Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


உன் கோபத்தைக் கூட ரசித்தேனடி - கதை

ஷமீம் பானு

Saha Writer
Team
Messages
86
Reaction score
0
Points
6
வணக்கம் நண்பர்களே...

எல்லாரும் எப்படி இருக்கிங்க?. இது என்னோட அடுத்த கதை உன் கோபத்தை கூட ரசித்தேனடி. இந்த கதையோட பெயரிலே நீங்கள் புரிந்து இருப்பிங்க . அதே மாதிரி இந்த கதையில கதாப்பாத்திரங்கள் சற்று அதிகம் அதற்காக நான் கதையில் வருபவர்களை முதலில் அறிமுகம் செய்து விடுகிறேன் வாருங்கள் பார்க்கலாம்....

நாகயகன் : சாகித்

நாயகி : சுரையா

நாயகியின் குடும்பம் :

அம்மா : மரியம்

அப்பா : ரஹீம்

தங்கை : ரஸியா

தாத்தா - பாட்டி: இப்ராஹிம் - முஸ்திரி

சித்தப்பா - சித்தி: அமீர் - அஸ்மா

அவர்களின் பிள்ளைகள் : ஃபரினா , ஜாவித்

அத்தை - மாமா : ஃபரிதா - பஷீர்

அவர்களின் பிள்ளைகள் : ஜரினா - நவாஸ்

ஜரினாவின் கணவர் : அக்பர்

ஜரினாவின் வளர்ப்பு பெற்றோர்: கதீஜா - மாலிக்

நாயகனின் குடும்பம் :

அம்மா : மும்தாஜ்

அப்பா : நிஜாம்

அண்ணன் : ரியாஸ்

அண்ணி : பிர்தவுஸ்

தங்கை : மக்மூதா

தாய்மாமா : பிலால்

அத்தை : ஹாஜிரா

பிர்தவுஸ் உடன்பிறந்தவர்கள் :

அண்ணன் : ரஷீத்

அண்ணி : ரஷீதா

தங்கைகள் : ருக்கையா , ராபியா

சாகித்தின் நண்பர்கள் :

வினோத் , ரமேஷ் , ராம்

நீங்கள் அனைவரும் கதை எப்படி இருக்கு சொன்னா தான் நான் அடுத்த பதிவை போடுவேன் ஹான் சொல்லிட்ட 😝😜
 

ஷமீம் பானு

Saha Writer
Team
Messages
86
Reaction score
0
Points
6
❤️ கோபம் 1 ❤️

இன்று தன் கனவு நினைவேற போகிறது என்ற சந்தோஷத்தில் இன்டர்வியூ கிளம்ப ஆயுத்தமானாள் சுரையா.ஆனால், அவள் கனவு நிறைவேறாது என்று சுரையாவிற்கு தெரியாது. அம்மா இன்னிக்கி சுரையாவை பொண்ணு பாக்க வராங்கலா என்ன? என்றாள் ரஸியா சுரையாவின் தங்கை.

ஏய் அவளுக்கு இன்னும் மாப்பிள்ளை கூட பாக்க ஆரம்பிக்கல என்றார் அவள் அம்மா மரியம். ஓஓ அப்படியா. ஆமா இப்ப எதுக்கு கேக்குற? சும்மா தெரிஞ்சிகலாம்ன்னு என்று கூறி கொண்டு அறைக்கு சென்றாள்.

சுரையா என்ன இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா இருக்க போல? ம்ஹூம் அதல்லாம் ஒன்னுமில்லை ரஸியா. இல்லக்கா இதுவரை உம் முகத்தில் இந்தளவுக்கு சந்தோஷத்தை நான் பாத்ததே இல்ல அதான்.இன்னிக்கி **** ஸ்கூல இன்டர்வியூ என்னோட கனவு நிறைவேற நான் எடுத்து வக்கிற முதல் படி இன்ஷா அல்லாஹ்(இறைவன் நாடினால்) நான் செலக்ட் ஆவேன் என்று கண்களில் நம்பிக்கையுடனும் பரவசத்தோடு கூறினாள்.

தன் அக்காவின் இந்த பேச்சிலே ரஸியா உணர்ந்தாள் தன் அக்கா அவள் கனவை எவ்வளவு நேசிக்கிறாள் என்று. ம்ம்ம் கண்டிப்பா நீ செலக்ட் ஆவே. மேலும் சின்ன வயசுலருந்து யாரு கேட்டாலும் நான் டீச்சர் ஆவேன் தானே சொல்லுவ கண்டிப்பா நீ செலக்ட் ஆவே . சரி வா சுரையா நாம போய் சாப்பிடலாம்.

ரஸியா, என்ன டிபன் மா இன்னிக்கு? என்று விரிக்கபட்ட பாயில் அமர்ந்து கேட்டாள். இட்லி தக்காளி சட்னி என்று கூறி கொண்டே பரிமாறினார் மரியம். இருவரும் சாப்பிட்டு விட்டு எழுந்தனர். பிறகு இருவரும் கிளம்ப ஆயுத்தமானார்கள்.

அப்பா நான் இன்டர்வியூ போய்ட்டு வரேன் என்று கூறினாள். சரிசரி போ போ என்று சலித்து கொண்டார் அவள் அப்பா ரஹிம். அப்பா நான் காலேஜ்க்கு கிளம்புற எனக்கு பத்து ரூபாய் தாங்க என்றாள் ரஸியா. நேத்து கொடுத்த பத்து ரூபாய் என்னாச்சு? என்றார் அப்பா. அதை நான் வாங்கி சாப்பிட்டேன். காசெல்லாம் கொடுக்க முடியாது கிளம்பு என்றார் கறாராக.

இருவரும் பர்தா அணிந்து கொண்டு வெளியே வர போஸ்ட் என்று போஸ்ட் மேன் வந்தார் . சுரையா பேருக்கு போஸ்ட் வந்திருக்கு என்றவுடன் சுரையா அதை வாங்கி கொண்டு உள்ளே சென்றாள். ரஸியாவும் உள்ளே சென்றாள். அந்த போஸ்டை பிரித்து படித்தவளுக்கு அதிர்ச்சி. அதை படித்து விட்டு சிலை போல் நின்றாள். ரஸியா பயந்து அக்கா என்னாச்சு சொல்லுக்கா என்று அவளை உலுத்கினாள்.

அவள் கண்களிலிருந்து தண்ணீர் வந்தது. எ...என் கனவு எல்லாம் நாசமா போய்டிச்சி ரஸியா. எனக்கு கவர்மட் ஜாப் கிடைச்சிருக்கு என்று அவளிடம் தனக்கு வந்த ஆர்டரை நீட்டினாள். அவளும் படித்து விட்டு அதிர்ந்தாள். அதை வாங்கி படித்த அவர் அப்பா சந்தோஷம் பட்டார். என் பொண்ணு மாசம் 60000 சம்பாதிக்க போறா என்று தன் பணத்தாசை வெளிப்படுத்தினார் அவள் அம்மாவும் கூட. ரஸியா கொஞ்ச நேரம் இரு நான் தொழுதிட்டு வரேன் என்று வுளு செய்து கொண்டு இறைவனிடம் முறையிட்டு விட்டு வந்தாள். வா ரஸியா போலாம் என்று இருவரும் கிளம்பினர்.

ரஸியா வீட்டில் சொல்லிவிட்டு கிளம்பினாள் ஆனால் சுரையாவோ யாரிடமும் எதுவும் சொல்லாமலே கிளம்பினாள்.

இருவரும் அமைதியாக நடந்தனர். ரஸியா காலேஜ் பஸ் வந்தவுடன் ஏறி சென்றாள். சுரையா மனதை ஒருநிலை படுத்தி கொண்டு அவள் தான் வேலை பாக்க போகும் register office சென்று தன்னை அறிமுகம் செய்து கொண்டாள். அவளுக்கான இடத்தில் அமர்ந்து வேலை செய்தாள்.

சுரையா, பிஎஸ்சி பிஎட் கணிதம் படித்தவள். ஆசிரியர் ஆக வேண்டும் என்பது அவள் கனவு. கோபம் பிடிவாதம் இரண்டும் அவளிடம் உண்டு ஆனால் ரொம்ப நல்லவள். அவள் பெற்றோர் பணத்தாசை பிடித்தவர்கள். பணம் மட்டுமே உலகம் என்று நினைப்பவர்கள். ரஸியா, பிஎஸ்சி கம்ப்யூட்டர் முன்றாம் ஆண்டு படித்து கொண்டு இருக்கிறாள். அக்கா தங்கை இருவரும் ஒரே மாதிரி. இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து இருக்க மாட்டார்கள். அவ்வளவு பாசம்.

ஏய் ரஸியா ஏன் டல்லா இருக்கே? என்று ரஸியாவின் தோழி சுமித்ரா கேட்க. இல்லடி அக்காவ நினைச்சி தான் . ஏன்டி உன் அக்காக்கு என்னாச்சு?. அவள் கனவை அழிச்சிட்டாங்க டி எங்க அம்மாவும் அப்பாவும். அவளுக்கு எதுவுமே கேட்டது கிடையாது. அவள் கேட்டதெல்லாம் அவளுக்கு பிடிச்ச படிப்பும் கெரியர் தான் அவ கேட்டா. ஆனா எங்க அப்பா அவரோட பணத்தாசையால அவளை இந்த கவர்மட் ஜாப் வாங்கி கொடுத்துட்டாங்க. அவள் ரொம்ப மனசு உடைச்சு போய்ட்டா. ஈவினிங் வீட்டுல ஒரு பூகம்பம் வெடிக்கும். அவ இப்ப ரொம்ப அமைதியா போய் இருக்கா. அதான எனக்கு ரொம்ப பயமா இருக்கு என்று அழுதாள். பணத்தாசை பிடிச்ச மிருகங்கள் எச்க அம்மாவும் அப்பாவும் என்று கூறிவிட்டு லண்ச் சாப்பிட கிளம்பினாள்..

மாலை ரஸியா வீடு வந்து சேர்ந்தாள். சிறிது நேரத்தில் சுரையாவும் வந்தாள். வேலை செய்த அசதியில் சற்று உட்கார்ந்தாள். அவள் அம்மா அவளுக்கு தண்ணீரை எடுத்து வந்து அவளிடம் அதை நீட்டினார். சுரையா தன் தாயை ஒரு முறை முறைத்து விட்டு உள்ளே சென்று உடை மாற்றி விட்டு வந்தாள். என்னம்மா வேலை எப்படி போச்சு என்று அவள் அப்பா விசாரித்தார் . அவரையும் ஒரு பார்வை முறைத்துவிட்டு பாத்ரூம் சென்று விட்டாள். மக்ரிப் தொழுகைக்காக வுழு செய்து விட்டு ரஸியாவும் சுரையாவும் சேர்ந்தே தொழுதனர். தொழுது முடித்தவுடன் அவள் அப்பா மறுபடியும் அதே கேள்வியை கேட்டார். இவளுக்கு கோபத்தோடு என் கனவை அழிச்சவங்க கிட்ட பேச விருப்பமில்ல என்று கத்தினாள் ஆனாலும் தெளிவாக இருந்தாள். உன் கனவை யாரு அழிச்சது என்றார் அவள் அம்மா. ம்ம்ம் நீங்கள் தான் வேற யாரு?. என்ன பேச விடுங்க இனி உங்ககிட்ட எனக்கு பேச விருப்பமில்ல இப்பன்னு இல்ல எப்பவுமே பேச மாட்ட. இனி என்னோட சம்பளம் உங்ககிட்ட நான் கொடுக்க மாட்டேன் என்றவுடன் அவர் அப்பா அதிர்ந்தார் பணத்தாசை அதிகம். நீங்களா பணத்தாசை பிடிச்ச மிருகங்கள். என்னோட கனவ அழிச்ச பேய்கள். இந்த வேலை நான் கண்டிப்பா ஒரு நாள் ரிசைன் பண்ணுவ கண்டிப்பா என அழுத்தமாக சொல்லி விட்டு அறைக்கு சென்றாள். ரஸியாவும் அவர்களிடம் ஏப்பா அவள் கனவ அழிச்சிட்டிங்கள நீங்களா மனிஷங்கலே இல்ல ச்சே என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள் அவளும்...

தொடரும்​
 

ஷமீம் பானு

Saha Writer
Team
Messages
86
Reaction score
0
Points
6
❤️ கோபம் 2 ❤️

சுரையா, ஏதோ யோசித்த வண்ணம் கட்டிலில் அமர்ந்திருந்தாள். ரஸியா, அக்கா என்று அவள் தோலில் கை வைத்தவுடன், சொல்லு ரஸியா என்றாள் சுரையா. என்னக்கா யோசிக்கிற? அதுவா எனக்கு கிடைச்சிருக்க இந்த வேலை பத்தி தான் டா.

ஆமா சுரையா எனக்கும் இதுல கொஞ்சம் சந்தேகம் தான். எனக்கு என்னமோ அப்பா இந்த வேலையை லஞ்சம் கொடுத்து தான் வாங்கியிருப்பாரோனு தோனுது. எப்படி சொல்ற ? கொஞ்சம் யோசிச்சு பாரேன். அப்பாக்கு நான் டீச்சர் வேலைக்கு போறது பிடிக்கல.

என்னை வற்புறுத்தி தான் tnpsc எழுத வச்சாரு. நான் எழுதின. ஆமாக்கா. ம்ம்ம் யாராது பர்ஸ்ட் அட்டம்ட் பாஸ் பண்ண முடியுமா அதுவும் எந்த கோச்சிங்கும் இல்லாமல். இன்னும் ஒரு விஷயம் அது எப்படி நான் இன்டர்வியூ போற நேரத்தில் எனக்கு ஆர்டர் வந்திச்சி. இதுலாம் யோசித்து பார்த்தா எனக்கு ஏதோ தப்பு தோனுது ரஸியா. அக்கா நீ சொல்ற மாதிரி அப்பா மட்டும் லஞ்சம் கொடுத்து வாங்கி இருந்தாருனு வை நான் கண்டிப்பாக போலீஸ் கிட்ட பிடிச்சி கொடுத்துடுவ லஞ்சம் கொடுத்தாருனு என்றவுடன் அடிப்பாவி இவ்வளவு தைரியம் வந்துடிச்சா உனக்கு என்றாள் சுரையா. நீ தானே சுரையா சொல்லுவ உண்மையா நேர்மையா இருக்கனும்னு அப்புறம் என்ன? ஏய் லூசு அப்படிலாம் இல்ல நீ சொல்றத தான் நான் செய்வேன். சரி சுரையா. என் உள் மனசு சொல்லுது டி நான் கண்டிப்பாக டீச்சர் ஆவேன். எப்படி சொல்ற. நீ எதுவாக ஆக நினைக்கிறாயோ அதுவாகவே ஆவாய் என்ற பொன்மொழி படிச்சதில்லையா. இந்த வேலையை ஒரு நாள் நான் ரிசைன் பண்ணுவ. அதே மாதிரி நான் டீச்சர் ஆவேன் என்று நம்பிக்கை பட பேசிய சுரையாவை பார்த்து சற்று பிரம்மித்து தான் போனாள் ரஸியா. ரஸியா, சுரையாவிடம் ஐ லவ் யூ சுரையா ஐ அம் வேரி லக்கி டு ஹேவ் யூ அஸ் மை சிஸ்டர் என்று அவள் நெற்றியில் முத்தம் கொடுத்தாள். சுரையாவும் அவள் கண்ணத்தில் முத்தமிட்டு நானும் தான்டி என்று கட்டி கொண்டாள். சுரையா இஷா தொழுகை டைம் ஆகுது வா போய் தொழுகலாம் என்று இருவரும் வுளு செய்து விட்டு தொழுதனர்.

இதையெல்லாம் கேட்டு கொண்டு இருந்த ரஹீம் சற்று அதிர்ந்தார். ஏனென்றால் இந்த வேலையை அவர் லஞ்சம் கொடுத்து தான் வாங்கினார். இது தெரிந்தால் சுரையா ரஸியா இருவரும் என்னை பிண்ணி எடுத்துடுவார்கள் என்று கொஞ்சம் இல்லை அதிகமாகவே பயந்தார். பிறகு இருவரும் தொழுதுவிட்டு வந்து அனைவரும் ஒன்றாக சாப்பிட்டார்கள். இந்தா சுரையா இன்னொரு சப்பாத்தி வச்சிக்க என்று அவள் தட்டில் வைப்பதற்கு முன் அவள் தாயின் முகத்தை கூட பாக்காமல் தட்டை எடுத்து கொண்டு சமையல் அறைக்குள் சென்று தட்டை கழுவி விட்டு தூங்க சென்றாள். அவளின் செயலில் வருத்தம் அடைந்தார் அம்மா . விடுங்க எல்லா சரியாகிடும் என்று ஆறுதல் கூறி விட்டு ரஸியாவும் தூங்க சென்றனர். அனைவரும் தூங்கினார்கள்.

ரஸியா தன் அக்கா மேல் கை போட்டு கொண்டு உறங்கினாள். ஆனால், சுரையாவிற்கு தூக்கம் தான் வரவில்லை. அதற்கு பதிலாக அழுகை தான் வந்தது. அவளால் அழுகையை நிறுத்த முடியவில்லை. எப்படி அழாமல் இருக்க முடியும். சிறுவயதில் இருந்தே அவள் கனவல்லவா? அதை உடைத்து விட்டாட்களே என்ற கோபம் தான். அதுவும் தன் பெற்றோர்களே இதற்கு காரணம் என்றால் அவள் எப்படி தாங்குவாள். அவள் கண்களில் கண்ணீர் வடிந்தது. அவளின் கனவை மனதில் பதிய வைத்த அந்த காட்சி அவள் கண்முன்னே வந்தது.

தொடரும்​
 

ஷமீம் பானு

Saha Writer
Team
Messages
86
Reaction score
0
Points
6
❤️ கோபம் 3 ❤️

சுரையா முதலாம் வகுப்பு படிக்கும் போது அவளுக்கு உடம்பு சரியில்லாமல் போனது இருந்தாலும் பள்ளிக்கு சென்று விட்டாள். அங்கு அவளால் பாடத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. இதனை பார்த்த அவள் ஆசிரியை அவளுக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிந்து அவளை தன் மகள் போல் அவளை பார்த்து கொண்டார். அன்று அவளுக்கு புரிந்தது ஆசிரியரும் தனக்கு அம்மா தான் என்று .

அன்று அவள் தன் மனதில் நானும் இவங்கள போல டீச்சர் தான் ஆவேன் என்று மனதில் நினைத்தாள். பசுமரத்தாணி போல் அவள் மனதில் அது கனவாகவே மாறியது அந்த பிஞ்சு மனதில். யாரேனும் விளையாட கூப்பிட்டாலும் டீச்சர் விளையாட்டு விளையாடலாமா என்று கேட்பாள் சிறுவயதில். அதை நினைத்து அழுது கொண்டு இருந்தாள் சுரையா.

பிறகு எனக்கும் என் தங்கைக்கும் நல்ல வாழ்க்கை துணை அமைத்து கொடு என்று இறைவனிடம் வேண்டியவாறு உறங்கினாள் சுரையா.

சுரையாவின் பக்கத்தில் வந்து அமர்ந்தான் அவன். அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு இருந்தாள். அவன் அவளை பார்த்து என்னமா அப்படி பாக்குற ? என்று பாசத்தோடு காதலையும் சேர்த்து தான் கேட்டான். அவள், இந்த தாடி அந்த சின்ன சின்ன கண்ணு குழந்தை மாதிரி முகம் அப்படியே அவ்வளவு அழகா இருக்கிங்க சாகித். இறைவன் எனக்கு கொடுத்த பொக்கிஷம் தான் நீங்களும் என் தங்கச்சியும் என்றாள். ஓ அப்படியா மா. துறுதுறு ஏதாது தேடிட்டு இருக்க உன் கண்ணு, சின்ன காது அதுக்கு ஏத்த மாதிரி ஒரு கம்மல் , நிலா வெளிச்சத்த விட பளிச்சென்று தெரியும் உன் முகம் அழகே தோத்துடும் குட்டி. அப்புறம் உன் கோபத்தை கூட ரசிக்கிற உன் பிடிவாதம் எனக்கு பிடிச்சி இருக்கு குழந்தை மாதிரி மனசு நீதான் என் லைப் என்றவுடன் அவன் தோலில் சாய்ந்து கொள்வதற்குள் சுரையா விழித்து கொண்டாள். மணியை பார்த்தாள் 4. 4 மணிக்கு காணும் கனவு பலிக்கும் சொல்லுவாங்க என்ன பண்ணுறது.

எனக்கு ஏன் இப்படி ஒரு கனவு? புரியவில்லை. அவள் அதை நினைதது கொஞ்சம் உறைந்து விட்டாள். ரஸியா கண்விழித்தாள். ரஸியா, சுரையா சுரையா என அழைத்தாள். அவளிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. ரஸியா பயந்து விளக்கை போட்டாள். சுரையா என்று கொஞ்சம் கடுப்பாக அழைத்தாள். பின்பு தான் அவள் தன்னிலைக்கு வந்தாள். என்னக்கா அவ்வளவு நேரமா கூப்பிட்டு இருக்க கண்டுக்காம ஏதோ யோசித்து இருக்க ஆமா ஏன் உன் கண்ணம் சிவந்து இருக்கு என்று அவள் கேட்டவுடன் எழுந்து சென்று கண்ணாடியில் தன் முகத்தை பார்த்தாள். அவன் தெரிந்தான். ஏய் நீ யாரு ? நீ எதுக்கு என் கனவுல வந்த ? என்று கேட்டாள். இவள் என்ன உளறா என்று யோசித்தாள். அக்கா யார கேக்குற என்றவுடன் தான் சுரையாவிற்கு புரிந்தது இது பிரம்மை என்று.

என்னக்கா ஆச்சு? அவள் கனவை ரஸியாவிடம் கூறினாள். அவள் ஆச்சிரியமாய் பார்த்தாள். அக்கா மாமா எப்படிக்கா இருந்தாரு? என்று கேட்டாள். அவள் கொன்றுவ உன்னை வா போய் தொழுகலாம் என்று வுளு செய்து விட்டு தொழுதனர் இருவரும். அக்காவுக்கு வந்த கனவை நினைவாக்கு என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்தாள் ரஸியா. சுரையாவோ என் தங்கைக்கு நல்ல வாழ்க்கை கொடு என்று பிராத்தனை செய்தாள். ஆனால், தன்னவன் அவன்தான் என்பதை தாமதமாக தான் உணர்வாள்.

பிறகு இருவரும் கிளம்பினர். சுரையா யாருடனும் பேசாமல் இருந்தாள். ரஸியா டைம் ஆயிடுச்சி பாருடா வாம்மா பஸ் வந்திடும் உனக்கு என்ற போது ரஸியா வந்தாள். இருவரும் சேர்ந்து நடத்தே சென்றனர். சுரையா உன்கிட்ட ஒன்னு சொல்லவா? சொல்லு டி. எனக்கு என்னவோ அந்த கனவுல வந்த பையன் தான் உன் ஹஸ்பண்ட் வருவானோன்னு தோனுது . ஏய் அதலாம் இல்ல என்றாள். அக்கா கனவுல கூட நீ அவன் பெயரை சொல்லியிருக்க எப்படிக்கா? அதான் ரஸியா எனக்கும் புரியல என்ற போது பஸ் வந்தது அவள் அதில் ஏறி சென்றுவிட்டாள். இவள் தன் அலுவலகத்திற்கு சென்று விட்டாள்.

அங்கு அவளுக்கு நிறைய வேலை இருந்தது அதையெல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக அழகாக முடித்தாள். அவள் செய்யும் வேலையை பார்த்து அசந்தனர் அங்கு வேலை செய்பவர்கள்.

ரஸியா மிகவும் மகிழ்ச்சி உடன் வகுப்பை கவனித்து கொண்டு இருந்தாள். அவளின் இந்த மகிழ்ச்சியை பார்த்து சுமித்ரா மிகவும் ஆச்சிரியப்பட்டாள். ப்ரேக் வந்ததும் அவளிடம் ஏய் என்ன இன்னிக்கு இவ்வளவு சந்தோஷமா இருக்க என கேட்டாள். அவள் இனி எனக்கு என் அக்காவோட லைப் பத்தி கவலை இல்லை டி அவ லைப் நல்லா இருக்க போது என்றாள். எப்படி ரஸியா சொல்ற என்றவுடன் அவள் காலையில் நடந்ததை சொன்னாள். அவள் எப்படி பா இப்படி ஒரு கனவு ஆச்சிரியமா இருக்கு ? இத நீ நம்புறியா ரஸியா. ஆமா டி சுமி அவளுக்கு வந்த கனவு கண்டிப்பா உண்மை ஆகும் என்றாள். சரி பெல் அடிச்சுடிச்சு என்று இருவரும் வகுப்பிற்குள் நுழைந்தார்கள்.

இப்படியே ஒரு மாதம் கழிந்ததே தவிர சுரையாவின் கோபமும் பிடிவாதம் கழியவில்லை. அவள் பேசாமல் இருப்பது பெற்றோர் இருவருக்கும் வருத்தம் அடைய செய்தது. ஆனாலும் அதை அவர்கள் வெளியே காட்டிக்கொள்ள வில்லை....

தொடரும்​
 

ஷமீம் பானு

Saha Writer
Team
Messages
86
Reaction score
0
Points
6
❤️ கோபம் 4 ❤️

காலை டிபன் சாப்பிட வந்து அமர்ந்தாள் சுரையா. இன்று அவளுக்கு பிடித்த உணவை சமைத்து வைத்திருந்தார் அவள் தாய். அதை பார்த்தவுடன் இவளுக்கு ஏதோ தவறு இருக்கிறது என்று புரிந்து கொண்டு என்னவாக இருக்கும் என்று யோசித்தவாறு இருந்தாள். பிறகு நினைவுக்கு வந்தது. இன்று அவள் முதல் மாதம் சம்பளம் வாங்கும் நாளென்று. ஓஹோ இதுக்கு தானா என்று அவள் ரஸியாவிடம் என்ன ரஸியா இன்னிக்கு எனக்கு சம்பளம் தர நாளுன்னு தானே எனக்கு பிடிச்சதெல்லாம் செஞ்சிருக்காங்க ம்ம்ம்? என்றவுடன் சற்றே அதிர்ந்தனர் அம்மாவும் அப்பாவும். இவள் எப்படி நம் மனதில் உள்ளதை கரெக்டா சொல்றா என்று மரியமிடம் கேட்டார் ரஹீம். ரஸியா நான் அவங்க பொண்ணு அப்படின்றதே மறந்துட்டாங்க போல அவங்க கூட நான் இருபத்தி நான்கு வருஷமா இருக்க .

என் அம்மா அப்பா என்ன செய்வாங்க என்ன செய்ய மாட்டங்க அப்படி செய்தா எதுக்கு செய்றாங்க எந்த எண்ணத்துல செய்றாங்க முக்கியமா பணத்தோட கூட எனக்கு தெரியும் என்றாள் ரஸியாவிடம் கூறுவது போல் பெற்றோர்களை பார்த்து.

உங்ககிட்ட ஒன்னு மட்டும் சொல்ற கோட்டுக்கோங்க. இப்பன்னு இல்ல எப்பவுமே என்னோட சம்பள பணத்தை உங்ககிட்ட நான் கொடுக்க மாட்டேன் என்று முடிவாக கூறிவிட்டு சென்றுவிட்டாள். என்னப்பா நீங்கள் போட்ட பிளான் புஸ்ஸா என்று தன் அப்பாவை கேலி செய்து விட்டு சென்றாள் ரஸியா.

அவர் முகத்தை பாவமாக வைத்திருந்தார். என்ன செய்வது என்று அறியாமல் இருந்தார் அவள் அப்பா. இருவரும் நடந்து சென்றனர். சுரையா நீ கனவுல வந்த பையனை பாத்தியா என கேட்டாள். அவள் என்ன கனவு என்று ஆச்சிரியத்துடன் கேட்டாள். ரஸியா ம்ம்ம் விடிஞ்சிது போ என்று சொல்லி கொண்டே இருந்த போது பஸ் வந்தது அதில் ஏறி சென்றுவிட்டாள். இவளும் தன் அலுவலகத்திற்கு சென்று விட்டாள்.

சுரையா, அலுவலகத்தில் தன் வேலைகளை செய்து கொண்டிருந்தாள். அப்போது ஒரு காரில் இருந்து ஒரு இளைஞன் இறங்கினான். தன் அண்ணனின் கல்யாணத்தை பதிவு செய்வதற்காக வந்து இறங்கினான். அவனின் அந்த தோற்றமே சொன்னது அவன் ஒரு பணக்கார வீட்டு பையன் என்று . உள்ளே வந்தான் தன் அண்ணன் அண்ணி உடன். அவன் சுரையாவின் டேபிள் அருகே வந்தான். அவளிடம் excuse me என்றான். சுரையா தலை நிமிர்ந்து அவனை பார்த்து என்ன வேண்டும் சார் என்று கேட்டாள்.

ஆனால் அவனோ சுரையாவையே பார்த்து கொண்டு இருந்தான். அவளோ ஹலோ சார் என்ன வேண்டும் என்று உரத்த குரலில் கேட்டாள்? பிறகு தன்னிலை வந்து அண்ணன் மேரேஜை ரெஜிஸ்டர் பண்ணணும் என்றான். சரி என்று அவள் அதற்கான வேலைகளை செய்து கொண்டு இருந்தாள். அவன் சுரையாவை பார்த்து கொண்டு இருந்தான். வேலைகள் முடிய மணி 2 ஆனது. அவள் அந்த வேவைகளை அழகாகவும் சரியாகவும் செய்து கொடுத்தாள். பிறகு அவன் தன் பாக்கெட்டில் இருந்து ஐநூறு ரூபாய் எடுத்து அவளிடம் லஞ்சம் கொடுத்தான். அவள், அவனை பார்த்து முறைத்து கொண்டு என்னது இது ? என கேட்டாள். அவன் நீங்கள் செய்த வேலைக்கு என்றான். அவள் , அப்பறம் கவர்மட் எதுக்கு சம்பளம் கொடுக்குது? என்ன லஞ்சமா? போலீஸ் கிட்ட பிடிச்சி கொடுத்துடுவ. அப்புறம் ஒன்னு சொல்ற " லஞ்சம் கொடுப்பவரையும்; அதை வாங்குபவரையும் நான் சபிக்கிறேன்" என்ற நபிமொழி கேள்விபட்டதில்லையா? நீங்கள்.

இவன் அதிர்ந்தான். நீங்கள் முஸ்லிமா? என கேட்டாள் அவன் அண்ணி. ம்ம்ம் ஆமாம். பெயர் என்ன? சுரையா என்றாள். சரிங்க நான் போய்ட்டு வரேன் அஸ்ஸலாமு அலைக்கும் என்றாள். இவளும் வ அலைக்குமுஸ்ஸலாம் என்றாள். அவர்கள் விடைபெற்று சென்றார்கள். அவர்கள் சென்றவுடன் அங்கு வேலை செய்பவர்கள் கைதட்டினர். அவள் தலைமை அதிகாரி அவளை பாராட்டி விட்டார். பிறகு இவள் தன் வேலைகளை செய்ய தொடங்கினாள். இனி நடக்க போவதை அறியாமல்....

பிறகு அலுவலகத்தில் விடுமுறை வாங்கிக்கொண்டு தன் சம்பளத்தை எடுத்து கொண்டு கடைக்கு போய் தன் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் துணிகளையும் தன் தங்கைக்கு ஒரு செல்போன் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றாள்.

தொடரும்​
 

ஷமீம் பானு

Saha Writer
Team
Messages
86
Reaction score
0
Points
6
❤️ கோபம் 5 ❤️

தன் அலுவலகத்தில் விடுப்பு எடுத்துக்கொண்டு கடைக்கு சென்றாள். தன் அம்மா அப்பா இருவருக்கும் சேர்த்து ஐந்தாயிரத்தில் துணியும், தன் தங்கைக்கு ஐந்தாயிரத்தில் நாலு சுடியும். தங்கைக்கு நல்ல ஸ்மார்ட் போன் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றாள். சம்பள பணத்தில் முப்பதாயிரம் மட்டுமே மீதம் இருந்தது. மணி 5 ஆனது.

அவள் உள்ளே நுழைந்தவுடன் ரஸியா என்ன இவ்வளவு பை என்று கேள்வி கேட்க அவள் அம்மா அப்பா கூப்பிடு என்றவுடன் ரஸியா அவர்களை அழைத்தாள். அவர்களும் சற்று மகிழ்ச்சி உடன் வந்தனர். வந்தவுடன் தன் அம்மா அப்பாவிற்கு வாங்கின துணியை ரஸியாவிடம் கொடுத்து அப்பா அம்மா கிட்ட கொடு என்றாள். அவள் ஏன் நீங்க போய் கொடுக்க வேண்டியது தானே என்றவுடன் சுரையா அவளை முறைத்தாள். உடனே ரஸியா அதை வாங்கிக்கொண்டு இதுக்கொன்னும் கொறச்சல் இல்ல என்று கூறி கொண்டே அவர்களிடம் தந்தாள். அப்பாவும் அம்மாவும் அதை பிரித்து பார்த்தனர். அவர்களுக்கு பிடித்த நிறத்தில் சட்டையும் பேண்டு சேலை. பிறகு தன் தங்கைக்கு வாங்கி வந்த துணிகளை அவளிடம் தந்தாள். அதை பார்த்தவுடன் ரஸியாவிற்கு கண்களில் ஆனந்த கண்ணீர். அனைத்தும் அவளுக்கு பிடித்த மாதிரி இருந்தது. பிறகு அவளிடம் ஒரு கிப்டை நீட்டினாள் அவள் என்ன என்று கேட்டாள் பிரித்து பார் என்றவுடன் ரஸியா பிரித்து பார்த்தாள். அதில், கைபேசி இருந்தது. ஐஐ போன் என்று கூறி சுரையாவை கட்டி பிடித்து முத்தம் கொடுத்தாள். ஐ லவ் யூ அக்கா என்றாள்.

பிறகு இருவரும் தொழுக சென்றனர். தன் மகளை நினைத்து கொஞ்சம் இல்லை இல்லை அதிகமாகவே பெருமை கொண்டார்கள் மரியமும் ரஹீமும். தன் தாய் தந்தை இருவரின் மகிழ்ச்சி பார்த்து சுரையாவும் மகிழ்ச்சி அடைந்தாள். பிறகு அனைவரும் சாப்பிட்டு எழுந்தனர்.

ரஸியா தன் அக்காவிடம், சுரையா நீ அந்த பையனை பாத்தியா? என்றவுடன் சுரையா எந்த பையன் என்று ஆச்சிரியமாக கேட்டாள். அதான் உன் கனவுல வந்த பையன் என்றவுடன் இல்லை நான் பாக்கல அந்த கனவு பொய்யாக கூட இருக்கலாம் நீ தூங்கு எனக்கு தூக்கம் வருது என்று கூறி விட்டு படுத்தாள். இவள் எருமை மாடு உன்கிட்ட கேட்டதுக்கு செவுத்து கிட்ட கேட்டு இருந்தாலும் சொல்லிருக்கும். அப்ப போய் செவுத்து கிட்டையே கேட்டுக்கோ மூடிட்டு தூங்கு நாயே என்றாள் சுரையா. சரிசரி தூங்குற என்று கடுப்புடன் தூங்கினாள்.

அவன் , காலையில் சுரையாவை பார்த்தது, அவளை ரசித்தது இதெல்லாம் சேர்ந்து அவனை ஏதோ செய்து கொண்டிருந்தது. இதுவரை நான் நிறைய பொண்ணுககிட்ட பேசியிருக்க பாத்துயிருக்க பட் இவ என்னை என்னவோ பண்ணிடா. ஏன் தெரியல அவளை தன் மனைவி ஆக்கி கொள்ள அவன் மனம் துடித்தது. அவன் என்ன செய்வது? எப்படி அவளை பற்றி தெரிந்து கொள்வது? என்று யோசித்து கொண்டு இருந்தான். அப்போது அவன் அம்மா சாப்பிட அழைத்தார். இவனும் சாப்பிட சென்றான். அங்கு அவனுக்கு பிடித்த உணவு செய்திருந்தார் அவன் அம்மா. அவன் அதை சாப்பிட்டு விட்டு தன் அறைக்கு வந்தான். கட்டிலில் படுத்து கொண்டு யோசித்து கொண்டே எப்போது தூங்கினான் என்று அவனுக்கே தெரியவில்லை.

பார்ப்போம் என்ன நடக்கிறது என்று....

தொடரும்​
 

ஷமீம் பானு

Saha Writer
Team
Messages
86
Reaction score
0
Points
6
❤️ கோபம் 6 ❤️

விடிந்தது.. இவன் கண்விழித்த போது தான் உணர்ந்தான் சுரையாவின் நினைவிலேயே உறங்கியது. அவன் புன்னகை விட்டு எழுந்து குளிக்கச் சென்றான்.

சிறிது நேரம் கழித்து வந்து அவளை பற்றி எப்படி தெரிந்து கொள்வது என்று யோசித்து கொண்டு இருந்தான். அவன் கைபேசி அடித்தது. அதை அட்டன் பண்ணான். சொல்லு மச்சி என்றான் இவன். என்ன மச்சி பண்ற? என்றான் அந்த பக்கம் இருந்தவன். இல்ல மச்சி வேலைக்கு கிளம்பிட்டு இருக்கேன். நீ சாப்பிட்டியா? சாப்பிட்டேன். மச்சி ஆபிஸ் கொஞ்சம் சீக்கிரம் வரீயா கொஞ்சம் பேசனும். சரி மச்சி. ஒகே பை டா. ம்ம்ம் பை போன் கட் ஆனது. பிறகு சாப்பிட்டு விட்டு ஆபிஸ் சென்றான்.

பிறகு ஆபிஸில் அவனுக்காக காத்திருந்தார்கள் அவன் நண்பர்கள். இவனை பாத்து என்ன மச்சி ஏதோ பேசனும் சொன்னியாமே ராம்கிட்ட என்றான் வினோத். ம்ம்ம் ஆமா டா என்றான் இவன். என்னடா பேசனும் என்றான் ரமேஷ். அவன் எப்படி ஆரம்பிப்பது என்று யோசித்தான் பிறகு டேய் மச்சி நேத்து ஒரு பொண்ண பாத்த அப்பலருந்து எனக்குள்ள ஏதேதோ செய்யுது மச்சி என்றவுடன். மூவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து ஆச்சிரியத்துடன் டேய் இது எப்பத்திலிருந்து. ஜஸ்ட் ஃபரம் எஸ்டர்டே மச்சி என்றான் சிறு புன்னகையுடன். சரி டா அவள் பெயர் என்ன? பேரு சுரையா. ராம், ம்ம்ம் பெயர் நல்லா இருக்கு என்றவுடன் அவன் ராமை முறைத்தான். டேய் கோபத்தை பாரு டா நம்ம சாருக்கு என்றான் வினோத். அப்ப கன்பார்ம் இது காதல் தான் என்றான் ரமேஷ். தெரியும் மச்சி என்றான் அவன். அவளை பத்தி தெரிஞ்சிக்கிறது ஒன்னும் புரியல.

அப்படி என்னடா அவகிட்ட புதுசா பாத்த என்றான் ராம். துறுதுறு தேடுற அவள் கண்ணு தான் என்னை ஏதோ செஞ்சிடிச்சி என்றான். பிறகு நேற்று நடந்ததை எல்லாம் அவன் விளக்கினான்.

சரிடா நாங்க போய் அவளை பற்றி விசாரிச்சிட்டு வரோம் டா என்றான் ரமேஷ். டேய் ஒரு பொண்ண பற்றி ஒரு பையன் விசாரிக்கறது தப்பு. அது நாளிக்கு பிரச்சினை வரும் . ஸோ நம்ம வித்யா கிட்ட சொல்லி விசாரிக்க சொல்வோம் என்று வித்யாவிற்கு போன் செய்தான். வித்யாவிடம் விஷயத்தை சொன்னான் அவளும் சரி என்றாள்.

அலுவலகத்தில் தன் வேலையை செய்து கொண்டு இருந்தாள் சுரையா.

ஹலோ எஸ்கீயூஸ் மீ என்றாள் ஜரினா. அவளை பார்த்தவுடன் சுரையா மகிழ்ச்சி அடைந்தாள். ஜரினாவிற்கோ அதிர்ச்சி. இவள் எப்படி இங்கே? என்று அவளை பார்த்தாள். ஏய் உன் மேரேஜை ரெஜிஸ்டர் பண்ண தானே வந்திருக்க என்றாள் சுரையா. அவள் உன்கிட்ட என்று சொல்வதற்குள் முதல்ல வந்த வேலையை முடிப்போம் என்றாள் கரகரத்த குரலில். விரைவாக வேலையை முடித்து விட்டு மேல் அதிகாரிடம் விடுப்பு கேட்க சென்றாள். அவரும் கொடுத்து விட்டார்.

ஜரினா சுரையா இருவரும் சிறுவயதிலிருந்தே தோழிகள். சுரையாவின் ஒரே தோழி. ஜரினாவிற்கும் தான். சுரையாவை முழுவதும் அறிந்த இரண்டு பேர் ரஸியாவும் ஜரினாவும் தான். சுரையா ஜரினா மற்றும் ஜனினாவின் கணவன் அக்பர் மூவருக்கும் ஆட்டோவில் ஏறி பூங்காவிற்கு சென்றனர்.

அங்கு சிறிது நேரம் அமைதி நிலவியது.... பிறகு சுரையா ஜரினாவை அணைத்து கொண்டு அழுதாள். சுரையா ஏன்டி அழுகுற என்று இவளை அறியாமலே இவள் கண்களிலும் கண்ணீர். அவள் சற்று நேரம் அழுது விட்டு . எனக்கு இந்த வேலை பிடிக்கல ஜரி. எப்படா ரிசைன் பண்ணுவன்னு இருக்கு . பிடிக்காத வேலையை எவ்வளவு நாள் தான்டி செய்ய முடியும். என் கனவு எல்லாம் நாசமா போச்சுடி என்று அழுதாள். எல்லாம் தெரியும் நேத்து தான் ரஸியா எனக்கு போன் பண்ணி சொன்னா. வேலைக்கு போய் ஒரு மாசம் ஆகுது என்கிட்ட சொல்லனும் தோனல்ல அப்படி தானே என்றாள் ஜரினா கோபத்தோடு. ஏய் இல்ல உனக்கு இப்ப தான் மேரேஜ் ஆச்சு அதான் சொல்லி டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு விட்டுட்ட. சரிடி இனி என்ன நடந்தாலும் என்கிட்ட சொல்லனும் ஒகே வா. ம்ம்ம் என்றாள். சரி டைம் ஆயிடுச்சி நீ கிளம்பு நாங்களும் போய்ட்டு வரோம் என்று கூறி விட்டு விடைபெற்றனர் ஜரினாவும் அக்பரும். அவளும் தன் வீட்டிற்கு சென்றாள்.

வித்யாவை பார்க்க வந்த அவன் சுரையா அழுவதை பார்த்து என்னாச்சு என்று கொஞ்சம் பக்கத்தில் சென்று அங்கு நடப்பதை கவனித்தான். பிறகு தெரிந்து காரணம் தெரிந்து அவள் கனவு என்னவாக இருக்கும் என்று யோசித்தான். பிறகு வித்யா மற்றும் அவன் நண்பர்கள் வந்தனர். வித்யா முதலில் ஆரம்பித்தாள். டேய் அந்த பொண்ணு உனக்கு செட்டாகாது. அவள் கோபக்காரி பிடிவாதக்காரி. கேக்குற எல்லாரும் அப்படி தான் சொல்றாங்க. உனக்கு ஆபோசிட் அப்படியே என்றாள். உடனே அவன் ஆபோசிட் போல்ஸ் அட்ராக்ட் டூ ஈச் அதர். அவள் அட்ரஸ் கிடைச்சிச்சா என்றான். ம்ம்ம் கிடைச்சிடிச்சி என்று அவனிடம் நீட்டினாள் பேப்பரை. எப்படா பொண்ணு கேக்க போற என்றான் ரமேஷ். முதல்ல வீட்டுல பேசனும், அப்புறம் தான். பாப்போம் என்று கூறி விட்டு வீட்டிற்கு சென்றான்.

வீட்டிற்கு சென்றவுடன், அம்மா அப்பா என்று அழைத்தான். அனைவரும் வந்தனர். என்னப்பா என கேட்டார் அவன் அப்பா. இவன் , அப்பா நான் ஒரு பொண்ண லவ் பண்ற அவளை தான் நான் மேரேஜ் பண்ணிக்கனும் ஆசைபடுற.. அவள் பெயர் சுரையா என்று அவளை பற்றி அனைத்தையும் கூறினான். இந்த கல்யாணத்தில் எனக்கு சம்மதம் இல்லை என்றார் அவன் அம்மா. இவன் அதிர்ந்து ஏன்மா என்றான் கண்ணில் கண்ணீரோடு. பின்ன இரண்டு வருஷமா கேட்டு மனசு மாறவில்லை இப்ப மட்டும் என்ன? என்றார் அவன் அம்மா. அம்மா ஒரு பொண்ண பாத்ததும் நமக்கு தோனனும் மா அதை இவகிட்ட தான் நான் உணர்ந்த ப்ளீஸ் என்று கெஞ்சினான். அதான் அவன் இத்தனை தூரம் அவன் சொல்றாலே அந்த பொண்ண பாத்து பேசி முடிச்சிடுவோம் என்றார் அவன் மாமா. அண்...ணா என்றார் அவன் அம்மா. ம்ச் சொல்றலே என்றார் மாமா. சரி நீங்கள் சொல்ற மாதிரியே செய்யலாம் ஆனா ஆறு மாசம் வெய்ட் பண்ணணும் என்றார் அவன் அப்பா . ஓகே என்றான். இவனுக்கு சந்தோஷத்தில் தலை கால் புரியவில்லை. ரொம்ப தேங்கஸ் மாமா என்று தன் அறைக்கு சென்றான்.

ஆமாம் இப்ப எதுக்கு ஆறு மாசம் வெய்ட் பண்ண சொன்னீங்க என கேட்டார் அவன் அம்மா. காத்திருக்கிறதுல தான் காதல் அதிகரிக்கும் என்றார் அவன் அப்பா. அவன் அம்மாவும் சரியென்றார்...

தொடரும்​
 

ஷமீம் பானு

Saha Writer
Team
Messages
86
Reaction score
0
Points
6
❤️ கோபம் 07 ❤️

நாட்களும் அப்படியே நகர்ந்தது, ஆறு மாத காலமும் முடிந்தது. ஆனாலும் சுரையாவின் கோபமும் பிடிவாதமும் குறையவில்லை. அவள் அம்மாவும் அப்பாவும் சற்று நொந்து தான் இருந்தனர். இன்னும் நான்கு மாதங்களில் ரஸியாவின் படிப்பும் நிறைவடையும் நிலையில் உள்ளது. சுரையா அன்று வழக்கம் போல் வேலைக்கு சென்றாள். ரஸியா காலேஜிற்கு செல்லவில்லை. சுரையா சென்ற பிறகு அவள் தாய் மரியம், நீங்க அவள் சுரையா ஆசைபடி டீச்சர் வேலைக்கு போக விட்டு இருந்தா அவ மாச சம்பளத்தை கொண்டாது என் கிட்ட கொடுத்திருப்பா ஆனால் நீங்கள் லஞ்சம் கொடுத்து அவளுக்கு வேலை வாங்கி கொடுத்திங்க ஆனா அவ நம்மள மதிக்காம காச கண்டவாரி செலவு செஞ்சிட்டு இருக்கா என்று தன் கணவர் ரஹீமிடம் குறை பட்டு கொண்டு இருந்தார் பணத்தாசையால் ரஸியா இருப்பதை மறந்து. இதை கேட்ட ரஸியா மிகவும் கடுப்புடன் ஏம்மா உனக்குலா கொஞ்ச கூட பாசமே இல்லையா. எப்பாரு பணம் காசு ச்சி. நான் கூட அக்கா ஏன் இப்படி பண்றா தப்பா நினைச்ச ஆனா அவள் பண்றதுல தப்பே இல்லை. அவள் வயசிலே இருக்க பாதி பேருக்கு கல்யாணம் முடிஞ்சிடிச்சி ஆனால் இங்க பணத்தாசையால அவளை கல்யாணம் பண்ணாம வச்சி இருக்கிங்க. உங்களை எல்லாம் ச்சே என்று கூறிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள் ரஸியா.

அவன் , வழக்கம் போல் வேலைக்கு செல்வதற்காக கிளம்பினான். அவன் அப்பா அம்மா இருவரும் சேர்ந்து சுரையா வீட்டிற்கு சென்றனர். அவர்களை உள்ளே அழைத்து அமர வைத்தார் அம்மா. இருவரும் தங்களை அறிமுகம் செய்து கொண்டனர். சுரையாவின் அப்பா தான் பேச ஆரம்பித்தார் என்ன விஷயம்? அதாவது நாங்கள் ஒரு வாரத்திற்கு முன்பு உங்கள் மகள் சுரையாவை அலுவலகத்தில் பாத்தோம் எங்கள் மகனுக்கு உங்கள் பொண்ணை எங்க வீட்டு மருமகள் ஆக வரனும் ஆசைபடுறோம் அப்புறம் இறைவன் விட்ட வழி என்றார் அவன் அப்பா . சுரையாவின் பெற்றோர் இருவரும் அமைதியாக இருந்தனர். பிறகு அவன் அம்மா பேச தொடங்கினார் .

எங்கள் வீட்டில் வசதிக்கு எந்த கொறச்சலும் இல்லை. எம்மகன் மாசம் ஏழுபதாயிரம் சம்பாதிக்கிறான். உங்கள் மகளை நாங்கள் நன்றாக பாத்து கொள்வோம் என்றவுடன் இருவரும் சரியென்று தலையசைத்தனர். பிறகு ரஸியா சுரையாவிற்கு போன் செய்து விவரத்தை கூறி வீட்டிற்கு வர சொன்னாள். சற்று நேரத்தில் அங்கு சுரையா வந்தாள். ரஸியா இன்று அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. சுரையா சிறிது நேரத்தில் ரெடியாகி அவர்கள் முன் வந்தமர்ந்தாள்.

சுரையா அவர்களிடம் ஒரு விஷயம் நான் கொஞ்சம் கோவக்க... என்று சொல்வதற்குள் அதெல்லாம் தெரியும் மா எனக்கு என்றார் அவன் அம்மா . எங்களுக்கு சம்மதம் தான் என்றார் அவன் அப்பா. அம்மா அப்பா சம்மதம் என்றால் எனக்கும் சம்மதம் தான் என்றாள் சுரையா. அப்புறம் என்ன மக்னா(நிச்சயதார்த்தம்) எப்ப வச்சிகலாம் என்றார் அவன் அப்பா. ம்ம்ம் நாளைக்கே வச்சிகலாம் என்றார் ரஹீம். அவர்கள் மகிழ்ச்சியுடன் விடைபெற்று சென்றனர்.

சுரையாவின் பெற்றோர்கள் மகிழ்ச்சியுடன் நாளை நடக்க போக இருக்கும் நிச்சயத்திற்கு வேலைகளை செய்து கொண்டு இருந்தனர். சுரையாவிற்கு தன்னை மணந்து கொள்ள இருப்பவனை பார்க்க வேண்டும் என்று ஆசை இருந்தது. ஜரினாவும் ரஸியாவும் அவளை கலாய்த்தவாறு இருந்தனர். நாளைக்கு தேவையானவற்றை எடுத்து கொண்டு இருந்தனர். அவரவர் வேலைகளில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். ஜரினா ஏய் கல்யாண பொண்ணே என்ன யோசனை என்று கேட்டவளை பார்த்து வெட்கப்பட்டு கொண்டு நா..ன் அவரை பாக்கனும் என்றாள். ஓஹோ
மேடம்க்கு அவங்க ஆள பாக்கனுமாமே ரஸி என்று கலாய்த்தாள் ஜரினா. ஏய் அதான் நாளைக்கு பாக்க போறல்ல அப்பறம் என்ன சுரையா என ரஸியா கூற அவள் ஏதோ சரியென்று தலையாட்டினாள். பிறகு மூவரும் வுளு செய்து விட்டு இஷா தொழுது கொண்டு சாப்பிட்டு தூங்க சென்றனர். அனைவரும் உறங்கினர். ஆனால் சுரையாவிற்கு தூக்கம் வரவில்லை. நாளை தன்னவனை பார்க்க போகும் சந்தோஷத்தில் மனம் குதுகலித்து கொண்டு இருந்தது. ஆனால் கொஞ்சம் வருத்தமும் அவளை தொற்றி கொண்டது .

இந்த வீட்டை அவள் தங்கையை பிரிய போகிறாள் என்று நினைத்து கவலை பட்டாலும் மனம் தன்னவனை பார்க்கும் ஆவலில் சிறிது புன்னகை விட்டாள். அப்படியே உறங்கியும் போனாள்.

சுரையா திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததை அறிந்த அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை . இரவு சாப்பிட்டு விட்டு தன் அறையில் வந்து அமர்ந்தான் அவன். நாளைக்கு எந்த டிரஸ் போடலாம் என்று பீரோ திறந்து பார்த்தான். கண்ணாடி முன் நின்று எந்த டிரஸ் நல்லா இருக்கும் என்று ஒவ்வொன்றாக வைத்து பாத்து கொண்டு பிறகு ஒரு டிரஸை செலக்ட் செய்து கொண்டு தூங்க சென்றான்...

சுரையாவிற்கு அழகான விடியலாய் விடிந்தது இன்று. நான்கு மணிக்கே எல்லாரும் எழுந்துவிட்டனர். பிறகு சுரையா குளித்து விட்டு வந்தாள் . அனைவரும் ஒன்றன் பின் ஒன்றாக குளித்து விட்டு வந்து வேலைகளை செய்து கொண்டு இருந்தனர். இவள் வேலை செய்ய சென்றாலும் அவளை வேலை செய்ய விடாமல் தடுத்து அவளை உள்ளே அனுப்பினார் அவள் தாய். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சூரியன் வெளியே வந்தது. ரஸியாவும் ஜரினாவும் சேர்ந்து சுரையாவை தேவதையாக மாற்றினர். அந்த மெருன் கலர் புடவை சுரையாவின் அழகை மேலும் கூட்டியது. அக்கா இந்த சேரில மட்டும் மாமா பாத்தாரு அவ்வளவு தான் ப்ளாட் ஆய்டுவார் என்று கிண்டல் செய்து கொண்டு இருந்தாள் ரஸியா. அவள் ச்சி பே லூசு என்று வெட்கப்பட்டு தலைகுனிந்து கொண்டாள்.

அய்யோ டா வெட்கத்தை பாரு மேடத்திக்கு என்று கூறி சிரித்தார்கள் இருவரும். சாப்பிட சென்றார்கள்.

அவனுக்கும் இதே நிலைமை தான். அவனை வருத்து எடுத்து விட்டனர் அவன் நண்பர்கள் மற்றும் தங்கை. அவன் அழகாக ரெடியாகி வந்தான். அவன் வந்தவுடன் சாப்பிட்டு விட்டு கிளம்பினர். அதற்குள் சுரையாவின் அப்பா போன் செய்து எங்க இருக்கிறார்கள் என்று கேட்டு கொண்டார். அவர்களும் வந்து விட்டனர்.

வந்தவர்களை வரவேற்றார் ரஹீம். அவர்கள் வந்தவுடன் ரஸியா சென்று அங்கேயே நில்லுங்க என்றாள் ரஸியா. அவர்கள் அதிர்ந்தனர். எதுக்கு மா நிக்க சொல்ற என அவன் அம்மா கேட்க . யாரு மாப்பிள்ளை? இவன் தான் என்று காட்டினார் அவன் தந்தை. ம்ம்ம் என்று அவனை ஒரு பார்வை பார்த்து சிரித்துவிட்டு மாமா கன்பார்ம் என் அக்கா பிளாட் என்றாள் . பெரியவர்களுக்கு புரியவில்லை. ஆனால் சிறியவர்கள் புரிந்து கொண்டு சிரித்தனர். அவர்களும் காரணம் தெரியாமல் சிரித்தனர். ஒரு நிமிஷம் ஒரு போட்டோ என்று போட்டோ எடுத்து கொண்டாள். மாமா அக்காவ பிடிக்கலனா சொல்லுங்க நான் உங்களை மேரேஜ் பண்ணிக்கிற என்றவுடன் அவள் தலையில் பலமாக இரண்டு கொட்டு விழுந்தது. கொட்டியது வேறு யாருமில்லை அவள் அம்மா தான் . வந்தவங்க கிட்ட பேசுற பேச்ச பாரு எருமை போடி. அவளை ஏன் அடிக்கிறிங்க சின்ன பொண்ணு என்றார் அவன் அம்மா. ரஸியா அவன் பாட்டியை பார்த்து என்ன தாதி தங்கச்சியே இந்த வாய்னா அக்கா எப்படி இருப்பானு தானே கவலையே வேண்டாம் அவளுக்கும் இதே அளவுக்கு தான் வாய் என்றாள். அதை கேட்டு அனைவரும் சிரித்தனர். மேலும் மாமா நேத்து கேட்க மறந்துட்டேன் உங்க பேரு என்ன என்றவுடன் சாகித் என்றான். இவள் சற்று அதிர்ந்தாள். பிறகு மாமா நீங்கள் மட்டும் தனியாக நில்லுங்க ஒரு போட்டோ எடுத்துக்கிற என்றவுடன் அவனும் நின்றான். இவள் போட்டோ எடுத்து கொண்டு ரொம்ப தேங்க்ஸ் என்று கூறிவிட்டு உள்ளே சென்றாள்.

ரஸியா அந்த போட்டோவை சுரையாவிடம் காட்டினாள். அவள் அதை வாங்கி பார்த்ததும் சற்று அதிர்ந்தாள். பிறகு ரஸியா, சுரையா இவர் பேர் கூட சாகித் தானா என்றாள். ஏய் என் கனவுல வந்த அந்த சாகித் தான்டி இவரு என்றாள் . ஜரினாவிற்கோ எதுவும் புரியவில்லை என்ன டி சொல்ற ஆமாம் என்று தன் கனவை கூறினாள்....

ஆம் அவன் வேறு யாருமில்லை சுரையாவின் கனவில் வந்த அந்த சாகித் தான் அவன்....

தொடரும்​
 

ஷமீம் பானு

Saha Writer
Team
Messages
86
Reaction score
0
Points
6
❤️ கோபம் 08 ❤️

ரஸியா, சாகித்தின் போட்டோவை சுரையாவிடம் காட்டி இவர் தான் சுரையா உன் வருங்கால உத்பி என்றாள். அவள் அதை வாங்கி பார்த்தாள். இவளுக்கு அதிர்ச்சி இவன் நம் கனவில் வந்தவன் ஆயிற்றே! இவன் எப்படி இங்கே? என்று மனதில் யோசித்து கொண்டு இருந்தாள். ஏய் சுரையா என்னாச்சு? என்று ஜரினா கேட்க நினைவுக்கு வந்தவளாய் இவன் என் கனவுல வந்தவன் டி ரஸியா என்றாள். ஜரினாவிற்கு புரியவில்லை. என்ன சொல்ற? ஆமாம் ஜரினா என்று எல்லாத்தையும் கூறி முடித்தாள். செம சுரையா என்ஜாய் என்றாள் ரஸியா புன்னகை உடன். பிறகு கதவு தட்டப்பட்டது. யார் என்று திறந்தாள் ரஸியா. அட! நீ இங்க தான் இருக்கியா என்று கூறி கொண்டே உள்ளே நுழைந்தார் சாகித் அம்மா மும்தாஜ். பின்ன வேற எங்க இருக்கனும் என்று ரஸியா கேட்க சுரையா செல்லமாக தட்டினாள். விடுமா என்று கூறி சீக்கிரம் ரெடியாகு மா என்று கூறி விட்டு சென்றார். பிறகு சாகித்தின் அண்ணி தங்கை மாமன் மகள்கள் வந்தனர் உள்ளே.

உள்ளே வந்தவுடன் சாகித்தின் அண்ணி சுரையா நான் தான் சாகித்தின் அண்ணி பிர்தவுஸ். இவள் அவன் தங்கை மக்முதா. இவங்க சாகித்தின் மாமா மகள்கள் அதாவது என் தங்கச்சிங்க இவ ராபிதா, இவ ருக்கையா என்று அறிமுகம் செய்து வைத்தாள். அவளும் அனைவருக்கும் ஸலாம் சொன்னாள். பிறகு எல்லாரும் ஒன்றாக சேர்ந்து சுரையாவை அழகு தேவதையாக மாற்றினர்.

சுரையா ஹாலிக்கு சென்று உங்கள் எல்லார்கிட்டயும் கொஞ்சம் பேசனும் என்றனர். என்னமா பேசனும் என சாகித்தின் அப்பா நிஜாம் கேட்க . சொல்றேன் என்று ஆரம்பித்தாள். எனக்கு நிக்காஹ் எவ்வளவு சிம்பிளா பண்ண முடியுமோ அந்த அளவுக்கு சிம்பிளா பண்ணம். வீண் விரயங்கள் தேவயில்ல. அதாவது மஹால பாட்டு போடுறது தேவையில்லாத செலவு அவள் சொன்னவுடன் அது எப்படி பாட்டு இல்லாமல் என்றார் அங்கு வந்தவர்களில். அதுக்கு பதிலா பயான் (சொற்பொழிவு) வச்சிக்குவோம் வந்தவங்க மார்கத்தை பற்றி தெரிஞ்சிகிட்ட மாதிரியும் இருக்கும் நமக்கு நன்மைகள் கிடைச்ச மாதிரியும் இருக்கும். அதே மாதிரி இன்வீடேஷன் கொஞ்சம் சிம்பிளா இருந்தா போதும். முக்கியமா என்ன அலங்காரம் பண்ண பியூடிஷியன் தேவையில்லை. எனக்கு இயற்கை அழகு தான் பிடிக்கும். வரவங்க எல்லாருக்கும் ஒரு யாசின் கிதாப்(புத்தகம்) கொடுக்கலாம். அப்புறம் சாப்பாடு மீதம் இருந்திசினா ஏழைகளுக்கு அதை கொடுத்துடலாம் வேஸ்ட் பண்ணாம என்று ஓரே மூச்சில் கூறி முடித்தாள். சரி உனக்கு மஹர் என்ன வேணும்? என நிஜாம் கேட்க 30 கிராம் வெள்ளி தான் மஹர் உடைய அளவு. ஸோ டட்ஸ் யூவர் விஷ் என்றாள். அவள் சொன்னவுடன் இது நல்லா இருக்கே என்றார் சாகித்தின் அண்ணன் ரியாஸ். சரிமா இப்படியே செஞ்சிடுவோம் என்றார்கள் அனைவரும்.

அதுக்கப்புறம் இந்த கல்யாணத்தோட செலவு எல்லாம் நான் தான் செய்ய போறேன் . என்னோட சம்பளத்தை சேர்த்து வச்சியிருக்க என்றவளை அதிர்ச்சியோடு பார்த்தனர் அனைவரும். பிறகு சரி நம்ம ஆரம்பிச்சிடுவோம் என்றார் அம்மா . சாகித் சுரையாவின் அழகில் மயங்கி விட்டான். அன்று சுடிதாரில் பார்த்தவன் இன்று சேவையில் பார்கிறான். சுரையாவோ அவனை பார்த்தால் , எங்கு தடுமாறிடுவோமோ என்ற பயத்தில் அவனை பார்க்கவே இல்லை. பிறகு நிச்சயம் முடிந்தது. அனைவரும் சாப்பிட சென்றனர். சாப்பிட்டு முடித்தவுடன், அனைவரும் உட்கார்ந்து பேசி கொண்டு இருந்தனர். சுரையா ரஸியாவிடம் ஜரினா எங்கடி என்று கேட்க அவள் ஜரினா அக்கா மாடில இருக்காங்க என்று பதில் அளித்தாள். சுரையா உடனே மாடிக்கு சென்றாள்.

ஜரினா ஜரினா என்று கூப்பிட்டு கொண்டே மேலே ஏறினாள். ஆனால் ஜரினாவிற்கு பதில் சாகித் இருந்தான். அவளின் குரல் கேட்டு திருப்பினான். இவள் அவனை பார்த்தவுடன் கீழே செல்ல முயன்ற போது ஒரு நிமிஷம் நில் என்றான். அவளும் நின்றாள். இவன் அவள் அருகில் வந்து நின்றான். என்ன பேசுவது என்று இருவருக்கும் தெரியவில்லை. அமைதியாக நின்றிருந்தனர். உன் போன் நம்பர் தர முடியுமா? என கேட்க அவள் தன் நம்பரை கொடுத்தாள்.

ம்ம்ம் நீங்க ஒரு மிஸ்டு கால் கொடுத்துடுங்க என்றாள். அவனும் கொடுத்தான். பிறகு இவள் நான் நம்பர் கொடுத்ததால் பேசலாம் வாட்ஸ் ஆப் சேட் பண்ணலாம் நினைக்காதிங்க. நான் பேச மாட்டேன் எல்லாம் மேரேஜ் அப்பறம் தான் என்றாள் கடுகடுபான குரலில். இவன் அடிப்பாவி ஆறு மாசம் தான் பேச முடியாம தவிச்ச இப்பயுமா என்று மனதில் நினைத்து கொண்டான். இவள் உன் கிட்ட பேசுன அவ்வளவு தான் எல்லாமே மறந்துடுவேன் என்ன இன்னும் கொஞ்ச நாள் தானே என்று மனதில் நினைத்து கொண்டாள். பிறகு நான் போய்ட்டு வரேன் என்ற போது இந்த புடவையில் செமயா இருக்க என்றான் அவள் காதருகில். இவள் வெட்கத்தோடு தேங்கஸ் என்று கூறி விட்டு கீழே இறங்கி விட்டாள். அவள் பேசியதில் இவன் மணம் மயங்கியது. மான் போல் சென்ற அவளை பாத்து கொண்டே இருந்தான்.

ஒரு மாதத்தில் திருமணம் என்று முடிவெடுத்தார்கள். சுரையா தன் அறையில் எல்லாருடனும் அமர்ந்து இருந்தாள். ஆனால் அவள் மனம் மட்டும் சாகித்தை சுத்தி சுத்தி வந்தது. பிறகு அனைவரும் விடைபெற்று சென்றனர் . ரஸியா ரெண்டு பேரும் கிளம்புக இன்வீடேஷன் அடிக்க கடைக்கு போகனும் என்றார் அப்பா. இருவரும் ரெடியாகி வந்தனர். நான்கு பேரும் காரில் ஏறி கடைக்கு சென்றனர். அங்கு அவளுக்கு பிடித்த இன்வீடேஷன் ஒன்றை எடுத்து காண்பித்தாள். அது ரொம்ப சிம்பிளாகவும் அழகாகவும் இருந்தது. ஆர்டர் கொடுத்து விட்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

சாகித் பிசிஏ முடித்து விட்டு கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கிறான். நல்ல குணம். அவன் குடும்பம் நண்பர்கள் மட்டுமே அவன் உலகம்.

போகும் வழியில் இன்வீடேஷன் அடிக்க ஆர்டர் கொடுத்து விட்டு சென்றனர் சாகித்தின் அம்மாவும் அப்பாவும். பிறகு வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். என்னடா இப்ப சந்தோஷமா என கேட்டார் சாகித் அப்பா. ம்ம்ம் ரொம்ப என்றான். ரொம்ப தேங்க்ஸ் பா எதுக்கு டா? இல்ல எனக்கு பிடிச்ச பொண்ண எனக்கு நிக்காஹ் பண்ண சம்மதம் சொன்னதுக்கு ஏய் உன் சந்தோஷம் தான் எங்க சந்தோஷம் புரியுதா என்றார் அப்பா . கண்ணீரோடு தன் அப்பாவை அணைத்து கொண்டான். பிறகு டேய் டேய் ரொம்ப சீன் போடாத என்று கலாய்த்தாள் தங்கை மக்முதா. இவன் தலையில் கொட்டி போடி எருமை என்று திட்டி விட்டு அறைக்குள் நுழைந்து கொண்டான்.

தொடரும்​
 

ஷமீம் பானு

Saha Writer
Team
Messages
86
Reaction score
0
Points
6
❤️ கோபம் 09 ❤️

உள்ளே நுழைந்த சாகித் மக்னாவில் அவன் போனை மக்முதாவிடம் கொடுத்து சுரையாவை போட்டோ எடுக்க சொன்னான். அந்த போட்டோவை பார்த்து எனக்கு ஒரு மாசம் எப்படி போக போது தெரியலை. ஆறு மாசம் வெய்ட் பண்ணிட்ட பட் இந்த ஒரு மாசம்.. உனக்காக எத்தனை ஜென்மம் எடுத்தாலும் காத்திருப்பேன் மா. உன்னை நான் யாருக்காகவும் விட்டு கொடுக்க மாட்டேன். உன்னை பாத்த மாத்திரத்தில் என்னை இழந்துவிட்டேன் என்று அவள் போட்டோவை வைத்து பேசி கொண்டு இருந்தான் சாகித். அவனை அறியாமல் அவனுக்குள் சுரையா அவன் மனதில் ஆழமாக பதிந்து விட்டாள். இவன் தன்னவளுக்காக மஹர் என்ன வாங்கி கொடுக்கலாம் என்று யோசித்து கொண்டு இருந்தான். என்ன வாங்கலாம்?? மோதிரம் இல்லை கொலுசு ம்ம்ம் வேண்டா கம்மல் 🤔🤔 ம்ம்ம் செய்ன் நோ நெக்லஸ் வேஸ்ட் வேற என்ன வாங்கலாம்🤔🤔🤔 எதுவும் தோன மாட்டேன்தே.... என்ன பண்றது....... என்று யோசித்து கொண்டே தூங்கி விட்டான். அவனை சாப்பிட எழுப்புவதற்காக அவன் அம்மா வந்தார். சாகித் எழுந்துடு பா சாப்பிடனும் என்று அழைத்தார். ஆனால் அவனோ விழித்த பாடு இல்லை . மக்முதா அவனே அண்ணி கூட டூயட் பாடிட்டு இருப்பா நீ என்னமோ டிஸ்டர்ப் பண்ற என்றவளை முறைத்தார் அம்மா. விடுங்க அதான் நல்லா தூங்கறால அப்பறம் என்ன வாங்க என்று ரியாஸ் அவர்களை அழைத்து சென்றான்.

சுரையாவிற்கு தூக்கம் வரவில்லை இத்தனை நாள் அழுவதற்காக முழித்திருந்தாள். ஆனால் முதல் முறையாக ஆனந்த கண்ணீரோடு முழித்திருந்தாள். இன்று அவனிடம் பேசியது அவனை ஒளிந்து இருந்து திருட்டு தனமாக ரசித்தது எல்லாம் எண்ணி எண்ணி தன்னையே மறந்தாள். அவளை அறியாமல் சாகித் அவள் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக வாழ தொடங்கினான். அவள் போனில் இருந்த அவன் போட்டோவை பார்த்து ஒரு மாசம்.... எப்படி போக போது தெரில.... உன்கிட்ட பேசனும் நிறைய பேசனும் பட் ஏனோ தெரியவில்லை மனசு வேண்டா சொல்லுது.... அவளை அறியாமலே கண்கள் கலங்கி விட்டது அதை துடைத்து விட்டு படுத்து விட்டாள்..

காலை.....

எப்போதும் போல் சுரையா வேலைக்கு கிளம்பி கொண்டு இருந்தாள். சுரையாவின் முகம் சற்று அழகாக இருந்தது. ரஸியாவும் சுரையாவும் சாப்பிட்டு விட்டு கிளம்பினார்கள். இருவரும் நடந்து செல்லும் போது ரஸியா, அக்கா நான் உன்கிட்ட ஒன்னு கேட்ப ஒழுங்கா பதில் சொல்லனும். ம்ம்ம் கேள். இந்த கல்யாணத்தில் உனக்கு இஷ்டம் தானே. ஏன்டி இப்படி கேக்குற இஷ்டம் இல்லாமலா சம்மதம் சொன்ன. அப்ப ஒகே. சரி பஸ் வருது பாத்து போ சரியா. ம்ம்ம் சரி சுரையா.
இவள் அலுவலகத்திக்கு வந்து சேர்ந்தாள்.

அங்கு அவளுடன் பணியாற்றும் ஒருவர் ஏன்மா நேத்து வரல? எனக்கு நேத்து எங்கேஜ்மட் ஸோ அதான் லீவு போட வேண்டியதா போய்டிச்சி. ஓஓ கங்ராஜ்லேஷன் கைகூடும் என்று அவளுடன் கை கொடுத்து விட்டு தன் வேலைகள் செய்து கொண்டு இருந்தாள். எப்போதும் இல்லாமல் இப்போது உற்சாகமாக வேலைகளை செய்து கொண்டு இருந்தாள். அவள் போன் அடித்தது எடுத்தாள். ஹலோ யார்? ஆ ஹலோ மேடம் நீங்கள் இன்வீடேஷன் ஆர்டர் பண்ணி இருந்திங்கல ஒரு சேம்பிள் மட்டும் அடிச்சி வச்சியிருக்கோம். நீங்கள் வந்து பாத்து சரியா இருக்குன்னு சொன்னா மத்தத பண்ணிடலாம். ம்ம் ஒகேணா நான் வரேன். சரிங்க. போன் கட்டானது. இவளுக்கு லீவு கேட்க சற்று தயக்கமாக இருந்தது. சரி வா கேட்டு தான் ஆகனும் என்று எழுந்து சென்றாள். மேல் அதிகாரியகடம் சார் எனக்கு ஹாப் டே லீவு வேண்டும் சார் என்றாள். ஏன்மா நேத்து லீவு போட்ட அதுக்கு முந்தைய நாள் லீவு என்ன தான் மனசுல நினைச்சிட்டு இருக்க? சார் நேத்து எனக்கு எங்கேஜ்மட் சார் அதனால தான் வர முடியல. இன்பாமாது பண்ணிருக்கனும் அதுவும் இல்லை. சாரி சார். இனி இப்படி நடக்காது. ப்ளீஸ் சார் இன்னிக்கு இன்வீடேஷன் சேம்பிள் வந்திருக்கு அத பாக்க தான் போறேன் மணி இப்பவே இரண்டு பர்மிஷன் போட முடியாது அதனால் தான் லீவு கேக்குற ப்ளீஸ் என்றாள். ம்ம்ம் சரிசரி எடுத்துக்கோங்க என்றார் . இவளும் விடுப்பு எடுத்து கொண்டு கடைக்கு சென்றாள்.

அங்கு அவர்கள் காட்டிய இன்வீடேஷன் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்தாள் எல்லா சரியா இருக்கு நீங்கள் ரெடி பண்ணிடுங்க அப்றம் எப்ப கொடுப்பிங்க டூ டேஸ் ரெடியாகிடும். நீங்கள் வாங்கிட்டு போய்டலாம். சரி என்று கூறிவிட்டு தன் பையில் இனுந்து அட்வான்ஸ் பணத்தை கொடுத்து விட்டு வீட்டிற்கு சென்றாள். அங்கு இன்வீடேஷன் இன்னும் ரெண்டு நாள்ல ரெடியாகிடும் என்றாள். அவர்களும் சரி என்றனர். இவள் தன் சிறு வயது ஆல்பம் எடுத்து பார்த்து கொண்டு இருந்தாள். பிறகு நாளிதழ் படித்து கொண்டு இருந்தாள்.

டேய் சாகித் ஆல் தி பேஸ்ட் உனக்கு மேரேஜ் சொன்னாங்க கை கொடு என்று கை நீட்டினாள் சுதா. ஆனால் சாகித்தோ தேங்க்ஸ் மட்டும் போதும் கை கொடுக்க முடியாது என்றான். ஏன்டா கை கொடுக்க முடியாது? கேட்டாள். பர்ஸ்ட் இந்த டா போட்டு கூப்பிடுறத நிறுத்து சுத்தமா பிடிக்கல. நான் பிரண்டு முறையில் கூப்பிட்ட என்றாள் . எத்தனை முறை சொன்னாலும் புரிய மாட்டேன்ற. எனக்கு பிடிக்கல தயவு செய்து இனி அப்படி கூப்பிடாதே என்று கூறி விட்டான். இவளும் நான் அப்படி கூப்பிடல. பொண்ணு போட்டோ இருக்கா. ம்ம்ம் இருக்கு என்று தன் போனில் இருந்த போட்டோவை காண்பித்தான். அழகா இருக்கா பா பொண்ணு. ம்ம்ம் தேங்கஸ். சரி சரி நான் என் டேபிள் போற என்று எழுந்து சென்றாள் சுதா. சிறிது நேரம் சுரையாவின் போட்டோவை பார்த்து ரசித்து கொண்டு இருந்தான். எவ்வளவு நேரம் சென்றது என்று அவனுக்கு தெரியவில்லை. டேய் போதும் போதும் வழியுது தொடச்சிக்கோ என்றான் வினோத். பிறகு தான் தன்னிலைக்கு வந்தான். ஐயோ இவன் தொல்லை தாங்க முடியல டா சாமி என்றான் ரமேஷ். டேய் என்று பாவமாக வைத்திருந்தான் முகத்தை சாகித். ரொம்ப நடிக்காத டைம் ஆயிடுச்சி வீட்டுக்கு கிளம்பு என்றவுடன் ஈஈஈ என்று சிரித்து கொண்டே வீட்டிற்கு விரைந்தான்....

தொடரும்​
 
Top Bottom