Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BK NOVEL இரவின் நிறம் நீலம் - Tamil Novel

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

 
Last edited:

Sathya sanjeevi

New member
Vannangal Writer
Messages
3
Reaction score
8
Points
3
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி :
கருப்பு வண்ணம் ;
"முல்லை",

இரவின் நிறம் நீலம்!



அதிகாரம் : 1

"நிழல் உருவாய் திருமகள் மகிழ்வென நிகழ்ந்தாள்"!


மக்கள் அரவம் நிறைந்த
நீண்ட நெடிய நெடுஞ்சாலையின் தார்ச்சாலைகளே உருகி ஓடும் அளவிற்கு இன்றைய பகலெல்லாம் கொளுந்து விட்டு எரிந்த வெயிலின் தாக்கம் தணிய தொடங்கி இருந்தது.

பகலின் வெட்கை சிறிதும் தற்போது இன்றி,
இன்றைய மாலை நேரத்து பொழுதின் சூழல் மிக ரம்யமாக குளிர்ந்த நிலவோடு ஒளிர துவங்கி இருந்தது.

ஒரு வழியாக சென்னையின் தேசிய நெடுஞ்சாலையின் புறநகரான பெருங்களத்தூரை தாண்டி விட்ட மகிழ்ச்சியில் இருந்தான்
ராகவ்.

காரின் வேகத்தை 100 கிலோ மீட்டர் வேகத்தில் வைத்து விட்டு
Auto drive mode Fix செய்து விட்டு டிரைவர் சீட்டில் அமர்ந்து கொண்டே கண்களை மூடி நேற்றிரவு தனது Official Mail id க்கு வந்த சங்கேத வார்த்தைகளை நினைவு கூர்ந்தான் ராகவ்.

ராகவ் தற்போது பயணிக்கும் கார் இந்தியாவின் முதல் Autonomous vehicles நிறுவனமான
"ராகவ எந்திரன் டெக்னாலஜீஸ்" நிறுவனத்தின் புதிய வெளியீடான "Pushpa vaghana" Brand ன் முதல் கார்.

இந்திய தொழில்நுட்ப செயற்கை நுண்ணறிவின் இயக்கத்தில் இயக்கப்படுகிறது என்பது தான் புஷ்ப வாகனா மகிழுந்துகளின் கூடுதல் சிறப்பு.


தனது காரின் உள்ளே இருந்த Virtual robot தன் உடன் பேசாமல் மிக உன்னிப்பாய் ஏதோ ராகவ் சிந்திப்பதை கவனித்து
" hey RE
என்ன யோசிக்கிறாய்?" என கீச்சுகுரலில் விளித்தது.

கார்மிக வேகமாய் இயல்பாய் சாலையில் சென்று கொண்டிருக்க,
எந்தபதிலும் அளிக்காமல்
மேலும் ஆழ சிந்தனையில் இருந்த ராகவ்வின் முகம் இன்னும் அதீதமாய் யோசனையில் மூழ்கியது.

அப்போது ராகவ்வின்
கார் திடிரென ஆட்டோமெட்டிக்காக நின்றது.

சரியாக ஒரு மீட்டர் இடைவெளியில்
கொரியன் டிராமாவில் வரும் மஞ்சள் நிற முகம் கொண்ட பெண்ணின் சாயலாய் இருந்த பெண் தன் கைகளால் தன் காதுகளை மூடி கொண்டு
கண்களை மூடி நிலைகுலைந்து நின்றிருந்தாள்.

திடிரென உலுக்கி போய் எழுந்த ராகவ் செவியில் "One person cross our way, so we cannot able to move " என்ற ரோபட்டின் வார்த்தைகள் உரைக்கவே இல்லை.

ஏதோ நண்பகலில் சூரியன் ஒளியில் மின்னி தலை சாய்ந்தே ஒளிரும், சூரிய காந்திப் பூ நிற சாயலாய் நின்றிருந்த பெண் மயங்கி விழாத குறையாய் தடுமாறி நிற்க,
"Open the car door "என ராகவ் கூற ,
தலைசாய்த்து பெருமரியாதையாய் டிரைவர் வாகன கதவை திறப்பதை போல ரோபட் உபசரித்து கார் கதவை வாய்ஜால வார்த்தைகளின் மூலமே பேசி ஏழு வினாடிகளில் திறந்தது.

இறங்கி சென்றவன் நலம் விசாரிக்க அப்பெண்ணின் அருகே செல்ல அதிர்ச்சியில் அப்படியே நின்றவள் தொய்ந்து மயங்கி கீழே விழ சரிய தொடங்கியவள் ராகவ்வின் நெஞ்சில் மயிலிறகென சாய்ந்து விழுந்தாள் அம்மங்கை!

ராகவ்வின் மூச்சுகாற்று பட்டதும் அரைமயக்கத்தில் அவனை விட்டு விலக முற்படாமல் கண்விழித்தவள்
"என்னை மதுரைக்கு கூட்டிட்டு போறீயிடுறீங்களா ப்ளீஸ்" என கெஞ்சினாள்.


அவளிடம் எதுவும் கேள்விகள் கேட்காமல் மெல்ல அவளை மயிலிறகுகளை போல தன் கைகளில் ஏந்தி தன் காரின் பின் சீட்டில் வைத்தான் ராகவ்.

உடனடியாய் அவளது உடல் வெப்பநிலையை சோதித்த விர்ச்சுவல் ரோபட்
"She got Sudden shock
She also have thirst
First give water for her" என அதிர்ச்சியில் இருந்த அவளுக்கு தாகம் தீர்க்க தண்ணீர் கொடுத்து முதலுதவி செய்ய சொன்னது.

தன் காரின் பின் சீட்டிலிருந்த Mini water store box ல் இருந்து குளிர்ந்த நீரை அவளுக்கு குடிக்க கொடுத்தான் ராகவ்.


மெல்ல நீர் அருந்தியவள் முகம் தனக்கு மிக நன்கு பழகியவள் போல இருக்கிறதே என்கிற உணர்வு ராகவ்விற்கு தோன்றி கொண்டே இருந்ததை விடுத்து காரின் முன் பக்கம் வர எழுந்தான்,
அவனை நகர விடாமல் அவனது மடியிலேயே தலைசாய்த்து கொண்டாள் பெயரற்ற அம்மாது!

எந்த உணர்வுமின்றி கல் போலே இருந்த ராகவ் எழ முடியாது அப்படியே இருந்தவன்
தனது ரோபட்டிற்கு மதுரை நோக்கி நில்லாமல் செல்லுமாறு கட்டளையை விடுத்தான்.

காரின் rotating, roof-mounted Lidar sensor monitors ல் மதுரை வரைக்குமான டெஸ்டினேசனை ஆட்டோமெட்டிக்காக மீண்டும் ரீசெட் செய்தது ரோபோர்ட்.

dynamic three-dimensional (3D) வரைபடமானது காரின் உள்ளே இருந்த மானிட்டரின் ஒளித்திரையில் தெளிவாக தூரத்தை கணக்கிட்டு செல்லும் வழிகளில் ட்ராபிக் இல்லை என்கிற அடிசனல் செய்திகளையும் முன்கூட்டியே Forecasting செய்து காட்டியது.

Artificial intelgence ன் Update version robot ஆல் சீராக கார் மீண்டும் பயணிக்க துவங்கியது.
ரயில்பயணம் போலே
தேரில் உலாவருவதை போல மிக ரிலாக்சான மனநிலையை கார் பயணம் உருவாக்கியது.

வாகனத்தில் பயணிக்கும் ராகவ்விற்கு,
[AI to provide driving analysis and real-time alerts to warn drivers of possible dangers like lane departure, forward collisions and driving conditions.] எதிரில் வரும் வாகனங்கள், பின்னே வேகம் ஆக வரும் வாகனங்கள் என்று அனைத்தையும் மைக்ரோ நொடிகளில் கால்குலேட் செய்யும் தனித்தன்மையும் அதன் எச்சரிக்கைகளையும்
வாகனத்தின்
மானிட்டர் ராகவ் கவனிக்க ஏதுவாக
அடிக்கடி காட்டி கொண்டே வந்ததது.

மனிதர்களின் உணர்வுக்கு நிகராக பள்ளம் மேடுகளையும் Visible ஆக 100 அடிக்கு முன்னேயே கண்டு கொண்டு அதற்கேற்றாற் போலே வாகனத்தை இயக்கும் அதிநவீன ஆட்டொமெட்டிக் சிஸ்டத்தை கொண்டது "புஷ்ப வாகனா"

சில நிமிடங்கள் கண் மூடி சிந்தித்தவன் கண் திறந்த போது மேல்மருவத்தூர் பகுதியை தாண்டி இருந்தான்.


"Good afternoon Venus" என்று மெல்லிதாய் அழைத்தான்.

யாருமற்ற காரில் தனியாக புலம்புகிறானா என்று தூங்கி கொண்டிருந்த பெண் விழித்து பார்த்தாள்.
உடனே அவனது காரின் AI ரோபட் பேச தொடங்கியது.

" Good afternoon Rahav " என்ற பெண் குரல் மிக மிக மயக்கும் பெண் குரலில் வந்ததை கேட்டு அப்பெண் மீண்டும் பயந்தாள்.

"இங்க எதுவும் பேய் கீயை கூட்டிட்டு வந்துட்டீங்களா "என பயந்தபடி கேட்டாள்.

"அதெல்லாம் இல்லீங்க,
கார்ல Robot system என சொல்லி கொண்டிருந்தவன்
Oh sorry !
கார்ல இருக்கிற மிசின் வாய்ஸ் தான் பெண் குரல்ல கேக்குதுங்க "என சொல்லி விட்டு அவளை அமைதியாக்கினான் .
சற்றே தெளிந்தவள் தான் அவன் மடியில் இருப்பதை தெளிவாய்
உணர்ந்து,
எழுந்து காரின் சீட்டில் தலை சாய்த்து அமர்ந்து கொண்டாள்.

"ஒண்ணும் பயப்படாதீங்க,
நேரா நானும் மதுரைக்கு தான் போறேன்,
மொதல பதட்டபடாம இருங்க,
பயப்படாதீங்க உங்க அட்ரஸ் சொல்லுங்க .
உங்கள ட்ராப் பண்ணிறேன் "என மிக மெல்லிய குரலில் நிதானமாய் நிறுத்தி அவன் பேசியதை அவள் வெகுவாய் ரசித்தாள்.


"I think she adores you" என பெண் குரல் மீண்டும் சொல்ல

"Shut your voice sensor"
என ராகவ் சற்றே எரிச்சலாய் கூற
அப்பெண் சற்றே விநோதமாக பார்த்தாள்.


மனிதர்கள் பெண்கள் மீது அதீத ஈர்ப்பு கொண்டவர்கள் போல,
உயிரற்ற கணினிக்கு கூட பெண் குரலில் தான் உயிர்ப்பை கொடுக்கிறார்கள் எனஅவள் மனதில் நினைத்து கொள்வதை Robot sense செய்து புரிந்து கொண்டது.
உடனே,
" பூக்கள், ஆறு,ஊர்ன்னு எல்லாத்துக்கும் பெண் பெயர் வைக்கிறாங்க,Software program ஐ மட்டும் விட்டு வைப்பாய்ங்களா என்ன?
நீங்க நெனைக்கிறது அத்தனையும் உண்மைதான் பெண்ணே "என சொல்ல நினைத்த ரோபட் ,
ராகவ் கூறிய கட்டளை சொல்லுக்கு கட்டுபட்டு அமைதியான
Virtual robots மைண்ட் வாய்ஸ்ன்னு நெனைச்சி சத்தமா பேசினத உணரும் முன்னே
"Enough" என கத்தினான் ராகவ்.
கப்சிப் என பேரமைதியானது வீனஸ் ரோபட்.

கார் விழுப்புரத்தை தாண்டி வந்து கொண்டிருந்தது தற்போது.

கார் ஜன்னல் வழியே சாலையின் மறுபுறத்தை பார்த்த வண்ணமே இருந்தாள் அப்பெண்.

"Play. ' Indian 2 ' songs"
என ராகவ் கூற

"ஏழையை அழிக்கும்
ஊழலை ஒழிக்கவே
வர்றாருடா இந்தியன் தாத்தா!

காசள்ளி திண்ணா உன் வயிறு நெறையுமா?
மீசை முறுக்கியே உன்ன
வேட்டையாடியே
கதிகலங்க வைக்க வர்றாருடா
இந்தியன் தாத்தா "
என்றே பாடலுக்கு மெட்டிசைக்க பட்ட
அனிருத் இசையின் அட்டகாசமான
Folk இசை பாடல் ஒலிபரப்பானது.


காரின் ஏசி குளுமை ராகவ்வின் காது மடல்களை ஜில்லிட வைத்தது.



சாலையெங்கும் தொடர்ச்சியாய் மக்கள் கூட்டம் வழக்கம் போலே ஆர்ப்பரித்திருந்தது.



தன் கைகளில் Inject செய்திருந்த பட்டனை விரல்களால் அழுத்தினான் ராகவ் .....

உடனே கலராக வெற்று காற்றில் அவன் முன்னே டிஜிட்டல் திரை ஒளிர்ந்தது .....

அதில் அவனது A to Z schedule information File தேடி கிளிக் செய்தான்.

"Meeting with நவரத்னா

Call her 9876543210

At 11 Pm "என்று திரையில் நேரம் ஒளிர்ந்தது .
இன்னும் ஆறு மணி நேரத்தில் மதுரைக்கு செல்ல வேண்டும் என்கிற பிரக்ஞை ராகவ்வை மேலும் உஷ்ணப்படுத்தியது.

உடனே "Hae venus!
Go to sleep now " என்றான். திரை உடனே மறைந்தது.

ராகவ் நிறுவனமான
'ராகவ எந்திரன்'
இந்திய டிஜிட்டல் யுகத்தின்
புது வரவு!
அந்நிய செலவாணியை கோடி கோயாய் வாரி குவித்து தரும் வற்றாத புதையல் வேட்டை என்றே சொல்லலாம்.

நவீன எலக்ட்ராக்னிஸ் சாதனங்களை Fusion technical முறையில் இணைத்து
புது புதுப்பயன்பாடுகளை மக்களுக்கு அறிமுகப்படுத்துவதிலும் அதனை சந்தை படுத்துவதிலும் ராகவ் அதிமேதமைத்துவம் மிக்கவன்.
இந்தியாவின் நவீன ஸ்டீவ் ஜாப்ஸ் ஆக தான் மக்கள் ராகவ்வை அணுகுகிறார்கள்.


தன்னுடைய ரோல்ஸ் ராயல்ஸ் காரில் ஸ்டைலிஷ்ஷாக கோர்ட் சூட் அணிந்து ராகவ் இறங்கி வருவதை காண்பவர்கள் தேவலோக ராஜ குமாரனை போல கண்டு மெய் சிலிர்ப்பார்கள் .

ஒரு நிமிடம் ராகவ் உரையை கேட்க சர்வதேச நிறுவனங்கள் காத்திருக்கும் போது,
இத்தனை பிசி செடூலில் ராகவ் மதுரை அருகே உள்ள சிறு கிராமத்திற்கு தற்போது சென்று கொண்டிருக்கிறான்.

என்ன காரணமாக இருக்க முடியும்?

ஒரே ஒரு மெயில்!

நிமிடத்திற்கு ஆயிரம் டாலர் சம்பாதிக்கும் நபர் அனைத்தையும் மறந்து விட்டு ஓடி வந்து கொண்டிருக்கிறான்.
திடிர் வரவாய் வந்த மாது உடன்!

பொதுவாக வே Introvert ஆன ராகவ் அதீதமாக தனிமையில் தான் இருப்பான் எப்போதும்.
இவனது தனிமையின் நீரோட்டத்தில் அறிமுகம் ஆகா பெண்ணொருத்தி இருப்பதை புத்தம் புது மனச்சிலிர்ப்பாய் உணர்ந்தான்.

அவளாக சொல்லாத வரை ஏதும் கேட்டு விட கூடாதென்றே இருந்தான்.

தன் கைகளை குவித்து மூடிய வண்ணமே அமர்ந்திருந்த அவளது பாங்கு ஏதோ ஒரு பெக்கூலியர் ஃபீலை ராகவ்விற்கு கொடுத்தது.


திருச்சியின் NH சாலையில் செல்லும் போது இரவு சூழ ஆரம்பித்து இருந்தது.

மெல்ல காற்றில் இருள் பரவி பகலை இருளாக மாற்றும் ஒளியின் இருப்பின்மை குறித்து சற்றே யோசித்தவன்,
நேற்றைய மெயில் குறித்து மீண்டும் யோசித்து கொண்டிருந்தான்.


" The secret Society of Kumari continent"
எனும் தலைப்பின் கீழ் தமிழ் பிராமி மொழி நடையில் எழுதப்பட்ட சங்கேத வார்த்களுடன் வந்த மெயிலில்
Emergency எனும் சொல்லும் இருந்தது.

சிந்து சமவெளி நாகரீகத்தின் சித்திர எழுத்து வடிவத்தின் தமிழ் நீட்சியாக வந்த அவ்வார்த்தைகள் ராகவ்வின் அட்ரீனலை துரிதமாக தூண்டி இருந்தது.


சட்டென இரவின் துவக்க பொழுதான இக்கணத்தில் மழை பெய்ய துவங்க
மீண்டும் தற்போதைய சூழலுக்கு வந்தான் ராகவ்.


மழைச்சாரலை ரசிக்க துவங்கிய பெண் "கார் கண்ணாடியை கொஞ்சம் இறக்குங்களேன் .
கொஞ்சம் காத்து வாங்கிகிறேங்க"
என குழந்தைதனமாக கேட்டாள் .

பதிலுக்கு மெல்லியதாக புன்னகைத்தா ராகவ்
"Open the mirror door venus" என கட்டளை பிறப்பித்தான் .
உடனே அப்பெண்ணின் இடதுபக்க கார் கண்ணாடி திறக்க
அவள் கை நீட்டி கொள்ள ஏதுவாக கீழே இறங்கிய கண்ணாடியின் பகுதியில் இருந்து Wooden plate வெளியே வந்து அவள் கைகளை பக்க வாட்டில் வைத்து கொள்ள ஏதுவாக அமைந்தது.


மழைச்சாரல் அவள் மீது விழ மேலும் அவள் நாணி சிரித்தது கண்டு மிகவும் மகிழ்வடைந்தான் ராகவ் !

மதுரையில் இரவு சந்திக்க போகும்
நவரத்னாவிற்கு
தன் கைகளில் பொருத்தப்பட்டு இருந்த விஷ்வல்
Virtual mobile அலைப்பேசியின் மூலம் ராகவ் அழைத்தான்.

எதிர்முனை அணைப்பில் இருந்ததை
ரோபட் "This number does not exist, this number last user name is Miss navarathna"
என பெயரோடு ரோபட் கூறிட
சட்டென பதட்டமாகினாள்
அருகே மழையை ரசித்து கொண்டிருந்த பெண் .
அவளது முக மாறுதலை கவனித்த ராகவ் "எதுவும் பிரச்சனையா " என கேட்டான்?

"அதெல்லாம் ஒண்ணும் இல்லீங்க"என பச்சையாக அவள் சமாளித்தது அவனுக்கு தெளிவாய் தெரிந்தது.
மதுரைல உங்கள எந்த ஏரியால இறக்கி விடனும் என கேட்டான்.

"சாம்பல் புதூர்"என்றாள்.

மின்னல் தென்பட மின்னலின் வெண்ணிற ஒளியில் அவளது மஞ்சள் முகம் மென்மேலும் ஒளிர்ந்தது.

"Interesting "என்று முணுமுணுத்து கொண்டே "நேரா உங்க இடத்துல .
நானே உங்கள ட்ராப் பண்ணிறேன் "
என அவன் சொன்னதும்
"சரி..." என்றாள் மர்மப் புன்னகையோடு? !

இவர்கள் பயணித்த கார் திண்டுக்கல் தாண்டி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் விரைவாய் பயணித்த போது, முழு நிலா மிக ஒளிர்வாய் தெரிய
கருநீலநிறமாய் நிலவு தோன்ற அதை சுற்றி வெண்ணிற புகை வடிவத்தில் ஏதோ வளையம் தோன்றி கொண்டே இருந்ததை இருவரும்
கவனிக்க வில்லை.

நிலவின் இருளில் கார் மிக வேகமாய் பயணிக்க,
காரில் அமர்ந்திருந்த ராகவ்விற்கு
Incomming call வந்தது.

வாய்ஸ் அப்ரூவல் ராகவ் வார்த்தைகளாய் உதிர்த்ததும் எதிர் குரல் ,
காதுக்குள் Inbuild ஆக இருந்த Micro voice receiver ல் கேட்க தொடங்கியது .

"சீக்கிரமே சீக்ரெட் சொசைட்டி யை ரீச் பண்ணுங்க,
நமக்கு நேரம் கம்மியா இருக்கு ராகவ் சார் "என ஏற்கனவே பதிந்து வைக்கப்பட்ட வாய்ஸ் மெய்ல் ரத்தின சுருக்கமாய் கேட்டது ராகவ்விற்கு.


தெளிவாக தன்னருகே இருந்தவளை தலை நிமிர்ந்து பார்த்தவன்
" உங்ககிட்ட ஒரு கேள்வி கேக்கலாமா?" என்றான்.

"கேளுங்க சார் "என கொஞ்சும் தமிழில் பேசினாள்.

"என்னோட யூகம் சரியா இருந்ததுன்னா ,
நீங்க தான மிஸ். நவரத்னா ?
என கேட்கவனை
மலங்க மலங்க விழித்த வண்ணம்
அரண்டு போய் பார்த்தவள் ,


"உங்களுக்கு எப்படி என்ன தெரியும்?"‌ என கேட்டாள்.

"பால்ய காலங்களை அவ்வளவு சீக்கரம் மறந்து விடமாட்டான் இந்த ராகவ்..." என்று அவளை நோக்கி புன்னகைத்தவனின் விழிகள் அவளது கண் விழிகள் முழுக்க நிறைந்திருந்தது.

அவனின் புன்னகை மெல்ல மலர்ந்து அதிர்வதைக் கண்டவள் சற்றே குதுகலமானாள்.

திசை திரும்பிய அவனது பார்வையை மட்டுமே எண்ணி கொண்டிருந்தவள் கண்ணாடி மீது சாயப்போனாள் .
அவளது கரம் பற்றி
"Always i am with you Rathna "என்றான் .
பதிலுக்கு பேச முடியாமல் விக்கி திணறியவள் அவனது மார்பில் சாய்ந்தே
மனதார பேச விரும்பி வார்த்தைகள் கிடைக்காமல் தயங்கி அவனிடம் ஐக்கியமானாள் .

நீண்ட காலத்திற்கு பிறகான முதல் சந்திப்பு தற்செயலாய் நிகழுமென இருவருமே எண்ணியதில்லை.

தனக்கான மிக சிறந்த அடைக்கலமே இவன் தான் என்று இவளது உள்ளம் துடிப்பாய் சொல்லி கொண்டே இருந்தது .

திக்கு தெரியா பயணத்தில் இருவருமே எதிர்கொள்ள போகும் வாழ்வின் மாய சுழல் நீரோட்டம் ராகவ்வின் கார் வேகத்தில் இருவருக்குமே புலப்படவில்லை !



நிகழ்வாள் .......
தொடரும்.
உங்கள் சத்ய சஞ்சீவி S
 
Last edited:
Status
Not open for further replies.
Top Bottom