Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


என்னுள் நிறைந்தவளே

vani sri

Saha Writer
Team
Messages
17
Reaction score
1
Points
1
மலர் 1:

அழகிய காலை பொழுது..... பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருக்கும் இரு சக்கர வாகனங்கள், பேருந்துகள் சாலை‌யி‌ல் ஓடிக்கொண்டிருக்க அதை தடை போடும் விதமாகச் சிவப்பு விளக்கை காட்டியது போக்குவரத்து சமிக்ஞை. அதை மதித்து மக்கள் அவசரத்திலும் பச்சை நிறத்திற்காக காத்திருக்க, எவ்வளவு சீக்கிரம் கிளம்பினாலும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொள்ள வேண்டியிருக்கிறது என சலித்துக் கொண்டே தன் நான்கு சக்கர வாகனத்தில் இருந்தவாரே அஷ்வின் தன் வலப்புற கண்ணாடி வழியாக சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தான்.

வேடிக்கைபார்த்தவாறு அவன் கண்கள் அருகில் நிற்கும் பேருந்தின் மீது விழ, ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்த அவளின் காந்த பார்வை அவனை ஈர்த்தது. நிலாவை தோற்கடிக்கும் அழகிய முகம், தேனீக்கள் அறியா மலர் இதழ்கள், அவளது கருநிறக் கூந்தல் காற்றுக்கு இசைந்தாட, விரல்கள் முடியை காதோரம் கோட்க, காதின் தோடு தென்றலின் இசைக்கு அசைய, அந்த தேவதையின் அழகில் முழுவது‌மாக மயங்கி தன்னிலை மறந்து அவளை ரசித்துக் கொண்டிருந்தான்.

பின்னர் நிற்கும் வாகனங்கள் எழுப்பும் சப்தம் அவன் காதுகளில் பாய, நினைவு திரும்பி பச்சை விளக்கை கவனித்து தன் வாகனத்தை முன்னே செலுத்தினான்.

அவனது மனமோ அழகு தேவதையின் பின்னே செல்ல நினைக்க, அலுவலக பணி மறுபுறம் இழுக்க, வேறு வழி இன்றி சாலையின் நேராக தனது அலுவலக பாதையில் செல்ல, அவள் இருந்த பேருந்தோ வலப்புறம் சென்றது.

அஷ்வின்தனது அலுவலகத்தை அடைந்தான். பதினைந்து மாடிகள் கொண்ட பெரிய கட்டிடம், அதில் எட்டாம் தளத்தில் உள்ள தனது வங்கிக்கு லிஃப்ட் மூலமாக வந்து சேர்ந்தான்.

அஷ்வின் எப்பொழுதும் போல தன் அறையை நோக்கி சென்றுக் கொண்டிருக்க, அங்கே பணி புரியும் சக ஊழியர்கள் "குட் மார்னிங் சார்" கூற, அனைவருக்கும் குட் மார்னிங் என பதிலுக்கு வாழ்த்தியவாறு தன் அறையை திறந்து உள்ளே நுழைந்தான்.

அஷ்வின், "கிளை மேலாளர்" என்ற பெயர் பலகை மேசையில் இருந்தது. தன் இருக்கையில் அமர்ந்து கணிணியில் வேலையை ஆரம்பித்தான்.

அந்த வங்கியில் ஏறத்தாழ இருபது ஊழியர்கள் உள்ளனர். வங்கி வேலை நாட்கள் வாரத்தின் ஐந்து தினங்களிலும் மக்கள் லோன் வாங்க வருவதும், காசு சேமிப்பு கணக்கில் போடுவதும், காசு எடுப்பதுமாக பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும்.ம‌திய‌ம் மூன்று மணிக்கு மேல் கொஞ்சம் அமைதியாக இருக்கும், மக்கள் வரவு சற்று குறைவாக இருக்கும்.

அஷ்வின் வங்கி கணக்கு வழக்குகளை சரி பார்க்க முயல, ஏனோ அவனது எண்ணம் மட்டும் ஜன்னல் ஓர தேவதையை நோக்கி... இன்னும் பயணம் செய்து கொண்டு தான் இருக்கின்றது.

வழியில் முகம் காட்டி என் விழிகளுக்குள் சென்றவளே! உன் முகவரியை கண்டு அறிய எங்கே நான் தேடி அலைவேன் !!! என்று எண்ணியவாரு நாற்காலியில் அமர்ந்திருந்தான்.

நானும் ஒரு வருஷமா பொண்ணு பார்த்துட்டு இருக்கேன், எந்த பொண்ணு போட்டோ காட்டினாலும் ஆயிரம் குறை சொல்றான், நேரா அறுபதாம் கல்யாணம் தான் அவனுக்கு நடக்கும் போல என்று கவலையுடன் புலம்பிக் கொண்டு இருந்தாள் ரேகா.

கொஞ்ச நாள் போனா சரி ஆகிடுவான் விடு ரேகா, தேவை இல்லாமல் ஏன் கவலைப்படுர என்றார் குமாரசாமி.
உங்களுக்கு என்ன தெரியும்? நீங்க கொடுக்க செல்லத்துல தான் அஷ்வின் இப்படி இருக்கான் என அதட்டினால் மனைவி ரேகா.

நான் கல்யாணம் செஞ்சுட்டு உன் சிறையில இருக்கிறது போதாதா? அவனாவது கொஞ்ச நாள் நிம்மதியா இருக்கட்டுமே என்று கூறியவாறு மாடிக்கு வேகமாக நடையை கட்டினார்.
ஓகோ! என் கூட வாழ்றது சிறையா உங்களுக்கு? என ரேகா அன்பு கலந்த கோபத்துடன் கேட்க, அன்பு சிறையில் இருக்கேன்னு சொன்னதை தப்பா புரிஞ்சுக்கிட்டியே என்று புன்னகைத்துக் கொண்டு, ஒரு வழியா தப்பிச்சுட்டேன்னு மனதில் நினைத்தபடி மாடியை அடைந்தார் குமாரசாமி.

சிரித்துக்கொண்டே ரேகா தனது வீட்டு வேலையை செய்ய ஆரம்பித்தாள்.

ரேகா சில வருடங்கள் தன் ஊரில் உள்ள பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்துவிட்டு பின்பு கணவரின் சம்பாத்தியம் மட்டுமே போதுமானது என்று எண்ணி, வீட்டில் இருந்து குழந்தைகளுக்கு தேவையானவற்றை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பணியை விட்டுவிட்டார்.

குமாரசாமி ஒய்வு பெற்ற காவல் அதிகாரி. காவல் நிலையத்தில் மட்டும் தான் அதிகாரியே தவிர , வீட்டின் அதிகாரி ரேகா தான்.

காலையிலே உங்க மகன் புராணத்தை ஆரம்பிச்சுட்டீங்களா அம்மா என வம்புக்கு இழுத்தாள் மகள் அனு.நேரம் ஆகுது, நான் காலேஜ் போகனும். எனக்கு சாப்பிட ஏதாவது கொடுத்துட்டு நீங்க உங்க புராணத்தை தொடர்ந்து பாடுங்க என்று கிண்டல் செய்தாள்.
எப்பவுமே சாப்பாடு சாப்பாடு தான் என்று சொல்லி அணுவின் தலையில் ஒரு கொட்டு வைத்தாள் ரேகா.

அனு , மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் வேதியியல் துறையில் முதுகலைப் பட்டப் படிப்பு பயின்று வருகிறாள்.

ஜாடிக்கு ஏற்ற மூடி போல் அண்ணனுக்கு ஏற்ற தங்கை. அண்ணனின் எல்லா செயல்களுக்கும் பக்கபலமாக இருப்பாள்.



மலரும்..​
 

vani sri

Saha Writer
Team
Messages
17
Reaction score
1
Points
1
மலர் 2:
அஷ்வின் இன்னும் ஆஃபீஸ்க்கு வரவில்லையே, என யோசித்துக் கொண்டே மேனேஜர் அறைக்குச் சென்று பார்த்தவன், தெளிவு இல்லாத அஷ்வின் முகத்தை பார்த்து ஆராய்ந்து கொண்டு ஓரமாக யோசனையில் நின்று விட்டான்.

சட்டென்று வெளியே பார்த்த அஷ்வின், "வா சித்து! ஏன் வெளியில நிக்குற? உள்ள வந்து உட்கார்".

நான் வந்தது இருக்கட்டும், நீ எப்ப வந்த? என்கிட்ட ஒரு வார்த்தை கூட பேசாம வந்துட்டியேன்னு தான் பார்க்க வந்தேன். இங்க வந்து பார்த்தா நீ எதோ பலத்த யோசனையில் இருக்க போலயே!! என்னடா ஆச்சு என்று கேள்வி மேல் கேள்வி தொடுத்தான்.

அதெல்லாம் ஒன்னும் இல்ல டா...கொஞ்சம் வேலை அதிகமாக இருக்குனு நேரா என் கேபின்க்கு வந்துட்டேன். அப்புறமா உன்ன பார்க்கலாம்னு நினைச்சேன்.

அது சரி... இளங்கோ எங்க?? இரண்டு நாள் ஆயிடுச்சு வேலைக்கு வந்து..!! ஃபோன் பண்ணினாலும் எந்த பதிலும் இல்ல என்று அஷ்வின் கேட்டான்..

அவன் தன் கிராமத்துக்கு யாரையோ சொந்த விஷயமா பார்க்க போகனும்னு சொல்லிட்டு இருந்தான். எப்படியும் நாளைக்கு வந்துடுவான். வந்ததும் கேட்டுத் தெரிஞ்சுக்கலாம் என்றான் சித்து.

ஹ்ம்ம்... நான் என் கேபின்க்கு போறேன். சாப்பிடும் போது பேசிக்கலாம் அஷ்வின் ..என்று அறையை விட்டு சித்து வெளியேறினான்.

தொலைபேசி ஒலித்தது....
ஹலோ!,,,
"சார், நம்ம வங்கில அக்கவுண்ட் வச்சிருக்க கஸ்டமர் லோன் விஷயமா உங்ககிட்ட பேசணும்னு சொல்றாங்க, உள்ள அனுப்பலாமா"?
" அனுப்புங்க செந்தில்" என்று தொலைபேசி இணைப்பைத் துண்டித்தான்.

கதவை தட்டும் சப்தம் அறிந்து , "உள்ளே வாங்க" என்றான் அஷ்வின்.
உக்காருங்க ,என்ன விஷயம் சொல்லுங்க.

"வணக்கம் சார்.. என் பெயர் ரமேஷ், நான் நம்ம வங்கில ரொம்ப வருஷமா சேமிப்பு கணக்கு வச்சுருக்கேன், இப்ப வீடு கட்டலாம்னு இருக்கேன். வீட்டுக்கடன் வாங்கலாம்னு முடிவு பண்ணிருக்கேன். மாத வட்டி எவ்வளவு வரும், லோன் கிடைக்க எத்தனை நாள் ஆகும், இந்த விபரம் எல்லாம் தெரிஞ்சிக்க தான் வந்தேன் சார்" என்றார்..

அப்படியா! நல்ல விஷயம் தான்,, லோன் அப்லிக்கேஷன் ஃபார்ம் நிரப்பி கொடுக்கணும், வீட்டு கடன் வாங்க தேவையான ஆவணங்கள் எல்லாம் கொண்டு வந்து சமர்ப்பிக்கனும். எல்லாம் சரியா இருந்தா இரண்டு இல்ல மூன்று வாரத்துல லோன் கிடைக்கும் ரமேஷ். லோன் வாங்க தேவையான ஆவணங்கள் என்ன என்று செந்தில் சொல்லுவாங்க.
"ரொம்ப நன்றி சார் நான் அப்ப கிளம்புறேன் " என்று வெளியேறினார் ரமேஷ்.

சிறிது நேரம் கழித்து பசி வயிற்றை கிள்ள, கைக்கடிகாரத்தை பார்த்து ஹையோ! ஒரு மணியா அதுக்குள்ள.....அப்போ சாப்பிட போகலாம் என்று கிளம்பினான் அஷ்வின்.

சித்துவிற்கு போன் செய்து நேராக ரெஸ்டாரன்ட் வர சொல்லிடலாம் என கைபேசி மூலம் சித்து க்கு தகவல் சொல்லிவிட்டு, முதலில் ரெஸ்டாரன்ட் வந்து எதிர் எதிராக இருவர் அமரும் இருக்கையைத் தேடி அமர்ந்தான்.

ஃபுல் மீல்ஸ் ஆர்டர் கொடுத்து விட்டு உணவு வருவதற்காக காத்திருந்தான்.

சற்று நேரத்தில் சித்தார்த் வந்து எதிரில் அமர்ந்தான்.
"வா டா,, ஆர்டர் பண்ணிட்டேன் இப்ப வந்துடும்".
ஹ்ம்ம்...ஓகே! அஷ்வின்..என்று தன் கைபேசியை நோண்ட ஆரம்பித்தான் சித்து..

கன்னத்தில் கைவைத்துக் கொண்டு சுவரை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த அஷ்வினை, நீ உன் குழப்பத்துக்கு காரணம் என்னவென்று சொல்லவே இல்லையே என்று மீண்டும் சித்து ஆரம்பித்தான்.

அது வந்து....ஒன்னும் இல்லையே.... விடு , சும்மா யோசிக்கிறேன் சித்து என தடுமாறினான்.

உன் பேச்சிலே ஏன் இவ்வளவு தடுமாற்றம் எதுவாக இருந்தாலும் சொல்லுடா என்று சித்து கேட்கவும்,

இன்னிக்கு ஆபீஸ் வர வழியில பேருந்தில் ஒரு பெண்ணை பார்த்தேன்.... அவள் முகம் இன்னும் என் கண்ணுக்குள்ளேயே நிக்குது.! எப்படி சொல்றதுன்னு தெரியல.... மனசுக்குள்ள இனம்புரியாத அன்பு, ஒரு விதமான தேடல்.. ஏக்கம்.. என்னனு ஒன்னும் புரியல... ஆனா, அவளைப் பார்த்த நிமிஷத்திலிருந்து நான் நானாகவே இல்லைனு மட்டும் தெரியுது.. என்று அஷ்வின் தன் மனதில் இருந்தவற்றை கொட்டித் தீர்த்தான்.

அந்த பொண்ணு உனக்கானவளா இருந்தா மறுபடியும் கண்டிப்பா பார்ப்ப கவலையை விடு என்று ஆறுதலாக பேசினான் சித்து.

எத்தனையோ பெண்களை கடந்து வந்த இவனுள் இவள் மட்டும் எப்படி கருத்தில் பதிந்தால் என்பது புரியாத புதிராக இருந்தது ....

சற்று நேரத்தில் உணவு வந்துவிட இருவரும் நன்கு ருசித்து சாப்பிட்டு விட்டு அலுவலகம் திரும்பினர்...

பூத்துக்குலுங்கும் மலர்கள்.... பற்றி படரிக்கிடக்கும் செடிக் கொடிகள்.......மாலைப்பொழுதின் தென்றல் காற்றுப் பட்டு அசைந்து கொண்டிருந்தன!..

செடிகளுக்கு எல்லாம் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தாள் யாழினி.. கோவிலுக்குச் செல்வதற்காக மாலை தொடுக்க நினைத்து சில மல்லி அரும்புகளைப் பறித்துக் கூடையில் போட்டுவிட்டு, தன் தலையை அலங்கரிக்க ரோஜா மலர்களையும் பறித்துக் கொண்டாள்.

"பூப்பறிச்சிட்டு சீக்கிரம் வா யாழினி நேரத்தோடு கோயிலுக்கு போயிட்டு வரலாம்" என்று குரல் கொடுத்தால் தேன்மொழி.

இதோ வந்துட்டேன் அம்மா!! என்று பதில் கூறியவாறு பூக்களை எல்லாம் மேசையில் வைத்து விட்டு கோவிலுக்குப் போக தயாராக அவளது அறையை நோக்கி நடந்தாள்.
" ஊதா வண்ணப் புடவை அணிந்து சிவப்பு மற்றும் மஞ்சள் நிற ரோஜாவை தன் ஜடையில் வைத்து, சிவப்பு நிற பொட்டு நெற்றியிலும், கை நிறைய கலகலவென ஓசை எழுப்பும் வளையல் அணிந்து, முகம் நிறைய சிரிப்புடன், நான் ரெடி ஆகிட்டேன் அம்மா" என்று வெளியே வந்தாள்...

"தேவதை மாதிரி இருக்கியே!!! என் கண்ணே பட்டுவிடும் போல! என்று தன் கையால் திருஷ்டி எடுத்து தலையில் சொடக்கு போட்டுக்கொண்டால் தேன்மொழி"..

மல்லி அரும்புகளை மட்டும் தொடுத்துவிடு யாழினி நான் சீக்கிரம் வந்திடுறேன் என்று நகர்ந்தாள்..

ஒவ்வொரு மல்லி அரும்புகளாக எடுத்து மாலை தொடுக்க, மறுபுறம் இவளது நினைப்பை மட்டுமே கோர்த்து ஏங்கிக் கொண்டிருந்தான் அஷ்வின்...

சற்று நேரத்தில் தேன்மொழி ரெடியாகி வர இருவரும் தன் ஊரில் இருக்கும் கோவிலுக்கு சென்றனர்.

எங்கு பார்த்தாலும் மக்கள் திரள், உள்ளமெங்கும் உற்சாகக் கழல், இருண்டு வந்த மேகம் போல் ஊர் மக்கள் திரண்டு சூழ்ந்து நின்றனர். மேள தாளமுழக்கங்கள் ஊரையே திரட்டியது.

"கரகாட்டம், பொம்மலாட்டம், பட்டிமன்றம், தெருக்கூத்து" என ஒருபுறம் திருவிழா கலைக் கட்டியது.

அழும் குழந்தைக்கு அருகிலேயே வந்து விற்கும் பலூன்காரன்... பட்டாம்பூச்சிகளாக ராட்டினத்தில் சுற்றும் சிறுவர்கள்.....

எப்போதும் போல எதுவும் பேசாமல் மெளனமாய் அமர்ந்திருக்கும் சாமியை கும்பிட்டுக் கொண்டிருக்கும் யாழினியை பின்னால் யாரோ தட்டி அழைப்பதை உணர்ந்து, யாறென்று திரும்பிப் பார்த்தவள் அதிர்ச்சியில்
உறைந்து நின்றாள்...

மலரும்....

 

vani sri

Saha Writer
Team
Messages
17
Reaction score
1
Points
1
மலர் 3:

‍‍ சற்றும் எதிர்பாராத அவனது சந்திப்பில், மொழிகளை மறந்து ஊமையாகி, கனவா? நிஜமா? என சிறிதுநேர தடுமாற்றத்துடன், காதல் வலி உச்சம் தொட, கண்கள் இரண்டும் கண்ணீர் வடித்தது.
யாழினியின் கண்களில் வழியும் நீரை அவனது கையால் துடைத்து விட்டு, "அழாதே யாழினி, நான் தான் உன்னை பார்க்க வந்துட்டேனே!
நீ என்கூட வெளியில வா பேசிக்கலாம்" என்று கூப்பிட, அவன் பின்னே சென்றாள்.

கோவில் பின்புறம் இருக்கும் ஆற்றங்கரைக்கு இருவரும் செல்ல, "உனக்காக ரெண்டு வருஷமா நான் காத்துட்டு இருக்கேன். உன்னை என் லைஃப்ல மறுபடியும் பார்க்க மாட்டேனானு இவ்வளவு நாள் ஏங்கிட்டு இருந்தேன், இப்பதான் என்ன வந்து பார்க்கணும்னு தோணுச்சா?" என்று அடைப்பட்ட சோகங்கள் அவள் விழிதனில் கண்ணீராய் பொழிய, தீரா காதலோடு ஏங்கி காத்திருந்தவள், அவன் தன் இரு கையினால் தன்னவளை அணைக்க, காத்திருந்த நிமிடம் எல்லாம் தொலைந்து போனது மன்னவனின் அணைப்பில்.

"இவ்வளவு நாள் எனக்காக காத்திருந்தது போதும். நாம சேர்ந்து வாழப் போகிற நாள் ரொம்ப தொலைவில் இல்லை! சீக்கிரமே நான் உன்னை கல்யாணம் செஞ்சுக் கூட்டிட்டு போய் விடுவேன்" எனத் தன்னவன் கூறிய வார்த்தைகள் காதில் தேன் வந்து பாய்ந்தது போல் இருந்தது. மல்லிகை மணத்திற்கு கூட மயங்க மறுக்கும் இவளது மனம் ஏனோ தன்னவனின் பேச்சில் மட்டும் மயங்கி விடுகிறது!

"யாழினி! யாழினி! தனியா இங்க வந்து ஏன் நிக்கிற? யார் கிட்ட பேசிட்டு இருக்க?" புரியாமல் தேன்மொழி கேட்க,

அம்மாவின் குரல் கேட்டு சுய நினைவிற்கு வந்தவள்,

"அம்மா.. அது வந்து.. என் கூட.." என்று தடுமாற, கண்கள் அவனைத் தேடி அலைப்பாய்ந்தன. "என்ன ஆச்சு உனக்கு? வா என்னோடு " என்று அவள் கையைப் பிடித்து இழுத்துச் சென்றாள் தேன்மொழி.

கற்பனையாய் தன்னவனோடு பல ஆண்டுகள் வாழ்ந்தவள், கனவெல்லாம் நிஜமாக போகிறது என ஆசையிலிருந்த அவளின் இதயம், உடைந்த கண்ணாடி போல ரணமனது.

"நீ கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்துக்க யாழினி" என்று அவள் அறையில் விட்டு, தனிமையில் தன் மகள் நடந்துக் கொண்டதை நினைத்து, அவளுக்குள் ஏதோ பிரச்சனை இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டு, அதை எப்படியாவது தெரிந்து விட வேண்டும் என்ற யோசனையில் தன் அறைக்குச் சென்றாள் தேன்மொழி.

அறையில் அடைப்பட்ட யாழினியின் மனமோ, தேன் பருக மலரை சுற்றி வரும் வண்ணத்துப்பூச்சி போல அவன் காதலைத் தேடி அவனையே வட்டமிட்டுக் கொண்டிருந்தது.

ஊரில் சொந்தமாகப் பள்ளி நடத்தி வரும் அளவுக்கு வசதியானவர் கார்த்திகேயன். தன் மனைவி தேன்மொழியையும் அந்தப் பள்ளியில் ஆசிரியராக பணி புரிய வைத்தார். தனது ஒரே மகளான யாழினியும் ஆசிரியராக வேண்டும் என்ற நினைப்பு தன் மனதில் இருந்த போதிலும், மகளை வற்புறுத்தாமல் அவளது ஆசைக்கு இணங்கி பொறியியல் பட்டப்படிப்பு படிக்க வைத்தார். யாழினி பொறியியல் துறையில் மேற்படிப்பையும் முடித்துவிட்டு பெங்களூரில் உள்ள தனியார் சாப்ட்வேர் கம்பெனியில் பணிபுரிந்து வந்தாள். மாதத்திற்கு ஒருமுறை தன் வீட்டிற்கு வந்து அம்மா அப்பாவுடன் சந்தோஷமாக மூன்று அல்லது நான்கு தினங்கள் இருந்து விட்டு மறுபடியும் செல்வது வழக்கம். தான் சம்பாதித்து குடும்பத்தை நடத்த வேண்டும் என்கிற கட்டாயம் இல்லாததால் துணிந்து அடிக்கடி விடுப்பு எடுத்து விட்டு தன் குடும்பத்துடன் இருப்பதற்காக வந்துவிடுவாள்.

தேன்மொழி கார்த்திகேயன் இருவருமே எப்பொழுதும் அவள் வருகையை எதிர்பார்த்துக் கொண்டே தான் இருப்பார்கள். பகல் பொழுது முழுவதும் பள்ளியில் செலவிட்டாலும் மாலை வீடு திரும்பியதும் யாழினி இல்லாதது ஒரு குறையாகவே இருக்கும். ஒரே மகள் என்பதால் செல்லம் கொஞ்சம் அதிகமாகவே தான் இருக்கும். இரண்டு வருடங்களுக்கு முன்பு தன் வேலையில் இருந்து விலகி, குடும்பத்துடன் இருக்க வேண்டும் என்ற ஆசையில் வந்து விட்டு, பள்ளி நிர்வாகத்தில் அப்பாக்கு உதவியாக இருந்து வருகிறாள்.

இரவு சிற்றுண்டி தயார் செய்து விட்டு எல்லோரும் வருவதற்காகக் காத்திருந்தாள் அமுதா. பல வருடங்களாக வீட்டில் வேலை செய்து வரும் விஸ்வாசமான வேலைக்காரி. அவள் செய்யும் வேலைக்கு அதிகமாகவே சம்பளம் கொடுப்பாள் தேன்மொழி. இதற்கு காரணம் அமுதாவின் ஏழ்மை நிலையும், தன் வீட்டில் எல்லா வேலையும் முகம் சுழிக்காமல் சந்தோஷமாக செய்து கொடுக்கும் குணமும் தான். நம்பகத்தன்மையான பெண்ணும் கூட. யாழினியை அமுதாவிற்கு மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு முறை வீட்டிற்கு வரும்போதும் ஏதேனும் பொருட்கள் அமுதாவிற்கு வாங்கி வருவாள். குழந்தை இல்லாத காரணத்தினால் யாழினியிடம் மிகவும் பாசம் காட்டுவாள்.

தேன்மொழியும் கார்த்திகேயனும் உணவு சாப்பிடுவதற்காக டைனிங் டேபிளில் வந்து அமர்ந்தனர். "தேனு, யாழினி இன்னும் சாப்பிட வரவில்லையா?" என்று கணவன் கேட்க
"ஆமாங்க, கோவில் போயிட்டு வந்து ரொம்ப அசதியில இருந்தான்னு நான் தான் தூங்கச் சொன்னேன். இன்னும் தூங்கிட்டுத் தான் இருப்பான்னு நினைக்கிறேன்" என்று தேன்மொழி சொல்லிக் கொண்டிருக்க ,
"நான் வேணும்னா போயி யாழினியை எழுப்பிவிட்டு வரவா ?" என்று குறுக்கிட்டாள் அமுதா.

"இல்லை நானே போய் கூட்டிட்டு வரேன் அமுதா "என்று யாழினியின் அறையை நோக்கி தேன்மொழி சென்றாள்.

யாழினியின் அறையின் வெளியே நின்று கூப்பிட்டு பார்த்துவிட்டு, என்ன சத்தத்தையே காணோம்! ஒருவேளை ரொம்ப அசந்து தூங்குறாப் போல, பரவாயில்லை எழுப்பி விடலாம் என மனதில் நினைத்துக் கொண்டு கதவைத் திறக்க, படுக்கையில் யாழினி இல்லாததை அறிந்து திடுக்கிட்டாள்.
"இந்த நேரத்துல வீட்ல இல்லாம எங்க போயிட்டா?"
"என்னங்க! என்னங்க!" என்று உரத்த குரலில் கணவனை அழைத்தபடி வேகமாக நடந்து வர,
"என்னம்மா? ஏன் சத்தம் போடுற?" என்று கார்த்திகேயன் கேட்க, "பின்வாசல் லைட் சீக்கிரம் போடுங்க, தோட்டத்தில யாழினி இருக்காளான்னு பார்க்கணும்" என்று படபடப்புடன் நடந்தாள்.

"யாழினி அவளோட அறையில இல்லாம இந்நேரத்துக்கு தோட்டத்துல என்ன பண்ணுறா?" என்ற குழப்பத்துடன் அதை வெளிக்காட்டாமல், "ஒருவேலை தோட்டத்துல காற்றோட்டமா இருக்கலாம்னு போயிருப்பா, நீ பதட்டப்படாமல் வா மா" என்று மனைவியை சமாதானப்படுத்திக் கொண்டே அவள் பின் நடக்க, அமுதாவும் நடப்பது புரியாமல் பின்தொடர்ந்தாள்.

"யாழினி! யாழினி! எங்க இருக்கம்மா? யாழினி! என்று கூச்சலிட்டும், சுற்றும் முற்றும் தேடியும் அவளைக் காணவில்லை.
"யாழினியைக் காணுமே, அவளை தனியா நான் விட்டிருக்க கூடாது. தப்புப் பண்ணிட்டனே!" என்று அழுதுக்கொண்டே தோட்டத்தில் தேன்மொழி ஒருபுறமாக அமர‌,
"நீ இப்படி அழுற அளவுக்கு யாழினி சின்னப் பொண்ணு இல்ல. இங்க தான் இருப்பாள், நிதானமாய் இரு" என்று சொல்லிக்கொண்டே, "அமுதா கொஞ்சம் தண்ணீர் எடுத்துட்டு வா" என்று திரும்ப,
அமுதா தலையிலிருந்து ரத்தம் வடிந்து போக கீழே கிடந்தாள்..

" ஐயோ அமுதா!!"என்று கூச்சலிட்டுக் கொண்டே இருவரும் அவள் அருகில் ஓட...

மலரும்...
 

vani sri

Saha Writer
Team
Messages
17
Reaction score
1
Points
1
மலர்: 4

விறுட்டென்று தண்ணீர் எடுத்து வந்து அமுதாவின் முகத்தில் தெளித்தார் கார்த்திகேயன். மகளைக் காணவில்லை என்ற பயத்தில் இருந்த தேன்மொழி, அமுதாவின் நிலைமையைப் பார்த்து மனம் பதறிப் போனாள்.

தண்ணீர் தெளித்த உடன் மயக்கம் தெளிய, அமுதாவின் தலையில் இருந்து வடிந்த இரத்தத்தை தன் புடவை நுனியால் தேன்மொழி துடைத்து எடுக்க, கைப்பேசி மூலம் குடும்ப மருத்துவருக்கு தகவல் கொடுத்து உடனே வரவழைத்தார் கார்த்திகேயன்.

அமுதாவை கைத்தாங்கலாகக் கூட்டி வரவேற்பறைக்கு அழைத்துச் செல்லவும், "அம்மா! அமுதவிற்கு என்ன ஆச்சு? எப்படி அடிப்பட்டது? என கேட்டப்படி படபடப்புடன் யாழினி வந்தாள். யாழினியைப் பார்த்தப் பின்பு தான் தேன்மொழிக்குப் போன உயிர் திரும்பி வந்தது போல ஒரு நிம்மதி.

"உன்னைக் காணும்னு தான் இவ்வளவு நேரம் எல்லாரும் தேடிட்டு இருந்தோம். நீ எங்க இருந்த யாழினி இவ்வளவு நேரம்?" என்று கோபத்தில் கத்தினாள் தேன்மொழி.
"அம்மா கோபப்படாதிங்க! முதல்ல அமுதாவிற்கு என்ன ஆச்சுன்னு பார்த்து அவங்கள கவனிப்போம் அப்புறம் பேசிக்கலாம்" என்று அமுதாவை சோபாவில் அமர வைத்து, அவள் அருகில் யாழினி அமர்ந்தாள்.

அமுதா தலையில் அடிப்பட்ட வேதனையில் துடித்துக் கொண்டிருக்க, "எப்படி அடிப்பட்டது தலையில" என்று அக்கறையுடன் யாழினி கேட்க,
"அவளை கொஞ்ச நேரம் தொந்தரவு பண்ண வேண்டாம் யாழினி. டாக்டர் வந்து ட்ரீட்மெண்ட் கொடுக்கட்டும் அப்பறம் எல்லாம் பேசிக்கலாம்" என யாழினியைத் தடுத்தார் கார்த்திகேயன்.

மகளின் வித்தியாசமான நடவடிக்கையும், வீட்டில் நடந்த சம்பவமும் தேன்மொழியின் மனதில் வேதனையை வாட்டியது. சற்று நேரத்தில் டாக்டர் வர, "தலையில் இப்படி ரத்தம் வருகிற அளவுக்கு எப்படி அடிபட்டது?" என்று கேட்க,
அமுதா ஏதும் பேசாமல் சிறிது நேரம் மௌனமாக இருந்தாள். பின்பு, "அது நாங்க தோட்டத்தில் இருந்தோம், அப்போது தென்னை மரத்திலிருந்து இளநீர் தலையில் விழுந்து அடிப்பட்டுக் கீழே விழுந்து மயங்கிட்டேன் டாக்டர்" என்று தயக்கத்துடன் சொன்னாள்.

அமுதா சொன்னதை எல்லோரும் நம்பி விட, தேன்மொழி மட்டும் அவள் தயக்கத்திலிருந்து பொய்யாக இருக்க வேண்டும் என எண்ணினாள். அடிப்பட்டது எப்படின்னு தெரியலைன்னு சொல்லி இருந்தால் கூட பரவாயில்லை, ஆனால் தென்னை மரம் பக்கமே அமுதா நிற்கவில்லையே! அப்புறம் எப்படி இளநீர் விழுந்திருக்கும்? கீழே இளநீர் எதுவுமே இல்லையே! அப்படியே அமுதா சொல்வது உண்மையாக இருந்தால் ஏன் அவளுடைய குரலில் இவ்வளவு தடுமாற்றம்? எனப் பல கேள்விகள் தேன்மொழி மூளையைக் குடைந்துக் கொண்டிருந்தன.

அமுதாவின் தலையில் ஏற்பட்ட காயத்திற்குக் கட்டுப்போட்டதுடன், சில வலி மாத்திரைகளையும் ஒரு வாரம் சாப்பிடச் சொல்லி கார்த்திகேயனிடம் கொடுத்தார் டாக்டர்.

"ஒரு வாரம் நல்ல ஓய்வு எடுத்தால் சரியாகிவிடும். மறுபடி தலைவலி வந்தால் எனக்கு உடனே சொல்லுங்கள்" என டாக்டர் கூற ,
"ஓகே டாக்டர்! நாங்க பாத்துக்குறோம். தேவைப்படும்போது நான் உங்களுக்கு போன் பண்றேன்" என்றார் கார்த்திகேயன்.

"எனக்கு ஓய்வு எடுக்கணும் போல இருக்கு அம்மா. நான் ஏதாவது ஒரு அறையில் கொஞ்ச நேரம் தூங்கி விட்டு அப்புறம் வீட்டுக்கு போறேனே!" என்று மெல்லிய குரலில் அமுதா கேட்க ,
"இது என்ன கேள்வி அமுதா? வா என்கூட" என்று அவளை கைபிடித்து தன் அறைக்கு அழைத்துச் சென்றாள் தேன்மொழி.

"நான் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்" என அமுதா கூற வர, "என்ன அமுதா சொல்லு "என்று ஆர்வத்தோடு தேன்மொழி கேட்க, யாழினி பின்தொடர்வதை அறிந்தவள், " நான் ஒருவாரம் விடுப்பு எடுத்துக்கலாம்னு நினைக்கிறேன்" என்று தான் சொல்ல வந்த விஷயத்தைச் சொல்லாமல் மறைத்தாள் அமுதா.

பொய் மேல் பொய் கூறுவது தெரிந்தும், "அதற்கு என்ன? நல்ல ஓய்வு எடுத்து உடம்பு சரியானதும் வேலைக்கு வா போதும் " என்று நம்பியது போல் தேன்மொழி பேசினாள். அமுதாவை தன் அறையில் உள்ள படுக்கையில் படுக்க வைத்து விட்டு, "நீ உன் வேலை ஏதும் இருந்தால் பாரு மா யாழினி. நான் அமுதா கூட இருக்கேன்" என்று தன் மகளை அங்கிருந்து விரட்டினாள் தேன்மொழி.

தேன்மொழி விடிவதற்காக காத்திருக்க, அவள் அருகில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தால் அமுதா. உறக்கத்திலிருந்து அமுதா விழிப்பதை அறிந்து கதவை தாழ் இட்டு, "அமுதா நீ என்கிட்ட ஏதோ ஒரு விஷயம் சொல்ல நினைக்கிற ஆனால் சொல்லாமல் மாற்றி மாற்றி பேசுற. என்னவென்று சொல்லப் போறியா இல்லையா?" என்று கோபமாகக் கேட்க,
" அம்மா...அது...." முகமெல்லாம் வியர்க்கப், பதட்டத்தில் வார்த்தையை விழுங்கினாள்.

இவளின் இந்த பாவனையைக் கண்டதும் மேலும் மேலும் குழப்பத்திலும் பயத்திலும் நொந்துப் போனாள் தேன்மொழி.

"நீ என்ன சொல்ல வரேன்னு பயப்படாம தெளிவாகச் சொல்லு அமுதா. இங்க உன் கூட நான் மட்டும்தான் இருக்கேன்" என்று தன் ஆவேசத்தை கட்டுப்படுத்திக் கொண்டு நிதானமாக தேன்மொழி கேட்டாள்.
"நம்ம வீட்டுல!... கீழே!...." என அமுதா திக்கி திக்கி சொல்ல,
"கீழே!..... நம்ம வீட்டுல!..... நம்ம வீட்டில் என்ன? என்று அச்சத்துடன் தேன்மொழி கேட்க,

"ஸ்டோர் ரூம்ல!...... " அமுதா கூறவும்,

"தேனு! தேனு!" என்று கூப்பிட்டுக் கொண்டே கார்த்திகேயன் கதவை தட்டும் சப்தம் கேட்டு கதவைத் திறந்தவள், ஏன் இப்படி அவசரமாக தட்டுறீங்க?" கோபத்தில் சீறினாள் தேன்மொழி.

"நம்ம வீட்டுக்கு அர்ஜுன் வந்துருக்கான் தேனு! அதனாலதான் உன்னை கூப்பிட வந்தேன்", என்று சொல்லவும், முகத்தில் புன்னகை மலர "அர்ஜுன் வந்திருக்கானா!!" என கேட்டப்படி அவளது அறையை விட்டு வெளியே போனாள்.

"அம்மா!... அம்மா!...." என்று அமுதா அழைக்க, அதைக் கவனிக்காமல் தேன்மொழி நகர்ந்தாள்.

"எப்படி இருக்க அர்ஜுன்? அம்மா அப்பா நல்லா இருக்காங்களா?" என்று தேன்மொழி நலம் விசாரிக்க,
"என்னடா...! பல வருஷம் கழிச்சு இப்பதான் வீட்டுப்பக்கம் வந்திருக்க! இவ்வளவு நாள் எங்க போனீங்க சார்?" என்று நக்கலாக யாழினி கேட்டுக் கொண்டே வர,

"பார்த்திங்களா ஆன்ட்டி! நான் பல வருஷம் கழிச்சு வரேனாம்! எல்லாம் என் நேரம்" என்று சிரித்துக்கொண்டே அர்ஜுன் பதில் சொல்ல, "ரொம்ப நொந்துக்காத டா அர்ஜுன், உள்ளதைத் தானே சொன்னேன்! என யாழினி விடாமல் அவனை வம்புக்கு இழுக்க,
"உங்க சண்டை எல்லாம் அப்புறமாக வச்சுக்கலாம். அவனைக் கொஞ்ச நேரம் வந்த விஷயத்தைச் சொல்ல விடு" என யாழினியை அமைதிப்படுத்தினார் கார்த்திகேயன்.

"அப்பா! அவனுக்கு ரொம்ப தான் நீங்க சப்போர்ட் பண்றீங்க!" எனச் செல்லமாகக் கோபித்துக் கொண்டாள். "நான் போய் குடிக்க ஜூஸ் எடுத்துட்டு வரேன். நீங்க எல்லாரும் பேசிட்டு இருங்க" என்று தேன்மொழி சொல்லவும், "ஆன்ட்டி! நீங்க ஏன் போறீங்க? அமுதாவைக் கொண்டு வர சொல்லுங்க. நீங்க போய் ஏன் சிரமப்படுறீங்க?" என்று அர்ஜுன் கேட்க, "ஜுஸ் போடுறதுல எந்த கஷ்டமும் இல்லை" என்று சிரித்துக் கொண்டு சமையலறையை நோக்கி நடந்தாள் தேன்மொழி.

வீட்டில் நடந்ததை அர்ஜுனிடம் கார்த்திகேயன் கூறவும், "ஐயோ! அமுதா இப்ப எப்படி இருக்காங்க? இப்போ உடம்புக்குப் பரவாயில்லையா?" என அக்கரையுடன் கேட்டான். இப்ப ஒன்னும் பிரச்சனை இல்லை, ஆனால் டாக்டர் ஒரு வாரத்திற்கு வேலை எதும் செய்யக் கூடாதுன்னு சொல்லி இருக்காங்க" என்று கார்த்திகேயன் கூறி முடிக்க, தேன்மொழி ஜூஸ் எடுத்து வந்தாள்.

தேன்மொழி எடுத்துவந்த ஜூஸை குடித்துவிட்டு, "வருகிற சனிக்கிழமை என்னோட பிறந்த நாள். நீங்க எல்லாரும் வீட்டுக்கு வந்தா சந்தோஷமாக இருக்கும்" என்று அர்ஜுன் சொல்ல, "எங்களுக்கு உன் பிறந்த நாள் நல்லாவே ஞாபகம் இருக்கு அர்ஜுன். நீ சொல்லாமல் இருந்தாலும் வந்து இருப்போம்" என்றாள் தேன்மொழி. "இங்க பக்கத்துல நிக்கிற ஒருத்திக்கு ஞாபகமிருக்கா தெரியலையே! அதனால்தான் சொன்னேன்" என்று அர்ஜுன் விளையாட்டாகச் சொல்ல,
"ஞாபகம் இருக்கு டா.. போ! போ! நாங்க வந்து விடுவோம்" என்று நக்கலாகச் சொன்னாள் யாழினி.

"டைம் ஆகுது, அப்ப நான் கிளம்புறேன். சனிக்கிழமை பார்க்கலாம் ஆன்ட்டி. போயிட்டு வரேன் அங்கிள், சி யூ! யாழினி! என்று அர்ஜுன் புறப்பட, தேன்மொழி உடனே தனது அறையை நோக்கி விரைந்தாள்.

“ஏதோ சொல்ல வந்தியே அமுதா! என்னன்னு மறுபடியும் சொல்லு!" என்று படபடப்பாகக் கேட்க,

"அதான்.... கீழே...." என அமுதா தடுமாற,

"இன்னும் மேலே சொல்லு", என்று அவசரப்படுத்தினாள் தேன்மொழி.

"ஸ்டோர் ரூம், ஸ்டோர் ரூம்", என்று அமுதா கூற,
" ஸ்டோர் ரூம்ல என்னன்னுச் சொல்லு" என்று தேன்மொழி கேட்க,

"அதை நீங்கதான் போய் தெரிஞ்சுக்கனும்" என்று புதிர் வைத்தாள் அமுதா.

ஸ்டோர் ரூம் இல் மறைந்திருக்கும் மர்மம் என்ன? என்ற புரியாத புதிருடன்!!! தேன்மொழி..........

மலரும்.....
 

vani sri

Saha Writer
Team
Messages
17
Reaction score
1
Points
1
மலர் 5:

சித்துவின் கைப்பேசி ஒலி எழுப்ப, "ஹலோ! சொல்லுடா!" என்று சித்து அழைப்பை ஏற்க,

மறுமுனையில் அஷ்வின், "டேய்! உனக்கு சனிக்கிழமை என்ன பிளான்? என்று கேட்க,

சித்து சிறிது யோசித்துவிட்டு, "பெருசா எதுவும் இல்லை...எப்பவும் போல வீட்ல தான்" என்றான்.

"அப்படின்னா என்கூட என் நண்பனை சந்திக்க வரியா? உனக்கு அவனை அறிமுகம் செய்கிறேன்" என்று அஷ்வின் சொல்ல,

" வரேன் டா! போயிட்டு வரலாம் அஷ்வின்!" என்று சித்து சம்மதித்தான்.

"ஓகே! நானே கார்ல வந்து உன்னைக் கூப்பிட வரேன்" என்று அஷ்வின் இணைப்பைத் துண்டித்தான்.

ரொம்ப நாள் கழிச்சி அர்ஜுனை பார்க்கப் போறோம்... எதுவுமே வாங்காமல் போனால் எப்படி? என்று சிந்தித்தபடி, அஷ்வின் டிவி மேசையில் உள்ள தனது கார் சாவியை எடுத்து விட்டு வெளியே புறப்பட,

"அஷ்வின்! அவசரமா எங்கடா கிளம்பிட்டு இருக்க? என்றாள் ரேகா. "

"கிப்ட் ஷாப் வரை போறேன் அம்மா. அர்ஜுன் தெரியும் தானே உங்களுக்கு? அவனை சனிக்கிழமை போய் சந்திக்கலாம்னு இருக்கேன். அவனுடைய பிறந்த நாளும் கூட.. அதான்..." என்றான் அஷ்வின்

"ஓ! அப்படியா! நல்ல விஷயம் தான். என்ன வாங்கிக் கொடுக்கப் போறே?" என்று ரேகா கேட்க,
"அதான் தெரியல அம்மா... போய் பார்த்தால் ஏதாவது ஐடியா கிடைக்கும் என்று அஷ்வின் குழப்பத்துடன் பதில் கூற,

" சும்மா காட்சிப் பொருளாக வைக்கிற மாதிரி இல்லாம ஏதாவது பயனுள்ளதா வாங்கிக் கொடு டா" என்றாள் ரேகா.

" நீங்க சொல்றதும் சரி தான்! நான் பார்க்கிறேன் அம்மா" என்று அஷ்வின் கிளம்பிக் காரை திறந்து உள்ளே உட்கார்ந்தவன் சட்டென்று வெளியே இறங்கி, அனு! அனு! என்று கூச்சலிட்டான்.

"சொல்லு அண்ணா! ஏன் இவ்வளவு அவசரமா கூப்பிடுற?" என்று உள்ளே இருந்து அவன் அருகே வந்தாள் அனு.

"என் கூட பக்கத்துல இருக்கிற கிப்ட் ஷாப் வரைக்கும் நீ ப்ரீயா இருந்தா வர முடியுமா? என அஷ்வின் கேட்க,

"பத்து நிமிஷம் வெயிட் பண்ணுடா ரெடியாயிட்டு வந்துடுறேன்" என்று விரைந்து சென்றாள் அனு.

சில நிமிடங்களில் புறப்பட்டு வந்தவள் காரில் வந்து அமர, இருவரும் கிளம்பினர்.

"யாருக்கு கிப்ட் வாங்கப் போறேன்னு சொல்லவே இல்லையே!" என வினவினாள் அனு.

"வேற யாருக்கு? பிளாஷ்பேக் பார்ட்டிக்கு தான்!" என்று கிண்டலாக அஷ்வின் சொல்ல,
" ஐயோ! அவனா!!!" என்று வாயைப் பிளந்தாள் அனு.
"அவனோட மொக்கையை எப்படி தான் வீட்டில சமாளிக்கிறாங்ளோ?" என்று அனு நக்கலாக சொல்ல,

"அவனோட அப்பா அம்மாவை விட்டு தள்ளு, அவன்கிட்ட படிக்குற பிள்ளைகள் நிலைமையை யோசிச்சுப் பாரு!" என்று கலகலவென சிரித்தான் அஷ்வின்.

"ஆமா ! ஆமா! தப்பு பண்ணிணா அடிக்கவே தேவையில்லை! ஏதாவது ப்ளாஷ் பேக் சொன்னா போதும் ஜென்மத்துக்கும் தப்பு பண்ண மாட்டாங்க" என அனு சிரிப்பை அடக்க முடியாமல் சிரிக்க, கண்களின் ஓரத்தில் நீர் வழியும் வரை சிரித்தாள்.

"அர்ஜுன் நம்ம வீட்டுக்கு வந்து ரொம்ப நாள் ஆச்சே! நீ எப்ப போய் பார்க்க போற?" அனு கேட்க,

"இந்த சனிக்கிழமை அவனோட பிறந்தநாள், அதான் போய் பார்க்கலாம்னு இருக்கேன் அனு. சும்மா போக வேண்டாமே ஏதாவது கிப்ட் வாங்கிட்டு போலாம்னு யோசிச்சேன்" என்று அஷ்வின் சொல்ல,

"உன்னை பார்த்ததும் அர்ஜுன் ரொம்பவே சந்தோஷப்படுவான்" என்றாள் அனு.

"நான் வரேன்னு அவன் கிட்ட இன்னும் சொல்லவே இல்லை.. சர்ப்ரைஸா இருக்கட்டும்னு விட்டுட்டேன்" என அஷ்வின் கூற,

"அப்படியா! அதுவும் சரிதான்... ஆனால் அர்ஜுனுக்கு எதுக்கும் சும்மா போன் பண்ணி பேசிட்டு போ" என்று யோசித்துக் கொண்டே தயக்கமாக அனு சொல்ல,

"ஏன் அப்படி சொல்ற?" என்று புரியாமல் அஷ்வின் கேட்டான்.

"அட! அண்ணா! சனிக்கிழமை ஒருவேளை அர்ஜுன் ஸ்கூலுக்கு மீட்டிங் இல்லை ஸ்பெஷல் கிளாஸ் என்று போயிட்டா? அதுக்கு தான் சொன்னேன்" என்றாள் அனு.

"அதுக்காக சொல்றியா? நான் ஒரு நிமிஷத்துல குழம்பி போயிட்டேன். சரி நான் போன் பண்ணி பேசிக்கிறேன்" என்றான் அஷ்வின்.

"ஏய் அனு! நீயும் வரலாமே என் கூட?" என்று அஷ்வின் அழைக்க,

"எனக்கு முக்கியமான வேலை இருக்கு அண்ணா, விட்டுட்டு வர முடியாது" என்று அனு மறுக்க,

"அப்படி என்ன முக்கியமான வேலை மேடம்? என்று கேலியாக அஷ்வின் கேட்டான்,

"வேறு என்ன? தூங்குறது தான்!" என்று சொல்லி சிரித்தாள் அனு.

வம்பு பேசிக் கொண்டே இருவரும் கடையை அடைந்தனர்.
கடையில் இருந்த பொருட்களை எல்லாம் கடைக்காரன் எடுத்துக் காட்டினார். அதில் சிலவற்றை அனு வாங்கலாமா என அஷ்வினிடம் கேட்க, ஒவ்வொன்றிற்கும் ஏதோ ஒரு குறை சொல்லி தவிர்த்தான். நேரம் ஆக ஆக பொறுமையை இழந்தாள் அனு.

"இந்தப் பாரு அண்ணா! நீ இந்த ஜென்மத்துல கிப்ட் வாங்கப் போறது இல்லை! அதனால நானே செலக்ட் பண்றேன் நீ காசு மட்டும் கொடு போதும்" என்று செல்லமாக அனு கோபித்துக்கொள்ள,

"சரி! சரி! கோபப்படாமல் நீயே பிடிச்ச மாதிரி ஏதாவது வாங்கு" என்று சொல்லி, அஷ்வின் கடையில் இருக்கும் பொருட்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தான்.

"இந்த வாட்ச் மட்டும் பேக் பண்ணிடுங்க" என்று கடைக்காரரிடம் கூறினாள் அனு.

"ஒரு கிப்ட் வாங்க கூட இவ்வளவு குழப்பமா அண்ணா?" என்று நொந்துக் கொண்டாள் அனு.

பதில் ஏதும் பேசாமல் முகத்தில் சிரிப்பை மட்டும் காட்டி அஷ்வின் காரை எடுக்க, இருவரும் வீட்டிற்கு புறப்பட்டனரர்.

ஸ்டோர் ரூம் ல அப்படி என்னதான் இருக்கிறது? என்று தெரிந்துக் கொள்ள ஆவலோடு சென்றாள் தேன்மொழி. ரூம்-ஐ திறக்க முயற்சிக்க, பூட்டுப் போட்டு உள்ளதை அறிந்து சாவியை எடுக்க போனாள். வரவேற்பறையில் உள்ள அலமாரியின் பக்கம் சாவிகள் தொங்கும் இடத்தில் இருந்து சாவியை எடுத்துக்கொண்டு மறுபடியும் திறக்க முயற்சித்தாள். பூட்டைத் திறக்க முடியவில்லை! சாவியை யாரோ மாற்றியிருக்க வேண்டும் என்று கோபத்தில் கையில் இருந்த சாவியைத் தூக்கி எறிந்துவிட்டு, யாழினியின் அறையை நோக்கி தேன்மொழி சென்றாள்.

ஸ்டோர் ரூம்ல இருக்கும் விஷயத்திற்கும் யாழினிக்கும் கண்டிப்பாக ஏதோ சம்பந்தம் இருக்க வேண்டும் அதனால்தான் யாழினியை பார்த்ததும் அமுதா பேச்சை மாற்றி இருப்பாள் என்று தேன்மொழி யூகித்துக் கொண்டே, யாழினி அறையின் வெளியே நின்று மகளை அழைக்க, கதவைத் திறந்தாள் யாழினி!

"நீ இன்னும் ஸ்கூலுக்கு கிளம்பலையா? பத்து மணிக்கெல்லாம் ஆசிரியர் பெற்றோர் கூட்டம் ஆரம்பிச்சுடும்! அப்பா உனக்காக கீழே வெயிட் பண்ணிட்டு இருக்காங்க" என்று தேன்மொழி சொல்லவும்,
" ஓ! அப்படியா! அதுக்குள்ள கிளம்பிட்டாங்களா? நானும் தயாராக தான் இருக்கேன் அம்மா. வாங்க போகலாம்!" என்று தன் கைப்பையை எடுத்துவிட்டு வெளியே வந்தாள் யாழினி.

அப்பாவுடன் தேவையான பைல்கள் எல்லாம் எடுத்துக்கொண்டு கிளம்பினாள் யாழினி.

இது தான் சரியான சந்தர்ப்பம் என எண்ணி யாழினியின் அறையில் சாவியைத் தேடி சோதனை செய்ய முடிவு செய்தாள் தேன்மொழி.

அலமாரியில் வைத்து இருந்த துணிமணிகள் எல்லாத்தையும் உதறி பார்த்து விட்டு, சில புத்தகங்கள் வைத்திருந்த இடத்தையும் அலசி ஆராய்ந்தாள் தேன்மொழி.

கட்டில் கீழே தேடிப் பார்த்தும் சாவி கிடைக்கவில்லை. கடைசியாக கட்டிலில் போட்டிருந்த மெத்தையைக் கூட விட்டு வைக்காமல், தூக்க முடியாமல் தூக்கி போராடி தேடிப் பார்த்து விட்டாள். ஆனாலும் சாவி இருப்பதற்கான அறிகுறியே இல்லை என்றதும் ஏமாற்றத்துடன் யாழினி அறையிலேயே அமர்ந்தாள் தேன்மொழி.

ஒருபுறம் சாவி யாழினியின் அறையில் இல்லாத காரணத்தினால் யாழினிக்கும் அமுதா சொன்னதுக்கும் சம்பந்தம் இல்லை போல என்று நினைத்து, தேன்மொழி நிம்மதி அடைந்து பெருமூச்சு விட்டாள். அமுதாவிற்கு சாவி பற்றி கண்டிப்பாகக் தெரிந்திருக்கும், ஆனால் அவளிடம் கேட்டாள் சொல்லுவாளா? என்று தேன்மொழி குழப்பத்தில் யாழினியின் அறையில் இருக்கும் ஜன்னல் வழியாக கீழே பூந்தோட்டத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

சரி இப்படியே நின்று யோசிப்பதில் எந்த பயனும் இல்லை என்பதை தேன்மொழி உணர்ந்து, அமுதாவிடமே கேட்டுவிடலாம் என்று தன் பார்வையைத் திருப்ப ஜன்னலின் ஓரத்தை பார்த்தவள் அதிர்ந்து போனாள்.

அஷ்வின் அனு இருவரும் கிண்டலும் கேலியுமாக பேசியவாறு காரில் வீட்டிற்கு சென்றுக் கொண்டிருக்க, அஷ்வின் கைபேசி ஒலித்தது..
"நீ ட்ரைவ் பண்ணு, நான் அட்டென்ட் பண்றேன். "என்று அனு போனை ஸ்பீக்கரில் போட்டு விட்டு,
"உன் ப்ரண்ட் சித்து தான்!" என்று கூறினாள் அனு.

"ஹலோ! ஹலோ! சித்து...! ஹலோ...!
என்று அஷ்வின் பேச,
மறுமுனையில் மெல்லிய குரலில் கண்ணீர் மல்க "தம்பி! நான் சித்துவோட அம்மா பேசுறேன்!" என்ற பதில் வர,

" சொல்லுங்க ஆன்ட்டி! ஹலோ....! என்ன ஆச்சு..? ஹலோ.....! ஹலோ...! என்று படபடப்புடன் அஷ்வின் பேச,
மறுமுனையில் இருந்து எவ்வித பதிலும் இல்லை.....

மலரும்...
 

vani sri

Saha Writer
Team
Messages
17
Reaction score
1
Points
1
மலர் 6:

"ஹலோ! சொல்லுங்க ஆன்ட்டி! ஏன் அழுறீங்க? என்ன ஆச்சு சொல்லுங்க?" என்று அஷ்வின் பதட்டத்துடன் கேட்க,

" சித்துவை ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்கு. நீ கொஞ்சம் வந்தால் நல்லா இருக்கும் பா" என்று ஜெயா மறுமுனையில் குமுறினாள்.

"ஐயோ! சித்து விற்கு என்ன? எந்த ஹாஸ்பிடல்னு சொல்லுங்க ஆன்ட்டி! உடனே வரேன்" என்று அஷ்வின் தவிப்புடன் சொல்லவும்,

"பிரபா ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணிருக்கு" என்றாள் ஜெயா.

"நான் இப்பவே வரேன் ஆன்ட்டி" என்று ஹாஸ்பிடளுக்கு செல்லும் பாதையில் காரைத் திருப்பினான் அஷ்வின்.

"நீ டென்ஷன் ஆகாம வண்டி ஓட்டு அஷ்வின்", என்று அனு அஷ்வினை நிதானப்படுத்தி ஆறுதலாக உடன் இருக்க, கவனமாகவே காரை ஓட்டிச் சென்றான்.

சில மணி நேரத்தில் அஷ்வினும் அனுவும் மருத்துவமனையை வந்து அடைந்தனர்.

நுழைவாயிலில் இருந்த ரிசப்ஷன் கவுண்டரில்,
"சித்தார்த் அட்மிட் பண்ணிருக்க ரூம் நம்பர் கொஞ்சம் வேண்டும்" என்று அஷ்வின் தகவல் கேட்க,
" ஒன் மினிட் ப்ளீஸ்! செக் பண்ணி சொல்றேன்.." என்று ரிசப்ஷனிஸ்ட் சொல்லவும்,
இருவரும் காத்திருக்க...

"ரூம் நம்பர் 56. டேக் லெஃப்ட் சைடு லிஃப்ட்!" என ரிசப்ஷனிஸ்ட் கூறியதும்,

"ஓகே! தேங்க்ஸ்! என்று லிஃப்ட்-ஐ நோக்கி அஷ்வின் விரைந்து செல்ல, அனு அவனைப் பின் தொடர்ந்தாள்.

மூன்றாவது மாடியில் லிஃப்ட் மூலம் வர, இடப்பக்கம் இரு அறைகள் தாண்டி 56 என்ற எண் கதவில் போட்டிருப்பதை கண்டு இடப்புறம் சென்று சித்து இருக்கும் அறைக் கதவை திறக்க, தலையில் கட்டுடன் படுத்துக் கிடந்தான் சித்தார்த்.

" உள்ள வாங்க!" என்றாள் ஜெயா.
"காலையில கூட என் கிட்ட பேசினானே! அதுக்குள்ள எப்படி இப்படி!" என்று மிகவும் பதட்டத்துடன் ஜெயாவிடம் கேட்டான் அஷ்வின்.

"வீட்டிலிருந்து பைக் எடுத்துட்டு வெளியே போறதுக்காக பைக்கை ரிவர்ஸ் எடுக்கும் போது எதிர்பாராமல் ஒரு கார் வேகமாக வந்து இடிச்சதுல பைக்கிலிருந்து கீழே விழுந்துட்டான். தலையிலிருந்து இரத்தம் வடியவும் உடனே ஆம்புலன்ஸில் கொண்டு வந்து இங்க சேர்த்தோம்" என்று ஜெயா அழுதுக்கொண்டே கூறியதைக் கேட்டு அஷ்வின் மனம் வருந்தினான்.

"இவ்வளவு அஜாக்கிரதையா ஏன் வண்டி எடுக்குறான்? கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாம..." என்று தன் நண்பன் மீது இருந்த அக்கரை கோபமாக வெளிப்பட,
"அண்ணா!" என்று அஷ்வின் கையை இறுக்கி பிடித்து அவனை கட்டுப்படுத்தினாள் அனு.

"நான் எதுவும் தப்பா நினைக்கலை மா..." என்று ஜெயா கண்ணில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே கூறினாள்.

"அழாதீங்க ஆன்ட்டி! நீங்க கொஞ்சம் ரிலாக்சா இருங்க.. வாங்க என்கூட.." என்று வெளியே ஜெயாவை கூட்டிச்சென்றாள் அனு .

"இது எதிர்பாராமல் நடந்த விஷயம் என்று தான் நானும் நினைச்சேன். அப்புறம்தான் தெரிஞ்சது இது வேணும்னு திட்டம் போட்டு நடந்த விபத்து" என்று அனுவிடம் ஜெயா தவிப்போடு கூறினாள்.

"என்ன ஆன்ட்டி சொல்றீங்க? எனக்கு ஒன்னும் புரியலையே! என்று அனு குழப்பத்துடன் கேட்க,

ஹாஸ்பிடல்ல சேர்த்து கொஞ்ச நேரத்தில தனக்கு ஒருத்தர் போன் பண்ணி, "என் விஷயத்துல தலையிட்டால் இனி உன் பையன் உயிர்கூட மிஞ்சாதுனு", சொல்லிட்டு போனை வச்சுட்டதாக ஜெயா சொல்லவும்,
என்ன சொல்வது? என்று தெரியாமல் சில நிமடங்கள் தவித்து போய் மெளனமாய் நின்றாள் அனு.

"என் அண்ணனிடம் சொல்லி இதை பற்றி சித்தார்த்திடமே கேட்க சொல்லலாம் ஆன்ட்டி" என அனு யோசனை சொன்னாள்.

ஜெயாவிற்கும் அதுவே சரி என தோன்றியது.

"சரி மா! அப்படியே செய்யலாம்" என்று ஜெயா தன்னை சமாதானம் செய்துக்கொண்டாள்.

"ஒருவேளை சித்தார்த் எந்த பொண்ணையும் விரும்புகிறானா...? அதனால அந்த பொண்ணு வீட்டில இருந்து மிரட்டினாங்களா? என்ன விஷயம்னு எனக்கு சரியா புரியல... ஆனா உங்க அண்ணனுக்கு கண்டிப்பா எல்லா விஷயமும் தெரிஞ்சுருக்கும்னு தான் அவனை வரச் சொன்னேன்" என்று ஜெயா சொல்லவும்,

"நீங்க அண்ணா கிட்ட இதை பற்றி கேட்டுப் பாருங்க. தெரிஞ்சு இருந்தா கண்டிப்பா சொல்லுவாங்க" என்றாள் அனு.

சிறிது நேரத்தில் அஷ்வின் வெளியே வர, நடந்த விஷயத்தை எல்லாம் ஜெயா அஷ்னிடம் கூறினாள்.

"என்கிட்ட இதுவரை காதல் விஷயம் எதுவும் சொன்னதே இல்லையே ஆன்ட்டி!! என்கிட்ட சொல்லாம அதிகம் வெளியே போகவும் மாட்டான். என் கூட தான் வெளியே சுத்துவான். அப்படி இருக்கும்போது யாரையும் லவ் பண்ணி இருந்தா என்கிட்ட மறைச்சிருக்க மாட்டானே!" என்று குழப்பத்துடன் அஷ்வின் கூறினான்.

"நீங்க எதுவும் நினைத்து வருத்தப்படாமல் இருங்க ஆன்ட்டி. நான் பிறகு சித்து கிட்ட பொறுமையாக விசாரிச்சு சொல்றேன்" என்று அஷ்வின் நம்பிக்கை ஊட்டினான்.

"ஆன்ட்டி! நீங்க உள்ளே போய் சித்து கூட இருங்க. நான் அவசரத்துல அம்மா கிட்ட கூட விஷயத்தை சொல்லாமல் வந்துட்டேன். இன்னும் எங்க ரெண்டு பேரையும் காணும்னு தேடிட்டு இருப்பாங்க. நான் போன் பண்ணி சொல்லிட்டு வரேன்" என்று அஷ்வின் தன் போனை எடுத்து தள்ளி செல்ல, ஜெயாவும் அறை உள்ளே சென்றாள்.

அம்மாவிற்கு போன் பண்ணி நடந்தவற்றையெல்லாம் அஷ்வின் விளக்கமாக கூற,
" சித்துவை கூட இருந்து பார்த்துக்கோ" என்று கூறினாள் ரேகா.
"சரி அம்மா! நான் வீட்டுக்கு வர எப்படியும் லேட் ஆகிடும், அனுவை மட்டும் இப்ப கொஞ்ச நேரத்தில் அனுப்பி வைக்கிறேன்" என்று கூறிவிட்டு போனை வைத்தான் அஷ்வின்.

மறுபடியும் சித்துவை பார்க்க அவன் அனுமதிக்கப்பட்ட அறைக்குள் நுழைந்து, சுவற்றில் சாய்ந்து நின்று கொண்டிருந்தான் அஷ்வின்.

"அனு! நீ கார் எடுத்துட்டு வீட்டுக்கு கிளம்பு" என்று அஷ்வின் சொல்ல,

"இல்லை அண்ணா! நானும் இங்கயே இருக்கேன்னே ஆன்ட்டிக்கு துணையாக?" என்று அஷ்விடம் அனு அனுமதி கேட்க, அஷ்வினும் சம்மதித்தான்.

கொஞ்ச நேரம் கழிய, சித்தார்த் மயக்கம் தெளிந்து கண் விழித்த பார்க்கவும், அருகில் அம்மாவும் எதிரில் அஷ்வின் மற்றும் அனு நிற்பதையும் கண்டான்.

ஜெயா கண்களில் நீர் வழிய தன் மகனின் தலையை தடவிக் கொடுத்து கையை பிடித்துக் கொண்டு மௌனமாய் இருந்தாள். அம்மாவின் மௌனத்தில் இருக்கும் கவலை சித்துவிற்கு நன்றாகவே புரிந்தது.

"நான் போய் டாக்டரை வர சொல்றேன்" என்று சொல்லிவிட்டு ஜெயா அறையை விட்டு வெளியேறினாள்.

"எப்படி இருக்கும் உடம்பு"? என்று சித்துவின் அருகில் அமர்ந்து அஷ்வின் கேட்க,
" கொஞ்சம் தலையில் மட்டும் வழி இருக்கு மற்றபடி எல்லாம் நல்லா இருக்கேன்" என்று குரலில் சிரத்தை இல்லாமல் கூறினான் சித்து.

இருவரும் பேசிக் கொண்டிருக்க, டாக்டர் உள்ளே வந்தார்.

"நான் வெளிய வெயிட் பண்றேன்" என்று அனு வெளியே நகர்ந்தாள்.

சித்தார்த்தின் தலையிலிருந்த காயத்தை எல்லாம் செக் பண்ணிவிட்டு சில மருந்து மாத்திரைகளை வாங்கி வரும்படி ப்ரிஸ்கிருப்ஷனை அஷ்வினிடம் கொடுத்தார்.

"இன்றைக்கு இரவே டிஸ்சார்ஜ் பண்ணிடலாம். ஹீ இஸ் பெர்ஃபெக்ட்லி ஆல்ரைட்" என்று டாக்டர் கூறினார்.
"நன்றி டாக்டர்!" என்று ஜெயா டாக்டரிடம் பணிவாக கூறிவிட்டு,
"தலையில வலி சீக்கிரம் குணமாகிடும் தானே டாக்டர்?" என்று மறுபடியும் கவலையுடன் ஜெயா கேட்க,

தாய்ப்பாசம் அவளின் மனதை உருக்குளைப்பதை உணர்ந்து,
"உங்க பையனுக்கு ஒன்னும் இல்லை. சீக்கிரம் குணமாகிடுவான் நீங்க தைரியமாக பையனுக்கு ஆறுதலாக இருங்கள்" என்று அறிவுரை கூறிவிட்டு டாக்டர் சென்றார்.

மருந்து வாங்குவதற்காக அஷ்வின் வெளியே வர, அனுவிடம் யாரோ பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு அவளை நோக்கி நெருங்கி சென்றுக்கொண்டிருக்க, பின்பு அனுவிடம் பேசிக்கொண்டிருப்பது அவனது காதல் தேவதை என்பதை அறிந்தான். அவளது எதிர்பாராத சந்திப்பு மிகவும் சந்தோஷத்தை அஷ்வினுக்கு அளித்தது. இருந்த போதிலும் அனுவிடம் பேசுவதைக் கண்டு அவன் மனதில் பல கேள்விகள் எழுந்தன. அனு அருகில் செல்லாமல் ஒரு ஓரமாக நின்று அவர்கள் இருவரின் உரையாடலை மட்டும் கவனித்துக் கொண்டிருந்தான். ஒரு சில நிமிடங்களில் காதல் தேவதையிடம் இருந்து விடைப்பெற்று அனு திரும்பி வரவும்,

"யார் அந்த பொண்ணு? உனக்கு எப்படி தெரியும்? என்ற ஆர்வத்துடன் படப்படவென வழி மறித்து அனுவிடம் அஷ்வின் கேள்விக் கனைகளை தொடுக்க,

அஷ்வினை உற்று உதாசீனமாக பார்த்தாள் அனு.
"அந்த பொண்ணு பற்றி ஏன் விசாரிக்க?" என்று புருவத்தை உயர்த்தி ஏளனமாக அனு கேட்கவும்,

"ப்ளீஸ் சொல்லு அனு.. என்று அவளிடம் அஷ்வின் கெஞ்சினான்.

"எனக்கு அந்த பொண்ணு யாருன்னு தெரியாது. நான் இங்கே நிக்கிறதைப் பார்த்து, "பார்மசி எங்க இருக்குன்னு?" கேட்க வந்தாங்க. வழி சொல்லி அனுப்பிவிட்டேன். கொஞ்ச நேரத்துல கூட்டமா இருக்குன்னு சொல்லி என்கிட்ட வந்து பேசிட்டு இருந்தாங்க" என்றாள் அனு.

"என்ன பேசினாள் உன்கிட்ட? அவளுடைய பெயர் ஏதாவது சொன்னாளா?" என்று அஷ்வின் ஆவலோடு கேட்க,

"அது.... ஏதோ ஒரு பெயர் சொன்னாங்களே!!!" என்று மறந்து போனது போல் முக பாவனை காட்டி அஷ்வினை அனு பரீட்சித்து பார்க்க முயல,

"தயவுசெய்து சொல்லு.. ப்ளீஸ்.. உனக்கு எல்லா விஷயத்தையும் பிறகு விவரமா சொல்றேன்" என்று அஷ்வின் கெஞ்சி கேட்கவும்,

"அந்த பொண்ணு பெயர் 'யாழினி'! இங்க அவங்களுக்கு தெரிஞ்ச யாரையோ பார்க்க வந்ததாக சொன்னாங்க. வேறு எதுவும் அவங்கள பற்றி சொல்லிக்கொள்ளவில்லை" என்று அனு சொன்னாள்.

"யாழினி யா!! அழகான பெயர்" என்று தனக்குள் சொல்லிக் கொண்டான் அஷ்வின்.

மறுபடியும் அவளை பார்க்க முயற்சித்து, அவள் சென்ற வழியில் விரைவாக அஷ்வின் தன்னவளைத் தேடிச் செல்ல,

"டேய்! அண்ணா எங்க போற?" என்று அனு கத்தினாள்.
அதெல்லாம் அவன் காதுகளில் விழவில்லை. காதல் தேவதையை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவனை ஆட்கொண்டிருந்தது.
"என்ன தான் இவனுக்கு ஆயிற்றோ?" என்று புலம்பிக்கொண்டு அனு நின்றாள்.

ஆனால கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தேடியும் தேவதையை காண முடியாமல் ஏமாற்றம் அடைந்ததை எண்ணி வருந்தினான்.
"இன்றும் என் கண்ணில் தோன்றி, அவளை மறுபடியும் காண்பதற்குள் மாயமாய் மறைந்து விட்டாள்!" என்று அஷ்வின் தனக்குள் புலம்பினான்.

"கண்டிப்பாக அவள் இங்கேதான் எங்கேயோ இருக்கணும், அவளை சீக்கிரம் கண்டுபிடிப்பேன்" என்று மனதில் நம்பிக்கை கொண்டு, மருந்து மாத்திரைகளை வாங்க சென்றான் அஷ்வின்.

ஜன்னல் வழியாக காற்றில் மரங்கள் அசைவதையெல்லாம் பார்த்துக் கொண்டே யோசனையில் நின்ற தேன்மொழி, தன் பார்வையை ஜன்னல் ஒரம் திருப்ப, ஒரத்தில் படிந்து இருந்த இரத்தக் கறையைப் பார்த்து மூச்சுத் திணற, "என்ன நடக்குது இந்த வீட்டில? எல்லாமே மாயாஜாலம் போல இருக்குதே!" என்று நினைத்துக்கொண்டு அமுதாவை பார்க்கத் தன் அறையை நோக்கி பயத்தில் ஓடினாள்.
"இந்த வீட்டில அப்படி என்ன ரகசியம் இருக்கிறது? தயவுசெய்து சொல்லு அமுதா!" என்று தேன்மொழி பயத்தில் நடுங்கியவாரு கேட்க,
"எனக்கும் முழுசா எதுவும் தெரியாது அம்மா. ஸ்டோர் ரூமில் ஏதோ ஒரு விஷயம் இருக்குன்னு மட்டும் தெரியும் அதனாலதான் உங்க கிட்ட சொன்னேன்" என்று அமுதா சொல்ல,
அவள் பேச்சில் கள்ளமில்லாததை உணர்ந்தால் தேன்மொழி. சாவி மாறியதையும் அதைத்தேடி யாழினியின் அறையில் சோதனை இட்டபொழுது அவள் பார்த்ததையும் அமுதாவிடம் தேன்மொழி சொல்ல,
"என்னம்மா சொல்றீங்க? நீங்க சொல்றதைப் பார்த்தா எனக்கு ரொம்ப பயமா இருக்கு. நீங்க எதுக்கும் யாழினி மேல ஒரு கண்ணு வச்சுக்கோங்க! சின்ன பொன்னு அதனால தான் சொல்றேன்" என்று அமுதா கூறிய வார்த்தைகளை கேட்டு மனம் பதைபதைக்க அவளருகில் உட்கார்ந்திருந்தால் தேன்மொழி.
"சரி நான் போய் சாவியைத் தேடி எடுக்கிறேன். கிடைக்காமல் போனால் பூட்டை உடைத்து விட வேண்டியதுதான்" என்று தேன்மொழி சொல்லிக் கொண்டே வெளியே செல்ல எழுந்திருக்க, அமுதாவின் சேலை நுனியில் ஸ்டோர் ரூம் சாவி முடிப் போட்டு மறைத்து வைத்திருப்பதை பார்த்துவிட,
" அமுதா! என்று ஆத்திரத்தில் தேன்மொழி சீர,

ஒன்றும் புரியாமல் அமுதா விழித்துப் பார்க்க...

மலரும்....
 

vani sri

Saha Writer
Team
Messages
17
Reaction score
1
Points
1
மலர் 7:

திடீரென்று தேன்மொழியின் ஆவேசத்திற்கு காரணம் புரியாமல் அமுதா ஒரு நிமிடம் திகைக்க,

உண்மை அறியாமல் வார்த்தையைக் கொட்டிவிட்டால் அமுதாவின் மனம் புண்பட்டுவிடும், அவளது விஸ்வாசத்தை என்றும் அவமதிக்கக் கூடாது என்று தேன்மொழி தன் மனதில் எண்ணிக் கொண்டு கோபத்தை கட்டுப்படுத்தினாள்.

"சாவி உன்கிட்ட எப்படி வந்துச்சு அமுதா?" என்று நிதானமாக தேன்மொழி கேட்டவுடன் தான், சேலையில் முடிந்திருக்கும் சாவி அமுதாவிற்கு ஞாபகமே வந்தது.

"அட! இந்த சாவிக்கு தான் இவ்வளவு ஆர்ப்பாட்டமா? இந்தச் சாவி வைத்து திறக்க முடிஞ்சிருந்தா ஸ்டோர் ரூமில் இருக்கிற விஷயத்தை தெரிஞ்சுக்காம இப்படி இந்த அறையில் அடைஞ்சுக் கிடப்பேனா?" என்று ஏளனமாக அமுதா சொன்னதைக் கேட்டு,

"நீ என்ன சொல்ல வர அமுதா? இந்த சாவிக்குள்ள பூட்டு தானே கீழே போட்டுருக்கு?" என்று குழப்பத்துடன் தேன்மொழி கேட்டதற்கு,

"நானும் அப்படித்தான் திறந்து பார்த்து ஏமாந்துட்டேன் மா!" என்று பதிலளித்தாள் அமுதா.

அமுதாவின் பிதற்றலானப் பேச்சைக் கேட்டு,
"எதுவுமே நீ தெளிவா சொல்ல மாட்டியா அமுதா? என்று தேன்மொழி கோபித்துக் கொள்ள,

"அந்த பூட்டின் உண்மையான சாவி இது இல்லை மா! நம்ம வீட்டுல இருக்க பூட்டு மாதிரியே வாங்கி போட்டு இருக்காங்க, நமக்கு சந்தேகம் வரக்கூடாதுணு. அதனாலதான் இந்தச் சாவி வைத்து அந்தப் பூட்டைத் திறக்க முடியலை. நம்ம வீட்டுப் பூட்டை எங்கயாவது தூக்கி வீசிறுப்பாங்க!" என்றாள் அமுதா.

"இதெல்லாம் மட்டும் கூட இருந்து பார்த்த மாதிரியே சொல்லு" என்று சலித்துக் கொண்டாள் தேன்மொழி.

" இதுக்கு ஒரே வழி புதுசா சாவி செய்யுறது மட்டும் தான். பூட்டை உடைச்சு, அது யாழினிக்கோ அவருக்கோ தெரிஞ்துனா விஷயம் வேற மாதிரிப் போயிடும். இந்த விஷயம் நமக்குள்ள இருக்கட்டும் என்று தேன்மொழி அமுதாவிடம் கூறினாள்.

"சரி மா! நீங்க கொல்லனை வீட்டுக்கு வரச் சொல்லி, சாவி செய்து தர சொல்லுங்க" என்று அமுதா யோசனை சொல்லவும்,

"இப்பவே நான் ஃபோன் பண்ணி வர சொல்றேன்" என்று தேன்மொழி கைப்பேசி மூலம் கொல்லனை தொடர்புகொண்டு வரச் சொன்னாள்.

சிறிது நேரத்தில் கொல்லன் வீட்டுக்கு வரவும், பூட்டின் சாவி தொலைந்து விட்டதாக அவனிடம் தேன்மொழி கூறி, புது சாவி அடித்துத் தரும்படி கேட்க, நாளைக்கு புது சாவி வந்து தருவதாகச் சொல்லிவிட்டு பூட்டின் அச்சை எடுத்துக் கொண்டான் கொல்லன்.

" ஒருவேளை அவசரமாக இப்பவே இந்தப் பூட்டைத் திறக்கனும்னா நான் திறந்து தரேன்" என்று கொல்லன் கேட்க,
தேன்மொழியும் உடனே திறந்து தரும்படி கேட்டவுடன், கொல்லனும் அவன் வைத்திருந்த ஆயுதத்தைப் பயன்படுத்திப் பூட்டைத் திறந்து கொடுத்தான்.

தேன்மொழியும் அமுதாவும் ஸ்டோரூமிற்குச் சென்று தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். பழைய புத்தகங்கள், பாத்திரங்கள் மற்றும் சில மரச் சாமான்கள் அடங்கியுள்ள அந்த அறை மிகவும் சுத்தமாக வைக்கப்பட்டிருந்தது. தூசி ஒட்டடை என எதுவும் இல்லாமல் பராமரித்து வந்ததால் தேடுவதற்கு கொஞ்சம் எளிதாக இருந்தது. தேன்மொழிக்கு எந்த ஒரு விடயமும் தெரியாததால் எதைத் தேடுவது? என்ன மர்மம்? என்று புரியாமல் சுற்றி சுற்றி அறையை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கவும், அமுதா மட்டும் விறுவிறுவென்று அறையின் ஓரத்தில் உள்ள புத்தகங்கள் நிறைந்த அலமாரியை அலசி ஆராய்ந்துக் கொண்டிருந்தாள். அமுதாவின் அவசரத்தையும் ஆர்வமான தேடலையும் பார்த்து வியப்படைந்தாள் தேன்மொழி. ஆனால் அமைதியாக நின்று அமுதாவின் செயலை வேடிக்கைப் பார்த்தவாறு நின்றுக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு புத்தகமாக புரட்டிப் புரட்டிப் பார்த்துத் தேடிக் கொண்டிருந்தாள் அமுதா.

"புத்தகத்தில் என்ன தேடிட்டு இருக்க அமுதா? சொன்னா நானும் தேடுவேனே!" என்று தேன்மொழி கேட்க,

எதுவுமே பதில் சொல்லாமல் விறுவிறுவென்று புரட்டிக் கொண்டிருந்தாள் அமுதா.

"என்ன தேடுறனு சொல்லு! எனக்கு தலையே வெடிச்சிடும் போல இருக்கு!" என்று தேன்மொழி சொல்வதைக் கேட்டு ,

"கொஞ்ச நேரத்துல தெரிஞ்சிடும்! கொஞ்சம் அமைதியா இருங்க மா!" என்று தேன்மொழியின் வாயை அடைத்தாள் அமுதா.

அலமாரியில் உள்ள அனைத்து அடுக்குகளிலும் இருந்த புத்தகத்தைப் பார்த்து விட்டு, மேல் அடுக்கில் உள்ள புத்தகத்தை எடுக்க முயல, உயரமாக இருந்ததால் உதவிக்கு பலகை எதுவும் இருக்கிறதா என்று அமுதா தேடிப் பார்க்க,
"நான் எடுத்து தரேன்!" என்று கூறி தேன்மொழி சில புத்தகங்களைச் சேர்த்து மொத்தமாக எடுக்க, கை நழுவிப் புத்தகங்கள் கீழே விழுந்தன.

புத்தகத்தின் உள் வைக்கப்பட்டு இருந்த சில தாள்கள் சிதறி விழுந்தன. விழுந்த தாள்களை எல்லாம் அவசரமாக எடுத்தாள் அமுதா. எடுத்த தாள்களை ஒன்றொன்றாக எடுத்து தேட,

"இது.. இல்லை! இல்லை!.. எங்க போச்சு..?" என்று சொல்லிக்கொண்டே எல்லாத் தாள்களையும் பார்க்க,

" கண்டுப்பிடிச்சுட்டேன்!" என்று சந்தோஷத்தில் தன்னை அறியாமல் அமுதா கத்த,

"சத்தம் போடாதே அமுதா! என்று தேன்மொழி கூறியதோடு இல்லாமல்,
"இந்த பேப்பர்ல என்ன? இதுக்கும் வீட்டுல நடக்க பிரச்சனைக்கும் என்ன சம்பந்தம்?" என்று ஒன்றும் விளங்காமல் தேன்மொழி கேட்க,

"இது யாழினிக்கு சொந்தமானது மா! அவளுக்கு மட்டுமே சொந்தமானது! இவ்வளவு நாள் நடந்தது எல்லாம் ஒரு விஷயமே இல்லை! இனி தான் பிரச்சனையே ஆரம்பிக்க போகுது!" என்று அமுதா கூறியதைக் கேட்டு தேன்மொழி தன் மகளை நினைத்து வேதனையில் வாடினாள்.

" இந்த பேப்பரை யாழினி அறையில் போய் வைக்கணும் மா!" என்று அமுதா சொல்லவும்,
" ஏன் இப்படி புதிர் போடுற அமுதா?" என்று தேன்மொழி கோபப்பட,

"இந்த விஷயம் நம்ம ரெண்டு பேருக்குள்ளே இருக்கட்டும். இந்த விஷயத்தை பற்றி நேரம் வரும் போது யாழினி மூலமாக நீங்க தெரிஞ்சுப்பீங்க மா!" என்றாள் அமுதா.
"நான் இன்றைக்கே இதை பற்றி யாழினியிடம் கேட்கிறேன்" என்று தேன்மொழி சொல்ல
"தயவுசெய்து சொல்றதைக் கேளுங்க மா! யாழினியின் உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடும்! புரிஞ்சுக்கோங்க! எல்லா விஷயத்தையும் உங்ககிட்ட விளக்கமா சொல்ல முடியாது!" என்று அமுதா கெஞ்சினாள்.

அந்த பேப்பரையே உற்று தேன்மொழி பார்த்துக் கொண்டிருந்தாள்.

மருந்து மாத்திரைகளை வாங்கிக் கொண்டு அஷ்வின் அறைக்குள் நுழைந்ததும்,
"நான் போய் பில் கட்டிட்டு வந்துடுறேன்" என்று ஜெயா சென்றாள்.

"நான் உன்கிட்ட ஒரு விஷயம் கேட்கணும் சித்து! தப்பா எடுத்துக்கலனா...! என்று தயங்கியபடி அஷ்வின் கேட்க,

"என்கிட்டே எதுக்கு இவ்வளவு தயக்கம்? என்ன வேண்டுமானாலும் கேளு அஷ்வின்! என்று சித்து சொன்னவுடன்,

"நீ யாரையாவது விரும்புறியா சித்து? சொல்லனும்னு விருப்பம் இருந்தா சொல்லு! நான் எதுவும் தப்பா கேட்கலையே..? என்று அஷ்வின் திக்கித் திக்கி கேட்க,

சித்துவின் முகம் சிறிது வாடியது. சில நிமிட மௌனத்திற்குப் பின்,
" நான் காதலிக்கிற விஷயம் உனக்கு எப்படி தெரியவந்தது?" என்று குழப்பத்துடன் சித்து கேட்கவும்,

"இல்ல! ஏதோ மனசுல தோணுச்சு அதான் உன்கிட்டயே கேட்கலாம்னு கேட்டேன்! என்று அஷ்வின் சொல்லவும்,

"அது... வந்து.... நான்...!"என்று சித்து தயங்கித் தயங்கி,
"நான்..... ஆமா! என் கூட காலேஜ்ல படிச்சப் பொண்ணு! படிக்கும் போதிலிருந்தே லவ் பண்ணினோம்!" என்றான் சித்து.

"இந்த விஷயம் ஆன்ட்டிக்கு இன்னும் ஏன் சொல்லாம இருக்க?" என்று அஸ்வின் கேட்க,

"அம்மா இந்த விஷயத்தை எப்படி எடுத்துப்பாங்கனு தெரியல....!
அவங்க முன்னாடி இருந்தே அத்தை பொண்ணு ராகினியை எனக்கு திருமணம் செய்து வைக்கனும்னு சொல்லிட்டே இருக்காங்க! அத்தைக்கும் தன் பொண்ண எனக்கு கட்டிக்கொடுக்க ரொம்ப இஷ்டம். அதனால தான் இதுவரை இந்த விஷயத்தை சொல்ல முடியாம கஷ்டப்படுறேன்! என்று சித்து கூறியதைக் கேட்டு,

"எவ்வளவு நாள் இப்படி மறைச்சு வைக்க முடியும்னு நினைக்கிற சித்து? இப்பவே ரொம்ப தாமதம் ஆகிவிட்டது இனியும் நீ மறைக்கிறதுல அர்த்தம் இல்லை! என்று அஷ்வின் தன் நண்பனுக்கு புரிய வைக்க முயல,

"நீ சொல்றது சரிதான்! ஆனா... இந்த விஷயம் நீ நினைக்கிற அளவுக்கு சாதாரனமாக சொல்ல முடியாது..!"
என்று சித்து யோசித்தவாறு மெளனமாக இருக்க,

"நீ லவ் பண்ற விஷயத்தை சொல்றதுல உனக்கு என்ன பிரச்சனை? இது நீ மட்டும் சம்பந்தப்பட்ட விஷயம் இல்ல. மூன்று குடும்பம் சம்பந்தப்பட்டிருக்கு! உன் அத்தை பொண்ணு வாழ்க்கையைக் கொஞ்சம் யோசிச்சுப் பாரு! அந்தப் பொண்ணுக்கு வேற மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிப்பாங்க விஷயம் தெரிஞ்சா!" என்று புலம்பினான் அஷ்வின்.

"எனக்கு அம்மா கிட்ட சொல்லி பொண்ணு கேட்டு நர்மதா வீட்டுக்கு போகப் பயமா இருக்கு அஷ்வின்! நர்மதா அப்பா ஊருக்குள்ள கட்டப்பஞ்சாயத்து பண்றவர். அவர்கிட்ட பொண்ணு கேட்டுப் போனா என்ன நடக்கும்னு நினச்சாலே படபடப்பா இருக்கு! என்று சித்து பயப்படுவதைப் பார்த்து,

"அப்போ இதுக்கு என்னதான் முடிவு?அவர் கல்யாணம் பண்ணிக் கொடுக்க மாட்டார்னு சொல்ற! பொண்ண கேட்டுப்போகவும் தயக்கம்! நீயே இப்படி பயந்தால் நர்மதா என்ன செய்வா? என்று அஷ்வின் கேட்டான்.

"நான் உன்கிட்ட ஒரு உண்மையை சொல்லனும் அஷ்வின்!" என்று சித்து தயங்குவதைக் கண்டு அஷ்வின் புரியாமல் விழிக்க,

" நீதான் எனக்கு உதவி பண்ணனும் அஷ்வின் ப்ளீஸ்!" என்று கையைப் பிடித்துக் கொண்டு சித்து கெஞ்ச,

ஒன்றுமே புரியாமல் அஷ்வின் திருதிருவென அஷ்வின் விழிக்க,

" நானும் நர்மதாவும் ஏற்கனவே திருமணம் செய்துகிட்டோம்! அதை சட்டப்படி பதிவும் பண்ணிட்டோம்!" என்று சித்து கூறியதைக் கேட்டு அதிர்ந்து போன அஷ்வின் தன் தலையில் கை வைத்து ஒன்றும் பேச முடியாமல் அமர,

"என்கிட்ட சொல்லாம கல்யாணம் பண்ணிட்டியா சித்து?" என்று கவலை நிறைந்த குரலில் கண்ணீரைக் கட்டுப்படுத்திக்கொண்டு வாசலில் நின்றபடி ஜெயா கேட்க,

அம்மாவின் குரல் கேட்டு, சித்து குற்ற உணர்ச்சியுடன் தன் தாயை பார்க்க......

மலரும்...
 

vani sri

Saha Writer
Team
Messages
17
Reaction score
1
Points
1
மலர் 8:

அம்மாவிடம் இருந்து மறைத்து வைத்த உண்மை தன் வாயாலே வெளி வர, என்ன சொல்வதென்றுப் புரியாமல் சித்து மனம் தடுமாறிப் போக,

"அம்மா! என்னை மன்னிச்சுருங்க! நான் நர்மதாவை இழந்து விடுவேனோனு பயத்துல தான் யாருக்கும் தெரியாமல் கல்யாணம் செஞ்சுக்கிட்டேன்! நர்மதா என்கூட இருந்தால் நான் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருப்பேன்! அவள் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷமா நினைக்கிறேன்!" என்று தன் காதலின் ஆழத்தை தாயிடம் உணர்ச்சிப் பொங்க வெளிப்படுத்தினான் சித்தார்த்.

ஜெயா தன் மகன் அருகில் வந்து "கண் கலங்காத சித்தார்த்! நீ கல்யாணம் செஞ்சுகிட்டதுல உன் மேல எனக்கு கோபம் இல்லை, கொஞ்சம் வருத்தம் மட்டும் தான்! நான் உன் மனசப் புரிஞ்சுக்காம, உன் ஆசைக்குக் குறுக்கே இருப்பேன்னு அம்மாவை நீ தப்பா நினைச்சுட்டியா சித்தார்த்?" என்று ஜெயா அழுவதைப் பார்த்து சித்துவின் மனம் ரணமானது.

"நான் உங்களை எப்பவும் அப்படி நினைச்சதே இல்ல மா! அழாதீங்க ப்ளீஸ்! நான் சொல்ல வருவதை கொஞ்சம் முழுசா கேளுங்க மா!" என்று கெஞ்சிக் கேட்க,

கண்களில் இருந்து வழியும் நீரைத் துடைத்துக் கொண்டால் ஜெயா.

"நர்மதாக்கு அவளோட அப்பாவை நினைச்சு பயம் அதிகமாக இருந்துச்சு! எந்த சூழ்நிலையிலும் யாருக்காகவும் அவளை கைவிடமாட்டேன்னு அவளுக்கு வாக்குக் கொடுத்திருந்தேன்! கொஞ்ச நாள் முன்னாடி அத்தை வந்து நம்ம வீட்டுல கல்யாணத்தைப் பற்றிப் பேச்சு எடுக்க ஆரம்பிச்சிட்டாங்க! நர்மதாவுக்கும் அவங்க வீட்டுல மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுட்டாங்கனு தெரிஞ்சதுமே உங்ககிட்ட சொல்லிப் பொண்ணு கேட்டுப் போகலாம்னு நினைச்சேன். ஆனா நர்மதாக்கு அவளோட வீட்டுல கல்யாணத்துக்கு சம்மதிப்பாங்கன்னு துளி அளவு கூட நம்பிக்கை இல்லை! எந்த சூழ்நிலையிலும் நாங்கப் பிரிஞ்சிடக் கூடாதுனு தான் திருமணம் செய்துகிட்டோம் மா!" என்று தன் பக்கம் உள்ள நியாயத்தை விளக்கினான் சித்தார்த்.

"நீ தப்பு பண்ணல சித்தார்த்! உன்னை நம்பி இருந்தப் பொண்ண கைவிடாம அவளைத் திருமணம் செய்தது மட்டுமில்லாமல் சட்டப்படி பதிவும் பண்ணிகிட்ட! ஒரு விதத்துல உன்னை நினைச்சா எனக்குப் பெருமையா இருக்கு! ஆனால் இன்னொருபுறம் நீங்க ரெண்டு பேரும் பெத்தவங்களுக்குத் துரோகம் பண்ணிட்டீங்களே!" என்று கவலையுற்றாள் ஜெயா.

" உன் அத்தை பொண்ணு ராகினியை கல்யாணம் செய்ய விருப்பம் இல்லைணு முன்னாடியே சொல்லியிருந்தா அவளும் தன் மனசுல ஆசையை வளர்த்திருக்க மாட்டாளே!" என்று வருந்தினாள் ஜெயா.

"நீங்க அதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை மா! ராகினிக்கு நான் லவ் பண்ற விஷயம் முன்னாடியே தெரியும். நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்ட விஷயம் கூட தெரியும்! அவளுக்கு என் மேல எந்த விருப்பமும் கோபமும் கிடையாது மா. அத்தையை தான் சமாளிக்கணும்!" என்று சித்தார்த் சொல்வதைக் கேட்டு,

" எல்லா விஷயமும் ராகினிக்கு தெரியுமா?" என்று அதிர்ச்சியுடன் ஜெயா கேட்க,

"ஆமா மா! நான் காலேஜ் படிக்கும் போதே ராகினியிடம் என் காதலைப் பற்றி சொல்லிருக்கேன்! இதைப் பற்றி அத்தைக்கு தெரியப்படுத்த வேண்டாம்னு சொன்னதுனால இந்த விஷயத்தை யாருக்கும் ராகினி தெரியப்படுத்தாமல் எதுவும் தெரியாத மாதிரி இருக்கிறாள்!" என்று சித்து சொன்னதற்கு,

"நல்லவேளை ராகினியிடம் எல்லா விஷயமும் சொன்னியே! இல்லைனா ஒரு பொண்ணு மனசுல ஆசையை வளர்த்து ஏமாற்றுறது பெரிய பாவம்" என்று வருந்தினாள் ஜெயா.

நடந்தது எதிர்ப்பாராத விபத்து இல்லை என்பதைச் சொல்லி தன் மகனை இன்னும் கஷ்டத்தில் ஆழ்த்த ஜெயாவிற்கு மனமில்லாமல்,
"நான் போய் நர்மதா வீட்டுல பேசுறேன். நீ ஒன்னும் கவலைப்படாதே சித்தார்த்! உன் சந்தோசம் தான் எனக்கு முக்கியம்" என்று ஆதரவாகப் பேசினாள் ஜெயா.

இருவருடைய உரையாடலையும் உடனிருந்து கவனித்த அஷ்வின் "ஆன்ட்டி! எனக்கு ஒரு யோசனை..! ஆனா ஒர்க் அவுட் ஆகுமானு தெரியல" என்று அஷ்வின் யோசிக்க,

"சொல்லு பா! உனக்கென்ன தோனுது?" என்று கேட்டாள் ஜெயா.

" நீங்க மட்டும் தனியா நர்மதா வீட்டுக்குப் போனா சரியா வராது. அவளோட வீட்டுல நிறைய அடியாட்கள் இருப்பாங்க! என் அப்பா அம்மாவையும் கூட அழைத்துக் கொண்டு நாம சேர்ந்து போகலாம்! என் அப்பா ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி அதனால நம்ம கிட்ட வம்பு பண்ண மாட்டாங்க!" என்று அஷ்வினின் யோசனையைக் கேட்டதும்,
அஷ்வின் சொல்வது சரிதான் என ஜெயா மனதிற்கு தோன்றினாலும், இதற்கு அஷ்வினின் பெற்றோர் சம்மதிப்பார்களா? என்று ஜெயா சிந்திக்க,

"உங்களுக்கு சம்மதம்னா சொல்லுங்க ஆன்ட்டி! எல்லா விஷயத்தையும் நான் பார்த்துக்கிறேன்! என் ப்ரண்டுக்காக இது கூட செய்ய முடியலன்னா எப்படி?" என்று அஷ்வின் சொல்வதைக் கேட்டு, இருவரின் நட்பை நினைத்து பெருமிதம் கொண்டாள் ஜெயா.

"சரி அஷ்வின்! ஆனா உங்க அப்பா அம்மாவை வற்புறுத்த வேண்டாம்" என்று ஜெயா சொன்னாள்.

மெளனமாக நடந்ததை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அனு,
"டேய் அண்ணா! நீ வீட்டில செம்ம அடி வாங்க போற போ! உனக்கு கல்யாணம் செய்ய அம்மா பொண்ணு பார்த்தா, பிடிக்கலனு எஸ்கேப் ஆகிட்டு, இப்ப உன் ஃப்ரண்டு க்கு பொண்ணு கேட்க கூப்பிடப் போறியே! உனக்கு தைரியம் தான்" என விளையாட்டாக அஷ்வின் காதருகில் முனுமுனுத்தற்கு,

"நீ அதையெல்லாம் நினைச்சு வருத்தப்படாத அனு. உனக்கு அண்ணி சீக்கரம் வந்துடுவாங்க!" என்று சொல்லிச் சிரித்தான் அஷ்வின்.

"நீயும் ஏற்கனவே கல்யாணம் பண்ணிட்டியா?" என்று நக்கலாக அனு சிரிக்க,

"அட..! நீ வேற அனு.....! பொண்ணு பெயரே இப்ப தான் தெரிஞ்சிருக்கு, அதுக்குள்ள எப்படி கல்யாணம்...?" என்று நொந்துக் கொண்டான் அஷ்வின்.

"ஓகோ!! டேய்! அப்போ நீ சொல்ற பொண்ணு யாழினியா? என்கிட்ட பேசிட்டு இருந்தாலே அவளா?" என்று ஆச்சர்யமாக அனு கேட்க,

"அமா! அவளே தான்! நான் வீட்டுக்குப் போயிட்டு விவரமா சொல்றேன் அனு"
என்றான் அஷ்வின்.

தான் இத்தனை நாள் மறைத்த விஷயத்தை தன் அம்மாவிடம் சொல்லி, சம்மதமும் கிடைத்துவிட்ட சந்தோஷத்தில் சித்தார்த் இருக்க, தன் அண்ணனுக்கு என்ன பதில் சொல்வது என்ற குற்ற உணர்ச்சியில் உருக்குலைந்து அமர்ந்திருந்தாள் ஜெயா.

ரூம் ஐ விட்டு வெளியே வந்து அர்ஜுன் க்கு போன் செய்தான் அஷ்வின்.

"ஹலோ! சொல்லு அஷ்வின்! எப்படி இருக்க? வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க? சனிக்கிழமை உன்னை பாக்குறதுக்கு ரொம்ப ஆவலோட காத்திருக்கேன்!" என்று அர்ஜுன் ஆர்ப்பரிக்கும் சந்தோஷத்தில் சொல்ல,

"சாரி அர்ஜுன்! என் ஃப்ரெண்டு சித்தார்த் க்கு ஆக்சிடென்ட் ஆகிடுச்சு! அவனைப் பார்த்துக்க ஹாஸ்பிட்டல்ல இருக்கேன்..." என்ற செய்தியை அஷ்வின் தெரிவிக்க,

"உன் ஃப்ரண்ட் இப்ப எப்படி இருக்கான்? என்ன உதவி தேவைப்பட்டாலும் தயங்காமல் உடனே கேளு அஷ்வின்" என்றான் அர்ஜுன்.

"இப்ப நல்லா இருக்கான்! சின்னதா தலையில் அடி. பயப்படுற மாதிரி எதுவும் இல்லை! இப்போ கொஞ்ச நேரத்துல டிஸ்சார்ஜ் பண்ணி கூட்டிட்டுப் போயிடுவோம்! ஆனால் சனிக்கிழமை எனக்கு கொஞ்சம் பெர்ஸ்னல் கமிட்மெண்ட் இருக்கு. நான் இன்னொரு நாள் உன்னை பார்க்க வரேன்! தப்பா எடுத்துக்காத அர்ஜுன்!" என்று தன் நிலைமையைப் புரிய வைக்க அஷ்வின் முயற்சிக்க,

"டேய்! என்னடா பேசுற? உன் ஃப்ரண்டு சித்தார்த் கூட இருந்து பார்த்துக்கோ! இப்ப அது தான் முக்கியம். நீ இன்னொரு நாள் ஃப்ரீயா வீட்டுக்கு வா!" என்று அர்ஜுன் கூறிய வார்த்தைகளைக் கேட்டு அஷ்வின் மன நிறைவுப் பெற,

"அர்ஜுன்! தேங்ஸ் ஃபார் அன்டர்ஸ்டேன்டிங் டா!" என அஷ்வின் கூற,
"டேக் கேர்! சீ யூ சம்டைம்ஸ் லேட்டர்!" என்று கூறி போனை கட் பண்ணினான் அர்ஜுன்.

சிறிது நேரத்தில்,
"எக்ஸ்க்யூஸ் மீ!" என்ற சத்தம் கேட்க,
"உள்ள வாங்க டாக்டர்!" என்றான் அஷ்வின்.

"சித்தார்த்! எப்படி இருக்கீங்க? தலைவலி இன்னும் இருக்குதா?" என்று டாக்டர் கேட்டதற்கு,

"ஐ எம் ஃபைன் டாக்டர்! இப்ப வலி எதுவும் இல்லை. கொஞ்சம் உடம்பு அசதியா இருக்கு அவ்வளவுதான்!" என சித்து சொல்ல,

"வலி இல்லைன்னாலும் மறக்காம இரண்டு நாள் பெயின் கில்லர் எடுத்துக்கணும் சித்தார்த். இல்லைன்னா மறுபடியும் வலி வர்றதுக்கு வாய்ப்பிருக்கு!" என்றார் டாக்டர்.

"கண்டிப்பா மாத்திரை எடுத்துக்கிறேன் டாக்டர்!" என்றான் சித்தார்த்.

"ஹீ இஸ் ஆல் ரைட் நவ்! கொஞ்ச நேரத்துல டிஸ்சார்ஜ் ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் முடிச்சுட்டு வீட்டுக்கு கூட்டிட்டு போயிடலாம்!" என்று கூறி டாக்டர் கிளம்பினார்.

கையில் வைத்திருந்த பேப்பர்-ஐ யாழினியின் அறைக்குச் சென்று தேன்மொழி வைத்து விட்டு வரும் வரை, ஸ்டோர் ரூம்-க்கு பூட்டுப் போட்டு விட்டு அதன் சாவியை தேன்மொழியிடம் கொடுக்கக் காத்திருந்தாள் அமுதா.

யாழினியின் அறையில் இருந்து திரும்பி வந்துக் கொண்டிருந்த தேன்மொழிக்குத் திடீரென்று அன்று அமுதாவின் தலையில் எப்படி அடிப்பட்டது என்ற கேள்வி எழ, அதற்கான விஷயத்தை அறிந்துக் கொள்ள முனைப்பாக இருந்தாள்.

சாவியைத் தேன்மொழியிடம் ஒப்படைத்துவிட்டு, "அம்மா! எனக்கு உடம்பு நல்ல குணம் ஆயிடுச்சு. இதுக்கு மேல சும்மா படுத்து இருக்க முடியல! நான் இனி வேலை எல்லாம் செய்ய ஆரம்பிக்கிறேன்" என்று அமுதா கூற,

"அதெல்லாம் இல்லை! நீ நல்லா ஓய்வெடு. அப்புறம் வேலை செய்யலாம்" என்று தேன்மொழி கட்டளையிட்டதற்கு கொஞ்சம் கூட பிடிக் கொடுக்காமல்,

"ஐயோ! சத்தியமா என்னால இப்படி படுத்து இருக்க முடியாது மா! நான் வேலை செய்ய ஆரம்பிக்கிறேன்!" என்று சமையலறை நோக்கி நடையைக் கட்டினாள் அமுதா.

"என்ன சொன்னாலும் கேட்கவே மாட்டாளே! சரி.. அவளோட போக்கில் விட்டு தான் உண்மையைக் கண்டுப் பிடிக்கனும்!" என்று தேன்மொழி நினைத்துக் கொண்டே மாடிப்படி ஏற, காலிங்பெல் அடிக்கும் சத்தம் கேட்டுத் திரும்பி வந்து கதவைத் திறந்தவள்,

"நீங்க மட்டும் வந்திருக்கீங்க! யாழினி எங்கே?" என்று கார்த்திகேயனை வாசலிலே மடக்கி கேள்வி கேட்டாள் தேன்மொழி.

"யாழினி ஹாஸ்பிடல் க்கு யாரையோ பார்க்கணும்னு சொல்லிட்டு அப்பவே ஸ்கூட்டி எடுத்துட்டு போயிட்டா. கொஞ்ச நேரத்துல வந்துருவா" என்று கார்த்திகேயன் சொல்லவும்,

ஹாஸ்பிட்டலுக்கு எதுக்கு போயிருக்கா? அதுவும் தனியா ஏன் போகனும்???? என்ற கேள்வியுடன் தேன்மொழி....

மலரும்...
 

vani sri

Saha Writer
Team
Messages
17
Reaction score
1
Points
1
மலர் 9:

"இதோ கார் சாவி வாங்கிக்கோ சித்து! நீ அம்மா கூட பொறுமையாக நடந்து கீழே போயிட்டு இரு, நான் லக்கேஜ் எல்லாம் எடுத்துகிட்டு வரேன்" என்று அஷ்வின் சொல்ல,

"சரிடா!" என்று புறப்பட்டான் சித்து.

சித்துவை வீட்டில் இறக்கி விட்டுட்டு, அஷ்வின் வீடு திரும்ப இரவு மணி 11 மணிக்கு மேல் ஆகிவிட்டது. அஷ்வினும் அனுவும் வீட்டுக்குள் நுழைந்ததும், அம்மா அப்பா ஹாலில் உள்ள சோபாவில் உட்கார்ந்து இருவரையும் எதிர்ப்பார்த்துக் காத்திருந்ததைப் பார்த்த அனு,

"நீங்க இன்னுமா தூங்காம இருக்கீங்க" என்று கேட்க,

" நீங்க வராமல் எப்படி எங்களுக்கு தூக்கம் வரும். அதான் நீங்க வர வரைக்கும் வெயிட் பண்ணிட்டு இருந்தோம்" என்றார் குமாரசாமி.

"சின்ன புள்ளையா நாங்க? இப்படி பயப்படுறீங்க?" என்று அஷ்வின் சொன்னான்.

"சித்தார்த் எப்படி இருக்கான்? டாக்டர் என்ன சொன்னாங்க?" என்று நலம் விசாரித்தார் குமாரசாமி.

"நல்லா இருக்கான் அப்பா! டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுல விட்டுட்டு தான் வரேன் அதான் லேட் ஆகிட்டு" என்றான் அஷ்வின்.

"நீ போயி தூங்கு அனு. நான் அப்பா அம்மா கிட்ட பேசிட்டு வரேன்" என்று அஷ்வின் கூறியதற்கு,

" ஹ்ம்ம்... குட்நைட்! நான் கிளம்புறேன். உங்க எல்லாருக்கும் சிவராத்திரி தான் இன்னிக்கி!" என்று கேலிச் செய்துவிட்டு தன் அறைக்குச் சென்றாள் அனு.

வழக்கம்போல் தூங்காமல் கைப்பேசியை நோண்டியபடி, தன்னை மறந்து தூக்கத்தில் ஆழ்ந்தாள் அனு.

"உங்ககிட்ட இருந்து சித்து குடும்பத்திற்கு ஒரு பெரிய உதவி வேண்டும்" என்று மெல்ல சொல்லத் தொடங்கினான் அஷ்வின்.

"விஷயத்தை சொல்லு! பண்ண முடிஞ்சா கண்டிப்பா செய்வோம்!" என்றார் குமாரசாமி.

"உங்களுக்கே சித்து வை நல்ல தெரியும்! ரொம்ப நல்ல பையன். அமைதியான குணம், அதோட பயந்த சுபாவமும் கூட! அது மட்டும் இல்லாம அவன் என்னோட பெஸ்ட் ஃப்ரண்ட். எனக்கு ரொம்ப வருஷமா பழக்கம்" என்று சித்தார்த் ஐ பெருமையாக அஷ்வின் சித்தரிக்க,

பின்பு, அவன் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்த விஷயத்தையும், பெண் வீட்டார் மூலமாக இந்த விபத்து நேர்ந்ததையும் கூறினான் அஷ்வின்.

இதைக் கேட்ட ரேகா உடனே ஆத்திரம் அடைந்தாள்.

"நல்ல பையன்! அப்படி இப்படி ன்னு சொல்லிட்டு இவ்வளவு பெரிய விஷயத்தை செஞ்சிருக்கான், இவனுக்கு ஆதரவா பேசிட்டு இருக்க?" என்று அஷ்வின் மேல் நெருப்பாக வார்த்தைகளை வீசி,

"யாரைப் பற்றியும் யோசிக்காமல் சுயநலமா இப்படி முடிவு எடுத்துட்டு எல்லோரையும் தர்மசங்கடத்தில் ஆழ்த்திட்டானே!" என்று தன் ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தாள் ரேகா.

"அம்மா! இப்ப கோபப்படுறதுனால எதுவுமே மாறப்போறது இல்லை! அடுத்து என்ன பண்ணலாம்னு தான் யோசிக்கனும்! நீங்களும் மற்றவர்களைப் போல உணர்ச்சிவசப்படாம, கொஞ்சம் யோசிச்சு பிரச்சினையை சரி பண்ணப் பாருங்க அம்மா!" என்று நிதானமாக ரேகாவை சமாதானம் செய்தான் அஷ்வின்.

"அஷ்வின்! இப்ப நாங்க என்ன செய்யணும்னு நீ நினைக்கிற? அதை சொல்லு!" என்று கேட்டார் குமாரசாமி.

"அப்பா! பொண்ணு பெயர் நர்மதா. அவள் பெரிய பண்ணையார் குடும்பத்தை சேர்ந்தவள். அவங்க வீட்டில அடிதடி அப்புறம் கட்டப்பஞ்சாயத்து பண்றதுன்னு கொஞ்சம் அடாவடியான ஆட்கள். இப்ப கல்யாண விஷயம் தெரிஞ்சா நர்மதாவை என்ன செய்வாங்கன்னு யோசிச்சுக் கூட பார்க்க முடியல! நர்மதா காதல் விஷயம் ஏதோ அலசல் புரசலாக தெரிஞ்சிருக்கும் போல! அதுக்கே சித்து வை கார் வச்சு இடிச்சுட்டு, ஆன்ட்டிக்கு போன் பண்ணி மிரட்டிருக்காங்க!" என்று அஷ்வின் கூறியதைக் கேட்டு,

"அடப்பாவமே! இப்படியெல்லாம் கூட செய்வாங்களா? பெரிய ரவுடியா இருப்பாரு போலயே!" என்று திகைத்தாள் ரேகா.

"அதான் நம்ம எல்லோரும் சித்து அம்மா கூட சேர்ந்து போயி பொண்ணு கேட்கலாம்னு யோசிச்சேன்"! என்றான் அஷ்வின்.

"உனக்கு பைத்தியம் பிடிச்சிருக்கா அஷ்வின்? லவ் பண்றது உறுதியா தெரியாம இருக்கும் போதே, கொலை மிரட்டல் கொடுத்துருக்காரு!இதுல நாம எல்லாரும் போயி பொண்ணு கேட்டு, கல்யாணம் ஆகிட்டுன்னு வேற சொன்னா, எல்லாருக்கும் ஒரே வெட்டு தான்!!" என்றாள் ரேகா.

"அப்படியெல்லாம் நடக்காது அம்மா! அப்பா கூட இருக்கும் போது ஏன் பயப்படுறீங்க? ஒரு போலீஸ் அதிகாரி முன்னாடி வாலாட்ட முடியுமா?" என்ற அஷ்வினின் வார்த்தைகள் ரேகா வை சிறிது ஆலோசிக்க வைத்தது.

"சரி... நாம சேர்ந்து போய் பேசலாம்!" என்றார் குமாரசாமி.

"நீங்க இவ்ளோ சீக்கிரம் ஒத்துப்பீங்கனு நான் நினைச்சு கூட பார்க்கல பா! ரொம்ப தேங்க்ஸ்!" என்றான் அஷ்வின்.

"அப்படினா.... நாளைக்கு ஈவினிங் நர்மதா வீட்டுக்கு போகலாம் அப்பா! நான் சித்து கிட்ட சொல்லிடுறேன். அம்மா நிம்மதியா தூங்குங்க! குட்நைட்!" என்று கிளம்பினான் அஷ்வின்.

"உனக்கு ஒரு கல்யாணம் பண்ணனும்னு ஆசைப்பட்டா, நீ உன் ஃப்ரண்ட் கல்யாணத்தைச் சொல்லி எங்க உயிரை ஊசலாட வைச்சுருக்கதும் இல்லாம நிம்மதியா தூங்குங்கன்னு வேற சொல்லிட்டு போறியா?" என்று ரேகா புலம்பிக் கொண்டிருக்க,

"யாரும் வேணும்னு தப்பான முடிவோ, சுயநலமான முடிவோ எடுக்க மாட்டாங்க. அவங்களோட சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அப்படி அமையும்போது என்ன செய்ய முடியும்? எல்லாத்துக்கும் மேல ஆண்டவன் எழுதின விதிப்படிதான் எல்லாம் நடக்கும்! நம்மளால முடிஞ்ச உதவியை செய்வோம்! அவ்வளவுதான்.. ரொம்ப யோசிக்காம தூங்கு.. வா போகலாம்" என்று குமாரசாமி அவளை அறைக்கு அழைத்துச் செல்ல,
கணவன் கூறிய வார்த்தைகள் ரேகாவின் மனசுக்கு நிம்மதியைத் தந்தது.

நாளைக்கு சாயங்காலம் நர்மதா வீட்டுக்கு போகலாம் என்ற செய்தியை ஜெயாவிடம் போன் மூலம் தெரிவித்து விட்டு படுத்தான் அஷ்வின். அம்மாவிற்கு தைரியம் சொல்லும் போது இருந்த தைரியம் ஏனோ இப்போது அவனுக்கே இல்லை! மனசுக்குள் ஒருவிதப் போராட்டமாக இருந்தது. நாளைக்கு நர்மதா வீட்டில் என்ன நடக்குமோ என்ற பயம், அடியாட்கள் வைத்து மறுபடியும் விபத்து ஏற்படுமா? என்ற குழப்பத்திற்கு மத்தியில் உருண்டு புரண்டுக் கொண்டிருந்தான் அஷ்வின்.

"ஏய் அஷ்வின்! நேரம் ஆகுது... எழுந்து வா!" என்று அம்மாவின் குரல் காதில் கேட்க,

"அட! அதுக்குள்ள மணி 12 ஆகிட்டா? எப்ப தூங்கினனு கூட தெரியல!" என்று தனக்குள் பேசிக் கொண்டே,

" நான் பிரஷ் பண்ணிட்டு ஃப்ரஷ் ஆகிட்டு வர்றேன் மா" என்று கட்டிலில் படுத்துக் கொண்டே குரல் கொடுத்தான் அஷ்வின்.

சிறிது நேரத்தில் சாப்பிடுவதற்காக வந்து தன் இருக்கையில் அமர,
"நீ எப்ப போய் சித்தார்த்-ஐ கூட்டிட்டு வரப் போற? என்று கேட்டார் குமாரசாமி.

"இப்ப கொஞ்ச நேரத்துல கிளம்பிடுவேன் அப்பா! நீங்க ரெடியா இருங்க, நான் வந்ததும் நர்மதா வீட்டுக்கு போகலாம்" என்றான் அஷ்வின்.

சில மணி வினாடிகளில் வீட்டில் இருந்து அஷ்வின் புறப்பட்டான். என் காதல் விஷயத்தை சொல்லும்போது கூட பாவிப்பயல் வாயைத் திறக்கவே இல்லையே!! இருக்கட்டும்! அப்புறம் மொத்தமாகச் சேர்த்து அவனை கவனிச்சுக்கலாம்..."என்று புலம்பிக் கொண்டே காரை ஓட்டினான் அஷ்வின்.

தன் காதல் தேவதையின் நினைவில் நனைந்துக் கொண்டே காரை ஓட்ட, சீக்கிரமா அவளது முகவரி அறிந்து அவளிடம் தன் காதலை தெரிவிக்க வேண்டும் என்றும், பின்பு அப்பா அம்மா சம்மதத்துடன் திருமணம் செய்ய வேண்டும் என்ற
எண்ணோட்டத்துடனே இருந்தான் அஷ்வின். ஒரே ஒரு தடவை பார்த்தாலும் ஏதோ பல ஜென்ம பந்தம் போல் அவளது முகம் அவனை வாட்டி வதைத்துக் கொண்டு இருக்க, எங்கே சென்று அவளை மீண்டும் பார்ப்பது? என்று குழப்பத்துடன் சித்துவின் வீட்டை அடைந்தான்...

யாழினியின் வருகைக்காக பதட்டத்துடன் காத்திருந்த தேன்மொழி, வண்டி வரும் சத்தம் கேட்டு எழுந்து வாசலுக்கு சென்றுப் பார்த்தாள்.
" யாழினி! என்னமா திடீர்ன்னு ஹாஸ்பிடல் போயிட்ட? என்ன விஷயம்னு கூட சொல்லாம? என்று கனிவுடன் தேன்மொழி கேட்க,

"என் ஃப்ரண்டுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு மா! அதான் பார்க்கப் போயிருந்தேன்! அப்பா கிட்ட சொல்லிட்டுத்தானே போனேன்!" என்று யாழினி சொல்லவும்,

"ஆமா தேனு! என்கிட்ட சொன்னா.. நான் தான் வேலை டென்ஷன்ல சரியா கவனிக்கல" என்றார் கார்த்திகேயன்.

தன் கணவனை முறைத்தப்படியே
"நீ ஃப்ரஷ் ஆகிட்டு சாப்பிட வா யாழினி!" என்று தேன்மொழி கூறினாள்.

யாழினி தன் அறைக்குச் செல்ல மாடிப்படி ஏறிக் கொண்டிருக்க,
"எந்த ஃப்ரண்டுக்கு குழந்தை பிறந்திருக்கு யாழினி?" என்று தேன்மொழி கேட்க,

"அது... என் ஃப்ரண்டு ரம்யா க்கு மா!" என்று யாழினி சொன்னதைக் கேட்டு,

"என்கிட்ட அஞ்சனா க்கு குழந்தை பிறந்திருக்குனு தானே சொன்ன? இப்ப ரம்யா ன்னு சொல்ற? என்று கார்த்திகேயன் புரியாமல் விசாரிக்க,

"அது ...அப்பா....!" என்று திருதிருவென யாழினி விழிக்க.....….

மலரும்...
 

vani sri

Saha Writer
Team
Messages
17
Reaction score
1
Points
1
மலர் 10:

"ரம்யா ன்னு தான் சொன்னேன் அப்பா! நீங்க சரியா கவனிச்சிருக்க மாட்டீங்க!" என்று சமாளித்து விட்டு தன் அறைக்கு வேகமாகச் சென்றாள் யாழினி.

கொஞ்சம் நேரம் கழித்து யாழினியின் அறைக்கு தேன்மொழி சென்று கதவைத் திறக்க, யாழினியோ கவலையுடன் அமர்ந்திருந்து கையில் அந்தப் பேப்பரைப் பார்த்தவாறு கண் கலங்கி இருப்பதைக் கண்டு வேதனையுற்றாள் தேன்மொழி.

"யாழினி!" என்று அழைத்த அம்மாவின் குரல் கேட்டு,
அவளைத் திரும்பிப் பார்த்தும் யாழினி மெளனமாகவே இருப்பதைக் கண்டு,
"உனக்கு எதுவும் பிரச்சினை இருந்தால் சொல்லு மா! நானும் உன்ன கொஞ்ச நாளா கவனிச்சிட்டுத் தான் இருக்கேன்! எதையோ பறிக்கொடுத்த மாதிரியே இருக்கியே!" என்று உருக்கமாக தன் தாய் பாசத்தை வெளிப்படுத்தினாள் தேன்மொழி.

"அப்படி ஏதும் இல்ல மா! நீங்க எதையும் யோசிச்சு மனச குழப்பிக்காதிங்க!" என்று யாழினி கூறிய வார்த்தைகளில் கூட சோகம் குடிக் கொண்டிருப்பதை உணர்ந்த தேன்மொழி, நேரம் வரும்போது யாழினி மூலம் விஷயத்தைத் தெரிஞ்சுப்பீங்க என்ற அமுதாவின் கூற்றை நினைவுபடுத்திக் கொண்டு, தன் மகளைத் தொந்தரவுச் செய்யாமல்,

"நாளைக்கு அர்ஜுன் வீட்டுக்கு வர்றியா யாழினி மா?" என்று தேன்மொழி கேட்டதற்கு,
"ஆமா! வருவேன் அம்மா!" என்று யாழினி சொல்ல,
"சரி! நீ ரெஸ்ட் எடு!" என்று கிளம்பினாள் தேன்மொழி.

"நல்லவேளை கையில இருந்த பேப்பரை அம்மா கவனிக்கல போல! பார்த்து இருந்தா கண்டிப்பா கேட்டிருப்பாங்க!" என்று யூகித்துக் கொண்டு பேப்பரைப் பார்த்துக்கொண்டே கட்டிலில் படுத்தாள் யாழினி.

சித்தார்த், ஜெயா இருவரும் நர்மதா வீட்டிற்கு செல்ல ஆயத்தமாக இருக்க,
வீட்டு வாசலில் நின்றபடியே அஷ்வின் சித்துவிற்குப் ஃபோன் செய்து வெளியில் வரச் சொல்ல, சித்து தன் அம்மாவுடன் தயாராகி வெளியே வந்தான்.

"நீ பண்ணின வேலையால எல்லாரும் இப்போ உயிரை பணையம் வச்சு அங்கே போறோம்! உன் கல்யாண விஷயம் தெரிஞ்சதும் அவ அப்பா என்ன செய்யப் போறாரோ? உன்ன பெத்ததுக்கு நான் போறேன் ஆனா பாவம் உன் கூட சகவாசம் வச்சதுனால தன் குடும்பத்தையும் இந்த பிரச்சினையில் உள்ளே இழுத்துருக்கான் அஷ்வின்!" என்று வேதனையில் பேசிக்கொண்டே காரில் ஏறினாள் ஜெயா.

"ஆன்ட்டி சித்து லவ் பண்ணின பொண்ண கல்யாணம் கட்டிகிட்டான்! இது ஒன்னும் பெரிய விஷயம் இல்லை! அவளோட அப்பா கண்டிப்பா சம்மதிச்சு ஏத்துப்பாங்க!" என்ற ஆறுதல் நிறைந்த வார்த்தைகளால் ஜெயாவின் மனதை சமாதானப் படுத்தினான் அஷ்வின்.

சிறிது நேரத்தில் மூவரும் அஷ்வினின் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். அனைவரும் கலந்து நர்மதா வீட்டில் என்ன பேசுவது? எப்படி அவர் அப்பாவை சமாளிப்பது? என்று ஆலோசித்துக் கொண்டிருக்க நேரம் உருண்டோடி அதற்குள் சாயங்காலம் மணி 5 ஆகிவிட,
"சரி நம்ம எல்லாரும் நர்மதா வீட்டுக்கு கிளம்பலாம்" என்று குமாரசாமி சொல்லவும், யாரும் எதிர்பாராதவிதமாக

" நர்மதா வீட்டுக்கு நாளைக்கு போலாமா? எனக்கு என்னவோ மனசு சரியில்லை!" என்று ஜெயா கூறியதும்,
எல்லோரும் சற்று புரியாமல் விழித்தனர்.
"ஏன் இவ்வளவு நேரம் கழிச்சு திடீர்னு இப்படி சொல்றீங்க?" என்று ரேகா கேட்க,
"என்னன்னு தெரியல! என் மனசு சரியில்ல... அதனால தான்...!" ஜெயா தடுமாற்றத்துடன் கூற,

"சரி! அப்போ நாளைக்கே நம்ம போகலாம்! இன்னைக்கு இங்கயே தங்கிட்டு காலையில் போகலாம்" என குமாரசாமி சொன்னதற்கு,

"அதுவும் சரிதான்! இதுக்குமேல வீட்டுக்குப் போய்விட்டு மறுபடியும் நாளைக்கு வர்றதுக்கு பதிலா இங்கேயே தங்கிட்டு நாளைக்கு போகலாம்!" என்றாள் ரேகா.

"மறுநாள் பொழுது விடிய, அர்ஜுன் வீட்டிற்கு செல்ல பரபரப்பாக கார்த்திகேயனும் தேன்மொழியும் கிளம்பிக் கொண்டிருக்க, யாழினி ஒருபுறம் தயாராகிக் கொண்டிருந்தாள். சற்று நேரத்தில் வீட்டில் இருந்து புறப்பட்டு அர்ஜுன் வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருக்கையில் திடீரென்று எதிர்பாராத விதமாக பள்ளம் இருப்பதை பார்த்து காரின் பிரேக்கை கார்த்திகேயன் அழுத்தியதும், முன்னிருந்த இருக்கையில் யாழினி முட்டிக்கொண்டு,
"ஆ!.......அம்மா!!!" என்று வலியில் கத்தினாள்.
"ஐயோ! ரொம்ப அடிபட்டுட்டா யாழினி?" என்று அப்பா கேட்டதும், "கொஞ்சம் வலிக்குது!" என்று யாழினி சொன்னாள்.

யாழினியின் தலையை நன்கு தேய்த்துவிட்டு, தண்ணீர் குடிக்க கொடுத்து தன் மடியில் படுக்க வைத்துக் கொண்டாள் தேன்மொழி. சில மணித்துளிகளில் அர்ஜுன் வீட்டிற்குள் பிரவேசிக்க,

"ஹே யாழினி! வா! வா! உன்ன தான் எதிர்பார்த்திட்டு இருந்தேன்! உள்ள வாங்க அங்கிள்! வாங்க ஆன்ட்டி வாங்க!" என்று வரவேற்றான் அர்ஜுன்.

"சரியான நேரத்துக்கு வந்துட்டோம் போதுமா?" என்றார் கார்த்திகேயன்.

"அம்மா அப்பா எங்க இருக்காங்க அர்ஜுன்? அவங்களைப் பார்த்து ரொம்ப நாள் ஆயிடுச்சு!" என்று யாழினி கேட்க,
"உள்ளே தான் இருக்காங்க போய் பாரு யாழினி! நான் மற்ற ஃப்ரண்ட்ஸ் எல்லாரையும் கவனிக்கிறேன்" என்று நகர்ந்தான் அர்ஜுன்.

பின்பு யாழினியைத் தன் மற்ற நண்பர்களுக்கும் அறிமுகம் செய்து வைத்துக் கொண்டிருந்தான் அர்ஜுன்.

"ஓகே! இட்ஸ் டைம் ஃபார் கேக் கட்டிங்!!" என்று அர்ஜுனின் அப்பா கணேஷ் விடுத்த அறிவிப்பைக் கேட்ட அனைவரும் தன் கைகளைத் தட்டி கரகோஷம் போடுவதும், விசில் அடிப்பதுமாக வீடே கலகலப்பாக மாறியது.

"ஹேப்பி பர்த்டே டூ யூ!!!" என்ற நண்பர்கள், உறவினர்கள் பாடல் பாட, வெட்கம் கலந்த சிரிப்புடன் அர்ஜுன் கத்தியை எடுத்து கேக் வெட்டப் போக,

"கொஞ்சம் வெயிட் பண்ணு டா!" என்று அர்ஜுன் அப்பா கணேஷ் சொல்லவும்,

ஒரு நிமிடம் வீடே நிசப்தமானது.

"யாழினி! நீயும் கூட போய் நில்லு மா!" என்றார் கணேஷ்.

இதைக் கேட்டவுடன் ஒன்றும் புரியாமல்,
"ஏன் அங்கிள்? நான் எதுக்கு?" என்று குழப்பத்துடன் கேட்டாள் யாழினி.

"அதெல்லாம் பிறகு சொல்றேன் மா! நீ போ! டைம் ஆகுது! சீக்கிரம் போ!" என்று கணேஷ் அவசரப்படுத்தினார்.

யாழினியின் அப்பா கார்த்திகேயனும்
"போ மா அர்ஜுன் பக்கத்துல!" என்று சொல்ல,
குழப்பத்துடன் யாழினி மெல்ல அடி வைத்து அர்ஜுன் அருகில் செல்ல, "என்ன நடக்குது ஒண்ணுமே புரியலையே?" என்று அர்ஜூன் மனதில் நினைத்துக் கொண்டிருந்தான்.

ஏதோ சர்ப்ரைஸ் இருக்கு போலயே! அதான் திடீர்னு இவ்வளவு பிரம்மாண்டமாகப் பிறந்தநாள் கொண்டாட்டமா? என்று நண்பர்கள் ஒரு பக்கம் கேலி கிண்டல் செய்தனர். நண்பர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு நடுவில் அர்ஜுன் கேக் வெட்டி முதலில் அம்மாவிற்கு ஊட்டி விட,
"நீ யாழினிக்குக் கொடு! அப்புறம் எனக்கு கொடு" என்றாள் லட்சுமி.

"அம்மா! என்ன இதெல்லாம்?" என்று அர்ஜுன் தயங்கியபடி வேறு வழியின்றி யாழினிக்குக் கேக்கை கையில் கொடுக்க,

யாழினியோ முகத்தை கூடப் பார்க்காமல் கீழே குனிந்தபடி கோபத்துடன் வாங்கிக்கொண்டாள்.
பின்பு நண்பர்களுடன் சேர்ந்து ஆரவாரத்துடன் பிறந்தநாள் கலைக் கட்டியது.

சில நிமிடங்கள் கழித்து,
"நான் கிளம்புறேன் அர்ஜுன்! எனக்கு முக்கியமான வேலை இருக்கு!" என்று கூறி யாழினி அவ்விடமிருந்து கிளம்ப முயல,

"அப்படியா! ஓகே கிளம்பு யாழினி!" என்று அர்ஜுன் சொல்ல,

"அதுக்குள்ள எங்க யாழினி கிளம்புற? உனக்கு இனி தான் ஒரு பெரிய சர்ப்ரைஸ் இருக்கு!" என்று அப்பா கூறியதைக் கேட்டு மீண்டும் குழப்பம் அடைந்தாள் யாழினி.

"ரொம்ப யோசிக்க வேண்டாம் யாழினி விஷயத்தை நானே சொல்லிடுறேன்!" என்று கார்த்திகேயன் புன்னகையுடன் அனைவரின் முகத்தையும் சுற்றிச் சுற்றிப் பார்க்க, எல்லோரும் ஆவலாக விஷயத்தை எதிர்ப்பார்த்துக் கூச்சலிட்டனர்.

"கணேஷ்! நீயே விஷயத்தைச் சொல்லிடேன்!" என்றார் கார்த்திகேயன்.

அர்ஜுன் நடப்பது புரியாமல் தவிக்க, யாழினிக்கோ தலையே பிச்சுக்கும் போலிருந்தது!

"இதுவரை நண்பர்களாக இருந்த அர்ஜுன் யாழினியை திருமணப் பந்தத்தில் இணைத்துக் கணவன் மனைவியாக வாழ்க்கையைத் தொடர ஆசைப்படுறோம். அதற்கான நிச்சயதார்த்தம் தான் இப்ப நடக்க போகுது!" என்று கணேஷ் சொல்லி முடிக்க, ஒரே கூச்சலும் கைத்தட்டலுமாக இருந்தது!

"டேய் நீ பார்ட்டி வைக்கும்போதே சந்தேகம் இருந்துச்சு!" என்று நண்பர்கள் கூட்டம் கிண்டல் செய்ய, அர்ஜுன் சற்றும் எதிர்ப்பார்க்காததால் திக்குமுக்காடிப் போய் நின்றுக் கொண்டிருந்தான்.

"கல்யாணமா? என்ன நடக்குது அப்பா இங்க? என் சம்மதம் இல்லாமல் எப்படி நீங்க முடிவு பண்ணலாம்?" என்று ஆக்ரோஷமாக யாழினி கேட்க,

கோபத்தில் சிவந்த அவளது முகமும், ஆத்திரத்தில் துடித்த அவளது கண்களும் அனைவரையும் பதற்றத்தில் ஆழ்த்தியது.

அவளது கோபம் நிறைந்த குரல் மற்றும் அவளுக்குள்ளிருந்த தவிப்பையும் பார்த்து கார்த்திகேயனும் தேன்மொழியும் திடுக்கிட்டனர்.

“ஏன்மா இப்படி பேசுற? உனக்கு இந்த கல்யாணத்துல சம்மதம் இல்லையா?" என்று தேன்மொழி அவளது கன்னத்தில் கைவைத்து அன்பாக கேட்க,

யாழினியின் இருதய ஓசையை வருடி, தேயாத நிலவாய் தன்னவன் நிலைத்திருக்க, வாடாத பூவாய் அவன் மீது தினம் காதல் மலருகையில்,

இப்படி ஒரு இக்கட்டில் மாட்டித் தவித்த யாழினி,

"இல்ல! இல்ல! இல்ல! அர்ஜுனை கல்யாணம் பண்ண எனக்கு விருப்பம் இல்ல!" என்று கத்தி விட்டு, மனம் செந்நீர் சிந்தியபடி வீட்டை விட்டு யாழினி வெளியே கிளம்பினாள்.....

மலரும்....
 
Top Bottom