Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


GY NOVEL இராவண காதலி - Tamil Novel

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

 
Last edited:

Nagaveni A

Member
Vannangal Writer
Messages
45
Reaction score
43
Points
18
அனைவருக்கும் வணக்கம் தோழமைகளே நான் உங்கள் நாகவேணி அழகர் ராஜன். வண்ணங்கள் போட்டியின் மூலம் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி.

போதும் போதும்.. ரொம்ப தூய தமிழ் வேண்டாம்னு நினைக்குறேன். நம்ம தமிழுக்கே வரேன்.

ஹல்...லோ!! தோழமைகளே, நான் வண்ணங்கள் போட்டில சாம்பல் வண்ணம் தேர்ந்தெடுத்து கதையெழுதலாம்னு முடிவு பண்ணிருக்கேன். அதற்கு உங்களோட அன்பும் ஆதரவும் ரொம்பவே முக்கியம். இதுனால நான் சொல்ல வருவது என்னவென்றால், என் கதை எப்படி உள்ளது? எவ்வாறு உள்ளது என்பதை படித்து பார்த்து மனம்விட்டு கூறுமாறு அன்புடன் அன்பான கட்டளையிடுகிறேன்.

கவலைபடாதிங்க தோழமைகளே, என் எழுத்து படிக்கும் உங்கள் அனைவரின் மனதிலும் ஓர் தாக்கத்தை கட்டாயம் ஏற்படுத்தும் என்று எழுத்தின் மீதுள்ள நம்பிக்கையிலும் உங்கள் மீதுள்ள நம்பிக்கையிலும் என் கதையாகிய இராவண காதலியை துவங்குகிறேன்.

கதை எப்படி இருக்கும் என்று யோசிக்க வைக்கவும் உங்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைப்பதற்க்காகவும் இதோ, உங்களுக்காக கதையின் சின்ன டீசர்.

கதை எப்படி இருக்கும் என்று யோசிக்க வைக்கவும் உங்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைப்பதற்க்காகவும் இதோ, உங்களுக்காக கதையின் சின்ன டீசர்.

*******

"தய்வுசெய்து நான் சொல்றத புரிஞ்சுக்கோ! அவன பார்க்குறதும் அந்த எமன பார்க்குறதும் ஒன்னு. அவன யார் நேர்ல பார்த்தாலும் அவங்களுக்கு மரணம் உறுதி!"

*******

"நான் உருவாக்குனவன நானே காதலிச்சா தப்பா?!"

"கற்பனை வேற, நிஜம் வேற."


*******

"யாருடா அது?"

"அது ஒரு பொண்ணாம் அண்ணா."


*******

"வெறும் புத்தகத்த வச்சு என்ன சார் செய்ய முடியும்?"

"உங்க கேள்விக்கு இந்த பேப்பர் பதில் சொல்லும்."


*******

"ஆணா இருந்தாலும் பெண்ணா இருந்தாலும் தப்பு தப்புதான். பாகுபாடு பார்த்து தண்டனை கொடுக்க நான் மனுசனோ, கடவுளோ கிடையாது. அரக்கன்! அவ உருவாக்குன இராவண அரக்கன்!!"

*******

"என்னோட கற்பனையே என் வாழ்க்கைய தலைகீழா திருப்பி போடும்னு ஒரு நாளும் நான் நினைக்கல."

"இப்போ அழுது என்ன பிரோஜனம்? முதல்ல உயிர் தப்பிக்குற வழிய பார்க்கனும்."


*******

"நீ?! நீ?! நான்!"

"நானேதான் நீ உருவாக்குன ராவணனே..தான்!!"


இராவணன் வருவான்..

*******

டீசர் எப்படி உள்ளது மேலும் உங்களால் கதையை யூகிக்க முடிந்ததா என கட்டாயம் சொல்லுங்க தோழமைகளே.


தங்களின் அன்பினையும் ஆதரவினையும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும்

நான் உங்கள் நாகவேணி அழகர் ராஜன்.
 
Last edited:

Nagaveni A

Member
Vannangal Writer
Messages
45
Reaction score
43
Points
18
இராவண காதலி

யார் இவர்கள் - 1

தெரு விளக்குகள் இன்றி அம்மாவாசை இருள் சூழ்ந்திருந்த அந்த சாலையில் முன் விளக்கொளியுடன் நான்கிற்க்கும் மேற்பட்டோர் அமர்ந்திருந்த அந்த கருநிற டாட்டா சுமோ அதிவேகத்துடன் வந்துக் கொண்டிருந்தது.

அந்த டாட்டா சுமோவின் முன்னே காலணிகள் இன்றி ஆடைகளில் சிற்சில இடங்கள் கிழிந்திருக்க உதடு, கை, கால் மற்றும் கன்னங்களில் ஏற்பட்டிருந்த இருந்த காயங்களில் இரத்தம் காய்ந்திருக்க கண்களில் வழிந்த நீரினை துடைத்தபடி உயிரினை கையில் பிடித்துக் கொண்டு வேகமாக ஓடிக் கொண்டிருந்தவளை வெறியுடன் துரத்திக் கொண்டிருந்தனர் அந்த நான்கிற்க்கும் மேற்பட்டோர்.

"வேகமா ஓட்டுடா! என்னடா வண்டி ஓட்டுற?" என ட்ரைவர் சீட்டில் அமர்ந்திருந்த கணேஷ் என்றவனை கோபமாக திட்டினான் அருகில் அமர்ந்திருந்த அர்ஜூனன் என்பவன்.

"அண்ணே வேகமாதான்ணே ஓட்டிட்டு இருக்கேன்! அவ அவ்ளோ வேகமா ஓடுறாண்ணா!" என்றான் கணேஷ்.

"ஒரு பொம்பள புள்ளைய புடிக்க வக்கு இல்ல, பேச்சா பேசுற! தள்ளுடா நானே ஓட்டுறேன்!" என்று கணேஷை காலால் உதைத்து வெளியே தள்ளிவிட்டவன் "உன்னைய விடமாட்டேன்டி!" என்று தானே காரை ஓட்டினான்.

பின்னால் அமர்ந்திருந்தவர்களோ கீழே விழுந்தவனை ஓர் பார்வை பார்த்தவர்கள் முன்னால் ஓடுபவளை கோபத்துடன் பார்க்க துவங்கினர்.

முன்னால் ஓடுபவளோ 'கடவுளே என்னைய காப்பாத்த யாருமே இல்லையா? இந்த நேரம் பார்த்து யாருமே ரோட்ல இல்லையே! இதுதான் நேரங்குறதா? கடவுளே தயவுசெய்து என்னைய காப்பாத்து!' என தன் கண்ணீரை துடத்தபடி ஓடிக் கொண்டிருந்தாள்.

"அண்ணே! வேகமா அண்ணே! இன்னும் வேகமா போங்க அண்ணே!" என்று பின்னால் இருந்தவர்கள் சீட்டினை தட்ட அவர்களின் ஊக்கத்தில் மேலும் வேகத்தை கூட்டியவன் முன்னே செல்பவளை இடிக்க தடுமாறி சாலையில் விழுந்தவளின் உடலில் காயங்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாகவும் ஆழமாகவும் ஏற்பட இரத்தமோ வேகமாக கசியத் துவங்கியது.

காரிலிருந்து இறங்கியவர்கள் கட்டுக்கடங்காத கோபத்துடன் அவளை சூழ்ந்திட காயங்களின் வலியும் தப்பிக்க இயவில்லை என்ற இயலாமையும் முழுவதும் ஆட்க்கொள்ள சோர்ந்தவளாய் கைகளை கூப்பியவள் "தய்வுசெய்து என்னைய விட்டுடுங்க! நான் தெரிஞ்சே எதுவும் செய்யல. என்னைய நம்புங்க. எனக்கு எதுவும் தெரியாது!" என கண்ணீருடன் கெஞ்சியவளின் முடியை பிடித்தான் அர்ஜூனன்.

"இந்த கதையெல்லாம் எங்ககிட்ட விடாத. ஏன்டி உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா தப்பிச்சு ஓட பார்ப்ப? எங்கிட்டருந்து தப்பிச்சு தப்புக்கு மேல தப்பு பண்ணிட்ட!" என்று காரிடம் இழுத்துச் சென்றான்.

"தய்வுசெய்து நம்புங்க! நான் தெரிஞ்சே எதுவும் பண்ணல. நம்புங்க! என்னைய விட்டுடுங்க!" என முழுவதும் சோர்ந்து கெஞ்சியவளின் வார்த்தைகளை காதில் வாங்காமல் காரிற்க்குள் ஏற்றியவன் காரை ஸ்டார்ட் செய்தான்.

கண்ணீருடன் காரிற்க்குள் அமர்ந்தவளின் இருபுறமும் கடுங்கோபத்தோடு அமர்ந்திருந்தவர்களை கண்டு மேலும் உடல் நடுங்கியது.

"இவளுக்கு எவ்ளோ தைரியம் இருக்கனும் அண்ணே, நம்மகிட்டையே போக்கு காட்டிட்டு ஓடிருக்கா!" என்று கோபத்தோடு கூறினான் விமலன் என்பவன்.

"ஆமாடா, இவளால அண்ணன்கிட்ட நாமதான் செம்ம அடி வாங்குனோம். கொஞ்ச நஞ்ச அடியா அது, எல்லாம் இவளால!" என பற்களை கடித்தான் கருணா என்பவன்.

"அதான் சிக்கிட்டாள, பின்ன எதுக்கு அவள முறைக்குற?" என நாகநாதன் என்பவன் கேட்டிட அனைவரின் பார்வையும் அவனை துளைத்தது.

"என்னடா, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நடந்தத மறந்துட்டியா?" என முழங்கையில் ஏற்பட்டிருந்த சாட்டை அடியின் காயத்தை கூறிப்பிட்டு சத்ரியன் கேட்கவும் அமைதியானான் நாகநாதன்.

அர்ஜூனனின் ஃபோன் அலற வேகமாய் காரினை நிறுத்தியவன் அனைவரையும் அமைதியாகுமாறு கூறிவிட்டு பணிவுடன் அட்டண்ட் செய்தான்.

"ஹலோ அண்ணா."

"என்னடா அவள தூக்கிட்டீங்களா?"
என்ற கம்பீரமான குரல் காரி்ல் உள்ள அனைவருக்கும் கேட்க அனைவரின் உடலும் மனமும் தானாய் சிறு நடுக்கம் கொடுத்தது.

"தூக்கியாச்சு அண்ணா. இன்னும் பத்து நிமிசத்துல நம்ம இடத்துக்கு போயிடுவோம்."

"வேண்டாம், அங்க போக வேண்டாம். அவள என் இடத்துக்கு கூட்டிட்டு வா."
என்றிட ஒருவருக்கொருர் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டனர்.

"அண்ணா... அது வந்து.."

"சொல்றத செய்!!"
என்றுவிட்டு கட் செய்ய இப்பொழுது அனைவரின் பார்வையும் தன் மீது பாரிதாபமாக வீசுவதை உணர்ந்தவள்

"இல்ல.. ப்ளீஸ்.. என்னைய விட்டுடுங்க! நான் இப்படி உங்க யாருக்கும் தெரியாம கண் காணாத இடத்துக்கு போயிடுறேன். என்னைய எங்கையும் கூட்டிட்டு போயிடாதிங்க!! என கைகள் கூப்பி மன்றாடியவளை இயலாமையுடன் பார்த்தனர்.

*******

அவ்வீட்டின் முன் மற்றும் பின் பக்க கதவுகளும் ஜன்னல்களும் உடைக்கும் சத்தம் கேட்டிட வீட்டினுள் இருந்த மூவரும் ஒருவருக்கொருவர் பயத்தில் கைகளை பற்றிக் கொண்டிருந்தனர்.

"அம்மா, அப்பா ரொம்ப பயமா இருக்குப்பா!" என்று பயத்தில் அழுதான் சஞ்சீவ் என்பவன்.

"பயப்டாத சஞ்சு.. நாங்க இருக்கோம்ல, பயப்டாத.." என்று கண்ணீருடன் பற்றினார் தாயார் சத்யா.

"ஃபோன்.. ஃபோன் எங்க சஞ்சு? சத்தம் கேட்குது." என நினைவு வந்தவராய் கேட்டார் தந்தை நாகேஷ்.

"ரூம்ல.. இருக்குப்பா!"

"நீங்க இங்க இருங்க நான் போய் எடுத்துட்டு வறேன்."
என்று ரூமிற்க்குள் செல்ல முற்பட இரு கதவுகளும் சிதறிய ஓளிக் கேட்ட நொடி இரு பக்கங்களின் வழியே காற்றேன உள்ளே நுழைந்தவர்களை பார்த்த மூவரும் உறைந்து நின்றனர்.

"வணக்கம் நாகேஷ் சார்! கிளம்பலாமா?" என்று விஷம சிரிப்புடன் வணக்கம் வைத்தான் இளங்கோ என்பவன்.

"இங்க பாருங்க..!" என்று விரல் நீட்டியவரின் கையை

"என்ன கைய நீட்டி பேசுறீங்க நாகேஷ் சார்? நான் எவ்ளோ மரியாதையா பேசுறேன், படிச்சவரு நீங்க, இப்படி மரியாதை இல்லாம நடந்துக்கலாமா?" என தன் நிலை மாறாமல் நாகேஷின் கையை வெட்டரிவாளால் மெதுவாய் கீழ் இறக்கிட சத்யா மற்றும் சஞ்சீவ் மேலும் பயந்தனர்.

"நாகேஷ் சார், இப்போ நீங்க என்ன பண்ண நினைச்சாலும் நஷ்டம் உங்களுக்குதான். அது உங்களுக்கே தெரியும்." என்றதும் நாகேஷிற்க்கு கண்ணீர் திரையிட்டது.

"பார்த்தீங்களாடா, சாருக்கு இப்படி பண்ணிவா மரியாதையா சென்னா தான்டா புரியும். அதவிட்டுட்டு பாரு கதவ உடைச்சு நாசம் பண்ணி வச்சுட்டீங்க. சார் படிச்சவர்டா சொன்னா புரிஞ்சிப்பாரு." என உடன் வந்த அனைவரிடமும் தன் நிலை மாறாது கூறிவன் மூவரையும் பார்க்க

தாய் தந்தையர்களுக்கு இளங்கோவின் பேச்சுக்கள் புரிந்திட "போலாம்." என்றனர் அமைதியாக.

"சுபம். வாங்க போலாம்." என கூறி வெளியில் செல்ல மூவருடன் இணைந்து உடன் வந்தவர்களும் பின் தொடர்ந்தனர்.

வெளியில் வந்த நாகேஷ் சுற்றிலும் பார்க்க சுற்றியிருந்தோர் அனைவரும் அவரவர் வீட்டின் வாசலிலும் ஜன்னலிடம் நின்றும் வேடிக்கை பார்க்கவும் தலை குனிந்துக் கொள்ள சத்யாவும் கண்ணீருடன் தலை குனிந்தவர் சஞ்சீவை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு நடந்தார்.

*******

இருள் சூழ்ந்த அந்த அறையில் தெருவிளக்கின் சிறு ஓளி மட்டுமே தெரிந்திட சுவற்றோடு சுவராய் பதட்டத்துடன் அமர்ந்திருந்த இருவரில் ஒருவளான சாதனா என்பவள் "என்னடி அட்டண்ட் பண்ணாங்களா?" என்று கேட்க

மற்றோருவளான கீர்த்தனாவோ "இல்ல சாது எடுக்கமாட்டேங்குறாங்க!" என்றாள்.

"ச்ச.. என்னடி இது!" என மெதுவாய் ஜன்னலில் எட்டிப் பார்த்த சாதனா பயத்தில் கண்கள் விரிய கீழே அமர்ந்தாள்.

"என்னடி? என்ன ஆச்சு?!"

"வந்துட்டாங்க கீர்த்து, இன்னும் கொஞ்ச நேரத்துல உள்ள வந்துடுவாங்க!"
என்றாள் கண்ணீருடன்.

"சொல்ல சொல்ல கேட்கம பண்ணதுக்கு இப்போ பாரு, எந்த நிலமைல வந்து நிக்கிறோம்னு!"

"இப்போ யோசிச்சு என்ன பிரயோஜனம்? முதல்ல தப்பிக்குற வழிய பார்க்கனும்."
என சாதனா கூறவும் அறையை சுற்றி பார்த்த கீர்த்தனாவிற்கு பாத்ரூம் ஜன்னல் தெரிந்திட வேகமாய் எழுந்தாள்.

"என்ன கீர்த்து, எங்க போற?"

"அங்க பாரு. பாத்ரூம் கண்ணாடிய எடுத்தோம்னா அது வழியா வெளிய போய்டலாம்."

"ஆனால், சுத்திலும்.."

"இல்ல சாது, பின்னாடி அதிகமா வெளிச்சம் தெரியல. பாத்துரூம் வழியா கீழ போனா மாட்டுறதுக்கு வாய்ப்பு கம்மிதான்."

"சரி, சீக்கிரம் வா."
என்று பாத்ரூமிற்க்குள் சென்ற நொடி கதவு தட்டும் சத்தம் வேகமாய் கேட்க இருவரின் பதட்டமும் அதிகமானது.

"சீக்கிரம் கீர்த்து, அவங்க உள்ள வந்துட போறாங்க!" என்று சாதனா கூற கீர்த்தனா ஜன்னல் கண்ணாடியை ஒவ்வொன்றாய் எடுக்க துவங்கினாள்.

கதவு தட்டும் ஒலி இப்போது உடைக்கும் சத்தமாக மாறிட மேலும் பதட்டம் அதிகரிக்க வேகமாய் கண்ணாடியை இழுத்தவளின் கையினை கண்ணாடி பதம் பார்க்கவும் நழுவவிட அக்கண்ணாடி உடைந்து சிதறியது.

கையில் வழிந்த இரத்தத்தினை கண்ட சாதனாவோ மயக்கம் போட்டிட மேலும் பதறினாள் கீர்த்தனா.

"ஹே! சாது!!! ப்ளீஸ்டி எழுந்துரிடி, ப்ளீஸ்டி! எனக்கு பயமா இருக்குடி! அவங்க வந்துற போறாங்கடி! எழுந்துரிடி! சாது!!" என்று கன்னங்களை தட்டியவள் அருகிலிருந்த ஷவரினை திறந்துவிட சாதனா கண்கள் திறக்கவும் கதவு இரண்டாய் உடைவதற்க்கும் சரியாய் இருந்தது.

"டேய் அவள்கள தேடுங்கடா!" என ஃபோனின் ஒளியை படரவிட்டவனாய் கூறினான் சந்துரு என்பவன்.

உடன் வந்த ஐவரும் அவ்வொளியின் ஊடே அறை முழுவதும் தேடினர்.

பாத்ரூம் கதவின் பின்னால் தங்களை மறைத்துக் கொண்ட இருவரின் இதயத் துடிப்புகளும் வெளியில் கேட்டிட கைகனை கெட்டியாக பற்றிக் கொண்டு நின்றிருந்தனர்.

வந்தவர்களில் ஒருவன் பாத்ரூமிற்குள் நுழைந்தவன் ஜன்னலை பார்க்க "அண்ணே!!" என அழைக்கவும் சுவரோடு சுவராக மேலும் ஓட்டிக் கொண்டனர்.

"என்னடா?"

"அங்க பாருங்க கண்ணாடிய."
என்றதும் கண்ணாடியை பார்த்தவன் ஏளனமாய் சிரித்துக் கொண்டு

"டேய் எல்லாரும் இங்க வாங்கடா!" என்றதும் கதவின் பின் நின்றிருந்த இருவரும் நடுங்கிய கைகளுடன் உதடுகள் துடிக்க கண்ணீருடன் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.

"என்ன அண்ணே?" என வந்தவர்களிடம்

"வேலை முடிஞ்சுது கார ஸ்டார்ட் பண்ண சொல்லு." என்றான்.

"அண்ணே பொண்ணுங்க.." என கூற

"இதோ இங்கதான்!" என்று கதவினை காலால் உதைத்த வேகத்தில் கதவு அறைந்து சாற்றிக் கொள்ள இருவரும் மிரண்ட விழிகளுடன் நின்றிருப்பதை பார்த்தவன்

"ஏன்டி எங்ககிட்டையே போக்கு காட்டுறீங்களோ? ஓடி வந்து ஒளிஞ்சுகிட்டா எங்களுக்கு கண்டுபிடிக்க தெரியாது பாரு!" என்று பற்களை கடித்தான் சந்துரு.

"அண்ணா! ப்ளீஸ் அண்ணா! எங்கள விட்டுடுங்க அண்ணா! எங்கள நம்புங்க அண்ணா! அவ தெரிஞ்சே எதையும் பண்ணல அண்ணா!" என கைகள் கூப்பி கெஞ்சினர்.

"என்னங்கடி அண்ணே, தம்பின்னு.. ஒன்னு தெரிஞ்சுக்கோங்க, எங்ககிட்டையோ இல்ல, எங்க அண்ணங்கிட்டையோ எந்தவித இரக்கமும் எதிர்பார்க்காதிங்க." என்றுவிட்டு கெஞ்சுவதை பொருட்படுத்தாமல் இருவரையும் வெளியே இழுத்துச் சென்றவர்கள் காரினுள் ஏற்றி காற்றென பறந்தனர்.

*******

இருள் படர்ந்திருந்த அவ்வறையின் நடுவே சாய்வு நாற்காலியில் கண்களில் கோபத் தீ பற்றி எறிந்திட இறுகிய முகத்துடன் நரம்புகள் புடைத்திருக்க பற்களை கடித்தபடி விட்டத்தை வெறித்து அமர்ந்திருந்தவனின் ஃபோன் அலறியது.

"என்னடா ஆச்சு, தூக்கியாச்சா?" என்று அழுத்ததுடன் வெளிவந்த குரல் அவ்வறை முழுவதும் எதிரொளித்தது.

"தூக்கியாச்சு அண்ணா."

"ம்ம்.. தூக்கிட்டு வா."
என்றதோடு கட் செய்தவன் சொடக்கிட்டதும் அவ்வறையில் ஒளி நிறைந்தது.

தன்னை சுற்றி தலை தாழ்ந்து கை கட்டி நிற்ப்பவர்களை ஏறிட்டவனின் பார்வையை உணர்ந்தவர்களின் ரோமங்கள் பயத்தில் குத்திட்டு நின்றது.

அக்கூட்டத்தில் கலக்கத்துடன் நின்றிருந்த ஒருவனை குறிப்பிட்டு "டேய் இங்க வா." என்றழைக்க சிறு நடுக்கத்துடனே வந்தான் அவன்.

"என்ன, என்னன்னு சொல்லு?" என ஏளனமாய் கேட்க

"இல்லண்ணே.. ஒன்னும் இல்லண்ணே.." என்று பின்வாங்கினான் அவன்.

"சொல்லுன்னு சொன்னேன்!" என்று பற்கள் கடித்திட

"இல்லண்ணே.. ஒரு பொண்ண..." என்று பயத்துடன் கூறியவனின் நெற்றியில் நொடிப் பொழுதில் தூப்பாக்கியின் குண்டு இறங்கிட பிணமென விழுந்தவனை அதிர்ச்சியுடன் பார்த்தனர் சுற்றியிருந்தோர்.

"எவனாவது... பொண்ணு, பையன், மனுசன, மக்கன்னு நியாய தர்மம் பேசுனீங்க! உங்களுக்கும் இதே நிலைமைதான்!" என்று துப்பாக்கியை கோபத்துடன்
சுழற்றியவனை நடுக்கத்துடன் ஏறிட்டனர் அனைவரும்.

"இவன தூக்கிட்டு எல்லாரும் வெளியப் போங்கடா!" என கத்திட அடுத்த நொடி அனைவரும் மறைந்தனர்.

கோபம் தணியாமல் இரத்ததை வெறித்தவனின் கோபம் மேலும் அதிகமாக "வா.. வாடி.. உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா என் கஸ்டடில இருந்தே தப்பிச்சுருப்ப, வறேன். நானே நேர்ல வறேன். அரக்கன்னா எப்படி இருப்பான்னு உனக்கு காட்டுறேன்." என்று பற்களுக்கிடையில் கூறிக் கொண்டான்.

*******
இராவணன் வருவான்...

முதல் யூடி எப்படி இருக்கு தோழமைகளே! படித்துவிட்டு அமைதியாக செல்லாமல் கட்டாயம் கருத்து தெரிவித்துவிட்டுச் சென்றீர்கள் என்றால் மகிழ்வேன் அல்லவா? தங்களின் பொன்னான கருத்துக்களை மறக்காமல் தெரிவியுங்கள்.

- நான் உங்கள் நாகவேணி அழகர் ராஜன்.
 

Nagaveni A

Member
Vannangal Writer
Messages
45
Reaction score
43
Points
18
இராவண காதலி

துடிக்கும் இதயங்கள் - 2

இயலாமையுடன் பார்த்தவர்களுக்கு தங்களின் கண் முன் அவன் வந்து செல்ல அர்ஜூனன் "கண்ணையும் கையயும் கட்டுங்கடா!" என்றான்.

"ப்ளீஸ் வேண்டாம்! நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க! தய்வுசெய்து கேளுங்க!" என்று கூறுபவளின் வார்த்தைகளை கேட்காதவர்களாய் கருணா கண்களை கட்டிட விமலன் கைகளை கட்டினான்.

"அண்ணே கட்டியாச்சு. இப்போ போலாம்." என்று சத்ரியன் கூற அர்ஜூனன் காரை ஸ்டார்ட் செய்தான்.

"உங்ககிட்ட கெஞ்சி கேட்குறேன். என்னைய எங்கையும் கூட்டிட்டு போகாதிங்க! என்னைய விட்டிங்கன்னா உங்க கண்ணுலபடாம.." என்ற கூறிடும் போதே

"அய்யய்ய... இவளோட ஒரே தொல்லையா போச்சு. டேய் இவ வாயயையும் சேர்த்து கட்டுங்கடா! சும்மா தய்வுசெஞ்சு.. தய்வுசெஞ்சுன்னு.. கடுப்ப கிளப்புறா!" என தலையில் அடித்துக் கொண்டான் கணேஷ்.

"ரொம்ப கடுப்பாகிட்டான் போல. இந்தாம்மா, உன்னைய விட்டுட்டு போயி எங்கள உசுரவிட சொல்றீயா?" என்று சிரிப்புடன் அவளது வாயினை கட்டினான் விமலன்.

"ம்ம்ம்..." என திமிறியவள் கண்ணீருடன் காயத்தின் வலியினாலும் சோர்வினாலும் மயங்கியதை கண்டு வேறுபுறம் திரும்பிக் கொண்ட நாகசூதனின் கண்கள் கலங்கியது.

*******

"அண்ணா ப்ளீஸ்னா! நாங்க சொல்றது உண்மைண்ணா! நம்புங்க! நிஜமா அவ தெரிஞ்சே பண்ணலண்ணா!" என்று சாதனாவும் கீர்த்தனாவும் அழுதிட

"இப்போ நீங்க சும்மா வறீங்களா இல்லாயாடி?! சும்மா, அண்ணா நொண்ணான்னு! டேய்! கண்ணையும் கையயும் கட்டுனீங்களே, வாய கட்டுனீங்களாடா? பாரு தொண தொண்ன்னு வராளுங்க." என்று சந்துரு பின்னால் அமர்ந்திருந்தவர்களை திட்டிட வேகமாய் இருவரின் வாயினையும் கட்டினர்.

"ம்ம்.. ம்ம்..." என்று இருவரும் திமிற

"அடிங்க! சும்மா கிடங்க!" என ஒருவன் அறைந்த வேகத்தில் இருவரும் மயங்கினர்.

"இத முதலே பண்ணிருக்க வேண்டிதானே? எதுவா இருந்தாலும் ஒன்னு கொடுத்தா தான் வேலை செய்வீங்களாடா?!" என்றுவிட்டு அமைதியானான் சந்துரு.

"அண்ணே, அண்ணேகிட்ட சொல்லிட்டீங்களா?"

"நாமா சொல்லிதான் அண்ணனுக்கு தெரியனும்னு இல்ல. உட்காந்த இடத்துல இருந்தே எல்லாத்தையும் பார்த்துட்டுதான் இருப்பாரு."

"இல்ண்ணே எதுக்கும்..."

"சொல்லிட்டேன்டா!!! போதுமா?! வாய முடிட்டு கொஞ்ச நேரம் அமைதியா வாங்க!!"
என்று சீறிட அமைதியாகினர் உடன் இருந்தவர்கள்.

*******

தன் கண்களில் கட்டியிருந்த துணியினை அவிழ்க்க முயன்றுக் கொண்டிருந்த நாகேஷிடம் "நாகேஷ் சார், கண்ண திறக்க எந்த முயற்சியும் பண்ணாதிங்க. அப்றம் முயற்சி பண்ண மூச்சு இருக்காது." என இளங்கோ கூற அமைதியானார்.

"படிச்சவருன்னு காட்டிட்டே இருக்கீங்களே சார் நீங்க. அதான் அதுக்குதான், உங்களலாம் எப்படி கடத்தனுமோ அப்படி கடத்தனும்." என்று கூறிக் கொண்டே மயக்க மருந்து நிறைந்த கைக் குட்டையை அழுத்த திமிறலுடன் மயக்கமுற்றார் நாகேஷ்.

"என்னம்மா, உங்க புருஷன் சத்தத்த காணோமேன்னு தவிக்கிறீங்களா? என்ன பண்ணோம்னு சொல்லவா? இல்லல்ல.. செஞ்சே காட்டுறேன்." என சத்யாவிற்கும் மயக்க மருந்தை அழுத்தினான்.

அருகில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் கண்களையும் வாயினையும் கட்டியிருந்த சஞ்சீவ் பயத்தில் அமர்ந்திருப்பதை கண்டவன்

"பொடியன கூட நம்ப கூடாதுடா. புடி இத அவனுக்கும் அழுத்து." என பின்னால் அமர்ந்திருந்தவனிடம் கொடுத்தான் இளங்கோ.

*******

அழகான வடிவமைப்பு கொண்ட அந்த கருநிற இரும்பு கேட்டின் முன் டாட்டா சுமோ வந்து நிற்க கதவு திறக்கபட்டது. கார் உள்ளே நுழைய ஆங்காங்கே அடியாட்கள் நின்று கவனித்துக் கொண்டிருந்த அந்த ஓரடுக்கு வெள்ளை மாளிகை இருளிலும் கம்பீரமாய் காட்சியளித்தது.

"நான் கேட்டு வறேன். நீங்க எல்லாரும் கார்லயே இருங்க." என்றபடி காரிலிருந்து இறங்கினான் அர்ஜூனன்.

இறங்கியவன் வாசற்படி ஏறிட உள்ளிருந்து ஓட்டமும் நடையுமாய் வந்தான் மாறன் என்பவன்.

"மாறா அண்ணா.."

"அந்த பொண்ண ப்பிஏம்ட்டிக்கு கூட்டிட்டு போக சொன்னாங்கண்ணே."

"சரி."
என்றவன் விடைபெற

"அண்ணே இருங்க, உங்கள வர சொன்னாரு." என்றிட

"என்ன சொன்னாரு?!" என்று கேட்டான்.

"வர சொன்னாரு. போங்க." என்றதும்

"டேய், நீங்க இவள அங்க கட்டி வைங்க. அண்ணன பார்த்துட்டு வறேன்." என்றவன் சிறு தலையசைப்புடன் உள்ளே செல்ல உடன் மாறனும் சென்றான்.

அப்பெரிய மாளிகையினுள் ஆடம்பரத்திற்கு எந்த குறிப்புமில்லாமல் சராசரி எளிய மனிதனுக்கு தேவைபடும் பொருட்களன்றி வேறெதுவும் இல்லாமலிருக்க பார்ப்பவர்களுக்கு இப்படியும் மனிதன் வாழ்கிறான என எண்ணி வியக்கும் அளவிற்க்கு எளிமையாய் நீல நிற சிறு விளக்கொளியுடன் காட்சியளித்தது கீழ் தளம்.

"அண்ணே எப்படிடா இருக்காரு?"

"அமைதியாதாண்ணே இருக்காரு. அதான் பயமா இருக்கு."

"இத முன்னாடியே சொல்லிருந்தா நான் அப்படியே போயிற்ப்பேனேடா!"

"வர சொன்னப்றமும் எப்படி போவீங்க?"

"வாங்கனும்னு இருந்தா வாங்கிதான் ஆகனும். வேற வழி இல்ல."

"என்னண்ணே, ரொம்ப நொந்து போயிருக்கீங்க போல?"

"ரொம்ப...டா! அதுவும் அந்த பொண்ண பிடிக்குறத்துக்குள்ள படாதபாடு பட்டுட்டோம்."
என இரு பிரிவாய் பிரிந்திருந்த படிகட்டுகளின் ஒன்றில் பேசியபடி நான்கு அறைகளை கொண்ட மேற்தளத்தை அடைந்தனர்.

"மெல்ல பேசுங்க. அண்ணே காதுல விழுந்துட போகுது."

"ஆமாடா. சரி, நான் போய் அண்ணன பார்க்குறேன்."
என்று முதலறையின் கதவை தட்டிட

"வா." என்ற அமைதியான குரல் கேட்டதும்

'குரல் ரொம்ப அமைதியா இருக்கே..' என பயத்துடன் உள்ளே நுழைந்தான் அர்ஜூனன்.

அறையில் இருள் சூழ்ந்திருக்க நடுநாயகத்தில் மட்டும் ஒளிர்ந்திருந்த சிவப்பு நிற விளக்கொளின் கீழ் கண்கள் மூடி அமர்ந்திருந்தான் அவன்.

தன் முன் அமைதியாய் நின்றவனிடம் "ஏன் இவ்ளோ நேரம்?" என்று கேட்டபடி கண்விழிக்க அர்ஜூனன் ஓரடி பின்னே எடுத்து வைத்தவன்

"அது.. இல்லண்ணே.."

"ம்ம்... பக்கத்துல வா."
என்று நிமிர்ந்தமர்ந்தவனின் அருகினில் பயத்தினூடே சென்றான்.

"அது.. அண்ணே.. அந்த பொண்ண...."

"அவ எந்த பக்கம், எப்படி, எங்க போயிட்டு இருப்பான்னு நான் அவ்ளோ தெளிவா சொல்லியும், அவள கண்டு பிடிக்க இவ்ளோ நேரமாச்சா?"
என அமைதியாய் கேட்டான்.

"அண்ணே.. நாங்க சரியான நேரத்துலதான்.." என நடுங்கியபடி கூறியவனை கையுயர்த்தி தடுத்தவன்

"மாறா!!" என்று கத்தவும் அர்ஜூனனுக்கோ பயத்தில் வியர்த்திட பதட்டத்துடன் உள்ளே நுழைந்தான் மாறன்.

"கணேஷ வர சொல்லு." என்றதும் அர்ஜூனனின் கண்களில் கண்ணீர் திரையிட துவங்கியது.

"சரிண்ணா." என மாறன் வெளியில் செல்ல

"இல்லண்ணா! கணேஷ் வேகமாதாண்ணா ஓட்டுனான். அவன் மேல தப்பில்லண்ணா! நானும் பக்கத்துலதானண்ணா இருந்தேன். அவன் வேகமாதாண்ணா ஓட்டுனான்." என்று கால்களை பற்றிக் கொண்டு அழுதான் அர்ஜூனன்.

*******

அர்ஜூனன் சென்றதும் காரினை மாளிகையின் பின்பக்கம் அமைந்துள்ள இரு வீடுகளில் ஓன்றின் முன் நிறுத்தினான் கணேஷ்.

"டேய் பார்த்து தூக்குங்கடா. ஏற்கனவே பல காயம் பலி ஆட்டுக்கு." என்று சிரித்தான் விமலன்.

"ஆமா.. ஆமா.. என்ன ஓரே கவலன்னா, இந்த ஆட்டுக்காக வாங்குன அடி மாதிரி வேற எதுக்காகவும் நாம வாங்குனது இல்லடா." என்றான் கருணா.

"அப்படி சொல்லு மச்சி! எனக்குலாம் இரத்தமே வந்துருச்சுடா." என தன் காயங்களை பார்த்தான் சத்ரியன்.

"இவன் ஏன்டா அமைதியாவே இருக்கான்?" என்று நாகநாதனை கேட்டான் விமலன்.

"அவனுக்கு பலி ஆட்ட பத்தி ரொம்ப கவல. அப்படிதான நாகா?" என நக்கலாய் கேட்டான் சத்ரியன்.

"நாளைக்கு சாக போறவள பத்தி எதுக்குடா கவலபடுற?" என்று கருணா கேட்க அமைதியாய் நின்றிருந்தான் நாகநாதன்.

"இவன் சொல்லமாட்டான். டேய் நாக, நீயே பலி ஆட்ட உள்ள கொண்டுபோய் நல்லா கட்டு. உள்ள இருக்கவனுங்க எங்கள மாதிரி இருக்கமாட்டானுங்க. அவன்ங்க பக்கா மொறடனுங்க. நீ இவளுக்காக கவலபடுறது தெரிஞ்சுச்சு, வெயில்ல கட்டி வச்சு சோறு தண்ணியில்லாம உட்கார வச்சுருவான்ங்க பாத்துக்க." என எச்சரித்தான் விமலன்.

பின் நாகநாதன் மயங்கி கிடந்தவளை தன் தோளின் மீது தாங்கியபடி அந்த ப்பிஎம்ட்டி என்னும் வீட்டின் கதவை தட்டிட ஆஜானபகுவாய் ஒருவன் கதவை திறக்க அமைதியாய் உள்ளே சென்றான்.

நல்ல வெளிச்சமும் காற்றோட்டத்துடனும் பெரிய ஹால், கிட்சன் மற்றும் படுக்கையறை கொண்ட வீட்டின் உட்பகுதியை கண்டதும் நாகநாதன் ஒருவாறு நிம்மதி கொள்ள. அடுத்த நொடி "எவ்ளோ நேரம் நின்னுட்டே இருப்ப? சீக்கிரம் போ." என்ற ஆஜானபகுவானவனின் குரலில் திடுக்கிட்டான்.

"என்ன? சீக்கிரம் உள்ள போ." என்றிட புரியாமல் விழித்தான்.

"என்ன புதுசா?"

"ம்ம்."

"என்கூட வா."
என்று பெட்ரூமிற்கு அழைத்துச் சென்று அறைக் கதவு மற்றும் ஜன்னல்களை மூடியவன் அவ்வறையில் போடபட்டிருந்த கட்டிலை நகர்த்தி தரையின் குறிப்பிட்ட இடத்தை காலால் அழுத்திட படிகட்டுகளுடன் சிவப்பு ஒளி நிறைந்த கீழ்தளம் திறந்தது.

"என்னடா, எத கண்டாலும் வாய பொலந்துட்டு நிக்குற? இறங்கு." என்று தள்ளிட தடுமாறியபடி உள்ளே இறங்கினான் நாகநாதன்.

*******

வெளியில் விமலன், கருணா, சத்ரியன் மற்றும் கணேஷ் நால்வரும் சிரித்து பேசிக் கொண்டிருக்க வேகமாய் ஓடி வந்தான் மாறன்.

"என்னடா, ஏன் இவ்ளோ அவசரம்?" என கருணா கேட்க

"அண்ணே கணேஷ கூட்டிட்டு வர சொன்னாரு." என்றான் மூச்சுவாங்கியபடி.

நால்வரும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ள "வா போலாம்." என்றான் கணேஷ்.

இருவர் செல்வதையும் கண்டவர்களின் மனம் ஏனோ அழுத்தியது.

மாறன் அறைக் கதவை தட்டிட "வா." என்றதும் இருவரும் உள்ளே நுழைந்தனர்.

"உன்ன உள்ள கூப்பிட்டேனா?" என மாறனை கேட்க

"இல்லண்ணா.." என்றவனிடம்

"இல்லல்ல, பின்ன எதுக்கு வந்த?" என்றதும் அமைதியாய் வெளியே செல்ல அர்ஜூனன் வலியுடன் கணேஷை ஏறிட அமைதியாக பார்த்தான் கணேஷ்.

"என்ன கணேஷ், கட்ட வண்டி ஓட்டுனியா, கார் ஓட்டுனியா?" என தன் காலை ஓர் ஜீவன் பிடித்து அழுவதையும் பொருட்படுத்தாது அமைதியாய் கேட்டவன் கணேஷை தன் அருகில் வர செய்தான்.

"வேகமாதாண்ணே ஓட்டுனேன்." என நடுக்கத்தோடு வெளிவந்தது பதில்.

"ம்ம்... உன் வேகத்த நானும் பார்த்தேன்." என்று தன் வாட்சை அமைதியாய் காட்டிட அவ்வறையில் அர்ஜூனன் மற்றும் கணேஷின் இதய சத்தங்கள் சலனமின்றி கேட்டது.

"ரொம்ப வேகமா துடிக்குதோ?" என்று அர்ஜூனனை உதறியவன் நொடிப் பொழுதில் கணேஷின் இதயத்தில் கத்தியை இறக்கிவிட்டு "இனி துடிக்காது!" என்று கத்தியை ஆழமாய் திருகினான்.

அதிர்ச்சியும் வலியுமாய் கீழே சரிந்தவனை கண்ணீருடன் ஏறிட்டான் அர்ஜூனன்.

"மாறா!" என அழைக்க உள்ளே நுழைந்த மாறனின் கண்களிலும் கண்ணீர் திரையிட்டிருந்தது.

"இவன தூக்கிட்டு போ." என்றதும் அமைதியாய் தூக்கிச் செல்ல அர்ஜூனன் எழுந்து நின்றான்.

"சந்துரு எங்க இருக்கான்?" என இரத்தம் நிறைந்த கத்தியை பார்த்தபடி அமர்ந்தவனின் மீண்டும் குரலில் அதே அமைதி.

"இன்னும் இரண்டு நிமிசத்துல வந்துருவான்..ண்ணே." என்றவனின் குரலில் அழுகை அடக்கப்பட்டிருந்தது.

*******

"எப்பா! சரியான நேரத்துக்கு வந்துட்டோமாடா?" என்று தன் வாட்சை பார்த்தவன் "இப்போதான்டா மூச்சே வருது." என்று இறங்கினான் சந்துரு.

"அவங்கள கொண்டு போய் ப்பிஎம்ட்டில போட சொன்னாரு. உங்கள பார்க்க வர சொன்னாரு." என அமைதியாய் கூறினான் மாறன்.

"மாறா சொன்னது கேட்டுச்சுல்ல? சொன்னத செய்ங்க." என்றவன் "ஏன்டா அமைதியா இருக்க? எவன் போனான்?" என்று மாறனின் அருகில் சென்றான்.

"கணேஷ்..." என்றான் சிறு கண்ணீருடன்.

"சரி, நான் போய் அண்ணேன பார்த்துட்டு வறேன்." என்று உள்ளே சென்றவனின் கண்களிலும் அதே கண்ணீர்.

கதவு தட்டிட அமைதியன குரலில் சந்துருவிற்க்கும் அதே பயம் பரவியது.


"அண்ணா கூப்டிங்கன்னு.."

"ம்ம்.. அவ குடும்பத்தையும் பிரண்ட்ஸூங்களையும் பார்க்குற தூரத்துல கட்டி வை. அவ மட்டும் பார்க்கனும். அவங்க யாரும் அவள பார்க்கக் கூடாது. அவ கதறல நான் பார்க்கனும்."
என்று அமைதியாய் கூறினாலும் அச்சிவப்பு நிற ஒளியில் அவனது இரக்கமற்ற நெஞ்சினின் வஞ்சத்தை பிரதிபளிக்க இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

"சரிண்ணா." என இருவரும் கிளம்பியதும்

"வருவேன்." என்று கண்களை மூடினான்.

*******

பொழுது புலரும்வேளைதனில் இளங்கோவின் கார் அம்மாளிகையினுள் அமைதியாய் நுழைந்தது.

"எப்படி கரைக்ட்டா வந்துட்டேன்ல?" என்று இளோங்கோவிடம் கேட்டான் ட்ரைவர் சீட்டில் அமர்ந்திருந்தவன்.

"உசுருமேல அவ்ளோ ஆசைன்னு சொல்லு." என்று சிரித்தபடி கீழே இறங்கினான் இளங்கோ.

"அண்ணே.." என மாறன் வர

"தெரியும் மாறா. நான் பசங்ககிட்ட முன்னாடியே சொல்லிவிட்டேன். அவன்ங்க சரியா பண்ணிருவான்ங்க." என்றான் இளங்கோ.

"கண்ண.."

"கண்ணு கட்டிதான் இருக்கும், மூனுபேரும் மயக்கத்துலயே இருப்பாங்க, போதுமாடா ராசா?"
என்று சிரிக்க சரியென தலையசைத்தான்.

"சரி, இன்னும் அரைமணி நேரத்துல அண்ணே கீழ இறங்கிருவாரு, அதுகுள்ள நான் குளிச்சுட்டு குட்டித் தூக்கம் போட்டு வறேன். டேய் எல்லாத்தையும் சரியா பண்ணிருங்கடா." என்றபடி மாளிகையின் பின்புறம் செல்லும் இளங்கோவை பார்த்தபடி நின்றான் மாறன்.

*******

காரில் "சரிம்மா நான் மறக்கமாட்டேன். கண்டிப்பா கூட்டிட்டு வறேன்." என்று ஃபோனில் புன்னகையோடு பேசிக்கொண்டு வந்தவன் கார் நின்றதும் ட்ரைவரை திரும்பி பார்க்க

"சார் வீடு வந்துருச்சு." என்றார் ட்ரைவர்.

"நான் அப்றம் பேசுறேன்." என்று கட் செய்தவன் தன் கருநிற கூலிங் கிளாஸுடன் கம்பீரமாய் இறங்கியவனின் பூட்ஷூம் யூனிஃபார்மும் சொல்லியது அவன் போலீஸென.

ஆம், அவன் ஸ்ரீபதியன் அஸிஸ்டன்ட் கமீஷ்னர் ஆஃப் போலீஸ்.

'வீடு பூட்டிருக்கு?' என்று யோசித்தபடி தன் ஃபோனை எடுத்தவன் அதில் NV என்ற எண்ணிற்க்கு அழைப்புவிடுக்க ஸ்விட்ச் ஆஃப் என்றுவர ட்ரைவரிடம் அருகில் உள்ளோரிடம் விசாரிக்க கூறியவன் NV frd1 என்ற நம்பரிற்க்கு அழைத்தான்.

அருகில் உள்ள வீட்டில் சென்று விசாரிக்க துவங்கினார் ட்ரைவர்.

"பக்கத்து வீட்ல மூனு பொண்ணுங்க இருந்தாங்களே அவங்க எங்க?"

"தெரில சார். மூனுநாளா அவங்கள காணோம். எங்க போனாங்கன்னு தெரியல."
என்றார் அவர்.

"மூனுநாளா காணோமா?"

"ஆமா சார். ஏன் எதுவும் பிரச்சனையா சார். மூனுபேரும் ரொம்ப நல்ல பிள்ளைங்க சார்."

"இல்லம்மா.. இல்லம்மா.. எங்க சார்க்கு தெரிஞ்சவங்க அதுனாலதான் பார்க்க வந்தோம்."

"ஓ.. சரிங்க சார்."
என்று ஸ்ரீபதியனை எட்டிப் பார்த்தபடி கூறினார் அவர்.

ட்ரைவர் ஸ்ரீபதியனிடம் கூற "வாட்!! மூனுநாளா காணோமா?! ஷட்!" என்று நெற்றியை தேய்த்துக் கொண்டவன் "சரி, கார கமிஷ்னர் ஆபிஸ்க்கு விடுங்க." என்றதும்

"ஓகே சார்." என வேகமாய் காரினை ஸ்டார்ட் செய்தார்.

தன் முன் காற்றின் வேகத்தால் பக்கங்களை அலசிக் கொண்டிருந்த புத்தகத்தினை கையில் எடுத்தவன் முதல் பக்கத்தினை பார்க்க அதில் 'இராவண காதலி ஆசிரியர்: நாகவந்தனா' என்றிருந்தது.

துடிக்கும் இதயத்துடன் அப்பெயரை வருடியவன் "ஒன்னும் ஆகிருக்க கூடாது." என்றவனின் ஃபோன் அலறியது.

"ஹலோ என்னாச்சு? வாட்!! உன்னோட ஏரியாதான அது? வீட்ட உடைச்சு ஒரு குடும்பத்த கூட்டிட்டு போயிற்க்கான்ங்க. யாருக்கும் எதுவும் தெரிலன்னு சொல்ற?!"

"..."

"அந்த ஏரியால எங்கையாவது கேமரா இருக்கான்னு செக் பண்ணு."

"..."

"அதெப்படி அவன்ங்க கேமராவ.. ஷட்!!! சரி நீ நல்லா விசாரி. கண்டிப்பா, கண்டிப்பா எதாவது ஒரு க்ளூ கிடைக்கும்." என்று கட் செய்தவனின் இதய துடிப்பு அதிகரிக்க "உங்களுக்கு எதுவும் ஆகவிடமாட்டேன்." என தனக்குள் கூறிக் கொண்டான்.

*******

மெதுவாய் கண்கள் திறந்தவள் தலைவலியால் முகம் சுழிக்க கைகளை தூக்க முயன்றவள் அப்பொழுதே தான் எங்கிருக்கிறோம் என்று கவனித்தாள்.

சிவப்பு ஒளி நிறைந்த அந்த பெரிய அறையில் ஆங்காங்கே ஆயுதங்களும் இரத்த கரைகளும் நிறைந்திருக்க உடன் இரண்டு அடியாட்கள் நின்றிருந்தனர்.

பேச முயன்றவள் அப்பொழுதே தன் வாய் கட்டபட்டிருப்பதை உணர்ந்தவள் இருவரையும் பார்த்திட அவ்விருவரின் பார்வையும் அவளின் எதிர்திசையை நோக்கி இருக்கவும் தன் எதிரே நோக்கியவளின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது.

தன் எதிரே தன் தோழிகள் தன் குடும்பமும் கை, கால் மற்றும் கண்கள் கட்டபட்டு மயக்கத்தில் இருப்பவர்களை பார்த்தவளின் கண்களில் கண்ணீர் குற்றவுணர்வோடு வெளிவந்தது.

"ஓ.. உன் குடும்பமா?" என ஒருவன் கேட்க 'ஆமென' வேகமாய் தலையசைத்தாள்.

"அப்போ இன்னைக்கு நமக்கு வேட்டைதான்." என்ற மற்றோருவன் கத்தியை அருகிலிருந்த இரும்பினில் உரச கண்டவளின் இதயம் வேகமாய் துடித்தது.

*******

இராவணன் வருவான்...


ஹாய் தோழமைகளே எப்படி இருக்கு யூடி ரொம்ப பெருசா இருக்கா? இல்ல இழுக்குற மாதிரி இருக்கா? எதுவா இருந்தாலும் தயங்காமல் கூறுங்கள். மேலும் தங்கள் கருத்துக்களை கதைப் பகுதியில் பதிவிடாமல் கீழே உள்ள linkல் பதிவிடலாமே

https://www.sahaptham.com/community/threads/இராவண-காதலி-comments.480/


-நான் உங்கள் நாகவேணி அழகர் ராஜன்.​
 
Last edited:

Nagaveni A

Member
Vannangal Writer
Messages
45
Reaction score
43
Points
18
இராவண காதலி

காவலும் காணுதலும் - 3

புத்தகத்தினை இறுக்கமாக பற்றியிருந்தவனது மனதில் பல எண்ணங்கள் உயர்ந்திட அதனை கட்டுபடுத்த முயன்றும் தோற்றுக் கொண்டு கமிஷ்னர் ஆபிஸ் நோக்கி வந்துக் கொண்டிருந்தான் ஸ்ரீபதியன்.

'ச்ச, ஒரு மூனுநாள்ல இப்படி ஆகும்னு கொஞ்சம்கூட எதிர்பார்க்கல, எவ்ளோ யோசிச்சாலும் எங்க இருக்காங்க, என்ன ஆனாங்கன்னு தெரியமாட்டேங்குதே.' என எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்க கார் நின்றதும் ட்ரைவரை பார்த்தவன்

"சார், கமிஷ்னர் ஆபிஸ்.." என முடிப்பதறக்குள் புத்தகத்துடனும் தனக்குத்தானே பேசிக் கொண்டும் கமிஸ்னர் ஆபிஸிற்குள் செல்பவனை

'பாவம் சார், எப்போ இந்த கேஸ ஆரம்பிச்சாரோ அப்போலெந்து அவர்கிட்ட ஒவ்வொரு மாற்றமா தெரியுது.' என்று ஸ்ரீபதியன் தன் கண்ணிலிருந்து மறையும் வரை கவலையோடு பார்த்துக் கொண்டிருந்தார் ட்ரைவர்.

"வாங்க ஸ்ரீ சார், கமிஷ்னர் சார் இப்போதான் உங்கள பத்தி பேசிட்டு இருந்தாரு." என முகம் மலர வரவேற்றார் அலுவலக உதவியாளர் கேசவன் என்பவர்.

"என்ன சார் முகமே ஒரு மாதிரி இருக்கு?"

"ஒன்னுல்லண்ணா. சார பார்க்கனும் ஒரு முக்கியமான விசியமா, சார் ஏதும் முக்கியமான.."
என்ற ஸ்ரீபதியனின் சற்று பதட்டமான குரலிலும் முக குறிப்பிலும் நிலையை உணர்ந்தவர்

"நீங்க போங்க ஸ்ரீ சார். சார் ஃப்ரீயா தான் இருக்காரு." என அனுப்பினார்.

"சரிண்ணா, நீங்க எதுவும் நினைச்சுக்காதிங்க." என்றவனிடம்

"உங்கள பத்தி தெரியாதா சார்? நீங்க போயிட்டு வாங்க." என்றவரிடம் விடைபெற்றவன் கமிஷ்னர் அறையை நோக்கி சென்றான்.

"சார்.."

"எஸ்.. ஹா.. வாங்க ஸ்ரீ உங்கள பத்திதான் பேசிட்டு இருந்தேன்."
என ஆர்வத்தோடு வரவேற்றார் கமிஷ்னர் திலகர்.

"சார்."

"என்ன ஸ்ரீ, வீட்ல விசேஷமெல்லாம் எப்படி போச்சு?"

"எல்லாம் நல்லபடியா முடிஞ்சது சார். சார்..."
என ஸ்ரீபதியன் கூறும் முன்பே கையிலிருந்த புத்தகத்தை கண்டவர்

"கேஸ் சம்மந்தமா எதாவது தெரிய வந்துருக்கா ஸ்ரீ, முதல்ல அந்த ரைட்டர்கிட்ட அஃபிஷியலா இன்வஸ்டிகேஷன ஆரம்பிச்சாச்சா?" என்ற கேள்விகளில் புத்தகத்தை இறுக பற்றியவன்

"சார், நான் உங்ககிட்ட அது சம்மந்தமா பேசதான் வந்தேன்." என்றான்.

"ம்ம்.."

"சார், என் ஃபார்ஸ்ட் மூவ்லேந்து இப்போ வரைக்குமே உங்ககிட்ட சொல்லிட்டுதான் இருக்கேன். ஆனால், இப்போ வரைக்குமே எல்லாமே கற்பனைன்னுதான் சொன்னாங்க."

"கற்பனையா, என்ன ஜோக் பண்றாங்களா அவங்க?"

"அதுக்காகதான் சார், டுடே..."
என்றவனது கண்கள் சிறிது கலங்கிட தன் தலையை தாழ்த்தி தன்னை சமன் செய்தவன் மீண்டும் கூறலானான்.

"டுடே ஆஃபிஷியலா இன்வஸ்டிகேஷன தொடங்கலாம்னு அவங்க வீட்டுக்கு போனப்போ அவங்க இல்ல சார்." என்றதும்

"இல்லன்னா? புரியல. ஸ்ரீ. யூ மின் அவங்கள எதாவது.." என சிறு பதட்டத்துடன் நிறுத்தியவரிடம்

"எஸ் சார்." என்றான் குரலில் சிறு தடுமாற்றத்துடன்.

"ஓ... காட்! அவங்க பிரண்ட்ஸ் அண்ட் ஃபேமிலிக்கு..."

"அவங்க எல்லாரையும் சேர்த்துதான் சார்."

"வாட்?!"

"எஸ் சார். இன்னும் பத்து நிமிசத்துல என் ஆபிஸ்க்கு எல்லா டிட்டெய்ல்ஸூம் வந்துடும். எனக்கு இப்போ தேவையெல்லாம் உங்களோட சப்போர்ட்தான்."

"கண்டிப்பா ஸ்ரீ. இந்த கேஸ் ஒரு ஸ்டேட்டையே போட்டு உலுக்கிட்டு இருக்குற கிரிமினலோடது ஸ்ரீ. மேல் இடத்துலருந்து நிறைய ப்ரெஷர் வந்துட்டே இருக்கு. நான் அமைதியா இருக்க காரணம் என்னன்னு உங்களுக்கே தெரியும். இதுக்கு மேல என்னால அமைதியா இருக்க முடியாது ஸ்ரீ. சோ, நீங்க எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் முடிங்க."

"ஷ்வர் சார்."
என்று விடைபெற சென்றவனிடம்

"ஸ்ரீ, ரைட்டர ரைட்டரா மட்டும் பார்க்கலன்னு உங்க கண்ணோரத்துல உள்ள கண்ணீர் சொல்லுது. அவங்களுக்கு எதுவும்..." என திலகர் முடிக்கும் முன்பே

"எதுவும் ஆகவிடமாட்டேன் சார்." என்று உறுதியாக கூறினான் ஸ்ரீபதியன்.

*******

சீரற்ற வரிசையில் நின்றிருந்த தொண்ணூறுக்கும் மேற்பட்ட அடியாட்கள் அனைவரும் சத்தமின்றி பேச வேண்டுமென எழுப்பிய சத்தமற்ற பேச்சுக்களாலே பெரும் சத்தமாக நிரம்பியிருந்தது அவ்வெள்ளை மாளிகையின் வாசல்.

'அய்யோ இவங்க எல்லாரையும் வாய மூடுங்கன்னும் சொல்ல முடியாது, சொல்லாமலும் இருக்க முடியாது. தினமும் காலைல ஆனா என்பாடு திண்டாட்டமா இருக்கு. இதுக்கு ஒரு வழி பிறக்குமா பிறக்காதான்னு தெரிலயே.' என உள்ளேயும் வெளியேயுமாய் பார்த்தபடி நின்றிருந்தான் மாறன்.

"நேத்து ஏதோ ஒரு சம்பவம் நடந்துதாமே.."

"ஒன்னு இல்லடா, இரண்டு."

"இரண்டு தானா?"

"வர வர கம்மியாகிட்டே வருதே."

"கூட்டத்துல எல்லாரும் சரியா நடக்க ஆரம்பிச்சுட்டான்ங்களா என்ன?"

"நடந்துட்டாலும். டேய், அவன் அவனுக்கு எப்போ எது நடக்கும்னே தெரியாம இருக்கு. இப்போதான் ஆராய்ச்சி பண்ணிட்டு."

"சரியா சொன்னடா. ஆமா, யாருடா அந்த இரண்டு சம்பவம்?"

"அது ஒன்னு கணேஷ். இன்னோன்னு ஏதோ பேரு சொன்னான்ங்க, மறந்துட்டேன்."

"ரைட்டுவிடு போனவன் பெயரெல்லாம் நியாபகம் வச்சுக்கனும்னா நாம பெரிய நோட்டு போட்டாதான் உண்டு."

"ஹா..ஹா.. நம்ம பேரு எப்ப சம்பவத்துல சிக்க போகுதோ தெரியல."

"நார பயலே, காலைலயே வாய வைக்காதடா!"

"சரி.. சரி.. பொங்காத."

"டேய் வாய மூடுங்க. அங்க பாரு மாறன் கப்புசிப்புன்னு நிக்குறான். அண்ணன் வராரு."
என்ற பலவாறான பேச்சுக்கள் மாறனின் உடற்மொழியின் மூலம் அறிந்துக் கொண்டு சீரான வரிசையில் அமைதியான நின்ற அனைவரின் கண்களும் வாயிற்படியினை நோக்கியிருந்தது.

தன் சட்டை காலரை விசிறிவிட்டு வெள்ளி கை காப்பை மேலெற்றியபடி சிரிக்க மறுக்கும் இறுகிய இதழ்களுடன் கழுகு கண்களும் பாம்பு காதுகளுமாய் வேட்டைக்கு செல்லும் சிங்கத்தின் அழுத்த நடையுடன் தலை நிமிர்ந்து ஆறடி மேலுள்ள உயரத்துடன் வந்தவனைக் கண்ட அனைவரின் ரோமங்களும் ஓர்முறை குத்திட்டு அடங்கிற்று.

அனைவரையும் தன் கண்களால் அளந்தபடி அவ்வாசற்படியை அளந்தவன் மார்பின் குறுக்கே கைகளை கட்ட அருகே வந்தான் மாறன்.

"அண்ணா?"

"ரெடியா இருக்க சொல்லு."
என்றதும் மாளிகையின் பின் பக்கம் விரைவாய் ஓடிட அனைவரின் பார்வையும் ஓடும் மாறனை நோக்கிச் சென்றது.

அதனை கண்டவன் சொடக்கிட அனைவரின் பார்வையும் அவன் புறம் திரும்பியது.

"இன்னும் இரண்டு நாளைக்கு யாரும் எதுவும் பண்ண வேண்டாம். பண்ண வேண்டாம்னா உங்களுக்கு புரிஞ்சுருக்கனும், யாரும் தடம் இல்லாம பண்ண வேண்டாம். பண்ணது யாருன்னு தெரியுற மாதிரி தெளிவா பண்ணனும்.

இனி ஒவ்வொருத்தனும் சாகும் போது எதுக்காக சாகுறான்னு தெரிஞ்சுட்டு சாகனும். அவனுக்கு மட்டுமில்ல அத பாக்குற ஒவ்வொருத்தனுக்கும் தெரியனும். வாழ்க்கைல அவன்களும் அத செய்ய கூடாதுங்குற பயமும் வரனும். இன்னும் இரண்டு நாளைக்குக்கு மொத்த ஸ்டேட்லையும் இந்த VKவோட பேரு மட்டும்தான் கேட்கனும்.

போலீஸ்காரன்களுக்காக விரிக்குற வலை இது. இங்க இருக்குற எவனும் அந்த வலைல மாட்ட கூடாது. மீறி மாட்டுனா, உசுரவிடவும் தயங்க கூடாது."
என்று அழுத்த திருத்தத்துடன் கூறியவனின் கண்கள் ஜொலித்தது. அது கோபத்தாலா? குரோதத்தாலா? என்பதை அவனே அறிவான்.

*******

ப்பிஏம்ட்டிக்குள் நுழைந்த மாறன் சிவப்பறைக்குள் நுழைய அங்கு இருந்த ஆஜானபாகுவனா இருவரும் பேசி சிரித்து பேசிக் கொண்டிருந்தனர்.

'இந்த பாதாளத்துல இருந்தும் சந்தோசமா இருக்க முடியுதுன்னா, அது உங்களால மட்டும்தான்டா முடியும். என்ன ஜென்மங்களோ இவன்க, சரி நாம வந்த வேலைய பார்ப்போம்.' என இருவரின் அருகில் சென்றான்.

"அண்ணே.."

"வாடா! வாடா!"
என வரவேற்றவர்களை

'ஆமா, கல்யாண வீட்டுக்கு வந்துருக்க மாதிரி வரவேற்ப்பு வேற.' என நொடிப் பொழுதில் நினைத்தவனாய் "அண்ணா, அண்ணே ரெடியா இருக்க சொன்னாரு." என்றிட

"எல்லாம் ரெடியா இருக்கு மாறா. அண்ணே வந்தா எல்லாத்தையும் அறுத்துப் போட்டு, அள்ளிப் போட வேண்டியதுதான்." என்றதும் அங்கிருந்தவர்களை பார்த்தான் மாறன்.

குடும்பமாய் மயக்கத்தில் கிடப்பவர்களும் தனியே இருவர் மயக்கத்திலும் பல காயங்ளோடும் அலண்ட விழிகளுடனும் தன்னை பார்ப்பவளை கண்டவன் 'உனக்கு வந்த கெட்ட நேரம், இவன்களுக்கு வந்த நல்ல நேரம்.' என்று இருவரையும் பார்த்துவிட்டு

"சரிண்ணா நான் கிளம்புறேன்." என கிளம்பினான்.

மாறன் சென்றதும் இருவரையும் கண்டவள் 'ம்ம்..ம்ம்..' என்று கண்ணீருடன் தன் வாய்கட்டை காட்ட இருவரும் சிரித்தனர்.

"நீ என்ன பண்ணாலும் நாங்க எதுவும் பண்ண முடியாது. உன் விதி அவ்ளோதான். உன்னோடது மட்டுமில்ல இந்தா இதுங்களோடதும்தான்." என்று மயக்கத்திலிருந்தவர்களை காட்டிவிட்டு அவளது கண்களை கட்டினான் ஒருவன்.

"கொஞ்சம் பொறு. இன்னு ஐந்து நிமிசமோ, பத்து நிமிசமோ. அண்ணே வந்துருவாரு. அப்றம் உங்க எல்லாரையும் பத்ரமா அண்ணன் மேல அனுப்பி வைப்பாரு." என மற்றோருவன் கூற கட்டினை நனைத்தது அவளது கண்ணீர்.

*******

தொண்ணூறுக்கும் மேற்பட்டோரையும் தனித்தனிக் குழுக்களாக பிரித்தவன் அர்ஜூனன், இளங்கோ, சந்துரு, மற்றும் சத்ரியன் ஆகிய நால்வர்களை மட்டும் தன்னுடன் நிறுத்தி வைத்துக் கொண்டான் VK.

தனக்கென பிரிக்கபட்ட குழுவின் பின் மனமில்லாமல் சென்றுக் கொண்டிருந்த நாகநாதன் VKவின் புறம் திரும்பி பார்க்க தைரியமின்றி மெதுவாய் அடியெடுத்து வைத்துச் கொண்டிருந்தான்.

"அண்ணா சொல்லிட்டேன்." என்று நால்வருடன் பேசிக் கொண்டிருந்த VKவிடம் கூறிய மாறனின் பார்வை தயக்கத்துடன் சென்றுக் கொண்டிருக்கும் நாகசுதனின் மீது விழ

"அவன வர சொல்லு." என நாகசுதனை காணாமலே கண்டு கொண்டுவனை அதிர்ச்சியுடன் பார்த்தான் மாறன்.

"வர சொல்லுன்னு சொன்னேன். என்னைய பார்த்துட்டு நிக்க சொல்லல." என்றதும் நாகசுதனிடம் ஓடினான்.

VKவின் அருகிலிருந்த நால்வரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள "எல்லாம் சரியா நடக்கனும்." என VK கூற தலையசைத்தவர்கள் மாளிகையின் பின்னால் சென்றனர்.

நால்வரும் கிளம்பியதும் VK திரும்பவும் மாறனுடன் நாகநாதன் அருகில் வருவதற்கும் சரியாக இருந்தது.

மாறனை பார்த்த நொடியினில் மாறன் தொலைவில் சென்று நின்றுக் கொள்ள உடற் நடுக்கத்தை கட்டுபடுத்த முயன்றும் தோற்று நின்றிருந்த நாகநாதனிடம் பேசத் துவங்கினான்.

"இங்க வந்து எத்தனநாள் ஆகுது?"

"பதிமூனு நாள் ஆகுதுண்ணா."
என்றான் நடுக்கத்துடன்.

"அப்போ நாளைக்கு பதினாலாவது நாள்?"

"ஆமா, அண்ணா."

"இத்தன நாள்ல என்னன்ன தெரிஞ்சுகிட்ட?"
என கேட்டவனின் கூர்மையான பார்வையினில் தடுமாறினான் நாகநாதன்.

*******

அந்த மீட்டிங் அறையில் நீள்வட்ட மேஜைகளை சுற்றியமர்ந்திருந்த இளம் போலீஸாலர்கள் பத்து பேர் கொண்ட குழுவின் முன் நின்று "சோ, நம்ம எல்லாருக்குமே தெரியும். சிட்டில இப்போலாம் அதிகமா க்ரைம் நடந்துட்டு வருது. மக்களுக்கு நம்ம மேல உள்ள நம்பிக்கை கொஞ்ச கொஞ்சமா போயிட்டு இருக்கு." என தீவிரமாக பேசிக் கொண்டிருந்தான் ஸ்ரீபதியன்.

"எஸ் சார். நம்பிக்கை மட்டும் இல்ல, மரியாதையும் சேர்ந்தே குறஞ்சுட்டு வருது." என்றான் ஒருவன்.

"ம்ம்.. இப்போ நடக்குற எல்லா க்ரைம பத்தியும் உங்களோட கண்ணோட்டம். என்னன்னு நினைக்குறீங்க?" என ஸ்ரீபதியன் அனைவரிடமும் கேட்க

"சார், முன்னாடிலாம் பெரியப் பெரிய காரணத்துக்காக எல்லாம் பண்ணட்டு இருந்தாங்க. ஆனால், இப்போலாம். சின்ன விசியத்துக்கெல்லாம் கத்திய தூக்கிறான்ங்க சார்." என ஒருவன் கூற

"எஸ் சார். அவர் சொல்றது போல தன்ன பார்த்து எல்லாரும் பயப்படனுங்குறத்துக்காவே எல்லாம் பண்றாங்க." என்றான் மற்றோருவன்.

"ம்ம்.. அப்படின்னா இப்போ உங்க எல்லார் முன்னாடியும் இருக்குற ஃபைல பாருங்க. அதுல நூறுக்கும் மேற்பட்ட மர்டர் கேஸஸ் அண்ட் அதோட மொத்த டீட்டெய்ல்ஷும் இருக்கு. எல்லாத்துக்குமே பொதுவான விசியம்னு பார்த்திங்கன்னா, உடல்ல ஏற்படுத்திருக்குற காயங்களோட ஆழம் மற்றும் அகலம். அதுவும் கழுத்துப் பகுதில இருக்க காயம் ரொம்பவே ஒத்து போகுது. இதோ இந்த ஃபோட்டோஸ பாருங்க." என்று ஸ்ரீபதியன் பீப்பீட்டியின் வழியே சில ஃபோட்டோக்களை காட்ட அனைவரும் நுணுக்கமாய் கவனித்தனர்.

"போஸ்மாட்டம் ரிப்போர்ட் படி கொலை பண்றவன் முதல்ல கடத்தி இரண்டு மூனுநாள் வர சித்திரவாதை செய்துட்டு அதுகப்றம்தான் சாகடிச்சுருக்கான்." என்று கூற

"சார் நீங்க சொல்ற மாதிரி ஓர் குறிப்பிட்ட நீளம், அகலத்தோட காயத்த ஏற்படுத்தி பண்ணிருக்கதா இருந்தா, நிறுத்தி நிதானமா பண்ணிருக்கான். அப்படித்தான சார்?" என ஒருவன் கேட்க

"அப்படியும் இருக்கலாம், ஆனால் பண்றவன் எப்போதும் கைல அளவுகோல் வச்சுட்டா பண்ணுவான்? அப்படியும் பண்ணாலும் அளவுகள் ரொம்பவே சரியா இருக்க வாய்ப்புகள் குறைவு." என்றான்.

"அப்போ நீங்க சொல்றத பார்த்தா ஒன்னு அவன் இந்த அளவுதான் பண்ணனும்னு ஆயுதத்துல மார்க் பண்ணிருக்கனும் இல்லன்னா அளவுகள் குறிக்கபட்ட ஆயுதத்த பயன்படுத்திருக்கனும். சரியா சார்?" என்று ஒருவன் கேட்க அதில் மகிழ்ந்தவன்

"எஸ், யு ஆர் கரைக்ட்." என்றான்.

"அப்போ கொலைகள பண்றது ஒரு சைக்கோன்னு சொல்றீங்களா சார்?" என ஆர்வத்துடன் கேட்டான் ஒருவன்.

"மேபி, அப்படி இருந்தா என்ன மோட்டிவா இருக்கும்னு நினைக்குறீங்க?" என்று கேட்க

"சார் நீங்க கொடுத்துருக்குற கேஸஸ்ல சிலபேர் ஏற்கனவே குற்றாவாளியா இருந்தவங்க. அதே போல தேடபட்டுட்டு இருக்கவங்களும் கூட சார்." என ஃபைலை பார்த்தபடி கூறினான் மற்றோருவன்.

"எஸ். நீங்க சொல்றது ரொம்பவே சரி. அவங்க மட்டுமில்ல அதுல சில போலீஸ் ஆஃபிஸர்சும் கூட இருக்காங்க." என ஸ்ரீபதியன் கூற ஒருவருக்கொருவர் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டனர்.

"நீங்க ஷாக் ஆகுற அளவுக்கு இதவிட பல விசியங்கள் இந்த புத்தகத்துல இருக்கு." என்று தன் கையில் வைத்திருந்த புத்தகத்தை மேஜையின் மீது வைக்க அனைவரின் பார்வையும் அப்புத்தகத்தின் மீது பதிந்தது.

"இந்த புத்தகத்துல சொல்லபட்டுருக்க எல்லாமே, நீங்க கைல வச்சுருக்க ஃபைலோட அதிக அளவு சம்மந்தபட்டுருக்கு.

இந்த கேஸ நான் அனலைஸ் பண்ணிட்டு இருக்கப்போதான் இந்த புத்தகத்த பத்தி தெரிய வந்தது. இந்த கேஸ்க்கும் இந்த கதைக்கும் உள்ள தொடர்பு ரொம்பவே நெருக்கமானதுன்னு இத படிச்சப்றம் தெரிய வந்தது.

அப்றம், நம்ம டிப்பார்ட்மென்ட்ல பல பேர கவனிச்சதுல நீங்க பத்துபேரும் இந்த கேஸ்க்கு சரியா இருப்பீங்கன்னு எனக்கு நம்பிக்கை வந்தது. அதுனாலதான் உங்க எல்லாரையும் செலைக்ட் பண்ணி ஒரு டீமா உருவாக்கிருந்தேன்.

இதுக்கு இடைலதான் இந்த புத்தகத்தோட ரைட்டரையும் அவங்க ஃபேமிலி அப்றம் அவங்க பிரண்ட்ஸ கடத்திட்டாங்க.

இன்னும் பல முடிச்சுகள் இந்த கேஸ்ல அவிழ்க்கபடாமலே இருக்கு. எல்லாத்தையும் தெளிவா தெரிஞ்சப்றம்தான் டீமா செயல்படனும்னு யார்கிட்டையும் சொல்லாம இருந்தேன். ஆனால், எதிர்பாராதவிதமா இப்படியாகும்னு நினைக்கவே இல்ல.

எனிவே, இந்த கேஸ் உள்ள போனப்றம் நமக்கு என்ன வேண்டும்னாலும் நடக்கலாம். அதுக்கு நாம தயாரா இருக்கனும். நம்ம மக்களோட அமைதிக்காகவும் பாதுகாப்புக்காகவும் நாம உயிர்விடவும் துணிஞ்சு நிக்கனும்."
என்று முடிக்க

அனைவரும் எழுந்து நின்று துணிவோடு "எஸ் சார்!" என சலியூட் செய்தனர்.

"உங்க எல்லாருக்கும் இந்த ஃபைல்ல உள்ள கேஸஸ் எல்லாத்தையும் தனித்தனியா பிரிச்சு டீட்டெய்ல்ஸ் எல்லாமே உங்க இடத்த தேடி வரும். அதே போல இந்த புத்தகத்தையும் படிச்சு பாருங்க. நமக்கு அதிக நேரம் கிடையாது. உடனடியா அவன் யாரு? என்னனு எல்லாத்தையும் கண்டுபிடிச்சாகனும், அவன் கடத்தி வச்சுருக்கவங்களையும் உயிரோட மீட்கப்படனும்." என்றான் உறுதியாக.

*******

அனைவரின் மயக்கமும் மெல்ல தெளிந்து கொண்டிருக்க காலடி ஓசைகள் அந்த சிவப்பு அறைக்குள் கேட்க துவங்கியது.

அவளோ எகிறி குதித்திடும் இதய துடிப்புடன் ஓர் காலடி சத்தத்தை மட்டும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தாள்.

சில நொடிகளில் அவ்விடமே அமைதியாகிட ஓர் உருவம் தன் நெருக்கத்தில் இருப்பதை உணர்ந்தாள்.

சீரான மூச்சுக் காற்றுகளின் சத்தமும் அவளின் இதய துடிப்பின் சத்தமும் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது அவ்வறையில்.

ஓர் நொடி இடைவெளியில் ஓர் காலடி சத்தம் கேட்க தன் கண் கட்டை அவிழ்ப்பதை உணர்ந்தாள்.

ஆம் கட்டும் அவிழ்க்கபட்டது. ஏனினும் அவள் கண்கள் திறக்கவில்லை. கண்களில் மட்டும் கண்ணீர் நிற்க்காமல் வெளியேறிக் கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் வாய் கட்டும் அவிழ்க்கபட்டது. வார்த்தைகளின்றி விம்மல்கள் மட்டுமே வெளி வந்தது.

'இல்ல நான் அவன பார்க்கமாட்டேன். பார்க்கமாட்டேன். வேண்டாம், வேண்டாம். அவன் என் கற்பனையாவே இருக்கட்டும்.' என்று மேலும் இறுக்கமாக கண்களை மூடிக் கொண்டாள்.

சில்லென மற்றும் கூர்மையான ஏதோ ஒன்றால் தன் முகம் திருப்பப்படுவதை உணர்ந்தவளின் உடல் முற்றிலும் நடுங்கிற்று.

"ம்ம்... இராவண காதலி, நாகவந்தனா.." என்று தன் பெயர் கூற கேட்டதும் பளிச்சென கண்களை திறந்து கண்டவளின் முன்பு கண்களில் கோபம் மின்ன நின்றிருந்தான் VK.

*******

இராவணன் வருவான்...
ஹாய் தோழமைகளே எப்படி இருக்கு யூடி? நிறை குறைகளை தயங்காமல் இங்கு
👉
https://www.sahaptham.com/community/threads/இராவண-காதலி-comments.480/ கூறுங்கள்.

- நான் உங்கள் நாகவேணி அழகர் ராஜன்.
 
Last edited:

Nagaveni A

Member
Vannangal Writer
Messages
45
Reaction score
43
Points
18
இராவண காதலி

கொல்வேன் வெல்வேன் - 4

உடலில் பல காயங்களுடன் ஆங்காங்கே கசிந்து காயந்த இரத்தமும் கண்களில் கண்ணீருடன் அவ்வறையில் சுருண்டு கிடந்த நாகநாதனிற்கு சற்று முன்பு நிகழ்ந்த நிகழ்வு கண்களின் முன்பு நிழலாடியது.

"இத்தன நாள்ல என்னன்ன தெரிஞ்சுகிட்டன்னு கேட்டேன்?" என VK கேட்க

"அது.. அண்ணா.. நான்.." என்று தடுமாறியவனை அறைந்தவன்

"இந்த பயந்த மாதிரி நடிக்கிற வேலையெல்லாம், இருக்க கூடாது. ஏன்டா, யார் நடிக்கிரா, யாரு உண்மையா இருக்கான்னு கண்டுபிடிக்க தெரியாத அளவுக்கு என்னைய முட்டாளுன்னு நினைச்சுட்டியா?" என்று மீண்டும் அறைந்த வேகத்தில் இதழ்கள் கிழிந்து இரத்தம் கசைய கண்கள் கலங்கியது நாகநாதனிற்க்கு.

மாறன் மற்றும் கிளம்ப தயாராய் இருந்த கடைசி குழு மட்டும் இருவரையும் அமைதியாய் தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.

"நீ யாரு, எதுக்காக, ஏன் வந்துருக்கன்னு எனக்கு நல்லாவே தெரியும்." என்று VK கூற அதிர்ச்சியில் கண்கள் விரித்தான் நாகநாதன்.

"எப்படி, எப்படி.. கூட்டத்துல இருக்கவன் ஒருத்தன பிரண்டு பிடிப்ப, திடீர்ன்னு ஒருநாள் நானும் உங்க கூட சேர்ந்துக்குறேன்னு சொல்லி வருவ, அவன் வந்து என்கிட்ட கேட்டதும், நானும் சரி, சேர்ந்துக்க சொல்லுன்னு சொன்னதும், என்னைய என்ன முட்டா பயன்னு நினைச்சியா?" என்றவன் மீண்டும் அறைந்து "VKடா!!" என்றிட நிலைதடுமாறி நின்ற நாகநாதனின் இதழ்களில் இரத்த கசைவு அதிகமானது.

"நீயா அவன் கூட பிரண்ட் ஆகலடா, நான் ஆக வச்சேன். நீயா வந்து சேந்துக்குறேன்னு சொல்லலடா, நான் சொல்ல வச்சேன்." என கூறியவனை அதிர்ச்சியும் பயமுமாய் உடல் நடுக்கத்துடன் பார்த்தான் நாகநாதன்.

"இப்போ! நடுங்குது பாரு, இதுக்கு பேருதான் உண்மையான பயம். ஏன்டா, என்னைய பத்தி என்ன நினைச்ச?" என்றவன் "மாறா!!" என்று கத்தியபடி கைகள் நீட்ட

மாறன் ஓடிச் சென்று சிறுசிறு முள் கம்பிகள் பொருந்திய சாட்டையை எடுத்து VKவிடம் கொடுத்துவிட்டு தூரம் செல்ல நாகநாதன் சர்வமும் அடங்கி VKவையும் சாட்டையையும் பார்த்தவாறு நின்றான்.

"எங்க போச்சு அந்த கோவம்? எங்க போச்சு அந்த நரித்தனம்? எங்கடா போச்சு அந்த கொலவெறி?! எடு!! எடுடா அந்த கத்திய!" என்று கத்த நாகநாதன் நடுநடுங்கி போக வேடிக்கை பார்த்தவர்களின் நிலையும் அதுவே.

"ம்ம்... சரி, நான் இத கீழ போடுறேன். எடு, நான் வெறும் கையோடே இருக்கேன். நீ கத்திய எடு." என்று அந்த முள் சாட்டையை கீழே போட நாகநாதனின் நடுங்கிய கைகள் தன் முதுகின் பின் வைத்திருந்த கத்தியை எடுத்தது.

"ஆனால், எப்போ உன்னோட கத்தி என் கைக்கு வருதோ, அப்போ உன்னோட கத்தி உன்னை நோக்கி கீறும். கீற வைப்பேன். அதுவும் உன்னைய வச்சே." என்று தன் கை காப்பை மேலே ஏற்றினான் VK.

மீதமிருந்த குழுவும் மாறனும் ஆர்வத்தில் சற்றே அருகில் வந்திட VK அவர்களை நோக்கி பார்வை செலுத்திய கணம் அனைவரும் பின்னே சென்றனர்.

அவ்விடைவெளியில் குத்த முயன்ற நாகநாதனின் கையை பற்றியவன் அவனை நோக்கி திரும்பினான்.

"உன்னோட மூவ் சரிதான். ஆனால் பாரு, அது யார நோக்கிங்குறதுல தப்பு பண்ணிட்ட." என பிடியை இறுக்க வலியில் துடித்தவன் கத்தியை நழுவவிட அதை சரியாய் பிடித்தான் VK.

"நான் சொன்ன வார்த்தைய மீறமாட்டேன். இந்தா உன் கத்தி." என்று மீண்டும் நாகநாதனின் கைகளில் திணித்த மறு நொடியினில்

நாகநாதன் உடலில் வலி உணர தடுமாற்றத்துடன் தன் உடலினை காண அதில் பல கீறல்களால் இரத்தம் கசிந்துக் கொண்டிருக்க அதிர்ச்சியுடன் VKவை பார்க்க வேடிக்கை பார்த்த மற்றவர்களின் நிலையும் அதுவே.

"நீ நாள் கணக்க போடுற ஸ்கேட்ச்சுக்கு எனக்கு கண்ண சிமிட்டுற ஒரு நொடி போதும்டா. போட்டு போயிட்டே இருப்பேன்." என்ற நொடி நாகநாதன் மயக்கத்தில் சரிய ஏளனமாய் புன்னகைத்தவன் "மாறா!" என்றழைக்க விரைவாய் ஓடி வந்தான் மாறன்.

"இவன ரூம்ல தூக்கி போடு. அப்றமே கவனிச்சுக்கலாம்." என்றுவிட்டு "நின்னு வேடிக்க பார்க்காம உங்களுக்கு கொடுத்த வேலைய கவனிக்க போங்க." என கூற அடுத்த நொடி அனைவரும் கிளம்பினர்.

மாறன் நாகநாதனை தூக்கிக் கொண்டு உள்ளே செல்ல VK ப்பிஎம்ட்டி நோக்கி சென்றான்.

இவையனைத்தையும் நினைத்து பார்த்த நாகநாதனிற்க்கு கண்களில் கண்ணீர் நிற்க்காமல் வெளிவர எழுந்தமர நினைத்தவனால் இயலாமல் போனது காயங்களின் வலியினால்.

'நான் அமைதியாவே இருந்துருக்கனும். இனி என்னால தப்பிக்க முடியாது. VKவ எதிர்த்து யாராலையும் எதுவும் செய்ய முடியாதுன்னு தெரிஞ்சப்றமும் நான் இங்க இருந்துருக்க கூடாது. நான் சாக போறது உறுதி.' என்று தன் நிலையெண்ணி கண்ணீர் வடித்தான்.

*******

"எஸ் சார், எனக்கு கொடுக்கபட்ட கேஸஸ் வச்சு செக் பண்ணப்போ அப்படித்தான் தோணுச்சு. நாம ஏன் அப்படி ட்ரை பண்ண கூடாதுன்னு." என ஸ்ரீபதியனிடம் கூறிக் கொண்டிருந்தான் பத்து பேர் கொண்ட குழுவில் ஒருவனான கண்ணன் என்பவன்.

"எதனால அப்படி தோணுச்சுன்னு சொல்றீங்களா?" என்று ஆர்வத்துடன் கேட்டான் ஸ்ரீபதியன்.

"சார், நீங்க கொடுத்த புத்தகத்துலையும் சரி, கொடுத்திருக்க ஃபைல்லையும் சரி. அக்யூஸ்ட் ஆண் பெண்ணுன்னு பேதம் பார்க்கல. சோ அவன்கிட்ட இரக்கம் எதிர்பார்க்க முடியாது."

"எஸ்..."

"அதே போல. செத்தவங்கல்ல யாரும் நல்லவங்களும் கிடையாது. எல்லாருமே 3rd க்ரேட் கிரிமினல்ஸ்தான். அதே போல போலீஸா இருந்தவங்களும் ஒரு வகைல கிரிமினல்ஸாதான் இருந்துருக்காங்க."

"அப்போ நாம கொலகாரன கண்டுபிடிக்காம கிரிமினல்ஸ்ஸ வாட்ச் பண்ணாலே அவன பிடிச்சற்லாம்னு சொல்ல வறீங்களா?"
என ஸ்ரீபதியன் கேட்க

"எஸ் சார். நீங்க சொன்னது போல அவன் டார்ச்சர் பண்ணி கொலை பண்ணிருக்கான்னா, கண்டிப்பா அவன் கடத்துனதும் கொலை பண்ணமாட்டான்னு தான் தோணுது. சோ, நாம பதட்டபடாம கரைக்ட்டா அனலைஸ் பண்ணோம்னா நாம ஈஸியா அவன நெருங்கிடலாம்." என்று கண்ணன் முடித்தான்.

"எஸ், அவன் கடத்துனதும் கொலை பண்ணமாட்டான்டான். பட், எத்தனை நாளுக்கு வச்சு டார்ச்சர் பண்ணுவான்னு நம்மலால சொல்ல முடியாது கண்ணன். பொறுமையா அனலைஸ் பண்றத்துக்கான நேரமும் நம்மகிட்ட கிடையாது. ஒவ்வொரு கிரிமினல்ஸ் பின்னாடியும் நம்மலால போயிட்டு இருக்க முடியாது." என்றவன் "வேற யாருக்காவது எதாவது தெரிஞ்சுதா?" என கேட்டான்.

"சார், இப்போ இருக்க நிலைமைல எங்க வேண்டும்னாலும் எப்போ வேண்டும்னாலும் அடுத்தடுத்து கொலைகள் நடக்கலாம். ஏன்னா இத்தன கொலைகள பண்ண தெரிஞ்சவனுக்கு உங்கள தெரியாம இருக்குமா சார்? சோ இப்போ அக்யூஸ்ட் நம்பல வாட்ச் பண்ணிட்டுதான் இருப்பான்." என்றான் வினோத் என்பவன்.

"ம்ம்... அவனுக்கு என்னைய நல்லாவே தெரியும் வினோத். ஏதோ ஒரு காரணத்துக்காகதான் அவன் இன்னும் என்னைய எதுவும் பண்ணாம இருக்கான்." என தன் முன் இருந்த கதை புத்தகத்தினை பார்த்தவாறு யோசனையுடன் கூறியவன் "எஸ்!!" என புத்தகத்தினை வேகமாக புரட்டினான்.

*******

VKவின் கோபம் நிறைந்த கண்களை கண்ட நாகவந்தனாவிற்க்கு 'அவனது கோபம் நிறைந்த கண்கள் சொல்லும் தீப்பிழம்பின் கொதிநிலை என்னவென்று.' என்ற தான் எழுதிய வரிகள் நினைவு வந்திட உறைந்து நின்றாள்.

VKவின் கத்தி அவளின் கழுத்தில் சிறிதாய் ஆழம் பதிய வலியை தாங்கிக் கொண்டாளே தவிர VKவிடமிருந்து பார்வையை விலக்கவிலக்கமால் இருந்தவளிற்க்கு தனது ஒவ்வொரு வரிகளும் நினைவிற்க்கு வந்தது.

'அவனின் இறுகிய உதடுகள் கூறும் இரும்பின் இறுக்கம் என்னவென்று'

'அவனின் முறுக்கிய மீசை கூறும் ஆண்மைக்கு மீசையில் எத்தனை கர்வம் உண்டென.'

'அணிந்திருக்கும் கை காப்பும் கூறும் அவன் கோபத்தின் ஏற்ற இறக்கங்கள் எவ்வளவென்று.'

'நரம்புகள் புடைத்தெழ அவன் பிடித்து தூக்கியெறிந்த வளைந்த கத்தியும் கூறும் அவனின் வேகம் என்னவென்று.' என தனது வரிகளை நினைவுக் கூர்ந்துக் கொண்டிருந்தவள் அதிகமான வலியால் நடப்பிற்க்கு மீண்டாள்.

VK தன் கை விரல்கள் ஒவ்வொன்னிறிலும் காயம் ஏற்படுத்திக் கொண்டிருப்பதை கண்டவள் வலியால் கத்தத் துவங்கினாள்.

"ப்ளீஸ்!!! வேண்டாம்!!! வலிக்கிது!! வேண்டாம்!!" என்று கத்தியவளை அறைந்த வேகத்தில் மயங்கினாள்.

VK அர்ஜூனனை காண ஓடிச் சென்று தண்ணீர் எடுத்து வந்தவன் நாகவந்தனாவின் முகத்தில் தெளித்ததும் மெதுவாய் கண் விழிக்க தன் முன் நிற்க்கும் VKவை தெளிவில்லா பிம்பமாய் கண்டாள்.

சத்ரியனை நோக்கி கை நீட்ட அவனோ VKவிடம் புத்தகத்தினை கொடுக்க "இதுல வர வந்தனா அவளோட இராவணன பார்த்ததும் என்ன சொல்லுவாளோ அததான் நீ சொல்லனும். அதவிட்டுட்டு என்னைய பார்த்துட்டே நிக்குற? எங்க, இப்புத்தகத்தில் வரும் வந்தனா என்கின்ற நாகவந்தனாவாகிய நீ, இராவணனாகிய இந்த VKவை கண்டதும் இப்புத்தகத்தில் என்ன கூறினாயோ அதை மட்டும் கூறு பார்ப்போம்." என அவளின் புத்தகத்தை அவள் மீது நக்கலுடன் தூக்கியெறிய கண்ணீருடன் புத்தகத்தை அணைத்துக் கொண்டு ஏறிட்டாள்.

"ம்ம்... கூறுங்கள் கதாசிரியரே, ம்ம்.. படிச்சு சொல்லு!!" என்று சாந்தமாய் துவங்கி கோபமாய் முடித்திட நாகவந்தனாவின் இரத்தம் கசையும் விரல்கள் நடுக்கத்துடன் பக்கங்களை புரட்ட கண்ணீர் துளிகள் புரட்டும் பக்கங்களில் விழுந்து தெரித்தது.

குறிப்பிட்ட பக்கத்தை எடுத்தவள் படிக்கத் துவங்கினாள்.

"நீ?! நீ?! நான்!" என படித்துக் கொண்டிருந்தவளை தன் கத்தியால் நிமிந்திட செய்தவன்

"நானேதான் நீ உருவாக்குன ராவணனே..தான்!!!!!!!" என்று பற்களை கடித்துச் கொண்டு கூற நாகவந்தனாவின் கண்ணீர் VKவின் கத்தியில் விழுந்தது.

"உன் புத்தகம் எனக்கு ரொம்ப பிடிச்சது. அதே அளவு பிடிக்காமலும் போனுச்சு. எந்த அளவுக்கு உண்மைய சொல்லிருக்கியோ, அந்த அளவுக்கு உனக்கு இழப்பும் ஏற்படும். அதுவும் உன் கண் முன்னாடியே. அதுல முதல் இழப்பு." என்று இளோங்கோவை பார்க்க இளங்கோ சரியென தலையசைத்து சென்றவன் ஐவரின் மயக்கத்தையும் தெளியச் செய்து கை கட்டைத் தவிர்த்து மற்ற கட்டுகளை அவிழ்த்தான்.

"இதோ உன் முன்னாடி இருக்க ஐந்துபேர்ல ஒருத்தர்." என்றதும் பதறினாள்.

"இரு... இரு... நான் எடுத்தவொடனே கொல்லமாட்டேன். எனக்கு தேவையான பதில் கிடைக்கனும், அதுவும் உண்மையான பதில் மட்டும்தான் கிடைக்கனும்." என்றான் பொறுமையாக.

"நான்... நான்.. உண்மைய சொல்றேன். ப்ளீஸ்! அவங்கள எதுவும் செய்யாதிங்க." என கைகள் கூப்பினாள்.

"உனக்கு உன் தம்பிய ரொம்ப பிடிக்கும்ல. அவன்கிட்டருந்தே ஆரம்பிப்போம்." என்று எழுந்தவன் அர்ஜூனனிடம் தன் எதிரேயிருந்த இளங்கோவிற்க்கு கால் செய்ய கூற குழப்பமாய் பார்த்தாள் நாகவந்தனா.

"புரியலையா? உனக்கு எதிர்ல இருக்கவங்கள நீ பார்க்க முடியும். அவங்க பேசுறத நீ கேட்க முடியும். ஆனால், அவங்களால ம்ம்ம்ஹூம்..." என தன் முன் சிறு இடைவெளியில் வித்தியாசமின்னிறி வீற்றிருந்த கண்ணாடியை தட்டிக் காட்டிட அதிர்ச்சியானாள்.

"டேய், அவ தம்பிய முன்னாடி கொண்டு வா." என்றதும் இளங்கோ சஞ்சீவை சற்று முன்னே இழுத்து மண்டியிட செய்யது கழுத்தினில் கத்திளை வைத்திட

"என் பையனுக்கு ஒன்னும் தெரியாது! தய்வு செய்து அவன ஒன்னும் பண்ணீடாதீங்க ப்ளீஸ்! அவன் சின்ன பையன் அவனுக்கு ஒன்னும் தெரியாது!" என்று நாகேஷூம் சக்தியும் கதறிட

"அண்ணா ப்ளீஸ்! அவன் சின்ன பையன்! அவனுக்கு எதுவுமே தெரியாதுண்ணா! விட்டுடுங்க ப்ளீஸ்!" என சாதனாவும் கீர்த்தனாவும் கதறினர்.

ஆனால் சஞ்சீவோ "என் அக்காவ பார்க்கனும். அக்காவ பார்த்தே ரொம்ப நாள் ஆச்சு அங்கிள். ஒரே ஒருதடவ என் அக்காவ பார்க்கனும் அங்கிள். ப்ளீஸ்!" என்று கெஞ்ச இளோங்கோவின் மனம் சற்று கனத்தது.

இவையனைத்தையும் கண்ணாடியை பல முறை அடித்துக் கொண்டும் VKவிடம் கெஞ்சிக் கொண்டும் பார்த்திருந்தாள் நாகவந்தனா.

எதற்க்கும் அசையாதவன் "உன் தம்பி கொஞ்சம் மூளை வளர்ச்சி இல்லாதவன்தான?" என கேட்க கண்ணீரும் கோபமுமாய் ஏறிட்டவளிடம் "எனக்கு தேவையெல்லாம் உண்மை." என்று கத்தியால் புத்தகத்தினை காட்டினான்.

"என்னோட கற்பனை." என்றுதும்

"அழுத்துடா!!" என VK கத்த இளங்கோ சஞ்சீவின் கழுத்தில் வைத்திருந்த கத்தியை அழுத்த சஞ்சீவ் பயத்தில் அழத் துவங்கினான்.

"அய்யோ! தய்வுசெய்து என் பையன விடுங்க! எங்கள என்ன வேணும்னாலும் பண்ணுங்க!! எங்க பையன விட்டுடுங்க!" என்று பெற்றோரும்

"ஒரு சின்ன பையன இப்படி கஷ்டபடுத்துறீங்களே உங்களுக்கே நியாயமா இருக்கா?! எங்கள என்ன வேணும்னாலும் பண்ணுங்க! அவன விட்டுடுங்க!" என தோழிகளும் அழுதிட

"நான் சொன்னது உண்மை. தய்வு செய்து என்னைய நம்புங்க! என் தம்பிய விட்ருங்க ப்ளீஸ்! அவன் சின்ன பையன். நான்தானே எல்லாத்துக்கும் காரணம் எனக்கு என்ன தண்டனை வேணும்னாலும் கொடுங்க. பாவம் அவங்கள எதுக்கு காயப்படுத்துறீங்க?" என்று VKவிட கை கூப்பி வேண்டிக் கொண்டிருந்தவள் "மனுசனா நீங்க?! ஒரு சின்ன பையன ஈவு இரக்கம் இல்லாம காயபடுத்துறீங்க?!!" என்று கோபமாய் கத்தினாள்.

"அது உனக்கே தெரியுமே, நான் யாருன்னு?" என்றவன் மீண்டும் இளங்கோவிடம் "டேய்! அழுத்த சொன்னா என்ன, கழுத்த தடவி கொடுத்துட்டு இருக்கீயா?! அழுத்துடா!" என கோபமாய் கூற இளங்கோ சஞ்சீவின் கழுத்தை மேலும் அழுத்த இரத்தம் கசியத்ந துவங்கியது.

சஞ்சீவ் வலியில் கதறிட "ஏன் இப்படி பண்றீங்க?! நீங்க உண்மைதான் வேணும்னு சொல்றீங்க, உண்மைய சொன்னா நம்ப மாட்டேங்குறீங்க? உங்களுக்கு பிரச்சனை என்னோடதானே?! என்னைய என்ன வேணும்னாலும் பண்ணுங்க. என்னோட குடும்பத்தையும் பிரண்ட்ஸையும் விட்டுருங்க!" என்று அழுகையும் கோபமுமாய் கூறினாள்.

"உண்மைய உண்மையா சொல்லனும். இல்லன்னா ஒவ்வொருத்தரா உசுரவிட்டுட்டேதான் இருப்பாங்க." என எச்சரித்தான்.

"அய்யோ! நம்புங்க. ஏன் இப்படி டார்ச்சர் பண்றீங்க?!!" என்று நாகவந்தனா கத்த கோபமானவன்

"அறுத்துவிடுடா!!" என VK கத்திய நொடி இளங்கோவின் கத்தி சஞ்சீவின் கழுத்தில் ஆழமாய் பதிந்தது.

கண்ணீருடன் துடித்துடித்தபடி கீழே விழுந்த சஞ்சீவை கண்ட பெற்றோரும் தோழிகளும் "சஞ்சூ!!!!" என அலறிட

"சஞ்சூ!!" என்று அதிர்ச்சியுடன் மயங்கினாள் நாகவந்தனா.

"அவன் சாகுறத்துக்குள்ள இவ முன்னாடி கொண்டு வந்து போடுங்கடா. அவனோட கடைசி ஆசை நிறைவேறட்டும். டேய், அப்படியே இவள தெளிய வைங்க சீக்கிரம், அவன் உசுறு போறதுகுள்ள பண்ணுங்க." என அருகே வீற்றீருந்த நாற்காலியில் அமர்ந்தான் VK.

சஞ்சீவை நாகவந்தனாவின் முன் அமர வைக்க நாகவந்தனாவின் முகத்தில் வேகமாய் தண்ணீர் தெளிக்கப்பட்டது.

கண்ணீருடன் சஞ்சீவின் உயிர் சிறிதுசிறிதாய் பிரிந்துக் கொண்டிருக்க கண்விழித்தவள் "சஞ்சு!! சஞ்சு!! என்னால...தானே!! என்னாலதானே, அய்யோ!! சஞ்சு, சஞ்சு!!" என்று சஞ்சீவின் கைகளை பற்றிக் கொண்டு அழுதவளின் கண்ணீரை வலிகள் நிறைந்த சிறு புன்னகையுடன் மெதுவாய் துடைத்தவனின் கை கீழே விழ அதிர்ச்சியானாள்.

"ச..சஞ்..சு, சஞ்சு, சஞ்சு!!!" என தன் தம்பியின் கன்னம் தட்ட உயிரற்ற கூடாய் கீழே விழுந்தான் சஞ்சீவ்.

"சஞ்சு!!! அய்யோ, அய்யோ!! என் தம்பியே நானே கொன்னுட்டேனே!!" என கதறினாள்.

"இப்பவும் சொல்றேன், எனக்கு தேவையெல்லாம் உண்மை." என்று அங்கிருந்து நகரச் சென்ற VKவினின் முன்பு கோபமாய் எழுந்து நின்றவள் சட்டையை இறுக பற்றினாள்.

மற்றவர்கள் அதிர்ச்சியாக VKவின் பார்வையில் அனைவரும் அங்கிருந்து வெளியேறிய அடுத்த நொடி VKவின் கை நாகவந்தனாவின் கழுத்தை நெருக்கியது.

"உன்..னால என்னை..ய கொல்...ல முடி..யாது" என VKவின் கையை பற்றினாள் நாகவந்தனா.

"உன்னைய கொல்லுவேன்டி. ஆனால், இப்போ கொல்லமாட்டேன். அவன் வருவான் பாரு. அப்போ, அவன் முன்னாடி உன்னைய கொல்லுவேன்." என்று கண்கள் சிவக்க கோபத்தில் கூற

"நீ.. ப..தி..!!" என அதிர்சியானவளை தள்ளிவிட்டவன்

"அவன்தான்! அவனதான்! சொல்றேன்!!" என்று ஆவேசமாய் கத்தினான்.

*******

"எஸ்... கய்ஸ் ஒரு க்ளுவ் கிடைச்சுருக்கு! இங்க பாருங்க." என ஸ்ரீபதியன் அனைவருக்கும் தான் கண்டறிந்ததை காட்ட அனைவரும் அருகே வந்தனர்.

"ச்ச! இத்தனநாள் இந்த புக்க திரும்ப திரும்ப படிச்சும் நான் ஏன் இத மறந்தேன்னே தெரியல. ஓகே, இப்போ நாம துவங்க போறது இந்த க்ளுவ் வச்சுதான். கண்டிப்பா நாம அவன் யாருன்னு சீக்கிரமே கண்டுபிடிச்சுருவோம்." என ஸ்ரீபதியன் உற்ச்சாகமாய் கூறியவனிடம்

"சார், இது சரியா வரும்னு நம்புறீங்களா?" என சந்தேகமாய் கேட்டான் மாதவன் என்பவன்.

"கண்டிப்பா! என் நாகுவ நான் நம்புறேன்." என்றவன் தன்னை சமன்செய்துக் கொண்டு "இந்த ரைட்டர நம்புறேன்." என்றிட அனைவருக்கும் புரிந்தது ஸ்ரீபதியனின் வார்த்தைகள்.

"எல்லாரும் கவனிங்க. நாகு சொல்லி.., சாரி. ரைட்டர் சொல்லிருக்க மாதிரி, அடர்ந்த காடு போல இருக்க இடம்னு பார்த்தா நம்ம சிட்டில மொத்தமா நாலு இடங்கள்தான் இருக்கு. இதுல இரண்டு இடங்கள்ல ஆட்கள் அப்போ அப்போ நடமாடுற பகுதி. மற்ற இரண்டு இடங்கள்ல நடமாட்டாம் இருக்காது. அதுல நாம இப்போ கண்டுபிடிக்க போறது. ஆட்கள் நாடமாடுற இடங்கள்தான்." என சிட்டி வரைபடைத்தை சுட்டிக் காட்டினான் ஸ்ரீபதியன்.

"சார், நீங்க சொல்லிருக்க பக்கத்துல அந்த மாதிரி எதுவுமே சொல்லலயே சார். நீங்க எத வச்சு சொல்றீங்க?" என கேட்டான் சுந்தர் என்பவன்.

"சொல்லிருக்காங்க சுந்தர். இந்த விரிகள படிங்க." என காட்டியவன்

"சூரியனும் அவனின் இருப்பிடத்தை மறைந்து மறைந்தே காணுவான்

வருணனும் அவன் பொழியும் இரத்த மழையைக் கண்டு பயத்தால் நிலத்தில் தன் கால் பதிக்க அஞ்சி இலைகளை மட்டும் நனைத்திட்டு சென்றிடுவான்
அவையும் அவன் மீதுள்ள பயத்தினாலே

புல்லினங்காளோ சுந்திரமாய் அவனிருப்பிடத்தில் கதைகள் பல பேசும்

மனிதர்களில் ஏனையோரே அவனிருப்பிடத்திற்க்கு வந்து செல்லும் மனிதர்கள் சிலருக்கும்

யாரென தன் சுயம் காட்டிடா வாழும் மனித உரு அரக்கனே அவன்

அவனே என் இராவணனும் ஆவான்." என்று அவ்வரிகளை கண்கள் மூடி உணர்ந்து கூறினான் ஸ்ரீபதியன்.

"சார் இதுல, அவங்க..!" என வரிகளின் பொருள் புரிந்து அனைவரும் வியந்தனர்.

"எஸ், அது ஒரு காடு." என்றவன் "நம்மலோட மூவ் இந்த இரண்டு இடத்துலருந்து ஸ்டார்ட் பண்ணனும்." என்றிட அனைவரும் "எஸ் சார்!" என்றனர்.

'உங்கள கடத்துனவன் யார இருந்தாலும் அவன உங்க கண்ணு முன்னாடியே கொன்னு சீக்கிரமே, உங்கள மீட்டு கூட்டிட்டு வருவேன் நாகு.' என்று புத்தகத்தினை நம்பிக்கையுடன் பார்த்தான் ஸ்ரீபதியன்.

*******

இராவணன் வருவான்...
ஹாய் தோழமைகளே எப்படி இருக்கு யூடி? நிறை குறைகளை தயங்காமல் https://www.sahaptham.com/community/threads/இராவண-காதலி-comments.480/page-3#post-7244 கூறுங்கள்.​

- நான் உங்கள் நாகவேணி அழகர் ராஜன்.
 

Nagaveni A

Member
Vannangal Writer
Messages
45
Reaction score
43
Points
18
இராவண காதலி

வலைகள் விரிந்தது - 5

"கய்ஸ் இப்போ நாம ஐந்து ஐந்து பேரா பிரிஞ்சு. இரண்டு காட்டு பகுதிக்குள்ள போகப் போறோம். உள்ள போனதும் எல்லாரும் தொடர்புலையே இருங்க. அக்யூஸ்ட்க்கு எந்த ஒரு சின்ன சந்தேகமும் ஏற்படாம கச்சிதமா நம்ம பிளான் முடியனும். எல்லாரும் கவனமா இருங்க. முக்கியமா பதட்டபடாம நிதானமா இருங்க." என ஸ்ரீபதியன் தன் குழுவிடம் கூறிக் கொண்டிருக்கும் போது ஃபோன் அலறிட காதில் வைத்தவன் கட் செய்துவிட்டு வேகமாய் டிவியை ஆன் செய்தான்.

'இன்று பல்வேறு இடங்களில் தொடர் கொலைகள் நடந்து வருகிறது. இதுவரையில் பதிமூன்று போலீசார்கள் உட்பட பல்வேறு ரவுடிகளும் கொலை செய்யபட்டுள்ளனர். கொலையாளிகள் எந்தவித பயமுமின்றி பொது இடங்களிலேயே கொடுரமாக கொலை செய்வதை கண்ட பொதுமக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர். மேலும்..' என்றிடும் போதே திலகர் அறையினுள் நுழைந்தார்.

"இப்போ என்ன செய்ய போறீங்க ஸ்ரீபதியன்? இந்த கேஸ் இப்போ எங்க வந்து நின்றுக்கு பார்த்தீங்கல்ல?!"

"சார்.."

"எனக்கு எந்த விளக்கமும் கொடுக்காதீங்க. இப்போ பத்திரிக்கைகாரவங்கலாம் மைக்க தூக்கிட்டு வந்துருவாங்க, அவங்களுக்கு நான் என்ன பதில் சொல்றது?!"

"சார் நான்.."

"கரைக்ட் நீங்கதான் பதில் சொல்லனும். இனி எதையும் சீக்ரட்டா பண்ண வேண்டாம். ஒரு கிரிமினல் நாய்! அவனுக்கே இவ்ளோ துணிச்சல் இருந்தா, போலீஸ் நமக்கு எவ்ளோ இருக்கனும்?!"

"சார் ப்ளீஸ்! நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க."

"நான் எத கேட்கவும் தயார இல்ல. டூ வாட் ஐ சே!."
என்றுவிட்டு வெளியேற

"ஷட்!!" என ஸ்ரீபதியன் மேஜையை குத்தினான்.

"சார்.." என்று வினோத் அழைக்க

"அவன நான் சும்மாவிட போறதில்ல. என்னைய ரொம்ப சீண்டி பார்க்குறான்!" என பற்களுக்கிடையில் கூறியவன் "கய்ஸ் முதல்ல சிட்டில நடக்குற கொலைகள கட்டுக்குள்ள கொண்டு வரனும். எல்லாரையும் அசம்பிள் ஆக சொல்லுங்க. இன்னைக்கு நைட்குள்ள சிட்டியே க்ளீனாகனும்." என்று உறுதியாய் கூறினான்.

"அப்போ ரைட்டர கண்டுபிடிக்க போட்ட பிளான் சார்?" என கண்ணன் கேட்க

"எல்லாத்தையும் சேர்த்துதான் சொன்னேன். மேக்கிட் ஃபார்ஸ்ட்." என்று துரிதபடுத்தியவனை

"சார், ப்ரஸ் மீட்டிங்?"
என மாதவன் கேட்க

"என்னோட செயலே எல்லாருக்கும் பதில் சொல்லும். நீங்க எல்லாரும் ஸ்பார்ட்டுக்கு போங்க. பிளான்ல எந்த மாற்றமும் இல்ல. நான் சிட்டிய கவனிச்சுட்டு உங்ககூட வந்து ஜாயின் பண்ணிப்பேன். பீ கேர்ஃபுல் அண்ட் பீ அலர்ட்!" என்றதும் அனைவரும் சல்யூட் செய்து கலைந்திட "உன்ன நான் சும்மாவிடமாட்டேன்டா!" என்று மேஜையை குத்தியவன் தன் துப்பாக்கியை ஓர்முறை உறுதியாய் பிடித்துவிட்டு வெளியேறினான்.

வெளியே சீர் வரிசைகளாக பல காவலர்கள் நின்றிருக்க கட்டுக்கடங்கா கோபத்துடன் பேசத் துவங்கினான் ஸ்ரீபதியன்.

"எல்லாருக்குமே தெரிஞ்சுருக்கும் இந்த அசம்பல் எதுக்காகன்னு, எங்கருந்து வந்தது இவன்ங்களுக்கு இவ்ளோ தைரியம்? இவன்ங்களுக்கு போலீஸ்னா என்னன்னு காட்ட வேண்டாம்? சும்மாயில்ல, நம்ப டிப்பார்ட்மென்ட்ல 13 பேர கொலை பண்ணிற்க்கான்ங்க. நாம அமைதியா இருந்தா மக்களுக்கு நம்ப மேல இருக்க நம்பிக்கை காணம போயிடும். இன்னைக்கு நைட்குள்ள ஒருத்தனவிடாம காலி பண்ணி சிட்டிய க்ளீன் பண்றோம்! இனி போலீஸ தொடனும்னு எவனும் கனவுல கூட நினைக்க கூடாது. அந்த அளவுக்கு இருக்கனும் நம்ப ஆட்டம். லெட்ஸ் ஸ்டார்ட்!" என்றிட அனைவரும் பரபரப்புடன் கிளம்பினர்.

ஸ்ரீபதியன் தனது குழுவிடம் "என்ன ஆனாலும் நிதானத்த இழக்காதிங்க." என்றுவிட்டு கிளம்ப புரியாமல் பார்த்துக் கொண்டவர்கள் ஆயத்தமாகினர்.

பத்திரிக்கையாளர்களிடம் பேச சென்றுக் கொண்டிருந்த திலகருக்கு செய்தி சென்றிட புன்னகையுடன் தலையசைத்தார்.

"சார், சிட்டில நடந்துட்டு இருக்க கொலைகளுக்கு என்ன நடவடிக்கை எடுக்க போறீங்க?"

"13 போலீஸார்களோட கொலைகளுக்கு காவல் துறை என்ன பதில் சொல்ல போகுது சார்?"

"எந்தவித பயமும் இல்லாம பொது இடத்திலேயே கொலைகள் நடந்ததுட்டுருக்க காரணம் காவல்துறையோட அலட்சியமும் கடுமையான தண்டனை இல்லாமையும்தான் காரணம்னு சொல்லலாமா சார்?"

"இல்ல, இதுவரைக்கும் மர்மமா நடந்துட்டு வந்துட்டு இருக்க கொலைகளுக்கு சொல்ற பதிலான, சீக்கிரமே குற்றவளிகள பிடிச்சு தண்டனை கொடுப்போம்னு சொல்ல போறீங்களா சார்?"
என்று பத்திரிகைகள் கேள்விகளைக் கேட்க

"உங்க எல்லா கேள்விக்கான பதிலும் இன்னும் ஒரு நிமிசத்துல ACP ஸ்ரீபதியன் தன்னோட செயல்கள் மூலமா உங்களுக்கு சொல்லுவாரு. தங்ன்க்யூ" என்றுவிட்டு நகரந்தார்.

*******

"பதியன தெரியுமா? எதுக்காக என்னைய அவர் முன்னாடி கொல்லனும்? அவர் என்ன பண்ணாரு? எனக்கும் அவருக்கும் என்ன சம்மந்தம்?" என்று தனக்குத்தானே கேட்டுக் கொண்டவளின் கழுத்தை நெறிக்க அதிர்ச்சியானாள்.

"என்ன சம்மந்தமா? ஏன் உனக்கு தெரியாது? உன் நடிப்ப என்கிட்ட காட்டாத, அவன் வேணும்னா நம்பலாம். ஆனால் நான், ம்ஹூம்." என கூறியவனின் முகத்தில் அத்தனை வெறுப்பு.

"நடிப்பா? நானா? என்ன பேசுற நீ? நான் எதுக்கு நடிக்கனும்?!"

"ஏய்!! சும்மா நடிக்காதடி! ஆமா, நான் எதுக்கு உன்கிட்ட சொல்லனும்? எனக்கு தேவை என்னோட கேள்விக்கான பதில். அதுக்காக மட்டும் பேசு. தேவையில்லாம பேசி ஒவ்வொரு உயிர் போறதுக்கும் காரணமாகாத."
என்றுவிட்டு தனது ஆட்களுக்கு ஃபோன் செய்து அழைத்தவன் புத்தகத்தை எடுத்து பக்கங்களைப் புரட்டிட தன் பயத்தை வெளிக்காட்டாது பார்த்திருந்தாள் நாகு.

"ம்ம்... பதில்... சொல்லு. இல்ல ஒவ்வொருத்தரா குறைஞ்சுட்டே வருவாங்க." என நிமிர்ந்திடாமல் கூறியவனின் அருகினில் உயிரற்ற கூடாய் கிடந்திருந்த தன் தம்பியை கண்டவள் பேரலையாய் எழுந்த அழுகையை தனக்குள் அடக்க முயற்ச்சித்துக் கொண்டிருந்தாள்.

"அண்ணா.." என ஆட்கள் வேகமாய் நுழைய நிமிர்ந்தான்.

"ம்ம்.. அர்ஜூனா நீ உள்ளப் போய் இவ அப்பன..." என்றிடும் போதே

"இப்போ எந்த உண்மை தெரியனும்?" என உணர்ச்சியற்றவளாய் கேட்டாள்.

சிறு கண்ணசைவில் அனைவரையும் வெளியேற்றியவன் நாகுவை நோக்கி அடியெடுத்து வைத்தான் VK.

"எனக்கு என்ன தெரியனும்னு உனக்கு நல்லாவே தெரியும்." என கூற அமைதியாய் வெறித்தாள்.

"என்ன பார்க்குற? ம்ஹூம்.. நீ பார்க்குற பார்வைக்கெல்லாம் அவன் வேணா மயங்கலாம். நான் மயங்கமாட்டேன்." என்றிட தன் பற்களை கடித்தாள் நாகு.

"என்னடி பல்ல கடிக்குற? என்ன முறைக்குற?!" என்றவனின் ஃபோன் அதிர பார்த்தவன் நாகுவை முறைத்துவிட்டு வெளியேற வேகமாய் உள்ளே வந்த சந்துருவோ அனைவரின் கண் மற்றும் கை கால்களை கட்டிவிட்டு சஞ்சுவின் உடலை தூக்கிச் சென்றான்.

வெளியேறியவன் "அவன் சரியான வலைலதான் விழுந்துருக்கான். ஆனால், தவறான நேரத்துல விழுந்துட்டான். என் இடத்துல எனக்கு தெரியாம நுழையனும்னு நினைச்சவன்களுக்கு நானே அவன்களுக்கு தண்டனைய கொடுக்கனும்." என்றதும் மாறன் தலையசைத்து நகர்ந்திட மற்றவர்கள் புரியாமல் பார்த்திருந்தனர்.

*******

பகலிலும் இருள் சூழ்ந்த அக்காடுகளுகுள் நுழைந்த போலீஸ் குழுவினர்களுக்கு சற்றே பயம் பரப்பியது.

"இந்த காடு பகல்லயே இவ்ளோ இருட்டா இருக்கே, அப்போ நைட்ல எப்படி இருக்கும்?" என மாதவன் கேட்க

"இருட்டாதான் இருக்கும். இங்க விடுங்க, அங்க அந்த ஐந்துபேரோட நிலமை எப்படி இருக்கும்னு தெரியல." என்றான் சுந்தர்.

"எல்லாம் ஒரே நிலமையாதான் இருக்கும்." என்றான் மாதவன்.

மற்றோரு காட்டில்...

"கண்ணன், ஸ்ரீ சார் எப்போ வரதா சொன்னாரு?" என கேட்டான் வினோத்.

"தெரில, கண்டிப்பா எல்லா பிரச்சனையயும் முடிச்சுட்டுதான் வருவாரு. அதுக்குள்ள நாம ஏதாவது ஒரு க்ளுவையாவது கண்டுபிச்சாகனும்." என்று கூறியபடி நடந்துக் கொண்டிருந்தவன் தடுமாறி கீழே விழ மற்றவர்களின் உதவியுடன் எழுந்து சுதாரிக்க காட்டில் ஏதோ அசைவுகள் தெரியவே ஐவரும் கைகளை கோர்த்துக் கொண்டு சிறு பதற்றத்துடன் சுற்றி பார்த்தனர்.

அக்காட்டில்...

"மாதவன் சார் ஏதோ.." என்பதற்க்குள் சுந்தரின் வாயை பொற்றியவன் அமைதியாகுமாறு கூற ஐவரும் அமைதியாய் பதுங்கினர்.

*******

சிட்டியின் ஒவ்வொரு இடத்திலும் துப்பாக்கி சூட்டினால் ரவுடிகள் கொன்று குவிக்கப்பட்டுக் கொண்டிருக்க VKவின் ஆட்கள் தங்களின் வேலைகளை கட்சிதமாக முடித்துக் கொண்டிருந்தனர்.

ஸ்ரீபதியன் கோபத்தோடு தனது வாட்ச்சை நிமிடத்திற்கு ஓர்முறை பார்த்தபடி நகர்ந்துக் கொண்டிருக்க பத்திரிக்கையாளர்களால் மடக்கபட்டான்.

"சார்... நீங்க இப்படி என்க்கௌன்டர் பண்றது மனிதநேயமற்ற செயல்னு சொல்லபட்டு வருதே அதற்கான உங்க பதில்.." என கேட்டவருக்கு முறைப்பையே பதிலாக தந்தான்.

"சார் நீங்க அமைதியா இருந்தா என்ன சார் அர்த்தம்?" என்றதும் காரிலிருந்து வேகமாய் இறங்கியவன்

"சரி நான் ஒன்னு கேட்குறேன், இப்போ ரவுடிகள் பண்ண கொலைகள் மட்டும் மனிதநேயமான செயலா? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கமிஷ்னர யாரோ கேள்வி கேட்டீங்களே தண்டனைகள் கடுமையா இல்லாதது பத்தி, அததான நான் இப்போ பண்றேன். உரிய தண்டனை கொடுத்தா மனிதநேயமற்ற செயல், கொடுக்கலனா அலட்சியமான செயல்.

இல்ல, எங்களுக்கு புரியல. எங்கள என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? எங்க கடமைய நாங்க செஞ்சா குற்றம், செய்யாம இருந்தாலும் குற்றம். குற்றத்த தட்டிக் கேட்குற எங்களையே குற்றவாளிகளா காட்டுனா எங்க மேல மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்? குற்றவாளிகளுக்கு எப்படி சட்டத்து மேல பயம் வரும்?!"

"அப்போ பத்திரிக்கையாளர்கள் மேல குற்றம் சொல்றீங்களா?!"

"இதோ, இப்படி எதையாவது கேள்வி கேட்டு நாங்க என்ன சொல்ல வறோங்குறதையே புரிஞ்சுக்காம உங்க ஹெட்லைனுக்கு எங்கள யூஸ் பண்ணிப்பீங்க!"

"சார்.."

"ஜஸ்ட் ஷட்டப்!!!! முதல்ல பத்திரிக்கையாளர்கள்னா யாருன்னு தெரிஞ்சுட்டு கேள்வி கேட்க வாங்க. நீங்க காட்டுறதையும் நீங்க சொல்றதையும் மட்டும்தான் மக்கள் நம்புறாங்க. உண்மை என்னன்னு நீங்க சொன்னாதான் அவங்களுக்கு தெரியும். உங்க சேனலோட சுயநலத்துக்காக மக்கள ஏமாத்தாதிங்க, பாரபட்சம் பார்க்காதிங்க. அண்ட், என்னோட கடமைய செய்யவிடுங்க. பின் தொடர்ந்து வராதிங்க."
என்றுவிட்டு காரிலேறி பறக்க அனைவரும் காரையே பார்த்திருந்தனர்.

இதனை பார்த்த திலகர் பெருமிதத்தோடு அமர்ந்திருக்க கேசவன் உள்ளே நுழைந்ததும் "என்ன ஹியூமன் ரைட்ஸ் கமிஷன்லேந்து காலா?" என கேட்க ஆமென தலையசைத்தார்.

"இவங்களுக்கு இதே வேலை. நான் பாத்துக்குறேன். நீங்க போங்க." என்று நீயூசை பார்க்கத் துவங்கினார்.

*******

'இப்போ என்ன பண்ண, என்னால என் தபம்பியோட உயிர் போகிடுச்சு. அடுத்து.. அடுத்து.. அய்யோ யோசிக்கவே பயமா இருக்கு. கடவுளே, உண்மைய சொன்னாலும் இந்த இராவணன் ஏன் நம்பமாட்டேங்குறான்? அப்படி எந்த உண்மைய எதிர்பாக்குறான்? முதல்ல பதியன எப்படி தெரியும்? என்னையும் பதியனையும் பத்தியும் என்ன நினைச்சுட்டு இருக்கான்? ஐயோ கடவுளே, கேள்விகள் அதிகமாகுதே தவிர பதில் கிடைக்கமாட்டேங்குதே!!' என தனக்குள் புலம்பிக் கொண்டிருந்தவளின் அருகில் மெதுவான காலடி சத்தம் கேட்கவே உற்று கவனிக்க துவங்கினாள் நாகு.

"செம்ம கில்லாடியா இருப்ப போல?" என்ற நக்கலான குரலில் குழப்பமடைந்தாள்.

"கில்லாடின்னு சொல்ல கூடாதுடா தந்திரவாதின்னு சொல்லனும்."

"தந்திரவாதியோ மந்திரவாதியோ ஆகமொத்தம் பொண்ணுக்கு ஆயுசு ஒருநாளைக்கு கெட்டி."
என சிரித்தான்.

'நாம பார்த்த இரண்டுபேர்தான் போல, அப்போ இன்னைக்கு யாரும் சாகபோறதில்ல. நமக்கு என்ன ஆனாலும் பரவால்ல, என் குடும்பத்துக்கும் பிரண்ட்ஸுக்கும் எதுவும் ஆகவிடகூடாது. அதுக்கு ஏதாவது கண்டிப்பா பண்ணியே ஆகனும்.' என முடிவெடுத்தவளாய் அருகிலிருந்தவர்களை அழைத்தாள்.

"வாய் கட்டிருந்தாலும் சும்மா இருக்குதா பார்த்தியா? அணத்திட்டே இருக்குது."

"என்னன்னு கேட்போம் கட்ட அவுத்துவிடுடா."
என்றதும் கட்டை அவிழ்க்க

"கண் கட்ட அவிழ்த்துவிடுங்க. நான் அவன பார்க்கனும்." என்றவளை புரியாமல் பார்த்தனர்.

"யார?"

"அவனதான், இரவணன். உங்க அண்ணன்."
என்றதும் இருவருக்கும் கோபம் வந்தது.

"இதோ பாரு, அண்ணன அவன் இவனெல்லாம் சொல்லிட்டு இருந்த! நாங்களே உன்னைய கொன்ருவோம். மரியாதையா பேச கத்துக்க!"

"உங்களுக்தான் அண்ணனெல்லாம் எனக்கு அவன்.. அவன்தான்."

"ஏய்!!"
என அறையச் சென்றவனை

"வேண்டாம்!" என தடுத்தது இளங்கோவின் குரல்.

"அண்ணே இவ.."

"நான் பேசிக்குறேன் நீங்க கிளம்புங்க."
என்றதும் இருவரும் கோபத்தோடு வெளியேற இளங்கோ நாகுவின் கண் கட்டை அவிழ்த்துவிட்டு புன்னகைத்தான்.

பயத்துடன் புன்னகைத்தவள் 'ஏதோ காரணம் இருக்கு போல.' என நினைத்துக் கொண்டாள்.

"நீ பயப்டாத நான் எதுவும் செய்யமாட்டேன். தண்ணீ குடிக்கிறீயா?"

'ஏதோ வலை விரிக்குறான்.'

"பயப்டாதம்மா, நான் நல்லவன்தான்."
என்றான் புன்னகை மாறாமல்.

*******

"டேய் அந்த ACPயோட வண்டி வருதுடா எல்லாம் ரெடியா இருக்குல்ல?"

"எல்லாம் ரெடிதான்."

"மிஸ் ஆச்சு, அண்ணன் நம்மல உயிரோடவிடமாட்டாரு."

"வாய மூடுடா! அதெல்லாம் ஒன்னும் ஆகாது. அந்த ACPய தூக்குறோம். அண்ணேங்கிட்ட கொடுக்குறோம்."
என தூரத்தில் வந்துக் கொண்டிருந்த ஸ்ரீபதியனின் காரினை பார்த்து பேசிக் கொண்டிருந்தவர்களின் பின்னால்

"யார, யாருத் தூக்குறான்னு பார்க்கலாமா?" என்ற ஸ்ரீபதியனின் குரல் கேட்கவே அதிர்ந்தனர்.

"சொல்லுங்கடா, பார்த்தற்லாமா? தூக்கிற்லாமா?" என கோபத்தோடு நெருக்கியவனிடம்

"என்ன ACP எங்கள தூக்கிட்டா அவ்ளோதானா? மொளச்சு வந்துட்டே இருப்போம்."

"எத்தன பேர தூக்குவ? உன்ன மாதிரி ஆளுங்கள அழிக்குற வர நாங்க மொளச்சுட்டேதான் இருப்போம்."

"என்ன நினைச்சுட்டு இருக்க? இது நீ விரிச்ச வலைன்னா? எங்க அண்ணே விரிச்ச வலை."

"இதுல விசியம் என்னன்னா, நீ மட்டும் மாட்டீக்கல. உன்னோட சேர்த்து நீ அனுப்புன பத்துபேரும் வலைல மாட்டீற்க்காங்க.
" என்றதும் ஸ்ரீபதியன் அதிர்ச்சியுடன் நின்றான்.

*******

இராவணன் வருவான்...

யாரும் 4 Udய மறக்கலல்ல தோழமைகளே... இனி கண்டிப்பா Ud தொடர்ந்து வந்துவிடும்... தாமதத்திற்கு மன்னிக்கவும்... மக்களே...


- உங்கள் நாகவேணி அழகர் ராஜன்.
 
Status
Not open for further replies.
Top Bottom