Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


ஈர்மத்தின் எச்சங்கள் - Comments

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏 🙏 ,

வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது... 💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை ஊக்கப்படுத்துங்கள். 👍👍👍👍

நன்றி மக்களே...
- நித்யா கார்த்திகன்
 
Last edited:

Kalai karthi

Well-known member
Messages
403
Reaction score
371
Points
63
"ஈர்மத்தின் எச்சங்கள்" இதுதான் கதையின் தலைப்பு.. கதைக்குள்ள போகுறதுக்கு முன்னாடி நான் சில விஷயத்தை இப்போவே தெளிவா சொல்லிடுறேன்


ஈர்மம் - இந்த சொல்லின் அர்த்தம் "ஓவியம், painting" என்பது

இதுல இருந்தே கதை ஒரு ஓவியத்தை மையமாக கொண்டதுன்னு கண்டு பிடிச்சி இருப்பீங்க..

தேவர் காலத்தில் தொலைந்த ஒன்று, இந்த காலத்தில் அதுவும் ஓவியத்தின் உதவியோடு கண்டெடுக்க படுவதே இந்த கதையின் கரு

கதையோட ஒரு டீஸர் உங்கள் பார்வைக்கு,

முதல் அத்தியாயம் மாலை பதிவிட படும்.. மற்றும் வாரம் இரு பதிவை எதிர் பார்க்கலாம்..

ஈர்மத்தின் எச்சங்கள் டீசர் :

நிலத்தின் சிறு சலசலப்பும் ஓங்கி ரீங்கரிக்கும், அடர்ந்த காட்டுப் பகுதி அது. எண்ணற்ற மூலிகையும், விஷ ஜந்துக்களையும், பல ஆயிரம் ஆண்டுகள் தாண்டி தம்முள் சிறை பட்டுக் கிடக்கும், பல மர்மத்தையும் தாங்கி நின்று கொண்டு இருக்கிறது அந்த அடர்ந்த காடு கொண்ட மலைப் பகுதி.

பாம்பின் சிறு அசைவும், குருவிகளின் குதூகலிப்பும் கூட அவ்வழி செல்லும் செவிகளை துல்லிமாய் சென்றடைய, ஏதுவான பௌர்ணமி முழு நிலவு நாள் அன்று.

மனிதனோ, அவனின் பாத தடமோ பல ஆயிரம் வருடமாய் படாமல், நவீன உலகத்தையும் அதனின் நாகரீகத்தையும் விட்டு தூரமாய் வாழும் அந்த கானகத்தில், கன்னியவளின் கால் தடம் பட்டதுமே பதறியது அவ்விடம் வாழ் உயிரினம் அனைத்துமே.

உயிரை கையில் பிடித்து கொண்டு, மறைந்து வாழ அண்டிய காட்டில் இருந்த விஷம் கக்கும் பாம்புக்கும் கூட, பரிதாபம் வந்தது அவளின் நிலை கண்டு.

எங்கோ, யாரிடமோ இருந்து, நெடு நேரமாய் கால் கடுக்க ஓடி வந்து கொண்டு இருக்கும் அவளின் தோற்றம் தான் சொல்லும் படி இல்லை.

பல நாள் சீவாத கூந்தல் மொத்தமும், தன் கட்டை அவிழ்த்து கொண்டு, முகம் முதுகு என்று அவளின் தேகத்தில் படர்ந்து கிடக்க,

முழு நிலவாய் என்றும் ஜொலிக்கும் முகம் இன்று கலை இழந்து, பராமரிப்பு இன்றி, துயரங்கள் பல தாங்கி அழுதே வீங்கிய அவளின் கருமணியில் மட்டும், தன் மடி தாங்கும் அதனை எப்படியும் காப்பற்றி விட வேண்டும் என்ற திடம் தெளிவுற மின்னவே செய்தது.

அவளின் கால் தடம் எழுப்பிய ஓசையை நூலிழையாய் பற்றிய படி, படு பொறுமையாய், மனதில் வஞ்சமும், கண்ணில் பேராசையும் கொண்டு அவளை பின்தொடர்ந்தான் அவன்.

எப்படியும் இவளால் தன்னிடம் இருந்து தப்பி செல்ல இயலாது என்பது நன்கு தெரியும் அவனுக்கு. ஒரு மாதம் வரை அவளை சிறை செய்து வைத்தவனுக்கு, அவளின் ஓட்டத்தின் அளவும், அவளின் மனதின் வலிமையையும் தெரியாமல் இல்லை. இருந்தும் இன்றோடு இவை அனைத்திற்கும் முடிவு கட்டும் நோக்கில் காலடி எடுத்து வைத்தான், அவன் அந்த கானகம் தன்னில்.

அவனின் பாதம் சொன்ன கதை அனைத்தையும் நொடியில் உணர்ந்த அவ்விடம் வாழ் உயிர் அனைத்தும், அடுத்து நடக்க இருக்கும் விபரீதம் புரிந்து, தம் தம் இருப்பிடம் சென்று மறைந்து கொண்டு, தெரியாமல் கூட அடுத்து நிகழ இருக்கும் ஆபத்தத்தை கண்டு, அதனின் பாவத்தை தமக்குள் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றே பதறி கிடந்தன.

ஓடியவளின் ஓட்டம் வேகம் எடுத்த வண்ணம் இருக்க, இம்முறை இவளை தவற விட்டாள், தன் பல கால கனவு மொத்தமும் மண்ணில் கரையும் என்பதை உணர்ந்தவன்,

ஓங்கி உயர்ந்த மரத்தின் கிளை ஒன்றை வேர் வரை உரித்தெடுத்தவன், இமை அசைக்கும் நொடி கூட நேரம் எடுத்து கொள்ளாமல், அவளின் கழுத்து நோக்கி குறி வைத்தவன், சரியாக அவளின் கழுத்தும் தோல் பட்டையும் சேரும் இடத்தில், தன் பலம் கொண்டு தாக்க, அடுத்த சில நொடியில் நிலம் பார்த்து கிடந்த சறுக்கல் அனைத்தும் அதிரும் வண்ணம் தரையில் விழுந்தாள் அவள்.

இதுவரை மறைத்து வைத்து இருந்த வன்ம புன்னகையை இதழில் தரித்த படி, பிண்டமாய் கிடக்கும் அவளை நெருங்கியவள், இத்துணை நாள் அவள் தன்னுள் மறைத்து வைத்து இருந்த அதனை தன் கையால் எடுத்தவன்,

அது தந்த அந்த அற்புத ஒளியை பார்த்தவனுக்கு இத்துணை நாள் தவம் இன்றே நிறைவுற்றது போன்ற ஆனந்தம் தன்னுள். காலம் கடந்து இருந்த காத்திருப்பு இன்றோடு முடிவடைய, இனி காலத்தை மற்றும் காலனாய் தன்னை எண்ணியவன், செருக்கில் தலை நிமிர்ந்து நிற்க,

அவன் கை தாங்கிய அது எழுப்பிய அந்த அற்புத ஒளியில் நிலவுப்பெண்ணும் கூட மயங்கி தான் நின்றாள், தன்னையே மயக்கிய அதனின் அழகில்.

அவன் யார்?
பிண்டமாய் கிடக்கும் இவள் யார்?
அது என்ன?
இது முடிவின் ஆரம்பமா?
இல்லை ஆரம்பத்தின் ஓலமா?

காத்திருப்போம் ஈர்மத்தின் எச்சங்களுக்காக, அது விட்டு வைக்கும் மிச்சங்களை தெரிந்து கொள்ள.

இந்த கதைக்கான கருத்துகளை கீழே இருக்கும் பக்கத்தில் பதிவு செய்யவும்

https://www.sahaptham.com/community/threads/ஈர்மத்தின்-எச்சங்கள்-comments.386/
ஆரம்பமே செம dear.வாழ்த்துகள்
 
Messages
81
Reaction score
60
Points
18
அப்பா...... இது என்ன? டீசரே பயமாக இருக்கே... காடும் அதில் இருக்கும் பாம்பும், அங்கு அவள் நின்ற கோலமும்...இது எல்லாம் ஏன்? என்னவாக இருக்கும்? ஆர்வமாக இருக்கிறது தோழி... வாழ்த்துகள் 😊
 

அர்பிதா

Active member
Vannangal Writer
Messages
38
Reaction score
9
Points
33
அப்பா...... இது என்ன? டீசரே பயமாக இருக்கே... காடும் அதில் இருக்கும் பாம்பும், அங்கு அவள் நின்ற கோலமும்...இது எல்லாம் ஏன்? என்னவாக இருக்கும்? ஆர்வமாக இருக்கிறது தோழி... வாழ்த்துகள் 😊
Thank u sis..adutha udyum potachu
 
Top Bottom