Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed இதயத்தை திருடியவன்

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 1



இன்ஸ்பெக்டர் சிங்கமுத்து பூட்டை திறந்து வீட்டின் உள்ளே நுழைந்தார். இருட்டாக இருந்த வீட்டை சுவிட்சை போட்டு வெளிச்சமாக்கியவர் கையில் இருந்த வி எஸ் ஓ பி கோட்டர் பாட்டிலை காலியாக இருந்த டீப்பாயில் வைத்தார். பூட்டையும் சாவியையும் டீப்பாயில் வைத்து விட்டு சாப்பாட்டு பார்சலை கிச்சனுக்கு கொண்டு போனார். குடித்துவிட்டு சாப்பிடலாமா இல்லை சாப்பிட்டு விட்டு குடிக்கலாமா என்ற யோசனையோடு திரும்ப ஹாலுக்கு வந்தவர் வண்டிபையில் எடுக்காமல் விட்டு விட்டு வந்த முட்டை பார்சலை எடுக்க திரும்ப வாசலை நோக்கி நடந்தார். அதே நேரம் அவரது இடுப்பில் இருந்த வாக்கி டாக்கி அலற ஆரம்பித்தது.



"பீட் நம்பர் 11. இங்கே ஓரு கார் செக்போஸ்டை உடைத்து விட்டு போகிறது. கார் நெம்பர் MD S5748. ப்ளூ கலர் அம்பாசிடர் .காரை எங்கே பார்த்தாலும் தடுத்து நிறுத்தவும்."வாக்கி டாக்கியில் போலீஸ் கண்ட்ரோல் ரூம் குரல் விடாது ஒலிக்க ஆரம்பித்தது.



இன்ஸ்பெக்டர் சிங்கமுத்துவின் மயிர் கால்கள் நிமிர்ந்து கொண்டன. காலையில் தான் மாணிக்கம்பாளையம் ஸ்டேசனில் இந்த கார் காணாமல் போனதாக ரிப்போர்ட் பைலாகியிருந்தது அவரது நினைவுக்கு வந்தது. இது நிச்சயமாக அவன் தான். அவன் தான் கார்களை திருடி விட்டு பிறகு பெண்களை கடத்தி கொலை செய்து நிர்வாண உடம்பில் எண்களை வரிசையாக கத்தியால் முதுகில் பொறிப்பவன். சிங்கமுத்துவிற்கு தெளிவாக தெரியும். அந்த காரில் முதுகில் 8 என்ற எண் எழுதப்பட்ட ஒரு பெண் பிணமாக பின் சீட்டிலோ டிக்கியிலோ இருக்க கூடுமென . இரண்டு வருடங்களாக சிங்கமுத்து அவனை தேடிக் கொண்டிருக்கிறார். இப்போது வாய்ப்பு வலிய வந்து சேர்ந்திருக்கிறது. தாறுமாறாக துடிக்க தொடங்கிய இதயத்தை பெருமூச்சு விட்டு சீராக்கி கொண்டவர் புயலென கிளம்பினார். வீட்டை பூட்டும் முன்பாக சுவரில் மாலையுடன் காட்சியளித்த மனைவி சாவித்திரியின் போட்டோவை ஒரு முறை பார்த்தவர் கண்களை துடைத்து கொண்டு கிளம்பினார்.



ஓரே உதையில் அவரது பைக் சீறிக் கொண்டு கிளம்பியது. இடுப்பின் பின் பக்கத்தில் ரிவால்வர் இருக்கிறதா என்று ஒரு முறை தொட்டு பார்த்து கொண்டார். அவர் மனம் தீவிரமாக கணக்கு போட்டது. பீட் நெம்பர் 11என்பது திண்டல் மேட்டை குறிப்பது. அவன் பெருந்துறை நோக்கித்தான் போய் கொண்டிருக்க வேண்டும். அவர் சட்டென்று ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் இருசப்பனுக்கு போன் போட்டார். எடுத்த இரு சப்பன்" சொல்லுங்க சார்" என்றான்.



"இரு சு! இப்போது நீ எங்கிருக்கிறாய்?"



"மேட்டு கடை பீட்சார் "



"கூட பசங்க இருக்கிறார்களா?"



" இருக்கிறார்கள் சார். "



"பேரி கார்ட் இல்லை கல்லை வைச்சு ரோட்டை மறித்து போக்குவரத்தை நிறுத்து. வாக்கி டாக்கி நியூசை கேட்டாய் தானே?"



" கேட்டேன் சார். நீங்க சொல்வது போலவே செய்கிறோம் சார்"



"கவனமாக கேள் இரு சு!நீ டிராபிக்கை நிறுத்தியதும் அவன் வேறு வழியில்லாமல் காரை திருப்பி கொண்டு திரும்ப வந்த வழியாகவே வருவான். கண்டிப்பாக சார்ட் கட்ல தான் அவன் வந்தாக வேண்டும். நான் அவனை தேடி கிளம்பி விட்டேன். எனக்கு அதிர்ஷ்டம் இருந்தால் நாங்கள் நேருக்கு நேர் சந்தித்து கொள்வோம் Vஅப்போது அவன் கண்டிப்பாக என்னிடம் மாட்டுவான்."



"புரியுது சார். ஜாக்கிரதையாக இருங்கள் சார். "



செல்போனை அணைத்த சிங்கமுத்து ஆக்சிலேட்டரை முழு வேகத்தில் முறுக்கினார்.

சிங்கமுத்து யூனிபார்ம் அணியாத க்ரைம் பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் .தவிர்க்க முடியாத தருணங்களில் மட்டுமே சீருடை அணிவது அவரது வழக்கம். மனைவியை இழந்து விட்டு தனிமரமாக இருக்கும் அவரைடிப்பார்ட்மெண்ட் கூப்பிடும் செல்ல பெயர் சிங் .பல கேஸ்களை அனாயசமாக தீர்த்து வைத்திருக்கும் சிங்கிற்கு இருக்கும் ஒரே பலவீனம் அவரது இதய பிரச்சனை தான்.முதல் அட்டாக் வந்து மயங்கி விழுந்த சிங்கை பரிசோதித்த டாக்டர் இரண்டாம் மூன்றாவது அட்டாக்கில் சிங் தப்பி பிழைப்பது கடினம் என்றும் அவரது இதயத்தின் வெண் டிரிக்கிள் பகுதி மிகுந்த சேதம் அடைந்திருப்பதால் அவரது இதயத்தை மாற்றி வேறு இதயத்தை பொருத்த வேண்டும் என்று கண்டிப்பாக கூறியிருந்தார்.



சிங்கிற்கு மாற்று இதயம் பொருத்துவதிலும் ஒரு பெரிய சிக்கல் இருந்தது. அவரது ரத்த வகை மிகஅரிதான பாம்பே பிளட் வகை. இந்தியாவில் அவர்களுக்கென்று தனியாக சங்கம் கூட இருந்தது. சிங் அந்த சங்கத்தில் உறுப்பினராகவும் இருந்தார். மாற்று இருதயம் பொருத்துவதற்குள் இந்த நெம்பர் கொலைகாரனை பிடித்து விட வேண்டும் என்று சிங் முயன்று கொண்டிருந்தார். கொலைகாரனோ சிங்கிற்கு தண்ணீர் காட்டிக் கொண்டிருந்தான்.



சிங் வில்ல ரசம்பட்டி வழியாக நுழைந்து காரப் பாறை ரோட்டில் வண்டியை திருப்பினார். அவன் டிராபிக் கால் தடுத்து நிறுத்தப்பட்டால் இந்த வழியாகத்தான் வந்தாக வேண்டும் என்று சிங் அனுமானித்தார். வேறு சில குறுக்குவழிகள் இருந்தாலும் கொலைகாரன் இந்த வழியாகத்தான் வந்தாக வேண்டும் என்று சிங்கின் உ ள்ளுணர்வு கூறியது.



சிங்கிற்கு அதிர்ஷ்டம் நிறையவே இருந்தது. அவரது அனுமானம் உண்மையாகியிருந்தது. 50 அடி தூரத்தில் அந்த கார் ஹேட்லைட் வெளிச்சத்தோடு வந்து கொண்டிருந்தது. சிங் பைக்கின் வேகத்தை குறைத்தார். வண்டிபையினுள் கையை விட்ட போது கேரி பேக் முடிச்சு அவிழ்ந்து முட்டைகள் ஆடிக்கொண்டிருந்தன. இதிலும் சிங்கிற்கு அதிர்ஷ்டம் உதவியது.அதில் இரண்டு முட்டைகளை எடுத்தவர் கார் கண்ணாடியை நோக்கி விட்டெறிந்தார். "ங் கோத்தா " என்ற வார்த்தையோடு கார் சற்று தொலைவில் போய் நின்றது.கார் கதவை திறந்து கொண்டு அவன் இறங்கினான். அவன்மங்கி குல்லா அணிந்து முகத்தை மறைத்திருந்தான். ஜெர்கினும், ஜீன்ஸ் பேண்ட்டும் அணிந்து கால்களில் ஸ்போர்ட்ஸ் ஷூவை மாட்டியிருந்தான்.



சைடு ஸ்டேண்ட் போட்டு பைக்கை நிறுத்திய சிங் இடுப்பில் இருந்த துப்பாக்கியை உருவினார். உருவிய துப்பாக்கியை அவனை நோக்கி நீட்டிய சிங் "ஹோண்ட்ஸ் அப்" என்றார்.



அவன் ஒரு கணம் திடுக்கிட்டு நின்றவன். அடுத்தகணம் மெல்ல சிரித்தவன்" யாரு? சிங்கா?" என்றான்.



சிங் டிப்பார்ட்ன்மெண்டில் அழைக்கும் தன் செல்ல பெயர் இவனுக்கு எப்படி தெரிந்தது என்று அயர்ந்து நின்றார். அதே நேரம் அவனை பற்றி ஒரு விசயம் கூட தனக்கு தெரியவில்லையே என்று அவர் மேல் அவருக்கே ேகாபம் வந்தது.



சிங் அயர்ந்து நின்ற அந்த ஒரு நொடி அவனுக்கு போதுமானதாக இருந்தது. காருக்கு முன்பாக நீண்ட சாலையில் புயலாக ஓட ஆரம்பித்தான் அவன்.சிங் அவனை துரத்த ஆரம்பித்தார். அவன் புலிக்கு பந்த புள்ளிமானாக குதித்து ஓடிக் கொண்டிருள்தான்.சிங் தனது கனத்த சரீரத்தை தூக்கி கொண்டு ஓடிக் கொண்டிருந்தார். இருட்டு அவனுக்கு சாதகமாக இருந்தது.. துப்பாக்கியை நீட்டி பிடித்தபடி அவன் பின்னால் குத்துமதிப்பாக வந்து கொண்டிருந்தார் சிங் .



இப்போதும் சிங்கின் பக்கம் அதிர்ஷ்டம் இருந்தது. கம்பி வலையால் அடைக்கப்பட்டிருந்த ஒரு முட்டுச் சந்தில் வழியில்லாமல் அவன் தடுமாறி நின்று கொண்டிருப்பதை தெருவிளக்கின் வெளிச்சத்தில் சிங் பார்த்தார். "ஓடாதே! நில். இல்லையென்றால் சுட்டு விடுவேன்" என்று கத்தினார் சிங் .அவரது பேச்சை அலட்சியம் செய்தபடி கம்பி வலைமீது ஏற ஆரம்பித்தான் அவன்.



ஓடி வந்த சிங் நின்றார். அவரது இதயம் தாறுமாறாக துடிக்க ஆரம்பித்தது. நெஞ்சின் மத்தியில் ஒரு குண்டுசியால் குத்திய வலிபர வ ஆரம்பித்தது. அவரது உடல் முழுவது ஜில்லிட ஆரம்பித்து வேர்க்க துவங்கியது. சிங் மூச்சு விடுவதை சிரமமாக உணர தொடங்கினார். இருள துவங்கிய கண்களில் வெளிச்சத்தை மீட்டு கொண்ட சிங்கம் பி வலையில் ஏறி மறுபக்கம் குதித்தவனை குறி பார்த்து சுட்டார். சிங்கின் துப்பாக்கியிலிருந்து கிளம்பியதோட்டா கம்பி ஓட்டை வழியாக புகுந்து ஓட துவங்கியவனின் வலது புறதோளில் பாய்ந்தது. "அய்யோ " என்ற அலறலுடன் கிழே விழுந்தவன் தட்டுதடுமாறி மெல்ல எழுந்து இருளில் மறைந்தான்.



சிங்கின் கண்கள் இருளத் துவங்கின. அவரது கையிலிருந்த ரிவால்வர் நழுவி தரையில் விழுந்தது. தரையில் அப்படியே நெடுஞ்சாண் கிடையாக விழுந்தார் சிங் .கனத்த இருள் அவரை மூடியது.
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 2



மூன்று மாதங்களுக்குப் பிறகு.



இன்ஸ்பெக்டர் சிங் கண் விழித்தார். பினாயில் வாசமும் நர்சுகளின் நடமாட்டமும் அவர் ஹாஸ்பிடலில் இருப்பதை அவருக்கு உணர்த்தின. அவர் கண் விழித்ததை பார்த்த அவரது அண்ணன் வேதநாயகத்தின் முகம் மலர்ந்தது.



" இருப்பா! டாக்டரை கூட்டிட்டு வந்துடுறேன்" என்று அவசரமாக அறையை விட்டு வெளியேறினார் வேதநாயகம். அருகில் உட்கார்ந்திருந்த அண்ணியை பார்த்தார் சிங் ." நான் வேண்டிய தெய்வங்கள் என்னை கைவிட வில்லை. நீங்க உயிர் பிழைத்த தே பேறும் " என்ற அண்ணியின் கண்களில் கண்ணீர்.சொந்த ஊரில் ஏராளமான சொத்துகள் வேதநாயகத்திற்கு பரம்பரை சொத்தாக வந்திருந்தன.சிங்கின் பாகத்தையும் சேர்த்து அவர் தான் நிர்வாகம் செய்து கொண்டிருந்தார். வாழ்வில் பிடிப்பற்று வேலை வேலை என்று ஓடிக் கொண்டிருந்த சிங் தன் சொத்தைப் பற்றியோ அதில் வரும் வருமானத்தை பற்றி யோ எந்த கேள்வியும் கேட்டதில்லை. எந்த அக்கறையும் காட்டியதில்லை.



ஆனால் வேதநாயகத்திற்கு தம்பி மேல் மிகுந்த அக்கறை இருந்தது. குறிப்பாக தம்பியின் சொத்துகள் மீது அவருக்கு ஓரு கண் இருந்தது. வாரிசு இல்லாத சிங்கின் தலை சாய்ந்து விட்டால் எல்லா சொத்துக்களையும் ஏகபோகமாக தானே ஆளுமை செய்யலாம் என்ற ஆசையினால் தம்பியின் மரணத்திற்கு காத்துக் கிடந்தார். அவரது துரதிர்ஷ்டம் சிங் சம்பவ நாளன்று இறந்து போகாமல் குற்றுயிரும் குலையுயிருமாக தப்பித்து கொண்டார். மாற்று இதயத்தை பொறுத்துவதற்கான பெருந்தொகையினையும் வேதநாயகமே வேண்டா வெறுப்பாக கட்டித் தொலைந்திருந்தார். அப்படியாவது தம்பி மனம் இளகி தன் பங்கு சொத்தை தனக்கே கொடுத்து விடுவான் என்று மனக்கோட்டை கட்டிக் கொண்டிருந்தார்.



உள்ளே வேகமாக நுழைந்த டாக்டர் " என்ன சிங்! இப்போது எப்படி இருக்கிறீர்கள்? உங்களுக்கான ஆபரேசன் முடிந்து விட்டது." என்றார்.



"பரவாயில்லை டாக்டர், " என்ற சிங் தன் சட்டை பட்டனை நீக்கி போடப்பட்டிருந்ததையலை பார்த்தார்.



"இனிமேல் தான் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். அதிகம் டென்சனாக கூடாது. குளிர்ச்சியான பொருட்களை கொஞ்ச நாட்கள் சாப்பிட கூடாது"



சிங்கிற்கு அது வினோதமாக இருந்தது.



"ஏன் டாக்டர் "



"குளிர்ச்சியான பொருளை சாப்பிட்டு சளி பிடித்து தும்மினால் தையல் பிரிந்து விட வாய்ப்பிருக்கிறது. அதனால் கொஞ்ச நாட்கள் அவற்றை தவிருங்கள்"



"ஓகே டாக்டர் .நான் எப்படி இங்கே வந்தேன்?"



"அது எனக்கு தெரியாது. உங்கள் டிப்பார்ட்மெண்ட் ஆட்கள் தான் உங்களை கொண்டு வந்தார்கள்."



"இப்போது யாரையாவது நான் பார்க்க முடியுமா?"



"சாப்பாட்டிற்கு போயிருப்பார்கள். காத்திருங்கள். வந்ததும் சந்திக்கலாம்"



"ரொம்ப நன்றி டாக்டர் "



"நன்றியெல்லாம் உங்களுக்கு இதயத்தை தானம் செய்தவருக்குத்தான் சொல்ல வேண்டும்"



சிங்கிற்கு சட்டென்று புரிந்து விட்டது. பாம்பே . பிளட் குரூப் சங்கத்தில் யாரோ இறந்திருக்கிறார்கள். இறந்தவனின் இதயத்தை தான் தனக்கு பொருத்தியிருக்கிறார்கள்.



"பேர் தெரியுமா?"



"அதை சொல்ல எனக்கு அதிகாரமில்லை சிங்"



டாக்டர் வெளியேறினார். சிங் தன் அண்ணனிடமும் அண்ணியிடமும் பேசத் தொடங்கினார். அவர் உதடுகள் வெறுமனே உரையாடிக் கொண்டிருந்தாலும் அவர் மனம் வேறு ஒன்றை யோசித்து கொண்டிருந்தது.



தான் சுட்ட அந்த கொலைகாரன் செத்து விட்டானா? இல்லை தப்பித்து ஓடி விட்டானா? காரில் தான் எதிர்பார்த்தபடி பெண்ணின் பிணம் இருந்ததா? இல்லையா?அவர் மனம் கேள்விகளுக்கு பதில் தேடி அலைந்து கொண்டிருந்தது.



அவரது அறைக்குள் நுழைந்த கான்ஸ்டபிள் தங்கராஜைப் பார்த்ததும் வேதநாயகத்தின் பேச்சு நின்றது.



தங்கராஜின் பரஸ்பர நலன் விசாரிப்புகளுக்குப் பிறகு சிங் ஆரம்பித்தார்.



" தங்கராஜ். என்னை யார் இங்கே கொண்டு வந்து சேர்த்தார்கள்.?"



"வேற யார் சார் ?இருசப்பன் தான்! உங்களின் செல்போனிற்கு ரொம்ப நேரமாக கூப்பிட்டு பார்த்திருக்கிறார். நீங்கள் எடுக்கவேயில்லை. உங்க போன் லோகேசனை வைச்சுத்தான் நீங்க இருந்த இடத்தை கண்டுபிடித்தோம் "



" அந்த கில்லர்?"



" அவன் தப்பித்து போய் விட்டான் சார்"



"அவனை நான் சுட்டேனே?"



"புல்லட் குறி தவறவில்லை சார். அது அவனை காயப்படுத்தியிருக்கிறது. ரத்த தாரை நிறைய இடத்தில் இருந்தது. அதை வைத்து அவனது பிளட் குருப்பை கண்டு பிடித்து விட்டோம். அவனது பிளட் குருட்B - "



"அப்படியென்றால் அவனுக்கு செவ்வாய் தோசமாக இருக்க வேண்டும். அவர்களுக்குத்தான் இந்த பிளட் குருப் அதிகமாக இருக்கும். செவ்வாய் இருக்கிறதென்றால் அவ்வளவு சீக்கிரம் பெண் கிடைக்காது. அப்படியென்றால் கில்லர் பேச்சிலராக இருக்க வேண்டும். அதே நேரம் காம சிந்தனை அதிகம் இருக்க வேண்டும்"



"என்ன சார் ஜோசியர் மாதிரி பேசறீங்க?"



"ஜோசியமும் ஒரு சைன்ஸ்தான் தங்கராஜ். இதை ஓரு யூகமாகக் கூட வைத்துக் கொள்ளலாம். நமக்கு அந்த கொலைகாரனை பிடிக்க இந்த துப்பு உதவினால் சரி. அந்த கார் திருட்டு காராகத்தான் இருக்க வேண்டும். அதில் ஏதாவது கிடைத்ததா?"



"அது திருட்டு கார்தான் சார். அந்த காரோட டிக்கியில் ஒரு பெண் பிணம் "



"முதுகில் 8 என்ற எண்ணோடு இருந்திருக்க வேண்டுமே?"



"ஆமாம் சார். அந்த பெண் யார் என்று கண்டுபிடித்தீர்களா?"



"அந்த பொண்ணு பேரு அனிதா சார். லேடீஸ் ஹாஸ்டலில் தங்கி இருந்திருக்கிறது."



"எந்த மோட்டீ வும் இல்லாமல் கொலை செய்கிறான். அனிதாவை கொல்ல அவனுக்கு எந்த காரணமும் இருக்காது. ஆனாலும் கொல்கிறான். அதுதான் ஏனென்று புரியவில்லை. இந்த மூன்று மாதத்தில் ?"



" அவன் வேறுகொலைகள் எதையும் செய்யவில்லை சார்.நீங்கள் இதை நினைத்து டென்சன் ஆகாதீர்கள். அநேகமாக இந்த கேசை உங்களிடமிருந்து வேறு யாருக்காவது மாற்றுவார்கள் என்று ஒரு பேச்சு அடிபடுகிறது சார்"



"இந்த கேசை கண்டு பிடிக்காமல் நான் ரிட்டயராக போவதில்லை. ஆமாம் என்னுடைய செல்போன் எங்கே?"



"என்னிடம் தான் சார் இருக்கிறது." என்று தங்கராஜ் செல்போனை நீட்டினான்.



செல்போனை வாங்கிய சிங் பாம்பே பிளட் குரூப் சங்கத்தின் தலைவரானதேஷ்பாண்டேவை அழைத்தார்.



"சார். நான் சிங்கமுத்து பேசுகிறேன்"



"சொல்லுங்கள் சிங்கமுத்து . நலமாக உள்ளிர்களா ? உங்கள் உடல் நிலை பரவாயில்லையா?" என்றார் தேஷ்பாண்டே உற்சாகத்துடன் .



"விசாரிப்புக்கு நன்றி சார். நான் நலமாகத்தான் இருக்கிறேன். நம் சங்கத்தில் யாரோ ஒருவர் இறந்து எனக்கு வாழ்வு தந்திருக்கிறார்கள். அவர் யார் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?"



"சாரி சிங். நம் சங்கம் இந்த மூன்று மாதத்தில் இரண்டு பேரை இழந்திருக்கிறது. நான் உங்கள் உடல் நிலை மனதில் வைத்துக் கொண்டு பேசுகிறேன்."



"சரி.எனக்கு அவர்கள் பெயர் வேண்டாம். எப்படி இறந்தார்கள் என்று மட்டும் சொல்லுங்கள்."



"நம் சங்கத்தின் இரண்டு உறுப்பினர்கள் ஓரு வார இடைவெளியில் சுட்டு கொல்லப்பட்டிருக்கிறார்கள்"



"என்னது கொலையா?" என்றார் சிங் அதிர்ச்சியுடன் .



" கொல்லப்பட்ட இரண்டாவது நபரின் இதயத்தை தான் உங்களுக்கு பொருத்தியிருக்கிறார்கள்."



"அந்த கொலைகாரனை பிடித்து விட்டார்களா? "



"அந்த கொலைகாரனை தேடிக் கொண்டிருக்கிறார்கள். கிடைத்த பாடில்லை."



சிங் மவுனமாக போனை வைத்தார்.



"அந்த இரண்டு கொலைகளும் உங்களுக்காக செய்யப்பட்டது போல் தோன்றுகிறது சார்" என்றான் தங்கராஜ்



"இரண்டு கொலைகள் இல்லை. அவன் செய்தது மூன்றுகொலைகள். தங்கராஜ். எனக்கு இந்த மூன்று மாத பேப்பர்கள் வேண்டும்." என்று பரபரப்பானார் சிங் .



"மூன்றாவது கொலையா?" என்று அதிர்ச்சியடைந்தான் தங்கராஜ்.
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 3



இரண்டு நாட்களுக்கு பிறகு இன்ஸ்பெக்டர் சிங் பூரண உடல் நலம் பெற்றதாக கூறி வீட்டிற்கு வழியனுப்பி வைக்கப்பட்டார். ஆட்டோவில் தன் அண்ணனுடனும் அண்ணியுடனும் தன் வீட்டிற்கு வந்து சேர்ந்தார் சிங் .ஆட்டோவை விட்டு இறங்கியதும்”கொஞ்சம் நில்லுப்பா” என்று கூறிய அண்ணி வீட்டை திறந்து ஆரத்தி கரைத்து எடுத்து வந்து சுற்றிய போது உண்மையில் சிங் நெகிழ்ந்து தான் போனார்.

அம்மாவிற்கு பின் சாவித்திரியிடம் மட்டுமே பிரதி பலன் பாராத அன்பை பார்த்திருந்த சிங் தன் அண்ணியின் அன்பில் நெகிழ்ந்து தான் போனார். அவரது போலீஸ் மூளையோ எல்லாம் சொத்திற்கான பாசாங்கு நடிப்பு என்றது. சராசரி மனிதனாக இருந்து விட்டு போகட்டுமே? ஏதோ ஒரு விதத்தில் அன்பு மனிதனுக்கு தேவைப்படத்தானே செய்கிறது என்றும் சிங் நினைத்தார். வீட்டின் முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த அவரது பைக்கை வாஞ்சையோடு தடவிக் கொடுத்தார் சிங் .அக்கம் பக்கம் இருந்தவர்கள் வரிசையாக உடல் நலத்தை விசாரிக்க வரத்தொடங்கினர்.

வீட்டின் உள்ளே சோபாவின் அருகே தங்க ராஜ் வைத்து விட்டு போனபேப்பர் கட்டை ஏக்கமாக பார்த்து கொண்டிருந்தார் சிங் .அவர் வந்தவர்களிடம் சகஜமாக பேசிக் கொண்டிருந்தாலும் உள் மனதில் எல்லோரும் எப்போது போய் தொலைவார்கள்? தனிமை எப்போது வாய்க்கும் என்று தவியாக தவித்துக் கொண்டிருந்தார். அவரது யோசனை வேறு திசையில் ஓடிக்கொண்டிருந்தது. தன்னால் சுடப்பட்ட கொலைகாரன் கண்டிப்பாக செத்திருக்க மாட்டான். பலத்த காயத்தோடு தப்பி பிழைத்திருக்க கூடும். அப்படி தப்பி பிழைத்திருந்தால் தான் குண்டு காயத்தை குணப்படுத்த யாராவது ஒரு டாக்டரை அணுகியிருக்க வேண்டும். அந்த டாக்டர் கண்டிப்பாக டோலீசில் தன்னை காட்டி கொடுத்துவிடக் கூடும் குறைந்த பட்சம் குண்டடிபட்ட காயத்திற்கு மருத்துவம் பார்த்ததையாவது சொல்லி விடக் கூடும் என்பதால் அவரை அவன் கொலை செய்திருக்க கூடும் என்று சிங் அனுமானித்தார். அதைத்தான் யாரும் கவனிக்காத மூன்றாவது கொலை என்று சிங் நினைத்தார்.

அதே நேரம் பாம்பே பிளட் குரூப் உள்ள இரண்டு பேரை அவன் ஏன் கொல்ல வேண்டும்? தனக்கான மாற்று இருதயம் அந்த குரூப் காரர்களிடமிருந்து தான் கிடைக்க வேண்டும் என்ற தகவல் எப்படியோ கொலைகாரனுக்கு தெரிந்திருக்கிறது.அப்படி தெரிந்திருந்தாலும் அவன் அந்த பிளட் குரூப் உள்ள யாராவது ஒரு வரை கொன்றிருக்கலாம். எதற்காக தேவை இல்லாமல் இரண்டு பேரைக் கொன்றான்? குண்டடிபட்ட ஒரு வாரத்தில் ஒரு டாக்டர் இறந்திருக்க வேண்டும். அப்படி இறந்திருந்தால் அந்த செய்தி கண்டிப்பாக செய்திகளில் வந்திருக்கும். சிங் அந்த செய்தியை தன் கண்களால் பார்த்து தன் யூகம் உண்மை தானா என்று உறுதி செய்ய விரும்பினார். ஆனால் அதற்கான தனிமை இன்று கிடைக்காது போல அவருக்கு தோன்றியது.

நலம் விசாரித்தவர்கள் அனைவரும் விடை பெற்று போனதும் ஆயாசத்துடன் சோபாவில் சாய்ந்தார் சிங் .

"தம்பி! உங்களுக்கு என்ன பிடிக்கும் என்று சொல்லுங்கள்? அதை செய்து தருகிறேன்"என்ற அண்ணியை வாத்சல்யத்துடன் நோக்கினார் சிங் .

"உங்களுக்கு என்ன பிடிக்குமோ அதையே செய்யுங்கள் அண்ணி " என்றார் சிங் .

"தம்பிக்கு மீன்னா உயிர். இரு நான் போய் வாங்கிட்டு வருகிறேன்" என்றார் வேதநாயகம்

"சும்மாருண்ணே. இந்த வெய்யில்ல வெளிய போயிட்டு "

"நான் என்ன மிட்டாயா? வெய்யிலில் உருகி போக .இந்தா போனதும் வருகிறேன் – அதுவரை நீ சும்மா இருக்கணும். அந்த பழைய பேப்பர் கட்டை பிரித்து வீட்டை குப்பையாக்கி விடாதே" என்றார் வேதநாயகம்

வேதநாயகம் படியிறங்கி போனதும் வாசலில் வந்து நின்றார் சிங் .அவருக்கு சிகரெட் பிடிக்க வேண்டும் போல் இருந்தது.

"அண்ணி! கடைவரைக்கும் போயிட்டு வந்துடறேன்”

" சொன்னா கேக்க மாட்டிங்களே! உங்ககால்ல சக்கரம் தான் கட்டியிருக்கும் போல” என்று சலித்து கொண்ட அண்ணியை பார்த்து சிரித்த சிங்” பக்கம் தான்! சீக்கிரம் வந்து விடுவேன்” என்றபடி வாசல்படியை விட்டு இறங்கினார்.

வழக்கமான பெட்டி கடையில் நின்றவர்”சிகரெட் ஃஎன்று கையை நீட்டினார்

பழக்கமான கடைகாரன் "சார் உடம்பு பரவாயில்லையா சார்.” என்றான் சிரிப்போடு./

" இப்ப பரவாயில்லப்பா” என்றார் சிங் .

அவன் சிகரெட் பெட்டியை நீட்டினான்.

" ஒன்னு மட்டும் கொடு.அண்ணன் வீட்டுல இருக்கார். அவர் முன்னாடி சிகரெட் குடிக்க மாட்டேன்" என்றார் சிங் .

அவன் நீட்டிய ஓற்றை சிகரெட்டை பற்ற வைத்து புகையை இழுத்து விட்டார் சிங் .இந்த கருமத்தை சீக்கிரம் விட்டு விட வேண்டும் என்று நினைத்தவர் பைசாவை கொடுத்து விட்டு நகர்ந்தார்.

சிங்கின் போன் மணி அடித்தது.

சிங் யாரென்று பார்த்தார்.

அன் நவுன் நம்பர் என்ற து டிஸ்ப்ளை.

யாராக இருக்கும் என்ற யோசனையோடு போனை காதுக்கு கொடுத்தார் சிங் .

" ஹலோ” என்றது கரகரத்தமறுமுனை.

" என்னை தெரிகிறதா?”என்றது டெலிபோன் குரல்.இன்ஸ்பெக்டர் சிங்கிற்கு அந்த குரல் வெகு பரிச்சயமானது.இரண்டு ஆண்டுகளாக எட்டு பேரை கொன்று விட்டு தலைமறைவாகியிருப்பவனின் குரல் அது.சிங்கிடம் சிக்காமல் தலைமறைவாக இன்னும் சிக்காமல் இருப்பவனின் குரல் அது.

"தெரியாமல் என்ன? அன்று நீ ஏன் என்னை கொல்லாமல் விட்டு விட்டாய்?”

" நீங்கள் சுட்ட குண்டு தடம் இன்னும் என் முதுகில் இருக்கிறது.காயமடைந்த நான் தப்பி ஓட முனைந்தேனே தவிர ஹார்ட் அட்டாக் வந்து துடித்த உங்களை காப்பாற்ற நினைக்கவில்லை.நீங்கள் மயங்கி விழுந்தது எனக்கு தெரியாது."

"தெரிந்திருந்தால் என்னை கொன்றிருப்பாய்தானே?”

" மிஸ்டர் சிங்.!என் மதிப்பிற்குறிய எதிரி நீங்கள்.என்னை தேடி கண்டு பிடிக்குமளவிற்கு புத்திசாலியும் கூட.உங்களை நிராயுதபாணியாக கொல்வது எனக்கு பிடிக்காது.வழக்கம் போல் நீங்கள் என்னை தேடி பிடியுங்கள்.அதில் நான் உங்களை கொல்வதும் நீங்கள் என்னை கொல்வதும் வழக்கமானது."

"இப்போது எதற்காக எனக்கு போன் செய்தாய்?”

" இதுவரை நான் எனக்காக கொலை செய்திருக்கிறேன்.முதல் முறையாக நான் உங்களுக்காக என் மதிப்புமிகுந்த எதிரிக்காக இரண்டு கொலையை செய்திருக்கிறேன்!”

" எனக்காக கொலையா? உளறாதே?”

" நம்புங்கள் மிஸ்டர் சிங்.!உங்களுக்கு மாற்றுஇருதயம் பொருத்த வேண்டும் என்று டாக்டர் சொன்னது நினைவிருக்கிறதா?”

" ஆமாம்.!சாகும் தருவாயில் இருந்த ஒருவனின் இதயத்தை பொருத்தித்தான் இப்போது உன்னை தேடி கொண்டிருக்கிறேன்.”

"கடைசியாக நான் கொலை செய்த இரண்டு பேருக்கும் உங்களின் பிளட் குரூப்தான்.நினைவிருக்கிறதா?”

" ஆமாம்.!”

"அந்த இரண்டு கொலைகள் உங்களுக்காக செய்தவை.முதல் கொலையை செய்து விட்டு ஆம்புலன்சிற்கு போன் செய்தேன்.வண்டி வருவதற்குள் அவன் இதயம் நின்று விட்டது.அதனால் இரண்டாவது ஆசாமியை சுடும் முன்பே ஆம்புலன்சிற்கு போன் செய்து விட்டேன்.அவன் இதயம் நின்று போய் விட கூடாது என்று நான் கடவுளை வேண்டி கொண்டிருந்தேன்.வெயிட்டிங் லிஸ்டில் உங்களின் பாம்பே பிளட் குரூப் இருந்தது.அதற்காக பாம்பே பிளட் குரூப் உள்ளவர்களை தேடி பிடித்து நான் கொல்ல வேண்டியிருந்தது.அரிதான ரத்தவகை என்பதால்தான் உங்களுக்கு மாற்று இதயம் வெகு எளிதாக கிடைத்தது"

சிங்கின் ரத்தம் உறைந்தது.விசித்திரமான சீரியல் கில்லர்.இப்போது இவனுக்கு நன்றி சொல்வதா சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிப்பதா என்ற ஊசலாட்டம் அவருள் தொடங்கியது.

"என்ன சிங்.?பதிலே இல்லை! உங்களுக்காக கொலையெல்லாம் செய்து உங்களை காப்பாற்றியிருக்கிறேன்.ஒரு நன்றி சொல்ல மாட்டிர்களா?”

" அந்த நன்றி உன் கொலைகளை நான் அங்கீகரித்தது போலாகி விடும்!”

“உங்களிடம் எனக்கு பிடித்ததே உங்கள் கடமை உணர்ச்சிதான் சிங்.எனக்கு சமமான எதிரி நீங்கள் என்பதால்தான் நான் உங்களை காப்பாற்றினேன்.நம்முடைய ஆட்டம் இன்னமும் முடியவில்லை.உங்களுக்காக செய்த இரண்டு கொலைகளை லிஸ்டிலிருந்து கழித்து கொள்ளுங்கள்.அவற்றிலிருந்து உங்களுக்கு எந்த துப்பும் கிடைக்காது.கெட் வெல் சூன் மிஸ்டர் சிங்.ஓய்விலிருந்து சீக்கிரம் மீண்டு வாருங்கள்.நம் விளையாட்டை தொடரலாம்.நீங்கள் மீண்டு வர வேண்டும் என்பதற்காகத்தான் நான் கொலைகளை நிறுத்தி வைத்திருக்கிறேன்!”

“காத்திரு எதிரியே! வருகிறேன்!”

“வெல்கம் மிஸ்டர் சிங்!”

போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது.சிங் தனது மார்பை தொட்டு பார்த்து கொண்டார்.இறந்தவனின் இதயம் உள்ளே துடித்தது.
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 4



அண்ணனும் அண்ணியும் வீட்டில் இருக்கும் வரை தன்னால் அந்த பழைய பேப்பர் கட்டுக்களை புரட்டிப் பார்த்து தனக்கு தேவையான தகவலை தேடி எடுக்க முடியாது என்று சிங்கிற்கு தோன்றியது. இருவரையும் எப்படியாவது வீட்டை விட்டு ஊருக்கு அனுப்பி விட வேண்டும் என்று சிங் நினைத்தார்.



அவர் யோசிப்பை அறுத்து கொண்டு அவர் மீது அண்ணனின் நிழல் கவிழ்ந்தது .சிங் நிமிர்ந்து பார்த்தார்.



" சொல்கிறேனே என்று தப்பாக நினைக்காதே தம்பி.! இந்த போலீஸ் வேலை உனக்கு வேண்டாம் தம்பி. உனக்கு எங்களை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்.? பேசாமல் வேலையை ராஜினாமா செய்து விட்டு எங்களோடு ஊருக்கு வந்துவிடு. நீ ஓருவன் தான் எங்களுக்கு சுமையாக இருந்து விட போகிறாயா?" என்ற அண்ணனை பார்த்தார் சிங் .



"எனக்கென்று யார் இருக்கிறார்கள் அண்ணா உன்னை விட்டால்.? என்னை கவனித்து கொண்டிருந்தவளும் என்னை தனியாக விட்டு விட்டுப் போல் விட்டாள். உங்களுடன் வருவதில் எனக்கு எந்த ஆட்சேபணையுமில்லை. ஆனால் என்டிப்பார்ட்மெண்ட் என்னை நம்பி ஒரு கேசை கொடுத்திருக்கிறார்கள். அதை நான் பாதியில் விட்டு விட்டு வர முடியாது. அந்த கேசை முடித்துவிட்டால் என் பணி ஓய்வும் நெருங்கி விடும். கடைசி டிரான்ஸ்பரை நம் ஊரிலேயே வாங்கி கொண்டு விட்டால் பென்சன் வாங்குவதும் எளிது." என்றார் சிங் .கடைசியாக எந்த ஊரில் பணி செய்கிறார்களோ அந்த ஊரில் தான் பென்சன் தரப்படும் என்பதை சிங் அறிந்திருந்தார். இந்த கேசை வெற்றிகரமாக முடித்துவிட்டால் சொந்த ஊருக்கு டிரான்ஸ்பர் வாங்குவது எளிதாக இருக்கும் என்று சிங் கணக்கு போட்டு வைத்திருந்தார்.



"வேறு யாரையாவது அந்த கேசை பார்க்க சொல்லலாமே தம்பி?" என்றார் வேதநாயகம்.



"டிப்பார்ட்மெண்டிலேயே திறமையான ஆள் என்று புகழப்படுகிறவன் நான். என்னாலேயே இரண்டு வருடங்களாக ஒரு துப்பையும் கண்டுபிடிக்க முடியவில்லை. புதிதாக வேறு யாரையாவது இந்த கேசை கண்டுபிடிக்க நியமித்தால் அவர்கள் திணறி விடுவார்கள்."



"அது சரி தம்பி! உன் உடல் இருக்கும் நிலையில் முன் போல் உன்னால் ஓடியாட முடியாது. உதவிக்கு யாரையாவது வைத்து கொள்ளலாமே ?"



"நானும் அதைப் பற்றித்தான் யோசித்து கொண்டிருக்கிறேன்." என்றார் சிங் .அதே நேரம் சிங்கின் வீட்டின் முன் ஒரு கார் வந்து நின்றது.யாராக இருக்கும் என்று சிங் யோசித்து கொண்டிருக்கும் போதே அந்த வாட்டசாட்டமான நபர் காரிலிருந்து இறங்கினார். அவரது முடிவெட்டப்பட்டிருந்த விதமும் காலில் அணிந்திருந்த பிரவுன் நிற ஷிவும் வந்திருப்பதுடிப்பார்ட்மெண்டை சேர்ந்த ஆள் என்பதை சீக்கிரமாக கண்டுபிடிக்கும் படி இருந்தது. அன்யூனிபார் அணிந்திருந்தாலும் சிங்கின் கூரிய கண்களில் இவையெல்லாம் பட தவறவில்லை. சிங் வந்திருப்பவரை உடனே தெரிந்து கொண்டார்.



"என்ன சிங்? உடல் நிலை பரவாயில்லையா?" என்றார் வந்தவர்.சிங் திரும்பி அண்ணனை பார்த்தார். அவர் உள்ளே போனார்.



"பரவாயில்லை. உங்களை நீங்கள் அறிமுகப்படுத்த கொள்ளவேயில்லையே? இருந்தாலும் சொல்கிறேன். நீங்கள் டிப்பார்ட்மெண்டை சேர்ந்த ஆள்தானே?உட்காருங்கள்."



"ஆமாம், என் பெயர் சரவணன்." அவர் முகத்தில் ஆச்சரியமோ வியப்போ இல்லை. சிங் காட்டிய நாற்காலியில் சரவணன் உடலை சாய்த்தார்.



" என்ன வேலை செய்கிறீர்கள்?"



"சித்தோடு ஸ்டேசனில் இன்ஸ்பெக்டராக இருக்கிறேன்."



"ஓ! சரி. என்ன தேடி வந்த காரணத்தை சொல்லுங்கள்."



" சொல்கிறேன். அதற்கு முன்பு இந்த வீடீயோவை பாருங்கள்" என்ற சரவணன் தன் பாக்கெட்டில் இருந்த செல்போனை எடுத்து ஒரு வீடியோவை பிளே செய்து சிங்கிடம் நீட்டினார்.



அதில் ஒருவன் தெருவில் தனியாக நடந்து செல்கிறான். தூரத்தில் ஒருவன் தன் பைக்கை நிறுத்திவிட்டு நடப்பவனை பின் தொடர்ந்து நடந்து அவன் முதுகில் சுடுகிறான்.

அவன் கீழே விழுந்ததும்பைக்காரன் தன் வண்டியில் ஏறி இருளில் காணாமல் போகிறான்.



" என்ன வீடியோ இது?" என்றார் சிங் .



"இது உங்களுக்காக அந்த கில்லர் செய்த முதல் கொலை. ஆம்புலன்ஸ் வருவதற்குள் அவனது இதய துடிப்பு நின்று விட்டது.இவனது பிளட் குரூப்பும் உங்களுடையதும் ஓரேகுருப் தான். அங்கிருந்த சிசிடிவியில் பதிவான காட்சி இது."



"இந்த பைக்கோட நெம்பரை கண்டுபிடித்து விட்டீர்களா?"



"வேறு ஒரு கடைவீடியோவில் இந்த பைக் பதிவாகியிருந்தது. அதில் இருந்த நெம்பரை வைத்து பைக்கை தேடினோம்."



"அது திருடப்பட்ட பைக்காகத்தானே இருக்க வேண்டும்"



"எக்சாட்லி "அது திருடப்பட்ட பைக் தான் "



"அது அவனது ஸ்டைல் தான். ஓவ்வொரு கொலைக்கும் முன்பாக காரையோ பைக்கையோ திருடுவது அவனது வழக்கம் " என்றார் சிங் .



"இது இரண்டாவது வீடியோ. இதை பாருங்கள்" என்றார் சரவணன் மீண்டும் ஒரு வீடியோவை பிளே செய்து சிங்கிடம் நீட்டியபடி.



இரண்டாவது வீடியோ பிளேயாக ஆரம்பித்தது.



இதிலும் அதே போல் தனியாக ஒருவன் வேலை முடிந்து தன் பேக்குடன் பைக்கில் வந்து கொண்டிருந்தான்.எதிரில் வந்த இன்னோரு பைக்கில் வந்த கொலைகாரன் அவனை சுட்டு விட்டு இருளில் மறைந்தான் .அவன் கீழே விழுந்த சில நொடிகளில் வந்த ஆம்புலன்ஸ் அவனை அள்ளி போட்டு கொண்டு கிளம்பியது.



"இப்ப கில்லர் சுட்டது தம்பி மோகனை .எஸ் .வாழ வேண்டிய மோகனன அநியாயமாக அவன் கொன்று விட்டான். எல்லாம் யாருக்காக? மிஸ்டர் சிங் உங்களுக்காக. ஆம்புலன்சிற்கு போன் செய்து விட்டுத்தான் என் தம்பியை கொன்றிருக்கிறான். அந்த பாழாய் போன பாம்பே பிளட் குருப்பில் பிறந்தது மட்டும் தான் அவன் செய்த ஒரே தவறு. மிஸ்டர் சிங் .உங்க ளுக்குள் துடித்து கொண்டிருப்பது என் தம்பியின் இதயம்" என்ற சரவணனின் குரல் தழுதழுத்து கண்கள் கலங்கியது.



சிங் தர்மசங்கடமான நிலையில் இருந்தார். சங்க கூட்டங்களில் அவர் சிலமுறை மோகனை சந்தித்திருக்க்றார்.நல்ல பையன் . வெகு திறமைசாலி. அவனுக்கு இப்படி ஒரு முடிவு தன்னால் நேர்ந்துவிட்டதை எண்ணி தன் மீதே வெறுப்பு கொள்ள ஆரம்பித்திருந்தார் சிங்.



"நீங்கள் சொன்ன எல்லா விசயங்களும் எனக்கு தெரியும் சரவணன் "



" எப்படி?"



"அந்த கில்லரே எனக்கு போன் செய்து சொன்னான். ஆனால் இதயத்தைதானமாக கொடுத்து யார் என்று எனக்கு தெரியாது. அது உங்கள் தம்பி மோகன் என்பது நீங்கள் சொல்லித்தான் தெரியும். இந்த இரண்டு கொலைகள் நடந்தது எங்கே?"



"இரண்டுமே வெவ்வேறு ஊர்கள். கில்லர் எப்படியோ பாம்பே பிளட் குரூப் உள்ளவர்களின் பட்டியலை பெற்றிருக்கிறான். இலகுவான குறிகளை தேர்ந்தெடுத்து கொலை செய்திருக்றான் என்னுடைய சுய ஆர்வத்தில், இவற்றையெல்லாம் சேகரித்து வைத்திருக்கிறேன். நீங்கள் தான் அவனை ேதடிக் கொண்டிருக்கிறீர்கள். இப்போது நானும் தேட ஆரம்பித்திருக்கிறேன். எனக்கு தெரிந்த தகவல்களை உங்களிடம் சொல்லி விட்டேன். உங்களுக்கு தெரிந்த உண்மைகளை நீங்கள் எனக்கு சொல்ல வேண்டும். இது என் கார்டு" என்ற சரவணன் தன் விசிட்டிங் கார்டை நீட்டினார்.



வாங்கிய சிங் அதிலிருந்த நெம்பரை மொபைலில் சேவ் செய்தார்.



"அவனைப் பற்றி ஏதாவது தெரிந்தால் கண்டிப்பாக உங்களை அழைக்கிறேன்" என்றார் சிங் .



சரவணன் தன் இடுப்பில் இருந்த துப்பாக்கியை எடுத்தார்.



"நான் அவனை கொல்ல வேண்டும் சிங். என் தம்பியை கொன்றவனின் மார்பில் துள்ள துடிக்க ேதாட்டாக்களை இறக்க வேண்டும், அதற்கு உதவி செய்யுங்கள் சிங் "



"கண்டிப்பாக "



அந்த சரவணன் விடுவிடுவென நடந்து காரில் ஏறினான். கார் புகையை கக்கியபடி விரைந்தது.



"அவனை எப்படியாவது கண்டுபிடித்து கொன்று விடு தம்பி" என்றார் வேதநாயகம் வீட்டின் உள்ளிருந்து வெளியே வந்தபடி.



"இந்த முறை தப்பித்து விட்டான். அன்று மட்டும் என் குண்டு அவனை கொன்றிருந்தால் இவர்கள் அநியாயமாக செத்திருக்க மாட்டார்கள்" என்றார் சிங் கழிவிரக்கத்துடன் .
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 5



"அவனை கொன்று விட்டு நானும் இறந்திருந்தால் இந்த கதை முதல் அத்தியாயத்திலேயே முடிந்திருக்கும்" என்றார் சிங் .



"உனக்கு மாற்று இருதயம் பொருத்த வேண்டும் என்பதற்காக அப்பாவிகளான இரண்டு பேரை வேறுகொலை செய்திருக்கிறான். விநோதமான கொலைகாரன்" என்றார் வேதநாயகம்



"அவனை நான் தான் பிடிக்க வேண்டும் என்று அவன் நினைக்கிறான். அதற்கு நான் உயிரோடு இருப்பது முக்கியம் என்று தான் அந்த இரண்டு கொலைகளை செய்திருக்கிறான். எனக்காக இரண்டு பேரை அநியாயமாக அவன் கொன்றிருப்பதை நினைக்கும் போது என் மனம் குற்றவுணர்ச்சியால் தவியாய் தவிக்கிறது" என்றார் சிங் சோகமான மனநிலையில்.



தன் தம்பி சுய பரிதாபத்திற்குள் ஆழ்வது அவனது உடல் நிலைக்கு ஏற்றதல்ல என்று நினைத்த வேதநாயகம் பேச்சைமாற்ற நினைத்தார்.



"ஆமாம் தம்பி! அந்த பழைய பேப்பர் கட்டில் அப்படி எதைத்தான் தேட நினைக்கிறாய்? சொன்னால் நானும் உனக்கு உதவியாக எதையாவது செய்து தருவேனல்லவா?" என்றார் வேதநாயகம்.



"அது ஓன்றும் இல்லை. நான் அந்த கொலைகாரனை சுட்டேன் அல்லவா? அவனது தோளில் பதிந்த என் துப்பாக்கி தோட்டாவை எடுக்க அவன் கண்டிப்பாக யாராவது ஒரு டாக்டரை தேடி பிடித்திருப்பான். தனக்கான சிகிச்சை முடிந்ததும் அந்த டாக்டர் கண்டிப்பாக தன்னை போலீசில் காட்டி கொடுத்து விடுவார் என்ற பயத்தில் அவரை கொன்நிருப்பான் என்று நான் நம்புகிறேன். அப்படி கொல்லப்பட்டிருந்தால் அந்த நியூஸ் கண்டிப்பாக பேப்பரில் வந்திருக்கும். அதை தேடி பார்த்து என் யூகத்தை உறுதி செய்ய நினைக்கிறேன்." என்றார் சிங் .



"அவ்வளவுதானே? உன் அண்ணியும் சமையல் வேலையை முடித்துவிட்டு அம்மாதான் இருக்கிறாள்.வா. மூன்று பேரும் சேர்ந்து தேடுவோம். எவ்வளவு நேரம் சும்மா டிவியையே பார்ப்பது? நமக்கும் பொழுதுபோக வேண்டாமா?" என்ற வேதநாயகம் பேப்பர் கட்டை பிரிக்க ஆரம்பித்தார்.



மூவரின் தேடலில் வெகு சீக்கிரத்திலேயே அகப்பட்டது அந்த செய்தி. இரண்டாம் பக்கத்தில் ஒரு ஓரமாக ஒளிந்திருந்தது அந்த செய்தி. "இளம் மருத்துவர் படுகொலை " என்ற தலைப்பில் அந்த செய்தி பிரசுரமாகியிருந்தது. இறந்து போன டாக்டரின் பெயர் ரஞ்சன்குமார் .கல்யாணமாகாதவன். தனியாக டி ஸ்பென்சரி வைத்து நடத்தி வந்தவன். ஆண்டவா! இன்னும் எத்தனை பேரைத் தான் அந்த கொலைகாரன் கொல்ல போகிறானோ? என்று சிங் மனக்கிேல சமடைந்தார்.



அதே நேரம் சிங்கின் செல்போன் மணி ஒலித்தது. போனை காதுக்கு கொடுத்தார் சிங் .

மறுமுனையில் சிங்கின் உயரதிகாரி தங்கவேல் பேசினார்.



" என்ன சிங்? நலமா?".



அவரது குரலைக் கேட்டதும் சிங்கின் உடல் தானாகவே விரைப்புக்கு போனது



"சார். நான் நன்றாக இருக்கிறேன் சார்" என்றார் சிங் .



" பாருங்கள் சிங் .உங்களுக்கு போதுமான ஓய்வு தேவை. அதனால் இந்த வழக்கை வேறு யாரிடமாவது ஓப்படைத்து விடலாமா என்று யோசித்து கொண்டிருக்கிறோம். நீங்கள் இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?" என்றார் தங்கவேல்.



"சார்! அப்படி எதையும் செய்து விடாதீர்கள். நான் ஈடுபட்ட எந்த வழக்கிலும் நான் தோற்றதேயில்லை. இந்த வழக்கிலும் நான் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த வழக்கில் கண்டிப்பாக நான் தோற்றுப் போகமாட்டேன். நான் இந்த வழக்கில் பாதி தூரம் முன்னேறி விட்டேன். நீங்கள் புதிதாக ஒருவரிடம் இந்த வழக்கை ஒப்படைத்து நான் வந்திருக்கும் அதே தூரத்திற்கு புது நபர் வருவதற்குள் அவன் இன்னும் நிறைய கொலைகளை செய்திருப்பான். மேலும்"



"சொல்லுங்கள்."



"அவனை நான் தான் பிடிக்க வேண்டும் என்று அந்த கில்லர் விரும்புவது போல் தெரிகிறது. என்னுடைய மாற்று இருதயத்திற்காக இரண்டு அப்பாவிகளை அவன் கொன்றிருப்பதை நீங்கள் அறிவீர்கள்தானே?" என்றார் சிங் .



"கேள்விப்பட்டேன். பிசிக்கலாக உங்களுக்கு உதவ ஓரு ஆள் தேவை சிங் .இதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள் தானே?"



"நீங்கள் சொல்வதை நான் ஒப்பு கொள்கிறேன் சார். அதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் கிடையாது சார். "



"ஓகே! இந்த கேஸை நீங்களே பாலோ பண்ணுங்கள்.உங்களுக்கு உதவ ஒரு ஆளை நாளை அனுப்புகிறேன்." என்றார் தங்கவேல்



"நன்றி சார்" என்ற சிங் போனை அணைத்தார்.



" உன் வாயில் சர்க்கரை தான் போட வேண்டும். என் உதவிக்கு ஒரு ஆளை அனுப்புவதாக சொல்லியிருக்கிறார்கள்" என்றார் சிங் வேதநாயகத்தை பார்த்து.



"சந்தோஷம் " என்றார் வேதநாயகம்.



அன்று இரவு சிங் நிம்மதியான உறக்கத்தில் இருந்தார். அவரது உறக்கத்தை கெடுக்கும் விபரீதம் ஓன்று புறநகர் சாலையில் நிகழ ஆரம்பித்திருந்தது.
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 6



நள்ளிரவு



பெருந்துறையிலிருந்து சித்தோடு செல்லும் பைபாஸ் ரோடு இருளில் நனைந்து கொண்டிருந்தது. ஓரமாக இருந்த மின்சார கம்பங்களில் இருந்து மெர்க்குரி விளக்குகள் ஆங்காங்கே எரிந்து சாலையின் இருப்பிடத்தை வெளிச்சத்தில் காட்டி கொண்டிருந்தன. வாகன போக்குவரத்துகள் குறைந்து போன நள்ளிரவு 12 மணி - மேட்டு சாலையின்வளைவிலிருந்து சட்டென்று சீறிக் கொண்டு கிளம்பியது சிகப்பு நிற சாண்ட்ரோகார். அதன் ஆக்சிலேட்டரை மிதித்து உச்ச வேகத்தில் வண்டியை பறக்கவிட்டான் கோபி கிருஷ்ணன். மறுநாள் சிங்கின் உதவியாளாக பணியில் சேரப் போகிறவன் இவன்தான். சில லாக்கப் டெத் கேஸ்களில் சம்மந்தப்பட்டு சஸ்பெண்டா கி மீண்டும் பணியில் சேர்ந்திருப்பவன்.



அவனை பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது ஓரு பிரெளன் நிற டஸ்கர் கார். அதன் உள்ளே இருந்தவனும் கோபியை போலவே உச்ச வேகத்தில் காரை ஓட்டிக் கொண்டிருந்தான். டிரைவிங்கில் அவனுக்கு போதுமான அனுபவம் இல்லாததால் கார் சாலையின் இருபுறமும் அலைந்து கொண்டிருந்தது. அவனது பின் சீட்டில் உட்கார்ந்திருந்த பெண்ணோ" கவனமாக காரை ஓட்டு" என்று உபதேசித்து கொண்டிருந்தாள் அவள் முகம் பயத்தில் வெளிறிப் போயிருந்தது.. அவனோ கோபத்தில் பரபரப்பில் இருந்தான். நொடிக்கு ஓரு முறை திரும்பி அவளை பார்த்தவன் " வாயை மூடு. என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும் " என்று உறுமினான்.



தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு கார்களும் விரைந்து கொண்டிருந்தன. தன்னை பின் தொடரும் காரைப் பார்த்து விசிலடித்து கொண்டான் கோபி.பின்னால் வருபவன் கண்டிப்பாக விபத்தை ஏற்படுத்தி விடுவான் என்று கோபிக்கு தோன்றியதால் ரிவர் யூ மிர்ரரில் அந்த காரை அவ்வப்போது கண்காணித்து கொண்டே வண்டியை செலுத்தி கொண்டிருந்தான்.



கோபியின் எதிர்பார்ப்பு நடந்து விட்டது.அதீத வேகத்தால் ஸ்டீரியங்கின் கட்டுப்பாட்டை இழந்து விட்ட டஸ்கர் காரன். மின்னல் வேகத்தில் அந்த விபத்து நடந்தேறியது.



கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் பக்க சுவரில் மோதி அப்படியே அந்தரத்தில் பறந்து குட்டி கரணம் அடித்து தரையில் விழுந்தது.கண்ணாடியும் இரும்பும் நொறுங்கும் ஓசையோடு அவர்கள் இருவரும் கத்தும் ஓசையும் சேர்ந்தே கேட்டது.



கோபி பிரேக்கை மிதித்தான். அவனது வண்டி கிறிச்சிட்டு நின்றது. கதவை திறந்து கொண்டு விபத்திற்கு உள்ளான காரை நோக்கி ஓடினான். கோபி காரை நெருங்கிய போது டிரைவர் சீட்டில் முகம் முழுக்க ரத்தத்துடன் அவன் முனகிக் கொண்டிருந்தான். அவனது பின் தலையில் இருந்து ரத்தம் சிறு அருவி போல் கொட்டி கொண்டிருந்தது. காரின் முன்பகுதியில் இருந்த பம்பரினால் ஏர்பேக் முழுதாக விரிவடையாமல் போய் பலத்த தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தான் அவன்.



" பின்னாடி சீட்டில் ஒரு பொண்ணு இருக்கு பாருங்க" என்றது இனம் தெரியாத ஓரு குரல்.



கோபி திடுக்கிட்டு திரும்பினான். பின்னால் ஓருவன் நின்றிருந்தான்.



"யாருய்யா? நீ ? " என்றான் கோபி.



"நைட் சிப்ட்தறி ஓட்டுபவன் . டீ வாங்கலாம் என்று ஆவின் பூத்திற்கு வந்தேன்" என்று மேட்டில் இருந்த ஆவின் பூத்தை கை காட்டினான்.



ஆவின் பூத்துகள் 24 மணி நேரமும் இயங்குவது அப்போதுதான் கோபிக்கு நினைவு வந்தது. பூத்திலிருந்து நிறைய ஆட்கள் காரை நோக்கி ஓடி வர ஆரம்பித்தனர். சிலர் ரத்தம் வடிந்து கொண்டிருந்த அவனையும் பின் சீட்டில் காயம் பட்டிருந்த பெண்ணையும் கதவை நீக்கி வெளியே கொண்டு வந்தனர். பின் சீட்டில் இருந்த அவளும் தலையில் கனமாக அடிபட்டிருந்தாள்.



"சீக்கிரமாக யாராவதுஆம்புலன்சிற்கு போன் செய்யுங்கள்" என்ற து ஒரு குரல்.



கோபி 108 க்கு போன் செய்தான். "இது எந்த இடம்?" என்றான் அருகில் இருந்தவனிடம்.



அவன் கூறிய லேண்ட் மார்க்கை ஆம்புலன்சிற்கு சொல்ல ஆரம்பித்தான் கோபி.



அதே நேரம் டிக்கியின் பக்கம் போன ஒருவன் அலறினான்.



"இங்க பாருங்க" என்றவனின் முகத்தில் பயத்தின் ரேகைகள்



கோபி லொக்கேசனை சொல்லிவிட்டு டிக்கி பகுதிக்கும் ஓடினான்.



டிக்கியின் பூட்டு உடைந்து மேல் கவர் திறந்து கொண்டிருந்தது. உள்ளே முழு நிர்வாணமாக ஒரு பெண் உடல் கிடந்தது.கோபி செல்போன் டார்ச்சை ஆன் செய்தான். இறந்து கிடந்தவளின் முதுகில் 9 என்ற எண் கத்தியால் கீறப்பட்டிருந்தது.
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 7



மறுநாள் காலையில் சிங் தனது அலுவலத்தில் உட்கார்ந்திருந்தார்.. சக ஊழியர்களின் நலன் விசாரிப்புகளை ஏற்று கொண்டிருந்த சிங்கின் செல்போன் மணியடித்தது.



சிங்கின் உயரதிகாரி தான் போனில் அழைத்திருந்தார்.



"சொல்லுங்கள் சார். நான் சிங் பேசுகிறேன்."



"சிங் .உன்னுடைய கொலைகாரன் மீண்டும் வேலையை ஆரம்பித்து விட்டான்."



"என்ன சார் சொல்கிறீர்கள்?"



"ஆமாம். நேற்று இரவு சித்தோடு பை பாஸ் ரோட்டில் ஒரு கார் விபத்து நடந்திருக்கிறது. அதில் ஒரு ஆணும் பெண்ணும் பலத்த காயமடைந்திருக்கிறார்கள். அவர்கள் பயணம் செய்த கார் டிக்கியில் ஓரு பெண் பிணம் நிர்வாணமாக கிடந்திருக்கிறது. முதுகில் 9 என்ற எண் கத்தியால் எழுதப்பட்டிருக்கிறது. நம்முடைய அதிர்ஷ்டம் நம்முடைய ஆள் ஓருவன் அந்த வழியாக அப்போது பயணம் செய்திருக்கிறான். அவன் தான் இந்த விபத்தை நேரில் பார்த்தவன். அவனது பெயர் கோபி கிருஷ்ணன். அவனைத் தான் உங்களுக்கு அசிஸ்டெண்டாக நியமித்திருக்கிறேன். இன்று அவன் இப்படி ஒரு விபத்தின் மூலமாக உங்களுடன் இணைந்து கொள்ள இருப்பது தான் விதி என்பது "



"இந்த கோபி எப்படிப் பட்ட ஆள் சார்.?" என்றார் சிங் .



"வேலையில் எமகாதகன்தான். ஆனால் சற்று முன் கோபி, ஆட்களை அடித்து சித்ரவதை செய்வதில் நிபுணன் அப்படியான நேரங்களில் சற்று உணர்ச்சிவசப்பட்டு வெறி பிடித்தது போல் நடந்து கொள்வான், அப்படி நடந்து தான் ஒரு லாக்கப் டெத்திற்கு காரணமாகி மூன்று மாதம் சஸ்பெண் டாகி திரும்பவும் வேலையில் இணைந்திருக்கிறான். அவனுடன் இணைந்து வேலை செய்வதில் உங்களுக்கு ஆட்சேபணை ஏதும் உண்டா?"



"இல்லை சார். எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. என்னால் யாருடனும் இணைந்து வேலை செய்ய முடியும் "



"குட். அப்படியானால் வேலையை ஆரம்பியுங்கள்"



சிங் போனை அணைத்து விட்டு பைக்கை கிளப்பினார்.



சித்தோடு ஸ்டேசனில் அவருக்காக காத்திருந்தான் கோபி.



அவரைப் பார்த்ததும் விறைப்பான சல்யூட்டோடு தன்னை அவன் அறிமுகப்படுத்தி கொண்டதை சிங் ரசிக்கவில்லை.



"பொது இடங்களில் சல்யூட் அடித்து ஆளை காட்டி கொடுத்து விடாதே பையா " என்றார் சிங் .நீட்டிய அவனது கைகளை குலுக்கிய படி.



"சாரி சார்" என்றான் கோபி நெளிந்தபடி.



"சிகரெட் குடிப்பாயா?" என்றார் சிங் சம்மந்தமில்லாமல் .



"சார். குடிப்பேன் சார்" என்றான் கோபிசங்கடமாக.



"வா. எதிர் டீக்கடைக்கு போகலாம்" என்ற சிங் டீக்கடையினுள் நுழைந்து அமர்ந்தார்..



"இரண்டு டீ என்றான் கோபி.



''அதற்கு முன்பாக இரண்டு சிகரெட் " என்றார் சிங் .



வந்த சிகரெட்டை பற்ற வைத்து புகையை இழுத்த சிங்" விவரமாக சொல். அன்று இரவு நடந்ததை " என்றார்.



கோடி நடந்தவற்றை முதலிலிருந்து சொல்ல ஆரம்பித்தான்.

அவன் சொல்வதை கவனமாக கேட்ட சிங்" காரில் அடிபட்ட அந்த இருவர், டிக்கியில் கிடைத்த அந்த பிணம் இப்போது எங்கே இருக்கிறார்கள் ?" என்றார்.



" அடிபட்ட இருவரையும் GHல் சேர்த்திருக்கிறேன். பாடி மார்ச்சு வரியில் இருக்கிறது. "



"குட்! விபத்திற்குள்ளான கார் ?"



"அது போலீஸ் ஸ்டேசனில் நிறுத்தப்பட்டிருக்கிறது"



சிங் சிகரெட்டை கீழே போட்டு மிதித்தார்.



"உங்களைப் பற்றி நான் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன்.சார். உங்களுக்கு அசிஸ்டெண்டாக வேலை செய்வதில் ரொம்பவும் சந்தோஷம் சார் எனக்கு " என்றான் கோபி.



"எனக்கும் சந்தோஷம் தான் கோபி. அந்த கில்லரை எப்படியாவது கண்டுபிடித்து விட்டால் அந்த சந்தோசம் இரண்டு மடங்காகிவிடும். சரி.வா. ஸ்டேசனுக்குள் செல்வோம்"



சிங் காசை கொடுத்து விட்டு எதிரே இருந்த ஸ்டேசனில் நுழைந்தார்.



சிங்கை பார்த்தவுடன் இன்ஸ்பெக்டர் சர வணன் எழுந்து வந்து கைகுலுக்கினார்.



"இங்கே உங்களை நான் எதிர்பார்த்தேன் சிங் !என் தம்பியை கொன்ற அந்த கொலைகாரன் மீண்டும் தன் வேட்டையை ஆரம்பித்து விட்டான்." என்றான் சரவணன் ஆவேசமாக .



"பொறுமை சரவணன்.ஆவேசப்படாதீர்கள். நாம் அவனை விரைவில் கண்டு பிடிப்போம்."



"உங்களுக்கு என்ன உதவி வேண்டுமோ கேளுங்கள் சார்" என்றான் சரவணன்.



"அந்த கொலைகாரன் ஒவ்வொரு கொலையையும் செய்வதற்கு முன்பாக காரையோ பைக்கையோ திருடுவதை வழக்கமாக வைத்திருக்கிறான். இந்த முறையும் அப்படி ஏதாவது காரை திருடியிருப்பான் என்று நம்புகிறேன். அப்படி கார் திருடு போன கேஸ் ஏதாவது இந்த ஸ்டேசனில் பதிவாகியுள்ளதா?" என்றார் சிங் .



"நேற்று இரவு ஒரு கார் கானாமல் போனதாக ஒரு கேஸ் பதிவாகியிருக்கிறது சார். " என்றான் சரவணன்.



"அந்த காரின் எண்ணும், விபத்தாகி ஸ்டேசனில் நிற்கும் காரின் எண்ணும் ஒன்றா என்று சரிபார்த்து விடலாமா?"



"மைகுட்னெஸ் .நான் இதை யோசிக்கவேயில்லை. இருங்கள். FIR காப்பியை எடுத்து வருகிறேன்."



"கொலைகாரன் ஓரே டெம்ளேட்டில் தான் இயங்கி வருகிறான்" என்றார் சிங் கோபியை பார்த்து. அவன் தலையசைத்தான்.



மூவரும் ஸ்டேசனுக்கு பின்னாடி இருந்த காலி இடத்திற்கு நடந்தனர். அங்கே ஓடுங்கி போய் நின்றிருந்த காரின் எண்ணை பார்த்த சரவணன் முகத்தில் பல்ப் எரிந்தது.



" பிரமாதம் சார். இரண்டும் ஓரே எண்கள். உங்கள் கணிப்பு தவற வில்லை" என்றான் சரவணன்.



சிங்கின் முகத்தில் ஓரு பெருமிதம் எட்டி பார்த்தது.
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 8



தன்னுடைய கணிப்பு மெய்யான தில் சிங்கின் மனம் திக்குமுக்காடியது, அதே சந்தோசத்தில் காரை மெல்ல ஓரு முறை சுற்றிவரத் தொடங்கினார் சிங் .திறந்து கிடந்த பின் சீட்டின் வழியாக காருக்குள் நுழைந்த சிங் கண்ணாடியருகே கிடந்த ஒரு பேக்கை கண்டுபிடித்தார். பின் சிட்டிற்கு கீழே அந்த பேக் விழுந்து கிடந்ததால் அவ்வளவு எளிதாக யார் கண்ணிலும் படாமல் சிங்கின் கண்களில் மட்டுமே பட வேண்டும் என்பது போல் அந்த பேக் கிடந்தது.



சிங் பர்த்டே பரிசை கிழித்து பார்க்கும் சிறுவனைப் போல் ஆவேசத்துடனும் ஆவலுடனும் அதை பிரித்துப் பார்த்தார். வெண்ணெய் போல் நழுவியது ஜிப்.வாயை திறந்த பேக்கினுள் கையை நுழைத்தார் சிங் .அவரது விரல்களில் மாட்டி கொண்டு வந்தது ஒரு பைல்.



"என்ன சார் அது?" என்றான் சரவணன்



" தெரியவில்லை" என்ற சிங் மெல்ல இறங்கி பான்ட் மீது அந்த பைலை வைத்து திறந்தார். மூவரும் ஆவலுடன் அதைப் பார்த்தனர்.



உள்ளே கல்யாண புகைப்பட ஆல்பம் போல நிறைய பேப்பர் கட்டிங் குகள் பாலிதின் கவருக்குள் சொருகப்பட்டிருந்தன.சிங் அந்த ஆல்பத்தை கவனமாக பார்வையிட ஆரம்பித்தார்.



அந்த கட்டிங்குகள் அனைத்துமே சிங் ஈடுபட்டிருக்கும் கேஸ் தொடர்பானவை. இதுவரை கொலைகாரன் செய்த 8 கொலைகளுக்கான பேப்பர் கட்டிங் குகள் அவற்றில் இருந்தன. முதல் கொலை நடந்த நாள், கிழமை , கொலையுண்ட வரின் புகைப்படம் என்று எல்லா விவரங்களும் தனித்தனியாக பைல் செய்யப்பட்டிருந்தன.



"இது நம்மிடம் இருக்க வேண்டிய விவரம். இந்த காரில் அதுவும் இவர்களிடம் எப்படி வந்தது?" என்றார் சிங் திகைப்புடன்



"ஓரு வேளை காரை ஓட்டி வந்தவன் சீரியல் கில்லராக இருப்பானோ? அவன் செய்த ஒன்பதாவது கொலையை பார்த்து விட்டதால் அந்த பெண்ணை காரில் கடத்தி வந்திருப்பானோ" என்றான் கோபி.



"நீ சொல்வதும் லாஜிக் படி சரியாகத் தான் இருக்கிறது" என்றார் சிங் .



" அவனால் காரை சரியாக ஓட்ட முடியவில்லை. அந்த பெண் அமைதியாக இல்லாமல் அவனை கார் ஓட்ட விடாமல் இடையூறு செய்ததை நானே நேரில் பார்த்தேன்" என்றான் கோபி.



"அப்படியானால் GHல் இருக்கும் அவன் தான் நாம் தேடும் கில்லராக இருக்க வேண்டும். ஆஸ்பிட்டலில் போதுமான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது தானே?" என்றார் சிங் பரபரப்புடன்



"இரண்டு போலிஸ்காரர்கள் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்." என்றான் கோபி.



"அந்த நாயை நான் தான் கொல்ல போகிறேன்." என்ற சரவணன் தன் துப்பாக்கியை இடுப்பிலிருந்து உருவினான்.



"கூல் சரவணன். நாம் சட்டத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர்கள். நீங்களே சட்டத்தை மீற நினைக்க கூடாது"



"போதும் சிங். உங்களுக்காக அவன் இரண்டு கொலைகளை செய்ததால் அவனை காப்பாற்ற முயற்சி செய்யாதீர்கள்." என்றான் சரவணன் .



"என்னை தப்பாக நினைக்காதீர்கள் சரவணன். அவனை எப்படியாவது உயிரோடு பிடிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். சட்டம் அவனை தண்டிக்கட்டும். உணர்ச்சிவசப்பட்டு விண் பிரச்சனைகளில் சிக்கி கொள்ளாதீர்கள்."



"அதனை நான் பார்த்து கொள்கிறேன்" என்றான் சரவணன்.



அவனிடம் இனி பேசி பயனில்லை என்பதை உணர்ந்த சிங் அங்கிருந்து கோபியுடன் கிளம்பினார்.



"அடுத்தது நாம் எங்கே போகிறோம் சார்?" என்றான் கோபி.



"ஹாஸ்பிடலில் இருக்கும் அந்த இரண்டு பேரை பார்க்கப் போகிறோம். அவர்கள் பேசும் நிலையில் இருக்கிறார்களா என்று விசாரித்து சொல். இந்த சரவணன் அங்கே வந்தால் உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்று சொல் அவசரப்பட்டு அவனை கொன்று விட போகிறான்.எங்கே நீ வந்த வண்டி ?"



"என் பைக் வெளியே நிற்கிறது சார்"



"நேற்று காரில் வந்ததாக சொன்னாயே?"



"அதை நான் சர்வீசிற்காக விட்டிருக்கிறேன்"



கோபி ஹாஸ்பிடலுக்கு போன் செய்தான். மறுமுனையில் எடுத்த டாக்டரிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டவன் "நேற்று இரவு நான் கொண்டு வந்து சேர்த்த ேப சண்டுகள் இப்போது பேசும் நிலையில் இருக்கிறார்களா?" என்றான்.



"அவர்கள் இன்னும் சுயநினைவிற்கு திரும்பவில்லை." என்றார் டாக்டர் .



போனை பிடுங்கிய சிங்" டாக்டர் நான் கோபியின் சீனியர் பேசுகிறேன். அட்மிட்டான அந்த ஆணின் முதுகில் துப்பாக்கி தோட்டா துளைத்த தழும்பு இருக்கிறதா என்று பார்த்து சொல்ல முடியுமா? "என்றார்.



" காத்திருங்கள். பார்த்து விட்டு சொல்கிறேன்" என்றது டாக்டரின் குரல்.



சிங் காத்திருந்தார்.
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 9



டாக்டரின் பதிலுக்காக காதை தீட்டிக் கொண்டு காத்திருந்தார் சிங் . சில நிமிட மவுனங்களுக்குப் பிறகு டாக்டரின் குரல் ரி சிவ ரில்கேட்டது. "ஸாரி மிஸ்டர். நீங்கள் குறிப்பிட்டது போல் எந்த குண்டு காயத் தழும்புகளும் அந்த நபரின் தோளில் இல்லை."



"ஓகே' டாக்டர் .இன்னும் சற்று நேரத்தில் நாங்கள் அங்கே வருகிறோம்" என்ற சிங் போனை கோபியிடம் நீட்டினார்.



"நீங்கள் திடிரென போனைப் பிடுங்கியதும் நான் சற்று பயந்து விட்டேன்" என்றான் கோபி.



"எனக்கு கொலைக் காரன்அவன் தானாவென்று உறுதி செய்து கொள்ள வேண்டும் அந்த ஆவலில்தான் சற்று வரம்பு மீறி நடந்து கொண்டு விட்டேன்.ஐ யாம் ஸாரி" என்றார் சிங் வருத்தத்தோடு.



" இட்ஸ் ஓகே சார். இந்த கேஸில் உங்களுக்கு உள்ள ஆர்வம் எனக்கு புரிகிறது. வாருங்கள்GHற்கு போகலாம்."



இருவரும் தங்களது வண்டியை கிளப்பினர்.



GH உள்ளேயிருந்த வண்டி பார்க்கிங்கில் வண்டியை பார்க் செய்து விட்டு இருவரும் உள்ளே நடந்தனர்.



"முதலில் நாம் பேசண்டுகளை பார்த்து விடலாம்" என்றார் சிங் .காவலுக்கு இருந்த போலீஸ்காரர்களின் சல்யூட்டை ஏற்று கொண்ட சிங்" இரண்டு பேரும் ஒரே அறையில் தான் இருக்கிறார்களா?" என்றார்.



"இல்லை சார். தனித்தனி அறையில் தான் இருக்கிறார்கள்," என்றார் காவலுக்கு இருந்த போலீஸ்காரர் .



சிங் படுக்கையில் படுத்திருந்தவனை பார்த்தார். அவனுக்கு 25 வயதிற்குள் இருக்கலாம். பிரஞ்ச்பியர்ஸ்தாடி வைத்திருந்தான். கண்களை முடி படுத்திருந்தவனின் நோயாளிக் குறிப்பு அட்டையை பார்த்தார் சிங் .அதில் பேசண்டின் பெயர் என்ற இடத்தில் X என்று குறிப்பிடப்பட்டிருப்பதை பார்த்து குழப்பமடைந்தார் சிங் .



"நான் டாக்டரை பார்க்க வேண்டுமே?" என்றார் சிங் .



" இப்போது வந்து விடுவார். காத்திருங்கள்"



சிங் காத்திருந்தார். என்ன தான் பாதுகாப்பு கொடுத்திருந்தாலும் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த இந்த இடத்தில் இந்த இருவரையும் வைத்திருப்பது ஆபத்தான விசயம் என்று சிங்கிற்கு தோன்றியது.



சற்று நேரத்தில் உள்ளே நுழைந்த டாக்டரிடம் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டார் சிங் .



" பாருங்கள் சிங் .இருவருக்குமே தலையில் பலத்த அடிபட்டிருப்பதால் தங்கள் சுயநினைவை இழந்து விட்டார்கள். அவர்களின் பெயரைக் கூட இருவருமே மறந்து போய்விட்டார்கள். அதனால் தான் அவர்களின் பெயருக்கு பதிலாக X என்று குறிப்பிட்டு அட்டையில் எழுதியிருக்கிறேன். அவர்களைப் பற்றிய விவரங்களை அவர்களாக சொன்னால் தான் உண்டு. இல்லையென்றால் அதையும் நீங்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும்" என்றார் டாக்டர் .



" இவர்களுக்கு சுய நினைவு திரும்ப வாய்ப் பே இல்லையா டாக்டர் "



"அப்படி சொல்ல முடியாது. இப்போதைக்கு நினைவுகள் வந்து வந்து போகும். சில நாட்களில் பழைய நினைவுகள் முற்றிலுமாக திரும்பி விட வாய்ப்பு இருக்கிறது. சில நேரங்களில் பழைய நினைவுகள் திரும்பாமலேயே போய் விடவும் சாத்தியம் உண்டு"



" என்ன டாக்டர் சொல்கிறீர்கள்?"



"ஆமாம். அப்படி பழைய நினைவுகள் திரும்பாமல் போய் விட்டால் புதிய வாழ்க்கைக்கு இவர்கள் தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டியது தான் "



" இவர்களின் பழைய வாழ்க்கையில் உள்ள நண்பர்கள் இவர்களை சந்தித்தால் ?"



" இவர்களுக்கு அடையாளம் தெரியாது. புதிய அறிமுக மற்ற ஆட்களைப் போல நடந்து கொள்வார்கள். இவர்களை பற்றி நாளிதழில் விளம்பரம் செய்து விடாதீர்கள். அது அவர்கள் மனநிலையை மேலும் மோசமாக்கிவிடும்" என்றார் டாக்டர் .



அப்படியானால் இவர்கள் யார் என்பதையும் நானே தான் கண்டுபிடிக்க வேண்டும்"



"ஆமாம்"



"நான் அடிபட்ட அந்த பெண்ணை பார்க்கலாமா?" என்றார் சிங் .



"கண்டிப்பாக . அவள் பெண்கள் வார்டில் இருக்கிறாள் . வாருங்கள், போகலாம்" என்றார் டாக்டர் .



சிங்கும் கோபியும் டாக்டரை பின்தொடர்ந்தனர்.பெண் காவலர்கள் இருந்த அறையில் Lாக்டர் நுழைந்தார்.



" இவளது பெயரும் என்னவென்று தெரியவில்லை. நீங்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும். இப்போதைக்கு இவளை X என்று தான் குறிப்பிட்டு கொண்டிருக்கிறேன்."



சிங் அவளையே பார்த்தார். அவருக்கும் 25 வயதிருக்கும். மருத்துவ உடையில் அப்போதுதான் மலர்ந்திருந்த பூப்போல் இருந்தாள். சிங் பார்த்து கொண்டிக்கும் போதே அவளது கண் இமைக ளுக்குள் பாப்பாக்கள் உருள ஆரம்பித்தன.சிங் அவள் கனவு கண்டு கொண்டிக்கிறாள் என்று புரிந்து கொண்டார். அவள் உதடுகள் மெல்ல திறந்தன. சற்று நடுக்கத்திற்கு பின்பு" என்னை விட்டுவிடு. நான் பார்த்தனை யாரிடமும் சொல்ல மாட்டேன்" என்றவள் வீல் என்ற அலறலுடன் எழுந்தாள்.



சிங்கை பேச வேண்டாம் என்று கை காட்டிய டாக்டர் "என்னம்மா? ஏதாவது கனவா?" என்றார்.



"ஆமாம் டாக்டர் . யாரோ என்னை கொல்ல வருகிறார்கள் டாக்டர் " என்றாள் அவள்.



" ரிலாக்ஸ் அது வெறும் கனவுதான். இப்போதுநான் ேகட்கிற கேள்விக்கு பதில் .சொல்கிறாயா?"



"நான் டாக்டர் என்பதை எதை வைத்து கண்டுபிடித்தாய்?"



"உங்களின் உடை, பினாயில் வாசம்"



"குட் ! உன்னோட பேர் என்ன?"



" என்னோட பேரா?"



"எஸ்?"



அவள் யோசிக்க ஆரம்பித்தாள். சிங் அவளையே பார்த்து கொண்டிருந்தார்.
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 10



சிங் அவளையே பார்த்து கொண்டிகுந்தார். அவளுக்கு டாக்டரை மருத்துவமனையை அடையாளம் தெரிந்திருக்கிறது. உலக விசயங்களில் அவளுடைய அறிவு அப்படியே இருக்கிறது ஆனால் அவள் யார் என்ன வேலை செய்து கொண்டிருந்தாள். இந்தக் காரில் அவளுடன் பயணித்தவன் யார் என்பதையெல்லாம் அவள் மறந்துவிட்டிருந்தாள். சிங்கிற்கு மனித மூளையின் செயல்திறனை நினைத்து ஆச்சரியமாக இருந்தது. அவள் இன்னமும் தன் தலையை பிடித்தபடி யோசித்து கொண்டிருந்தாள்.



" என் பெயர் எனக்கு நினைவு வரவில்லை. ஆமாம் நான் யார்?" என்றாள் அவள்.



"மனதை குழப்பி கொள்ள வேண்டாம் ரிலாக்ஸ் .இந்த கார் விபத்தில் நீ உன் பழைய நினைவுகளை இழந்து விட்டாய். உனக்கு விரைவிலேயே நினைவு திரும்பக் கூடும். அப்போது நீ யார் என்பதை நீயே எங்களுக்கு சொல்வாய்" என்றார் டாக்டர் .



"அது வரை எனக்கு எந்த பெயரும் கிடையாதா?" என்றாள் அவள்.



"இது சிக்கலான விசயம்தான். உன்னை இன்னும் எத்தனை நாட்களுக்கு பெயர் இல்லாமல் அழைத்து கொண்டிருப்பது? சரி உனக்கு ஒரு நல்ல பெயரை வைத்து விடலாம். அந்த பெயரை வைக்கப் போவது இங்கிருப்பவர்கள் அல்ல. நீ தான் உனக்கான பெயரை வைக்கப் போகிறாய். நீ சொல்லும் அதே பெயரில் தான் உன்னை நாங்கள் அழைக்க போகிறோம்" என்றார் சிங் .



டாக்டர் தன் செல்போனில் குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் வெப்சைடிற்கு சென்றார்.



"இதோ! இதில் ஏராளமான பெயர்கள் ஆல்பா பேட்டிக் வரிசையில் இருக்கின்றன. உனக்கு பிடித்தமான பெயரை நீயே தேர்ந்தெடு " என்ற டாக்டர் தன் செல்போனை அவளிடம் நீட்டினார். அவள் அதை கையில் வாங்கி கொண்டு ஏவரிசையில். படிக்க ஆரம்பித்தாள். அனிதா என்ற பெயரை இரண்டு மூன்று முறை உச்சரித்தவள் "இந்த பெயர் எனக்கு வெகு பரிட்சையமாக இருக்கிறது. கேள்விப்பட்டது போலவும் இருக்கிறது." என்றாள்.



"அப்படியானால் அந்த பெயரையே உனக்கு வைத்து விடலாம். இந்த நிமிடத்திலிருந்து உன் பெயர் அனிதா " என்றார் சிங் .



"விநோதம். அப்பா அம்மா குழந்தைக்கு பெயர் வைத்து பார்த்திருக்கிறேன். இங்கே தனக்கான பெயரை தானே வைத்து கொள்வதை இப்போது தான் பார்க்கிறேன்" என்றான் கோபி.



"சரி அனிதா நன்றாக ஓய்வெடு. விரைவிலேயே உன்னை யார் என்று கண்டுபிடிக்கிறேன்." என்றார் சிங் .



இருவரும் டாக்டரிடம் விடை பெற்றுக் கொண்டு வெளியே வந்தனர். சிங் வராந்தாவில் யோசனையுடன் நின்றார்.



"கோபி! எனக்கு ஒரு உதவி செய்" என்றார் சிங் .



"சொல்லுங்கள் சார்!"



நேற்றும் இன்றும் எந்த ஸ்டேசனிலாவது பெண் மற்றும் ஆணை காணவில்லை என்று ஏதாவது புகார் பதிவாகி இருக்கிறதா என்று பார் .அப்படி பதிவாகி இருந்தால் போட்டோ மற்றும் மேல் விவரங்களை சேகரித்து கொண்டு என் அலுவலகத்திற்கு வா"



"ஓகே சார்' நீங்கள்?"



" மார்ச்சு வரியில் உள்ள அந்த பெண்ணின் பிணத்தை பார்த்து விட்டு வருகிறேன்"



கோபி அங்கிருந்து கிளம்பினான்

சிங் அருகிலிருந்த மார்ச்சு வரிக்குள் நுழைந்தார். தரையை கூட்டி கொண்டிருந்தவன் "இங்கே யெல்லாம் உள்ளே வர பர்மிசன் கிடையாது. வெளியே போங்கள்" என்றான்.



"போலீசிற்கு கூடவா?" என்றார் சிங் தன் அடையாள அட்டையை காட்டியபடி.



திடீர் பணிவை உடலிலும் பேச்சிலும் காட்டியவன்" சொல்லுங்க சார் என்ன வேணும்?" என்றான்.



சிங் நடந்த சம்பவத்தை விவரித்தார்.



"அட அந்த நெம்பர் எழுதிய பிணமா?வா சார் போலாம். அது பீரீசர் ரூமில் இருக்கிறது" என்றவன் நடக்க ஆரம்பித்தான்.



சிங் அவனை பின் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தார். பிரீசர் ரூமின் கதவை திறந்ததும் ஜில்லென்ற காற்றும் நாற்றமும் சிங்கின் முகத்தில் அடித்தது.



வரிசையாக அடுக்கப்பட்டிருந்த நீண்ட லாக்கர் பாக்ஸ்களில் ஒன்றை திறந்தவன் "இ தான் சார்" என்றார்.



சிங் எட்டி பார்த்தார் உள்ளே லேசான பனி விலகி அவள் தெரிந்தாள். ஸ்லிப்பிங் பியூட்டி என்பதை சிங் கேள்வி பட்டிருந்தார். இப்போது தான் முதல் முறையாக பார்க்கிறார். அழகான ஓவியத்தை போல் அவள் வாய் திறந்து படுத்திருந்தாள்.



"போஸ்ட் மார்டம் ரிப்போர்ட் வேண்டுமென்றால் டாக்டர் தான் வரணும்" என்றான் அவன்.



" அவர் வர எவ்வளவு நேரமாகும்" என்றார் சிங் .



" வருகிற நேரம் தான். வெயிட் பண்ணுங்க"



சிங் சுற்றும் முற்றும் பார்த்தார். இறந்து போன வர்களின் உடைகள் தாறுமாறாக ஒரு மூலையில் வீசப்பட்டிருந்தன.சில எலிகள் உடைகளின் நடுவே விளையாடிக் கொண்டிருந்தன. மற்றொரு ஓரத்தில் செருப்புகள் குவியலாக கிடந்தன. சிங்கின் பார்வை செருப்பு குவியலில் நிலைத்தது. அதிலிருந்த ஒரு ஜோடிஹை ஹீல்ஸ் செருப்பு தான் சிங்கின் கவனத்தை கவர்ந்திருந்தது.



"அந்த செருப்பு யாருடையது?" என்றார் சிங் .



"இப்ப நீங்க பார்த்தீங்களே அந்த பொண்ேணாடது. அந்த செருப்பை கழட்ட வே முடியலை. முழங்கால் வரை இறுக்கி கட்டியிருந்தது. நானே அதை வெட்டித்தான் எடுத்தேன்"



சிங் அந்த ஹை ஹீல் ஸை நோக்கி நடந்தார்.
 
Top Bottom