Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

Notifications
Clear all

Zakiya's ❤ உன்னிடத்தில் எனை வீழ்த்துகிறாயடி❤  

Page 3 / 6
  RSS

Jade Javid
(@jadejavid)
Trusted Member Writer
Joined: 7 months ago
Posts: 68
29/07/2020 5:28 am  

              ❤அத்தியாயம் 17❤

         ரியாவிடம் பேசிவிட்டு படிகளில் ஏதோ யோசித்தவாறு இறங்கி வந்துக் கொண்டிருந்த சித்துவை ஸோஃபாவில் சொகுசாக அமர்ந்தவாறு ஆதிராவை வம்பிழுத்துக் கொண்டும் கயலிடம் கதையளந்தவாறு இருந்த அபிமன்யு காண ஒரு நக்கல் சிரிப்புடன் எகத்தாளமாக,
         "ஏலே சித்து பயலே.. பொடிப்பயலே.. இங்க வாலே.."  என சிரிப்பை அடக்கிக் கொண்டு சித்துவை அழைக்க,

அவனை ஒரு மாதிரியாக பார்த்த சித்து எதுவும் பேசாது அவன் அருகில் அமர போக
          "ஏய்ய்.. யாரக் கேட்டு நீ என் பக்கத்துல உட்காருற.. அதுவும் எனக்கு சமமா என் பக்கத்துல.. நோக்கு எவ்வளவு திமிரு இருக்கனும்.." என அபி அவனை ஒருவழிப்படுத்த,

எதுவும் பதில் பேசாது எழுந்து மார்புக்கு குறுக்கே கையை கட்டிய வண்ணம் முறைத்துக் கொண்டு நின்றான் சித்து. அவனை கண்களில் குறும்புடன் பார்த்த அபி,
          "போ போய் எனக்கு ஜூஸ் எடுத்துட்டு வா.." என அதிகாரமாக சொல்ல,

          'இங்க என்னதான்யா நடக்குது..' என்ற ரீதியில் அவர்களை பார்த்திருந்தனர் கயலும் ஆதிராவும். அவர்களுக்கு சற்று தொலைவில் தனி நாற்காலியில் புத்தகம் வாசித்தவாறு இருந்த துர்கா இந்த கூத்தை கவனித்தாலும் கண்டும் காணாதது போல் புத்தகத்திலேயே பார்வையை பதித்திருந்தாள்.

பெண்கள் புறம் திரும்பிய அபி,
          "கேர்ள்ஸ்.. உங்களுக்கு எதாச்சும் வேணுமா.. வேணும்னா தயங்காம சொல்லுங்கோ.. நம்ம ஆளுதான்.." என சித்துவை காட்டி சொல்ல,

  ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த சித்து கண்களில் கோபம் பொங்க "முடியாது" என்ற ஒரு வார்த்தை மட்டுமே அபியை முறைத்துக் கொண்டே சொல்ல,

இதைக் கேட்ட அபி நக்கலாக சிரித்துக் கொண்டே, "முடியாது..." என சித்துவை ஒரு வில்லன் பார்வை பார்த்தவாறு கேள்வியாக கேட்டு,
         "அப்போ சரி..  மறைக்கப்பட்ட ரகசியங்கள் வெளிப்பட வேண்டிய நேரம் வந்தாச்சு.. " என கூறியவாறு சித்துவை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டே பெண்களில் புறம் ஸ்லோ மோஷனில் திரும்ப,

பதறிய சித்து 'ஆண்டவா இது என்ன சோதனை..' என தன் தலையில் வெளிப்படையாகவே அடித்துக் கொண்டு தன் குட்டு வெளிப்பட்டு விடுமோ என்ற பயத்தில்,
        "கொண்டு வந்து தொலைக்கிறேன்.." என பல்லை கடித்துக் கொண்டு கூறிவிட்டு சென்றான்.

"அய்யோ.. அய்யோ.. சில்லி காய் (Silly guy) "  என சித்து சென்ற திசையையே நக்கலாக பார்த்துக் கொண்டே இடமும் வலமும் தலையாட்டிய வண்ணம் சிரித்துக் கொண்டிருந்த அபியை பார்த்த கயல்,

           "ஆமா.. அது என்ன மறைக்கப்பட்ட ரகசியம்.. அதுவும் சித்துவை வச்சி மிரட்டுறன்னா அவன பத்தி தான் இருக்கும்.. அப்பிடி என்ன மேட்டர்.." என தெரிந்துக் கொள்ளும் ஆர்வத்தில் கேட்க,

கயலை மேலும் கீழுமாக ஒற்றை புருவத்தை உயர்த்தி முறைப்புடன் பார்த்த அபி,
            "வுமென் வில் பி வுமென் தான்.. ரகசியம்னு சொல்றேன் தோண்டி துருவி கேக்குற பாத்தியா.. ஊர் வம்பு எதுக்கு உனக்கு.. பிச்சு புடுவேன் பிச்சு.." என பொய்யாக மிரட்டி சமாளிக்க, இவனிடமிருந்து எப்பிடி விஷயத்தை கரப்பது என யோசித்த கயலுக்கு ஒரு ஐடியா தோன்ற ஆதிராவை பார்த்து கண்களாலே கேட்குமாறு சைகை செய்தாள்.

அதைப் புரிந்து கொண்ட ஆதிராவும் அபியை கனிவாக பார்த்தவாறு "அபி.. " என பாசம் வழியும் குரலில் அழைக்க,

'நம்ம ஆதுவா நம்மள கூப்பிடுறா.. ஒருவேள முழிச்சிக்கிட்டே கனவு காணுறோமோ..'  என ஒரு நிமிடம் இது கனவா என்று  குழம்பிய அபி ஆதிராவை கூர்மையாக பார்க்க அவள் முகத்தில் முதன் முதலாக தன்னை நோக்கிய வசீகரப் புன்னகையில் மயங்கியவனுக்கு உள்ளுக்குள் குளுகுளுன்னு இருக்க அதே காதல் பொங்கும் குரலில் தன் முப்பத்திரெண்டு பற்களையும் காட்டியவாறு,
          "என்ன ஆது பேபி.." என ஆர்வமாக கேட்டான்.

கஷ்டப்பட்டு வரவழைத்த பாசக் குரலுடனும் புன்னகையுடனும்,
          "அது வந்து அபி.. என்கிட்ட கூட அது என்ன ரகசியம்னு சொல்ல மாட்டியா.. நா உன் ஆது செல்லம் தானே.." என ஆதிரா கூற,

அவளுடைய பேச்சில் உருகியவன் தன்னை மறந்து,
         "உன்கிட்ட சொல்லாம இருப்பனா பேபி.. அவனும் அவன் ரகசியமும்.. அவன் கிடக்குறான் லூசுப் பயல்.." என கூறியவன் சித்து வருகிறானா என்று கண்களை சுழலவிட்டு பார்த்து அந்த ரகசியத்தை கூற தொடங்கினான்..

       கயலும் ஆதிராவும் தங்கள் திட்டம் வர்க் அவுட் ஆகியதை நினைத்து ஒருத்தருக்கொருத்தர் பார்த்து கண்சிமிட்டி அர்த்தமாக புன்னகைத்து அவன் கூறப் போகும் ரகசியத்தை கேட்க தங்கள் காதுகளை நன்று தீட்டிக் கொண்டனர்.

        "அது என்னன்னா.. உங்களுக்கு தான் தெரியுமே சித்துக்கு புக்ஸ்னா ரொம்ப பிடிக்கும் அடிக்கடி லைப்ரரிக்கு போவான்னு.. அன்னைக்கு ஒரு நாள் இவன் வீட்டுல வச்சிருந்த புக்க எதேர்ச்சையா பார்த்தேனா ஏகப்பட்ட லெட்டர்ஸ்.. நா அத பார்த்ததும் அப்பிடியே ஷாக் ஆகிட்டேன்.. அவன மிரட்டி உருட்டி கேட்டதுல லைப்ரரில இதுவரை முகத்த கூட பார்க்காத ஒரு பொண்ண சார் லவ்வாம்.. அவ குடுத்தது தான் இது எல்லாம்னு சொன்னான்.. இந்த உண்மைய அவன்கிட்ட இருந்து கரக்குறதுக்குள்ள எனக்கு நாக்கே தள்ளிட்டு..

      பட் இந்த மேட்டர் என்னை தவிர இப்போ உங்களையும் சேர்த்து யாருக்கும் தெரியாது.. அதுதான் அந்த முட்டாப்பயல இத வச்சி மிரட்டி எனக்கு சம்பளமில்லாத அப்ரன்டிஸ்ஸா வச்சிருக்கேன்.. எப்புடி..."  என அவன் சித்துவை பற்றி உளறியது மட்டுமில்லாமல் இல்லாத கோலரை தூக்கி விட கயலும் ஆதிராவும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

           ஆனால், இங்கு ஒரு மனமோ அபி கூறிய செய்தியில் உறைந்தே போனது. கண்களில் நீர் திரண்டிருக்க நான் கேட்டது கனவா இல்லை நினைவா என மனம் குழம்ப வேகமாக சமையலறை நோக்கி சென்றாள் துர்கா. அவள் எதிர்ப்பார்த்தவன் அங்கு இல்லாததால் ஏதோ ஒரு யோசனையுடன் சற்று திறந்திருந்த தன் அறைக்கதவை தள்ளியவள் கண்கள் மின்ன வாயில் வார்த்தை வராமல் தடுமாற உதட்டில் தோன்றிய புன்சிரிப்புடன் தன்னை மீட்டெடுத்து "சித்.." என அழைத்தாள்.

       அவளுக்கு நேரெதிரில் அவளுக்கு சற்றும் குறையாத உணர்ச்சிகளோடு கன்னத்தினூடே வழியும் கண்ணீரோடு ஒரு கையில் புத்தகமும் மறுகையில் ஒரு கடிதத்தையும் வைத்திருந்தவன் அவள் அழைப்பில் சட்டென நிமிர்ந்து பார்த்தான். அவன் உதடுகள் உள்ளத்தில் அளவிட முடியாத சந்தோஷத்துடனும் கண்களில் புதிதாக பூத்த காதல் உணர்வோடும் "துகி.." என முணுமுணுத்தது.

       அவ்வளவு தான் இது கனவல்ல தன் எதிரில் நிற்பவன் தான் இதுவரை முகத்தை கூட பார்த்திராத வெறும் எழுத்துக்கள் மூலம் உணர்வுகளை பரிமாறிக் கொண்டு மனதளவில் எவனிடம் தன் காதலை சொல்ல தயங்கினேனோ எவனுடைய முகத்தை பார்கவும் குரலை கேட்கவும் ஏங்கினேனோ அவனே 'துகியின் சித்'.

       இரு கண்களில் கண்ணீர் அருவியாக பெருக உதடு துடிக்க அந்த அறையை விட்டு வேகமாக அழுது கொண்டே வெளியேறியவளை கண்ட அபி, சித்து, ஆதிரா மூன்று பேரும் குழம்பித்தான் போனர்.ஆனால் நம் சித்தார்த்தோ தன் தேவதையை நேரில் பார்த்த மனநிறைவுடனும் அவளுக்கு தன் மீதான காதலையும் தெரிந்து கொண்ட சந்தோஷத்திலும் காற்றில் மிதந்தான்.

துர்கா அந்த அறையிலிருந்து அழுது கொண்டு வெளியேறியதை கண்டு குழம்பிய அபி அவ்வறையினுள் என்ன ஏதோ என தெரிந்து கொள்ள நுழைய அங்கு சித்து இரூப்பதை கண்டு,
         "டேய்ய்.. என்னடா ஆச்சு.. உன்ன ஜூஸ் தானே போட சொன்னேன்.. அந்த பொண்ண என்ன டா பன்ன.." என கேட்க,

சித்து  'டேய் மச்சி..' என்று கத்திக் கொண்டு அவனை கண்களில் கண்ணீரோடு இதழ் முழுக்க சிரிப்புடன் அணைத்தது மட்டுமன்றி அவன் கன்னத்திலும் சந்தோஷ மிகுதியில் நச்சென்று ஒரு முத்தம் வைக்க அவனின் இந்த திடீர் செயலில் விதிர்த்துப் போன அபி அவனிடமிருந்து விலகி தன் கன்னத்தை பரபரவென தேய்த்துவிட்டு,
          "அட கருமம் பிடிச்சவனே.. என் கன்னத்த ஏன் டா எச்சி பன்ற.. என்ன தான் டா ஆச்சு.." என வினவ,

சந்தோஷத்தில் தொண்டைக்குழி அடைத்தாலும் திக்கித்திணறியாவது அவனிடம் கூறி முடித்தான் சித்தார்த். இதைக் கேட்ட அபி,
       "அடப்பாவத்த.. இதுங்கள்ள ஒருத்தியா.. சிக்கிட்டான்யா சிவனான்டி.." என கேலி செய்தாலும் அவனுக்கும் ஒரே குஷி தான்.

      இதை அபி கயல் ஆதிராவிடமும் சொல்ல அவர்களுக்கும் தன் நண்பி அழுது கொண்டு சென்றதற்கான காரணம் புரிந்து அவள் ஆசைப்பட்ட வாழ்க்கை அவளுக்கு கிடைத்தால் போதும் என நினைத்துக் கொண்டனர். ஆனால், தங்களிடம் சொல்லும் வரை இது பற்றி அவளிடம் கேட்க கூடாது என்றும் முடிவு எடுத்தனர்.

     மனம் முழுக்க சந்தோஷத்துடனும் இதழ்விரிய புன்னகையுடனும் தன் முன்னால் வைத்திருந்த புத்தகத்தை பார்த்தவாறு வண்டியை செலுத்தியவனின் நினைவுகள் அவனுக்கும் அவனின் துகிக்குமான எழுத்து மூலமான சந்திப்புகளில் மூழ்கி போனது.

ஆறு மாதங்களுக்கு முன்,

     வாழ்க்கையில் கஷ்டங்கள் என்பார்கள்
           கஷ்டமே வாழ்க்கையாக அமைந்ததே என் வாழ்க்கையின் வினோதம்..
      
     கொடுப்பதற்கு எதுவுமில்லை
                இழப்பதற்கு ஏதுமில்லை
     கேட்பதற்கு நாதியில்லை
                 தனித்து விடப்பட்டேன் இந்த இருள்மய உலகத்தில்..

       மனம் முழுக்க கனத்தோடு லைப்ரரியில் தன் கவலையை எழுத்திலே வடித்து ஒரு கவிதையை எழுதிய துர்கா அதையும் தன் ஜொப் ஓஃபர்(Job offer) லெட்டரையும்  ஏதோ ஒரு யோசனையில் புத்தகத்தில்  வைத்து லைப்ரரியில் வைத்துவிட்டு சென்று விட அதன் பின் வந்த சித்து எதேர்ச்சையாக அந்த புத்தகத்தை எடுத்தான்.

         வாசிக்க எடுத்த புத்தகத்தில் இருந்த காகிதம் சித்துவின் கண்களுக்கு தென்பட அதை வாசித்தவனின் மனதுக்கு அவள் கண்ணீரால் கலங்கியிருந்த எழுத்துக்களும் ஒவ்வொரு வார்த்தைகளிலும் புதைந்துள்ள அர்த்தமும் புரிய வைத்தது அவளுடைய சோகத்தை.

ஓஃபர் லெட்டரில் அவள் பெயரை பார்த்தவன் சிறு சிரிப்புடன்,

       தனிமை நிரந்தரமில்லை
               கஷ்டங்கள் நிலைப்பதில்லை
      உன் இருள் உலகத்திலிருந்து  வெளிவர
              'என்றும் உனக்காக நான்' என்ற வார்த்தை போதுமாடி கண்மனி..

     ஏதோ ஒரு எதிர்ப்பார்ப்பின் பெயரில் தனக்கு தெரிந்த ஆறுதல் வார்த்தைகளை கவிதையில் அவன் வடித்து தன் பெயரையும் குறிப்பிட்டிருக்க, அக் கடிதத்துடன் ஜொப் ஓஃபர் லெட்டரையும் பார்த்து எப்பிடியும் இதை எடுக்க வர வாய்ப்புள்ளது என சரியாக ஊகித்து  இரண்டையும் அப்புத்தகத்திலேயே வைத்து தான் எடுத்த இடத்தில் வைத்தான்.

      தன் லெட்டரை தேடி வந்த துர்கா தான் வைத்த இடத்திலேயே அப்புத்தகம் இருப்பதை கண்டவள் ஒரு பெருமூச்சு விட்டு அதனை பார்க்க தன் லெட்டருடன் புதிதாக மடித்து வைக்கப்பட்டிருந்த தாளை பார்த்தாள்.  அதில் தன் மனதுக்கு இதமளிக்கும் வார்த்தைகளை கண்டவள் ஏதோ ஒரு உந்துதலில் இன்னொரு தாளில் தன்னை அறிமுகம் செய்தது மட்டுமன்றி அவ் ஆறுதல் வார்த்தைகளுக்கான நன்றியையும் தெரிவித்தாள்.பின் ஒரு எதிர்ப்பார்புடன் அப்புத்தகத்தை பார்த்த சித்துவிற்கு ஒரே துள்ளல் தான்.

         ஃபேஸ்புக்(Facebook) , இன்ஸ்டக்ரம்(instagram) என பல சோஷியல் மீடியா ப்ளாட்ஃபோம்ஸ் அவர்களை  சுற்றி  இருந்தும்  இவர்களின் உரையாடல் இவ்வாறு அப்புத்தகத்தினூடே கடிதத்தின் மூலம் தொடர்ந்து செல்ல, தொலைபேசி எண்ணையோ தங்கள் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான விடயங்களையோ பகிர்ந்து கொள்ளாது தம் உணர்வுகளையும் மனநிலைகளையுமே பகிர்ந்து கொண்டனர் இருவரும்.

          ஒரு கட்டத்தில் முகமே பார்த்திராத இருவருக்குள்ளும் காதல் பூக்க இதை முதலில் சொல்ல எண்ணிய துர்கா அவனுக்கான தன் முதல் காதல் கடிதத்தை எழுதினாள். அதுவும் முதன்முதலாக அவள் சித்துவுடன் பைக்கில் லைப்ரரி சென்ற அந்த நாள் தான்..  ஆனால் எதை எதையோ  யோசித்து சித்து வருவதற்குள் கடிதத்தை புத்தகத்தில் வைக்காது ஏதோ முடிவு எடுத்தவளாக அந்த புத்தகத்தையும் கையோடு சேர்த்து எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டாள்.

      அதன்பின் வந்த சித்து எதிர்ப்பார்புடன் அப்புத்தகத்தை தேட அது அந்த உரிய இடத்தில் இல்லாமல் போக லைப்ரரியனிடம் விசாரித்தான். அது துர்கா என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பது பார்த்து அவனுக்கு 'அவள் தானோ..' என குழப்பம் ஏற்பட்டாலும் அதை தெளிவுபடுத்தி கொள்ளவே இத்தனை நாள் ஆருத்ராவின் வீட்டிற்கு வரும் சமயம் துர்கா தனது புத்தகங்களை  வைத்துள்ள கபோர்டில் தேட நினைத்தான். அவளிடம் நேரில் கேட்கும் தைரியம் இல்லை.. ஆனால், துர்கா அவள் அறையில் நுழைய விட்டால் தானே..

      இன்று ஏதோ அபி புன்னியத்தில் சமையலறை பக்கம் சென்றவன் அந்த அறையில் யாருமில்லாததை பார்த்து அப்புத்தகத்தை தேட அவன் தேடல் அவன் கண்களில் சிக்கியது.
 
      அதைவிட அதனுள் இருந்த கடிதத்தை பார்த்தவனுக்கு மனது சந்தோஷத்தில் திளைக்க கூடவே  குழப்பத்தையும் தத்தெடுத்தது. அதில் அவன் துகி தன்னை காதலிப்பதாக எழுதிய காதல் கடிதம் இருக்க ' இந்த துர்கா தான் என் துகியா இல்ல.. ஜஸ்ட் இந்த புக்க படிக்க எடுத்துகிட்டு வந்துட்டாளா..' என்ற குழப்பத்தில் இருந்தவனுக்கு துர்காவுடைய 'சித்..' என்ற அழைப்பே மொத்த குழப்பத்தையும் தவுடு பொடியாக்கியது.
அவனுடைய துகி மட்டுமே அவனை அழைக்கும் பிரத்யேக அழைப்பு அல்லவா..

        நடந்ததையெல்லாம் நினைத்துக் கொண்டு தன் தேவதையை கண்டுபிடித்த பூரிப்பில் சென்றவனது காதில் அந்த பாடல் வரிகளே கேட்டது.

     கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்
           காதல் முகம் கண்டு கொண்டேன்
    விரல் தொடும் தூரத்திலே
           ஏ வெண்ணிலவு கண்டு கொண்டேன்...

  
இரண்டு நாட்கள் கழித்து கிரிஷை வேட்டையாட தங்கள் வேட்டையை தொடங்கினர் நம் நாயகிகள்.. நாயகிகளின் இன்னொரு அவதாரத்தை பார்த்து விக்கித்துப் போய் நின்றனர் நம் நாயகர்கள்..
    
  
❤தொடரும்..❤
----------------------------------------------------------------        

        Friends innaiki ud epidinnu marakama unga comments a solluga..  innaiki udla irundha kavithai na try pnnathu thaan.. namakku kavithai ellam eludha waradhu just try pannean😁😁  so edhaachum mistakes irundha enaya mannichu frnds..😄

https://www.sahaptham.com/community/tamil-novels-jade-javid/%e2%9d%a4%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b4/#post-8560

❤ZAKI❤

 

Zakiya


ReplyQuote
Jade Javid
(@jadejavid)
Trusted Member Writer
Joined: 7 months ago
Posts: 68
30/07/2020 3:58 am  

           ❤அத்தியாயம் 18❤

இரண்டு நாட்கள் கழித்து,
   இரவு பதினொரு மணியளவில்,

         "காய்ஸ்(Guys) இது என்ன இடம்.. இன்னைக்கு நைட் கிரிஷ தூக்குறதுன்னு சொன்னிங்க.. ஆனா நாம இங்க என்ன பன்னிகிட்டு இருக்கோம்.."  - என காட்டுக்குள் முன்னால் நடந்து சென்றுக் கொண்டிருந்த பெண்களிடம் ஆர்யன் கேட்க,

        "முதல்ல நாம இந்த இருட்டுக்குள்ள எங்க போயிகிட்டு இருக்கோம்னு கேளு டா.. இந்த இடமே ஒரு மார்கமா இருக்கு.." - என ஹரி சுற்றும் முற்றும் பார்த்தவாறு கூறினான்.

      "எல்லாரும் கொஞ்ச நேரம் அமைதியா இருக்கீங்களா.. எங்க பின்னாடியே வாங்க அதுவே போதும்.. சும்மா நொய்நொய்னு கேள்வி கேட்டுகிட்டு.." - என ஆருத்ரா கடுப்படிக்க,

     "ஏம்மா உன் பாட்டுக்கு நீ போற.. எங்களுக்குல்ல நடந்து கால் வலி உயிர் போகுது.. ஒரு கிலோ மீட்டர் தள்ளியே வண்டிய நிறுத்த சொல்லிட்ட.. அங்கிருந்து எங்க போறோம்னு கூட தெரியாம உன் பின்னாடி தானே வந்துகிட்டு இருக்கோம்.."  என சித்து பாவமாக சொல்ல,

      "எல்லாம் சேஃப்டிக்கு தான் சித்.. அதோ அங்க பாருங்க ஒரு பங்களா தெரியுதுல்ல.. அங்க தான் நாம போறோம்.. அந்த கிரிஷையும் இங்க தான் வர வைக்கனும்.." என துர்கா சொல்ல,

     "இந்த காட்டுக்கு நடுவுல இப்பிடி ஒரு பங்களாவா.." என ஆதி ஆச்சரியமாக பார்த்தான்.

     "ஹேய்ய்.. இது அந்த பேய் பங்களால்ல.. நா கேள்விபட்டிருக்கேன்.." என அபி சொல்ல, "வட்.." என ஹரி கத்திக் கொண்டு சட்டென திரும்பி பீதியோடு அபியை பார்க்க,

ஹரியை பற்றி புரிந்த கொண்ட ரியா உடனே,
     "நிறைய பேர் அப்பிடி தான் நினைச்சிருக்காங்க.. பட் அப்பிடி எல்லாம் எதுவும் இல்ல.. அந்த வதந்தி கூட எங்ளுக்கு நல்லது தான் செஞ்சிருக்கு.. அந்த ராட்சசன்களுக்கு இந்த இடம் ஒரு நரகம் மாதிரி.." என கண்ணில் அனல் தெறிக்க ரியா கூறிக் கொண்ருக்கும் போதே அந்த பங்களாவின் வாயிலின் அருகில் வந்துவிட்டனர் அனைவரும்..

பெண்கள் அனைவரும் உள்ளே சென்று அதன் மாடிக்கு செல்ல,
       "பாருங்க டா இதுங்க புத்திய.. கொலை பன்ன காட்டுக்கு நடுவுல ஒரு பங்களாவையே தேடி கண்டுபிடிச்சிருக்குங்க.. தொழிலே இதான் போல.. நோ கமன்ட்ஸ் சிம்ப்ளி வேஸ்ட்.." என ஹரி கேலி செய்து கிசுகிசுக்க, மற்றவர்களும் அவன் பேச்சில் வாயை பொத்தி சிரித்துக் கொண்டு அவர்கள் பின்னால் சென்றனர்.

         அங்கு அனைவரும் ஒரு பெரிய அறைக்குள் செல்ல, அதற்குள் இருந்தவற்றை பார்த்து திகைத்து தான் நின்றனர் ஆண்கள் அனைவரும். ஒரு நீண்ட பெரிய மேசையில் மூன்று கம்ப்யூட்டர்ஸ், அதன் பக்கத்திலே ஒரு வட்ட மேசையில் கத்தி குறடு  என சில உபகரணங்கள் இருக்க, ஒரு பக்க சுவற்றில் ஆர்னவ் ஹரிஷ் கிரிஷ் மூவரின் புகைப்படங்கள் அவர்கள் தொடர்பான விடயங்கள் எழுதி வைத்த குறிப்புகள் ஒட்டப்பட்டிருக்க,  அந்த அறையே பார்ப்பதற்கு த்ரில்லர் படங்களில் வருவது போன்று காட்சியளிக்க அது இவர்கள் அடிவயிற்றில் ஒரு கிளியை தான் ஏற்படுத்தியது. ஆண்களின் வெளிறிய முகமே காட்டியது அவர்கள் இப்படி ஒரு அமைப்பை சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை என்று.

     உள்ளே சென்ற ஆருத்ரா தன் பிஸ்டலை அங்கிருந்த வட்ட மேசையில் வைத்துவிட்டு கயல் ரியாவுடன் கணினிகளுக்கு முன் போடப்பட்டிருந்த கதிரையில் அமர, மூவரும் கம்யூட்டரை ஓன்(On) செய்து அதில் தங்களது வேலைகளை ஆரம்பித்தனர்.அவர்கள் பின்னால் இருந்த ஆர்யன், ஆதி, ஹரி தான் புரிந்தும் புரியாமலும் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

     அங்கு மேசையில் தூர்காவும் ஆதிராவும் கிரிஷை பதம் பார்க்க தேவையானதை ரெடி செய்துக் கொண்டிருக்க அவர்கள் எடுத்து வைக்கும் பொருட்களை பார்த்த அபியோ
'ஆத்தீ.. இதுங்ககிட்ட எதுக்கும் ஜாக்கிரதையா தான் இருக்கனும்.." என மனதில் நினைக்க,

     சித்துவோ, 'துகி என்கூட பேசும் போது இவ இப்பிடி ஒரு பொண்ணான்னு நினைக்கவே தோணல.. ஆனா, இவ இந்த மாதிரி மாறி இருக்கான்னா ஏதோ ஒன்னு நடந்திருக்கு..அது என்னவா இருக்கும்.." என யோசித்துக் கொண்டிருந்தான்.
----------------------------------------------------------------

அதே சமயம்,
   பப்பில்(Pub),

          இன்று தான் தன் உயிர் தன் கையில் இருக்கப்போகும் கடைசி நாள் என்பதை கூட அறியாது இனி ஒட்டு மொத்த வாழ்நாளுக்கும் சேர்த்து வைத்து குடித்து முழு போதையில் அரைகுறை ஆடை அணிந்த பெண்களுடன் நடனமாடிக் கொண்டிருந்தான் கிரிஷ்.

         பின் ஒரு ஸோஃபாவில் அணைத்தவாறு ஒரு பெண்ணுடன் அமர்ந்தவன் அவளிடம் தன் லீலைகளை தொடங்க அவன் ஃபோன் ரிங் ஆனதில் நடப்புக்கு வந்து தொலைபேசி திரையை பார்க்க உச்சகட்ட போதையில் அது அவன் கண்களுக்கு புலப்படவுமில்லை. அருகிலிருந்தவள் மேல் சரிந்தவாறு எப்பிடியோ ஃபோன் அழைப்பை ஏற்று காதில் வைத்தவன் மறுமுனையில் கேட்ட குரலில்,

       "இப்போ எதுக்கு டா எனக்கு கோல் பன்ன.. போனவன் அப்பிடியே போக வேண்டியது தானே.." என கோபத்தில் வாய் குளறியபடி பேசினான் கிரிஷ்.

மறுமுனையில் ஆர்னவ்,
       "டேய்.. பப்புல இருக்கியா.. எத்தனை தடவ சொல்றது உனக்கு.. நமக்கு இப்போ நேரம் சரியில்ல வீட்ல இருன்னு.. கேட்க கூடாதுன்னு முடிவே பன்னிடியா.." என கத்த,

       "உனக்கென்ன டா.. நீ தான் என்கிட்ட கூட சொல்லாம அமெரிக்கா போயிட்ட.. கேட்டா ஏதேதோ காரணம் சொல்ற.. இனி தேவையில்லாம என் விஷயத்துல தலையிடாத.." -கிரிஷ்

     "உன் சேஃப்டிக்கு தான் டா சொல்றேன்.. ஹரிஷ கொன்ன அந்த கில்லர்ஸ்ஸயே இப்போ வரைக்கும் கண்டு பிடிக்க முடியல.. எனக்கு அந்த டிபார்ட்மன்ட் ஆளுங்க மேலயும் நம்பிக்கை இல்ல.. அந்த கில்லர்ஸ் ரொம்ப அலெர்ட்டா எல்லாம் பன்னிருக்காங்க டா ஒரு எவிடன்ஸ் கூடவா இல்லைன்னு எனக்கே ஆச்சரியமா இருக்கு.. அதான் சொல்றேன் பீ சேஃப்.."  - என ஆர்னவ் அவனுக்கு புரிய வைக்க முயல,

       "உன்ன காப்பாத்திக்க தானே நீ ஓடி ஒழிஞ்ச.. என்னை ஒன்னும் நீ பாத்துக்கு தேவையில்ல.. மைன்ட் யுவர் ஓன் வர்க்.. நா செத்தாலும் உனக்கு என்ன ****.. வை டா ஃபோன.." என கிரிஷ் கெட்ட வார்த்தையில் திட்டிவிட்டு தொலைபேசியை துண்டிக்க,

     மறுமுனையில் ஆர்னவோ "டேய்ய்.. டேய்ய்.." என கத்தி விட்டு அவன் கோலை கட் பன்னி விட்டதை உணர்ந்து தலையிலடித்துக் கொண்டு, ' இன்னைக்கு ஏதோ தப்பா தோணுதே.. பாடிகார்ட்ஸ்ஸோட போன்னு சொன்னாலும் கேட்க மாட்டான்.. இவன என்ன தான் பன்றது.." என கோவத்தில் தரையில் காலை உதைத்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.

    இங்கு கிரிஷை வழக்கம் போல் அவன் கார் ட்ரைவர் கைத்தாங்கலாக அழைத்து வந்து காரின் பின்பக்க சீட்டில் சாய்த்து படுக்க வைத்து வண்டியை எடுத்தார்.
---------------------------------------------------------------

       "சித்து அன்னைக்கு அந்த ச்சிப் ஓட ஒரு மினி கேமராவும் தந்தன்ல அதையும் நா சொன்ன மாதிரி கரெக்டா ஃபிக்ஸ் பன்னிங்களா.." -ஆருத்ரா கேட்க,

      "அதெல்லாம் பக்காவா பன்னிட்டோம்ல.." என கோலரை தூக்கி விட்டான் சித்து.

அவனுக்கு ஒரு மெல்லில சிரிப்பை கொடுத்தவள் ரியாவிடம்,
       "ரீ என்னோட டேப்(Tab)"  என்று அவள் புறம் பார்வையை திருப்பாது கையை மட்டும் நீட்ட அவளும் மொனிடர்லயே (Monitor)  பார்வையை பதித்தவாறு அதனை அவள் கையில் கொடுக்க அதில் தன்னுடைய வேலையை ஆரம்பித்தாள் ஆருத்ரா.

        அதில் அவள் வேலையை தொடங்கிய சிறிது நேரத்தில் அங்கு அந்த காரில் பொருத்தியிருந்த கேமரா இயங்க ருத்ரா முன்னால் இருந்த மொனிட்டர் ஸ்க்ரீனில்(Screen) கிரிஷுடைய கார் சென்றுக் கொண்டிருந்த பாதை கேமரா வழியாக இங்கு திரையில் தெரிய பின் அவனுடைய காரின் கன்ட்ரோலும் அவளுடைய டேபில் தெரிந்தது.

இதை பார்த்த ஐந்து ஆண்ளும் 'இதுங்களுக்கு இவ்ளோ அறிவா..' என்ற ரீதியில் திகைக்க, ஆர்யனோ,
        "ஆரு ஒன்னு கேட்ட தப்பா நினைக்க மாட்டியே.. நீ என்ன படிச்சிருக்க.." என தன் சந்தேகத்தை கேட்க,

  ஆருத்ரா வேலையில் கவனமாக இருந்ததால் அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாது இருக்க ஆருத்ராவை பற்றி தெரிந்த ஆதிரா,
       "எதிக்கல் ஹேகிங் (Ethical hacking) " என்று சொன்னாள்.

     இதைக் கேட்ட ஆர்யனோ 'வாவ்வ்..' என ஆருத்ராவை சுவாரஸ்யமாக பார்க்க ஆரம்பித்தான். அவளுடைய கண்களின் கருமணிகள் மொனிட்டரிலும் டேபிலும் மாறி மாறி அலை பாய அவளுடைய கவனத்தை கலைக்கும் விதமாக சிறு முடி கற்றைகள் அவள் கட்டியிருந்த பொனிடெய்லிலிருந்து விடுபட்டு முகத்தில் விழுந்து கன்னத்தில் உறவாட அதை காதோரம் ஒதுக்கி ஒதுக்கி விட்டவாறு தன் வேலையை செய்துக் கொண்டிருந்தாள் ஆருத்ரா.

        அதை ரசித்த ஆர்யன் அவள் அமர்ந்திருந்த கதிரையில் தன் கைகளை ஊன்றி பின்புறம் இருந்தவாறு அவளுடைய முடிக்கற்றையை அவள் கன்னத்திலிருந்து காதோரம் உரசியவாறு ஒதுக்கி விட திடீரென அவன் ஸ்பரிசத்தில் உடல் சிலிர்த்தவள் அவனை திரும்பி கண்கள் விரிய நோக்க அவனோ எதுவும் நடக்காதது போல் குறும்பான சிரிப்போடு வேலையை பார்க்குமாறு கண்ணால் சையை செய்தான். அவன் ஸ்பரிசத்தால் தன்னுள் எழுந்த   உணர்ச்சியை கட்டுப்படுத்தவே ஆருத்ராவிற்கு சிறிது நேரம் சென்றது.

அருகில் கயலோ கீபோர்ட்டில் விரல்களை கொண்டு சில தட்டுகளை தட்ட அவள் முன்னால் இருந்த ஸ்க்ரீனில் அந்த பப்பிலிருந்து இவர்கள் இருக்கும் இடம் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் வீதி பாதுகாப்பாக பொருத்தப்பட்டிருக்கும் சிசிடீவி கேமராக்களின் காட்சி தெரிய அதைப்பார்த்த ஆதி,
        "ஏய்ய்.. இத எப்பிடி ஹேக் பன்ன இதெல்லாம் ரொம்ப செக்யூரால (Secure)  வச்சிருப்பாங்க.." என ஆச்சரியமாக கேட்க,

அவனை அசட்டையாக ஒரு பார்வை பார்த்தவள்,
       "எனக்கு இதெல்லாம் சல்ப மேட்டர்..  தட்டுவோம் தூக்குவோம்.." என கெத்தாக சொல்ல,

      "எப்ப பாரு தூக்குறது வெட்டுறது குத்துறது.. நா தெரியாம தான் கேக்குறேன் நீ பொண்ணு தானா.." என நக்கலாக பார்த்தபடி கேட்க,

     "அதுல உனக்கு என்னடா சந்தேகம் சிடுமூஞ்சி.." என கயல் கடுகடுக்க,

     "ச்சே..ச்சே.. சந்தேகம்னுலா  இல்ல.. உன்ன போய் சந்தேகப்படுவேனா.. கன்ஃபோர்மே பன்றேன் நீயெல்லாம் பொண்ணே இல்ல.. ராட்சசி.." என ஆதி கயலை வார, அவனை மூக்கு விடைக்க  முறைத்துக் கொண்டிருந்தாள் கயல்.

    "காய்ஸ் பீ சீரியஸ்.." என்ற ஆருத்ராவின் குரலில் அமைதியான கயல் தன் வேலையை தொடங்க ரியாவோ ஆருத்ராவை அர்த்தமான புன்னகையுடன் பார்த்தவாறு,
   "ருத்ரா உன் வேலையை காட்டு" என சொல்ல, அவளும் அதே அர்த்தமான இதழோர புன்னகையுடனும் தன் விரல்களால் டேபில் புகுந்து விளையாட ஆரம்பித்தாள்.

     கிரிஷுடைய ட்ரைவர் காரை செலுத்திக் கொண்டிருக்க திடீரென வண்டி நின்றதில் குழம்பிப் போனவர் மீண்டும் ஸ்டார்ட் செய்ய கொஞ்சம் முன்னால் நகர்ந்து மீண்டும் கார் நிற்க, என்ன ஆச்சோ ஏதாச்சோன்னு அவர் பதறி வண்டியை ஆராய, அவர் ஸ்டியரிங்கை பிடிக்காமலேயே அது தானாக சுழன்று முன்னாடி பின்னாடி என கார் சென்று அவருக்கு விளையாட்டு காட்ட அவர் பயத்தில் உறைந்தே விட்டார்.

      அதே இடத்தில் ஒரு சுற்று சுற்றி கார் நிறுத்தப்பட்டதுடன் கார் கதவை திறந்து பின்னால் சீட்டில் போதையில் படுத்திருப்பவனை கூட மறந்து அந்த ஆள் அரவமற்ற சாலையில் வண்டியை நட்ட நடு ரோட்டில் அப்பிடியே போட்டுவிட்டு கால் பிறடியில் பட அவ்விடத்தை விட்டு ஓடியே விட்டார் அந்த டிரைவர்.

இதைப் திரையில் பார்த்த ஹரி,
        "அந்த ட்ரைவர் பத்தி முன்னாடியே தெரிஞ்சி வச்சிருக்கீங்க போல ஏதோ பேய்க்கு பயந்த மாதிரி சம்பளம் கொடுக்குறவனயே அம்போன்னு விட்டுட்டு தலை தெறிக்க ஓடிட்டான்.."

      "அவன பத்தி தெரிஞ்சிக்காமலா இருப்போம்.. அவன் கிரிஷோட ஃபேமிலிக்கு  விசுவாசமான ஆளு.. ஆனா, பேய் பிசாசு இதுக்கெல்லாம் ரொம்பவே பயம்.. இந்த மாதிரி விஷயத்துல எல்லாம் நம்பிக்கையும் அதிகம்.. அதான் கொஞ்சம் ஆட்டம் காட்டின உடனே பின்னாடி இருக்குறவனையும் மறந்து ஓடியே போயிட்டான்.. இப்போ கிரிஷ் தனியா வசமா சிக்கிட்டான்.." என துர்கா சிரிப்போடு  சொல்ல,

    ஆருத்ரா அவனுடைய வண்டியை இங்கிருந்தே செலுத்த ஆரம்பிக்க கயலோ அனைத்து சிசிடிவி கேமராக்களின் செயற்பாட்டையும் செயலிழக்க செய்ய இவர்களின் ஒவ்வொரு அசைவையும் ஆண்கள் வியப்போடு தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.

     "எல்லா கேமராஸையும் ஹேக் பன்னி டீஎக்டிவேட்(Deactivate) பன்னிட்டியே.. இந்நேரம் ஏதோ பிரச்சினன்னு தெரிஞ்சிருக்கும்.. அவங்க உங்கள கண்டுபிடிச்சிட்டா.." என அபி கேள்வியாக சந்தேக பார்வையுடன் வினவ,

     "அதெல்லாம் எங்கள அவ்வளவு ஈஸியா கண்டுபிடிச்சிற முடியாது.. எங்களோட திறமை அப்பிடி.." என இல்லாத கோலரை  தூக்கி விட்டாள் ஆதிரா.

     "அதான் எங்களுக்கு இதெல்லாம் யாரு பன்றாங்கன்னு தெரியுமே.. இன்கேஸ் நாங்க உங்கள போட்டு கொடுத்துட்டா.." என புருவத்தை உயர்த்தி அபி கேட்க, உடனே மற்ற நான்கு ஆடவர்களும் அவனை ஒரு முறைப்போடு எச்சரிக்கை பார்வையோடு நோக்கினர்.

       "எங்கள போட்டு கொடுத்துட்டு எங்ககிட்ட இருந்து உங்களால தப்பிச்சிற முடியுமா.. நாங்களும் சும்மா தான் உங்கள விட்டுறுவோமா.." என துர்கா ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்கி வினவ,

உடனே அபி பேசி சொதப்புவதற்கு முன் சித்து குறுக்கிட்டு,
       "அது.. ஹான்.. அதானே.. உங்கள மாட்டி விட்டுட்டு உங்ககிட்ட இருந்து நாங்க தப்பிச்சிற முடியுமா என்ன..  பெரிய ஆளுங்களையே ஈஸியா போட்டு தள்ளுரீங்க.. நாங்கெல்லாம் எம்மாத்திரம்.. இவனுக்கு ஒன்னுமே தெரியல துகி.. " என திக்கித்திணறி சமாளிக்க, 'அது' என்ற பார்வையுடன் ஆதிரா துர்கா திரும்பிக் கொண்டனர். அப்போது தான் உணர்ந்த அபியோ சித்து சமாளித்ததை நினைத்து 'அப்பாடா..' என ஒரு பெருமூச்சை விட்டுக் கொண்டான்.

கிரிஷுடைய கார் கண்ணாடி வெளியிலிருப்பவர்களுக்கு உள்ளே இருப்பவர்களை பார்க்க முடியாதது போல் இருப்பதும்  இவர்களுக்கு வசதியாக போக, வீதியில் பிறருக்கு சந்தேகம் எழாதவாறு குறுக்கு வழியில் லாவகமாக தன் டேப் வழியே காரை செலுத்தி இவர்களின் வாகனம் நிறுத்தப்பட்ட இடத்தையும் தாண்டி சற்று தொலைவில் அவனுடைய வாகனத்தை நிறுத்தியவள் சித்து அபியின் புறம் திரும்பி,
         "இப்போ போய் அவன கூட்டிட்டு வாங்க.. எங்க வண்டி பார்க் பன்னியிருக்கிற பொய்ன்டையும் தாண்டி இந்த ஃபோரெஸ்ட்குள்ள வாரதுக்கான ரோட்ல இருந்து கொஞ்சம் தள்ளி தான் அவன் வண்டியை நிறுத்தியிருக்கேன்.. சீக்கிரம் அவன கூட்டிகிட்டு வாங்க.. யாரும் கவனிச்சிறாம பாத்துகோங்க.." என ஆருத்ரா அவள் பாட்டிற்கு பேச,

அபி ரெடியாக இருந்தாலும் சித்துவோ திகைத்து,
      "முடியவே முடியாது.. கரடிக்கு வாழ்க்கப்பட சொன்னாலும் என் கழுத்த தாராளமா நீட்டுவேனே தவிர அந்த நாய் பக்கத்துல போகவே மாட்டேன்.. " என அன்று நடந்த சம்பவத்தை நினைத்து இவன் கதறினான்.

இதைக் கேட்ட அனைவரும் 'க்ளுக்' என சிரித்து விட தங்களை முறைத்துப் பார்த்தவனிடம் ஒரு கர்ச்சீஃபை தூக்கி போட்ட ரியா,
       "இதோ இத உன் சேஃப்டிக்கு வச்சிக்கோ.. ஓல்ரெடி போதையில தான் இருப்பான் அப்பிடியும் அவனுக்கு உன்ன அடையாளம் தெரிஞ்சி அவன் ஆளுன்னு ஓவரா உணர்ச்சிவசப்பட்டு எதாவது உன்கிட்ட சில்மிஷம் பன்னுனான்னு வை இத வச்சி ஒரே அமுக்கா அமுக்கிறு மயங்கிருவான்..  தாங்களுக்கு இந்த ஆயுதம் போதுமா இல்ல.. இன்னும் ஏதாவது வேணுமா.."  என சிரிப்பை அடக்கிக் கொண்டு கேட்க,

அந்த கர்ச்சீஃபை ஒருமுறை பார்த்தவன் 'இந்த சில்வண்டு எல்லாம் என்னை கலாய்க்கிற நிலைமைக்கு கொண்டு வந்துட்டியே டா பாவி.. இதுக்காகவே உன்ன மூனு மிதி மிதிக்காம விட மாட்டேன்..' என கிரிஷை மனதில் வறுத்தெடுத்தவாறு விறுவிறுவென வெளியே செல்ல அபியும் பின்னாலே சென்றான்.

       அது காட்டை சுற்றியுள்ள பகுதி என்பதால் அங்கு வீடுகளோ கடைகளோ பெரிதாக இல்லை. அதுவும் இவர்கள் வண்டியை நிறுத்தியுள்ள பகுதி இந்த நடு ராத்திரியில் ஆள்அரவமற்று வெறிச்சோடியே காணப்பட காரின் அருகில் சென்றவர்கள் அவனை கைத்தாங்கலாக பிடித்து வெளியே எடுக்க கிரிஷோ அந்த போதையில் ஏதேதோ குளறியபடியே இருந்தான்.

     எரிச்சலடைந்த சித்து அவன் மூக்கில் மயக்கமருந்து கர்ச்சீஃபை வைத்து மூட அவன் மயங்கியவுடன் இருவரும் அவனை குண்டுகட்டாக தூக்கிக் கொண்டு தங்களின் இடத்தை நோக்கி வந்தனர். அவர்கள் காரிலிருந்து கிரிஷை வெளியேற்றியவுடன் மீண்டும் காரை செலுத்திய ஆருத்ரா அந்த சாலையில் இருந்ததற்கான தடையமே இல்லாமலிருக்க அவன் காரை வேறொரு சாலையில் இந்த காட்டிற்கு எதிர்திசையில் நிறுத்தி வைத்தாள்.

        இரண்டு மணி நேரம் மயக்கத்திலேயே இருந்தவன் மயக்கத்திலிருந்து தெளிந்து தன் கருமணிகளை இமைக்குள் அங்கும் இங்கும் சுழலவிட  தலை வேறு பயங்கரமாக வலி எடுத்ததால் முகத்தை சுழித்தவாறு கண்களை மெதுவாக திறக்க அதற்குள் அவன் மேல் ஒரு வாலி தண்ணீரை ஊற்றினாள் கயல்.

      மொத்த போதையும் இறங்கி பதறியடித்து கண்களை திறந்தவன் தன் உடலை அசைக்க முடியாது இருப்பதை உணர்ந்து கீழே குனிந்து பார்க்க அவன் கண்டது தன் கை கால்கள் கட்டப்பட்டு ஒரு சேரில் தான் அமர்த்தப்பட்டுள்ளதை தான்..  அதிர்ச்சியாக நிமிர்ந்தவன் எதிலிருந்த ஆடவர்களை  'நீங்களா..' என்ற கேள்வியோடு நோக்கினான்.

❤தொடரும்..❤
---------------------------------------------------------------
      
        Innaiki ud epidinnu marakama unga comments a solluga friends..❤ 

https://www.sahaptham.com/community/tamil-novels-jade-javid/%e2%9d%a4%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b4/#post-8560

 

❤ZAKI❤
     

 

Zakiya


ReplyQuote
Jade Javid
(@jadejavid)
Trusted Member Writer
Joined: 7 months ago
Posts: 68
31/07/2020 4:52 am  

          ❤அத்தியாயம் 19❤

         தன் முன்னால் நின்றிருந்த ஆண்களை 'நீங்களா..' என்ற கேள்வியோடு கிரிஷ் நோக்குவதை உணர்ந்த ஆர்யனோ அவன் சந்தேகப்பார்வையை பெண்கள் பார்பதற்கு முன் வேகமாக சென்று அவனுடைய முகத்தில் தன் முறுக்கேறிய இரும்பு கைகளால் நான்கு குத்து விட அவனுடைய மூக்கும் பல்லும் உடைந்து இரத்தம் பீறிட்டு வந்து வலியில் அலற தொடங்கினான்.  அவனுடைய கழுத்தை ஆர்யன் நெறுக்க அவனுக்கோ விழி பிதுங்கி மூசுமுட்ட பின் அவனுக்கு வாயிலிருந்து வார்த்தை வந்தால் தானே..

     இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஆருத்ராவோ இவர்களால் இவனுக்கு ஏற்பட்ட கசப்பான நிகழ்வின் காரணமாகவே கிரிஷை பார்த்ததும் தன் மொத்த கோபத்தை அவன் மீது வெறித்தனமாக காட்டுகிறான் என தப்பாக புரிந்து கொள்ள, ஆனால் ஆர்யன் ஏன் அவனை பேச விடாது அடித்தான் என்பது நம் இளங்காளைகள் மாத்திரம் அறிந்த உண்மையே..

      ஆர்யனின் கையை பிடித்து தட்டிவிட்ட ஆருத்ரா,
        "இனிமே நீங்க இங்க இருக்க வேணாம்.. இதுக்கப்றம் என்ன பன்னனுமோ அத நாங்க பாத்துக்குறோம்.. நீங்க வெளிய போங்க.." என கூற,

      "ஹெலோ நாங்க எதுக்கு வெளிய போகனும்.. அதெல்லாம் முடியாது.. ஆத்தீதீ அவன் என்னா வெயிட்டு தெரியுமா அவன தூக்கிட்டு வந்தது நானு.. அதனால நாங்க எங்கயும் போக போறது இல்ல இங்க தான் இருப்போம்.." என அபி சொல்ல மற்றவர்களும் அவனுக்கு ஆமா சாமி போட்டு 'போக முடியாது' என அடம்பிடித்தனர்.

        "இதுங்க என்னைக்கு நாங்க சொல்றத கேட்டிருக்குதுங்க.. என்னவோ பன்னி தொலைங்க.." என கயல் கோபத்தோடு கூறிவிட்டு நகர பெண்களும் ஒரு பெருமூச்சை விட்டு தங்களின் வேட்டையில் கவனமாகினர்.

      ஆர்யன் அடித்த அடியில் வலி தாங்காது சோர்ந்து போன கிரிஷ் ஆடவர்களை பார்த்தவாறு ஏதோ கூற வர அவனால் பேச முடிந்தால் தானே.. வெறும் காற்று மட்டுமே வந்தது. ஆர்யன் அவனுடைய கழுத்தை நெறித்த நெறியில் ஒரு வித வலியும் எடுக்க இயலாமையில் முகம் சுழித்து தலை குனிந்தவன் முகத்தில் 'தான் இனி உயிரோடு இருக்க வாய்ப்பில்லை..' என புரிந்தது போல் பயம் அப்பட்டமாக தெரிந்தது.

     கிரிஷின் முன்னால் வந்து முட்டி போட்டு அமர்ந்த ஆருத்ராவுக்கோ தன் மனக் கண்ணில் சில நிழற்படங்கள் வந்து செல்ல கோபத்தில் அவள் மனம் எரிமலை குழம்பாய் கொதித்தது. கண்கள் சிவப்பேற கிரிஷுடைய கையை பிடித்து தன் அருகில் இழுத்தாள்.தொடுகையை உணர்ந்து கிரிஷ் அவளை நோக்க அவளுடைய முகத்தில் தெரிந்த அனலே அவனுக்கு பீதியை கொடுக்க அவனுடைய கை கால்கள் பயத்தில் நடுங்கின.

முகமெல்லாம் வியர்த்து போய் உடல் நடுங்க அமர்ந்திருந்தவனை பார்த்தவாறு ஆருத்ரா "இவனுக்குன்னு ஸ்பெஷலா வச்சத கொண்டு வா " என இதழோர வெற்றிப் புன்னகையுடன் சொல்ல அவளின் கையில் குறடை கொடுத்து துர்கா நகர ஆருத்ரா தன் மொத்த கோபத்தையும் அவன் விரல்களில் காட்ட ஆரம்பித்தாள்.

       கிரிஷை சுற்றி நான்கு பெண்களும் அவனை கொலைவெறியுடன் நோக்க கிரிஷோ பயத்தில் உறைந்து 'என்னை விட்டுறுங்க..' என்று கூட சொல்ல முடியாது அவர்களிடம் கெஞ்சவும் முடியாது வார்த்தை வராமல் ஆர்யனின் அடி, இவர்களின் தாக்குதல் என வலியை பொறுக்க முடியாது கண்களில் நீரோட கதறத் தொடங்கினான்.
ஆண்களோ தோழிகள் ஐவரையும் கண்கள் விரிய எழுச்சிலை விழுங்கியவாறு ஒருவித கலவரத்தோடே பார்த்துக் கொண்டிருந்தனர்.

கிரிஷுடைய இடது கையை அழுத்தமாக பிடித்தவாறு ஆருத்ரா,
     "உனக்கு எங்கள தெரியாதுல்ல.. ம்ம்.. நீ பன்ன பாவத்தோட பிரதிபலன் தான் நாங்க.. நீ என்ன குடிச்சே செத்துறலாம்னு முடிவு பன்னிட்டியா.. உன்னையே மறக்குற அளவுக்கு உள்ள தள்ளுற.. எங்க சந்தோஷத்தை அழிச்சிட்டு அவ்வளவு சீக்கிரம் எங்க டோர்ச்சர(Torture) அனுபவிக்காம போய் சேர்ந்திடலாம்னு நினைச்சியா.. ம்ம்.." என கூறியவாறு அவனுடைய ஒரு விரலை குறடால் நசுக்கி வெட்ட அவன் கதறிய கதறலை விட அவனின் அறுக்கப்ட்ட விரலிலிருந்து இரத்தம் வெளியேறியது.

அவனுடைய வலது கை விரல்களை அவனை பார்த்துக் கொண்டே புன்னகைத்தவாறு மென்மையாக தடவி விட்டு தன் கையில் இருந்த மற்றொரு குறடால்,
       "பொண்ணுங்கன்னா உனக்கு போதைப் பொருளா டா.. இந்த விரல் தானே அவ கதற கதற கொஞ்சம் கூட பாவமே பார்க்காம அவளுக்கு வலிய கொடுத்திச்சு.. இதே விரல் தானே டா பல பொண்ணுங்களோட வாழ்க்கைய அழிச்சிச்சு கதறுடா நாங்க பார்க்கனும் நல்லா அனுபவி.." என்று அவனது விரல்களை சிரித்தவாறு கயல் அறுக்க,

       இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஹரியோ அதிர்ச்சியிலும் பயத்திலும் தன் அருகிலிருந்த சித்துவின் மீது மயங்கியே சரிந்து விட இதை கவனித்த ரியா அவனிடம் ஓடி வந்து அவனது கன்னத்தை தட்டி 'இவனெல்லாம் திருத்தவே முடியாது..' என பெருமூச்சு விட்டவாறு சித்துவிடம் இவனை மற்றொரு அறைக்கு அழைத்து சென்று அவன் பக்கத்திலே இருக்குமாறு கூற சித்துவும் சரி என்று தலையசைத்து விட்டு ஹரியை தாங்கி பிடித்தவாறு அந்த அறையை விட்டு வெளியேறினான்.

   பின் கிரிஷை கட்டிப்போட்டிருந்த நாற்காலியில் பின்புறமாக கைகளை ஊன்றிக் கொண்டு தன் கையில் வைத்திருந்த கத்தியை அவன் கழுத்தின் பின்புறம் வைத்து அழுத்தியவாறு அதிலிருந்து கசியும் இரத்தத்தை பார்த்துக் கொண்டே,
      "என்ன டார்லிங் வலிக்குதா.. எனக்கும் அப்பிடிதானே இருந்திருக்கும்..  எத்தனையோ பொண்ணுங்கள தொட்டு நாசமாக்கின அதே கையோட எவ்வளவு தைரியம் இருந்தா என்னையும் தொட்டிருப்ப..  எனக்கு எப்பிடி இருந்துச்சு தெரியுமா.. உன்ன இப்பிடி கதற வச்சி பாக்குற இந்த நாளுக்காக தான் டா வெயிட் பன்னேன்.. இன்னும் கதறு.." என கத்தியால் அவன் பின் கழுத்தை கிழித்தாள் ஆதிரா.

       துர்காவும் ரியாவும் தங்களுடைய மொத்த கோபத்தை அவனுடைய கால்களில் காட்ட  ஐந்து பெண்களும் அவனுடைய உடலை குத்தி கிழித்தனர். அவனோ வலியை பொறுக்க முடியாது கதறி கதறி ஒரு கட்டத்தில் இரத்தம் அதிகமாக வெளியேறி அவன் இதயத்துடிப்பு நிற்க, அவன் துடித்து இறப்பதை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அவன் இறந்த மறுநிமிடமே தரையில் அமர்ந்து கதறி அழத் தொடங்கினர்.

     இவ்வளவு நேரம் அவர்களின் ஆக்ரோஷத்தை திகைத்து பார்த்துக் கொண்டிருந்த ஆர்யன், ஆதி, அபி  இப்பொழுது இவர்கள் கதறியழுவதை பார்த்து 'என்ன மாதிரியான பெண்கள் இவர்கள்..' என நினைத்து செய்வதறியாது திணறித்தான் நின்றனர்.

     அழுதால் மனதில் அழுத்தியுள்ள பாரம் குறையும் என இவர்களும் சமாதானப்படுத்தாது அமைதியாக இருக்க மங்கைகளின் அழுகையோ நின்றபாடில்லை. ஒரு கட்டத்தில் ஆருத்ராவின் அழுகையை காண முடியாது ஆர்யன் அவள் அருகில் சென்று அமர்ந்து அவள் தலையை வருட, தன்னவனிடத்திலே தனக்கான ஆறுதல் எனும் ரீதியில் அவனை தாவி அணைத்து கதறி அழ தொடங்கினாள் அவனவள்.

        அவனும் எதுவும் வார்த்தையால் சமாதானம் சொல்லவில்லை.. அவளும் எதுவும் கூறவில்லை வெறும் அழுகை மட்டுமே... அவனும் அவளை மென்மையாக அணைத்தவாறு அவள் முதுகை நீவி விட, அவனுடைய அணைப்பில் ஒரு இதத்தை உணர்ந்தவள் அழுகை மட்டுபட பின் தான் இருக்கும் நிலை உணர்ந்து அவனிடமிருந்து மெதுவாக விலகினாள்.

        ஆர்யன் ஆருத்ராவை மெதுவாக எழுப்பி அவளது நண்பிகளை கண்களால் சைகை காட்ட அதைப் புரிந்து கொண்டவளோ தன் தோழிகளின் அருகில் சென்று கண்ணீரை துடைத்தெறிந்து நால்வரையும் அணைத்து ஆறுதல்படுத்த அவர்களும் தங்களின் நண்பியின் அணைப்பில் தங்களுடைய வேதனையை ஒதுக்கினர்.

       இதைக் கவனித்துக் கொண்டிருந்த ஆதிக்கும் அபிக்கும் தங்களின் மனம் கவர்ந்தவர்களின் அழுகை மனதை பிசைய ஆனாலும் எதுவும் கூறாது அவர்களை பார்த்தவாறே நின்றிருந்தனர்.

     "நீங்க இனி வீட்டுக்கு போங்க.. இவன் உடம்ப என்ன பன்னனும்னு நீங்க நினைச்சிங்களோ அத நாங்க பாத்துக்குறோம்.."  என ஆர்யன் தோழிகள் ஐவரையும் நோக்கி சொல்ல, அவர்களும் எதுவும் கூறவில்லை.  சரி என தலையசைத்து விட்டு வெளியேற அவர்களை அவர்கள் வீட்டில் விட ஆதியை அவர்களுக்கு துணையாக அனுப்பிய ஆர்யன் அபி சித்து ஹரியுடன் அடுத்து செய்ய வேண்டி காரியங்களை செய்ய விரைந்தான்.
-------------------------------------------------------------

         கிரிஷ் பொதுவாக கெஸ்ட் ஹவுஸிலே தங்கிக் கொள்வதால் அவன் வீட்டிற்கு வராததை அவன் அம்மா ராதிகா பெரிதுபடுத்தவில்லை. கிரிஷிற்கு அப்பா இல்லை அம்மா மட்டுமே.. அவனுடைய அம்மா ராதிகா சமுதாயத்தில் முக்கிய புள்ளி. பெரிய தொழிலதிபர்.

       தொழில், பணம் என்று அதிலே முழுமூச்சாக இருந்ததால் கிரிஷை கவனிக்கவே இல்லை என்பதை விட அவனுடன் பேச கூட அவருக்கு நேரம் இருந்ததில்லை என்றே கூறலாம். தன் மகனுக்கு நடந்தது அறியாது எப்பொழுதும் போல் அவரும் இருந்து விட அவருடைய மகனின் உடல் ஒரு நாள் பூராக அந்த நகரத்தில் குப்பைகள் குவியும் இடத்தில் பாதி அழுகியும் அழுகாமலும் பல வெட்டுக் காயங்களோடு இரத்தக் கிளறியாக கிடந்தது.
---------------------------------------------------------------

ஒரு நாள் கழித்து,
       அன்று இரவு,

          தனது ஃபார்ம் ஹவுஸிற்கு (Farm house) பின்னாடியுள்ள காட்டுப் பாதையில் பயத்தில் விழி கருமணிகள் அங்கும் இங்கும் உருள, கைகள் நடுங்க தலை தெறிக்க ஓடிக் கொண்டிருந்தான் ஆரவ். ஒரு கட்டத்தில் முடியாமல் மூச்சு வாங்க கைகளை முட்டியில் ஊன்றியவாறு பெரும் மூச்சுகளை விட்டுக் கொண்டிருந்தவன் சற்று நேரத்திற்கு முன் நடந்ததை யோசிக்க ஆரம்பித்தான்.

      அவன் தான் ஆரவ் அரோரா. ஆர்னவின் சித்தப்பா ஜெகன் அரோராவின் மகன். ஆர்னவ் கிரிஷ் ஹரிஷ் மூவர் செய்யும் அனைத்து கெட்டதிலும் இவனுக்கும் பங்கு உண்டு. ஏதோ தப்பித்தவறி நம் சிங்கப் பெண்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தில் இவன் தொடர்புபடாமல் போய்விட்டான்.

     ஹரிஷ் சாவின் போது இவன் வெளியூரில் இருந்ததால் அவனுக்கு முடிவு கட்ட நினைத்தவர்களிடம் அன்று தப்பித்து விட்டான். ஆனால், விதியின் விளையாட்டு இன்று ஒரு நவநாகரீக மங்கையுடன் தன் ஃபார்ம் ஹவுஸில் கூடலில் இருந்தவன் அறியவில்லை இன்றே தனக்கான இறுதி நாளென்று.

    அவனுடன் கூடலில் இருந்தவள் சட்டென தனக்கு வந்த ஃபோன் ரிங்கில் அவனை தன்னிடமிருந்து விலக்கி அழைப்பை ஏற்று காதில் வைத்தாள். மறுமுனையில் என்ன கேட்கப்பட்டதோ ஒரு இதழோர குறுஞ்சிரிப்பை சிந்தியவள் 'ரெடி' என்று மட்டும் கூறி அழைப்பை துண்டித்து விட்டு கட்டிலிலிருந்து எழுந்து தனது ஆடைகளை அவசர அவசரமாக அணிய ஆரவோ அவளையே புரியாமல் பார்த்தான்.

       பின் ஆரவ் கட்டிலிலிருந்து எழுந்து அவளருகில் வர, கதவை படாரென்று திறந்து கொண்டு வந்தனர் இருவர். 'யார் இவர்கள்' என்று அவன் புரியாமல் நோக்க, அந்த இருவரில் ஒருவனோ ஆரவையே அழுத்தமாக பார்த்தவாறு அந்த யுவதி கையில் சில பண கட்டுகளை வைத்து,
       "தேங்க்ஸ் ஃபோர் யுவர் ஹெல்ப்.. இப்போ இவன நாங்க கவனிச்சிக்கிறோம்.."
  என சொல்ல,

அவளோ பண கட்டுகளை வாய் பிளந்து பார்த்து விட்டு ஆரவை நோக்கி,
      "எல்லாம் உன்னால தான் தேங்க்ஸ் ஹனி.. பாய்ய்.." என குழைவாக பேசிவிட்டு அவள் பாட்டிற்கு செல்ல,

ஒரு நிமிடம் 'இங்க என்னதான் நடக்குது' என பாதி புரிந்தும் பாதி புரியாமலும் அவ்விருவரையே விழி பிதுங்கி பார்த்துக் கொண்டிருந்தவன்,
       "ஏய்ய்.. ஹேய்ய்..  யா..யார்ரா நீங்கெல்லாம்.. உங்க இஷ்டத்துக்கு உள்ள வந்திருக்கீங்க.. செக்யூரிட்டி.. செக்யூரிட்டி.."  என திக்கித்திணறி பேசியவாறு பதற,

அவர்களோ அவனுடைய பதட்டத்தை கண்டு வாய்விட்டு சிரித்து,
     "நீ உன் அப்பனயே கூப்பிட்டாலும் அவனால கூட இப்போ உன்ன எங்ககிட்ட இருந்து காப்பாத்த முடியாது மிஸ்டர்.ஆரவ் அரோரா.." என மற்றொருவன் கூற,

     ஆரவோ சட்டென இருவரையும் தள்ளிவிட்டு அறையிலிருந்து வேகமாக வெளியேறியவன் தலை தெறிக்க ஓடினான். ஆனால், அவர்களோ விஷமமான புன்னகையுடன் அவன் ஓடுவதையும் தடுக்காது அவன் பின் நிதானமாகவே சென்றனர்.

     மூச்சு வாங்கிக் கொண்டே நடந்ததை நினைத்துப் பார்த்தவன் தன் முன் நிழலாடுவதை உணர்ந்து தலை நிமிர்ந்து பார்க்க தன் முன்னால் ஏளன சிரிப்புடன் நின்றுக் கொண்டிருந்த மூவரையும் 'இப்போ இவங்க யாரு..'  என்ற ரீதியில் பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

    திடீரென தன் தோளில் தொடுகையை உணர்ந்தவன் உடல் தூக்கி வாரிப்போட இரண்டு மூன்று அடிகள் முன்னால் நகர்ந்து திரும்பி  பார்க்க சற்று நேரம் முன் தன் அறைக்கு வந்த இருவர் நிற்பதை பார்த்தவனது கண்கள் ஐவரையும் பயத்துடனும் அதிர்ச்சியுடனும் மாறி மாறி நோக்கி அலை பாய்ந்தன. அந்த ஐவர் வேறு யாருமில்லை சாட்சாத் நம் கதா நாயகர்களே..

    "என்ன பாஸ்.. நீங்க எவ்வளவு பெரிய ஆளு இப்பிடி அலறுறீங்க..  பாக்குற எங்களுக்கே பாவமா இருக்கே எதுக்கு வந்தமோ அத பன்ன கூட மனசு வருதில்ல.. ச்சு..ச்சு..ச்சு.." என ஆர்யன் அவனை ஏளனமாக பார்த்து உச்சுகொட்ட,

    "டேய்ய்.. யாருடா நீங்கெல்லாம்.. நா யாருன்னு தெரியுமா டா.. என் பெரியப்பா யாருன்னு தெரியுமா டா.." என ஆரவ் பேச,

அதை குறுக்கிட்ட ஆதி,
    "போடாங்ங்.." என நிறுத்தி " உனக்கே உன்னையும் உன் பெரியப்பா புடலங்காயையும் தெரியல.. அப்றம் ஏன் டா எங்ககிட்ட கேக்குற.."  என முகத்தை சுழித்தவாறு சொல்ல,

    "ஆமா டா.. இவன் எல்லா ஒரு ஆளுன்னு  இவன இன்னைக்கு இங்க வரவைக்க அந்த மேனா மினிக்கிகிட்ட போய் பேசலாம்னு போனா அவ என்னை இவன மாதிரி நினைச்சிட்டு என் கூட சேர்ந்து குடும்பம் நடத்த  ப்ளான் போடுறா.. இதுக்காகவே இவன கொல்லனும் டா.." என சித்து ஆவேசமாக கூற,

      "ஏய்ய்.. மரியாதையா என்னை விட்டுறுங்க.. அப்றம் உங்களுக்கு தான் பிரச்சினை.. நீங்க யாருன்னு கூட எனக்கு தெரியல.. என்கிட்ட உங்க மிரட்டலெல்லாம் வச்சிகாதீங்க..இத விட மோசமா அனுபவிப்பீங்க.." என அந்த பயத்திலும் கொஞ்ச நஞ்ச தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஆரவ் அவர்களை மிரட்ட,

     "டேய்ய்.. இவன் வேற என்னை ரொம்ப படுத்துறான் டா.. நமக்கிட்ட மாட்டிகிட்டதிலிருந்து மிரட்டுறன்னு பேர்ல சினிமா டயலாக்கா பேசி காமெடி பன்னிகிட்டு இருக்கான்.." என ஹரி புலம்ப,

அவன் கூற்றில் சிரித்த ஆர்யன் பின் ஆரவை முறைப்புடன் அழுத்தமாக பார்த்து கொண்டு,
     "ஆமா.. நாங்க யாருன்னு உனக்கு தெரியாது தான்.. நீ கூட எங்க வாழ்க்கைல எதுவும் பன்னல..  ஆனா, நீ யாரோ ஒருத்தரோட வாழ்க்கைல விளையாடுனதுக்கு உனக்கான எமனா கடவுள் எங்கள ஃபிக்ஸ் பன்னிட்டாரே.. எங்களாலயும் மறுக்க முடியல பாஸ்.. வேறவழி.. தலையெழுத்தேன்னு உன் முன்னாடி நின்னுகிட்டு இருக்கோம்.."  என ஆர்யன் சொல்ல,

     "ஆமா ஆர்யா.. இவன் கதைய சீக்கிரம் முடிச்சிடு டா.. ரொம்ப நேரமா இவன் கூடவே கடல போட்டுகிட்டு இருக்கோம்.. இன்ஸ்டால என் ரஷ்யன் கேர்ள் ஃப்ரென்ட் வேற வெயிட்டிங் டா.. லேட் ஆகினா ரஷ்யன் பாஷையிலேயே பச்சை பச்சையா கழுவி ஊத்துறா..மீ பாவம் டா.." என அபி பாவமாக முகத்தை வைத்து கூற,

  இன்று தன்னை இவர்கள் விடப்போறதில்லை என புரிந்து கொண்ட ஆரவ்,
      "ப்ளீஸ் என்னை விட்டுறுங்க.. உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்னாலும் தரேன்.. நீங்க தான் என்னை கொல்ல வந்தீங்கன்னு உங்கள காட்டி கூட கொடுக்க மாட்டேன்.. நீங்க என்ன கேட்டாலும் தர நா ரெடி.. என்னை விட்டுறுங்க.." என ஆரவ் டீலிங் பேச,

அவன் அருகில் நெருங்கிய ஆர்யன்,
      "என்ன கேட்டாலும் எவ்வளவு கேட்டாலும் தருவியா.." என போலி ஆச்சரியத்தில் கேட்க,

       "ஷுவர்(Sure) கண்டிப்பா தரேன்.. எவ்வளவு வேணும் என்ன வேணும்னு மட்டும் சொல்லுங்க.." என தான் தப்பித்து விட்டதாக தவறாக புரிந்து கொண்டு ஆர்வத்தில் ஆரவ் கேட்க,

"ச்சு.. ச்சு.. ச்சு.." என அவனை பார்த்து உச்சு கொட்டிய ஆர்யன்,
      "நமக்கு வேண்டப்பட்டவங்க இப்போ உன் உயிர தான் கேட்டிருக்காங்க.. சோ.. எனக்கும் அது தான் வேணும்.. நீயே பெருந்தன்மையா என்ன கேட்டாலும் தரேன்னு சொல்லிட்ட.. அதனால நானே எடுத்துக்குறேன்.." என கூறியவன் அவன் மிரளும் பார்வையை பார்த்தவாறு தன் துப்பாக்கியால் அவனுடைய இடது பக்க நெஞ்சை துளைத்தான்.

      துப்பாக்கி சத்தத்தில் அந்த இடத்தை சுற்றி மரங்களிலுள்ள பறவைகள் அடித்து பிடித்து அலறியடித்துக் கொண்டு பறந்தன. தன் நெஞ்சை குண்டுகள் துளைத்தெடுக்க விழி பிதுங்கி அந்த இடத்துலேயே சரிந்தான் ஆரவ்.

யாரும் பார்க்காத வண்ணம் ஐவரும் அவனை தங்களின் வண்டியின் பின் டிக்கியில் போட,  உடனே ஒருவருக்கு தொலைபேசியில் அழைப்பை மேற்கொண்ட ஆர்யன்,
       "ஆரவ் இஸ் நோ மோர்.. வேலைய பக்காவா முடிச்சாச்சு.." என சொல்ல,

மறுமுனையில் என்ன சொல்லப்பட்டதோ மீண்டும் ஆர்யன்,
     "இதுல எங்க மேல சந்தேகம் வராம பாத்துக்க வேண்டியது உங்க பொறுப்பு.." என கூறியவன் மறுமுனையில் பதிலை எதிர்பாராமல் துண்டிக்க, வண்டி நேராக சென்றது கிரிஷின் உடல் போடப்பட்ட அந்த குப்பை கூவியும் இடத்திற்கு தான் அங்கு வேலையாட்கள் வராது யார் கண்ணிலும் படாததால் கிரிஷின் உடல் அப்பிடியே இருந்தது.

      கிரிஷின் உடல் போடப்பட்ட இடத்திலிருந்து சற்று தொலைவில் ஆரவுடைய உடலை போட்டவர்கள் தானே பொலிஸிற்கு அவ் ஏரியா மக்கள் போல் தகவல் சொல்லி அவ் இடத்தை விட்டு நகர்ந்தனர்.

நடு நிசி,
   ஒரு மணி போல்,

          தூக்கத்திலிருந்த கிரிஷின் அம்மா ராதிகா தனக்கு வந்த அழைப்பை அரைதூக்கத்தில் எடுத்து காதில் வைக்க மறுமுனையில் சொன்ன செய்தியில் மொத்த தூக்கமும் கலைந்து கண்கலங்க உறைந்தே விட்டார்.

❤தொடரும்..❤
-------------------------------------------------------------

         Friends innaiki ud epidinnu marakama unga comments a solluga.. ❤❤

https://www.sahaptham.com/community/tamil-novels-jade-javid/%e2%9d%a4%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b4/#post-8560

 

❤ZAKI❤
    

     

 

Zakiya


ReplyQuote
Jade Javid
(@jadejavid)
Trusted Member Writer
Joined: 7 months ago
Posts: 68
03/08/2020 7:55 am  

          ❤அத்தியாயம் 20❤

       அவசர அவசரமாக தனது தம்பி மானஸை அழைத்துக் கொண்டு மோட்ச்சரிக்கு சென்றார்.

அவர்கள் மோட்சரிக்குள் நுழைந்ததும் இவர்களுக்கு பழக்கப்பட்ட பொலிஸ் ஓஃபிசர் இவர்களிடம் வந்து,
       "மேடம், கிரிஷ் தம்பி மாதிரி தான் இருக்கு.. உடம்பெல்லாம் ஒரே வெட்டு.. அவரோட கை கால் விரல்கள அறுத்துறுக்காங்க.. நீங்க எதுக்கும் ஒரு தடவ பாத்தீங்கன்னா மோஸ்மாட்டத்துக்கு அனுப்பிடலாம்.."

     என சொல்ல உடல் நடுங்க அவர் பின்னால் சென்றார் ராதிகா. முகத்தை மூடியிருந்த வெள்ளை துணியை எடுக்க 'கிரிஷ்ஷ்...' என கத்தியவாறு கதறினார். என்ன தான் தொழில் பணம் என்று அதன் பின்னாலும் சென்றாலும் பெத்த மனம் பதறத்தானே செய்யும்..

    பின் உடல் போஸ்மாட்டம் செய்வதற்கு அனுப்பப்பட்டு ஆக வேண்டிய காரியங்களை செய்ய கிரிஷின் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. எல்லாவற்றையும் முன்நின்று செய்தது ராதிகாவின் தம்பி மானஸே. ராதிகா கிரிஷை முகத்தை திறந்த போது பார்த்தது தான். ஒரே ஒரு பிள்ளை தன்னை விட்டு பிரிந்ததை ஏற்றுக் கொள்ள முடியாது தன் அறையில் பித்து பிடித்தவர் போல் அடைந்தது தான் வெளியில் வரவே இல்லை.

     ஹரிஷின் கொலைக்கும்  கிரிஷின் கொலைக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்கிறதா என இதை விசாரிக்க ஹரிஷின் கொலை தொடர்பாக விசாரனை செய்யும் முக்கிய CBI அதிகாரிகள் இருவர் ராதிகாவின் வீட்டிற்கு வந்து ராதிகாவுடன் பேச முயற்சிக்க,
      "தயவு செஞ்சி எல்லாரும் இங்கிருந்து போயிருங்க.. என் மகனே என்னை விட்டு போயிட்டான்.. நா யார்கூடவும் எதுவும் பேச தயாரா இல்ல..  எல்லாரும் போங்க.." என ராதிகா கத்த,

அவரை சமாதானம் செய்த அவர் தம்பி மானஸ் அந்த அதிகாரிகளை தனியாக அழைத்துச் சென்று,
     "ஹரிஷ கொன்னவங்ளுக்கும் என் மருமகன கொன்னவங்களுக்கும் சம்மந்தம் இருக்கான்னு தெரியல..  ஆனா, கிரிஷ கொன்னவங்க யாரா இருந்தாலும் சரி அவங்கள உடனே கண்டு பிடிங்க..என் மருமகனோட சாவுக்கும் ராதிகாவோட நிலைமைக்கும் காரணமானவங்கள நா சும்மா விடப் போறதில்ல..." என அவர் ஆக்ரோஷமாக பேச,

     "காம் டவுன் சார்.. ஹரிஷ கொலை பன்னவங்க தான் கண்டிப்பா இதையும் பன்னிருப்பாங்க.. அதுல நோ டவுட்.. அவங்கள சீக்கிரம் கண்டுபிடிக்கிறது எங்க பொறுப்பு சார்.. நாங்க பாத்துக்குறோம்.." என அந்த CBI முதலாம் அதிகாரி சொல்ல,

    அவரும் தலையசைத்து விட்டு தன் அக்காவை பார்த்து ஆக வேண்டிய காரியங்களை செய்ய சென்றார்.
------------------------------------------------------------------

அதே சமயம்,

      அரோரா குடும்பத்துக்கும் விஷயம் சொல்லப்பட ஜெகதீஸ் அரோரா,  ஆரவின் அப்பா ஜெகன் அரோரா தங்கள் பாதுகாவலர்களுடன் மோட்ச்சரிக்கு வர தங்கள் மகன் துப்பாக்கியால் சுடப்பட்டு குப்பைகளுக்கு நடுவில் கிடந்ததை அறிந்து துடித்து விட்டனர்.

      பின் ஆரவின் உடலும் போஸ்மாட்டம் செய்யப்பட அங்கு அவனுடைய உடலில் செலுத்தப்பட்ட புல்லட் வெளியே எடுக்கப்பட்டு போஸ்மாட்டம் அறையினுள் வைத்தே மாற்றப்பட்டதை வெளியிலிருக்கும் அவனுடைய குடும்பம் அறியவில்லை.

    பின் அவனுடைய உடலும் ஆக வேண்டிய காரியங்ளை செய்ய எடுத்துச் செல்லப்பட இது முதலமைச்சர் குடும்ப விவகாரம் என்பதால் பல மீடியா காரர்களும் 'தங்களுக்கு கடுகளவு செய்தியாவது கிடைக்காதா அதை ஊதி பெருசாக்க' என வருகை தந்திருந்தனர். பாதுகாவர்கள் அவர்களை நெருங்க விடாது தடுத்து வைத்திருக்க அங்கும் வருகை தந்திருந்தனர் அந்த இரு CBI அதிகாரிகள்.

     ஆர்னவிற்கு தொடர்பு கொண்டு விஷயத்தை கூற முற்பட ஆனால், அவனையோ தொடர்பு கொள்ளவே முடியவில்லை. அதனால் வேறுவழியில்லாது அவர்களின் முறைப்படி கிரிஷின் உடலையும் ஆரவின் உடலையும் தகனம் செய்தனர் அவர்கள் குடும்பத்தினர்.
---------------------------------------------------------------

அமெரிக்காவில்,

      நன்றாக குடித்துவிட்டு மட்டையாகிருந்த ஆர்னவ் திடீரென விழிப்பு தட்ட தலைவலியில் தலையை பிடித்துக் கொண்டு எழுந்தவன் தனது தொலைபேசியை கைகளால் துளாவியே தேடி எடுத்தான்.

    ஃபோன்  ஓஃப் ஆகி இருப்பதை பார்த்தவன் அதை ஓன் செய்ய அதில் தனக்கு ஏகப்பட்ட மிஸ்ட் கோல்கள் அதிலும் தனது வீட்டில் உள்ளவர்களிடமிருந்து வந்ததை பார்த்தவன்,
      'என்ன இத்தனை கோல் பன்னிருக்காங்க.. நா ஆன்சர் பன்னலனா ஏதோ வேலைல இருக்கேன்னு எகைய்ன் கோல் பன்ன மாட்டாங்க.. இப்போ மட்டும் என்னாச்சு..'   என யோசித்தவாறே தனது தந்தையின் எண்ணிற்கு அழைக்க,

அப்போது தான் ஆரவின் உடலிற்கு செய்ய வேண்டிய காரியங்களை செய்து விட்டு அவன் தந்தை ஜெகதீஸ் அவனுடைய அழைப்பை பார்த்து தயக்கத்துடன் அழைப்பை ஏற்று காதில் வைக்க,

மறுமுனையில் ஆர்னவ்,
     "டாடி என்னாச்சு எதாவது முக்கியமான விஷயமா.. இத்தனை தடவ கோல் பன்னிருக்கீங்க.. அங்க எதுவும் பிரச்சினை இல்லையே.." என படப்படப்பாக பேச,

தன் தம்பி தன் நண்பன் இருவரும் இறந்த செய்தியை கேட்டு தன் மகன் எவ்வாறு தாங்கிக் கொள்வான் என அவர் யோசித்தவாறு ஏதும் பேசாது அமைதியாகவே இருக்க, அவருடைய அமைதி ஆர்னவிற்கு தப்பாகவே பட்டது. உடனே,
      "டாடி ஏதோ நடந்திருக்கு என்னன்னு சொல்லுங்க.. இல்லைன்னா நா இப்போவே கிளம்பி இந்தியா வருவேன்.." என அவன் சொல்ல,

அதில் பதறியவர்,
       "இல்ல ஆர்னவ் நீ வரக் கூடாது.. இங்க வாரத பத்தி யோசிச்சு கூட பார்க்காத.. இங்க நிலைமை சரில்ல.. உன் பாதுகாப்புக்கு தான் சொல்றேன்.. உன்னையும் இழக்க நா விரும்பல.." என அவர் கலங்கிய குரலில் சொல்ல,

அவர் குரலில் உள்ள கலக்கத்தை வைத்தே ஏதோ நடந்திருக்கு என்பதை ஊகித்தவன்,
      "டாடி என்கிட்ட மறைக்காதீங்க.. என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க.." என அவன் அழுத்தமாக கேட்க,

      "அது.. அது வந்து.."  என ஜெகதீஸ் திணற,

     "என்னாச்சு டாடி.."  அவன் இதயம் படபடக்க ஒரு வித பயத்துடனே கேட்க,

    "நம்ம ஆரவும் உன் ஃப்ரென்ட் கிரிஷும் உன்ன விட்டு போயிட்டாங்க டா.. அவங்கள கொன்னுட்டாங்க.." என அவர் கூறி முடிக்க,

தான் கேட்டது நிஜம் தானா என யோசித்தவன் பின் கஷ்டப்பட்டு வார்த்தைகளை கோர்த்து,
    "டாடி உண்மையா தான் சொல்றிங்களா.. அவனுங்க இரண்டுபேரும் என்னை விட்டு போயிட்டாங்களா.." என குரல் கமர ஆர்னவ் வினவ,

   "ஆமா டா.. உன்கிட்ட விஷயத்தை சொல்லி ஆரவ் முகத்த கடைசியா காமிக்க தான் உனக்கு கோல் பன்னேன் ஆனா.. உன் ஃபோன் ஓஃப்ல இருந்துச்சு.. கிரிஷோட இறப்பும் எங்களுக்கு ஏத்துக்கவே முடியல.. இங்க உன் சித்தி சித்தப்பா தான் ரொம்ப உடைஞ்சி போய்ட்டாங்க.." என அவரும் கண்கலங்க கூறிக் கொண்டிருக்க,

     தன் தம்பி தன் நண்பன் இருவரும் இறந்த செய்தியை ஏற்றுக் கொள்ள முடியாது உறைந்து இருந்தவன் பின் தன் ஒட்டு மொத்த இயலாமையும் கோபமாக மாற்றி தன் தொலைபேசியில் காட்ட அது சுவற்றில் மோதி சுக்கு நூறாக நொறுங்கியது.

    பின் அதே இடத்தில் முட்டி போட்டு அமர்ந்தவன் சிறிது நேரம் அசையாது கண்கலங்க அமர்ந்திருந்தான்.பின் சுதாகரித்து தன் இன்னொரு தொலைபேசியில் அவசர அவசரமாக தந்தைக்கு அழைப்பு ஏற்று,
     "டாடி. அவங்கள சீக்கிரம் கண்டுபிடிங்க.. அவங்களோட அடுத்த டார்கெட் நான்தான்.. என் கண்ணு முன்னாடி மட்டும் அவங்க வரட்டும் அவங்களோட சாவு என் கையில தான்.." என ஆக்ரோஷமாக கூறினான் ஆரனவ்.

     பின் முதலமைச்சர் ஜெகதீஸ் அரோரா தனது பதவி பலத்தை பயன்படுத்தி மும்பை DGP சமருடன் பேசுவதற்கு ஏற்பாட்டை செய்ய முதலமைச்சர் வீட்டில் அவரை காண வந்திருந்தார் DGP சமர். அவருக்கு வயது ஐம்பதிற்கும் மேற்பட்டதாக இருக்க அந்த வயதிலும் கம்பீரமாவே இருந்தார் சமர் IPS.

      அவரை அமர சொன்ன ஜெகதீஸ் அவருடைய ஆட்களிடம் கண் ஜாடை காட்ட அங்கு வேலை செய்துக் கொண்டிருந்தவர்களை வெளியேற்றினர் அவருடைய அடி ஆட்கள்.

    "என்ன சார்.. என்ன விஷயமா என்னை வர சொன்னிங்க.. " என ஜெகதீஸை தீர்க்கமாக பார்த்தவாறு சமர் வினவ,

    "நீங்க தான் சொல்லனும் DGP சார்ர்.. உங்க டிபார்ட்மென்ட்ல அப்பிடி என்ன தான் பன்றாங்க.. ஹரிஷ் இறந்தப்போ உங்க கைக்கு வந்த கேஸ் இப்போ இரண்டு பேர் இறந்துட்டாங்க.. ஆனா, உங்க டிபார்ட்மென்ட் ஆளுங்க கொலை பன்னவங்கள கண்டுபிடிச்ச மாதிரி எனக்கு எந்த தகவலும் கிடைக்கல என்னதான் நடக்குது.." என நக்கல் தொனியில் அடக்கப்பட்ட கோபத்தில் ஜெகதீஸ் பேச,

    "சார் கொஞ்சம் பொறுமையா இருங்க.. எங்க டிபார்ட்மென்ட்லயே ரொம்ப திறமையான ஆளுங்கள தான் ஹரிஷோட கேஸ்ஸ பத்தி விசாரிக்க நா அஸ்ஸைன்(Assign) பன்னேன். அவங்களும் விசாரிச்சிட்டு தான் இருக்காங்க.."

என அவர் பேசுவதை குறுக்கிட்ட ஜெகதீஸ்,
    "என்ன விசாரிக்கிறாங்க.. இப்போ வரைக்கும் ஒரு எவிடென்ஸ் கூடவா கிடைக்கல.." என ஜெகதீஸ் ஆவேசமாக கத்த,

     "ஹரிஷ், கிரிஷ் இந்த இரண்டு கொலையிலுமே ஒரு எவிடென்ஸ் கூட கொலை பன்னவங்க விட்டு போகல.. அதான் இந்த கேஸ்ல எங்களால எதுவும் கண்டு பிடிக்க முடியல.. பட் ஆரவ் வோட உடல்ல இருந்து எடுத்த புல்லட் அ வச்சி அது யாருன்னு கண்டுபிடிக்கிற ப்ரோசஸ் தான் போயிக்கிட்டு இருக்கு.. ரொம்ப நாள் அந்த கொலைகாரங்க எங்ககிட்ட இருந்து தப்பிக்க முடியாது.. இந்த கேஸ்ஸ எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் யாரு இதெல்லாம் பன்றாங்க இதுக்கு பின்னாடி யாரு இருக்காங்கன்னு எங்க டிபார்ட்மென்ட் ஆளுங்க கண்டுபிடிப்பாங்க சார்.." என அவர் கூற,

     "கூடிய சீக்கிரம் அந்த கில்லர்ஸ்ஸ கண்டுபிடிக்கிற வழிய பாருங்க.." என ஜெகதீஸ் கூற அவருக்கு தலையசைத்து விட்டு வெளியேறினார் DGP சமர்.
----------------------------------------------------------------

DGP ஓஃபீஸில்,
  
        தனது அலுவலகத்திற்கு வந்தவர் இந்த விவகாரம் தொடர்பாக தான் நியமித்த CBI அதிகாரிகளை அழைக்க, அவர் முன் வந்து செல்யூட் அடித்து கம்பீரமாக நின்றனர் அந்த முக்கிய இருவர்.

     "என்னாச்சு.. இந்த கேஸ்ஸ உங்ககிட்ட ஹேன்டோவர் பன்னி மாசக்கணக்காச்சு ஆனா இப்போ வரைக்கும் எந்த இம்ப்ரூமென்ட்டும் இல்லாம இருக்கீங்க.. நம்ம டிபார்ட்மென்ட் என்ன அவ்வளவு வீக் ஆயிருச்சா.."  என DGP சமர் கோபமாக கேட்க,

     "சார் நாங்ளும் இன்வெஸ்டிகேட் பன்ன தான் செய்றோம்.. பட் ஒரு எவிடென்ஸ் கூட எங்களுக்கு கிடைக்கல.. இந்த கில்லர்ஸ்ஸ பத்தி ஒரு சின்ன தகவல் கூட எங்களால கண்டுபிடிக்க முடியல சார். ஆனா கூடிய சீக்கிரம் கண்டுபிடிச்சிருவோம்.." என அந்த முதலாம் CBI அதிகாரி சொல்ல,

     "கிரிஷோட டிரைவர நம்ம கஸ்டடில வச்சி விசாரிச்சன்னு சொன்னிங்க..  என்ன சொன்னா அவன்கிட்ட இருந்து எதாவது தகவல்.." என சமர் கேட்க,

அதற்கு அந்த இரண்டாம் CBI அதிகாரி,
      "அவன எப்பிடி எல்லாம் விசாரிக்கனுமோ அப்பிடி எல்லாம் விசாரிச்சிட்டோம் சார்.. அவனுக்கு எதுவும் தெரியாது என்றத தவிர எதுவுமே சொல்ல மாட்டிக்கிறான்.. ஏதோ பேய் பிசாசுன்னு அவன் இஷ்டத்துக்கு ஏதோ உளருறான்.." என கூற,

     "என்னது பேயா.. என்ன இது சுத்த நோன்ஸென்ஸ் டோகிங் ஆ இருக்கு.." - DGP சமர்

     "ஆமா சார்.. அவன விசாரிச்சதுல கிரிஷோட வண்டி அவரோட கன்ட்ரோல்ல இல்லாம தானா மூவ் ஆகிச்சின்னு சொல்றான்.. அத பார்த்ததும் பயந்து வண்டி சடன்னா(Sudden) நின்னதும் வண்டில இருந்து இறங்கி ஓடிட்டான்னு சொன்னான்..ஆனா, அது உண்மை தான் சார் அவர் வண்டில இருந்து இறங்கி ஓடுறது அந்த ஏரியா சிசிடிவி ஃபுடேஜ்ல பதிவாகியிருக்கு.." - இரண்டாம் CBI அதிகாரி

      "அப்போ கிரிஷோட  வண்டிய டிரைவர் பன்னது யாரு.. அத பத்தி ஏதாவது தகவல் கிடைச்சதா.." -DGP சமர்

    "இல்ல சார். அந்த கார ஒரு ஏரியால தான் கண்டுபிடிச்சோம்.. கிரிஷோட உடல் இருந்த இடத்துக்கும் அந்த கார் கண்டுபிடிச்ச ஏரியாவுக்கும் சம்மந்தமே இல்ல சார்.. இரண்டும் ஒப்போசிட் சைட்ஸ்.." - முதலாம் CBI அதிகாரி

    "அதுமட்டுமில்ல சார். அந்த வண்டி அந்த ஏரியாவுக்கு போனதுக்கு எந்த தடையுமே இல்ல..கிரிஷோட டிரைவர் இறங்கி ஓடினதும் எல்லா சிசிடிவி கேமராஸ்ஸையும்  டீஎக்டிவேட் பன்னிருக்காங்க.." என இரண்டாம் CBI அதிகாரி சொல்ல DGP சமருக்கு மொத்தமாக குழப்பமே சூழ்ந்து கொண்டது.

    "அவனோட கார நல்ல ச்செக் பன்னிங்களா.. அதுல எதாவது எவிடென்ஸ் கிடைக்க வாய்ப்பிருக்கலாம் தானே.."  என DGP சமர் வினவ,

    "கிரிஷோட கார நல்ல ச்செக் பன்னிட்டோம்.. அதுல எந்த எவிடென்ஸ்ஸும் எங்களுக்கு கிடைக்கல சார்.. அவனோட கார் அந்த ஏரியாவுக்கு வந்ததே குழப்பமான ஒன்னு தான்.. " என ஆருத்ரா அந்த வண்டியில் பொருத்த சொல்லியிருந்த ச்சிப் உம் மினி கேமராவும் இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் இருந்ததை கொண்டு முதலாம் CBI அதிகாரி கூறினார்.

     கிரிஷை கொலை செய்த அன்று இரவே கிரிஷூடைய காரிலிருந்து பொருத்தப்பட்ட இரண்டும் எடுக்கப்பட்டதை பெண்கள் கூட அறியவில்லை.

     "அப்போ அந்த வண்டி எப்பிடி தான் மூவ் ஆகிச்சு.. இன்கேஸ் ஹேக்கிங் மாதிரி ஏதாவது.." என DGP சமர் குழம்பியவாறு கேட்க,

     "நோ டவுட் சார்.. இப்போ கார ஹேக் பன்ற அளவுக்கு டெக்னோலோஜி  ரொம்பவே வளர்ந்திருச்சு.. என்ட் அந்த கில்லர்ஸ் ரொம்ப செக்யூரான சிசிடிவி கேமராஸையே ஹெக் பன்னிருக்காங்க அப்பிடி இருக்கப்போ கார ஹேக் பன்றது அவங்களுக்கு பெரிய விஷயமாவே இருந்திருக்காது.."  என முதலாம் CBI அதிகாரி சொல்ல,

      "ஒகே.. நெக்ஸ்ட் ஆரவோட கேஸ்ல எனி இம்ப்ரூமென்ட்.. " என DGP சமர் வினவ,

       "போஸ்மாட்டம் பன்னும் போது ஆரவோட உடல்ல இருந்து எடுத்த புல்லெட்ட ஆய்வு செய்ய அனுப்பிருக்கோம் சார்.. கூடிய சீக்கிரம் அந்த புல்லெட்டோட சீரியல் நம்பர் ஓர்(Or) மேட்ச்சிங் டைனி மார்க்ஸ்ஸ(Matching tiny marks) வச்சி அது யாருன்னு கண்டுபிடிச்சிறலாம்.. கண்டிப்பா அதுவும் அந்த கில்லர்ஸ் ஆ தான் இருப்பாங்க.."  -இரண்டாம் CBI அதிகாரி

சற்று நேரம் மௌனமாக இருந்த DGP சமர் பின்,
       "இந்த கேஸ் ரொம்பவே கோம்ப்ளிகேட்டட் ஆ (Complicated) இருக்கு.. ஒரு எவிடென்ஸ் கூட இல்லாம ஜாக்கிரதையா ப்ளான் பன்னி எல்லாம் பன்னிருக்காங்க..  ஆனா தெரியாம ஏதோ ஒரு எவிடென்ஸ்ஸாவது விட்டுட்டு போயிருக்கலாம்.. இப்போ கிடைச்சிருக்க புல்லெட்டும் நமக்கு ஒரு நல்ல எவிடென்ஸ் தான்.. இனி அவங்க நம்மகிட்ட இருந்து தப்பிக்க முடியாது.. சீக்கிரம் அந்த கில்லர்ஸ்ஸ கண்டுபிடிச்சு கேஸ்ஸ க்ளோஸ் பன்னுங்க.."  என தீவிரமாக சொல்ல,

      "கண்டிப்பா சார் இந்த கேஸ்ஸ எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிச்சிருவோம்.." என இரு CBI அதிகாரிகளும் கூறி மீண்டும் அவருக்கு சல்யூட் அடித்து விட்டு அவ்வறையிலிருந்து வெளியேற DGP சமர் தன் மேசையிலிருந்த ஃப்ரேம் செய்யப்பட்ட புகைப்படத்தை கண்கலங்க பார்த்தார்.

இரண்டு நாட்கள் கழித்து,
       ஆர்யனின் வீட்டின் முன் முகத்தை சுழித்தவாறு நின்றுக் கொண்டிருந்தனர் நம் நாயகிகள்..

❤தொடரும்..❤
--------------------------------------------------------------

         Friends story epidi pogudhunnu marakama unga comments a solluga.. and keep supporting me guys.❤❤

❤ZAKI❤

   

    

 

Zakiya


ReplyQuote
Jade Javid
(@jadejavid)
Trusted Member Writer
Joined: 7 months ago
Posts: 68
04/08/2020 6:58 am  

         ❤அத்தியாயம் 21❤

இரன்டு நாட்கள் கழித்து,

        "ருத்ரா இந்த வீடு தானா.. சரியா தானே ட்ரேஸ் பன்ன.." என ஆதிரா வாசலில் கிடந்த குப்பைகளை முகத்தை சுழித்துக் கொண்டு பார்த்தவாறு சந்தேகமாக கேட்க,

      "இதே வீடு தான்.. அவங்க நம்ப வச்சி லொகேஷன் ட்ரேஸ் பன்னதுல இந்த லொகேஷன் தான் காமிச்சிச்சு.. என்ட், எனக்கு நோ டவுட். கொஞ்சம் அங்க பாருங்க.." என ஆருத்ரா ஓரிடத்தை காட்ட அங்கு அவர்களுடைய வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தது.

      இங்கு நம் வானரக் கூட்டமோ தம் துணைவிகளின் வருகையை அறியாது ஹோலில் நேற்று இரவு அடித்த சரக்கு போத்தல்கள் அங்கு ஒன்றும் இங்கு ஒன்றுமாக சிதறிக் கிடக்க கூடவே சரக்கோடு எடுத்து கொண்ட சைட்டிஷ் மிக்ச்சர் அவர்களின் முத்திலே ஒட்டியிருக்கு ஹோல் நடுவில் அங்கு ஒருவர் இங்கு ஒருவராக கிடந்தவாறு மல்லாக்காக படுத்துக் கொண்டிருந்தனர்.

திடீரென கோலிங் பெல் சத்தம் கேட்டு விழித்த ஆதி,
      "டேய்ய்.. எவன் டா அவன் காலங்காத்தால.." என்று கத்தி விட்டு பக்கத்தில் கிடந்த ஆர்யனை கண்ணை மூடியவாறே தட்ட,

       "செல்ல குட்டி தட்டுறது தான் தட்டுற.. கொஞ்சம் மெதுவா தான் தட்டி அப்பிடியே ஒரு பாட்டு பாடே.." என ஆர்யன் கூறியவாறு ஆதியின் கழுத்தை கட்டிக் கொண்டு தூங்க,

    "அரை போத சைக்கோ நாயே எழுந்துருடா.. இருக்குற கடுப்புல உன்ன தாலாட்ட வேற செய்யனுமா.. முதல்ல போய் எவன்னு பாரு டா நொய்யு நொய்யுன்னு விடாம பெல்(Bell) அடிச்சிக்கிட்டு இருக்கான்.." - ஆதி தூக்கம் கெட்டுவிட்ட உச்சகட்ட கடுப்பில் சொல்ல,

    கண்ணை கசக்கி கொண்டு எழுந்த ஆர்யன் ஹேங்கோவரில் தலையில் கைவைத்தவாறு அரை தூக்கத்தில் போதையில் அங்குமிங்குமாக ஹொலில் படுத்துக் கொண்டிருந்த தன் நண்பர்களின் கை, கால், நெஞ்சு என மிதித்து அவர்கள் தூக்கத்தில் அலறுவதை கூட பொருட்படுத்தாது கதவருகே சென்றவன் பீப்ஹோல் வழியாக வெளியே நிற்பவர்களை கூட பார்க்காது 'படார்' என கதவை திறக்க அங்கு நம் கதாநாயகிகளை எதிர்ப்பார்க்காதவன் அதிர்ந்து தான் போனான்..

      கையில்லாத பனியன், ஷார்ட்ஸ் அணிந்து கலைந்த முடி, முகத்திலும் கழுத்திலும் மிக்ச்சர் தூள்கள் ஒட்டிக்கிடக்க அவன் இருக்கும் கோலத்தை பார்த்த ஆருத்ரா அவளை மேலும் கீழுமாக கண்ணை சுருக்கிக் கொண்டு ஒரு பார்வை பார்த்தாள். அதைப் புரிந்து கொண்டவனோ எச்சிலை விழுங்கியவாறு அவர்கள் உள்ளே பார்க்காதவாறு கதவை இறுக்கமாக பிடித்த வண்ணம்,
     "என்ன ஆருமா இந்த பக்கம்.. சொல்லிருந்தா நாங்களே வந்திருப்போமே.. ஒகே.. ஒன்னும் ப்ரோப்ளம் இல்ல நீங்க அப்பிடியே வெளில வெயிட் பன்னுங்க..  நாங்க சீக்கிரம் ரெடி ஆகிட்டு வரோம்.. எல்லாரும் வெளில போய் குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கி சாப்பிடலாம்.."
    என ஆர்யன் அசடுவழிந்தவாறே ஆருத்ராவை பார்த்தவாறு சொல்ல கயலோ அவனை சந்தேகமாக பார்த்து அவன் எதிர்பாராத நேரம் கதவை வேகமாக தள்ள உள்ளே எட்டிப் பார்த்தனர் மற்ற நால்வரும்.

      ஒவ்வொருவரும் ஒவ்வொரு போஸில் படுத்துக்கிடக்க அதன் காரணத்தை அவர்ளை சுற்றியிருந்த மது போத்தல்களை வைத்து புரிந்து கொண்டவர்கள் ஒருவர் மற்றொருவரின் முகத்தை அர்த்தத்தோடு பார்த்துக் கொள்ள ஆருத்ராவோ ஆர்யனை தீயாய் முறைத்தாள் அவன் தலையை குனிந்தவாறு சற்று தள்ளி நிற்க ஐந்து பெண்களும் உள்ளே வந்தனர்.

உள்ளே வந்து வீட்டை சுற்றி முற்றி பார்த்தவர்கள் அதிர்ந்து தான் போனர்.

    "என்னடி இது.. நிஜமாவே இது வீடு தானே.. வீட்டுக்குள்ள குப்பை இருக்கா இல்ல குப்பைதொட்டி தான் வீடா இருக்கான்னு எனக்கே குழப்பமா இருக்கு.. இப்பிடி அலங்கோலமா கிடக்குது.." - என துர்கா வீட்டில் அலங்கோலமாக சிதறிக்கிடந்த உடைகள் பொருட்களை முகத்தை சுழித்தவாறு பார்த்து சொல்ல,

     "அது கூட பரவாயில்ல ஏதோ டிஃபரென்ட் பேட் ஸ்மெல் எல்லாம் சேர்ந்து புதுவித பேட் ஸ்மெல் வருது டி.. முடியல.. " - என மூக்கை பொத்தியவாறு ரியா சொல்ல,

ஒரு பக்கெட் ஃபுல்லா தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்த ஆதிரா,
     "எழுந்துருங்க டா.. குடிகார பசங்களா.." என கத்தியவாறு சித்து அபி ஆதி ஹரி நால்வர் மீதும் ஊற்றி விட பதறி அடித்துக் கொண்டு எழுந்தனர் நால்வரும்.

ஆர்யனோ விழிவிரித்து மனதில் 'இன்னைக்கு  இருக்கு.. கண்டிப்பா ஏதோ சம்பவம் இருக்கு.. நாம என்ன நடந்தாலும் அலெர்ட்டா ஆரு பக்கமே இருப்போம் அதான் நமக்கு சேஃப்..' என நினைத்தவாறு அவனின் ஆருவின் அருகில் போக அவள் திரும்பி முறைத்த முறைப்பில் பாவமாக முகத்தை வைத்தவாறு தள்ளி நின்றுக் கொண்டான்.

     திடீரென தங்கள் மீது தண்ணீர் பட பதறி அடித்துக் கொண்டு எழுந்த நால்வரும் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு நிமிர்ந்து பார்க்க அங்கு எதிரே பத்ரகாளியாக தத்தமது துணைவிகள் தங்களை முறைத்துக் கொண்டிருப்பதை கண்டனர் அதிர்ந்து விட்டனர். ஹரி,சித்து, ஆதி தங்கள் உடைகளை அவசர அவசரமாக சரி செய்துக் கொண்டு எழ,

அபியோ அப்போதும் அரை தூக்கத்தில்,
       "ஆது செல்லம் நீயா.. போ பேபி மாமா உன் மேல கோபமா இருக்கேன்.. கோஃபி கப்ஓட வந்து மாமாவ எழுப்புவன்னு பார்த்தா குழாய் சண்டைக்கு போற ஆன்ட்டிங்க மாதிரி  தண்ணி வாலியோட எதிர்ல நிக்குற.."  என அவன் பாட்டுக்கு பேச கடுப்பாகிய ஆதிரா தண்ணீர் பக்கெட்டை அவன் தலையிலே கவிழ்த்தினாள்.

    "ஹே கொஞ்மாவது அறிவிருக்கா.. இப்பிடி தான் பேச்சிலர்ஸ் இருக்குற வீட்டுக்குள்ள உங்க இஷ்டத்துக்கு நுழைவிங்களா..டீசென்ட் இல்ல.. மேனர்ஸ் இல்ல.." என பேசிக் கொண்டே சென்றவன் பின் துர்கா முறைத்த  முறைப்பில் ஜெர்க்காகி,
       "இல்ல.. வயசு பசங்க இருக்குற வீட்டுக்குள்ள வயசுப் பொண்ணுங்க நேரங்கெட்ட நேரத்துல வாரது அவ்வளவு நல்லதுகில்ல.." என இழுத்து இழுத்து மெதுவாக சொன்னவன் கண்களாலே அவளிடம் மன்னிப்பு வேண்ட,

  தூர்காவோ,
       "ஹெலோ.. குப்பை மாதிரி வீட்டை வச்சிக்கிட்டு பேச்ச பாரு.. நீங்க எங்க வீட்டுக்குள்ள வித்தை காட்டி திருட்டுத் தனமா வந்த மாதிரியா வந்தோம் டீசென்ட்டா கோலிங் பெல் அழுத்திட்டு கதவ தட்டி தான் உள்ளயே வந்தோம்.." என நொடிந்து கொள்ள

      "என்னடா வீடு இது.. ஒரு மாதிரி கேவலமான ஸ்மெல் வருது.. உண்மைய சொல்லுங்க டா வீட்ட க்ளீன் பன்னி எத்தனை வருஷம்டா ஆச்சு.." -ரியா

    "அது ஒன்னுஇல்லங்க.. நேத்து நைட் சாப்பிட்டு மிச்சம் வச்ச சாப்பாடு கெட்டு போயிருக்கும் அதோட ஸ்மெல்லு..  என்ட் சரக்கு ஸ்மெல்னு மிக்ஸ் ஆகி கெமிக்கல் ரியாக்ஷன் ஆகி புதுசா ஒரு ஸ்மெல் ரிலீஸ் ஆகி இருக்கு.. அவ்வளவு தான் வேற ஒன்னுஇல்லங்க.." என ஹரி அசால்ட்டாக சொல்ல அவன் கூறிய விதத்தில் அடக்கப்பட்ட சிரிப்புடன்  அவனை பார்த்துக் கொண்டிருந்தாள் ரியா.

    "இப்பிடி தான் சரக்கடிச்சிட்டு மட்டையாகி நேரம் காலம் தெரியாம தூங்கிட்டு இருப்பீங்களா.. மணி 11 ஆச்சு கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல.." என கயல் கடிந்து கொள்ள,

அதில் கோபமடைந்த ஆதி,
    "ஏய்.. நாங்க என்ன பன்னா உனக்கு என்ன டி.. நாங்க உன்ன இங்க வர சொன்னோமா.. விட்டா ஓவரா பேசுற.. உன் வேல என்னவோ அத மட்டும் பாரு.." என அவள் கோபமாக கத்த அவன் திடீரென கத்தியதில் கயலுக்கு கண்கள் கரித்துக் கொண்டு வந்தது.

      கண்ணீர் வெளியில் வராமல் அடக்கிக் கொண்டவள் தலையை வேறுபுறம் திருப்பி கொள்ள அதில் ஆதிக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது. அவள் எதிர்த்து பேசியிருந்தால் கூட அவன் சாதாரணமாக விட்டிருப்பான்.. ஆனால் அவள் மௌனமாக முகத்தை வேறுபுறம் திருப்பியதும் ஆதிக்கு தன்னை நினைத்தே கோபமாக வந்தது.

        கயல் ஆதி சண்டையிட்டுக் கொண்டிருக்கும் போது அந்த நேரத்தை பயன்டுத்திய ஆர்யன் மற்றவர்கள் தன்னை பார்க்காத வண்ணம் அபியை பார்த்து கண்களால் ஒரு அறையை எச்சரிக்கை பார்வை கொண்டு காட்ட அவன் பார்வையின் அர்த்தத்தை புரிந்து கொண்டவனோ மற்றவர்கள் கவனம் கயல் ஆதியிடம் இருப்பதை உறுதி செய்து கொண்டு அந்த அறைக்குள் சென்று ஆர்யன் பார்வையின் மூலம் உணர்த்திய வேலையை கச்சிதமாக முடித்து முகத்தில் எந்தவித உணர்ச்சியும் காட்டாது சாதாரணமாக ஹரி பக்கத்தில் வந்து நின்றுக் கொண்டான். ஆனால்,  இதை ஒரு ஜோடி கண்கள் கூர்ந்து கவனித்ததை அபி கவனிக்கவில்லை.இதுவே ஆடவர்களின் மீது நம் கதாநாயகிகளுக்கு சந்தேகம் எழ முதல் அடியாக இருக்குமென அவர்கள் அறியவில்லை.

அவ்வளவு நேரம் ஆரு எதுவும் பேசாமல் மௌனமாக இருப்பதை சகிக்க முடியாத ஆர்யன் அவள் அருகில் சென்று,
       "ஆரு என் மேல கோபமா டா.. இனி குடிக்க மாட்டேன் போதுமா.." என அவளை சமாதானம் செய்வதில் இறங்க,

ஆருத்ராவோ,
        "எக்ஸ்க்யூஸ்மீ(Excuse me)  மிஸ்டர் ஆர்யன் நீங்க குடிச்சா என்ன குடிக்காட்டி எனக்கென்ன.. அது உங்க பெர்சனல்.. நீங்க என்ன என் லவ்வரா இல்ல ஹஸ்பன்ட்டா.. குடிச்சிட்டீங்கன்னு உங்க கூட சண்டை போட.. ஐ டோன்ட் க்யார் .." என சாதாரணமாக முகத்தை வைத்து சொல்ல,

'அவன் மட்டும் என் கையில கிடைச்சா அந்த டேஷ் சட்னி தான்.." என மறுபடியும் இல்லாத ஆருவுடைய ஆளை அவன் மனதில் வறுக்க,

அவன் சிந்தனையை கலைக்கும் விதமாக,
     "ஆர்யன் எனக்கு ஒரு ஹெல்ப் பன்ன முடியுமா.. " என ஆருத்ரா கேட்க,

ஆர்யனோ ஆர்வமாக,
     "என்ன.. என்ன வேணும் ஆரு.. தயங்காம சொல்லு.." என கேட்க,

அவளோ அவனை கேலியாக பார்த்து,
     "இத சொல்றதுக்கு எனக்கு என்ன மேன் தயக்கம்.. டிரெக்டாவே சொல்றேன்.. இந்த வீட க்ளீன் பன்ன முடியுமா.. கொஞ்ச நேரம் இங்க நின்னாலும் இந்த வீட்டுக்குள்ள இருக்கிற மொத்த கிருமியும் என் மேல ஏறிரும்னு பயமா இருக்கு அதான்.." என சொல்ல,

அவளை பார்த்து பெருமூச்சு விட்டவன்,
    "நீங்கெல்லாம் அந்த ரூம்குள்ள இருங்க.. அது க்ளீனா தான் இருக்கும்.. இன்னும் ஹாஃப் என்ட் அவர்ல(Half and hour) எல்லாத்தையும் க்ளீன் பன்னிர்ரோம்.."
   என கூறியவன் விறுவிறுவென சென்று ஒரு கையில் துடப்பத்தையும் இன்னொரு கையில் மொப்பையும் எடுத்து வர மற்ற நான்கு ஆடவர்களும் 'இவன் என்ன டா இப்பிடி இறங்கிட்டான்..' என்ற ரீதியில் அவனை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

தன் நண்பர்களிடம் வந்தவன் ஆளுக்கொரு கையில் துடப்பம், வோர்ட்டர் பக்கெட், மொப் என கொடுக்க முதலில் முழித்த அபி பின் பொங்கியெழுந்து,
     "ஹே.. ஹே.. எங்க கையில ஏன் மேன் கொடுக்குற.. உன் ஆளு சொன்னான்னா  நீ க்ளீன் பன்னு மேன் வை அஸ்(Us).. " என வடிவேல் பாணியில் சொல்ல,

     "பன்னிகளா.. இங்க என்ன நா மட்டுமா குப்பை கொட்டுறேன்.. என்ட், என் கூட ஃப்ரென்ட் ஆன பாவத்துக்கு என் கூட சேர்ந்து பன்னுங்க டா.." என கூறிய ஆர்யன் தன் வேலையை தொடர,

     "எது உண்மையோ இல்லையோ.. இரண்டாவதா ஒன்னு சொன்ன பாத்தியா அது ஃபேக்ட்டு ஃபேக்ட்டு ஃபேக்ட்டு.." என கூறிய மற்றவர்கள் வாயுக்குள்ளேயே முணுமுணுத்தவாறு ஆர்யனோடு வீட்டை க்ளீன் செய்தனர்.

     இங்கே ரூமுக்குள் இருந்த பெண்கள் தங்கள் பொழுதை கழிக்க அந்த ரூமை சுற்றி முற்றி அலசி ஆராய அங்கே இருந்த மேசையோடு ஒட்டிய கபோர்ட்டை திறந்த ஆருத்ரா அதில் சில ஃபைல்கள் இருப்பதை பார்த்தவள் சாதாரணமாக அதனை எடுத்து புரட்ட அதிலிருந்து ஒரு புகைப்படம் ஆருத்ரவின் காலடியில் விழுந்தது.

     திடீரென கையிலிருந்து விழுந்த புகைப்படத்தை எடுத்தவள் அது என்ன என்று பார்க்க, தான் பார்ப்பது உண்மை தானா என அதிர்ந்தவாறு பார்த்துக் கொண்டிருந்தாள்.

   சில கணம் யோசித்தவள் அப்புகைப்படத்தை தன் ஃபோனில் படம் எடுத்து அப்புகைப்படத்தை அந்த ஃபைலினுள்ளே வைத்து இருந்த இடத்தில் வைத்து விட்டாள். ஆனால், அப்புகைப்படம் அவளுக்குள் ஆடவர்கள் மீது இருந்த சந்தேகத்தை அதிகரித்தது எனவோ உண்மை தான்..

    இங்கு வேலை செய்துக் கொண்டிருந்த ஆர்யனுக்கு அவன் ரகசியமாக வைத்திருந்த ஃபோனில் அழைப்பு வர நிமிர்ந்து தன் நண்பர்களையும் பெண்கள் இருந்த அறையையும் பார்க்க அவன் நண்பர்களுக்கு அவன் பார்வையின் அர்த்தம் புரிந்து போனது.

      அவர்களோ கண்ணால் தாங்கள் பார்த்துக் கொள்வதாக சொல்ல அவனோ தொலைபேசியை எடுத்துக் கொண்டு வெளியில் சென்றவன் அழைப்பை ஏற்று பேசத் தொடங்கினான்.

      "ஹெலோ.. எதாவது முக்கியமான விஷயமா.." என ஆர்யன் கேட்க,

மறுமுனையிலோ,
       "உங்க மேல சந்தேகம் வராம இருக்க புல்லட்ட மோட்ச்சரிக்குள்ள வச்சே மாத்தியாச்சு.. ஆனா, கிரிஷ்ட மாமா மானஸ்ஓட கன்(Gun) புல்லட்ட ஏன் எவிடென்ஸ்ஸா மாத்தி வைக்க சொன்னிங்க.." என அந்த நபர் கேட்க,

ஆர்யனோ,
      "தப்பு பன்னவங்க மட்டுமில்ல தப்புக்கு துணை நின்னவங்களும் தண்டனை அனுபவிச்சே ஆகனும்.. " என இறுகிய குரலில் கூற அவன் கண்கள் ஆருத்ராவின் கண்களில் தெரியும் பழி வெறியை  விட அதிக பழி வெறியில் மின்னியது.
      
மறுமுனையில்,
       "அடுத்து என்ன ப்ளான்.. ஆர்னவ்வ எப்பிடி இங்க வர வைக்கிரதா இருக்கீங்க.. " என அந்த நபர் கேட்க,

ஆர்யனோ,
        "எங்களோட நெக்ஸ்ட் டார்கெட் மிஸ்டர் ஜெகதீஸ் அரோரா.." என்று அவர் பெயரில் அழுத்தத்தை கூட்டி சொன்னவன் தோடர்ந்து,
         "அவரோட அரசியல் வாழ்க்கையை மொத்தமா அழிக்கனும்.. அப்போ அப்பாக்காக பையன் இங்க வந்து தானே ஆகனும்.. சீக்கிரம் அவன் ச்செப்டரையும்(Chapter) க்ளோஸ் பன்னிருவோம்.. " என கூறியவனுக்கு தெரியவில்லை நம் கதாநாயகிகளால் அனைத்தும் உல்டாவாக மாறப் போகின்றதென்று.

மறுமுனையில்,
         "அப்போ ஓகே மிஸ்டர் ஆர்யன்.. எத பன்னாலும் கவனமாவே காய நகர்த்துங்க.." என கூறிய அந்த நபர் அழைப்பை துண்டிக்க,

    தன் நெற்றியை நீவி விட்டவாறு சிறிது நேரம் யோசித்தவன் உள்ளே வந்து அத் தொலைப்பேசியை மறைத்து விட்டு  மீண்டும் தன் வேலையில் கவனமானான்.

❤தொடரும்❤
---------------------------------------------------------------

        Innaiki ud epidinnu marakama unga comments a solluga frnds..
         and keep supporting me❤❤

❤ZAKI❤

 

Zakiya


ReplyQuote
Vani Prabakaran
(@vaniprabakaran)
Estimable Member Registered
Joined: 1 year ago
Posts: 125
04/08/2020 6:11 pm  

Hi Zaki, sudden a intha pasanga vanthanga and girls a support panranga but nejama yaaru evanga.. Flash back story kaga waiting .. Good going 👍

one thing kekanum unga mother tongue malayalam a(sorry if I'm wrong) 


ReplyQuote
Jade Javid
(@jadejavid)
Trusted Member Writer
Joined: 7 months ago
Posts: 68
05/08/2020 7:21 am  

@vaniprabakaran

Thank u so much sisy😍  and keep reading..

Ennoda mother tongue tamil thaan sis😊

 

Zakiya


ReplyQuote
Jade Javid
(@jadejavid)
Trusted Member Writer
Joined: 7 months ago
Posts: 68
05/08/2020 7:28 am  

                ❤அத்தியாயம் 22❤

   பின், வீட்டை க்ளீன் செய்த ஆண்கள் பெண்களை ஹோலுக்கு வருமாறு அழைத்தனர். அப்போது தான் வேலை செய்ததில் ஆர்யன், ஆதி, சித்து, அபி ஃப்ரெஷ் ஆகி விட்டு வந்து களைப்பில் சோஃபாவில் அமர்ந்திருக்க,

ஹோலுக்குள் வந்து வீட்டை சுற்றி பார்த்து ஒவ்வொரு இடமாக தொட்டுப் பார்த்த துர்கா,
    "பரவாயில்லை ஏதோ பன்னிருக்கீங்க.." என சொல்ல,

    "என்னது பரவாயில்லையா... ஏம்மா இடுப்பு எழும்பு உடைய உடைய க்ளீன் பன்னிருக்கோம்.. எவ்ளோ அசால்ட்டா பரவாயில்லன்னு சொல்ற.." என அபி கூறிய விதத்தில் அனைவரும் சிரித்தே விட்டார்கள்.

    "ஹெலோ.. மணி ஒன்னு ஆச்சு சமைக்கலையா.. வீட்டுக்கு முதல் தடவை வந்திருக்கோம்.. வந்த விருந்தாளிக்கு எதுவும் சாப்பிட எல்லாம் கொடுக்க மாட்டிங்களா.." என கயல் வினவ,

'கிராதகி.. உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா..' என்ற ரீதியில் அபி, சித்து, ஆதி அவளை கண்களை உருட்டி பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஆர்யனோ,
    "அச்சோ பசிக்குதா உங்களுக்கு.. கொஞ்சம் வெயிட் பன்னுங்க.. நாங்க எதாவது சமைச்சா கொண்டு வரோம்.. வாங்க டா.." என கூறிவிட்டு அவன் பாட்டிற்கு கிச்சன் இருக்கும் பக்கம் திரும்ப,

அவன் கையை பிடித்து தடுத்த ஆதி,
  "டேய்ய்ய்ய்...." என பல்லை கடித்து கொண்டு கத்தினான்.

ஆருவோ அவர்கள் ஒவ்வொருவரின் திகைத்த பாவமான முக ரியாக்ஷன்களை வைத்தே அவர்கள் மனதில் நினைப்பதை புரிந்து கொண்டு சிரித்தபடியே,
    "பரவாயில்லை ஆர்யன்.. நீங்க யாரும் எதுவும்  பன்ன வேணாம்.. உங்களுக்கு ரொம்ப டயர்டா இருக்கும்.. நீங்க இருங்க.. நா எல்லாருக்கும் ஜூஸ் போட்டு எடுத்துகிட்டு வரேன்.. லன்ச் வெளில ஓர்டர் பன்னி சாப்பிட்டுக்கோங்க.." என சொல்ல,

      "தெய்வமே.. தெய்வமே.." என சித்து, அபி கோரஸாக அவளை பார்த்து கையெடுத்து கும்பிட்டு பாடினர்.

    "போதும் போதும் ரொம்ப தான்.. உங்க மேல அக்கறை எல்லாம் இல்ல.. உயிருக்கு உத்தரவாதம் இல்லை பாருங்க அதான்.." என கேலியாக ஆரு சொல்ல,

     "என் மானத்தை வாங்குறத்துக்குன்னே வந்து சேர்ந்திருக்கு பாரு மடையனுங்களா.." என ஆர்யன் தன் தலையிலேயே அடித்துக் கொண்டான்.

    பின் ஆரு ஜூஸ் செய்வதற்கு கிச்சன் பக்கம் போக அவள் பின்னே ஆர்யனும் செல்வதை பார்த்த சித்து அவன் கையை பிடித்து,

   "நீ என்ன அவ வாலா.. அவ பின்னாடியே போற.."  என ஒற்றை புருவத்தை உயர்த்தி கேட்க,

ஆர்யனும் அவன் போல் ஒற்றை புருவத்தை உயர்த்தி,
    "நா ஒன்னும் அவ வால் இல்ல.. ஆருவோட ஆளு.." என கூறிவிட்டு சித்துவின் கன்னத்தை கிள்ளி தலையில் தட்டி வேகமாக கிட்ச்சனை நோக்கி விரைந்தான்.

   ஹோலில் சிறிய சோஃபாக்கள் மூன்றே போடப்பட்டிருக்க  அதில் ரியா, கயல், ஆதிரா,  துர்கா அமர்ந்திருக்க ஹோலில் இருந்த டைனிங் டேபிள் நாற்காலியில் அபி, சித்து, ஆதி அமர்ந்திருந்தனர்.

     "அபி இங்க ரெஸ்ட் ரூம் எங்க இருக்கு.." என ரியா கேட்க, அபி ஒரு அறையை கை காட்டினான். ஆனால், அங்கு ஹரி இருப்பதை அவன் கவனிக்கவில்லை.

     அறையினுள் சென்ற ரியா ரெஸ்ட்ரூம் கதவை தள்ள அந்நேரம் சரியாக ஹரி உள்ளிருந்தபடி  கதவை இழுக்க இரண்டும் ஒரே சமயத்தில் நடந்ததால் அவன் இழுத்த வேகத்தில் அவன் மேலேலே விழுந்தாள் ரியா. விழுந்ததில் இருவரின் இதழ்களும் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ள இதை எதிர்ப்பார்க்காதவர்களோ அதிர்ச்சியில் கண்களை அகல விரித்து ஒருவர் விழிகளை ஒருவர் மாறிமாறி பார்த்துக் கொண்டனர்.

       இருவரின் இதழ்களும் மெல்ல பிரிய சட்டென்று சுதாகரித்துக் கொண்டு இருவரும் எழுந்து நின்றனர். ஹரிஷிற்கோ அன்று அவர்கள் கிரிஷை ஒருவழிப்படுத்தியது சரியாக டைமிங்கில் நினைவு வர,
     "அரே பகவான்.. சும்மாவே ருத்ரதாண்டவம் ஆடுவாளுங்க.. இதுல நீ பன்ன டிவிஸ்ட்ல இவ என்னை என்ன பன்ன காத்திருக்காளோ.." என மனதில் நினைத்தவாறு பீதியுடன் அவள் முகத்தை உற்று நோக்க ரியாவோ ஹரிஷை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

    இடுப்பிலிருந்து முட்டி வரையான வெள்ளை நிற டவலுடன் அப்போது தான் குளித்து விட்டு வந்ததால் தலையிலிருந்து நீர் சொட்ட சொட்ட, அவன் கட்டுமஸ்தான உறமேறிய தேகத்திலோ குளித்ததற்கு அடையாளமாக நீர் துளிகள் கிடக்க, அவன் இருந்த கோலத்தை பார்த்து சற்று முன் நடந்த திடீர் செயலும் நினைவில் வர வெட்கத்தில் அவள் இரு கன்னங்களும் குப்பென்று சிவக்க அதை மறைக்க தலையை கவிழ்த்துக் கொண்டவள் அவனை பார்க்க முடியாமல் அறையை விட்டு வேகமாக வெளியேறினாள்.

வெளியில் வந்த ரியா பேயறைந்தது போல் சோஃபாவில் சென்று உட்கார அவளை பார்த்த கயல்,
     "என்னாச்சு இவளுக்கு ஏன் ஒரு மாதிரி இருக்கா.. உள்ள போகும் போது நல்லா தானே இருந்தா உள்ள ஏதாவது பார்த்து பயந்துட்டாளா..'  என நினைத்தவாறு டிவியை ஓன் செய்ய  அதில் ஆரவ், கிரிஷ் இறந்த செய்தியே பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருந்தது.

     "இரண்டு நாளா எந்த சேனலை மாத்தினாலும் இதப்பத்தியே தான் நீயூஸ் போயிக்கிட்டு இருக்கு.." என துர்கா சலித்துக் கொண்டு சொல்ல,

    "அது ஒன்னுஇல்ல டி இவனுங்க இரண்டு பேரோட ஃபேமிலியும் மும்பையில பெரிய ஆளுங்க.. இப்பிடி லட்டு மாதிரி நீயூஸ் கிடைச்சா பத்திரிகைகாரங்க விட்டுடுவாங்களா என்ன.. அதான் செத்த இவனுங்க போட்டோவையே திரும்ப போட்டு போட்டு சாகடிச்சிக்கிட்டு இருக்காங்க.." கயல் ஏளனமாக சிரித்தபடி சொல்ல,

      "அதுசரி இந்த ஆரவ்வ எவன் கொன்னான்.. இவனுங்கள பத்தி டீடெய்ல்ஸ் கலெக்ட் பன்னும் போது ஆரவ் பத்தியும் தெரிஞ்சிச்சு ஆர்னவோட சித்தப்பா மகன் தான் இவன்.. இவன எதுக்கு கொல்லனும்.." என ஆதிரா சந்தேகமாக கேட்க,

      "இவனுங்க என்ன பெரிய மகான்களா.. இல்ல.. போராட்ட வீரர்களா நாட்டு சுதந்திரத்துக்காக போராடினாங்களேன்னு சுட்டு போட.. வேற என்ன காரணமா இருக்கும் எங்கயாச்சும் போய் அவன் வேலையை காட்டிருப்பான்.. அதான் ஒரே போடா போட்டுட்டானுங்க.." என கயல் கூற அவள் கூறிய விதத்தில் துர்கா ஆதிரா சிரித்தே விட்டனர்.

      ஆனால், இதற்கு சம்மந்தப்பட்டவர்களோ தங்களுக்கும் அவர்கள் பேசும் விஷயத்திற்கும் சம்மந்தமே இல்லை என்பது போல் தங்களின் தொலைபேசியில் முகத்தை புதைத்துக் கொண்டும் அங்கும் இங்கும் வேடிக்கை பார்த்துக் கொண்டும் இருந்தனர்.

    இங்கு ரியாவோ இவர்கள் பேச்சு வார்த்தை எதிலும் கலந்துக் கொள்ளவில்லை. அவள் நினைவு முழுக்க ஹரியுடனான எதிர்பாராத முத்தமே வந்து பாடாய்படுத்த அந்நேரம் உடை மாற்றி ஹரியும் வந்து அமர்ந்தான்.

     அமர்ந்தவன் ஓரக் கண்ணால் ரியாவை பார்க்க அவளோ அவன் வந்திருப்பதை உணர்ந்து அவன் பக்கமே பார்வையை திருப்பாது தலையை கவிழ்த்தியவாறு இருக்க அதை கண்ட ஹரியின் இதழ்களோ மெலிதாக புன்னகைத்தது. தன்னுடனான ஸ்பரிசத்தில் அவள் முகம் சிவந்து வெட்கப்பட்டதை அவள் முக சிவப்பை வைத்தே அவனும் கண்டு கொண்டான் அல்லவா..  அந்நேரம் சிறு வயதிலிருந்து தன் குடும்பம் தனக்கு சொன்னதையும் அவர்களின் ஆசையையும் மறந்தே போனான் ஹரிசரண்.
   
     இங்கு சித்துவும் துர்காவும் கண்களாலே தங்களின் காதலை பகிர்ந்து கொண்டனர். வார்த்தைகள் இல்லாத கண்களினூடான காதலும் ஒருவகை இதமான காதல் தான்.அதிலும் இருவருமே தங்களின் காதலை உணர்ந்திருக்க யார் முதலில் காதலை சொல்வது என்பதே அவர்களுக்குள் போட்டியாக இருக்க இருவரும் காதலை சொல்வதில் கண்ணாம்பூச்சி ஆட்டம் ஆடிக் கொண்டிருந்தனர்.

     "ஆமா.. என்ன திடீர் விஜயம்.. என்ட், எப்பிடி எங்க வீட்ட கண்டுபிடிச்சீங்க.. ஆர்யன் உளறினானோ.." என ஆதி கேட்க,

     "ச்சே..ச்சே.. அப்பிடி எல்லா இல்ல.. உங்க நம்பர வச்சி லொகேஷன் ட்ரேஸ் பன்னி தான் இந்த குப்பை தொட்டியை கண்டுபிடிச்சோம்.." என குறுஞ்சிரிப்புடன் துர்கா சொல்ல, 

'எரிமலை எப்பிடி பொறுக்கும்ம்...' என பேக்ரௌன்ட் மியூசிக் ஒலிக்க,
    "எங்களுக்கு தெரியாம எங்க நம்பர ட்ரேஸ் பன்னி திருட்டுத்தனமா வீட்டுக்கு வந்தத அசால்ட்டா சொல்றதும் இல்லாம எங்க கோயில குப்பை தொட்டின்னா சொல்ற.." என அபி பொங்கி எழ,

"அதானே அத எப்பிடி அப்பிடி சொல்வாங்க.." என மற்ற மூவரும் அபியுடன் சேர்ந்து கூறி பொங்கி எழுந்தனர்.

அவர்களை கேலியாக பார்த்த கயல்,
      "ரொம்ப பன்னாதீங்க டா..இந்த வீட்டுக்கு இவ்வளவு ஃபீலிங்க்ஸ் ஆகாது.. கொஞ்சம் கம்மி பன்னிக்கோங்க முடியல டா எப்பா..."  என தலையில் கை வைத்து புலம்ப,

     "ஏதோ நாலு நாளா வீட்டுக்கு வராம இருக்கீங்களே.. என்ன ஏதோன்னு நம்பர வச்சி எல்லாம் ட்ரேஸ் பன்னி வீட்ட கண்டுபிடிச்சி வந்தா வீட்ட வீடு மாதிரியா டா வச்சிருக்கீங்க.. இதுல அந்த ஸ்மெல் வேற இன்னும் அதோட எஃபெக்ட் என் மூக்க விட்டு போகல.." என ஆதிராவும் நக்கலாக கூற,

     "ஆது பேபி.. நாலு நாளா என்னை பார்க்காம ரொம்ப துடிச்சி போயிட்டியா டா.." என அபி கண்கள் மின்ன கேட்க,

'எது ஆது பேபியா.. முதல்ல இவனுக்கு ஒரு முடிவு கட்டனும்..' என மனதில் நினைத்தவாறு அவனை பார்த்து உதட்டை சுழித்தவள் முகத்தை வேறுபுறம் திருப்பி கொண்டாலும் அவளும் அவனை பார்க்காத நாட்களில் அவனின் ஆது என்ற கொஞ்சலுக்கு ஏங்கத்தான் செய்தாள்.

     இவர்கள் இவ்வாறு அரட்டை அடித்துக் கொண்டு இருக்கும் நேரம் இங்கு நம்ம ஆர்யனோ கிட்ச்சனின் மேடையில் கால்களை ஆட்டிய வண்ணம் தன்னவளை ரசித்துக் கொண்டு அமர்ந்திருக்க, அவளோ ஜூஸ் போடுவதற்கு தேவையான பொருட்களை தேடி ப்ரிட்ஜை திறந்தவள் அதில் ஆறைந்து சரக்கு போட்டில்கள் இருப்பதை பார்த்து ஆர்யனை தீயாய் முறைத்தாள்.

   அவளின் முறைப்பில் ஜெர்க் ஆனவன் தலையை குனிந்து கொண்டு காலை ஆட்டிய வண்ணம் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டான். அவனின் செய்கையில் சிரித்தவள் ப்ரிட்ஜில் இருந்த நான்கைந்து மாம்பழங்களை எடுத்து அதன் தோலை சீவி அதை வெட்ட ஆரம்பிக்க எப்போதும் போல் அவள் வேலை செய்யும் போது அவள் முன் நெற்றியில் வந்து விழுந்தது அவளின் சிறிய முடிக்கற்றைகள்.

      ஆருத்ராவோ அதனை காதோரம் ஒதுக்கி விட்டவாறு வேலை செய்ய அவளின் ஒவ்வொரு அசைவுகளையுமே பார்த்துக் கொண்டிருந்தான் இல்லை இல்லை ரசித்துக் கொண்டிருந்தான் நம் நாயகன்.

    பழத்தை வெட்டிக் கொண்டிருந்தவள் அதை ருசித்து பார்க்கும் ஆவலில் ஒரு துண்டை எடுத்து ருசித்து பார்க்க அதிலிருந்து சிறு துண்டு அவள் இதழோரம் ஒட்டிக் கொண்டது. அதை அவளும் கவனிக்காது வேலை செய்ய, அதை கவனித்த ஆர்யனோ அச்சிறு துண்டின் ருசி பார்க்கும் ஆவலில் கிட்ச்சன் மேடையிலிருந்து தாவி குதித்தவன் அவள் அருகில் வர அவனை திரும்பி என்ன என்பது போல் கேள்வியாக பார்த்தாள் ஆருத்ரா.

      அவள் கண்களையே பார்த்தவாறு அவளை அவன் இன்னும் நெருங்க ஆருவோ கண்கள் விரிய அவன் நெருக்கத்தில் செயலிழந்து அவனையே பார்த்தவாறு இருந்தாள்.

    அவளை மேலும் நெருங்கியவன் அவளை தொல்லை செய்யும் அவளுடைய சிறுகற்றை முடிகளை நெற்றியிலிருந்து காதோரம் ஒதுக்கி விட்டு அவளது இடதுபுற கன்னத்தை தன் வலக் கையால் ஏந்த,  ஆருவோ,
     "ஆர்.. ஆரா.. என்ன.. என்ன பன்றீங்க.."என அவன் செய்கையில் வார்த்தை வராமல் திக்கித்திணறி வினவ,

  அவள் பதட்டத்தை ரசித்தவன், "அது வந்து ஆரு.." என கூறியவாறே அவள் இதழோரம் ஒட்டியிருந்த சிறு பழத்துண்டை தன் இதழ்களால் சுவைத்து விழுங்கினான். அவளின் ஸ்பரிசத்தில் அவனுக்கு உணர்ச்சிகள் மேலெழ பழத்தின் தித்திப்பை ருசித்தவன் தன்னவளுடைய இதழின் தித்திப்பையும் ருசிக்கும் ஆர்வத்தில் அவள் இதழ்களுக்கு நேராக தன் இதழை உரசிக் கொண்டு வந்து அவள் இதழில் தன் இதழை வைத்து உரச ஆருவோ முதன் முறையாக உணரும் இவ் உணர்ச்சியில் கண்களை மூடிக் கொண்டாள்.

     அவளின் மூடிய விழிகளும் அவளின் மௌனமுமே அவளின் சம்மதத்தை உணர்த்த அதை புரிந்து கொண்டவனோ அவள் இதழ்களை சுவைப்பதற்கு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க போக,
     
 "டேய்.. அந்த பொண்ண என்ன டா பன்ற.." என்ற ஆதியின் குரலில் இருவரின் மோனநிலையும் கலைந்து நடப்புக்கு வந்து சட்டென்று விலகி நின்றனர்.

     ஆர்யனோ திருதிருவென முழித்துக் கொண்டிருக்க ஆருவோ தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாது வெட்கத்தில் முகம் குங்குமப்பூ போன்று சிவந்திருக்க இருவரின் முகத்தையும் பார்க்காது கிட்ச்சனிலிருந்து வேகமாக வெளியேறினாள்.

அவள் செல்வதை பார்த்த ஆர்யன் ஆதியின் புறம் திரும்பி,
     "அட கரடி பயலே.." என அவளுக்கு முத்தம் கொடுக்க முடியாது போன கோபத்தில் பல்லை கடித்துக் கொண்டு கொலைவெறியாக முறைத்து முணுமுணுக்க,

       இப்போதும் முழிப்பது ஆதியின் முறையாயிற்று.. மற்றவர்களுடன் பேசிக் கொண்டிருந்தவன் 'என்ன டா ஜூஸ் போட போறேன்னு போனவங்கள ஆளே கானோம்.. என்னன்னு தான் போய் பாத்துட்டு வந்துருவோம்..'  என நினைத்தவன் கிட்ச்சனிற்கு செல்ல,

     அங்கே ஆர்யனும் ஆருவும் நெருங்கி இருப்பதை பார்த்து திகைத்தவன்,
    'அடப்பாவத்த.. என்ன பன்னிகிட்டு இருக்குதுங்க இரண்டும்.. ஜூஸ் போட போறேன்னு சொல்லிச்சுங்க.. இங்க வந்து பார்த்தா பல்லி மாதிரி ஒட்டிக்கிட்டு நிக்கிதுங்க..'  என மனதில் நினைத்தவாறு சரியாக ஆர்யன் ஆருவின் இதழோடு உரச திடீரென கத்தி விட்டான்.

பின்னரே இருவரின் முழியையும் பதட்டத்தையும் சந்தேகமாக பார்த்தவன் ஆரு வெளியே சென்றதில் ஆர்யனின் முறைப்பை வைத்து
     'இதுங்க இரண்டுடையும் போக்கே சரியில்லையே.. ஒருவேள நாமதான் தப்பான நேரத்துல கரெக்ட்டா வந்துட்டோமா.. அச்சச்சோ..." என கன்ஃபோர்மே பன்னி விட்டான்.

சற்று பதறிய ஆதி ஆர்யனை சமாளிக்கும் விதமாக,
     "டார்லிங்.. கல்யாணத்துக்கு முன்னாடி இதெல்லாம் தப்பு மா அதான்ன்.." என இழுக்க,

ஏற்கனவே அவன் மேல் கொலைவெறியில் இருந்தவன் இப்போது அவன் பேசியதில் இன்னும் கடுப்பாகிய  ஆர்யன் அங்கு ஆரு பழத்தை வெட்டிக் கொண்டிருந்த கத்தியை அவன் மேல் விட்டெறிய அதில் திகைத்த அபி,
     "அட கொலைகார பாவி.." என கத்தியவாறு ஒரே ஓட்டமாக ஓடி விட, ஆர்யன் தான் உணர்ச்சிகளை அடக்க முடியாது படாத பாடுபட்டு விட்டான்.

     பின் அனைவரும் ஒன்று கூடி சிறிது நேரம் பேசி சண்டையிட்டு அரட்டை அடித்துக் கொண்டிருக்க தோழிகள் ஐவரும் தங்களிள் வீட்டிற்கு செல்ல ஆயத்தமானார்கள். எல்லோரிடமும் கூறிக் கொண்டு கதவு வரை சென்ற ஆரு திரும்பி ஆர்யனை பார்க்க அவன் ஒற்றை புருவத்தை தூக்கி இறக்கி அவளை குறும்பாக பார்த்து சிரிக்க அதில் மீண்டும் அவளுக்கு வெட்கம் வேறு வந்து தொலைய வேறுபுறம் முகத்தை திருப்பி சிரித்தவள் தன் நண்பிகளுடன் வெளியேறினாள். இவர்களை போல் இன்னொரு ஜோடியும் வெட்கத்தில் திளைக்கத் தான் செய்தார்கள்.. வேறு யாரு நம்ம ரியாவும் ரியாவின் சரணும் தான்.

 

❤தொடரும்❤
------------------------------------------------------------

       Innaiki ud epidinnu marakama unga comments a solluga friends..
       thanks for ur support 😍
     and keep supporting me❤

https://www.sahaptham.com/community/tamil-novels-jade-javid/%e2%9d%a4%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b4/#post-8560

 

❤ZAKI❤

 

 

 

Zakiya


ReplyQuote
Jade Javid
(@jadejavid)
Trusted Member Writer
Joined: 7 months ago
Posts: 68
06/08/2020 6:06 am  

           ❤அத்தியாயம் 23❤

    அதன் பிறகு வந்த நாட்கள் சாதாரணமாக நகர பெண்கள் தங்களது வேலைகளிலும் ஆடவர்கள் அவரவர் வேலைகளிலும் மூழ்கி கிடந்தனர்.

அன்று,
      
       தங்கள் வேலைகளை முடித்து மதிய இடைவேளையின் போது ஓஃபிஸ் கேன்டீனில் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர் நம் இளங்காளைகள்.

அப்போது ஆர்யனோ மனதில்,
     'அன்னைக்கு நாம ஆருவ கிஸ் பன்னும் போது அமைதியா தானே இருந்தா.. அவ அமைதியே அவ சம்மதத்தை சொன்ன மாதிரி தான் இருந்திச்சு.. என் மேல அவளுக்கு ஏதோ ஒன்னு இருக்கு அத அவ கண்ண பார்த்தே என்னால உணர முடியுது.. ஆனா, அவ ஓல்ரெடி ஆள் இருக்குன்னு சொல்றாளே.. அப்போ அவ கண்ணுல தெரிஞ்சது??..' என அவன் யோசனையில் உழன்றுக் கொண்டிருக்க,

திடீரென,
    "ஆமா டி நான் தான் அதுக்கென்ன இப்போ.." என்ற ஆதியின் குரலில் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தான் ஆர்யன்.

அங்கு ஆதியோ ஃபோனில் பேசிக் கொண்டு இல்லை இல்லை யாருக்கோ திட்டிக் கொண்டு அவர்கள் அமர்ந்திருந்த டேபிளில் வந்து உட்கார்ந்தவன் மற்றவர்கள் தன்னை கவனிப்பதை கூட பொருட்படுத்தாமல்,

"ஆமா டி ஆமா நா தான்.. இன்னும் பன்னுவேன் இதுக்கு மேலயும் பன்னுவேன்.. உன்னால என்ன டி பன்ன முடியும்.." -ஆதி

மறுமுனையில்  ----------------------------------

"எது நீயும் பன்னுவியா.. ஏய்ய் முடிஞ்சா செஞ்சி காட்டு டி.. அப்போ ஒத்துக்குறேன் நீ பொண்ணுன்ணு.." -ஆதி

மறுமுனையில் ------------------------------

"ஹே.. ஹேய்ய்.. நோ பேட் வர்ட்ஸ்(Bad words) ஹான்.." -ஆதி

மறுமுனையில்  -------------------------------

"யாரப்பார்த்து என்ன டி சொன்ன.. ஏய்... ஏய்ய்ய்ய்... " என அன் கத்த கத்த அழைப்பு மறுமுனையில் துண்டிக்கப்பட தன் தொலைபேசியை திரையை பார்த்தவன் "கொழுப்பெடுத்தவளே.." என வாய்விட்டு முணங்கியவாறு நிமிர எதிரே தன் நண்பர்கள் நால்வரும் தன்னை முறைப்பதை கண்டு திருதிருவென முழித்தான் ஆதி.

அவனின் முழியை வைத்தே அவனின் கேடித்தனத்தை புரிந்து கொண்ட ஆர்யன்,
     "யாரு டா ஃபோன்ல... கயலா??.." என கேட்க,

தனது காட்டுகத்தலிலே கயல் தான் என்று கன்ஃபோர்மே பன்னிருப்பார்கள் என தெரிந்தவன் அவர்களை சமாளிக்கும் பொருட்டு,
    "ஆமா டா அந்த ராட்சசி தான்.. நேர்ல தான் சண்டை போடுறான்னு பார்த்தா இப்போ ஃபோன்லயே வோன்டெட் ஆ வந்து வம்பிழுக்குறா டா.. விட்றுவோமா நாங்க அதான் புடிச்சு திட்டிவிட்டுட்டேன்.. யு டோன்ட் வொர்ரி மச்சான்ஸ் ஒரு பிரச்சினையும் இல்ல.." - என ஆதி கூற,

அவனை கூர்மையாக பார்த்துக் கொண்டே,
      "உன் முழியை பார்த்தா நீ தான் வோன்டெட் ஆ போய் ஏதோ பன்னி அசிங்கப்பட்டு வந்த மாதிரி இருக்கு.. ஒழுங்கா உண்மைய சொல்லு.." என ஆர்யன் தன் ஒற்றை புருவத்தை தூக்கி மிரட்டும் தொனியில் கேட்க,

       "மச்சான் நா ஒன்னுமே பன்னல டா.. என் மேல நம்பிக்கை இல்லையா.. நா சமத்து புள்ள.." என பாவமாக முகத்தை வைத்து கூறினான் ஆதி.

ஆர்யன் அவனை உக்கிரமாக முறைக்க ஆதியோ தன் தலைமுடியை சிலிப்பி விட்டவாறு அவனை பார்த்தும் பார்க்காதது போல் ஆக்டிங் பன்ன,

     "அதை இங்க தானே வச்சேன்.. ஆனா எங்கன்னு தான் தெரியல.. நீ பார்த்த.." என ஆர்யன் தன்னை சுற்றி எதையோ தேடுவது போல் பாவனை செய்ய,

அவன் எதை தேடுகிறான் என்பதை புரிந்து கொண்ட ஆதி,
     "சரி.. சரி.. சொல்றேன்.. சொல்லி தொலைறேன்..." என பல்லை கடித்துக் கொண்டு கூறியவன் ஒரு பெருமூச்சை விட்டு,
      "அது ஒன்னு இல்ல டா..  இன்ஸ்டால அவ ஃபோட்டோவ  போஸ்ட் பன்னிருந்தா.. அத பார்த்ததும் அவ முகத்துக்கு நேரா ஒன்னே ஒன்னு மட்டும் சொல்லனும்னு எனக்கு இல்லடா என் டங்க்கு(tongue) துடிச்சிச்சி.. அதான்.. கமன்ட்ஸ்ல என் மனசுல இருந்தத கொட்டிட்டேன்.. அதுக்கு தான் அந்த ராட்சசி என்னை அப்பிடி திட்டுறா.. உண்மைக்கு இப்போ காலம் இல்ல மச்சான்.." அவன் சோகமாக முடிக்க,

      "அப்பிடி என்னடா சொன்ன.." என ஹரி ஆர்வமாக கேட்க,

      "ப்ப்பாஹ்ஹ்... யார்ரா இந்த பொண்ணு பேய்க் கூட்டத்துக்கே தலைவி மாதிரி இருக்கான்னு நம்ம விஜய் சேதுபதி சாரோட டயலாக்க அடிச்சி விட்டேன்.. அவ்வளவு தான் மச்சான் வேறொன்னு இல்லை.." என ஆதி தோலை குலுக்கி கூலாக சொல்ல,

      "டேய்ய் நானும் கயல் ஃபோட்டுக்கு வந்த கமென்ட்ஸ்ஸ பார்க்க தானே செஞ்சேன்..  பட் நீ கமென்ட்டே பன்னிக்கலையே.. அது ஒரு பொண்ணு தான் அப்பிடி பன்னிருந்திச்சு.. அதுவும் என் ஃப்ரென்டு தான்.. " என கூறிக்கொண்டே சென்ற அபி சற்று நிறுத்தி,
     "ஹே.. வெயிட்.. ஒருவேள அந்த பொண்ணு.." என இழுக்க,

"யா.. இட்ஸ் மீ.." என வடிவேல் பாணியில் கூறிய ஆதி,
      "ஆனா ஒன்னு மச்சான்.. என் ஐடில இருந்து பன்னா கண்டுபிடிச்சிறுவான்னு இப்பிடி பன்னா அதையும் கண்டுபிடிச்சிட்டா டா அந்த ராட்சசி.. ரொம்ப க்ளவர் தான்.."
    என சொல்லிக் கொண்டே போனவன் ஆர்யன், அபி, ஹரியின் முறைப்பை பார்த்து,
     "டேய்.. என்னடா வந்ததுல இருந்தே என்னை மட்டுமே கேள்வி கேட்டுகிட்டு முறைச்சிக்கிட்டு இருக்கீங்க.. இதோ இருக்கான் இந்த ஆர்யா பய அன்னைக்கு அந்த ருத்ரா புள்ளய கிஸ் பன்னிட்டான் டா.. அதுவும்.. அதுவும் லிப் டு லிப் கிஸ் டா.." என ஆர்யனை கோர்த்து விட்டான் ஆதி.

      "எது கிஸ்ஸா.. " என அபி அதிர்ந்து திரும்பி ஆர்யனை பார்க்க அவனோ வெட்கத்தில் அசடுவழிந்தவாறு நெளிந்துக் கொண்டிருந்தான்.

      "டேய் போதும் டா பார்க்க சகிக்கல.." என முகத்தை சுழித்தவாறு கூறிய அபி பின் சீரியஸாக,
       "நிஜமாவே ருத்ராவ லவ் பன்றியா டா.." என கேட்க,

       "ஐ திங் சோ..  அவ கூட இருக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு.. அவ திமிரு கெத்து எல்லாலே எனக்கு சொந்தமானதா இருக்கனும்னு நிறைக்கிறேன் டா.. அவக்கும் என் மேல ஒரு க்ரஷ் இருக்கு டா அத அவ கண்ணுலயே நா பாத்திருக்கேன்.. பட் அவக்கு ஓல்ரெடி ஆள் இருக்குன்னு சொல்றாடா.. என்னால அத நம்பவும் முடியல ஏத்துக்கவும் முடியல.." ஆர்யன் யோசனையாக கூற,

     "இப்போ எல்லாம் வச்சிக்கிட்டு இல்லைன்னு சொல்லிக்கிட்டு திரியுதுங்க.. அப்பிடி இருக்கப்போ ருத்ராவே இருக்குன்னு சொல்லிருக்கான்னா பேசாம நம்பிறு டா.. ஸ்கூல் கோலேஜ் முடிச்சி அப்றமும் ஒரு பொண்ணு சிங்களாவே சுத்துதுன்னா அவங்க அப்பா அம்மா புண்ணியம் தான் டா பன்னிருக்கனும்.. அந்த அளவுக்கு காலக் கொடும கதிரவா.." என ஆதி சொல்ல,

     "டேய்ய்... நீ இந்த மாதிரி லீலைகள் எல்லாம் அவக்கிட்ட காட்டும் போது ருத்ரா உன்ன சும்மாவா விட்டா.." என அபி ஆச்சரியமாக கேட்க,

     "ஏன்டா என்கிட்ட மட்டும் இப்பிடி கேக்குறியே நீ கூட தான் அந்த ஆதிரா புள்ள பின்னாடி சுத்துற.. நீ பேசுற பேச்சுக்கு இவ்வளவு தூரம் அவ உன் வாயிலயே மிதிக்காம விட்டது ஆச்சரியம் தான்.." என ஆர்யன் கேலியாக சொல்ல,

    "என்ட் உனக்கு ஒன்னு தெரியுமா டா முன்னாடி எல்லாம் பொண்ணுங்க பொண்ணுங்கன்னு ஜொல்லு விட்டுட்டு திரிவான் இப்போ அதுவும் இல்லை.. நா கூட என் ஃபேக் கேர்ள் ஐடில இருந்து ஐ லவ் யூன்னு அனுப்பினதுக்கு எனக்கு ஓல்ரெடி ஆள் இருக்கு சிஸ்டர்னு அனுப்புறான் டா.. ஒருவேள திருந்திட்டானோ.." என ஆதி சொல்ல ஆர்யன் சிரிக்க அவனை வெட்டவா குத்தவா ரீதியில் முறைத்து பார்த்த அபியும் ஒரு கட்டத்தில் சிரித்தே விட்டான்..

    " அப்பிடி எல்லாம் எதுவும் இல்லை டா.. உங்களுக்கே தெரியும்ல.. என் அம்மா அப்பாக்கு  நா ஒரே புள்ள தான்.. அதுவும் ரொம்ப வருஷம் கழிச்சி தான் பொறந்தேன்னு யாரும் என்னை திட்டினதும் இல்லை அடிச்சதும் இல்லை.. நீங்க என்னை திட்டுறத நா திட்டாவே கண்டுக்குறது இல்லை.. பட் நா என்ன பேசினாலும் அவ என்னை முறைப்பா பாரு.. அதுக்காகவே அவள டீஸ் பன்ன தான் தோனும் டா..  அதுவும் அவ என்னை திட்டும் போது ரொம்ப ஹேப்பியா இருக்கும்..  சரி அத விடுங்க டா.. என்னை கோர்த்து விட்டியே.. அந்த சித்து பய நிஜமாவே லவ் பன்றான்  அவன என்னன்னு கேளுங்க டா.." என அபி சித்துவை கொர்த்து விட,

     அவன் ஆரம்பத்திலிருந்து அவர்களை கவனித்தால் தானே..  ஃபோனில் முகத்தை புதைத்துக் கொண்டு  துர்காவுடன் சிரித்து சிரித்து ச்சேட்(Chat) பன்னிக் கொண்டிருந்தான் சித்து. அவனையும் ஃபோனையும் ஆதியும் ஆர்யனும் மாறி மாறி பார்க்க,

      "அட கிறுக்கு பயபுள்ள பைத்தியம் மாதிரி தனியா சிரிச்சிக்கிட்டு இருக்கான்.. நீ வேற எதோ லவ்வு கிவ்வுன்னு உளர்ற.. என்ன டா நடக்குது இங்க.."  ஆதி கேட்க,

     "எது தனியா சிரிக்கிறானா.. நிஜமாவே உங்களுக்கு தெரியாதா.. எந்த கிரகத்துலடா இருக்கீங்க.." என தலையிலடித்துக் கொண்டவன் சித்துவுக்கும் துர்காவுக்கும் நடந்ததை கூற,

   "என்னடா அம்பி இதெல்லாம்.." என ஆதி வாயை பிளந்து சித்துவை பார்த்து கேட்க,

சித்துவோ அவர்களை நிமிர்ந்து பார்த்து புன்னகைத்து வெட்கத்தில் தலையை குனிந்து கொள்ள அதை ஒரு மார்கமாக பார்த்த ஆர்யன்,
     "என்னடா இவன் நம்மள பார்த்துட்டு தரையில எதையோ தேடுறான்.." என கேட்க,

அபியோ,
     "அய்யய்யோ.. ஆர்யா செல்லம் நீ தப்பா புரிஞ்சிக்கிட்ட அவன் தேடல வெட்கப்படுறான்.." என சொல்ல,

"எது வெட்கமா.." என சித்துவை மேலும் கீழுமாக ஒரு பார்வை பார்த்த ஆர்யன்,
        "நாம எல்லாம் படிக்கிறப்போவே தொடாத புக்ஸ்ஸ இப்பவும் லைப்ரரி போய் படிச்சிட்டு வரான் நம்ம நண்பன்னு ஏதோ இத்துனூண்டு பெருமையா நினைச்சா.. நாய் லைப்ரரி போய் புக்ல காதல் காவியம் எழுதியிருக்கு.."  என கூற,

     "என்ன டா என்னை மட்டுமே இப்பிடி திட்டுறீங்க.. இதோ இருக்கானே இவன்.." என சாப்பிட்டு கொண்டிருந்த ஆதியை காட்டிய சித்து,
      "கயலை ரொம்ப சீரியஸா லவ் பன்றான் டா.." என சொல்ல சாப்பிட்டுக் கொண்டிருந்த சாப்பாடு தொண்டையில் அடைக்க புரையேற அடக்கப்பட்ட சிரிப்புடன் மற்றவர்கள் ஆதியின் தலையில் தட்டி நெஞ்சை நீவி விட்டனர்.

சற்று நிதானமடைந்த ஆதி,
     "எது நானு.. கயலு.. லவ்வு.. சீரியஸா.. இந்த வேர்ட்ஸ்ஸோட கோம்பினேஷனே சரியில்லையே டா.. உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா.. அந்த ராட்சசிய என்கூட கோர்த்து விடுற.." என ஆதி பதறியபடி சொல்ல,

     "டேய் அவன் சொல்றதுல என்னடா தப்பு இருக்கு..  நீ எந்த பொண்ணுங்க கூடவும் பேச மாட்ட எந்த பொண்ணையும் உன்ன நெருங்க கூட விட மாட்ட.. ஆனா நீ முதல் தடவ கயல பார்த்ததிலிருந்து சண்டை போட்டாவது இரண்டு பேரும் பேசிக்க தான் செய்றீங்க.. நீ இப்பிடி இல்லையே ஆதி.. உனக்கு ஒருத்தர புடிக்கலன்னா அவங்கள விட்டே விலகி போயிருவ.. ஆனா நீ கயல திட்டிட்டாவது அவள பத்தி தான் யோசிக்கிற .. எனக்கு இது சரியா படல.." என ஆர்யன் 'என் நண்பனை நான் அறிவேன்' என்ற ரீதியில் பேச,

ஆதி கூட மனதில்,
       'இவன் சொல்றதும் உண்மைதான் நா ஏன் திட்டிட்டாவது அவள பத்தி யோசிக்கிறேன்.. அவள தான் எனக்கு புடிக்காதே.. எனக்கு புடிக்காதவங்க என்ன பேசினாலும் அவங்க, அவங்களோட பேச்ச ஒரு பொருட்டாவே மதிக்க மாட்டேன்.. ஆனா அந்த ராட்சசி அமைதியா இருந்தா கூட நா வழிய போய் ஏதாவது ஏடாகூடமா பேசி அவள வம்பிழுக்கிறேன்..இது என் குணம் இல்லையே.. நிஜமாவே எனக்கு அவள புடிக்காதா இல்ல.. நானே அவள புடிக்காத மாதிரி நடிக்கிறேனா.."  என தான் மனதில் என்ன தான் நினைக்கிறோம் என்பது புரியாது அதை அறிவதில் குழம்பித் தவித்தான் ஆதி.

      இங்கு ஒருவரை ஒருவர் கோர்த்து விட்டபடி இவ்ளோ கலவரங்கள் நடக்க ஆதி ஆரம்பத்தில் ஆர்யனை மாட்டி விட சொன்ன முத்தம் என்பதை கேட்டதிலிருந்து ஒரு சிறு புன்னகையுடன் ரியாவை பற்றிய சிந்தனையில் ஆழ்ந்தான் ஹரி.

     'எனக்கு என்னாச்சு.. நா ஏன் ரியா பத்தியே யோசிச்சிக்கிட்டு இருக்கேன்.. ஜஸ்ட் ஆக்ஸிடன்ட்லி கிஸ் பன்னிட்டோம் பட் அது நடந்ததுலிருந்தே நா நானாகவே இல்லையே.. அவளுக்கு என் மேல் இன்ட்ரஸ்ட் இருக்குறது  தெரிஞ்சி தான் சித்துவை அவக்கிட்ட எங்க ஃபேமிலி பத்தின உண்மையும் எக்ஸ்ட்ராவா நானும் என் அத்தை பொண்ண காதலிக்கிறேன்னு ஒரு பொய்யையும் சேர்த்து சொல்ல சொன்னேன். ஆனா இப்போ அந்த பொய்யோடு சேர்த்து அந்த உண்மையும் பொய்யாவே போயிட கூடாதான்னு இருக்கே.. இன்னும் அவ என்னை தான் காதலிக்கிறாளா.."  என யோசனையில் இருந்தவனை,
       "டேய் இங்க இவனுங்க கோமெடி பன்னிக்கிட்டு இருக்கானுங்க.. நீ என்ன டா யோசிச்சிக்கிட்டு இருக்க.." என அபியின் குரல் கலைக்க நிமிர்ந்து பார்த்தான் ஹரி.

       "என்னடா எப்பவும் போல ஊரு பேரு தெரியாத உன் அத்தை பொண்ணு கூட ரொமேன்ஸ்ஸா.." என சித்து கேலியாக கேட்க,

     "அட ச்சே.. அப்பிடி எல்லால் இல்லை.. லாஸ்ட் டைம் அப்பா கோல் பன்னப்போ இத பத்தி விசாரிச்சாரு பட் என்ன பதில் சொல்றதுன்னே தெரியல.."  ஹரி யோசனையாக சொல்ல,

      "என்ன டா இன்னும் அந்த பொண்ண பத்தி ஒரு சின்ன தகவல் கூடவா கிடைக்கல.. மும்பைல இருக்கான்னு தகவல் கிடைச்சதால தானே இங்க ட்ரான்ஸ்ஃபர் கேட்டு வந்த.." என ஆர்யன் கேட்க,

       "அது அந்த பொண்ணு இல்லைடா..  அந்த பொண்ணுக்கு ரொம்ப சின்ன வயசு..  என்ட் ஆர்யா நீ கூட சொன்ன தானே ருத்ரா சொன்னாங்க அவங்க எல்லால் ஆசிரமத்தில தான் வளர்ந்தாங்கன்னு.. எதுக்கும் ஒரு க்ளரிஃபிகேஷன்கு(Clarification) அவங்க வளர்ந்த சென்னை ஆசிரமத்தில கூட விசாரிச்சேன்டா.. என் அத்தை இறந்த வருஷம் எந்த குழந்தையும் ஆசிரமத்தில சேர்ந்தில்ல.. யாரோட டீடெய்ல்ஸும் எங்களுக்கு கிடைச்ச தகவலோட ஒத்தே போகல.. அப்பாகிட்ட என்ன பதில் சொல்றதுன்னே குழப்பமா இருக்கு.."

     என ஹரி தலையில் கைவைத்து புலம்ப மற்ற நால்வரும் 'அப்பாடா.. நல்ல வேள நம்ம ஆளுங்க இல்லை ' என மனதில் நினைத்தவாறு பெருமூச்சை விட்டனர்.

    "ஹரி டார்லிங் அவங்களா இருக்க வாய்ப்பே இல்லை டா.. ஏன்னு கேளு.. நீ சாந்த முகத்தோட சமத்து பையன் டா.. ஆனா அவங்க ரொம்ப வயலென்ஸ்.. ஆஆ ஊன்னா பிஸ்டலு கத்திய தான் கைல எடுக்குதுங்க.. அதுவும் ஆரு உன் அத்தை பொண்ணா இருக்க வாய்ப்பே இல்லை டா.." என ஹரியின் முகத்தை தன்பக்கம் திருப்பி ஆர்யன் கூற,

     ஆர்யனின் கையை தட்டிவிட்டு ஹரியின் தோளை பிடித்து திருப்பிய அபி,
       "ஆமாடா ஆர்யா சொல்றதும் வாஸ்தவம் தான்.. அவங்க முக ஜாடையும் உன் முக ஜாடையும் பாரு.. உன் அத்தை பொண்ணுன்னா உன் ஜாடை இருக்கனும்ல .. சோ வாய்ப்பில்லை ராஜா.. வாய்ப்பில்லை.." என சொல்ல,

     "என்ட் துகிக்கு கூட புக்ஸ் தான் ரொம்ப புடிக்கும் என்னை மாதிரியே.. ஆனா நீ ஸ்கூல்லயே என் புக்க தான் கடன் வாங்கி எழுதுவ.. குணத்துலயே ஒத்தும இல்ல அப்றம் எப்பிடி டா உறவுல இருக்கும்.." என சித்துவும் தன்னவள் இல்லை என நிரூபிக்கும் களத்தில் இறங்க,

    "டேய் அவங்க என்ன சொல்றது நா சொல்றேன்டா.. அந்த ராட்சசி உன் அத்தை பொண்ணா இருக்க வாய்ப்பே இல்லை.. நீயும் உன் குடும்பத்துல இருக்கிறவங்களும் ரொம்ப நல்லவங்க.. பட் அவ சரியான திமிரு புடிச்சவ கொழுப்பெடுத்தவ டா.. அவளுக்கு அத்தை பையன் ஒன்னு தான் குறைச்சல்.. அவள எல்லாம் உன் அத்தைபொண்ணா நினைச்சும் பாத்துராத ரொம்ப டேன்ஜரான க்ரியேச்சர் அவ.." என ஆதியும் தன் பங்கிற்கு அவளை எப்போதும் போல் வார,

அபி, சித்து, ஆர்யனோ,
      "விட்டா எங்க ஃப்ரென்ட்ட பத்தி ரொம்ப ஓவரா தான் பேசிக்கிட்டே போற.. உன்ன..." என்று அவனை அடி வெளுத்து எடுத்தனர்.

   ஆனால், ஹரியோ அபி சொன்ன முகஜாடை என்ற வார்த்தையையும் தனக்கு தோன்றிய சந்தேகத்தையும் இணைத்து யோசிக்க ஆரம்பித்தான்.
--------------------------------------------------------------------
 
     வீட்டிற்கு தேவையான சில பொருட்களை வாங்கி விட்டு சூப்பர் மார்கெட்டிலிருந்து வெளியே வந்த ஆருத்ரா அவள் நின்றிருக்கும் இடத்திலிருந்து எதிர்திசையில் கூட்டம் கூடியிருப்பதை பார்த்தவள் என்ன என்று பார்ப்பதற்காக அக் கூட்டத்திற்கு அருகே சென்றாள்.

     கூடத்திற்கு வெளியே இருந்து எட்டிப்பார்க்க அங்கு ஒரு பெரியவர் மயங்கிக் கிடப்பதையும் சுற்றி இருப்பவர்கள் எதுவும் செய்யாது பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்தவள் அக் கூட்டத்தை தள்ளி விட்டு உள் நுழைந்து அப் பெரியவரின் கன்னத்தை தட்ட அவரிடம் எந்த அசைவும் இல்லை. உடனே சுற்றி இருந்தவர்களிடம் தண்ணீர் தருமாறு கத்த அங்கிருந்த ஒரு பெண்மனி கொடுக்க அவர் முகத்தில் நீரை தெளித்தாள்.

      மெதுவாக அந்த பெரியவர் கண்ணை திறக்க அவர் எழுந்தவுடன் ,
      "அப்பா  இப்போ உங்களுக்கு பரவாயில்லையா.." என கேட்க, அவளின் அப்பா என்ற அழைப்பில் அவருக்கு கண்கள் கலங்கி விட்டது.

அதைப் பார்த்தவள்,
      "என்னாச்சுப்பா ரொம்ப முடியல்லையா.. ஹொஸ்பிடல் போலாமா.." என கேட்க,

அவர் அவளை கையெடுத்து கும்பிட்டு,
      "அதெல்லாம் வேணாம் மா.. இப்போ பரவாயில்லை.. ரொம்ப நன்றி மா.." என கூறியவாறு அவர் எழ முற்பட உடல் மிகவும் சோர்வாக இருந்ததால் அடுத்த அடி வைக்க முடியாமல் தடுமாறி விழுந்தார்.

அவரை தாங்கி பிடித்த ஆருத்ரா,
      "மொதல்ல என்கூட நீங்க வாங்க.." என அவரை கை தாங்கலாக பிடித்துக் கொண்டு அழைத்து செல்ல,

     "இல்லை மா வேணாம்.. எங்க முதலாளி முக்கியமான வேலை கொடுத்திருக்காரு.." என அவர் பேச,

அதை குறுக்கிட்டவள்,
      "ச்சே.. முதல்ல என் கூட வாங்க.. வேலை பார்க்க முன்னாடி உடம்பு தெம்பா இருக்கனும்.. உங்கள பார்த்தாலே தெரியுது நீங்க ரொம்ப முடியாம இருக்கீங்கன்னு.. சோ,  வண்டி சாவிய குடுங்க.. நா உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்பா.."  என சொல்ல,

   அவளுடைய ஒவ்வொரு அப்பா என்ற அழைப்பிற்கும் அவருக்கு சில நினைவுகள் வந்து மனது பிசைய, ஆருத்ராவோ கயலுக்கு கோல் பன்னி தன் வண்டியை எடுக்குமாறு சொல்லிவிட்டு அவர் வண்டியை செலுத்தி அவர் மறுத்தும் கேட்காமல் மருத்துவரிடம் காட்டி மருந்து வாங்கி  ஹோட்டலில் சாப்பாடும் வாங்கிக் கொண்டு அவர் வழி சொல்ல அவர் வீட்டிற்கு அழைத்து சென்றாள்.

     வீட்டினுள்  அவரை அழைத்துச் சென்றவள் அவரை கட்டிலில் அமர வைத்து அச்சிறிய வீட்டில் யாராவது இருக்கிறார்களா என கண்களை சுழலவிட அதைப் புரிந்து கொண்டவர்,
      "இங்க யாரும் இல்லை மா.. நா மட்டும் தான்.."  என கூற,

ஆருத்ராவோ தலையசைத்து விட்டு,
       "கொஞ்சம் வெயிட் பன்னுங்க.. சாப்பாட ஒரு ப்ளேட்ல வச்சி எடுத்துகிட்டு வரேன்.. என்ட் நீங்க சரியா சாப்பிடாததால தான் மயங்கி விழுந்திருக்கீங்கன்னு டாக்டர் சொன்னாங்க.. கேட்டிங்கல்ல.." என ஆருத்ரா உரிமையாக அதட்ட,

அவள் அன்பில் நெகிழ்ந்தவர்,
       "உனக்கு ரொம்ப சிரமம் கொடுத்துட்டேன் மா.." என வருத்தமான குரலில் சொல்ல,

       "என்னை உங்க மகள் மாதிரி நினைச்சிகோங்கப்பா... மகள் செய்றத வேணாண்ணா சொல்வாங்க.. " என அவள் உரிமையாக கேட்க அதில் புன்னகைத்தவாறே தலையசைத்தார் அந்த பெரியவர்.

    பின் வாங்கி வந்த உணவை ஒரு தட்டில் வைத்து அவருக்கு கொடுத்தவள் சட்டென்று திரும்ப அங்கே சுவற்றில் ஒரு இளம் பெண்ணின் புகைப்படத்திற்கு  மாலையிட்டு பொட்டு வைத்திருப்பதை பார்த்தவள் 'அது யாரா இருக்கும்..' என யோசனையாக பார்த்துக் கொண்டிருக்க,

     அவள் அமைதியை உணர்ந்த அப்பெரியவர் நிமிர்ந்து பார்க்க அவள் அந்த படத்தை பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்து,
         "என்னமா அப்பிடி பார்க்குற.. அவ என் பொண்ணு தான் மா பேரு சாரு.. இப்போ உயிரோட இல்லை.." என கூறும் போதே அவர் குரல் தழுதழுத்தது.

     "அவங்களுக்கு என்னாச்சு.." என ஆருத்ரா அப்படத்திலிருந்து விழி அகலாது கேட்க,

     "எல்லாத்துக்கும் அவனுங்க தான் மா காரணம்.. என் பொண்ண கொன்னுட்டாங்க.. என்னை இப்பிடி அநாதையா தனியா தவிக்க விட்டுடானுங்க.." என அவர் புலம்பிக் கொண்டே போக,

அவர் அருகில் அமர்ந்து தோளை ஆதரவா பற்றிய ஆருத்ரா,
       "யாருப்பா.. என்ன பன்னாங்க.. உங்களுக்கு விருப்பமில்லைன்னா சொல்ல வேணாம்பா.." என சொல்ல

       "எல்லாத்துக்கும் காரணம் அந்த பொறுக்கி ஆர்னவ் தான் மா.. கை நிறைய காசு அரசியல் பலம் வேற.. பின்ன எப்பிடி மா இருப்பானுங்க.. நா அவங்க வீட்டில தான் ஆர்னவ்க்கு டிரைவரா வேலை பார்க்குறேன்.." என அவர் கூற அதில் ஆருத்ரா அப்பெரியவரை பார்த்த நொடி ஏற்பட்ட தன் சந்தேகத்தை உறுதிப்படுத்திக்
கொண்டாள். ஆர்னவ்வை பின்தொடரும் போது இந்த பெரியவரையயும் பார்த்திருக்கிறாள் அல்லவா..

       " ஒரு வருஷத்துக்கு முன்னாடி என் பொண்ண காதலிக்கிறேன்னு சொல்லி ஏமாத்தி சீரழிச்சிட்டான் மா அந்த பாவி.. அந்த அவமானம் தாங்க முடியாம இதோ இங்க தான் தூக்குல தொங்கிட்டா.. எனக்கு அவ எழுதி வச்ச லெட்டர்ல தான் மா எல்லாம் தெரிஞ்சது.. அவன எதாவது பன்னனும்னு துடிச்சிக்கிட்டு இருக்கேன்.. இதே போலிஸ் கேஸ்னு போனா என் பொண்ணு இறந்ததுக்கு அப்றமும் அவ மானன் போறது மட்டுமில்லாம அவனுக்கு இருக்கிற பலத்துல ஒரு நாள் கூட உள்ள வைக்க முடியாதும்மா..  அதனால தான் மா உள்ளுக்குள்ளயே என் கோபத்தை புதைச்சிட்டு எதாவது ஒரு வாய்ப்பு கிடைக்காதா அவன நானே நரகத்துக்கு வழியனுப்பன்னு காத்திக்கிட்டு இருக்கேன் மா..  ஆனா எவனோ புண்ணியவான் அவன் தம்பி அவன் கூட்டாளிகளை துடிக்க துடிக்க கொன்னிறுக்காங்க.. எல்லா செய்த பாவத்துக்கு கிடைச்ச தண்டனை மா.." என கூறி முடித்தவர் தன் மகளின் ஃபோட்டோவை பார்த்து கதற,

      அதைக் கேட்ட ஆருத்ராவுக்கே கோபத்தில் கண்கள் சிவக்க ஆரம்பித்தது. தன் கோபத்தை கட்டுப்படுத்தியவள் அவரை சமாதானம் செய்து மருந்து சாப்பிட வைத்து அவரிடம் கூறிவிட்டு வெளியேற எத்தனிக்க,

     "எனக்காக இவ்வளவு பன்னிட்டு என் மகள் மாதிரின்னு சொல்லிட்டு உன் பேரக் கூட சொல்லாம போறியே மா.." என அவர் கேட்க,

அவரை திரும்பி பார்த்தவள்,
        "ஆருத்ரா பா.." என புன்னகையுடன் கூறி தான் அடுத்து செய்ய வேண்டிய காரியத்தை மனதில் குறித்துக் கொண்டாள்.

❤தொடரும்❤
----------------------------------------------------------------
 
    Innaiki ud epidinnu marakama unga comments a solluga friends..
        keep supporting me Guys❤❤

https://www.sahaptham.com/community/tamil-novels-jade-javid/%e2%9d%a4%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b4/#post-8560

❤ZAKI❤

 

Zakiya


ReplyQuote
Jade Javid
(@jadejavid)
Trusted Member Writer
Joined: 7 months ago
Posts: 68
10/08/2020 5:23 am  

              ❤அத்தியாயம் 24❤

       ஆருத்ராவின் வீட்டிற்கு செல்வதற்காக ஆடவர்கள் தத்தமது வண்டிகளில் கிளம்ப,  ஆர்யன் அவன் பைக்கை சர்வீஸ்க்கு விட்டிருந்ததால் ஆதியின் பைக்கை அவன் ஓட்டிக் கொண்டு வர ஆதி அவன் பின்னால் எதுவும் பேசாது அமர்ந்திருந்தான்.

ஆதி எதையோ யோசித்துக் கொண்டே அமைதியாக வர அதை புரிந்து கொண்ட ஆர்யன்,
       "என்ன டா எதுவும் பேசாம வர.. புயல் கிளம்புறதுக்கு முன்னாடியுள்ள அமைதியோ.." என கிண்டலாக கேட்க,

      "டேய் ஆர்யா  நா ஒன்னு கேட்கவா.." என ஆதி வினவ,

      "என்ன டா புதுசா பெர்மிஷன் எல்லாம் கேக்குற.. சரி ஓகே பெர்மிஷன் க்ராண்டட்(granted).." என ஆர்யன் நக்கலாக சொல்ல,

    "ச்சே.. நீ நிஜமாவே ருத்ராவ லவ் பன்றியா.." என ஆதி சந்தேகமாக வினவ,

     "எத்தனை தடவ தான் இதையே கேட்பீங்க டா.. அன்னைக்கே அதுக்கான பதில சொல்லிட்டேன் அவள புடிச்சிருக்கு.. அவக் கூடவே இருக்கனும்னு தோணுது.. அது தான் லவ்வான்னு சரியா சொல்ல தெரியல டா.. இதுக்கப்றமும் என்னை கேள்வி கேட்டு குழப்பாத.." என சலித்துக் கொண்டான் ஆர்யன்.

      "இந்த குழப்பமும் ஒருவிதத்துல நல்லது தான்.. இதை அப்பிடியே விட்டுறு.. முடிவுக்கு கொண்டு வர நினைக்காத.. இது செட் ஆகாது ஆர்யா.."  என ஆதி சொல்ல வண்டியை சடன் ப்ரேக் போட்டு நிறுத்தியவன் திரும்பி அவனை புரியாமல் ஆர்யன் பார்க்க,

      "வண்டியை எடு ஆர்யா.. உன்கிட்ட நா நிறையவே பேச வேண்டி இருக்கு.."  என கூறினான் ஆதி.

மற்றவர்கள் மூவரின் வண்டிகளும் முன்னாடி சென்றிருக்க ஆதி கூற்றில் முகம் இறுகி மெதுவாக வண்டியை செலுத்தினான் ஆர்யன்.

      "என்ன சொல்ல வர்றேன்னு உனக்கு புரியும்னு நினைக்கிறேன்.. நம்மள பத்தி எந்த உண்மையும் அவங்களுக்கு தெரியாது.. தெரிஞ்சா என்ன நடக்கும்னு உனக்கு தெரியும்.. நாம யாருன்னு உண்மை தெரிஞ்ச அடுத்த செகன்ட் அவங்க நம்ம கண்ணுல இருந்து மறைஞ்சாலும் ஆச்சரியமில்லை..
  
      என்ட், அவங்க வெளில ஸ்ட்ரோங்கா இருந்ததுக்கு உங்களுக்கு ரொம்ப சென்ஸிடிவ் ஆர்யா.. நாம அவங்களுக்கு பன்ன துரோகமா தான் நினைப்பாங்களே ஒழிய அவங்களுக்கு சொல்லி புரிய வைக்க முடியாது.. புரிஞ்சிக்கிற கேரக்டர்ஸ்ஸும் அவங்க கிடையாது.. நீ சொன்ன ஒரே காரணத்துக்காக தான் அவங்க கூட சேர்ந்து இத பன்னிக்கிட்டு இருக்கொம்.. அதுவும் உனக்கு தெரியும்.. ஆனா நீங்க ஒவ்வொருத்தரும் போற போக்க பார்த்தா எனக்கு சரியா படல..

     நாம ஏன் இந்த வேலைய பன்னிக்கிட்டு இருக்கோம்னு உனக்கு தெரியும்.. நம்ம நோக்கம் நிறைவேறின அப்றம் அவங்க யாரோ நாங்க யாரோ.. அதுக்குள்ள தேவையில்லாத உறவ கொண்டு வர நினைக்காத.. அப்றம் உண்மை தெரிஞ்சி எதாவது நடந்தா நீ ரொம்ப உடைஞ்சி போயிருவ.. என் ஃப்ரென்ட் கஷ்டப்படுறத என்னால பார்க்க முடியாது.. உன் மேல இருக்கிற அக்கறையில தான் சொல்றேன்.. புரிஞ்சப்பன்னு நினைக்கிறேன்.. அவனுங்களுக்கும் புரிய வை.."

        என ஆதி கூறிக் கொண்டிருக்க சரியாக ஆருத்ரா வீட்டின் முன் வண்டியை நிறுத்தினான் ஆர்யன்.ஆதி அவனது தோளை தட்டி அமைதியாக இறங்கி உள்ளே செல்ல ஆதி பேச ஆரம்பித்ததிலிருந்து எதுவும் பேசாது முகம் இறுகி போய் மனதில் பல எண்ணங்கள் ஓட யோசனையினூடாக வீட்டின் வாசலில் தனக்காக காத்திருந்த நண்பர்களிடம் சென்றான்.

     "ஹாய்ய் கேர்ள்ஸ்ஸ்..."  என கோரஸாக கத்திக் கொண்டு அபி, சித்து, ஹரி கதவை திறந்து கொண்டு உள்ளே செல்ல ஆதி, ஆர்யன் அமைதியாகவே அவர்கள் பின்னால் உள்ளே நுழைந்தனர். இவர்கள் போட்ட சத்தத்தில் எப்போதும் போல் அவர்களுக்கு ஒரு நிமிடம் தூக்கி வாரிப்போட 'அட குரங்குப் பயலுகளா..' என மனதில் நினைத்தவாறு அவர்களை முறைத்து பார்த்தனர் நம் நாயகிகள்.

       உள்ளே நுழைந்த ஆர்யன் ஸோஃபாவில் சம்மனமிட்டு டைரி மில்க் சாக்லெட்டை உதட்டுக்கு மேலும் கீழும் பட சிறுபிள்ளை போல் சப்பி சப்பி சாப்பிட்டுக் கொண்டிருந்த ஆருத்ராவை காண அந்த நிமிடமே தன் யோசனையை மறந்து அவளிடத்தில் தன்னிலை மறந்து நின்றான்.

       அவனுக்கு அன்று பழத்தின் தித்திப்பில் அவளின் இதழுடன் இதழ் உரசியது ஞாபகத்திற்கு வர இன்று அவள் சாக்லெட் சாப்பிடுவதை பார்த்து அவள் உதட்டை சுற்றி ஒட்டியுள்ள சாக்லெட்டை சுவைக்க தோன்றிய மனதை கடிவாளமிட்டு அடக்கியவன் அவள் உதட்டையே குறுகுறுவென பார்த்துக் கொண்டிருக்க, 
சட்டென்று நிமிர்ந்து பார்த்த ஆரு அவன் பார்வையின் அர்த்தத்தை உணர்ந்து வெட்கம் பீறிட்டுக் கொண்டு வந்தாலும் அதை காட்டாமல் அவனை முறைத்து பார்த்தாள்.

     அவள் முறைப்பை கண்டவனோ 'ஹிஹிஹி' என  அசடுவழிந்தவாறு பார்வையை திருப்பி கொள்ள அங்கு பக்கத்தில் ஆதியோ,
     'தொண்டை தண்ணி வத்த இந்த அல்பகிட்ட போய் அவ்வளோ வசனம் பேசினோமே.. என்னை நானே செருப்பால அடிச்சிக்கனும்.." என நினைத்தவாறு  அவனை மூக்கு விடைக்க முறைக்க அதில் ஜெர்க்கான ஆர்யன் முகத்தை கைகளால் மூடிக் கொண்டு வேறு புறம் திரும்பி கொண்டான்.
   
இங்கு சித்துவும் துர்காவும் ஒருவரையொருவர் பார்வையால் வருடிக் கொண்டிருக்க,
      "சித் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்.. சாப்பிட வர்றீங்களா.." என துர்கா வினவ, ரியா, ஆருத்ரா அவளை மேலிருந்து கீழ் ஒரு மார்கமாக பார்த்தார்கள் என்றால் கயல், ஆதிரா வாயை பொத்திக் கொண்டு சிரித்தனர்.

சித்துவோ வெட்கப்பட்டுக் கொண்டு,
        "பரவால்ல துகி.. வேணாம்.. நீ சாப்பிடு மா.." என சொல்ல இப்போது ஆண்கள் நால்வரும் அவனை திரும்பி பார்த்து  "ஆஹான்ன்..."  என்று கோரஸாக சொல்ல ஆருத்ரா, ரியா தான் என்ன நடக்கிறது என்று புரியாமல் இருவரையும் மாறி மாறி பார்த்தனர்.

      கயல் அவர்களிடம் விஷயத்தை சொல்ல முதலில் துர்காவை முறைத்த இருவரும் பின் அவளுடைய பாவமான முக ரியாக்ஷனை பார்த்து சிரித்து விட்டனர். அவர்களும் தங்கள் நண்பியின் வாழ்வு நல்ல விதமாக அமைந்தால் போதுமென நினைத்துக் கொண்டனர். அவர்கள் சிறுவயதில் அனுபவித்த தனிமைக்கும் உறவுகளின் அன்பு கிடைக்காமல் ஏங்கிய ஏக்கமான வாழ்வுக்கும் ஆடவர்கள் நட்பு, காதல் அர்த்தத்தை கொண்டு வந்தது போன்றே உணர்ந்தனர்.

     "ரியா ஒரு கோஃபி கிடைக்குமா.. ரொம்ப தலை வலிக்குது.." என ஆதி வினவ,

     "கொஞ்சம் வெயிட் பன்னுங்க.. எல்லாருக்கும் சேர்த்தே போட்டு கொண்டு வர்றேன்.."  என கூறிக் கொண்டு எழ போன ரியாவை தடுத்த கயல் தானே கொண்டு வருவதாக கூறி ஆதியை ஒரு பார்வை பார்த்து விட்டு கிட்ச்சனை நோக்கி சென்றாள்.

ஆதியோ வாயை வைத்து சும்மா இல்லாமல்,
      "சுகர் கொஞ்சம் தூக்கலா..." என சொல்ல,

அவன் குரலில் சடன் ப்ரேக் போட்டு நடையை நிறுத்தியவள் அவன் புறம் திரும்பி  "தூக்கலா தானே.." என்று ஒற்றை புருவத்தை உயர்த்தி நக்கலான ஒரு பார்வை பார்த்து 'இதோ வரேன் டா..' என மனதினில் கூறியவாறு கிட்ச்சனுக்குள் நுழைந்தவள் பத்து நிமிடத்தில் எடுத்து வந்து எல்லாருக்கும் கொடுத்தாள்.

ஆதியிடம் நீட்டிய கயல்,
      "ராஜன் சார்ர்ர்.. கோஃபி எடுத்துக்கோங்க.." என சொல்ல தன் காதில் சரியாக தான் விழுந்ததா என குழம்பியவாறு அவளை ஆதி புரியாமல் நோக்க, மீண்டும்
     "சீக்கிரன் ராஜன் கோஃபி ஆறிட போகுது.." என புன்னகை முகமாக கூற ஆதிக்கு மயக்கம் வராத குறை தான்.

ஆதியோ மனதில்,
     'எது ராஜனா..  என்ன இன்னைக்கு ஒரு டைப்பா பேசுறா.. ஏதும் போதி மரத்துக்கு அடியில நின்னுட்டு வந்தாளா.. ஒருவேள திருந்திட்டாளோ.." என அவளை தப்பாக எடை போட்டு அவளின் உள்குத்தை அறியாது கோஃபியை எடுத்தான் ஆதி.

கயலோ மனதில்,
    'தூக்கலா தானே கேட்ட.. சுகர் மட்டுமில்ல டா உப்பு மிளகாப்பொடின்னு எல்லாலே தூக்கலா தான் இருக்கும்.. என்னையா ராட்சசின்னு சொல்ற நல்ல அனுபவி..' என இதழோர குறுஞ்சிரிப்புடன் அவனையே குறுகுறுவென பார்க்க,

      ஒரு மிடறு அருந்தி மீண்டும் கப்பை உதட்டுக்கு அருகில் கொண்டு சென்ற ஆதி  அப்பிடியே உறைந்தே விட்டான். முகம் சிவக்க கண்கள் கலங்க நிமிர்ந்து கயலை,
     'உன் புத்தியை காமிச்சிட்டல்ல..' என்ற ரீதியில் ஒரு பார்வை பார்க்க அவனின் முக பாவனைகளை கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்த கயலோ அடக்கக்கட்ட சிரிப்புடன்,
     "ராஜன் சார்ர் இந்த தூக்கல் போதுமா இல்ல இன்னும் கொஞ்சம் தூக்கலா வேணுமா.." என கேட்க, ஆதி ஏதோ கூற வரும் முன் அவனுக்கு குமட்டிக் கொண்டு வந்தது.

கப்பை டீபாயில் வைத்தவன் அது கீழே விழுந்ததை கூட பொருட்படுத்தாது அப்பிடியே அறைக்குள் இருக்கும் பாத்ரூமை நோக்கி ஓட, 'என்னாச்சு இவனுக்கு..' என்ற ரீதியில் கயலை தவிர அனைவரும் அவன் போன திசையையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

     "டேய்ய் என்னடா ஆச்சு இவனுக்கு.. ஒருவேள காலைல சாப்பிட்டது எதுவும் ஒத்துக்கலையா.." என ஹரி வினவ,

     "ச்சே இருக்காது டா.. ஒருவேள அதுவா இருக்குமோ.." என அபி யோசனையாக இழுக்க,

     "அறிவு கெட்டவனே அவன் என்ன பொண்ணா டா முழுகாம இருக்க.. ஏன்டா உன் புத்தி இப்பிடி போகுது.." என ஆர்யன் அபியை திட்ட,

    "ச்சே அது இல்லை டா.. ஒருவேள இது ஆதியோட ராட்சசி வேலையா இருக்குமோ.. அவ ராஜான்னு சொல்லி கொடுக்கும் போதே பையன் உஷாராகியிருக்கனும்.. " என அபி கூற நான்கு ஆண்களும் கயலை ஒருசேர திரும்பி நோக்க அவளின் தோழிகள் நால்வரும் இடுப்பில் கையை வைத்து அவளை தான் முறைத்துக் கொண்டு நின்றனர்.

அனைவரின் பார்வையையும் உணர்ந்த கயலுக்கு உள்ளுக்குள் சிறு உதறல் எடுத்தாலும் அப்போதும் அசராமல்,
       "என்ன லுக்கு.. எனக்கு ஒன்னும் தெரியாது பா.." என கூறி அங்கிருந்து தப்பித்து கிட்ச்சனுக்குள் புகுந்து கொண்டாள்.

      " கன்ஃபார்ம் இந்த பெருச்சாலி தான்.. பாவம் டா அவன்.." என சித்து ஆதி சென்ற அறையையே பாவமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

       கயல் கிட்ச்சனுக்குள் வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்து பின் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு நிமிர,  குடித்த ஒரு மிடறு கோஃபியோடு காலை மதியம் சாப்பிட்ட சாப்பாட்டையும் சேர்த்து வாந்தியாக வெளியே எடுத்திருந்தவன் கண்கள் சிவக்க கொலைவெறியில் சமையலறை வாயிலில் அவளை முறைத்துக் கொண்டு நின்றான் ராட்சசியின் சிடுமூஞ்சி.

அவனின் அனல் பார்வையை பார்த்த கயலோ, 'அடி ஆத்தீதீ.. இன்னைக்கு நம்ம செத்தோம்..' என மனதில் நினைத்து அவனை சமாளிப்பதற்காக,
       "ராஜன் சார்ர் சுகர் தூக்கலா இன்னொரு கோஃபி தரட்டா.. ரொம்ப டயர்டா இருப்பீங்கல்ல அதான்.." என முப்பத்திரெண்டு பல்லை காட்டி இழித்துக் கொண்டு சொல்ல,

"அடிங்க..." என அவளிடம் ஆதி வேகமாக நெருங்க அவன் கையில் சிக்காகல் தப்பித்தோம் பிழைத்தோம் என வீடு பூராவும் ஓட்டம் பிடித்தாள் கயல். ஆதி துரத்த கயல் ஓட என வீடே கலவரமாக ஒருவழியாக அவர்களை சமாதானப்படுத்தி அமர வைத்தார்கள் மற்றவர்கள்.

இங்கு ஆருத்ரா ஏதோ தீவிரமான யோசனையில் இருக்க அவளை பார்த்த ஆர்யன்,
       "என்ன ஆரு ஏதோ பயங்கரமா திங்க் பன்ற மாதிரி இருக்கு எதும் பிரச்சினையா.." என அக்கறையுடன் கேட்க,

       "எங்களுக்கு பிரச்சினையே அவனுங்க தானே.." என கண்களில் கோப அனலுடன் கூறினாள் ஆருத்ரா.

      "அதான் இரண்டு பேரோட கதைய முடிச்சாச்சே இப்போ மிச்சம் இருக்கிறது ஆர்னவ் மட்டும் தான்.. அவன என்ன பன்னனும்னு முடிவு பன்னிட்டிங்களா.."  ஆர்யன் கேட்க,

     "ஒவ்வொருத்தருக்கும் என்ன பன்னனும்னு நாங்க முன்னாடியே ஸ்கெட்ச் போட்டுட்டோம்.. ஆனா, இப்போ அவன் இங்க இல்லை.. அவன முதல்ல இங்க வர வச்சு அப்றம் அவனுக்கு நரகம்னா என்னன்னு காட்டனும்.." என ஆவேசமாக கூறினாள் கயல்.

    "அதான் பிரச்சினையா.. ஜஸ்ட் லீவ் தெட் டென்ஷன்.. அவன இங்க வர வைக்கிறத நாங்க பாத்துக்குறோம்.."  என சித்து சொல்ல,

    "அது எப்பிடி.. அப்பிடி என்ன பன்ன போறீங்க.." என தெரிந்து கொள்ளும் ஆவலில் துர்கா கேட்க,

    "அத தெரிஞ்சி நீங்க என்ன பன்ன போறீங்க..  உங்களுக்கு அவன இங்க வர வச்சா போதும்ல.. அதுக்கு என்ன பன்னனுமோ அத நாங்க பன்றோம்.." என ஆதி சொல்ல,

       ஒரு நிமிடம் கௌத்தமை பற்றியும் அவனிடம் கூறிய ப்ளானை பற்றியும் இவர்களிடம் கூறி விடுவோமா என யோசித்த ஆருத்ரா பின் இப்போதைக்கு சொல்ல தேவையில்லை ஏதாவது பிரச்சினை என்றால் சொல்லி கொள்ளலாம் என விட்டுவிட்டாள்.

       "சரி அத விடுங்க.. அதென்ன கைல ஹரி ஏதோ இன்விடேஷன் கார்ட் மாதிரி இருக்கு.." என ஆதிரா ஹரியின் கையிலுள்ள கார்ட்டை பார்த்து கேட்க,

அப்போது தான் நினைவு வந்தவனாக,
      "அச்சோ.. எதுக்காக வந்தேனோ அத சொல்ல மறந்துட்டேன் சோரிங்க.." என கூறியவன் அந்த கார்டை அவர்களிடம் நீட்டி,
      "இன்னும் பதினைஞ்சு நாள்ல என் தங்கச்சிக்கு கல்யாணம் ஏற்பாடு பன்னிருக்கோம்.. ஊர்ல தான்.. இன்னும் ஒரு வாரத்துல நிச்சயதார்த்தம் அடுத்த பத்தாவது நாள்ல கல்யாணம்.. கண்டிப்பா நீங்க வரனும்.." என ஹரி முறையாக அழைப்பை விடுக்க,

தோழிகள் ஐவருக்கும் இவ்வாறான அழைப்பு புதிதாக தோன்ற, அந்த கார்டை வாங்க தயங்கிய ஆருத்ரா,
       "இல்ல ஹரி.. எங்களால வர முடியாது.. சோரி.." என சொல்ல,

         "ஏன் ஆரு.. அதான் நாங்கெல்லாம் இருப்போம்ல.. உங்களுக்கும் இப்போ இருக்கிற பிரச்சினைக்கு இவன் ஊருக்கு வந்தா கொஞ்சம் ரிலாக்ஸேஷனா இருக்கும்.."  என ஏதேதோ பேசி அவளை ஒத்து கொள்ள வைப்பதற்குள் ஒருவழி ஆகினான் ஆர்யன்.

அப்போதும் ஆருத்ரா, "இல்ல.. அது.. அது வந்து.." என திணற,

      "நீங்களும் இவனுங்க மாதிரி எனக்கு நல்ல ஃப்ரென்ட்ஸ் தான்.. என்னோட உறவா நினைச்சு தான் உங்கள இன்வைட் பன்றேன்.. எங்களுக்காக ப்ளீஸ்.." என ஹரி கேட்க, ஆருத்ராவும் தோழிகளை பார்க்க அவர்களும் கண்களாலே 'போகலாம் டி..' என சொல்ல பின் மலர்ந்த முகத்துடன் கார்டை வாங்கிக் கொண்டாள்.

      "இன்னும் மூனு நாள்ல நாங்க ஊரு கிளம்புறோம்.. சோ, அப்போவே நீங்களும் எங்க கூடவே வந்துறுங்க எல்லாரும் ஒன்னாவே போலாம்.. டூர் மாதிரி ஜாலியா இருக்கும்.." என அபி கூற,

      "எங்களுக்கு அங்க யாரையும் தெரியாது.. நாங்க எப்பிடி.." என ஆருத்ரா முகத்தை தொங்க போட,
  
அவள் கையை பற்றிய ஆர்யன் அதில் அழுத்தத்தை கொடுத்து,
     "அதான் நா இருக்கேன்ல ஆருமா.." என சொல்ல அவளோ தன்னை மறந்து அவன் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

இங்கு டைனிங் டேபிளில் ரியா ஃபோனை நோண்டிக் கொண்டு அமர்ந்திருக்க அவளுக்கு எதிரில் வந்து அமர்ந்தான் ஹரி. அவளையே ஓரக் கண்ணால் அவன் பார்த்துக் கொண்டிருக்க நிமிர்ந்து பார்த்தவள் புன்னகையுடன்,
       "அப்போ கல்யாணத்துக்கு எல்லா ஏற்பாடும் பன்னியாச்சா.." என வினவ,

      "எல்லா ஏற்பாடும் நடந்துக்கிட்டு இருக்கு.. இப்போ தான் நீங்கெல்லாம் வர்றீங்கல்ல எல்லாரும் சேர்ந்தே பன்னிடலாம்.."  என ஹரி சிரிப்புடன் சொல்ல,

       "தங்கச்சி கல்யாணம் இப்பிடி தான் பதினைஞ்சி நாளுக்கு முன்னாடி போறதா..  முன்னமே போய் எல்லா அர்ரேன்ஜ்மென்ட்ஸையும்(Arrangements) பன்னியிருக்க வேணாம்.. ம்ம்.." என உரிமையாக ரியா அதட்ட,

அவள் உரிமை அதட்டலில் குதூகலித்தவன்,
       "ஓஃபீஸ்ல அதிகமா லீவ் எடுத்துட்டேன்.. இந்த டைம் ரொம்ப கெஞ்சி கூத்தாட போய் தான் பெர்மிஷனே தந்திருக்காங்க.. இன்ஃபேக்ட் இது கிடைச்சதே ஆச்சரியம் தான்.. " என ஹரி சொல்ல,

      "தேங்க்ஸ் சரண்.. எங்களையும் உங்க உறவா நினைச்சு இன்வைட் பன்னதுக்கு.. எங்களுக்கு இதெல்லாம் ரொம்பவே புதுசா இருக்கு..  எல்லாரோடையும் உறவா நெருங்கி பழக ஆசை தான்.. ஆனா, சின்ன வயசிலிருந்து மத்தவங்களால கேலி கிண்டல் அனுபவிச்சதால யாரையும் எங்க பக்கத்துல நெருங்க விட்டதில்லை.. " என அவள் பாட்டிற்கு பேசிக் கொண்டே போக,

       அவனோ அவளுடைய சரண் என்ற அழைப்பிலே உடல் சிலிர்த்து அவளையே ரசனையாக பார்த்துக் கொண்டிருந்தான். அதை உணராதவளோ,
        "சரண் என்னை ஏன் எப்போ பார்த்தாலும் வாங்க போங்கன்னு ரொம்ப மரியாதை கொடுத்து பேசுறீங்க.. ரொம்ப தூரமா இருக்குற மாதிரி ஃபீல் ஆகுது..  என் பேர் சொல்லி கூட என்னை நீங்க கூப்பிட்டதில்லை.." என போலியான முறைப்புடன் ரியா சொல்ல,

அவனுக்கும் அவளுடனான நெருங்கிய உறவு தேவைப்பட சிறுசிரிப்புடன்,
       "இனி உங்க பேர் சொல்லியே கூப்பிடுறேன்.. ஓகேவாங்க.." என கேட்க,
அவளோ மீண்டும் முறைக்க அதை பார்த்தவன் புரியாமல் குழம்பி பின் தான் பேசியது நினைவில் வர நாக்கை கடித்து கொண்டு,
       "சோரிங்க.. அச்சோ.. சரி சரி சோரி ரீ.." என சொல்லிவிட்டு அவளை பார்த்து புன்னகையுடன் நகர்ந்தான்.

        ரியாவுக்கு தான் மனதில் பாரம் ஏறியது போன்ற ஒரு உணர்வு. தான் காதலித்தவன் தனக்கில்லை என்று அறிந்தவுடன் அவனை விட்டு அவளே ஒதுங்கி போக நினைத்தாலும் ஒன்று அவன் வழிய வந்து பேசுகிறான் இல்லை இவளாகவே தன்னிலை மறந்து அவனை ரசிக்கிறாள். அவனை விட்டு விலகவும் முடியாமல் நெருங்கவும் முடியாமல் அவன் இன்னொருத்திக்கு சொந்தம் என்பதை ஏற்கவும் முடியாமல் தடுமாறியவள் கண்களிலிருந்து இரு சொட்டு கண்ணீர் அவளை மீறி வழிந்தது.

எல்லாரும் கூடியிருந்து பேசிக் கொண்டிருக்க ஆருத்ராவோ,
       "ஹரி நீங்க எந்த ஊரு.." என தன் சந்தேகத்தை கேட்டாள்.

  சிறுசிரிப்புடன் "தேனி.." என கூறியவன் தேனி புறப்படுவதற்கு அவர்களுக்கான ஃப்ளைட் டிக்கெட்ஸ் மற்றும் செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டான்.

      இவ்வாறு நாட்கள் நகர அவர்கள் தேனிக்கு புறப்படும் நாளும் வந்தது. ஆனால், சந்தோஷமாக ஆரம்பிக்கும் இப் பயணம் முடிவில் சந்தோஷமாக அமையுமா என்பதே கேள்விக்குறிதான்..

❤தொடரும்❤
------------------------------------------------------------------
 
        Friends story epidi poguthunnu marakama unga comments a solluga..
        and keep supporting me guys❤

https://www.sahaptham.com/community/tamil-novels-jade-javid/%e2%9d%a4%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b4/#post-8560

 

❤ZAKI❤

     
       

Zakiya


ReplyQuote
Page 3 / 6
Share: