Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


ஒன்றரை நிமிடத்தில் ஐந்து கொலைகள்!

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம்11



காலையில் நயன்தாராவோடு கட்டி உருண்டு கொண்டிருந்த அருண் வெலிங்டனால் எழுப்பப்பட்டான்.



“இன்னைக்கு யாருகூட டேட்டிங்? “என்ற வெலிங்டனை முறைத்த அருண் “நயன்தாரா கூட! “என்றான் கடுப்புடன்.



“நல்ல எக்ஸ்பீரியன்ஸான ஆளுதான்.”என்றார் வெலிங்டன் கிண்டலாக.அவர் கையில் சில பைல்கள் இருப்பதை பார்த்த விக்னேஷ் “எல்லாத்தையும் கொண்டு வந்திட்டிங்களா? “என்றான்.



“எல்லாத்தையும் வாரிட்டு வந்திருக்கேன்.உன் கணிப்பு எல்லாமே தப்பு! “என்றார் வெலிங்டன்.



“ஒவ்வொண்ணா சொல்லுங்க! கேட்போம்! “என்றபடி பிரஸ்ஸில் பேஸ்டை பிதுக்கினான் விக்னேஷ்.



“செத்து போன ஐந்து பேருமே பக்காமே கிரிமினல்கள்.அதுல இந்த கணேஷ் ராஜ் இருக்கானே அவன் மெடிசன் மாபியா குரூப்பை சேர்ந்தவன்.காலாவதியான மருந்தை விற்றது, சிலிண்டர் இல்லாம 30 குழந்தைகள் செத்ததுன்னு சில கேஸ் இவன் மேல இருக்கு.அரசியல் செல்வாக்கால தப்பிச்சிட்டான்.மீதி நாலு பேரும் இதே மாதிரி குற்றப் பிண்ணனி உள்ளவனுகதான்.ஒவ்வொருத்தனுக்கும் டஜன்கணக்குல எதிரிகள் இருக்கலாம்.”



“அப்ப நாம தேட போறது ஒரு புத்திசாலிய? “என்றான் வாஷ்பேஸினில் எச்சிலை துப்பியபடி விக்னேஷ்.



“அப்புறம் இன்னொரு விசயம்.ஆறாவது ஆள் அங்கே வரவேயில்லை.தப்பிச்சு ஓடியிருந்தா காலி தோட்டாவாவது கிடைச்சிருக்கும்.அப்படி எதுவும் கிடைக்கலை! “



“குடோன்ல கிடைச்ச ப்ளட் என்ன குரூப்? “



“அது O +குரூப்! “



“அப்ப வேலை ஈஸி! ஆர்மில ஸ்னைப்பர் சூட்டர்ல ஓ குரூப் ஆளுக யாருன்னு லிஸ்டு வாங்குங்க! ஓ. .பாஸிட்டிவ்குரூப்புக்கு ஒரு ஸ்பெசாலிட்டி இருக்கு தெரியுமா அருண்? “என்றான் விக்னேஷ்.



“யுனிவர்சல் டோனர்? “



“அப்சல்யூட்லி! அவங்க ரத்தம் யாருக்கு வேணா சேரும்.அதனால ஆர்மில குறிப்பிட்ட சதவீதத்திற்கு அவங்களை செலக்ட் பண்ணுவாங்க.வீரர்களுக்கு காயமேற்பட்ட ரத்த தானம் செய்ய! “



“வேற எதாவது? “



“லெப்ட் ஹேண்ட்! இன்னும் வித்தியாசமான பழக்கம் இருந்தா மென்சன் பண்ணி கேட்டு பாருங்க! அந்த லிஸ்டுலதான் நம்ம கில்லர் இருக்கனும்! “



“ஒகேப்பா! நான் ரெடி பண்றேன்.!”



விக்னேஷ் சிடி கேஸட்டை போட்டு பார்த்தான்.



“வலமிருந்து இடமாக சுட்டிருக்கான்.அப்ப லெப்ட் ஹேண்டா இருக்க வாய்ப்பில்லை! முதல் டார்கெட் கணேஷ் ராஜ்தான்.அடுத்ததுதான் லைன் பண்ணி சுட்ருக்கான்.!ஆமா! பார்க்குல ஐந்து செல்போனை கொடுக்கும் போது கடைசியா கில்லர்தான் போன் பண்ணினான்னு எப்படி சொன்னீங்க? மூணு போன்தான் பேடர்ன் லாக் போட்ருக்கே? “



“மீதி ரெண்டு போன்ல கடைசியா ஒரே நெம்பர் இருந்ததால கெஸ்ல சொன்னேன்! “என்றார் வெலிங்டன்.



கில்லரின் கால் லிஸ்டை செக் பண்ணிய விக்னேஷ் ஒரு நம்பரை சிகப்பு மார்க்கால் வட்டமிட்டான்.



“இவன்தான் அந்த வராம போன ஆறாவது ஆள்! “என்றான் விக்னேஷ்.



அருணும், வெலிங்டனும் சின்ன திடுக்கிடலோடு நிமிர்ந்தார்கள்.
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 12



“எப்படிப்பா சொல்கிறாய்? “என்றார் வெலிங்டன்.



“காலையில் பார்க் வந்த எல்லோரையும் காண்டாக்ட் பண்ணிய கில்லர் பெருக்கல் குறியில் அவங்களை நிற்க வைக்க இன்ஸ்ரக்ஷன் கொடுத்திருக்கான்.அதனால செத்தவங்களோட போன்ல கடைசி நம்பரா கில்லரோட நெம்பர் ஸேவ் ஆயிருக்கு! அதுக்கு முன்னாடி நைட்டு எல்லாரும் வருவாங்களான்னு போன் பண்ணி கன்பார்ம் பண்ணியிருக்கான்.இந்த ஒரு நம்பர்காரன் மட்டும் போனை எடுக்கலை.மிஸ்டு காலா ஆயிருச்சு.காலையிலும் கில்லர் டிரை பண்ணி பாத்திருக்கான்.அதுவும் மிஸ்டு கால் ஆயிருக்கு! போனை அட்டெண்ட் பண்ண முடியாத நிலைமைல ஆறாவது ஆள் இருந்திருக்கனும்.இந்த நெம்பருக்கு போன் போட்டு பேசிப் பாருங்க! “என்றான் விக்னேஷ்.



வெலிங்டன் போனை எடுத்த போது அருண் டிவியை போட்டான்.”செண்ட்ரல் பார்க்கில் ஐந்து பேர் சுட்டு கொலை.தீவிரவாதிகளின் சதி செயலா? “என்றாள் லிப்ஸ்டிக் போட்ட நியூஸ் ரீடர்.



“கொஞ்சம் பொறுங்க சார்! “என்றான் விக்னேஷ்.



“ஏன்? என்னாச்சு? “என்றார் வெலிங்டன்.



“இந்த நியூஸ் எப்பருந்து டிவில ஓடுது? “



“நேத்து மதியானத்திலிருந்து.அப்புறம் இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன்.ஞானம் பார்மாசூட்டிகல்ஸின் ஓனர் கணேஷ்ராஜ் மட்டும்தான்.பார்ட்னர் யாரும் கிடையாது.!”



“அப்ப அவருக்கு பின்னாடி வாரிசு? “



“அது இனிமேதான் தெரியும்!”



“இப்ப அந்த நெம்பருக்கு கூப்பிட்டு ஏன் பார்க்குக்கு வரலைன்னு கேளுங்க! எதிர்முனையில் இருப்பவனோட பேர் கூட நமக்கு தெரியாதுங்கிறதை நினைப்புல வைச்சுக்குங்க! “



“நான் பாத்துக்கிறேன்பா! “என்ற வெலிங்டன் விரல்களால் மொபைல் திரையை தடவினார்.ரிங் போய் மறுமுனையில் போனை எடுத்தவன் “சஞ்சய் ஸ்பீக்கிங்! “என்றான்.

“நேத்து ஏம்ப்பா பார்க்குக்கு வரலை? “என்றார் வெலிங்டன்.



“நீயா? வந்தா என்னையும் சுட்டு கொன்ருப்பியே? “என்றான் மறுமுனை.



“இப்ப தேடி வர மாட்டேன்னு நினைக்கிறியா? “என்றார் வெலிங்டன்.



“எனக்கு பணமெல்லாம் வேணாம்.அந்த கேஸட்டை கொடுத்துடறேன்.என்னை எதுவும் பண்ணிடாதே? “



“ஒ.கே.நான் உன்னை பார்க்கனும்! எங்க வர்ரது? “



“நீ சொல்ற இடத்துக்கு நான் வர மாட்டேன்.நான் சொல்ற இடத்துக்கு நீ வா! கூட பசங்க இருப்பாங்க! கேஸட்டை கொடுத்துடறேன்.அவளையும் தொந்தரவு பண்ண மாட்டேன்.இதோட எல்லாம் முடிஞ்சது.”என்றவன் போனை துண்டித்தான்.



லவுட் ஸ்பீக்கரில் கேட்டு கொண்டிருந்த விக்னேஷ் “ஏதோ ப்ளாக்மெயில் விவகாரமா இருக்கும் போல தோணுது! “என்றான்.



“கில்லர் அவனை வேற நம்பர்ல காண்ட்டாக்ட் பண்றதுக்குள்ள நாம அவனை பிடிச்சாகனும்! “என்றான் அருண்.

அந்த அறை நெருப்பு பிடித்தது போல் தகிக்க தொடங்கியது.
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 13



“அப்ப கில்லர் அவனை கொல்ல டிரை பண்ணுவான்னு சொல்ரியா? “என்றார் வெலிங்டன்.



“கண்டிப்பா! நம்ம மாதிரியே அவனும் போன் பண்ணி பேசினால் எல்லாமே குழப்பமாயிரும்! பயந்து போய் தலைமறைவாயிருவான்.அவனை உடனே பிடிச்சாகனும்.!”என்றான் விக்னேஷ்.



“அப்ப அவன் சொன்ன இடத்துக்கு உடனே வர்ரேன்னு போன் பண்ணி சொல்லுங்க! அநேகமா மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடமாத்தான் சொல்லுவான்.!”என்றான் அருண்.



“இடத்தை மாத்தி சொல்லவும் வாய்ப்பிருக்கு! தன்னை சுட்ருவாங்கன்னு பயத்துல இடத்தை மாத்தி நம்மை சோதிக்கவும் வாய்ப்பிருக்கு! “என்றான் விக்னேஷ்.



போனை போட்ட வெலிங்டன் சஜ்ஜெயிடம் பேசி விட்டு “செண்ட்ரல் பார்க் எதிர்ல இருக்கிற பேக்கரியில் இருக்கானாம்.உடனே வர சொல்றான்.!”என்றார் வெலிங்டன்.



பாய்ந்து மூவரும் ஜீப்பில் ஏறினர்.அருண் தன் போனில் சஜ்ஜெயின் நெம்பரை கூகிள் மேப்பில் உள்ளிட்டு தேட தொடங்கினான்.அவனது செல்போன் சிக்னல் சிகப்பு நிறத்தில் ஒளிர தொடங்கியது.



“அவன் பொய் சொல்லலை! சிக்னல் செண்ட்ரல் பார்க்கைத்தான் காட்டுது! “என்றான்.



அவர்கள் செண்ட்ரல் பார்க்கை நெருங்கிய போது சிக்னல் அங்கிருந்து நகர தொடங்கியது.



“அங்கிருந்து கிளம்பிட்டான்! வேற எங்கேயோ போவான் போல தெரியுது.”என்றான் அருண்.



“பேக்கரியில் நம்மை கண்காணிக்க யாரையாவது நிறுத்தி வைச்சிருப்பான்! நாம சிக்னலை பாலோ பண்ணுவோம்! “என்றான் விக்னேஷ்.

வெலிங்டன் போனை எடுத்து சஞ்ஜெயை அழைத்தார்.



“வர சொல்லிட்டு ஏந்தம்பி ஆட்டம் காட்டுகிறாய்? “என்றார்.



“எனக்கு பயமாயிருக்கு! என்னை கொன்னுட்டா என்ன செய்யறதுன்னு? “என்றான் சஞ்ஜெய்.



“பாருப்பா! நான் கில்லர் இல்லை.போலீஸ் கமிசனர்தான் பேசறேன்.!என்னை நம்பு! “



“உங்க ஐடி கார்டை வாட்ஸ்அப்புல அனுப்புங்க! நம்புறேன்! “



வாட்ஸ் அப்பில்அனுப்பிய ஐந்து நிமிடத்தில் அழைத்தவன் “ஹோட்டல் பாரடைஸ் வாங்க! “என்றான்.



கார் பார்க்கிங்கில் காத்திருந்தவன் போன் செய்வதை பார்த்து விட்டு அருகில் வந்தான்.”நீங்க தேடுற சஞ்ஜெய் நான்தான்.என்னை எப்படியாவது காப்பாத்துங்க! இந்த சி.டிய நீங்களே வைச்சிக்குங்க! “என்றான்.



“காப்பத்துகிறோம்! ஆமா இது என்ன சி.டி.?”என்றான் விக்னேஷ்.



“ரத்னா குளிக்கும்போது அவளுக்கு தெரியாம எடுத்தது! “என்றான் சஞ்ஜெய்.



“யாரு அந்த ரத்னா? “என்றான் அருண்.சிடியை அவசரமாக வாங்கியபடி.



“ஞானம் பார்மாசூட்டிகல்ஸ் லேப்ல வேலை செய்யற பயோ இன்ஜினியர்ல அவளும் ஒருத்தி! “என்றான் சஞ்ஜெய்.



“என்னப்பா! சுத்தி சுத்தி ஞானம் பார்மாசூட்டிகல்ஸுக்கே வருகிறோம்! “என்றார் வெலிங்டன்.
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 14



“தம்பி! இந்த சி.டி கதையை முழுசா சொல்லுப்பா! ஒன்னும் புரியலை! “என்றார் வெலிங்டன்.



சற்றே தயங்கிய சஞ்ஜெய் “மாச கடைசியில கேஸ் கிடைக்கலைன்னு என்னை கூட்டிட்டு போயிர மாட்டிங்களே? “என்றான்.



“அவர பாத்தா டிராபிக் போலீஸ் மாதிரியா தெரியுது? “என்றான் விக்னேஷ்.



“இதுக்குத்தான் தொப்பைய குறைக்க சொல்றது? “என்றான் அருண்.



“நான் உண்மைய சொல்லிடுறேன்.நான் கேமரா ஸ்பெசலிஸ்ட்.யாராலும் கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு கேமராவ செட் பண்ணி வைச்சு எதாவது தப்பு தண்டா நடக்காதான்னு பார்த்து அதை செய்தவர்களை மிரட்டி பணம் வாங்கிக்குவேன்.பெரிய பணக்கார வீட்டுக்குள்ள ப்ளம்பர், எலக்ட்ரீசியன் மாதிரி நுழைந்து பாத்ரூம்ல கேமராவை செட் பண்ணி வைச்சிருவேன்.!”



“அதென்ன ப்ளம்பர்? எலக்ட்ரீசியன்? “



“அல்காநெட் கல்லை போட்டா அது தண்ணியில ஊறி பெருசாகி பைப் லைனை அடைச்சிக்கும்.அதை சரி பண்ண உள்ளே நுழைஞ்சிருவேன்.அதே மாதிரி பழைய தாமரை படம் போட்ட 20 காசை குண்டு பல்போட. பின்னாடி வைச்சு போட்டா டோட்டலா பியூஸ் போயிரும்.அதை சரி பண்ண எலக்ட்ரீசியனா மாறிருவேன்.”



“பய புள்ள உள்ளே நுழைய வாய்ப்பை உருவாக்கியிருக்கான்! “



“ஆமா! அப்படித்தான் ரத்னாவையும் படம் பிடித்தேன்.பணம் கேட்டு மிரட்டினேன்.கொஞ்ச நாள் கேட்ட பணத்தை கொடுத்தாள்.அப்புறம் இந்த கில்லர் என்னை காண்டக்ட் பண்ணினான்.ரத்னாவோட மாமான்னு சொன்னான்.பல்க்கா ஒரு அமவுண்ட் தர்ரேன்.சிடியோட பார்க்குக்கு வான்னு கூப்பிட்டான்.அன்னைக்குன்னு பாத்து அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக்.ஹாஸ்பிடல்ல மாட்டிகிட்டேன்.வர முடியலை.போனிலும் சார்ஜ் இல்லை.அதனால போக முடியலை.காலையில பாத்தா ஐந்து பேரை சுட்டு கொன்ருக்கான்! அதான் பயந்துட்டேன்! “



“துணைக்கு பசங்க இருப்பாங்கன்னு சொல்லிட்டு தனியா வந்திருக்க? “என்றான் அருண்.



“அவங்க பேக்கரில உங்களுக்காக வெயிட் பண்றாங்க! “



“வேற என்ன தெரியும் உனக்கு? “



“ரத்னா ஒரு தடவை ஆபரேசன் ப்ளூ ஸ்டார்ல என்னை செலக்ட் பண்ணியிருக்காங்க! அடுத்த மாசத்திலிருந்து சம்பளம் அதிகமாக போகுதுன்னு ஒரு தடவை சொன்னாள்! “



“சரி! நீ போ! இனி தனியா சுத்தாதே! இனிமே பிளம்பர் எலக்ட்ரீசியன் வேலை பாத்தினா பிதுக்கிருவேன்! “என்றார் வெலிங்டன்.



அவன் கும்பிட்டு விட்டு பைக்கை நோக்கி போனான்.



ஆபரேசன் ப்ளூ ஸ்டார்! என்னவாக இருக்கும்? மூவரும் யோசிக்க ஆரம்பித்தனர்.
 
Top Bottom