Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

Notifications
Clear all

ரிஷாவின் "அஞ்சுவது பேதைமை " சிறுகதைத் திரி  

  RSS

Risha John
(@risha)
New Member Registered
Joined: 2 years ago
Posts: 3
11/12/2019 5:32 pm  

அன்பர்களே.நான் ரிஷா,இது சிறுகதையில் என்‌ முதல் முயற்சி.படித்து விட்டு நிறை குறைகளைச் சுட்டிக்காட்டவும். 

அஞ்சுவது பேதைமை 

சென்னை வி.ஜே.டி கலைக் கல்லூரி

இளநிலை இறுதி ஆண்டு கணித பிரிவு

காலை 11 மணி

Convergence, in mathematics, property (exhibited by certain infinite series and functions) of approaching a limit more and more closely as an argument (variable) of the function increases or decreases or as the number of terms of the series increases.
என்று கன்வெர்ஜன்ஸ் தியரியை விளக்கிக் கொண்டிருந்தார் பேராசிரியர் பாலகிருஷ்ணன்.

ஆனால் என் கவனம் அந்த கன்வெர்ஜன்ஸ் தியரியில் இல்லை.கடினமான என் சூழலை நினைத்து கலங்கிக் கொண்டே அமர்ந்திருந்தேன் நான்.

நான் யாரென்று நீங்கள் அறிய மாட்டீர்கள் அல்லவா?நான் தான் பூமிகா.இக்கல்லூரியில் இளநிலை இறுதி ஆண்டு பயில்கிறேன்.எனக்கு ஒரு சகோதரி.அவள் திருமணம் முடிந்து அயர்லாந்தில் வசிக்கிறாள்.அவளின் பேறு காலத்திற்காக என் பெற்றோர் அயர்லாந்து சென்று ஒரு மாதமாகி விட்டது.நான் இப்பொழுது மகளிர் விடுதியில் தங்கி பயில்கிறேன் என் பெற்றோர் என்னை தனியே விட விரும்பாததால்..!

விடுதியில் தங்க எனக்கு விருப்பம் இல்லை.ஆனாலும் சூழ்நிலை என்னை விடுதியில் தங்க வைத்து விட்டது.இந்த சூழ்நிலை தான் என் வாழ்வில் எப்படியெல்லாம் விளையாடுகிறது. இப்பொழுதுள்ள சூழ்நிலை என்னை கொன்று விழுங்கிக் கொண்டிருக்கிறது கொஞ்சம் கொஞ்சமாக.

"கிர்ர்ர்ர்" என்னுடைய பையில் இருந்த மொபைல் வைப்ரேட்டியது.பேராசிரியருக்கு தெரியாமல் பையினுள் கையை விட்டு தலையைக் குனியாமல் கண்களை மட்டும் கீழே விட்டு பார்த்தேன்.

திருநாவுக்கரசிடம் இருந்து மெசேஜ் வந்திருந்தது "மாலைக்காக தயாராக இரு" என்று..

என் கண்களுக்கு மட்டும் எரிக்கும் சக்தி இருந்திருந்தால் எரித்திருப்பேன் இந்த மெசேஜை அல்ல.இதை அனுப்பியவனை!

நீசன்!சதை வெறி பிடித்து அலையும் மிருகம்.பிணத்தை கூட விட்டு வைக்காமல் அதனோடும் கூடும் பிண்டம் அவன்!இன்னும் என்னென்னவோ சொல்லி அவனைத் திட்டத் துடிக்கிறது எனது நாவு.அதை வாய் பெட்டகத்தில் அடக்கி வைத்து அமர்ந்திருக்கிறேன்.

சற்றாய் தலையை திருப்ப என்னைப் பார்த்து கோணலாக சிரித்தான் அந்த கயவன்!ஆம் அவன் என் வகுப்பில் உடன் பயில்பவன் தான்.அவன் பயில்வது பாடத்தை அல்ல பெண்களை எப்படி வீழ்த்தி அவன் வலையில் விழ வைக்கலாம் என்பதை!

எல்லாம் நான் சென்ற பெங்களூர் டூரினால் வந்த வினை.இறுதி வருடம் என்பதால் கல்லூரி சுற்றுலா அழைத்துச் செல்ல மகிழ்வாகவே கிளம்பினேன் நானும் ஒரு வாரத்திற்கு முன்பு..

அலைபேசி வழியாய் ஆயிரம் பத்திரம் சொன்னார்கள் அன்னையும் தந்தையும்.இந்த வயதின் வழக்கம் போல் இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டு மகிழ்ந்து பறந்தேன் பெங்களூர் முழுவதும்.

என் சிறகை வெட்டவென்றே வேடன் அவன் எனக்கு கண்ணி வைத்ததை அறியாமல்!

பெங்களூர் சென்று வந்த அலுப்பில் முன்மதியம் நான் உறங்கி இருக்க உறக்கமே உனக்கு இனி இல்லை என்பது போல் வந்தது அந்த காணொளி.

பெங்களூர் சென்று வந்து சென்னை திரும்பிய அன்று முன்மதிய உறக்கத்தில் நான் இருக்க என் அலைப்பேசிக்கு வாட்ஸ் அப்பில் வந்தது அந்த காணொளி.

உறக்கம் கலைந்து கைப்பேசியை நோண்டிக் கொண்டிருக்க என் உயிரை உருவி எடுத்தது அந்த காணொளி.

நான் குளிக்கும் காட்சியை எவனோ ஒரு நீசன் படம்பிடித்து எனக்கு அனுப்பி இருந்தான்.நான் குளித்து உடை மாற்றி குளியல் அறையை விட்டு வெளியேறும் வரை இருந்தது அந்த காணொளி.

நிச்சயம் இது அந்த பெங்களூர் பயணத்தில் எடுத்தது என்பது எனக்கு உறுதியாகத் தெரிந்தது.நாங்கள் தங்கி இருந்த விடுதியின் குளியலறையில் தான் அது எடுக்கப்பட்டது என்பதை பார்த்தவுடன் புரிந்துக் கொள்ள இயலாத அளவு நான் ஒன்றும் பாலகி அல்லவே!

இந்த ஈனச்செயலை செய்தது யாரென்று நான் எண்ண அந்த நீசனே தன்னை யாரென்று வெளிப்படுத்தினான் அலைப்பேசி மிரட்டல் மூலம்.

"என்ன பூமிகா..உன்னோட கவர்ச்சிகரமான குளியல் வீடியோவைப் பார்த்து அதிர்ச்சியாகி இருக்க போல.என்ன உடம்பு என்ன ஸ்ட்ரக்சரு சன்னி லியோன் ,சில்க் ஸ்மிதாலாம் உன்கிட்ட தோத்துடுவாங்க போ.ப்பாஆஆ உன் வீடியோவை பார்த்ததிலிருந்து ரெண்டு நாளா எனக்கு தூக்கத்துல கூட உன் உடம்பு தான் ஞாபகம் இருக்கு" என்று தொடங்கி அருவெருக்தக்க அத்தனை வார்த்தையையும் அலைப்பேசி வாயிலாய் சொன்னான் அந்த நீசன்.

'கடவுளே என் காதுகள் செவிடாய்‌ மாறிவிடாதா' என்று ஆயிரம் முறையாவது அந்த பரம்பொருளிடம் மன்றாடி இருப்பேன்.

"உன் வீடியோ இப்ப என் மொபைல்ல நான் பார்க்குறதுக்கு மட்டும் பத்திரமா இருக்கு.நீ மட்டும் நான் சொல்லுறதைக் கேட்கலை நெட்ல போட்டு ஊருல இருக்க அத்தனை பேரும் கனவுலயே உன்கூட குடும்பம் நடத்துற மாதிரி செஞ்சுடுவேன்" வக்கிரமாய் சொன்னான் அந்த கேடுகெட்டவன்.

அவன் நோக்கம் என்ன என்பது அவன் சொல்லாமலே புரிந்து விட்டது.'என் சம்மதத்துடன் எனக்கு நடக்கப் போகும் பாலியல் வன்கொடுமை'.

என் மானத்திற்கு பயந்து குடும்ப கவுரவம் கெடக்கூடாது என்பதற்காக அவன் சொல்படி நடந்து அவன் உடல் இச்சையை நான் தீர்க்க வேண்டும்.இதைத் தான் அவன் சொல்லாமல் சொன்னான்.யோசிக்க இரண்டு நாள் அவகாசம் வேறு தந்தான்.எப்படியும் எனக்கு தப்பிக்க வேறு மார்க்கம் இருக்க போவதில்லை.இரண்டு நாளில் எப்படி அவனிடம் இருந்து தப்புவது என்று நான் சிந்திக்க நேரம் கொடுத்தானோ அல்லது இவனிடம் சென்று சீரழிவதற்கு உலகை விட்டே நான் செல்வது மேல் என்று என் உயிரை நானே மாய்த்துக் கொள்ள நேரம் கொடுத்தானோ..!அவன் எதற்காக வேண்டுமானாலும் எனக்கு இரண்டு நாள் அவகாசம் கொடுத்திருக்கட்டும்.ஆனால் நான் அது இரண்டையும் செய்யவில்லை இனி செய்யப் போவதுமில்லை.

என் அந்தரங்கத்தை அவன் வாயிலாய் சொல்லக் கேட்டு காணொளியாய் கண்டு உயிர்த்துடித்து வெந்து மடிந்தேன் தான்.இல்லையென்று சொல்ல மாட்டேன்.ஆனால் நான் தற்கொலை செய்யும் அளவிற்கு இதில் என் தவறு என்ன?

'இந்தா படம்பிடித்துக் கொள்' என்று அவனிடம் சொன்னேனா?இல்லை தானே!ஒரு பெண் குளிப்பதை உடைமாற்றுவதை படம்பிடித்து அவளை மிரட்டி உடல் இச்சையை தீர்த்துக் கொள்ளும் அந்த பிண்டமே இந்த அண்டம் தனில் வாழும் போது என்னை அறியாமல் எனக்கு நேர்ந்த துன்பத்திற்கு போய் நான் ஏன் என் உயிரை மாய்த்துக் கொள்வானேன்?

அவனின் மிரட்டலில் முதல் ஒரு மணிநேரம் நான் அழுதேன்,துடித்தேன்,பயந்தேன் தான்.ஆனால் அடுத்து என்ன என்பதை யோசிக்கத் துவங்கி விட்டேன்.

நான் ஒரு கணித மாணவி என்பதால் எனக்கு கொடுக்கப்பட்ட பிரச்சினையில் இருந்து எப்படி விடுபடுவது என்பதையே நான் யோசிக்கத் துவங்கினேன். ஆங்கிலத்தில் இதை ப்ராப்ளம் சால்விங் என்பார்கள்.கணிதம் பயின்றவர்களின் நடத்தையில் இது இயல்பாகவே வெளிப்படும் .

பொதுவாக ஒரு கணக்கை தீர்ப்பதற்கு ஒரு வழி மட்டும் இருக்காது.மாற்று வழியும் இருக்கும்.ஒன்றுக்கு மேற்பட்ட வழியும் இருக்கும்.அந்த ஒன்றுக்கு மேற்பட்ட வழியையே நான் தேடத்தொடங்கினேன்.

முதல் வழி காவல்துறையிடம் புகார் செய்வது.ஆனால் இது பயன்தராது.ஏனெனில் திருநாவுக்கரசின் தந்தையே இன்ஸ்பெக்டர் தான்.அவரிடமே சென்று அவர் மகனைப் பற்றி நான் புகார் தந்தால்?அவர் நேர்மையாய் இருக்கும் பட்சத்தில் எனக்கு நியாயம் கிடைக்கும்.இல்லையேல் என் மரணத்திற்கான காரணம் என்னவாக இருக்கும் என்ற விசாரணை நடக்கும்.சோ திஸ் மெதட் இஸ் டஸ் நாட் சூட்டபிள்.

மீடியாவிற்கு செல்லலாம் என்றால் என்னை வைத்து அவர்களின் டி.ஆர்.பியை ஏற்றிக் கொள்வார்கள்.மேலும் என்னுடைய வீடியோவை வெளியிட்டு அவர்களின் சேனல் ரேட்டிங்கை ஏற்றிக் கொள்வார்கள்.சொந்த செலவில் நானே வைத்துக் கொள்ளும் சூனியம்.சோ திஸ் மெதட் ஆல்சோ ரிஜக்டட்.

இப்படி ஒவ்வொரு வழியிலும் ஒன்றுக்கு மேற்பட்ட ஓட்டைகள்.என்ன செய்வது?என்று நான் யோசித்து முடிக்கவே இரண்டு நாள் ஓடிவிட்டது.

என் குடும்பம் மான,அவமானங்களுக்கு பயந்து அடுத்தவர் என்ன சொல்வார்களோ என்று பயந்து அடுத்தவர் கண்ணோட்டத்திலேயே வாழ்க்கையை வாழும் அக்மார்க் மிடில் கிளாஸ் குடும்பம்.என்னுடைய நிலையைச் சொன்னால் குடும்பத்துடன் சேர்ந்து விசம் தின்று சாகலாம் அல்லது நீயே செத்துவிடு என்று சொல்வார்களே ஒழிய அந்த கயவனுக்கு தண்டனை தருவது என்பது தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்‌ என்று சம்பந்தப்பட்டவர்கள் மனதை சமாதானப்படுத்திக் கொள்வதைப் போல் கடவுள் தண்டிப்பான் என்று விட்டு விடுவார்கள்.

கடவுள் அவனை எப்பொழுது வேண்டுமானாலும் தண்டிக்கட்டும்?ஆனால் இப்பொழுது அந்த சதைப்பசி மிகுந்த பிண்டத்திடமிருந்து நான் தப்பிக்க வேண்டுமே?இன்று மாலை அவன் சொல்லும் இடத்திற்கு அவனோடு வரவேண்டும் என்று சொல்லி இருக்கிறான்.

முரண்டு பிடிக்காமல் வந்தால் சேதாரம் கம்மியாக இருக்குமாம்! தொடர்ந்து வரும் குறுஞ்செய்திகள் என் குருதியை கொதிக்க வைத்துக் கொண்டிருந்தன.

இதில் பாலகிருஷ்ணன் நடத்திய எதுவும் என் கபால ஓட்டைக் கடந்து மூளைக்குள் நுழையவில்லை.

எனக்கு இப்பொழுது தேவை சொல்யூஷன்.அதை அடைவதற்கான ஸ்டெப்ஸ்.இருக்கும் நேரம் மிகவும் சொற்பம்.கணித மாணவி என்பதை நிருபிக்க வேண்டிய இடமல்லவோ இது?

இதில் தோழி மாலா வேறு "டீ பூமி கன்வெர்ஜன்ஸ்னா என்னனா இரண்டு இல்லைன்னா அதுக்கு மேற்பட்ட விசயம் சேர்ந்து ஒன்றிணையறது.இல்லைன்னா ஒரே விசயத்துல போய் முடியறது.
அதே மாதிரி கன்வெர்ஜன்ஸ் சீக்வன்ஸ் எப்படி கன்வெர்ஜ் ஆகுதுன்னா ஒரு லிமிட் இருக்கும்.அதை நெருக்கமா ரீச் பண்ண வேரியபில்ஸ்க்கு நாம கொடுக்குற வேல்யூ பொருத்து தான்‌ அது இன்க்ரீசோ இல்ல டிக்ரீசோ ஆகும்..அப்புறம்..." என்று ஏதேதோ அவளுக்குப் புரிந்த வகையில் என்னிடம் சொல்லி அவள் மண்டையில் ஸ்டோர் செய்துக் கொண்டிருந்தாள்.அவளின் பழக்கம் இது யாருக்காவது சொல்லிக் கொடுத்து படித்தால் தான் அது அவளின் மண்டையில் நிற்கும்.ஆனால் இன்று மாலா சொன்னதில் ஒன்று அல்ல பல விசயம் என் மூளைக்குள் பளிச் என்று பல்பு எறிய வைத்தது.

'இரண்டு இல்லைன்னா அதுக்கு மேற்பட்ட விசயம் சேர்ந்து ஒன்றிணையறது.இல்லைன்னா ஒரே விசயத்துல போய் முடியறது.'
'லிமிட்டை நெருக்கமா ரீச் பண்ண வேரியபில்ஸ்க்கு நாம கொடுக்குற வேல்யூ பொருத்து தான்‌ அது இன்க்ரீசோ இல்ல டிக்ரீசோ ஆகும்'
பாலா சொல்லி மண்டையில் ஏறாத கன்வெர்ஜன்ஸ் மாலா சொல்லியதில் நச்சென்று நங்கூரமாய் பதிந்தது.நான் என்ன செய்யவேண்டும் என்பதையும் எனக்கு புரிய வைத்தது.

ப்ராப்ளமை சால்வ் செய்வதற்கான மெதட் இப்பொழுது எனக்கு கிடைத்து விட்டது.

அதாவது மாலா சொன்ன கன்வெர்ஜன்ஸ் லிமிட்டாக என்னை வைத்துக் கொள்வோம்.என்னை அடைய துடிக்கும் வேரியபிளான அந்த திருநாவுக்கரசுவிற்கு நான் தான் வேல்யூ கொடுக்க வேண்டும்.அதைப் பொறுத்து தான் லிமிட்டான என்னை அடைவதில் இன்க்ரீஸ் அல்லது டிக்ரீஸ் ஏற்படும்.

நிச்சயம் நான் அந்த வேஸ்ட்டு வேரியபிள் திருநாவுக்கரசுவிற்கு லிமிட்டாகிய என்னை அடைவதற்கு உரிய வேல்யூ கொடுக்க கூடாது.அதாவது சந்தர்ப்பத்தை கொடுக்க கூடாது.நிச்சயம் கொடுக்க மாட்டேன்.

அடுத்தது இரண்டு விசயத்தை ஒன்றிணைத்து ஒரே விசயத்தில் போய் முடிப்பது.அட இது ஏன் எனக்கு முன்னமே தோன்றவில்லை?என் மூளையை தான் ஸ்தம்பிக்க செய்து விட்டானே அந்த பிணம்தின்னி‌.

காலம் இன்னும் கடக்கவில்லை‌.செல் பூமிகா?'அனைத்தையும் ஒன்றிணைத்து ஒரே விசயத்தில் கொண்டு சென்று முடி.'முதன்முறையாய் மனதும் மூளையும் ஒன்றிணைந்து முரசு கொட்ட நடையில் மீண்டு விட்ட துடிப்புடன் வகுப்பை விட்டு வெளியேறினேன் ஓய்வறை செல்வதாக பொய் கூறி மாலாவிடம்.திருநாவுக்கரசுவின் பார்வை என்னை தொடர்வதை என்னால் உணர முடிந்தது.

மாலை 4 மணி
கல்லூரி முடிந்து நாங்கள் அனைவரும் எங்கள் இருப்பிடத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தோம்.

மணி அடித்தவுடன் முதல் ஆளாக திருநாவுக்கரசின் கண்ணில் படாமல் வேகமாய் வெளியேறி கல்லூரியை விட்டு நாற்பதடி தூரம் ஓட்டமாய் நடந்தேன்.ஆனால் அதில் ஒரு பலனும் இல்லை.

சரியாக அந்த பீட்சா ஹட் கடையின் வாயிலில் எனக்கு முன்னே காரை சடன் பிரேக் போட்டு நிறுத்தினான் அந்த சனியன்.'என்னிடமிருந்து தப்ப முடியாது' என்ற எச்சரிக்கையை முகத்தில் காட்டியபடி ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருந்தான் அந்த ஓநாய்.

முகத்தை திருப்பிக் கொண்டு அந்த காரை நான் கடக்க சட்டென்று காரின் பின்கதவு திறக்கப்பட்டு நான் உள்ளிழுக்கப்பட்டேன்.

'அய்யோ' என்று நான் கத்தக் கூட அவகாசம் தராமல் என் வாயை டேப் வைத்து ஒட்டினான் என்னை உள்ளே இழுத்த மற்றொரு ஓநாய்.

நான் யூகித்தது சரிதான்.திருநாவுக்கரசு மட்டும் இதில் சம்பந்தப்படவில்லை.அவனுடன் ஒரு கூட்டமே இருந்தால் ஒழிய அவனால் இது போல் செய்ய முடியாது என்பதை நான் யூகித்தது இப்பொழுது சரியாகி விட்டது.

"டேய் எதுக்குடா அவளை இழுத்த.யாராவது பார்த்திருந்தா என்ன ஆகுறது?" அந்த திருநாவுக்கரசு பின்னிருக்கையில் இருந்தவனிடம் கத்தினான்.

"அதுலாம் யாரும் பார்க்கலை மச்சான்.வெடைக்கோழி வெட்டிக்கிட்டு போச்சா அதான் கட்டித் தூக்கிட்டேன்" என்று என்னை பார்த்து ஈனத்தனமாய் ஈயென்று இழித்தவாறு கூறினான் அந்த இழிப்பிறவி.

"டேய் அவளே வந்திருப்பாடா.பாப்பா பயந்து இருக்கும்.நாம கொஞ்சம் சமாதானம் செஞ்சு இருந்தா அதுவே கார்ல ஏறி இருக்கும்.நீ அவசரப்பட்டுட்ட.சரி விடு அதான் யாரும் பார்க்கலை இல்ல.எதுக்கும் அந்த வாய்க்கட்டு அப்படியே இருக்கட்டும்.இவ ஏதும் கத்தி கித்தி வச்சான்னா என்ன பண்ணுறது?" என்று அவர்களுக்குள் பேசியவாறே சிட்டியை விட்டு தாண்டியது வண்டி.

மனதினுள் சஷ்டி கவசம் ஓட போகும் வழியில் பார்வையைப் பதித்திருந்தேன் நான்.'இந்த கடுமையான சூழலை சமாளிக்கும் திறன் கொடு இறைவா' என்று அந்த பரம்பொருளிடம் உதவி கேட்டுக் கொண்டே வந்தேன்.

திக்கற்றவருக்கு இறைவனே துணை!நானும் அவனையே சரணடைந்தேன்.

கார் ஒரு கடற்கரை ஓரப் பங்களாவிற்குள் நுழைந்து போர்டிகோவினுள் நின்றதும் தான் தாமதம் உள்ளிருந்து பாய்ந்து ஓடி வந்தார்கள் மேலும் இரு நீசர்கள்.

என்னைப் பார்த்து அசிங்கமாக அவர்களுக்குள் கமெண்ட் செய்துக் கொண்டே என்னை உள்ளே இழுத்துக் கொண்டு சென்றார்கள்.

உள்ளே ஒருவன் மதுபானங்களை வாயில் சரித்து கொண்டிருந்தான்.அவர்கள் மொத்தம் ஐந்து பேர்.நான் ஒருத்தி!

அவர்களை அடித்து துவம்சம் செய்து அங்கிருந்து தப்புவதற்கு இது ஒன்னும் சினிமா அல்ல.தவிர எனக்கு கராத்தே கூட தெரியாது.நகங்களை வைத்து அவர்களைத் தாக்கலாம் என்றால் நான் நகம் வளர்ப்பதே கிடையாது.அம்மாவின் ஆணை நகம் வளர்க்கக் கூடாது,அதை மதித்து நானும் வளர்ப்பதில்லை.

என் பையில் பெப்பர் ஸ்ப்ரே இருக்கும்.ஆனால் என் பை அந்த திருநாவுக்கரசின் காரிலேயே கிடக்கிறது.என் மொபைலையும் பிடுங்கி விட்டதுகள் காரில் வந்த இரு சனிகள்.

நிராயுதபாணியாய் நான்!!என் எதிரில் நீசர்களாய் அவர்கள்!

துச்சாதனனாய் ஐவரும் பார்வையாலேயே என்னை துகில் உரிக்க என் மானம் காக்க கிருஷ்ணர் என்று யாரும் வரப்போவதில்லை.

என்னை நான்தான் காத்துக் கொள்ள வேண்டும்.இந்த ஐந்து ஜந்துக்களிடமிருந்து.

"மச்சான் நான் தான்டா முதல்ல"

"இல்லடா கஷ்டப்பட்டு கூட்டிட்டு வந்தது நான் நான்.சோ நான் தான் ஃபர்ஸ்ட்"

"அவளை வீடியோ எடுத்தது நான்டா.நான் தான் முதல்ல"

ஐந்து ஜந்துக்களும் அடித்துக் கொண்டது என்னை பாலியல் கொடுமை செய்ய.

கண்கள் கலங்கினாலும் கண்ணீரை வடியவிடவில்லை நான்! வைராக்கியம் கொண்டேன் நான்..என்னை கலங்க வைப்பவர்களை கதற வைக்காமல் என் கண்ணீர் கண் இமைதனை தாண்ட விடமாட்டேன் என..!

அந்த ஜந்துக்கள் ஒருவழியாக கூடிப் பேசி தங்களுக்குள் சமரசம் செய்து கொண்டு நான் உள்ளே நுழையும் போது மதுபானம் அருந்திக் கொண்டிருந்த நீசன் முதலில் என்னை தொடட்டும் என்று ஒருமனதாக முடிவு செய்து விட்டார்கள்.

அவன் என் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு அந்த பங்களாவின் மாடி அறைக்கு இழுத்து சென்று கதவை சாத்தி தாள் இட்டான்.

அசிங்கமாய் இளித்துக் கொண்டே என் தோள் மேல் கையை வைக்க அழுத்தினேன் நான் இதுவரை மறைத்து வைத்திருந்த கைக்குட்டையை எடுத்து அவன் மூக்கின் மேல். அதில் தெளித்து வைத்திருந்த குளோராஃபார்ம் சற்று வீரியம் குறைந்திருந்தாலும் அதன் வேலையை சரியாய் செய்தது.

குடிபோதையில் இருந்த அந்த நாய் குளோராபார்ம் தயவால் தள்ளாடி மயங்கியது.அவன் கத்தக் கூடாது என்று நான் வேண்டியது நடந்து விட்டது.முதலில் என்னை தாக்க முயற்சித்தவன் பின்பு அந்த முயற்சியில் தோற்று சத்தமேயில்லாமல் மயங்கி விட்டான்.

அவனை கஷ்டப்பட்டு இழுத்துக் கொண்டு சென்று அந்த அறையில் இருந்த குளியலறையில் தண்ணீர் படாமல் தள்ளி அவன் முகத்தை என் உடையினுள் ஒழித்து வைத்திருந்த ப்ளாஸ்டிக் கவரினால் கட்டினேன்.அவன் மூச்சினைக் கூட விடக்கூடாது என்பதற்காக.

இப்பொழுது எனக்கு கிடைத்திருப்பது அரைமணிநேரம்.அடுத்தவன் வந்துவிடுவான்.இவனை சாய்த்தது போல் தெளிவாய் இருக்கும் அடுத்தவனை சாய்ப்பது எனக்கு சுலபமாய் இருக்காது.

என்னடா சற்றுமுன் தான் நிராயுதபாணியாக நிற்கிறேன் என்றாளே இப்பொழுது எங்கிருந்து வந்தது குளோராபார்மும் பிளாஸ்டிக் கவரும் என்று தானே கேட்கிறீர்கள்?நான் மட்டும் கீழே கலங்காமல் நின்றிருந்தால் கயவர்கள் சுதாரித்து இருப்பார்கள்.

என்னை நானே பலவீனப்படுத்தியதால் தான் என் கண்கள் கலங்கியது கயவர்களும் நம்பினர்.பாத்திரம் அறிந்து பிச்சையிடு என்பது போல் சூழ்நிலை அறிந்து செயல்பட வேண்டும்.

அந்த குடிகார நாய் நல்லவேளையாக கைப்பேசியை கையோடு கொண்டு வந்திருந்தது.அதை நான் கைப்பற்றி செய்தி அனுப்பினேன் சிலருக்கு.அவன் கை ரேகை தான் கைப்பேசியை திறக்கும் கடவுச்சொல்.அதனுள் என்னைப் போல் எத்தனையோ பெண்களின்‌ அந்தரங்கம் இருந்தது.எல்லாரையும் மிரட்டி இவர்களின் இச்சையை தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.வந்த கோவத்திற்கு அவன் உயிர்நாடிலேயே எட்டி மிதித்தேன்.

அவன் வலியை சிறிதாய் உணர்ந்திருக்க வேண்டும்.முகத்தை சுழித்து அனத்தினான்.அவனை இன்னும் மிதிக்க வேண்டும் என்று தான் தோன்றியது.ஆனால் இப்பொழுது பதினைந்து நிமிடங்களே எஞ்சியிருக்கும் நிலையில் வீரியத்தை விட காரியமே பெரிதாய் தெரிய அமைதியாய் அடுத்தவனை எதிர்நோக்கி வியூகங்கள் வகுத்து காத்திருந்தேன் குடிகாரனின் கைப்பேசியில் உள்ள வீடியோக்களை டெலீட் செய்துக் கொண்டே.

"தட் தட்" கதவு தட்டப்பட என் இதயம் மத்தளம் கொட்டியது.சரியாய் வந்து விட்டான் அடுத்த சனியன்.

என் துப்பட்டாவை அறையின் ஒருபுறம் வீசி எறிந்து என்னை நானே அலங்கோலம் செய்து குளியலறையில் தண்ணீரை திறந்து விட்டு ஒரு போர்வையால் என்னை லேசாக மூடியவாறு கலங்கிய கண்களுடனும் எனக்கு நானே ஏற்படுத்திக் கொண்ட நகக்காயங்களுடனும் சோர்வாய் திறந்தேன் கதவை.

வேகமாய் உள்ளே வந்தான் திருநாவுக்கரசு.என்னை மேலும் கீழும் பார்த்தவன் குளியலறையில் தண்ணீர் விழும் சத்தம் கேட்டு "என்னடா மாமா பச்சைக்கிளியை ரொம்ப படுத்திட்ட போல.சரி சரி சீக்கிரம் வா நான் ஆரம்பிக்கனும்ல" குளியலறையை பார்த்தவாறே எனக்கு முதுகு காட்டி நின்று சொன்னவனை பின்னிருந்து போர்வையால் அவன் முகம் மூடி அவன் சுதாரிப்பதற்குள்ளாக பூ ஜாடியை எடுத்து அடித்தேன் அவன் பின் மண்டையில்.

"ஆஆஆ" என்று கத்திக் கொண்டே அவன் என்னை பிடிக்க முற்பட மேலும் ஒரு அடி அழுத்தமாய் வைத்தேன் அவன் பின்மண்டையில்."ஏய்***" என்று பீப் வார்த்தையை உச்சரித்துக் கொண்டே அவன் முகம் மூடியிருந்த போர்வையை விலக்க முற்பட அவசரமாய் ப்ளக் பாயின்டில் இருந்து முன்னமே உருவி வைத்திருந்த ஒயரை எடுத்து அவனுக்கு கரண்ட் ஷாக் கச்சிதமாய் கொடுத்தேன்.

சனியன் தொலைந்தது.கரண்ட் ஷாக்கினால் தாக்கப்பட்டு தள்ளாடியவன் வாயைத் திறந்து கத்த முடியாமல் தொடர்ந்து உடல் பலவீனப்பட்டு தொய்ந்து விழுந்தான்.

என் துப்பட்டாவை எடுத்து அவன் கை மற்றும் காலை பின்புறமாய் கட்டியவள் போட்டேன் மிளகாய் பொடியை அவன் கண்ணுக்குள்.கண் தந்தூரி அடுப்பு போல் அவனுக்கு எரிந்திருக்கும் ஆனாலும் சனியனால் கத்த முடியவில்லை.

நல்லவேளையாய் கீழிருந்த சனியன்கள் மேலே வரவில்லை.சத்தம் கேட்கக் கூடாது என்று திருநாவுக்கரசு உள்ளே நுழைந்ததுமே கதவை சாற்றியது நல்லதாய் போனது.

ஐந்து ஜந்துவில் இரண்டு காலி.ஆனால் என்னால் சந்தோஷப்பட முடியவில்லை.குடிகார சனியன் இன்னும் கீழே போகவில்லை.அதனைத் தேடி மற்ற சனியன்கள் எப்பொழுது வேண்டுமென்றாலும் வரலாம்.

இவர்கள் தனியாய் இருந்தால் தாக்குவது எளிது.ஆனால் ஒன்று கூடினால் அத்தனை சுலபத்தில் இவர்களை அடித்து சாய்க்க முடியாது.

மேலும் இப்பொழுது அடிபட்டு கிடக்கும் இரண்டு சனியன்களும் தெளிவதற்கு கூட வாய்ப்பு உண்டு.

அதற்குள் நான் திட்டமிட்டபடி நடந்தாக வேண்டும்.திருநாவுக்கரசின் கைப்பேசியையும் கைப்பற்றி அதிலிருந்த வீடியோவை அழிக்கவில்லை கைப்பேசியையே உடைத்து விட்டேன் சுக்கல் சுக்கலாய்.மெமரி கார்டை பொடியாக்கி கழிவறையில் கொட்டி விட்டேன்‌.

"பட் பட் பட்" கதவு பலமாய் இடிக்கப்பட்டது.கீழே இருக்கும் சனியன்களுக்கு சந்தேகம் வந்திருக்க வேண்டும்.கணித்தது போலவே கதவை தட்டுகிறதுகள்.

இப்பொழுது அவர்களை எதிர்கொள்வது உசிதமில்லை.அவர்களிடமிருந்து தப்ப வேண்டும்.

அந்த அறையின் பால்கனியிலிருந்து கீழ் தளத்தை நோக்கி இருக்கும் சன் ஷேடில் கால் வைத்தேன் ‌சனியன்கள் இடித்தே கதவை உடைத்ததனால்.

சன்ஷேடில் அடுத்த கால் வைக்கும் நேரம் கதவு திறந்து மற்ற மூன்று சனியன்களும் காச் மூச் என்று கத்தும் சத்தம் கேட்டது.

உடனடியாக இறங்க வேண்டும் என்ற உள்ளுணர்வின் உந்துதலால் நான் வேகமாய் இறங்க போக ஒரு சனி என்னைப் பார்த்து கத்தி அதுவும் சன்ஷேடில் கால் வைத்தது என்னைப் பிடிப்பதற்காய்.

எனக்கும் அவனுக்கும் இரண்டடி இடைவெளி தான்.எட்டிப்பிடித்து விடும் தூரத்தில் நான்.

இரண்டு ‌காலையும் அதற்குள் சன் ஷேடில் வைத்து விட்டது சனி.நான் விரைந்து குதித்திருப்பேன் என்று நீங்கள் நினைத்தால் என்னை இன்னும் நீங்கள் சரியாய் புரிந்து கொள்ளவில்லை என்று அர்த்தம்.

அவன் சன்ஷேடில் இரண்டு காலையும் வைத்ததுமே அவனை பேலன்ஸ் செய்ய விடாமல் ‌என் பலம் அனைத்தையும் திரட்டி நெஞ்சில் கை வைத்து ஒரே தள்ளாக தள்ளி விட்டேன்‌.

மல்லாக்க விழுந்து மண்டை உடைந்தான் மூன்றாம் சனியன்.அதற்குள் அடுத்த சனியன் சன்ஷேடில் கால் வைக்க அவனையும் இடறி விடும் எண்ணம் இல்லாமல் சன்ஷேடில் இருந்து இரண்டு விரல் அகலமுள்ள அந்த பக்கசுவரினுள் தத்தி தத்தி மெதுவாய் நடந்தேன்.

'அவர்களிடம் மாட்டிக் கொள்ளாதே பூமி' என்று மூளை எச்சரித்தது.நான்காம் சனி சன்ஷேடில் கால் வைத்து நான் இருக்கும் பக்கச் சுவரில் அதுவும் கால் வைத்து விட்டது.

'அவன் கையில் சிக்குவதை விட பேசாமல் குதித்து விடு' என்று மனம் உந்த 'கடைசி வரை போராடு' என்று மூளை தூண்ட இரண்டுக்கும் இடையில் நான் போராடும் வினாடிகளுக்குள் அந்த நான்காம் சனியன் என் கையை எட்டிப் பிடித்து இழுத்து விட்டது.

"முடிந்தேன் நான்' என்று நினைக்க மாறாய் என்னைப் பிடித்து இருந்த சனியின் கை என்னிலிருந்து விடுபட்டு தரைத்தளத்தை நோக்கி பறந்தது அவன் உடல்.

'எப்படி இது சாத்தியம் ?' என்று நான்‌ மேலே பார்க்க சன்ஷேடில் கையில் கட்டையுடன் நின்றுக் கொண்டிருந்தாள் உஷா.

எங்கள் கல்லூரியின் வேதியியல் பிரிவு மாணவி.நான் சொன்ன இரண்டு விசயங்களை ஒன்றிணைத்து ஒரே விசயத்தில் கொண்டு போய் முடிப்பதில் இருந்த இரண்டாவது விசயம் இவள் தான்.திருநாவுக்கரசால் எனக்கு முன்னமே மிரட்டப் பட்டு பாதிக்கப்பட்டவள்.

ஓய்வறைச் செல்வதாக சொல்லி நான் ஓடியது உஷாவைக் காணத்தான்.ப்ரெசன்ஸ் ஆஃப் மைண்ட் என்பார்களே அது இன்றைக்கு எனக்கு எக்கச்சக்கமாய் இயங்கியது போலும்.

குனிந்த தலை நிமிராமல் குடும்ப குத்துவிளக்காய் திரியும் உஷா கடந்த மூன்று மாதமாக திருநாவுக்கரசின் கைப்பொம்மையாய் மாறியிருந்த காரணம் அப்பொழுது எனக்கு புரியவில்லை.

திருநாவுக்கரசு என்னை மிரட்டி நான் தப்பிக்க வழித்தேடியதும் தான் ஏன் உஷாவும் என்னைப் போல் பாதிக்கப்பட்டடு அவன் சொல்படி நடந்திருக்க கூடாது என்று எண்ணிதான் உஷாவை சந்திக்க ஓடி அவளை ஓய்வறைக்கு தனியாய் கூட்டிச் சென்று என் நிலையைக் கூற அவளோ கண்ணீர் வடித்து கூறினாள் அவனால் சீரழிக்கப்பட்டு, சீரழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் கதையை.

அவளையும் தவறாய் படம் எடுத்து மிரட்டி அவனின் இச்சையை தீர்த்து தேவைப்படும் நேரத்திலெல்லாம் அவளை மிரட்டி பணிய வைத்துள்ளான்.வீட்டிலும் சொல்ல தைரியமில்லாமல் மனதினுள்ளே மடிந்துக் கொண்டிருந்திருக்கிறாள் அவள்.

இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாய் வரையறுத்து விட்டேன்.உஷாவை சமாதானம் செய்து அந்த சனியர்களைப் பற்றிய விவரங்களையும் வாங்கிக் கொண்டேன்.

பெண்களை‌ மிரட்டிக் கூட்டிக் கொண்டு வருவது திருநாவுக்கரசின் வேலை.அவர்களை தங்கள் இச்சைக்கு பயன்படுத்தி கொள்ள இடம் ஏற்பாடு செய்து தருவது இன்னொருவனின் வேலை.அவன் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ மகன்.அவனைப் போன்றே பண பலம் படைத்தோர் தான் ஐந்து பேராக குழுவாக இணைந்து பெண்களை மிரட்டுகிறார்கள்.

உஷாவிடம் விசாரித்தவரை இந்த ஐந்து பேர் மட்டும் தான் ஒரே குழுவாய் இருப்பவர்கள்.இவர்களுக்கு வேறு யாருடனும் தொடர்பு கிடையாது.எனவே என் வீடியோவும் இந்த ஐவரைத் தவிர வேறு யாரிடமும் கசிய வாய்ப்பில்லை.

வகுத்து விட்டேன் திட்டத்தை.செயல்படுத்த உஷாவின் உதவி வேண்ட அரக்கர்களை அழிக்க ஆனந்தமாய் உடன்பட்டாள் அவளும்.

அதன்படி உஷா அவர்களால் பாதிக்கப்பட்ட பெண்களை அணிதிரட்டி அழைத்து வருவதென்றும் அதுவரை நான் ஐவரை சமாளிப்பதென்றும் முடிவானது.

எங்கள் கல்லூரியிலேயே அவனால் துறைக்கு ஐந்து பேர் வீதம் பாதிக்கப்பட்டிருக்க எங்கள் கல்லூரியில் மட்டும் எண்ணிக்கை நூறைத் தொட்டது.

அனைத்து பெண்களின் மனதிலும் அவர்களை அழிக்கும் ஆத்திரம் இருந்தாலும் அவர்களின் அந்தரங்கம் சனியர்களிடம் சிக்கியிருப்பதாலும் அவர்களை வழிநடத்த ஆள் இல்லாததாலும் அடங்கி இருந்தார்கள்.

நான் தெளிவாய் பாதை அமைத்துக் கொடுக்க அனைவரும் என்னைப் பின்பற்றினார்கள்.

என்னுடைய ப்ராப்ளமை சால்வ் செய்வதற்கான மெதட்டையும் சொல்யூஷனையும் கண்டுபிடித்தாகிற்று.

உஷா குளோராஃபார்மை உள்ளாடையில் மறைத்து வைக்க உதவி செய்ய பெண்கள் அனைவரும் இணைந்து திட்டம் தீட்டினோம் கயவர்களை கூண்டோடு ஓழிக்க.

நான் திருநாவுக்கரசுடன் செல்லும் காரை சந்தேகம் வராமல் இரு பெண்கள் அவர்களின் ஸ்கூட்டியில் தொடர உள்ளே ஐந்து பேர் மட்டும் தானா?இல்லை புதிதாய் எவரும் இருக்கின்றனரா ?என்பதை அறிந்து நான் எப்படியாவது அவர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.அதற்காய் தனியாய் ஒரு கைப்பேசி என் உள்ளாடைக்குள் ஒழிந்திருந்தது.ஆனால் நான் அதை உபயோகிக்கவில்லை.அந்த குடிகாரனின் கைப்பேசியையே உபயோகித்துக் கொண்டேன் உள்ளாடைக்குள் ஒழித்து வைத்த கைப்பேசி சார்ஜ் போதாமல் உயிரை விட்டதால்.

இவர்கள் ஒரே இடத்தில் தங்கள் லீலையை தொடராமல் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு இடம் மாற்றுவதால் என்னைப் பின்தொடர்ந்து வந்த பெண்களும் அந்த அத்துவான பங்களா இருக்கும் இடத்திற்குள் நுழையாமல் பாதுகாப்பு கருதி வெளியே நின்று விட உள்ளே நான் மட்டும்.

உள்ளே நான்..வெளியே அவர்கள்..எங்களின் சக்கரவியூகத்தில் வீழ்ந்தனர் துச்சாதனர்கள்.

இன்று மாலை இதுவரை பெண்களின் கதறலை மட்டுமே கேட்டு வந்த அந்த கடற்கரை பங்களா முதன் முறையாய் ஈனர்களின் கதறலைக் கேட்டது.

நூறு பெண்களை தனித்தனியாய் பயம் காட்டிய ஐவர் இன்று நாங்கள் அணிதிரண்டு நிற்கையில் ஐம்புலன்களும் அடங்கி இருக்கிறார்கள்.

மரண அடி அடித்தோம் நாங்கள் ..எங்களின் ஆவேசம் அப்போதும் அடங்கவில்லை.

"வலிக்குது.ப்ளீஸ் விடுங்க" என்று அவர்கள் கதறிய கதறல் "அய்யோ எங்களை விட்டுடுங்க ப்ளீஸ்" என்று எங்கள் பெண்கள் கதறிய கதறலைத் தான் எங்கள் காதில் எதிரொலித்தது.

ரௌத்திரம் பூண்டது எங்கள் மனம்.அடித்து நாராய் கிழித்து தொங்க விட்டோம் ஐவரையும்.தெளிய வைத்து தெளிய வைத்து அடித்ததில் நேரம் ஆறைக் கடந்து விட்டது.

இவர்களுக்கு முடிவு கட்ட வேண்டுமல்லவா? என்ன செய்வது என்று எங்களில் ஒருத்தி சொன்னாள்.

"இன்னிக்கு இவனுங்களை இப்படியே விட்டால் நாளைக்கு இன்னும் நிறைய பெண்களை மிரட்டி துன்புறுத்துவானுங்க.இவனுங்களை மன்னிக்குற அளவுக்கு தப்பை இவனுங்க பண்ணலை.இவனுங்களை தண்டிக்க சட்டமும் உதவாது.நீதியும் நமக்கு கிடைக்காது.அரெஸ்ட் ஆன அடுத்த மாசமே அதுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லைன்னு இவனுங்க வெளியே வந்துடுவானுங்க.இவனுங்க இனி இந்த உலகத்திலேயே இருக்கக் கூடாது" என்றாள் ஒருத்தி.

"ஆமாம்.இவனுங்க அப்பனுங்க நாம இவனுங்களை போலீஸ்ல பிடிச்சுக் கொடுத்தாலும் வெளியேக் கொண்டு வந்துடுவானுங்க.நமக்கான நீதியை நாம தான் தேடிக்கனும்.இவனுங்களை கொன்னுடலாம்" என்றாள் மற்றொருத்தி.

எங்கள் நீதிமன்றத்தில் அந்த குற்றவாளிகளுக்கான தண்டனை எழுதப்பட்டு விட்டது.

கயவர்கள் கதறிய கதறலைக் காண வேண்டுமே..கண்கொள்ளா காட்சியாக இருந்தது.எப்படி அவர்களுக்கு மரணம் நேர வேண்டும் என்றும் முடிவு செய்து விட்டோம்.

அவர்கள் அனைவரும் கைப்பேசியிலும் லேப்டாப்பிலும் சேகரித்து வைத்திருந்த எங்கள் அனைவரின் அந்தரங்கத்தையும் முதலில் அழித்தோம்.அடுத்ததாய் அழியப் போவது அவர்கள்.

எங்களுள் எலக்ட்ரீசியன் வேலை தெரிந்த ஒருத்தி அந்த பங்களா வீட்டின் மின் இணைப்பை ஷார்ட் சர்க்யூட் செய்தாள்.

இன்னொருத்தி பங்களாவில் சனியர்களுக்கு சமைப்பதற்காய் வைத்திருந்த கேஸ் சிலிண்டரை திறந்து வைத்தாள்.

அரை உயிராய் இருந்தவர்களை சமையலறையில் ஒருவனும்,படுக்கை அறையில் ஒருவனும் ,ஹால் சோபாவில் இருவரும் ,டைனிங்கிள் ஒருவனும் என்று அவர்களின் வாயில் மதுவை ஊற்றி தள்ளி விட்டோம்.

அடுத்த ஐந்து நிமிடத்தில் நாங்கள் அந்த கடற்கரை பங்களா இருந்த பகுதியை விட்டு வெளியேற எட்டாவது நிமிடத்தில் வெடித்தது "டொம்" என்ற பெரும் சத்தத்துடன் அந்த பங்களா.

கரும்புகை வானம் தனை மறைக்க அதனையும் விலக்கி வெளி வந்தது வெண்ணிலவு அன்று இனி எங்கள் வாழ்வில் வெளிச்சம் தருவதற்காய்!

பேடிப்பயல்கள்.நாங்கள் ஃபீமேல்(female)‌ தானே என்று குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள்.இந்த‌ ஃபீமேலுக்குள்ளும் ஒரு மேல்(male) இருப்பதை மறந்து விட்டார்கள்.

நாங்கள் செய்தது உங்களுக்கு தவறாய் ,தார்மீக வழிமீறலாய் தோன்றலாம். உங்களுக்கு என்ன வேண்டுமென்றாலும் தோன்றிக் கொள்ளட்டும்.

என்ன நடந்தாலும் நீங்கள் கருத்து மட்டும் தான் சொல்லிக் கொண்டிருப்பீர்கள்.அந்த சூழலை கடந்து வந்த எங்களுக்குத் தான் தெரியும் அது எப்படியானதென்று!

எங்களுக்கு அவர்கள் இழைத்த தவறுக்கு நாங்களே தண்டனை கொடுத்து விட்டோம்.எங்கள் சதையை தின்னும் மிருகங்களின் சதையை நெருப்பில் எரிய விட்டோம்.

பெண் பிள்ளைகளை அஞ்சுவது கடமை என்று சொல்லி வளர்க்காதீர்கள்.அஞ்சுவது பேதைமை என்று சொல்லி வளருங்கள்.

ஒரு மாதத்திற்கு பின்..

"சென்னையை அடுத்த ******கடற்கரை பங்களாவில் கேஸ் சிலிண்டர் வெடித்து ஐந்து பேர் இறந்த சம்பவத்தை விபத்து என்று உறுதி செய்து முடித்து விட்டது காவல் துறை."

தினசரி நாளிதழில் கடைசிப் பக்கத்தில் பெட்டிச் செய்தியாய் அத்தனை ஆராவாரத்தையும் தாண்டி அடங்கி போனது அந்தச் செய்தி.
               ******முற்றும்******

This topic was modified 12 months ago by Risha John

இந்திரா செல்வம்
(@indra-selvam)
Reputable Member Exclusive Writer
Joined: 3 years ago
Posts: 398
12/12/2019 12:04 am  

Ealla pengalum padikka veandiya kadhai.... appadiyea katchiyai kanmun kondu vanthutenga.,, super ....oru oru move um samaya irunthathu... Sama plan..  idhu pol pratchanaiyil eantha ponnum mattikola kudathu.,,, apadiyea matikittalum ithea mathiri dhairiyama irukanum..,,  great story , bold story

அன்புடன்
இந்திரா செல்வம்

ReplyQuoteRisha John
(@risha)
New Member Registered
Joined: 2 years ago
Posts: 3
12/12/2019 8:19 am  

@indra-selvam

Thank you sis 😍😍

ReplyQuote
Zeenath Sabeeha
(@zeenath)
Active Member Registered
Joined: 2 years ago
Posts: 14
12/12/2019 10:54 am  
Posted by: @risha

Wowwwwwwww Risha babe....jus awesome dear superb story good moral keep rocking dear good luck😊😊👌👌👍👍👍💐💐💐💐

ReplyQuote
Shalini M
(@shalini-m)
Estimable Member Registered
Joined: 1 year ago
Posts: 229
12/12/2019 1:41 pm  

Super sis 😘😘 girls power na ennanu katitanga Ellorum...... presence of mind oda correct ah plan panni avanungaliku punishment kuduthutanga....

ReplyQuote
Shalini M
(@shalini-m)
Estimable Member Registered
Joined: 1 year ago
Posts: 229
16/01/2020 5:06 pm  

வாழ்த்துக்கள் சாகோ 💐💐💐

ReplyQuoteDeepika Krishna
(@deepika-krishna)
Eminent Member Registered
Joined: 1 year ago
Posts: 47
16/01/2020 6:05 pm  

Congrats sis.. 👍 👍 

ReplyQuote
Share: