Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


என்னடி மாயாவி நீ - Exclusive Tamil New Novel

Aarthi murugesan

Saha Writer
Team
Messages
29
Reaction score
0
Points
1
என்னடி மாயாவி நீ

அத்தியாயம்: 1

நான்கு கண்ணாடி
சுவர்களுக்குளே நானும்
மெழுகுவர்த்தியும்....
தனிமை தனிமையோ
கொடுமை கொடுமையோ...


வெண்மை நிற நிலா குட்டி குட்டி நட்சத்திரங்களுடன் அமைதியாக ஆட்சி புரிகின்றன இந்த இருள் சூழ்ந்த உலகில். ஐக்கிய
அமெரிக்காவின் வடகிழக்கிலும் வாசிங்க்டன் டிசிக்கும் பாஸ்டனுக்கும் நடுவிலும் ஹட்சன் ஆற்றின் முகத்துவாரத்திலும் அமைந்திருந்தது அந்த அழகான நகரம்.

ஐக்கிய அமெரிக்காவில் மிகக் கூடுதலான மக்கள் தொகையுடைய அந்நகரம், கையைத் தூக்கி வரவேற்பது போல அமைந்திருக்கும் சுதந்திர தேவி சிலையை கொண்டு, ஆங்கிலேயர்களின் கைக்கு குடியேற்றம் மாறும் வரை "நியூ ஆம்ஸ்டர்டாம்" என்ன அழைக்கப்பட்ட நியூ யார்க் நகரம் தான் அந்த நகரம்.

அந்நகரில் நெடுமென வளர்ந்திருக்கும் அப்பார்மெண்டில், நிலவும் அமைதியை குலைக்கும் வண்ணம் போன் அலறியது. அதை உயிர்பித்தவன் மாமா என்ன அழைக்கையில் எதிர்முனையிலிருந்து, 'என்னப்பா எப்படி இருக்க?, ஒழுங்கா சாப்பிடுறீயா?, வேலையெல்லாம் சுமுகம் தானே?(இவரின் கேள்வி, மனம் முழுவதும் பிறந்த மண்ணின் வாசத்தை பரப்ப) என வினவ, அதற்கு விடையளிக்கும் பொருட்டு 'எல்லாமே நலம் தான் மாமா' என கேள்விகளை அடுக்கும் மாமாவிடம் எல்லாவற்றிற்கும் சேர்த்து ஒரே பதிலளித்தான் அந்த வாலிபன்.

அப்புறம் உன் உடம்பு ஆரோக்கியமா தானே உள்ளது? என இவனை அக்கறையோடு வினாவினரிடத்தில் இவனோ பதிலுக்கு ஏதேனும் விசாரிக்கவில்லை...விசா- ரிக்கும் மன நிலையில் இவன் இல்லை என்பதே சரி. சிறிது நேரம் கழித்தே ஆரோக்கியம் தான் மாமா என்றான், அருகிலிருந்த பீர் பாட்டிலயும் சிகரெட்டையும் பார்த்து கொன்டே...

அப்பறம் வர்ஷித் நீ எப்போ ஊருக்கு வருவ, உனக்கு எப்போ கல்யாணம் செய்து பார்ப்பது என எப்போதும் இவனை இம்சிக்கும் கேள்வியை கொடுத்தார் அவனது மாமா. வர்ஷித்தோ இதற்கு கொஞ்சம் நாள் போகட்டும் என சொல்லியே பல மாதங்களை கடத்தினான். இவன் வேலைக்காக இங்கு வந்த ஒரு வருடம் முழுவதும் இவனிடம் அவன் மாமா வழக்கமாக கேட்கும் கேள்வி இதுதான்...

இனிமேலும் இவரிடம் பேசி தள்ளிப்போட முடியாது என தீர்மானித்தவனாக சரி மாமா, நீங்க ஆக வேண்டியதை பாருங்க எனக் கூறியபின் அவனது மாமாவோ இப்போதான் நிம்மதியாக உள்ளது... எங்க நீ கல்யாணமே வேணாம்ணு சொல்லிடுவியோன்னு பயமா இருந்தது எனக் கூறினார். போனை கட் செய்த பிறகு, பெண் பார்ப்பதற்கு ஆரம்பிக்கவேண்டும் என முடிவெடுத்தார்.

வெறுப்பாக அறைக்குள் அமர்ந்து, அலுவலக நண்பன் ஆகாஷ் கூட மதுவருந்த ஆரம்பித்துவிட்டான் வர்ஷித் சோகத்தை மறைப்பதற்கு... மச்சான் ஊரிலிருந்து வந்து இந்த கெட்ட பழக்கத்தை வேற கத்துக்கிட்ட, மாமா கிட்ட கல்யாணத்துக்கு சரினு சொல்ல மாற்ற, எப்போ பாரு சோகமா முகத்த வச்சிக்கிட்டு சுத்துறியே உனக்கு என்னதான் பிரச்சனை என கேட்டான் ஆகாஷ்.

ஆணுக்கே உறிய கம்பிரம் கொண்டு, வெற்று தோளோடு முட்டி வரை டிரௌசர் மட்டுமே அணிந்து முகத்தில் கொள்ளை வாட்டத்து டனும் அமர்ந்திருக்கும் வர்ஷித் நிறைய வற்புறுத்தலுக்கு பிறகே வாயை கட்டவிழ்த்தான் failure என்று...

தெளிவா சொல்லேன்டா என ஆகாஷ் கேட்க, love என சொல்லும்போது மலர்ந்த முகம், failure என சொல்லும்போது வாட்டத்தின் உச்சத்திற்க்கே சென்றது.

நியூ யார்க் சிட்டியை நனைத்த பனி கூட இவன் மனதை குளிருட்டவில்லை போலும் அவ்வளவு கடுமையாக பிரதிபலித்தான் மது அருந்தி கொன்டே...

ஏன்? என்னவானது அந்த பெண்ணுக்கு உன்னை ஏற்க மறுத்தாள் என கேட்ட நண்பனிடம் நான் என் மனசை அவளிடம் சொல்லவில்லை. அவள் எனக்கு கிடைக்கமாட்டாள் என ஏற்கனவே தெரியும் என்ற வர்ஷித் அவள் என்றுமே மாயாவி தான். தனக்கு கிடைக்காத வரம் என நினைத்து மருகிக்கொண்டான்.

சரி மச்சான் கடந்த காலத்தை விட்டுட்டு எதிர்காலத்த நினை. உன் மாமா திருப்திக்காவது அவர் காட்டும் பொன்னை கட்டிக்கோ, இந்த குடிப்பழக்கத்தயெல்லாம் மறந்திடு என்று கூறி போதை மயக்கத்தில் படுக்கையில் சரிந்தான் ஆகாஷ்.

அவனோ பித்து பிடித்தாற்போல அமர்ந்து, அவளை மறக்கத்தானே இந்த பழக்கமெல்லாம் பழகினேன்... வருங்காலத்தில் இந்த பழக்கத்தை கூட மறந்திடுவேன். ஆனால், உன்னிடம் தொலைத்த என் மனதை நான் எப்படி மறப்பது என்னும் சிந்தனையை சந்தித்தான் மனதில்...

வாய்விட்டு சொல்லாத காதல், சொர்க்கத்தை சேராது என்பர். ஆனால், இவனது காதல் திருமணம் சொர்க்கத்திலே நிச்சயிக்கப்பட்டவை என்பதை கடவுள் மட்டுமே அறிந்த விசயமாகும்...

உனது பெயரெழுதி
பக்கத்துல... எனது பெயரை
நானும் எழுதிவச்சேன்...
அதை மழையில் நனையாம
குடை புடிச்சேன்... மழை விட்டு நான் நனஞ்சேன்...

என இவன் அம்மு என்று செல்லப்பெயரிட்டு மனதில் வைத்திருக்கும் காதலியின் பெயரையும் இவனது பெயரையும் சேர்த்து எழுதி பார்த்து, இது கனவில் மட்டுமே சாத்தியம் என இவன் உருகி கசிந்துக்கொண்டிருக்க...
ஆனால் அவளோ...

Heyy பெண்னே என் நெஞ்சில் சாய்ந்து சாய்க்- கிறாய்.... நீ அருகில் புரியாத மாயம் செய்கிறாய்...
என கைபேசி அழைக்க, உயிர்ப்பித்த விஷ்ணு திரையில் கண்ட பெயரைக்கண்டு மகிழ்ச்சி கொண்டான்.

'பட்டு' என அழைத்தவன் மறுமுனையிலிருந்து 'ஏன்டா? உன்னையே ஒருத்தி நினைச்சுகிட்டு இருக்கேன் ஒரு போன் பண்ணியாடா...வர கோபதித்துக்கு உன்கிட்ட பேசக்கூடாதுனு இருந்தேன். ஆனா, இந்த மனசு கேட்க மாட்டிக்குதே என்ன செய்ய... என காய்ச்சு எடுத்தாள்ஆதிகா.
ஏன்டி இரண்டு மூணு நாளைக்கு அப்புறம் பேசுறோம்.. அப்பவும் இப்படி திட்டுறியேடி... இங்க கொஞ்சம் வேலடி அதான் இல்லனா உன்கிட்ட பேசாம எப்படி டி இருப்பேன் என்றான் விஷ்ணு...
சரி சரி நீ வேலைனு சொன்ன ஒரு வாரம் இன்னையோட முடியுதுல...என கேட்டவளுக்கு ஆமாடி, நாளைக்கு சென்னைல இருந்து வந்துருவேன். நீ சொன்ன மாதிரி உங்க வீட்ல வந்து நம்ம கல்யாணத்த பத்தி பேசுறேன் சரியா... இப்போ சந்தோசமாடி என கேட்டவனிடத்தில் ஐ லவ் யூ டா என கூறிவிட்டு சீக்கிரமா வா நாளைக்கு பாப்போம் என கூறி காலை கட் செய்தாள்...
எப்படியோ இன்னும் கொஞ்ச நாளில் அப்பாவோட கம்பெனியை கையில் பொற்றுப்பேற்று கொண்டு செட்டில் ஆகிவிடுவோம். பிறகு, வேறென்ன, நேசித்தவளின் கையை பிடிக்க வேண்டும் என நினைத்தவன் கடவுளே நாளைக்கு எல்லாம் சரியாக நடக்க வேண்டும் என வேண்டிக்கொண்டான் (விதியே சதி செய்ய போவதை யார் அறிவார்) தனது சொந்த ஊரான திருச்சிக்கு புறப்பட்டுவிட்டான்.
அங்கு அவளோ மூச்சு முட்டியபடி போர்வைக்குள் இருந்து வெளியே வந்தாள். ஏனன்றால், வீட்டுக்கு தெரியாமல் காதலிப்பதால் தினமும் இரவு போர்வைக்குள்ளிருந்து தான் போன் பேசுவாள். நாளைக்கு மட்டும் நல்ல விதமாக நடந்தால்,பயந்து போன் பேச வேண்டியது இல்ல என நினைத்து மகிழ்ச்சியில் திளைத்திருந்தவளின் எண்ணம் எல்லாம் விஷுணுவை காதலித்த பள்ளி பருவமே சுற்றியது...
நான்கு வருடத்திற்கு முன்,

காவேரி நதிக்கரையில் அமைந்திருக்கும் மலைக்கோட்டை மாநகரான திருச்சியில் Saraswathi Mandhir Hr Sec School ல் பயின்றனர் விஷ்ணுவும் ஆதிகாவும்...
அழகான நாட்கள்... திரும்ப பெற முடியாத நினைவுகள்... ஒரே மாதிரியான யூனிபார்ம்... இரட்டை ஜடைகள்... ஸ்கூல் பேக்...பேனா புக்ஸ் நோட்... ஆசிரியர்... நன்பேண்டா... கேலி... சிரிப்பு... சாப்பாடு...சண்டை, திட்டு... ரேங்க் கார்டு இன்னும் சொல்லி கொன்டே போகலாம்
அந்த பள்ளியில் விஷ்ணு 12ஆம் வகுப்பும், ஆதிகா 11 ஆம் வகுப்பும் பயின்றனர்.
அந்த வருடம் பள்ளியின் முதல் நாள். ஒரு மாதம் விடுமுறைக்கு பிறகு அனைவரும் சந்தித்தால் அனைவரின் முகத்திலும் ஒரு விதமான மகிழ்ச்சி அப்பட்டமாக வெளியே தெரிந்தது.
முதல் நாள் என்பதால் காலை 9.15க்கு பிரார்த்தனைக்கூடம் நடைபெற்றது. அதில், தேசிய கீதமான 'ஜன கன மன அதி நாயக ஜெயகே' என்னும் பாட்டை அழகாகவும் சரியாகவும் பாடிய 11 ஆம் வகுப்பு மாணவிகள் அடங்கிய குழுவிற்கு கூடத்தின் இறுதியில் பாராட்டு வழங்கப்பட்டது. அதில் ஆதிகாவும் ஒருத்தி.
அப்போது, ஏதோ அந்த வயதிற்குரிய உணர்வுகளினால் அவள் உருட்டி உருட்டி விழிக்கும் கண்களை பார்த்தும் நீண்ட கூந்தலின் அழகை பார்த்தும் அவளின் மேல் ஒரு விதமான ஈர்ப்பு எழுந்தது விஷ்ணுவிற்கு ...
ஆதிகாவிற்கும் இந்த ஈர்ப்பு தோன்றுமா என அடுத்த அத்தியாயத்தில் காண்போம்...
நன்றி !​
 

Aarthi murugesan

Saha Writer
Team
Messages
29
Reaction score
0
Points
1
என்னடி மாயாவி நீ

அத்தியாயம் : 2

விஷ்ணு அந்த நொடியிலிருந்து ஈர்ப்பின் வினையாக அவளை பார்க்கும்போதெல்லாம் கண்கள் கொட்டாமல் பார்ப்பது அவனது வழக்கமாகி போனது.

விஷ்ணு ஸ்போர்ட்ஸில் பாஸ்கெட் பால் டீமில் உள்ளதால் தினமும் காலை மாலை இருவேளையிலும் மைதானத்தில் பயிற்சி எடுப்பது அவனது வழக்கம். ஆதிகாவும் வகுப்பு முடிந்து பள்ளியிலேயே டியூஷன் போவதால் கிரௌண்ட்க்கு எதிரில் அமைந்திருக்கும் மரத்தடியில் தான் அவளும் இருப்பாள்... இப்போது, அவள் அங்கு இருக்கும்வரை விஷ்ணுவும் கிரௌண்ட்ல் இருப்பான்... ஆனால், அவனது சக நண்பர்கள் அவ்வளவு நேரம் இருக்கமாட்டார்கள். அவள் இருக்கும்போது வச்ச கண் வாங்காமல் பார்ப்பான் விஷ்ணு. ஒரு நாள், ஆதிகாவும் அவளது தோழியும் டியூஷன் சீக்கிரமாக முடிந்த காரணத்தால் மரத்தடியில் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கும் வேளையில், விஷ்ணு கிரௌண்ட்லிருந்து தன்னை பார்ப்பதாக தோழியிடம் இருந்து செய்தி வந்தது. அதை கேட்ட ஆதிகாவிடம் அமைதியே பதிலாக வந்தது...
அங்கு ஆள்நடமாட்டம் இல்லாமல் இருந்தது. சற்று நேரம் கழித்து, ஆதிகா விஷ்ணு மீது பார்வை வீச, அவனோ அவ்வேளையில் மயங்கி சரிந்தான். அதை கண்ட ஆதிகவோ விரைந்து ஓடினாள்... அங்கு யாரும் இல்லாததால், இவளே விஷ்ணுவை மடியில் ஏந்தி தண்ணீர் தெளித்து அவனை மயக்க நிலையிலிருந்து மீட்டுவிட்டாள்... மயக்கம் தெளிந்த பிறகு வெகு அருகில் அவளின் முகம் இருப்பதை கண்டு திக் பிரம்மை பிடித்தாற்போல ஆனான். இருவரின் கண்களும் சில நொடிகள் சந்தித்து கலைந்தன. பிறகே, அவனை சுற்றி கூட்டம் கூடியது . கூடிய கூட்டம் கலைந்த பிறகே கண்டான், அவளும் அந்த கூட்டத்தோடு கூட்டமாய் கலந்துவிட்டால் என்று... இந்தமுறை, விஷ்ணுவின் மனதில் ஆழமாக பதிந்தால் ஆதிகா. அவளிடம் ஒரு நன்றி கூட சொல்ல முடியவில்லையே என வருந்தினான்.

நன்றி கூறும் சாக்கில் அவளை பார்க்க இன்னொரு வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டான். இரண்டு நாள் கழித்து அவளை பார்ப்பதற்காகவே விஷ்ணு கிளாஸ் முடிந்து கிரௌண்ட்கு போகாமல் அவளுக்காக காத்திருந்து அவளை சந்தித்தான்.

அன்னைக்கு மயக்க போட்டு விழுந்த போது ஹெல்ப் பண்ணீங்க அதுக்கு நன்றி சொல்லலாம்னு தான் வந்தேன் "ரொம்ப தேங்க்ஸ் " என கூறி முடித்தவுடன் ஆதிகா கேட்டாள் இதற்குத்தான் என்னைய பாக்கவந்திங்களா என. அதற்கு திரு திரு வென முழித்தவனிடம் ஆதிகா தனது மனதை அவிழ்த்துவிட்டால், "இனிமேலும் என்னால மனசுல வச்சிக்க முடியாது சொல்லிடுறேன்" என கூறியவளிடம் என்ன சொல்ற புரியல என கேட்டான் விஷ்ணு.

"ஆமா உங்களுக்கு புரிஞ்சி இருந்தாதான் என்னோட பார்வையோட அர்த்தமும் புரிஞ்சி இருக்குமே, என்கிட்டே வந்து பேசியும் இருப்பிங்க", என கூறியவளை புரியாமல் பார்த்து கொண்டிருந்தான் விஷ்ணு. மேலும் அவள் தொடங்கினாள், "உங்கள போன வருஷத்துல இருந்தே பாத்துட்டு இருக்கேன். பர்ஸ்ட் டைம் நா உங்கள பாத்தது பாஸ்கெட் பால் மேட்ச்ல தான். அப்பவே உங்கள ரொம்ப புடிச்சி போச்சு. ஏதோ அதிலிருந்து ரொம்ப டிஸ்டர்ப் ஆகிட்டேன்.இதுக்கு பேர் என்னனும் தெரியல. அதுக்கு அப்புறம் நீங்களும் பர்ஸ்ட் டேயிலிருந்து பாக்குறது எனக்கு தெரியும். நீங்க வந்து பேசுவீங்கணு வெயிட் பண்னேன். நீங்க வர மாதிரியே தெரியல அதா இப்போ சொல்லிட்டேன்" வேகமாக அவன் முகத்தை பார்க்காமல் தரையை பார்த்தே சொல்லி முடித்தவுடன் வெட்கம் வந்து சூழ்ந்ததால் உடனே அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள் அந்த பேதை.

ஓ எல்லாம் மறந்து உன்
பின்னே வருவேன்.
நீ சம்மதித்தாள் நான்
நிலவையும் தருவேன்.
உன் நிழல் தரை படும்
தூரம் நடந்தேன்.
அந்த நொடியை தான்
கவிதையாய் வரைவேன்.

இக்கணத்தில் இவளிடமிருந்து வெளிவந்த வார்த்தை, மொழி என எதுவுமே புரியாமல் போனது அவனுக்கு. இவளுக்குள்ளும் நாம் உள்ளோமே என நினைத்து பிரமித்து போனான் மறுபடியும் விஷ்ணு.

இந்த சந்திப்புகள் அடிக்கடி தொடர்ந்தது. இருவரும் நெருங்கி பழக ஆரம்பித்தனர். ஏதோ ஒரு கட்டத்தில் இருவருக்குள்ளும் காதல் மலரத்தான் செய்தது. ஆனால், இருவருமே காதலை வாய் வழியே பரிமாறிக்கொள்ளவேயில்லை.

பொழுதுகள் மாதங்களாக ஓடின. விஷ்ணுவிற்கு பொது தேர்வும் நெருங்கியது. தேர்வுக்கு முதல் நாள் இருவரும் சந்தித்தனர். இருவருக்குமே ஒரு விதமான கவலை இருந்தது இனிமேல் எப்போது இது போல சந்திப்போம் என்று. கவலையை உடைத்து முதலில் விஷ்ணுவே வாயை திறந்தான், "நாம் இருவரும் கல்லூரி படிப்பை முடித்து, நான் நல்லா ஒரு வேலைக்கு போன பிறகு உங்க வீட்ல வந்து பேசுறேன் அது வரையும் நீ வெயிட் பண்ணனும் எனக்காக பண்ணுவியா என கேட்டவுடன் ஆதிகா அவனுடைய கரத்தோடு தன் கரத்தை சேர்த்து கண்டிப்பா வெயிட் பண்றேன் என்றாள்.

இருவரும் மற்றவருக்காக வாங்கி வந்த ஹீரோ பேனாவை பரிமாறிக்கொண்டனர்.... தேர்வுகளும் முடிந்தது. பிறகு இருவரும் சந்தித்துக்கொள்ளவும் இல்லை பேசிக்கொள்ளவும் இல்லை.

விடுமுறை முடிந்து ஆதிகா 12ஆம் வகுப்பின் முதல் நாள் பள்ளிக்கு வரும்போதுதான் விஷ்ணு அவளை சந்தித்தான். அப்போது, தான் இன்ஜினியரிங் படிக்க போவதாகவும் அடிக்கடி பள்ளிக்கு வந்து உன்னை சந்திப்பதாகவும் கூறி சில நிமிட பேச்சு வார்த்தைக்கு பிறகு முற்றுப்புள்ளி வைத்து நகர்ந்தனர்.

விஷ்ணு வீட்டிற்கு ஒரே பிள்ளை என்பதால் ரொம்ப செல்லம். ஆனால், ஆதிகா வீட்டில் கட்டுப்பாடு அதிகம். அவளுக்கு முகேஷ் எனும் சுட்டி தம்பியும் உள்ளான். அந்த ஒரு வருடம் இருவருக்குமே சிரமமாகின, எப்பவாவது தான் விஷ்ணு பள்ளிக்கு ஆதிகாவை சந்திக்க வருவான். இதோ அதோ என பொது தேர்வும் நெருங்கியது ஆதிகாவிற்கு. அன்று விஷ்ணு கொடுத்த பேனாவிலேயே பரீட்சையும் முடித்தாள். விஷ்ணு நியாபகம் நெஞ்சை தட்டும்போதெல்லாம் அந்த பேனாவிடமே தன் மனதை கொட்டுவாள்.

ஆதிகாவும் 12ஆம் வகுப்பு பாஸ் என ரிசல்ட்டும் வந்தது. Bsc கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவை தேர்ந்தெடுத்து கல்லூரியில் சேர்ந்தாள். வீட்டில் அழுது அடம்பிடித்து எப்படியோ ஒரு மொபைல் போனும் வாங்கிவிட்டாள். இருவரும் கல்லூரி படிப்பது திருச்சி மாநகர் என்றாலும் அடிக்கடி சந்தித்துக்கொள்ளமுடியவில்லை. எப்பயாவது வெளியில் சந்தித்துகொள்வர். அதிகம் இரவில் போனிலையே உரையாடி தங்களது காதலை வளர்த்தனர்.

இதுபோலவே மூன்று வருடமும் காற்றோடு காற்றாக கரைய இருவரும் கல்லூரி படிப்பை முடித்தனர். விஷ்ணுவோ பல வேலைகள் தேடி திரிந்தான் தான் படித்த படிப்பிற்கு சம்மந்தமாக, ஆதிகா வீட்டில் மேற்படிப்புக்கு அனுமதிக்காமல் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தனர்.

இவளும் விஷ்ணு வேலைக்கு போகும் வரை ஏதாவுது சொல்லி தட்டிக்கழிக்கவேண்டியிருந்தது.

பிறகுதான், விஷ்ணு ஓர் நற்செய்தியை தெரிவித்தான், தன் தந்தை வைத்திருக்கும் கம்பெனியை தானே பொறுப்பேற்க போவதாக.

இவளுக்கும் ஒரு விதத்தில் நிம்மதியாக இருந்தது, இனிமேல் பெற்றோரிடம் பொய் சொல்ல வேண்டியது இல்லை என்று. சந்தோஷமும் இருந்தது, தான் நேசித்தவனையே மணந்து கொள்ளலாம் என்று. இந்த வேலை சம்மந்தமாக தான் விஷ்ணு ஒரு வாரம் சென்னை சென்றிருந்தான்.

ஆதிகாவும் பெற்றோரிடம் நாளைக்கு என் நண்பன் ஒருவன் நம் வீட்டுக்கு வருவதாகக் கூறியிருந்தாள். இவளின் பெற்றோரான
மாறன்-சுதாவிற்கு தெரியாது இவனைத்தான் தம் மகள் விரும்புகிறாள் என்று.

கடந்த காலங்கள் யாவும் அழகாக மனக்கண்ணில் கற்பனை போல வலம் வருவதை உணர்ந்த ஆதிகாவிற்கு மனதில் நாளை வெகு நாட்களுக்கு பிறகு
ஆறடிக்கும் சற்றும் குறையாத உயரம், கட்டுக்கோப்பான உடல் வாகு, மீசை, தாடி அனைத்தையும் ட்ரிம் செய்து பிரதிபலிக்கும் முகம்... இத்தனை நாள் போனிலே பார்த்து ரசித்தவனை நேரில் பார்க்க போகிறோம் என ஆனந்தம் மட்டுமே தாண்டவம் போட்டது...

அன்றிரவு இருவருக்குமே இன்பமும், ஒரு பக்கம் ஆதிகாவின் பெற்றோர் சம்மதிப்பார்களா என சிறு பயமும் தலை தூக்கியது தான் உண்மை. ஏனென்றால், விஷ்ணு ஒரே பிள்ளை என்பதால் பெற்றோரான சுப்பிரமணியன்-வசந்தா தம்பதியர் ஒத்துக்கொள்வர் என்பது தெரிந்த விஷயமே.

பயமே இருந்தாலும் அந்த இரவு இருவருக்கும் சுகமாகவே அமைந்தது. கை சேர துடிக்கும் காதலுக்காகவும், காதல் கொண்ட நெஞ்சத்தை பார்பதற்க்காகவும் காத்திருத்தல் சுகம் தானே. இரவு பயணத்தின் அமைதி அவனை ஆதிகாவை முதலில் பார்த்த இடத்திற்கு எடுத்து சென்றது.

கொலுகொலுவென இரு கன்னங்கள், வளர்ந்து இடையோடு நிற்கும் கூந்தல், செழிமையான கருமை தோட்டத்தில் பூத்த பூ, பள்ளி சீருடையிலும் அருமையாக காண்பிக்கும் அவளது தோற்றம் என எண்ணிய மனதிற்கு கடிவாளமிட்டு உறங்க முயன்றான்.

கடிகாரம் நள்ளிரவை காட்டிய பின்பே இருவரும் தூங்கினர்.

காலையில் விழிக்கையில் விஷ்ணுவின் கண்ணிற்கு புலப்பட்டது அவனது சொந்த ஊரான திருச்சி மாநகரே.

விடியும் பொழுதில் காத்திருந்த காதல் கைக்கூடுமா இல்லை உயிரற்று போகுமா... விதியின் விளையாட்டை அடுத்த அத்தியாயத்தில் பாப்போம்...
 

Aarthi murugesan

Saha Writer
Team
Messages
29
Reaction score
0
Points
1
என்னடி மாயாவி நீ
அத்தியாயம்: 3
விடியற்காலையில், விடியும் பொழுதில் வந்து இறங்கிய விஷ்ணுவை கண்டு மகிழ்ந்தனர் அவனது பெற்றோர். அவனை கண்ட ஆனந்த களிப்பில் சுப்பிரமணியனோ, "வாப்பா போன வேலையெல்லாம் நல்ல படியா முடிஞ்சிருச்சா?" எனக் கேட்க விஷ்ணுவோ நல்லா போனுச்சு பா, என்ன உங்கள தா ரொம்ப மிஸ் பண்னேன் என மொழிந்தான். "என்னைய மட்டுமப்பா மிஸ் பண்ண?" என அவனுடைய தந்தை குறும்பு கூத்தாட கேட்க, வசீகர சிரிப்பை உதிர்த்தவன் "அம்மாவையும் தான்ப்பா, ஆனா உங்கள கொஞ்சமா அம்மாவை மட்டும் நெறயா", என அப்பாவின் பிள்ளைக்கு தப்பாமல் பிறந்திருந்த விஷ்ணுவை கண்ட தந்தைக்கு சிரிப்பை உண்டாக்கியது அவனது பதில்.
அம்மா, அப்பா இருவரையும் விஷ்ணு பாசமாக பார்த்துக்கொள்வான். ஆனா, அம்மா மீது மட்டும் விஷ்ணுக்கு தனி பாசம் என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால், அவர்கள் இருவரது பிணைப்பு அப்படி என்றால் அதற்கு மிகையில்லை.
அழகான சிறிய குருவி கூடு போல தான் இவர்களது குடும்பம். இந்த குடும்பத்தின் ஒரே வாரிசு என்றால் அது விஷ்ணு மட்டுமே. ஆதலால், பெற்றோர்களின் மொத்த அன்பின் உருவம் தான் விஷ்ணு.
மகனின் சிரிப்பு ஓசையை கேட்டுக்கொன்டே இவர்களுக்குள் நுழைந்த வசந்தா எல்லா வசனத்தையும் கேட்டிருந்தார் ஏற்கனவே.
"ஏன்மா இவளோ நேரம் கூப்பிடுறேன், வந்து பாத்துட்டு போனாதான் என்னமா", என கோபப்படும் போது கூட பாசமான வார்த்தைகளை வெளிப்படுத்தும் தந்தையின் தாய் மீதுகொண்ட காதலை மனதில் மெச்சிக்கொண்ட விஷ்ணு, வெளியில் "ஏன் பா அம்மாவ திட்டுறீங்க விடுங்கப்பா" என கூறி அன்னையை கட்டிக்கொண்டான். "ஏன்ப்பா இளச்சு போயிட்ட, ஒழுங்காவே சாப்பிடாலய. அங்க சரியான சாப்பாடு இல்லையப்பா"என கவலையோடு வினாவிய அம்மாவிடம்," உன் கையாள சாப்பபிடலைல அதான் மா, ஒன்னும் இல்லமா இப்ப உங்க கையாள சாப்பிட்ட சரி ஆகிடுவேன்", என கூறியவுடன் அவனின் தாயோ, "நீ போய்ட்டு பிரெஷ் ஆகிட்டு வாப்பா சாப்பிடலாம்"என கூறி சமையல் அரண்மனையில் ஆட்சி செய்ய ஆரம்பித்தாள், வசந்தா. ஏனென்றால், அவரிடம் ஏக்கத்தோடு கேட்டது அவரது இளவரசன் ஆச்சே.
ஒன்றாக மூவரும் அமர்ந்து உணவருந்தும்போது விஷ்ணு,
"இன்னைக்கு இரவு உங்ககிட்ட முக்கியமான ஒரு விஷயம் பேசணும்"என இதை மட்டுமே கூறி பெற்றோர் இதை பற்றி விசாரிப்பதற்கு முன்பாகவே அவ்விடத்தை விட்டு நீங்கினான். நான் என்னோட (மனதில் உங்க மருமகள) நண்பனை பாத்துட்டு வரேன் என சொல்லி கிளம்பிட்டான் ஆதிகா வீட்டிற்கு...
அவனுக்கு இப்போது தெரியவில்லை எந்த சூழ்நிலை வந்தாலும் ஆதிகா தான் எப்பவுமே நம்ம அம்மாவுக்கு மருமகள் என.
தமிழ் நாட்டிலிருந்து ஒரு போன் கால் நியூ யார்க் வரை தாவி சென்றது காற்றிலே.
அதை உயிர்ப்பித்து காதில் வைத்தவன் "சொல்லுங்க மாமா"என கூற உனக்கு பொண்ணு பாத்துருக்கேன்பா, ஜாதகமும் பாத்துட்டேன் ரொம்ப பொருத்தமா இருக்கு நீ மட்டும் சரின்னு சொல்லிட்டா மேற்கொண்டு பேசலாம் என கூற, வர்ஷிதோ "சரிங்க மாமா
உங்களுக்கு சம்மதம்னா எனக்கும் சம்மதம் மாமா, நான் அப்புறம் கூப்பிடுறன்"என அவர் பேச இடம் விடாதபடி இவன் போன் காலை கட் செய்தான்.
ஜாதகம் பொருத்தம் இருந்து என்ன செய்றது, மனசுக்கு புடிக்கணுமே... பார்போம் வாழ்க்கை அழைச்சிட்டு போற பாதையில போவோம் என மனதை மாற்ற முயற்சி செய்தான். முயற்சி செய்தும் அவனது அம்மூவை
மறக்கமுடியவில்லை அவனால், அவனது காதல் சுமந்த இதயத்தால்...
காதல் சுமந்த ஒரு நெஞ்சம் இங்கே டிராபிகில் பயணத்தில் இருந்தது... இந்த காதலுக்கு சொந்தக்காரியான ஆதிகவோ வீட்டில் அவனுக்காகவும், தங்கள் உள்ளத்திலுள்ள காதலை பெற்றோரிடம் கூறி சம்மதம் வாங்குவதற்காகவும் தன்னை தயார் படுத்திக்கொண்டிருந்தாள். எந்த நிலை வருகை புரிந்தாலும் காதலை மட்டும் விடக்கூடாது எனும் முடிவில் தீவிரமாக திளைத்திருந்தனர் இருவருமே...
இந்நேரத்தில் இருவரின் எண்ணமும் ஒன்றே...
காதல் கொண்ட நெஞ்சம்
இரண்டும் ஏங்குகிறது...
காதலுக்குள் சரணடைந்து
காதல் பந்தத்துக்குள்
தங்களை தொலைத்துக்கொள்ள...
மேசை மீது இருந்த ஆதிகாவின் போட்டோ பிரேம் ஒன்று காற்றினால் அசைவு கொண்டு கீழே சாய்ந்ததால்,
விஷ்ணுவின் நினைவுகள் பொதிந்து இவர்களின் காதலினால் உயிர் பெற்று, உயிர் வாழ்ந்து கொண்டிருந்த ஹீரோ பேனா கீழே விழுந்து சுக்கு நூறாக உருமாறி உயிரை துறந்தது. அதை கண்ட ஆதிகாவுக்கு உயிரே இல்லாமல் உறைந்து போனது போல ஒரு உணர்வு உச்சி முதல் பாதம் வரை பரவியது. தினமும் ஒரு முறையாவது இந்த பேனாவிடம் பேசுபவள், இனி அவன் இருக்கையில் எதற்கு இந்த பேனா என கேள்வி கேட்டுக்கொண்டு மனதை தேத்திக்கொண்டாளும் இவளுக்குள் பதற்றமாகவே இருந்தது.
சாலையிலோ ஒரு பெருத்த கூட்டம். சாலையின் இருபுறங்களிலும் நிறைய வாகனங்கள் நிறுத்தி கிடந்தன. கூட்டத்தில் இடம்பெற்றிருக்கும் எல்லா மக்களும் என்ன ஆச்சு? யாருக்கு அடிபட்டது? என பல கேள்விகளை எழுப்பினர். விபத்துக்குள்ளான வாகனத்தின் எல்லா உறுப்புகளும் சுக்கு நூறாகி போயிருந்தன. அப்போ அடிப்பட்டவரின் நிலை என்னவோ? என சிலர் புலம்பினர்.
கூட்டத்தில் உள்ள ஒருத்தருக்கும் தெரியவில்லை அடிப்பட்டவர் யாரு என்று... பல மனிதர்களும் மனிதநேயமற்று வெறும் வேடிக்கை மட்டுமே நடத்திக்கொண்டிருந்தனர். சில மனிதம் உள்ள மனிதர்களே உதவி செய்து ஆம்புலன்ஸை அழைத்தனர்.
(என்ன நேயர்களே, இந்த கூட்டத்துல விஷ்ணு மாட்டிகிட்டு ஆதிகா வீட்டிற்கு தாமதமா போகப்போறாணு தானே யோசிக்கிறீங்க. அதுதான் இல்ல, இந்த கூட்டத்துக்கு காரணமே இவன் தான்.)
சூரியன் மறைந்த பிறகு பகல் முடிவது போல, இனி நம் வாழ்க்கையும் நமக்கு முடிந்துவிட்டது என சாலையில் விபத்துக்குள்ளாகி, உடல் உணர்வுகளற்று, மனதில் சுமந்த ஆசையெல்லாம் நிறைவேறாமல் பொய்யென ஆக, இறுதியில் இவ்வுயிரை கொடுத்த கடவுளே அதை கறந்து கொண்டிருக்க, அவ்வுயிருக்கு சொந்தமான உடலோ, தன் தாயிடம் குடித்த பாலெல்லாம் உருமாறிய ரத்தத்தில் ஊறி கிடந்தது.
கூட்டத்தில் ஒருவர் மட்டும் அடிப்பட்டவரின் போன் எட்டி விழ, அதை எடுத்து இந்த துற்செய்தியை சம்மந்தப்பட்டவர்களிடம் தெரிவிக்கவேண்டும் என contact list ஐ பார்த்து, அடிப்பட்டவரின் பெற்றோருக்கு போன் செய்தார். போனில் மறுபுறமோ அதிர்ச்சியில் அதிர்ந்து, சோகத்தை அடக்கமுடியாமல் கதறினர், விஷ்ணுவின் பெற்றோர்.
கொஞ்சம் நேரத்திற்கு பிறகு, கூட்டம் கலைய, மக்கள் விலக, ஆம்புலன்ஸ் வந்தது அந்த உடலை மருத்துவமனைக்கு எடுத்து செல்லவதற்கு. ஆசைகளோடு பைக்கில் தனது இறுதி பாதைகளில் பயணித்த அந்த வாலிபனின் உடலை போஸ்ட்மார்டம் செய்து வீட்டிற்கு கொண்டு வந்தனர்.
முதல்முறையாக விஷ்ணு தன் வீட்டிற்கு வர போகிறான் என எதிர்பாத்த ஆதிகாவிற்கு, அவனின் இறுதி சடங்கிற்கு தான் போவோம் என சிறிதும் எதிர்பார்க்கவில்லை.
இப்படி என்ன கைவிட்டுட்டியே என புலம்பியும் ஆதிகாவால் அழுகமுடியவில்லை. அவளால், மனம் திறந்து தனது ஆத்திரத்தை கொட்டவும் முடியவில்லை. ஏனென்றால், அவள் காதலித்ததுதான் யாருக்கும் தெரியாதே. அவளும் தோழன் என்றே பெற்றோரிடம் கேட்டு விஷ்ணு வீட்டிற்கு வந்திருந்தாள். இனிமேல், தங்களது காதல் தெரிந்தும் என்ன பயன்? .... வசந்தாவோ ஒரு பக்கம் கதறி அழ, சுப்பிரமணியனோ மனமுடைந்து அமர்ந்திருந்தார்,தனது ஒரே ஒரு ஆசை மகனை பறிக்கொடுத்த பறித்தவிப்பில்...
அவனின் காதலுக்கு சொந்தமான நெஞ்சமோ சோகத்தை வெளிப்படுத்த முயன்றும், அவளின் ஆசை மனம் அதிர்ச்சியடைந்து, அழுகை கண்ணை விட்டு தாண்ட மறுத்தது. அவளுக்கு உயிரை யாரோ சிறைப்படுத்தியது போல ஒரு உணர்வு உள்ளுக்குள் ஊறியது. அவளின் பல கனவுகளை, விஷ்ணுவின் இறப்பு குழி தோண்டி புதைத்துவிட்டது. அவளின் சோகம், துக்கம், ஏமாற்றம் எல்லாம் சேர்ந்து மனதில், அவளுக்கு பாரமாக அமர்ந்தது.
மேடையேற கூடுமோ
மீண்டும் நமது நாடகம்....
நீயும் நானும் சேர்வதால்
யாருக்கென்ன பாதகம்...
யாரை சொல்லி நோவது
காலம் செய்த கோலம்....
உன்னை என்னை
வாட்டுது காதல்
செய்த பாவம்...
சில பொழுதுகள் யாருக்கும் தெரியாமலே அழுது, கஷ்டத்தை வெளியில் வெளிபடுத்த முடியாமல், அந்த சிறு பேதையின் மன பாரம், அவனின் மீது மட்டுமல்ல காதல் மீதும் வெறுப்பை அழைத்துக்கொண்டது.
நாட்கள் உருண்டோட, கல்யாணத்திற்கு முதல் நாள்தான் இந்தியாவிற்கு வந்திறங்கினான் வர்ஷித். இவனது மாமாவான சுப்பையன், இவன் இனிமேலாவது சந்தோசமாக இருக்க வேண்டும் என கடவுளை பிரார்த்திக்கொண்டார்.
தனது காதலின் கடைசி பக்கம் என இந்த திருமணத்தை நினைத்தவனுக்கு தெரியவா போகிறது, இந்த பந்தம் தான் அழகான காதல் அடங்கிய வாழ்க்கையின் முதல் பக்கம் என்று.
காலை பொழுது அழகாக துவங்க, வர்ஷித்தின் மனம் முழுவதும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை அழித்துவிடுவோமோ என்ற குற்ற உணர்ச்சி சுமந்துக்கொண்டிருந்தது. பிறகு, ஆறடி ஆளுயரத்திற்கேற்ப பட்டு வேஷ்டி சட்டை அணிந்து மாப்பிள்ளை தோரணையில் மணமேடை ஏறினாலும் அவனின் மனதிலும் முகத்திலும் திருமண கலை சிரிதும் தென்படவில்லை.
பல மந்திர சொற்களோடு, தேவர்களின் ஆசியோடு, மனம் நிறைந்த இந்த ஜோடியின் சொந்தங்களின் திருப்தியோடு, இவர்களின் திருமணம் சாதாரணமாகவே நிகழ்ந்தது, மலைக்கோட்டை மாநகரிலே...திருமண தம்பதி இருவரின் உள்ளங்கள் மட்டும், அழகான, மீண்டும் அனுபவிக்க இயலாத இந்த திருமண தருணத்தை ரசிக்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்தது. தாலியால் மூன்று முடிச்சு போடும் வரை தனது மனையாளின் நிலா முகத்தை அவன் நேரிலும் பார்க்கவில்லை, மாமா போனில் போட்டோ அனுப்பியும் பார்க்கவில்லை. ஒரு வேலை பார்த்திருந்தால் வேண்டாம் என மறுத்திருப்பானோ என்னவோ... ஆனால், விதிக்கு தெரியுமே யாருக்கு யார் என்று... அதனாலே, இருவரையும் இணைத்து வைத்து வேடிக்கை பார்த்தது.
தன் வாழ்க்கையோடு வெறும் தாலியால் போட்ட முடிச்சியின் காரணமாக சொந்தமானவளின் பிறை நெற்றியில் குங்குமம் வைக்கும்போதுதான், தனது இருவிழியால் அவளது திருமுகத்தை பார்த்து அதிர்ந்தான்... அவளது கலங்கிய விழிகளை கண்டு. அவளது விழிகளில் சுரந்த நீரை பார்த்து அதிர்ந்தானோ அல்ல, அவளது விழிகளை கண்டு அதிர்ந்தானோ அது அவனுக்கு மட்டுமே புலப்பட்ட விஷயமாகும்.
அந்த விழிகளுக்கு சொந்தக்காரி ஆதிகா தான் என்றால் அதில் பொய்யில்லை.
கல் போன்ற இவனது இறுகிய மனம் இளகுமா? காதல் மீது வெறுப்பு கொண்ட இவளது உள்ளமும் துளிர்விடுமா? அடுத்த அத்தியாயத்தில் பாப்போம்...
 

Aarthi murugesan

Saha Writer
Team
Messages
29
Reaction score
0
Points
1
என்னடி மாயாவி நீ

அத்தியாயம்: 04

ஆதிகாவிற்கும் வர்ஷித்திற்கும் திருமணம் நடந்து முடிந்தது. இருவருக்குமே திருமணத்தில் ஈடுபாடில்லை. குடும்ப சூழ்நிலை வேண்டி இருவரது மனமும் இணைந்தது திருமண பந்தத்தில்... திருமணம் என்றாலே வாழ்வில் மறக்க நேரிடாத ஒரு நிகழ்வு. இதை அழகாக்குவதும் உயிரற்று போகவைப்பதும் புதுமண தம்பதிகளின் கைகளில் தான் உள்ளன. ஆனால், இங்கு இருவரது மூளையிலும் வெவ்வேறு எண்ணங்கள், மனம் முழுவதும் குழப்பங்கள், கண்களில் கரையை தாண்ட துடிக்கும் கண்ணீர் துளிகள்... இவற்றை உள்ளுக்குள் மறைத்து வெளியில் சிரிப்பை உதிர்ப்பதில் மட்டுமே ஒற்றுமை தெரிந்தது இருவரிடத்தில்.

ஆதிகா வீட்டில் பெற்றோர் இருவரும் ஏற்கனவே, வர்ஷித்தை தேர்வு செய்து வைத்திருந்தனர். ஜாதகம் பொருத்தமெல்லாம் நன்றாக அமைந்து போக, மாப்பிள்ளையும் வேலையிலிருந்து நன்றாக சம்பாதிப்பதாலும் தன் மகளை இவருக்கு திருமணம் செய்து கொடுத்தால் கண் கலங்காமல் காலம் கடைசி வரைக்கும் பார்த்து கொள்வார் என நம்பிக்கை பிறந்தது வர்ஷித் மீது. பிறகு, வர்ஷித்தை போட்டோவில் மட்டுமே பார்த்து உறுதி செய்தனர் ஆதிகாவின் பெற்றோர் அவளது காதல் மனம் அறியாமலே.

இவளிடம் சொன்னால் நிராகரித்து விடுவாள் என நினைத்த பெற்றோர், ஆதிகா சொன்னது போல, அவளின் நண்பன் வருகை தரும் பொழுதில், அவனிடம் பேசி, இந்த கல்யாணத்திற்கு ஆதிகாவை சம்மதிக்க வைக்க சொல்லுமாறு கேட்கலாம் என முடிவெடுத்தனர்.

அந்நேரம், எல்லோரின் கனவில் மண்ணை வாரிப்போட்டது போல, அனைவரின் திட்டமும் பொய்த்து நிற்க செய்தது அவனின் இறப்பு. இதற்கு காரணம் விதி என்றே, எல்லாரும் அதையே குற்றம் சாடினார். யாருக்குதெரியும் இது கடவுளின் கணக்கு என்று.

விஷ்ணுவின் நினைப்பிலும் இழப்பிலும் மனம் நொந்து கிடந்த நேரம் அது. மனதை வெளிக்காட்ட முடியாமலும் தன்னை தேற்ற முடியாமலும் கடல் அலையில் சிக்கியது போல அல்லாடிக்கொண்டிருந்தாள் ஆதிகா.

அந்நேரத்தில், அவளின் தலையில் இடியை இறக்கி வைத்தனர் அவளது பெற்றோர் உனக்கு திருமணம் செய்ய முடிவு செய்திருக்கிறோம் என்று, இவளின் விருப்பத்தினை கேட்காமலே. இனிமேல் தன்னால் யாரையும் சாக்கு போக்கு சொல்லி நிராகரிக்க முடியாது, அப்படி சொல்லுவதுக்கும் பயனில்லை. ஏனென்றால், அவள் சொன்ன பொய்களுக்கு சொந்தமானவனே இப்போ ஆதிகாவிற்கு சொந்தமில்லாமால் போனது தான் பரிதாபம். திருமணத்திற்கு அவள் மறுப்பு சொல்லவும் இல்லை, அதை மனதார ஏற்கவும் இல்லை. திருமணத்திற்கு முன், பெற்றோர் மாப்பிள்ளையின் போட்டோவை காட்டியும், நான் அப்புறம் பார்க்கிறேன் என கூறி அவள் அதை பார்க்கவே இல்லை.

ஆதிகாவிற்கு தனது திருமணம் குறித்து பெரிய பெரிய ஆசைகளும் கனவுகளும் இருந்தது. ஆனால், இந்த கனவிற்குரியவனே இல்லை என்று ஆக, கனவும் கனவாகி மட்டுமே போனது. ஆதிகாவும் இந்த திருமணத்தையே மனம் ஒப்பாமல் ஒத்துக்கொண்டதால், இந்த ஆசைகளை பற்றி யோசிக்கக்கூட இல்லை.

வெளிநாட்டிலிருந்து வந்த நாளே வர்ஷித் தனது மாமாவிடம், தனக்கு இரண்டு நாள்தான் விடுமுறை கிடைத்தது, திருமணம் முடித்த மறு நாளே தாங்கள் சென்னை கிளம்பிவிடுவோம், ஒரு வார வேலை அங்கு இருப்பதாகவும் பிறகு, நாங்கள் திருச்சிக்கு வந்து வீடு பார்த்துக்கொள்கிறோம் எனவும், திருமணத்தன்று இரவு பெண் வீட்டிலேயே தங்கி, காலையில் சென்னைக்கு கிளம்புவதாகவும் கூறினான்.

இதற்கு ஏற்றவாறு, சுப்பிரமணியனோ ஆதிகா வீட்டிலும் பேசி சம்மதம் வாங்கி வைத்தார். ஏனென்றால், அவன் இவ்வளவு இறங்கி வந்ததே பெரிய விஷயம் என்பதால் இதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவில்லை.

திருமணம் முடிந்து அன்றைய நாள் முழுவதுமுள்ள சடங்குகள் எல்லாவற்றையும் கடமைக்கு செய்தனர் இருவரும். எல்லா சடங்கிற்கும் ஏற்பாடு செய்த பெற்றோர் முதலிரவிற்கு ஏற்பாடு செய்யவும் தவறவில்லை.

ஆதிகாவின் துயர் அடைந்த மனதில், இன்று தன் வீட்டிலே இருப்பதால் ஒரு நிம்மதி பரவியது. ஆனால், தனது அறையை யாரோ ஒருவனும் பங்கெடுத்து கொள்வான் என நினைக்கும்போதே திக் என இருந்தது. பிறகு, அந்த யாரோ ஒருவனே தனது கணவன் என்றதும் பதற்றம் அவளை தொற்றிக்கொள்ள, காலையிலிருந்து நடந்த நிகழ்வையெல்லாம் ஒன்று திரட்டி விழிமுன் படம் ஓட்டி கொண்டிருந்தாள். ஒரு சொல்ல முடியாத கஷ்டம், ஆற்ற முடியாத வலி என அனைத்தும் அந்த பெண்ணிடத்தில் புகுந்துகொண்டது.

'ஏய் என்னடி பண்ற இன்னும் கிளம்பாம' என கேள்வி கேட்கும் தாயிடம் வந்த சொற்களில் நினைவிற்கு திரும்பியவள் தனது தாயை கண்டவுடன், "அம்மா" என்று சொல்லும்போதே அவளது கண்களில் கண்ணீர் கவ்வி நின்றது.

அவளின் அருகில் அமர்ந்து அவளை அணைத்து, "நீ இன்னும் சின்ன புள்ள இல்லமா புரிஞ்சுக்கோ, இனிமேல் இப்படி அழக்கூடாது", எனக்கூறி 'இது எல்லா பொண்ணுங்களுக்கும் உள்ளது தான்மா. நான், அப்பா, தம்பி எல்லாரும் இருக்கோம் உன்ன அப்படியே விட்டுறமாட்டோம். நாளைக்கு சென்னை போய்ட்டு கொஞ்ச நாளிலேயே வந்துருவிங்க. அதுக்கு அப்புறம் இங்கதான் இருக்கப்போறிங்க. பக்கத்துல தான் இருக்க போறோம். அடிக்கடி பாத்துக்கலாம், எதையும் போட்டு மனச குழப்பிகாம சந்தோசமா உன் வாழ்க்கையை பாரு என அறிவுரைக்கூறி அவளை மிதமாக அலங்கரித்து, அவளது அறைக்கு அனுப்பி வைத்தார் அவளது அம்மா.
அனுப்பி வைத்தவருக்கும், மனதில் ஒரு விதமான உணர்வு அமர்ந்தது, மாப்பிள்ளை எதிலும் பிடிக்கொடுக்காமல் இருப்பதை நினைத்து. ஆனால், இதை அவள் வெளியிலும் காட்டிக்கொள்ளவில்லை.

அறைக்கு போகும் வழியில் பயத்துடனே நடையை எடுத்து வைத்தாள். இது எப்படி சாத்தியாமாகும் மனதில் ஒருவன் இருக்கையில், தன்னால் எப்படி இதையெல்லாம் ஏற்றுக்கொள்ளமுடியும் என உள்ளம் வெம்ப துடித்தாள். விருப்பமே இல்லாமல் பெற்றோரின் வார்த்தைக்கு கட்டுண்டு திருமணம் முடிந்தது. அதுபோலவே, முதலிரவு ஏற்பாட்டிலும். அனைவரும் அவரவர் விருப்பத்திற்கு செயல்பட ஆதிகாவின் விருப்பத்திற்கு யாரும் செவி சாய்க்கவில்லை.

எல்லா கோபத்திற்கும் காரணம் இந்த திருமணம் என நினைத்தவள் கோபத்தை தன் கணவன் திசையில் திருப்பியவள் ஒரு நிமிடம் யோசித்தாள், இத்தனை வருடம் பார்த்து பார்த்து வளர்த்த அப்பா அம்மாவுக்கே என்னோட விருப்பம் தெரியல, இன்னைக்கு தாலி கட்டுன அவருக்கு எப்படி தெரியும் என தன் கோபத்தை அடக்கி கொண்டாள்.

பயத்துடனே பால் சொம்போடு உள்ளெ நுழைந்தவுடன், அந்த காட்சியைக் கண்டு அதிர்ந்தாள்.

பூக்குவியல் கொண்டு அலங்கரித்த கட்டிலை விட்டு வர்ஷித், அங்கு ஒரு போர்வையால் கீழே விரித்து படுத்திருந்தான்.

அவனருகில் சென்று, அவனிடம் நீங்க மேல படுங்க என கூற அவனோ அவளிடம் முகம் கூட காட்டாமல், பரவாயில்ல நீ மேல தூங்கு என்றான்.

இதற்கு மேல், அவனிடம் ஆதிகாவால் பேச முடியவில்லை. நகைகளை கழட்டி வைத்து விட்டு, கட்டிலில் படுத்தவளுக்கு இங்கு நடந்தது அவளின் பயந்த மனதுக்கு சிறிது நிம்மதியாகவே இருந்தது. எத்தனை நாள் எதிர்பாத்த கனவு இது. ஆனால், இந்த சூழ்நிலை முற்றிலும் மாறியதை நினைத்து வருத்தமுற்றாள். இந்த வருத்தத்தில், வர்ஷித்தின் நடவடிக்கை பற்றி அவள் யோசிக்க கூட இல்லை.

வர்ஷிதோ தனது மாமாவிடம் எவ்வளவோ சொன்னான் முதலிரவு ஏற்பாடு வேண்டாமென்று. அவரோ, இது சம்பிரதாயம் என கூறி வாயை அடைத்தார்.

தனது பழக்கப்பட்ட இடத்தில் படுத்ததாலோ என்னவோ உடல் முழுதும் களைத்து போயிருக்க, கண்கள் தூக்கத்தை தழுவ, ஆதிகா தூங்கி போனாள்.

ஊரே அமைதி காக்க, வர்ஷித்திற்கு மட்டும் மனம் முழுதும் குழப்பங்கள் சூழ்ந்து, அமைதியை கலைத்து அவனை தூங்கவிடவில்லை. இதையெல்லாம் முறியடித்து உறங்கும் போது கடிகாரம் நள்ளிரவை சுட்டி காட்டியது.

விடியும் புது வாழ்வு இருவருக்கும் எப்படி அமைய போகுது என அடுத்த அத்தியாயத்தில் பாப்போம்...

நன்றி!
 

Aarthi murugesan

Saha Writer
Team
Messages
29
Reaction score
0
Points
1
ஹாய் பிரண்ட்ஸ்...ஒரு வாரமா போடத்ததுக்கு இப்ப சேர்த்து 3 எபிஸோட்ஸ் போட்டிருக்கேன்.

என்னடி மாயாவி நீ

அத்தியாயம்: 5

வெகு நாட்களுக்கு பிறகு நிம்மதியாக தூங்கி சந்தோசமாக கண்களை மலர வைத்தான் ராகேஷ். தூக்கத்திலிருந்து தன்னை விடு வித்து கொண்டு சோம்பலை முறித்து இனி தனக்கு எதிரி என்பதே கிடையாது என நினைத்து மனதுக்குள் கர்வப்பட்டுக்கொண்டான்.

இனிமேல் சித்தப்பா சொத்தையும் நம்மதான் ஆளப்போறோம், அவருக்குதான் வாரிசு இல்லையே நம்மதான் தனிகாட்டு ராஜா என கற்பனையை வளர்த்துக்கொண்டான். ராகேஷ், சித்தப்பாவிடம் உங்க கம்பெனியை தானே பார்த்துக்கொள்கிறேன் என கேட்டதுக்கு, 'தனக்கு ஒரே மகனான விஷ்ணுக்கு தான் தனது கம்பெனியும் சொத்தும் சேரும் எனவும், எனக்கு பிறகு தன் மகனே இதையெல்லாம் பார்த்துக்கொள்வான்' என திட்டவட்டமாக கூறினார் சுப்பிரமணியன்.

விஷ்ணுவும் ராகேஷும் சித்தப்பா பெரியப்பா முறையில் அண்ணன் தம்பி முறை ஆவர். இருவரின் தாத்தா விஸ்வமூர்த்தி தனது இரு மகன்களான ராமநாதனையும் சுப்பிரமணியனையும் பாகுபாடின்றி நன்றாகவே வளர்த்தார். இருவரும் நன்றாகவே படித்தனர். கல்லூரி படிப்பையும் முடித்துவிட்டு தானாகவே கம்பெனி வைத்து நடத்தும் அளவுக்கு திறமை வாய்ந்தவராக தேறினார். ஆனால், ராமநாதனோ குறுக்கு வழியில் தொழிலை நடத்தினான். இதனால், வருமானமும் செழுமையாக வருகை தந்தது. ஆகையால், இவரால் இந்த தொழிலை கை விட முடியவில்லை. ஆனால், சுப்பிரமணியனோ இதற்கு எதிர்மறை குணம் படைத்தவர். தனது கம்பெனியை நேர்வழியில் நடத்தி சிறு தொகை வந்தாலும் அதை மனதார ஏற்றுக்கொள்வர். நேர்மையையே பின்பற்றும் இருவரின் தந்தைக்கு மூத்த மகனின் செயல் பிடிக்காமல் அறிவுரை வழங்கினார். இதை கேட்கும் மனநிலையில் ராமநாதனோ இல்லை. தந்தை சொல் கேட்காமல் தனது வேலையை தொடர்ந்தார். மூத்த மகனுக்கு திருமணம் செய்ய முடிவு செய்தனர் அவரது பெற்றோர், அப்பயாவது பொறுப்பு வரணும் என. அடுத்து, சுப்பிரமணியனுக்கும் திருமணம் முடித்து வைத்தனர். விஸ்வமூர்த்தி சொத்தை தனது இரு மகன்களுக்கும் சரி பாதியாக பிரித்து எழுதி கொடுத்தார். மறுவருடமே சிங்கக்குட்டிகள் போல இரு மகன்களும் ஆளுக்கொரு வாரிசுகளை வெளிப்படுத்தினர். சுமுகமாக போன குடும்பத்தில் பிறகுதான் பொறாமை என்னும் குண்டு வெடித்தது.

குறுக்கு வழியில் சம்பாதித்த ராமநாதனின் கம்பெனியில் நஷ்டத்துக்கு மேல் நஷ்டமே குவிந்தது. சுப்பிரமணியனுக்கு தொழில் நன்றாக நடந்து கொண்டிருந்தது. பொறாமையை தூண்டிவிட்டது ராமநாதனுக்கு, இவனுக்கு மட்டும் லாபமாக குவிகிறது என. இதனாலே இரு குடும்பமும் பிரிந்தது. ஒற்றுமையாக இருந்தவர்கள் ஆளுக்கொரு திசை என நகர்ந்தனர். ராமநாதனுக்கு வளர்ந்து வரும் தன் தம்பியின் வளர்ச்சியின் மீது மோகம். அவனது சொத்தை தானே ஆளவேண்டும் என்னும் வெறி ராகேஷுக்கும் ஊறியது. இதுவே, ராகேஷ் விஷ்ணுவை கொல்ல காரணமாகும்.

அவனது பழியுணர்ச்சி, தந்தையின் ஆசை, சுப்பிரமணியன் மறுத்ததால் ஏற்பட்ட பகை, சொத்து மீதுள்ள மோகம் என எல்லாமே ஆட்கொண்டு அவனை ஆட்டிப்படைத்து விஷ்ணுவை கொல்ல வைத்தது. விஷ்ணுக்கு அப்புறம் தனக்கே எல்லா சொத்தும் வந்துவிடும என்ற நம்பிக்கையில்...

ஆனால், இவனின் எல்லா திட்டமும் அரங்கேராது என்பது இவனறியா கடவுளின் திட்டமாகும்...

வர்ஷித் இரவு முழுவதும் தூங்காமல் இருந்ததால், விடியற்காலையில் தான் தூக்கத்தை தழுவினான். தூங்கி இரண்டு மணி நேரத்திலேயே அலாரம் அடித்து சென்னைக்கு புறப்படுவதை நியாபக படுத்தியது.

கண் விழித்தவன் புரண்டு ஆதிகா படுத்திருக்கும் பக்கம் திரும்பி படுத்தான். அலாரம் சத்தத்தில் கண்களை விழித்து, துடைத்து கொண்டே வர்ஷித் படுத்திருக்கும் பக்கம் திரும்பி படுத்தாள் ஆதிகா, எதேச்சையாக.

இருவரும் ஒரே நேரத்தில் எதிர் நோக்கும்போது இருவிழிகளும் ஒரு நிமிடம் சந்தித்து மீண்டன. வர்ஷித் ஒரு வெற்று பார்வையை அவளிடம் செலுத்தி, "கிளம்பு இன்னைக்கு சென்னைக்கு போகணும்" என்றான்.

வர்ஷித் முதலில் திருமணம் முடிந்து, தான் மட்டுமே சென்னைக்கு போவதாக அவனது மாமாவிடம் கூறினான். அதற்கு அவர்தான், நீ மட்டும் தனியா போறதுக்கா உனக்கு மெனக்கெட்டு கல்யாணம் பண்ணி வைக்கிறது. ஒழுங்கா அந்த பொண்ணையும் கூட்டிட்டு போ என்றார் கட்டளையாக. அவர் கூறும்போது அவரது வார்த்தையில் சிக்கிய மெனக்கெட்டு என்கிற வார்த்தை வர்ஷித்தை காயப்படுத்தியது என்னவோ உண்மை தான். தனக்கென்று பெற்றோர் இருந்திருந்தால் இதை அவர்கள் பாரமாக எடுத்திருக்க மாட்டனர். நமக்கு தான் அது கொடுத்து வைக்கலயே என எண்ணி மனதை தேற்றி கொண்டான்.மாமா கூறிய பிறகு இதனை மறுக்கமுடியாமல் வர்ஷித் அவளை தன்னுடன் அழைத்து செல்ல சம்மதித்தான் முழு மனதில்லாமல்.

வர்ஷித் கூறியதற்கு ஆதிகாவும் சரி என்று தலையை மட்டும் அசைத்துnதனது பதிலை தெரிவித்தாள் பயந்த விழிகளோடு...

பொழுதும் பளபள வென விடிந்தது. இருவரும் வீட்டை விட்டு கிளம்பும் நேரமும் வந்தது. தன் காதல் கண்ட ஏமாற்றமும், அதனின் வலியும், திருமணம் முடிந்து வீட்டை விட்டு பிரியும் சராசரி பெண்ணிற்குரிய சோகமும் போட்டி போட்டு கொண்டு துயரத்திற்குள் ஆதிகாவை மூழ்கடித்தது. ஆதிகா தந்தையையும் தாயையும் கட்டி தழுவி கொண்டு கண்ணீர் சிந்தினாள். இருவரும் மகளிற்கு, "இன்னும் கொஞ்ச நாள் தானே, அப்புறம் இங்க வந்துருவிங்க அழுக கூடாது போய்ட்டு வாங்க" என கூறினார். அவளின் தாயோ," பாத்திரமா பாத்துக்கோ அவர நீ தான் மாத்தணும் எல்லாமே சரி ஆகிடும்" என அறிவுரை கூறினார் மகளுக்கு. சுதா மட்டும் வர்ஷித் எதிலும் ஈடுபாடு இல்லாமல் இருப்பதை பார்த்து அவனின் நடவடிக்கையை கண்டுபிடித்தார், போக போக சரி ஆகிடும் என நம்பினார். இங்கு நடந்த எதையும் வர்ஷித் கண்டுகொள்ளவேயில்லை. போய்ட்டு போன் பண்ணுங்க என கூறி வழியனுப்பி வைத்தனர் ஆதிகாவின் பெற்றோர்.

ஆதிகா வர்ஷித்துடன் அவனது மாமாவும் பேருந்து நிலையம் வரை சென்று அவர்களை சென்னை பஸில் ஏற்றிவிட்டு, தன்னுடைய ஊருக்கும் பஸ் ஏறினார்.

பேருந்தில் ஜன்னல் ஓர சீட்டில் ஆதிகாவும் அவளுக்கு அருகில் வர்ஷித்தும் அமர்ந்திருந்தான். வெகு அருகில் அமர்ந்திருந்தும் இருவரது உடல், ஒருவரையொருவர் தொடும் தூரத்தில் இருந்தும் தொடாமல் இருந்தது, உடல் மட்டும் இல்லை மனமும் அப்படிதான். பேருந்து பயணத்தை தொடங்கியது.

மதி மறைந்து, ஆதவன்
ஆட்சியை தொடங்க,
பறவைகள் கூட அமைதி
காக்காமல் கூச்சலிட்டு
தங்கள் இருக்கையை
தெரிவிக்க, மக்கள்
பரபரப்பாக வேலையில்
ஈடுபட,
இப்பேருலகமே அமைதியை
இழந்துகொண்டிருந்தது,
இவர்கள் இருவரை தவிர,
அந்த காலை பொழுதில்...

ஆதிகா திரும்பி வர்ஷித் என்ன செய்கிறான் என கூட பார்க்காமல் ஜன்னல் பக்கமே தலையை பதித்திருந்தாள். வர்ஷித்தா இதற்கு சளைத்தவன்? அவனும் ஆதிகாவை கண்டு கொள்ளாமல் போனையே பார்த்துக்கொண்டு வந்தான்.

பேருந்து வேகமாக செல்லுவதால் , பனிக்காற்றும் புயலென வீச, குளிர் தாங்க முடியாமல் ஆதிகா அணித்திருந்த சுடிதாரின் துப்பட்டாவை இழுத்து போர்த்தியிருந்தாள். அவனோ, உள்ளே குளிர்ந்தாலும் வெளியில் குளிர்வதை அவன் வெளிக்காட்டி கொள்ளவில்லை.

சிறிது நேரம் இப்படியே நகர, வர்ஷிதிற்க்கு போனை பார்த்துக்கொண்டே வருவதால், போர் அடித்தது. கொஞ்ச நேரம் கழித்து தன் தோளில் பாரம் ஏறுவதை உணர்ந்தவன், சற்று திரும்பி கண்களை ஆதிகா மேல் பதித்தான். அவளோ, சிறு பிள்ளை போல், இவன் தோள் மீது அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தாள்.

அத்தியாயம்: 6

அழகு பதுமையென தூங்கும் தன் மனையாளின் முகத்தை அப்போதுதான் வெகு நெருக்கத்தில் பார்த்தான் வர்ஷித். அவ்வளவு நேரமிருந்த மன போராட்டங்கள் சிறிது அமர்ந்து, சற்று முன் பிறந்த மன அமைதியும் பனிக்காற்றின் ஈரப்பதமும் ஆதிகாவின் அழகை ரசிக்க தூண்டியது அவனுக்குள்.

முடிக்கற்றை ஒன்று வீசும் காற்றுக்கு ஏற்றவாறு நடனமாடும் மைதானமாக அவளது நெற்றி, தூங்கும் போது கூட கதை பேசுவது போல காட்சியளிக்கும் உருண்டை விழிகள், அந்த விழிகளுக்கு ஏற்ப இறைவனே இறங்கி வந்து வரைந்தது போல இரு கருமை நிற புருவங்கள், முகத்திலே கொஞ்சம் மேடிட்டு வளர்ந்து, மூச்சு காற்றை உள்ளே ஏற்றியும் வெளியே இறக்கியும் செயல்படும் மூக்கு என இது வரை எல்லாத்தையும் ரசித்தவன், அதற்கு கீழே இறங்கினால், நடக்க கூடாத விபரீதம் நேரிடும் எனும் பயத்தில் மனதை கடிவாளமிட்டு, இவள் தனக்கு என்றுமே கிடைக்க போவதில்லை, கிடைத்தாலும் தான் என்றுமே இவளை ஏற்க போவதில்லை என தன் மனதை அடக்கினான்.

தூங்கிய நிலையில் இருந்தலும், அவளது அதரங்களும் பற்களும் நடுங்கி கொண்டே குளிரின் வீரியத்தை
எடுத்துரைத்தது. அவள் தூக்கம் கலையாத வண்ணம், பையிலிருந்து போர்வையை எடுத்து அவளுக்கு போர்த்திவிட்டான். இவள் தனக்கில்லை என்றாலும் தன் கூட இருக்கும் சில நாட்கள் நன்றாக பார்த்துக்கொள்ளவேண்டும் என முடிவெடுத்தான். ஆனால், இதை அவன் நிறை வேற்றுவானா...

என்னதான் தோள், வலி கொடுத்தாலும் சிறுபிள்ளை போல் தூங்கும் அவளது சோகத்தை சுமந்து கொண்டிருக்கும் முகத்தை தன் மேலிருந்து அகற்ற மனமில்லாமல் சுமந்து கொண்டே தானும் சீட்டின் மீது தலையை சாய்த்து தூங்கி போனான்.

சாலையில் வாகனங்களின் பேரிரைச்சல், இவர்களை விழிக்க செய்து தெரியப்படுத்தியது, சென்னை மாநகரம் வந்துவிட்டது என்று இல்லை இல்லை சென்னைக்கு தாங்கள் வந்துவிட்டோம் என்று.

சென்னைக்கு வரப்போகிறோம் என முடிவு செய்த பொழுதே, வர்ஷித் ஆகாஷிடம் போனில், " மச்சான் உன்னோட பிரண்ட் கவின் கிட்ட சொல்லி சென்னைல எனக்கொரு வீடு பாக்கசொல்லுடா ஒரு வாரத்துக்கு மட்டும்" என கூற, "சரி மச்சான் சொல்றேன், அவனுக்கே இன்னொரு வீடு இருக்குடா, நான் அவன்கிட்ட பேசிட்டு அவனோட நம்பரும் அட்ரஸும் அனுப்பி விடுறேன் டா"என பதிலளித்தான் ஆகாஷ்.

சென்னையில் இறங்கியதும் ஆதிகாவிற்கு படபட வென இருந்தது. வர்ஷித் ஆகாஷ் அனுப்பிய அட்ரெஸ்ஸை வைத்து அவனது நண்பனான கவின் வீட்டுக்கு ஆதிகாவை அழைத்து சென்றான்.

ஆகாஷ் கவினிடம் வர்ஷித்தின் வருகையை பற்றி கூறியிருந்தான். கவினும் அவனது மனைவியும் வர்ஷித்தையும் ஆதிகாவையும் நன்றாக உபசரித்தனர். அவர்கள் இருவரும் தங்கப்போகும் வீட்டிற்கு கூட்டி சென்று காட்டிவிட்டு, ஏதாவது உதவின கேளுங்க எனவும் கூறிவிட்டு, சமையலுக்கு தேவையான பொருட்களையும் இவர்களே ஏற்பாடு செய்து கொடுத்து வந்தனர்.

சென்னைக்கு வந்து சேர்ந்து வீடு பார்த்து முடிக்கும்போதே அன்றிரவு நெருங்கியது. காலையிலிருந்து ஒழுங்கா சாப்பிடாமல் இருந்ததால், தானே கடைக்கு சென்று இருவருக்கும் உணவு வாங்கி வரலாம் என முடிவு செய்த வர்ஷித், ஆதிகாவிடம் நாளைக்கு சமைச்சுக்கலாம் இன்னைக்கு வெளில வாங்கிட்டு வரேன் என்ன வேணும் என கேட்டதுக்கு, தயக்கமாக, 'இட்லி' என்றாள்.

அவன் சென்ற பிறகு, ஹாலிலே சுருண்டு படுத்துக்கொண்டாள். அப்பொழுது, ஆதிகாவிற்கு போனில் அழைப்பு வந்தது பெற்றோரிடமிருந்து. அவர்களிடம் பேசி முடித்து மறுபடியும் படுக்க போன போது, வர்ஷித் சாப்பாடு வாங்கி வந்தான். இந்த சாப்பாடு சாப்பிட்டு தூங்கு, காலையிலிருந்து ஒழுங்கவே சாப்பிடலைல என்றான். இருத்தட்டை கொண்டு வந்து வைத்தவள். அவனை நிமிர்ந்து கூட பார்க்காமல், நீங்களும் வாங்க சாப்பிடலாம் என்றாள். அதற்கு அவன், இல்லை இப்போ நீ சாப்பிடு எனக்கு பசிக்கல நான் அப்புறம் சாப்பிட்டுகிறேன் என்றான். அவள் மனதில் எனக்கு மட்டும் தான் பசிக்குமா, இவரும் தானே காலையிலிருந்து சாப்பிடல... என நினைத்தவள், அவனை மீண்டும் வற்புறுத்த விரும்பவில்லை. வர்ஷித்தும் அவளை பார்க்க விரும்பாமல், பேசி முடித்த மறு நொடியே உடையை மாற்றி டி ஷிர்ட்டும், முக்கால் பேண்டுடனும் வெளியேறினான்.

அவன் வெளியேறிய சில நிமிடத்திலே ஆகாஷ் அவனை போனில் அழைத்தான். பால்கனியில் நின்று அவனுடன் உரையாட ஆரம்பித்தான் வர்ஷித். 'என்னடா மச்சான் வீடு எல்லாம் ஓகே தானே, பாத்து போயிட்டீங்களா' என ஆகாஷ் கேட்க, வந்துட்டோம் டா நல்லா பேசுனாங்க, உபசரிப்பு எல்லாம் பலமா இருந்ததுடா என்றான் மன நிறைவுடன் வர்ஷித். நீ சாப்பிட்டியா என ஆகாஷ் கேக்க வர்ஷித்தோ, இன்னும் இல்லடா இப்போதான் வாங்கி கொடுத்துட்டு வந்தேன் அவ சாப்பிடதுக்கு அப்புறம் தான் நான் சாப்புடனும் என்றான். ஆகாஷ் "ஏன்டா அவுங்க கூட சாப்பிடலாம்ல இப்படியே எத்தனை நாள் இருக்க போற, உன்னோட பஸ்ட்ட மறந்துட்டு இவுங்க கூட பழகுடா எல்லாமே மாறும் என அறிவுரை மொழிந்தவன், சரி இப்போ எதுக்கு திருச்சி வேண்டாம்ணு சென்னை கேட்டிருக்க என்ன ஆச்சு என ஆகாஷ் கேக்க, இதற்கு வர்ஷித் என்னால அங்க இருக்கமுடியும்ணு தோணல அதான்டா கொஞ்சம் சேஞ்சுகாக சென்னை சூஸ் பண்ணேன்டா.ஆனால், என் வாழ்க்கையில இப்போ என்னென்னமோ நடந்து போச்சு, இப்போ ரொம்ப குழப்பமா இருக்குடா என்ன பண்றதுனே தெரியல, என வர்ஷித் கூறிய மொழிகளை கேட்ட ஆகாஷ், "என்ன குழப்பம் மச்சி" என கேட்டு முடிப்பதற்குள்ளவே வர்ஷித்தின் போன் சுவிட்ச்ஆப் ஆகியது சார்ஜ் இல்லாமல். வர்ஷித் நொந்து கொண்டே, இது கூட எனக்கு சதி பண்ணுது கொஞ்சம் நிம்மதியா இருக்க விடாதே இது...இது மட்டும் இல்லை எல்லாமே தான் என பார்வையை மனைவி மீது செலுத்தினான். உள்ளே சென்று சார்ஜ் போட்டுவிட்டு இவள் படுத்துவிட்டாளா என ஒரு நோட்டம் விட்டு சாப்பிட தொடங்கினான். மனித கோபத்தை எல்லாம் உயிரற்ற கருவியிடம் காட்டினால் அது தான் என்ன செய்யும்...

ஆதிகா உண்டு முடித்து, அறையில் சென்று கீழே முடங்கிக்கொண்டாள். படுத்தவுடன் காலையிலிருந்து அடக்கி வைத்த அழுகையையெல்லாம் தலையணையிடம் கொட்டி தீர்த்தாள். அவள் மனம் முழுவதிலும் விஷ்ணும் நியாபகங்களே நிரம்பி அவளை வாட்டியது. அவனும், தான் இருக்கிற சென்னையில் இருக்கும் போது தானே நம்மிடம் கடைசியாக பேசினான். அன்று அவன் பேசிய வார்த்தைகள் காற்றில் கலந்து அவளது செவி முழுவதும் ஆட்கொண்டது... பேசிய மனிதனுக்கு அழிவிருந்தாலும் பேசிய வார்த்தைக்கும் அதை உள்வாங்கிய காற்றுக்கும் அழிவு உண்டோ....

நிழல் அது தான் பிரிகிறதே...
நிஜம் அது தான் மறைக்கிறதே...
கண்ணும் கண்ணும் தவிக்கிறதே...
ஒன்றை ஒன்று தொலைக்கிறதே..

எத்தனை கனவு, எத்தனை ஆசை எல்லாமே கலைந்து விட்டதே. எல்லா பழியையும் விஷ்ணு மீது சுமத்தினாள் அந்த பேதை. இனிமேல், அவனுக்காக அழுக கூடாது. அவன் தானே என்னை விட்டு போனான், அவன் தான் வருந்தனும். நான் எதற்கு அழுகணும் என தன்னையே தேற்றிக்கொண்டாள். ஒட்டுமொத்த அவனது நினைவுகளையும் அழித்துவிடும்படி அழுது ஓய்ந்தாள்.

அத்தியாயம்: 7

நாளையிலிருந்து இனிமேல் இவரோட பேசணும். பேசுனாதான் எல்லாமே சரி ஆகும் இது தான் ஒரே வழி. இவர் கூட தான் இனி என் வாழ்க்கை என தீர்மானமாக நினைத்துக்கொண்டாள். காலையில் முதல் வேலையாக அவரிடம் என்னோட கடந்த காலத்தை பத்தி பேசி, கொஞ்சம் டைம் கேட்போம் என முடிவெடுத்தாள்.

இவள் குழப்பத்தில் இருந்ததால், அவனும் குழப்பத்தில் உள்ளான் என்பதை இவள் அறியாமல் விட்டாள். என்ன சொன்னாலும் அவன் தன்னை ஏற்கமாட்டான் என இவளுக்கு துளியளவும் தெரியவில்லை. தெரிய வரும்போது என்ன செய்வாள்?

இவள் தூக்கத்திற்கு போராடி கொண்டிருக்கும்போது தான், வர்ஷித் உள்ளே நுழைந்தான். இவள் கீழே படுத்திருப்பதை பார்த்தவன், "நீ மேல படுத்துக்கோ நான் ஹால்ல படுத்துக்குறேன்", என கூறி இவள் பதில் கூற நேரம் கொடுக்காமல் அறையை விட்டு வெளியேறினான்.

காலையில் எழுந்தவுடன் வர்ஷித்தும் முதல் வேலையாக ஆதிகாவிடம் பேச வேண்டும் என முடிவெடுத்தான்.

வர்ஷித் காலையில் குளித்து முடித்து அலுவலகத்திற்கு கிளம்பி ஆதிகாவிடம் பேசுவதற்காக காத்து கொண்டிருந்தான். ஆதிகா அப்போதான் தூங்கி முழித்து வெளியில் வந்தாள். அவள், மாலையில் அலுவலகத்திலிருந்து வந்த பிறகு பேசலாம் என நினைத்தாள். வர்ஷித்தோ இப்பவே பேசிவிடனும் என முடிவாக இருந்தான். ஆனால், ஆதிகாவிற்கு மாலை வரை இந்த விஷயத்தை மனதில் போட்டு குழப்பிகொள்ள விரும்பவில்லை. எனவே, இப்பவே கூறிவிடலாம் என நினைத்து, அவனிடம் பேசுவதற்காக வந்தாள். உங்களிடம் ஒன்னு பேசணும் என ஆரம்பித்தாள் ஆதிகா. வர்ஷித் நிமிர்ந்து பார்த்தான் தன் எதிரில் நிற்கும் ஆதிகாவை. என்னோட கடந்த காலத்தை பத்தி, என ஆதிகா கூறி முடிப்பதற்குள்ளவே அவன் கை நீட்டி தடுத்து, " வேண்டாம் எல்லாம் எனக்கு தெரியும்" என்றான். ஆதிகா திரு திரு வென முழித்தாள். அவன்மேலும், "இன்னும் கொஞ்ச நாள் தான், அதுக்கு அப்பறம் நான் உன் வாழ்க்கைய விட்டு போயிருவேன். நீ எந்த கவலையும் படாத, உன் வாழ்க்கையில் நான் தலையிட மாட்டேன். இந்த வீட்டிலயும் நீ எனக்காக ஒன்னும் செய்ய வேண்டாம். நான் வெளியில் சாப்பிடுகிறேன்" என ஆதிகாவை பேச விடாமல் தான் பேச நினைத்ததை பேசிவிட்டு அலுவலகத்திற்கு கிளம்பினான் வர்ஷித்.

அவன் போன பிறகு, இவளும் நின்ற இடத்திலேயே உணர்வற்று அமர்ந்தாள். தான் காதலித்தது தெரிந்து தான் இப்படி பேசுகிறான். தானே கல்யாணத்திற்கு முன்னாடி அவனிடம் கூறியிருக்க வேண்டும் தப்பு செய்துவிட்டோமே என தன்னையே நொந்துக்கொண்டாள். இது மட்டும் வீட்டிற்கு தெரிந்தால் எல்லாருக்கும் என்ன பதில் சொல்வது, என்னோட வாழ்கை இப்படி ஆகிடுச்சே, தானே மாறி வந்தால் கூட இவன் ஏற்றுக்கொள்ளமாட்டான் என நினைத்து அழுது மடிந்தாள் அந்த அறியா பெண். ஆனால், அவன் இப்படி கூறியதற்கு இது காரணமில்லை என்பதை இவள் உணர்வாளா?

நாட்கள் இதுபோலவே நகர்ந்தது இருவருக்கும், ஒருவரையொருவர் பார்க்காமலே... வர்ஷித் காலையில் சென்று மாலையில் தான் வீட்டிற்கு வருவான். ஆதிகாவோ நாள் முழுவதும் வீட்டிற்குள்ளே அடைந்து கிடந்தாள். வர்ஷித் அவசரத்துக்கு மட்டும் தனது நம்பரை மட்டும் ஆதிகாவிடம் பகிர்ந்து கொண்டான். பதிலுக்கு அவள் எண்ணை கூட அவன் வாங்கிக்கொள்ளவில்லை.

ஒருநாள், ஆதிகாவின் தம்பி முகேஷ் போன் செய்தான். தம்பியின் புகைப்படத்தை போனில் பார்த்ததும் கண்கள் குளமாகிப்போனது ஆதிகாவிற்கு. அதை உயிர்ப்பித்து காதில் வைத்து தம்பி என பேசும்போதே அவளின் குரல் கரகரத்தது. மறுபக்கம் முகேஷ், "அக்கா அழுகாத ஏன் அழுகுற? என்றான் கஷ்டமிருந்தாலும் அதை மறைத்து அக்காவை தேற்றும் பொருட்டில். அவள் பதிலேதும் பேசாமல் இருந்தாள். அவனே மேல தொடர்ந்தான்," அப்பா இப்பதான் போன் பண்ணி நடந்த எல்லாமே சொன்னாங்க. நான் காலேஜ்ல கேம்ப் போன ஒரு வாரத்துல இப்படியெல்லாம் நடந்து போச்சு, சரிக்கா கவலைப்படாத. பாஸ்ட மறந்துட்டு இந்த வாழ்க்கையை ஏத்துக்க பழக்கிக்கோ அக்கா. எல்லாமே ஒரு நாள் கண்டிப்பா மாறும்", என கூறினான் கஷ்டத்துக்கு மேல் கஷ்டம் வந்தும் கொல்லும் தன் தமக்கையின் வாழ்க்கையை சரி செய்யும் நோக்கில். தன்னை தூக்கி வளர்த்து, தனக்கு மறு அன்னையாகவே வாழ்ந்த அக்காவின் வாழ்க்கையை நினைத்து மிகவும் வேதனை கொண்டான். அவளுக்கு ஆறுதல் மொழி பேசி, ஆறுதலாகவே மாறினான் முகேஷ். என்னதான் தம்பி ஆறுதலாக இருந்தாலும் ஆதிகாவிற்கு வர்ஷித் கூறிய சொற்கள் பயம் அளித்தது எதிர் கால வாழ்க்கையைப்பற்றி. வர்ஷித் கூறியதை தன் தம்பியிடம் அவள் கூறவில்லை. தன் கஷ்டம் தன்னோடவே இருக்கட்டும் என நினைத்தாள். பிறகு, தம்பியிடம் பொதுவாகவும் அவனது படிப்பு பற்றியும் பேசி விட்டு அழைப்பை தூண்டித்தாள். தன் கடந்த கால காதல் எதிர்கால வாழ்வை அழிக்கப்போகிறது
எனும் பயம் இவளை மிரட்டியது. வாழ்க்கையே கேள்வி குறியாக மாறிப்போனது.

வாழ்க்கையின் விடை தெரிந்துவிட்டால், வாழும் போது என்ன சுவாரசியம் இருக்க போகிறது என்பதை இந்த பாவை புரிந்துக்கொள்ளவில்லை. இந்த பயம், இதனை தெரிந்துக்கொள்ளவும் விடவில்லை. சரி பயப்படுவதால் என்ன ஆகப்போகிறது? நடக்கும் போது பார்த்து கொள்ளலாம் என நினைத்து பயத்தை மூட்டை கட்டி வைத்தாள்.

பிரச்சனையை நாம் ஒதுக்கி வைத்தாலே போதும் தானாகவே நம்மை விட்டு அது நீங்கிவிடும். நாம் அதை நினைக்க நினைக்க தான், அதுவும் நம்மையே நாடுகிறது.

நான்கு நாள் கழித்து, வர்ஷித் அலுவலகத்திலிருந்து வந்தது முதல் உச்சக்கட்ட கோபத்தில் இருந்தான். யாருக்கோ போன் செய்து கொண்டிருக்க, மறுபக்கம் எடுத்தவுடன் காட்டு கத்து கத்தினான். ட்ரஸ் கூட மாற்றமால் கோபத்தில் இருந்தவனை கண்டவள், "அலுவலகத்தில் ஏதோ பிரச்சனை போல" என நினைத்தாள். அதனால், அவள் அவனிடம் ஏதும் கேட்டு கொள்ளவில்லை. நேரம் ஆக ஆக அவனின் கோபம் அதிகரிப்பதை பார்த்து அரண்டு போனாள். அவள் சென்று கேட்டதிற்கும் அவன் பதிலளிக்கவில்லை. இப்படி இருப்பவனிடம் என்ன கேட்பது என தெரியாமல், அறைக்குள் சென்று படுத்துக்கொண்டாள். இரவு 11மணிக்கு அறைக்கதவை திறந்தவன் திடுதிடுமென உள்ளே நுழைந்தான். சத்தம் கேட்டு விழித்தவள், எழுந்து அமர்ந்தாள். சட்டென, வர்ஷித்
' உன்னோட திங்ஸ் எல்லாத்தையும் பேக் பண்ணிக்கோ, இப்பவே ஊருக்கு கிளம்பனும்' என்று கூறி கொண்டு அவன் பொருட்களை எடுத்து வைத்து கொண்டிருந்தான். அவன் முகத்தை உற்று பார்த்தாள் ஆதிகா ஒரு நிமிடம், கோபம் கோபம் கோபம் மட்டுமே பிரதிபலளித்தது. பிறகு, 'ஒரு வாரம் இருக்கணும்ணு சொன்னிங்க, இப்ப வந்து கிளம்பனும்னு சொல்றிங்க என்ன ஆச்சு, எதாவுது பிரச்சனையா' என அவள் கேட்டதுதான் தாமதம், உடனே அவன் "எதிர்கேள்வி கேட்காமல் கிளம்பு சீக்கிரமா இன்னும் கொஞ்ச நேரத்துல கார் வந்துரும்" என கத்தினான். இவன் திட்டிய வேகத்தில் பயந்து இவளும் கிளம்ப ஆரம்பித்தாள். வர்ஷித் தனது உடைமை எல்லாம் எடுத்து வைத்து விட்டு, கவினிடம் வீட்டை காலி செய்வதாக தெரிவித்தான். ஆதிகவோ சமையல் அறையை சுத்தம் செய்துவிட்டு தானும் ஆயத்தமானாள்.

கார் இவர்களை சுமந்துக்கொண்டு திருச்சியை நோக்கி சென்றது. ஆதிகாவிற்கு பயம் தொற்றிக்கொண்டது, தன் காதல் தெரிந்து தான் பிரச்சனை செய்ய போறான் என. திருச்சி செல்லும் வரையிலும் அவன் கோபம் மட்டுப்படவேயில்லை. இருவருக்கும் ஒரு நிமிடம் கூட கண் அயரவில்லை அவனுக்கு கோபத்தில், இவளுக்கு பயத்தில்... ஒரு வழியாக காலை பொழுது நெருங்கியதும் கார் திருச்சியை அடைந்து விஷ்ணுவின் வீட்டின் வாசலில் நின்றது.

ஆதிகாவின் வாழ்கை என்ன ஆகப்போகிறது... வர்ஷித்தின் முடிவு என்ன என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்...

நன்றி !!!
 

Aarthi murugesan

Saha Writer
Team
Messages
29
Reaction score
0
Points
1
என்னடி மாயாவி நீ

அத்தியாயம்: 8

கோபத்தில் விளைந்து உதித்தவன் போன்று காட்சியளித்த வர்ஷித்தின் முகம் கொஞ்சம் இறுக்கம் தளர்ந்தது, விஷ்ணுவின் தாய் தந்தை முகத்தை கண்டு. ஆம், இவ்வளவு சீக்கிரமா யார் வந்திருப்பது என்று யோசித்து கொண்டே வெளியே வந்தனர் இருவரும் கார் வந்த சத்தத்தை கேட்டு.

இருவரும் வாசற்படியில் நிற்க அவனோ இருவரையும் பார்வையில் பதித்துக்கொண்டே வாசலில் நின்றான். இப்போது அவனது முகத்தில் கோபம் மறைந்து கண்ணில் கண்ணீர் துளிகள் பூத்து கன்னத்தில் இறங்கி முகமெங்கும் சோகத்தின் வாசனையை பரப்பியது.

வசந்தாவின் கண்களும் சுப்பிரமணியன் கண்களும் வர்ஷித்தின் கண்களும் கலங்கி ஒருவரை ஒருவர் கண்களாலே தாங்கி நின்றனர். ஆதிகாவின் நிலை தான் பரிதாபம், இங்கு என்ன நடக்கிறது, என்ன நடக்கப்போகிறது என தெரியாமல் பயத்தில் நடுங்கி நின்றாளே தவிர யாரையும் நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. வர்ஷித் கண்களால் ஏன் இதை என்கிட்டே மறச்சிங்க என கேள்வி கேட்க, இந்த கேள்வியில் இருவரது முகமும் மனமும் குற்ற குறுகுறுப்பில் தலை கவிழ்ந்தது.

அவர்கள் தலை கவிழ்ந்ததை தாங்க முடியாமல் சட்டென்று ஓடி அவர்கள் இருவரையும் கட்டி ஆற தழுவிக்கொண்டான், அந்த அணைப்பு தான் இருக்கிறேன் என்பது போல் இருந்தது. மூவரும் கண்ணீர் விட்டு கதறினர். ஏன்மா நான் உயிரோட இருக்குறது உங்க கண்ணுக்கு தெரியலையா, இல்லை அந்த அளவுக்கு நான் மூணாவுது மனுசனா போயிட்டேனா என கேட்டவனிடம் வசந்தா, "என்னப்பா இப்படியெல்லாம் பேசுற, நீ எங்களோட புள்ள உன்ன எதுக்கு இப்படி நினைக்கபோறோம் என வர்ஷித்தின் முகத்தை வருடி கண்ணீரை துடைத்து கொண்டு அவனது முகத்தையும் துடைத்துவிட்டார். இந்த பதில் தான் வருமென்று அவனுக்கு ஏற்கனவே தெரிந்தது தான். ஏனென்றால், அவனை பெறாவிட்டாலும் தூக்கி வளர்த்த அன்னை ஆயிற்றே. தன்னிடம் விஷ்ணு இறந்த விஷயத்தை கூறாமல் இருந்த அவர்களின் மேலுள்ள கோபத்தினாலே தனது மனதை கல்லாக்கி கொண்டு இந்த கேள்வியை அவர்களிடத்தில் உதிர்த்தான்.

ஆதிகாவிற்கு இங்கு என்ன நடக்கிறது என யோசித்து தவித்து கொண்டிருந்தாள். இங்கு நடப்பதை அவளால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. முதலில் புரியாமலிருக்க பிறகு நடப்பதும் புரியாவிட்டாலும் இவன் தனக்காக பிரச்சனை செய்ய இங்கு வரவில்லை என்பதை புரிந்துக்கொண்டான். இவனுக்கும் இந்த குடும்பத்திற்கும் ஏதோ ஒரு பிணைப்பு உள்ளதை அவள் அங்கு அரங்கேறிய காட்சிகளை வைத்து யூகித்துக்கொண்டாள்.

சில நிமிடங்கள் கழித்து, வர்ஷித் ஜோடியாக வந்திருப்பதை கண்டு சோகம் மறந்து மகிழ்ச்சியாக அவனை வரவேற்றனர். ஏய் என்ன பாத்துட்டு இருக்க, போயிட்டு ஆரத்தி கரைச்சு எடுத்துட்டு வா நம்ம புள்ள இப்பதா முதல் முறையா கல்யாணம் ஆகி வந்திருக்கான் என அப்பா கூற அவரது மனைவியோ உள்ளே சென்று ஆலத்தோடு வந்தார். இருவரையும் ஒன்று சேர நிற்கவைத்து ஆரத்தி எடுத்து வலது காலை எடுத்து வைத்து உள்ளே போங்க என்று கூறி ஆழத்தை வாசலில் கொட்ட போனார் வசந்தா. வர்ஷித்தை குற்ற உணர்வு கொன்றது, விஷ்ணு இடத்தில் தான் இருக்கிறமே என்று.

உள்ளே நுழையும் போது அவர்களை சிரித்த முகத்துடன் வரவேற்த்தது பூமாலைக்கு நடுவில் பத்தி வாசனையில் உயிர்கொண்டு, உருவமற்று போட்டோக்குள் ஒளிந்திருக்கும் விஷ்ணுதான். அவனது முகத்தை இந்த ஒரு நிலையில் பார்த்தவுடன் திகைத்து நின்றனர். வர்ஷித்திற்கு சொல்ல முடியாத துயரமும் கம்பீர ஆணின் அகராதியில் இடம்பெறாத அழுகையும் தொற்றிக்கொண்டது.

இதை வெளியில் காட்டக்கூடாது. தான் வருந்துவது அப்பா அம்மாவுக்கு தெரிந்தால், அவர்களும் வருந்துவர் என நினைத்து தன்னை கட்டுப்படுத்தி கொண்டான். அவர்கள் இந்நாள் வரை தன்னை வளர்த்ததற்கு இனிமேல் தானே அவர்களின் துன்பத்திற்கு மருந்தாக வேண்டும், அவர்களை எந்த நிலையிலும் கை விடவே கூடாது. இனிமேல் அவர்கள் தான் நமக்கு எல்லாமே என முடிவெடுத்து ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்து விஷ்ணுவை வெறித்து பார்த்து கொண்டிருந்தான். எங்கே போனாலும் ஒன்னா தானேடா போவோம். நீ சொன்னதை கேட்காம நான் வெளிநாடு போனதுக்கு நீ ஓரேடியா என்ன விட்டுட்டு போயிட்டியேடா என்மேல அவ்ளோ கோபமாட உனக்கு. கடைசி நேரத்துல உன்கூட இல்லாமா என்னோட சுயநலத்துக்காக நான் வெளிநாடு போயிட்டேனே என புலம்பி மனதினுள் நொந்துக்கொண்டான். ஆதிகவோ அன்று உயிரற்ற சடலத்தில் அவனது முகத்தை பார்த்தது, பிறகு இப்போதான் பார்க்கிறாள். அவன் ஏமாற்றிய வலியில் அவனது முகத்தையே பார்க்க மறுத்திருந்தாள். இப்போது, எதார்த்தமாக அவனை கண்ட பின்பு கல்லாகி போனாள்.

இருவரது எண்ண ஓட்டங்களை களைத்த படி, வசந்தாவோ இரண்டு பேரும் மேல போயிட்டு குளிச்சிட்டு வாங்க, சாப்பாடு எடுத்து வைக்கிறேன் என சொல்ல ஆதிகா அதற்கு சரிங்கமா என்றாள். வர்ஷித் பேசாமல் இருந்தலும் ஆதிகா கூறியதை கவனிக்க தவறவில்லை.

வர்ஷித்தும் ஆதிகாவும் பைகளை சுமந்து கொண்டு படியில் ஏறினர். வர்ஷித் அம்மா சொன்ன அறைக்கு செல்லாமல் அதற்கு அருகிலிருந்த அறைக்கு சென்றான்.

உள்ளே சென்றதும் அவளிடம் முகம் காட்டாமல் குளியறைக்குள் புகுந்து கொண்டான். ஆதிகாவிற்கு வர்ஷித்தின் கண்ணீர் சோகத்தை உண்டாக்கியது. அவன் குளித்து முடித்து வெளியே வந்தவுடன் அவளை நிமிர்ந்து பார்த்து அவுங்கள அம்மா அப்பாணு கூப்பிடதே அத்தை மாமானு கூப்பிடு, அவுங்ககூட நல்லா பேசு பழகு என கூறி முடித்தான். முதலில் அவனது சொல்லில் அதிர்ந்தவள் பிறகு நிம்மதி அடைந்தாள். இதுவும் அவுங்க சந்தோச படுவாங்க, அதுக்காக மட்டும் தான் என கூறி பட்டும் படாமல் பேசிய தனது கணவனை கண்டவள் ஆற்றாமையுடன் பார்த்துவிட்டு குளிக்கச்சென்றாள். பல விதமான யோசனையோடு அமர்ந்தவன் வண்டியில் நிதானமாக பயணிப்பவனுக்கு சாலை விபத்து என்பதை அவனுக்கு ஏற்றுக்கொள்ள இயலவில்லை. இதற்கு பின் ஏதோ ஒரு சூழ்ச்சி உள்ளது, அதை கண்டுபிடிக்கவேண்டும் என முடிவெடுத்தான்.

குழப்பத்தினுள் தன்னை சமன் செய்து கொள்ள சிகரெட்டை பற்ற வைத்து மொட்டை மாடிக்கு சென்றான். புகைப்பிடிப்பதில் தன்னிலை மறந்தவனின் மனமும் மொட்டை மாடி போல வெறுமையாக தோன்றியது.

கீழே ஹாலிலிருந்து அன்னையின் குரல் இவனை எட்டியதும் சிகரெட் துண்டை காலில் போட்டு மிதித்து விட்டு கீழே இறங்கினான்.

அப்பொழுது, ஆதிகாவும் அம்மாவும் இணைந்து ஒன்றாக பேசிக்கொண்டிருக்கும் காட்சியை கண்டான். வர்ஷித் சாப்பிட அமர்ந்ததும் வசந்தா ஆதிகாவையும் அவன் கூட அமர்ந்து சாப்பிட சொன்னார். அவளோ அதை மறுக்க, வர்ஷித்திற்கு ஆதிகா அம்மா பேச்சை மறுப்பதால் கோபம் வந்தது. அவன் பார்வையின் கோப மொழி சற்று புரிந்ததால், அவன் அருகில் சென்று அமர்ந்து உண்டாள். இவளிடம் கோபப்பட்டு கோபப்பட்டு அவனின் கோபத்தை ஆதிகா நன்றாகவே புரிந்திருந்தாள். ஆதிகா அம்மாவிடம் சகஜமாக அத்தை என பேச, வர்ஷித் முகத்தில் சிறு புன்னகையின் விளைவாக அவனது உதட்டில் வளைவு ஏற்பட்டது மனத்தில் நிம்மதியும் பரவியது. அதுகூட சில நொடி தான், அந்த அற்புத காட்சியை அவள் தவறாது கவனித்து இருந்தாள். அவனின் புன்னகை முகம் ஆதிகாவின் கண்ணிற்கு அழகாக தெரிந்தது. அவனின் சிரித்த முகம், அவன் அருகில் அமர்ந்து உண்பது என எல்லாமே அவளுக்கு புதிது.

ஆதிகாவிற்கு அதன் பிறகு விஷ்ணு எந்த வகையிலும் தொல்லை செய்யவில்லை. ஆனால், வர்ஷித்திற்கும் இந்த குடும்பத்துக்கும் என்ன தொடர்பு எனும் குழப்பம் மேலோங்கியிருந்தது. யாரிடம் கேட்பது என்று தெரியாமல் திசையை மறந்த குழந்தைபோல ஆனது அவளது நிலைமை.

சாப்பிட்டு முடித்தவுடன் வர்ஷித்தின் அருகே அவனது அம்மா வந்து, 'இந்த விஷயம் தெரிந்ததும் மாமாகிட்ட ஏதும் கோபப்பட்டியாப்பா' என கேட்க அவனோ, அப்புறம் கோப படமா,எவ்வளவு சுய நலம் அவருக்கு என்றான் வர்ஷித். அதற்கு அம்மா 'மாமாவிடம் கோபப்படாதப்பா, நான்தான் அவரிடம் உன்கிட்ட எதுவும் சொல்லக்கூடாதுணு சொன்னேன் என்றார். வர்ஷித் ஏன்மா இப்படி பண்ணீங்க என கேட்டதுக்கு, 'உனக்கு தெரிஞ்சா நீ கல்யாணமே பண்ணிக்க மாட்ட, நீயே இப்பதா சம்மதம் சொல்லிருக்க நீயும் என்னோட புள்ள தான உன்னோட கல்யாணம்னா அது எனக்கும் சந்தோசம் தான அதான் சொல்லல என்றார் அவனது அம்மா. சொன்ன மறுநொடி, வர்ஷித் அவரது மடியில் படுத்து கண்ணீர் சிந்தினான். அவன் இவ்வாறு துவண்டு அழுவதை கண்டு, ஆறுதலாக தலையை வருடி, என்னப்பா சின்ன புள்ள மாதிரி அழுதுகிட்டு இருக்க, நீ இப்போ ஒரு குடும்ப தலைவர், அது போல நடந்துக்கனும். எங்களுக்கு தான் நீ இருக்கியே வேற எதுக்கு நாங்க கவலை படப்போறோம் என கூறியவரிடத்தில், இந்த புள்ளய தான் நீங்க அப்போ மறந்துட்டீங்கதானே என கோபத்துடன் கூறி மடியிலிருந்து எழுந்து அறைக்கு சென்றான். வசந்தாவிற்கு தெரியும் இவனது கோபத்திற்கு ஆயுள் சிறிது என.

மேல அறையில் சென்று படுத்தவனுக்கு அன்று மாமா இவனிடம் கூறியதை நினைவு கூர்ந்தான். வர்ஷித்திடம் பெண்ணின் போட்டோவை அனுப்பிய போதே இங்கு அம்மாகிட்ட சொன்னீங்களா என தான் கேட்டான். அதற்கு மாமாவும் கூறினேன் என்றார். அதற்கு மறுநாள் தான் விஷ்ணு இறந்தான். இந்த செய்தியை வர்ஷித்திடம் சொல்லலாம் என அவனது மாமா குமாரசாமி முற்பட்ட போது வசந்தா தடுத்து விட்டார். திருமணம் நடந்த பிறகு தெரிய வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என வசந்தா கூறினார். அதனாலே, வர்ஷித்திடம் மாமாவும் கூறவில்லை. இவன் இந்தியா வந்ததும் எதிர்ப்பார்த்தது விஷ்ணு குடும்பத்தை தான்.

மாமாவிடம் விஷ்ணு குடும்பத்தை பற்றி கேட்டதற்கு குடும்பத்தோடு ஒரு வாரம் திருப்பதி சென்றிருப்பதாக கூறினார். தானும் அந்த குடும்பத்தில் ஒருவன்தானே என நினைத்தபோது அவரது மாமா ஏதோ நேர்த்திக்கடன்னு சொன்னங்க, உன்னோட கல்யாணத்துக்கு வரமுடியலையேனு ரொம்ப கவலை பட்டாங்க என கூறி அவனது சிந்தனையை தடை செய்தார். இதையெல்லாம் கேட்டு நம்பியிருந்தான், திருமணத்திற்கு முன் வரை. ஆனால், மணவறையில் ஆதிகாவை பார்த்தவுடன் அவனுக்கு சந்தேகம் மேலோங்கியது, இவள் விஷ்ணுவின் காதலி ஆயிற்றே என. இவர்களின் காதல் இவனை தவிர வேறு யாருக்கும் தெரியாது என்பதால் இதை பற்றி இவன் வேறு யாரிடமும் கேட்கவில்லை, அவளிடமும் கேட்டுக்கொள்ளவில்லை. ஏனென்றால், அவள் வருத்தப்படுவாள் என்பதால். கடைசியாக, ஆதிகாவின் அப்பாவிற்கு காதல் பிடிக்காது இவர்களின் காதல் தெரிந்ததும் மறுத்திருப்பார். விஷ்ணு திருப்பதி சென்ற இந்த வாரத்தில் எனக்கு மணமுடிக்க திட்டம் போட்டிருக்கார் என தானே கற்பனையில் யூகித்துக்கொண்டான்.

பிறகு, திருமணம் முடிந்து, விஷ்ணு ஊருக்கு வந்ததும் இதைப்பற்றி பேசி இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்கவேண்டும் என முடிவெடுத்தான் இல்லாத விஷ்ணுக்காக உயிரற்ற இவர்களின் காதலுக்காக. சென்னை சென்று அவளை ஒதுக்கியத்துக்கும் இதுவே காரணம். விஷ்ணுவின் இறப்பு செய்தி கேட்டவுடன் ஏமாற்றத்தில் மூள்கிப்போனான். இப்போது, ஆதிகாவை நினைத்தே மிகவும் வருத்தப்பட்டான், இவளின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என. அவளின் விஷயத்தில் என்ன முடிவெடுப்பது என நினைத்து குழம்பினான். வெளியில் கம்பீரமாக தன்னை காட்டிக்கொண்டாலும் உள்ளே மிகவும் மனமுடைந்து போனான்.

அன்று இரவும் நெருங்கியது. ஆதிகா அறைக்கு செல்லும்போது வழி தவறி காலையில் வர்ஷித் கூட்டி சென்ற அறைக்கு அருகிலுள்ள அறைக்கு சென்றாள். உள்ளே சென்றவள், ஆ வென அறை முழுவதும் பார்த்தாள். இந்த அறை தான், வர்ஷித் விஷ்ணு இருவரும் தங்கியிருந்த அறை. காலையில் அம்மா கூறியும் அவன் அந்த அறையை தவிர்த்ததற்க்கு காரணம், அங்கு சென்றால் தன்னை கட்டுப்படுத்த முடியாது என்று.

ஏனென்றால், அந்த அறை முழுதும் விஷ்ணு, வர்ஷித் பொருட்கள் ஜோடியாகவே இருந்தது. சுவர் மீது இவர்களின் சிறுவயது முதல் இப்போதுவரை உள்ள எல்லா பருவநிலையையும் காட்டும் வகையில் இருந்தது நிறைய போட்டோக்கள்.இதை எல்லாம் பார்த்து, இவர்களின் பந்தம் என்ன என்பதை தெரிந்தே ஆகவேண்டும் என நோக்கில் கீழே சென்று அத்தையிடம் கேட்டாள். அவரும் ஆரம்பித்தார் இவர்களின் நட்பு கதையை....

வானவில் போல அழகாய், வண்ண கோலமாய் விரிந்த இவர்களின் நட்பை அடுத்த அத்தியாயத்தில் பாப்போம்.

நன்றி!
 

Aarthi murugesan

Saha Writer
Team
Messages
29
Reaction score
0
Points
1
என்னடி மாயாவி நீ

அத்தியாயம்: 8

கோபத்தில் விளைந்து உதித்தவன் போன்று காட்சியளித்த வர்ஷித்தின் முகம் கொஞ்சம் இறுக்கம் தளர்ந்தது, விஷ்ணுவின் தாய் தந்தை முகத்தை கண்டு. ஆம், இவ்வளவு சீக்கிரமா யார் வந்திருப்பது என்று யோசித்து கொண்டே வெளியே வந்தனர் இருவரும் கார் வந்த சத்தத்தை கேட்டு.

இருவரும் வாசற்படியில் நிற்க அவனோ இருவரையும் பார்வையில் பதித்துக்கொண்டே வாசலில் நின்றான். இப்போது அவனது முகத்தில் கோபம் மறைந்து கண்ணில் கண்ணீர் துளிகள் பூத்து கன்னத்தில் இறங்கி முகமெங்கும் சோகத்தின் வாசனையை பரப்பியது.

வசந்தாவின் கண்களும் சுப்பிரமணியன் கண்களும் வர்ஷித்தின் கண்களும் கலங்கி ஒருவரை ஒருவர் கண்களாலே தாங்கி நின்றனர். ஆதிகாவின் நிலை தான் பரிதாபம், இங்கு என்ன நடக்கிறது, என்ன நடக்கப்போகிறது என தெரியாமல் பயத்தில் நடுங்கி நின்றாளே தவிர யாரையும் நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. வர்ஷித் கண்களால் ஏன் இதை என்கிட்டே மறச்சிங்க என கேள்வி கேட்க, இந்த கேள்வியில் இருவரது முகமும் மனமும் குற்ற குறுகுறுப்பில் தலை கவிழ்ந்தது.

அவர்கள் தலை கவிழ்ந்ததை தாங்க முடியாமல் சட்டென்று ஓடி அவர்கள் இருவரையும் கட்டி ஆற தழுவிக்கொண்டான், அந்த அணைப்பு தான் இருக்கிறேன் என்பது போல் இருந்தது. மூவரும் கண்ணீர் விட்டு கதறினர். ஏன்மா நான் உயிரோட இருக்குறது உங்க கண்ணுக்கு தெரியலையா, இல்லை அந்த அளவுக்கு நான் மூணாவுது மனுசனா போயிட்டேனா என கேட்டவனிடம் வசந்தா, "என்னப்பா இப்படியெல்லாம் பேசுற, நீ எங்களோட புள்ள உன்ன எதுக்கு இப்படி நினைக்கபோறோம் என வர்ஷித்தின் முகத்தை வருடி கண்ணீரை துடைத்து கொண்டு அவனது முகத்தையும் துடைத்துவிட்டார். இந்த பதில் தான் வருமென்று அவனுக்கு ஏற்கனவே தெரிந்தது தான். ஏனென்றால், அவனை பெறாவிட்டாலும் தூக்கி வளர்த்த அன்னை ஆயிற்றே. தன்னிடம் விஷ்ணு இறந்த விஷயத்தை கூறாமல் இருந்த அவர்களின் மேலுள்ள கோபத்தினாலே தனது மனதை கல்லாக்கி கொண்டு இந்த கேள்வியை அவர்களிடத்தில் உதிர்த்தான்.

ஆதிகாவிற்கு இங்கு என்ன நடக்கிறது என யோசித்து தவித்து கொண்டிருந்தாள். இங்கு நடப்பதை அவளால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. முதலில் புரியாமலிருக்க பிறகு நடப்பதும் புரியாவிட்டாலும் இவன் தனக்காக பிரச்சனை செய்ய இங்கு வரவில்லை என்பதை புரிந்துக்கொண்டான். இவனுக்கும் இந்த குடும்பத்திற்கும் ஏதோ ஒரு பிணைப்பு உள்ளதை அவள் அங்கு அரங்கேறிய காட்சிகளை வைத்து யூகித்துக்கொண்டாள்.

சில நிமிடங்கள் கழித்து, வர்ஷித் ஜோடியாக வந்திருப்பதை கண்டு சோகம் மறந்து மகிழ்ச்சியாக அவனை வரவேற்றனர். ஏய் என்ன பாத்துட்டு இருக்க, போயிட்டு ஆரத்தி கரைச்சு எடுத்துட்டு வா நம்ம புள்ள இப்பதா முதல் முறையா கல்யாணம் ஆகி வந்திருக்கான் என அப்பா கூற அவரது மனைவியோ உள்ளே சென்று ஆலத்தோடு வந்தார். இருவரையும் ஒன்று சேர நிற்கவைத்து ஆரத்தி எடுத்து வலது காலை எடுத்து வைத்து உள்ளே போங்க என்று கூறி ஆழத்தை வாசலில் கொட்ட போனார் வசந்தா. வர்ஷித்தை குற்ற உணர்வு கொன்றது, விஷ்ணு இடத்தில் தான் இருக்கிறமே என்று.

உள்ளே நுழையும் போது அவர்களை சிரித்த முகத்துடன் வரவேற்த்தது பூமாலைக்கு நடுவில் பத்தி வாசனையில் உயிர்கொண்டு, உருவமற்று போட்டோக்குள் ஒளிந்திருக்கும் விஷ்ணுதான். அவனது முகத்தை இந்த ஒரு நிலையில் பார்த்தவுடன் திகைத்து நின்றனர். வர்ஷித்திற்கு சொல்ல முடியாத துயரமும் கம்பீர ஆணின் அகராதியில் இடம்பெறாத அழுகையும் தொற்றிக்கொண்டது.

இதை வெளியில் காட்டக்கூடாது. தான் வருந்துவது அப்பா அம்மாவுக்கு தெரிந்தால், அவர்களும் வருந்துவர் என நினைத்து தன்னை கட்டுப்படுத்தி கொண்டான். அவர்கள் இந்நாள் வரை தன்னை வளர்த்ததற்கு இனிமேல் தானே அவர்களின் துன்பத்திற்கு மருந்தாக வேண்டும், அவர்களை எந்த நிலையிலும் கை விடவே கூடாது. இனிமேல் அவர்கள் தான் நமக்கு எல்லாமே என முடிவெடுத்து ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்து விஷ்ணுவை வெறித்து பார்த்து கொண்டிருந்தான். எங்கே போனாலும் ஒன்னா தானேடா போவோம். நீ சொன்னதை கேட்காம நான் வெளிநாடு போனதுக்கு நீ ஓரேடியா என்ன விட்டுட்டு போயிட்டியேடா என்மேல அவ்ளோ கோபமாட உனக்கு. கடைசி நேரத்துல உன்கூட இல்லாமா என்னோட சுயநலத்துக்காக நான் வெளிநாடு போயிட்டேனே என புலம்பி மனதினுள் நொந்துக்கொண்டான். ஆதிகவோ அன்று உயிரற்ற சடலத்தில் அவனது முகத்தை பார்த்தது, பிறகு இப்போதான் பார்க்கிறாள். அவன் ஏமாற்றிய வலியில் அவனது முகத்தையே பார்க்க மறுத்திருந்தாள். இப்போது, எதார்த்தமாக அவனை கண்ட பின்பு கல்லாகி போனாள்.

இருவரது எண்ண ஓட்டங்களை களைத்த படி, வசந்தாவோ இரண்டு பேரும் மேல போயிட்டு குளிச்சிட்டு வாங்க, சாப்பாடு எடுத்து வைக்கிறேன் என சொல்ல ஆதிகா அதற்கு சரிங்கமா என்றாள். வர்ஷித் பேசாமல் இருந்தலும் ஆதிகா கூறியதை கவனிக்க தவறவில்லை.

வர்ஷித்தும் ஆதிகாவும் பைகளை சுமந்து கொண்டு படியில் ஏறினர். வர்ஷித் அம்மா சொன்ன அறைக்கு செல்லாமல் அதற்கு அருகிலிருந்த அறைக்கு சென்றான்.

உள்ளே சென்றதும் அவளிடம் முகம் காட்டாமல் குளியறைக்குள் புகுந்து கொண்டான். ஆதிகாவிற்கு வர்ஷித்தின் கண்ணீர் சோகத்தை உண்டாக்கியது. அவன் குளித்து முடித்து வெளியே வந்தவுடன் அவளை நிமிர்ந்து பார்த்து அவுங்கள அம்மா அப்பாணு கூப்பிடதே அத்தை மாமானு கூப்பிடு, அவுங்ககூட நல்லா பேசு பழகு என கூறி முடித்தான். முதலில் அவனது சொல்லில் அதிர்ந்தவள் பிறகு நிம்மதி அடைந்தாள். இதுவும் அவுங்க சந்தோச படுவாங்க, அதுக்காக மட்டும் தான் என கூறி பட்டும் படாமல் பேசிய தனது கணவனை கண்டவள் ஆற்றாமையுடன் பார்த்துவிட்டு குளிக்கச்சென்றாள். பல விதமான யோசனையோடு அமர்ந்தவன் வண்டியில் நிதானமாக பயணிப்பவனுக்கு சாலை விபத்து என்பதை அவனுக்கு ஏற்றுக்கொள்ள இயலவில்லை. இதற்கு பின் ஏதோ ஒரு சூழ்ச்சி உள்ளது, அதை கண்டுபிடிக்கவேண்டும் என முடிவெடுத்தான்.

குழப்பத்தினுள் தன்னை சமன் செய்து கொள்ள சிகரெட்டை பற்ற வைத்து மொட்டை மாடிக்கு சென்றான். புகைப்பிடிப்பதில் தன்னிலை மறந்தவனின் மனமும் மொட்டை மாடி போல வெறுமையாக தோன்றியது.

கீழே ஹாலிலிருந்து அன்னையின் குரல் இவனை எட்டியதும் சிகரெட் துண்டை காலில் போட்டு மிதித்து விட்டு கீழே இறங்கினான்.

அப்பொழுது, ஆதிகாவும் அம்மாவும் இணைந்து ஒன்றாக பேசிக்கொண்டிருக்கும் காட்சியை கண்டான். வர்ஷித் சாப்பிட அமர்ந்ததும் வசந்தா ஆதிகாவையும் அவன் கூட அமர்ந்து சாப்பிட சொன்னார். அவளோ அதை மறுக்க, வர்ஷித்திற்கு ஆதிகா அம்மா பேச்சை மறுப்பதால் கோபம் வந்தது. அவன் பார்வையின் கோப மொழி சற்று புரிந்ததால், அவன் அருகில் சென்று அமர்ந்து உண்டாள். இவளிடம் கோபப்பட்டு கோபப்பட்டு அவனின் கோபத்தை ஆதிகா நன்றாகவே புரிந்திருந்தாள். ஆதிகா அம்மாவிடம் சகஜமாக அத்தை என பேச, வர்ஷித் முகத்தில் சிறு புன்னகையின் விளைவாக அவனது உதட்டில் வளைவு ஏற்பட்டது மனத்தில் நிம்மதியும் பரவியது. அதுகூட சில நொடி தான், அந்த அற்புத காட்சியை அவள் தவறாது கவனித்து இருந்தாள். அவனின் புன்னகை முகம் ஆதிகாவின் கண்ணிற்கு அழகாக தெரிந்தது. அவனின் சிரித்த முகம், அவன் அருகில் அமர்ந்து உண்பது என எல்லாமே அவளுக்கு புதிது.

ஆதிகாவிற்கு அதன் பிறகு விஷ்ணு எந்த வகையிலும் தொல்லை செய்யவில்லை. ஆனால், வர்ஷித்திற்கும் இந்த குடும்பத்துக்கும் என்ன தொடர்பு எனும் குழப்பம் மேலோங்கியிருந்தது. யாரிடம் கேட்பது என்று தெரியாமல் திசையை மறந்த குழந்தைபோல ஆனது அவளது நிலைமை.

சாப்பிட்டு முடித்தவுடன் வர்ஷித்தின் அருகே அவனது அம்மா வந்து, 'இந்த விஷயம் தெரிந்ததும் மாமாகிட்ட ஏதும் கோபப்பட்டியாப்பா' என கேட்க அவனோ, அப்புறம் கோப படமா,எவ்வளவு சுய நலம் அவருக்கு என்றான் வர்ஷித். அதற்கு அம்மா 'மாமாவிடம் கோபப்படாதப்பா, நான்தான் அவரிடம் உன்கிட்ட எதுவும் சொல்லக்கூடாதுணு சொன்னேன் என்றார். வர்ஷித் ஏன்மா இப்படி பண்ணீங்க என கேட்டதுக்கு, 'உனக்கு தெரிஞ்சா நீ கல்யாணமே பண்ணிக்க மாட்ட, நீயே இப்பதா சம்மதம் சொல்லிருக்க நீயும் என்னோட புள்ள தான உன்னோட கல்யாணம்னா அது எனக்கும் சந்தோசம் தான அதான் சொல்லல என்றார் அவனது அம்மா. சொன்ன மறுநொடி, வர்ஷித் அவரது மடியில் படுத்து கண்ணீர் சிந்தினான். அவன் இவ்வாறு துவண்டு அழுவதை கண்டு, ஆறுதலாக தலையை வருடி, என்னப்பா சின்ன புள்ள மாதிரி அழுதுகிட்டு இருக்க, நீ இப்போ ஒரு குடும்ப தலைவர், அது போல நடந்துக்கனும். எங்களுக்கு தான் நீ இருக்கியே வேற எதுக்கு நாங்க கவலை படப்போறோம் என கூறியவரிடத்தில், இந்த புள்ளய தான் நீங்க அப்போ மறந்துட்டீங்கதானே என கோபத்துடன் கூறி மடியிலிருந்து எழுந்து அறைக்கு சென்றான். வசந்தாவிற்கு தெரியும் இவனது கோபத்திற்கு ஆயுள் சிறிது என.

மேல அறையில் சென்று படுத்தவனுக்கு அன்று மாமா இவனிடம் கூறியதை நினைவு கூர்ந்தான். வர்ஷித்திடம் பெண்ணின் போட்டோவை அனுப்பிய போதே இங்கு அம்மாகிட்ட சொன்னீங்களா என தான் கேட்டான். அதற்கு மாமாவும் கூறினேன் என்றார். அதற்கு மறுநாள் தான் விஷ்ணு இறந்தான். இந்த செய்தியை வர்ஷித்திடம் சொல்லலாம் என அவனது மாமா குமாரசாமி முற்பட்ட போது வசந்தா தடுத்து விட்டார். திருமணம் நடந்த பிறகு தெரிய வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என வசந்தா கூறினார். அதனாலே, வர்ஷித்திடம் மாமாவும் கூறவில்லை. இவன் இந்தியா வந்ததும் எதிர்ப்பார்த்தது விஷ்ணு குடும்பத்தை தான்.

மாமாவிடம் விஷ்ணு குடும்பத்தை பற்றி கேட்டதற்கு குடும்பத்தோடு ஒரு வாரம் திருப்பதி சென்றிருப்பதாக கூறினார். தானும் அந்த குடும்பத்தில் ஒருவன்தானே என நினைத்தபோது அவரது மாமா ஏதோ நேர்த்திக்கடன்னு சொன்னங்க, உன்னோட கல்யாணத்துக்கு வரமுடியலையேனு ரொம்ப கவலை பட்டாங்க என கூறி அவனது சிந்தனையை தடை செய்தார். இதையெல்லாம் கேட்டு நம்பியிருந்தான், திருமணத்திற்கு முன் வரை. ஆனால், மணவறையில் ஆதிகாவை பார்த்தவுடன் அவனுக்கு சந்தேகம் மேலோங்கியது, இவள் விஷ்ணுவின் காதலி ஆயிற்றே என. இவர்களின் காதல் இவனை தவிர வேறு யாருக்கும் தெரியாது என்பதால் இதை பற்றி இவன் வேறு யாரிடமும் கேட்கவில்லை, அவளிடமும் கேட்டுக்கொள்ளவில்லை. ஏனென்றால், அவள் வருத்தப்படுவாள் என்பதால். கடைசியாக, ஆதிகாவின் அப்பாவிற்கு காதல் பிடிக்காது இவர்களின் காதல் தெரிந்ததும் மறுத்திருப்பார். விஷ்ணு திருப்பதி சென்ற இந்த வாரத்தில் எனக்கு மணமுடிக்க திட்டம் போட்டிருக்கார் என தானே கற்பனையில் யூகித்துக்கொண்டான்.

பிறகு, திருமணம் முடிந்து, விஷ்ணு ஊருக்கு வந்ததும் இதைப்பற்றி பேசி இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்கவேண்டும் என முடிவெடுத்தான் இல்லாத விஷ்ணுக்காக உயிரற்ற இவர்களின் காதலுக்காக. சென்னை சென்று அவளை ஒதுக்கியத்துக்கும் இதுவே காரணம். விஷ்ணுவின் இறப்பு செய்தி கேட்டவுடன் ஏமாற்றத்தில் மூள்கிப்போனான். இப்போது, ஆதிகாவை நினைத்தே மிகவும் வருத்தப்பட்டான், இவளின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என. அவளின் விஷயத்தில் என்ன முடிவெடுப்பது என நினைத்து குழம்பினான். வெளியில் கம்பீரமாக தன்னை காட்டிக்கொண்டாலும் உள்ளே மிகவும் மனமுடைந்து போனான்.

அன்று இரவும் நெருங்கியது. ஆதிகா அறைக்கு செல்லும்போது வழி தவறி காலையில் வர்ஷித் கூட்டி சென்ற அறைக்கு அருகிலுள்ள அறைக்கு சென்றாள். உள்ளே சென்றவள், ஆ வென அறை முழுவதும் பார்த்தாள். இந்த அறை தான், வர்ஷித் விஷ்ணு இருவரும் தங்கியிருந்த அறை. காலையில் அம்மா கூறியும் அவன் அந்த அறையை தவிர்த்ததற்க்கு காரணம், அங்கு சென்றால் தன்னை கட்டுப்படுத்த முடியாது என்று.

ஏனென்றால், அந்த அறை முழுதும் விஷ்ணு, வர்ஷித் பொருட்கள் ஜோடியாகவே இருந்தது. சுவர் மீது இவர்களின் சிறுவயது முதல் இப்போதுவரை உள்ள எல்லா பருவநிலையையும் காட்டும் வகையில் இருந்தது நிறைய போட்டோக்கள்.இதை எல்லாம் பார்த்து, இவர்களின் பந்தம் என்ன என்பதை தெரிந்தே ஆகவேண்டும் என நோக்கில் கீழே சென்று அத்தையிடம் கேட்டாள். அவரும் ஆரம்பித்தார் இவர்களின் நட்பு கதையை....

வானவில் போல அழகாய், வண்ண கோலமாய் விரிந்த இவர்களின் நட்பை அடுத்த அத்தியாயத்தில் பாப்போம்.

நன்றி!
 

Aarthi murugesan

Saha Writer
Team
Messages
29
Reaction score
0
Points
1
என்னடி மாயாவி நீ

அத்தியாயம்: 9

சிறுபிள்ளையிலிருந்து டீனேஜ் வயசில் கால் வைக்கும் அழகான மாணவ பருவம் இது. இந்த பருவம் தான் வாழ்க்கை என்றால் என்ன, வாழ்க்கையில் இதற்கடுத்து நடக்கவிருப்பது என்ன என்பதை கூறும் பருவம்.

முதல் நட்பும் இங்கே தான், ஏன் சிலருக்கு முதல் காதல் கூட மலருவதும் இங்கே தான். முதல் நட்பெல்லாம் நல்ல நட்பாகிவிடாது. அதுபோல தான் இவர்களின் நட்பும் முதல் நட்பல்ல. ஆனால், காலம் கடந்து காவியம் பாடுமளவிற்கு இவர்களின் நட்பு புனிதமானது.

ஜூன் மாதம் என்றாலே எல்லாருக்கும் நினைவை தட்டுவது கோடை விடுமுறை முடிந்து பள்ளிகளின் திறப்புதான்.

வர்ஷித் தனது சொந்த ஊரான தஞ்சாவூர் அருகிலுள்ள பூவலுர் (கற்பனை ஊர்) கிராமத்திலிருந்து திருச்சிக்கு வந்தான். குமாரசாமி வர்ஷித்தை திருச்சியில் 8ஆம் வகுப்பு சேர்த்துவிட்டு, விடுதியிலும் சேர்த்தார். அவரும் ஆசை ஆசையை வளர்த்த பிள்ளையை மனசு கேட்காமல் தான் விடுதியில் சேர்த்தார் அவன் வாழ்க்கை நல்லா இருக்கணும் என்னும் நோக்கில். அவனும் சிறுவயதிலிருந்து வீட்டில் இருந்துவிட்டு தீடிரென்று பழக்கமில்லாத ஊர், தெரியாத நபர்கள், புது பள்ளிக்கூடம் என எல்லாமே வர்ஷித்திற்கு அறிமுகமில்லாதவைகளாகவும் விடுதியை நினைத்து கொஞ்சம் பயமாகவும் இருந்தது.

அன்றுதான் பள்ளிகள் திறக்கப்பட்டு முதல் நாள். விஷ்ணு L.K.G யிலிருந்து அதே பள்ளியில் தான் படித்து வந்தான். அவனுக்கு முதல் நாள் பள்ளி என்பதில் பெரிய மாற்றம் ஏதும் தோன்றவில்லை. அதே நண்பர் கூட்டம், அதே பள்ளிக்கூடம், என்ன முன்னாடி 7ஆம் வகுப்பு, இப்போ 8ஆம் வகுப்பிற்கு மாறியிருந்தான். முதல் நாளில் வர்ஷித்தை பள்ளியிலும் விடுதியிலும் சேர்த்துவிட்டு அவனது மாமா குமாரசாமி கிளம்பினார் தன் வருத்தத்தை மறைத்து, தான் வருந்தினால் அவனும் வருந்துவான் என.

வர்ஷித் வகுப்பறைக்குள் நுழையும் போது ஆசிரியர் முதல் வகுப்பு என்பதால் பொதுவாக பேசிக்கொண்டு இருந்தார். வர்ஷித் வந்ததும் அவனது பெயர் மற்றும் ஊரை கேட்டுவிட்டு அவன் உயரமாக இருப்பதால், கடைசி பெஞ்சிற்கு சென்று அமர சொன்னார். அந்த இருக்கையை தான் நாம் காலம் காலமாக 'மாப்பிள்ளை பெஞ்சு' என்றழைப்பது வழக்கம்.

ஏற்கனவே, கடைசி
இருக்கையில் மூன்று பேர் பழைய மாணவர்கள் அமர்ந்திருந்தனர். அந்த மூன்று பேரின் நடுவில் தான் விஷ்ணு இடம் பெற்றிருந்தான். இங்கு நடப்பதற்கும் தனக்கும் எந்த ஒரு சம்மந்தமும் இல்லை என விஷ்ணு இருந்தான். ஆசிரியர் சொன்னதும் வர்ஷித்தும் கடைசி இருக்கைக்கு சென்றான். விஷ்ணுவின் இருபுறம் உள்ள மாணவர்கள் அவனுக்கு முகத்தாலே வெறுப்பை காட்டினார்கள். ஆனால், ஆசிரியர் சொன்னதால் வேறு வழியில்லாமல் இடம் கொடுத்தனர். விஷ்ணு இதனை கண்டுக்கொள்ளவேயில்லை. வர்ஷித் முன்பு எல்லாம் கடைசி பெஞ்சில் உட்கார்ந்திருந்தாலும் இப்போது சங்கடமாக இருந்தது.

அந்த வகுப்பு முடிந்து ஆசிரியர் வெளியேறியதும் விஷ்ணுவை தவிர மற்ற இருவரும் வர்ஷித்தை இந்த இடத்தை விட்டு, முன்னாடி பெஞ்சில் உட்கார சொன்னார்கள். அவனுக்குமே அங்கு அமர பிடிக்காமல் போனது. அவன் போவதை பற்றி விஷ்ணு ஏதும் கூறவில்லை.

அந்த வாரத்திலேயே ஒரு நாள் மதியம், வர்ஷித் மட்டும் தனியாக மரத்தடியில் அமர்ந்து, விடுதியிலிருந்து கொண்டு வந்த உணவு டப்பாவை திறந்து வைத்துக்கொண்டு உட்காந்திருந்தான். விஷ்ணு அவனை கவனித்து கொண்டிருந்தான். வர்ஷித்தோ உணவை வேண்டா வெறுப்பாக பார்த்து கொண்டிருந்தான். அவன் கண்களிலிருந்து கண்ணீர் துளிகள் கன்னத்தை தொட்டு பார்த்தது, அவனது மனதில் வீட்டு நியாபகங்கள் வாழ்ந்து கொண்டிருந்ததால்...

இதையெல்லாம் கவனித்த விஷ்ணு மட்டும் தனியாக அவ்விடத்தில் இருந்ததால், வர்ஷித்திடம் சென்று, 'ஏன் சாப்பிடாம டப்பாவ பார்த்துட்டு உட்காந்துருக்க' என கேட்க, வர்ஷித் அவனை பார்த்து 'பிடிக்கல' என்றான். சரி என்கூட வா என்று அவனை கை பிடித்து அழைத்து இவனது ஸ்னாக்ஸை எடுத்து கொடுத்து சாப்பிட வைத்தான்.'நன்றி' என்ற சொல்லோடு வர்ஷித் சென்றுவிட்டான். வர்ஷித்திற்கு சிறு வருத்தம் விஷ்ணு மீது, அன்று அவன் பெஞ்சில் உட்காரும்போது இவனது நண்பர்கள் மறுத்ததை நினைத்து. இவனுக்கு தினமும் மதிய சாப்பாடு நகரமானதை தெரிந்த விஷ்ணு, ஒரு நாள் இவனாகவே வர்ஷித்திற்கும் சேர்த்து மதிய உணவை வீட்டில் கேட்டு வாங்கி கொண்டு வந்திருந்தான். வர்ஷித்திடம் கொடுத்ததுக்கு, அவன் முதலில் வாங்கிக்கொள்ளவில்லை. பிறகு, பேசி போராடி வாங்கி கொள்ள செய்தான். வாங்கிக்கொண்டதோடு விடாமல் அருகிலே அமர்ந்து சாப்பிடவும் வைத்தான். பிறகு, வர்ஷித் தனது கோபத்தை விஷ்ணுவிடம் கூறும்போது, அவனோ சிரிப்புடன் "அவனுங்க L.K.G யிலிருந்து என்னோட கிளாஸ்மேட் டா அதனால அன்னைக்கு ஒண்ணுமே பண்ண முடில, இதுக்கெல்லாமா கோச்சுக்குவ சரி ஓகே இனிமேல் நாம பிரண்ட்ஸ் ஆனால், உன் கூட எப்பவுமே இருக்க முடியாது, அவனுங்க கூட சாப்பிட்டுட்டு, நீ சாப்பிடும்போது உன்கூட இதுமாதிரி பேசிகிட்டு இருக்கேன் சரியா. இனிமேல், நானே உனக்கு மதிய சாப்பாடு கொண்டு வரேன்" என கூறியவனின் வெகுளி பேச்சு பிடித்திருந்ததால், வர்ஷித் எல்லாத்துக்கும் சரி என்றே மண்டையை ஆட்டினான்.

தினமும் வர்ஷித்திற்கு சாப்பாடு கொண்டு வருவது விஷ்ணுவின் வழக்கமாயிற்று. வர்ஷித்தும் இரண்டு மூன்று நாட்கள் வேண்டாம் என முற்றுகையிட்டாலும் விஷ்ணு அதை பொருட்படுத்தவில்லை. பிறகு, வர்ஷித்தும் இதை ஏற்றுக்கொண்டான். இவர்களின் நட்பும் வளர ஆரம்பித்தது.

சில நாட்கள் இப்படியே நகர, பள்ளியில் ஸ்போர்ட்ஸ் டேயும் வந்தது. விஷ்ணு ஸ்போர்ட்ஸில் உள்ளதால், அவனுக்கு தலைக்குமேல் வேலையிருந்தது. அவன் நண்பர்கள் இருவரும், 'அதான் உனக்குதான் புது பிரண்ட் கிடைச்சிருக்கானேடா அப்புறம் என்ன அவன்கிட்ட கொடுத்து நோட்ஸ் எழுத சொல்லுடா 'என சொல்ல மற்றொருவனோ, 'அதான் சோறு போட்டே ஒரு அடிமையை வச்சிருக்கியே அவன்கிட்ட கொடுத்தா, அவன் எழுத போறான்' என நக்கல் செய்தனர் இவனுடைய நட்பு பிடிக்காத நண்பர்கள். வர்ஷித், விஷ்ணுக்கு உதவ மாட்டான் என நம்பிக்கையில் பேசினர்.

விஷ்ணுவும் தயக்கத்தோடு வர்ஷித்திடம் சென்று உதவி கேட்டான். அவனும் மலர்ந்த முகம் மாறாமல் உதவி செய்றேன் என உதவினான். ஒருவாரம் முழுக்க விஷ்ணுக்கும் அவனது பெஞ்சில் உள்ள இருவருக்கும் ஸ்போர்ட்ஸ் டே வேளையில் ஈடுபட்டிருந்ததால், வகுப்பில் தலைக்கட்ட முடியவில்லை. சாப்பிடும் நேரம் மட்டுமே, விஷ்ணு வர்ஷித்திடம் பேசி கழித்தான்.

வகுப்பு நடத்தும்போது வர்ஷித் விஷ்ணுக்கும் நோட்டில் முழுதும் எழுதி வைத்திருந்தான். ஸ்போர்ட்ஸ் டே முடிந்து விஷ்ணு வகுப்புக்கு வரும்போது வர்ஷித் எல்லா நோட்டையும் எழுதி வைத்திருந்தான். விஷ்ணுவை விட அவனது இரு நண்பர்களுக்கு தான் பேரதிர்ச்சியாக இருந்தது, வர்ஷித்தின் நடவடிக்கை. விஷ்ணுக்கு மனசு முழுக்க ஆனந்தமாகயிருந்தது தமக்காக இவ்வளவு பன்றான் என.

வர்ஷித் ஏற்கனவே நன்றாக படிப்பவன். விஷ்ணு வகுப்புக்கு வந்ததும் வர்ஷித் அனைத்தையும் சொல்லியும் கொடுத்தான். அவனுக்கு மட்டுமல்ல அவனது இரு நண்பர்களுக்கும் நோட் கொடுத்து எழுத வைத்து சொல்லி கொடுத்தான். அவர்கள் இருவரின் மனதையே அசைத்து பார்த்தது வர்ஷித்தின் நல்ல குணம் தான். விஷ்ணுக்கும் இவன் தன் நண்பன் என கர்வமும் மேலோங்கியது. வர்ஷித்தை விஷ்ணு கடைசி பெஞ்சில் தன்னுடன் உட்கார வைத்து கொண்டான். அவனுடைய நண்பர்களும் வரவேற்றனர். வர்ஷித்தும் விஷ்ணுவும் பக்கத்தில் அமர்ந்திருந்தனர். இவர்களின் நட்பும் துளிர்த்த செடி போல, மலர்ந்த மொட்டு போல அழகாக வளர்ந்து கொண்டிருந்தது.

குடல் வலித்திடும் வரை தினமும் சிரித்தே கூத்தடிப்போம்...
உடல் வலித்திடும் வரை கைகளால் அணைத்தே குதூகலிப்போம்....
நீ அடித்தாலும் நீ பிடித்தாலும் என் நண்பன் தானடா....
நான் அழுதாலும் நான் சிரித்தாலும் என் துணையே
நீ தானடா...

8ஆம் வகுப்பு கடைசி பரிட்சை நெருங்கும் நேரத்தில், ஒருநாள் வர்ஷித் தனியாக அமர்ந்து கொண்டிருந்தான். பின்னாலிருந்து விஷ்ணு, வர்ஷித் தோளை தொட்ட பிறகு சுயநினைவு பெற்றவன் கண்ணீரை துடைக்கும் வேளையில், விஷ்ணு கவனித்தான் வர்ஷித் அழுவதை. காரணம் கேட்டவனிடத்தில் பதிலேதும் இல்லை. விஷ்ணுவோ," நான் எல்லாத்தையும் உன்கிட்ட தான் சொல்றேன்.ஆனால், நீ எதையும் சொல்றது இல்லை. நான் உனக்கு பெஸ்ட் பிரண்டா இருந்தா என்கிட்ட சொல்லு இல்லனா வேணாம்" என விஷ்ணு சொல்லிய பிறகே, வர்ஷித் அனைத்தையும் சொன்னான், எனக்கு ஹாஸ்டல தங்கவே பிடிக்கல என சாப்பாடு, காலையில் சீக்கிரமா எழுப்புவது முதல் இரவு தூங்கும் வரை அனைத்தும் பிடிக்கல என கூறி முடித்தான். இவனும் எவ்வளவோ சமாதானம் செய்தான். ஆனால், அவனின் வருத்தம் தினமும் வாடிக்கையாகிப்போனது.
 

Aarthi murugesan

Saha Writer
Team
Messages
29
Reaction score
0
Points
1
அத்தியாயம்: 10

இந்நிலையில், ஒரு நாள் வர்ஷித் பள்ளிக்கு வரவில்லை. அவனும் காரணமின்றி விடுப்பு எடுப்பவன் இல்லையே என யூகித்தவன் விசாரித்ததில், அவனுக்கு காய்ச்சல் என தெரிந்துகொண்டான். அன்றிரவே, விடுதியிலிருந்து வர்ஷித் மாமாவுக்கு எவ்வளவு போன் அடித்தும் அவர் எடுக்கவில்லை. பிறகுதான், வர்ஷித் விஷ்ணுவின் வீட்டு நம்பர் கொடுத்தான். விடுதியிலிருந்து விஷ்ணு வீட்டிற்கு தகவல் சொன்னார்கள். விஷ்ணு வீட்டை பொறுத்தவரை வர்ஷித்தை பார்த்ததில்லை என்றாலும் விஷ்ணுவின் நட்பால் அவன் அங்கு உயிர் பெற்று வாழ்ந்து கொண்டிருப்பவன் தான். சொன்னவுடன், விஷ்ணுவும் சுப்பிரமணியனும் சென்று அவனை அழைத்து மருத்துமனையில் பார்த்து அவனை குணப்படுத்தி வைத்திருந்தனர். அவனுக்கும் அங்கு இருப்பது நல்ல உணர்வாக உணர்ந்தான்.
கிடைக்க பெறாத தாயின் அன்பும் தந்தையின் பாசமும் வர்ஷித்திற்கு அங்கு கிடைத்தது. அதோடு, நண்பன் கூடவே இருப்பதால், ரொம்ப மகிழ்ச்சியாக வாழ்ந்தான். அவனின் மகிழ்ச்சியை கலைக்காத வண்ணம் விஷ்ணுவின் அப்பாவும் அம்மாவும் வர்ஷித் இங்கே தங்கிக்கொள்வதை பற்றி அவனது மாமாவிடம் பேசலாம் என முடிவெடுத்தனர். பிறகு வர்ஷித்தை பார்க்க வந்த குமாரசாமியிடம் வர்ஷித்தை இங்கே வைத்துக்கொள்வதை பற்றி விஷ்ணுவின் பெற்றோர் கேட்டபோது முதலில் மறுத்தவர் வர்ஷித்தின் முகத்தை பார்த்து அவனது எண்ணத்தை தெரிந்து கொண்டார், அவன் இங்கே சந்தோசமாக இருப்பான், இவர்களும் அவனை நன்றாக கவனிப்பார் என நம்பிக்கை கொண்டதால் ஒத்துகொண்டார். பிறகு, இருவரும் ஒரே வீட்டில் இருந்தனர். எப்பயாவுது மாமா வந்து வர்ஷித்தை பார்ப்பது உண்டு. வசந்தாவிற்கும் அண்ணன் தம்பி யாரும் இல்லாததால், குமாரசாமியை தன் அண்ணனாகவே ஏற்றுக்கொண்டார். விஷ்ணுவும் மாமா என்றழைத்தே, அவரும் இந்த குடும்பத்தில் ஒருவரானார். காலங்கள் நகர்ந்தாலும் இருவரின் நட்பும் வளர்ந்ததே தவிர இம்மியும் குறையவில்லை. இருவரும் பள்ளி படிப்பு முடித்து ஒரே கல்லூரியில் சேர்ந்தனர். ஒரே பாட பிரிவை தேர்ந்தெடுத்தனர்.

வர்ஷித்தும் அந்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன் போலாகியிருந்தான். சுப்பிரமணி வசந்தாவிற்கும் வர்ஷித் இன்னொரு மகன் ஆனான். இருவருக்கும் பாசத்திற்கு அங்கு பஞ்சமேயில்லை. விஷ்ணுக்கும் தன் தந்தை தாயை நினைத்து பெருமையாக இருந்தது. விஷ்ணு பள்ளி போல கல்லூரியிலும் ஸ்போர்ட்ஸில் இருந்ததால், அவனுக்கும் சேர்த்தே எல்லா வேலையும் பார்ப்பது வர்ஷித் என்றால், அவனை நினைத்து பெருமை படுவது விஷ்ணு தான். விஷ்ணுக்கு ஒன்று என்றாலும் வர்ஷித்தும், வர்ஷித்துக்கு ஒன்று என்றால் விஷ்ணு வருவது வழக்கம். ஒருவரையொருவர் விட்டுக்கொடுப்பதே கிடையாது. அவர்களின் அறை முழுதும் இவர்களின் புகைப்படங்கள் தான் புகை மிதந்து கொண்டிருப்பது போல எல்லா இடத்திலும் பரவி அந்த அறையை அலங்கரித்தது. அன்று முதல் இன்று வரை இருவரும் சேர்ந்தே படிப்பது, தூங்குவது முதல் சரக்கடிப்பது வரை ஒன்றாகத்தான் செய்வார். பெற்றோர் எவ்வளவு சொல்லியும் இந்த விஷயத்தில் இருவரும் கேட்கவில்லை. அன்றும் அப்படித்தான், இருவரும் நண்பர்களின் பார்ட்டிக்கு சென்று விட்டு சரக்கடித்துவிட்டு தள்ளாடும் நிலையில் இருவரும் வீடு திரும்பினர். பார்ட்டிக்கு போனாலே இந்த நிலைதான் என அறிந்த பெற்றோர்கள் இவர்களிருவரை அமைதியாக தூங்க வைக்க காத்திருந்தனர். ஏற்கனவே, சாதாரணமாக இருவரும் கேலி கூத்துமாக இருக்க, ட்ரிங்க்ஸ் பண்ணால், பாட்டு பாடி, டான்ஸ் ஆடாம தூங்க மாட்டாங்க, ரெண்டு பேரையும் தூங்கவைக்குறதுக்குள்ள இல்லாத சேட்டையெல்லாம் பண்ணிட்டுதான் தூங்குவாங்க. அன்றும் இது போலவே இருவரும் வீட்டுக்கு வந்து இயல்பு போல் இல்லாமல் அமைதியாக அமர்ந்து, குசு குசு வென ரகசியம் காப்பது போல பேசினர். இருவரின் பெற்றோருக்கு தான் பரிதாப நிலை இவர்களின் நடவடிக்கை புரியாததால்.

சற்று நேரத்திற்கு பிறகு, மீண்டும் பழைய படி ஆரம்பித்தனர். இருவரும் தனித்தனியாக அமர்ந்திருந்த பெற்றோரை ஒன்று சேர்த்து உட்கார வைத்து, 'அப்பவே ரெண்டு பேரும் வீட்டுக்கு தெரியாம லவ் பண்ணதும் இல்லாம, தாத்தா கிட்ட இந்த பொண்ணையே பொண்ணு பார்க்க போற மாதிரி செட் பண்ணி அரேஞ்சு மேரேஜ் பண்ணியிருக்கிங்க, எவ்ளோ கேடி வேலை பாத்துருக்கீங்க, உங்கள பனிஷ் பண்ணியே ஆகணும்' என விஷ்ணு கூற வர்ஷித்தோ, 'நாம முன்னாடியே யோசிச்ச தண்டனை தான் இருக்கே, அதையே கொடுப்போம்'என கூறினான்.

சுப்பிரமணியனோ, "பிள்ளைங்க ஆசையா கேட்டாங்கனு சொன்னது தப்பா போச்சே, இது இப்போ நமக்கே கஷ்டமா போச்சே" என யோசிச்சு கொண்டே மனைவியை பார்த்தார் அவளோ, 'இதெல்லாம் உங்க வேலையா பிள்ளைங்க கிட்ட எத சொல்லணும்னு ஒரு வரைமுறை இல்ல'என கடிந்து கூறியவரை கூட சுப்பிரமணியனின் ஒரு கள்ள சிரிப்பு வசந்தாவை ஆப் செய்தது. இந்த சிரிப்ப வச்சே என்ன சரி பண்ணியறது என நொந்துகொண்டவரிடம் வர்ஷித்தோ 'இப்ப திருட்டு தனமா பண்ண ரொமான்ஸ எங்களுக்கு முன்னாடி செய்யணும் இதான் உங்களுக்கு பனிஷ்மென்ட்' என கூறும்போதுதான் இவர்கள் இருவர் இருப்பதை உணர்ந்தார்கள் பெற்றோர்.விஷ்ணுவும் 'இதே இதே' என ஆமோதித்து, பாதியிலே 'இதுக்கெல்லாம் நான் வரல ஆள விடுங்க' என எழுந்து போக துடித்த அம்மாவின் கையை பிடித்து உட்கார வைத்தான். சுப்பிரமணியனோ, 'கொஞ்சம் ஈசியா கொடுங்கப்பா' என்றவரிடத்தில், ' இந்த திருட்டு வேலைக்கே நீங்க தான் காரணம், அதுனால நீங்க பேசக்கூடாது' என்றனர் இருவரும்.

இருவரும் சாதாரணமாக இருந்தால், சுப்பிரமணியன் வாய்க்கு வாயடித்து கேலி செய்பவர். ஆனால், இன்றும் பதிலுக்கு பதில் பேசினால், அவரின் நிலைமை தான் பரிதாபம் அதுனால அமைதி காத்தார்.

விஷ்ணு மறுபடி ஆரம்பித்தான், 'சரி நீங்க ரொம்ப வெக்கபடுறதுனால கொஞ்சம் ஈசியாவே தரோம், அம்மாவின் முகத்துக்காக' என்றான். அவனே, 'நீங்க லவ் பண்ணதுநால, எங்க முன்னாடி ஐ லவ் யூ சொல்லி ப்ரொபோஸ் பண்ணுங்க' என்றான். வர்ஷித்தும் இருவரை கட்டாயப்படுத்தினான். சரி இவர்களை அடக்கமுடியாது என பல காரணம் சொன்னவர்கள் கடைசியில் இதை ஒப்புக்கொண்டு சுப்பிரமணியன், வசந்தாவின் கண்களை நோக்கி, காதலும் ஆசையுமாக முதல்முறை சொன்னது போலவே தனது காதலை சொன்னார். காதலுடனும் வெட்கத்துடனும் வசந்தா ஏற்றுக்கொண்டார். இதை கண்ட வர்ஷித்தும் விஷ்ணுவும் கை தட்டி விசில் அடித்து பெற்றோரை கட்டி பிடித்து முத்தம் கொடுத்தனர்.

'சரி சரி நீங்க சொன்னது நாங்க பண்ணிட்டோம்ல இப்ப நீங்க பேசாம சத்தமில்லாம ஒழுங்கா தூங்கணும்' என இனி இருந்தால் பல சேட்டைக்கு ஆளாகி விடுவோம் என சுப்பிரமணியனும் வசந்தாவும் அவர் அறைக்கு சென்றனர். வர்ஷித்தும் விஷ்ணுவும் அறைக்கு சென்று மஞ்சத்தில் சரிந்தனர். வர்ஷித், "அவுங்க மட்டும்தா ப்ரொபோஸ் பண்ணனுமா, ஏன் நாம பண்ணக்கூடாது" என கேட்க, விஷ்ணுவோ "ஏன் மச்சி நாமளும் சொல்லுவோம்டா, ஐ லவ் யூ மச்சான்" என வர்ஷித்தை கட்டிப்பிடிக்க அவனும் "மீது டூ மச்சி" என விஷ்ணுவை கட்டிக்கொண்டு கட்டி கொண்டு கன்னத்தில் முத்தம் கொடுத்தான். விஷ்ணு, "நான் எப்பவுமே உன்னோட சந்தோசம், துக்கம் எல்லாத்துலயும் உன்கூட இருப்பேன்டா. நாம ஒருத்தர் ஒருத்தருக்கு துணையாக இருக்கணும்டா " என வர்ஷித்திடம் கூறினான். வர்ஷிதோ, உன்னோட நட்பு கிடைக்க நான் குடுத்து வச்சிருக்கணும்டா என இருவரும் போதையிலே பல கதைகளை பேசியே தூங்கினர்.

அன்பால் பிணைக்கப்பட்டு, அனைத்து ப்ரெண்ட்ஷிப் பாடல்களும் நமக்குத்தான் என இருந்த இருவரின் வாழ்வில் வந்த பிரிவுதான் வர்ஷித்தின் நியூ யார்க் பயணம். இவன் போவதில் விஷ்ணுக்கு சிறிதும் உடன்பாடில்லை. வர்ஷித்தும் விஷ்ணுவை பிரிவதில் வருத்தமிருந்தாலும் தனக்கு மாற்றம் தேவை என நினைத்தான். எல்லாவற்றையும் பகிரும் நண்பனிடம் இந்த மாற்றம் என்பது எ
தனால் வந்த விளைவு என்பதை மறைத்திருந்தான். இந்த விஷயம் குடும்பத்தில் தெரிந்தால், என்னவாகும் என்பதை பலமுறை சிந்தித்திருக்கிறான். இனிமேலவுது தெரிய வருமா என்பதை வரும் பகுதியில் தெரிந்துக்கொள்ளலாம்.

நீ கொடுத்த வாழ்வில்,
நட்பிலக்கணமே நம்மை கண்டு வியக்கும் வகையில்,
உன்னோடு பயணிக்கலாம் எனும் ஆசை கொண்டு
நானிருக்கையில்,
கிணற்றில் இறங்கி
கலங்கிய நிலாவை
கண்ட குழந்தை போல
ஏமாற்றமடைந்தேனடா...
வானவில் போல நீயும்
தோன்றி மறையும் போது
சோகம் கொண்டேனடா....
உன்னை தொலைத்த வாழ்வில்
 

Aarthi murugesan

Saha Writer
Team
Messages
29
Reaction score
0
Points
1
என்னடி மாயாவி நீ

அத்தியாயம்: 11

வசந்தாவின் வார்த்தை வழியாக அவர்களின் நட்புலகத்திற்கே சென்று வந்த ஆதிகா, இவர்களின் இந்த பிரிவிற்கு தெய்வத்தையே குற்றம் சாடினாள்; விதியிடம் முற்றுகையிட்டாள்; அவளுக்கு அந்த இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை. இப்படி ஒரு நண்பன் இருப்பதாக விஷ்ணு நம்மிடம் கூறவே இல்லையே. அப்போதுதான், அவளுக்கு நினைவில் பளிச்சிட்டது தான் தானே எப்போதுமே பேசுவோம் அவனை பேசவிட்டதே கிடையாதே என. இதனை நினைத்து சிரித்து தலையில் அடித்து கொண்டவள் கீழே படுத்திருக்கும் வர்ஷித்தை பார்த்து வேதனை கொண்டாள் எத்தனை துயரம், எத்தனை இழப்பு இந்த வயதில் என. இவனை இனிமேல் துயரம் தாக்காத வகையில் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று சிறு பிள்ளையை பார்ப்பது போல் வர்ஷித்தை பார்த்துக்கொண்டே நித்திரையை தழுவினாள். இந்த எண்ணத்திற்கு வர்ஷித் உயிர் கொடுப்பானா?

காலையில் விழிப்பு தட்டியதும் வர்ஷித், "ஆதிகா இந்த வீட்டுல இருந்த ரொம்ப கஷ்டப்படுவா, அவளுக்கு வேதனையா இருக்கும்" என்பதை நினைவில் கொண்டு நாம் வாங்கின அபார்ட்மெண்ட்க்கு இன்றே ஆதிகாவை அழைத்து செல்ல வேண்டும் என எண்ணினான். பிறகு, இன்றே கம்பெனியில் வேலையில் சேர வேண்டும் என நிறைய உத்திகள் ஒன்றன் பின் ஒன்றாக இருந்தது.

தூங்கி எழுந்தவுடனே ஆதிகாவை கிளப்ப நினைத்தவனுக்கு, அசந்து பொம்மை போல் அசைவு இல்லாமல் தூங்கும் மனையாளை எழுப்ப மனமே இல்லை. காலை கடன்களை முடித்துவிட்டு அவன் கீழே வருவதற்குள் ஆதிகா தூங்கி முழித்து கீழே வந்து அத்தையிடம் வாயடித்து கொண்டிருந்தாள்.

சமையல் கட்டில் இருந்த ஆதிகாவை பார்த்துக்கொண்டே சோபாவில் அமர்ந்து டிவி சேனலை மாத்தி கொண்டிருந்தான். வர்ஷித்தை கண்டதும் வசந்தா, ஆதிகாவிடம் காபி கப்பை கொடுத்து அனுப்பினார். அவளும் மறுப்பு சொல்லாமல், வாங்கி கொண்டு வர்ஷித்திடம் கொடுக்கும்போது அவனை கண்களால் முழுதாய் ஆராய்ந்தாள், இவ்வளவு சீக்கிரம் எங்கே போக கிளம்பிருக்கான் என. அவன் நேர்த்தியான உடையில் கம்பீரமாக ஆதிகாவின் கண்களுக்கு விருந்தளித்து கொண்டிருந்தான். வர்ஷித் காபி பருகிகொண்டிருந்தாலும் ஆதிகாவின் பார்வையில் தான் சிக்கி வதைபடுவதை உணர்ந்தவன் தன்னை காப்பாற்றிக்கொள்ள என்ன என்பது போல விழியாலே புருவம் உயர்த்தி கேட்டான். அந்த விழி வழியால் வந்த கேள்வியில் தன்னிலை அறிந்த ஆதிகவோ, "இவளோ நேரம் தன்னையே மறந்து இவனை பாத்துட்டு இருந்துருக்கோமே" என உள்ளுக்குள் நொந்துக்கொண்டவள், வெளியில் 'ஒண்ணுமில்லை' என்பது போல தலையை அசைத்தாள்.

அங்கு நடந்த மௌன மொழியை சட்டென உடைத்து, 'சீக்கிரமா கிளம்பு' என்றான் வர்ஷித். அவளோ எங்கே என கேட்க முடியாமல் தவிக்கும் தவிப்பை பார்த்துவிட்டு அவனே மீண்டும், 'நாம நம்ம வீட்டுக்கு போகலாம், இங்க இருக்க வேணாம். என்னைய மதிக்காத இந்த வீட்ல எப்படி இருக்கிறது' என கூறினான். அவனது பேச்சிலே பெற்றோர் இருவருக்கும் வர்ஷித்தின் கோபம் ஒரு துளி கூட குறையவில்லை என்பது புரிந்து போனது. வர்ஷித்தின் உரிமை நிறைந்த பேச்சோ அல்ல அவனின் கோபம் தெளித்த வார்த்தையோ எதுவென்று தெரியவில்லை. ஆனால், ஆதிகா சீக்கிரமா கிளம்பி வந்து அவன் முன் நின்றாள்.

அவள் வந்து நின்றவுடன் வசந்தா இருவரையும் பார்த்து, ''கிளம்புறதுன்னு முடிவு பண்ணிட்டீங்க, அத நான் தடுக்க போறதில்ல, ஆனா சாப்பிட்டு கிளம்புங்க' என கூற ஏற்கனவே, அத்தைய தனியா விட்டுட்டு போறது கஷ்டமாயிருக்கு என எண்ணினாலும் கணவனின் சொல்லுக்கு கட்டுண்டு இருந்த ஆதிகா, வசந்தா இவ்வாறு கூறவும் அவள் பார்வையால் வர்ஷித்தை பார்க்க அவனும் சரி என்றே சம்மதித்தான்.

வசந்தா பரிமாற இருவரும் உண்டனர். வர்ஷித் சாப்பாடு முடிக்கும் தருவாயில் வசந்தா, 'கல்யாணம் ஆகிட்டாலே இந்த பசங்க எப்படித்தான் அம்மாவ விட்டுட்டு பொண்டாட்டி பின்னாடி சுத்துறானுங்களோ' என வர்ஷித்தை வம்பிழுக்க சொல்லி முடிக்கும்போது வர்ஷித்தும் சரியாக அந்த வேளையில் சாப்பிட்டு எழுந்தான் பொய்யான கோபத்தோடு கை கழுவுவதற்கு.

ஆதிகா, 'ஏன் அத்த இப்படி பேசுனீங்க, அவரே இப்பத்தா கோபம் இல்லமா சாப்பிட்டாங்க அதுக்குள்ளயும் இப்படி பண்ணிட்டீங்களே அத்த' என வருத்தப்பட. வசந்தா இதற்கு, 'உன் புருசன் கோவிச்சிக்கிட்டு போறானாக்கும், அவனுக்கு சிரிப்பு வந்திருக்கும் அத அடக்கமுடியாம தான் கோபமா போற மாதிரி நடிக்கிறான், எங்க சிரிச்சா கோபம் இல்லனு தெரிஞ்சிடுமோனு தான் ஓடுறான். காலையிலிருந்து பறந்து பறந்து கிளம்புறதுக்கும் இதுதான் காரணம்' என கூற ஆதிகவோ, 'அத்த சும்மா சொல்லாதீங்க, அவரு உண்மையிலே சாப்பிட்டு முடிச்சிட்டாரு, அதா கிளம்பிட்டாரு' என விட்டுக்கொடுக்காமல் பேச வசந்தா, ' நல்ல ஜாடிக்கு ஏத்த மூடிதான், நீயும் அவனுக்கு சளச்சவ இல்லை , நல்லா விட்டுக்கொடுக்கமா பேசுறமா' என கலாய்த்து பேசி இருவரும் சிரித்தனர்.

ஆதிகாவும் இந்த வீட்டிற்கு வந்து ஒரு நாள் என்றாலும் வசந்தாவுடன் நன்றாக பழகி அந்த குடும்பத்தில் ஒன்றாகியிருந்தாள். ஒருவாரம் சென்னையில் தனிமையில் இருந்த ஆதிகாவிற்கு இந்த வீடு நிம்மதியையும் புது சொந்தத்தையும் தந்து அவளை இதமாக்கியது.

கைகழுவி வந்த பிறகு, இருவரும் சிரித்து பேசுவதை பார்த்து மகிழ்ந்த வர்ஷித் ஆதிகாவிடம், 'சொல்லிட்டு வா கிளம்பலாம்' என்றான். ஆதிகாவிற்கு கவலை தொற்றி கொண்டது, அத்தையையும் மாமாவையும் தனித்து விட்டு போவதை நினைத்தும், வர்ஷித் கோபமாக இருப்பதை நினைத்தும், ஆனால் இவனும் பாவம் தானே என இன்னொரு மனமும் எண்ணியது.

வசந்தவிடம் சென்று, 'அத்த நான் கிளம்பவா' என வருத்தத்துடன் கேட்டாள் ஆதிகா. வசந்தா அவளின் எண்ணங்களை துல்லியமாக புரிந்து, 'எல்லாம் சரி ஆகிடும்மா, கவலை படாத, அவனை பத்திரமா பாத்துக்கோ வர்ஷித் ஒரு குழந்தை மாதிரி அவனால ரொம்ப நாளுக்கெல்லாம் கோபத்தை பிடிச்சு வச்சுக்க தெரியாது. அவனோட கோபமும் நியாயம் தானே, கொஞ்சம் நாள் போகட்டும்' என சமாதானம் கூறி அனுப்பி வைத்தார்.'ஆனா அவுங்க இப்போ' என ஆதிகா கூறும்போது, 'எங்க போயிடப்போரான் கோபம் போச்சுன்னா இங்க வந்து எங்களையே சுத்தி சுத்தி வருவான், அவனை பத்தி எனக்கு தெரியாதா' என வசந்தா மகனின் மனம் அறிந்து கூறினார்.

இருவரும் காரில் பயணிக்கையில், ஆதிகா வேடிக்கை பார்த்து கொண்டே வந்தாள் அவள் சட்டென்று சாதாரணமாக வர்ஷித் பக்கம் திரும்பும்போது, அவனின் புன்னகை முகம் அவளின் கண்ணுக்கு தென்பட்டது. அவள் வினோதமாக வர்ஷித்தை பார்க்க, அவனோ மாட்டிகிட்டோமா என்பது போல விழித்தான். அவனே ஆரம்பித்தான் அவளிடம், 'எனக்கு இப்போ கோபம் எல்லாம் இல்ல, அவுங்களும் எனக்காக தானே யோசிச்சுருக்காங்க. ஆனா வருத்தமா இருக்கு. எங்க அங்க இருந்தா அவுங்கள கஷ்டப்படுத்திவேனோனு பயமா இருக்கு. அதனால தான் இப்படி. கொஞ்ச நாள் போகட்டும். எல்லாம் சரி ஆகிடும்' என்றான். 'அத்தையும் இதுதான் சொன்னங்க' என ஆதிகா கூற, வர்ஷித் 'இதற்கு நடுவில எங்க அம்மா வேற கோபத்தை குறைக்கிரேன்னு சொல்லிட்டு காமெடி பண்றாங்க, நானாவுது பொண்டாட்டி பின்னாடி சுத்துறதாவுது' என்றான் சாதாரணமாக. ஆதிகா, 'எப்படியோ ஒத்துக்கிட்டா சரி தான்' என்று தனக்கு மட்டும் கேக்கும் குரலில் மெதுவாக புலம்பினாள். அவள் புலம்பியதை கேட்ட வர்ஷித் தனக்குள் சிரித்து கொண்டு சாதாரணமாக, 'நீ மைண்ட் வாய்ஸ்னு நெனச்சு வெளில பேசிட்டு இருக்க' என கூற. அவன் கூற்றில் தன்னிலை அறிந்த ஆதிகா நாக்கை கடித்து தலையில் அடித்து கொண்டாள். இருவரும் சிறிது நேரம் இறுக்கம் தளர்ந்து பேசினர். வர்ஷித் ஆதிகாவின் செயலை கண்டு புன்னகைத்து காரை சாலையில் செலுத்துவதில் கவனமானான். அவளும் வேடிக்கையை தொடர்ந்தாள்.

அன்று வீட்டிற்கு சென்றவுடன் வர்ஷித், 'இப்போ நான் வெளில சாப்பாடு வாங்கிக்குடுத்துட்டு போறேன் நீ மதியத்துக்கு பாத்துக்கோ, நான் வெளியில் சாப்புடுகிறேன்' என கூற ஆதிகாவிற்கு "எப்படி சமைப்பது இப்போதான் இங்க வந்துருக்கோம் எதுமே இருக்காதே என்ன பண்றது" என யோசித்துக்கொண்டே புதுவீட்டிற்குள் போக அவள் வியந்து தான் போனாள். அங்கு வீட்டிற்கு தேவையான எல்லா பொருட்களும் நேர்த்தியாக இருந்தது. இதுலயே தெரிந்தது வர்ஷித் பார்த்து பார்த்து வீட்டிற்காக செய்திருக்கிறான் என்பது.

அவனும் வேலை முடிந்து மாலையில் வீட்டிற்கு வந்தான். அவன் வந்தவுடன் ஆதிகா, 'ரெப்பிரேஷ் ஆகிட்டு வாங்க, டீ குடிக்கலாம்' என்றாள். இருவரும் டீ பருகிக்கொண்டே பேசிக்கொண்டிருந்தனர். வர்ஷித், 'சாரி ஆதிகா, இங்க நடந்தது தெரியாம நான் வேற உன்கிட்ட அன்னைக்கு கடுமையா பேசிட்டேன், நீ வேதனையில இருந்துருப்ப, நான் வேற திட்டிட்டேன்'என கூற ஆதிகா 'பரவலா விடுங்க' என்றாள். அவனே மேல தொடர்ந்தான் 'இன்னைக்கு நான் மட்டுமே இங்க வரலாம்னு இருந்தேன். ஆனால், நீ அங்க இருந்தா உனக்கு கஷ்டமா இருக்கும் அதான் உன்னைய என்கூடவே அழைச்சிட்டு வந்தேன். என்னாலேயே அங்க இருக்க முடியல, நீ மட்டும் எப்படி அங்க இருப்ப அதுனாலதான். எனக்கு தெரியும் அம்மாவ விட்டுட்டு உனக்கு வர மனசில்லேனு, என்ன பண்றது நீ கஷ்டப்படுறத பாத்த என்னால தாங்கமுடியாது' என அவளை பேசவிடாமல் அக்கறையாக பேசினான்.

ஒரு பார்வையில் பூ கொடுத்தாய்...
ஒரு வார்த்தையில் வாழ
வைத்தாய்...
ஒரு மேகத்தை போல் எந்தன்
தேகத்தை மாற்றி வைத்தாய்...
இறகை போல் ஒரு வேகத்தில்
வேகத்தில் வானத்தில் வானத்தில் செல்லுகின்றேன்...
நிலவை போல் உன்னை தூரத்தில் தூரத்தில் பார்க்கின்ற போதெல்லாம் துள்ளுகின்றேன்...

இந்த வார்த்தைகளை கேட்ட ஆதிகாவிற்கு மனம் சிறகில்லாமல் பறந்தது... வானை தொட்டதுபோல் ஒரு உணர்வு. அவனின் ஒரு வார்த்தையில் மகிழ்ச்சியாக இருந்தாள். இவளோ சாதாரணமாக சொல்கிறானே, இந்த அக்கறையெல்லாம் என்மீது எப்படி என பல கேள்விகள் எழுந்தன. அவளது கண்கள் பலநாள் கழித்து வந்த மகிழ்ச்சியில் மின்னியது. இந்த நொடியை அனுபவித்த ஆதிகாவால் தொடர்ந்து அனுபவிக்கமுடியாமல் செய்தது வர்ஷித்தின் வார்த்தைகள்.

'கண்ணைமூடி திறக்குறதுக்குள்ள எல்லாமே நடந்த்துப்போச்சு. சரி விடு இது சூழ்நிலை காரணமா நடந்த கல்யாணம், இதுக்காக என்கூட வாழணும்னு கட்டாயம் இல்லை. எனக்கு தெரியும் என்னைய உனக்கு கண்டிப்பா பிடிக்காது. ஒரு வருஷம் தான் கொஞ்சம் பொறுத்துக்கோ, டிவோர்ஸ்க்கு அப்ளை பண்றேன். அதுவரையும் நாம பிரண்ட்ஸா இருக்கலாம்' என கூறி சட்டென எழுந்து அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.

இதை கேட்ட ஆதிகா கல்லென சமைந்து உணர்வற்று இருந்தாள். "இப்பதானே கொஞ்சம் நிம்மதியா இருந்தோம் அதுக்குள்ள அப்படி சொல்லிட்டானே. நாம எப்போ சொன்னோம் இவனை பிடிக்கலைனு இவனாவே முடிவு பண்ணிக்கிட்டானே" என எண்ணினாள். சரி நாம நினைக்கிறது எப்போ நடந்துருக்கு, வாழ்க்கை போற பாதையில போவோம் என கூறி தன்னை தேற்றிக்கொண்டாள். சரியான சிடுமூஞ்சி எப்படி பேசிட்டு போறான் பாரு என அவன் மேல குறை பாட்டு பாடியவள் தன் மனம் அவன் மீது சரிவதை அவள் கவனிக்கவில்லை.

காதல் இவளிடம் கூடி வருகையில் அவன் பிரிய நினைக்கும் இவர்களின் வாழ்வில் அடுத்து என்ன நடக்கும்? அடுத்த பகுதியில் பார்ப்போம்.
நன்றி !
 
Top Bottom