Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - [email protected]


என்னவனும் என் அண்ணனும்- கதை திரி

Messages
48
Reaction score
0
Points
6
என்னவனும் என் அண்ணனும்

அத்தியாயம் 37

நீண்ட நாள் கழித்து தன்னவளை பார்க்க போவதால் இமானின் உற்சாகம் அன்று சற்று அதிகமாகவே இருந்தது. அவன் அம்மா அவர்களின் மல்லிகை கடையை திறந்து வைப்பதற்காக இமானை எழுப்ப முயற்சிக்கும் கஷ்டத்தை சொல்லி மாலாது. அம்மாவிடம் அடி வாங்கி மிதி வாங்கி, எழுந்து, அறையும் குறையுமாய் பல் விளக்கி, ஆர அமர டீ குடித்து விட்டு 'இன்னும் கிளம்பலயா நீ' என்று அம்மாவிடம் மீண்டும் திட்டு வாங்கி கிளம்பும் இமான் அன்று அது எதையும் செய்யவில்லை.

மற்ற நாட்களில் கூட சீக்கிரம் அவனை எழுப்புவது மலையை தூக்குவது போல் கடினமாக இருக்கும். அன்றோ ஞாயிற்றுக்கிழமை. எப்படியும் இவன் எழுந்திரிக்க பத்து மணி ஆகும் என்று நினைத்திருந்த அம்மாவுக்கு ஆச்சரியம். அவனாக அலாரம் வைத்து ஏழு மணிக்கெல்லாம் குளித்துவிட்டு வந்து, சாப்பாடு கூட வேண்டாம் என்று கூறிவிட்டு கண்ணாடி முன் நின்று தன்னை தானே பத்து முறை பார்த்துக்கொண்டான்.

"என்னடா இன்னைக்கு நல்ல பையனா சீக்கிரம் எழுந்து கிளம்பிருக்க அதிசயமா? அப்படி யார பாக்க போற?" என்று அம்மா கேட்க, 'ஒரு வேலை அக்கா அம்மாவிடம் சொல்லிவிட்டாளோ' என்ற ஐயம் வந்தது இமானுக்கு.

"இல்லமா ஃபிரண்ட பாக்க போறேன் அதான்" என்று கூறி சமாளிக்க பார்த்தான்.

"ஃபிரண்ட பாக்க நீ என்னைக்கு டா சீக்கிரம் போய்ருக்க. அவங்க சொன்ன டைம்ம விட ரெண்டு மணி நேரம் லேட்டா தானேடா போவ? எத்தன பேர் என்கிட்ட வந்த கம்பிளைன்ட் பண்ணிருக்காங்க" என்று அவனின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றும் வேலையை சிறப்பாய் செய்துக்கொண்டு இருந்தார் இமானின் தாயார்.

"எப்போதும் அப்படியே வா இருப்பாங்க. நாங்களும் திருந்துவோம்ல" என்று பதில் கூற அதற்கு பதிலடி கொடுக்க தயாராக இருந்தார் இமானின் அம்மா.

"உன் மொகரையலாம் பாத்தா திருந்துற ஐடியா இருக்க மாறி தெரியலையே ராசா" என்று கிண்டல் அடித்தார்.

இதையெல்லாம் பொருட்படுத்தாமல் கிளம்பி சென்றான் இமான்.

போகும் வழியில் ஒரு கடையில் நிறுத்தி அவளுக்கு பிடித்த சாக்லேட்டும் பப்ஸும் வாங்கி கொண்டு போனான். இவனுக்காக அவள் காத்திருந்த நாட்கள் போய் இப்போது தன்னவளுக்காக தன்னை மாற்றிக்கொண்டு இவன் முன்னே போய் நின்றான். தன் காதலை சொன்ன பின் அவளை சந்திக்கும் முதல் தருணத்தை போன்றே இருந்தது இன்றும்.

இமானுக்கு பிடித்த சிவப்பு நிறத்தில் அழகாய் ஒரு சுடி. அதற்கேற்ற மேச்சிங் வளையல், மேச்சிங் தோடு, மேச்சிங் செயின் என அணிந்திருந்தாள். அவளின் அழகிய கண்களுக்கு இட்டிருந்த மை அந்த கண்களுக்கு இன்னும் அழகு சேர்த்தது. அவள் உதட்டில் தீட்டிய லேசான சிவப்பு நிற சாயம் அவள் முகத்தில் பூசிய பவுடர் என ஓவர் மேக்கப் என சொல்லுவதற்கு இல்லாமல் அளவான அழகால் ஜொலித்தது முகம். அவள் அன்ன நடை போட்டு நடந்து வர அவளை கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டு இருந்தான் இமான்.

ஜூலி அருகில் வந்து அவனின் முகத்துக்கு முன் கையை அசைத்து " என்ன அப்படி பாக்குற? சைட் அடிக்கிறியா" என்று கேட்க, "என் பொண்டாட்டிய நான் சைட் அடிப்பேன். என்ன யார் கேப்பா?" என்று அவளின் மேல் ஐஸ் மழையை கொட்டினான்.

"ரொம்பதான்" என்று சொன்னவளை பார்த்து, "இப்படி ஒரு நாளுக்காக நான் எவ்ளோ நாள் ஏங்கிருக்கேன்‌ தெரியுமா? நான் எப்பெல்லாம் இந்த பக்கம் வரேனோ அப்பெல்லாம் கண்ணுல கண்ணீர்‌ வரமா போனதே இல்ல. நம்மலோட அழகிய நினைவுகள், செல்ல சண்டைகள் எல்லாமே கண்ணு முன்னாடி வந்துட்டு போகும்‌. உன்ன ரொம்ப மிஸ் பண்ணேன் ஜூலி‌. எங்க நீ எனக்கு கிடைக்காம போய்டுவியோனு‌ பயந்தேன்" என்று சொன்னதை கேட்டவளுக்கு இப்படி ஒருவனை மிஸ் பண்ண பார்த்தோமே என்று நினைத்து கண்கள் கலங்கியது. அவன் அவளை எவ்வளவு மிஸ் பண்ணினான் என்று கூறும் போது வரும் போதை அலாதி இன்பம் அல்லவா.

"அதேதான் இமான் எனக்கும். உனக்காவது இந்த பக்கம் வந்தாதான் பிரச்சனை. ஆனா நீ எங்க வீட்டுக்கு கொஞ்சம்‌ முன்னாடி என்ன டிராம் பண்ணுற எடத்த டெய்லி பாத்துட்டு தான் போகனும். நரக வேதனையா இருக்கும். மறக்கனும்னு‌ நினைக்கிறப்பலாம் அந்த இடம் நியாபக படுத்தி விட்டுரும். அவ்ளோ ஸ்ட்ரெஸ் தெரியுமா. மறக்க முடியாதுன்னு சொன்னா அப்பா புரிஞ்சுக்கல. நீ ஆஃபீஸ் ல எல்லார் கிட்டயும் நல்லா பேசுறனால எல்லாரும் என்னதான் வில்லி மாறி பாத்தாங்க‌. இப்படி பட்ட நல்ல பையன விட்டுட்டு போறியேனு ரொம்ப மோசமாலாம் கூட பேசுனாங்க. டெய்லி ஆஃபீஸ் வரதே எனக்கு கொடுமையா இருந்தது" என்று தான் பட்ட கஷ்டத்தை அவனிடம் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே ஜூலியின் கண்களில் கண்ணீர் சொட்டு சொட்டாக சிந்தியது‌.

"சரி விடு. அதான் எல்லாத்துக்கும் முடிவு வர போகுதுல" என்றான். அவள் சொன்ன போது அவன் மனமும் கலங்கி அவளுக்காக துடித்தாளும் அவன் அதை காட்டிக்கொள்ளவில்லை. அவளை டைவர்ட் பண்ண எண்ணினான்.

"அது பத்திதான் பேசனும் இமான்" என்றவளை ஆச்சரியமாய் பார்த்து, "இதுல இனி பேச என்ன இருக்கு? அதான் மாமா ஓகே சொல்லிட்டாங்கல" என்றான் புன்னகை தவழும் முகத்துடன்.

"இருந்தாலும் நீயே கொஞ்சம் யோசிச்சு பார். நம்ம லைஃப் அ நல்லா வாழனும்னா கொஞ்சமாவது காசு வேணும்ல இமான்" என்றதும் தூக்கி வாரி போட்டது இவனுக்கு.

"ஓஓ!!! அப்ப நான் இப்ப சம்பாதிக்கிறது காசு இல்லையா?" என்று கன்னத்தில் அரைந்தது போல் கேள்வி கேட்டான்.

"அப்படி இல்ல. இருந்தாலும் அது பத்தாதுல. நம்ம குழந்தைங்கல நல்ல ஸ்கூல்ல சேத்து அவங்களுக்கு ஒரு நல்ல லைஃப் அமச்சு தரனும்ல" என்று அவள் பேசி முடிப்பதற்குள், "அதுக்குதான் நம்ம ரெண்டு பேரும் வேலைக்கு போறோமே?"

"நம்ம வாங்குற சேலரிக்கு நம்ம ரெண்டு பேரும் ரெண்டு வேலைக்கு போனாதான் சரியா இருக்கும்" என்று அவள் அதையே பிடித்து தொங்கினாள்.

"நீ என்ன லவ் பண்ணுறியா இல்ல என் வேலைய லவ் பண்ணுறியானு எனக்கே இப்போ சந்தேகம் வருது ஜூலி" என்று பட்டென கேட்டுவிட, "என்ன இமான் இப்படிலா பேசுற" என்று அச்சரியமாய் கேட்டாள்.

"நீ சொல்றத பாத்தா அப்படிதான் இருக்கு" என்று பதிலுக்கு பதில் பேசினான்."நான் ப்ராக்டிக்கல்லா பேசுறேன் இமான்" என்று சொன்னதும் இமானுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.

"ஒன்னா சேர்ந்து கஷ்டப்பட்டாலும் உன்னோட தான் இருப்பேன். அந்த சந்தோஷம் பணத்துல இல்லனு சொல்றது கூட நீ சொல்ற மாறி ப்ராக்டிக்கல் தான் ஜூலி" என்று நாக்கை புடிங்குற மாறி ஒரு பதில் சொன்னான்.

"அப்படி இல்ல. எங்க குடும்பத்துல எல்லாரும் கவர்மெண்ட் ஜாப்ல இருக்கவங்க. அவங்க கண்டிப்பா இப்படி ஒரு பையன பாத்துருக்கோம்னா ஒத்துக்க மாட்டாங்கல...அப்பா ஓகே சொல்லிட்டாலும் கூட குடும்பத்துல எல்லார்கிட்டயும் எப்படி சொல்லுவாரு? எப்படி அவங்கள ஒத்துக்க வைப்பாரு?" என்று கேட்டவளை எரிச்சலோடு பார்த்தான் இமான்.

"ஓஹோ! சம்மதிக்கிற மாறி சம்மதிச்சுட்டு அப்புறமா இப்போ முடியாதுன்னு சொல்ல காரணம் தேடுறீங்கலா" இமானின் கோபத்தில் வார்த்தைகள் சரமாரியாக வந்து விழுந்தது.

"அப்படிலாம் இல்ல இமான். ஆனா வீட்ல பேச ஷ்டிராங்கா ஒரு விஷயம் வேணும்ல" என்று அவள் பேச, "அப்ப கவர்மெண்ட் ஜாப் கிடைச்சாதான் கல்யாணம். அப்படிதானே?" என்று கடுகடுத்தான்.

"அப்படி இல்ல. அது இருந்தா நல்லா இருக்கும். சோ நீ அதுக்கு முன்ன மாறி ஒழுங்கா கிளாஸ் போய் படின்னு சொல்றேன். நான் என் எதிர்காலத்த பத்தி மட்டும் பேசல. நம்ம ரெண்டு பேர் எதிர்காலமும் நல்லா இருக்கனும்னுதான் பேசுறேன். புரிஞ்சுக்க" என்று ஜூலி கூற,
"ஆமா.‌.‌ஆமா.. 'நீ வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கிட்டா என் எதிர்காலம் நல்லா இருக்கும். கவர்மெண்ட் ஜாப் கைல இல்லாம என்னையே நெனச்சுட்டு இருக்காம உன் வேலைய பாத்தா உன் எதிர்காலம் நல்லா இருக்கும்' னு சொல்றியா" என்று இமான் கேட்க இவர்களின் விவாதம் இப்படியே நீண்டது.

"அப்படி இல்ல இமான். நான் சொல்றத நீ தப்பா எடுத்துக்குற" என்று ஜூலி அவனுக்கு எவ்வளவோ சொல்லி புரிய வைக்க முயற்சிக்க அது அனைத்தும் இமானிடம் செல்லுபடி ஆகவில்லை.

"இல்ல ஜூலி. நான் கவர்மெண்ட் ஜாப் க்கு படிச்சுட்டு தான் இருக்கேன். டிரை பண்ணிட்டு தான் இருக்கேன். அதுவும் உனக்காக மட்டும் தான். ஆனா அதுக்குன்னு அது இருந்தா மட்டும்தானு நீங்க எதிர்பார்த்தா அது கஷ்டம். குட் பை" என்று கூறி வேகமாக எழுந்து சென்று அவளை திரும்பி கூட பார்க்காமல் பைக்கை ஒரு முருக்கு முருக்கினான் வீட்டை நோக்கி‌.


****​

பாஸின் கட்டளைக்காக ஆஃபீஸ் க்கு இரவில் கிளம்பி போனான் கிருஷ். வீட்டில் இருக்கும் கொஞ்ச நேரத்தையும் பிடிங்கி விட்டாரே என்ற கோபம். கண்களில் தெரியும் நெருப்பை பார்த்தால் ஆம்புலேட் ஒன்னு சுட்டு தரலாம் என்பது போல் இருந்தது. அதை எல்லாம் காட்டிக்கொள்ளாமல் பல்லை கடித்துக்கொண்டு வேலை செய்துவிட்டு வீட்டிற்கு திரும்பினான். வீட்டிற்கு வந்தால் சைந்தவியின் கவலை. 'எதுக்கு சோகமா இருக்க'னு கேட்டா அப்புறம் சொல்றேனு சொல்லிட்டா. இதை யோசித்துக்கொண்டே என்ன பண்றது என்று தெரியாமல் நேராக கட்டிலில் போய் கவிழ்ந்தான். உறங்கி எழுந்தால் மீண்டும் அதே வீடு அதே அலுவலகம் அதே வேலை என சலிப்பான வாழ்க்கை. அதற்கு தயார் ஆகி அவனின் நாட்குறிப்பில் மீண்டும் ஒரு கடுப்பான நாளை கடந்து விட்டு வீடு வர வழக்கத்தை விட ஒரு மணி நேரம் அதிகமாக ஆனது.

வீட்டிற்கு வந்து முகம் பார்த்து ஒரு வார்த்தை கூட பேசாமல் போய் குளித்துவிட்டு சாப்பிட வந்து உட்கார்ந்த அவன் முகம் 'உர்ர்ர்ர்' என்று இருந்தது. வார்த்தைகள் வாயை விட்டு தவறி கூட வரவில்லை. கண்கள் இரண்டும் அவள் பக்கம் திரும்பவே இல்லை. இப்போது சைந்தவிக்கு ஒன்றும் புரியவில்லை. அவளின் கெஸ்சை வைத்து "ஏங்க ஆஃபீஸ் ல லேட்டா விடுறாங்கனு இப்படி இருக்கீங்களா?" என்று கேட்டாள்.

"ஆமா. அவங்களும் லேட்டா லேட்டா விடுறாங்க‌. உன் கூட ரொம்ப நேரம் இருக்க முடில. அது இல்லாம நீயும் ஏன் அழுதனு சொல்றேன் சொல்றேன்னு இன்னும் சொல்லல" என்றவனின் முகம் இன்னும் இருக்கத்துடன்தான் இருந்தது.

"இல்லங்க நீங்க ஆஃபீஸ் டென்ஷன்ல இருப்பீங்க. அதான் வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் சொல்லலாம்னு அப்போ சொல்லல‌" என்று கூறியதும், "சரி இப்ப சொல்லு‌" என்றான்.

"அது வந்து....உங்கள கேன் எடுத்து ஊத்திட்டு போ சொன்னப்ப நீங்க ஆஃபீஸ் போற டென்ஷன்ல இருந்தீங்க. அந்த டென்ஷன் எல்லாத்தையும் என் மேல காமிச்சீங்கலா அதான்" என்றவளை பார்த்து, 'என்ன பண்ணி வச்சேனு தெரியலயே' என்று யோசித்துக்கொண்டே, "என்ன பண்ணேன்?" என்று தலையை சொறிந்தான்.

"தண்ணி கேன்ன பிரிச்சு ஊத்த சொல்லிட்டு நான் ஏதோ பாக்க ஃபோன் எடுத்தேன். அப்போ அப்படியே வாட்ஸ்அப்ல வந்த மெஸேஜ்-அ எடுத்து படிச்சிட்டு இருந்தேன். நீங்க அத பாத்துட்டு 'எல்லா வேலையும் நான் தனியாவே செய்றேன். நீ நல்லா சொகுசா இரு'னு சொன்னீங்க‌. அப்படி என்ன நான் உங்கள மட்டும் வேலை வாங்கிட்டு சும்மா இருக்கணும்னா நினைக்கிறேன். வீட்லயே இருந்தாலும் நானும்தா எவ்வளவு வேலை செய்றேன். சும்மா இருக்கேணு சொல்ற மாறி இருந்துச்சு. ஆனா அதுக்கு கூட வருத்தம் தான் அழுகை வந்தது எதுத்குன்னா நீங்க திரும்பி 'எப்ப பாரு இப்படியே சொல்லு' னு ரொம்ப கடுப்பா சொன்னீங்க‌. அதுக்குதான்" என்று தன் மன குமுறல் அத்தனையும் கொட்டி தீர்த்தாள் சைந்தவி.

"ஐ அம் சோ சாரி. நான் ஏன்‌ அப்படி சொன்னேனு தெரியல. கேன்ல தண்ணி எடுத்து ஊத்துறது என் வேலை. அதுல உனக்கு ஒன்னும் வேலையே இல்ல. ஏதோ ஆஃபீஸ் கிளம்புற டென்ஷன் ல அப்படி பேசிருப்பேன். சாரி..ரியலி சாரி டி பொண்டாட்டி" என்று வார்த்தைக்கு வார்த்தை சாரி போட்டு சமாதானம் பண்ண முயற்சித்தான்.

"என்னமோ போங்க" என்று சளித்துக்கொண்ட சைந்தவியை சட்டென தன் பக்கம் இழுத்து முத்தமிட்டான் கிருஷ். "விஷம்பகார கண்ணா இதுக்கு ஒன்னும் கொரச்சல் இல்ல" என்று சொல்லி விட்டு எழுந்து சென்றவளின் கையை பிடித்துக்கொண்டு விடமாட்டேன் என பிடிவாதம் பிடிக்க "நான் தான் மன்னிச்சுட்டேன்ல. அப்புறம் என்ன?" என்று சைந்தவி கேட்டாள்.

"அது எப்படி எனக்கு தெரியும்?" என்று கிருஷ் கேட்க, "அதுக்கு என்ன பண்ணனும்?" என்று கேட்டு விட்டு கிருக்கனோ இவன் என்று நினைப்பதற்குள் பதில் வந்தது அவளின் அவனிடம் இருந்து.

"என்ன பாத்து எப்போதும் அழகா ஒரு சிரிப்பு சிரிப்பல. அதான் வேணும்" என்றான். "அது தானா வரனும். கேட்டதும்லா வராது" என்று கூறிவிட்டு முகத்தை திருப்பிக்கொண்டு சென்றவளின் இடைவலைத்து தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டான். "வரனும். அப்பதான் விடுவேன்" என்றான் கிருஷ்.

அவன் கேட்டான் என்பதற்காக கஷ்டப்பட்டு அந்த சிரிப்பை சிரித்தாள் அவள். அதை பார்த்ததும் அவள் கையை விட்டுவிட்டு "இப்படி சிரிச்சுட்டு இருந்தா பரவால‌. எப்ப பாரு எதாவது ஒரு காரணத்தை வச்சு சண்டை போட்டுக்கிட்டு" என்று கிருஷ் கூற "அப்ப நான் வேணும்னே சண்டை போட்டுக்கிட்டு இருக்கேனா? உங்க மேல தப்பே இல்லையா?" என்று கேட்ட முகம் கோபமாய் மாற "மறுபடியும் முதல்ல இருந்தா!!!!" என்று சொல்லிவிட்டு மயங்கி விழுவது போல் ஆக்ஷன் செய்தான் கிருஷ். இதை பார்த்த சைந்தவிக்கு குழந்தை தனமான தன் கணவனை நினைத்து சிரிப்பு வந்தது.
 
Messages
48
Reaction score
0
Points
6
என்னவனும் என் அண்ணனும்

அத்தியாயம் 38

மல்லிகை கடைக்கு சென்று ஒரு மாதத்திற்கு தேவையான பொருட்களை எல்லாம் வாங்கிக்கொண்டு வீடு திரும்பினர் சைந்தவியும் கிருஷும். வீட்டிற்கு வந்து வாங்கி வந்த பொருட்களை இருவரும் சேர்ந்து எடுத்து வைத்துக்கொண்டு இருந்தனர்.

"ஸ்ருதி கால் பண்ணாங்க. அவ கல்யாணம் ஆகி இப்போ கேரளால இருக்கா. அங்க ஒரே மழையாம். குளிர் வேற ஜாஸ்தி இருக்குனு சொல்லிட்டு இருந்தா" என்று சைந்தவி அவளின் தோழியைப்பற்றி சொல்லிக்கொண்டு இருந்தாள். கிருஷ் திடீரென அவளை தன் பக்கம் இழுத்து தன் மார்போடு அணைத்துக் கொண்டான். அவள் அவனின் பிடியில் இருந்து விழகாத வண்ணம் இருக பிடித்தபடி,
"அப்போ நம்ம ஹனிமூனுக்கு கேரளா போய்ருவோமா?" என்று அவளின் காதோரம் கிசுகிசுதான். அவன் ஹஸ்கி வாய்ஸில் பேச மெல்லிய காற்று அவள் காதில் பட்டு அவள் தேகத்தை கூச செய்தது. சிலிர்த்து நின்ற அவளை இன்னும் கொஞ்சம் இருக பற்றி "பதில் சொல்லுடி என் பொண்டாட்டி" என்று மீண்டும் மெல்லிய குரலில் பேசினான் கிருஷ்.

"என்ன சார். நம்ம ஜஸ்ட் நவ் மேரிட் கப்பில்ஸ் னு நெனப்பா. நமக்கு கல்யாணம் ஆகி ஒரு வருஷத்துக்கு மேல ஆச்சு. இப்போ என்ன ஹனிமூன் பத்தி பேசிக்கிட்டு" என்றவளின் கண்ணோடு கண் பார்த்து "ஒரு வருஷம் என்ன அருவது வருஷம் ஆனாலும் கேப்பேன்" என்றான்.

"இந்த ரொமான்ஸுக்கு ஒன்னும் கொரச்சல் இல்ல. அங்க நாலு நாள்தான் மழை இருக்கும்னு சொல்லிருக்காங்க. நம்ம ப்ளான் பண்ணி போறதுக்குள்ள குளிர் முடிஞ்சு வெயிலே வந்துரும்" என்று கூறிவிட்டு அவன் பிடியில் இருந்து விலகி மீதி இருந்த பொருட்களை எடுத்து வைத்தாள். "அதெல்லாம் தெரியாது. உன்ன நான் ஹனிமூன் கூட்டிட்டு போகவே இல்ல. சோ கேரளா போகனும்" என்று அடம்பிடித்தான்.

"எதுக்குங்க அதுக்கு தேவையில்லாம பெருசா செலவு பண்ணிக்கிட்டு. எனக்கு ஹனிமூன் போகனும்னு ஆசை எல்லாம் இல்ல. நம்ம வீட்லயே சந்தோசம இருந்தா போதும்" என்று சைந்தவி கூற,
"நமக்குதான் இப்பலாம் அப்போ அப்போ சண்டை வருதே. நீ வீட்லயே இருக்கனால கூட உனக்கு கொஞ்சம் ஸ்ட்ரெஸ் ஜாஸ்தியா இருக்கும். உன்ன வெளிலயே எங்கையும் கூட்டிட்டு போறது இல்ல. அதுனால கண்டிப்பா இந்த ட்ரிப் போறோம்" என்று கூறிவிட்டு சென்றான்.

எப்படியும் ப்ளான் பண்ணுவோம்ல அப்ப பேசிக்கலாம் என்று இருந்தாள்‌‌. ஆனால் மறு நாள் கிருஷ் ஆஃபீஸ் விட்டு வரும்போதே சர்ப்ரைஸ் ஒன்றை கையில் கொண்டு வந்தான். சைந்தவியிடம் நீட்டி "நம்ம கேரளா போறோம். அதுவும் அங்க ஃபேமஸா இருக்குற போட் ஹவுஸுக்கு" என்று சொல்லும் போது அவன் கண்களில் இருந்த எக்சைட்மண்ட்கு அளவில்லை.

இது சைந்தவி சற்றும் எதிர்பார்க்காத சர்ப்ரைஸ் தான். இருந்தும் அதற்கு ஆகும் செலவு பத்தாயிரத்தை தாண்டும் என தெரிந்ததும் இந்த இரண்டு நாள் சந்தோஷத்துக்கு இவ்வளவு பணத்த வீணடிக்கனுமா என்று தோன்றியது அவளுக்கு. அவனிடம் எவ்வளவு சொல்லியும் அவன் ஒத்துக்கொள்ளவில்லை. "இத செலவுனு பாக்காத டா. சந்தோஷம்னு பாரு" என்றவனின் கூற்றுக்கு "இது மட்டும்தான் சந்தோஷமா? வேற எதுவும் சந்தோஷம் இல்லையா?" என்று கேட்டாள்.

'ஹனிமூன் கூட்டிட்டு போலனு அடம்பிடிக்கிற இந்த காலத்துல இவ என்ன இப்படி இருக்கா எடக்குநாட்டான் மாறி' என்று நினைத்துக்கொண்டு, "இல்ல டா. அதெல்லாம் விட இது பெஸ்டா இருக்கும்ல. அதுக்குதான். இதெல்லாம் ரசிக்காம காசு பணம் மட்டும் என்னத்துக்கு? நானே செலவு பத்தி யோசிக்காதப்ப உனக்கு என்ன?" என்று கேட்டதும் ஒருவாறு சம்மதித்தாள்.

"சரி போறது போறோம். கேரளாலதான் நல்பமராதி தைலம் நிறைய கிடைக்குமாம்.ஒரு பாட்டில் வாங்கிட்டு வரனுங்க" என்று அவள் கூற 'எதுக்கு இவ தைலம் பாட்டிலாம் கேக்குறா? வீட்டில உள்ள தைலம்லா பத்தாதாமா?!' என்று உள்ளுக்குள் நினைத்துக்கொண்டே, "எதுக்கு மா?" என்று வெளியில் சாந்தமாய் கேள்வி கேட்டான். நல்லவனாம்.

அவனின் இந்த கேள்வி முடிவதற்குள்ளாகவே அவளின் பதில் வந்தது. "இல்லங்க, எனக்கு மீசை வளருதுல அது அப்லை பண்ணா இதெல்லாம் தன்னால மறஞ்சுருமாம்" என்று சொன்ன மறுநிமிடம் ஆவேசமாய், "அதெல்லாம் வேண்டாம்" என்றான். தன்னவளிடம் அவன் ரசிப்பதே அதைதானே. அதற்கு வேட்டு வைக்கிறாள் என்று வந்த ஆவேசம் அது.

"ஏங்க?" என்று கேட்டவளின் மெல்லிய மீசையை தடவி, "இதுதான் அழகே. அதெல்லாம் போக வைக்க வேணாம்" என்றான்.

அதை ஏற்க மறுத்த சைந்தவியோ பெண்களுக்கே உரிய எண்ணத்தோடு "பசங்க மாறி மீசைலாம் இருந்தா நல்லாவா இருக்கு!! வேண்டாங்க" என்றாள் சிறுபிள்ளை போல். "அதெல்லாம் முடியாது. எனக்கு அந்த மீசை வேணும். அததான் நான் ரசிக்கிறேன். அத எடுக்காத" என்று கூறியவன் அதை மறுத்து பேச வந்தவளின் இதழ் மேல் விரல் வைத்து 'உச்ச்ச்' என்றவாறு அருகில் வந்து அவளின் கன்னத்தில் முத்தமிட்டான். மேலும் தொடர்ந்தவள், "ஏங்க ரசிக்க வேற எதுவுமே இல்லையா?" என்று கூறிய உதடுகள் மேல் அவன் இதழ் பதித்தான். அவள் மௌனமானாள். அதன்பின் இருவரின் விழிகள் மட்டுமே பேசியது.

இவர்கள் வாழ்க்கை ஆனந்தத்தை நோக்கி அம்பு விட இன்னொரு பக்கம் இமானின் வாழ்க்கை புரியாத புதிராகவே போய் கொண்டு இருந்தது. சைந்தவி கூறுவது போல் 'எப்படிப்பட்ட முடிவா இருந்தாலும் பரவால. ஆனா முடிவுன்னு ஒன்னு சீக்கிரம் வந்தா சரி. எத்தன நாளைக்கு கிடைக்குமா கிடைக்காதா னு அல்லாடிட்டே இருப்ப' என்றாயிற்று. இமானுக்கு என்ன முடிவு எடுப்பது என்று ஒன்றும் புரியவில்லை. ஜூலியின் காதல் உண்மைதான் போல. இவன் குட் பை சொல்லிய பின்னும் இருபது மிஸ்டுகால் எண்ணற்ற எஸ்எம்எஸ் என அவளால் முடிந்த வரை சமாதானம் செய்ய முயற்சித்தாள். கடைசி காலை எடுத்து,

"எதுக்கு சும்மா ஃபோன் பண்ணி டார்ச்சர் பண்ற?" என்று கோப குரலில் அளர, ஜூலியின் மனமோ அவனின் வார்த்தைகளில் நொந்து போனது.

"நான் வேணும்னா... நான் 'ஜோ, ஏஜ்ஜல்'. அதே நான் வேணானு ஆயிட்டா டார்ச்சர் ல?" என்று கூறும் அவள் சோக குறளில் கண்ணீர் தெரித்தது.

"இப்போ கூட நான்...உன்ன வேணானு சொல்லல. உனக்காகதான் எல்லாம் பண்ணேன். உனக்காக என் ஃபிரண்ட்ஸ் கூட வெளில போறத கொறச்சுட்டேன். அவங்கள ஹர்ட் பண்ணேன். எங்க கேங் அதுல இருந்தும்‌ தள்ளி வந்தேன். உனக்கு பிடிக்காதுன்ற ஒரே காரணத்துக்காக‌. கிரிக்கெட்னா எனக்கு உயிர். அதையும் விளையாடுறத விட்டேன். நீ வேணானு சொன்ன ஒரே காரணத்துக்காக. இது எல்லாம் இல்லாம எனக்கு வாழ்க்கையே வெறுத்து போன மாறி சில நேரம் தோணும். நீ எனக்கு கிடைப்பன்ற ஒத்த சந்தோஷத்துக்காக என்னோட மத்த எல்லா சந்தோஷத்தையும் இழந்தேன். இப்போ கூட உன்ன விட்டுட்டு போகனும்னு நினைக்கல. ஆனா நீ என் வேலைய மட்டும்தா லவ் பண்ண போறனா அது என் கையில இல்ல. கிடைச்சா வருவேன். இல்லனா நீ என் வாழ்க்கைல இல்லனு நெனச்சுக்குறேன். அதுக்கு நடுவுல பேசுறது, பழகுறது, ஆசைய வளர்த்துக்குறது இதெல்லாம் வேணாம்" என்று தன் முடிவை மிக உறுதியாக சொன்ன இமானின் குறளில் ஒரு தெளிவு தெரிந்தது. இருந்தும் அவன் காதல் மனம் இதையெல்லாம் ஏற்க மறுத்தது. இவை அனைத்தும் கனவாய் இருந்துவிட கூடாத என்ற ஏக்கம். ஆனால் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் அவளின் பதிலுக்காக காத்திருந்தான்.

"நான் கூட உனக்காக என்னோட ஏழு வருச ஃபிரண்ட் சிப்-அ விட்டேனே அது உனக்கு பெருசா தெரியலயா? என்னமோ வேலை வேலைனு பேசுறேனு சொல்றியே!! நான் என்ன பத்தி மட்டுமா பேசுறேன். ஃபேமிலியா இருக்கப்ப ஒரு ஸ்டேட்டஸ்ல இருந்தா தானே குடும்பத்த நல்லா ரன் பண்ண முடியும். இத சொன்ன அதையும் தப்பாதான் புரிஞ்சுக்குற" என்று அவள் வருத்தமாக கூற 'இவள் நல்லவளா இல்லை கெட்டவளா? அவங்க இருக்க வசதிக்கு இந்நேரம் நல்ல மாப்பிள்ளையா பாத்து கல்யாணம் பண்ணிருக்கலாம். ஆனா நான் தான் வேணும்னு திரும்பி திரும்பி வரா. சரி இவ்ளோ லவ் இருக்கேன்னு பாத்தா வேலை முக்கியம்னு சொல்றா. வேலை இருந்தாதான் கல்யாணம்னு சொல்ல மாட்டேங்குறா. ஆனா வேலைக்கு போ போ னு டார்ச்சர் பண்றா.அன்னைக்கு ஃபேமிலிகிட்ட ஓகே வாங்க கவர்மெண்ட் ஜாப் வேணும்னு சொன்னா இன்னைக்கு நம்ம ஃபேமிலிய ரன் பண்ண கவர்மெண்ட் ஜாப் வேணும்னு சொல்றா. இவள புரிஞ்சுக்க எனக்கு ஒரு தனி மூலைய குடு ஆண்டவா' என்று மனதிற்குள் நொந்துக் கொண்டான் இமான்.

இந்த எண்ணங்கள் நொடி பொழுதில் அவனுக்குள் வந்து செல்ல, அவன் அவளிடம் "நீ என்ன சொன்னாலும் சரி ஜூலி. என் முடிவ மாத்திக்கிற ஐடியா இல்ல.நாம சேரனும்னு இருந்தா சேருவோம்" என்று கூறி ஃபோனை துண்டித்தான்.


*****​


ஈரக்காற்று இதமாய் அவள் இதழ்கள் தொட, சில்லென வீசும் தென்றலில் சில்லிட்டு போனது அவள்‌ தேகம். இந்த இயற்கை தாய் இதம் தர செயற்கை காற்று எதற்கு என்று ஏசியை ஆஃப் பண்ணிவிட்டு கார் கண்ணாடியை இறக்கி விட்டு இயற்கையை ரசித்தப்படி, தன் காதல் டைரியில் இன்னொரு இனிய நினைவை அழகாய் அச்சிட ஆவலுடன் பயணித்தாள் சைந்தவி.

கேரளாவின் எல்லைகளைத் தொட்டதுமே தென்னை மர அலங்காரம் தொடங்கிவிட்டது. ஆங்காங்கே மரங்கள், அளவான வாகனங்கள், அழகிய வடிவில் வீடுகள் என எழில் கொஞ்சும் ஊராக திகழ்ந்தது கேரளம். வெளியில் வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தவளுக்கு ஆச்சரியம். வீடே மறையும் அளவிற்கு மரங்கள். வீட்டிற்குள் மரம் என்பதற்கு பதிலாக மரங்களுக்குள் வீடு என்பது போல் காட்சி அளித்தது. கண்டிப்பாக வீட்டிற்கு ஒரு மரமாவது இல்லாமல் இல்லை. மரம் இல்லாத வீடே அங்கு இல்லை. அவர்கள் போக வேண்டிய இடம் வரும்வரை ஒவ்வொரு வீட்டையும் சைந்தவி செக் பண்ண, மரம் இல்லாத வீடே தென்படவில்லை.

இந்த அழகிய காட்சிகளை ரசித்து வந்தவளுக்கு கண் குளிரும் வகையில் ஒரு காட்சி. அதுதான் அவர்கள் போக வேண்டிய போட் ஹவுஸ். ஆழி சூழ்ந்த இடத்தில் அழகாய் ஒரு படகு. பார்க்கவே பரவசம் தரும் அந்த படகில் இருவரும் ஏற, உள்ளே போய் பார்த்தால் நம் வீட்டை போலவே மிக வசதியாய் ஒரு பெரிய படுக்கை, அதோடு அட்டேச்ட் பாத்ரூம். அந்த அறையோ ஏ.சி. , முகம் பார்க்க ஆள் உயர கண்ணாடி, பொருட்கள் வைத்துக்கொள்ள கப்போர்ட், ஆழி சூழ்ந்த இடத்தை ரசிக்க பெரிய கண்ணாடி ஜன்னல் என ஃபை ஸ்டார் ஹோட்டல் போல சகல வசதிகளுடன் இருந்தது.

படகா அது. படி கட்டுகள் வைத்த மேல் தளமும் இருந்தது. ஒரு புறம் சோஃபா இன்னொரு புறம் மெத்தையை ஒத்த அமரும் இருக்கை, அதில் இருந்து பார்த்தால் ரம்மியமாய் காட்சி அளிக்கும் ஏரி நீரும் சுத்தி இருக்கும் மரங்களும். மேல் தளத்தில் எங்கிருந்து பார்த்தாலும் தண்ணீர் ததும்பும் காட்சி தெரியும். இயற்கையை ரசிக்கும் ஜோடிகளுக்கு இதை விட சிறந்த இடம் இல்லை என கூறலாம். அப்படிப்பட்ட இடத்தில் அவர்கள் அமர்ந்ததும் படகு மெல்ல நகர தொடங்கியது. அனல் காற்று அகோரமாய் அடிக்க 'ஐய்யோ வெயில் நாளில் இந்த இடத்திற்கு வந்தது மிக பெரிய தவறு போல' என்று இருவரும் பேசிக்கொண்ட சில நொடிகளில் அனல் காற்று ஈரக்காற்றாய் மாறியது. இவரின் காதல் நிகழ்விற்கு இதம் தந்தது.

ஏரியே கடல் போல் காட்சியளிக்க அதை ஒருவர் தோல் மேல் ஒருவர் சாய்ந்து அந்த காட்சியை பார்த்துக்கொண்டு ரசித்தப்படி பயணித்தனர்.

"கல்யாணம் ஆகி இன்னைக்குதான் இப்படி நிதானமா உட்கார்ந்து நிம்மதியா பேசிட்டு இருக்க மாறி இருக்கு. சந்தோஷமா இருக்கேன்" என்று கூறி அவன் தோல் மேல் இருந்த அவள், சற்று நிமிர்ந்து அவனை பார்த்து புன்னகைத்தாள்.

"ஆமா. நம்ம ஞாயிற்றுக்கிழமை தான் மாவு ஆட்டுறது, கடைக்கு போறது, வீடு க்ளீன் பண்றதுன்னு எல்லா வேலையும் பார்போம். இல்லனா பக்கத்துல எங்கயாவது போய்டு வந்தா டைம் சரியா போகிடும்‌. அதுக்குதான் சொன்னேன் இப்படி ஒரு ஹனிமூன் ட்ரிப் போகலானு" என்று கூறிவிட்டு அவனின் இடையை கிள்ளிய மறு நொடி அவள் துள்ளி எழுந்தாள். "என்னங்க இது" என்று அவள் கேட்க "அப்புறம் ஹனிமூன் வந்துட்டு அதுக்கான அறிகுறியே இல்லனா எப்படி?" என்று தன் விஷம்பதனத்தை காட்டினான் அந்த விஷம்பக்கார கண்ணன்.

இப்படியே பேச்சுக்களும் அவர்களின் சில்மிஷங்களும் தொடர, மாலை நேரத்தில் போட்டை ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு சன்செட் பார்க்க சொல்லி அனுப்பி வைத்த டிரைவர் அவருக்கான ஓய்வு நேரத்தை உபயோகிக்க சென்றுவிட்டார். இருவரும் கண்களில் காதலோடு இரு கை கோர்த்து கரையோரம் நடந்து சென்று அந்த ஏரியின் ஓரத்தில் நின்று வெய்யோன் தன் வெண்கதிர்களை மூடும் அழகை பார்த்து ரசித்தனர். அதன் அழகை மெச்சினர்.

"இந்த ட்ரிப் இயற்கைய பெருசா ரசிக்காதவங்களுக்கு மொக்கையா இருக்கும்ல" என்று சைந்தவி இந்த இயற்கையின் வனப்பை பார்த்து விரிந்த கண்களின் வியப்பு குறையாமல் பார்க்க,
"ஆமா" என்றவனின் கண்களும் அதே ரசனையை உணர்த்தியது.

"உங்களுக்கும் இயற்கைனா இவ்ளோ புடிக்கும் னு நினைக்கல. ஐ லவ் தட் வீ போத் லைக் த சேம்" என்று ஆங்கிலத்தில் பிதற்றினாள்.

"பீட்டர் அம்மா. போதும் உங்க இங்கிலீஷ் விங்கிலீஷ்" என்று கிண்டல் அடித்துவிட்டு மீண்டும் அவர்களின் போட்டிற்கே சென்றனர்.

இரவு கேன்டில் லைட் டின்னர் சாப்பிட்டு விட்டு அவர்களின் இந்த இனிய பயணத்தின் ஒவ்வொரு நொடியையும் நெஞ்சில் நினைவுகளாய் நிரப்பிக்கொண்டு நித்திரை கொண்டனர்.

வீடு செல்லும் பயணத்திலும் குறும்புகள் பல செய்யும் இவர்களுக்கு தெரியவில்லை இமான் இவர்களை அழைத்து கூறவிருக்கும் அதிர்ச்சி செய்தி.
 
Messages
48
Reaction score
0
Points
6

என்னவனும் என் அண்ணனும்

அத்தியாயம் 39

தினமும் சண்டை வந்து இவர்களுக்கு இடையே உள்ள காதலை மறக்க வைக்க நினைக்க இந்த இனிய பயணம் மீண்டும் உணர்த்தியது காதலுக்கு ஊடல் அழகு என்பதை. இப்படியும் காதல் ஜோடிகள் உள்ளதா என நினைக்க வைக்கும் கப்பில்ஸ். சண்டையிலும் சரி காதலிலும் சரி. மனகசப்பு எல்லாம் மறந்து, காதலின் மாய வலையில் மாட்டிக்கொண்டு காலம் எனும் படகில் பயணிக்கும் இவர்களின் பயணம் அழகாய் சென்று கடலோடு கலக்குமோ? பாறைகளில் முட்டி பாதியாய் பிளக்குமோ?!!

"ஏங்க!! ஏங்க!!! கார ஒரு நிமிஷம் நிறுத்துங்க" என்று சைந்தவி அவனிடம் கை அசைத்துக்கொண்டே நிறுத்த சொல்ல அதற்குள் கார் அவள் கைக்காட்டிய இடத்தை தாண்டி சிறிது தூரம் சென்றுவிட்டது. அவள் கத்திய கத்தில் பரபரப்பாக காரை நிறுத்தி என்னவென்று கேட்டான் கிருஷ்.

"அங்க ஒரு கோட்டக்கல் ஆரிய வைத்திய சாலை இருக்கு. நான் அதுல ஒரு மருந்து வாங்கனும்" என்று கூறியவள் அவனுக்கு தான் சொன்னது நியாபகம் இருக்கா என முதலில் டெஸ்ட் செய்தாள்.

இவளின் திட்டம் எதையும் அறியாத அப்பாவியோ, "சரி வா. போகலாம்" என்று அழைக்க, கேரளாவில் தான் தன் மீசையை போக்க மருந்து வாங்குவேன் என இவள் சொன்னதை அவன் முற்றும் மறந்து விட்டான் என தெரிந்தது. அதை அறிந்த சைந்தவி அந்த கடைக்குள் குதித்தோடினாள்.

உள்ளே சென்றதும், "இதுல என்ன வாங்க வந்த?" என்று கிருஷ் கேட்க, 'ஐய்யய்யோ நம்ம வேற இவர்கிட்ட நல்பமராதி தைலம் வாங்கனும்னு அதோட பேர வேற சொல்லி தொலச்சுட்டோமே. தெரிஞ்சா வாங்க விட மாட்டடாரே. ஆம்பள மாறி மீசையோட திரிய சொல்லுவாறே...அட சைந்தவி இதுக்கு ஒரு முடிவு பண்ணலாம்னு பாத்தா முடியாது போலையே.‌..நீ மீசையோடையே சுத்த வேண்டியதுதான்' என்று எண்ணிக்கொண்டு தயக்கத்துடன் "நல்பமராதி தைலம் வாங்கனும்" என்று கூற, தலையசைத்தப்படி நின்றான் கிருஷ்.

'சைந்தவி கிரேட் எஸ்கேப். அவருக்கு நியாபகம் வரத்துக்குள்ள வாங்கிட்டு ஓடிரு' என்று நினைத்துக்கொண்டு வேகமாக பில் போட அங்கு நின்ற கிருஷோ, "ஒன்னு போதுமா. இனி எப்போ இங்க வருவோமோ. வேணும்னா இரெண்டா வாங்கிக்கோ" என்று சொன்னதும் சைந்தவிக்கு சிரிப்பு வர "வேணாம்" என்று சொல்லிவிட்டு பில் போடும் இடத்தில் நின்றுக்கொண்டு தலையை குனிந்து அவனுக்கு தெரியாமல் சிரித்துக்கொண்டு இருந்தாள்.

இவர்கள் இருவரும் காருக்கு பக்கத்தில் நெருங்கிய பின்தான்' "இது எதுக்கு?!" என்ற கேள்வியையே கேட்டான் நம் ஹீரோ. "வண்ணடிய எடுங்க சொல்றேன்" என்று சமாளித்து கிளம்ப வழியில் உண்மையை சொன்ன சைந்தவியை பார்த்து அனல் கண்ணால் முறைத்தான் கிருஷ். இதை தன் காதல் கண்ணால் கவர்ந்து விட்ட சைந்தவியின் கைகளை மெல்ல பற்றி முத்தமிட்டான் அவளின் இதயம் தொட்ட அவன். இவர்களின் காதல் பயணம் இப்படியே இனிமையாய் தொடராதா என்ற ஏக்கம் எல்லோருக்கும் ஒட்டிக்கொள்ள அதை மட்டுமே அனுதினமும் எண்ணிக்கொண்டு இருந்தாள் பெண்ணவள். ஆனால் விதி செய்யவிருக்கும் சதியை யார் அறிவார்.

அவர்கள் கேரளா பார்டரை தொட சைந்தவியின் ஃபோன் அடிக்க, அதை எடுத்துப் பார்த்து விட்டு 'அட நம்ம கரடி குட்டி தான் கால் பண்ணுது' என்று சொல்லிக்கொண்டே ஃபோனை எடுத்தாள்.

"டேய் கரடி. நீ இன்னும் உயிரோடதான் இருக்கியா. சார் என்ன அவ்வளவு பிஸியா. ஒரு ஃபோன் இல்ல. மெசேஜ் இல்ல" என்று திட்ட ரெடியாக இருந்தவளை பார்த்த கிருஷ், 'செத்தான் சிவனாண்டி' என்று இமானுக்காக பாவப்பட்டான்.

"எங்கமா. நான் யாருக்குமே கால் பண்ணல. யார் கூடயுமே பேசல. வேணும்னா ஹரிஷ் கிட்ட கூட கேட்டு பாரு" என்று மிக சோகமான குறளில் கூறும் போதே பாதி விஷயத்தை கனித்து விட்டாள் சைந்தவி.

"என்ன லவ் ப்ராப்ளமா. இப்போ எந்த ஸ்டேஜ்ல இருக்கு. இதுக்கு முடிவு வரவே வராதா. இல்லைனா இல்லனு சொல்லிட்டா கூட நம்ம எப்படியும் அதுல இருந்து வெளிய வரத்துக்கு டிரை பண்ணலாம். இது என்னது இப்படி" என்று சலித்துக்கொண்டாள் அண்ணன் மீதிருந்த அக்கரையில் அவனின் அடுத்த நகர்விற்கான வழியை எதிர்பார்த்து நிற்கும் தங்கையாய்.

"உனக்கு தெரியாதுல. நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன். நான் கஷ்டப்பட்டப்ப எவ்வளவோ உன்கிட்ட பொலம்பிருக்கேன். அப்பலாம் கூட இருந்துட்டு இப்போ என் லைஃப்ல ஒரு நல்லது நடக்குறப்ப என் தங்கச்சி இல்லனா எப்படி. கூடிய சீக்கிரம் உன்ன கூப்பிடுவேன். அத சொல்லத்தான் கால் பண்ணேன்" என்று கூறும் அவன் பேச்சிலே அவனின் ஆனந்தம் அழகாய் தெரிய அவனின் அன்பு தங்கைக்கும் அது ஒட்டிக்கொண்டது போல் இதை கேட்டதும் புன்னகைத்தாள்.

"என்ன இமான் சொல்ற. எல்லாம் ஓகே ஆகிருச்சா? உங்க வீட்டுல எல்லாரும் ஓகே சொல்லிட்டாங்கலா‌? ஜூலி அப்பா எப்படி ஒத்துக்கிட்டாரு?" என்று கேள்வியை படிகட்டுகளை போல் அடிக்குக்கொண்டே போக, அவள் அடுத்த படிகட்டை கட்டுவதற்குள் குறுக்கே புகுந்து,

"அட இருமா. நானே சொல்றேன்" என்று கூறியவனிடம் "சரி சொல்லு" என்று சொல்லி அவனை பேச அனுமதித்தாள் இவள். "அது ஒரு பெரிய கதை மா" என்று அவன் கூறும்போதே இவள் பேசாத நாட்களில் ஏதோ பெரிதாய் நடந்திருக்கிறது என்று கனித்தாள். அவன் மேலும் தன் சோக கதை சுகத்தில் முடிந்ததை சொல்ல தொடங்கினான்.

"இந்த ஜூலி கவர்மெண்ட் ஜாப் வேணும்னு ரொம்ப பிடிவாதம் பண்ணி அதுக்கு என்ன படிக்க சொல்லி டார்ச்சர் பண்ணா. அப்புறம் அவளோட பொஸசிவ் பிரச்சனை வேற‌. நான் யார் கிட்டயும் பேசாம விளையாட கூட போகாம தனியா ஆய்ட மாறி இருந்தது. ஜாப் இருந்தாதான் மேரேஜ் பண்ணுவனா நீ எனக்கு வேணாணு சொல்லிட்டேன்" என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே குறுக்கிட்டு,

"நிறுத்து! நிறுத்து!! நீ ஜூலிய வேணானு சொன்னியா இல்ல அவங்க உன்ன வேணானு சொல்லிட்டாங்களா? உண்மைய சொல்லு. தங்கச்சிட்ட என்ன ப்ரஸ்டீஜ்" என்று கூறியவளை மூக்கில் ஒரு குத்து விடலாம் என்று எண்ணியவனோ 'தங்கச்சியா போய் தொலஞ்சுட்டாளே..அடிக்கிறேனு சொல்ல கூட மனசு வந்து தொலைய மாட்டேங்குது' என்று நினைத்துக்கொண்டு,

"அட லூசு. நிஜமா நானாதான் சொன்னேன். நீ வேணும்னா தீபாகிட்ட கேளு. அப்புறம் அவள ஆஃபீஸ் ல எல்லாரும் கழட்டி விட்டுட்டானு திட்டி, அவளுக்கு திரும்பி வேற மாப்பிள்ளை பார்த்து எல்லாரையும் வேணானு சொல்லி, என்ன உண்மையா லவ் பண்றாலோ இல்லை சும்மாவோனு யோசிக்க வச்சு, கடைசியாக இப்போதான் அவங்களே எங்க வீட்ல வந்து பேசுறேனு சொல்லிருக்காங்க" என்று நீண்ட கதையை முடிந்தவரை சுருக்கிச் சொல்லி முடித்தான் இமான்.

"எப்படியோ. நீ ஹேப்பியா இருந்தா சரிதான்" என்று கூறிவிட்டு அவர்கள் கேங்கில் காணாமல் போன மீதி பேரை பற்றி விசாரித்துவிட்டு அவர்களுக்கு இன்னொரு நாள் பொறுமையாக கால் பண்ணி பேசிக்கலாம் என்று முடிவு செய்தபின் இருவரும் ஃபோனை வைத்தனர்.

இந்த உறவு அவன் வாழ்வில் வரமாக வந்து அமையுமோ இல்லை வாழ்வை புரட்டி போட்டு விடுமோ என்று ஆனந்தமும் கவலையும் சேர்ந்து வாட்டியது சைந்தவியை.

எப்படியோ இவர்கள் தங்கள் ஹனிமூன் பயணத்தை முடித்துவிட்டு வீடு திரும்ப, இப்போது அது செலவு என்று தோன்றாமல் செலவு செய்தாலும் தனக்கு மிக அழகான நினைவாய் மாறிப்போனதை சொல்லிக்கொண்டு இருந்தாள் கிருஷின் மனையாள்.

நாட்கள் நகர தொடங்கியது. ஒரு நாள் வழக்கம் போல் ஆஃபீஸ் கிளம்பி சென்றான் கிருஷ். அந்த ஹனிமூன் நினைவுகளை அசைப்போட்ட படி அங்கு கிருஷும் இங்கு சைந்தவியும். நேரம் ஓடிவது தெரியாது போனது சைந்தவிக்கு. கனவுகளை அலசியபடி மெல்ல சென்று துணி துவைத்து, பாத்திரங்களை கழுவி போட்டு, தனது தினசரி வேலைகள் அனைத்தையும் செய்து முடிக்கவே மதியம் ஆயிற்று. 'சரி, நம்ம அவருக்கு ஸ்வீட் செஞ்சு கொடுத்து ரொம்ப நாள் ஆச்சு. மாலை நேரத்தில் அதையாவது செய்வோம்' என்று நினைத்துக்கொண்டு மதியம் உண்டு சிறிது நேரம் புக் படிக்க, அவளை அறியாமல் கண் அயர்ந்தது. எழுந்து பார்த்தால் மணி ஏழு. மூன்று மணி நேரத்துக்கு மேலாக அசந்து தூங்கிவிட்டாள்.

'நம்ம ஒரு ஸ்வீட் பண்ணலானு பாத்தா. அதுக்கு ஒரு நேரம் காலம் வர மாட்டேங்குதே!! மாவு வேற ஆட்டனும்' என்று முதலில் நினைத்தவள் பின்பு 'இன்னைக்கு எப்படியாவது செஞ்சே தீரனும்' என்று முடிவெடுத்தாள்.

மாவு ஆட்டும் வேலை ஒரு பக்கம் நடக்க, இன்னொரு பக்கம் ஸ்வீட் ரெடி பண்ண துவங்கினாள் சைந்தவி. அதற்காக எதையோ மிக்ஸியில் அரைத்து வைத்துவிட்டு ஆறுவதற்காக வெயிட் பண்ண, அதற்குள் பக்கத்து வீட்டு பவித்ரா வந்து பக்கம் பக்கமாக பேச இன்னும் லேட் ஆகி போனது ஸ்வீட் செய்வதற்கு. மாவை ஆட்டி வைத்துவிட்டு இரவு உணவுக்கு சிப்பிளாக ஒன்றை செய்துவிட்டு, அவன் வரும் நேரம் ஆகிவிட வேகமாய் ஸ்வீட் செய்துக்கொண்டு இருந்தாள்.

அவன் எப்போதும் போல் வந்து பையை வைத்துவிட்டு குளிக்க போய்விடுவான். அதற்குள் செய்துவிடலாம் என்று எண்ணியதால் அவள் அவனை கவனிக்க மறந்தாள். அதுவே அவளுக்கு ஆப்படிக்கும் என்று பெண்ணவளுக்கு பாவம் தெரியவில்லை.

கிருஷ் உள்ளே வந்து "எல்லா வேலையேயும் இழுத்து கட்டிக்கிட்டு செய். தனியாவே கடந்து கஷ்டப்படு. எனக்கென்ன. சொல்றத கேக்குறது இல்லனு இருக்க நீ. ரொம்ப திமிர் ஆய்ருச்சோ" என்று கோபத்தில் கத்த துடங்கியவனை வியப்பாய் பார்த்தாள் இவள்.
 
Messages
48
Reaction score
0
Points
6

என்னவனும் என் அண்ணனும்

அத்தியாயம் 40

கிருஷின் கோப சொற்களில் சுட்டெரிக்க, உள்ளுக்குள் அழுகை வர 'வேலை செய்வது ஒரு குத்தமா. வேலை செய்யலனு திட்டுற புருஷன பாத்துருக்கேன். எதுக்கு வேலை செய்றதுக்கு இப்படி திட்டுறாரு இவர்' என்று வருத்தத்துடன் அழுகையை அடக்கிக்கொண்டு அந்த வேலையை சட்டென முடித்துவிட்டு வந்து அவனின் பையை வாங்க வந்தாள். வெளியில் வந்து பார்த்த அவள், அவனின் கோலம் அலங்கோலம் ஆனதால் வந்த கோபம் அது என்று புரிந்தது. இருந்தும் அவன் பேசிய விதம் அவள் நெஞ்சை குத்திக்கொண்டுதான் இருந்தது.

அவளை பார்த்த மறுநொடி அவனின் கோபம் பீறிட்டது. பெண்ணவளின் ஈர்க்கும் விழிகள் இப்போது அவனின் கண்களில் சிறைபடவில்லை. அவளை பார்த்து, "இப்படி புருஷன் முழுசா நனஞ்சு வந்து நிக்கிறேன். அது கூட தெரியாம அடுப்படில என்ன புடுங்கிட்டு இருக்க" என்று சொல்லும் வார்த்தை இன்னது தான் சொல்கிறோம் என்பதைக்கூட கவனியாத கிருஷ் கோபக்கனலில் கொந்தளித்தான்.

முன்பே காயப்பட்டிருந்த மனம் இதை கேட்டதும் கண்ணீர் சிந்த, மனதில் அழுகையும் கோபமும் சேர்ந்தார் போல் பொங்கி வந்தது. "வார்த்தை ரொம்ப தப்பா வருது. மைன்ட் யுவர் வோர்ட்ஸ்" என்று அவள் கூற அது அவனின் மூலையில் சென்று சேரவேயில்லை.

"இப்படி வந்து நின்னுட்டு வீட்டுக்கு உள்ளயும் வரமுடியாம, என்ன பண்றதுன்னு தெரியாம தவிச்சுட்டு இருக்கேன். இப்போ உன்ன ஸ்வீட் பண்ண சொல்லி கேட்டேனா. எதுக்கு தேவை இல்லாத வேலை பாத்துட்டு இருக்க நீ" என்று அவளிடம் கடிந்துக்கொள்ள பதிலுக்கு அவள் கோபத்தில் சீறினாள்.

"நான் பண்ணது ஒன்னும் கொலை குத்தம் இல்லையே. நீங்க ஒரு வார்த்தை கூப்பிட்டிருக்கலாம்ல. அத செய்யலயே‌‌. நான் கவனிக்காம விட்டுட்டேனாகூட இப்படி கேவலமா பேசனுமா?" என்று கிருஷிடம் வரிந்து கட்டிக் கொண்டு பேசி பார்த்தாள். ஒன்றும் கதைக்கு ஆகவில்லை.

"நான் சொத சொதன்னு வீட்ட ஆக்க கூடாதுன்னு துண்ட வீட்டுக்குள்ள வராம எக்கி எடுக்க பட்ட பாடு எனக்குத்தான் தெரியும். நீயா என்ன கண்டுக்குவனு பாத்தேன். இப்படி கண்டுக்காம கடுப்பேத்துனா யாருக்கா இருந்தாலும் அப்படிதான் வார்த்தை வரும். நான் என்ன கெட்ட வார்த்தையா பேசுனேன்" என்று அவளிடம் சண்டையிட சைந்தவியும் விடுவதாய் இல்லை.

"கெட்ட வார்த்தை ஒன்னுதான் பாக்கி. அதையும் சொல்லிடுங்க. உங்களுக்கு இதுதான் பிரச்சனைனு டேரக்டா சொல்லனும். அத விட்டுட்டு சம்மந்தமே இல்லாம நீ தனியா செஞ்சு கஷ்டப்படுனு கத்துனா சரியா போச்சா." என்று கேட்டவளிடம்,
"நீ வாய மூடு. எனக்கு எல்லாம் தெரியும். நீ ஒன்னும் எனக்கு சொல்ல தேவையில்ல" என்று கத்தினான் கிருஷ். இதை கேட்டதும் தாங்காத சைந்தவி ஓடி சென்று படுக்கையில் விழுந்தபடி தேம்பி அழத்தொடங்கினாள். அழுது வீங்கிய கண்களுடன் இரவு பொழுது கடந்தது.

****​
அடுத்த நாள், அடுப்படியில் அழுப்பாய் ஆரம்பிக்க அமைதியே உருவாய் அவளிடம் நெருங்காமல் ஆஃபீஸ் சென்றான் கிருஷ். இதற்கிடையில் இமான் காணாமல் போக அன்று அவனிடம் இருந்து ஃபோன் வந்தது சைந்தவிக்கு.

தங்கச்சி ஃபோனை எடுத்த உடனே, "என்னமா தங்கச்சி, எப்படி இருக்க" என்று கேட்க ஆல்ரெடி கவலையில் இருந்த முகம் இன்னும் கவலை கொண்டது.

"ஏதோ இருக்கேன்" என்று அவள் சொல்லும் போதே அவள் மனம் அமைதியாய் இல்லை என்பதை அறிய முடிந்தது அவனின் அண்ணனுக்கு.

"ஏம்மா இப்படி சொல்ற?" என்று அவளின் சோகம் அவனுக்கும் தொற்றிக்கொண்டது போல் கேட்க, "நீ கல்யாணம் மட்டும் பண்ணிக்காத கரடி. நாங்க படுற கஷ்டம் போதும்" என்று கூறியவளுக்கு அவன் அளித்த பதில் குழப்பத்தை தந்தது.

"நானும் அதுதான் மா முடிவு பண்ணிருக்கேன். கல்யாணமே பண்ணிக்க போறது இல்ல" என்று அவன் சொல்ல ஏதேதோ கவலையில் ஆழ்ந்திருந்த அவளுக்கு இது பெரிதாக காதில் விழவில்லை. 'ஏன்' என்று கேட்கும் முன்பே பேச்சை மாற்றினான்.

"சரி, நீ ஏம்மா இப்படி சொல்ற. மாம்ஸுக்கு என்ன கொரச்சல்? பாசமாதானே பாத்துக்குராரு?" என்று இமான் கல்யாண வாழ்க்கையின் கஷ்ட நஷ்டம் புரியாத பேச்சுலராய் பேச,
"அவர் பாசமா பாத்துக்கிட்டார் இமான். அவ்வளவுதான்" என்று பொடி வைத்து சைந்தவி பேச இமான் கேள்விக்குறியாய் நின்றான்.

"ஏம்மா இப்படி சொல்ற? என்னாச்சு?" என்று இமான் பதற்றமாய் கேட்டதுதான் போதும் தன் மனக்குமுறலை எல்லாம் புலம்பலாய் கொட்டி தீர்த்தாள் சைந்தவி.

"அது ஏன் கரடி கேக்குற. எல்லாம் திவ்யா அக்கா சொன்ன மாறி இரெண்டு வருஷத்துக்கு தான். அதுவும் என் விஷயத்துல அந்த இரெண்டு வருஷம் கூட இல்ல" என்று அவள் கூறியதில் இருந்து ஒருவாறு பிரச்சனை என்ன என்று புரிந்துக்கொண்டு இமான், "என்னமா ஆச்சு? விஷயத்த சொல்லு" என்று கேட்டவனிடம் பதில் அளிக்கும் முன்பு சில நிமிடங்கள் அமைதி காத்தாள்.

"இல்ல கரடி. எல்லாரும் ஒரே மாதிரிதான் இருக்காங்க. கொஞ்ச நாள் ஆனதும் பாசம் எல்லாம் மாறி போய்டுது. நம்மல ஒரு பொருட்டாவே மதிக்கிறது இல்ல" என்று அவளின் புலம்பலை ஆரம்பித்ததுமே, "இல்ல மா. அப்படி இல்ல. திவ்யா கதை வேற. மாம்ஸ் புரியாம பண்றாங்க. ஆனா நம்ம மாம்ஸ் அப்படிலாம் பண்ண மாட்டார். புரிஞ்சிப்பார். நீ அதையும் இதையும் போட்டு குழப்பிக்காத" என்று இமான் சொல்ல,

"இல்ல இமான். நான் ரொம்ப நாளா கவனிக்கிறேன். கொஞ்ச நேரம் இரெண்டு பேரும் சந்தோஷமா இருந்தா பெருசு. உடனே சண்டை வந்துரும். அவர் ஆஃபீஸ் போனா, முன்னாடிலாம் அத்தன வாட்டி கால் பண்ணுவாரு. இப்ப அவர் பண்ணலனா பரவால. நான் பண்ணா கூட பேச மாட்டேங்கிறார். இத கேட்டா சண்டை வருது. முன்ன மாறி இல்ல அவர். என் மேல அப்படி கோபப்படுறாரு, இப்பெல்லாம் என்ன கண்டா கடுப்பா இருக்கு அவருக்கு, முன்ன மாறி ஜாலியா பேசுறது இல்ல, பேசுனாலும் நான் சின்னதா எதாவது சொன்னாலும் கோபம் வருது. பாசமா பேசி, அன்பா பார்த்துக்கிட்டு எத்தன நாள் ஆச்சு தெரியுமா. ஏதோ பழைய செல்ஃபோன் சிக்கினல் மாறி அப்போ அப்போ கொஞ்சமா வந்து போது. இந்த கத்துறது, சண்டை, கோபம், தேவையில்லாத வார்த்தைகள், மூஞ்ச தூக்கிட்டு போறது இதெல்லாம் நெனச்சா ஏன்டா கல்யாணம் பண்ணோம்னு இருக்கு இமான்" என்று தன்னவனுக்கும் தனக்குமான பிரச்சனையை மேலாக சொல்லிக்கொண்டு இருக்க,

"இப்படிலாம் பேசக்கூடாது மா. எல்லாருக்கும் வர பிரச்சனைதான். இதுக்குலாம் போய் என் தங்கச்சி இப்படி ஒடஞ்சி போகலாமா" என்று அவளை சமாதானம் செய்ய அவன் செய்த முயற்சிகள் எல்லாம் வீணாக போனது.

"போ கரடி. என் லைஃப் எப்படி இருந்தது தெரியும்ல. எதுக்கும் கவலை படாம ரொம்ப ஜாலியா சுத்திட்டு இருந்தேன். என்ன பாத்து இப்படி வாழனும்னு சொல்லி பொறாமை பட்டாங்க சிலர். இப்போ கல்யாணம் பண்ணி இப்படி கவலை பட்டுட்டு இருக்கேன். என் கணவன் இப்படி இருக்கனும் அப்படி இருக்கனும்னு எதாவது நான் எக்ஸ்பெக்ட் பண்ணேனா? அவரா வந்தாரு நல்லா பாத்துக்கிட்டாரு. பாசமா எல்லாமே பாத்து பாத்து பண்ணாரு. இப்போ அவரேதான் கண்டுக்கவும் மாட்டேங்கிராரு. எதுக்கு லவ் பண்ணனும் இப்போ எதுக்கு இப்படி பண்ணனும். வெறுப்பா இருக்கு இப்படி சண்டை போட்டுட்டே இருக்க. அதுக்கு பேசாம...." என்று அவள் சொல்லி முடிப்பதற்குள் இமான் குறுக்கிட்டு,

"தேவை இல்லாம கண்டதையும் போட்டு கொழப்பிக்காத மா. அப்படி மாம்ஸ் இருக்க மாட்டார். அதுக்கு எதாவது காரணம் இருக்கும். நீ ஃபீல் பண்ணாத" என்று தங்கைக்காக வருந்தினாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் கிருஷுக்கு முடிந்தவரை சப்போர்ட் பண்ணினான்.

"என்னமோ கரடி. அத விடு உன் லவ் என்னாச்சு? வீட்ல பேசிட்டாங்களா? எப்போ நிச்சயம் டேட் ஃபிக்ஸ் பண்ணிருக்காங்க?" என்று கேட்ட மறு நிமிடம் மௌனம் நிலைக்கொண்டது அலைவரிசையில். நொடிகள் கடந்த பின்,
"இனி அவ என் லைஃப்ல வர வாய்ப்பே இல்ல மா. அவ்வளவுதான். எனக்கு ஜூலி இல்ல" என்று சொல்லும் போதே அவன் குறளில் அழுகையின் அறிகுறி தெரிந்தது.

"என்னாச்சு? திரும்பி ஜாப் வேணும்னு சொல்றாங்கலா?" என்று அனைவருக்கும் தெரிந்தவற்றை வைத்து ஒரு யூகத்தில் கேட்ட அவளுக்கு பாவம் தெரியவில்லை அவர்கள் நூதனமாய் செய்த வேலை.

"அதெல்லாம் சொல்லல" என்று கூறியவன் மேலும் நடந்தவற்றை சொல்லத் தயங்கினான்.

"அது இல்லனா அப்புறம் வேறென்ன கரடி. சொல்லு" என்று மீண்டும் அவள் கேட்க,
"அவங்க ரொம்ப ரூல்ஸ் போடுறாங்க மா. அதெல்லாம் நமக்கு செட் ஆகாது" என்றான்.

"நீ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி போய்பியே? அப்படி என்ன ரூல்ஸ் போட்டாங்க" என்று சைந்தவி கேட்க, "வீட்டுக்கு அவங்க பேச வந்த மாறி தெரில. வீட்ட இன்ஸ்பெக்ட் பண்ண வந்துருப்பாங்க போல. சும்மா கொஞ்ச நேரம் ஏதேதோ பேசிட்டு அப்புறம் என்ன கூப்பிட்டு பேசுனாங்க. வீடு சின்னதா இருக்காம். கல்யாணம் ஆன உடனே அம்மாவ விட்டுட்டு தனி குடுத்தனம் வந்தரனுமாம். சும்மா சும்மா வீட்டுக்கு போற மாதிரி இருக்கக்கூடாதாம். நான் அவங்களுக்கு என் சம்பளத்துல இருந்து காசு எதுவும் குடுக்க கூடாதாம். இதெல்லாம் சொன்னதும் எனக்கு ரொம்ப கடுப்பாய்டுச்சு மா. பெத்து என்ன கஷ்டப்பட்டு வளத்த அம்மாவ தனியா விட்டுட்டு அவங்களுக்கு செலவுக்கு பணம் கூட தராம நடு தெருல விட சொல்றியா? அது மட்டும் இல்லாம இப்போவே இவ்வளவு ரூல்ஸ் போட்டா கல்யாணம் ஆய்டா முழு உரிமை இருக்குனு இன்னும் எதையாவது சொல்லி அதையும் கேட்டுதான் ஆகனும்னு சொல்ல மாட்டாங்களா?அப்படி பட்ட காதலே வேணானு நான் தூக்கி எரிஞ்சிட்டேன்" என்று அவன் கொந்தளிக்க அவன் பேச்சில் நியாயம் இருந்தது என தோன்றிற்று சைந்தவிக்கு. அவன் அம்மாவிடம் இவள் பழகி இருக்க அப்படி பட்ட அம்மாவுக்கு இப்படி நேரும் என்றாள் இமானின் முடிவு தவறில்லை என்று தோன்றியது.

"ஜூலி இல்லாம நீ இருந்துப்பியா இமான்?" என்று பாவமாய் இவள் கேட்க, "அதெல்லாம் இருந்துப்பேன்" என்று அவன் கூறும்போதே அவன் அழுகையின் விம்மல் சத்தம் கேட்க அண்ணனின் அழு குரல் இவளை வாடச்செய்தது.

"இல்ல கரடி. அவங்க பாரு முன்னாடி கவர்மெண்ட் ஜாப் தா வேணும்னு சொன்னாங்க. அப்புறம் மாறலயா? அப்படி மாறி வருவாங்க" என்று கூற அந்த கூற்றை முழுவதுமாக மறுத்தான் இமான்.

"வாய்பில்ல மா. இத்தன நாள் எத்தனை சண்டை போட்டுருப்போம். எத்தன வாட்டி பிரேக்கப் பண்ணிக்கிலாம்னு சொல்லிருப்போம். அப்பலாம் அவ என்ன விட்டு போய்டுவானு தோணுனதே இல்ல. ஏன் அவள் நிச்சயத்தப்பையும் கூட அப்படிதான். ஆனா இப்போ அப்படி தோணல. அவ எனக்கு இல்ல மா" என்று புலம்பினான்.

‌ "நீயும் நானும் லவ் பண்ணாம நம்ம பேச்சுலர் லைஃப என்ஜாய் பண்ணிட்டு எப்படி சந்தோஷமா இருந்தோம்‌. உனக்கும் இப்போ எவ்வளவு கஷ்டம். என் பிரச்சனை பரவாலனு போய்டும் போல. நமக்கு மட்டும் ஏன் கரடி இப்படி நடக்கது" என்று அவளும் அவன் புலம்பலில் கைக்கோர்தாள்.
 
Messages
48
Reaction score
0
Points
6
என்னவனும் என் அண்ணனும்

அத்தியாயம் 41

சைந்தவி தன் கணவனின் காதல் புரியாமல் குழம்பி கிடக்கிறாளோ! இல்லை அதன் வாழ்வியல் நடைமுறையை ஏற்க முடியாமல் தவிக்கிறாளோ!! இவளின் மனப்போராட்டம் ஒரு பக்கம் தன்னவனை வெறுக்க செய்ய இன்னொரு பக்கம் இமானுக்கோ உயிராய் நேசிப்பவள் உறவை விட்டு வரச்சொல்லி உண்ணத காதலை உதாசினப்படுத்துகிறாள். இமான் செய்வதறியாது திகைத்து நிற்கிறான். இரு ஜோடிகளின் நிலைதான் என்ன ஆகும்?

நேசிக்கும் நெஞ்சம் மறக்க மறுக்கிறது இமானுக்கு. வெறுக்கும் நெஞ்சம் விரும்பவும் செய்கிறது சைந்தவிக்கு.

இந்த காதல் பிரச்சனைகளில் இருந்த இமான், ஹரிஷை அடிக்கடி பார்க்கும் வழக்கத்தையே விட்டிருந்தான். அன்று அவனுக்கு என்ன தோன்றிற்றோ, ஹரிஷை வர சொன்னான் அவர்களின் வழக்கமான பேக்கரிக்கு.

எப்போதும் சொன்ன டைம்மிலிருந்து அரை மணி நேரமாவது லேட்டாக வருபவன் அன்று நேரமே ஹரிஷுக்கு முன் வந்து அமர்ந்திருந்தான். இவனுக்காகவே மீட்டிங் டைம்மை மாற்றி சொல்லும் ஹரிஷுக்கு ஆச்சரியம்‌.'இந்த குண்டன்‌ என்ன நமக்கு முன்னாடி வந்து உட்கார்ந்து இருக்கான்' என்று யோசித்துக்கொண்டே பேக்கரிக்குள் நுழைந்தான்.

அவனுக்கு ஏதோ பிரச்சனை என்பது அவனின் டைம்மிங்கிலேயே கணித்துவிட்டான் ஹரிஷ். உள்ளே போய் அமர்ந்து சோகமாய் இருப்பவனை கவனிக்காமல் அவனின் முகத்தை தள்ளிவிட்டு அப்பால் இருந்த சர்வரை அழைத்து ஒரு டீ சொல்லி விட்டு பின்பு பொறுமையாய் இவன் புறம் தலை திரும்ப, அனல் பறக்கும் சிவந்த கண்களால் இவனை பார்த்துக்கொண்டு இருந்தான் இமான்.

'ஐய்யோ!!! இவன் ஏன் இப்படி முறைக்கிறான்!' என்று நினைத்தவன் கூலாக "ஏன்டா குண்டா? என்ன ஆச்சு?" என்று ஒன்றும் தெரியாதவன் போல் கேட்டான்.

"நான் செம்ம காண்டுல இருக்கேன். நீ டீ சொல்லிட்டு இருக்க" என்று கோபமாய் பேசியவனை பார்த்து "நீ ஏன்டா தடியா காண்டுல இருக்க" என்று நகைக்க கோபம் பீறிட்டது இமானுக்கு.

"என் லைஃப்ல என்ன நடக்குதுனு உனக்கு எதாவது தெரியுமா?" என்று பல்லை கடித்துக்கொண்டு கேட்டவனிடம் "சொன்னாதானே டா தெரியும்" என்று கேசுவலாய் பேச, வெறி ஏறி போனது இமானுக்கு. "உன்ன போய் கூப்பிட்டேன் பாரு" என்று கூறிக்கொண்டே டேபிளை விட்டு எழுந்து கிளம்ப முயன்றான்.

அவன் கையை பிடித்து இழுத்து உட்கார வைத்துவிட்டு, "சரி டா‌. சாரி" என்று கூறி சமாதானம் செய்தான் ஹரிஷ். "இல்லடா நானே ஜூலி என்ன விட்டு போய்டானு நொந்து போய் இருக்கேன். அவ வேற ஒருத்தனுக்கு சொந்தமாய்டாளேனு கடுப்புல இருக்கப்ப நீ வெறுப்பேத்துனதும் கோபம் வந்துருச்சு" என்று கோபம் சற்று குறைந்தது போல் பேசினான்.

"என்னடா சொல்ற. கொஞ்ச நாள் முன்னாடி தானே ஜூலி வீட்ல இருந்து உங்க வீட்டுக்கு பேச வராங்கனு சொன்ன. நிச்சயத்துக்கு தேதி குறிக்கிற வரைக்கும் யோசிச்சு வச்சுருந்தியே!! அப்புறம் என்ன இப்படி சொல்ற" என்று கேட்டவனின் கண்கள் பிதிங்கி நின்று அவனின் ஆச்சரியத்தை வெளிப்படுத்தியது.

"அப்படிதான் டா நானும் நெனச்சேன். ஆனா அவங்க அப்பா ஏமாத்திட்டாரு டா. வீட்டுக்கு வந்து பாத்துட்டு இந்த வீட்ல இருக்க கூடாது. தனி குடித்தனம் வந்தரனும். அம்மாவுக்கு காசு எதுவும் கொடுக்க கூடாதுன்னு ஒரே ரூல்ஸ். நான் முடியாதுனு சொல்லிட்டேன். அப்ப கூட ஜூலி எனக்காக பேசுவா, என்கிட்ட திரும்பி வந்துருவானு நம்பிக்கைல இருந்தேன். எல்லாம் பொய்யா போச்சுடா" என்று சொன்னவனின் கண்களில் இருந்து கண்ணீர் துளிகள் எட்டி பார்க்க, அதை யாரும் பார்க்கும் முன் துடைக்க நினைத்த அவன் முயற்சிகள் வீணாக போய் அது தரையில் விழுந்தது.

"குண்டா! நீ அழாத டா. நீ அழறத பாத்தா கஷ்டமா இருக்கு. நீ எப்போதும் போல லூசு தனமா சிரிச்சுட்டு இருந்தாதான் நல்லா இருக்கு" என்று ஹரிஷ் சொல்ல நண்பனின் கண்ணீர் துளிகளை கண்ட கண்கள் அதில் கொஞ்சம் கடன் வாங்கியது போல் கலங்கியது.

"இது தான்டா அவளுக்காக நான் சிந்தும் கடைசி கண்ணீர் துளி. இனி இத நெனச்சு அழ போறது இல்ல" என்று இமான் வெளியில் சொன்னாலும் உள்மனம் ரணமாகத்தான் கிடந்தது.

"அது சரி. இப்போ ஜூலி என்ன பண்றா? ஏன் திரும்பி வரமாட்டானு சொல்ற?" என்று ஹரிஷ் கேட்டுக்கொண்டு இருக்கும் போதுதான் டீ அவர்களின் டேபிளை அடைந்தது.

"அவ வேற ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டா டா. நேத்துதான் கல்யாணம் ஆச்சாம். என் ஆஃபீஸ் மேட் போட்டோ அனுப்பிருக்கான்" என்று கூறியதும் ஹரிஷ் வியப்பின் எல்லைக்கே போய்விட்டான்.

"என்ன டா சொல்ற!!! எப்படிடா அதுக்குள்ள இன்னொரு கல்யாணம்! இவ்ளோ அவசரமா ஏன் பண்ணனும்?" என்று வாயை பொளந்தவனை சோகக் கண்களால் பார்த்து, "எல்லாம் அவங்க அப்பா ஏற்பாடுடா. கவர்மெண்ட் மாப்பிள்ளைன்னு சொன்னதும் உடனே முடிச்சுட்டாங்க. இவளும் ஓகே சொல்லிட்டா. வெளில வரமாட்டானு சொன்னாலும் உள்ளுக்குள்ள ஒரு நம்பிக்கை இருந்துச்சு வந்துருவானு. எல்லாத்தையும் குளி தோண்டி பொதச்சுட்டா" என்று கதறியவனை தேற்ற முயற்சித்தான் ஹரிஷ்.

"விடுடா. கவர்மெண்ட் மாப்பிள்ளைய கட்டிக்கிட்டு அழட்டும். உனக்கு இனிமே கவர்மெண்ட் ஜாப்க்கு படிக்கணும்னு ப்ரசர் இல்ல. இப்படி ஒரு பொண்ணு கிடைக்காட்டி போறா. நம்ம அம்மாவையே விட்டு வர சொல்றவ நமக்கு எதுக்கு. உன் நல்ல கேரக்டருக்கு உனக்கு இன்னும் நல்ல பொண்ணா கிடைப்பா. தேவை இல்லாம ஃபீல் பண்ணாத" என்றான்.

"இல்லடா. நான் மத்தவங்க மாதிரி ஃபீல் பண்ணிட்டு தாடி வச்சிட்டு சுத்த போறது இல்ல. என் லைஃப நான் திரும்பி வாழ போறேன். என்னவிட்டு போன சந்தோஷத்தை எல்லாம் நான் தேடி போக போறேன். ஃபிரண்ட்ஸோட ஊர் சுத்த போறேன். ஆஃபீஸ் ல எல்லார்கிட்டயும் பழைய மாறி ஜாலியா பேச போறேன். வார வாரம் கிரிக்கெட் விளையாட போறேன்" என்று சொன்னவனின் உள்ளம் ஒரு புறம் அவளை நினைத்து உருகாமல் இல்லை. இருந்தும் வேதனையை வெளியில் காட்டிக்கொள்ளாமல் சமாளிக்க முடிந்தது அவனால்.

இந்த விஷயம் சைந்தவிக்கும் அவர்களின் கேங்குக்கும் தெரியவே அவர்களுக்கு இமானை நினைத்து கவலை ஒரு புறம், ஜூலி அவனின் துணை இல்லை அதை விட சிறப்பான துணை கிடைக்க போகிறது என்ற நிம்மதி ஒரு புறம். இதை கிருஷிடம் சொல்லலாம் என அவனது ஃபோனிற்கு அழைத்தாள் சைந்தவி. அவன் வேலை விஷயமாக டிரைனிங்காக தர்மபுரி வரை சென்றிருந்தான். அவனின் பாஸ் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் என்பதாலோ என்னவோ உடனே எடுக்காமல் சிறிது நேரம் கழித்து கூப்பிட்டான் கிருஷ். பாஸ் என்றாலே பயம் தானே. அதிலும் இந்த பாஸ் பிரச்சனைக்குனே பொறந்தவர்.

அவனின் அழைப்பை எடுத்து என்ன என்று கேட்கும் முன்பே விஷயத்தை ஒப்பித்துவிட்டாள் அவள். அதன் பின் ஏதோ அதிசயமாக மற்ற இயல்பான விஷயங்களை பற்றி பேசிக்கொண்டு இருக்க சைந்தவிக்கு ஹேப்பி ஆனது.

"நம்ம வீட்டு ஓனர் ஊருக்கு போய்டாங்க தெரியுமாங்க?" என்று சைந்தவி கேட்டதை கவனிக்காமல் பக்கத்தில் இருக்கும் நபருக்கு, அவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிக்கொண்டு இருந்தான். பின்பு திரும்பி என்ன என்று கேட்டுக்கொண்ட பின்
"அப்படியா. அதுக்கு என்ன?" என்று கூறியவன் 'இத எதுக்கு என்கிட்ட சம்மந்தம் இல்லாம சொல்லிட்டு இருக்கா என்று நினைத்துக்கொண்டு இருந்தான்.

"சும்மா சொன்னேன். பக்கத்து வீட்டு பொண்ணுக்கிட்ட அவங்க வீட்டு செடிக்கு தண்ணீர் ஊத்திட்டு வர சொல்லிருப்பாங்க போல. அவ நகர்ர மாறியே தெரியலை" என்று கூறியவளுக்கு இதை கூறாமலே இருந்திருக்கலாம் என்பது அப்போது பாவம் தெரியவில்லை.

"சரி, அப்ப நீ போய் ஊத்திட்டு வா" என்று கிருஷ் சொல்ல சைந்தவிக்கு கோபம் மூக்கை புடைத்துக்கொண்டு வந்தது.

"நான் ஏன் போய் ஊத்தனும். நம்ம அவங்க சொந்தக்காரங்க தானே. நல்லா பழகுறவங்கதானே. நம்மல்ட சொல்லாம யார்டயோ சொல்லிட்டு போய்ருக்காங்க. நான் ஏன் போய் தண்ணி விடனும்" என்று டென்ஷனுடன் பேச,
"நம்மல்ட சொல்லாட்டி என்ன. நீ போய் ஊத்த மாட்டியா?" என்று அவனும் வம்பிலுப்பதாய் நினைத்துக்கொண்டு பேச சைந்தவி மேலும் கடுப்பானாள்.

"நான் போ மாட்டேன். போகவும் முடியாது. அவ்வளவு அக்கறை இருந்தா நீங்க வேணா வந்து ஊத்துங்க" என்று கடுப்பில் திட்ட அதை அவன் சீரியஸாக எடுத்துக்கொள்வான் என அவள் எதிர்பார்க்கவில்லை.
"சரி, நான் வந்து ஊத்திக்கிறேன்" என்று சொன்னவனின் குறளில் வீம்பு தெரிந்தது.
அதற்கும் சைந்தவி சரி என்று தலையசைக்க,"நான் வர மாட்டேன்னு நினைக்கிறியா" என்று கேட்டவனுக்கு ஆஃபீஸ் கால் ஒன்று வர அதை அட்டன் பண்ணி பேசிவிட்டு உடனே இவளின் லைனுக்கு வந்தான்.

"நீங்க வர மாட்டீங்கனு நினைக்கல. வந்தா வாங்கனுதான் சொல்றேன்" என்று கூறிவிட்டு "உங்க பாஸ் கூப்பிட்டாரு போல. போங்க ரொம்ப நேரம் பேசிட்டு இருக்கீங்கனு சண்டை போட போராரு" என்று இவள் கூற அதற்கு வந்த அவனின் பதில் ஷாக் தந்தது சைந்தவிக்கு.

"அதெல்லாம் நான் பாத்துக்குறேன். பேசுறதுக்கே திட்டுவாரா. இப்போ நான் பாதில கிளம்பி அங்க வர போறேன். அப்போ என்ன பண்ணுவாருனு பாக்குறேன்" என்று வீம்புக்கு பேசும் கிருஷுக்கு அதன் விளைவுகள் பற்றி எள்ளளவும் யோசனை இல்லை. டென்ஷன் வந்ததும் பிராக்டிகலாக அதன் பிரச்சனைகளை யோசிக்க மறுத்தது அவன் மூலை‌.

"ஏங்க விளையாடாதீங்க" என்று கூறியவளிடம் "நிஜமா தான் சொல்றேன்" என்றான். அதற்குள் சைந்தவியிடம் தயிர் இருந்தால் உரைக்கு தயிர் வேண்டும் என்று கேட்டு கீழ் வீட்டு பெண் வந்து கேட்க கிருஷிடம் வைக்கிறேன் என்று சொல்லிவிட்டு ஃபோனை வைத்தாள் சைந்தவி.

அவனின் ஃபோனை கட் பண்ணி விட்டு வந்தது சைந்தவிக்கு சுத்தமாக மறந்து போனது. சிறிது நேரம் கழித்து ஃபோனை எடுத்து பார்த்தாள். அவன் பஸ்ஸில் உட்கார்ந்து இருக்குமாறு போட்டோ ஒன்றை அனுப்பிவிட்டு 'நான் நிஜமா கிளம்பிட்டேன். இப்போ நம்புறியா' என்று ஒரு மெசேஜும் வந்திருந்தது. அதை பார்த்ததும் பெண்ணவளுக்கு தூக்கி வாரி போட்டது. 'பேசுவதற்கே பிரச்சனை பண்ணும் பாஸ், இப்படி பாதியில் கிளம்பி வந்தது தெரிந்தால் என்ன செய்வார். நான் இப்போ என்ன சொலிட்டேனு இப்படி பண்றாரு. விளையாட்டுக்கு சரி வாங்கனு சொல்றது ஒரு குத்தமா? வாங்கனு சொன்னா உடனே அதோட பிரச்சனைகள யோசிக்காம கிளம்பிருவாரா? நான் சும்மா சொல்றேன்னு கூடவா தெரியாது மனுஷனுக்கு? அப்படி என்ன வீம்பு?' என்று பல எண்ணங்கள் மனதில் ஓட, அவன் ஆஃபீஸில் நாளை சந்திக்க போகும் பிரச்சனைகளை நினைத்து அவளின் மனம் தவித்து போனது. அவன் மீது கோபமும் வந்தது.

இப்படி விளையாட்டாக சொல்வதை கூட தப்பாக எடுத்துக்கொண்டாள் நாளை அவனிடம் எப்படி அவ்வாறு பேச தோன்றும் என்று நினைத்து வருந்திக்கொண்டு இருக்கையில் அவளின் கண்களில் அவளை அறியாமல் கண்ணீர் வழிந்தது. இவனை எப்படி வைத்து காலம் தள்ளுவது என்ற கவலையும் வந்து ஆட்டி படைத்தது. அப்போது அவனிடம் இருந்து ஃபோன் வந்தது.

"என்ன ஷாக் சுமைலி போட்டு மெசேஜ் அனுப்பிருக்க? பயப்படாத நான் பக்கத்துல ஆஃபீஸ் வேலையா பாஸ் வாங்கிட்டு வர சொன்னத வாங்க பஸ் டான்ட் தான் போய்ருந்தேன்" என்று சொல்ல சைந்தவிக்கு தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது.எதுவும் பேசாமல் ஃபோனை வைத்தாள்.

'இது என்னது!! வில்லன் மாறி பண்றாரு? இப்படியுமா பொய் சொல்லுவாங்க? அது என்ன எவ்ளோ ஹர்ட் பண்ணும்னு யோசிக்க மாட்டாரா! அப்படி என்ன அவருக்கு என்கிட்ட ப்ரூவ் பண்ணும்னு எண்ணம்? வரமுடியாதுனு தெரியும் சும்மா வம்பிலுக்க சொல்றாங்கனு விடவேண்டிதானே. வந்து காட்டனும்னு நான் சொன்னேனா? இப்படி சின்ன விஷயத்தை கூட மிஸ் அண்டர்ஸ்டாண்ட் பண்ணா என்ன பண்றது' என்று மனதிற்குள் புலம்பி தள்ளினாள் சைந்தவி.
 
Messages
48
Reaction score
0
Points
6
என்னவனும் என் அண்ணனும்

அத்தியாயம் 42

வேலை முடிந்து வீடு திரும்பியவனை கண்டுக்கொள்ளாமல் சாப்பாடு பரிமாறி விட்டு அமைதியாய் எதையோ வெறித்துப் பார்த்துக்கொண்டு இருந்தாள் சைந்தவி.

"எதுக்கு இப்படி மூஞ்ச வச்சுருக்க?" என்று கிருஷ் கேட்டதுதான் போதும் சைந்தவி கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது. அதை பார்த்துவிட்டு "எதுக்கு இப்போ அழுகுற?" என்று கேட்டான் அவன்.

"இன்னைக்கு எதுக்கு அப்படி பண்ணீங்க?" என்று கேட்டவுடன் எதுவும் தெரியாதவனாய் முழித்துக்கொண்டு, "என்ன பண்ணேன்?" என்று கேட்டான். அவள் முகம் சிவந்தது. "எதுவும் தெரியாத மாறி கேக்குறீங்களே! எதுக்கு கிளம்பி வரேனு பொய் சொன்னீங்க? நாளைக்கு ஆஃபீஸ்ல இத எவ்வளவு பெரிய பிரச்சனை ஆக்குவாங்கனு நெனச்சு எப்படி பயந்தேன் தெரியுமா?" என்று சொன்னவளிடம் தான் நினைத்தவற்றை சொல்லத் தொடங்கினான் கிருஷ்.

"நீ மட்டும் திரும்பி திரும்பி வாங்க பாக்கலாம். வாங்க வாங்கனு சொல்லிட்டே இருக்கலாமா? என்ன ஏதோ டெஸ்ட் பண்ற மாறி இருந்துச்சு. எப்ப பாரு இவன் இப்படிதான் சொல்லுவான் எதையுமே செய்ய மாட்டானு நினைக்கிற மாறி தோணுச்சு நீ சொன்னத பாத்தா. அதான் அப்படி பண்ணேன்" என்றவனின் கூற்றை கேட்ட சைந்தவி கண்களில் ஆறாய் ஓடியது கண்ணீர்.

"யாராவது அப்படி நினைப்பாங்க லா? நீங்க வர முடியாதுனு தெரியும்‌. உங்க ஆஃபீஸ் பத்தி உங்க பாஸ் பத்திலாம் எனக்கு தெரியாதா? அப்படி இருக்கப்ப நான் ஏன் அப்படி நினைக்க போறேன்? விளையாட்டுக்கு ஒன்னு பேச கூடாதா?" என்று‌ அழுத விழிகளுடன்‌ அவள் பேச "சாரி" என்பது மட்டுமே அவனின் பதிலாக இருந்தது.

"நீங்க சாரி சொல்லனும்னே நான் இத சொல்லல. நீங்க இப்படி விளையாட்டுக்கு பேசுறதெல்லாம் சீரியஸா எடுத்துக்கிட்டு எதாவது பண்ணா நாளைக்கு உங்கள்ட அபப்டி பேச தோணுமா சொல்லுங்க? புருஷன் ட விளையாட்டா பேசாம வேற யார்ட்ட போய் பேசுறது? எதுவும் இல்லாம 'உர்ர்ர்' ன்னு இருந்தா வீடு நல்லாவா இருக்கும்? ஐ ஹேட் பீயிங் சைலன்ட்" என்று சொன்னவளின் முகத்தை பார்த்தான். அவள் கண்கள் சிவந்து, முகம் வாட பேசிக்கொண்டு இருந்தாள்.

"நீ பேசுன விதம் அப்படி. எனக்கு ஹர்ட் ஆய்டுச்சு. அதான் அப்படி பண்ணேன்" என்று கூறிக்கொண்டே சாப்பிட்ட தட்டில் கையை கழுவி விட்டு எழுந்து சென்றான்.

"ஓஓ!! உங்களுக்கு ஹேர்ட் ஆச்சுன்னா என்னையும் ஹர்ட் பண்ணுவீங்க அப்படிதானே?" என்று இங்கிருந்த படி சத்தமிட்டு கேட்டவளின் குறளில் கோபம் தெரிந்தது.

தட்டை பட்டென சிங்க்கில் போட்டவன் "இப்போ எதுக்கு எது சொன்னாலும் சண்டை போட்டுட்டு இருக்க?" என்று கத்த, "ஆமாம். நான் எல்லாத்துக்கும் சண்டைதான் போடுறேன். பிக்காஸ் ஐ அம் நாட் ஹேப்பி வித் யூ" என்று சொன்னதும் ஒரு நிமிடம் வாயடைத்து போனான் கிருஷ். எப்போதும் மனைவியை சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும் என ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்பவன் இதை சற்றும் எதிர்பார்க்க வில்லை. அவளின் சந்தோஷமே முக்கியம் என நினைப்பவன், தன் மீது தப்பே இல்லை என்றாலும் காலில் விழாத குறையாய் வந்து முதலில் சாரி கேட்பவன். ஏதோ அவனின் சின்ன சின்ன கோபத்திற்காகவும் அறியாமல் புரியாமல் நடந்துக்கொண்ட செயல்களுக்காகவும் அவள் கூறிய வார்த்தைகள் அவனை எவ்வளவு காய படுத்தியது என்று வார்த்தைகளில் சொல்ல முடியாது. இதை கேட்டபின் எதுவும் பேசாமல் அமைதியாய் போய் படுக்கையில் சாய்ந்தவனின் கண்களில் கண்ணீர் சொட்டியது.

இன்னொரு புறம் இமான் தன் காதலை மறக்க எடுக்காத முயற்சி இல்லை. தன் வாழ்க்கையை பழையபடி திருப்ப நினைத்தான். நண்பர்களோடு ஊர் சுற்றினான், நாளுக்கு ஒரு படம் பார்த்தான், கிரிக்கெட் விளையாடினான், தனக்கு பிடித்த உணவுகளை உண்டு மகிழ்ந்தான். இவை அனைத்தும் செய்த பின்னும் அவனுக்கு அந்த நாளின் கடைசியில் மிஞ்சியது என்னமோ அழுகையும் தனிமையும்தான். வெளியில் அவனுக்கு அவனின் காதல் தோல்வியின் வலி தீர்ந்துவிட்டது போல் நடித்தாலும் மனம் எங்கும் ரணமாகத்தான் இருந்தது.

ஒரு நாள் ஹரிஷ் இமானை வெளியில் செல்வதற்காக அழைக்க, இருவரும் வழக்கம் போல் பேக்கரிக்கு போனார்கள். ஹரிஷ் வழக்கம் போல் வீட்டில் உள்ள பிரச்சனைகளை பற்றி புலம்பிக் கொண்டு இருந்தான்.

"எங்க வீட்டுல டெய்லி இம்சை பண்றாங்க டா. நான் கம்மியா சம்பளம் வாங்குறேனாம். வீடே அக்கா சம்பளத்த நம்பிதான் ஓடுதாம். சும்மா சும்மா குத்தி காமிக்குறாங்க. சீக்கிரம் வேற கம்பெனிக்கு மாறனும்டா" என்றான் ஹரிஷ்.

"ஆமாம். நானும் மாறனும் இரெண்டு பேரும் சேர்ந்து வேற கம்பெனி தேடலாம்" என்றான். அவன் கூறியது வீட்டில் இருப்பவர்களிடம் இருந்து தப்பிக்க, இமான் கூறியதோ ஜூலியின் நினைவுகளிடம் இருந்து தப்பிக்க.

"டேய், என்னடா பழைய மாறி கிரிக்கெட்லாம் விளையாட போற. ஃபிரண்ட்ஸோட ஊர் சுத்தலாம் ஆரம்பிச்சுட்ட போல" என்று கேட்க,
"ஆமாம் டா. வேலை இல்லனு விட்டுட்டு போனால. அதான் அவளை பத்தி நினைக்கிறத நிறுத்திட்டேன். நான் பழைய மாறி இப்போதான் டா சந்தோஷமா இருக்கேன்" என்று சொன்னவனின் கண்களில் இருந்த பொய்யை கண்டுபிடித்து விட்டான் ஹரிஷ்.

"ஒரு விதத்துல சந்தோஷமா இருக்கனு எனக்கு தெரியும். உன் லைஃப் உனக்கு பிடிச்ச லைஃப் உனக்கு கிடச்சுருச்சு. ஆனா ஜூலி இல்லனு வருத்தம் இருக்குல" என்று கேட்டான். "அதெல்லாம் நான் மறந்துட்டேன் டா. ஏன் இப்படி கேக்குற" என்றான்.

"நடிக்காத டா. சோகமா டெய்லி ஸ்டேட்டஸ் போடுற. எனக்கு காமிக்காத மாறி வச்சா யாரும் என்கிட்ட வந்து சொல்ல மாட்டாங்கனு நெனச்சியா. அது மட்டும் இல்லாம நீ வீட்டுல அப்பப்ப சோகமா உட்காந்து இருக்கனு அம்மா சொல்லி வருத்த பட்டாங்க" என்றான் ஹரிஷ்.

"அதெல்லாம் அவள நெனச்சு ஒன்னும் சோகமா இல்ல. எங்க வீட்டு நாய் ஜூலி செத்து போச்சு. அதான் அப்படி இருந்தேன்" என்றவனின் கண்கள் அது மட்டும் காரணம் இல்லை என்பதை அழுத்தமாக காண்பித்தது தேங்கி நிற்கும் கண்ணீர் வழியாக.

"அப்புறம் ஏன்டா கண்ணு கலங்குது" என்று சொன்னபடி அவனின் தோல்களை தட்டிக்கொடுத்து "சரி விடு இமான். எல்லாம் நல்லதுக்குதான். அந்த பேர்ல உனக்கு எந்த நினைவும் வர கூடாதுனுதான் இப்படி நடந்துருக்கு போல. கொஞ்ச நாள்ல பாரு நீ பழைய மாறி ஆகிடுவ" என்று ஆறுதல் சொல்ல அந்த வார்த்தைகளில் இருந்த ஆழம் உணர்ந்தவன் அனைவரும் கூடிய இருக்கும் பொது இடம் என்று கூட பாராமல் சிறு பிள்ளை போல் தேம்பி தேம்பி அழ தொடங்கிவிட்டான்.

தன் நண்பன் இப்படி உடைந்து போனதை என்றுமே பார்த்திராத ஹரிஷுக்கும் கண்களில் கண்ணீர் பெருக அதை மறைத்துக்கொண்டு,"ஏன்டா இப்படி அழுகுற" என்று அவன் பக்கம் வந்து தோல்களை அணைத்துக்கொண்டு கேட்க, அந்த தொடுதலின் ஆறுதலில் இன்னும் உடைந்து போனது அவன் மனம்.

"என்னால முடியல டா. எவ்வளவு தான் நானும் நடிக்கிறது. அவ நெனப்பு மனசுல இருந்து போ மாட்டேங்குது டா. டெய்லி அவ அனுப்புன காதல் கவிதைல இருந்து அவ அனுப்புன எல்லா மெசேஜையும் திருப்பி திருப்பி படிச்சுட்டு அவ ஏன் இப்படி விட்டுட்டு போனானு நெனச்சு நெனச்சு அழுதுட்டு இருக்கேன் டா. அப்படி பண்ணாம இருக்க முடியல. அதுல இருந்து வெளியில வர முடியல. உங்கள்டலாம் சும்மா நடிச்சுட்டு இருக்கேன். என்னால பழைய மாறி மாறவே முடியாதோனு பயமா இருக்கு டா. அவ நெனப்பு என்ன போட்டு கொல்லுது. அவள ரொம்ப நம்புனேன். ஏன்டா என்ன விட்டுட்டு போனா?" என்று அவன் பேசும் போது அவனின் தொண்டை அடைக்க தடுமாறி தடுமாறி பேசி முடித்தபின் மீண்டும் அழ, அங்கிருந்த அனைவரும் அவனையே பார்த்தனர்.

ஹரிஷுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. எதையாவது சொல்லி அவனை தேற்ற பார்த்தான். 'அவனுக்கு ஜூலியின் நினைப்பு வராத வண்ணம் அவனை பிஸியாக வைக்கனும். அவன நல்லா பாத்துக்கணும். இனி அவன் அவளுக்காக அழ கூடாது' என்று பல எண்ணங்கள் அவன் மனதில் சபதம் எடுப்பது போல் ஓடிக்கொண்டு இருந்தது. அப்போதிக்கு அவனிடம் "விடுடா. எல்லாம் சரி ஆகிடும். அவ உனக்கு செட் ஆக மாட்டா. உனக்கு நல்ல பொண்ணா, உன் கேரக்டருக்கு ஏத்த பொண்ணா கடவுள் கண்ணுல காமிப்பாரு" என்று கூறி அவனை அங்கிருந்து அழைத்து சென்றான்.
 
Messages
48
Reaction score
0
Points
6
என்னவனும் என் அண்ணனும்

அத்தியாயம் 43

கண்ணீர் பெருகிய கண்களை துடைத்துக்கொண்டு படுத்தவன் அடுத்த நாள் எழுந்து அமைதியாய் ஆஃபீஸுக்கு கிளம்பினான். அவன் கிளம்பி போகும் வரை பார்த்துக்கொண்டு இருந்தாள் சைந்தவி. அவன் முகம் அவ்வளவு வாடி இவள் பார்த்ததில்லை. பாவமாக இருந்தது இவளுக்கு. தான் சொன்ன வார்த்தை அவனை எவ்வளவு பாதித்திருக்கிறது என்று நினைக்கையில் உள்ளம் வலித்தது. என்னதான் கோபமாக இருந்தாலும் கோபத்தில் வாய் தவறி வந்து அந்த வார்த்தை அவன் காதுகளில் விழ விட்டிருக்கக்கூடாது என மனம் வருந்தினாள். அவனிடம் சண்டையிட்டது நியாயமே என எண்ணினாலும் வார்த்தை பிழை வந்தது அவளை வருந்ததான் செய்தது. சண்டை போடும் மனைவி ஆனாலும் அரக்கி இல்லையே அவள்.

பிறர் மனம் நோக பேசவே கூடாது என நினைக்கும் அவள் அவளின் துணையையே வார்த்தை கொண்டு கிழித்தது அவ்வளவு சுலபமாக அவள் மனதை காயபடுத்தாமல் மறையுமா. இருந்தும் இந்த திருமண வாழ்வின் மீதும் மாறிபோன கணவனின் காதல் மீதும் உள்ள வெறுப்பு என்னவோ அவளை விட்டு நீங்குவதாய் இல்லை.

இதையெல்லாம் யோசித்துக்கொண்டு இருந்தவள் அன்று எந்த வேலையையும் செய்யவில்லை. எந்த செயலிலும் நாட்டம் இல்லாது போனது அவளுக்கு. படுக்கையில் படுத்துக்கொண்டு தான் திருமணத்துக்கு முன்பு வாழ்ந்த ஆனந்த வாழ்க்கையை அலசிப் பார்த்து, நண்பர்களுடன் லூட்டி அடித்து சேட்டை செய்த சைந்தவியையும் இப்போது கனவும் கவலையும் விருப்பும் வெறுப்பும் கலந்த அமைதியான சைந்தவியையும் ஒப்பிட்டு பார்க்கையில் கண்ணீர் துளிகள் அவள் தலையணையை நனைத்தது.

யாருடனும் சண்டை பிடிக்காத நான், எல்லோரையும் புரிந்துக்கொள்ளும் நான், எந்த சூழ்நிலையையும் ஏற்றுக்கொள்ளும் நான், யாருக்கும் துன்பம் தராத நான், பிரச்சனை பெருதெனினும் சிறிதென நினைத்த நான், என்னை முழுதும் விரும்பிய நான், என் வாழ்க்கையை ரசித்த நான்...இப்போது தினம் ஒரு சண்டையுடன், எப்போதும் கவலையுடன், எதையும் ஏற்றுக்கொள்ள முடியாமல், சின்ன சின்ன பிரச்சனைக்காக என்னையும் வெறுத்து இந்த வாழ்வையும் வெறுத்து, இன்னொரு ஜீவனையும் வருத்தி....இதுதான் திருமண வாழ்க்கையா? நான் இப்படி மாறி போக இந்த திருமணம்‌ ஒன்றுதான் காரணமா? திருமணம் ஆன அனைவரும் இப்படிதான் மாறி போவார்களா? இல்லை திருமணம் எங்களையெல்லாம் அப்படி மாற்றிவிட்டதா? என்று எண்ணியவாறு படுத்திருந்தாள் பெண்ணவள்.

தன்னைத்தானே தேற்றிக்கொள்ள அவளுக்கு பிடித்த பாடல்களை கேட்டுக்கொண்டு டைவர்ட் ஆக முயற்சித்தாள். சற்று அமைதி கண்ட மனம் அயர்ந்து உறங்கிவிட, அந்த நேரம் அடித்தது அவளின் அழைபேசி. ஃபோனை எடுத்தவள் மறு முனையில் இருப்பவரை பேச விடாமல் பேசினாள்.

"ஹலோ சார். எப்படி இருக்கீங்க? தங்கச்சி நியாபகம்லா இருக்கா உங்களுக்கு? அப்போலாம் தங்கச்சி தங்கச்சினு உருகுவீங்க. ஒரு வாரம் பேசலனா அப்படி சண்டை போடுவீங்க? உங்க பாசத்த பத்தி பெருமையா பேசிட்டு இருப்பேன் இவர்ட. இதுதான் உங்க பாசமா? தங்கச்சிய சுத்தமா மறந்தாச்சு? இத்தனை மாசமா கால் பண்ணலயே என்ன ஆச்சு ஏது ஆச்சுன்னு கேக்க தோணல? ஏன் ஃபோன் பண்ணலனு சண்டை போட கூட சார் இப்போலாம் விரும்புறது இல்ல போல?? நான் செத்த கூட உனக்கு தெரிய இரண்டு நாள் ஆகும் போலயே??!!" என்று அவனின் மீது இருந்த அத்தனை கோபத்தையும் கேள்வி மழையாய் பொழிந்து எரிமலை பார்வையை ஏழெட்டு கேள்விகளில் எடுத்துரைத்தாள்.

"ஹலோ நிறுத்து. என்ன ரொம்ப ஜாஸ்தியா பேசுற? நான் உன் மேல எவ்வளவு கோபமா இருக்கேன் தெரியுமா? என்னமோ நான் மோசம்ங்ற மாதிரியே பேசுற?" என்று வழக்கம் போல் கோபமாய் ஆரம்பித்தான். வழக்கம் போல் அவன் கோபம் சில நொடிகளில் புஸ்வாணமாய் போகுமோ என்னமோ? அவன் தன் கோபத்தை கொட்டி தீர்க்க தொடங்கினான்.

"நீ செத்தா கூட எனக்கு தெரியாதா? எங்க வீடு மாறி கண்டுக்காம எப்படியோ கடக்கட்டும்னு விட்டுறுவேனு நெனச்சியா? நீ என்ன புரிஞ்சுக்கிட்டது அவ்வளவுதான். நீ எப்படி இருக்க என்ன பண்ணிட்டு இருக்கனு எல்லாம் எனக்கு தெரியும்" என்று சொன்னவனை வியப்பாய் பார்த்தவள்,"யாரு இமான் சொல்லிருப்பான். அவன்ட கேட்டு தெரிஞ்சுருப்ப" என்று கூற அவனின் கோபத்தால் நாசி வழியாக வந்த உஷ்ணக்காற்று அழைபேசி வழியாக அவளின் காதுகளை அடைந்தது. "நான் ஏன் அவன்ட கேக்குறேன். அவன் மட்டும்தான் உன்கிட்ட அடிக்கடி பேசுறான் அவன் மட்டும்தான் உன் மேல அக்கறையா இருக்கானு நெனச்சா வச்சுக்கோ உன் பொல்லாத அண்ணன. நான் வேண்டாதவனாவே இருந்துட்டு போறேன்" என்று கடுகடுத்தான். எப்போதுமே மற்ற அண்ணன்களை உயர்த்தி பேசினால் கோபப்படுபவன் போபியோ. அவனை லைனில் வைத்துக்கொண்டு அவனிடமே இமானை பற்றி பேச ஏதோ அவனை உயர்த்தி பேசியதாய் நினைத்துக்கொண்டு கச்சிகட்டிக்கொண்டு மல்யுத்தத்துக்கு நிற்பது போல் நின்றான்.

"நீ வேண்டாதவனு நான் சொல்லவே இல்லையே. உன்ன நான் அப்படி என்னைக்கும் நினைக்கவும் மாட்டேன். நீ இன்னும் மாறவே இல்லை. அதே பொஸசிவ்‌. சரி வேற யார் சொன்னா?" என்று கேட்டவுடன் ஒரு நொடி மௌனம் கொண்டான்.

பின்பு, "நீ என்கிட்ட பேசல. முன்னலாம் நீ பேசலனா நானும் பேச மாட்டேன். நீயா எப்ப கூப்பிடுறனு பாப்போனு இருப்பேன் அப்புறம் நானே ஃபோன் பண்ணி ஏன் பேசலனு கேட்டு சண்டை போடுவேன். இப்போ என்ன ஆனாலும் நீ கல்யாணம் ஆன பொண்ணு. முன்ன மாறி சும்மா சும்மா ஃபோன் பண்ணி ஏன் பேசல ஏன் பேசலனு டார்ச்சர் பண்ண முடியாது. சோ நானே என் கேரக்டர மாத்திக்கிட்டேன். நீயா பேசுவனு ஏக்கம் மட்டும் மாறல. சண்டை போடல அவ்வளவுதான். அதுக்குன்னு நீ எப்படி இருக்கனு தெரிஞ்சுக்காம இருப்பேனா?" என்று அவன் கூறும் போதே அவளின் இதழ்கள் புன்னகைத்தது. யார் மூலியமாக தெரிந்திருப்பான் என்ற ஆர்வமும் இருந்தது.

"நானும் மாம்ஸும் தான் ஒரே கேரக்டர் ஆச்சே. நீ பேசிட்டு இருந்தப்ப அப்போ அப்போ அவரா கூப்பிட்டு பேசிட்டு இருந்தார். மிங்கில் ஆக முதல ரொம்ப கஷ்டப்பட்டேன். நீ பேசாத இத்தன நாள்ல நாங்க ரொம்ப க்ளோஸ் ஆகிட்டோம். ஒவ்வொன்னும் என்னமாறியே அவர் யோசிக்கிறத பாத்து என்னோட இனம்னு எனக்கு அவர் மேல ஒரு பாசம் வந்துருச்சு. நீ எப்படி இருக்கனு நான் கேட்டுக்கிட்டேதான் இருப்பேன். ஆனா உன்கிட்ட சொல்ல வேணானு சொல்லிடுவேன். நீயா எப்பதான் கால் பண்ணுறனு பாப்போனு விட்டுட்டேன். அவரும் கண்டிப்பா என் இடத்துல இருந்துருந்தா இப்படிதான் ஃபீல் பண்ணிருப்பார். அவங்களா கால் பண்ணட்டும்னு வெயிட் பண்ணிருப்பார். சோ என்ன புரிஞ்சிக்கிட்டு உன்கிட்ட என்ன பத்தி பேசாம இருந்தார்" என்று அவன் கூறியதும் போதும் இவள் ஆரம்பித்துவிட்டாள்.

"அவ்வளவு ஈகோ" என்றாள். உடனே அவனோ, " இல்ல. எங்களுக்கு உங்க பாசம் கிடைக்காதானு ஏக்கம். நாங்கலா வந்து பண்றத விட நீங்க பண்ணா இன்னும் பாசமா இருக்காங்க, நம்மல பத்தி யோசிக்கிறாங்கனு அவ்வளவு ஹேப்பியா இருக்கும். அந்த ஹேப்பினஸ்காகதான் வெயிட் பண்ணேன். அது கிடைக்கல" என்று அவன் சோகமாக சொன்னாலும் பல நாள் அவள் மீது கோபம் கொண்டிருந்தான் என்பதும் தெரிந்தது. சில நாள் பேசாமல் இருந்தாவே கதருபவன். இத்தனை மாதம் பேசாமல் இருந்திருக்கிறாள். எத்தனை நாள் இதை நினைத்து கண்ணீர் வடித்திருப்பான் என்று தெரியாமலா இருக்கும்?. அவள், அவன் மனம் அறிந்து அவனை சமாதானம் செய்ய முயற்சித்தாள்.

"என் போபியோ பத்தி எனக்கு தெரியாதா. எப்படியும் நான் ஃபோன்‌ பண்ணலனு அழுதுருப்பனு தெரியும். ஆனா என்ன பத்தி விசாரிச்சுட்டு இருப்பனு தெரியல. நான் வேணும்னு பண்ணாம இல்ல. என் லைஃப்ல கொஞ்ச நாளா ஒரே பிரச்சனை. எவனோ ஒரு பொருக்கி பிரச்சனை பண்ணி, உங்க மாமா என் மேல சந்தேகப்பட்டு பிரியுற அளவு போய், திரும்பி சேர்ந்தா அவர் பழைய மாறி இல்ல. அந்த லவ் இல்ல. ஒரே சண்டை பிரச்சனை. அதுல வேற எதையும் எனக்கு யோசிக்க தோணல" என்று கூறியவளை வியப்பாய் பார்த்தவன் சற்று நிதானித்து, "ம்ம்..தெரியும்" என்றான்.

"ஓஓ!! உங்க மாமா சொல்லிட்டாரா..உடனே அவ இப்படி பண்றா அப்படி பண்றானு திட்டிருப்பாரே என்னைய" என்று சைந்தவியின் பதிலில் அதிர்ந்தவன், "எப்படி உன்னால் இப்படி பேச முடியுது. எல்லாத்தையும் புரிஞ்சுக்குற பொண்ணு நீ. நான் எத்தனை தடவை எனக்கு இருக்க பிரச்சனைல உன்ன போட்டு சம்மந்தமே இல்லாம திட்டிருக்கேன். அப்பலாம் நீ என்ன புரிஞ்சுக்கிட்டு அப்புறமா எனக்கு புரிய வைப்ப அது தப்புன்னு. அப்படி இருந்த என் தங்கச்சியா இப்படி மாறிட்ட? கொஞ்ச கூட நீ மாமாவ பத்தி புரிஞ்சுக்கவே இல்ல" என்றதும் போதும் அவளுக்கு கோபம் பீறிட்டு வந்தது. தன் அண்ணன் தனக்காக சப்போர்ட் பண்ணுவான் என நினைத்தவளுக்கு இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

"நீ கூட அவருக்கு சப்போர்ட் பண்ணிதான் பேசுறல? அவர் பண்றது எதுவும் தப்பில்லை. நான் தான் தப்பு. அப்படிதானே?" என்று கேட்டவளிடம் தான் சொல்ல வந்ததை அவள் தவறாக புரிந்துக்கொண்டாள் என்பதை எப்படி சொல்லி அவளுக்கு புரிய வைப்பது என்றே அவனுக்கு தெரியவில்லை. இருந்தும் அண்ணன் ஆச்சே தங்கையை அப்படியே கோபத்தோடு இருக்க சொல்லி விட்டுவிட முடியுமா?..தன்னால் இயன்ற வரை சொல்லி புரிய வைக்க போராடினான்.

"அப்படி இல்ல மா. அவர் மேல தப்பே இல்லனு சொல்லல. எல்லாத்தையும் புரிஞ்சுக்குற நீ ஏன் அவர மட்டும் புரிஞ்சுக்க டிரை பண்ணாம போய்டனு ஆச்சரியமா இருக்கு. அதான் கேட்டேன்" என்றான் போபியோ.

"உனக்கு எதுவும் தெரியாது. அவர் என்ன எவ்ளோ ஹர்ட் பண்ணிருக்காருனு. எதுவும் தெரியாம நான்தான் புரிஞ்சுக்கனும் நான்தான் தப்புன்னு பேசாத. அண்ணனு கூட பாக்காம திட்டிடுவேன்" என்று அவள் கூற அவள் முகம் சிவந்து போனது அவளின் கோபத்தால். மீண்டும் மீண்டும் தன் கணவன் பக்கம் கச்சை கட்டிக்கொண்டு பேசும் தன் அண்ணனை நினைக்கையில் ஆத்திரம் வந்தது அவளுக்கு. இவனை எப்படியோ பேசி என்னவோ சொல்லி தன் பக்கம் நியாயம் இருப்பதாக காட்டிக்கொண்டு இவனை அவர் பக்கம் இளுத்துக்கொண்டார் என்று நினைத்தவளின் புருவங்கள் உயர கிருஷ் மீதான வெறுப்பு இன்னும் கூடியது.

கோபத்தில் நேற்று கூறிய வார்த்தைகள் தவறென நினைத்தவள் இப்போது அதில் என்ன தப்பு என்று நினைக்க தொடங்கினாள். "ஒன்று அவன்‌ தன்னை மனைவி என்றே நினைக்காதவன் போல் கண்டுக்கொள்ளாமல் இருந்து, சொற்களை கொண்டு காய படுத்தி, தேவை இல்லாத விஷயத்திற்கு கத்தி தீர்த்து தன்னை கஷ்டப்படுத்துவது, இல்லை இப்படி யாரையாவது தூண்டி விட்டு, அவர்கள் என்னை பற்றி தவறாக நினைக்கும் படி செய்து, என்னிடம் சண்டை போட செய்வது. இப்படி இருந்தால் எப்படி இவருடன் இருப்பது சந்தோஷம் தரும். ஒரு நாள் காதல் பார்வை கொண்டு சந்தோஷம் தந்துவிட்டு வாரம் முழுவதும் அது பொய் என நினைக்கும் வண்ணம் சோகத்தில் தவிக்க விடுவது. இது காதலா?" என்று முணுமுணுத்துக்கொண்டாள் சைந்தவி.

"எனக்கு எதுவும் தெரியாதா? எனக்கு எல்லாம் தெரியும் மா" என்றவனை நிறைத்தி, "அவர் சொன்னத வச்சு அப்படிதான் நடந்துருக்கும்னு நினைக்காத. அவர் அவர நியாயப்படுத்தி கதை கட்டி விட்டிருப்பார்" என்று கூறியவளின் வார்த்தைகளில் அதிர்ந்துதான் போனான் அவன்.

"எப்படிமா இப்படி மாறி போன நீ. யாரையுமே நீ இப்படி குறை சொல்லி பார்த்தது இல்லை. மோசமான ஆள் பத்தி பேசுனா கூட அவங்கள்ட நல்ல விஷயமும் இருக்குனு அதையும் சேர்த்து சொல்லுவ. இப்ப மாமாவ பத்தி குறை மட்டுமே சொல்லிட்டு இருக்க" என்று அவன் கூற அவளின் மனம் சட்டென வாடி போனது. அவன் சொன்ன வார்த்தைகள் அவள் மனதை ஏதோ பண்ணியது போல. ஃபோனை காதில் இருந்து எடுத்துவிட்டு சில நிமிடம் மௌனம் கொண்டவளால் அவன் கூறுவதை முழுதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. "உங்க மாமா என்னை அப்படி மாத்திட்டார்" என்று மீண்டும் கிருஷ் மீதே பழி போட்டாள் சைந்தவி.

"அப்படி சொல்லாத‌. அவர் மேல மட்டுமே எல்லா தப்பும் இல்லை. எனக்கு நல்லா தெரியும்" என்று இவன் கூற உடனே "அப்படி அவர் நம்ப வச்சுருக்காங்க" என்றாள். "இல்லை" என்று அவன் தொடங்கும்போதே அவனை பேச விடாமல் இவள் ஏதேதோ பேச, அவன் "போதும் நிறுத்து" என்று அலைபேசி அதிர கத்தினான். அவன் கத்திய கத்தில் ஒரு நொடி காதில் இருந்த ஃபோனை எடுத்துவிட்டு மீண்டும் காதில் வைத்தாள். கோபத்தில் கூட அவன் ஒருநாளும் இப்படி கத்தியது இல்லை. அதுவும் பாசம் வைத்த தங்கை மீதே இப்படி எரிந்து விழுபவனை ஆச்சரியமாய் பார்த்தாள் அவள். அப்படி கத்தாமல் இருந்திருந்தால் இவளுக்கு உண்மைகளும் சில உணர்வுகளும் புரியாமலேயே போயிருக்குமோ என்னமோ!

அவன் சொன்ன அனைத்தையும் கேட்டவளுக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. முதலில் ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் பின் அமைதி ஆனாள்.
 
Top Bottom