Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


GY NOVEL அன்பே!அன்பே!கொல்லாதே! - Tamil Novel

Status
Not open for further replies.

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
327
Reaction score
607
Points
93
அன்பே! அன்பே!கொல்லாதே!


அத்தியாயம் 9


குறள்நெறியன் மருத்துவமனைக்குச் செல்லும் போதே ..அவனுடைய செல்வாக்கைப் பயன்படுத்திப் ஃபோனில் பேசியே .. சிகிச்சைக்கான அனைத்து ஏற்பாட்டையும் செய்திருந்தான்..


பாவினியோ ,அவனுடைய வேகத்தைக் கண்டு மனதிற்குள் இனம் புரியாதப் பயத்துடன் சிலையாக அமர்ந்திருந்தாள்.. ஆனால், காலின் வலி அவள் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது. நவிலோ ஆயிரம் முறைத் தன் தமக்கையிடம் மன்னிப்பு கேட்டபடியே வந்தான்.


" நவில் நீ வேணும்னா செய்தே? விடுடா.." என்று தம்பியைச் சமாதானப் படுத்தினாள் பாவினி.."


குறள்நெறியனோ ,அவள் முகத்தில் தெரிந்த வலியை உணர்ந்து காரை மருத்துவமனையை நோக்கி வேகமாகச் செலுத்தினான்.. தன்னந்தனியாக வளர்ந்தவனுக்கு அக்கா, தம்பியின் பாசம் வியப்பைத் தந்தது.


மருத்துவமனை வளாகத்தில் காரை நிறுத்தியவன்,ரெடியாக இருந்த ஃஸ்ட்ரெச்சரில் தானே பாவினியைத் தூக்கிச் சென்று படுக்க வைத்தான்..


பாவினிக்குக் உடனடியாக எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. அதில் அவளுக்கு அழுத்தத்தின் காரணமாக லேலசான ஹேர்லைன் ஃப்ராக்சர் ஏற்பட்டிருப்பது தெரிந்தது. மருத்துவர் அறுவைச் சிகிச்சைத் தேவை இல்லை என்று காலில் மாவுக் கட்டு மட்டும் போட்டார்..


இரண்டு வாரம் கண்டிப்பாக ரெஸ்ட் எடுக்கனும். கால்களை அசைக்கவே கூடாது. அப்படி இருந்தால் தான், சீக்கிரம் எலும்பு விரிசல் கூடும்..பொதுவாக 21 நாட்கள் ‌ஆகும். இவர்களுக்குக் சின்ன வயது தானே ! மிக லேசான ப்ராக்சர் என்பதால் விரைவாகக் கூடிவிடும்.. ஆனால், கண்டிப்பாக நடக்கக் கூடாது என்று அறிவுருத்தியிருந்தார்..


குறள்நெறியன் தான், சிகிச்சை முடியும் வரைக் கூடவே இருந்தான்.. நவிலோ, அலுவலகத்திலிருந்த தன் தந்தையை அலைபேசியில் அழைத்து, " அப்பா பவிக்காவுக்கு, சின்ன விபத்து மருத்துவமனையில் இருக்கிறேன்.." என்று மருத்துவ மனையின் பெயரை மட்டும் பதட்டத்துடன் சொல்லி விட்டு அழைப்பைத் துண்டித்தான்.


தூயவனோ, பதற்றத்துடன் கிளம்பினார்.. அன்று நாவேந்தியும் அலுவலகத்திற்கு வந்திருந்தார். விஷயத்தைக் கேள்விப்பட்ட நாவேந்தியும் .. தூயவன் இருந்த மனநிலையைக் கண்டு, அவரைத் தனியாக அனுப்ப மனமில்லாமல், கவினை வரச் சொல்லி மூவருமே நவில் சொன்ன மருத்துவமனைக்கு கிளம்பினார்கள்.


பாவினியை இரண்டு நாட்கள் மட்டும் மருத்துவமனையில் இருக்கச் சொல்லி மருத்துவர் அறிவுருத்தியிருந்தார். பாவினிக்கு மாவுக்கட்டுப் போட்ட பின்னர் படுக்கையில் ஓய்வாக படுத்திருந்தாள்..


குறள்நெறியன், தானே சிகிச்சைக் கட்டணம் முழுவதையும் மருத்துவமனைக்குக் கட்டினான். நவிலோ,தன் தாயுக்கும் அலைபேசியில் அழைத்து விஷயத்தைச் சொல்லிவிட்டு அக்காவை பார்க்க வந்தான்.


அவளோ, ஓய்ந்து போய்ப் படுத்திருந்தாள். நவிலோ, அவளிடம் சென்று, "அக்கா.. இப்ப எப்படி இருக்கு ? வலிக்குதா?"என்றவனிடம்..


"உன்னால் தான்டா இத்தனை பிரச்சினை.. நீ ஒழுங்கா வண்டி ஓட்டியிருந்தால் ,நான் இப்படி அடிபட்டு நடுரோட்டில் கிடந்திருக்க மாட்டேன். கண்டவன் என்னைத் தொட்டு தூக்கும் நிலை வந்திருக்காதே.. அவன் என்னைத் தூக்கும் போது பேசாமல் வேடிக்கைப் பார்த்துட்டு நின்னுட்டு .. இப்ப வந்து கேள்வியா கேட்கிறே? ஏன்டா அப்படிச் செய்தே.. ? அவனைக் கண்டாலே எனக்குப் பிடிக்கலை.. அங்கேயே செத்திருந்தால் கூட நல்லாயிருந்திருக்கும்.. அவனின் உதவியை ஏற்கும்மளவு என்னைக் இக்கட்டான சூழ்நிலையில் நிற்க வைச்சுட்டீயே.." என்றவள்.. கோபத்துடன் அவன் சட்டையைப் பிடித்துத் தன் அருகில் இழுத்து, கன்னம்..கன்னமாக, அறைந்தாள்.


அவனோ, தமக்கையின் அடியை மெளனமாகப் பெற்றுக் கொண்டவன், "அக்கா, ஸாரிக்கா..ஸாரிக்கா.." என்றுக் கெஞ்சியவனிடம்.. " பேசாதே ..அவனெல்லாம் என்னைத் தொடும்மளவு என் நிலைமை ஆகிவிட்டதே.. எல்லா உன்னால் தானே ! என் முகத்தில் விழிக்காதே போ.." என்று கத்தினாள்.


நவிலோ ,பாசத்தை மட்டுமே கொட்டும் தன் உயிரான அக்கா, இன்று முதல் முறையாகத் தன் மீது காட்டிய கோபத்தில் நொருங்கிப் போனான்.. மனம் உடைந்து வெளியில் சென்றான்.


அங்கே ஒருவனோ, பாவினிப் பேசியதையெல்லாம் வெளியே நின்று கேட்டுக் கொண்டிருந்தான். மருத்துவ கட்டணத்தைக் கட்டிவிட்டு அவளைப் பார்க்க வந்தவன், உள்ளே, நவில் பேசுவதைக் கேட்டு , அக்கா தம்பி பேசுகிறார்கள்.. பேசட்டும், என்று வெளியிலேயே நின்றவனின் காதுகளில் பாவினியின் வார்த்தைகள் நெருப்பாக விழுந்தது.


அவன் மனமோ அதைக் கேட்டு கொதிநிலையை அடைந்தது. தன்னை எவ்வளவு கேவலமாக நினைத்திருக்கிறாள்.. 'நான் கண்டவனா? 'என்று எண்ணியவன் ..அதே சினத்துடன் அறைக்குள் சென்றவன், அவள் அழுது கொண்டிருப்பதைக் பார்த்து அப்படியே அசையாமல் சிலையாக நின்றான்.


குறள்நெறியன் , மனதிற்குள், 'தான் தூக்கியதற்குத் தான் அழுகிறாள் ' என்று நினைத்தவனுக்கு அவள் மீது கோபம் பல மடங்காகப் பெருகியது. மனதிற்குள் எரிமலையே வெடித்துக் கொண்டிருந்தது.


பாவினியோ, அழுது கொண்டே நிமிர்ந்தவள், தன்னையே பார்த்துக் கொண்டு நின்ற குறள்நெறியனைப் பார்த்து திகைத்தாள்.


அவனோ , பாவினியின் திகைத்த பார்வையைப் பார்த்த படியே ,நிதானமாக அவள் அருகில் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்துச் சென்றான்.


உடலும்,உள்ளமும் பதற அவனைப் பார்த்தவளின் முகம் நோக்கிக் குனிந்தவன், அவள் காதருகில் தன் இதழ்கள் உரச.. " நான் உனக்குக் கண்டவனா? என்னை எவ்வளவு கேவலமாக நினைத்திருக்கே.. நான் மட்டுமே தொடும் நிலையில் உன்னை நிறுத்தி வைக்கலைன்னா நான் குறள்நெறியன் இல்லை.. " என்றவன்,அவளின் கண்களை இமைக்காமல் பார்த்த படியே ,தன் இதழ்களைக் குவித்துக் தன் மூச்சுக் காற்றை அவளின் நெற்றியில் மெதுவாக ஊதினான்.


அவளோ, அவன் கண்களில் தெரிந்த பளபளப்பிலும், அவனின் செய்கையிலும், வெடவெடத்துப் போனாள்.. முகம் வெளிறிப் போய் அவனையே பார்த்தாள்.


அவனோ, முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாமல், அவளைப் பார்த்து இதழ்களில் நக்கலான புன்னகையைச் சிந்தியபடியே , வெளியில் செல்ல திரும்பினான். அப்போது, அவசரமாகக் கதவைத் திறந்து கொண்டு தூயவன், நாவேந்தி,கவின் மூவரும் உள்ளே வந்தார்கள்.


தன் தாயையும்,கவினையும் அங்கே கண்டதும், குறள்நெறியன் இறுகி முகத்துடன் அங்கேயே நின்றான்.


குறள்நெறியனை அங்கே எதிர்பார்க்காத அவர்களும், திகைத்துப் போனார்கள்.

தூயவனோ, மகளின் நிலையைக் கண்டு அவளிடம் வேகமாகச் சென்றவர், "பவிம்மா என்னடாச்சு.." என்றார் பதற்றத்துடன்..


மகளோ, தந்தையைக் கண்டவுடன் தன்னைக் காக்க கடவுளே வந்தது போல்‌.. தந்தையைக் கட்டிக் கொண்டு தேம்பி..தேம்பி, அழுதாள்.


அவரோ, மகளின் அழுகையைக் கண்டு துடிதுடித்துப் போனவர்.. "பவிம்மா ரொம்பப் வலிக்குதா? காலில் அடி ரொம்ப பெருசா? டாக்டர் என்னடா சொன்னார்..? என்று அடுக்கடுக்காகக் கேள்வி கேட்டவரிடம் பதிலே சொல்லாமல் தலையை மட்டும் ஆட்டினாள்.


நாவேந்தியோ, பாவினியின் அருகில் வந்து, " தம்பி எங்கேம்மா ? ரொம்ப வலிக்குதா பவிம்மா " என்று கேட்டுக் கொண்டு இருக்கும் போதே.. உள்ளே வந்த நவிலைப் பார்த்த தூயவன்.. மகளிடமிருந்து நவில் அருகில் சென்றவர், சட்டென்று ,அவன் கன்னத்தில் 'பளார்ரென்று' அறைந்தார்.


அதைக் கண்டு அத்தனைப் பேரும் சிலையாக நின்றார்கள்.. பாவினயோ தன் செல்லத் தம்பியை தந்தை அடித்தததைப் பார்த்துக் கண்ணீர் சிந்தினாள்.


தூயவனோ, அடங்கா கோபத்துடன், "என்னடாப் பண்ணி வச்சுருக்கே..உனக்கு‌ ஒழுங்கா வண்டி கூட ஓட்டத் தெரியாதா? மான் குட்டியாய் துள்ளி திரிந்தவளை இப்படி வாடிய கொடியாய் படுக்க வச்சுட்டீயே.." என்றார்.


குறள்நெறியனோ, நடப்பதை அதிர்ந்துப் போய் பார்த்துக் கொண்டு இருந்தான். அவன் பார்த்தவரை , தூயவனிடம் என்ன கோபம் இருந்தாலும் , ஒரு நிதானம் இருக்கும். ஆனால் , இன்று தன்னை மறந்த கொதிநிலையில் இருந்தார்.. மகள் மீது அவர் கொண்ட பாசம் அவரைத் தன் நிலை மறக்க வைத்திருந்தது.


நவிலோ, தன் தந்தையிடம் எந்த வித எதிர்ப்பையும் காட்டாமல் ,கண்களில் கண்ணீர் தேங்க மெளனமாகத் தலை குனிந்தபடியே நின்றான்.


நாவேந்தி தான், தூயவனைச் சமாதானப்படுத்தினார்.. குறள்நெறியனோ, தூயவனிடம் நடந்தவற்றைச் சுருக்கமாகச் சொன்னவன்.. டாக்டர் பாவினியை இரண்டு வாரம் கட்டாய ஓய்வு எடுக்கச் சொன்னதையும் கூறியவன்,எந்த நேரத்தில் எந்த உதவி வேண்டுமானாலும் தன்னை தயங்காமல் கேட்கச் சொல்லி விட்டுக் கிளம்பினான்..



நாவேந்தியோ, குறள்நெறியனின் பின்னேயே சென்றவர், அறையை விட்டு வெளியே வந்தவுடன்,
" குறள் ஒரு நிமிஷம் நில்லுப்பா ..உனக்கு ஒன்றும்மில்லை தானே.." என்று பெத்த மனம் தவிக்கக் கேட்டவரிடம்..


" ஏன் ? அப்படியே, அடிபட்டுப் போய்ச் சேர்ந்திருந்தால் உங்களுக்கு ரொம்பச் சவுகரியமா இருக்கும்ன்னு நினைத்தீங்களா?" என்று வார்த்தையில் விஷத்தை கக்கிச் சென்றான்.


அவரோ,மகனின்வார்த்தைகளில் ,துடி..துடித்துப் ,
போனார்.. அவரைத் தேடி வந்த கவினும் குறள்நெறியன் சொன்னதைக் கேட்டுக் கலங்கினான்.


நாவேந்தியோ, கால்கள் தடுமாற நிற்க முடியாமல் தள்ளாடுவதைக் கண்ட கவின் ..ஓடிப்போய் அவரை அணைத்து, காத்திருப்போர் இருக்கையில் அமரவைத்தான்..


கண்களில் ஆறாக வடிந்த கண்ணீருடன் அமர்ந்தவரிடம், " ஏம்மா அவரைப் பற்றி நன்றாகத் தெரிந்தும் ! அவரிடம் போய் ஏன் பேசறீங்க .." என்று அலுத்துக் கொண்டவனிடம்..


"இப்படி ஒரு சூழலில் அவனைப் பார்த்தும், விபத்து நடந்திருக்குன்னு தெரிந்தும், எப்படிடா என்னால் பேசாமல் இருக்க முடியும்.. அவன் யாரோ இல்லையே டா.. நான் பத்து மாசம் சுமந்து பெத்த என் உயிராச்சே.." என்று விரக்தியாகக் கூறியவரை அணைத்துக் கொண்டவன்..


"அந்த நினப்பு கொஞ்சமாவது அவருக்கு இருக்கா?அது நாக்கா ? இல்லை தேள் கொடுக்கா? இப்படி மனம் நோகப் பேசறாரே.." என்றவறிடம்..


" கவின் நான் கண் மூடுவதற்குள் அவன் என்னைப் புரிந்து கொள்வானா? ஒரு முறையாவது என்னை அம்மான்னு கூப்பிடமாட்டானான்னு மனசு கிடந்து தவிக்குதுடா.. அப்படி நான் என்ன தான்டா தப்பு செய்தேன்?" என்று முகத்தை மூடிக் கொண்டு அழுதவரைக் கவினால் கண் கொண்டு பார்க்க முடியலை..


"ப்ளீஸ்ம்மா இந்த மாதிரி பேசாதீங்க..என்னால் தாங்க முடியாது.. "என்றவன் ,நாவேந்தியை ஆறுதல் படுத்தி, வீட்டிற்கு அழைத்துச் சென்றான். போகும் போது தூயவனிடமும் பாவினியிடமும் சொல்லி விட்டுச் சென்றார்கள்.


வளர்பிறையோ, அடித்துப் பிடித்து ஆட்டோவில் மருத்துவமனைக்கு வந்தார்..மகளின் நிலையைக் கண்டு "பவிம்மா..என்னடா இஃது! என்று கண்ணீர் சிந்தியவரை..தூயவன் தான் சமாதானப்படுத்தி, மருத்துவரைப் பார்க்க அழைத்துச் சென்றார்..


பாவினியோ ,அமைதியாகப் படுத்திருந்தாள்.. அவள் மனதிற்குள் குறள்நெறியனைப் பற்றிய சிந்தனையே ஓடியது.. அவன் கூறியது அவளின் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது..அவன் கண்களின் பளபளப்பு ! வேட்டையாடத் துடிக்கும் மிருகத்தை நினைவு படுத்தியது.


'ஏன்? அவனுக்குத் தன்மேல் இப்படி ஒரு வன்மம்.. ' என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டிருந்தவளின் அருகில் வந்து நின்ற நவிலோ.. அவளின் வாடிய முக்ததைக் கண்டு, "அக்கா.. வெரி ஸாரிக்கா.." என்றவனின் குரலில் அவனை நிமிர்ந்துப் பார்த்தவள்.. அவனைத் தன் அருகே இழுத்து அணைத்துக் கொண்டு, " நவில் நான் தாண்டா சாரி கேட்கனும்.. சாரிடா , நான் உன்னே ரொம்ப கஷ்டப்படுத்திட்டே .. என் அவசரப்புத்தியால் என் உயிரான தம்பியை இன்னைக்கு என்னென்னமோ பேசி ,அடிச்சுட்டேன்..என்னை மன்னிச்சுடுடா .."என்று கதறியவளிடம்..


" பவிக்கா, ப்ளீஸ்க்கா நீ அழுதால் என்னால் தாங்க முடியாது. நீ என்னைத் திட்டாமல் யார் திட்டுவா..? தப்பு செய்தது நான் தானே.."என்றவனிடம்..


" இல்லைடா..நீ என்ன வேணும்னா செய்தே? நான் தான் மடச்சி மாதிரி ஏதோ ஒரு கோபத்தில் உன்னை பேசிட்டேன்.. நீ அதை மனசில் வச்சுக்காதே.. என்னால் அப்பாவும் உன்னை அடித்துட்டுடார்.."என்றவளிடம்..


" அப்பா அடிச்சதில் எந்த தப்பும் இல்லையேக்கா.. உன்னை இப்படி ஒரு நிலையில் கொண்டுவந்து நிறுதித்டடேன்.. அதற்க்குத் தான் அப்பா அடிச்சுருப்பார்.. அதை விடுக்கா, உனக்குப் இப்ப வலி எப்படி இருக்கு.. இரண்டு வாரம் நீ சுத்தமா நடக்கவே கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்கார்..ரொம்ப கஷ்டமாக இருக்குக்கா.."


"ம்..! வலி இப்போ கொஞ்சம் கம்மியாகிடுச்சு.. இரண்டு வாராந்தானே எப்படியோ சமாளிச்சுடலாம்.. நீ கவலைப்படாதே.."என்று தம்பியைத் தேற்றினாள்..


குறள்நெறியனோ, எரிமலையின் கொதிநிலையில் இருந்தான். பாவினி அவனைப் பற்றி கேவலமாக பேசியதிலேயே கொதித்துக் கொண்டிருந்தவன்.. நாவேந்தியையும், கவினையும் ஒன்றாகப் பாரத்ததும் இன்னும் அவனின் கோபம் அதிகரித்தது..


மருத்துவமனையில் , என்னவோ அவனை மட்டும் தனித்து விடப்பட்டது போல் உணர்ந்தான்.. எல்லோரும் பாவினியைத் தாங்கும் போது, அவனை அறியாமலேயே மனதிற்குள் சிறு பொறாமை எட்டிப் பார்த்தது.


அதுவும் மகளுக்காகத் தூயவன் துடித்ததும் .. தந்தையும்,அக்காவும் அடிக்கும் போது ஒரு வார்த்தை கூட பேசாமல் அமைதியாக இருந்த நவிலின் அன்பும் அவனைப் பிரமிக்க வைத்தது. இந்தக் காலத்தில் கூட இவ்வளவு பிணைப்புடன் இருக்கிறார்களே! என்று நினைத்தான். அந்தக் காட்சி இன்னுமே அவன் கண்ணுக்குள்ளேயே இருந்தது. தனக்குத் தான் எதற்கும் கொடுப்பினை இல்லை என்று எண்ணினான்..



தாத்தா,பாட்டி தன்னை உள்ளங்கையில் வைத்துத் தாக்கினாலும், பெற்றவர்களின் அன்புக்கு அவன் மனம் ஏங்கியது.. இல்லாத தந்தையை நினைக்க முடியாது.. ஆனால், தாய்யிருந்தும் தனக்கு இல்லாதது போல், ஒரு நிலைமையில் தானே நாம் இருக்கிறோம்‌ என்று வருந்தினான்..


வருத்தமும், இயலாமையும் அவன் மனதில் ஒரு வெறியைக் கிளப்பியது.. இத்தனை பேரின் செல்லமான பாவினியை மணந்து.. அவள் உட்பட அனைவருக்கும் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என்ற எண்ணம் அவனை ஆட்டிப்படைத்தது.


அதுவும் தூயவன் எப்போதும் நாவேந்திக்குக் சப்போட் போடுவது, அவனுக்கு எரிச்சலையே கொடுக்கும்.. இன்று ! ஒன்று மட்டும் அவனுக்கு உறுதியானது.. அது பாவினி தான் அவர்களுடைய ஆணிவேர் என்பது..அவளை தன் வசமாக்கிக் கொண்டு இவர்களைத் துடிக்க வைக்க வேண்டும் என்று நினைத்தான்.


தன்னை வெகு சாதரணமாக நினைத்த பாவினிக்கும் பாடம் புகட்டனும். இதுக்கு எல்லாம் ஒரே வழி! பாவினியை தான் மணப்பது ஒன்று தான் என்று உறுதியாக நம்பினான்..


வன்மம் கொண்ட மனம் அதற்கு வடிகால் தேடியது.. மனதிற்குள் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்த படியே காரை ஓட்டிக் கொண்டிருந்தான்.


நல்ல வேளை இன்று டிரைவரை வேண்டாமென்று சொல்லிவிட்டு, அவனே கார் ஓட்டியது ! எவ்வளவு நல்லாதாக் போய்ட்டு.. பாவினியுடன் பழக நல்ல வாய்ப்பு ! நவில் காரில் வந்து மோதியவுடன், அடங்கா கோபத்துடன் இறங்கியவன்..


பாவினியைக் கண்டவுடன் குளிர்ந்து விட்டான்..அது ஏன் என்று அவனுக்கும் தெரியாது.. அதை அவன் யோசிக்கவும் இல்லை.. ஆனால் , இந்த நிகழ்வை அவனுக்குச் சாதகமாக்கிக் கொள்ள அவன் மனம் துடித்தது.


பாவினியோ, இரண்டு நாள் மருத்துவமனையில் ஓய்வெடுத்தாள்.. தாய்,தந்தை,தம்பி மூவரும் அவளை கண்ணுக்குள் வைத்து தாங்கினார்கள்..


ஆனால் ,அவளுக்குயிருந்த ஒரே பிரச்சனை குறள்நெறியன் தான்.. அவனோ, அடுத்த நாளும் அவளைப் பார்க்க மருத்துவமனை வந்தான். சரியாக அந்த சமயம் தூயவனும்,வளர்பிறையும் மருத்துவரை பார்க்க சென்றிருந்தார்கள்.. நவிலோ பாவினிக்கு ஜூஸ் வாங்க கேன்டீன் சென்றிருந்தான்.


பாவினி ஓய்வாகக் கண்களை மூடி ஓய்வாகப் படுத்திருந்தாள். அப்போது, லேசாகத் கதவைத் தட்டி அனுமதி வாங்கிக் கொண்டு ,உள்ளே வந்த குறள்நெறியனைப் பார்த்ததும் பாவினிக்கு தூக்கி வாரிப் போட்டது.


அவனோ, முகத்தில் புன்னகைத் தவழ பூங்கொத்துடன் உள்ளே வந்தவன், " ஹாய் வினு எப்படி இருக்கே! விரைவில் குணமாக என் வாழ்த்துகள்.." என்று கூறியபடி பூங்கொத்தைக் அவள் கையில் திணித்தான்.


அவளோ, திகைப்புடன் தன் கையில் திணித்த பூங்கொத்தைப் பார்த்தாள். அத்தனையும் அழகான சிவப்பு ரோஜாக்கள்.. அதை அப்படியே அவனின் முகத்தில் விசிறி அடிக்க வேண்டுமென்ற ஆவலை பெரும்பாடு பட்டு அடக்கிக் கொண்டாள்.


அவனோ, அவளின் முகத்தில் தெரிந்த உணர்ச்சிகளைக் கொண்டே அவளின் மனதை புரிந்து கொண்டவன்.. முகத்தில் மாயப் புன்னகையுடன்,
" என்னை இந்தப் பூங்கொத்தாலேயே அடிக்க வேண்டுமென்ற ஆத்திரம் வருகிறது போல்.." என்றவனை மிரட்ச்சியுடன் பார்த்தாள்.


அவளின் பார்வையிலேயே அவளின் மனதைப் படித்தவன், நக்கலான பார்வை பார்த்தபடியே அங்கிருந்த நாற்காலியை இழுத்து அவளின் அருகில் போட்டு அமர்ந்தவன் .. "வினு உன் முகம் கண்ணாடி போல..நீ என்ன மனதில் நினைத்தாலும் அஃது அப்படியே பிரதிபலிக்கிறது..ஆமாம்..முழங்காலில், சைலண்சரின் சூடு பட்டிருந்ததே, அஃது இப்போது எப்படி இருக்கு.." என்றவனை..



இவனுக்கு எப்படித் தெரியும் என்று ஆச்சரியமாகப் பார்த்தவளிடம், " எங்கே காட்டு.." என்று அவளின் போர்வையை விலக்க முயன்றவனை அவனின் கைகளைப் பிடித்துத் தடுத்தவள்..


" ஹலோ , என்ன தான் நினைச்சுட்டு இருக்கீங்க..எந்த உரிமையில் என்னைத் தொடறீங்க..நானும் போனால் போகட்டும் அப்பாவின் எம்.டி. என்று பார்த்தால் ரொம்பத் தான் ஓவரா போறீங்க.." என்றவளிடம்..


அவனோ ரொம்பக் கூலாக.. " ம்..! என்ன உரிமையா? உன் வருங்காலக் கணவன் என்ற உரிமை .."


"மிஸ்டர் குறள்நெறியன் ! ஓவரா கற்பனைப் பண்ணிட்டு பேசாதீங்க.. நீங்க இப்படி நடந்து கொள்வது மட்டும் என் அப்பாவுக்குத் தெரிந்தால் அவ்வளவு தான்.."


"ஓ..!என்ன செய்வார்.. உங்கப்பாவால் என்னை என்ன செய்ய முடியும் ? நான் குறள்நெறியன் ! நினைத்ததை நடத்திக்காட்டாமல் விட மாட்டேன்.. அதையும் பார்ப்போம்.. யார் என்னை என்ன செய்யறாங்கன்னு..‌" என்றவன், வலுக்கட்டாயமாக அவளின் போர்வையை அகற்றி அவளின் முழங்காலிருந்தப் புண்ணை ஆராய்ந்தான்.


பாவினியோ,அவனுடன் போராடிப் பார்த்து ஓய்ந்துப் போனாள். அவனின் கடினமான அணுகுமுறையின் முன் அவளின் மென்மை அடிபட்டுப் போனாது..


அவளின் இயலாமையில் கண்களில் நீர் கோர்த்தது.. அவனோ, அவள் வலியில் அழுகிறாள் என்று நினைத்து.. அவளின் கன்னத்தில் வடிந்த கண்ணீரை, தன் விரல் கொண்டு மென்மையாகத் துடைத்தவன்,
" வினு சீக்கிரம் எல்லாம் சரியாகிடும் கவலைப்படாதே .."என்று தேற்றினான்.


அவளுக்கோ, அவனின் 'வினு..' என்ற அழைப்பே எரிச்சலை கொடுத்தது.. ஆத்திரத்துடன் அவனின் கைகளைத் தட்டிவிட்டவள், "மிஸ்டர் உங்களுக்கு ஒரு தடவை என்னைத் தொடதீங்கன்னு சொன்னாப் புரியாதா? முதலில் இங்கிருந்து போங்க.. உங்களைப் பார்த்தாலே பிடிக்கலை.." என்றவளின் கன்னத்தை அழுத்தமாகப் பற்றியவன், " என்னையா வெளியில் போகச் சொல்றே.. இந்தத் திமிர் தாண்டீ மறுபடியும்.. மறுபடியும் ,உன்னிடம் என்னைக் கொண்டு வந்து நிறுத்துது.. அதை அடக்கியே தீரவேண்டும் என்ற வெறி வருது.. " என்றவன், கதவு திறக்கும் ஓசையில் சட்டென்று அவளின் கன்னத்திலிருந்த கையை எடுத்து விட்டு நகர்ந்தான்.


தூயவனும்,வளர்பிறையும் மருத்துவரைப் பார்த்துவிட்டு அறைக்கு வந்தார்கள். குறள்நெறியனை அங்குப் பார்த்ததும், தூயவனின் முகம் இறுகியது. வாய்வார்த்தைக்கு "வாங்க .." என்றார்.


அவனோ, அவரின் முக மாற்றத்தை மனதில் குறித்துக் கொண்டவன், எதையும் காட்டிக் கொள்ளாமல், "டாக்டரைப் பார்த்தீங்களா? என்ன சொன்னார்.. எப்போது டிஸ்சார்ஜ்.." என்றான் இயல்பாக..



" ம்..! மாவுக்கட்டு பதினைந்து நாளாவது இருக்கனும் .. அப்படி இருந்தால் தான் விரிசல் கூடுமாம்.. பதினைந்து நாட்கள் கழித்து மாவுக்டகட்டை பிரித்துப் பார்த்துட்டு சரியாகலைன்னா ,மீண்டும் ஒரு வாரம் மாவுக்கட்டுப் போடனும்மாம்.. இன்னைக்கு மாலை வீட்டுக்கு போகலாம்ன்னு சொல்லிட்டார் .."என்று தூயவன் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே , ஜூஸ்சுடன் உள்ளே வந்த நவில், குறள்நெறியனைக் கண்டு திகைத்தவன்.. அய்யோ! அக்கா இவரைப் பார்த்தாலே டென்ஷன் ஆவலே என்று நினைத்தவன்..


"நீங்க எங்க சார் இங்கே.. உங்களுக்கு இருக்கும் வேலைகளில் இவ்வளவு தூரம் வர வேண்டுமா ..?
நேற்று நீங்க உதவியதே பெரிய விஷயம் .." என்றவனிடம்..


"இதில் என்ன சிரமம்..ஏன் நான் வரக்கூடாதா? என்னால் அடிபட்டவங்களை எப்படி இருக்காங்கன்னு நான் பார்க்க வருவது என்ன கொலைக் குற்றமா?" என்று கடுப்பாகக் கேட்டான்.


ஆளாளுக்கு, ஏன் வந்தாய் ?என்பதைப் போல் ,பேசுவதும், நடந்து கொள்வது அவனுக்கு மிகுந்த எரிச்சலைக் கொடுத்தது.. 'அவன் என்ன பொழுது போகாமலா ? இங்கே வந்தான். . அவனுக்கிருக்கும் வேலைக்கு.. ஒரு நாளைக்கு எழுபது மணிநேரம் இருந்தாலும் பத்தாது..' என்று மனதிற்குள் கருவினான்..


தூயவனோ , அவனின் கோபத்தைப் புரிந்து கொண்டவர், அதன்பிறகு இயல்பாக இருப்பது போல் , அவனிடம் பேசினார். அவனிடம் இத்தனை நாள் வேலை செய்கிறார் ..அவனைப்பற்றி அவருக்குத் தெரியாதா? அவனின் வார்த்தைகளை வைத்து அவன் மனநிலையைப் புரிந்து கொள்வார்..


சிறிது நேரத்தில் குறள்நெறியன் கிளம்பினான். போகும் பொழுது பாவினியை கண்கள் மின்னப் பார்த்தவன் ,அவளிடம் தலையை மட்டும் ஆட்டிவிட்டுச் சென்றான்..


தூயவனுக்கோ, குறள்நெறியனின் நடவடிக்கைகள் புரியாத புதிராக இருந்தது. மனதிற்குள் ஏனோ இனம் புரியாத சிறு பயம் அவரையும் விட்டுவைக்கலை.. விரைவில் மகளுக்குத் திருமணத்தை முடிக்க வேண்டுமென்ற எண்ணம் அவருக்கு அதிகமானது.


பெற்றவர்களின் எண்ணம் வெல்லுமா?இல்லை அவனின் வன்மம் வெல்லுமா? காலத்தின் கையில் ..




அன்பு கொல்லும்..
 
Last edited:

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
327
Reaction score
607
Points
93
அன்பே! அன்பே! கொல்லாதே!

அத்தியாயம் 10

பாவினி மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்து ஒரு வாரம் ஆகியிருந்தது.. இந்த ஒரு வாரமும் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் கழிந்தது.


ஆடிட்டரே,அவளை அழைத்து நலம் விசாரித்தவர், குறள்நெறியன் தொடர்ந்து அவனுடைய கம்பெனி ஆடிட்டிங்கைப் பார்க்கும் பொறுப்பை ஆடிட்டரிடம் ஓப்படைத்ததை மகிழ்ச்சியுடன் சொன்னார்..


பாவினிக்கு அடிபட்டதைக் ஆடிட்டரிடம் குறள்நெறியன் தான் சொன்னார் என்றவர் , அவளுக்கு ஒரு மாதம் விடுமுறையும் எடுத்துக் கொள்ள அனுமதி அளித்தார்.


பாவினிக்கோ, ஆடிட்டர் சொன்னதை நம்பவும் முடியவில்லை.. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.. இருந்தாலும், மனதிற்குள், தன்னால் யாருக்கும் வேலை போகாது என்ற நிம்மதி இதமாக பரவியது..


தூயவனோ,பாவினி வீட்டிற்கு வந்த பின் .. அடுத்த நாளே அலுவலகம் சென்றவர்.


அன்றே ,குறள்நெறியனைச் சந்திக்க அவன் அறைக்குச் சென்றார்.


அவனோ ,கதவை தட்டி அனுமதியைப் பெற்றுக் கொண்டு, உள்ளே வந்து நின்ற தூயவனைக், கேள்வியாகப் பார்த்தான்..


கேள்வியாக பார்த்தவனுக்குக் பதில் சொல்லாமல், தன் பாக்கெட்டில் வைத்திருந்த பணத்தைக் கத்தையாக எடுத்து மேஜை மீது வைத்தார் தூயவன்.


குறள்நெறியனோ,புரியாமல் அவரை யோசனையுடன் பார்க்க..

" பாவினிக்கு டீரீட்மெண்டுக்காக நீங்க ஹாஸ்பிட்டலில் கட்டிய அமோண்ட்.." என்றார்..

" நான் உங்களை கேட்கலையே..அந்த விபத்து நடக்க நானும் ஒரு காரணம் என்பதால் தான் , நான் பில் பே பண்ணுனேன்.. அதனால், இது தேவை இல்லை.."


"என் மகளுக்கு நான் செலவு செய்வது தான் நியாயம்..அதனால் நீங்க இதை திருப்பி வாங்கிக்கோங்க.."


" மிஸ்டர் தூயவன் ,நான் தான் வேண்டாம்ன்னு சொல்றேன்னே ! அப்புறம் என்ன..? டேக் இட்.."


" வேண்டாம் சார் .. அடுத்தவர்கள் என் மகளுக்கு, செலவு செய்வதில் எனக்கு விருப்பம் இல்லை.." என்றவர், அடுத்த நொடி அங்கிருந்து வெளியில் சென்றார்..


குறள்நெறியனுக்கோ , அவரின் செயல் மிகுந்த ஆத்திரத்தைத் தந்தது. அவனை அடுத்தவன் என்று சொன்னது மேலும் கோபத்தை அதிகமாக்கியது.. 'என்ன திமிர் ! கம்பெனியின் எம்.டி. என்ற மரியாதைக் கூட இல்லாமல் பணத்தை விட்டெரிந்துட்டு போகிறார்' என்று நினைத்தவன்.' மனதிற்குள், ' இதற்கு கண்டிப்பாக மிக விரைவில் பதில் சொல்லனும் மிஸ்டர் தூயவன்..' என்று கருவினான்.


தூயவனுக்கோ , பணத்தை திருப்பிக் கொடுத்தப் பின்பு தான், மனதிற்குள் நிம்மதியே வந்தது. அவர் பார்த்தவரை, குறள்நெறியன் ! யாருக்கும் அத்தனை எளிதாக பணத்தை தூக்கி கொடுப்பவன் இல்லை.. உதவுபவனும் இல்லை.. ஆனால், அவன் , பாவினிக்காக பணமும்,உதவியும் செய்தது, அவர் மனதிற்குள் உறுத்தலாகவே இருந்தது.


ஆனால், அவரின் இந்த செயல் ! பின்னாளில், தனக்கே திருப்பி வருமென்று அவர் அப்போது உணரவில்லை...


வளர்பிறையும்,நவிலும் பாவினியைப் பத்திரமாக பார்த்துக் கொண்டனர். அவளுக்குக் வலது காலில் தான், பிரச்சினை என்பதால்.. முடிந்தவரைப் பாவினி வலது காலை அசைக்காமல், இடது காலை ஊன்றியும்,ஸ்டிக் வைத்து ஃஅட்ஜஸ்ட் செய்தும், தன் வேலைகளை யாரையும் தொல்லைச் செய்யாமல் தானே பார்த்துக் கொண்டாள்.


நவிலுக்கு ப்ராஜெக்ட் வொர்க் என்பதால், அவன் முடிந்த வரைப் பாவினியுடனேயே இருந்தான்..


தூயவனோ, அலுவலகம் சென்று வந்த பின்னர் மகளுடன் தான் ! தன் நேரத்தைச் செலவழிப்பார்..
பாவினியும் தினமும் தந்தையின் வரவை ஆவலோடு எதிர்பார்ப்பாள்..


இப்படியே, ஒரு வாரம் கழிந்தது.. அன்று காலை எழுந்ததிலிருந்தே, பாவினிக்கு மனம் ஏனோ சோர்வாக இருந்தது . வீட்டிற்குள்ளேயே அடைபட்டுக் கிடப்பதால் அப்படி இருக்குமோ? என்று நினைத்தாள்..


வளர்பிறை, சமையல் வேலைகளை கவனித்துக் கொண்டிருநதார்.. நவிலை அவள் தான், ஒரு முக்கியமான வேலையாக வெளியில் அனுப்பியிருந்தாள்.‌ நவிலும் இல்லாமல் மனம் இன்னும் அவளுக்கு சோர்வாக இருந்தது.


மனதை மாற்றும் பொருட்டு பாரதிதாசன் கவிதைகளை எடுத்துப் படிக்கத் தொடங்கினாள். அவளுக்கு எப்போதுமே புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் கவிதைகள் என்றால், ரொம்ப பிடிக்கும் ! அவரின் தமிழ்பற்றும்,புரட்சிகரமான சிந்தனைகளும் அவளுக்கு எப்போதுமே பிடிக்கும். மனதை அதில் செலுத்த முயன்றாள்..


வளர்பிறையோ, மும்மரமாக சமையல் வேலையில் இருக்கும் போது, வெளியில் கார் சத்தம் கேட்கவும் ..யார் வந்து இருக்கிறார்கள் ? என்று பார்க்க வந்தவர் .. அங்கே , குறள்நெறியனை பார்த்ததும் திகைப்புடன் விழித்தார்.


அவனோ, அவரின் திகைத்தப் பார்வையைக் கண்டு கொள்ளாமல் , "எப்படி இருக்கீங்க .. பாவினிக்கு இப்போ எப்படி இருக்கிறது .. "என்று அடுக்கடுக்காக கேள்வி கேட்டவனை, தயக்கததுடனேயே "வாங்க.." என்று வீட்டிற்குள் வரவேற்றார்..


அவனோ ,உள்ளே வந்ததும், "பாவினி எங்கே..?" என்று கேட்டவனிடம்.. சோஃபாவில் அமரச்சொல்லிவிட்டு ..மகள் இருக்கும் அறையைக் கை காட்டினார்..


அவனோ , "கொஞ்சம் குடிக்க தண்ணீர் கொடுங்க.." என்று கேட்கவும், வளர்பிறை தண்ணீர் எடுக்க சமையலறைக்குள் சென்றார்.


அவனோ, அவர் உள்ளே சென்றதும் ,எழுந்து பாவினி அறைக்குக் வந்தான்.


பாவினியோ,தன்னை மறந்து படித்துக் கொண்டிருந்தவள், " புரட்சிக் கவிஞரை ரொம்பப் பிடிக்குமோ.. ? அது தான் பேச்செல்லாம் அனல் பறக்கிறது.. "என்ற குரலில் தூக்கிவாரிப் போட நிமிர்ந்தாள்..


அங்கே, குறள்நெறியன் ! கைகளைக் கட்டிக் கொண்டு, கதவின் மேல் சாய்ந்து நின்ற படி .. அவளையே, இமைக்காமல் பார்த்துக் கொண்டு நின்றான்.


பாவினியோ , இவன் எப்படி உள்ளே வந்தான்? என்று சிந்தித்துக் கொண்டு இருக்க.. அவனோ ,அறைக்குள் வந்து அவளின் அருகில் அமர்ந்தான்.


அவளுக்கோ, அவனின் செயல்கள் தூக்கிவாரிப் போட, "ஹலோ மிஸ்டர் என்ன இது ? நீங்க பாட்டுக்கு யாரிடமும் அனுமதி கேட்காமலேயே உள்ளே வரீங்க.."என்று கோபத்துடன் கேட்டவளிடம்..


" என் வருங்கால மாமனார் வீட்டிற்கு வர நான் யாருகிட்ட பர்மிஷன் கேட்கனும்.. "என்றவனை தீப்பார்வை பார்த்தவள்..


" தேவை இல்லாததை பேசுனீங்க.. அப்புறம் மரியாதை கெட்டுவிடும் .."என்று கூறிக் கொண்டு இருக்கும் போதே ,வளர்பிறை வரும் சத்தம் கேட்கவும் அமைதியானார்கள்.


வளர்பிறையோ ,குறள்நெறியனுக்கு குடிக்க தண்ணீர் எடுத்து வந்தவர் .. அவனைச் சோஃபாவில் காணாமல் திரும்பியவர் , பாவினி அறைக்கு குறள் நெறியன் செல்வதைக் கண்டார்.


ஒரு பெருமூச்சுடன் சமையலறைக்குள் சென்று, எலுமிச்சை சாற்றைக் கலந்து, இரண்டு டம்ளரில் ஊற்றி எடுத்துக் கொண்டு... வளர்பிறை பாவினி அறைக்குச் வந்தார்.


அங்கே, குறள்நெறியன் உரிமையாக மகளின் பக்கத்தில் அமர்ந்திருந்தது, அவர் மனதிற்குள் நெருடலைக் கொடுத்தது..


குறள்நெறியனோ, வளர்பிறை கொடுத்தப் பழச்சாற்றை "தேங்க்ஸ்.." என்று சொல்லிப் பெற்றுக் கொண்டவன் , அதை ரசித்துக் குடிக்க ஆரம்பிச்சான்.



பாவினியோ , வேண்டாமென்று மறுத்துவிட்டாள்.. அவளோ,குறள்நெறியனின் செய்கையில் தீயாய் எரிந்து கொண்டிருந்தாள்..


குறள் நெறியன், பேசாமல் நின்ற வளர்பிறையிடம் சம்பிரதாயமாக சில நிமிடங்கள்
பேசியவன்,பழச்சாற்றை முழுவதும் குடித்து விட்டு காலி டம்ளரை அவரிடம் நீட்டினான்..


வளர்பிறையும், டமளரைப் பெற்றுக் கொண்டு, அமைதியாக அங்கேயே நின்றார்.


குறள்நெறியனோ ,அவர் நிற்பதைப் பொருட்படுத்தாமல் "வினு வலி இப்போ எப்படி இருக்கு..பரவாயில்லையா?" என்றவனை குத்தவா,வெட்டவா?என்றுப் பார்த்து வைத்தாள் பாவினி..


வளர்பிறைக்கோ, மகளை அவன் உரிமையாக அழைத்தது வயிற்றுக்குள் நெருப்பை மூட்டியது..


பாவினிக்கோ, அவனின் செயல்கள் எல்லையில்லா வெறுப்பைக் கொடுத்தது. அதுவும் தன் தாய் முன்பே, சிறிதும் பயம்மில்லாமல் , தன்னை உரிமையாக 'வினு' என்று அழைத்தது, அவளுக்கு மனதிற்குள் பயத்தைக் கொடுத்தது.


குறள்நெறியனுக்கோ, பாவினி பதில் சொல்லாமல் இருப்பது அளவுகடந்த கோபத்தைக் கொடுத்தது. அவனின் முகமாறுதலைக் கண்ட வளர்பிறை, தானே பதில் சொன்னார்.


" இப்போ கொஞ்சம் பரவாயில்லை தம்பி.. ஏதாவது ரொம்ப ஃஸ்டெயின் செய்தால் தான், வலி அதிகமாகிறது.." என்றவரிடம்..


" ஓ..! எதற்கு ஃஸ்டெயின் பண்ணனும்.. டாக்டர் சொன்னது போல், நல்லா ரெஸ்ட் எடுக்க வேண்டியது தானே.. நெக்ஸ்ட் வீக் தானே கட்டைப் பிரிப்பாங்க .." என்று கேள்வியாக வளர்பிறையைப் பார்த்தவனிடம்..


" ஆமாம் ..! நல்லாயிடுச்சுன்னா பரவாயில்லை.. இல்லைன்னா மறுபடியும் ஒரு வாரம் கட்டுப் போடச் சொல்வாங்க.." என்று வருந்தியவரிடம்..


"நல்லா ரெஸ்ட் எடுத்தா அதெல்லாம் சரியாகிடும்.."என்றவன், சிறிதும் தயக்கமே இல்லாமல், " நான் வினுவுடன் கொஞ்சம் தனியா பேசனும்.." என்றான், வளர்பிறையிடம்..

அவன் சொன்னதைக் கேட்டு, தாயும் ,மகளும் ஒருசேர அதிர்ந்தனர்.


வளர்பிறையோ, வேறு வழி இல்லாமல் மகளை திரும்ப..திரும்ப பார்த்தபடி‌யே, அறையை விட்டு வெளியில் சென்றார்.


மகளோ , பார்வையாலேயே தாயைப் போகதே என்று கெஞ்சினாள். வளர்பிறைக்கும், போக பிடிக்கவில்லை தான்.. ஆனால், அவன் சொன்னபின் எப்படி‌ நிற்பது என்று வெளியில் சென்றார்.


வளர்பிறை சென்றவுடன் , பாவினி புறம் திரும்பியவன், "மேடம்க்குக் கேள்வி கேட்டா ..பதில் சொல்லக் கூட முடியாதா..? நான் என் வேலை வெட்டியை விட்டுட்டு, என் தகுதியை விட்டு இறங்கி வந்து , உன்னை எல்லாம் பார்க்க வந்தேன் பார்.. என்னைச் சொல்லனும்.." என்றவனிடம்..


"ஏன் அப்படி இறங்கி வரீங்க..? உங்களே அப்படி யார் இறங்கி வரச் சொன்னாங்க.."


" என்ன செய்ய என் வருங்காலப் பொண்டாட்டி அடிபட்டுக் கிடக்கிறாளே ! என்று பாவப்பட்டு வந்தேன்."


" இப்படி பேசுவது தான் ! எனக்கு ஆத்திரத்தை உண்டு பண்ணுது. நடக்கவே..நடக்காத, ஒன்றை திரும்ப.. திரும்பச் ?சொல்லாதீங்க.."


" நடக்குதா? இல்லையான்னு ? சீக்கிரம் பார்ப்பே.."


" எனக்கு உங்கள சுத்தமா பிடிக்கலை.. தயவு செய்து இங்கிருந்து போங்க..இனி வரவே வராதீங்க.."


" ஓ..! அப்படியா? நீ பிடிக்கலைன்னு சொல்றது தான் ! எனக்கு‌ ரொம்ப பிடிச்சிருக்கு.. என்னை உனக்குப் பிடிக்க வைக்கனும்ன்னு வெறியே வருது.. உன் இந்த வெறுப்பு தான் ! உன்னிடம் என்னைத் திரும்ப..திரும்ப, கொண்டு வந்து நிறுத்துகிறது. நம்மள சுத்தமாக பிடிக்காதவங்கள பிடிக்க வைக்கிறதும்‌ ஒரு கிக்கு தான்.."


" அஃது இந்த ஜென்மத்தில் நடக்கவே நடக்காது.."


" இன்னைக்கு நடப்பதே நம் கையில் இல்லை..இதில் நீ ஜென்மத்திற்கே போயட்டே.."


"இங்க பாருங்க.. உங்க கூட வெட்டிப் பேச்சு பேச.. எனக்கு நேரமில்லை..எனக்கு ஃடையேடா இருக்கு . நான் தூங்கனும்.."என்றாள் அவனை எப்படியாவது அங்கிருந்து போக வைக்க..


"ஓகே மை டியர் வினு டார்லிங்.. நல்லா ரெஸ்ட் எடுத்து சீக்கிரம் குணமாகும் வழியைப் பார். அப்பத் தானே நம்ம கல்யாணத்தைச் சீக்கிரம் வைக்க முடியும்.." என்று நக்கலாக சொன்னவனை.. என்ன செய்தால் தகும் என்றுப் பார்த்தாள்..


அவனோ, "ஓகே ஃபாய்‌ .. டேக் கேர்‌.. " என்றவன் ,கதவு வரைச் சென்று விட்டு ,திரும்பி வந்தவன்.. அவளின் முகத்தை தன் கைகளில் ஏந்தி.. அவளின் அதிர்ந்த விழிகளை ரசித்தபடியே, " இந்த விழிகளை சிறை எடுக்கனும் போல் இருக்கு.. "என்றான்.. ‌அவளோ, அவன் கைகளைத் தட்டிவிட்டு, "ஏன் இப்படி படுத்துறீங்க? ப்ளீஸ் என்னை விட்டுடுங்க .."என்றவளிடம்..


" நீ தான் பேபி ! என் துருப்புச் சீட்டு.. உன்னை அவ்வளவு எளிதாக விட முடியுமா?" என்று கண்கள் மின்னச் சொல்லியவன், வேகமாக அந்த அறையை விட்டு வெளியில் வந்தான்.. வரவேற்பறையில் அமர்ந்திருந்த வளர்பிறையிடம், எதுவும் பேசாமல், சிறுத் தலை அசைப்புடன் விடைபெற்றுச் சென்றான்..


பாவினிக்கோ, அவன் சொன்னது சுத்தமாகப் புரியலை.. அவன் பார்வை தந்தப் பயத்தில் அவள் இதயம் துடிப்பது அவளுக்கே கேட்டது.


கண்களை மூடியபடி அமர்ந்திருந்த மகளிடம் வந்த வளர்பிறை, என்னவென்று விசாரிக்க.. அவளோ, தாயிடம் ," அவர் எங்க கிளையண்ட்ம்மா.. அது தான் அவருடைய கணக்கு வழக்கில் சில சந்தேகங்கள் கேட்டார்.." என்ற மழுப்பினாள்..


வளர்பிறையோ, மகள் சொன்னதை நம்பவில்லை.. அவருக்கு தெரியும் ! மகளால் என்றும் பொய் பேச முடியாதென்று .. ஏதோ மறைக்கிறாள் என்று புரிந்தது.


ஆனால் , கட்டாயப்படுத்திக் கேட்கப் பிடிக்காமல்.. அவளே ,விருப்பம் இருந்தால் சொல்லட்டும்.. இல்லையென்றால் ,எதுவாக இருந்தாலும், அவளே சமாளிக்கட்டும் என்று நினைத்தார்..


பாவினியோ, இரவு தன் தந்தை வரும் வரை மனதிற்குள் குறள்நெறியனைப் பற்றி குழம்பிய படியே படுத்திருந்தாள்..


மாலை அலுவலகம் முடிந்து வந்த தூயவனுக்கு, குறள்நெறியன் அன்று வீட்டுக்கு வந்ததைச் சொன்னார் வளர்பிறை..


தூயவனுக்கோ ,அதைக் கேட்டவுடன் மனதிற்குள் பெரும் யோசனை ஓடியது.. அதற்குத் தகுந்தாற்போல் மகள் வேறு தந்தையைக் கண்டவுடன், "அப்பா இன்னைக்கு உங்க எம்.டி நம் வீட்டிற்கு வந்திருந்தார்.. எனக்கு அவரைச் சுத்தமா பிடிக்கலை.."என்று பாவினி வாடிய முகத்துடன் சொன்னதும் , அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை..


அவர் இப்படி நடக்குமென்று ஒரு நொடி கூட எதிர்பார்த்ததில்லை.. அதுவும் ,அவன் இவ்வளவு இறங்கி வரக்கூடிய ஆளும்மில்லையே ! என்று குழம்பினார்..


குறள்நெறியனோ , அன்று இரவு பதினோரு மணியாகியும் அலுவலகத்திலிருந்து நகரவில்லை..


தன் முன்னிருந்த கணினியை வெறித்துப் பார்த்தபடி சுழல் நாற்காலியில் சுழன்று கொண்டிருந்தான். அவன் மனம் கணினியில் பதியவே இல்லை.. பாவினியைப் பற்றிய சிந்தனையிலேயே உழன்றது..



அவளின் திமிர் அவனை ஈர்த்தாலும், தன்னை அடியோடு வெறுப்பவளை தன் வாழ்க்கையில் இணைத்தால் சரிவருமா?என்ற கேள்விக்கு.. அவன் மனசாட்சியோ, ' நீ மட்டுமென்ன அவளை விரும்புகிறாயா? வெறுக்கத் தானே செய்கிறாய்..' என்று எதிர் கேள்வி கேட்டது..


உண்மை தான் இதுவரை அவளை அவன் ஒரு நொடி கூட வேறு மாதிரி நினைத்தது இல்லை.. அவனைப் பொறுத்தவரை, பாவினி அவனுக்கு கிடைத்திருக்கும் துருப்புச்சீட்டு.. அதை எந்த சூழலிலும் அவனால் விடமுடியாது..


அவளை பார்க்கச் சென்றது கூட, தன் மனதிற்கு பாவினி தான் மனைவி என்ற உணர்வைப் பழக்கப் படுத்திக் கொள்ளத்தான். ஆனாலும் , அவள் இவனிடம் வெறுப்பை பொழியும் பொழுதெல்லாம் ..அவளை தன்னவளாக்கியே தீரவேண்டும் என்று உந்துதல் அவனுக்கு அதிகமாகத் தான் வருகிறது.


இந்தத் திருமணத்தை எப்படி நடத்துவது.. என்று அவன் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது, கதவைத் தட்டி அனுமதிப் பெற்றுக் கொண்டு அவனின் உதிவியாளன் நிலன் உள்ளே வந்தான்.


குறள்நெறியன் கேள்வியாக அவனைப் பார்க்க..அவனோ தயங்கியபடியே ," சார் உங்களைப் பார்க்க மிஸ்டர் நேயவாணன் வந்திருக்கிறார்.." என்றான்.


குறள்நெறியனோ, ஒரு நொடி வியந்தவன் ! அடுத்த நொடி 'வந்து தானே ஆகனும்.. அவரை இந்த நிலையில் நிறுத்தியதே அவன் தானே.. அதுவும் இன்று அவன்‌ செய்த வேலைக்கு கண்டிப்பாக அவருக்கு வேறு ஆஃப்ஷனே இல்லை ..' என்று நினைத்தவன் .
தன் கை கடிகாரத்தில் மணியை பார்த்தவன், யோசனையுடனேயே அவரைச் சந்திக்க அனுமதி கொடுத்தான்.


அடுத்த சில நிமிடங்களில் உள்ளே வந்த 'நேயவாணன்' ஓய்ந்து போய்யிருந்தார். அவரின் நிலையைக் கண்டு அதிசயமாக அவரை அமரச்சொல்லி இருக்கையை காட்டினான்.



அவரும் மறுப்பு சொல்லாமல் அமர்ந்தவர், "குறள் ஏம்ப்பா இப்படிச் செய்கிறாய் .ஏற்கனவே எங்களுக்கு வரவேண்டிய அத்தனை ஃகன்ஸ்டெக்ஷன் வொர்க் கையும், வேறு..வேறு, ஃகன்ஸ்டெகக்ஷனுக்கு மாற்றிவிட்டாய். இப்போது நாங்க எதிர்பார்த்திருந்த இந்த கவர்மெண்ட் காண்ட்ராக்ட்டும் கை நழுவிப் போய்டுச்சு.. இதற்க்கு காரணம் நீ தான்னு தெரியும் .. "என்றவரிடம்..



" ஆமாம் நான் தான் செய்தேன். அவ்வளவு எளிதாக உங்களை வளரவிட்டு விடுவேனா? இல்லை நிம்மதியாகத் தான் இருக்க விட்டுவிடுவேனா?"

" ஏம்ப்பா எங்கள் மீது இப்படி ஒரு வெறுப்பு.."


" உங்க மனச்சாட்சியைக் கேளுங்க அது சொல்லும்.."


" நீ எல்லாத்தையும் தப்பா புரிஞ்சிருக்கே.."

" ஓ..!அப்படியா ! அப்படியே இருக்கட்டும்.. இப்ப நீங்க வந்த காரணம்.."


" நான் உன்னை மாதிரிப் பரம்பரைப் பணக்காரன் இல்லைப்பா.. கையூன்றி..காலூன்றி கொஞ்சம் கொஞ்சமாக என் உழைப்பால் இந்தளவு வளரந்திருக்கேன். ஆனால், இந்த கொஞ்ச நாட்களாக உன்னால் எனக்கு பெரிய நஷ்டம்.. இனியாவது இத்தோடு உன் தலையீட்டை நிறுத்திக் கொள்ளுன்னு சொல்லத் தான் வந்தேன்.."


" முடியாது..உங்களையும்,உங்க சம்சாரத்தையும் இருக்கிற இடம் தெரியாமல் அழிக்கும் வரை நான் ஓய மாட்டேன்.."


"குறள் நீ தப்பு மேலே தப்பு பண்றே..என்னை விடு நாவேந்தி என்னப்பா செய்தா?"

" இந்தக் கேள்விக்கு உங்களுக்கே விடை தெரியும்.."

"நீ தான் ஏதோ தவறாகப் புரிந்து இருக்கே.."

" ஆமாம் நான் தான் தவறாக புரிந்து கொண்டேன்.. அதற்கு இப்போ என்னங்குறீங்க.. எல்லாம் தெரிந்தே தான் செய்கிறேன்.. உங்களால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்துக்கோங்க.."

" நான் ஒன்றும் உன்னைப் போல பரம்பரைச் சொத்தில் வளரவில்லை.. இத்தனை நாள், நீயும் என் மகனைப் போல் தான்.. என்ற நினைப்பில் உன்‌அம்மாவிடம் கூட எதுவும் சொல்லை.. ஆனால் , இனி என்ன செய்யனும்ன்னு எனக்கு தெரியும்.. என் உடம்பில் உயிர் இருக்கும் வரை.. உழைக்க மனசிலும் தெம்பு இருக்கு.. " என்றபடி வேகமாக திரும்பி நடந்தவர், ஒரு நிமிடம் நின்று திரும்பி அவனைப் பார்த்தவர்..


" குறள் ஒருநாள் ‌கண்டிப்பாக இதெற்கல்லாம் வருத்தப் படப் போகிறாய்.. அந்த நாளும் வெகு தூரம் இல்லை.." என்றவர் வேகமாக வெளியில் சென்றார்..


அவனோ, "தப்பு செய்த உங்களுக்கே மனட்சாட்சி உறுத்தாத போது.. நான் எதற்கு வருந்தனும் .."என்று கத்தியவன் , கோபத்துடன் அவர் அமர்ந்திருந்த நாற்காலியை உதைத்தான்..


எந்த தவறுக்கும் மனசாட்சியே மிகப் பெரிய அத்தாட்சி ! அந்த மனச்சாட்சி அவனை கொல்லுமோ? இல்லை அவன் தவறை காலம் உணர்த்துமோ ?


அன்பு கொல்லும்..
 
Last edited:

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
327
Reaction score
607
Points
93
அன்பே! அன்பே!கொல்லாதே !

அத்தியாயம் 11


குறள்நெறியன் வீட்டுக்கு வந்து போனதிலிருந்தே, தூயவன் மனம் ஒரு நிலையில் இல்லை.. இரவு முழுவதும் சரியாகத் தூங்காமல் சிந்தனையிலேயே இருந்தவர், பொழுது விடிந்ததும் முதல் வேலையாகத் தரகரை அலைபேசியில் அழைத்துப் பேசினார்..


தரகரிடம் பேசிய பின்பும் கூட அவர் மனம் குழப்பத்திலேயே இருந்தது. இது சரி வருமா? என்ற எண்ணமே அவரைத் தீவிரமாக ஆட்கொண்டது.


கணவருக்கு, காஃபி‌ எடுத்து வந்த வளர்பிறை.. அவரின் தெளிவற்ற முகத்தைக் கண்டு யோசனையுடனேயே, அவரை அழைத்து, காஃபியை அவரிடம் கொடுத்துவிட்டு.. அவர் அருகிலேயே அமர்ந்தார்.


தூயவன் காஃபி குடித்து முடிக்கும் வரை.. அமைதியாகயிருந்த வளர்பிறை, காலி டம்ளரை வாங்கிய படியே , "என்னங்க முகம் வாடியிருக்கு நைட் சரியா தூங்கலையா ?" என்றவரிடம்..


"மனசே சரியில்லை வளர்.. பவிக்குச் சீக்கிரம் கல்யாணத்தை முடிச்சால் தான் என்னால் நிம்மதியாக இருக்க முடியும். அது தான் இப்போ தரகரை அழைத்துப் பேசினேன். அந்தப் போலீஸ் மாப்பிளையைப் பற்றி விசாரிக்கச் சொல்லியிருக்கேன்.. அந்த வரன் ஒத்து வந்தால் சீக்கிரம் கல்யாணத்தை முடிச்சுடலாம்.."


"ஏன் திடீர்னு என்னாச்சு?அவசரப்பட வேண்டாம்.. இது நம்ம‌ பொண்ணோட வாழ்க்கை பிரச்சினை. உங்களுக்குத் தான் போலீஸ் என்றாலே பிடிக்காதே! அப்புறம் எதற்கு அந்த வரனைப் பார்க்கனும்.."


"அப்படி இல்லை..இப்பத்த சூழலுக்குத் தைரியமான மாப்பிள்ளை தான் வேனும்.. அதுவும், எல்லாப் போலீஸ்சும் மோசமில்லை.. எல்லாத் துறையிலும் நல்லவர்களும் இருக்காங்க..கெட்டவங்களும் இருக்காங்க.. தரகரிடம் அந்த வரன் பற்றிய தகவலை வாட்ஸ் அப்பில் அனுப்பச் சொல்லி இருக்கேன். எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் காவல்துறையில் உயர் பதவியில் இருக்கிறார்.. அவரிடம் நல்லா விசாரித்த பின்பு முடிவு செய்யலாம். நீ தானே அந்த மாப்பிள்ளை நல்ல விதம்ன்னு அன்னைக்குச் சர்ட்டிபிகேட் கொடுத்தே..இப்போ‌ என்னாச்சு?"


"ஒன்னுமில்லை.. உங்களுக்குப் பிடிக்காதேன்னு சொன்னேன்.."


"பிடிக்காதுன்னு இல்லை, பார்ப்போம்.." என்றவர், அதன் பிறகு அலுவலக்த்திற்குக் கிளம்பினார்.


இரண்டு நாட்கள் அமைதியாக நகர்ந்தது. தூயவன் தன் நண்பனின் உதவியுடன் தரகர் சொன்ன வரனை நன்றாக அலசி , ஆராய்ந்து விசாரித்தார். அவருக்கு விசாரித்த வரை திருப்தியாகத் தான் இருந்தது..


மாப்பிள்ளை 'செல்வச்சீரன்' மதுரையில் அசிஸ்டன்ட் கமிஷனராகப் பணிபுரிகிறான். சின்ன வயதிலேயே மிகப்பொறுப்பான பையன். வேலையிலும் நேர்மையானவன் ! தூயவன் எதிர்பார்த்து போல் கறைபடியாத கை ! அம்மா மட்டுமே.. பார்ப்பதற்கும் கம்பீரமாகவும் இருந்தான்.


திருமணம் முடிந்தால் மகளைப் பிரிய வேண்டும்.. அடிக்கடி மகளைப் பார்க்க முடியாது. என்பது மட்டுமே அவருக்குக் கவலையாக இருந்தது. இரண்டு நாள் அதே வேலையாகச் சுற்றி செல்வச்சீரன் பற்றி முழுவதுமாக விசாரித்தவருக்கு மனதுக்குத் திருப்தியாக இருந்தது.


வளர்பிறையிடம் சொன்னவுடன், மகளை அவ்வளவு தூரம் கல்யாணம் பண்ணி அனுப்பி விட்டு.. இவர் எப்படி அவளைப் பிரிந்து இருப்பார் ? என்று தான் முதலில் நினைத்தார். கணவருக்குச் செல்வச்சீரனை மிகவும் பிடித்ததால் எந்த எதிர்ப்பும் காட்டாமல் தானும் சம்மதித்தார்.


நவில் தான் வானுக்கும்,பூமிக்கும் குதித்தான். "அக்கா மதுரைக்குப் போய்ட்டா நான் எப்படிப் பார்க்காமல் இருப்பேன் ? என்னால் இருக்க முடியாது.. பேசாமல் இங்கேயே மாப்பிள்ளை பாருங்கள். இல்லைன்னா நாமும் மதுரையே போகலாம் .."என்றவனிடம்..


"நவில் மதுரை என்ன கடல்கடந்தா இருக்கு..? ஃப்ளைட்ல போன ஒன்றை மணி நேரத்தில் போய்ட்டலாம்.." என்றவரிடம்..


"நீங்க தானே அக்காவுக்கு வீட்டோட மாப்பிள்ளே பார்க்கறேனீங்க ?இப்ப ஏன் முடிவை மாத்துனீங்க..?"


" பவிக்கு எது நல்லதோ ! அதைத் தான் செய்றேன்.. மாப்பிள்ளை வீட்டாரை நாளைக்குச் சாய்ங்காலம் வீட்டுக்கு வரச்சொல்லி இருக்கேன். நீ முதலில் மாப்பிள்ளையைப் பாரு உனக்கும் பிடிக்கும்.." என்றவரிடம்..


நாளைக்கா? எதுக்கு இவ்வளவு அவசரம். பவிக்கு இன்னும் காலே சரியாகலையே.." என்ற மனைவியிடம்..


"வளர் அதனால் என்ன முதலில் பார்க்கட்டும் . பவிக்குப் பிடித்தால் மட்டும் தான் அடுத்தக் கட்டத்துக்குப் போவோம் ..இல்லைன்னா வேறு வரன் பார்க்கலாம்.. எல்லாம் நல்லபடியாக நடந்தால் பவியின் கால் கட்டுப் பிரித்த பின்னர்த் திருமணத்தை வைத்துக்கலாம்.." என்ற கணவனைக் குழப்பத்துடன் பார்த்த வளர்பிறை..


"ஏங்க முதல் ..முதலாக, பொண்ணு பார்க்கும் போத.. பவி இப்படி நடக்க முடியாமல் கால்ல கட்டோட நின்னால்.. அது நல்லாவ இருக்கும்? நீங்க வேனா சாங்கியம், சம்பரதாயம் பார்க்காமல் இருக்கலாம் ..வரவங்க அப்படி இருப்பாங்களா? அபசகுணமா நினைச்சுட்டாங்கனா?


" வளர் நான் தரகர் கிட்ட தெளிவா பேசிட்டேன்.மாப்பிளளை வீட்டில் பவியைப் பற்றித் தெரிந்து தான் வராங்க.. இந்தக் காலத்தில் போய் அபசகுணம்.. அஃது.. இதுன்னு பேசிட்டு.. "என்று சலித்துக் கொண்டவரிடம்..


"எந்தக் காலமாக இருந்தாலும் சிலதெல்லாம் மாறுவதே இல்லை.. அப்படி என்ன இப்ப அவசரம் ? இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமே.." என்ற மனைவியிடம், "உனக்கு ஒரு தடவைச் சொன்னால் புரியாதா? காரணம் இல்லாமல் நான் எதையும் செய்ய மாட்டேன்.." என்றவர், கோபமாக எழுந்து மகளைப் பார்க்கச் சென்றார்.

வளர்பிறையோ ,போகும் கணவனையே யோசனையுடன் பார்த்தார் . 'என்றுமே கடிந்து பேசாதவருக்கு இன்னைக்கு என்ன ஆச்சு.. ? ஏன் பவி திருமணத்திற்கு இவ்வளவு அவசரப்படுகிறார் ..? அதுவும் இத்தனை வருடத்தில் தன்னிடம் கலந்து கொள்ளாமல் எந்த முடிவையும் எடுக்காதவர்.. இன்று இப்படிப் பிடிவாதம் பிடிக்கிறாரே ..'என்று குழம்பினார்..


நவிலோ, தந்தையின் கோபத்தில் வாயடைத்துப் போனான்.


தூயவனோ, மகளின் அறைக்குள் நுழைந்தவர்.. ஆழ்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்த மகளின் அருகில் சென்று,படுக்கையில் அமர்ந்தவர்.. "பவிம்மா.." என்ற படி மகளின் தலையை மென்மையாக வருடினார்..


பாவினியோ, படித்துக் கொண்டிருந்த புத்தகத்தைச் சட்டென்று மூடிவிட்டு, தந்தையை ஆசையாகப் பார்த்தவள் மென்மையாகச் சிரித்தாள்..


அந்த அழகான சிரிப்பைக் கண்களிலிருந்து நெஞ்சம் வரை நிரப்பிக் கொண்டு, "பவிம்மா அப்பா நாளைக்கு உன்னைப் பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டிலிருந்து வரச் சொல்லியிருக்கேன் .உனக்கு ஓகே வா.." என்று விசயத்தை அதிரடியாகச் சொன்னவரை..


ஒரு நொடி அதிர்ந்து பார்த்தவள்.. "அப்பா உங்களுக்கு எது சரின்னு தோனுதோ ! அதைச் செய்யுங்க. உங்க விருப்பம் தான் என் விருப்பம்.." என்ற மகளின் கைகளைப் பற்றித் தன் கைகளுக்குள் பொக்கிஷமாக வைத்துக் கொண்டு..


"மாப்பிள்ளையைப் பற்றி நீ ஒன்னுமே கேட்கலையே டா.."

" நீங்களே எப்படியும் சொல்லுவீங்களேன்னு நினைச்சேன்.."என்ற‌ மகளைப் பார்த்தபடியே.. " பேர் செல்வச்சீரன்! ஊர் மதுரை ! அசிஸ்டன்ட் கமிஷனர். அம்மா மட்டும் தான்.." என்றவர், மகளைத் தீர்க்கமாகப் பார்த்தார்..


பாவினியோ, ஒரு நிமிடம் மெளனமாக இருந்தவள்.. "அப்பா நவிலுக்கும் , அம்மாவுக்கும் சம்மதா?"


"அவர்களை விடு உனக்கு ஓகே வா.."


"அப்பா உங்களையெல்லாம் விட்டுட்டு நான் எப்படி மதுரைக்குப் போவேன்.." என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே..


"அப்படிக் கேளுக்கா.. நானும் உன்னை விட்டுட்டு எப்படி இருப்பேன்.." என்று முகம் வாட நின்ற தம்பியைக் கண்டவள், கண்களாலேயே அருகில் அழைத்தாள்..


நவிலும் தன் தமக்கையின் அருகில் சென்று அமர்ந்தவன், "அக்கா நீயாவது அப்பாகிட்ட சொல்லு.." என்ற தம்பியைப் பாவமாகப் பார்த்து வைத்தாள்..


"நவில் அவளையும் சேர்த்துக் குழப்பாதே.." என்று மகனைக் கடிந்தவர்.. மகள் புறம் திரும்பி , "பவிம்மா.. மதுரை தானேம்மா.. எப்ப நினைத்தாலும்,நீயும் வரலாம் ..நாங்களும் வரலாம் .. அப்பா எது செய்தாலும் உன் நல்லதுக்குத் தாண்டா செய்வேன் .."என்றவரிடம்..


" அப்பா தூரம் மட்டும் தான் கஷ்டமா இருந்துச்சு.. மற்றபடி உங்களுக்கு எது சரின்னு தோனுதோ ! அதைச் செய்யுங்க.. ஆனால், நாளைக்கே அவுங்களை வரச் சொல்லனுமா? கால் கட்டுப் பிரித்த பின் வரச் சொல்லாமலே .. "என்ற மகளிடம்..


"அதனால், என்னடா ? பார்ப்பது மட்டும் தான் நாளைக்கு.. அவுங்களும் நாளைக்கு இங்கே ஏதோ சொந்தக்காரங்க திருமணத்திற்கு வாராங்கலாம்.. அப்படியே, உன்னையும் நாளைக்கே பார்த்துட்டு போலாம்ன்னு நினைக்கிறாங்க.. மதுரையிலிருந்து சும்மா..சும்ம, வரமுடியாது.. அவர் வேலையும் அதற்கு வசதிபடாது.." என்றவரிடம், தலையை மட்டுமே ஆட்டினாள்..


அவளுக்கும் மனதிற்குள் பல குழப்பங்கள்.. அதை விடக் குறள் நெறியனின் பார்வையும் , பேச்சும்,செயலும் தந்தையின் முடிவுகளுக்கு அவளைத் தலை ஆட்ட வைத்தது.


அடுத்த நாள் காலை மிக அழகாகவே விடிந்தது.. செல்வச்சீரன் மாலை தான் பாவினியைப் பார்க்க வருவதாக ஏற்பாடு..


தூயவனோ, அன்று தன் தலையில் ஒருவன் பாறாங்கல்லை இறக்கப் போவதை அறியாமல், வழக்கம் போல் அலுவலகம் சென்றார்.


வளர்பிறையும்,நவிலும் வீட்டை சுத்தப்படுத்தும் வேலையில் இறங்கினார்கள்.. நவிலுக்கு இந்தச் சம்பந்தம் சுத்தமாகப் பிடிக்கவில்லை.. இருந்தாலும், அப்பாவின் பிடிவாதத்திற்காக அமைதியாக இருந்தான்.


பாவினியோ, எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அமைதியாகவே நேரத்தைக் கழித்தாள்.


தூயவனுக்கோ, அலுவலகத்தில் இருப்புக் கொள்ளவில்லை.. ஏன் தான் வந்தோமோ? என்று நினைத்தபடியே வேலையைச் செய்து கொண்டிருந்தார்.


அவரின் மனதிற்குள் , எப்படியாவது இந்தத் திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டுமே ! என்ற எண்ணமே ஓடிக் கொண்டிருந்தது..


அதற்குக் காரணம் குறள்நெறியன் தான் ! அவனின் நடவடிக்கைகள் அவரைக் கலவரப்படுத்தியது.. அதனாலேயே எவ்வளவு விரைவாக முடியுமோ? அவ்வளவு விரைவாக மகளுக்குத் திருமணத்தை முடிக்க வேண்டுமென்று எண்ணினார்.


பல யோசனையுடனேயே வேலை பார்த்துக் கொண்டிருந்தவரை, 'நிலன்' இன்டர்காமில் அழைத்து, குறள்நெறியன் அவரை அழைத்தாகச் சொன்னான்..


அதைக் கேட்டதும் மனதிற்குள் இனம்புரியா உணர்வு அவரை வாட்டியது.. பெருத்த யோசனையுடனேயே சென்றவர்.. எம்.டி குறள்நெறியன், என்று அறையின் நுழைவாயிலிருந்த பெயரை பெருமூச்சுடன் ஒரு நொடி பார்த்தார் தூயவன்.


மனதிற்குள் இன்று எந்தக் குண்டு காத்திருக்கோ, என்று எண்ணியபடியே மெல்ல கதவைத் தட்டினார்.


"எஸ் ,கம்மின்.." என்ற கம்பீரமான குரலின் அனுமதியை ஏற்றுக் கொண்டு உள்ளே சென்றவர், "குட்மார்னிங் சார்! என்ன விசயம்! காலையிலேயே என்னை வரச்சொல்லி இருக்கீங்க.." என்றவரிடம்..

"முதலில் உட்காருங்கள்..'என்றான், சுழல் நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்த குறள்நெறியன்.

அவன் சொன்னதைக் கேட்டு ஆச்சரியப்பட்ட தூயவன் , அசையாமல் அப்படியே நின்றார்.


மனதிற்குள், 'குறள்நெறியன் எம்டியாகப் பதவியேற்ற இத்தனை நாட்களில் அவரின் வயதுக்குக் கூட மரியாதை கொடுத்து அவன் உட்கார சொல்லியதே இல்லை.. அப்படிப்பட்டவன் இன்று உட்காரச் சொல்கிறானே! 'என்று யோசித்தார்.


குறள்நெறியனோ,தூயவன் அமராமலேயே யோசனையுடன் நிற்பதைப் பார்த்து, "மிஸ்டர் தூயவன் பீளிஸ் சீட் .."என்றான்.


தூயவனோ, தயக்கத்துடன் அமர்ந்தபடியே ,அவன் முகத்தையே யோசனையுடன் பார்த்தார்.


அவனோ,தன் கையில் பேனாவை வைத்து சுழற்றியபடியே சில நொடிகள் அமைதியாக இருந்தான்.


தூயவனோ, ஏன் இன்று இவ்வளவு அமைதியாக இருக்கிறான். கடந்த ஐந்து வருடங்களாக அவனைப் பார்க்கிறார்..அவன் செயல்கள் எல்லாமே அதிரடியாகத் தான் இருக்கும் என்று நினைத்தவரிடம், அவரின் எண்ணத்தைப் பொய்யாக்காமல்..


"நான் உங்கள் பெண் பாவினியை மணந்து கொள்ள விரும்புகிறேன்.. திருமணத்தை இந்த மாதமே வைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.." என்றவன் அவரின் தலையில் அசராமல் இடியை இறக்கினான்.


அவரோ அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ந்தவர்,தன் காதில் விழுந்தது சரிதானா? என்று தன் காது கேற்கும் திறனை ஒரு நொடி சந்தேகித்தார்.


அவனோ, அவரின் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியைக் கண்டு கொள்ளலாமல், "எந்த ஃபார்மாலிட்டிஸ்சும் வேண்டாம்..நேராக ரிஜிஸ்தர் மேரேஜ் செய்துட்டு , பெரிதாக வரவேற்ப்பு வைத்துக் கொள்ளலாம்.." என்று அவன் பாட்டிற்கு அடுக்கிக் கொண்டே போனான்..


அவரோ, அவனின் திட்டமிடலைக் கண்டு திகைத்தவர், " சாரி சார் எனக்கு இந்தத் திருமணத்தில் சம்மதமில்லை.." என்றார்.


அவனோ,"ஏன் சம்மதமில்லை ?உங்கள் தகுதிக்கு மீறிய இடம்மென்று தயங்குகிறீர்களா?"


"இல்லை..தன் தாயை மதிக்கத் தெரியாதவருக்கு எந்த நம்பிக்கையில் என் பெண்ணைத் தருவது .."என்றவுடன்..


அடங்கா சினத்துடன் ,தான் அமர்ந்திருந்த சுழல் நாற்காலியை வேகமாகப் பின்னே தள்ளியபடி எழுந்தவன், "மிஸ்டர் தூயவன் யாரிடம் என்ன பேசுகிறீங்கன்னு யோசித்துப் பேசுங்கள்.. ஜாக்கிரதை.." என்று வார்த்தைகளைக் கனலாக கக்கினான்..


"நான் யோசித்துத் தான் பேசுகிறேன்.எனக்கு விருப்பமில்லை, இத்தோடு இந்தப் பேச்சை நிறுத்திக் கொள்ளுங்கள்.."


"நான் உங்களிடம் சம்மதம் கேட்கவில்லை என் முடிவைச் சொன்னேன்.."


"மிஸ்டர் குறள்நெறியன்! இஃது ஒன்றும் உங்கள் அலுவலக விஷயமில்லை! உங்க இஷ்டத்திற்கு முடிவு செய்ய.. என் பெண்ணின் திருமண விஷயம்! என் பெண்ணை யாருக்கு மணமுடித்துக் கொடுக்க வேண்டுமென்று நான் தான் முடிவு செய்யனும்.." என்றார் கோபத்துடன்..


அவனோ,"தூயவன் நீங்க இன்னும் என்னிடம் தான் வேலை செய்றீங்க என்பதை மறந்துவிடாதீங்க.."


"நான் உங்களிடம் வேலை செய்வதால் உங்களுக்கு அடிமையில்லை .. நீங்க சொல்வதற்கெல்லாம் தலையாட்ட.."


"நான் நினைத்ததைச் சாதிக்காமல் விட்டதாக என் சரித்திரத்திலேயே இல்லை.."


"இருக்கலாம் ..எல்லாத்திற்கும் ஒரு விதி விலக்கு இருக்கு.. நீங்க தலைகீழாக நின்னாலும் இந்தத் திருமணம் நடக்காது.." என்றவரிடம்..


"அதையும் பார்த்துடலாம். உங்க பொண்ணுக்குத் திருமணம் என்று ஒன்று நடந்தால் அஃது என்னோட தான்! அதை எந்தக் கொம்பன் நினைத்தாலும் தடுக்க முடியாது.." என்று நக்கலாகச் சொன்னவனை எரித்து விடுவது போல் பார்த்தவர்.. பதிலே சொல்லாமல் வேகமாக எழுந்து வெளியேறினார்.


அவரின் மனமும்,உடலும் அளவுகடந்த கோபத்தில் நடுங்கியது.. இத்தனை நாள் அவனிடம் நேருக்கு நேர் மோதாதவர் இன்று மோதிவிட்டார்..


இனி எந்தப் பின்விளைவுகள் அவனால் வந்தாலும், அவர் சந்திக்கத் தயாராகத் தான் இருந்தார். அவரின் உயிரான மகளைக் கேட்டால்..உடனே இந்த ராட்சசனிடம் தூக்கி கொடுக்க அவர் என்ன முட்டாளா?


அவன் எத்தனை பணக்காரானாக இருந்தாலும், அவருக்கு ஒன்றுமில்லை.. அவன் அழகாக இருக்கட்டும்.. புத்திசாலியாக இருக்கட்டும்.. வீரனாக இருக்கட்டும்.. ஆனால், தாயை மதிக்கவில்லை என்பதிலேயே மற்ற அத்தனை நல்லதும் அடிப்பட்டுப் போய்விட்டதே..


'தாயிடம் அன்பு காட்டத் தெரியாதவனுக்கு, மனைவியிடம் மட்டும் அன்பு காட்டத் தெரியுமா?' என்று தனக்குள்ளேயே கேள்விக் கேட்டுக் கொண்டவருக்குக் கோபம் மட்டும் அடங்கவே இல்லை..


'பெண் கேட்கும் போது கூட என்ன திமிர்.. சம்மதம் கேட்கவில்லையாம்.. முடிவு எடுத்து விட்டானாம்.. யார் பெண்ணுக்கு யார் முடிவெடுப்பது.. ' அவனை அடித்துப் பல்லை உடைக்காமல் வந்தோமே? என்றிருந்தது அவருக்கு..


'எப்படித் தான் அந்தப் புண்ணியவதி வயிற்றில் வந்து இவன் பிறந்தானோ ! 'என்று நினைத்தவருக்கு ஆத்திரம் அடங்கவே இல்லை..


'எவ்வளவு கொழுப்பிருந்தால் என்னிடமே எந்தக் கொம்பனும் தடுக்க முடியாதுன்னு சொல்லுவான்.
இந்த மாதிரி எதுவும் நடக்கக் கூடாதுன்னு தானே மகளுக்குத் திருமணத்தை உடனே நடத்த விரும்பினார்.. ஆனால் , இப்போது அவர் பயந்தது போலவே நடந்து விட்டதே !' என்று நினைத்தவர், அரை நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றார்..


குறள்நெறியனோ ,எரிமலையாகக் குமறிக் கொண்டிருந்தான்.. தூயவனின் உதாசீனம் அவனை வெகுண்டேழச் செய்தது.. மனதிற்குள் 'எத்தனை பிரச்சினை வந்தாலும், நீங்க தான் என் மாமானார் மிஸ்டர் தூயவன் . இனிமேல் தான் இந்தக் குறள்நெறியனின் விளையாட்டைப் பார்க்கப் போறீங்க..' என்று பேசிக் கொண்டான்..


விதியின் விளையாட்டில் பொம்மையாகப் போவது யாரோ? மங்கையவள் நாயகனின் சூழ்ச்சிக்கு இரையாகப் போகிறாளோ?விடையாகப் போகிறாளோ?காலத்தின் கையில்..


அன்பு கொல்லும்..‌
 
Last edited:

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
327
Reaction score
607
Points
93
அன்பே! அன்பே! கொல்லாதே!

அத்தியாயம் 12


குறள்நெறியனிடம் பேசிய பின்பு தூயவனால், கோபத்தைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை..


அலுவலக்கத்தில் தொடர்ந்திருந்தால், தன்னை மீறி அவனிடம் கோபத்தைக் காட்டிவிடுவோமோ? என்ற எண்ணத்தில் தான் அவர் அரை நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தார்..


'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பதற்கேற்ப்ப அவரின் மனநிலையை முகம் கண்ணாடி போல் காட்டியது..


வளர்பிறையும், கணவனின் முகத்தைக் கண்டவுடனேயே புரிந்து கொண்டார். ஏதோ சரியில்லையென்று.. ஆனால் , அவரே சொல்லட்டுமென்று நினைத்தவர், வாடிப்போய் வந்த கணவனுக்கு மோர் கலக்கி கொடுத்தார்.


தூயவனோ, எதுவும் பேசாமல் மனைவி கொடுத்த மோரை வாங்கி மெளனமாகக் குடித்துவிட்டு மகளைத் தேடிச் சென்றார்..


மகளின் மலர்ந்த முகத்தைக் கண்டதுமே , ஆதவனைக் கண்ட செந்தாமரையைப் போல் அவரின் முகமும் மலர்ந்தது.. கவலைகளும் மறைந்தது. சிறிது நேரம் மகளுடன் பேசிக் கொண்டு இருந்தவருக்கு, மனப்பாரமெல்லாம் காணாமல் போனது.. அவர்களுடன், நவிலும் கலந்துகொள்ள அங்கே மகிழ்ச்சிக்குப் பஞ்சமில்லாமல் போனது..


மாலை சரியாக ஆறுமணிக்குச் செல்வச்சீரன் தன் தாயுடன் பாவினியைப் பார்க்க வந்திருந்தான்..



தூயவனுக்குச் செல்வச்சீரனைப் பார்த்தவுடனேயே, ரொம்பப் பிடித்துவிட்டது.. வளர்பிறைக்கும் மகளுக்குப் பொருத்தமாக இருப்பார் என்று எண்ணமே தோன்றியது..



செல்வச்சீரனோ ,எந்தப் பந்தாவுமில்லாமல் மிக இயல்பாகத் தூயவனுடன் பேசிக் கொண்டு இருந்தான். ஆனால், நவிலோ செல்வச்சீரனை ஆராய்ச்சிப் பார்வை பார்த்தபடியே அமர்ந்திருந்தான்.


வளர்பிறையோ, மகளைப் பார்த்து..பார்த்து, தேவதையாக அலங்கரித்திருந்தார்.. மாம்பழ வண்ணத்தில் மெலிதான அரக்கு நிறத்தில் பாடரும் ,உடல் முழுவதும் அரக்கு நிறத்திலேயே அங்காங்கே கொடியும், பூவுமாகப் பிணைந்திருந்த புடவை பாவினிக்கு அத்தனை பொருத்தமாக இருந்தது.


தளரப்பின்னிய கேசத்தில் வளர்பிறை , சரமாக முல்லை மொட்டுக்களை வைத்துவிட்டார். பாவினியோ முகத்தில் அளவான ஒப்பணையில் சின்னதாக வட்டப் பொட்டு இட்டு தன் அலங்காரத்தை முடித்துக்கொண்டாள். மையிடாத கண்களும் !சாயம் பூசாத இதழ்களும்! அவள் அழகுக்கு இன்னும் மெரூகூட்டியது..


வளர்பிறையோ, மகளை ஒரு முறை தலை முதல் அடிவரை பார்த்து திருப்தி அடைந்தவர், மகளை உச்சிமுகர்ந்து திஷ்டி கழித்தார்..


பாவினியை நடக்கவிடாமல், அவள் அறையிலேயே இருக்க வைத்த தூயவன்,செல்வச்சீரனையும்,அவன் தாயையும் பாவினியின் அறைக்கே அழைத்துச் சென்று இருவரையும் சந்திக்க வைத்தார்.


பாவினியோ, எந்த வித அலட்டலும் இல்லாமல் இயல்பாக அவர்களைப் பார்த்து மென் புன்னகையுடன் வரவேற்றாள்..


பாவினியை பார்ததவுடனேயே செல்வச்சீரனுக்கும்,அவன் தாயாருக்கும் மிகவும் பிடித்துவிட்டது..


தூயவனோ பாவினிக்கும் ,செல்வச்சீரனுக்கும் தனிமை கொடுத்துவிட்டு, மற்றவர்களை அழைத்துக் கொண்டு வெளியில் சென்றார்..


பாவினியின் அறையிலிருந்த மேஜை மீது சாய்ந்து நின்று கொண்டே செல்வச்சீரன் , பாவினியைப் பார்த்து "பா..வினி.. மிக அழகான பேர்.. பேரே சொல்கிறது நீங்க பாடலைப் போல் இனிமையாக இருப்பீங்கன்னு..அப்படியா ..?" என்று அவளின் கண்களைப் பார்த்துக் கேட்டவனிடம்..புன்னகையை மட்டுமே பரிசளித்தாள்.


அவனோ, அவளின் கால்களைப் பார்த்து, "இப்போ கால் வலி பரவாயில்லையா.. ?எப்போ கட்டு பிரிக்கனும்..?" என்றவனிடம்..


" ம்..! நெக்ஸ்ட் வீக் .."


" ஓ.! என்னைப் பிடிச்சு இருக்கா..?"என்றவனிடம், பதிலே சொல்லாமல் சிரிப்பை மட்டுமே பதிலாகத் தந்தாள்.


அவனோ , " பவி எனக்கு உங்களை ரொம்பப் பிடிச்சிருக்கு. காலம் பூரா வாழப் போறது நாம் தான். அதனால் எனக்கு உங்க தெளிவான பதில் வேனும்.. "என்றவனிடம்.


" எனக்கு எல்லாமே என் அப்பா தான்.. அப்பாவுக்குப் பிடிச்சா எனக்கும் பிடிச்ச மாதிரி தான்.."


" ஓ..!அப்பா பொண்ணா? பட் வாழப் போறது நாம் தானே! அதனால் , நமக்கு ஒருவரை ஒருவர் பிடிக்கனும்,புரிந்து கொள்ளனும் அப்பத் தானே நம்ம எதிர்கால வாழ்க்கை நல்லா இருக்கும்.."


" ம்..! எனக்கு மதுரை மட்டும் தான் பிரச்சினை.. அப்பா,தம்பியை பார்க்காமல் இருப்பது தான் கஷ்டம்.. மற்றபடி ஒன்னும் பிரச்சினையில்லை.."


" ஓ..! கொஞ்ச நாள் பொறுத்துக்கோங்க இங்கேயே மாற்றல் வாங்கிட்டு வந்துக்கலாம்.. பட் பிடிச்சுருக்குன்னு நேரா சொல்லமாட்டீங்க..! ஆனால், நான் சொல்றேன் எனக்கு உங்களை ரொம்பப் பிடிச்சுருக்கு.. 'மிஸஸ் செல்வச்சீரனா ' நீங்க ஆகும் நாளுக்காக, இப்போதிருந்தே காத்திருக்கிறேன் .."என்றவனைத் திகைத்துப் போய்ப் பார்த்தாள்..


அவளின் திகைப்புக்குக் காரணம் , சட்டென்று தோன்றிய குறள்நெறியனின் ஞாபகம் தான். அவன் 'மிஸஸ் செல்வச்சீரன் ' என்று சொன்னதுமே, குறள்நெறியன் சொன்னது தான் அவளுக்கு ஞாபகத்திற்கு வந்தது.


அவன் தானே , 'மிஸஸ் குறள்நெறியன் ' என்று சொல்லிச் சொல்லி அவளைப் பயமுறுத்தி வைதாதிருந்தானே ! அது தான் சீரன் அப்படிச் சொன்னவுடன் அதிர்ந்து விழித்தாள்..


'குரங்கை நினைக்காமல் மருந்தைக் குடி' என்றால், குரங்கைத் தவிர வேறு எதயையும் நினைக்கத் தோன்றாத மனநிலையில் தான் பாவினியிருந்தாள். ஏதாவது ஒரு விசயம் அவனை அவளுக்கு ஞாபகப்படுத்திக் கொண்டே இருந்தது.


செல்வச்சீரனோ, அவளின் திகைத்த பார்வையை ரசித்தபடியே , " நான் நம்ம கல்யாணத்தைச் சீக்கிரம் முடிக்கச் சொல்லப் போறேன்.. ஏனோ ?உன்னைப் பார்த்தவுடனேயே அவ்வளவு பிடித்துவிட்டது.. போலிஸ்காரனை கவிதை எழுத வைத்துவிடுவாய் போல.. "என்று மென்புன்னகை சிந்தியவன்.. தொடர்ந்து, "வரட்டுமா ? நான் நாளை ஃபோன் செய்கிறேன். இன்று இரவு ஓர் அவசர வேலையிருக்கிறது.. உடம்பைப் பார்த்துக்கோ.." என்று ஒருமைக்குத் தாவியவன், அவளின் பதிலை எதிர்பார்க்காமல் கூறிச் சென்றான்.



பாவினியோ, ஓர் இனம் புரியாத பயத்துடனேயே அமர்ந்திருந்தாள். அவளுக்கே , அவள் நிலை புரியவில்லை.. செல்வச்சீரன் அவளிடம் பேசிய விதமும் அவனின் நேர்பார்வையும் அவளுக்கு அவனின் குணத்தைச் சொல்லாமலேயே உணர்த்தியது.


ஆனாலும், அவளின்‌மனதிற்குள் ஏதோ? ஒன்று அவளை வாட்டியது . அஃது என்னவென்று அவளால் உணரத் தான் முடியவில்லை.. இதே போல் தான் குறள்நெறியனின் பார்வையும் இருக்கும் என்று நினைக்காமல் அவளால் இருக்க முடியவில்லை..



தூயவனோ, செல்வச்சீரனை அனுப்பிவிட்டு மகளிடம் வந்தவர்.. " பவிம்மா மாப்பிள்ளயைப் பிடித்து இருக்கா? எனக்கு ரொம்பப் பிடித்து இருக்குடா.. இந்த வயதிலேயே பெரிய பதவியில் இருந்தாலும் ,கொஞ்சம் கூட‌ தலைக்கனம் இல்லை.. பொறுப்பான பையன்..கண்ணியமான பேச்சு இதெல்லாம் ரொம்பப் பிடித்து இருக்குடா..?" என்றவரிடம்..


"அப்பா உங்களுக்குப் பிடித்தால் போதும் பா .."என்ற மகளிடம்..


"எனக்குப் பிடித்தால் போதுமா டா ..?உனக்கு பிடிக்க வேண்டாமா..? வாழப் போறது நீ தானே .. அப்பாவுக்காகச் சொல்லாமல் உனக்குத் தோன்றியதை சொல்..!"


" என் அப்பாவின் விருப்பம் தான், என் விருப்பம்.." என்றவள் . சலுகையாகத் தந்தையின் தோள்களில் சாய்ந்து கொண்டாள்..


அப்போது உள்ளே வந்த நவிலோ, முகத்தைத் தொங்க போட்டபடியே பாவினியின் அருகில் அமர்ந்தான்.

தூயவனோ, மகனின் முகத்தைப் பார்த்த படியே.. "சார் ஏன் இப்படி முக்த்தை தூக்கி வச்சுருக்கீங்க .. மாப்பிள்ளையை எப்படி..?" என்றவரிடம்..


" அப்பா..எனக்கு ‌ரொம்பப் பிடிச்சு இருக்கு.." என்றவனிடம்..


"என்னடா சொல்றே .. பிடிச்சிருந்தா சந்தோஷப்படுவீயா ? இப்படி எதுக்கு முகத்தைத் தூக்கிட்டு இருக்கே.."


" ம்..! அக்காவை பிரிந்து எப்படி இருப்பேன்? அது தான் கவலையா இருக்கு.."


" மாப்பிள்ளை சொல்லிட்டார்.. முடிந்தவரை சீக்கிரமா இங்கேயே மாற்றல் வாங்கிட்டு வரேன்னு .."என்றவரிடம்..


" அய்..! நிஜமாவா .. ? சூப்பர்.. அப்போ ,என் பவிக்குட்டியை நான் பிரிய வேண்டாம் .." என்று தன் தமக்கையின் கன்னங்களைப் பிடித்துக் கொஞ்சியவனைக் கண்களில் நீர் தேங்கப் பார்த்தாள் பாவினி.


பாவினியின் கண்களில் கண்ணீரைக் கண்டு , தூயவனும்,நவிலும் என்னவென்று பதறியவர்களிடம்.. மெளனமாக ஒன்றும்மில்லை என்று தலையை மட்டுமே ஆட்டினாள்.


அவள் மனதிற்குள், இத்தனை அன்பைப் பெற தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று ஆனந்தப் பட்டாள்.


அடுத்து வந்த நாட்களில் கல்யாண வேலைகள் மடமடவென்று நடந்தது. செல்வச்சீரன் ஊருக்குச் சென்ற பின் ,தூயவனுக்கு அழைத்து இருமுறை பேசியவன்.. பாவினியிடமும் நலம் விசாரித்தான்.


தூயவனோ , குறள்நெறியன் மீதிருந்த அச்சத்தின் காரணமாக ,அலுவலகத்தில் திருமண விசயத்தைக் காட்டிக் கொள்ளவில்லை.. பத்திரிகை உடன் தான் , அவனிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்தார்.


அதற்கு முன்பே தெரிந்தால், அவன் ஏதாவது செய்து திருமணத்தை நிறுத்தி விடுவானோ? என்ற அச்சம் அவரை மெளனமாக்கியது.



குறள் நெறியனும் அவனின் வேலைப்பளுவில் இவரைப் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை..


குறள்நெறியனுக்கு ,அவன் மீது அளவுகடந்த நம்பிக்கை இருந்தது. அதனால், பாவினியின் திருமணம் தன்னுடன் தான் என்ற இறுமாப்பில் இருந்தான்.


தூயவனோ, நாவேந்தியை மட்டும் அழைத்துப் பாவினியின் திருமணவிசயத்தைச் சொன்னார்..


நாவேந்தியோ, அதைக் கேட்டவுடன் மனதில் சொல்ல முடியாத துயரத்துடன் அமைதியாகக் கேட்டுக் கொண்டார்.. அவரால், பதிலே பேசமுடியவில்லை.. அவர் ஆசைபட்டது எதுவும் நடக்கக் கூடாதென்று அவர் தலையில் எழுதி இருக்கிறது போல.. என்று நினைத்து மருகினார்..



கல்யாணவேலைகள் ஒரு புறம் வேகமாக நடந்து கொண்டிருந்தது.. ஆனால், நவில் மட்டும் எந்த வேலையிலும் முழு மனதுடன் ஈடுபடாமல் சுத்திக் கொண்டிருந்தான். அதைக் கவனித்த தூயவன், அவனிடம் என்னவென்று விசாரிக்க.. அவனோ,செல்வச்சீரனிடம் தனியாகப் பேசனும் என்றான்.


தூயவனோ, ஃபோனில் பேசச் சொல்ல.. அவனோ, நேரில் தான் பேசனும் என்று அடம்பிடித்தான். அவருக்கோ, அவன் பிடிவாதம் எரிச்சலைக் கொடுத்தாலும், செல்வச்சீரனிடம் பேசி அதற்கான ஏற்பாட்டைச் செய்தார்..


செல்வச்சீரனோ, இரண்டு நாட்களில் வேலை விசயமாகச் சென்னை வருவதாகவும் , அப்போது நவிலை சந்திப்பதாகக் கூறினான்..


செல்வச்சீரன் சொன்னது போல், சென்னை வந்தவன்.. நவிலை சென்னை நகரத்தின் பிரபலமான வணிக வளாகத்திற்கு மாலை சந்திக்க வரச்சொல்லியிருந்தான்.


நவிலும் சரியான நேரத்திற்குச் செல்வச்சீரனை சந்திக்க வணிக வளாகத்திற்கு வந்திருந்தான். இருவரும் அங்கிருந்த ஃபுட்கோர்ட்டில் ஒதுக்குப்புறமாக அமர்ந்தனர்.


செல்வச்சீரனோ ,எந்த வித பந்தாவும் இல்லாமல், "எப்படி இருக்கே நவில்.. அப்பா நீ ஏதோ பேசனும்ன்னு சொன்னார். என்ன விசயம்.." என்றவனிடம்..


" நீங்க எப்படி இருக்கீங்க.. நீங்க சீக்கிரம் சென்னைக்கு டிரான்ஸ்ஃபர் வாங்கிட்டு வந்துடுவீங்கன்னு அப்பா சொன்னார் . அப்படியா..?"



" ம்..!‌உங்க அக்கா தான்.. உங்களையெல்லாம் பிரிந்து இருக்க முடியாதுன்னு சொன்னா .. அது தான்.." என்றவனை, நவிலுக்கு ரொம்பவே பிடித்துவிட்டது.



உடனே "தேங்கஸ் மாமா .. அக்கான்னா எனக்கு உயிர்.. அவளைப் பிரிந்திருப்பது எனக்கு ரொம்பக் கஷ்டம்.. எப்படி இருப்பேனோ? என்று தவித்துட்டு இருந்தேன். இல்லைன்னா நானும் மதுரையிலேயே ஒரு வேலையைப் பார்த்துடலாமோன்னு நினைத்தேன்.." என்றவனை ஆச்சரியாமாகப் பார்த்தான் செல்வச்சீரன்..



அவன் மனதிற்குள் இவர்கள் பாசம் பிரமிப்பை ஏற்படுத்தியது.. ஒத்தையாக வளர்ந்தவனுக்கு அக்கா தம்பியின் பாசம் வியப்பைத் தந்தது.


நவிலோ, தன்னை வியப்பாகப் பார்த்தவனிடம்.. "மாமா பவிக்கா எங்க எல்லாருக்குமே செல்லம்.. பவிக்காவே நல்லா பாத்துக்கவீங்க தானே.. அக்கா குழந்தை மாதிரி .. ரொம்ப நல்ல டைப்.. மத்தவங்க மனசு பார்த்து நடந்துக்குவா.. அவ்வளவு எளிதாகக் கோபம் வராது.. ஆனால் , கோபம் வந்தால் பேசாமலே கொள்ளுவா..நீங்க அவகிட்ட எப்பவும் கோபப்பட்டாதீங்க..அவ தாங்க மாட்டா..சொன்னால் புரிஞ்சுக்குவா.." என்ற பேசிக் கொண்டே போன நவிலைப் பார்த்தவனுக்கு, அவளுக்கு இவன் தம்பியா ? இல்லை அண்ணனா?என்ற‌ சந்தேகம் தான் வந்தது.


தன்னை மறந்து பேசிக் கொண்டிருந்த நவிலின் கைகளை அழுந்த பற்றிய செல்வச்சீரன்.. "நவில் உன் அக்காவை நிச்சயமா என் கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக்கிறேன். போதுமா..? நானும் உன் அக்காவைப் போலத் தான்! எனக்கும், அவ்வளவு சீக்கிரம் கோபம் வராது.. வந்தால் கொஞ்சம் அதிகமா வரும். ஆனால், உங்கக்கா கிட்ட காட்ட மாட்டேன் .. நீ மாமான்னு சொன்னபோதே உனக்கு என்னைப் பிடித்துவிட்டது என்று புரிந்தது. ஃ சோ நீ மனதைக் குழப்பிக்காம நிம்மதியாக இரு.. பவியை நான் பார்த்துக்கிறேன்.என்றவன், தொடர்ந்து , "பவிக்குக் கால் கட்டு எப்போ பிரிக்கிறீங்க.." என்றவனிடம்..


" நாளைக்குப் போகனும் மாமா.." என்று கூறிக் கொண்டிருக்கும் போது .. "ஹாய் நவில்.." என்ற குரலில் தன்னை அறியாமல் குரல் வந்த திசையைத் திரும்பிப் பார்த்தான்.


அங்கே, குறள்நெறியன் நின்று கொண்டிருந்தான். அவனோ,ஒரு கிளைண்டயை மீட் பண்ண வந்திருந்தான்.. அவனும் அதே ஃபுட்கோர்ட்டில் அமர்ந்து தான் பேசிக் கொண்டிருந்தான். எதார்த்தமாகத் திரும்பியவனின் கண்களில் நவில் தென்பட்டான்.



நவில் பேசிய உடல்மொழியே, ஏதோ முக்கியமான விசயமென்று குறள்நெறியனை நினைக்கவைத்தது.. அது மட்டுமில்லாமல் செல்வச்சீரனை பார்த்தவுடனேயே, அவன் காவல்துறையைச் சேர்ந்தவன் என்பது நன்றாகத் தெரிந்தது. அவன் உடல் மொழியும்.. போலீஸ் கட்டிங்குமே அதை உறுதி செய்தது.


இவர்களைப் பார்த்துக் கொண்டே, தன் கிளைண்ட்டிடம் பேசி அனுப்பியவன், என்ன விசயம் என்று தெரிந்து கொள்ள நவிலிடம் வந்தான்.


நவிலோ, குறள்நெறியனைப் பார்த்ததும் சிறு அதிர்ச்சி அடைந்தவன், அதைக் காட்டிக்காமல் "ஹாய் சார் எப்படி இருக்கீங்க.." என்றான்..


அவனோ, நான் நல்லா இருக்கேன்..பவி எப்படி இருக்கா..? மாவுக்கட்டு பிரிச்சாச்சா? கால் இப்போ எப்படி இருக்கு.." என்றவனிடம்..


"நல்லா இருக்கா..நாளைக்குத் தான் ஹாஸ்பிட்டல் போகனும்.." என்றவனிடம் .. "சாரை எங்கோயோ பார்த்த மாதிரி இருக்கே ?"என்று செல்வச்சீரனைப் பார்த்துக் கொண்டே நவிலிடம் கேட்டான்..


நவிலோ , இவர் மிஸ்டர் செல்வச்சீரன் ! மதுரையில் அசிஸ்டன்ட் கமிஷனராக இருக்கிறார் .. பவிக்காவை கல்யாணம் பண்ணிக்கப் போகிறவர்.. " என்ற உடனேயே, குறள்நெறியன் ஒரு நொடி அதிர்ந்தவன் , அடுத்த நொடி செல்வச்சீரனைப் பார்தது வாழ்த்துகள் சொன்னான்.


செல்வச்சீரனோ ,குறள்நெறியனுக்கு நன்றி சொன்னபடியே, திரும்பி நவிலை கேள்வியாகப் பார்த்தான்..



நவிலோ , இவர் மிஸ்டர் குறள்நெறியன் ! அப்பாவின் எம்.டி. ! அக்காவுக்குக் காலில் அடிபட்ட போது, இவர் தான் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போய் நிறைய உதவி செய்தார்.." என்றான்.


" ஓ..! அப்படியா? தேங்க்ஸ் சார் .."என்ற செல்வச்சீரன், குறள்நெறியனை யோசனையாகப் பார்த்தான். அவனுடைய போலீஸ் மூளை தீவரமாக அவனை ஆராய்ந்தது.


பாவினிக்குத் திருமணம் என்ற உடனேயே, குறள்நெறியன் முகத்தில், ஒரு நொடி தெரிந்த அதிர்ச்சியும்.. உடனே இயல்பாக மாறிய முகமும் அவனுக்கு மனதிற்குள் உறுத்தியது.


செல்வச்சீரனுக்கு ,குறள்நெறியனைப் பார்த்தவுடனேயே , இவன் சாதாரணமான ஆள் இல்லை .. என்று புரிந்தது.


குறள்நெறியனோ, சில நிமிடங்கள் அவர்களிடம் சாதாரணமாகப் பேசிவிட்டு, கிளம்பியவனின் மனமமோ ! எரிமலையாகக் குமறிக் கொண்டிருந்தது.


மங்கையவள் ! மன்னவனின் மனக்குமறலுக்குப் பழியாவளோ? இல்லை தென்றலாகி குளிர்விப்பாளோ? காலத்தின் கையில்..


அன்பு கொல்லும்..
 
Last edited:

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
327
Reaction score
607
Points
93
அன்பே! அன்பே!கொல்லாதே!

அத்தியாயம் 13


செல்வச்சீரனை நவிலுக்கு மிகவும் பிடித்துவிட்டது. அவனைச் சந்தித்து விட்டு வந்ததிலிருந்தே, நவில், தன் தந்தையிடமும்,தமக்கையிடமும் செல்வச்சீரன் புகழ் பாடிக் கொண்டே இருந்தான்.


பாவினியோ, எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அமைதியாகவே இருந்தாள். தூயவனோ, மகனின் மகிழ்ச்சியில் பூரித்துப் போனவர்.. நல்ல பையனைத் தான் , மகளுக்குத் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்று மகிழ்ந்தார்.


குறள்நெறியனோ, பாவினிக்கு திருமணமென்று கேள்விபட்டவுடன், முதலில் எரிமலையாகக் கொதித்தவன், அதன் பின் யோசனையாகவே இருந்தான்.


தனக்குத் தெரியக் கூடாதென்று நினைத்து, திருமணத்தைத் தூயவன் ஏற்பாடு செய்திருப்பது, அவனுக்கு நன்றாகவே புரிந்தது. தன் மீது அவருக்கிருக்கும் பயத்தை நினைத்து தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டவன், வீடு வந்ததும், தன்னை எதிர்கொண்ட பாட்டி மெய்ம்மையிடம் என்றுமில்லாமல் அன்று, "சாப்பிட்டீங்களா..?" என்றான்.


மெய்யமையோ, அதிசயமாகப் பேரன் விசாரித்தில் ,மகிழ்ந்து வாயடைத்து ஒரு நிமிடம் நின்றவர்..


பேரன் தனது அறைக்குச் செல்ல வேகமாகப் படி ஏறுவதைக் கண்டு, " குறள் டிபன் எடுத்து வைக்கிறேன் சீக்கிரம் வாப்ப்பா.." என்றவரிடம்..


"பாட்டி இன்னைக்கு எனக்கு டிபன் வேண்டாம் . நான் இன்னைக்கு ரொம்பச் சந்தோஷமா இருக்கேன். அதனால் , பசிக்கவே இல்லை.. " என்ற பேரனைப் பார்த்து.. "என்ன விசயமுன்னு சொன்னால் நானும் சந்தோஷப்படுவேனே .. இரவு வெறும் வயிற்றில் படுக்கக் கூடாது.. பாலாவது குடி .." என்ற பாட்டியிடம்.. பதிலே‌ சொல்லாமல் சன்னமான இதழ் புன்னகையுடன் வேகமாகப் படியேறி தன் அறைக்குச் சென்றான்.


மெய்யமையோ, பதிலே சொல்லாமல் போகும் பேரனையே விழி எடுக்காமல் பார்த்தபடி நின்றார்.. மனதிற்குள், 'கடவுளே இப்படியே என் பேரன் என்றும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்று ' மனதார வேண்டிக் கொண்டார்.


சோஃபாவில் அமர்ந்து பாட்டியும்,பேரனும் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டிருந்த செங்கோடன் , பேரன் சென்றதும் மனைவியிடம், " எந்த வில்லங்கத்தை இழுத்துட்டு வரப்போறானோ தெரியலையே.. ?" என்று புலம்பினார்.


" உங்களுக்கு எப்ப பாரு அவனைக் குறை சொல்வதே வேலை.. நானே, எத்தன நாள் கழிச்சு இன்னைக்குத் தான் அவன் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தை பார்த்து மனசு நிம்மதியானேன்.. அஃது உங்களுக்குப் பொருக்காதே.."என்று கணவரிடம் சலித்துக் கொண்டவரிடம்..


" அடி போடி.. நீ இன்னும் அவனைச் சரியாகப் புரிஞ்சுக்கலை.. அவன் கண்ணில் தெரியும் பளபளப்பே ! அவன் ஏதோ, தேவையில்லாத பிரச்சினையை விலைக்கு வாங்கப் போறான்னு தெரியுது.." என்று கலங்கியவரிடம்..


"நீங்க தான் தேவையில்லாததைப் போட்டுக் குழம்பிக்கிறீங்க‌..அவன் அப்படியெல்லாம் ஒன்னும் செய்ய மாட்டான்.அவனைக் குறை கூறுவதே.. உங்களுக்குப் பொழப்பா போச்சு .."என்று கடிந்து கொண்டார்.


செங்கோடனோ , பேரன் மீது கண்மூடித்தனமான பாசத்தை வைத்திருக்கும் மனைவியைப் பார்த்து , அவருக்குப் பரிதாபமாகத் தான் இருந்தது. அவரும் ஒரு காலத்தில் பேரன் மீது அளவு கடந்த பாசம் வைத்தது, மட்டுமின்றிச் செல்லமும் கொடுத்தவர் தான்.. ஆனால் , அதுவே பேரனின் குணம் மாறியதற்குக் காரணம் என்று தாமதமாகவே புரிந்து கொண்டவர் , அதன்பிறகு முடிந்தவரை தன்னை மாற்றிக் கொண்டார்.


' கண்கெட்ட பிறகு சூரியநாமஸ்காரம் தான்!' ஆனாலும், நடந்ததை நினைத்து வருந்துவதை விட , நடக்கப் போவதையாவது இனி மாற்ற முயற்சிக்கலாம் என்று நினைத்துத் தான், பேரனிடம் நடந்து கொள்ளும் விதத்தை மாற்றிக் கொண்டார்.


குறள்நெறியனோ, தனது அறைக்கு வந்தவன்,உடையைக் கூட மாற்றாமல் சோஃபாவில் அமர்ந்து தன் அலைபேசியை எடுத்து பாவினிக்கு அழைத்தான்..


பாவினியின் அலைபேசி எண்களை, நிலன் மூலம் ஏற்கனவே வாங்கி வைத்திருந்தான். இப்போது அஃது உபயோகமானது.


புத்தகம் படித்துக் கொண்டிந்த பாவினியோ, புது நம்பரிலிருந்து அழைப்பு வருவதை யோசனையுடன் பார்த்தவள் , 'ஒரு வேளை செல்வச்சீரனா இருக்குமோ ! ' என்று நினைத்து அழைப்பை உயிர்ப்பித்தாள்..



அந்தப்பக்கம், "மிஸ் பாவினி ..மிஸஸ் பாவினி ஆகப்போறீங்களாமே.. வாழ்த்துகள் ! " என்ற குறள் நெறியனின் குரலில் தூக்கிவாரிப் போட திகைத்து விழித்தாள்.


குறள்நெறியனோ, பாவினியிடமிருந்து பதில் வராமல் போகவும் , "ஹாலோ..ஹாலோ.." என்று பலமுறை அழைத்தான்.


அவளோ, ம்..!" என்று மட்டுமே சொல்லவும்.. " ஏன் கல்யாணப் பொண்ணு பேச மாட்டீங்களா? பேசாட்டி பரவாலை .. நான் சொல்வதை மட்டும் கேட்டுக்கோ.. உனக்குக் கல்யாணமன்னு ஓன்னு நடந்தா .. அஃது என் கூட மட்டும் தான் ! இதை மட்டும் நினைவில் வச்சுக்கோ .. " என்றவன், அதே வேகத்தில் அழைப்பை துண்டித்தான்.


பாவினிக்கோ, ஒன்றும் புரியவில்லை .. 'என் நம்பர் இவனுக்கு எப்படித் தெரியும் ! கல்யாண விசயம் யார் சொன்னா? அப்பா சொல்லி இருப்பாரா? எதற்கு இப்ப கால் செய்தான் ? நம்மை மிரட்டவா?' என்று குழம்பியவள், இவன் என்ன சொன்னாலும், அப்பாவை மீறி இவனால் ஒன்றும் செய்ய முடியாது என்று நினைத்தாள் அந்தப் பேதை..


குறள்நெறியனோ, பாவினியிடம் பேசிய பின்பு மனதிற்குள் அடுத்த என்ன செய்ய வேண்டுமென்று, திட்டமிட்டவனின் இதழ்களின் ஓரம் மர்மபுன்னகை வந்து ஒட்டிக் கொண்டது. அதுவே, அவனின் ஆட்டம் தொடங்கி விட்டது என்று சொல்லாமல் சொல்லியது.


அடுத்த நாள் தூயவனை அலுவலகத்தில் சந்தித்த குறள்நெறியன், " மிஸ்டர் தூயவன் பொண்ணுக்குக் கல்யாணம் ஃபிக்ஸ் பண்ணியிருக்கீங்களாமே ! சொல்லவே இல்லை.. வாழ்த்துகள் ! " என்றவன் ஒரு நக்கல் சிரிப்புடன் அவரைக் கடந்து சென்றான்.


தூயவனோ, அவன் பேசியதைக் கேட்டு உறைந்து போய் நின்றார்.. அவர் மனதிற்குள் ' இவனுக்கு எப்படித் தெரியும் ! கண்டிப்பாக நாவேந்தி சொல்லியிருக்க மாட்டாள்.. வேறு யார் சொல்லியிருப்பார்கள் ..'என்று நினைத்துக் குழம்பினார்..


வளர்பிறையும்,நவிலும் பாவினியை காலில் இருக்கும் மாவுக்கட்டைப் பிரிக்க மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்கள்.


மருத்துவரோ, பாவினியின் காலிருந்த மாவுகட்டை‌ப் பிரித்துப் பரிசோதித்து விட்டு,திரும்பவும் எக்ஸ்ரே எடுத்து வரச் சொல்லி பார்த்தவர்.. "இனி மாவுக்கட்டு தேவை இல்லை..விரிசல் கூடிவிட்டது.மெதுவாக நடக்கலாம்,ரொம்ப ஃஸ்டெயின் செய்ய வேண்டாம்.வாக்கர் உதவியுடன் மெதுவாக ஒரு வாரம் நடங்க..அதன் பிறகு எப்போதும் போல் நடக்கலாம்.." என்று கூறி அனுப்பி வைத்தார்.


பாவினி அதன் பிறகு வாக்கர் உதவியுடன் மெல்ல..மெல்ல நடக்க ஆரம்பித்தாள்..


தூயவனே, குறள்நெறியன் பேசிய பிறகு மனதில் அச்சத்துடனேயே இருந்தார். அவனுடன் ஐந்து வருடங்களாகப் பணி புரிகிறார்.. அவனைப் பற்றி நன்கு தெரிந்தவர்.. அன்று, தன்னிடம் சவால் விட்டவன், இன்று, அமைதியாக வாழ்த்துச் சொன்னது அவருக்குச் சந்தேகத்தைக் கொடுத்தது.. 'இந்தப் புலி பாய்வதற்குத் தான் பதுங்குதோ?' என்று குழம்பியவர்.. வேலைக்கு விடுப்பு எடுத்துக் கொண்டு, கல்யாண வேலையில் தீவிரம் காட்டினார்.. கல்யாணத்திற்கு இன்னும் இரண்டு வாரம் தான் இருந்தது.


பாவினி, கொஞ்சம் நடக்க ஆரம்பித்ததும், செல்வச்சீரனின் விருப்ப படி கல்யாணப் புடவை எடுக்கத் துணி கடைக்கு வந்தாள்.


செல்வச்சீரனும் மதுரையிலிருந்து வந்திருந்தான். பாவினியோ, பேபி பிங்க் நிறத்தில் சுடிதார் அணிந்திருந்தாள்.. தலையை உயர்த்தி ஃபோனிடெய்ல் போட்டிருந்தவள்,எந்த வித ஒப்பனையும் இல்லாமல் மிக எளிமையாக வந்திருந்தாள். அவளுக்கு, ஏனோ எதிலும் கலந்து கொள்ள விருப்பமே இல்லை.. வளர்பிறையின் வற்புறுத்தலில் தான் வந்திருந்தாள்.


செல்வச்சீரனோ, அவளிடம் மிக இயல்பாக நடந்து கொண்டான். அவளின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு ஒவ்வொன்றையும் பார்த்து.. பார்த்து ,செய்தான்.


செல்வச்சீரன் தாயார் வரவில்லை.. அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவன் மட்டுமே வந்திருந்தான்.


புடவை தேர்வு செய்யும் போதும் பாவினியின் விருப்பத்திற்கே மதிப்புக் கொடுத்தான். பாவினி புடவை தேர்வு செய்து கொண்டிருக்கும் போது, சரியாக அந்த நேரம், குறள்நெறியன் புடவை கடைக்குள் நுழைந்தான்.


லைட்லேவண்டர் நிறத்தில் சேர்ட்டும், ஆஃப்வொயிட் நிறத்தில் பேண்ட்டும் அணிந்திருந்தான்.. கண்களில் சன் கிளாஸ்சுடன் ஒரு கையைப் பேண்ட் பாக்கெட்டில் விட்டவாரு வேகமாக வந்தவனைக் கடையிலிருந்தவர்கள் ஒரு நிமிடம் தங்களை மறந்து ரசித்தனர்.


சொல்லி வைத்தா போல், நேராகப் பட்டு புடவை செக்ஃசனுக்கு வந்தவன்.. பாவினியின் அருகில் சென்று, "ஹாய் கல்யாணப் பெண்ணே கால் எப்படி இருக்கு.." என்று கேட்டு வைத்தான்.


பாவினியோ அந்தக் குரலில் தூக்கி வாரிப் போட திரும்பியவள், அங்குக் குற்ளநெறியனைப் பார்த்து விழி இமைக்காமல் சிலையானாள்.


வளர்பிறையும் யோசனையுடன் அவனைப் பார்த்தார். தூயவனும்,நவிலுமே குறள்நெறியனைக் கண்டு அதிர்ந்தனர்.


செல்வச்சீரனோ, அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தவன், இவனைக் கண்டதும் ஆராய்ச்சிப் பார்வை பார்த்தான்.


ஆனால், குறள்நெறியனோ யாரையும் கண்டு கொள்ளாமல், ‌அவள்‌ புறம் லேசாகக் குனிந்து அவளுக்கு மட்டுமே கேட்குமாறு , "மிஸ் பாவினி.. மிஸஸ் குறள்நெறியன் ஆகும் நாள் வெகு தூரமில்லை.." என்று தன் சன் கிளாஸை சற்றே கீழே இறக்கி கண் சிமிட்டியவன், அது பொய்யோ என்பதைப் போல் சட்டென்று,சன் கிளாஸை சரி செய்து கொண்டு.. அங்கிருந்து நகர்ந்து தூயவனிடம் வந்தவன்..


"கல்யாண வேலையெல்லாம் எப்படிப் போகுது மிஸ்டர் தூயவன் .. ஏதாவது உதவி வேண்டுமென்றால் தயங்காமல் கேளுங்க.."என்றவன் தன்னையே ஆராய்ச்சி பார்வை பார்த்துக் கொண்டு நின்றிருந்த செல்வச்சீரனிடம் லேசான புன்னகையுடன் நகர்ந்தான். அந்தப் புன்னகையின் அர்த்தம் அவர்களுக்கு அப்போது புரியவில்லை..


தூயவனோ, இவன் எதற்கு இங்கு வந்திருக்கிறான்? என்று குழம்பி தவித்தார். அவன் சென்றதும் மகளிடம் குறள்நெறியன் என்ன சொன்னான்னென்று பெற்றவர்கள் கேட்டனர்..


அவளோ, " உடல் நிலையை விசாரித்து விட்டு,வாழ்த்து தான் சொன்னார் .." என்று பொய்யுரைத்தாள்.. மனதிற்குள் இந்த நேரத்தில் எதையும் சொல்லி பெற்றவர்களைக் கலவரப்படுத்த வேண்டாமென்று நினைத்தாள்..


குறள்நெறியன் அங்கிருந்து சென்ற பின் பாவினியோ, வளர்பிறையின்‌ வற்புறுத்தளில் வாடாமல்லி நிறத்தில் தங்க தாமரைகள் ஆங்காங்கே மின்னுமாறு ஜொலித்த புடவையைத் தேர்ந்தெடுத்தாள்..


செல்வச்சீரனுக்கும் அந்தப் புடவை மிகவும் பிடித்திருந்தது.. அதையே பில் போட சொல்லி விட்டு செல்வச்சீரனுக்கும்,மற்றவர்களுக்கும் திருமணத்திற்கு உடை எடுத்தனர்.


குறள்நெறியனோ, அது வரையும் கடையின் ஓனர் அறையிலேயே அமர்ந்திருந்தான். கடையின் ஓனர் அவனுக்குப் பரிசித்தம் போல்..


கல்யாணத்திற்கு அதிக நாட்கள் இல்லாததால், பாவினிக்கு ஃப்ளவுஸ் தைக்க , வேறு எங்கும் அலைய முடியாத காரணத்தால்.. அந்தக் கடையிலேயே தைக்கச் சொல்லி அளவு கொடுத்துச் சென்றனர்..


குறள் நெறியனோ, தன் வேலை முடியும் வரை கடையிலேயே இருந்தான். தன் காரியத்தைச் சாதித்து விட்டே சென்றவன், தான் நினைத்ததெல்லாம் , தன் திட்டப்படி அழகாக நடப்பதை எண்ணி மனதிற்குள் மகிழ்ந்தான்.


தூயவனோ, மனதிற்குள் குறள்நெறியனைப் பற்றிச் சிந்தனையுடனேயே இருந்தார். செல்வச்சீரனோ, குறள்நெறியனை சந்தேகத்துடனேயே ஆராய்ந்தான்.
ஆனால் ,அவன் என்ன ஆராய்ந்தாலும் , செல்வச்சீரனால் எதையும் குற்நெறியனைப் பற்றி யூகிக்க முடியவில்லை..


பாவினியோ, குறள்நெறியன் சொன்னதைக் கேட்டதிலிருந்து மனதிற்குள் பயந்தபடியே வலம் வந்தாள். கொஞ்சம் தைரியமாக இருந்தவள், இன்று அவன் பேசியதைக் கேட்டதும்,அவனின் குரலில் இருந்த உறுதியும் அவளைக் கலங்க வைத்தது. ஆடிட்டர் வேறு அவன் நினைத்ததைச் சாதிப்பான் .. என்று சொன்னது அப்போது ஞாபகம் வந்து.. அவளை மேலும் கலங்கடித்தது. அவன் சொன்னதைச் செய்துவிடுவானோ? என்ற பயம் அவளை ஆட்கொண்டது.



தன் தந்தையிடமும் சொல்லவும் முடியாமல்,சொல்லாமல் இருக்கவும் முடியாமல் தவித்தாள்.. ஆனால், அவளின் இந்த மெளனமே அவனுக்குச் சாதகமாகப் போவதை அவள் அப்போது அறியவில்லை.


நவில் மட்டுமே எந்தக் கவலையும் இன்றி மிகுந்த மகிழ்ச்சியுடன் தன் தமக்கையின் திருமணத்தை எதிர்நோக்கி காத்திருந்தான்..


தூயவனுக்கும்,வளர்பிறைக்கும் , உறவினர்,நண்பர்களுக்கு அழைப்பிதழ் கொடுப்பதற்கும், பாவினிக்கு தேவையானதை வாங்குவதற்குமே, நேரம் சரியாக இருந்தது.


இவர்களோ, கல்யாண வேலையில் பிஸியாக இருக்க, அங்கே ஒருவனோ, தான் நினைத்ததை நிறைவேற்ற .. எந்த எல்லைக்கு வேண்டாமானாலும் போவேன்.. என்று இறங்கி வேலைகள் செய்து கொண்டிருந்தான்.


நாவேந்தியின் வீட்டிற்குச் சென்று தூயவன் திருமணத்திற்கு அழைத்தார். நாவேந்தியோ ,மெளனமாகவே அழைப்பிதழைப் பெற்றுக் கொண்டவரின் மனதிற்குள், பாவினி தனக்கு மருமகள் ஆகமுடியலையே என்று நினைத்தவருக்கு ,சொல்ல முடியாத துக்கம் நெஞ்சை அடைத்தது.


அவரின் நிலை தூயவனுக்கு நன்கு புரிந்தாலும் , எதையும் காட்டிக் கொள்ளாமல், " வேந்தி நாம் நினைத்தெல்லாம் நடப்பது இல்லைம்மா ..நடப்பது நல்லதுக்கே என்று நினைத்துக் கொள்.." என்று கூறி வந்தார்.


செங்கோடனையும்,மெய்யம்மையும் வீட்டிற்கே சென்று அழைத்தவர், குறள்நெறியனுக்கு மட்டும் அலுவலகத்திலேயே அழைப்பிதழைக் கொடுத்தார்..


அவனோ , எதையும் காட்டிக் கொள்ளாமல் புன்னகையுடனேயே அழைப்பிதழைப் பெற்றுக் கொண்டான். தூயவனுக்கு அவனின் நடவடிக்கைகள் சந்தேகத்தை உண்டு பண்ணினாலும் ,தன்னை மீறி என்ன நடந்துவிடும் என்ற எண்ணத்தில் எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.. ஆனால், அதுவே அவருக்குப் பெரும் பிரச்சனையாகப் போகிறதென்று அவர் அப்போது உணரவில்லை..


ஒரு வழியாகக் கல்யாண நாளும் வந்தது..இரண்டே வாரத்தில் மாமனாரும்,மருமகனும் அருமையாகத் திருமணத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.


நகரத்தின் மையத்திலிருந்த திருமண்டபம் ! அன்று, விழாக் கோலம் பூண்டது.. மண்டபத்தின் முகப்பில் 'செல்வச்சீரன் வெட்ஸ் பாவினி' என்ற பெயர் பலகை பூக்களால் மின்னியது.


பாவினியோ, அதிகாலையிலேயே எழுந்து, ஒப்பனைக் கலைஞரின் உதவியுடன் தேவதையாகத் தயாராகிக் கொண்டிருந்தவள், தன்‌ கல்யாணப் பட்டுப்புடவையைக் கண்டு திகைத்துப் போனாள்..


நாயகனின் விருப்பம் நடக்குமோ?இல்லை பெற்றவர்களின் ஆசை நடக்குமா? காலத்தின் கையில்.


அன்பு கொல்லும்..
 

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
327
Reaction score
607
Points
93


அன்பே!அன்பே! கொல்லாதே!

அத்தியாயம் 14

பாவினி கல்யாணப் புடவையைக் கண்டு சிலையாக நிற்பதை பார்த்த எழிலி, அவளின் தோளைப் பிடித்துக் குலுக்கிய படியே, "ஏய் பவி ..டைம் ஆகுதுடீ சீக்கிரம் புடவை மாத்தனும்.. நீ என்ன பிடிச்சுவச்ச பிள்ளையார் மாதிரி புடவையைப் பார்த்துட்டே நிற்கிறே..! " என்றவளிடம்..


பாவினியோ, "எ..எழிலி, இது நான் ஃசெல்க்ட் செய்த புடவை இல்லை டீ...."


"என்ன டி உளறே .. நீ ஃசெலக்ட் செய்த புடவை இல்லைன்னா‌? அப்போ, இது யார் புடவை.."


"அது தான் தெரியல ‌டீ.."


" பவி ஏற்கனவே ப்ளவுஸ் தைக்க லேட்டாகிடுச்சுன்னு, இப்பத்தான் கொண்டு வந்து கொடுத்துட்டு போறாங்க.. இதில் நீ வேறே புதுசா ஒரு பிரச்சினையைக் கிளப்பாதே .. "என்றவளிடம்..



"'நிஜமாத் தான் டீ சொல்றேன்.. இது நான் ஃசெல்க்ட் செய்தது இல்லை டி"


" ஏய் பவி விளையாடதே.. ஏற்கனவே டைப்பாய்ட்டு வந்து இப்ப தான் நல்லாகியிருக்கேன்.. அது தான், நீ அடிபட்டப்ப கூட வந்து உன்னைப் பார்க்க முடியலை.. உன்கூடப் புடவை எடுக்கவும் வர முடியலைன்னு நானே பீல் பண்ணிட்டு இருக்கேன்.. நீ வேறே இப்படிக் குண்டைத் தூக்கிப் போட்டு என் பிஞ்சு ஹார்ட்டே வெடிக்க வச்சுடாதே.." என்றவளிடம்..


" எழிலி நீ முதலில் அம்மாவே கூப்பிடு டீ .."என்றவளின் கலங்கிய முகத்தைப் பார்த்ததும்.. எழிலிக்கும் ஏதோ சரியில்லை என்பது புரிந்தது.. உடனே வளர்பிறை அழைக்கச் சென்றாள்..


பாவினியோ, அந்தப் புடவையை யோசனையுடனேயே தடவிப் பார்த்தாள்.. மெரூன் நிறத்தில், ஆங்காங்கே கண்ணனும்,மீராவும் சேர்ந்திருப்பது போல், பொன் நிறத்தில் மின்னியது.. பார்க்கவே கண்ணைப் பறித்தது..


புடவைக்குப் பொருத்தமாக ப்ளவுஸ்சும் அழகாகத் தைக்கப்பட்டு இருந்தது. அதுவும், கண்ணனும்,மீராவும் சேர்ந்தே இருப்பது போல் கைகளிலும்,முதுகிலும் ஜர்தோசி வேலைகள் அவ்வளவு நுணுக்கமாகச் செய்யப்பட்டு இருந்தது.


பாவினியோ, ப்ளவுஸ்சை கைகளில் எடுத்து அந்த நுணுக்கமான வேலைப்பாட்டை மென்மையாகத் தடவிப் பார்த்தாள், மனதிற்குள் இப்படி ஓர் அழகான டிசைனைத் தேர்ந்தெடுத்தவங்க, நிச்சயமாக நல்லா கலாரசிகனாக் தான் இருக்க முடியும்.." என்று நினைத்தாள்..


புடவையிலும், ப்ளவுஸ்சிலும், மீராவும் ,கண்ணனும் சேர்ந்திருப்பது போலிருந்த டிசைனைப் பார்த்ததும் அவளுக்கு, 'மீராவின் கண்ணன் மீராவிற்கே ..'என்ற பாடல் வரிகள் தான் ஞாபகத்திற்கு வந்தது.


ஆனால், இந்த மீராவும் அந்தக் கண்ணுக்கு மட்டும் தான் என்று அவளுக்கு அப்போதும் தெரியவில்லை .. இங்கே மீரா அந்தக் கண்ணுக்காகக் காத்திருக்கவில்லை.. ஆனால், அந்தக் கண்ணனோ இந்த மீராவை சிறை எடுத்தாவது, தன்னவளாக்கி கொள்ளத் துணிந்து விட்டானென்று யாரும் அறியாதது விதியின் விளையாட்டு..


பாவினி புடவையை ரசித்துக் கொண்டிருக்கும் போது, வளர்பிறையும்,எழிலியும் டென்ஷனாக அறைக்குள் வந்தார்கள்..


"பவி என்னடா ஆச்சு.. எழிலி ஏதோ புடவை மாறிடுச்சுன்னு சொல்றா.." என்று கேட்டவரிடம்..


தன் கையிலிருந்த புடவையைக் கொடுத்து, "பாருங்கம்மா இது நாம எடுத்த புடவையா..? டெய்லர் மாற்றிக் கொடுத்துட்டான் போல் இப்ப என்ன‌ செய்ய..?" என்றவளை திகைப்புடன் பார்த்தவர்.. மகள் கொடுத்த புடவையை வாங்கிப் பார்த்தவருக்கும், மகள் சொல்வது சரியே என்று தோன்றியது.


அவருக்கும் ஒரு நிமிடம் என்ன செய்வதென்றே புரியவில்லை.. தையல்காரன் அவசரத்தில் மாற்றித் தான் கொடுத்துவிட்டார், என்று உறுதியாக நம்பினார்.. புடவையின் அழகே சொல்லியது, அது மிக உயர்ந்த விலையென்று.. அவரும் அதை மென்மையாகத் தடவியபடியே..


" பவி இப்போ எதுவுமே செய்ய முடியாது டா.. டைம் வேறு ஆச்சு.. மாப்பிள்ளை ரெடியாகி விட்டார்.. முகூர்த்ததிற்கு இன்னும்‌அரைமணி நேரம் தான் இருக்கு.. எனக்கும் என்னசெய்வதென்றே புரியவில்லை.. தையல்க்காரன் இன்று காலை வரை லேட் பண்ணும் போதே, ஏதாவது சொதப்பிருவானோன்னு பயந்தேன்.. நான் பயந்தது போலவே ஆகிடுச்சு.. கல்யாணம் முடியட்டும் அப்புறம் அவனைப் பேசிக்கலாம் .. " என்றவரிடம்..


" இப்ப என்னம்மா செய்வது.. ? யாரோட புடவையோ ! எவ்வளவு ஆசைப்பட்டு எடுத்தாங்களோ .. அதை நான் எப்படிம்மா உடுத்த முடியும்..அதுவும் ப்ளவுஸ்சும் அவுங்க அளவுகக்குத் தான் தைத்து இருப்பாங்க.." என்ற மகளிடம்..


" நீ இந்தப் புடவையைக் கட்ட வேணடாம்.. போன முறை பிறந்த நாளுக்கு, அப்பா எடுத்துக் கொடுத்த பச்சை நிறப் பட்டுப் புடவையை உடுத்திக்கோ.. அதை இன்னும் நீ ஒரு முறை கூட உடுத்தவே இல்லையே.. நல்ல வேளை எதற்கும் இருக்கட்டும் என்று நான் எடுத்து வந்தேன்.." என்றவர் ,அந்தப் புடவையைப் பாவினியின் உடமைகளை வீட்டிலிருந்து எடுத்து வந்த பையில், அதைத் தேடி எடுத்தவருக்கு, அதிர்ச்சியே மிஞ்சியது..


" அந்தப் புடவைக்குப் பொருத்தமான ப்ளவுஸ்சை எடுத்து வைக்க மறந்துட்டார்.. அந்தப் புடவையின் ப்ளவுஸ் லேசாகச் சுருங்கி இருக்கவும் , வளர்பிறை அதை ஐயன் செய்தவர், அப்புறம் எடுத்துக் வைக்கலாமென்று நினைத்து, மேஜை மீது வைத்தவர் ..வேலைப் பளுவில் மறந்தே விட்டார்..


இப்போது என்ன செய்வதென்று வளர்பிறைக்கும் தெரியவில்லை.. நவிலை அனுப்பி எடுத்து வரச் சொல்லவும் நேரம் போதாது.. என்று குழம்பிக் கொண்டிருக்கும் போது , வெளியில் போன் பேசிவிட்டு வந்த பியூட்டிசியன், "சாரி சிஸ்டர் டைம் ஆகிடுச்சா..?" என்றவள் , "புடவை கட்டலாமா..? "என்று பாவினியைப் பார்த்து கேட்டாள்..


பாவினியோ, என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்தாள்.. ஆனால் வளர்பிறையோ, கடவுள் மீது பாரத்தைப் போட்டுவிட்டு, தையல்காரன் மாற்றித் கொடுத்துச் சென்ற புடவையை எடுத்து பியூட்டிசியனிடம் கொடுத்துவிட்டு ,
பாவினியின் காதருகில், " பவி எது நடக்குத்தோ ? அது நல்லதற்கேன்னு நினைச்சுக்கோ.. இப்ப வெளியில் இந்த விசயம் தெரிந்தால், அபசகுணமாகத் தான் நினைப்பாங்க.. ‌திருமணம் முடிந்தவுடன் இந்தப் புடவைக்கான பணத்தை டெய்லரிடம் கொடுத்து விடலாம்.. நீ எதையும் யோசிக்காமல் புடவையைக் கட்டு.. ப்ளவுஸ்சைப் பார்த்தால், உனக்கே அளவெடுத்து தைத்த மாதிரி தான் இருக்கு.." என்று கூறிச் சென்றார்..


பாவினியோ, தாய் சொல்லைத் தட்டாமல் அந்தப் புடவையே குழப்பத்துடன் கட்டி முடித்தாள்.. ப்யூட்டிசினமும் ,எழிலியும் சேர்ந்து, அவளுக்கு மிக அழகாக அந்தப் புடவையைக் கட்டிவிட்டார்கள்..

வளர்பிறை சொன்னது போல், ப்ளவுஸ் அவளுக்கே அளவெடுத்துத் தைத்தது போல் கனகச்சிதமாகப் பொருந்தியிருந்தது..

எழிலியோ, அந்தப் புடவையில் தேவதையாக ஜொலித்த பாவினியைப் பார்த்து மெய்மறந்து நின்றாள்.. அவளுக்காகவே நெய்யப்பட்ட புடவை போல் இருந்தது..

பாவினியோ, விழி எடுக்காமல் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த தோழியிடம் ,
" என்ன டீ இப்படிப் பார்க்கிறே .."


" ம்..! பவி.. நீ இந்தப் புடவையில் ஜொலிக்கிறே..என் கண்ணே பட்டுவிடும் போல் இருக்கு..அம்மாகிட்ட சொல்லி சுத்திப் போட சொல்லனும்..உன்னை கமிஷனர் மட்டும் இப்போ பார்த்தால்.. அவ்வளவுதான் , உன் அழகில் மயங்கி விழுந்துவிடுவார்.." என்று கேலி செய்தவளை அடிக்கக் கை ஓங்கிய பாவினியிடம்..

" அடியே இன்னைக்காவது கொஞ்சம் வெட்கப்படு.." என்று கேலி செய்தாள் எழிலி..

பியூட்சினோ, உண்மையளுமே நீங்க இந்தப் புடவையில் ரொம்ப அழகா இருக்கீங்க சிஸ்டர்.. நானும் எத்தனையோ , கல்யாணப் பெண்ணுக்கு புடவை கட்டி விட்டு இருக்கேன்.. ஆனால், இப்படி உங்களுக்கே நெய்யப்பட்டது போல், பொருந்திய இந்தப் புடவை மாதிரி நான் பார்த்ததில்லை.. இந்தப் புடவையை யார் செல்க்ட் செய்தாங்க செமையா இருக்கு.." என்றாள்.. அவளுக்குத் தான் புடவை மாறிய விஷயம் தெரியாதே..

பாவினியோ, எதுவும் சொல்லாமல் இதழோரம் மென்புன்னகை ஒன்றை சிந்தி சமாளித்தாள்..

இவர்களோ, இங்கே புடவை பற்றிப் பேசிக் கொண்டிருக்க .. அங்கே குறள்நெறியனோ, தன் வீட்டை ரணகளமாக்கிக் கொண்டிருந்தான்..

" பாட்டி இப்போ நீங்க கல்யாணத்துக்கு வரீங்களா ?இல்லையா..?" என்றவனிடம்..

" குறள் என்னப்பா இஃது .. அதிசயமா இன்று நீ இப்படி அடம்பிடிக்கிறாய்.."

" நானே அடம்பிடிக்கிறேன்னு தெரியுது தானே, அப்புறமென்ன கிளம்பி வாங்க.."

" குறள் அது தான் பாட்டி வரலைங்கிறாளே, விடுப்பா .. நாம போகலாம்.." என்ற செங்கோடனிடம்..

" தாத்தா நீங்க பேசாம இருங்க.. பாட்டி கண்டிப்பா கல்யாணத்துக்கு வரனும்.." என்றவனிடம்..

"உனக்குத் தான் தூயவனைக் கண்டாலே ஆகாதே.. ஆனால், இன்னைக்கு அவுங்க வீட்டுக் கல்யாணத்திற்கு மூனு பேருமே போகனும்ன்னு பிடிவாதம் பிடிக்கிறே.."


"ஆமாம், அவரைப் பிடிக்காது தான்.. அதற்கும் கல்யாணத்திற்குப் போவதற்கும் என்ன சம்பந்தம். இத்தனை நாள் நம் கம்பெனியில் பொறுப்பான பதவியில் இருப்பவர், வீட்டு விஷேத்திற்கு நாம் மூவரும் போவது தானே மரியாதை.." என்றவன் .


தன் பாட்டியின் புறம் திரும்பி, " பாட்டி நான் நேத்து நைட்டே உங்களிடம் நாம் மூவரும் கல்யாணத்திற்குப் போகனும்ன்னு சொல்லிட்டேன்.. கிளம்பிட்டீங்களான்னு பார்க்க வந்தது நல்லதாகப் போச்சு.. இன்னும் அரைமணி நேரத்தில் நான் கிளம்பி வருவேன்.. அதற்குள், நீங்க ரெண்டு பேரும் ரெடியாகி இருக்கனும் .." என்று ஆர்டர் போட்ட படி சென்ற பேரனின் முதுகை பெரியவர்கள் இருவரும் திகிலுடனயே பார்த்தனர்.


அவர்கள் மனதிற்குள் பேரனின் பிடிவாதம் மிகுந்த அச்சத்தைக் கொடுத்தது.. யார் வீட்டு திருமணத்திற்கும், என்ன வற்புறுத்தி அழைத்தாலும் போகதவன்.. நேற்றிலிருந்து இந்தத் திருமணத்திற்குப் போவதைப் பற்றியே பேசுகிறானே.. என்று நினைத்தார்கள்.


தூயவனைக் கண்டாலே பிடிக்காதவன், அவர் வீட்டுக் கல்யாணத்திற்குப் போக இப்படிப் பிடிவாதம் பிடிப்பது அவர்களுக்குக் குழப்பத்தைத் தந்தது.. அதுவே, செங்கோடனுக்கு மனதிற்குள் கொஞ்சம் பயத்தை உண்டு பண்ணியது. அங்குப் போய், இவன் என்ன வில்லங்கத்தை விலைக்கு வாங்க போறானோ..?என்று அவன் மனம் பதறியது..


செங்கோடனின் பயத்தைப் பொய்யாக்கமல் , ஒரு பிரளையத்தையே பேரன் உண்டாக்கப் போவது அவரும் அப்போது அறியவில்லை..


மெய்யம்மையும்,செங்கோடனும் பேரனின் பேச்சை தட்டாமல், திருமணத்திற்குத் தயாராகி ..குறள் நெறியினின் வரவை எதிர்நோக்கி காத்திருந்தனர்..


குறள்நெறியனோ, சொன்னதைப் போல் அரைமணி நேரத்தில் பட்டு வேட்டி சட்டையில்.. ஆண்களே பொறாமை படும் அழகுடன் , கம்பீரமாக மாடியிலிருந்து தன் வேக நடையுடன் இறங்கி வந்தான்.


செங்கோடனும்,மெய்யம்மையும் , பட்டு வேஷ்டி சட்டையில் ஆண்மகனின் இலக்கணத்துடன் நடந்து வரும் பேரனின் அழகை! விழி எடுக்காது தங்களை மறந்து பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.. அதுவும், அவன் வாழ்க்கையிலேயே முதன் முதலாகப் பட்டு வேஷ்டி ,சட்டை அணிந்திருப்பதை வியப்பாகக் கண்டனர்..


குறள்நெறியனோ ,தன்னையே இமைக்க மறந்து பார்த்த தன் பாட்டி ,தாத்தாவின் பார்வையைத் தாங்கிய படியே, ஒரு சிறு தலையசைப்புடன் அவர்களை அழைத்துக் கொண்டு காரில் மண்டபம் நோக்கி பயணத்தைத் தொடங்கினான்..


தூயவனும் ,நவிலும் முகத்தில் மகிழ்ச்சி தவழ, திருமணத்திற்கு வருகிறவர்களை அன்பாக வரவேற்றனர்..


நாவேந்தியும், நேயவாணன் ,கவினுடன் சரியான நேரத்திற்கு மண்டபத்திற்கு வந்திருந்தார்..


நாவேந்தியின் முகத்தில் கடுகளவிற்கும் மகிழ்ச்சி இல்லை.. அகமும்,புறமும் சோர்ந்தே காணப்பட்டார்..

தூயவனோ அவர்களை இன்முகத்துடனேயே வரவேற்று முன் வரிசையில் அமர வைத்தார்..
அவர்கள் வந்த சில நிமிடங்களிலேயே, தன் பாட்டி,தாத்தாவுடன் குறள்நெறியன் , தன் அக்மார்க் வேக நடையுடன் மண்டபத்திற்கு நுழைந்தான்..


தூயவனோ, அவனைப் பார்த்து ஒரு நிமிடம் திகைத்து விழித்தார்,
செங்கோடனையும்,மெய்யம்மையையும் வாய்நிறைய வரவேற்றவர்.
குறள்நெறியனைக் கண்டு லேலசாகத் தலையை மட்டும் ஆட்டினார்..


அவனோ, இதழோரம் சிறு புன்னகையுடன் மண்டபத்திற்குள் நுழைந்தான்.. அந்தப் புன்னகையின் அர்த்தம் இன்னும்‌ சற்றுநேர்ததில் நடக்கவிருக்கும் சம்பவத்திற்கான அறிகுறியின்‌ வெளிப்பாடென்று அப்போது யாரும் உணரவில்லை..

தூயவனுக்குக் குறள் நெறியனைப் பார்த்ததிலிருந்தே மனதிற்குள் பிசைந்தது.. அவருடைய முகத்தில் அழையா விருந்தாளியாக டென்ஷன் வந்து ஒட்டிக் கொண்டது.


குறள்நெறியனோ, தன் பாட்டி தாத்தாவுடன் முன் வரிசையில் சென்று அமர்ந்தான்.. அவன், நாவேந்தியை தாண்டிப் போகும் பொழுது, பெற்றவளின் கண்கள் அவனையே மொய்த்தது.. அந்தத் தாயின் மனமோ ! மகனின் கம்பீரத்தைக் கண்டு 'என் மகன்' என்று மனதிற்குள் கர்வம் கொண்டது.


மாப்பிள்ளை செல்வச்சீரனோ, பட்டு வேஷ்டி சட்டை அணிந்து கழுத்தில் மாலையுடன், மணமேடையில் பாவினியை எதிர்பார்த்து அமர்ந்திருந்தான்.. அவன் விழிகளோ, நொடிக்கொரு தரம் மணப்பெண்ணைக் காண விழைந்தது, அடிக்கடி மணமேடைக்கு வரும் பாதையைப் பார்த்துக் கொண்டிருந்தது.


குறள்நெறியனோ, கால் மீது கால் போட்டுக் கொண்டு முன் வரிசையில் கூலாக அமர்ந்திருந்தவன்,மணமேடையில் நடப்பதை கண்டும் காணாமல், தன் அலைபேசியை நோண்டிக் கொண்டிருந்தான். அவன் முகமோ அடுத்து நடக்கப் போகும் பிரளயத்தை எதிர்நோக்கி காத்திருந்தது..


சதி வெல்லுமோ? இல்லை பாசம் வெல்லுமோ? காலத்தின் கையில்..


அன்பு கொல்லும்..








 

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
327
Reaction score
607
Points
93
அன்பே!அன்பே!கொல்லாதே!

அத்தியாயம் 15

வளர்பிறையோ, மகளைப் பட்டுப்புடவையில் ஒரு நிமிடம் ‌கண்குளிர கண்டவர், திஷ்டி கழித்தார்.. பாவினிக்கு அந்தப் புடவை அவ்வளவு அழகாகப் பொருந்தியிருந்தது..

முகூர்த்த நேரமானதும்,எழிலி, பாவினியை அழைத்துக் கொண்டு மணமேடைக்குச் சென்றாள்.


பாவினியோ, எந்த வித அலட்டலுமில்லாமல் நிமிர்ந்த நடையுடன் எழிலியுடன் சென்றாள்.


செல்வச்சீரனோ ,அவள் வரவை ஆவலாக எதிர்பார்த்திருந்தவன் .. அவள் வருவதைக் கண்டதும் மென்புன்னகை புரிந்தான். பாவினியும் பதிலுக்குச் சிரித்தாள்.. இதையெல்லாம், கீழேயிருந்து பார்த்த குறள்நெறியனுக்கு, மனதிற்குள் பொறாமை எட்டிப் பார்த்தது. ஆனாலும், அதைக் காட்டிக் கொள்ளாமல், நடப்பதை வேடிக்கை பார்த்தபடி கூலாக அமர்ந்திருந்தான்.


பாவினி செல்வச்சீரன் அருகில் அமர்ந்த பின், குறள்நெறியனின் விழிகள் அவளை விட்டு எங்கும் நகரவில்லை.. மனதிற்குள்,என்ன நினைத்தானோ? இதழோரம் ஒரு நக்கல் சிரிப்பு வந்து ஒட்டிக் கொண்டது..


மணமேடையில் திருமணச் சடங்குகள், அமைதியாக நடந்து கொண்டிருந்தது.. வளர்பிறை,தூயவன்,நவில் உட்பட அனைவருமே மணமேடையில் தான் இருந்தார்கள்.. செல்வச்சீரனின், அம்மா மட்டும் மணமேடையின் கீழே முதல் வரிசையில் அமர்ந்து, மணமேடையில் நடப்பதை நிம்மதியுடன் பார்த்துக் கொண்டிருந்தார்..


பெற்றவர்களின் மனதிற்குள் திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டுமென்ற எண்ணமே நிரம்பி வழிந்தது..


அப்போது, மண்டபத்திற்குள் சிறு சலசலப்பு ஏற்பட்டது.அனைவரும் நுழைவாயிலைப் பார்க்க.. அங்கே உயர் காவல் துறை அதிகாரி தன் சாகக்களுடன் யூனிப்பார்ம்மில் வந்து கொண்டிருந்தார்..


செல்வச்சீரன்! அசிஸ்டன்ட் கமிஷனர் என்பதால், அவனை வாழ்த்த.. திருமணத்திற்குக் காவல் அதிகாரிகள் வந்திருக்கிறார்கள், என்று அனைவரும் நினைத்தனர்..


ஆனால், அனைவரது எண்ணத்தையும் பொய்யாக்கி, அந்த அதிகாரி நேராக மணமேடைக்குச் சென்றவர்,யோசனையாகத் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த செல்வச்சீரனிடம் சென்று , "மிஸ்டர் செல்வச்சீரன், உங்கள் மீது ஒரு புகார் வந்திருக்கு.. அதனால் ,உங்களை இப்போது விசாரணைக்கு அழைத்துப் போக வேண்டிய சூழல்..நீங்க ஒத்துழைப்புத் தருவீர்கள் என்று நம்புகிறேன்.." என்றவுடன் செல்வச்சீரன் உட்பட அனைவரும் ஒரு நிமிடம் அதிர்ந்து விழித்தனர்..


செல்வச்சீரனோ ,சட்டென்று சூழ்நிலையைப் புரிந்து கொண்டவன், "யார் என் மீது ,என்ன கம்ளைண்ட் தந்திருக்காங்கன்னு தெரிஞ்சுக்கலாமா.. "என்றவுடன்..


" கண்டிப்பாகத் தெரிஞ்சுப்பீங்க..அதை ஸ்டேஷன் போய்த் தெரிஞ்சுக்கலாம்.." என்றவரிடம்..


தூயவனோ, பதற்றத்துடன், " சார் இவரும் மதுரையில் அசிஸ்டன்ட் கமிஷனர் தான் ..என்ன காரணமுன்னு நாங்க தெரிஞ்சுக்கனும்.... எப்படி? ஓர் உயர் பொறுப்பில் இருக்கும் அதிகாரியை, எந்த முன்னறிவிப்புமின்றி இப்படி ஒரு நல்ல நிகழ்வு நடந்து கொண்டிருக்கும் போது ,நீங்க விசாரணைக்கு அழைத்துச் செல்ல முடியும்.."


" இங்க பாருங்க சார் ..சட்டத்தின் முன் அனைவரும் சமம் தான்.. இவரை விசாரணைக்கு அழைத்துவரச் சொல்லி மட்டும் தான் எங்களுக்கு உத்தரவு ! எதுவாக இருந்தாலும், நீங்க ஸ்டேஷன் வந்து எங்கள் மேல் அதிகாரிகளிடம் பேசிக் கொள்ளுங்கள் .."என்றவர் செல்வச்சீரனைப் பார்த்து, "போகலாமா.." என்றார்..


செல்வச்சீரனின் தாயாருக்கோ, மணமேடையில் ஏதோ சரியில்லையென்று தோன்றவும், வேகமாக எழுந்து மணமேடைக்கு வந்தவருக்கு, விஷயம் புரிய .. என்னசெய்வதென்று தெரியாமல், அவரும் தவித்தார்..


செல்வச்சீரனோ, பிரச்சினையை எப்படிக் கையாள்வது என்று திணறித் தவித்தான்.. தூயவனோ மீண்டும்.. "சார் கொஞ்சம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளுங்கள்.. இவர் எவ்வளவு நேர்மையான அதிகாரின்னு கேட்டுப் பாருங்கள், எதுவாக இருந்தாலும், இந்தத் திருமணம் நடக்கும் வரை கொஞ்சம் பொறுங்கள்..எனக்கும் உங்க டிபார்ட்மெண்டில் சீனியர் ஆபிஸ்சர்ஸ் எல்லாம் தெரியும் .. நான் அவர்களிடம் பேசி வேண்டுமானாலும் பர்மிஷன் வாங்கித் தருகிறேன்.." என்றவரிடம்..


" சார் அதெற்கெல்லாம் எங்களுக்கு நேரமில்லை.. மிஸ்டர் செல்வச்சீரன்! இப்போது நீங்க வரீங்களா ..?" என்று அவன் புறம் திரும்பியவரிடம்..


" ப்ளீஸ் சார் கொஞ்சம் பொறுங்கள்.. திருமணம் முடியட்டும்.." என்ற தூயவன் ,மகளின் திருமணம் நல்லபடியாக முடியவேணடுமேமென்ற பரிதவிப்பில் கெஞ்சினார்..


பாவினியோ, தன் தந்தை இப்படிக் கெஞ்சுவதை இதுவரை பார்க்காதவள், தனக்காக, யார்..யாரிடமோ, கெஞ்சுவதைக் கண்டு கண்ணீர் வடிய அமர்ந்திருந்தாள்.. எழிலி தான், ஆறுதலாக அவளின் தோள்களைத் தொட்டு, சமாதானம் செய்தாள்..


வளர்பிறையும்,நவிலும் என்ன செய்வதென்றே தெரியாமல், உள்ளம் பதைபதைக்கத் தூயவன் கெஞ்சுவதைக் கையாளாகத தனத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்..


குறள்நெறியனோ, மண மேடையில் நடப்பதை எந்த வித அலட்டலும் இல்லாமல், பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்..


செங்கோடனும்,மெய்யமையுமே நடக்கும் நிகழ்வுகளைக் கண்டு அதிர்ந்தவர்கள், " குறள் என்னப்பா இது! முகூர்த்த நேரத்தில் இப்படி ! நீயாவது போய் அந்த ஆபிஸ்சரிடம் பேசுப்பா.." என்ற மெய்யம்மையிடம் ..


" பாட்டி நான் என்ன செய்ய முடியும். நீங்க அமைதியா இருங்க.. பார்ப்போம் என்ன தான் நடக்குதுன்னு.." என்றவன், தன் அலைபேசியில் யாருக்கோ 'குட் 'என்று மெஸேஜ் செய்தான்..


செங்கோடனுக்கோ, பேரன் மீது லேசாகச் சந்தேகம் வந்தது.. தூயவனைப் பழிவாங்க ,திருமணத்தை நிறுத்த ! பேரன் ஏதாவது ப்ளான் செய்யறானோ? என்று எண்ணினார்.. அப்படி மட்டுமிருந்தால் ஒரு பெண்ணின் பாவம் சும்மா விடுமா? என்று நினைத்து கலங்கினார்..


நாவேந்தியும்,நேயவாணனும் நடக்கும் நிகழ்வுகளைக் கண்டு ,படபடப்புடன் மணமேடை ஏறியவர்கள், விஷயத்தை அறிந்ததும், முதலில் திகைத்தவர்கள் ! அடுத்த நொடி, சூழ்நிலையைத் தன் கையில் எடுத்த நேயவாணன், " சார் எனக்குக் கமிஷனர் நன்றாகத் தெரியும்! அவர் என்னுடைய கிளையண்ட் ! நான் பேசுகிறேன் ..நீங்க கொஞ்சம் வெயிட் செய்யுங்க.." என்றவரிடம்..


" சார் உங்களுக்கு யாரை வேண்டுமானாலும் தெரியட்டும்.. எனக்கு இப்போ டைம் ஆச்சு ..நீங்க எதுவாக இருந்தாலும் ஸ்டேஷன்ல வந்து ,யாருகிட்ட வேணாலும் பேசிக்கோங்க.." என்றவர், செல்வச்சீரனைப் பார்த்து, " நீங்க இப்ப வரலைன்னா ? நான் உங்களைக் கைது செய்து கூட்டிட்டுப் போக வேண்டி இருக்கும்.. நீங்களும் பொறுப்பான பதவியில் இருப்பவர்.. அந்தளவு நடந்து கொள்ள மாட்டீங்கன்னு நம்பறேன்.." என்றவரிடம்..


" ஓகே சார் நான் வரேன் .." என்றவன் தன் கழுத்தில் இருந்து மாலையைக் கழற்றினான்.. தூயவனோ , அதைக் கண்டு பதறி " மாப்பிள்ளே ப்ளீஸ் நீங்க திருமணத்தை முடித்துட்டு போங்க.. நீங்க எந்தத் தப்பும் செய்திருக்க மாட்டீங்கன்னு தெரியும். உங்க மேலே எனக்கு முழு நம்பிக்கை இருக்கு.. "என்றவரிடம்..


" மாமா, உங்க நம்பிக்கையை நான் காப்பாற்றுவேன்.. பட் இப்ப சூழ்நிலை சரியில்லை.. நான் ஒரு பொறுப்பான பதவியிலிருந்துட்டு, நானே சட்டத்தை மதிக்கவில்லைன்னா எப்படி.." என்றவனிடம்..


" நீங்க சொல்வது புரியுது. ஆனால், ஒரு பெண் மணமேடை வரை வந்துவிட்டு , அவள் திருமணம் நின்றால் ..இந்த ஊர் அவளைத் தான் பேசும் .. "என்று அதுவரை அமைதியாகயிருந்த வளர்பிறையோ, தவிப்புடன் கேட்டார்..


" அத்தே , நீங்க சொல்வது நியாயம் தான் ! ஆனால், இப்படி ஓர் இக்கட்டான சூழ்நிலையில், நான் பவி கழுத்தில் மாலையிடுவது எனக்குச் சரின்னு படலை.. ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க.. "என்றவனிடம் என்ன பேசுவதென்றே தெரியாமல் தூயவனும், வளர்பிறையும் விழித்தார்கள்.


அதுவரை, நடப்பதைப் பார்த்து அதிர்ச்சியில் படபடப்புடன் நின்றிருந்த செல்வச்சீரனின் தாய், " செல்வா இத்தனை பேர் சொல்றாங்க தானே.. கல்யாணத்தை முடித்துட்டு போப்பா.. நீ, எதற்கும் உன்‌மேல் அதிகாரியிடம்‌ போன் பண்ணி என்னன்னு கேட்டுப்பார் .."என்றவரிடம்..


" ம்மா..! அவசர கதியா ! என் திருமணம் நடப்பதில் எனக்கு விருப்பமில்லை.. அதுவும், என் மீது ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருக்கிறது.. அந்தக் குற்றச்சாட்டுடன், என் வாழ்க்கையைத் தொடங்க நான் விரும்பவில்லை.."என்றவன், "வாங்க சார் போகலாம் .."என்று கூறியபடி மணமேடையிலிருந்து இறங்கிச் சென்றான்..


காவல் அதிகாரிகளும், அவன் பின் செல்ல .. தூயவனோ , என்ன செய்வதென்றே தெரியாமல், அவர்கள் பின்னோடு அதிகாரியிடம் பேசிய படியே சென்றார்.


தூயவன், எதற்கும் கலங்காதவர் ! இன்று, மகளுக்காகத் துடிப்பதைக் கண்டு, குடும்பத்தினர் மனதிற்குள் ரத்தக்கண்ணீர் வடித்தார்கள்.. வளர்பிறையோ, அதிர்ச்சியில் மயங்கி சரிந்தார்.. சட்டென்று அருகில் நின்றிருந்த நாவேந்தி அவரைத் தாங்கி பிடித்தார்..


அதைக் கண்ட பாவினியும்,நவிலும் அவர் அருகில் ஓடி வந்தவர்கள், "அம்மா, ம்மா.., வென்று கத்தியபடி அவரின் கன்னத்தைத் தட்டினார்கள்..


மண்டபமே அல்லோலப் பட்டுக் கொண்டிருக்க.. கீழே இருந்த குறள்நெறியனோ, வளர்பிறை மயங்கி விழுந்ததைக் கண்டு, பதற்றத்துடன் மணமேடை ஏறியவன் , பதறியபடி வளர்பிறையின் கன்னத்தைத் தட்டி எழுப்பிக் கொண்டிருந்த பாவினியிடம் சென்றவன், "வினு நகரு .." என்று அவளின் தோளைத் தொட்டு, வளர்பிறையின் அருகிலிருந்து அவளை விலக்கினான்.. பாவினியோ, இதை எதையும் உணரும் நிலையில் இல்லை..


மணமேடையில், பூஜைக்காகக் கும்பத்தில் வைத்திருந்த நீரை எடுத்து குறள்நெறியன், அவர் முகத்தில் அடித்தான். பதற்றத்தில் மற்றவர்களுக்குத் தோன்றாதது, குறள்நெறியனின் சமயோசித புத்தியால், வளர்பிறைக்கு உடனே மயக்கம் கலைந்தது.


வளர்பிறை கண்விழித்ததும், நாவேந்தி அவரை மணமக்கள் நாற்காலியில் அமரவைத்தார்.. அவர் பெற்ற பிள்ளைகளோ, அவர் அருகில் சென்று, வளர்பிறையைத் தாவி அணைத்துக் கொண்டார்கள்..


வளர்பிறையோ, பாவினியின் தலையை வருடிய படியே " பவி .. " என்று நா தழுதழுக்க அழைத்தவர், " உன் வாழ்க்கை தொடங்கும் முன்பே, இப்படிக் கலைந்து விட்டதே.." என்று கலங்கியவரிடம்..


" வளர் கொஞ்சம் அமைதியா இருங்க.. உடம்புக்கு ஏதாவது வந்துடப் போகுது.. எல்லாம் சரியாகும்.." என்ற‌ நாவேந்தியிடம்..


" என்னால் எப்படி அமைதியா இருக்க முடியம் ! என் மகள் வாழ்க்கை தொடங்கும் முன்னரே இப்படிக் கருகி விட்டதே .. மணமேடை வரை வந்து திருமணம் நின்றால், என் பெண்ணைத் தானே ஊர் பலிக்கும்.." என்று புலம்பியவரிடம், என்ன சொல்லி சமாதானம் செய்து தேற்றுவது ,என்று நாவேந்தி தவித்துக் கொண்டிருக்கும் போதே.. தூயவன் அவசர.. அவசரமாக, வளர்பிறையில் நிலையை அறிந்து மணமேடை ஏறி வந்தவர், "வளர்.." என்று அழைக்கவும்..


வளர்பிறையோ, கணவனைக் கண்டதும் கண்ணீர் விட்டார்.. தூயவனோ, மனைவியின் கண்ணீரைக் கண்டதும் ,ஏற்கெனவே ஓய்ந்து போனவர்.. இன்னும் தளர்ந்து போய் வார்த்தைகளற்ற மெளனத்திலேயே மனைவியிடம் பேசினார்..


குறள்நெறியனோ, நடப்பதை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு, சில நிமிடங்கள் அமைதியாக இருந்தவன்.. தூயவனின் அருகில் சென்று, "மிஸ்டர் தூயவன் ! இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகலை ..நான் பாவினியைக் கல்யாணம் செய்துக்க விரும்புகிறேன்.. அதுவும் இதே மேடையில், இப்போதே !" என்று அவரின் முகத்தைப் பார்த்து சொன்னதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்..


குறள்நெறியனின் கூற்று, மற்றவர்களுக்குப் பேரதிர்ச்சி என்றால் , நாவேந்திக்கு மட்டும் ஆனந்த அதிர்ச்சி! அவரின் எத்தனை வருட ஆசையை , அவரின் மகன் நிறைவேற்ற விழைந்துள்ளானே!


தூயவனோ ,என்ன சொல்லவது,என்ன செய்வது, என்று தெரியாமல் விழித்தவருக்கு, மனதிற்குள் சிறு சந்தேகம் துளிர்த்தது.. இவன் தான் ஏதோ செய்து, சரியான நேரத்தில் திருமணத்தை நிறுத்தி விட்டானோ ! என்று நினைத்து அவனின் முகத்தையே கேள்வியாகப் பார்த்தார்..


குறள்நெறியனோ, அவரின் பார்வையைத் தாங்கியபடியே அசராமல் நின்றான்..


வளர்பிறையும்,நவிலும், குறள்நெறியனின் வார்த்தைகளைக் கேட்டு திகைத்தவர்கள், தூயவன் என்ன சொல்வாரோ ! என்று அவர் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தார்கள்..


ஆனால், சம்மந்தப்பட்ட பாவினியோ, திகிலுடன் குறள்நெறியனைப் பார்த்தவளின் மனதிற்குள் , அவன் நினைத்ததைச் சாதிப்பான் ! என்று ஆடிட்டர் சொன்னது, அப்போதும் ஞாபகம் வந்து அவளைக் கொல்லாமல் கொன்றது. தந்தை என்ன சொல்லுவாரோ ? என்று உச்சகட்ட குழப்பத்துடன் நின்றாள்.


தூயவனோ, " அது சரிப்படாது ..எனக்கு இதில் விருப்பமில்லை.." என்று முகத்தில் அடித்தது போல் பதில் சொன்னார்..


நவேந்தியோ, தூயவனின் பதிலில் கலங்கியவர், 'சாமி வரம் கொடுத்தாலும், பூசாரி வரம் கொடுக்காது போல.. அவனே, இவ்வளவு இறங்கி வந்து கேட்கும் பொழுது, இந்தத் தூயவன் காரியத்தைக் கெடுக்கிறானே ..'என்று மனதிற்குள் நினைத்தவர்..


" தூயா, திருமணம் யாருடன்..யாருக்கு, என்று போட்டிருக்கோ ! அதை நம்மால் மாற்ற முடியுமா..?பாவினிக்கு , குறள் தான் மணவாளன்னு.. கடவுளே முடிவு செய்திருக்கும் போது, இதைத் தடைச் சொல்ல நாம் யாரு.." என்று கேட்டார்.


தூயவனோ, "எனக்கு இதில் விருப்பமில்லை..இதைப் பற்றி இனி பேசவேண்டாம்.."என்றவரிடம்..


" தூயா புரியாமல் பேசாதே.. ஒரு பெண்ணுக்கு! மணமேடை வரை வந்து, திருமணம் நின்றால் ஊர் என்ன பேசும்.." என்ற நாவேந்தியிடம் கோபமாக..


" ஊர் என்ன பேசினாலும் எனக்குக் கவலையில்லை..என் பெண்ணோட வாழ்க்கை தான் எனக்கு முக்கியம். எத்தனை நேரமானாலும், மாப்பிள்ளை விசாரணை முடிந்து வரும் வரை காத்திருப்போம்.. பாவினிக்கு அவர் தான் மாப்பிள்ளை! நேயவாணன் சாரும்,கவினும் , மாப்பிள்ளையோட அம்மா..அவுங்க சொந்தக்காரங்க, எல்லாரும் மாப்பிள்ளை கூடப் போய் இருக்காங்க.. எல்லாம் சரியாகி சீக்கிரம் வநதுவிடுவாங்க.." என்றவரிடம்..


" தூயா புரிந்து தான் பேசறீயா? ஒரு போலீஸ் ஆஃபிஸ்சரையே திருமணத்தன்று விசாரணைக்குக் கூட்டிட்டுப் போய் இருக்காங்கன்னா..? விசயம் எவ்வளவு பெரிது..அவர் எப்ப திரும்பி வந்து எப்ப கல்யாணம் நடப்பது.."


" அவர் என்று வருகிறாரோ.. அன்று நடக்கட்டும் !" என்று விட்டேத்தியாகப் பதில் சொன்னவரிடம், என்ன பேசுவது என்றே தெரியாமல் நாவேந்தி நின்றார்..


ஆனால் குறள்நெறியனோ, " மிஸ்டர் தூயவன் கல்யாணத்திற்கு உங்க சம்மதம் எனக்குத் தேவையில்லை.. கல்யாணம் பாவினிக்குத் தானே ! எனக்கு அவள் சம்மதம் போதும்.. நான் அவளிடம் கேட்டுக்கொள்கிறேன்.." என்றவன்,


பாவினியிடம் செல்ல முயன்றவனைத் தடுத்த தூயவன் , "எனக்கு இஷ்டமில்லைன்னா.. என் பொண்ணும் சம்மதிக்க மாட்டாள்.. அதனால், எதற்கு உங்களுக்கு வீண் சிரமம் .."என்றவரிடம்..


"அதை நான் அவளிடம் பேசிவிட்டு முடிவுசெய்து கொள்கிறேன்.. என் சிரமத்தைப் பற்றி நீங்கள் கவலைப் படத் தேவையில்லை.." என்று அதிகாரமாகக் கூறிவிட்டுப் பாவினியிடம் சென்றவன்,அவள் காதருகில் குனிந்து..


"பாவினி, இப்ப நீ இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதித்து தான் ஆகனும்..உனக்கு வேறு ஆஃப்ஷனே இல்லை.. நீ எடுத்த புடவையை மாற்றி, அசிஸ்டன்ட் கமிஷனரையே விசாரணை கைதியாக்கிய என்னால், உன் அப்பாவையையும்,தம்பியையும் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்பதில் உனக்குச் சந்தேகமிருக்காதுன்னு நினைக்கிறேன்.. யோசித்து முடிவைச் சொல்..உன் முடிவு என்னவாக இருந்தாலும்..உன் கல்யாணம் என்னோடது தான்.. என்றுமே, நீ மிஸஸ் குறள்நெறியன் தான் .. சீக்கிரம் முடிவைச் சொல்.."என்று மிக மெதுவாகவும் ,அழுத்தமாகவும் மிரட்டியவனைக் கண்டவளுக்கு.. மனம் முழுவதும் பயமே ஆட்கொண்டது..


அவனோ, அவளின் வெளிறிய முகத்தையும் , கண்களில் தெரிந்த அச்சத்தையும் பொருட்படுத்தாமல், கர்வத்துடன் நின்றான்.


பாவினியோ, என்ன சொல்வதென்றே தெரியாமல் தவித்தாள்.. 'இத்தனை பேர் முன்னிலையிலேயே, எவ்வளவு சர்வசாதாரணமாகத் தன்னை மிரட்டும் இவனால், என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று உணர்ந்தாள்.. ஆனால், இவன் பேச்சுக்கு பயந்து எப்படித் தன் வாழ்க்கையை இவனிடம் ஒப்படைக்க முடியும்.. அப்பாவுக்குச் சுத்தமாக விருப்பம் இல்லாத ஒன்றை, எந்தக் காலத்திலும் தன்னால் செய்ய முடியாது.. என் கல்யாணம் அப்பா ஆசைபட்டவருடன் தான் நடக்கனும்.. இவன் என்ன செய்தாலும்,என் அப்பாவை மீறி இவனால் என்னை நெருங்க முடியாது..' என்று நினைத்தவள், தன் தந்தையைப் பார்க்க..


அவரும், மகளைத் தான் விழி எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்.. அந்தக் கண்களில் நான் இருக்கேன்டா உனக்கு ! என்ற தைரியம் தான் மின்னியது.. அதுவே அவளுக்கு ஆயிரம் யானைப் பலத்தைத் தரவும், குறள்நெறியனிடம் திரும்பி, " எனக்கு உங்களைக் கல்யாணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை.. என் அப்பா முடிவு தான் என் முடிவும்.." என்று தைரியமாக , நேருக்கு நேர் அவன் முகத்தைப் பார்த்து சொன்னாள்..


தூயவனோ, மகளின் பதிலில் எல்லையில்லா ஆனந்தம் கொண்டவர் ,குறள்நெறியனை திரும்பி பார்த்தவரின் கண்களில் ,அவள் என் மகள் ! என்ற பெருமிதமே தெரிந்தது..


நவேந்தியோ, பாவினியின் பதிலில், ஓய்ந்து போய்விட்டார்.. வளர்பிறையும், நவிலும் பாவினியின் பதிலில் நிம்மதியடைந்தனர்.


மணமேடையின் கீழே அமர்ந்து நடக்கும் கூத்தையெல்லாம், புரியாமல் திகிலுடன் பார்த்துக் கொண்டிருந்த செங்கோடனும்,மெய்யமமையும் .. மணமேடையில் பேரன் என்ன பேசிக் கொண்டு இருக்கிறான்.. அவன் முகமே சரியில்லையே..மேலே போவோமா?வேண்டாமா?என்று குழம்பிய படி அமர்ந்திருந்தார்கள்..


திருமணத்திற்கு வந்தவர்களோ, திருமணம் நடக்குமா?நடக்கதா?நாம் போகலாமா?வேண்டாமா?என்ற குழப்பமான மனநிலையில் மணமேடையைப் பார்த்தபடி அமர்ந்திருந்தனர்..


குறள்நெறியனோ, பாவினியின் பதிலில் வியந்து போனான்..தான் இவ்வளவு சொல்லியும், அவளின் அப்பாவின் சம்மதம் தான் முக்கியம்.. என்று பயப்படாமல் தன்னை நிராகரித்தவளை மணந்தே தீரவேண்டும் என்ற வெறி அவனுள் எழுந்தது.. அதுவும் , பாவினியின் பதிலில் தூயவன், தன்னைப் பார்த்த பார்வையை , அவனால், மறக்கவே முடியலை.. அடுத்து என்ன செய்ய வேண்டுமென்று உடனே முடிவு செய்தவன்..


தன்னையே பார்த்துக் கொண்டிருந்த மற்ற எவரையும் பொருட்படுத்தாமல்,நேராகப் பாவினியிடம் சென்று நின்றவன்,யாருமே எதிர்பார்க்காத நொடியில், சட்டென்று தன் சட்டைப் பாக்கெட்டில், ஏற்கனவே வாங்கி வைத்திருந்த, மாங்கல்யத்தை எடுத்து அவளின் கழுத்தில் கட்டினான்..


குறள்நெறியனின் இந்த அதிரடியை எதிர்பார்க்காத பெற்றவர்கள் சப்தநாடியும் ஓடுங்க அதிர்ச்சியில் கற்சிலையானர்கள்..


பாவினியோ,அவன் தன் புறம் வந்து நின்ற பொழுது ,தன்னிடம் மறுபடியும் பேசத் தான் வந்திருக்கான் என்று நினைத்திருந்தவளுக்கு, அவன் இப்படி ஒரு காரியத்தைக் கண் இமைக்கும் நேரத்தில் செய்வான்.. என்று ஒரு விநாடி பொழுது கூட எண்ணிடாதவள்.. அவனின் செய்கையால் பேரதிச்சியுடன், பேச்சு,மூச்சற்று கல்லாகச் சமைந்தாள்..

பாவையின் வாழ்க்கை விளையாட்டு பொம்மையானது விதியின் சதியா? நாயகனின் சூழ்ச்சியா?காலத்தின் கையில்..


அன்பு கொல்லும்..
 

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
327
Reaction score
607
Points
93
அன்பே! அன்பே! கொல்லாதே!@@

அத்தியாயம் 16

மணமேடையின் ,கீழே அமர்ந்திருந்த செங்கோடனும், மெய்யமமையும் பேரன் செய்த காரியத்தைப் பார்த்து அடங்கா கோபத்துடன் மணமேடை வந்தவர்கள்.. "குறள் என்னடா பண்ணி வ்சசிருக்கா.." என்றவர்களிடம்..


" ஏன் பார்த்தா தெரியலையா..? உங்க பேரனுக்கு இன்னைக்குத் திருமணம் ஆயிடுச்சு.. வந்து எங்களை ஆசிர்வாதம் செய்யுங்க என்று தெனாவெட்டாகச் சொன்னவனை, என்ன சொல்வதென்று புரியாமல் அதிர்ச்சியில் பெரியவர்கள் வாயடைந்து நிற்க..


சில நிமிடங்களில் திகைப்பிலிருந்து மீண்ட தூயவன்,எல்லையில்லா கோபத்துடன் குற்ளநெறியன் அருகில் வந்தவர், அவனின் சட்டையைப் பிடித்து " யூ ராஸ்கல் ! எத்தனை திமிரிருந்தால் என் முன்னேயே இப்படிச் செய்திருப்பாய் .. "என்று கத்தியவரிடம்..


"அது தான் திமிருன்னு நீங்களே சொல்றீங்களே மாமா ! அப்புறம் என்ன கேள்வி.. நான் தான் அன்றே சொன்னேனே.. எந்தக் கொம்பானாலும் ,எதுவும் செய்ய முடியாதுன்னு.." என்று நக்கலாகக் கூறியவன் .. தன் சட்டையிலிருந்து ,அவர் கையை எடுத்து விட்டு, சட்டையின் சுருக்கை நீவி விட்ட படியே, " என் மீது கையை வைத்ததற்கு, உங்களை உண்டு, இல்லைன்னு பண்ணிருப்பேன்.. ஆனால், என் மாமானாரா போய்டீங்களேன்னு.. பேசாம இருக்கேன்.." என்று வாரத்தைகளைக் கடித்துத் துப்பினான்..


தூயவனோ, உச்ச கட்ட கோபத்தில் ,உடல் நடுங்க .. "நீ தாலி கட்டினா ! அப்படியே என் பெண்ணை உன் கூட அனுப்பிருவேன்னு நினைச்சியா..? இது கட்டாயக் கல்யாணம்!இதற்கே, உன் மீது கேஸ் போட்டு உன்னை உள்ளே தள்ள முடியும்.? அது மட்டுமில்லாமல் பிடிக்காத தாலியை காலம் பூரா சுமக்க வேண்டிய அவசியம் என்ன பொண்ணுக்கில்லை.. இப்போதே அதைக் கழற்றி உன் முகத்தில் எறிகிறேன்.." என்று கூறியபடி, பாவினியின் கழுத்தில் கிடந்த, புத்தும் புது மஞ்சள் கயிற்றில் கை வைக்கப் போன, தூயவனின் கைகளை அழுந்த பற்றிய குறள்நெறியன்..


" மிஸ்டர் தூயவன் ! என்னைத் தாண்டித் தான் என் மனைவி மீது கைவைக்க முடியும்.. இதற்கு மேல் ஏதாவது செய்தீங்க.. அவ்வளவு தான் உங்களுக்கு மரியாதை.." என்று கர்ஜித்தவன்.. பாவினியை மறைத்துக் கொண்டு, தன் முழு உயரத்திற்கு நிமிர்ந்து நின்றான்.


மற்றவர்கள் நடப்பதை நம்பமுடியாமல் பார்த்துக் கொண்டிருக்க, நாவேந்தியோ, தூயவனிடம் மகனுக்குச் சப்போட்டாக..
" தூயா நீ செய்வது கொஞ்சம் கூடச் சரியில்லை.. அவன் நியாயமா உன்னிடம் பெண் கேட்டானா ? நீ ஏன் ஒத்துக்கலை.. அப்படி என்ன அவனுக்குக் குறை.. அறியா பையன் ஏதோ ஆசையில் செய்துட்டான்.. ஆனால், கட்டிய தாலியை கழற்றுவேன்னு பிடிவாதம் பிடிப்பது நியாயமே இல்லை.".என்று கூறிக் கொண்டு இருக்கும் போதே..


" யார் அறியாப் பையன் உன் மகனா? அவனைப் போல் ஒரு கிரிமினலை இந்த உலகத்திலேயே பார்க்க முடியாது.."என்று அவர் ஆத்திரத்தில் வார்த்தையை விட.. அதைக் கேட்ட பாவினியும் ,நவிலும் குறள்நெறியன் நாவேந்தியின் மகன் என்று அறிந்ததும், அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றனர்..


நாவேந்தியோ, தூயவனின் பதிலில் எல்லையில்லா கோபத்துடன்.. " தூயா நீ பேசுவது கொஞ்சம் கூடச் சரியில்லை. என் மகன் என்ன கிரிமினல் வேலை செய்தான்னு நீ பார்த்தே.."

" ம்..! இந்தக் கல்யாணத்தையே அவன் தான் நிறுத்தியிருக்கான்.. உண்டா?இல்லையான்னு அவனையே கேளு.." என்றவரை அச்சுத்துடன் ஒருநிமிடம் பார்த்தவர்.. பின் மகன் புறம் திரும்பி, அவனைக் கேள்வியாகப் பார்த்தார்..

அவனோ தாயின் பார்வையைப் பொருட்படுத்தாமல்.. தூயவன் புறம் திரும்பி, அவரின் கண்களை நேராகப் பார்த்தபடி.. "ஆமாம் நான் தான் நிறுத்தினேன்.. சரியான நேரத்தில் போலீஸ் வரவழைத்தது மாப்பிள்ளையே விசாரணைக்குக் கூட்டிட்டுப் போகச் செய்தேன்.. நான் நியாமா பெண் கேட்ட போதே, சரின்னு சொல்லியிருந்தா? இத்தனை தூரம் வந்து இருக்காது.. நான் நினைத்தது நடக்க என்ன வேண்டுமானாலும் செய்வேன்.."என்றவனை, 'பளார்' என்று அறைந்திருந்தார் நாவேந்தி..


குறள்நெறியனோ, நாவேந்தி அறைந்ததை நம்பமுடியாமல் பார்த்தவனிடம்.. "ஏன்டா இப்படிச் செய்தே ? பெண்ணைப் பெற்றவர் விருப்பம்.. உனக்குக் கொடுப்பதும், கொடுக்காமல் போவதும்.. அதற்காக, ஒரு பெண்ணோட வாழ்க்கையில் விளையாடுவாயா? என்ன தைரியம் உனக்கு.. எங்கிருந்துடா என் வயிற்றில் வந்து பிறந்தாய்.. " என்று கதறியவரிடம்..

" மிஸஸ் நேயவாணன்.. என்ன தைரியமிருந்தால், என் மீது நீங்க கை வைத்திருப்பீங்க.. எந்த உரிமையில் அடித்தீங்க.. உங்க மரியாதையைக் காப்பத்தீங்க..நான் என்ன பாவம் செய்தேனோ? உங்க வயிற்றில் பிறந்தேன்னு .. தினம்..தினம் நொந்து கொண்டிருக்கேன்.. " என்றவனின் சுடுச்சொல்லைக் கேட்டு நாவேந்தி துடித்துப் போனார்..


நடப்பதை கையளாகாத தனத்துடன் பார்த்துக் கொண்டிருந்த ,மாமனார்,மாமியாரிடம் பார்வையாளேயே , உங்களை நமபித்தானே விட்டேன்.. எப்படி வளர்த்து வைச்சிருக்கீங்க .. என்று கண்களாலேயே கேள்விகளைத் தொடுத்தார் நாவேந்தி..


அவர்களோ, மருமகளின் குற்றச்சாட்டும் பார்வையைத் தாங்க முடியாமல் தலை குனிந்து கொண்டனர்.. தங்களுடைய அளவுகடந்த செல்லமே, அவனை நினைத்ததை எல்லாம் சாதித்து வைத்திருக்கிறது..'என்று காலம் கடந்து புரிந்து கொண்டனர்..


குறள்நெறியனின் பேச்சைக் கேட்ட தூயவனோ, ஆத்திரத்துடன்.. " இந்தப் புண்ணியவதி வயிற்றில் பிறந்ததால் தான், நீ இப்படி ஒரு காரியம் செய்தை பார்த்துக் கொண்டு சும்மா நிற்கிறேன்.. இல்லை என்றால், நடப்பதே வேறு .."என்று ஏக வசனத்தில் பேசியவர்.. செங்கோடன் புறம் திரும்பியவர், "ரொம்ப அழகாக வளர்த்திருக்கீங்க.." என்று இத்தனை நாள் மனதிற்குள் அரித்ததைக் கோபத்துடன் கேட்டே விட்டார்..


குறள்நெறியனுக்கோ, தூயவன் சொன்னதைக் கேட்டதும், " என் வளர்ப்பில் என்ன குறை கண்டீர்கள் மிஸ்டர் தூயவன்.. இனி ஒரு முறை என் பாட்டி தாத்தாவை யாராவது ஏதாவது சொன்னால் மரியாதை கெட்டுவிடும் .."என்றவன் .


சிலையாக நின்ற பாவினியின் கைகளைப் பற்றி.. "வா போகலாம் .." என்று அழைத்தவனிடம்...

"குறள் ஒரு நிமிடம் இரு.." என்ற செங்கோடன்.. தூயவனிடம், " நீ பேசியது சரிதான் ..என் வளர்ப்பு பொய்த்துப் போய்விட்டது ..,"என்றவரிடம் , "தாத்தா .."என்று குறள்நெறியன் கத்தவும்..


" குறள் உனக்கு என் மீது ஒரு துளியாவது மரியாதையிருந்தால், கொஞ்ச நேரம் பேசாமல் இரு.. எங்களின் கண்மூடித்தனமான பாசம், இப்போது கூட நீ செய்த காரியத்திற்கு உன்னை ஓங்கி ஓர் அறை விடமுடியாமல் நிற்க வைத்திருக்கிறது.." என்றவுடன் குறள்நெறியன் நரம்புகள் புடைக்க ,கை முஷ்டி இறுக கோவத்தை அடக்கியபடி நின்றான்..

செங்கோடனோ, " தூயவா, நடந்தது.. நடந்து , போச்சு.. அதற்காக ,என் பேரன் செய்தது சரியென்று சொல்லவில்லை.. நல்லதோ,கெட்டதோ திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர்ன்னு சொல்லுவாங்க.. இவர்கள் இருவரையும் தான் இணைக்க வேண்டும் என்பது கடவுளின் தீர்ப்பு போல்.. நாம் பெரியவர்கள் என் பேரன் செய்ததை மன்னித்து .. இந்தச் சின்னஞ்சிறுசுகளை வாழ்த்துவோம்.." என்றவரிடம்..


" எவ்வளவு எளிதாகச் சொல்றீங்க அய்யா.. எதை நம்பி என் பெண்ணை உங்க பேரனுடன் அனுப்ப முடியும்.. இப்போது கூடப் பெற்றவளை மதிக்காமல் மனம்நோக பேசும் உங்க பேரன்.. என் பெண்ணை மட்டும் மனைவியாக நடத்துவாரா? அட்லீஸ்ட் பெண்ணாகவாவது நடத்துவாரா ? உங்க பெண்ணுக்குப் இப்படி ஒரு நிலமை வந்தா.. அப்பவும் நீங்க இப்படித் தான் பேசுவீங்களா..?"


" தூயவா உன் ஆதங்கம் புரியுது.. ஆனால், அதற்காக நடந்த திருமணம் இல்லையென்று ஆகாது.. உன் பெண் இனி எங்க வீட்டுப் பெண்.. என்னை நம்பி நீ தைரியமாக அனுப்பி வை.. நாங்க மட்டுமில்லை என் பேரனும் நல்லா பார்த்துக்குவான்.. அப்படி நடக்கலைன்னா ? நீ என் சட்டையைப் பிடித்துக் கேள்வி கேளு.." என்றவரை , "தாத்தா.." என்று குறளும், "அய்யா என்ன பேச்சு இது.." என்றார் தூயவனும்..

" தூயவா , எனக்கு வேறு என்ன சொல்வதென்று தெரியலை.. உன் மனதார ஆசிர்வாதம் பண்ணி உன் பெண்ணை அனுப்பி வைப்பா.. அவர்கள் கண்டிப்பாக நல்லா வாழ்வார்கள்.. உன் மகள் என் வீடு வரும் நேரம் எல்லாம் சரியாகும்.. கண்டிப்பா உன் வளர்ப்பு என்னைப் போல் சோடை போகாது.." என்று நா..தழுதழுத்தவரை..


" தாத்தா ஏன் இப்படிப் பேசறீங்க.. யார் என்ன பேசினாலும், உங்க வளர்ப்பு என்றும் மோசமாகது.. நீங்க என்னைப் பெற்றதுடன் கடமை மூடிஞ்சுருச்சுன்னு போனாங்களே, அவங்களை விட நீங்க எனக்குப் பல மடங்கு உயர்ந்தவங்க.. உங்க வளர்ப்பை குறை கூற இங்கு யாருக்கும் தகுதி இல்லை.. எனக்காக நீங்க யாருகிட்டயும் தலை குனியவும் வேண்டாம், கெஞ்சவும் வேண்டாம் .. என்றவன்.. பாவினி புறம் திரும்பி , " வினு இப்ப எங்கூட உன்னால் வர முடியுமா? முடியாதா? "என்று நடப்பதை திகைப்புடனே பார்த்துக் கொண்டிருந்தவளிடம் கேட்டான்.


பாவினியோ, தன் தந்தையைப் பார்த்தாள்.. தூயவனோ ,தன் மனைவி புறம் திரும்பி கேள்வியாகப் பார்த்தார்.. வளர்பிறையோ, கணவன் அருகில் வந்தவர்.. "பெரியவர் சொல்வதைப் போல், நடந்தது.. நடந்து போச்சு.. அழித்து அழித்து எழுத முடியாது..அவள் தலையில் என்ன எழுதியிருக்கோ , அது தான் நடக்கும்.. எல்லாரிடம் ஆசிர்வாதம் வாங்கிட்டு அழைத்துப் போகச் சொல்லுங்க.." என்று பொதுவாகச் சொன்னவரை அனைவரும் வியப்புடன் பார்த்தனர்..


குறள்நெறியனோ, எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல், வளர்பிறை சொன்னது போல், பாவினியை அழைத்துச் சென்று, முதலில் தன் தாத்தா பாட்டி கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினான்..
பெரியவர்கள், மனம் குளிர பேரனை ஆசிர்வாதித்தவர்கள் ..

நாவேந்தியிடமும்,தூயவனிடமும் ஆசிர்வாதம் வாங்கச் சொன்னார்..


குறளோ,நாவேந்தியை பொருட்படுத்தாமல், பாவினியின் பெற்றோரிடம் சென்று ஆசிர்வாதம் வாங்க வந்தவனிடம்.. "முதலில் உங்க அம்மாகிட்ட ஆசிர்வாதம் வாங்குங்க.." என்ற தூயவனிடம்.. அவனோ, தனக்கு விருப்பமில்லாமையைத் தன் உடல் மொழியில் காட்டினான்..


பாவினியோ, தந்தை சொல்லைத் தட்டாமல் நாவேந்தியின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினாள்.. ஆனால், குறள்நெறியனோ, அசையாமல் நின்றான்..


நாவேந்தியோ, தன் ஆசை மருமகளை அடி மனதிலிருந்து மனதார வாழ்த்தினார்.. அவரின் கண்களில் ஆனந்த கண்ணீர் அருவியாய்க் கொட்டியது..


தூயவனோ, குறளை முறைத்தார்.. நாவேந்தியோ, பார்வையாலேயே தூயவனை அமைதி காக்கச் சொல்லி வேண்டினார்..


பாவினி ,தன் பெற்றோர்களிடம் ஆசிர்வாதம் வாங்கும் பொழுதும் தூயவன் இரும்பாகவே நின்றான்.. தூயவனோ, அதைப் பெரிதாக நினைக்காமல் தன் ஆசை மகளிடம்..
" பவிம்மா ஏற்க்க முடியாத என்னென்னவோ நடந்து விட்டது.. எனக்கு விருப்பமில்லாவிட்டாலும், சில நல்ல உள்ளங்களுக்காத் தான், அப்பா இந்தத் திருமணத்தை ஏற்றுக் கொண்டேன்.. எந்தச் சூழ்நிலையிலும், உனக்காக நான் இருப்பேன் என்பதை மறந்துடாதே.." என்றார் குறள்நெறியனை பார்த்த படியே..


குறள்நெறியனோ, அவரை முறைத்துக் கொண்டே பாவினியிடம் "போகலாமா.." என்றான்.


தன்னை முறைத்தபடி நின்ற மருமகனிடம்.. "பவியின் கண்களில் கண்ணீரைக் கண்டால் நான் மனிதனாக இருக்க மாட்டேன்.. உங்க தாத்தாவுக்காவும், இதோ உங்க மகிழ்ச்சியே ! தன் வாழ்க்கை என்று வாழும் உங்களைப் பெற்ற இந்த அப்பாவிக்காவும் தான்.. எனக்குப் பிடிக்கைலைன்னாலும்,
நீங்க செய்த காரியத்தை மன்னிக்க முடியாமல் மன்னித்துப் பவியை அனுப்புகிறேன்.." என்று பிடிக்கா விட்டாலும் மருமகனுக்கு மரியாதை கொடுத்து பேசினார்..


அவனோ, அவருக்குப் பதிலே சொல்லாமல், கொஞ்சம் கூட தான்‌ செய்த காரியத்தை நினைத்துக், குற்றவுணர்வும் கொள்ளாமல்.. தன் இயல்பான திமிருடன், பாவினியை அழைத்துக் கொண்டு சென்றான்..

பாவினியோ மனதிற்குள் குறள்நெறியன் மீது அளவு கடந்த கோபத்தையும்,வெறுப்பையும் சுமந்து கொண்டு தன் பெற்றவர்களின் சொல்லுக்காக ..எரிமலையாகக் குமுறும் மனதினை அடக்கிக் கொண்டு ,அவனுடன் கண்களில் நீர் தேங்க தன் பெற்றவர்களையும்,தன் ஆரூயிர் சகோதரன் நவிலையும், எழிலியையும் ..திரும்பி..திரும்பி பார்த்தபடியே சென்றாள்..


எழிலியும் , நடந்ததை நம்ப முடியாமல் பிரமிப்புடன் , தோழி போவதை கற்சிலையாகப் பார்த்தபடி நின்றாள்..


செங்கோடனோ, தூயவனிடம் தான் பார்த்துக் கொள்வதாகக் கூறிவிட்டு, பேரன் பின் சென்றார்..


அதுவரை நடப்பதை பிரமிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்த நவிலோ.. தன் அக்கா கண்ணீரோடு தன்னைப் பார்த்தபடியே போவதைக் கண்டு, துக்கம் தாங்க முடியாமல் ..அவள் பின்னே ஓடினான்..


திருமணத்திற்கு வந்தவர்கள்.. எப்படியோ திருமணம் முடிந்த சந்தோஷத்தில், நடந்ததைப் பற்றிப் பேசிக் கொண்டே விருந்துண்ணச் சென்றார்கள்..


பாவினியோ, தயங்கியபடியே காரில் ஏறப் போகும் சமயம்.. "பவிக்கா.." என்ற அழைப்பைக் கேட்டு ஆசையாகத் திரும்பினாள்..


நவிலோ, பாவினியின் அருகில் வந்து, "அக்கா, அக்கா.. "என்றவனுக்கோ வார்த்தைகளே வரவில்லை.. அந்த இருபத்தொரு வயது குழந்தை பேச்சற்றுக் கண்ணீர் சிந்தியது..


பாவினியோ, சட்டென்று தம்பியின் கண்களில் வடிந்த கண்ணீரை துடைத்தபடியே, "நவி.." என்றவள், தன் துக்கத்திற்கு வடிகால் தம்பி தான் என்பதைப் போல் .. தம்பியின் நெஞ்சில் சாய்ந்து கொண்டு, அத்தனை நேரம் மனதிற்குள் அடக்கி வைத்திருந்த மனக் கஷ்டத்தைக் கண்ணீராக வடித்தாள்..


நவிலோ , " பவிக்கா ப்ளீஸ் அழாதே .. நீ அழுதால் என்னால் தாங்க முடியாது .." என்று கூறியபடியே தன் அக்காவை தேற்றினான்..


இவர்களின் பாசப் போராட்டத்தைக் குறள்நெறியன் தன் பாட்டி தாத்தாவுடன் பார்த்த படி நின்றான்..


ஒருவழியாகப் பாவினி தன்னைத் தேற்றிக் கொண்டு, நிமிர்ந்த போது.. குறள்நெறியனின் பொறுமையற்ற பார்வையைத் தான் சந்தித்தாள்..


நவிலோ, குறள்நெறியன் அருகில் சென்று, "என் அக்கா எங்க வீட்டு தேவதை.. அவள் முகத்தில் நாங்க கண்ணீர் வரவிட்டதில்லை.. உங்க வீட்டிலும் அவ எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும். இல்லைன்னா, நான் சும்மா இருக்க மாட்டேன்.." என்றவனைப் பார்த்த குறளநெறியனோ..

மனதிற்குள், "கொடுக்குக் கெல்லாம் வால் மொழச்சிருச்சு.. எல்லாம் என் நேரம்..' என்று எண்ணியவன், தன் தாத்தா பாட்டியைக் காரில் ஏறச் சொல்லிவிட்டு,பாவினி ஏறும் வரை பொறுத்து தானும் ஏறியவன் நவிலிடம் சிறு தலை அசைப்புடன், காரை வீட்டை நோக்கி ஓட்டினான்..


மன்னவனுடனான வாழ்க்கை மங்கைக்கு நரகமா? சொர்க்கமா? காலத்தின் கையில்..

அன்பு கொல்லும்..
 

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
327
Reaction score
607
Points
93
அன்பே!அன்பே! கொல்லாதே!

அத்தியாயம் 17

மணமக்கள் சென்ற பின், தூயவன் ஓய்ந்து போய் அமர்ந்து விட்டார்.. அவர் மனம் துடியாய், துடித்தது. தன் மகளுக்கு இப்படி ஒரு திருமணம் நடக்குமென்று அவர் ஒரு நொடி கூட நினைத்துப் பார்த்ததில்லை..


மகள் தங்களைத் திரும்பி..திரும்பி, பார்த்துக் கொண்டே போன போது, அவருடைய இருதயத்தை யாரோ? சம்மிட்டியால் அடித்ததைப் போல் வலித்தது.



மகளின் கண்களில் கண்ணீரைக் கண்டால் ! தன்னை மீறி உடைந்து விடுவோமோ ? என்ற பயத்தில் மனதைக் கல்லாக்கிக் கொண்டு , மகளை வழி அனுப்ப போகாமல் மரம் போல் நின்றார்.


தூயவன் மனநிலையைப் புரிந்து கொண்ட வளர்பிறையும் , மகளை வழியனுப்பச் செல்லாமல் ,கணவனுக்குத் துணையாக நின்று கொண்டார் . கணவன் என்ன தான் முற்போக்குச் சிந்தனைவாதியாக இருந்தாலும், வளர்பிறை சராசரித் தமிழ் பெண்ணாக, மகளின் எதிர்பாராதத் திருமணத்தை மனதார ஏற்றுக் கொண்டு, அவர்கள் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டுமென்று மனதிற்குள்ளேயே வாழ்த்தினார்.


நாவேந்தியோ,மகன் என்ன தான் தன்னை மதிக்காவிட்டாலும்..பெத்த மனம் பித்து ! பிள்ளை மனம் கல்லு ! என்ற பழமொழிக்கு ஏற்ப.. தன் நண்பனின் மகளே‌! தனக்கு மருமகளாக வந்ததில் மனம் கொள்ளா மகிழ்ச்சியில் திளைத்தார். பத்து வயது குறைந்தது போல் பூரிப்பில் மிதந்தார்.


மணமக்கள் சென்ற பின் ,தூயவன் சிறிது நேரம் தன் கவலையிலேயே ‌மூழ்கியிருந்தார்.. பின் நிதர்சனத்தைப் புரிந்து கொண்டு மனைவியிடம் , "வளர் நான் ஸ்டேஷன் வரை ஓர் எட்டு போய்ட்டு வரேன்.. நீ மனசை குழப்பிக்காமல் வந்தவர்களை கவனி..!" என்றவர், தமக்கையை வழியனுப்பி விட்டு வந்த நவிலையும், நாவேந்தியையும் மனைவிக்கு துணையாக இருக்கும் படி சொல்லிச் சென்றார்.



காரில் சென்று கொண்டிருந்த பாவினியோ, தன் அருகில் முகத்தில் மகிழ்ச்சி ரேகை மின்ன.. காரை ஓட்டிக் கொண்டிருந்தவனைப் பற்றிய சிந்தனையிலேயே உழன்று கொண்டிருந்தாள்.


குறள் நெறியனுடன் தன் எதிர்காலம் இனி எப்படி இருக்குமென்ற பயமும்,குழப்பமுமே அவளைச் சூழ்ந்திருந்தது..


செங்கோடனும், மெய்யம்மையும் நடந்த திருமணத்தை நம்பவே முடியாதப் பேரதிர்ச்சியுடனேயே பயணித்தனர்.

பேரனின் செய்கை அவர்களை பேச்சிழக்க வைத்திருந்தது. அவனைக் கண்டிக்கவோ, தண்டிக்கவோ, முடியாமல் இறுகிப் போய் அமர்ந்திருந்தனர். அவர்கள் மனமோ, ஊமையாக அழுதது.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருந்தனர். குறள்நெறியன் மட்டும் , தான் நினைத்ததைச் சாதித்த மகிழ்ச்சியில் திளைத்தான். மனதிற்குள் , 'என் அருமை மாமனாரே ! இனிமேல் தான் என்‌ ஆட்டத்தைப் பாரக்கப் போறீங்க..' என்று சொல்லிக் கொண்டான்..

ஆனால் ,அவனுடைய மாமனார் ! அவன் கண்களிலேயே விரல் விட்டு ஆட்டிக் கூடிய வல்லமை படைத்தவர், என்று அவன் அப்போது அறியவில்லை..


பாவினியோ , பாதையில் கவனம் இல்லாமல் சாலையை வெறித்துப் பார்த்த படியே அமர்ந்திருந்தாள். காரின் ஹாரன் இடைவிடாமல் ஒலிக்கும் சத்ததில் தான் நடப்புக்கு வந்தாள்.



யோசனையுடன் சுற்றுப் புறத்தை ஆராய்ந்தவளின் பார்வையில் முதலில் பட்டது.. 'குறளகம்' என்ற பொன்னிற எழுத்துக்கள் தான். அதைக் கண்ட பின் தான், இது குறள்நெறியன் வீடு என்பதே அவள் மண்டைக்குள் உரைத்தது.


இனி இந்த வீட்டில் தான் நாம் வாழப்போகிறோமோ? என்றெண்ணியபடியே வீட்டைப் பார்வையால் அளந்தாள்..


அவள் எதிர்பார்த்ததை விடவே வீட்டின் தோற்றம் மிக பிரமாண்டமாகவும்,நேர்த்தியான அழுகுடனும் ஜொலித்தது.


குறள்நெறியனோ, பொறுமை இல்லாமல், அடித்த காரின் ஹாரன் சத்தத்தைக் கேட்டு, வாட்ச்மேன் ஓடோடி வந்து கேட்டைத் திறக்கவும்.. காரை வழக்கம் போலவே, மிக வேகமாக, ஒரு குலுக்கலுடன் நிறுத்திய குறள்நெறியன், பாவினியின் புறம் திரும்பி அவளை கீழே இறங்குமாறு சைகை செய்தான்.


பாவினியோ,தன் புறமிருந்த காரின் கதவை திறக்க முயன்றவள், அது இயலாமல் திணறினாள்..

மெய்யம்மையும்,செங்கோடனும் முதலில் இறங்கி, மணமக்களை வரவேற்க தேவையான ஏற்பாடுகளை செய்யச் சென்றனர்.


குறள்நெறியனோ, பாவினியின் திணறலை சில நொடிகள் வேடிக்கைப் பார்த்தான்.. பின் அவள் புறம் நகர்ந்து ,அவளை உரசியபடியே கார் கதவின் கைப்பிடியிலிருந்த, பாவினியின் விரல்கள் மீது தன் கைகளை வைத்து கார்க் கதவை திறக்க முயன்றான்.


அவளோ , அவனின் எதிர்பாராத தீண்டலில் விதிர்விதித்து போனாள்.. சட்டென்று தன் விரல்களை அவனிடமிருந்து உருவிக் கொண்டாள். அவனின் உடல் தன் மீது உரசாதவாறு மிக நாசூக்காக காரின் சீட்டோடு முடிந்தளவு ஒட்டி அமர்ந்தாள்.


குறள்நெறியனோ, அவளின் செய்கையை புரிந்து கொண்டு, மீண்டும் வேண்டுமென்றே அவளை உரசியபடியே கதவைத் திறந்து விட்டான்.


பாவினியோ, கதவு திறந்ததும் தப்பித்தால் போதுமென்று, காரிலிருந்து இறங்கினாள். குறள்நெறியனும் அவளின் செயல்களை ரசித்தபடியே காரிலிருந்து இறங்கி அவள் புறம் சென்று நின்றான்.


மெய்யம்மையோ, காரிலிருந்து இறங்கிய மணமக்களை ஆலாத்தி எடுக்க வேண்டுமென்றுச் சொல்லி, சில நிமிடங்கள் வாசலிலேயே நிற்க வைத்தார்.



தன் அருகில் அழகுப் பதுமையாக நின்றிருந்த பாவினியின் புறம் குனிந்த குறள்நெறியன், "வெல்கம் மிஸஸ் பாவினி குறள்நெறியன்.." என்று அழுத்தமாக சொன்னான்.


பாவினியோ,குறள்நெறியன் தன் அருகில் வந்து நின்றதை உணராமல் வீட்டை ஆராய்ந்து கொண்டிருந்தாள். அதனால், திடீரென்று தன் காதருகில் அவன்‌குரலைக் கேட்டதும்,தூக்கிவாரிப் போட நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்..


அவனோ, அவளை விழுங்கி விடுவதைப் போல் பார்த்துக் கொண்டே.. "எதற்கு இத்தனைப் பதட்டம் .. ஜெஸ்ட் ரிலேக்ஸ்..இனிமேல் தானே நம்ம விளையாட்டே தொடங்கப் போகுது.. அதற்குள்ளேயே இப்படி பயந்தா எப்படிமா..?" என்று தன் புருவத்தை உயர்த்தி கேட்டவனைக் கண்டு அவள் மனதிற்குள் அச்சம் குடிகொண்டது.


இமைகளை விரித்து, அச்சத்துடன் தன்னையே பார்த்தவளின் விழிகள் முன் சொடக்கிட்டு, அழைத்த குறள்நெறியன்.. "நீ இப்படி பயப்படும்மளவு.. நான் இன்னும் எதுவுமே செய்யலையே மா .. இதற்கே இப்படியென்றால் .. இனி நடக்கப் போவதை எப்படி எதிர் கொள்வாய் மை டியர் வினு டார்லிங்.." என்று அதிகாரத்துடன் தொடங்கி கொஞ்சலில் முடித்தான்.


பாவினிக்கோ, அவனின் வார்த்தைகள் மேலும் அச்சத்தையும்,திகிலையும் கூட்டியது. அவளின் இயல்பான தைரியம், கொஞ்சம்.. கொஞ்சமாக, மறைந்தது. நொடிக்கு ..நொடி ,மாறும் அவனின் பேச்சு மொழி புரியாமல் குழம்பினாள்.


மெய்யம்மையோ,பேரனின் திருமணக் கோலத்தையும்,பாவினியையும் பிரமிப்புடன் பார்த்த வேலையாட்களை, ஏவி.. அவரவர் வேலைகளைச் செய்ய சொல்லி கட்டளையிட்டார் !


செங்கோடனோ, ஓய்ந்து போய் சோஃபாவில் அமர்ந்து கொண்டார். அவர் மனமோ, பேரன் செய்த காரியத்தை நினைத்துச் சொல்ல முடியாத துயரத்தில் தத்தளித்தது.


மெய்யம்மை ,மணமக்கள் இருவரையும் நெருக்கமாக நிறுத்தி , தானே அவர்களுக்கு ஆலம் சுற்றி வரவேற்றார்.. பின் இருவரையும் பூஜை அறைக்கு அழைத்துச் சென்று விளக்கேற்றி, இருவரின் வாழ்க்கையும் செழிக்க வேண்டுமென்று மனதாரம் கடவுளிடம் வேண்டினார்.


குறள் நெறியனும் , அன்று மட்டும் பாட்டி சொல் தட்டாமல் கண்மூடி கடவுளை வணங்கினான் . பாவினியும் , தெளிவற்ற மனதுடன் கடவுளிடம் சரணடைந்தாள்.


தன் வேண்டுதலை முடித்துக் கொண்ட மெய்யம்மை, பேரனிடம் குங்குமத்தைக் கொடுத்து, பாவினியின் நெற்றியில் வைக்கச் சொன்னார்..

குறள்நெறியனும் ,பாட்டி சொல்படி கண்மூடி நின்றிருந்த பாவினியின் நெற்றியில் குங்குமத்தை எடுத்து வைத்தான்.


பாவினி ,அவனின் விரல் தீண்டலில் சட்டென்று கண்களை திறந்தாள். தன்னையே விழி எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்த, குறள்நெறியனின் கண்களில் வழிந்த கள்ளத்தனமான சிரிப்பு ! அவளுக்கு எதையோ சொல்லாமல் சொல்லியது. அஃது என்னவென்று தான் அப்போது அவளுக்குப் புரியவில்லை..


அவனோ, அவளின் குழம்பிய பார்வையை கண்டும், காணாமலும் தன் அறைக்குச் சென்றான்.


பாவினியோ, அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் விழித்த படியே நின்றாள். அவளுக்கு அந்த வீட்டின் பிரமாண்டமே மூச்சடைத்தது.


மெய்யம்மையோ, அவளின் நிலை புரிந்து நடந்து கொண்டார். அவளின் தயக்கத்தையும்,விலகலையும் உணர்ந்து.. அவளை வரவேற்பறைச் சோஃபாவில் அமரச் சொல்லி,குடிப்பதற்கு பழரசம் கொடுத்தார்.


பாவினியோ, தயங்கியபடியே மெய்யம்மை தந்த பழரசத்தை குடித்துக் கொண்டிருக்கும் போது, குறள்நெறியன் வெளியே செல்லத் தயாராகி தன் வழக்கமான வேகநடையுடன் படிகளில் தாவித் ..தாவி, இறங்கி வந்தான்.


பாவினி, அவனை பார்த்ததும் தன்னை அறியாமல் தயக்கத்துடன் எழுந்து நின்றாள்.


அவனோ , "ஹோய் உட்காரு நோ ஃபார்மாலிட்டிஸ்.." என்றவுடன் தான் , அவளுக்கு தான் எழுந்து நின்றதே உரைத்தது. மனதிற்குள், "இச்சே லூசு மாதிரியே நடந்து கொள்கிறோமே..' என்று நினைத்தாள்.


வெளியில் செல்ல தயாராகி வந்த பேரனிடம், " குறள் எங்கப்பா போறே .. அதுவும் இன்னைக்கு.." என்று சலித்துக் கொண்ட மெய்யமையிடம்..

" பாட்டி ஆஃபிஸ்சில் ஒரு அவசர வேலை..முடித்துட்டு சீக்கிரம் வந்துறேன்.."

"எப்பத் தான் உனக்கு வேலை இல்லை.. இன்னைக்காவது வீட்டில் இருக்கலாம் தானே.."

"பாட்டி பிளீஸ் புரிஞ்சுக்கோங்க.. வேலை இருக்குன்னு சொல்றேன்னே, முடிந்தவுடன் சீக்கிரம் வரேன்.."என்று கடிந்து கொண்டவனிடம்..


" நீ வரும் வரை இந்த பெண் தனியாக இருப்பாளே..அது தான் கேட்டேன் .."

" நீங்க தான் இருக்கீங்களே துணைக்கு.."

" என்ன தான் நான் இருந்தாலும் உன்னைப் போல் வருமா?"

" அவளுக்கு என்னை விட உங்க துணை தான் பிடிக்கும்‌.."என்று பேசியபடியே நடந்த பேரனை நிறுத்தி, கட்டாயப்படுத்திப் பழரசம் குடிக்க கொடுத்தார்..

அவனும் மறுக்காமல் வாங்கி குடித்து விட்டு காலி டம்ளரை நீட்டியவனிடம்.. " குறள் கொஞ்ச நேரம் இருந்தால், சாப்பாடு ரெடி ஆகிடும். சாப்பிட்டு விட்டே போயேன்.."

"பாட்டி எனக்கு இப்பவே லேட்டாச்சு..சாப்பிட வெல்லாம் நேரமில்லை.." என்றவன் ,பாவினியைப் பார்த்து ,எதுவும் சொல்லாமல், சிறு தலை அசைப்புடன் வேகமாக கிளம்பிச் சென்று விட்டான்.


மெய்யம்மையோ, ஒரு பெருமூச்சுடன் பாவினியிடம்.. "அவன் எப்போதும் இப்படித் தான் மா ..வேலையென்று வந்துவிட்டால், சோறு, தண்ணி பார்க்க மாட்டான்..நீ தவறாக நினைக்கதே.." என்றவரை புரியாமல் பார்த்தாள்.


' நான் எதற்கு தவறாக நினைக்கப் போறேன்.. அவன் போனதே எனக்கு நிம்மதி..' என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டிருந்தவளிடம்..

"பாவினி .." என்று அழைத்தவர், தயங்கிய படியே, " பாவினி தானே உன் பெயர் .." என்றார்.

பாவினியோ , உடனே 'ஆமாம்‌ 'என்று வேகமாகத் தலை ஆட்டினாள்.

அவரோ, "பாவினி கொஞ்சம் உட்காருமா.. நான் உன்னிடம் சில விஷயங்கள் பேச வேண்டும் .."என்று அவளை அமரச் சொல்லி ,தானும் அருகில் அமர்ந்து கொண்டார்.

பாவினியோ, நம்மிடம் இவர் என்ன பேசப் போகிறார் என்று நினைத்து , அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

மெய்யம்மையோ, எப்படி ஆரம்பிப்பதென்று சில நொடிகள் யோசனையில் இருந்தவர். " பாவினி‌ எனக்கு எப்படி ஆரம்பிப்பதுன்னு தெரியலை.. குறள் ஏன் இப்படிச் செய்தான்னு புரியலை.. ? அவன் செய்தது உன் மனதை எவ்வளவு காயப்படுத்தி இருக்கும்ன்னு புரியுது. உன் அப்பாவுக்காக நீ இந்த திருமணத்தை ஏற்றுக் கொண்டாய்ன்னு நல்லா தெரியுது.." என்றவர் அவளை கேள்வியாக பார்த்தார்.


அவளோ , பதிலே பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்..

மெய்யம்மையோ, அவளின் மெளனத்தை சம்மதமாக எடுத்துக் கொண்டு பேரனைப் பற்றி தொடர்ந்தார்..


"பாவினி குறள் மோசமானவன் இல்லைம்மா..பெண்கள் பக்கமே போகாதவன், உன்னிடம் இப்படி நடந்து கொண்டதைத் தான் என்னால் நம்பவே முடியவில்லை.. நிச்சயமாக நீ ஏதோ ஒரு வகையில் அவனை பாதித்திருக்கிறாய்.. அது தான் இப்படி பிடிவாதமாக உன்னை மணந்திருப்பான்னு நினைக்கிறேன்.."'என்றவரை, விழி விரிய ஆச்சரியமாக பார்த்தாள்.


அவரோ, அவளின் பார்வையை தாங்கியபடியே , " நிஜம் தான் மா.. அவனைப் பற்றி நன்கு தெரிந்து தான் சொல்றேன்.. சில விஷயங்கள் இப்பச் சொன்னால் உனக்கு புரியாது.. நீயே, போகப்.. போக, புரிந்து கொள்வாய்.. உன்னிடம் ஒரு வாக்கு கேட்கிறேன் ,எனக்கு தருவாயா?" என்றவரை புரியாமல் கேள்வியாகப் பார்த்தாள்.


அவரோ தொடர்ந்து, "பவி இனி இது தான் உன் வீடு .. என் பேரனுடன் தான், உன் வாழ்க்கை ! என்பது கடவுளின் விருப்பம் போல்.. நீ நல்ல பெண் என்பதில் எனக்கு எந்த ஐயமில்லை.. தூயவன் பெண் கண்டிப்பாக குணத்தில் சிறந்தவளாகத் தான் இருப்பாள்.." என்றவுடன் பாவினிக்கு மிகுந்த வியப்பாக இருந்தது. தன் தந்தையின் மேல் இவ்வளவு நம்பிக்கையா?என்று வியந்தாள்.


தன் தந்தையின் மீது மெய்யம்மை வைத்திருந்த மரியாதை ஒன்றே, அவளுக்கு மெய்யம்மையைப் பிடிப்பதற்கு போதுமானதாக இருந்தது.


மெய்யம்மையோ, யோசனையுடன் அமர்ந்திருந்தவளிடம், "பவி தாயுக்கு பின் தாரம் என்பார்கள்.. "என்றவர், பேச்சை நிறுத்தி, ஒரு பெருமூச்சுடன்.. " நீ அவனை வெறுத்து விடாதேம்மா.. அவன் இழந்தது அதிகம். அதையெல்லாம் இனி உன்னால் மட்டும் தான் திருப்பி தர‌ முடியுமென்று என் உள் மனம்‌ சொல்கிறது. அவன் கோபக்காரன் தான். ஆனால், கோபம் இருக்குமிடத்தில் தான் குணம் இருக்கும்‌ என்பார்கள்.. "
என்றவர் சில நொடி பேச்சை நிறுத்தினார்..


அவளோ, அவர் சொன்னதைக் கேட்டு குழப்பத்துடன் அமர்ந்திருந்தவளிடம்..


"பவி உனக்கு நான் சொல்வது இப்போது குழப்பமாகத் தான் இருக்கும்.. எதையும் போட்டுக் குழப்பிக்காதே ! போகப்.. போக, எல்லாம் சரியாகும் .. நீ வா.. கொஞ்ச நேரம் ஓய்வெடு ! முகம் வாடி இருக்கு, ஓய்ந்து போய் தெரிகிறாய்‌.." என்றவர், அவளை விருந்தினர் அறைக்கு அழைத்துச் சென்றார்..


பாவினிக்கும் நடந்த நிகழ்வுகளால் தலை பயங்கரமாக வலித்தது. கொஞ்ச நேரம் தூங்கினால், தேவலாம் போல் இருந்தது. தன் பிரச்சனை இப்போதைக்கு தீராதது.. என்று நினைத்தவள் அவருடன் சென்றாள்.


மெய்யம்மையோ ,அவளை விருந்தினர் அறைக்கு அழைத்துச் சென்று, "பவி நீ கொஞ்சம் நேரம் படுத்திரு..சாப்பாடு ரெடியானதும், கூப்பிடறேன்..என்று கூறிச் சென்றார்..


பாவினிக்கோ, சாப்பாடே வேண்டாம்.படுத்து தூங்கினால் போதுமென்றிருந்தது.. அந்த அறையைப் பார்த்ததும் அவளுக்கு தலை சுற்றியது. விருந்தினர் அறையே மிகவும் பெரிதாக அனைத்து வசதிகளுடனும் இருந்தது.


அங்கிருந்த பொருட்களைப் பார்த்தவுடனேயே, அதன் மதிப்பு தெரிந்தது.. பாவினிக்கோ, தன்னையும் அறியாமல் ஒரு சிறு தாழ்வுமனப்பான்மை எட்டிப் பார்த்தது.


இந்த வீட்டிற்கு நாம் பொருந்துவோமா? என்ற கேள்வி அவளை வாட்டியது.. மனதின் குழப்பங்கள் அவளின் கால்களை தளரச் செய்தது.


அவளால் நிற்கவே முடியவில்லை.. புத்தம் புது விரிப்புடன் பரந்து விரிந்து கிடந்த கட்டிலில் சென்று அமர்ந்தவளுக்கு , மனக்குழப்பத்தின் காரணமாக தலை வலி உச்சகட்டத்தைத் தொட்டது.


தலையை ஒருகையால் தடவியபடியே, கட்டிலில் கண்களை இறுக மூடி படுத்தாள்.. சில நிமிடங்களிலேயே அவளையும் அறியாமல் தூங்கி விட்டாள்..


எத்தனை நேரம் தூங்கினாளோ தெரியாது ? மெய்யம்மை வந்து அவளை எழுப்பிய போது தான், கண்களை திறக்க முடியாமல் திறந்தாள்.


மங்கையவளுக்கு விதி என்ன வைத்து கத்திருக்கோ ? அது காலத்தின் கையில்..



அன்பு கொல்லும்..

ஹாய் ஃப்ரெண்ட்ஸ் ,
சில பர்சனல் வேலையால் யூடி தர தாமதமாகிவிட்டது..இனி முடிந்தவரை தினமும் யூடி தர முயற்சிக்கிறேன்.. இரண்டு யூடி போட்டிருக்கேன்(17,18)படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்..

நன்றி

 
Last edited:

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
327
Reaction score
607
Points
93
அன்பே ! அன்பே! கொல்லாதே!

அத்தியாயம் 18

"பவி உன்னைப் பார்க்க உன் தம்பி வந்திருக்கான் மா .. அது தான் எழுப்பினேன்.." என்று மெய்யம்மை சொன்னவுடன், பாவினி ,விழுந்தடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்தாள்..

மெய்யம்மையோ, "மெதுவா..மெதுவா, எதற்கு இத்தனை அவசரம்.." என்று கேட்டவரிடம்..

"நவில் எங்கே பாட்டி ?" என்று கேட்டாள்.

"அதை ஏன்மா கேட்கிறே. .நாங்க என்ன‌ அழைத்தும் வீட்டிற்குள்ளே வராமல் தோட்டத்திலேயே அமர்ந்திருக்கான். நீ தூங்கிறேன்னு சொன்னேன்.. நீயா விழிக்கும் வரை எழுப்ப வேண்டாம்ன்னு சொல்லி , அங்கேயே உட்கார்ந்து இருக்கான்.. எனக்குத் தான் மனசு கேட்காமல் வந்து உன்னை எழுப்பினேன்.." என்றவரிடம், தலையை மட்டும் ஆட்டியவள்.. படுத்திருந்ததில் கலைந்த ஆடைகளை சரிசெய்து விட்டு, தம்பியைப் பார்க்க தோட்டத்திற்கு அவசரமாகச் சென்றாள்..


நவிலோ, தனது அலைபேசியை தோண்டிய படி தோட்டத்தில் இருந்த சிமெண்ட் நாற்காலியில் அமர்ந்திருந்தான்.


பாவினியோ, அவனைக் கண்டதும் மகிழ்ச்சி ததும்ப, அவன் அமர்ந்திருந்த இடத்திற்கு வேகமாக சென்று, "நவில்.." என்று ஆசையாக அழைத்தாள்.


தமக்கையின் குரலைக் கேட்டதும் , என்னமோ பல வருடங்கள் பிரிந்திருந்ததைப் போல் "பவிக்கா.." என்று அழைத்தபடியே எழுந்து நின்ற நவில், "எப்படி இருக்கேக்கா..?" என்று பாவினியின் முகத்தை உற்றுப் பார்த்தவாறு கேட்டான்..


பாவினியோ, மென் புன்னைகையுடன் , " நீ எப்படி இருக்கே? அம்மா ,அப்பா எல்லோரும் எப்படி இருக்காங்க.. ?அப்பா வரலையா ? "என்று அடுக்கடுக்காக கேள்வி கேட்டாள்.


"அக்கா பொறு..பொறு, இப்படி அடுக்கடுக்காக கேள்வி கேட்டா ? நான் எதற்கு பதில் சொல்வேன்.." என்று கேலி பேசியவன், "எல்லாரும் நல்லா இருக்கோம்.. அப்பா வரலைக்கா .."என்றவனிடம்.

"நவில் ஏன்டா வீட்டுக்குள் வராமல் இங்கேயே உடகாருந்துட்டாய்.." என்ற தமக்கையிடம்..

தலையை குனிந்த படியே, "பவிக்கா தப்பா நினைக்காதே, அப்பாவுக்கு பிடிக்காதவங்க வீட்டுக்குள் எனக்கும் வரப்பிடிக்கலை.."

" ஓ..!அப்போ, உங்க அக்கா மட்டும் இந்த வீட்டில் இருக்கலாமா?"

" பவிக்கா..அஃது.. எனக்கும் விருப்பம் இல்லை தான்.. ஆனால், அப்பா,அம்மாவின் முடிவு ! அது தான், நான் பொறுமையா இருக்கேன்.."

" ம்..! நான் இருக்கும் வீட்டிற்குள், கூட வரமாட்டாயா?"


"கண்டிப்பா ஒரு நாள் வருவேன்.. அப்பா என்னைக்கு சந்தோஷமா இங்கு வராறோ? அன்னைக்கு நானும் வருவேன்.."


" உன்னிஷ்டம்.." என்று முகம் வாடச் சொன்னவளிடம்..

"ஃப்ளீஸ்க்கா ,என்னைப் புரிஞ்சுக்கோ ! தவறாக நினைக்காதே.."

" ம்..!" என்று அரை மனதாக தலை ஆட்டிய தமக்கையிடம்..

" பவிக்கா, இந்த ஃபேக்கில் உனக்கு மாற்றுடையும்,உன் நகையையும் எடுத்து வந்தேன். அப்பா உன்னிடம் கொடுத்து வரச் சொன்னார்.. இந்தா உன் ஃபோன்.." என்று, தன் ஃபாக்கெட்டில் வைத்திருந்த போனை எடுத்து பாவினியிடம் கொடுக்கும் பொழுது..


"என் மனைவிக்குத் தேவையானதை, என்னால் வாங்கி கொடுக்க முடியும்ன்னு உங்கப்பா கிட்ட போய் சொல்லு நவில்.." என்ற குரலில் இருவரும் தூக்கி வாரிப் போட திரும்பினார்கள்.


அங்கே, கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிய படி குறள்நெறியன் நின்றிருந்தான். அவன் நின்றிருந்த தோரனையைப் பார்த்த இருவருக்குமே வயிற்றில் புளியைக் கரைத்தது.


குறள்நெறியனோ, "என்னைப் பிடிக்காதவர்கள்,என் வீட்டுக்குள் வரத் தயங்குபவர்கள் , கொடுக்கும் எதுவும் என் மனைவிக்கு தேவை இல்லை.. அவளுக்கு மாற்றுடை கூட வாங்கித் தர‌முடியாதளவு நான் வக்கத்துவனும் இல்லை.. கையாளாகதவனும் இல்லை.. "என்ற குறள் நெறியனை, பேச்சற்று பார்த்தனர் இருவரும்..


குறள்நெறியனோ , தொடர்ந்து, " உங்கப்பா கிட்டப் போய் சொல்லு ,உங்க அக்கா இப்போ பாவினி தூயவன் இல்லை..மிஸஸ் பாவினி குறள்நெறியன் என்று.. அவருக்கு நல்லா உரைக்கிற மாதிரி சொல்லு்.. இனி என் மனைவியைப் பார்த்துக்க எனக்கு தெரியும் .. "என்று வார்த்தைகளில் அமிலத்தை கக்கினான்.


நவிலோ, முகம் சிவக்க பதில் சொல்ல வாயை திறந்தவனை.. பாவினியோ, கண்களாலேயே வேண்டாம் என்று‌ ஜாடை செய்து தம்பியை அடக்கினாள்.


நவிலும், தமக்கையின் பேச்சைக் கேட்டு பல்லைக் கடித்துக் கொண்டு பொறுமையை கடைப் பிடித்தான்.


பாவினி, நவிலிடம்.. " நீ கிளம்பு.. அப்பா கிட்ட நான் நல்லா இருக்கேன்னு சொல்லு.."என்றவளிடம்..


"ம்.. ! இந்தா உன் ஃபோன்.." என்று அலைபேசியை நீட்டிய நவிலிடம்..


" நவில் நான் தான், உங்கள் வீட்டுப் பொருள் எதுவும் வேண்டாமென்று சொல்கிறேனே.. அப்புறம் எதற்கு இந்த ஃபோன்.. இதையும் எடுத்து போ..! நானே அவளுக்கு வேறு வாங்கி கொடுத்துக்கிறேன்.." என்றவனிடம் என்ன பேசுவதென்று தெரியாமல் நவில் அமைதி காத்தான்.


பாவினியோ, அவன் கைகளை பற்றி அழுத்தியவள்.. "நான் பாத்துக்குறேன், நீ கவலைப்படாமல் போ.." என்றாள்..


முகம் வாட கிளம்பிய நவிலை தடுத்து நிறுத்திய குறள் நெறியன்.. "நவில் இனிமேல் என் மனைவிக்கு எது வேண்டுமானாலும், நான் வாங்கிக் கொடுத்துக்குவேன்.. அதனால், நீ போகும் போது, இந்த ஃபேக்கையும் எடுத்துட்டு போ..இங்கே அது தேவைப்படாது.." என்று முகத்தில் அடித்தாப் போல் பேசினான்.


நவிலோ, முகம் வாடத் தமக்கையிடம் விடைபெற்றவன்..அவன் கொண்டு வந்த ஃபேக்கை எடுத்துக் கொண்டு, நகரப் போனவனின் கைகளை பிடித்து அழுத்திய பாவினி.. கண்களாலேயே அவனுக்கு சமாதானம் சொல்லி அனுப்பினாள்.


நவிலோ, மனம் முழுவதும் பாரத்துடன், குறள்நெறியன், எப்படி பட்டவன் ? அக்காவை நல்லா பார்த்துக்குவானா ?என்ற குழப்பத்துடனேயே சென்றான்.


நவில் தலை மறைந்ததும், வீட்டிற்குள் செல்ல திரும்பிய குறள்நெறியன் முன் வழியை மறைத்து நின்ற பாவினி..


" உங்க மனசுல என்ன தான் நினைச்சிட்டிருக்கீங்க.. நாங்க அமைதியா போறதால், உங்க இஷ்டத்திற்கு என்ன வேனாலும் பேசலாம்,செய்யலாம்னு நினைக்கிறீங்களா?என் அப்பாவை பற்றி சரியா தெரியாமல் நீங்க தப்பு செய்றீங்க.." என்றவளிடம்.


"உங்கப்பாவைப் பற்றி உன்னை விட எனக்குத் தெரியும்? இந்த மாதிரி என்னை நிற்க வைத்து கேள்வி கேட்பது இதுவே கடைசியாக இருக்கட்டும்..இப்படி எங்கிட்ட யாருமே நடந்து கொண்டதில்லை..இதுவே உனக்கு கடைசி..புரிந்து நடந்து கொள்! என் செயலுக்கு உன்கிட்ட காரணம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை .."


"ஓ..! அப்படியா..? என்னை கேள்வி கேட்க வைத்ததே நீங்க தான். உங்க செயலை நான் கேள்வி கேட்கலை..என் விசயத்தில் தலை இடாதீங்கன்னு தான் சொல்றேன். அதுவும் என் அப்பாவையோ,தம்பியையோ அவமானப்படுத்த உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை.. "என்று மூச்சு வாங்க கோபத்துடன் பேசியவளிடம்..


" என் மனைவி விஷயத்தில் நான் தலையிடாமல் யார் தலையிடுவாங்க.. உன் அப்பா..மகள் பாசம்மெல்லாம் இந்த வீட்டுக்குள் இனி கொண்டு வராதே.. அவர்களுக்கு வக்காலத்து வாங்கிட்டு எங்கிட்ட பேசினே! நான் பொல்லாதவனா ஆகிடுவேன்.."


" நான் ஒன்றும் நீங்க ஆட்டிவைக்கும் பொம்மையல்ல.. உயிரும் உணர்வும் உள்ள மனுஷி ! என்னால் நீங்க நினைப்பது போலெல்லாம் நடக்க முடியாது.. நீங்க என்ன செய்தாலும் எங்க அப்பா ,மகள் உறவை பிரிக்கவும் முடியாது.."


"ஓ..! அதையும் பார்க்கிறேன் .. இப்ப சொல்றேன் கேட்டுக்கோ ! நீ இனி மிஸஸ் குறள்நெறியன் மட்டும் தான் ! அதை எப்போதும் மறந்துவிடாதே.. அப்புறம் பின் விளைவுகள் விபரீதமா இருக்கும்.."


" நான் எப்போதும் பாவினி தூயவன் தான் .. உங்க மிரட்டல் எங்கிட்ட பலிக்காது.. எங்கப்பா சொன்ன ஒரே காரணத்திற்காகத் தான் இங்கே இருக்கேன் . அதுவும், நீங்க என் விருப்பமில்லாமல் கட்டுன இந்த தாலியைக் கூட சுமந்துட்டிருக்கேன்..இல்லைன்னா அங்கேயே கழற்றி வீசி இருப்பேன்.."


" வீசுவே டீ வீசுவே .. உனக்கு அவ்வளவு தைரியமா? கழற்றி இருந்தீனாத் தெரியும்‌ என்னைப் பற்றி.. எந்த கொம்பன் தடுத்திருந்தாலும் உன்னைத் தூக்கிட்டு வந்து குடும்பம் நடத்திருப்பேன் ஞாபகம் வச்சுக்கோ.." என்றான் , கண்கள் இடுங்க அளவில்லாத கோபத்துடன்..


"ஓ..! தூக்குவீங்க.. தூக்குவீங்க, சட்டம் தெரியாமல் பேசாதீங்க..நான் ஒரு கம்ளைண்ட் கொடுத்தா போதும், இன்னேரம் கம்பி எண்ணிட்டிருப்பீங்க.."

"அப்படியா..?கம்ளைண்ட் கொடுத்து தான் பாரேன்.."என்று நக்கலாக பேசியவனை வெட்டவா..? குத்தவா என்று பார்த்தாள்..


அப்போது, நவில் இருப்பான்‌ என்று நினைத்து மெய்யம்மை.. அவனுக்கு காஃபியையும்,பலகாரத்தையும் எடுத்து வந்தார்.


அவரைப் பார்த்ததும் குறள்நெறியன் பேச்சை நிறுத்திவிட்டான்..


மெய்யம்மையோ, நவிலை காணாமல் பாவினியிடம், " தம்பி எங்கேம்மா?" என்றார்.


" அவன் அப்பவே போய்ட்டான் பாட்டி .. "என்ற பாவினியிடம்..


" என்னம்மா முதல்..முதலாக வீட்டிற்கு வந்த பையன், வீட்டிற்குள்ளும் வராமல், எதுவும் சாப்பிடாமலும் போய்விட்டானே.. இனிமே யார் வந்தாலும், இப்படி தண்ணி கூட கொடுக்காமல் சும்மா அனுப்ப கூடாது..சரியா..?" என்றவர்.. தொடர்ந்து "பவி நீ வந்து சாப்பிடும்மா..சூடாக டிபன் எடுத்து வச்சுருக்கேன்.. நீ அசந்து தூங்கியாதால் மதியம் சாப்பிடக் கூட எழுப்பலை.. குறளும் ,இன்னும் எதுவும் சாப்பிடலை. இரண்டு பேரும் வாங்க ..நான் போய் டிபன் எடுத்து வைக்கிறேன்.." என்று பொதுவாக சொல்லிவிட்டு போனார்..


மெய்யம்மை போனதும் பாவினியிடம், "நம் சண்டையை அப்புறம் வச்சுக்கலாம் வா போலாம்.." என்ற குறள்நெறியனிடம்..

"நீங்க போங்க நான் வரலை.."

"ஏன்..?"

"எனக்கு பசிக்கலை..இப்போ சாப்பிடற மூடும் இல்லை.."

"எனக்கு பசிக்குது வா.."

"உங்களுக்கு பசித்தால்.. நீங்க போய் சாப்பிடுங்கோ.."

"அஃது எனக்குத் தெரியும்.. நீ சொல்லத் தேவையில்லை..நீயும் காலையிலிருந்து எதுவும் சாப்பிடலை.. பிகு பண்ணாமல் வா.."


"எனக்கு வேண்டாம்ன்னு சொல்றேன்னே விடுங்க .. நீங்க போய் சாப்பிடுங்க.."


"பாவினி என் பொறுமையை ரொம்ப சோதிக்கிறே! இப்போ நீ வரலைன்னா? நான் தூக்கிட்டு போக வேண்டியிருக்கும்.. எப்படி வசதி.." என்றவன், அவள் புறம் ஓர் எட்டு எடுத்து வைக்கவும்..


அவன் செய்தாலும் ,செய்வான்.. என்ற அச்சத்தில் ஓர் எட்டு பின்னாடி நகர்ந்தவள்.. "அச்சோ வேண்டாம் நா..நானே வரேன்.." என்றவளிடம்..


"குட் கேர்ள்..இப்படிச் சொன்ன பேச்சு கேட்டு நடந்தால் ஒரு பிரச்சனையும் இல்லை .. வா போகலாம்.." என்று கூறியவன், அவளையும் அழைத்துக் கொண்டு தான் வீட்டிற்குள் சென்றான்..


மெய்யம்மையோ, இருவரையும் அமர வைத்து உணவைப் பரிமாறினார்..

பாவினியோ, சாப்பிட்டேன் என்று பேர் செய்தாள்.. குறள்நெறியனோ, அவள் உணவை கொறிப்பதை கண்டும், அவள் விருப்பப்படியே விட்டு விட்டான்..

உண்டு முடித்ததும் குறள்நெறியன் அவன் அறைக்குச் சென்று விட்டான்.. பாவினியோ இரவு வரை நேரத்தை நெட்டித் தள்ளினாள்..


மெய்யம்மையோ,பாவினி காலையிலிருந்து உடை மாற்றாமல் இருப்பதைக் கண்டு, "பாவினி உன் தம்பி உனக்கு மாற்றுடை கொண்டு வரலையா? நான் வேண்டுமானால் டிரைவரை உங்க வீட்டுக்கு அனுப்பி உடை வாங்கி வரச் சொல்லட்டுமா?" என்று பேரன் அடித்த கூத்து தெரியாமல் கேட்டவரிடம்..


"இப்ப வேண்டாம் பாட்டி ..நான் தம்பியிடம் சொல்லியிருக்கேன் .. நாளை வந்துரும்" என்று பொய்யுரைத்தாள்.. மனதிற்குள் "
'கொண்டு வந்ததை வேண்டாம்ன்னு சொன்னவானே, ஏதோ செய்யட்டும்..இல்லைன்னா இப்படியே இருப்போம்..வாழ்க்கையே கேள்வி குறி ஆகிவிட்டது. இதில் உடை ஒரு
பிரச்சினையா? 'என்று விரக்தியாக நினைத்தாள்.


இரவு நெருங்க..நெருங்க ,பாவினிக்கு மனதிற்குள் இனம் புரியாத பயம் குடிகொண்டது.


மெய்யம்மையிடம், மணமக்கள் இருவருமே, தாமதமாக உணவு உண்டதால் இரவு உணவை மறுத்து விட்டனர்..


மெய்யமையோ, பாவினியை வற்புறுத்தி, பாலைக் கொடுத்து, குறள்நெறியன் அறைக்கு அனுப்பி வைத்தார்..


பாவினியோ, மறுக்கவும் முடியாமல்,ஏற்கவும் முடியாமல், எவ்வளவு முடியுமோ அவ்வளவு மெதுவாக மாடிப்படிகளை ஏறினாள்.


என்ன மெதுவாக சென்றாலும், அவனின் அறை வந்துவிட்டது. மூடியிருந்த கதவை படபடக்கும் இதயத்துடன் மெதுவாக தட்டினாள்.


உள்ளோயிருந்து "வெல்கம்.." என்ற அவனின் கம்பீரமான குறள் அவளை வரவேற்றது.. அவளின் கொலுசு சத்தத்திலேயே பாவினி தான் வருகிறாள் என்று ஊகித்திருந்தான்.


பாவினியோ, மெல்ல கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றாள். அறையின் பிரமாண்டம் அவளை பிரமிக்க வைத்தது.
அந்த அறையோ ! விருந்தினர் அறையை விட இருமடங்கு பெரிதாக இருந்தது.


கதவருகே, தயங்கி நின்ற பாவினியை கண்ட குறள்நெறியன்.. "வெல்கம் மிஸஸ் பாவினி குறள்நெறியன்.." என்றான் வேண்டுமென்றே அழுத்தத்துடன்..


பெண்ணவள் நாயகனின் விளையாட்டு பொம்மையாவாளோ? இல்லை நாயகனை ஆட்டுவிப்பாளோ?அது காலத்தின் கையில்..

அன்பு கொல்லும்..
 
Status
Not open for further replies.
Top Bottom