அத்தியாயம்- 7
தான் எவ்வளவு முயன்றும் தன் தந்தையின் உத்தரவை மீற முடியாத மித்ரன், முதலிரவு அறைக்குள் மிக உக்கிரமாக நின்றிருந்தான்.
ஒரு நிமிடம், ஒரே ஒரு நிமிடம் யோசிக்காமல் தான் எடுத்த முடிவை எண்ணி தன் மீது அவனுக்கே கொலைவெறி உண்டாகியது.
அவளை பற்றி என்ன தான் விசாரித்து தெரிந்துக் கொண்டாலும், அவன் மனம் அவளை ஏற்க முடியாமல் ஏதோ ஒன்று தடுத்துக் கொண்டே இருந்தது.
அதற்கு காரணம் ஒருவேளை அவளின் முன்னால் காதலாக கூட இருக்கலாம் என்று அவனுக்கே அவன் மனம் ஆறுதல் சொல்ல, அதை உணர்ந்து அதிர்ந்து போனான் அவன்.
'அவளையே பிடிக்கவில்லை என்று சொல்கிறேன். இதில் அவளுடன் என் வாழ்க்கையா? ச்சை என்ன எண்ணம் இது!" என்று தன்னை நொந்துக் கொண்டவன் மெத்தையை வெறித்துப் பார்த்தான்.
"இப்ப இதெல்லாம் ரொம்ப முக்கியம். இந்த அப்பா இருக்காரே. ச்சா! அப்படி என்ன என் மேல கண்மூடித் தனமான பாசம், நம்பிக்கை. மகனா இருந்தாலும் என் வார்த்தையில உண்மை இருக்கா இல்லையானு இந்நேரம் கமிஷனரா யோசிச்சி இருக்கனும்ல? வேலையை விட்டுட்டா போலீஸ் மூளை யோசிக்காதா? " என்று தன் தந்தையை நினைத்து வெறுப்படைந்தான்.
பின் அறையை சுற்றி சுற்றி வந்தவனுக்கு திவ்யா மதியம் பேசியது எல்லாம் நினைவில் வந்து சென்றது.
' என்ன என்ன பேசுறா? பொண்ணு மாதிரியா பேசுறா? கொஞ்சம் கூட அடக்கமே இல்ல. கமிஷனர்ங்கிற பயமும் இல்ல." என்று அவள் ஜீப்பில் பேசியதை நினைத்து பார்த்தவனின் உதடு மெல்லியதாக புன்னகையை தழுவியது. ஆனால், அதை அவன் உணர தான் இல்லை.
வெளியே திவ்யாவின் குரலை கேட்டவனுக்கு உள்ளுக்குள் ஏதோ ஒரு படபடப்பு ஏற்பட்டாலும், ஏதோ ஒரு உள்ளுணர்வு அவனின் மனநிலையை சிறிது மாற்றி இருந்தது என்னவோ உண்மை தான்.
" என்ன எனக்கு இவ்வளவு படபடப்பா இருக்கு? என்னவோ புது மாப்பிள்ளை மாதிரி ஃபீலாகுதே? அய்யோ மித்ரன் வேண்டாம்டா, ஒரு பொண்ணுக்கிட்ட விழுந்திடாத. அவ ஜஸ்ட் சிக்ஸ் மன்த்ஸ் இருந்துட்டு போயிடவா. அதுவரை உன்னை நீயே கண்ட்ரோல் பண்ணிக்கோ " என்று கண்ணாடியில் தன் பிம்பத்திடமே பேசிக்கொண்டு இருந்தவன், இன்னும் அவள் அறைக்குள் வராமல் இருப்பதை பார்த்து கதவை திறக்க, அங்கே அவளோ பலத்த சிந்தனையில் நின்று இருந்தாள்.
அதைப் பார்த்தவன் சட்டென அவளை உள்ளே இழுத்தான்.
பயத்தில் பேதையவளின் நயனங்கள் மிரட்சியாக இருப்பதை கண்டவன் அவளை வம்பிழுக்க நினைத்து வார்த்தைகளில் விளையாடினான். அதை வைத்தே அவளை இம்சை செய்து அவள் அறியா வண்ணம் ரசித்தான்.
அவனின் சாந்தி முகூர்த்தம் என்ற வார்த்தையை கேட்டவளுக்கு மயக்கமே வராத குறை தான்.
'அய்யோ இவர் என்ன காலையில பார்த்த சிடு மூஞ்சி மாதிரி இல்லாம ரொமான்ட்டிக் பாய் மாதிரி நடந்துக்கிறாரே! பேச்செல்லாம் ஒரு மார்க்கமா இருக்கு. இப்ப என்ன பண்றது?' என்று யோசனையில் இருந்தவளின் தலையில் நங்கென்று கொட்டினான் மித்ரன்.
அவளோ, " ஆஆ..உஸ் "என சத்தமிட்டுக்கொண்டே தலையை தேய்த்து மித்ரனை பார்க்க,
அவனோ, " என்னடி கனவு காண்றியா? " என்று 'டி' போட்டு ஏகத்திற்கும் உரிமை கொண்டாடினான்.
திவ்யாவோ தனது எதிர்ப்பை முறைப்பில் காட்டினாள்.
மித்ரனோ அவளை மேலும் சீண்ட நினைத்து அவளை பட்டும்படாமல் நெருங்கி நூலிழையில் உரசியபடி ஹஸ்கி வாய்ஸில், " என்னடி ஜீப்ல அந்தப் பேச்சி பேசின? இப்போ அப்படியே பம்முற? " என்று கேட்க, அவளோ ஆணவனின் நெருக்கத்தில் நெளியவும் முடியாமல் விலகவும் முடியாமல் மயங்கி சரிந்தாள்.
அவள் மயங்கியதை பார்த்தவன் முதலில் பதற்றமாக அவளை தூக்கி வந்து அலங்கரித்த மஞ்சத்தில் கிடத்தினான். பின் அருகிலிருந்த தண்ணீரை அவசரமாக எடுத்து திவ்யாவின் முகத்தில் தெளிக்க போன சமயத்தில் அவனின் கரங்கள் அப்படியே அந்தரத்தில் தொங்கின.
கடுப்புடன், " அடச்சீ எழுந்திரி! கேவலமா நடிக்காத" என்று கையில் ஊற்றிய தண்ணீரை கீழே தெளித்தான்.
அவளோ இன்னும் கண்களை இறுக்கமாக மூடிக்கொள்ள, அதை பார்த்தவன், "ஏன்டி உனக்கு மிரட்ட தான் தெரியலப் பார்த்தா! சரியா நடிக்கவும் தெரியலயேடி. மயங்கினவங்க கருவிழி கண்ணுக்குள்ள உருண்டுக்கிட்டே இருக்குமா?" என்று அவள் முகத்தருகில் குனிந்து மெல்ல கேட்க,
நயனங்களை பட்டென்று திறந்தவள், " ஆமால்ல?" என்று கேட்டாள், நடிப்பையும் மறந்து.
அவனோ அவனின் நெற்றியில் அடித்துக் கொண்டு அவளிடமிருந்து விலகி திரும்பி நின்றான், அவளால் ஏற்பட்ட புன்னகையை மறைத்துக்கொள்ள.
" சரியான சுட்டி டிவி " என்று முணுமுணுத்துக்கொண்டே அவன் மாற்று உடையை எடுத்துக் கொண்டு குளியலறைக்கு சென்றான்.
அவன் அகன்றதும் தான் அவளுக்கு சீரான மூச்சே வந்தது.
"ச்சா போலியா மயங்கினதை கண்டுபிடிச்சிட்டாரே. இப்போ ஆளே ஒரு மார்க்கமா இருக்காரு. என்னாச்சி இவருக்கு? காலையில எரிஞ்சி விழுந்தாரு. இப்போ அதுக்கு நேரெதிரா குழைஞ்சிக்கிட்டு வராரு? இந்த விசித்திரமான மனுஷன் கிட்ட இருந்து எப்படி தப்பிக்கிறது? " என்று யோசித்தவள், "பாத்ரூம்ல இருந்து வர்றதுக்குள்ள கண்ண மூடி தூங்கிடலாம் திவ்யா" என்று முடிவு செய்து, குளியலறையில் தண்ணீர் சத்தம் நின்றதை அறிந்து, போர்வையை முகம் தொட்டு கால்வரை போர்த்திக்கொண்டு படுத்துவிட்டாள்.
இரவு உடையை மாற்றிக் கொண்டு வெளியே வந்தவனின் புருவங்கள் உச்சி முதல் பாதம் வரை போர்த்திக்கொண்டு இருந்தவளைப் பார்த்து யோசனையில் சுருங்கியது. பின் இருபக்கமும் தலையை ஆட்டி விட்டு மெல்லிய புன்னகையோடு அந்த மெத்தையில் சென்று இன்னொரு பக்கம் படுத்தான் மித்ரன்.
அதுவரை போர்வையிலிருந்து அவனின் அசைவுகள் அனைத்தையும் நிழலாக பார்த்தவள், அவனும் மெத்தையில் வந்து படுத்ததும் போர்வையை சுருட்டிக்கொண்டு மெத்தையிலிருந்து துள்ளி எழுந்தாள்.
திவ்யா எழுந்த வேகத்தில் மித்ரனும் என்னவோ ஏதோ என்று பாய்ந்து எழுந்து நின்றான். பின், கண்களால் சுற்றி அலசியவாறே, " என்னடி? " என்று கேட்டான்.
" அது... " என சொல்ல வந்தவள் மூளையோ, 'எப்படி சொல்றது? இது அவரோட வீடு, அவரோட ரூம்மு, அவரோட மெத்தை, எதுக்கு இங்க வந்து படுத்தீங்கனு எப்படி கேட்கிறது?' என்று யோசிக்க,
சங்கடத்துடன் நின்றவளை சலிப்புடன் பார்த்து, "சொல்லு திவ்யா, என்னாச்சி? " என்று கேட்டான் மித்ரன்.
" அது வந்து இந்த ரூம்ல சோபா எல்லாம் இல்லையா?" என்று சுற்றி முற்றி பார்த்துக் கொண்டே அவள் கேட்க,
அவனோ குழப்பமாக, " பெட் ரூம்க்குள்ள சோபா எதுக்குடி? "என்றான்.
"அதுவும் சரி தான்" என்று கூறியவளை அழுத்தமாக பார்த்தவன் அவள் அருகில் காலடி எடுத்து வைத்து, கரங்களை மார்புக்கு நடுவே கட்டிக் கொண்டு,
"ஏன் மேடத்தை நான் ஏதாவது பண்ணிடுவேனு பயம் வந்துடுச்சா?" என்று கேட்டான், அவளின் நயனங்களை ஆராய்ந்தபடி.
திவ்யாவோ அவனை மிரட்சியுடன் பார்த்து வலப்பக்கம் இடப்பக்கம் மேல்பக்கம் கீழ்பக்கம் என்று அனைத்து பக்கமும் தலையை ஆட்டினாள். அதைப் பார்த்தவனுக்கு தன் சிரிப்பை அடக்க பெரும்பாடாகியது.
புன்னகையை மிகவும் கடினப்பட்டு விழுங்கிக் கொண்டு, " நீதானடி சொன்ன! சிங்கமா அசிங்கமானு கூட வாழ்ந்து பார்க்கச் சொல்லி? நீயே சொல்லிட்டு இப்ப இப்படி தள்ளிப்போனா என்ன அர்த்தம்?" என்று கேட்டவன், மங்கையவளின் கரங்களிலிருந்த போர்வையை வாங்கி மெத்தையில் வீசிவிட்டு கணப்பொழுதில் பெண்ணவளின் இடையை வளைத்துப் பிடித்து தன்னருகே நிற்க வைத்தான்.
அவளின் இதயத்துடிப்பு வேகமாக இருக்க, உதடுகள் துடித்து நயனங்கள் இரண்டும் பட்டாம்பூச்சி போல் அடித்துக் கொள்ள, மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியபடி எச்சிலை ழுழுங்கிக்கொண்டு இருந்தவளை அப்பட்டமாக ரசித்தான் மித்ரன்.
ஆரம்பத்தில் அவளை வெறுப்பேற்றி பார்க்கவே அவ்வாறு நடந்துக் கொண்டவனால், முதல் முறை ஒரு பெண்ணின் வாசமும், ஸ்பரிசமும், மஞ்சள் கயிற்றின் மாயத்தால் 'இவள் என்னவள் தான்' என்ற எண்ணத்தை விதைத்து, ஆணவனின் மனதை தடுமாறச் செய்தது.
அவளிடம் கொஞ்சம் கொஞ்சமாக தன் சுயத்தை இழந்துக்கொண்டு இருந்தவனுக்கு அவளிடம் விலக வேண்டும் என்ற நினைப்பே மூளையில் இருந்தாலும், மனமும் சூழலும் இத்தனை வருடங்கள் அவன் கட்டிக்காத்து வந்த உறுதியை எல்லாம் சிறிது சிறிதாக உடைத்துக்கொண்டு இருந்தன. அதை முழுமையாக உணர்ந்தான் மித்ரன்.
திவ்யாவோ, " எ..என்ன பண்றீங்க? அது அப்போ உங்க மனசை மாத்த சொன்னேன். ஆனா நீங்க அதை இவ்வளவு சீரியஸா எடுத்துப்பீங்கனு நான் நினைக்கல. " என்று அவனின் கைவளைவுக்குள் இருந்து விடுபட முயன்றாள்.
அவனோ ஹஸ்கி குரலில், "ஏய் சுட்டி டிவி, சும்மா நில்லுடி. எதுக்கு நெளிஞ்சிட்டே இருக்க?" என்றான், மிரட்டலாக.
அவள் தன்னை அதிர்ந்துப் பார்த்த சமயத்தில்," நீ சும்மா சொன்னீயோ, பொய்யா சொன்னீயோ, ஆனா இந்த மித்ரனை உசுப்பிவிட்டுட்ட. சோ, அதனோட பலனை நீ அனுபவிச்சி தான் ஆகனும் " என்று கூறியவனின் கண்கள் பேதையவளின் இதழில் படிய, அவளோ அவசரமாக,
"ஆனா நீங்க எனக்கு சிக்ஸ் மன்த்ஸ் தானே டைம் கொடுத்து இருக்கீங்க? ஆறு மாசம் கழிச்சி என்னை விரட்டி விட்டுட்டா, அப்போ என் வாழ்க்கை என்னாகுறது?" என்று கண்கள் பனிக்க கேட்டவளை வினாடியும் தாமதிக்காமல் விடுவித்தான் மித்ரன்.
அந்நொடி தான் முன்பு கூறிய சொற்களை வெறுத்தவன் சுயவுணர்வுக்கு வர சிறிது நேரம் பிடித்தது.
பின், " நீ போய் தூங்கு" என்று கூறிவிட்டு வெளியே சென்றவனுக்கு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு தன் மீதே கோபம் வந்தது.
" என்ன மித்ரன் பண்ணி இருக்க? சும்மா அவளை சீண்டிப் பார்க்க தானே நினைச்ச? அப்புறம் எப்படி அவ கிட்ட அவ்வளவு நெருக்கமா எந்த வெறுப்புமில்லாம நெருங்கி நின்ன?"என்று கேட்டுக்கொண்டவனுக்கு பதில் தான் கிடைக்கவில்லை.
மித்ரன் வெளியேறியதும் அதுவரை பிடித்து வைத்து இருந்த கண்ணீர் துளிகள் அனைத்தும் வெளியேற, உடைந்து போய் தரையில் கட்டிலுக்கருகில் சரிந்து உணர்வுகளின் பிடியில் சிக்கித்தவித்தாள் திவ்யா.
அப்படியே சிறிது நேரத்தில் உறங்கியும் போனாள். அந்நேரம் மீண்டும் அறைக்குள் வந்தவன் அவளின் வாடிய வதனத்தை கண்டு பெருமூச்சோடு அவளை எழுப்பிவிடாமல் தன் இடத்தில் சென்று உறங்க ஆரம்பித்தான்.
மறுநாள் காலை சீக்கிரம் விழித்தவன் இன்னும் அவள் அதே நிலையில் உறங்குவதை கண்டு மனம் கேளாமல் மெல்ல அவளை தூக்கி மெத்தையில் சரியாக படுக்க வைத்துவிட்டு போர்வையை எடுத்து போர்த்தி விட்டான். பின் எப்போதும் போல் உடற்பயிற்சி செய்ய புறப்பட்டுவிட்டான்.
அவளும் சிறிது நேரத்தில் கண்விழித்தவள், தான் மெத்தையில் இருப்பதை பார்த்து நேற்று இரவு மித்ரன் செய்ததனைத்தையும் மனதில் ஓட்டிப்பார்த்தாள். பிறகு, ஒரு பெருமூச்சோடு தன் மாற்று உடைகளை எடுத்துக்கொண்டு குளியலறைக்கு சென்றாள்.
திவ்யா குளித்துவிட்டு வரவும் மித்ரன் உடற்பயிற்சி செய்துவிட்டு வரவும் சரியாக இருக்க, ஈரம் சொட்ட சொட்ட வந்த மனைவியை கண்டதும் ஹார்மோன்கள் அனைத்தும் ஏகத்துக்கும் துள்ளிக்குதித்தன மித்ரனுக்கு.
அவளும் கணவனின் வியர்வை படர்ந்த ஆடையையும் உடலையும் பார்த்து 'எக்சர்சைஸ் நல்லா செய்வாரு போல' என்று எண்ணிக்கொண்டே தலையை துவட்டியபடி கண்ணாடி முன் நின்றாள்.
மித்ரனோ தன் தலையை உலுப்பிக்கொண்டு " ஊப்ப் " என ஊதிவிட்டு, ' இவகிட்ட இருந்து தள்ளி போகனும் பார்த்தா முடியாது போலயே ' என்ற நினைப்போடு குளியலறைக்கு சென்றான்.
குளித்து முடித்தவனோ 'இந்நேரம் அவ வெளியப்போய் இருப்பா' என்ற நினைப்போடு வெளியே வர, அதேசமயம் திவ்யா தயாராகி தன் துப்பட்டாவை எடுக்க திரும்பினாள். குளியலறையிலிருந்து வந்தவன் மீதே மோதி பின்னால் விழப்போனவளை, ஆணவனின் வலிய கரங்கள் கீழே விழாமல் தாங்கிப் பிடித்தன.
இடுப்பில் ஒரு துண்டை மட்டும் கட்டிக்கொண்டு ஈரத்துடன் இருந்தவனின் வெற்றுத் தோள்களை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள் திவ்யா.
அக்கணம் அவளின் மிரண்ட நயனங்கள் அவனின் காந்தப்பார்வையோடு கலந்தது.
ஏற்கனவே உணர்வுகளின் பிடியில் சிக்கித் தவித்தவனுக்கு இந்நிலை மேலும் தவிப்பை உண்டாக்கியது.
அவளை மெல்ல நிமிர்த்தி நிற்க வைத்தவன், " ஏன்டி இப்படி பண்ற? உன்னை விட்டு தள்ளி இருக்கனும்னு நினைக்கிறேன். ஆனா முடில, சாரி " என சொல்லிக்கொண்டே மங்கையவளின் செவ்விதழ்களை மென்மையாக சிறைப்பிடித்தான்.
அவளோ உள்ளுக்குள் அதிர்ந்து அவனை தள்ளிவிட, திவ்யாவின் விலகலை உணர்ந்தவனோ பலமாக காயப்பட்டு போனான்.
பின் கடகடவென தன் காக்கிச்சட்டையை எடுத்துக்கொண்டு வேறு அறைக்கு சென்று தயாராகி வெளியே சென்று விட்டான்.
அவன் வீட்டை விட்டு போனதும் திவ்யா இன்னும் அதே நிலையில் தான் நின்றிருந்தாள்.
"ச்சா என்ன காரியம் பண்ணிட்டான்? ஒரு பொண்ணோட அனுமதியில்லாம...ச்சை!" என்று மித்ரன் மீது கோபம் எல்லையில்லாமல் வந்தது அவளுக்கு.
அதே நேரம் அவளின் கைப்பேசி அழைக்க, அதை எடுத்துப் பார்த்தவள் தன் தோழி என்றதும் தன்னை ஒருநிலைப்படுத்திக் கொண்டு அழைப்பை எடுத்தாள்.
" சொல்லு சுதா"
" என்னடி உன் புருஷன் வீட்டு ஆளுங்க எப்படி நடந்துக்கிட்டாங்க?" என்று தோழியின் நலனில் அக்கறையுடன் விசாரித்தாள் சுதா.
திவ்யாவோ, " புருஷன் இல்ல. என் கழுத்துல தாலியை மாட்டிவிட்டவர். இனி ஒரு தரம் அவரை புருஷன் மண்ணாங்கட்டினு பேசின, உன் நம்பரை ப்ளாக்ல போட்ருவேன். "என கோபத்துடன் பேசியவளின் குரலை கேட்ட சுதா, 'ரெண்டுக்கும் ஒரே அர்த்தம் தான் ' என மனதில் நினைத்தபடியே,
" சரிடி நீ இன்னிக்கு ஸ்டூடியோவுக்கு வருவியா? இன்னும் ஒன் வீக்ல அந்த பிரபலமான டிவி ஷோ காம்பெடிஷன் இருக்கு. நீயும் உன் முன்னால் காதலனும் தான் பர்ஃபாமென்ஸ் செய்யனும். பட் நேத்து தான் உங்களுக்கு ப்ரேக்கப்பாகிடுச்சே. சோ, மதன் இதுல உன் கூட ஜாயின் பண்றது…. சந்தேகம்தான்?" என்று இழுத்தாள் சுதா.
திவ்யாவோ ' இதை எப்படி மறந்தேன்? ' என்று யோசித்தவள், மதனை இதில் கலந்துக்கொள்ள வைக்க எப்படியெல்லாம் மன்றாடி சம்மதிக்க வைத்தார்கள் என்ற நினைவு வந்து கண்கள் ஈரமாகினாள்.
ஒரு ஷோவில் இவளின் நடனத்தை பார்த்து அவளை பார்க்கும் ஆர்வத்தோடு தினமும் அவர்களின் டான்ஸ் ஸ்டூடியோவிற்கு வந்து பேசி பழகியவனின் மீது எந்த பெண்ணுக்கு தான் ஈர்ப்பு வராது. ஆனால், இதில் திவ்யாவும் மதனும் அறியாத ஒன்று, சுதாவிற்கும் ஆரம்பத்தில் மதன் மீது ஈர்ப்பு உண்டானது தான்.
ஆனால், காலப்போக்கில் தோழியும் மதனும் விரும்புகிறார்கள் என்று அறிந்ததும் தன் ஆசைகளை எல்லாம் மனதிற்குள்ளேயே போட்டு பூட்டி வைத்துக் கொண்டாள் சுதா.
ஆனால், மதனும் திவ்யாவும் பழகுவதை பார்த்தால் சத்தியம் செய்தால் கூட யாரும் நம்ப மாட்டார்கள், இருவரும் காதலர்கள் என்று. அந்த அளவிற்கு இருவரின் கண்ணியமும் இருந்தது.
ஐடியில் வேலை செய்பவன் வேலைபளூவிலும் தினமும் ஒருமுறையேனும் இருவரையும் பார்த்துவிட்டு தான் செல்வான்.
அப்படிப்பட்ட ஒரு நாளில் தான் பிரபலமான டிவி ஷோவில் ஜோடியாக நடனம் ஆடும் போட்டியை பற்றிய தகவல் வர, இரு தோழிகளுக்கும் மதனை தவிர வேறு எந்த ஆணும் நம்பிக்கையானவராக தெரியாமல் போனதால் இருவரும் மதனின் காலை பிடித்து கெஞ்சாத குறை தான்.
அவனுக்கும் பெண்கள் இருவரையும் பார்த்து பாவமாக தோன்ற, சரியென்று ஒப்புக் கொண்டான். அன்றிலிருந்து ஆரம்பமானது அவர்களின் பயிற்சி.
என்ன தான் தொட்டு, தூக்கி, சில சமயம் அணைத்து என நடனம் ஆடினாலும், இருவரின் கவனமும் நடனத்தின் நேர்த்தியிலேயே இருக்கும்.
அப்போது எல்லாம் சுதாவிற்கு தோன்றிய ஒரு விசயம் ' உண்மையாவே இவர்கள் காதலர்கள் தானா? ' என்பது தான்.
சுதாவோ போனில் சத்தம் போட்டுக் கொண்டு இருக்க, அதை உணர்ந்தவள், " நான் நேரா வந்து பேசுறேன்டி " என சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டு கீழே சென்றாள்.
அங்கே தனக்காக காத்திருந்த தயாளனை கண்டதும், " குட் மார்னீங் மாமனாரே " என கூற, அவரும் பதிலுக்கு சிரித்துக்கொண்டே " மார்னீங் மருமகளே " என்று கூறினார்.
பின் இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டே காலை உணவை முடித்தனர்.
திவ்யா தனது அந்த ப்ரோக்ராம் பற்றி எந்த ஒளிவும் மறைவும் இன்றி விளக்கமாக சொல்ல, முதலில் தயங்கியவர் இத்தனை நாள் அதற்காக அவள் பட்ட கஷ்டத்தை தெரிந்து கொண்டதும் இந்த ஒரு முறை மட்டும் மதனுடன் நடனமாட ஒப்புக் கொண்டார்.
திவ்யாவின் நேர்மையான பேச்சை கேட்ட தயாளனுக்கு மருமகளின் மீது தனிமரியாதையே உண்டானது.
"தான்க்யூ மாமனாரே " என்று துள்ளிக் குதித்துக் கொண்டு சொல்லியவள் சிட்டாக பறந்து தங்கள் ஸ்டூடியோவிற்கு சென்றாள்.
அதே சமயம் அந்த பெரிய மாலில் ஒரு அறையில் அமர்ந்து இருந்த மித்ரன் அனல் கொதிக்கும் பார்வையோடு தன் எதிரே அமர்ந்து இருந்த நபரிடம், "ம்ம் சொல்லுங்க மிஸ்டர், எப்படி ஒரே மாசத்துல உங்க மாலுக்கு ஷாப்பிங் பண்ண வந்த சின்ன பசங்க எல்லாம் காணாமப் போறாங்க?" என்று குரலில் கடுமையை காட்டி விசாரித்துக் கொண்டிருந்தான்.
எதிரே அமர்ந்திருந்தவனின் முகமோ கொஞ்சம் கொஞ்சமாக வெளிறிப் போனது.
இனி அடுத்த அத்தியாயத்தில் காணலாம்.
மறக்காமல் கதை எப்படி செல்கிறது என்று கருத்துகளை கூறுங்கள்...
Welcome Dikshita 😍😍😍
www.sahaptham.com