Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


என் உயிரினும் இனிய -தமிழ் நிவேதா

Sowby

New member
Messages
3
Reaction score
3
Points
1
என் உயிரினும் இனிய

நாயகன்: சூரியா
நாயகி: ரேவதி

திருச்சி அருகே உள்ள காவி பூந்துறை கிராமத்தில் ராமசாமி ராஜம் தம்பதிக்குப் பிறந்த ஒரே பெண் ரேவதி. பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் அவளுக்கு அவளது கிராமத்தினை முன்னேற்ற வேண்டும் என்பது இலட்சியம். அருணாச்சலம் கமலம் தம்பதிக்கு மூன்று பிள்ளைகள். மூத்தவள் மௌனிகா திருமணமாகி வெளிநாட்டிலும் கடைக்குட்டி நிகிலா பள்ளியிலும் படித்து வருகிறாள். சூரியா மென்பொருள் நிறுவனம் ஒன்றில் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறான். ரேவதியின் அப்பத்தாவைக் காண வந்த கமலம் அவளை தன் மருமகளாய் தேர்ந்தெடுக்கிறார். அதே நேரத்தில் விடுமுறைக்காக தாயைக் காண வந்த சூரியா ரேவதியின் முதல் சந்திப்பே சண்டையில் முடிகிறது.

இதற்கிடையில் இருவருக்கும் திருமணம் செய்துவைக்க இருவீட்டுப் பெரியோர்களும் முடிவு செய்கின்றனர். ஒருவரையொருவர் அறியாமலே திருமணத்திற்கு சம்மதிக்கின்றனர். திருமணத்தன்று தங்கள் இணையினைக்கண்டு அதிர்ச்சியடைந்தவர்கள் பெற்றோருக்காக பந்தத்தை 18 மாதங்கள் தொடர முடிவு செய்கின்றனர். சூரியாவின் நிறுவனம் சென்னையில் மாற்றல் தர, இருவரும் அங்கு தங்கிக் கொள்கின்றனர். அவளது இஷ்டப்படி அவளது படிப்பினை சென்னையில் தொடர உதவுகின்றான். மாதங்கள் உருண்டோட ரேவதியின் படிப்பு முடிந்து அவளுக்கு மும்பையில் வேலை கிடைக்கிறது. அவள் மனதில் கணவனுக்கான காதலும் பெருகுகிறது. சூரியாவும் வேறொரு நாட்டிர்க்குச் செல்ல முடிவி எடுக்கின்றான்.

ரேவதி தன் இலட்சியத்தினை நிறைவேற்ற மும்பை சென்றாளா?? அல்லது சூரியாவிடம் தன் மனதினை வெளிப்படித்தினாளா?? சூரியா ரேவதியை விரும்புகிறானா??? கதையினைப் படித்துத் தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!!!
 
Top Bottom