Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


என் காதலும் என்னாகுமோ !!

Shanmathy Saravanan

New member
Messages
1
Reaction score
4
Points
3
என் காதலும் என்னாகுமோ !!

அத்தியாயம் - 1

காலை காப்பியின் மனம் மூக்கை துளைக்க, அவள் மெல்ல கண்களை விழிக்க முயற்சி செய்து கொண்டிருக்கயில்.. "ஏய் அம்மூ எழுந்திருடி, என் செல்லம்ல எழுந்திருடி.. " என்ற அவனின் குரல் கேட்டது. குரலின் திசையை நோக்கியவளுக்கு, வாசன், ஆம் நம் கதையின் நாயகன், வீட்டினில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டிருக்கும் இனிமையான காட்சியுடன் காப்பியும் காத்திருந்தது. நேரம் ஆறு பதினாறு என்று காட்டியது அவள் கையில் எடுத்த கைபேசி.

எப்போதும் காப்பி மட்டும் அல்ல காலை உணவும் சேர்த்து தயார் செய்து விட்டு வேலைக்கு கிளம்பும்போது எழுப்பி விடும் தன்னவன் இன்று நேரமாக எழுப்பியது ஏன் என யோசித்தவாரே முகம் கழுவச் சென்றாள் நம் ஹ்ருதயா.

முகத்தை கழுவிவிட்டு வந்தவளிடம் “இன்று நீ சமையல் செய்து விடு, நான் மீடிங்க்கு ப்ரெசென்டஷன் ரெடி பண்ணனும், ரொம்ப இம்பார்ட்டன்ட் டாஸ்க், ப்ரேக்பாஸ்ட் மட்டும் செஞ்சுட்டு காலேஜுக்கு கிளம்பு” என்று கூறி காப்பியை கையில் கொடுத்துவிட்டு தனது லேப்டாப்பில் மூழ்கினான் வாசன்.

சரி என்றவாறு தலையசைத்தவள் அவன் எதிரே அமர்ந்தபடி சொன்னாள் "இன்று நான் காலேஜ் செல்லவில்லை" என்று.

தன் கவனத்தை லேப்டாப்பில் இருந்து விலக்காமல் "ஏன்?" என்றவனிடம்

"அட்டெண்டன்ஸ் கம்ப்லீட் செஞ்சுட்டேன், செமஸ்ட்டர் வருது கொஞ்சம் படிக்கனும்" என பதிலளித்துவிட்டு காப்பியும் குடித்து முடித்தாள்.

நேரம் எட்டுமணியளவை கடந்திருக்க தன் ப்ரெசென்டஷனை முடித்து குளித்து கிளம்பியவனுக்கு சூடாக டிபன் காத்திருந்தது. அதை ருசித்தவன் "உப்பு இல்லை , காரம் அதிகம்" என குறைகளை கூறினாலும் அவள் நெற்றியில் முத்தம் ஒன்றை பதித்துவிட்டு வெளியே செல்ல ஆயத்தமானான்.

'வீட்டை சுத்தம் செய்துவிட்டு படிக்கனும்' என்று நினைத்துகொண்டே திரும்பியவள் கண்களில் பட்டது டேபிலின் மீது இருந்த பென்டிரைவ். 'மீட்டிங்க் இருக்கு, இம்பார்ட்டன்ட் டாஸ்க்னு சொன்னானே, இப்போ பென்டிரைவ விட்டுட்டு போய்டானே..' என தலையில் தட்டிக்கொண்டு.. அதை எடுத்துக்கொண்டு அவன் பின் ஓடினாள்.

அதற்குள் அவன் லிப்டில் சென்றிருக்க, அவள் படிகளில் வேகமாய் இறங்கிச் செல்லும்முன் பார்க்கிங் வரை போய்விட்டான் வாசன். அவன் காரை எடுப்பதற்க்குள் அங்கு போக முடியாது என்று நினைத்தவள் "ஒரு நிமிஷம் நில்லு டா" என சத்தமாக கத்தினாள்.

அவள் அழைப்பை கேட்டு திரும்பியவன் 'எதற்கு இப்படி ஓடி வருகிறாள்' என எண்ணியவாரே அவள் திசை நடந்தான்.

"பென்டிரைவ விட்டுட்டு வந்துட்ட அதான் கொண்டு வந்தேன்" என்றாள்.

"லூசு, நான் லேப்டாப்பில் தான் ப்ரெசென்டஷனை வெச்சுருக்கேன், அதில் இருப்பது எக்ஸ்ட்ரா காப்பி தான். நான் என்ன உன்னை மாதிரியா எதாச்சும் முக்கியமான விசையத்தயெல்லாம் கூட மறப்பதற்கு" என்று செல்லமாக அவள் தலையில் குட்டினான், இருந்தும் அவள் முகம் சுருங்குவதை பார்த்து அவன் மனம் இலக,

"சாரி டி... உன்ன இப்படி நாலு மாடிக்கு படி இறங்கி ஓடி வரவெச்சுட்டேன்.. என்ன மன்னிச்சுடு ஹ்ருதயா..." என்று உருக.. சரி என்று மெல்லிய சிரிப்புடன் அவனை வழியனுப்பினாள்.

தனது அப்பார்ட்மென்ட்-க்கு செல்லும் வழியில் இருந்த அந்த பெண்மணி தங்கள் இருவரையும் வெகு நேரமாக கவனித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தாள். தனது தாயை விட வயது சற்று கூடுதலாக இருக்கும் அவருக்கு, வெளியில் செல்லும்போது அடிக்கடி பார்த்திருந்த நியாபகம். பக்கத்தில் வசிப்பவராக இருக்கலாம் என்று ஊகித்தபோதே அவர் தன்னை பார்த்து புன்னகைப்பதை அறிந்து தானும் பதிலுக்கு புன்னகை செய்தாள்.

"ஹ்ருதயா" என அவர் கூப்பிட 'இந்த ஊரில் தன்னை யாருக்கு அடையாளம் தெரியும், யாரவது சொந்தமாக இருக்குமோ, அய்யோ.. இப்போ என்ன செய்யப்போறேன்.. தெரியலையே...' என பல கேள்விகள் மனதில் எழ.. பயத்தை வெளியில் காட்டாமல் "என்னை உங்களுக்கு தெரியுமா?" என்று கேட்டாள்.

"உன்னை தெரியாமல் இருக்குமா" என்றவரின் பதிலில் அதிர்ந்தாள் ஹ்ருதயா.

"மூச்சுக்கு முன்னூறு தடவை உன் புருஷன் உன் பேரை சொல்லுரப்போ, ஹ்ருதயா, அம்மூ, அம்மூகுட்டி என்று கொஞ்சுரப்போ தெரியாமல் இருக்குமா" என்று அவர் சொன்ன பிறகே குழப்பம் தெளிந்து நிம்மதி அடைந்தாள்.

பக்கத்து ப்ளாட்டினில் வசிப்பதாய் அறிமுகம் செய்தவரிடம் எப்படிக் கூறுவாள் அவன் தன் கணவன் அல்ல காதலன் மட்டுமே என்று !

ஆம் அவர்கள் காதலர்கள் மட்டுமே!!! திருமணம் செய்யாமல் இணைந்து வாழும் இணையர்கள்...

சங்க காலத்திலேயே தலைவனும் தலைவியும்,

"யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம் முறைக்
கேளீர் ?
யானும் நீயும் எவ் வழி அறிதும்?
செம் புல பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே"

என்று வாழ்ந்திருந்தாலும் இன்றைய காலத்தில் சட்டம் அனுமதித்தாலும் சமூகத்தால் அங்கீகரிக்க படாமலேயே இருக்கிறது லிவிங்க் டுகெதர் என்னும் திருமணம் செய்யாமல் வாழும் காதல் வாழ்வுமுறை.

நம் கதையின் நாயகனும் நாயகியுமான வாசனும் ஹ்ருதயாவும் அவ்வாறாகவே தற்போது வாழ்க்கையை தொடர்கின்றனர்.

தஞ்சாவூரை பூர்வீகமாய் கொண்டவர்கள் ஹ்ருதயா மற்றும் வாசன் குடும்பத்தினர், ஊரில் நல்ல செல்வாக்கான பெருந்தனக்காரர்கள் மட்டும் அன்று உறவினர்களும் தான்.

வாசனின் பதின் பருவத்தில் அவர்களின் குடும்பத்தின் தொழில் நொடிந்தது... இருப்பதை விற்றுவிட்டு கோயம்புத்தூருக்கு குடி பெயர்ந்தவர்கள் சில காலத்திலேயே அதாவது வாசன் கல்லுரியில் படிக்கும் பொழுது, விபத்தில் அவனை மட்டும் அனாதையாய் விட்டு செல்ல.. சொத்து ஏதும் இல்லாததால் உறவினர்களாலும், கைவிடப்பட்டவன் தனி மரமாய் வளர்ந்து படிப்பை முடித்து வேலைக்கு சென்று கொண்டு இருக்கிறான்.

கோயம்புத்தூரின் மிக பிரபலமான கல்லூரியில் இளங்கலை படிப்பை தொடங்கிய ஹ்ருதயா சிறிது நாட்களில் வாசனை தற்செயலாக ஒரு காப்பி ஷாப்பில் சந்தித்தாள். இருவரும் மீண்டும் நட்பு பாராட்ட, அவளின் சிறுவயது முதல் உற்ற தோழனான வாசனும் அவளும் ஒருவர் மீது ஒருவர் காதல் வயப்பட்டனர். மூன்று வருடங்களுக்கு பிறகு, ஒன்றாய் ஒரே வீட்டினில் வசிக்கத் தொடங்கி தற்போது ஆறு மாதங்கள் ஆகிவிட்டன.

தன்னை அறிமுகம் செய்துகொண்ட பெண்மணியிடம் நலம் விசாரித்துவிட்டு புன்முறுவலோடு விடைபெற்று தன் இல்லம் வந்தடைந்தாள் ஹ்ருதயா.

'வாசன் சீக்கிரம் செட்டில் ஆகனும், நானும் படிப்பு முடித்து வேலைக்கு போகனும் அதுவரைக்கும் எந்த பிரச்சனையும் வர கூடாது' என மனதில் கடவுளை வேண்டியவள் அறிந்திருக்கவில்லை, அவள் வரக்கூடாது என வேண்டிய பிரச்சனை தன் அண்ணனின் ரூபத்தில் கோயம்புத்தூர் வந்து கொண்டு இருக்கிறது என்று.

_ தொடரும்
 
Top Bottom