Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


யாரென்று தெரிகிறதா.....? -4

Megala Appadurai

Saha Writer
Team
Messages
52
Reaction score
64
Points
18
சென்ற இரண்டு திங்களாக யாரென்று தெரிகிறதா வராததற்கு மன்னியுங்க ...... கடைசியா போட்ட கதையோட விடையான காஞ்சனா ஜெயதிலகர் அவர்களின் முல்லைப்பந்தல், நீலநயனா, நித்தியன் என்ற சரியான விடையை சொல்லி கடந்த வார கீரடத்தையும், வாசகப்பேரிகை என்ற பட்டத்தையும் பெறுபவர் saranya shan அவர்கள். வாழ்த்துகள் சரண்யா .... இந்த கீரடத்தை உங்களுக்கு பெருமையுடன் சூட்டுகிறோம்.



மக்களே.... நான் ஏற்கனவே சொன்னது போல இன்றைய கதைச் சுருக்கத்திற்க்கான விடையை நாளை இரவே சொல்வேன்.... அதுவரை உங்களுக்கு நேரமிருக்கிறது. வந்து கலந்துக்கோங்க நட்புக்களே....இனி இந்த வாரக் கதைச்சுருக்கத்திற்க்கு செல்வோம் வாங்க.....



கிட்டதட்ட இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் இவரின் கதைகளைப் படித்து ஆச்சர்யத்தில் வியந்து போனேன். அப்படி நான் வியந்த கதைகளுல் இதுவும் ஒன்று.... இது திரைப்படமாகவும் வந்ததென்பது கூடுதல் சிறப்பு. வாங்க இனி கதையை நாயகன் வழி பார்ப்போம்.



நான் எதற்காக அவளின் கிராமத்திற்கு வந்தேன். ஏன் அவளைப் பார்த்தேன். நாட்டுபுறப் பாட்டை ஆராய்ச்சி செய்ய வந்தவன் அதை விட்டுவிட்டு அவளின் வெள்ளிந்தி பேச்சிலும் சிரிப்பிலும் மயங்கியதேன். கருமையான நிறத்தோடும் படிப்பறிவில்லாத போதும் அவளையே என் மனம் சுற்றி வருவதேன். ஆனால் அவளோ அவள் முறைமாமனுக்காய் காத்திருக்கிறாளென என் தலையில் இடியை இறக்கினாள். கிராமத்து பைங்கிளியின் விருப்பம் அதுவாய் இருப்பின் நான் என்ன செய்ய....



ஆனாலும் அவளின் வெள்ளந்தி பேச்சையும், வெகுளித்தனத்தையும் முழுசாய் இழந்து விட என் மனம் விரும்பவில்லை.... அவள் மற்றொருவனை காதலித்தாலும் ஏனோ அவன் பால் வெறுப்பு வர மறுக்கின்றது. நான் நாட்டுப்புற பாடல்களோடு நின்றிருக்கலாம் தங்குவதற்காக அந்த ஜமீன் அரண்மனைக்கு சென்றிருக்க வேண்டாமோ என்று தோன்றுகிறது. ஆனாலும் சென்று விட்டேன் அங்கு நடக்கும் ஒவ்வொரு விஷயங்களும் எனக்கு தீகில் ஊட்டுவதாய் அமைந்தது. அந்த அரண்மனையில் யாரோ நடமாடுகிறார்கள் ஏதோ ஒரு அமானுஷ்ய திகழ்கிறது அந்த ஜமீன் பங்களாவில்.....



நான் சென்ற சில நாட்களிலேயே ஜமீனுக்கு சொந்தக்காரியாய் ஒருத்தி வந்து சேர்ந்தாள் அவளின் நடவடிக்கைகளும் உடைகளும் எங்களுக்குள் சற்றே விவாதத்தை ஏற்படுத்தியது. ஆனாலும் அவள் நல்லவள் என்று நம்பினேன் சில நாட்கள்.



அவளிடம் இருந்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாய் சரிய ஆரம்பித்தது. என்னிடம் அந்த டைரி கிடைக்கும் வரை மட்டுமே.... வீட்டின் உரிமைக்காரிகாய் வந்தவள் வேஷம் போடுகிறாள் எனக்கு சந்தேகம் வலுத்தது,



தினம் தினம் திகிலுடன் கழிகிறது நாட்கள். நள்ளிரவில் யாரோ நடமாடுகிறார்கள். இந்த கிழவி வேறு பேய் பிசாசு என்று பயப்படுத்துகிறது.



என்னவளின் காதலன் வேறு நாகரிகத்து மங்கையின் மயக்கத்தில் அவள் பின்னேயே சுற்றுகிறான். இது பாவம் அந்த வெள்ளை மனசுக்காரிக்கு பிடிக்கவில்லை. சபிக்கிறாள் அந்த பட்டணத்து பைங்கிளியை.



பாவம் அவள் ஒருநாள் இறந்துபோனாள். அவள் இறந்தது சிறிது எனக்கு வருத்தம் வந்தது. வெள்ளை மனசுக்காரியோ தான் தான் அவளை கொலை செய்தேன் என்ற சொல்லி அழும் போது என் இதயமே வெடித்துவிடும் போலிருந்தது. அவளால் நிச்சயம் ஒரு கொலையை செய்ய முடியாது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.



ஆனா அவளின் முறைமாமனோ இறந்தவளின் கூடவே சுற்றி அவளின் மீது ஏற்பட்ட மோகத்தால் என்னவளை காயப்படுத்துகிறான். இதை மோகம் என்று சொல்வதா... இல்லை அறியத்தனம் என்று சொல்வதா.... ஏதோ ஒன்று ஆனால் அவள் பால் அவன் ஈர்க்கப்பட்டது உண்மை.



அவள் இழப்பிற்கு என் வெள்ளை மனதுகாரிதான் காரணம் என ஊரும் காவல்துறையும் தேடுகிறது.



இதற்கிடையில் அந்த அரண்மனையில் இருக்கும் ரகசியத்தை நான் அறிந்து கொண்டேன் அப்பப்பா என்ன மாதிரியான உணர்வு இது.இந்த அரண்மனையில் ரகசியத்தையும் நீங்கள் அறிய வேண்டுமானால் நீங்கள் என்னுடன் பயணிக்க வேண்டியிருக்கும்.



தேடிய புதையலுக்கு கூட விடை கிடைத்தது. ஆனால் நான் ஊரை விட்ட கிளம்பும் போது அவள் விட்ட கண்ணீருக்கு மட்டும் என்னால் கடைசிவரைவிடை காண இயலவில்லை. நான் தவறு செய்து விட்டேனோ.... கிராமம் அதன் கட்டுப்பாடு என அவளை விட்டு விட்டேன். எதுவாயிருந்தாலும் என் நேசத்தை அவளுக்கு நான் கூறியிருக்க வேண்டுமோ..... என் நேசத்தை சிறிதாவது அறிந்திருப்பாள் அவள். நான்



யார் என்று தெரிகிறதா......?
அவள் யாரென்று தெரிகிறதா.....?
 
Top Bottom