நான் ஒரு தமிழனாக எதற்கு வந்தோம் ஏன் வாழ்ந்தோம் செத்தோம் என்றும் இருந்துவிடக்கூடாது என் முன்னோர்கள் காட்டிய வழியில் சாதிக்க விரும்புகிறேன்
திருவாசகம் அது ஒரு வாசகம் அதை எழுத ஓதியது மணிவாசகம் எழுதியது நமச்சிவாயம்
"தென்னாடுடைய சிவனே போற்றி"
"என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி"
எந்த நாட்டில் இருப்பவர்களுக்கு எல்லாம் இறைவன் சிவனே அவனே என் சிந்தையுள் வந்து நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி இந்த சிறுகதையை சமர்ப்பிக்கிறேன்
ஜி. யு. போப் என்ற அமெரிக்கர் அவர்களால் ஆங்கில வடிவில் மொழிபெயர்க்கப்பட்ட திருவாசகம்
ஜி. யு. போப்
(George Uglow Pope,
ஏப்ரல் 24, 1820 -பெப்ரவரி 11, 1908)
கனடாவில்
பிறந்து கிறிஸ்தவ சமய போதகராக தமிழ் நாட்டிற்கு வந்து 40 ஆண்டு காலம் தமிழுக்கு சேவை செய்தவர். திருக்குறள், நாலடியார், திருவாசகம் நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்.
1886 ஆம் ஆண்டு திருக்குறளை
ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தார்.புறப்பொருள் வெண்பா மாலை, புறநானூறு, திருவருட்பயன் போன்ற நூல்களை பதிப்பித்தார்.தமிழ் மீது பெரும் பற்று பெற்ற அவர் நாலடியார், திருவாசகம் ஆகியவற்றையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்.
முதுமையில் தளர்ச்சியடைந்த சமயம் தமது நண்பரிடம் மூன்று விருப்பங்களைத் தெரிவித்திருந்தார் ஜி.யு.போப்.
இறப்புக்கு பின் தனது கல்லறையில் இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்
என்ற வாசகம் இடம்பெற வேண்டும்
தமது கல்லறைக்குச் செலவிடும் தொகையில் ஒரு சிறுபகுதியாவது தமிழ் மக்களின் நன்கொடையால் அமைய வேண்டும். பச்சையப்பன் கல்லூரித் தமிழ் பேராசிரியர் செல்வக் கேசவராயர் தமிழன்பர்களிடம் நன்கொடை திரட்டி இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தார்.
கல்லறையில் தம்மை அடக்கம் செய்யும் போது தான் மொழிபெயர்த்து வெளியிட்ட திருக்குறள் மற்றும் திருவாசகத்தையும் உடன் வைக்க வேண்டும் என்பது.
சிவனும் சிவ தூதுவன் உரையாடலும்:
சிவன்: பக்தா நீ மானிட அவதாரம் எடுத்து பூலோகத்திற்கு போ!! மக்கள் அன்போடு இன்பமுற வாழ்வதற்கு வழி என்ன தேவை என்பதை உணர்த்தி விட்டு வா!!
சிவ தூதுவன்: அது அடியேனின் பணி இறைவா நான் பூலோகத்திற்கு புறப்படுகிறேன் விடைபெறுகிறேன்
ஓம் க்லீம் சிவாய நம என்று திருமூலர் அருளிய திருமந்திரத்தை கூறிவிட்டு பூலோகத்தை சென்றடைந்து திரு அண்ணாமலையாரை அமாவாசையன்று கிரிவலம் செய்து சிவன் அறிவுரை பெற்று சித்தர்கள் ஆசியுடன் காஞ்சி மாநகரை சென்றடைந்து
ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் சிவ தூதுவன் உரையா
திரு அண்ணாமலையாரை நினைத்தாலே முக்தி காஞ்சியில் பிறந்தால் முக்தி காசியில் இறந்தால் முக்தி என்று சிவ தூதுவன் புலம்பிக் கொண்டிருந்த வேளையில் சிவனடியார் ஒருவர் சிவனை வணங்க வந்த சமயம் இறைவா பூலோகத்தில் மக்களின் இங்கே இப்போது இந்திரலோகம் போல மது போதையிலும் மாது தேவையிலும் சீரழிந்து கொண்டிருக்கின்றன அதுமட்டுமல்லாமல் உடலை ஒட்டிய உயிரோடு இப்பொழுது மனிதனால் உண்டாக்கப்பட்ட மொபைல்போன் ஒட்டிக்கொண்டது அனைவரும் அந்த மாயை இருள் மூடிக் கொண்டிருக்கின்றனர்
அதைக் கேட்டுக் கொண்டிருந்த சிவ தூதுவன் எது தேவை எதனால் இந்த நிலை என்று மக்களுக்கு புரிய வைக்க இயலவில்லை சிவன்அடியார் இல்லை ஏனென்றால் எல்லோரும் வசதி என்ற மாய உலகில் பணம் என்ற பேய் பிடித்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்
சிவ தூதுவன்
என்ன காரணத்தால் சீரழிந்து கொண்டிருக்கிறது நம் தமிழகம் என்று அறிவித்து வசதி தேவையா வளம் தேவையா என்று புரிய வைத்தால் வெற்றி பெற முடியாது நல்ல குணத்தால் மட்டுமே முடியும் என்றும்
"அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை"