Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed என் இதயம் நடிப்பதில்லை

Messages
81
Reaction score
60
Points
18
11
எல்லாம் கடவுள் கணக்குப்படி செவ்வனே நடந்தேறி விட்டது. கனகமும் சதாசிவமும் ரொம்பவும் சந்தோஷமடைந்தனர். காரணம் அவர்களின் அன்பு நிறைந்த மனம்தான். தங்கள் முதலாளியை கவனிக்க யாரும் இல்லையே, அனாதை போல் தனியாக இங்கு வந்து ஓய்வெடுக்கும் அவரை பார்க்க இருவருக்கும், எத்தனை பணம் இருந்து என்ன? வீட்டில் விளக்கேற்ற பெண்ணில்லையே என்று பலமுறை வருத்தப்பட்டிருக்கிறார்கள். ஆகவே இப்போது அவர்களுக்கு ரொம்பவும் மகிழ்ச்சி. கனகம் பம்பரமாய் சுழன்று எல்லாம் செய்தாள். ஆரத்தி எடுத்து இருவரையும் வரவேற்று பால் பழம் கொடுத்து மதியம் வடை, பாயசத்துடன் விருந்து சமைத்து என்று சகலமும் செய்தார் எல்லாவற்றையும் இயந்திரமாய் செய்தாள் ரக்‌ஷிதா
அவளின் மனதில் இருந்ததெல்லாம் ஒன்றுதான் தூங்கிக்கொண்டிருக்கும் தன்வன்யா எழுந்து விட்டால் அவளுக்கு நடந்ததை எப்படி புரிய வைப்பது...அந்த பிஞ்சு மனம் இதை எப்படி ஏற்கும் ?
மாத்திரையின் வீரியத்தால் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தாள் தன்வன்யா
"தனுவை எழுப்பி சாதம் ஊட்டனும் மா----- காலையில் பால் குடிச்சதோட சரி...." என்ற கனகம் தனுவை எழுப்பியும் விட்டார்.
தூக்க கலகத்தில் விழித்த குழந்தை "அம்மா" என்று ரக்‌ஷிதாவின் மடியில் சாய்ந்தது.... கண்கள் தாமாக கலங்கியது ரக்‌ஷிதாவிற்கு

"அட நீ ஏன் கண்ணு அழுவுற எல்லாம் சரியாகிடும், தனும்மா......எழுந்திரி - சாப்பிடலாம். பாட்டி உனக்கு பாயசம் எல்லாம் செய்திருக்கேன்"
"ஐ....பாயசமா?"
"ம்......வா----வா..." தனுவை இடுப்பில் வைத்துக்கொண்டு உணவு ஊட்டத்தொடங்கி விட்டார் கனகம்.

"கடவுளே! என் வாழ்வில் நானே நினைக்காத பலதும் நடக்கிறது. எல்லாவற்றிற்கும் நீ தான் பொறுப்பேற்க வேண்டும். ஒரு வகையில் அந்த எம்.டி.போன்ற நரிகள் வாழும் இந்த உலகில் குடும்பத்தின் ஆதரவு இல்லாமல் நின்றால் அழிவது நிச்சயம் ஆனால் அதற்காக அந்த கிசுகிசுவை உண்மையாக்கியது எப்படி நியாயமாகும். ஏன் இதை பற்றி கிருஷ்ணகாந்த் யோசிக்கவில்லை. அது மட்டும் இல்லாமல் அவருக்கு பெண் கொடுக்க பல திரைபட பிரபலங்களும் பணக்காரர்களும் காத்திருக்க இவர் என் பெயர் கெட்டு விடக்கூடாது என்ற மனிதாபிமான அடிப்படையில் ஏன் ஏற்றுகொள்ள வேண்டும்? இது தான் விதி என்பதா? என் துரதிர்ஷ்டம்....அது தான் அண்ணி அடிக்கடி கூறும் தரித்திரம். என்னிடம் சில முறை பேசியதற்கே கிருஷ்ணகாந்தையும் பிடித்து விட்டதா?" தலையே வெடித்துவிடும் போல் இருந்தது அவளுக்கு.
அப்போது தனுவின் தளிர் கைகள் அவள் கழுத்தை சுற்றி வளைத்திருந்தது.
"அம்மா!!!" என்று முதுகில் சாய்ந்த குழந்தையை இழுத்து கட்டி அணைத்துக் கொண்டு அழுதாள் ரக்‌ஷிதா.
,"அடடா...என்ன ரக்‌ஷிதா இது ..." என்ற கிருஷ்ணகாந்தின் குரல் அவள் அழுகையை நிறுத்தியது.

"தனு இங்க வா!" விரித்த அவனுடைய கைகளில் அடைக்கலமானாள் தன்வன்யா

"அம்மாவை ஏன்டா செல்லம் அழ வெச்ச!"

"நானா...இல்ல அங்கிள் அம்மா என்னை பார்த்ததுமே அழறாங்க"

"உனக்கு தான் தெரியுமே உன் அம்மா ஒரு அழுமூஞ்சி என்று" தனுவின் காதுகளில் ரகசியமாய் பேசினான்.

குழந்தை பளீர் என சிரித்தது.

"கரெக்ட் அங்கிள் ....." என்றவள் உடனே ரக்‌ஷிதாவிடம் விரைந்து

"மம்மி......இந்த புது செயின் எப்போ வாங்கினீங்க" திருமாங்கல்யத்தை எடுத்துக்காட்டிய தன்வன்யாவிடம் என்ன கூறுவதென்று தெரியாமல் மெளனித்தாள் ரக்‌ஷிதா

"சொல்லுங்க மம்மி......" ரக்‌ஷிதாவின் தோள் பற்றி குலுக்கியது குழந்தை

"நான் சொல்கிறேன் தனும்மா இங்க.....வா" கிருஷ்ணகாந்திடம் ஓடியது குழந்தை

"தனு குட்டி ரொம்ப புத்திசாலி பாப்பா தானே. அங்கிள் சொல்வதை நல்லா கேட்பியாம். அம்மாவுக்கு நான் தான் இந்த செயினை வாங்கிக் கொடுத்தேன்.நல்லாயிருக்கா?"

"சூப்பரா இருக்கு அங்கிள் "

"தட்ஸ் மை கேள்.ஓ.கே இப்போ நான் கேட்பதற்கு பதில் சொல், ஸ்கூல்ல உன்னுடைய ஃபிரெண்ட் ரம்யாவின் அப்பா என்ன செய்கிறார்?"

அவளோட அப்பா பிரொபசர் தெரியுமா, ரொம்ப பெரிய கிளாஸ் அக்கா அண்ணாக்கு பாடம் எடுப்பாராம்"

"குட் .....அப்புறம் உன் ஃபிரண்டு ராமுவுடைய அப்பா?

"அவர் எங்கள் ஸ்கூல்லயே கார்டனரா இருக்கார்".

அப்போ தனு பாப்பாவோட அப்பா?"

அவன் கேள்வியில் குழம்பியது குழந்தை, ரக்‌ஷிதாவும் தான்.

“அ... அப்பா ....போட்டோல .....தான் இருப்பாங்க"

"அது நேத்து வரைக்கும். பழைய அப்பா,இப்போ தனு குட்டி கூட விளையாட, ஸ்கூல் கூட்டி போக, நிறைய சாக்லேட் வாங்கித்தர ஒரு புது அப்பா வந்தாச்சு"

"ஐய் நெஜமாவா? புது அப்பாவா? அது யாரு? சீக்கிரம் சொல்லுங்க"

"அது...அது...சொல்லட்டுமா?" வேண்டுமென்றே இழுத்தான்.
"அய்யோ சீக்கிரம் சொல்லுங்க அங்கிள்"

"ஓ.கே....ஓகே... இந்த அழகான க்யூட் லிட்டில் ஏஞ்சல்லோட அப்பா இனிமேல் நான் தான்"

"எ....என்ன!!! நீங்களா?" விழிவிரித்து தன் அதிசயத்தையும், சந்தோஷத்தையும் ஒன்றாக வெளிப்படுத்தியது குழந்தை.

"ஏன் என்னை உனக்கு பிடிக்கலையா?"

"இல்லை இல்லை ரொம்ப பிடிக்கும். ஜாலி எனக்கு. இனிமே யாரும், உனக்கு அப்பா இல்லைன்னு சொல்லமாட்டாங்க. அப்புறம் அந்த மைதிலி அத்தை, அப்பனை முழுங்குனவன்னு திட்டமாட்டாங்க, அப்படித்தானே அங்கிள்"

"ஆ.. --- ஆமாம் அப்படித்தான், ஆனால் நீ இன்னமும் அங்கிள்ன்னுதானே கூப்பிடற?"

"சாரி .....சாரி, அங்கிள் இல்லை, இப்போ தான் நீங்க அப்பா ஆகிட்டீங்களே, சரி அப்பா இனிமே நீங்க தினமும் ஸ்கூல்ல விடுவீங்களா? சண்டேல பார்க் கூட்டிட்டு போவீங்களா? கடைக்கு கூட்டிப் போய் நிறைய டாய்ஸ் வாங்கி தருவீங்களா?" பேசிக்கொண்டே இருந்த தன்வன்யாவை அதட்டினாள் ரக்‌ஷிதா.

"தனு...என்ன இது ---- போதும் இப்படி வா....!!"

"ஏன் மம்மி இன்னிக்கு தான் எனக்கு அப்பா கிடைச்சிருக்காங்க இனிமே நான் அப்பா செல்லம் தான்"

"போதும் நிறுத்து "அவளின் இயலாமையும் கோபமும் தனுவிடம் பாய்ந்தது. எங்கே அவள் தனுவை அடித்து விடுவாளோ என்று பயந்த கிருஷ்ணகாந்த்,

"சரி .....சரி.......நீ வெளியே கனகம் பாட்டியிடம் போ தனும்மா அப்பா இதோ வந்துடறேன்.

"ஓ.கே....அப்பா" அவன் கேட்காமலே அவன் கன்னத்தில் இதழ் பதித்துவிட்டு ஓடி மறைந்தாள் தன்வன்யா.

ஒரு பெருமூச்சுடன் எழுந்தவன் அறை கதவை சாற்றிவிட்டு அவளருகில் வந்தமர்ந்தான்.
"உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும் ரக்‌ஷிதா "
அவளின் மெளனத்தை சம்மதமாக ஏற்று தொடர்ந்தான்.
"நான் சொல்வதை நன்றாக கேள் ரக்‌ஷிதா தனு சின்ன குழந்தை நமக்குள் ஆயிரம் வேற்றுமைகள் இருக்கலாம். ஆனால் அதனை குழந்தையிடம் காட்ட வேண்டாமே. நமக்குள் நடந்த இந்த திருமணம் திட்டமிட்டு நடந்ததல்ல. இதை ஒரு ஆக்சிடன்ட் என்று தான் சொல்ல வேண்டும். நான் உன் சம்மதம் கேட்காமல் செய்தது தவறுதான் ஆ.... ஆனால் அந்த சூழலில் எனக்கு வேறு வழியும் தெரியவில்லை" சிறு இடைவேளை விட்டு தொடர்ந்தான்."என்னுடைய இந்த முடிவிற்கு அது மட்டும் காரணமில்லை. முக்கியமான காரணம் தனுவுடைய எதிர்காலம். தெரிந்தோ தெரியாமலோ நம் இருவரின் பெயரும் இணைந்து பத்திரிக்கையில் வந்துவிட்டது. இதற்கு பிறகு தனுவின் எதிர்காலமும் அவளுடைய அடையாளமும் என்னவாக இருக்கும்? தவறான ஒரு அடையாளத்துடன் என் தனு வளர்வதை நான் விரும்பவில்லை. இந்த முடிவு முழுக்க முழுக்க தனுவிற்காக மட்டும்தான். ஏ..... ஏன்...தெரியுமா? இ... இந்த உலகிலேயே என்னிடம் தூய்மையான அன்பு வைத்த பிஞ்சு உள்ளம் அவளுடையது தான் "இப்படி பேசுகையில் அவன் கண்கள் லேசாக கலங்கியிருந்ததை ரக்‌ஷிதாவால் பார்க்க முடிந்தது. உடனே கண்களை சிமிட்டி கண்ணீரை உள்ளுக்கிழுத்தவன் தொடர்ந்தான்.
"இங்கே பார் ரக்‌ஷிதா .... தனுவை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அது மட்டுமில்லாமல் இது நாள் வரை திருமணம் பற்றிய எண்ணமே இல்லாமல் இருந்தது. ஆகவே உன்னை திருமணம் செய்து கொண்டதால் என் கனவுகள் உடைந்துவிட்டதாக நீ எண்ண வேண்டாம். நாம் இருவரும் தனுவுடைய எதிர்காலத்லைப் பற்றி யோசிப்போம். பாடுபடுவோம். இந்த திருமணத்தில் வேறு எந்த நோக்கமும் இல்லை. நான் என்ன சொல்கிறேன் என்று புரிந்திருக்கும். வீண் மன சஞ்சலம் வேண்டாம் இந்த வீடு உன்னுடையது. இதில் எந்த வெட்கமோ ! ஒதுக்கமோ வேண்டாம். உனக்குப் பிடித்ததை நீ தாராளமாக செய்யலாம். நாம் தோழமையுடனும், சந்தோஷத்துடனும் தனுவிற்கு ஒரு பிரகாசமான எதிர்காலத்தை காட்டுவோம்.ஏன் சொல்கிறேன் என்றால், ஆளுக்கொரு மூலையில் சுருண்டு கிடந்தால் அந்த பிஞ்சு மனம் பாதிக்கப்படும். அவளுக்கு ஒரு அழகான, ஆரோக்கியமான குடும்ப சூழலை ஏற்படுத்திக் கொடுப்போம். இப்போது நான் பேசியவற்றை நன்றாக யோசித்துப் பார், முடிவு உன் கையில், நான் வருகிறேன்"

அவள் பதிலுக்கு காத்திராமல் கதவை திறந்தவன் அவள் புறம் திரும்பி "மறுபடி சொல்கிறேன். இது நம் தனுவிற்காக மட்டுமே "முடித்தவன் உடனே வெளியேறினான்

அன்புடன்
இந்திரா செல்வம்
 
Messages
81
Reaction score
60
Points
18
12
மூடிய கதவையே வெறித்திருந்தாள் ரக்‌ஷிதா. கொஞ்சம் முன்னால் கிருஷ்ணகாந்த் பேசியது அத்தனையும் மூளைக்கு நன்றாகவே எட்டி இருந்தது. ஏனோ அவன் கூறிய எல்லாமே சரியாகப்பட்டது அவளுக்கு.ஆ......ஆனால் எங்கோ ஒரு மூளையில் நெருடலாக இருப்பதும் நிஜம். பாலா... என்ன நடக்கிறது பாலா. இத்தனை வருடமாக எந்த ஒரு சிறு சஞ்சலமும் என்னுள் எழுந்ததே எழுந்ததே இல்லையே நான், என் வேலை, தனு இதை தவிர வேறு எந்த எண்ணமும் இல்லையே! எனக்கு இந்த நிலையா? கிருஷ்ணகாந்த் அவருடைய தரப்பு விளக்கத்தை கூறிவிட்டார். இப்போது நான் என்ன செய்யட்டும்? அய்யோ என் தலைவலிக்கிறதே என்னால் எதுவும் யோசிக்க முடியவில்லை. பேசாமல் எங்காவது கண்காணாமல் ஓடி விடலாம் போல் தோன்றுகிறது அல்லது இந்த உலகமே இந்த நொடி அழிந்து விடக்கூடாதா? அப்படியும் இல்லை என்றால் நடப்பது முழுக்க கனவாக இருக்கக் கூடாதா. ஆனால் இதில் எதுவுமே சாத்தியம் இல்லையே. அப்படியானால் விதிப்படி நடக்கட்டும் என்று வாழ்க்கை என்னும் நதியில் அதன் போக்கில் ஓடிக்கொண்டே இருக்க வேண்டியது தானா?,வின் வின் என்று தெறித்த தலையை இருகரங்களால் பிடித்துக்கொண்டாள்.
அப்போது அவள் தலைவலிக்கு மருந்தாக காப்பி கோப்பையுடன் வந்து நின்றார் கனகம். அவர் புன்னகையுடன் நீட்டிய கோப்பையை மறுக்க முடியாமல் பெற்றுக்கொண்டவள் உடனே பருகவும் செய்தாள் உடலும் உள்ளமும் லேசாக தெளிவடைந்தது போல் உணர்ந்தாள்.
அவள் முகத்தில் தெரிந்த புத்துணர்ச்சியை பார்த்த கனகம்,
"இரவு டிபனுக்கு என்ன செய்யட்டும்மா?" என வினவினாள்
"எப்போதும் என்ன செய்வீர்களோ அதையே செய்யுங்கள் அம்மா.சார் என்ன சாப்பிடுவார் என்று எனக்கு எப்படி தெரியும்?"
"அடடா....அவர் உங்களுக்கு பிடித்ததை சமைக்கச் சொன்னார். நீங்கள் அவரை கை காட்டுறீங்க, நல்ல ஜோடி தான் போங்க" சிரித்தபடியே வெளியேறிய கனகம் போகிற போக்கில் "கடவுள் நாலையும் யோசிச்சு தான் செய்வார். அவரின் செய்கை அத்தனைக்கும் நிச்சயம் ஒரு பொருள் இருக்கும். இதை நீங்க புரிஞ்சிக்கனும்மா" என்ற அட்வைசையும் இனாமாக அளித்து விட்டு மறைந்தாள்.
யோசித்து யோசித்து பித்து பிடிப்பது போல் உணர்ந்தாள் ரக்‌ஷிதா, அந்த அறையில் மூச்சு முட்டுவது போல் தோன்றியது. மெல்ல எழுந்தவள் அருகிலிருந்த பால்கனியை அடைந்தாள்.
அங்கே கொடியாய் படர்ந்து, மல்லிகையை மலர விட்டு தங்களது வாசனையால் அவளை வரவேற்றது அந்த சாதிமல்லிகை கொடி. சட்டென மனதின் பாரமும் அழுத்தமும் மட்டுப்பட்டதை போல் தோன்றியது. கண்களை மூடி அந்த தெய்வீக மணத்தை உள்ளிழுத்தவள்.
"ரக்‌ஷிதா ஏய் ... ரக்‌ஷிதா" என்ற ரகசிய குரலில் கண் விழித்தாள் எதிரில் அவள் வீட்டு மாடியில் பாக்கியம் நின்றிருந்தார்.
“அ .... அம்மா ....!" கண்களில் மடை உடைந்தது.
"ரக்‌ஷிதா...கண்ணு... அழாதடா....அம்மா சொல்வதை கேள் இன்று நடந்தது அத்தனையும் அந்த கடவுளின் சித்தம் என்று நினைத்துக்கொள். உன் வாழ்வில் இப்படி ஒரு மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும் என்று நான் மிகவும் ஆசைப்பட்டேன் தெரியுமா? இந்த சின்ன வயதில் உன்னால் ஒரு அலங்காரமும் செய்து கொள்ள முடியவில்லையே என்று எத்தனை நாள் அழுது இருக்கிறேன் தெரியுமா?ஏன் ஒரு முழம் பூவை கூட உன் கூந்தலில் சூட்டி அழகு பார்க்க முடியவில்லையே கணவனை, வாழ்க்கையை இழந்து நிற்கும் உன்னைப் பார்க்க பார்க்க என் பெத்த வயிறு பற்றி எரியும். கட்டாயப்படுத்திக் கொடுக்கப்பட்டாலும் இந்த வாழ்க்கை உன்னை சந்தோஷப்படுத்தும் என்பது என் நம்பிக்கை, எதை நினைத்தும் கலங்காதே கண்ணு வாழ்க்கையை அதன் போக்கில் விட்டுவிடு. காலம் பதில் சொல்லும். பார்த்து புத்திசாலித்தனமா நடந்து கொள் ரக்‌ஷிதா. சரி, சரி உன் அண்ணன் என்னை தேடினாலும் தேடுவான் பார்த்து விட்டால் பிரச்சனை. உனக்காக அரை மணி நேரமாய் காத்திருந்தேன். நல்ல வேளை நீ வந்தாய்.நான் கீழே போகிறேன். கண்ணு, தனுவை நல்லா பாத்துக்கோ!" விடை பெற மனம் இல்லாமல் படி இறங்குவதற்குள் பலமுறை திரும்பிப் பார்த்து விட்டார் பாக்கியம்.
இப்போது ரக்‌ஷிதாவிற்கு ஒன்று நன்றாகவே புரிந்து விட்டது. தன்னை சுற்றி உள்ள அத்தனை பேருக்கும், தன்வன்யா உட்பட இன்று நடந்த நிகழ்ச்சியை அங்கிகரித்து விட்டார்கள்.அவளும் அதையே செய்ய வேண்டும் என்றும் ஆசைப்படுகிறார்கள் கிருஷ்ணகாந்த் பேசியது போல் தோழமை, என்றும் ஒரு பிரச்சனையே அல்ல. அதற்கு மேல் ....ச்சே..அவருக்கு என்ன குறை, நினைத்தால் கமாலிகாவோ.....விமாலிகாவோ! இப்படி நிறைய காக்காய்கள் இருக்க இவளுக்கு அந்த சந்தேகம் தேவையே இல்லை. அதனால் இப்போது இப்படியே விட்டு விடுவது நலம் இனி கடவுள் விட்ட வழி. நினைத்தவள் ஒரு பெருமூச்சுடன் அங்கிருந்த ஊஞ்சலில் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டாள்.
எத்தனை நேரம் இப்படி அமர்ந்திருந்தாளோ கனகத்தின் குரல் கேட்டுதான் நினைவிற்கு வந்தாள்.
"டிபன் சாப்பிட வாங்கம்மா" என்ற அழைப்பை ஏற்று கனகத்தை பின் தொடர்ந்து டைனிங் டேபிளை அடைந்தாள்.
அங்கே --- அவளுக்கு முன்னமே கிருஷ்ணகாந்தும் தன்வன்யாவும் வந்தமர்ந்து அவளுக்காக காத்திருந்தனர்.
"அம்மா சீக்கிரம் வாங்க, அப்பாவிற்கு ரொம்பவும் பசியாம், எனக்கும் தான்"
எப்படி இவளால் மட்டும் சட்டென கிருஷ்ணகாந்தை தந்தையாக ஏற்றுக் கொள்ள முடிந்தது. அவள் உள்மனம் அப்பா என்ற உறவுக்காக ரொம்பவும் ஏங்கித் தவித்ததோ? இப்போது அந்த உறவு கிடைத்ததும் மனதார ஏற்றுக் கொண்டாளோ? எண்ணங்கள் பலவாறாக தோன்றி மறைந்தன
"இப்படி நின்று கொண்டே இருந்தால் எப்படி சாப்பிடுவதாம் என்ன தனு உன் அம்மா எப்போதும் கை ஏந்தி பவன் தானா?" பேச்சில் நன்றாகவே குறும்பு தெரிந்தது.
வேறு வழி இல்லாமல் அமர்ந்தவள்., இவனும் தான் எப்படி இயல்பாக இருக்கிறான். ஆக மொத்தத்தில் கப்பல் கவிழ்ந்தது போல் தத்தளிப்பவள் நான் தானா? ஏன் என்னால் இயல்பாக இருக்க முடியவில்லை? குழந்தைப்பருவத்திலிருந்து மறுமணம் பெண்களுக்கு தவறு என்று இடித்துரைத்து மண்டையில் ஏற்றி இருக்கும் இந்த சமுதாயமா? அல்லது பாலாவின் மேல் அதிகமான காதல் வைத்து விட்டு இன்னொருவரை அந்த இடத்தில் வைத்து பார்க்க பிடிக்கவில்லையா? ஒன்றும் புரியவில்லை ஆனால் இந்த உறவு பிடிக்கவில்லை என்பது மட்டும் நிஜம். ஒரு பெருமூச்சுடன் தட்டில் இருப்பது இட்லியா? தோசையா? என்பது கூட தெரியாமல் உண்டு முடித்து விட்டாள்.
அன்புடன்
இந்திரா செல்வம்
 
Messages
81
Reaction score
60
Points
18
13
முந்தின நாள் தங்கிய அறையிலேயே தனுவை உறங்க வைத்தாள் ரக்‌ஷிதா. எவ்வளவு முயன்றும் அவளுக்கு உறக்கம் வர மறுத்துவிட்டது.கிருஷ்ணகாந்த் அத்தனை பேர் முன்னிலையிலும் தாலிகட்டிய காட்சி மனதில் வந்து கொண்டே இருந்தது.இந்து சாஸ்திரத்தின்படி இனி கிருஷ்ணகாந்த் தான் என்னுடைய கணவர்.ஆ.... ஆனால் மனம் என்று ஒன்று உண்டுதானே அதை நடிக்க வைக்க யாராலும் முடியாதே இங்கே ஒரு நாள் ஒரு யுகம் போல் இருக்கிறதே எப்படி காலம் தள்ளப்போகிறேன்....

அவளின் சிந்தனையை கதவின் டக்... டக்... ஒலி கலைத்தது.

யாராக இருக்கும்...?... !! ... ஒரு வேளை கனகம்மா? இல்லை இல்லை அவர் தான் எப்போதோ தூங்கப்போகிறேன் அம்மா என்று விடைபெற்றுச் சென்றாரே. அ..... அப்படியானால்... கிருஷ்..... கிருஷ்ணகாந்த்? இ... இப்போது ஏன்... வந்தார். கழுத்தில் இருந்த தாலி இப்போது பாம்பை போலவே தோன்றியது அவளுக்கு. ஆனால் அது அவருடைய வீடு,அவரை வரக்கூடாது என்று சொல்ல நான் யார்,படபடக்கும் இதயத்தை சிரமபட்டு அடக்கிக் கொண்டு கதவை திறந்தவள் யுகிதைபோல் கிருஷ்ணகாந்த் தான் நின்றிருந்தான்.ஒரு வார்த்தைக் கூட பேசாமல் அவளை கடந்து உள்ளே சென்றான்.

அவன் அவளை கடுக்கும் பொழுதே அவன் மீது லேசாக மதுவின் வாடை அடித்தது. தன்னிச்சையாக சேலை தலைப்பால் மூக்கை பொத்தினால் ரக்‌ஷிதா மனம் கலவரமடைந்தது. ‘அய்யோ குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு என்பார்கள். அவர் சில மணி நேரங்கள் முன்பு பேசியதை இப்போது இந்த மது மறக்க செய்திருக்குமோ? அ....
அப்படியானால்?’ வெளிறிய முகத்துடனும், மிரட்சியான பார்வையுடனும், நாசியை மூடிக்கொண்டு விழித்தவளை பார்த்த கிருஷ்ணகாந்த்.

“ச... சாரி... ரக்‌ஷிதா... வந்து.. இ.... இது இல்லாமல் என்னால் தூங்க முடிவதில்லை. பணம் கொட்டிக்கிடந்தாலும், நிம்மதி இல்லை.அதனால்... உறக்கம் வர மறுக்கிறது... எனக்கு வேறு வழியும் தெரியவில்லை. ஆ.. ஆனால் இன்று தான் என் வாழ்வில் தேவதை வந்திருக்கிறாளே. இனி எல்லாம் மாறும் என்று நம்புகிறேன்” முடித்தவன் இன்னமும் தெளியாத அவளது பார்வையில் ஏதோ புரிந்து கொண்டவன் போல்

“நா.. நான் தனுவை தேவதையாகத் தான் பார்க்கிறேன்” அவன் எதிர்பார்த்த நிம்மதி அவளது முகத்தில் அப்போது வந்தது. ஆனால் ஏனோ அவளை சீண்டி விளையாடும் எண்ணம் அவனுள் தோன்றியது. அதன்படியே அவளை நெருங்கினான். அவன் வெளியேறவே வருகிறான் என்று நினைத்தவள் கதவில் நன்றாக சாய்ந்து கொண்டு அவனுக்குவழிவிட்டாள். அவனோ வெளியே செல்லாமல் அவள் புறம் திரும்பி அவள் முகத்தையே சில நிமிடம் உற்று பார்த்துக் கொண்டிருந்தான். ரக்‌ஷிதாவிற்கு உதறல் எடுக்க ஆரம்பித்துவிட்டது. “கடவுளே இது என்ன வெளியே செல்லாமல்...!!! இனி என்ன செய்வது... இவர் நல்லவராக இருக்கலாம். ஆனால் இவனுள் இருக்கும் மது... அது கொடியதாயிற்றே. இதை எப்படி எதிர்கொள்வது’. அவளின் தாடையை பற்றி நிமர்த்தினான் பொறுமைக்கும் எல்லை உண்டு இனி பொறுப்பதற்கில்லை நாகரீகம் பார்த்தால் ஆகாது பளார் என்று அறைவதே நல்லது.. இப்படி நினைத்தவள் செயலில் இறங்க முயன்று கொண்டிருந்த நேரத்தில்,அவனது ஆள்காட்டி விரல் அவள் உதட்டருகே நீண்டு முந்தினநாள் அவளுக்கு ஏற்பட்டிருந்த காயத்தை தொட்டது. “இப்போது வலி இல்லையே ரக்‌ஷிதா?.... நன்றாக காய்ந்துவிட்டது இனி கவலை இல்லை” சாதாரணமாக பேசி விலகியவனை என்ன செய்தால் தகும் என்று முறைத்துக் கொண்டிருந்தாள். அவளின் கோபத்தை முழுமையாக ரசித்தவன் லேசான சிரிப்புடன் வெளியேறினான்.கதவை அடைக்கவும் மறந்தவளாய் சிலையென நின்றிருந்தாள் அவள்.

இரண்டடி முன்னேறியவன் அதே இரண்டடியை பின்னோக்கி வைத்தான்.எங்கோ வெறித்த பார்வையுடன் நின்றிருந்தவளின் முகத்திற்கு நேரே சொடுக்கிட்டான். சட்டென நினைவிற்கு வந்தவள் ‘இன்னும் என்ன தான் வேண்டும் இவருக்கு’ என்பதை போல் அவனை பார்த்தாள்.லேசாக தொண்டையை செருமி பேசலானான். “அது... நம் திருமணம் பற்றிய செய்தி நாளை பேப்பரில் வந்துவிடும் மறைக்க வழியில்லை என்பது உனக்கே தெரியும்.”

இரண்டு வினாடிக்கு முன்னே இருந்த குறும்புத்தனம் சுத்தமாக அவன் முகத்திலிருந்து அகன்றிருந்தது.இப்போது ரொம்பவும் சீரியசாக பேசுவதாய் தோன்றியது ரக்‌ஷிதாவிற்கு நல்ல நடிகர் தான். நொடிக்கு நொடி முகஉணர்வுகளை என்னமாய் மாற்றுகிறார். சற்றுமுன் எப்படி எல்லாம் கலங்கடித்தார். இவரை....

“வெள்ளம் தலைக்கு மேல் போகிறது சார். இனி சான் போனால் என்ன முழம் போனால்தான் என்ன? அதைப்பற்றி கவலைபடுவதற்கில்லை” ஆவேசமாகவே பேசி முடித்தாள்

இப்படி ஒரு பேச்சை கிருஷ்ணகாந்த் எதிர்பார்க்கவில்லை என்பதை அவனது சுருங்கிய முகமே சொல்லியது. சரியான பதிலடி கொடுத்த நிம்மதி ரக்‌ஷிதாவின் முகத்தில். வேறு எதுவும் பேசாமல் அவ்விடம் விட்டுச் சென்றான் கிருஷ்ணகாந்த்.

எப்பொழுதும் போல் விடியலிலேயே விழிப்பு வந்துவிட்டது ரக்‌ஷிதாவிற்கு.ரூமினுள் என்ன செய்வதென்றே புரியவில்லை. “ஐடில் மேன்ஸ் ப்ரெயின் இஸ் எ டெவில்ஸ் வர்க் ஷாப்” என்ற பழமொழி தான் நினைவிற்கு வந்தது. மெல்ல நடந்தவள் சமையலறையினுள் நுழைந்தாள். கனகம் அங்கு இல்லை. பாவம் அவரும் தான் நேற்று தடபுடலாக சமைத்து வழக்கத்திற்கு அதிகமாகவே சிரமப்பட்டுவிட்டார். அதனால் கொஞ்சம் ஓய்வு எடுக்கட்டும். டிபன் வேலை தானே அது என்ன பெரிய கஷ்டம் செய்துவிட்டால் போகிறது.இப்படி நினைத்தவள் உடனே செயலில் இறங்கினாள்.

பிர்ட்ஜில் இருந்து பால் எடுத்து காய்ச்சினாள். இட்லிகளை ஊற்றி அடுப்பில் வைத்தாள். தேங்காய் சட்னியும்,காரச்சட்னியும் அரைத்து முடித்தாள். பிறகு லேசான நெருடல் எழுந்தது.பணக்காரர்கள் எப்போதும் ஒரே வகையான உணவு உண்பதில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறாள். அதனால் கோதுமை மாவை தேடித் பார்த்தாள். ஆனால் அவளுக்கு அது கிடைக்கவே இல்லை. வேறு வழி தெரியாமல் வெங்காயதோசை செய்துவிட முடிவெடுத்து வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொண்டிருக்கும் பொழுது தான் கனகம் உள்ளே நுழைந்தார்.

“அய்யோ! அம்மா... நீங்க ஏன் இதை எல்லாம் செய்துகிட்டு ஏதோ கொஞ்சம் அசதியா இருந்தது என்னையும் அறியாம தூங்கிடேன்”

“அ... அடடா... இதில் தப்பு ஒன்றும் இல்லை அம்மா. நான் செய்தால் ஒன்றும் தவறில்லையே!”

“இ..இல்லை.. தான்”

“சரி.. சொல்லுங்க சதாசிவம் எழுந்துட்டாரா?”

“ம்.. எழுந்துட்டாரும்மா குளிக்கிறாரு. அவரு போய் தான் நைட் வாட்ச்மேன் வெங்கடேசனை அனுப்பனும்”

“ஓ... சரி.. அப்போ இந்த டீயை கொண்டு போய் அவருக்கு கொடுங்க அப்படியே நீங்களும் குடிங்க” என்றவளின் கைகளில் இரண்டு ஆவி பறக்கும் டீ நிறைந்த டம்ளர்கள்..

“ரொம்ப நன்றிம்மா!”

“நன்றிக்கு அவசியமில்லை அம்மா!” கூறியவள் பதிலை எதிர்பாராமல் மறுபடியும் வெங்காயத்தில் கவனம் செலுத்தினாள்

சில நிமிடங்களில்

“நீ இங்கு என்ன செய்கிறாய்? கனகம் எங்கே?” என்று கிருஷ்ணகாந்தின் கம்பீரகுரல் அவளை நிமிரச் செய்தது.

குளித்துவிட்டு எங்கோ கிளம்ப அவன் தயாராக இருப்பது தெரிந்தது.

“டீ குடிக்கிறார்கள்” கலங்கிய விழிகளுடன் அவனை பார்த்து பதில் கூறினாள்

அவளின் கண்ணீருக்கு காரணம் வெங்காயம் தான் என்பது புரிந்துவிட

இதெல்லாம் நீ ஏன் செய்கிறாய்? பார் கண் எரிகிறது. போதும் நீ போ.. கனகம் மற்றதை பார்த்துக் கொள்வார்கள்.

அவனை வினோதமாக பார்த்தவள்

“கனகம் இதை அரிந்தாலும் கண் எரியத்தான் செய்யும்” துடுக்காக பேசிவிட்டு டீயை அடுப்பில் வைத்து சூடுபடுத்தினாள்.

“இது தேவைதானடா உனக்கு’” நினைத்தவன் டைனிங் டேபிளில் அமர்ந்து கொண்டான். சுடச்சுட ஏலக்காய் மணம் வீசும் அந்த தேனீர் அமிர்தமாய் இருந்தது அவனுக்கு. குடித்து முடித்தவன் கார் சாவியை எடுத்துக் கொண்டு வெளியேறினான்.

‘இந்த காலை வேளையில் எங்கே போகிறார்?!! ஆனால் அதை தெரிந்து என்னவாக போகிறது. சாப்பிடாமல் சென்றது தான் புரியவில்லை. ஒரு வேளை நான் சமைத்ததை ஏன் சாப்பிட வேண்டும் என்று நினைத்து விட்டாரா? நான் தான் அதிகபிரசங்கித்தனமாக நடந்துவிட்டேன் என்று தோன்றுகிறது’. ஆனாலும் ஆரம்பித்த வேலையை பாதியில் நிறுத்த மனமில்லாமல் கனகம் எவ்வளவு தடுத்தும் கேட்காமல் டிபனை முடித்து டைனிங் டேபிளில் நிரப்பி விட்டே அறைக்குள் சென்றாள்.

தூங்கிய தனுவை எழுப்பிப் பால் குடிக்கச் செய்து குளிக்க வைத்தவள் அவளுக்கு டிபன் எடுக்க கீழே செல்ல திரும்பிய போது கனகம் வாயிலருகே நின்றிருந்தாள்.

“என்ன கனகம்?”

“ஐ.. ஐயா இதை உங்களிடம் கொடுக்க சொன்னாரும்மா”

அவர் நீட்டிய கவர் ஒரு பிரபலமான ஜவுளிக் கடையுடையது என்று ரக்‌ஷிதா நன்கு அறிவாள்.

“இது என்ன கனகம்?”

“இதை அணிந்து கொள்ளச் சொன்னார் அம்மா”

“வேண்டாமே ப்ளிஸ்”

“’என் பணிவான வேண்டுகோள்’ என்று சொல்லுங்கள் என்று அனுப்பி வைத்தார். மற்றதை நீங்களே பேசிக் கொள்ளுங்கள்” கவரை சுவற்றில் சாய்த்து வைத்தவர் தனுவை தூக்கிக் கொண்டு கீழே இறங்கிவிட்டார்.

“வேண்டுகோளா? அதுவும் பணிவான வேண்டுகோளா? இதை உடுத்துவதா? வேண்டாமா? ஒன்றும் புரியவில்லையே. ஒருவேளை இதை உடுத்தாமல் போனால் அவர் என்ன நினைப்பார்? பாவம் முகமே வாடிவிடும். ஏனோ அது பிடிக்கவில்லை. அவளுக்கு அத்தனை பேர் முன்னிலையில் என் குடும்பத்தார் ஒருவரும் ஆதரிக்காத அந்த நேரத்தில் எனக்காக குரல் கொடுத்தது அவர் மட்டும் தான் போனால் போகிறது அவருக்காக இதை அணிந்து கொள்வதில் தவறு ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை, இப்படி நினைத்தவள் தயக்கத்துடனே அந்த கவரை திறந்தாள். உள்ளே அழகிய வேலைப்பாடு நிறைந்த சிகப்பு பட்டுப்புடவை கண்களை கவர்ந்தது. சில நொடி அதன் அழகில் மயங்கியே போனாள் ரக்‌ஷிதா. ‘ ஆஹா என்ன ஒரு அழகு!... எப்படி ஒரு ஆணால் இப்படி ஒரு அழகான புடவையை தேர்வு செய்ய முடிந்தது?’
‘இதற்கு மேட்சாக என்னிடம் பிளவுஸ் இல்லையே என்ன செய்யலாம்?’ என்று யோசித்தவளுக்கு ரொம்பவும் ஆச்சரியம் உள்ளே புடவையுடன் பிளவுசும் இருந்தது. முந்தின நாள் அவள் தோய்த்து உலர்த்தி இருந்த பிளவுசும் அந்தக் கவரில் இருந்தது
உடனே புரிந்துவிட்டது. அவளுக்கு எல்லாம் யோசித்து தான் செய்கிறார்.ஆனால் இதெல்லாம் ஏன் என்று தான் புரியவில்லை. ஒரு வேளை இன்று காலை பத்திரிக்கையில் வந்த செய்தியின் அடிப்படையில் விருந்தினர் வரக்கூடும். அப்போது பிரபலமான ஹீரோவின் மனைவி பழையதை உடுத்தி இருப்பதை அவர் விரும்பவில்லை போலும்.

‘படத்தில் வரும் அடுத்தக்கட்ட காட்சிக்கு ரெடி ஆவது போல் இங்கு எல்லாம் வந்துவிட்டது. ஆனால் நான் தான் நடிப்பில் ஜீரோவாக உள்ளேன்.’

நினைவு ஒரு பக்கம் ஓடிக் கொண்டே இருக்க கைகள் தாமாக புடவையை கட்டி முடித்தன.

பக்கத்து அறையில் தனுவின் குரல் கேட்டது. கூடவே கிருஷ்ணகாந்தினுடையதும்.

“ஐய்... தனுகுட்டி ரெடி ஆகிட்டாளா? சரி வா உன் அம்மா ரெடியா என்று பார்ப்போம்” என்ற கிருஷ்ணகாந்தின் குரலை தொடர்ந்து கதவு தட்டப்பட்டது. கதவை திறந்தவுடன் தன்வன்யா அவளின் கால்களை கெட்டியாக பிடித்துக்கொண்டாள்.

“அம்மா...இன்னிக்கு ரொம்பவும் அழகா இருக்கீங்க”

பாலா இறந்தவுடன் வெள்ளை உடுத்தவில்லை தான் என்றாலும் பட்டுக்களை தவிர்த்திருந்தாள் ரக்‌ஷிதா. ஆனால் இப்போது வேறுவழி இல்லாமல் அணிந்தது தனுவிற்கு ரொம்பவும் அழகாய் தோன்றி இருக்கலாம் என்று நினைத்தவள்.

“தேங்க்ஸ் தனு... நீயும் இந்த புது டிரெஸ்சில் ரொம்பவும் இருக்க. யார் செல்லம் தந்தா?”

“அப்பாதான்”

“ஓ... சூப்பர், சரி வா கீழே போகலாம் உனக்கு பசிக்குதா?” பேசிக்கொண்டே தனுவை தூக்கிக் கொண்டு நிமிர்ந்த போது கிருஷ்ணகாந்தின் துளைக்கும் பார்வையை உணர்ந்தாள்.

கடவுளே இதை எப்படித்தான் சமாளிக்க போகிறேனோ. அவன் பார்வையை தவிர்தவள் தனுவை பிடித்துக் கொண்டு கீழே இறங்கினாள். பின்னே அவன் வருவது நன்றாகவே தெரிந்தது. டைனிங் டேபிளை அடைந்ததும்.

“அட... இந்த புடவையில் ரொம்பவும் அழகாகத் தெரிகிறீர்கள் அம்மா” கனகத்தின் பாராட்டை சிரிப்பால் ஏற்றவள் தனுவை ஒரு நாற்காலியில் அமர்த்தி தட்டை எடுத்து வைத்தாள்.

“என்ன கனகம் எல்லாம் ரெடியா?” என்ற கிருஷ்ணகாந்தின் குரல் பின்புறம் கேட்டது.

“எல்லாம் தயாராக இருக்கிறது ஐயா அம்மா வந்து விளக்கேற்றினால் போதும்”

“சரி போங்க” என்றவன் தனுவை தூக்கிக் கொண்டான்.

“ரக்‌ஷிதா! ஒரு நிமிஷம் பூஜை அறை பக்கம் வரமுடியுமா?”

பூ..ஜை அறையா?... ஓ..ஹோ... பெரிய நடிகனுக்குள் இப்படி ஒரு கடவுள் பக்தியா? அல்லது மனைவி விளக்கேற்ற வேண்டும் என்ற சென்டிமென்டா? எதுவாக இருந்தாலும் அவளால் நம்பமுடியவில்லை.இருப்பினும் பதிலேதும் சொல்லாமல் அவனை பின் தொடர்ந்தாள்.

அந்த வீட்டின் பூஜை அறையே ஒரு கோவிலின் கர்ப்ப கிரகம் போல் பெரிதாக தான் இருந்தது. நிறைய சுவாமிப் படங்கள், சில சிலைகள். எல்லாவற்றிலும் பிரதானமாய் இரண்டு பெரிய ஃபிரேம் செய்த ஃபோட்டோக்கள் ஜாடையை வைத்துப் பார்த்தாள் அவர்கள் கிருஷ்ணகாந்தின் பெற்றோர்களாகத் தான் இருப்பார்கள் என்று யூகித்தாள் ரக்‌ஷிதா.

“போய் விளகேத்தும்மா” என்ற கனகத்தின் குரலுக்கு கட்டுப்பட்டவளாய் விளக்கேற்றினாள் ரக்‌ஷிதா. விளக்கேற்றியவள் தானாக கைகளை கூப்பி கண்களை மூடி பிரார்த்தித்தாள்.

“கடவுளே நீ காட்டும் வழியில் செல்கிறேன், என்னை வழி நடத்துவதும் நீதான், உன்னை நம்பி இதோ கண்களை மூடிக் கொண்டு நடக்கிறேன். விபரீதம் ஏதும் இல்லாமல் என்னை காப்பாற்று” கண்கள் நீரை உகத்தன.

அப்போது கிருஷ்ணகாந்தின் அம்மாவின் போட்டோவில் இருந்த மல்லிச்சரம் கீழே விழுந்தது.” ஐயா! நம்ம வீட்டுக்கு வந்த மருமகள் வெறும் தலையா இருக்காங்கன்னு பெரியம்மா பூவெச்சுக்க சொல்றாங்க,இது ரொம்ப நல்ல சகுனம். அந்த பூவை எடுத்து ரக்‌ஷிதாம்மா கையில் கொடுங்கய்யா” கனகத்தின் பேச்சில் பரவசம் தெரிந்தது.

மறு பேச்சின்றி கிருஷ்ணகாந்தும் அந்த பூவை எடுத்து ரக்‌ஷிதாவின் புறம் நீட்டினான்.

சில வினாடிகள் என்ன செய்வது என்று புரியாமல் விழித்தவள். வேறு வழியின்றி கைகளை உயர்த்தினாள். அவளது விரல்கள் நடுங்குவது நன்றாகவே தெரிந்தது.அவள் கைகளில் பூவை வைத்தவன் ஆதரவாய் ஒருமுறை அவள் விரல்களை அழுத்திவிட்டு விடுவித்தான். ஏனோ அந்த ஸ்பரிசம் அவளின் படபடப்பை குறைந்தது. அவனின் அந்த செயலின் அர்த்தம். ‘இதெல்லாம் வெறும் சம்பிரதாயம் தான், நான் நிச்சயம் உன் மனம் நோகும்படி ஒருபோதும் நடக்க மாட்டேன்’. என்று சொல்லாமல் சொல்லியது போல் தோன்றியது. மனம் இப்படி நினைக்கும் வேளையில் கைகளில் பெற்ற பூ தலையில் சூட்டப்பட்டது.

“கனகம் சதாசிவம் எங்கே? வரச்சொல்லி இருந்தேனே!”

“இதோ வந்துடுவாருய்யா?”

கனகம் முடிப்பதற்கும் சதாசிவம் உள்ளே வருவதற்கும் சரியாக இருந்தது. உள்ளே வந்தவர் தனுவை தூக்கிக் கொண்டார்.

தன் தாயின் படத்தருகே குனிந்த கிருஷ்ணகாந்த ஒரு நீல நிற டப்பாவுடன் எழுந்தான். என்னவாக இருக்கும் என்று ரக்‌ஷிதா யூகிக்கையில் அதிலிருந்த திருமாங்கல்ய செயினை வெளியே எடுத்தான்.உண்மையிலேயே மெய்சிலிர்த்துவிட்டது அவளுக்கு. அவளுக்கு தடிமனாக தங்க சங்கலியில் பளபளக்கும் பசும்பொன் தாலியை பார்க்கையில் இன்னதென்று சொல்ல முடியாத ஓர் உணர்வு அவளை ஆக்கிரமித்தது

என் அப்பா அம்மாவின் முன் நம் திருமணம் நடக்க வேண்டும் என்பது என் ஆசை ரக்‌ஷிதா! அதற்காகத் தான் இதெல்லாம். அதுமட்டுமில்லாமல் நீயும் இந்த கயிற்றுடன் எத்தனை நாள் ஓட்டுவாய் அதான்” என்றவன் வேற பேசாமல் அவள் கழுத்தில் அந்த திருமாங்கல்யத்தை அணிவித்தான். சதாசிவமும் கனகமும் அட்சதை தூவி வாழ்த்தினர். “இந்தாங்க ஐயா இந்த குங்குமத்தை அம்மா நெற்றியில் வெச்சுவிடுங்க” குங்குமச் சிமிழை நீட்டிய கனகத்திடம் மறுப்பேதும் சொல்லாமல் அவர் கூறியதை செய்தான்.

தன் நெற்றியை நோக்கி அவனின் குங்குமவிரல் வருகையில் கண் மூடினாள் ரக்‌ஷிதா. உடம்பில் உள்ள மொத்த ரத்தமும் சூடேறுவது நன்றாகவே தெரிந்தது. அப்போது குரல் அவள் நிலையை மாற்றியது.

“என்ன பாட்டி இதெல்லாம்?”

“அடடா.. உனக்கு தெரியாதா? உன் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நடந்த கல்யாணத்தை பார்த்ததில்லை தானே. அதான் உனக்காக மறுபடியும் நடக்குது”

“ஆ..ஆங்.. அம்மாவின் கல்யாணத்தை பார்த்ததில்லை தான். ஆனால் அப்பா... அப்பா தான் நிறைய கல்யாணம் செய்திருக்கிறாரே நான் எத்தனை முறை டிவியில் பாத்திருக்கிறேன்”

குழந்தை புரியாமல் தான் பேசியது என்றாலும் இதயத்தில் முள்தைத்த வலியை உணர்ந்தான் கிருஷ்ணகாந்த். ‘ஒரு சிறு குழந்தை கூட என்னை நடிகனாகத்தனே பார்க்கிறது. ரக்‌ஷிதா எப்படி என்னை புரிந்துகொண்டு மனதார கணவனாக ஏற்பாள்...?’

கன்றிய முகத்துடன் ரக்‌ஷிதாவை பார்த்தவன் அவள் முகத்தில் தெரிந்த ஏளனப் புன்னகையில் இன்னுமும் மனம் நொந்தான்.

உடனே கனகம் “அதெல்லாம் நடிப்பு பாப்பா, உண்மை கிடையாது. இதுதான் உண்மை” என்று கூறி ஒப்பேற்றப் பார்த்தாள்.

ஆனால் தனு ஏற்க மறுந்துவிட்டாள். “நடிப்புன்னா என்ன பாட்டி?”

இப்போது கனகம் பதில் தெரியாமல் விழித்தாள்.

இதற்குள் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட கிருஷ்ணகாந்த்

“நான் உனக்கு புரிய வைக்கிறேன் தனு. அதற்கு நாளை வரை நீ பொறுத்திருக்க வேண்டும். சரிதானா செல்லம்”

“ஓகே ... டாடி” என்று உடனே ஒத்துக் கொண்டாள்.

“அம்மா அப்பாவிடம் ஆசிர்வாதம் வாங்கிக்கோங்கய்யா” என்று கனகம் நினைவுபடுத்தியதன் பேரில் இருவரும் போட்டோவை நமஸ்கரித்து எழுந்தனர்.

அதை தொடர்ந்து சதாசிவம் கனகத்திடமும் ஆசி பெற்றனர்.
“தம்பி எங்களுக்கு அந்த கடவுள் புள்ளை பாக்கியத்தை தரவில்லையேன்னு இத்தனை நாளா ரொம்ப வருத்தமா இருந்தது. ஆனால் அது இன்று சுத்தமாக இல்லை. ரொம்ப சந்தோஷம் தம்பி” தன்னை மீறி கண் கலங்கினார் சதாசிவம்.

“என்ன இது நல்ல நாளும் அதுவுமா? வாங்க எல்லோரும் சாப்பிடலாம்” நிலைமையை சகஜமாக்கினார் கனகம்.

தட்டுகளில் முதலில் நெய்யில் மிதக்கும் கேசரி பரிமாறப்பட்டதும் குழப்பமடைந்தாள் ரக்‌ஷிதா. அவள் செய்யவில்லையே, இதை உணர்ந்த கனகம்.

“ஐயாதான்மா சீக்கிரம் ஏதாவது இனிப்பு செய்யுங்கன்னு சொன்னாரு. இந்த இனிப்பை போலவே உங்க வாழ்க்கையும் இனிக்கனும்மா” பேசிக் கொண்டே இட்லிகளையும், வெங்காய தோசையையும் வைத்தார்.

‘இனிப்பான் வாழ்க்கையா? எனக்கா? அது தான் என் தலையில் எழுதப்படாமலே இருக்கிறதே.சந்தோஷம்தான் எனக்கு தடை செய்யப்பட்டிருக்கிறதே. இது உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை கனகம்,புரியவும் வாய்ப்பில்லை தான்’ அவளின் எண்ணம் கிருஷ்ணகாந்தால் கலைக்கப்பட்டது.

“அட... ரக்‌ஷிதா.. இத்தனை சுவையாக சமைக்க தெரியுமா உனக்கு? சூப்பர் ஆனால் இந்த தோசையில் தான் உப்பு அதிகம். அதற்கு தான் அப்போதே சொன்னேன் ரொம்பவும் அழாதே என்று” சீரியசாக கூறி முடித்தவன் சிரிக்கையில் தான் அது ஜோக் என்றே உரைத்தது அவளுக்கு. ஆனால் மனதிற்கு இதமாக இருந்தது. வேலைக்கு போகும் அவசரத்திலும் சமைத்து வைத்து விட்டுத்தான் ஓடுவாள். ஆனாலும் அதில் நூறு குறை சொல்லவில்லை என்றால் தூக்கம் வராது மைதிலிக்கு. குட்டுப்பட்டே பழகியவளை ஒருவர் பாராட்டினால் மனம் குளிரத்தானே செய்யும்.

“நீ டிரஸ் சேஞ்ச் பண்ணிடாதே ரக்‌ஷிதா. நாம் நம் கோடம்பாக்க வீட்டுக்கு செல்ல வேண்டும். அங்கு ஒரு சின்ன பிரஸ் மீட் வைத்திருக்கிறேன். நம் திருமணம் பற்றி பேச, இல்லை என்றால் அவர்கள் இந்த வீட்டிற்கே வந்து விடுவார்கள். அது நம் பிரைவசியை பாதிக்கும், சரிதானே இன்னுமும் ஒரு மணி நேரத்தில் கிளம்பிவிடலாம் அதற்குள் கொஞ்சம் ஒய்வெடுத்துக் கொள்” பேசியவன் அவள் பதிலை எதிர்பாராமல் படிகளில் ஏறினான்.

அவன் சகஜமாகத்தான் பேசுகிறான்.என்னவோ அவர்களின் திருமணம் திட்டமிட்டு முறையாக நடந்தேறியதை போல்... ஆனால் அவளால் தான் அதிகம் பேச முடியவில்லை.
அன்புடன்
இந்திரா செல்வம்
 
Messages
81
Reaction score
60
Points
18
14

அந்த இரண்டடுக்கு மாடி வீடு அல்லோல கல்லோலப்பட்டுக்கொண்டிருந்தது.அந்த வீட்டையே விழுங்கி விடும் ஜனத்திரள் அங்கே கூடி இருந்தது. நிறைய காவல் அதிகாரிகள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் விழிபிதுங்கி நின்றிருந்தனர்

பத்திரிக்கையாளர்கள் ஒரு பக்கம் மைக்குடன் "உங்கள் தலைவரின் திடீர் திருமணம் பற்றி உங்கள் கருத்து என்ன?" என்று பொதுமக்களிடம் விசாரித்துக் கொண்டிருந்தனர். அவர்களின் பதில்களை பதிந்துக் கொண்டார்கள். அப்போது வழுக்கிக்கொண்டு அங்கே வந்தது கிருஷ்ணகாந்தின் பி.எம்.டபிள்யூ கார்.

அவ்வளவு தான் எல்லோரின் கவனமும் காரின் மீது ஏகப்பட்ட ஃபோட்டோ மின்னல்கள்.

எந்தவித உணர்ச்சியையும் காட்டாமல் கூலாக இறங்கினான் கிருஷ்ணகாந்த்.

ரக்‌ஷிதாவிற்கு தான் இதயம் படபடவென அடித்துக்கொண்டது. பயமாக இருந்தது சாலையில் ஓர் இருவர் உற்று பார்த்தாலே கதிகலங்கிவிடுவாள். இங்கே இத்தனை கண்கள் தன்னை துளைத்து பார்க்குமே....எப்படி சமாளிப்பது? ஒன்றும் புரியவில்லையே.

வெளியே இறங்கிய கிருஷ்ணகாந்த் பின்னோடு ரக்‌ஷிதாஇறங்காததை உணர்ந்தான்.

அவள் புறம் கதவை திறந்தவன்.அவளது மிரண்ட விழிகளை கண்டவன் தனுவை அவளிடமிருந்து பெற்று கொண்டவன்.

"என்ன பயம் ரக்‌ஷிதா.....நான் இருக்கிறேன் வா" கையை அவள் புறம் நீட்டினான்.

கடலில் ரொம்ப நாள் நீந்திகளைத்தவன் கிடைத்த பற்றுதலை எப்படி விட மாட்டானோ அதே போல் அவன் கரத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டாள்.அவளின் கைகள் ஜில்லிட்டிருப்பதை உணர்ந்தவன் அவள் இறங்கியதும் தன் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

ஏகப்பட்ட கேமிராக்கள் தன் ஒளியை அவர்கள் மேல் செலுத்தியது. கண்கள் கூசவில்லை என்றால் ஆச்சர்யம்தான்

"ஏன் சார் இந்த ரகசிய திருமணம்?" முதல் கேள்வி ஒரு பத்திரிக்கையால் கேட்கப்பட்டது.

"ரகசியம் என்று ஒன்றும் இல்லை. எங்களுக்குள் பேச்சு வார்த்தை ரொம்ப நாளாக நடந்து கொண்டு தான் இருந்தது. ஒரு மனதாக திருமணம் செய்வது என்று முடிவெடுத்த பின்பு தான் திருமணம் செய்து கொண்டோம்"

“அப்படியானால் எல்லோரையும் அழைத்து பிரம்மாண்டமாக செய்திருக்கலாமே" அடுத்த கேள்விக்கனை

“எங்கள் இருவருக்கும் எளிமையான திருமணமே பிடித்திருந்தது. விமர்சையான திருமணத்தை இருவருமே விரும்பவில்லை கூடிய விரைவில் எல்லோருக்கும் விருந்து ஏற்பாடு செய்ய முடிவெடுத்திருக்கிறோம்"

"எத்தனையோ இளம் ரசிகைகள் உங்களை திருமணம் செய்ய கனவு காண, நீங்கள் ஒரு வி ----" பேச முடியாமல் நிறுத்தினார் அந்த பத்திரிகையாளர்.

இதை கேட்ட ரக்‌ஷிதாவின் கண்கள் தாமாக கலங்கின. அதை மறைத்திட சட்டென குனிந்து கொண்டாள். ஆனால் கிருஷ்ணகாந்தின் பார்வையில் அது தப்பவில்லை. யாருக்கும் தெரியாமல் ரக்‌ஷிதாவின் கைகளை மேஜையின் கீழ் பற்றி ஆறுதல்படுத்த முயன்றவன் பின் தொடர்ந்து

"புரிகிறது....எங்களுக்குள் காதல் மலர்ந்ததற்கு காரணமே இந்த குழந்தைதான். இவளுக்கு தகப்பனாகும் தகுதியை எனக்கு கொடுங்கள் என்று தான் நான் முதலில் கேட்டேன் "

"உங்கள் இருவரையும் பற்றி முன்னமே நிறைய தவறான கிசுகிசுக்கள் வெளிவந்து கொண்டுதானே இருந்தது"

"ஆம் .... அதுதான் சொன்னேனே திருமண பேச்சுவார்த்தை நடந்ததென்று. அது உங்கள் பத்திரிகையாளர்களின் கழுகுப் பார்வைக்கு தப்பவில்லை தான். ஆனால் நீங்கள் எழுதி இருப்பது போல் இல்லை நேர்மையான முறையில் மட்டுமே பேச்சுவார்த்தை நடந்தது"

அதற்கு பின்பு நிறைய கேள்விகள் தொடர்ந்து கேட்கப்பட்டன. எல்லாவற்றிற்கும் சளைக்காமல் பதில் கூறியவன். கடைசியாக பத்திரிக்கைகளுக்கு ஒரு வேண்டுகோளை வைத்தான்.

"எடுத்தோம், கவிழ்த்தோம் என்று கிசுகிசு எழுதிவிடாதீர்கள். அது உண்மையா என்று நன்கு ஆராய்ந்து பின்பு எழுதுங்கள். இதனால் வரும் பாதிப்பு உங்கள் கண்களை அடையாமல் வேண்டுமானால் போகலாம். ஆனால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது நிஜம், என் அழைப்பை ஏற்று இங்கு வந்ததிற்கு நன்றி வருகின்ற வெள்ளி லீ மெரீடியனில் ஒரு விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன். நீங்கள் அவசியம் வந்து கலந்துகொள்ள வேண்டும் என்பது என் விருப்பம்" கை கூப்பி விடைகொடுத்தவன் தனுவை தூக்கிக் கொண்டு மாடியில் இருக்கும் அவன் அறைக்கு சென்றான், பிரமிப்புடன் அவனை பின் தொடர்ந்தாள் ரக்‌ஷிதா

அடுத்த நாளே தன்வன்யாவை அழைத்துக் கொண்டு வெளியே கிளம்பி விட்டான் கிருஷ்ணகாந்த்.

இரவு தான் இருவரும் வீடு திரும்பினார்கள். ரக்‌ஷிதாவிற்கு தான் ரொம்பவும் போர் அடித்துவிட்டது

ஊர் எல்லாம் சுற்றிவிட்டு தாமதமாகத்தான் இருவரும் வந்தார்கள் .

தனுவிற்கு உணவு கொடுத்து படுக்கையில் கிடத்தியவள் அவள் தூங்குவதற்கு விளக்குகளை அணைத்து விட்டு அவளருகில் படுத்தாள், ஆனால் தூக்கம் வரவில்லை.

அப்படி இருவரும் எங்கு தான் போனார்கள். யோசித்தவள் தனுவிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தாள்.

"ஏய் தனு ....இன்றைக்கு எங்கெல்லாம் சுற்றிப் பார்த்தாய்?"

அவ்வளவு தான் உடனே உற்சாகம் தொற்றிக் கொண்டது தனுவிற்கு.

"அய்யோ...மம்மி...அப்பா எவ்வளவு நல்லவர் தெரியுமா? எனக்கு பெரிய சாக்லேட் ஐஸ்கிரீம் எல்லாம் வாங்கிக் கொடுத்தார். அப்புறம் ஷூட்டிங் நடக்குதே அங்கே கூட்டிப் போனார். ஆ...ஆங்...அம்மா நம்ம டிவில பாக்கிறோமே அது எல்லாமே பொய்மா அடிபடறா மாதிரி நடிக்கிறாங்க அப்புறம் ரெட் பெயின்ட் ஊத்திகிட்டு அடிபட்டு ரத்தம் வர்ற மாதிரி அப்படியே அச்சு அசலா நடிக்கிறாங்க. அங்க எதுவுமே உண்மை இல்லையாம் அப்பா சொன்னாங்க"

"ஓ. " என்றவள் இதற்காகவா இவளை அழைத்துச் சென்றார்? என்று யோசிக்கும் பொழுதே இல்லை என்பது தன்வன்யாவின் பேச்சில் தெரிந்தது.

"அதுபோல தான் கல்யாணமுமாம். அம்மா விளையாட்டுக்கு எல்லாமே பொய், நேற்று எனக்கும் உன் அம்மாவுக்கும் நடந்தது தான் நிஜம்.நீ டிவியில் பார்த்தது எல்லாம் பொய் என்று புரிந்து கொள் தனும்மா.உன்னிடமும் ரக்‌ஷிதாவிடமும் நான் நடிக்கவில்லை" இப்படி இன்னும் நிறைய சொன்னாங்க. எனக்கு எல்லாம் மறந்துடுச்சு மம்மி. ஓகே எனக்கு தூக்கம் வருது குட் நைட்" என்றவள் உடனே உறங்கியும் விட்டாள். ஆனால் ரக்‌ஷிதாவால் உறங்க முடியவில்லை.

அன்புடன்
இந்திரா செல்வம்
 
Messages
81
Reaction score
60
Points
18
15

நாட்கள் தன் வேகத்தில் ஓடிக்கொண்டே இருந்தது. இதற்கிடையில் ஒரு நாள் காய்கறி வெட்டும் மிஷினுடன் வந்த கிருஷ்ணகாந்த் அதை ரக்‌ஷிதாவின் கைகளில் கொடுத்தான்." இனி காய் வெட்டும்பொழுது கண்கலங்காமல் இருக்கும்" என்றான்.

மற்றொரு நாள் ஒரு தங்க நகை செட் வாங்கி வந்து கொடுத்து "இது உனக்கு ரொம்பவும் அழகாக இருக்கும் என்று தோன்றியது உடனே வாங்கி விட்டேன், ப்ளீஸ் மறுக்காதே" என்றான்.

வாரக் கடைசியில் தன்வன்யாவும், கிருஷ்ணகாந்தும் ஷாப்பிங் சென்று விடுவார்கள். வரும் பொழுது கார் நிறைய பொம்மைகளோடும் துணிமணிகளுடன் தான் வருவது வழக்கம். அவ்வப்போது அவன் வெளியூர்களுக்கு வேலை நிமித்தமாக செல்வதும் உண்டு. அப்பொழுதெல்லாம் வீடு வெறுமையாக இருப்பது போல் ரக்‌ஷிதாவால் உணரமுடிந்தது.

நிறைய விருந்துகளுக்கு ரக்‌ஷிதாவையும் தன்வன்யாவையும் உடன் அழைத்துச் செல்வதை பழக்கமாக்கிக் கொண்டான் கிருஷ்ணகாந்த் அப்போதெல்லாம் அவள் அறிந்துகொண்ட உண்மை என்னவென்றால். "கிருஷ்ணகாந்த் ரொம்பவும் மாறிவிட்டார். இப்பொழுதெல்லாம் நம் பக்கம் பார்ப்பது கூட இல்லை." என்று புலம்பும் துணை நடிகைகள். "ம்ஹூம் இப்படி ஒரு அழகு தேவதை மனைவியாக அமைந்துவிட்டால் நம் பக்கம் பார்வை எப்படித் திரும்பும்" என்று பெருமூச்சுவிடும் ஒரு பெண்கள் கூட்டம் அவள் காதுபடவே எல்லாம் பேசும் பொழுது அவளுக்கும் உள்ளுக்குள் வருத்தமாக தான் இருந்தது.

நான் அவரை மாறச் சொல்லவில்லையே உங்கள் விருப்பம் போல் இருக்கலாம் என்று தானே கூறினேன். அப்புறமும் ஏன் இவர் தன் சந்தோஷங்களை இழக்க வேண்டும்?” ஒரு பக்கம் மனம் அவனுக்காக வருந்தியது மறுபக்கம் “அவர் அப்படி எல்லாம் சல்லாபமாக இருந்தால் அதை உன்னால் தாங்கிக் கொள்ள முடியுமா?” என்று எதிர் கேள்வி கேட்டது.

உண்மைக்கும் மாயைக்கும் ஒருவே நசுக்கப்படுவதை ரக்‌ஷிதாவால் நன்றாகவே உணர முடிந்தது. இப்படி குழம்பும் வேளையில் தான் அது நடந்தது


அன்று இரவு வெகு நேரம் ஆகியும் கிருஷ்ணகாந்த் வீடு திரும்பவில்லை.. வெளியூர் எங்கும் செல்வதாக எதுவும் கூறவும் இல்லை. சென்னையில் இருந்தால் நிச்சயமாக இரவு வீடு வந்து விடுவான். தன்வன்யாவை பார்க்காமல் இருக்க முடியவில்லை என்று அவன் பலமுறை கூறியதுண்டு.

ரக்‌ஷிதாவிற்கு இமைகள் மூட மறுத்தன. என்ன நடந்ததோ என்ற பயம் ஒரு புறம் எத்தனை முறை போன் செய்தும் அட்டன்ட் செய்யவில்லை என்பது வேறு இன்னமும் பீதியை கிளப்பியது

சதாசிவம் ஒன்பது மணி வரை தான் காவல்காப்பார் பின் நைட் வாட்ச்மேன் வந்துவிடுவார். காலையிலிருந்து வேலை பார்க்கும் அவரின் தூக்கத்தை கெடுக்கவும் மனமில்லாமல், இனி என்ன செய்வது என்றும் புரியாமல் ஹாலில் கிடந்த ஷோபாவில் கைகளை பிசைந்தபடி அமர்ந்திருந்தாள். நேரம் இரவு பனிரெண்டை தாண்டிவிட்டது. கவலையின் உச்சத்திற்கே சென்று விட்டாள் ரக்‌ஷிதா. இனி பொறுக்க வேண்டாம். போலீசில் சொல்லிவிடலாம். அப்படிச் சொன்னால் அவரது இமேஜ் பாதிக்கப்படாதா? இருக்கவே இருக்கிறார்கள் பத்திரிக்கை நண்பர்கள். இதற்கும் ஒரு கிசுகிசுவை எழுதிவிடுவார்கள். பேசாமல் அவரின் மாமாவுக்கே ஃபோன் போடலாமா? வேண்டாம் வேண்டாம் ...அவர் சரியான சிடுமூஞ்சி அவரிடம் கேட்பது வீண் தொல்லை தான், நிறைய யோசித்தாலும் அவளால் எந்த செயலிலும் இறங்க முடியவில்லை.

சரியாக ஒரு மணி அளவில் கதவு தட்டப்பட்டது. உடனே ஓடிச் சென்று கதவை திறந்தால், வெளியே நிற்க கூட முடியாத நிலையில் கிருஷ்ணகாந்த் வாட்ச்மேனின் பிடியில் .

பார்த்த உடனே தெரிந்து விட்டது அளவுக்கு அதிகமாக குடித்திருக்கிறான் என்று கோபம் வந்தாலும் அதை காட்ட இது நேரமில்லை என்றுணர்ந்தவள் வாட்ச்மேனின் துணையுடன் அவன் அறைக்கு அழைத்து வந்துவிட்டாள்.

அவனை படுக்கையில் கிடத்தியவள் அவன் ஷூ, சாக்ஸ், டைய், பர்ஸ் என்று தேவை இல்லாதவற்றை அகற்றிவிட்டு இறுதியாக அவன் தலை தூக்கி தலையணையையும் வைத்துவிட்டு வெளியேற திரும்புகையில் அவளால் முன்னேற முடியவில்லை. காரணம் கிருஷ்ணகாந்தின் கரம் அவளின் முந்தானையை இறுக்கமாக பற்றி இருந்தது.



உடனே முகம் வெளிறிவிட்டது. அவளுக்கு இனி என்ன நடக்குமோ என்ற நடுக்கம் உடல் எங்கும் பரவியது மெல்ல தன் சக்தியை ஒன்று திரட்டி.

"கி.... கிருஷ்...கிருஷ்ணகாந்த் என்ன ... இது "அவள் முடிப்பதற்குள்

"உஷ்.....கிருஷ்ணகாந்துன்னு சொல்லக்கூடாது.கு..... கும.....குமார் .... எங்கே சொல்லு .....கு...குமார் .....சொல்லு...சொல்லு....." குழறவாய் அவன் பேசியது சரியாக புரியவே இல்லை என்றாலும்

"குமார் ...."என்றாள். அவன் விட்டால் போதும் என்று தான் தோன்றியது. ஆனால் அவனோ அழ ஆரம்பித்தான்.

"அ ...அம்மா...அம்மா என்னை குமார்ன்னு தான் கூப்பிடுவாங்க.....இந்த சினிமாவுக்காகத் தான் கிருஷ்ணகுமார் என்ற பெயரை கிருஷ்ணகாந்துன்னு மாத்திக்கிட்டேன், எனக்கு குமார் தான் பிடிக்கும்.....ஆனா யாரும் கூப்பிடவே மாட்டேங்கிறாங்க, நீயாவது கூப்பிடு ரக்‌ஷிதா...பிளீஸ்" அவன் கெஞ்சுவதை பார்க்க பாவமாக இருந்தது அவளுக்கு,

"சரி குமார் நீங்க தூங்குங்க..... காலையில் மற்றதை பேசலாம்" சமாதானப்படுத்த முயன்றாள்.

"ம்.......ஹும் முடியாது. இங்க உட்கார்.அவன் அருகில் கைவைத்து காட்டினான். இதயம் படபடத்தாலும் அவன் வார்த்தைக்கு கட்டுப்பட்டு அமர்ந்தாள். உடனே தலையணையில் இருந்து அவள் மடியில் தலைவைத்து படுத்துக்கொண்டான்.. “

"இது போதும் ரக்‌ஷிதா --- -- இந்த அன்பு போதும் ..... இது கிடைக்காமல் எப்படி துடித்திருக்கிறேன் தெரியுமா... ரொம்ப நன்றி ரக்‌ஷிதா....ரொம்பவும் நன்றி, என் மனம் முழுக்க நீதான் .... அதே போல் உன் மனமும் மாறும். அதுவரை காத்திருப்பேன் ...,திக்கித் திணறி பேசிக்கொண்டே உறங்கியும் விட்டான் .....

அவன் பேசியதை கேட்டு உறைந்து அமர்ந்திருந்தாள் ரக்‌ஷிதா .... குடித்ததால் உளறுகிறாரா.....அல்லது உள் மனதில் இருப்பது வெளிவருகிறதா? அப்படியானால்? சப்தநாடிகளும் ஒரு நொடி நின்று, , பின் துடித்தது போல் உணர்ந்தவள் உடனே அவனை தலையணையில் கிடத்தி விட்டு ஓடிச்சென்று தலையணையில் முகம் புதைத்து கண்ணீர் வடித்தாள்.ஏன் அழுகிறோம் எதற்காக அழுகிறோம் ஏன் இந்த வலி ஒன்றுமே புரியவில்லை. ஆனால் அழுகை மட்டும் நிற்கவே இல்லை.

அன்புடன்
இந்திரா செல்வம்
 
Messages
81
Reaction score
60
Points
18
16

வழக்கத்திற்கும் சற்று தாமதமாக எழுந்த ரக்‌ஷிதா தன் காலை வேலைகளை முடித்துக் கொண்டு கீழே இறங்கிய போது அவளுக்காகவே கிருஷ்ணகாந்த் ஹாலில் காத்திருப்பது தெரிந்தது.
இருப்பினும் அவனை கவனியாதது போல் சமையலறை நோக்கி சென்றவளை வழிமறித்தவன், “கொஞ்சம் என்னுடன் வா" என்ற படி முன்னே சென்றான்.
ஏன் என்று யோசித்தாலும் மறுக்காமல் அவனை பின் தொடர்ந்தாள்.
பூஜையறை வாயிலை அடைந்தவன் அதன் மணிக்கதவுகளை திறந்தான்.
பின்புறம் நின்றவளின் கரம்பற்றி அவன் எதிரே நிறுத்தினான்.
" என்ன?" என்று கேட்காமல் கேட்கும் அவளின் விழிகளை ஊடுறுவியவன்
"நே-..நேற்று நடந்ததற்கு மன்னிப்பு வேண்டுகிறேன். அது மட்டும் இல்லாமல் இனி நான் என்றும்..... மது அருந்தமாட்டேன் என்று உனக்கு சத்தியம் செய்கிறேன்" அவள் கரம் பற்றி அதன் மேல் அவன் கரத்தை அடித்துச் சத்தியம் செய்தான்
கண்கள் பணித்தாலும் அவன் விழிகளை நேருக்கு நேர் பார்த்தவள், "இது---- இது உங்கள் படத்தில் வரும் வசனமில்லையே?"உதடுகள் நடுங்க வார்த்தைகளும் நடுக்கத்துடனே வெளியேறின,
சில நொடி மெளனித்தவன்
" நான் தான் நடிகன் ரக்‌ஷிதா ! என் இதயம் எப்பொழுதும் நடிப்பதில்லை" பிடித்திருந்த அவளது கையை தன் நெஞ்சில் வைத்து அழுத்தி "இப்போது நான் பேசியது என் இதயத்திலிருந்து வந்த வார்த்தைகள்தான்" அவன் குரல் தழுதழுத்தது. இருவரின் கண்களும் விலகவில்லை. அழுந்தப் பிடித்திருந்த கையை அவனும் விடவில்லை இவளும் விடுவித்துக் கொள்ள முயலவில்லை. எத்தனை நேரம் அப்படியே இருந்தார்களோ தெரியவில்லை. தனுவின் “அம்மா” என்ற குரலில் தான் இருவருமே சுயநினைவிற்கு வந்தனர்.
"என் குட்டி ஏஞ்சல் எப்போ விழித்தது?" ஓடிச் சென்று தனுவை தூக்கிக்கொண்டான் கிருஷ்ணகாந்த்.
" இப்போதான் அப்பா "
“ சரி ஸ்கூலுக்கு நேரமாயிடுச்சே,போடா போய் குளித்து ரெடியாகு" அவள் கன்னங்களில் இதழ் பதித்து விட்டு கீழே இறங்கி விட்டான்.
ஏனோ இந்த காட்சியை பார்த்ததும் மனம் நிறைவுற்றது போல் தோன்றியது ரக்‌ஷிதாவிற்கு, தனுவிற்கு சிறந்த தந்தை கிடைத்திருக்கிறார்.

நாட்கள் நகர்ந்தன, தன்வன்யாவிற்கு விடுமுறை விட்டுவிட்டார்கள். தினமும் வீட்டில் இருபத்திநான்கு மணி நேரம் போதவில்லை ரக்‌ஷிதாவிற்கு, தன்வன்யாவின் குறும்புகளை ரசிக்கவும் செய்தாள். கண்டிக்கவும் செய்தாள். தன்வன்யாவிற்கோ, அப்பா, அம்மா இருவரும் வீட்டிலிருக்க வேண்டும் என்று அதிக ஆசை.அவளுக்காக விடுமுறை நாட்களில் டூர் போக ஏற்பாடு செய்யலாம் என்று யோசித்தான் ஆனால் ரக்‌ஷிதா மறுத்து விட்டாள். "வெளியே சென்றால் உங்களை சுற்றி கூட்டமாகவே இருக்கும், எல்லோரும் உங்களுடன் பேச ஆசைபடுவார்கள். எங்களுடன் இருக்க முடியாமல் போகலாம், அதனால் வேண்டாம்" என்று திட்டவட்டமாக கூறிவிட்டாள்.
வெளிநாடு போக வேண்டும் என்றால் ரக்‌ஷிதாவிற்கும் தன்வன்யாவிற்கும் பாஸ்போர்ட் இல்லாததால் அதுவும் முடியாது. ஆக டூர் எண்ணம் கைவிடப்பட்டது.
அதற்கு மாற்று ஏற்பாடாக அவன் நடித்த அத்தனை பட சீடிக்களையும் கோடம்பாக்க வீட்டிலிருந்து எடுத்து வந்து தன்வன்யாவிடம் கொடுத்தான்.
"அப்பா இல்லாத போது போர் அடித்தால், இந்த படங்களை பார்தது. அப்பா உன் முன்னே இருப்பது போலவே தோன்றும் சரிதானா?" என்றதும் ரொம்பவும் சந்தோஷப்பட்டாள் தன்வன்யா
"தேங்யூ டாடி ஐ லவ் யூ சோ மச்" அவன் கழுத்தை கட்டிக் கொண்டு கன்னங்களில் இதழ் பதித்தாள்.
மூன்று நாள் ஊட்டியில் ஷூட்டிங் என்று சென்றிருந்தான் கிருஷ்ணகாந்த்.
எப்போதும் தன்வன்யா தான் "அப்பா எப்போ வருவார்" என்று கேட்டு நச்சரித்து விடுவாள். ஆனால் இந்த முறை ரக்‌ஷிதாவின் இதயமே அவளை நச்சரித்தது. இரண்டு நாளாக அவன் இல்லாதது ரொம்பவும் வெறுமையை கொடுத்தது. இரவு அவன் வருகைக்காக தன்வன்யாவுடன் சேர்ந்து அவளும் காத்திருக்க தொடங்கினாள்
"அம்மா...இந்த சிடியை போடப் போறீங்களா இல்லையா?"
"இருடி வரேன், ஏன் இப்படி கத்தி ஊரை கூட்டறே"
"அப்பா என்ன சொல்லியிருக்கார், தனு பாப்பாவுக்கு போர் அடிக்கும் போது இதை போடச் சொன்னார் தானே. நீங்க போடலைன்னா நான் அப்பாகிட்ட சொல்லிடுவேன்."
"சொல்லேன், அவர் என்ன புலியா? சிங்கமா? நான் பயப்பட, அப்படி என்ன செய்வார் உன் அப்பா?" வேண்டுமென்றே தனுவை சீண்டியவள் தான் எத்தனை சுலபமாக கிருஷ்ணகாந்தை பற்றி பேசுகிறாள் என்பதும் கருத்தில் பதியத்தான் செய்தது
"இன்றைக்கு அப்பா வரட்டும் உங்களை மாட்டி விடுகிறேன் , அப்போ தெரியும் உங்களுக்கு"
"சரி சரி சீடியை கொடு" என்றவள் கேசட்டை போட்டுவிட்டு தனுவுடன் சேர்ந்து பார்க்க ஆரம்பித்தாள்
கண்கள் திரையில் பதிந்திருக்க நினைவு வேறெங்கோ சுற்றிக்கொண்டிருந்தது. அப்போதுதான் அந்த காட்சி, திருமண காட்சி கிருஷ்ணகாந்த் அந்த கதாநாயகியின் கழுத்தில் மூன்று முடிச்சிடுகிறான் கண்கள் கலங்கி விட்டது. இதனை தொடர்ந்து முதலிரவுக்காட்சி வரக்கூடுமே என்ற எண்ணமே அவளை கலவரப்படுத்தியது, இதனை தன்வன்யா வேறு பார்ப்பாளே" உடனே ரிமோட் கொண்டு டிவியை அணைத்து விட்டு அதற்கு மேல் அடக்க முடியாமல் அழுது கொண்டே தன் அறைக்குள் சென்று மறைந்தாள்.
தன்வன்யாவிற்கு ஒன்றும் புரியவில்லை. பின்னோடு செல்ல முயன்ற தனுவை தடுத்த கனகம் "சீடில ஏதோ கோளாரு போலிருக்கே தனும்மா சரி வாங்க பாட்டி உனக்கு கார்டூன் சேனல் வைக்கிறேன்" என்று தன்வன்யாவின் சிந்தனையை மாற்ற முயன்றார்.

அன்புடன்
இந்திரா செல்வம்
 
Messages
81
Reaction score
60
Points
18
17(final -The End )


மதியம் ரூமினுள் சென்ற ரக்‌ஷிதா இரவு வரை வெளியேவரவே இல்லை. கனகம் எத்தனை கூப்பிட்டும் கதவைதிறக்கவும் இல்லை. கைகளை பிசைந்தபடி கிருஷ்ணகாந்தின் வரவுக்காக காத்திருந்தார்.

இரவு பத்து மணி அளவில் வீடு திரும்பிய கிருஷ்ணகாந்த், கனகம் கதவை திறந்ததும் குழப்பமடைந்தான்.

"என்னம்மா இன்னும் நீங்க போகலையா?" கேட்டபடியேஉள்ளே நுழைந்தவன் கால்களை ஓடி வந்துகட்டிக்கொண்டாள் தன்வன்யா. உடனே அவளை தூக்கிக்கொண்டவன்.

"என்ன செல்லம் இன்னும் நீ தூங்கலையா?" குழந்தையின் முகம் வாடி இருப்பதை உணர்ந்தவன், ஏதோ உறுத்த சுற்றும் முற்றும் தேடினான்.

"ர - - - - ரக்‌ஷிதா எங்கே கனகம்மா "

"வ... வந்து ...." அவர் மென்று விழுங்குவதற்குள் தன்வன்யாபேசினாள்.

"டாடி மதியம் நானும் அம்மாவும் டிவில உங்க படம்பார்த்தோமா, திடீர்னு அம்மா ஒரே அழுகை"

கனகத்தின் பதிலுக்காக அவரை பார்த்தான்கிருஷ்ணகாந்த்.
"ஐயா வந்து .... டிவியில் உங்க படம் ஓடிச்சு...அதுல நீங்கதாலி கட்டுற காட்சியை பார்த்ததும் அம்மா அழுகிட்டேஓடிட்டாங்க."

கிருஷ்ணகாந்த் பேசுவதற்குள் தன்வன்யா பேசினாள்.

"அய்யோ பாட்டி, அம்மா அதெல்லாம் நெஜம்னுநம்பிட்டாங்களா? அப்பா என்னை ஷீட்டிங்குக்கு கூட்டிப்போனீங்களே, அங்க அம்மாவையும் கூட்டிப் போங்கப்பா. அப்போதான் அதெல்லாம் பொய்ன்னு அம்மாவுக்குதெரியும்"

" சரி செல்லம், இப்போ அப்பா சொல்வதை கேப்பியா?நீகனகம் பாட்டியுடன் இங்கே கீழே இருக்கும் பெட்ரூமில்படுத்து தூங்க நீயா? அப்பா அம்மாவை ஷூட்டிங்கிற்குகூட்டிப் போய் புரிய வைக்க நேரமாகும்.. அதனால் தனுபாப்பா தூக்கம் கெடும்தானே, பார் இப்போதே கண்கள்சிவந்திருக்கிறது"

"நானும் ஷூட்டிங்கிற்கு வரேன் அப்பா?!!"

"அடடா .... உன்னை நாளை ஒரு ஐஸ்கிரீம் ஷாப்பிற்குகூட்டிப் போகலாம்ன்னு யோசிச்சேனே .....சரி ---- வேண்டாம் என்றால் ஷூட்டிங் போகலாம். ஐஸ்கிரீமா? ஷூட்டிங்கா?"

சில நொடி யோசித்த தன்வன்யா.,

"ஐஸ்கிரீம் தான் வேணும். ஷூட்டிங் வேண்டாம் அதுபோர். கனகம் பாட்டி நம்ம தூங்கலாம்" கனகத்தின் கைபற்றினாள் தன்வன்யா.

"ப்ளீஸ் கனகம்மா தனுவை பார்த்துக் கொள்ளுங்கள் நான்ரக்‌ஷிதாவை போய் பார்க்கிறேன்"

"என்னய்யா நீங்க ப்ளீஸ் எல்லாம் சொல்லிகிட்டு, நீங்கபோங்க" என்று கனகம் கூறியது தான் தாமதம் உடனேஇரண்டு இரண்டு படிகளாக தாவி மாடிக்கு ஓடினான்கிருஷ்ணகாந்த்.


அவன் ரூமில் இருந்த மாஸ்டர் கீயை எடுத்துக்கொண்டவன் ரக்‌ஷிதாவின் அறை கதவை திறந்தான்.



அங்கே கட்டிலில் ரக்‌ஷிதா குலுங்கி அழும் காட்சி அவன்கண்களில் பட்டதும் இதயம் துடித்தது அவனுக்கு,. இரண்டே எட்டில் கட்டிலை அடைந்தவன் ரக்‌ஷிதாவின்தோள் பற்றினான்.

அதிர்ச்சியுடனும், நீர் கசியும் கண்களுடனும் அவசரமாகஎழுந்தவள் கிருஷ்ணகாந்தை பார்த்ததும் தலைகவிழ்ந்தாள்..கண்களில் கண்ணீர் அதிகரித்ததே தவிரகுறையவில்லை.

உதட்டை கடித்து அழுகையை உள்ளிழுக்க முயன்றவளைசில நொடி உற்று பார்த்தவன் மெல்ல அவளருகில்அமர்ந்தான் அவளின் தாடையை பற்றி தன்புறம்நிமிர்த்தியவன்

" இப்போ இந்த அழுகை ஏன் ரக்‌ஷிதா?"

அவள் விழி திறக்கவில்லை. உதடுகள் மட்டும்"தெரியவில்லை "என்று முணுமுணுத்தன

"தனு என்னிடம் சொல்லி விட்டாள் நீ எதற்காகஅழுகிறாய் என்று "

பட்டென விழிதிறந்தவள் உடனே தலை குனிந்தாள்.

"சரி ...இப்போது உன் வாயால் நீயே சொல் ஏன்அழுகிறாய்?"

"இப்போதும் தெரியவில்லை"

சில விநாடி மெளனித்தவன், பேசினான்

"நான் சொல்லட்டுமா?"

அவளின் பதில் மெளனமாகவே இருந்தது.

சட்டென இழுத்து தன்னுடன் சேர்த்து அணைத்துக்கொண்டவன் அவள் முகம் முழுவதும் தன் இதழ்களால்முத்திரை பதித்து மீண்டும் தன் நெஞ்சோடு அழுந்தப்புதைத்துக்கொண்டான்.சில பல நிமிடங்கள் நீடித்திருந்தஅந்த அணைப்பில் ரக்‌ஷிதாவின் அழுகை படிப்படியாககுறைந்து பின் நின்றது. அவளின் அழுகை நின்றவுடன்அவளை தன்னிடமிருந்து பிரித்து நிறுத்தி

"இப்போது உனக்கு என் மேல் கோபம் வருகிறதா?"
"இல்லை" என்பது போல் தலையசைத்தாள்.


"போதுமே! இது போதுமே. உன் மனதில் எழும் அத்தனைகேள்விகளுக்கும் இப்போது நீயே பதில் கூறிவிட்டாய். இருப்பினும் உனக்கு விளக்கம் சொல்ல நான் கடமைபட்டிருக்கிறேன். படத்தில் நீ பார்த்தக்காட்சி உன்னைபாதிக்க எந்த அவசியமும் இல்லை காரணம் என்னதெரியுமா?" நிறுத்தியவன் அவள் கழுத்தில் கிடந்ததாலிச்சரடை வெளியே எடுத்து காண்பித்தான்.

"இதுவும் நான் கட்டியதுதான் நீ படத்தில் பார்த்ததும் நான்கட்டியதுதான். ஆனால் இப்போதும் இது உன் கழுத்தில்இருக்கிறது.அந்த நடிகையின் கழுத்தில் இருக்குமா? யோசித்துப்பார். அது வெறும் நடிப்பு அவ்வளவே. நடிப்பிற்காக நெருக்கமான காட்சி நடிக்கிறேன் தான்இல்லை என்று சொல்லமாட்டேன். ஆனால் அப்படிநடிக்கும் பொழுது மனதில் எந்த உணர்ச்சியும்எழுந்ததில்லை. உதாரணத்திற்கு உன்னை பேருந்தில்எத்தனை பேர் இடிக்கிறார்கள் உரசுகிறார்கள். தவறானசெயல் கூட செய்கிறார்கள். அப்போது உன் மனதில்வெறுப்பு தானே தோன்றும். அப்படி பார்த்தால் தொடுகைஒரு பொருட்டே இல்லை.

நான் நெருக்கமாக நடித்த நடிகைகள் மீது எனக்குஎன்றுமே நாட்டம் வந்ததில்லை.. ஆனால் உன் அருகில்அமர்ந்தாலே என் உள்ளம் கரைகிறது. உன் விழி உரசலேஎன்னை வேறு உலகத்திற்கு அழைத்துச் செல்கிறது. உன்னை பார்த்த பின்பு தான் காதல் என்றால்என்னவென்று நான் உணர்ந்தேன். அது ஒரு சுகமான வலி. இதனை எனக்கு புரிய வைத்ததற்காகவே நன்றி சொல்லவேண்டும்"

"உன்னை முதல் நாள் பார்த்த பொழுதே எனக்குபிடித்துவிட்டது. உன் துடுக்கான பேச்சில் என்னை உன்பக்கம் இழுத்து விட்டாய். எப்படி வேண்டுமானாலும்வாழலாம் என்று இருந்த என்னை உன் சிறு முகச்சுழிப்புஇப்படித்தான் வாழ வேண்டும் என்று சொல்லாமல்சொல்லியது. என் காதலை நீ ஏற்பாயா என்றஅச்சத்தோடு நான் தயங்கிக் கொண்டிருந்தேன். தனு உன்குழந்தை என்று தெரியாமல், உனக்கு திருமணமானதுதெரியாமலே உன்னை மனதினுள் காதலித்துக்கொண்டிருந்தேன்.ஆனால் தனு உன்னை அம்மா என்றுசொன்னதும் நம் கலாச்சாரப்படி விலகத் தான்முயன்றேன். ஆனால் தனு என்னுடன் அன்பாய்பழகினாள்.அந்த பிஞ்சு மனம் என்னை சந்தோஷப்படவைத்தது அப்போது தான் தனுவிற்காக உன்னிடம்பேசவேண்டும் என்று யோசித்தேன். அதற்குள்என்னவெல்லாமோ நடந்து விட்டது.



நடந்தவற்றில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ரொம்பவும் சந்தோஷமே. நம் உறவு இப்படியே நீடித்தாலும்சரி அல்லது முன்னேற்றம் அடைந்தாலும் சரி எனக்குசந்தோஷம் தான். என் ஆயுள் வரை உன் அருகாமையேபோதுமானது. என் மனதிலிருப்பதை நான் பேசி விட்டேன். இனி எதற்காகவும் உன்னை நீயே ஏமாற்றிக் கொள்ளாதே. நன்றாக யோசித்துப் பார். நான் உன் முடிவுக்காக என்அறையில் காத்திருப்பேன்".

வேகமாக வெளியேற எத்தனித்தவன் கதவருகில் நின்று"மறக்காதே ரக்‌ஷிதா என் அறை கதவு உனக்காகதிறந்திருக்கும்" முடித்தவன் வெளியேறினான்

கிருஷ்ண காந்தின் மனதில் லேசான படபடப்புஇருக்கத்தான் செய்தது. ரக்‌ஷிதா என்னமுடிவெடுப்பாள்.என்னுடன் வந்து பேசுவாளா? என்னை, என் காதலை ஏற்பாளா? எங்கள் வாழ்வில் மறுமலர்ச்சிநடக்குமா? இப்படி பலத்தரப்பட்ட கேள்விகள் அவன்மனதில் தோன்றி மறைந்தன. சன்னலின் கம்பிகளைஇறுகப்பற்றியவன் தன் மன இறுக்கம் குறைவதற்காகவெளியே தோட்டத்தை வேடிக்கை பார்த்தான். இரவுவிளக்கின் ஒளியில் சில செடிகள் மற்றும் மலர்களின்நிழலாடியதை பார்க்க முடிந்தது .

தன்னுடைய வாழ்வும் இப்படி பட்ட இருள் நிறைந்ததோட்டமாகிவிடுமோ? என்று அவன் நினைத்த அதேவினாடி கதவு தட்டும் ஓசை கேட்டது.

வாயில் புறம் திரும்பாமலே "கதவு திறந்துதான்இருக்கிறது. அதுவும் உனக்காக, எதற்கு தட்டுகிறாய்உள்ளே வா"

தன் பின்னே நிழலாடுவது தெரிந்ததும் கைகளை குறுக்கேகட்டிக் கொண்டு திரும்பினான்.

அவன் எதிரில் கைகளை பிசைந்தபடி நின்றிருந்தாள்ரக்ஷிதா.

அவளே பேசட்டும் என்பது போல் சன்னலில் நன்றாகசாய்ந்து நின்று கொண்டான் கிருஷ்ணகாந்த்


விநாடிகள் நிமிடங்களாக கரைந்ததே ஒழிய அவள் வாய்திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை.

இது சரிப்படாது என்று நினைத்தவன் "உன் மௌனத்தின்பொருள் எனக்கு புரியவில்லை. என் மனதிலிருப்பதைநான் பேசி முடித்து விட்டேன் இனி நீ தான் பேசவேண்டும். ஒருவேளை என்னை பிரிவதுதான் உனக்குவிருப்ப ..." அதற்கு மேல் அவனால் பேசமுடியவில்லைகாரணம் ரக்‌ஷிதாவின் கரம் அவன் இதழ்களை மூடிவிட்டிருந்தது.

"வேண்டாமே குமார்....... பிரிவை பற்றி பேசுவதற்காகநான் வரவில்லை" அவள் கண்களில் தேங்கி இருந்த நீர்கன்னங்களில் வழிந்தோடின. மென்மையாக அவளின்கரத்தை விலக்கியவன் அதில் இதழ் பதித்தான். பிறகுஅவள் கண்ணீரை துடைத்தவன்,

“போதும் ரக்‌ஷிதா அழுதது."

"இல்லை ....நான் ....."

"ம்...ஹும்..எதுவும் சொல்ல வேண்டாம். நீ குமார் என்றுஅழைத்த போதே எனக்கு எல்லாம் புரிந்து விட்டது. இனிஏன் தாமதம்” என்றவன் தன் கைகளை விரித்தான். உடனே அவன் தோள்களில் தஞ்சமடைந்தாள் ரக்‌ஷிதா.

" ரக்‌ஷிதா ----" அவள் காதருகே செவி மடல்களை தன்இதழால் உரசியபடி மென்மையாக கிசுகிசுத்தாள்.

அவனின் அருகாமையிலும் ஸ்பரிசத்திலும் பேச்சைமறந்தவளாய் "ம்...." என்ற ஒலியை மட்டும்பதிலாக்கினாள்

"ரொம்ப நாள் முன்பாக தனு என்னிடம் ஒன்று கேட்டாள்"

"என்ன கேட்டாள்?"

"அப்பா என் பிரெண்ட் ரம்யா இருக்கால்ல அவளுக்குதம்பி பாப்பா இருக்காம் ரொம்ப அழகாம், ரொம்பசேட்டையாம், இவள் தான் தினமும் ஏ.பி. சி.டி.--- சொல்லித் தருவாளாம். ஸ்கூலில் ஒரே பீற்றல். எனக்குஎப்போ தம்பி பாப்பா வரும்? நானும் அவனுக்கு டீச்சராகிஏ.பி.சி.டி எல்லாம் சொல்லித் தருவேன் என்று கேட்டுநச்சரித்து விட்டாள்" என்றவன் சிவந்திருந்த அவளதுகன்னங்கள் மேலும் சிவப்பதை ரசித்தான்.

"ஓ - - - அதற்கு நீங்கள் என்ன சொன்னீர்களாம்?"
"ம் - - - - - ஹூம் நான் என்ன சொல்லட்டும்குழந்தையையும் காயப்படுத்தகூடாது என்று ஏதோ அந்தநேரத்திற்கு உளறி வைத்தேன், சீக்கிரம் தம்பி பாப்பாவருவான் என்று"

" ---"

ரக்‌ஷிதா மெளனமாக இருக்கவும்

"என்ன ரக்‌ஷிதா உனக்கும் சரிதானே?"

"ம்... ஹ்ம் இல்மை "

"ஏ.... ஏன் "அவன் குரலில் இருந்த சிறு அதிர்ச்சிகவனித்து லேசாக சிரித்தவள். "ஏன் தங்கை என்றால்வேண்டாமாக்கும் அந்த மகாராணிக்கு "இப்படிச்சொல்கையில் அவளது இதழ்களில் வெட்கப் புன்னகைமலர்ந்திருந்தது.

"அப்படி போடு - - - - - ரொம்பவும் சந்தோஷம் ரக்‌ஷிதா, எனக்கும் தன்வன்யா போலவே ஒரு அழகான கியூட்சின்டர்லா தான் வேணும், நாம் இருவர் நமக்கிருவர்.இரண்டு அழகான பெண் குழந்தைகளை வளர்ப்பதேசுகம்தான். எனக்கு அந்த சுகத்தை கொடுப்பாயா?"

அவளின் வெட்கம் நிறைந்த மௌனமே அவனுக்குபதிலாய் இன்னமும் அவன் மார்பில் தன்னை அழுந்தப்புதைத்துக்கொண்டாள் ரக்‌ஷிதா
அன்புடன்
இந்திரா செல்வம்
 
Top Bottom