Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


GY NOVEL அன்பே!அன்பே!கொல்லாதே! - Tamil Novel

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

 
Last edited:

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
327
Reaction score
607
Points
93
Hi friends,
ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..சகாப்தம் தளத்தில் நடக்கும் வண்ணங்கள் போட்டியில் நானும் கலந்து கொள்கிறேன்..சாம்பல் வண்ணத்தில் ஆன்டி ஹீரோ கதை எழுதுகிறேன்..எப்போதும் போல் இதற்கும் உங்கள் ஆதர்வை தந்து என்னை ஊக்குவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
கதையில் இருந்து ஒரு சின்ன முன்னோட்டம் பதிந்துள்ளேன் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்..

அன்பே!அன்பே!கொல்லாதே!

முன்னோட்டம்
நாயகன்: குறள்நெறியன்
நாயகி:பாவினி

முன்னோட்டம்

எம்.டி குறள்நெறியன், என்று அறையின் நுழைவாயிலிருந்த பெயரை பெருமூச்சுடன் ஒரு நொடி பார்த்தார் தூயவன்.

மனதிற்குள் இன்று எந்த குண்டு காத்திருக்கோ, என்று எண்ணியபடியே மெல்ல கதவைத் தட்டினார்.

"எஸ் ,கம்மின்.." என்ற கம்பீரமான குரலின் அனுமதியை ஏற்றுக் கொண்டு உள்ளே சென்றவர் ,"குட்மார்னிங் சார்! என்ன விசயம்!காலையிலேயே என்னை வரச்சொல்லி இருக்கீங்க.." என்றவரிடம்..

"முதலில் உட்காருங்கள்..'என்றான், சுழல் நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்த குறள்நெறியன்.

அவன் சொன்னதைக் கேட்டு ஆச்சரியப்பட்ட தூயவன் ,அசையாமல் அப்படியே நின்றார்.

மனதிற்குள், 'குறள்நெறியன் எம்டியாக பதவியேற்ற இத்தனை நாட்களில் அவரின் வயதுக்கு கூட மரியாதை கொடுத்து அவன் உட்கார சொல்லியதே இல்லை..அப்படிப்பட்டவன் இன்று உட்காரச் சொல்கிறானே! 'என்று யோசித்தார்.

குறள்நெறியனோ,தூயவன் அமராமலேயே யோசனையுடன் நிற்பதைப் பார்த்து,"மிஸ்டர் தூயவன் பீளிஸ் சீட் .."என்றான்.

தூயவனோ, தயக்கத்துடன் அமர்ந்தபடியே ,அவன் முகத்தையே யோசனையுடன் பார்த்தார்.

அவனோ,தன் கையில் பேனாவை வைத்து சுழற்றியபடியே சில நொடிகள் அமைதியாக இருந்தான்.

தூயவனோ, ஏன் இன்று இவ்வளவு அமைதியாக இருக்கிறான்.கடந்த ஐந்து வருடங்களாக அவனைப் பார்க்கிறார்..அவன் செயல்கள் எல்லாமே அதிரடியாகத் தான் இருக்கும் என்று நினைத்தவரிடம், அவரின் எண்ணத்தைப் பொய்யாக்காமல்..

"நான் உங்கள் பெண் பாவினியை மணந்து கொள்ள விரும்புகிறேன்..திருமணத்தை இந்த மாதமே வைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.." என்றவன் அவரின் தலையில் அசராமல் இடியை இறக்கினான்.

அவரோ, அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ந்தவர்,தன் காதில் விழுந்தது சரிதானா? என்று தன் காது கேற்கும் திறனை ஒரு நொடி சந்தேகித்தார்.

அவனோ,அவரின் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியை கண்டு கொள்ளலாமல்,"எந்த ஃபார்மாலிட்டிஸ்சும் வேண்டாம்..நேராக ரிஜிஸ்தர் மேரேஜ் செய்துட்டு ,பெரிதாக வரவேற்ப்பு வைத்துக் கொள்ளலாம்.." என்று அவன் பாட்டிற்கு அடுக்கிக் கொண்டே போனான்..

அவரோ,அவனின் திட்டமிடலைக் கண்டு திகைத்தவர்," சாரி சார் எனக்கு இந்த திருமணத்தில் சம்மதமில்லை.." என்றார்.

அவனோ,"ஏன் சம்மதமில்லை ?உங்கள் தகுதிக்கு மீறிய இடம்மென்று தயங்குகிறீர்களா?"

"இல்லை..தன் தாயை மதிக்க தெரியாதவருக்கு எந்த நம்பிக்கையில் என் பெண்ணைத் தருவது .."என்றவுடன்..

அடங்கா சினத்துடன் ,தான் அமர்ந்திருந்த சுழல் நாற்காலியை வேகமாக பின்னே தள்ளியபடி எழுந்தவன்,"மிஸ்டர் தூயவன் யாரிடம் என்ன பேசுகிறீங்கன்னு யோசித்துப் பேசுங்கள்.. ஜாக்கிரதை.." என்று வார்த்தைகளை கனலாக கக்கினான்..

"நான் யோசித்து தான் பேசுகிறேன்.எனக்கு விருப்பமில்லை, இத்தோடு இந்த பேச்சை நிறுத்திக் கொள்ளுங்கள்.."

"நான் உங்களிடம் சம்மதம் கேட்கவில்லை என் முடிவைச் சொன்னேன்.."

"மிஸ்டர் குறள்நெறியன்!இது ஒன்றும் உங்கள் அலுவலக விஷயமில்லை!உங்க இஷ்டத்திற்கு முடிவு செய்ய..என் பெண்ணின் திருமண விஷயம்!என் பெண்ணை யாருக்கு மணமுடித்து கொடுக்க வேண்டுமென்று நான் தான் முடிவு செய்யனும்.."என்றார் கோபத்துடன்..

அவனோ,"தூயவன் நீங்க இன்னும்என்னிடம் தான் வேலை செய்றீங்க என்பதை மறந்துவிடாதீங்க.."

"நான் உங்களிடம் வேலை செய்வதால் உங்களுக்கு அடிமையில்லை .. நீங்க சொல்வதற்கெல்லாம் தலையாட்ட.."

"நான் நினைத்ததை சாதிக்காமல் விட்டதாக என் சரித்திரத்திலேயே இல்லை.."

"இருக்கலாம் ..எல்லாத்திற்கும் ஒரு விதி விலக்கு இருக்கு!நீங்க தலைகீழாக நின்னாலும் இந்த திருமணம் நடக்காது.." என்றவரிடம்..

"அதையும் பார்த்துடலாம்.உங்க பொண்ணுக்கு திருமணம் என்று ஒன்று நடந்தால் அது என்னோட தான்! அதை எந்த கொம்பன் நினைத்தாலும் தடுக்க முடியாது.." என்று நக்கலாக சொன்னவனை எரித்து விடுவது போல் பார்த்தவர்..பதிலே சொல்லாமல் வேகமாக வெளியேறினார்.


************************

விரைவில் யூடி உடன் உங்களை சந்திக்கிறேன்..
(பின் குறிப்பு)வாசகர்களே!பரிசு‌ எங்களுக்கு மட்டுமில்லை ..படிக்கின்ற உங்களுக்கும் தான்..அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது.. படித்து விட்டு உங்கள் கருத்துக்களை மறவாமல் கீழே உள்ள லிங்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்..உங்களின் சிறந்த கருத்துக்கு வார..வாரம் பரிசு உண்டு..அதனால் தயவுசெய்து படித்து விட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டு எங்களையும் ஊக்கப்படுத்தி..நீங்களும் பரிசை வெல்லுங்கள்..
நன்றி
அன்புடன்
இனிதா மோகன்


உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

 
Last edited:

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
327
Reaction score
607
Points
93
அன்பே!அன்பே!கொல்லாதே!

அத்தியாயம் 1


சென்னை மாநகரத்தின் வசதி படைத்தவர்கள் மட்டுமே! வாழும் பகுதியில்,பல கோடிச் செலவில் கட்டப்பட்டிருந்த அந்த பங்களா ! 'குறளகம் 'என்ற பெயரில் பிரமாண்டமாகவும், கம்பீரமாகவும் காட்சி தந்தது.


தென்றல் சுகமாக வருடும் இளங்காலைப் பொழுதில், குறளகத்தின் உள்ளே வேலையாட்கள் சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருந்தார்கள்.


பல வருடங்களாக அவர்கள் அங்கே பணிபுரிபவர்கள் தான்! ஆனாலும், மனதில் ஒரு பயத்துடனேயே தங்கள் வேலைகளை செய்து கொண்டிருந்தார்கள்.


அவர்களின் பயத்துக்கு காரணம், அந்த வீட்டின் முடிசூடா இளவரசன் குறள்நெறியன் தான்! அவன் அவர்களின் சின்ன முதலாளி!


அவனைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால்,தேனீக்கள் போல சுறுசுறுப்பு!காற்றைப் போல வேகம்! அனலைப் பொழியும் கோபம்!திமிருக்கு அரசன்!கர்வத்தின் மன்னன்!ஆணவத்தின் தலைவன்!செல்வத்தில் சக்கரவர்த்தி! நினைத்ததை நினைத்த நொடி சாதிக்கும் குணம்!அழகுக்கும்,கம்பீரத்திற்கும் ராஜா!பார்ப்போரை கவர்ந்திழுக்கும் உயரம்!இத்தனைக்கும் சொந்தக்காரன்!ஆனால், அவனிடம் கருணையும்,அன்பும் மட்டும் கடுகளவும் கிடையாது.


அவனிடம் மரியாதையெல்லாம் எப்போதும் எதிர்பார்க்க முடியாத ஒன்று!அவன் வீட்டில் இருந்தாலே, வேலையாட்கள் நெருப்பின் மேல் நிற்பது போல் தான் பணிபுரிவார்கள்.


குறள்நெறியன் காலை ஐந்தரைக்கு எழுந்தால், இரவு பத்து மணி வரை ஓய்வில்லாமல் உழைப்பவன்.அவனுக்கு சரியான நேரத்தில் வேலைகள் நடந்து விடவேண்டும். தாமதம் என்பது அவனுக்கு பிடிக்காத ஒன்று! அது அவனது அகராதியிலேயே இல்லாதது.


அன்றும் வழக்கம் போல ஐந்தரைக்கு எழுந்தவன், தன் நடைபயிற்சியை முடித்துக் கொண்டு தோட்டத்தில் வலம் வந்தான்.


சில செடிகள் தண்ணீர் இல்லாமல் லேசாக வாடி இருப்பதைப் பார்த்து, கோபத்துடன் தோட்டக்கார் தேனப்பனை அழைத்தான்.


ஐம்பது வயது மதிக்கத்தக்கமாறு இருந்த தேனப்பன்,மிகுந்த பயத்துடனும்,மரியாதையுடனும் அவனிடம் வந்து கைகட்டி பவ்வியமாக நின்றார்.


அவரைப் கோபமாகப் பார்த்தவன்,"ஏன் இந்த செடிகள் எல்லாம் வாடி இருக்கு?ஒழுங்கா தண்ணீர் விடவில்லையா ?"என்றவனிடம்.

"தம்பி நேற்று எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை..அதனால் புதிதாக வேலைக்கு சேர்ந்த பையனிடம் தண்ணீர் ஊற்ற சொல்லியிருந்தேன். அவன் ஊற்ற மறந்துட்டான் போல..நான் விசாரிக்கிறேன்.இதோ இப்போதே எல்லாச் செடிகளுக்கும் தண்ணீர் விடுகிறேன் .."என்றவரிடம்.


"அந்தப் பையனை கூப்பிடுங்கோ.." என்றான் கோபமாக.

அவரோ, மனதிற்குள் 'இன்று அந்தப் பையனுக்கு நேரம் சரியில்லை போல்..' என்று நினைத்த படி அந்த பையனை அழைத்து வந்தார்.அவனோ ,கண்களில் மிரட்சியுடன் குறள்நெறியனைப் பார்த்தபடியே வந்து நின்றான்.


குறள்நெறியனோ,அவனைக் கண்டவுடன், "உனக்கு என்ன வேலையோ! அதை ஒழுங்காக செய்ய முடியாதா?" என்றவன், பளார்றென்று அந்த பையனை அறைந்து விட்டான்.


அவனோ,அடிபட்ட கன்னங்களை கையில் தாங்கியபடி,கண்களில் பூச்சி பறக்க பயத்துடன் தன் முதலாளியைப் பார்த்தான்.


குறள்நெறியனோ,தேனப்பனைப் பார்த்து, "இன்றிலிருந்து இவன் இங்கே இனி வேலையில் இருக்க கூடாது .நிலனிடம் சொல்லி இவனுக்கு செட்டில் செய்து அனுப்புங்கள்.." என்றான், அடங்காத கோபத்துடன்.


அந்த பையனோ,"சார் இந்த ஒருமுறை என்னை மன்னித்து விடுங்கள்.இனி இது போல் தவறு எப்போதும் நடக்காது .."என்று கெஞ்சினான்.


தேனப்பனோ, பாவமாக அந்த பையனைப் பார்த்தார்.பாவம் ஏழைப் பையன்! ரொம்ப கஷ்டப்படும் குடும்பம்! பத்து நாட்கள் தான் இருக்கும் அவன் வேலைக்குச் சேர்ந்து.. என்று கலங்கினார்.


அந்த பையனை நினைத்து வருத்தபட மட்டுமே அவரால் முடியும்.குறள்நெறியனிடம் எதிர்த்து பேச முடியுமா?அவர் பல வருடங்களாக இங்கு வேலை பார்க்கிறார்.அவனைப் பற்றி நன்கு தெரியும்!அவன் ஒன்று நினைத்தால் அதை யார் நினைத்தாளுமே மாற்ற முடியாது. இதற்கு ஒரே வழி தங்கள் பெரிய முதலாளி செங்கோடன் தலையிட்டால் மட்டுமே முடியும். என்று நினைத்தவரின் எண்ணத்தை உணர்ந்தவர் போல், செங்கோடனே தெய்வமாக அங்கே வந்தார்.


செங்கோடனும் தோட்டத்தில் நடைபயிற்சியில் இருந்தார் ,பேரனின் முகத்தை தூரத்திலிருந்தே கண்டவருக்கு ,ஏதோ? அங்கு சரியில்லை என்று தோன்றியது.உடனே வேகமாக அவன் அருகில் வந்தார்.


முகம் வாடி நின்ற தேனப்பனை பார்த்தபடி, பேரனிடம் என்னவென்று கேட்டார். பேரனோ, கோபமாக நடந்ததை சொன்னவுடன்,"குறள் நீ போப்பா ..நான் பார்த்துக்கிறேன். நீ எதற்கு இதற்கெல்லாம் டென்ஷன் ஆகிறாய் .."என்றார்.

அவனோ,"தாத்தா என்ன வேலைக்கு வந்தோமோ! அதை ஒழுங்காக செய்யனும் . அப்படி செய்யாதவர்களுக்கு இங்கே இடமில்லை..நாளை இவன் என் கண்ணில் படக்கூடாது.." என்றவன், வேகமாக வீட்டிற்குள் சென்றான்.


செங்கோடனும்,தேனப்பனும் கோபமாக போனவனையே ஒரு பெருமூச்சுடன் பார்த்தனர்.


செங்கோடனோ,பேரனிடம் இனி பேசிப் பயனில்லை என்று புரிந்தவர் ,அந்த பையனிடம்.."நீ இனி தோட்டத்தில் வேலை செய்ய வேண்டாம்.உனக்கு நான் வேறு வேலைக்கு ஏற்பாடு செய்கிறேன்.."என்று அவன் வயிற்றில் பாலை வார்த்துச் சென்றார்.


குறள்நெறியன் வேகமாக தன் அறைக்குள் வந்தவன்,
தன் உதவியாளன் நிலனை அழைத்துச் சில வேலைகளுக்கு கட்டளைகளைப் பிறபித்தான்.


அந்த வாரமே! அவனுக்கு ஓய்வென்பதே இல்லாமல் இருந்தது.மார்ச் மாதம் வேறு, இயர் என்டீங் வேலை அவனின் நேரத்தையெல்லாம் இழுத்துக் கொண்டது.ஆனாலும்,இன்னும் சில வேலைகள் முடியவில்லை.இன்று ஆடிட்டிங் ஆபிஸ் வரைச் செல்ல வேண்டும்.இவனுடைய ஆடிட்டர் நகரத்திலேயே தலைசிறந்த ஆடிட்டர் தான்!


ஆனால்,அவர் இவனுடையதைப் போல் பல பெரிய கம்பெனிகளுக்கு ஆடிட்டராக இருப்பதால், அவரை பிடிப்பதே மிகவும் சிரமம்.அதுவும் மார்ச் மாதம் மென்றால் மிக கஷ்டம்.இன்று ஆடிட்டரைச் சந்திக்க நிலன் அவரிடம்அப்பாய்ன்மெண்ட் வாங்கி இருக்கிறான்.


காலை பத்து மணிக்கு அங்கு போகனும் .அதற்குள் சில மிச்சமிருக்கும் வேலைகளை முடிக்க வேண்டும் .


ஏப்ரல் முதல் தேதி புது கணக்கு ஆரம்பிக்கும் வரை, ஒரு நொடி கூட அவன் நேரத்தை தேவையில்லாமல் செலவழிக்க முடியாது.


குறள்நெறியன், நடைபயிற்சிக்கு செல்லுவதே அவனுடைய மனஅழுத்தத்தை குறைப்பதற்குத் தான். ஆனால், இன்று மேலும் டென்ஷன் ஆனது தான் மிச்சம். என்று நினைத்தவன், சிறிது நேரம் தன் உடற்பயிற்சிக் கூடத்தில் நேரத்தை செலவிட்டான்.பின் அலுவலகம் செல்ல தயாராகி கீழே வந்தான்.


மணி எட்டானதும் பேரனுக்கு காலை சிற்றுண்டியை தயாராக எடுத்து வைத்த மெய்யம்மை, பேரனின் வரவை எதிர்நோக்கி மாடிபடிகளையே பார்த்துக் கொண்டிருந்தார்.


அதே சமயம் அவரின் கண்களை நிறைத்தபடி, குறள்நெறியன் மாடிப்படிகளை தன் நீலக்கால்களால் இரண்டு..இரண்டு ,படிகளாக தாவித் தாவி இறங்கி வந்தான்.


பேரனின் துடிப்பையும்,கம்பீரத்தையும் எப்போதும் போல் மனம் குளிர ரசித்தபடியே, டைனிங்டேபிள் முன் அமர்ந்த பேரனுக்கு உணவைப் பறிமாறினார்.


குறள்நெறியனோ ,என்ன கோபமாக இருந்தாலும், தன் பாட்டியிடம் மட்டும் கொஞ்சம் தன்மையாக நடந்து கொள்வான்.அவரின் மலர்ந்த முகம் என்றுமே அவனுக்கு ஒரு பூஸ்ட்டு தான்.


பாட்டியைப் பார்த்து அவன் மென் புன்னகை ஒன்றை சிந்தியபடி உணவை உண்டான்.


மெய்யம்மையோ,பேரனின் தலையை பாசமாக வருடிய படியே ,"குறள் வேலை..வேலையென்று ஓய்வில்லாமல் உழைக்கிறாய்.அளவு சாப்பாடு சாப்பிடாமல் வயிறார சாப்பிடுப்பா.."என்று தன் மனக்குமுறலை கொட்டியவரிடம்..


"பாட்டி எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதை விட.. சத்தாக சாப்பிடுகிறோமா? என்பது தான் முக்கியம்!அது தான் நீங்க எனக்கு பார்த்துப் ..பார்த்து, சாப்பிடக் கொடுக்கிறீர்களே! அது போதும் .."என்றான்.


மெய்யம்மை எப்போதும், குறள்நெறியன் சாப்பிடும் பொழுது, வேலையாட்கள் யாரையும் அந்தப் பக்கம் வரவிடமாட்டார். தானே ,பார்த்துப் பார்த்து பறிமாறுவார்.அப்படி பட்டவருக்கு பேரன் அளவு சாப்பாடு சாப்பிடுகிறான் என்பது மிகுந்த வருத்தத்தை தந்தது.


'இப்படி கஷ்டப்பட்டு சம்பாதிப்பதெல்லாம் எதற்கு? இந்த வயிற்றுக்குத் தானே!ஆனால், இந்தப் பையன் அதற்கு கூட ஒழுங்காக சாப்பிட மாட்டீங்கிறானே !' என்று நினைத்து மனதிற்குள் சங்கடப்பட்டார்.


"வயசுப்பையன் நீ! கல்லைத் தின்றால் கூடச் செரிக்கும் வயசு.ஆனால், நீயோ டையட்டு,கியட்டுன்னு இப்படி அளவு சாப்பாடு சாப்பிடறது தான் எனக்கு பொறுக்கலை.."


"பாட்டி..நான் ஒன்றும் குழந்தை இல்லை..எனக்கு என்ன தேவையோ அதை நான் பார்த்துக் கொள்வேன்.என்னைப் பற்றி நீங்க தேவையில்லாமல் கவலைப்படாதீங்க..உடம்பைக் கட்டுக் கோப்பாக வைத்திருந்தால் தான்! உடலும் ,மனசும் ஆரோக்கியமாக இருக்கும்.



"ம்ஹூம்!இப்படிச் சொல்லி ..சொல்லியே ,என் வாயை அடைத்துவிடு.நாளைக்கு கல்யாணத்துக்கு பெண் பார்க்கும் போதும், உன் இஷ்டத்திற்கு முடிவு செய்துட்டு எல்லாம் எனக்கு தெரியுமென்று சொன்னாலும் சொல்லுவே.."


"பாட்டி நீங்க சொன்னாலும், சொல்லாவிட்டாலும், பெண் எனக்கு பிடித்த மாதிரி தான் இருக்கனும்.அவள் கூட காலம் பூரா வாழப் போறது நான் தானே! அதனால்,அதை நான் தான் முடிவு செய்வேன். எனக்கு பிடித்தால் போதும்.."

"ஓ!உனக்கு பிடித்தால் போதுமா?எனக்கு பிடிக்க வேண்டாமா?"என்று கோபமாக கேட்டவரிடம்..


"என் செல்ல பாட்டியே !ஒன்று சொல்லட்டுமா?பெண்ணுக்கே என்னை பிடிக்கா விட்டாலும், எனக்கு பெண்ணைப் பிடித்திருந்தால் போதும்! கடத்தி வந்து கல்யாணம் செய்துக்குவேன் .."என்று சொல்லியபடி எழுந்து கை கழுவ சென்றவனை திகைப்புடன் பார்த்தார் மெய்யம்மை.


குறள்நெறியனோ, கைகளை கழுவி வந்தவன், தான் சொன்ன பதிலில் மெய்யம்மை உறைந்து போய் நின்றதைப் பார்த்து சிரித்தபடியே, "பாட்டி எதற்கு இப்படி உறைந்து போய் நிற்கிறீங்க..அப்படி எல்லாம் உங்க பேரனுக்கு எந்த பெண்ணையும் அவ்வளவு சீக்கிரம் பிடிக்காது .அதனால் நீங்க இந்தளவு பயப்பட வேண்டாம். அப்படியே பிடித்தாலும் உங்க பேரனுக்கு பிடித்தது உங்களுக்கும் பிடிக்கும்.."என்றான்.


ஆனால்,இன்று அவன் நாக்கில் என்ன இருந்ததோ!அவன் சொன்னது விரைவில் நடக்கப் போகிறது என்றும், அவன் இன்று சந்திக்கப் போகும் பெண்ணை மணப்பதற்காக பல தில்லுமுல்லு வேலை செய்யப் போகிறான் என்று அவனும் அறியவில்லை.


பாட்டியிடம் பேசிவிட்டு அலுவலகத்திற்கு
காரின் பின் சீட்டில் அமர்ந்து பயணித்தவன்,
மனதிற்குள்,'பாட்டியிடம் இன்று கொஞ்சம் அதிகமாகவே பேசி விட்டோம்' என்று நினைத்து சங்கடப்பட்டான்.


குறள்நெறியன், அன்று வழக்கத்திற்கு மாறாக தன் மடிகணினியைப் பார்க்காமல் வெளியில் வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தான்.


அப்போது சென்னை டிராஃபிக்கில் கார் சில நிமிடங்கள் நின்றது.குறள்நெறியனோ எதிர்திசையை வேடிகாகைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

அப்போது எதிர்திசையில் டிராஃபிக்கில் நின்றிருந்த ..பேருந்திலிருந்து இறங்கிய நடுத்தர வயது பெண்! கால் தவறி விழுப் போனவர்,தன்னை சமநிலைப்படுத்திக் கொள்ள, படியின் கம்பியை பிடித்துக் கொண்டு தடுமாறியபடியே பேருந்தின் வாசப் படியில் நின்றார் .ஆனால், அவரால் தன் தலையில் வைத்திருந்த உதிரிப்பூக்கள் நிரம்பிய கூடையை பிடிக்க முடியாமல், அந்த வழியாக நடந்து வந்து கொண்டிருந்த பெண் மீது தவற விட்டார்.


அந்த பெண்ணின் தலையில் அத்தனை பூக்களும் குவியலாக கொட்டியது.

அந்த பெண் பாவினியோ! ஒரு நிமிடம் தன் மீது விழுந்த பூக்குவியலில் திக்குமுக்காடிப் போனாள்.


அந்த அழகை குறள்நெறியன் தன்னை மறந்து ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.


பாவினி,தன்னை ஒருவன் ரசிப்பதை அறியாமல், தன் மீது விழுந்த பூக்குவியலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதில் மும்மரமாக இருந்தாள்.அங்கிருந்த அத்தனை பேரும் அதைத் தான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.



பூக்களுக்கே சவால்விடும் அழகில் ஜொலித்தவளை, வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் குறள்நெறியன்.அவன் வாழ்க்கையில் இந்த மாதிரி எந்த பெண்ணையும் அவன் ரசித்து மட்டுமில்லை நிமிர்ந்தே பார்த்ததில்லை.



ஏனோ! அவனுக்கு பெண்கள் என்றால் அத்தனை பிடித்தம் இல்லை.தன் பாட்டியைத் தவிர எந்த பெண்ணையும் மதித்ததும் இல்லை.. விரும்பி பார்த்ததும் இல்லை..கல்லூரியில் படிக்கும் காலத்தில் கூட மற்ற பசங்க பெண்கள் பின் சுற்றும் போது,இவன் மட்டும் தன் வேலையுண்டு ,படிப்புண்டுன்னு இருப்பான்.அப்படியும் இவன் அழகிலும்,வசதியிலும் மயங்கி இவனிடம் நெருங்கி பழக முயன்ற பெண்களை அவமானப்படுத்தி விரட்டி அடித்திருக்கான்.


இவன்இப்படி பெண்கள் மீது ஈடுபாடு இல்லாமல் இருப்பதற்கு காரணம் அவனை ஈன்றவள் மீது கொண்ட வெறுப்பாய் கூட இருக்கலாம்!அப்படிப் பட்டவன் இன்று அந்தப் பெண்ணை சுற்றம் மறந்து பார்த்தான்.



பாவினி,தன்மீது விழுந்திருந்த பூக்களை ஒருவாறு விலக்கிவிட்டு நிமிர்ந்து,அந்த பூவுக்கு சொந்தமான பெண்மணியைப் பார்த்தாள்.


அவரோ,பூக்கூடை தவறி விழுந்ததில் தன் இன்றைய பொழப்பே போய்விடாடதே! என்று நினைத்து கண்களில் கண்ணீருடன் நின்றிருந்தார்.


அந்த அம்மாவின் முகத்தை வைத்தே அவரின் எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்டவள்,அந்த அம்மாவிடம், தன் பரிசிலிருந்த பணத்தை எடுத்துக் கொடுத்து ," இதை வைச்சுக்கோங்கம்மா.." என்றாள்.


அந்த அம்மாவோ,"என் அஜாக்கிரதையால் தான் பூ உங்கள் மீது தவறி விழுந்தது..அதற்கு நான் தான் மன்னிப்பு கேட்கனும்மா.. பணமெல்லாம் வேண்டாம்மா.." என்றவரை வியப்பாக பார்த்தவள்.

ஏழ்மையில் கூட, தன்மானத்துடன் நடக்கும் அந்த பெண் மீது அவளுக்கு மிகுந்த மரியாதை வந்தது.அவரை வற்புறுத்தி அவர் கைகளில் பணத்தை திணித்தாள்.


அந்த அம்மாவோ,மிகுந்த தயக்கத்துடன் அதைப் பெற்றுக் கொண்டவர்,"ரொம்ப நன்றிம்மா !வேறு யாராவதாக இருந்தால், என் மீது கோபப் பட்டிருப்பார்கள்.ஆனால் நீங்களோ, கோபப்படாமல் பணம் வேறு கொடுக்குறீங்க.."என்றவரிடம்.


"நீங்க என்ன என்மீது சேரையா கொட்டுனீர்கள்!பூக்களைத் தானே கொட்டுனீர்கள்! அதற்கு நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.என்னை பூக்குவியலில் திக்குமுக்காட வைத்து வீட்டீர்களே.." என்று கள்ளம் கபடமற்று, சொல்லி கண்ணடித்துச் சிரித்தவளை அந்த அம்மாளுக்கு ரொம்ப பிடித்துவிட்டது." நீ நல்லா இருக்கனும் மா .." என்று மனதார வாழ்த்தி விட்டுச் சென்றார்.


"பாவினியும், தான் செல்ல வேண்டிய பேருந்து நிற்கும் இடத்தை நோக்கி வேகமாக நடந்து சென்றாள்.


குறள்நெறியனோ, டிராஃபிக் சரியாகி ,கார் நகரும் வரை அவளையே !தன்னை மறந்து பார்த்த படி அமர்ந்திருந்தான்.ஏனோ ?அவன் மனதில் அவள் முதல் முறையாக பெண்ணாக சிறு சலனத்தை ஏற்படுத்தி இருந்தாள்.


பாவினியோ,தன் வாழ்க்கையே இன்றிலிருந்து மாறப் போகிறது என்று அறியாமல், தன் அலுவலகத்திற்கு பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தாள்.


அவள் வாழ்க்கை குரங்கு கையில் சிக்கிய பூமாலையாகப் போகிறதோ?இல்லை இறைவனுக்கு சூட்டும் பாமாலையாகப் போகிறதோ ?அதற்கு காலம் தான் பதில் சொல்லனும்..


அன்பு கொல்லும்...

Hi friends,
சகாப்தம் வண்ணங்கள் 21 போட்டியில் நான் சாம்பல் நிறம்(குறிஞ்சி) ஆன்டி ஹீரோ கதை எழுதுகிறேன்.படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தவறாமல் கீழே உள்ள லிங்கில் சென்று பதியுங்கள்..சிறந்த கருத்துக்கு வார ..வாரம் தரும் பரிசை வெல்லுங்கள்.. நீங்களும் வெற்றி பெற்று பரிசை வெல்ல என் மனமார்ந்த வாழ்த்துகள்..
நன்றி
அன்புடன்
இனிதா மோகன்


உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்..பரிசை வெல்லுங்கள்..



[URL
unfurl="true"]https://www.sahaptham.com/community/threads/அன்பே-அன்பே-கொல்லாதே-comments.494/[/URL]
 
Last edited:

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
327
Reaction score
607
Points
93
அன்பே!அன்பே!கொல்லாதே!

அத்தியாயம் 2

குறள்நெறியன் சரியான நேரத்திற்கு ஆடிட்டர் ஆபிஸ்க்கு வந்தான்.அவனை அதிக நேரம் காக்க வைக்காமல் ஆடிட்டர் அவனைச் சந்தித்தார்..


"வாங்க சார்..நானே உங்களை மீட் பண்ணலாம்னு நினைத்தேன்.பட் எனக்கு டைம்மே கிடைக்கலை சாரி சார்.."என்று கூறியபடி கைகுலுக்க தன் கைகளையை அவன் புறம் நீட்டினார்.


அவனோ,"மிஸ்டர் அறிவழகன் !இன்னும் ஏன் வேலை பெண்டிங் இருக்கு?"என்றான் . அவர் சொன்னதை காதில் வாங்காமல்..அவருடன் கை குலுக்குவதையும் நாசூக்காக தவிர்த்தபடி..


ஆடிட்டருக்கு அவனின் செயல் காயப்படுத்தினாலும்,அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் , "நாளைக்கு முடிந்து விடும் சார்.இதற்காக நீங்க இவ்வளவு தூரம் வர வேண்டுமா?போனிலேயே பேசியிருக்கலாமே?"


"உங்க தாமதம் தான் என்னை இவ்வளவு தூரம் வரவைத்தது.உங்களுக்கு எங்களிடமிருந்து வரவேண்டிய பேமெண்ட்டில் ஏதாவது பிரச்சினை இருக்கா..?"


"சார் அப்படியெல்லாம் எதுவும் இல்லை..முன் கூட்டியே உங்க பி.ஏ, நிலன் செக் கொடுத்துட்டாரே.."


"அப்புறம் என்ன தான் உங்களுக்கு பிரச்சனை?வேலை முடிய ஏன் லேட்டாகுது?"


"சார் உங்க கம்பெனியைப் போல், நான் பல கம்பெனிகளுக்கு ஆடிட்டர்.அஃது உங்களுக்கே தெரியும்.வேலை ஜாஸ்தி.."என்று அவர் விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கும் போதே..


"மிஸ்டர் அறிவழகன் !நான் உங்க ஹிஸ்ட்ரிய கேட்க வரலை ..என் கம்பெனி வேலை ஏன் பெண்டிங்ல இருக்குன்னு கேட்டேன்.எனக்கு இன்று இரவுக்குள் வேலை முடியனும்.இல்லைன்னா நான் ஆடிட்டரை மாத்த வேண்டியிருக்கும்.." என்று உரைத்தவன் ,கோபத்துடன்அறையின் கதவை வேகமாகத் திறந்து கொண்டு வெளியேச் சென்றான்.



ஆடிட்டரோ, அவனை எப்படி சமாதானப்படுத்துவது என்று நினைத்தார் .அவன் மட்டும் சொன்ன மாதிரி செய்தால், இவருக்குத் தான் பெரிய நஷ்டம்..என்ன செய்வதென்று தெரியாமல் கையை பிசைந்தார்.


அவன் கதவை திறந்து கொண்டு வெளியில் வந்த வேகத்தில் ,தன் எதிரே வந்த பாவினி மீது மோதினான்.அவளும் இவனை எதிர்பார்க்கததால் தடுமாறியவள் , கஷ்டப்பட்டு தன்னை பேலன்ஸ் செய்து கொண்டாள்.ஆனால்.அவள் கையில் வைத்திருந்த ஃபைல்கள் எல்லாம் கீழே விழுந்தது.


அவனோ,தன் மீது தவறை வைத்துக் கொண்டு அவளிடம்," ஏய் உனக்கு கண்ணு தெரியாதா ? மேலே வந்து மோதுறே.. இடியட்!" என்றவனுக்கு, அப்போது தான், அவளை காலையில் டிராஃபிக்கில் நின்ற போது, பூக்குவியலுக்கு நடுவில் பார்த்தது ஞாபகம் வந்தது.


"ஹாலோ சார்! பார்த்து பேசுங்க!நான் கேட்க வேண்டிய கேள்விய, நீங்க கேக்கறீங்க ..போய் நல்ல டாக்டர் கிட்ட கண்ணைச் செக்பண்ணுங்க.."என்றவளிடம் அடங்கா கோபத்துடன்...


"ஏய் !யாரை டீ டாக்டர் கிட்ட போகச் சொல்றே!திமிரா! நான் யாருன்னு தெரியுமா?"என்று அவனுக்கு இருந்த டென்ஷனில் கத்தினான்.


பாவினிக்கு அவன் தன்னை டீ என்று சொன்னதில் வந்த ஆத்திரத்தில், "உனக்கு என்ன தைரியமிருந்தா ,என்னை டீ போடுவே !"என்றவள்,எல்லை இல்லா கோபத்தில் அவனை அடிக்க கை ஓங்கிவிட்டாள்.



அவனோ, அவள் கைகளை பிடித்து தடுத்தவன்,"என்னை யார் என்று நினைத்தாய்?அடிப்பதற்கு கன்னத்தைக் காட்ட, நான் ஒன்னும் ஞானி இல்லை.."என்றவன்,பிடித்திருந்த அவளின் கையை முறுக்கிய படியே, "எவ்வளவு கொழுப்பிருந்தால் என்னிடமே கை ஓங்கவாய் .."என்று பற்களை கடித்தவனிடம்..



"மரியாதையாக என் கையை விடு.பெண்களிடம் எப்படி நடந்துக்கனும்னு கூட தெரியாத ராட்சசன்.." என்று அவளும் உச்சகட்ட கோபத்தில் கத்தினாள்.


அவனோ ,அவள் தன்னை ராட்சசன் என்று சொன்னதில் வந்த அடங்கா கோபத்தில் ,"என்னைய ராட்சசன் என்றாய், ராட்சசன் என்ன செய்வான்னு தெரியுமா?" என்றபடி அவளின் கழுத்தில் கைவத்து அவளின் குரல்வளையை நெறித்தான்.


அவளோ ,மூச்சுக்காற்றுக்கு தவிக்க ஆரம்பித்தாள்.அந்த நேரத்தில் சரியாக சத்தம் கேட்டு வெளியில் வந்த ஆடிட்டர் !இருவரையும் பார்த்து திகைத்துப் போய்,"பாவினி என்னாச்சும்மா.." என்றபடி அவனிடமிருந்து அவளை காக்க போராடினார்.


" சார்..சார்.. பிளீஸ் விடுங்க..எதுவாக இருந்தாலும், பேசித் தீர்த்துக்கலாம் .."என்றவர் ,வலுக்கட்டாயமாக அவள் கழுத்திலிருந்து அவன் கைகளை விடுவித்தார்.


குறள்நெறியனோ, "கொஞ்சம் கூட மரியாதை தெரியாத, திமிர் பிடித்த.. இந்த மாதிரி ஆட்களையெல்லாம்,எதற்கு வேலைக்கு வச்சுருக்கீங்க.."என்று அவரிடம் காய்ந்தவன்,அவள் புறம் திரும்பி," இவரால் இன்று நீ தப்பித்தாய் .."என்றவன், அடுத்த நொடி அங்கிருந்து புயலாக வெளியேறினான்.அவன் மனமோ உலைகளமாக கொதித்துக் கொண்டிருந்தது..



பாவினியோ, நடந்ததை நம்ப முடியாமல், சில நொடிகள் சீரான மூச்சுக் காற்றுக்குத் தவித்தாள்.பின் இயல்பாக மூச்சுவிட்டவள்,மனதிற்குள் 'இவர் மட்டும் சரியான நேரத்திற்கு வரலைன்னா அந்த அரக்கன் என்னைக் கொன்றே இருப்பான்!' என்று நினைத்தாள்.


ஆடிட்டரோ,அவள் ஆசுவாசப்படுத்திக் கொள்ள நேரம் கொடுத்தவர், அதன் பின் நடந்ததை விசாரித்தார்..


பாவினியோ, கண்கள் கலங்க நடந்ததை அவரிடம் சொன்னாள்..அவள் சொன்னதை கேட்ட ஆடிட்டர் !' பாவினி எம்.காம் படித்து முடித்ததிலிருந்து , இந்த இரண்டு வருடங்களாக அவரிடம் தான் வேலை பார்க்கிறாள்.தேவையில்லாமல் யாரிடமும் பேச மாட்டாள்.தான் உண்டு !தன் வேலை உண்டு! என்று இருக்கும் நல்ல பெண்!பாவம் இன்று இந்த பெண்ணுக்கு நேரம் சரியில்லை போல..அவனிடம் போய் மாட்டிக்கிட்டாளே! .அவன் என்ன செய்யப் போறானோ! தெரியலையே?' என்று நினைத்தவர்.


"பாவினி, நீ அவரிடம் இனிமேல் கொஞ்சம் ஜாக்கிரதையாக இரும்மா.. மனுஷன் தன்னை எதிர்ப்பவர்களை அட்ரஸ் இல்லாமல் செய்து விடக்கூடியவர்.."என்று அவர் வேறு அவள் வயிற்றில் புளியைக் கரைத்தார்.

அவளோ பயத்துடன்,"சார் யாரிவர்?" என்ற பாவினியிடம்.


"கே.என் குரூப் ஆஃப் கம்பெனியின் எம்.டி .."என்றார்.


அவளோ, அவரை அச்சத்துடன் பார்த்தாள்!மனதிற்குள் 'அவனா?இவன் !'என்று எண்ணியவளின் மனமோ, சொல்லமுடியாத உணர்வில் துடித்தது.தன் தந்தை இவனிடம் தான் வேலை செய்கிறாரா?அவர் இவனைப் பற்றி நல்லவிதமாக சொல்லியது இல்லையே.. இவனும் அதே போல் தான் இருக்கிறான் ! என்று நினைத்தாள்.


நல்ல வேளை நடந்தது இவர்கள் மூவரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது.. ஆடிட்டர் ஆபிஸ் இரண்டு மாடி கட்டிடம்! கீழ் தளத்தில் பணியாளர்கள் வேலை செய்கிறார்கள்.மேல் தளத்தில் ஒரு பெரிய வரவேற்பறை.. அதில் ஓர் ஓரமாகத் தான் ஆடிட்டரின் அறை இருந்தது.


குறள்நெறியன் ஆடிட்டர் அறையிலிருந்து வெளியே வேகமாக வந்தவன் தான், பாவினியைக் கவனிக்காமல், வரவேற்பறையிலிருந்து ஆடிட்டர் அறைக்கு வந்து கொண்டிருந்தவள் மீது தான் மோதி விட்டான். அப்போது யாரும் வரவேற்பறையில் இல்லாததால் இவர்களுக்குள் நடந்தது இவர்கள் மூன்று பேரைத் தவிர யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை.. ஆனால், சிசிடி கேமராவில் மட்டும் பதிவாகி இருக்கும் .அதை ஆடிட்டர் தவிர வேறு யாரும் பார்க்கவும் வாய்ப்பில்லை..



குறள்நெறியனோ, மனதிற்குள் தன் சீற்றத்தை அடக்க பெரும் பாடுபட்டுக் கொண்டிருந்தான்..'அவளுக்கு எவ்வளவு தைரியமிருந்தால் என்னிடம் கை ஓங்கியிருப்பாள்..அவளை சும்மா விட்டுட்டு வந்தோமே!' என்று தன் மீதே கோபம் கொண்டவன்.'அந்த ஆடிட்டர் மட்டும் வரவில்லையென்றால்.. இன்னேரம் அவளை கொன்று புதைத்திருப்பேன்..' என்று மனதிற்குள் கருவினான்.


கோபத்துடன் தன் பி.ஏ நிலனை அலைபேசியில் அழைத்து, பாவினியைப் பற்றிய தகவலை விசாரித்து தனக்கு சொல்லும் படி பணித்தான்.


'காலையில் இவளையா ரசித்தோம்?என்று மனதிற்குள் குன்றியவன்.தன் பாட்டியைத் தவிர உலகத்தில் இருக்கும் அத்தனை பெண்களுமே திமிர் பிடித்தவர்கள் தான் என்று நினைத்தான்.


பாவினிக்கோ ,அன்று முழுவதும் அவன் தன்னை அசிங்கப்படுத்தியதே ஞாபகம் வந்தது.அவன் உண்மையாளுமே ராட்சசன் தான்! மனுசனே இல்லை..மிருகம்..' என்று அவனை தன் மனதிற்குள் திட்டிதீர்த்தாள்.


பாவினி எப்போதும் வீட்டுக்கு போகும் போது புன்னகை முகமாகத் தான் செல்வாள்.. அஃது அவளுடைய அன்பு அப்பாவின் உத்தரவு! ஆஃபிஸ்சில் என்ன பிரச்சினையாக இருந்தாலும் அதை வீட்டுக்கு கொண்டு வரக்கூடாது என்பது அவரின் கட்டளை! அவளுக்கு வீடு என்பது மகிழ்ச்சி மட்டுமே பொங்கும் சொர்க்கம்!


அன்பான அன்னை வளர்பிறை! தோழனைப் போல் தந்தை தூயவன்! தன் மேல் உயிரையே வைத்திருக்கும் அன்பான செல்லத் தம்பி நவில்! அவளுக்கு உலகமே அவளின் குடும்பம் தான்!


ஆனால், அன்று அவனைச் சந்தித்த பிறகு அவள் முகமே சரியில்லை. தலை வேறு வின்னு வின்னென்று வலித்தது..மனம் முழுவதும் அவனின் உதாசீனமே நிரம்பி வழிந்தது..அதே டென்ஷனுடன் வீட்டிற்குள் வந்தவளை தாய் வளர்பிறை சிரித்த முகமாக வரேவேற்றார்.


பாவினியோ,தன் கைப்பையை ஷோஃபாவில் வீசிவிட்டு, தானும் தொப்பென்று அமர்ந்தாள்.


வளர்பிறையோ, என்றுமில்லாமல் இன்று மகளின் முகமமே சரியில்லையே !என்று நினைத்தவர், மகளுக்கு ஜில்லுன்னு குடிக்க பழரசம் எடுத்து வந்து கொடுத்தார்.


பாவினியோ, அதை மறுக்காமல் வாங்கி குடித்தாள்.அவளிருந்த மனநிலைக்கு அது மிகவும் தேவையாகவே இருந்தது..


மகளின் அருகில் அமரந்த வளர்பிறை, "பவி என்னாச்சு முகம் வாடியிருக்கு! வேலை ஜாஸ்தியா? டெய்லியும் வரும் டைம்ம விட இன்னைக்கு லேட் .." என்றார்.


பாவினியோ, தாயிடம் சொல்லிவிடலாமா? என்று ஒரு நொடி யோசித்தாள்.அடுத்த நொடி, வேண்டாம் !தேவையில்லாமல் அம்மா பயப்படுவாங்க..என்று தன் முடிவை மாற்றிக் கொண்டவள், "அப்படியெல்லாம் இல்லை மா..லேசா தலைவலி.. அது தான் கொஞ்சம் டல்லா இருக்கேன்.."


"பவி தலைவலின்னு சொல்லி இருந்தா, காஃபி கலந்து கொடுத்திருப்பேனே !நான் வேறு ஜூஸ்ஸை கொடுத்துட்டேனே.." என்று வருந்தியவரிடம்..


"ம்மா பரவால.. நான் அப்புறமா குடிச்சுக்கிறேன்..நவில் வந்துட்டானா?"என்று தன் தம்பியை கேட்டாள்.


நவில் நான்காம் ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்கிறான்.கேமபஸ்ல செலக்ட் ஆகிட்டான்..இப்போது ப்ரோஜட் ஒர்க் போய்ட்டு இருக்கு.


"இல்லை பவி ..அவன் வர கொஞ்சம் லேட் ஆகுமுன்னு சொன்னான்.."


"ஓ! அப்பா ?"என்றவளிடம்.

"அப்பாவும் ,வேலையிருக்கு வர லேட் ஆகும்ன்னு போன் செய்தார்.நீ போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு..நான் தலைவலிக்கு காஃபி கலந்து தரேன்.." என்றார்.



"ம்! "என்றவள் தன் அறைக்குச் சென்று,இரவு உடைக்கு மாறினாள்.. சிறிது நேரத்தில் வளர்பிறை மணக்க மணக்க சூடாக காஃபி கலந்து கொண்டு வந்து கொடுத்தார்.அதை குடித்தவளுக்கு தலைவலி கொஞ்சம் சரியானது போல் இருந்தது.


தாய் சொன்னதைப் போல் சிறிது நேரம் படுக்கையில் கண்களை மூடி படுத்தவளுக்கு, அவனின் கோபம் முகமே மனதிற்குள் வந்து டென்ஷனை அதிகரித்தது.


சற்று நேரத்தில் ,தந்தை தூயவனின் பேச்சுக் குரல் கேட்டதும், மகிழ்ச்சியுடன் தந்தையை காண வரவேற்பறைக்குச் சென்றாள்.


தூயவனோ, அன்று மிக கோவமாக மனைவியிடம் பேசிக் கொண்டிருந்தார்."வளர் பேசாமல் வேலையை விட்டு விடலாமான்னு இருக்கு..வர..வர என்னால் அங்க பொறுமையா வேலை செய்ய முடியவில்லை.."என்றவரிடம்..


"ஏன்?என்னாச்சுங்க .."


"ம்! எல்லாம் என் நண்பனின் தவப்புதல்வனால் தான்!இறக்கம் என்பதே இல்லாதவன்.."என்று திட்டி தீர்த்தார்.
வளர்பிறையோ, கணவனே சொல்லட்டும் என்று அமைதியாக அவரின் முகத்தைப் பார்த்தார்.


தூயவனோ",வளர் இன்று என்ன நடந்துச்சுன்னு தெரியுமா? வாட்ச்மேன், எம்.டி வரும் நேரம் சரியாக கேட் பக்கமில்லாமல் ரெஸ்ட் ரூம் போய்ருக்கார்.அந்த டைம் எம். டி கார் ஆபிஸ் வந்திருக்கு.. வாட்ச்மேன் கேட்டில் இல்லாத கோபத்தில் ,அவர் வந்ததும் கேட் அருகில் ஏன் இல்லை?" என்று கேட்டு..இனி நீங்க வேலைக்கு வேண்டாம்..என்று அவரை வேலையை விட்டு அனுப்பிட்டார்.பாவம் அவர் எத்தனை வருடமாக வேலை செய்யபவர் தெரியுமா? அவருக்கு நான்கு குழந்தைகள்! இரண்டு பெண்!இரண்டு ஆண்!.ஒரு பெண்ணுக்குத் தான் திருமணம் ஆகியிருக்கு.. பாவப்பட்ட ஜீவனம் நடத்துபவர்..எனக்கு மனசே கேட்கலை.." என்று புலம்பினார்.


வளர்பிறையோ,"ஏங்க நீங்க தைரியமா அவரிடம் பேசுவீங்களே!நீங்களாவது ,வேலையை விட்டு எடுக்க வேண்டாம்ன்னு சொல்லியிருக்கலாமே?" என்ற மனைவியிடம்.


"நான் சொல்லாமல் இருப்பேனா? நான் சொன்னதற்கு.. இங்க நான் எம்.டியா? நீங்க எம்.டியா .?உங்ககிட்ட யாரும் ஆலோசனை கேட்கலை ..உங்க வேலையை மட்டும் பாருங்கன்னு மூஞ்சியில் அடித்த மாதிரி சொல்லிட்டார்.."


"நீங்க மேடமிடம் சொல்லியிருக்கலாமே?"


"சும்மாவே மேடத்தைக் கண்டால் அவருக்கு ஆகாது. இதை நான் மேடம் வரை கொண்டு போனால், வேறு வினையே வேண்டாம்..அவுங்க இப்பதான் ஏதோ கொஞ்சம் நிம்மதியாக இருக்காங்க.அதுவும் கெட்டுவிடும்.அதனால் தான் ,நான் இன்னைக்கு அமைதியாக வந்துட்டுடேன் . நாளைக்கு அந்த வாட்ச்மேனைப் பற்றி மேடத்திடம் சொல்லி வேறு ஏதாவது வேலைக்கு ஏற்பாடு செய்யனும்.." என்று பெருமூச்சு விட்டார்.


",சரி நீங்க அதை நினைத்து டென்ஷன் ஆகாதீங்க.. ஒரு நாள் அவர் கண்டிப்பாக மாறுவார்.." என்ற மனைவியிடம்..


"வயசு முப்பதாகுது இன்னும் மாறாமல் எப்போ மாறுவது!எல்லாம் பெரியவரைச் சொல்லனும்.பேரன்..பேரன்னு ,செல்லம் கொடுத்து கெடுத்து வச்சுருக்காரு.."


"எல்லாம் கல்யாணமானால் சரியாகிடும்.." என்ற மனைவியிடம்..


"ஆமாம், ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையப் போகுதா? எந்த பெண் வந்து சிக்கி சீப்பாருக்க போகுதோ..நல்லவன் யாரும் அவனுக்கு பெண் கொடுக்க மாட்டான் .."என்றார் கோபத்துடன்..


ஓர் இக்கட்டான சூழ்நிலையில் , தானே அவனுக்கு பெண் கொடுக்க போறோம் என்று அறியாமல்! இன்று அவனை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தார்.


பாவினியோ,தந்தை சொன்னதைக் கேட்டு, மனதிற்குள் 'கண்டிப்பாக இஃது அந்த அரக்கனாகத் தான் இருக்கும். அவனெல்லாம் மனிதனே இல்லை..' என்று நினைத்தாள்.. அன்று காலையில் நடந்ததை தந்தையிடம் சொல்ல நினைத்திருந்தவள், தந்தையின் கோபத்தைக் கண்டு,இதைச் சொல்லி இன்னும் அவரை டென்ஷன் பண்ண வேண்டாமென்று எண்ணியவள்,தந்தையின் அருகில் சென்று அமைதியாக அமர்ந்தாள்.


தூயவனோ ,மகளைப் பார்த்ததும் தன் டென்ஷனை யெல்லாம் மறந்து," என்னடா பவிம்மா ! அம்மா தலைவலின்னு சொன்னா .. இப்போ தலைவலி எப்படி இருக்கு..இயர் என்டூன்னு வேலை அதிகமா டா.." என்று மகளின் தலையை வருடியபடி அக்கறையாக கேட்டார்.


மகளோ,உரிமையாக தந்தையின் தோள்களில் சாய்ந்தபடி," அப்படியெல்லாம் இல்லைப்பா.. கொஞ்சம் டென்ஷன் அவ்வளவு தான் !"என்றாள்.


சரியாக அந்த நேரம் நவில் வீட்டிற்குள் வந்தான்.தந்தையும்,மகளும் பாசமலர்களாக இருப்பதைக் கண்டு, "நான் வர லேட்டானதும் ஒரே கொஞ்சல் மழையாக இருக்கே.."என்று கேட்டபடியே அவர்களிடம் சென்று அமர்ந்தான்.


வளர்பிறையோ,"டேய் கண்ணு வைக்காதே! பொம்பளைப் பிள்ளை, வேறு வீட்டுக்கு போகும் வரை தான் இந்த சந்தோஷம்!அப்புறம் அவள் குடும்பத்தைப் பார்க்கவே அவளுக்கு நேரம் சரியாயிருக்கும்.." என்ற அன்னையிடம்..


"ஏம்மா, அக்கா எங்க கல்யாணமாகி போனாலும் இந்த வீட்டுக்கு இளவரிசி தான்!எப்ப வேனாலும் இதேப் போல் பாசமலர்கள்லகலாம்.." என்ற மகனிடம்..


"திருமணத்திற்கு பிறகு எந்தப் பெண்ணுக்கும் அந்த கொடுப்பினை மட்டும் இல்லையே..உன் மாமா சம்மதித்தால் தானே, அவளே இங்கே வந்து இருக்க முடியும் .."என்றவுடன்.


"என் பெண்ணை அவள் முகம் வாடாமல் ,அவளின் விருப்பத்திற்கு மதிப்பு கொடுக்கிற மாப்பிளைக்குத் தான் நான் கொடுப்பேன். என்றார் தூயவன்.


"ஆமாம் !அப்பா சொல்றபடி ..என் செல்ல அக்காவை மகாராணி மாதிரி பார்த்துக்கிற ஆளுக்குத் தான் நாங்க கொடுப்போம்.."என்று தந்தைக்கு சாதகமாக சொன்னான் நவில்.


பாவினியோ,தந்தையின் தோளில் சாய்ந்தபடியே, அவர்களின் பேச்சை முகத்தில் புன்னகைத் தவிழ பார்த்துக் கொண்டிருந்தாள்.



வளர்பிறையோ,இது தான் சாக்கென்று, "உங்க மகள்ன்னா அப்படி இருக்கு ..ஆனால் ,யாரோ குணாளன் பெற்ற மகளென்றால் மட்டும் !உங்களுக்கு கிள்ளுக்கீரை .."என்றவுடன்..



"அப்பா !அம்மா சந்தடி சாக்கில் உங்களை சொல்றாங்க..அம்மா சொல்றது கரெக்ட் தானே..?"


"டேய் நீ கொஞ்சம் சும்மா இரு..நல்லா இருக்கிற புருஷன் பொண்டாட்டிக்குள்ள சண்டையை மூட்டி கும்மியடிச்சுட்டு போயிடாதே.."என்றார்..


அவர் சொன்னதைக் கேட்டு,அவர் பெற்ற மக்களும்,அவரின் சரிபாதியும் மனம் விட்டு சிரித்தார்கள்.. இப்படித்தான் என்றுமே அவர்கள் வீட்டில் இந்த கலகலப்புக்கு பஞ்சமே இருக்காது.


அதே கலகலப்புடன் ,ஒருவரை ஒருவர் வாரியபடியே இரவு உணவை முடித்துக் கொண்டு, அவர்வர் அறையில் சென்று தஞ்சம் புகுந்தனர்.


பாவினியோ ,உறங்கமால் தன் அலைபேசியை நோண்டிக் கொண்டிருந்தாள்.அப்போது அவளின் அறைக் கதவை லேசாக தட்டிவிட்டு உள்ளே வந்தான் நவில்.

"ஹேய் நீ இன்னும் தூஙகலையா?" என்ற பாவினியிடம் தலையை ஆட்டியபடியே அவள் அருகில் வந்து அமர்ந்தான் நவில்.


"ஏண்டா முகம் ஒரு மாதிரி இருக்கு..,உன் ஃப்ரோஜெக்ட் வொர்க்ல ஏதாவது பிரச்சனையா?" என்ற தமக்கையிடம்..



"அதெல்லாம் ஒன்னும் இல்லை..நீ இன்னைக்கு வீட்டிற்கு வரும் போது உன்
முகமே சரியில்லைன்னு அம்மா சொன்னாங்க.. ஆஃபிஸ்சில் ஏதாவது பிரச்சனையா?"என்ற கவலையாக கேட்ட தம்பியிடம்..


"அட வாலுப் பையா அப்படியெல்லாம் எதுவும் இல்லை..இயர்என்டீங் வேலை டென்ஷன்! அது தான் தலைவலி !மற்றபடி எதுவுமில்லை.."என்ற தமக்கையை நம்பாமல் "நிஜமா அது தானா? "என்ற தம்பியிடம்..


" என் தங்க கம்பியே நிஜமாத்தான்.. வேறு ஏதாவது இருந்தால் உங்கிட்ட சொல்லாமல் நான் யாருகிட்ட சொல்வேன் .."

"ம்!எனக்கு இப்பத் தான் நிம்மதியாக இருக்கு..அம்மா சொன்னவுடன் நான் பயந்தே போய்ட்டேன்.."என்ற தம்பியை அன்பாக பார்த்தாள்.


மனதிற்குள் 'இன்று நடந்ததை மட்டும் இவனிடம் சொன்னால்..அவ்வளவு தான் தேவையில்லாமல் அந்த அரக்கனிடம் சண்டைக்கு போவான் ..'என்று எண்ணியவள் தன் தம்பியிடம் மறைத்தாள்.


நவிலோ,"அக்கா எதுவுமில்லை தானே! மனசு ஏனோ அடிச்சுக்குது!உனக்கு ஏதாவதுன்னா என்னால் தாங்க முடியாது.." என்று கலங்கியவனிடம்..


"டேய் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.. நீ என் கூட இருக்கும் வரை என்னை எதுவும் நெருங்காது..கவலைப்படாமல் போய் தூங்கு.." என்றாள்.


அவனோ, தன் அறைக்கு போக திரும்பியவுடன்," நவில்.." என்று அழைத்தவள்,அவனின் அருகில் சென்று அவனை தன் தோள்ளோடு அணைத்துக் கொண்டு "தேங்க்ஸ் டா.." என்றாள்.


அவனோ,தன் தமக்கை நன்றி சொல்லியதை கேட்டு முறைத்தவன்," உன் தம்பிக்கு நீ தேங்க்ஸ் சொல்வீயா..?"என்று செல்லமாக அவள் மண்டையில் கொட்டினான்.


"ஓகே..ஓகே.. தேங்க்ஸ் வாப்பஸ் .."என்று கள்ளம் கபடமில்லாமல் சிறித்தவளின் கன்னங்களை பிடித்து.." என் செல்லக்கா எப்போதும் இப்படியே சிரித்துட்டே இருக்கனும்.."என்றவன், "குட் நைட் மை டியர் ஸ்வீட் டால் .."என்று கொஞ்சி விட்டு சென்றான்.


தம்பி போவதையே பார்த்துக் கொண்டு நின்றவள்,அவன் சென்றதும், கதவை தாளிடாமல் சாத்திவிட்டு வந்து படுத்தாள்.மனதிற்குள் ,'இந்த மாதிரி ஒரு தம்பி கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்கனும்' என்று எண்ணியபடியே படுத்திருந்தாள்.


சற்றுநேரத்தில் மறுபடியும் கதவு தட்டும் சத்தம் கேட்டு படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தாள்.அங்கே, தூயவன் இவளின் அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தார்..

மகள் தூங்காமல் இருப்பதைக் கண்டவர்,"பவி நீ இன்னும் தூங்கலையாடா ?"என்றவர் ,அவளின் அருகில் வந்து அமர்ந்து.." பவிம்மா இன்னும் தலைவலிக்குதா? அம்மா சொன்னா நீ ஆஃபிஸ்சிலிருந்து வரும் போதே டல்லா வந்தேன்னு .. ஏதாவது பிரச்சினையாடா .."என்றவரிடம்..


"அச்சோ !அப்பா அப்படியெல்லாம் இல்லைப்பா .லேசா .தலைவலி! அதனால் ,தான் டல்லா இருந்தேன்..இப்போ ஓகே .."என்ற மகளிடம்.."வேறு ஒன்னுமில்லையாடா..நான் கொஞ்சம் பயந்துட்டேன் பவிம்மா .. நான் உனக்கு எப்போதும் சொல்வதைத் தான் இப்பவும் சொல்றேன்.எந்த பிரச்சனையாக இருந்தாலும் தைரியமா ஃபேஸ் பண்ணனும்..சோர்ந்துவிடக் கூடாது..நான் உன்னை தைரியமா வளர்த்துருக்கேன்னு இப்பவும் நம்பறேன் .."என்றவரிடம்..


"அப்பா நான் உங்க பொண்ணுப்பா ..எதற்கும் கலங்கமாட்டேன்! நீங்க போய் நிம்மதியா தூங்குங்கோ.." என்ற மகளின் கைகளை பிடித்து மென்மையாக அழுத்தியவர் ,"நீ என் உயிர்டா .. உன் மனசு சரியில்லைன்னா என்னால் நிம்மதியாக இருக்க முடியாது. எதுவாக இருந்தாலும் அப்பாகிட்ட சொல்லிடனும் ..அப்பா பார்த்துப்பேன்.நீ மண்டைக்குள் போட்டு குழப்பிக்க கூடாது..நான் அம்மா முன்னாடி அவ பயந்துருவான்னு எதையும் காட்டிக்கல..அவ தூங்கின பின் உன்னிடம் விசாரிகலாம்ன்னு வந்தேன்..நீயும் நிம்மதியா தூங்குடா.." என்றவர்,அவர்கள் அறைக்குச் சென்றார்.

பாவினியோ,தன் முகம் லேசாக வாடுவதைக் கூட பொறுக்க முடியாத தன் குடும்பத்தை நினைத்து கர்வப்பட்டாள்..இந்த வீட்டில் பெண்ணாக பிறந்ததற்கு தான் என்ன தவம் செய்தோமோ! என்று எண்ணி..எண்ணி நெகிழ்ந்தாள்.


இவளோ,இங்கு மகிழ்ச்சியில் திளைக்க!அங்கே, ஒருவன் இவள் மேல்பழி வெறியில் துடித்துக் கொண்டிருந்தான்!காலம் அவளுக்கு என்ன வைத்து காத்திருக்கோ?



அன்பு கொல்லும்..




உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் பகிர்ந்து பரிசுகளை வெல்லுங்கள்..


 
Last edited:

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
327
Reaction score
607
Points
93
அன்பே!அன்பே!கொல்லாதே!

அத்தியாயம் 3

குறள்நெறியன், தன் அறையில் தூங்காமல், கூண்டுப் புலி போல் நடைப் பயின்று கொண்டிருந்தான். அவன் மனதிற்குள், தன் உதவியாளன் 'நிலன்' சொன்னச் செய்தியே,வலம் வந்தது.


நிலன் பாவினியைப் பற்றித் தான் விசாரித்துச் சொல்லியிருந்தான். பாவினி தன் மேனஜர்த் தூயவனின் மகள்! என்பது அவனுக்கு மிகுந்த வியப்பைத் தந்தது. தூயவனுக்கு இரண்டு குழந்தைகள் என்று தெரியும் .ஆனால், அவர்களைப் பற்றி அறிந்து கொள்வதில் , அவன் இதுவரை பெரிதாக ஆர்வம் காட்டியதில்லை..


பாவினி ,தூயவனின் மகள் என்று தெரிந்ததுமே , அவள் அப்பாவைப் போலவே இவளுக்கும் உடம்பு முழுதும் திமிர்! என்று குறள்நெறியன் நினைத்தான். அவன் அலுவலகத்தில், அவனுக்கு சற்றும் மரியாதை கொடுக்காத ஒரே ஆள் அவர்தான்! அது மட்டுமின்றி அவனை டென்ஷன் செய்யும் இருவரில் அவரும் ஒருவர்.


தூயவனிடம், குறள்நெறியன் , அமைதியாக போவதற்கு தன் தாத்தா செங்கோடன் தான், முதல் காரணம்! முப்பது வருடமாக வேலை செய்பவர், என்ற மரியாதை அவர் மேல் செங்கோடனுக்கு இருந்தது. அதைவிட தன் மகனின் உயிர் நண்பன் என்ற ஒரு காரணமும் தூயவனிடம் அன்பு கொள்ள செய்தது.


மகன் இறந்த பின், கம்பெனியை தூயவன் ஒருவர் தான் ஒத்தையாளாக பல நாட்கள் நிர்வாகம் செய்தார். அவரின் கடுமையான உழைப்பு தான்!செங்கோடன் சோர்ந்திருந்த போது கூட, கம்பெனியின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியது.


அதனாலேயே, செங்கோடனுக்கு தூயவன் மீது மாரியாதை இருந்தது. தன் மகன் 'கானகன்' உயிருடன் இருக்கும் வரை தூயவனிடம் விலகியே இருந்தவர், அதன் பிறகு தான் அவரிடம் கொஞ்சம் நெருங்கி பழகினார்..


செங்கோடனின் காரணமாகவே, குறள்நெறியன் தூயவனிடம் கொஞ்சம் அமைதியாக போனான்..ஆனாலும் ,சில நேரங்களில் அவரை அவமானப்படுத்த தவற மாட்டான். இன்று அவரின் மகளைப் பற்றி தெரிந்ததும், அப்பாவிற்கு தப்பாமல் மகள் பிறந்திருக்கிறாள் என்று நினைத்தான்.


தன்னை அவமானப் படுத்தியவளுக்கு , தான் யாரென்று காட்ட வேண்டும் . அதுவும், தந்தை, மகள் இருவருமே தன்னிடம் மரியாதையில்லாமல் நடந்து கொள்வது அவனுக்கு மிகுந்த எரிச்சலை தந்தது. அதற்காகவே இருவருக்கும் ஒரு சேரப் பாடம் கற்பிக்க வேண்டுமென்று எண்ணினான்.


அடுத்து வந்த நாட்களில், குறள்நெறியனிடம் மிகுந்த அமைதியே தென்பட்டது. கம்பெனியில் புது கணக்கை ஆரம்பித்து அந்த வருடத்தை இனிதே தொடங்கிய பின்,கம்பெனியின் டைரக்டர் மீட்டிங்க்கு ஏற்பாடு செய்திருந்தான்.


கே.என். குரூப்பின் டைரக்டர், என்ற முறையில் நாவேந்தியும் மீட்டிங்கிற்கு வந்திருந்தார். தூயவனும் அன்று முழுவதும் அவருடனேயே இருந்தார். நாவேந்தி அதிகமாக கம்பெனிக்கு வரமாட்டார். ஏதாவது, முக்கியமான வேலையாக இருந்தால் மட்டுமே வருவார்.
அதற்கு காரணம் ,தன் மகன் குறள்நெறியன் தான்!தாய்யைக் கண்டாலே, அவன் அனலாய் சுடுவான்.


ஆனாலும் ,அன்றாவது மகனை அருகிலிருந்து கண்குளிரப் பார்க்கலாம், என்று நினைத்து வருவார்.


தூயவனுக்கோ ,குறள்நெறியன் தன் தாய்யென்றும் பார்க்காமல், அவரை அவமானப்படுத்துவது மிகுந்த மன வேதனையை கொடுக்கும். அவனை ஓங்கி அறைய வேண்டுமென்ற ஆத்திரமும் வரும். ஆனால்,நாவேந்திக்காகத் தான் பொறுத்துப் போவார்..


தூயவனும்,கானகனும் பள்ளியிலிருந்தே ஒன்றாக படித்தவர்கள். நாவேந்தி இவர்களுடன் கல்லூரியில் படித்தவர். கல்லூரியில் தான் இவர்கள் மூன்று பேருக்கும் நெருக்கமான நட்பு உருவானது.


காலப்போக்கில் அந்த நட்பு, கானகனுக்கும்,நாவேந்திக்கும் காதலாக மலர்ந்தது. நாவேந்தி சின்ன வயதிலேயே தாய்,தந்தையை இழந்தவள். தன் தாய்மாமன் வீட்டில் தான் வளர்ந்தாள்.


தூயவனுக்கும்,நாவேந்திக்கும், கல்லூரி நட்பு! இன்று வரையும் களங்கமில்லாமல் தொடர்கிறது. தன் நண்பனின் மனைவியை தன் மனதில் எப்போதும் தங்கையாகவே நினைத்து அன்புகாட்டுவார்.


கானகன்,நாவேந்தியின் அழகான வாழ்க்கையை தூயவன் அருகிலிருந்து பார்த்தவர். நண்பனின் இறப்புக்கு பின் நாவேந்தி பட்ட துயரத்தையும்,அவருக்கு நடந்த கொடுமைகளையும் , கையாளாகத தனத்துடன் கண்டு மனம் துடித்தவர். அதனால், நாவேந்தியிடம் மிகுந்த பாசமும்,மரியாதையும் உண்டு.


அதனாலேயே, குறள்நெறியன் தன் தாயை அவமானப்படுத்தும் பொழுதெல்லாம் கோபப்படும் தூயவனை, நாவேந்தி தான், "தூயா விடு ! அவன் தான் புரியாமல் நடந்துக்கிறான்னா, நீயும் அவன் மீது கோபப்பட்டு உன் நிலையைதாழ்த்திக்காதே..அவனுக்கு என்ன சொன்னாலும், இப்ப புரியாது. இளம் வயது அப்படித் தான் இருக்கும். என்றாவது ஒரு நாள், என்னைப் புரிந்து கொள்வான் .."என்று அவரை அமைதிப்படுத்துவார்.


தூயவன் மற்றவர்கள் முன் நாவேந்தியை, 'மேடம்' என்றே அழைப்பார். நாவேந்திக்கு நண்பனின் அழைப்பு சங்கடமாக இருந்தாலும், தூயவனின் பிடிவாதத்தால் அமைதியாகவே அதை ஏற்றுக் கொள்வார்.


நாவேந்தியிடம், ‌"வேந்தி என்ன தான் நமக்குள் நட்பு இருந்தாலும் ,மற்றவர்கள் முன் நான் உன்னை பெயர் சொல்லி அழைத்தால்,அது காண்பவர்களுக்கு தவறாகத் தான் தோன்றும்.." என்று கூறி அவரை சம்மதிக்க வைத்தார்.


தூயவன்,டைரக்டர் மீட்டிங் முடிந்தவுடன், நாவேந்தியிடம் வேலை விஷயமாக சில கோப்புகளில் கையெழுத்து வாங்கினார் . முக்கியமான வேலையெல்லாம் முடிந்தவுடன்.. வீட்டிற்கு கிளம்பிய நாவேந்தியுடன், தூயவனும்.. பேசியபடியே வெளியில் வந்தார்.


"ஏன் தூயா ?பவிக்கு கல்யாண வயசாச்சே.. மாப்பிள்ளை பார்க்கலையா..?"


"பார்க்கனும் வேந்தி,வளர்ரும் இதையே தான் சொல்லிட்டு இருக்கா.."


"ம்! , 'கானு' மட்டும் இருந்திருந்தால், இன்னேரம் பவியை என் மருமகளாக்க நீ சம்மதித்து இருப்பாய் தானே.."என்றவரை தூயவன் திகைப்புடன் பார்த்தார்.


அவரின் திகைத்த பார்வையை உள்வாங்கிய படியே, "குறளுக்கும், பவிக்குமென்ன? ஓர் ஐந்தாறு வருஷம் தானே வித்தியாசமிருக்கும். என் வாழ்க்கை மட்டும் நல்லாயிருந்திருந்தால், இன்று எல்லாமே நல்லபடியா நடந்திருக்கும். நானும் உன்னிடம் உரிமையாக பெண் கேட்டிருப்பேன்.." என்றவரின் கண்கள் கலங்கியது.


"வேந்தி என்ன இது! சிறுபிள்ளையாட்ட கண்கலங்கிட்டு.."என்ற தூயவனிடம்..


"என்னால் முடியலே தூயா ..இன்னும் எத்தனை நாள் நான் இருப்பேனோ? அதற்குள் என் பையன் என்னை ஒரு முறையாவது அம்மான்னு கூப்பிடமாட்டானா? என்று மனசு தவிக்கிது. இப்பவெல்லாம் கானுவின் ஞாபகம் என்னை ரொம்பவே வாட்டுது.." என்று கலங்கியவரிடம்.


"வேந்தி, ப்ளீஸ்மா கலங்காதே..காலம் தான் எல்லாத்துக்கும் மருந்து. நீ அடிக்கடி சொல்வாயே! குறள் ஒரு நாள் என்னை புரிஞ்சுக்குவான்னு, அது கண்டிப்பா நடக்கும். நீ எதையும் போட்டு மனசுலே குழப்பிக்காதே, எல்லா சீக்கிரம் சரியாகும்.." என்று ஆறுதல் கூறியவரிடம்.


"தூயா கொஞ்ச நாட்களாகவே உடம்பும், என்னைப் படுத்தி எடுக்குது. அடிக்கடி முடியாம போகுது . என் காலம் முடியறதுக்குள்ள .. அவனோட திருமணத்தை கண்குளிரப் பார்க்கனும். என் துக்கத்தையெல்லாம் சொல்லி, அவன் நெஞ்சில் சாஞ்சு ஒரு மூச்சு அழுது தீர்க்கனும்.." என்றவரிடம்.


"கவலப்படாதேம்மா.. எல்லாம் ஒரு நாள் சரியாகும்.." என்ற படியே கீழே செல்வதற்காக இருவரும் லிஃப்ட்டுக்குச் சென்றார்கள்.


அப்போது சரியாக லிஃப்ட்டிலிருந்து குறள்நெறியனும்,நிலனும் வெளியில் வந்தார்கள்.


இவர்கள் இருவரையும் கண்டதும், குறள்நெறியன், நிலனிடம் திரும்பி, "நிலன் இந்த ஆஃபிஸ்சில சில பேரை 'களை' எடுக்கனும். கம்பெனிக்கு கொஞ்சமும் சமந்தமே இல்லாதவங்கயெல்லாம் பசை போல ஒட்டிட்டு இருக்காங்க..அவுங்களுக்கு ,சால்றா போட.. கூடவே ஓர் ஆள் வேறு ,சுயநலவாதிகள்! அவுங்களைப் பார்த்தாலே, ஆத்திரம்..ஆத்திரமாக ,வருது.."என்று இவர்களைப் பார்த்து வேண்டுமென்றே சொல்லிச் சென்றான்.


தூயவனுக்கோ,அவன் தங்களைத் தான் சொல்கிறான் என்று புரிந்ததும் ,அளவில்லா கோபம் வந்தது. நாவேந்திக்காக அடக்கி கொண்டார்.


நாவேந்தியோ ,மகனின் வார்த்தைகளைக் கேட்டு துடித்துப் போனார். கண்களில் கண்ணீர் துளிகள் தேங்கியது. கஷ்டப்பட்டு தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டவர்,மனதிற்குள், 'கானு பாத்தீங்களா, உங்க பையனை ..என்னை என்ன‌ சொல்றான்னு,இந்த கம்பெனிக்கும் எனக்கும் சம்மந்தமில்லையாம்..அவனுக்கும் ,எனக்குமாவது சம்மந்தம் இருக்கா?'என்று இல்லாத தன் கணவரிடம் மனதிற்குள் முறையிட்டார்.


தூயவனோ, தன் மனக்குமுறலை யெல்லாம் நாவேந்திக்காக அடக்கிக் கொண்டு, மெளனமாக லிஃப்ட்டிற்குள் சென்றார்.


நாவேந்தியும் அவர் பின்னோடு லிஃப்ட்டுக்குள் வந்தார். அப்போது ,அவருக்கு, திடீரென்று கண்களை இருட்டிக் கொண்டு, தலை சுற்றியது.. தூயவனை அழைக்க முற்பட்டார், ஆனால் ,முடியவில்லை.. குரல் எழும்பவில்லை..கீழே விழப் போறோம் என்று உணர்ந்தவர்.. லிஃப்டில் அப்படியே சாய்ந்து கொண்டே கஷ்டப்பட்டு, "தூயா.." என்று அழைத்தார்.


தூயாவனோ , கீழே செல்ல லிஃப்ட் பட்டனை அழுத்திய படியே திரும்பியவர், நாவேந்தியின் நிலையைப் பார்த்து திகைத்துப் போய்.. ஸ்டாப் பட்டணை அழுத்தி விட்டு , "வேந்தி .." என்ற கத்தியபடியே கண் சொருகி கீழே விழப் போனவரை தாங்கினார்.


அதற்குள் அந்த தளத்தில் வேலை செய்பவர்கள், தூயவனின் சத்தம் கேட்டு ,லிஃப்ட் அருகே ஓடி வந்தவர்கள், தூயவனுடன் சேர்ந்து முடியாமல் நின்றிருந்த நாவேந்தியை கைத்தாங்கலாக வெளியில் கூட்டிவந்தனர்.


நாவேந்தியை ஒரு நாற்காலியை எடுத்துப் போட்டு அவரை அமரவைத்தனர். நாவேந்தியோ, அறை மயக்கத்தில் குடிக்கத் தண்ணீர் கேட்டார்.


உடனே தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தனர். அதை வாங்கி மெதுவாக குடித்தவர்..அப்படியே, சிறிது நேரம் கண்களை மூடிய படியே நாற்காலியில் அமர்ந்திருந்தார்.


அதற்குள் தூயவன், அவருக்கு சூடாக காஃபியை வரவழைத்து, கட்டாயப்படுத்தி குடிக்க வைத்தார்.


அந்த நேரம் குறள்நெறியனும்,நிலனும் தங்கள் வேலையை முடித்துக் கொண்டு லிஃப்ட் அருகில் வந்தார்கள்.


நாவேந்தியை சுற்றியிருந்த கூட்டத்தைக் கண்டு, குறள்நெறியன், "வேலை நேரத்தில் வேலை செய்யாமல் இங்க என்ன பண்றீங்க...."என்று கடிந்தான். வேலையாட்களோ, சத்தமில்லாமல் அவர்வர் இடத்திற்கு சென்றார்கள்.


நிலனோ, தூயவனிடம் என்னவென்று விசாரித்தான். அவர் நடந்ததை சுருக்கமாக இறுகிய முகத்துடன் சொன்னார்.


குறள்நெறியனோ,அதைக் கேட்டு," நிலன் வா போகலாம், வெட்டிப் பேச்சுக்கு நேரமில்லை.. ஃட்ராமா போட்டு சிம்பத்தியை கிரியேட் செய்யலைன்னா, சில பேருக்கு தூக்கமே வராது.." என்று வார்த்தைகளை விஷமாக கக்கினான்.


தூயவனோ ,அவன் சொன்னதைக் கேட்டு, ‌"சார், உங்களுக்கு நிறைய வேலை இருக்கும். நீங்க போங்க சார்..இந்த ட்ராமா வேலையை நான் பார்த்துக்கிறேன்.."என்றார் கோபத்தில்..


அவனோ,ஆத்திரத்துடன் " சில பேரை வைக்க வேண்டிய இடத்தில் வைக்காமல், தாத்தா அதிக இடம் கொடுத்தால்.. வந்த வினை! எல்லாம் அவரைச் சொல்லனும்.." என்றபடி வழக்கமான தன் வேகநடையுடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.


நாவேந்தியோ, " தூயா, நீ கவின்னை வரச் சொல்லு! நான் வீட்டுக்குப் போறேன்.."என்றவர், தூயவனை அமைதியாக இருக்கும் படி கண்களாலாயே கெஞ்சினார்.


தூயவனோ, ஒரு பெருமூச்சுடன் கவின்னுக்கு, அலைபேசியில் அழைத்து வரச்சொல்லிவிட்டு, நாவேந்தியை வரவேற்பறைக்கு அழைத்து வந்தார்.


நாவேந்தியோ, வரவேற்பறைச் சோஃபாவில் ஓய்வாக கண்களை மூடித் தலை சாய்ந்திருந்தார். தூயவனோ, கவினின் வரவவை எதிர்பார்த்து காத்திருந்தார்.


அடுத்த இருபது நிமிடங்களில் கவின் வேகமாக அவர்கள் அருகில் வந்தவன், தூயவனைப் பார்த்து, "மாமா அம்மாக்கு என்ன..?" என்று நாவேந்தி இருந்த நிலையைக் கண்டு பதறினான்.


நாவேந்தியோ ,அவனின் குரலை கேட்டு கன்விழித்தவர், "ஒன்னுமில்லைப்பா ,லேசா தலை சுற்றியது.. வேறொன்றும் இல்லை .."என்றார் ஆறுதலாக..


தூயவனோ," கவின், நீ முதலில் வேந்தியை ஃஹாஸ்ப்பிட்டல் அழைத்து சென்று, முழு உடல் பரிசோதனை செய்யப்பா..எப்பே கேட்டாலும் ஒன்னுமில்லை..ஒன்னுமில்லைன்னுச் சொல்லி பெரிதாக எதையாவது இழுத்து வைத்துக்க போறாள்.." என்றவரிடம்..


"தூயா , நீ பேசமா இரு..எனக்கு ஒன்னுமில்லை.. லேசா ஃப்ரசர் தான் ஜாஸ்தியாகியிருக்கும் . கொஞ்ச நேரம் நல்ல தூங்கினா எல்லாம் சரியாகிடும்.."


" அம்மா! மாமா சொல்வது சரிதான்.. வர,வர..நீங்களே டாக்டர் ஆகிட்டீங்க.."என்றபடி அவரை கைத்தாங்கலாக காருக்கு அழைத்துச் சென்றான்.


தூயவனும், கார்வரை சென்று அவரை அனுப்பிவிட்டு, தன் இருக்கைக்கு சென்றார்..அவர் மனமோ, குறள்நெறியன் மீது அளவுகடந்த கோபத்தில் கொந்தளித்தது.


கவினோ, காரில் செல்லும் போது, "அம்மா அண்ணன் ஏதாவது சொன்னாரா?.."என்றபடி நாவேந்தியை கேள்வியாகப் பார்த்தான்.


நாவேந்தியோ ,"அவன் என்னிடம் பேசினால் தானே, ஏதாவது சொல்வதற்கு.." என்றவர், இனி கவினிடம் பேச்சுக் கொடுத்தால் ,தொளைத்து.. தொளைத்து,கேள்வி கேட்பான் ..என்று நினைத்து கார் சீட்டில் தலையைச் சாய்த்து கண்களை இறுக மூடிக் கொண்டார்..


கவினோ,அவர் சொன்னதை நம்பாமல் யோசனையாக அவரையே பார்த்தவன், வேறு எதுவும் கேட்கலை.. மனதிற்குள்'மாமாவிடம் கேட்டுக்கலாம்..' என்று நினைத்தான்.


நாவேந்திக்கோ , மனதிற்குள், 'மகன் தன்னை என்றாவது புரிந்து கொள்வானா?' என்ற எண்ணமே ஆட்கொண்டிருந்தது.


ஒவ்வொருவரும் அவர்ரவர் சிந்தனைக்குள், உழன்று கொண்டிருந்தார்கள்.. ஆனால் , ஒருவன் மட்டும்! தன் அலுவலக அறையின் சாளரத்தின் வழியாக நாவேந்தி கவின்னுடன் காரில் ஏறிச் செல்வதைக் கண்டு, உடலும், உள்ளமும் கொதிக்க ஆத்திரத்துடன் சாளரக் கம்பியை இறுக பற்றிக் கொண்டு நின்றான்.


அவன் மனதிற்குள் ,ஆயிரம்..ஆயிரம், கேள்விகள் ! ஆனால்,அதற்கான பதில்லை, அவன் உணர்ந்து கொள்ள.. விதி, இனி தன் வேலையை காட்ட ஆரம்பிக்குமோ?காலம் உணர்த்துமோ?இல்லை தன்னவள் உணர்த்துவாளோ?



அன்பு கொல்லும்..
 
Last edited:

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
327
Reaction score
607
Points
93
அன்பே!அன்பே! கொல்லாதே!

அத்தியாயம் 4

நாவேந்தி, வீட்டுக்கு வந்ததும் நேராகத் தன் அறைக்குச் சென்று தஞ்சம் புகுந்தார். அவர் மனம் அன்று சொல்ல முடியாத துயரில் வெம்பியது . மகனின் உதாசீனம் புதிதில்லை என்றாலும், ஏனோ, மகன் இனித் தன்னைப் புரிந்து கொள்வான்..என்ற அவரின் நம்பிக்கைக் கொஞ்சம்..கொஞ்சமாக, தகர்ந்ததது.



கவினோ, வரவேற்பறையில் அமர்ந்திருந்த .. தன் தந்தை நேயவாணனிடம் கூட எதுவும் பேசாமல் , தன் அறைக்குச் சென்ற தாயைப் பற்றிய யோசனையுடனேயே.. தந்தையின் அருகில் சென்று அமர்ந்தான்.



நேயவாணனே, மகனின் யோசனையைப் பார்த்து,"கவின் ஏம்ப்பா ஒரு மாதிரி இருக்கே? வேந்தியும் எதுவும் பேசாமல் அறைக்குப் போய்ட்டா .."என்றவரிடம்.



"எனக்கு ஒன்னுமில்லை.. அம்மா தான் , ஆஃப்ஸிலிருந்து வரும்போதே சரியில்லை.. என்ன கேட்டாலும் ,ஒன்னும் சொல்ல மாட்டீங்கிறாங்க. அண்ணன் தான் வழக்கம் போல், ஏதாவது சொல்லிட்டாரான்னுத் தெரியலை..?"



"ஓ ..! தூயவன் இல்லையா? " என்றவரிடம்..


" மாமா தான் எனக்கு ஃபோன் பண்ணி ஆஃபிஸ் வரச் சொன்னார்.. "நான் போகும் போது அம்மா ரொம்ப ஃடல்லாகத் தான் உட்கார்ந்திருந்தாங்க.. உடம்பு சரியில்லையான்னுக் கேட்டதற்கு ,ஒன்னுமில்லை லேசா தலைச் சுத்தல் தான்னு சொன்னாங்க.. சரி வாங்க ஹாஸ்ஃபிட்டல் போகலாம்ன்னு நான் சொன்னதற்கு, ஹாஸ்ஃபிட்டல் யெல்லாம் வேண்டாம்.. இப்ப நல்லாயிருக்குன்னு சொல்லிட்டாங்க.. ஆனால் ,அவுங்க மனசுதான் சரியில்லைன்னுத் தோனுது.."



"ஓ ..!சரி விடு.. கொஞ்ச நேரம் தனியாகயிருந்தா சரியாகிடுவா.. அவ எப்போதும், குறளைப் பார்த்துட்டு வந்தாலே! அன்னைக்குப் பூரா இப்படித்தான் இருக்கா.."



"ஏம்ப்பா ,அண்ணா அம்மாவைப் புரிஞ்சுக்கவே மாட்டீங்கிறாரு..நீங்காளவது அவரிடம் பேசிப் பார்க்கலாம் தானே..அம்மா அண்ணனை நினைத்தே உடம்பை கெடுத்துக்கு வாங்கப் போல.."



" வேறு வினையே வேண்டாம் ..என்னைக் கண்டாலே அவனுக்கு ஆகாது.. இதில் நான் போய் அம்மாவைப் பற்றிப் பேசினால்.. அவ்வளுவு தான் ,வேந்தி கூட ஜென்மத்துக்கும் பேசமாட்டான். அவனைப் பொறுத்த வரை நான் தான் மெயின் வில்லன்.."



"அப்பா , அண்ணனுக்கு என்ன நடந்துச்சுன்னு உண்மை தெரியாது. அதனால் தான், அம்மாவையும், உங்களையும் தப்பா புரிஞ்சுட்டு இருக்காருன்னு நினைக்கிறேன் .நீங்க அந்த உண்மையை அவருக்குப் புரியவைங்க.."



"கவின் இத்தனை நாளா , நான் அதைச் செய்யாமலா ? இருந்திருப்பேன். எத்தனையோ முயற்சி வேந்திக்குத் தெரியாமல் செய்து பார்த்துட்டேன். ஆனால், பிரயோசனம் தான் இல்லை.."



"ஓ..! ஆனால்,அம்மாவை இப்படிப் பார்க்கப் பிடிக்கவே இல்லை.. எப்போதும் கலகலப்பா இருப்பவர் .. இப்பவெல்லாம் அந்தக் கலகலப்பு எங்க போச்சுன்னே தெரியலை.."



"'ம் ..! நானும் கொஞ்ச நாளாகக் கவனிச்சுட்டுத் தான் இருக்கேன்..மகனை நினைத்து மனசுக்குள்ளயே மருகுகிறாள் போல..



"ஆமாம்ப்பா.. இதை இப்படியே விடக் கூடாது. ஏதாவது செய்து , அம்மாவை அண்ணாவுடன் சேர்த்து வைக்கனும்.."



"கண்டிப்பா செய்யலாம்ப்பா..நீ அதை நினைத்துக் கவலைப் படாமல் போய் ரெப்ரஸ் ஆகிட்டுவா.." என்றவரிடம்..



"சரிப்பா..அம்மா வந்தா, நீங்களும் விசாரிங்க.. " என்றவன், தன் அறைக்குச் செல்ல எழுந்தவன்,தயங்கியபடியே " அப்பா உங்ககிட்ட ஒன்னுச் சொல்லனும் .. அண்ணா ! இந்த வாட்டியும் நமக்கு வரவேண்டிய காண்ட்ராக்டை ஆர்.கே. குரூப்புக்குக் கிடைக்குமாறுச் செய்துட்டார் .."என்றவனிடம்..



"ம்..! "என்று ஒரு நெடியப் பெருமூச்சுவிட்டவர்.." தெரிந்தது தானே, விடு! பார்த்துக்கலாம் .. இதைப் பற்றி நீ வேந்தியிடம் எதுவும் சொல்லிடாதே அவள் தாங்கமாட்டாள்."



"கவலைப்படாதீங்கப்பா ,நான் சொல்லமாட்டேன். அம்மா ஏற்கனவே அவரை நினைத்துத் தான் கவலைப்படறாங்க..இதில் இது வேறு தெரிந்தால், அவ்வளவு தான் ! ஏம்ப்பா, அவரால் இந்த ஒரு வருஷத்தில் மட்டும், நமக்குப் பலகோடி இழப்பு..இந்த இழப்பு மட்டும் இல்லையென்றால் நம்மக் கம்பனி தான் நம்பர் ஒன் ஃகன்ஸ்டெக்ஷன் கம்பெனியாகக் கொடிக் கட்டிப் பறந்திருக்கும்."



" ம் ..! "என்றவர் , " சரி விடுப்பா.. எல்லாம் சரியாகிடும்.."



"அப்பா ,அண்ணனுக்குக் கல்யாணம் ஆனாவாது மாறுவாரா..?"


"ஏப்பா உனக்கு இப்படி ஒரு சந்தேகம்.."


"இல்லை.. சும்மாதான் கேட்டேன்.."


"உங்கம்மாவாட்டா, நீயும் இன்னைக்கு ஒரு மாதிரியாகத் தான் இருக்கே ..போய்க் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு..சைட்டிலும் உனக்கு இன்னைக்கு வேலை ஜாஸ்தி.." என்றவரிடம் சிறு தலை அசைப்புடன் தன் அறைக்குச் சென்றான்.



மகன் போவதையே யோசனையாகப் பார்த்துக் கொண்டிருந்தவரின் மனதிற்குள், 'மகன் சொல்வது உண்மை தான்னு..' தோன்றியது.



அவர் கஷ்டப்பட்டுக் ,கையூன்றிக்,காலூன்றித் தொடங்கிய கவின் ஃகன்ஸ்டெக்ஷன் கம்பெனி! இன்று நல்ல வளர்ச்சி கண்டு இருக்கிறது.ஆனால் ,சமீபகாலமாகக் குறள்நெறியனால் அவருக்குப் பல கோடிகள் இழப்பு தான்.. தங்கள் மேல் உள்ள கோபத்தில் அவன் தொழிலில் பல வகையில் பிரச்சினைக் கொடுக்கிறான்.ஆனால், இதை எல்லாம் வேந்தியின் காதுக்குப் போகாமல் நேயவாணன் தான் பார்த்துக் கொள்கிறார்.



நாவேந்திக்கு மட்டும் இந்த விஷயமெல்லாம் தெரிந்தால் தாங்க மாட்டார்.. என்று நேயவாணனுக்கு நன்கு தெரியும்.அதனாலேயே, இது வரை அவரிடம் தந்தையும்,மகனும் மறைத்து வருகிறார்கள்.



நேயவாணனோ,மனதிற்குள், 'இதற்கெல்லாம் என்ன தான் முடிவு !என்று நினைத்தவர், தான் அமர்ந்திருந்த சோஃபாவில் தலையைச் சாய்த்துக் கொண்டு, கண்களை மூடிய படியே.. 'காலம் ஒன்றே அனைத்தையும் மாற்றக் கூடிய வல்லமை படைத்தது.' என்று நினைத்துத் தன்னைத் தேற்றிக் கொண்டார்.



தூயவனோ, ஆபிஸ் வேலைகளை முடித்து விட்டு அன்று தாமாதமாகத்தான் வீடு சென்றார்.



அவருக்குத் தெரியும், நாவேந்தி அலுவலகம் வந்தாலே ..அன்று முழுவதும் குறள்நெறியன் தன்னைப் படாய்படுத்துவானென்று.. பெரியவர் வந்திருந்தால், கொஞ்சம் அடக்கி வாசிப்பான். ஆனால்,அவரும் அதிகமாக இப்போதெல்லாம் அலுவலகம் வருவதே இல்லை..



குறள்நெறியன், கம்பனியின் பொறுப்பெடுத்த பின் அவரை அதிகமாக அலுவலகத்தில் பார்க்க முடிவதில்லை..அனைத்தையும் குறள்நெறியனே பார்த்துக் கொள்கிறான்.



கம்பெனியும், இந்த ஐந்தாறு வருஷத்தில் அசுர வளர்ச்சி அடைந்திருக்கு.. அதற்குக் காராணம் குறள்நெறியன் தான். வேகமும், விவேகமும் ஒருங்கே சேர்ந்து அமைந்திருப்பவன்.. இந்த வயதில் அவனுடைய உழைப்பும் , வேகமும் மற்றவர்களிடம் பார்ப்பது ரொம்பக் கடினம்..அவன் வேகத்திற்கு வேலை செய்வது , தூயவனுக்கே கம்பி மேல் நடப்பது போல் தான்.



தூயவனால், அவன் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடிந்ததால் தான் ! இன்னும் அங்கே வேலையில் இருக்கிறார்..இல்லையென்றால், என்றோ அவரை வேலையை விட்டுத் தூக்கி இருப்பான்.



தூயவனை,என்ன தான் அவமானப்படுத்தக் , கஷ்டப்படுத்தினாலும்.. அவனிடம் இருக்கும், புத்திகூர்மையையும்,வேகத்தையும் கண்டு அவர் பலதரம் வியந்துள்ளார். அதுமட்டுமில்லை, அவருக்கு அவனிடம் பிடித்த விஷயம்! இத்தனை வசதி இருந்தும் ,கேட்க ஆள்ளில்லாத நிலையிலும், எந்தத் தீயப்பழக்கத்திற்கும் அடிமை ஆகவில்லை.. மது,மாது இவை இரண்டுமே அவனிடம் நெருங்க முடியாத ஒன்று. அவனுடைய ஒழுக்கமான நடத்தை! அவரைப் பல முறை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.



ஆனால் ,அவருக்கு அவனிடம் அறவே பிடிக்காத விஷயம்! நாவேந்தியை, அவன் நடத்தும் விதம் தான்.அவனுடைய கோபம், நியாமென்றாலும் ஒரு முறையாவது என்ன நடந்ததென்று தன் தாயிடமாவது கேட்டு இருக்கலாம்.. ஆனால் , அவனே ஒரு முடிவு செய்து கொண்டு, எல்லோரையும் படாய்ப் படுத்துவது தான் அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை..



அவரும், அவனிடம் பேச எவ்வளவோ முயன்றுவிட்டார்.. அதற்கு அவனிடமிருந்து வந்த பதில், 'உங்க வேலையைப் பாருங்க எனக்குத் தெரியும்.' என்று சொல்லியே அவரை அவமானப்படுத்திவிவான்.



பெரியவரும், தங்கள் சுயநலத்திற்காக.. நடந்த உண்மைகளைப் பேரனிடம் மறைந்துவிட்டார்.. இதற்குமேல், குறள்நெறியன் நினைத்தால் மட்டுமே, உண்மையைத் தெரிந்து கொள்ள முடியும்.காலம் கண்டிப்பாக அவனுக்கு உண்மையை உணரவைக்கும் என்று நினைத்துத் தான், தன் மனதையும் தேற்றிக் கொள்கிறார்.



ஆனால், அந்தக் காலம் தனக்கே வினையாக முடியுமென்று அவர் அப்போது உணரவில்லை..



வளர்பிறையோ,ஓய்ந்துப் போய் வீடு வந்து கணவருக்கு ,காஃபிக் கலந்து கொடுத்து விட்டு, அவர் அருகில் வந்து சாவுகாசமா அமர்ந்தார்.



தன் பக்கத்தில் மனைவி அமர்ந்ததை வைத்தே தூயவன்.. பாவினியும்,நவிலும் வீட்டில் இல்லையென்று புரிந்து கொண்டார்.



பிள்ளைகள் வளர்ந்தப் பிறகு..அவர்கள் வீட்டில் இருக்கும் போது, வளர்பிறை முடிந்தவரைக் கணவர் அருகில் வந்து அமரவே மாட்டார்..



தூயவன் வீட்டிலிருந்தாலே, பாவினியும், நவிலும் பெரும்பாலும் அவருடன் தான் நேரத்தைச் செலவிடுவார்கள்.அதனால், வளர் ஒதுங்கியே இருப்பார்.தங்கள் தனிமையான நேரத்தில் தான் கணவனிடம் நெருக்கத்தைக் காண்பிப்பார்..



தூயவன், அதற்கே பலநேரம் வளர்பிறையைக் கேலி செய்வார் .. "இப்பத் தான் உனக்கு என்னைக் கண்ணு தெரியுதா..?"என்று அவரிடம் செல்லச் சண்டை கூடப் போடுவார்..



அப்படிபட்ட மனைவி ,இன்று தன் அருகில் அமரும் போதே தெரிந்துவிட்டது .அவரின் வாரிசுகள், வீட்டில் இல்லையென்று..அதை மெய்பிப்பது போல் மனைவியும் அவர் தோளில் சாய்ந்து கொண்டே..



"ஏன் ?இன்று உங்க முகம் வாடி இருக்கு.. வேலை அதிகமா..?" என்றவரிடம்.



தூயவன், தன் மனக்குமுறலை யெல்லாம் கொட்டிக் தீர்த்தார்.



"ம்! வேலை அதிகம் தான்.. ஆனால்,அதை விட மனசு தான் சரியில்லை .."



"ஏங்க? என்னாச்சு, ஏதாவது பிரச்சனையா?



"அதெல்லாம் ஒன்னுமில்ல.. இன்னைக்கு, ஃபோர்ட் மீட்டிங் அதற்கு வேந்தி வந்திருந்தா.. வழக்கம் போலக் குறள் அவளை மனம் நோகப் பேசிவிட்டான்.அது தான் கஷ்டமா இருக்கு .."



" ஓ..! ஏந்தா இந்தப் புள்ள .. பெத்தவளைப் புரிஞ்சுக்காம நடந்துக்குதோ தெரியலை.. ? சரி, நீங்க வருத்தப்படாதீங்க எல்லாம் ஒரு நாள் சரியாகும்.."



"நானும் அப்படித் தான் நினைக்கிறேன்.. ஆனால், அஃது என்று தான் நடக்குமோ..? "என்று சலித்துக் கொண்டே சொன்னார்..


வளர்பிறைக்கு, நாவேந்தியைப் பற்றிய அனைத்தும் தூயவன் மூலம் தெரியும்.. அதனால், தாங்கள் தனிமையில் இருக்கும் போது மட்டுமே தூயவன், 'வேந்தி ' என்று சொல்லுவார்..



பாவினியோ,நகுலோ வீட்டில் இருக்கும் நேரம், நாவேந்தியைப் பற்றிய பேச்சு வந்தால், 'மேடம்' என்றே விளிப்பார்.



பிள்ளைகளுக்கு வேந்தியை நன்றாகத் தெரியும். அவர்களின் பிறந்த நாளுக்கு, ஒவ்வொரு வருடமும் ! மறக்காமல் அவர்களை அழைத்து, வாழ்த்து! சொல்வதுடன், பரிசும் வாங்கி அனுப்புவார்.



பாவினி, நவில் இருவருக்குமே..'மேடம்' என்றாலே ஒரு தனிமரியாதை மனசில் எப்போதும் இருக்கும்.. அடிக்கடி இல்லையென்றாலும், ஏதாவது விழாக்களில் நாவேந்தியைச் சந்தித்திருக்கிறார்கள்.இவர்கள் இருவரையும் கண்டால் நாவேந்தி உருகிப் போய்விடுவாள். அதுவும், பாவினி ! என்றால் எப்போதும் அவருக்குத் தனிப்பிரியம்.



ஆனால் ,நாவேந்தியைப் பற்றியோ,குறள்நெறியன் பற்றியோ, எந்த விசயமும் அவர்களுக்குத் இதுவரை தெரியாது. தூயவனும் அதைப் பற்றி அவர்களிடம் காட்டிக் கொண்டதும் இல்லை..



தான் பெற்ற மக்கள் வீட்டில் இல்லாத பொழுது மட்டுமே, மனைவியிடம் அதைப் பற்றிப் பேசுவார்.இல்லையென்றால் தங்கள் தனிமையில் கொட்டித் தீர்ப்பார்.. எங்கே பசங்களுக்கு விசயம் தெரிந்தால், அரைகுறையாகப் புரிந்து கொண்டு, வேந்தியைத் தவறாக நினைத்து விடுவார்களோ? என்று அவர் நாவேந்தியைப் பற்றியும்,குறள்நெறியன் பற்றியும் எதையும் அவர்களிடம் கூறியதில்லை..



தூயவன் தன் நண்பரின் கம்பெனியில் வேலைச் செய்கிறார் என்று மட்டும் தான் பாவினிக்கும்,நவிலுக்கும் தெரியும். மற்ற குடும்ப விஷயங்கள் எதுவும் தெரியாது..நாவேந்தியும்,தூயவனும் ஒன்றாகப் படித்தது கூடத் தெரியாது..அது தெரிந்தால் எல்லாக் கதையும் சொல்ல வேண்டுமென்று அவர் எதையும் அவர்களிடம் இதுவரை காட்டிக் கொண்டதில்லை..



பாவினி,நவிலைப் பொறுத்தவரை நாவேந்தி கம்பெனி டைரக்டர்.. தூயவன் மீது அளவுகடந்த மரியாதை வைத்திருக்கும் ஒரு நல்ல பெண்மணி ..முதலாளி என்ற ஈகோ இல்லாமல் குடும்பத்தில் ஒருவராகப் பழகும் நல்ல குணம் படைத்தவர். என்று மட்டும் தான் தெரியும்.அதற்கு மேல் நாவேந்தியைப் பற்றத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் அவர்களிடத்திலும் இருந்து இல்லை..



நேயவாணன்,கவின் இவர்களைப் பற்றித் தான் அவர்களுக்குத் தெரியும். கவின் தான் அவருடைய பையன் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்..அப்படியே நினைக்கட்டும் மென்று தூயவனும் விட்டுவிட்டார்.



கணவன், மனைவி இருவருமே பிள்ளைகள் இருவரும் இருக்கும் போது தேவை இல்லாத விஷயத்தைப் பேசமாட்டார்கள்.



வளர்பிறையோ, கணவனின் வருத்தத்தைக் கண்டு ,அவரின் மனதை மாற்றும் நோக்குடன், "ஏங்க இன்று தரகர் வந்திருந்தார் . ஒரு நல்ல ஜாதகம் வந்து இருக்காம் .. நல்ல குடும்பமாம், பையனுக்குப் போலிஸ் வேலை .. அசிஸ்டன்ட் கமிஷனராக மதுரையில் இருக்கிறார்.பாவினிக்குப் பொருத்தமா இருக்கும்ன்னு எனக்கும் தோனுது..நாளைக்கு ஜாதகத்தோட முழுவிவரத்தையும் கொடுக்கிறேன்னு தரகர் சொன்னார்.." என்றவரிடம்.



சுரத்தே இல்லாமல் , "சரி வரட்டும் பார்க்கலாம்.. எனக்குப் போலிஸ் வேலைன்னா , கொஞ்சம் நெருடலாக இருக்கு.. ஒழுக்கமும்,நேர்மையும் இருக்குமான்னு தெரியலையே.. ? என் பெண்ணைக் கல்யாணம் பண்ணறவனிடம் நான் எதிர்பார்ப்பது அதைத் தான்.." என்றவரிடம்..



"நான் விசாரித்த வரைக்கும் ரொம்ப நல்ல ஒழுக்கமான,கரைபடியாத பையன் தான்னு , தரகர் சொன்னார்.."



"அடி போடி தரகர் சொல்றதெயெல்லாம் அப்படியே நம்ப முடியாது. பார்ப்போம் என்னைப் போல், பொண்டாட்டி தான் உலகமா ! இருக்கிற பையன் கிடைச்சா ,என் பெண்ணைக் கண்ணமூடிட்டு கொடுத்துடுவேன்.." என்று நையாண்டி செய்த கணவரிடம்..



"யாரு, நீங்க பொண்டாட்டி தான் உலகம்ன்னு இருக்கிற ஆளு..இதை நான் நம்பனும்.."



"நீ நம்பினாலும்,நம்பாட்டியும் அது தான் உண்மை! என்னை இருபத்தஞ்சு வருசமா! உன் முந்தானையில் தானே முடிஞ்சு வச்சுருக்க .." என்று கேலி செய்தவரிடம்..



"ம்ஹும் ! பேச்சை மாற்றாமல் நான் கேட்டதற்குப் பதில் சொல்லுங்க.."



"வளர், இஃது அவசரப்பட்டுச் செய்யக் கூடிய விசயமில்லை.. நம் பெண்ணோட வாழ்க்கை ! கொஞ்சம் பொறுமையா, யோசித்து,விசாரித்துத் தான் செய்ய முடியும்.." என்றார்..



வளர்பிறையும் ,கணவர் சொல்வதும் சரிதானென்று நினைத்தார் .அதை ஆமோதிப்பது போல், "ம்..!" என்றவர், அவரின் தோள்களில் சாய்ந்து கொண்டார்.



இங்கு, பெற்றவர்களோ! மகளின் கல்யாண விசயத்தைப் பற்றிக் கனவில் இருக்க..மகளோ ! தன் வாழ்க்கையை மாற்றக் கூடிய பிரச்சனைக்கு, தன்னையறியாமலேயே வழிவகுத்து வந்தாள்..



பாவினியின் வாழ்க்கை பெற்றவர்கள் நினைத்தபடி பொன் மாலையாக மாறுமோ?இல்லை குரங்கு கையில் கிடைத்த பூமாலையாகுமோ?



அன்பு கொல்லும்..




 

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
327
Reaction score
607
Points
93
அன்பே!அன்பே! கொல்லாதே!

அத்தியாயம் 5

"எழலி , இப்பவே டைம்யாச்சு .. இனிமேல் , ஃபோன் கடைக்குப் போனால் லேட்டாகிடும் டீ , நாளைக்குப் போய்க்கலாம் வா .." என்று பாவினித் தன் பள்ளித் தோழியை வற்புறுதிக் கொண்டிருந்தாள்.


எழிலியும்,பாவினியும் ,பள்ளி முதல் கல்லூரி வரை ஒன்றாகப் படித்தவர்கள். இருவரும் கல்லூரியில் வேறு..வேறு, துறையாக இருந்தாலும், ஒரே கல்லூரியில் படித்தவர்கள். அதனால், இவர்களின் நட்பு இன்றும் தொடர்கிறது.


எப்போதும் , எழிலிக்கு என்ன வாங்குவதென்றாலும் ,பாவினியுடன் தான் வருவாள். பாவினியும், எழிலி அழைத்தால் மறுக்கமாட்டாள். எழிலிக்குத் தாய் இல்லை ..தந்தை மட்டும் தான். அதனாலேயே, எழிலி மீது பாவினிக்குத் தனிப் பாசம்.


அடுத்த வாரம் எழிலிக்குப் பிறந்தநாள். அதற்கு உடை எடுக்கத் தான் வந்திருந்தார்கள்.


"பவி மணி ஆறு தான்டீ ஆகுது , ஓர் அரைமணி நேரம் தான். போய்டலாம் வா..கடைக்குப் பக்கத்தில் வந்துட்டோம்.." என்று பாவினியின் கைகளைத் தர..தரவென இழுத்துச் சென்றாள் எழிலி..


"ஏண்டீ இப்போ எதுக்கு டீ உனக்கு ஃபோன் .. உன் ஃபோனே நல்லாத்தானே இருக்கு .. "என்றவளிடம்..


"நான் எப்போ போன் வாங்கறேன்னு சொன்னேன்.. ஆப்பிள் ஐ ஃபோனில் ஏதோ புது மாடல் வந்திருக்காம். இவ்வளவு தூரம் வந்துட்டோம். அதையும் சும்மா பார்த்ததுட்டுப் போலாமேன்னு நினைச்சேன்.."என்று கூறியப் படியே நடந்த எழிலி, பாவினியிடமிருந்து பதில் வராததைக் கண்டு திரும்பிப் பார்த்தாள்..


பாவினியோ, முகத்தில் கோபம் தாண்டவம் ஆட, இடுப்பில் கைகளை வைத்து அவளை முறைத்துக் கொண்டு நின்றிருந்தாள்.


எழிலியோ, 'அய்யோ! இவளுக்குச் சாமி வந்துருச்சு போல.. இப்ப வாய்க்கு ஜிப் போடலைன்னா, நம்மளே துவைச்சுக் காயப் போட்டுவிடுவாளே ..' என்று நினைத்தவள்..


முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டு , "பவி ..ப்ளீஸ் மா எனக்காக வா.. சீக்கிரம் பார்த்ததுட்டு வந்துடலாம்.." என்று கேட்டவளிடம்.


பாவினியால், தன் கோபத்தை அதிக நேரம் இழுத்துப் பிடிக்க முடியவில்லை. முகத்தைத் தூக்கிக் கொண்டு எழிலியுடன் சென்றாள் .


கடையைப் பார்த்ததுமே பாவினிக்கு ஒரு மாதிரியாக இருந்தது. கடையில் அதிகக் கூட்டமில்லை..தாங்கள் எதுவும் வாங்கப் போவதும் இல்லை என்பதால் , அவளுக்கு , உள்ளே செல்லவே தயக்கமாக இருந்தது . எழிலி தான் வற்புறுத்தி அவளை இழுத்துச் சென்றாள்..


உள்ளே சென்றதும், எழிலி தான் ஒவ்வொரு மாடலையும் பார்த்து..பார்த்து, விலையைக் கேட்டுக் கொண்டிருந்தாள். பாவினியோ பேசாமல் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாள்.


அப்படிப் பார்த்துக் கொண்டிருந்தவளின் பார்வை ! ஓர் இடத்தைப் பார்த்ததும் இமைக்காமல் நிலைகுத்தி நின்றது.


எழிலியோ, ஏதோ கேட்க பாவினியிடம் திரும்பியவள், பாவினியின் பார்வைச் சென்ற திசையை அவளும் பார்க்க.. பில்லிங் கவுண்டரில் குறள்நெறியன், அவன் வாங்கிய ஃபோன்னுக்குப் பணம் செலுத்திக் கொண்டிருந்தான்.


எழிலியோ, சட்டென்று பாவினியின் காதுகளில், "பவி அவன் செம ஸ்மார்ட்டாக அழகா இருக்கான் தானே.." என்றவுடன்.


பாவினியோ , அவளை எறித்து விடுவது போல் பார்த்தவள்.. சட்டென்று அவள் கைகளைப் பிடித்து இழுத்துக் கொண்டு, கடையின் வெளியே வந்தாள்.


எழிலியோ, "ஏய்ப் பவி உனக்கு என்னாச்சு ? ஏண்டி இப்போ கடையிலிருந்து வந்தே..முதல்லே என் கையை விடு ! வலிக்குது.." என்றவள், பாவினி கையை விட்டதும் வலியில் கைகளை உதறிய படியே .. "பவி இப்போ சொல்லப் போறீயா? இல்லையா .." என்று பற்களைக் கடித்தாள்..


பாவினியோ,அவளை முறைத்தபடி , "ஏண்டி உனக்குச் சைட்டடிக்க வேற ஆளே கிடைக்கலையா .. போய்யும்..போய் அவனைப் பார்கிறே.."


"ஏண்டி அவனுக்கு என்ன ?பார்க்கவே சூப்பரா இருக்கான்.."


"ஆள் சூப்பரா இருந்தாப் போதுமா? குணம் வேண்டாமா..? எனக்குச் சுத்தமாப் பிடிக்கலை.."


"அவனுக்குக் குணமில்லைன்னு உனக்கு எப்படித் தெரியும் ..?"


"அறிவுகெட்டவளே! உங்கிட்ட எல்லாம் இப்போ விளக்கனுமா..?"


"ஆமாம் சொல்லு..நிஜமாவே அவன் செம ஸ்மார்ட் ! முகத்தில் ராஜகலை .. இவனைப் போய்ப் பிடிக்கலையிங்கிற ?அவனைக் கல்யாணம் பண்ணிக்க போறவள் செம லக்கி.."


"மண்ணாங்கட்டி .. இவனைக் கல்யாணம் பண்ணிக்கப் போறப் பெண் தான் உலகத்திலேயே ரொம்பப் பாவப்பட்டவளா இருப்பா .."


"ஏண்டி அப்படிச் சொல்றே.. உனக்கு அவனை முன்னமே தெரியுமா..?"


"ம் ..! அவன் தான் குறள்நெறியன்! பேருக்கும் , குணத்துக்கும் சம்மந்தமே இல்லாதவன்.. அன்னைக்கு என் கழுத்தைப் பிடித்தான்னு சொன்னேனே .. அந்த ராட்சசன் இவன் தான்.."


"ஓ..!நான் இதை எதிர்பார்க்கவே இல்லை..ஆனால் பவி மோதலில் தான் காதல் உண்டாகும்ன்னு சொல்வாங்க.. சப்போஸ் அப்படிக் கீது நடந்தா? எப்படி இருக்கும்! "என்றவளை கண்களில் அனல் பறக்கப் பார்த்தவள்..


"எழிலி, இப்போ நீ வாயை மூடலே.. உன்னை இங்கேயே கொன்னுப் போட்டுறுவேன்.."


"ஏண்டிக் கோபப்படறே.. கதை,சினிமாவிலெல்லாம் அப்படித் தானே வருது.."


" எழிலி ,உனக்குப் பைத்தியந்தான் பிடிச்சுருக்கு.. அந்த அரக்கனை நான் லவ் பண்றதா ? நெவர் சான்ஸ்.. அப்படி ஒரு நிலை என் வாழ்க்கையில் வரவே வராது..


"நாளை என்ன வேணாலும் நடக்கலாம் பவிக்குட்டி.. ஒரு வேளை அவனுடனே திருமணம் நடக்கலாம்.." என்று சீண்டியவளை..


"ஏய், உனக்கு மூளைக் கலங்கி விட்டதா? ஒரே ஒரு முறை பார்த்தவுடன் திருமணம் வரை யோசிக்கிறாய்.. இது சரியில்லை.."


"ஹோய் ,எல்லாரையும் அப்படி நினைக்கத் தோனாது..ஆனால் , ஏனோ ! இவன் நல்லா அழகா இருக்கான்.ஜோடிப் பொருத்தம் நல்லா இருக்கும்ன்னு தோனுது.."



"அடியேய் என்னைக் கடுப்பாக்காதே .. உனக்குப் பிடிச்சிருந்தா ! நீ வேனா டிரைப் பண்ணு.. ஆனால், உன் ஃப்ரெண்டா நான் அதைக் கூட அலோ பண்ணமாட்டேன்.. ஏன்னா என் ஃப்ரெணடோட வாழ்க்கை எனக்கு முக்கியம்.கண்ணைத் திறந்துட்டே போய் யாரும் பாழும் கிணத்துல விழ மாட்டாங்க.."


"அப்போ அவனைக் கல்யாணம் பண்ணினா பாழும் கிணத்துல விழறதுக்குச் சமம்ன்னு சொல்றீயா.."


"நிச்சயமா.."


"அம்மா, தாயே! போதும்.. போதும் , நீ அவனை ஓவரா வெறுக்கிறே..இதுவே காதலாக மாற வாய்ப்பு இருக்கு .."என்றவளிடம்..


எழிலி, எனஃப்! போதும், இதுக்கு மேலே ஒரு வார்த்தை பேசினே.. நான் மனுசியாவே இருக்க மாட்டேன்.."


"ஏய் ஜெஸ்ட் ஜோக் டீ.. அதுக்குப் போய் ஏண்டி இவ்வளவு கோபம்..?"


"அது ஜோக்காயிருந்தா கூட , யாரோ ஒருத்தனுடன் என்னை இணைத்துப் பேசுவது தவறு..அதுவும் அந்த ராட்சசனை இணைத்து பேசுவது சுத்தமா எனக்குப் பிடிக்கலை..உலகத்திலேயே நான் வெறுக்கிற ஒரே ஆள் அவன் தான்..கடவுளிடம் கூட இனி மேல் இவனை எங்கேயும் கண்ணுல காட்டிடாதேன்னு தான் வேண்டிக்கிறேன்.."


"பவி என்னடி இவ்வளவு டென்ஷனாகிறே.. அதுவும் ஒரே ஒரு முறைப் பார்த்த ஆளை இந்தளவு வெறுக்கிறே.."என்றவளிடம்.


"எழிலி எத்தனை முறைப் பார்த்தோம் என்பது முக்கியமில்லை.. முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பார்களே! அதே போல் , எங்கள் முதல் சந்திப்பிலேயே விரும்பத் தாகாத நிகழ்வுகள் நடந்து விட்டது. தெரியாத ஒரு பெண்ணிடம் எப்படிப் பேசவேண்டும்,எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்ற அடிப்படை நாகரிகம் கூட இல்லாதவனை .. எனக்கு மட்டுமில்லை யாருக்கும் பிடிக்காது.."


நீ சொல்வது சரிதான்.. ஆனால், யார் மீதும் நீ இவ்வளவு வெறுப்பைக் காட்டி நான் பார்த்து இல்லையே..அது தான் ஆச்சரியமா இருக்கு..என்று எழிலி சொல்லிக் கொண்டு இருக்கும் போதே..


"எக்ஸ்க்யூஸ் மீ ... கொஞ்சம் வழி விடறீங்களா..?" என்று கூறியபடி வந்து நின்றக் குறள்நெறியனைப் பார்த்ததும் இருவருக்கும் தூக்கிவாரிப் போட்டது..


அவனோ முகத்தில் எதையும் காட்டாமல், அமைதியாக நின்றான்.. அவன் கேட்ட பின்னர்த் தான் தாங்கள் இருவரும் வழியை மறைத்துக் கொண்டு நிற்கிறோம் என்பதே அவர்களுக்குப் புரிந்தது.


உடனே வேகமாக நகர்ந்து அவனுக்கு வழி விட்டனர்..அவனோ, "தேங்க் யூ .." என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.


பாவினிக்கோ, உள்ளுக்குள் உதறல் எடுத்தது. 'பகலில் பக்கம் பார்த்துப் பேசனும் ,இரவில் அதுவும் கூடாது என்பார்களே .. இப்படி லூசு மாதிரி வழியை மறைத்து நின்றதும் இல்லாமல் , அவனைப் பற்றிப் பேசிவிட்டோமே.. அவனுக்கு நம்மை அடையாளம் தெரிஞ்சிருக்குமா? நாம் பேசியதை எல்லாம் கேட்டு இருப்பானா?' என்று அந்தச் சில நொடிகளிலில் மனதிற்குள் ஆயிரம் கேள்விகளுடன் வலம் வந்தவளை .. அவள் எண்ணத்தைப் பொய்பிக்காமல், அவனோ, திரும்பி அவளை அனல் பார்வைப் பார்த்துச் சென்றான்..


அந்தப் பார்வையில் அப்படி என்ன இருந்தது? என்று அவளுக்குத் தெரியவில்லை.. ஆனால், நிச்சயமாக அவன் தாங்கள் பேசியது அனைத்தும் கேட்டிருப்பான் என்று மட்டும் புரிந்தது.


அப்போதே,மனதிற்குள் பாவினிக்கு சிறு அச்சம் பிறந்தது. அவனுக்கு ஒருத்தரைப் பிடிக்கவில்லையென்றால், அவர்களை வேரோடு அழித்து விடுவானென்று ஆடிட்டர் சொன்னது வேறு அப்போது ஞாபகம் வந்து அவளைப் பயத்தில் உறைய செய்தது.


எழிலியோ,அசையாமல் சிலையாக நின்ற பாவினியை, "ஏய் பவி ஏண்டி இப்படிப் பேய் அறைந்தது போல் நிக்கறே ..வா போலாம்.." என்று அவள் கைகளைப் பிடித்து இழுத்தாள்.


பாவினியோ, "நாம பேசுனதை அந்த அரக்கன் கேட்டிருப்பானா..?"என்று எழும்பாத குரலில் கேட்டாள்.


"தெரியலையே டீ.. அப்படியே கேட்டால் கூட அவனைத் தான் பேசினோம்ன்னு அவனுக்கு எப்படித் தெரியும்.. வாடி போலாம் .." என்று பாவினியின் கைகளைப் பிடித்து இழுத்துச் சென்றாள்.


ஆனால், அப்போது அவர்கள் இருவருக்கும் தெரியவில்லை..அங்கே ஒருவனின் மனதில் பழிவெறியை விதைத்து விட்டோமென்று..


குறள்நெறியனோ, பார்க்கிங்கில் நின்றிருந்த தனது காரில் ஏறிக் கோபமாக அமர்ந்தவன், கையிலிருந்த புதுப் போனை பின் சீட்டில் எறிந்தான். காரை ஸ்டார்ட் செய்யாமல், ஸ்டீயரிங்கில் கைகளை மடக்கி குத்தி தன் கோபத்தைக் காட்டினான்.


பாவினி கடையிலிருந்து வெளியில் வந்த சில நிமிடங்களிலேயே குறள்நெறியனும் வெளியில் வந்துவிட்டான்.. அவன் வந்தது தெரியாமல் இவர்கள் இருவரும் பேசிக் கொண்டு இருந்தார்கள்..


குறள்நெறியனும், அவர்களைக் கடந்து செல்ல நினைக்கையில் இவனுடைய பேர் அவர்கள் பேச்சில் அடிபடவும், அப்படியே நின்றுவிட்டான்.. அவனைப் பற்றிப் பேச..பேச ,அது பாவினி என்று அவனுக்குத் தெளிவாகப் புரிந்தது.


அவள் தன்னை எவ்வளவு கேவலமாக நினைத்து பேசுகிறாள் என்று கோபப்பட்டவன், முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாமல், வழி விடச் சொல்லி நகர்ந்தான்.ஆனாலும், தான் யார் என்பதைக் காட்டாமல் போனால் அவன் குறள்நெறியன் இல்லையே ..அதனாலேயே, அவளுக்கு மட்டும் புரியும்படி திரும்பி தீ பார்வைப் பார்த்துச் சென்றான்.


பாவினிக்கும் , தன்னையறியாமலேயே, தான் ஒருவனைச் சீண்டிவிட்டிருகோமென்று அப்போது தெரியவில்லை..


குறள்நெறியனோ , தன்னைக் கேவலமாகப் பேசியவளை ஒன்றும் சொல்லாமல் வந்துவிட்டோமே என்று தன்னை நினைத்தே கோபம் கொண்டான்.


பாவினி தான் , அவனை முதல் முதலாக உதாசீனப்படுத்திய பெண்..! அதனால் தான், ஒரே ஒரு முறை மட்டுமே அவளைப் பார்த்திருந்தாலும், அவனால், எளிதாக அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது. அவன் மனதில் அவளின் முகம் பசுமரத்து ஆணியாகப் பதிந்திருந்தது.


பாவினி தன்னைப்பற்றிப் பேசியதை மனதில் அசைப் போட்ட படியே, கார் சீட்டில் தலையைச் சாய்த்தவனுக்கு, எப்படியாவது தன்னை அவமானப்படுத்தியவளை சும்மா விடக்கூடாது. ஏதாவது செய்து அவளைப் பழி தீர்க்கனும் . என்ற எண்ணம் அவன் மனதிற்குள் விபரீதமாகத் தோன்றியது.


அவளை என்ன செய்யலாம், என்று யோசித்தபடியே காரை ஓட்டியவனின், கண்களில் விழுந்த காட்சி! அவனை மேலும் கோபமாக்கியது.


அவனின் கோபம் அவளை எரிக்குமோ?இல்லை அவனையே எரிக்குமோ? விதியின் விளையாட்டை யார் அறிவார்..



அன்பு கொல்லும்..






 

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
327
Reaction score
607
Points
93



அன்பே!அன்பே!கொல்லாதே!

அத்தியாயம் 6

பாவினியோ, மனதிற்குள் குறள் நெறியனைப் பற்றிய
சிந்தனையிலேயே இருந்தாள்.


எழிலியோ,அது தெரியாமல் வழ..வழவென்னு‌
பேசியபடியே, அவளின் கைகளைப் பற்றி இழுத்துக்
கொண்டு பேருந்து நிலையத்தை நோக்கி நடந்தாள்.


எழிலி பேசுவதற்கெல்லாம், "ம்.! " மட்டும் கொட்டிக்
கொண்டே நடந்து வந்த பாவினியின் சிந்தனையை,
"பவிம்மா .." என்ற அழைப்பு நடப்புக்குக் கொண்டு
வந்தது.


பாவினியோ ,தன்னை அழைத்தது யாரென்று
திரும்பிப் பார்த்தாள். அங்கே, நாவேந்தியும், கவினும்
நின்றிருந்தார்கள்.


பாவினியோ, அவர்களைக் கண்டவுடன் "ஆண்டி.." என்று அழைத்தபடி, அவர்கள் அருகில் இன்முகத்துடன்
சென்றாள்.


தன் அருகில் வந்த பாவினியின் கைகளை நாவேந்தி , ஆசையாக பற்றிக் கொண்டவர், " எப்படிம்மா இருக்கே ?அம்மா, தம்பி எல்லோரும் எப்படி இருக்காங்க .."
என்றவரிடம்.


"எல்லாரும் நல்லா இருக்கோம் ஆண்டி.. நீங்க எப்படி
இருக்கீங்க..?கடைக்கு வந்தீங்களா..? "


"ஆமாம் பவிம்மா.. சில பொருட்கள் வாங்க
வேண்டியிருந்தது. கவினிக்கு, டைம் இருக்கும்
போது தான் இந்தப்பக்கம் வரமுடியும் .
தனியா என்னை வர விட்டால்தானே ! "


"ஓ..! " என்றவள் கவினைப் பார்த்து மென்புன்னகை
ஒன்று சிந்தினாள்.


அவனோ, "உடம்பு நல்லாயிருந்தா எங்கு வேணாலும்
தனியா அனுப்புலாம் .."என்றதும்..


" உடம்புக்கு என்ன ஆண்டி..? " என்று பதறிய
பாவினியிடம்.. " அதெல்லாம் ஒன்னுமில்லைம்மா..
லேசா ஃப்ரெஷர் .. அதைத் தான் சொல்றான் .."


"ஓ..! பார்த்து ஜாக்கிரதையாக இருங்க ஆண்டி .
ரிலேக்க்ஷா இருங்க என்றவளிடம்..?"


" நீங்களாவது நல்லா சொல்லுங்க..நாங்க சொன்ன
கேட்டாத்தானே .." என்று புலம்பிய கவினைப் பார்த்து
முறைத்தபடியே , " நான் நல்லாத்தான் இருக்கேன் மா.. இவந்தான் சின்ன விசயத்தையும் பெரிசு படுத்தறான்.."


" எது சின்ன விசயம் ! ஃப்ரெஷர் சில சமயம் ஒன்
செவன்டீயை தாண்டறது சின்ன விசயமா..? " என்று
முறைத்தவனிடம்.


" அச்சோ! ஆண்டி ,அவர் சொல்வது சரிதானே .
அவ்வளவெல்லாம் நார்மலா இருக்கக் கூடாதே.."


" நீயும் அவன் கூடச் சேரந்துட்டீயா.. நான் என்ன
வேணும்ன்னா ஏத்திக்கிறேன்.." என்றவரிடம்.


" அதில் உங்களுக்குச் சந்தேகம் வேறா ? தேவை
இல்லாத விஷயத்தைப் மனதிற்குள் போட்டு
குழப்பிக்க வேண்டியது.."


" டேய் பவியைப் பார்த்து எத்தனை நாளாச்சு?
ஆசையாப் பேசலாம்ன்னு பார்த்தா.. இங்கேயும்
உன் புலம்பல் தானா..? "


"ஓகே நல்லா பேசுங்க நான் வாயே திறக்கலை ..
நல்லது சொன்னா கேட்டாத் தானே.. " என்று சலித்துக் கொண்ட கவினுக்குச் சப்போட்டாக..


"ஆண்டி, அவர் சொல்வது கரெக்ட் .. மனசில் எதையும்
போட்டுக் குழப்பிக்காதீங்க .. ஃப்ரெஷர்க்கு
மன அமைதியும்,நல்ல தூக்கமும் தான் மருந்து.."
என்றவளிடம்..


"நல்லாச் சொல்லுங்க பவி .. நான் சொன்னா காதிலே
வாங்கறதே இல்லை.." என்று குறைபட்டவனிடம்..


" உனக்குச் சப்போட்டுக்கு ஆள்கிடைச்சா போதுமே..
நான் நல்லாத்தான் இருக்கேன் பவிம்மா .. இவனே
என்னை நோயாளிஆக்கிடுவான்.." என்று மகனிடம்
கடிந்துவிட்டு..


பாவினியிடம் திரும்பி, " பவிம்மா உன் வேலை எப்படிப் போகுது.. ஃப்ரீ டைம்லா அம்மாவை கூப்பிட்டுட்டு ஒரு
நாள் வீட்டுக்கு வாம்மா.. "என்றவர், " இது யாரு உன்
ஃப்ரெண்டா.." என்று எழிலியைப் பார்த்துக் கேட்டார்.


"ம்..! " என்றவள், " கட்டாயம் வருகிறேன் . நீங்களும் ஒரு
நாள் வீட்டுக்கு வாங்க.. உடம்பைப் பார்த்துக்கோங்க.."
என்றவளிடம்..


" கண்டிப்பா வரேன்ம்மா.. தேவையானது எல்லாம்
வாங்கியாச்சா ? வீட்டுக்குத் தானே போகனும்..?"


" ஆமாம் ஆண்டி ,வாங்கியாச்சு . இனி வீட்டுக்குத் தான் போகனும், பஸ் வந்துரும்.. நாங்க கிளம்புறோம்.."


" பவி எங்களுக்கும் வேலை முடிஞ்சுச்சு.. வாங்க
நாங்களே போகும் போது உங்களை வீட்டில விட்டுட்டுப் போறோம்.."


" வேண்டாம் ஆண்டி உங்களுக்கு எதற்குச் சிரமம்.."


" எனக்கு என்ன சிரமம்.. நானா கார் ஓட்டப் போறேன்..
இந்த தடிப் பயல் தானே ஓட்றான். நாம ஜாலியா
பேசிட்டே போலாம் வா.. " என்று மகனை கேலி
செய்தவரிடம்.


" ம்மா..! இது தான் சானஸ்னனு என்னைத்
தடிப்பயலுங்கறீங்களே .. " என்று குறைபட்டவனிடம்..


" டேய் வாயடிக்காமல் போய்க் காரை எடுத்துட்டு வா .."


" ம்ஹூம்..! லேடீஸ் எல்லாம் ஒன்று சேர்ந்தாச்சு. இனி
நம்ம பேச்சு எடுபடாது.. நாம நம்ம வேலையைப்
பார்ப்போம்.." என்றபடி நகரந்தவனைப் பார்த்து மூவரும் சிரித்தனர்.


அப்போது , அந்த வழியாகக் காரில் சென்ற
குறள்நெறியனின் கண்களில் இந்தக் காட்சி விழுந்தது. அவர்களையே, விழி எடுக்காமல் பார்த்தபடியே
சென்றவனின் மனதில்.. சொல்ல முடியாத கோபமும்,
ஆத்திரமும் ஆட்கொண்டது.


அவர்களின் சிரிப்பு ! அவனுக்கு, தான்
இழந்ததையெல்லாம் ஞாபகப்படுத்தியது. அதை விடப் பாவினியிடம் அவர் காட்டிய நெருக்கம்.. எரியிற தீயில்
எண்ணையை வார்த்தாப் போல் இருந்தது.


மனதிற்குள் பல கேள்விகள் அவனை வாட்டியது.
ஏனோ ? அவன் மனதில் தான் மட்டும் தனித்து இருப்பது போல் தோன்றியது. தவறு செய்தவர்கள் எல்லாம்
சந்தோசமாக இருக்கும் போது.. எந்தத் தவறும்
செய்யாத நான் ஏன் தவிக்க வேண்டும் என்ற எண்ணம்.. அவனின் இயல்பான குணத்தை மீட்டுக் கொடுத்தது.


யாரிடமும் நெருங்கிப் பழகாதவனுக்குப் பாவினியின்
உதாசீனமும், பாராமுகமும் அவள் மேல் அவனுள் ஓர்
ஈர்ப்பை உண்டாக்கியது . அவள், அவனைப் பார்க்கும் போதெல்லாம், கண்களில் காட்டும் வெறுப்பும்,
அலட்சியமும் அவனுக்கு வித்தியாசமான
சுவாரசியத்தைத் தந்தது . அவனை, அவள் நேசமாகப்
பார்த்தால்எப்படி இருக்குமென்ற விபரீத ஆசை
மனதிற்குள் தோன்றி அவனை இம்சித்தது.


விருப்புக்கும் ,வெறுப்புக்கும் நூலளவு இடைவெளி
என்பதாலேயோ? இல்லை எதிர் .. எதிர் துருவங்கள்
எளிதில் ஈர்க்கும் என்பதாலேயோ..? அவனின் மனதில் அவனே அறியாமல் பாவினியை நிரப்பினான்.


ஆனால், அவனின் குரங்கு மனமோ! அவளைத்
தன்னிடம் அடிபணியச் செய்யனும்.. தன்னை
வெறுக்கும் அவளின் தந்தையயும், தன் தாயையும்
ஒரு சேரப் பழி தீர்க்கனும் என்று கணக்கு போட்டது.


அங்கே ஒருவன் தங்கள் சிரிப்பை அழிக்கத் திட்டம்
வகுப்பது தெரியாமல், நாவேந்தியும் , பாவினியும்
காரில் சிரித்துப் பேசிக் கொண்டு வந்தார்கள்..


எழிலி அவள் வீட்டருகில் இறங்கிக் கொண்டாள்.
பாவினியை விடுவதற்காக அவள் வீட்டிற்கு
வந்தவர்களைக் கட்டாயப்படுத்தி வீட்டிற்குள்
அழைத்துச் சென்றாள் பாவினி..


வளர்பிறையும்,தூயவனும் அவர்களைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்கள். சிறிது நேரம் வளர்பிறை,
அவர்களிடம் பேசி விட்டு இரவு உணவு சமைக்கச்
சென்றார். அவருடன் பாவினியும் சென்றாள்.


கவினும்,நவிலும் பேசிக் கொண்டு இருக்க.. தூயவன்
நாவேந்தியிடம் பாவினிக்கு வந்திருந்த திருமணச்
சம்மந்தங்களைப் பற்றிப் பேசினார்..


நாவேந்தியோ, " ஓ..!" என்றதுடன் வேறு எதுவும்
பேசவில்லை.. அவர் மனம் முழுவதும் தன் மகனுக்குப்
பாவினியைத் திருமணம் செய்து வைக்க
வேண்டுமென்ற எண்ணமே நிரம்பியிருந்தது.


பாவினியின் குணமும், அழகும்,பொறுப்பும்.. அவள்
தான் அவனுக்குச் சரியான ஜோடி என்ற எண்ணமே
நாவேந்தியின் மனதில் ஆழப் பதிந்திருந்தது.


குறள்நெறியனின் வேகத்திற்கும்,விவேகத்திற்கும்
பாவினியால் மட்டும் தான் ஈடு கொடுக்க முடியும்
என்று உறுதியாக நம்பினார்.


தூயவன் அவளின் திருமணப் பேச்சை
எடுத்ததிலிருந்தே.. நாவேந்தியின் மனமோ,
பாவினியை தன் மருமகளாக்கிக் கொள்ள
வேண்டுமென்று கடவுளிடமும்,கணவனிடமும்
மன்றாடியது..



நாவேந்தியின் இந்த ஆசை இப்போது
தோன்றியதில்லை .. பாவினி பிறந்த போதே
தோன்றிய ஆசை !


அவரின் மனதை அறியாமல் தூயவனோ, ஃபோலிஸ்
மாப்பிள்ளையைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார்.


வளர்பிறையோ, இரவு உணவைச் சமைத்து
முடித்தவுடன் நாவேந்தியையும், கவினையையும்
கட்டாயப்படுத்தி உண்ண வைத்தார். பாவினி தான்
பரிமாறினாள்..


நாவேந்தியோ, வீட்டுக்கு கிளம்பும் போது தூயவனிடம் மெதுவாக , " தூயா பவியின் திருமண விசயத்தில்
கொஞ்சம்அவசரப்படாமல் இரு! பவிக்கு வரும்
ஜாதகத்தை நன்கு அலசி ஆராய்ந்த பின்னரே
முடிவெடுக்கலாம்.. பவியிடம் இப்போதைக்கு எதுவும்
சொல்லாதே .." என்றவரிடம்.


" நான் இன்னும் எந்த முடிவும் எடுக்கலை.. முதலில்
பவியிடம் திருமணத்திற்குச் சம்மதம் கேட்ட பின்னரே
தரகர் கொடுத்த ஜாதகங்களை அவளிடம் காட்ட
வேண்டும். கண்டிப்பாக உன்னைக் கலந்துக்காமல்
நான் தனித்து எதுவும் செய்ய மாட்டேன்.. நீ நிம்மதியா
இரு.." என்றவரிடம்.


" ம்..! அப்படியே ,பவிக்கு மணாளனாகக் குறளையும்
கொஞ்சம் கன்சிடர் பண்ணு .." என்ற நாவேந்தியிடம்
மெளனத்தையே பதிலாகத் தந்தார்.


தூயவனின் அமைதி ! நாவேந்திக்குச் சுருக்குன்னு
வலித்தாலும், இன்முகத்துடனேயே விடை பெற்றுச்
சென்றார்..


தூயவனும் அவர்கள் சென்ற பின் யோசனையுடனேயே உணவு உண்டுவிட்டுப் படுக்கைக்கு வந்தார்.


பாவினிக்கோ உறக்கமே வரலை.. குறள்நெறியனைப்
பற்றியே சிந்தித்துக் கொண்டு இருந்தாள்..


அந்த அரக்கன் தான் பேசியதை முழுவதும்
கேட்டிருப்பானா? என்ற எண்ணமே அவளை வாட்டியது. அப்படிக் கேட்டிருந்தால் தன் மீது கோபப்பட்டு ஏதாவது செய்து விடுவானா? என்றெல்லாம் அவளின் மனம்
துடித்தது.


ஆனாலும், இயல்பாக அவளுக்குள்ளிருக்கும் தைரியம் தலைதூக்கியது.. அவனால், தன்னை என்ன செய்து
விட‌முடியும் ? என்றும் நினைத்தாள்.


இங்கே ,பாவினி இப்படி நினைக்க.. அங்கே ஒருவனோ ! மனதிற்குள் தன் வஞ்சத்திற்கெல்லாம் பழி தீர்க்கத்
திட்டம் தீட்ட ஆரம்பித்தான்.


குறள்நெறியனின் கைகளில் அன்று கார் பறந்தது.
அவன் கண்முன்னே நாவேந்தியும்,பாவினியும்
கொஞ்சிக் கொண்டு நின்றதே வலம் வந்தது.


அஃது அவனுடைய இழப்பின் வலியை அதிகரிக்கத்
தான் செய்தது . தன் எதிரி எல்லாம் ஒன்று
கூடிவிட்டார்களே ? என்ற எண்ணத்தை உருவாக்கியது.


எந்த விசயத்திலும், உண்மை நிலையை அறியாமல்..
தானே, ஒரு முடிவு எடுப்பது எவ்வளவு பெரிய தவறு !
என்று அவனுக்குக் காலம் கற்றுக் கொடுக்கப்
போவதை அவன் அப்போது அறியவில்லை..


குறள் நெறியன் வீட்டிற்குள் புயல் வேகத்தில்
நுழைந்தான். அதே வேகத்துடன் காரை நிறுத்தியவன்,
தன் வேக நடையுடன் வீட்டிற்குள் சென்றான்.


மெய்யம்மைக்குப் பேரன் காரை நிறுத்தும்
வேகத்திலேயே , அவன் கோபமாக இருக்கிறான்
என்பது புரிந்தது . ஆனாலும் ,பேரன் வீட்டிற்குள்
வரும் போது எதையும் காட்டிக் கொள்ளாமல் ..
எப்போதும் போல் மலர்ந்த முகத்துடனேயே
வரவேற்றார்.


குறள்நெறியனோ, அதை உணரும் நிலையில் இல்லை. மெய்யம்மையிடம் ஒரு வார்த்தைக் கூடப் பேசாமல்
நேராகத் தன் அறைக்குச் சென்றவன், அப்படியே
படுக்கையில் கண் மூடி விழுந்தான்..


அவன் தலையோ, வின்..வின்னென்று வலித்தது.
மனதிற்குள் ஆறாத ரணம் அவனைக் கொல்லாமல்
கொன்றது. எப்போதெல்லாம் தன் தாயைப்
பார்க்கிறானோ அப்போதெல்லாம், அழையா
விருந்தாளியாகத் தலைவலி வந்து அவனை வாட்டும்..


தனக்காக யாருமே இல்லையே என்ற எண்ணம் அவன் மனதை எப்போதும் போல் அன்றும் ஊசியாகக்
குத்தியது. அதுவும் நாவேந்தியுடன், கவினையும்
பார்த்தால் அவனின் வைராக்கியமெல்லாம்
சுக்கு நூறாக உடைந்து விடும்.


தன்னால் செய்ய முடியாதது எதுவுமே இல்லை என்ற
அவனின் மமதை அடிவாங்கும். தோல்வியே
கண்டறியாதவனுக்குத் தோல்விப் பயம் வரும்.
எதையெல்லாம் அவன் மறக்க நினைத்தானோ,
அஃது எல்லாம் அவனின் நினைவில் வந்து அவனை
வதைக்கும்.


இன்றும் , பழசையெல்லாம் எண்ணி மனதின் ரணத்தை மேலும் அதிகமாக்கிக் கொண்டு படுத்திருந்தவனின்
அருகில் வந்து அமர்ந்த மெய்யம்மை , அவனின்
கேசத்தை மென்மையாக வருடினார்.


உடனே கண்களைத் திறந்தவன்,எதையும் தன்
பாட்டியிடம் காட்டிக் கொள்ளாமல், அப்படியே
விழுங்கிக் கொண்டு வேகமாக எழுந்தமர்ந்தான்.


"என்னாச்சுப்பா முகமெல்லாம் வாடியிருக்கிறது.." என்று மென்மையாகக் கேட்டவரிடம்..


" வேலை டென்ஷன் பாட்டி வேறொன்றும் இல்லை..
நீங்க போய் டிபன் எடுத்து வைங்க.. நான் டூ மினிட்ஸ்ல வரேன்.." என்றபடிக் குளியலறைக்குள் வேகமாகச்
சென்ற பேரனின் முதுகைப் பார்த்தவர், ஒரு
பெருமூச்சுடன் கீழே சென்றார்.


"குறள் சாப்பிடவரலையா.." என்று கேட்ட
செங்கோடனிடம் , " "வரேன்னா .." என்று ஒத்தை
வார்த்தையில் பதில் சொல்லி விட்டு மெய்ம்மை
பேரனுக்கு உணவை எடுத்து வைத்தார்.


மெய்யம்மையின் மனமோ, 'சீக்கிரம் அவனுக்கு ஒரு
திருமணத்தைச் செய்து வைக்கனும். மனம் விட்டு
எதையும்,யாரிடமும் சொல்ல மாட்டீங்கிறான்.
அவனுக்குன்னு ஒருத்தி வந்ததால் நிச்சயமாக
அவளிடமாவது தன் மனச்சுமையை இறக்கி
வைப்பான் ' என்று நினைத்தார்.


கொஞ்ச காலமாகவே பேரனின் ஒதுக்கமும்,நடவடிக்கையும் அவருக்குக் குற்றயுண்ர்வை தந்தது.
அவனைப் பெற்றவளை நினைக்க வைத்தது.
தாங்கள் தவறுசெய்து விட்டோமா? என்ற எண்ணத்தை
அதிகமாக்கியது.


மெய்யம்மை மனச்சஞ்சலத்துடனேயே பேரனுக்கு
உணவை பரிமாறினார்..அவனோ,தன் தாத்தாவிடம்
தொழிலைப் பற்றிப் பேசிக் கொண்டே உண்டு
முடித்து விட்டு தன்‌அறைக்குச்‌ சென்றான்.


"ஏங்க , சீக்கிரம் இவனுக்கு ஒரு கல்யாணத்தைப்
பண்ணிப் பார்க்கனும். அவனை ஒருத்தி கையில்
ஒப்படைத்தால் தான் நாம் நிம்மதியாகக் கண்ணை
மூட முடியும்.." என்ற மெய்யம்மையிடம்.


"நீ சொல்வதும் சரிதான்.. இனி பெண் பார்க்கும்
வேலையை ஆரம்பிக்க வேண்டியது தான்.." என்றார்
செங்கோடன்.


" ம்ஹூம்! நடப்பதை பேசுங்க.. நாம பார்த்தால்
அவனுக்குப் பிடிக்குமா? அவனை அப்படிச்
சாதரணமாக எடை போடதீங்க. இவனுக்கு ஏற்ற
பெண்ணைக் கண்டுபிடிப்பதே அதிசயம். இதில்
அவளுக்கு இவனைப் பிடிக்கனும். அதை விட
உங்க பேரனுக்குப் பெண்ணைப் பிடிக்கனும்..
எனக்கு இதையெல்லாம் நினைச்சாலே தலை சுத்துது.."



"நீ ஏன் கண்டதையும் நினைச்சு மனசை போட்டு
குழப்பிக்கிறே.. அவனுக்குன்னு ஒருத்தி இனி
மேலா பிறக்கப் போறாள்.. எல்லாம் நல்ல படியாக
நடக்கும்.." என்று மனைவியைச் சமாதானப்படுத்தினார்..



குறள் நெறியனோ, தன் அறை பால்கனியில் நின்று
நிலவை வெறித்துக் கொண்டிருந்தவனுக்கு, தன்
தாத்தா,பாட்டி தன்னைப் பற்றிக் கவலைப்படுவது
தெரியவில்லை..



அவன் மனமோ,நிலையில்லாமல் தவித்தது.. மனம்
பாவினியைச் சுற்றிச் சுற்றியே வந்தது. தன்னைக்
கல்யாணம் செய்வது, பாழும் கிண்ணத்தில்
விழுவதற்குச் சமம்.. என்று அவள் சொன்னதே
அவன் மனதை அரித்தது.



தன்னை எவ்வளவு கேவலமாக நினைத்திருக்கிறாள்.
எல்லாம் அப்படியே அவளின் அப்பன் புத்தி !அவரும் இப்படித் தான் காரணமே இல்லாமல்
தன்னை எதிர்ப்பதை தொழிலாக
வைத்திருப்பவராச்சே..



தன் தாயின் உண்மையான விசுவாசி ! நண்பனின்
மகனை விட நண்பனின் மனைவி மீது தானே பாசம்..
என்று தவறாகவே யோசித்தவனுக்கு,தன் நடத்தை
தான் அவரைத் தன்னிடமிருந்து விலக்கி வைக்கிறது
என்பது அப்போதும் புரியவில்லை..



தன்னைத் தவறாக நினைத்தவளையே மணந்து..
அவருக்கே தான் மருமகன் ஆனால் ? ஒரே அடியில்
இரண்டு மாங்காய் ! என்பார்கள்.. ஆனால், நான்
நினைத்தது மட்டும் நடந்தால் மூன்று மாங்காய் தான்..
என்‌அடி என்றும் தப்பாது . நான் அவருக்கு மருமகன்
ஆனால் , தன் தாயுடன் சேர்ந்து ஆடாமல் என்னிடமும்
அடங்கிப் போவார்..



இவை எல்லாவற்றையும் விடத் தன்னை மணந்தால்,
அந்தப் பெண் தான் உலக்கத்திலேயே பாவப்பட்ட
பெண் ! என்றவளையே மணந்து , அந்தப் பாவப்பட்ட
பெண் நீ தான் ! என்று பாவினிக்கு காட்ட வேண்டும்
என்ற வெறி.. அவன் மனதிற்குள் தீயாய் கொழுந்து
விட்டு எரிந்தது.



திருமணத்திற்கு மனப் பொருத்தமும் , காதலும்
ரொம்ப முக்கியம் என்ற அடிப்படை உண்மையை
அவன் அப்போது உணரவில்லை..


அவன் தன் பலநாள் வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்ளப்
போகிறானோ? இல்லை தானே, தன் வஞ்சத்துக்குப்
பழியாகப் போறானோ‌? தெரியவில்லை ..
விதியின் விளையாட்டை யார் அறிவார்?


அன்பு கொல்லும்..
















































































































































































 

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
327
Reaction score
607
Points
93
அன்பே! அன்பே!கொல்லாதே!

அத்தியாயம் 7

இரவு ஏழு மணி! போக்குவரத்து நிறைந்த அந்தச் சாலையில் ஆட்டோ மிக மெதுவாக ஊர்ந்துச் சென்று கொண்டிருந்தது.. ஆட்டோவின் உள்ளே பாவினியோ மிக டென்ஷனாக அமர்ந்திருந்தாள்.


அவள் மனமோ, இன்று எப்படியாவது குறள்நெறியனைப் பார்த்து விட வேண்டும். அதுவும், அப்பாவுக்குத் தெரியாமல் பார்க்க வேண்டும் என்று துடித்தது.


முதல் முறையாகத் தன் தாயிடம், பழைய பள்ளித் தோழியைப் பார்த்துவிட்டு வருகிறேன், என்று பொய்யுரைத்து விட்டு வந்திருக்கிறாள். அதுவும் அப்பா அலுவலகத்திலிருந்து கிளம்பி விட்டாரா? என்று தன் தாயிடம் உறுதிப்படுத்திய பின்னரே தைரியமாகக் கிளம்பி வந்திருக்கிறாள்.



காலையில் அவளை அழைத்து, ஆடிட்டர் தயங்கியபடியே குறள் நெறியைப் பற்றிய விஷயத்தைச் சொன்னப் போது,
பாவினி முதலில் முடியாது என்று தான் மறுத்தாள்.


ஆனால்,சரியோ? தப்போ? தன்னால் யாருக்கும் எந்த நஷ்டமும் வேண்டாமென்று யோசித்தே அவனைச் சந்திக்கச் சம்மதித்தாள்.


ஆடிட்டர், அவளிடம் அவனைச் சந்திக்கச் சொன்ன பொழுது, "இந்தக் கம்பெனிப் போனால் போகட்டுமே சார்..நமக்கு வேறு நல்ல கம்பெனிகள் இல்லையா? "என்றவளிடம்..


" நீ சொல்வது போல், கே.என். குரூப் கம்பெனிகள் இல்லைன்னாலும் ,வேறு எத்தனையோ நல்ல கம்பெனிகள் நம் கைவசம் இருக்கத் தான் செய்கிறது . ஆனால், அவரைப் பகைத்துக் கொண்டால் ,நிச்சயமாக நம் நற்பெயரைக் கெடுத்து அடியோடு அழித்து விடுவார் என்பது தான் என் பெரும் கவலையே பாவினி.." என்றார்.


ஆடிட்டர் சொல்வதைப் போல் , அக்கோண்ட்சில் குட்வில் (நற்பெயர்)கம்பெனிகளுக்கு மட்டும் முக்கியமில்லை.. ஆடிட்டருக்கும் மிக முக்கியமான ஒன்று ! அதனால் தான், ஆடிட்டர் அவளிடம் குறள்நெறியனைச் சந்திக்க முடியுமா ? என்று கேட்டார்.


அந்த அரக்கன் ஆடிட்டரிடம்.. அவனுடைய கம்பெனியின் வேலை தாமதமானதால் மட்டும், ஆடிட்டரை மாற்றவில்லை.. பாவினியின் திமிரான செயலும் ஒரு காரணம் என்று அவளையும் வேண்டுமென்றே இந்த விஷயத்தில் கோர்த்து விட்டிருக்கான்.


குறள் நெறியனின் கம்பெனி மூலம் வரும் வருமானம் ஆடிட்டருக்கு மிகப் பெரும் தொகை.. அதனாலேயே, நிறைய ஆட்களை வேலைக்கு அமர்த்தியிருந்தார்.

இப்போது குறள்நெறியனின் கே.என். குரூப் கம்பெனியின் ஆடிட்டிங் கை நழுவிப் போனால் , அவரின் வருமானம் தடைபடும். அதனால், நிறையப் பேரை வேலையை விட்டு எடுக்க வேண்டி இருக்கும். அது தான் அவரைக் கலங்க வைத்தது.


குறள் நெறியனின் உதவியாளன் 'நிலன்'தான், பாவினியை வந்து தங்கள் எம்.டியை பார்க்கச் சொல்லுங்கள்.. அவங்க வந்து பேசினால் ,ஒரு வேளை அவர் மனம் மாறக் கூடும் என்று கூறியிருந்தான்.



அதனாலேயே, ஆடிட்டரும் பலமுறை யோசித்த பின்னரே அவளிடம் சொன்னார். அதுவும் அவன் பெண்களிடம் கோப்பபடுவானே தவிர.. எந்த தவறானக் கண்ணோட்டத்திலும் பார்க்கவும் மாட்டான், நடந்து கொள்ளவும் மாட்டான் என்று உறுதியாக அவருக்குத் தெரியும் என்பதால் தான், பாவினியை அவனைச் சந்திக்க அனுப்பினார்.



ஆனால், அது மற்ற பெண்களிடம் தான்..பாவினியிடம் இல்லை என்பது அவருக்கு அப்போது தெரியவில்லை.. தெரிந்திருந்தால் அவளை அனுப்பி இருக்க மாட்டார்.


பாவினியோ, மனதிற்குள் , ' அவனை என்று பார்த்தோமோ ! அன்றிலிருந்தே, நமக்குப் போதாத காலம் ஆரம்பித்து விட்டது . தேவையில்லாத பிரச்சனைகள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக வருகிறது..' என்று நினைத்தாள்.


தனக்காக இல்லாவிட்டாலும், தன்னுடன் வேலைப் பார்க்கும் மற்றவர்களுக்காக... அவளுக்குச் கொஞ்சமும், சம்மந்தமும், தேவையுமில்லாத பிரச்சனைக்காக அவனைச் சந்தித்துப் பேச வந்திருக்கிறாள்.


மனதிற்குள் அவனிடம் எப்படி பொறுமையாகப் பேச வேண்டுமென்று பல முறை ஒத்திகைப் பார்த்து விட்டுத் தான் வந்திருந்தாள்.

பாவினிக்கு தான் நினைத்து வந்ததது நடக்குமா? என்று தெரியவில்லை.. ஆனாலும், நடக்க வேண்டும் ! என்று மனதார கடவுளிடம் வேண்டிக் கொண்டாள்.


சரியாக ஏழரை மணிக்கு, கே.என். குழுமத்தின் முன் ஆட்டோ வந்து நின்றது. ஆட்டோவை சிறுது நேரம் காத்திருக்க சொல்லிவிட்டு , உள்ளே சென்றவளை வாட்ச்மேன் தடுத்து நிறுத்தி என்னவென்று விசாரித்தார்.


எம்.டியை சந்திக்க வந்திருப்பதாக சொன்னவுடன் யோசனையாக பார்த்தவர், அவளை அங்கேயே காத்திருக்குமாறு கூறிவிட்டு,யாரையோ தொலைபேசியில் அழைத்துப் பேசினார்.


அந்தப்பக்கம் தொலைப் பேசியில் என்ன சொன்னார்களோ? உடனே, அவளை உள்ளே போக அனுமதித்தார்..


பாவினியும் அவரிடம் நன்றி கூறிவிட்டு உள்ளே சென்றவள், ரிசப்ஷனில் தன்னை அறிமுகபடுத்திக் கொண்டு, தான் வந்த காரணத்தைச் சொன்னவுடனேயே, அவளைக் குறள்நெறியன் அறையைக் காட்டிப் போகச் சொன்னது அவளுக்கு அதிசயமாக இருந்தது. தான் வருவது முன்கூட்டியே தெரியும் என்பதைப் போலேவே நடந்து கொள்கிறார்களே ! என்று நினைத்தாள்.


ரிசப்ஷனிஸ்ட் காட்டிய அறையின் வாயிலில் கம்பீரமாக , எம்.டி .குறள் நெறியன் என்றிருந்த பெயர் பலகை.. அவளின் மனதிற்குள் சிறு துளிப் பயத்தை வரவழைத்தது. இருந்தாலும், தன் வழக்கமான தைரியத்துடன் அறைக் கதவை மெல்லமாக தட்டி அனுமதி பெற்றுக் கொண்டு உள்ளே சென்றாள்.


குறள்நெறியனோ,கால் மேல் கால் போட்டு சூழல் நாற்காலியில் அமர்ந்திருந்தவன், இவள் உள்ளே நுழைந்ததும்..அவளையே விழி எடுக்காதுப் பார்த்தான்.


பாவினியோ,அவனைப் பார்தத்ததும் பேசா மடந்தையாக மலங்க விழித்தபடி நின்றாள்!


அவள் பேசாமல் நிற்பதைக் கண்ட குறள்நெறியன், மனதிற்குள், அவளை வரவழைத்து விட்டதை நினைத்து மகிழ்ந்த படியே, "சொல்லுங்க மிஸ் பாவினி தூயவன் என்னை எதற்காகப் பார்க்க வந்திருக்கீங்க.. " என்றான்.


பாவினியோ, அவன் தன் முழுப்பெயரைச் சொன்னதைக் கேட்டு மனதிற்குள் அதிர்ந்தவள்,அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல்,தன் வழக்கமான நிமிர்வுடன், "நீங்க சொன்ன டைம்முக்கு எங்க ஆடிட்டர் உங்க கம்பெனி அக்கோண்ட்ஸ்சை முடித்துக் கொடுத்துவிட்டாரே.. அப்புறம், ஏன்? நீங்க உங்க கம்பெனிக்கு வேறு ஆடிட்டரை மாத்துனீங்க.."என்று அதிகாரமாகக் கேட்டவளை ஆராய்ச்சி பார்வை பார்த்தபடியே..


"எக்ஸ்க்யூஸ்மீ நீ பேசுவது எனக்குப் புரியலை.." என்று உடனே ஒருமைக்குத் தாவினான்.


" இதில் புரியாமல் போக என்ன இருக்கு..நான் தமிழில் தானே கேட்டேன்.."என்றவளின் மனதிற்குள், அவன் அவளை 'நீ 'என்று ஒருமையில் அழைத்தது மனதை நெருடச் செய்தது.


" நீ கேட்டதுப் புரிந்தது.. ஆனால், என்னைக் கேள்வி கேட்கும் அதிகாரத்தை உனக்கு யார் கொடுத்தது..? என் கம்பெனி ! என் இஷ்டம் ! நான் யாரை வேணாலும் மாத்துவேன்.."


"உங்க கம்பெனி தான்.. யார் இல்லைன்னு சொன்னா? ஆனால், இத்தனை நாட்கள் இல்லாமல் இந்த முறை ஏன் இப்படிச் செய்யனும்.."


"அவசியம் பதில் சொல்லனுமா..?"

" கண்டிப்பாச் சொல்லனும்.."

"நான் எதற்கு உன்னிடம் சொல்லனும்..?"

"நானும் பாதிக்கப்பட்டிருக்கேன்.."

"அதற்கு நான் ஒன்னும் செய்ய முடியாது.."

"உங்களால் என் வேலை கேள்விக் குறியாகியிருக்கு.."

"ஓ ..! வெரிகுட் .. அந்த ஆடிட்டருக்கு இப்பத் தான் புத்தி வந்திருக்கு போல.. யாரை எங்கே வைக்கனும்ன்னு இப்பவாவது தெரிந்ததே..தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு முதலில் யார்..யாரிடம், எப்படி நடந்துகொள்ளனும்ன்னு கத்துக் கொடுக்கச் சொல்.."


"மிஸ்டர் குறள்நெறியன் மரியாதையாகப் பேசுங்க.. எனக்கு வேலை போறதில் உங்களுக்கு என்ன அப்படியொரு ஆனந்தம். நான் என்‌ பொறுமையை இழுத்துப் பிடிச்சுட்டுத் தான் பேசறேன்.."


"வாவ் !வெரிகுட் ..என்னால் நீ எப்படிப் பொறுமையாக இருக்கனும்ன்னு கத்துக்கிட்ட போல.." என்றான் நக்கலாக.. அவளிடம் வார்த்தையாடுவது அவனுக்கு ஏனோ ரொம்ப பிடித்திருந்தது.


அவளோ, பற்களைக் கடித்துத் தன் கோபத்தை அடக்கிக் கொண்டு.. "நீங்க நான் கேட்டதற்குப் பதிலே சொல்லலை.."


"என் செயலுக்கு நான் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.."

"என்னிடம் சொல்லித் தான் ஆகனும்.."


"உன்னிடம் சொல்ல நீ என்ன‌ என் பொண்டாட்டியா..?"


"மிஸ்டர் மரியாதையா பேசுங்க.?"


"ஏய்..என் இடத்துக்கு வந்து என்னையே கேள்வி கேட்கிறே..உனக்கு என்ன மரியாதை! ரொம்பத் தைரியம் தான்.."


"என் தைரியத்தின் அளவு அன்றே உங்களுக்கு புரிந்திருக்கும்ன்னு நினைக்கிறேன். நான் ஒன்னும் ஆசைப்பட்டு இங்கு வரலை.. வேறு வழியில்லாமல் தா வந்தேன். அதுவும் எனக்காக இல்லை..என்னுடன் வேலை பார்க்கும் மற்றவர்களுக்காக.."


"ஓ..! அப்போ உனக்காக வரலை.." என்றவன்,வேண்டும் என்றே அவளைச் சீண்டினான்.


"ஆமாம், எனக்காக வரலை..பதில் சொல்லுங்க ஏன்? ஆடிட்டரை மாத்தினீங்க.."


"ம்..! என்னையே மிரட்டுறே?"


"நான் ஒன்னும் மிரட்டலை.. காரணத்தைக் கேட்கத் தான் வந்தேன்.."


"காரணம் தெரிந்து கொள்ள வந்தவள், இப்படி எண்ணெய்யில் போட்ட அப்பளம் மாதிரி கொதிக்கக் கூடாது..பொறுமையா ,மரியாதையா கேட்கனும்.."


"இப்ப நீங்க பதில் சொல்ல முடியுமா? முடியாதா?"

"சொல்ல முடியாதுன்னா என்ன செய்வே?"

"போட நீயும் உன் பதிலும்ன்னு போய்ட்டே இருப்பேன்.."


"ஓ..! என்னைப் போடான்னு சொல்லும்மளவு உனக்குத் தைரியமா.? இது என் இடம்.. இந்த அறையில் உன்னை நான் என்ன வேணும்னாலும் செய்யலாம் தெரியுமா?"



"உங்க ஆண் வார்க்கத்திற்கு, காலம்..காலமாக, பெண்களை இதைச் சொல்லித் தானே பயமுறுத்தி வச்சிருக்கீங்க..உங்கள மாதிரி ஆளை இந்த இரவு வேளையில் தனியாக பார்க்க வந்திருக்கிறேன்னா? அப்போதே என் தைரியத்தை நீங்க தெரிந்து கொள்ளலையா? நான் பாவினிதூயவன். உங்க மிரட்டலுக்கு பயப்படும் ஆள் நானில்லை.."


" சூப்பர்..பட் எனக்கு மிரட்டிப் பழக்கமில்லை..செய்து தான் பழக்கம் .."என்றவன் அவளை ஆழப் பார்த்தான்.


அவன் சொன்னதைக் கேட்டவளின் கண்களில் ஒரே ஒரு நொடி வந்து சென்ற பயத்தைக் கண்டான்.. ஆனால், அது பொய்யோ! என்பதைப் போல் அடுத்த நொடியே தன் இயல்பான தைரியத்துடனும்,நிமிர்வுடனும் நின்றவளை ரசனையுடன் பார்த்தான். அதற்கு மேல் அவளைச் சீண்டாமல் விசயத்திற்கு வந்தான்.


"இங்க பாரு பாவினி எனக்கு எந்த வேலையும் டைம்முக்கு நடக்கனும் ..லேட் ஆனாப் பிடிக்காது.. இந்த முறை என்னை அவர் ரொம்பவே டென்ஷன் பண்ணிட்டார். சோ..இனி , எனக்கு அவர் தேவையில்லை .."என்று நிறுத்தி நிதானமாக கூறியவனிடம்..


"அப்புறம் எதற்கு என்னால் தான் ..இந்தப் பிரச்சினைன்னு அவரிடம் சொல்லியிருக்கீங்க.."


"ம்..!‌ நீயும் ஒரு காரணம் தான்.." என்றவன், "அப்படிச் சொன்னால் தானே நீ என்னைப் பார்க்க வருவாய்.."

" ஹலோ மிஸ்டர் உங்க மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கீங்க.."

" ம்..! நான் என்னென்னவோ நினைச்சுருக்கேன் அதையெல்லாம் உங்கிட்ட சொல்ல முடியுமா ?" என்றவனிடம் பற்களைக் கடித்தப் படியே , "இப்ப என்ன தான் சொல்றீங்க.." என்றாள்.


" ஓ..! நான் சொன்னா நீ செய்வாயா?"


" நீங்க என் பொறுமையை ரொம்பச் சோதிக்கிறீங்க.."


" அப்படியா..?" என்று புருவத்தை உயர்த்திவனைப் பார்த்தவளுக்கு .. கோபம் எல்லையைக் கடக்க ..இனி இவனிடம் பேசப் பயனில்லை என்று நினைத்தவள்.. திரும்பி நடக்கத் தொடங்கினாள்.


அவனோ,அவளின் எண்ணத்தைப் புரிந்து கொண்டு ,வேகமாக எழுந்து சென்று அவள் வழியை மறைத்து நின்றவன், " மிஸ் பாவினி தூயவன் .. நீங்க வந்த காரியம் இன்னும் முடியலைன்னு நினைக்கிறேன்.. "என்றான் நக்கலாக..


" மிஸ்டர் முதல் வழியை விடுங்க..உங்களைப் பற்றி தெரிந்தும் வந்தேன் பாருங்க என்னைச் சொல்லனும்.."


" ஹப்பா .. மிஸ்டர் தூயவன் பொண்ணுக்கு ! என்ன கோவம் வருது.. தூயவனைப் போலவே கோபத்திற்குப் பஞ்சமில்லை.."


" தெரியுது தானே ! அப்போ வழியை விடுங்க..
உங்களிடம் வெட்டிக் கதைப் பேச எனக்கு நேரமில்லை.."என்றவளிடம்..


"ஓ..! அப்படியா ! " எனக்கு மட்டும் வேலை வெட்டி இல்லையா? என் நேரத்தை நீ தான் வீணடிக்கிறாய்.."


" நா ஒன்னும் வெட்டியாப் பேச வரலை..அன்று நடந்ததற்கு முழு பொறுப்பு நீங்க தான் .. ஆனால், இன்று வேண்டுமென்றே என்னை வைத்து பிரச்சினை செய்றீங்க.. "என்றவுடன்.


" ஆமாம்.. உன்னை வேண்டும்மென்று தான் இந்த பிரச்சினையில் இழுத்தேன். உன்னை இங்கே வர வைத்தேன்..உன்னால் என்னை என்ன செய்ய‌ முடியும்? வேண்டுமானால் அன்று நடந்ததற்கு என்னிடம் மன்னிப்புக் கேள்! அதன் பிறகு என்ன செய்யலாம்ன்னு யோசிக்கிறேன்.."என்றான் அடங்காத கோபத்துடன்.


" நெவர் சான்ஸ் .. அன்று முழு தவறும் உங்கள் மீது தான் .. நீங்க தான் வேகமாக வந்து.. எதிரில் வந்த என்னைக் கவனிக்காமல் மோதினதுமில்லாமல்,என் கழுத்தையும் பிடிச்சீங்க ... நியாயப்படி அதற்கு நீங்க தான் முதலில் என்னிடம் மன்னிப்பு கேட்கனும்.. "


" ஹலோ நீ யாருகிட்ட பேசிட்டீருங்கன்னு தெரியுமா? தி கிரேட் பிஸினஸ் மேக்னட் குறள்நெறியனிடம் என்பதை மறந்து விடாதே! மன்னிப்பு என்பது என் அகராதியிலேயே கிடையாது. உனக்கெல்லாம் என்னிடம் பேசும் தகுதியே கிடையாது. ஞாபகம் வைத்துக் கொள்.." என்றான் வார்த்தைகளில் அனல் பறக்க..


அவனின் வார்த்தைகள் அவளையும் கோபப்படுத்த.. "அப்புறம் எதற்கு என்ன வரவழைத்து பேசறீங்க..உங்க தகுதிக்கு உகந்த ஆட்களுடன் பேசுங்க..உங்களை மாதிரி ஒரு ஆளை இனி என் வாழ்க்கையில் பார்க்கவே கூடாது..குட் பை.." என்று திரும்பியவளிடம் ..


அவனோ, நன்றாக வழியை மறைத்து நின்றபடியே, "அப்படியெல்லாம் எளிதாக உன்னை விட முடியாது பெண்ணே! நீ காரணத்தையும் தெரிந்து கொண்டு, அதற்கான பதிலையும் தெரிந்து கொண்டே போ.."என்றவனிடம் முகத்தை திருப்பிக் கொண்டு நின்றாள்.


"என்னை இந்த அளவு இறங்க வைத்தது உன்னோட இந்த திமிர்‌ தான் ! உன்னால் தான் நான் ஆடிட்டரை மாற்றி இங்கே உன்னை வரவழைத்தேன். அது மட்டுமின்றி உன் ஃப்ரெண்டிடம் அன்று என்ன சொன்னே? என்னைக் கல்யாணம் செய்யறவங்க தான் உலகத்திலேயே ரொம்ப பாவப்பட்ட பெண் என்றாயே.."என்று அவன் சொன்னவுடன் அவனை திகைத்துப் போய் பார்த்தாள்.


அவளின் திகைத்த பார்வையை உள்வாங்கிய படியே, "நான் அன்னைக்கு நீ பேசியது எல்லாத்தையும் கேட்டேன். பொது இடத்தில் கொஞ்சம் கூட நாவடக்கம் இல்லாம இப்படித் தான் பேசுவீயா? அதுவும் என்னைப் பற்றி முழுதும் தெரியாமல்.. இது தான் உங்க வீட்டில் கற்றுக் கொடுத்தார்களா?" என்றவுடன்..


பாவினி கூனிக் குறுகி நின்றாள். அவள் செய்தது தவறு தானே.. அதுமட்டுமின்றி, தன்னால் தன் தாய், தந்தையின் வளர்ப்பையே அவன் குறை கூறும்மளவு நடந்து விட்டோமே.. என்று தவித்தாள்.


அவளின் முகத்தில் தெரிந்த தவிப்பை பார்த்தபடியே, "நீ நடந்து கொண்டதற்கும்,என்னைப் பேசியதற்கும் ஒன்னும் செய்யாமல் அமைதியாகப் போவதற்கு நான் ஒன்னும் புத்தர் இல்லை.." என்றவனிடம்..


" சாரி உங்களைப் பற்றி எதுவும் தெரியாமல் நான் அன்று பொது இடத்தில் அப்படிப் பேசி இருக்கக் கூடாது தான் . அதற்காக நான் உங்களிடம் மனதார மன்னிப்பு கேட்கிறேன்.." என்றவளிடம்..


" எனக்கு இப்போ உன் மன்னிப்பு தேவை இல்லை.. முதலில் உன்னை மன்னிப்பு தான் கேட்க வைக்கனும்ன்னு நினைத்தேன். ஆனால் ,என்னை திருமணம் செய்து கொள்ளும் பெண் ரொம்ப பாவப்பட்டவள் என்று சொன்ன உன்னையே ! ஏன்? நான் திருமணம் செய்யக் கூடாது என்று நினைக்கத் தோன்றுகிறது.." என்றவனை ஒரு நொடி திகைத்துப் பார்த்த பாவினி, அடுத்த நொடி அளவுகடந்த கோபத்துடன் அவனை அடிக்க கை ஓங்கி விட்டாள்.


அவனோ, சட்டென்று அவளின் கைகளைப் பிடித்து தடுத்த படியே அவளை ஒரு சுற்று சுற்றி.. பின்னோடு வளைத்துப் பிடித்தவன், " ஆ..ஊன்னா கையை ஓங்கும் இந்த திமிர் தான்டி எனக்கு உன்னைப் பழிவாங்க தூண்டிகிறது. அதே சமயம் உன்னைப் பிடிக்க காரணமாகவும் இருக்கு.."என்றவனிடம்.


" மிஸ்டர் முதலில் என் கையை விடுங்கள்..இது என்ன அராஜகம் ..இப்ப கையை விடலைன்னா சத்தம் போட்டு எல்லாரையும் கூப்பிடுவேன்.."


" ஹலோ மைடியர் இஃது என் ஆஃபிஸ் ..நீ என்ன கத்தினாலும் என் அனுமதி இல்லாமல் ஓர் ஆள் கூட உள்ளே நுழைய முடியாது.."என்றவனிடம் மனதில் அச்சம் பிறக்க..


" பிளீஸ் முதலில் கையை விடுங்க.. வலிக்குது.." என்று கெஞ்சியவளை அதற்கு மேல் வஞ்சிக்காமல் கையை விட்டவன்..


"மிஸ் பாவினி தூயவன் எப்போது மிஸஸ் குறள்நெறியன் ஆவதுன்னு சொன்னீனா எனக்கு வசதியாக இருக்கும்.." என்றவனிடம்..


அவன் அழுத்தி பிடித்த கைகளை மற்றொரு கை கொண்டு தடவியப் படியே, "நீங்க நினைப்பது இந்த ஜென்மத்தில் நடக்காது.."என்றபடி மீண்டும் வெளியில் செல்ல நகர்நதவளைப் பிடித்து தடுத்து நிறுத்தியவன்.


அவளின் கண்களை ஆழப் பார்த்தபடியே, " அது நடக்குதா? இல்லையான்னு சீக்கிரம் பார்ப்பே மைடியர் பாவினி.. ஆமாம் , உனக்கு யார் இந்த பேரை வைத்தாங்க..பேருக்கும் உன் குணத்துக்கும் கொஞ்சம் கூட சம்மந்தமே இல்லை .."என்றவனை பதிலே சொல்லாமல் முறைத்தாள் .


அவள் முறைப்பதை கண்டு கொள்ளாமல், "பா..வினி .." என்று ராகம் இழுத்தவன், "எத்தனை அழகான பெயர் ! இந்தப் பேருக்கு என்ன அர்த்தமன்னு தெரியுமா..?பாட்டைப் போல் இனிமையானவள்ன்னு அர்த்தம். ஆனால், நீ அப்படியா..?எப்ப பாரு பட்டாசு மாதிரியே படபடக்கிறது.." என்றவனிடம் கோபமாக..


" உங்க பேருக்கும் தான் குறளைப் போல் வழிநடத்துபவன் என்று பொருள்..ஆனால் , நீங்க அப்படியா இருக்கீங்க..?" என்றவளை மெச்சும் பார்வை பார்த்தவன்.. " ஹப்பா நம் திருமணத்திற்குப் பின் எனக்குப் போரே அடிக்காது..நீ இப்படி என்னிடம் வாயாடிட்டே இருந்தால் நல்லா பொழுது போகும்.."


" ஹலோ நடக்கவே..நடக்காதைப் பற்றிக் கனவு காண்பது அறிவீனம். மரியாதையாக வழியை விடுங்கள் நான் போகனும்.. " என்றவளிடம்..


" நடக்காததையும் நடக்க வைப்பவன் தான் இந்த குறள்நெறியன். ஞாபகம் வைத்துக்கோ இன்னும் ஒரே மாதத்தில் உன்னைக் திருமணம் பண்ணிக் காட்டறேனா? இல்லையான்னு பாரு.." எனறவனைக் கண்கள் சிவக்கத் தீ பார்வைப் பார்த்தாள்.


அவனோ , அவளின் பார்வையை அலட்ச்சியப்படுத்திவிட்டு, " மை டியர் பாவினி நீ தலைகீழாக நின்றாலும் என் முடிவு மாறாது.."


"அதையும் பார்ப்போம்.." என்றவளிடம்..


" கண்டிப்பா பார்ப்பீங்க மை டியர்.. அப்புறம்
உங்க ஆடிட்டர் கிட்ட நான் யோசித்து விட்டு ஒரு வாரத்தில் அவரையே தொடர்ந்து ஆடிட்டராக்குவது பற்றி முடிவு சொல்கிறேன்னு சொல்லு..இப்ப பாவினி தூயவனா போங்க .. விரைவில் மிஸஸ் குறள்நெறியனா வருவீங்க "என்று கேலி செய்தவனைப் பார்த்தவளுக்கு..மனதிற்குள் சிறு நடுக்கம் வந்தது. இவனிடம் பதில் பேசுவதே அறிவீனம்..என்று நினைத்து நடந்தாள்.


அவள் பதிலே சொல்லாமல் போனதைப் பார்த்து
" பாவினி எதில் வந்தே..தனியாக போய்க் கொள்வாயா? நான் கொண்டு வந்து விடட்டுமா..? "என்று அடுக்கடுக்காகக் கேள்வி கேட்டவனிடம் பதிலே சொல்லாமல் நடந்தாள்.



குறள்நெறியனுக்கோ அவளின் அலட்சியம் ஆத்திரத்தை தந்தது..உடனே அவளை நோக்கி வேகமாகச் சென்று அவள் கைபிடித்து இழுத்தவன்,
" ஏண்டி கேள்வி கேட்டாப் பதில் சொல்லத் தெரியாதா? உடம்பு பூராக் கொழுப்பு.." என்று பல்லைக் கடித்தவனிடம்..



" ஆமாம் நீங்க ஆகிப்போட்டுச் சாப்பிட்டேன் பாருங்க அந்த கொழுப்பு தான்..இங்கு வந்த எனக்கு..போகவும் வழி தெரியும்.. நீங்க உங்க வேலையைப் பாருங்க.." என்றவள், அவனின் பதிலை எதிர்பார்க்காமல் .. அவனின் கைகளைத் தட்டிவிட்டுச் சென்றாள்..




குறள்நெறியனோ,அவள் போவதையே பார்த்துக் கொண்டு நின்றவன். 'இந்தத் திமிர் தான் டீ எனக்கு உன்னிடம் பிடிச்சதே..அதை அடக்காமல் நான்
விடமாட்டேன் டீ .. 'என்று மனதிற்குள் சவால் விட்டான்.


ஆனால் , அஃது அவளின் திமிர் இல்லை ..நிமிர்வு என்று அவனுக்கு அப்போது தெரியவில்லை..


அவன் அவளை அடக்கி ஆளப்போகிறானா?இல்லை அவளிடம் அடங்கிப் போகிறானா? அது காலத்தின் கையில்..


அன்பு கொல்லும்..

























 

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
327
Reaction score
607
Points
93
அன்பே!அன்பே! கொல்லாதே!

அத்தியாயம் 8


குறள்நெறியனைச் சந்தித்து விட்டு வந்ததிலிருந்தே, பாவினிக்கு மனதிற்குள் அவன் மேல் இனம்புரியாப் பயம் ஆட்கொண்டது.


ஆடிட்டர் சொன்னது போல், அவனை எதிர்த்தவர்களை அழிக்காமல் விடமாட்டான் போல.. ஏன் தான் அவனைச் சந்தித்தோமோ..? என்று மனம் கலங்கியது..


அவன் தன்னிடம் நடந்து கொண்ட முறை அவளை மேலும் கலவரப்படுத்தியது. தன்னைத் திருமணம் புரிந்து கொள்வேன் என்று அவன் சவால் விட்டது .. அவள் மனதிற்குள் ப்ரளயத்தையே ஏற்படுத்தியது.


அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதற்கேற்ப.. அவளின் மனக்குழப்பம் முகத்தில் தெரிந்தது.


இரவு உணவு உண்ணும் சமயத்தில் பாவினியன் அமைதி குடும்பத்தாருக்கு யோசனையைக் கொடுத்தது. யாருடனும் பேசாமல் யோசனையுடனேயே உணவைக் கொறித்துக் கொண்டிருந்த மகளின் கைகளை மென்மையாக பற்றிய தூயவன்.. "பவி என்னடா பயங்கர யோசனையில் இருக்கே.. ஏதாவது பிரச்சனையா.." என்றார்.


தந்தையின் கேள்வியில் திகைத்தவள், "அப்படியெல்லாம் எதுவும் இல்லைப்பா.. ஒரு வேலையை முடிக்கனும் .. அதைப் பற்றித் தான் யோசித்துட்டு இருந்தேன்.."


"ஓ..! வேறொன்றும் இல்லையே.. நானும் உங்கிட்ட ஒரு முக்கியமான விசயம் பேசனும் பவி.."என்றவரிடம்..


"என்ன விசயம்ப்பா சொல்லுங்க.."


"சாப்பிட்டு முடி பேசலாம்.." என்றவரிடம், தலையை ஆட்டிவிட்டு அவசரமாகத் தட்டில் இருந்த உணவை அள்ளி வாயில் போட்டவளிடம்..


"பவிக்கா சாய்ங்காலம் எங்கே போனே..? நான் உன்னை அப்பா ஆஃபிஸ் பக்கம் பார்த்தேனே!" என்றவுடன் அவளுக்கு உணவு புரை ஏறியது..இருமியபடியே தம்பியைப் பார்த்து விழித்தாள்.


வளர்பிறையோ, இருமிய மகளின் தலையை லேசாகத் தட்டியவர், குடிக்கத் தண்ணீரை எடுத்துக் கொடுத்து விட்டு, "சாப்பிடும் போது பேசாமல் சாப்பிட முடியாதா..? " என்று மகனைக் கடிந்தார்.


தூயவனும் யோசனையாக மகளைப் பார்க்கவும்.. பாவினிக்கு நெஞ்சுக்குள் சிறு பயம் எட்டிப் பார்த்தது. அதற்குள் வளர்பிறையோ, "யாரோ பழைய ஃப்ரெண்டா பார்த்துட்டு வரேன்னு போனா.." என்று தக்க சமயத்தில் தன்னை அறியாமலேயே மகளைக் காத்தார்..


பாவினியும், தாய் சொன்னதை ஆமோதிப்பது போல், தந்தையிடமும், தம்பியிடம் தலையை மட்டும் ஆட்டினாள்.



ஆனால், நவிலோ, "எனக்குத் தெரியாமல் யார் அந்தப் பழைய ஃப்ரெண்ட் .."என்று அவளை விடாது கேள்வி கேட்டவனிடம்..


"அது ஸ்கூல் ப்ரெண்ட் உனக்குத் தெரியாதுடா.." என்றவள், தந்தையிடம் திரும்பி, "அப்பா ஏதோ பேசனும்ன்னு சொன்னிங்களே என்னப்பா.." என்று பேச்சை மாற்றினாள்.


"நீ சாப்பிட்டு முடித்துட்டு வாடா பேசலாம்.." என்றவர் கை கழுவி விட்டு சென்று சோஃபாவில் அமர்ந்தார்.


பாவினியும், நவிலும், உண்டு முடித்தவுடன், தந்தையின் அருகில் சென்று அமர்ந்தனர். பாவினியோ, அவரைக் கேள்வியாகப் பார்க்க.. அவரோ, ஒரு நெடிய யோசனைக்குப் பின்.. மகளின் கைகளை எடுத்து தன் கைக்குள் வைத்து அழுத்திய படியே, "பவிம்மா நானும் , அம்மாவும் உன் திருமணத்திற்கு வரன் பார்க்கலாம்ன்னு நினைக்கிறோம். உனக்கும் கல்யாண வயசாயிடுச்சு.. நீ என்னடா சொல்றே.. தரகர் மூலமா.. இரண்டு ,மூன்னு வரனும் வந்துருக்கு. உன்னைக் கேட்டுட்டு முடிவு பண்ணிக்கலாம்ன்னு இருக்கோம்.." என்றவுடன்.


பாவினிக்கோ, சிறு அதிர்வு மனதிற்குள் வந்து சென்றது. அவள் இதுவரை திருமணத்தைப் பற்றியெல்லாம் கனவு கண்டது இல்லை.. தந்தையிடம் என்ன சொல்வதென்று தயங்கிவளுக்கு , ஒரு நொடி குறள்நெறியன் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது.
உடனே, "உங்களுக்கு எது சரின்னு தோனுதோ! அதைச் செய்யுங்கப்பா.. நீங்க என்ன முடிவெடுத்தாலும் எனக்குச் சம்மதமே.. "என்றாள்.



தூயவனோ, மகளின் பதிலில் மனம் நிறைந்தவர்.. அவளைத் தன் தோளோடு அணைத்துக் கொண்டார்.


நவில் அமைதியாக வேடிக்கை பார்த்தவன், "ஏம்ப்பா இப்போ அக்கா கல்யாணத்திற்கு என்ன அவசரம்.. இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமே.. இப்பவே கல்யாணம் பண்ணி வேறு வீட்டுக்கு அனுப்பனுமா?" என்று குறைபட்ட மகனிடம்..


டைனிங் டேபிளை சுத்தம் செய்த படியே, இவர்களின் பேச்சைக் கேட்ட வளர்பிறை.. "டேய் உங்க அக்காவுக்குக் கல்யாண வயசு வந்தாச்சு.. நடக்க வேண்டியது காலா.. காலத்துக்கு.. நடக்கனும் டா.. உனக்காக அவளைக் கல்யாணம் பண்ணிக் கொடுக்காம இங்கேயே வச்சுக்க முடியுமா..?" என்று மகனைக் கடிந்து கொண்ட வளர்பிறையிடம்..


"நான் ஒன்னும் கல்யாணம் பண்ண வேண்டாமன்னு சொல்லலை.. இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டுமே.. பவிக்கா இல்லைன்னா இந்த வீடே வீடாட்டா இருக்காது.. "என்றவன் , சட்டென்று தன் தந்தையிடம் திரும்பி.." அப்பா பவிக்காவுக்குக் பேசாமல் வீட்டோட மாப்பிள்ளை பார்த்துருங்கோ.. அப்போ அக்கா எப்போதும் இங்கேயே இருப்பா.." என்று குழந்தை போல் சொன்ன மகனிடம்..


"நவில் இதுயெல்லாம் உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியலே.. உன்னை யாராவது வீட்டு மாப்பிள்ளையாக்கிக்கக் கேட்டா ? எங்களுக்கு எப்படி இருக்கும் . அது போல் தானே மற்றவர்களுக்கும். நாளைக்கு உனக்குத் திருமணமானால் நீ பெண் வீட்டுக்குப் போய்றுவீயா?"


"ஆ..! நான் எப்படி உங்களை விட்டுப் போக முடியும் . அதெல்லாம் முடியாது.."


"அப்போ உனக்கு ஒரு நியாயம்.. ஊருக்கொரு நியாமா? "
என்ற வளர்பிறையிடம்..


"வளர் கொஞ்சம் அமைதியா இரு.. வீட்டு மாப்பிள்ளையா ?இல்லையா என்பது முக்கியம் இல்லை‌.. எங்கிருந்தாளும், தன்னை நம்பி வரும் பெண்ணை மனம் கோணாமல் , மனுஷியாக மதித்துச் சரிசமாக நடத்துகிறவன் தான் என்னைப் பொறுத்தவரை நல்ல ஆண்மகன். அப்படிப்பட்டவன் தான் என் பொண்ணுக்கு மாப்பிள்ளையாக வரனும்.. "என்றார்.


"அது சரிதான்..ஆனால் நாம விரும்பிற படி மாப்பிள்ளை கிடைக்கும்னுமே.."


" அதெல்லாம் கிடைக்கும். நவில் சொன்ன மாதிரியே வீட்டோட மாப்பிளே பார்த்தா ! என்னான்னு எனக்குப் இப்போ தோனுது. பவியும் எப்போதும் நம்ம கூடவே இருப்பாளே.." என்ற கணவரிடம்.


"அப்பாவும்,மகனும் ஒரு முடிவோடதா இருக்கீங்க போல . நடத்துங்க..நடத்துங்க.. "என்று கேலி செய்த மனைவியிடம்..


"பின்னே இத்தனை வருடம் பாசமா வளர்த்தப் பெண்ணைக் கடமை முடிஞ்சுச்சுனு தூக்கி கொடுக்க முடியுமா..?" என்ற தூயவனிடம் ..


" அது சரிதான்.. காலம் பூரா கூட வாழப் போறவ.. அவளைத் தங்க தட்டில் வைச்சு தாங்கட்டீயும், சகமனுசியா நடத்துனா போதும்.. எதுவாக இருந்தாலும் பவியின் விருப்பத்தையும் கேட்டுக்கோங்க.."


" அவளைக் கேட்காமல் நான் முடிவு செய்வேனா? என்றவர், அமைதியாகத் தன் தோளில் சாய்ந்து நடப்பதை வேடிக்கைப் பார்த்தபடி அமர்ந்திருந்த மகளிடம்.. " என்னடா ஒன்னும் சொல்ல மாட்டீங்கிற.. "என்ற தந்தையிடம்..


"அப்பா...அம்மாவும் ,நீங்களும் என்ன முடிவெடுத்தாலும், எனக்கு முழுச் சம்மதம்.. உங்க விருப்பம் தான் என் விருப்பம்.."என்ற மகளைக் கனிவோடு பார்த்தார்.


" அப்பா ஒன்னா அக்காவுக்கு வீட்டோட மாப்பிளே பாருங்க..இல்லை அக்கோவோட என்ன சீதனமா அனுப்பிருங்க.." என்று சீரியஸாகச் சொன்ன நவிலைப் பார்த்து குடும்பமே சிரித்தது.


"ஏண்டா உங்க அக்கா கூடச் சீதனமா நீ போய்ட்டா ..கடைசிக் காலத்தில் எங்களே யாருட பார்ப்பாங்க.."என்ற வளர்பிறையிடம்..


"நாமிருக்கப் பயமேன். அதெல்லாம் நான் நல்லா பார்த்துக்குவேன். நீங்க கவலைப்படாதீங்க.."


"ஆமா.. இப்ப இப்படித்தா சொல்லுவே.. நாளைக்கு உனக்கும் கல்யாணம்மானா அக்காவாது, அம்மாவாதுன்னு ஓடப் போறே.."


" மை டியர் வளர் டார்லிங் .. உங்க மகன் ஒரு காலமும் அப்படியெல்லாம் செய்ய மாட்டான்.. அதனால் நீங்க இப்படித் தேவை இல்லாததைப் பேசாம ..மை சிஸ்டருக்கு நல்ல மாப்பிளே பாருங்க ஓகே.." என்ற மகனிடம்..


" ம்..! அதை அப்போ பார்ப்போம்.." என்ற வளர்பிறை.. "பவிம்மா நீ போய்ப் படுடா.. உன் முகமெல்லாம் ஏனோ வாடிருக்கு.. "என்றார் மகளிடம் கனிவாக..


பாவினியும் தாய் சொன்னதும்,சரியென்று தலையாட்டிவிட்டு அவள் அறைக்குச் சென்றாள்.


பாவினி சென்றவுடன் மூவரும் தரகர் கொடுத்துச் சென்ற வரன்களைப் பற்றிக் கலந்துப் பேசினார்கள்.


தன் அறைக்கு வந்து படுத்த பாவினிக்கு, மனம் முழுவதும் குழப்பமே நிறைந்திருந்தது.. அவள் இதுவரை திருமணம் பற்றியெல்லாம் எண்ணிப்பார்த்தது இல்லை.. தீடிரென்று தந்தை திருமணத்தைப் பற்றிப் பேசியதும்..என்ன சொல்வதென்று தெரியாதவள், முடிவை அவர் கையிலேயே விட்டுவிட்டாள்.


ஆனால் ,இன்று குறள்நெறியன் பேசியது தான் அவளைப் பயமுறுத்தியது.. அவன் சொன்னது போல் தன்னிடம் நடந்து கொள்வானா..? எத்தனை திமிராகப் பேசினான். இன்று அவனைப் பார்க்கவே போய்யிருக்கக் கூடாது என்று காலம் கடந்தது நினைத்தாள்..


இங்கே இவள் அவனைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்க.. அங்கே குறள்நெறியனோ, தன் நினைத்ததை எப்படிச் செயல் படுத்துவது என்று யோசித்துக் கொண்டிருந்தான்.


குறள்நெறியனோ ,அன்று பொழுது விடிந்து வெகு நேரம் சென்றும், உறக்கம் கலைந்தாலும் , படுக்கையிலிருந்து எழாமல் படுத்துதே கிடந்தான். இரவு வெகு நேரம் விழித்து வேலை செய்தவன், நடு இரவிற்கு மேல் தான் உறங்கினான்.


எப்போதும் எத்தனை மணிக்குப் படுத்தாலும், தன் வழக்கமான நேரத்தில் விழித்து உடற்பயிற்சி செய்பவன், அன்று படுக்கையை விட்டு எழவே மனமில்லாமல் படுத்து இருந்தான்..


நேற்று இரவு அவளைச் சந்தித்து விட்டு வந்ததிலிருந்தே, அவன் மனம் ஒரு நிலையில் இல்லை.. அவன் சற்றும் எதிர்பாராத ஒர் அழகான சந்திப்பு.


பார்க்கும் பொழுதெல்லாம் தீயாய் காய்கிறவளுக்கு அவளின் அப்பாவைப் போலவே உடம்பு முழுவதும் இவளுக்கும் திமிர்.. தன்னிடத்திற்கே வந்து, தன்னையே கேள்வி கேட்கிறாளென்றால் அவளுக்கு எத்தனை கொழுப்பு இருக்கும்.. கண்டிப்பாக அந்தத் திமிரை அடக்கியே ஆகவேண்டும் என்று மனதிற்குள் எண்ணினான்.


சிறிது நேரம் யோசனையுடனேயே படுத்திருந்தவன்.. நிலனை அலைபேசியில் அழைத்துச் சில விஷயங்களைச் செய்யச் சொல்லிக் கட்டளையிட்டவன்.. வழக்கமான தன் வேலையைச் செய்யத் தொடங்கினான்.


பாவினியோ, இரவு சரியாகத் தூங்கவில்லை..அதனால், காலையில் தாமதமாகவே எழுந்தாள். சோம்பலுடனேயே தன் பணிகளைச் செய்து முடித்தாள்..


மனதிற்குள், குறள்நெறியனைப் பார்த்து வந்ததைப் பற்றி ஆடிட்டரிடம் எப்படிச் சொல்ல வேண்டும்..என்ன சொல்ல வேண்டும்.. என்ற‌ யோசனை செய்து கொண்டே இருந்தாள்.


அவனால் ஏற்பட்ட டென்ஷனில், ஆடிட்டருக்குப் போன் செய்ய மறந்து விட்டாள்.. அது போக வீட்டிலும் கல்யாணப் பேச்சை எடுக்கவும், சுத்தமாக அவரை அழைக்க வேண்டும் என்பதையே மறந்து விட்டாள்.



யோசனையுடனேயே தாய் கொடுத்த உணவை உண்டு விட்டு, மதிய உணவையும் வாங்கித் தன் கைப்பையில் அடைத்துக் கொண்டு அவசரமாகக் கிளம்பினாள்.


அப்போது, நவிலோ, "அக்கா.. இரு ! நீ பஸ்சில் போக வேண்டாம்.. எனக்கு உன்‌ ஆபிஸ் பக்கம் ஒரு வேலை இருக்கு.. வா நானே டிராப் செய்றேன்.." என்ற தம்பியிடம் மறுக்காமல் கிளம்பிச் சென்றாள்..


நவில்லோ, வழ..வழன்னு, பேசியபடியே வண்டி ஓட்டிட்டு வந்தான். பாவினியோ , "ம்..! " மட்டும் சொல்லியபடியே வந்தாள்..


நவிலோ, மனதிற்குள் 'அக்கா நேற்றிலிருந்து ஏதோ ? யோசனையிலேயே இருக்கிறாள்.. கல்யாண விசயம் பேசியதிலிருந்தே ரொம்ப அமைதியாக இருக்கிறாள் .. ஏதாவது பிரச்சனையா ? 'என்று பாவினியைப் பற்றிச் சிந்தித்தபடியே வந்தவன், சாலையோர வளைவில் எதிரில் வந்த காரைக் கவனிக்காமல்.. வண்டியை ஓட்டியவன்.. கடைசி நொடியில் சுதாரித்து விலகுவதற்குள் வண்டி காரில் மோதி விட்டது.


நவிலும்,பாவினியும் நிலை தடுமாறி சாலையின் ஓரத்தில் விழுந்தனர்.. நவில் எப்படியோ சமாளித்து எழுந்து விட்டான். ஆனால் ,பாவினியின் கால் வண்டிக்கடியில் சிக்கிக் கொண்டது..


வணடியின் பாரம் முழுவதும் பாவினியின் வலது கால் மீது விழுந்து அழுத்தியது. அதனால் அவளால் எழ முடியவில்லை.. நவிலோ, பதறிப்போய்க் கீழே விழுந்து கிடந்த வண்டியைத் தூக்கிப் பாவினி எழுவதற்கு உதவ முயன்றான்.


அப்போது, காரிலிருந்து வெகு வேகமாக இறங்கி வந்த குறள்நெறியன்.. " ஏய் உனக்குக் கண்ணு தெரியாதா..? வண்டிக்குப் பின்னாடி பொண்ணு இருந்தால் ராக்கெட் ஓட்டற மாதிரி வண்டியை ஓட்டுவீயா.." என்று கத்தியவன், அப்போது தான்.. கீழே விழுந்து கிடந்த பாவினியைப் பார்த்தான். ஒரு நொடி திகைத்தவன் !உடனே நவிலுடன் சேர்ந்து பாவினி மீது விழுந்து கிடந்த வண்டியை தூக்கி நிறுத்தினான்.


நவிலோ ஹெல்மெட் போட்டிருந்தான். அதனால் அவன் நவிலின் முகத்தைச்‌ சரியாகப் பார்க்கவில்லை.. முகத்தைப் பார்த்திருந்தால் கூட அவனுக்கு அடையாளம் தெரிந்து இருக்காது.. நவிலை அவன் சின்ன வயதில் எப்போதோ பார்த்திருக்கிறான். அஃது அவன் ஞாபகத்தில் இருக்குமோ ?என்பதே சந்தேகம் தான்..


குறள்நெறியனை ,பாவினியும், அங்கு எதிர்பார்க்கவில்லை.. அவனைப் பார்த்ததும் முதலில் அதிர்ந்தவள்,அடுத்த நொடி அவன் முன் தான் இருக்கும் நிலையை எண்ணிக் கூனிக் குறுகினாள்..


நவிலோ, பாவினியின் கைகளைப் பிடித்து அவளை எழுப்ப முயன்றான்.. ஆனால் ,அவளால் அசையவே முடியலை.. அவளின் காலில் நன்றாக அடிபட்டு இருந்தது. வண்டியின் , சைலன்சரின் சூடு.. அவளின் சுடிதார் பேண்ட்டையும் மீறிக் அவளின் முழங்காலைப் பதம் பார்த்திருந்தது. அது மாட்டுமின்றி அவளின் பாதம் வண்டிக்கடியில் சிக்கியதால் பாதத்தில் நல்ல அடி..


சில நிமிடங்களிலேயே பாதம் நன்றாக வீங்கி விட்டது.. அவளால் , காலை அசைக்க முடியாமல் வலியில் முனங்கியவளிடம்..


"பவிக்கா மெதுவா என்னைப் பிடித்து எழ முடியுதான்னு பாரு.." என்ற நவிலிடம்..



" நவில் என்னால் கால் பாதத்தை அசைக்கவே முடியலைடா .." என்று வலியில் கண்களில் நீர் தேங்க கால் பாதங்களைப் பற்றி அழுத்தினாள்.


நவிலுக்கோ, தன்னால் தான்.. அக்காவுக்கு இப்படி அடிபட்டு விட்டது. என்று மனதிற்குள் குற்றவுணர்வில் தவித்தவன், குறள் நெறியன் திட்டியதையோ ! அவன் அருகில் நிற்பதையோ ! பொருட்படுத்தவே இல்லை.. நவிலுக்குக் குறள்நெறியனை தெரியும்.. ஒரு முறை தூயவனை அவசரமாகச் சந்திக்க அலுவலகம் சென்றிருந்த பொழுது, தூரத்தில் பார்த்து இருக்கான். ஆனால், அதை நினைவுப்படுத்திக் கொள்ளும் நிலையில் அவன் இப்போது இல்லை..


" பாவினி உனக்கு நல்லா அடிபட்டு இருக்கு.. அதனால் பாதத்தில் ஃப்ராக்சர் ஏற்பட்டு இருக்கும்ன்னு நினைக்கிறேன்.. காலை அசைக்காதே ! " என்ற குறள்நெறியன்.. நவிலிடம் திரும்பி, " உடனே ஹாஸ்பிட்டல் போகனும். கால் ரொம்ப வீங்குது.." என்றான்..

நவிலோ, அப்போது தான் குறள்நெறியனை நன்றாகப் பார்த்தான்.


உடனே , "நீங்க குறள்நெறியன் தானே ! " என்றவனிடம், லேசாகத் தலையை மட்டும் ஆட்டிய படியே.. "பாவினி உடனே ஹாஸ்பிட்டல் போகனும்..என் காரிலேயே போய்டலாம்.." என்றவனிடம்..


" நீங்க போங்க.. நான் பார்த்துக்கிறேன்.. உங்களுக்கு எதற்கு வீண் சிரமம்.." என்ற பாவினி.. தம்பியிடம் , " நவில், ஏதாவது ஆட்டோ வந்தா நிறுத்து !" என்றாள்.


குறள்நெறியனோ, "அது தான் என் கார் இருக்கு போலாம்ன்னு சொல்றேனே.. நீ எதற்கு இப்போ ஆடாடோவைக் கூப்பிடச் சொல்றே.. உன்னால் முதலில் எழுந்து நிற்க முடியுமா? நீ எப்படி ஆட்டோவில் போவே.." என்றவனிடம்..


" அஃது என்‌ பிரச்சனை.. நீங்க உங்க வேலையைப் பாருங்க .. என் பிர்சசனையை நான் பார்த்துக்கிறேன்.." என்று முகத்தில் அடித்தது போலச் சொன்னப் பாவினியை முறைத்தபடியே..


" நவில் நீ வண்டியை ஓரமாகப் பார்க் பண்ணிட்டு.. என்னுடன் காரில் வா ! நாம இவளைக் கூட்டிட்டு ஹாஸ்பிட்டல் போகலாம் .."என்றான்..


நவிலோ, மந்திரத்திற்குக் கட்டுப்பட்டதைப் போல் அவன் சொன்னதைச் செய்தான்.. பாவினியோ,அவனுடன் வருவதற்குப் பிடிவாதமாக மறுத்தாள்..


குறள்நெறியனோ, அவளின் மறுப்பைச் சிறிதும் பொருட்படுத்தாமல்.. அவளைத் தூக்கிச் சென்று காரில் அமரவைத்தான்.


நவிலிடம், " நீ பின்புறம் ஏறிக் கொள் ! "என்றவன்.. பாவினியை முன்புறம் அமரவைத்தவன்.. அவள் வசதியாக அமர்வதற்குச் சீட்டை பின்புறம் நகர்த்தி வசதி செய்து கொடுத்தான்.


அவளோ, அவன் செய்வதை வெறுப்போடு பார்த்துக் கொண்டிருந்தாள். மனதிற்குள் தன் கையாளாகத நிலையை எண்ணி கலங்கிய படி அமர்ந்திருந்தாள்..


குறள்நெறியனோ, அவளின் வெறுப்பைப் பொருட்படுத்தாமல் அவளுக்குச் சீட் பெல்ட் போட்டு விட்டான். அவளோ, அவன் சீட்பெல்ட் போடும் பொழுது அவனின் தொடுகையிலும்,விரல் தீண்டலிலும் சிலிர்த்தாள். அவன் காருக்கு தூக்கி வரும் பொழுது, கால் வலியிலும், அவன் மீது இருந்த ஆத்திரத்தாலும் அவனின் தொடுகையை அவள் உணரவில்லை.. ஆனால், இப்போது அவனின் மூச்சுக்காற்று தன் மீது தீண்டும்மளவு இருந்த நெருக்கம் அவளை அச்சுறுத்தியது. தன் பேச்சை மதிக்காமல் அவன் நடந்து கொள்வதைக் கண்டு பார்வையில் கனலை உமிழ்ந்தாள்..


அவனோ, அவளின் பார்வையில் தெரிந்த கனலை கண்டு கொள்ளாமல்.. அவளைப் பார்த்து நக்கலாகச் சிரித்தபடியே காரை மருத்துவமனையை நோக்கிச் செலுத்தினான்..


பாவையின் அக்னிப் பார்வையில் மன்னவன் எரிவானோ? இல்லை பாவையின் பார்வையயை குளிர்விப்பானோ ?அது காலத்தின் கையில்..




அன்பு கொல்லும்..
 
Last edited:
Status
Not open for further replies.
Top Bottom