Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

பைந்தமிழின் தீந்தமி...
 
Notifications
Clear all

பைந்தமிழின் தீந்தமிழ்  

  RSS

dharshini chimba
(@mazhainila)
Estimable Member Writer
Joined: 3 years ago
Posts: 136
15/12/2019 3:28 pm  

வணக்கம் ப்ரெண்ட்ஸ்!

வண்ணங்கள் போட்டிக்கான என் இரண்டாவது  கதை இது, "பைந்தமிழின் தீந்தமிழ்"  

படித்துவிட்டு தங்களின் கருத்துகளை கண்டிப்பாக பகிரவும்... 

******

"டேய்! நல்லா யோசிச்சிட்டியாடா? அப்புறம் பின்னாடி எதுக்கும் வருத்தபடக்கூடாது" என்று தன்னையே பார்த்து கொண்டிருக்கும் நண்பனை முறைத்தான்.

"நான் நல்லா யோசிச்சிட்டேன் மஹி. இன்னும் ரெண்டு நாள்ல கிளம்புறேன். நீ தான் வீட்ல சமாளிக்கணும்" என்றான்.

"நீ போறது உன் வாழ்க்கையை தேடி கண்டுபிடிக்க. ஆனா, அதுக்கு ஏன்டா என் வாழ்க்கைய உங்க அப்பாகிட்ட அடகு வைக்க சொல்ற? என்னால முடியாது" என்றான் மஹி.

"அதெல்லாம் எனக்கு தெரியாது. நீ தான் சமாளிக்கனும். சமாளிக்கிற.." என்றான் தீந்தமிழ்.

பெருமூச்சோடு நண்பனை நோக்கி, "எனக்கு பயமெல்லாம் இல்ல.. கொஞ்சம் பயம் தான். உங்கப்பா மீசைய முறுக்கிட்டு ஒருமுறை முறைச்சா எனக்கு ரெஸ்ட்ரூம் வந்துரும். அதான் பார்த்தேன். நான் ஏதாவது உளர போறேன்னு, சரி. நீ இவ்ளோ தூரம் சொல்ற. பார்த்து பத்திரமா போய்ட்டு வா. ஊர் பேர் தெரியாத இடத்துக்கு போற. உஷாரா இரு." என்று சிரித்தான் மஹி.

"ரொம்ப தாங்க்ஸ் டா. நான் பார்த்துக்குறேன்." என்று நண்பனை ஆரத்தழுவி கொண்டான்.

"எல்லாம் எடுத்து வச்சிட்டியா பா?" என்று தன் பின்னாலேயே சுற்றி கொண்டிருக்கும் அன்னையை நின்று திரும்பி பார்த்து புன்னகைத்தான்.

"அம்மா! எனக்கு தேவையானது எல்லாம் எடுத்து வச்சிக்கிட்டேன். நான் ஒண்ணும் இன்னும் சின்ன புள்ளை இல்லம்மா." என்று சிணுங்கிக்கொண்டே அன்னையை கட்டிக்கொண்டான்.

"ஆமா. நீ எவ்ளோ வளர்ந்தாலும் எனக்கு சின்ன புள்ள தான்டா" என்று சிரித்தார்.

"சரி. அப்படியே வச்சிக்கோங்க" என்று தன் பெட்டியில் எல்லாவற்றையும் சரி பார்த்து கொண்டிருந்தான் தீந்தமிழன்.

"சரியா ஒரு மாசம் தான் டா. உன் வேலை முடிஞ்சி வந்தப்புறம், இத்தனை நாள் தள்ளி போட்ட மாதிரி இனி தள்ளி போட கூடாது. நான் பார்க்கிற பெண்ணை தான் கல்யாணம் பண்ணிக்கனும்" என்றார் அவனின் அன்னை அழுத்தமாய்.

'நான் என் வாழ்க்கையை தேடி போறேன்மா. பார்க்கலாம் நீங்க சொல்றது நடக்க போகுதா? இல்ல இத்தனை வருஷ என்னோட கனவு நினைவாக போகுதான்னு' என்று நினைத்தவன்.

"சரி மா. அதெல்லாம் போய்ட்டு வந்தப்புறம் பேசிக்கலாம்" என்றான் தீந்தமிழன்.

"சிவகாமி. இன்னும் என்ன பண்றிங்க உள்ள அம்மாவும் பையனும்? கேப் வந்துடுச்சு. அவங்கிட்ட சொல்லு." என்றார் ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்தபடி செய்திதாளை புரட்டிக்கொண்டே.

"உன் புருஷருக்கு கொஞ்ச நேரம் நாம பேசனா புடிக்காதே?" என்றான் கடுப்பாய்.

"டேய்! என்ன பேச்சு இது? அவர் உன்னோட அப்பா. அந்த மரியாதை மனசில இருக்கணும்" என்றார் முகவாட்டமாய்.

"சரிம்மா. இனி அப்படி சொல்லமாட்டேன். போதுமா? நீ உடனே முகத்தை தூக்கி நம்ம வீட்டு மோட்டுவலைல வச்சிக்காத" என்றான் கிண்டலாய்.

"கூட கூட பேசுற. வாய் மேலயே போடப்போறேன் பாரு" என்றார் சிவகாமி.

அழிந்து போனதாய் அனைவரும் கூறும் தன் வாழ்க்கை தொலைந்து தான் போயிருக்கிறது என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் தன்னுடைய பயணத்தை தொடங்கினான் தீந்தமிழ்.

"தீனா பார்த்துக்கோடா. பத்திரமா போய்ட்டு வா" என்றான் மஹி.

"எல்லாம் நான் பார்த்துக்குறேன். நான் வரவரைக்கும் ஆஃபீசை பொறுப்பா பார்த்துக்கோ" என்றான் தீந்தமிழ் என்கிற தீனா.

"சரி டா" என்று பிரியா விடைகொடுத்து அனுப்பினான் நண்பனுக்கு மஹி என்கிற மஹேந்திரன்.

எந்த விமானத்தில் தன் வாழ்க்கை பறந்து போனது என்று நினைத்தானோ அதே விமானத்திலேயே பயணம் மேற்கொண்டான்.

பயணத்தில் அசதியில் அவனது விழிகளும் மெல்ல துயிலில் கரைந்தது.

*****

"பாலா! என்னை கல்யாணம் பண்ணிபல்ல" என்பாள்.

"உன்னை மட்டும் தான் கல்யாணம் பண்ணிப்பேன்" என்று சிரிப்பான்.

"சத்தியமா?" என்பாள் நம்பாத தொனியில்.

"என் மேல சத்தியமா நீ மட்டும் தான் என் பொண்டாட்டி" என்று அவளுக்கு சத்தியமும் செய்தான்.

இரண்டு வாரங்கள் கழிந்தது.

"நான் தான் சொன்னேன்ல உன்னை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு. இப்போவாவது நம்புறியா?" என்று மணமக்களின் அலங்காரத்தில் மலராத மொட்டாய் தன் அறையில் அமர்ந்திருந்தவளின் முன் கன்னத்தில் குழிவிழ சிரித்தான் தீந்தமிழன்.

"எனக்கு தெரியும் பாலா. இருந்தாலும் அந்த மதன் இருக்கான்ல நீ தான் என் புருஷன்னு நான் சொன்னா நம்பவே இல்ல. அதெல்லாம் நடக்காது. சும்மா, அவன் பெருசானவுடனே அழகான பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிப்பான்னு சொன்னானா அதான் உன்கிட்ட அப்படி கேட்டேன். சாரி.... நீ கோவிச்சிக்காத." என்றாள் விழிகளை படபடக்கும் மின்மினி பூச்சியின் அசைவு கொண்டு.

"சரிடி,. வீடு" என்றான் தீந்தமிழ்.

"பாலா. நீயும் நானும் கல்யாணம் பண்ணவுடனே அவன்கிட்ட நீ சொல்லணும் சரியா? இவ தான் எப்பவும் என்னோட பைந்தமிழ். என்னோட பொண்டாட்டின்னு. சொல்றியா?" என்றாள் நம்பிக்கையோடு அதட்டும் உரிமையில் குழந்தை மனம் மாறாமல், திருமணமென்பது பொம்மைகள் விளையாட்டாய் எண்ணி. .

"ஹ்ம்.. சொல்றேனே" என்று அவளுடைய பாலாவும் சிரிக்க.

"பாலா!" என்று வெளியில் இருந்து அம்மா அழைக்கவும், "என்னை கூப்பிட்றாங்க பொண்டாட்டி நான் முதல்ல போறேன். நீ பின்னாடியே வா" என்று பால் மனம் மாறாமல் ஓடினான் பதிமூன்று வயதே நிரம்பிய தீந்தமிழன்.

பாலன், பைந்தமிழின் பெற்றோர் இருவரும் தலைமுறைகளாய் தொடர்ந்து வந்த நெருங்கிய குடும்ப சிநேகிதர்கள்.

பிறந்ததில் இருந்தே விரல் பிடித்து சுற்றி வந்தனர் பாலனும் பைந்தமிழும்.

மற்றவரின் பேச்சோ பெற்றவரின் பேச்சோ இருவரின் மனதிலும் ஆணித்தரமாய் வேரூன்றியது ஒருவருக்கு ஒருவர் தான் என்று.

பால்ய விவாகம் ஒழிந்ததாய் நாம் கூறிக்கொண்டிருந்த வேளைகளில் இரு வீட்டு தாத்தாகளும் பாட்டிகளும் தங்கள் பிள்ளைகளை சம்மதிக்க வைத்து "தீந்தமிழ் பாலன்- பைந்தமிழ்" பால்யவிவாகம் நடந்து முடிந்தது.

பத்து வயது நிரம்பிய பைந்தமிழின் கழுத்தினில் திருமணம் என்ற பந்தத்தின் பொருள் முழுமையாய் விளங்கும் முன் இருவரின் முதல் எழுத்துகளும் பொருந்திய லாக்கெட்டுடன் இருந்த தங்கசங்கிலியை கழுத்தினில் அணுவித்து மனைவியாய் எற்றுக்கொண்டான் பாலன்.

திருமணம் முடிந்தாலும் பருவமெனும் மொட்டு மலராததால் அவள் வீட்டிலேயே வலம் வந்தாள் பைந்தமிழ்.

இரண்டு மாதங்கள் கடந்திருந்த வேளையில், ஒரு நாள்..

"தமிழ்! அப்பா சென்னைல பிசினஸ் ஆரம்பிக்க போறாங்க. நாங்க எல்லாரும் போகபோறோம்" என்றான் தீந்தமிழன்.

"எங்க அப்பாக்கும் லண்டன்ல வேலை கிடைச்சிருக்கு பாலா நாங்களும் அங்க போகபோறோமே" என்றாள் பைந்தமிழ் குஷியாக.

"அவங்க போகட்டும்டி. நீ என் பொண்டாட்டி என்கூட தான் இருக்கனும். எங்கக்கூட வந்துடு. சரியா?" என்றான் பாலன்.

"ஹுஹும்... அஸ்கு புஸ்கு.. நான் ஏன்டா உன்கூட வரணும்? நீ வேணா எங்கக்கூட வந்துடு. நான் எங்க அப்பா அம்மாவை விட்டுட்டு வரமுடியாது" என்று அவனிடம் கோபித்து கொண்டு ஓடினாள் பைந்தமிழ்.

"நில்றி. அடியே தமிழ்." என்று கத்திக்கொண்டே அவள் பின்னால் ஓடினான் தீந்தமிழன்.

இப்படியே ஒருவரை ஒருவர் பிரியமுடியாமலும் குடும்பத்துடன் போக முடியாமலும் தவிக்க, மிக பெரிய போராட்டத்திற்கு பின் இரு குடும்பங்களும் தங்கள் குடும்பத்துடன் பிரிந்தனர்.

"டேய் தீனா. அவ எங்க போகபோறா. இங்க இருக்க லண்டனுக்கு தான? அதுவுமில்லாம மாமாவும் நம்ம கம்பனில பார்ட்னர் தான்டா. ரெண்டு வருஷம் தான் அங்க இருப்பாங்க. அதுக்கப்புறம் இங்க நம்மகூடயே தான் இருக்க போறாங்க. அதுவரைக்கும் தினமும் போன்ல பேசிக்கலாம். நீங்க ரெண்டு பேரும் ஸ்கூல், ப்ரெண்ட்ஸ், எக்ஸாம்னு நாள் வேகமா ஓடிடும். சும்மா அடம் பிடிக்காம போயி படிக்கிற வேலைய பாரு." என்று தீந்தமிழனை சமாதானம் செய்து ஒரு வழியாக சமாளித்தனர்.

ஒரு நாள் தவறாது இருவரும் போனிலும் வீடியோ சாட்டிங்கைலும் பேசினார்.

இருவரும் திருமணம் என்ற பந்தத்தின் பொருள் புரியாமல் குழந்தைகளின் பிள்ளை விளையாட்டாய் நினைத்து கொண்டு பருவம் பெறா பள்ளிக்காலத்தில் அறியா காதலில் சிக்குண்டு இருந்தனர்.

"ஒரு வருஷம் போய்டுச்சு தமிழ். இன்னும் ஒரு வருஷம் தான் அப்புறம் முதல்ல மாதிரி நீயும் நானும் ஒன்னா ஜாலியா பக்கத்து பக்கத்து வீட்ல இருக்கலாம். நிறைய விளையாடலாம்" என்றான் கண்களில் மின்னும் கனவுகளுடன் தீந்தமிழன்.

அவனை சீண்ட நினைத்த பைந்தமிழ்.

"அய்யோ! நான் திரும்பி அங்க வரமாட்டேன் பாலா. எனக்கு இங்க நிறைய ப்ரெண்ட்ஸ் இருக்காங்க. அதுவும் இல்லாம என் கிலோஸ் ஃப்ரெண்ட் ஜானை விட்டுட்டு என்னால இருக்க முடியாது." என்றாள் பைந்தமிழ்.

அறியா வயதில் முளைத்த காதலில் பொறாமை எட்டி பார்க்க, "யாருடி அந்த ஜான்?" என்றான் முறைத்து.

"ஏய்! மரியாதையா பேசு. என்னை டி போட்டு பேசுற வேலைலாம் வேணாம் சொல்லிட்டேன். ஜான் தான் என் கிலோஸ் ஃப்ரெண்ட் அவனுக்கு நான் னா ரொம்ப பிடிக்கும்" என்றாள் மேலும் வெறுபற்ற

"எனக்கு அவனை பிடிக்கலை. அவன்கூடல்லாம் இனி பேசாதே" என்றான் தீந்தமிழன்.

"நான் ஏன் நீ சொல்றதை கேக்கனும்? நான் ஒண்ணும் உனக்கு அடிமை இல்லை" என்றாள் கோபத்தோடு.

"நீ என் பொண்டாட்டி. நான் சொல்றதை தான் நீ கேக்கனும்" என்றான்.

"அதெல்லாம் சும்மா. நான் பெருசாகி இங்கயே நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணிபேன்." என்று விளையாட்டாய் பைந்தமிழ் கூற வெடுக்கென்று போனை கட் செய்தான் தீந்தமிழன்.

அதன்பின் எவ்வளவு முறை பைந்தமிழ் போன் செய்தாலும் எடுக்கவில்லை பேசவும் இல்லை.

இப்படியே இரு வீட்டிலும் ஒரு வாரமாக பெரிய போரே நடக்க தீந்தமிழின் அப்பா,

"டேய் தீனா! என்னடா பைந்தமிழ் கூட சண்டை உனக்கு? நீ பேசலைன்னு அவ ஒரு வாரமா யார் கூடயும் பேசுறதில்லையாம். ரெண்டு நாளா எதுவுமே சாப்பிடலையாம்டா. எதுக்குடா இப்படி பண்ற?" என்று கேட்டுக்கொண்டிருக்கும் போதே...

பைந்தமிழ் சாப்பிடவில்லை என்று கேட்டவுடன் அவளுக்கு போன் செய்ய ஓடினான்.

போனை பைந்தமிழ் எடுத்த மறுநொடி, "அறிவு இருக்காடி உனக்கு? யாராவது ரெண்டு நாளா சாப்பிடாம இருப்பாங்களா? சாப்பாடு மேல ஏன் உன் கோபத்தை காட்ற? ஒழுங்கா போய் சாப்பாடு போட்டு வந்து சாப்பிடுடி" என்றான் கோபமாய்.

"முடியாது போடா. ஒரு வாரமா பேசாதவன் இப்போ எதுக்குடா வந்து பேசுற? நான் சாப்பிடாம இருந்தா உனக்கு என்ன?" என்றாள் அவளும் கோபமாய்.

"சரி டி சாரி. தமிழ் எனக்கும் பசிக்குதுடி. நானும் இன்னும் சாப்பிடலை. நீ சாப்பிட்டா தான் நானும் சாப்பிடுவேன்" என்று தீந்தமிழன் கூறி முடிக்கும் முன்னரே சாப்பாட்டு தட்டுடன் வந்து அமர்ந்திருந்தாள்.

அவனும் எதுவும் பேசாமல் வேகமாக சென்று சாப்பாட்டு தட்டுடன் வந்தமர்ந்தான்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்தனர்.

"இங்க பாரு. உனக்கு பிடிக்கும்ல வத்தக்குழம்பு நான் சாப்பிடட்டா?" என்றான் தீந்தமிழன்.

"ஹிம்.. இங்க பாரு உனக்கு பிடிக்கும்ல புலி சாதம்" என்றாள் பைந்தமிழ்.

ஒருவருக்கு பிடித்ததை மற்றவர் விரும்பி சாப்பிட்டனர்.

வார்த்தைகளின் அலறல் தேவையில்லை. தீண்டலின் பாஷை தேவையில்லை. புரிதலின் அன்பு மேலோங்கி இருந்தது இருவரிடமும்.

இப்படியே அவர்கள் எதிர்பார்த்த இரண்டு வருடங்கள் ஓடி போனது.

"பைந்தமிழ்" என்றான் சந்தோஷமாய் தீந்தமிழ்.

"இன்னும் ரெண்டு நாள் தான் பாலா. அப்புறம் அங்க வந்துட்டா நீ என்கிட்ட சண்டை போட மாட்டல்ல?" என்றாள் பைந்தமிழ்.

"நிச்சயமா இல்லடி. எனக்கும் எப்போ உன்னை பார்ப்பேன்னு இருக்கு தெரியுமா?" என்றான் ஏக்கமாய் தீனா.

"சீக்கிரமா வந்துடறேன். ஆனா அதுக்கு முன்னாடி எல்லாரும் மொரிஷஸ் போலாம்னு அப்பா சொல்லிருக்கார். நாங்க ஒரு வாரம் போய்ட்டு அங்க சென்னைக்கு வருவோம்?" என்று மகிழ்ச்சியில் துள்ளினாள்.

அவளின் மகிழ்ச்சியை கண்டு தானும் மகிழ்ந்தவன், "சரி. பார்த்து பத்திரமா பார்த்து போய்ட்டு வாங்க" என்று வைக்க மனமில்லாமல் போனை வைத்தான்.

அதுதான் அவர்களின் கடைசி உரையாடல் என்று இருவரும் அறியவில்லை வீதி நினைத்துவிட்டது.

மறுநாள் மொரிஷியஸ் கிளம்பியவர்கள் அங்கு சென்று இறங்கும் முன் ஓடுதளத்தில் இறங்கும்போது ஏற்பட்ட கோளாறில் விமானம் வெடித்து சிதறியதாக செய்தி வந்ததும். அதில் பைந்தமிழின் குடும்பம் இறந்ததாக செய்தியும் சேர்ந்து வந்தது.

"உன் விழியின் வழியே
என் இதயத்தை 
சிறைபிடித்தவளே! 
உன்னோடு சேர்த்து 
என் 
உயிரையும் கொண்டு
சென்றதேனோ?

இருப்பினும் 
இதயத்தின் மொழிக்கு
உருவம் தேவையில்லையடி
கண்மணியே!

இறப்பெனும் போர்வையில்
நீ ஆடும்
கண்ணாமூச்சியில்
உன் 
உயிர்க்காதல் கொண்டு 
நம்பிக்கையோடு 
நீ வருவாயென
உயிர் வாழ்கிறேனடி
பைந்தமிழ்.

அதை கேள்விபட்ட தீந்தமிழன் பெரிய அதிர்ச்சிக்குள்ளானான். யாரிடமும் பேசாமல் தன்னை தனிமை படுத்திக்கொண்டான். பித்து பிடித்தவன் போல் விட்டத்தை வெறித்து பார்த்து கொண்டு அமர்ந்திருப்பான். இரவு நேரங்களில் "பைந்தமிழ்! எங்கடி இருக்க? என்கிட்ட வந்துடு. நான் எப்பவுமே உன்னை திட்டமாட்டேன். நீ இல்லாம என்னால இருக்க முடியலை. நானும் சாகபோறேன்" என்று அலறி துடிப்பான்.

இரண்டு வருடங்கள் முழுவதுமாய் தன்னை மற்றவர்களிடம் இருந்து தனிமை படுத்தி கொண்டான்.

பள்ளிக்கு சென்று வருவதோடு சரி. அந்த நேரங்களில் எல்லாம் அவனிடம் இருந்தவன் நண்பன் மஹி மட்டும் தான்.

பள்ளி படிப்பும் முடிந்து கல்லூரியில் சேர்ந்தான். அவனுடனே அவனுக்காகவே உடன் சேர்ந்து படித்தான் மஹி.

அடுத்த மூன்று வருடங்கள் ஜடமாய் சென்று வந்தான்.

அவனிடம் பேச நிறைய பேர் முயன்று முடியாமல் போனதும் உண்டு.

அவனை உயிராய் காதலித்த பெண்களும் உண்டு.

யாரையும் ஏறெடுத்தும் பார்க்க மறுத்துவிடுவான். இவனை இந்த தனிமை சிறையில் இருந்து மீட்டு வர எவ்வளவோ முயற்சி செய்து முடியாமல் தவித்தனர் அவனின் பெற்றோர்.

பதுமையவள் கொண்டு சென்ற
என் மனதைக்கேட்டு
மார்டன் மங்கைகள்
வரிசைகட்டினாலும்
நீண்டு வளர்ந்த
அவள் கூந்தலின் 
பின்னழகிற்குக்கூட
ஒருவரும்
ஈடாகவில்லையென்பதே
நிதர்சன உண்மை...

கல்லூரி படிப்பும் முடிந்துவிட கம்பனியை அவனிடம் ஒப்படைத்தார் அவனின் தந்தை.

அப்படியாவது அவனிடம் ஏதாவது முன்னேற்றம் வந்துவிடாதா என்ற நப்பாசையில். கம்பனியை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல மிகவும் கடினமாய் உழைக்க ஆரம்பித்தான் தீந்தமிழன். தன் வெறுமை, தனிமை என்று எல்லாவற்றையும் அதில் கொட்டி தீர்க்க ஆர்ம்பித்தான்.

மேலும் இரண்டு வருடங்கள் ஓடியது. பைந்தமிழ் இறந்து இன்றோடு எழு வருடங்கள் ஓடி விட்டாலும் அவளின் ஒவ்வொரு அசைவுகளும் அவனின் மனதில் காலத்துக்கும் அழியாத கல்வெட்டு பொக்கிஷமாய் பதிந்து இருந்தன, அப்படி செதுக்கி இருந்தால் அவள்.

கல்யாண பேச்சை எடுத்தாலே, "அம்மா! நீங்க வேணா மறந்திருக்கலாம். இல்ல பொம்மை கல்யாணம்னு நினைச்சு இருக்கலாம். ஆனா, எனக்கு ஏற்கனவே பைந்தமிழ் கூட கல்யாணம் ஆகிடுச்சு. அவ மட்டும் தான் என்னோட பொண்டாட்டி உயிரோட இல்லன்னாலும். அதனால இதை பத்தி இனி பேசாதீங்க" என்று அழுத்தமாய் கூறி விடுவான்.

அவனை மாற்ற எவ்வளவோ முயன்றனர். ஆனால் எல்லாமே கடலில் கலக்கும் நீராய் கரைந்து போனது.

மாற்ற நினைப்பது 
உடையென்றால்
பயனிருக்கும்... 
இல்லாத
என் மனதையல்லவா
கேட்கின்றனர்.
நீ என்பதே நான் என்று
அறியாமல்
வேரோடு பிடுங்கமுடியாதே..
.

இப்படி நாட்கள் சென்று கொண்டிருக்க, ஒரு நாள் தன் அலுவலகத்தில் அமர்ந்து செய்தி தாளை புரட்டி பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு மின்னல் தாக்கியது போல் இருந்தது அதில் இருந்த செய்தி.

''நாட்டியத்தில் சாதனை படைத்த இளம்பெண் நிஷா' என்று பைந்தமிழின் புகை படத்துடன் இருந்தது.

"டேய்! அந்த பொண்ணு பேரு நிஷான்னு போட்ருக்கு. அது நம்ம பைந்தமிழ் இல்லடா" என்றான் மஹி.

"டேய் மஹி இல்லடா. அது என் தமிழ் தான். இந்த நியூஸ் படிச்சு பார்த்தியா? எந்த இடத்துலன்னு? மொரிஷியஸ் டா. என் தமிழ் கடைசியா போன இடம். ஏன் என் தமிழா இருக்ககூடாது?" என்று நம்பிக்கையுடன் கூறினான் தீந்தமிழ் பாலன்.

அந்த செய்தியை பற்றி எப்படியோ ஆராய்ந்து இதோ இன்று என்ன தான் உண்மை என்பதை தானே சென்று அறிந்து கொள்ள, வீட்டில் யாரிடமும் இதை பற்றி கூறாமல் கிளம்பிவிட்டான் தீந்தமிழ் மொரிஷியோஸ்கு.

அங்கு சென்று ஒரு வாரம் பைந்தமிழ் பற்றி எந்த செய்தியும் சரியாக கண்டுபிடிக்க முடியாததால் சற்று துவண்டாலும். 'இல்ல என் பைந்தமிழை நா கண்டு பிடிச்சே தீருவேன். அவ இவ்ளோ நாள் கஷ்டபட்டதெல்லாம் போதும், இனி அவளை ராணி மாதிரி கண்ணுக்குள்ள வச்சி பார்த்துப்பேன்.' என்று நினைத்தவன் துவளாமல் மீண்டும் நம்பிக்கையுடன் அதே இடங்களில் தேடினான்.

அவனின் முயற்சி வீண் போகாமல் அந்த நாட்டியபள்ளியில் பைந்தமிழின் முகவரி கிடைத்தது.

எப்படியோ ஒருவழியாக கடல் கடந்து தன்னவளை தேடி வந்தவனுக்கு, அலைந்து திரிந்து முகவரியும் வாங்கியவனுக்கு இன்று சொல்ல முடியாத உணர்வில் ஏனோ மனம் படபடக்க அந்த இல்லத்தின் வாசலில் நின்றிருந்தான் தீந்தமிழ்பாலன்.

அவள் என்ன நிலையில் இருப்பாள்? அவளுக்கு தான் யார் என்று நினைவிருக்குமா? இல்லை நீங்க யார் என்று கேட்டுவிட்டால் என்ன செய்வது? என்று ஆயிரம் கேள்விகள் அவனின் மூளையில் உதிக்க.

'ஏய்! சும்மா இருக்க மாட்ட? நானே இங்க பயங்கர டென்ஷன்ல இருக்கேன். நீ வேற இப்போ தான் தேவை இல்லாத கேள்வியெல்லாம் கேட்டு என்னை இன்னும் டென்ஷன் ஆக்குற? கொஞ்ச நேரம் உன் திருவாயை மூடிட்டு அமைதியாய் இருந்தாலே நான் எல்லாத்தையும் சரியா செய்வேன்' என்று தன் மனதோடு சிறிது நேரம் சண்டையிட்டவன் மனதில் இருக்கும் கடவுள்களையெல்லாம் துணைக்கு அழைத்துக்கொண்டு உள்ளே சென்றான்.

வரவேற்பறையில் நாற்பது வயது மதிக்கதக்க பெண்மணி அமர்ந்திருக்க இவனை பார்ததும், "சொல்லுங்க சார்! என்ன வேணும்?" என்றார் கனிவாக.

சிறிது நேரம் தயங்கியவன் பின் மெதுவாய், "மேடம்! இங்க பைந்தமிழ்... " என்று நாக்கை கடித்து கொண்டு, "இங்க நிஷாவை பார்க்கணும்" என்றான்.

"நீங்க யாரு? எதுக்கு நிஷாவை பார்க்கணும்?" என்று அவனை ஏற இறங்க பார்த்தார்.

"நான் அவங்க ஃப்ரெண்ட்" என்றான் உண்மையை கூறமுடியாமல்.

"உங்களை அவங்களுக்கு தெரியுமா? இதுக்கு முன்னாடி நான் உங்களை பார்த்ததே இல்லையே?" என்றார் சந்தேகமாய்.

"மேடம்!.." என்று தயங்கியவன், பின்

"மேடம்! நான் அவங்க அத்தை பையன். என்னை அவங்களுக்கு நிச்சயமா தெரியும்?" என்றான்அவளுக்கு தன்னை தெரியும் என்ற நப்பாசையோடு.

'அப்படி என்னை ஞாபகம் இருந்திருந்தா அப்பவே என்னை கூப்பிட்டு இருப்பாளே? எங்க போன் நம்பர் தான் அவளுக்கு அத்துப்படி ஆச்சே?' என்று உள்ளுக்குள் மூளை கேட்க.

'ஹிம்... இதுக்கு மட்டும் முன்னாடி வந்துடு' என்று முறைத்தவன்.

"மேடம்! அவங்க என் அத்தை பொண்ணு. ஏழு வருசத்துக்கு முன்னாடி அவங்க மிஸ் ஆகிட்டாங்க. பிளைட் கிராஷ்ல அவங்க பேமிலி எல்லோரும் தவிறிட்டதா தான் எங்களுக்கு தகவல் கிடைச்சுது. இப்போ ரீசென்டா அவங்களை நியூஸ் பேப்பர்ல பார்த்தப்புறம் தான் இங்க இருக்காங்கன்னு தெரிஞ்சு தேடி வந்துருக்கேன். பிளீஸ் அவங்களை பார்க்கணும்." என்றான் பைந்தமிழை பார்க்கும் ஆவலை மறைக்க முடியாமல்.

எதுவும் பேசாமல் அவனை உற்று நோக்கியவர்.

"இதுல உங்க பேர் அட்ரெஸ் எழுதுங்க. நான் போயி நிஷாவை கூட்டிட்டு வரேன்" என்று எழுந்து உள்ளே சென்றார்.

ஐந்து நிமிடங்கள் கடந்திருக்க, தீந்தமிழனுக்கு ஐந்து யுகங்கள் போல் தோன்றியது.

மேலும் அவனை காத்திருக்க வைக்காமல் வந்து நின்றாள் நிஷா என்கிற அவனுடைய பைந்தமிழ்.

"யெஸ்" என்று அவனை பார்த்து நிஷா கேட்க, தீந்தமிழன் தான் நொறுங்கி போனான்.

அவன் எதிர்பார்தது தான் இருந்தாலும் அவளுக்கு தன்னை ஞாபகம் இருக்கும் என்று உள்ளுக்குள் ஒரு நப்பாசை இருந்தது அது பொய்யானதில் மிகவும் ஒடிந்து போனான்.

இத்தனை வருட கனவான தவம் நேரில் நிஜமாய் உருவெடுத்து நிற்க, பேச நா எழாமல் கண்கள் கலங்க தவித்து நின்றான். கண்ட ஒரே நொடியில் கணித்து விட்டான் அவள் தான் தன்னுடைய சகி என்று. அவள் கழுத்தில் இருந்த அவன் அணிவித்த லாக்கெட் சொல்லாமல் பல கதைகள் சொல்லிற்று அவனுக்கு.

"சொல்லுங்க சார்! யார் நீங்க? என்னை எதுக்கு பார்க்கனும்னு சொன்னிங்க?" என்றாள் பைந்தமிழ என்கிற நிஷா.

"அது...அது.." என்று தலையை சொறிந்தபடி திணறினான் தீந்தமிழ்.

சுற்றி முற்றி பார்த்தவள், தன் மணிகட்டீல் இருந்த கடிகாரத்தை பார்த்தபின், "சாரி! என்னை தேடி யாரோ வந்துருக்காங்கன்னு சொன்னாங்க. நான் அது நீங்க தான்னு தப்பா நினைச்சிட்டேன்." என்று உள்ளே போக திரும்பினாள் பைந்தமிழ்.

'முட்டாள்... இப்படி அமைதியா இருக்கவா இவ்ளோ தூரம் கடல் கடந்து வந்து இத்தனை நாள் தேடின? இத்தனை வருஷ தவம் இவளுக்காக தான இத்தனை வருஷம் காத்திருந்த? இப்போ பேசுறதுக்கு என்ன? பேசி தொலை போக போறா" என்று உள்ளுக்குள் புலம்பியவன்.

"ஒரு நிமிஷம் தமிழ்" என்றான் நிறுத்தி, "நிஷா" என்றான் மெதுவாய்.

திரும்பி உள்ளே சென்றவள் ஒருநொடி நின்று திரும்பினாள்.

"நான் தான் உன்னை... உங்களை பார்க்க வந்தேன்" என்றான்.

"நீ
பிறந்த சிலநிமிடங்களில்
ஜனிததடி என் காதல்
"என் பாப்பா"
என்று பிஞ்சுவிரல்கொண்டு
உன் தந்தையுடன்
மல்லக்கு நின்ற 
மாவீரனடி நான்.."

"சொல்லுங்க. என்ன விஷயமா என்கிட்ட பேசணும்?" என்றாள் நிஷா.

"நான் உங்ககிட்ட முக்கியமான விஷயமா பேசணும். இங்க பக்கத்துல இருக்க பார்க்ல உட்கார்ந்து பேசலாமா?" என்றான் உள்ளுக்குள் என்ன சொல்வாள் என்று தடுமாறியபடி.

அவனை ஏற இறங்க பார்த்த பைந்தமிழ் என்கிற நிஷா.

"உங்களை யாரென்றே எனக்கு தெரியாது. நான் எதுக்கு உங்ககிட்ட பேசணும்? என்னை எதுக்கு பார்க்குக்கு வர சொல்றிங்க? முன்ன பின்ன தெரியாதவங்க கிட்ட பேச எனக்கு பிடிக்காது. நீங்க போகலாம்" என்றாள் பைந்தமிழ்.

ஒரு காலத்தில் என் பொண்டாட்டி என்று கூறியவனால் இன்று என்ன உறவு என்று கூற முடியாமல் தவித்தான்.

"நீங்க தைரியமா என்னை நம்பலாம். நான் உங்க அத்தை பையன் தான். அதை பத்தி சொல்ல தான் வர சொன்னேன். உங்களுக்கு நம்பிக்கையில்ல, பயமா இருக்குன்னா கூட யாரையாவது கூட்டிட்டு வாங்க." என்றான் தீந்தமிழ்.

தன் உறவு என்றதும் முகம் பூவாய் மலர்ந்தது பைந்தமிழிற்கு. மற்ற அனைவரும் ஏதோ ஒரு சொந்ததுடன் இருக்கவும் தான் மட்டும் எப்போதும் அனாதையாக தனித்து இந்த சிறையில் இருப்பது அவளுக்கு மனசுமையை கொடுத்து கொண்டே இருக்கும்.

அவளின் முக மலருதலை கவனித்தவன், "அத்தை மாமாக்கு என்னை ரொம்ப பிடிக்கும்" என்றான்.

"அத்தை மாமான்னா?" என்றாள் பைந்தமிழ்.

"உங்க அப்பா அம்மா தான்" என்றான் சாதாரணமாக.

"எங்க அப்பா அம்மாவை உங்களுக்கு தெரியுமா?" என்றாள் சிறுகுழந்தை போல் முகத்தில் கண்ணீர் துளிர்க்க ஏக்கதோடு.

"நல்லா தெரியுமே. நான் நிறைய வளர்ந்தது உங்க வீட்ல தான்" என்றான் தீந்தமிழன்.

"அப்படியா?" என்றாள் பைந்தமிழ்.

'இவ விட்டா எல்லாத்தையும் இங்கயே கேட்டுட்டே இருப்பா போல இருக்கே. எப்படியாவது இவளை சமாளித்து சமாதானம் செய்து இங்க இருந்து கூட்டிட்டு போய்டனும்" என்று நினைத்து கொண்டவன்.

"சரி. நீங்க நம்புற மாதிரியே தெரியலை. நீங்க வரமாதிரியும் தெரியலை. நான் வேணா போய்ட்டு இன்னொரு நாள் வரட்டுமா? " என்றான்.

"இல்ல.. இல்ல.. இங்கயே இருங்க இதோ வரேன்." என்று உள்ளே ஓடினாள்.

அப்பொழுது தான் கவனித்தான் பைந்தமிழ் அவள் போட்டிருந்த உடையை, முக்கால் லெக்கின்ஸ் டாப்ஸும் போட்டிருந்தால். 'இந்த டிரஸ்லையா வரபோறா? கடவுளே ஏன் என்னை இது மாதிரி சோதிக்கிற? " என்று பெருமூச்சி விட்டான்.

உன் மலர்விழியில்
மதிமயங்கி நான் நிற்க
என் இதயம் மட்டும்
இதழோடு இதழ் பதிக்க சொல்லி
மல்லுக்கு நிற்குதுதடி என்னிடம்...

'இந்நேரம் எல்லாம் சரியாக இருந்தா என்கூட இருந்திருப்ப என் பொண்டாட்டியா? என்ன பண்றது எல்லாம் நம்ம விதி.' என்று நினைத்து கொண்டான்.

சிறிது நேரத்தில் அழகான மிகவும் சாதாரண சுடிதாரில்வெளி வந்தாள்.

"போலாம்" என்று அவனுடன் நடக்க, தொலைந்து போன உயிர் வந்து தன்னுடன் சேர்ந்து கொண்டது போல் உணர்ந்தான் தீந்தமிழ்.

பூங்காவில், "உங்களுக்கு எங்க அம்மா அப்பாவை தெரியுமா? உண்மையாவா?" என்றாள் பைந்தமிழ்.

"சத்தியமாங்க. இன்னுமா உங்களுக்கு சந்தேகம்?" என்றவன் தன் பையில் இருந்து ஒரு போட்டோ ஆல்பமை எடுத்து நீட்டினான்.

அது சிறுவயதில் அவர்கள் எடுத்து கொண்ட குடும்ப புகைப்படம் .

"இது நீ.. இது நான்.. இதோ அத்தை மாமா... இது எங்க அப்பா அம்மா..." என்று ஒவ்வொரு புகைபடத்தையும் காட்டி பொறுமையாக கூறினான் தீந்தமிழன்.

கண்களில் வழியும் கண்ணீரை துடைக்க தோன்றாமல் பொக்கிஷத்தை பார்ப்பது போல் மிக மெதுவாய் பொறுமையாய் ரசித்து பார்த்து கொண்டிருந்தாள் பைந்தமிழ்.

தன்னையும் மறந்து மீசை முளைக்கும் முன்னே அனைவரின் முன்னே மனைவியாய் தன்னவளாய் ஏற்று கொண்டவன் இன்று விரல் தொடும் தூரத்தில் இருக்க திருமணத்தின் அர்த்தம் முழுவதுமாய் விளங்கியிருக்க தீண்டாமல் தள்ளி அமர்ந்திருக்கும் தன் நிலையை எண்ணி நொந்து போனான்.

"எங்க அப்பா அம்மா இப்போ எங்க? உங்களுக்கு தெரியுமா?" என்றாள் கண்ணீரை துடைத்து.

அவளை அள்ளி அணைத்திட மனது ஏங்கிட, அவளையே உற்று பார்த்தவன்.

"நீ என் கூட வரியா? நான் கூட்டிட்டு போறேன்" என்றான் உண்மை எதுவும் கூறாமல்.

சற்று நேரம் அமைதியாய் இருந்தவள்.

"நீங்க இதெல்லாம் காற்றிங்க சரி. இருந்தாலும் உங்களை எனக்கு தெரியாம நான் எப்படி உங்கக்கூட வர முடியும்" என்று இழுத்தாள்.

"நிஷா... ஹ்ம்.. உன்னோட உண்மையான பேரு பைந்தமிழ். உனக்கு என்கூட தனியா வர தயக்கமா இருந்தா உங்க இல்லத்துல இருந்து யாரையாவது கூட கூட்டிட்டு வா. அங்க வந்தப்புறம் நம்பிக்கை இருந்தா எங்க கூட இருக்கலாம்" என்றான் தீந்தமிழன்.

"இல்லன்னா நீயே அவங்க கூடயே இங்க திரும்பி வந்துடு" என்றான் மீண்டும் அதுபோல் நடக்க வாய்ப்பே இல்லை என்று.

சிறிதுநேரம் அமைதியாய் இருந்தவள், "சரி. முதல்ல நான் ஹோம்ல பேசணும். அப்புறம் எனக்கு தேவையான திங்க்ஸ் மட்டும் எடுத்து வைக்கணும்" என்றாள் பைந்தமிழ்.

'உனக்காக ஒரு புது வீட்டையே உருவாக்குவேன். இங்க இருக்கிறதை எதுவுமே வேணாம்' என சொல்ல துடித்தாலும் அமைதியாய் இருந்தான்.

"ஹிம்" என்றான்.

"அதுக்குள்ள நீங்களும் இங்க மொரிஷியஸ சுத்தி பாருங்க" என்று சிரித்தாள்.

தினமும் கனவிலும் நினைவிலும் தன் உயிர் குருதியில் தன்னோடு கலந்தவளின் சிரிப்பில் தன்னை மறந்தவன் அவளின் கன்னத்தை லேசாக ஒற்றை விரலால் வருடினான்.

அதிர்ச்சியில அவனை பார்த்த பைந்தமிழ் அவனின் விழிகளில் இனம் புரியாமல் கரைந்து போனாலும் தன்னை மீட்டுக்கொண்டவள் லேசாக செருமினாள்.

"ஹிம்.. எனக்கு இங்க எதுவும் தெரியாது. நீயும் வந்து சுத்தி காட்றியா?' என்றான் ஆர்வமாய்.

"சரி. நாளைக்கு போலாம். ரெடியா இருங்க. இந்த ஆல்பத்தை நான் எடுத்துட்டு போகட்டுமா?" என்றாள்.

"சரி தமிழ்" என்று மனநிறைவோடு சிரித்தான்.

மறுநாள் அனைவரிடமும் எல்லாவற்றையும் கூறி ஆல்பத்தை காட்டி மகிழ்ந்தாள்.

ஊர் சுற்றும் எண்ணம் இல்லையென்றாலும் அவளுடனிருக்கும் அந்த நேரத்திற்காக அவனும் சுற்றினான்.

"நம்ம குடும்பங்களை பத்தி சொல்லுங்க" என்றாள் பைந்தமிழ் திடீரென்று.

அவளின் கேள்வியில் திடுக்கிட்டாலும் தங்கள் திருமணத்தை தவிர மற்ற அனைத்தையும் பொறுமையாக விளக்கி கூறினான்.

"அப்போ நாங்க லண்டன்ல தான இருக்கனும்? இங்க எப்படி நான் வந்தேன்?" என்றாள் பைந்தமிழ் ஒன்றும் புரியாமல்.

நடந்த விபத்தை பற்றி கூறியவன் தான் தேடாத இடமில்லை விபத்தில் அவளின் பெற்றோர் இறந்து விட்டதையும் கூறினான். தன்னை தவிர மற்ற அனைவரும் அவள் இறந்துவிட்டதாக கூறினர் என்பதையும் கூறினான்.

தன் பெற்றோருக்காக மிகவும் நொந்து போனவள்.

"எல்லோரும் நான் இறந்துட்டேன்னு சொன்னப்ப உங்களுக்கு நான் இருக்கேன்னு எப்படி தோணுச்சி?" என்றாள்.

வசீகரிக்கும் புன்னகையை இதழ்களில் சிந்தியவன். அவள் கழுத்தினில் தங்கள் திருமணத்தன்று அவன் மாங்கல்யமாய் அவளுக்கு அணிவித்த பி.டி என்ற எழுத்துக்கள் பொறிக்க பெற்ற செயினை பார்த்து சிரித்தான்.

'நான் போட்ட செயின் இன்னும் கழுத்தினில் இருக்கும்போது யார் சொன்னாலும் என்னால் எப்படி நம்ப முடியும்?' என்று நினைத்துகொண்டான்.

"அது அப்படி தான். நாம ரெண்டு பேரும் ரொம்ப கிலோஸ் ப்ரெண்ட்ஸ்ல அதான். ஊருக்கு போனப்புறம் சொல்றேன்" என்றான் தீந்தமிழ்.

பைந்தமிழுடன் வயதான பெண்மணி ஒருவரை உடன் அனுப்ப இல்லத்தில் ஏற்றுக்கொண்டபின் மூன்று பேரும் சென்னைக்கு விமானம் ஏறினார்கள்.

பெரியதொரு துயர் விலகி தன் வாழ்க்கை மீண்டும் மலர்வது போல் தோன்றியது இருவருக்கும். விமானத்தில் முதலில் சாதாரணமாக ஏறியவளுக்கு விமான பயணம் ஆரம்பித்தவுடன் சிறுவயதில் நேர்ந்த விபத்தின் பழைய நியாபகங்கள் மனக்கண்ணில் நிழலாட, விழிகள் மூடியடிபடியே தனதருகில் அமர்ந்திருக்கும் தீந்தமிழனின் கரத்தை இறுக பற்றினாள் பைந்தமிழ்.

திடிரென்ற தீண்டலில் அவளை விழிகள் விரிய பார்த்தவன் பைந்தமிழின் விழிகளில் நீர் நிற்காமல் வழிவதையும் தலையை இடப்புறமும் வலபுறமும் ஆட்டியபடி ஏதோ முனகுவதையும் அதிர்ச்சியாய் நோக்கியவன். அவளின் அருகில் நகர்ந்து என்ன கூறுகிறாள் என்று கூர்ந்து கவனித்தான்.

"பாலா! எனக்கு பயமா இருக்கு. அம்மா... அப்பா... ஏன் இந்த பிளைட் இப்படி ஆடுது? ஏதோ தப்பா நடக்குது.. பாலா காப்பாத்து... பாலா" என்று சொன்னதையே மீண்டும் கூறி கொண்டிருந்தாள்.

அவளின் இந்த நிலை மிகுந்த வேதனையை தந்தாலும் ஒருவகை இன்பமும் சூழ்ந்தது. அது அவளுக்கு மட்டும் தெரிந்த, அவள்மட்டும் சிறுவயது முதல் கூறும் 'பாலா' என்ற தனது பெயரை அவள் கூறுவதை கேட்டவன் இதயம் ஒருநொடி துடிக்க மறந்துபோனது. எல்லாம் மறந்தும் அவளின் அடிமனதில் தான் இருப்பதை கண்டு நெகிழ்ந்து போனான் தீந்தமிழன்.

அவளின் இறப்பை இவன் நம்பவில்லை... எல்லாம் மறந்தும் இவன் நினைவுகள் இன்னும் அவள் மனதில் மறையவில்லை.... இரு இதயங்களும் ஒன்றாய் சங்கமித்து இருப்பதை அந்த நொடி உணர்ந்து கொண்டான்.

மெல்ல அவனை தன் தோளோடு சேர்த்து அணைத்து கொண்டவன்.

"தமிழ்! இங்க பாரு. நான் தான் உன்னோட பாலா உன்கூட தான் இருக்கேன். உனக்கு எதுவும் ஆகாது. இனி எதுவும் நடக்கவும் விடமாட்டேன். நீ நிம்மதியா இருடா. இங்க பாரு... கண்ணை திறந்து பாருடா. நான் உன்னோட பாலா இங்க தான் இருக்கேன்." என்றான் மிகவும் மெல்லிய குரலில் அவளின் இதயத்தோடு பேசுவதை போல்.

வெடுக்கென்று விழி திறந்தவள் அவனை ஊற்றுபார்த்து கண்ணீர் மின்ன "பாலா" என்றாள்.

"ஹூம்.. நான் தான் நீ மட்டும் எப்பவும் கூபிட்ற உன்னோட பாலா." என்று புன்னகைத்தான்.

அவனின் இருகரங்களுக்குள் தன் இருகரங்களை இறுக பற்றியவள் முகத்தை அவன் கரங்களுக்குள் புதைத்து கதறினாள்.

"ஏய்! என்னடா எதுக்கு அழர தமிழ்?" என்று பதறினான் தீந்தமிழ்.

மெல்ல எழுந்தவள், "இந்த ஏழு எட்டு வருஷமா தினமும் என் கனவுல வர அந்த பேரோட அர்த்தம் தெரியாம எத்தனையோ நாள் பைத்தியம் பிடிச்க மாதிரி உட்கார்ந்துருக்கேன். ஆனா அந்த பேருக்கு சொந்தக்காரனே நீ தான்னும் என்னை தேடி வருவேன்னும் நான் கொஞ்சமும் எதிர்பார்க்கலை. சொல்லு நமக்குள்ள என்ன உறவு இருக்கு? ஏழு வருஷமா எதுவுமே புரியாத நேரத்துல என்னையே மறந்தப்ப கூட உன்னோட பேர் மட்டும் நிழலா என் மனசுல தொடர்ந்து இருக்குன்னா இது நிச்சயமா வெறும் அத்தை மாமா பொண்ணு உறவா இருக்கமுடியாது... இப்படி வரவும் முடியாது... நீங்க யாரு? எனக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்?" என்றாள் பைந்தமிழ்.

எதை அவளிடம் கூற பயந்து மறைத்தானோ? எந்த உறவை பத்தி அவளிடம் கூற இன்னும் தைரியம் வராமல் தவிர்த்து தயாராகாமல் தயங்கினானோ அதை பற்றி அவள் கேட்கின்றாள்? என்னவென்று சொல்வது? எப்படி சொல்வது? தெரியாமல் மனம் வலிக்க திணறினான்.

"இங்க பாரு பைந்தமிழ். நம்ம வீட்டுக்கு போனப்புறம் எல்லாத்தையும் பொறுமையா சொல்றேன். இப்போ நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு" என்று சமாதானம் செய்து உறங்கு வைத்தான்.

இதோ சென்னையில் அவர்கள் வீட்டின் முன் நின்று கொண்டிருந்தான்.

"இவ்ளோ பெரிய பங்களா யாருடையது?" என்றாள் வியப்பில் பைந்தமிழ்.

'இது உன்னுடைய வீடு. எது எல்லாம் எனக்கு சொந்தமோ அதுவெல்லாம் உன்னுடையதும்' என்று சொல்ல வாயெடுத்தவன்.

"இதுதான் நம்ம வீடு" என்று காலிங்பெல்லை அழுத்தினான்.

"இதோ வரேன்" என்று அம்மாவின் குரலை கேட்டவனுக்கு நெஞ்சம் படபடத்தது .

கதவை திறந்தவர்.

"வாப்பா! எத்தனை நாள் ஆச்சு?" என்றவரின் பார்வை அவனின் பின்னால் தன்னை மறைந்துகொண்டு நின்ற பைந்தமிழின் மேல் பதிய, கூர்ந்து அவளின் முகத்தை கவனித்தவர். திரும்பி அதிர்ச்சியும் ஆச்சர்யமும் சேர பேச நா எழாமல் விழிகளால் கேள்விகளை மகனிடம் தொடுத்து தலையை அசைத்து கேட்டார்.

'ஆமாம்' என்று சிரித்து விழிகளை மூடி திறந்தவனை கண்டவர் கையில் இருந்த பாத்திரம் நழுவி கீழே விழுந்தது.

"அம்மா" என்று தாங்கி பிடித்தான் தீந்தமிழன்.

"தீனா இது நம்ம..." என்று இருவரையும் மாறி மாறி பார்க்க.

"ஆமாம்மா இது நம்ம தமிழே தான்." என்றான் புன்னகையுடன்.

கண்களில் கண்ணீர் வழிய மெல்ல அவள் முகத்தை வருடியவர். "அம்மாடி தமிழு" என்று அணைத்து கொண்டார்.

"அம்மாடி நீ உயிரோட இருக்க ரொம்ப சந்தோஷம். கடவுள் எங்க மேல கருணை காட்டிட்டார்" என்றவர்.

"தள்ளுடா! இவன் ஒருத்தன் என் மருமகள் இவ்ளோ வருஷம் கழிச்சி வந்துருக்கா நான் ஆரத்தி எடுக்கணும்?" என்று உள்ளே ஓடினார்.

மருமகள் என்று அவர் கூறியதும் தீந்தமிழன் மாட்டிக்கொண்ட பூனையாய் முழிக்க பைந்தமிழ் அவனை பார்த்தாள்.

'அய்யோ அம்மா! போட்டு கொடுத்துட்டியே' என்று உள்ளுக்குள் புகைந்தவன். 'இன்னும் எதுவும் உளராம இரும்மா' என்று நினைத்துகொண்டான்.

"ஹ்ம்.. அவங்களுக்கு உன்னை பார்த்த உடனே சந்தோஷத்துல உளறாங்க. அவங்க எப்போவுமே உன்னை மருமகளேன்னு தான் கூப்பிடுவாங்க." என்று சமாளித்தான்.

அவளுக்கு ஆரத்தி சுற்றி உள்ளே அழைத்து சென்றார்.

"அம்மாடி.." என்று ஏகபட்ட கேள்விகளை அடுக்க தீந்தமிழன் தான் தடுமாறினான். "அம்மா ப்ளீஸ்! அவ இங்க தான் இருக்க போறா. கொஞ்ச நேரம் முதல்ல ரெஸ்ட் எடுக்கட்டும்" என்றான்.

"சரிடா" என்றார் மனசே இல்லாமல் வெளியே சென்றபடி.

"நீ வா. உன் ரூம் காட்றேன்" என்று மேலே மாடிக்கு அழைத்து சென்றான்.

தனதறைக்கு அடுத்த அறையை மகியிடம் கூறி சுத்தம் செய்ய சொல்லி இருந்ததால் அந்த அறையில் பைந்தமிழை தங்க வைத்தான்.

"தமிழ்! டிராவல் செஞ்சது ரொம்ப டையர்டா இருக்கும். நீ கொஞ்ச நேரம் தூங்கி ரெஸ்ட் எடு. பக்கத்து ரூம் தான் என்னுடையது. உனக்கு ஏதாவது வேணும்னா என்னை கூப்பிடு." என்று வெளியேறிவன் மீண்டும் உள்ளே எட்டி பார்த்தான்.

"சரி" என்று சிரித்தாள் பைந்தமிழ்.

அவளின் வருகையை வீடே கொண்டாடியது. தீந்தமிழின் அப்பா தன் நண்பனே மீண்டும் வந்ததாய் நெகிழ்ந்து போனார்.

"பைந்தமிழ்! ரொம்ப சந்தோஷம் டா. நீ திரும்ப கிடைச்சது என் நண்பன் வந்த மாதிரி இருக்குடா. நீ எதுக்கும் கவலை படாதே. இனி இது தான் உன் வீடு. இதோ இந்த தடிமாடு மட்டும் என் பையன் இல்ல நீயும் என் பொண்ணு தான்." என்று மென்மையாய் தலைகோதினார்.

"மா பார்த்தியா?" என்று தன் அன்னையின் தோளை இடித்து முணுமுணுத்தான்.

"என்னடா?" என்றார் அவரும் மெதுவாக.

"ஹ்ம்ம். சந்தடி சாக்குல உன் புருஷர் என் பொண்டாட்டிகிட்ட என்னை தடிமாடுன்னு சொல்றதை" என்றான் கடுப்பாகி.

"டேய்!" என்று அவர் ஆரம்பிக்க,

"என்ன? அவர் என் அப்பா. கொடுக்க வேண்டிய மரியாதைய கொடுக்கணும். அதானே?" என்று அன்னையை நோக்கினான்.

"எப்பிடிடா?" என்று தாய் கேட்க.

"இதுக்கு பி.ஹெச்.டி யா முடிக்கனும்? அதான் தேஞ்சு போன ரெகார்ட் மாதிரி சொல்றியே தினமும்" என்று சிரித்தான்.

"உனக்கு உன் பொண்டாட்டி கிடைச்ச உடனே வால்தனமம் அதிகமாகிடுச்சு" என்று பொய்யாய் முறைத்தாள்.

"நீ வேறம்மா. அவளுக்கு எங்களுக்கு கல்யாணம் நடந்தது தெரியாது. தெரிஞ்சா என்ன பண்ணுவாளோ?" என்றான் தீந்தமிழன்.

"என்னடா சொல்ற?" என்று அதிர்ச்சியாய் கேட்ட தாயிடம் நடந்தவற்றை கூறினான்.

"அடக்கடவுளே! என் புள்ள வாழ்க்கை சரியாகிடுச்சுன்னு சந்தோஷ பட்டேனே?" என்று கண்கலங்கியவரிடம்.

"அம்மா தமிழ் உயிரோட இருக்கான்னு தெரிஞ்சப்பவே என் வாழ்க்கை சரியாகிடுச்சு. இறந்துட்டான்னு நீங்கல்லாம் ஏழு வருஷமா சொன்னவள் இப்போ என் கண்ணு முன்னாடியே இருக்காம்மா. இனி நான் பார்த்துக்குறேன்" என்று சிரித்தான் தீந்தமிழ்

நீண்ட காலத்திற்கு பின் தன் மகன் புன்னகைப்பதை கண்டு தாயுள்ளம் பூரித்து போனது.

"தீனா! சீக்கிரமே எல்லாத்தையும் சொல்லிடுப்பா" என்றார்.

"சரிம்மா. நேரம் வரட்டும்" என்று எழுந்து சென்றான்.

முதலில் எல்லோருடனும் பழக தயங்கிய பைந்தமிழ் அவர்களின் உண்மையான அக்கறை கொண்ட அன்பில் கரைய தொடங்கி, சிறுக சிறுக இது தன் வீடு என்று இயல்பாக மாறியிருந்தாள்.

இப்படியே ஒரு மாதம் கடந்திருக்க, அவளுடன் வந்த பெண் ஊருக்கு கிளம்பிட்டார்.

ஒரு நாள் மாலை,

தோட்டத்தில் செடிகளுக்கு நீர் ஊற்றியப்பின் மலரோடு மலராய் நின்றிருந்தவளை நெருங்கினான்.

"தமிழ்!" என்று அழைக்க, திரும்பினாள்.

"சொல்லு பாலா" என்று தன் முந்தானையில் கைகளை துடைத்து கொண்டே கேட்டாள்.

அவளின் எளிமையான தோற்றத்தில் ஒரு நொடி நா வரண்டது தீந்தமிழனுக்கு.

'இவ்ளோ அழகா ஒரு மனைவியை கொடுத்த நீ அவளுக்கு ஞாபகத்தையும் கொடுக்கலாம்ல? நான் தான் அந்த முந்தானையில் முகம் துடைக்கனும். ஆனா, புடவை நுனியை கூட தொட முடியலை. கடவுளே நீ மட்டும் என் கண் முன்னாடி வந்த , நான் கேக்குற கேள்வில அந்த ஜாபையே ரிசைன் பண்ணிட்டு போய்டுவ' தன் மனதினுள் கடவுளை வறுத்தெடுக்க,

"பாலா! என்ன? கூப்பிட்டு ஏதோ யோசனைல இருக்க?" என்று சிரித்தாள்.

முத்துக்கள் வெண்சங்கிலிருந்து வருவது போல் அவளின் இதழ்களில் இருந்து வந்த சிரிப்பொலி கவிதையாய் அவன் செவிகளில் புகுந்து கிறங்க செய்தன.

"ஒன்னுமில்லை தமிழ். உன்கிட்ட கொஞ்சம் பேசணும்" என்றான் தீந்தமிழின்.

"என்ன பாலா?" என்று பைந்தமிழ் கேட்டாள்.

"இப்படி உட்காரு." என்று அவளை ஊஞ்சலில் அமர வைத்து தானும் சற்று இடைவெளிவிட்டு அமர்ந்தகான்.

"அது தமிழ். இந்த வருஷத்தோட நீ உன்னோட பி.ஏ முடிச்சிட்டல்ல. மேற்கொண்டு என்ன படிக்க போற?" என்று ஆரம்பித்தான்.

"ஆமா பாலா. எனக்கு எம்.ஏ தமிழ் முடிக்கனும். அதுலயே பி.ஹெச்.டி முடிக்கனும்னு ஆசை. ஏன்னு தெரியாது ஆனா தமிழ் படிக்க ரொம்ப பிடிக்கும். " என்றாள்.

"சரி. இங்க நல்ல காலேஜ்ல போடலாம். அப்புறம் நாளைல இருந்து நீயும் என்கூட ஆஃபீஸ் வரணும்" என்றான்.

"ஏன்?" என்றாள் தமிழ் பதட்டமாய்.

"எதுக்கு இப்போ பதட்ட பட்ற? இந்த கம்பெனில மாமாவும் பார்ட்னர் தெரியும்ல? அவர் இல்லாததால இவ்ளோ நாள் நான் பார்த்துட்டு இருந்தேன். இப்போ நீ வந்துட்ட. இனி நீயும் பார்த்துக்கோ. அட்லீஸ்ட் கத்துக்கனும்" என்று சிரித்தான்.

"இல்ல பாலா. இவ்ளோ நாள் நீ தான பார்த்துகிட்ட? இப்பவும் நீயே பார்த்துக்க." என்றாள்.

"இங்க பாரு தமிழ். கம்பெனி மட்டும் இல்ல இந்த வீடும் நம்ம ரெண்டு பேர் பேர்ல தான் இருக்கு. நாளைக்கு நீ வர. பயப்படாதே. நான் இருக்கேன். உனக்கு எல்லாமே சொல்லி தரேன்" என்றான்.

"சரி" என்றாள் சிறிதுநேரம் யோசித்த பின்.

போன் அடிக்க எடுத்து "ஹலோ! " என்றான் பாலா.

"ஹலோ.டேய் உனக்கு இங்க ஒரு ஆபிஸ் இருக்கு. ஞாபகம் இருக்கா?" என்றான் மஹி.

"அதுக்கு என்ன இப்போ?" என்றான் கடுப்பாய்.

"ஒரு மாசம் ஆச்சு நீ இந்த பக்கம் வந்து. யார் பார்த்துகிறது?" என்றான் மஹி.

"அதுக்குத்தான் தண்டமா இருக்க நீ?" என்று போனை வைத்துவிட்டான்.

"ஊர்ல ஆயிரம் பேர் இருக்காங்க. இவனுக்கு தான் நான் பிரென்டா கிடைக்கனுமா? பொண்டாட்டி வந்தவுடனே நண்பனை கழட்டி விட்டுட்டான்" என்று தலையில் அடித்து கொண்டான் மஹி.

அங்கே, 'இவன் ஒருத்தன் நேரம் காலம் தெரியாத குரங்கு.' என்று திட்டி கொண்டிருந்தான் தீனா.

"இந்தா உனக்கு போர் அடிக்கும்ல அதான் இந்த புக். எனக்கு பிடிச்ச ரைட்டர். அவங்களோட எல்லா புக்ஸும் இருக்கு" என்று நீட்டினான்.

"அப்படியா? எனக்கு புத்தகம் படிக்கிறது பிடிக்கும் பாலா. தாங்ஸ்" என்று வாங்கியவள் விழி விரிந்தது.

"இந்த கதைல வர அமுதன் நந்தினி ஜோடி ரொம்ப அருமையா இருக்கும்ல?" என்றாள் தமிழ்.

"ஆமா தமிழ். ரொம்ப அருமையான எழுத்துக்கள்" என்றான் பாலா.

"இந்த புக்ல 231பக்கம் இருக்கும், 35067 வார்த்தைகள் இருக்கு, ஜனவரி 2017 புத்தகம் போட்ருக்கு" என்றாள் தமிழ்.

அவளை ஆச்சரியமாய் பார்த்தவன், "இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும் தமிழ்?" என்றான் தீந்தமிழ்.

"ஏன்னா என்னோட பேர் தான் இசையாழ்." என்று சிரித்தாள்.

"அப்படின்னா நீ தான்.." என்றான் ஆச்சர்யமாக.

"நான் தான் எழுதினேன். எனக்கு எழுத பிடிக்கும் இல்லத்துல ரொம்ப சப்போர்ட் பண்ணாங்க. அதான்" என்று சிரித்தாள.

உணர்ச்சி பொங்க அவளை தூக்கி தட்டா மாலை சுற்றினான்.

மறுநொடி, 'ஏன்டா உனக்கு இந்த வேலை? கொலை பண்ண போறா' என்று அவளை இறக்கி விட்டு தள்ளி நின்றான்.

"பாலா எனக்கு சின்ன வயசுல இருந்து நடந்த எல்லாத்தையும் சொல்லிட்டியா? நீ எனக்கு வெறும் மாமா பையன் தான்னு தெரிஞ்சு போச்சு. ரொம்ப சந்தோஷம். எனக்கு பிடிச்ச மாதிரி நல்ல கணவனா அமைய கடவுள் தான் அருள் புரியனும்" என்றதும் சுருக்கென்று கோபம் ஏறியது தீந்தமிழ் பாலனுக்கு.

"உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்னு கேட்டல்ல? தெரிஞ்சிக்கணுமா?" என்றான் அமைதியாக.

"ஆமா" என்றாள் தமிழ்.

"சரி கிளம்பு கோவிலுக்கு போகலாம்" என்றான்.

"போலாமே. இரு ட்ரெஸ் மாத்திட்டு வரேன்" என்று உள்ளே போக எத்தனித்தவளை,

"வேணாம் இந்த புடவையே உனக்கு அழகா இருக்கு. போலாம்" என்றான் பாலன்.

இருவரும் கோவிலுக்கு வந்து இறைவனை வழிபட்டு பின் அமர்ந்தனர்.

"இப்போ சொல்லு பாலா." என்றாள் பைந்தமிழ்.

அவளையே கூர்ந்து நோக்கியவன்.

"வீட்டுக்கு போலாம்" என்று வேகமாக எழுந்து நடந்தான்.

அவனின் பின்னே அவளும் ஒன்றும் புரியாமல் நடந்தாள். தீந்தமிழ் தான் சீரும் எரிமலையென உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்தான்.

அதன் பிறகு இரண்டு நாள் அவள் கண்ணிலே படாமல் இருக்க அவனை காணாது தவிக்க தொடங்கினாள் பைந்தமிழ்.

"அத்தை. பாலா எங்க?" என்று கேட்டாள்.

"அவனா என்னனு தெரியலைம்மா ரெண்டு நாளா ரூம்குள்ளயே அடைஞ்சிருக்கான். யார்கிட்டயும் பேசல" என்றார் கவலையாக.

நெருடலாக அவனின் அரைநோக்கி நடந்தவள் உள்ளே செல்ல தயங்கி வெளியில் நின்றாள்

கதவை தட்டியபின் எந்த பதிலும் வராததால் மெதுவாக உள்ளே நுழைந்தாள்.

அங்கே மெத்தையில் விழிமூடி படுத்திருந்தான் தீந்தமிழின்.

அருகில் சென்று, "பாலா" என்று மெதுவாய் அழைக்க விழிகள் திறந்து அவளை பார்த்தவன் எழுந்து அமர்ந்தான்.

"என்னாச்சி பாலா? உடம்பு சரியில்லையா?" என்று அவன் நெற்றியை தொட போக வேகமாக விலகினான்.

விலகியது அவள் வருந்த அல்ல.. அவளின் தீண்டலில் தான் கரை தான்ட கூடாது என்ற தவிப்பில். இது அறியாத பதுமை, "ஏன் பாலா நான் இங்கே இருக்கிறது உனக்கு பிடிக்கலையா? நான் இங்கிருந்து போகட்டுமா?" என்றது தான் தாமதம்.

"என்னை விட்டுட்டு போக போறியா? ஏற்கனவே நீ போனப்ப நடைப்பிணமா இருந்தவன் இந்த முறை பிணமாதான் போவேன்" என்று அவளின் பிடித்து வேகமாக தோளை உலுக்க.

அதிர்ச்சியாக பார்த்தாள்.

"என்ன பார்க்கிற?" என்று வேகமாக சென்று ஒரு ஆல்பத்தை மெத்தையின் மேல் வேகமாக வீசினான்.

அதில் இருந்து புகைப்படங்கள் சிதற அந்த புகைப்படங்களை கண்டவள் விழிகள் விரிந்தது.

"கேட்டல்ல என்ன என்னன்னு? பாரு. நான் யாருன்னு தெரியுதா?" என்றான் காட்டமான குரலில்.

"என்னை மட்டும் தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு நீ ஒத்த கால்ல நின்னு அடம் பிடிச்சியே? இதோ நமக்கு கல்யாணம் ஆகிடுச்சு. சின்ன வயசுலயே? நான் பேசலைன்னு ரெண்டு நாள் சாப்பிடாம இருந்தியே... இப்போ ஞாபகம் வருதா? நீ இறந்துட்டன்னு எல்லோரும் மாத்தி மாத்தி சொல்லும் போது. இல்ல.. நான் இன்னும் இருக்கேன்னு எனக்குள்ள இருந்த நீ தான் சொன்ன. உன்னை தேடியும் வந்தேன். உன் கழுத்துல இருக்க இந்த லாக்கெட்ல இருக்க இனிஷியல் யாருது? டீ... அதாவது நான் தீந்தமிழ் பாலன்.. பி.. நீ பைந்தமிழ்... இப்பவும் புரியலையா? இது தான் நான் உனக்கு கட்டின தாலி. நீ எனக்கு மட்டுமே சொந்தமானவ... நீயில்லன்னா நான் இல்லை தமிழ். நீ இவ்ளோ பக்கத்துல இருந்தும் உன்னை என் மனைவின்னு சொல்ல முடியாம எவ்ளோ நரகமா இருந்துச்சுன்னு உனக்கு தெரியுமா? ஒவ்வொரு நிடோய்யும் நெருப்பு மேல நின்னுக்கிட்டு இருந்தேன்." என்று தன் காதல் கலந்த உரிமையான கோபம் முழுவதையின் இவளின் இதழினில் தன் இதழ் வழியாக கூற ஒரு நொடி திகைத்தவள் பின் மயங்கி சரிந்தாள்.

"தமிழ்" என்று பதறியவன் மெல்ல அவளை மெத்தையில் கிடத்திவிட்டு முகத்தில் தண்ணீர் தெளித்தான்.

கண் விழித்தவள் மெல்ல எழுந்து அமர, தான் செய்தது தவறு என்று. உணர்ந்து தலைகவிழ்ந்தான் பாலன்.

"பாலா! நீ எந்த தப்பும் பண்ணலை தலைகுனியாத. இந்த ஏழு வருஷமும் எனக்காக துடிச்சிட்டு இருந்த உயிர் நீ மட்டும் தான். நான் எப்பவுமே உன் மனைவி தான். இருந்தாலும் இன்னும் கொஞ்சம் டைம் வேணும் எனக்கு" என்றாள் பைந்தமித்.

அவளின் முகத்தை ஒற்றை விரல் கொண்டு நிமிர்த்தியவன்.

"இங்க பாரு தமிழ் நீ வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கணும்னு சொன்னது தான் என்னால தாங்க முடியலை. மத்தபடி நீ எப்பவும் போலவே இரு. கொஞ்சகொஞ்சமா நம்ம காதல் வளரட்டும்.  சரியா?" என்றான் தீந்தமிழன்.

"சரி" என்று தலையாட்டினாள்.

அன்றிலிருந்து வார்த்தைகள் இல்லாமல் இருவர் விழிகளும் பேச ஆரம்பித்தன.

தீண்டாத தீண்டல்களும் அங்கங்கே நடைபெறும் நேரமும் உண்டு.

இரு வாரங்கள் கழிய, ஒரு காலை வேலை பைந்தமிழ் சமயலறையில் இருந்தாள். அவளின் வாசம் கொண்டு உள்நுழைந்தான் அவளின் மனம் கொண்ட கள்வன்.

"என்ன பண்ற?" என்றான் மேடையில் சாய்ந்தபடி.

"உளுந்துகளி " என்றாள் திரும்பாமல்.

சேலையை இழுத்து சொருகிக்கொண்டு நெற்றியில் இருந்து. வழியும் வியர்வையை சட்டை செய்யாமல் மத்தை கொண்டு அவள் களி கிண்டும் அழகை மனம் குளிர ரசித்தான்.

"இதை எப்படி செய்றது? எதுக்கு இது?" என்றான் தீந்தமிழின்.

"இது நம்ம முன்னோர்கள் சாப்பிட ஒரு உணவு வகை. பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் கொடுப்பாங்க. ரொம்ப நல்லது. இடுப்பெலும்பு வலுப்பெரும். பிரசவ நேரத்துல உடல்வலிமை வேணும்னு பெண் குழந்தைகளுக்கும், உடல் அமைப்பு அழகா இருக்க பருவபெண்களுக்கும் கொடுப்பாங்க" என்றாள்.

"உனக்கு எப்படி தெரியும்?" என்றான்.

"எங்க இல்லத்துல மாதம் இரு முறை செஞ்சு கொடுப்பாங்க" என்றாள்.

"இப்போ எதுக்கு செய்ற?" என்றான்.

"அத்தைக்கு மூட்டு வலிக்குதுன்னு சொன்னாங்க. அதான் செய்றேன்" என்றாள்.

" உளுந்துகளி எப்படி செய்யணும்னா..

கருப்பு உளுந்து, பச்சரிசி மெஷின்ல கொடுத்து அரைச்சு வச்சுக்கனும்.

பனைவெல்லம் தேவையான அளவு எடுத்து நாலு க்ளாஸ் தண்ணி ஊத்தி ஒரு பாத்திரத்தில் சூடு பண்ணனும். வெல்லம் சேர்த்து கரைந்ததும் வடிகட்டனும்.

அடிகனமான பாத்திரத்தில் அந்த வெல்ல கரைசலை ஊற்றி கொதிக்கவிடனும். ஏலக்காய் பொடி சேர்க்கனும்.

ஐந்து கரண்டி மாவ அதில போட்டு மத்துல நல்லா இது மாதிரி கிளறனும். இடையிடையே நல்லெண்ணெய் ஊற்றி கிளறனும் மாவு நல்லா வெந்ததும் இறக்கி உருண்டை பிடித்து. நடுவில் சிறு குழி செஞ்சு ரெண்டு ஸ்பூன் நல்லெண்ணை ஊத்தி உருண்டை பிடிச்சு  சாப்பிடனும். அவ்ளோ தான்" என்றாள் சிரித்து.

"எப்படி கிளறனும்? இப்படியா?" என்று அவளின் இடையின் வழியாக கரங்களை கொண்டு சென்று அவள் கரங்களின்மேல் தன் கரங்களை வைத்தான். அவன் தேக. தீண்டலில் அவளின் பெண்மையின் நாடி முழுவதும் நடுங்க தொடங்கியது.  தன் கணவனின் மூச்சின் வெப்பகாற்று அவள் செங்கழுத்தினில் பட மேனியில் ஒரு சிலிர்ப்பு உண்டாகி அவளுக்குள் ஏதோ ஒரு மாற்றம்.

"இப்படி செஞ்சா எல்லாம் வேஸ்ட். நீ முதல்ல வெளிய போ." என்று அவனை துரத்தினாள்.

"எத்தனை நாள் தான் தப்பிக்கிறேன்னு பார்க்கிறேன் என் பொண்டாட்டி? இனி என்னோட ரூம்ல தான் நீ தங்கபோற. அதாவது இனி நம்ம ரூம் அது. புரியுதா?"  என்று தீந்தமிழ் கண்ணடித்தான்.

அவனின் வார்த்தைகளில் வெட்கம் கொண்டவள்.

"பாலா! இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும்  நீ இந்த, "பைந்தமிழின் தீந்தமிழ்" தான். சரியா?" என்றாள் அவன் நெற்றியோடு நெற்றி மோதி.

இதோ இவர்களின் வாழ்க்கையில் இங்கிருந்து படிப்படியாக காதல் எனும் கடலில் மூழ்கி அன்பெனும் முத்தெடுக்க முயல்கின்றனர்.

இங்கிருந்து நாமும் விடைபெறுவோம்.

உங்கள்.
தர்ஷினிசிம்பா.

 

This topic was modified 12 months ago 2 times by dharshini chimba

Shalini M, Tamil Venba, Janani Naveen and 4 people liked
Quote
Paramasivam Jayavel
(@parama17)
New Member Registered
Joined: 11 months ago
Posts: 1
03/01/2020 2:37 pm  

வாழ்த்துக்கள் அக்கா. 

அருமையாக கதை அக்கா. அதிலும் இடையே உள்ள கவிதை வரிகள் அற்புதம் அக்கா.


ReplyQuoteRamya Anamika
(@anamika)
Trusted Member Writer
Joined: 2 years ago
Posts: 57
03/01/2020 3:03 pm  

Akka semma super ka😍😍😍😍 kavidhai dhan highlight 😍😍😍😍 keep rocking 😊😊😊☺️☺️☺️

நல்லாதே நினை நல்லதே நடக்கும்..
அன்புடன் ,
ரம்யா அனாமிகா


ReplyQuote
Priya Shakti
(@priyashakti)
Active Member Writer
Joined: 3 years ago
Posts: 8
03/01/2020 3:06 pm  

Arumaiyana decent story dear. Adhu matum ilama ulundhang kali recipe super. Parambarya item.


ReplyQuote
Devi Prakash
(@devisprakash6)
Active Member Registered
Joined: 1 year ago
Posts: 7
03/01/2020 4:01 pm  

தீந்தமிழின் பைந்தமிழ் உண்மையாவே அழகான ஒரு காவியம்.. காதல் மனசுல உண்மையா இருந்தா பிரிவு எப்போதும் இல்லனு அழகா புரிய வச்சு இருக்கே டா தர்ஷு.. அதோட குழந்தை பருவ காதல் ரொம்ப அழகான தருணம். சிலருக்கு அது அழகான மலரும் நினைவுகளை தரும். ஆனால் பலருக்கு அது மனதில் ஆழமான வலிகளாய் வருடும்.. பாலா பைந்தமிழோட சின்ன வயசு பருவமும் ரொம்ப அழகா சொல்லிருக்கே டா 😍😍😍😍 ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டு கொடுக்காம அன்பு செலுத்தர விதம் பார்க்கவே செம்ம கியுட் தான்.. அப்பறம் குழந்தை பருவத்தில நடந்த கல்யாணம் பார்க்க அழகா இருந்தாலும் அது பிற்காலத்தில் காலமாற்றம் நடக்கும்போது எப்படிபட்ட விளைவுகள் தரும் என்பதும் பெரியவர்கள் யோசிச்சு இருக்கணும்.. இப்போ பாலா தமிழ் விஷயத்துல விதிவசத்தால அவங்களோட ஏழு வருட பிரிவு கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் தீனா நம்பிக்கை இழக்காம அவள கண்டுபிடிக்க போராடுறது ரொம்ப அழகா இருக்கு அதோட உணர்வு பூர்வமாவும் அமஞ்சு இருக்கு பேபி 😍😍😍😍

😍 தீந்தமிழ்😍
தீனா பார்க்க ரொம்ப நல்ல பையன் மாதிரி இருக்கே🤭🤭🤭 சொல்லும்போது எனக்கே கொஞ்சம் சிரிப்பு தான் வருது ஆனா என்ன பண்றது ஹீரோவா போய்ட்டான் அதன் ரொம்ப டேமேஜ் பண்ண முடியல டா😂😂😂😂 ஆனா தமிழ் மேல அவன் வச்சு இருக்கற காதல் தென் ஏழு வருஷமா தமிழுக்காக அவன் வெயிட் பண்ணி இருக்கற அவனோட நம்பிக்கை எல்லாம் பார்கறப்போ உண்மையாவே பொறாமை நம்மை அறியாமேயே வரும்.. தமிழ் இல்லனு எல்லாரும் சொன்னாலும் நிச்சயம் அவ உயிரோட இருக்கானு அவனோட மனசு சொன்னதுக்காக இவளோ தூரம் அவன் போராடி கடைசில அவளை தேடி பிடிச்சு மறுபடியும் அவளுக்கு இழந்த எல்லா சந்தோஷத்தை திருப்பி கொடுத்து அவனோட உரிமையும் அழகா நிலைநாட்டி இருக்கான்..

😍 பைந்தமிழ் 😍
ஹீரோயின் அவளோட வருகை இதுல கம்மியா இருந்தாலும், கொஞ்ச நேரம் வந்த இடங்கள்ல அவளோ சிறப்பா வெளிப்பட்டு இருக்கு.. சின்ன வயசுல பாலா மேல அவ காட்டின அன்பு உரிமை எல்லாம் வார்த்தைகளா சொல்ல முடியாது. அனுபவமா உணரும்போது அருமையானதா இருக்கு பேபி... சின்ன சின்ன சண்டைகள் சீண்டல்கள்னு அவளோட அழகான இம்சை தான் பாலாவுக்கு அவமேல அன்பை அள்ளி தெளிக்க உறுதுணையாக இருந்திருக்கு.. அதோட ஆக்ஸிடென்ட் அப்பறம் நிஷாவா மாறி வந்தும் எல்லா நியாபகங்கள் மறந்து போன போதும் ஆழ்மனசில பாலாவோட நினைவுகள் வச்சு இருக்கறது அவளோட அன்பு எவ்வளவு ஆழம் கொண்டதுஎன்பது தெளிவா தெரியுது..

😍மஹி😍
உண்மையாவே பாவம் மஹி 😝😝😝 அவனோட நிலை தான் ரொம்ப கவலைக்கிடமாக இருக்கு டா 😂😂😂😂 ஊருல பத்து ப்ரெண்ட் வச்சு இருக்கவன்லாம் நிம்மதியா இருக்கான்.. இவன் தமிழ் ஒருத்தன வச்சுக்கிட்டு பிரெண்ட்காக உயிர பணயம் வச்சுருக்கானே பாவம்.. பயம் இல்ல ஆனா இருக்கு அந்த டயலாக் செம்ம 😂😂😂😂 எந்த உறவு நம்ம கூட இருந்தாலும் மனசு விட்டு போற சமயத்துல உண்மையான நட்பு தான் நம்மல எப்போதும் தோள் கொடுத்து தைரியம் சொல்லி தூக்கி விடும்.. அது நானும் ரொம்ப விஷயத்தில் அனுபவப்பூர்வமாக உணர்ந்து அனுபவிச்சி இருக்கேன் தர்ஷ்.. மஹி அதே போல தான் ஒவ்வொரு விஷயத்துல தமிழ் க்கு ரொம்ப அதரவா துணையா இருந்து அவன மீட்டு கொண்டு வந்து இருக்கான்.. அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் மாதிரி ❤️❤️❤️❤️❤️

மொத்தத்தில் பைந்தமிழின் தீந்தமிழ் ஜென்மம் பந்தம் போல அவங்களோட பிரிவும் சில காலம் கடந்த பின்ன, மீண்டும் அவங்கள இணைத்து அழகான மாற்றத்த அவங்க வாழ்க்கைல குடுத்து இழந்த மொத்த சந்தோஷத்தையும் ஒட்டுமொத்தமாக திருப்பி குடுத்திருக்கு😍😍😍😍 அன்பு எப்போதும் அனதையா ஆகாது என்பது இவங்க விஷயத்துல தெளிவாகிறது.. அருமையான கதை டா.. ரொம்ப இழுக்காம ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா கியூட்டான காதல் கதை.. வாழ்த்துக்கள் தர்ஷூ மா😘😘😘😘


ReplyQuote
Janani Naveen
(@jananinaveen)
Trusted Member Writer
Joined: 3 years ago
Posts: 99
04/01/2020 8:30 am  

வாவ் அழகான கதை. ரொம்ப ஆழமான காதல். எழுத்து நடை அபாரம். வாழ்த்துக்கள் மா.


ReplyQuote


Share: