Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed ஆபத்து ஆரம்பம்

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் ஒன்று



சொக்கு கடைசியாக மிச்சமிருந்த ஒரு பீடியை பற்ற வைத்து விட்டு தன் பழைய செல்போனில் மணியை பார்த்தான்.அவனைப் போலவே நைந்து போயிருந்தபட்டனுடனிருந்த செல்போனின் டிஸ்ப்ளே மணி பத்து என்றது.வாழ்க்கை அடித்து துவைத்ததில் சொக்கு எண்ணற்ற வேடங்களை போட்டு விட்டான்.காலம் இப்போது பிம்பென்னும் வேடத்தை தந்திருந்தது.ஆங்காங்கே லைட்டுகள் அணைய துவங்கியிருந்த நகரின் இரவின் இருளில் சொக்கு மெடிக்கல் ஷாப்பின் வாசலில் உட்கார்ந்திருந்தான்.எட்டி பார்த்த மெடிக்கல்காரன் “என்ன சொக்கு?டாஸ்மாக் கடை சாத்தியிருப்பாங்க! இன்னும் போகாம நிக்கறியே? ஆச்சரியமாயிருக்கு!“என்றான்.



“ஒரு பார்ட்டி வர்ரேன்னு சொல்லியிருக்கு! வந்தவுடன் கிளம்ப வேண்டியதுதான்! ப்ளாக்குலதான் எந்நேரமும் சரக்கு பார்லவிக்கறாங்களே? “



“அது சரி!கிராக்கி எதையும் காணோம்? தனியா நிக்கறியே? “



“அதோ! அந்த கரண்டு கம்பத்துகிட்ட நிக்குது பாரு! பழைய டிக்கெட்டுதான்! “



மெடிக்கல்காரன் எட்டி பார்த்த போது கம்பத்துக்கு பக்கத்தில் இருட்டில் ஒருவள் மறைந்து நின்றிருப்பது காற்றில் சேலை பறப்பதில் நிழலாக தெரிந்தது.



“வெளிச்சத்துல நிக்க வைக்கலாமில்லை? “என்றான் மெடிக்கல் ஏக்கமாக!



“எதுக்கு? வேற எவனாவது கூட்டிட்டு போகவா? தொழில்ல வாக்கு முக்கியம்பா! சைட்டடிக்கலாம்னு பாக்குறியா? “



“இதையவா ?அது சரி! ஆமா பேரு என்ன? “



“ஊருக்கு ஒரு பேருவைக்குதுக! இங்க பேரு ரூபா! “



“எத்தனை ரூபா? “



“காமெடியா? ஆளை செஞ்சா காசு செலவாகும்னு நிழலை செய்யர கஞ்சனாச்சே நீ! “



“ஓட்டாதப்பா! சும்மா கேட்டேன்! “



ஷோ கேஸின் கண்ணாடியை உற்று பார்த்த சொக்கு



“ஆமா! இதென்ன காண்டத்துல வாழைப்பழம், ஸ்ட்ராபெர்ரின்னு பழத்து படமா போட்ருக்கு? “



“அந்த ஸ்மெல் அடிக்குமாம்! “



“இதென்ன திங்கிற பொருளாய்யா!பத்து நிமிசத்துல கழட்டி வீசறதுக்கு எதுக்கு இத்தனை பில்டப்! “



“இதை பாரு! டோட்டேடு,ரிப்புடு, பட்டன்னுகாண்டம் டிசைன் டிசைனா வந்துருக்கு! “ஷோ கேஸின் கதவை திறந்து அந்த அட்டைகளில் ஒன்றை எடுத்தான் மெடிக்கல்..



அட்டையை வாங்கி கையில் பார்த்த சொக்கு “இதாய்யா செய்யும்! நாமதான்யா செய்யனும்! “என்ற போதுதான் அந்த பைக் தன் ஹேட் லைட்டை அணைத்தபடி வந்து நின்றது.அதை ஓட்டி வந்தவனஇறுக்கமான பேண்டும் ஜெர்கினும் போட்டு் ஹேல்மட் அணிந்து தன் முகத்தை மறைத்திருந்தான்.கைகளில் வினோதமாக கிளவுஸ் அணிந்திருந்தான்.அவன் முன்பேசொக்குவிடம் போனில் தன் பைக் நெம்பரை அடையாளத்திற்காக சொல்லியிருந்தான்.சொக்கு “இரு பார்ட்டி வந்துருச்சு! அனுப்பிட்டு வந்துர்ரேன்! “என்று ஹேல்மெட்காரனை நெருங்கினான்.

“நீதான் போன் பண்ணுனியா துரை? “என்றான் சொக்கு.தலையை ஆட்டியவன் இரண்டு ரோஸ் நிற தாள்களை நீட்டினான்.சொக்கு ஒரு மெல்லிய விசிலை அடித்தான்.அருகில் வந்த ரூபாவை “இந்தா! சார் கூட போயிட்டு காலைல வா! காசை வாங்கிக்கலாம்! “என்றான்.



“ஏமாத்தீராதைய்யா! “



“என்ன பத்தி தெரியும்ல உனக்கு? யாரை ஏமாத்தியிருக்கேன் நானு! ஏறு பைக்ல! “



அவள் ஏறியவுடன் “பலூன் ஏதுனா வேணுமா துரை? “



கையை அசைத்து மறுத்தவன் ரூபாவுடன் கிளம்பினான்.



“என்ன பேச மாட்டேங்கிறான்.பல்லு வலியா இருக்குமோ? “என்றபடி வந்த சொக்குவை மெடிக்கல்காரனின் “இந்த ஷட்டரை புடியேன்? கடைய சாத்துவோம் “என்ற குரல் கலைத்தது.

கடையை பூட்டியவன் “சரி நான் கிளம்பரேன்! “என்றான்.



“ஒயின் ஷாப்புல என்னை இறக்கி விட்டுட்டு போவேன்! “என்றான் சொக்கு.



“டிராப் பண்றவனுக்கெல்லாம் சரக்கு கிடையாதா? “



“அழுவரேன் வா! பொண்டாட்டி ஊருல இல்லதானே? “



“ஆமா! எப்படி கண்டு பிடித்தாய்? “



“அப்பத்தானே உங்களுக்கு வீரம் வரும்! “சொக்கு மெடிக்கல் ஷாப்காரனுடன் பைக்கில் கிளம்பினான்.



அதே நேரம் சாலையின் வளைவில் விரைந்து கொண்டிருந்தது பைக்.”யோவ்! மெதுவா டர்ணிங்ல ஓட்டுய்யா! விழுந்து வாரிருவோமான்னு பயமா இருக்கு! “என்றாள் ரூபா. ஒதுக்குப்புறமான காட்டுப்பகுதியில் தேர்ந்தெடுத்த இடத்தில் பைக்காரன் தன் பைக்கை நிறுத்தி சைடு ஸ்டேண்டை போட்டான்.!



“யோவ்! என்னய்யா இங்க நிறுத்திருக்க! லாட்ஜ், வீடுன்னு எதுவும் கிடைக்கலையா? பாம்பு கீம்பு எதுனா புடுங்கீர போகுதுய்யா? “என்று ரூபா சத்தம் போட்டு கொண்டிருந்தாள்.

அவன் மவுனமாக நின்று கொண்டிருந்து விட்டு ஹேல்மெட்டை கழட்டி பெட்ரோல் டாங்கின் மீது வைத்தான்.ஒரு சிகரெட்டை பாக்கெட்டிலிருந்து எடுத்தவன் அதை மூக்குக்கு கீழே வைத்து மூச்சை நன்றாக இழுத்தான்.

“நான் பேசிட்டே இருக்கேன்! பதிலே பேச மாட்டேங்குறியே? “என்று ரூபா அவனை தோள் தட்டி திருப்பினாள்.அதே நேரம் அவன் தன்னுடைய ஜெர்கினிலிருந்து அந்த ஸ்டில்லடோவை எடுத்தான்.ஸ்டில்லடோ கூர்மைக்கு பேர் போன ஜெர்மன் மேக் கத்தி.அது அவன் கையில் இப்போது மின்னியது.நிலவின் மெல்லிய வெளிச்சத்தில் அவனது முகத்தை பார்த்தவள் “நீயா? “என்ற போது ஸ்டில்லடோ ஒரு அரைவட்டமடித்து அவள் கழுத்தில் இறங்கியது.அருகிலிருந்த மரத்தில் சிதறிய ரத்தம் வித விதமாக கோலம் போட ஆரம்பித்தது.
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் இரண்டு !



டாக்டர் மருத நாயகம் இறந்து கிடந்த ரூபாவின் சடலத்தை பார்த்தார்.தன் கோட் பாக்கெட்டிலிருந்த விஸ்கி பாட்டிலை வாயில் கவிழ்த்தவர் ராவாக குடிக்க ஆரம்பித்தார்.அருகே தொப்பியை கழட்டியபடி இன்ஸ்பெக்டர் அருணும் கான்ஸ்டபிள் முத்துசாமியும் நின்றிருந்தனர்.காலி பாட்டிலை சடலம் கிடந்த டேபிளின் ஓரத்தில் வைத்தவர் “இந்த கேஸ் உனக்கு தலைவலிதான்யா! “என்றார்.



“என்ன டாக்டர் சொல்ரீங்க? “என்றான் அருண்.



“இது ரெண்டாவது கொலை.கில்லர் ஒரு பயங்கர சைக்கோவா இருப்பான்னு நினைக்கிறேன்.பாரு முதல்ல கத்திரக்கூடாதுன்னு கழுத்தை கத்தியால அறுத்திருக்கான்.ஓடிர கூடாதுன்னு கணுக்கால் நரம்பை அறுத்திருக்கான்.மார் காம்பை அறுத்து ரணகளம் பண்ணியிருக்கான்.முதுகில் பாவத்தின் சம்பளம் மரணம்னு எழுதி 2 ன்னு எழுதியிருக்கான்.1ன்னு எழுதுன அன்புக்கரசியையும் இப்படித்தான் கொன்றுக்கான்.!”



“உங்க கணிப்பை சொல்லுங்க டாக்டர்! “



“நான் கொஞ்சம் உளவியல் படிச்சிருக்கேன்.அதை வைச்சு சொல்ரேன்.விலைமகள்களால் இவன் பயங்கரமாக பாதிக்கப்பட்டிருக்கனும்.யாரையுமே ரேப் பண்ணலை.சோ ஆண்மையற்றவனாகவோ செக்ஸை அசிங்கம்னு நினைக்கிறவனாகவோ இருக்கனும்.பொண்ணுகதான் இன்னொரு பொண்ணு அழகா இருந்தா தாங்கிக்க மாட்டாங்க.ஆனா இவன் அழகை சிதைப்பதையே நோக்கமா வைச்சிப்பதுதான் உதைக்குது! “



“பத்த வைக்காத அந்த வில்ஸ் சிகரெட்டுக்கு என்ன மீனிங்? “



“அது வெறியூட்டியாக இருக்கலாம்.கோயிலில் உடுக்கையடிக்கும் சத்தம் கேட்டதும் சிலருக்கு சாமி வருதே அந்த மாதிரி சிகரெட் வாசம் அவனுடைய மோசமான கடந்த காலத்தை நினைவுபடுத்தும் ஒரு பொருளாக இருந்திருக்கலாம்.சில பொண்ணுகளுக்கு சிகரெட் வாசனை பிடிப்பதுண்டு! தெரியுமா?கொலை வெறிய வர வைக்க அதை யூஸ் பண்ணியிருக்கலாம்.ஆனா ஸ்மோக் பண்ற பழக்கம் அவனுக்கு இருக்க வழியில்லை.இந்த வாசம் வெறியை கிளப்பும் என்பதால் அவனுக்கு ஸ்மோக்கிங் பழக்கம் இருக்காது.இதுவும் ஒரு க்ளூதான் “



“ஆமா டாக்டர் ! நல்ல க்ளூதான்.இந்த சிட்டியில் நான் அவனை எங்கேயென்று தேடுவது? “



“கவலைப்படாதே! தொடர்ந்து கொலை பண்ணுவான்! எதாவது துப்பை கண்டிப்பா விட்டுட்டு போவான்.சரி எனக்கு தூக்கம் வருது.நான் தூங்க போறேன்! “



“வீட்டுக்கா டாக்டர்? “



“வீடு இருக்கு! நான் போவதில்லை.நேத்து மூணு கேஸ்.தண்ணிய போட்டு வண்டிய ஓட்டி ஸ்பாட்லயே அவுட்.இப்பத்தான் போஸ்ட்மார்டம் பண்ணி முடிச்சேன்.மனுசனுகளை பார்த்தாவே பேசற பிணம் போல் தோணுது.அருண் ஸ்ட்ரெச்சர்ல இருக்கிற இந்த பாடிய கொஞ்சம் புடி.கீழே வைப்போம்.!”



அருண் கால்மாட்டை பிடித்து கொள்ள டாக்டர் தலைமாட்டை பிடித்து தரையில் பிணத்தை வைத்தார்கள்.

“அப்பாடா! பெட்டு கிடைச்சிருச்சு! “என்ற மருத நாயகம் ஸ்ட்ரெச்சரில் காலை நீட்டி படுத்தார்.



“என்ன பாக்கர! இங்கதான் தூக்கம் நல்லா வருது.!போகும் போது லைட்டை ஆப் பண்ணிட்டு போ! இங்க நான் மட்டும்தான் குறட்டை விடுவேன்.”

டாக்டர் தூங்கதொடங்க அருணும், முத்துசாமியும் மார்ச்சுவரியின் லைட்டை அணைத்து விட்டு வெளியேறினர்.



வெளியே சொக்குவும், மெடிக்கல் ஷாப்காரனும் நின்றிருந்தனர்.பீடியை தூக்கி எரிந்து விட்டு திடீர் பவ்யம் காட்டினான் சொக்கு.



“என்ன சொக்கு? அந்த பைக் நெம்பர் சொன்னியே? அது பொய்யின்னு விசாரணைல தெரியுது.!வேற எதாவது வித்தியாசமா அவங்கிட்ட இருந்துச்சா? “என்றான் அருண்.



“அப்படி எதுவும் தோணலைங்களே! “என்று தலையை தடவியவன் “ஆனா ஒரு டவுட் இருக்குங்க! “என்றான்.



“என்ன சொல்லு? “என்றான் அருண்.



“எங்கிட்ட போன்ல கிராக்கி வேணும்னு கேட்டவன் வேற ஆளாவும், வந்தவன் வேற ஆளாவும் இருக்கணும்னு தோணுது! “



“திடிர்னு இப்படி ஒரு சந்தேகம் ஏன் வந்துச்சு? “



“பைக்ல வந்தவன் ஒரு வார்த்தை கூட பேசலீங்க! சைகையிலேயே எல்லாத்துக்கும் பதில் சொல்லிட்டு ரூபாவை கூட்டிட்டு போயிட்டான். நான்கூட பல்லு வலியோன்னு நினைச்சேன்.இப்ப வேற மாதிரி தோணுது! “



“என்ன தோணுது? “



“வந்தவன் ஊமையா இருப்பானோன்னு தோணுது.!”
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் மூன்று !



“என்ன சொல்ற சொக்கு? போனில் பேசியவன் நேர்ல பேசலையா?“என்றான் அருண்.



“ஆமாங்க! வேணும்னா மெடிக்கல்ஷாப்புக்காரரிடமே கேட்டு பாருங்க! “என்றான் சொக்கு.



“ஆமாங்க! அவன் எதுவும் பேசலை.ஹேல்மெட்டையும் கழட்டலை! “என்றான் மெடிக்கல்.



“சொக்கு! எத்தனை வருசமா இந்த தொழில்ல இருக்கே? “என்றார் முத்துசாமி.



“அது நாலைஞ்சு வருசமா இருக்கனுங்க! மானங் கெட்ட பொழப்பு.என் உடல் கண்டீசனுக்கு பிச்சைதான் எடுக்கனும்.வேற வழியில்லாம இதை செய்யரேன்.”



“என்ன மாதிரி கஸ்டமரெல்லாம் வருவாங்க? “



“அதை பொண்ணுககிட்டத்தான் கேக்கனும்.இருந்தாலும் அவங்ககிட்ட பேசுனவரைக்கும் தெரிஞ்சதையெல்லாம் சொல்ரேன்! “



“ம்! சரி சொல்லு! “



“வர்ரவனுகள்ள சின்ன பசங்க, எக்ஸ்பீரியன்ஸ் வேணும்னு வர்ரவனுக வழக்கமா செய்யறதை செய்வானுக.இந்த கல்யாணம் ஆனவனுக பலான படத்தை பாத்துட்டு அதையெல்லாம் பொண்டாட்டிகிட்ட செய்ய முடியாத வக்கிரத்தை இங்க வந்து தணிச்சுக்குவாங்க.இதுதான் வீட்டுலயே இருக்கேன்னு சொல்ரவனுக பெரும்பாலும் செய்வது ஓரல் செக்ஸூம், ஆனல் செக்ஸிம்தான்.பாவம் அந்த பொண்ணுங்க! “



“அவன் எந்த நெம்பர்ல கூப்பிட்டான்னு சொல்ல முடியுமா?”



“காலைலயே அய்யாகிட்ட நெம்பர் கொடுத்துட்டனே? “



முத்துசாமி “விசாரிச்சாச்சுங்க! அந்த நெம்பர் ஸ்விட்ச் ஆப்ல இருக்கு.Emi நெம்பரை வைச்சு பாத்தா அது சாம்சங் போனுங்க.கடைசியா டவர் மார்கெட்டுகிட்ட காட்டுது.”



“அப்ப ஆளு அங்கதான் இருக்கனும்! “



“அப்படி சொல்ல முடியாதுங்க! 5000க்கு மேல செல் இணைப்பு பூர்த்தியாயிட்டா அடுத்த டவருக்கு மாறிரும்.கூகுள் மேப்புல நீங்களே உங்க செல்லை டெஸ்ட் பண்ணி பாக்கலாம்.!டவர் மாறிட்டே இருக்கும்.!”



“இப்போதைக்கு ஒரே துப்பு அந்த செல் நம்பர்தான்.!அது மறுபடியும் ஆன் ஆனால் கம்பெனியை சொல்ல சொல்லுங்க! “



“சொல்லியாச்சுங்க! “என்றார் முத்துசாமி.



“பாடிய யார்கிட்ட ஒப்படைக்கிறது? “என்றார் முத்துசாமி.



“சொக்கு! இந்த பொண்ணைபத்தி எதாவது தெரியுமா? “



“தெரியாதுங்க! இந்த தொழில் பண்ற பொண்ணை உறவுன்னு யார் சொல்லுவா? நானே பாடிய வாங்கிக்குறேன்.எத்தனையோ பாவம் பண்ணிட்டேன்.நான் செய்த ஒரே புண்ணியமா இது இருக்கட்டுமே? “என்றான் சொக்கு.



“பணம் இருக்கா சொக்கு? “என்றான் அருண்.



“மத்த கிராக்கிகளிடம் வசூல் பண்ணிக்கலாம்.நாளைக்கு நான் போனாலும் இப்படித்தானே செய்யனும்.எல்லாருமே அனாதை மாதிரிதானே? “



“சரி சொக்கு நீ கிளம்பு.போன் பண்ணும்போது வரணும்! “என்றான் அருண்.



“சரி சார்! “என்றான் சொக்கு.



“ஏங்க நானு? “என்ற மெடிக்கல் ஷாப்காரனை போ என்று கையசைத்தான் அருண்.அவர்கள் போவதை பார்த்து கொண்டிருந்ததை பார்த்து கொண்டிருந்த அருண் திரும்பி “எண்ணன்னே! என்னை போய் வாங்க போங்கன்னு கூப்பிடறீங்க? அன் ஈஸியா இருக்குண்ணே! நீங்க தூக்கி வளர்த்த பையன் நான்! “என்றான் முத்துசாமியை பார்த்து.



“பதவிக்குன்னு ஒரு மரியாதை இருக்குதில்லை தம்பி.அதை நான் கொடுத்துதானே தீரணும்? “என்றார் முத்துசாமி.



“எங்கப்பா சப் இன்ஸ்பெக்டரா வேலை செய்து ரிட்டையர் ஆயிட்டாரு.அவரு கூட வேல பாத்தவரு நீங்க.அதே ஸ்டேசனுக்கு நான் இன்ஸ்பெக்டரா வந்து எங்கூட வேலை பாக்குறீங்க.ரொம்ப சந்தோஷமா இருக்குண்ணே! “



“எனக்கும் சந்தோஷம்தான்.ஆனா உங்களுக்கு முதல் கேஸா இப்படி ஒரு கேஸ் வரும்னு எதிர்பார்க்கலை தம்பி.!”



“பாத்துக்குவோம்னே! சுப்பீரியர் யாராவது வந்தா மட்டும் சார்னு கூப்பிடுங்க! போதும்! “



“சரி தம்பி! “



இருவரும் ஜீப்பில் ஏறி கிளம்பினர்.ஸ்டேசனில் ஒரு விபரீதம் காத்திருந்தது.
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் நான்கு!



ஸ்டேசனில் ஜீப்பை நிறுத்தி விட்டு இருவரும் உள்ளே வந்தனர்.எதிர்பட்ட கான்ஸ்டபிள்களின் சல்யூட்டை ஏற்றபடி வந்த அருணிடம் “தம்பி! நான் போய் அந்த நெம்பரைப்பத்தி விசாரிச்சுட்டு வந்துடரேனே? அது யார் பேர்ல இருக்கு! செல்போனை எங்க வாங்கினாங்கன்னு என்கொயரி பண்ணிட்டு வந்துடுறேனே? “



“போலாம்ணா! ஒரு டீ சாப்பிட்டுவிட்டு போகலாம்! “



“சரி தம்பி! “என்ற முத்துசாமி

வாசலில் இருந்த டீக்கடையை நோக்கி இரண்டு விரலை காட்டினார்.



வந்த டீயை குடித்து கொண்டிருந்த போது அருண் “அந்த டாக்டர் வித்தியாசமான கேரக்டரா இருக்காரே? பிணத்தோட தூங்குறார்! நினைச்சாவே பயமா இருக்கு! “என்றான் தலையை உலுக்கியபடி.



“அவரு எப்பவுமே மார்ச்சுவரிலதான் கிடப்பாரு.வாடகைக்கு ஒரு வீட்டுல குடி இருக்காரு.ஆனா அங்க போக மாட்டாரு! “



“ஏன்? “



“அவரு பொண்ணு யாரையோ லவ் பண்ணி கூட்டிட்டு ஓடிருச்சு.கூட்டிட்டு போனவன் ரெட் லைட் ஏரியாவுல வித்துட்டு போயிட்டான்.எப்படியோ கஷ்டப்பட்டு கண்டு பிடிச்சு கூட்டிட்டு வந்துட்டாரு.ஆனா ஊருக்குள்ள விசயம் பரவிருச்சு.கல்யாணம் பண்ணிக்க யாரும் வரலைன்னு அம்மாவும் பொண்ணும் தூக்கு போட்டுட்டு செத்துட்டாங்க.அன்னைலருந்து ஆளு ஒரு மாதிரி ஆயிட்டாரு.அதிலிருந்து வெறுத்து போய் வீட்டுக்கு போறதையே நிறுத்திட்டாரு! “



“அவருக்கு பின்னாடி இப்படி ஒரு சோகம் இருக்கும்னு தெரியாது! “



“ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பீலிங்! சரி தம்பி! நான் போய் சிம்மையும், போனையும் விசாரிச்சுட்டு வந்துடரேன்.!”



“எல்லாமே டம்மி அட்ரஸ் கொடுத்துதான் வாங்கியிருப்பான்னு நினைக்கிறேன்.எதுக்கும் விசாரிச்சு பாருங்க.எதாவது கிடைக்குதான்னு பார்ப்போம்! “



முத்துசாமி தன்னுடைய பைக்கை எடுத்து கொண்டு கிளம்பினார்.அருண் யோசித்தபடி உட்கார்ந்திருந்தான்.இந்த சவாலான கேஸை எப்படி டீல் செய்வது என்ற வியப்பு அவனை அயற்ச்சிக்குள்ளாக்கியது.கை ரேகை கூட இல்லாத நிலையில் எப்படி அவனை பிடிப்பது என்று குழப்பமாக இருந்தது.பரந்து விரிந்த மக்கள் வெள்ளத்தில் ஒரு துளியாய் அவன்.எப்படி? எப்படி பிடிப்பது அவனை?

அருணின் கை பேசி ஒலித்தது.அப்பா! அம்மாவை இழந்த அருணை தூக்கி வளர்த்த அன்புள்ள அப்பா! முன்னாள் சப் இன்ஸ்பெக்டர் தாமோதரனின் போன் அது.!



“கோயிலுக்கு போயிட்டு எப்பப்பா வந்தீங்க? “



“இப்பத்தான்! “என்று குழறலாக குரல் ஒலித்தது.



“என்னாச்சுப்பா? “என்றான் அருண்.



“வழக்கம் போலதான்.வெளியூர் போனா வர்ர வாய்புண் வந்துருக்கு! பேசறதே சிரமமா இருக்குப்பா! “



“குழந்தை வேலு வரலை! “குழந்தை வேலு வீட்டு வேலைக்காரன்.



“இல்லைப்பா! காலையில்தான் வருவான்! “



“சரிப்பா! கடையில் டிபன் எதாவது வாங்கிட்டு வரவா? “



“இல்லைப்பா! சமைச்சிட்டு இருக்கேன்.மதியம் சாப்பாட்டுக்கு வர்ரியாப்பா? “



“ஒரு விசாரணையில் பிஸிப்பா.!நைட்டு வந்துருவேன்னுநினைக்கிறேன்.!”



“நேரத்துக்கு சாப்பிடுப்பா! நைட்டு வரும் போது போன் பண்ணு! “



தாமோதரன் போனை வைத்து விட்டார்.அம்மாவின் தற்கொலைக்கு பின் பெண் வாடையே இல்லாமல் அருணை வளர்த்தவர்.பதினைந்து நாளுக்கு ஒருமுறை கோயில் கோயிலாக ஆன்மீக சுற்று பயணம் செல்பவர்.நேற்று கூட எதோவொரு கோயிலுக்கு போவதாக சொல்லி விட்டு போனவர்.



அப்பாவை நினைத்து அருண் நெகிழ்ந்து கொண்டிருந்த போது லேண்ட்லைன் போன் ஒலித்தது.



“ஹலோ! போலீஸ் ஸ்டேசன்? “என்றது பதட்டமாக ஒரு பெண் குரல்.



“போலீஸ் ஸ்டேசன்தாங்க! சொல்லுங்க! “



“”இன்னும் பத்து நிமிசத்துல என்னை கொல்ல போறாங்க! வந்து காப்பாத்துங்க! “என்றது பெண் குரல்.



அருணின் உடலில் அட்ரீனல் வேகமாக சுரக்க ஆரம்பித்தது.
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 5.



“ஹலோ! யாருங்க நீங்க? எங்கிருந்து பேசறீங்க? “என்றான் அருண்.அவன் உடலும், மனமும் ஒரு அட்வென்சருக்கு தயாராகின.!



“நான் டாக்டர் மாயாதேவி! ராஜ சேகர் ஹாஸ்பிட்டல்லருந்து பேசறேன்.உடனே வந்து காப்பாத்துங்க! இங்க ஒருத்தன் கத்தியோட மிரட்டறான்.!”



“இப்ப சேப்டியாத்தானே இருக்கீங்க? “



“கதவை தாழ் போட்டு இருக்கேன்.அவன் வெளியே நிற்கிறான்! “



“ஒகே! அப்படியே இருங்க! பத்து நிமிசத்துல வந்துடுரேன்.!”



வெளியே கிளம்பிய அருண் கூடவே ஒரு கான்ஸ்டபிளை கூட்டி கொண்டான்.இருவரையும் சுமந்து கொண்டு ஜீப் ஜன சந்தடி மிக்க டவுனை நோக்கி விரைந்தது.அவர்கள் ராஜ சேகர் ஹாஸ்பிடலை வந்தடைந்த போது வெளியே ஒரு கூட்டம் கூடி நின்றது.போலீஸ் ஜீப்பை பார்த்ததும் யாரோ “போலீஸ் வந்துருச்சுப்பா! இனி அவங்க பார்த்துப்பாங்க“என்றார்கள்.அவர்கள் கூட்டத்தை பிளந்து கொண்டு முன்னேறிய போது உள்ளே தாழிடப்பட்ட அறை ஒன்றின் முன்னால் அவன் கையில் கத்தியோடு நின்றிருந்தான்.அவனுடன் ப்ளு நிற சீருடையணிந்த செக்யூரிட்டி ஒருவன் மல்லு கட்டி கொண்டு இருந்தான்.



“மாயா! ஒழுங்கா வெளிய வந்துரு! “என்றான் கத்தி.



“வெளிய வராதீங்க மேடம்! “என்ற செக்யூரிட்டி போலீஸ் யூனிபார்மில் இருவரையும் பார்த்து மலர்ச்சிக்கு போனான்.

“கவலைப்படாதீங்க மேடம்! போலீஸ் வந்துட்டாங்க! “என்றான்.



அருண் தொண்டையை கனைத்து கொண்டு “யோவ்! யாருய்யா நீ! உனக்கு என்ன வேணும்? “என்றான்.



“எனக்கு மாயா வேணும்! தர முடியுமா உன்னால! “என்றான் கத்தி.



“உம் பேரு என்ன? “என்றான் அருண்.



“அது மாயாவுக்கு தெரிஞ்சா போதும்.உனக்கு சொல்ல முடியாது! “



அருண் கத்தி அதீத மன டிப்ரஸ்ஸனில் இருப்பதை உணர்ந்து கொண்டான்.



“மாயா! நாங்க போலீஸ்! தைரியமா கதவை திறங்க! “என்றான்.



சிறிது தயக்கத்திற்கு பின் கதவு திறந்தது.அவளை பார்த்ததும் கத்தியோடு பாய்ந்தவனை செக்யூரிட்டி தடுத்து பிடிக்க முனைய கத்தி அவனது கையில் பட்டு ரத்தம் வழியலாயிற்று.ரத்தத்தை பார்த்து அவன் திடுக்கிட்டு “அய்யய்யோ !”என்ற போது புயலாக அருண் செயல்பட்டான். அவன் கண்களை நோக்கி அருண் தன் வலது கையை வீசினான்.புரூஸ்லீ தன் சண்டை காட்சிகளில் இப்படியொரு யுக்தியை பயன்படுத்துவதை அருண் கவனித்திருந்தான்.அதை வாகாக இப்போது பயன்படுத்தி கொண்டான்.கண்களின் மீது அடி விழுந்தவுடன் அனிச்சை செயலாக கத்தியை போட்டு விட்டு கண்களை மூடினான் அவன்.அந்த கணம் அருணுக்கு போதுமானதாக இருந்தது.சட்டென்று அவனை வீழ்த்தி பின்புறமாக கைகளை வளைத்து கை விலங்கை மாட்டினான்.அவனை அருகிலிருந்த கான்ஸ்டபிளிடம் ஒப்படைத்தவன் “ஜீப்புல ஏத்தி பாத்துக்குங்க!”என்றான்.”மாயா! ஐ லவ் யூ! மாயா”என்று கத்தியவனை கான்ஸ்டபிள் தள்ளி கொண்டு போன பின் கூட்டம் கலைய ஆரம்பித்தது.மாயா பர்ஸ்ட் எய்ட் பாக்ஸை எடுத்து கொண்டு செக்யூரிட்டியை நெருங்கினாள்.



“கிளவுஸ் போட்டுட்டு வாங்கம்மா! “என்றான் செக்யூரிட்டி பதட்டமாக!



“பதட்டத்துல மறந்துட்டேன் ஏழுமலை! “என்ற மாயா கிளவுஸைடிராவினுள் தேடி எடுத்தாள்.உதவிக்கு கையை பற்றிய அருணை “தொடாதீங்க சார்! “என்றான் ஏழுமலை.

ஒரு வயதான ஆயா பாக்கெட் நிறைய தண்ணீரோடு வந்து தரையில் சிதறிய ரத்தத்தை மாப்பினால் துடைக்க தொடங்கினார்.

அருண் மாயாவை பார்த்தான்.மேக்கப் செய்தால் சினிமாவில் நடிக்கலாம் போல் அழகியாக இருந்தாள்.அவளது கிராப் தலை இந்திரா காந்தியை நினைவுபடுத்தியது.அறையின் உள்ளே இருந்த டேபிளில் ஏழுமலையை உட்கார வைத்தவள் முதலுதவி செய்ய ஆரம்பித்தாள்.



“எனக்கு இது வினோதமா இருக்கு! “என்றான் அருண்.



“நீங்க போட்ருக்கிற கிளவுஸை ஆபரேசன் மாதிரி..சர்ஜரிக்குத்தானே போடுவாங்க.!சாதாரண காயத்துக்குமா போடுவாங்க! “என்றான் அருண்.



“நோயாளிகள் சம்மந்தப்பட்ட ரகசியங்களை ஒரு டாக்டர் வெளியே சொல்ல கூடாது! “என்றாள் மாயா.



“ஆனா பேசண்ட் சொல்லலாம்! கிளவுஸ் போட சொன்னதுக்கு காரணம் இருக்கு! “என்றான் செக்யூரிட்டி ஏழுமலை.அவன் பேசும் போது லேசாக திக்குவதை அருண் கவனித்தான்.



“ஏழுமலை! சும்மாயிருக்க மாட்டிங்க! “என்றாள் மாயா.



“உங்களை காப்பாத்துனவருகிட்ட எப்படிம்மா பொய் சொல்றது? உண்மைய சொல்ரேன் சார்.எனக்கு எய்ட்ஸ் இருக்கு! “என்றான் செக்யூரிட்டி ஏழுமலை.

#தொடரும்!
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 6.



“ஏழுமலை!நீங்க இப்படி காம்ளெக்சா பேசக் கூடாது! “என்றாள் மாயா.



“விடுங்கம்மா! என்னை பாத்து நாலு பேரு திருந்துனா சரி! “என்றான் ஏழுமலை.



“சரி! கோட்டர்ஸிக்கு போய் ரெஸ்ட் எடுங்க! “என்றாள் மாயா.



“சின்னகாயம்தாம்மா! இதுக்கு ரெஸ்டா! “



“சொன்னா கேளுங்க! கிளம்புங்க! “என்றாள்.

ஏழுமலை தன் டிவிஎஸ்ஸை எடுத்து கொண்டு நகர்ந்தவுடன் “ இந்த வியாதி எப்படி வந்துச்சு இவருக்கு? “என்றான் அருண்.



“இவருக்கு நாமக்கல் சொந்த ஊரு.ரிக் வண்டி டிரைவர்.வடக்கே போர் போட காண்ட்ராக்ட்ல போனவரு அங்க கண்ட இடத்துல மேய்ஞ்சதுல நோய வாங்கிட்டாரு. இங்க வந்தும் திருந்தலை.அப்புறம் உடம்பு சரியில்லைன்னு வந்தப்போ எய்ட்ஸ்னு கண்டு பிடிச்சோம்.பயத்துல பொண்டாட்டி பிள்ளைகளை கூட்டிட்டு அப்பா வீட்டுக்கு போயிருச்சு.தனி மரமா நின்னுட்டாரு.பொண்டாட்டியே விட்டுட்டு போனதால பொண்ணுக மேல காண்டாயிட்டாரு.கண்ட பொண்ணுககிட்ட போய் எய்ட்ஸை பரப்பி விடலாமாங்கிற அளவுக்கு சைக்கோவாயிட்டாரு.நாங்க உளவியல் சிகிச்சை மூலமா குணப்படுத்தி நார்மலாக்கியிருக்கோம்.போக்கிடம் இல்லாததால இங்கேயே வேலை போட்டு கொடுத்துட்டேன்.அந்நியன் படத்து விக்ரம் மாதிரிதான் இவரும்.எப்ப வேணா பழைய நிலைக்கு போயிருவார்.அதனாலதான் கூடவே வைச்சிருக்கேன்.!”



அருணின் மனதில் மணியடித்தது.ஒருவேளை இவனாக இருக்குமோ?



“என்ன யோசிக்கிறீங்க? “



“இல்லை மேடம்.ஒரு டவுட்டு! “



“சொல்லுங்க! “



“எங்கப்பாக்கு வெளியூர் போனா வாயில் புண் வந்துருது.எதனாலன்னு தெரியலை.!”



“வெத்தலை போடுவாரா? சுண்ணாம்பு அதிகமானா வாய் புண் வர வாய்ப்பிருக்கு.!”



“அவரு டீ டோட்டலர்! “



“அப்ப சேராத எதையாவது சாப்பிட்டு அலர்ஜியாகி இருக்கலாம்! “



“ஒகே! அப்பாவை ஒரு நாள் கூட்டி வருகிறேன்.கம்ப்ளைண்ட் ஒன்னு எழுதி கொடுங்க! “



“நானே ஸ்டேசனுக்கு வர்ரேன்.!”



“சரி! எதுக்கு உங்களை கொலை செய்ய முயற்சி பண்ணினான்.அவன் பேரு? “



“அவன் பேரு மதன்.மூணு மாசமா என் பின்னாடி சுத்தி லவ் டார்ச்சர் பண்றான்.என்ன சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்டேங்கிறான்.போன வாரம் இங்க வந்து அட்மிட்டாயிட்டான்.அவனுக்கு நோய் எதுவும் இல்லை.என்னை பாக்கனும்கிறதுக்காக வம்படியா வந்து அட்மிட்டாகி இன்ஸ்ப்ரசன் பண்ண முயற்சி பண்றான்! “



“நல்லாத்தானே இருக்கான். லவ் பண்ணலாமே? “



“நோ! என்னோட ஆம்பிசன் வேறு.!என்னோட அறக்கட்டளை மூலமா ஏழைகளுக்கு உதவனும்! “



“இன்னைக்கு என்ன பிரச்சனை ஆச்சு? “



“இன்னைக்கு கத்தியோட வந்துட்டான்.பேப்பர்ல எத்தனை நியூஸ் படிக்கிறோம்.லவ் பண்ண மறுத்த பெண்ணை குத்தி கொன்னதையும், ஆசிட் அடிச்சதையும்.அதான் பயந்து போய் உங்களுக்கு போன் பண்ணினேன்.”



அவளுடைய பயம் நியாயமானதாக அருணுக்கு தோன்றியது.



அடுத்த அரைமணி நேரத்திற்கு பின் விசாரணை அறையிலிருந்த மதன் “என்னது? நான் மாயாவை கொல்ல பார்த்தேனா? அவ என்னோட தேவதைங்க! அவளுக்காக யாரை வேணாலும் கொல்லுவேன்.அவளை கொல்வேனா? “என்றான் கோபமாக!



தொடரும்.
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் ஏழு !



“அப்ப நீ மாயாவை கொல்ல வரலியா? “என்றான் குழப்பமாக அருண்.



“என்னை லவ் பண்ணலைன்னா கை நரம்பை கட் பண்ணிட்டு செத்து போயிருவேன்னு சொல்லத்தான் வந்தேன்.நீங்க என்னடான்னா நான் அவளை கொல்ல வந்ததா மாத்தி சொல்ரீங்க? “என்றான் மதன்.



“நான் சொல்லலைய்யா! மாயாவே சொன்னதுதான்.!”



“என்னோட மாயா அப்படியெல்லாம் சொல்ல மாட்டாங்க.நீங்க பொய் சொல்ரீங்க? “



“இன்னும் கொஞ்ச நேரத்துல மாயாவே கம்ப்ளைண்ட் கொடுக்க வருவா! அப்ப தெரியும்! “



“மாயா என்னோட தேவதைங்க.என்னை தப்பா புரிஞ்சுகிட்டாளேன்னு வருத்தமா இருக்கு.!”



“ஆமா! என்ன படிச்சிருக்க? “



“எம்பி ஏ படிச்சிருக்கேன்! “



“மாயாவை முதல்ல எங்க பார்த்த? “



“ஒரு ரத்த தான முகாம்ல! அவளோட அன்பு, இரக்கம், அழகு இதெல்லாம் பிடிச்சு போய்தான் லவ் பண்ண ஆரம்பிச்சேன்.!



“ஆஸ்பிட்டல்ல போய் அட்மிட்டாகி அழிச்சாட்டியம் பண்ணியிருக்க? “



“தப்புதான்.அவளை இம்ப்ரெஸ் பண்ண வேற வழி தெரியலை.!”



அருண் தன் விசாரணையை முடித்து கொண்டு வெளியே வந்த போது மதனை பற்றி ஒரு முடிவுக்கு வந்திருந்தான்.தர் படத்து ஷாருக்கானின் லேட்டஸ்ட் வெர்சனாக மதன் இருப்பதை அவனால் உணர முடிந்தது.



அதே நேரம் உள்ளே நுழைந்த முத்துசாமி “விசாரிச்சாச்சு தம்பி்.!எல்லாமே நீங்க சொன்ன மாதிரி டம்மி அட்ரஸ்தான்! “என்றவர் அறையினுள் எட்டி பார்த்து விட்டு”இவனா? “என்றார்.



“மதனை தெரியுமா உங்களுக்கு? “என்றான்.



“இவனை அதிகம் தெரியாது தம்பி!ஆனா இவங்கப்பா டைகர் ராம்நாத்தை ஊருக்கே தெரியுமே? பிஸ்னஸ் மேக்னட்.ஊரின் பெரும் புள்ளி.!”



அதே நேரம் போன் அடித்தது.எடுத்து பேசிய அருண் போனை வைத்து விட்டு “கமிசனர்தான்! மதனை விட சொல்றார்.!”என்றான்.



“ராம்நாத்தோட செல்வாக்கு அப்படி! “என்றார் முத்துசாமி.



“பாருங்க தம்பி! இந்த ராம்நாத் பணத்துக்காகத்தான் மதனோட அம்மாவை கல்யாணம் பண்ணிக்கிட்டாரு.இரண்டு பேத்துக்கும் ஒத்து வராம டைவர்ஸ் பண்ணிக்கிட்டு வெவ்வேறு ஆளை கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க.மதன் அனாதையாயிட்டான்.அன்புன்னா என்னன்னே தெரியாமதான் வளர்ந்திருக்கான்.ராம்நாத்துக்கு வாரிசு இல்லாததால மதனை இப்ப கவனிக்க ஆரம்பிச்சிருக்காரு.அவன் அப்பா மேலவெறுப்புல இருக்கான்.அனாதையா விட்டுட்ட அம்மா மேல கொல வெறியில் இருக்கான்.!”



“நினைச்சேன்.இப்படி எதாவது ப்ளாஷ்பேக் இருக்கும்னு.இனி மாயாவுக்கு என்ன பதில் சொல்வது? “



“நிலவரத்தை சொல்லுங்க! அப்புறம் முடிவு பண்ணலாம்! “



அருண் மாயாவை போனில் அழைத்து விவரம் சொன்னான்.



“போதும்! அவனை வார்னிங் பண்ணி விட்ருங்க.அவங்கப்பாக்கு அரசியல் சப்போர்ட் நிறைய இருக்கு.என் ஹாஸ்பிடலுக்கும், அறக்கட்டளைக்கும் எதாவது தொந்தரவை தரலாம்.என்னை தொல்லை பண்ணாம இருந்தா போதும்.!”



“தாங்க்ஸ் மாயா! “என்ற அருண் அறைக்கதவை திறந்து மதனை வெளியே அழைத்து வந்தான்.



“இனிமே மாயாவை தொந்தரவு பண்ண மாட்டேன்னு எழுதி கொடுத்துட்டு போ! “என்றான் அருண்.



“சத்தியமா மாயாவை இனிமேல் தொந்தரவு செய்ய மாட்டேன்! “என்றான் மதன்.



“அதை எழுதி கொடு! இதே மாதிரி மோனிகா செலஸ் பின்னாடி ஒருத்தன் சுத்தி அவளை பாக்கவே கூடாதுன்னு கோர்ட் சொல்லியிருக்கு.தெரியுமா? “என்றான் அருண்.



“அவளை பாக்கலைன்னா செத்துருவேங்க! “என்றான் மதன்.



“முதல்ல நல்ல சைக்காலாஜிஸ்டை பாரு! அப்புறம் அவளை பாக்கலாம்! “என்றான் அருண்.



“எனக்கு மனோவியாதின்னா சொல்ரீங்க? “



“அப்படி எதாவது இருக்கலாம்.ரொம்ப புடிச்சவங்க எதை சொன்னாலும் தட்டாம கேட்பது.ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம் இந்த மாதிரி எதாவது இருக்கலாம்.!”



மதன் குழப்பத்தோடு காகிதத்தை வாங்கி கொண்டு எழுத உட்கார்ந்தான்.



தொடரும்.
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் எட்டு



அருண் பாப்கார்னை தின்றபடி படத்தை பார்த்து கொண்டிருந்தான்.பக்கத்தில் உட்கார்ந்திருந்த முத்துசாமி படத்தில் லயித்திருந்தார்.அருணுக்கு போலீஸ் யூனிபார்மில் முத்துசாமி பக்கத்தில் உட்கார்ந்திருப்பது சங்கடமாக இருந்தது.பள்ளிக்கூடத்திற்கு லீவு போட்டு விட்டு சினிமாவிற்கு அப்பா அவனை கான்ஸ்டபிள் முத்துசாமியோடு அனுப்பியது அவனுக்கு வியப்பாக இருந்தது.நேற்றுதான் அப்பாவும், அம்மாவும் இரவு ரொம்ப நேரம் சண்டை போட்டு கொண்டிருந்ததை அழுதபடி பார்த்து விட்டுதூங்கி விட்டான்.

அம்மா காலையில் சமைக்காமல் அழுதபடி இருந்தாள்.அருண் முத்துசாமியோடு ஓட்டலில் சாப்பிட்டு விட்டு படம் பார்த்து கொண்டிருந்தான்.வழியனுப்பிய அப்பாவின் முகம் இறுக்கமாக இருந்தது.

படம் முடிந்ததற்கான பெல் அடித்தது.முத்துசாமி “போலாமா தம்பி! “என்றார்.

“சரிண்ணே! “என்றான் அருண்.

இருவரும் வண்டிபாஸை கொடுத்து விட்டு எக்ஸ்எல் சூப்பரை எடுத்தார்கள்.முத்துசாமி மௌனமாக வண்டியை ஓட்டினார்.அருணின் வீட்டை நெருங்கிய போது வீட்டை சுற்றி கூட்டம் நின்றிருந்தது.கூட்டத்திலிருந்தவர்கள் அருணை பரிதாபமாக பார்த்தார்கள்.அருண் கூட்டத்தை விலக்கி உள்ளே நுழைந்த போது அம்மாவை பார்த்தான்.பூ, பொட்டு வைத்து மாலை அணிந்து அம்மா படுத்திருந்தாள் பிணமாக.!”வயித்து வலி தாங்காம தூக்கு போட்டுகிட்டா? “என்றார் அப்பா அழுகையினுடே!



அருண் தூக்கி வாரிப்போட எழுந்து விட்டான். கனவு !எப்போதோ நடந்து முடிந்தது கனவாக.பக்கத்து அறையிலிருந்து அப்பாவின் குறட்டை ஒலி கேட்டது.அருண் மணியை பார்த்தான்.கடிகாரம் மணி ஐந்து என்றது.எழுந்தவன் டிராக்கிங் சூட்டை அணிந்து கொண்டு வீட்டை சாத்தி விட்டு ஜாகிங் கிளம்பினான்.அருண் எக்ஸ்சர்சைஸை முடித்து விட்டு வீட்டுக்கு வந்த போது அப்பா ஹாலில் பேப்பர் படித்து கொண்டிருந்தார்.குழந்தை வேலு கிச்சனில் எதையோ உருட்டி கொண்டிருந்தான்.”நைட்டு எத்தனை மணிக்கு வந்தப்பா? “என்றார் தாமோதரன்.



“பத்து மணிக்கு மேலாயிருச்சுப்பா.நீங்க தூங்கிட்டு இருந்தீங்க.அதான் தொந்தரவு பண்ண வேணாம்னு படுத்துட்டேன்.!வாய் புண்ணுக்கு மருந்து சாப்பிட்டீங்களா? “



“ம்! வைட்டமின் பீ காம்ப்ளக்ஸ்! ஆமா! குளிக்க போறீயா? “



“ஆமாப்பா! “



“உன் ரூமில் உள்ள பாத்ரூமில் தண்ணி வராது.டேங்கில் தண்ணி இல்லை.தண்ணி லாரிக்கு போன் பண்ணனும்.!”



“அய்யய்யோ! நான் எப்படி குளிப்பது? “என்றான் அருண்.



“கீழே லேபருக்குன்னு ஒரு பாத்ரூம் இருக்குதுல்லை.அதுல இருக்கிற தொட்டியில் தண்ணி வரும்.போய் குளி! “



“ஒகே! “அருண் பாத்ரூம் கதவை சாத்தி விட்டு உடையை களைந்த போதுதான் அதை பார்த்தான்.இந்தியன் டாய்லெட்டின் அருகே முழுசாக கிடந்தது அந்த பில்டர் வில்ஸ் சிகரெட்.அப்பா டீடோட்டலர் என்று அருணுக்கு தெரியும்.!குழந்தை வேலு பீடி மட்டுமே குடிப்பான். அதுவும் ஒளிந்து மறைந்து.’அப்படியானால் இந்த சிகரெட் எங்கிருந்து வந்தது? சிகரெட்டோடு வெளியே வந்த அருண் “இதை யாருப்பா பாத்ரூம்ல போட்டது? “என்றான்.



அப்பாவின் முகம் இருளடைய ஆரம்பித்து கைகள் நடுங்க ஆரம்பித்தன.அருண் அவரின் பதட்டத்தை புதிதாக பார்க்க ஆரம்பித்தான்.

தொடரும்!
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 9



எந்த சலனமும் இன்றி பதினைந்து நாட்கள் கடந்து சென்றன.அருண் மனதின் ஒரு மூலையில் இந்த கேஸை நினைத்தபடி வழக்கமான பணியில் இருந்தான்.அப்பா வழக்கம் போல் சிவன் மலைக்கு போவதாக சொல்லிவிட்டு கிளம்பியிருந்தார். இன்று இரவு பயணித்து காலையில் சிவன் மலையில் இறங்குவதுதான் அவருடைய பிளான்.காலையில் ஹாஸ்பிடலுக்கு போவதாக சொல்லிவிட்டு கிளம்பினார்.அவரை கண்காணிக்க ஒரு கான்ஸ்டபிளை அனுப்பலாம் என்று நினைத்தவனுக்கு அவர் ஒரு போலீஸ் என்பது நினைவுக்கு வந்தது.டிபார்ட்மெண்டில் உள்ள எல்லோரையும் அவருக்கு அடையாளம் தெரியும் என்பதால் தன் முயற்சி தோல்வியில்தான் முடியும் என்று அவனுக்கு தெரியும்.அதனால் அவருக்கே தெரியாமல் மாற்று ஏற்பாடு ஒன்றை செய்து வைத்திருந்தான்.



அன்று அந்த சிகரெட்டை குழந்தைவேலு தான்தான் தவறி கீழே போட்டதாக சொன்னபோது அப்பா கோபப்பட்டதை அவன் இதுவரை பார்த்ததில்லை.அவரின் கோபத்திற்கு பின்னால் ஏதோ ஒரு ரகசியம் இருப்பதை அவனால் உணர முடிந்தது.தன்னுடைய சந்தேகத்தை முத்துசாமியிடம் கேட்கவும் அவனுக்கு சங்கடமாக இருந்தது.



மேஜையிலிருந்த போன் அடித்தது.சிந்தனை கலைந்தவன் போனை எடுத்து காதில் வைத்தான்.

மறுமுனையிலிருந்த கமிசனர் “நான் கமிசனர் பேசறேன் அருண்! “என்றார்.

“குட்மார்னிங் சார்! சொல்லுங்க சார்! “என்றான் அருண்.



“உனக்கு காசி லிங்கத்தை தெரியுமா? “



“கேள்விப்பட்டிருக்கேன் சார்.ஹி இஸ் எ டெலண்டட் பர்சன்.ஒரு கேஸை தவிர எல்லா கேஸ்லயும் அக்யுஸ்டை பிடிச்சிருக்கார்.!”



“யெஸ்! அதே காசி லிங்கம்தான்.!அவர் அன் அபிசியலா உங்க ஊருக்கு வந்திருக்கார்.லட்சுமி லாட்ஜ்ல தங்கியிருக்கார்.அந்த சைக்கோ மர்டர் கேஸை அவரோட கன்சல்ட் பண்ணி பாரு.நல்ல கைடுனெஸ் தருவாரு! “என்றார்.



“ஒகே! சார்! நான் உடனே போய் பார்க்கிறேன்.!” அருண் காசி லிங்கத்தைபற்றி நிறைய கேள்விப்பட்டிருந்தான்.தீர்வு காண முடியாத எத்தனையோ கேஸ்களை கண்டறிந்த திறமைசாலி.



அருண் முத்துசாமியோடு காசி லிங்கத்தை சந்திக்க கிளம்பினான்.அறையில் லுங்கி, பனியனோடு வந்து கை குலுக்கி வரவேற்றார் காசி லிங்கம்.லேசான வழுக்கையோடு நடுத்தர வயதை கடந்திருந்தார்.”என்ன முத்துசாமி? சௌக்யமா? “என்றார் சினேக புன்னகையுடன்.



“நல்லா இருக்கேன் சார்! இவர் அருண்.சப் இன்ஸ்பெக்டர் தாமோதரனுடைய சன்! “



“ஹலோ அருண்! அப்பா எப்படி இருக்கிறார்.?”



“நல்லா இருக்கார் சார்! இன்னைக்கு கூட ஒரு கோயிலுக்குத்தான் போயிருக்கார்.!”



“அவரு அப்படித்தான்.!ஆன்மீகத்தில் ரொம்பவே ஆர்வம்.!”



“இந்தாங்க சார்! கேஸ் பைல்! இதுல என்னோட சஸ்பெக்டையெல்லாம் எழுதியிருக்கேன்.படிச்சு பாருங்க! “



“ஒகே!படிக்கிறேன்.அந்த சைக்கோ கில்லரை பிடிச்சுருவியா அருண்.!”



“முட்டு சந்துல நிக்கிற மாதிரிதான் இப்பவும் இருக்கு.!”



“எனக்கு ஒரு கேஸ்லதான் இந்த மாதிரி நடந்திருக்கு.கில்லர் கடைசிவரை சிக்கவே இல்லை.!”



“யானைக்கே அடி சறுக்கிருச்சா சார்? “



“வெற்றியும் தோல்வியும் சகஜம்தானே? சரி நைட்டு பத்து மணிக்கு நான் டிரெய்ன் ஏறனும்.நீங்க ரெண்டு பேரும் ஒரு எட்டு மணிக்கு வாங்க.இந்த கேஸை நான் படிச்சு வைக்கிறேன்.என்னோட ஐடியாவை சொல்ரேன்.எதாவது யூஸ் ஆகுதான்னு பாருங்க! “



“ஒகே சார்! “



இருவரும் விடைபெற்று ஜீப்பில் கிளம்பினார்கள்.வழியில் ராஜசேகர் ஹாஸ்பிடலை கிராஸ் பண்ணிய போது ஹாஸ்பிடலின் எதிரே மதன் தன் பைக்கோடு நின்று கொண்டிருப்பதை பார்த்தார்கள்.



“இவன் இன்னும் திருந்தவேயில்லை! “என்றான் அருண்.



“லவ் தம்பி! அப்படித்தான் இருப்பானுக.அவனுக்கு யாருகிட்டயும் கிடைக்காதஒரு விசயம் மாயாகிட்ட கிடைச்சிருக்கலாம்.!”



“அவ ஒன்னும் அவ்வளவு அழகில்லையே! சிம்பிளாத்தானே இருக்கா? “



“ரோமியோவின் கண்களின் வழியே பார்.ஜீலியட்டின் அழகு தெரியும் என்பார்கள்.!”என்றார் முத்துசாமி.



“அது சரிதான்! “என்றான் அருண்.



இருவரும் வேலையில் மூழ்கிய நான்கு மணி நேரத்திற்கு பிறகு அருணின் போன் ஒலித்தது.



“அருண்! நான் காசி லிங்கம் பேசறேன்! “



“சொல்லுங்க சார்! “



“கேஸ் பைலை படிச்சு பாத்தேன்.இதுவரைக்கும் நடந்தது இரண்டு கொலையல்ல.மூன்று கொலை.!”



“என்ன சார் சொல்ரீங்க? “



“எஸ்! என்னால கண்டு பிடிக்க முடியாத அந்த ஒரு கேஸ்தான் கில்லரோட முதல் கொலை! “



அருணுக்கு தலை சுற்றியது.

“உங்களால் முடியாத கேஸை நான் எப்படி சார்? “என்றான் அருண்.



“நைட்டு வாங்க! பேசுவோம்! “



இன்று இரவு பல விபரீதங்களை சந்திக்க போவதாக அருணின் உள் மனசு சொல்லியது.



தொடரும்!
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 10



“முதல் கொலை அன்புக்கரசி.அவளோட பிம்ப் நாகராஜ்.போனில் பேசிய கஸ்டமர் நேரில் பேசலை.அதே டிட்டோதான் ரூபாவுக்கும்.இதுல பொதுவா கிடைச்சது ஒரு போனோட ஐஎம்இ நம்பர் மட்டும்தான்.சிம்மோட நெம்பர் மட்டும் வெவ்வேறு.ரைட்டா? “என்றார் காசி லிங்கம்.



“ஆமா சார்! “என்றான் அருண்.அருகே முத்துசாமி உட்கார்ந்திருந்தார்.



“கில்லர் ஏன் பேசலைன்னு யோசிச்சீங்களா? “



“அவனுக்கு வாய்ல எதாவது பிரச்சனை இருந்திருக்கலாம்.வாயில புண் ,திக்குவாய் இந்த மாதிரி! “என்றான் அருண்.



“பொண்ணாவும் இருந்திருக்கலாம்!அறைகுறை தமிழ் தெரிஞ்ச இந்திக்காரனாக்கூட இருக்கலாம் “என்றார் முத்துசாமி.



“கரெக்ட்! ஆனா லாஜிக்கா யோசிங்க.!போனில் பேசியவனால் நேரில் ஏன் பேச முடியவில்லை.?அப்போ போனில் பேசியவன் கில்லரோட கூட்டாளியா இருக்கலாம்.பொண்ணுன்னு வைச்சுகிட்டா நகரத்துல பிராத்தல் நடக்கிற இடங்களும், பிம்புகளோட போன் நம்பர்களும் எப்படி துல்லியமாக தெரிந்தது? அப்படி தெரியனும்னா அந்த பொண்ணும் பிராஸ்டிடியூட்டாத்தானே இருக்க முடியும்? “



“அப்போ இது தொழில் போட்டின்னு சொல்ரீங்களா? “



“இதென்ன மேகி நூடுல்ஸா? சரியில்லைன்னா வேற எதையாவது செய்ய! வெவ்வேற ஏரியாவுல கொலை செய்ய அவசியம் இல்லையே? “



“யோசிக்க வேண்டிய விசயம்தான்.!”



“ரெண்டாவது கொல்லப்பட்ட பெண்கள் யாரும் செக்ஸ் டார்ச்சர் செய்யப்படவேயில்லை.ஒன்னு கில்லர் ஆண்மையற்றவனாவோ, அது பற்றிய கிண்டல், கேலிக்கு ஆளானவனாகவோ இல்லை வயதானவனாகவோ இருக்கலாம்.!இல்லை பால்வினை நோயால் பாதிக்கப்பட்டு தன்னுடைய அடையாளம் தெரிஞ்சுருமோன்னு எதுவும் செய்யாமல் இருந்திருக்கலாம்! “



“மே பீ! இருக்கலாம்! “என்ற அருணின் மனதில் ஏழுமலையும், மருத நாயகமும் வந்து போனார்கள்.



“போலி நம்பர் ப்ளேட்டோடு இருக்கும் அந்த பைக்தான் கில்லருக்கும் நமக்கும் இருக்கும் ஒரே தொடர்பு! அந்த பைக் எங்க இருக்கு.இருக்கும்! யோசிங்க! கண்டிப்பா வண்டிக்கு பெட்ரோல் போட எதாவது பங்குக்கு போய்தான் தீரனும்.!



“பைக் பாஸ் போடுற இடத்துல.அங்கதான் யாரும் அதிகம் கவனிக்க மாட்டாங்க.வண்டி திருடர்கள் பைக்கை திருடியதும் முதல்ல ஸ்டேண்டுலதான் போடுவாங்க.!இல்லை ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத ஒரு வீட்டுலயோ, அண்டர்கிரவுண்டுல எங்கியாவது ஒரு அபார்ட்மெண்டுல இருக்கலாம்.!”



“நைட்டு வண்டிய அங்கிருந்து எடுக்கிற அளவுக்கு கில்லருக்கு ப்ரீடம் இருக்கனும்! அருண் உன்னோட சஸ்பெக்ட் லிஸ்ட்ல எத்தனை பேர் இருக்காங்க? “



அருண் லிஸ்டை சொன்னான்.கவனமாக அப்பாவின் பெயரை தவிர்த்தான்.அதை கேட்ட காசிலிங்கம் “நீ ஒரு பேரை விட்டுட்ட? “என்றார்.



“யார் சார் அது? “



“உன்னோட அப்பா தாமோதரன்.!”என்றார் காசி லிங்கம்.அருணின் முகம் கறுத்தது.



“எப்படி சார் கண்டு பிடிச்சீங்க? “என்றான் அயற்சியுடன்.



“அவரோட ப்ளாஷ்பேக் அப்படி.நீ சின்ன பையனா இருந்தப்போ நடந்தது.உங்கப்பா வீட்டுக்கு வரும்போதெல்லாம் கீழே கிடந்த சிகரெட் துண்டுகளை பார்த்து உங்கம்மா மேல சந்தேகப்பட ஆரம்பிச்சிட்டாரு.அது சண்டையா மாறி சந்தேகத்துல டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சிட்டாரு.பொண்ணுங்க புருசனை விட்டுட்டு வேறோருத்தன் கூட ஓடி போனாலும் கேஸ் போட்டு தண்டிக்க முடியாது.அதனால உங்கப்பாவுக்கு பயம்.கடைசியில் ஒருநாள் உங்கம்மா தூக்கு போட்டு செத்துட்டாங்க.உங்கப்பாதான் தூக்கி கட்டி விட்டதாக ஊரில் பேசிக் கொண்டார்கள்.உண்மை அவருக்கு மட்டும்தான் தெரியும்! “



அருண் அதிர்ச்சியுடன் உட்கார்ந்திருந்தான்.”ஸாரி மை பாய்! இங்கே செண்டிமெண்டுக்கு இடமில்லை! இந்த கேஸை நான் டீல் பண்ணியிருந்தா லிஸ்டுல உன்னையும் சேர்த்திருப்பேன்.!"



“சார்!என்னை சேர்க்க காரணம்இருக்கலாம்.ஆனால் என் நேர்மையை சந்தேகிக்காதீங்க.! அதனால்தான் சிவன்மலையில் அப்பா இறங்கியதும் தகவல் அனுப்ப சொல்லி என் ப்ரண்டை கேட்ருக்கேன்.இன்னைக்கு நைட் யார் கொலைகாரன்னு தெரிஞ்சுரும்! “என்றான் அருண்.



“சொல்லலாமா வேணாமான்னு தெரியலை.அப்பாவுக்கு இந்த சைக்கோ கேஸ்பத்தி புல்லா தெரியும்.!”என்றார் முத்துசாமி.



“எப்படிண்ணே? “என்றான் அருண்.



“இது உங்களுக்கு முதல் கேஸ் தம்பி.நீங்கஜெயிக்கனும்னு அவருக்கு ரொம்ப ஆசை.அதனால் போன் பண்ணி எங்கிட்ட டீடெய்ல் கேப்பாரு! நைட்டு நீங்க தூங்கிய பின்னாடி பைலை பார்ப்பதாக அப்பாவே சொல்லியிருக்கார்.!”



“அப்படின்னா தாமோதரனுக்கு கில்லரை பத்தி எதாவது தெரிஞ்சிருக்கலாம்! இல்லை கில்லரே தாமோதரனாகக் கூட இருக்கலாம்.!தாமோதரன் அழுத்தமான ஆள் வேற.எதையும் ஓப்பனா சொல்ல மாட்டாரு! “



“என்னோட அப்பாவை ஒரு கொலைகாரனா யோசிக்க முடியலை! “என்றான் அருண்.



“இன்னும் உறுதியாகலை.இப்போதைக்கு டவுட் மட்டும்தான்.!”என்றார் காசிலிங்கம்.



“இந்த கேஸிக்கும் உங்க கேஸ்க்கும் என்ன சார் சம்மந்தம்? “என்றார் முத்துசாமி.



“இருக்கு! மூணு வருசத்துக்கு முன்பு சென்னையில் டூட்டியில் இருந்தேன்.அப்ப இதே மாதிரி அகல்யான்னு ஒரு புராஸ்டியூட் படு கொலை செய்யப்பட்டாள்.அவளோட அம்மா செத்து கொஞ்சநாள்தான் ஆகியிருந்தது.இதே போல் கொடூரமா கொன்ருக்கான்.கில்லர் கொஞ்சநாள் சென்னையில் வாழ்ந்திருக்கனும்.அவளோட பிம்புக்கு வந்த போன் நெம்பரை தேடி டம்மின்னு கண்டு பிடிச்சேன்.அந்த போனோட ஐஎம்இ நம்பரும்இந்த கேஸ்ல வர்ர போனோட நம்பரும் ஒன்னு! “



“ அப்ப போனை மூணு வருசமா மாத்தாம வைச்சிருக்கான்.ரேரா யூஸ் பண்றதால ரிப்பேராக வாய்ப்பில்லை.எப்படியாவது கில்லரை பிடிக்க ட்ரை பண்றோம் சார்! “



“ரைட்! அதுக்கு முன்னாடி எல்லா பிம்பையும் எச்சரிக்கை பண்ணிருங்க! எந்த கஸ்டமராவது வீட்டுக்கு கூட்டிட்டு போகனும்னு சொன்னா போன் பண்ண சொல்லுங்க!



“ஒகே சார்! “



அருணும் முத்துசாமியும் காசி லிங்கத்தை ரயில்வே ஸ்டேசனில் டிராப் பண்ணிய போது நகரின் மற்றோரு மூலையில் ஜெர்கின்காரன் பஸ்ஸிலிருந்து இறங்கினான்.கொஞ்ச தூரம்நடந்தவன் இருட்டில் நின்று பாக்கெட்டிலிருந்த ஸ்டில்லடோவை தொட்டு பார்த்து கொண்டான்.கையிலிருந்த தொப்பியை அணிந்தவன் அருகிலிருந்த பெட்டிகடையில் “வில்ஸ் சிகரெட் ஒன்னு கொடுங்க! “என்றான் கரகரத்த குரலில்.



தொடரும்.
 
Top Bottom