Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - [email protected]


என் காதல் நீ! உன் கணவன் நான்!

Sevanthi Durai

Crazy Writer
Vannangal Writer
Team
Messages
273
Reaction score
287
Points
93
காதல் கணவன் 1

⚠️கதை ஒரு மாதிரி.. என்ன மாதிரின்னு எனக்கே தெரியாது. அதனால இதை கதையா மட்டும் நினைச்சி படிக்கவும்..‌நன்றிகள்..

அதிகாலை நேரம்

வெற்றி நல் உறக்கத்தில் இருந்தான். கனவில் தனது காதலி அம்ருதாவோடு சேர்ந்து சிரித்து பேசி மகிழ்ந்துக் கொண்டிருந்தான்.

அவனின் அந்த அழகிய கனவை கலைக்கும் விதமாக கைபேசி ஒலிக்க ஆரம்பித்தது.

"ஹலோ.." கண்களை மூடியபடி அரை தூக்கத்தோடு பேச ஆரம்பித்தான். எதிரில் இருந்தது யாரென்று கூட கண் திறந்து பார்க்கவில்லை.

"அம்ருதாவை இன்னைக்கு பொண்ணு பார்க்க வராங்க.." நண்பன் முத்துராம் சொன்னது கேட்டு படக்கென்று எழுந்து அமர்ந்தான் வெற்றி.

"என்ன சொன்ன?" நம்ப முடியாமல் கேட்டான்.

"உன் லவ்வரை இன்னைக்கு மதியம் பொண்ணு பார்க்க வராங்க.." இரண்டாம் முறையாக சொன்னான்.

"அவ என்கிட்ட எதுவும் சொல்லல‌.." பற்களை கடித்தபடி ஆத்திரத்தோடு சொன்னவன் போனை தூக்கி கட்டிலில் எறிந்து விட்டு அவசரமாக குளியலறைக்குள் புகுந்தான்.

அம்ருதா பட்டு புடவை சரசரக்க எட்டு காப்பி கோப்பைகள் அடங்கிய தட்டோடு கூடத்திற்கு வந்தாள்.

மாப்பிள்ளை குடும்பம் வந்து நின்ற பெண்ணை அளக்கும் பார்வை பார்த்தது. ஐந்தடி உயரத்தில், மாநிறமாக, அம்சமாக இருந்தாள்.

"அழகான பொண்ணுதான்.." என்றாள் பையனின் அம்மா.

பெண் பார்க்க வந்த பையன் தயங்கி தயங்கி அம்ருதாவை பார்த்தான். புகைப்படத்தில் பார்த்ததை விட சற்று நிறம் குறைந்து இருப்பது போல் தோன்றியது. 'பில்டர் போட்டு போட்டோவை அனுப்பி வச்சிருக்காங்க போல.. ஆனா நேரிலேயும் நல்லாதான் இருக்கா..'

"காப்பியை கொண்டு போய் கொடு.." என்று மகளை நகர்த்தினாள் அம்ருதாவின் அம்மா மேகலா.

பெண் பார்க்க வந்த குடும்பத்தை நிமிர்ந்து பார்த்த அம்ருதா மென்மையாக புன்னகைத்தாள்.

மாப்பிள்ளை வீட்டாரை நோக்கி நடந்தாள். அதே நேரத்தில் திறந்திருந்த கதவின் வழியே புயலாய் நுழைந்தான் வெற்றி.

அம்ருதா அவனை ஆச்சரியமும் அதிர்ச்சியுமாக பார்த்தாள். அவனை இங்கே எதிர்பார்க்கவில்லை அவள்.

பெண் பார்க்க வந்தவர்களை வெறித்தான் வெற்றி.

"யார் தம்பி நீங்க?" என கேட்டார் அம்ருதாவின் தந்தை ராமன்.

அவரின் கேள்வியை காதில் போட்டுக் கொள்ளாதவன் நேராய் அம்ருதாவின் அருகே வந்து நின்றான். அவளின் கையில் இருந்த தட்டை வாங்கினான்.

குழப்பத்தோடு பார்த்தவளை கோபமாக பார்த்தவன் காப்பி கோப்பை ஒன்றை எடுத்தான். அவளின் தலை மீது அந்த காப்பியை ஊற்றினான். சூடான காப்பி அவளின் தலையை நனைத்து, முகத்தை நனைத்து, பட்டு புடவையையும் நனைக்க ஆரம்பித்தது. சூடான காப்பியால் அவள் முகம் சுளிப்பது கண்டு சற்று மனம் நிறைந்தது அவனுக்கு.

"காட்.." பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை அதிர்ச்சியோடு எழுந்து நின்றான்.

"டேய்.. யார்டா நீ?" என்றபடி அவனின் அருகே வந்தார் ராமன்.

அங்கிருந்த மொத்த பேரும் அதிர்ச்சியோடு இருந்தனர்.

"நான் யார்ன்னு உங்க பொண்ணோட வயித்துல வளரும் குழந்தைகிட்ட கேளுங்க.." என்றவன் மீண்டும் ஒரு கோப்பை காப்பியை எடுத்து அவளின் தலை மீது ஊற்றினான்.

பற்களை கடித்தபடி, புடவையின் முந்தானையை இறுக்கி பிடித்தபடி தரையை பார்த்தாள் அம்ருதா.

"அம்ருதா.? யார் இவன்? என்ன சொல்றான் இவன்?" நம்ப முடியாமல் கேட்டாள் அம்மா‌. அப்பா ஒருபுறம் இடிந்து போனவராக நின்று கொண்டிருந்தார்.

கேள்வி கேட்ட மேகலாவை திரும்பி பார்த்த வெற்றி "உங்களுக்கெல்லாம் ரொம்ப தெளிவா விளக்கணுமோ? இவளோட வயித்துல இருக்கும் குழந்தைக்கு அப்பா நான்.." என்றவன் பேசிக் கொண்டே மற்ற கோப்பைகளில் இருந்த காப்பியையும் அவள் மீது கொட்டினான்.

அம்மாவும் அப்பாவும் அதிர்ச்சியில் வார்த்தை வராமல் உறைந்து நின்றிருந்தனர். எவ்வளவு பாசமாக வளர்த்த மகள். அவளை சந்தேகிக்கவும் முடியவில்லை. தைரியமாக வந்து நின்று புகார் சொல்லுபவனை யோசனையோடு பார்க்காமல் இருக்கவும் முடியவில்லை.

சுடு காப்பியால் மொத்தமாக நனைந்து நின்றாள் அம்ருதா. முகமும், தோளும், கழுத்தும் காப்பியால் நிறம் மாறி இருந்தது. வென்னீரை கூட சற்று சூடு குறைவாக கலந்துதான் குளிப்பாள். வெறும் இரண்டு முறை ஆற்றிய காப்பி அவள் குளிக்கும் நீரை விடவும் சற்று சூடாகதான் இருந்தது. மேலே பட்ட காப்பியால் நன்றாகவே சூட்டை உணர்ந்து விட்டாள்.

அவளின் அப்பா ஆசையாய் எடுத்து தந்த பட்டு சேலை காப்பியால் கரைப்பட்டு கொண்டிருந்தது. அவளை சுற்றி தரையில் தேங்கி நின்றது காப்பி. குனிந்த தலை நிமிராமல் நின்றுக் கொண்டிருந்தாள் அவள்.

"அவன் சொல்வது உண்மையா அம்ருதா?" நம்ப முடியாமல் கேட்டார் அப்பா.

ராமனை கேலியோடு பார்த்த வெற்றி, "உங்க பொண்ணு மேல அவ்வளவு நம்பிக்கையோ.. நானும் கூடதான் நம்பிக்கை வச்சிருந்தேன். ஆனா என்னை கை விட்டுட்டாளே.!" என்றான் எரிச்சலோடு.

வெளியே அவசர வேலையாக சென்றிருந்த ஆரவ் அதே நேரத்தில் வீட்டுக்குள் வந்தான். ஆரவ் அம்ருதாவின் தம்பி‌. இருபத்தியொரு வயது இளைஞன் அவன். நின்றிருந்தவர்களை குழப்பத்தோடு பார்த்தவன் நடு கூடத்தில் காப்பியால் நனைந்திருந்த அம்ருதாவையும், காப்பி தட்டை கையில் வைத்திருந்த இளைஞனையும் புரியாமல் பார்த்தான்.

மொத்த காப்பியும் தீர்ந்த பிறகு அம்ருதாவை வெறித்தபடி, தட்டை தரையில் விசிறி அடித்தான் வெற்றி. செராமிக் பிளேட்டும், காப்பி கோப்பைகளும் சில்லு சில்லாக உடைந்து போனது. தட்டு உடைந்த சத்தத்தில் பயந்து உடல் சிலிர்த்தாள் அம்ருதா.

அம்மாவுக்கு முகம் கறுத்து விட்டது. பெண் பார்க்க வந்தவர்களின் முன்னால் தங்கள் வீட்டு மானம் இப்படி போய்விட்டதே என்று கவலைப்பட்டாள். தன் மகள் உண்மையில் கர்ப்பமாக இருக்கிறாளோ என்ற சந்தேகம் அவளை வேறு எதையும் யோசிக்க விடவில்லை.

"ஏய் யார் நீ?" வெற்றியை பார்த்து கேட்டபடி அருகே வந்தான் ஆரவ். அருகில் வந்தவனை நோக்கி தனது புறங்கையை வீசினான் வெற்றி. சட்டென்று நகர்ந்து தம்பியை இடித்து தள்ளிவிட்டு நின்றாள் அம்ருதா. ஆரவிற்கு விழ வேண்டிய அறை இவளின் கன்னத்தில் விழுந்தது.

பற்களை கடித்த வெற்றி அதே கரத்தால் வேகத்தோடு இன்னொரு அறையை விட்டான். அடி பலம் என்பதால் இரண்டாம் அறையை வாங்கிய அதே நொடியில் தரையில் விழுந்தாள் அம்ருதா.

ஆரவ் பாய்ந்து வெற்றியின் நெஞ்சில் கை வைத்து பின்னால் தள்ளினான். ஆனால் அவன் துளியும் நகராமல் இருந்தான்.

நொடியில் இரண்டு அறை வாங்கி விட்ட மகளையும், வீட்டிற்குள் அராஜகம் செய்துக் கொண்டிருந்த அந்நியனையும் ஆத்திரத்தோடு பார்த்தார் ராமன்.

"அவனை பிடிடா.. போலிஸ்க்கு போன் பண்றேன் நான்.." என்றவர் தனது கைபேசியை கையில் எடுத்தார்.

"பண்ணுங்க.. சீக்கிரம் பண்ணுங்க.. காதலிச்சி ஏமாத்திய இவளை நான் கொன்னுட்டேன்னு வந்து அரெஸ்ட் பண்ணிட்டு போகட்டும்.." என்றான் அவன் ஆத்திரத்தோடு.

"என்னடா.. தேவையில்லாம பேசி சீன் போட்டுட்டு இருக்க.?" எனக் கேட்ட ஆரவ் எதிரில் இருந்தவனின் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டான்.

ஆனால் அந்த குத்து முகத்தில் விழும் முன் தடுத்து விட்டான் வெற்றி. ஆரவின் கையை முறுக்கினான்.

வெற்றியை அவனால் சமாளிக்க முடியவில்லை. ஆரவின் கையை அவன் உடைக்கும் முன் எழுந்தோடி வந்த அம்ருதா வெற்றியின் கையை பற்றினாள். அவள் புறம் பார்த்தான் வெற்றி. தரை பார்த்து நின்றிருந்தாள்.

"அம்ருதா நீ தூரம் வா. அவன் ஏதோ ரவுடி பையன் போல தெரியறான்.." அப்பா எச்சரித்தபடி வெற்றியை நெருங்கினார்.

"என் புள்ளை மேல் இருந்து கையை எடுடா பொறுக்கி.." என்றவர் அவனை அறைய கையை ஓங்கினார். பட்டென்று அவரின் கையை பற்றியவன் அவரது கையோடு சேர்த்து அவரையும் பின்னால் தள்ளினான். பலமுள்ளவனாக இருந்தான். ராமனாலும் அவனை எதிர்க்க முடியவில்லை.

"யாராவது என் மேல கை வச்சா அப்புறம் நடக்கறதே வேற.." என்றான் எச்சரிக்கும் விதமாக‌.

அங்கே நின்றிருந்த மாப்பிள்ளை வீட்டாரோ நடப்பதை வேடிக்கை பார்த்தபடி தங்களுக்கு என்ன எனும்படி நின்றனர்.

வெற்றியின் கையை இறுக்க பற்றிய அம்ருதா, "ப்ளீஸ்‌.." என்று தரை பார்த்தபடி சிறு குரலில் கெஞ்சினாள்.

"என் தம்பியை விடு.." அதே சிறு குரலில் கேட்டாள்.

ஆரவை தூர தள்ளியவன் அம்ருதாவின் தாடையை பற்றினான். காப்பி பிசுபிசுத்தது.

"உனக்கு என்னை பார்த்தா எப்படிடி தெரியுது?" என்றான் ஆத்திரத்தோடு.

"அமைதியா போ. அப்புறமா பேசிக்கலாம் நாம.." தாடையிலிருந்து புறப்பட்ட வலியை பொறுத்துக் கொண்டு சொன்னாள்.

"ஏன் நான் அந்த பக்கம் போன பிறகு இவனோடு நிச்சயம் பண்ணி, மேரேஜ் பண்ணிக்கவா?"

இல்லையென தலையசைத்தாள்.

"நா.. நான் மாப்பிள்ளையை பிடிக்கலன்னுதான் சொல்ல இருந்தேன்.." அவனின் முகத்தை பார்க்காமல் சொன்னாள்.

சுற்றியிருந்தவர்கள் வியப்போடு அவளை பார்த்தனர்.

"என்னம்மா நடக்குது இங்கே?" அப்பா கோபத்தோடு கேட்டார்.

"என்ன சொன்னாலும் என் கண்ணை பார்த்து சொல்லுடி.." பற்களை அறைத்தான் வெற்றி.

அவள் அவனின் கண்களை பார்க்கவில்லை.

அம்ருதாவை வெறித்து பார்த்த மாப்பிள்ளை அங்கிருந்து கிளம்பினான். அவனோடு வந்த மற்றவர்களும் அவனை பின் தொடர்ந்தனர்.

அம்ருதாவின் தாயும் தந்தையும் அவர்களை தடுத்து நிறுத்த முயலவில்லை.

"என் பொண்ணை விடுங்க தம்பி.." இம்முறை ராமனின் குரல் தாழ்ந்து இருந்தது.

"எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்.." உடல் பலத்தால்‌ அவனை எதிர்க்க முடியாது என்று புரிந்து பேச்சு உடன்படிக்கைக்கு வந்தார் அவர். அவனை விடவும் தனது பெண் சொன்னது அவருக்கு முதல் பிரச்சனையாக இருந்தது.

வெற்றி அம்ருதாவின் கன்னத்திலிருந்த தன் கையை எடுத்துக் கொண்டான்.

"உனக்கு ஏன்க்கா மாப்பிள்ளை பிடிக்கல?" தான் வரும் முன்பு வெற்றி சொன்னதை அறியாமல் கேட்டான் ஆரவ்.

தம்பியின் முகம் பார்த்த

அம்ருதா வாய் திறக்க இருந்த நேரத்தில் "நீ போய் குளிச்சிட்டு வா.." என்றார் அப்பா.

தயக்கத்தோடு வெற்றியை பார்த்தாள் அவள். கண்களை உருட்டியவன் "நடிக்கறதை நிப்பாட்டுடி. இதுக்கு மட்டும் நான் பர்மிசன் தரணுமோ? மாப்பிள்ளை பார்க்க வந்தவன் முன்னாடி சீவி சிங்காரிச்சிட்டு வந்து பல் இளிக்கும்போது என் பர்மிசன் தேவையில்லாம போச்சோ.." என்று கடுப்போடு கேட்டான்.

அம்ருதா தரையை பார்த்தபடி அங்கிருந்து நகர்ந்தாள்.

வெற்றி எரிச்சலோடு அருகே இருந்த சுவரில் சாய்ந்து நின்றான்.

ஆரவ் வெற்றியை ஆத்திரத்தோடு முறைத்தான். அவன் முறுக்கிய கை வேறு கொஞ்சமாக வலித்தது. ஆரவ்வின் கண்களுக்கு இவன் சுத்தமான பொறுக்கியாகதான் தெரிந்தான்.

அம்மா தரையை சுத்தம் செய்தாள்.

'மகள் இந்த பைத்தியக்காரனை காதலித்து ஏதும் வைத்து விட்டாளோ?' என்று பயமாக இருந்தது அவளுக்கு‌. பெண் பார்க்க வந்ததற்கே இப்படி வந்து அராஜகம் செய்பவன் பெண்ணை இவனுக்கே கட்டி ஏதும் தந்தால் என்ன செய்வானோ என்று பயமாக இருந்தது.

இருபது நிமிடங்களுக்கு பிறகு தலையில் துண்டு ஒன்றை சுற்றியபடி, சுடிதாரை அணிந்தபடி ஹாலுக்கு வந்தாள் அம்ருதா. வெற்றி சுடு காப்பியால் அபிஷேகம் செய்த காரணத்தால் அவளின் முகம் சிவந்து போயிருந்தது. நல்ல வேளையாக காப்பி சுட்டு வைக்கவில்லை.

"இப்படி வந்து உட்காரு.." அப்பா கட்டளையாக சொன்னார். தயங்கியபடி வந்து அமர்ந்தாள்.

ஹாலின் மறு பக்க சுவரில் சாய்ந்து நின்றபடி இவளை முறைத்துக் கொண்டிருந்த வெற்றியிடம் "என்ன விசயம் தம்பி?" என்று கேட்டார் ராமன். தன்னால் முடிந்த அளவு பொறுமையை கடைப்பிடிக்க முயன்றார்.

"நானும் அவளும் லவ் பண்றோம்.."

ஆரவ் நம்ப முடியாமல் அக்காவை பார்த்தான். தலை நிமிரவேயில்லை அம்ருதா.

"என் பொண்ணு உண்மையிலேயே கர்ப்பமா இருக்காளா?" குரலில் இருக்கும் அழுகையை மறைத்தபடி கேட்டாள் மேகலா.

"எல்லா கேள்வியையும் என்கிட்ட கேட்கறதுக்கு பதிலா அவக்கிட்டயும் கொஞ்சம் கேட்கலாம்.." சலிப்போடு சொன்னான் அவன்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

LIKE

COMMENT

SHARE

FOLLOW
 

Sevanthi Durai

Crazy Writer
Vannangal Writer
Team
Messages
273
Reaction score
287
Points
93
காதல் கணவன் 2

தலை நிமிராமல் அமர்ந்திருந்த தன் மகளை கோபத்தோடு பார்த்த மேகலா "வாய திறந்து பேசுடி.. என்ன பண்ணி தொலைச்ச.?" என்று விசாரித்தாள்.

அம்ருதா தயக்கத்தோடு நிமிர்ந்து வெற்றியை பார்த்தாள். அவன் நெருப்பாக அமர்ந்திருந்தான். மீண்டும் தலை குனிந்துக் கொண்டாள்.

"நீ பேச போறியா இல்லையா.?" கத்திக் கேட்டாள் அம்மா.

இவளின் மௌனம் கண்டு சிரித்தான் வெற்றி.

"உண்மையை பேச உனக்கு என்னடி அவ்வளவு தயக்கம்.?" என்றான் நக்கலாக.

"போதும் தம்பி. நாங்கதான் விசாரிச்சுட்டு இருக்கோம் இல்லையா.?" என்ற ராமன் "என் பொண்ணை வாடி போடின்னு கூப்பிடாதிங்க.!" என்றார் கோபத்தோடு.

விழிகளை சுழற்றினான் வெற்றி. 'டி போட்டது தப்பா.? பொண்டாட்டியை வேற என்னன்னு கூப்பிடுறதாம்?'

"நீ சொல்லும்மா.. என்ன பிரச்சினைன்னு சொல்லு.. சொன்னாதானே எங்களுக்கும் தெரியும்.?" தன் மகளிடம் விசாரித்தார் அப்பா.

அம்ருதா வெற்றியை ஒரு முறை பார்த்தாள். "நானும் அவனும் லவ் பண்ணிட்டு இருந்தோம்.." என்றாள்.

இருக்கோம் என்று சொல்லாமல் இருந்தோம் என்று அவள் சொல்லியதைக் கேட்டு கடுப்பானான் வெற்றி.

"இருந்தோம்ன்னா.? இப்ப இல்லையாடி.?"

"பிரேக்அப் பண்ணிக்கலாம் வெற்றி.."

அவள் சொல்லியதை அவனால் நம்ப முடியவில்லை. எழுந்து நின்று அவளின் தாடையைப் பற்றி நிமிர்த்தினான். அவள் அவனின் கண்களைப் பார்க்கவே இல்லை.

அப்பாவும் உடன் சேர்ந்து எழுந்து விட்டார்.

"என் பொண்ணு மேல இருந்து கையை எடுங்க.." என்றார் வெற்றியிடம்.

"அப்படின்னா இவளை கரெக்டா பதில் சொல்ல சொல்லுங்க.." என வெற்றி சொல்லவும், எழுந்து நின்றாள் அம்ருதா.

"எனக்கு உன்னை பிடிக்கல வெற்றி. நம்ம பிரேக்அப் பண்ணிக்கலாம். அதுதான் நம்ம ரெண்டு பேருக்கும் நல்லது.." என்றாள் தரை பார்த்தவண்ணம்.

"என்னை பிடிக்கலையா.?" ஆச்சரியத்தோடு கேட்டான். அவனோடு அவள் கொண்ட காதல் கண் முன் வந்து போனது. அவ்வளவு சீக்கிரத்தில் அழியும் காதலா அது?

"ஆமா எனக்கு உன்னை சுத்தமா பிடிக்கல. உன்னை லவ் பண்ண பிடிக்கல. உன்னோடு பேச பிடிக்கல. உன்னோட பழக பிடிக்கல.." வெற்றியை நிமிர்ந்து பார்த்து வெறுப்போடு கத்தினாள் அம்ருதா. அவளை ஆச்சரியம் தீராமல் பார்த்துக் கொண்டிருந்தான் வெற்றி.

"லவ் பண்ணும்போது பிடிக்கல.. என்னோடு கட்டிலை ஷேர் பண்ணும்போது பிடிச்சிருந்ததா.?" என்றவன் அவளை எரித்து விடுவது போல பார்த்தான். அவன் கேட்ட கேள்வியில் முகம் கறுத்து போனது அவளுக்கு. நடு கூடத்தில் நின்று பங்கம் செய்வது போலிருந்தது. அதற்காகவே அவனை அதிகம் வெறுத்தாள். அவன் அப்படிதான். கோபம் வந்தால் எதுவும் தெரியாது. சுற்றி இருக்கும் யாரை வேண்டுமானாலும் காயம் செய்வான்.

"எனக்கு உன்னை நிஜமா பிடிக்கல வெற்றி. உன்னோட அகங்காரம் ஆணவம் எதுவும் பிடிக்கல. நீ என்னை ரொம்ப கட்டுப்பாடு பண்ற. என்னை உன் கைப்பாவையாக மாத்துற.. உன்னோடு இருந்தா எனக்கு மூச்சு முட்டுற மாதிரி இருக்கு. என்னால சுதந்திரமா எதையும் யோசிக்க முடியல. நான் நானாவே ஃபீல் ஆகல. உனக்கும் எனக்கும் ஒத்துவராது. என்னை விட்டுடு. ப்ளீஸ்.." என்றாள்.

அவளது முகத்திலிருந்த வெறுப்பை அதிசயமென பார்த்தான். அவளால் இவ்வளவு வெறுப்பு காட்ட முடியும் என்பதையே இன்றுதான் தெரிந்து கொண்டான்.

"அப்படின்னா குழந்தை.?" அவனுக்கு வேறு எதுவும் கேட்கத் தோன்றவில்லை. அவ்வளவு காதலித்தான் அவளை. அவள் இப்படிச் சொல்வதை இப்போது வரையிலும் அவனால் நம்ப முடியவில்லை.

"நான் அபார்ட் பண்ணிட்டேன்.." என்றாள் சுவரைப் பார்த்தபடி. அவள் சொன்ன நொடியே சப்பென்று ஒரு அறையை விட்டு விட்டான் வெற்றி.

இன்றைய நாளில் மூன்றாவது முறையாக வாங்கிய அறை. ஏற்கனவே சிவந்திருந்த கன்னம் இப்போது இன்னும் அதிகமாக சிவந்து போனது. அப்பாவும் அம்மாவும் அதிர்ச்சியில் இருந்தார்கள். தாங்கள் பெற்று வளர்த்த அருமை மகளா இப்படி ஒரு காரியத்தை செய்தது என்று யோசித்து தங்களின் நம்பிக்கை ஏன் உடைந்தது என்ற கவலையில் இருந்தார்கள். ஆரவ் நடப்பதை ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான். அக்கா தவறு செய்துள்ளாள் என்ற விஷயம் தெரிய வந்த பொழுது அவனே அவளை அடிக்க நினைத்திருந்தான். அதனால் இப்போது வெற்றி அடித்ததை கண்டும் கூட அவனை அக்காவிடமிருந்து விலக்காமல் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான்.

கன்னத்தை பிடித்தபடி தரையை பார்த்த அம்ருதா "அது என் வயித்துல உருவான குழந்தை. அதை அழிக்க எனக்கு எல்லா உரிமையும் இருக்கு.." என்றாள்.

"என்கிட்ட ஒரு வார்த்தை சொன்னியா.? அது எனக்கும் குழந்தை அம்மு. நான் உன்னை ரேப் பண்ணி குழந்தையை தரலையே.. இட்ஸ் அவர் லவ் அம்மு. அதை அழிக்க உனக்கு எப்படி மனசு வந்தது? அட்லீஸ்ட் என்கிட்ட சொல்லி இருக்கலாமே.. நாம பேசி தீர்த்திருக்கலாமே.." வலியோடு கேட்டவனை நிமிர்ந்து பார்த்தவள் "அதுக்கு என்ன அவசியம்.? எனக்கு ‌உன்னையே பிடிக்கல. ஏன் பேசணும். இந்த குழந்தை எதுக்கு.? நீ என்னை இன்னும் அதிகமா டாமினேட் பண்ண அந்த குழந்தையும் ஒரு காரணமா சேர வேணாம்.." என்றாள் வெறி பிடித்தவள் போல.

அன்பின் அடையாளமாக உருவான முதல் குழந்தை. அதை அழிக்க இவளுக்கு எப்படி மனம் வந்தது என்று புரியவில்லை அவனுக்கு. நேற்று வரை இனித்த காதல் இன்று கசந்த மாயம் என்னவோ?

"உன்னை முழுசா வெறுக்கறேன் நான். எப்பவும் கன்ட்ரோல் பண்ற. லவ் பண்ணும்போதே இப்படின்னா மேரேஜ் ஆனா என்ன நடக்கும்ன்னு கற்பனை கூட பண்ண முடியல என்னால. எனக்கு ரொம்ப அமைதியான லைஃப் வேணும். அமைதியான லவ்வர் வேணும். உன்னை போல அராஜகம் பண்றவன் வேணாம்.. உனக்கு கோபம் வந்தா உன் முன்னாடி யார் இருந்தாலும் நீ பார்க்க மாட்ட. உன் கோபத்தை பார்த்து எனக்கு பயமா இருக்கு. உன்னோடு இருந்தா நீ உன் கோபத்துல என்னையும் ஒருநாள் கொன்னாலும் கொன்னுடுவ வெற்றி. போதும் இந்த காதல் கருமாந்திரமெல்லாம். இத்தோடு நிறுத்திக்கலாம். தெரியாம லவ் பண்ணிட்டேன். ஆனா இப்போது உன்னை பத்தி தெரிஞ்சது. நல்லா புத்தி வந்துடுச்சி. ப்ளீஸ் என்னை விட்டுடு.." கையை கூப்பியபடி கெஞ்சினாள்.

"நிஜமா சொல்றியா? எல்லாமே முடிஞ்சி போச்சா?" ஜீவன் செத்த கண்களோடு கேட்டான்.

தலைக்கு மேல் கை தூக்கி கும்பிட்டாள்.

"போதும் சாமி. உன்னோடு நான் கொண்ட காதல் இதோடு போதும். இனி உன் நிழல்ல கூட கலக்க விரும்பல நான். எனக்கு விடுதலை தந்துடு. ப்ளீஸ்.‌"

வெற்றி உதட்டின் உள் பகுதியை கடித்தபடி அவளின் முகத்தை ஆராய்ந்தான். பிராங்க் செய்கிறாளோ, விளையாடுகிறாளோ, இல்லை தாய்‌ தந்தையர் முன்னால் பயப்படுகிறாளா என்று சந்தேகம் கொண்டு பார்த்தான். அவள் முகத்தில் வெறுப்பை வேறு எதையும் இனம் காண முடியவில்லை.

"நீ என்னை விலகி போனா பிறகு நான் உன்னை திரும்பி கூட பார்க்க மாட்டேன் அம்மு. உன்கிட்ட வந்து கெஞ்சுவேன், உன் கால்ல வந்து விழுவேன்னு நினைச்சிடாத.. நீ ஒரு முறை என் கையை விட்டா பிறகு எப்போதுமே பிடிக்க முடியாது." எச்சரித்தான்.

"போதும் ஆண்டவா இவ்வளவு நாளா உன் கையை பிடிச்சதே.. தயவு செஞ்சி இங்கிருந்து தொலைஞ்சி போ.. இனி எப்பவும் என் முகத்துல விழிக்காதே.. உயிர் போனாலும் நான் உன்னை தேடி வர மாட்டேன்.." என்றவள் அவன் முகம் பார்க்காமல் திரும்பிக் கொண்டாள்.

மனதுக்குள் பத்து நொடிகளை எண்ணியபடி நின்றிருந்தான். அவள் திரும்பவில்லை. அவன் திரும்பி நடந்தான்.

முகம் செத்து செல்பவனை வெறித்தனர் அப்பாவும் அம்மாவும்.

அவர்களின் வீட்டை விட்டு வெளியே வந்தான் வெற்றி. வாசலில் சிவப்பு ரோஜா செடி தொட்டியோடு இருந்தது. அழகான சிவப்பு ரோஜா பூக்கள் ஐந்தாறு பூத்திருந்தது. போன மாதம் அவன் வாங்கி தந்த செடி அது‌. கோபத்தோடு தொட்டியை எட்டி உதைத்தான். இரண்டாக உடைந்து விழுந்தது தொட்டி.

சாலையில் நிறுத்தியிருந்த பைக்கில் ஏறி அமர்ந்து மூர்க்கமாக கிளம்பினான்.

"செத்து சுடுகாடு போனாலும் இவளை நினைச்சிடாதே.." தனக்கு தானே சொல்லிக் கொண்டான்.

வெற்றி அங்கிருந்து சென்ற பிறகுதான் அம்ருதாவால் இயல்பாய் மூச்சு விட முடிந்தது. ஆனால் அவள் மறு மூச்சு விடும் முன்னால் அப்பா அவளை ஓங்கி அறைந்தார்.

அடி வாங்கியதும் தரையில் விழுந்தாள் அம்ருதா.

"என்ன பண்ணி வச்சிருக்க நீ?" எனக் கேட்டவர் மகளை பார்த்து முறைத்தார்.

"உனக்கு செல்லம் தந்து பொக்கிஷம் போல வளர்த்திட்டு இருக்கேன் நான். நீ எவனையோ காதலிச்சி, கர்ப்பமாகி, அந்த குழந்தையையும் அழிச்சி இருக்க.. ஆனா எங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லல.. நாங்க செத்து போயிட்டோமா? இவ்வளவு பெரிய பெரிய முடிவுகளை தானா எடுக்கற அளவுக்கு வளர்ந்துட்டியா நீ? வேலைக்கு போய் கை நிறைய சம்பாதிச்சா திமிரும் சேர்ந்து வந்துடுமோ?" எனக் கேட்டவர் மீண்டும் ஒரு அறையை தந்தார்.

'எத்தனை அறையை வாங்குவது?' என்று‌ வெறுத்து போனாள் அம்ருதா. 'ஆனாலும் பரவால்ல.. எத்தனை அடியா வேணாலும் இருக்கட்டும். இந்த அத்தனை பிரச்சனையும் இன்னையோடு முடிஞ்சி போகட்டும்.' என்று தனக்குள் சொல்லிக் கொண்டவள் "சாரிப்பா.." என்றாள் சிறு குரலில்.

"சாரி சொன்னா போன குடும்ப மானம் திரும்பி வருமா? பொண்ணு பார்க்க வராங்கன்னு உன்கிட்ட சொல்லிதானே நான் ஏற்பாடு செஞ்சேன்? ஒரு வார்த்தை அப்போதாவது எங்ககிட்ட சொல்லி இருக்கலாம் இல்ல?" என்று கோபத்தோடு கேட்டாள் அம்மா.

"தப்பு பண்ணிட்டேன். அதுக்கு என்ன செய்ய முடியும்? சாரி. அவ்வளவுதான். இதை தவிர வேறு என்ன சொல்லட்டும்?" எனக் கேட்டவள் எழுந்து நின்றாள்.

தந்தையையும் தாயையும் மாறி மாறி பார்த்தவள் "பொண்ணு பார்க்க வராங்கன்னு அவனுக்கு தெரியாதுன்னு நினைச்சேன். ஆனா எப்படியோ அந்த பொறுக்கி வந்துட்டான். முடிஞ்சதை எப்படி மாத்த முடியும்? இந்த ஒரு முறையும் என்னை மன்னிச்சி விட்டுடுங்க.." என்றாள். தனது அறைக்குள் சென்று புகுந்துக் கொண்டாள்.

வெற்றி தனது வீட்டின் முன் பைக்கை நிறுத்தினான். ஆற்றங்கரை மேட்டிலிருந்த சிறு பங்களா அது. ஆற்றில் வெள்ளம் நிறையும் வேளையிலெல்லாம் அவனது வீட்டின் பின் வாசலருகே இருக்கும் பாலத்தை தொட்டபடி ஓடும் ஆறு.

"எங்கேடா போன?" மகன் வீட்டுக்குள் வந்ததும் கேட்டார் முரளி.

"சும்மா.. வெளியே போயிருந்தேன்.."

அவனின் குரல் வழக்கமான குரலாக இருக்கவில்லை. மாறாக உடைந்து, துக்கமும்,‌ வலியும் கலந்திருந்தது.

"என்னாச்சிப்பா?" அப்பா அமர்ந்திருந்த இருக்கையை விட்டு எழுந்து வந்து மகனின் முகத்தை பற்றியபடி கேட்டார்.

"சு.. சும்மாதான் அப்பா‌.. அம்மா ஞாபகம் வந்துடுச்சி.." என்றவன் கூடத்தின் சுவரில் மாட்டியிருந்த அம்மாவின் புகைப்படத்தை பார்த்தபடி விழிகளை துடைத்துக் கொண்டான்.

"அவ உன்னோடுதான் இருக்கா.. நம்மோடுதான் இருக்கா.. அழாதே ராசா.." என்றவர் அவனின் முகத்தை துடைத்து விட்டார்.

'என்னோடு இருக்கதான் டிரை பண்ணாங்க.. ஆனா பாவி அழிச்சிட்டா.. என்கிட்ட கூட சொல்லாம என் அம்மாவை கருவிலேயே அழிச்சிட்டா..' மனதுக்குள் புழுங்கியவனுக்கு இமைகளின் ஈரம் மறைய மறுத்தது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 

Sevanthi Durai

Crazy Writer
Vannangal Writer
Team
Messages
273
Reaction score
287
Points
93
காதல் கணவன் 3

சந்தனக் கொடிக்கால் பரபரப்பாக இருந்தது. ஸ்மார்ட் சிட்டிக்கு தரம் உயர்ந்துக் கொண்டிருந்த அந்த நகரத்தின் மத்தியில் இருந்த நெடுமானஞ்சி வங்கி கிளை நகரத்தை விடவும் அதிக பரபரப்போடு செயல்பட்டுக் கொண்டிருந்தது.

நெடுமானஞ்சி வங்கி லிமிடெட். நாட்டின் சிறு குறு தொழில்களின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி கொண்டிருக்கும் தனியார் வங்கி. நாட்டின் பல இடங்களிலும் கிளைகளை வைத்திருந்த அந்த வங்கியின் மதிப்பு பல மில்லியன் கோடிகளை தாண்டி கொண்டிருந்தது.

மற்ற வங்கிகளை விடவும் இந்த வங்கியில் எப்போதும் கூட்டம் அதிகமாகவே காணப்படும்.

சந்தன கொடிக்காலின் நாற்பது சதவீத சொத்திற்கு தனது வங்கியின் பெயரில் கடன் தந்து, எண்பது சதவீத மக்களின் சேமிப்புகளை தனக்குள் வைத்திருக்கும் வங்கி அது.

நான்கடுக்கு தளங்களையுடைய அந்த வங்கி கட்டிடத்தின் மூன்றாம் தளத்தை முழுமையாக ஆக்கிரமித்திருந்தது கடன் வழங்கும் பிரிவு.

லோன் பிரிவின் அசிஸ்டென்ட் மேனேஜருக்கான கேபினில் அமர்ந்திருந்த வெற்றி தனது வேலையில் கண்ணாக இருந்தான்.

வங்கியின் வாடிக்கையாளர்களை காக்க வைக்க கூடாது என்பதில் கவனமாக இருந்தான்.

கணினியின் பட்டன்களை படபடவென தட்டிக் கொண்டிருந்தவனின் அருகே காகித கட்டுகள் கொண்டு வந்து அடுக்கப்பட்டன.

அவை அனைத்தும் லோன் ப்ரோஸசரிடமிருந்து வந்தவை. எப்போதும் லோன் ப்ரோஸசர்தான் அவளாகவே கொண்டு வந்து தந்து செல்வாள். இல்லையேல் அவளின் அழைப்புக்கு இவன் செல்வான். ஆனால் இம்முறை ஆபிஸ் அசிஸ்டென்டாக இருக்கும் ஆதீரா கொண்டு வந்திருந்தாள்.

வெறுப்போடு காகித கட்டுகளை எடுத்தான். அதில் உள்ள விசயங்களை சரி பார்க்க ஆரம்பித்தான். ஓரிடத்தில் லோன் ப்ரோஸசரின் கையெழுத்து இல்லை. முன்பென்றால் அது பெரிய விசயம் இல்லைதான். இதையே சாக்காய் வைத்து அவளின் கேபின் சென்று சற்று நேரம் பேசி சிரித்து விட்டு வந்திருப்பான். ஆனால் இப்போது அப்படி இல்லையே! எரியும் எரிமலை பொங்கும் நேரம் வந்தும் அமைதியாய் காத்திருக்குமா?

கையெழுத்து மறந்த அப்ளிகேஷனை எடுத்துக் கொண்டு அங்கிருந்து நடந்தான்.

"தம்பி.." அவனுக்கு எதிரே நின்றிருந்தவர் அழைத்தார்.

"ஒரு நிமிசம் சார்.." என்றவன் வாடிக்கையாளரை காக்க வைக்க கூடாது என்ற தனது கொள்கையை காற்றில் விட்டுவிட்டு நகர்ந்தான்.

லோன் ப்ரோஸசரின் அறையை தட்டினான்.

"கமின்.."

முன்பெல்லாம் இப்படி தட்டியதே இல்லை.

இன்று கதவை தட்டியவனை கண்ணாடி கதவின் வழி அவளும் கவனிக்கவே இல்லை.

தனக்கு முன்னால் அமர்ந்திருந்த வாடிக்கையாளரிடம் லோன் பெறுவதற்கு தேவையான ஆவணங்களை பற்றி விளக்கிச் சொல்லிக் கொண்டிருந்தவள் தன் முன் வீசப்பட்ட அப்ளிகேஷனை கண்டு நிமிர்ந்தாள்.

"அப்ளிகேஷனை பாஸ் பண்ணும் முன்னாடி எல்லாத்தையும் சரி பார்த்து அனுப்புங்க மேடம்.. நான் இங்கே வேலை செய்வது வாடிக்கையாளர்களுக்கு.. உங்களுக்கு அடிமையா வேலை செய்யல.. என்னோட நேரத்தை நீங்களே வீண் பண்ணிட்டு இருந்தா அப்புறம் எப்படி நான் என்னோட மத்த வேலைகளை பார்க்க முடியும்?‌" என்று எரிந்து விழுந்து விட்டு வெளியே நடந்தான் வெற்றி.

லோன் ப்ரோஸசருக்கான இருக்கையில் அமர்ந்திருந்த அம்ருதா நெற்றியை தேய்த்தாள். எதிரில் அமர்ந்திருந்த வாடிக்கையாளர் தன்னை பற்றி என்ன நினைப்பார் என்ற வருத்தம் தோன்றியது.

'பிரேக்அப் செய்யும்போதே இதையெல்லாம் எதிர்பார்த்ததானே அம்ரு? அப்புறம் என்ன? அவன் இப்படிதான் அவனோட திமிரை காட்டுவான்.. கூட இருந்து சிறையை அனுபவிக்கிறதை விட இப்படி தூர இருந்து அப்பப்ப முறைப்பையும் திட்டையும் வாங்கிக்கலாம்..' என்று நினைத்துக் கொண்டாள்.

அப்ளிகேஷனை எடுத்துப் பார்த்தாள். கையெழுத்து இல்லை. தன்னைதானே திட்டிக் கொண்டு கையெழுத்து போட்டாள். சொத்தின் மீது கடன் வாங்க வருவோர் அனைவருக்கும் அவள்தான் கடன் பெறும் உதவியை செய்துக் கொண்டிருந்தாள்.

அந்த அப்ளிகேஷனை அவளே எடுத்துச் சென்று அவனின் மேஜையில் வைத்துவிட்டு திரும்பி வந்தாள்.

வெற்றிக்கு எரிச்சலாக வந்தது. எதைப் பற்றி நினைத்தாலும் கோபமாக வந்தது. என்றும் இல்லாத அதிசயமாக ஒன்றிரண்டு வாடிக்கையாளர்களிடம் கூட சிடுசிடுத்தபடி பேசினான்.

மதிய உணவு இடைவெளியில் சாப்பாட்டு மேஜைக்கு வந்தவன் அங்கே அமர்ந்திருந்த அம்ருதாவை கண்டவுடன் தனது உணவு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு திரும்பி விட்டான். அவளை பார்த்த பிறகு அவனுக்கு பசிக்கவே இல்லை. பிற்பகல் வேளையில் பசியில் காரணமாகவும் முகத்தை கடுகடுப்பாக வைத்தபடிதான் வேலை செய்தான்.

வங்கியின் ஸ்பெஷல் காதலர்கள் இன்று எதிரிகள் ஆகிப்போன விசயம் அறிந்தனர் மற்றவர்கள்.

ஏன் சண்டை வந்ததென்று சிலர் விசாரித்தனர். ஆனால் இருவருமே அதை பற்றி வாய் திறக்கவில்லை.

மாலை வேளையில் வங்கியில் கூட்டம் குறைந்த பிறகு வெற்றியை தேடி வந்தான் நண்பன் முத்துராம். அதே தளத்தில் இருக்கும் ஹோம் லோன் பிரிவில் பணிபுரிகிறான் அவன்.

வெற்றியின் அருகே இருந்த நாற்காலியில் அமர்ந்தவன் "நிஜமா நீங்க இரண்டு பேரும் பிரேக்அப் பண்ணிக்கிட்டிங்களா.?" என்றான் சந்தேகத்தோடு.

"ம்ம்.." கணினித் திரையை விட்டு கண்களை அகற்றாமல் பதிலை சொன்னான் வெற்றி.

"என்னால நம்பவே முடியலடா வெற்றி. நீங்க ரெண்டு பேரும் ஒண்ணுக்குள்ள ஒண்ணா பழகிட்டு இருந்திங்க. கல்யாணம் மட்டும்தான் பண்ணல. கடைசியில பிரேக்அப் ஆகிடுச்சி.." என்றான் புலம்பலாக.

"இந்த பொண்ணுங்களே இப்படித்தான் முத்து.. அவங்களுக்கு விருப்பம் வந்தா காதலிப்பாங்க. விருப்பம் இல்லனா விட்டுட்டு போயிடுவாங்க. எதிர்ல இருக்கறவனோட மனசை கொஞ்சமும் புரிஞ்சிக்க மாட்டாங்க. இவங்களை நம்பவே கூடாதுடா.. முக்கியமா அம்ருதாவை மாதிரியான அமைதியான பொண்ணுங்களை நம்ப கூடாதுடா.." என்று கரித்துக் கொட்டினான்.

"அம்ருதா உன்னை அவ்வளவு லவ் பண்ணா.. அவளே கடைசியில் உன்னை விட்டுட்டு போயிட்டா.." என்று சலித்துக் கொண்டவன் தூரத்தில் இருந்தபடி தன்னை நோட்டம் விட்டுக்கொண்டிருந்த ஆதிராவை சந்தேகத்தோடு பார்த்தான். "இவளோட கிரஷையெல்லாம் நாம் எப்படி நம்புறது.?" என்று தன்னிடமே கேட்டுக்கொண்டான்.

ஆதிரா அவனை கடந்த ஒரு வருடமாக நோட்டம் விட்டுக் கொண்டிருக்கிறாள். ஆனால் இதுவரையிலும் நெருங்கி வந்து தன் காதலை சொன்னதில்லை.

அவளின் கண்களைப் பார்க்கும் போதெல்லாம் தானே சென்று சரணடைந்து விட வேண்டும் என்று தோன்றும் முத்துராமனுக்கு. ஆனால் அவனுக்குள் இருந்த தயக்கம் காரணமாக தூரத்திலேயே நின்று கொண்டிருந்தான். இப்போது வெற்றியும் அம்ருதாவும் பிரிந்ததை கண்ட பிறகு அவனால் இந்த காதலையே நம்ப முடியவில்லை.

மாலையில் வங்கியை விட்டு வெளியே வந்தாள் அம்ருதா.

தனது காரை கிளப்பினாள்.

முன்பெல்லாம் இரவு எட்டு மணிக்கு மேல்தான் வீடு சென்று சேர்வாள். தினம் மாலைப் பொழுதுகளில் வெற்றியோடு சுற்றிக் கொண்டிருப்பதுதான் அவளுக்கு முக்கியமான வேலையாக இருக்கும். ஆனால் இப்போது காதல் பிரிந்ததன் காரணமாக நேராய் வீடு நோக்கிப் புறப்பட்டாள்.

இவளைக் கண்டதும் அப்பா முறைத்தார். அம்மா கடந்த இரு நாட்களாக இவளிடம் பேசவே இல்லை.

வெற்றி வங்கியின் அருகே இருந்த காபி ஷாப்பிற்குள் நுழைந்தான். அவனும் அமிர்தாவும் வழக்கமாக உட்காரும் அதே மேஜைக்கு சென்று அமர்ந்தான்.

எந்த இடத்தில் இடறினோம் என்று அவனுக்கு தெரியவில்லை. எந்த இடத்தில் தவறிழைத்தோம் என்றும் புரியவில்லை.

இருவரும் ஒரே நாளில்தான் அந்த வங்கியில் பணிக்கு சேர்ந்தனர். இரண்டு வருடங்கள் முழுதாய் கடந்து விட்டது. பார்த்த நொடியிலேயே இருவருக்கும் பிடித்து போய் விட்டது.

நட்பு போல ஆரம்பித்த பழக்கம். விரைவிலேயே இருவரும் போட்டி போட்டுக் கொண்டு தங்களின் காதலை சொல்லும் அளவிற்கு வளர்ந்து விட்டது.

ஆரம்பத்திலேயே தனது கோபத்தை பற்றிச் சொல்லி விட்டான் வெற்றி.

"எனக்கு டென்ஷன் இஷ்யூ இருக்கு அம்மு. இதனால உனக்கு பிரச்சினை வரும்.." என்று எச்சரித்தான்.

"பரவால்ல வெற்றி.. என்னால உன்னை சமாளிக்க முடியும். எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு. உன்னை விலக்கி விட முடியும்னு தோணல. என்னை நம்பு.." என்றாள் இவனின் கையை பிடித்தபடி.

வங்கியில் இருந்த அனைவருக்குமே தெரியும் இவர்களின் காதல் கதை பற்றி. இருவரும் சேர்ந்து சுற்றாத இடமில்லை. பேசாத காதல் மொழிகள் இல்லை.

அம்ருதா தனது அறைக்குள் வந்து முடங்கினாள். தலையணையை அணைத்தபடி கட்டிலில் விழுந்தாள். பெற்றோரின் வெறுப்பும் வெற்றியின் வெறுப்பும் அவளின் கண் முன் வந்து சென்றது.

அவள் வெற்றியை அளவுக்கதிகமாகவே நேசித்தாள். ஆனால் அவனின் கோபத்தை அவளால் சமாளிக்க முடியவில்லை. அவளின் பயம்தான் அவளுடைய காதலுக்கு எதிரியாகி விட்டது.

அவனின் முதல் கோபம் அவளுக்கு இன்னும் நன்றாக நினைவில் இருந்தது.

காதலிக்க ஆரம்பித்து ஒரு மாதம் சென்ற நிலையில் இருவரும் பூங்கா ஒன்றில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.

அருகே இருந்த நீர் விளையாட்டு குளத்தினருகில் ஜோடி ஒன்று தங்களின் குழந்தையோடு நடந்துச் சென்றுக் கொண்டிருந்தது. தந்தையின் கைப்பற்றி நடந்த குழந்தை தண்ணீரைக் கண்டதும் தந்தையின் கையை விட்டுவிட்டு ஆவலோடு குளத்தை நோக்கி ஓடியது. நொடியில் அந்த குளத்தில் விழுந்து விட்டது. அக்குழந்தை விழுந்ததை கவனிக்காத அந்த பெற்றோர் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் எழுந்து சென்று குளத்தில் குதித்து குழந்தையை மேலே தூக்கினான் வெற்றி.

அதன் பிறகே குழந்தையை கவனித்தனர் பெற்றோர். அதற்குள் சுற்றியிருந்த கூட்டமும் குளத்தின் அருகே வந்து விட்டது. குழந்தையை மேலே தூக்கி வந்து நிற்க வைத்த வெற்றி அந்த பெற்றோரை கண்டதும் ஆத்திரமடைந்து விட்டான்.

"நீங்களெல்லாம் ஏன் குழந்தை பெத்துக்கறிங்க.? உங்களுக்கு இந்த பார்க்கை சுத்தி பார்க்கணும்னு ஆசையா இருந்தா இந்த குழந்தையை வீட்டுல கூட விட்டுட்டு வந்து இருக்கலாமே.. ஏன் கூட்டி வந்து கொல்லப் பார்க்கறிங்க? ஒரு குழந்தையை பெத்துக்க தகுதியே இல்லாத உங்களுக்கெல்லாம் எதுக்குத்தான் குழந்தை பிறந்திருக்கோ? உங்களால இந்த குழந்தையை நல்லபடியாக வளர்க்க முடியலன்னா தயவு செஞ்சு கொண்டுபோய் அனாதை ஆசிரமத்திலாவது விட்டுடுங்க.." என்று கத்தி வைத்தான்.

நொடியில் குழந்தையை பறிகொடுக்கவிருந்த பெற்றோருக்கு இவன் திட்டியதை கேட்ட பிறகு இன்னும் அதிகமாக முகம் வாடிவிட்டது. அவன் காரமாக பேசி இருந்தாலும் கூட தவறு தங்கள் மீதுதான் உள்ளது என்பதை புரிந்து கொண்டவர்கள் தலை குனிந்தபடியே குழந்தையை தூக்கிக் கொண்டு அங்கிருந்து சென்றனர்.

"நீ இன்னும் கொஞ்சம் சாந்தமாக சொல்லியிருக்கலாம்.." என்றாள் அம்ருதா அவனருகே வந்து நின்று.

விலுக்கென்று திரும்பிப் பார்த்தான் வெற்றி. அவனின் பார்வையிலேயே பயந்து விட்டாள் அம்ருதா.

"உனக்கு இது விளையாட்டு போல இருக்கா.? அது ஒரு குழந்தை.. அதுக்கு என்ன தெரியும்.? இவங்களை நம்பிதானே அந்த குழந்தை பிறந்தது.? அந்த குழந்தையை இவங்கதானே பொறுப்பா பாத்துக்கணும்.? இப்ப நான் மட்டும் பார்க்கலன்னா அந்த குழந்தை செத்து இருக்கும் அம்மு.." என்றான் கோபத்தோடு.

"ஓகே.. ஓகே.. சரி விடு. அது தான் குழந்தையை காப்பாத்தியாச்சே.." என்றவள் அவனின் கையைப் பற்றினாள். அவனின் விரல் இடுக்குகள் இடையே தனது விரல்களை நுழைத்துப் பின்னிக்கொண்டாள்.

அவளின் ஸ்பரிசம் தீண்டிய நொடியிலேயே தன் கோபம் இழந்துவிட்டான் வெற்றி. அவள் விழிகளில் தன்வசமும் இழந்து விட்டான்.

"சாரி நான் உன்னையும் பயப்படுத்திட்டேன்.." என்றவன் அவளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.

அப்போதைய நேரத்தில் அவனின் கோபத்தை கூட அவளுக்கு பிடித்திருந்தது.

அவனின் முகம் பார்த்தாள். சாலையை பார்த்து நடந்து கொண்டிருந்தவனின் தோளில் தன் தலையை சாய்த்துக் கொண்டாள்.

அவளின் தோளைப் பற்றியிருந்த அவனது கரம் மெல்ல கீழிறங்கி அவளின் இடையில் வந்து நின்றது.

"இந்த ஒரு மாசமும் நேரம்போனதே தெரியல அம்மு. ஒவ்வொரு நாளும் அழகா இருக்கு. உன்னை தினமும் நிறைய நிறைய பிடிச்சிருக்கு. உன்ன நினைச்சிட்டே இருக்கணும் போல இருக்கு அம்மு.. உன்னை முதலிலேயே பார்த்திருக்கணும்னு தோணுது.. உன்னை விட்டுப் பிரியவே பிடிக்கல. ஏதாவது ஒரு தனி உலகம் உருவாக்கி உன்னை அங்கே கடத்திட்டு போகணும் போல இருக்கு.." என்றான் ஆசை மிகுதியில்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 

Sevanthi Durai

Crazy Writer
Vannangal Writer
Team
Messages
273
Reaction score
287
Points
93
காதல் கணவன் 4

இரவு உணவு உண்ணுகையில் அம்ருதாவை முறைத்துக் கொண்டு இருந்தனர் பெற்றோர்.

அம்ருதா அமைதியாக சாப்பிட்டுவிட்டு மீண்டும் தனது அறைக்கு வந்து விட்டாள். என்ன செய்வதென்று தெரியவில்லை. காதலனை பிடிக்கவில்லை என்று சொல்லி கைவிட்டு வந்தவளுக்கு இப்போது வாழ்க்கையில் எந்த வேலையுமே இல்லாதது போல இருந்தது.

அன்று இரவு தனது நண்பர்களோடு இணைந்து பிறந்தநாள் விழா ஒன்றுக்கு கிளம்பினால் ஆரவ்.

அன்றைய நாளில் தனது பிறந்தநாளினை கொண்டாடிக் கொண்டிருந்த கல்லூரி தோழி தேன்மொழி இரவையும் அவனது நண்பர்களையும் தனது வீட்டிற்குள் வரவேற்றாள்.

தேன்மொழியை ஒருதலையாய் காதலித்துக் கொண்டிருந்தான் ஆரவ். அதுவும் கடந்த இரு மாதங்களாகதான். அவளிடம் தன் மனதில் உள்ளதை அவன் இன்னும் சொல்லவில்லை. அவளோ இவனிடம் நட்பாகதான் பழகிக் கொண்டிருந்தாள். நண்பர்களோ இன்று இவளின் பிறந்தநாள் விழாவில் அவனுடைய காதலை சொல்லிவிட வேண்டும் என்று சொல்லி அழைத்து வந்திருந்தார்கள். இந்த வீட்டிற்கு வரும் பொழுதே அவனுக்கு கை கால்கள் நடுங்கி கொண்டுதான் இருந்தது. அவள் என்ன பதில் சொல்வாள் என்ற அச்சத்தில் உறைந்து இருந்தான்.

பெரிய வீடு அது. நிறைய சொந்தங்கள் நடமாடிக் கொண்டிருந்தனர்.

வீட்டுக்குள் பலூன்கள் பல பறந்துகொண்டிருந்தன. உறவினர்களும் நண்பர்களும் ஆங்காங்கே நின்றபடியும் அமர்ந்தபடியும் பேசிக் கொண்டிருந்தனர்.

அந்த ஹாலின் ஒரு ஓரத்தில் கிடந்த இருக்கையில் அமர்ந்து கொண்டிருந்த வெற்றியை பார்த்தவுடன் அடையாளம் கண்டுக் கொண்டான் ஆரவ்.

இவன் இங்கே என்ன செய்கிறான் என்ற குழப்பத்தோடு அவனை வெறித்து கொண்டிருந்தவன் தனக்கு குளிர்பானம் கொண்டு வந்து தந்த தேன்மொழியிடம் "அது யார்.?" என சுட்டிக் காட்டி கேட்டான்.

வெற்றியை திரும்பிப் பார்த்த தேன்மொழி "அவன் என் அண்ணன்.. பெரியப்பா மகன்.." என்று பதில் சொன்னவள் மற்றவர்களுக்கு குளிர்பானம் வழங்க கிளம்பி விட்டான்.

வெற்றியை முறைத்தபடியே நின்று கொண்டிருந்தான் ஆரவ். அப்பாவியான தன் அக்காவை காதல் வலையில் சிக்க வைத்ததற்காக அவனை வெறுத்தான்.

தனது கைப்பேசியில் இருந்த அம்ருதாவின் புகைப்படத்தை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான் வெற்றி. அவளைப் பிரிந்து வந்த நாட்களில் இருந்தே அவன் செய்யும் முக்கிய வேலை இதுவாகத்தான் இருந்தது. அவளை தன் மனதிலிருந்து தூக்கி எறிய முடியவில்லை அவனால். எப்போதுமே எதையுமே சாதாரணமாக கடந்துவிட முடியாது அவனால். அப்படி இருக்கையில் உயிருக்குள் கலந்த காதலை மட்டும் எப்படி உடனே மறப்பான்.?

"வெற்றி.." இளம் பெண் ஒருத்தியின் இசை குரலில் நிமிர்ந்தான். அவனின் அத்தை மகள் கீர்த்தனா நின்று கொண்டிருந்தாள். தன்னிடமிருந்த பலகார தட்டை அவனிடம் நீட்டினாள்.

"பாட்டி இதை உன்கிட்ட கொடுத்துட்டு வர சொன்னாங்க வெற்றி.."

இந்த வீட்டிற்கு வந்தாலே இப்படித்தான். பாட்டிக்கு இவன் எப்போதும் உண்டு கொண்டே இருக்க வேண்டும். தாத்தாவுக்கு இவன் எப்போதும் புன்னகைத்தபடி அவரின் கண் முன்னால் இருக்க வேண்டும். சித்திக்கும் சித்தப்பாவுக்கும் இவன் முகத்தில் கோபம் இருக்கக்கூடாது. அத்தைக்கும் மாமாவுக்கும் இவன் கலகலப்போடு மற்ற அனைவரோடும் பேசிக் கொண்டிருக்க வேண்டும்.

பலகார கட்டிலில் இருந்ததை சாப்பிட ஆரம்பித்தான் வெற்றி. அதே நேரத்தில் "அண்ணா உன்னை தாத்தா கூப்பிடுறாரு.." என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள் தேன்மொழி.

வெற்றி பலகார தட்டை வைத்துவிட்டு எழுந்து நின்றான். தாத்தாவின் அறை நோக்கி நடந்தான்.

வழியில் நின்றிருந்த சொந்தங்கள் அனைவருக்கும் பதில் சொல்லிவிட்டு தாத்தாவின் அறையை அடைவதற்கே பத்து நிமிடங்கள் பிடித்து விட்டது அவனுக்கு.

"எத்தனை நாளா சொல்லிட்டு இருக்கேன்? ஒரு பெண்ணைப் பார்த்து கல்யாணம் செய்றதுல உனக்கு என்ன கஷ்டம்.?" வெற்றி அறைக்குள் நுழைந்த அதே நொடியில் காட்டமாக கேட்டார் தாத்தா.

"நான் வேணா இப்படியே திரும்பிப் போய்டட்டுமா.?" என்றான் பாதி திரும்பியபடி.

"உன்னை யாரும் எதுவும் சொல்லிடக் கூடாதே.. உடனே ரோசம் பொத்துக்கிட்டு வந்துடும்.." என்றார் தாத்தாவின் அறைக்குள் அமர்ந்திருந்த மாமா கதிரேசன்.

அம்ருதாவை திருமணம் செய்யதான் நினைத்தான். ஆனால் அதுதான் நடக்கவில்லையே அவன் மட்டும் என்ன செய்வான்?

"தாத்தா நான் மெதுவா கல்யாணம் கட்டிக்கிறேன். இப்ப என்ன அவசரம்.?" என்றவன் அறைக்குள் இருந்த இருக்கை ஒன்றில் அமர்ந்தான்.

"உன் வயசுல எனக்கு உன் அப்பாவும் சித்தப்பாவும் பிறந்துட்டாங்க.." என்றார் தாத்தா.

வெற்றி நெற்றியை பிடித்துக் கொண்டான். இதற்கு என்னவென்று பதில் சொல்வது.?

வெற்றியின் மௌனம் கண்ட மாமா "சரி விடு வெற்றி. தாத்தா இப்படித்தான் ஏதாவது சொல்லுவார். நீ டென்சன் ஆகாதே.." என்றார் அவனை சமாதானப்படுத்தும் விதமாக. அவனின் பிரச்சனையை அந்த வீட்டிலிருந்த அனைவரும் அறிவர்.

எட்டு வருடங்களுக்கு முன்பு வெற்றியின் தாயார் இறந்து போனாள். அதுவரையிலும் மொத்த குடும்பமும் இதே வீட்டில்தான் மகிழ்ச்சியோடு இருந்தது.

அம்மா இறந்த பிறகு வெற்றிக்குள் பல மாற்றங்கள். அவனால் யாரிடமும் அதிகம் கலகலப்பாக பேச முடியவில்லை. முன்பு போல வெளிப்படையாக பழக முடியவில்லை. எதற்கெடுத்தாலும் கோபம் கொண்டான். யாரை வேண்டுமானாலும் அடித்து வைத்தான். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலமது. தினமும் ஏதோ ஒரு சண்டையை இழுத்து வந்தான். அவனால் வீட்டில் இருந்த அனைவருமே மன உளைச்சலுக்கு ஆளானார்கள்.

இவனால் வீட்டிலும் பிரச்சனை ஏற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாத அப்பா இவனை மட்டும் அழைத்துக் கொண்டு தனி வீட்டிற்கு சென்றுவிட்டார். வெற்றியும் அப்பாவும் தனிக்குடித்தனம் சென்றதில் இந்த வீட்டில் இருந்த யாருக்குமே விருப்பமில்லை. ஆனால் இது வெற்றியின் நலனுக்காக என்று சொல்லி பிடிவாதமாக அவனோடு அங்கேயே தங்கிவிட்டார் அப்பா.

அவ்வப்போது ஏதாவது விசேச நாட்களில் இந்த வீட்டிற்கு வந்து செல்வார்கள் அப்பாவும் மகனும். வெற்றியின் மீது அந்த வீட்டில் இருந்த அனைவருமே பாசம் கொண்டிருந்தார்கள். அவனின் கோபத்தை சரிசெய்ய எத்தனையோ மருத்துவமனைகள் சென்று பார்த்தாகி விட்டது. ஆனால் எதுவும் கை கொடுக்கவில்லை.

"அக்கா கேக் வெட்ட போறா.. உங்களையெல்லாம் வர சொன்னா.." என்று அறையின் வாசலில் வந்து நின்று அழைத்தாள் தேன்மொழியின் தங்கை கனிமொழி.

தாத்தா அவசரமாக தனது தலையை வாரிக் கொண்டார்.

மூன்று ஆண்களும் வெளியே நடந்தனர். ஹாலின் நடுவே இருந்த மேஜையின் மீது மெழுகுவர்த்தி அலங்காரத்தோடு காத்திருந்தது கேக்.

வாழ்த்து பாடலுக்குப் பிறகு கேக்கை வெட்டினாள் தேன்மொழி. தன் தாய் தந்தைக்கு ஊட்டிய பிறகு வெற்றிக்கு ஊட்டினாள்.

"நல்லாரு தங்கம்.." அவளின் தலையை தடவி தந்தவன் அங்கிருந்து நகர்ந்தான். நடந்தவனின் பார்வையில் ஆரவ் விழுந்தான்.

மறக்க நினைத்தவளின் முகம் மீண்டும் நினைவிற்கு வந்தது. காயங்களை எவ்வளவு தாங்குவது என்று தெரியவில்லை.

கண்கள் கலங்கி விடக்கூடாது என்ற எச்சரிக்கையோடு அங்கிருந்து நகர்ந்தான். இல்லையேல் இதற்கு வீட்டில் இருக்கும் பலருக்கும் பதில் சொல்லவேண்டி வரும்.

தோட்டத்திற்கு நடந்தவனைப் பின்தொடர்ந்து வந்திருந்தான் ஆரவ்.

"நில்லுங்க.." என்று அழைத்தவன் அவன் திரும்பி பார்த்ததும் "நீங்க என்ன பைத்தியமா.?" எனக் கேட்டான்.

பற்களை கடித்த வெற்றி "அப்படி இருந்தாதான் உனக்கு என்ன போச்சி.?" என்றான் எரிச்சலோடு.

"சைக்கோ மாதிரி நடந்துக்கறிங்க.. என் அக்கா மேல சுடு காபியை ஊத்தி, அவளை என் கண்ணு முன்னாடியே அத்தனை அடிச்சிங்க.. இது கொஞ்சமும் சரி கிடையாது.. அன்னைக்கு அவ மேல இருந்து கோபத்துல உங்களை எதுவும் செய்யல. இல்லன்னா கை காலை உடைச்சி விட்டிருப்பேன்.." என்று எச்சரித்தவனின் சட்டையை சட்டென்று பிடித்தான் வெற்றி.

கொஞ்சம் அசந்து விட்டான் ஆரவ்‌. ஆனாலும் தனது தடுமாற்றத்தை அவனிடம் காட்ட விரும்பவில்லை.

"உனக்கு எதுவும் தெரியாது. அவ என்னோடு வாழ்ந்த வாழ்க்கை என்னன்னு உங்க யாருக்கும் தெரியாது.. பாசத்தையும் காதலையும் போதை மாதிரி தந்து என்னை அவளுக்கு அடிமையாக்கி வச்சிட்டா.. நான் அவளுக்கு முழுசா அடிக்டான பிறகு கை விட்டு போயிட்டா.. என் வலி, கோபம், வருத்தம் எதுவும் உனக்கு தெரியாது. உயிரில்லா பிணம் போல சுத்திட்டு இருக்கேன் நான். தூரமா இருந்து பார்க்கும் உனக்கு என்னைப் பத்தி எதுவும் தெரியாது.." என்றவன் இடது கையால் தனது முகத்தை தேய்த்து கொண்டான்.

"சரி விடு.. என்னோடு அவ்வளவு பழகிய உன் அக்காவே என்னை புரிஞ்சிக்கல.. நீ எல்லாம் யாரு.?" என கேட்டபடி அவனின் சட்டையை விட்டான்.

ஆரவ்வின் கண்களுக்கு இவன் என்னவோ முழு பைத்தியக்காரன் போலதான் தெரிந்தான்.

"ஆரவ்.." தேன்மொழியின் குரலில் இருவரும் திரும்பினர்.

அருகில் வந்தவள் தன் கையில் இருந்த சிறு தட்டை அவனிடம் நீட்டினாள். துண்டு போடப்பட்ட கேக் இருந்தது.

"உன்னை உள்ளே காணல. அதனாலதான் வந்தேன்.." என்றாள்.

"தேங்க்ஸ்.." என்றவன் அவசரமாக தனது பாக்கெட்டில் இருந்து வண்ணத் தாள் சுற்றிய சிறு பெட்டியை எடுத்து அவளிடம் நீட்டினான்.

"என்னப்பா கிப்டெல்லாம் வாங்கிட்டு வந்திருக்க.?" என்று வெட்கப்பட்டாள் தென்மொழி.

ஆரவ் பதில் சொல்லாமல் புன்னகைத்தான்.

வெற்றி அவர்கள் இருவரையும் விட்டுவிட்டு வீட்டிற்கு நடந்தான்.

"அண்ணா இன்னைக்கு நைட் இங்கேயே இரு.. நாளைக்கு அந்த வீடு போகலாம்.." என்று கட்டளையிட்டாள் தேன்மொழி.

திரும்பிப் பார்த்து சரி என்று தலையசைத்துவிட்டு நடந்தான் வெற்றி.

"சரியான திமிர்.." ஆரவ்வின் முணுமுணுப்பை கேட்டு கோபம் வந்தது தேன்மொழிக்கு.

"அவன் என் அண்ணன்.. அவன் எவ்வளவு நல்லவன்னு எனக்கு தெரியும். அவனுக்கு திமிர் இருந்தா கூட காரணத்தோடுதான் இருக்கும்.." சிடுசிடுப்போடு சொன்னவள் கோபத்தோடு அங்கிருந்து கிளம்பினாள்.

நடந்தவளின் கை பற்றி நிறுத்தினான் ஆரவ்.

"அவனும் என் அக்காவும் லவ் பண்ணிட்டு இருந்தாங்க. ஆனா பிரேக்அப் பண்ணிட்டாங்க.. என் கண் முன்னாடியே என் அக்காவை எத்தனை அடி அடிச்சான் தெரியுமா? இவ மேல எனக்கு எவ்வளவு கோபம்ன்னு சொன்னா உனக்கு புரியாது.." என்று தன் பக்க நியாயத்தை விளக்கிச் சொன்னான்.

யோசித்தாள் தேன்மொழி. "சாரிப்பா அவன் அவ்வளவு சீக்கிரத்தில் கை நீட்டிட மாட்டான். ரொம்ப கோபம் வந்தா மட்டும்தான் அடிப்பான். அவனுக்காக நான் சாரி கேட்கறேன்.."

"பரவால்ல விடு.. இன்னொரு முறை அவன் என் அக்காவை நெருங்காம இருந்தா போதும்.." என்றவன் தன்னிடம் இருந்த கேக்கை எடுத்து அவளுக்கு ஊட்டி விட்டான்.

வெட்கமாக இருந்தது அவளுக்கு.

"தேன்மொழி.." தயக்கமாக அழைத்தவன் அவள் நிமிர்ந்ததும் "என்னை உனக்கு பிடிச்சிருக்கா.?" என கேட்டான்.

மீண்டும் தரை பார்த்தாள் தேன்மொழி.

"நான் யோசிச்சி சொல்றேன்.." சிறு குரலில் சொன்னாள்.

"ஓகே.."

அன்று இரவு தேன்மொழியின் பிடிவாதத்தால் வெற்றி அங்கேயேதான் தங்கினான்.

மறுநாள் காலையில் அவசரமாக உணவை முடித்துக் கொண்டு கிளம்பிவிட்டான்.

டைனிங் ஹாலில் அமர்ந்திருந்த மற்ற அனைவரும் அவனைக் கண்டு சலித்துக் கொண்டனர்.

"ஒருநாள் சேர்ந்து தங்குவதால் இந்த பையன் என்ன குறைஞ்சிட போறான்.?" என்று திட்டினாள் பாட்டி.

"நானொரு ரகசியம் சொல்லட்டுமா.?" என்று கேட்ட தேன்மொழியை அனைவரும் குறுகுறுப்பாக பார்த்தனர்.

"வெற்றி அண்ணா ஒரு பொண்ணை லவ் பண்ணியிருக்கான். இப்ப பிரேக்அப்பும் பண்ணியிருக்கான்.."

சுற்றி இருந்தவர்கள் சந்தேகத்தோடு தேன்மொழியை பார்த்தனர்.

"யார் அந்த பொண்ணு.?" என விசாரித்தார் தாத்தா.

விவரத்தை சொல்ல ஆரம்பித்தாள் தேன்மொழி. ஆனால் தான் உளறிக்கொட்டி விஷயத்தால் எவ்வளவு பிரச்சினைகள் வரும் என்று அறியாமல் போய்விட்டாள் அவள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே.

LIKE

COMMENT

SHARE

FOLLOW
 

Sevanthi Durai

Crazy Writer
Vannangal Writer
Team
Messages
273
Reaction score
287
Points
93
காதல் கணவன் 5

தேன்மொழி சொன்ன விசயம் கேட்டறிந்த தாத்தா அன்று மாலையில் முத்துராமை வீட்டிற்கு வர வைத்தார்.

"என் பேரனுக்கும் அந்த பொண்ணுக்கும் நடுவுல என்னதான் ஆச்சி?"

தாத்தாவின் விசாரணை கண்டு தயங்கினான் முத்துராம்.

'இவர் உட்கார்ந்திருக்கும் ஸ்டைலை பார்த்தாலே பயமா இருக்கு.. விசயத்தை சொன்னா அவன் மிதிப்பான். சொல்லலன்னா இவர் விட மாட்டாரு. வசமா வந்து சிக்கிட்டேன் போலயே..' வருத்தமாக நினைத்தவனை முறைத்தார் தாத்தா.

"கேட்கறவன் கேன பையலாடா.? எவ்வளவு நேரமா காத்திருக்கேன்?" தாத்தா கத்தினார்.

நேரமென்று பார்த்தால் இரண்டு நிமிடங்கள் கூட ஆகியிருக்காது.

பயந்தபடியே விசயத்தை சொல்ல ஆரம்பித்தான் முத்துராம். தனக்கு தெரிந்த அனைத்தையும் சொன்னவன் நான்கு நாட்கள் முன்பு வெற்றி தன்னிடம் கோபத்தில் உளறியிருந்த கர்ப்பம், கரு கலைப்பு விசயத்தையும் சொல்லி விட்டான்.

அவ்விசயத்தை கேட்டவுடன் தாத்தாவின் முகம் முழுதாய் மாறி போனது.

எவ்வளவு பெரிய விசயம். இவ்வளவு சாதாரணமாக கையாண்டு இருக்கிறார்கள் என்று கோபம் வந்தது. சிறு பிள்ளைகள் செயல் இப்படிதான் என்று திட்டினார்.

"குடும்பத்தோட வாரிசை வயித்துல சுமந்த பொண்ணை பிரேக்அப் பண்ணிட்டு வந்திருக்கிறானா அந்த பையன்?" என்று அவர் திட்ட ஆரம்பிக்க, முத்துராம் சோதனையாக வருந்த ஆரம்பித்தான். தான் உளறிக் கொட்டியதை அறிந்த பிறகு வெற்றி தன்னை தூக்கி போட்டு மிதிக்க போகிறான் என்ற விசயம் மட்டும் அவனுக்கு தெளிவாக தெரிந்தது.

"தாத்தா இதை நான்தான் உங்ககிட்ட சொன்னேன்னு அவன்கிட்ட சொல்லிடாதிங்க.." என்று கேட்டு விட்டு அங்கிருந்து கிளம்பினான் முத்துராம்.

தாத்தா அன்று முழுக்க யோசித்தார். மறுநாள் அம்ருதாவின் வீடு தேடி சென்றார். அம்ருதா பணிக்கு கிளம்பி இருந்த நேரத்தில் வந்திருந்த இந்தப் பெரியவரை வரவேற்றனர் அம்ருதாவின் பெற்றோர்.

"யார் நீங்க.?"

தன்னைப் பற்றிய விவரங்களை சொன்னவர் "சின்ன புள்ளைங்க தப்பு பண்ணிட்டாங்க.. அப்படியே விட முடியாது இல்லையா.? அதனாலதான் பேசலாம்ன்னு நானே தேடி வந்து இருக்கேன்.!" என்றார்.

ராமனும் மேகலாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

"நாங்க என்னங்க சொல்றது? ஆசையா வளர்த்த பொண்ணு.. இப்படி பண்ணிட்டாளேன்னு இவர் இந்த ஒரு வாரமா சரியா சாப்பிட கூட இல்ல.. அவளோடு சரியா பேசவும் இல்ல.." என்று புலம்பினாள் மேகலா.

"இரண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சிட்டா சரியா இருக்கும்ன்னு நான் நினைக்கிறேன்.. எங்க குடும்ப வாரிசை சுமந்த பொண்ணு.. அவளை விட்டுட எங்களால முடியாது.. நீங்கதான் இனி உங்க விருப்பத்தை சொல்லணும்.." தாத்தா சொன்னது கேட்டு மறுப்பாக தலையசைத்தார் ராமன்.

"உங்க பேரன் ரொம்ப திமிரா நடந்துக்கறாரு.. எங்க முன்னாடியே எங்க பொண்ணை அடிக்கிறாரு. சூடான காபியை அப்படியே தூக்கி தரையில கொட்டிட்டாரு. பார்த்த எனக்கு பக்குன்னு ஆகிடுச்சி. அவரை நம்பி எப்படி எங்க பொண்ணு கட்டித் தருவது.?" என்று கோபத்தோடு கேட்டார் ராமன்.

இரு கை கூப்பி வணங்கினார் தாத்தா. அவரின் செயல் கண்டு மேகலாவுக்கும் ராமனுக்கும் ஒரு மாதிரி ஆகிவிட்டது.

"என்னங்க இப்படி பண்ணிட்டிங்க.?" என்றபடி எழுந்து நின்றார் ராமன்.

"என் பேரனுக்கு அடிக்கடி கோபம் வரும்ங்க. அது என்னவோ உண்மைதான். ஆனா நீங்க என்னை நம்பி உங்க பொண்ணை கட்டி தரலாம். அவ மேல தூசு துரும்பு கூட விழாது. அதுக்கு நாங்க பொறுப்பு. எங்களோடது கூட்டுக் குடும்பம். என் பேரனை மட்டும் அவங்க அப்பன் தனியா கூட்டி போய் வச்சிருக்கான்.. நீங்க உங்க பொண்ணை தந்தா என் பேரனையும் எங்க வீட்டுக்கு திருப்பிக் கூட்டிப்போம். உங்க பொண்ணையும் பத்திரமா பார்த்துப்போம்.." என்றார்.

"கொஞ்சம் யோசிச்சிட்டு பதில் சொல்றோங்க.." ராமன் சொன்னது கேட்டு "சரிங்க.." என்ற தாத்தா தங்கள் வீட்டு முகவரியை அவர்களிடம் எழுதி தந்து விட்டு வந்தார்.

ராமன் அவர்களின் குடும்பத்தை பற்றி விசாரித்தார். விசாரித்து அனைத்த இடத்திலுமே குடும்பத்தை பற்றி நல்ல முறையில்தான் சொன்னார்கள். வெற்றிக்கு மட்டும் கடந்த எட்டு ஆண்டுகளாக அளவுக்கு அதிகமாக கோபம் வந்துக் கொண்டிருக்கிறது என்பதையும் அறிந்துக் கொண்டார். காரணம் உள்ள இடத்தில் மட்டும்தான் அவனுக்கும் கோபம் வருகிறது என்பதையும் புரிந்து கொண்டவர் தனது மனைவியோடு கலந்து ஆலோசித்தார்.

"கோபம்தான் எனக்கு கொஞ்சம் நெருடலாக இருக்குங்க.." என்றாள் மேகலா.

"கொஞ்ச வருசத்துல சரியாகிடும்னு டாக்டர்ஸ்ஸே சொல்லியிருக்காங்க.. நல்ல குடும்பம். வசதி வாய்ப்பு எல்லாமே இருக்கு. அதையும் தாண்டி உன் பொண்ணு ஆசைப்பட்டுட்டா.. பேசி முடிச்சிடலாம்.." என்றார்.

அடுத்த நாள் காலையில் உணவை சாப்பிடுகையில் "உனக்கு கல்யாணம் பண்ணலாம்னு இருக்கோம்.." என்று மகளிடம் சொன்னார் ராமன்.

"உங்க இஷ்டம்ப்பா.." என்றாள் நிமிர்ந்து பார்க்காமல்.

ஒரு வாரத்திற்குப் பிறகு தந்தை பேசுகிறார் அதுவே அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவரிடம் மறுத்து பேசி மீண்டும் வெறுப்பை வாங்கிக் கொள்ள விரும்பவில்லை அவள். திருமணம் செய்வதும் தவறாக தோன்றவில்லை. அதனால் உடனே ஒத்துக்கொண்டாள்.

"மாப்பிள்ளை யார்ன்னு தெரிய வேணாமா.?"

"நீங்க யாரை கை காட்டுறிங்களோ அவங்களுக்கு நான் கழுத்தை நீட்டுறேன் அப்பா.." தனது முன்னால் காதல் தந்த வலியில் இருந்தவளுக்கு மாப்பிள்ளை யாரென்று அறிந்து கொள்ளும் ஆசை கூட இல்லாமல் போய்விட்டது.

அடுத்த இரண்டாம் நாள் காலையில் வேலைக்கு தயாராகிக் கொண்டிருந்த மகளிடம் "அம்ருதா இன்னைக்கு சாயங்காலம் உன்னை பொண்ணு பார்க்க வராங்க.. அஞ்சி மணிக்கு கே.எம் ஹோட்டல்ல இரண்டாவது ஹாலுக்கு வந்துடு.." என்று சொல்லி அனுப்பினாள் மேகலா.

"சரிம்மா.." என்றுவிட்டு கிளம்பியவள் வங்கியின் கார் பார்க்கிங்கில் தனது வாகனத்தை நிறுத்தி விட்டு இறங்கினாள்.

"அம்ருதா.." பாலாஜியின் குரலில் திரும்பிப் பார்த்தாள்.

தனது பைக்கை நிறுத்தி விட்டு இறங்கியவன் இவளை நோக்கி வேகமாய் நடந்து வந்தான். ஒரு மாதத்திற்கு பிறகு அவனைப் பார்க்கிறாள் அம்ருதா. மகிழ்ச்சியோடு சென்று நண்பனை அணைத்துக் கொண்டாள்.

"உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன் பாலாஜி.." என்றாள்.

"மீ டூ.." என்றவன் அவளை அழைத்துக்கொண்டு வங்கிக்குள் நுழைந்தான்.

பாலாஜி தங்க நகை கடன் பிரிவில் வேலை செய்து கொண்டிருக்கிறான். அவனும் அம்ருதாவும் கல்லூரி காலத்திலிருந்தே நண்பர்கள்.

"நீயும் வெற்றியும் பிரேக்அப் பண்ணிட்டிங்களாமே, உண்மையா.?" சந்தேகத்தோடு கேட்டான் மாடிப்படிகளில் ஏறியபடியே.

சுவரைப் பார்த்தபடி ஆமென்று தலையசைத்தவள் "உனக்கு இப்போது உடம்பு எப்படி இருக்கு.?" என கேட்டாள்.

"என்னை விடு. நீ ஏன் வெற்றியை பிரேக்அப் பண்ண.? அவன் உன்னை ரொம்ப லவ் பண்றான்.." என்றான் குறையாக.

நண்பனை படியிலேயே நிறுத்தினாள் அம்ருதா. அவனைத் தன் பக்கம் திருப்பினாள்.

அவனது சட்டையின் கையை மேலே மடக்கி விட்டாள். அவனின் வலது கைப்புறத்தில் பன்னிரெண்டு தையல்களோடு இருந்த காயம் இப்போது வடுவாக காணப்பட்டது.

"இதுக்கு என்ன செய்யறது.?" என கேட்டாள் கோபத்தோடு.

"விடுப்பா எனக்கும் அவனுக்கும் செட் ஆகாதுன்னுதான் எல்லோருக்குமே தெரியுமே.." என்றவன் சந்தேகத்தோடு தோழியை பார்த்தான். "நீ எனக்காக அவனை பிரேக்கப் பண்ணியா.?" எனக் கேட்டான்.

பதில் சொல்லவில்லை அம்ருதா. ஆனால் அவளின் மௌனம் அவனுக்கான பதிலை சொன்னது.

"நான் இதுக்காகத்தான் இந்த விசயத்தை உங்ககிட்ட சொல்லவே இல்ல‌‌.." என்று கோபத்தோடு சொன்ன பாலாஜி அவளை அப்படியே விட்டுவிட்டு மேலேறினான். அவனின் கோபம் கண்டு நெற்றியைத் தேய்த்துக் கொண்டாள் அம்ருதா.

அவனை சமாதானம் செய்யலாம் என நினைத்து படியேறினாள். அதே சமயத்தில் அவளின் கைப்பை கீழே விழுந்தது. அதை எடுக்க நினைத்து திரும்பியவளை இடித்துக் கொண்டு மேலே ஏறியது ஒரு ஜீவன்‌. நிமிர்ந்து பார்க்காமலே தெரியும் அது யாரென்று அவளுக்கு.

"காலங்காத்தாலயே இவ முகத்துல விழிச்சிருக்கோம் பாரு.." என்று சலித்துக் கொண்டு அவளைத் தாண்டி நடந்தான் வெற்றி.

அவனின் சலிப்பு கண்டு கடுப்பானாள் அம்ருதா.

வெற்றி தனது கேபினுக்கு சென்று அமர்ந்த வேளையில் அவனின் கைபேசி ஒலித்தது. தாத்தா அழைத்திருந்தார். எடுத்து பேசினான்.

"இன்னைக்கு சாயங்காலம் உனக்கு பொண்ணு பார்க்க போறோம்.." என்றார் அவர்.

"ஏன் தாத்தா இப்படி உயிரை வாங்கறிங்க.? எனக்கு அந்த இழவெல்லாம் என்னத்துக்கு.? நானும் ஒரு வாரமா சொல்லிட்டு இருக்கேன் இல்லையா.? அப்போதும் போன் பண்ணி பொண்ணு பார்க்க போறோம்ன்னு திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டே இருந்தா என்ன அர்த்தம்.?" என்று கத்தி வைத்தான்.

எதிர்முனையில் இருந்த தாத்தா தனது காதுகளை கொஞ்சமாக அசக்கி விட்டுக் கொண்டார்.

"உன் கோபத்தையெல்லாம் என்கிட்ட காட்டாத வெற்றி. அப்புறம் கை காலை முறிச்சி போட்டுடுவேன்.." மிக அமைதியாக சொன்னார்.

வெற்றி ஒற்றை கையால் முகத்தை பொத்திக் கொண்டான். இதுவரை தாத்தாவிடம் மட்டும்தான் தனது கோபத்தைக் காட்டாமல் இருந்தான். ஆனால் இன்று அவரிடமும் காட்டியாகிவிட்டது. அம்ருதாவை பார்த்த கோபத்தில் வந்தவன் அதே மனநிலையோடு தாத்தாவிடம் பேசி விட்டான்.

"சாரி தாத்தா.." என்றான் மன்னிப்புக் கோரும் குரலில்.

"உன் சாரி எனக்கு எதுக்கு.? மரியாதையா சாயங்காலம் கே.எம் ஹோட்டலோட செகண்ட் ஹாலுக்கு வந்து சேரு.." என்றவர் அழைப்பை துண்டித்துக் கொண்டார்.

அன்று முழுக்க வெற்றிக்கு வேலையே ஓடவில்லை.

முற்பகல் வேளையில் கேன்டினில் அமர்ந்து தேநீர் அருந்திய வண்ணம் தனது பிரச்சனையைப் பற்றி நண்பன் முத்துராமிடம் சொன்னான் வெற்றி. இன்று மாலையோ அல்லது நாளை காலையோ தனக்கு கச்சேரி உண்டு என்பதை புரிந்துகொண்ட முத்துராம் "உன் விருப்பப்படி செய்டா. உன்னை யாரும் கட்டாயப்படுத்த முடியாது இல்லையா.?" என கேட்டான்.

"என் தாத்தாவோட பிடிவாதத்தை பத்தி உனக்கு தெரியாதா.? அதுவும் இப்ப மொத்த குடும்பமும் சேர்ந்து பிளான் பண்ணிட்டு இருக்காங்க. அவங்க முடிவு பண்ணிட்டா எனக்கு நிஜமா கல்யாணம் ஆகிடும் முத்து. எப்படி தப்பிக்கிறதுன்னு எனக்கு தெரியலடா.." என்றான் புலம்பலாக.

"அதுதான் பிரேக்அப் ஆயிடுச்சே. நீ‌ ஏன் கல்யாணம் பண்ணிக்க கூடாது.?" என கேட்டான் நண்பன்.

"பிரேக்அப் பண்ணிட்டா கல்யாணம் பண்ணிக்கணுமா.? முடியலடா என்னால. மறக்க முடியல அவளை.. ஓடிப் போய் அவ கால்ல விழுந்துடலாமான்னு கூட தோணுது‌. அந்த அளவுக்கு அவளுக்கு அடிக்ட் ஆகிட்டேன்டா.." என்று தலையை பிடித்தபடி சொன்னான்.

"சரி விடுடா. எல்லாம் விதிப்படிதான் நடக்கும்.." என்று நண்பனுக்கு சமாதானம் சொன்ன முத்துராம் நாற்காலியிலிருந்து எழுந்து நடந்தான். நண்பனை தொடர்ந்து நடந்த வெற்றி கேன்டினுக்குள் சிரித்துப் பேசியபடி நுழைந்த அம்ருதாவையும் பாலாஜியையும் கண்டு நெஞ்சுக்குள் தீ பிடித்தவன் போலானான்.

இவனைக் கண்டதும் நெருங்கி வந்த பாலாஜி "வெற்றி, நீ ஏன் இவளை பிரேக்அப் பண்ணிட்ட.?" எனக் கேட்டான் வருத்தத்தோடு.

அவனின் மூக்கில் ஒரு குத்து விட்டான் வெற்றி. மூக்கை பிடித்தபடி ஓரடி பின்னால் தள்ளி நின்றான் அவன். முத்துராம் கேன்டினில் இருக்கும் யாராவது தங்களை பார்க்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தான். நல்லவேளையாக அந்த நேரத்தில் அங்கு கூட்டம் இல்லை.

அம்ருதா நண்பனுக்கு முன்னால் வந்து நின்றாள். முன்னாள் காதலனை முறைத்தாள்.

"மரியாதையா இருந்துக்க வெற்றி.." என்றாள் விரல் நீட்டி.

அவள் மேலே பேசுமுன் கைகாட்டி தடுத்தான் வெற்றி. "நான் உங்களை டிஸ்டர்ப் பண்ணேன்னா.?‌ அவன் என்னோடு பேசினான். நான் அவனை அடிச்சேன். நடுவுல உங்களுக்கு என்ன சம்பந்தம் மேடம்.?" எனக் கேட்டான்.

"இவனைப் போல ஒரு மிருகத்தோடு உனக்கு என்ன பேச்சி பாலாஜி ?" எனக் கேட்டபடி நண்பனை அழைத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள் அம்ருதா.

பாலாஜியை பார்க்கும் ஒவ்வொரு முறையும் தனக்குள் கொலைவெறி உண்டாவதை உணர்ந்தான் வெற்றி.

அப்படி என்னதான் ஆயிற்று வெற்றிக்கும் பாலாஜிக்கும் இடையில்.?‌

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

LIKE

COMMENT

SHARE

FOLLOW
 

Sevanthi Durai

Crazy Writer
Vannangal Writer
Team
Messages
273
Reaction score
287
Points
93
காதல் கணவன் 6

கேன்டினை விட்டு வெளியே செல்லும் வெற்றியின் முதுகை வெறித்தபடி இருந்த நண்பனின் கையில் தட்டினாள் அம்ருதா.

"அவனை பார்க்காதே விடு.." என்றவள் எழுந்து சென்று இரண்டு காப்பிகளை வாங்கி வந்தாள்.

பாலாஜி காபியைப் பருகினான். "இருந்தாலும் நீ ஒரு நல்ல பையனை மிஸ் பண்ணிட்டியோன்னு தோணுது.." என்றான் கவலையாக.

"எனக்கு இப்போதுதான் விடுதலை கிடைச்சிருக்கு. எதுவும் புரியாம பேசாதே.." நண்பனிடம் கோபித்து கொண்டவள் காப்பியை அருந்தினாள்.

"என்னை இன்னைக்கு பொண்ணு பார்க்க வராங்க.." என்றாள் சில நிமிடங்கள் கழித்து.

அவள் சொன்ன செய்தி கேட்டு ஆச்சரியப்பட்டான் அவன். "நீ நிஜமா இவனை மறந்துட்டியா.?"

"சுத்தமா பிடிக்கல பாலாஜி. ரொம்ப அழுத்தம் தரான்.."

தோழியின் கையைப் பற்றிய பாலாஜி "கவலைப்படாதே.. எல்லாம் சரியா போயிடும். ஆனா இவன் மேல இருக்கிற கோபத்துல எந்த அவசர முடிவும் எடுக்காதே.." என்று எச்சரித்தான்.

சிரித்தாள் அம்ருதா. "நான் இந்த திருமணத்துக்கு முழுசா சம்மதிக்கிறான். இவனை என் மனசுல இருந்து தூக்கி எறியறதுக்கு இதை தவிர வேற ஆப்சனே கிடையாது.."

"அவ்வளவு டீப்பா லவ் பண்ணிட்டு உடனே பிரியறது சுலபமில்ல அம்ருதா. குளிருக்கு பயந்து நெருப்பில் குதிச்ச அதே கதை ஆகிட போகுது உன்னோடது. எதுக்கும் பார்த்து பத்திரமா முடிவு பண்ணு. உன்னோட பிரெண்டா நெனச்சி‌ இதை சொல்றேன். நீ நாளைக்கு உடைஞ்சி அழுவதை நான் பார்க்க விரும்பல.."

"ஏற்கனவே நிறைய அழுதுட்டேன் பாலாஜி. இதுக்கு மேலயும் இவனை காரணம் காட்டி அழுக விரும்பல.. மாப்பிள்ளை பிடிச்சிருந்தா கண்டிப்பா நான் அவனை கல்யாணம் பண்ணிப்பேன்..." என்றவள் மாலையில் கிளம்பும்போது அவளோடு சேர்ந்து ஹோட்டலுக்கு வந்தான் பாலாஜி.

ஹோட்டலின் வாசலில் நின்று கொண்டவன் "நான் இங்கேயே வெயிட் பண்றேன். நீ பார்த்து பேசிட்டு வா.." என்று அனுப்பி வைத்தான்.

இரண்டாவது ஹாலில் நுழைந்தாள் அம்ருதா. நீண்டிருந்த மேஜையை சுற்றி அமர்ந்திருந்தார்கள் இவளைப் பெண் பார்க்க வந்தவர்களும், இவளின் பிறந்த வீட்டாரும்.

அம்ருதா புன்னகைத்தபடி அம்மாவின் அருகே வந்து நின்றாள். ஆரவ் தனக்கு முன்னால் அமர்ந்திருந்த இளம்பெண்ணை ஓரக்கண்ணால் ரசித்துக் கொண்டிருந்தான். தம்பியின் விழிகள் போன திசை கண்டு மனதுக்குள் சிரித்தாள் அம்ருதா.

"இப்படி உட்கார் பாப்பா.." என்றாள் எதிரே இருந்த பாட்டி.

புன்னகைத்தபடியே நாற்காலியில் அமர்ந்தாள்.

பெண் பார்க்க வந்திருந்த கூட்டத்திலிருந்த இளம் பெண்கள் இருவர் இவளைப் பார்த்து விட்டு தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

"நீங்க ரொம்ப அழகா இருக்கிங்க.." என்று இளம் பெண் ஒருத்தி சொல்லவும், "தேங்க்ஸ்.." என்று வெட்கப்பட்டு தலை குனிந்தாள் அம்ருதா.

பெண்பார்க்க வந்தவர்கள் இவளிடம் பொதுவாய் விசாரித்தார்கள். அவர்களின் பேச்சும் உபசரிப்பும் அம்ருதாவுக்கு பிடித்திருந்தது. அவர்களின் கூட்டுக் குடும்பமும் அவளுக்குப் பிடித்திருந்தது. அவர்களைப் பார்க்கையில் எங்கோ பார்த்த முகசாயல் என்று தோன்றியது. ஆனால் எங்கு பார்த்தோம் என்றுதான் அவளுக்கு நினைவில் இல்லை.

அவள் வெற்றியின் தந்தையைத் தவிர வேறு யாரையும் இதுவரை பார்த்ததில்லை. இந்தப் பெண் பார்க்கும் படலத்திற்கு வெற்றியின் அப்பாவும் வந்திருக்கவில்லை. ஏதோ ஒரு குடும்பம் என நினைத்து அமர்ந்திருந்தாள் அவள்.

மாலை வேளையில் தனது பணியை முடித்துக் கொண்டு கிளம்பினான் வெற்றி.

தனது கை கடிகாரத்தை பார்த்த மாப்பிள்ளையின் தாத்தா, "சாரிம்மா இப்ப வந்துடுவான் அவன்.." என்றார்.

கே.எம் ஹோட்டலின் பார்க்கிங்கில் பைக்கை நிறுத்தியவன் கீழே இறங்கினான். கலைந்திருந்த தலையை கண்ணாடி வழியே பார்த்தான். அந்த தலையைக் கோதிக் கொள்ள வேண்டுமென்று தோன்றவில்லை.

போனை எடுத்தவன்‌ கீர்த்தனாவுக்கு அழைத்தான்.

"உன் அண்ணன் வந்துட்டாராம் தேன்மொழி.." என்று கீர்த்தனா சொல்லியவுடன் அங்கிருந்து துள்ளிக் கொண்டு ஓடினார்கள் தேன்மொழியும் கனிமொழியும்.

ஹாலினை நோக்கி நடந்து கொண்டிருந்த வெற்றி எதிரே வந்து நின்ற தங்கைகளை கண்டு முகம் மலர்ந்தான்.

"அண்ணா எனக்கு அண்ணியை ரொம்ப பிடிச்சிருக்கு.." என்றாள் கனிமொழி.

அவளின் காதை பற்றி செல்லமாக கிள்ளியவன் "எனக்கு இந்த பெண் பார்க்கும் படலத்தையே பிடிக்கல. நீ அதுக்குள்ள அண்ணின்னு சொல்றியா.?" என கேட்டான் கேலியாக.

"வந்து பொண்ணை பாரு. அப்புறம் நீயே சொல்லுவ அவங்கதான் எங்களோட அண்ணின்னு.."

"உனக்கு சொன்னா புரியாது செல்லம். அது.. லவ் இருக்கு இல்லையா.? அது இங்கே உருவாகும்.." என்ற தன் நெஞ்சை சுட்டிக் காட்டினான். "இந்த மனசுக்கு எல்லாரையும் பிடிச்சிடாது.. அந்த மனசுக்குன்னு ஒருத்தங்க இருப்பாங்க. அவங்களோட மட்டும்தான் அது அந்த லவ்வை உணரும்.." என்று கனிமொழிக்கு பாடம் எடுத்தான்.

அவன் ஹாலுக்குள் நுழையும் முன் அவனை நிறுத்தினாள் தேன்மொழி. அவனது கழுத்தில் சங்கிலி ஒன்றை அணிவித்தாள்.

"என்ன இது.?" என்றவனிடம் "இது பெரியம்மாவுடையது.. இதை நீ கழுத்துல போட்டிருக்கும் வரை யார்கிட்டயும் கோபப்படக் கூடாது.." என்றவள் அவனது வலது கையை எடுத்து தன் தலை மீது வைத்தாள். "இன்னைக்கு இந்த ஹோட்டலை விட்டு வெளியே போகும் வரை நீ கோபமே படக்கூடாது. இது என் மேல சத்தியம்.." என்றாள்.

வெற்றி அவளை விசித்திரமாக பார்த்தான். அவனது பார்வையை கண்டு கொள்ளாதவள் அவனை இழுத்துக் கொண்டு உள்ளே நடந்தாள்.

ஹாலுக்குள் நுழைந்த நொடியிலேயே அம்ருதாவின் சிரிப்பு சத்தத்தை கேட்டு விட்டான் வெற்றி.

சந்தேகத்தோடு பார்த்தான். அவனுக்கு முதுகு காட்டி அமர்ந்திருந்தவள் அவனது குடும்பத்தாரோடு சிரித்துப் பேசிக்கொண்டிருந்தாள். குழப்பமாக இருந்தது அவனுக்கு.

அவனை பிடித்து இழுத்துக்கொண்டு நடந்த தேன்மொழி "மாப்பிள்ளை வந்துட்டாரு.." என்று சொன்னாள்.

அம்ருதா திரும்பிப் பார்த்தாள். இவனைக் கண்டதும் குழம்பிப் போனாள். கொஞ்சம் அதிர்ந்து போனாள்.

"இப்படி வந்து உட்காரு அண்ணா.." என்று அவனை நாற்காலியில் தள்ளினாள் தேன்மொழி. அவனது பக்கத்திலேயே அமர்ந்து கொண்டவள் அவனது கையை இறுக்கமாக பற்றிக்கொண்டாள்.

வெற்றி வாய் பேசும் நிலையில் இல்லை. அதிர்ச்சியில் இருந்தவனை பார்த்துக் கொண்டிருந்த அம்ருதாவுக்கும் அங்கே நடக்கும் விசயம் புரியவில்லை.

"உன் குழப்பம் எனக்கும் புரியுதும்மா.." என்று பேச ஆரம்பித்தார் தாத்தா.

"சின்ன பிள்ளைங்க உங்களுக்கு இந்த வாழ்க்கையை பத்தி சரியா தெரியல. என் பேரன் ரொம்ப நல்ல பையன். இவனை கல்யாணம் பண்ணிக்க. உன்னோட வாழ்க்கை ஹேப்பியா இருக்கும். அதுக்கு நான் கேரண்டி தரேன்.." என்றார்‌

வெற்றியை வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்த அம்ருதா தாத்தாவை இளக்காரமாக பார்த்தாள். இது வெற்றியின் குடும்பம் என அறிந்த பிறகு அவளால் அங்கு நிற்க கூட முடியவில்லை.

அவளின் பார்வை கண்டு எதிரே இருந்த அனைவருக்கும் ஒரு மாதிரி ஆகி போனது. இவ்வளவு நேரமும் கலகலப்பாக சிரித்துப் பேசிக் கொண்டிருந்தவளால் இப்படி வெறுப்பாக கூட பார்க்க முடியுமா என்று சந்தேகமாக இருந்தது.

வெற்றி கண்களை மூடினான். கைவிரல்களை இறுக்கிக் கொண்டான். தேன்மொழியின் மீது செய்திருந்த சத்தியம் நினைவிற்கு வந்தது. இந்த ஒற்றை நாளை மௌனத்தோடு கடந்து விட்டால் போதும் என்று மனதுக்குள் வேண்டிக் கொண்டிருந்தான்.

"என் பேரன் என்ன தப்பு செஞ்சிருந்தாலும் அவன் சார்பா நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்ம்மா.." என்றாள் பாட்டி.

'பாட்டி நான் எந்த தப்பும் செய்யல..' என்று மனதுக்குள் அலறினான் வெற்றி.

நிச்சயமற்ற பார்வை பார்த்துக் கொண்டிருந்த அம்ருதாவினுடைய கையைப் பற்றினார் அப்பா.

"குடும்பம் ரொம்ப நல்ல குடும்பமா இருக்கு. மாப்பிள்ளையும் நல்லவனாதான் இருக்கான். உங்களுக்கிடையில ஏன் சண்டை வந்ததுன்னு எனக்கு தெரியல அம்ருதா. ஆனா இவன் உனக்கு பொருத்தமானவனா இருப்பான்னு தோணுது.." என்றார்.

அம்ருதா பதில் பேசாமல் தன் கையை உருவிக் கொண்டாள். அவளின் முகம் மாறியதை பார்த்துக் கொண்டிருந்த அனைவருக்குமே சங்கடமாக இருந்தது.

இருக்கையிலிருந்து எழுந்து நின்றாள் அமிர்தா. "எனக்கு மாப்பிள்ளையை பிடிக்கல‌‌.." என்றாள்.

"உன் கோபத்தை கொஞ்ச நேரம் ஒத்திப்போடு அக்கா. உங்களுக்குள்ள என்ன நடந்திருந்தாலும் அதுல உன் தப்பும் இருக்கும்.." என்றான் ஆரவ்.

கசப்பாக சிரித்தாள் அம்ருதா.

"நான் ஒன்னும் சின்ன குழந்தை கிடையாது.." என்றாள்.

"அம்ருதா இது நான் பார்த்து முடிவு செஞ்சிருக்கேன்.." என்ற அப்பாவை கோபத்தோடு பார்த்தவள் "உங்களுக்கு இவனைப் பத்தி சரியா தெரியாதுப்பா. இவன் சுத்தமான ராட்சசன்‌ எதிரில் இருக்கும் ஒரு மனுசனை கூட மதிக்க மாட்டான். உங்க முன்னாடியே என்னை அத்தனை அடி அடிச்சான். அப்படி இருந்தும் எப்படி இவனை நம்புறிங்க.?" எனக் கேட்டாள்.

"இவன் உன்னை அடிச்சது தப்புதான். அதுக்கு நான் மன்னிப்பு கேட்கறேன்.." என்று எழுந்து நின்ற தாத்தா தன் கையை கூப்பினார்.

வெற்றிக்கு அவமானமாக இருந்தது.

"சாரி கேட்டா எல்லா விசயமும் முடிஞ்சிடாது தாத்தா.." என்றவள் இமையோரம் உருவான ஈரத்தைத் துடைத்துக் கொண்டாள்.

"தயவுசெஞ்சி உங்க பேரனைக் கூட்டிப் போய் ஒரு நல்ல மெண்டல் ஹாஸ்பிடல்லா பார்த்து சேர்த்துங்க. இவனுக்கு பொண்ணு தேடி எங்கேயும் போகாதிங்க. அப்படி போனா உங்களுக்குதான் அவமானம். அவன் மனுசனே இல்ல தாத்தா. சுத்தமான மிருகம்.. ஒரு சைக்கோ.. அவனோடு நான் மட்டுமில்ல எந்த பொண்ணுமே வாழ மாட்டா.. காதலிச்ச பொண்ணோட மனசை கூட புரிஞ்சிக்க தெரியாதவன்.."

பாட்டிக்கும் வெற்றியின் அத்தை சித்திக்கும் முகம் கறுத்துப் போய் விட்டது. வெற்றி எத்தனையோ இடங்களில் பிரச்சினையை இழுத்துக் கொண்டு வந்துள்ளான். ஆனால் யாருமே இப்படி அவனை குறை சொன்னதில்லை. நடுத்தெருவில் நிற்க வைத்து உடைகளை உருவுவது போல மானத்தை வாங்கி கொண்டிருந்தாள் அம்ருதா.

அம்ருதா தன் அண்ணனை அவமானப்படுத்துவது கண்டு தேன்மொழிக்கு கண்கள் கலங்கியது.

தாத்தா பரிதாபத்தோடு அவளைப் பார்த்தார். "நடந்ததை மறந்துடலாம்மா.." என்றார் சிறு குரலில்.

அம்ருதா இடம் வலமாக தலையசைத்தாள்‌. தன்னைச் சுற்றி இருக்கும் அனைவருமே பைத்தியக்காரர்களோ என்று நினைத்தாள்.

"இவன் யார் கிடைச்சாலும் கண்மண் தெரியாம அடிக்கிறவன். அதையும் மீறி நான் இவனை கல்யாணம் பண்ணா இவனோட கோபத்துக்கு கண்டிப்பா என்னையும் ஒரு நாள் கொன்னுடுவான். எனக்கு பயமா இருக்கு தாத்தா.. உங்களுக்கு நான் சொல்றது புரியலையா?" என கத்தலாக கேட்டாள்.

"அமைதியாய் இரு அம்ருதா.." என்ற அம்மாவை திரும்பி பார்த்து முறைத்தாள்.

"நீங்க யாரை கல்யாணம் பண்ணிக்க சொன்னாலும் நான் பண்ணிக்கறேன் அம்மா. ஆனா இவன் மட்டும் வேண்டாம். இவனை தவிர வேறு யாரை வேணாலும் கை காட்டுங்க. உடனே கழுத்தை நீட்டுகிறேன்.." என்றாள்.

அவள் சொன்னதை கேட்டு வெற்றிக்கு முகம் கறுத்தது. யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்வேன் என்று அவள் சொன்னதை அவனால் நம்பவே முடியவில்லை.

"என் அண்ணன் ராட்சசன்னு உங்களுக்கு காதலிக்கும் முன்னாடியே தெரியாதா.?" அழுகையை அடக்கியபடி கோபத்தோடு கேட்டாள் கனிமொழி.

"தெரியாம காதலிச்சிட்டேன் போதுமா.. எனக்கு இனி இவன் வேண்டாம்.." என்றவள் அங்கிருந்து திரும்பிச் செல்ல முயன்றாள்.

"என்னமா இப்படி சொல்ற.? என்ன இருந்தாலும் நீ எங்க குடும்ப வாரிசு வயித்துல சுமந்தவள் இல்லையா.?" பாட்டி எழுந்து நின்று கேட்டாள்.

நின்ற இடத்திலேயே திரும்பினாள். வெற்றியை முறைப்போடு பார்த்தாள். பின்னர் பாட்டியை பார்த்தாள்.

"உங்களுக்கு எப்படி புரியவைக்கறதுன்னு தெரியல. இவன் குழந்தையை வயித்துல சுமந்ததுக்காக நான் அவமானப்படுறேன்.. இவனை காதலிச்சது பாவம். இவனை கல்யாணம் பண்ணிக்க நினைச்சது என் வாழ்க்கைக்கு நான் செய்யயிருந்த துரோகம். அதைவிட முக்கியமாக குழந்தை.. நினைச்சிக் கூட பார்க்க விரும்பல. இவனோட நிழலைக் கூட பார்க்க விரும்பல. தயவு செஞ்சி விட்டுடுங்க. இனி எப்பவும் என்னை தேடி வராதிங்க. அதையும் மீறி இவனுக்காக என்னை கேட்டு வந்திங்கன்னா நான் உங்களை அவமானப்படுத்தவும் தயங்க மாட்டேன்.. பைத்தியக்கார பேரனுக்காக பொண்ணு கேட்டு எங்கேயும் போயிடாதிங்க.. என்னை மாதிரியே எல்லாரும் மரியாதையோடு பேச மாட்டாங்க.."

வெற்றி பற்களைக் கடித்தபடி எழுந்து நின்றான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

LIKE

COMMENT

SHARE

FOLLOW
 

Sevanthi Durai

Crazy Writer
Vannangal Writer
Team
Messages
273
Reaction score
287
Points
93
கணவன் 7

வெற்றியின் கையை பற்றினாள் இந்த பக்கத்தில் அமர்ந்திருந்த சித்தி. திரும்பி பார்த்தான். வேண்டாமென்று தலையசைத்தாள் அவள். அவளின் விழிகளும் கலங்கிதான் இருந்தது.

"உங்க பையனை ஏன்டா காதலிச்சோம்ன்னு நினைச்சி தினம் அழுதுட்டு இருக்கேன். இதுல கல்யாணம் ஒன்னுதான் குறைச்சலா? சீரியஸா ஒரு மேட்டர் சொல்றேன்.. அவனுக்கு யாரையுமே கல்யாணம் பண்ணி வைக்காதிங்க.. அந்த பொண்ணு கண்டிப்பா இரண்டே நாள்ல சூஸைட் பண்ணி செத்து போயிடுவா. அந்த அளவுக்குதான் இவன் டார்ச்சர் இருக்கும்.. இவனை எப்படிதான் நீங்க வீட்டுல வச்சிருக்கிங்களோ.. எனக்கு புரியவே இல்ல. நீங்க தூங்கும்போது கல்லை தூக்கிப் போட்டு கூட கொன்னுடுவான். சுத்தமான பைத்தியக்காரன். அடிக்கறது மிதிக்கறது தவிர வேற எதுவுமே தெரியாது அவனுக்கு.. ஹீ ஹேஸ் எ மெண்டல் ப்ராப்ளம். சீக்கிரம் ஹாஸ்பிட்டல் பாருங்க.. இல்லன்னா சைக்கோ கொலைக்காரனா மாறிடுவான்.." தனது கோபம் அத்தனையையும் வார்த்தைகளாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள் அம்ருதா.

தலை குனிந்து நின்றிருந்த வெற்றியின் கையை இன்னமும் சித்தி பிடித்துக் கொண்டுதான் இருந்தாள். கோபத்தை அடக்கியதாலும், இயலாமையின் வலி தந்த ரோசத்தாலும் விழிகள் கலங்கியது அவனுக்கு.

"போதும் அம்ருதா. இவ்வளவு பேச வேண்டிய அவசியம் என்ன? பிடிக்கலன்னா லீவ் ஹிம். ஏன் இப்படி பேசி வைக்கிற?" ஆரவ் கோபத்தோடு கேட்டான்.

அம்ருதா நெற்றியை தேய்த்தாள்.

"என்னை கெட்டவளை போல சித்தரிக்கறான் அவன்‌. அதுக்கு நானும் ஒத்து போறேன்.." என்றாள் தனக்கு தானே குறை சொல்பவளை போல.

"நீ ஜெயிச்சிட்ட வெற்றி‌. உன்னோட கோபம் யாருக்கும் தெரியல. நீ செய்த சேதாரம் யாருக்கும் தெரியல. ஆனா நான் வாயால இரண்டு வார்த்தை பேசுவது அவ்வளவு கஷ்டமா இருக்கு.." என்றவள் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டாள்.

"போதும். நீங்க பார்த்த மாப்பிள்ளை எனக்கு பிடிக்கல அப்பா. அதையும் மீறி இவனை கல்யாணம் பண்ணிக்க சொன்னா நான் செத்து போவேன்.." என்றவள் தனது கைப்பையை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினாள்.

தேன்மொழியின் விழிகள் இரண்டும் கண்ணீரோடு பளபளத்தது கண்டு ஆரவ்க்கு சங்கடமாக இருந்தது.

"அவ சார்ப்பா நாங்க உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கறோம்.." என்று எழுந்து நின்றார் ராமன்.

"அவங்களோட பிரச்சனை புரியல. ஒட்டாத கொடியை ஒட்ட வைக்க நினைச்சது நம்ம தப்புதான். உங்களோட ஆசைக்காக நானும் முயற்சி செஞ்சேன். ஆனா அவளுக்கு விருப்பம் இல்லை.. விட்டுடலாம்.." என்ற ராமன் இவர்களுக்கு கடைசி வணக்கத்தை வைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தார். அம்மாவும் ஆரவ்வும் இவர்களை பார்த்துக் கொண்டே அங்கிருந்து சென்றார்கள்.

அவர்கள் நால்வரும் சென்ற பிறகு தேன்மொழியின் விசும்பல் சத்தம் கேட்டது. எழுந்து நின்றவள் அண்ணனை கட்டிக் கொண்டாள்.

"அவங்க உனக்கு வேணாம் அண்ணா.. கெட்டவங்களா இருக்காங்க.. நீ நல்ல பையன்தான்.. அவங்க சொன்னதை நம்பாதே.." என்றாள் அழுதபடி.

வெற்றி வாய் திறக்கவில்லை. தலையும் நிமிரவில்லை.

"உனக்கு ஒன்னும் இல்லடா.. நீ மென்டலி ஹெல்தியா இருக்க.. அவ சொன்ன எதையும் மனசுல போட்டுக்காத.." அத்தை ஆறுதல் சொன்னாள்.

"பஜாரி மாதிரி நடந்துக்கறா.. அவளை போய் காதலிச்சி வச்சிருக்க.. உனக்கு ஒரு நல்ல பொண்ணு கூடவா கிடைக்கல.." என்று எழுந்தாள் கீர்த்தனா.

"நிஜமா சொல்றேன் கேளு.. இதுவரைக்கும் உனக்கும் எனக்கும் நடுவுல எந்த அபக்ஷெனும் கிடையாது. ஆனா அவளை விட நான் உனக்கு பொருத்தமா இருப்பேன். லவ் கிடையாதுதான். ஆனா எதுவும் சாத்தியம் இல்லாம இல்ல.. உனக்கு ஓகேன்னா சொல்லு. நாம மேரேஜ் பண்ணிக்கலாம்.." என்றாள் அவள்.

வெற்றி மிடறு விழுங்கினான். தொண்டை வலித்தது. எங்காவது சென்று கத்தி அழ வேண்டும் போல இருந்தது.

இடம் வலமாக தலையசைத்தான்.

கீர்த்தனாவுக்கும் அவனுக்கும் இடையில் நல்ல நட்பு இருந்தது. அம்ருதாவை காரணம் காட்டி அந்த நட்பு உடைவதில் அவனுக்கு துளியும் விருப்பம் இல்லை. அதை விட முக்கியமாக அவளின் மனதுக்குள் வேறு ஒருவன் இருந்தான்.

"சாரி.." என்றான் தலை குனிந்தபடியே.

"நீ ஏன்டா." பாட்டி பேசும் முன் "உங்களுக்கு பெரிய அவமானத்தை தேடி தந்துட்டேன்.. என்னால மொத்த குடும்பத்துக்கும் கெட்ட பேர்.. சாரி.." என்றவன் தேன்மொழியை விலக்கி நிறுத்தினான். சித்தியின் கையை விலக்கினான்.

"வெற்றி.." தாத்தா அவனுக்கு ஆறுதல் சொல்ல முயன்றார்.

"நான் அப்புறம் போன் பண்றேன்.." என்றவன் தலை நிமிராமலேயே அங்கிருந்து சென்றான். அவள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் நெஞ்சுக்குள் திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டிருந்தது.

***

வெற்றியை வேண்டாமென்று சொல்லி விட்டு வெளியே வந்தாள் அம்ருதா. ஹோட்டலின் வாசலில் நின்றிருந்த பாலாஜி இவளை கண்டதும் அருகில் வந்தான்.

கைக்கடிகாரத்தை பார்த்தவன் "அதுக்குள்ள மாப்பிள்ளை பார்த்துட்டியா?" என்றான் சந்தேகத்தோடு.

"உள்ளே இருந்தது வெற்றி. அவனோட குடும்பம் வாரிசை சுமந்தவள்ன்னு பிணாத்திக்கிட்டு என்னை பொண்ணு கேட்டு வந்திருக்காங்க.. ஆனா எனக்குதான் அவனை சுத்தமாவே பிடிக்கலையே.. அதையே சொல்லிட்டு வந்துட்டேன்.." என்றவள் தனது காரினை நோக்கி நடந்தாள்.

அவளின் பின்னால் ஓடியவன் அவள் தனது காரின் கதவை திறக்கும் முன் அவளது தோளை பற்றி திருப்பினான்.

"என்ன சொன்ன? என்ன வாரிசு?" எனக் கேட்டான் குழப்பத்தோடு.

அம்ருதா நெற்றியை தேய்த்தபடி இவன் புறம் திரும்பினாள்.

"நான் பிரகனென்டா இருந்தேன்.."

அவள் சொன்னது கேட்டு அதிர்ச்சியில் விழி விரித்தான் அவன்.

"ஆனா அபார்ஷன் பண்ணிட்டேன்.."

"அது வெற்றியோடதா.?" என கேட்டவனை முறைத்தாள். "பின்ன நான் என்ன ஏழு பேர் கூடவா சுத்திட்டு இருந்தேன்?" என்று கோபத்தோடு கேட்டாள்.

"ஏன்?" புரியாமல் கேட்டான் அவன்.

"ஏனா எனக்கு அவனை பிடிக்கல.." கத்தலாக சொன்னவளை கோபத்தோடு பார்த்தவன் "வெங்காயம் மாதிரி சொல்லாத.. அவனை காதலிச்சி, கட்டில் வரை போய், குழந்தை ஒன்னும் உருவாகும் வரை அவனை பிடிச்சிருந்ததா?" என்றான்.

அம்ருதா விழிகளை சுழற்றினாள்.

"அதே சராசரி ஆண்.."

மேலே பேசும் முன் அவளின் கன்னத்தில் ஒரு அறையை விட்டான்.

"சராசரி ஆணாவே இருந்துட்டு போறேன் நான்.. ஆனா நம்பி காதலிக்கறவங்களை பாதியில் கை விடுறது என்ன உயர்வு?" என்றான் பற்களை கடித்தபடி.

அவனை போலவே அவளும் பற்களை கடித்தாள்.

"உன்னை ரொம்ப நல்லவன்னு நம்பிட்டு இருந்தேன் நான்.. இவ்வளவு சீப்பா இருக்க.. சீட்டரா நடந்துக்கற.. உன்னை போல ஒருத்தி அவனுக்கு கிடைக்காதது அவன் செஞ்ச புண்ணியம்.. ஏதோ சாதாரண பிரேக்கப்.. இன்னைக்கு சண்டை. நாளைக்கு சேர்ந்துப்பிங்கன்னு நினைச்சேன். ஆனா அவனோட குழந்தையை அபார்ஷன் பண்ணியிருக்க நீ.. அவனுக்கு எப்படி வலிச்சிருக்கும்ன்னு யோசிச்சியா? அதை விட முக்கியமா உனக்கு எப்படி மனசு வந்தது அம்ருதா? அவ்வளவு லவ் பண்ணியே அவனை.." என்றான் அவள் செய்த செயலை நம்ப முடியாதவனாக.

கோபம் வரலாம். தவறில்லைதான். ஆனால் இந்த அளவுக்கு கூட செய்ய தோன்றுமா என்று குழம்பினான் அவன்.

யோசனையோடு அவனை பார்த்தவன் "ஒன் லாஸ்ட் கொஸ்டீன்.. நீ எனக்காக அவனை பிரேக்கப் பண்ணியான்னு காலையில் கேட்டதுக்கு எதுவும் சொல்லல நீ.. உண்மையில் எனக்காகதான் பிரேக்அப்.. அதை விட.. என்னை காரணம் காட்டிதான் உன் குழந்தையை அபார்ட் பண்ணியா?" என்றான்.

கேள்வியை கேட்டு முடித்தவனுக்கு வியர்த்தது. இதயம் ஓட்டமாய் ஓடியது.

மௌனம் காத்தாள் அவள்.

"சொல்லி தொலை சனியனே.." திட்டினான். அவளின் மௌனத்தை சுமந்த ஒவ்வொரு நொடியும் அவனை கொன்றது.

"ஐயோ.. அம்ருதா.. ஏன் இப்படி செஞ்ச? நான்.. எனக்கும் அவனுக்கும் நடுவுல நீ வராதேன்னு எத்தனை ஆயிரம் முறை சொல்லி இருக்கேன்.." என்று அங்கும் இங்குமாக நடந்தவன் தலையை பிடித்தபடி அவளருகே வந்து நின்றான்.

அவளின் சரிந்திருந்த தலையை பார்த்தவன் "தயவு செஞ்சி இந்த வாயை திறந்து சொல்லு.. நீ பண்ண தப்புக்கான பாவ கணக்கை என் பேர்லதான் எழுதி தொலைஞ்சி இருக்கியா.?" என்றான் கெஞ்சலாக.

உதட்டை கடித்தபடி நிமிர்ந்தாள் அம்ருதா.

"நீ மட்டுமே காரணம் கிடையாது.. அவனோட திமிர், அவன் என்கிட்ட நடந்துக்கிட்டது, அவனோட அணுகுமுறை.." என்று அடுக்கிக் கொண்டே போனவளின் முன்னால் கையை காட்டி நிறுத்தினான்.

"ஆக நானும் ஒரு காரணம். ரைட்?"

மௌனமாய் இருந்தாள்.

"தயவு செஞ்சா போய் செத்து தொலைஞ்சிடு அம்ரு.. உனக்கும் எனக்குமான பிரெண்ட்ஷிப் இந்த செகண்ட்ல இருந்து கட். இனி எப்பவும் என்னை தேடி வராத. நானும் உன்னை தேடி வர மாட்டேன். அதையும் மீறி வந்தா செருப்பால கூட அடி‌.." என்றவன் காரின் பின் இருக்கையில் இருந்த தனது தோள்பையை எடுத்து மாட்டிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.

"பாலா.."

திரும்பி வந்து அவள் முன் நின்றவன் "சத்தியமா முடிஞ்சிடுச்சி எல்லாமே. இனி என் பேர் கூட சொல்லி கூப்பிடாதே.." என்றான் எச்சரிக்கும் விதமாக.

அவன் நகரும் முன் அவனின் கையை பற்றினாள்.

"அவன் உன்னை அப்படி அடிச்சிருக்கான்டா.. ஆனா நீ அவனுக்கு சப்போர்ட் பண்ற. நீ நியாயமா என் பக்கம் நின்னு என்னை பாராட்டி இருக்கணும்.."

தலையை கோதிக் கொண்டவனுக்கு விழிகள் நிலை கொள்ளாமல் அலைந்தது.

"நான் எப்படி சொல்லுவேன்.? அவன் என்னை அடிச்சான். இல்லன்னு நான் சொல்லலையே.. ஆனா வீ ஹேவ் ரீசன் அம்ரு. என் வாழ்க்கையில் நடக்கும் எல்லாத்தையும் உன்கிட்ட சொல்ல முடியாம போறதுக்கு சாரி. ஆனா உன் முட்டாள்தனமான முடிவுக்கெல்லாம் எப்போதுமே என் மேல சாக்கு ஓட்டாத.. அவன் உன் லவ்வர். இது உன் லவ். நீதான் பிரச்சனையை ஸ்பேஸ் பண்ணணும்.. ஆனா நீ என்னை காரணம் காட்டி.." மீண்டும் கோபம்தான் வந்தது அவனுக்கு.

"நாம நம்ம நட்பை பிரேக்அப் பண்ணிக்கலாம். இனி நீ யாரோ நான் யாரோ‌.." என்றவன் அவள் குழம்பி நின்ற வேளையிலேயே அங்கிருந்து போய் விட்டான்.

தயங்கி நின்றாள். அவனின் கோபம் புரியவில்லை. இத்தனை ஆண்டுகால நட்பை ஏன் முறித்துக் கொண்டான் என்று புரியவில்லை. நாளை பேசிக் கொள்ளலாம் என எண்ணியவள் காரில் ஏறி அமர்ந்தாள். காரினை இயக்க இருந்தவள் எதிரே பார்த்தாள். தூரத்திலிருந்த பைக்கில் அமர்ந்துக் கொண்டிருந்த வெற்றி முகத்தை மூடியபடி இருந்தான்.

அவனை கண்டதும் இவளுக்கு உள்ளம் கொழுந்து விட்டு எரிந்தது.

"சைக்கோ.." என திட்டியவள் அங்கிருந்து சென்றாள்.

வெகுநேரம் பைக்கில் அப்படியேதான் அமர்ந்திருந்தான் வெற்றி. அரை மணி நேரத்திற்கு பிறகு அவனாகவே தேறி நிமிர்ந்தான். கழுத்தில் இருந்த அம்மாவின் சங்கிலியை பார்த்தான். அடுத்து டாலரில் முத்தமிட்டான்.

"லவ் யூம்மா.." என்றவன் பைக்கை கிளப்பினான்.

நேராய் சுடுகாட்டில் கொண்டு வந்து பைக்கை நிறுத்தினான். வழியில் வாங்கி வந்திருந்த பூங்கொத்தை எடுத்துக் கொண்டு நடந்தான்.

அம்மாவின் கல்லறை வந்தது. கல்லறையின் மீது பூங்கொத்து ஒன்று ஏற்கனவே இருந்தது. கோபத்தோடு அதை கீழே தள்ளி விட்டான். தனது பூங்கொத்தை வைத்தான்.

"ஐ மிஸ் யூம்மா.." என்றான். கல்லறையின் மீது அமர்ந்தான். தலை சாய்த்து படுத்தான். கண்களில் இருந்து ஆறாய் பெருகியது கண்ணீர். வாயை மூடியபடி குலுங்கி அழுதான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

LIKE

COMMENT

SHARE

FOLLOW
 

Sevanthi Durai

Crazy Writer
Vannangal Writer
Team
Messages
273
Reaction score
287
Points
93
காதல் கணவன் 8

மணி ஒன்பதை தாண்டி விட்டிருந்தது. அம்ருதா பாலாஜிக்கு கைபேசியில் அழைத்து சலித்துப் போனாள். இதுவரை நூறு முறையாவது அழைத்திருப்பாள். அவன் அழைப்பேற்கவே இல்லை.

"இவனுக்கு என்னதான் வந்ததோ? அந்த சைக்கோ இவனை அத்தனை முறை அடிச்சி மூஞ்சியை உடைச்சி வச்சான். கை காலை உடைச்சி வச்சான். அப்பவும் வெட்கமே இல்லாம அவனுக்கேதான் சப்போர்ட் பண்ணிட்டு திரியறான். பைத்தியம் பிடிச்சிருக்கு இவனுக்கும்.." என்று கைபேசியின் திரை பார்த்து திட்டினாள்.

அழுது சிவந்த கண்கள் நெருப்பாக எரிந்தது. பைக்கை செலுத்தவே முடியவில்லை. ஆனாலும் எப்படியோ வீடு வரை வந்து சேர்ந்து விட்டான் வெற்றி.

பைக்கை வாசலில் நிறுத்திவிட்டு உள்ளே நடந்தான்.

அப்பா சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்தார்.

ஹாலின் சோபாவில் அமர்ந்து தேனீரை அருந்திக் கொண்டிருந்த பாலாஜி இவனை கண்டதும் தேனீர் கோப்பையை வைத்து விட்டு எழுந்து வந்தான்.

"வெற்றி.."

வெற்றி பற்களை கடித்தான்.

"மரியாதையா வெளியே போ.." கர்ஜித்தான்.

"அவ அப்படி செஞ்சதுக்கும் எனக்கும் நடுவுல எந்த சம்பந்தமும் இல்ல.."

கண்களை மூடியபடி நெற்றியை பிடித்தான் வெற்றி. கழுத்தில் இருந்த சங்கிலி அவனின் நெஞ்சோடு உரசிக் கொண்டிருந்தது.

"உன்கிட்ட கெஞ்சி கேட்கறேன். இங்கிருந்து போ.."

அப்பா சமையலறையிலிருந்து வெளியே வந்தார்.

"சாப்பிட்டு போகட்டும்டா. உன்னால ஒரு மாசம் ஹாஸ்பிட்டல்ல இருந்திருக்கான்.."

நிமிர்ந்து தந்தையை பார்த்தான்.

"ஓகே.." என்றவன் திரும்பினான். வெளியே நடந்தான்.

அப்பா பெருமூச்சு விட்டார். தனக்கு மட்டும் ஏன் இந்த கஷ்டகாலம் என்று நினைத்தார்.

பாலாஜி ஓடி சென்று வெற்றியின் கைப்பிடித்து நிறுத்தினான்.

"நான் இனி வர மாட்டேன். ஆனா புரிஞ்சிக்க.. அவ இப்படி செஞ்சதுக்கும்.."

அவன் மேலே பேசும் கை காட்டி நிறுத்தினான்.

"அவளை பத்தி நீ பேசாதே. அனாவசியமா எதுவும் என்கிட்ட பேசாதே.. சாப்பிட வந்தா போய் சாப்பிடு. என்னை ஏன் நிறுத்தி வைக்கற?" என்றவன் அவனின் கையை உதறிவிட்டு வெளியே நடந்தான்.

"வெற்றி ப்ளீஸ்.."

வெற்றி பதில் பேசவில்லை. கோபத்தை அடக்கும் வழி தெரியாமல் கதவோரம் இருந்த செருப்பு ஸ்டேன்டை கீழே தள்ளி விட்டான். ஷுக்களும், செருப்புகளும் பல திசைகளில் பறந்தன. பாலாஜியின் முட்டியிலும் ஒன்று வந்து மோதியது.

"என்னை கூப்பிடாத.. என்னோடு பேசாத. என் வீட்டுக்கு வராத." என்றவன் கடைசி சொல்லை மட்டும் ஒலி குறைத்துச் சொன்னான்.

பாலாஜி சாயம் போன முகத்தோடு அவனை பார்த்து நின்றான்.

"சாரி.." அவன் சொல்லியது தன் காதில் விழும் முன்பே வெளியேறி பைக்கில் ஏறி விட்டான் வெற்றி.

எங்கே செல்வது என்று தெரியவில்லை. தெரிந்திருந்தால் சுடுகாட்டிலேயே கூட இரவு முழுக்க தங்கி விட்டு வந்திருப்பான்.

"அவன் சாப்பாடு சாப்பிடணுமாம்.." பற்களை கடித்தான்.

வீட்டை விட்டு அரை கிலோமீட்டர் தாண்டி இருப்பான். கீர்த்தனா அழைத்தாள்.

பைக்கை ஓரம் கட்டி விட்டு எடுத்துப் பேசினான்.

"தாத்தா உன்னை வர சொல்லி இருக்காரு.."

"நான்தான் அப்புறமா வரேன்னு சொன்னேனே.." சலிப்போடு கேட்டான் இவன்.

"இன்னைக்கு ஒருநாளைக்கும் இந்த வீட்டுக்கு வந்து தங்கிக்கோ.."

பற்களை கடித்தபடி அமைதியை கட்டுப்படுத்த முயன்றான்.

"அவன்தான் போன் பண்ணி நான் வீட்டை விட்டு வெளியே வந்துட்டேன்னு சொன்னானா?"

மறுமுனையில் அமைதியாக இருந்தாள் கீர்த்தனா.

"கீது.. எனக்கு ரொம்ப மனசுக்கு கஷ்டமா இருக்கு. என்னால அங்கே வர முடியாது. ஐ லாஸ்ட் மை கன்ட்ரோல்‌. அங்கே வந்தா ஏதாவது பண்ணிடுவேன். என்னால நீங்க ஏற்கனவே நிறைய கஷ்டப்படுறிங்க.. அது இன்னும் அதிகமாக வேணாம். இன்னைக்கு ஒரு நாளைக்கும் என்னை விட்டுடுங்க.." என்றவன் யோசனை வந்தவனாக "தயவுசெஞ்சி அவன்கிட்ட சொல்லு, இனி எப்பவும் என்கிட்ட வந்து பேச வேண்டாம்ன்னு.. இல்லன்னா சத்தியமா நான் அவனை கொன்னுட்டு ஜெயிலுக்கு போயிடுவேன்.." என்று சொல்லி விட்டு அழைப்பை துண்டித்தான்.

போனை பாக்கெட்டில் போட்டுக் கொண்டு முகத்தை தேய்த்தான். இந்த ஒரு இரவு மட்டும் இருளாகாமல் விடிந்து விட்டால் நன்றாக இருக்குமென்று தோன்றியது.

விளக்கொளியில் நகரமே பளிச்சென்று இருந்தது. இருளை மனம் முழுக்க சுமந்தபடி பைக்கை ஓட்டிக் கொண்டிருந்தான் வெற்றி.

விடாத ரீங்காரமாய் அம்ருதாவின் குற்றச்சாட்டு வேறு காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது.

போனை எடுத்தவன் நண்பனுக்கு அழைத்தான். "முத்து.. நான் உன் வீட்டுல இன்னைக்கு நைட் ஸ்டே பண்ணிக்கலாமா?" என்றுக் கேட்டான்.

"வாடா.. இதுக்கெல்லாம் கேட்டுட்டு இருக்க.. இந்த பேச்சிலர் பாயோட ரூம் உனக்காக எப்பவும் காத்துட்டு இருக்கும்.." என்றவன் "அப்புறம் மறக்காம சாப்பிட்டுட்டு வந்துடு. நான் எனக்கு மட்டும்தான் சமைச்சேன். அதுவும் இப்ப காலி.." என்றான் ஏப்பம் விட்டபடி.

நண்பனின் வீடு நோக்கி பைக்கை திருப்பினான் வெற்றி.

அம்ருதா மணி பதினொன்றாகியும் உறங்காமல் அமர்ந்திருந்தாள். பாலாஜி உண்மையிலேயே கோபித்துக் கொண்டானா என்று தெரியவில்லை. மீண்டும் அழைத்துப் பார்த்தாள். ரிங் ஆனதே தவிர பதில் இல்லாமல் போய் விட்டது. பொறுத்து பார்த்தவள் உடையை மாற்றிக் கொண்டு வெளியே கிளம்பினாள்.

வீடு நிசப்தமாக இருந்தது. சத்தமில்லாமல் வெளியே வந்தாள். காரை கிளப்பியவள் பாலாஜியின் வீடு நோக்கி புறப்பட்டாள்.

அப்போதுதான் தனது வீட்டிற்கு வந்து சேர்த்திருந்தான் பாலாஜி. அது ஒரு சிறிய வீடு. குடும்பத்தார் எவ்வளவோ திட்டி பார்த்து விட்டார்கள். வீட்டோடு இணையாமல் தனியாய் இருந்தான்.

சட்டையை கழட்டி ஹேங்கரில் மாட்டினான். அருகே இருந்த கண்ணாடியை பார்த்தான். பனியன் அணிந்திருந்தவனின் மேல் நெஞ்சிலும் கையிலும் இருந்த காயங்களின் வடு தெரிந்தது.

கையிலிருந்த பன்னிரெண்டு தையலுக்கே குழந்தையை கலைத்த தோழி இந்த உடம்பில் இருக்கும் ஒட்டுமொத்த தழும்புகளையும் கண்டால் வெற்றியை கொன்று விடுவாளோ என்று கூட தோன்றியது.

பனியனையும் கழட்டி வீசினான். வயிற்றில் இரண்டு இடங்களில் தையல் போட்ட தடம் இருந்தது. நெஞ்சில் மட்டுமே ஏழெட்டு தழும்புகள். அது என்னவோ எப்போதும் நெஞ்சில்தான் காயப்படுத்த வேண்டும் வெற்றிக்கு. அப்போதும் கூட ஆத்திரம் தீருவதே இல்லைதான்.

கண்ணாடியை கண்டு பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தவன் தலையை பற்றினான். காயம்பட்டதையும், காயத்தின் காரணமான வெற்றியையும் பற்றி அம்ருதாவிடம் சொல்லாமல் இருந்திருக்கலாம் என்று தோன்றியது. வேண்டுமென்று சொல்லவில்லை. ஒரு மாதமாய் ஏன் வேலைக்கு வரவில்லை என்று அவள் தினமும் கேள்வி கேட்டு தொல்லை செய்ததால் உளறி விட்டான். நொடி நேரம் தவறி விட்டான். அவள் எடுக்கும் முடிவு பற்றி தெரியாமல் சொல்லி விட்டான்.

அவள் காதலையும், குழந்தையையும் அழிக்க காரணம் தான்தான் என்று தெரிந்தால் வெற்றி மறுபடி என்ன செய்வானோ என்று கலக்கமாக இருந்தது.

வயிறு நிறைந்திருந்தது. தூங்கலாம் என நினைத்து படுக்கையறை நோக்கி அடியெடுத்து வைத்தவன் கதவு தட்டப்படும் சத்தத்தில் நின்றான். இந்த நேரத்தில் யாரென்று குழப்பம் வந்தது. வெற்றியாய் மட்டும் இருக்க கூடாது என்று வேண்டிக் கொண்டான். மருத்துவமனை விட்டு வெளியே வந்த ஒரு சில நாளிலேயே திரும்பி செல்ல ஆசையில்லை அவனுக்கு.

கதவை திறந்தான். கீர்த்தனா தலை குனிந்தபடி நின்றிருந்தாள். அவள் நின்றிருந்த தோரணை கண்டு இதழ் விரிந்தது அவனுக்கு.

"என் கையில் எந்த தாலியும் இல்ல.."

திகைத்து நிமிர்ந்து பார்த்தாள். குழப்பம் அவளின் விழிகளில் சூழ்ந்திருந்தது.

"வெட்கப்பட்டு தலைகுனிஞ்சி இருந்தியே.. அதான் சொன்னேன்‌.."

வெட்கத்தில் சிவந்த கன்னங்களோடு மீண்டும் தரை பார்த்தாள்.

கடிகாரத்தை ஒருமுறை திரும்பி பார்த்தவன் "இந்த டைம்க்கு வந்திருக்க.?" என்றான் சந்தேகத்தோடு.

வாசலில் நின்றிருந்த அவளின் ஸ்கூட்டி அவள் தனியாய் வந்ததாக சேதி சொன்னது.

"சாரி. நான் நேத்தே வரணும்ன்னு நினைச்சேன்."

அவளின் விழியை மறைத்த கூந்தலை ஓரம் ஒதுக்கி விட்டான். அவன் விரல் தீண்டியதில் சிலிர்த்தாள். மேலும் சிவந்தது கன்னங்கள்.

"குளிருல ஏன் நிக்கற?" என்றான் சுற்றும் முற்றும் பார்த்து. அவனுக்கே குளிர் தாக்கிக் கொண்டுதான் இருந்தது.

"நீதான் வாசல்படியை மறிச்சி நிக்கற.." அவள் நிமிராமல் சொல்லவும் சிரித்தபடியே அவளுக்கு வழி விட்டு நின்றான்.

கதவை தாழிட்டு விட்டு வந்தவன் அவள் சமையலறை நோக்கி செல்வதை கண்டு விட்டு "ஆல் த பெஸ்ட்.." என்றான்.

திரும்பியவள் குழப்பமாக இவனை பார்த்தாள்‌. அவனின் கண்களை விட்டு ஒரு சென்டி மீட்டர் கூட பார்வையை கீழிறக்கி விட கூடாது என்று வைராக்கியமாக இருந்தாள்.

"எதுக்கு?"

"மாப்பிள்ளை பிக்ஸ் பண்ணிட்டதுக்கு.."

கீர்த்தனாவின் முகம் பேயறைந்தார் போல் ஆகிவிட்டது.

"இல்ல‌‌.. நான்.. அது‌.." தன் பக்க நியாயத்தை சொல்ல தயங்கினாள். எப்படியொரு சூழ்நிலையிலும் வந்திருக்க கூடாத வார்த்தைகள்தான் அவை.

"உனக்கு வெற்றி ரொம்ப பொருத்தமா இருப்பான்.."

இதயம் வலித்தது அவளுக்கு. அவனின் முகத்தில் எந்த ஏமாற்றமும் இல்லாதது இன்னும் அதிகமாக வலித்தது.

கலங்கும் விழிகளை மறைத்தபடி கிச்சனுக்குள் நுழைந்தாள்.

"மா.. மாத்திரை சாப்பிட்டியா.?"

"ம்ம்.."

அவனின் முகம் பார்க்க முடியவில்லை அவளால். பிரிட்ஜை திறந்து தண்ணீரை எடுத்தாள்‌. குடிக்க முடியவில்லை. மனதின் பாரம் அந்த அளவிற்கு தாக்கியது.

கண்களை மூடியபடி நெஞ்சத்தின் பாரத்தை விரட்ட முயன்றாள்.

"நான் சத்தியமா மீன் பண்ணி சொல்லல.." என்றபடி திரும்பியவள் தன் முன்னால் நின்றிருந்தவனை கண்டு மிடறு விழுங்கினாள். நெருக்கத்தில் இருந்தான். மிகவும் நெருக்கத்தில்.

அவனின் விழிகளை சில நொடிகள் பார்த்தவளுக்கு கண்கள் இரண்டும் தானாய் கலங்கியது.

"நீ மீன் பண்ணாலும் பண்ணலன்னாலும் என்ன போச்சி.? எனக்கும் அதுக்கும் சம்பந்தம் உண்டா.? இது உன் லைஃப். நான் யார் சம்மதம் கேட்க?" உணர்ச்சிகளை மறைக்க முயன்றான். ஆனால் குரலில் வருத்தமும், ஏமாற்றமும் கலந்து விட்டது.

உள் உதட்டை கடித்தாள் கீர்த்தனா.

"ரைட்.? உனக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்?" என கேட்டவள் மீண்டும் தலை குனிந்தாள்.

அவனிடமிருந்து இப்படியொரு பதிலை எதிர்பார்க்கவில்லை அவள். 'யாரை கேட்டு இப்படி சொன்னாய்.?' என்று திட்டியிருக்கலாம். 'யார் உன்னை இப்படி ஒரு முடிவை எடுக்க சொன்னது.?' என கேட்டு அடித்து கூட இருக்கலாம். அவனின் பதில் உடைத்து விட்டது அவளை.

அவன் முன் அழுவதற்கு அவளுக்கு துளியும் விருப்பமில்லை. இப்போது மட்டும் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ளாவிட்டால் கதறி விடுவோம் என்று அவளுக்கு தெரியும். ஆனால் முடியவில்லை. மனமும் விழிகளும் அவளின் பேச்சை கேட்கவில்லை. எவ்வளவோ கட்டுப்படுத்தியும் அவளின் கண்கள் மௌனமாய் கண்ணீரை சிந்தி விட்டன.

அவளின் மறுமொழி கேட்ட பிறகு விலகலாம் என்றுதான் நினைத்தான் அவன். ஆனால் அதற்குள் அவளின் கன்னங்களில் கோடிட்ட கண்ணீரை கண்டு விட்டான்.

அவளின் தாடையை பற்றி நிமிர்த்தினான். தன் கன்னங்களை துடைக்க முற்பட்டாள் கீர்த்தனா. அவளின் கையை தடுத்தான். அவளின் முகத்தை ஆராய்ந்தான். ஏன் இந்த கண்ணீர் என்று கண்டறிய முயன்றான்.

அவனின் முகத்தை இரண்டு நொடிகளுக்கு மேல் பார்க்க முடியவில்லை அவளால். கண்ணீரை கட்டுப்படுத்தும் வழி தெரியாமல் விழிகளை மூடிக் கொண்டாள்.

"ஏன் என்னை டார்ச்சர் பண்ற பாலா? நிஜமா உனக்கு என்னை பிடிக்கலையா? நான் ஜாடை மாடையா எத்தனையோ முறை என் லவ்வை சொல்லிட்டேன். கண்டுக்கவே மாட்டேங்கற.. பயமா இருக்கு பாலா‌. என் ஃபீலிங் என்னை கொல்லுது. உனக்கு என்னை பிடிக்கலையோன்னு நினைச்சி உள்ளுக்குள்ள உடையுறேன் நான். ஒரு மாசம் ஹாஸ்பிட்டல்ல இருந்த..‌ என் உயிரே என்கிட்ட இல்ல.. ஒரு நாளைக்கு எத்தனை முறை அந்த ஹாஸ்பிட்டல் ரூம் வரை வந்து உள்ளே வர தயங்கி திரும்பி இருப்பேன் தெரியுமா? உள்ளே வந்த நேரத்திலெல்லாம் உன் கட்டுக்களை கண்டு மனசுக்குள்ள எவ்வளவு அழுதிருப்பேன் தெரியுமா? அவன்கிட்ட நீ ஒவ்வொரு முறை அடிவாங்கும்போதும் சாகறேன் நான். உன் வலியை பார்க்கறதுக்கு பதிலா நானே செத்துடலாம்ன்னு தோணுது. ரொம்ப வலியா இருக்கு.." என்றவள் விழிகளை திறந்தாள். கண்ணீர் அருவியாய் கீழிறங்கியது.

"ஏன் பாலா என் மனசு உனக்கு புரியல. இந்த டைம்க்கு உன்னை தேடி வந்திருக்கேனே!? என்னை புரியலையா? இதுக்கு மேலயும் இந்த மௌன போராட்டத்தை தாங்க முடியும்ன்னு தோணல பாலா. எனக்கு இன்னைக்கு ஒரு பதிலை சொல்லிடு. வாழ்வோ சாவோ இன்னைக்கே தெரியட்டும். விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து உன்னை பிடிக்கும். உன்னை லவ் பண்றேன். மேரேஜ் பண்ணிக்க ஆசைப்படுறேன். இதுக்கு என்ன பதில் சொல்ற?" எனக் கேட்டாள் அவனின் கண்களைப் பார்த்து.

மௌனமாய் இருந்தான். அவனின் அசையாத இதழ்கள் கண்டு ஏமாற்றம் வந்து சேர்ந்தது.

கண்ணீர் அதிகமாய் பெருகியது. அவனின் கண்களை விட்டு பார்வையை திருப்பினாள்.

"ஐ யம் சாரி.." என்றாள் இடது கையால் விழிகளை துடைத்தபடி. ஆனால் கண்ணீரின் வழிப்பாதை மூடுவதாய் தோன்றவில்லை.

"உன்கிட்ட நான் இதை சொல்லி இருக்க கூடாது.. நான்தான் நம்பிட்டேன். உரிமை இருக்கு, லவ்வும் இருக்கும்ன்னு நினைச்சிட்டேன். ரியலி ரியலி சா.." என்றவளின் கன்னங்களை பற்றியது அவனின் இரு கரங்களும்.

குழப்பத்தோடு நிமிர்ந்தாள். அவனின் முகத்திலிருந்து எதையும் படிக்க முடியவில்லை. "பா.." அவளை அடுத்து பேச விடாமல் அவளின் இதழ் மீது தன் உதடுகளை பதித்தான் அவன்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 

Sevanthi Durai

Crazy Writer
Vannangal Writer
Team
Messages
273
Reaction score
287
Points
93
காதல் கணவன் 9

பாலாஜிதான் தனக்கு முத்தம் தருகிறானா என்று குழப்பமாக இருந்தது கீர்த்தனாவுக்கு. தன் காதல் கை சேர்ந்து விட்டதா என்று ஆச்சரியப்பட்டாள்.

கன்னங்கள் வருடிய அவனின் கரங்களும், மெல்ல உராய்ந்து முத்தமிட்டுக் கொண்டிருந்த அவனின் இதழ்களையும் நம்பவே முடியவில்லை அவளால்.

இரண்டு நிமிடங்களுக்கு பிறகு விலகி நின்றான். ஈரமாகவும், சிவப்பாகவும் இருந்த அவளின் இதழ்களை வெறித்தான்.

"கீர்த்தனா.."

விழிகளை மூடி இருந்தவள் மெள்ள திறந்தாள். மீண்டும் கண்ணீர்தான் வந்தது.

"ஏன்?" எனக் கேட்டபடி அவளின் கண்ணீரை துடைத்து விட்டான்.

"உனக்கு என்னை பிடிக்கலையோன்னு நினைச்சி பயந்திருந்தேன்.." என்றவள் கண்ணீரோடு அவனை கட்டிக் கொண்டாள். அவனின் வெற்று மேனி ஏதோ போல இருந்தது. அவளின் முகத்தை உரசிய அவனின் நெஞ்சத்து வடுக்கள் அவளுக்கு பாரத்தை தந்தது.

அவளின் முதுகில் அணைத்து தூக்கியவன் "நீயெல்லாம் என்னை லவ் பண்ணுவியான்னு நினைச்சிட்டு இருந்தேன். என்னாலதான் நீ சொன்னதை நம்ப முடியல.." என்றான்.

விலகி அவன் முகம் பார்த்தவள் "உன்னை நீயோ தாழ்த்திக்காத.. எனக்கு உன்னை ரொம்ப ரொம்ப பிடிக்கும்." என்றாள் அதே ஈர விழிகளோடு.

அவளை தரையில் நிறுத்தியவன் மீண்டும் அவள் விழிகளை துடைத்தான்.

"ரொம்ப அழுதுட்ட.." சிரிப்போடு சொன்னான்.

"நான் வெற்றிக்கிட்ட சொன்னதை உனக்கு யார் சொன்னது?"

"கனி.."

முகத்தை சுளித்தாள் கீர்த்தனா.

"அந்த குட்டி சாத்தானோடு அதிகம் பழகாதே நீ.." என்றவள் சமையலறையை விட்டு வெளியே நடந்தாள்.

"தூக்கம் வருது கீர்த்தனா.."

"வீட்டுல நிறைய இடம் இருக்கு. விழுந்து புரளு பாலா.. ஆனா பெட்ரூம்க்குள்ள மட்டும் என்டர் ஆகாதே.." அவனின் படுக்கையறையை நோக்கி நடந்துக் கொண்டே சொன்னாள்.

"இது அநியாயம். நான் உன் அம்மாவுக்கு போன் பண்ணி நீ இங்கே ஓடி வந்துட்டன்னு சொல்ல போறேன்."

திரும்பி பார்த்தாள்.

"ஓ.. தாராளமா சொல்லேன்‌. அப்போதான் நமக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்கும்‌.. உனக்கு இவ்வளவு இன்ட்ரஸ்ட் இருந்தா எனக்கும் ஓகேதான்.." வசீகர புன்னகையோடு சொல்லி விட்டு படுக்கையறைக்குள் நுழைந்தாள்.

பெட்சீட்டையும் தலையணையையும் கொண்டு வந்து வெளியே எறிந்தாள்.

"குட் நைட்.." என்றவள் உள்ளே நுழைந்து கதவை தாழிட இருந்த சமயத்தில் அவளை இடித்து தள்ளிக் கொண்டு உள்ளே ஓடினான் அவன்.

"ஏய் பொறுக்கி.‌."

"சுச்சூ அவசரம்.. அந்த பாத்ரூம்ல தண்ணி வராது கீர்த்து.." அவசரமாய் பாத்ரூமிற்குள் நுழைந்து கதவை தாழிட்டான்.

நெற்றியில் அடித்துக் கொண்டாள் கீர்த்தனா. அதே நேரத்தில் வீட்டின் கதவு மெல்லிய ஓசையோடு தட்டப்பட்டது.

நேரத்தை பார்த்தவள் குழம்பினாள்.

"என்னை தேடி வீட்டுலயிருந்து யாராவது வந்துட்டாங்களா? ஆனா யாரும் எனக்கு போன் கூட செய்யலையே.. ஒருவேளை வெற்றியா இருக்குமோ!?" யோசனையோடு சென்று கதவை திறந்தவள் வெளியே நின்றிருந்த அம்ருதாவை கண்டு குழம்பினாள்.

'இவ இங்கே என்ன செய்றா?' இருவரும் ஒரே நேரத்தில் நினைத்தனர்.

"யார் வேணும்?" கீர்த்தனாவின் கேள்வியில் குழம்பியவள் "பாலாஜி வீடு மாறிட்டானா? சொல்லவே இல்லையே.!" என்று முணுமுணுத்தாள்.

"வீடு மாறல.." என இவள் சொல்லிய அதே நேரத்தில் "இப்பதான் பிரெஷா இருக்கு கீர்த்து.." என்று தன் வயிற்றை பார்த்தபடி கால்சட்டையை மேலேற்றி சரி செய்துக் கொண்டே படுக்கையிலிருந்து வெளியே வந்தான் பாலாஜி.

"இந்த ரூம்ல ஒரு பேய் இருக்கு‌. நீ தனியா தூங்கினா கண்டிப்பா அது உன்னை டிஸ்டர்ப் பண்ணும். நீ ஓகே சொன்னா நான் உனக்கு பாதுகாப்பா இருக்கேன்." என்றபடி நிமிர்ந்தவன் வாசலில் நின்றிருந்த தோழியை கண்டு முகம் மாறினான்.

கடிகாரத்தைப் பார்த்தவன் "இந்த டைம்க்கு வந்திருக்க. ஏதாவது பிரச்சனையா?" எனக் கேட்டான். கோபமும் அக்கறையும் சரிசமமாக இருந்தது அவனிடம்.

"சாயங்காலத்துலயிருந்து அத்தனை முறை கால் பண்ணேன். ஒரு முறை கூட அட்டென்ட் பண்ண தோணல உனக்கு.." என்று ஆரம்பித்தவள் அவனின் உடம்பிலிருந்த தழும்புகள் கண்டு விழிகளை அகல விரித்தாள்.

"என்னாச்சி? எப்படி இவ்வளவு காயம்?" என்று உள்ளே நுழைந்தவளை கை காட்டி தடுத்தாள் கீர்த்தனா.

பாலாஜி அவசரமாக சட்டையை எடுத்து அணிந்துக் கொண்டான். கதவின் அருகே நடந்தான்.

பாலாஜியின் புறம் திரும்பியவள் "இவதான் வெற்றி லவ் பண்ண பொண்ணு. இந்த டைம்க்கு இங்கே ஏன் வந்திருக்கா பாலா?" என்றாள் சந்தேகமாக.

அவன் பதில் சொல்லும் முன் அம்ருதாவின் புறம் திரும்பியவள் "அவனை காதலிச்சி ஏமாத்தியது போதாதுன்னு இப்ப இவனையும் ஏமாத்த வந்திருக்கியா?" என்றாள் கோபத்தோடு.

"அவ என் பிரெண்ட்.." விருப்பு வெறுப்பில்லாத குரலில் சொன்னவனை அதிக சந்தேகத்தோடு பார்த்தாள்.

"வெற்றியை பழி வாங்கிட்டு இருக்கியா?"

கீர்த்தனாவின் கேள்வியால் கண்கள் சுருக்கியவன் இரு கைகளாலும் தலையை பற்றிக் கொண்டான்.

"தயவுசெஞ்சி நீயே இப்படி பழி போடாத.. செத்தாலும் நான் அவனுக்கு துரோகம் செய்ய மாட்டேன். அவன் உன்னை கட்டிக்க ஆசைப்பட்டா சத்தியமா இந்த செகண்ட் கூட நான் உன்னை விட்டுடுவேன்.." என்றவனை கேலியாக பார்த்தாள் கீர்த்தனா.

'நானும் அவனும் உனக்கு அப்படியொரு வாய்ப்பை தருவோம்ன்னு நினைக்கிறியாடா முட்டாள்?' என்று மனதுக்குள் கேட்டவள் "அப்படின்னா இவ ஏன் இந்த டைம்க்கு வந்திருக்கா?" எனக் கேட்டாள்.

நிமிர்ந்தவன் அவளை முறைத்தான். "அதைதான் நானும் கேட்க டிரை பண்ணேன்.." என்றான் மூக்கு சிவக்க.

உதடு சுளித்து பழிப்பு காட்டிய கீர்த்தனா, "என்ன பிரெண்டோ? என்ன பிரெண்ட்ஷிப்போ? நடு ராத்திரியில் வயசு பையன் தனியா இருக்கும் வீடு தேடி வந்திருக்கா.. காதலிச்சவனையே வேணாம்ன்னு சொன்னவளுக்கு பிரெண்டோடு எதுக்கு கொஞ்சலும் குலாவலும்.." என்று புலம்பல் போல திட்டிக் கொண்டு இருக்கையில் சென்று அமர்ந்தாள்.

"அவ சொல்வதை காதுல வாங்காத.. எதுக்கு நீ இந்த டைம்க்கு வந்திருக்க?" தோழியிடம் விசாரித்தான் பாலாஜி.

கீர்த்தனா சொன்னதில் அதிர்ந்துப் போய் இருந்தவள் "போன் எடுக்கவே இல்ல நீ. அதனாலதான் ரொம்ப கோபமா இருக்கியோன்னு நினைச்சி வந்தேன்‌.." என்று தனது காரணத்தை சொன்னாள்.

"உண்மையிலேயே எனக்கு கோபம் அம்ரு. உன்னோட தவறுகளை நீ என் மேல பழியா போடுவதை என்னால துளியும் ஏத்துக்க முடியாது. உன்னுடனான இந்த பிரெண்ட்ஷிப் எனக்கு பாதிப்பை தருமோன்னு பயமா இருக்கு. நீ செஞ்ச தப்புக்கு ஏதோ ஒரு வகையில் நானுமொரு காரணமாகிட்டேன். இனியும் இப்படி எதுவும் நடக்க வேணாம். நம்ம நட்பை முடிச்சிகறதுதான் நமக்கு நல்லது.." பாலாஜி வெகு சீரியஸாக சொல்லிக் கொண்டிருக்க கீர்த்தனா முகத்தில் நக்கல் பரவியது.

கீர்த்தனாவையும், பாலாஜியையும் மாறி மாறி பார்த்தவள் "இந்த பொண்ணு யாரு.? இறந்த கால நட்பின் உரிமையில் கேட்கறேன். உன் வாழ்க்கையில் நடக்கும் எல்லாத்தையும் என்கிட்ட சொல்ல முடியாதுன்னு நீயும் பல முறை சொல்லி இருக்க.. ஆனா வெட்கம் கெட்ட பிரெண்ட்ஷிப் இன்னும் சாகாம இந்த கேள்வியை கேட்குது.." என்றாள்.

"நான் கட்டிக்க போற பொண்ணு அவ. லவ்வரும் கூட.‌."

"கடைசி கேள்வி. உன்னோட இந்த காயத்துக்கும் வெற்றிதான் காரணமா?" கீர்த்தனாவை அங்கே பார்த்த பிறகே இயல்பாய் எழுந்தது இந்த சந்தேகம். இவள் மீது பாலாஜி கொண்ட காதலால்தான் வெற்றி அடித்து துவைத்தானோ என்று சந்தேகம் வந்தது அவளுக்கு.

தயங்கினான் பாலாஜி.

"சொல்லு பாலாஜி. அந்த சைக்கோ மிருகத்தாலதான் உனக்கு இத்தனை காயமா?" கண்கள் சிவக்க கேட்டவளை கண்டு கோபத்தோடு எழுந்து வந்தாள் கீர்த்தனா.

"மரியாதை கெட்டுடும் பார்த்துக்க. எங்க வெற்றி சைக்கோவா? சாயங்காலம் நீ கேட்ட வார்த்தைகளுக்கே நாங்க பொறுத்து வந்தது பெரிய விசயம். மறுபடியும் அவனை பத்தி ஏதும் பேசிடாதே. கடுப்பாகிடுவேன் நான்.." என்று எச்சரித்தவள் பாலாஜியின் புறம் பார்த்தாள்.

"இவ அவனை என்னவெல்லாம் கேட்டா தெரியுமா? அவனை மெண்டல் ஹாஸ்பிடல்ல சேர்த்த சொல்றா.. அவனை எவ கட்டிக்கிட்டாலும் இரண்டே நாள்ல செத்துடுவான்னு சொல்றா.. அவனை நிக்க வச்சி கேட்காத வார்த்தையெல்லாம் கேட்கறா.. அவனை மட்டுமில்ல மொத்த குடும்பத்தையும் வசை பாடுறா. தாத்தாவுக்கும் பாட்டிக்கும் மூஞ்சே செத்து போச்சி இவ கேட்டதை பார்த்து.." கீர்த்தனா சொன்னதை கேட்ட பிறகு சோகமாக அம்ருதாவை பார்த்தான் அவன்.

"ஏன் அம்ரு.?" என்றான் வருத்தமாக.

"சனியனே.." பாலாஜியின் தோளில் அடித்தாள் கீர்த்தனா. திரும்பி பார்த்தான் அவன்.

"அவ குடும்ப மானத்தையே வாங்கிட்டான்னு சொல்லிட்டு இருக்கேன். திட்டி அனுப்பாம ஏன் அம்ருன்னு கொஞ்சிட்டு இருக்க?" என்று திட்டினாள்.

அவனால் அப்படியெல்லாம் திட்ட முடியவில்லை. மாலை நேரத்தில் அவளை அடித்ததே அவனுக்கு இன்னமும் வருத்தத்தை தந்துக் கொண்டிருந்தது.

"லேட்டாகிட்டு இருக்கு நீ போய் தூங்கு.." கீர்த்தனாவை அங்கிருந்து தள்ளினான்.

அம்ருதாவின் கையை பிடித்து அழைத்துக் கொண்டு வெளியே வந்தான். காரின் அருகே கொண்டு வந்து அவளை நிறுத்தினான்.

"டைம் ஆச்சி. நீ வீட்டுக்கு போ. எதுவா இருந்தாலும் நாளைக்கு பேசிக்கலாம்.." என்றவன் அவளுக்கு காரின் கதவை திறந்து விட்டான்.

"இந்த பொண்ணை நீ லவ் பண்றதால்தான் அவன் உன்னை அடிக்கறானா? அனாதைன்னா அவனுக்கு அவ்வளவு இளக்காரமா? நான் வேணா என் பேரண்ட்ஸை விட்டு அவ வீட்டுல பேச சொல்லட்டுமா?"

அவளின் அக்கறை கண்டு அவனுக்கு துன்பமாக இருந்தது. அவளை அறைந்திருக்க கூடாது என்று நினைத்தான்.

"ஹலோ மேடம்.." வாசற்படியின் வெளியே நின்றிருந்த கீர்த்தனா விரலை சொடக்கிட்டு அழைத்தாள்.

அம்ருதா விழிகளை சுழற்றியபடி அவளை பார்த்தாள்‌.

"இந்த நாய் அனாதை நாயெல்லாம் இல்ல‌.."

"கீர்த்தனா.." இடை புகுந்த பாலாஜியின் அதட்டலை காதில் வாங்கிக் கொள்ளவில்லை அவள்‌

"எல்லா சொந்தமும் இவனுக்கு இருக்கு. இன்னைக்கு ஈவ்னிங் அவமானப்படுத்தவும் தயங்க மாட்டேன்னு ஒரு பேமிலியை பார்த்து சொன்னிங்களே அந்த ஃபேமிலிதான் இவன் ஃபேமிலி. யாரை நீங்க சைக்கோ மிருகம்ன்னு திட்டினிங்களோ அவன்தான் இவனோட உடன் பிறந்த அண்ணன்.." என்றவள் உதட்டை கோணியபடி உள்ளே நடந்தாள்.

"கொடுமை.." முனகியபடியே நெற்றியில் அடித்துக் கொண்ட பாலாஜி தோழியை நிமிர்ந்து பார்த்தான்.

"நான் அனாதைதான். எல்லா உறவும் இருந்தும் நானே ஒதுக்கி வச்சிட்டு அனாதையா வாழ்றேன். இது எனக்கு நானே தந்துக்கற தண்டனை. இந்த உடம்புல இன்னும் ஆயிரம் காயம் பட்டாலும் நான் அவனுக்குதான் சப்போர்ட் பண்ணுவேன். அவன் என்னை கொன்னாலும் நான் அவனுக்கு சப்போர்ட் மட்டும்தான் பண்ணுவேன். நீ செஞ்ச காரியத்துக்கு நானும் ஒரு காரணம்ன்னு தெரியும்போது மறுபடியும் அடிச்சி போடுவான். தடுக்க விருப்பம் இல்ல‌. அடி வாங்கிக்க எனக்கு சம்மதம். நீயாவது இனி நல்ல வாழ்க்கை வாழு.." என்றவன் அவளை விட்டுவிட்டு வீட்டிற்கு திரும்பினான்.

அவனும் அவளும் சொன்னது அனைத்தும் மூளையில் பதியவே சில நிமிடங்கள் பிடித்தது அம்ருதாவுக்கு.

வெற்றி அத்தனை முறை முறைத்தும் திட்டியும் கூட பாலாஜி வலிய வலிய சென்று பேசியதன் காரணம் இப்போதுதான் அவளுக்கு விளங்கியது. அவன் அடித்தும் திருப்பி திட்டாத, அடிக்காத காரணம் இன்று விளங்கியது.

அரை குறையாய் விசயம் புரிந்த மறுநொடியே தான் எங்கோ இடறி விட்டது அவளுக்கு தெரிந்தது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

LIKE

COMMENT

SHARE

FOLLOW
 

Sevanthi Durai

Crazy Writer
Vannangal Writer
Team
Messages
273
Reaction score
287
Points
93
காதல் கணவன் 10

கதவை தாழிட்டு விட்டு உள்ளே வந்தவனை கேலியும் கிண்டலுமாக பார்த்தாள் கீர்த்தனா.

"அனாதை அனாதைன்னு சொல்லிட்டே இருக்காத.. ஒருநாள் உன் வார்த்தை பலிச்சிட போகுது.." எச்சரித்தாள்.

அவள் சொன்னது கேட்டு அவனுக்கு திக்கென்று இருந்தது.

படுக்கையறைக்குள் நுழைந்தவள் கதவின் மீது சாய்ந்து நின்றபடி இவனை நோட்டமிட்டாள்.

"பேய் இருக்குன்னு சொன்னியே.. துணைக்கு வரியா?"

குழப்பத்தோடு நிமிர்ந்தவன் அவள் கேட்டது புரிந்து ஆர்வமானான்.

"நிஜமாவா?"

ஆமென்று கண்சிமிட்டி சைகை காட்டியவளை கண்டதும் வெட்க புன்னகையோடு தரையில் கிடந்த தலையணையை எடுத்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டு உள்ளே நடந்தான்.

"நோ டச்சிங்.. ஓகே? பேய் வந்தா மட்டும் விரட்டு.." என்றவள் அவனை விட்டு தூர தள்ளி படுத்துக் கொண்டாள்.

முத்துராம் வீட்டின் மொட்டை மாடியில் படுத்திருந்தனர் வெற்றியும் முத்துராமும்.

"இன்னைக்கும் சண்டையா வெற்றி?"

"ம்.." என்றான் அவன் நட்சத்திரம் பார்த்தபடி.

"ரொம்ப கடுப்பேத்துறான். அவன் என்ன டேஷ்க்கு என்கிட்ட பேசணும்? சாப்பிட வரான். விட்டா கொஞ்ச நாள்ல என்னையே அங்கிருந்து துரத்தி விட்டுடுவான்னு தோணுது.." என்று எரிச்சலாக மொழிந்தான்.

'அவன் அப்படி இல்ல..' என்று சொல்ல தோன்றியது முத்துராமுக்கு. ஆனால் சொல்லதான் தைரியம் இல்லை.

"சரி விடு.. நீ தூங்கு.." என்றபடி மறுபக்கம் திரும்பி படுத்துக் கொண்டான் நண்பன்.

வெற்றி தன் கழுத்திலிருந்த சங்கிலியை உள்ளங்கையில் இறுக்கி பிடித்தபடி உறங்க ஆரம்பித்தான்.

மறுநாள் வங்கிக்கு வந்த பாலாஜி நேற்று வங்கிலேயே விட்டு சென்றிருந்த தனது பைக்கை கூட கவனிக்காமல் பணிக்கு புறப்பட்டான். ஆனால் மூன்றாம் தளத்தின் நுழைவாயிலிலேயே அவனுக்காக காத்திருந்தாள் அம்ருதா.

அவளை கண்டதும் காணாதவன் போல தாண்டி செல்ல நினைத்தான்.

"பாலா.." கடின குரலில் அழைத்து நிறுத்தினாள்.

"ப்ளீஸ்.. என்னை விடு.. ஏற்கனவே நிறைய நாள் லீவ் எடுத்துட்டேன். என் வேலையை சரியா செய்ய விடு.." அவளிடம் கெஞ்சி கேட்டு விட்டு நகர்ந்தான்.

பாலாஜியின் முதுகை சோகமாய் பார்த்து நின்றவள் தன்னை நூலளவு இடைவெளியில் கடந்து சென்ற வெற்றியை வெறித்தாள்.

"சொந்த தம்பியையே இந்த அடி அடிக்கறான். சாகடிக்க பார்க்கறான். இவனை கல்யாணம் பண்ணா இரண்டே நாள்ல டெத் கன்பார்ம்.." சிறு குரலில்தான் முனகியிருந்தாள். ஆனால் அவன் காதில் விழுந்து விட்டது. நொடி நேரம் நின்றான். கோபத்தை வெளியேற்ற சொல்லி கட்டளையிட்டது மூளை. உரிமையில்லாதவளிடம் என்ன கோபத்தை காட்டுவது என்ற யோசனையோடு அமைதியாக போனான். அப்போதும் கூட இதயம் வலிக்கதான் செய்தது.

மதிய உணவு இடைவெளியில் பாலாஜியைதான் தேடினாள் அம்ருதா. ஆனால் அவன் இவள் இருக்கும் திசை பக்கம் கூட வரவில்லை.

தனது கேபினிலேயே அமர்ந்து உணவை முடித்தான். "சொந்தமே வேணாம். எந்த உறவும் வேணாம்ன்னு இருந்த மாதிரி நட்பும் வேணாம்ன்னு இருந்திருக்கலாம். எந்த பிரச்சனையும் இருந்திருக்காது.." கவலையோடு முனகினான்.

உணவை வேகமாக முடித்துக் கொண்ட அம்ருதா நண்பனை தேடி வந்தாள். இவளை கண்டதும் உண்ட உணவனைத்தும் ஜீரணமாகி விட்டது அவனுக்கு.

"டார்ச்சர் பண்றா.." என்று கலங்கியவன் "எனக்கு வேலை இருக்கு அம்ரு.." என்றான்.

அவனது அருகே இருந்த நாற்காலியில் அமர்ந்தவள் "அந்த சைக்கோ நிஜமா உன் அண்ணனா?" என்றாள் கோபத்தோடு.

சலிப்போடு முகத்தை தேய்த்தவன் "இப்படியெல்லாம் திட்டாதே.. அவன் காதுக்கு போனா டென்சன் ஆவான். கோபம் வரும்." என்றான் கவலையாக.

"உனக்கு சூடு சொரணையே இல்லையா பாலா? கூட பிறந்தவன்னு கூட பார்க்காம அப்படி காயம் பண்ணி வச்சிருக்கான். போலிஸ் கம்ப்ளைண்ட் தராம, ஹாஸ்பிட்டல் கூட்டி போய் சேர்த்தாம அவனை கொண்டாட்டி இருக்க.."

அவள் சொல்வதையெல்லாம் கேட்டு பாலாஜிக்கே கோபம் வரும் போல இருந்தது.

"புரியற மாதிரிதானே சொல்றேன் அம்ரு? அவன் இல்லன்னா, அவன் அடிக்கலன்னா நான் செத்துடுவேன் அம்ரு.." விழிகள் கலங்க சொன்னவனை விசித்திரமாக பார்த்தாள்.

"நான் இன்னமும் உயிரோடு இருக்க அவன்தான் காரணம். நான் குற்ற உணர்வுல சாகாம இருக்கேன். அதுக்கு அவன் அடி உதைதான் காரணம். அவனே எனக்கு தண்டனை தருவதாலதான் எனக்கு நானே தண்டனைகள் தந்துக்காம இருக்கேன். ஒரு விதத்துல அவன் என் சேவியர் அம்ரு. இரண்டு வருசம் லவ் பண்ணியிருக்க. அவனை நிஜமா நீ புரிஞ்சிக்கலையா? அவன் அவனுக்கு உரிமைபடாத யார் மேலயும் கை வைக்க மாட்டான். உன்னை நல்லாதானே பார்த்துட்டு இருந்திருப்பான் இந்த இரண்டு வருசமும்.? அப்புறம் ஏன் உனக்கு அவனை பிடிக்காம போச்சி? வருசம் நாலு பசங்களை மாத்தும் சில பெண்களை போல நீயும் மாறிட்டியா?" என்றான். எவ்வளவு முயற்சித்தும் கோபம் மட்டும் குரலில் சேரவே இல்லை அவனுக்கு.

அம்ருதா அவனை யோசனையோடு பார்த்தாள்.

"அப்படி என்னதான் ஆச்சின்னு சொல்லு.. நீ ஏன் உன் வீட்டை விட்டு இருக்க? அவன்தான் உன்னை துரத்தி விட்டிருப்பான். கரெக்டா?"

நெற்றியில் அடித்துக் கொண்டான் பாலாஜி.

"ஆகாத பொண்டாட்டி கை பட்டா குத்தம், கால் பட்டா குத்தம் கணக்கா ஆச்சி உன் பேச்சி. எது நடந்தாலும் அவன் மேல்தான் பழி போடுவியா? நான் நேத்து தெளிவாதானே சொன்னேன்? இது எனக்கு நானே தந்துக்கற தண்டனைன்னு. மறுபடியும் அவனையே திட்டாத.. போய் உன் வேலையை பாரு. எனக்கும் வேலை இருக்கு.." என்றவன் கணினியை இயக்க ஆரம்பித்தான்.

இரண்டு நிமிடங்கள் காத்திருந்தாள். அவன் திரும்பவில்லை. நேரத்தை பார்த்தவள் சாயங்காலம் பார்த்து கொள்ளலாம் என நினைத்து அங்கிருந்து கிளம்பினாள்.

வெற்றி தன் முன் வைக்கப்பட்ட அத்தனை ஆவணங்களையும் சரிபார்த்து கணினியில் பதிவேற்றிக் கொண்டிருந்தான். கடன் அப்ரூவல் ஆனவர்களுக்கு சேதியை தெரிவித்து அவர்களுக்கு அனைத்தையும் விளக்கி, அக்கவுண்டில் இருந்த பணத்தையும் எடுத்து தந்துக் கொண்டிருந்தான்.

பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தவனை கலைத்தது கைபேசி சத்தம். வேலையை பார்த்தபடியே இயர்போன் பட்டனை அழுத்தினான்.

"வெற்றி.." கீர்த்தனா அழைத்திருந்தாள்.

"ம். சொல்லு.." முழு கவனத்தையும் கணினியில் வைத்திருந்தவன் "எங்க அப்பா பாலாவை வேணாம்ன்னு சொல்றாரு.." என்று அவள் அழுகை குரலில் சொல்லவும் சட்டென்று கவனத்தை திசை திருப்பினான்.

"என்ன.? ஏன்?" என்றான் ஒன்றும் புரியாதவனாக.

விசயத்தை முழுதாய் விளக்கி சொன்னாள் கீர்த்தனா. பாலாஜியின் மீதுதான் ஆத்திரம் வந்தது அவனுக்கு.

"விடு. நான் பார்த்துக்கறேன்.." என்று அவளுக்கு சமாதானம் சொன்னான்.

"எனக்கு பயமா இருக்கு.‌." என்று இன்னமும் கலங்கினாள் அவள்.

"அந்த நாய்க்கு இவ்வளவு வொர்த்தெல்லாம் இல்ல.. நீ விடு. நான் பார்த்துக்கறேன்.." என்றவன் இணைப்பை துண்டித்தான்.

மணி நான்கை நெருங்கி கொண்டிருந்தது. சலசலப்பு சத்தம் எங்கிருந்தோ வந்தது.

"வெற்றி சார்.. ஒரு பிரச்சனை.." என்று வந்தாள் ஆதிரா.

"என்ன?" என்றான் நிமிர்ந்து.

"அம்ருதா மேம் செக்சன்ல பிரச்சனை.." அவள் பதட்டமாக சொல்லவும் இவன் மேஜைகளை பூட்டி விட்டு அவசரமாக அங்கிருந்து ஓடினான்.

பாலாஜியின் அறை வரையிலுமே தகவல் போய் விட்டிருந்தது. மாலை வேலை என்பதால் அவனுக்கான வேலையும் குறைந்து விட்டிருந்தது. தோழியை தேடி ஓடி வந்தான்.

"நான் சொல்வதை கொஞ்சமா புரிஞ்சிக்கங்க சார்.. இந்த சொத்து உங்க பேர்ல இல்ல.." எதிரே இருந்த மனிதனிடம் புரிய வைக்க முயன்றுக் கொண்டிருந்தாள் அம்ருதா.

எதிரே இருந்தவனோ எதையும் புரிந்துக் கொள்ளும் நிலையில் இல்லை.

"என் அப்பாவுக்கு ஒரே வாரிசு நான். இந்த சொத்து மேல எனக்கு கடன் கிடைக்காதுன்னு சொல்றியா நீ?" என்று கத்தியவன் கையை ஓங்கினான். அவளை அறைய வந்தான்.

அம்ருதா பயத்தில் கண்களை மூடிக் கொண்டாள். அவளை நோக்கி ஓட இருந்தான் பாலாஜி. ஆனால் அதே நேரத்தில் "அம்மு.." என்று அவசரமாக அம்ருதாவின் முன்னால் வந்து நின்றான் வெற்றி. அவளுக்கு விழ வேண்டிய அறை இவனின் கன்னத்தில் விழுந்தது.

சுற்றியிருந்த அலுவலக பணியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். பாலாஜி உதட்டை கடித்தபடி அறைந்தவனை வெறித்தான்.

வெற்றி பின்னால் திரும்பி பார்த்தான். அம்ருதா ஒற்றை கையை முன்னால் மறைத்தபடி இன்னும் கண்களை மூடியபடி பயந்து நின்றிருந்தாள்.

எதிரே பார்த்தான் வெற்றி. மதுவின் நெடி அளவுக்கு அதிகமாக வந்தது.

"என் சொத்துதான் இது‌. எனக்கு கடன் வேணும்.." என்றான் அவன் கையிலிருந்த பத்திரத்தை அசைத்து காட்டியபடி.

வெற்றி அவனின் கையிலிருந்த பத்திரத்தை பிடுங்கினான். புரட்டி பார்த்தான். புன்சிரிப்போடு நிமிர்ந்தவன் "சாரி சார்.. எங்களோட சட்டதிட்டத்தின் படி இந்த சொத்துக்கு எங்களால கடன் தர முடியாது. இந்த சொத்தின் உரிமையாளரான உங்க அப்பா வந்து கையெழுத்து போட்டாதான் கடன் கிடைக்கும்.‌" என்றான்.

"அவர் வந்து கையெழுத்து போட்டா போதுமா?" என்றான் எதிரில் இருந்தவன் ஆச்சரியத்தோடு.

"ஆமாங்க சார். அவர் கையெழுத்து போதும்.. மறுமுறை வரும்போது அவரை அழைச்சிட்டு வாங்க.." என்றான்.

எதிரே இருந்தவன் ஆவணத்தை திருப்பி திருப்பி பார்த்தபடி அங்கிருந்து சென்றான்.

வெற்றி தன் கைபேசியை எடுத்து செக்யூரிட்டிக்கு அழைத்தான்.

"இன்னொரு முறை குடிபோதை ஆசாமிகள் பேங்குக்குள்ள வந்தா அப்புறம் உங்க வேலை போயிடும். லாஸ்ட் வார்னிங்.." என்றவன் இணைப்பை துண்டித்தான்.

அவனின் பொறுமை அம்ருதாவை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. வெற்றி தன் கழுத்து சங்கிலியை நினைத்தபடியே திரும்பினான்.

அம்ருதா உணர்ச்சிகளற்று அவனை பார்த்து நின்றாள்.

"சாரி மேடம். பேங்க்ல நடந்த இந்த சம்பவத்துக்கு பேங்க் சார்ப்பா நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்.." என்றவன் அவள் பதில் மொழி பேசும் முன் "உங்களோட வொர்க் இங்கே ரொம்ப சிம்பிள்.. அவருக்கு தெளிவா சொல்லி புரிய வைக்காம இப்படி சண்டையை இழுத்து விட்டிருக்கிங்க. இது பேங்க் பேரையும் சேர்த்து கெடுக்கும்.. கொஞ்சமாவது பொறுப்பா வேலை பாருங்க. இல்லன்னா ரிசைன் பண்ணிட்டு போங்க. இருக்கிறவங்க வொர்க்கையும் சேர்த்து கெடுக்காதிங்க.." என்று சொல்லி விட்டு நகர்ந்தான். அவனின் குரலில் கோபம் இல்லை. ஆனால் வார்த்தையில் வன்மம் இருந்ததே!

கூட்டம் கலைந்தது. பாலாஜியால் நகர முடியவில்லை. தோழியின் அருகே வந்து தோளில் கை பதித்தான்.

"பயப்படாதே.." என்றான்.

"நான் சொல்ல வருவதை அந்த ஆள் முழுசாவே கேட்கல பாலா. சொத்து உங்க பேர்ல இல்ல. உங்களுக்கு கடன் தர முடியாதுன்னு சொன்னேன். மீதியை சொல்லவே விடல. கத்த ஆரம்பிச்சிட்டாரு.." தன் பக்க வாதத்தை சொன்னாள்.

புன்னகைத்தபடி அவளின் நெற்றி வியர்வையை துடைத்து விட்டான்.

"அதை மறந்துட்டு உன் வேலையை பாரு.."

வெற்றிக்கு கன்னம் எரிந்தது. முகத்தை சுளித்தபடியே வேலையை பார்க்க ஆரம்பித்தான். 'அம்மு..' என்று அவனையும் மீறி பதறி விட்டான். அதற்காக அவனுக்கு தன் மீதே கோபம் வந்தது. கழுத்தில் சங்கிலி இல்லாமல் இருந்திருந்தால் அவளை அப்படி அழைத்ததற்காக கையை சுவற்றிலாவது நாலு முறை குத்தி கொண்டு இருந்திருப்பான். வீட்டிற்கு போனதும் சங்கிலியை கழட்டி வைத்து விட வேண்டும் என்று நினைத்தான்.

"பொறுக்கி.. பேங்க்ல இருக்கும் மத்த கஸ்டமர்ஸ் முன்னாடி பேங்க் பேர் கெட்டு போயிட கூடாதுன்னு பொறுத்து போயிருக்கான். மத்தவங்க முன்னாடி தான் மட்டும் நல்ல பேர் எடுக்க டிரை பண்ணியிருக்கான்.." என்று கரித்துக் கொட்டியபடியே வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள் அம்ருதா.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

LIKE

COMMENT

SHARE

FOLLOW
 
Top Bottom