Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BK NOVEL எதிர்ப்பு சக்தி - Tamil Novel

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
780
Points
93
எதிர்ப்பு சக்தி
 

Jeyalakshmiabi

Member
Vannangal Writer
Messages
22
Reaction score
32
Points
13
நகரமே இருள் சூழ்ந்து நிசப்தத்தில் உறங்கிக் கொண்டிருந்தது; பகலில் வாகன நெரிசலில் திணறிக் கொண்டிருக்கும் மெயின் ரோடும் ஏதோ ஓரிரு வண்டி மட்டும் செல்ல வெறிச்சோடி காற்று வாங்கிக் கொண்டிருந்தது மணி நள்ளிரவு ஒன்றாகும் மதன் மட்டும் இயந்திர மனிதன் போல ஆய்வகத்தில் வேலை செய்துகொண்டிருந்தான் நல்ல உயரம் மாநிறம் அதிகம் பேச மாட்டான் அவன் வேலை தான் பேசும்; எப்பவும் ஒரு விரைப்புடன் இருப்பான் அவன் மாலிக்யூலர் பயாலஜி ஆராய்ச்சி அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்து இரண்டு வருடங்கள் ஆயிற்று பொறுப்பானவன் என்பதால் பெரும்பாலான டெஸ்ட் ஒர்க் எல்லாம் இவன் தலையில் தான் விழும்.

ட்ரிங்.... ட்ரிங்... மதனுக்கு ப்ராஜக்ட் ஹெட் போன் செய்திருந்தார்.'

என்ன மதன் எல்லா செம்பிலும் அனலைஸ் பண்ணியாச்சா நாளைக்கே ரிப்போர்ட் பண்ணனும் தெரியுமில்ல' எனக்கேட்டார் ஹெட்

.'டோன்ட் வரி பினிஷ் பண்ணிரலாம்' என்றான் மதன்.

கோர்... கோர்.....என்று சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.'

மதன் என்ன கோர் கோர் என சத்தம் கேட்குது எனி ப்ராப்ளம் இன்ஸ்ட்ருமென்ட் ஏதாவது ரிப்பேர் ஆச்சா எல்லாம் காஸ்ட்லி' என கதறினார் ஹெட். '

சார் டோன்ட் ஒரி அது நம்ம செந்தில் தான் நல்ல சத்தம் போட்டு கொறட்டை விட்டு தூங்கிட்டு இருக்கான்' என சிரித்தபடி சொன்னான் மதன்.

'எழுப்பி போனை அவனிடம் கொடு' என கடுப்பானார் ஹெட்.
மதன் செந்திலை எழுப்பி 'ஹெட் லைன்ல இருக்கார்' என்று சொன்னான்.

தூங்கி வழிந்தவாறே 'சொல்லுங்க சார் என்றான் செந்தில்'.

'இடியட் வாட் டூயிங்'?

'நைட் ஒரு மணிக்கு எல்லோரும் என்ன பண்ணுவார்களோ அதை தான் நானும் பண்ணிட்டு இருக்கேன்' என்றான் செந்தில்.

செந்தில் மதன் உடன் வேலை பார்க்கும் நண்பன் கொஞ்சம் விளையாட்டு தனமாக இருப்பான்.

'நான் என்ன சொன்னேன் ஸ்டாக் சொலியுசன் அண்ட் மீடியம் பிரிபரேஷன் இந்த மாதிரி சின்ன சின்ன வேலையாவது செய் மதனுக்கு ஹெல்ப் ஃபுல்லா இரு என்று சொன்னா இப்படி லேப்ல படுத்துட்டு தூங்கிட்டு இருக்க' என அர்ச்சனை செய்தார் ஹெட்.

'சார்.... சார்.... சிக்னல் சரியா கிடைக்கல' என மழுப்பி போனை கட் செய்தான்

செந்தில்.'ஒழுங்கா வேலைய பாக்கலாம் இல்ல ஏன் இப்படி திட்டு வாங்கிட்டு இருக்க டா' என்றான் மதன்.

'வேலை செய்ற நேரமா இது பேய் கூட இந்நேரத்துக்கு டியூட்டி முடித்துவிட்டு ரெஸ்ட் எடுக்க போயிருக்கும் ஆனா இந்த ப்ராஜக்ட் ஹெட் இருக்கானே அவன் மட்டும் வீட்டில் ஏசி ரூம்ல படுத்துட்டு லேப்ல நம்மள நாய் மாதிரி வேலை வாங்குகிறான்' என நொந்தபடி பேசினான் செந்தில்.
'
சரி விடுடா சீக்கிரம் வேலை முடித்து விட்டு போய் தூங்கணும் நாளைக்கு 10 மணிக்கு ஏதோ முக்கியமான மீட்டிங் இருக்காம் எல்லாரும் கம்பல்சரி அட்டன் பண்ணனுமா' என்றான் மதன்.

காலையில் எல்லாம் மீட்டிங் ஹாலில் அசம்புல் ஆகினர்.எதுக்கு இந்த திடீர் மீட்டிங் என எல்லோரும் தங்களுக்குள்ளே சலசலவென்று பேசிக்கொண்டிருந்தனர். ஹெட் உள்ளே நுழைந்தார்.

'எல்லோருக்கும் திடீர் மீட்டிங் எதுக்குன்னு தானே யோசிக்கிறீங்க? நமக்கு ஒரு புது ப்ராஜெக்ட் கிடைச்சிருக்கு அது ஒரு பிரபல ட்ரின்க் புரொடக்ஷன் கம்பெனி நம்ப கம்பெனிக்கு ஒரு ப்ராஜக்ட் கொடுத்திருக்காங்க அது என்னன்னா இம்யூனிட்டி பூஸ்ட் பவுடர் (எதிர்ப்புசக்தி பவுடர்) அதற்கான விட்டமின் மினரல் காம்போசிஷன் காம்போனன்ட் ரேஷியோ என எல்லாம் கால்குலேட் பன்னி ரிசெர்ச் ரிப்போர்ட் ரெடி செயினும். இப்ப வர்ற புதுப்புது நோய்க்கிருமி கிட்ட இருந்து நம்பை பாதுகாப்பதற்கு எதிர்ப்பு சக்தி அதிகப்படுத்தறது தான் ஒரே வழி .அவனவன் எங்க பிஸ்கட் சாக்லேட்ல ஏன் அப்பளத்தில் கூட இம்யூனிட்டி இருக்குன்னு விளம்பரம் பண்றானுங்க...இந்த பிராஜக்ட் சம்பந்தமா நாம்ப ரீசார்ஜ் பண்ணி பேப்பர் பப்ளிஷ் பண்ணனும் அப்போ தான் நாம கம்பனிக்கும் ஒரு நேம் கிடைக்கும்'

.'சார் தினத்தந்தியா இந்துவா பிரண்ட் பேஜ்ல நம்ம போட்டோ போடுவாங்களா?' என்றான் செந்தில்.

'இடியட் நான் சொன்னது ரிசர்ச் பேபர் ஆர்டிகல்' என கடுப்பானார் ஹெட்.

'டூ டேஸ் டைம் யாரு நல்லா ஐடியா வோட இந்த ப்ராஜெக்ட்கு பிரசன்டேஷன் பண்றீங்களா அவங்களுக்கு இந்த ப்ராஜெக்ட்ல எனக்கு அசிஸ்டென்டா வொர்க் பண்றதுக்கு சான்ஸ் கிடைக்கும் அப்புறம் செலரி இன்க்ரீமெண்ட்டும் உண்டு' என்றார் ஹெட்.

'அப்ப கண்டிப்பா இது மதனுக்கு தான் கிடைக்கும்' என சாதாரணமாக சொன்னான் செந்தில்.

'அது எப்படி இன்னும் யாரும் பிரசன்டேஷன் பண்ணல ஏன் எங்களுக்கெல்லாம் டேலன்ட் இல்லையா?' என கண்ணிலே பார்த்து எரித்தான் விக்ரம்.

எப்பவும் விக்ரமுக்கும் மதனுக்கும் ஆகாது ஏதாவது பிரச்சனை வந்துட்டே இருக்கும் விக்ரம் ஒர்க் நல்லா செய்கிறாரோ இல்லையோ ஆனா மதனை நல்லா வச்சு செய்றதுக்காக காத்துகிட்டு இருக்கான்.

' இந்த ப்ராஜெக்ட் எனக்குக் கிடைக்கட்டும் அப்புறம் இருக்குது உங்களுக்கு' என மனதுக்குள்ளே பேசிக் கொண்டான் விக்ரம்.

'விக்ரம்... மதன்... எனக்கு உங்க ரெண்டு பேர் மேலயும் நம்பிக்கை இருக்கு பாக்கலாம் யாரு நல்ல ஐடியாசுடன் பிரசெண்ட் பண்றீங்கனு' என்றார் ஹெட்.

'எனக்கு நம்பிக்கை இருக்கு இந்த ப்ராஜெக்ட்ல நீங்க எந்த வேலையும் செய்ய மாட்டீங்க எங்கள மட்டும் தான் வேலை வாங்குவீங்க' என்று முணுமுணுத்தான் செந்தில்.

'என்ன செந்தில் எனி டவுட்' என்றார் ஹெட். நோ சார் என்றான் செந்தில். விக்ரம் மதன் இருவரும் பார்வையாலே மோதிக்கொண்டனர்.

எதிர்ப்பு சக்தி யாருக்கு கிடைக்கும் என்று இனி பார்ப்போம்...
 

Jeyalakshmiabi

Member
Vannangal Writer
Messages
22
Reaction score
32
Points
13
எதிர்ப்பு சக்தி 2


காலையிலேயே அலுவலகத்தில் ஒரே பரபரப்பாக இருந்தது, ஹெட் கொடுத்த இரண்டு நாட்கள் முடிந்துவிட்டது.

செந்திலும் மதனும் ஏதோ சீரியஸாக பேசிக் கொண்டிருப்பதை பார்த்த விக்ரம் அவர்கள் பேசுவதை மறைந்து நின்று ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்தான்.

' என்னடா மதன் எல்லாம் தயார் செய்து விட்டாயா என்ன ஐடியா வச்சிருக்க சொல்லு?'ஆர்வமாக கேட்டான். செந்தில் மதன் தான் தயார் செய்த பிரசன்டேஷன் பற்றி அனைத்தையும் விவரமாக செந்திலிடம் விலக்கினான்

'சூப்பர்டா... மதன் கண்டிப்பா ப்ராஜெக்ட் நமக்குதான்' என மதன் தோளை தட்டிக் கொடுத்தான் செந்தில்.

ஓ... இதுதான் உங்க ஐடியாவா சரி பார்த்துக் கொள்ளலாம் என மனதுக்குள் பேசிக் கொண்டான் என விக்ரம்.

அனைவரும் மீட்டிங் ஹாலில் கூடினர்.என்ன மீட்டிங் காலையிலேயே என எதுவும் புரியாமல் பிரியா மதனிடன் கேட்டால் நீ ஒரு வாரமா ஆபீஸ் வரல இல்ல என்ன நடந்தது என தொடங்கி மதன் புது ப்ராஜக்ட் பற்றி அனைத்தையும் தெளிவாக கூறினான் 'மதன்.
ஆல் த பெஸ்ட்... கண்டிப்பா ப்ராஜெக்ட் உங்களுக்கு தான் கிடைக்கும்' என சிரித்த முகத்துடன் மதனை பார்த்து கூறினாள் பிரியா.'

இதைப்பார்த்த விக்ரமுக்கு வயிற்று எரிச்சலாக இருந்தது.

ஹெட் வரார் என எல்லாரும் அமைதியாக எழுந்து நின்றனர்.

'ஓகே... எல்லாம் தயாரா யாரு முதலில் பிரசன்டேஷன் செய்யப் போறீங்க' என்றார் ஹெட்.

விக்ரம் மதனை பார்த்து ஒரு நமட்டு சிரிப்பு சிரித்து விட்டு உரையைத் தொடங்கினான்.'

'நம்ப பாரம்பரியத்தில் இருக்கின்ற மஞ்சள் இஞ்சி வெங்காயம் எல்லாவற்றிலும் எதிர்ப்பு சக்தி இருக்கு; மஞ்சளில் ஆன்டிசெப்டிக், ஆன்டி-பாக்டீரியல் ப்ராப்பர்ட்டீஸ் இருக்கு; இஞ்சி நம்ம எதிர்ப்பு சக்தியை ஊக்கப்படுத்தும்; அண்டிஆக்சிடன்ட் புரோபர்டீஸ் இருக்கு; பூண்டில் கால்சியம் பொட்டாசியம் சல்பர் ப்ராப்பர்ட்டீஸ் இருக்கு' என விக்ரம் கூறினான்.

மதனும் செந்திலும் அப்படியே உறைந்து போய்விட்டனர் ஏனென்றால் விக்ரம் சொன்னது எல்லாமே மதன் செந்திலிடம் பேசியது; அப்படியே ஒரு வார்த்தை கூட மாறவில்லை.

'பார்த்தாயா கஷ்டப்பட்டு நீ கூகுளில் சுட்டதை இவன் உன் கிட்ட இருந்து சுட்டு இப்ப வாந்தி எடுத்து கிட்டு இருக்கான்' என செந்தில் கூறினான்.

எந்த சலனமும் இல்லாமல் அமைதியாக இருந்தான் மதன் . விக்ரம் தொடர்ந்து கருத்துக்களை கூறிக் கொண்டிருந்தான்.

'மஞ்சள், இஞ்சி, பூண்டு இந்த மாதிரி இன்னும் சில பொருட்கள் சரியான அளவில் சேர்த்து கலந்து என விக்ரம் கூறும்போது செந்தில் இடைமறித்து' ஆமா எல்லாத்தையும் ஒண்ணா கலந்து உருட்டி லேகியம் செஞ்சி அம்மா பாருங்க ஐயா பாருங்க இந்த லேகியம் நாற்பது நாள் சாப்பிட்டு வந்தீங்கனா உங்க உடலை இருக்க எல்லா பிரச்சினையும் சரியாகிவிடும் என விற்கப் போறியா விக்ரம்' என கிண்டல் அடித்தான் செந்தில் அனைவரும் சிரித்து விட்டனர்.

எல்லோரும் அமைதியாக இருங்கள் நீங்க தொடருங்க விக்ரம் என கூறினார் ஹெட்.
விக்ரம் பிரசன்டேஷன் முடித்தவுடன் அனைவரும் பலமாக கைதட்டினர்; விக்ரமுக்கு தான் கிடைக்கும் என எல்லாம் தங்களுக்குள்ளே பேசிக் கொண்டனர்; இன்னும் ஒரு சிலர் பிரசன்டேஷன் செய்து முடித்தனர்.

'என்ன பிரியா யு ஹவ் ஐடியா' என கேட்டார் ஹெட்

'இப்ப பாரேன் பிரியா எந்த ஐடியா சொன்னாலும் சொல்ல வில்லை என்றாலும் வெரி நைஸ் ஐடியா என்று ஹெட் வழிவான்' என செந்தில் மதனிடம் கிசுகிசுத்தான்.

'சார் இப்ப இருக்க சுச்சுவேஷன்ல நாம இந்த ப்ராஜெக்ட் எப்படியாவது சக்சஸ் செய்தாக வேண்டும்' என்றாள்.

' பிரியா வாவ் வெரி குட் வெரி நைஸ் ஐடியா' என சிரித்தவாறே சொன்னார்ஹெட்.

' நான் சொல்லலை எப்படி வழிகிறான் பாரு...' என கடுப்பானான் செந்தில்.' ஆனா பிரியாவுக்கு உன் மேல தான் ஒரு கண்ணு' என மதனை இடித்தவாறே செந்தில் சொன்னான்.

'அதெல்லாம் இல்லை எப்படி சொல்லுற'

'ஆமா அவ உன்ன பார்த்து சிரிக்கிறதும் உனக்கு அடிக்கடி லஞ்ச்

கொண்டுவந்து தருவதும் உனக்கு மட்டும் ஆல் த பெஸ்ட் சொல்றதும்

ஒன்னும் சரி படல; அத வச்சு தான் சொல்லுறேன் மதன்' என்றான் செந்தில்.

'என்னப்பா மதன் நீ இன்னும் பிரசன்டேஷன் பண்ணலையா' எனக்கேட்டார் ஹெட்.

'விக்ரம் சொன்ன ஐடியாவில் எனக்கு மாற்று கருத்து இருக்கு சார் இந்த மஞ்சள்,
பூண்டு, இஞ்சி எல்லாம் நம்ம பாரம்பரியம் தான் நல்லதுதான் ஆனால் அதை ஏன் மக்கள் நம்ம கிட்ட வாங்கணும் அதை நேரா காய்கறி கடையில வாங்கிப்பாங்களே? எதிர்ப்பு சக்தி வெறும் ஏதோ ஒரு பவுடர் மட்டும் சாப்பிட்டுட்டு வர்றதில்லை; நம்ம வாழ்க்கை முறை, உணவு, உடற்பயிற்சி, உறக்கம், மன அழுத்தம் எல்லாம் சேர்ந்தது தான்'தெளிவாக சொன்னான் மதன்.

'அப்போ இந்த ப்ராஜெக்ட் வேஸ்ட் என சொல்லறியா' கடுப்பானான் விக்ரம்.

'சொல்லுங்க... மதன் உங்களுக்கு வேற ஏதாவது நல்ல ஐடியா இருக்கா' என்றார் ஹெட்.

'அவன் எப்படி சொல்லுவான் அதான் எல்லாம் விக்ரம் சொல்லிட்டானே முனகினான் செந்தில்.

அனைவரும் மதன் என்ன யோசனை சொல்ல போகிறான் என ஆவலாக அவனையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

எதிர்ப்பு சக்தி வளரும்.......

please share your comments here

 
Last edited:

Jeyalakshmiabi

Member
Vannangal Writer
Messages
22
Reaction score
32
Points
13
எதிர்ப்பு சக்தி 3

அனைவரும் மதன் என்ன ஐடியா சொல்லப் போகிறான் என எதிர்பார்த்துக் கொண்டிருக்க 'என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு நான் சொல்லலாமா?' என செந்தில் கேட்டான்.

சொல்லுங்க என வேகமாக தலையை அசைத்தார் ஹெட்.

' நீ கவலைப்படாதே மதன்; இப்ப எப்படி சமாளிக்கிறேன் பாரு' என சீரியசாக ஐடியா சொல்ல ஆரம்பித்தான் செந்தில்.

'அந்த காலத்தில் சித்தர்கள் எப்படி அத்தனை வருடம் உயிர் வாழ்ந்தாங்க; அதன்

சக்தி, மருத்துவ ரகசியம், வலிமை, ஆரோக்கியம் எல்லாம் அவங்க மூலிகையில

இருக்கு; இன்னும் அந்த சித்தர்கள் தலைமுறை வாழ்ந்துட்டு தான் இருக்காங்க அவர்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து அவர் உடலில் உள்ள ஜீன் மெமரியை தூண்டுவதன் மூலம் அந்த மூலிகை ரகசியத்தை தெரிஞ்சுகிட்டு அதை மூலப் பொருளாக வைத்து நாம ப்ராஜெக்ட் சக்சஸ் பண்ணலாம் சார்' என்றான் செந்தில்.

'அவர்கள் இப்ப எங்க இருக்காங்க நம்மளுக்கு கோவாப்ரெட் பண்ணுவாங்களா... வருவாங்களா..' என கேட்டார் ஹெட்.

அதுக்கு சூரியா ஒத்துக்கணுமே என முனகினான் செந்தில்.சூர்யாவா... இவன் ஏழாம் அறிவு படத்தை ஓட்டி காமிச்சுக்கிட்டு இருக்கான்' என சிரித்துக்கொண்டே கூறினாள் பிரியா.

'இடியட் டோன்ட் வேஸ்ட் மை டைம்' என கோபமாகக் கூறினார் ஹெட்.

'அவங்க கிட்ட ஏதாவது ஐடியா இருந்தா தான சொல்லுவாங்க... டைம் தான் வேஸ்ட்' என தெனாவட்டாக சொன்னான் விக்ரம்.

'மதன் ஏதாவது ஐடியா உங்ககிட்ட இருக்கா இல்லையா.. எல்லாருடைய டைமும்

வேஸ்ட் ஆகுது இல்ல' என்றார் ஹெட்.

மதன் ஒரு புது உத்வேகத்துடன் எழுந்து தனது உரையை தொடங்கினான்.
நம்ம உடம்புல கிட்டத்தட்ட 40 ட்ரில்லியன் நுண்ணுயிரிகள் இருக்கு பெரும்பாலானவை
நம்ம வயிற்றிலிருக்கும் குடல் பகுதியில் தான் இருக்கு அதை மைக்ரோ பயோடேட்டா என்று சொல்லுவாங்க; குடல் பகுதியில் இருக்க நுண்ணுயிர்கள் நம் இரத்தத்தில் இருக்கிற எதிர்ப்பு சக்தி செல்கள் நியூட்ரோபில்ஸ் உடன் தொடர்புடையது.நிறைய காய்கறி பருப்பு வகைகள் கொட்டைகள் பழங்கள் பெர்மெண்ட்டேட் உணவு லைக் யோகர்ட்ஆகியவற்றை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது ஆரோக்கியமான மைக்ரோ பையோடவுக்கு வழிவகுக்கும். யோகட்ல இருக்குற ப்ரோபயாடிக்
நுண்ணுயிரிகள் நம்ம இம்மியுன் சிஸ்டத்தை சப்போர்ட் செய்றதுக்கு
ஹெல்ப்பா இருக்கும் நம்ம செல்கள் ஓட ஆக்டிவிட்டிய இன்க்ரீஸ் செய்யும்.
யோகட் செய்றதுக்கு பால், தேங்காய் மாதிரி பொருட்களை பாக்டீரியா மூலம் பெர்மெண்ட்டேட் செய்யறாங்க அதுல ப்ரோபயாடிக் இருக்கு அது நம்ம குடல்ல இருக்க நுண்ணுயிரிகளுக்கு நல்லது. யோகார்ட் விட்டமின் சி விட்டமின் ஈ மற்றும் இன்னும் சில மூலப் பொருட்களை வைத்து நாம எதிர்ப்பு சக்தி டானிக் இல்ல இம்மியுன் பூஸ்டர் தயாரிக்கலாம்'என சொல்லி தனது பிரசெண்டேஷன் முடித்தான் மதன். எல்லோரும் அவன் கருத்தை ஆதரித்தனர்.

'நான் ஒரு முடிவு பண்ணிட்டேன் இந்த ப்ராஜெக்ட் மதன் எடுத்து செய்தால் நல்லா இருக்கும் என்றார் ஹெட். அனைவரும் கைதட்டினர் கான்கிராட்ஸ் என அனைவரும் அவனை வாழ்த்தினர்.'ஆனா மதன் கூட அசிஸ்டன்ட்டா விக்ரம்,செந்தில் மற்றும் பிரியா இருப்பாங்க என்ன விக்ரம் உங்களுக்கு இதுல எந்த பிராபளமும் இல்லைல என்றார் ஹெட்.

'நோ ப்ரோப்லேம் ஐ வில் டூ இட்' என அரை மனதுடன் சொன்னான் விக்ரம்.

கைகுலுக்கிய வாரே 'ஓகே மதன் வாழ்த்துக்கள் ப்ராஜெக்ட்க்கு தேவையான கெமிக்கல்ஸ் மெட்டீரியல்ஸ் என்ன வேணாலும் பிரியாவை காண்டாக்ட் பண்ணுங்க இந்த மந் எண்டுக்குள்ள ப்ராஜெக்ட் பண்ட் கொண்டுவந்துவிடும்; ஓகேவா' என்றார் ஹெட்.

'யா தேங்க்யூ சார் வி வில் டு தி பெஸ்ட் என மகிழ்ச்சியாக கூறினான் மதன்

மீட்டிங் முடிந்து அனைவரும் அவர்களது டேபிளுக்கு சென்றனர். எங்க
காணமே காணமே என செந்தில் விக்ரம் அமர்ந்த நாற்காலிக்கு கீழே தேடிக்கொண்டிருந்தான்.

'என்ன செந்தில் என்ன தேடுற' என கேட்டான் விக்ரம். 'அது ஒன்னுமில்லை ஒரு திருட்டு நரிமூக்கு இன்னிக்கு மீட்டிங்கில் உடைஞ்சிடுச்சு அதை தான் தேடுறேன் என்றான்; குள்ளநரி திருடக்கூடாது.. குள்ளநரி திருடக்கூடாது... குள்ளநரி திருடவே கூடாது என மதனிடம் டோரா நாம பிராஜக்ட்டை திருட விடாம தடுத்து விட்டோடும் என
சொல்லி சிரித்தான் செந்தில்.விக்ரம் வேகமாக கோபத்துடன் அந்த இடத்தை விட்டுச் சென்றான்.

பிரியா மிகுந்த சந்தோஷத்துடன் மதன் அருகே வந்து வாழ்த்துக்கள் என கை குலுக்கினாள்.

சிரித்தவாறே நன்றி என்றான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தவாரே

கொஞ்ச நேரம் கைகுலுக்கிய படி இருந்தனர்.

அட போதும் விடுங்கப்பா ஓவராக குலுக்கனா கையில இருக்கிற ரேகை எல்லாம் அழிஞ்சிட போகுது என கிண்டல் செய்தான் செந்தில்.

சிவ பூஜையில் கரடி மாதிரி கரெக்டா வந்து விட்டான் பாரு மெதுவாக முனுமுனுத்தாள்
பிரியா. சுயநினைவுக்கு வந்த மதன் வேகமாக கையை எடுத்தான்.

'அப்புறம் ப்ராஜெக்ட் எல்லாம் கிடைச்சிருக்கு ட்ரீட் இல்லையா என கேட்டாள் பிரியா. இன்னைக்கு நைட் டின்னர் ஓகேவா என்றான் மதன். 'ஓகே நான் உன்கிட்ட கொஞ்சம் பேச வேண்டி இருக்கு அப்போ பேசலாம்' என்றாள் பிரியா.

அன்றிரவு செந்திலும் மதனும் பிரியாவிற்காக ஹோட்டலில்நாற்காலியில் அமர்ந்தபடி காத்துக்கொண்டிருந்தனர்.

'என்ன மதன் பிரியா வர லேட் ஆகும் போல நாம வேணா ஏதாவது ஆர்டர் செய்யலாமா ரொம்ப பசிக்குது என வயிற்ரை தடவினான்' செந்தில்.

'அலையாதே இரு பிரியா வந்து விடட்டும் சரி அப்படி என்ன என்கிட்ட பேசணும்னு சொல்லி இருப்பா என சந்தேகமாக கேட்டான் மதன்.

'ஒரு வயசு பொண்ணு ஒரு வயசு பையன் கிட்ட என்ன பேசணும்னு கேப்பா கண்டிப்பா
அது அவ காதல பத்தி தான் இருக்கும்' என்றான் செந்தில்.

'அவ காதல பத்தி நம்மகிட்ட எதுக்கு பேசணும் ப்ரொஜெக்ட பத்தின கூட ஓகே' என மதன் சொன்னான் ஒன்றும் புரியாதவனாய்.

'நீ ரிஸர்ச்ல வேணா பெரிய பருப்பா இருக்கலாம் ஆனா காதல் விசயத்துல மக்கா இருக்கியே' என தலையில் அடித்துக்கொண்டார் செந்தில்.

டேய் பிரியா வந்துட்டா என செய்கை செய்தான்.பிரியா வெள்ளை நிற சுடிதாரில் ஒரு தேவதை போல வந்தாள் என்றுமில்லாத ஒரு கூடுதல் அழகு அவளிடம் இன்று கண்டான் மதன் .

'யு லுக் வெரி பியூட்டிபுல் டுடே.. 'என்றான் மதன்.

'தேங்க்யூ ரொம்ப நேரமா வெயிட் செய்றீங்களா சாரி....சாப்பிட ஏதாவது ஆர்டர் செஞ்சீங்களா என்றாள் பிரியா.

'எங்க பிரியா வந்ததுக்கு அப்புறமா பண்ணிக்கலாம் என ஆர்டர் போட்டுடான் என்றான் செந்தில். அவனை பார்த்து அமைதியாக முறைத்தான் மதன். சிக்கன் நூடுல்ஸ், சிக்கன் ரைஸ் ஜூஸ் என பலவகையாக ஆர்டர் செய்தார்கள்.

மதன் உன்கிட்ட கொஞ்சம் பேசணும் என தயங்கி தயங்கி ஆரம்பித்தாள் பிரியா.

' எதா இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு பேசலாமே ரொம்ப பசிக்குது' என்றான் செந்தில்.மதன் முறைக்கவே புரியுது... புரியுது... நான் பக்கத்து டேபிள்ல போய் சாப்பிட்டுட்டு இருக்கேன் நீங்க பொறுமையாபேசுங்கடா' என சொல்லிவிட்டு ஆர்டர் பண்ண முக்கால்வாசி பிளேட்டை எடுத்துக்கொண்டு 'அப்படி பார்க்காதேடா நீங்க பேசிட்டு இருக்குற வரைக்கும் எனக்கு டைம் பாஸாக வேணாமா' என சாப்பிட்டுக்கொண்டே வேற டேபிளுக்குப் போனான் செந்தில்.

'அவன விடுங்க அவன் அப்படித்தான் சாரி உங்களுக்கு வேற ஏதாவது ஆர்டர் பண்ணட்டுமா' என்றான் மதன்.

'நோ தேங்க்ஸ் நான் உங்ககிட்ட.. உங்களை... ஐ' என ஏதேதோ உளறினாள் பிரியா.

'ஒன்னும் பதட்டப்பட வேண்டாம் நான் ஏதும் நினைச்சிக்க மாட்டேன் சும்மா
சொல்லுங்க' என்றான்.

அது வந்து இந்தாங்க இந்த லெட்டர்ல என் மனசுல இருக்குற எல்லாத்தையும் எழுதி இருக்கிறேன் என ஒரு லெட்டரை நீட்டிக்கொண்டே அது வந்து.. "ஐ லவ் யூ "என வேகமாக சொல்லிவிட்டு கண்களை இறுக்கி மூடிக் கொண்டாள் அவள்.
இது சொல்லவா இவ்வளவு கஷ்டப்பட்ட என்றான். அப்போ உங்களுக்கு ஓகேவா
என்றாள்.

'லவ் தானே பண்ணலாம் நோ ப்ராப்ளம் அப்புறம் கொஞ்சம் ப்ரொஜெக்ட்ல நல்லா
கான்சன்ட்ரேசன் பண்ணனும்' என ப்ராஜெக்ட் பற்றி பேச ஆரம்பித்தான் மதன்.
அரை மணி நேரம் இருக்கும் பேசிக்கொண்டே இருந்தான் ஒரு கட்டத்தில் கோபமாக
எழுந்து ' சரி நான் வரேன்' என கிளம்பினாள்.

ஒரு நிமிஷம் என்றான் .சொல்லுங்க என்றவள் இப்பவாது ரொமான்டிக்கா ஏதாவது பேசுவான் என எதிர்பார்த்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

'எதுல வந்த டூவீலரில் தானே பாத்து பத்திரமா போ' என்றான். யாராவது பார்ப்பார்களா என சுற்றியும் பார்த்துவிட்டு அவன் அருகில் வந்து அவன் கன்னத்தில் ஒரு முத்தம் இட்டுவிட்டு கூறினாள் நீ சரியான இடியட் மதன் குட்பாய் என்கிட்ட இனி நீ பேசாத போடா என கோபமாக கூறிவிட்டு சென்றாள்.

'என்னடா லவ் ஓகே ஆயிடுச்சு போல' என மதனை கட்டி பிடித்தவாறு
வாழ்த்தினான் செந்தில்.

ஒன்றும் புரியாமல் தன் கன்னத்தை தடவி சிறு புன்னகையுடன் அவள் போவதை பார்த்துக் கொண்டே சொன்னான் கிஸ்ஸும் பண்ணிட்டு கூடவே திட்டிடும்
போறாளே' என குழம்பினான் மதன்.

என்னதான் நடந்துச்சு என செந்தில் கேட்க நடந்த அனைத்தையும் சின்னபிள்ளை வாய்பாடு ஒப்பிப்பது போல கூறினான் மதன்.

'போடா உன் கன்னத்துல அடிச்சுட்டு போகாமல் முத்தம் கொடுத்துட்டு போறா பாரு அவளை சொல்லணும்... ஒரு பொண்ணு அவளே வலிய வந்து வெக்கத்தை விட்டு ஐ லவ் யூ னு சொன்னா... ஐ லவ் யூ டு இல்ல சேம் டு யு என்று கூட சொல்லாமல் ப்ரொஜெக்ட பத்தி பேசி இருக்க உன்ன பெத்தாங்களா இல்ல செஞ்சாங்களா என திட்டினான் செந்தில்.

'அவளுக்கு பிடிச்சிருந்தா அப்புறம் ஏன்டா திட்டிட்டு போறா என்றான் மதன்.
அதுவா அவ உன்னை எவ்வளவு லவ் பண்றேன்னு அவள் முத்தத்தால சொல்லிட்டு அது உனக்கு புரியலையா மரமண்டை உனக்கு சூடு சொரணை இல்லையா என நினைத்து திட்டிட்டு போயிருக்கா ஒன்னும் விளங்கல இல்ல...' என்றான் செந்தில்.

ஆமாடா என மதன் திருதிருவென விழித்தான். 'இனிமே அப்படித்தான் உனக்கு விக்ரம்
கூட ஆபீஸ் ப்ராஜெக்ட், பிரியா கூட லவ் ப்ராஜெக்ட் இருக்கு. ரெண்டு பேர் கிட்டேயும்
மாட்டிகிட்டு முழிக்க போற என செந்தில் சொல்லி சிரித்தான். மதன் எப்படி
இருவரையும் சமாளிக்க போறான் என போக போக பார்ப்போம்.

எதிர்ப்பு சக்தி வளரும்....
 
Last edited:

Jeyalakshmiabi

Member
Vannangal Writer
Messages
22
Reaction score
32
Points
13
எதிர்ப்பு சக்தி 4

இரவு பொழுது நீண்டு கொண்டிருந்தது. மதனும் செந்திலும் சாப்பிட்டு முடித்துவிட்டு அவர்கள் தங்கும் இடத்திற்கு சென்றனர். மதனுக்கு பிரியா தன் காதலை சொன்னதே மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்தது.

' என்னடா மதன் அப்படி என்ன யோசிச்சிட்டு இருக்க பிரியாவை பத்தி தானே' என்றான் செந்தில்.

ஆமாம்... இல்லை... அப்படி எல்லாம் இல்லை என மாற்றி பேசினான் மதன்.
'சரி நீ பிரியாவை லவ் பண்றியா இல்லையா..' என சந்தேகமாக கேட்டான் செந்தில். தெரியல டா என்றான் மதன்.

'ஒன்னு அவள் மேல காதல் இருக்குன்னு சொல்லு. இல்லைன்னா இல்லைன்னு சொல்லு அது என்ன ரெண்டு இல்லாம தெரியலைன்னு சொல்லுற' என்றான் செந்தில்.

' அது இல்லடா செந்தில் நான் சின்ன வயசா இருக்கும்போதே என் அப்பா எங்களை விட்டுட்டு ஓடிப்போயிட்டார். அம்மாவும் அந்த சோகத்திலே கொஞ்ச நாள்ல இறந்துட்டாங்க; அப்புறம் என் சொந்தக்காரங்க யாரும் என்னை பாத்துக்க விரும்பல. என் மாமா என்னை ஹாஸ்டல்ல சேத்துட்டாங்க. சின்ன வயசுல இருந்தே அன்பு அக்கறை எல்லாம் இல்லாதவனாய் எந்த ஆசை பாசம் இல்லாத மனிதனாய் வளர்ந்தேன். படிப்பிலேயே முழு கவனத்தை செலுத்தினேன். என்னோட ரிசர்ச் லேப் தான் என் முதல் காதலா இருந்துச்சு. இப்ப புதுசா பிரியா கிட்ட இருந்து கிடைக்கிற பாசம் எவ்வளவு நாளைக்கு நிலைக்கும்னு தெரியல... ஆனா அவ தன் காதலை என்கிட்ட சொல்லும்போது என்னால மறுக்கவும் முடியல' என குழப்பமான மன நிலையுடன் சொன்னான் மதன்.
' ரொம்ப யோசிச்சு குழப்பிக்காதடா பிரியா ரொம்ப நல்ல பொண்ணு உன்னை பிரியா புரிஞ்சுப்பா கவலை படாதே அவ கூட சந்தோஷமா வாழ பாரு சரியா...' என்றான்.

சரி என தலையை ஆட்டியபடி யோசித்துக் கொண்டே தனது சட்டையை கழட்டி ஹாங்கரில் மாட்டினான் மதன். ஒரு மடித்த காகிதம் சட்டையில் இருந்து கீழே விழுந்தது. 'என்ன... அட இது பிரியா கொடுத்தது இல்ல பாக்க மறந்துட்டேன்' என அந்த லெட்டரை படிக்க ஆரம்பித்தான் மதன்.

என் அன்பு காதலா உன்னை எனக்கு எவ்வளவு பிடிக்கும்னு வார்த்தையால சொல்ல முடியல உன்னை பார்த்த முதல் நாளே என் மனசை உன்கிட்ட பறிகொடுத்து விட்டேன். உன்னோட சின்சியாரிட்டியும், யாரையும் கண்டுக்காத திமிரும், எளிமையாக இருக்கிறதும் தான் என்னை கவர்ந்தது. உன்கிட்ட எவ்வளவு நாள் என் காதலை சொல்ல முயற்சி செய்திருக்கிறேன் ஆனால் முடியலை காலையில போன்ல உன் போட்டோ பார்த்து தான் விழிப்பேன். அப்புறம் ஆபீஸில் எப்பவும் என் கண்கள் உன்னை தான் தேடி அலையும். இரவு தூங்கும் போதும் உன் போட்டோ பார்த்துட்டு இருப்பேன் இப்படி நினைவிலும் கனவிலும் நீ மனதிலும் நீ என் உயிர் சுவாசம் என எங்கும் நீ தான் நிறைந்து இருக்க. நீ என்ன மறந்துட்டா அது எனக்கு தாங்க முடியாத வலியாக இருந்தாலும் உன்னை என்னால் மறுக்கவோ மறக்கவோ முடியாது மதன்.

இப்படிக்கு,
உன் அன்புள்ள பிரியா.

லெட்டரை படித்து முடித்ததும் கண்களில் இருந்து லேசாக கண்ணீர் எட்டி பார்த்தது. அதை வெளிக்காட்டாமல் துடைத்துக்கொண்டு பிரியாவிற்கு போன் செய்தான். யார் இந்த நேரத்துல போன் செய்கிறார்கள் என பிரியா போனை பார்த்ததும் அவளால் சந்தோசத்தை அடக்கமுடியவில்லை வேகமாக அட்டன் செய்தாள். 'ஹலோ பிரியா' என்றான். 'ஹலோ சொல்லுங்க மதன்' 'அதுவந்து நீ வீட்டுக்கு பத்திரமா போயிட்டியான்னு கேக்க தான் போன் செய்தேன்' என்றான். 'அதுக்கு கூட உங்களுக்கு நேரம் இருக்கா' என்றாள். 'உன் கிட்ட பேசுவதை விட எனக்கு என்ன பெரிய வேலை இருக்கப் போகுது' என்றான் மதன். 'அப்படியாடா மதன் செல்லம்... ஐ லவ் யூ சோ மச்' என்றாள். ஐ லவ் யூ என சொன்னான். 'ஓகே நாளைக்கு காலையில சீக்கிரம் வந்துடு' என்றான். சீக்கிரமா... எனி ஸ்பெஷல் என ஆர்வமாக கேட்டாள். 'மறந்துட்டியா நாளையிலிருந்து நம்ம புது ப்ராஜெக்ட் வொர்க் ஸ்டார்ட் ஆகுது.அதுக்கு நிறைய கெமிக்கல் மெட்டீரியல்ஸ் எல்லாம் பிரிப்பேர் செய்ய வேண்டி இருக்கு' என்றான். 'இப்பவும் ஒர்க் பத்தி தான் பேசணுமா...' என்றாள் பிரியா கடுப்புடன். சரி விடு சரி ஓகே பாய் பாய் குட் நைட் என்றான். 'அதுக்குள்ளவா.... எனக்கு தூக்கமே வரல; நாம ஏதாவது பேசலாமே' என்றாள்.

' தூக்கம் வரலையா... இப்போ பத்து மணி ஆகுது. சரியா தூங்கலைனா ஹார்மோன் இம்பேலன்ஸ் ஆகும்.கார்டிசால் ஹார்மோன் அதிகமாக சுரப்பதால் நமக்கு உடல் பருமன் வரும் அதனால் உயர் ரத்த அழுத்தம் நீரிழிவு நோய் வரும். அப்புறம் ஹார்ட் பிராப்ளம் வரும்' என லெச்சர் ஆரம்பித்தான் மதன்.

ஐயா சாமி போதும் போனை வைக்கிறேன் என கட் செய்தாள் . ஹலோ பிரியா முழுசா சொல்லி முடிக்கிறதுக்குள்ள போன் கட் பண்ணிட்டா லே என உச்சி கொட்டினான். 'ஆமா இப்படி லெச்சர் எடுத்ததா யார் தான் கடுப்பாக மாட்டாங்க..' என்றான் செந்தில்.

'ஏய் நான் போன் பேசுவதை ஒட்டுக் கேட்கிறயாடா... 'என திட்டினான் மதன். 'ஆமா நீ பேசுறத வேற ஓட்டு கேக்குறாங்க... லவ்வர் கிட்ட போன்ல விடிய விடிய ரொமாண்டிக்கா பேசுவதை பார்த்திருக்கிறேன் ஆனா இப்படி கிளாஸ் எடுக்கிறத நான் இப்பதான் பாக்குறேன் பாரு காது கிட்ட ரத்தமே வந்திருச்சு' என காதோரம் தொட்டுப் பார்த்துக்கொண்டான் செந்தில்.

காலைப்பொழுது மலர்ந்தது இன்றைய நாள் இனிய நாளாக இருக்க வேண்டும் என தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டு தயாராகி வேலைக்கு சென்றான் மதன். ஆபீஸுக்கு நுழையும் முன்னே சிரித்த முகத்துடன் பிரியா மதனை பார்த்து 'ஹாய் மதன் குட் மார்னிங்' என உற்சாகத்துடன் கையசைத்து காட்டினாள். 'என்ன பிரியா இன்னைக்கு இவ்வளவு நேரமா வந்துட்ட' என ஆச்சரியமாகக் கேட்டான் மதன். 'நீ தான் சீக்கிரம் வர சொன்ன அப்புறம் கேட்காமல் இருக்க முடியுமா அதான் நேரமா அலாரம் வைத்து எழுந்து ரெடியாகி வந்தேன்' என்றாள். சரி போய் சீக்கிரமா ப்ரொஜெக்டர் ஸ்டார்ட் பண்ணலாம் என்றான். 'அதுக்குள்ளவா நாம கொஞ்ச நேரம் நம்ம லவ் ப்ராஜெக்ட் பத்தி டிஸ்கஸ் பண்ணலாமா' என வெக்கபட்டு கொண்டு சொன்னாள்.

யார் கிட்ட பேசிட்டு இருக்க என சிரித்தான் செந்தில். நீயா மதன் எங்கே என்றாள். அவன் போய் அரை மணி நேரமாகுது போன வேகத்தில இந்நேரம் ஒர்க் ஸ்டார்ட் பண்ணி இருப்பான் என்றான் செந்தில். இந்த கரடி முன்னாடி என்னை இப்படி அவமானம் படுத்திட்டு போய் விட்டானே என கடுப்பானாள் பிரியா.

எதையும் கண்டுக்காமல் வேலையை செய்துக்கொண்டிருந்தான் மதன். இப்போ என்ன செய்யலாம் என மதனை பார்த்தவாறே யோசித்தாள் பிரியா. விக்ரம் லேபிற்குள் நுழைந்தான். ஹலோ விக்ரம் என அவனிடம் பேச்சு கொடுத்தாள் இருவரும் சத்தமாக சிரித்தபடி பேசிக்கொண்டிருந்தனர். கடுப்பான மதன் என்ன அங்கே ஒரே சிரிப்பும் கேலியுமா சத்தம் என்றான் மதன்.

'மதன் நான் விக்ரம் கிட்ட பேசினா உங்களுக்கு என்னவாம்...' என்றாள். 'இப்பதான் புது ப்ராஜெக்ட் தொடங்கி இருக்கு சின்சியரா ஒர்க் செய்றவங்க மட்டும் லேப்ல இருங்க. உங்க கேலி சிரிப்பு எல்லாம் ஆபீஸ் முடிஞ்சதுக்கு அப்புறமா வச்சுக்கோங்க. ஆல் ஆஃ யூ கெட் அவுட்' என கத்தினான். மதன் பிரியா முன்னாடி சீன் போடுறான் பாரு என மனதுக்குள் திட்டிக்கொண்டே வெளியேறினான் விக்ரம்.

'நீ என்னடா செந்தில் தலையில் அடிச்சுக்கிற நாம இப்ப எந்த தொந்தரவும் இல்லாம வொர்க் பண்ணலாம்' என்றான் மதன்.
' டேய் நீ நெஜமாவே டியூப்லைட் தாண்டா' என பல்லை கடித்துக்கொண்டே சொன்னான் செந்தில்.
ஏன்டா சம்பந்தமே இல்லாம திட்டுற என்றான் மதன். 'டேய் நீ வந்ததில் இருந்து பிரியாவை கண்டுக்க மாட்டுகிற அதனால அவ விக்ரம் கூட ஜாலியா பேசி உன்ன ஜல்லஸ் ஆக வைக்கலாம்னு பார்த்தா ஆனா நீ அவர்களை வெளியில போய் பேச சொல்லுற விளையாட்டா பேசப் போகி அப்புறம் அவ நிஜமா விக்ரம் கூட ஜோடி சேர்ந்துட்டா என்னடா பண்ணுவ' என திட்டினான் செந்தில்.

ஓ...கதை அப்படி போகுதா இப்ப நான் என்ன செய்யட்டும் என பால் வழிந்த முகத்துடன் கேட்டான் மதன். ஆமா எல்லாம் நானே சொல்லனுமா போய் முதல்ல அவ கிட்ட பேசு டா என்றான் செந்தில்.

பிரியா அருகில் சென்ற மதன் திட்டிட்டேனு கோவமா சாரி என கெஞ்சினான். பிரியா வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள். இங்க பாரு பிரியா என அவளை திருப்பி கையை பிடித்தான் பிரியாவிற்கு என்னவோ போலிருந்தது. சாரி டி என்றான். என்னது டீயா .ஆமா நீ மட்டும் என்ன போடா வாடானு தான கூப்பிடுற என்றான். பிராஜக்ட் ஹெட் வரவே இருவரும் கையை சட்டுனு எடுத்துக்கொண்டனர்.

என்ன மதன் வொர்க் ஸ்டார்ட் ஆயிடுச்சா இன்னைக்கு நம்ம புது ப்ராஜெக்ட் கொடுத்த அந்த புரொடக்ஷன் கம்பெனி எம்டி விசிட் பண்ண வராங்க. அவர் ஓகே சொன்னா அப்புறம் தான் பிராஜக்ட் பண்ட் அலர்ட் செய்வாங்களாம். சோ...பி ரெடி மதன் என்றார் ஹெட். ஓகே சார் வி வில் டு தீ பெஸ்ட் என்றான் மதன்.

ஹெட் சொன்னதால எல்லாத்தையும் கரெக்டா ஓர்கனைஸ் செய்து வைத்தான் மதன். 'அங்கே வெள்ளை சேட்டு மாதிரி ஒருத்தர் வரார் பாரு அவரு தான் அந்த புரொடக்ஷன் கம்பெனி எம்டியாம் என்றான் செந்தில்.ஓ... நோ கதை முடிஞ்சது என முகத்தை திருப்பி கொண்டான் மதன். 'ஏண்டா என்னாச்சு அந்த ஆள பார்த்து நீ ஏன் பயப்படுற... அவர உனக்கு முன்னாடியே தெரியுமா' என்றான் செந்தில்.

வா சொல்றேன் என ஆபீஸ் கேண்டீனுக்கு அழைத்துச் சென்றான் மதன். 'அந்த புரோடக்சன் எம்டி இருக்காரு இல்ல அவனை ஒரு நாள் நான் ஹோட்டல்ல மீட் பண்ணேன்'. 'ஓகே அதனால இப்ப என்ன பிராப்ளம்' என்றான் செந்தில்.

அன்று ஹோட்டலில் என்ன நடந்தது என சொல்ல ஆரம்பித்தான் மதன். பயோ கோட் ப்ராஜெக்ட் விசயமா ஒரு பாரின் சயின்டிஸ்ட் மீட் பண்ண பை ஸ்ட்டார் ஓட்டல்ல வெயிட் பண்ணிட்டு இருந்தேன். அப்போ இந்த புரோடக்சன் எம்டி ஜூஸ் குடித்ததுகிட்டு யார் கிட்டயோ போனில் பேசிக் கொண்டிருந்தார், 'எனக்கு குவாலிட்டி செக் பத்தி எல்லாம் கவலை இல்லை பணம் கொடுத்து சமாளித்து விடுவேன். ப்ராடக்ட் டேஸ்ட் நல்லா இருக்கணும், பேக்கிங் நல்லா இருக்கணும் அதை மட்டும் பார்த்துக்கோங்க குவாலிட்டி ஆரோக்கியம் எல்லாம் இருந்தாலும் இல்லனாலும் நம்ப ப்ராடக்ட் மக்களை போய் சேரனும். நல்லா மார்க்கெட்டிங் பண்ணனும் ஓகே' என்றான்.

' வந்துச்சு பாரு கடுப்பு உங்களுக்கு பொருளோட தரத்தை பற்றியோ மக்களோட ஆரோக்கியத்தை பற்றியோ கவலை இல்லை. உங்களுக்கு உங்க ப்ராடக்ட் நல்லா ரீச் ஆகணும்... லாபம் பாக்கணும் அவ்வளவு தானே' என திட்டினேன். சரி அவ்வளவு தானே சமாளிச்சுக்கலாம் விடு என தோளை தட்டிக் கொடுத்தான் செந்தில்.

இன்னும் பிளாஷ்பேக் முடியல என தொடர்ந்தான் மதன். அதை கேட்க நீ யார் எனக் கேட்டான் அந்த எம்டி. 'சாப்பிடற புட் ப்ராடக்ட்ல பர்மிஷ்ஷபுல் லிமிட்கு அதிகமா அபாயகரமான அளவு கெமிக்கல் கலக்குறீங்க. இதனால் எவ்வளவு பேர் பாதிக்கப்படுகிறார்கள் தெரியுமா...? என்றேன். அதுக்கு அவன் போடா எல்லாம் தெரிஞ்சு தான் வாங்கி சாப்பிடுறாங்க உன்னால முடிஞ்சத நீ பண்ணிக்கோ என்றான். என்னால் கோபத்தை அடக்க முடியல அவன் குடிக்கிற ஜூஸில் ஒரு பவுடர் கலந்து சொன்னேன் இதில் புற்றுநோயை உருவாக்குற கெமிக்கல் கலந்து இருக்கேன் இத நீ குடிச்சு கொஞ்ச நேரம் கழித்து உன் உடம்புல மெதுவா மாற்றம் தெரியும் என ஜூசை அவன் வாயில் வலுக்கட்டாயமாக பிடித்து ஊற்றினேன். வேண்டாம் என்னை விட்டுவிடு என கதறினான். என்ன பயந்திட்டியா... இது வெறும் சுகர் பவுடர் தான் ஹோட்டல்ல வேற என்ன இருக்கும் என்று சிரித்தேன். நான் கொடுத்தது ஏதோ ஒரு கெமிக்கல் கலந்தது என தெரிந்ததும் எப்படி பதறன அது மாதிரி தானே மத்தவங்களுக்கும் இருக்கும்' என்றேன்.

'லூசாடா நீ என கத்தினான். உன்னை மறக்கவோ மன்னிக்கவோ மாட்டேன்டா உன்னை என்ன செய்யிறேன் பாரு' என கத்தினான். 'போடா உன்னால முடிஞ்சத பாத்துக்கோ என தெனாவெட்டாக காலரை தூக்கிவிட்ட படி சொன்னேன்' என நடந்த சம்பவத்தை சொல்லி முடித்தான் மதன்.

'மதன் இந்த சமூக அக்கறை எல்லாம் உனக்கு தேவையாடா இப்ப என்ன செய்வது' என்று யோசித்தான் செந்தில். 'என்னால அந்த எம்டி கூட பிராஜக்ட் பத்தி டிஸ்கஸ் பண்ண முடியாது. அவனுக்கு என்ன நல்லா அடையாளம் தெரியும். அப்புறம் பிராஜக்ட் கையை விட்டு போயிடும் நீதான் எப்படியாவது சமாளிக்கணும்' என செந்திலிடம் வேண்டினான். விக்ரம் சில பேப்பரில் சைன் வாங்குவதற்காக ஹெட்டை பார்க்க சென்றான் அங்கே அவரும் அந்த புரோடக்சன் கம்பனி எம்டியும் பேசிக்கொண்டிருந்தனர். கமிங் விக்ரம் ப்ராஜெக்ட் சம்பந்தமா டிஸ்கஸ் செய்ய போய் மதன கூட்டிட்டு வாங்கனு சொன்னார். விக்ரமுக்கு ஒரே கடுப்பாக இருந்தது தன்னை விட்டு மதனை முன்னிலைப்படுத்துவது பிடிக்கவில்லை.சரி என கூறிவிட்டு மதனை தேடிச் சென்றான் விக்ரம்.

மதனை பார்த்து' ஹெட் ப்ராஜெக்ட் சம்பந்தமாக பேசணுமா புரோடக்சன் கம்பனி எம்டியும் வந்திருக்காங்க. எல்லாத்தையும் மீட்டிங் ஹாலுக்கு வர சொன்னார்' என கூறினான்விக்ரம். விக்ரமிடம் உண்மையை சொல்லவும் முடியாது மீட்டிங்கு போனாலும் பிரச்சனை ஆகிடும் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தான் மதன். மதன் இதை எப்படி சமாளிக்கப் போகிறான் என பார்ப்போம்.
எதிர்ப்பு சக்தி வளரும்
 
Top Bottom