Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

ஸகியின்"என்னை தீண்ட...
 
Notifications
Clear all

ஸகியின்"என்னை தீண்டாதே என் ஜீவனே🔥" கதை திரி  

Page 4 / 4
  RSS

Jade Javid
(@jadejavid)
Trusted Member Writer
Joined: 9 months ago
Posts: 96
19/11/2020 5:32 am  

                   தீண்டாதே 30🔥

 

         
         "வன் இயர் லிவின் ரிலேஷன்ஷிப்ல இருந்தோம்.. " என்று ஹர்ஷா சொல்ல சுற்றி இருந்தவர்களோ அதிர்ச்சியில் விழிவிரித்துக் கொண்டனர்.

தேவ்வோ முதலில் அதிர்ந்தாலும் பின் ஏதோ நியாபகம் வந்து, 'இருக்காதே.. எதுக்கு ஹர்ஷா இப்பிடி ப்ளே பன்னிகிட்டு இருக்கான்..' என்று யோசித்தவாறு அவனை அழுத்தமாக நோக்க,
 
மித்ராவோ "வாட்.." என்று அதிர்ந்தவள் பின், "நோ.. நோ.. ஹீ இஸ் லையி(Lie).. யு ப்ளடி லையர்(liar).. ஹவ் டேர் யு.."  என ஹர்ஷா சொன்ன அப்பட்டமான பொய்யில் கொதித்தவள்,
         "அமெரிக்காவில நாங்க பழகினது உண்மை தான்.. பட் இவன் சொல்ற மாதிரி இல்ல.. அங்கிள்.. ஆன்ட்டி என்னை நம்புங்க.." என்று மித்ரா புரிய வைக்க முயல,

        "நானும் அவளும் சேர்ந்து தான் இருந்தோம்னு ஏதாவது ப்ரூஃப் வேணும்னா என்கிட்ட தாராளமா இருக்கு.. அமெரிக்காவுல என்கூட நல்லா தான் பழகினா.. என்னை ரொம்ப லவ் பன்னா.. பட் இப்போ என்னை வேணாம்னு சொல்றா.. ஷீ ச்சீடட்(cheated) மீ அங்கிள்.. பட் என்னால என் மதுவ விட்டுக் கொடுக்க முடியாது.. இப்போ சொல்லுங்க அங்கிள்.."
என்று ஹர்ஷா கொஞ்சமும் பிசறாமல் பேசிய  பேச்சில் பெரியவர்களோ ஒருசேர மித்ராவை பார்க்க அவளோ அவன் தன்னை போட்டு கொடுத்ததில் பெக்க பெக்கவென விழித்துக் கொண்டிருந்தாள்..

      "ஒரே கேள்வி தான் மித்ரா இந்த பையன காதலிச்சி ஏமாத்தினியா.." என்று அபி கேட்க,

என்ன சொல்வதென தெரியாமல் விழித்தவள் ஹர்ஷாவை பார்க்க அவன் அனல் பார்வையோ 'இல்லைன்னு சொல்லி தான் பாரேன்..' என்று ரீதியில் தான் மிரட்டிக் கொண்டிருந்தது..

         "ஸ்பீக் அவுட் மித்ரா.. ஹர்ஷாவ காதலிச்சி ஏமாத்தினியா." என்று ஆதி அதட்டி கேட்டதில் சற்று திடுக்கிட்டவள் எச்சிலை விழுங்கியவாறு மேலும் கீழும் ஆம் என்ற ரீதியில் தலையாட்ட பெரியவர்கள் பார்த்த அனல் பார்வையிலே பொசுங்கி விட்டாள் மித்ரா..

        "இப்போ மட்டும் உன் அம்மா இருந்தா நீ பன்ன காரியத்துக்கு உன்ன கொன்னு போட்டிருப்பா மித்ரா.." கயல் அவளை முறைத்தவாறு சொல்ல மித்ராவோ தன் அத்தையை ஏறெடுத்து பார்க்க சங்கடப்பட்டு கைகளை பிசைந்தவாறு தரையையே வெறித்துக் கொண்டிருந்தாள்..

       "எங்களை மன்னிச்சிறுங்க ஹர்ஷா.. எங்க வீட்டு பொண்ணு இப்பிடி பன்னுவான்னு.." என்று சித்து பேச வர அதை குறுக்கிட்ட ஹர்ஷா,
          "அச்சோ அங்கிள் என்ன நீங்க போய் மன்னிப்பெல்லா கேட்டுகிட்டு.. நா இப்போ இங்க எனக்கு ஜஸ்டிஸ்(justice) கேட்டு வரல.. ஐ வோன்ட் டு மெர்ரி ஹெர்.. அதுக்கு உங்க பதில் என்ன.." என்று ஹர்ஷா கேட்க,

இவ்வளவு நேரம் நான் செய்தது வீட்டில் உள்ளவர்களுக்கு தெரிந்து விட்டது என்ற சங்கடத்தில் இருந்தவள் ஹர்ஷா மீண்டும் கல்யாணப் பேச்சை ஆரம்பித்ததில்,
             "நோ ஐ கான்ட்.. நா யாரை வேணா கல்யாணம் பன்னிப்பேன்.. எனக்கு நீங்க எந்த மாப்பிள்ளை பார்த்தாலும் எனக்கு கல்யாணத்துக்கு ஓகே.. பட் இவன் மட்டும் வேணாம்.. இல்ல இல்ல.. எனக்கு கல்யாணமே வேணாம்.." என்று மித்ரா கத்திக் கொண்டிருக்கும் போதே அவள் பேச்சில் பொறுமையை இழந்தவன் அவளை நெருங்கி அவள் தாடையை இறுகப் பற்றி தன் முகம் நோக்கி நிமிர்த்த அவன் பிடியில் உண்டான வலியில் முகத்தை சுருக்கினாள் மித்ரா.

      "ஹர்ஷா லீவ் ஹெர்.." என்று தேவ் ஒரு அடி முன்னோக்கி வர ஹர்ஷா பார்த்த பார்வையிலே அப்படியே நின்று விட்டான் தேவ்..

        "என்ன டி சொன்ன.. என்னை கல்யாணம் பன்னிக்க மாட்டியா.. எங்க.. மறுபடியும் சொல்லு.. சொல்லி தான் பாரேன்.. யாரை வேணா கல்யாணம் பன்னிப்பியா.. அதுவும் என் முன்னாடியே இப்பிடி சொல்ல எவ்வளவு தைரியம் டி உனக்கு இருக்கனும்.." என்று கர்ஜிக்க சுற்றி இருந்தவர்களோ முதல் முறை ஹர்ஷாவின் இந்த கோபத்தை பார்த்ததில் ஆடிப்போய் விட்டார்கள் என்றால் மித்ராவுக்கோ உதடு துடிக்க கண்களில் கண்ணீர் சுரக்க ஆரம்பித்து விட்டது..

          "சொல்லு டி.. மறுபடியும் அப்படி சொல்லுவியா ஹான்.. கேக்குறேன்ல.." என்று ஹர்ஷா அதட்டி கேட்க அவன் அதட்டலில் பயந்தவள்,
           "மாட்டேன்..மித்.. மித்து.." என்று திக்கித் திணறி சொல்லி சிறுபிள்ளை போல் இருபக்கமும் தலையாட்டினாள்.

தன் பிடியை தளர்த்தி,
           "உனக்கு நல்லாவே தெரியும் என்னை பத்தி.. தென் வை டிட் யு ட்ரை.. ஹான்.. நா சொன்னது சொன்னது தான்.. உன்ன கல்யாணம் பன்னிக்க உன் சம்மதம் எனக்கு தேவையில்லை.." என்று அவளை மேலும் நெருங்கியவன், அவள் அணிந்திருந்த லேடிகட் ஷேர்ட் கோலரில் கை விட்டு அவள் கழுத்தில் அவன் அணிவித்திருந்த செயினை வெளியில் எடுத்து அவள் கண்களை நேருக்கு நேர் பார்த்தவாறு,
         
         "இதை நா உன் கழுத்துல போட்டப்பவே முடிவு பன்னிட்டேன்.. நீ தான் என் பொண்டாட்டின்னு.. இதை இப்போ வரைக்கும் நீ தூக்கி போடாம வச்சிருக்கும் போதே புரிஞ்சிக்கிட்டேன்.. உன் மனசுல நா தான் இருக்கேன்னு.. சோ, டோன்ட் ப்ளே வித் மீ மது.. உனக்கு புடிக்குதோ இல்லையோ என் டிஷிஷன்க்கு(decision) நீ சம்மதம் சொல்லி தான் ஆகனும்.. புரியுதா.." என்று கேட்க,

அவள் அப்போதும் சிவந்த உதடுகள் துடிக்க தன்னவனையே மிரட்சியாக பார்த்துக் கொண்டிருக்க "புரியு..தான்..னு கேட்..டேன்.. " என்று அவன் ஒவ்வொரு வார்த்தையாக அழுத்தி கேட்க, மித்ராவோ தலையை எல்லா பக்கமும் பூம்பூம் மாடு போல் ஆட்டியதில் சுற்றி இருந்தவர்களுக்கோ மயக்கம் வராத குறை தான்..

இதுவரை யாருக்கும் கட்டுப்படாதவள் தனக்கென வட்டத்தை அமைத்து அதில் யாரையும் தன்னை நெருங்க விடாமல் தனக்கு தோன்றியதை செய்துக் கொண்டு எவர் பேச்சையும் காதில் வாங்காமல் இத்தனை நாட்கள் தங்கள் முன் இருந்த மித்ராவா இது என்று கேட்கும் படி இருந்தது அவளின் தோற்றம்..

உடல் நடுங்க கீழ் உதட்டை பற்களால் கடித்துக் கொண்டு ஹர்ஷாவையே மிரட்சியுடன் பார்த்தவாறு அவன் மிரட்டலுக்கு சிறுபிள்ளை போல் தலையாட்டியவளை கண்ட எல்லாருக்குமே அதிர்ச்சியாக தான் இருந்தது..

தங்களை மிரட்சியுடன் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் புறம் திரும்பியவன்,
         "அங்கிள் சீக்கிரம் வீட்ல இதை பத்தி பேசி சொல்லி உங்ககிட்ட பேச சொல்றேன்.. இன்னும் வன் மன்த்ல எனக்கும் மதுக்கும் கல்யாணம் நடக்கனும்.. அதுல யாருக்கும் சம்மதம் இருக்குதோ இல்லையோ.." என்று கறாராக சொல்லி விட்டு எல்லாரும் தங்களை பார்ப்பதை கூட கண்டுக்காது மித்ராவை அணைத்து அவள் கன்னத்தை இரு கைகளிலும் தாங்கி நெற்றியில் அழுந்த முத்தமிட்டவன்,
            "லவ் யு பேபி.. டேக் க்யார்.." என்று சொல்லி விட்டு செல்ல மித்ராவோ ஒரு இடத்தையே தான் வெறித்துக் கொண்டிருந்தாள்..

ஆதியோ கயலை கண்களால் அறையை கண்ஜாடை காட்டி விட்டு செல்ல பின் ஒவ்வொருவராக அந்த இடத்திலிருந்து கலைய ஆரம்பித்தனர். இத்தனை நேரம் இந்த கூத்தை பார்த்துக் கொண்டிருந்த வேலுவுக்கு இப்போது தான் அரவிந்தின் நிறைவு வர சட்டென்று மாடியை பார்த்தவளுக்கு அங்கு அவன் இல்லாததில் புரிந்து போனது அவன் எந்தளவு நொறுங்கி போயிருப்பான் என்று..

ஆதி கயலின் அறையில்,
  
            "கயல் அது நிஜமாவே நம்ம மித்ரா தானா.." என்று ஆதி இவ்வளவு நேரம் இருந்த தன் சந்தேகத்தை கேட்க,

முதன் முறை மித்ரா ஒருவருக்கு அடங்கி பார்த்த கயலுக்கு புன்னகை தோன்ற,
           "அதுல என்ன சந்தேகம் சிடுமூஞ்சி.. அவளே தான்.. ஆர்யன் ருத்ராவ சிரிச்சே சமாளிப்பான்னா ஹர்ஷா மித்ராவ மிரட்டியே சமாளிக்கிறான்.." என்று சொல்ல,

சிறிது நேரம் யோசித்து ஆதியோ,
           "ஆமா கயல் மித்ரா விஷயத்துல நாங்க ஏதோ ஒரு விதத்துல தப்பான  முடிவு எடுத்துட்டோம்.. அதனால அவ வாழ்க்கையில எங்கள தலையிட விடாமல் அவ விரைப்பா இருக்கலாம்.. ஆனா அதுக்காக அவள அப்பிடியே விட்டுற முடியாது.. நா நினைக்கிறதை தான் நீயும் நினைக்கிற அப்படி தானே..." என்று சிரித்தவாறு கேட்க,

           "எக்ஸ்ஸாக்ட்லி(Exactly).. ஹர்ஷாவை தவிர வேறு யாராலையும் மித்ராவை கன்ட்ரோல் பன்ன முடியாது.. முதல் தடவை மித்ரா ஒருத்தரோட பேச்ச கேட்டு பதில் சொல்றதை இன்னைக்கு தான் பார்த்தேன்.. ஆனா ஏன் அவ அப்படி பன்னா.. நம்ம வீட்டு பொண்ணு காதலிச்சி ஏமாத்துற அளவுக்கு போயிட்டாளா.. " என கயல் ஒருவித வேதனையில்  பேச,

           "இல்ல கயல் அவ மனசுல அவன் இல்லைன்னா இவ அவன் பேச்சுக்கு கட்டுப்பட்டிருக்கவே மாட்டா.. அதுவும் அவ வீட்லயே எங்க எல்லார் முன்னாடியும் இவ்வளவு உரிமையா அவள அதட்டுறான்னா.. அந்த பையனுக்கு எவ்வளவு தைரியம் இருக்கனும்.. என்னை பொருத்த வரைக்கும் மித்ரா மனசளவுல ரொம்ப குழம்பி போயிருக்கா.. இரண்டு விஷயங்களுக்கு நடுவுல ரொம்பவே சிக்கித் தவிக்கிறா.. அவளை ஹர்ஷாவால மட்டும் தான் சரி பன்ன முடியும்.. " என ஆதி சொல்ல,

        "அப்போ இந்த விஷயத்துல உங்களுக்கு சம்மதமா ராஜன்..  பட் ஹர்ஷா யாருன்னு.." என கயல் இழுக்க,
 
        "ஐ க்னோ கயல்.. பட் மித்ரா பத்தி ஹர்ஷாவுக்கு உண்மை தெரிஞ்சத்துக்கு அப்றம் அவன் மனநிலை எப்பிடி இருக்கும்னு சொல்ல முடியாது.. என்ன நடக்குதுன்னு பொறுத்திருந்து பார்க்க வேண்டியது தான்.." என்று ஆதி சொல்ல தன்னவனின் தோளில் சாய்ந்துக் கொண்டாள் கயல்.

அன்று இரவு,

      மொட்டை மாடியில் கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிய வண்ணம் முகம் சற்று சிவந்திருக்க சோர்ந்து போன கண்களுடன் வானத்தையே வெறித்தவாறு நின்றுக் கொண்டிருந்தான் அரவிந்த்..

    "அவிந்த்.." என்ற வேலுவின் குரலில் சட்டென திரும்பி தன் கண்களை துடைத்து விட்டு முகத்தை சாதாரணமாக வைக்க பெரும்பாடுபட்டான் அரவிந்ந்..

      "சொல்லு நச்சு.." என்று உணர்ச்சிகளை அடக்கிய வண்ணம் கேட்க அவள் காதல் கொண்ட மனமோ தன்னவனை நினைத்து ஊமையாக தான் அழுதது..

    "என்கிட்ட எதுக்கு அவிந்த் நடிக்குற.. நா தான் உன் ஒரே ஆறுதல்னு எப்பவும் சொல்வல்ல.. இப்போ.." என்று அவள் சொல்லி முடிக்கவில்லை.. அவளை அணைத்து ஓவென்று அழுக ஆரம்பித்து விட்டான் அவிந்த்..

       "என்னால முடியல நச்சு.. நா இவ்வளவு நாள் அவளுக்கும் என் மேல விருப்பம் இருந்திருக்குன்னு தப்பா புரிஞ்சிக்கிட்டு இருந்திருக்கேன்.. ஆனா மித்ரா.. எனக்கு அழுகை அழுகையா வருது நச்சு.. என் காதல் சொல்லாமலே புதைஞ்சிருச்சி.." என அவன் சிறுபிள்ளை போல் அழுக,

அவனை தன்னோடு அணைத்துக் கொண்டவள்,
         "எவ்ரிதிங் இஸ் கொய்ங் டு பி ஆல்ரைட்.. ரிலாக்ஸ் அவிந்த்.. ரிலாக்ஸ்.. ப்ளீஸ்.." என்று அவள் சமாதானப்படுத்த நேரம் போவதே தெரியாமல் அவளின் ஆறுதலில் சற்று அழுகையை நிறுத்தி அவள் தோளிலே சாய்ந்தவாறு அரவிந்த் இருக்க வேலு தான் தன்னவன் வேறு பெண்ணிற்காக கலங்குவதில் ஏற்படும் வேதனையை தாங்க முடியாது மௌனமாக கண்ணீர் வடித்தாள்..
------------------------------------------------------------------

கொலேஜ் கேன்டீனில்,

         "பாவம் டி அக்கா.. அன்னைக்கு மாமா மிரட்டுனதுல ரொம்ப பயந்துட்டாங்க.. மாமா இப்பிடி அதிரடியான ஆள்னு எனக்கு முன்னாடியே தெரியாம போயிருச்சி டி.." என தியா ஆச்சரியமாக சொல்லிக் கொண்டிருக்க,

          "உன் அக்காவ சமாளிக்க ஹர்ஷா ப்ரோவ மாதிரி இருந்தா தான் முடியும்.." என்று அனா பேசிக் கொண்டிருக்கும் போதே எப்போதும் போல் இரு பெண்களையும் பயத்தில் அலற வைத்து தாவி குதித்து அவர்களுக்கருகில் வந்தமர்ந்தான் அனிருத்..

அனாவோ ஏகத்துக்கும் முறைக்க இவன் வந்ததில் முதலில் அதிர்ந்தாலும் பின் முகத்தை வேறுபுறம் திருப்பி அவனை கண்டுக்காதது போல் அமர்ந்திருந்த தியாவை கண்டவன் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே,
        "ஹாய்ய் ஏன்ஜல்.." என்று சொல்ல அவளோ அவனை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை..

    "அவமானப்பட்டான் ஆட்டோக்காரன்.." என வாயைப் பொத்திக் கொண்டு சிரித்த அனா, "டேய் குரங்குப் பயலே.. இந்த பழக்கத்தை விடவே மாட்டியா டா.. ரொம்ப பதறுது டா.."  என்று பாவம் போல் சொன்னதில், அனாவின் தலையில் தட்டியவன்,
           "என் ப்ரோ கொடுத்த ஷாக் அ விடவுமா நா உங்களுக்கு கொடுக்குறேன்.." என நக்கலாக கேட்க,

          "அதுவும் வாஸ்தவம் தான்.. எங்க வீட்ல தலைப்புச் செய்தியே உங்க ப்ரோதான்னா பாரேன்.. ஆனா ஹர்ஷா ப்ரோ வேற லெவல்ல.. சூப்பர் டா.." என்று அனா சொல்லி பின் ஏதோ யோசித்தவள்,
           "ஆமா டா லண்டன்.. உன் வீட்டுக்கு இந்த மேட்டர் தெரியுமா.." என்று தீவிரமாக கேட்க,

'இல்லை..' என்று தலையாட்டியவன்
           "எங்க தாத்தா ரொம்ப ஸ்வீட்.. என் அப்பாவும் பெரியப்பாவும் தான் ஜாதி அப்பிடி இப்பிடின்னு லைட்டா பார்ப்பாங்க..  பட், இப்போ என் அப்பா அப்படியெல்லா இல்ல.. பெரியப்பா மட்டும் தான்.." என தயக்கமாக இழுத்தவன் பின்,
           "பட், தட்ஸ் நொட் அ பிங் டீல்.. அவருக்கு ப்ரோன்னா உயிரு.. சோ, எப்படியும் சம்மந்திப்பாரு.. அச்சு ப்ரோ அதெல்லாம் பாத்துப்பாரு.." என்று சொல்ல,

தியாவோ,  "எல்லா நல்லதாவே நடந்தா சரி தான்.. என் அக்கா இப்பிடியே இருந்துருவாங்களோன்னு ரொம்ப பயந்துட்டு இருந்தேன்.. பட் இப்போ மாமாவ பார்ததிலிருந்து அந்த டென்ஷனே எனக்கில்ல.. ரொம்ப நிம்மதியா இருக்கு.. மாமா எப்பவும் சூப்பர் தான்.." என தியா சிறுபுன்னகையுடன் சொல்ல,

அதில் பாவமாக முகத்தை வைத்த அனி,
            " உன் மாமா மட்டும் தான் சூப்பரா.. உன்னையே நினைச்சிக்கிட்டு இருக்க உன் அக்காவோட கொழுந்தனார பத்தியெல்லாம் யோசிக்க மாட்டியா.. அவங்களையும் கொஞ்சம் கவனிக்க வேண்டியது.. " என அடக்கிய சிரிப்புடன் சொல்ல,
   
       "ஆஹான்.. பேஷா கவனிச்சிட்டா போச்சு.." என்று சொல்லி அங்கிருந்த ஃபோக்(folk) ஆல் அவன் கையில் குத்த "ஆஆ.." என்று அலறியவன்,
           "வை இந்த வெறி ஏன்ஜல்.. " என்று அப்பாவி போல் கேட்டான் அனி.

       "இங்க பாரு அனிருத்.. எத்தனையோ தடவை சொல்லிட்டேன்.. தயவு செய்து உன் மனசுல இருக்க கிறுக்குத்தனமான எண்ணத்தை இதோட விட்டுறு.." என கிட்டதட்ட தியா கத்த,

அவள் ரித்து என்ற அழைப்பிற்காக ஏங்கியவன் உதட்டை பிதுக்கியவாறு,
            "ஏன் ஏன்ஜல் இப்பிடி சொல்ற.. என்கிட்ட என்ன டி குறை.. நீ சொல்ற ரீசன் ரொம்ப ஸ்டுபிட் ஆ இருக்கு.. என்னால அதை ஏத்துக்கவே முடியல.." என அனி சொல்ல,

கோபமாக குறுக்கிட்ட தியா..,
          "உனக்கு எல்லாமே ஸ்டுபிட் தான்.. நீ வளர்ந்த விதம் அப்படி.. பட் நா அப்படி இல்ல.. என்னை விட சின்ன பையன எல்லாம் என்னால ஹஸ்பன்ட்டா ஏத்துக்க முடியாது.. நீ எனக்கு தம்பி மாதிரி ரித்து.." என்று தியா சொன்னதும் "வாட்.." என்று அனி கத்த அனாவோ வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்தாள்..

           "திஸ் இஸ் டூ மச் ஆரா.. வெறும் எட்டு மாசம் கேப்க்கு என்னை உன் தம்பி ரேன்ஜ்க்கு நீ பேசுறது ரொம்ப ஓவர்.." என்று அனி பொங்கி எழ,
    
          "அது தானே ஃபேக்ட்டு.. நீ எனக்கு தம்பி தானே.."  என அசால்ட்டாக சொன்ன தியாவின் மேல் தற்போது அனிக்கு கொலைவெறியே வந்து விட்டது..

         "இந்த அநியாயத்தை தட்டி கேக்க மாட்டியா நட்பு.. " என அவன் அனாவை பார்க்க கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டிருந்தவள் சட்டென இருவரையும் முறைத்து,
          "ஆமா டா.. நீ விண்ணை தாண்டி வருவாயா சிம்பு.. இவங்க த்ரிஷா.. இவள விட நீ வயசு கம்மின்னு உன்னை ஏத்துக்க முடியாம தவிக்குறாங்க.. போடா புடலங்கா.. நீ அரை கிறுக்கன் அவ முழு கிறுக்கி இந்த ஈர வெங்காய பஞ்சயத்துக்கு என்னையும் கூட்டி சேர்க்குறியா.. போங்க டா நீங்களும் உங்க வீணாபோன லவ்வும்.."  என திட்டிவிட்டு அனா அவள் பாட்டிற்கு நகர,

இதுக்கும் தனக்கும் சம்மந்தமே இல்லை என்பது போல் தன் ஃபோனை நோண்டிக் கொண்டிருந்தவளை பார்த்தவனுக்கு கோபம் எழ,
            "லுக்.. இனி என்னை தம்பின்னு கூப்பிட்ட அதுக்கப்றம் பேசுற அந்த உதட்டை இழுத்து வச்சி கடிச்சிறுவேன்.. க்யார்ஃபுல்.." என்று ஒற்றை விரலை நீட்டி எச்சரித்து விட்டு அனிருத் செல்ல தியா தான் அவன் கூற்றில் 'உதட்டை கடிச்சிறுவானா..' என மிரண்டு போய் பார்த்துக் கொண்டிருந்தாள்..
--------------------------------------------------------------

அன்று இரவு,

தேவ்விடமிருந்து அழைப்பு வர அதை ஏற்று காதில் வைத்த ஹர்ஷா,
         "ஹெலோ தேவ்.. என்ன இந்த நேரத்துல.. "என என்ன ஏதோ என்று பதட்டமாக கேட்க,

           "ஒன்னுஇல்ல ஹர்ஷா.. ஒரு முக்கியமான விஷயம்.. " என்று தேவ் சொல்லியதில் ஹர்ஷாவோ யோசனையாக புருவத்தை நெறித்து எதுவும் பேசாது அமைதியாகவே இருந்தான்..

           "மித்ராவ பத்தி உங்க மனசுல இருக்க மொத்த கேள்விக்கும் நாளைக்கு உங்களுக்கு பதில் தெரிய போகுது ஹர்ஷா.. " என்று தேவ் சொன்னதும் தான் தாமதம்

அடுத்த நொடி,
          " வாட் நிஜமாவா.. எப்போ எங்க வரனும்னு மட்டும் சொல்லுங்க.. ஐ வில் பீ தெயார் ஒன் டைம்.." என்று உற்சாகமாக ஹர்ஷா சொல்ல தேவ்விற்கோ, 'இப்போ இருக்க இந்த சந்தோஷம் நா நடந்ததை சொன்னதுக்கு அப்றம் இருக்குமா..'  என மனதில் நினைக்காமல் இருக்க முடியவில்லை..

          "ஓகே ஹர்ஷா ***** ஹோட்டல்ல நம்பர் 201 ரூம் புக் பன்னியிருக்கேன்.. நாளைக்கு மதியம் அங்க மீட் பன்னலாம்.. " என்று தேவ் சொல்ல ஹர்ஷாவுக்கோ 'எதுக்கு ஹோட்டல் ரூம்..' என்ற கேள்வி மனதில் தோன்ற மறைக்காது அவனிடமே கேட்டு விட்டான்..

        "அது வந்து ஹர்ஷா.. வெளில வச்சு பேசுறது எனக்கு சரியா படல.. உங்க மனநிலை எப்பிடி வேணா மாறலாம்.. அதான்.." என்று தேவ் தயக்கமாக சொல்ல ஹர்ஷாவுக்கு அவன் சொன்னது பாதி புரியவில்லை என்றாலும் மேலும் கேள்வி கேட்காது சம்மதித்தவன் அடுத்த நாள் டான் என்று தேவ் சொன்ன நேரத்துக்கு முன்பாகவே அந்த ஹோட்டல் அறையில் இருந்தான் ஹர்ஷா..

அவனுக்கு எதிதே அமர்ந்த தேவ் கைகளை பிசைந்தவாறு அமைதியாக இருக்க ஹர்ஷாவோ சற்றும் நிதானம் இல்லாமல்,
            "சொல்லுங்க தேவ்.. மொதல்ல மது யாரு.. அவளோட அப்பா அம்மா யாரு.. அவங்க இறந்ததால தான் என் மது இப்பிடி இருக்காளா.. இல்ல.. அதுக்கான ரீசன் தான் என்னோட டாட்ஆ.. " என்று அவன் அடுக்கடுக்காக கேள்விகளை அடுக்க சற்று உள்ளுக்குள் பதறித்தான் போனான் தேவ்..

பெருமூச்சுவிட்டு தன்னை நிதானப்படுத்தியவன் முட்டியில் கைகளை கோர்த்து ஊன்றி ஹர்ஷாவையே அழுத்தமாக பார்த்தவாறு,
           "மித்ரா பத்தி தெரிஞ்சிக்க முன்னாடி முதல்ல அவ அப்பா அம்மாவ பத்தி நீங்க தெரிஞ்சிக்கனும் ஹர்ஷா.. "  என்று சொல்ல ஹர்ஷாவோ கண்களில் ஆர்வத்துடன் தேவ்வை தான் பார்த்துக் கொண்டிருந்தான்..

தொடரும்..🔥
--------------------------------------------------------------
 
            
-ZAKI🔥
        

 

Zakiya


ReplyQuote
Jade Javid
(@jadejavid)
Trusted Member Writer
Joined: 9 months ago
Posts: 96
21/11/2020 5:14 am  

                  தீண்டாதே 31🔥

 

     
         "மித்ரா பத்தி தெரிஞ்சிக்க முன்னாடி மொதல்ல அவ அப்பா அம்மா பத்தி நீங்க தெரிஞ்சிக்கனும் ஹர்ஷா.." என்று தேவ் சொல்லவும் ஹர்ஷா கண்களில் ஆர்வத்துடன் தேவ்வை தான் பார்த்துக் கொண்டிருந்தான்..

       "அவ அம்மா பேரு ஆருத்ரா..மித்ரா இப்போ ரன் பன்ற ஆரா சொஃப்ட்வெயார் சொல்யூஷன உருவாக்கினவங்களே அவங்க தான்.. அப்பா ஆர்யன் பதினைஞ்சி வருஷத்துக்கு முன்னாடி தமிழ்நாட்டு ஹெட் ஆஃப் CBI.. " என்று சொல்ல ஹர்ஷாவின் கண்களோ ஆச்சரியத்தில் விரிந்துக் கொண்டது..
அவன் உதடுகளோ "வாவ்.." என்று புன்னகைக்க அதை கவனித்த தேவ்வின் உதடுகளும் சிறு புன்னகையை சிந்தியது..

       "எங்க அத்தை மாமா இரண்டு பேருமே ஒருத்தருக்கொருத்தர் சளைச்சவங்க இல்ல.. சொல்லபோனால் மாமாவ விட ருத்ரா அத்தை ஒருபடி மேல தான் ரொம்ப போல்ட்(bold).. எங்க அம்மா அத்தை யாருமே இரத்த சொந்த கிடையாது எல்லாருமே ஆசிரமத்தில வளர்ந்தவங்க.. அப்பா மாமா எல்லாரும் ஒரே டிபார்ட்மென்ட்ல சேம் டீம்.. ஒரு கேஸ் அ ஹேன்டல் பன்ன போய் தான் அவங்க அவங்க லவ் அ மீட் பன்னிருக்காங்கன்னா பாருங்களே.."என்று கூறியவன் சில சம்பவத்தை மட்டும் கூற அதிலே ஹர்ஷா வாயை பிளந்து விட்டான்..

          "இப்போ புரியுது தேவ் மித்ரா இவ்வளவு அழுத்தமா இருக்க அத்தை தான் காரணம்னு.. இப்படியும் இருப்பாங்களான்னு நினைக்கிற அளவுக்கு நீங்க சொல்றது இருக்கு.." என்று ஹர்ஷா ஆச்சரியம் கலந்த குரலில் சொன்னவன் பின்,
          "அப்போ எப்பிடி இறந்தாங்க தேவ்.. மித்ரா ரொம்ப பாவம்ல.." என வருத்தத்துடன் கேட்க, தேவ்விற்கு கூட கண் கலங்க தான் செய்தது..

தன்னை சுதாகரித்து,
           "பதினைஞ்சி வருஷத்துக்கு முன்னாடி ஆர்யன் மாமா ஒரு கேஸ் ஹேன்டல் பன்னாரு.. அது தான் அவர் ஹேன்டல் பன்ன லாஸ்ட் கேஸ்.. தமிழ்நாட்டுல பல பொண்ணுங்க கடத்தப்பட்டு வேற வேற ஸ்டேட்ஸ்ல வெளிநாட்டுல விக்கப்பட்டாங்க.." என்று தேவ் சொல்லவும் ஹர்ஷாவுக்கு அன்று அந்த அடியாள் சொன்னதும் நினைவு வர கூர்ந்து கேட்க ஆரம்பித்தான்.

       "அது யாருன்னு கண்டுபிடிச்சி அதை தடுக்க ரொம்ப முயற்சி பன்னாங்க.. ஆரம்பத்துல ரொம்ப கம்ப்ளிகேடட் ஆ இருந்த கேஸ் போக போக ஒவ்வொரு விஷயமா வெளிய வர ஆரம்பிச்சது.. அவருக்கு தேவையான எவிடென்ஸ்ஸும் கிடைக்க ஆரம்பிச்சது.. கிட்டதட்ட கல்ப்ரிட் அ நெருங்குற சமயம் ஏகப்பட்ட மிரட்டல் கோல்ஸ் வந்துச்சி.. அவர ஹேன்டல் பன்ன விடாம பல குடைச்சல் கொடுத்தாங்க.. அதை எல்லா மாமா பொருட்டாவே எடுத்துக்கலை..

     ஒரு கட்டத்துல மித்ரா, தியாவ வச்சி மிரட்ட ஆரம்பிச்சாங்க..அவர் தனியா எத்தனையோ கேஸ் ஹேன்டல் பன்னிருக்காரு பட் இப்போ அவருக்குன்னு இருக்க ஃபேமிலிய வச்சி மிரட்டவும் ரொம்ப பதறிட்டாரு.. அப்போ எல்லா அவருக்கு பக்க பலமா இருந்தது ருத்ரா அத்தை தான்..

       ஆனா எல்லா கொஞ்ச நாள் தான்.. மிரட்டிட்டு இருந்தவங்க அப்படியே அமைதியாகிட்டாங்க.. மாமாவுக்கு சந்தேகம் வந்தாலும் அதை அவரு பெருசா கண்டுக்கல.. மாமாவும் கிட்டதட்ட கல்ப்ரிட் யாருன்னு கண்டுபிடிச்சிட்டாங்க.. எவிடென்ஸ் சப்மிட் பன்னி இந்த கேஸ்ஸ முடிச்சிடலாமேன்னு இருந்தப்போ தான் " என சற்று நிறுத்தியவனுக்கு தொண்டை அடைக்க அதை புரிந்துக் கொண்ட ஹர்ஷா  க்ளாசில் தண்ணீர் ஊற்றி குடிக்க கொடுத்தான்..

அதை மறுக்காது வாங்கி குடித்த தேவ் மேலும் தொடர்ந்தான்..

          "அன்னைக்கு நைட்டே  அந்த பாவிங்க அத்தையையும் மாமாவையும் கொன்னுட்டாங்க.. அவங்க சாகுறதை கண்ணால பார்த்த ஒரே ஆள் மித்ரா தான்.. அவ கண்ணு முன்னாடி அவங்கள கொன்னுட்டானுங்க..  அடுத்த நாள் போலிஸ் அந்த இடத்துக்கு வந்தப்போ அத்தையும் மாமாவும் அந்த பீச் மணல்ல இறந்து கிடக்க கொஞ்சம் தூரம் தள்ளி  மித்ரா காருக்குள்ள மயங்கி கிடந்திருந்தா.. வீட்ல அவங்களுக்கான காரியம் நடக்க  ஹோஸ்பிடல்ல மித்ரா வன் வீக் கண்ணையே திறக்கல.. சுயநினைவே இல்லாம இருந்தா..

          ஒருவாரத்துக்கு அப்றம் மயக்கம் தெளிஞ்சு கண்ணு முழிச்சப்போ கிட்டதட்ட பைத்தியக்காரி மாதிரி அந்த இடத்தையே ஒருவழி ஆக்கிட்டா..  யாராலையும் அவளை கன்ட்ரோல் பன்னவே முடியல.. எல்லாத்தையும் உடைச்சி தன்னை தானே காயப்படுத்திகிட்டு இருந்தவள அடக்க வேறுவழியில்லாம மயக்க ஊசி போட்டதுக்கு அப்றம் தான் எல்லாருக்குமே போன உயிரே திரும்ப வந்த மாதிரி இருந்திச்சு.. பிகோஸ் அவ எக்ஸ்ப்ரெஸ்(express) பன்ன கோபம் அந்த மாதிரி..

அப்றம் ஒருநாள் முழுக்க ஒப்சர்வெர்ஷன்ல இருந்து கண் முழிச்சவ எந்த உணர்வுகளுமே இல்லாத மாதிரி இருந்தா..  எந்த ரியாக்ட்டும் பன்னல.. ஒரு வார்த்தை கூட பேசல்ல. அவ அவளோட அப்பா அம்மா இறந்ததை நேர்ல பார்த்ததால ரொம்ப மனசளவுல பாதிக்கப்பட்டிருக்கான்னு மித்ராவ ட்ரீட்மென்ட் பன்ன டொக்டெர் சொன்னாங்க.. சைக்காட்ரிஸ்ட்(psychiatrist)  அ கன்சர்ன் பன்ன சொல்லி சொல்லவும் மித்ராவ கவுன்ஸ்லிங் கூட்டிட்டு போனாங்க.. அங்க அத்தை மாமாவோட பேர சொன்னது தான் தாமதம் ஓன்னு அழ ஆரம்பிச்சிட்டா.. ஆராவ கொன்னுட்டாங்க ம்மிய கொன்னுட்டாங்கன்னு அதையே திரும்ப திரும்ப சொல்லிகிட்டு இருந்தா..

யாரு கொன்னாங்கன்னு கேட்டதுக்கு அவக்கிட்ட பதில் மட்டும் வரவே இல்ல.. அதை கேக்கும் போது மட்டும் முகமெல்லா சிவந்து அமைதி ஆகிறுவா.. வீட்டுக்கு வந்த கொஞ்ச நாள் யாருக்கிட்டையும் எதுவும் பேசல அமைதியா தான் இருந்தா நல்லா சாப்பிடுவா நைட்டுக்கு மட்டும் தூங்காம முழிச்சிக்கிட்டு இருப்பா.. அவ பக்கத்துல எப்போவும் நா தான் இருப்பேன்.. தியா ரொம்ப சின்ன பொண்ணு அவளுக்கு எதுவுமே தெரியல பட் மித்ராவுக்கு அப்போ பத்து வயசு அவ அப்பா அம்மா இறந்தது அதுவும் அவ கண்ணு முன்னாடி சோ, அவளால எதையுமே மறக்க முடியல..

ஒருநாள் நைட் நா முழிச்சி பார்த்தப்போ மித்ரா பக்கத்துல இல்லை.. நா பயந்து போய் அம்மா அப்பாகிட்ட சொல்ல எல்லாரும் அவள தேட ஆரம்பிச்சிட்டாங்க.. அப்போ தான் அவ வெளில விட சொல்லி வீட்டு வோட்ச்மேனோட சண்டை பிடிச்சிகிட்டு இருந்தா அவரால அவள சமாளிக்கவே முடியல.. சத்தம் கேட்டு எல்லாரும் போய் அவள சமாதானப்படுத்தி வீட்டுக்கு கூட்டிட்டு வந்தா டைனிங் டேபிள் மேல இருந்த கத்திய எடுத்து "அவன கொல்லனும்.. கொல்லனும்.. "ம்னு ஆவேசமா கத்திகிட்டு வீட்ல இருந்து வெளில ஓட ட்ரை பன்னா.. 

எவ்வளவு சமாதானப்படுத்தியும் அவ அமைதி ஆகல.. கோபத்தோட உச்சியில இருந்தவள பார்க்க வீட்ல இருந்தவங்களுக்கே பயமா தான் இருந்துச்சி அப்போ ஒரு கட்டத்துல ஆதி மாமா அறைஞ்ச அறைல அப்படியே மயங்கி விழுந்துட்டா.. அடுத்த நாள் எழுந்தவ அப்படி ஒன்னே நடக்காத மாதிரி சாதாரணமா இருந்தா..

அவள ரொம்ப கம்பிள் பன்னி கவுன்ஸ்லிங் கூட்டிட்டு போனதுல வீட்ல இருந்தா நடந்ததே நியாபகம் வந்துகிட்டு இருக்கும் இந்த சூழல்ல இருந்து வேற சூழல்க்கு போனா மறக்க வாய்ப்பிருக்குன்னு சொன்னதால அவ போகமாட்டேன்னு அடம்பிடிச்சும் ரொம்ப ட்ரை பன்னி அமெரிக்காவுல இருந்த எங்க கௌத்தம் மாமாவோட வீட்டுக்கு அனுப்பி விட்டுட்டாங்க..

அங்க போய் ஒருநாள் தான் அழுதா அப்றம் ஏதோ ரொம்ப பழக்கப்பட்ட இடம் மாதிரி சாதாரணமா தான் இருந்தாளாம்.. ஏன் அதுக்கப்றம் அழுக கூட இல்லையாம்.. அமெரிக்காவுலயே கௌத்தம் மாமா அவளுக்கு கவுன்ஸ்லிங் எடுத்துக்க ஏற்பாடு பன்ன அடம்பிடிக்காம ட்ரீட்மென்ட் எடுத்துக்குவாளாம்..  ஆரம்பத்துல நாங்க கோல் பன்னா பேசவே மாட்டா அதுக்கப்றம் ரொம்ப நெருக்கமா இல்லைன்னாலும் ஒரு வார்த்தை இரண்டு வார்த்தை பேசுவா.. சரி கோபத்துல இப்பிடி இருக்கா போக போக சரியாயிரும்னு நினைச்சாங்க ஆனா அவ இப்போ வரைக்கும் மாறல.. ஒரு ஒதுக்கம் அவக்கிட்ட  எப்போவும் இருக்கும்.. ஏதோ ஒரு கோபம் அவ மனசுல இருக்கு.. அதை ரொம்ப அழுத்தி வச்சிருக்கா.. " என்று நிறுத்திய தேவ் பெருமூச்சுவிட்டவாறு,

         "இதெல்லா நடந்தப்போ எனக்கும் மித்ரா வயசு தான்.. அப்போ அவளோட கோபத்தை பார்த்து எதுவுமே புரியல பட் ரொம்ப பயமா இருந்துச்சி.. ஆனா மித்ரா இந்தியா வர்றதுக்கு டூ விக்ஸ் முன்னாடி அவளோட ஆக்ரோஷத்தை நேர்ல பார்த்தேன் ஹர்ஷா.. " என்று சொன்ன தேவ்விற்கு அன்று நடந்ததை இப்போது நினைக்கும் போதும் நெஞ்சு பதறத் தான் செய்தது..

மித்ரா அமெரிக்கா சென்ற பிறகு தேவ் மட்டுமே அடிக்கடி அவளுடன் பேச மித்ராவும் அவனிடம் மட்டுமே நெருக்கமாக இருந்தாள்.. அவனும் தன் கல்லூரி படிப்பு முடிந்து அடிக்கடி அமெரிக்காவிற்கு அவளை பாக்க செல்ல அன்றும் எப்போதும் போல் சென்றவனுக்கு தன் இன்னொரு முகத்தையே காட்டி விட்டாள் மித்ரா..

அவளுடைய ஃப்ளாட்டுக்கு வந்தவன் கோலிங் பெல்லை அழுத்த மித்ராவோ கதவை திறந்தபாடே இல்லை.. ஒரு கட்டத்தில் முடியாமல் கதவை வேகமாக தட்ட கதவு தானாகவே திறந்து கொண்டது.. அதில் எரிச்சலடைந்தவன்,
             "என்ன இவ கதைவை லோக் பன்னாம விட்டிருக்கா.. எத்தனை தடவை சொல்லியிருக்கேன்.. தனியா இருக்க டோர் லோக் பன்னி வீட்டுக்குள்ள இருன்னு கேட்கவே மாட்டா.." என திட்டியவாறு உள்ளே வந்தவன் கண்களோ அதிர்சிச்சியில் விரிந்து கொண்டது.. வீடு இருந்த கோலம் அப்படி..

வீட்டில் இருந்த மொத்த பொருட்களும் தரையில் சுக்கு நூறாக சிதறியிருக்க சுற்றி முற்றி பார்த்தவன் ஏதோ நினைவு வந்தவனாக தனது தொலைப்பேசி திரையை பார்க்க அவனுக்கோ தூக்கி வாரிப்போட்டது.. அன்று தான் ஆர்யன் ருத்ரா இறந்த நாள்..

'ஷீட்.' என நெற்றியில் அடித்துக் கொண்டவன் உடனே மித்ராவை தேடி அறைக்குள் சென்று பார்க்க தலை முடி கலைந்து முகத்தை மறைத்த வண்ணம் கையில் கத்தியுடன் முட்டியில் கையை ஊன்றி அவள் கட்டிலில் அமர்ந்திருந்த விதமே அவனுக்கு சற்று பீதியை கிளப்ப  படபடப்பில் அவனுக்கு வியர்க்கவே ஆரம்பித்து விட்டது.

"மித்ரா.." என்று அவன் அழைக்க அவளிடம் சிறு அசைவு கூட இல்லை.. மெல்ல அவள் அருகில் சென்றவன் அவள் தோளை தொட கையில் வைத்திருந்த கத்தியால் அவன் கையை கிழித்து விட்டாள் மித்ரா.

கையில் இரத்தம் வழிய வலியில் காயப்பட்ட இடத்தை அழுத்தி பிடித்தவாறு அவளை மிரட்சியுடன் தேவ் பார்க்க முகமெல்லாம் சிவந்து போய் தலைவிரி கோலமாக கண்கள் தீபிழம்பை கக்க கையில் இருந்த கத்தியில் இரத்தம் சொட்ட சொட்ட அவனை நெருங்கினாள் மித்ரா..

தேவ்விற்கோ ஒருநிமிடம் என்ன செய்வதென்றே தெரியவில்லை..
       "மித்.. மித்ரா என்ன பன்ற.. என்னாச்சு டி உனக்கு.." என அவள் தன்னை காயப்படுத்தியதையும் பொருட்படுத்தாது அவளை தேவ் நெருங்க அவளோ கத்தியை நீட்டி,
            "என் அம்மா அப்பாவ ஏன் டா கொன்ன.. என் ஆரா பாவம் டா.. என் ம்மி ரொம்ப துடிச்சாங்களே டா.. ஏன் இப்பிடி பன்ன.. ஏன் டா கொன்ன.. உன்ன நா கொல்லனும்.. உன்ன துடிக்க துடிக்க கொல்லுவேன்.." என ஆவேசமாக கத்தியவள் கத்தியால் அவனை குத்த முற்பட,

ஒருநொடி அவள் தன்னை கொல்ல வருவதிலும் அவள் நடந்து கொள்ளும் விதத்திலும் மிரண்டவன் அவள் கத்தியை குத்த நீட்டியதில் சுதாகரித்து விலகி காயம் படாத கையால் அவள் கை பிடித்து தடுத்தவன்,
           "மித்ரா.. நா தேவ் டி.. உன் தேவ்.. என்னாச்சு டி உனக்கு.." என அவளுக்கு புரிய வைக்க முயல,

அவளோ அவன் பேசும் எதையும் காதில் வாங்கும் மனநிலையிலே இல்லை.. தன் அப்பா அம்மாவை கொன்றவர்களை கொல்லும் ஆத்திரமே உயர்ந்து நிற்க அவன் பிடியிலிருந்து தன் கையை உறுவ முயற்சித்தவாறே அவனை மறுகையால் அடிக்க முயல,

இதற்கு மேல் முடியாது என அவள்  கையை தட்டி விட்டவன் தன் மொத்த பலத்தையும் திரட்டி அவளை ஓங்கி அறைந்திருந்தான் தேவ்.. தரையில் விழுந்திருந்தவள் அரை மயக்கத்தில் பிதற்றியவாறு இருக்க அவளை பதட்டமாக மடியில் கிடத்தியவன் அவள் கன்னத்தை தட்ட அவளோ சுயநினைவே இல்லாமல் ஏதேதோ பிதற்றிக் கொண்டு இருந்தாள்.

அப்படியே அவள் மயங்கி போக உடனே தொலைப்பேசியில் டாக்டெருக்கு அழைக்க அவளை வீட்டில் வைத்தே பரிசோதித்த டொக்டெரும் மித்ரா உயர் மனஅழுத்தத்தில் இருப்பதாகவும் உடனே அதற்கான சிகிச்சையை எடுக்க வேண்டும் என்று சொல்ல அவனுக்கு தான் பதட்டமாகி போனது.

அடுத்த நாள் எழுந்த மித்ரா தலையை அழுந்த பிடித்தவாறு கட்டிலில் அமர்ந்திருக்க தன் முன் அரவம் உணர்ந்து நிமிர்ந்து பார்க்க அவளுக்கு எதிரே தேவ்வோ ஒரு கையை பேன்ட் பாக்கெட்டுக்குள் விட்டு மறுகையால் கோஃபி குடித்தவாறு அவளையே தான் அழுத்தமாக பார்த்துக் கொண்டிருந்தான்..

அவனை பார்த்து திடுக்கிட்டு எழுந்தவள்,
      "நீ எப்போ வந்த தேவ்.." என்று 'குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு..' ரேன்ஜ்ஜிற்கு கேட்க, அவளை ஏற இறங்க பார்த்து முறைத்தவன் தன் பாக்கெட்டுக்குள் விட்டிருந்த கையை எடுத்து அதில் மணிக்கட்டில் போட்டிருந்த கட்டையும் அவளையும் மாறி மாறி பார்க்க அவன் கையில் கட்டை பார்த்தவளோ பதறி விட்டாள்..

      "தேவ் இது என்ன காயம்.. எப்படி அடிபட்டிச்சு.. ஆமா நேத்து என்னாச்சு.. நீ.. நீ எப்போ வந்த.." என மித்ரா பதட்டமாக அடுக்கடுக்காக கேள்வி கேட்க அவன் அவளை அழுத்தமாக பார்த்த விதத்திலே ஓரளவு நடந்ததை ஊகிக்க முடிந்தது மித்ராவால்.

அப்படியே கட்டிலில் தொப்பென அமர்ந்தவள்,
         "என்னால தான் உனக்கு காயம் ஆச்சா தேவ்.." என்று கண்கலங்க கேட்க அதற்கு மேல் அவனாலும் அவளிடமிருந்து தள்ளி நிற்க முடியவில்லை.

அருகில் சென்று அவள் தலையை ஆதரவாக வருடியவாறு,
         "ச்சே அப்படி எல்லா இல்லை மித்ரா.. உன் மேல எந்த தப்பும் இல்லை டா.." என்று தேவ் சமாதானப்படுத்த அவன் வயிற்றை கட்டிக் கொண்டு அழுக ஆரம்பித்து விட்டாள் மித்ரா.

   "ஐ அம் சோரி தேவ்.. ஐ அம் சோரி.. என்னால அதை மறக்க முடியல டா.. அந்த மூனு முகங்களும் என் கண்ணுகுள்ளேயே இருக்கு.. அவனுங்க மேல இருக்க என் மொத்த கோபத்தையும் என் கூட இருக்கவங்க மேல காட்டுறேன்.. ஐ கான்ட் ஸ்டொப் மைசெல்ஃப் ஃப்ரொம் ஹர்ட்டிங் அதர்ஸ்(i can't stop my self from hurting others).."என்று அவள் கதற,

அவள் முகத்தை நிமிர்த்தியவன் "யாரு மித்ரா அவங்க.." என்று குழப்பமாக கேட்க, அவன் வயிற்றில் முகத்தை புதைத்தவாறு பதினைந்து வருடங்களுக்கு முன் தான் கண்ணால் பார்த்த அனைத்தையும் கூறி முடித்தவள் அழுது கரைய அதைக் கேட்ட தேவ்விற்கோ கோபத்தில் கண்கள் சிவந்து நரம்புகள் புடைத்தது.

ஆனாலும் "ஐ அம் சோரி.. ஐ அம் சோரி.." என்று திரும்ப திரும்ப சொன்னதையே மித்ரா சொல்லிக்கொண்டிருக்க தற்போது மித்ராவை சமாதானப்படுத்துவதே தேவ்விற்கும் சரியாக தோன்ற,
          "அச்சோ மித்ரா இங்க பாரு.. உனக்கு என்னாச்சுன்னு கூட நியாபகம் இல்ல.. உன் மேல தப்பு இல்ல டா.. எவ்ரிதிங் வில் பி ஃபைன்.. ஆமா நீ கவுன்ஸ்லிங் போறல்ல.." என்று தேவ் கேள்வியாக கேட்க,

கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்தவாறு அவனை விட்டு விலகியவள்,
         "அ.. அது .. போறேன்.." என்று மித்ரா பொய் சொல்ல அவள் சொல்வது பொய் என்று தெரிந்தும் மேலும் அவளை திட்டி கஷ்டப்படுத்த விரும்பாது  பேச்சை மாற்றி அவள் மனநிலையை மாற்ற முயற்சி செய்தான்.

அவளும் ஓரளவுக்கு நடந்ததை மறந்து அவன் இருந்த மூன்று நாட்களும் சாதாரணமாக இருப்பது போல் காட்டிக் கொண்டாலும் அவள் மனதில் தன்னால் தேவ் காயப்பட்டதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அந்த கோபம் மொத்தமாக தான் வெறுப்பவர்கள் மேல் தாவி அதில் ஹர்ஷா பாதிக்கப்பட்டதை தேவ் அப்போது அறியவில்லை.

நடந்ததை தேவ் கூறி முடித்து தன்னையே அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தவனை ஒருவித  பதட்டமாக பார்த்து,
          "என்ட் அன்னைக்கு.. அன்னைக்கு அவ சுயவுணர்வே இல்லாம என்னை கொல்ல வந்தப்போ எனக்கு ஒரு டவுட் இருந்துச்சி ஹர்ஷா.. அதை கன்ஃபோர்ம் பன்னிக்க அவ மயக்கத்துல இருந்தப்போ வீட்டை ச்சேக் பன்னேன்.. அப்போ அன்னைக்கு கவலைய மறக்க ட்ரக்ஸ் யூஸ் பன்னிருக்கான்னு தெரிஞ்சது..  " என்று தேவ் சொல்லி முடிக்க,

ஹர்ஷாவின் விழிகளோ மேலும் விரிய இதழ்கள் "வாட்.. ட்ரக்ஸ்ஸா.. " என்று முணுமுணுக்க கண்களில் விடாமல் கண்ணீர் சுரந்தது.. ஹர்ஷாவின் விழிகளிலிருந்து கண்ணீர் துளிகள் தரையை தொட ஒரு கையை உயர்த்தி சட்டையில் கண்ணை துடைத்தவன்,
          "என் மது லைஃப்ல இப்பிடி கஷ்டப்பட்டான்னு எனக்கு சுத்தமா தெரியல தேவ்.. அவக்கூட பழகும் போது அவ மனசுல ஒரு அழுத்தம் இருக்குன்னு புரிஞ்சும் அதை கண்டுக்காம விட்டுட்டேன்.. அவளுக்கு பாதுகாப்பா இருந்த நானே பிரச்சினை அவளுக்குள்ள தான் இருக்குன்னு தெரியாம அவளை கவனிக்காம விட்டுட்டேன்.. ரொம்ப.. ரொம்ப கஷ்டப்பட்டிருக்கா.. பாவம் தேவ் அவ.. "என குரல் தழுதழுக்க கூறி ஹர்ஷா அழ,

அவன் கையை ஆதரவாக பிடித்த தேவ்,
          "இப்போ மித்ரா பத்தி உங்ககிட்ட சொல்றதுக்கும் ரீசன் இருக்கு ஹர்ஷா.. ஆரம்பத்துல எப்பிடி அவள பத்தி முன்னபின்ன தெரியாத உங்ககிட்ட சொல்றதுன்னு ரொம்ப குழப்பத்துல இருந்தேன்.. ஆனா நா ஒன்னு மட்டும் தெரிஞ்சிக்கிட்டேன்.. மித்ராவோட காயத்துக்கான மருந்து நீங்க மட்டும் தான்.. மித்ரா இதுவரைக்கும் யாரையும் லிசன்(Listen) பன்னி நா பார்த்தது இல்லை..

  அந்த இன்சிடென்ட்க்கு அப்றம் எங்க வீட்ல இருக்கவங்க கிட்ட அதிகமா பேச மாட்டா.. யாரு எது சொன்னாலும் காதுல வாங்கிக்காம மனசுல தோணினதை தான் செய்வா.. பட் அன்னைக்கு முதல் தடவை அவ ஒருத்தர் சொல்றதை ஒத்துகிட்டு பதில் சொல்றதை பார்த்தேன்.. அப்போவே புரிஞ்சிருச்சி அந்த சண்டிராணிய உங்களால மட்டும் தான் சமாளிக்க முடியும்னு..  என்ட் அவ ட்ரீட்மென்ட் எடுத்தே ஆகனும் ஹர்ஷா.. பட் அவ அமெரிக்கால இருக்கும் போதே கவுன்ஸ்லிங் போறதை நிறுத்திட்டான்னு நினைக்கிறேன்.." என்று தேவ் சொல்ல,

யோசனையில் புருவத்தை சுருக்கியவன் ஒரு முடிவு எடுத்தவனாக,
           "என் பொண்டாட்டிக்கு இனி எந்த பிரச்சினையும் வராம நா பாத்துக்குறேன் தேவ்.. மது மை ரெஸ்போன்ஸ்ஸிபிலிட்டி(Responsibility).. மை லவ்.. மை லைஃப்.. அவளோட ஸ்ட்ரக்ல் (struggle) எனக்கும் ஸ்ட்ரக்ல் தான்.. ஐ ப்ரோமிஸ் ஐ வில் டேக் க்யார் ஆஃப் ஹெர்.. பட் எனக்கு ஒன்னு தெரியனும் மதுவோட இந்த நிலைக்கு காரணமானவங்க யாரு.. அதுக்கும் என் அப்பாவுக்கும் எதாவது சம்மந்தம்ம்.." என பதட்டமாக கேட்ட  ஹர்ஷாவை தயக்கமாக பார்த்த தேவ்
டேபிளின் மேல் ஒரு ஃபோட்டோவை வைத்தான்.

அதில் ஹர்ஷாவின் அத்தையின் படம் இருப்பதை பார்த்தவன்,
            "தேவ் இது என் அத்தை. இவங்கள பத்தியும் தெரிஞ்சிக்கிட்டீங்களா.. இவங்க இப்போ எங்க இருக்காங்க.." என்று கேட்ட ஹர்ஷாவை பார்த்த தேவ்விற்கு மனது வேதனையாக இருந்தது.

           "ஐ அம் சோரி ஹர்ஷா.. உங்க அத்தை யாருன்னு தெரியுமா.." என்று ஆரம்பித்த தேவ் அடுத்து பேச பேச ஹர்ஷாவிற்கு நெஞ்சே அடைத்து விடும் போல் இருந்தது. தேவ் அவன் முகத்தை பார்க்காது அனைத்தையும் சொல்லி முடித்து ஹர்ஷாவின் முகத்தை ஏறிட்டு பார்க்க அவனின் தோற்றத்திலே தேவ்விற்கு வயிற்றில் பயபந்து உருள தான் செய்தது.

ஏசி குளிரையும் தாண்டி ஹர்ஷாவின் முகம் வியர்த்து அவன் நிறத்திற்கு மேலும் முகம் கோபத்தில் சிவந்து இருக்க உதடு துடிக்க கண்ணீர் குளம் கட்டிய சிவந்த கண்கள் கண்ணீரை சிந்த விடாமல் பிடித்து வைத்திருக்க தாடை இறுகி நெற்றி நரம்புகள் புடைத்து அவன் இருந்த கோலமே தேவ்விற்கு பகீரென்று தான் இருந்தது.

ஆனாலும் சொல்ல வேண்டியதை சொல்லி  முடித்தவன் இப்போது அவன் மனநிலையை புரிந்துக் கொண்டு,
          "ஹர்ஷா நா சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன்.. இனி எல்லா உங்க கைல தான்.. உங்க மது உங்களுக்கு வேணும்னா இதை நீங்க ஏத்துகிட்டு தான் ஆகனும்.. நடந்து முடிஞ்சதை எப்பவுமே மாத்த முடியாது.. இனி நடக்க போறதை கை மீறி போகாம பார்த்துக்கோங்க.. பெஸ்ட் ஆஃப் லக் ஹர்ஷா.." என்று சொல்லி விட்டு தேவ் அறையை விட்டு வெளியேறி இருக்க அடுத்த நொடி தன் முன் இருந்த டீபாயின் கண்ணாடி உடைய இரு கைகளாலும் அதை ஓங்கி குத்தி இருந்தான் ஹர்ஷா.

ஹோட்டல் அறையிலிருந்த மொத்த பொருட்களையும் ஆவேசத்தில் தூக்கி போட்டு உடைத்தவன் மனது உலைகளமாக கொதிக்க அவன் கொதிக்கும் மனதை எவ்வளவு முயன்றும் அணைக்கவே முடியவில்லை.

மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க சட்டை பட்டன்கள் திறந்து கலைந்த தலைமுடி சிவந்த முகம் என கையில் இரத்தம் சொட்ட சொட்ட கிட்டதட்ட அருவாள் இல்லாத மொடர்ன் அய்யனார் போல் காட்சியளித்தவனை யாரு பார்த்திருந்தாலும் அவன் தோற்றத்தில் பயத்தில் மயங்கியே விழுந்திருப்பார்கள்.

அங்கு இருந்த  பூவாசை சுவற்றில் தூக்கி எறிந்தவன் ஒரு கட்டத்தில் குமுறும் மனதை பொறுக்க முடியாமல் "மது.." என ஆவேசமாக கத்தியவாறு தலைமுடியை பிய்த்துக் கொண்டு தரையிலே மண்டியிட்டு அமர்ந்தவன் விழிகளோ கண்ணீரில் மூழ்கி இருக்க அவன் உதடுகளோ விடாது "சோரி மது.. சோரி மது.. ப்ளீஸ் டி சோரி.." என்று முணுமுணுத்த வண்ணம் இருக்க கதறி அழுக ஆரம்பித்து விட்டான் அந்த ஆண்மகன்.

தொடரும்..🔥
------------------------------------------------------
            
 -ZAKI🔥
  

    

 

Zakiya


ReplyQuote
Jade Javid
(@jadejavid)
Trusted Member Writer
Joined: 9 months ago
Posts: 96
23/11/2020 4:03 am  

                  தீண்டாதே 32🔥

 

அன்று இரவு,

         "அவிந்த் ஆர் யு ஓகே.." என்று கேட்டவாறு வீட்டின் பின்புற வளாகத்தில் போடப்பட்டுள்ள பெரிய ஊஞ்சலில் ஏதோ யோசித்துக் கொண்டு அமர்ந்திருந்த அரவிந்த் அருகில் அமர்ந்து வேலு கேட்க,

வரவழைக்கப்பட்ட புன்னகையுடன்,
              "நத்திங் நச்சு.. நீ இங்க பன்ற.." என்று அரவிந்த் சாதாரணமாக கேட்டாலும் அவன் மனவேதனையை வேலுவால் புரிந்து கொள்ள முடிந்தது.

அவன் கை மேல் தன் கையை வைத்து அழுத்தியவள்,
            "உனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கா அவிந்த்.." என்று குரல் கமற வேல் கேட்க,

           "ச்சே.. ச்சே.. அப்படி எல்லா இல்லை டா..  முன்னாடி இருந்ததை விட நவ் ஐ ஃபீல் பெட்டர்.." என்று மெல்லிய புன்னகையை சிந்தியவாறு அரவிந்த் சொல்ல,

அவனையே ஆழ்ந்து பார்த்தவள் தன் கண்களில் மொத்த காதலையும் தேக்கி,
            "உனக்காக நா எப்பவுமே இருப்பேன் அவிந்த்.." என்று தன்னை மீறி வேல் சொல்ல புருவத்தை நெறித்து அவனை புரியாமல் பார்த்தவனுக்கு மனதில் இனம்புரியாத சந்தோஷம் தோன்ற அது அவன் இதழ்களிலும் பிரதிபலித்தது.

"தேங்க்ஸ் நச்சு.." என்று அரவிந்த் சொன்னதும் தான் சுதாகரித்த வேல் 'முட்டாள்.. முட்டாள்..' என தன்னை தானே மானசீகமாக கடிந்துக் கொண்டு தயக்கமாக அரவிந்தின் முகரியாக்ஷனை  ஏறிட்டு பார்க்க அவனோ சாதாரணமாக அவளையே தான் குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்தான்.

    'ஹிஹிஹி..' என்று அசடுவழிந்தவள் "வட் நெக்ஸ்ட் அவிந்த்.." என பேச்சை
மாற்ற,

        "நத்திங் மச்.. உங்க வர்க் எல்லாம் எப்படி போயிக்கிட்டு இருக்கு ஓஃபீஸர்.." என்று அரவிந்த் கேலியாக கேட்க,

           "கொய்ன்ங் வெல்.. எல்லா உனக்காக தான்.." என்று மறுபடியும் உளறிவிட்டு நாக்கை கடித்துக் கொண்டவள் ஒற்றை கண்ணை மூடி அவனை மறுபடியும் தயக்கமாக ஏறிட்டு பார்க்க அரவிந்த்கோ அவள் செய்கைகள் அனைத்தும் புதிதாகவே தோன்றியது. அவளுடைய தடுமாற்றம், தனக்கான ஆறுதல், முகபாவனைகள் எல்லாம் வித்தியாசமாக தோன்ற வேலு அவன் கண்களுக்கு ஏதோ புதிதாகவே தெரிந்தாள்.

இமைவெட்டாது அரவிந்த் அவளையே பார்த்திருக்க வேலுவும் அவனையே தான் பார்த்துக் கொண்டிருந்தாள். தலையை குலுக்கி தன்னை சமன்படுத்தியவன்,
  'என்னாச்சு எனக்கு.. ஏன் நச்சுவை இப்படி பார்த்துகிட்டு இருக்கேன்.. ச்சே நம்மள என்ன நினைச்சிருப்பா.." என்று யோசித்தவாறு மறுபடியும் அவன் வேலுவை பார்க்க அவளோ அப்பட்டமாக அவனையே விழுங்குவது போல் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அதில் அரவிந்த்க்கு சற்று வெட்கமாகி போக ஒருவித தடுமாற்றத்துடன்,
           "நச்.. நச்சு மொத்தல்ல நீ போய் தூங்கு .. நாளைக்கு காலைல எழுந்திருக்கனும்ல.. நாம நாளைக்கு பேசலாம்.. டேக் க்யார்.. குட் நைட்.." என்று பதட்டமாக சொல்லி விட்டு தப்பித்தோம் பிழைத்தோம் என்று அவளை திரும்பி திரும்பி பார்த்தவாறு வீட்டிற்குள் ஓடியவனுக்கு இதுவரை உணராத ஒரு புது உணர்வு மனதை ஆட்கொண்டது எனவோ உண்மை தான்.

இதுவரை வேலுவிடம் தனக்கில்லாத தயக்கமும் உணர்வும் முதன் முதலில் அரவிந்த்க்கு தோன்ற அறைக்குள் வந்து கதவை சாத்தியனுக்கு இதயம் படபடவென அடித்து கொள்ள 'என்ன பார்வை டா அது..' என்று அன்று இரவு முழுக்க தன் நச்சுவை நினைத்து குழம்ப ஆரம்பித்து விட்டான் அரவிந்த். இங்கு வேலுவோ அவன் சென்றதும் தான் நிகழ்காலத்திற்கு வந்தவள் தலையிலே வெளிப்படையாக அடித்துக் கொண்டு 'போச்சு போச்சு என் மானமே போச்சு..' என புலம்பி தள்ளி விட்டாள்.
---------------------------------------------------------------

நாட்கள் நகர,

அன்று,

        ஃபோனை நோண்டியவாறு இறுகிய முகமாக டைனிங் டேபிளில் வந்தமர்ந்த ஹர்ஷா எதுவும் பேசாது காரியமே கண்ணாக தட்டிலே முகத்தை புதைத்துக் கொண்டு சாப்பிட அவனுக்கெதிரே சாப்பிட்டுக் கொண்டு அவனையே கவனித்துக் கொண்டிருந்த ராஜ்தீப்பிற்கு அவன் செய்கைகள் ஏதோ வித்தியாசமாகவே பட்டது.

இதற்கு முன் தன்னை கண்டால் ஹர்ஷாவிடம் தானாக தோன்றும் உற்சாகம், குறும்புப் பேச்சுகள் சில நாட்களாக குறைந்து போல் அவருக்கு தோன்ற வேலைப்பளுவாக இருக்கலாம் என தன்னை தேற்றிக் கொண்டவர் இப்போதும் ஹர்ஷா பேசாது தவிர்ப்பது மனதில் பாரத்தை ஏற்றியதை போல் தோன்றியது..

ஒருகட்டத்தில் முடியாமல் "கண்ணா.." என்று அவர் அழைக்க சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் ஒருநொடி நிமிர்ந்து அவரை அழுத்தமாக பார்த்து விட்டு மீண்டும் தட்டிலே முகத்தை புதைத்து தன் தந்தையை பாராமல் "ம்ம்.." என்று மட்டும் சொல்ல அவருக்கோ ஒன்றுமே புரியவில்லை.

        "நியூ ப்ரோஜெக்ட் வர்க் எல்லா எப்படி போயிக்கிட்டு இருக்கு ஹர்ஷா.." என்று அவர் சாதாரணமாக கேட்க,

         "ஹான் குட்.." என்று ஒற்றை வார்த்தை மட்டுமே ஹர்ஷா  சொல்ல அவனை அழுத்தமாக பார்த்த ராஜ்தீப்,
           "கொஞ்ச நாளா ஒருவிஷயம் கேள்விபடுறேன் உண்மையா.." என்று குதர்க்கமாக கேட்க,

அவரை நிமிர்ந்து ஒரு கணம் பார்த்தவன் நிமிர்ந்து அமர்ந்து உதட்டை பிதுக்கி இருபக்கமும் தலையாட்டியபடி,
           "புரியல.." என்று புருவத்தை நெறித்தவாறு சொல்ல,

             "ஆரா சொஃப்ட்வெயார் சொல்யூஷன்ஸ்ஸோட எம்.டி மிஸ்.மித்ராக்கும் உனக்கும் என்ன சம்மந்தம் ஹர்ஷா.." என்று பட்டென்று ராஜ்தீப் கேட்க,

அவரை கூர்மையாக பார்த்தவன்,
            "என்ன டாட் என்னையும் ஃபோலோ பன்றீங்களா.." என்று ஹர்ஷா கேட்க,

அவன் கூரிய பார்வையில் சற்று தடுமாறியவர் அவன் கேட்ட கேள்வியில் புருவத்தை நெறித்து,
         "வட் டு யு மீன் ஹர்ஷா.. உன்னையுமான்னா என்ன அர்த்தம்.. உன் பாதுகாப்புக்கு எப்பவுமே நா ஆளுங்கள வச்சி தான் இருக்கேன்.. என் மகனோட பாதுகாப்பு எனக்கு ரொம்பவே முக்கியம்.." என்று ராஜ்தீப் சொல்ல,

அவரை அலட்சியமாக பார்த்தவன் சாப்பிட்ட தட்டிலே அவரை பார்த்துக் கொண்டு கையை கழுவியவாறு "தேங்க்ஸ் டாட்.." என்று சொல்லிவிட்டு நகர அவனுடைய நடவடிக்கைகள் அனைத்தும் தன்னிடத்தில் புதிதாக தோன்றியதில் ஒரு அப்பாவாக அவனுடைய அலட்சியத்தில் மனம் வெதும்பத் தான் செய்தார்.
------------------------------------------------------------------

அதே சமயம்,

          டைனிங் டேபிளில் மித்ரா சாப்பிட்டுக் கொண்டிருக்க ஏதோ குசுகுசுவென பேசும் சத்தத்தில் நிமிர்ந்து பார்த்தவள் எல்லாரும் அமைதியாக சப்பிடுவதை பார்த்து எல்லாரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு தன் வேலையை தொடர மீண்டும் தனக்கு கேட்காதவாறு எல்லாரும் ரகசியம் பேசுவதில் காண்டானவள்,
          "இப்போ என்ன பிரச்சினைன்னு சொல்ல போறிங்களா இல்லையா.." என்று கத்தியே விட்டாள்.

          "அது வந்து மா.. எல்லா அந்த பையன பத்தி தான்.. " என்று கயல் ஆரம்பிக்க மித்ராவின் புருவங்களோ குழப்பத்தில் முடிச்சிட்டு கொண்டது.   

அவள் குழம்பிய முகத்தை கவனித்த சித்து,
          "மித்ராமா எல்லா ஹர்ஷா பத்தி தான்.. அன்னைக்கு ஒரு மாசத்துல கல்யாணம்னு  முடிவா சொல்லிட்டு போயிட்டாரு.. ஆனா நம்ம வீட்ல எந்த முடிவுமே எடுக்காம இருக்கோம்..  அதாஆஆன்ன்.." என்று இழுக்க மித்ரா எல்லாரையும் முறைத்த முறைப்பிலே இவள் முடிவு எது என்று வெளிப்படையாக தெரிந்தது.

ஆனாலும் இப்படியே விட்டாள் சரிவராது என்று நினைத்த ஆதி,
              "மித்ரா ஹர்ஷா அன்னைக்கு உன்கிட்ட பேசின விதத்துலயே இதுக்கு நீ மறுப்பு சொல்ல மாட்டேன்னு நினைக்கிறேன்.. சீக்கிரம் ஹர்ஷாவோட வீட்டுல பேசி கல்யாணத்துக்கான அர்ரேன்ஜ்மென்ட்ஸ்ஸ ஆரம்பிக்கலான்னு இருக்கோம்..  என்ட், உன் கல்யாணம் உன் விருப்பப்படி தான்.. நாங்க கல்யாணத்துக்கான சம்மதத்தை சொல்லல்ல.. அதர் ஃபோர்மலிடீஸ் அ சொல்றோம்.. கல்யாணத்தை சிம்பிளா கோவில்ல வச்சி ரிசப்ஷன க்ரான்டா பன்னலாமேன்னு.. நீ என்ன மா சொல்ற.." என்று ஆதி தீவிரமாக கேட்க,

  "இது.. இது ஒன்னு தான் இப்போ குறைச்சல்.." என்று சத்தமாகவே முனுமுனுத்தவாறு மித்ரா எழுந்து விறுவிறுவென கோபத்தில் சிவந்த முகத்துடன் மாடியேற இங்கு டைனிங் டேபிளில் இருந்தவர்களுக்கோ அவளின் செய்கையில் சிரிப்பு முட்டிக் கொண்டு வந்தாலும் எங்கே கேட்டு விட்டால் பத்ரகாளி ஆகி விடுவாளோ என்று அடக்க பெரும்பாடு பட்டனர்.

தன் அறைக்கு வந்தவளுக்கோ தன் கையாலாகாததனத்தை நினைத்து தன் மீதே கோபம் எகிற,
      "ச்சே நம்மளையே இப்படி கன்ட்ரோல் பன்னி வச்சிருக்கான் ஃப்ராடு.. அவன் இஷ்டத்துக்கு ரொம்ப தான் ஆடுறான்.. என்னை என்னன்னு நினைச்சிக்கிட்டு இருக்கான்.. அவன் என்ன சொன்னாலும் கேப்பேன்னா.. இடியட்.. என்னால அவன கல்யாணம் பன்னிக்க முடியாது.. எதாவது பன்னனுமே.." என்று யோசித்தவளுக்கு சரியாக டிவியில் ஒளிபரப்பாகிய ஆர்.டி டெக்ஸ்ட்டைல் விளம்பரம் கண்ணில் ஓட உடனே அவள் குட்டி மூளையில் சரியாக மின்னல் வெட்டியது.

உடனே ஒரு எண்ணிற்கு அழைத்தவள் தன் மொத்த ப்ளானையும் சொல்லி திரும்ப திரும்ப,
           "லுக் மிஸ்டர் இதுல வர்க்கர்ஸ்க்கு எதுவுமே ஆகக் கூடாது.. அத்தனை வர்க்கர்ஸ்ஸும் கிளம்பினதுக்கு அப்றம் சொன்னதை செய்.. என்ட் வெளில இருக்க கேமரா முன்னாடியே இதை பன்னு உன்னை அர்ரெஸ்ட் பன்னாலும் ராஜ்தீப்போட பெயரை சொல்லி சரண்டர் ஆகிறு.. அதுவும் ரொம்ப ஜாக்கிரதை.. நீ பன்ற வேலைல அந்த ராஜ்தீப்புக்கு தான் நஷ்டம் வரனுமே தவிர எந்த உயிருக்கும் ஆபத்து வந்துற கூடாது.. கொட் இட்.." என்று சொல்லி அழைப்பை துண்டித்தவள் இதழ்களோ விஷமமாக புன்னகைத்துக் கொண்டது.

அடுத்த இரண்டே நாட்களில் ஆர்.டி டெக்ஸ்ட்டைல் தீவிபத்திற்கு உள்ளாகியுள்ளது எனவும் அதுவும் சில பணநெருக்கடி காரணமாக அந்த நிறுவனத்தின் முதலாளி மிஸ்டர் ராஜ்தீப்பே இந்ந காரியத்தை செய்ய சொன்னதாகவும் எல்லா தொலைக்காட்சி சேனல்களிலும் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்க அதை இதழ்களில் வெற்றிப் புன்னகையுடன் மேசையிலிருந்த கண்ணாடி உலக உருண்டையை உருட்டியவாறு தன் அலுவலக அறையின் தொலைக்காட்சியில் சுவாரஸ்யமாக பார்த்துக் கொண்டிருந்தாள் மித்ரா.

திடீரென கதவு திறக்கப்படும் சத்தத்தில் அத்திசையை நோக்கியவள் அங்கு கண்கள் சிவக்க நெற்றி நரம்பு புடைக்க கோபத்தின் உச்சியில் நின்றிருந்த ஹர்ஷாவை கண்டதும் உள்ளுக்குள் பதறினாலும் அதை முகத்தில் காட்டாது சாவகாசமாக இருக்கையின் பிடியில் கையை ஊன்றி எழுந்தவள் அவனருகே நெருங்கியவாறு,

        "என்ன மிஸ்டர் ஹர்ஷா  பார்த்தல்ல.. உன் அப்பனுக்கு தொழில்ல இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் காத்துல கரைஞ்சு போச்சு.. சும்மாவே கௌரவம் கௌரவம்னு இருக்க உன் அப்பாவுக்கு என்ன ஒரு அசிங்கம்.. ஐயோ பாவம்.. இதுக்கு தான் சொல்றது என் வழில குறுக்க வராதன்னு.. சோ, கொஞ்சம் அடங்கி இரு.." என்று மித்ரா சொல்லி முடிக்கவில்லை அவளை மின்னல் போல் நெருங்கியவன் தன் ஐவிரலையும் அவள் கன்னத்தில் பதித்திருக்க இந்த எதிர்பாராத தாக்குதலில் தடுமாறி விட்டாள் மித்ரா.

அவள் அவன் அறைந்த அறையை சுதாகரிக்கும் முன்பே அவள் கீழே விழாது அவள் முழங்கையை பிடித்து நிறுத்தியவன் அடுத்த நொடி அவளை சுவற்றில் சாய்த்து அவள் கழுத்தை பற்றியிருக்க மித்ராவோ பயத்தில் உறைந்தே விட்டாள். 

ஹர்ஷாவின் கோபம் மலையளவு இருக்க மொத்த கோபத்தையும் தன் கை அழுத்தத்தில் காட்டியவன் ஒருகட்டத்தில் அவள் கண்களில் தெரிந்த வலியில் "ச்சே.. நீயெல்லாம்.." என்று வார்த்தையை கடித்து துப்பி அவளை உதறி தள்ள,

தரையில் விழுந்தவள் தன் கழுத்தில் கொடுத்த அழுத்தத்தில் இரும ஆரம்பித்ததில் அந்த கோபத்திலும் அவன் அவள் அவஸ்தை படுவதை பொறுக்க முடியாது மேசையிலிருந்த தண்ணீர் க்ளாசை எடுத்த ஹர்ஷா  அவள் தலையை தன் தோளில் சாய்த்து நீரை புகட்டி விட்டான்.

ஒருவாறு தன்னை நிதானப்படுத்தி அவனை உதறிவிட்டு அவள் எழுந்து நிற்க அடுத்த அதிரடியாக அவள் கையை இறுகப்பற்றி தரதரவென மித்ராவை இழுத்துக் கொண்டு ஹர்ஷா செல்ல மித்ராவுக்கோ அவன் மேல் கோபம் வருவதற்கு பதில் பயம் தான் மனதை கவ்விக் கொண்டது.  (கோபம் வந்தாலும் நம்ம ஹீரோயினால எதுவுமே அவன பன்ன முடியாது அது வேறு கதை..)

வெளியே இழுத்து வந்தவன் தன் காரில் முன்சீட்டில் அவளை தள்ளி மின்னல் வேகத்தில் ஏ.ஆர் வைத்தியசாலை நோக்கி தன் வண்டியை பறக்க விட்டான்.

அவன் வைத்தியசாலையில் காரை நிறுத்தியதும் 'இங்க எதுக்கு கூட்டிட்டு வந்திருக்கான் ஒருவேள நாம பன்ன வேலையால யாருக்காச்சும் எதாச்சும்..' என்று மித்ரா காரில் இருந்தவாறே பதட்டமாக யோசிக்க அவள் பக்க கதவை திறந்து விட்டு அவளை இழுத்துக் கொண்டு ஹர்ஷா உள்ளே செல்ல மித்ராவுக்கு தான் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது.

அங்கு ஐசியு அறையின் வாசலில் ஒரு குடும்பமே அழுது கரைய மித்ராவோ அவர்களை புரியாமல் பார்த்துக் கொண்டிருக்க அவளை இழுத்து சென்ற ஹர்ஷா "உள்ள பாரு.." என்று இறுகிய குரலில் ஐசியு கண்ணாடி வழியே உள்ளே பார்க்க சொல்ல ஒருவித பதட்டத்துடன் பார்த்தவளுக்கு அவள் எதிர்ப்பார்க்காத ஒன்றே நடந்திருந்தது.

அங்கு ஒரு பெண்ணின் உடல் தீயினால் பாதிக்கப்பட்டு அவள் சுயநினைவின்றி இருக்க அவளுக்கான சிகிச்சைகள் அவசர அவசரமாக நடந்துக் கொண்டிருந்தது. அதைப்பார்த்தவளுக்கு இதயமே வெடித்து சிதறியது போல் இருக்க கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வழிய ஹர்ஷாவோ உக்கிரமாக தன்னவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

தன்னை முயன்று சமன்படுத்தியவள்,
            "மித்து எனக்கு.. எனக்கு சத்தியமா தெரியாது.. நா .. நா வேணும்னு.." என்று மித்ரா ஏதோ கூற வர "பேசாத டி.." என்று ஹர்ஷா கர்ஜித்த கர்ஜனையில் அவளுக்கு சர்வமும் ஒடிங்கி விட்டது.

சுற்றி முற்றி பார்த்தவன் எல்லாரும் தங்களை பார்ப்பதை உணர்ந்து அவளை இழுத்துக் கொண்டு ஒரு அறைக்குள் வந்தவன் அவளை உதறிவிட்டு தலைமுடியை அழுந்த கோதி மித்ராவை கண்கள் சிவக்க பார்க்க மித்ராவோ ஹர்ஷாவிடம் தன்னிலை விளக்கம் கூறவே முயற்சித்துக் கொண்டிருந்தாள்.

        "மித்து .. நா சொல்றதை கொஞ்சம் கேளு.. நிஜமாவே நா எதிர்ப்பார்க்கல இப்பிடி ஆகும்னு.. நா அந்த இடியட்கிட்ட படிச்சி படிச்சி சொன்னேன்.. ப்ளீஸ் மித்து ட்ரஸ்ட் மீ.. என்னை இப்பிடி பார்க்காத டா.. எனக்கு.. எனக்கு ரொம்ப வலிக்குதும்மா.." என்று அவள் அழுக ஆரம்பிக்க இடுப்பில் கை குற்றி சிறிது நேரம் அவளையே வெறித்து பார்த்தவன் ஒரு கட்டத்தில் முடியாமல் அவளை இழுத்து அணைத்திருந்தான்.

       "ஏன் மது இப்பிடி பன்ன.. பாவம் டி அந்த அம்மாவோட ஃபேமிலி.. அவங்களுக்கு குட்டி குட்டி குழந்தைங்க டி.. கதறுறாங்கடி.. அவங்க அம்மா இப்பிடி இருக்கும் போது எவ்வளவு கஷ்டப்படுவாங்க.. நம்ம இரண்டு பேருக்குமே அம்மா இல்லை.. அதோட வலி நமக்கு நல்லாவே தெரியும்.. இப்போ உன்னால அந்த குழந்தைங்க கஷ்டப்படும் போது என்னால பார்த்துகிட்டு இருக்க முடியுமா சொல்லு டி.. நீ உன் லைஃப்ல ரொம்ப கஷ்டப்பட்டிருக்க.. ஆனா அதுக்காக உன்னால ஒருத்தர் பாதிக்கப்படுறதை என்னால ஏத்துக்க முடியாது மது.." என்று ஹர்ஷா கண்கலங்க பேச,

       "மித்து.. மித்து ப்ளீஸ் .. ஐ அம் சோரி.. என்னை மீறி.. எனக்கு சத்தியமா தெரியல மித்து.." என்று மித்ரா அவன் மார்பில் முகத்தை புதைத்து அழ,

அவளை மேலும் தன்னுடன் இறுக்கிக் கொண்டன் எதுவும் பேசாது அமைதியாகவே இருக்க திடீரென வந்த தொலைப்பேசி அழைப்பில் சுயநினைவிற்கு வந்தவன் மித்ராவை கை வளைவிற்குள் வைத்தவாறு அழைப்பேசியை எடுத்து திரையை பார்க்க அதில் தெரிந்த பெயரில் ஒருகணம் தன் மார்பில் அழுது கரைபவளை பார்த்தவன் அவளை தன்னிடமிருந்து விலக்கி அறையிலிருந்து வெளியேறி அழைப்பை ஏற்று காதில் வைத்தான்..

தொடரும்..🔥
-----------------------------------------------------------

-ZAKI🔥

 

Zakiya


ReplyQuote
Jade Javid
(@jadejavid)
Trusted Member Writer
Joined: 9 months ago
Posts: 96
25/11/2020 4:29 am  

                   தீண்டாதே 33🔥 

 

     மித்ராவை ஆறுதலாக ஹர்ஷா அணைத்திருக்க திடீரென வந்த தொலைப்பேசி அழைப்பில் சுயவுணர்வுக்கு வந்தவன் மித்ராவை அணைத்தவாறே தொலைப்பேசியை எடுத்து திரையை பார்க்க அதில் தெரிந்த பெயரில் ஒருகணம் தன்னவளை பார்த்தவன் அவளிடமிருந்து விலகி அறையிலிருந்து வெளியே சென்று அழைப்பை ஏற்று காதில் வைத்தான்.

மறுமுனையில் ராஜ்தீப்போ,
             "அந்த லேடி இப்போ எப்பிடி இருக்காங்க ஹர்ஷா.. இதுக்கு யாரு காரணம்னு கண்டுபிடிச்சியா.." என்று அவர் தன் கேள்விகளை அடுக்க,

             "அந்த ஆள் யாரு பன்ன சொன்னாங்கன்னு வாயே திறக்க மாட்டேங்குறான் டாட்.. என்ட் அந்த அம்மாவோட கன்டிஷன் இன்னும் க்ரிடிக்கல்லா தான் இருக்கு.." என்று ஹர்ஷா சமாளித்து விட்டு அந்த அம்மாவுடைய நிலைமையையும் சொல்ல,

              "பிஸ்னஸ்ல இருக்க என் நேம்ம டேமேஜ் பன்றதுக்குன்னே எவனோ பன்னிருக்கான்.. ச்சே எவ்வளவு லொஸ்ட்.. இன்ஷ்யூரன்ஸ் பணமும் கிடைக்கும்னு நம்பிக்கையே இல்லை.. இதை நாதான் பன்ன சொன்னேன்னு வேற கதை கட்டிவிட்டுட்டான்.." என்று ஆவேசமாக கத்தியவர் பின், "அந்த லேடியோட ஃபேமிலிக்கு ஏதாவது செட்ல் பன்னிரு கண்ணா.. இந்த விஷயத்தை நா ஹேன்டில் பன்னிக்கிறேன்.." என்று ராஜ்தீப் சொல்ல,

     "ஓகே.." என்று ஒற்றை வார்த்தையில் அழைப்பை துண்டித்தவன் 'உஃப்ப்..' என்று பெருமூச்சுவிட்டவாறு அறையில் வந்து  மித்ராவை பார்க்க அவளோ அங்கிருந்தால் தானே..

சற்று பதறியவன் சுற்றி சுற்றி பார்த்துவிட்டு அந்த ஐசியு அறையை நோக்கி செல்ல அங்கே மித்ராவோ அம்மா அம்மா என்று கதறிக் கொண்டிருக்கும் பாதிக்கப்பட்ட குழந்தைகளையே வாயை கையால் பொத்தி அழுகையை கட்டுப்படுத்தியவாறு பார்த்துக் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்த ஹர்ஷாவுக்கே பரிதாபமாகத் தான் இருந்தது.

தன் தந்தையை பழிவாங்கும் ஆத்திரத்தில் செய்தவள் நிச்சயம் தப்பு செய்யாத உயிருக்கு பாதிப்பு வந்தால் என்ன என்று அலட்சியமாக நினைத்திருக்க மாட்டாள் என்பது அவனுக்கு நல்லாவே தெரியும்.. இப்போது அவள் அழுகும் அழுகையிலும் அவள் குற்றவுணர்ச்சி அப்பட்டமாக தெரிய மேலும் பேசி அவளை காயப்படுத்த விரும்பாது தன்னவளை நெருங்கியவன் அவள் தோளில் கை வைக்க வெடக்கென திரும்பி அவன் மார்பில் கன்னத்தை வைத்து அழ ஆரம்பித்து விட்டாள் மித்ரா.

            "நா ரொம்ப பெரிய தப்பு பன்னிட்டேன்.. எல்லாரையும் ரொம்ப காயப்படுத்துறேன்.. என்னை கொன்னுறு மித்து..  எனக்கே என்னை நினைச்சா ரொம்ப பயமா இருக்கு.. முதல்ல தேவ் அப்றம் உன்னை இப்போ இந்த அம்மாவ.. நா பன்ன காரியத்தால அவங்களுக்கு எவ்வளவு வலிச்சிருக்கும் மித்து.. பாவம் அந்த குழந்தைங்க.. அம்மா அம்மான்னு அழுக போல எனக்கு ரொம்ப வலிக்குது டா.. என்னால முடியல.. மன்னிப்பு கேட்க கூட எனக்கு தகுதி இல்லை.." என்று மித்ரா கதறி அழ, ஹர்ஷாவோ எதுவும் போது அவளை தாங்கிக் கொண்டு வெளியில் அழைத்து வந்தவன் காரின் பின்சீட்டில் அமர்த்தி காரிலிருந்த தண்ணீர் போத்தலை அவளிடம் நீட்ட அவளோ போத்தலையும் அவனையும் மாறி மாறி பார்த்தாள்.

அவள் பார்வையிலேயே அவளுடைய மனதை படித்தவன் வந்த சிரிப்பை இதழ்களுக்குள் அடக்கியவாறு தன்னவளை தன் தோளில் சாய்த்து நீரை புகட்ட அவளும் வாகாக சாய்ந்தவாறு நீரை பருகினாள். அவனிடமிருந்து விலகியவள் மீண்டும் சீட்டில் முழங்கால்களை கட்டிக்கொண்டு அதில் முகம் புதைத்து விம்மி விம்மி அழ 'இதற்கு மேல் முடியாது.' என அவளை இழுத்து இறுக்கமாக அணைத்திருந்தான் அவளவன்.

          "ரிலாக்ஸ் பேபி.. ரிலாக்ஸ்.. ஒன்னும் ஆகாது.. நீ வேணும்னு பன்னல டா ஐ க்னோ.. அந்த அம்மா அவங்க திங்க்ஸ்ஸ விட்டுட்டு போயிட்டாங்கன்னு மறுபடியும் கடைக்குள்ள வந்திருக்காங்க.. நீ செய்ய சொன்ன ஆளும் வர்க்கர்ஸ் வெளில போறதை மட்டும் தான் கவனிச்சிருக்கான்.. இவங்க திரும்பி வந்ததை அவன் கவனிக்கல்ல.. என் மதுவுக்கு ஒரு உயிரோட மதிப்பு தெரியும்ல.. இப்பிடி நடக்கும்னு நீயும் எதிர்ப்பார்க்கலல்ல.. மொதல்ல அழுகையை நிறுத்து.. அந்த அம்மாவுக்கு ஒன்னும் இல்ல.. அவங்க ஃபேமிலிய இனி நாம பார்த்துக்கலாம்.. அவங்களுக்கு சீக்கிரம் சரி ஆகிறும்.. ஜஸ்ட் ரிலாக்ஸ் மது.." என தனக்கெதிராக தான் அவள் செயற்பட்டாள் என்பதையும் மறந்து தன்னால் முயன்ற ஆறுதல் வார்த்தைகளை கொண்டு தன்னவளை ஹர்ஷா தேற்ற முயல,

அவன் வார்த்தையிலும் அவன் வருடலிலும் தன் அழுகையை மட்டுப்படுத்தியவள் அழுத களைப்பில் தன்னவனை அணைத்தவாறு அவன் மார்பிலே சாய்ந்தவாறு உறங்கிப் போக அவள் நெற்றியில் அழுந்த முத்தமிட்டவன்  சீட்டில் அவளை சரியாக படுக்க வைத்து காரை செலுத்தி நிறுத்தியது என்னவோ மித்ராவின் வீட்டு வாசலில் தான்.

அவளை கைகளில் ஏந்தியவாறு ஹர்ஷா வீட்டினுள் நுழைய அப்போது ஹோலில் இருந்த கயல், ஆதிரா, துர்கா, ரியா தான் அதை பார்த்து வாயைப் பிளந்து விட்டனர்.

அவர்களை பார்த்தவன் அவர்கள் தன்னையே அதிர்ச்சியாக பார்ப்பதை கண்டுக்கொண்டாலும் எதுவும் பேசாது தன்னவளை அவளது அறைக்கு ஏந்திச் சென்று மெத்தையில் படுக்க வைத்து அவள் நெற்றியில் அழுந்த முத்தம் பதித்து விட்டு வெளியேற தற்போது அவர்களை பார்க்க அவனுக்குமே ஒருவித சங்கடமாகத் தான் இருந்தது.

அவர்கள் அருகில் வந்தவன் ஒருவித சங்கடத்துடன்,
              "அது.. அது வந்து.. மது நல்லா தூங்கிட்டு இருக்கா.. எழுப்ப வேணாம்.. காலைல இருந்து அவ எதுவுமே சாப்பிடலன்னு நினைக்கிறேன்..  எழுந்ததுக்கு அப்றம் சாப்பிட ஏதாவது கொடுங்க மா.. அப்போ நா வரேன்.." என தான் பேச வேண்டியதை தட்டுத்தடுமாறி பேசி விட்டு ஹர்ஷா அவன் பாட்டுக்கு நகர்ந்து செல்ல அவர்கள் தான் ஒருவரையொருவர் அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தனர்.
----------------------------------------------------------

அடுத்த நாள்,
        ஆசிரமத்தில்,

        கிளுக்கி சிரித்துக்கொண்டு மண்ணில் உருண்டு பிரண்டு குட்டி குட்டி மலர்கள் அவள் கண்முன் விளையாட தானும் சிறுமியாகவே இருந்திருக்க கூடாதா என்ற ஏக்கப்பார்வையோடு அவர்களையே அந்த பெரிய மரத்தின் கீழ் உள்ள பென்ச்சில் கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக்கொண்டு அமர்ந்து இமைக்காது பார்த்துக் கொண்டிருந்தாள் மித்ரா.

        "ஆர் யு ஓகே பேபி.." என்ற குரலில் சட்டென திரும்பியவள் தன் பக்கத்தில் முட்டியில் கைகளை கோர்த்து சற்று சாய்ந்தவாறு பார்வையை தன் புறம் திருப்பாமல் குழந்தைகளையே பார்த்தவாறு கேட்ட தன்னவனை கண்டவள் அவன் தன் பக்கத்தில் அமர்ந்திருப்பதை கூட உணராத தன் நிலையை மானசீகமாக கடிந்தவாறு வேறுபுறம் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

           "ஷீ இஸ் ஃபைன்.. உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை.. உடம்புல காயம் மட்டும் தான்.. அதுவும் சரியான ட்ரீட்மென்ட் எடுத்தா சீக்கிரம் சரியாகும்னு டொக்டெர் சொல்லிட்டாங்க.. " என்று ஹர்ஷா தன்னவளின் முகத்தை பக்கவாட்டாக திரும்பி பார்த்தவாறு சொல்ல அதைக் கேட்டவளுக்கோ மனது லேசாக அதன் பிரதிபலிப்பாக அவள் இதழில் தோன்றிய புன்னகை அவனையும் தொற்றிக் கொண்டது போல் அவன் இதழிலும் புன்னகை கீற்றாக அரும்பியது.

சற்று நேரம் இருவருமே எதுவும் பேசாது அமர்ந்திருக்க திடீரென மித்ராவின் காதில் கேட்ட "பொம்முகுட்டி.." என்ற அழைப்பில் ஹர்ஷாவின் புறம் திரும்பியவள் அவனை கூர்ந்து நோக்க,

ஹர்ஷாவோ சாதாரணமாக முகத்தை வைத்துக்கொண்டு அங்கு விளையாடிக் கொண்டிருந்த குட்டிச்சிறுமியை "பொம்முகுட்டி.." என்று மீண்டும் அழைக்க அந்த சின்னவண்டு அருகில் வந்ததும் அச்சிறுமியின் கன்னத்தில் முத்தத்தை பதித்து தான் கொண்டு வந்திருந்த சாக்லெட் பாக்ஸ்ஸை அவளிடம் நீட்டி மற்ற சிறுவர்களுடன் பகிர்ந்து உண்ணுமாறு சொல்லி அனுப்ப மித்ரா தான் ஹர்ஷாவையே ஏக்கமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவள்புறம் திரும்பியவன் ஒற்றை புருவத்தை உயர்த்தி  "என்ன.." என்று கேட்க, இருபக்கமும் 'இல்லை' என்று தலையாட்டியவள் முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்டாலும் தன் தந்தையின் அழைப்பு அவள் காதில் ஒலித்துக் கொண்டே இருக்க மித்ராவால் நிலை கொள்ளவே முடியவில்லை.

ஹர்ஷாவோ அவள் மனநிலையை மாற்ற எண்ணி,
             "எப்போ நம்ம கல்யாணத்தை வச்சிக்கலாம் மது.." என்று குறும்பாக கேட்க,

அவனை திரும்பி முறைத்தவள்,
            "உனக்கு எப்பிடி நா இங்க இருக்குறது தெரியும்.." என்று சீற,

            "சத்தியமா தேவ் என்கிட்ட சொல்லல்ல செல்லம்.." என்று பக்காவா நம் தேஸு பயலை போட்டுக் கொடுத்தவன் அப்பாவி போல் முகத்தை வைத்திருக்க,

"அவன.. இருடா வரேன்.." என்று உறுமியவள் விறுவிறுவெற தன் காரை நோக்கி செல்ல, "மது.." என்ற ஹர்ஷாவின் கத்தலில் சற்று நின்று திரும்பி அவனை மித்ரா முறைத்து பார்க்க,

   ஹர்ஷாவோ , "பாவம் பையன்.. பார்த்து ஹேன்டல் பன்னு மது.." என்று சிரிப்பை அடக்கிக் கொண்டு கத்த, 'ச்சே..' என்று சலித்தவள் தன் காரை மின்னல் வேகத்தில் பறக்கவிட்டு வீட்டு வாசலில் காரை நிறுத்தியிருந்தாள்.

ஹோலில் தேவ் அரவிந்தோடு ஒரு க்ளைன்ட் தொடர்பாக மும்முரமாக பேசிக் கொண்டிருக்க புயல் போல் உள்ளே விறுவிறுவென வந்தவள் ஹோலில் தேவ்வை கண்டதும் ரியா தன்னை கூப்பிடுவதை கூட காதில் வாங்காமல் மின்னல் வேகத்தில் அவனை நெருங்கி அவன் ஸ்பைக்(spike) விட்ட கேசத்தை கொத்தாக பற்றி ஒரு சுற்று சுற்றிவிட்டாள்.

         "அடியே.. விடு டி என்னை.. வலிக்குது டி.." என்று தேவ் அலற அரவிந்த் உட்பட வீட்டில் இருந்தவர்களோ அவர்களையே 'என்னடா நடக்குது இங்க..' என்ற ரீதியில் மிரண்டு போய் பார்த்துக் கொண்டிருந்தனர்.

         "ஹவ் டேர் யு.. அவன்கிட்ட நா இருக்குற இடத்தை எப்பிடி டா நீ சொல்லலாம்.. உன்ன.." என்று தன் முழங்கையால் அவன் முதுகில் நாலு போடு போட்டவள் அவனை புரட்டி எடுக்க

         "விடுடி சண்டி ராணி.." என்று தேவ் மித்ராவை செல்லமாக அழைக்கும் பெயரால் அழைத்து கதற,
 
          "என்னையா டா சண்டி ராணின்னு சொல்ற கருவாப்பயலே.." என்று அவன் வாயிலேயே பட்டு பட்டு என அடி வைத்தாள் மித்ரா.

         "மித்ரா என்னாச்சு அவன விடு.. டேய் என்னடா பன்னி தொலைச்ச.. " என அரவிந்த் இருவரையும் விலக்க முயல, அவளோ அதை எல்லாம் கண்டு கொண்டால் தானே.. அவனை கோபம் தீரும் அளவுக்கு அடி வெளுத்தவள் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க பத்ரகாளி போல் நிற்க,

அவள் அடியில் ஷார்ட் பட்டன்கள் திறந்து கசங்கி பரட்டை தலையுடனான தோற்றத்தில் இருந்தாலும்,
  'என்ன நடந்தாலும் அசராம இருப்பான் டா இந்த ஏகாம்பரம்' என்ற ரீதியில் கெத்தாக அப்போதும் பேன்ட் பாக்கெட்டுக்குள் கையை விட்டுக்கொண்டு நின்றவாறு,
          "வந்த வேலை முடிஞ்சதுல்ல கிளம்பு.." என்று தேவ் அசால்ட்டாக சொல்ல,

அவன் நடு மண்டையில் நங்கென்று கொட்டியவள், "இனிமே என்னை பத்தி அவன்கிட்ட ஏதாச்சும் சொன்ன.." என்று ஒற்றை விரலை நீட்டி எச்சரித்து விட்டு சில அடிகள் தேவ்வை தாண்டி நடந்தவள் பின் ஏதோ யோசித்து அப்படியே யுடர்ன் அடித்து டீபாயின் மேல் இருந்த தேவ்வின் ஃபோனை கையில் எடுத்து ஆதிராவின் அருகில் சென்று,
            " த்ரீ, வன், ஃபோர், நைன்.. இதான் அவன் பாஸ்வர்ட்.." என்று சொல்லி விட்டு தேவ்வை நக்கலாக பார்த்தவாறு மித்ரா நகர தேவ்விற்கு தான் தூக்கி வாரிப்போட்டது.. அதில் தான் தேவ் பையா நாடு நாடாக கரெக்ட் பன்னி வைத்திருந்த  கேர்ள் ஃப்ரென்ட்ஸ் ஒரு கூட்டமே இருக்கிறாங்களே..

           "அடி பாதகத்தி.. உன் புத்திய காமிச்சிட்டல்ல.." என்று வாய்விட்டே புலம்பியவாறு அரவிந்திடம் "டேய் மடையா என் ஃபோனை புடுங்குடா.." என்று கத்தியவாறு தன் அம்மாவின் கையிலுள்ள தன் தொலைப்பேசியை பறிக்க அவன் ஓட அரவிந்த் ஒருபக்கம் ஓட ஆதிராவோ அதை கொடுக்காமல் விளையாட்டு காட்ட என அன்று வீடே ரணகளமானது தான் மிச்சம்..
------------------------------------------------------------

அடுத்த நாள் காலை,

      ஆதி, ஹரி, சித்து, அபி சோஃபாவில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க அப்போது ஓஃபீஸ் செல்வதற்கு ரெடி ஆகி வந்த தேவ்வையும் அரவிந்தையும் பார்த்த அபியோ,
             "டேய் பசங்களா.. கொஞ்சம் இங்க வந்து உட்காருங்க.." என சொல்ல,

தன் தந்தையின் எதிரே அமர்ந்த தேவ் கிண்டலாக,
            "சொல்லுங்கள் டேடி சொல்லுங்கள்.." என்று கேலியாக சொல்ல அரவிந்தோ "இவன் அடங்க மாட்டான்.." என்று வாய்விட்டு சொல்லி சலித்தவாறு சித்துவின் அருகில் அமர்ந்துக் கொண்டான்.

          "பசங்களா இப்போ ஒரு ட்ரக்(drug) கேஸ் தான் நாங்க ஹேன்டல் பன்றோம்.. ஆளுங்கள சந்தேகத்துல விசாரனை  பன்னா எவனுமே வாய திறக்கவே மாட்டேங்குறானுங்க.. இதுல இந்த மிரட்டல் கோல்ஸ் வேற ரொம்ப தொல்லை கொடுக்குறானுங்க.. இப்போ நீங்க என்ன பன்னனும்னா.." என்று சித்து ஏதோ சொல்ல வர,

        "என்ன பன்னனும்னு தெரிஞ்சிருச்சி மாமா.." என்று அரவிந்த் சொல்ல,

தேவ்வோ,  "அந்த கேஸ் பத்தின டீடெய்ல்ஸ் மட்டும் கொடுங்க.. இதையெல்லாம் யாரு பன்றாங்கன்னு இரண்டே நாள்ல நாங்க சொல்றோம்.." என்று சொல்ல இருவரையும் மெச்சுதலாக ஒரு பார்வை பார்த்தனர் நம்ம ஓல்ட் ஹுரோஸ்.

என்ன தான் தேவ்வும் அரவிந்தும் விளையாட்டாக இருந்தாலும் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரங்க மாதிரி என்று அவர்களுக்கு தெரிந்த விடயம் தானே.. அப்போது சரியாக தன் சீனியர் ஓஃபீஸரோடு அழைப்பில் பேசிக் கொண்டு வந்த வேல் அழைப்பை துண்டித்து ஹரியின் அருகில் அமர்ந்தவாறு,
           "அப்பா நேத்து நைட் என்கிட்ட ஏதோ பேசனும்னு சொன்னீங்க.. என்ன விஷயம்.." என்று கேட்க,

            "நல்லவேள நியாபகப்படுத்தின நாச்சிமா.. டேய் ஆதி, சித்து, அபி நம்ம நாச்சிமாக்கு ஒரு நல்ல வரன் வந்திருக்கு டா.. பையன் என் ஃப்ரென்ட்டோட மகன் தான்.. பெரிய பிஸ்னஸ் மாக்னெட்.. சுனில் க்ரூப் ஆஃப் கம்பனீஸ்ஸோட சிஇஓ.." என்று உற்சாகமாக சொல்ல இத்தனை நேரமாக ஃபோனை நோண்டிக் கொண்டிருந்த அரவிந்த் சட்டென நிமிர்ந்து வேலுவை பார்க்க தேவ்வோ அரவிந்த்தின் ரியாக்ஷனை தான் கடைக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தான்.

         "வாவ்வ் சூப்பர் டா.. அப்போ பேசி முடிச்சிரலாம் தான்.. இது நம்ம வீட்டு சிங்கப்பெண்களுக்கு தெரியுமா டா.." என்று அபி நக்கலாக கேட்க,

           "அதெல்லால் முன்னாடியே ரீ அவங்ககிட்ட சொல்லிட்டா.. எல்லாருக்கும் சம்மதம் தான்.. என் பொண்ணு ஒரு வார்த்தை அவ சம்மதத்தை சொன்னா வேலைய ஆரம்பிச்சிற வேண்டியது தான்.." என்று ஹரி புன்னகையுடன் கூறிவிட்டு வேலுவின் பதிலுக்கு அவளின் முகத்தை பார்க்க,

          "வேலுமா உனக்கு ஓகேவா.. யாராச்சும் லவ் பன்றன்னா கூட சொல்லிரு.. நாங்க ஒன்னும் லவ்வுக்கு எதிரி இல்ல.. அது நாங்க சொல்லி உனக்கு தெரிய வேண்டியதும் இல்ல.." என்று ஆதி சொல்ல,

வேலுவோ சட்டென அரவிந்தை தான் நோக்கினாள்.அவனும் அவளை தான் இமையாது பார்த்துக் கொண்டிருக்க அவன் மனமோ, 'சம்மதம் இல்லைன்னு சொல்லு நச்சு..' என்று அவனையும் மீறி ஓலமிட அவன் பார்வையும் அதை தான் உணர்த்தியது. 

வேலுவோ அவன் கண்களை பார்த்தவாறே,
           "எனக்கு சம்மதம்ப்பா.." என்று சொல்ல,

           "ஆர் யு ஷுவர் நாச்சிமா.." என்று ஹரி அவளை சந்தேகமாக பார்த்தவாறே கேட்டான். பொலிஸ்துரையில் இத்தனை ஆண்டுகள் இருப்பவனுக்கு தன் மகளின் பார்வை மாற்றத்தினை கூடவா உணர்ந்து கொள்ள முடியாது.

  "ஷுவர் பா.." என்று வேலு அரவிந்திடமிருந்து பார்வையை திருப்பி தரையை வெறித்தவாறே சொல்ல அரவிந்திற்கோ என்ன உணர்கிறோம் என்றே தெரியவில்லை. ஏதோ அவன் தொண்டைகுழியில் அடைக்க மனதில் ஏதோ பாரத்தை ஏற்றி வைத்தது போன்று கனத்தது அரவிந்திற்கு.

அதற்கு மேலும் அங்கிருக்க முடியாமல் அவன் எழுந்து விறுவிறுவென சென்றிருக்க வேலுவோ தேவ்வை தயக்கமாக பார்த்ததில் அவனோ அர்த்தமான புன்னகையுடன் "கன்ங்கிராட்ஸ் வேலு குட்டி.." என்று சொல்லி விட்டு நகர,

ஹரியும் "சரிம்மா அப்போ சீக்கிரம் என் ஃப்ரென்ட்டோட பேசுறேன்.. மித்ரா கல்யாணத்தோடயே உன் கல்யாணத்தையும் வச்சிரலாம்.." என சந்தோஷமாக சொல்ல வேலுவிற்கோ மனது வெடித்து சிதறிவிடும் அளவிற்கு வலித்தது.

தொடரும்..🔥
-----------------------------------------------------

     -ZAKI🔥   

 

Zakiya


ReplyQuote
Jade Javid
(@jadejavid)
Trusted Member Writer
Joined: 9 months ago
Posts: 96
27/11/2020 5:37 am  

                    தீண்டாதே 34🔥

 

மியூசிக் கொலேஜில்,

       "ஹேய் டார்லிங்.." என்று தியாவின் பின்னால் அமர்ந்து அனி அவளை சுரண்டி சுரண்டி வெறுப்பேற்ற பல்லைக் கடித்துக் கொண்டு அமைதியாக இருந்தாள் தியா.

அனாவும் அனிருத்தோடு சேர்த்துக் கொண்டு,
        "லண்டன் நீ தியாவ கல்யாணம் பன்னிகிட்டு லண்டன்கே கூட்டிட்டு போயிருவியா.." என்று சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்பது போல் பாவனை செய்ய,

அவனோ சட்டென்று,
           "நோ.. நோ.. யு நோ வட் நட்பு நா ப்ரோபோஸ் பன்னும் போதே வீட்டோட மாப்பிள்ளையா தான் வருவேன்னு கன்டிஷனா சொல்லிட்டேன்னா பாரேன்.." என்று பெருமையாக சொல்ல,

அவனை நெற்றி முறித்து திருஷ்டி கழிப்பது போல் பாவனை செய்தவள்,
           "வாவ்வ் இப்படி ஒரு சின்ன மருமகன் நம்ம வீட்டுக்கு கிடைக்க தியா நீ போன ஜென்மத்துல ஏதோ புன்னியம் பன்னியிருக்கனும்.." என்று சிலாகித்துக் கொள்ள, தியாவால் அதற்கு மேல் பொறுமையாக இருக்கவே முடியவில்லை.

எழுந்தவள் விறுவிறுவென வகுப்பிலிருந்து வெளியேறி செல்ல அனியோ,
         "அச்சச்சோ ஏன்ஜல்.." என்று தலையில் கை வைத்தவாறு அவள் பின்னாடியே ஓடினான்.

அவள் வாயுக்குள் ஏதேதோ முணுமுணுத்தவாறு சிவந்த முகமாக நடந்து செல்ல அவள் கையை பிடித்து தடுத்த அனி,
            "சோரி தியா ஜஸ்ட் ஃபோர் ஃபன்.. இதெல்லாம் நீ சீரியஸா எடுத்துக்குவியா.." என கெஞ்சுதலாக கேட்க,

             "எத்தனை தடவை சொல்றது எனக்கு இந்த பேச்சே பிடிக்கலைன்னு.. நிறுத்த வேண்டியது தானே.. இதுல அந்த கிறுக்கியும் உன் கூட சேர்ந்துகிட்டு இப்படி பன்னிகிட்டு இருக்கா.. " என கோபத்தில் தியா பொறிந்து தள்ள,

               "ஓகே ஓகே சோர்ர்ரி.. உனக்கு இந்த பேச்சு பிடிக்கலல்ல அப்போ இப்பிடி பன்னலாம்.. நாம வேணா தனிக்குடித்தனம் போகலாமா.. நீ ஏன் அந்த பொய்ன்ட்ட கன்சிடர் பன்ன கூடாது.." என அனி தீவிரமான முகபாவனையுடன் கேட்டதில்  அவன் பிடியை உதறிதள்ளிவிட்டு அவள் அவனை கடந்து செல்ல,

வாய்விட்டு சிரித்தவன்,
            "சும்மா ஏன்ஜல்... சோரி டா..." என அவள் பின்னால் சென்றவன் ஒருகட்டத்தில் அவளை நிறுத்த அவள் கையை பிடித்து இழுக்க ஏற்கனவே அவன் பேச்சில் கோபத்தில் இருந்தவள் இப்போது கல்லூரியில் அத்தனை பேர் மத்தியில் தன் பின்னால் வந்துக் கொண்டும் இப்பிடி கையை பிடித்து இழுத்ததிலும் கோபம் உச்சத்தை தொட்டிருக்க திரும்பி அவனை 'பளார்' என அறைந்தே விட்டாள் தியா.

       "உனக்கு சொல்றது புரியல்லையா.. ஆர் யு டேஃப்(Deaf).. எனக்கு தான் உன்னை புடிக்கலைன்னு சொல்றேன்ல.. நா சொல்ற ரீசன் உனக்கு சில்லிதனமா இருக்கலாம் ஆனா எனக்கு அப்படி இல்லை.. இதை எத்தனை தடவை சொல்லியும் உன் மறமண்டைக்கு ஏறமாட்டேங்குது.. உன்ன.." என்று ஏதோ திட்ட வந்தவள் அப்போது தான் அவனை நிமிர்ந்து பார்க்க அவனோ அவள் அறைந்த கன்னத்தை பிடித்த வண்ணம் கண்களில் கண்ணீர் ததும்பி சிறுகுழந்தை போல் உதட்டை பிதுக்கிக் கொண்டு இருந்தான்.

அதைப் பார்த்தவளுக்கு தான் செய்த காரியம் அப்போது தான் புரிய இதுவரை யாரையும் அதிர்ந்து கூட பேசிறாதவளுக்கு அனியை அறைந்து திட்டியது ஏதோ பெரிய குற்றவுணர்ச்சி போல் தோன்ற,
         "ரித்து.. அது வந்து.." என்று ஏதோ சொல்ல வர அனிருத்தோ ஒரு கையை தூக்கி சட்டையில் கண்ணீரை துடைத்துக் கொண்டவன் அங்கிருந்து நகர்ந்து செல்ல, தியாவுக்கோ என்ன செய்வதென்றே புரியவில்லை..

வகுப்பிற்குள் வந்த தியாவை பார்த்த அனா அவளை ஏகத்துக்கும் முறைத்துத் தள்ளி அனியின் பக்கத்தில் அமர்ந்து கொள்ள தியாவோ தயக்கமாக அனிருத்தை பார்த்ததில் அவனோ இறுகிய முகமாக ஃபோனில் முகத்தை புதைத்து இருக்க அவளுக்கோ அது மேலும் மனபாரத்தை தான் கொடுத்தது.

கொலேஜ் முடியும் வரை அனிருத் அவள்புறம் பார்வையை திருப்பவே இல்லை என்றால் தியாவோ அவனையே தான் ஏக்கமாக பார்த்துக் கொண்டிருந்தாள். அனா வேறு தியாவுடன் பேசாமல் தவிர்க்க அதில் தியாவிற்கு தான்
அழுகையே வந்துவிடும் போலிருந்தது.
------------------------------------------------------------------

அன்று,

        கூப்பிட்டு வைத்து எதுவும் பேசாமல் லேப்டாப்பில் மும்முரமாக வேலை செய்துக் கொண்டிருந்தவளை பார்த்த தேவ்விற்கும் வேலுவிற்கும் சலிப்பாக ஒரு கட்டத்தில் முடியாமல்,

           "ஏதோ முக்கியமான விஷயம்னு எங்க இரண்டு பேரையும் கூப்பிட்டு வைச்சு கண்டுக்காம உன் வேலைய பாத்துகிட்டு இருக்க.. என்ன எங்கள பார்த்தா வெட்டி பசங்க மாதிதி தெரியுதா உனக்கு.." என்ற தேவ் மித்ராவிடம் வம்பிழுக்க,

லேப்டாப்பை மூடி ஓரமாக வைத்தவள் அவர்களை புருவத்தை உயர்த்தி பார்த்த பார்வையிலே 'இதை நா என் வாயால வேற சொல்லனுமா..' என்ற உள்ளருத்தம் தான் பொதிந்திருந்தது.

அவளை முறைத்த வேல்,
            "ஒரு சிபிஐ அயும் டிடெக்டிவ்வையும் நீ ரொம்ப குறைச்சி மதிப்பிடுற மித்ரா.." என்று விறைப்பாக சொல்ல,

'உஃப்ப்..' என பெருமூச்சுவிட்டு இருபக்கமும் தலையாட்டி சலித்துக் கொண்டவள் பட்டென்று,
             "கம்மிங் சடர்டேய்(coming saturday) சப்தகிரியோட கதைய முடிக்கிறோம்.." என்று சொன்னதில் "வாட்ட்.." என்று அதிர்ந்து விட்டனர் தேவ்வும் வேலுவும்.. அதே நேரம் தேவ்விற்கும் ஒரு அழைப்பு வர திரையை கூட பார்க்காது அழைப்பை துண்டித்தவன்,

      "அதுக்கு இன்னும் இரண்டு நாள் தானே இருக்கு.. "என்று தேவ் அதிர்ந்து கேட்க,

         "என்ன திடீர்னு மித்ரா.." என்று வேல் கேட்க,

        "இங்க என்னை சுத்தி என்ன நடக்குதுன்னே எனக்கு புரியல.. சீக்கிரம் நா நினைச்சதை நடத்தி முடிக்கனும்.. எதுக்காக இங்க வந்தேனோ அதை முடிச்சிட்டு நா லண்டன் கிளம்புறேன்.." என்று அடுத்த இடியை இறக்க,

          "உனக்கென்ன பைத்தியமா டி.." என்று பொங்கிவிட்டான் தேவ்.

அவனை அலட்சியமாக பார்த்தவள் அவன் கோபத்தை எல்லாம் கண்டுக்காது,
           "சப்தகிரி பொண்ணுங்க விஷயத்துல ரொம்ப வீக்.. எவ்ரி சடெர்டேய் நைட் கோலிங் கேர்ள்ஸ்ஸோட அவனோட ஃபார்ம் ஹவுஸ்ல தான் கூத்தடிப்பான்.. அந்த ஒருநாள் தான் அவன் ஆளுங்க கூட அவன் கூட இருக்க மாட்டாங்க.. அவன் ட்ரைவர் மட்டும் தான் இருப்பான்.. அவன் எல்லாம் ஒரு விஷயமே இல்லை ஈஸியா டைவர்ட்(Divert) பன்னிரலாம்..

            என்ட் நமக்கு இன்னொரு பொஸிவிட் திங் என்னன்னா.. அவன் ஃபார்ம் ஹவுஸ்ஸ சுத்தி ஒரு சிசிடிவி கேமரா கூட இல்லை.. அவன் அரசியல் வாழ்க்கைக்கு வினையா அவன் பன்ற தில்லுமுல்லு ஏதாவதுக்கு  எவிடென்ஸ்ஸா  அந்த ஃபுடேஜஸ்ஸே இருந்துருமோன்னு பயம்.. சரியான முட்டாள்.. ஹாஹாஹா" என்று மித்ரா சொல்லி சிரிக்க, ஆனால் இங்கு தேவ்வோ அவள் பேசுவதை கேட்கும் மனநிலையிலே இல்லை.

        "ஜஸ்ட் ஷட் அப் மித்ரா.. லண்டன்க்கு போயிருவன்னா.. வை(Why).. இங்க உனக்கு என்ன டி பிரச்சினை.. என்ட் நீ போனாலும் ஹர்ஷா உன்ன விட்டுறுவான்னு நினைக்கிறியா.." என்று தேவ் சீற,

           "ஹர்ஷா.. அவன் தான் இப்பொ என் பிரச்சினையே.. அவன் யாருன்னு உனக்கு தெரிஞ்சும் அவன் என்னை கல்யாணம் பன்னிக்க கேட்டப்போ பார்த்துகிட்டு தானே இருந்த.. நா போய் அவன கல்யாணம் பன்னிப்பேன்னு நீ எப்பிடி நினைக்கலாம்.. தட் இஸ் இம்போஸிபள்(impossible).."  என்று மித்ராவும் பதிலுக்கு சீற,

            "நீதானே அவன உன் ப்ளான்ல இழுத்து விட்ட.. அதுவும் லவ் பன்றேன்னு ஏமாத்தி இருக்க.. ரொம்ப ச்சீப்பா இருக்கு மித்ரா.. இப்போ வீட்ல இருக்கவங்க எவ்வளவு கஷ்டப்படுவாங்கன்னு கூட யோசிக்காம போறதா சொல்ற.. அட்லீஸ்ட் தியா பத்தி யோசிச்சு பார்த்தியா.." என்று தேவ் வருத்தம் தேய்ந்த குரலில் கேட்டதில்,
"காம் டவுன் தேவ்.." என்று தேவ்வை  சமாதானப்படுத்தினாள் வேலு.

தன் முகபாவனைகளை காட்டாது முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்டவள்,
               "இங்க இருந்து என்னை அனுப்பும் போது என்னை பத்தி யாராச்சும் யோசிச்சாங்களா.. அப்போ நா மட்டும் எதுக்கு யோசிக்கனும்.." என்று மித்ரா அழுத்தமாக கேட்க, தேவ்விற்கு தான் அய்யோ என்றிருந்தது.

         "லுக் மித்ரா.. நீ தப்பா புரிஞ்சிருக்க.. அன்னைக்கு உன்ன அனுப்பி வைச்சாலும் வீட்ல.." என வேலு ஏதோ பேச வர,

           "நோ அதர் டோப்பிக்ஸ்.. நீங்க வர்றீங்களோ  இல்லையோ நா அவன் ஃபார்ம் ஹவுஸ்க்கு போக தான் போறேன்.. தட்ஸ் இட்.." என்று விட்டு மித்ரா அறையிலிருந்து வெளியேற தேவ்வோ கோபத்தை அடக்க வழிதெரியாது சுவற்றில் கையை குத்தி அடக்க முயற்சித்தான்.

அவனை கஷ்டப்பட்டு தடுத்த வேல்,
            "தேவ் ரிலாக்ஸ்.. மித்ரா நம்மள விட்டு போக மாட்டா.. ஐ அம் டேமன் ஷுவர் ஹர்ஷா ப்ரோ எப்போவும் அவள விட மாட்டாரு.. என்னை பொருத்தவரைக்கும் அவ எங்க போனாலும் அவர்கிட்ட இருந்து அவளால தப்பிக்கவே முடியாது.." என்று சொல்ல,

            "அந்த ஒரு காரணத்துக்காக தான் வேலு பல்லைகடிச்சிகிட்டு எல்லாத்தையும் பொறுத்துகிட்டு இருக்கேன்..  இல்ல.. இவ வீட்ல அத்தை மாமாவ நோகடிக்கிறதுக்கும், பன்ற காரியத்துக்கும் இவள..." என்று தேவ் பல்லைகடித்துக் கொண்டு சீற,

அவனை சமாதானப்படுத்தி யோசனையூடே வேல் வெளியே வர சரியாக அரவிந்தும் அவன் அறையிலிருந்து வெளியே வந்தான்.

அரவிந்தை கண்டவள் சிறுபுன்னகையை மட்டும் உதிர்த்து விட்டு தனது அறையை நோக்கி விறுவிறுவென செல்ல அவளை கண்டதில் உற்சாகி ஓடி வந்து அவள் கையை பிடித்து தரதரவென மாடிக்கு இழுத்துக் கொண்டு சென்றான் அரவிந்த்.

     "அவிந்த் எதுக்கு என்னை இழுத்துட்டு வர்ற.. கூப்பிட்டா நானே வரபோறேன்.." என தன் மணிக்கட்டை தேய்த்து விட்டவாறு வேல் சொல்ல,

        "ஹிஹிஹி சோரி நச்சு.. உன்னை ஹர்ட் பன்னிட்டேனா.." என்று அவன் பாவம் போல் கேட்டதில் மெல்லிதாக சிரித்தவள் 'இல்லை' என தலையாட்டினாள்.

திடீரென அரவிந்த் முகம் வாட அதை கவனித்தவள்,
           "என்னாச்சு அவிந்த்.." என்று அவன் முகத்தையே கூர்மையாக பார்த்தவாறு கேட்க,

அவனுக்கோ தான் மனதில் நினைத்ததை கேட்கவே சங்கடமாக இருந்தது.. இருந்தாலும் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு,
             "அது நச்சு.. அன்னைக்கு சரண் மாமா சொன்னாருல்ல.. உனக்கு ஏதோ வரன் பார்த்திருக்காங்கன்னு.. " என்று நிறுத்தி நிறுத்தி அவன் சொல்ல,

'என்ன நம்ம ஆளோட பேச்சே ஒருமார்கமா இருக்கு..' என்று நினைத்தவாறு புருவத்தை சுருக்கியவள்,
           "ஆமா அவிந்த் அதுக்கென்ன இப்போ.. நீயும் பக்கத்துல தானே இருந்த.." என்று சாதாரணமாகவே வேல் கேட்க,

       "இல்ல நச்சு.. உனக்கு.. உனக்கு.." என்று அவன் திக்கித்திணற,

உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவள்,
            "எனக்கு என்ன.. ஒஹோ.. ஒருவேள அப்பா பார்த்த மாப்பிள்ளை எனக்கு சம்மதமான்னு கேட்குறியா.." என்று வேல் நக்கலாகை கேட்க,

         "ஆங்.. ஆமா நச்சு.. உனக்கு நிஜமாவே சம்மதமா.. இல்ல மாமா கேட்டாருன்னு அவங்க சந்தோஷத்துக்காக ஓகே சொன்னியா.." என்று அரவிந்த் மனதில் தோன்றியதை மறைக்க முடியாமல் கேட்டதில்,

       'வர்ர்ரேவா.. சாருக்கு இப்போ தான் என்மேல பொஸ்ஸெஸ்ஸிவ்வா இருக்கோ.. ஆனாலும் உன்ன சும்மா விட மாட்டேன் டா.. என்னை சின்னவயசுல இருந்து எவ்வளவு அலையவிட்டிருப்ப... இதுல நீ மித்ராவ லல் பன்றதுக்கு என்னையே மாமா வேலை பார்க்க விட்டு காண்டாக்கினல்ல அதுக்காகவே உன்ன வச்சு செய்யல்ல என் பேரு வேலு நாச்சியார் இல்ல டா..' என்று தனக்குள்ளே சபதம் எடுத்துக் கொண்டவள் வெளியில்,

           "நோ நோ அவிந்த் எனக்கு ராகேஷ்ஷ ரொம்ப பிடிச்சிருக்க.. யு நோ வன்திங் நாங்க நம்பர் கூட ச்சேன்ஜ் பன்னிகிட்டோம்.. ஹவ் ஸ்வீட் ஹி இஸ்.." என்று வேல் கண்கள் மின்ன பேச அரவிந்த்கோ உள்ளுக்குள் எரிமலையே வெடித்தது.

முயன்று கட்டுப்படுத்தியவன்,
             "பேசி இரண்டு நாள் கூட ஆகி இருக்காது.. அதுக்குள்ள ஸ்வீட்டா.." என்று வேறுபுறம் முகத்தை திருப்பிக் கொண்டு பல்லைகடித்துக் கொண்டு அரவிந்த் கேட்க,

அவன் கோபத்தில் உள்ளுக்குள் குஷியானவள்,
                "இல்லையா பின்ன.. இரண்டு நாளா இருந்தாலும் என் மனசுல ஃபெவிகோல் போட்டு ஒட்டிக்கிட்டாரு.. ஹி இஸ் சோ ஹேன்ட்ஸம்.. என்ட் மேன்லி.." என்று அவள் பாட்டுக்கு சிலாகித்துக் கொண்டே போக அரவிந்த்திற்கு தான் அதை கேட்க கூட முடியவில்லை..

மித்ரா ஹர்ஷாவின் காதல் தெரிந்த போது கூட தன் முதல் காதல் கைகூடவில்லை என்ற அழுகை வந்ததே தவிர மித்ரா மீது உரிமை உணர்வோ ஹர்ஷா மீது கோபமோ ஆத்திரமோ அவனுக்கு வரவில்லை.. மித்ராவை விட்டுக்கொடுக்க கூடாது என்று கூட அவன் மனதில் நினைத்தது இல்லை..  அதுவும் வேல் விஷயதில் அவனுக்குள் ஏற்பட்ட அவள் மீதான உரிமை கலந்த பந்தம் அவளை இன்னொருவனுக்கு விட்டுக் கொடுக்க மாட்டேன் என்ற ரீதியில் இருக்க இப்போது வேல் வேறு இப்படி பேசியதில் அவனுக்கு தான் பிபி எகிறிக் கொண்டு சென்றது..

"ஓகே இனாஃப்.." என்று கத்தியவன் அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் ஒவ்வொரு காலடிகளையும் அழுத்தத்துடன் வைத்தவாறு விறுவிறுவென செல்ல அதிலே அவன் கோபத்தின் அளவு அப்பட்டமாக தெரிய அவன் தன் கண்ணை விட்டு மறைந்ததும் "யாத்தே யாத்தே.." என்ற பாடலை ஒலிக்க விட்டு மொட்டைமாடியில் ஒரு குத்தாட்டம் ஆடியே விட்டாள் வேல்..
---------------------------------------------------------------

அன்று இரவு,

             குளித்து உடை மாற்றி அப்போது தான் படுகைக்கு வந்த மித்ராவின் தொலைப்பேசி ஒலிக்க திரையில் தெரிந்த பெயரை பார்த்தவள் அப்படியே கட்டிலில் மல்லாக்காக படுத்து அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.

மறுமுனையில் ஹர்ஷாவோ,         
  "மதுபேபி.." என்றதில் எரிச்சலானவள் நேரத்தை பார்த்து விட்டு,
             "இடியட் உனக்கெல்லாம் நேரம் காலமே தெரியாதா.. ஐ அம் டயர்ட் ஹர்ஷா ப்ளீஸ்.. " என்று நிதானமாகவே மித்ரா திட்ட,

           "இப்போ மட்டும் ஒரு ஃபைவ் மினிட்ஸ் என் தொல்லைய பொறுத்துக்கோ டி.. அதுக்கப்றம் கொஞ்ச நாளைக்கு உன் பக்கமே வரமாட்டேன்.." என்று ஹர்ஷா சொன்னதும் திடுக்கிட்டு எழுந்து நிமிர்ந்து அமர்ந்தவள் புருவங்களோ யோசனையில் சுருங்கியது.

மித்ரா யோசித்தவாறு அமைதியாகவே இருக்க,
          "ஒரு முக்கியமான ப்ரோஜெக்ட்.. அடுத்த கொஞ்ச நாளைக்கு யு.எஸ்ல தான்.. சோ, ஐ வோன்ட் (Won't) போதர் யு அனதர் ஃபிவ் டேய்ஸ்.. ஆர் யு ஹேப்பி பேபி.." என்று ஹர்ஷா கேட்க, அதில் முகத்தை சுருக்கியவள் மனதில் என்ன நினைக்கிறாள் என அவளுக்கே புரியவில்லை.

மனதில் ஒருவித வலி தோன்ற அதை அடக்க முடியாமல் தன்னை மீறி,
             "அப்போ என் கூட நீ பேச மாட்டியா.." என்று மித்ரா கேட்டே விட,

அதைக் கேட்ட ஹர்ஹாவின் இதழ்களோ பெரிதாகவே விரிந்துக் கொண்டது. அவனுக்கு தான் தெரியுமே அவன் மதுவைப் பற்றி.. "நோ.." என்று அவன் குறும்பாக சொல்ல மித்ராவின் முகமே சோர்ந்து விட்டது.

ஒரு கட்டத்திற்கு மேல் அவள் அமைதியை பொறுக்க முடியாதவன்,
          "மது ஐ வில் மிஸ் யு.." என்று சொல்ல, தன்னவனை பார்க்க முடியாது என்ற சோகத்தில் இருந்தவளும் தன்னை மீறி "ஐ டூ மிஸ்.." என்று சொல்லிவிட்டே சுதாகரித்தவள் 'ச்சே..' என தன் நெற்றியிலே அடித்துக் கொண்டு 'இவன் கூட பேசினாலே ஏதேதோ பேசி நம்மள மயக்குறான் ஃப்ராடு..' என மானசீகமாக அவனை திட்டிக் கொண்டாள்.

மறுமுனையில் ஹர்ஷாவோ குறும்பாக,
          "யு மிஸ் மீ மது.." என்று கேட்டதில்,

           "நோ.. நோ.. நோ வேய்.. ஐ அம் ஹேப்பி அபௌட் தட்.. கொஞ்ச நாளைக்கு நா நிம்மதியா இருக்க போறேன்.. சீக்கிரம் கிளம்பு இங்கிருந்து.."என அவள் தன் மனதை மறைத்து பேச,

அதைப் புரிந்துக் கொண்ட ஹர்ஷாவும் "ஆஹான்.." என்று கேலியாக கேட்டுவிட்டு,
             "ஓகே பேபி.. ஐ ஹேவ் டூ கோ.. லவ் யு டா சீ யு.." என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டிக்க போக, மித்ராவின் "டேக் க்யார்.." என்ற சொல்லில் அப்படியே நின்றுவிட்டான்.

         "வட்.. கம் அகைன்.." என்று ஹர்ஷா சிரிப்புடனே கேட்க,

           "அது.. அது ஹர்ஷா.. டேக் க்யார்." என்று சொல்லிவிட்டு அழைப்பை பட்டென்று துண்டித்து தன்னவனின் நினைப்பிலே உழன்றவளுக்கு தெரியவில்லை தன்னவனுடனான அடுத்த நேருக்கு நேர் சந்திப்பில் அவன் தன் வாழ்க்கையின் திசையையே மாற்ற போகிறான் என்று..
---------------------------------------------------------------

இரண்டு நாட்களுக்கு பிறகு,
    இரவு பதினொரு மணியளவில்,

சப்தகிரி ஃபார்ம் ஹவுஸில்(Farm house),

   சப்தகிரியின் ஃபார்ம் ஹவுஸ் வளாகத்திலிருந்து சற்று தள்ளி காரை நிறுத்தி அந்த இடத்தையே நோட்டம் விட்டுக் கொண்டிருந்தனர் தேவ்வும், மித்ராவும்.

சுற்றி எந்த ஆட்களும் இல்லாமல் மின்சாரம் துண்டிக்கப்பட்டது போல் அந்த இடமே கும்மிருட்டாக இருக்க மித்ராவுக்கோ எதுவுமே சரியாக படவில்லை. மனது ஏதோ நெருடலாக இருக்க அந்த ஃபார்ம் ஹவுஸின் வாயிலையே உற்று உற்று பார்த்துக் கொண்டிருந்த தேவ்வை,
               "தேவ் ஐ ஃபீல் சம்திங் ரோங்.. ஏதோ தப்பா இருக்குடா.." என்று சீரியஸாக மித்ரா சொல்ல,

      "ஆஹான்.."  என்ற தேவ்வின் கேலியான பதிலை கூட உணராமல் மித்ராவோ,
           "உனக்கு ஏதாச்சும் தப்பா தோணுதா.." என்று கேட்க,

"ம்ம்.." என்ற தேவ்வின் பதிலில் சட்டென அவன்புறம் திரும்பியவள்,
               "வாட்.. வாட்.." என ஆர்வமாக கேட்க,

           "அதுவா செல்லகுட்டி வயித்துக்குள்ள ரொம்ப நேரமா கடமுடா கடமுடான்னு ஏதோ சவுண்ட்டு வருது.. ஐ திங் எனக்கு பசிக்குதுன்னு நினைக்கிறேன்.. நாம வேணா சாப்பிட்டு பொறுமையா வரலாமா.." என்று தேவ் வெகு தீவிரமாக கேட்க,

அவனை முறைத்தவள் "யு இடியட்.." என்று அவன் உச்சந்தலையிலே நான்கைந்து கொட்டு வைக்க சரியான வேலுவிடமிருந்து அழைப்பு வந்தது.

"அம்மாடி.." என்று தலையை தேய்த்து விட்டவாறு தேவ் அழைப்பை ஏற்க,

மறுமுனையில் வேலுவோ,
            "எல்லாம் பக்கா.. அந்த கோலிங் கேர்ள் இந்த வழியா தான் வருவா.. நா என் போலிஸ் பவர யூஸ் பன்னி அவள புடிச்சி வைச்சிக்கிறேன்.. நீங்க சீக்கிரம் வேலைய முடிச்சிட்டு இன்ஃபோர்ம் பன்னுங்க.." என்று சொல்ல,

             "ரொம்ம்ம்ம்ப பெருஊமையா இருக்கு வேலுநாச்சியார்.." என்று தேவ் நீட்டி முழக்கி கேலியாக சொல்ல,

           "தேங்க் யு.. தேங்க் யு.. தேங்க் யு.. " என்று சிரிப்புடன் சொன்ன வேல் "பீ சேஃப்.." என்று விட்டு அழைப்பை துண்டித்திருந்தாள்.

        "தேவ் இதுக்கு மேல முடியாது நா உள்ள போறேன்.." என்று காரிலிருந்து இறங்கப் போனவளை தடுத்த தேவ்,
            "வெயிட் நானும்.." என்று சொல்ல வர,

அவனை குறுக்கிட்டவள்,
              "நோ தேவ் நீ இங்கேயே இரு.. நா அவன் கதைய முடிச்சிட்டு வரேன்.." என்று ஜான்சிராணியின் ஒன்றுவிட்ட தங்கச்சி பெண் போல் மித்ரா பேசியதில் காண்டானவன்,
                 "ஆர் யு ஜோகிங்.. இட்ஸ் இம்போஸிபிள்.. தட்ஸ் நொட் சேஃப் மித்ரா.. உன்ன தனியா போக நா அல்லொவ் (allow) பன்ன மாட்டேன்.." என்று தேவ் கண்டிப்புடன் சொல்ல,

              "அய்யோ தேவ் ஐ அம் நொட் அ ச்சைல்ட்(child).. என்ட் அவன் இப்போ நிதானமாவே இருக்க வாய்ப்பில்ல.. நல்ல குடிச்சிட்டு அரை மயக்கத்துல கிடப்பான்.. இது தான் சரியான நேரம்.. லெட் மீ  கோ.." என்று மித்ரா கடுப்படிக்க,

அவள் கையை இறுகப் பற்றியவன்,
           "நோ வேய்.. " என்று அழுத்தமாக சொன்னதில் 'உஃப்ப்..' என்று பெருமூச்சுவிட்டு "சரி வந்து தொலை.." என்று பல்லைகடித்துக் கொண்டு மித்ரா சொல்ல இருவருமே அந்த வீட்டு வளாகத்துக்குள் நுழைந்தனர்.
 
            "தேவ் டிட் யு நோட்டிஸ் தட்.. யாருமே இல்லை.. ஈவன்(even) அவன் ட்ரைவர் கூட.. ரொம்ப அமைதியா இருக்கு.. நிஜமாவே அவன் உள்ள தான் இருக்கானா.."  என்று புதருக்கு பின்னால் மறைந்தவாறு கண்களை அங்கும் இங்கும் சுழலவிட்டவாறு மித்ரா கேட்க,

          "யாஹ்ஹ்.. எதுக்கும்  அந்த வின்டோவ் வழியா உள்ள யாராச்சும் இருக்காங்கலான்னு பார்க்கலாம்..  அவன் உள்ள தான் இருக்கானான்னு கன்ஃபோர்ம் பன்னிட்டு உள்ள போகலாம்.. அது தான் நமக்கும் சேஃப் .. என் பின்னாடியே வா.." என்று விட்டு தேவ் மறைந்தவாறு வீட்டின் பின்புறமாக இருந்த  ஜன்னலை நோக்கி செல்ல மித்ராவும் அவன் பின்னாலே சென்றாள்..

       "மித்ரா லுக்.. இந்த ஜன்னல் வழியா ஏதோ வெளிச்சம் தெரியுது.. ஐ திங்  இந்த சைட் யாராச்சும் இருக்கலாம்.. பட் ஜன்னல் ரொம்ப உயரமா இருக்கே.." என்று சொன்னவன் அங்கு பக்கத்திலிருந்த இரண்டு பெரிய கற்களை ஒன்றுக்கு மேல் ஒன்று வைத்து கைகளை தூசி தட்டியவாறு ஏற போக,

அவனை தடுத்தவள்,
             "நானே பார்க்குறேன்.." என்று விட்டு தேவ்வின் தோள்களை பிடித்து ஏறி நின்று அப்பொழுதும் உயரம் பத்தாமல் பெருவிரலை ஊன்றி எம்பியவாறு ஜன்னல் வழியே எட்டி பார்க்க அங்கு கண்ட காட்சியில் அவள் கண்களோ அதிர்ச்சியில் விரிந்து உடல் நடுங்க ஆரம்பித்து விட்டது மித்ராவிற்கு..

தொடரும்..🔥
---------------------------------------------------

 

Zakiya


ReplyQuote
Page 4 / 4
Share: