
       
இவர்கள் பேசிக் கொண்டே மொட்டை மாடிக்கு வர அங்கு மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக் கொண்டு கண்கள் கலங்க வானத்தை வெறித்தவாறு நின்ற வேலுவின் தோற்றமே கண்ணில் பட்டது.

மித்ராவோ பின்னால் வந்த தேவ்விடம் வேலுவை கண்களால் காட்டி புரியாமல் 'என்ன' என்று கண் ஜாடையில் கேட்க, தேவ்வோ உதட்டை பிதுக்கி 'தெரியாது' என்ற ரீதியில் தலையாட்டி வேலுவின் அருகில் செல்ல அவளோ இவர்கள் வந்ததை கூட உணராது அப்பிடியே சிலை போல் சமைந்திருந்தாள்.

மித்ரா அவள் தோளை தொட திடுக்கிட்டு திரும்பியவள் அவர்களுக்கு காட்டாது முகத்தை திருப்பி கண்ணீரை துடைத்து விட்டு உதட்டில் வரவழைக்கப்பட்ட புன்னகையுடன்,
             "இன்னும் தூங்கலையா மித்ரா.. இந்த அரலூசு கூட இந்த ராத்திரியில கதையளந்துகிட்டு இருக்க.." என சகஜமாக கேட்க முயல, ஆனாலும் அவள் குரல் சற்று கரகரப்பாக இருப்பதை தேவ்வும் மித்ராவும் உணரத் தான் செய்தனர்.

         "என்னாச்சு வேல்.. ஏன் ஒரு மாதிரி இருக்க.. உன் கண்ணெல்லாம் ஏன் சிவந்து இருக்க.." என மித்ரா அவளையே கூர்மையாக பார்த்தவாறு கேட்க,

"அது.. அது வந்து.." என தடுமாறியவள்,
            "அப்பா அம்மாவ பார்த்து ரொம்ப நாள் ஆச்சுல்ல அதான்.. வேறொன்னு இல்லை மித்ரா.. ஐ.. ஐ அம் ஆல்ரைட்.." என்று சமாளித்தவள் தயக்கமாக தேவ்வை பார்க்க தேவ்வோ பேன்ட் பாக்கெட்டுக்குள் கையை விட்டவாறு அவளை தான் அழுத்தமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

அவள் தன்னிடம் சொல்வதற்கு தயங்குகிறாள் என்பதை புரிந்து கொண்ட மித்ரா தேவ்விடம் கண்களால் அவளை சுட்டிக் காட்டி, "ஓகே ஓகே வட்எவர்(Whatever).. நாளைக்கு பார்க்கலாம்.. குட் நைட் வேல்.." என்று சொல்லி விட்டு மித்ரா சென்ற அடுத்த நொடி தேவ்வின் மார்பில் சாய்ந்து கதறியே விட்டாள் வேல்.

என்ன நடந்திருக்கும் என்பதை சரியாக ஊகித்தவன் எதுவும் பேசாது அவள் அழுது கரையும் வரை ஆறுதலாக அவளை லேசாக அணைத்து அவள் தலையை வருடி விட, வேலுவோ
          " தேவ் அவிந்த்க்கு என்னை பிடிக்கல டா. அவன் மித்ராவ தான் லவ் பன்றானாம்..  அவன் எப்படி அப்பிடி சொல்லலாம் டா.. அதுவும் என்கிட்ட.. அவன் தான் என் வாழ்க்கைன்னு அவனுக்கு புரியலையா டா.." என்று விம்மி விம்மி அழுதவாறு சொல்ல, தேவ்விற்கு தான் அவளை என்ன சொல்லி சமாதானப்படுத்துவது என்றே தெரியவில்லை.

          "அதுக்கப்றம் என்கிட்டயே மித்ராகிட்ட அவன் லவ்வ சொல்லி அவளுக்கு புரிய வைக்க சொல்றான் டா.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு டா.. அழுகை அழுகையா வருது.." என கதறி அழ தேவ்விற்கோ அரவிந்த் மேல் கொலைவெறியே வந்தது.

தற்போது இவளை சமாதானப்படுத்துவதே பெரிதாக தோன்ற,
             "அவன் சரியான கிறுக்கன் வேலு.. நீ மொதல்ல அழுறத நிறுத்து..அந்த மென்டல் தலைல பிஸ்டல வச்சி மிரட்டியாவது உன் கழுத்துல தாலி கட்ட வைக்கிறேன்.. உன் அவிந்த் உனக்கு தான்.." என தேவ் சமாதானப்படுத்த,

அவளோ 'இல்லை' என இருபக்கமும் தலையாட்டியவள்,
           "நோ தேவ்.. அவிந்த் மனசுல நா இல்லாம அவன் கையால நா தாலி கட்டிக்க மாட்டேன்.. நா அவன காதலிக்கிற விஷயத்தையும் என் மேல சத்தியமா நீ அவனுக்கு சொல்ல கூடாது.. என்னை மனசார காதலிச்சு தான் என் புருஷன் என் கழுத்துல தாலி கட்டனும்.." என அவள் முடிவாக சொல்ல,

        "அப்போ வேலு நா உன்கிட்ட ஒரு மேட்டர் சொல்லவா.." என தேவ் தயங்கியவாறு கேட்க அவனை நிமிர்ந்து புரியாமல் பார்த்தாள் வேல்.

அவள் கண்ணீரை தன் பெருவிரல் கொண்டு துடைத்தவாறே,
           "அது வந்து வேல்.. நீ எனக்கும் அத்தைப் பொண்ணு தான்.. சின்ன வயசுல நானும் உன் பின்னாடி தான் சுத்திகிட்டு இருந்தேன்.. அப்போவே உன் மேல எனக்கும் ஒரு க்ரஷ் இருந்துச்சு.. எப்படியாச்சும் என் மனசுல இருக்குறத உன்கிட்ட சொல்லனும்னு நினைக்கும் போது தான் நீ அந்த காட்டெருமை பின்னாடி சுத்திகிட்டு இருந்த.. எனக்கு எவ்வளவு கோபம் வரும் தெரியுமா.. ஐ லவ் யு வேலு.. நீ வேணா என்னை கல்யாணம் பன்னிக்கிறியா.." என தேவ் பேச பேச வேலுவிற்கு தான் தூக்கி வாரிப்போட்டது.

       'அடி ஆத்தீதீ.. இவன் என்ன நம்ம பக்கம் வரான்.. வேலு விடு ஜூட்டு.." என மனதில் நினைத்தவாறு அவனிடமிருந்து தாவி விலகியவள் அப்படியே யுடர்ன் அடித்து அவனை திரும்பி பார்க்காது விறுவிறுவவென நடக்க,

         "அய்யய்ய்யோ.. வேலு எங்க ஓடுற.. நிஜமாவே நா உன்ன நல்லா பாத்துப்பேன் டி.. மூனு வேள சோறு போட்டு உன் முந்தானையையே பிடிச்சிகிட்டு உன் பின்னாடியே சுத்திகிட்டு இருப்பேன்.. நம்பு டி என்னை.. வேலு.. என் உயிரே.. நா ப்ரியத்தமா..." என்று தேவ் கத்த கிட்டதட்ட கால் பிடறியில் பட ஓடியே விட்டாள் வேல்.

அவள் ஓடியதை பார்த்து வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்தவன்,
      "அய்யோ.. அய்யோ.. நாம லவ் சொன்னாலே தலை தெறிக்க ஓடுதுங்க.. இந்த தேவ்வா கொக்கா.." என தன்னை தானே சிலாகித்து கோலரை தூக்கி விட்டவன், "நா லவ் சொல்லி வேணாம்னு போயிட்டா.. இப்போ நாம சோகமால்ல இருக்கனும்.. ஸ்டார்ட் த மியூசிக்.." என சொன்னவன்,  "வாழ்வே மாயம்.. இந்த வாழ்வே மாயம்.." என்று குத்து பாடல் மொடியூலேஷனில் சிரித்தவாறு பாடியவாறு ஆடிக் கொண்டு சென்றான் தேவ்தாஸ்.

இவ்வாறு நாட்கள் நகர,

அன்று,

        ஏற்கனவே காலையில் தொலைபேசியில் தன் ஆள் சொன்ன செய்தியில் கோபத்தின் உச்சகட்டத்தில் இருந்தவள் காரை மின்னல் வேகத்தில் செலுத்தி தன் கோபத்தை அடக்க முயற்கி செய்ய அதுவும் முடியாமல் போக காரை நிறுத்தி ஓஃபீஸிற்குள் புயல் வேகத்தில் அங்கு சுற்றி இருப்பவர்கள் சொல்லும் வணக்கத்திற்கு ஒரு சிறு தலையசைப்பை கூட கொடுக்காது இறுகிய முகத்தோடு அழுத்தமான காலடிகளுடன் தன் அறைக்குள் நுழைந்தாள் மித்ரா.

அறைக்குள் நுழைந்ததும் இன்னும் கோபம் எக்குத்தப்பாக எகிற முயன்று கட்டுப்படுத்திக் கொண்டு  "இங்க என்ன பன்ற.." என்று கேட்டவாறு திரும்ப அவளுக்கு எதிரே அவள் அறைக் கதவில் ஒற்றை காலை மடக்கி  பாக்கெட்டுக்குள் கைகளை விட்டவாறு வெற்றிப் புன்னகையுடன் சாய்ந்து தன்னவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான் ஹர்ஷா.

"ச்சு.. ச்சு.. ச்சு.." என உச்சு கொட்டியவன், அவளருகில் நெருங்கி,
          "என்ன மோகினி ப்ளான் ஃப்ளொப்பா(Flop).. நா தான் அன்னைக்கே சொன்னேன்ல.. என்னை மீறி உன்னால எதுவும் பன்ன முடியாதுன்னு.." என தெனாவெட்டாக சொல்ல,

மார்புக்கு குறுக்கே கைகளை கட்டியவாறு வேறு புறம் பார்வையை திருப்பியவள் எதுவும் பேசாது அமைதியாக இருக்க இடுப்பில்  கை குற்றி இருபக்கமும் தலையாட்டி சிரித்தவன் அடுத்த நொடி அவளை இழுத்து தன் கைகளில் ஏந்திக் கொண்டான்.

     "டேய்ய் என்ன விடு டா.." என திமிறியவாறு மித்ரா அவன் மார்பில் அடிக்க அவனோ அதையெல்லாம் சிறிதும் கண்டுக்காது அவள் இருக்கையில் அமர்ந்து தன் மடியில் அவளை அமர்த்தி தன் இரும்பு கரங்களால் அவள் இடையை வளைத்து அவள் எழாதவாறு இறுக்கி சிறைப்பிடித்திருத்திருக்க அவன் உடும்பு பிடியிலிருந்து அவளால் சிறிதும் எழ முடியவில்லை..

இதில் அவன் ஸ்பரிசம் வேறு அவள் ஆழ்மனது காதலை தட்டி எழுப்பி இம்சை படுத்த ஒருகட்டத்தில், "ப்ளீஸ் விடு ஹர்ஷா.." என கெஞ்சவே ஆரம்பித்து விட்டாள் மித்ரா.

அவள் கேட்ட விதத்தில் தன் முத்து பற்கள் தெரிய வாய்விட்டு சிரித்தவன்,
            "ரொம்ப ஹோட்டா(hot) இருந்த நா கூட இருக்குற கோபத்துல அறைஞ்சிறுவியோன்னு அலெர்ட்டா இருந்தேன்.. ஆனா பார்ர்ராரா.. இந்த அழகு மோகினி  என்கிட்ட கெஞ்சிகிட்டு இருக்கா.." என நக்கலாக சொல்ல,

"இப்போ என்ன விட போறியா இல்லையா.." என அவன் சட்டை கோலரை பிடித்து பல்லை கடித்துக் கொண்டு மித்ரா கேட்டதில் நிதானமாக அவள் நெற்றியில் புரளும் கற்றை கூந்தலை காதோரம் ஒதுக்கி விட்டவன்,
             "நீ எங்க கம்பனிக்கு அந்த டென்டர் கிடைக்க கூடாதுன்னு அவ்வளவு ப்ளான் போட்ட.. பட் ஒன்னு யோசிக்காம போயிட்ட டி.. மித்ரா நீயே இவ்வளவு யோசிக்கிறன்னா எதிரி யாருன்னு தெரிஞ்சே வச்சிருக்க இந்த மித்ரன் எவ்வளவு யோசிப்பான்.." என கெத்தாக கூறியவாறு தன் ஃபோனை எடுத்தவன் அவளுக்கு ஒரு ரெகோர்ட்டை போட்டு காட்ட அதில் மித்ரா அவன் கம்பனியில் வைத்த தன் ஆளிடம் தன் ப்ளானை சொல்லுவது ஒலிக்க அவளோ அதிர்ச்சியில் விழிவிரித்து கொண்டாள்.

         "கொட்டேஷன்காக நாங்க ரெடி பன்ன அம்மௌன்ட்ட திருடி எங்க ஓப்போஸிட் கம்பனிக்கே அதை விக்க ட்ரை பன்னிருக்க.. எவ்வளவு பெரிய தில்லாலங்கடியா இருப்ப நீ.. இப்படியெல்லா நடக்கும்னு தெரிஞ்சி தான் முன்னாடியே என் ஃபோன நீ ஹேக் பன்ன மாதிரி உன்னோடதை நா ஹேக் பன்னிட்டேன்.. சோ.. பெட்டர் லக் நெக்ஸ் டைம் டார்லிங்.." என அவள் கன்னத்தை தட்ட அவன் கையை கோபத்தில் தட்டி விட்டவள் அவனை உக்கிரமாக முறைத்துக் கொண்டிருந்தாள்.

அவளையே ஆழ்ந்து பார்த்தவனுக்கு அவளது கோபம் கூட அவள் மேல் போதை கொள்ள செய்ய தன் மடியில் இருப்பவளை இன்னும் தன்னுடன் நெருக்கி அவள் கழுத்து வளைவில் முகத்தை புதைக்க இதில் மித்ராவுக்கோ திக்குமுக்காடி போனது.

        "ஹ.. ஹர்ஷா என்னை.. வி..விடு ப்ளீஸ்.."என மித்ராவிற்கு வார்த்தைகள் தந்தியடிக்க,

        "ப்ளீஸ் மது டூ மினிட்ஸ்.. எனக்கு உன் பக்கத்துலயே  இருக்கனும் டி.. உன்னை ரொம்ப மிஸ் பன்றேன் மா.." என குரல் கமர பேசிய தன்னவனை பார்க்க அந்த இறுகிய மனது பாவைக்கே மனது லேசாக இளகத் தான் செய்தது.

அவனை அணைக்கவும் முடியாமல் விலக்கவும் முடியாமல் அவள் தடுமாற ஹர்ஷாவோ,
         "உனக்கொன்னு தெரியுமா டி. நீ என்னை விட்டு விலகி இருக்குறதை என்னால ஏத்துக்கவே முடியல.. உன் கூட அமெரிக்காவுல  நா இருந்த ஒவ்வொரு நிமிஷமும் என் லைஃப்ல எனக்கு கிடைச்ச ப்ரீசியஸ் கிஃப்ட் (precious gift) டி மது.. நீ என் பொக்கிஷம் டி.. நிஜமாவே உன் மனசுல நா இல்லையா மது.. உன் கண்ணுல எனக்கான காதலை நா பார்த்திருக்கேனே டி.. என்னால உன்னை விட்டு விலக முடியாது.. எனக்கு எல்லாமே நீ தான்.. ப்ளீஸ் டி நீ இல்லாம உன் மித்து ரொம்ப கஷ்டப்படுறான்.. அவன் மோகினி தான் அவன் சந்தோஷமே.. எப்போ டி அதை புரிஞ்சிப்ப.." என அவளோடு மேலும் மேலும் ஒன்றியவாறு ஹர்ஷா கண்கலங்க பேச,

அவன் ஒவ்வொரு சொல்லிலும் மித்ரா புதைக்கப்பட்டு ஹர்ஷாவின் மதுவே தன்னவனுக்காக வந்து விட்டாள். தன்னவனின் கழுத்தை கட்டிக் கொண்டு அவனை இறுக அணைத்துக் கொண்டவள் அவன் தோள் வளைவில் தன் முகத்தை புதைத்து "மித்து.." என அழைத்ததும் தான் தாமதம் ஹர்ஷாவிற்கு அது என்ன உணர்வென்றே தெரியவில்லை..

இதுவரை தொலைத்த ஏதோ ஒன்று மீண்டும் தன்னிடமே வந்து சேர்ந்தது போல் உணர்ச்சி மிகுதியில்,
              "மது.. மது ஐ லவ் யு டி. ப்ளீஸ் என்னை விட்டு போகாத டி." என பிதற்றியவாறு அவன் தன்னவளுக்குள் மேலும் புதைய முயல மித்ராவோ கண்களை மூடி அவன் ஸ்பரிசத்தை ரசிக்கவே தொடங்கி விட்டாள்.

அதுவும் கொஞ்ச நேரம் தான் அடுத்த ஹர்ஷா பேசியதில் வேதாளம் முருங்க மரத்தில் ஏறியது போல் மீண்டும் மித்ராவின் பழிவெறி மேலெழ அவனை உதறி தள்ளி விட்டு எழுந்த மித்ராவின் முகம் சிவந்து கண்கள்  கோபத்தில் கோவைப்பழம் போல் சிவந்திருக்க அடுத்த கொஞ்ச நேரத்தில் தன் கையில் வைத்திருந்த உடைந்த க்ளாசிலிருந்து தரையில் இரத்தம் சொட்ட சொட்ட பத்ரகாளியாக நின்றுக் கொண்டிருந்தாள் அந்த அக்னி பாவை..

தொடரும்..🔥
-----------------------------------------------------

Keep supporting me with ur comments.. ✌

-ZAKI🔥

     

 

Zakiya


ReplyQuote
Jade Javid
(@jadejavid)
Trusted Member Writer
Joined: 8 months ago
Posts: 84
22/10/2020 5:02 pm  

                  தீண்டாதே 18🔥

 

தன் மடியில் அமர்ந்திருந்த தன்னவளை அணைத்தவாறே,
             "மது உன் லைஃப்ல ஏதோ நடந்திருக்கு.. அதை என்கிட்ட சொல்லிரு  இல்லைன்னா நடந்து முடிஞ்சது நடந்ததாவே இருக்கட்டும் அதை எப்போவும் மாத்த முடியாது.. அதை மறந்துட்டு உன் மித்துவ ஏத்துக்க டி ப்ளீஸ்.." என ஹர்ஷா பேசிய அடுத்த நொடி வேதாளம் முருங்க மரம் ஏறியது போல் பழிவெறி காதலை முந்திக் கொண்டு மேலெழ அவனை உதறி தள்ளி விட்டு எழுந்து நின்றவள் கண்கள் சிவக்க பத்ரகாளி போல் ஹர்ஷாவை முறைத்துக் கொண்டிருந்தாள்.

அவள் தன்னை விட்டு விலகியதில் சுயவுணர்வு பெற்ற ஹர்ஷா இருக்கையிலிருந்து எழுந்து அவளை குழப்பமாக பார்த்தவாறு,
"மது.." என்று கூறிக் கொண்டு அவளை நெருங்க,

இரண்டடி பின்னோக்கி நடந்தவள் அவனை கை நீட்டி தடுத்து,
        "என் பக்கத்துல வராத.. வெளில போ.." என்று உச்சஸ்தானியில் கத்தியதில் ஹர்ஷாவோ அவளின் திடீர் கர்ஜனையில் ஆடிப் போய்விட்டடான்.

சற்று நேரம் முன் தான் தன்னை மித்து என்று காதலாக அழைத்து அணைத்தவள் இப்போது அந்த காதல் குரலுக்கு சற்றும் பொருத்தமில்லாத முக பாவனைகளுடன் கோபத்தில் சிவந்த முகமாக நின்றிருப்பவளை கண்டவன் அவள் கத்தலையும் பொருட்படுத்தாமல் தன்னவளை அவன் நெருங்கி இருக்க அடுத்த நொடி தன் மேசையிலிருந்த தண்ணீர் க்ளாசை உடைத்தவள் ஆத்திரம் கண்ணை மறைக்க கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் அவன் கையை கிழித்து விட்டிருந்தாள்.

வலியில் "ஸ்ஸ்..ஆஆ.. " என என்று கத்தியவாறு காயம் பட்ட இடத்தை அழுத்தி பிடித்துக் கொண்டவன் 'தன் மதுவா..' என்ற ரீதியில் கண்கலங்க அவளை மிரட்டிசியுடன் ஹர்ஷா பார்த்துக் கொண்டிருக்க, வெளியில் சத்தம் கேட்டு  உள்ளே பதறி வந்த ரவி மித்ரா கையில் உடைந்த க்ளாசுடன் ருத்ரதேவியாக நின்றிருப்பதையும் கையில் இரத்தம் வழிய கையை பிடித்தவாறு அவளையே ஹர்ஷா மிரட்சியுடன் பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்தவனுக்கு என்ன நடந்திருக்கும் என ஓரளவுக்கு ஊகிக்க முடிந்தது.

உடனே ஹர்ஷாவிடம் விறுவிறுவென சென்று,
           "அய்யோ.. சார்.. இட்ஸ் ப்ளீடிங்.. சும்மா நின்னுகிட்டு இருக்கீங்க.." என்று பதற ஹர்ஷாவோ சற்றும் தன்னவளை விட்டு பார்வையை அகற்றவில்லை. ஹர்ஷா மித்ராவையே கலங்கிய விழிகளோடு பார்த்திருக்க ரவியோ,
      'ப்ளீஸ் வாங்க சார்.." என்று அவனை வெளியே இழுத்துக் கொண்டே சென்று விட்டான்.

அவன் சென்ற அடுத்த நொடி தரையில் அப்படியே அமர்ந்தவள் தன்னவனை தானே காயப்படுத்தியதை நினைத்து கதறி அழ ஆரம்பித்து விட்டாள்.
    
    "ஐ அம் சோரி மித்து.. ஐ அம் சோரி டா.. நா என் மித்துவ காயப்படுத்திட்டேன்.. அன்னைக்கு தேவ் இன்னைக்கு என் மித்து.. நா ராட்சசியே தான் என்னை மன்னிச்சிரு டா இதுக்கப்றம் சரி என்னை விட்டு விலகிரு டா ப்ளீஸ்.." என்று பிதற்றிக் கொண்டிருந்தவள் அதற்கு மேல் அங்கு இருக்க முடியாமல் கண்களை அழுந்த துடைத்து வெளியில் வந்து காரை மின்னல் வேகத்தில் செலுத்தி ஆசிரமத்தின் முன்னே காரை நிறுத்தினாள்.

எப்போதும் போல் அந்த மரத்தின் கீழ் உள்ள பென்ச்சில் அமர்ந்தவள் மனது ஒரு பக்கம் பழிவெறியில் உலையாக கொதிக்க மறுபக்கம் காதல் வலியில் துடித்துக் கொண்டிருந்தது.

இங்கு ஹர்ஷா வீட்டில்,

வீட்டிற்குள் தளர்ந்த நடையுடன் கையில் கட்டுடன் வந்த மகனை பார்த்து பதறிய ராஜ்தீப் அவனை நெருங்கி,
              "என்னாச்சு ஹர்ஷா.. கைல எப்படி அடி பட்டிச்சு.. " என்று பதட்டமாக கேட்க,

          "நத்திங் டாட்.. சின்ன காயம் தான்.." என்று மட்டும் கூறிக் கொண்டு அதற்கு மேல் அங்கு நிற்க விரும்பாமல் விறுவிறுவென தன் அறைக்குள் நுழைந்து கதவை தாழிட்டுக் கொள்ள அவருக்கு தான் ஒன்றுமே புரியவில்லை.

அறைக்குள் வந்த ஹர்ஷா கட்டிலில் தொப்பென்று அமர்ந்து தன்னவள் பற்றிய யோசனையிலே மூழ்கினான். அன்று அமெரிக்காவில் மித்ராவை கடத்த வந்தவர்களுடன் நடந்த சண்டையில் கையில் ஏற்பட்ட சின்ன அடிக்கு மித்ரா பதறிய பதட்டம் அவன் கண்முன் தோன்ற இப்போது தன்னவளே தன் காயத்திற்கு காரணமாக இருப்பது அவனால் நம்பவே முடியவில்லை.

"ஏன் மது.. ஏன் இப்பிடி இருக்க டி.." என்று தலையை பிய்த்துக் கொண்டவன் உடனே தேவ்விற்கு தான் அழைப்பை எடுத்தான்.

மறுமுனையில் தேவ் அழைப்பை ஏற்ற மறுநொடி,
           "தேவ் மது பத்தி டீடெய்ல்ஸ் கலெக்ட் பன்னிங்களா.. அவள பத்தி எதாவது தெரிஞ்சிச்சா.. மதுவோட பேரன்ட்ஸ் யாரு.. அவக்கும் என் அப்பாவுக்கும் என்ன சம்மந்தம் எதாச்சும் தெரிஞ்சிக்கிட்டீங்களா.." என ஹர்ஷா கேள்வி மேல் கேள்வி அடிக்கிக் கொண்டே போக,

ஏற்கனவே தன் அறையிலிருந்து ஹர்ஷாவிடம் 'சொல்லுவோமா வேணாமா..' என யோசித்துக் கொண்டிருந்த தேவ் அவன் திடீரென அழைத்ததும் சற்று பதட்டப்பட்டாலும் ஏதாவது சொல்லி சமாளிக்கலாம் என்று நினைத்து அழைப்பை ஏற்க ஹர்ஷாவின் தொடர் கேள்வி கனைகளில் திக்குமுக்காடித் தான் போனான் தேவ்.

       "அது வந்து.. ஹர்ஷா.. கலெக்ட் பன்னிகிட்டு தான் இருக்கேன்.. சீக்கிரம் அவங்கள பத்தி தெ.. தெரிஞ்சிரும்.." என்று திக்கித் திணறி சமாளிக்க,

'ச்சே..' என சலித்த ஹர்ஷா "ஓகே தேவ்.. டு இட் ஃபாஸ்ட்.. சீக்கிரம் வேலைய முடிச்சிட்டு சொல்லுங்க.." என்று அழைப்பை துண்டித்திருந்தான்.

கையிலிருந்த அவன் அத்தை தொடர்பாக சேகரித்திருந்த தகவல்களை அடக்கிய  ஃபைலை பார்த்தவன் ஒரு பெருமூச்சு விட்டு,
          "இதை எப்படி சொல்ல முடியும்.. சொல்ல போனால் மொத்த கதையும் ரிவர்ஸ்(reverse) ஆகுமே.. ஆரம்பத்திலிருந்து இப்போ நடந்தது வரைக்கும் மொத்த காரணமும் இவன் அப்பன் தான்னு தெரிஞ்சா என்னாகுமோ கடவுளே.." என்று நெற்றியை விரலால் நீவி விட்டவாறு புலம்பிக் கொண்டிருந்தான் தேவ்.

அடுத்த நாள்,  
           
           தன் ஓஃபீஸ் போர்டிகாவில் காரை நிறுத்திய ஹர்ஷா வண்டியிலிருந்து இறங்க சரியாக தனக்கு எதிரே காரில் ஒற்றை காலை மடக்கி மார்புக்கு குறுக்கே கைகளை கட்டியவாறு தனக்காகவே காத்திருந்தவள் போல் நின்றுக் கொண்டிருந்தவளை கண்டவன் சற்று மிரண்டு தான் போனான்.

ஹர்ஷா காரிலிருந்து இறங்கி தன்னையே அதிர்ச்சி கலந்த முகத்துடன் பார்த்துக் கொண்டிருப்பதை கண்ட மித்ரா மறுநொடி அவன் காரை நோக்கி விறுவிறுவென சென்று கார் கதவை திறந்து பின் சீட்டில் அமர்ந்துக் கொள்ள ஹர்ஷாவுக்கு ஒரு நிமிடம் ஒன்றுமே புரியவில்லை.

சுற்றி முற்றி இது கனவா நினைவா என்ற ரீதியில் பார்த்து தன் கையை தானே கிள்ளி "ஆஆ.. நிஜம் தான்.." என்று அலறியவன்,
           "எப்போவும் நாம தானே அவ முன்னாடி போய் நின்னு அவளுக்கு ஷாக் கொடுப்போம்.. இப்போ என்ன.. அப்படியே உல்ட்டாவா நடக்குது.. இது நல்லதுகில்லை.. எதுக்கும் இந்த மோகினிகிட்ட அலெர்ட்டா இருந்துக்கோ ஹர்ஷ்.." என்று தனக்குத் தானே மானசீகமாக பேசிக் கொண்டவன் கதவை திறந்து அவளுக்கு அருகிலே பின்சீட்டில் அமர்ந்துக் கொண்டான்.

"மது.. நீ இங்க.." என்று அவன் சொல்லி முடிக்கவில்லை அவன் புறம் மின்னல் வேகத்தில் திரும்பியவள் தான் காயப்படுத்திய கையை இழுத்து தன் கைக்குள் அடக்கி அதையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க அவனுக்கு தான் இந்த புரியாத புதிர் பாவையால் தலையே சுற்றி விட்டது.

அவன் கையிலிருந்த கட்டின் மேலே லேசாக வருடியவள் முகம் கலங்கி கண்களில் அப்பட்டமாக வலி தெரிய அதை பார்த்த ஹர்ஷாவுக்கு 'இவள் என்ன மாதிரியான பெண்..' என்று தான் இருந்தது..

அவன் இதழ்கள் மெல்லிய புன்னகையை தத்தெடுத்திருக்க அப்படி அவள் என்ன தான் செய்கிறாள் என்று ஹர்ஷாவும் எதுவும் பேசாமல் அமைதியாக அவளையே சுவாரஸ்யமாக பார்த்துக் கொண்டிருக்க காயத்தின் மேல் முத்தம் பதித்தவள் கண்கள் கலங்கி ஒரு சொட்டு கண்ணீர்துளி அவன் கைகளில் விழ, அவள் முத்தத்தில் இருந்த வலியும் காணாமல் போனது போல் தான் இருந்தது ஹர்ஷாவுக்கு. 

அவளே காயத்தை ஏற்படுத்தி அவளே மருந்தாகி போகும் விந்தையில் வியந்து தான் போனான் ஹர்ஷா. அவனை நிமிர்ந்து பார்க்காமல் காயத்திலே பார்வையை பதித்து,
           "ரொம்ப வலிக்குதா.." என்று குரல் தழுதழுக்க மித்ரா கேட்க,

அவள் அன்பில் நெகிழ்ந்தவன் புன்னகையுடனே,
          "இருந்த கொஞ்ச வலியும் இப்போ காணாம போயிருச்சி டி.." என்று மெல்லிய குரலில் அவளை ரசனையாக பார்த்தவாறே சொல்ல அவளின் சிறு தலையசைப்பே அவனின் பதிலை ஏற்றுக் கொண்டது போல் இருந்தது.

சிறிது நேரம் அவன் காயத்தையே வருடிக் கொண்டு வெறித்தவாறு இருந்தவள் சட்டென அவள் கையை விட்டு காரிலிருந்து வெளியேற போக அவள் இறங்கப் போவதை உணர்ந்தவனோ சட்டென அவளை இழுத்து அவள் அசையாது அவள் பின்னந்தலையை இடது கையால் பிடித்து தலையை சரித்து அவள் உதட்டில் அழுந்த முத்தம் பதிக்க மித்ராவோ அவன் முத்தத்திற்கு எந்த எதிர்ப்புமே காட்டாத அதே சமயம் அதற்கு இசையவும் இல்லை..

அவளின் அமைதியில் அவன் கண்கள் புன்னகைக்க அவளை ஒரு தடவை இறுக அணைத்து அவள் காது மடலில் தன் இதழ் உரச,  "ஐ லவ் யு மது.." என்று கூறியவன் மெதுவாக விலகி "இப்போ போ.." என்று குறும்புப் புன்னகையுடன் சொல்ல அவனை நிமிர்ந்து கூட பார்க்காது பார்வையை தாழ்த்தியே இருந்தவள் அவன் போக சொன்ன அடுத்த நொடி மந்திரித்து விட்ட பொம்மை போல் இறங்கி சென்றிருந்தாள்.

அவள் அங்கிருந்து நகரும் வரை அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் கார் தன் கண்களை விட்டு மறைந்ததும் வெட்கச் சிரிப்புடன் தலையை கோதியவனுக்கு ஒரே குஷியாக இருக்க பேன்ட் பாக்கெட்டுக்குள் கையை விட்டு விசிலடித்த படியே ஓஃபீஸிற்குள் நுழைந்தான் நம் ஹீரோ..
--------------------------------------------------------------

அன்று மாலை,

         "அமைதி.. அமைதி.. அமைதியோ அமைதி.. அமைதிக்கெல்லாம் அமைதி.." என்று வீட்டு வாசலிலிருந்து எட்டிப் பார்த்து மெதுமெதுவாக அடியெடுத்து வைத்து உள்ளே சென்ற தேவ் சுற்றி முற்றி பார்க்க ஹோலில் யாருமே இருப்பதாக தெரியவில்லை.

        "ஹப்பாடா.. எந்த ஆபத்தான ஜந்துக்களும் இல்லை.. இல்லைன்னா இந்த ஜிலேபி பாக்ஸ்ஸை மட்டும் பார்த்துச்சுங்க அவ்வளவு தான்.. யாருக்கும் தெரியாம நம்ம ரூம்குள்ள எடுத்துட்டு போயிரனும்.." என்று மனதில் நினைத்தவாறு நகர சரியாக "தேவ்.." என்ற கயலின் குரலில் ப்ரேக் போட்டது போல் நின்றவன் ஸ்லோமோஷனில் திரும்பி பார்க்க,

அங்கு கயலோ,
           "டேய் உன்ன ராஜன் கூப்பிட்டாரு.. கோல் பன்னா உன் ஃபோன் ரீச் ஆகல்லையாமே.. ஓஃபீஜ் ரூம்ல தான் இருக்காரு.. சீக்கிரம் போய் என்னன்னு பாரு.." என்று சொல்லி விட்டு  அவனையே சந்தேகமாக பார்த்தவாறு நகர,

தன் பின்னால் மறைத்து வைத்திருந்த பாக்ஸ்ஸை எடுத்தவன் ,
             "ச்சே.. இப்போ என்ன பன்றது.. ஆதி மாமாக்கு வேற ஜிலேபின்னா ரொம்ப இஷ்டம்.. நமக்கிட்ட இருக்குறதை புடிங்கி சாப்பிட்ட்டிருவாரு.. இதை இங்கேயே இப்படிட்டே வச்சிட்டு போகலாம்.. இப்போதைக்கு எந்த ஜந்துக்களும் வராதுங்க.. " என்று நினைத்த தேவ் டைனிங் டேபிளில் பாக்ஸ்ஸை வைத்து அதை ஒரு துணியால் மறைத்து வைத்து ஓஃபீஸை ரூம்மை நோக்கி விறுவிறுவென சென்றான்.

அங்கு ஆதியோ யோசனையுடன் அமர்ந்திருக்க "மாமா.." என்று தேவ் கதவை தட்டிய சத்தத்தில் "உள்ள வாடா.." என்ற ஆதி நிமிர்ந்து கதிரையில் சாய்ந்து அமர்ந்து தேவ்வையே அழுத்தமாக பார்க்க அவனுக்கு தான் பக்கென்றானது..

முயன்று சாதாரணமாக முகத்தை வைத்தவன் காஷுவலாக "என்ன மாமா வர சொன்னிங்களாமே.. இஸ் தெயார் எனிதிங் இம்போர்டன்ட்.." என்று குரலில் பதட்டத்தை காட்டாதே கேட்டான். அவனுக்கு தான் தேரியுமே தன் ஆதி மாமா ஓஃபீஸ் ரூமிற்கு அழைத்தாலே அதன் பின் பெரிய ஆப்பாக காத்திருக்கும் என்று..

அவனை முறைத்த ஆதி,
           "என்ன டா நடக்குது இங்க.. இல்ல என்ன நடக்குதுன்னு கேக்குறேன்.. எல்லாம் உனக்கு தெரிஞ்சி தான் அவ பன்னிகிட்டு இருக்காளா.." என்று அதட்டி கேட்க, தேவ் தான் 'ஙே' என்று ஆதியையே புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

         "என்ன டா கேள்வி கேட்டுகிட்டு இருக்கேன்.. பதில் சொல்லாம பெக்கபெக்கன்னு முழிச்சிகிட்டு இருக்க.. " என்று ஆதி கேட்டதில்,

         "அய்யோ மாமா நீங்க யாரை பத்தி பேசுறீங்க , எதை பத்தி பேசுறீங்கன்னு  தலையும் புரியல வாலும் புரியல.." என தேவ் சலித்துக் கொள்ள,

        "நா வேற யாரை பத்தி டா உன் கிட்ட கேக்க போறேன்.. மித்ரா பத்தி தான்.. என்ன பன்னிகிட்டு இருக்கா அவ.. ரவி அவ பன்ற கூத்தை வந்து சொல்லி அவக்கிட்ட வேலை பார்க்க மாட்டேன்னு அலறுரான்.. என்ன டா இதெல்லாம்.." என்று ஆதி சொல்ல,

      'ஆத்தீதீதீ அவள பத்தியா.. அவ என்ன பன்றா ஏது பன்றான்னு நமக்கே தெரியல.. இதுல இந்த முட்டாபீஸுக்கிட்ட நா என்னன்னு சொல்லி புரிய வைக்க.. என்ன பன்னி தொலைச்சாளோ.." என மனதில் புலம்பியவன் வெளியில்,
           "அது வந்து மாமா.. அது.." என்று தடுமாற,

  "ஆர்.டி குரூப் ஆஃப் கம்பனீஸ்ஸோட தேவையில்லாம பிரச்சினை பன்னிகிட்டு இருக்கா.. அந்த கம்பனி சிஇஓ வேற அடிக்கடி நம்ம ஓஃபீஸ்க்கு வாரதா ரவி சொல்றான்.. ஓஃபீஸ்ல அப்படி என்ன தான் நடக்குது.. மித்ராவுக்கும் அவங்களுக்கும் அப்பிடி என்ன சம்மந்தம்னு அடிக்கடி அந்த பையன் நம்ம ஓஃபீஸ்க்கு வரான்.. ஏன் இப்படி எல்லாம் பன்னிகிட்டு இருக்கா.." என ஆதி மூச்சு கூட விடாமல் ஆவேசமாக கத்த,

       'அய்யோ.. இந்த ரவி வேற எல்லாத்தையும் இந்த முட்டாபீஸுக்கிட்ட போட்டு கொடுத்திருக்கானே.. இது மட்டும் அந்த சண்டி ராணிக்கு தெரிஞ்சிச்சு அவன உண்டு இல்லைன்னு பன்னிருவாளே... பாவம் பையன்.." என மனதில் நினைத்து புலம்பிக் கொண்டிருந்த தேவ்விற்கு நிஜமாகவே ஹர்ஷாவுக்கும் மித்ராவுக்கும் என்ன சம்மந்தம் என்று புரியவே இல்லை..

"நா அவக்கிட்ட என்னன்னு விசாரிக்கிறேன் மாமா.." என்று என்ன சொல்வதென்று தெரியாமல் எப்போதும் தன் மாமாவிடம் சொல்லும் அதே டயலாக்கை சொல்லி விட்டு நகர போனவனை,

"இதை தானே டா பல வருஷமா சொல்லிகிட்டு இருக்க.. இனிமே எதாச்சும் மித்ரா பத்தி கம்ப்ளைன்ட் வந்துச்சி உன் தோல்ல தான் உரிச்சிறுவேன்.." என மிரட்டும் தொனியில் ஆதி கூற தேவ்விற்கு தான் தூக்கி வாரிப் போட்டது.

       "க்கும்.. இதை தானேயா நீயும் பல வருஷமா சொல்லிகிட்டே இருக்க அந்த தைரியத்துல தான் நானும் சேம் டயலாக்கை சொல்லி எஸ்கேப் ஆகுறேன்.. ஆனாலும் எவன் எது பன்னாலும் நம்மளையே ரவுண்டு கட்டி அடிக்கிறாங்க.. என்ன கொடுமை தேவ்தாஸ் இது.." என வாயுக்குள் முணுமுணுத்தவாறு வெளியேற அறைக் கதவை திறக்க,

"அங்க என்ன மாப்பிள்ளை சத்தம்.." என்ற ஆதியின் அதட்டும் குரலில்..

  "வெளிய போயிக்கிட்டு இருக்கேன் மாமா.." என்று வடிவேல் பானியில் சொன்னவன் அறையை விட்டு மின்னல் வேகத்தில் வெளியாகி இருக்க  இங்கு இவன் ஆதியுடன் பேசிய அந்த அரை மணி நேரத்தில் இவன் ஜிலேபி பாக்ஸ் பலபேர் கை மாதிரி ஹோலில் ஜிலேபிக்காக ஒரு களவரமே நடந்துக் கொண்டிருந்தது..

தொடரும்..🔥
----------------------------------------------------

      KEEP MOTIVATING ME WITH UR COMMENTS..🔥✌

-ZAKI🔥

 

Zakiya


ReplyQuote
Jade Javid
(@jadejavid)
Trusted Member Writer
Joined: 8 months ago
Posts: 84
24/10/2020 4:26 pm  

                  தீண்டாதே 19🔥

 

தேவ் டைனிங் டேபிளின் மேல் ஜிலேபி பாக்ஸ்ஸை வைத்து அதை துணியால் மூடி மறைத்து விட்டு போன அடுத்த இரு நிமிடங்களில் வேல் வேலையை முடித்து வந்திருக்க டைனிங் டேபிளில் அமர்ந்தவள்,  " அத்தை.." என்று அழைத்து சுற்றும் முற்றும் பார்க்க அவள் கண்ணில் சிக்கியது அந்த துணியால் மூடி வைக்கப்பட்ட பொருள்.

'என்ன இது..' என நினைத்தவாறு துணியை எடுத்து விட்டு பாக்ஸ்ஸை பார்த்தவளுக்கோ கண்கள் மின்ன ஆரம்பிக்க,
          "அய்ய் ஜிலேபி.. அவிந்த்க்கு ஜிலேபின்னா ரொம்ப புடிக்கும்.. பட் இது யாரோடது.." என்று யோசித்தவள் பின், "இது யாரோடதா இருந்தா நமக்கென்ன.. இதை யாருக்கும் தெரியாம கொண்டு போய் அவிந்த்கிட்ட கொடுத்துருவோம்.." என்று திட்டம் தீட்டியவள் மற்றவர்கள் கண்ணில் படாது,
          "அமைதி.. அமைதி.. அமைதியோ அமைதி.. அமைதிக்கெல்லாம் அமைதி.." என கூறியவாறு அரவிந்த்தின் அறைக்கு சென்று கதவை தட்ட,

கதவை திறந்தவன் தன் முன்னே பாக்ஸ்ஸுடன் நின்ற வேலுவை பார்த்து,
           "என்ன நச்சு இந்த பக்கம்.. ஏதாச்சும் குட் நிவ்ஸ்ஸா.." என்று எதையோ எதிர்ப்பார்த்து ஆர்வமாக கேட்க,

அவன் எதை கேட்கிறான் என்பதை புரிந்துக் கொண்டவளுக்கு சற்று முகம் வாடினாலும் அதை மறைத்துக் கொண்டு,
            "அது வந்து அவிந்த்.. உனக்காக ஜிலேபி வாங்கினேன்.. அதான் கொடுத்துட்டு போலாமேன்னு.." என்று இழுக்க, பாக்ஸ்ஸை பார்த்த அரவிந்தின் கண்களோ மின்ன ஆரம்பித்து விட்டது.

         "நிஜமாவா நச்சு.. ரொம்ப தேங்க்ஸ் .. எனக்கு ஜிலேபி புடிக்கும்னு உனக்கு எப்படி தெரியும்.." என்று பாக்ஸ்ஸை கைகளில் வாங்கியவாறு அரவிந்த் கேட்க,

'உன்னை பத்தி என்னை விட யாருக்கு டா தெரியும்...' என மனதில் நினைத்துக் கொண்டாலும் வெளியில்,
        "அதெல்லாம் எப்படியோ தெரியும் அவிந்த்.. யு என்ஜோய்ய்.." என்று விட்டு நகர, அரவித்தோ ஜிலேபி பாகஸ்ஸை கையில் வைத்து கதவு நிலையில் சாய்ந்தவாறு யோசிக்க ஆரம்பித்தான்.

  'சின்ன வயசுல மித்ரா நல்லா ஜிலேபி சாப்பிடுவால்ல.. நாம வேணா இதை அவளுக்கு கொடுக்கலாமா.. சத்யராஜ் சேர் அல்வா கொடுத்து கரெக்ட் பன்ற மாதிரி நாம ஜிலேபி கொடுத்து மித்ராவ கரெக்ட் பன்னலாம்.. இதை யாராச்சும் பார்க்குறதுக்கு முன்னாடி மித்ராகிட்ட கொடுத்துரனும்..' என்று மனதில் அரவிந்த் ஒரு திட்டத்தை தீட்டியவாறு,

     "அமைதி.. அமைதி.. அமைதியோ அமைதி.. அமைதிக்கெல்லாம் அமைதி.." என பதுங்கியவாறு அரவிந்த் மித்ராவின் அறைக்கு சென்று கதவை தட்ட, லேப்டாப்பில் மும்முரமாக வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் கதவை தட்டும் சத்தத்தில் கதவை திறக்க தன் முன் முப்பத்திரெண்டு பற்களையும் காட்டியவாறு இழித்துக் கொண்டு கைகளை பின்னால் மறைத்தவாறு நின்ற அரவிந்த்தை புரியாமல் பார்த்தாள் மித்ரா.

        "ஹிஹிஹி.. மித்ரா சின்ன வயசுல உனக்கு ஜிலேபின்னா ரொம்ப புடிக்கும்ல.. அதான் உனக்காக வாங்கினேன்.. எல்லாம் உனக்கு தான் எடுத்துக்கோ.." என்று அரவிந்த் சொல்ல,

       "எனக்கு வேணாம் அரவிந்த்.. இப்போ நா இதெல்லாம் சாப்பிடுறதில்லை.. " என்று கூறிவிட்டு கதவை சாத்த போக,  'நோ அரவிந்த் அவ என்ன சொன்னாலும் கம்பிள் பன்னியாவது இதை அவக்கிட்ட கொடுத்தே ஆகனும்..' என்று மனதில் நினைத்தவாறு அவளை தடுத்தவன்,
         "நோ மித்ரா.. ப்ளீஸ் எனக்காக வாங்க மாட்டியா." என பாவம் போல் அரவிந்த் முகத்தை வைக்க,

எதுவும் சொல்ல முடியாமல், "ஓகே.. ஓகே.. கொடு..ரொம்ப தேங்க்ஸ் அரவிந்த்.." என்று மித்ரா பாக்ஸ்ஸை வாங்கிய அடுத்த நொடி 'படார்' என கதவை சாத்தி இருக்க அரவிந்த்தோ 'அவ்வளவு தானா..' என்று நினைத்தவாறு உதட்டை பிதுக்கிக் கொண்டு நின்று பின்,
         "பரவாயில்லை.. அவ நம்மகிட்ட இருந்து இதை வாங்கினதே  ஜாஸ்தி தான்.." என தன்னை தானே சமாதானம் செய்தவாறு நகர்ந்து சென்றான்.

இங்கு மித்ராவோ அதை வீணாக்க விரும்பாமல் அரவிந்த் சென்ற மறுநொடி தியாவின் அறையை நோக்கி சென்றிருந்தாள். கதவை திறந்த தியா தன் அக்கா முதன் முதலில் தன் அறைக்கு வந்ததில்,
           "அக்கா உள்ள வா.. எதாவது முக்கியமான விஷயமாக்கா.. " என்று ஆர்வமாக கேட்க,

  "அதெல்லாம் ஒன்னுஇல்ல தியா.." என்றவாறு பாக்ஸ்ஸை நீட்டியவள் "இதுல ஜிலேபி இருக்கு சாப்பிடு.. " என்று கொடுத்து விட்டு அவள் பாட்டிற்கு செல்ல தியாவுக்கு தான் அய்யோ என்றாகிவிட்டது..

       "இப்போ நாம என்ன தான் பன்றது.. நமக்கு தான் ஜிலேபி புடிக்காதே.. அக்கா எனக்காக கொடுத்தது குப்பையில போடவும் மனசில்லையே.." என்று நினைத்தவாறு மாடியிலிருந்து எட்டி பார்த்தவள் கண்ணில் சரியாக சிக்கினாள் அனா.

         'அய்ய் அனா செல்லம்.. இவளுக்கு தான் ஜிலேபின்னா உயிராச்சே.. ஏற்கனவே நாம திட்டினதுல சரியாக பேச மாட்டேங்குறா.. இதை கொடுத்து கரெக்ட் பன்னிற வேண்டியது தான்.. பட் தேவ் மாமாவுக்கு அரவிந்த் மாமாக்கு ஜிலேபின்னா ரொம்ப புடிக்குமே.. இதை பார்த்தா விட மாட்டாங்க.. யாரும் பார்க்காத மாதிரி கொண்டு போய் கொடுத்து அனாவை கன்வின்ஸ் பன்னிரலாம்..' நினைத்த தியா அதை தன் துப்பட்டாவில் மறைத்துக் கொண்டு,

          "அமைதி.. அமைதி.. அமைதியோ அமைதி.. அமைதிக்கெல்லாம் அமைதி.." என்று மாடியிலிருந்து இறங்கியவள் சோஃபாவில் உட்கார்ந்து ஃபோனை நோண்டிக் கொண்டிருந்த அனாவின் அருகில் சென்று அமர அனாவோ தியா தன் பக்கத்தில் உட்கார்ந்ததில் முகத்தை கோபமாக திருப்பிக் கொண்டாள்.

அவள் கன்னத்தை தொட்டு தன்னை நோக்கி திருப்பிய தியா,
           "ஹே சோரி டி.. என் கூட பேச மாட்டியா.. நா தான் திட்டினதுக்கு சோரி கேக்குறேன்ல.. " என்று கெஞ்ச,

          "போடி பேசாத.. அந்த லண்டன் முன்னாடியே என்னை திட்டிடல்ல.. என் கூட பேசாத.." என்று முகத்தை திருப்பியவள் கண் முன் தியா பாங்ஸ்ஸை ஆட்டி ஆட்டி காட்டி,

         "பாத்தியா.. நா உனக்காக ஜிலேபி கொண்டு வந்திருக்கேன்.. இப்போ சொல்லு என் கூட பேச மாட்டியா.." என்று பாவம் போல் தியா கேட்டது கூட அனாவின் காதுக்கு எட்டவில்லை. அனாவின் கண்கள் மின்ன அவள் கருமணிகள் தியா கையில் வைத்து ஆட்டிக் கொண்டிருந்த பாக்ஸ் போகும் திசையிலே சென்றது.

தியாவுக்கும் அவள் ஆர்வம் புரிய அனாவின் கையில் கொடுக்க சரியாக தியாவின் கைகளை பிடித்தான் அரவிந்த். தியாவோ நிமிர்ந்து புரியாமல் அரவிந்த்தை பார்க்க, அனாவோ தன்னை நோக்கி வந்துக் கொண்டிருந்த ஜிலேபி திடீரென தன் வருகையை நிறுத்தியதில் பொம்மையை பிடுங்கிய குழந்தை போல் உதட்டை பிதுக்கியவாறு நிமிர்ந்து அரவிந்த்தை பார்த்தாள்.

அரவிந்த்தோ,
          "தியா இது என் ஜிலேபி.. எனக்கு நச்சு கொடுத்தது.." என்று சிறுபிள்ளை போல் திருப்பி கேட்க,

அதே நேரம் வேலுவும் ஆஜராகி,
            "ஆமா ஆமா இது என்னோடது.. நா தான் அவிந்த்க்கு கொடுத்தேன்.. அதை அவன்கிட்ட கொடு.." என்று சொல்ல,

           "நோ வேய்ய்.. இது என் அக்கா கொடுத்தது.. நா தர மாட்டேன்.. " என்று தியா சொன்னது தான் தாமதம் வேலு சட்டென திரும்பி அரவிந்த்தை  எரித்து விடுவது போல் பார்க்க  அவன் இவளை கவனித்தால் தானே..

அரவிந்த், வேலு, தியா மூன்று பேரும் அந்த ஜிலேபி பாக்ஸ்ஸை பிடித்திருக்க அந்த இடையில் தானும் எட்டி பிடித்த அனா,
        "இதுக்கு முன்னாடி யாரு உரிமை கொண்டாடினாங்களோ அதை பத்தி ஐ டோன்ட் கெயார்.. இப்போ இது எனக்கு தியா கொடுத்தது.. இது என்னோடது.." என அவள் ஒரு பக்கம் இழுக்க,

          "நோ இது என்னோடது.. அடம்பிடிக்காம கொடு அனா.." என்று அரவிந்த் பிடித்து இழுக்க,

       "அரவிந்த்கே கொடு அனா.. அவன் பாவம்ல.. உன் அண்ணன் தானே.." என வேலு ஒரு பக்கம் இழுக்க,

        "அய்யோ.. இது யாருக்கும் இல்லை.. எனக்கு மட்டும் தான்.. என் அக்கா எனக்காக ஆசையாக கொடுத்தது.. நா தர மாட்டேன்.. " என தியா ஒருபுறம் இழுக்க நால்வரும் இழுத்த இழுவையில் நடுவில் இருந்து அல்லோலப்பட்டது என்னவோ அந்த ஜிலேபி தான்..

ஒரு கட்டத்தில் முடியாமல் ஒரு கையால் பாக்ஸ்ஸை பிடித்து இழுத்தவாறு மறுகையால் பாக்ஸ்ஸின் மூடியை அனா திறக்க அரவிந்த் அனா மூடியை திறந்ததில் பதட்டப்பட்டு பாக்ஸ்ஸுக்குள் கை விட்டு ஜிலேபியை வேளியவே எடுத்திருந்தான்.

இவன் எடுத்ததில் தியாவோ,
               "அய்யோ மாமா அது என் அக்கா தந்தது.. கொடுங்க மாமா என்கிட்ட..." என புலம்பியவாறு அவன் கையிலிருந்து எடுக்க முயல, அதற்கு நடுவில் அனாவும் அரவிந்தின் கையிலிருந்து எடுக்க போய் ஜிலேபியை பாய்ந்து எடுக்க வேலுவும் அவர்களுடன் மல்லுகட்ட என மொத்த ஜிலேபியும் நசுங்கி போய் கீழே விழுந்தது தான் மிச்சம்..

இவர்கள் போட்ட சத்தத்தில் கயல், ஆதி, சித்து, துர்கா, ஆதிரா, அபி என எல்லாருமே ஹோலில் வந்து இவர்கள் அடித்துக் கொள்ளவதை புரியாமல் பார்க்க இதற்கு நடுவில் ஆதியும்,
            "ராட்சசி ஜிலேபி டி.." என்று கூறியவாறு அவர்கள் நடுவில் செல்ல போக,

ஆதியின் கையை பிடித்து இழுத்து முதுகில் ஒரு அடி வைத்த கயல்,
            "ஏற்கனவே டோக்டர் உங்கள அதிகமா ஸ்வீட் சாப்பிட கூடாதுன்னு சொல்லியிருக்காரு.. இதுல நாலு துண்டு ஜிலேபிக்கு அதுங்க இப்படி அடிச்சிகிதுங்க  அதுக்கு நடுவுல நீங்களும் போய் மாட்டிக்க போறீங்களா.." என்று முறைத்தவாறு கேட்டதில் ஆதியோ, "ஜிலேபி போச்சே.." என உதட்டை பிதுக்கியவாறு அந்த களவரத்தையே சுவாரஸ்யமாக பார்த்துக் கொண்டிருந்தான் ஆதி.

மொத்த ஜிலேபியும் நொறுங்கி கீழே விழுந்ததில் கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை என்ற ஆத்திரத்தில் கையில் இருந்த பாக்ஸ்ஸை 'ச்சே..' என்று சலித்தவாறு அனா தூக்கி வீச அது சரியாக இந்த பாக்ஸ்ஸிற்கு சொந்தக்காரன் மேலேயே மோதி விழுந்தது.

இவ்வளவு நேரம் நடந்த சம்பவத்தை வாயில் கை வைத்து பார்த்துக் கொண்டிருந்தவன் பாக்ஸ் தன் மேல் பட்டு விழுந்ததும் குனிந்து பாக்ஸ்ஸை பார்த்து விட்டு நிமிர்ந்து அவர்களை பார்க்க அப்போதும் நிறுத்தாது தனக்கு எதிரே சண்டையிட்டுக் கொண்டிருந்ததில் தேவ்விற்கோ கோபம் ஏகத்துக்கும் எகிற,
         "ஸ்டாப் இட்.." என்று கத்தியதில் அப்போது தான் நால்வருமே தேவ் என்ற ஜீவன் இருப்பதையே உணர்ந்து திரும்பி பார்த்தனர்.

அவர்களை பார்த்த தேவ்வோ உதட்டை பிதுக்கியவாறு,
            "அய்யோ.. என் ஜிலேபி.." என்று பாக்ஸ்ஸை பார்த்து கதற சுற்றி இருந்தவர்களோ எதுவுமே புரியாது நின்றார்கள் என்றால் வேலுவோ திருதிருவென முழித்துக் கொண்டு நின்றாள்.

       "நாட்டுக்கு சுதந்திரம் கிடைச்சு பல வருஷம் ஆனாலும் வீட்ல ஒரு ஜிலேபிய கூட இந்த சாத்தான்களை நம்பி சுதந்திரமா வைக்க முடியல்லையே.. அய்யோ.. அய்யோ.. நல்லா பெத்து வச்சிருக்கீங்கய்யா.. வீட்லயே குள்ளநரிக் கூட்டம்.." என்று பெரியவர்களை திட்ட அவர்களோ தனக்கும் இதற்கும் சம்மதமில்லை என்ற ரீதியில் கைவிரல் நகங்களை ஆராய்வதிலும் அங்கும் இங்கும் வேடிக்கை பார்ப்பதுமாக பாவனை செய்தனர்.

முயன்று தன்னை நிதானப்படுத்தியவன்,
             "ஒரே கேள்வி தான் இந்த மொத்த சம்பவத்துக்கு காரணமான அந்த திருட்டு கழுதை யாரு.." என்று தேவ் மூக்கு விடைக்க முறைத்தவாறு கேட்க,

அதில் அனாவோ,
             "எனக்கு தெரியாது தாஸு தியா தான் கொடுத்தா.." என அவளை மாட்டி விட தேவ்வின் பார்வையோ தியாவின் மேல் பதிந்தது.

          "அது வந்து மாமா.. எனக்கு அக்கா தான் கொடுத்தா.." என்று தியா மித்ராவை சொல்ல,

         இவர்கள் போட்ட சத்ததில் மாடியிலிருந்து இந்த கூத்தை பார்த்துக் கொண்டிருந்த மித்ராவிடம் திரும்பிய தேவ் அவளை முறைத்தவாறு பார்க்க,
 
         "ஐ அம் சோரி தேவ்.. உன்னோடதுன்னு எனக்கு தெரியாது.. எனக்கு அரவிந்த் தான் கொடுத்தான்.." என்று மித்ரா அங்கிருந்தே அரவிந்த்தை கை காட்ட,

"ஸப்பாஹ்ஹ்.." என்று இருபக்கமும் தலையாட்டி தேவ் அரவிந்த்தை பார்க்க அவனோ இவன் பார்வையில் ஜெர்க் ஆகி,
             "எனக்கு நச்சு தான் கொடுத்தா தேவ்.." என்று வேலுவை பட்டென்று அரவிந்த் மாட்டி விட,

'போட்டு கொடுத்துட்டியே பரட்ட.. உன்னை லவ் பன்ன பாவத்துக்கு இன்னும் என்ன எல்லா அனுபவிக்கனுமோ.. சமாளி வேலு..' என்று மனதில் நினைத்தவாறு ,
          "என்னை ஏன் டா இப்படி பார்க்குற.. அது நா வாங்கினது.. எனக்கு தான் அடுத்தவங்க பொருள திருடி பழக்கம்  இல்ல.. தெரியும்ல.." என்று விறைப்பாகவே சொல்ல,

  ஒற்றை புருவத்தை தூக்கி முறைத்தவன்,
            "எங்க இன்னொரு தடவை சொல்லு.." என்று கூறியவாறு ஒவ்வொரு அடியாக வைத்து அவளை நோக்கி வர,

       "தேவ் போலிஸ் மேல கை வைச்சா பிரச்சினையாயிரும்.. அதுவும் நா ஒரு பொண்ணு.." என்று கூறியவாறு வேலு இரண்டடி பின்னால் நகர,

  "அடிங்க.." என்று அவளை விரட்டி விரட்டி அடித்தான் தேவ். எல்லாருடைய சிரிப்பு சத்தமும் வீட்டை நிறைக்க அங்கு ஒருத்தியின் சிரிப்பு சத்தம் எல்லாருடைய கண்களையும் கலங்க வைத்து விட்டது. இவர்களின் கூத்தை பார்த்து சிரிப்பை அடக்க முடியாமல் அவள் சத்தம் போட்டே சிரித்து விட பெரியவர்களோ அவள் வாய்விட்டு சிரிப்பதை இமை வெட்டாது மனதில் ஒருவித நிம்மதியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்..
-----------------------------------------------------------------

ஹர்ஷா வீட்டில்,

       தன் ஓஃபீஸ் ரூமில் திலகனுடன் பேசிக் கொண்டிருந்த ராஜ்தீப்பிற்கு தொலைபேசி அழைப்பு வர அதை எடுத்தவரோ தன் நெற்றியை விரலால் நீவி விட்டவாறு திரையில் தெரிந்த பெயரை தன் முன் இருந்த தன் நண்பனிடம் காட்ட அதில் ஜேக்கப் என்ற பெயர் ஒளிர்வதை பார்த்த திலகன் பேசு என்பது போல் சைகை செய்தான்.

அழைப்பை ஏற்றவர் பேசும் முன்னே மறுமுனையில் பேய் கத்து கத்த ஆரம்பித்து விட்டான் ஜேக்கப்.
 
        "இடியட்ஸ் வட்ஸ் கொய்ன்ங் ஒன் தெயார்.. என்ன பன்னிகிட்டு இருக்கீங்க.. அந்த பொண்ண இன்னுமா எதுவும் பன்ன முடியல.. லுக் இதை நீங்க கரெக்ட்டா முடிச்சா தான் கேஷ் இல்லைன்னா.. நா வேற ஆள பாத்து போயிக்கிட்டே இருப்பேன்.. மைன்ட் இட்.." என்று கத்த,

அவன் கத்ததில் கொபம் வந்தாலும் அடக்கிக் கொண்டு,
           "மிஸ்டர் ஜே ப்ளீஸ் காம் டவுன்.. நீங்க கேட்ட பொண்ணு ரொம்ப பெரிய இடத்து பொண்ணு.. அவள கடத்துறதுல ஏகப்பட்ட பிரச்சினை இருக்கு.. அதனால தான் எதுவும் பன்ன முடியாம இருக்கோம்.. சீக்கிரம் அவள உங்க இடத்துக்கு அனுப்ப வேண்டியது எங்க பொறுப்பு.." என ராஜ்தீப் சமாதானப்படுத்த முயல,

          "இங்க பாரு.. இந்த பிஸ்னஸ்ல ஏகப்பட்ட பொண்ணுங்கள கை மாத்தியிருக்கோம்.. எந்த பொண்ண பார்த்தும் நா எட்ரேக்ட்( attract) ஆகினது இல்லை.. அவ எனக்கு வேணும்.. என்ட்,  அவளோட ரேட் இங்க ரொம்ப அதிகமாவே இருக்கு..  ஐ நீட் ஹெர்.." என்று மறுமுனையில் அந்த வெளிந்நாட்டவன் கர்ஜிக்க,

         "நீங்க கொஞ்சம் பொறுமையா இருங்க.. அந்த பொண்ண எப்படியாச்சும் கடத்திருவோம்.." என்று ராஜ்தீப் பேசியதை இடைவெட்டிய அந்த ஜேக்கப்,
         "லிசன் இந்த வேலைய உன்னால முடிக்க முடியலைன்னா  அடுத்த நிமிஷம் நா இந்தியால இருப்பேன்.. என்ட் அது உன் கணக்குல தான் பிரச்சினையாகும்.. கொட் இட்.. சோ, சீக்கிரம் வேலைய முடிக்கிற வழிய பாரு.." என்று அழுத்தம் திருத்தமாக கூறிவிட்டு அழைப்பை துண்டிக்க,

உடனே தன் ஆட்களுக்கு அழைத்த ராஜ்தீப்,
        "என்ன டா பன்னிகிட்டு இருக்கீங்க.. அந்த பொண்ண கடத்த இவ்வளவு நாளா..இன்னும் பத்தே நாள் தான் அதுக்குள்ள அவ நம்ம கன்ட்ரோல்ல இல்ல.. ஐ வில் ஸ்லேஷ் யு ஓல்.. புரியுதா.." என்று ஜேக்கப் மேல் இருந்த மொத்த கொபத்தையும் தன் ஆட்களின் மேல் காட்டி மிரட்டி விட்டு வைத்தவர் எதிரே இருந்த தன் நண்பனிடம் எல்லாத்தையும் கூறி முடிக்க,

         "டோன்ட் வொர்ரி டா.. கிரி அவளை ஃபோலோ பன்ன ஆள் ஏற்பாடு பன்னியிருக்கான் .. சீக்கிரம் அவன் ஆளுங்க அவள தூக்கிறுவாங்க.." என்று திலகன் கூற,

     "சரி டா நீ எப்போ கிளம்புற.." என்று ராஜ்தீப் கேட்க,

        "இன்னும் பத்தே நாள் டா.." என்று கூறிய திலகனுக்கு தெரியவில்லை அடுத்த பத்து நாளில் தான் சடலமாக தான் கிடக்க போகிறோம் என்று..

தொடரும்..🔥
-----------------------------------------------------

KEEP SUPPORTING ME WITH UR COMMENTS..🔥✌

-ZAKI🔥

 

Zakiya


ReplyQuote
Page 2 / 3
Share: