Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


என் உயிரானவளே! - கதை

Dowlath Haseena

Saha Writer
Team
Messages
12
Reaction score
23
Points
1
ஹாய்....! இது என்னோட முதல் கதை. படித்து விட்டு குறைகளைக் கூறுங்கள் அது என்னை பண்படுத்திக்கொள்ள உதவும்.



இப்போ கதை பற்றி சொல்றேன்

நம்ம ஹீரோ சரண் ஒரு IPS ஆபிஸர்



ஹீரோயின் சந்தியா. ஹீரோயின் பத்தி கதைய படிக்க படிக்க தெரிந்து கொள்ளலாம்.



என்னங்க IPS ன்னா எப்பவும் கஞ்சி போட்ட சட்டையோட விரப்பா தான் சுத்திட்டு இருக்கனுமா...????கொஞ்சம் வித்தியாசமா அதிரடியா லவ் பண்ற ஆளா இருக்க போறாங்க நம்ம ஹீரோ சார்



சரி..இப்போ கதைக்குள்ள போகலாம்..
 

Dowlath Haseena

Saha Writer
Team
Messages
12
Reaction score
23
Points
1
அத்தியாயம் - 1

சூரியன் தன் கதிர்களை வீசி இருளை அகற்றிட பறவைகள் இரைத்தேடி பயணப்படும் அந்த காலை வேளையில் தனது உடற்பயிற்சியை முடித்து விட்டு தன் முதல் நாள் வேளைக்கு தயாராகி கொண்டிருந்தான் சரண் IPS. டிரைனிங் முடித்து விட்டு கோவையில் DSP யாக பதவியேற்று கொண்டுள்ளான்.



சரண் ஆறடி உயரத்தில் போலிஸிற்க்கு உரிய கம்பீரத்தோடு இருப்பவன். பார்வையில் ஓர் தீவிரம் அளவாய் வெட்டப்பட்ட மீசை …மொத்தத்தில் ஒர் ஆணழகன்.




சரணிற்கு உடன்பிறந்தவர்கள் யாரும் இல்லை. பெற்றோர்கள் விவாகரத்தானவர்கள். நண்பர்கள் பட்டாளம் என்று பெரிதாக எதுவும் இல்லை என்றபோதும் உயிர் தோழன் ஒருவன் உள்ளான் பெயர் ஆதி. சரணின் பள்ளி தோழன். அவன் புலம்பாத நாள்களே இல்லை ஊர்ல பத்து பதினைந்து பிரண்ட்ஸ் வச்சு இருக்கவன் எல்லாம் சந்தோசமா இருக்கான் ஆனா ஒரே ஒரு பிரண்ட் வச்சுக்கிட்டு நான் படுற பாடு அய்யுய்யோ...... 🙄 🤣 ஆனாலும் அவனும் இவனை பிரிந்து இருக்க மாட்டான் இவர்கள் பிரிந்தது சரணின் பயிற்சிக்காக ஹைதராபாத் சென்ற போது தான் அதுவும் அப்போது ஆதி முதுகலை படித்து கொண்டிருந்ததினால்தான்.



சரண் கிளம்பும் நேரத்தில் சரியாக ஆதி வந்தான். "வா.. மச்சான்..! எப்படி டா மனசுல நினைச்ச உடனே வந்து நிக்குற ம்ம்..நம்மக்குள்ள அப்படி ஒரு wavelength ஏன்டா?"..சரண்.



"கருமம் எல்லாம் என் நேரம் இந்நேரத்துக்கு ஒரு பொண்ணோட wavelength செட்டாகி ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்க வேண்டிய ஆளு யார் கூட செட்டாகுது பாரு"..ஆதி.



அதான் ஓன்னும் வெர்க்கவுட் ஆகலல அப்புறம் என்ன புலம்பல் என்றான் சரண்.
ங்ங.. என்று ஆதி புரியாமல் விழிக்க "மச்சி! நீ மைண்ட் வாய்ஸ் ன்னு நினைச்சு சத்தமா பேசிக்கிட்டு இருக்கடா"..சரண்.
சாரி மச்சான் அசடு வழிந்தான் ஆதி.



இருவரும் ஒரு வழியாக கிளம்ப சரணை DSP ஆபிஸில் விட்டு விட்டு அலுவலகத்திற்கு சென்றான் ஆதி.



இங்கு இவர்கள் இப்படி இருக்க நம் நாயகனின் தூக்கத்தை விரைவில் துரத்த இருக்கும் நம் நாயகியோ தூக்கத்தில் தன்னை தொலைத்து கொண்டிருந்தாள்.
சந்தியா எழுந்திருடி மணி எட்டு ஆச்சு அச்சோ ஆண்டவா இவளை எழுப்புறது உள்ள என்னோட பாதி ஆயுள் முடிஞ்சுருமே புலம்பி கொண்டிருந்தார் பார்வதி.சந்தியாவின் அம்மா. சந்தியாவிற்கு அப்பா இல்லை அம்மா மட்டும் தான்.உடன் பிறப்புகள் யாரும் இல்லை மிகவும் கஷ்டப்பட்டு தான் வளர்த்தார் பார்வதி இருப்பினும் தந்தை இல்லை என்ற குறை தெரியாமல் வளர்த்திருக்கிறார்.



சந்தியாவும் மிகவும் பொறுப்பு உள்ளவள் தூங்கும் விசயத்தில் மட்டும் கொஞ்சம் வீக் (நம்மல போல). ஆமாங்க இடியே விழுந்தாலும் அவளை 8 மணிக்கு முன்னால் எழுப்புறது கஷ்டம். கஷ்டம் மட்டும் அல்ல முடியாத காரியமும் தான்.
சந்தியா ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனியில் M.D க்கு P.A வாக வேளை செய்யும் ஒரு 23 வயது பெண்



எத்தனை மணிக்கு எழுந்தாலும் ஆபிஸிற்க்கு சரியாக 9.00 மணிக்கெல்லாம் வந்து விடுவாள்.



எந்த வேளை செய்தாலும் ஒரு நேர்த்தியுடன் செய்து முடிப்பாள். அவளின் செயல்களே கூறும் இவற்றை முடித்தது அவள் என்று..



சந்தியா ஐந்தரை அடி உயரம், மை தீட்டிடாமல் மையல் கொள்ள செய்யும் விழிகள்,புவிதழ் உதடுகள் அதனுள் முத்து போன்ற பற்கள். ஒப்பனைகள் இல்லாமலும் காண்போரை கவர செய்யும் இயற்கையான அழகு. புத்திசாலியான அதே சமயத்தில் கொஞ்சம் அடக்கமான பெண், ஏன் இந்த கொஞ்சம்ன்னா அவளா எந்த வம்புக்கும் போக மட்டாள் ஆனா அதே சமயம் வர வம்ப விட மாட்டாள்.



இனி சரண் சந்தியா வாழ்வில் நடக்கும் விசயங்கள் அவர்களின் வாழ்வை எப்படி மாற்றி அமைக்க போகின்றன என்பதை அடுத்தடுத்த அத்யாயங்களில் தெரிந்து கொள்ளலாம்.
 

Dowlath Haseena

Saha Writer
Team
Messages
12
Reaction score
23
Points
1
அத்தியாயம் - 2

முதல் நாள் வேலை சரணிற்கு அவ்வளவு கடினமாக இருக்கவில்லை. முக்கிய கோப்புக்களை படித்து விட்டு ஸ்டேசனின் தினசரி நடைமுறைகளைதெரிந்து கொண்டான்….

அங்கு சந்தியாவோ அவளின் தோழியை திட்டிக்கொண்டிருந்தாள், அலுவலக பணத்தை தொலைத்து விட்டாள் என்பதற்காக!!….”ஏன்டி இவ்வளவு கேர்லஸ் ஆக இருப்பாயா??... ஒரு ருபாயா…இரண்டு ருபாயா????...பத்து இலட்சம்…….எங்கபோறது??”....சந்தியா.

“எல்லாம் என்னை சொல்லனும்..நானே போயிருக்கனும்….எனக்கு ஒரு இம்பார்டென்ட் மீட்டிங்க் இருக்கு என்று தான் உன்னை அனுப்பினேன்…இப்போ என்ன செய்வது??? சார் வேற நேற்றே கூறினார்….மொத்தமாக பணத்தை எடுத்துக்கொள்ளுங்கள் என்று… நான் தான் பெரிய இவ்வளாட்டம் ஒரே நேரத்தில் அவ்வளவு பணத்தை எடுப்பது நல்லது இல்லை தேவையானபோது எடுத்துக்கொள்ளலாம் என்றேன்”… சந்தியா.

இப்போ சார்க்கு என்ன பதில் சொல்லுவது என்று புலம்பிக்கொண்டிருந்த சந்தியாவிடம், திவ்யா எதுக்கும் ஒரு போலிஸ் கம்ப்ளெண்ட் கொடுத்து விடலாம் என்றாள்…..செய்வதும் செய்து விட்டு இப்போ வந்து வியக்கியானம் பேசுறியா????....என்று கடுக்கடுத்தாள்….

அதை கேட்டதும் முகம் சுருங்கிய திவ்யா நான் ஒன்னும் வேணும் என்று செய்யவில்லை என்றாள்… நானும் நீ வேணும் என்று செய்தாய் என கூறவில்லை, கவனமாக இருந்திருக்க வேண்டும் என்று தான் சொல்லுகிறேன்…சந்தியா. “இப்போ சார் ஏன் என்னை கேட்காமல் கம்பளெண்ட் கொடுத்திங்க என கேட்டா என்ன சொல்றது?”..... சந்தியா..

“அது அப்புறம் யோசித்துக்கொள்ளாம்…இப்போதைக்கு இது தான் பெஸ்ட், பின்னாடி நம் மீது யாரும் சந்தேக பார்வையுடன் பார்க்க மாட்டார்கள்” என்றாள் திவ்யா. சந்தியாவிற்கும் அவள் கூற்று சரியென பட இருவரும் போலிஸ் ஸ்டேசனை நோக்கி பயணப்பட்டனர்…..ஆனால் அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை இது அவளின் வாழ்வில் திருப்புமுனை என்று…..

காவல் நிலையத்தில் நுழைந்த இருவரும் அங்கிருந்த கான்ஸ்டெபிளிடம் சார் ஒரு கம்ப்ளெண்ட் கொடுக்க வேண்டும் என்றனர்…அவர் நிமிர்ந்து ஒரு வினாடி நோக்கி விட்டு உள்ளே சார் இருப்பாங்க போய் கொடுங்க என்று கூறிவிட்டு அவரின் வேலையை தொடர்ந்தார்…

உள்ளே…..நம்ம ஹீரோ சரண் கேஸ் பயிலை படித்துக்கொண்டிருந்தான்… எக்யுஸ்மீ சார்!! “யெஸ்…சொல்லுங்க”…. சரண்.

“சார்! ஆபிஸ் பணம் திருடுப்போய்ருச்சு…”, சந்தியா…எவ்வளவு??...எந்த ஆபிஸ்ல ஒர்க் பண்றிங்க??.... எப்போ திருடுப்போச்சு?.... என அடுக்கடுக்கான கேள்விகளை கேட்க திவ்யாவோ ஒரு காகிதத்தை நீட்டி சார் இதுல எல்லா டிட்டயல்ஸும் இருக்கு என்றாள்…

அதை வாங்கிய சரண், “நான் அவுங்க கிட்ட கேள்விக்கேட்ட நீங்க பதில் சொல்றிங்க”, சரண். “பச்..யாரு சொன்னா என்ன???..உங்களுக்குத் தேவை டிட்டயல்ஸ் தான” என்று சலிப்புடன் பதில் அளித்தாள் சந்தியா…

அதைக்கேட்டு கோபம் கொண்ட சரண் “ஹலோ! இங்க நான் யாரை கேட்கிறேனோ அவுங்கதான் பதில் சொல்லனும்” என்று கூறியவாறு அந்த கம்ப்ளெண்டை படிக்க துவங்கினான்….

“So….பேங்க்ல இருந்து பணம் எடுத்துட்டு வரும்போது திருடு போய்ருக்கு…அப்படித்தானே” என்றான்…சரண்…

அச்சோ இப்போ யாரு இதுக்கு பதில் சொல்றதுனு தெரிலையே என சந்தியாவிடம் திவ்யா முணுமுணுக்க அவளோ திவ்யாவை முறைத்துவிட்டு அவனின் கேள்விக்கு யெஸ் சார் என்று பதிலளித்தாள்…

ம்ம்ம்…”பணம் வித் டிரா பண்ண யாரு போனிங்க?” என திவ்யாவிடம் கேட்க சற்று தயக்கத்துடன் நான் தான் சார் போனேன் என்றாள் திவ்யா. ம்ம்.. உங்க designation என்ன?..நான் அக்கௌண்டென்ட்டாக இருக்கேன்…திவ்யா. நீங்க…?சரண்…. நான் P.A வாக இருக்கேன்… சந்தியா.

ok..யுஸ்வலா நீங்க தான் பணம் எடுக்க போவிங்களா என திவ்யாவிடம் கேட்க இல்லை சார்.. எப்பவும் சந்தியா தான் போவங்க பட் இன்னைக்கு அவ்வுங்களுக்கு ஒரு மீட்டிங்க் இருந்ததுனால நான் போக வேண்டி இருந்தது…..திவ்யா. ஒஹோ…அப்ப இதுக்கு முன்னாடி இப்படி நீங்க போய் எடுத்துட்டு வந்து இருக்கிங்களா…என சரண் கேட்க… ம்ம்.. எடுத்துட்டு வந்து இருக்கேன் சார்…திவ்யா…

ம்ம்ம்…சரி எதுல போனிங்க??...சரண்…. பஸ்ஸில் தான்…திவ்யா… எப்பவும் பஸ்ல தான் பேங்க்கு போவிங்களா என சரண் கேட்க அவனின் கேள்வியில் கடுப்பாகிய சந்தியா என்ன சம்பந்தம் இல்லாத கேள்வியெல்லாம் கேட்குறிங்க என்றாள்.

லுக் மிஸ்…ம்ம்..உங்க பேரு என்ன? என அவளின் பெயரை சரண் கேட்க சந்தியா என்றாள் கடுப்புடன் ஒகே மிஸ் சந்தியா..நான் ஒன்னும் சம்மந்தம் இல்லா கேள்வி கேட்கவில்லை அப்புறம் நான் முன்னடியே சொன்ன மாதிரி நான் யாரை கேட்கிறேனோ அவுங்க தான் பதில் சொல்லனும் என சற்று கோபமாக பதில் அளித்தை கண்டு அவனை முறைத்து கொண்டு நின்றிருந்தாள்… சந்தியா.

பின் அவன் திவ்யாவிடம் திரும்பி நான் கேட்ட கேள்விக்கு பதில்??...அவளோ இல்லை சார் எப்பவும் என்னோட வண்டில தான் போவோம்..நான் போனாலும் சரி அவ போனாலும் சரி பட் இன்றைக்கு வண்டி சர்விஸ்ல விட்டு இருக்கு அதுனால தான் பஸ்ல போனேன்….திவ்யா.

அம்மௌண்ட் பெரியது ஏன் நீங்க ஒரு ஆட்டோ கூட யுஸ் பண்ணாம எதுக்கு பஸ்சில் போனிங்க?....ஒருவேலை உங்க மேல அவ்வளவு நம்பிக்கையா இல்லை பணத்தை மிஸ் பண்ணனும்கிறது தான் உங்க இன்டென்சனா….என்ற கேள்வியை திவ்யாவிடமும் பார்வையை சந்தியாவிடமும் வைத்தான்.



இவர்களின் முதல் சந்திப்பு எவ்வாறு முடியும்?....சரணின் சந்தேக பார்வையில் இருந்து தப்புவாளா சந்தியா அல்லது சந்தேகம் தொடருமா…? என்பதை அடுத்த அத்யாயங்களில் பார்க்கலாம்….

- தொடரும்
 

Dowlath Haseena

Saha Writer
Team
Messages
12
Reaction score
23
Points
1
அத்தியாயம் - 3

அவனின் கேள்வியை சற்றும் எதிர்ப்பார்க்காத சந்தியா அவனை முறைத்துக்கொண்டே திவ்யாவை திட்ட ஆரம்பித்தாள்… “பாருடி உன்னால தான் கண்டவங்ககிட்ட எல்லாம் பேச்சு வாங்க வேண்டியிருக்குது…. M.D கிட்ட சொல்லி இருந்திருநதா அவர் கூட இவ்வளவு மோசமாக பேசி இருக்க மாட்டார்”….. சந்தியா

தனது கனவு குறைவால் நடந்த தவறினால் ஏற்கனவே மன ஊளைச்சலில் இருந்த திவ்யா சரணின் கேள்வியில் நிலைக்குலைந்து ஏதும் பேசமுடியாமல் இருந்தாள்.

“ஏய்……! எங்க வந்து யாரை பார்த்து இப்படி பேசுற என சரணும்” எகிற சந்தியாவோ பொருமை இழந்தவளாய்….. “முதலில் கம்ப்ளைண்ட் கொடுக்க வருபவர்களை கொஞ்சமாவது மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்….பொருளை காணவில்லை என்று வருபவர்கள் மீதே பழியை போடாதிங்க…இதுனால் தான் போலிஸ் என்றாலே மக்கள் பயப்படுறது… இதுல பெரிசா போலிஸ் உங்கள் நண்பனு பேனர்ஸ் வேற…..உங்களுக்கு ஒரு பொருளை கண்டுப்பிடிக்க முடியாதுனு தெரிஞ்சா போதும் உடனே பறிக்கொடுத்தவுங்க மீதே பழியைப் போடுறது….இத்தெல்லாம் ஒரு…..என ஆரம்பித்தவள் என்ன நினைத்தாலோ திவ்யாவிடம் திரும்பி சார் கிட்ட சொல்லிட்டு பணத்தோட பொறுப்பை நானே ஏற்றுக்கொள்கிறேன்டி வாடி போகலாம்” என திவ்யாவை அழைத்துக்கொண்டு விறுட்டென்று சென்று விட்டாள்…

திவ்யாவை அழைத்துக் கொண்டு அலுவலகம் வந்து சேர்ந்து ஒரு மணிநேரமாகியும் அவளின் கோபம் தணியவில்லை….சரண் மட்டும் அவளின் முன் இருந்திருநதால் அவனை பார்வையிலே எரித்து இருப்பாள்… அந்த அளவு கோபத்துடன் சுவற்றில் தெரிந்த கற்பனையான அவனின் நிழல் படத்தை முறைத்துக் கொண்டிருந்தாள் … சந்தியா

பின் நினைவு வந்தவளாய் தன் முன் பாவாமாக அமர்ந்திருந்த திவ்யாவிடம் பேச முயலும் போது…….உன்னாலே…என்னாலும் என் ஜீவன் வாழுதே….சொல்லாமல் உன் சுவாசம் என் மூச்சில் சேருதே…என செல்போன் பாட துவங்க….. பச்…யாரிது இந்த நேரத்துல என கடுப்புடன் போனை பார்த்தவள் முகம் வெளிறத்துவங்கியது…

அவளின் வெளிறிய முகத்தை பார்த்த திவ்யாவிற்கு கால் செய்தது யாரு என்பது புரியத்துவங்க பதற்றம் அடைந்தவளாய் சாராடி என கேட்டாள்… .ம்…எனத்தலையசைத்து காலை அட்டெண்ட் செய்து பேச துவங்கினாள்…

“ஹலோ!” சந்தியா…..”யெஸ் சார்”…

“கம் டூ மை கேபின்” M.D……

“ஒகே சார்” என போனை கட் செய்தாள்…

“என்னடி சொன்னாரு?”….திவ்யா, “ம்…கேபினுக்கு கூப்பிட்டாரு”…. சந்தியா.. ஹோ!”..சரி போய் விசயம் என்னவென்று கேட்டு வா…இப்போது ”பணத்தை பற்றி எதுவும் சொல்லாதே….இரண்டுபேரும் சேர்ந்தே போய் சொல்லாம்” என்றாள் திவ்யா…

திவ்யாவிற்க்கு மனம் உறுத்தலாகவே இருந்தது…..சரணின் அளவிற்க்கு மட்டமாக எண்ணாவிடினும் தங்கள் மீது உள்ள நன்மதிப்பு கண்டிப்பாக குறைந்து விடும் என்பது அவளுக்கு தெரிந்து இருந்தது…

அது மட்டுமின்றி சந்தியா எவ்வாறாயினும் தன்னை பற்றிக் கவலை படாமல் தன்னை காப்பாற்ற முயலுவாள் என்பதும் அதற்காக அந்த பணத்தின் மொத்த பொறுப்பையும் தான் ஏற்க தயங்கமாட்டாள் என்பது அவளுக்கு தெரியும் எனவே சாரிடம் அவள் பேசுவதற்க்கு முன்னே தான் சென்று பேசி விடுவது என முடிவு எடுத்தவளாய் கேபினை நோக்கி சென்றாள்…திவ்யா.

“எக்யுஸ்மீ சார்…மே ஐ கம் ன்”…. சந்தியா…

.எஸ் மா……உட்காரு மா”, M.D.

“தேங்க்ஸ் சார்”, சந்தியா…

“ம்ம்.இன்றைக்கு பேங்க் ல இருந்து பணம் எடுக்கனும்னு நேற்று சொன்னாயே பணம் எடுத்து விட்டாயா…..? M.D.



அவரின் கேள்வியில் திகைத்தவளாய் அதுக்குள்ள இவருக்கு தெரிந்து விட்டதா….? இல்லை சாதாரணமாக தான் கேட்கிறாரா…?? அச்சோ ஒரு வேளை தெரிந்து இருந்தாள் நம்மலே ஒத்துக்கலாம்…

பட் நான் இப்படி ஒத்துக்கிட்டா திவ்யா என்னை கொன்றுவாளே.. அப்பொழுதே சொன்னால் சேர்ந்து தான் சொல்லனும்….முன்னாடியே சொன்ன என்ன பண்ணுவேனு எனக்கே தெரியாது என்று…இப்போ என்ன பண்றது என தனக்கு தானே மனதிற்குள் பேசிக்கொண்டு இருந்தவளை கண்டவர் சொடக்கு போட்டு அவளை நினைவுக்கு கொண்டு வந்தார்…

“என்ன? சந்தியா நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லாம என்ன யோசனை?” என சற்று கோபமாக கேட்டார்… அதிகமாக கோபம் கொள்ளாதவரின் கோபத்தை கண்டு சற்று திணறியவளாய் “அ..அது வந்து சார்”…திக்கி திணறியவளிடம்… எனக்கு எல்லாம் தெரியும் சந்தியா என்று கூறி முறைத்தார்…

சந்தியாவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை…என்னதான் அவளே அவரிடம் கூறிவிடலாம் என எண்ணிக்கொண்டிருந்தாலும் அவரின் நேரடியான கூற்றில் என்ன பதில் கூறுவது தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தாள்.



சந்தியாவின் M.D. என்ன சொல்ல போகிறார்… அவரும் சரணைப் போல் சந்தியாவை தவறாக எண்ணிக் கொள்வாறோ….. என்பதை அடுத்த அத்யாயத்தில் தெரிந்துக்கொள்ளலாம்.

- தொடரும்
 

Dowlath Haseena

Saha Writer
Team
Messages
12
Reaction score
23
Points
1
ஹலோ மக்களே!

எல்லாரும் எப்படி இருக்கிங்க? கதை எப்படி இருக்குனு கமெண்ட் பண்ணா எழுதற எனக்கும் சரி நம்ம கதை பரவாயில்லமா இருக்கு போல அப்படினு ஒரு பீல் வரும்..நீங்க எதுவுமே சொல்லாம இருந்தா கதை நல்லா இல்லயோ உங்களுக்கு பிடிக்கலையோனு தோணுது அதுனால எபிசோட் அப்லோட் பண்ண இன்ட்ரஸ்ட் குறையிது..சோ உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்.
 

Dowlath Haseena

Saha Writer
Team
Messages
12
Reaction score
23
Points
1
அத்தியாயம் - 4

சந்தியா பேசமுடியமால் தவித்துக்கொண்டிருக்க திவ்யாவை கூப்பிடு என்றார் M.D கிருஷ்ணன். திவ்யாவிற்க்கு சற்று பதற்றமாக இருப்பினும் எப்படியேனும் சொல்லித்தானாக வேண்டும்…நான் செய்த தப்பிற்க்கு நானே பொறுப்பேற்க வேண்டும் என நினைத்தவளாய் கிருஷ்ணனின் அறைக்கு சென்றாள்.

“திவ்யா உள்ளே வர கிருஷ்ணன் உங்க ரெண்டு பேர் மீதும் எவ்வளவு நம்பிக்கை வைத்து இருந்தேன்”…..இருவரும் மனதில் அச்சோ இவரும் நம்மல அந்த காட்சில்லா(சரண்) மாதிரி நினைத்துக் கொண்டாரா என பதறிய படி சார் நாங்க பணத்தை…….என முடிப்பதற்க்குள் நீங்க பணத்தை “என்ன பண்ணீங்கனுதான் தெரியுமே”…. –கிருஷ்ணன்.

“அது இல்ல சார்”-.திவ்யா. “நீ பேசாத…கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம இவ்வளவு பெரிய அம்மௌண்ட்டை தொலைச்சுட்டு வந்து இருக்க”, கிருஷ்ணன். அவர் திட்டுவதை விட அவர் தங்களை திருடியதாக எண்ணி விடவில்லை என்பதே பெரிய ஆறுதலாக இருந்தது இருவருக்கும்…

“சரி இப்போ பணத்துக்கு யாரு பொறுப்பேற்க போறிங்க”, கிருஷ்ணன். இருவரும் ஒரே நேரத்தில் நானே ஏத்துக்கிறேன் என கூற கிருஷ்ணன் சற்று திகைப்புடன் “என்ன உங்க இரண்டு பேருக்கும் அம்மௌண்ட் எவ்வளவு என்பது நினைவில் இருக்கா இல்லையா….? கொஞ்சம் நஞ்சம் இல்ல முழுசா பத்து இலட்சம்” என்றார்.

சந்தியா உடனே “தெரியும் சார்..இருந்தாலும் நாங்க செஞ்ச தப்ப நாங்க தான சரி செஞ்சு ஆகணும்”

“ம்ம் அது சரி…அப்போ காசு கொடுக்க நீ ரெடி அப்படித்தானே!”, கிருஷ்ணன்

“ஆமா சார்…”.சந்தியா….

“ஆனா வாங்க நான் ரெடி இல்லையே!…எனக்கு உங்க காசு எதுவும் வேண்டாம்…இனிமேல் ஒழுங்கா வேலை பாருங்க அது போதும்..இனி காசு விசியத்துல ரொம்ப கேர்புல்லா இருங்க” கிருஷ்ணன்.





“சார் அப்போ அ….அம்மௌண்ட்?” என தயங்கியவாறே திவ்யா கேட்க “அதான் கிடைச்சிருச்சே!!” என இன்ப அதிர்ச்சி தந்தார் கிருஷ்ணன்

என்ன….??இருவரும் அதிர்ந்தவாறு கேட்க ஆமா…”ஒருத்தர் திவ்யா போன அதே பஸ்ல இருந்தவர் அந்த பணப்பையில இருந்த நம்ப ஆபிஸ் அட்ரஸ் பாத்துட்டு கொண்டு வந்து கொடுத்துட்டு போய்ருக்காரு” கிருஷ்ணன்

இருவருக்கும் உயிர் திரும்பியதாக தோன்ற சந்தியாவோ யார் சார் அவரு என கேட்டாள்… அது எதுக்குமா?..-கிருஷ்ணன். “இல்ல சார் ஒரு தேங்க்ஸ் சொல்ல தான்”, திவ்யா.

“அவரு யாருனுலாம் டிடயல்ஸ் சொல்லல அவருக்கு ஏதோ முக்கியமான வேலை இருக்குனு போய்டாரு அவரு பேருக்கூட ஏதோ சொன்னாரு… மறந்துட்டேன்…. தேங்க்ஸ் சொல்றது எல்லாம் இருக்கட்டும் இதுவே பர்ஸ்ட் அண்ட் லாஸ்டாக இருக்கட்டும்” என இருவரையும் மீண்டும் ஒரு முறை எச்சரித்து அனுப்பினார். கிருஷ்ணன்.

இரவு சரண் வீட்டில்.,

“என்னடா எதையோ யோசிட்டே இருக்க?”- ஆதி,அது வந்து மச்சி என நகத்தை கடித்தவாற சிறிது வெட்கத்துடன்…. ஒ என சரண் பேச ஆரம்பிக்கும் முன்….. “யே.கருமம் இது என்னடா புதுசா வெட்கம்லாம் படுற..பாக்க முடில…என்னடா யோசிக்கறனு கேட்டதுக்கு இதைலாம் பார்க்கனுமா” என்றான் ஆதி.

“ஆமா….காலை நல்லா தான ஸ்டேசன் போன இப்போ எங்கயாவது அடி பற்றுச்சா” என சரணின் தலையை தொட வந்தவனின் கைகளை இதயத்தின் அருகில் வைத்து “தலைலாம் எதுவும் ஆகல மச்சி ஆனா இங்க தான் ஏதோ பண்ணுது அவளை பார்த்துல இருந்து” என்றான் சரண்.

வாட்..?என்ற ஆதியிடம் “ஆமாடா! அவளை பார்த்ததிலிருந்து ஏதோ ஹார்ட்க்கு டேரக்டா கரண்ட் சாக் கொடுத்தா எப்படி இருக்குமோ அப்படி இருக்கு மச்சி இது என்ன உணர்வுனே சொல்ல தெரியலைடா….ஆனா இதுவும் புதுசா செம பீல்லா இருக்குடா”, சரண்



“என்ன உனக்கு ஒரு பொண்ண புடிச்சு இருக்கா? அவுங்கல எங்க பார்த்த? நீ இப்படி ஒரு பொண்ண பத்தி சொல்றது எனக்கு கனவாக இருக்குமோனு ஒரு சந்தேகம் இருக்கு ஒரு நிமிடம் கிள்ளி பார்த்துக்கிறேன்” என்றவனை ஒங்கி ஒரு அறை அறைந்து கனவு இல்ல மச்சி என்றான்…சரண்

ஆதி கையை கன்னத்தில் வைத்தவாறு ஏன்டா….என பாவாமாக பார்த்தான்…உன் டவுட்டை கிளியரை பண்ணத்தான்டா சிரித்துக்கொண்டே கூறிய சரணிடம் அது சரி நான் கேட்ட கேள்விக்கு பதில் எங்க?-ஆதி

அவளை இன்னைக்கு தான்டா முதல் தடவையா பார்த்தேன்…எப்படி இருந்தா தெரியுமாடா என்றவனின் மனதில் சந்தியாவின் முகம் தோன்ற அவன் உதட்டில் புன்னகை அரும்பியது…..

சந்தியாவின் நினைவில் இருந்த சரணை ஆதியின் உலுக்கல் மூலம் நினைவு வந்தவனை என்னடா டிரிம்க்கு போய்டியா?...-ஆதி...ஈஈஈ…ஆமா மச்சி என்றான் சரண் அசடு வழிந்த முகத்துடன்.

அது சரி பார்த்த முதல் நாள்ளே இப்படி ஆகிட்ட…இனி போக போக மெண்டல் ஆகிருவ போல…ஆதி

அவனை முறைத்த சரணை கண்டுக்கொள்ளாமல் “சரி கதையை சொல்லு பர்ஸ்ட்” என்றான் ஆதி.

அவளை ஸ்டேசன்ல தான்டா பார்த்தேன், பேரு சந்தியா…அவளை பர்ஸ்ட் பார்த்ததுமே மனசுல மின்னல் வெட்டுன மாதிரி இருந்துச்சு…சும்மா தேவதை மாதிரி இருந்தாடா…அவகிட்ட ஏதோ ஒரு பதற்ற்ம் அவமுகத்துல அவ்வளவு டென்சன்”, சரண்.

ஆதி அடப்பாவி போலிஸ் ஸ்டேசன் வரவுங்க சிரிச்சுட்டா வருவாங்க!!…

“அது இல்லடா அவ்வுளோ டென்சன் நிறைந்த முகமும் அவளை அவ்வளவு அழகா காட்டுச்சு….ஆனா அது எல்லாத்தையும் விட ஏதோ ஒன்னு அவகிட்ட இருக்குடா….அவ கவனத்தை நான் ஈர்க்கனும் அப்படிங்கறது மட்டும் தான் அப்போ தோனுச்சு”-சரண்

அதுசரி…சார் அப்படி என்ன பண்ணிங்க அவங்க கவனத்தை கவர என ஆதி கேட்க நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்லி முடித்தான் சரண்…

அதைக் கேட்ட ஆதியோ தலையில் அடித்துக்கொள்ளாத குறையாக என்னடா ரோபோக்குள்ளையும் ஒரு ரோமியோ இருக்குனு பார்த்தா இப்படி பண்ணிவச்சுட்டு வந்து இருக்க இந்த லட்சணத்தில் காதல் வேற…

அவுங்க உன் மேல கொலை வெறில இருப்பாங்க….உனக்குதான் பொண்ணுங்ககிட்ட ஒலுங்கா பேச கூட வராதே….கம்முனு எனக்கு போன் பண்ணிற்க வேண்டியதுதானா……?அத விட்டுட்டு இப்படி சொதப்பி வச்சுட்டு வந்து இருக்க….

தன் நண்பன் முதல் முதலாய் ஒரு பெண் மீது காதல் வயப்பட்ட பெண்ணிடம் தன் மதிப்பை குறைத்துக்கொண்டுள்ளான் என்ற ஆதங்கத்துடன் கேட்டான் ஆதி..

அதற்கு சற்றும் அலட்டிக்கொள்ளாமல் சரண், நான் நார்மல்லா எல்லார்கிட்டையும் நடந்து கொள்கிற மாதிரி கம்ப்ளெண்ட் வாங்கி பைல் பண்ணி வச்சுட்டு அனுப்பி இருந்தா அவ என்ன பத்தி யோசிச்சிருக்க மாட்டாளே ஆனா இப்போ திட்டிட்டாவது என்ன பத்தி யோசிப்பாளே என்று கூறிய சரணை வித்யாசமாக பார்த்தான் ஆதி…

டேய் நீ நினைக்கற மாதிரி இது பிலிம் இல்லை மோதலில் ஆரம்பிக்கறது எல்லாம் காதல்ல முடியும் அப்படினு நினைக்கறதுக்கு….ரியல் லைப் ஒரு வேளை அவங்க உன்ன பத்தி யோசிக்காம இருந்தா..இல்ல உன் மேல தப்பான ஒரு அபிப்ராயம் வச்சு இருந்தா என்ன பண்ணுவ…..?ஆதி

ஏன்டா நானே இப்போ தான் முதல் முதலா ஒரு பொண்ண பார்த்து லவ் பண்ண ஆரம்பிச்சு இருக்கேன்…இப்படி முதலையே அபசகுணமாவ பேசற….-சரண்

அது இல்லடா ரியாலிட்டிய புரிஞ்சுக்க….சரி நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு…-ஆதி

சரணிற்க்கும் ஆதி சொல்வதும் சரியாக பட்டது அவன் சொன்னவாறே நடந்தால் என்ன செய்வது என்று எண்ணும் போதே கலக்கமடைந்தான்….

சந்தியா சரணை பற்றி நினைப்பாளா….? இல்லை ஆதி கூறியது போல் சரணை பற்றி தவறாக எண்ணிகொள்வாளா…? அடுத்த அத்யாயத்தில் சந்திப்போம்…
 

Dowlath Haseena

Saha Writer
Team
Messages
12
Reaction score
23
Points
1
அத்தியாயம் - 5

சரண் எண்ணியதைப் போலவே சந்தியாவும் அவளின் அறையில் தூங்காமல் மெத்தை மீது அமர்ந்து தனியாக புலம்பிக்கொண்டிருந்தாள்..உன்னிப்பாக கவனித்தாள் புலம்பல் என்பதை விட திட்டிக்கொண்டிருந்தாள் என்பதே பொருத்தமாக இருக்கும்..

அவன் DSPனா என்னவேனா பேசுவானா…..அதுவும் இந்த சந்தியாவை பார்த்து இப்படி ஒரு கேள்வியை கேட்டுவிட்டான்…. சே…எல்லாம் இந்த திவ்யாவால…அந்த லூசு பேச்ச கேட்டு போய்ருக்க கூடாது… எல்லாம் போலிஸ் திமிரு….எல்லா போலிஸ்களும் இப்படித்தான் இருப்பாங்க போல…அதிகாரம் நம்ம கிட்ட இருக்கு…நம்மல யாரு என்ன சொல்லிர முடியும்கிற எண்ணம்…இனி இவன் என் லைப்லயே பார்க்க கூடாது…நம்ம எப்படி பார்ப்போம் இனி கம்ப்ளெண்ட்க்குனு போனாதானா பார்ப்பதுக்கு…என்ற எண்ணத்துடன் இருந்தவளுக்கு அப்போது தெரியவில்லை வாழ்வு முழுவதும் அவன் முகத்தை தான் பார்க்க போகிறாள்…அவனை காணாமால் இருக்க முடியாமல் தவிக்க போகிறாள் என்று

பார்க்கவே கூடாது என்று நினைத்திருந்திவனின் உடனே வாழ்க்கை முழுவதும் பயணம் செய்ய போகிறாள் என்பதை அறியாமல் நிம்மதியாக உறங்க ஆரம்பித்தாள்.

அங்கு சரண் இவளிடம் எப்படி பேசுவது?....எடுத்தவுடன் காதலை சொன்னால் எப்படி எடுத்துக்கொள்வாள் அதுவும் அவ்வாறு நடந்துக் கொண்டு….ஒரு வேளை ஆதி சொல்வதை போல் தான் நடந்து விடுமோ……!!அப்படி எதுவும் நடந்துவிட கூடாது என்று புலம்பியவாறே தூங்கி போனான்.

இரவு வெகு நேரம் கழித்து துயில் கொண்டவன் மறுநாள் காலை தாமதமாக எழுந்தான்…அச்சோ இவ்ளோ நேரம் தூங்கி விட்டேனா என வேக வேகமாக குளியலறை சென்று 15 நிமிடங்களில் தயாராகி வந்தவனுக்கு சூடாக இட்லி, தோசை, சாம்பார், தேங்காய் சட்னி என வரவேற்ப்பு அளிக்க என்ன இலட்சுமி அம்மா முதல் நாளே இவ்வளவு செஞ்சுட்டிங்களா என்றான் சரண்.(இலட்சுமி அம்மா சரணினின் வீட்டில் சமையல் வேலைக்கு என்று சேர்ந்திருக்கிறார். இவ்வளவு நாள் அவனே சமைத்துக் கொண்டிருந்தான் இனி நேரம் இல்லாததால் இலட்சுமி அம்மாவை வேலைக்கு அமர்த்தினான்..,ஆமாங்க சரணிற்க்கு ரொம்ப நல்லா சமைக்க தெரியும்….ம்ம்…சந்தியா லக்கி கேள்…)

நீங்க மதியம் எப்போ சாப்பிட வருவிங்கனு தெரியவில்லை அதான் தம்பி இப்போ கொஞ்சம் நல்லா சாப்பிட்டு போவிங்கனுதான்…-இலட்சுமி அம்மா ஏதோ காசு கொடுக்கறாங்கனு கடனுக்கு வேலை செய்யாம அக்கறையா இருக்காங்கனு என மனதினுள் அவரை மெச்சிக்கொண்டான் சரண், மதியம் நான் ஸடேசன்லயே சாப்பிட்டுக்குறேன் காலைலயும் நைட்டுக்கும் சமைச்சா போதும் என்றவாறு சாப்பிட்டு கிளம்பினான்.

காலையில் வழக்கத்திற்க்கு மாறாக சீக்கிரமாக ஏழு மணிக்கு எல்லாம் எழுந்து விட்டாள்…(சீக்கரம்னு சொன்னதும் நான் கூட 5 மணிக்கு எழுந்துவிட்டாள் என நினைத்தேன்…அடச்சே இதுதான் சீக்கிரமா??? நம்ம சந்தியாவிற்க்கு இது தான் சீக்கரம்)….என்ன இவ்வளவு சீக்கரமாக எழுந்து விட்டேன்…ஒன் ஹவர் தூக்கம் போச்சே…எல்லாம் அந்த காட்சிலானால தான், அவன பார்த்ததிலிருந்து எதுமே உருப்படியா நடக்க மாட்டிங்குது., என சம்பந்தமே இல்லாமல் சரணை திட்டிக்கொண்டிருந்தாள் (அடஎன்னமா நீ எதுக்கெடுத்தாலும் அவனையே குத்தம் சொல்ற)

சீக்கிரமாக ரெடியாகி வந்தவளை அதிசயமாக பார்த்த அவளின் தாயிடம் என்னம்மா ஏதோ வேற்றுகிரகவாசி போல் பார்க்கிற உன் பிள்ளை தான்மா….-சந்தியா அதான்டி எனக்கும் சந்தேகமாக இருக்கு…-பார்வதி

ம்..அம்மா…என்ற முறைப்புடன் பார்த்தவளை எதுக்கு முறைகிற இடியே விழுந்தாலும் எந்திருக்க மாட்ட அவ்வளவு ஏன் பப்ளிக் எக்ஸாம் அப்போவே 8 மணிக்கு எந்திருச்ச ஆளுதானடி நீ… பார்வதி

சரி விடு ஏதோ தூக்கம் வரல அதான் இதுக்கு போய்….சரி..சரி என்ன டிபன் இன்னைக்காவது நல்ல சாப்பிட்டு ஆபிஸ்க்கு போகிறேன் என்றவாறு பூரி உருளைகிழங்கை ரசித்து உண்ண தொடங்கினாள்.

காலை 8.45 மணிக்கு அலுவலகம் சென்றவளை அலுவலகமே வித்யாசமாக பார்க்க கடுப்பாகி போனாள்…திவ்யா என்ன அதி….என ஆரம்பிக்க ஏய் ஒரு நாளைக்கு கொஞ்சம் முன்னாடி வந்தா எல்லாரும் இப்படி பாக்குறிங்க…உங்களுக்கு என்னதான் பிரச்சனை போங்க போய் உங்க வேளையை பாருங்க என்றவாறு தன் கேபினுக்கு சென்று விட்டாள்

தன் அறைக்கு சென்றவள் ச்சே ஏதோ ஒரு நாளைக்கு கொஞ்சம் சீக்கரமா வந்தது உலக மாகா அதிசயம் மாதிரி பார்க்குறாங்க…அம்மாவும் இப்ப்டி தான் பண்ணாங்க எல்லாம் அந்த காட்சிலா நால அவன் மட்டும் என் கனவுல வராம இருந்திருந்தா நானும் நிம்மதியா இருந்திருப்பேன் என மீண்டும் அவனின் மீதே கோபம் கொண்டாள்

அலுவலக வேலையில் முழ்கி போய் இருந்தவளுக்கு M.D. கிருஷ்ணன் அழைப்பு விடுத்தார்…அழைப்பு ஏற்றுவள் சொல்லுங்க சார்…..கம் டூ மை கேபின் சரி என்று அழைப்பை துண்டித்து அவரின் கேபினிக்கு சென்றாள்.

மே ஐ கம் இன் சார்…? யெஸ் கம் இன்-M.D. சொல்லுங்க சார்…-சந்தியா, இன்னைக்கு ஏதாவது முக்கியமான கிளைண்ட் மீட்டிங்க இருக்காமா..?- கிருஷ்ணன். இல்லை சார்..ஏன் சார் எதாவது அர்ஜெண்ட் ஒர்க் இருக்கா சார்..-சந்தியா

ஒர்க் எதுவும் இல்லை பட் இம்பார்ட்ண்ட் பர்சனை மீட் பண்ணனும்..நீயும் வரனும்..- கிருஷ்ணன் …ஹோ…எப்போ சார்…சந்தியா…இன்னைக்கு லன்ச்சுக்கு மீட் பண்ணலாம்னு சொல்லிருக்கேன்..கிருஷ்ணன்…நியூ கிளைண்டா சார்…?சந்தியா

கிளைண்ட்லாம் இல்லமா…இது அன்அபிசியல் மீட்டிங்க்தான்மா… அவுங்களை உனக்கு அறிமுக படுத்தணும் தோணுச்சு…உனக்கு விருப்பம்னா வாம்மா…மீட்டிங்க் நம்ம கிளைண்ட்ஸ் வழக்கமா மீட் பண்ற அதே ரெஸ்டாரண்ட் தான்மா என்றார்.

சிறிது நேரம் யோசனை செய்து சார் நான் திவ்யாவையும் கூப்பிட்டு வரட்டுமா சார் என்றாள் சந்தியா.அதானே பார்த்தேன் நீயாவது திவ்யா இல்லாமல் வெளியே போறதாவது சரிமா திவ்யாவையும் கூப்பிட்டுவா என்றார்…-கிருஷ்ணன்

கிருஷ்ணனை பற்றி கூற வேண்டுமென்றால் நம்பர் 1 பிஸ்னஸ் மேன் அதே நேரத்தில் அன்பான கணவர். அவர் மனைவி லதா கணவனே கண்கண்ட தெய்வம் என்பது போல் கணவனின் பேச்சை மீறாத அமைதியான பெண்.இத்தம்பதியர்க்கு செல்வங்களில் ஏதும் குறையில்லை மக்கட் செல்வத்தை தவிர….

கிருஷ்ணனிற்கு சந்தியா மீது தனி பாசம் உண்டு..அலுவலகத்தை தாண்டி இவர்களின் குடும்பத்திலும் ஒர் ஆளாக இருப்பாள்.லதாவிற்கு சந்தியா என்றாள் உயிர்…வேலை அதிகமாக இருப்பதால் அடிக்கடி பார்க்க முடியாது என்ற போதினும் பண்டிகைகள் அன்று கண்டிப்பாக லதாவிற்க்கு முன் ஆஜராக வேண்டியது சந்தியாவின் மிக முக்கியமான கடமைகளில் ஒன்று. என்னதான் சந்தியாவிற்கு லதாவிடமும், கிருஷ்ணனிடமும் தனிப்பட்ட செல்வாக்கு இருந்த போதிலும் அதை அவள் அட்வாண்டேஜ் ஆக எடுத்துக்கொண்டதில்லை.

மூவரும் மதியம் ஒரு மணிக்கு அவர்கள் வழக்கமாக கிளைண்ட் சந்திக்கும் ரெஸ்டாரண்டிற்க்கு சென்றனர், அங்கு சந்தியாவோ தான் யாரை வாழ்வில் சந்திக்கவே கூடாதேன்று நினைத்து கொண்டு இருந்தாலே சாத் சாத் அவனே வீற்றிருக்க் அவனைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்தாள் சந்தியா.

சந்தியாவுடன் வேறு ஓருவரும் சற்று அதிர்ச்சியடைந்தார்…யார் அவர் எதற்காக அதிர்ச்சியடைந்தார் என்பதை அடுத்த அத்யாயத்தில் பார்ப்போம்
 

Dowlath Haseena

Saha Writer
Team
Messages
12
Reaction score
23
Points
1
அத்தியாயம் - 6

சந்தியாவும் திவ்யாவும் சரணை பார்த்து தயங்கியபடி நிற்க சரணை நோக்கி சென்ற கிருஷ்ணன் எப்படி இருக்க சரண் என்று கேட்டுக்கொண்டே சற்று பார்வையை திருப்ப அருகில் இருந்த ஆதியை பார்த்து ஆச்சர்யத்துடன் நீ இங்கு எப்படி பா?..சரணை உனக்கு தெரியுமா என்று கேட்டுக்கொண்டு இருக்கும் போதே சரண், அங்கிள் இது என் பிரண்ட் ஆதி நான் கூட சொல்லி இருக்கேன்ல பட் இவனை நீங்க பார்த்தது இல்லையே அப்பறம் எப்படி தெரியும்? என்றான்.

நீ சொல்லுவையே அந்த பையன் தானா இது? – கிருஷ்ணன். ஆமா அங்கிள்…பட் இவனை உங்களுக்கு எப்போதிலிருந்து தெரியும் என சரண் கேட்க நேற்றிலிருந்து தான் என்று பதிலுரைத்தார் .கிருஷ்ணன். நேற்றிலிருந்தா??...-சரண்.ஆமா..நேற்று பேங்க்ல இருந்து அம்மௌண்ட் என் ஆபிஸ் ஸ்டாப் எடுத்துட்டு வரும் போது மிஸ் பண்ணிட்டாங்க..அதை இவர் தான் பார்த்து எடுத்து கொண்டு வந்து கொடுத்தார்…..-கிருஷ்ணன்

சரண் ஆதியிடம் திரும்பி நீ கார்லதான போன நேற்று? அப்புறம் எப்படி என கேட்க நேத்து ஒரு கிளைண்டை மீட் பண்ண போகும் போது கார் ரிப்பேர் ஆயிடுச்சு, பக்கத்துல இருந்த ஒரு மெக்கானிக் சாப்ல விட்டுட்டு ஆட்டோக்கு வெயிட் பண்ணிட்டு இருந்தேன் பட் கிடைக்கல..அப்போ கரக்டா பஸ்ஸும் வந்துச்சு அதுல ஏறிட்டேன்…சீட்ல உட்கார்ந்த பிறகுதான் கவனித்தேன் என் காலுக்கு கீழே ஒரு லெதர் பேக் இருந்துச்சு…. எடுத்து பார்த்தா பணம் இருந்துச்சு கூடவே பேங்க் ரெசிப்டும், பாஸ் புக்கும் இருந்துச்சு….அப்போதான் தெரிந்தது இவுங்க கம்பெனி அம்மொண்ட்னு….பஸ்லயே அவுங்க இருக்காங்களானு கேட்டு கொடுக்கலாம்னு நினைச்சேன் அப்புறம் அவுங்க உண்மைய சொல்லுவங்கனு என்ன கெரண்டி அதான் கிளைட்ட மீட் பண்ணிட்டு பாஸ் புக்குல இருக்க அட்ரஸ் வச்சு சார்கிட்ட போய் கொடுத்துட்டேன் என்றான். ஆதி.

ரொம்ப தேங்க்ஸ் பா என கிருஷ்ண்ன் கூற எத்தனை தடவை சொல்லுவிங்க சார் பாரவால்லை நமக்கு சொந்தம் இல்லாத பொருள் மீது நம்ப எப்பவும் ஆசை படக்கூடாது. அதான் பொருளுக்கு சொந்தமானவுங்க கிட்டயே ஒப்படைச்சுட்டேன்…-ஆதி

சந்தியாவை கவனித்தவாறே ஹோ அப்போ அங்கிள் கம்பெனில தன் வொர்க் பண்றிங்களோ மேடம்…இதை எப்படி கவனிக்காம போனேன்,,,கம்ப்ளேண்ட்ல கம்பெனி நேம் கொடுத்து இருப்பாளே(சார் தான் அவுங்கள பார்த்ததும் பிளாட் ஆகிடிங்களே பின்ன எப்படி மத்ததை கவனிப்பீங்க என்று கேளி செய்த மனதை ஒரு மீதி மீதித்து அடக்கினான்) அப்போ அம்மௌண்ட் கிடைச்சுருச்சா இந்த ஆதி பக்கி ஒரு வார்த்தையும் இத பற்றி எங்கிட்ட சொல்லல இருக்கு அவனுக்கு இன்னைக்கு என்று மனதில் கருவிக்கொண்டான்(அப்படியே அவன் சொல்லி இருந்தாலும் நீங்க கேட்டு இருப்பிங்க, கனவு உலகத்துலயே இருந்துட்டு இப்போ அந்த அப்பாவி ஜீவனை குறை சொல்றது)

அப்போதுதான் கவனித்தனர் கிருஷ்ணனும் சரணும், திவ்யா மற்றும் சந்தியாவும் சற்று தள்ளி தயங்கிய படியே நிற்பதை….அவர்களை பார்த்து கிருஷ்ணன் என்னம்மா அங்கயே நிற்கிறிங்க? வாங்க என்று அழைக்க சரணின் கண்களோ இமை மூடாமல் சந்தியாவையே பார்ப்பதை கண்ட ஆதி மெதுவாக சரணின் காதருகில் சென்று இதுதான் அந்த பொண்ணா? என்றான் ஆதி சரணிடமிருந்து பதில் இல்லாமல் போகவே சற்று தொண்டையை செரும அதில் சுய நினைவு வந்தவனை நோக்கி, மச்சி பப்ளிக் நீ ஒரு DSP அந்த கெத்தை விற்றாத…..அப்புறம் வழியுது துடைச்சுக்கோ என்றவாறு ஒரு கர்ச்சிப்பை நீட்டினான் ஆதி. அவனை முறைப்பதை பார்த்து தோளை குலிக்கியவாறு நல்லதுக்கே காலம் இல்ல உன் நல்லதுக்கு தான்பா சொன்னேன் அதுக்கு ஏன் முறைக்கிறாய்? ஆதி

கிருஷ்ணன் அழைத்ததை தொடர்ந்து அவர்களும் வேறு வழியின்றி அவர்களுடன் சேர்ந்து கொண்டனர்.அதன் பிறகே இவ்வளவு நேரமும் தாங்கள் நிற்பதை உணர்ந்து அவர்கள் புக் செய்த டேபிள்க்கு சென்று அமர்ந்தனர்…

சந்தியாவிற்க்கு எதிரில் சரணும் திவ்யாவிற்க்கு எதிரில் ஆதியும் அமர கிருஷ்ண்னோ ஆதிக்கு வலப்புறமாக அமர்ந்தார். சரண் தன்னை பார்ப்பதை உண்ர்ந்த சந்தியா அவனை முறைக்க அவளை கண்டுக்கொள்ளாமல் கிருஷ்ண்னிடம் திரும்பி அங்கிள் இவுங்க யாருனே சொல்லையே என்றான்.(பாவம் சாருக்கு யாருனே தெரியாது பாரு)

இவுங்க சந்தியா அண்ட் திவ்யா என்றதும் மரியாதைக்காக ஹலோ என்றனர் இருவரும்(இவுங்களும் தெரியாத மாதிரியே காட்டிக்கிறாங்களாமா..)இவனும் பதிலுக்கு ஹலோ என கூற ஆதியோ சரணிடம் ஆமா நீங்க ரெண்டு பேரும் முதல் தடவை சந்தித்து கொள்கிறிங்க பாருங்க….சப்பா என்னா நடிப்புடா!! நீதான் நடிக்கிறாய் என்று பார்த்தால் அவுங்க உன்னையே தூக்கி சாப்பிட்டுவிடுவாங்க போலயே நடிப்பில் என்ற ஆதியை கையை மடக்கி முட்டியால் யாரும் கவனிக்காமல் அவனின் வயிற்றில் ஒரு குத்து விட்டான் சரண். வலியோடு அவனை பார்க்க இனி வாய தொறப்ப என அவனுக்கு மட்டும் கேட்கும் படி கூற அவனோ அச்சோ வேணாம்டா நான் வாயே தொறக்கவில்லை நீங்க கண்டினியூ பண்ணுங்க என்றான் ஆதி.(பாவம்டா நீ)

இவுங்க ரெண்டு பேரும் நம்ம ஆபிஸ்ல தான் ஒர்க் பண்றாங்க,ஆனா இவுங்க வெறும் ஸ்டாப்ஸ் மட்டும் இல்ல அதுக்கும் மேல்..சந்தியானா உங்க ஆன்டிக்கு உயிர். சுருக்கமா சொல்லனும்னா எங்க பொண்ணு மாதிரி என்று கூற சந்தியாவோ எல்லையில்லா சந்தோசம் கொண்டாள், அவர்கள் தன்னை அவர்களின் பெண் போல் கவனித்துக்கொண்டாலும் அடுத்தவர்களின் முன்னும் தன்னை அவரிகளின் பெண்ணை போன்று என கூற அவளின் மனம் அதை கேட்டு பூரித்தது…அதை வெளிக்காட்டாமல் சிறு கர்வத்தோடு சரணை நோக்கினாள்.அவனும் அவளைதான் பார்த்துக் கொண்டிருந்தான்…இருவரின் விழிகளும் நொடிக்கும் குறைவான நேரத்தில் சந்தித்துக் கொண்டன.

திவ்யாவிற்க்கு ஆதி தான் அந்த பணத்தை கொண்டு வந்து கொடுத்தான் என்று அறிந்ததும் அவனின் மீது இனம் புரியாத மரியாதை கலந்த அன்பு பிறந்தது.முதலில் கிருஷ்ணன் ஒருவர் பணத்தை கொண்டு வந்து ஒப்படைத்தார் என கூறிய உடனே அந்த முகமறியா நபர் மீது மரியாதைக்கொண்டாள். இப்போது நேரில் பார்த்ததும் மரியாதையுடன் அன்பும் கலந்து விட்டது.ஆதியும் சரணின் அளவிற்க்கு இல்லாது இருந்தாலும் அவனை கடக்கும் பெண்கள் ஒரு நிமிடம் திரும்பி பார்க்கும் அளவிற்கு ஆண்களுக்கே உரித்தான கம்பீரத்தோடு இருப்பான். (என்ன இருந்தாலும் நீ செக்கண்ட் ஹீரோ தான்பா அதான் உன்ன சரணை விட கொஞ்சம் கம்மியா சொன்னேன்.. ஹீரோவை விட்டு கொடுக்க கூடாதுல அதான்….இந்த அன்பு காதலில் முடியுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்)

திவ்யா ஆதியிடம் தேங்க்ஸ் சார் என்றாள்…எதுக்கு?…-ஆதி..நீங்க நேற்று பணத்தை கொண்டு வந்து கொடுத்ததுக்கு….-திவ்யா.. அதுக்கு தான் உங்க சார் நிறைய முறை நேற்றே நன்றி சொல்லிட்டறே…-ஆதி., இல்ல சார் அந்த பேக்கை மிஸ் பண்ணது நான் தான்….-திவ்யா. ஆதியோ இட்ஸ் ஒகே இனி கேர்ப்புள்ளா இருங்க. அண்ட் சார்லாம் கூப்பிடதிங்க ஜெஸ்ட் கால் மீ ஆதி என்றான்.

பின் தங்களுக்கு பிடித்ததை ஆர்டர் செய்து காத்திருந்தனர்… இதற்க்கு இடையில் இரு ஜோடி கண்கள் அடிக்கடி சந்தித்து மீண்டுக் கொள்ள அதை சந்தியா கவனித்தாலோ இல்லையோ போலிஸ் கண்கள் கவனித்து விட்டன.

அவனிடம் பிறகு கேட்டுக்கொள்ளலாம் என்று எண்ணிய சரண் கிருஷ்ணனிடம் பார்வையை திருப்பி அங்கிள் இந்த சண்டே விட்டுக்கு வரேன் ஆண்டிக்கிட்ட சொல்லிடாதிங்க ஒரு சப்ரைசா இருக்கட்டும் என்றான்

சரிங்க சார் உங்கள் உத்தரவு என சற்று தலைக்குனிந்த படியும் கையை மேல் வயிற்றிக்கு செங்குத்தாக வைத்தபடி கிருஷ்ண்ன் கூற அவறை பொய்யாக முறைத்த சரணிடம் பின்ன சார் பெரிய ஆள் ஆயிட்டிங்க மரியாதை தராம இருக்க முடியுமா??... IPS வேற அதான் வீட்டிற்க்கு வரதுக்கு கூட டைம் எல்லாம் பிக்ஸ் பண்ணிட்டு தான் வருவிங்க என்றார்.

அதைக் கேட்டதும் சரணின் முகம் வாட அப்படி எல்லாம் இல்ல அங்கிள் டிரைனிங்க் முடிந்ததும் ஜாயின் பண்ண சொல்லிட்டாங்க.. முதல் நாள் இவினிங்க் தான் ஹைதராபாத்ல இருந்து வந்தேன், வீடு ஆதி முன்னாடியே ரெடி பண்ணி வச்சுட்டான் அதுனால அரேன்ஞ் பண்ற பிரச்சனை இல்ல மறுநாளே ஜாயின் பண்ண வேண்டி இருந்தனால உங்கள வந்து பார்க்க முடியல சாரி அங்கிள் டியூட்டில ஜாயின் பண்றதுக்கு முன்னாடியே வீட்டிற்க்கு வந்து உங்களையும் ஆண்டியையும் பார்க்கனும்னு நினைச்சிருந்தேன், நான் இன்னைக்கு இப்படி ஒரு போஸ்ட்ல கவுரமாக இருக்கேனா அது உங்களால் தான் அப்படி இருக்க அந்த நன்றியை நான் மறக்க மாட்டேன் ஒரு நாளும் என்று உணர்வு பூர்வாமாக கூறியவனின் கைகளை பற்றி சமாதானம் படுத்தும் விதமாக சற்று தட்டிக் கொடுத்தார்.

டேய் படவா நான் சும்மா விளையாடினேன்டா…இதுக்கு போய் இவ்வளவு எமோசன் ஆகுற…. கூல்டவுன்..சரி சாப்பிட ஆரம்பிக்கலாம் பாவம் ரொம்ப நேரமா இந்த சிக்கன் எனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கு என்று பேச்சை மாற்றினார்.

பின் சரணிடம் நீ இப்போ ஒரு ஆபிசர் சோ இந்த மாதிரி எமோசன்லாம் ஆகாத என்றார், நீங்க சொன்னதும் எனக்கு நான் மறக்க நினைச்சது நியாபகம் வந்துருச்சு அதான் அங்கிள்…-சரண். அச்சோ சாரிப்பா எல்லாத்தையும் மறந்திரு எப்பவும் நானே சொல்லிட்டு இன்னைக்கு நானே நியாப படுத்திட்டேன் என கிருஷ்ணண் கூற நிலைமை மறுபடியும் சிரியசாக மாறுவதை உணர்ந்த ஆதி, சார் உங்களுக்காக வெயிட் பண்ணி டையடாகி சிக்கன் எங்கிட்ட வந்திருச்சு என்றவாறு சிக்கனை எடுத்து உண்ண தொடங்கினான்…

அவனின் செயலை கண்டு அனைவரும் சிரிக்க அந்த சூழ்நிலை இருக்கம் தளர்ந்து லேசானது.

சந்தியாவிற்க்கு சரணின் பேச்சு சொல்ல முடியா உணர்வை தந்தது…நேற்று அவ்வளவு திமிராக தன்னிடம் பேசிய சரணா இன்று இவ்வளவு உணர்வு பூர்வமாய் பேசியது?...இதில் எது உண்மை? இதில் எது உண்மையான முகமாக இருந்தாலும் சரணிற்க்கு வெளியில் கூறாத வேதனையும் காயங்களும் நிறைந்த மறுபக்கம் இருப்பது உறுதியானது.எனினும் முரண்பாடாக அந்த காயங்களுக்கு தானே மருந்தாக வேண்டும் என்று தோன்றவே….ச்சே…என்னது இது? எப்படி போகுது பாரு புத்தி..! நானே அவன் மேல கோபமாக இருக்கேன் அப்புறம் எதுக்கு அவன பத்தி யோசனை பண்ணிட்டு இருக்கேன் என்றவாறு தனக்குள்ளே பேசிக்கொண்டு சாப்பிடாமல் இருந்தவள் திவ்யாவின் என்னடி யோசனை? என்ற கேள்வியில் நினைவு திரும்பியவளாக ஒண்ணுமில்லை என்றவாறு சாப்பிட தொடங்கினாள்.ஆனால் சந்தியா ஒன்றை உணரவில்லை கோபம் உரிமை இருக்கும் இடத்தில் தான் வரும் என்பதை அவ்வாறு அவள் உணர்ந்திருந்தால் பின்விளைவுகளை தடுத்திருந்திருக்கலாமோ என்னவோ விதி யாரை விட்டது…?

சந்தியாவிற்க்கு சரணின் மறுபக்கம் தெரியவருமா? அவ்வாறு தெரியும் போது அவள் அதற்க்கு மருந்தாக மாறுவாளா….? இல்லை காயத்தை அதிகரிப்பாளா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
 

Dowlath Haseena

Saha Writer
Team
Messages
12
Reaction score
23
Points
1
ஹாய் மக்களே..!!

எல்லாரும் எப்படி இருக்கீங்க? ரொம்ப சாரி எந்த அறிவிப்பும் இல்லாமல் கதையை பாதியிலேயே நிறுத்துனதுக்கு...என்ன பண்றது..? திடிருனு லைப்ல டேர்னிங்க் பாயிண்ட் வந்திருச்சு...சோ அதுல கொஞ்சம் பிசி ஆகிட்டேன்....சரி கதைக்கு வருவோம்...யாரும் சரண், சந்தியாவை மறந்திருக்க மாட்டிங்கனு நம்பறேன்....

அத்தியாயம் - 7

ரெஸ்டாரண்டிலிருந்து அலுவலகம் வந்த சந்தியாவிற்க்கு சரணின் நினைவு முழுவதும் ஆட்கொள்ள என்ன இது வந்ததுல இருந்து அவன் நினைப்பாவே இருக்கு……இது சரி இல்லையே ஒரு வேளையும் ஓட மாட்டிங்குதே…என்ன பண்ணலாம்? என யோசித்துக் கொண்டிருந்தவளின் முளையில் ஒரு எண்ணம் உதிக்கவே அதை செயல் படுத்த ஆயுத்தமானாள்.

அலுவலகத்தில் பாதி நாள் விடுப்பு சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்தவளை பூட்டிய வீடே வரவேற்க அம்மா எங்க போயிருப்பாங்க…? சரி அவுங்க எங்கயாவது கடைக்கு போயிருப்பாங்க நம்ம இப்போ போன் பண்ணிக் கேட்டு அவுங்க எதுக்கு ஆபிஸ் பாதிலயே வந்தனு கேட்டா என்ன பதில் சொல்றது…? எதுக்கு வம்பு நம்ம கிட்ட இருக்கற சாவி வச்சு உள்ளே போகலாம்..அப்புறம் கேட்டா ஏதாவது சொல்லி சமாளிச்சுக்கலாம் என்று எண்ணியவாறு தன் சாவியை பயன்படுத்தி வேக வேகமாக உள்ளே வந்து கதவை அடைத்தாள்.

தன் அறைக்குள் சென்றவள் 5நிமிடங்களில் பிரஸ் ஆகி வந்து கதவு சன்னல் எல்லாத்தையும் அடைத்துவிட்டு போர்வை எடுத்து இழுத்து போர்த்திக் கொண்டு தூங்க ஆரம்பித்தாள்…..(இது தான் மேடமோட பிளான் சரணை பற்றி நினைக்காமல் இருக்க…பயபுல்ல எவ்வளவு புத்திசாலியா இருக்கு…ஏம்மா சந்தியா உன் அறிவை கண்டு புல்லரிக்குதுமா…உனக்கு மட்டும் எங்க இருந்து இப்படி வித்யாசமா ஐடியா வருதோ..!!)

.

.

.

ஆதியின் நிலையோ தவறு செய்து தாயிடம் மாட்டிக்கொள்ளும் குழந்தையை போல் இருந்தது..டேய் என்டா சொல்லல…? – சரண். எதடா கேட்கிற…? மனதிற்க்குள் அச்சோ ஒரு வேளை திவ்யாவை சைட் அடிக்கறத பத்தி கேட்கிறானோ…இருக்காதே சான்ஸ் இல்லையே… அவனுக்கு சந்தியாவை கவனிக்கவே நேரம் பத்திருக்காது என தனக்கு தானே கேள்வியும் பதிலும் கூறிக்கொண்டிருந்தவனிடம்…..ம்ம்ம் பணத்தை நீ எடுத்து கொடுத்தனு,,,,-சரண்.

எனக்கு அப்போ அந்த பணத்தை மிஸ் பண்ணவுங்க தான் இவுங்கனுதெரியல..நான் இவ்ங்கல பார்க்கவும் இல்லையே..மோர் ஒவர் அந்த விசயத்தை நான் அப்போவே மறந்துட்டேன்..- ஆதி.

அது எல்லாம் சரி, சார் ரெஸ்டாரண்ட்ல என்ன பண்ணிட்டு இருந்திங்க?..-சரண். கண்டுபுடிச்சுட்டானே சமாளிப்போம்..நா..நான்…உங்கள மாதிரிதான் சாப்பிட்டு இருந்தேன் அதுவும் என் பேவரட் கிரில் சிக்கன்….-ஆதி. இல்லயே… சார் அது எல்லாத்தையும் தாண்டி திவ்யாவை பார்த்து ஜொல்லு விட்டு இருந்திங்களே…என்ன விசயம்…?யாருகிட்டயும் மாட்டிக்க மாட்டேனு பில்டப் கொடுத்து முழுசா ஒரு வாரம் கூட ஆகல அதுக்குள்ள இப்படி ஜொல்லு விடுற அந்த பிள்ளைய பார்த்து….-சரண்.

அவனின் கேள்விற்கு என்ன விடையளிப்பது என தெரியாமல் ஈஈ என இழித்து வைத்தான் ஆதி…என்டா நான் கேட்டதும் சமாளிக்கற…? நான் எனக்கு லவ் வந்ததும் உங்கிட்ட ஷேர் பண்னேன்ல அதே மாதிரி நீயும் சொல்லுவேனு பார்த்தா மழுப்பற என கடுப்பாக கேட்ட சரணிடம் எனக்கே உறுதி இல்லாத விசயத்தை நான் என்னனுடா சொல்லுவேன்..?எனக்கு திவ்யாவை பிடிச்சிருக்கு ஆனா இது காதாலானு கேட்டா தெரியாதுனு தான் சொல்லுவேன்…அதுனால தான் நீ கேட்கும் போது என்ன சொல்லனு புரியாததுனால மழுப்பிட்டேன். உன் கிட்ட சொல்லமா வேற யாருக்கிட்ட மச்சி சொல்ல போறேன்…-ஆதி, சரி அவ்வளவு மோசமாவா தெரிஞ்சது?...-ஆதி.நீ விட்ட ஜொல்லுவ பார்த்து அங்கிளே கண்டு பிடிச்சு இருப்பாரு..-நான் கூட பயந்துட்டேன் எங்க நீ விடுற ஜொல்லுல ரெஸ்டாரண்ட் முழ்கிடும்னு….எனக்கு என்னமோ திவ்யாவிற்கும் உன் மேல அட்ராக்சன் இருக்குனு தோணுது…ம்ம் எங்க இந்த ஆர்த்ர் உனக்கு எல்லாம் பார்த்ததும் காதலை கொடுத்துட்டாங்க…நான் பாரு சந்தியாவோட ஒற்றை பார்வைக்கு ஏங்கி காத்திருக்கேன்.. என புலம்ப ஆரம்பித்தான்.

சரி விடு மச்சி உனக்கு சிக்கரமே உன் லவ் சக்ஸஸ் ஆயிடும் விடியற்காலைல கனவு கண்டா பலிக்கும்னு சொல்லுவாங்க என ஆதி கூற கண்களில் ஓளி மின்ன உண்மையாடா என சரண் கேட்க ஆமாடா நான் ஸ்கூல் படிக்கும் போது விடியற்காலை கனவு வந்துச்சுடா.அது அப்படியே பலிச்சது…-ஆதி

என்ன கனவு சார் அது?..-சரண்.நான் பெயிலாருவேனு கனவு வந்துச்சுடா அதே மாறியே நான் பெயிலாயிட்டேன் என பெருமையாக கூறிய ஆதியிடம் நாயே..நீ கனவு கானலனாலும் பெயில்தாண்டா ஆயிருப்ப என கூறி சிரித்தான்.

பின் சிறிது நேரம் அரட்டையடித்து விட்டு ஆதி கிளம்பி விட்டான்.இரவு உணவிற்க்கு பின் படுக்கையில் விழுந்தவன் சந்தியாவின் நினைவில் தனியாக பேசிக்கொண்டிருந்தான்…ஹே…தியா..நீ அங்கிள் கம்பெனிலதான் வொர்க் பண்றியா….?? இவ்வளவு நாள் தெரியாம போச்சே…சே எத்தனை தடவை அங்கிள் கூப்பிட்டு இருப்பாரு ஆபிஸ் பக்கம் வர சொல்லி..அப்போ போயிருந்தா அப்போவே பார்த்திருப்பேனே…எவ்வளவு நாள் வெஸ்ட் பண்ணிட்டேன் என தன்னையே நொந்துக் கொண்டான்.

சரி விடு தியா…இவ்வளவு நாள் மிஸ்ஸானதுக்கும் சேர்த்து வச்சு உண்ண லவ் பண்ண போறேன்..அச்சோ...ஹனி…கொல்றியேடி…இப்படி புலம்ப வச்சுட்டியேடி…நான் இப்படி மாறுவேனு கனவுல கூட நினைக்கல…என சந்தியாவின் நினைவிலேயே உலன்று கொண்டிருந்தவனை நித்திரா தேவி ஆட்கொண்டாள்.

சந்தியாவோ சனிக்கிழமை விடுமுறையாயினும் சீக்கிரமே எழுந்து விட்டாள்…இது என்ன நமக்கு தூக்கம் வர மாட்டிங்குது…சே என்ன நமக்கு வந்த சோதனை..(மேடம் சரணை பார்த்ததுல இருந்து இப்படி ஆயிடாங்க,ஆனா இன்னும் இத அவுங்கலே உணரல.)

இப்போ கீழே போனா அம்மா நேற்றை விட வித்தியாசமா பார்க்க ஆரம்பிச்சுருவாங்க…என்ன பண்ணலாம் என யோசித்தபடி பிரஸ்ஸாகி வந்தவளுக்கு வாங்கி படிக்க நேரமில்லாமல் வைத்திருந்த “மழை சாரல் என் நெஞ்சிலே” புத்தகம் நினைவுக்கு வர அதை எடுத்து படிக்க ஆரம்பித்தாள்(ஆதர் நிவேதா ஜெயாநந்தன்…எனக்கு ரொம்ப பிடித்த நாவல் டைம் இருந்தா படிச்சு பாருங்க பிரண்ட்ஸ்..சுப்பரா இருக்கும்).

அதை படிக்க படிக்க எவ்வளவு செமையா எழுதிருக்காங்க…..இந்தளவுக்கா ஒரு பொண்னு ஒரு பையன லவ் பண்ணுவா…அவனுக்காக சாக கூட போவாளா…அந்த பொண்ணோட காதலை பார்க்கும் போது லவ் இவ்வளவு அருமையான பீலான்னு தோணுது…அப்போ நமக்கு ஏன் ஒரு நாள் கூட இந்த மாதிரி தோணுனது இல்ல என்று அவள் போக்கில் சிந்தித்தவள் அவளுடைய மனசாட்சியின் உனக்கு மூளை ஏன் வர வர இப்படி வேளை செய்யிது சந்தியா என்ற கேள்வியில் தெளிந்தாள்…சே எப்படி யோசிச்சிருக்கேன் பாரு என தலையில் அடித்து கொண்டுநாவலை மூடி வைத்து விட்டு குளித்து விட்டு கீழே சென்றாள்.

சந்தியாவின் நினைவிலே இரவு வெகு நேரம் கழித்து உறங்கியவன் விடிந்து சிறிது நேரம் கழித்து தான் எழுந்தான்…பின் ரெடியாகி அவன் ஸ்டேசன் கிளம்ப அவனை அழைத்து செல்ல ஆதி வந்தான்..

ஸ்டேசன் வந்ததும் முக்கியமான கேஸ்கள் ஏதும் இல்லாத காரணத்தால் பழைய கேஸ் பையில்களை படிக்க ஆரம்பித்தான்…இடையில் மீண்டும் அவள் நினைவே வர ஏன்டி,உன்னால எனக்கு வேளையே ஒட மாட்டிங்குது…என்னைக்கு நான் உன் கிட்ட லவ்வை சொல்றேனோ அன்னைக்குதான் நான் என்னால மத்த விசயத்தை கான்சன்டேட் பண்ணி பார்க்க முடியும் போல..ம்ம்…சீக்கரமே உங்கிட்ட பேசறேன்…ஆனா எப்படி என்று யோசித்தவனுக்கு ஒரு எண்ணம் தோன்றவே அதை செயல் படுத்த தயாரானான்.

திவ்யாவுடன் சினிமா,ஷாப்பிங் என சுற்றி கொண்டிருந்தவளுக்கு திடிரென்று லதாவிடம்(M.D. கிருஷ்ணனின் மனைவி) இருந்து கால் வரவும் அட்டெண்ட் செய்து பேசினாள்.. பேசி முடித்தவள் யோசனையில் ஆழ்ந்தாள்..

.

.

.

அப்படி லதா என்ன சொல்லிருப்பாங்க…? சரண், அவன் நினைத்த மாதிரியே சந்தியாவை சந்திப்பானா…?

அடுத்த அத்யாயத்தில் சந்திப்போம்…
 

Dowlath Haseena

Saha Writer
Team
Messages
12
Reaction score
23
Points
1
அத்தியாயம் - 8

சரணிற்க்கு தோன்றிய யோசனையை செயல்படுத்த கிருஷ்ணணின் வீட்டை நோக்கி புறப்பட்டான்.வீட்டினுள் நுழையும் போது அந்த வீட்டின் அழகை கண்டு பிரம்மிக்காதவர்கள் இருக்க மாட்டார்கள்.ஆனால் சரணிற்க்கு அந்த வீடு மிகவும் பரிட்சய பட்டதினாலோ ஏனோ அவன் அந்த அழகை கண்டுக் கொள்ளாமல் அவன் வந்த நோக்கத்தை நிறைவேற்ற உள்ளே சென்று விட்டான்.

அந்த பிரம்மாண்ட வரவேற்பு அறையில் கிருஷ்ணணும், லதாவும் ஏதோ ஒரு காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்ததை போல் தெரிந்தது.. சற்று உன்னிப்பாக கவனித்தால் லதா கிருஷ்ணணிடம் கொஞ்சிக்கொண்டும் கெஞ்சிக்கொண்டும் இருந்தார்…

சரண் வந்ததையும் கவனிக்காமல் இருவரும் பேச்சை தொடர்ந்ததால் அவன் ம்ம்கும்..என தொண்டயை செருமி தான் வந்திருப்பதை உணர்த்த அப்போதுதான் அவனை கவனித்த இருவரும் ஹே..சரண் நீ எப்போ வந்த? என ஒரே நேரத்தில் கூற…ம்…நான் வருகிறத கூட கவனிக்காம ரொமன்ஸா என்றான்.

அட நீ வேற சரண்….என் கிருஷ்ணன் ஆரம்பிக்கும் போதே வீட்டுக்கு வந்த புள்ளைய நிக்க பேசிக்கிட்டு தள்ளுங்க என்று சரணின் அருகில் வந்து எப்படி இருக்கடா கண்ணு..என வாஞ்சையாக அவனின் கன்னம் தடவி கேட்க…நீங்க எல்லாம் இருக்கும் போது எனக்கு என்ன கவலை ஆண்டி நீங்க எப்படி இருக்கிங்க என்றான்.

நானா…இருக்கேன் பா..என சொன்னவரை ஏக்கமாக கிருஷ்ணன் பார்க்க அங்கு ஒரு மௌன யுத்தம் நடக்கிறது என்பதை புரிந்துக்கொண்டான் சரண்.

ஏன் ஆண்டி அங்கிள் என்ன பண்ணாரு ஒரு வார்த்தை சொல்லுங்க தூக்கிறலாம்..என கூறியவாறு அவரின் தோள்களை மீது கைவைத்து கேட்க அவ சொல்றது இருக்கட்டும் நானே சொல்றேன் சரண் நீயே நியாத்தை சொல்லு என்றார்.

சரி சொல்லுங்க..-சரண்.இவளுக்கு வீட்டுல ரொம்ப போர் அடிக்குதாமா அதுனால வீட்டு வேளை எல்லாம் நானே செய்யிரேனு சொல்லி எல்லா வேலையாட்களையும் அனுப்பிட்டா…நான் ரொம்ப கம்பல் பண்ணுனது நால ஒரு ஹெல்பர் மட்டும் இருக்க அலோ பண்ணிருக்கா…நீயே சொல்லு சரண் இவளூக்கு மனசுல யூத்னு நினைப்பு இன்னமும் அதுனால தான் இப்படி எல்லா வேளையும் இழுத்து போட்டு செஞ்சிட்டு இருக்கா என்றார் கிருஷ்ணண்.

அதற்கு என்பா இருக்கறது இரண்டு பேரு அதுக்கு எதுக்கு இத்தனை வேளையாட்கள்? அதுவும் இல்லாம எனக்கும் வீட்டுக்குள்ளே இருக்க போர் அடிக்குது…லதா.

சரி இத விடுப்பா இப்போ என்னா சொல்றானு கேளு இது பண்ணது எல்லாம் அவங்களுக்கு பொழுது போகலயாம…காசி, ராமேஸ்வரம்னு எங்கயாவது டூர் கூட்டிட்டு போக சொல்ற..இப்போ வேளை அதிகமா இருக்கு முடியாதுனு சொன்னா சரி நான் போய்யிட்டு வரேனு சொல்றா…இவள நான் எப்படி தனியா அனுப்பவது..?-கிருஷ்ணண்.

நான் மட்டும் தனியாவ போக போறேன்…அந்த டிராவல் ஏஜென்சில எத்தன பேர் என் கூட வருவாங்க..-லதா.

நீ இல்லாமல் நான் என்ன பண்ணுவேண்டி தனியா..இவ்வளவு பெரிய வீட்டில என்ற கிருஷ்ணனின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் அமைதி காத்தார்.பின் அவரால் மட்டும் கிருஷ்ணணை விட்டு பிரிந்து இருக்க முடியுமா என்ன…? அவரின் இந்த பிடிவாததிற்க்கு காரணமே தன்னை தனியாக அனுப்ப மனமின்றி அவரும் உடன் வந்து விடுவார் என்பதினால் தான்.

சரணிற்கு கிருஷ்ணண் குற்றம் சாட்டுவதை போல் கூறினாலும் அவரின் அக்கறை தெளிவாக தெரிந்தது அதில்….லதாவின் எண்ணத்தையும் கண்டு கொண்டவனுக்கு இவர்களின் அன்பு பிரம்மிப்பாக இருந்தது…

திருமணம் முடிந்த மறுமாதத்திலிருந்து குழந்தையை பற்றி கேட்டு குடைந்தெடுத்து இரண்டு வருடங்கள் அல்லது மூன்று வருடம் குழந்தை பிறக்காமல் இருந்தால் அந்த பெண்ணை விவாகரத்து செய்து விட்டு மறுமணம் செய்து கொள்ள துடிக்கும் பல ஆண்கள் மத்தியில் தன் மனைவியை ஒரு குழந்தை போல் பார்த்துக் கொள்ளும் கிருஷ்ணனும் அவரிடம் எத்தனை வயதாயினும் குழந்தையை போல் பிடிவாததுடன் அவருடன் நேரம் செலவளிக்க விரும்பும் லதாவின் அன்பையும் காணும் போது பிரமிக்காமல் இருந்தால் தான் ஆச்சர்யம். இதே மாதிரி நானும் என் சந்தியாவும் எங்க கடைசி காலம் வரைக்கும் இருப்போமா…அப்போ எப்படி இருக்கும் என எண்ணிக் கொண்டிருந்தவன் கிருஷ்ணண் நீயே நியாயம் சொல்லுப்பா என்ற குரலில் நினைவுலகம் திரும்பினான்.

ஆண்டி,அங்கிள் உங்க பிரச்சனைக்கு என் கிட்ட ஒரு சொல்யூசன் இருக்கு.. என்றான்..சரண். என்ன என்பதை போல் இருவரும் பார்க்க பர்ஸ்ட் ஆண்டி…உங்களுக்கு காசி,இராமேஸ்வரம் தான் போகனுமா..இல்ல சும்மா வேற எங்கயாவது போனா கூட ஒகே வா என்றான்..

இல்ல சரண் எனக்கு எந்த பிளேஸ் நாலும் ஒகே தான் ஆனா வெளிய போகனும்..என்றார் லதா.சரி ஆண்டி, இப்போ அங்கிள் நீங்க என் கேள்விக்கு பதில் சொல்லுங்க…சரண்

கேளுப்பா…கிருஷ்ணண்.உங்களுக்கு ஆபிஸ் 2 நாள் லீவு போட முடியாதா…சரண். 2 நாள்னா பிரச்சனையில்ல சரண் ஆனா இவதான் பத்து நாள் டூர் சொல்றாலே என்றார் கிருஷ்ணண்.

அதவிடுங்க அங்கிள் உங்க நாள 2 நாள் லீவு போட முடியும் தானா?…-சரண். ம்ம்..கிருஷ்ணண்.அப்போ உங்க ரெண்டு பேத்துக்கும் ஏத்த பிளான் எங்கிட்ட இருக்கு…சரண்..

சரி பிளான சொல்லு சரண்.ஏன் ஊட்டி போக கூடாது..? அதுக்கு 2நாள் போதும் ஆண்டிக்கு வெளிய போன மாதிரியும் இருக்கும்.அங்கிளுக்கும் பிராப்லம் சால்வ் அதுவும் வீக்யெண்ட்னா லீவு பிராப்லமும் இல்ல..சரண்

அப்புறம் உங்களுக்கு ஆட்சியபனை இல்லாட்டி நானும் உங்க கூட வரலாமா என்று கேட்டான்..இதை கேட்ட கிருஷ்ணனும்,லதாவும் உண்மைதானா தாங்கள் கேட்டது என்ற ரீதியில் நிற்க ஹலோ..என சரண் இருவர் முன்னும் கைகளை ஆட்ட சரண் நீ சொன்னது உண்மைதானா நீயும் எங்க கூடவரியா என்று கேட்ட லதாவிடம் ஆமா ஆண்டி நானும் வரலாம்ல என்றான் சரண்

படவா..என்ன கேள்வி இது நாங்க இத்தன வருடம் எங்க கூப்பிட்டும் வாராம இருந்த..சரி அப்போவே அப்படி இப்போ போலிஸ் வேற அதான் வரமாட்டேனு சந்தேகம்னுதான் கூப்பிடலாம் நினைச்சத கூட விட்டுட்டேன் என்றார் லதா.நீ கண்டிப்பா வர்ர நீ மட்டும் இல்ல உன் பிரண்ட் ஆதியையும் கூட்டிட்டு வா என்றார். லதா..

அவர் கூறியதை கேட்டு சரி ஆண்டி நானும் வரேன் என்ற சரணை அவனின் மனசாட்சி அடேய் நீ என்ன நினைச்சு வந்தியோ அந்தகாரியத்தை சாதிச்சுட்டு இப்போ என்னமோ அவ்ங்களுக்காக போற மாதிரி முஞ்சிய வச்சிருக்கறத பாரு…ஆனாலும் கடவுள் உன் பக்கம் இருக்காருடா..இல்லாட்டி நீ சந்தியாவை பத்தி நல்லா புரிஞ்சுக்க அவகூட டூர் போகற பிளான தைரியமா போட்டதும் மட்டும் இல்லாம அத எக்ஸிகியூட் பண்ணதான் இங்கயே வந்த…உன் நல்ல நேரம் ஆண்டி அங்கிள்குள்ளையும் அதே டாபிக் ஒட அவுங்களுக்கு சொல்லியூசன் சொல்ற மாதிரியே உன் பிளான சக்ஸஸ் பண்ணிட்ட..ஆனாலும் இன்னும் உன் பிளான் முழுசா சக்ஸஸ் ஆகலயே…சந்தியாகாக தான இந்த பிளானே..ஆனா இன்னும் அவள கூப்பிடவே இல்லையே..என்றது

அவனுக்கும் அதே கேள்வி ஒட சந்தியாவை எப்படி கூப்பிடுவது என்று எண்ணிக்கொண்டிருந்த நேரத்தில் லதா கிருஷ்ணனிடம் ஏங்க இந்த சந்தியா பொண்ணையும் ஊட்டிக்கு கூப்பிடலாமா..?அதுவுன் உங்கள மாதிரிதான பொழுதனைக்கும் ஆபிஸே கதினு இருக்கு என்று கூற சரணிற்கோ வானில் பறப்பதை போன்ற உணர்வு வந்தது…என் செல்ல ஆண்டி சொல்லாமலே என் மனச புரிஞ்சுகிட்டிங்க…ஆண்டினா ஆண்டிதானு மனதிற்க்குள் அவரை புகழ்ந்து கொண்டிருந்தான்..(டேய்..கொஞ்சம் பொறுடா..இன்னும் சந்தியாவிற்க்கு இந்த விசயம் தெரியவே இல்ல.. அதுக்குள்ளேயும் இவ்வளவு ஆட்டமா?)

லதா சந்தியாவிற்க்கு போன் பண்றேனு எழுந்து செல்ல போகயில் ஆண்டி அவுங்களுக்கு போன் பண்ணி கேட்டுட்டு அவுங்க பதில சொல்லுங்க அரேன்ஜ்மெண்ட் எல்லாம் பண்ணனும் எனக்கு கொஞ்சம் வேளை இருக்கு ஆண்டி நான் கிளம்பிகிறேன் …என்று தன் சந்தோசத்தை வெளிக்காட்டாமல் கூறி விட்டு கிளம்பியவனிடம் சாப்பிட்டு போடா என்று லதா கூற இல்ல ஆண்டி எனக்கு டைம் ஆச்சு ஆண்டி நாளைக்கு வந்து சாப்பிட்டுக்கிறேன் உங்கள பாக்கதான் வந்தேன்..பை என கூறி சிட்டாக பறந்து விட்டான்.. பின்ன அங்க இருந்து அவனையும் மீறி சந்தோசத்தில கத்தி யாரு மாட்டிட்டு முளிக்கறது என்ற எண்ணத்தில்…

லதாவிடமிருந்து கால் வந்தததிலிருந்து சரண்யா குழப்பமாக இருப்பதை கண்டு திவ்யா அவளிடம்…ஏன்டி எப்பவும் அவுங்ககிட்ட பேசுனா ரொம்ப் ஹாப்பியா இருப்ப..இப்போ ஏன் ஒரு மாதிரி இருக்க..-திவ்யா..

அதுவா…அவுங்க ஊட்டி டூர் போறாங்களாம் அதான் நம்மலையும் கூப்பிட்டாங்க….ஹே..செம டி அப்போ ஒகே சொல்லிடு நாம வெளியூருக்கு போய் ரொம்ப நாள் ஆச்சு அதுவும் டூர் போய் வருசமே இருக்கும் சொ போகலாம் டி என்றாள் திவ்யா.

ஆனா அதுல ஒரு பிரச்சனை…சந்தியா.இதுல என்னடி பிரச்சனை..?-திவ்யா. நாம மட்டும் போகல ஊட்டிக்கு….சந்தியா..ஹோ..அப்போ புல் ஆபிஸும் வருதா…செம டி என்று அவள் பாட்டில் பேசிக்கொண்டே போக…ஒரு நிமிடம் நான் என்ன சொல்ல வரேனு கேளு.. கேள்வியும் நானே பதிலும் நானேங்கிற மாதிரி ஒலராத..என்று சிறிது கடுப்போடு கூறினாள் சந்தியா.

சரி சொல்லு யாரு நம்ம கூட வரா..?-திவ்யா. அவுங்க.. சந்தியா… அவுங்கனா..எவுங்க..?-திவ்யா. அதான நேற்று ரெஸ்டாரண்டில மீட் பண்ணோம்ல அந்த காட்சில்லாவும், ஆதி சாரும்… என்றாள் சந்தியா.

ஆதி என்ற பெயரை கேட்டதும் திவ்யா சந்தோசத்தில் ஹய்யா…என உலறிவிட…ம்ம்..நெற்றியை சுருங்க கேள்வியாக அவளை நோக்கினாள் சந்தியா.. அவள் என்ன சொல்லி சமாளிப்பது என்றறியாமல் இல்ல அவுங்களும் வந்தா ஜாலியா தான இருக்கும்..நல்லா என்ஜாயி பண்ணலாம்ல என்றாள் திவ்யா.

ம்ம் பண்ணுவடி பண்ணுவ..நானும் நேற்றுல இருந்து கவனித்து கொண்டுதான் இருக்கிறேன்…உன் நடவடிக்கை எதுவுமே சரியில்லையே..-சந்தியா. அது எல்லாம் ஒன்னும் இல்ல…சரி நீ சொல்லு போகலாம் தானா நாமளும் என்றாள் திவ்யா அவளின் குரலில் ஏங்கே சந்தியா வேண்டாம் என்று சொல்லி விடுவாளே என்ற கலக்கம் இருந்தது.

போகறது இருக்கட்டும் அதுக்கு முன்னாடி நான் கேக்குற கேள்விக்கு பதில்சொல்லு.. என்ன நடக்குது உனக்கும் ஆதி சாருக்கும் இடையில்….சந்தியா.

சந்தியாவின் இந்த கேள்வியில் சற்று ஆடித்தான் போனாள் திவ்யா..ஏய் என்னடி நீ கேக்குறத பார்த்தா நான் ஏதோ எ.. ஆதியை லவ் பண்ற மாதிரில இருக்கு..-திவ்யா.

இவ்வளவு நேரம் எனக்கு டவுட் தாண்டி இருந்துச்சு…ஆனா எப்போ உரிமையா என் ஆதினு சொல்ல வந்துட்டு அப்படியெ ஸ்டாப் பண்ணும் போதே தெரிஞ்சுக்கிட்டேன்…சரி என்னைக்கா இருந்தாலும் என் கிட்ட சொல்லி தானா ஆகனும் அன்னைக்கு பார்த்துக்கிறேன்..ஆதி சார பார்த்தா நல்லவரா தான் தெரியராரு..அந்த காட்சிலா மாதிரி இல்லாமா..என மனதினுள் நினைத்து கொண்டாள்.

நீ நினைக்கிற மாதிரி எல்லாம் ஒன்னும் இல்ல. அவர் தானா அமௌண்ட் கொண்டு வந்து கொடுத்தது அதுனால ஒரு சின்ன மரியாதை ஒரு தேங்க்ஸ் சொல்லனும் நினைச்சேன்..(அதான் ஆல்ரெடி சொல்லிட்டியேமா சந்தியாகிட்ட சமாளிக்கறேங்கிற் பேருல உலறாத…கண்டுபிடிச்சிட போறா.). கொஞசம் நினைச்சு பாரு பணம் மட்டும் கிடைக்கமா இருந்திருந்தா நம்ம நிலைமய அன்னைகு சரண் சார் கேட்ட மாதிரி தான் எல்லாரும் கேட்டிருப்பாங்க..-திவ்யா.

சந்தியாவிற்கோ சரணின் நேற்றைய பேச்சிலிருந்து அவனின் மீதிருந்த கோபம் சற்று தணிந்திருந்த நிலையில் திவ்யா மீண்டும் அப்பேச்சை ஆரம்பிக்க தணிந்திருந்த கோபம் மீண்டும் கிளம்பியது..

சந்தியாவின் முகமாற்றத்தை கொண்டே அவள் செய்த மடத்தனத்தையும் அதனால் உண்டானது தான் இந்த கோபம் என்பதையும் உண்ர்ந்துக் கொண்டாள்..

அச்சோ நான் வேற சும்மா இருக்காமா உலறி வச்சுட்டேனே…இவவேற மறுபடியும் கோபமாயிட்டா சரண் சார் மேல..இனி ஊட்டிக்கு ஒகே சொல்லுவாளா மாட்டாளானு தெரியலயே கலக்கத்தோடு அவளின் பதிலுக்குக்காக காத்திருந்தாள்.



நாமும் காத்திருப்போம்…
 
Top Bottom