Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


என் உயிராய் நீ

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
167
Points
43
என் இனிய வாசகத்தோழிகளுக்கு!



தர்ஷினிசிம்பாவின் பணிவான வணக்கங்கள்!!

புதியதொரு முயற்சியாக, இக்கதைக்கு இணையதளக்கங்களில் வாசகர்கள் அளித்த பெரும் ஆதரவால் என் முதல் கதை, ”என் உயிராய் நீ!” மீண்டும் இங்கே பதிவு செய்ய முடிவு செய்திருக்கிறேன். .

முதல் புத்தகம் என்பதால் மறுதிருத்தம் செய்யபடாத பதிவு இது... பிழையிருந்தாலோ வாக்கியங்கள் கோர்வையில்லாமல் இருந்தாலோ மன்னிக்கவும்.

காதல் சுகமானது மட்டும் அல்ல, மிக ஆழமாக நேசிக்கும் போது அது முரட்டுத்தனமாக மாறும்.

இந்த கதையின் நாயகன் வருணின் அன்பும் அவன் காதலியின் மேல் அவன் வைத்திருக்கும் முரட்டுதனமும், விஷ்வாவின் காதலும், அணைத்தையும் கடந்தது உண்மையான அன்பு என்பதை உணர்த்தும் குமார் என அனைத்து கதாபாத்திரங்களும் உங்களின் மனதை தொடும் விதமாக கூறியுள்ளேன்.

"என் விழிகள்

உன்னை கண்டதும்

காதலாய் மாற!

முள்ளொன்று தைத்ததடி என் நெஞ்சில்

உன் அன்பெனும் கரம்கொண்டு

சீர்செய்ய வந்திடடி கண்னே! "

என்னை எழுத சொல்லி ஊக்கபடுத்திய அணைத்து சகோதர சகோதிரிகளுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். என்றும் உங்கள் ஆதரவை எதிர்நோக்கி காத்திருக்கும் ...



உங்கள்

தர்ஷினிசிம்பா.,
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
167
Points
43
1. ஆரம்பம்:

குளிர்ந்த காற்றுடன் முகத்தில் விழுந்த மெல்லிய மழைச்சாரலை மனதிற்குள் ரசித்தபடியே ரயில்பெட்டியின் கதவோரத்தில் நின்று கொண்டிருந்தான் நம் கதையின் நாயகன் வருண்சுந்தர்.

"என்ன டா? இங்க வந்து நின்னுட்ட?" என்று தன்னருகே வந்த நண்பன் விஷ்வாவை பார்த்து புன்னகைத்து கொண்டே,

”இந்த மழைச்சாரலை பாரேன். ஆசையாய், உன்னை தொட வரும் என்னை தடுக்காதேன்னு சொல்ற மாதிரி இருக்குல்ல" என்று சிரித்தான்.

வருண், பெயரில் காற்றின் சுகம் இருப்பது போல மென்மையானவன். ச்செக்க சிவந்த நிறத்தில் பார்ப்பவர்களை திரும்பி பார்க்க வைக்கும் ஆறடி ஆணழகன்.

ரேவதி, வருணின் செல்ல தங்கை. பி.எட்., படித்துக்கொண்டு இருக்கிறாள்.

லட்சுமி, வருணின் அம்மா. வீட்டிற்குள் மங்களகரமாய் வளைய வரும் மஹாலக்ஷ்மி. அவள் இன்றி ஒரு அணுவும் அங்கே அசையாது.

சென்னையில் இருக்கும் கார்மெண்ட்ஸ் கம்பெனிகளில் இரண்டு பெரிய கம்பெனி வருணுடையது. மிக குறுகிய காலத்தில் வளர்ந்தவன் என்றாலும் அனுபவம் நிறைய.

வருண் பள்ளி படிப்பின் போது, சுந்தர் சின்ன துணிக்கடை வைத்திருந்தார். நாட்கள் வேகமாக நகர்ந்தது.

வருண் எம்.பி.ஏ., முடித்துவிட்டு அப்பாவுக்கு உதவியாய் கடையை பார்த்துக்கொண்டே வெளியில் வேலை தேடி கொண்டிருந்த சமயம்.

ஒரு நாள், தன் அப்பாவிடம் வந்து,”அப்பா! விஷ்வா, ஒரு கார்மெண்ட்ஸ் பாதி விலைக்கு வருதுன்னு சொன்னான். நான் விசாரிச்சதுல நல்லா போயிட்டு இருந்த கம்பெனி தான். திடீர் பணத்தேவையால் பாதி விலைக்கு தராங்க, நாம துணிஞ்சி வாங்கினா, நல்லா இருக்கும் பா" என்றான்.

"எவ்வளவு பா சொல்றாங்க?" என்று யோசனையாய் சுந்தர் கேட்க.

"ஆக்சுவலி, அதோட ரேட் நாற்பது லட்சம்பா. பட் வி ஆர் கோயிங் டு பை ஒன்லி ட்வென்டி லாக்ஸ்பா" என்ற வருணை பார்த்து,”எப்படி டா? அவ்ளோ பணத்துக்கு ஏற்பாடு பண்றது?" என்றார் கையாகளி பிசைந்தபடி.

"அப்பா! இந்த கடையை வித்துட்டு வர காசோட லோன் ட்ரை பண்ணி அதை வாங்கிடலாம்ப்பா." என்றான் வருண்.

"சரியா வருமா வருண்?" என்றார் சுந்தர் பெரிய தூகஐ தேவைப்படுவதால்.

"வி கேன் ட்ரை அவர் பெஸ்ட். நான் உங்க கூட இருக்கேன் பா. நான் பார்த்துகிறேன்" என்றான் வருண் நம்மால் முடியும் என்ற நம்பிக்கையில்.

"சரி பா" என்று ஆரம்பித்த பயணம் ஆறு வருஷத்துல வருணின் கடின உழைப்பால் லோன் தீர்ந்தது மட்டும் அல்லாமல், இன்னொரு கார்மெண்ட்ஸும் ஆரம்பித்து வெற்றிகரமாக தொடர்கிறது.

(அவ்ளோ தான் ஹீரோக்கு இன்ட்ரோ போதும் இதுவே ரொம்ப ஜாஸ்தி).

*********

வாங்க இப்போ ஹீரோயின் பார்க்கபோலாம்,

காலை கதிரவன், பட்டொளி போல் தன் கதிர்கள் வீசி, மதுவின் முகத்திலே ஒளிக்கற்றையாய் வீசினான். சூடான வெயில் பட்டவுடன், கண் விழித்து முகத்திற்கு முன் இரு கைகளையும் கூப்பி கடவுளை வேண்டினாள்.”கடவுளே! இன்னைக்கு பொழுது இனிமையா இருக்கனும். எல்லாருமே நல்லா இருக்கனும்." என்று நெட்டி முறித்தாள்.

"மது! ஹாஸ்பிடலுக்கு டைம் ஆச்சு. எந்திரி டி." என்று
கிச்சனில் இருந்து குரல் கொடுத்தாள் மோஹனா, மதுவின் அண்ணி.

"ஆஹ! தோ எழுந்துட்டேன் அண்ணி" என்றாள் மது.

குரல் வந்த திசையில் ஓடிவந்து, அண்ணியின் கழுத்தை கட்டிகொண்டாள்.

"மது. உனக்கு எத்தனை தடவை சொல்றது?அந்த மீனு வாலு கூட சேர்ந்து விளையாடிட்டு, நைட் லேட்டா தூங்காதன்னு? இப்ப பாரு. அவ நல்லா தூங்குறா. உன்னால தூங்க முடியுதா?" என்று கேட்ட மோஹனாவை பார்த்து.

"விடுங்க அண்ணி. அவகூட விளையாடறதுதான், எனக்கு புடிச்ச ஹாபினு உங்களுக்கு தெரியும்ல? டூட்டிக்கு இன்னும் பத்து நிமிஷத்துல ரெடியாகிடுவேன். என் செல்ல அண்ணி இல்ல கோவிச்சிக்காதிங்க!" என்று அவளின் மூக்கை பிடித்து கிள்ளினாள்.

மோஹனா திரும்பி ஏதோ சொல்வதற்குள். டவெல் எடுத்துட்டு பாத்ரூம் ஓடியே போய்ட்டா மது.

"ஓடிட்டியா! வெளிய வா. உதை வாங்குற." என்று சிரித்துக்கொண்டு சமையலை கவனித்தாள்.

தன் அம்மா இறந்தபிறகு அப்பா, அண்ணன் அன்பிலே வளர்ந்தவள். அன்னையின் பாசத்திற்கு ஏங்கினாள். கடவுள் கொடுத்த வரமாய், அண்ணன் மனைவி அமைந்தாள். அம்மாவிற்கு இணையாக பார்த்துக்கொண்டாள் மோஹனா.

"மது எங்க?" என்று கேட்டுக்கொண்டே வந்து, மோஹனாவை பின்புறமாய் இறுக்கி கட்டியணைத்து கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தான் நந்தகுமார், மதுவின் அண்ணன்..

"விடுங்க... மது ரெடியாகுறா. வந்துடபோறா" என்றவளை முன்புறமாய் திருப்பி பேசவிடாமல் இதழில் ஒரு முத்தம் பதிக்க.

"வந்தா வரட்டும்! என் பொண்டாட்டிக்கு, நான் முத்தம் தரகூடாதா? என்ன ஒரு கொடுமை சார்?" என்று பாவமாய் பார்த்தவனை காதை பிடித்து செல்லமாய் திருகினாள்.

"எத்தனை தடவை சொல்றது? உங்க ரொமான்ஸ் எல்லாம் பெட்ரூம்குள்ள வச்சுக்கோங்கன்னு? வயசு பொண்ணு வீட்ல இருக்கா. இப்படியா நடந்துக்கறது?" என்றாள் செல்லமாய் கோபத்துடன்.

"அப்ப பெட்ரூம்க்கு போலாமா?" என்று கண்ணடித்தவனை. ”முதல்ல போய் ஆபீஸ்க்கு ரெடியாகுங்க" என்று டவல் எடுத்து அவன் தோளில் போட்டு, இரண்டு கைகளையும் முதுகில் வைத்து சிரித்துக்கொண்டே மெதுவாய் தள்ளிவிட்டாள்.

"மது! மது! எங்க இருக்க?" என்று கூப்பிட்ட அண்ணன், கண்களை பின்னாலிருந்து சிரித்து கொண்டே மூடினாள் மது.

"ஏய் வாலு! இங்க தான் இருக்கியா? சாப்பிட்டியா? நான் உங்க ஹாஸ்பிடல் வழியா தான் போறேன். ஷால் ஐ டிராப் யு?" என்று நந்தகுமார் பேசிக்கொண்டே கார் சாவியை எடுத்தான்.

"இல்லண்ணா. நான் என் ஸ்கூட்டியிலேயே போய்க்கிறேன். போற வழியில என் பிரென்ட் சுமியை பார்க்கணும்" என்றாள் மது.

‘ஓஹ் சாரி இவ்ளோ சொன்னேன் நா மதுவை பத்தி மறந்துட்டேன்.
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
167
Points
43
2. யாரோ யாரோ இவள்!

"ஹலோ! ஒருத்தி இங்க அரைமணி நேரமா வெயிட் பண்ணிட்டு இருக்கேன். எங்கடி இருக்க?" என்று கோபமாய் பேசிக்கொண்டு இருந்த சுமியிடம்.

"கொஞ்சம் திரும்பி பாருங்க மேடம்" குரல் வந்த திசையை நோக்கி இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்துக்கொண்டு முறைத்தாள் சுமி.

வண்டியை விட்டு இறங்கி, வேகமாக சுமி முன்னால் வந்து நின்று”சாரி" என்று முகத்தை குழந்தை போல் வைத்துக்கொண்டு தோப்புக்கரணம் போட ஆரம்பித்தாள் மது.

சுமியும் மதுவும் சிறுவயதில் இருந்தே நெருங்கிய தோழிகள்.

சுமி எம்.எஸ்.சி., பிசிக்ஸ், எம்.பில்., முடித்துவிட்டு காலேஜ் ஒன்றில் ப்ரோபஸ்சராக இருக்கிறாள்.

மதுவிற்கு சிறுவயதில் இருந்து டாக்டர் ஆகவேண்டும் என்று ஆசை. குறிப்பாக கைனகாலஜி படித்து, அந்த துறையில் வேலை செய்கிறாள். முடிந்தவரை 99% நார்மல் டெலிவரி தான் செய்ய வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருந்தாள். அதனால் பேஷன்ட்ஸ்கிட்ட எப்பவுமே நல்ல பெயர் உண்டு.

தினமும் ஒரு சின்னஞ்சிறு ரோஜா, தன்னால் இந்த பூமிக்கு வருகிறது என்பதில் ஒரு பெருமை அவளுக்கு உண்டு.

மதுவின் அம்மா, அவளுக்கு பதினைந்து வயது இருக்கும்போது உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார்.

அப்பா ரவிக்குமார், ரிடையர்ட் ஹெட்மாஸ்டர். மனைவி இறந்தபின் தனியாக நின்று இருபிள்ளைகளையும் வளர்த்தார். அண்ணன் நந்தகுமார் பிரைவேட் பாங்கில் மேனேஜர்.

மது. முழுபெயர் மதுநிலா. வானத்தில் இருந்து இறங்கிவந்த நிலவுதேவதை போல் இருப்பாள்.

‘ஹீரோயின் என்ட்ரி போதும், இனி கதையை பார்ப்போம்..’

"இன்னைக்கு சார்ட்டடே. காலேஜ் லீவ்னா, நம்ம ஒண்ணாதானே இருப்போம்? ஒய் ஆர் யு சோ லேட்? எரும." என்றாள் சுமி.

"சாரி. டென் 'ஓ' கிளாக். ஐ ஹாட் எ கேஸ் டுடே. ஆஃப்டர் தட், வி வில் கோ எனிவேர்." என்றாள் மது.

"சரி. வண்டில ஏறு" என்றாள் சுமி.

நேராக ஹாஸ்பிடல் போன மது, ”சுமி, என் ரூமில் வெயிட் பண்ணிட்டு இரு. நான் கேஸ் முடிச்சிட்டு வரேன்" என்று அவள் பதிலுக்கு காத்திராமல், டெலிவரி ரூமிற்கு வேகமாக ஓடிக்கொண்டிருந்தாள்.

"யா! யா! சியூர் மிஸ்டர்.ரமேஷ். வி வில் டெலிவர் அவர் ப்ராடக்ட்ஸ் இன் தி ரைட் டைம். டோண்ட் வொரி. பை!" மொபைலில் பேசிக்கொண்டே வந்த வருண், எதிரில் வந்த மதுவை கவனிக்காமல் வேகமாக மோதினான்.

கீழே விழப்போனவளை, சட்டென மாலைபோல் தாங்கி பிடித்தவன் தன்னை மறந்து அவளை ரசித்தான். ‘தன்னவள் இவ்வளவு அழகா? வானத்துலேர்ந்து இறங்கி வந்துட்டாளோ?’ என்று மேலே பார்த்தான். ஒரு நிமிடம்! இருவர் கண்களும், இமை மூடமறந்து ஆயிரம் கதைகள் பேசின.

வருண் சுதாரித்து கொண்டு ”வெரி வெரி சாரி, ஐ ஆம் எக்ஸ்டீரிமிலி சாரிங்க! போன் பேசிட்டு வந்ததுல எதிர்ல வந்த உங்களை இடிச்சிட்டேன்" என்றான்.

"இட்ஸ் ஓகே! தப்பு என் மேலயும் தான். பேஷண்ட்ட பார்க்கப்போற அவசரத்துல உங்களை கவனிக்கல! ஓகே! ஐ ஹவ் டு கோ இம்மீடியட்டேலி. எக்ஸ்கியுஸ் மீ ப்ளீஸ்!" என்று வேகமாக ஓடுபவளை கண்ணில் இருந்து மறையும் வரை பார்த்து கொண்டிருந்தான்.

"யாரோ யாரோ இவள்" தன்னுள் ஒரு பாட்டு கேட்பது போல் இருக்கவே சிரித்துக்கொண்டே, இவள்தான் தன்னுடைய மூச்சுக்காற்று ஆகப்போகிறவள் என்பது தெரிந்தும் அமைதியாய் வெளியேறினான்.
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
167
Points
43
3. குழந்தை

"என்னடா? போன் பேசிட்டு வரேன்னு சொல்லிட்டு, இங்க என்ன பண்ற?" என்றான் ரவி.

"ஒன்னும் இல்லடா. உமா எப்படி இருக்கா? பாப்பா எப்படி இருக்கா?" என்றான் வருண்.

"நல்லா இருக்காங்க! நல்லவேளை, கடைசி நேரத்துல நம்ம குமார் தான் இந்த ஹாஸ்பிடல் பத்தி சொன்னான். இல்லனா, ரொம்ப கஷ்டம் ஆகியிருக்கும். அந்த பழைய டாக்டர் பி.பி ரொம்ப அதிகமா இருக்கு நார்மல் டெலிவெரிக்கு 10% தான் சான்ஸ் இருக்குன்னு சொனனவுடனே எனக்கு பயம் வந்துடுச்சு" என்றான் தன் கவலை நீங்கியவனாய்.

"என்னடா சொல்ற?" என்றான் வருண் எடுவ்கும் தெரியாமல்.

"ஆமா! அப்புறம்தான் இங்க மது டாக்டர்கிட்ட கூட்டிட்டு வந்தேன். அவங்க உண்மையாவே கைராசியான டாக்டர் தான்டா!" என்று ரவி புகழ.

"ஓகே டா! அப்ப நான் கிளம்பறேன்" என்றான் வருண்.

"வீட்டுக்கு போக வேண்டியது இருக்கு! வா போயிட்டு வந்துரலாம்" என்றான் ரவி.

உமா வருணின் சித்தப்பா பெண், சிறுவயதிலேயே பெற்றோரை இழந்ததனால், இவர்களே வளர்த்து அவளை விரும்பின வருணின் நண்பனுக்கே திருமணம் செய்து வைத்தார்கள்.

வீட்டில் இருந்து தேவையான பொட்ருகளை வருணும் ரவியும் எடுத்து வந்தார்கள்

உள்ளே நுழைவதற்குள் பேச்சு குரல் கேட்க வாசலில் நின்று கவனித்தான். ”குட்டி பாப்பாவை பிடிச்சிருக்கா?" மது.

"ம்" என்ற குழந்தையை பார்த்து ”அப்போ, இங்க நிறைய பேர் இருந்தா பாப்பாக்கு இன்பெக்ஷன் ஆகுமே? பரவாயில்லையா?" என்றாள் மது கொஞ்சும் குரலில்.

"வேண்டாம்" என்று தலையசைத்த குழந்தையை பார்த்து,”சோ கியூட்!" என்று குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டாள்.

‘யப்பா! என்ன ஒரு கொஞ்சல். இனி இது எனக்கு மட்டும்தான் சொந்தமாக வேண்டும்! இவள் என்னவள், குழந்தையை இந்த அளவு நேசிப்பவள் நிச்சயம் தன் கணவனையும் உயிராய் நினைத்து உள்ளங்கையில் வைத்து பார்த்து கொள்வாள்’ வருண் எண்ணிக்கொண்டான்.

‘ஐயோ! எனக்கு தரவேண்டிய முத்தமது! இனி யாருக்கும் போக கூடாது’ என்று மனதிற்குள் கோபப்பட்டான் வருண்.

"அப்ப எல்லாரும் கொஞ்ச நேரம் பாப்பாகிட்ட விளையாடிட்டு போய்டறிங்களா?" என்றாள் மது. குழந்தை சிரித்துக்கொண்டே தலையசைத்தது.

"ஓகே, பை!" என்று எழுந்தவள்.

தன் பின்னே நிற்கும் வருணை அப்போது தான் கவனித்தாள்.

காலையில் தன்னை இடித்தவன் தானே என்று நினைத்தவள். தன்னை விழுங்கி விடுவது போல பார்க்கிறானே. அவன் பார்வையின் வெப்பம் தாங்காமல் ரவிடம், ”மிஸ்டர்.ரவி உங்க மனைவி இப்ப ரொம்ப நல்லா இருக்காங்க. ரெண்டுநாள் கழித்து வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம், பட் அதுவரைக்கும் பேஷண்ட் கூட ரெண்டு பேர் மட்டும் இருக்கலாம். மத்தவங்கள போக சொல்லுங்க. குழந்தைக்கு நிறைய பேர் இருந்தா இன்பெக்ஷன் ஆகும்" என்று கூறிவிட்டு வெளியேவர, வாசலில் நின்று தன்னையே பார்த்து கொண்டிருக்கும் அவனை கடக்கையில், உள்ளுக்குள் ஏதோ ஒன்று இனம் புரியாத உணர்வு ஏற்படுவதை கண்டு வேகமாக வந்துவிட்டாள்.

‘இப்படியே கைப்பிடித்து இழுத்து அணைத்து இதழோடு இதழ் சேர்க்க வேண்டும் போல் இருக்க’ இடம் பார்த்து தன்னை கட்டுப்படுத்தினாலும், இத்தனை காலம் பொறுத்திருந்தது போதும், இனி முடியாது இப்பொழுதே தன் விருப்பம் சொல்ல விரைந்தோடினான்....
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
167
Points
43
4. காதல்!

"போலாமாடி?" என்று சுமியை பார்த்து கேட்க அவளும் தலையசைத்து எழுந்தாள்.

வேகமாய் வந்தவன் வாசலில் நின்று, ”மே ஐ கம் இன்?" என்றான் நாகரிகம் கருதி.

"எஸ்!" என்று வாசலில் அவனை பார்த்து ஒருநிமிடம் திகைத்தாள்.

"உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் தனியா" என்றான் வருண்.

"சுமி வெளியே வெயிட் பண்ணு. நான் வரேன்" என்றாள் மது அவனை பார்த்துக்கொண்டே.

"சொல்லுங்க! என்ன விஷயமா பேசணும்?" என்றாள் தன் பொருட்களை எடுத்துவைத்துகொண்டு.

அவளை நோக்கியபடி சென்று, கதவை பட் என்று சாத்தினான்.

"இங்க பாருங்க, எனக்கு சுத்தி வளைச்சுல்லாம் பேசத்தெரியாது. உங்கள எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு! ஐ லவ் யு!" என்று கூறி அவள் எதிர்பார்க்காத நேரத்தில் அவள் கைபிடித்து சேர்த்தணைத்து அழுத்தமாக இதழோடு இதழ் பதித்தான்.

ஒருநொடி என்ன நடக்கிறது என்று தெரியாமல் தன்நிலை புரிய கோவம் கொண்டவளாய், அவன் கன்னத்தில் மாறி மாறி ‘பளார்’ என்று அரைகொடுத்தாள்.

"ஹவ் டேர் யூ ராஸ்கல்!" என்று கோபம் அடங்காமல் மறுபடியும் அவனை அடிக்க கை ஓங்கினாள்.

இதையும் எதிர்பார்த்தவன் போல் அவள் கையை தடுத்து சுவரோடு அவளை சாய்த்து அணைபோட்டான் வெளி வராதபடி.

அவனை சுட்டெரிப்பது போல் முறைத்தவளின் விழிகளை நேருக்கு நேராக பார்த்தவன்.

‘நீ என்னவள்’ என்பது போல் இருந்தது அந்த பார்வை.

"இங்க பாரு! இனிமே ஒரு நிமிஷம் கூட என்னால உ்ன்னை விட்டு இருக்கமுடியாது. நீ என்னவள்! எனக்கு மட்டும் தான்! யு ஆர் ஆல்வேஸ் பி மைன்!" என்று கூறி தள்ளி நின்றான்.

"பத்து நாள் டைம் எடுத்துக்கோ. என்னை பத்தி நல்லா விசாரிக்கனுமா விசாரிச்சிக்க. இது என் விசிட்டிங் கார்டு! பதினோராவது நாள் கண்டிப்பா உன் கழுத்துல நான் தாலி கட்டுவேன்!" என்றவன் அவள் பதிலுக்கு காத்திராமல் வெளியே சென்றான்.

"மது! மது! என்னடி நின்னுட்டே இருக்க? வா போகலாம். யார் அவர்? என்ன வேணுமாம்? ஏதாச்சும் பேசுடி மது! மது!" சுமி தன்னை உலுக்குவது கூட தெரியாமல் சிலைப்போல நின்றிருந்தாள் மது.

சிறிதுநேரம் கழித்து தன்னை ஆசுவாச படுத்திக்கொண்டு அந்த விசிட்டிங் கார்ட்டை கையில் எடுத்து பார்த்துகொண்டே இருந்தாள்.

அதில் கன்னத்தில் குழிவிழ வருண் தன்னையே பார்த்து சிரிப்பது போல் இருந்தது.

"தலைவலிக்குது சுமி! வீட்டுக்கு போலாம் வா!" என்று போய் கொண்டிருந்தாள்.

வீட்டிற்குள் வந்தவள்,அண்ணி கூப்பிடுவது கூட கேட்காமல் தன் ரூமிற்கு சென்று கதவை சாத்திக்கொண்டாள்.

"என்னாச்சு சுமி? ஏன் மது நேரா உள்ள போய்ட்டா?" என்றாள் மோகனா.

"தெரியல அண்ணி. ஹாஸ்பிடல்ல இருந்தே அப்படிதான் வரா" என்றாள் சுமி கவலையாய்.

‘எவ்வளவு திமிர் இருக்கும்? முன்பின் தெரியாத பெண்ணிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என தெரியாதவனா? படிச்சிருக்க மாட்டான் முட்டாள் எனக்கு வர்ற கோபத்துக்கு அவனை....’ என்று வசை பாடிக்கொண்டு இருந்தாள் மது.

உள்மனம் ‘ஆயிரம் கூறினாலும் உனக்கும் அவனை பிடித்திருக்கிறது தானே!’ என்று நக்கலாய் சிரித்தது.

‘யார் என்றே தெரியாது? எப்படி பிடிக்கும்? அப்படியே பிடித்திருந்தால் கூட அதற்காக என் அனுமதி இல்லாமல் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா?’ என்று கேள்விகேட்டது அவளின் இன்னொரு மனம்.

இப்படி அவளுக்குள் ஏகப்பட்ட மனப்போராட்டம்... .

தன் படுக்கையில் அமர்ந்தவள் என்ன நடந்தது? யார் அவன்? என்று யோசித்தவள், வேகமாக தன் லேப்டாப்பை எடுத்து வருண்சுந்தர் என்று தட்டினாள்.

வருணின் குழந்தை போன்ற சிரித்தமுகத்துடன், அவனை பற்றிய அணைத்து செய்திகளும் படித்துமுடித்தாள்.
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
167
Points
43
5. நீ என்னுடயவள்

ஹாஸ்பிட்டலை விட்டு வேகமாக வெளியே வந்து காரில் அமர்ந்த வருண்.

‘ச்சே! நானா ஒரு பெண்ணிடம் இப்படி நடந்து கொண்டேன்? எத்தனை பெண்களை இதுவரை பார்த்து பேசி இருப்பேன். யாரிடமும் இப்படி ஓரு எண்ணம் தோன்றியது இல்லையே? இவ்வளவு காலம் அவளை காணாமல் இருந்ததால் வந்த வேகம். இவளை கண்டதில் இருந்து என் வசம் நானில்லையே? என்ன இருந்தாலும் நான் செய்தது தவறு. இனி அவள் அனுமதி இல்லாமல் இப்படி நடந்துகொள்ள கூடாது. இதற்கு ஒரு வழி செய்ய வேண்டும்’ என்று தனக்குள் பேசிகொண்டவன் காரினை இயக்கி, நேராக தன் வீட்டிற்கு வந்தவன் ரவிக்கு போன் செய்து ”இங்க பார்! நீ என்ன செய்வியோ எனக்கு தெரியாது? இன்னும் அரைமணி நேரத்துல மதுவோட டீடெயில்ஸ் எல்லாம் எனக்கு வேணும்" என்றான்.

"என்னடா சொல்ற?" என்றான் ரவி அதிர்ச்சியாய்.

"சொல்றது புரியலையா? ஐ வாண்ட் டி டீடெயில்ஸ் ஆப் ஹெர் இம்மீடியட்லி, காட் இட்" என்று போனை வைத்தவன்.

ஒரு வெள்ளை தாளில்

"உன் விழியெனும்

கூரிய அம்பு

சத்தமின்றி என் மார்பை

துளைத்து எடுக்க

உயிர் இருந்தும்

உன் மடியில்

சாய்த்தது என் மனம்!"

"இத்தனைகாலம் யாரிடமும்

ஏற்படாத ஈர்ப்பு

உன்னைக்கண்டதும்

உண்டானதால்....

மறுபேச்சின்றி சரணடைந்தது

என் இதயம் உன்னிடத்தில்!

நீ என்னவள் என்று

கண்டுகொண்டதாலோ?"


"நல்லா... காட் இட்! எப்படி தான் நம்மள இப்படி கோர்த்து விடறாங்கன்னு தெரியலையே? டீடெயில்ஸ் வேணும்ணா நான் என்ன பண்றது? யோசிப்போம்" என்றபடியே ஹாஸ்பிட்டல் உள்ளே சென்றான் ரவி.

"அப்பா! உங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும்” என்றான் வருண்.

தன் அப்பாவிடம் இதுபற்றி பேசுகையில் தான் வருணுக்கு தெரிந்தது மதுவின் அப்பாவும் தன் அப்பாவும் பால்ய சிநேகிதர்கள் என்று.

மதுவை தவிர்த்து அவள் குடும்பத்தினர் அனைவரையும் சந்தித்து இதுபற்றி பேசி எல்லோரும் ஒரு முடிவெடுத்தனர்.

தன் ரூமிற்கு வந்து மொபைலில் அவளுக்கு தெரியாமல் எடுத்த போட்டோவை பார்த்துக்கொண்டிருந்தான் வருண்.

இனி நீயே நினைத்தாலும் உன்னால் என்னிடம் இருந்து விலக முடியாது.

‘நீ என்றும்

என்னுடையவள்..

உன்

நிழல்கூட

என்னைக்கேட்க

வேண்டுமடி

உன்னோடு இருக்க’


அவளைப்பற்றி நினைத்துகொண்டே உறங்கியும் போனான்.

அங்கே உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தாள் மது.
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
167
Points
43
6. பதினோராவது நாள்

"உனக்கு நல்ல வரன் ஒன்னு வந்துருக்கு மா என்னோட ஸ்நேகிதன் பையன், எம்.பி ஏ முடிச்சிட்டு தனியா கம்பெனிவச்சி நடத்திட்டு இருக்கான். ஒரே பையன் ஒரு பொண்ணு படிச்சிட்டு இருக்கா, நாங்க எல்லாரும் பார்த்துட்டோம் எங்களுக்கு பிடிச்சிருக்கு அவங்களுக்கும் உன்ன போட்டோல பார்துட்டு ரொம்ப பிடிச்சிருக்கு நேர்ல பார்க்கணும்னு அவசியம் இல்ல, ஒரு வாரத்துல நிச்சயம் வச்சிக்கலாம்னு சொல்லிட்டாங்க மா! அண்ணிகிட்ட போட்டோ குடுத்துருக்கேன் பத்துட்டு உன் முடிவை சொல்லுமா! " என்றார்.

"அப்பா ! இதுல என்கிட்ட கேட்க என்ன இருக்கு நான் ஏற்கனவே நீங்க பார்க்கற மாப்பிளையை தான் மேரேஜ் பண்ணிபேன்னு சொல்லிருக்கேன்ல ",உங்க எல்லாருக்கும் பிடிச்சிருந்தா எனக்கு ஓகே பா", என்று சென்றுவிட்டாள்.

"நீ என்னுடையவள், எனக்கு மட்டும் தான்னு சொன்ன, நீ சொன்ன பத்து நாளுக்குள்ள எனக்கு மாப்ள பார்த்துட்டாங்க இப்போ என்ன பண்ண போன்ரேன்னு பார்க்கிறேன்" என்று தனக்குள் கூறிக்கொண்டாலும்,தன மனதின் ஒரு ஓரத்தில் அவனை பிடித்திருக்கு என்றும் சொல்லிக்கொண்டிருந்தது.

இந்த குழப்பதினால் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தாள்.

இரண்டு நாளும் தன் தங்கையை பார்க்கும் சாக்கி்ல் அவளை பார்ப்பதற்கு வந்திருந்தான் வருண் .

அவளை கண்டும் காணாததுபோல் தன்னை கட்டுப்படுத்தி கொண்டு இருந்தான்.

தன்னைஅவன் கண்டு கொள்ளவி்ல்லை என்பது அவளுக்கு நி்ம்மதியாக ஒரு புறம் ஏனோ மனம் கவலை கொண்டது.

உமாவை ஹாஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யும் போது மது ரூமிற்கு சென்றவன்

"ஹலோ! மேடம் என்ன முடிவு பண்ணிருக்கீங்க " என்றான்.

"ஹலோ! ப்ளீஸ் நீ யாருனே எனக்கு தெரியாது. எனக்கு நீ சொன்ன அதே 11வது நாள் நிச்சயதார்த்தம் எங்க வீட்ல பார்க்கற பையன தான்....." சொல்லிமுடிக்க விடாமல் அவள் இதழை சிறை பிடித்தான்.

தன் முழு பலம் கொண்டு அவனை வேகமாக தள்ளி விட்டாள்.

"இப்பவும் சொல்ரேன் என்ன தவிர யாரும் உன் கழுத்து யாரும் தாலிகட்ட முடியாது, உன்ன தொடவும் முடியாது " என்று அவள் கண்களை நேருக்கு நேரா பார்த்து கூறிவிட்டு போய்விட்டான்.

"என்ன இவன் நாம இவ்ளோ சொல்லியும் ஏதோதோ சொல்லிட்டு போரானே " என்று தலையில் அடித்து கொண்டாள்.

"திமிர் பிடித்தவன்".

அதற்கு பிறகு அவன் தொந்தரவு செய்யாததால் அதை மறந்து போனாலும் உள்ளுக்குள் ஒரு பயம் இருந்தது.

பத்து நாள் போனது தெரியவில்லை.

"மது உனக்கு பையன் போட்டோ வேணாமா? நீயும் கேட்பன்னு பார்த்த? இந்தா மாமா குடுக்க சொன்னார் திறந்து பார் செம சூப்பரா இருக்கார்" என் கண்ணடித்தாள்.

"அண்ணி போங்க அண்ணி !" மது.

"போட்டோவ திறந்து பார்க்கலாமா ?" மனதில் ஒரு வித சந்தோஷம் பயம் எல்லாம் கலந்த கலவையோடு போட்டோவை கையில் எடுப்பதற்குள் "ஹாய் ! " என்று கையில் இருந்து பிடுங்கி கொண்டு ஓடினாள் மீனு.

"மீனு ப்ளீஸ் டா குடுத்துடா என் செல்லம்ல பட்டுக்குட்டில குடுடா " என்று கெஞ்சிகொண்டே பின்னாடி ஓடினாள்.

வேகமாகஓடி தன் தந்தையின் மடியில் அமர்ந்து போட்டோவை முதுகிற்கு பின்னால் மறைத்து கொண்டாள்.

"என்ன என்ன? ரெண்டு பேருக்கும் சண்டை? மீனு கண்ணா அத்தைகிட்ட இருந்து என்ன எடுத்துட்டு வந்திங்க ?" என்றான் நந்து.

"போட்டோ" என்றது மழைக்குரலில்.

"அப்படியா வெரி குட் ! காட்டுங்க நா பார்க்கறேன் " வாங்கி பார்ப்பது போல் பார்த்துவிட்டு "சரி! அத்தைகைல குடுத்திடலாம் என்று மதுவிடம் கொடுத்தான்.

போட்டோவை வெளியே எடுப்பதற்கும் போன் அடிப்பதற்கும் சரியாக இருந்தது.

"ஹலோ! யாரு?" மது.

"ஐ லவ் யூ!" வருண்.

"யாருவேணும் உங்களுக்கு ராங் நம்பர்" மது.

"ராங் நம்பர் இல்லடி கரெக்டான நம்பர் தான் " வருண்.

"ஐ லவ் யு!" வருண்.

"நாளைலர்ந்து நீ எனக்கு தான் சொந்தம்" என்று போனை வைத்தான்.
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
167
Points
43
7. நிச்சயம்:

பதினோராவது நாள் ....

வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது..

எல்லோரும் மிகவும் பரபரப்பாக இருந்தார்கள்.

ஆனால் மது, தன் நிலை மட்டும் இப்படி இருக்கிறதே? என்று நொந்துகொண்டவள்,

மனம் படபடத்தது. ஏனோ, உடலில் ஒரு நடுக்கம், ஒரு விதமான படபடப்பு, எப்படி இருப்பார் மாப்பிள்ளை பேர் ராகவ் என்று தெரியும்..

"மது மது ? வா போலாம் !மாப்பிள்ளை வீட்லருந்து வந்துட்டாங்க" என்றபடி சுமி கூட்டிசென்றாள். சபையில் எல்லோரையும் பார்த்து வணக்கம் சொல்லும்போது அவனை பார்த்து விட்டாள்.

ஒரு நிமிடம் தள்ளாடி விழ போனவளை சுமி பிடித்து விட்டாள்.

எதுவும் பேசாமல் வேகமாக தன் ரூமிற்கு ஓடினாள்.

"மது!" என்றவர்களை கையமர்த்திவிட்டு "நானே கூட்டிட்டுவரேன்" என்று கண் அசைத்துவிட்டு உள்ளே சென்றான்.

உள்ளே வேகமாக வந்தவள் அண்ணி தன்னிடம் கொடுத்த அந்த போட்டோவை எடுத்து பார்த்தாள்.

கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது.

அந்த போட்டோவில்...

அழகாக கன்னத்தில் குழிவிழ சிரித்து கொண்டிருந்தான்...

வ...... ரு...... ண்....

வாசலில் மார்பிற்கு குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு மதுவையே பார்த்து சிரித்து கொண்டிருந்தான் வருண்.

அவனை பார்த்த மது பக்கத்தில் சென்றவள் "பளார்..." என்று கன்னத்தில் அறைந்தாள்.

"ஏன்டா இப்படி பண்ண?" என்று அவன் மார்பில் மாறி மாறி கொஞ்சலாய் அடித்தாள்.

"ஆ! வலிக்குதுடி!" வருண்.

தன்னை அடித்து கொண்டிருந்த மதுவின் கைகளை பிடித்தபடி மதுவை காதலோடு பார்த்தான்.

அந்த கண்களின் வெப்பம் தாங்காது தரையை நோக்கினாள்.

அவனிடம் இருந்து தன் கைகளை விடுவித்து கொண்டு உள்ளே ஓடினாள்.

உள்ளே வந்து கதவை தாழிட்டவன்,

"ம..து.." மிக அருகில் அவள் குழலருகே அவனின் குரல் கேட்கவே,

"தேன் குடித்தாலும்

இவ்வளவு இனிப்பாய்

இருக்காது அன்பே !

உன் குழலிலிருந்து வரும்

என் பெயர் இத்தனை

திதிக்கும் மாயமெனனவோ!


"ஹு..ம்.." ஈனஸ்வரத்தில் முனகினாள்.

அவள் தோளில் கை வைத்து தன்புறம் திருப்பி "மது என்னை பாரேன்!" வருண்.

தன் ஆட்காட்டிவிரல் கொண்டு அவள் முகம் நிமிர்த்தி "என் கண்ண நேருக்கு நேர் பார்!" என்றான்.

"என்ன பாரேன் ப்ளீஸ்!" வருண்.

"உனக்கு என்னை பிடிச்சிருக்கா?"

"சொல்லு! உனக்கு பிடிச்சிருந்தா தான் நம்ம நிச்சயம் நட....."

முடிக்கும் முன் அவன் கன்னத்தில் இதழ் பதித்து சம்மதம் தெரிவித்தாள்.

முடிக்கும் முன் அவன்  கன்னத்தில் இதழ் பதித்து சம்மதம் தெரிவித்தாள்


"நடந்தது கனவா?" என்று கிள்ளி பார்த்தான் வலித்தது உண்மை தான்.

தன் மனம் கவர்ந்தவள் சம்மதம் கூறிவிட்டாள் என்று புரிய அவளை பார்த்து கண்ணடித்தான்.

"அப்ப இதுக்கு முன்னாடி நா குடுத்தது எல்லாம் உனக்கு பிடிச்சிருந்தது...."

"டக்......டக்...."

"மது உங்க ரொமான்ஸ் எல்லாம் அப்புறம் வச்சுக்கங்க. வெளிய எல்லாரும் வெயிட் பண்றாங்க. சீக்கிரம் வாங்க!" மோஹனா குரல் குரல் குடுத்தாள்.

"இதோ வரேண்ணி!" என்று கதவு திறக்க போனவளின் கை பற்றி இழுத்து இறுக்கமாக அணைத்து நெற்றியில் ஒரு இதமாக முத்தமிட்டான்.

அவன் மார்பின் கதகதப்பில் ஒரு நிமிடம் கண்மூடி ரசித்து...

"சரி சரி நாம அப்புறம் பேசலாம், வா போலாம்" என்று அவன் கை பிடித்து கூட்டி சென்றாள்.
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
167
Points
43
8.என் காதல்:

இருவரும் வருவதை பார்த்து எல்லோரும் சிரித்தார்கள்.

"மது! நீ சொல்லுமா உனக்கு வருண பிடிச்சிருா?" மதுவின் அப்பா கேட்டார்.

"பிடிச்சிருக்குப்பா! " சிரித்துகொண்டே வரூணை ஸநேகமாய் பார்த்தாள்.

"முதல் பார்வையிலே பறித்த

என் இதயத்தை .....

உன்னிடமே வைத்து கொண்டாய்!

அதற்குமாறாக இப்பொழுதாவது

நான் சுவாசிக.....

எனக்குள்

உன் மூச்சுக்காற்றை

முத்தமழையால் ....

தந்துவிடடடி கண்மணியே!


மாமா! நான் தான் சொனேன்ல  நிச்சயதார்தம் அன்னைக்கு  உங்க பொண்ணு என்ன பிடிச்சிருக்குனு  சொல்வா



"மாமா! நான் தான் சொனேன்ல நிச்சயதார்தம் அன்னைக்கு உங்க பொண்ணு என்ன பிடிச்சிருக்குனு சொல்வா.... அப்படி சொல்லலனா நா போய்டரேன்னு" மதுவை பார்த்து சிரித்தான்.

பெரியவர்கள் நல்லாசியுடன் எங்களின் நிச்சயம் நல்லபடியாக நடந்தது.

"உன் விரலினில்

என் விரல்நுழைய

இன்னும்...

ஒருதிங்கள் அதாவது....

முப்பது நாட்களை....

நான் விரல்விட்டு எண்ண

வேண்டுமா அன்பே!

இப்பொழூதே கூட்டிச்செல்

என்நினைவுகளை உன்னோடு ..... "


"என்ன இப்படி பார்த்துக்கிட்டே இருந்தா நா போகட்டா வேணாமா?" வருண் அவள் கண்களை பார்க்க ... வெட்கத்தில் தலைகுனிந்தாள் மது.

"மது..." கூப்பிட்ட வரூனை என்ன என்பது போல் பார்த்தாள்.

"இந்த கோலிகுண்டு கண்ணவச்சு இப்படி பார்த்தே என்ன கொல்றடி! ராட்சஸி" என்றான் வருண்.

"இவ்ளோ பண்ணிருக்கேன் ஒரே ஒரு கிஸ்கூட கிடையாதா?" காதலாய் கேட்டவனை பார்த்து கிடையாது என்று இருவரும் வருவதை பார்த்து எல்லோரும் சிரித்தார்கள்.

"மது! நீ சொல்லுமா உனக்கு வருண பிடிச்சிருா?" மதுவின் அப்பா கேட்டார்.

" பிடிசிருக்குபா! " சிரித்துகொண்டே வரூணை ஸநேகமாய் பார்த்தாள்.

"முதல் பார்வையிலே பறித்த

என் இதயத்தை .....

உன்னிடமே வைத்து கொண்டாய்!

அதற்குமாறாக இப்பொழுதாவது

நான் சுவாசிக.....

எனக்குள்

உன் மூச்சுக்காற்றை

முத்தமழையால் ....

தந்துவிடடடி கண்மணியே!



"மாமா! நான் தான் சொனேன்ல நிச்சயதார்தம அன்னைக்கு உங்க பொண்ணு என்ன பிடிச்சிருக்குனு சொல்வா....அப்படி சொல்லலனா நா போய்டரேன்னு" மதுவை பார்த்து சிரித்தான்.

பெரியவர்கள் நல்லாசியுடன் எங்களின் நிச்சயம் நல்லபடியாக நடந்தது.

"உன் விரலினில்

என் விரல்நுழைய

இன்னும்...

ஒருதிங்கள் அதாவது....

முப்பது நாட்களை....

நான் விரல்விட்டு எண்ண

வேண்டுமா அன்பே!

இப்பொழூதே கூட்டிச்செல்

என்நினைவுகளை உன்னோடு ..... "


"என்ன இப்படி பார்த்துக்கிட்டே இருந்தா நா போகட்டா வேணாமா?" வருண் அவள் கண்களை பார்க்க .....வெட்கத்தில் தலைகுனிந்தாள் மது.

"மது..." கூப்பிட்ட வரூனை என்ன என்பது போல் பார்த்தாள்.

"இந்த கோலிகுண்டு கண்ணவச்சு இப்படி பார்த்தே என்ன கொல்றடி! ராட்சஸி" என்றான் வருண்.

"இவ்ளோ பண்ணிருக்கேன் ஒரே ஒரு கிஸ்கூட கிடையாதா?" காதலாய் கேட்டவனை பார்த்து கிடையாது என்று தலை அசைத்தாள்.

"ஹு.... ம்...! நா சொன்ன மாதிரி உன் கைல மோதிரம் போட்டுடேனா? நிச்சயம் முடிந்தால் பாதி கல்யாணம் முடிந்த மாதிரி தான், இன்னைலருந்து நீ என்னோட பொண்டாட்டி" வருண் கிளம்பும் போது கூறி கண்ணடித்ததை எண்ணி சிரித்தாள்.

"என்னடி நின்னுகிட்டே தூங்கறியா? அண்ணி உன்ன கூப்பிடறது காதுல விழலையா?" என்ற சுமியை முறைத்து கொண்டே முன்னேறினாள்.

"நேத்து கூட என்கூட தான இருந்த. ஆனா, வருண் தான் மாப்ள இவுங்க எல்லாரும் பிளான் போட்ருக்காங்கனு சொன்னியாடி உன்ன சாவடிச்சுடரேன்" மது.

(அவ கோவம் கரெக்ட் தான இந்த பக்கி இத பத்தி முதல்லயே சொல்லியிருக்கலாம்ல.. இப்ப பாரு தேவையில்லாம அடி வாங்குறா.")

சுமியை அடிக்க கொம்பு தேடியவள் கையில் மாட்டியது மூங்கில் கொம்பு...

"மது நா சொல்றத கேளு. இவொலத்தையும் பண்ண உங்க அத்தானை விட்டுட்ட? என்ன அடிக்க வந்தா என்னடி நியாயம்." என்ற கூறிக்கொண்டு உள்ளே வீட்டினுள் ஓடினாள்.

சுமியை அடிக்க துரத்தி கொண்டு ஓடியவள் தரையில் நீர் இருப்பதை கவனிக்காமல் ஒட வழுக்கி படியில் தலை மோதி,

"அம்மா... .."

எனும் அலறலோடு தரையில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தாள்.

"ம......து....." என்று கத்திக்கொண்டு மதுவை தூக்கினாள்.

"என்ன ஆச்சு...?" என்று எல்லோரும் அலறி அடித்து ஓடி வந்தார்கள்.

"ம...து...! ம...து..." எல்லோரும் கூப்பிடுவது தூரத்தில் கேட்பது போல இருக்க கண் திறக்க முடியாமல் மயங்கினாள் மது.

"மது கண்ணை திறடா மது... அம்மா..." என்று மதுவின் அப்பா கதற காது கேட்காமலே போனது மதுவிற்கு.

"மது அண்ணாவை பாருடா ம....து..." என்று அழுதுகொன்டே...

நந்தகுமார், மதுவை குழந்தை போல் அள்ளி காருக்கு கொண்டு சென்றான்.

ஹாஸ்பிடல வாசலில் காரை நிறுத்தி இறங்கியபடியே .....

"ந...ர்...ஸ்..." என்று கத்தியபடி மதுவை தூக்கி கொண்டு உள்ளே ஓடினான் நந்தகுமார்.

கண் விழித்தாளா மது...

We will see it in our next episode. Please share ur comments.

தலை அசைத்தாள் .

" ஹு.... ம்...! நா சொன்ன மாதிரி உன் கைல
மோதிரம் போட்டுடேனா? நிச்சயம் முடிந்தால் பாதி கல்யாணம் முடிந்தமாதிரிதான், இன்னைலருந்து நீ என்னோட பொண்டாட்டி வருண் கிளம்பும்போது கூறி கண்ணடித்ததை எண்ணி சிரித்தாள் .

"என்னடி நின்னுகிட்டே தூங்கறியா? அண்ணி உன்ன கூப்பிடறது காதுல விழலையா?" என்ற சுமியை முறைத்து கொண்டே முன்னேறினாள்
"நேத்து கூட என்கூட தான இருந்த ஆனா வருண் தான் மாப்ள இவுங்க எல்லாரும் பிளான் போட்ருக்காங்கனு சொன்னியாடி உன்ன சாவடிச்சுடரேன்" மது.

(அவ கோவம் கரெக்ட் தான இந்த பக்கி இத பத்தி முதல்லயே சொல்லியிருக்கலாம்ல ... .. இப்ப பாரு தேவையில்லாம அடி வாங்குறா ..")

சுமியை அடிக்க கொம்பு  தேடியவள்  கையில் மாட்டியது  மூங்கில் கொம்பு


சுமியை அடிக்க கொம்பு தேடியவள் கையில் மாட்டியது மூங்கில் கொம்பு.....

"மது நா சொல்றத கேளு இவொலத்தையும் பண்ண உங்கால விட்டுட்ட? என்ன அடிக்க வந்தா என்னடி நியாயம்." என்ற உள்ளே வீட்டினுள் ஓடினாள்.

சுமியை அடிக்க துரத்தி கொண்டு ஓடியவள் தரையில் நீர் இருப்பதை கவனிக்காமல் ஒட வழுக்கி படியில் தலை மோதி,

"அம்மா..."

எனும் அலறலோடு தரையில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தாள்.

"ம......து....." என்று கத்திக்கொண்டு மதுவை தூக்கினாள்.

"என்ன ஆச்சு...?" என்று எல்லோரும் அலறி அடித்து ஓடி வந்தார்கள்.

"ம....து....! ம.....து....." எல்லோரும் கூப்பிடுவது தூரத்தில் கேட்பது போல இருக்க கண் திறக்க முடியாமல் மயங்கினாள் மது.

"மது கண்ணை திறடா மது.... அம்மா....." என்று மதுவின் அப்பா கதற காது கேட்காமலே போனது மதுவிற்கு....

"மது அண்ணாவை பாருடா ம....து..." என்று அழுதுகொன்டே...

நந்தகுமார், மதுவை குழந்தை போல் அள்ளி காருக்கு கொண்டு சென்றான்.

ஹாஸ்பிடல வாசலில் காரை நிறுத்திஇறங்கியபடியே..

"ந...ர்...ஸ்..." என்று கத்திக்கொண்டு மதுவை தூக்கிகொண்டு உள்ளே ஓடினான் நந்தகுமார்.

கண் விழித்தாளா மது...?
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
167
Points
43
9.ஹாஸ்பிடல்

கவலை தோய்ந்த முகத்தோடு அனைவரின் கண்களும் ஐ.சி.யுவிற்கு வெளியே எரியும் சிகப்பு நிற விளக்கையே பார்த்து கொண்டிருந்தனர் .

வருணின் வீடு,

எல்லோரும் உள்ளே செல்ல, காரை விட்டு இறங்கியவன் போன் அடித்தது.

"ஹலோ!" என்று காதில் வைத்தான்.

"எ.....ன்..ன.....?" என்றான் பதட்டமாக.

"எந்த ஹாஸ்பிடல் ? நா உடனே வரேன்."

வேகமாக காரை ஸ்டார்ட் செய்து ஆஸ்பிட்டலுக்கு வண்டியை ஓட்டினான்.

"ஐயோ! மது உங்கிட்ட பேசிட்டு வந்து அரைமணி நேரம் கூட ஆகலயே? என்னடி ஆச்சு உனக்கு?" என்று புலம்பி தவித்தான்.

"உனக்கு ஒன்னும் ஆகாது டா. நா வந்துட்டே இருக்கேன். உன்ன பார்த்து லவ் பண்ணது வேணா பத்து நாளா இருக்கலாம்டி! ஆனா உனக்கும் எனக்கும் பூர்வஜென்மத்து பந்தம் இருக்கு, உன்ன பார்த்த அந்த நிமிஷமே எனக்குள்ள ஒரு மாற்றம், இனி உன்ன யாரும் என்கிட்டேர்ந்து பிரிக்கமுடியாதுனு தோணுச்சுடி!"

"அந்த எமனே வந்தாலும் உன்ன என்கிட்டே இருந்து பிரிக்கமுடியாதுடி!" காரை ஓட்டிக்கொண்டே சின்ன குழந்தை பிதற்றுவது போல் அழுதுக்கொண்டிருந்தான்.

ஒரு ஆண்மகன் எந்த சோதனை வந்தாலும் அவ்வளவு எளிதில் கண்கலங்காமல் தன் கண்ணீரை இதயத்திலேயே அடக்கி வைக்கிறான்.

தானே உடைந்தால் தன் சொந்தங்களையெல்லாம் காப்பது யார் என்று மன்சஞ்ஜலங்களை ஒற்றை புன்னகையில் மறைத்து வைக்கும் கலை தெரிந்தவன்.

தானே உடைந்தால் தன் சொந்தங்களையெல்லாம் காப்பது யார் என்று மன்சஞ்ஜலங்களை ஒற்றை புன்னகையில் மறைத்து வைக்கும் கலை தெரிந்தவன்


அத்தனையும் மீறி அவன் கண்களில் இருந்து கண்ணீர் வருகிறதென்றால் அது ஒரு பொக்கிஷம்.....

தன் பாசம் முழுதும் கொட்டிவைத்திருக்கும் ஒருவருக்கு சோதனை என்றால் வருகின்ற அதீத அன்பின் பெயர் தான் கண்ணீர்.....

கார் ஹாஸ்பிடலை நெருங்கும் போது எல்லா கடவுளையும் வேண்டினான்.

ஐ.சி.யு வை நெருங்க நெருங்க தன் இதயத்துடிப்பு தனக்கே கேட்பதை போல் உணர்ந்தான்.

"மாமா! என்னாச்சு இப்ப எப்படி இருக்கா மது? டாக்டர் என்ன சொன்னாங்க?" வரூண் கேட்க,

"இன்னும் டாக்டர் வெளிய வரலப்பா" என்றான் நந்தகுமார் கவலையாக.

கண்மூடி ஊரில் இருக்கும் அணைத்து கடவுளையும் வேண்டினான்.

(நம்ம பழக்கம அதானே.. சோதனை வந்தா தான் கடவுள் கண்ணுக்கே தெரிவார், இல்லனா ஹாய்! ஹலோ! இதுவே அவருக்கு பெருசு)

"டாக்டர்! மது எப்படி இருக்கா? அவளுக்கு ஒன்னும் இல்லல" வெளியே வந்த டாக்டரை கேட்டான நந்தகுமார்.

"கடவுளோட அருள்தான்! கால் தடுக்கி முன்னாடி விழுந்தவங்க, பின்னாடி விழுந்திருந்தா எங்களால காப்பாத்திருக்க முடியாது! முன்நெத்தியில பலமா அடிப்பட்டு இருகிறதால ஆறு தையல் போட்ருக்கோம். அதோட கீழ விழுந்தாலே கால் ப்ராக்சர் ஆகியிருக்கு கட்டு போட்ருக்கேன் பார்த்துக்கோங்க! திரி ஆர் போர் டேஸ் இங்க தான் இருக்கனும்" கூறிவிட்டு டாக்டர் போய்ட்டார்.

"அவங்களுக்கு தூக்க மருந்து கொடுத்துருக்கு ரெண்டு மணி நேரத்துக்கு கண்விழிக்க மாட்டாங்க டிஸ்டர்ப் பண்ணாம பாருங்க. ஒருத்தர் மட்டும் தான் பேஷண்டோட இருக்கலாம் மத்தவங்க பார்த்ததும் கிளம்பிடுங்க" கூறிவிட்டு சென்றாள் நர்ஸ்.

சுருண்டு விழுந்த கோழியை போல் படுத்திருந்தாள். ஓடி சென்று கட்டிப்பிடித்து அழவேண்டும் போல் இருந்தது தன்னை கட்டுப்படுத்தி கொண்டு வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு இருந்தான் வருண்.

"குழந்தை கூட தோற்றதடி

உன் சிணுங்களின் முன்னே,

அம்மாவை தொலைத்த குழந்தை போல்

நிற்கின்றேன் உன் முகம் காண,

எழுந்து வா! என் மூச்சடைக்கிறது

நீஇல்லாமல்...."


'சும்மா படுத்துருந்தா கூட என்ன பாடா படுத்துறடி ராட்சசி சீக்கிரம் எந்திரிடி'

"சரி! நீங்க எல்லாரும் கிளம்புங்க, நா இங்கேயே இருக்கேன். எனக்கு டிரஸ் மட்டும் எடுத்துட்டு வாங்க." என்றாள் மோஹனா நந்துவை பார்த்து.

"சாரி. நா குறுக்க பேசறதுக்கு மன்னிச்சிக்கோங்க. நா இங்க தான் இருக்க போறேன். நீங்க எல்லாருமே கிளம்புங்க" என்ற வருணிடம் "இல்ல தம்பி அது சரிவராது. நீங்க கிளம்புங்க நா பார்த்துகிறேன்" என்றாள்.

"இல்ல மதுவை விட்டு ஒரு அடி கூட நகர மாட்டேன் " என்றான் தீர்க்கமாக..
 
Top Bottom