Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BL NOVEL உயிரினை மனம் தேடுதே - Tamil Novel

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

 
Last edited:

MAHARAJ

New member
Vannangal Writer
Messages
6
Reaction score
7
Points
3
உயிரினை மனம் தேடுதே -- முதல் பதிவு


இரவு 9 மணி...

" ஏய் ! துளசி வெளிய வாடி , எங்கடி போன வாடி இங்கே, இன்னிக்கு எத்தனை மணி ஆகும்? உன் பொண்ணு ஊர் சுத்திட்டு வர..." என்று கேட்டுக்கொண்டே தள்ளாடி நடந்து வீட்டு வாசலில் விழுந்தார் அந்த குடும்பத்தின் தலைவர் சரவணன்...


கீழே விழுந்தும் கூட பேச்சை நிறுத்தாமல் காதில் கேட்க முடியாத தகாத வார்த்தைகள் வந்து விழுந்தன அவர் வாயில் இருந்து...

அதே நேரம் கடைக்கு சென்றிருந்த அவர் மகன் முகில் வர, " வாடா அக்காவுக்கே மாமா வேலை பாக்குறவனே நீ எங்க போன கிராக்கி பிடிக்கவா? என அந்த 17 வயது தன் சொந்த மகனை பார்த்து கேட்டார் அவரின் தகப்பனான இந்நாட்டின் குடிமகன்...


முகில் " அம்மா ! அம்மா ! இங்க வா இந்தாளு இன்னும் என்னென்ன பேச போறாரோ ? சே ! புருஷனா பொண்டாட்டியும் பார்க்கல , அப்பனா புள்ளைங்களயும் பார்க்கல ஆனா நீ இன்னும் இவரோட குடும்பம் நடத்துற , ஏன் மா ? இவரு இப்படி இருக்காரு அக்கா பாவம் ம்மா அவ எவ்வளவு நேரம் வேலை பார்த்துட்டு வரா வரும் போது இவரு ஆரம்பிச்சுடுறாரு.. சரி தூக்கு இன்னிக்கும் இவரை குளிப்பாட்டி , உள்ளே கூட்டி போய் சோத்த போட்டு தூங்க வை, அந்தபுள்ள இன்னிக்காவது ஒழுங்கா சாப்பிடட்டும்.. "அப்படினு சொல்லிட்டு கடையில வாங்குன முட்டையும் மேகி பாக்கெட்டையும் உள்ளே கொண்டு போய் வைச்சுட்டு வந்து அப்பாவ குளிக்க வைக்க அன்னைக்கு உதவி கொண்டிருந்தான் அந்த வீட்டின் குட்டி தலைவரான இளவரசன் முகிலினியன்...

################

அதே நேரம் இரவு 9 மணி

திருச்சியின் இதயம்னு சொல்ற N S B ரோட்டில் உள்ள பெரிய நகைக்கடை ஒன்றின் பின் கதவு வழியே அக்கடையின் ஊழியர் அனைவரும் வெளியே வந்து கொண்டிருக்க நாம இன்னும் நெருக்கமா போய் பார்ப்போம் ...


அதோ அந்த மஞ்சள் சுடிதார் அவங்க தான் இன்னும் கொஞ்சம் கிட்ட போய் பார்ப்போம்...


கடையின் சீருடையான மேல் சட்டையை மாற்றி துப்பட்டா போட்டுக்கொண்டு மூனு பொண்ணுங்க பேசிட்டு வராங்க..

அமுதா " ருத்ரா நீ எப்படி சத்திரம் போய் தான் போகனுமா "

ருத்ரா " இல்லைக்கா இன்னிக்கும் மேடம் கூட தான் போய்ட்டு அப்புறம் வீட்டுக்கு பஸ் ஏறனும். ஜங்சன் போய் ஏறிப்பேன் நீங்க போங்க "

அமுதா " தினமும் லேட்டா போனா அம்மா திட்ட மாட்டாங்களா டி ஏன் இப்படி எது சொன்னாலும் கேட்க மாட்டேங்கிற , மகி! அடியேய் மகி! உன்னைத்தான்..." என ஒரு உலுக்கு உலுக்கு உலுக்க அவ்வளவு நேரம் எதுவும் கவனம் பதியாமல் வேறு சிந்தனையில் இருந்த நம் நாயகி மஹிமா நினைவுக்கு திரும்பினாள்...


மஹிமா " ஆங்! சொல்லுங்க அக்கா என்ன ?"

ருத்ரா " என்னாச்சு டார்லிங் என்ன சிந்தனைல வர ?

அமுதா " என்னாவா இருக்கும் இன்னிக்கும் அப்பா குடிச்சுட்டு வந்துருப்பாரா, இல்லை நார்மலா வந்துருப்பாரானு , தான்.. அதானே"

மஹி " ஆமாக்கா! நேத்து நாம மகேஷ் அக்கா கல்யாணத்துக்கு போய்ட்டு, சமயபுரம் கோவிலுக்கு போய்ட்டு சாயங்காலம் தானே வீட்டுக்கு போனோம். நான் வீட்டுக்கு போனதும் அவர் வந்துட்டார் . வந்ததும் ஆரம்பிச்சதுதான் ஒன்பது மணி வரை திட்டிட்டே இருக்கார் . ரொம்ப அசிங்கமா இருக்குக்கா".. என்றாள் வருத்தத்தோடு..


" சரி விடுடி என்னமோ அம்மாவும் அவரை திருத்தல, அவரும் திருந்தல நீ என்ன பண்ண முடியும்.. என்று ஆறுதல் மொழிந்தனர் நட்பு இருவரும்...


அதற்குள் அமுதாவிற்கு பேருந்து வர , மஹிக்கும் பேருந்து வந்தது. இவர்கள் பயணிக்கட்டும் நாம இவர்கள் அறிமுகம் பார்த்து வருவோம்..

இக்கதை நாயகி : மஹிமா ,
அவளின் தந்தை : சரவணன்,
அம்மா : துளசி,
தம்பிகள் : முகிலினியன் , புகழினியன்,


அப்புறம் ருத்ரா மஹிக்காக உயிரையே கொடுக்கும் நட்பு அப்பப்ப அவள் உயிரை தவணை முறையில் வாங்குபவளும் அவளே..

அமுதா இவர்கள் இருவரை விட மூன்று வயசு முதிர்ந்தவள் அவ்வபோது அறிவுரை , அக்கறை காட்டி வேலையின் போது அன்னையின் உருவத்தை பிரதிபலிப்பவள்..

இவ்வளவு தான் பா அறிமுகம்..

இப்ப பஸ்ல போன அமுதா பெரியார் நகர் அவ வீட்டுக்கே போய்ருப்பா...

நாம மஹிய பாலோ பண்ணுவோம் , அவர்கள் ஏறிய பேருந்து உறையூர் போலீஸ் ஸ்டேஷன் ஸ்டாப் ல நிற்க , இந்த இருவரோடு இன்னும் சிலரும் இறங்க பேருந்து நகர்ந்து விட்டது..

இருவரும் நடக்க மேட்டுத்தெரு திரும்பிய உடனே அந்த சத்தம்
" ஆத்தி! டார்லிங் இன்னிக்கு மாம்ஸ் செம்ம ஸ்ருதில இருக்கார் போல எதுக்கும் நீங்க முகிக்கு போன் போடுங்க " என்றாள் ருத்ரா..

" ம் ! சரி ருத்ரா " என்று தன் தம்பிக்கு அழைத்தாள் மஹி.. "முகி என்னடா என்னாச்சு அப்பா இன்னிக்குமா " என்று கேட்டாள்..

"ஆமா அக்கா இன்னைக்கும் தான் நீ வா, அவரு தூங்க போய்டாரு" என்றான் முகில். "என்ன ஆச்சுங்க மாம்ஸ் என்ன பண்றாராம்" என்று கேட்டாள் ருத்ரா.. மகி"தூங்க போறாராம்"

" அப்போ நீ சீக்கிரம் வீட்டுக்கு போங்க, அப்பறம் மாம்ஸ் எழும்புனா சுப்ரபாதம் பட தொடங்கிடுவாரு " என்று கூறினாள் ருத்ரா.. "சரிமா நீ பாத்து வீட்டுக்கு போ நாம நாளைக்கு பாக்கலாம் பாய்மா" என்று கூறி அனுப்பி வைத்தாள் ருத்ராவை.

மஹி வீட்டிற்குள் நுழைய அவளுக்காக விழித்திருந்த சரவணன் .

"வாடி ! எங்க டி போய் ஊர் சுத்திட்டு வர. நீ எனக்கு னு பிறந்து இருக்கியே பொட்ட கழுத" என வழக்கம் போல தன் அர்ச்சனை கொடுக்க கண்ணீரோடு தன் அறைக்குள் சென்று கட்டிலில் படுத்துக் கொண்டாள் மஹி.

இதை பார்த்ததும் தாயானவள் தடுக்க முயற்சி செய்தும்,
தன்னால் முடிந்த வரை போராடிய முகிலும் நீயெல்லாம் ஒரு அப்பனா, என்று சொல்லி விட்டு கண்ணீரை துடைத்துக் கொண்டு சமயலறைக்குச் சென்றான்...

தன் தாய் செய்த மேஹியை ஒரு தட்டில் வைத்து தன் கரத்தால் ஆம்லெட் ஒன்று போட்டு எடுத்துக் கொண்டு தன் அக்கா அறைக்குள் நுழைந்தான் முகில்.

அக்காவின் அருகில் அமர்ந்த முகி தன் மடியில் அக்கா தலையை வைத்து கண்ணீரை துடைத்து "அக்கா உனக்கு தெரியாதா அந்தாளு எப்போதும் இப்படி தான் எப்பவுமே கத்துவாரு னு நீ இல்லனா நம்ம குடும்பத்தில் மூன்று வேளை உணவு கிடையாது,
முகத்தை கழுவிட்டு வா" என்றான்.

முகம் கழுவி வந்தவளுக்கு உணவை கொடுத்து உண்ண சொல்லி விட்டு, தமக்கையின் அலைபேசியுடன் வெளியே வந்தவன், ருத்ராவை அழைத்து நடந்ததை சொல்லி அக்காவை பார்த்துக் கொள்ள வேண்டிக்கொண்டான்.

இவள் உணவை உண்டு முடித்திருக்க, அவனும் உள்ளே வந்தவன், தட்டை எடுக்க அவன் தலையில் கைவைத்து முடியை ஆட்டி விட்டு நீ போய் படு சென்று சொல்லி அனுப்பினாள் மஹி.

காலையில் எழுந்து புத்துணர்ச்சியோடு கிளம்பினாள் மஹி மறுபடியும் சரவணன் வார்த்தைகள் காதில் விழ சாப்பிடாமல் கோபமாக வேலைக்குச் சென்றாள்..

கடையில் அழகு மயில் மஹி சோகமாக உட்கார்ந்து இருப்பதை கண்ட ருத்ரா "ஏன் அக்கா இவங்க காலையிலிருந்தே சோகத்தோடு இருக்காங்க மாம்ஸ் குடிச்சுட்டு என்ன பேசுச்சுனு தெரியலயே…"

" அதுக்குன்னு இவ எதுக்கு பீல் பண்ணுறா‌னு " சொல்லி கொண்டே மஹி அருகில் வந்தனர்.

"என்னடா மஹி! ஏன் இப்படி அழும் படி முகத்தை வச்சி இருக்க எல்லாமே கடந்து போகும் மஹி" என்றாள் அமுதா.

"என்ன அழகம்மா இன்றைக்கும் என் மாம்ஸ் அர்ச்சனை வார்த்தைகள் அதிகம் போல" என்ற ருத்ராவை மஹி செல்லமாக முறைக்க, ஈஈஈ என இளித்து வைத்தாள்…

" நீதான் உன் மாமாவை மெச்சுக்கனும் ருத்ரா, இது அசிங்கமா இருக்குனு அவருக்கு ஏன் தெரியவே மாட்டுது? " என்று சோகத்தில் ஆழ்ந்தாள் மஹி.

" ஆமா! நான் ரொம்ப நாளா கேட்கனும்னு நினைச்சுட்டே இருந்தேன், இதோ இன்னிக்கு இவ மாம்ஸ்னு கேட்டதும் தான் நியாபகம் வந்துச்சு…"

"என்னாக்கா என்னா கேட்கனும்?" என்று அமுதாவை பார்த்து எதிர் கேள்வி கேட்டாள் மஹி…
"அது இவ ஏன் சரவணன் அப்பாவ மாமானு சொல்றா முன்னாடி அப்பானு தானே சொல்லுவா இப்ப என்ன புதுசா? ம்! சொல்லுங்க" என்று கேட்க…

ருத்ரா தன் முட்டைகண்ணை திருத்திரு வென உருட்டிக்கொண்டிருக்க , மஹி
" எனக்கும் தெரியாதுக்கா இவ ஆறு மாசமா அப்படித்தான் கூப்பிடுறா, நான் எனக்கு இருக்க டென்ஷன்ல அதை கவனிக்கல… ருத்ரா சொல்லுமா! ஏன் அப்பாவ மாமானு சொல்ற எதும் காரணம் இருக்கா?" என கேட்க… "ஆத்தி! மாட்டிக்கிட்டோமே…" என்று ஓட பார்க்க.


ஒரு கையை அமுதாவும் மறுக்கையை மஹியும் பிடித்துக்கொள்ள அவள் தப்பிக்க வழியின்றி தவித்தாள், " சொல்லுடி " என அமுதா கேட்க, " அது நான் மஹிய லவ்வாங்கி, அதான் அவரை மாமானு சொன்னா இவங்க மாமா பொண்ணு சோ சைட்டிங் க்கா அதான் காரணம், வேற நீங்க எதிர் பார்க்குற அளவுக்கு இல்லை க்கா" என இளித்து வைக்க , இருவரும் தன்னால் முடிந்த அளவு முறைத்து விட்டு நகர, அமுதா ருத்ரா தலையில் இரண்டு கொட்டு கொட்டிவிட்டே சென்றாள்..

நாட்கள் அதன் போக்கில் நகர, அட்சயதிருதியை வந்தது.


பொதுவாக துணிக்கடைகளில் தீபாவளிக்கு முதல் நாளன்று பகலும் இரவும் விடிய விடிய வாடிக்கையாளர்கள் வந்து கொண்டிருப்பர், அது போல நகைக்கடைகளில் அட்சயதிருதியை தான் சிறப்பு தினம்.


நம் நாயகி வேலை செய்யும் கடையிலோ முன்பதிவு என்ற முறை இருக்க, பத்து நாட்களாக மிகவும் அதிகமாக வாடிக்கையாளர்கள் வரவு இருக்க, இவள் சற்று திணறித்தான் போனாள்…


அந்த வெள்ளிப் பொருட்கள் பிரிவில், உள் பகுதி மேற்பார்வையாளராக பார்வையிடுவது இவள் வேலை, அதனை சிறப்பாக செய்தால் இந்த வருட பணி உயர்வாக புதிய நகை மதிப்பிடும் பணிக்கு பரிந்துரைக்கப் படுவாள்…


மூன்று வருட வேலையை காட்டிலும் இந்த வருடம் சற்று சிரமமும் அதே நேரம் ஆர்வமும் சேர்ந்தே கழிந்தது அட்சயதிருதியை தினம் நம் நாயகிக்கு…


அது முடிந்த மறுநாளே இவளுக்கு வார விடுமுறை என்பதால், எப்போதும் போல் மதியம் இரண்டு மணிக்கு உணவு உண்டு முடித்து தன் பணப்பையை எடுத்துக்கொண்டு வீட்டில் ஒருமுறை பார்வையிட்டு விட்டு யாரும் பார்க்கும் முன் கிளம்பினாள்…


தன் தெருவில் இருந்து மூன்று தெரு தள்ளி உள்ள ஒரு பொதுத்தொலைபேசி கடையில் உள்ளே சென்று அரைமணி நேரம் பேசிவிட்டு வெளியே வர யாரும் தன்னை பார்க்கவில்லை என்று தைரியமாக நடக்க எதிரே இருந்தவரை கண்டு திகைத்து நின்றாள்.


மஹி போன் பேசியது யாரிடம்?
வந்தது யாராக இருக்கும்? யார் வந்தால் என்ன என்று சென்றவள் திகைத்து நின்றது ஏன்?
வரும் அத்தியாங்களில் காண்போம்.
 
Last edited:

MAHARAJ

New member
Vannangal Writer
Messages
6
Reaction score
7
Points
3
உயிரினை மனம் தேடுதே - இரண்டாவது அத்தியாயம்


உச்சி நேரத்தில் பகலவன் தாக்கம் கடுமையாக இருக்க , இங்கே நாயகியவளோ பரபரப்புடன் தயாராகி கொண்டிருந்தாள்.


"மஹி! கிளம்பிட்டியா? நேரமாச்சு புள்ள, கடைக்கு லோடு வந்துடும் , வா! வந்து சாப்பிடு… அம்மா! அம்மா! வாம்மா வந்து சாப்பாடு எடுத்து வை, நாங்க கிளம்பனும்ல…" என்று கூறிக் கொண்டே சாப்பிட அமர்ந்தான் முகிலினியன்.


"டேய்! நீயும் ஏன்டா வேலைக்கு போகனும்னு அடம் பிடிக்கிற, நான் தான் போறேன்ல! முன்னாடி விட இப்ப அதிக சம்பளம் இப்ப வேலைக்கு போற இடம் கூட பக்கம் தான் இன்னும் என்னடா பண்ணட்டும் நான், ஏன் இப்படி சொல்லற சொல்லு கேட்காம இருக்க…" என்று கோபமாக பேசிவிட்டு உணவை தவிர்த்து வெளியேற துளசி கைப்பிடித்து நிறுத்தினார்.



துளசி " அவன் உன் சுமை குறைக்கனும்னு நினைக்கிறான் நீ ஏன் பாப்பா திட்ற?" என்க, "அவன்தான் புரியாம படிக்கிற வயசுலயே வேலைக்கு போறேன்னு நிக்கிறான்னா நீயும் ஏம்மா, இந்த வருஷம் அவன் காலேஜ் இரண்டாவது வருஷம் அதாச்சும் நியாபகம் இருக்கா, உங்க இரண்டு பேருக்கும், எப்பவுமே என் பேச்சுக்கு மதிப்பு இருக்குறது இல்ல இந்த வீட்டுல அப்புறம் நான் ஏன் பேசனும்? " என்று படபடத்தாள் மஹி.


" அக்கா ஒன்னு புரிஞ்சுக்க, இப்ப என்ன அக்டோபர் மாசம் தானே! தீபாவளி வரைக்கும் தான் இங்கே வேலை பார்ப்பேன்க்கா, நான் சூப்பர் மார்க்கெட்டுக்கு தானே வேலைக்கு போறேன், ஐடி கம்பெனிக்கு இல்லையே, இங்கே அக்ரிமெண்ட் எதும் இல்லை , சோ நோ டென்ஷன் மை ஸ்வீட் சிஸ்டர் சிரி பார்ப்போம்" என தமக்கையை சமாதான படுத்த முயற்சி செய்து அதில் வெற்றியும் கண்டான் அந்த இல்லத்து சின்ன தலைவர்.



இருவரும் உணவு உண்டு முடித்து கிளம்பினர்… தன் வண்டியிலேயே அவனை திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்த ஒரு சூப்பர் மார்க்கெட்டில் இறக்கி விட்டு தான் வேலை செய்யும் நிறுவனம் சென்றாள் மஹி.


ஓமேகா ஹெல்த்கேர் என்ற பெயர் பதாகையை பார்த்தவாறே, கட்டிடத்துக்குள் வாகனத்தை செலுத்தினாள்… தன் வண்டியை நிறுத்தி ஹெல்மெட்டை கலட்டி வைத்துவிட்டு திரும்ப, வந்து நின்றான் அவளோடு பணிபுரியும் கவின்ராஜ். கவின்ராஜ் பெயருக்கு ஏற்ற அழகும் கம்பீரமும் நிறைந்தவன்... ஆறு அடி மூன்று அங்குல உயரத்துடன், டக் இன் செய்த பார்மல் பேண்ட் சட்டையில் வந்து நின்றான் அவன்.

கவின் அறிமுகம் பார்த்துடுவோம்

இரு தங்கைகளின் தமையன், தாய், தந்தை என் சிறு கூடு தான் இவர்களின் வீடு.

தந்தை - கதிரவன்
தாய் - அபிராமி
தங்கைகள்-- அனுசியா , சரண்யா

அவனை சட்டைச் செய்யாது நடக்க, பின்னாலே ஓடி வந்தான் கதாநாயகன்… "மஹி! மஹி! நில்லுங்க!!! ப்ளீஸ்…! என்னை பாருங்க… " என்றவாறே வழி மறிக்க, " சார்! ப்ளீஸ்! உங்க வயசுக்கு தகுந்த மாதிரி நடக்கலனா கூட பரவாயில்லை, இந்த ஆபிஸ்ல நீங்க வேலை பார்க்கிறீங்க! அந்த போஸ்டிங்க்காவது மரியாதை கொடுங்க சார்..! இப்படி என் பின்னாடியே வரீங்களே? பாக்குறவங்க என்ன நினைப்பாங்க???" என சொல்லி நடந்தாள்.



அவள் சென்ற பாதையையே பார்த்திருந்தவன் தோள் மீது ஒரு கரம் தீண்ட திரும்பினான், " டேய் அண்ணா அதான் அவங்க செட் ஆகலயே பின்ன ஏன் இப்படி தொந்தரவு பண்ற?" என்றான் அவன் அலுவலகத்தில் வேலை செய்யும் அவனை விட ஆறு வயது இளையவனுமான மகாதேவன்.


" டேய் ! நீ வேற ஏன்டா, ஆமா என்னா சொன்ன டேய் அண்ணாவா நீ இருக்க சைஸுக்கும் உன்னோட வயசுக்கும் எனக்கு சமமா பண்றேன் பாத்தியா அதான் டா நீ பேசுவ, இது மட்டுமா? இன்னும் பேசுவ உன் அக்காவ சொல்லனும்.


"அண்ணா நீங்க தான் என் அக்காட்ட உதவி கேட்டுருக்கீங்க அவங்க இல்லை அது ஞாபகம் இருக்கட்டும்… சரி நாளைக்கு காலையில் ஐஞ்சு மணிக்கு ரெடியா இருங்க ஓகே வா?" என்று இவனையும் இழுத்துக்கொண்டு லிப்ட் நோக்கி நடந்தான் மகா என்ற மகாதேவன்.



லிப்ட்டில் ஏறி மூன்றாம் தளம் வந்து அவரவர் வேலையில் மூழ்க, இங்கே நம்ம தலைவர் மட்டும் மஹியை பார்த்துக்கொண்டு இருக்க, அங்கே வந்த மேனேஜர் "மிஸ்டர். கவின் , மிஸ்டர். கவின், என்ன பண்றீங்க? மீட்டிங் அரேஞ்ச் பண்ண சொன்னேன்ல பண்ணியாச்சா?" ,
" ஆச்சு பாஸ்! ஒரு டீம் லீடர் பொண்ணு கல்யாணம் ஆகி போச்சுல்ல, அதான் சத்யா பொண்ணு அவங்களுக்கு பதிலா இந்த புது ப்ராஜக்ட்ல அந்த டீம்க்கு வேற ஒரு லீடர் போடுறேன்னு சொன்னீங்க பாஸ், இன்னிக்கு ஞாபகப்படுத்த சொன்னீங்க அதான் சொன்னேன்" என்றவாறே தொடர்ந்தான், " சொன்னீங்கனா நான் பிரமோஷன் ஆர்டர் ரெடி பண்ண சொல்லிடுவேன் பாஸ்" என பேசி முடித்தான் கவின்.




கவின்ராஜ் MBA படித்து விட்டு இந்த அலுவலகத்தில் அசிஸ்டெண்ட் மேனேஜராக வேலை பார்ப்பவன், முதல் நேர்காணலிலேயே வெற்றி கண்டு நேரடியாக இந்த பதவிக்கு வந்தவன்,

மேனேஜர் " நீங்க ஆர்டர் ரெடி பண்ணுங்க கவின், நான் ஜி.எம் கிட்ட போன் பேசிட்டு வரேன் , நீங்க ஸ்டாப்ஸ் எல்லாரையும் கான்பிரன்ஸ் ரூம்க்கு வர சொல்லுங்க கவின். போங்க நான் வரேன்" என்று விட்டு நகர்ந்தார்…


இவன் மேனேஜர் P.A விடம் சென்றவன் பெயர் போடாம பிரமோஷன் ஆர்டர் ரெடி பண்ண சொல்லிவிட்டு அவன் கேபினுக்கு வந்தவருக்கு அலைபேசி ஒலிர அதை எடுத்து பார்த்தவனின் முகம் புன்னகையில் மிளிர்ந்தது..


போனை அட்டன் செய்து காதில் வைப்பதற்குக்குள் அதில் குரல் அலரியது!! " அண்ணா நீ எப்ப வர ? என்க, " ஹேய் பாப்பா வரேன் மா இப்ப தானே ஆபிஸ் வந்தேன் வந்து மூனு மணி நேரம் தான் ஆச்சு நைட் இரண்டு மணிக்கு தான் வேலை முடியும், நானும் மகாவும் வந்துடுறோம்" என்றான் கவின்.



" சரி அண்ணா நாளான்னைக்கு எனக்கு கல்யாணம் ஞாபகம் இருக்கு தானே அப்புறம் மூனு நாளைக்கு லீவு போட்டுட்ட தானே சொல்லு அண்ணா சொல்லு, அப்புறம் உன் ஆளு வேலைக்கு வந்தாச்சா இன்னிக்காவது எதாவது பேசுனாங்களா உன் ஆளு?" என கேட்டாள் அவள்.


"அம்மா ! தெய்வமே! லீவு போட்டாச்சு, நாளைக்கு காலையில் ஐஞ்சு மணிக்கு கிளம்பிடுவோம், என் ஆளு வேலைக்கு வந்தாச்சு, அப்புறம் எப்பவும் போல அதே வசனம், அதே மாடிலேஷன், எனக்கும் சேம் பிளட் போதுமா, அப்புறம் நான் மட்டும் தான் மகா கூட வரேன்… வீட்டுல யாரும் வரல ஓகே தானே, சரி இப்ப அண்ணனுக்கு மீட்டிங் அதனால அப்புறம் பேசுவோம், நீ அர்ஜீன் மாப்ளட்ட கடலை போடு, சாப்பிட்டு தூங்கு வைக்கவா?" என கேட்க " சரி !சரி ! வைங்க , போய் மீட்டிங்க பாருங்க, டாட்டா , பாய்" என்று அலைபேசியை அணைத்தாள் அவள்…



ஒரு மணிநேரம் கடக்க மீட்டிங் ஹாலில் அனைவரும் குழுமியிருக்க, மேனேஜர் பேச தொடங்கினார்…
" போன வாரம் நம்ம ஆபிஸ்ல வேலை பார்த்த சத்யா பொண்ணுக்கு கல்யாணம் ஆகி போய்ட்டாங்க அவங்க வேலைக்கு வரலனு ரெசிகினேஷன் கொடுத்துட்டு போய்ட்டாங்க இப்ப அதே இடத்துக்கு இன்னொரு ஆள் போடனும் அடுத்த புது பிராஜெக்ட்ட மானிட்டர் பண்ணனும், சோ யாரை போடலாம்னு பண்ண டிஸ்கசன் முடிஞ்சது, ஜி.எம் சார் மிஸ்.மஹிமா வ போடலாம்னு சொல்லிருக்காங்க…

இதை கேட்டதும் சிலையாகி போனாள் மஹிமா...

"மஹி உன்னைத்தான் டி உனக்குத்தான் பிரமோஷன் கிடைச்சுருக்கு போ கூப்பிடுறாங்க" என்றாள் அவள் தோழி ப்ரியா.
அவள் வார்த்தை கேட்டு சுயநினைவுக்கு வந்தவள் மேனேஜர் அருகே சென்றாள்..


"வாங்க மிஸ்.மஹிமா காங்ராட்ஸ்" என கைக்குலுக்க கை நீட்டினான் கவின்… அவனுக்கு ஒரு முறைப்பை தந்து விட்டு மேனேஜரிடம் சென்றவள், " பாஸ் ! நான் இங்கே வேலைக்கு சேர்ந்து ஆறு மாசம் தான் ஆகுது, அதோட நான் சிங்கள் டிகிரி தான் படிச்சுருக்கேன் அதுவும் கரஸ்ல எனக்கு எப்படி பாஸ் பிரமோஷன் குடுப்பீங்க " என வினா எழுப்ப.


"மஹிமா நீங்க எவ்வளவு நாள் வேலை பாக்குறீங்கனு முக்கியம் இல்லை, எவ்வளவு ஈடுபாட்டுடன் வேலை பார்க்கிறீங்கங்கிறது தான் முக்கியம் , சோ போங்க போய் அடுத்த பிராஜெக்ட் வேலையை ஆரம்பிங்க வாழ்த்துக்கள்!! என்றுரைத்துவிட்டு அவர் சென்றார்.



"மச்சி ட்ரீட்டு டா " என கவின் நண்பன் ஸ்ரீனி கேட்க, " ஏன் அதை உன் தங்கச்சிட்ட கேட்க வேண்டியது தானே."

" அதில்லைடா நீதானே இதுக்கு ரெக்கமண்ட் பண்ண அவள அதான் உன்கிட்ட கேட்டேன்" என்று இவனின் குட்டை உடைத்து சென்றான் அவன்.


"ஈஈஈ" என சிரித்தவாறே ஓடியே விட்டான்.


இரவு ஒன்பது மணி ஆக முகி வீட்டுக்கு வந்தான்.


வீட்டுக்கு வந்தவன் முகம் கைக்கால் கழுவி சாப்பிட அமர்ந்தவன்" ம்மா! எங்கே அவரை காணோம் உன்ற பிருஷர்" எனக் கேட்க…

துளசி" பேசாம சாப்பிடு எப்ப பாரு அவரை திட்டுறதே உனக்கு வேலையா போச்சு அவரை குறை சொல்லலனா உனக்கு தூக்கம் வராதே" என கடிந்தார்…


சாப்பிட்டு விட்டு எழுந்தவன் " நான் படுக்குறேன், ஒரு வேளை ! அவர் குடிச்சுட்டு வந்தார்னா என்னை கூப்பிடும்மா நீ பாட்டுக்கு தனியா போராடாத சரியா" என்று சொல்லி விட்டு ஹாலில் பாய் விரித்து படுத்துக்கொண்டான்…


இரவு பதினொரு மணியாக தண்ணி குடிக்க எழுந்தவன் " ம்மா இன்னுமா அவர் வரல?" என வினவ,
" ஆமாடா இன்னும் வரல எப்பவுமே ஆறு மணிக்கே வந்துடுவாரு இன்னிக்கு பாரு இவ்வளவு நேரம் காணோம்" என்று பயத்தில் பேசினார் துளசி

"சரி இரும்மா நான் போய் பார்த்துட்டு வரேன்" என்று சட்டை மாட்டிக்கொண்டு வெளியே கிளம்பினான், அவன் வாசலை கடக்க எதிரே சரவணன் வந்தார்.



" ஏங்க! எங்கே போனீங்க எவ்வளவு நேரம்? எப்பவும் ஆறு மணிக்கே வந்துடுவீங்களே இன்னிக்கு என்ன இவ்வளவு நேரம் ஆச்சு " என்று கண்களாளே கணவனை கவனித்தார் துளசி.

"எனக்கு ஒன்னும் இல்லை மா, ஆமா! நீங்க ஏன் இவ்வளவு நேரம் தூங்காம இருக்கீங்க, என்னாச்சு" என்று கேள்வி கேட்டார்.


" ம்மா என்னத்தான் நினைச்சுட்டு இருக்காரு இவரு, வந்ததும் லேட்டா வந்ததும் இல்லாம நம்மல குறை சொல்றாரு… ம்மா! அவருக்கு சாப்பாடு போடு நாளைக்கு காலேஜ் வேற போகனும்… நான் போய் தூங்குறேன்" என்றவாறே திரும்பியவனை அழைத்தார் சரவணன்.



" அய்யா ! முகிலா இங்கே பாரு !!! இந்தாய்யா" என தன் கையில் இருந்த இரண்டு ஐநூறு ரூபாய்
நோட்டுக்களை அவன் கையில் திணிக்க, அவனோ முழித்தான்.


" என்ன இது?" எனக் கேட்டவனின் முகத்தை நோக்கி, "அப்பனா என் கடமைய செய்ய போறேன்! இனிமேல் இது அதுக்கு முதல் படி." என்றவர் " துளசி மா நான் சாப்பிட்டேன், நீ சாப்பிட்டியா? கேட்கவும்," ஙே" என விழித்தவர்… இவரின் கேள்வியில் உயிர் கொள்ள , "ஆங் ! சாப்பிடல மாமா நீங்க வந்ததும் சாப்பிடலாம்னு இருந்தேன்" என்றார் துளசி.


"இனி நேரமாக்காம சீக்கிரத்தில் சாப்பிட்டுரு சரியா, இப்ப வா நான் ஊட்டி விடுறேன்" என மனைவியின் கரம் பற்றி இழுத்து சென்றவர் ஊட்டி விட்டு எழுந்தவர் கைக்கழுவி வர பாத்திரம் ஒதுக்கி கொண்டிருந்த மனைவியை அழைத்து அமர வைத்து மடியில் படுத்துக் கொண்டார்.


இதை அனைத்தும் பார்த்து கொண்டிருந்த முகிலனோ அதிர்ச்சியுடனும் , ஏதோ ஒரு திருப்தியுடனும் உறங்கி போனான்.

கணவனின் செயல் புரியாது
குழம்பி இருந்த துளசியும், மடியில் படுத்திருந்த தன்னவரின் கேசம் கோத,


"என் மேல எதுவும் கோபமா துளசி?" என வினாக்களை தொடுக்க ஆரம்பித்தார், "நான் நல்ல அப்பா இல்லையா, நம்ம பொண்ணு யாரையும் விரும்புதா" என கேள்வி கணைகளை தொடுத்து கொண்டே இருக்க.

கணவனின் கேள்வியின் வாயிலாக ஒன்றை புரிந்து கொண்டவர், "காலையில பேசிப்போம் இப்ப தூங்குங்க" என கூறி படுத்துக்கொண்டவர் அப்படியே உறங்கியும் போனார்…


விடியற் காலையில் தனது அலுவலகத்துக்கு வெளியே வந்தவள் பேருந்தை பிடிக்க நடந்தாள்… "முதல்ல இன்னொரு வண்டி வாங்கனும் சீக்கிரம், இல்லைனா இந்த பையன வேலைய விட்டு நிக்க சொல்லனும். இந்த மூனு வருட நம்ம குடும்ப வளர்ச்சில இந்த வண்டி ஒன்னுதான் உருப்படியானது, அதையும் வாங்கலனா இந்த வேலைக்கு வர, போக என்ன பண்ணிருப்பேன்."என புலம்பியவாறே உறையூர் பேருந்து நிற்குமிடம் நோக்கி நடந்தாள்.



பேருந்து நிலையத்திற்கு வந்தவள் பேருந்து பிடித்து ஊர் நிறுத்தத்தில் இறங்கி வேக நடையிட்டு வீடு விரைந்தாள்.
உள்ளே நுழைய அவள் கண்ட காட்சியில் அதிர்ந்து நின்றாள்…
அங்கே துளசி மடியில் சரவணன் படுத்திருக்க அவர் காலில் தலை வைத்து புகழ் படுத்திருந்தனர். முகிலை காணவில்லை என்று சுற்றி முற்றி தேட அவனோ குளியலறையில் இருந்து வெளியே வந்தான்.



முகி மஹியை கண்டதும் சிரிக்க, அவனிடம் கண்களால் வினவினாள்..
பின்பு ரகசிய குரலில்" என்னடா நடக்குது இங்கே? இது மாதிரி அரிய காட்சி நாம இதுவரை பார்த்தது இல்லையே, என்னாச்சு டா" என்க.


"இதோட இன்னொரு அதிசயம் என்னன்னா நேத்து அந்தாளு அதான் உங்கொப்பா குடிக்கவே இல்லை தெரியுமா நாலு நாளா குடிக்காம தான் வராறாம் அவரு, நேத்து நைட் அம்மா தான் சொல்லுச்சு" என்க.


இவளோ அதிர்ச்சியில் உறைந்து நின்றாள், " ஏய்! என்னாப்பிள்ள போ போய் பிரஷ் ஆகு நான் டீ போடுறேன்" என கூறி விட்டு அடுகளை நோக்கி நடந்தான்.

குளியலறை சென்று திரும்பி வந்தவள், முகியுடன் காபி அருந்திக் கொண்டிருக்க துளசி துயில் களைந்து எழ மடியில் பாரம் இருப்பதை உணர்ந்து பார்க்க இரவின் நினைவு வர சுதாரித்து முகி உறங்கிய இடம் பார்க்க அது காலியாக இருந்தது.


" அய்யோ! மணி என்ன ஆச்சுனு தெரியல, இந்த மஹி வந்துட்டாளானு கூட தெரியல, வாசல் தெளிக்கனும், இவரை எப்படி எழுப்புறது ?? , என்னங்க ! என்னங்க! என சத்தம் வராமல் எழுப்பினார்.


அதில் எழுந்த சரவணன் என்ன என்று வினவ, "மஹி வந்துட்டா போல , எழுந்திரிங்க பிள்ளைங்க பார்த்தா என்ன நினைப்பாங்க " என்று எழுந்து கொண்டார்.


அதற்குள் மஹி குளித்து வந்தவள், சிவபுராணம் பாடி சாமி கும்பிட்டு விட்டு, மணி பார்க்க அது ஏழு என காட்டியது.


"ம்மா நாளைக்கு ருத்ரா கல்யாணம் நான் போய்ட்டு, நாளைக்கு சாயங்காலம் வந்துடுவேன், இங்கே எல்லாம் பார்த்துக்கோங்க… மூனு இரண்டு நாள் லீவு சொல்லியாச்சு ஆபிஸ்ல சரி நான் கிளம்புறேன், டேய்! முகி பாத்துக்க சரியா! வரேன் ம்மா ! போய்ட்டு வரேன்" என கிளம்பியவளை தடுத்து நிறுத்தினார் அவளின் தந்தை.


" அம்மாடி ! மஹி ஒரு நிமிஷம் நில்லுமா…" என உள்ளே சென்றவர் கையில் இரு ஐநூறு ரூபாயை எடுத்து வந்தவர் " என் மருமகளுக்கு இதுல பரிசு வாங்கி கொடு" என்று நீட்டினார்.


சற்றே திகைத்தவள்,"இது ஏது உங்களுக்கு இவ்வளவு காசு இருந்தும் நீங்க குடிக்காம வந்துருக்கீங்க என்னாச்சு உங்களுக்கு, அதோட ருத்துமா என் கிட்ட பரிசு எதிர் பார்க்க மாட்டா அதனால, இது எங்கே வாங்குனீங்களோ? அங்கேயே கொடுத்துடுங்க" என வாங்க மறுத்து நின்றாள்.



"இல்லமா இது என் உழைப்பு யார்கிட்டயும் கடன் வாங்க மாட்டேன்னு உனக்கு தெரியாதா" என கூற, "அந்த ஒரே காரணத்துக்காக தானே இன்னும் உங்களை திட்டாம, எங்களையும் பேச விடாம பாத்துக்குது இந்த புள்ள, ஆமா இதென்ன புதுசா?" என்று கேட்டுக்கொண்டே கூடத்திற்கு வந்தான் முகிலினியன்.



"இல்லைப்பா இனி நானும் காசை வீட்டுக்கு கொண்டு வந்து தரலாம்னு இருக்கேன் அதோட என் கடமையை இதுவரை தவறி இருக்கலாம், ஆனால் இனி அதை தவிர்க்கவோ தவறவோ மாட்டேன் பா முகிலா" என வாக்குறுதி அளிக்க ஒன்றும் புரியாமல் நின்றனர் குடும்பத்தினர் அனைவரும்.



காசை கையில் திணித்து விட்டு துண்டை தோளில் போட்டு வெளியே சென்று விட்டார் சரவணன்.


"மஹி! இரு நானே உன்னை சத்திரத்தில் பஸ் ஏத்தி விட்டுட்டு காலேஜ் போய்க்கிறேன்" என கிளம்பினான் முகில்.

" அம்மா நானும் கிளம்புறேன் , இந்த புள்ளய பஸ் ஏத்திட்டு நானும் காலேஜ் போய்டுவேன் கேண்டீன்ல சாப்பிட்டுகிறேன்" என்றான்.



துளசி வெளியே வந்தவர் " மஹி இந்த வளையலை நான் கொடுத்தேன்னு ருத்ராக்கு கொடுத்துடு, பார்த்து போய்ட்டு வா, ஜாக்கிரதை, போய்ட்டு போன் பண்ணு" என வழியனுப்பினார்.



இருவரும் சத்திரம் வர கரூர் செல்லும் தனியார் பேருந்து நிற்க அதில் ஏறி கொண்டவள், தண்ணீர் பாட்டில் வாங்கி தரும்படி வேண்ட , முகி வாங்கி வந்தவன். பல முறை எச்சரிக்கை செய்து விட்டே கிளம்பினான்.


பேருந்து நகர ஓட்டுனர் இருக்கைக்கு எதிர் பக்கம் முன் படிக்கட்டுக்கு முன்னால் இருக்கையில் இருந்தவர்கள், ஜன்னல் கண்ணாடியை ஏற்ற, ஒரு தாய் குழந்தையை இடுப்பில் தூக்கிக்கொண்டு, இன்னொரு பையனை கையில் இழுத்தவாறு ஓடி வர, இவள் ஓட்டுனர்கள் சொல்லி பேருந்தை நிறுத்த, அம்மூவரும் ஏறினர்.



ஏறிய அந்த பெண் " பார்த்தீபா இங்கே வாடா இடம் இருக்கு" என்று உடன் நடந்து வந்த சிறுவனின் கரம் பற்றி அமர வைத்தவள் மஹியை பார்த்து சிநேக முறையில் உதிர்த்தாள்.


பார்த்தீபன் என்ற பெயரை கேட்டதும் மூன்றரை வருடம் நடந்த அனைத்து காட்சிகளும் நிழற் படமாக சிந்தனையில் ஓட, இருக்கையின் பின் கண்மூடி தலை சாய்த்து அமர்ந்தாள்.


ருத்ராவின் ஊர் வர நடத்துனர் குரலில் விழித்தவள் பேருந்தை விட்டு கீழே இறங்கினாள்.


இறங்கியவள் ருத்ராவின் தம்பிக்கு அழைக்க அந்த பக்கம் அழைப்பை ஏற்றவன்… " அக்கா வந்துட்டிங்களா " , " வந்துட்டேன் பா பஸ் ஸ்டாண்ட்ல இறங்கிட்டேன் இப்ப எப்படி வரது?" என்று கேட்டவாறே சுற்றி முற்றும் பார்க்க.


"அக்கா நான் ஆள் அனுப்பிட்டேன் , கறுப்பு கலர் முக்கால் பேண்ட் ஸ்கை ப்ளு டிசர்ட் போட்டு என் அண்ணன் வந்துருக்காங்க பாருங்கக்கா உங்க போட்டோ காட்டிருக்கேன் , மீதி நேர்ல வாங்க பேசிப்போம்" எனக்கூறி அழைப்பை துண்டித்தான் அவன்.

இவள் போனை கைப்பையில் வைத்துவிட்டு திரும்ப ஒரு கரம் வந்து அவளின் துணிப்பையை தூக்கியது, அது யாரென பார்த்தவள் உறைந்து நின்றாள்…



பார்த்தீபன் யார்? வந்தது யாராக இருக்கும்? சரவணனின் மாற்றத்தின் காரணம் என்னவாக இருக்கும், இனி வரும் அத்தியாயங்களில் பார்ப்போம்.


கருத்து திரி கீழே கொடுத்திருக்கிறேன் 👇👇👇👇
தங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் நன்றி


 
Last edited:

MAHARAJ

New member
Vannangal Writer
Messages
6
Reaction score
7
Points
3
உயிரினை மனம் தேடுதே -- மூன்றாவது அத்தியாயம்.

போனை கைப்பையில் வைத்துவிட்டு திரும்பியவள், யாரோ ஒருவர் வந்து அவளின் துணிப்பையை தூக்க, அது யாரென பார்க்க , அவளின் கண்களோ ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியில் விரிந்தது.



" நீங்க எங்க இங்கே?, உங்களுக்கு எப்படி ருத்ராவ தெரியும்?, அவளோட தம்பி அண்ணன அனுப்புறேன்னு சொன்னான்? நீங்க எப்படி அண்ணன்?" என கேள்விகளை அடுக்கிக் கொண்டே இருக்க.


"கொஞ்சம் மூச்சு விட்டு பேசுங்க மஹி! நான் பாவம்! இத்தனை கேள்வி கேட்டா தடுமாறி போய்டுவேன்!" என்று பாவமாய் முகத்தை வைத்தவாறே கூற.


மஹி" இப்படி மூஞ்சிய வைச்சுக்கிட்டா மட்டும் கேட்காம நிறுத்திடுவேனா என்ன?, எனக்கு பதில் தெரியனும் சொல்லுங்க" என சற்று கோபம் தெறிக்க கேட்டாள்.

" வாங்க! வீட்டுக்கு போய் எதுவா இருந்தாலும் பேசிப்போம், ப்ளீஸ் மஹி! வாங்க! எல்லாரும் பாக்குறாங்க." என்று கெஞ்சி அழைக்க, இவளும் இதற்கு யார் காரணமோ அவளிடமே கேட்டுக் கொள்வோம் என கிளம்பினாள்.


"வாங்க! வந்து வண்டிய எடுங்க! மணி இங்கேயே ஒன்பது ஆச்சு, அப்புறம் ருத்ரா! ருத்ர தாண்டவம் ஆடிடுவா, ம்! சீக்கிரம் வாங்க!" என்று கட்டளை இட அவனும் சேவகன் போல் தலையாட்டிக் கொண்டே வண்டியை நகர்த்தி வந்தான்.


பேருந்து நிலையத்தின் வெளியே வரை தள்ளி வந்தவன்." ஏன் இப்படி பண்றீங்க மஹி! வண்டில ஏறுனா சீக்கிரம் போலாம்ல?" என்க. பரவாயில்லை நீங்க தள்ளிட்டு வாங்க சீக்கிரம்! நடந்தே போகலாம்." என சொன்னவள் நடையை விரைவு படுத்தினாள்.

"சரி! இவ்வளவு வேகமா போறீங்களே? வீடு எங்கனு தெரியுமா?, எனக் கேட்டு நகைத்தான் அவன்."அதுக்கு தானே நீங்க வரீங்க!" என்ற மஹியிடம் தொடர்ந்த அவன்,
" ஏங்க மஹி இப்பவே மணி ஆச்சு!, அங்கே ஏகப்பட்ட வேலை இருக்கு! நீங்க இப்படி சின்ன புள்ளயாட்டம் விளையாடாம வாங்க உங்களை விட்டுட்டு, நான் இன்னும் திருச்சி ஜங்ஷன் போய் ருத்ரா அப்பா வீட்டு சொந்தக்காரங்க வராங்க அவங்கள பிக்கப் பண்ணனும். ப்ளீஸ்! வண்டில ஏறுங்க வேணா பேக்க நடுவுல வைச்சுக்கோங்க!" என்றவனது பேச்சில் இருந்த ஏதோ அவளை ஒத்துக்கொள்ள வைத்தது.


வண்டியில் ஏறியவள் பையை நடுவில் வைத்து பக்கவாட்டு கம்பியை பிடித்து அமர்ந்தாள்.
"மஹி பிடிச்சாச்சா?,போலாமா?" என்று கேட்டான் வண்டியை இயக்கியபடி." போலாம்,போலாம்! போங்க!" என்றாள் மஹி.


வண்டியை இயக்கியவன் அதை விரைவாய் செலுத்தினான். வீடு வரும் வரை எதுவும் பேசிக்கொள்ளவில்லை இருவரும். வாசலில் வாகனத்தை நிறுத்தியவன் "இறங்குங்க! இதான் ருத்ரா வீடு" என கூறிய படி இறங்கினான்.

வந்தவள் உள்ளே வர ருத்ராவின் அன்னை எதிரில் வந்தவர். "வாம்மா மஹிதா! எப்படி இருக்க?, நாளைக்கு கல்யாணத்த வைச்சுட்டு இன்னிக்கு வந்துருக்க? ஒரு நாலு நாள் முன்னாடியே வந்துருக்க கூடாதா அவளும் காலையில் இருந்து மஹி வருவாங்க னு வாசலயே பார்த்துட்டு இருந்தா போமா போய் பாரு பிரஷ் ஆகிட்டு வா நான் டிபன் எடுத்து வைக்கிறேன்." என கூறி நகர்ந்தார்.

அவளோடு பின்னே வந்தவன், மஹி ருத்ரா அன்னையிடம் பேசுவதை கண்டதும் சற்று பின் தங்கி வந்தான்.அவளை அறைக்கு அனுப்பி நகர்ந்தவர் இவனை கண்டதும்" யய்யா ராசா! எங்கேயா போனான் உன் பிரண்டு? அவங்க அப்பா வீட்டு ஆளுங்க வந்துருவாங்க ,போய் கூட்டி வரனும் வீடு தெரியாதுயா அவங்களுக்கு, அதான் இவன போய் கூட்டியா னு சொன்னேன் எங்கே போனான்?" என்று வந்தவனை வினவினார் சுமதி(ருத்ராவின் தாய்)

இவர்களின் பேச்சு அறைக்கு செல்பவள் காதில் விழ. 'இவங்க இரண்டு பேரும் பேசிக்கிறத பார்த்தா முதல் தடவை பேசிக்கிற மாதிரி தெரியலயே? இவரு உண்மையாவே ருத்ரா அண்ணனா இருப்பாரோ? அப்படினா ஏன் இவரும் சொல்லல? அவளும் சொல்லல?' என்று மனதில் பேசியபடி அறை பக்கம் சென்றாள்.

ருத்ராவின் அறைக்குள் சென்றவள்." ருத்ரா! ருத்ரா! எங்கே இருக்க?" என்று கத்தியபடி வந்தாள் உள்ளே. "ஏங்க! வந்துட்டிங்களா? இதோ வரேன்! பாத்ரூம்ல இருக்கேன்!" என்று குரலை மட்டும் வெளியே அனுப்பினாள் ருத்ரா.


அவள் வெளியே வருவதற்குள், உள்ளே வந்தவன் "மஹி! சாப்பிட வாங்க! சித்தி கூப்பிடுறாங்க!" என்று சாப்பிட அழைத்தான். அவனை ஒரு மாதிரி பார்த்தவாரே ருத்ராவை மீண்டும் அழைத்தாள்.

" நீங்க போய் சாப்பிடுங்க, பாப்பா வரும் நீங்க போங்க" என அவளை அனுப்பியவன், கதவை சாத்தினான்.
"ருத்ரா! வெளியே வாமா! அவங்க போய்ட்டாங்க". என்று அவன் சொன்னதுதான் தாமதம் விருட்டென குளியலறையில் இருந்து வெளியே வந்தவள், பெரிய பெரிய மூச்சுக்களை வெறியேற்றி தன்னை ஆசுவாச படுத்தினாள்.


ருத்ரா"அய்யோ! அண்ணா சத்தியமா முடியல இவங்களுக்காக இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்துருக்கேன், எதாவது முன்னேற்றம் இருக்கா?" என்று வினவ.


எதிரில் நின்ற கவினோ சிரித்தவாறே " எந்த இம்ப்ரூமெண்டும் இல்ல டா," என்றான். "அதுக்கு தானே இந்த இரண்டு நாள் இங்கே தங்குற மாதிரி வர சொன்னேன். நாளைக்கு அங்கே அப்பாவும் அம்மாவும் போய் பொண்ணு பாக்குற சடங்க முடிச்சுடுவாங்கல்ல? நான் முகிட்ட பேசிட்டேன், அத்தையும் சரினுட்டாங்க, இன்னும் முகி மாமா மட்டும் தான் அங்கேயும் அனேகமா இன்னிக்கே பேசிடுவாங்க. சோ! நாளைக்கு காலை என் கல்யாண முகூர்த்தம் உங்க வீட்டுல பொண்ணு பார்க்க போகனும் சரி தானே அண்ணா." என கிரிமினலாக திட்டம் தீட்டினாள் ருத்ரா.


கவின் " இந்த இளவரசி சொன்னா சரிதான் மா நான் பேசிட்டேன். ஆனா எனக்கு ஒரு சந்தேகம்? நாளைக்கு கல்யாணம் முடிஞ்சதும் அவ கிளம்பிடுவா, என்ன சொல்லி நீ நிறுத்தி வைக்க போற டா ?" என்று சந்தேகம் வினவ, "அதெல்லாம் பக்கா ப்ளான் இருக்கு, அண்ணா! நாளைக்கு எனக்கு கல்யாண முகூர்த்தம் முடிஞ்சதும் கோவிலுக்கு போகனும், அதுனால இங்கே இருந்து அம்மாவ பார்த்துக்க ஆள் வேணும்னு சொல்லி இருக்க வைச்சுட வேண்டியது தான்! அம்மாக்காகனா தட்டாம கேட்டுப்பாங்க, சரி இப்ப நான் வெளியே போறேன் நீங்க அவன் கூட போய் சித்தப்பா கூட்டிட்டு வந்துடுங்க சரியா!" என்று கூறிக்கொண்டே அறை கதவை திறக்க, வெளியே மஹிமா நின்றுக் கொண்டிருந்தாள்.



வெளியே நின்றிருந்தவளை கண்டவர்கள் திருட்டு முழி முழிக்க! "சரிமா! நான் போய் சித்தப்பாவ கூட்டிட்டு வரேன், போறப்ப அவனையும் பிக்கப் பண்ணிக்கிறேன், வாழைமரம் ஆர்டர் பண்ண போனான்" என்று வராத அலைபேசியை பிடித்தபடி ஓடியே விட்டான்.


இங்கே கைகளை கட்டிக்கொண்டு இருவரின் கூத்தையும் வேடிக்கை பார்த்தவள், அவன் நகர்ந்ததும் இவளை பிடித்து கொண்டாள்.


"உன்னை! அவரை எப்படி உனக்கு தெரியும்?அதோட உங்க அம்மாவ சித்தினு சொல்றாரு, உங்களுக்கு சொந்தமா அவரு? எதாச்சும் சொல்லேன், வாயில என்ன வைச்சுருக்க?" என திட்டிக் கொண்டே போக.


"கல்யாண பொண்ண இப்படித்தான் திட்டுவாங்களா?நான் பாவம் தானே! உங்க ருத்துமா தானே?" என கொஞ்சினாள்.

"இப்ப சொல்லு உனக்கு கவின் சார எப்படி தெரியும்? அதோட இவர் இப்ப பேசுனத பாத்தா இது முதல் தடவை வீட்டுக்கு வந்தது போல தெரியல, எனக்கே அவரை ஆறு மாசமா தான் தெரியும்! உனக்கு எப்படி தெரியும்? சொல்லு மா எனக்கு தலையே வெடிச்சுடும் போல இருக்கு." என்று சற்று கோபத்தோடும் குழப்பத்தோடும் வினவினாள்.


அதற்குள் அறை கதவு தட்ட பட யாரென பார்த்தாள் ருத்ரா அங்கே அவளின் தம்பி நிற்க"டேய்! பெரியவன் எங்கே டா? அவனையும் வர சொல்லு. மஹி! இன்னும் உங்களை பார்த்தது இல்லைல அதான் இண்ட்ரோ கொடுக்க." என்று சிறிய தம்பியிடம் கூறி இன்னொரு தம்பியை அழைத்தாள்.



"ஏங்க! இவனுங்க இரண்டு பேரும் என் தம்பிங்க, இவன் சின்னவன் விஷ்ணுதேவன்!, இவன் பெரியவன் மகாதேவன்!" என சுட்டி காட்டி ருத்ரா அறிமுக படுத்த விழிவிரித்து கண்டாள் மஹிமா.


"ஹேய்! ருத்ரா இந்த பையன் என் ஆபிஸ்ல தான் வேலை பார்க்கிறான். எனக்கு தெரியும்." என்றாள்.


"டேய்! நீங்க போங்க நான் இவங்கட்ட பேசிட்டு அப்புறம் சாப்பிடுகிறேன், மகா! நீ அண்ணா கூட போய் சித்தப்பாவ கூட்டிட்டு வந்துடு, சின்னவனே! நீ போய் அந்த வீட்டுல இருந்து சாமான் ஏதோ எடுக்கனும் னு அம்மா சொல்லுச்சு அதை போய் எடுத்துட்டு வா" என வேலை ஏவியவள், மஹியின் புறம் திரும்ப, உணவு தட்டுடன் அவள் நின்றிருந்தாள்.


"ஏங்க மஹி நீங்க இப்படி இந்த வேலையெல்லாம் செஞ்சுட்டு? " என்றவள் தட்டை வாங்கிட முனைய, "பரவாயில்ல மா நீ அடிக்கடி என்கிட்ட கேப்பில்ல ஊட்ட சொல்லி நான் ஊட்டுறேன் நீ சாப்பிடு, சாப்பிட்டுட்டே பதில் சொல்லு!" என ஊட்ட ஆரம்பித்தாள்.



ருத்ராவும் உணவை வாங்கி கொண்டு நடந்தவற்றை சொல்ல தொடங்கினாள், "நான் பிப்ரவரி மாசம் உங்கள பார்க்க வந்தேன்ல! அதான்ங்க 13 ம் தேதி உங்க ஆபிஸ்க்கு அன்னிக்கு உங்களுக்கு முன்னாடி அண்ணன அதாவது உங்க கவின் சாரை பார்த்தேன். அவங்க தான் உங்களை கூப்பிட ஆள் அனுப்புனது. நீங்க வரதுக்குள்ள அவர் நம்ப இரண்டு பேரோட ரிலேஷன்ஷிப் பத்தி கேட்டு நான் சொல்லி அவரு உங்கள லவ் பண்றத பத்தி சொல்லி, நான் அதுக்கு மூனு மாசம் உங்கள வாட்ச் பண்ணி நீங்க நல்லவங்கனு எனக்கு தோனுனா, மட்டும் தான் நான் மஹிய கரெக்ட் பண்ண ஐடியா கொடுப்பேன்னு சொன்னேன். அதான் எப்படி கண்காணிக்கிறதுனு யோசிச்சப்ப, மகா வேலை தேடிட்டு இருந்தான்,அதான் அவன அங்கே சேர்க்க சொல்லி கேட்டேன் அவரும் சரினு சேர்த்து விட்டார்." என்று சொல்லி கொண்டிருக்க, இடைமறித்தவள் " நான் உன் தம்பிய பார்க்காதத நீ யூஸ் பண்ணிக்கிட்ட அதானே என்று வினவிக் கொண்டே எழுந்தவளை கைப்பற்றி நிறுத்தி தன் பேச்சை தொடர்ந்தாள்.


"அப்படி இல்லைங்க! என்னை விட ஒரு வயசு பெரிய பொண்ணு நீங்க! உங்களுக்கு கல்யாணம் ஆக வேணாமா? மாமா அத்தைய யோசிச்சு பாருங்க, நடந்தத நினைச்சு இனி இருக்கத விட கூடாது ல அதான். இதுவரை நான் கவனிச்சதும் சரி, மகா சொன்ன வரைக்கும் சரி, கவின் அண்ணா ரொம்ப நல்லவர் தான் நீங்க லவ் பண்ணி கல்யாணம் பண்ண வேண்டாம் என்னை மாதிரி கல்யாணம் பண்ணிட்டு லவ் பண்ணுங்க அவ்வளவு தான் டார்லிங் என்ன சொல்றீங்க?".என கேள்வியோடு முடித்தவளை கண்டவள் "இப்ப என்ன தான் சொல்ல வர? சரி மா நீ சொல்ற மாதிரி வைச்சுக்கலாம், ஆனா நான் எல்லா உண்மையும் சொல்லுவேன்! உன் அண்ணன் அப்பவும் இதே மாதிரி இருந்தா பார்ப்போம்! ஆனா காதல் கிடைக்காது பரவாயில்லையா?" என்று முடித்தவளை பார்த்து சோர்ந்து போனாள் ருத்ரா.


பிறகு யோசனை வந்தவளாய் ருத்ராவை பார்த்து "ஆமா! இங்கே இவ்வளவு உரிமையா இருக்காரே அது எப்படி?" எனக் கேட்டாள்.


இதை கேட்டவளின் கண்களே காட்டி கொடுத்து விட்டது இவர்களின் குட்டை. "அது வந்து கவின் அண்ணா உங்களுக்கு பார்த்துருக்க மாப்பிள்ளைனு சொல்லி தான் மகா கூட்டி வந்தான். மஹி!" என்றவள்
அதோடு அவளின் திட்டப்படி இனி நடக்க வேண்டியதையும் சொன்னவள், இறுதியாக அவள் இங்கே நாளை முழுவதும் தங்கி, நாளை மறுதினம் செல்லுமாறு கேட்டும் கொண்டாள்.


இதை கேட்டவள் கோபத்தில் நாலு சாத்து சாத்தினாள் ருத்ராவை.

மஹி "என்னை பத்தி அம்மா என்ன நினைப்பாங்க? எரும மாடே, இப்படி பண்ணி வைச்சுருக்கீங்க, நாளைக்கு நைட் தங்க முடியுமானு தெரியல மா பார்ப்போம். ஏற்கனவே இங்கே வந்துருக்காரா கவின்?" எனக் கேட்டாள்.


ருத்ரா " ம்! இரண்டு தடவை அப்ப மகா பிரண்டு னு தான், இப்பதான் உங்க மாப்பிள்ளை னு சொன்னோம்."
என்றாள்.


"அடுத்த வாரம் புதன்கிழமை அமுதா அக்கா கல்யாணம்! நீ வருவீல்ல?" என்க. "தெரியல என் புருஷன் வேற ஸ்டிரிட் பார்ப்போம்ங்க, வரமுடியுமானு?" என்றாள் ருத்ரா.


இவர்கள் இருவரும் பேசி கொண்டிருக்க, உறவினர்களை அழைக்க சென்ற மகாவும், கவினும் வந்துவிட்டனர்.

அடுத்தடுத்து கல்யாண வேலைகள் யாவும் நடந்தேற, மாலை நான்கு மணிக்கு அலங்காரம் செய்ய அழகு நிலைய ஆட்கள் வர, ருத்ராவின் அருகிலே இருந்து அவர்களையும் கவனித்து, அவளையும் கவனித்து கொண்டாள் மஹிமா.


அலங்காரம் முடிந்து அழகு பதுமையாய் தயாரான ருத்ராவை நெட்டி முறித்தவள். "ருத்ரா நீ செம்மயா இருக்க!" என்றாள். "ஏங்க இந்த வெட்கம் எல்லாம் நமக்கு வராது, அதோட என்னை அழகுனு நீங்க அடிக்கடி சொல்லுவீங்க, சோ இதுவும் ரிஜெக்ட். நாளைக்கு புல்லா இருங்கனா! இருங்களேன், இந்த ஐஸ் எல்லாம் என்கிட்ட வேலைக்கு ஆகாது." என்றவள். தன் பெரியன்னையிடம் சென்றவள், ஆசி வாங்கி கிளம்ப தயாராக நின்றாள்.


மஹி"இவ இருக்காளே! இவளை வைச்சுக்கிட்டு ஒன்னும் பண்ண முடியல. நாளைக்கு கிளம்பலாம்னு பாத்தா விட மாட்டா போடலயே?" என்று புலம்பியவாறே பின் சென்றாள்.


பின் உறவுகாரர்கள், அக்கம் பக்கத்தினர், பெரியவர்களிடம் ஆசி வாங்கி கிளம்ப தயாராக, பெண் அழைக்க வந்தவர்களுக்கு உணவு கொடுத்து உபசரிக்க, மஹியும், கவினும்,மகாவும் பரிமாறினார்கள்.


ஸ்கார்பியோ காரில் பெண் அழைக்க வந்திருக்க, அதே காரில் பெண் வீட்டு சார்பாக மூவரை அழைத்து கொள்ள மீது சொந்தங்கள் ஆம்னி பேருந்தில் ஏறினர் அனைவரையும் அனுப்பிவிட்டு மஹிமாவும், மகாவும், கவினும் மட்டுமே இருக்க.கவின்"டேய்! தம்பி நீ போடா அங்கே மச்சனன் தான் கேட்பாங்க மண்டபத்துல நான் வீட்டை பூட்டிட்டு இந்த ஜாமானை எடுத்துட்டு மஹியையும் கூப்பிட்டு வந்துடுறேன். நீ முன்னாடி போ." என்றவன் அதோடு நில்லாது அவனை வண்டியேற்றி பாதி பொருட்களையும் கொடுத்தனுப்பினான்.



சற்று பொறுத்து தயாராகி மஹி, அங்கே மகாதேவனை காணாது தேடினாள். "என்னாச்சு மஹி! யார தேடுறீங்க?" என்றவனுக்கு, "மகாவ தான் நாம போகனும்ல மண்டபத்துக்கு." எனக் கூறினாள்.


"அவன் அப்பவே போய்ட்டானே! சித்தி போன் பண்ணாங்க அதான் போய்ட்டான்" என பொய்யுரைக்க, "சரி அப்ப நாம எப்படி போறது?" என்று கேட்டவளுக்கு தனது வண்டியினை காட்டினான். " இதுல போறோம், பாருங்க எல்லாமே எடுத்து அதுல கட்டியும் வைச்சுட்டேன். இனி நீங்க ஏறுனா போக வேண்டியது தான்," என்றபடியே வண்டியை ஸ்டார்ட் செய்ய இவளோ திகைத்து நின்றாள்.

'காலையில் வரும் போதாவது தன் பேக் மட்டும் இருந்துச்சு நடுவில் வைச்சுட்டு ஒரு பக்கமா கால் போட்டு உட்கார்ந்து வந்துட்டோம். இப்ப இந்த இம்சை எல்லாத்தையும் பின்னாடி வைச்சு கட்டிருக்கே இடமும் கொஞ்சம் தான் இருக்கு இரண்டு பக்கமும் கால் போட்டுல உட்காரனும்'
என்று மனசுக்குள் பேசிக்கொண்டிருக்க.


அவனோ வண்டி ஒலிப்பானை ஒலித்து அவள் சிந்தனையை கலைத்தான். மஹி! வாங்க போவோம். நேரமாச்சு! சீக்கிரம் அங்கே தேவைபடுற பொருள் இங்கே கொஞ்சம் இருக்கு, வாங்க!" என்று அவளை விரைவு படுத்தினான்.


அவனவளும் ஏற வண்டி கிளம்பியது, திருமண மண்டபம் நோக்கி எட்டு கிலோ மீட்டர் தொலைவை அரைமணி நேரம் கடந்தான்.


திருமண மண்டபத்தின் வாயிலில் வண்டியை நிறுத்தியவன் பின்னாடி பார்க்க, மஹிமா இறங்கியவள் அங்கே வைத்திருந்த மணமக்கள் பெயர் பலகையை பார்த்து நின்றாள்.


அங்கே ருத்ரா தேவி

Weds

அர்ஜீன் பிரபாகரன்
அதற்குள் வண்டியை நிறுத்தி விட்டு வந்தவன், இதையே பார்த்து கொண்டு நின்றிருந்தவள், அருகே வந்து தோளில் கை வைத்தான்.

"வாங்க மஹி! உள்ள போலாம்." என்றழைக்க இருவரும் மண்டபம் உள்ளே சென்றனர்.

ருத்ராவின் கல்யாணத்தில் மஹிக்கு ஏன் இவ்வளவு முன்னுரிமை? கவினோடு மஹிதாவை சேர்க்க ருத்ரா ஏன் மெனகெட வேண்டும்? உண்மை என்று சொன்னது யாது? வரும் அத்தியாங்களில் பார்ப்போம், ருத்ராவின் கல்யாண கலாட்டாவோடு நம் நாயகன் செய்யும் காதல் கலாட்டாவையும் காண்போம்...



Thread 'உயிரினை மனம் தேடுதே - Comments' https://www.sahaptham.com/community/threads/உயிரினை-மனம்-தேடுதே-comments.705/


தங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் நன்றி 🙏
 

MAHARAJ

New member
Vannangal Writer
Messages
6
Reaction score
7
Points
3
உயிரினை மனம் தேடுதே -- நான்காம் அத்தியாயம்.


திருமண மண்டபத்திற்கு ருத்ராவின் வீட்டிலிருந்து கவினுடன் கிளம்பி வந்திருந்தாள் மஹிமா. வண்டியில் அழைத்து வந்தவன், மண்டபத்தின் வாசலில் நிறுத்தி இறக்கி விட்டு, வண்டியை நிறுத்துமிடம் சென்று நிறுத்திவிட்டு வந்தான் கவின்.



மண்டப வாயிலில் வைத்திருந்த பெயர் பலகையை பார்த்திருந்தவளின் தோளில் கை வைத்து அழைக்க, அவள் திரும்பவும் உள்ளே கூட்டி சென்றான். உள்ளே சென்றவர்களின் கண்டதோ ருத்ராவின் தாயிடம் அவர் வயதையொத்த ஒரு பெண்மணி சண்டையிட்டு கொண்டிருந்ததும், உடன் ஆறேழு பெண்களும் , பத்து ஆண்களும் நின்று கொண்டிருந்ததை தான்.

நேரே அங்கே சென்றவர்கள் காதில் விழுந்தென்னவோ அந்த சண்டையிட்ட பெண்ணின் வார்த்தைதான் " மதனி! யாரை கேட்டு ருத்ராக்கு கல்யாணம் முடிவு பண்ணீங்க? எங்கள ஒத்த வார்த்தை கேட்கனும்னு தோனுச்சா நாங்க பின்ன அத்தைங்கனு எதுக்கு இருக்கோம். இவ்வளவு அக்குசம் பாக்குறவுங்க எதுக்கு இப்ப மட்டும் சொல்லனும். நாங்க ஏன் சொல்லாம கல்யாணம் பண்ணீங்க னு கேட்டுருவோம்னு தானே? சொல்லுங்க மதனி அண்ணே இல்லைனா எங்க உறவும் இல்லையா? அண்ணன முன்னிட்டு தான் எங்க உறவுனா பெறகு எதுக்கு அத்தைனு பத்திரிக்கைல பேரு போடனும் சொல்லுங்க" என்று பேசிக்கொண்டே போனார்.

சுமதியோ பதில் சொல்ல முயன்று கொண்டே இருந்த மகாதேவனை அடக்கி வைக்க பிரம்மபிரயத்தனம் செய்து கொண்டிருந்தார். அருகே வந்த மஹிமாவோ விஷ்ணுவிடம் என்னவென்று விசாரித்தாள்.


"அக்கா அவங்க எங்கப்பாவோட தங்கச்சி அப்ப பெரியத்தையோட பையனுக்கு அக்காவ பேசனும்னு கேட்டுருந்தாங்கலாம், இப்ப அக்காக்கு இவரை முடிவு பண்ணா பிரச்சினை பண்ணுவாங்கனு தான் சொல்லாம பேசி முடிச்சு கல்யாணப் பத்திரிக்கை போய் வைச்சுட்டு வந்தாங்க. அங்கே எதுவும் பேசாம இங்கே வந்து பிரச்சினை பண்றாங்க அக்கா. உள்ள அந்த புள்ள வேற குதிச்சுட்டு இருக்குக்கா என்ன பண்றது னு தெரியல" என்றான் விஷ்ணு.


பிரச்சனையின் வீரியம் புரிந்தவள் விரைந்து மணமகள் அறைக்கு செல்ல அங்கே ருத்ராவை அவளின் மாமன் மனைவிகளான மூன்று மாமிகளும் அமைதிப் படுத்தி கொண்டிருந்தனர்.


"ருத்துமா! அமைதியா இருமா, இப்பதான் விஷ்ணுட்ட கேட்டுட்டு வந்தேன். அவங்க இப்படித்தான்னு தெரியும்ல அப்புறம் ஏன் கூப்பிட்டிங்க? சரி விடு நான் பார்த்துக்கிறேன். நீ இங்கேயே இரு அம்மா பார்த்துக்கோங்க" என ருத்ராவிடம் பேசி விட்டு அவளின் பெரிய மாமியிடம் கூறி விட்டு வெளியே வந்தாள்.


இங்கே மகாதேவனை சமாதான படுத்திக் கொண்டிருந்தான் கவின்.
"டேய்! சும்மா இருடா, டென்ஷன் ஆகாத அவங்க பெரியவங்க, இரு சித்தி பேசட்டும்" என்று கவின் மகாவிடம் சமாதான வார்த்தைகளை கூறிக் கொண்டிருந்தான்.


அறையில் இருந்து நேராக கவின், மகாவிடம் வந்தவள் " என்னாச்சு? அவங்க சமாதானம் ஆனாங்களா, இல்லையா? என்று வினவ "இல்லைக்கா ரொம்ப பேசிட்டே போறாங்க, என்னை எதாச்சும் பேச விட்டாதானே நான் பேசுவேன்." என மகாதேவன் சொல்லிக் கொண்டிருந்த நேரம், தன் அறையில் இருந்து வெளியே வந்தவள் "எல்லாரும் கொஞ்சம் அமைதியா இருக்கீங்களா! அத்தே இங்கே பாருங்க எனக்கு உங்க அக்கா பையன் ராஜாவ பிடிக்கல. எனக்கு பிரபா வ தான் பிடிச்சுருக்கு, இப்ப என்னா பண்ணனும். உங்க அக்கா உங்க அக்கானே சொல்றீங்க எனக்கு அத்தை தானே அப்புறம் என்ன? ஆமா இன்னொன்னு கேட்டிங்களே! ஹான்! என் அப்பா இருந்தா தான் உங்க உறவானு அதையே நான் கேட்கிறேன். உங்கண்ணே இருந்தாதான் உறவா? இதுக்கு உங்க கிட்ட பதில் இல்லை தானே பத்திரிக்கை உங்க எல்லாருக்கும் அதாவது என் அப்பா வோட சொந்தம் எல்லாருக்கும் வைக்க சொன்னது நான் தான் இப்ப என்ன பண்ணனும் உங்களுக்கு?" என்று கேள்வியோடு நிறுத்தியவளின் குரலில் இருந்த சத்தத்திலும் உறுதியிலும் அடங்கி நின்றார் கலைச்செல்வி(ருத்ராவின் அத்தை).


ருத்ராவின் குரல் மட்டும் ஒலிக்க மஹிமாவும், மகாவும், கவினும் அங்கே வந்தனர். மணமகனான அர்ஜீனும் விரைந்தான் ருத்ராவிடம் நால்வரும் பேச்சை நிறுத்த கேட்டு கொண்டிருக்க, பாதியில் விட்ட பேச்சை ருத்ராவே தொடர்ந்தாள்.

"சொல்லுங்க அத்தே! என்ன பண்ணனும்?" என கேட்டவளின் கேள்விக்கு பதிலின்றி தவித்து போனார் செல்வி. மஹியோ ருத்ராவை இழுத்து அறைக்குள் சென்றவள், உள்ளே விட்டு வெளியே வந்தவள், அர்ஜீனையும் அறைக்கு சென்று தயாராகுமாறு கூறி விட்டு செல்வியிடம் பேசினாள்.


மஹி"அம்மா! விடுங்க அவ சின்ன பொண்ணு ஏதோ பேசிட்டா நீங்க அவளை பெரிசா எடுத்துக்காதீங்க ப்ளீஸ்!" என்று கெஞ்ச. "நீ யாருமா? எங்க குடும்பத்துக்குள்ள பேச? அவ பேசினா என் அண்ணன் பொண்ணு பேசுவா! நீ இழுத்துட்டு போற? அவளுக்கு பதிலா நீ இங்கே சமாதானம் பண்ற? யாரு நீ? என்ன நினைச்சு இதெல்லாம் பண்ற? உனக்கு யாரு அந்த உரிமய கொடுத்தா?" என பேசிக்கொண்டே போனார்.



சட்டென மகா வந்தவன் "அத்த! ஒரு நிமிஷம் நிறுத்துறீங்களா! இவங்களயா யாருனு கேட்டிங்க? எங்க குடும்பத்துக்கு உதவுன நல்ல பொண்ணு. இன்னும் சொல்லனும்னா நம்ம குல சாமி நல்லதாங்காவே இவுகதான். அம்மாக்கு பீரியட்ஸ் நிக்கப் போற சமயம் ஓவர் ப்ளீடிங்ல சீரியஸ் கண்டிஷன் போய்ட்டாங்க. அப்ப நீங்க வரல! ஏன் உங்க அண்ணனுங்க ஒருத்தனும் வரல. இவங்க தான் அவங்க ஒரு மாச சம்பளத்த தூக்கி கொடுத்ததும் இல்லாம, ருத்ராக் கூடவே இருந்து எங்கள பாத்துக்கிட்டது. இல்லைனா மூனு வருஷத்துக்கு முன்னாடியே அம்மா செத்து போய்ருக்கும். நீங்க கேட்கலாம் ஒரு மாச சம்பளம் என்னா ஒரு பத்தாயிரம், பதினஞ்சாயிரம் இருக்குமானு ஆனா அதை கொடுக்க கூட நீங்க யாரும் வரலயே! தரலயே. இப்பயும் இத உங்கட்ட சொல்ல விருப்பம் இல்லை. ஆனா எங்க குடும்பத்துல மஹி அக்காவோட இடமும், முக்கியத்துவமும் எவ்வளவுனு எல்லாருக்கும் தெரியனும்னு தான் சொன்னேன். இனி உங்க இஷ்டம் இருக்கறதுனா இருங்க, போறதுனா போங்க அவ்வளவு தான். அம்மா! நீ போ போய் அந்த புள்ள ரெடி ஆயிடுச்சானு பாரு. நான் போய் மாமாவ கூட்டி வரேன். என்று அத்தையிடம் பேச்சை முடித்து தாயிடம் கட்டளையிட்டு விட்டு தன் மாமனான மணமகனை பார்க்க சென்றான்.



அதற்குள் ருத்ரா தயாரானவள் வெளியே அழைத்து வர மணமேடையில் உள்ள நாற்காலியில் இருத்தி நலங்கு வைக்க ஆரம்பித்தனர். முதலில் தாய்மாமன் மனைவியான மூவரும் சந்தனம், குங்குமம் இட்டு ஆசிர்வதிக்க, அடுத்து நாத்தனார் அத்தை, அக்கா முறையில் உள்ள அனைவரும் நலங்கு வைத்து முடிக்க, மணமகன் அழைத்து வர பட்டான்.



மச்சினனான மகாதேவனுடன் இன்னொரு மச்சினனாக கவினும் கைப்பற்றி அழைத்து வந்தனர். அவரையும் நாற்காலியில் இருத்தி மாப்பிள்ளைக்கும் அதே போல் நலங்கு வைத்தனர். அதன் பிறகு இருவரின் தாய் மாமன்களும் வந்து மாப்பிள்ளை, பொண்ணுக்கு மாலையிட , ஆரத்தி எடுத்து முடித்து அனைவரையும் சாப்பிட அனுப்பினர் மகாதேவனும், கவினும்.



மாப்பிள்ளை, பொண்ணை அருகருகே அமர்த்தி ருத்ராவுக்கு அருகே மஹியும், அர்ஜுனுக்கு அருகே கவினும் அமர, அங்கே வந்த மகாவின் அலுவலகத்தில் வேலை செய்யும் ஒருத்தர் வந்து கவினிடம் பேசி செல்ல, அவனிடம் என்னவென்று வினவினான் மகாதேவன்.



அவர் சொன்ன விஷயத்தை சொல்லவும் "சரி அண்ணா நீங்க என்ன பண்ணலாம்னு யோசிச்சு வைங்க. நான் அடுத்து போட்டோ எடுக்கனுமாம் அதை அரேஞ்ச் பண்ணி வைச்சுட்டு வரேன்." என கூறி மணமக்களை அழைத்து சென்றான் மகாதேவன்.


'இதை எப்படி இவள்ட்ட சொல்றது இது பத்தி தெரிஞ்சாலே தாம்தூம்னு குதிப்பா. என்னமோ நானே ப்ளான் பண்ண மாதிரி' என்று மனதில் பேசியவனை, தன் குரலால் நிஜத்திற்கு அழைத்து வந்தாள் மஹி.


போட்டோ ஷூட் முடிந்து உறவுகள் அனைத்தும் உறங்கச் செல்ல முக்கிய சிலர் மட்டும் விழித்திருந்தனர். அதில் மஹியும்,கவினும் கூட அடக்கம்.




மீதம் இருந்த வேலைகளை ஆட்கள் பார்த்துக் கொண்டிருக்க, மகாவும், மேலும் சிலரும் அதை மேற்பார்வை பார்க்க செல்ல மஹியும், கவினும் தனித்து விட பட்டனர். இருவரும் சாதாரணமாக பேச ஆரம்பிக்க அது அப்படியே தொடர்ந்தது.


"கவின் சார்! ஸ்ரீனி அண்ணா ஏதோ ஆபிஸ் கால் வந்தது பத்தி சொல்லிட்டு இருந்தாரே என்ன அது? எதுவும் இம்பார்ட்டண்ட்டா சார்." எனக் கேட்க, கவினோ திருட்டு முழி முழிக்க, 'ஆத்தி ஏற்கனவே பிரமோஷனுக்கு நான் தான் காரணம்னு தெரிஞ்சும் இவ்வளவு சாப்டா பேசுறது பெரிய விஷயம் இதுல இதை சொல்லி கிடைச்சுருக்க நல்ல நேரத்தை வீணடிக்க கூடாது. நம்ம லவ்வ புரிய வைக்க இதை யூஸ் பண்ணிக்க வேண்டியது தான்' என்று மனதிற்குள் நினைத்தவன் அவளிடம் பேச்சை மாற்றும் முயற்சியில் இறங்கினான்.



"அதை அப்புறம் பேசுவோம் மஹி, முதல்ல எனக்கு உங்க கிட்ட கொஞ்சம் பேசனும்." என்றவனிடம். என்ன என வினவ, அவன் கேள்விகளை கேட்டான்.

"என்னை பத்தி உங்க அபிப்ராயம் என்ன மஹி. நான் கெட்ட பழக்கவழக்கங்கள் உள்ள பையனா உங்க கண்ணுக்கு மட்டும் தெரியிறேனா, இல்லை என்னை பார்த்தா ஊதாரியா திரியுற சல்லி பயலாட்டம் தெரியுதா." என்று கேட்டுவிட்டு அவளின் முகம் பார்க்க அதுவோ இப்படிப்பட்ட கேள்விகளை எதிர் பார்க்காததால் அதிர்ச்சியில் இருந்தது.

"திடீர்னு ஏன் சார் இப்படி கேள்வி கேட்குறீங்க என்னாச்சு?" என்றவளுக்கு. "நீங்க பதில் சொல்லுங்க இல்லை என் காதல் போலியானதாக தெரியுதா?" என்று நிறுத்தினான்.


"சார் நீங்க ரொம்ப நல்லவர் தான். கெட்ட பழக்கம்னு எனக்கு தெரிஞ்சு ஒன்னும் இல்லை. நீங்க ஊதாரிலாம் இல்லை. அம்மாக்கு நல்லமகன் , தங்கச்சிக்கு அன்பான அண்ணன். இன்னும் என்ன சொல்றது எனக்கு தெரிஞ்சு இவ்வளவுதான் சார்." என்றாள் மஹி.



தன்னவள் தன்னை பற்றி கூறியதை கேட்டவனது இதயம் எட்டு கிரகத்தையும் தாண்டி எட்டா உயரம் பறந்து கொண்டிருந்தது.


இவர்கள் இங்கே பேசிக் கொண்டிருக்க, மணமகன் வீட்டிலோ மாங்கல்யம் வைத்து சாமி கும்பிட்டு, முகூர்த்த புடவை, வேஷ்டி சட்டை, மாங்கல்யம், மெட்டி, பூநூல், இதெல்லாம் எடுத்து வந்தனர். வந்த மாப்பிள்ளை வீட்டினரை எதிரில் இருந்த மண்டபத்திலும், அனுமதி வாங்கியிருந்ததால் அங்கே தங்க வைத்தனர் பொண்ணு வீட்டினர்.



இருவரும் பேசிக் கொண்டே சமையல் செய்யும் இடத்திற்கு சென்றனர். அங்கே மகாவோ சமைப்பவரிடம் கோபமாக பேசிக்கொண்டிருந்தான். அதை பார்த்தவர்கள் வேக எட்டுகளில் அவ்விடத்தை அடைந்து என்ன என்று கேட்டவர்களுக்கு சமைக்கும் சமையல் பொருட்கள் இன்னும் தேவை படுகிறது என கூறியவன் மேலும் சமையல்காரரிடம் மீண்டும் வாக்குவாதத்தை ஆரம்பித்தான்.



"டேய்! நிறுத்துடா ஏன் அவரை கத்திட்டு இருக்க? இன்னும் என்னென்ன சாமான் வேணும். அண்ணா லிஸ்ட் போட்டு தாங்க, நாங்க போய் வாங்கிட்டு வரோம் சீக்கிரம் எழுதி தாங்க." என்றவனுக்கு பதில் மகாதேவனே கொடுத்தான். "அண்ணா! இப்ப மணி எத்தனை? இரண்டு மணி ஆச்சு. இப்ப எந்த கடை திறந்திருக்கும்? அதான் அவர்ட்ட கேட்டுட்டு இருக்கேன், நீங்க வேற. லிஸ்ட் குடுனு கேட்டுட்டு இருக்கீங்க." என்றான்.



"சரி விடுடா! நாம திருச்சி போய் வாங்கிட்டு வருவோம். அதுக்கு ஏன் டென்ஷன் ஆகுற? போ போய் கார் சாவி எடு நான் இருந்து லிஸ்ட் வாங்கிட்டு வரேன்." என்றவனின் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து சென்றான் மகாதேவன்.

அதே நேரம் அங்கே வந்த ருத்ராவின் பெரியம்மா மகன் கார்த்தி "தம்பி மகா எங்கே போனான். ஆளையே காணோம்?" என்று கேட்க, "அண்ணா அவன் கார் சாவி எடுக்க போய்ருக்கான். இங்கே கொஞ்சம் சாமான் வாங்கனுமாம்! அதான் திருச்சி மார்க்கெட் போனா வாங்கிட்டு வந்துடலாம்னு போறோம் இரண்டு பேரும். ஏண்ணா எதாவது முக்கியமா சொல்லுங்க அண்ணா நான் மட்டும் கூட போய்ட்டு வரேன்." என்றான் கவின்.


"அதெல்லாம் ஒன்னும் இல்லை பா தூங்க சொல்லலாம்னு வந்தேன். அதான் நீங்க இரண்டு பேரும் போய் ரெஸ்ட் எடுங்க. நானும் அவனும் போய்ட்டு வரோம்." என்றவனிடம் மறுத்து ஏதோ கூற வந்த கவினை தடுத்தவன் "போய் தூங்குடா காலையில் ஐஞ்சு மணிக்கு வந்தவன். நேத்து வேற நைட் ஷிப்ட் முடிச்சுட்டு நேர இங்கே வந்துட்ட போ போய் படு. இவங்களையும் கூட்டிட்டு போய் ருத்ரா ரூம்ல விட்டுட்டு போ." என்று கூறியபடி மளிகை பொருட்களின் தேவை பட்டியலை வாங்கி சென்றான்.


சமையலறையில் இருந்து வெளியே வந்த மூவரின் எதிரே வந்த மகாவை பார்த்த கார்த்தி "டேய்! வாடா நான் வரேன் போய்ட்டு வருவோம். நேரமாச்சு! மணி இப்பவே இரண்டரை போக வரவே இரண்டு மணி நேரம் ஆகும். அதோட சாமான் வாங்க ஒரு மணிநேரம் ஆகும். நாம திரும்பி வர எப்படியும் ஐஞ்சரை, ஆறு ஆகிடும் வா போவோம் சீக்கிரம்." என்று விரைவு படுத்தியவனுடன், "நீங்க போய் தூங்குங்க" என்றவாறே நடந்தான் மகாதேவன்.


அவர்களிருவரையும் அனுப்பி வைத்தவர்கள் சரி உறங்கலாம் என சென்றனர். அப்போது மணமகள் அறையில் இருந்து முக்காடு போட்ட ஒரு உருவம் கதவை திறந்து வெளியே வந்தது. அதை பார்த்தவர்கள். திருடன் என நினைத்து ஒளிந்து இருந்து கவனித்தனர். வெளியே வந்த அவ்வுருவம் சுற்றும் முற்றும் பார்வையை சுழற்றியது. யாரும் இல்லையென உறுதி செய்து கொண்டு, அங்கிருந்து நேராக மணமகன் அறைக்கு சென்றது. அங்கே அந்த அறையின் கதவை திறந்து உள்ளே தலையை மட்டும் நீட்டி பார்த்து அனைவரும் உறங்குகிறார்களா என்று கவனித்து விட்டு பின் உள்ளே சென்றது.




அந்த உருவத்தையே தொடர்ந்து வந்தவர்கள் அறையின் வாசலிலேயே நின்று கொண்டனர். எப்படியும் இந்த வழியாக தானே வரனும் பிடித்திட வேண்டும் என்று தயாராக இருந்தனர். அதோடு சத்தமிட்டால் திருடன் சுதாரித்து விடுவான் என்பதால் சப்தமிடாமல் பொறுமையாக பின்தொடர்ந்து வந்தனர்.



உள்ளே சென்ற உருவமோ அங்கே படுத்திருந்த, ஐந்தாறு ஆட்களின் முகத்தை பார்த்து தான் தேடி வந்தவனை தேடிக்கொண்டிந்தது.
ஐந்தாவது படுத்திருந்த நபரே தான் தேடி வந்தவன் என்று உறுதி படுத்திக் கொண்டு அவனை எழுப்ப தொடங்கியது. "டேய் எந்திரிடா! எல்லாரும் தூங்கியாச்சு. மணி வேற மூனு ஆகிருக்கும், சீக்கிரம் எழுந்திரிடா உன்னை வைச்சுக்கிட்டு ஒரு கொலை கூட பண்ண முடியாது. இன்னும் இரண்டு மணி நேரத்துல, எல்லாரும் எழுந்துடுவாங்க டா எந்திரி" என்று விடாமல் எழுப்ப, அதில் விழுந்தடித்து எழுந்தான் அவன்.


எழுந்தவனின் சட்டையை பிடித்த உருவம் அவனை திட்ட ஆரம்பித்தது. "டேய் எரும மாடே உன்னையெல்லாம் வைச்சுக்கிட்டு நான் என்ன பண்றது?" என சீறியது. அவனும் "சரி விடு நான் அலாரம் வைச்சுட்டு தான் படுத்தேன். ஆனாலும் அசந்துட்டேன் சரி போலாமா?" என்றான்.


இரு கதவுகளுக்கு இடையே இது மட்டும் தான் தெரிந்தது, ஆனால் எதுவும் கேட்கவில்லை. பிறகு அந்த உருவம் அந்த அறையில் இருந்து வெளியே வர பின்னாடியே அவனும் வந்தான். அறையினுள் விடி விளக்கு வெளிச்சத்தில் எதுவும் சரியாக தெரியவில்லை. ஆனால் வெளியே வரவும் இருவரின் முகமும் தெள்ள தெளிவாக தெரிந்தது. வெளியே இருந்த கவினும்,மஹியும் ஆச்சரியத்தில் நிற்க, அறையின் உள்ளே இருந்து வந்த இருவரும் அதிர்ச்சியில் நின்றனர்.



அந்த உருவம் யார்? அது பேசியது யாரோடு? கவினும், மஹியும் ஆச்சரியப் படும் அளவிற்கு இருவரும் யாராக இருக்கும்? அடுத்த அத்தியாயத்தில் காண்போம்.



படித்துவிட்டு தங்களது கருத்துக்களை பதிவிடுங்கள் நன்றி

 
Status
Not open for further replies.
Top Bottom