Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - [email protected]


என் காதல் நீ! உன் கணவன் நான்!

Sevanthi Durai

Crazy Writer
Vannangal Writer
Team
Messages
273
Reaction score
287
Points
93
காதல் கணவன் 110

"மாமா.." தயக்கமாக அழைத்தாள்.

"ரொம்ப பயந்துட்டேன்டி.!" என்றவனின் விரல்கள் அவளின் கழுத்தை அழுத்தியது.

"உனக்கு மட்டும் ஏதாவது ஆகியிருந்தா நான் செத்திருப்பேன்.!"

"பொய்.." சட்டென்று சொல்லி விட்டாள் கனிமொழி.

நிமிர்ந்து அவளின் முகம் பார்த்தவன் "நி‌ஜமா பாப்பா. எவ்வளவு பயம் தெரியுமா.? நீ இல்லாத ஒரு சூழல்ல என்னால வாழவே முடியாதுன்னு லேட்டாதான் தெரிஞ்சிக்கிட்டேன். உன்னை லவ் பண்றேன்டி." என்றான் தளும்பும் கண்ணீரோடு.

கனிமொழி கண்களை மூடினாள். "இரக்கப்பட வேணாம் மாமா. அது கொஞ்ச நாள்ல மறைஞ்சிடும்.."

அவளின் கன்னங்களை ஒற்றைக் கையால் பற்றினான். வலியோடு கண் விழித்தாள்.

அவளது விழிகளில் விழுந்தது அவனின் கண்ணீர். கண்களை சிமிட்டினாள். விழி கடந்து ஓடியது கண்ணீர் துளி.

"இது இரக்கம்ன்னு‌ நம்புறியா.? இந்த கண்கள் உனக்கு எதுவும் சொல்லலியா.?" ஏக்கமாக கேட்டான்.

மிடறு விழுங்கினாள். ஏறி இறங்கிய அவளின் தொண்டையை கண்டுவிட்டு இவன் எச்சிலை விழுங்கினான். அவளின் கழுத்தில் ஓடிய பச்சை நரம்புகள் அவனுக்கு ஏதேதோ ஆசைகளை தந்தது.

அவனின் கண்களில் காதலை பார்த்தாளோ இல்லையோ எக்கச்சக்கமாக தாபத்தைப் பார்த்தாள்.

'விளங்குவடா நீ.! வருசம் முழுக்க சன்னியாசியா சுத்திட்டு இப்ப வந்து, நான் இந்த நிலையில் இருக்கும்போது உன் மோகத்தை காட்டுறியே.!' நெஞ்சம் கூட வலித்தது அவளுக்கு.

வெளியேறும் அவனின் மூச்சுக் காற்று அனல் காற்றாக வெளியேறி அவளின் முகத்தில் மோதியது.

பார்வையை திருப்பினாள். தாடையை இறுக்கினான். சலித்தபடி மீண்டும் திரும்பினாள். அந்த கண்களை அவளால் பார்க்க முடியவில்லை. காதலும் காமமும் கலந்து இருந்த அந்த பார்வையினால் அவளுக்கு உடல் தீப்பற்றி எரிந்தது. துரதிஷ்டவசமான சூழலில் அதிர்ஷ்ட பார்வை என்று நொந்துப் போனாள்.

"என் கண்கள் எதுவும் சொல்லலியா.?" மீண்டும் கேட்டான்.

அவனின் கையை சைகை காட்டினாள். விலக்கிக் கொண்டான்.

"கன்னத்தை இப்படி இறுக்கி பிடிச்சிட்டு இருந்தா என்னால எப்படி வாய் பேச முடியும்.?" எனக் கேட்டாள்.

"சரி இப்ப சொல்லு.." அவனின் செயலில் குறியாக இருந்தான்.

பெருமூச்சு விட்டவள் "லவ் தெரியல. லஸ்ட்தான் தெரியுது நிறைய.." என்றாள் எங்கோ பார்த்தபடி.

சக்திக்கு வெட்கமாக வந்தது. அவளை விட்டு விலகி அமர்ந்தான். அவனின் சிவந்த முகத்தைப் பார்த்தவள் "இது நிஜமா மாமா.?" எனக் கேட்டாள் தயங்கியபடி.

"என்ன.?"

"இந்த லஸ்ட்.."

திரும்பிப் பார்த்து முறைத்தான்.

பார்வையை தாழ்த்திக் கொண்டவள் "அவங்க மறுபடியும் கிண்டல் பண்ணாங்க மாமா. நான் அழகான பொண்ணு மாதிரி இல்லன்னு சொன்னாங்க. என் பிரெஸ்ட் சைஸ் சுப்ரியா அளவுக்கு இல்ல. நானே பார்த்தேன். உங்களுக்கு நிஜமா என் மேல லவ் இருக்கா மாமா? முன்னாடி யோசிக்கவே இல்ல. என் மாமன். லவ் பண்ண எனக்கு எல்லா உரிமையும் இருக்குன்னு நினைச்சிட்டேன். உங்க மனசை பார்க்கவே இல்ல. உங்களுக்குன்னு கனவு இருந்திருக்கும். ஒரு அழகான பொண்ணை கட்டிக்கணும்ன்னு நினைச்சிருப்பிங்க. நான் உங்க லைப்பை கெடுத்துட்டேன்.!" என்றாள் வருத்தமாக.

அவளின் கன்னம் வருடினான்.

"இல்ல கனி. ஐ லவ் யூ. அழகுன்னா நீ என்ன நினைக்கற.? பெரிய சைஸ் பிரெஸ்ட் இருந்தாதான் அழகா.? இப்படி உன்னை நீயே தாழ்த்திக்காத. ஐ லைக் யூ. ரொம்ப ரொம்ப.‌ அளவுகள் எப்போதும் காமத்தை நிர்ணயிக்கறது கிடையாது. அப்படி அளவுகள்தான் காமத்தை நிர்ணயிக்குதுன்னா ஸ்கூல் போற புள்ளைங்க, நடக்க தெரியாத குழந்தைங்களெல்லாம் ரேப் விக்டிம் ஆக மாட்டாங்க. லவ் இருக்கும் இடத்தில் லஸ்ட்க்கு காரணம் தேவை கிடையாது. ஆசைகள் தோன்ற நிர்வாணமும் அவசியம் கிடையாது.." என்றான்.

நம்பதான் தோன்றியது.

"நீ என் முன்னாடி நியூடா நிற்கும்போது எனக்கு லவ்வும் வரல. லஸ்டும் வரல. ஆனா இப்ப புல்லா கவராகி படுத்திருக்க. முதுகுல ஆபரேஷன் பண்ணி இருக்காங்க. உன்னால எழ கூட முடியாது. ஆனா எனக்கும் கண்டதும் தோணுது. இதுலயே புரியலையா உனக்கு.?" எனக் கேட்டான்.

உதட்டை கடித்தாள்.

அவளின் கன்னங்கள் இரண்டிலும் கைகளை பதித்தான். "நீ அழகுன்னு நான் மட்டும்தான் சொல்லணும். இப்ப நான் சொல்றேன். யூ ஆர் பியூட்டிபுல். உன் மொத்த உடம்பும் அழகுதான். உன் அழகுக்கு நான் கேரண்டி தரேன்.."

அவனின் சொற்களோடு சேர்ந்து வெளிப்பட்ட குரலின் தாபம் அவளை நம்ப செய்தது.

"ஒருத்தங்களோடு உன்னை நீயே ஒப்பிட்டுக்காத கனி. நீ யார் மாதிரியும் கிடையாது. நீ நீதான். உனக்கு ப்ளாட் பிரெஸ்ட் இருந்தா கூட அதுவும் உன் அடையாளம்தான். உன் அடையாளத்தை நீ அவமானமா நினைக்காத.‌" என்றவன் அவளை மேலும் கீழுமாக பார்த்துவிட்டு "அப்புறம் உனக்கு ப்ளாட்டும் கிடையாது.." என்றான் சிறு வெட்க சிரிப்போடு.

அவனை பார்க்க முடியாமல் முகத்தை மூடிக் கொண்டாள். குளுக்கோஸ் ஏறிக் கொண்டிருந்த அவளின் கரத்தின் மீது முத்தமிட்டான்.

விரல்களை விலக்கி அவனைப் பார்த்தாள்.

"நீ வெட்கப்படும்போது செம க்யூட்டா இருக்க." என்றான் கண்ணடித்து.

அவளின் முகம் சிவந்துக் கொண்டே இருந்தது.

"சீக்கிரம் குணமாகி வா கனி. நான் வெளியே இருக்கேன். ஏதாவது வேணும்ன்னா கூப்பிடு.!" என்றவன் எழுந்து நின்றான்.

"மாமா.." அழைப்பில் நின்றான்.

"அந்த கேமரா.." வெட்கம் எங்கேயோ ஓடி விட்டது. பயம்தான் இருந்தது அவளிடம்.

அவளின் தலையை வருடினான்.

"எதுவும் இல்ல. எந்த ரெக்கார்டும் இல்ல. நான் அதை முழுசா செக் பண்ணி நெருப்பு வச்சிட்டேன்.!" என்றான்.

அவளை அங்கிருந்து அழைத்து வரும் முன்பே அந்த கேமராவை அங்கிருந்த படியின் அடியில் ஒளித்து வைத்து விட்டு வந்திருந்தான். கனிமொழிக்கு ஆபரேஷன் நடந்தபோது‌ இவன் சென்று அந்த கேமராவை எடுத்து சோதித்தான். அதிலிருந்த மெமரியை எடுத்துக் கொண்டான். அந்த கேமராவோடு வேறு ஏதாவது சாதனம் ப்ளூடூத் மூலம் இணைந்து இருந்ததா என்பதையும் சோதித்து விட்டு அனைத்திற்கும் நெருப்பை வைத்து விட்டான்.

கனிமொழி நிம்மதியோடு தலையணையில் அசைந்தாள்.

"உடம்பை ரொம்ப அசைக்காத.." என்றுவிட்டு வெளியே நடந்தான்.

***

அபிராஜ் தன் முன் வைக்கப்பட்ட சுடு தேனீரை சுட சுட அருந்தினான். அவனின் அருகில் அமர்ந்திருந்த சினேகா தன்னிடம் தரப்பட்ட தேனீரை ரசித்து ரசித்து அருந்தினாள்.

வெள்ளை பனியில் அவர்கள் முன் இருந்த மொத்த இடமும் அழகாக இருந்தது. குளிருக்கு ஸ்வெட்டரை அணிந்திருந்தனர் இருவரும். அப்போதும் குளிரெடுத்தது.

வாழ்க்கையே வெறுத்துப் போய் விட்டான் அபிராஜ். அப்போதுதான் சினேகா அவனை காஷ்மீருக்கு இழுத்து வந்தாள். இருவரும் வெண்பனியை பார்த்தபடி நேரத்தை கடத்திக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்த உணவகம் ஒன்றில் இருவரும் வேலை செய்தனர். அதன் வருமானம் இருவருக்கும் போதுமானதாக இருந்தது. நிறைவாக ஒரு வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருந்தார்கள்.

"எனக்கு அந்த பொண்ணை நினைச்சா பாவமா இருக்கு.!" வானத்திலிருந்து உதிர்ந்த பனியை பார்த்தபடி சொன்னான் அபிராஜ்.

சினேகாவுக்கும் பாவமாகதான் இருந்தது.

"அவன் உன் பேச்சை கேட்கல. அதுவும் இல்லாம உன்னை அடிச்சிட்டு போயிட்டான். அவளும் பிடிவாதமா இருக்கா. அவனை ரொம்ப வெறுக்கறா போல. அதனாலதான் இப்படி பண்றா.." என்ற சினேகாவுக்கு தேனீரில் சுவையே தெரியவில்லை.

"அவங்கவங்க உயிர் அவங்கவங்களுக்குதான் முக்கியம். அவளே அசால்டா இருந்தா நாம என்ன பண்றது.? அவ சாகணும். அவன் அழணும்ன்னு ஒரு காலத்துல விரும்பினேன். ஆனா இப்ப வேற மாதிரி தோணுது. இவங்க இரண்டு பேரும் பண்ற தப்புக்கு அந்த குழந்தை என்ன பாவம் பண்ணும். அவளுக்கு ஏதாவது ஆகிட்டா அவனுக்கு பைத்தியம் பிடிச்சிடும். அப்புறம் அந்த குழந்தை.?" கவலையோடு கேட்டான்.

"அவங்க வீட்டுல இருப்பவங்க பார்த்துப்பாங்க.." சமாதானம் சொன்னாள் சினேகா.

இருவரும் தேனீரை அருந்தி முடித்துவிட்டு தாங்கள் தங்கும் இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். சாலை ஓரத்தில் இருந்த பனிகளும், பச்சையும் தெவிட்டாமல் பார்க்க வைத்தது.

"வெற்றிக்கு போன் பண்ணி நீ உண்மையை சொல்லிடேன்.!" யோசித்துவிட்டு கேட்டான்‌ அபிராஜ்.

சினேகா நடப்பதை நிறுத்தினாள். யோசித்தாள். "டிரை பண்றேன்.." என்றவள் தனது போனை கையில் எடுத்தாள்.

வெற்றிக்கு அழைத்தாள். ஸ்விட்ச் ஆப் என்று வந்தது.

"ஸ்விட்ச் ஆப். அப்புறமா பண்ணி பார்க்கறேன்."

***

வங்கியில் இருந்தான் வெற்றி. முக்கிய ஆவணங்கள் சிலவற்றை சரி பார்க்க வேண்டி இருந்தது. அதனால் கைபேசியை அணைத்து வைத்திருந்தான்.

அனைத்து வேலைகளையும் பார்த்து முடித்தபோது மணி நான்கு ஆகியிருந்தது. கைபேசியை உயிர்ப்பித்தான். 'கால் மீ - சினேகா' என்று செய்தி ஒன்று அறியாத எண்ணிலிருந்து வந்திருந்தது.

பெயரை கண்டதும் புருவம் சுருக்கினான். அவள் யார், அவளுக்கும் அம்முவுக்கும் என்ன சம்பந்தம் என்று யோசித்தவன் அழைக்கலாமா வேண்டாமா என்று குழம்பினான்.

"சார்.." ஆதிராவின் குரலில் நிமிர்ந்தான்.

பைலை அவன் முன் வைத்தாள். "இட்ஸ் ஃப்ரம் லோன் டிபார்ட்மெண்ட் சார்.." என்றவள் திரும்பினாள்.

"ஆதிரா.."

நின்றாள்.

"யெஸ் சார்.."

"உட்காரு. உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.."

அவனுக்கு எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தாள்.

"சினேகா யாரு.?" வெற்றியின் கேள்வியில் குழம்பினாள். அவளின் குழப்பம் அவள் முகத்தில் அப்படியே தெரிந்தது.

"சினேகா.? ஆக்டரஸஸ்.."

"நோ. அம்முவோட பிரெண்ட்.."

"அம்முவுக்கு பிரெண்டா.? யார் அந்த டுபாக்கூர்.? அவளோட ஒரே பிரெண்ட் நான்தான். அப்புறம் உங்க தம்பி." என்றாள்.

"அம்மு என்கிட்ட எதையோ மறைக்கிறா. எல்லாத்தை பத்தியும் சொன்னவ இந்த சினேகா பத்தி மட்டும் என்கிட்ட சொல்லவே இல்ல. கேட்டா சும்மா பிரெண்டுன்னு சொல்றா. ஆனா அவ கூட போன்ல கூட பேசுறது இல்ல. ஆனா அந்த சினேகா வீட்டுக்கு வரா. இவளும் பிரகனென்ஸி டெஸ்டுக்கு மாச மாசம் போகும் போது அவளைதான் கூட்டிப் போறா, அதுவும் என்னை கூட கழட்டி விட்டுட்டு.!" என்றான்.

அவன் சொன்னதை கேட்ட பிறகு ஆதீராவுக்கே சந்தேகமாகதான் இருந்தது.

"இதுவரைக்கும் அவ யார்ன்னு தெரியல. ஆனா நான் அம்முக்கிட்ட விசாரிக்கிறேன்.!" என்றாள் எழுந்து நின்றபடி.

"விசாரிச்சதும் மறக்காம எனக்கும் சொல்லு.."

சரியென்று தலையசைத்து விட்டு போனாள்.

"அம்மு.." போனை பார்த்தபடி முனகினான்.

***

கனிமொழியை பார்க்க வந்திருந்தான் ஆரவ். அவளின் அருகே இருந்த மேஜையின் மீது பூங்கொத்தை வைத்தவன் "சீக்கிரம் குணமாகிடுங்க கொழுந்தியாளே.!" என்றான்.

சிரிப்போடு சரியென்று தலையசைத்தாள்.

அவளோடு சற்று நேரம் பேசிக் கொண்டு இருந்துவிட்டு கிளம்பினான். பின்னால் வந்தாள் தேன்மொழி.

"தேங்க்ஸ்.." என்றாள்.

"எதுக்கு.?" வாகனம் நிறுத்துமிடம் நோக்கி நடந்துக் கொண்டே கேட்டான்.

"இங்கே வந்ததுக்கு.."

"அவ என் சிஸ்டர் இன் லா.."

ஆரவின் கையை பிடித்தாள். நிறுத்தினாள். திரும்பியவனின் முகம் பார்த்தவள் "எல்லா நியூஸும் கேட்ட இல்லையா.?" என்றாள்.

"ம்.."

"ஒருவேளை எனக்கு அப்படி ஆகியிருந்தா நீ என்னை இதே போல நேசிச்சி இருப்பியா.?" சந்தேகத்தோடு கேட்டாள்.

ஆரவ் கலகலவென்று சிரித்தான். "மனுசங்க மனசை போல ஒரு ரோலர் கோஸ்டர் இருக்கவே இருக்காது. லவ்வையும் நட்பையும் எப்பவும் டெஸ்ட் பண்ணிட்டே இருக்கணும். ஒவ்வொரு முறையும் பாசிடிவ்ன்னு வந்தாலும் மறுபடியும் செக் பண்ணணும்.." தத்துவம் பேசியவனை முறைத்தாள்.

அவளின் தோளில் கைகளை பதித்தான்.

"ஓகே டார்லிங். எனக்கு உன்னை எப்பவும் பிடிக்கும். எந்த சூழ்நிலையிலும் பிடிக்கும். நீ எதையும் நினைச்சி மனசை குழப்பிக்காத.!" என்றவன் அவளின் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.

***

"இன்னைக்கு நான் ஹாஸ்பிட்டல் போறேன்.." வங்கிக்கு கிளம்பிக் கொண்டிருந்த வெற்றியிடம் சொன்னாள் அம்ருதா‌.

"நானும்‌ வரேன்.!" என்றான் டையை கழட்டியபடி.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 

Sevanthi Durai

Crazy Writer
Vannangal Writer
Team
Messages
273
Reaction score
287
Points
93
காதல் கணவன் 111

முகம் வெளுத்து விட்டது அம்ருதாவிற்கு. அவனிடம் சேதி சொல்ல நினைத்தாள், அழைத்துப் போக அல்ல.

"இல்ல நானே போய்ட்டு வந்துடுறேன். உனக்கு பேங்க்ல வேலை இருக்கும்.."

வெற்றி அவளின் முகத்தை உற்றுப் பார்த்தான்.

"யாரோடு.?"

"சினேகாவோடு.."

எதுவும் சொல்லவில்லை. பணத்தை நீட்டினான்.

"காசு இருக்கு வெற்றி."

"பரவால்ல வச்சிக்க.." என்றவன் அவளின் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு கிளம்பினான்.

பத்து மணியளவில் கிளம்பினாள் அம்ருதா.

"ஹாஸ்பிட்டலா.? நாங்களும் அங்கேதான் போறோம். எங்களோடே வா.." என்று அழைத்தாள் அர்ச்சனா.

"இல்ல ஆன்டி. நான் போற ஹாஸ்பிட்டல் வேற.." என்றவள் அவர்கள் அடுத்த கேள்வி கேட்கும் முன் வீட்டை விட்டு வெளியே போய் விட்டாள்.

அர்ச்சனாவும் வளர்மதியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு கிளம்பினர்.

அம்ருதா தன்னை தாண்டி சென்ற ஆட்டோவை நிறுத்தி ஏறினாள். அவளும் வெற்றியும் எப்போதும் செல்லும் கோவிலுக்கு சென்றாள். கடவுளை வணங்கிவிட்டு வந்து கோவில் திண்ணையில் அமர்ந்தாள்.

கைபேசியை எடுத்து அம்மாவுக்கு அழைத்தாள்.

"அம்மா.."

"எப்படி இருக்க அம்மு.? உன் நாத்தனார் பொண்ணு எப்படி இருக்கா.?" விசாரித்தாள் மேகலா.

"நான் நல்லாருக்கேன்ம்மா. அவ இன்னும் ஹாஸ்பிட்டலை விட்டு வரல.."

"ஆரவ் பார்த்துட்டு வந்தேன்னு சொன்னான். அவளை வீட்டுக்கு கூட்டி வந்த பிறகு சொல்லு. நான் வந்து பார்த்துட்டு வரேன்.!"

"சரிம்மா.." என்றவள் தந்தையின் நலம் தாயின் நலம் வீட்டில் வளரும் பூச்செடிகளின் நலம் என்று அனைத்தையும் விசாரித்தாள்.

வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். மேகலா மதிய உணவு தயாரிக்க வேண்டும் என்று சொல்லி அழைப்பை துண்டித்தாள்.

அம்ருதா கை கடிகாரத்தைப் பார்த்தாள். மணி பன்னிரெண்டரை ஆகி இருந்தது.

அவள் ஆதீராவுக்கு அழைக்கலாம் என்று நினைத்த நேரத்தில் வெற்றி அவளுக்கு அழைத்தான்.

"வெற்றி.."

"ஹாஸ்பிட்டல் போயிட்டியா.? என்ன சொன்னாங்க டாக்டர்.? போனை டாக்டர்கிட்ட கொஞ்சம் கொடு.‌ நான் பேசுறேன்.!"

அம்ருதா எச்சிலை விழுங்கினாள். பயத்தை மறைத்துக் கொண்டாள்.

"நான் ஹாஸ்பிட்டலை விட்டு கிளம்பிட்டேன் வெற்றி.." என்றாள்.

"ஓ.. சரி பத்திரமா வீட்டுக்கு போய்ட்டு போன் பண்ணு.." என்றவன் அழைப்பை துண்டித்துக் கொண்டான்.

கைபேசியை பார்த்த வண்ணம் சில நிமிடங்கள் அமர்ந்திருந்தாள். அரளியின் வாசம் அவளின் நாசியில் தாக்கியது. கோவிலில் கூட்டம் குறைந்திருந்தது. இரண்டு சன்னியாசிகள் அவளுக்கு எதிரே புரண்டுக் கொண்டிருந்தார்கள்.

அவர்களின் வாழ்க்கை அமைந்திருக்கலாம் என்று நினைத்தாள்.

"காதலிக்க கூடாது. எந்த எமோஷனலும், பீலிங்கும் இருக்க கூடாது. அழகா அவங்களை போல வாழ்ந்துட்டு போயிடணும். நோ லவ். நோ டேமேஜ்.." முனகியபடி தூணில் சாய்ந்தாள்.

***

கனிமொழியின் மேலாடையை கழட்டினான் சக்தி.

"என் அம்மாவை வர சொல்லுங்க மாமா. உங்களுக்கு ஏன் கஷ்டம்.?" என்றவளை கணக்கில் எடுத்துக் கொள்ளாதவன் சுடுதண்ணீரில் நனைத்து எடுத்த டவலால் அவளின் மேனியை துடைத்து விட்டான்.

"இதையெல்லாம் நீங்க செய்யும்போது எனக்கு கஷ்டமா இருக்கு.."

அவளின் பின்னங்கழுத்தில் கரம் பதித்தான்.

"எனக்கு எந்த கஷ்டமும் இல்ல. இந்த மாதிரி சமயத்துல கூட உதவலன்னா எதுக்கு வாழ்க்கைதுணையா இருக்கணும்.? உன்னை பத்திரமா பார்த்துப்பேன்னு தாலி கட்டும்போது எனக்கு நானே சத்தியம் பண்ணியிருக்கேன். உன் அம்மா உன்னை துடைச்சி விட்டா கூட உனக்கு கூச்சமா இருக்கும். ஆனா என்னை பார்த்து கூச்சம் இருக்காது இல்லையா.?" எனக் கேட்டான் புருவம் உயர்த்தி.

வெட்கம் பொங்கும் கண்களை தாழ்த்திக் கொண்டவள் "எதிர்காலத்துல பிரசவம் நடக்கும்போது என்ன செய்விங்களாம்.? அப்ப என் அம்மாதான் என்னை பார்த்துப்பாங்க.." என்றாள்.

சிரித்தான். "அப்ப அவங்க பார்த்துப்பாங்க இல்லையா அதான் இப்ப நான் பார்க்கறேன்.." என்றவன் யோசனை வந்தவனாக "உன் அம்மா பாவம் இல்லையா.?" எனக் கேட்டான்.

நிமிர்ந்துப் பார்த்த கனிமொழி அவனின் எண்ணம் படித்தவளாக ஆமென்று தலையசைத்தாள். "அவங்களோட பிரசவத்தின் போது அவங்களுக்கு பிறந்த வீடு இல்ல. நர்ஸ்தான் எல்லாமும் பார்த்திருப்பாங்க.." என்றாள் யோசித்துவிட்டு.

அவளின் நெற்றியில் விரலை வைத்து தள்ளினான்.

"ஏன்.?"

"பிரசவம் முடிஞ்ச பிறகு உங்க அம்மா பக்கத்துல யாரையுமே விடல உங்க அப்பா. உங்க அம்மாவுக்கு எல்லா பணிவிடையும் அவரேதான் செஞ்சாரு. நீ பிறந்தபோது நடந்த எல்லாமும் எனக்கு ஞாபகம் இருக்கு. பாட்டியும் என் அம்மாவும் திட்டுவாங்க. நாங்க பண்றோம் பார்க்கறோம்ன்னு சொல்லுவாங்க. ஆனா மாமா எதையும் மத்தவங்களை செய்ய விட மாட்டாரு. அத்தையோட டிரெஸ்ஸை கூட அவரேதான் துவைச்சி போடுவாரு. ரொம்ப நாள் கழிச்சிதான் சொன்னாரு, என்னைக்காவது என் மனைவியோடு உங்களுக்கு மனஸ்தாபம் வரும். அன்னைக்கு நீங்க இப்படி பணிவிடை செஞ்சோம்ன்னு நூத்துல ஒரு வார்த்தையா கூட சொல்லிட கூடாது‌. அப்படி நீங்க சொன்னா இவ ரொம்ப உடைஞ்சிடுவான்னு சொன்னாரு.. அத்தை மேல அவ்வளவு பிரியம் அவருக்கு. ஆனாலும் உன் அம்மா பாவமில்லையா.? தனக்கு ஒரு பேமிலி இருந்திருக்கலாமேன்னு நினைச்சிருப்பாங்க.." என்றான் பரிதாபமாக.

மகளை பார்த்து வரலாம் என நினைத்து கதவை திறக்க முயன்ற வளர்மதி கதவு தாழிட்டு இருப்பதை கண்டு கதவை தட்ட இருந்த நேரத்தில் அவளை பற்றிய உரையாடல் காதில் விழவும், தட்ட இருந்த கையை நிறுத்திக் கொண்டாள்.

மகளும் மருமகனும் பேசிக் கொண்டதை கேட்டுவிட்டு திரும்பினாள். அருகே இருந்த சுவரோடு சரிந்து அமர்ந்தாள்.

கணவனின் காதல் புயல் போல தாக்கியது. மனதை உடைத்தது அவர்தானே, மன்னிப்பையும் அவரே கேட்கட்டுமே என்று நினைத்தாள்.

கனிமொழியின் மேனியை துடைத்து உடை மாற்றி விட்டான் சக்தி.

"பொட்டு எடுத்து வர சொன்னேனே.?"

கால்சட்டை பாக்கெட்டில் இருந்ததை எடுத்தான். பொட்டை அவனே வைத்து விட்டான்.

"எனக்கு தலை வார அவ்வளவா வராது. இதுக்கு மட்டும் உன் அம்மாவை அனுப்பி வைக்கிறேன்." கண்ணடித்துச் சொன்னான்.

தனது கன்னங்களை பற்றினாள்.

"மாமா நீங்க செம க்யூட். இன்னொரு முறை கண்ணடிங்களேன்.. நான் பார்த்துட்டேன் இருக்கேன்." கொஞ்சலாக கேட்டாள்.

அவளின் மூக்கை பிடித்து ஆட்டியவன் "குணமாகி வீட்டுக்கு வா. எத்தனை முறை வேணாலும் கண்ணடிக்கிறேன்.." என்று விட்டு வெளியே போனான்.

***

மணி இரண்டை கடந்து விட்டது. அம்ருதா எழுந்து நின்றாள். கடவுளை வணங்கிவிட்டு வெளியே நடந்தாள்.

சாலையில் சென்ற ஆட்டோவை நிறுத்தினாள். வீட்டின் முகவரியை சொன்னவள் ஆட்டோவில் ஏற முயன்ற சமயத்தில் அவளருகே வந்து நின்றது பைக்.

திரும்பினாள். வெற்றி ஆக்ஸிலேட்டரை முறுக்கியபடி பைக்கில் அமர்ந்திருந்தான்.

"வீட்டுக்கு போகலாமா.?" எனக் கேட்டான். அவனே ஆட்டோக்காரரிடம் "நீங்க போங்க.." என்று அனுப்பி வைத்தான்.

அம்ருதா சுற்றும் முற்றும் பார்த்தாள்.

"ஹாஸ்பிட்டல் போய்ட்டு வரும்போது இந்த கோவிலுக்கு வந்தேன்.!" என்றவளை உறுத்துப் பார்த்தவன் "போலாமா.?" எனக் கேட்டான்.

உதறும் கரங்களோடு ஏறி அமர்ந்தாள். அவளின் வயிறு அவனின் முதுகில் முட்டியது. பைக்கை கிளப்பினான்.

அவன் வங்கிக்கு செல்லவில்லை. காலையிலேயே அவளின் கண்களிலிருந்த பொய்யை கண்டுபிடித்து விட்டான். அவளுக்கும் முன்னால் புறப்பட்டவன் தங்களது தெருவின் எல்லையில் மறைந்து நின்றிருந்தான். அம்ருதா வந்ததும் அவளை பின்தொடர்ந்தான்.

ஏதாவது தவறு செய்கிறாளோ என்றுதான் சந்தேகப்பட்டான். ஆனால் இப்படி கோவிலில் வந்து நேரத்தை கடத்துவாள் என்று எதிர்பார்க்கவேயில்லை.

வீட்டின் முன் பைக்கை நிறுத்தியவன் அவளின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு உள்ளே நடந்தான். வேலையாட்களை தவிர மற்ற அனைவரும் கனிமொழியை பார்க்கவும் தங்களது பணிகளுக்கும் சென்றிருந்தனர்.

அறையினுள் புகுந்ததும் அவளை விட்டுவிட்டவன் கதவை தாழிட்டான்.

திரும்பினான்.

கையை பிசைந்தபடி நின்றுக் கொண்டிருந்தாள்.

"என்ன டிராமா பண்ற நீ.?" சந்தேகத்தோடு கேட்டான்.

பயத்தில் கண்களை இறுக்க மூடியவள் "எ.. எதுவும் இல்ல." என்றாள்.

பயத்தில் மொத்த உடம்பும் வியர்த்து ஊற்றியது. கால்கள் நடுங்கியது. நிற்கவே முடியவில்லை அவளால்.

"ஹாஸ்பிட்டல் போறேன்னு சொல்லிட்டு எதுக்கு கோவில்ல போய் உட்கார்ந்திருந்த.?" என்றவன் சுற்றிலும் பார்த்தான். கடைசியில் தனது இடுப்பிலிருந்த பெல்ட்டை கழட்டினான்.

பயத்தில் பின்னால் நகர்ந்தவள் வயிற்றை ஒரு கரத்தால் பற்றிக் கொண்டாள்.

"வே.. வேணாம் வெற்றி.. ப்ளீஸ்.. என்னை அடிக்காத.." சொல்லும்போதே கதறினாள்.

"அப்படின்னா நீ உண்மையை சொல்லு. ஹாஸ்பிட்டல் போறேன்னு சொல்லிட்டு நீ ஏன் அங்கே போகாம கோவிலுக்கு போன.?" எனக் கேட்டவன் குனிந்தான். அடியை அவளின் கால்களுக்கு விட்டான்.

"அம்மா.." கத்தியபடி மண்டியிட்டாள். வலியில் அரை உயிர் போய் விட்டது. கண்ணீர் மளமளவென்று கொட்டியது.

"என் கோபம் பத்தி உனக்கு நல்லா தெரியும். நான் உனக்காக ரொம்ப பொறுமையா இருக்கேன். ஆனா நீ எவ்வளவு ஈசியா என்கிட்ட பொய் சொல்ற.? உன்னை அடிக்க எனக்கும் ஆசை கிடையாது. ஆனா நான் என் கன்ட்ரோலை இழந்துட்டு இருக்கேன். என்னை அரக்கனா மாத்தாத அம்மு.."

விம்மியவள் "ஹாஸ்பிட்டல் போக எனக்கு பிடிக்கல.." என்றாள்.

தலைமுடியை கோதியபடி அருகே இருந்த இருக்கையில் அமர்ந்தவன் "ஏன்.? இந்த குழந்தை மேல அக்கறை இல்லையா.? அந்த குழந்தையை நான் அழிச்சேன். இந்த குழந்தையை நீ அழிக்கலாம்ன்னு இருக்கியா.?" என்று சீற்றமாக கேட்டான்.

இடம் வலமாக தலையசைத்தவள் "இல்ல. எனக்கு நிஜமா ஹாஸ்பிட்டல் போக பிடிக்கல.." என்றாள்.

"முட்டாள். நாளைக்கு ஹாஸ்பிட்டல் போகலாம். நானே கூட்டிப் போறேன்.!" என்றவன் கையிலிருந்த பெல்ட்டை தூர வீசினான்.

கையை ஊன்றி எழுந்து நின்றாள்.

"நான் என் அம்மா வீட்டுக்கு போறேன்.." என்றவள் கதவை நோக்கி நடக்க, இடையில் வந்து மறித்து நின்றான்.

"கொன்னுடுவேன் உன்னை.. எதுக்கு அங்கே.?"

"ஏனா எனக்கு ஹாஸ்பிட்டல் போக பிடிக்கல.." தேம்பலோடு சொன்னாள்.

"ஒருவேளை நீ பிரகனென்ட் இல்லையா.?" சந்தேகத்தோடு அவளின் வயிற்றைப் பார்த்தான். சேலையில் தெரிந்த இடைப்பட்ட இடங்களில் மேடிட்ட வயிறு தெரிந்தது.

அருகில் வந்தான். பயத்தோடு பின்னால் நகர்ந்தாள்.

கதவின் மீது சாய்ந்து நின்றவளின் முன்னால் மண்டியிட்டான். பயத்தில் கதவோடு ஒண்டி நின்றாள் அவள்‌. அவளின் வயிற்றின் மீது காது பதித்தான். இதயத்தின் துடிப்பு கேட்டது. நன்றாகவே அறிய முடிந்தது வயிற்றில் இருந்த குழந்தையை.

கையை வைத்து வருடினான். வயிற்றோடு அணைத்துக் கொண்டான். அவள் பொய் சொல்லவில்லை என்று புரிந்தது.

சில நிமிடங்களுக்கு பிறகு எழுந்து நின்றான். அவளை பார்வையால் துளைத்தான்.

"ஹாஸ்பிட்டல்.."

"நான் வர மாட்டேன்.."

"ஆனா ஏன்.?"

"ஏனா எனக்கு பிடிக்கல. என்னை ஹாஸ்பிட்டல் கூப்பிட்டா நான் என் அம்மா வீட்டுக்கு போவேன்.!" கண்ணீரை துடைத்தபடி சொன்னாள்.

அணைத்துக் கொண்டான். "பயப்படுறியா.? அங்கே ஒன்னும் பெருசா இருக்குது. ரெகுலரா செக் பண்ணுவாங்க. அவ்வளவுதான்.!"

இல்லையென்று தலையசைத்தாள். "அங்கே அபார்ஷன் ஆனவங்களும், வயித்துலயே குழந்தை இறந்தவங்களும் வருவாங்க. எனக்கு ஹாஸ்பிட்டல் வேணாம். அந்த காலத்துல எந்த ஹாஸ்பிட்டல் பார்த்தாங்க.? என்னை இப்படியே விடு.." என்றாள் அழுதபடி.

அவளை அழைத்து வந்து இருக்கையில் அமர வைத்தான். மருந்தை எடுத்து வந்து அவளது கால்களின் மீது தடவினான். வீங்கியிருந்தது. இவன் மருந்து தடவியதற்கும் அழுதாள்.

"சாரி அம்மு.." என்றான் கெஞ்சலாக.

அவளின் கன்னங்களை அள்ளியவன் "ஐயம் சாரி. நான் வேணும்ன்னு செய்யல.." என்றான்.

"ம்ம்.."

அவளின் கண்ணீரை துடைத்து விட்டான். படுக்கையில் சாய்த்தான். பாதத்தை பிடித்து விட்டான். அவளின் முகமெங்கும் முத்தங்களை தந்தான்.

"சாரி பேபி.." என்றான் நிமிடத்திற்கு ஒருமுறை.

"என்னை ஹாஸ்பிட்டல் கூட்டிப் போகாம இருக்கணும். அப்பதான் உன் சாரியை ஏத்துப்பேன்.."

"சரி.." என்றான் உடனே. அவளை சமாதானம் செய்து விடலாம் என்று நம்பிக்கை கொண்டிருந்தான்.

***

"மறுபடியும் ஸ்விட்ச் ஆப்.." வருத்தமாக சொன்னாள் சினேகா.

அவளின் கையிலிருந்த தனது போனை வாங்கிய அபிராஜ் அவளின் எண்ணுக்கு அழைத்தான். இம்முறையும் ஸ்விட்ச் ஆப் என்றே வந்தது. வீட்டிற்கு வரும் வழியில் அவள் தனது போனை தொலைத்து விட்டிருந்தாள்.

கைபேசி தொலைந்த கவலையில் அம்ருதா விசயத்தை இருவருமே மறந்து விட்டனர்.

"புது போன் வாங்கணும்ன்னா பத்தாயிரமாவது வேணும். இரண்டு பேருக்கும் சாப்பாடுக்கே இன்னும் வழி செய்யல.." கவலையாக சொன்னான் அபிராஜ்.

அவனது கைபேசியை எடுத்து காட்டினாள்.

"நாம இது ஒன்னை மட்டும் வச்சி அட்ஜஸ்ட் பண்ணலாம்.." என்றாள் புன்னகையோடு.

***

ஷாலினி அழைத்திருந்தாள் என்று காவல் நிலையத்திற்கு சென்றிருந்தான் சக்தி.

"இதெல்லாம் உங்க வொய்ப்போட நகைகள்ன்னு நினைக்கிறேன்.."

வாங்கிக் கொண்டவன் ஆமென்று தலையசைத்தான். தாலியை வருடினான்.

"அவங்க நிஜமா செத்துட்டாங்களா மேடம்.?" என்றவனிடம் கைபேசியை நீட்டினாள்.

வாங்கிப் பார்த்தான். தலை தொங்கிக் போய் இருந்தது சுப்ரியாவுக்கும் அவளது தோழர்களுக்கும்.

"அவங்க எல்லோரும் இறந்துட்டாங்க. ஆள் இறங்க முடியாத புதர் கிணறு. கம்பியில் ப்ளூ டூத் கேமராவை கட்டி உள்ளே அனுப்பி இந்த பிக்சர்ஸை கலெக்ட் பண்ணி இருக்கோம். உங்க மனைவிக்கு ப்ரூப்பா காட்டணும்ன்னுங்கற ஒரே ஒரு காரணத்துக்காக.. காப்பியை உங்க போனுக்கு அனுப்புறோம். அவங்ககிட்ட காட்டிட்டு டெலிட் பண்ணிடுங்க. போட்டோஸ் வெளியே போனா நிறைய சிக்கல்கள் வரும். அவங்களோட பேரண்ட்ஸ் சும்மாவே போராட்டம் செய்வாங்க.."

புரிந்துக் கொண்டதாக தலையசைத்தான்.

அன்று மாலையே கனிமொழியிடம் புகைப்படங்களை காட்டினான்.

"அவங்க செத்துட்டாங்க‌. நம்பு.." என்றான்.

அழுகையோடு அவனை அணைத்துக் கொண்டாள். "தேங்க்ஸ் மாமா.." என்றவளின் தோளை வருடினான்.

ஒரு வாரத்திற்கு பிறகு அவளை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டனர். ஒரு மாதத்திற்கு ஓய்வெடுக்க வேண்டும் என்று சொல்லியிருந்தார்கள்.

"இந்த வருசம் என் காலேஜ் படிப்பு போச்சி.." வருந்தினாள்.

"ஆமா. இல்லன்னா மட்டும் மேடம் யூபிஎஸ்சி பாஸ் பண்ணிட்டுதான் அடுத்த வேலையை பார்ப்பாங்க.." கிண்டல் செய்தான் சக்தி.

முறைத்தாள் கனிமொழி.

"ஏன் என்னால முடியாதா.? நான் ஐ.ஏ.எஸ் கூட ஆவேன்.." என்றாள் முகத்தை திருப்பியபடி.

"முதல்ல டிகிரியை முடிடி.." என்றான் கேலியாக அவன்.

"இதையும் முடிக்கிறேன். அதையும் முடிக்கிறேன்டா டப்பா தலையா.."

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..
 

Sevanthi Durai

Crazy Writer
Vannangal Writer
Team
Messages
273
Reaction score
287
Points
93
காதல் கணவன் 112
வெற்றியின் நெஞ்சில் இருந்தது அம்ருதாவின் பின்னந்தலை. அவளின் வயிற்றின் மீது இருந்தது அவனின் கரம்.

"அம்மு.." அவளின் பின்னங்கழுத்தில் முத்தமிட்டு அழைத்தான்.

உடம்பெங்கும் ஓடிய சிலிர்ப்போடு "ம்." என்றாள்.

"எனக்கு பாப்பாவை பார்க்கணும்ன்னு ஆசையா இருக்கு.." என்றான் வயிற்றை வருடியபடி.

ஏழாவது மாதம் இது. அவனின் கெஞ்சலுக்கு மசியவே இல்லை அவள்.

"இன்னும் மூனு மாசத்துல பார்த்துடலாம்‌ வெற்றி.."

"ஹாஸ்பிட்டல்ல உன்னை எதுவும் செய்ய மாட்டாங்க. நீ பயப்பட தேவையில்ல.." அவளின் தோளில் இருந்த உடையை விலக்கி முத்தங்களை தந்தபடி சொன்னான்.

முத்தங்கள் தந்த மாயங்களில் மூழ்கி கொண்டிருந்தவளுக்கு அவன் சொல்வது கேட்டு எரிச்சல் ஒருபுறம் வந்தது.

அவன் புறம் திரும்பினாள்.

"அந்த காலத்துல யார் ஹாஸ்பிட்டல் போனாங்க.?"

"அப்ப அந்த வசதி இல்ல. ஆனா இப்ப இருக்கு. நாம போகலாம். செக் பண்ணி வரலாம் அம்மு. எனக்கு எல்லாம் நார்மலா இருக்கான்னு தெரிஞ்சிக்க ஆசை. நீ ஏன் பயப்படுறன்னு ஒன்னும் புரியல எனக்கு.."

அவனின் இதழில் தன் இதழை ஒற்றினாள். ஒற்றை நொடியில் விலகிக் கொள்ள நினைத்தாள். ஆனால் அவனின் கரம் அவளின் பின்னங்கழுத்தில் பதிந்தது. முத்தம் தொடர்ந்தது. விழிகளை மூடியிருந்தவளின் முகத்திலிருந்த ஆனந்தம் அவனுக்கு நிறைவை தந்தது. அவளின் முகத்தில் உண்டான சிறு சிறு அசைவுகளையும் ரசித்துக் கொண்டிருந்தான். சிவந்த கன்னங்களில் கை பதித்தான். வருடியபடியே கீழே நகர்ந்தான்.

கூடல் கூடாது என்று சொல்லியிருந்தாள். ஆனால் அவனுக்குதான் அது சிரமமாக இருந்தது. இவளிடம் மட்டும் தனக்கு ஏன் இவ்வளவு பேராவல் என்று அறிய முயன்றான்.

வயிற்றுக்கு வந்து சேர்ந்தது அவனின் கரம். முத்தத்தை நிறுத்திவிட்டு அவசரமாக விலகினான்.

"நீ பார்த்தியா.?" எனக் கேட்டான்.

"என்ன.?"

"பாப்பா உதைச்சதை.?"

எழுந்து அமர்ந்தாள். வயிற்றின் மீது கையை வைத்தாள். ஆறாம் மாதம் முன்பே குழந்தைகள் சில உதைக்கும் என்று கேள்விப்பட்டுள்ளாள். தன் குழந்தையின் அசைவு நெளிவு உணர்ந்துதான் இருந்தாள். ஆனால் உதைத்ததை இன்றுதான் அறிந்தாள்.

மீண்டும் ஒரு உதை விழுந்தது.

சிரித்தாள்.

"சூப்பரா இருக்கு.." புடவையை விலக்கினாள். மீண்டும் உதைப்பது தெரிந்தது. வயிறு மெள்ள ஏறி இறங்கியது.

வாயை பொத்திக் கொண்டு சிரித்தாள். அத்தோடு சேர்த்து அழுதாள்.

வெற்றி வயிற்றின் மீது முத்தமிட்டு நிமிர்ந்தான். அம்ருதாவின் நெற்றியில் முத்தமிட்டான்.

"நம்ம குழந்தை வெற்றி.. இது உன்னை மாதிரி இருக்குமா இல்ல என்னை மாதிரி இருக்குமா.?" எனக் கேட்டவள் "உன்னை மாதிரியே இருக்கட்டும்.." என்றாள்.

தன்னை போல இருந்தால் பிறகு அவன் தன்னையே நினைத்துக் கொண்டு கவலைப்படுவான் என்று தோன்றியது.

அவனது நெஞ்சில் சாய்ந்தாள். "வெற்றி.." அழைத்தாள் ஆசையோடு.

"சொல்லு அம்மு.." அவளின் கன்னங்களில் முத்தங்களை மாறி மாறி தந்தான்.

"ஐ லவ் யூ வெற்றி. இதுவரைக்கும் நான் உன் மனசை கஷ்டப்படுத்தியிருந்தா சாரி. உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். உன்னை மறக்கவே முடியல என்னால. கவின் அழகா இருப்பான் தெரியுமா? க்யூட்டா நடந்துப்பான்.." என்று சொல்லி சிரித்தாள்.

கையை இறுக்கிக் கொண்டு அமர்ந்திருந்தான் வெற்றி.

"பார்த்த உடனே அவனை பிடிச்சிருந்தது. உன்னை பார்க்கும் முன்னாடி அவனை பார்த்திருக்கலாமேன்னு நிறைய முறை நினைச்சிருக்கேன். நல்ல பையன். அதிர்ந்துக் கூட பேச மாட்டான் ரொம்ப கேரிங். உனக்கு தெரியுமா, நான் செஞ்ச தப்புக்கும் கூட அவனே வந்து சாரி கேட்பான்.." என்று சிரித்தாள்.

வெற்றிக்குதான் இரத்தத்தில் சூடு ஏறிக் கொண்டிருந்தது.

"அவனுக்கு கோபமே வராது. எனக்கு ஆச்சரியமாக இருக்கும். எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் நிதானமா இருப்பான். அவனை பிடிச்சிருந்தது‌. ஆனா காதலிக்கவே முடியல. கொஞ்சமா லவ் உருவாகி இருந்தா கூட நான் அவனையே கல்யாணம் பண்ணியிருப்பேன்.." என்றாள் சோகமாக.

பற்களை நெரித்தவனின் சத்தம் அவளுக்கு கேட்கவில்லை.

"நீ ஏன் வெற்றி என் மனசை விட்டு போகல.? நீ அப்படி என்னதான் பண்ண.? ஏன் இந்த காதலை என்னால மறக்க முடியல? இன்னொரு ரிலேஷன்ஷிப்குள்ள போக முடியல.?" சந்தேகமாக கேட்டாள்.

கடைசியில் தான்தான் வெற்றிப் பெற்றது போலிருந்தது அவனுக்கு. சந்தோசப்பட்டான்.

"ஏனா நான்தான் உனக்கானவன். விதி போல இது. இந்த காதல் உன் விதி. நானும் உன் விதி.." என்றவனிடம் ஆமென்று தலையசைத்தாள்.

"அது என்னவோ உண்மைதான்.." என்றாள்.

அவனின் உதடுகளை வருடினாள். "நீ கிஸ் பண்ணா எனக்கு பிடிக்கும் தெரியுமா.?" சிரிப்போடு கேட்டாள்.

"ஓ.. ஹேப்பி நான்.!" என்றவனிடம் "உனக்கு என்னை பிடிக்குமா வெற்றி.?" என்று விசாரித்தாள்.

"ரொம்ப பிடிக்கும் அம்மு. நீ இல்லாம வாழ்ந்தா அது சும்மா ஏனோதானோ வாழ்க்கைதான் எனக்கு. உன்னை தொடாமலேயே இருந்தாலும் அது ஒரு தனி பீல். பாரதியோடு இருந்திருந்தா இந்த அளவுக்கு இருந்திருப்பேனான்னு தெரியல.."

கரங்களை இணைத்தபடி அமர்ந்திருந்தனர்.

***

கனிமொழி ஹாலில் அமர்ந்திருந்தாள். பெரிய புத்தகம் ஒன்றை பரபரவென்று புரட்டிக் கொண்டிருந்தாள்.

"பாவம் நல்லா இருந்த புள்ளைக்கிட்ட எதையோ சொல்லி லூசாக்கி விட்டுட்டான். எப்ப பார்த்தாலும் புத்தகமும் கையுமாவே திரியுது.." மருமகளின் நிலை எண்ணி கலங்கினாள் அர்ச்சனா.

நிமிர்ந்த கனிமொழி "நான் கலெக்டர் ஆக போறேன் அத்தை. மாமாவுக்கும் எனக்கும் சவால்.." என்றாள்.

பாட்டியும் வளர்மதியும் இவளை திரும்பிப் பார்த்தனர்.

அர்ச்சனா ஆச்சரியத்தோடு மருமகளின் அருகே வந்தாள்.

"சவாலா.?" என்றாள் மருமகளின் தாடையை பற்றி.

"ஆமா அத்தை.." தலையை மேலும் கீழுமாக ஆட்டியவளிடம் "என்கிட்ட ஒரு சவாலுக்கு வாயேன்.!" என்றாள்.

"என்ன.?"

"தினம் திங்கற இல்ல.? அந்த தட்டை நீயே கொண்டுப் போய் கழுவி வச்சிடு. அது போதும். இது நான் உனக்கு தர சவால்.." என்றாள் புன்னகை மாறாமல்.

கனிமொழி வெடுக்கென்று எழுந்து நின்றாள். அவளின் மடியிலிருந்த புத்தகம் கீழே விழுந்தது. "ஒரு கலெக்டருக்கு சொல்ற வேலையா இது.?" நெஞ்சை நிமிர்த்திக் கேட்டாள்.

கீழே கிடந்த புத்தகத்தை எடுத்து அவள் முன்னால் இருந்த மேஜையின் மீது வைத்தாள் அர்ச்சனா.

"இது வேலை இல்ல. ஒழுக்கம். சாப்பாட்டு தட்டையே க்ளீன் பண்ண தெரியல. நீ கலெக்டராகி நாட்டுக்கு சேவை பண்ண போறியா.?"

மூக்கு சிவந்தது இவளுக்கு.

"ஹலோ மாமியாரே.!" என்றாள் ஒரு விரலை நீட்டி.

"இனி நானே என் சாப்பாட்டு தட்டை க்ளீன் பண்றேன். என்னோடது மட்டுமில்ல.. என் புருசனோடது. உங்களோடது.. எல்லோரோடதும்.. டிசிபிள்ன்ல இந்த கனிமொழி எந்த விதத்திலும் குறைஞ்சவ இல்லன்னு காட்டுறேன்.." என்றாள்.

அர்ச்சனா இடம் வலமாக தலையசைத்தாள். "எல்லார் தட்டையும் கழுவிட்டு இருந்தா எப்ப படிப்ப.? உன் தட்டை க்ளீன் பண்ணு. அதுவே போதும்.." என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

பாட்டி தலையை திருப்பிக் கொண்டுச் சிரித்தாள். தனது மகளும் பேத்தியும் மாமியார் மருமகள் விவாதம் நடத்துவது பிடித்திருந்தது.

வளர்மதி சிறு புன்னகையோடு தன் மகளை பார்த்தாள். மகள் எத்தனை பெரிய இக்கட்டை கடந்து வந்திருக்கிறாள் என்று அறிந்தவள்தானே அவளும்! இன்று மகள் சாதாரணமாக உலவுவது அவளுக்கு மகிழ்ச்சியை தந்தது.

கனிமொழி தான் விட்ட இடத்திலிருந்து படிக்க ஆரம்பித்தாள்.

அப்பா வீட்டிற்குள் நுழைந்தார். மகளின் அருகே வந்து தலையை வருடினார். தனது பேக்கிலிருந்து இரண்டு புத்தகங்களை எடுத்து தந்தார். "நீ எழுதி தந்த புத்தகம்.. வாங்கிட்டு வந்துட்டேன்.!" என்றார்.

"தேங்க்ஸ்ப்பா.." பற்களை காட்டினாள்.

"நாளைக்கு என் புள்ளையும் கலெக்டரு.." பெருமிதத்தோடு சொன்னவர் "அம்மா டீ தரிங்களா.?" எனக் கேட்டார். மனைவி அந்த திசையில் இருப்பதை அவரும் அறிவார். அதனால்தான் அந்த பக்கம் கூட திரும்பாமல் கேட்டார்.

கனிமொழிக்கு வருத்தமாக இருந்தது. தன்னால்தான் அவர்களுக்குள் சண்டை என்று தினமும் வருந்தினாள்.

வழக்கம் போல அன்று இரவும் "மாமா.. பாவம் எங்க அம்மாவும் அப்பாவும்.." என்றாள்.

"அதுக்கு நான் என்னடி பண்ணட்டும்.?" என்றவனின் நெஞ்சில் சாய்ந்தவள் "ஏதாவது செஞ்சி சேர்த்து வைங்க.." என்றாள்.

"நானா.? அவங்களையா.? சண்டை போட்டுக்கிட்ட அவங்களுக்கு சேர்ந்துக்க தெரியுதா.? அதெல்லாம் சேர்ந்துப்பாங்க. நீ உன் வேலையை பாரு.." என்றான்.

***

வளர்மதி கட்டிலில் படுத்திருந்தாள். அவள் கணவன் வழக்கம்போல தலையணையை எடுத்து சென்று சோஃபாவில் சாய்ந்தார்.

மனைவியின் முகம் பார்க்கவேயில்லை அவர். வளர்மதிக்குதான் மன அழுத்தம் கூடிக் கொண்டிருந்தது.

மூச்சு விடுவது கூட சிரமமாக இருந்தது. தனக்கு ஏன் இந்த கஷ்டம் என்று தன்னையே கேட்டுக் கொண்டாள்.

"ஏங்க.." என்றாள் தனது மொத்த பிடிவாதத்தையும் கைவிட்டுவிட்டு.

அவர் பதில் சொல்லவில்லை. திரும்பிப் பார்த்தாள். கூரையை பார்த்துக் கொண்டிருந்தது அவரின் பார்வை.

"என்னோடு பேச கூட மாட்டிங்களா.?"

மௌனமே பதிலாக வந்தது.

அதற்கு மேல் பேச வாய் வரவில்லை. கவிழ்ந்துப் படுத்துக் கொண்டாள். கண்ணீர் ஓசையின்றி தலையணையை நனைத்தது.

***

அம்ருதாவை பார்க்க வந்தாள் அவளின் அம்மா.

மகளுக்கு பிடித்த பலகாரங்களை செய்து எடுத்து வந்திருந்தாள். மாலை வரை அவளின் அருகிலேயே அமர்ந்திருந்தாள்.

"இந்த மாசம் டாக்டர்கிட்ட போய்ட்டு வந்திங்களா அம்மு.? என்ன சொன்னாங்க.?"

"எல்லாமே நல்லாருக்குன்னு சொன்னாங்க.."

மகளின் தலையை வருடி‌விட்டவள் "ஸ்கேன் ரிப்போர்ட் காட்டும்மா.." என்றாள் ஆசையோடு.

"வெ.. வெற்றி எங்கேயோ வச்சிட்டான்ம்மா. நான் எங்கே தேடி எடுக்கறது? குழந்தை பிறந்த பிறகு நீயே பார்த்துக்க.."

"ஒவ்வொரு மாசமும் இப்படியே சொல்லு.." என்றவள் மகளின் கழுத்து எலும்புகளை கவலையோடு பார்த்தாள்.

"என்ன பொண்ணு நீ.? சாப்பிடுறியா இல்லையா.? எலும்பா இருக்க. எல்லோரும் புள்ளைதாச்சியான்னா உடம்பு பிடிப்பாங்க. நீ என்னடான்னா தீஞ்சிக்கிட்டு போற.." சலித்துக் கொண்டாள்.

"சாப்பிட்டுக்கிட்டுதான் இருக்கேன்ம்மா.."

மகளுக்கு தலைவாரி பூ‌ வைத்து விட்டாள்.

"இந்த வீட்டுல இருப்பவங்க உன்னை கொடுமை பண்ணுவாங்களோன்னு பயந்துட்டே இருந்தேன். ஆனா பரவால்ல.‌ இவங்களும் மனுசங்களாதான் இருக்காங்க. இப்படியொரு குடும்பத்துல எப்படிதான் பிறந்தானோ உன் புருசன்.? மூக்குக்கு மேல் கோபத்தை வச்சிக்கிட்டு சுத்திக்கிட்டு திரியறான்.."

அம்ருதாவிற்கு சிரிப்புதான் வந்தது.

கிளம்பிக் கொண்டிருந்த மேகலா நினைவு வந்தவளாக மகளின் முன்னால் அமர்ந்தாள்.

"வந்த வேலையை மறந்துட்டேன் பாரு. உனக்கு வளைகாப்பு நடத்தி வீட்டுக்கு கூட்டிப் போகணும்.." என்றவள் ரவிக்கையின் உள்ளே இருந்து காகிதம் ஒன்றை எடுத்து நீட்டினாள்.

"இதுல நாலு தேதி இருக்கு. உனக்கும் உன் புருசனுக்கும் எது சரியா இருக்கும்ன்னு பேசிட்டு சொல்லுங்க. நாங்க அந்த தேதியிலேயே வளைக்காப்பை‌ வச்சிடுறோம்.." என்றாள்.

அம்ருதா காகிதத்தில் எழுதி இருந்ததை பார்த்தாள்.

"நான் அங்கே வரலம்மா. வளைகாப்பு நடத்திட்டு இங்கேயே விட்டுட்டு போயிடுங்க. நான் இங்கிருந்து‌ வரல.." என்றாள்‌ தயக்கமாக.

"இப்படி சொல்ல கூடாது. ஊர் உலகம் என்ன பேசும்.? பிள்ளைத்தாச்சி பிள்ளையை இங்கே விட்டுட்டு எனக்கு எப்படி அங்கே தூக்கம் வரும்.? ஒரு ஏழெட்டு மாசம் நம்ம வீட்டுல இருப்பதுல என்ன குறையற.?" என்றுக் கேட்டாள்.

"என்னை இங்கேயே விட்டு போறதா இருந்தா வளைகாப்பு வைங்க. இல்லன்னா வேணாம்.." ஒரே முடிவாக சொன்னாள்.

மேகலா எவ்வளவோ எடுத்துச் சொன்னாள். ஆனால் அம்ருதா மசியவில்லை.

"உங்க அப்பாகிட்ட பேசிட்டு சொல்றேன்.." என்று அங்கிருந்து கிளம்பிப் போனாள்.

வெற்றி வந்த பிறகு தேதிகளை சொன்னாள். "எப்ப வளைகாப்பு வைக்கலாம்.?" என்றுக் கேட்டாள்.

"உனக்கு பிடிச்ச நாள்ல.." அவளின் கன்னம் கிள்ளி சொன்னான்.

அவளுக்கு பிடித்த நாளிலேயே வளைகாப்பு நடத்த திட்டமிட்டார்கள்.

வளைகாப்பு நாளும் வந்தது. வீடு புது பொலிவோடு இருந்தது. அம்ருதாவிற்கு அணிகலங்களை அணிவித்து அழகாக தயார் செய்தனர்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 

Sevanthi Durai

Crazy Writer
Vannangal Writer
Team
Messages
273
Reaction score
287
Points
93
காதல் கணவன் 113

சக்தி குளியலறை வாசலில் நின்றிருந்தான். கனிமொழி டவலை சரி செய்தபடி வெளியே வந்தாள். அவசரமாக அவளை அணைத்தான். இவனின் திடீர் அணைப்பில் பயந்து விட்டவள் "என்ன.?" என்றாள்.

"பிரெஸ்ஸா இருக்க.." என்று தாடையில் முத்தமிட்டான்.

"என்ன இன்னைக்கு காலையிலேயே.." சந்தேகமாக கேட்டாள்.

"ஏனா நீ அழகா இருக்க.." என்றவன் அவளின் ஈர முடியை ஓரம் ஒதுக்கினான்.

"நீ என் பொண்டாட்டியா.? நிஜமாவா.? என்றவனை கழுத்தைச் சாய்த்துப் பார்த்தாள்.

"என் மாமனுக்கு கிறுக்கு பிடிச்சிருக்கு.." என்றவள் அவனை தாண்டி நடக்க அவளின் முதுகை அணைத்தான். வயிற்றை பின்னின கரங்கள் இரண்டும்.

"நான் உன்னை விட மாட்டேன்.." என்றான்‌ தலையை ஆட்டியபடி.

அவளின் கழுத்தில் முத்தங்களை தந்தான். "செம வாசம் கனி.." என்றவனின் குரலில் மயக்கம் கலந்திருந்தது.

"எனக்கு வேலை இருக்கு மாமா. வீடு முழுசா ஆளுங்க இருக்காங்க. உங்களுக்கு எப்படி இந்த டைம்ல இப்படியெல்லாம் தோணுது?" சந்தேகமாக கேட்டவளின் முதுகிலிருந்த டவலை கொஞ்சம் கொஞ்சமாக கீழே இறக்கினான்.

"நீ என் பொண்டாட்டி. எனக்கு எந்த டைம் வேணாலும் தோணும்.." என்றபடியே முதுகில் முத்தமிட ஆரம்பித்தான்.

"உன்னை இப்படி பூனைக்குட்டி போல சுத்தி வருவேன்னு நினைச்சதே இல்ல கனி. உண்மையிலேயே நீ மேஜிக் வுமன்தான்.!" என்றவனின் இடது கரம் அவளின் கழுத்தில் கோலமிட்டது.

"ஆனா எனக்கு நம்பிக்கை இருந்தது என் காதல் மேல.!" என்றவளை தன் புறம் திருப்பினான். முதுகில் சொருகப்பட்டு இருந்த டவலின் நுனியை எடுத்து விட்டிருந்தான். அதனால் டவல் நழுவ பார்த்தது. அவசரமாக டவலை பிடித்துக் கொண்டாள்.

"எப்படி இந்த நம்பிக்கை.?" என்றவன் இப்போது தேவை அது இல்லை என்று உணர்ந்து "நீ ஏன் திடீர்ன்னு அந்த வீட்டுல இருந்து இங்கே வந்த.?" என்று விசாரித்தான்.

ரகசிய புன்னகை சிந்தியவள் "என்னை நீங்களும் வளர்த்தியதால என் மேல உங்களுக்கு காதல் வருவது கஷ்டமாம். பக்கத்துல தினமும் பார்த்த ஒரு பொண்ணு மேல லவ்வோ லஸ்டோ எப்படி வரும்.? நமக்கு தேவை மாற்றம். உங்களை விட்டு நான் விலகி போகும்போது, நான் என்னோட அலங்காரத்தை மாத்திக்கும்போது நான் உங்களுக்கு வேற மாதிரி தெரிவேன். இயல்பிலிருந்து மாறும்போது புதுசா தெரிவேன். இந்த பழைய கனியை விடவும் அந்த புது கனியை உங்களுக்கு பிடிக்கும்ன்னு நினைச்சேன்.." என்றாள் பற்களை காட்டியபடி.

வியந்தான். அவள் சொன்னதில் இருந்த உண்மையை அவன் மனம் ஒத்துக் கொண்டது. அவளை வேறு ஒரு அலங்காரத்தோடு பார்த்தபோது புதிதான ஒரு உணர்வு உண்டானது. விலகி இருந்தபோது அவள் மீதான புது காதல் உண்டானது.

"ஆமா பாப்பா.. ரொம்ப சூப்பரா யோசனை பண்ணியிருக்க.." என்றவனிடம் அது வேறு ஒருவரின் யோசனை என்பதை சொல்லவில்லை அவள்.

'இவருக்கு லவ் வர வைக்க நாசா சைன்டிஸ்டை விட அதிகமா ஆராய்ச்சி பண்ண கஷ்டம் எனக்குதானே தெரியும்.!' என்று அவள் யோசித்த வேளையில் டவலை தொட்டான்.

"இது வேற எதுக்கு?" என்றான் டவலை உருவியபடி.

வீடு முழுக்க உறவினர்களை வைத்துக் கொண்டு இப்படி அழிச்சாட்டியம் செய்கிறானே என்று மனதோடு புலம்பியவளை‌ நெருங்கினான்.

"கேன் வீ.?"

அவளை எங்கே பதில் சொல்ல விட்டான். அதற்குள் இதழையும் அவளது மேனியையும் தனது காதல் விலங்கால் கைது செய்து விட்டான்.

டவலோடு சேர்ந்து புத்தியும் நழுவிக் கொண்டிருந்தது அவளுக்கு.

***

தேவதையே நேரில் வந்தது போலிருந்தது வெற்றிக்கு. மனைவியின் முகத்தை விழியசைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். கை நிறைய வளையல்களோடு நாற்காலியில் அமர்ந்திருந்தாள்.

"கல்யாணம்தான் அப்படி ஆகி போச்சி. இந்த வளைகாப்பாவது நல்லவிதமா நடக்குதே.!" என்று சொன்னார்கள் பலர்.

ராமனும் மேகலாவும் விழாவை சிறப்பாக செய்துக் கொண்டிருந்தனர்.

"பொண்ணா இருக்குமா.? பையனா இருக்குமா.?" ஆரவிடம் கேட்டாள் தேன்மொழி.

"பையனா இருந்தாலும் பெண்ணா இருந்தாலும் நம்ம மருமக புள்ளைதானே.?" புருவம் தூக்கி அவன் சொல்லவும் நெகிழ்ச்சியோடு அவனது தோளில் சாய்ந்தாள் தேன்மொழி.

கனிமொழியும் சக்தியும் வந்து நின்றார்கள்.

அம்ருதாவிற்கு நலங்கு வைக்கப்பட்டது. அற்புதமான தருணங்களை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

வெற்றியின் முகம் பூரிப்பில் இருந்தது.

"பின்னாடி கல்யாணம் பண்ணவங்க கூட குழந்தை பெத்துக்கறாங்க. ஆளுக்கு முன்னாடி கல்யாணத்தை பண்ணிட்டு வெறும் வயிறா சுத்திட்டு இருக்கா இவ.." கீர்த்தனாவை சாடை பேசினாள் பெரிய பாட்டி.

தாயம்மா தன் அக்காவை முறைத்தாள்.

"என் பேத்தியும் பேரனும் வாழ்க்கையை கொஞ்ச வருசத்துக்கு என்ஜாய் பண்ணணும்ன்னு நினைக்கிறாங்க. இதுல உனக்கு என்ன கவலை.?" என்றுக் கேட்டாள்.

பாட்டி பதில் சொல்லிவிட்டாலும் கூட கீர்த்தனாவுக்கு மனம் வாடிப் போனது. அந்த வாட்டம் முகத்திலும் தெரிந்தது.

வயிற்றிற்கு அனிச்சையாக சென்றது கரம். ஒரு வருடத்திற்கு மேலாகி விட்டது திருமணமாகி. இன்னும் ஏன் குழந்தை தரிக்கவில்லை என்று கவலையாக யோசித்தாள்.

'எனக்கு ஏதாவது குறை இருக்குமோ.? இல்லன்னா பாலாவுக்கோ.? ஏதாவது தோசம் இருக்குமோ.? கர்ப்பப்பையில் ஏதாவது கட்டி இருக்குமோ.? ஹாஸ்பிட்டல் போனா என்ன சொல்வாங்க.? செலவு ரொம்ப ஆகுமோ.? குழந்தை பிறக்கும் பாக்கியம் இல்லன்னு சொல்லிடுவாங்களோ.?' பயமோ பயம் அவளுக்கு.

புன்னகை இறந்த முகத்தோடு அங்கிருந்து நகர்ந்தாள்.

"உன் வாய்தான் என்ன வாயோ.?" அக்காவை திட்டினாள் தாயம்மா.

"நான் சொல்லலன்னா ஊருல நாலு பேர் சொல்வாங்க இல்ல.." என்றவளிடம் "உனக்கு வயசாகி போச்சி. ஆனா நீ இன்னும் சாகலன்னு ஊர்ல நாலு பேர் சொல்றாங்கன்னா நீ இப்பவே செத்துடுவியா என்ன.?" என்று எரிச்சலாக கேட்டாள்.

***

கீர்த்தனா கனிமொழியை பார்த்தாள். கனிமொழியும் தனக்கு முன்பாக குழந்தையை பெத்து‌விட்டால் பிறகு தனக்கு மலடி என்ற பட்டம் நிரந்தரமாகிவிடும் என்று கவலைப்பட்டாள்.

முகம் வாடியிருந்த மனைவியின் தோளை அணைத்தான் பாலாஜி.

"என்னாச்சி என் தங்கத்துக்கு.?" என்றவனிடம் விசயத்தை சொன்னாள்.

"அட ச்சை.. நாலஞ்சி வருசத்துக்கு ஜாலியா லைப்பை என்ஜாய் பண்ணலாம்ன்னா இவ ஒருத்தி இப்பவே புள்ளைன்னு ஆரம்பிக்கறா.." என்றான்.

அவளின் முகம் மேலும் வாடியது.

"இங்க பாரு. ஊர்ல எந்த பேயாவது சொல்லுதுன்னு இப்பவே புள்ளை வேணும்ன்னு ஆரம்பிச்சாவோ, இல்ல ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிக்கிட்டு அலையும் வேலையை வச்சிக்கிட்டாலோ மவளே பொண்டாட்டியே வேணாம்ன்னு டைவர்ஸ் பண்ணிட்டு போயிடுவேன். நான் கடவுளையும் இயற்கையையும் நம்புறேன். மதிக்கிறேன். அந்த கடவுளும் இயற்கையும் சேர்ந்து எப்ப நமக்கு வாரிசு தராங்களோ அன்னைக்கு நாம குழந்தையை பெத்துக்கலாம். அவங்க தரலன்னாலும் அவங்க மூடிவை மதிக்கிறேன். குழந்தை உண்டாகும் வரைக்கும் வாழ்க்கையை வாழலாம். குழந்தையோடு என்ஜாய் பண்றது ஒரு லைப்ன்னா. எந்த தொந்தரவும் இல்லாத லவ்வர்ஸ் லைப்பை என்ஜாய் பண்றதும் ஒரு லைப்தான். அதனால என்ஜாய் பண்றதுக்கு விடுடி.." என்று கன்னத்தை பிடித்து கிள்ளி விட்டு நகர்ந்தான்.

கீர்த்தனா வருத்தத்தோடு இருக்கையில் அமர்ந்தாள். அவன் சுலபமாக சொல்லிவிட்டான். ஏச்சுபேச்சுகள் தனக்குதானே என்று நினைத்தாள்.

***

அம்ருதாவின் கைகளில் வளையல்கள் குலுங்கியது.

பாட்டி சொன்னது போலவே அவளுக்கு திருஷ்டியை சுற்றி தேங்காயை வெளியே உடைக்க போனான் வெற்றி.

சாலையில் தேங்காயை உடைத்தான். கருப்பு நிறத்தில் சிதறியது தேங்காய்.

'அழுகி போன தேங்காயா.?' மனதில் என்னவோ சுருக்கென்று தைத்தது.

வீட்டுக்குள் வந்ததும் பாட்டியிடம் சொன்னான்.

"குல தெய்வ திருநீறு சாமி ரூம்ல இருக்கும். போய் எடுத்து வந்து வச்சி விடு.." என்றாள் அவள்.

சரியென்று தலையசைத்து விட்டு சென்றான். திருநீறை அம்ருதாவின் நெற்றியில் வைத்து விட்டான்.

கூட்டம் குறைய ஆரம்பித்தது.

மேகலா சம்பந்தி குடும்பத்தின் முன் வந்து நின்றாள்.

"பொண்ணு இங்கேயே இருக்கணும்ன்னு சொல்றா. ஆனா எனக்கு அங்கே தூக்கம் கூட வராது. அவகிட்ட பேசி எங்களோடு அனுப்பி வைங்க.." என்றாள்.

அம்ருதா இருக்கையிலிருந்து எழுந்து வந்தாள்.

"நான் வர மாட்டேன்ம்மா. இங்கேயேதான் இருப்பேன்.." என்றாள் பிடிவாதமாக.

"வச்சா குடுமி. அடிச்சா மொட்டை. அப்படிதான் இருக்கு உங்க நியாயமும். வெறுத்தா அப்படி வெறுக்கறது. இப்ப சேர்ந்தே இருக்கணும்ன்னு அழறது.." திட்டினான் பாலாஜி.

"வேலையை பாருடா.." என்ற வெற்றி "இங்கேயே இருக்கட்டும் ஆன்டி.." என்றான்.

"நீ சும்மா இருடா அவசர குடுக்கை. அவளுக்கு இது முதல் பிரசவம். அம்மா பக்கத்துல இருந்தா அவளுக்கும் தைரியம். அவங்க அம்மாவுக்கும் புள்ளையை பக்கத்துல வச்சிட்டு இருப்பதுல ஒரு நிம்மதி. வாய்க்கு ருசியா அம்மா சமைச்சி போடுற சாப்பாட்டை சாப்பிட்டணும்ன்னு அவளுக்கும் ஆசை இருக்கும்.." என்று அடுக்கிக் கொண்டே போனாள் வளர்மதி.

அவள் சொல்வதில் இரட்டை அர்த்தம் இருந்ததை அனைவருமே அறிந்திருந்தார்கள். தனக்கு கிடைக்காத தாய் வீட்டு பாசம் இவளுக்கேனும் கிடைக்க வேண்டும் என்று எண்ணினாள்.

"நான் போகல அத்தை. இங்கேயே இருக்கேன். என்னை கம்பல் பண்ணாதிங்க." என்றவள் அம்மாவிடம் திரும்பினாள். "நான் தெளிவா சொன்னேன் இல்லையா.? அந்த வீட்டுக்கு கூப்பிடுறதா இருந்தா எனக்கு வளைகாப்பே வேணாம்ன்னு. அப்ப சரின்னு சொல்லிட்டு இப்ப இங்கே வந்து மாத்தி பேசுறிங்க.." என்றாள். அங்கிருந்து நடந்தாள்.

மேகலா தன் கணவனை பார்த்தாள். ஆரவ் அக்காவின் பின்னால் ஓடினான்.

அவள் அறையினுள் நுழைந்ததும் "ஏன்க்கா இப்படி பிடிவாதம் பிடிக்கற.? எந்த வீட்டுலயாவது இப்படி இருப்பாங்களா.? பிறந்த வீடு வேற எதுக்கு இருக்கு.?" என்றுக் கேட்டான்.

"நீயாவது என்னை புரிஞ்சிக்க ஆரவ். எனக்கு இங்கே இருக்கதான் பிடிச்சிருக்கு.. பிள்ளைத்தாச்சி பிள்ளையோட ஆசையை மறுக்க கூடாதுன்னு சொல்வாங்க. நீ புரிஞ்சிக்க.." என்றாள்.

அவனுக்கு முகம் ஒரு மாதிரி ஆகிவிட்டது.

"குழந்தை பிறந்துச்சின்னா அந்த குழந்தையை நான்தான் முதல்ல தூக்கி வளர்த்தணும்ன்னு ஆசையா இருக்கேன். நீ என்ன இப்படி சொல்ற.? தாய்மாமன் நான்தானே.? எனக்கு ஒரு உரிமையும் இல்லையா.?" என்றான் உடைந்த குரலில்.

தம்பியின் தோளை பிடித்தாள்.

"குழந்தை பிறந்த பிறகு அங்கே வந்துடுறேன். பிரசவம் வரை மட்டும் இங்கே.." என்றாள் சமாதானம் செய்பவளாக.

"சரி.." அரை குறை சமாதானத்தோடு அங்கிருந்துப் போனான்.

மேகலாவுக்கும் ராமனுக்கும் மனம் விட்டுப் போனது. மகள் தங்களின் பேச்சை கேட்காமல் போனாளே என்று வருத்தத்தோடு அங்கிருந்து கிளம்பிப் போனார்கள்.

அம்ருதா அணிந்திருந்த ஆபரணங்களையும் உடைகளையும் களைய உதவி புரிந்தான் வெற்றி.

"ஹேப்பியா இருக்கேன் வெற்றி.." என்றாள் அவனின் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டு.

அவளின் தோளை வருடினான். ஒரு தோளிலிருந்து மறு தோளுக்கு உதடுகளால் பயணம் போனான்.

"நானும் ஹேப்பி அம்மு.." அவளின் உச்சி வகிட்டில் முத்தமிட்டு சொன்னான்.

அவனின் புறம் திரும்பினாள். "நாம எங்கேயாவது வெளியே போய்ட்டு வரலாமா.? டூர் மாதிரி.."

"இந்த வயிறோடு டூரா.?" அவளின் நெற்றியில் சுட்டு விரல் பதித்துக் கேட்டான்.

"ஆசையா இருக்கு.." என்றவளின் ஏக்க பார்வையை பார்க்க முடியாமல் "சரி.." என்றான்.

எங்கே செல்வது என்று யோசித்தார்கள்.

"ஆத்தங்கரைக்கு போகலாமா.? உங்க தனி வீட்டுக்கிட்ட.?" என்றவளை ஆச்சரியத்தோடு கேட்டான்.

"இதுவா வெளியே போறது.?" சிரித்தான்.

"எனக்கு அதுவே போதும்.." என்றவளை அழைத்துச் செல்ல நினைத்து திட்டமிட்டான். ஆனால் வங்கியிலும், வீட்டிலும் வேலைகள் இருந்துக் கொண்டே இருந்தன. சரியாக ஒரு மாதம் கடந்த பிறகு ஒரு ஞாயிற்றுக்கிழமையில் அழைத்துச் சென்றான்.

மீன் பிடித்து மணலில் நெருப்பு மூட்டி மீனை சுட்டு தின்றனர் இருவரும்.

ஆற்றில் மகிழ்ச்சியோடு குளித்தனர். அவளின் மேல் தண்ணீரை வீசினான். ஆனாலும் கவனமாகவே இருந்தான்.

அடிக்கடி சிரித்தாள் அம்ருதா. மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தாள். தண்ணீரில் சிறிது தூரம் நீந்தினாள்.

அவள் மேலே ஏறியதும் வீட்டிற்கு அழைத்து சென்றான். உடை மாற்றி வந்தவளின் தலையை துடைத்து விட்டான்.

"சளி பிடிக்குமோ.. பயமா இருக்கு அம்மு.." என்றவனின் கழுத்தை வளைத்தவள் "எனக்கு உன் மேல ஆசையா இருக்கு.." என்றாள்.

புரியாமல் புருவம் உயர்த்தியவனிடம் கட்டிலை கண் காட்டினாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 

Sevanthi Durai

Crazy Writer
Vannangal Writer
Team
Messages
273
Reaction score
287
Points
93
காதல் கணவன் 114

வெற்றிக்கு ஆச்சரியமோ ஆச்சரியம். இவளா இது? அவளை மேலும் கீழும் பார்த்தான்.

அழகாய் இருந்தாள். பேரழகாய்! அவனின் மூளையை மந்தமாக்கிவிட்டு அவளிடம் சரணடைய செய்யும் அளவுக்கு அழகாய் இருந்தாள்.

"நிஜமாவா.?" இவ்வளவு நாள் நெருங்கவும் விடாதவள் இவள்தானே? அதனால் குழம்பினான்.

"யெஸ்.." என்றவள் புடவை முந்தானையை சரிய விட்டாள்.

"வாவ்.. என் பொண்டாட்டி இன்னைக்கு ரொம்ப வித்தியாசமா இருக்கா.." என்றவனின் கன்னங்களை பற்றினாள்.

"நான் உன்னை எவ்வளவு லவ் பண்றேன் தெரியுமா.?" என கேட்டவளிடம் புருவம் மட்டும் உயர்த்தினான்.

"நீ உன் அம்மாவை லவ் பண்றதை விட அதிகமா, நீ என்னை லவ் பண்றதை விட அதிகமா லவ் பண்றேன். உன்னை விட்டு விலக நினைச்சதுக்கு சாரி.." அவனின் கழுத்தை வளைத்தாள். அவனின் அடர்ந்த மீசையின் மீது முத்தமிட்டாள்.

அவளின் இடுப்பில் கைகளை பதித்தான். அவளின் வயிறு பளபளத்தது. நிறைய கோடுகள் இருந்தது. கோடுகள் வராமல் இருக்க க்ரீம் வாங்கி வந்து தந்தான். அவள்தான் பயன்படுத்தவேயில்லை‌.

எட்டு மாதமும் இரண்டு வாரங்களும் ஆகியிருந்தது இப்போது.

"அம்மு.." அவளின் இதழில் முத்தமிட்டுவிட்டு விலகினான்.

"எனக்கு பயமா இருக்கு. வேணாம்.." என்றான் வயிற்றை வருடியபடி.

"ப்ளீஸ் வெற்றி." என்றவளுக்கு விழிகள் கலங்கி விட்டிருந்தது.

"இத்தனை நாளா இல்லாம இப்ப ஏன்.?"

"எனக்கு இப்பதான் ஆசையா இருக்கு.." அவனின் இடுப்பிலிருந்த டவலில் கையை வைத்தபடி கேட்டாள்.

"ஒரு முறை.." என்றவளுக்கு கண்ணீர் கன்னங்களில் ஓடியது.

"அம்மு.." கண்ணீரை துடைத்தான். "ஏன் அம்மு இப்படி? நீ அழுதா எனக்கு கஷ்டமா இருக்கு.." என்றவன் தயக்கத்தோடு அவளை கட்டிலில் சாய்த்தான்.

"நான் கண்ணை மூடிக்கிட்டா.?" எனக் கேட்டவளை புரியாமல் பார்த்தான்.

"எனக்கு பயமா இருக்கு. அன்னைக்கு அந்த குடோன்ல நடந்த விசயம் நினைவுக்கு வருது.."

அவளின் கழுத்தை வருடினான்.

"சாரி அம்மு.." அவளின் காதோர கூந்தலில் முகம் புதைத்து சொன்னான்.

"தெரியாம தப்பு பண்ணிட்டேன். பைத்தியம் போல நடந்துக்கிட்டேன்.. அம்மு சாரி.. என்னை மன்னிப்ப இல்ல.?" அவளின் கன்னங்கள் வருடி கேட்டான்.

மேலும்தான் கண்ணீர் வழிந்தது அவளுக்கு.

"நிஜமா சாரி கேட்கிறியா.?" குரல் உடைந்துக் கேட்டவளிடம் ஆமென்று தலையசைத்தான்.

"என்னால்தான், நான் தள்ளி விட்டதாலதான் அந்த குழந்தை கலைஞ்சதுன்னு ஒரு வார்த்தை சொல்லியிருந்தா‌ கூட நான் அடுத்து வந்த எந்த தப்பையும் செஞ்சிருக்க மாட்டேன். நான்தான் தப்பு பண்ணேன்னு என்கிட்ட சொல்லி இருக்கலாமில்ல.?" என்றவனின் கழுத்தை வளைத்து அருகில் சாய்த்தாள். முகங்கள் மட்டும் அருகில் இருந்தது.

"சொல்ல தோணல. சாரி வெற்றி.."

அவளின் நெற்றியில் இதழ் பதித்தான். விழிகளை மூடிக் கொண்டாள். அவன் கட்டாயப்படுத்தவில்லை.

மலர்களை பறிப்பது போன்று அவளிடம் நடந்துக் கொண்டான். சிறு அசௌகரியம் கூட அவளுக்கு தர கூடாது என்று நினைத்தான்.

ஆனால் அம்ருதாவின் மூடியிருந்த விழிகள் நிறைய தண்ணீர் நிரம்பி நின்றிருந்தது.

"அம்மு.." என்றவனின் ஆசை குரல் அவளின் செவிகளில் ஏறவேயில்லை. வலிதான் அதிகமாக இருந்தது.

இவ்வளவு வலி இருக்கும் என்று அவள் நினைக்கவேயில்லை. ஆசையாக இருந்தது. அதனால்தான் அவனிடம் வாய் திறந்து கேட்டாள். கடைசி ஆசையாக கூட நினைத்தாள் என்றே சொல்லலாம்.

பெட்சீட்டை இறுக்கி இருந்த கரங்களில் நகங்கள் மடங்கி உடைந்து விழுந்தது. கடித்த பற்களை வெளிகாட்ட மறுத்தாள்.

அத்தனை வலியிலும் ஒரே நிம்மதியாக இருந்தது அவன் தந்த முத்தங்கள்தான். அந்த முத்தங்கள் காயத்திற்கும் வலிக்கும் மருந்தாக இருந்தது.

"அம்மு.. உன்னை இத்தனை நாள் தொடாம இருந்தேன்னு நினைக்கும்போது ரொம்ப ஆச்சரியமா இருக்கு.. நீ என் தேவதை அம்மு.." என்றவனின் இதழ்களில் அவளின் மேனியெங்கும் பயணம் போய் கொண்டிருந்தது.

"இங்கேதான் நமக்கு முதல் கூடல் நடந்தது. ஞாபகம் இருக்கா.?" விழிகள் மூடி கேட்டவளின் கழுத்தில் முத்தமிட்டவன் "ஞாபகம் இருக்கு அம்மு.." என்றான். இந்த வீடு அவர்களின் இனிமையான நிகழ்வுகளை சுமந்துக் கொண்டிருந்தது.

"சாரி வெற்றி.." அவன் தன் அருகே தலை சாய்ந்த பிறகு சொன்னாள். விழிகளின் கண்ணீரை மறுபுறம் திரும்பி துடைத்துக் கொண்டு அவர் புறம் திரும்பினாள்.

"எதுக்கு.?" அவளின் நெற்றி வியர்வையில் நனைந்திருந்த முடிகளை ஓரம் ஒதுக்கிவிட்டு கேட்டான். அந்த வியர்வை அவனுக்கு புதிதாக இருந்தது. ஏசி ஓடிக் கொண்டுதான் இருந்தது. அப்போதும் ஏன் இந்த வியர்வை என்று புரியவில்லை. ஒருவேளை அந்த குடோன் சம்பவத்தால் இப்படி இருக்கிறாளோ என்று கலங்கினான்.

போர்வையால் அவளின் நெற்றியை துடைத்தான்.

"விதியை‌ தவிர வேற யாருமே கெட்டவங்க இல்ல வெற்றி‌. கன்ட்ரோல் இழந்த மைன்ட்டை போல மோசம் வேற எதுவும் இருக்காது. எப்போது சிந்தனையை விட உணர்வுகள் அதிகமா கன்ட்ரோலை செய்ய ஆரம்பிக்குதோ அப்ப நடக்கற பிரச்சனைகள், இழக்கும் விசயங்கள் நிறைய நிறைய.. எப்போதும் நிதானமா இருக்க யாரால முடியும்?" என்றவளின் வலது கரம் அவனின் நெஞ்சில் பதிந்தது.

"நீ என்னை மட்டும்தான் லவ் பண்ற வெற்றி. அதை நானும் புரிஞ்சிக்கிட்டேன்.." அவனின் நெஞ்சில் முகத்தை புதைத்தாள்.

இருவரும் விழிகளை மூடினர். மனைவி ஏதோ பேசுகிறாள் என்று நினைத்திருந்தான் அவன்.

***

மாலையில் பாட்டி தாத்தாவின் வீட்டிற்கு திரும்பினர்.

அம்ருதா நோட் ஒன்றை எடுத்தாள். எதையோ கிறுக்கினாள். அவ்வப்போது அடி வயிற்றை தடவினாள். கண்ணீரை துடைத்தாள். வலித்துக் கொண்டே இருந்தது.

"இது எல்லாமே விதி.!" முனகியபடி இரவு உணவை குடும்பத்தாரோடு சேர்ந்து உண்டாள். அனைவரும் அவளை ஆச்சரியமாக பார்த்தனர்.

"அம்ரு நான் ஒரு கடி ஜோக் சொல்லட்டா.?" என்று கேட்ட பாலாஜிக்கு அனைவரும் மறுப்பாக தலையசைக்க அவள் மட்டும் சரியென்று தலையாட்டினாள்.

"ரொம்ப ரொம்ப ஆபத்தான சிட்டி எதுன்னு சொல்லு."

அனைவரும் யோசித்தனர்.

"எந்திரன் பட சிட்டி ரோபோ.." என்றாள் கீர்த்தனா.

மறுப்பாக தலையசைத்தான்.

"தெரியலையே.!" என்ற அம்ருதாவிடம் "எலெக்ட்ரிசிட்டி.." என்றான் பற்களை காட்டி.

"சூப்பர் அண்ணா.." பாராட்டினாள் தேன்மொழி.

அம்ருதா கடனுக்கு சிரித்தாள். "நல்லா இருக்கு.." என்றாள்.

"அடுத்த ஜோக்.." என்றவன் வாய் திறந்த நேரத்தில் அம்ருதாவின் கையில் இருந்த உணவு அவள் சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டிலேயே விழுந்தது.

"வலிக்குது ரொம்ப.." என்றவளின் கழுத்து பின்னால் சாய்ந்தது.

வெற்றியும் பாலாஜியும் அவசரமாக கையை கழுவிக் கொண்டு அவளருகே ஓடினார்.

"அம்மு.. என்னாச்சி.?"

"வயிறு வலிக்குது.." என்றாள் கண்ணீரோடு.

"எட்டரைதானே ஆகுது.? அதுக்குள்ள எப்படி வலி?" குழப்பத்தோடு கேட்டாள் தேன்மொழி.

"நாம ஹாஸ்பிட்டல் போகலாம்.." என்ற‌ சக்தி காரை எடுக்க முன்னால் ஓடினான்.

"வேணாம்.. ஹாஸ்பிட்டல் வேணாம்.." பற்களை கடித்தபடி சொன்னாள்.

"பைத்தியம் மாதிரி உளறாதே. உன் வலியை பார்த்து எங்களுக்கே பயமா இருக்கு. வா ஹாஸ்பிட்டல் போகலாம்.." மிரட்டினான் பாலாஜி.

முடியாதென்று மறுத்தாள்.

வெற்றி யோசிக்காமல் அவளை தூக்கினான். எடையில் மாற்றமே இல்லாதது போலிருந்தது.

"என்னை ஹாஸ்பிட்டல் கூட்டி போக மாட்டேன்னு சொல்லி சத்தியம் பண்ணியே வெற்றி.." என்றவளை குழப்பமாக பார்த்தாள் கீர்த்தனா.

"லூசா நீ.? பிரசவ வலியா இருந்தா என்ன செய்றது.? அமைதியா இரு. டாக்டர் பார்த்துட்டு எதுவா இருந்தாலும் சொல்லட்டும்.." என்றான் பாலாஜி.

அவளிடம் தெம்பேயில்லை. இல்லையேல் அவர்களிடமிருந்து தப்பி ஓடியிருப்பாள்.

தேன்மொழி ஆரவுக்கு போன் செய்து விசயத்தை சொன்னாள். அவன் முன்பே சொல்லி வைத்திருந்தான்.

காரில் ஏறி அமர்ந்த பிறகு அவளின் வலி அவளாலேயே பொறுக்க முடியாத அளவுக்கு அதிகமாகிப் போனது.

மருத்துவமனை வேண்டாமென்று சொல்ல இப்போது பயம் வந்தது. பிரசவ வலிதானோ என்று சந்தேகித்தாள். அவ்வளவு வலி இருந்தது இடுப்பிலும் பிறப்புறுப்பிலும்.

இக்கட்டான சூழ்நிலையில், தாங்கவே முடியாத வலியில் அவளுக்கு வாழ வேண்டும் என்று ஆசை வந்தது. தனது ஆசை கண்டு அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது.

கார் வேகமெடுத்தது. அம்ருதாவின் கீழ் ஆடை ஈரத்தால் நனைய ஆரம்பித்தது.

"பனிக்குடம் உடைஞ்சிடுச்சி போல.. சீக்கிரம் போ சக்தி.." விரட்டினாள் கீர்த்தனா.

பாலாஜியும் மற்றவர்களும் மற்றொரு காரில் வந்துக் கொண்டிருந்தனர்.

அம்ருதா அழுதாள். "வெற்றி சாரி.. வெற்றி ஐ லவ் யூ.." என்று உளறிக் கொண்டே இருந்தாள்.

"சரி. எல்லாம் தெரிஞ்சதுதான். நீ கொஞ்சம் அழாம இரு.." அவளின் கண்ணீரை‌ துடைத்து விட்டான் வெற்றி.

அவனின் கரங்கள் நடுங்கிக் கொண்டிருந்தன.

"நான் செத்துட்டா என்னை மறந்துடு வெற்றி. உனக்குன்னு ஒரு நல்ல லைப்பை அமைச்சிக்க.." என்றவளை முறைத்தான். "என்னை டென்ஷன் பண்ணாத. நான் ஏற்கனவே அன்ஸ்டேபிளா இருக்கேன். அறைஞ்சி‌ பல்லை தட்டிடுவேன்.." மிரட்டினான்.

சிரித்தாள். பிறகு அழுதாள்.

"எனக்கு சத்தியம் பண்ணி கொடு வெற்றி.." கையை நீட்டினாள்.

"என்ன சத்தியம்.?"

"நான் செத்துட்டா நீ வேற பொண்ணை கல்யாணம் பண்ணிக்கணும். நல்லா வாழணும். என்னை மறந்துடணும்.." திக்கலாக சொன்னாள். அதற்குள் ஆறாக கொட்டி‌ விட்டிருந்தது கண்ணீர் வேறு.

"அம்மு என்னை கொல்லாம இரு.." என்று வெற்றி சொன்ன அதே நேரத்தில் "இப்படி அபசகுணமா பேசாம இரு அம்ருதா.." என்று மிரட்டினாள் கீர்த்தனா.

"உனக்கு ஒன்னும் ஆகாது அம்மு.. என்னை நம்பு.." அவளின் கையை இறுக்கினான் வெற்றி. அவளுக்கு தைரியத்தை சொன்னான்.

மறுப்பாக தலையசைத்தாள்.

"நோ. நான் சாக போறேன். கடைசியா உன் சத்தியம் வேணும். இல்லன்னா எனக்கு ஆன்மா கூட சாந்தியடையாது வெற்றி.." என்றவளின் கன்னத்தில் ஓங்கி அறைந்தே விட்டான்.

"வெற்றி.." அவனின் தோளில் அறைந்தாள் கீர்த்தனா. "வீணா போனவனே பிள்ளைத்தாச்சி புள்ளை வலியில துடிக்கும்போது அடிக்கிறியே நீயென்ன மனுசனா மாடா.? உன் கையை உடைச்சி அடுப்புல வச்சாதான் எனக்கு திருப்தியே.!" திட்டினாள்.

அம்ருதா ஒருபுறம் வலியில் துடித்துக் கொண்டே இருந்தாள். சக்தி ஒருபுறம் காரின் வேகத்தை அதிகப்படுத்திக் கொண்டே இருந்தான்.

"இவ உளறலுக்கு வேற என்ன செய்ய சொல்ற.?" என்று கடுகடுத்தான் வெற்றி.

"சண்டை போடாம சத்தியம் பண்ணி கொடு வெற்றி.." அம்ருதா மீண்டும் கையை உயர்த்தினாள்.

"இவளை.." கீர்த்தனா நெற்றியில் அடித்தபடி திரும்பிக் கொண்டாள்.

"நீ செத்தா நானும் செத்துப் போவேன்.." அவளின் கையில் அடித்தபடி சொன்னான் அவன்.

அதிர்ந்தாள். "அப்ப குழந்தை.!?"

"உனக்கே இல்லாத அக்கறை எனக்கெதுக்கு.? நீ செத்தா நானும் செத்துடுவேன்.." என்றவனின் முகம் பார்த்தவள் மறுத்து சொல்ல இருந்த நேரத்தில் வலி அதிகமாகி விட்டது. பேச முடியாத நிலைக்கு சென்று விட்டாள். அவளின் கத்தல் குரல் அந்த காரையும் தாண்டி ஒலித்தது.

***

"டாக்டர் ரேகா அமெரிக்காவுல இருந்து திருப்பி வந்துட்டாங்களாமே.. உண்மையா.?" செவிலியையிடம் விசாரித்துக் கொண்டிருந்தார் சக மருத்துவர் ஒருவர்.

"ஆமா சார். ஒன்னரை வருட டிரெயினிங் முடிஞ்சி வந்திருக்காங்க. இன்னைக்கு காலையில்தான் டியூட்டியில் ஜாயின் பண்ணாங்க. அதோ அவங்களே வராங்க.." கையை காட்டினாள் செவிலியை.

ஸ்டெதஸ்கோப்பை கழுத்தில் அணிந்தபடி புன்னகை முகத்தோடு நடந்து வந்தாள் ரேகா. பிரசவம் ஒன்றை பார்த்து முடித்த கையோடு வந்தவள் மருத்துவரை கண்டுவிட்டு கையசைத்தாள்.

"உங்களை ரொம்ப மிஸ் பண்ணேன் ரேகா.." என்றவரிடம் "தினம் பத்து மிஸ்டு கால் வந்ததே. அப்பவே தெரிஞ்சிக்கிட்டேன் சார்.." என்று கலாய்த்தாள் இவள்.

"போன் பண்ண டைம் கிடைக்கல ரேகா.."

"ஹாஸ்பிட்டல் பெயிண்ட் மட்டும்தான் மாறியிருக்கு. மீதியெல்லாம் அப்படியே இருக்கு.." என்றபடி தனது அறை நோக்கி அடியெடுத்து வைத்தாள்.

அதே நேரத்தில் "அம்மா.." என்ற குரல் கேட்டது.

திரும்பினாள். அம்ருதாவை ஸ்ட்ரெச்சரில் வைத்து தள்ளிக் கொண்டு வந்தார்கள்.

"பிரசவத்துக்கு புது கேஸ் வந்திருக்கு டாக்டர்.." என்று ஸ்ட்ரெச்சரோடு வந்தார் செவிலியை ஒருவர்.

அம்ருதாவின் குரலால் நெருடலை உணர்ந்த ரேகா சந்தேகத்தோடு அவளின் முகத்தைப் பார்த்தாள்.

"மிஸ் அம்ருதா.?" என்றாள் குழப்பத்தோடு. அவளோ இல்லை அவள் போல வேறு யாராவதோ என்று தயங்கினாள்.

"ஆமா டாக்டர். மிஸஸ் அம்ருதாதான்.." கீர்த்தனா சொன்னாள்.

"இம்பாசிபிள்.." என்ற ரேகா அருகே ஓடி வந்தாள்.

"ஏம்மா பொண்ணே.. உனக்கு அறிவு இல்லையா.?" என்று திட்டினாள்.

"டாக்டர்.. இவளுக்கு ரொம்ப வலி.." என்ற வெற்றியின் புறம் திரும்பியவள் "இவ நிஜமா பிரகனென்டா.?" என்றுக் கேட்டாள் சந்தேகத்தோடு.

"ஆமா டாக்டர்.." இந்த மருத்துவர் பைத்தியமோ என்று தோன்றியது சக்திக்கும் வெற்றிக்கும்.

தலையை மறுப்பாக ஆட்டினாள் ரேகா. எங்கேயோ இடித்தது.

"ரிப்போர்ட்ஸ் கொடுங்க.." என்று கையை நீட்டினாள். ஏதாவது ஒரு மிராக்கிள் ஏற்பட்டு இருக்குமோ என்ற சந்தேகம் அவளுக்கு.

"ரிப்போர்ட்.?"

"இந்த பொண்ணோட செக்கப் ரிப்போர்ட். மன்த்லி மன்த்லி எடுத்திருப்பிங்களே பிரகனென்ஸி ப்ளஸ் ரிப்போர்ட்ஸ்.. அதை கேட்டேன்.."

கீர்த்தனா வெற்றியின் முகம் பார்த்தாள். "வர அவசரத்துல எடுத்துட்டு வரல.." என்றாள்.

"இல்ல. எங்ககிட்ட எந்த ரிப்போர்டும் இல்ல. இவ எந்த செக்கப்புக்கும் வரல.." என்றான் வெற்றி.

"வாட்.? வரலன்னா அப்படியே விட்டுடுவிங்களா.?" என்ற ரேகா வலியில் துடித்துக் கொண்டிருந்தவளை வெறுப்பாக பார்த்தாள்.

"இல்ல டாக்டர்.. நான் எத்தனை முறை கம்பல் பண்ணியும் அவதான் வரல.."

ரேகாவுக்கு விசயம் புரிந்துப் போனது. ஆனால்.?

கடைசியாக இருந்த ஒரே சந்தேகத்தையும் கேட்டு விடலாம் என்று நினைத்தாள்.

"நீங்க வெற்றியா.?" என்றுக் கேட்டாள்.

ஆச்சரியமும் அதிர்ச்சியுமாக ஆமென்று தலையசைத்தான்.

இப்போது அவளின் அதிர்ச்சி கூடியது.

"ஆனா இந்த பொண்ணு எப்படி பிரகனென்ட்டானா.? இவ பிரகனென்டே ஆக கூடாதுன்னுதானே நான் இவளோட பர்ஸ்ட் குழந்தையை கூட வலுக்கட்டாயமா அபார்ட் பண்ணேன்.?" என்றவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 

Sevanthi Durai

Crazy Writer
Vannangal Writer
Team
Messages
273
Reaction score
287
Points
93
காதல் கணவன் 115

"கருவை நீங்க கலைச்சிங்களா.? ஆனா ஏன்.? அந்த கருவை கலைச்சதால இங்கே எவ்வளவு பிரச்சனை தெரியுமா.? ஒன்னரை வருசமா எத்தனை குழப்பம் தெரியுங்களா.?" ஆத்திரத்தில் கத்தினான் வெற்றி.

ரேகா தன் அருகில் இருந்த நர்ஸை பார்த்தாள். "போலிஸ்க்கு போன் பண்ணுங்க.. மனநலம் சரியில்லாத பொண்ணை ஏமாத்தி கல்யாணம் பண்ணி கர்ப்பமாக்கி இருக்காருன்னு இவர் மேல கேஸ் எழுத சொல்லுங்க. இந்த பொண்ணு செத்ததும் கொலை கேஸையும் இவர் மேலேயே எழுத சொல்லுங்க.." என்றாள்.

சுற்றிருந்தவர்கள் திகைத்தனர்.

"மனநலம் சரியில்லையா.? என்ன பேசுறிங்க நீங்க.?" கோபத்தோடு ரேகாவை நெருங்கினான் வெற்றி.

"பின்ன இவ என்ன நார்மல் பொண்ணா.? இவளோட அப்பா அம்மா எங்கே.? 'எல்லாம் நான் பார்த்துக்கறேன் டாக்டர்'ன்னு சொன்னாளே இவளோட தங்கச்சி அவ எங்கே.?" என்று கேட்டாள் ரேகா.

"தங்கச்சியா.? அது என்ன புது கதை.?" என்ற வெற்றியை ஓரம் தள்ளினான் பாலாஜி.

"டாக்டர் மேடம். எங்கேயோ ஏதோ குழப்பம். தயவு செஞ்சி விளக்கமா சொல்றிங்களா.? இவ கர்ப்பத்தை ஏன் கலைச்சிங்க.? அதுக்கு முன்னாடி இவளை பிரசவ வார்டுக்கு அனுப்பிடுங்க. ரொம்ப வலியா இருக்கா.." என்றான்.

ரேகா நர்ஸிடம் சைகை காட்டினாள். "குழந்தையை மட்டுமாவது உயிரோடு காப்பாத்திடுங்க.." என்றாள்.

வெற்றிக்கு கோபமாக வந்தது அவள் சொன்னது கேட்டு.

"என் அம்முவுக்கு ஏதாவது ஆச்சின்னா உங்களை சும்மா விட மாட்டேன்.." என்றான்.

நகர்ந்துக் கொண்டிருந்த ஸ்டெச்சரை நிறுத்தினாள் ரேகா. "அப்படின்னா இப்பவே வேற ஹாஸ்பிட்டல் கூட்டிப் போங்க.." என்றாள்.

"நீ கொஞ்சம் சும்மா இருடா.." வெற்றியை அடக்கினார் தாத்தா.

"ப்ளீஸ் மேம்.. எப்படியாவது தாயையும் பிள்ளையையும் காப்பாத்தி கொடுங்க.." என்று கெஞ்சினார் தியாகராஜன்.

"சண்முகா மேமை கவனிக்க சொல்லுங்க.. செக்கப் பண்ணிட்டு தகவல் சொல்லுங்க.." என்று நர்ஸிடம் சொல்லி அனுப்பினாள் ரேகா.

ஸ்ட்ரெச்சரை உள்ளே தள்ளிக் கொண்டு போனார்கள்.

"அம்ருதாவை உங்களுக்கு எப்படி தெரியும் டாக்டர்.? ஏன் அவ குழந்தையை கலைச்சிங்க.?" வெற்றி கோபம் குறையாமல் கேட்டான்.

"பெரிய கதை. என் ரூமுக்கு போகலாமா.? நான் இப்பதான் ஒரு பிரசவம் பார்த்துட்டு வந்தேன். ரொம்ப நேரம் நிற்கறது கரெக்ட் கிடையாது.."

அவளது கன்சல்டிங் அறைக்கு சென்றார்கள்.

"அவளோட அம்மா எங்கே.?"

"வந்துட்டு இருக்காங்க.." என்றாள் தேன்மொழி. அதே நேரத்தில் தேன்மொழியின் கைபேசி ஒலித்தது. கைபேசியோடு வெளியே போனவள் சற்று நேரத்தில் அம்ருதாவின் பிறந்து வீட்டு ஆட்களோடு உள்ளே நுழைந்தாள்.

"ஒன்னரை வருசம் முன்னாடி வயித்துல பயங்கர வலி, ப்ளீடிங்கா இருக்குன்னு என்கிட்ட வந்தா இந்த பொண்ணு. செக் பண்ணதுல கர்ப்பப்பையிலும், கருப்பை வாயிலும், பிறப்புறுப்பு வரையிலுமே அடிப்பட்டு இருப்பதை கண்டுபிடிச்சோம். இந்த லட்சணத்துல அந்த பொண்ணு பிரகனென்ட் வேற. விசாரிச்சதுல அவளோட லவ்வர் அவளை கீழே தள்ளியிருக்கார்ன்னும் அதனால இப்படி அடி பட்டிருக்குன்னும் தெரிஞ்சது.." என்று வெற்றியை பார்த்தாள்.

வெற்றியின் முகத்தில் இரத்த ஓட்டமே இல்லை. சுற்றி இருந்த குடும்பத்தார் அவனை சந்தேகமாக பார்த்தனர். மேகலா தன் மருமகனை அதிர்ச்சியோடு பார்த்தாள்.

"ஆனா எங்களுக்கு இதை பத்தி எதுவும் தெரியாது டாக்டர். அவ கம்ப்ளீட்டா நார்மலா இருந்தா.." என்றாள் மேகலா.

"இருந்தாளா.? நடிச்சாளான்னு இன்னும் கொஞ்ச நேரத்துல ரிப்போர்ட்ல சொல்லிடுவாங்க.." என்றாள் ரேகா கசந்த நகைப்போடு.

"முதல்ல பழைய விசயத்தை முடிச்சிடலாம்.." என்றவள் "அந்த கரு வளரும் அளவுக்கு சூழ்நிலை இல்ல. சுக பிரசவம், சிசேரியன் நடக்காது. கருப்பையோட உள் சுவர்லயும் வெளி சுவர்லயும் பயங்கர காயம். இதனால அவளோட கர்ப்பப்பையில் ரொம்ப சேதாரம் ஆகிடுச்சி. அவ அந்த குழந்தையை பெத்துக்க நினைச்சா அவ செத்துடுவா. அந்த அளவுக்கு ரிஸ்கியானது அந்த கர்ப்பம். இந்த குழந்தையை அழிச்சிட சொல்லி நான்தான் கட்டாயப்படுத்தினேன். சின்ன பொண்ணு அவ. அவளோட உயிரோடு விளையாட நான் விரும்பல. அதே போல அந்த கர்ப்பப்பையையும் அவளால தன் உடம்புக்குள்ள வச்சிருக்கவே முடியாது. அவ முடிஞ்ச அளவுக்கு சீக்கிரமா அதை நீக்கியாகணும். ஆனா அவ எல்லாத்துக்கும் நோ தான் சொன்னா.."

வெற்றியின் கண்களில் திரண்டு இருந்த கண்ணீர் இமைகளை தாண்டியது. அறையில் ஓசையே இல்லை. அனைவரும் வெற்றியை கோபத்தோடு வெறித்துக் கொண்டிருந்தனர்.

"அவ இந்த விசயம் கேட்டதுல இருந்து மென்டலா பாதிக்கப்பட்டுட்டா. கை நடுங்க உனக்கு போன் பண்ணா.." என்று வெற்றியை கை நீட்டி சொன்னாள் ரேகா.

வெற்றி சிலையாக நின்றிருந்தான்.

"ஒரு முறை இரண்டு முறை இல்ல. எனக்கு தெரிஞ்சி ஒரு மணி நேரமா தொடர்ந்து உனக்கு மட்டும்தான் போன் பண்ணிட்டு இருந்தா. உன் அம்மாவுக்கு பண்ணுன்னு நான் சொன்னேன். ஆனா அவ உனக்கு மட்டும்தான் பண்ணா. அவ அம்மாவை விடவும் அந்த டைம்க்கு நீதான் தேவைப்பட்டிருக்க அவளுக்கு.."

மேகலா முந்தானையால் வாயை பொத்தினாள்.

இதய துடிப்பின் வேகம் குறைந்துக் கொண்டிருந்தது வெற்றிக்கு. அன்றைய நாள் நினைவு இருக்கிறது. டிரெயினிங் சென்ற இடத்தில் அங்கிருந்தவர்களோடு சேர்ந்து பார்டிக்கு சென்றிருந்தான். அவள் அழைப்பதை பார்த்தான். ஆனால் தன் காதலிதானே,‌ பிறகு அழைக்கலாம் என்ற அதே பழைய அலட்சியத்தோடு போனை சைலன்டில் போட்டு விட்டு தனது வேலையை‌ பார்க்க ஆரம்பித்தான்.

"ஒரு மணி நேரம் கழிஞ்சது. அந்த குழந்தையை கலைச்சிடுன்னு மீண்டும் சொன்னேன். அவ லேட் பண்ண பண்ண கருப்பையோட சேதாரம் அதிகமாகிட்டே போகும். ஒரு நாள் தாமதமும் பெரிய ஆபத்தை கொண்டு வந்து விட்டுடும். பச்சை ரணம். அவளுக்கான ரத்த போக்கு கூட அப்ப அதிகமாதான் இருந்தது.."

வெற்றிக்கு கரங்கள் நடுங்கியது. தலைக்குள், மூளையை பாதுகாக்கும் மண்டை ஓட்டின் உள்ளே என்னவோ பூச்சியும் பூரானும் ஓடியது.

நடுங்கிய மனைவியை தோளோடு அணைத்துக் கொண்டார் ராமன்.

அழுதுக் கொண்டிருந்தாள். சத்தம் வெளியே வராத அளவுக்கு வாயை பொத்தி அழுதுக் கொண்டிருந்தாள் மேகலா.

"யோசிக்கிறேன்னு வெளியே போனா. அந்த டைம்க்கு அவளோட சிஸ்டர் வந்துட்டா. என்னாச்சின்னு கேட்டவக்கிட்ட விசயத்தை சொன்னேன்.‌ 'குழந்தையை கலைச்சிடுங்க. ஆனா கர்ப்பப்பையை எடுக்காம அதை சரி பண்ண வேற வழி இருக்கா டாக்டர்'ன்னு கேட்டா. 'அவ கரு வீக் இல்ல. ஆனா கருப்பைதான் சேதாரம். கருவை கலைச்சாலும் இனி எப்பவும் அவளால குழந்தை பெத்துக்க முடியாது. குறைஞ்சபட்சம் ஒரு வருசத்துக்காவது செக்ஸ்ங்கறது அவளுக்கு பாசிபில் இல்ல.. அதையும் மீறி அவ எதையாவது டிரை பண்ணா கண்டிப்பா செத்துடுவா'ன்னு சொன்னேன்."

வெற்றியால் அதற்கு மேல் நிற்க கூட முடியவில்லை. அங்கிருந்த ஒற்றை இருக்கையில் அமர்ந்தான்.

'என்னாலயா.? என் அம்முவுக்கு என்னால அவ்வளவு பிரச்சனையா.?' உள்ளங்கைகளிலும் உள்ளங்கால்களிலும் வியர்த்தது.

"அவளுக்கு சிஸ்டர்ன்னு யாரும் இல்ல டாக்டர்.." என்றாள் மேகலா அழுகையோடு.

"எனக்கு என்னம்மா தெரியும்..? அவதான் அந்த பொண்ணோடு இருந்தா. 'அவ சாக வேணாம் டாக்டர். குழந்தையை கலைச்சிடுங்க'ன்னு சொன்னதும் அவதான். அதுக்கு கையெழுத்து போட்டதும் அவதான். அப்புறம் அவளேதான் அந்த பொண்ணுக்கிட்ட பேசினா. 'அவ முடியாதுன்னு சொல்றா. நீங்க மயக்க ஊசி‌ போட்டு கருவை மட்டும் கலைச்சிடுங்க'ன்னு சொல்லிட்டா.‌ நான் அதன் பிறகும் அந்த பொண்ணோடு பேசினேன். ஒரு யூஸும் இல்ல. அந்த செய்தியால மனதளவில் பாதிக்கப்பட்டுட்டா.. 'நான் வாழவே கூடாது சாகணும்'ன்னு ஒரு முறை சொன்னா. 'வெற்றியை கொல்லணும்.. என் வாழ்க்கையையே அழிச்சிட்டான்'னு ஒரு முறை அழுதா. 'நான் வெற்றியோட காதலுக்கு அருகதையா இல்லாதவளா போயிட்டேன்'னு அழுதா.. 'இனி அவன் முகத்துல எப்படி விழிப்பேன்,‌ அவன் என்னை வேணாம்ன்னு சொல்லிடுவான்'னு புலம்பினா. அந்த டைம்ல அவளை பார்க்கணுமே. அழுகையும் புலம்பலும். 'நான் என் குழந்தையை அழிக்க மாட்டேன். இது என் குழந்தை.. இதை அழிச்சா என் வெற்றி என்னை கொன்னுடுவான். அவனோட கோபத்தையும் வெறுப்பையும் என்னால தாங்க முடியாது. அதுக்கு பதிலா நான் செத்தே போகலாம். குழந்தையை கலைச்சிட்டு வாழுறதுக்கு பதிலா குழந்தையை வயித்துல வச்சிக்கிட்டே சாகறேன் நான்'னு ஒரு அழுகை.."

தரையை‌ பார்த்து உட்கார்ந்திருந்தவன் நிமிர்ந்தான். "அந்த குழந்தையை உடனே கலைச்சிருக்கலாமே.!" என்றான்.

"அப்கோர்ஸ். அதைதான் செஞ்சேன் நான். அவளுக்கு மெண்டல். அதுக்காக நான் அவ உயிரோடு ‌விளையாட முடியுமா.? பைத்தியம் பிடிச்ச மாதிரி உட்கார்ந்துட்டு இருந்த பொண்ணுக்கு மயக்க ஊசி போட்டுதான் கலைச்சேன் நான். மயக்கம் தெளிஞ்ச பிறகும் அவளுக்கு ஒரே அழுகை.. உயிரை காப்பாத்ததான் இப்படி பண்ணேன்னு அவளுக்கு புரியல. அப்பவும் கூட ப்ளீடிங் நிற்கவே இல்ல. இப்படியே இருந்தா இன்னும் ஒரு வாரத்துல கர்ப்பப்பையை எடுத்தே ஆகணும்ன்னு சொல்லிட்டேன்.. மனநல மருத்துவர் மங்கைக்கிட்டயும் அனுப்பி வச்சேன். அவங்கதான் செக் பண்ணிட்டு 'இந்த பொண்ணுக்கு மனநிலையில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கு. கண்டிப்பா அப்நார்மலா பிகேவ் பண்ணுவா. மூனு நாலு மாசமாவது ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணியாகணும்'ன்னு என்னையே பர்சனலா கூப்பிட்டு சொன்னாங்க.."

"அவ அப்நார்மலா நடந்துக்கல டாக்டர். நல்லா இருந்தா.." ஆரவ் உடைந்த குரலில் சொன்னான்.

"இல்ல.. அப்நார்மலாதான் இருந்தா.. நான்தான் கவனிக்கல.." நெற்றியில் ஓங்கி அறைந்துக் கொண்டு சொன்னான் வெற்றி. தேன்மொழி அவசரமாக அவனருகில் ஓடிப் போய் நின்றாள். அவனின் கையை விலக்கினாள். அவனின் தலையை தன் இடுப்போடு சாய்த்துக் கொண்டாள்.

"அவளை உடனடியா மனநல மருத்துவமனையில அட்மிட் பண்ண முடியல. பிகாஸ் ஆப் ஹேர் பாடி ஹெல்த். ப்ளீடிங் நின்ன பிறகு ஸ்கேன் எடுத்து பார்த்து, கர்ப்பப்பையில் ஏதாவது மாற்றம் இருக்கான்னு செக் பண்ணிட்டு அதன்பிறகுதான் அவளை அட்மிட் பண்றதை பத்தி யோசிக்க முடியும்.. அதனாலதான் அன்னைக்கு டிஸ்சார்ஜ் செஞ்சோம் நாங்க. அவளோட தங்கச்சிக்கிட்ட ஒன்னுக்கு பத்து முறை தெளிவா சொல்லி அனுப்பினேன். எல்லாத்துக்கும் தலையை தலையை ஆட்டினா. ஆனா இப்ப இப்படியொரு நிலையில் கொண்டு வந்து நிற்க வச்சிருக்கா. அக்கா மேல கொஞ்சமும் பாசம் இல்லாம போயிருக்கு அந்த பொண்ணுக்கு.."

"காட்.. அவளுக்கு எந்த தங்கச்சியும் இல்ல டாக்டர்.." ராமன் அடக்க முடியாத வேதனையோடு சொன்னார்.

"சினேகா.. அவளாதான் இருக்கும்.." முனகினான் வெற்றி.

"ஆமா. அவதான். அந்த பேர்லதான் சைன் பண்ணா.." என்று ரேகா சொன்ன அதே நேரத்தில் அந்த அறைக்குள் நுழைந்தாள் சண்முகா.

நின்றிருந்த கூட்டத்தை பார்த்தவள் "வாட் இஸ் திஸ்.? எதுக்கு இவ்வளவு கூட்டம்.? அவசியத்துக்கு இரண்டு பேரை வச்சிட்டு மீதி பேரை வெளியே அனுப்ப மாட்டிங்களா.?" என்று எரிந்து விழுந்தபடி வந்து வெற்றிக்கு அருகில் இருந்த மற்றொரு இருக்கையில் அமர்ந்தாள்.

"ஹூ இஸ் தட் கேர்ள்.? எதுக்கு இப்படி ரிஸ்கான கேஸை உள்ளே சேர்த்துக்கிறிங்க.? நாளைக்கு ஹாஸ்பிட்டல் வாசல்ல போராட்டம் பண்ணுவாங்க. நம்மகிட்டயிருந்து காசு‌ பிடுங்க பார்ப்பாங்க.." வெறுப்போடு சொன்னாள் சண்முகா.

ரேகா பெருமூச்சு விட்டாள். "வேண்டிய பொண்ணு டாக்டர்.."

"அவளால முடியாது ரேகா. கரு உருவான உடனே அழிச்சிருக்கணும். அதுவும் இல்லாம இந்த பொண்ணு எப்படி செக்ஸ் வச்சிக்கிட்டான்னு சந்தேகமா இருக்கு.."

"அது செக்ஸ் இல்ல. ரேப்.." பற்களை கடித்தபடி சொன்னான் ஆரவ்.

அவனை ஏதோ ஜந்து போல திரும்பி பார்த்து விட்டு மீண்டும் ரேகாவிடம் திரும்பினாள் சண்முகா.

"வெஜைனாவுல இருந்து யூடரஸ் வரைக்கும் ஏதோ காயங்கள் பரவியிருக்கு.‌ யூடரஸ்ல ஏற்கனவே காயம் இருந்திருக்கணும். வைரஸ் இன்ஃபெக்ஷனால இப்ப முழுசா சேதாரம். உள் தோல் நார்மலா இல்ல. இந்த பொண்ணு இத்தனை நாள் எப்படி உயிரோடு இருந்தான்னு சந்தேகமாக இருக்கு.. இதுல ஒரே பாசிடிவ் மேட்டர் என்னன்னா குழந்தை ஹெல்தியா இருக்கு. ஆபரேட் பண்ணி எடுத்துடலாம். ஆனா.." பெருமூச்சு விட்டவள் "ஆபரேஷன் பண்ண அவளோட ஹஸ்பண்ட்கிட்டயும் அப்பாகிட்டயும் கையெழுத்து வாங்கிடு. ஹாஸ்பிட்டல் முன்னாடி நின்னு போராட்டம் பண்றது கூடவே கூடாதுன்னு கன்டிஷனா சொல்லிடு. அதுக்கு அவங்களுக்கு சம்மதம்ன்னா நான் ஆபரேஷன் ரூமுக்கு போறேன்.." என்றாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 

Sevanthi Durai

Crazy Writer
Vannangal Writer
Team
Messages
273
Reaction score
287
Points
93
காதல் கணவன் 116

சண்முகாவின் காலில் விழுந்தான் வெற்றி. "எப்படியாவது என் பொண்டாட்டியை காப்பாத்தி கொடுங்க மேடம்.. என் உயிரை கூட இப்பவே எடுத்துக்கோங்க. அவளை உயிரோடு திருப்பி கொடுங்க.." அழுகையோடு கெஞ்சினான்.

சண்முகா அவனை விசித்திரமாக பார்த்தாள். "எல்லாரும் இதேதான் சொல்வாங்க. அம்மாவை காப்பாத்தி கொடுங்க, பொண்டாட்டியை.. புருசனை.. மகனை..‌ மகளை காப்பாத்தி கொடுங்கன்னு.. ஆனா அது எங்களால முடியாது. ஒரு உயிர் உயிரோடு இருக்கணும்னு உடம்புல எழுதி இருந்தா அவங்க உயிரோடு இருப்பாங்க. இல்லன்னா அவங்க இறந்துதான் போவாங்க.. சொந்த பொண்டாட்டி.. ரேப்ன்னு சொல்றான் அந்த பையன். பொண்டாட்டியை ரேப் பண்றது தப்பு பிரதர். அவ உடம்புல இருக்கும் பிரச்சனை தெரிஞ்சும் இப்படி செஞ்சது ரொம்ப தப்பு.. அவளால உயிர் பிழைக்க முடியாது. புரிஞ்சிக்க.." என்றவள் கதறுபவனை கண்டுக் கொள்ளாமல் "பேப்பர்ல சைன் வாங்கிட்டு சொல்லுங்க.." என்றுவிட்டு எழுந்து போனாள்.

விம்மிக் கொண்டிருந்த வெற்றியின் தோளை பற்றினாள் தேன்மொழி.

"நீ எழு அண்ணா.. நாம வேற ஏதாவது வழி இருக்கான்னு பார்க்கலாம். இப்படி அழுதா ஒன்னும் செய்ய முடியாது.." என்று அவன் முன்னால் வந்து நின்று தைரியம் சொன்னாள் கனிமொழி.

மற்ற யாருமே அவனின் நெருங்கவில்லை.

"நடிக்கறதை நிறுத்து.." என்றான் பாலாஜி கடினமாக.

"அண்ணா நீயுமா?" தேன்மொழி கவலையோடு கேட்டாள்.

"அவளை இவன் என்ன பாடு படுத்தினான் தெரியுமா.?" என்று கேட்ட பாலாஜி மருத்துவரின் புறம் திரும்பினான்.

"இப்படி ஒரு சீரியஸ் கன்டிஷனோடு அவளை நீங்க அன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல இருந்து அனுப்பியதாலதான் இன்னைக்கு இவ்வளவு பெரிய பிரச்சனை. ஒரு நோயாளியை நீங்க சரியா கவனிக்காம விட்டிருக்கிங்க.." என்று குற்றம் சொன்னான்.

ரேகா தோள்களை குலுக்கினாள்.

"நான் ஒரு சாதாரண மருத்துவர். இதே ஹாஸ்பிட்டல்ல தினம் நூறு பேருக்கு வைத்தியம் பார்த்துட்டு இருக்கேன். நான் அவளை அப்படியே அனுப்ப கிடையாது. அவளோட தங்கச்சிக்கிட்ட தெளிவா சொல்லிதான் அனுப்பினேன். இவன் பொண்டாட்டிக்கு மட்டும்தான் அப்ப மனநிலை சரியில்ல. ஆனா அந்த பொண்ணுக்கு சரியாதானே இருந்தது. அவ ஏன் ஹாஸ்பிட்டல் கூட்டி வரலன்னு நானும் கேட்பேன். அது மட்டுமில்லாம.. இங்கே நான் கடைசியா பார்த்த பேஷண்ட்தான் அம்ருதா. அப்புறமா மேற்படிப்புக்காக வெளிநாடு போயிட்டேன். நேத்துதான் திரும்பி வந்தேன். இன்னைக்குதான் இங்கே மறுபடியும் வேலைக்கு ஜாயின் பண்ணேன்.." என்று தன் பக்கத்து நியாயத்தை விளக்கினாள்.

"அந்த பொண்ணு மேலேயும் இதுல தப்பு இருக்கு. அடிப்பட்டதால இவ்வளவு பிரச்சனை வந்துடல. அடிப்பட்ட வலியை உதாசீனப்படுத்தி தாமதம் செஞ்சதாலதான் அன்னைக்கு அவ்வளவு பெரிய நஷ்டம். முதல் நாளே அதிக வலி. ஆனா அந்த பொண்ணு மூனு நாள் கழிச்சிதான் வந்தா. மூனு நாள்ல காயம் அதிகமாகிடுச்சி.."

வெற்றி விழிகளை எவ்வளவு துடைத்தும் கண்ணீர் நிற்கவே இல்லை.

"என் பொண்ணை எப்படியாவது காப்பாத்துங்க டாக்டர்.." ராமன் முன்னால் வந்து நின்று கெஞ்சினார்.

"இங்கே அந்த பொண்ணை காப்பாத்த வேணாம்ன்னு நினைக்க யாரேனும் உண்டா.? எல்லோருக்கும் அவளை காப்பாத்ததான் ஆசை இன்க்லூடிங் மீ. அதுக்கு மேல அவ விதிதான்.."

"அந்த டாக்டர் எங்கே இருக்காங்க மேடம்?" கண்ணீரை துடைத்து கொண்டு கேட்டான் வெற்றி.

"எந்த டாக்டர்.?"

"அவளுக்கு மனநலம் சரியில்லன்னு சொன்ன டாக்டர்.."

"எதிர் பிளாக்ல.."

"எனக்கு தெரியும் டாக்டர்.." குறுக்கிட்டு சொன்னான் பாலாஜி.

"நான் அவங்களை பார்க்கணும். என் மனைவியை காப்பாத்த ஏதாவது வழி இருக்கான்னு அவங்ககிட்ட கேட்கணும்.." என்றான்.

ரேகா சிரித்தாள். "நோ வே மேன்.. மனநிலை எப்ப நல்லாருக்கணும் தெரியுமா? உடல்நிலை நல்லா இருக்கும் போதுதான். அந்த பொண்ணு இப்ப சாக கிடக்கு. இனி எப்படி இது முடியும்.?" என கேட்டவள் தனது டிராவிலிருந்து பேப்பர் ஒன்றை எடுத்து மேலே வைத்தாள். வேகமாக எதையோ எழுதினாள்.

"இந்த பொண்ணோட புருசனும் அப்பாவும் இதுல கையெழுத்தை போடுங்க. அப்பதான் குழந்தையையாவது காப்பாத்த முடியும். நீங்க லேட் பண்ணா குழந்தைக்கும் ஆபத்துதான்.." என்றாள்.

ராமன் பேப்பரில் கையெழுத்தை போட்டார்.

"சீக்கிரம் கையெழுத்தை போடுங்க.." வெற்றியிடம் பேனாவை நீட்டினார்.

"நான் மாட்டேன்.. எனக்கு என் அம்மு வேணும்.." மறுத்து தலையசைத்தான். அழுதுக் கொண்டிருந்தான்.

"முதல்ல கையெழுத்தை போடுடா. லேட் ஆனா அது ஆபத்துதானே தவிர எதையும் காப்பாத்தி தராது. எவ்வளவு சீக்கிரம் ஆபரேஷன் நடக்குதோ அவ்வளவு சதவீதம் அவ உயிர் பிழைக்க வாய்ப்பு கூடும். யோசிச்சி பாரு.." அவனின் அப்பா மகனுக்கு புரிய வைத்தார்.

அவசரமாக கையெழுத்திட்டான்.

"ப்ளீஸ்.." என்றான்.

ரேகா தனது ஸ்டெதஸ்கோப்பை கழுத்தில் மாட்டினாள்.

அங்கிருந்து கிளம்பினாள்.

அவளை பின்தொட முயன்றான் வெற்றி. அவனின் கையை பிடித்து இழுத்தான் பாலாஜி. அவனை வெளியே இழுத்து போனான்.

பெரியவர்கள் மருத்துவரை பின்தொடர்ந்தனர். சின்னவர்கள் வெற்றியையும் பாலாஜியையும் பின்தொடர்ந்தனர்.

மருத்துவமனையின் வெளியே வந்த பிறகு ஆட்கள் அதிகம் நடமாடாத தோட்டத்தில் அவனை தள்ளினான் பாலாஜி.

"திரும்பி‌ வந்துடாத.. அப்படியே ஓடிடு.." என்று எச்சரித்தான்.

கனிமொழியும் தேன்மொழியும் வெற்றியிடம் ஓடினர்.

"ஏன் அண்ணா இப்படி சொல்ற.? வெற்றியண்ணா மட்டும் வேணும்ன்னா செஞ்சான்? அவளோட ஹெல்த் கன்டிஷன் தெரியாமதானே ரேப் பண்ணான்.?" ஆரவ் தன்னை முறைப்பது அறிந்தும் பேசினாள் தேன்மொழி.

"அதுவும் இல்லாம சும்மா கீழே விழுந்ததுக்கு இப்படி ஆகும்ன்னு அண்ணா மட்டும் கனவா கண்டாரு?" கனிமொழி கவலையோடு கேட்டாள்.

வெற்றி தலை நிமிரவேயில்லை. விழுந்து எழுந்து அமர்ந்தவன் முட்டிக்காலை கட்டியபடி அப்படியே அமர்ந்திருந்தான். கண்ணீரை புல்செடிகளுக்கு பரிசாக தந்துக் கொண்டிருந்தான்.

"கீழே விழுந்தாளா.?" அவசரமாக தனது போனை எடுத்து வீடியோ வைத்து தங்கையின் கையில் திணித்தான்.

"அவ வயிறு இடிச்சதால இத்தனை நாள் பிழைச்சிருந்தா. அந்த இடத்துல வயித்துக்கு பதிலா அவ நெத்தியோ தலையோ மோதி இருந்தா அவ ஸ்பாட் அவுட் ஆகியிருப்பா கனி. மெண்டல் இவன். உண்மையிலேயே இவன்தான் சைக்கோ. இவனோட சைக்கோதனத்தை எங்க மேல காட்டி காட்டி எங்க இரண்டு பேரையும் பைத்தியமா மாத்திட்டான்.." என்று கத்தினான் பாலாஜி.

"பாலா.." உடைந்த குரலில் அவனின் கையை பிடித்தாள் கீர்த்தனா.

"உண்மை கீர்த்து. 'உன் மேல எந்த தப்பும் இல்லடா.. அம்மா ஆக்ஸிடென்ட்ல இருந்துட்டாங்க.. நீ அழாத'ன்னு ஒரே ஒரு வார்த்தை இவன் சொல்லியிருந்தா நான் இழந்த அத்தனையும் எனக்கு சொந்தமாகியிருக்கும். சொந்த வீட்டுல தங்க முடியாம ஓடினேன். சொந்தங்களை ஏத்துக்க முடியாம ஓடினேன். காதலை கூட கை பிடிக்க முடியாம ஒதுங்கினேன். எல்லாத்துக்கும் இவன்தான் காரணம் கீர்த்து. யாரோ ஒரு டாக்டர்.. ஐயாயிரம் ரூபா பீஸை வாங்கிக்கிட்டு என் மேல தப்பு இல்லன்னு புரிய வச்சாங்க.. ஆனா இவன்.. என்னை உயிரோடு சாகடிச்சிட்டான். இப்ப அம்ருதாவை சாகடிக்க போறான்.." என்று திட்டினான்.

கனிமொழியின் கையிலிருந்த போனை பார்த்தனர் சக்தியும் ஆரவ்வும். தேன்மொழி தங்கையை அணைத்தபடி போனை பார்த்தாள். அம்ருதா செயற்கை நீருற்றின் மீது பலமாக மோதி கீழே விழுந்து எழுந்து வருவதை கண்டனர் நால்வரும். அவளின் முகத்தில் கண்ட வலியை இவர்களால் உணர முடிந்தது. அளவுக்கு அதிகமான விசையோடு வாட்டர் பவுண்டனில் வெளியே நீட்டியது போல செதுக்கப்பட்டிருந்தத தாமரை இதழ் உருவ அலங்கார அமைப்பில் அவளின் அடிவயிற்றின் நடுப்பகுதி மோதியிருந்தது.

ஆரவ் வெற்றியை நோக்கி நடந்தான். வெற்றியை ஓங்கி உதைத்தான். ஆனால் உதை அவன் மீது விழவில்லை. ஆரவ் நெருங்குவது கண்டு ஓடி வந்து வெற்றியை அணைத்திருந்த தேன்மொழியின் மீதுதான் அவனின் உதை விழுந்திருந்தது. முதுகில் விழுந்த உதையோடு திரும்பினாள்.

ஆரவ் அதிர்ச்சியோடு அவளை பார்த்தான்.

கையெடுத்து கும்பிட்டாள்.

"என் அண்ணன் தப்பு பண்ணிட்டான். ப்ளீஸ்.. அவன் தெரியாம பண்ணிட்டேன். ரேப்.. ரேப் தெரிஞ்சே தப்பு‌ பண்ணிட்டான்.. தயவுசெஞ்சி என் அண்ணனை மன்னிச்சி‌ விட்டுடு. அவன் பாவம்.. இவனை கொல்றதால உன் அக்கா உயிரோடு வருவான்னா இவனே அந்த உயிரை விட்டுடுவான்.. அவளை ரொம்ப லவ் பண்றான் ஆரவ்.." என்று கெஞ்சினாள் அழுகையோடு.

"அவன் தப்பானவன் தேனு. அவனை விட்டு வா. அவனோட கோபத்தை தீர்த்துக்க அம்ருதா தேவைன்னா ஆரவோட கோபத்தை தீர்த்துக்க இவன்தானே பலியாகணும்?" என்றுக் கேட்ட பாலாஜியை அதிர்ச்சியோடு பார்த்தாள் தேன்மொழி.

"என்னை விட்டு போ தேனு. நான் வாழ தகுதியே இல்லாதவன்.." வெற்றி தலை நிமிராமல் சொன்னான்.

அவனின் கழுத்தை கட்டிக் கொண்டவள் "அப்படி சொல்லாத அண்ணா.." என்றாள் கெஞ்சலாக.

பிறகு அங்கிருந்தவர்கள் புறம் திரும்பினாள்.

"என் அண்ணன் செஞ்சது தப்புதான். இல்லன்னு சொல்லல நான். ஆனா இப்ப நீங்க செய்றதும் அதே தப்புதானே.? அம்ருதா கூட இவனுக்கு எந்த தண்டனையும் தரலியே.. கூடவே இருந்தாளே. என் அண்ணனை கொல்லணும்ன்னு நினைச்சிருந்தா காபியில கூட அவ விஷத்தை கலக்கி தந்திருக்கலாமே! பாதிக்கப்பட்ட அவளே மன்னிச்சி விட்டுட்டா.."

ஆரவ் நகைத்தான். "எவ்வளவு கேவலமா உன் அண்ணனுக்கு சப்போர்ட் பண்ற நீ.."

தலை குனிந்தாள். அவன் இடத்தில் இருந்துப் பார்த்தால் அப்படிதான் தோன்றும். அழுவதை தவிர அவளாலும் வேறு பதில் சொல்ல முடியவில்லை.

"என் அண்ணனை ஏதும் செய்யாத ஆரவ். ப்ளீஸ்.." கெஞ்சுவதை தவிர வேறு என்ன செய்வது என்றும் தெரியவில்லை.

கையை இறுக்கியவன் அவளை முறைத்தபடி அங்கிருந்து போனான். அவனின் கண்கள் கலங்கியிருந்ததை அவளும் கவனித்தாள். ஆனால் அண்ணனை விட்டு நகரவில்லை அவள்.

சக்தி அருகில் வந்தான். தேன்மொழியின் கையை பற்றி எழுப்பி நிறுத்தினான். அவளின் துப்பட்டாவை எடுத்து கண்ணீரை துடைத்து விட்டான்.

"அழாதே. நீ அழுறதாலும் உன் அண்ணி உயிரோடு வர போறதில்ல.." என்றான்.

சக்தி சொன்னது கேட்டு தலையை பற்றிய வெற்றி குலுங்கி அழுதாள்.

'அம்மு உன்னை தொலைக்க போறேனா நான்.? நீ இல்லன்னா நான் எப்படி வாழ்வேன்.?'

அழுது கொண்டிருந்தவனின் அருகே போக முயன்றாள் கீர்த்தனா. அவளின் கையை பற்றி நிறுத்தினான் பாலாஜி.

"அவனை விடு. அவன் அழுது சாகட்டும்.." என்றான் ஆத்திரத்தோடு.

"அம்ருதாவோட நிலைக்கு யாரா இருந்தாலும் அப்படிதான் தோணும். ஆனா இவனை விட்டுட்டா உடைஞ்சிடுவான். அவளுக்காக இவனையும் பலி தர சொல்றியா? அந்த குழந்தையை பிறக்கும் போதே அனாதையாக்க பார்க்கறியா.? இவன் வருத்தப்படுறது உன் கண்ணுக்கு தெரியலையா.? அவ சாகணும்ன்னு இவன் மட்டும் நினைச்சிருப்பானா.? அத்தனை கோபத்திலும் கூட அவ ரவுடிங்ககிட்ட மாட்டிக்கிட்டான்னு தெரிஞ்சும் கூட அவளை காப்பாத்தானே அன்னைக்கு ஓடினான்.? சாகணும்ன்னு நினைச்சிருந்தா அப்பவே விட்டிருப்பானே.!" என்றாள்.

பாலாஜி கசந்த நகைப்போடு அவளின் கையை விட்டான்.

"அவன் உருப்படாம போகல.. உன்னை போல சப்போர்ட்ஸாலதான் அவன் நாசமாவே போனான்.." என்றவன் அவளை முறைத்து விட்டு மருத்துவமனைக்குள் போனான்.

சக்தியின் கைபேசி ஒலித்தது. எடுத்து பேசியவன் "உள்ளே போகலாம் வா.." என்று தன் மனைவியை அழைத்தான்.

"ஏ..ஏன்.. என்னாச்சி.?" பயத்தோடு கேட்டாள் கனிமொழி.

"ஒன்னும் இல்ல. ஆபரேஷன் ஆரம்பிக்க போறாங்களாம்.. வா." அவளை அழைத்துக் கொண்டு நடந்தான். வெற்றியை திரும்பி பார்த்துக் கொண்டே போனாள்.

"பயமா இருக்கு மாமா. என் அண்ணன் தனியா இருக்கான்.."

"கீர்த்துவும் தேனுவும் இருக்காங்க. நீ வா.." என்று கையை விடாமல் கூட்டிப் போனான்.

தேன்மொழியும் கீர்த்தனாவும் வெற்றியின் முன்னால் அமர்ந்தனர். அழுதுக் கொண்டிருந்தவனின் தோளில் வருடினாள் கீர்த்தனா.

"அவ பிழைப்பான்னு நம்பு வெற்றி.." என்றாள்.

***

மருத்துவமனை நோக்கி சென்றுக் கொண்டிருந்த பாலாஜி பக்கவாட்டில் இருந்த வாகன நிறுத்துமிடத்தில் மங்கையை கண்டுவிட்டு அவளிடம் ஓடினான்.

"டாக்டர்.." மூச்சிரைக்க ஓடி வந்து நின்றவனை மேலும் கீழும் பார்த்தவள் "ஹலோ மிஸ்டர் பாலா.. இப்ப எப்படி இருக்கு.? உங்க அம்மா ரூமை கண்டு எந்த பயமும் இல்லதானே.?" என்றுக் கேட்டாள்.

"இல்ல மேடம். இப்ப நான் நார்மலா இருக்கேன். ஆனா பிரச்சனை இப்ப என்னை பத்தி இல்ல. என் அண்ணியும் பிரெண்டுமான அம்ருதா பத்தி‌. ஒன்னரை வரும் முன்னாடி கர்ப்பப்பையில் அடிப்பட்டு இந்த ஹாஸ்பிட்டல் வந்து கருவை கலைச்சாளாம்.." என்று விவரிக்க முயன்றவனிடம் "யெஸ்.. அந்த ப்ளூ சுடி பொண்ணு.. கருவை கலைக்க மாட்டேன்னு அழுதவதானே.? அம்ருதா.!" என்றாள் அவள்.

"ஆமாம் மேடம் அவதான்.."

"அந்த பொண்ணு மறுபடியும் ஹாஸ்பிட்டல் வரலப்பா. வேற டாக்டர்கிட்ட கூட்டி போயிட்டாங்க போல.." என்றவளிடம் அதன் பிறகு நடந்ததை‌ விவரித்தான்.

"மை காட்.." அதிர்ந்தாள்.

"அவ ஏன் டாக்டர் அப்படி செஞ்சா.? அவ வெற்றியை கொன்னிருக்கலாமே.." ஏக்கமாக கேட்டவனின் தோளில் கை பதித்தாள் மங்கை.

"மை டியர் பாய்.. அவ மனநிலையை நீ முதல்ல புரிஞ்சிக்கணும். அவளுக்கு காதல் அதிகம். அவன் மேல பயமும் அதிகம். அவன் செஞ்ச செயலால என்ன ஆச்சின்னா.. அந்த பயம் மட்டும் ஆத்திரமா மாறிடுச்சி. ஒரு பொண்ணு தன் உடம்பை எந்த அளவுக்கு‌ விரும்புறான்னு உனக்கு தெரியாது. அதிலும் ஒரு பொண்ணு.. முக்கியமா குழந்தை பெத்துக்காத ஒரு பொண்ணு‌ தன் கர்ப்பப்பையை எவ்வளவு நேசிக்கறான்னு உனக்கு புரியல. காலம் எவ்வளவோ மாறிடுச்சி. பெண்கள் முன்னேறிட்டாங்க. முடியை கட் பண்றாங்க.. டிரெஸ்ஸை கட் பண்ணி அணியறாங்க. ஆனா ஒருத்தராவது கர்ப்பப்பையை சுமைன்னு நினைச்சி எடுத்து பார்த்திருக்கியா.? மாசமானா மென்சஸ் டைம்ல வயித்து வலியால துடிக்கற பெண்கள் எத்தனை பேர் தெரியுமா.? உயிர் போகும் வலியை அனுபவிச்சா கூட அந்த வலிக்கு காரணமான கர்ப்பப்பையை எடுக்க மாட்டாங்க.." என்றாள்.

***

கனிமொழியை மருத்துவமனை படுக்கை ஒன்றில் அமர வைத்தான் சக்தி.

செவிலியை ஒருவர் வந்தார். ஊசியை எடுத்து‌ வந்தார்.

"என்ன மாமா பண்ண போறாங்க.?" பயத்தோடு கேட்டவளை பார்த்தபடியே அருகில் இருந்த மற்றொரு கட்டிலில் அமர்ந்தான் அவன்.

"அம்ருதாவோட ஆபரேஷனுக்கு நிறைய ரத்தம் வேணுமாம்.. அதனாலதான்.." என்றவன் தனது சட்டையின் கையை மேலே ஏற்றினான்.

"அப்படின்னா அண்ணி பிழைச்சிடுவாங்களா.?"

"டிரை பண்றாங்க.. பார்க்கலாம்.." என்றான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..
 

Sevanthi Durai

Crazy Writer
Vannangal Writer
Team
Messages
273
Reaction score
287
Points
93
காதல் கணவன் 117

மங்கை சொன்னது கேட்டு குழம்பினான் பாலாஜி. ஆனால் புரிந்தது பல விசயங்கள். யார்தான் தனது தாய்மையை இழக்க விரும்புவார்கள்.? ஆனாலும் அவள் செய்த தவறும் பூதாகரமாக தோன்றியது அவனுக்கு.

"இதை அவ வீட்டுல சொல்லியிருந்தா இந்த அளவுக்கு பிரச்சனை ஆகியிருக்காது. வேற வழி‌ பார்த்திருப்போம்.. கருவை கலைச்சிட்டேன்னு சொன்னா. அது உண்மைதான். இவன் பிராங் பார்டியை அடிச்சதாலதான் குழந்தையை கலைச்சேன்னு சொன்னா. ஆனா அதுக்கு மேல ஒத்தை வார்த்தை சொல்லலியே.. அசால்டா இருந்துட்டா. அவன் மேல இருக்கும் கோபத்துல தன்னை தானே அழிச்சிக்கிட்டா.."

"அப்படி சொல்ல முடியாது. அவளால அவளோட குறையை மனசார ஏத்துக்க முடியல. அதுதான் இங்கே பிரச்சனை. அவளுக்கு மட்டுமில்ல பல பேரும் இதுதான் பிரச்சனை. அவளுக்கு அடிப்பட்ட உடனே வலி பிடிச்சிருக்கு. அப்பவே வந்திருந்தா கண்டிப்பா இவ்வளவு சேதாரம் ஆகியிருக்காது. சர்வ சாதாரணமா குணமாகியிருக்கும். ஆனா இது என் உடம்பு. இது சும்மா வலி. இதை என்னால தாங்கிக்க முடியும். எனக்கு எந்த பிரச்சனையும் இல்லன்னு அவ நினைச்சது முதல் நாள் தப்பு. அப்புறமும் அத்தனையும் நடந்த பிறகும் கூட தனக்கு இப்படி ஆகாது. ஆக கூடாதுன்னு தனக்கு தானே சொல்லிட்டு இருந்திருப்பா பார்த்தியே அது இன்னும் பெரிய தப்பு. அதுவும் இல்லாம அவளுக்கு தன்னோட குறைகளை யார்கிட்டயும் சொல்ல பிடிச்சிருக்காது. அவளால மத்தவங்க கஷ்டபடுவதை விரும்பியிருக்க மாட்டா.." என்று மங்கை சொல்லிக் கொண்டே செல்ல, பாலாஜிக்குதான் கடுப்பானது.

ஏதேனும் ஒரு வகையில் அவளின் உயிர் காப்பாற்றப்பட்டால் நலம் என்று கெஞ்சியது மனது.

"அவனை பார்க்கும் போதெல்லாம் அவளுக்கு ஆதங்கமும் ஆத்திரமும்தான் வந்திருக்கு. ஆனா தன்னோட உடல்நிலையை பத்தி சொல்ல முடியல. ஏனா அவளோட மனநிலை அவனை பார்க்கும்போதெல்லாம் மாறி இருக்கு. அவ அவன்கிட்ட மட்டும் சைக்கோதனமா நடந்திருக்கா. அவனால தனக்கு உண்டான இழப்பு மட்டும்தான் அவளுக்கு பிரச்சனையா தெரிஞ்சிருக்கு. அதுதான் அவளுக்கு வினையா வந்து சேர்ந்திருக்கு.. நீங்க அத்தனை பேர் இருந்திருங்கிங்க. அவளால அவன்கிட்ட இயல்பா இருந்திருக்க முடியாது. ஆனா நீங்க காரணம் தெரிஞ்சிட்டு இருந்திருக்கலாமே! முதல்லயே.. அவ கர்ப்பமாகும் முன்னாடியே இதை பத்தி கேட்டிருந்தா அவ சொல்லியிருக்க வாய்ப்பு இருக்கு. அவ மனசுக்குள்ள மருகியிருப்பாதான். ஆனா வீட்டுல உள்ள யாராவது அன்பா அனுசரணையா கேட்டிருந்தா சொல்லி இருப்பா."

பாலாஜி எச்சிலை விழுங்கினான். அவளிடம் கேட்டார்கள். ஆனால் பொறுப்பெடுத்து கேட்கவில்லை. அவள் அவனை வெறுத்தது சட்டபடி குற்றம் என்பது போலதான் அனைவரும் நடந்துக் கொண்டார்கள். ஏன் வெறுக்கிறாள் என்ற காரணத்தை தேடவேயில்லை. வெறுப்பதற்கு அவளுக்கு என்ன உரிமை இருக்கிறது என்றுதான் கேட்டார்கள்.

"அவ மனசு ரொம்ப சிதைஞ்சிருக்கு. அவளால தன் காதலனை பிரியவே முடியாது. ஆனா அவளோட வாழ்க்கை அழிய அந்த காதலனே காரணம். ரொம்ப யோசிச்சி இருக்கா. மனசுக்குள்ளவே ரொம்ப போராடியிருக்கா. இருபத்திநாலு மணி நேரமும் டிப்ரஷன்லயே இருந்திருப்பா. அந்த டைம்ல அவளோட காயங்கள் கொஞ்சமா ஆற ஆரம்பிச்சிருக்கும். கண்டிப்பா. இல்லன்னா அவ பிரகனென்ட் ஆக சான்ஸே இல்ல. பாதி குணமாகி பாதி காயமா அப்படியே இருந்திருக்கும். அந்த டைம்லதான் அந்த ரேப் நடந்திருக்கணும். அவ பிரகனென்டானது மிராக்கள்தான். ஏதோ ஒரு மைக்ரோ செகண்ட் வாய்ப்பு. இவளை தவிர வேற யாருக்கும் இப்படி நடக்க வாய்ப்பே இல்ல. அதை மட்டும் அடிச்சி சொல்வேன் நான். ஆனா அந்த ரேப்க்கு பிறகு பிரகனென்ட்ன்னு அவளுக்கு தெரிய வந்தபோது அவ ரொம்ப குழம்பி இருப்பான்னு நினைக்கிறேன். என்னவோ நடக்கட்டும்.. எப்படியோ போகட்டும்ன்னு அந்த செகண்ட்லதான் அவ முடிவெடுத்திருக்கணும். ஆனா அந்த கரு அவ வயித்துல தங்கியதுதான் என்னால நம்பவே முடியல. எப்படி இது பாசிபில்.?" அவளுக்கே குழம்பியது.

"அவ கட்டிலை விட்டு கீழேயே இறங்கல டாக்டர். ஒரு பொம்மை மாதிரி, ஒரு நோயாளி மாதிரி கட்டில்லயே படுத்துட்டு இருப்பா. சாப்பாட்டுக்கு கூட வெளியே வர மாட்டா.. உடம்பை அவ அசைக்கவே இல்ல.."

"அதனாலதான்னு நினைக்கிறேன். அளவுக்கு அதிகமான ஓய்வு, அந்த குழந்தையையே காரணம் காட்டி மன கஷ்டத்தை குறைச்சிக்கிட்டா.. ரொம்ப ரேர் கேஸ்தான்.."

பாலாஜி வாடிய முகத்தோடு தலையசைத்தான்.

"நான் சொன்னது எல்லாமே என் யூகம்தான். அந்த பொண்ணு பிழைச்சி வந்தான்னா மறக்காம கவுன்சிலிங் கூட்டி வாங்க. நான் செக் பண்ணிட்டு மத்த விவரங்களை சொல்றேன்.." என்றவள் அங்கிருந்து கிளம்பினாள்.

அண்ணனை தேடி செல்ல முயன்றவனுக்கு அழைத்தான் சக்தி.

"ப்ளட் டொனேட் பண்றியா.?" என்றுக் கேட்டான்.

"வரேன்.." என்று மருத்துவமனைக்குள் ஓடினான் பாலாஜி.

***

"அண்ணா எழு.. அவளுக்கு ஒன்னும் ஆகாதுன்னு நம்பு.." வெற்றியை தேற்ற முற்பட்டாள் தேன்மொழி.

"என்னை தனியா விடு தேனு. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.. என்னை விட்டுட்டு போங்க இரண்டு பேரும்.. ப்ளீஸ்.." கெஞ்சினான் வெற்றி.

"பைத்தியம் போல ரியாக்ட் பண்ணாத வெற்றி. எழுந்து வா உள்ளே போகலாம்.." கீர்த்தனா அழைத்தாள்.

"ப்ளீ‌ஸ்.. இரண்டு பேர்க்கிட்டயும் கெஞ்சி கேட்கிறேன்.. என்னை‌ விடுங்க.. கொஞ்ச நேரம் டைம் கொடுங்க.."

கீர்த்தனாவும் தேன்மொழியும் அங்கிருந்து கிளம்பினார்கள். ஆனால் தேன்மொழி தூரத்தில் வந்து நின்றாள்.

"நீ போ கீர்த்தனா.‌ நான் இருக்கேன். ஏதாவது பண்ணிப்பானோன்னு பயமா இருக்கு எனக்கு.."

"எதுவா இருந்தாலும் போன் பண்ணு.." என்றுவிட்டு உள்ளே போனாள் கீர்த்தனா.

***

"எல்லாமே என்னாலதான்.." அழுதபடி புலம்பினான்.

வெற்றியின் போன் சத்தமிட்டது. எடுத்துப் பார்த்தான். அம்ருதாவிடமிருந்து மெயில் வந்திருந்தது. குழப்பத்தோடு திறந்துப் பார்த்தான்.

"வெற்றி.. இந்த மெயிலை நான் ஷெட்யூல் பண்ணி வச்சிருக்கேன். டாக்டர் என்னை காப்பாத்த முடியாதுன்னு சொல்லி இருப்பாங்க..

நடந்ததை இப்பவாவது உன்கிட்ட சொல்லிடுறேன். அந்த பிராங் பார்டியை நீ அடிச்சபோது நான் குறுக்கே வந்தேனே ஞாபகம் இருக்கா.? அங்கே தொடங்குச்சி எல்லாமே.! நீ தள்ளி விட்டதுல வயித்துல பயங்கர அடி வெற்றி. பயங்கர வலியும் கூட. ஆனா நான் கவனிக்கவே இல்ல. டேட் தள்ளி போச்சேன்னு வீட்டுலயே டெஸ்ட் பண்ணேன். பிரகனென்டுன்னு வந்தது. உனக்கு வேற என் மேல பயங்கர கோபம். இதை சொன்னா உன் கோபம் தீருமேன்னு சொன்னேன். ஆனா அதுக்கப்புறமும் வலி இருந்துட்டே இருந்தது. அடுத்த இரண்டு நாள்ல ப்ளட் ஸ்டெயின் ஆச்சி. பயங்கர பெயின். நான் பிரகனென்ட்ன்னு அம்மாவுக்கு தெரிஞ்சா திட்டுவாங்கன்னு பயந்து தனியா ஹாஸ்பிட்டல் போனேன். ஆனா ஹாஸ்பிட்டல் போனதுல என் கருப்பையில் பயங்கரமா அடிப்பட்டதால என்னால இனி குழந்தை பெத்துக்கவே முடியாது, என் கர்ப்பப்பையை கூட உடனே எடுத்தாகணும்ன்னு சொன்னாங்க. எனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்தது தெரியுமா.? அவங்களே அந்த கருவை அழிச்சிட்டாங்க. ஒரு வாரம் கழிச்சிட்டு வர சொன்னாங்க. நான் எதுக்கும் உதவாதவளா அன்னைக்குதான் மாறி போனேன்.

நான் எதையும் வேணும்ன்னு செய்யல. நீயும் எதையும் வேணும்ன்னு செய்யல. எனக்கு தெரியும் நான் மோசமா நடந்துக்கிட்டேன்னு. பாப்பா என் வயித்துல வளர ஆரம்பிச்ச பிறகுதான் எனக்கு மூளையே ஒழுங்கா வேலை செய்ய ஆரம்பிச்சது. அதுக்கு முன்னாடியெல்லாம் உன்னை பத்தி யோசிச்சாலே கோபம் மட்டும்தான் வரும். உன்னை நினைக்கறதே கஷ்டமா இருந்தது. சாரி வெற்றி. என்னால உன்னை எப்பவுமே வெறுக்க முடியாது. ஆனா என்னால என்னை கன்ட்ரோல் பண்ணவே முடியல. உன்கிட்டயிருந்து விலக ஆசைப்பட்டேன். நீ என்னை விடவே மாட்டன்னு தெரியும்.

ஆனாலும் அவசரமா கல்யாண பொண்ணா மாறினேன். ஆனா நீ அதையும் கெடுத்துட்ட. கவினை காதலிக்க போய் தோத்து போய் திரும்பினேன். எங்கேயாவது ஓடிப் போயிருக்கணும் நான். ஆனா அந்த அறிவு அப்ப தோணாம போயிடுச்சி. உன் மேல அவ்வளவு வெறுப்பு. உன் மேல அவ்வளவு காதல். லூசுதனமா இருக்கு இல்லையா? எனக்கும் அப்படிதான் தோணுச்சி.

உன்கிட்ட நான் என்னன்னு சொல்வேன் வெற்றி? உன்னால உன் கோபத்தால எனக்கு இழப்புன்னு எப்படி சொல்வேன்.? நீதான் தெளிவா சொல்லியிருந்தியே, எனக்கு எதுக்கெடுத்தாலும் கோபம் வரும். நான் உனக்கு செட் ஆக மாட்டேன்னு! நான்தானே உன் பின்னால சுத்தி உன் மனசை மாத்தினேன். உன் கோபத்தை பொறுத்து போவதா, உன் கோபத்தை ஏத்துக்கிறதா உன்கிட்ட சொன்னேனே.. பிறகு எப்படி உன் மேல பழி போட முடியும்.?

ஆனா உன் மேல கோபத்தையும் காட்டாம இருக்க முடியல என்னால. உனக்கு அந்த பாரதி மேல கோபம் வந்தது இல்லன்னு கேட்டு எப்படி அழுதேன் தெரியுமா.? தாங்கவே முடியல வெற்றி. நான் உனக்கு தகுதியானவ இல்லன்னு என்னையே வெறுக்க ஆரம்பிச்சிட்டேன்‌.

எதிர்பார்ப்பு இருக்க கூடாதுன்னு நினைச்சிதான் உன்னை லவ் பண்ண ஆரம்பிச்சேன். உன் கோபம் கண்டு பயம் வந்துடுச்சி. அதை மறைச்சேன் உன்கிட்ட. எனக்கு பயமே இல்லன்னு எனக்கு நானே சொல்லிக்க ஆரம்பிச்சேன். உன் கோபம் உன்னோட இயல்புன்னு நினைச்சது என் தப்புதான். உன் கோபத்துக்கு நான் ஏதாவது சொல்யூஸன் கண்டுபிடிச்சிருக்கணும். என் பயத்தை சாதாரணமா நினைச்சதும் என் தப்புதான். என் பயத்துக்கு நான் மரியாதை தந்திருக்கணும். அதை உன்கிட்ட சொல்லி இருக்கணும். நான் உன் கோபத்தை கண்டு பயப்படுறேன்னு முதல்லயே சொல்லி இருந்தா நீயும் உன்னை மாத்திக்க டிரை பண்ணி இருப்பியோ என்னவோ? எல்லாமே காலம் கடந்துதான் புரிஞ்சது வெற்றி. முட்டாள் நான்.

பயத்தையும், உன் மேலான ஆத்திரத்தையும் தவிர வேற எதுவுமே இல்ல என்கிட்ட. எண்ணங்கள் நார்மலுக்கு வர ஆரம்பிச்ச பிறகு யோசிச்சதுல தப்பு முழுக்க என் மேலன்னு புரிஞ்சது. ஆனா என்ன செய்யட்டும் வெற்றி.? எல்லாமே போயிடுச்சி. என்னை நீ ரேப் பண்ண போது உண்மையை உன்கிட்ட சொல்லணும்ன்னு நினைச்சேன். ஆனா முடியல. என்னவோ ஆயிடுச்சி எனக்கு. கோபம் மட்டுமே பிரதானமாகிடுச்சி. சைக்கோ சைக்கோன்னு உன்னை திட்டுவேன் இல்ல. நான்தான் சைக்கோ வெற்றி. நீ ரொம்ப நார்மல்டா.. நான்தான் சைக்கோ.. மெண்டல்.."

விம்மி அழுதான்.

"இந்த குழந்தையை கலைக்கறதுல எனக்கு கொஞ்சமும் விருப்பம் இல்ல. உன் மேல இருக்கும் கோபத்துலதான் இந்த குழந்தையை சுமந்தேன். பொய் சொல்ல விரும்பல வெற்றி. எதையும் நான் முழு மனசோடு செய்யல. உன்னை அழ வைக்க நினைச்சேன்‌. என்னை நீ எவ்வளவு அழ வச்சியோ அதே அளவு உன்னை அழ வைக்க நினைச்சேன். தப்பு பண்ணிட்டேன் இல்ல.? என் வெற்றி நீ. உன்னை அழ வைக்கறது எனக்கு நானே கொடுத்துக்கற தண்டனை.. ஆனா அதைதான் தேர்ந்தெடுத்தது என் முட்டாள் மூளை. நான் எங்கேயாவது தூரமா இருப்பேன். குழந்தை பிறக்கும். நான் செத்துடுவேன். உனக்கு தகவல் சொல்வாங்க. நீ அந்த குழந்தையை தூக்கிப் போய் பாரதியோடு சேர்த்து நல்லா வளர்த்திடுவ.. நீ செஞ்ச தப்பு உனக்கு தெரியாது. ஆனா என்னை மறக்காம இருப்ப.. பைத்தியக்காரிதான் இந்த மாதிரி முடிவெடுப்பா. நான் பைத்தியக்காரிதானே வெற்றி.?

ஆனா எல்லாமும் மாறிடுச்சி. நமக்கு கல்யாணம் ஆகிடுச்சி. குழந்தை வளரவும் எனக்கு குழப்பம் தெளிஞ்சிடுச்சி.

நான் போன பிறகு அழாத. உன் கோபத்துக்கு ஏதாவது ட்ரீட்மெண்ட் எடுத்துக்க. உன்னை காதலிக்க ஆரம்பிச்ச புதுசுலயே இந்த வார்த்தையை சொல்லி இருக்கணும் நான்‌. ஆனா கடைசியா உன்னை விட்டு பிரியற நேரத்துல சொல்றேன். சாரி.

உன் அம்மா இறந்ததுக்கு பாலாஜி மேல கோபத்தை காட்டின. நான் இறந்ததுக்கு நம்ம குழந்தை மேல கோபத்தை காட்டிடாத.. ப்ளீஸ். ஐ லவ் யூ.. உன்னால மன்னிக்க முடிஞ்சா என்னை மன்னிச்சிடு. இன்னொரு ஜென்மம் இருக்கான்னு தெரியல. அப்படி இருந்து நீ இதே மாதிரி கோபக்காரனா இருந்தா கூட நானே உன்னை ஹாஸ்பிட்டல் கூட்டிப் போய் சரி பண்ணிடுவேன். உன்னோடு கடைசி வரை வாழ்வேன். அப்படி ஒரு ஜென்மம் இருக்கான்னு தெரியல.. பாதியிலேயே விட்டுட்டு போறதுக்கு மன்னிச்சிடு வெற்றி.."

கைபேசியை தரையில் விட்டுவிட்டான். புல்வெளியில் அமர்ந்திருந்தவன் முட்டிக்காலை கட்டியபடி ஓசையின்றி அழுதான்.

இப்படியொரு இக்கட்டான சூழலை தன் வாழ்வில் அவன் சந்தித்ததே இல்லை. வாழ்க்கை மொத்தத்தையும் இழக்கும் தருணம் இது.

"அம்மு.." என்பதை தவிர வேறு வார்த்தை அவன் வாயிலிருந்து வெளிவரவில்லை.

"பிடிக்கலன்னு சொன்னவளை மறுபடி மறுபடி தொல்லை செஞ்சவன் நான்தான். உன் வார்த்தைக்கு மதிப்பு தந்திருந்தா, உன் கோபத்துக்கு மதிப்பு தந்திருந்தா இன்னைக்கு இவ்வளவு பெரிய கஷ்டம் வந்திருக்காது.." தலையில் அடித்துக் கொண்டான். நிறுத்தாமல் கொட்டியது கண்ணீர்.

***

கீர்த்தனாவின் எதிரில் அமர்ந்திருந்தான் பாலாஜி. அவளின் முகத்தை பார்க்கவேயில்லை. இருவரின் கையிலிருந்தும் இரத்தத்தை எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

ஆரவும் இரத்த தானம் செய்தான். விசயம் அறிந்து மருத்துவமனைக்கு வந்த ஆதிராவும் கவினும் ஆளுக்கொரு படுக்கையில் படுத்திருந்தார்கள்.

"முத்துராம் வந்திருவாரு. அவரும் ப்ளட் டொனேட் பண்ணுவாரு.." என்றாள் ஆதிரா.

சக்திக்கு கவினை கண்டு வித்தியாசமாக தோன்றியது.

கவினை பொறுத்தவரை தங்கையின் பிரச்சனை வேறு. அம்ருதாவின் பிரச்சனை வேறு. தங்கை தவறு செய்தவள். ஆனால் அம்ருதா அவனை பொறுத்தவரை அன்பின் தேவதை. அவளுக்கான இரத்தம் தருவது சாதாரணம் அவனுக்கு.

அம்ருதாவை ஆபரேஷன் தியேட்டருக்குள் அழைத்துச் சென்றார்கள்.

மேகலா‌ சுவரோடு சரிந்து அமர்ந்திருந்தாள்.

"பொண்ணு வளர்ந்துட்டா.. நல்ல வேலையில் இருக்கா. கை நிறைய சம்பாதிக்கிறா.. அவளை அவளே கவனிச்சாப்பான்னு நினைச்சது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்.? அவளுக்கு எப்பவும் நான் வேணும். எப்பவும் நான் அவளோட உடம்பை பத்தியும் மனசை பத்தியும் கண்காணிச்சிட்டு இருந்திருக்கணும்.. எல்லாத்தையும் கோட்டை விட்டுட்டேன்.." புலம்பிக் கொண்டிருந்தாள்‌.

தேன்மொழி தான் நின்ற இடத்திலிருந்து அண்ணனை கவனித்துக் கொண்டிருந்தாள். அவன் அழுவதை காண சகிக்காமல் தன் கண்ணீரை துடைத்துக் கொண்டிருந்தாள்.

'என் அண்ணன் தப்பு பண்ணிட்டான் கடவுளே. ஆனா அதுக்காக அவ உயிரை எடுத்துடாத. அவ இல்லன்னா இவனும் செத்துடுவான். தயவுசெஞ்சி இரண்டு பேரையும் காப்பாத்தி கொடுங்க..' கடவுளிடம் கெஞ்சினாள்.

சண்முகாவும் ரேகாவும் திட்டமிட்டு விட்டுதான் ஆபரேஷனை ஆரம்பித்தார்கள்.

***

தேன்மொழியின் கையை பற்றினாள் வளர்மதி.

"என்னம்மா.?"

"நீயும் ப்ளட் டொனேட் பண்றியா.?"

தேன்மொழி உள்ளே ஓடினாள். வளர்மதி பின்தொடர்ந்தாள்.

***
வெற்றியின் போன் மீண்டும் சத்தமிட்டது. எடுத்தான்‌. அவளிடமிருந்துதான் மீண்டும் ஒரு மெயில் வந்திருந்தது.

"என் அம்மா அப்பாவுக்கு சாரி சொல்லி லெட்டர் எழுதி வச்சிருக்கேன்‌. நம்ம ரூம்ல இருக்கு. மறக்காம அதை அவங்ககிட்ட கொடுத்துடு.

ஆத்தங்கரை வீட்டுல இருந்தபோது உன்னை பிடிக்காமலோ, பழைய ஞாபகத்திலோ நான் கண்ணை மூடல வெற்றி. வலியை உன்கிட்ட காட்ட கூடாதுன்னுதான் கண்ணை மூடினேன். உன்னை ரொம்ப பிடிக்கும் எனக்கு. சாரி.." என்று மெயிலை முடித்திருந்தாள்.

எழுந்து நின்றான் வெற்றி. மருத்துவமனையை விட்டு வெளியே கிளம்பினான்.

வாகனங்கள் சீறி பாய்ந்து சென்றுக் கொண்டிருந்தது. கோபத்தில் கையை முறுக்கியவன் எதிரில் இருந்த லாரியை நோக்கி நடந்தான்.

"நீ இல்லாத உலகத்துல நானும் வாழ மாட்டேன் அம்மு. உன்னை பிரியவும் முடியாது. மறக்கவும் முடியாது. உன்னை விட முடியலன்னுதானே உனக்கு அவ்வளவு பிரச்சனை தந்தேன். அந்த எண்ணத்தை கடைசி வரை தொடரணும் இல்லையா.? எந்த மரணமும் நம்மை பிரிக்க முடியாது. என்னோட சைக்கோதனத்துக்கு எந்த மருந்தும் வேணாம். அந்த சைக்கோதனம் இன்னும் பத்தே பத்து நிமிசம் எனக்கு துணை வரட்டும்.. முட்டாள்தனத்துல யார் உயர்ந்தவங்கன்னு போட்டி போடுறது இன்னையோடு முடியட்டும். போதும் அம்மு.. இந்த அடிப்பட்ட மனசோடு வாழும் வாழ்க்கை. உனக்கு துணையா நான் இருப்பேன், இருந்தாலும் இறந்தாலும்.."

லாரி தூரத்தில் வந்துக் கொண்டிருந்தது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..‌
 

Sevanthi Durai

Crazy Writer
Vannangal Writer
Team
Messages
273
Reaction score
287
Points
93
காதல் கணவன் 118

"எனக்கு டென்ஷன் இஷ்யூ இருக்கு அம்மு. இதனால உனக்கு பிரச்சினை வரும்.."

"பரவால்ல வெற்றி.. என்னால உன்னை சமாளிக்க முடியும். எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு. உன்னை விலக்கி விட முடியும்னு தோணல. என்னை நம்பு.."

***

"ரொம்ப ஓவரா பண்ணாதடி. என் உதவியால நிற்கறதை விடவும் படியில் விழுந்து தலையை உடைச்சிக்கிறது உனக்கு அவ்வளவு பிடிச்சிருக்கு.. அவ்வளவு வெறுப்பு என் மேல. காரணம்தான் சரியா தெரியல எனக்கு.."

***

"என்னை மேரேஜ் பண்ணிக்கிறியா? இந்த கல்யாணம் நின்னுடும்.."

"நீ செத்து போனா கூடதான் இந்த மேரேஜ் நிற்கும். அதை செய். இந்த மேரேஜை சாக்கா வச்சி என்னை உன் வலையில் விழ வைக்க பார்க்காத.."

***

"குடிக்காரன், பொறுக்கியை கூட கல்யாணம் பண்ணிக்க சம்மதம்ன்னு சொல்லியிருக்க.."

***

"சைக்கோவை சைக்கோன்னுதானே சொல்வாங்க.. கொலைக்கார சைக்கோ மிருகம்.. என்னை சாகடிக்கணும்ன்னு உனக்கு ஆசையா இருந்தா என் கழுத்தை கூட அறுத்துப் போடு. ஆனா இப்படி செய்யாதே.. ப்ளீஸ்.."

***

"உன்னை நான் கல்யாணம் பண்ணிக்கணுமா.? நீ என்ன மெண்டல் மண்ணாங்கட்டியா.? உன்னை கல்யாணம் பண்ண பிடிக்கலன்னுதானே நான் அத்தனை முறை அப்ப சொன்னேன்.? இப்ப மறுபடியும் அதையே கேட்கற.. உனக்கு சத்தியமா சலிக்கலையா.? நீ ஒரு சைக்கோ மிருகம்.. அறிவு இருக்கும் எவளும் உன்னை கட்டிக்க மாட்டா. அன்னைக்கு சொன்ன அதேதான் இன்னைக்கும் வெற்றி. நீ என்ன வழிமுறையில் வந்தாலும் என் பதில் அதேதான். என்கிட்ட அவ்வளவு கொடூரமா நடந்துட்ட பிறகும் இதே கேள்வியை என்கிட்ட வந்து கேட்க எப்படிதான் மனசு வருது உனக்கு.?"

***

வெற்றியின் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்த வார்த்தைகள் அவனை பைத்தியமாக மாற்ற முயற்சித்துக் கொண்டிருந்தன.

இரவை பொருட்படுத்தாமல் லாரியை நோக்கி நடந்தவனின் கன்னங்களில் இருந்த கண்ணீர் சுற்றியிருந்தவர்களை விசித்திரமாக பார்க்க வைத்தது. இளைஞன் ஒருவன் சந்தேகத்தோடு அவனைப் பார்த்தான். அவன் செய்ய இருக்கும் செயலை யூகித்து விட்டான் அவன்.

"ஏய்.." ஓடினான் அவன் பின்னால். லாரி அவனை தொடும் முன் இவன் பிடித்து இழுத்தான். இருவரும் சாலையோரத்தில் விழுந்தனர்.

"என்னாச்சி ப்ரோ.. என்னவா இருந்தாலும் சரியாகிடும்ன்னு நம்புங்க.. எழுங்க.." கை தந்து எழுப்பி விட்டான் அவனே. சுற்றி இருந்தவர்கள் அவர்களை கண்டுவிட்டு தங்களுக்குள் பேசிக் கொள்ள ஆரம்பித்தனர்.

"இப்படி வாங்க.." கைப்பிடித்து அருகே இருந்த கடைக்கு அழைத்து சென்றான். தண்ணீரை வாங்கி இவனிடம் நீட்டினான்.

தண்ணீரை வாங்காமல் பார்த்தான் வெற்றி.

"தண்ணீருக்கு ஒரு ஸ்பெஷல் சக்தி இருக்கு ப்ரோ. எவ்வளவு கலங்கிய மனசா இருந்தாலும் தண்ணீர் குடிச்ச பிறகு யோசிச்சா ஒரு பர்சன்டாவது தெளிஞ்சிருக்கும். எவ்வளவு டிப்ரஷனா இருந்தாலும் தண்ணீர்ல குளிச்சிட்டு வந்தா கொஞ்சமாவது அதுவும் குறைஞ்சிடும்.. டிரை பண்ணி பாருங்க.." என்றான்.

வெற்றி சந்தேகத்தோடு தண்ணீரை பருகினான். முகத்தை கழுவினான். அழுகை வந்தது.

ஹாஸ்பிட்டலை பார்த்தான் அந்த இளைஞன். "வேண்டப்பட்டவங்க இறந்துட்டாங்களா ப்ரோ.?" பரிவோடு கேட்டான்.

இல்லையென தலையசைத்தான் இவன்.

"கிரிட்டிக்கல் கன்டிஷன். பிழைக்கறது கஷ்டம்ன்னு சொல்லிட்டாங்க. என்னாலதான் அவ சாக போறா.. நான்தான் அவ நிலைக்கு காரணம்.." என்றான் தரை பார்த்து.

"அண்ணா இரண்டு டீ.." தேனீர் கடைக்காரரிடம் சொன்னான்.

"டீயும் கவலையை குறைக்கும் ப்ரோ." என்றவன் தனது கர்ச்சீப்பை எடுத்து நீட்டினான்.

"முகத்தை துடைச்சிக்கங்க.."

"தேங்க்ஸ்.."

தேனீர் குவளைகளை வாங்கி அவனிடம் தந்தான் அவன்.

"கடைசி நொடியிலும் அதிசயம் நடக்கும் ப்ரோ. நீங்க செய்ய இருந்த தற்கொலை முயற்சி ஜெயிச்சி, அவங்க இறக்காம இருந்துட்டா அப்புறம் என்னாகும்ன்னு நினைச்சிங்களா.?"

அவனின் கண்ணீர் தேனீர் குவளையில் விழுந்தது.

"என் லவ்வர். என் வொய்ப். கவனிக்காம கோபத்துல அவளை அடிச்சிட்டேன். அவளை தள்ளி விட்டுட்டேன். வயித்துல அடிப்பட்டுட்டுச்சி. சாக கிடக்கறா.." என்றான்.

அவனின் தோளை பற்றினான் அந்த இளைஞன்.

"தெரியாம நடக்கற விசயத்துக்கு யார் என்ன செய்ய முடியும்.? ஆனா.." என்று இழுத்தவன் பெருமூச்சு விட்டான்.

"கோபம் இரண்டு விதம் ப்ரோ. கோபத்துல போனை தூக்கி செவுத்துல அடிக்கறவங்களும் இருக்காங்க. அதே கோபத்துல போனை தூக்கி கட்டில்ல எறியறவங்களும் இருக்காங்க. கட்டில்ல போனை வீசுறவன் கோபத்திலும் நிதானமா இருப்பான். செவுத்துல வீசுறவன் நிதானத்துல கூட கோபமாதான் இருப்பான். நாமதான் ப்ரோ நம்ம கோபத்தை கட்டுப் படுத்தணும். ஒரு குழந்தையை கையில் தூக்கி வச்சிருக்கும்போது கவனமாதான் நடப்போம். ஓட மாட்டோம். அது போலதான் இருக்கணும் நம்ம கோபமும்.."

வெற்றியின் கண்ணீர் மீண்டும் தேனீரில் விழுந்தது. அதே நேரத்தில் அவனின் தலை மீது ஒரு துளி மழை நீர் வந்து விழுந்தது.

அவனின் கைப்பிடித்து அருகே இருந்த கூரையின் கீழே நிற்க வைத்தான் அந்த இளைஞன். ஆலங்கட்டியாக பெய்ய ஆரம்பித்தது மழை.

"வாழ்க்கை இந்த வானம் மாதிரி ப்ரோ. எப்பவும் ஓடிட்டே இருக்கும். காட்சிகள் மாறிக்கிட்டே இருக்கும். நீங்க நம்பிக்கை வைங்க.." என்றான்.

வெற்றி பதிலே சொல்லாமல் தரை பார்த்து நின்றிருந்தான்.

அந்த இளைஞனின் போன் ஒலித்தது. எடுத்து பேசினான்.

"இங்கேதான் இருக்கேன். ஹாஸ்பிட்டல் முன்னாடி.." என்றான்.

சில நொடிகளுக்கு பிறகு அவனை தேடி வந்தாள் சுடிதார் பெண்ணொருத்தி.

"எவ்வளவு நேரம் வெயிட் பண்றேன் தெரியுமா.?" என்றான் கை கடிகாரத்தை காட்டி.

வெற்றி நிமிர்ந்துப் பார்த்தான். சினேகா வெற்றியை கண்டுவிட்டு புருவம் சுருக்கினாள்.

"வெற்றி.." என்றாள்.

அவனின் முகத்தில் குழப்ப முடிச்சுகள் தோன்றியது.

"நான் சினேகா.."

நொந்துப் போகாத குறை அவனுக்கு.

"உங்ககிட்ட ரொம்ப நாளா பேசணும்ன்னு இருந்தேன். ஆனா முடியல. என் பிரெண்ட் அபிராஜை இந்த ஹாஸ்பிட்டல்லதான் அட்மிட் பண்ணியிருக்கேன். மூனு மாசமா நெஞ்சு வலி.. அடிக்கடி உடம்பு சரியில்லாம போகவும் என்னால தனியா சரி பண்ண முடியல.." என்றவள் "சாரி.. நான் ஏதோ புலம்பிட்டு இருக்கேன்.. உங்ககிட்ட அம்ருதாவுக்கு ஹெல்த் இஷ்யூ இருக்கு. நீங்க கண்டுபிடிச்சிருப்பிங்கன்னுதான் நினைக்கிறேன்.." என்றவளிடம் இல்லையென தலையசைத்தான்.

"இல்ல சிஸ்டர். எல்லாமும் போயிடுச்சி. சாக கிடக்கிறா என் பொண்டாட்டி. ஒரு வார்த்தை நீங்க என்கிட்டயோ அவ வீட்டுலயோ சொல்லி இருக்கலாம்.." என்றான். வேறு ஒரு நேரமாக இருந்திருந்தால் அவளின் கழுத்தை பிடித்திருப்பான்.

அதிர்ந்தாள் சினேகா.

"நீங்க நிஜமாவே கண்டுபிடிக்கலையா.?"

"நடிக்கறவளை கண்டு பிடிச்சிருக்கலாம். ஆனா மறைக்கிறவகிட்ட இருந்து எப்படி கண்டு பிடிக்க முடியும். அவ ஒவ்வொரு செகண்டையும் திட்டம் போட்டு ஏமாத்தினாளே.!" என்றவன் "ஆனாலும் நீங்க அவளோட வீட்டுலயாவது சொல்லி இருக்கலாம்.." என்றான் வருத்தமாக.

"அம்ருதா சொல்லிடுவாங்கன்னு நினைச்சேன். அதுவும் இல்லாம அன்னைக்கு உங்ககிட்ட உண்மையை சொல்ற நிலையில் நாங்க இல்ல. அபிராஜ். என் பிரெண்ட். அவனுக்கு எவ்வளவு பிரச்சனை தெரியுமா உங்களால.? சூஸைட் அட்டெம்ட் வரை போயிட்டான். அந்த டைம்ல எனக்கு உங்களை பழி வாங்க தோணுச்சே தவிர வேற எதுவும் தோணல. சாரி ப்ரோ. ஆனா அதே போல் அவங்களும் சொல்லவே இல்ல. அவங்க பிரகனென்டுன்னு கேள்விப்பட்ட பிறகு கருவை கலைச்சிட சொல்லி கெஞ்சினேன். ஆனா அவங்க கேட்கவே இல்ல.. பக்கத்துல இருக்கிங்க நீங்க. கண்டிப்பா கண்டுபிடிப்பிங்கன்னு நினைச்சேன்."

வெற்றி என்ன சொல்வான்.?

ஏதோ ஒரு காரணம். ஏதோ ஒரு பழி வாங்கல். ஏதோ ஒரு கோபம். தனது கோபத்தின் பிரதி பிம்பம் மிகவும் மோசமாக உள்ளதை உணர்ந்தான் அவன்.

அருகில் இருந்தவன் விசயத்தை கேட்டான். விளக்கி சொன்னாள் சினேகா.

அவளை கோபத்தோடு பார்த்தான் அவன்.

"இவ்வளவு மோசமா காரணம் சொல்ற.. நீ இவருக்காக ஏன் பார்க்கணும்.? அந்த பொண்ணும் உன்னை போல ஒரு பொண்ணுதானே.? உன்னோட அலட்சியத்தாலதான் இவ்வளவு மோசமான நிலை வந்திருக்கு. நீ அன்னைக்கு அவங்களோட தங்கச்சின்னு போய் அறிமுகம் ஆகாம இருந்திருந்தா டாக்டர் அவங்களோட குடும்ப மெம்பர்ஸை வர வச்சிருப்பாங்க. அவங்க இன்னைக்கு உயிரோடு இருந்திருப்பாங்க.." என்றான் வேதனையோடு.

மழையை பார்த்தாள் சினேகா.

"நான் தப்பு பண்ணிட்டேன்னு தெரியும்‌ விஷால். ஆனா எனக்கு இப்ப கூட அபிராஜோட ஹெல்த் பத்திதான் கவலையே தவிர அம்ருதாவை பத்தி இல்ல. அந்த அளவுக்கு என் புத்தி குழம்பி போயிருக்கு. நான் அவளை காப்பாத்த நினைச்சதாலதான் அன்னைக்கு அவளோட கரு கலைக்க சைன் பண்ணிட்டு வந்தேன்‌. அவ பிடிக்கலன்னு சொல்லியும் பின்னாடியே சுத்தி டார்ச்சர் பண்ணது இவர்தானே தவிர நான் இல்ல.. சுயநலவாதியா இருக்கிறது தப்புதான். ஆனா என் நண்பனை சாக கொடுக்க இருந்தேன் நான். அதனால என்னால பொது நலமா இருக்க முடியாது. சாரி.." என்றவள் மழையில் இறங்கி நடந்தாள்.

விஷால் அவளின் முதுகை வெறித்தான்.‌ அவளை நோக்கி நடக்க இருந்தான். அவனின் கையை பிடித்து நிறுத்தினான் வெற்றி.

"இல்ல பரவால்ல விடுங்க. அன்னைக்கு இவங்க கையெழுத்து போடலன்னா என் அம்மு அப்பவே இறந்திருக்க வாய்ப்பு இருக்கு. ஏதோ ஒரு நல்ல நேரம். இவங்க வந்து காப்பாத்தியிருக்காங்க.." என்றான்.

போன் ஒலித்தது. எடுத்துப் பார்த்தான்.

"அண்ணா.." எதிரே தேன்மொழி அழைத்தாள். "எங்கோ போன நீ.?" பயத்தோடு கேட்டாள்.

தங்கை தன் மீதுள்ள பாசத்தில் பயப்படுகிறாள் என்று புரிந்துக் கொண்டான்.

"நான் ஹாஸ்பிட்டலுக்கு வெளியே இருக்கேன்.."

கேட்டின் வாசலில் வந்து நின்றாள் தேன்மொழி. "எங்கே.?" என்றவளிடம் இடத்தை சொன்னான். மழையை பொருட்படுத்தாமல் ஓடி வந்தாள்.

"இவர் சூஸைட் அட்டெம்ட் டிரை பண்ணிட்டு இருந்தாரு. கொஞ்ச நேரத்துக்கு இவர் கூடவே இருங்க.." என்றுவிட்டு மருத்துவமனை நோக்கி நடந்தான் விஷால். இதே போல அம்முவையும் அன்று தன் கையில் ஒப்படைத்த பிறகு சினேகா போயிருந்தால் எவ்வளவு நலமாக இருந்திருக்கும் என்று நினைத்தான்.

தேன்மொழி அவனின் கையை இறுக்கி பிடித்தாள்.

"ஏன் அண்ணா இப்படி.? கொஞ்ச நேரம்தானே உன்னை விட்டுட்டு போயிருந்தேன்.." என்றவளின் முகம் பார்த்தவன் "ஏதாவது சொன்னாங்களா.?" என்று விசாரித்தான் பயத்தோடு. பதிலை கேட்பதில் அவ்வளவு பயம்.

"ஆபரேஷன் ரூம்ல இருக்கா.."

"ஸ்கூட்டி எடுத்துட்டு வரியா.?" ஓடிப் போய் ஸ்கூட்டியை எடுத்து வந்தாள்.

"சுடுகாட்டுக்கு போ.." என்று அவளின் பின்னால் ஏறி அமர்ந்தான்.

இருவரும் அவனின் தாயாருடைய கல்லறைக்கு வந்தனர். காலடியில் அமர்ந்தவன் கல்லறையின் மீது தலை சாய்ந்தான். செல்போன் மூலம் லைட்டை போட்டுக் கொண்டிருந்தாள் தேன்மொழி.

"ஏன்ம்மா இப்படி.? நான் ஏன் இப்படி இருக்கேன்.? என் கோபத்தை பாலாகிட்டயும் அம்முக்கிட்டயும் மட்டும் காட்டினேன்.? நீ இருக்கும் வரை எனக்கு எந்த கோபமும் வராதுதானே.? இப்ப மட்டும் ஏன்.?" எனக் கேட்டான் கண்ணீரோடு.

தனது கையை வெறித்தான். பலத்தை எப்போதும் கையில் காட்டுவது மிகவும் மோசமான பழக்கம் என்று இன்றேதான் புரிந்தது. அவன் மெதுவாக தள்ளி விட்டிருந்தால் இப்படி ஆகியிருக்காதே. எப்போதும் கோபம். பாலாவிற்கு விழும் ஒற்றை உதையில் பல நாட்கள் மண்டியிட்டு கீழே விழுந்துள்ளான் அவன். அதே பலத்தை இவளிடமும் காட்டியதால் வந்த வினை அது.

கையில் கிடைப்பதையெல்லாம் வைத்து பாலாவின் நெஞ்சுக்கு நேரே வீசி காயம் செய்துள்ளான். இவளுக்கு அடிப்பட்டது போல அவனுக்கும் இதயத்தில் அடிப்பட்டிருந்தால் என்னவாகியிருக்கும் என்று யோசிக்கும்போதே பயமாக இருந்தது.

தேன்மொழி சுற்றிலும் பார்த்தாள். பயத்தில் எச்சிலை விழுங்கினாள்.

போன் ஒலித்தது. சக்தி அழைத்திருந்தான். போனை காதில் வைத்தாள்.

"ஆபரேஷன் முடிஞ்சது. பையன் பிறந்திருக்கான்.." என்றான் அவன்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 

Sevanthi Durai

Crazy Writer
Vannangal Writer
Team
Messages
273
Reaction score
287
Points
93
காதல் கணவன் 119

மழையில் நனைந்தபடி அமர்ந்திருந்த தன் அண்ணனை பார்த்தாள் தேன்மொழி.

"அண்ணி.?" தயக்கமாக கேட்டாள்.

"ஆபரேஷன் நடந்துட்டு இருக்கு தேனு. ஆபரேஷன் நடந்து முடிஞ்சாலும் அவங்க ஹெல்த் பத்தி தெளிவா சொல்ல இருபத்தி நாலு மணி நேரம் ஆகும்ன்னு சொல்லி இருக்காங்க.." என்ற சக்தி "எங்கே இருங்கிங்க.?" என்று விசாரித்தான்.

"சுடுகாட்டுல. பெரியம்மா கல்லறையில் இருக்கோம்.."

"போன் பேசிட்டு இருக்க.?"

"துப்பட்டாவுல கவர் பண்ணிதான் பேசுறேன்.."

"அறிவு கெட்ட எருமை.. ஏற்கனவே உங்க நொண்ணன் பண்ண வேலையாலதான் இப்ப எல்லாரும் உயிரை கையில பிடிச்சிட்டு இருக்கோம். இதுல மழையில நனைச்சிட்டு போன் பேசுறியே உனக்கு அறிவு இருக்கா.? இடி தாக்கி உன்னையும் அங்கேயே புதைச்சிட ஏதும் போறாங்க. போனை கட் பண்ணி தொலை.." என்று கத்திவிட்டு இணைப்பை துண்டித்தான்.

தான் வெற்றி அண்ணனுக்கு ஆதரவாக பேசுவதால் உண்டான அந்த கோபத்திலும் இந்த மழை நேர கோபத்திலும் கத்துகிறான் என்பதை புரிந்துக் கொண்டவள் போனை அணைத்தாள்.

"அண்ணா.."

திரும்பிப் பார்த்தான். போனில் இவள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு என்னவென்று கேட்க பயமாக இருந்தது.

"பையன் பிறந்திருக்கான் அண்ணா.." மகிழ்ச்சியோடு சொன்னாள்.

"அவ.?" உயிரை கையில் பிடித்துக் கொண்டு கேட்டான். 'கெட்ட சேதி எதுவும் வந்துட கூடாது ஆண்டவா..' வேண்டிக் கொண்டான்.

"ஆபரேஷன் நடந்துட்டு இருக்காம் அண்ணா.." என்றவள் அவனின் அருகே வந்து எழுப்பினாள்.

"ஹாஸ்பிட்டல் போலாம். எழுந்து வா.." அழைத்தாள்.

'அம்மா என்னை காப்பாத்தி கொடும்மா..' கெஞ்சியபடி எழுந்து நின்றான்.

இருவரும் ஸ்கூட்டியின் அருகே வந்தனர்.

"வீட்டுக்கு போகலாமா அண்ணா.? டிரெஸ் மாத்திட்டு போகலாம்.." என்றவள் வீட்டிற்கு கிளம்பினாள்.

வீடு அமைதியாக இருந்தது. சமையல்காரரையும் வேலைக்காரர் ஒருவரையும் தவிர வேறு யாருமே இல்லை.

வெற்றி தனது அறைக்குள் நுழைந்தான். தலையோடு குளித்து உடை மாற்றினான்.

அறைக்குள் நுழைந்தான். அம்ருதா சொன்ன இடத்தில் கடிதத்தை தேடி எடுத்தான்.

மனம் ஏனோ பயங்கர அமைதியாக இருந்தது. குளித்ததன் விளைவோ என்று சந்தேகப்பட்டான்.

"அம்மா என்னை மன்னிச்சிடு.. உன்கிட்ட நான் முதல்லயே எல்லாத்தையும் சொல்லி இருக்கணும். ஆனா பயமா இருந்தது. நான் கர்ப்பம்ன்னு சொன்னா திட்டுவியோ அடிப்பியோன்னு பயம். அப்பாவும் கண்டிப்பா அடிச்சிருப்பாரு. அதனாலதான் ஹாஸ்பிட்டல்ல கூட உனக்கு நான் போன் பண்ண முடியல. என்னால குழந்தை பெத்துக்க முடியாதுன்னு சொல்லி என் கருவை கலைச்சிட்டாங்க. அவ்வளவு நேரமும் உனக்கு பயந்துட்டு இருந்த மனசு அப்புறமா மாறி போயிடுச்சிம்மா. எல்லாத்து மேலேயும் ஒரு வெறுப்பு. வாழ்க்கை மேலயே வெறுப்பு. அதனாலதான் அப்புறம் உங்களுக்கு உண்மை தெரிஞ்சபோது கூட நான் எதுவும் பேசல.

உன்கிட்ட எல்லாத்தையும் சொல்லணும்ன்னு தோணும். ஆனா பயமும் தயக்கமும் அதிகமா இருக்கும். நான் என்னம்மா செய்யட்டும்.? எனக்கு அவ்வளவு பயம். அவ்வளவு வெறுப்பு. என்னை எனக்கே பிடிக்கலம்மா. எதுவும் பிடிக்கல. வெற்றியை உங்களுக்கு அறிமுகப்படுத்தவே பயம். எங்கே திட்டுவிங்களோ இந்த காதல் நம்ம வீட்டுக்கு வேணாம்ன்னு சொல்லி என்னை வேற யாருக்காவது கட்டி வச்சிடுவிங்களோன்னு பயம். அதனாலதான் அவனை அவ்வளவு லவ் பண்ணியும் உங்ககிட்ட அறிமுகப்படுத்தவே இல்லை. சாரிம்மா. நான் உனக்கு நல்ல மகளா இல்ல. அவனுக்கு நல்ல காதலியா இல்ல. நான் நல்ல அம்மாவா இல்ல. நல்ல மனுசியாவும் இல்ல. இந்த வாழ்க்கை நரகம் போல தோணுதும்மா.

நான் இறந்து போன பிறகு எல்லோரும் என்னை வெறுப்பிங்க.. என்னை பொய்காரின்னு சொல்விங்க. ஹாஸ்பிட்டல்ல இருந்த இன்னொரு டாக்டர் எனக்கு மனநிலை சரியில்ல. என்னை ‌ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணணும்ன்னு சொன்னாங்கம்மா. என்னால நம்பவே முடியல. நான் கம்ப்ளீட்லி ஆல்ரைட்.. நான் உன் பொண்ணு. எனக்கு ஒன்னும் இல்லதானம்மா.? பயமா இருக்கும்மா. நைட்ல தூங்கும்போது கூட பயமா இருக்கும். வெளியே போக பயமா இருக்கும். திடீர்ன்னு ஏதாவது செஞ்சிடுவேனோன்னு பயம். அப்புறம் அதை பார்த்து யாராவது என்னை மெண்டல் ஹாஸ்பிட்டலுக்கு அனுப்பி வச்சிடுவாங்களோன்னு பயம்.."

காகிதத்தை பிடித்திருந்த கரம் இறுகியது. பேப்பரின் மீது கண்ணீர் துளிகள் ஓசையின்றி விழுந்தது.

"நான் மெண்டல் இல்ல மெண்டல் இல்லன்னு எனக்கு நானே பலமுறை சொல்லிப்பேன். தினமும் தியானம் செய்வேன். வன்முறையான படங்கள் கூட பார்க்க மாட்டேன். எங்கேயாவது சண்டை நடந்தா அங்கிருந்து விலகி வந்துடுவேன். பார்த்து பார்த்து சாப்பிடுவேன்ம்மா. ஆனா அவனை பார்க்கும்போது என்னையும் மீறி கத்துவேன். உள்ளே நடுங்கும். இதயம் வலிக்கும். நான் பைத்தியம் இல்லன்னு உள்ளுக்குள்ள சொல்லிப்பேன். ஆனாலும் கத்துவேன். அவன்கிட்ட நான் கத்தும்போது என்னை பார்த்தே எனக்கு பயமா இருக்கும்மா. அங்கே வேற யாருமே தெரிய மாட்டாங்க. வேறு எதுவுமே ஞாபகத்துக்கு வராது. அவனை திட்டணும். அவனை விரட்டியடிக்கணும்ன்னு மட்டும்தான் தோணும். என் மைன்டை என்னால கன்ட்ரோல் பண்ண முடியலம்மா. அப்படின்னா நான் பைத்தியமா அம்மா? இல்லதானேம்மா.? எனக்கு சொல்ல பயமா இருந்ததும்மா. எனக்கு பைத்தியம்ன்னு தெரிஞ்சா உங்களுக்கு கஷ்டமா இருக்கும் இல்லையா.? எல்லாத்தையும் நினைச்சி நினைச்சி ரொம்ப பயம்மா.."

கடிதத்தோடு மேஜையின் மீது சாய்ந்து அமர்ந்தான். ஒற்றை கையால் கண்ணீரை துடைத்தான். ஆனால் கண்ணீர் இஷ்டத்துக்கு வழிந்துக் கொண்டிருந்தது.

"நீ பைத்தியம் இல்ல அம்மு. நான் பைத்தியம். நீ இல்லடி அம்மு.." என்று சிறு குரலில் கதறினான். அவனின் கதறல் அவனது அறையை தாண்டி வெளியே செல்லவில்லை.

"உள்ளுக்குள்ள எவ்வளவு வேதனைப்பட்ட அம்மு.? உன்னை பத்தி எல்லாமும் தெரிஞ்சிக்கிட்டதா கர்வப்பட்டுட்டு இருந்தேனே.. கடைசியில இப்படி ஏமாந்துட்டேனே.." அழுதான்.

"நான்தான்டி முட்டாள். உயிரா லவ் பண்ணவ விலகி போன காரணம் கண்டுபிடிக்கல. என் கோபத்துக்கு நீ பயப்படுறன்னு தெரிஞ்சிக்கல. பொசசிவ்னெஸ்ஸை தவிர வேற எதுவும் என்கிட்ட இல்ல அம்மு.. வேஸ்ட் நான்.. என் அம்மாவை கொன்னேன். இப்ப உன்னை.. பிழைச்சி வந்துடுடி. நான் செஞ்ச எல்லா முட்டாள்தனத்துக்கும் உன்கிட்ட சாரி கேட்கவாவது உயிரோடு வா. வாழ வேண்டிய வாழ்க்கை நிறைய இருக்கு அம்மு. விட்டுட்டு போயிடாதே. என்னை நடைப்பிணமா மாத்திடாத.."

முகத்தை மூடிக் கொண்டு அழுதான்.

கடிதத்தின் மீதியை படித்தான்.

"அப்பாகிட்ட சாரி சொன்னேன்னு சொல்லிடும்மா. பொண்ணு பார்க்க வந்தவங்க முன்னால் ரொம்ப அவமானம் என்னால. அவரோட வளர்ப்பு தப்பா போயிடுச்சின்னு தெரிஞ்சதும் கண்டிப்பா வருத்தப்பட்டிருப்பாரு. நான் தப்பு பண்ணணும்ன்னு நினைக்கல. ஆனா வெற்றியை பார்த்தா என் பீலிங்ஸை என்னால கட்டுபடுத்தவே முடியாது. அவனை பார்த்தாலே இதயம் முழுசா உருகிடும்.. பர்த் கன்ட்ரோல்லதான் இருப்பேன் எப்பவும். ஆனா ஏனோ அந்த நேரத்துல ஏமாந்துட்டேன். அதனாலதான் பிரகனென்ட் ஆகிட்டேன். இதை பத்தி அப்பாகிட்ட சொல்லிடாத. திட்டுவாரு.‌ முதல்லயே அவனை பத்தி சொல்லி இருந்தா இரண்டு பேருக்கும் முதல்லயே கல்யாணம் நடந்திருந்து, தாலியோடு இருக்கும் பொண்ணுக்கிட்ட அந்த பிராங் பார்டி பூ கொடுக்க வராம இருந்திருந்து எல்லாமும் நல்லா நடந்திருந்தா ஆகியிருக்கும். எல்லாமும் போச்சி. லவ் பண்ற அளவுக்கு இருந்த தைரியம் அதை வீட்டுல சொல்லும் அளவுக்கு இல்லாம போயிடுச்சி. அவனை உயிரா காதலிச்ச எனக்கு அவனை பார்த்து வர பயத்தை பத்தி சொல்ல முடியாம போயிடுச்சி. வாழ்க்கையை மொத்தமா ஹாஸ்பிட்டல்ல இழந்துட்டு வெளியே வந்தபோது தற்கொலை செஞ்சிக்கற அளவுக்கு தைரியம் இல்லாம போயிடுச்சி.."

அதற்கு மேல் படிக்க முடியாமல் கடிதத்தை மடித்தான். கைகள் இரண்டும் ஈரமாக இருந்தது கண்ணீர் துடைத்து.

"அண்ணா போகலாமா.?" தேன்மொழி கதவை தட்டினாள்.

எழுந்து போனான். முகத்தை நன்றாக துடைத்துக் கொண்டு கதவை திறந்தான்.

அவனின் அழுத முகம் கண்டவள் வாயே திறக்கவில்லை. இருவரும் வெளியே நடந்தனர். மழை பொழிந்துக் கொண்டே இருந்தது‌.

தன் அப்பாவின் காரை எடுத்தாள் தேன்மொழி.

வாகனம் மருத்துவமனை நோக்கி விரைந்தது.

"ஆரவ்வை நீ லவ் பண்றது எப்படி வீட்டுக்கு தெரியும் தேனு.?" சாலையை பார்த்தபடி கேட்டான்.

'இதுக்கு மேல எங்கே லவ்.? கேவலமா திட்டி பிரேக்அப் பண்ண போறான்.!' என்று நினைத்தவள் "அம்மாகிட்ட வந்து பேசினான் அண்ணா. பேசி பேசி மயக்கிட்டான். அம்மாவுக்கு பிடிச்சி போச்சி.." என்றாள்.

"நீ சொல்லி இருக்கலாமே வீட்டுல.." என்றவனை அதிர்ச்சியோடு பார்த்தவள் "ஐயோ நானா.? கனி தைரியம் எனக்கு இல்ல சாமி.." என்றாள் சிரித்தபடி.

வெற்றி ஜன்னலில் தலையை சாய்த்தான். இரண்டு வீட்டிற்கும் காதலை சொல்லவே இல்லை. அவள் சொல்ல விடவே இல்லை. எப்போதும் வேண்டுமானாலும் விட்டுவிட்டு செல்வாள் என்பதற்காக இப்படி செய்தால் என்று காரணம் தேடியவன் அதற்கு இப்படியும் பயம் ஒரு காரணமாக இருக்கும் என்று யோசிக்காமலயே போய் விட்டான்.

'அவ்வளவு பயமா அம்மு.?' கசந்தது இதயம். 'நானே உனக்கு எமன்.?' மூச்சு விடவும் சிரமமாக இருந்தது.

மருத்துவமனைக்குள் நுழைந்தனர் இருவரும்.

"பையன் பிறந்திருக்கான் வெற்றி.." என்று அருகில் வந்து அவனின் தலையை கோதினாள் பாட்டி.

'எப்படி இவங்களால மட்டும் எப்பவும் என்னை நேசிக்க முடியுது.?' குழப்பத்தோடு யோசித்தான்.

குழந்தையை கையில் வைத்தபடி அமர்ந்திருந்தாள் கனிமொழி. மேகலா ஆபரேஷன் தியேட்டரின் முன்னால் நின்றிருந்தாள். அவளால் வேறு எதையும் நினைக்க முடியவில்லை. புது உயிரை பற்றி யோசிக்க முடியவில்லை.

அண்ணனின் கையை பற்றி தன் தங்கையிடம் அழைத்துப் போனாள் தேன்மொழி. ஆரவ் வெற்றியை ஆத்திரத்தோடு முறைத்துக் கொண்டிருந்தான்.

அண்ணனை இருக்கையில் அமர வைத்தவள் தங்கையின் கையிலிருந்த குழந்தையை வாங்கி அண்ணனின் கையில் தந்தாள். முடியவில்லை என்று தலையசைத்தவன் கையை பின்னால் இழுத்துக் கொண்டான். முகத்தை பொத்திக் கொண்டு விம்மி அழுதான்.

'இப்படி ஒரு குழந்தையை பெற்று தராமல் அந்த கருவை அழித்தால் என்பதற்காகதானே இவ்வளவு பாடு படுத்தினேன் அவளை.?'

அவனின் முகத்தை பற்றி தன் தோளில் சாய்த்துக் கொண்டாள் கனிமொழி. தேன்மொழி குழந்தையை கையில் வைத்தபடி அண்ணனை பரிவோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.

"நம்பிக்கையா இரு அண்ணா.. பாலா அண்ணனுக்கு தந்த தண்டனையை இந்த குழந்தைக்கு தராத.." என்றாள் தேன்மொழி.

ஒரு நிமிடங்களுக்கு மேலாக அழுது விட்டு நிமிர்ந்தான். முகத்தை துடைத்துக் கொண்டு கையை நீட்டினான்.

யாரின் வெறுப்பு பற்றியும் கவலை இல்லை அவனுக்கு.

அவனின் சாயல் அதிகம் இருந்தது குழந்தையிடம்.

"தங்கம்.. செல்லம்.." அழைத்தான். அழுகையை கட்டுப்படுத்த முயன்றவனால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் போய் விட்டது. குழந்தையை சுற்றி இருந்த டவலின் மீது கண்ணீர் விழுந்தது.

கண்களை மூடி உறங்கிக் கொண்டிருந்தான் குழந்தை. வளர்மதியும் அர்ச்சனாவும் எங்கிருந்தோ வந்தார்கள்.

"ஆரோக்கியமா பிறந்திருக்கான். ஆனாலும் ஒரு மணி நேரம் ஐ.சி.யூவில் வச்சிருந்து தந்தாங்க. பசிக்கும் இல்லையா‌.? அதான் பால் பவுடர் வாங்கி பசிக்கு பால் தயார் பண்ணிட்டு வந்தோம்.." என்று பால்புட்டியை காட்டினாள் வளர்மதி.

பால்புட்டியை கண்டும் அழுகைதான் வந்தது அவனுக்கு. தாங்க முடியாத அளவுக்கு துக்கம் பீடித்தால் என்ன செய்ய முடியும் என்று தன்னையே கேட்டுக் கொண்டான். இதையேதான் அவள் இத்தனை நாட்களாக அனுபவித்தால் என்று நினைத்துபோது இந்த வாழ்க்கையையே பிடிக்காமல் போனது.

குழந்தையின் சின்ன கன்னத்தில் நெற்றியை மோதினான். "அப்பு.. அப்பாவை மன்னிச்சிடு. உனக்கான உணவு உனக்கு கிடைக்காம போக நான்தான் காரணம்.‌" என்று சிறு குரலில் கெஞ்சினான்.

ஆபரேஷன் தியேட்டரின் கதவு திறக்கப்பட்டது.

அனைவரும் மருத்துவர்களிடம் சென்றார்கள்.

"தேனு.. எனக்கு கை நடுங்குது. தம்பியை தூக்கிக்கிறியா.?" சிறு குரலில் கெஞ்சிக் கேட்டான் வெற்றி.

அருகில் இருந்த கனிமொழி அவனின் கையிலிருந்த குழந்தையை வாங்கிக் கொண்டாள். அவனின் கரங்கள் அதிகமாக நடுங்கிக் கொண்டிருந்தது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே.. நெகடிவ் கிளைமேக்ஸ் இல்லப்பா. அதனால நம்பி படிங்க. எல்லாத்தையும் ஒரு எபியில் சொல்ல முடியாது இல்லையா.?
 
Top Bottom