Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


ஒரு புன்னகை பூவே- கதை திரி

Revathy Murugan

Saha Writer
Team
Messages
8
Reaction score
6
Points
1
புன்னகை 1 :

“ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ

கண் ரெண்டும் தந்தியடிக்க கண்ணா வா கண்டுப்பிடிக்க

(ராதை மனதில்..)

கொள்ளை நிலவடிக்கும் வெள்ளை ராத்திரியில் கோதை ராதை நடந்தாள்

மூங்கில் காட்டில் ஒரு கானம் கசிந்தவுடன் மூச்சு வாங்கி உறைந்தாள்

பாடல் வந்த வழி ஆடை பறந்ததையும் பாவை மறந்து தொலைந்தாள்

நெஞ்சை மூடி கொள்ள ஆடை தேவை என்று நிலவின் ஒளியை எடுத்தாள்

நெஞ்சின் ஓசை ஒடுங்கிவிட்டாள்

நிழலை கண்டு நடுங்கிவிட்டாள்

கண்ணன் தேடி வந்த மகள்

தன்னை தொலைத்து மயங்கிவிட்டாள்

தான் இருக்கின்ற இடத்தினில் நிழலையும் தொடவில்லை

எங்கே எங்கே சொல் சொல்

கண் ரெண்டும் தந்தியடிக்க கண்ணா வா கண்டுபிடிக்க

(ராதை மனதில்...)
என சிநேகிதி திரைப்பட பாடலிற்கு ஏற்ப மேடையில் ஆடிக்கொண்டிருந்தார்கள். பாடல் சத்தத்தை விட அந்த அரங்கத்தில் எழுந்த மாணாக்கர்களின் விசில் சத்தத்திலும்,கரகோஷங்களிலும் அரங்கத்தினை அதிர வைத்தனர். பழைய பாடலே என்றாலும், இன்றும் அனைவருக்கும் பிடித்த பாடலே..!

மாணவர்களின் உற்சாக சத்தத்தின் காரணம் மேடையில் நடுநாயகமாக அடர் சிவப்பு நிறத்தில் லெஹன்ஹா அணிந்து,தலை முடியை இரு பக்கமும் எடுத்து சென்ட்டர் க்ளிப் போட்டு விரித்து விட்டு, ராதையின் பாவத்தை முகத்தில் கொண்டு வந்து ஆடிக் கொண்டிருந்தாள் தீக்ஷா.
“ஊருக்கண்ணு உறவுக்கண்ணு
உன்ன மொச்சுப் பாக்கும் நின்னு
சின்ன மகராசன் வரான்
மீச முறுக்கு
எங்க மண்ணு தங்க மண்ணு
உன்ன வைக்கும் சிங்கமுன்னுhu!

முத்துமணி ரத்தினத்தைப் பெத்தெடுத்த ரஞ்சிதம்
ஊருக்குன்னே வாழு கண்ணு அம்மாவுக்கும் சம்மதம்
எந்த இடம் வலிகண்டாலும் கண்ணுதானே கலங்கும்
கண்ணுபோல எங்களுக்கு காவலா நீ வரணும்..

ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே
வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே
வீரன்னா யாருனு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே
வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய அவன் தந்தானே”

என்று மாணவர்கள் ஆடிம் பொழுதே தீக்ஷா வரவே அடுத்த கரகோஷம் எழுந்தது.

“Male : OMG ponnu….
ILY kannu….
ASAP kooda va nee

BAE…neeemaa
BFF naan maa..
ROFL pannalaama…

Female : IMO… nininee nee
Aaaiyiram ponna paarpa nee..
IDK ennanna enna
Evloo pudikkum sollu nee….”

என்று நான்கு மாணவர்களின் நடுவில் ப்ளு நிற ஜீன்ஸ், வெள்ளை நிற குர்த்தியும், இடை வரை வளர்ந்திருந்த கூந்தலினை லூஸ் ஹார் விட்டிருந்தாள் தீக்ஷா.

“தீக்ஷா தீக்ஷா தீக்ஷா…” என தீக்ஷாவின் ஒவ்வொரு அசைவிற்கும் கீழே இருந்த மாணவர்கள் அவர்களும் ஆடிக்கொண்டே கத்தினர். அவ்வளவு ஃபேன்ஸ் அவளிற்கு. இவ்வளவு சத்தமும் தனக்கு தான் என்று அறிந்து இருந்தாலும் அலட்டிக்கொள்ளாது, கெத்து காட்டாது முகத்தினில் மயக்கும் சிரிப்பினை கொண்டு ஆடினாள்.

எப்பொழுதும் தான் அழகு என்றோ, நினைத்தது இல்லை...இதுவே அவளிற்கு பல தோழமைகளையும், பல எதிரிகளையும் உருவாக்கும்..

தீக்ஷா செக்கச் சிவேலென்று, மான் விழிகளில் மையிட்டு, நவநாகரிக தேவதையென மேடையில் நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருந்தாள். கல்லூரியின் இருபத்தி ஐந்தாவது வெள்ளி விழா மற்றும் ஆண்டு விழாவிற்கான நிகழ்ச்சி தான் இது.

“தீக்ஷா கலக்கிட்ட டி… இருக்குற ஆடியன்ஸ் மொத்தமும் விட்ட ஜொள்ளுல காலேஜே மிதக்குது டி...பாத்து” என தீக்ஷாவின் நெருங்கிய தோழி யாழினி வாரினாள்.

“தீக்ஷா உன்கிட்ட கொஞ்சம் பேசனும் ஜஸ்ட் ஃபை மினிட்ஸ் “ என அவள் வகுப்பு மாணவன் ரோஹித் வந்து நின்றான். “ஏற்கெனவே சொல்லிட்டேன்ல, ஐ டோன்ட் ஹாவ் இன்ட்ரஸ்ட் ஆன் யூ” என்றாள்.

இதே போல் இரண்டு முறை காதலிப்பதாக சொன்ன போது பக்குவமாக மறுத்திருந்தாள். மறுபடியும் பழைய பல்லவியை பாடியதால் கடுப்பாகியது. ஆனாலும் அமைதி காத்தாள்.

அவளது அமைதி ரோஹித்தை கடுப்பின் உச்சத்தில் நிறுத்தியது. அதன் பலனாக அவளை வார்த்தைகளால் வசைபாடினான்….

“என்னடி, அழகா இருக்கேன்ற திமிறா.. லவ்வ சொன்னா ரொம்ப பண்ற. என் மேல மட்டும் தான் இன்ட்ரஸ்ட் இல்லையோ. ஸ்ட்டேஜ்ல மட்டும் நாழு பசங்க கூட ஈஈஈஈ னு இளிச்சுட்டு ஆட்ற” என்ற முடிப்பதற்கிள் ரோஹித்தின் இடது கன்னத்தில் தீக்ஷாவின் வலது கரம் இடியென இறங்கியது.

இன்று சில ஆண்கள் மனதில் இருப்பது தான் விரும்பிய பெண்ணிடம் தன்னுடைய காதல் மனதினை வெளிப்படுத்தினால் உடனே அவர்கள் மறுக்காது ஏற்று கொள்ள வேண்டும்.. இல்லையெனில் பெண்கள் திமிர் பிடித்தவர்கள், தான் அழகு என்று கர்வம் உள்ளவர்கள், மேலும் பலவற்றை நினைத்து கொள்வார்கள்.

ரோஹித்தை பேச்சில் தீக்ஷாவின் பொறுமையும் எல்லையை கடக்க செய்தது..அதனால் தான் அவனை கை நீட்டியது.

"என்னடா விட்டா ரொம்ப பேசிட்டே போற.. ஆமா...நான் அழகா இருக்கேன்னு திமிரு தான்...நீ வந்து உன்னோட லவ்வ அப்ரோச் பண்ணோனே, ஈஈஈ ன்னு சிரிச்சுட்டு வந்து நானும் உன்ன லவ் பன்றேனு சொல்லணுமோ…. இதுக்காகவே நிறைய பேரு இருப்பாளுங்க… அங்க போய் உன்னோட உண்மையான லவ்வ காமி...அடுத்து இன்னொரு தடவை என்கிட்ட ஏதாவது வந்து பேசுனா அப்பறம் இப்படி நான் பொறுமையா பேச மாட்டேன்…" என்று கோபத்தில் கத்திய தீக்ஷா ரோஹித்திற்கு புதிது.

அதனால் அவனும் சமயம் வரும் பொழுது பார்த்து கொள்ளலாம் என்று சென்று விட்டான். "ஹேய் ஏன்டி இவ்வளவு கோபம்… நீ இப்படிலாம் பேச மாட்டியே...உனக்கு லவ் பிடிக்காதா… பிடிக்கலைனா அதை அவன்கிட்ட பொறுமையா சொல்லிருக்கலாம்ல...அவனை எதுக்குடி ஹர்ட் பண்ற..?" என்றாள் யாழினி..

"லவ் பிடிக்காதா…" என்ற யாழினியின் கேள்விக்கு தீக்ஷாவின் எண்ணம் சற்று முன் கோப்படுத்திய ரோஹித்தை முகம் மறைந்து வேறு திசையில் பயணிக்க ஆரம்பித்தது… அதில் தீக்ஷாவின் முகம் புது பொலிவுடன் இருந்ததை கண்ட யாழினி "யம்மா தாயே...என்ன கற்பனை உலகத்துக்கு போய்ட்டியா….கேட்டாலும் சொல்ல மாட்டா...இதுல இருந்து புரியுது...லவ்ன்னா மேடம்க்கு பிடிக்காதுன்னு இல்லை.."

அதில் தன்னுணர்வு பெற்ற தீக்ஷா "கொஞ்ச நேரம் பேசாம இருக்க மாட்டியா டி… நீ நினைக்கிற மாதிரி எதுவுமே இல்லை...டைம் ஆகிடுச்சு...வா கிளம்புவோம்" என்று அந்த பேச்சிற்கு அவசரமாக முற்றுபுள்ளியை வைத்து தன்னுடைய இருசக்கர வாகனத்தில் யாழினியுடன் வீட்டிற்கு கிளம்பினாள்..

“நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை -டிக்கன்ஸன்”

பூக்கும்..
 

Revathy Murugan

Saha Writer
Team
Messages
8
Reaction score
6
Points
1
புன்னகை 2 :சென்னையில் போக்குவரத்து நெருக்கடியிலும், தனது ஜாகுவார் XJ ஐ புயல் வேகத்தில் செலுத்திக் கொண்டிருந்தான். வேகம்,கோபம், எதிராளிகளை அடியோடு வீழ்த்திவிடும் அளவு விவேகம்,எதிரில் நிற்போரை தன் கூரிய விழிகளால் எடை போதும் திறமை வாய்ந்த, தொழிலில் கால் பதித்த மூன்று வருடங்களில் பல நட்புகளையும், பல பல எதிரிகளையும் சம்பாரித்து வைத்திருக்கும் இளம் தொழிலதிபர்.
தன்னிடம் நெருங்குபவர்களை சிரிக்கத் தெரியாது என்று கூறும் அழுத்தமான உதடுகளாலும், ஒற்றை பார்வையிலும் தள்ளி நிறுத்தி விடுவான்.ADS Group Of Companiesஅந்த பெரிய கேட்டை செக்யூரிட்டி திறந்த நொடி சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவு கடந்து தங்களுடைய சாம்ராஜியமான, முழுவதும் கண்ணாடியால் அலங்கரிக்கப்பட்டு இருந்த தங்களின் எட்டு மாடி கோட்டைய்க்குள், சிறிதும் காரின் வேகத்தினை குறைக்காமல், மேலும் கூட்டி,புயல் வேகத்திலேயே தனது மைலாப்புரத்தில் உள்ள முதன்மை அலுவலகத்தில் நிறுத்தி,தனது டிரைவர் காரை அடைய குறைந்தபட்ச இடைவேளியே என்றாலும், அது வரையுமே தன்னால் பொறுத்துக் கொள்ள இயலாது என்பது போல், மேலும் உறும விட்டுக் கொண்டிருந்தான். தனது முதலாளி வரும் போது தான் இருக்க வேண்டும், அதற்குள் தனது வேலையை முடித்து விட்டு திரும்பி வந்து விடலாம் என்றென்னி சென்ற தன் மடத்தனத்தை நொந்துகொண்டு, கிட்டத்தட்ட ஓடி வந்து மூச்சு வாங்க நின்றான். தனது காரை விட்டு கீழ் இறங்கியதும், கார் கீயை வாங்க நின்றிருக்கும் தனது டிரைவரிடம் கோபப் பார்வையை வீசி கீயை குடுத்துவிட்டு அகன்றான்.தன் முதலாளி தன்மை இத்தோடு விட்டதற்கே தனது குல தெய்வத்திற்கு பெரிய அவசர கும்பிடு ஒன்றை போட்டு விட்டு, செல்லும் முதலாளியை பார்த்தான்.போர்ஸ்சே (porsche) சன் க்ளாஸை இடது கரத்தில் கழற்றி தன் சட்டையில் மாட்டிக் கொண்டே, வலது கரத்தில் ஜெல் தடவப்பட்ட அடர்ந்த சிகையை கோதியவாரு, மிக அலட்சியமாக அலுவலக தொழிலாளர்களின் காலை வணக்கத்தை சிறு தலை அசைப்புடன் ஏற்றுக் கொண்டு வேக எட்டுகளுடன் தனது அறையை அடைந்தான்.ஆதி ஆறு அடி அங்குலம், மாநிறத்திற்கும் சுற்று கூடுதலான நிறம், தனது மேல் படிப்பிற்காக சென்ற வெளிநாட்டு வாசத்தின் உதவியில் இன்னும் சிவந்த மேனி நிறம், அழுத்தமான உதடுகள், இறுகிய தாடை, தீர்க்கமான கண்கள், உடற்பயிற்சியினால் முறுக்கேறிய கட்டுப்பாடான உடற்கட்டு, எடுப்பான மீசை என முழு ஆணழகனாக திகழ்ந்தான்.அறைக்குள் நுழைந்தவுடன் ஆதியின் பி. ஏ ஷர்மிளா கதவை தட்டி அனுமதி பெற்றுக் கொண்டு நுழைந்தாள். உள்ளே சென்றவுடன் தன்னை நிமிர்ந்து பார்க்கவில்லை என்று உறுதிப்படுத்தி தன் அன்றாட பணியை தொடர்ந்தாள் ஆதியை சைட் அடிப்பதே முதல் முக்கிய பணி.
உள்ளே வந்து எதுவும் பேசவில்லை என்று ஓரிரு நிமிடங்கள் கழித்து கணினியில் இருந்து பார்வையை மட்டும் திருப்பி “என்ன” என்பது போல் ஒற்றை புருவத்தை ஏற இறங்க பார்த்தான். திடீரென்று தன்னை பார்ப்பான் என்று எதிர்பாராததால் விநாடி நேரத்தில் தன்னை நிலைப்படுத்தி “சார், நம்ம நியூ ப்ராஜெக்ட்டிற்கு வொர்கர்ஸ் வேணும்னு திருச்சியில் இருக்க மௌன்ட் காலேஜில் கேம்பஸ் இன்டர்வியு கன்டக்ட் பண்ணாலாம்னு சொல்லிருந்தோம். ஆனா இன்னும் நம்ம சைடு இருந்து எந்த கன்பர்மேஷனும் குடுக்கல. டுடே காலேஜில் இருந்து பேசுனாங்க. நீங்க செக் பண்ணிட்டா இன்றைக்கு நாம இன்பர்மேஷன் கொடுத்திரலாம்” என்று ஒரு வழியாக சொல்லி முடித்தாள்.ஓரிரு விநாடிகள் நிதானித்து விட்டு,

“ஓகே நெக்ஸட் மன்த், ஃபர்ஸட் சேடெர்டே கன்டக்ட் பண்ணாலாம்னு கன்பர்மேஷன் மெயில் போட்டிருங்க. தென் நம்ம ஹெச்.ஆர் (HR) டிபார்ட்மன்ட்ல சொல்லி டென் ஸ்டாஃப்ஸ ரெடியா இருக்க சொல்லிங்க, நம்ம ப்ராஜெக்ட் ரொம்ப பெரியது அதனால நாம் ஹண்ரட் (100) ஸ்டூடண்ட்ஸ செலக்ட் பண்ணனும், அதற்கு ஏற்ற மாதிரி ப்ரிபேர் பண்ண சொல்லிடுங்க” பேச்சு முடிந்தது என்பது போல் கணினியில் பார்வையை திருப்பிக் கொண்டான். இவ்வளவு நேரம் இவன் தான் பேசினானா என்று அவன் செயல் இருந்தது.------------------------------------------------------------
திருச்சி மௌன்ட் காலேஜ்:(“Dear students,

Next Saturday campus drive will be conduct by ADS group of companies. Totally 100 candidates will be recruit by the company. Above 7.5 cgpa interested candidates will give your name to your class place the coordinator” )
“அன்புள்ள மாணவர்கள்,
அடுத்த சனிக்கிழமை ADS group of companies நடத்தும் வேலை வாய்ப்பில் 100 மாணவர்கள் நிறுவனத்தால் நியமனம் செய்யப்படுவார்கள். 7.5 cgpa மேல் ஆர்வமுள்ள மாணவர்கள் உங்கள் வகுப்பு ப்ளேஸ்மென்ட் ஒருங்கிணைப்பாளரிடம் பெயரை கொடுக்க வேண்டிய கடைசி நாள் வரும் புதன் கிழமை.”காலேஜ் இறுதி ஆண்டு மாணவர்களின் ப்ளாக் நோட்டிஸ் போர்டில் தான் இந்த சர்க்குலர் போடப்பட்டிருந்தது. அனைத்து மாணவர்களும் தங்களுக்குள் சலசலத்த படி சென்றனர்.
“ஹேய், நம்மலும் ப்ரிபர் பண்ணனும் டி. வர போற கம்பெனி சாதாரணம் இல்ல, அந்த கரண்ட் எம்.டி யோட அப்பா முழு பொறுப்பையும் பார்த்துட்ட அப்ப கூட ஒரு சில ப்ராஜெக்ட் இவங்க கைய விட்டு போயிருக்கு. ஆனா இப்ப அவங்க ஸன் வந்த அப்புறம் எல்லாம் இவங்க தானாம். இவங்க விட்டு குடுத்தா தான் மத்தவங்களுக்கு ப்ராஜெக்ட் கிடைக்குமாம். இப்ப இருக்க நியூ எம்.டி சரியான சிடு மூஞ்சியாம் டி. ஆனா வேலை கிடைச்சா சொர்க்கம். அந்த சிடு மூஞ்சி மட்டும் வேலை குடுத்திட்டா, அந்த மகாராசன் பேர கேட்டு எங்க கோவில்ல கெடா வெட்டிரேன்“ என்று தீக்ஷாவின் நெருங்கிய தோழி யாழினி ஏக பெரு மூச்சுடன் தீக்ஷா மற்றும் அவர்கள் தோழிகளிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.“அந்த எம்.டி எப்படி இருந்தா நமக்கென்னடி, வேலை மட்டும் கிடச்சா போதும்” என்று தீக்ஷா அத்தோடு முடித்தாள். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பாள். ஆனால் மிகவும் கலகலப்பானவள் தன் குடும்பம் மற்றும் நெருங்கிய வகுப்புத் தோழிகளிடம். அதன் பிறகு பேச்சு வேறு பக்கம் சென்றது.---------------------------------------------------------------
“ஃபனா ஃபனா ஃபனா
யாக்கை திரி காதல் சுடர்


அன்பே அன்பே அன்பே அன்பே
ஜீவன் நதி காதல் கடல்
நெஞ்சே நெஞ்சே நெஞ்சே நெஞ்சே
பிறவி பிழை காதல் திருத்தம் நெஞ்சே
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
இருதயம் கல் காதல் சிற்பம் அன்பே

யாக்கை திரி காதல் சுடர்”
என காதை கிழிக்கும் அளவிற்கு மேல் தட்டு வர்க்க பிள்ளைகள் ஆண், பெண் பேதமின்றி ஆடிக் கொண்டிருந்தார்கள் சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டை அடையார் பார்க்கில் இருக்கும் நைட்ஸ் அவுட் க்ளிப்பில். அதில் தன்

நண்பர்களுடன் டார்க் ப்ளு ஜீன்ஸ் பேண்ட், வொய்ட் காலர் இல்லாத டீசர்ட், டீசர்டில் ரேஃபான் சன் க்ளாஸை மாட்டி, ஜெல் தடவப்படாத தன்னைப் போலவே இருக்கும் அடங்காத சிகையை இடது கரத்தில் அழுந்த கோதியபடி, வலது கரத்தால் கோப்பையில் உள்ள மதுவை வாயில் சரித்துக் கொண்டே, உதட்டுல் எப்பொழுதும் இருக்கும் சிரிப்புமாக,சிரிக்கும் பொழுது விழும் கண்ணக் குழியுமாக வசிகரிக்கும் புன்னகையுடன் ஆடிக் கொண்டிருந்தான் தர்ஷன்.“ஏன்டா மச்சி, அது எப்டிடா கரெக்டா கவர்மென்ட் ஜாப்ல வேலை பார்க்குற மாதிரியே ஷார்ப்பா ஏழு மணிக்கே கிளம்பி,உங்க அப்பாட்ட இருந்தும் எஸ் ஆகிட்டு நைன்க்கு எங்க கூட ஜாய்ன் பண்ணிடுற” என்று தர்ஷனின் உயிரை எடுக்கும் உயிர் தோழன் அஷ்வின் கேட்டான்.
“அது வந்து மச்சி, ஒன்னு எங்கையாது அதிர்ஷ்ட மச்சம் இருக்கனும், இல்ல சமாளிக்க மூளை வேணும். அதப் பத்தி ரொம்ப யோசிக்காம அங்க பாரு, ஒரு ப்யூட்டி என்ன லுக்கு விடுது, நீயும் போய் ஒரு பிகர கரெக்ட் பன்ன பாரு மச்சி போ… ” என்றவாறு தன்னை ஜொள்ளிய ஸவீட்டியைத் தேடிச் சென்றான். “ஹாய் ஸ்வீட்டி, டூ யு வான்ட் டு டான்ஸ் வித் மீ” என்று தன் வலது கரத்தினை நீட்டுனான் தர்ஷன்.தன்னை ஒரு தரம் கடைக் கண் பார்வை பார்ப்பானா என்று நின்றுக் கொண்டிருந்தவளிற்கு தன்னுடன் நடனம் ஆட அழைத்தும் போகாமல் இருக்க அவள் என்ன லூசா. நீட்டிய தர்ஷனின் வலது கரத்தினை பற்றிக் கொண்டு சந்தோஷமாக சென்றாள்.பின்ன அவளும் கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக அவனின் ஸ்டைல், தலையினை அவ்வப்போது கோதியவாரு பேசும் விதம், நண்பர்களை வாரி பேசும் பொழுது தன் வலது கண்ணை மட்டும் அடித்து மட்டும் பேசும் மேனரிஸம் என பார்த்து மயங்கிருத்தாள். தர்ஷனும் இவளின் பார்வையை, பார்த்தும் பார்க்காத படியும் இருந்ததால் தான் இன்று நடனம் ஆட அழைத்திருந்தான்.என்ன தான் தன் மகன் இவ்வாறு பப் க்ளப் என்று சுத்துவதும், பெண்களிடம் பழகுவது பற்றி அறிந்திருந்தாலும், தன் எல்லைக் கோட்டினை தாண்டாமல் இருப்பது பற்றி தெரிந்ததினால் அவன் போக்கில் விட்டு விட்டார் தர்ஷனின் தந்தை ராஜன்.“நீ உயர்ந்து மேலே செல்லச் செல்ல, இன்னும் கீழேயே இருப்பவர்களுக்கு நீ சிறியவனாய்த் தோன்றுவதில் வியப்பொன்றும் இல்லை. அதனால், அவர்கள் உன் முயற்சிகளைப் பற்றி எள்ளி நகையாடினால், கண்டு கொள்ளாதே. - Mark twain”பூக்கும்.
 

Revathy Murugan

Saha Writer
Team
Messages
8
Reaction score
6
Points
1
புன்னகை 3 :

“சொல்லுங்க மச்சான், எப்படி இருக்கீங்க…?” என்று தன் செல்ல தங்கையின் கணவரிடம் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தார் தீக்ஷாவின் தந்தை மூர்த்தி.

“..............”,

“அப்படியா, இல்லையே”,

“...............”,

“சரி சரி பாப்போம் மச்சான் சீக்கீரம்”

“...............”,

“ஆமா கண்டிப்பா”,

“................”,

“உங்க தங்கச்சி வேலையா இருக்கா, நீங்க பேசுனதா சொல்லிடுறேன், சரி மச்சான் அப்ப வச்சிடுறேன்”,

என்று அணைக்கப்படும் சமயம் மாடியில் இருந்து துள்ளலுடன், கருப்பு நிற லாங் ஸ்கர்ட்டும், பேபி நிற சிறிய அளவில் கை வைத்த டீசர்ட்டும், கருப்பு மற்றும் அதே பிங்க் நிற டிசைனால் ஆன ஸ்கார்பை கழுத்தைச் சுற்றி அணிந்து இறங்கி வந்தாள் தீக்ஷா.

பால் நிறத்தில், நீள் வடிவ முகமும், தலை குளித்திருந்ததால் விருத்து விடப்பட்ட முடியும், சிறிதும் ஒப்பனை இல்லாத முகத்தில், ஐலைனரால் வைக்கப் பட்ட சிறு பொட்டும், பிறை நெற்றியில் சிறு கீற்றென அடர் சிவப்பு நிற குங்குமம், கழுத்தில் சிறிய தங்க சங்கிலி அதில் இதய வடிவ டாலர் அணிந்து, வலது கையில் ப்ரேஸ்லட் என தன் அருகில் அமர்ந்த மகளை பார்த்தவரின் முகத்தில், இவள் என் மகள் என்கிற கர்வமும், பெருமையும் ஒருசேர எழுந்தது.

“குட் மார்னிங் டாட், என்ன இங்க இருந்து லவ்ஸ் போல, அம்மாவை லுக் விட்டுட்டு இருக்கீங்க” என்றவாறு நான்கு பேர் அமரும் ஷோபாவின் இடதுபுற ஓரத்தில், கையில் தொலைபேசியுடன் அமர்ந்திருந்த தந்தையின் வலது புறம் உட்கார்ந்தவள் தந்தையின் மடியில் படுத்துக் கொண்டாள்.

“என்னடா குட்டிமா, சீக்கிரம் எழுந்துட்ட எங்கையும் வெளில போறியாடா” என்று சிறு நக்கல் சிரிப்புடன் கேட்ட தந்தையை கொலைவெறியுடன் பார்த்தாள். பின்ன நடு பகல் பன்னிரென்டை தாண்டி எழுந்து கீழே வந்த மகளிடம் கேட்டால்??

“உங்கட்ட என்ன டாட் சொன்னேன் நேத்து நைட், நாளைக்கு நான் யாழி கூட வெளிய போகனும், சீக்கிரம் எழுப்பி விடுங்கன்னு. ஆனா நீங்க என்னன்னா ஹாயா இங்க உட்கார்ந்துட்டு உங்க வொய்ஃப சைட்டு அடிச்சுட்டு இருக்கீங்க” என்றவாறு கோபத்தில் சிலிர்த்தெழுந்தாள்.

கையில் உள்ள தொலைபேசியை அருகில் உள்ள மேசை மீது வைத்து விட்டு மகளின் புறம் திரும்பினார். “குட்டிமா, நீ சொல்லி அதை நான் செய்யாம இருப்பேனா, இரண்டு தடவை வந்து எழுப்புனேன், நீ எழுந்துக்கல. அதான் சரி சண்டே தான, ரெஸ்ட் எடுக்கட்டும்னு வந்துட்டேன்” என்று சமாதானப் படுத்தினார்.

மீண்டும் தன் மடியில் படுத்த மகளை செல்லம் கொஞ்சியவாறே “என்னடா குட்டிமா,பைனல் இயர் வந்துட்ட, நெக்ஸ்ட் என்ன பன்னலாம்னு ஐடியால இருக்க, டாட் கூட பிஸ்னஸ் பாக்க வர்றியா, இல்ல பி.ஜி அப்லை பண்றியாடா” என்று கேட்டார்.

“டாட் சொல்ல மறந்துட்டேன், அடுத்த சேடெர்டே ADS groups ல்ல இருந்து தான் கேம்ப்பஸ் இன்டர்வியு வராங்க. அதுல செலக்ட் ஆகிட்டா எனக்கும் ஒரு எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கும்,அப்டியை கரஸ்ல மேனேஜ்மென்ட் படிக்கலாம்னு இருக்கேன், ஒரு டூ இயர்ஸ் வொர்க் பார்த்து நானும் கொஞ்சம் கத்துப்பேன்ல டேட்” என்று முடித்தாள். ஏதோ யோசித்தவராக “சரிடா, நீ டிசைட் பன்னிட்டா சரி” என்றார்.

சமையல் அறையில் இருந்து வெளியில் வந்த திவ்யா கணவரை முறைத்தவாரு “ரொம்ப நல்லா இருக்கு, இருபத்தியொரு வயசாகிருச்சு, இன்னும் சின்ன குழந்தை மாதிரி கொஞ்சிட்டு இருக்கீங்க, அவளும் இப்ப தான் விடிஞ்ச மாதிரி எழுந்திருச்சு வரா”, என மகளை பார்த்து கூறினார் பாரதி தீக்ஷாவின் அன்னை.

தன் மகளின் அழகு முழுவதும் தன் தாயிடம் இருந்து வந்தது தான் என்பது போல், முகத்தில் மஞ்சள் பூசி,வீட்டில் வேலை பார்ப்பதற்கு ஏற்ப பருத்தி சேலையின் முந்தானையை இடுப்பில் சொருகி, இந்த வயதிலும் தெய்வீக அழகும்,சாந்தமான முகமுமாக இருந்த மனைவியை விழி அகற்றாமல் பார்த்துக் கொண்டிருந்தார். கணவரின் பார்வையை கண்டு லஜ்ஜையுற்றவராக, மனதிற்குள் நொடித்துப்போய் பாரதி பார்வையை திருப்பிக் கொண்டார்.

“சரி பாரு, சாப்பாடு எடுத்து வை,சாப்டுட்டு குட்டிமா கிளம்பட்டும்” என்று சொல்லி் கொண்டே எழுந்தார்.

ஞாயிறு மட்டும் காலை,இரவு உணவு சேர்ந்து உண்பது வழக்கம். பேசிக் கொண்டே உண்டு முடித்து எழுந்தாள் தீக்ஷா. “பை டேட், பை மாம்” என்றபடி கீ, மொபைல், மற்றும் சைடு பேக்கை அணிந்து,தன் ஸ்கூட்டி பெப்பை உயிர்ப்பித்து நகர்ந்தாள்.

தீக்ஷா, யாழினி, ரேஷ்மா, வினய், தருண் எல்லோரும் பள்ளியில் இருந்து நெருங்கிய நண்பர்கள். இதில் ரேஷ்மா தருண் மருத்துவ படிப்பையும், வினய் திருச்சியில் வேறு கல்லூரியில் கணினிப் பொறியியல் படிப்பையும் தேர்வு செய்தனர். தீக்ஷா,யாழினி மட்டும் கட்டிடப் பொறியியல் துறையை தேர்வு செய்தனர்.

ஏற்கெனவே சினிமா சென்று அடுத்து ஹோட்டல் போகலாம் என்று முடிவு செய்திருந்தனர். இன்று தீக்ஷாவினால் மூவி செல்லாமல் ஹோட்டல் மட்டும் சென்றனர். நண்பர்களுடன் இருக்கும் பொழுது அரட்டைக்கு பஞ்சம் ஏது?
“என்ன தருண், உன் ஆள் எப்படி இருக்கா?? “ என்று வம்பை ஆரம்பித்தால் ரேஷ்மா என்று கண் சிமிட்டி விஷம புன்னகையுடன் வினவ, “பேச்சு, நாமலே சொல்லலாம்னு நினைச்சோம், அதுக்குள்ள ஆரம்பிச்சு விட்டுட்டாலே இந்த பக்கி”என தலையில் கை வைத்து உட்கார்ந்து விட்டான். ஏனெனில் இது வரை எதையும் நண்பர்களிடம் மறைத்ததில்லை. தனது காதலை பற்றி நேரில் சொல்லலாம் என்று ஏற்படுத்தப்பட்டதே இந்த கெட் டு கெதர்.

தருண் நினைப்பை பொய்யாக்காமல் தீக்ஷா தருணை ரொம்ப பாசமாக பார்த்துக் கொண்டிருந்தாள். “அது வந்து தீக்ஷா, இது நேர்ல சொல்லி ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ் குடுக்கனும்னு தான்” என்று பாவம் போல் சொன்னான். கொஞ்சம் கெஞ்சி, கொஞ்சி சமாதானம் செய்தான். அப்புறம் பேச்சு வெவ்வேறு திசைகளில் திரும்பியது.

ஒரு வழியாக அனைவரும் ஹோட்டலை விட்டு வெளியேறி ஷாப்பிங் முடித்து வீடு திரும்பினர்.

--------------------------------------------------------------

“DR industries”

என்று மிகப் பெரிய நுழைவாயிலை தாண்டி சுமார் இரண்டிற்கும் மேற்பட்ட ஏக்கர்களை கொண்ட தன் சொந்த சாம்ராஜ்யத்தில் ராஜ தோரணையுடன் தனது பென்ஸ் காரில் இருந்து இறங்கினான் தர்ஷன்.

சென்னை சிட்டியில் இருந்து பல மயில் கடந்து, அரசாங்க ஒப்புதலில், மிகத் தகுந்த பாதுகாப்பும் தனது தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு, ஒரு வருட காலமாக உணவு,தூக்கம் என்பதை சரி நேரத்தில் எடுக்காமல், கர்ம சிரத்தையுடன் சொந்த முயற்சியால் உருவாக்கப்பட்ட சிமெண்ட் தயாரிக்கும் ஆலை. ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள். ஒவ்வொரு பிரிவிற்கும் மேற் பார்வைக்கு என அந்த துறையை சார்ந்த சிறந்த பொறியாளர்கள் என நியமிக்கப்பட்டு நடத்தி வருகிறான்.

தொழிலாளர்களிடம் வேலை வாங்கும் பாங்கு, அவனின் ஆளுமை, சிறு வயதிலேயே இமாலய வளர்ச்சி என அனைவரையும் பிரமிக்க வைக்கும் அவனின் தொழில் வளர்ச்சி. மார்க்கெட்டில் DR சிமெண்ட்டிற்கு எப்பொழுதும் டிமான்ட் தான். தரத்தில்,விலையில் என அனைத்திற்கும் பேர் போனது.

தர்ஷன் - எப்பொழுதும் ஃபார்மல்ஸ் அணிவது என்றால் வேப்பங்காய் தான். தவிர்க்க முடியாத தொழில் ஒப்பந்தத்திற்கு மட்டுமே நேர்த்தியான உடை. மற்ற நேரங்களில் ஜீன், கேஷூவல் சர்ட்டும் தான். இப்போதும் அதே போல் அடர் சிவப்பு நிற சர்ட்டும் அதில் மேல் சட்டை பட்டன் போடாமல் அதில் தன்னுடைய ரேஃபான் சன் க்ளாஸும், லைட் ப்ளூ நிற ஜீன், எப்பொழுதும் இருக்கும் அதே வசிகர புன்னகையுடன் தனது அலுவல் அறையை அடைந்தான்.
-------------------------------------------------------------
“சரி கம பத நி சொல்லித்தாரேன் ஒரு வாட்டி

சரியா கேட்டுட்டு பாடுவியா ஏ பாட்டி

கொடுக்கா புளிய பறிச்சு நா தொவையல் அரச்சு தாரேன்”

என தன் பாட்டி மற்றும் பக்கத்து வீட்டில் உள்ள பாட்டிகளை வீட்டு முற்றத்தில் உட்கார வைத்து அனைவரையும் பாடாய் படுத்திக் கொண்டிருந்தாள் வைதேகி பாட்டியின் மகன்வழிப் பேத்தி ஷாலினி, பாட்டிக்கு ஷா வராதனால சாலுக்கண்ணு, இந்த வீட்டின் முதல் பெண் வாரிசு. விஸ்வநாதன் மற்றும் சசி அவர்களின் சீமந்தபுத்திரி.

“ஏன்டி எங்கள இந்த பாடு படுத்துற, உன்ன ஒரு மகராசன் கைல பிடுச்சு குடுத்தா தான் உன்ன அடக்க முடியும்,அந்த மகராசந்தேன் எங்க இருக்கானோ”என வைதேகி பாட்டி நொடித்துக் கொண்டார்.

“இந்தா கெழவி, இனிமேட்டா பிறக்க போறான், எங்க இருக்கானோ, என் கண்ணுல சிக்குறவர அந்த மகராசன்,பாவம்,சந்தோசமா இருந்துட்டு போவட்டும்” என கனவு உலகிற்கு சென்று விட்டாள். “எத்தனை வருடம் அவனை பார்த்து. இந்த தடவையாவது ஊருக்கு வருவானா?? அப்டியே வந்தாலும் நம்மல தெரியுமா?? நம்மட்ட பேசுவானா???” என தனக்குள் முனுமுனுத்தப்படி உட்கார்ந்து விட்டாள்.
“நீ உன் சிறகை விரிக்கும் வரை நீ எட்டும் உயரம் யாரறிவார்?”

பூக்கும்
 

Revathy Murugan

Saha Writer
Team
Messages
8
Reaction score
6
Points
1
புன்னகை 4 :

தனக்குள் முனுமுனுத்தப்படி உட்கார்ந்து இருந்த பேத்தியை பார்த்து விட்டு,தான் சொன்னதால் தான் அமைதியாகி விட்டாள் என்று மிக சரியாக, தவறாக எண்ணி விட்டார் வைதேகி பாட்டி. பாவம் அவருக்கு எங்கு தெரியும், தன் பேத்தி அவளின் காதல் மன்னனுடன் கனவுலகிற்கு சென்று விட்டாள் என்று.

மற்ற பாட்டிகளிடம், “என் பேத்தி உங்க கூட கத்தி கத்தி தான் சோந்துருச்சு, எல்லாரும் போயி மத்த வேலை இருந்தா பாருங்க” என்று விரட்டி விட்டபடி பேத்தியின் அருகில் அமர்ந்து அவள் கையை எடுத்து தன் முதிய கரங்களிற்குள் வைத்துக் கொண்டு,

“சாலுக்கண்ணு, அப்பத்தா ஏதூம் உன்ன கஷ்டப்படுத்துற மாதிரி பேசிட்டேனாத்தா, முகம் சோந்துருச்சு” என்று குரலில் வருத்தம் பொங்க கேட்டார்.

கனவில் இருப்பவளை தொந்தரவு செய்த பாட்டியை கோபமாக பார்க்க முயன்று நிமிர்ந்து பார்த்து, பாட்டியின் முகத்தில் உள்ள கலக்கத்தை பார்த்து விட்டு, தற்காலிகமாக தனது கனவிற்கு தொடரும் போட்டவள், இன்னும் அருகில் நெருங்கி அமர்ந்தாள்.

“அய்யயோ பாட்டி, அப்பிடி எல்லாம் இல்ல, இங்க வர்ரதுக்கு உன் மகன் கிட்ட படாத பாடு பட வேண்டியதா போய்ருச்சு, அத தான் நெனச்சிட்டு இருந்தேன்” என்றாள்.

ஷாலினி நல்ல சிவந்த நிறம், பார்க்கும் யாவரும் திரும்பி பார்க்க வைக்கும் தோற்றம். இடை வரை வளர்ந்திருந்த அடர்ந்த கூந்தலை தளர பின்னி, பாட்டியின் கைங்கரியத்தால் நெருக்கி தொடுத்த தோட்டத்தில் உள்ள மல்லிகையை வலப்புற தோலில் தொங்க விட்டிருந்த விதம், அடர் நீல நிற சிறிய கோல்டன் நிற தங்க நிற ஜரிகை உள்ள பாவாடையில் மயில் கழுத்து நிற சிறு பூக்கள் டிசைன், மற்றும் அதே நிற ரவிக்கை, அதற்கு மேட்சிங்காக மயில் கழுத்து நிற தாவணி, கிராமத்து தேவதை என இருந்தாள்.

“ஏன்டி இப்ப என் மகன இழுக்குற, இங்க வாரதுக்கா உன்ன விட மாட்டேனு சொன்னான், நீ ஏதாது வம்பளந்துருப்ப, அதான் சொல்லிருப்பான்” என மகனுக்கு வக்காலத்து வாங்க வந்தார் பாட்டி. பின் தன் ஒரே மகனை சொன்னால் பொருத்துக் கொள்வாரா?

வடிவேல் - வைதேகி தம்பதியினருக்கு மூன்று பிள்ளைகள், மூத்த மகன் தான் ஷாலினியின் தந்தை விஸ்வநாதன், இரண்டாவது மகள் பிரபாவதி, மூன்றாவது மகள் கலையரசி. பிரபாவதியை சென்னையில் பெண் கொடுத்து தனது மகனிற்கு பெண் எடுத்தார். பிரபாவதியின் கணவர் ஊர் மெச்சும் மருமகன் மற்றும் மிகப் பெரிய தொழிலதிபர். வடிவேல் தாத்தாவும் ஏக போக சொத்துக்களின் சொந்தக்காரர். ஆனால் அந்த பந்தா இன்றி வாழ்பவர்.

பாட்டியிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே ஷாலினியன் எண்ணங்கள் எட்டு வருடத்திற்கு முன்னால் சென்றது, இதேபோல் பாட்டி வீட்டிற்கு வந்த பொழுது தன்னிடம் வம்பளந்த தன் அத்தை மகனை நினைத்து.

மதுரையில் திருமங்கலத்திற்கு செல்லும் வழியில் உள்ள நகரமும் அல்லாத, சத்த கிராமமும் அல்லாத கொளமங்களம் ஊரில் தான் வைதேகி பாட்டியின் வீடு உள்ளது. இப்போது போல் உயர்ந்த அதிக அளவில் கட்டிடங்கள் இல்லாது இருந்தாலும், அனைத்து அடிப்படை வசதிகளையும் கொண்டது.

திருவிழாவின் முதல் நாள் என்பதால் கோவிலில் கூட்டம் அலைமோதியது. இன்று தான் கொடி ஏற்றி பக்கர்கள் தங்களது விரதங்களை தொடங்குவர். அழகான சீரியல் பல்புகளினாலும், கிட்டத் தட்ட ஐந்நூறு பேருக்கும் மேல் நிற்க கூடிய மைதானத்தின் நடுவில் அமைந்திருந்தது பிரசித்திப் பெற்ற மாரியம்மன் கோயில். மைதானத்தின் கடைசியில் வரும் கோயில், இடப்புறம் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு என மேடையும் அமைக்கப்பட்டிருந்தது. கோயில் வாசலில் அம்மனின் இடது புறம் சரஸ்வதி லட்சுமி என படங்கள் உள்ள சீரியல் லைட்டுகள் மாறி மாறியும், வலது புறம் தன் வாகனம் குதிரையில், கையில் சாட்டையுடன் கம்பீரமாக வீற்றிருக்கும் ஐய்யனாரும், தனது ஆயுதமான அரிவாளை கையில் ஏந்தியவாறு கருப்பனசாமியின் படங்களும் மாறி மாறி மின்னிக் கொண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது அந்த கோயில்.

கோயிலில் இளைஞர்கள் அனைவரும் சைடு அடிப்பதற்காகவே வந்திருப்பவர்கள் ஒரு புறபமும், சிலர் பயபக்தியாக சாமி கும்பிடுவதற்காகவும், மற்றும் சிறுவ சிறுமியர்கள் பட்டாம் பூச்சிகளாய் சுற்றிக் கொண்டிருந்தனர். மாலையில் கோயிலின் கொடி மரத்தில் ஐய்யரின் மந்திரங்களுடன், மேள தாளங்கள் முழங்க கொடி ஏற்றி பக்கர்கள் காப்பு கட்டி தங்களின் விரதங்களை தொடங்கி வைத்தனர்.

ஷாலினி மற்றும் வைஷ்ணவி(வைதேகி பாட்டியின் இரண்டாவது மகள் கலையரசியின் மகள்), வைஷ்ணவியின் தம்பி அஷ்வின் மூவரும் சேர்ந்து கோயிலை சுற்றிக் கொண்டிருந்தனர். ஷாலினி வைஷ்ணவி ஒரே வயது தற்போதே எட்டாம் வகுப்பை முடிக்க இருக்கும் இளம் பெண் குழந்தைகள். அஷ்வின் அவர்களை விட இரண்டு வயது சிறியவன். இரு பெண்களும் ஒரே நிற பட்டு பாவாடை சட்டையில் அனைவரும் வியக்கும் வண்ணம் அழகாக தேவதையாக வலம் வந்தார்கள்.

இப்பொழுது தான் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் ஷாலினியின் அத்தை மகன் ராசு வந்திருந்தான். பார்ப்பபதற்கு மாநிறம் தான் ஆனால் தற்போது புதியதாக முளைத்திருக்க துவங்கும் மீசை, தாடியுமாக ஊரில் உள்ள இளம் பெண்களை வம்பிழுத்து கொண்டிருந்தான் கூடவே அவனைப் போல இருவர் வேறு. இவர்கள் தாத்தா வடிவேல் தான் ஊர் தலைவர் என்பதால் சிறு கெத்து காட்டி நின்றிருந்தான்.

கோயிலில் முன், இடது, வலது புறம் என மூன்று வாசல் உள்ளது. சற்றே பெரிய கோயில் என்பதால் ஒரு புறம் மட்டுமே சென்று வந்தால் சிரமம் ஏற்படும் என இந்த ஏற்பாடு. இதில் வலது புறம் வாசலில் தான் நம்ம சின்ன ஹீரோ நின்றிருந்தான். அப்பொழுது அவர்களை தாண்டி சென்ற ஒரு இளம் பெண் திருவிழா என்பதால் கூடுதல் சிரத்தையுடன் மேக்கப் செய்து தன் தோழிகளுடன் கோயிலை சுற்றிக் கொண்டிருந்தாள். அப்பெண்ணை ராசு வச்ச கண் எடுக்காமல் வயது கோளாரினால் பார்த்து கொண்டு எவ்வாறு நெருங்கி பேசிவது இவ்வளவு கூட்டத்தின் நடுவே என்று யோசித்து பலன் பூஜ்யம் தான். அப்பெண் அவ்வீட்டாருடன் சேர்ந்து சென்று விட்டாள்.

இன்று தான் முதல் நாள் என்பதால் இன்னும் பெரிய திருவிழா அடுத்த சனிக்கிழமை தான் என்று ராசுவும் கிளம்ப விட்டான்.

அப்படியே மற்ற நாட்களும் செல்ல அனைவரும் மறுபடியும் திருவிழாவிற்கு கூடினர். ஞாயிறு அன்று தான் பூக்குழி உச்சவம் என்பதால் பக்தர்கள் தீ மிதித்தல் போன்ற வேண்டுதலை செய்வர். ராசுவும் கிட்டத் தட்ட ஒரு மணி நேரமாக தேடி கண்டுபிடித்தான் அந்த பெண்ணை. கையில் சாக்லெட்டுடன் நின்றிருந்தான் ஹீரோயிசம் வேறு. ஆனால் எவ்வாறு நெருங்குவது என்று யோசித்து கடைசியில் தன் தங்கை வைஷூ மற்றும் அத்தை மகள் ஷாலினியை நாடினான்.

“வைஷூ, அதோ நிக்கிது பாரு அந்த கோல்டன் கலர் ஹாஃப் சாரி போட்ருக்க பொண்ணு, அவட்ட நான் குடுத்தேனு யாருக்கும் தெரியாம குடுத்துட்டு வர்றியா நீயும் ஷாலுவும், நான் போய் குடுத்தேனா தொலஞ்சேன்” என்று கெஞ்சிக் கொண்டிருந்தான். பாவம் அவளிற்கு தான் தன் அண்ணன் என்றால் உயிர் ஆயிற்றே.

ஆனால் ஷாலு தான் “அத்தான், யாரவது பார்த்துட்டா எங்கள தொலச்சுருவாங்க, நீங்க வேணா போய் குடுங்க, நம்ம வீட்ல யாரவது பார்த்துட்டா நீங்க அடி வாஙகுங்க” என ஓடுவதற்க்கு தயாரானால். ராசு ஒரு வழியாக கெஞ்சிக் கொஞ்சி கேட்பரி சாக்லெட்டுடன் அனுப்பி வைத்தான். ஷாலு மட்டும் திரும்பி திரும்பி பார்த்தவாறு சென்றாள். ஏதோ தன் அத்தை மகனை அந்த வயதிலும் யாருக்கும் விட்டு குடுக்க முடியவில்லை.

அந்த பெண்ணை இருவரும் நெருங்கி ராசுவை நோக்கி கை நீட்டியபடி ஏதோ சிறியவர்கள் பேச, அப்பெண் இவர்களையும் ராசுவையும் நன்றாக முறைத்தவாறு அகன்றாள். இதை எல்லாம் ராசுவும் பார்த்து கொண்டு தான் இருந்தான். அவள் சென்றவுடன் ஷாலு மற்றும் வைஷூவை நெருங்கி அவர்கள் கையில் உள்ள சாக்லெட்டை சாப்பிடுமாறு சொல்லிவிட்டு “அவளுக்கு குடுத்து வச்சது அவ்வளவு தான், அவர் இல்லனா என்ன, எனக்கு தான் என் அத்த மக ஷாலுக்குட்டி இருக்கால, என்ன அம்மு அத்தான கல்யாணம் பண்ணிப்ப தான? “ என்று சீண்டினான். ஆனால் அது தான் அவள் மனதில் வேரூன்றிது. ஏனெனில் வீட்டிலும் அடிக்கடி பேச கேட்டிருக்கிறாளே. “அம்முவ நம்ம ராசுவிற்கே கல்யாணம் பண்ணி வச்சுட்டோம்னா அவள நம்ம பிரிஞ்சு இருக்க வேணாம், அவளும் அவர் அத்த கூட கடைசி வர இருப்பா, சொந்தமும் விட்டு போகாதுல” என பெரியவர்கள் அடிக்கடி பேசும் பேச்சு, அந்த சிறு வயதிலும் அத்தான் என்றால் உயிர். கல்யாணம் என்றால் அர்த்தம் தெரியாத வயதிலும் அத்தான் கேட்டதற்காக “சரி” என்று மகிழ்வோடு தலை ஆட்டினால்.

வருடங்கள் ஏற ஏறவே தன் அத்தானின் வார்த்தைகள் பசுமரத்தானியாய் நெஞ்சில் பதிவாகியது. இதோ இந்த நிமிடம் வரை. ஆனால் அவன் யாருட்ட
ப்ளாட் ஆகிருக்கானோ????

--------------------------------------------------------

“குட் மார்னிங் டாட்”, என்று ஹாலின் சோஃபாவில் தினசரி நாளிதழை படித்து கொண்டிருந்த தந்தையின் பதிலுக்கு கூட காத்திராது “மாம், லன்ச் வேண்டாம் டுடே, கேன்டீன்ல சாப்டபோறோம்” என்று சமையல் அறை நோக்கி குரல் குடுத்தாள் தீக்ஷா. மகளின் குரலில் கையில் ஒரு டம்ளர் பாலினை கொண்டு வந்தவர் “இந்தா டா, இது மட்டும் குடிச்சிட்டு கிளம்பி, All the best “ என்று வாழ்த்து கூறினார். இன்று தான் கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியு. அதற்கு தகுந்தாற் போல் மெல்லிய நீல நிற டாப் மற்றும் வெள்ளை நிற லெகின்ஸ், துப்பட்டா என அணிந்து, முன் உச்சி சில முடியை சிறிதாக பஃப் வைத்து, விருத்து விடப்படாமல் ஹார் பேண்ட் கொண்டு போனி டெய்ல் போட்டிருந்தாள் அவ்வளவே.

“ஆல் த பெஸ்ட் டா குட்டிமா” என்று கூறிய தந்தையின் வாழ்த்தை பெற்றக் கொண்டு தன் பெப்பை உயிர்ப்பித்து நகர்ந்தாள்.

--------------------------------------------------------

Mount college of engineering and technology:

மிக மிக பரபரப்புடன் இயங்கி கொண்டிருந்தது அந்த ஒரு ப்ளாக் மட்டும். சிலர் மிகுந்த சிரத்தையுடனும், சிலர் சிறிது பயத்துடனும், சிலர் வேலை கிடைக்க வேண்டுமே என்ற கவலையுடனும், மற்றும் சிலர் யாருக்கு வந்த விருந்தோ எனும் விதமாக இவ்வாறு தங்களை தயார் செய்து கொண்டிருந்தனர்.

தனது வழக்கமான புயல் வேகத்திலேயே ஜாகுவாரினை மிக அசட்டையாக கல்லூரியின் வாயில் முன் நிறுத்தி, சில மணி துளிகள் கழித்தே காரை விட்டு இறங்கினான் “ஆதி மேனேஜிங் டிரெக்ட்டர் அஃப் ADS Group of companies”. வெள்ளை முழு கை சட்டை, அடர் கருமை நிற பேன்ட்டும், அடர் சந்தன நிற கோர்ட்டும், கண்ணில் எப்பொழுதும் அணியும் போர்ஸ்சே (Porsche) சன் க்ளாஸும் அணிந்திருந்தான். இறங்கி சில நிமிடங்கள் கல்லூரி வளாகத்தில் தன் பார்வையை சுழற்றியவன் என்ன நினைத்தானோ, சட்டென்று தன்னை மீட்டுக் கொண்டு, தன்னை அழைக்க வந்த கல்லுாரி முதல்வரின் கையை குலுக்கினான். “வெள்கம் மிஸ்டர் ஆதி” என்றவரிற்கு மிக சிறு புன்னகையுடன் தலை அசைப்பை பதிலாக்கினான்.

கல்லூரி மாணவர்கள் மொத்தமும் வைத்த கண் பார்த்தவாறு அவனை அங்குலம் அங்குலமாக ரசித்துக் கொண்டிருந்தனர்.ஏனெனில் நேற்று தான் ஆதியே இன்று நேர்க்காணலிற்கு வருவதாக கல்லூரியில் கூறியிருந்தாள் ஷர்மிளா ஆதியின் பி.ஏ.

“ஆதி ஹியர், கம் டூ மை கேபின்” என்று கூறி அலைபேசியை வைத்த அடுத்த இரண்டு நிமிடத்தில் ஷர்மிளா அவனின் கேபினில் இருந்தாள். சிறு மெச்சுதலாக பார்த்தவன் மிக மெல்லிய நகையை உதட்டில் எட்டாதவாறு பேச தொடங்கினான். “மிஸ் ஷர்மிளா, டுமாரோ தான கேம்பஸ் இன்டர்வியு கன்டக்ட் பண்ணாலாம்னு இருக்கோம், ஒன் சேன்ஜஸ் ஆன் தட் ப்ளான். நானும் போக போறேனு காலேஜ்ல இன்பார்ம் பண்ணிடுங்க, ஏன்னா இது ரொம்ப பெரிய ப்ராஜெக்ட்னு அல்ரெடி சொல்லிருக்கேன்ல. சோ ஐ நீட் டு மானிட்டர் தி ஸ்டூடண்ட்ஸ பெரமார்மன்ஸ்” என்றால். ஷர்மிளாவிற்கு மயக்கம் வராத குறை தான், ஏனெனில் ஆதி தன்னிலை விளக்கம் சொல்வது இதுவே முதல் முறை. எந்த பதிலும் இல்லாது போகவே “என்ன” என்பது போல் தனது மேனரிஸமான வலது புற ஒற்றை புருவத்தை மட்டும் தூக்கினான். சடுதியில் தன்னை மீட்டு கொண்டவள் “காட் இட் சர், வில் இன்பார்ம் டு தி காலேஜ்” என்று வெளியேறியவள் உடனே தகவலும் குடுத்தாள் சிறு குழப்பத்தினூடே.

“ஹேய் தீக்ஷாஷாஷா” என்றாவாறே பிரசங்கமாள் யாழினி மூச்சு வாங்க..

“ஏன்டி இப்டி கத்துற,இந்தா தான இருக்கேன் நானு” என்றாள் கடுப்புடன். பின்னே எல்லோரும் இன்னும் சில மணி துளிகளில் நடக்கவிருக்கும் இன்டர்வியுவிற்கு படித்து கொண்டிருக்க இவள் மட்டும் சுத்தினால். “ஏன்டி, படிக்காம சுத்திட்டு வந்து என்னையும் உயிர வாங்குற, கொஞ்சமாச்சும் பொறுப்பு இருக்கா, ஆனா வேலை மட்டும் வேணும்னு கதறு, சொல்லி தொல எதுக்கு கூப்டனு” என ஏகத்துக்கும் பொரிந்தாள்.

“இல்ல டி, இன்னைக்கு இன்டர்வியூக்கு அந்த எம்.டி ஆதியே வந்துருக்காரு. என்ன ஹான்ட்சம் தெரியுமா, சும்மா ஹீரோ மாதிரி இருக்காரு,ஆனா ஆளுதான் சிடுமூஞ்சி போல, மருந்துக்கும் சிரிப்பு இல்ல, அங்க வேலை மட்டும் கிடச்சா போதும், லைஃப் செட்டில் ஆகிடும்” என்றாள்.

“அந்த மகராசன் ஆளு எப்படி இருந்தா நமக்கென்னடி, வேலை கிடைச்சிடனும்” என பெரு மூச்சு விட்டாள் தீக்ஷா. “ஏன்டி நாங்க தான் கவலைப்படனும், வேலை கிடைக்கனும்னு, நீ ஒரு வார்த்தை சொன்னா உங்க அப்பா உனக்குனு சொந்தமா கம்பெணி வச்சு குடுத்துருவாறு. நீயே நூறு பேருக்கு வேலை போட்டு குடுக்கலாம், நீ என்னனா எங்கள மாதிரி முட்டிட்டு படிச்சுட்டு இருக்க” என்று யாழினி கேட்டாள்.

ஆம், தீக்ஷாவின் தந்தை பெயர் சொல்லும் பெரிய பணக்காரர். பல கோடிகளுக்கு சொந்தக்காரர். மகளிடமும் பல முறை சொல்லி விட்டார் தன்னுடன் தொழிலை படிப்பு முடிந்தவுடன் பார்க்கும் படி. அவள் தான் படிப்பு முடிந்து இரண்டு வருடம் வேறு கம்பெணியில் வேலை பார்த்த அனுபவம் வேண்டும் என்று. ஏனெனில் அவளின் எண்ணப்படி தந்தையின் தொழிலில் இருந்தால் கண்டிப்பாக கற்றுக் கொள்ள முடியும் தான், ஆனால் அதை விட கடமை தான் இருக்கும். இதேது வேறு கம்பெணி என்றால் நிறைய கற்றுக் கொள்ள முடியும் அந்த சூழ்நிலையில் என்பதே அவளின் எண்ணம்.

“சரி டி, இன்னும் கொஞ்சம் நேரத்தில் எல்லாரையும் வி-1 லேப்(lab) அங்க வர சொல்லிருக்காங்க. போகலாம்” என்றவாறு ஐ.டி கார்டை மாட்டிக் கொண்டு நகர்ந்தனர்.

எல்லோரும் முதல் சுற்று திறனாய்விற்கு அம்ர்ந்திருந்தனர். மொத்தம் முந்நூறு மாணவர்களில் இருந்து இறுதி சுற்றில் நூறு பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப் பட வேண்டும் என்று ஆதி முடிவு செய்திருந்தான். எனவே முதல் சுற்றில் 200 மாணவர்களும், இறுதி சுற்றில் நூறு மாணவர்களும் என பிரித்திருந்தான்.

கல்லூரியில் ஒரு ஹாலில் தேர்வும், மற்றொரு ஹாலில் ஆதி,கல்லூரி முதல்வர், மற்றும் சிலரும் இன்டர்வியுவை மானிட்டர் பன்னுவதற்கென்று ஏற்பாடு செய்திருந்தனர். ஏனெனில் ஆதி தான் அனைவரையும் நேரிடையாக மானிட்டர் பண்ண வேண்டும் என கூறியிருந்தான்.

முதல் சுற்றும் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்று முடிவுகளும் உடனடியாக அறிவிக்கப்பட்டது. அதில் தீக்ஷா,யாழினி,ரோஹித் உட்பட தேர்வாகினர். அடுத்த சுற்று ஜி.டி-யில் இருபது மாணவர்கள் ஒரு குழு என பத்து குழுக்களாக பிரிக்கப்பட்டிருந்தனர். மொத்தம் ஐந்து தலைப்பு மாணவர்களிடமே குடுக்கப்பட்டு முடிவு செய்து பேச சொன்னனர். முதல் குழு இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி பற்றி
பேசினார்கள். அடுத்து குழுவில் தான் தீக்ஷா வந்தாள். முதலிலே அவளை ஆதி ஓரிரு நிமிடம் ஆழ்ந்து பார்த்து விட்டு பின்பு என்ன நினைத்தானோ சிறு உதட்டு சுழிப்புடன் பார்த்தவன். அவர்கள் குழு EQ or IQ என்ற தலைப்பை தேர்வு செய்து பேச தொடங்கினர். அடுத்ததாக தீக்ஷா பேச ஆரம்பித்தாள். முதலில் சாதாரணமாக பார்த்துக் கொண்டிருந்தவன் அவளின் தெளிவான ஆங்கில உச்சரிப்பு, சிறிதும் பயம் இன்றி, ஒரு வித நிமிர்வோடு அழகாக பேச பேச அவளின் பேச்சில் மூழ்க ஆரம்பித்து விட்டான் மற்றவர்கள் முன்பு எதையும் காட்டிக் கொல்லாதவாரு. அவள் பேசி முடித்ததும் ஏதோ நினைத்தவனாக உதட்டோரம் மிக சிறு மந்தகாச புன்னகை தோன்றியது. அழகாக அதை மற்றவர்களுக்கு காட்டாமல் மறைத்தவன் “இனி என் பக்கத்தில தான இருக்க போற, உன்ன அப்ப கவனிச்சுக்கிறேன் டி மை பேபி” என்று தனக்குள் கூறிக் கொண்டான்.
------------------------------------------------------------

“ஹாய் அண்ணா,எப்டி இருக்கீங்க, என்னைய சுத்தமா மறந்துட்டீங்கல்ல, நா உங்க மேல செம்ம போவத்துல இருக்கேன். ஆனா உங்களுக்கு தேவையான விஷயத்த மட்டும் கேட்டோனே டீல்ல விட்டுடீங்க” என்று விட்டார் அழுது விடுபவள் போல் அண்ணனிடம் பேசினாள் வைஷ்ணவி.

அவளிற்கு அவள் அண்ணன் ராசு என்றால் அவ்வளவு பிடித்தம். ஆனால் அவன் எப்ப பாரு வேலை வேலை என்று மட்டும் ஓடுபவன். ஆனாலும் வாரம் ஒரு முறையாவது தன் செல்ல தங்கையிடம் பேசி விடுவான். அடிக்கடி நேரில் பார்த்து விட்டும் வருபவன் சில காலமே நேரமின்றி ஓடுகிறான்.

“இல்ல வைஷூ குட்டி, உன்ன எப்டி டா மறப்பேன். லைட்டா பிஸிடா அதான்” என்றான். “சரி ண்ணா.. ஐஞ்சு வருஷம் மேல ஆச்சு நீங்க திருவிழாக்கு வந்து, இந்த தடவ கண்டிப்பா வரனும். ஊர்ல இருந்து நாங்க எல்லாரும் வெள்ளிக் கிழமை காலைல எல்லாம் வந்துருவோம். சோ நீங்களும் கண்டிப்பா வந்து எங்க கூட பத்து நாள் தங்கனும், எல்லாரும் வெளிய போய் ஜாலியா சுத்தலாம் ண்ணா” என்று கெஞ்சிக் மிரட்டினாள். “அவ்வளவு டேஸ் கஷ்டம் டா, பட் உனக்காக முயற்சி பண்றேன்” என்று கூறினான். “அப்பறம் அண்ணா, உங்க ஆளு எப்பவோ ஊருக்கு போய்ட்டா, இந்த தடவை ஆச்சும் வாங்க” என்று தொலைபேசியை அணைத்தாள்.

இங்கு ராசுவோ அவளின் அத்தை மகளினை பற்றிய கனவிற்கு சென்று விட்டான்.

“உன் அன்பின் தன்மைக்கு ஏற்றபடி, உன் செயல்கள் இருக்கும். உன் செயல்களுக்கு ஏற்றபடி, உன் வாழ்க்கை இருக்கும் -சாக்ரடீஸ்”

பூக்கும்.
 

Revathy Murugan

Saha Writer
Team
Messages
8
Reaction score
6
Points
1
புன்னகை 5 :

“அப்பறம் அண்ணா, உங்க ஆளு எப்பவோ ஊருக்கு போய்ட்டா, இந்த தடவை ஆச்சும் வாங்க” என்று தொலைபேசியை அணைத்தாள்.

தங்கை தொலைபேசியை அணைத்தவுடன் அவனின் எண்ணங்கள் எங்கெங்கோ சென்றது. அதில் சுகமாய் தொலைந்தான் தன் அத்தை மகளின் நினைவில். இந்நேரம் என்னை நியாபகம் இருக்குமா இல்ல மறந்துருப்பாளா? தன் நண்பர்களுல் சிலர் தன் அத்தை அல்லது மாமன் மகளை காதலிக்கிறேன் என்று சொல்லி கேட்டிருக்கிறானே. அப்பொழுது எல்லாம் கிண்டல் பண்ணினான்.

“அதெல்லாம் ஓல்டு ஸ்டைல் டா, அது என்ன எப்போ பாரு ஒரு அத்தை மகள் இருந்தா அவள தான் லவ் பண்ணி கல்யாணம் பண்ணனுமா என்ன? அப்ப மத்த ஃபிகர் எல்லாம் கோச்சுக்க மாட்டாங்க? அப்பறம் நம்ம லைஃப் ஒரு ஷார்ட் சர்கில்லையே முடிஞ்சிடும். அப்டியே கலர் கலரா நாலு ஃபிகர பார்த்தோமா சைட் அடிச்சோமா அதுல ஒன்ன மட்டும் கரெக்ட் பண்ணிட்டு மேரேஜ் பண்ணனும் டா, அத விட்டுட்டு டைம் வேஸ்ட் டா” என்று சொல்லி விடுவான். அவன் நண்பர்கள் கூட “நீயும் ஒரு நாள் இப்டி,மச்சான் ஐ ஆம் இன் லவ் வித் மை கஸின் டா னுட்டு சொல்லும் போது பார்த்துக்கிறோம்” என்று சொல்லி ஏகத்துக்கும் சாபம் விட்டார்கள். பின்னே அவர்களின் லவ்வை எல்லாம் கிண்டல் செய்தால்?

அவர்கள் விட்ட சாபம் தானோ என்னவோ நம்ம ராசுவும் காதலில் விழுந்து விட்டான் ஒற்றை பார்வையில். ஆனாலும் கிட்டத் தட்ட மூன்று வருடங்கள் அவள் முன்னால் செல்லாமல் காதலை வளர்த்துக் கொண்டிருக்கிறான். எங்கே நண்பர்களிடம் சொன்னால் கிண்டலில் இறங்கி விடுவார்கள் என்று சொல்லாமல் மறைத்து விட்டான். “மாமன் வரேன்டி சீக்கிரமே என் அத்தை மகளே, வந்து தூக்கிட்டு போரேன் எல்லாருக்கும் முன்னாடி முழு உரிமையோட”. என டூயெட் பாட சென்று விட்டான்.

மூன்று வருடங்களுக்கு முன்னால் தன் தங்கையின் வற்புறுத்தலிற்கு இணங்க மதுரைக்கு சென்றிருந்தான். மதுரையில் தான் பாட்டி வீடும் உள்ளது. சரி இரண்டு நாள் தங்கி விடலாம் என்ற எண்ணத்தில் சென்றான். காரில் பயணம் செய்ததன் பயன் எட்டு மணி நேர பயணம் ஆறு மணி நேரத்தில் சனிக்கிழமை காலை நான்கு மணி அளவில் சித்தி கலையரசியின் இல்லத்தை அடைந்தான். வைஷூ தன் அன்பு அண்ணன் தான் சொன்னதிற்காகவே வந்ததினால் ஏகத்துக்கும் மகிழ்ந்தவள் அவனை விட்டு நகரவே இல்லை.

பயண கலைப்பு தீர தனக்காக என இங்கு அமைக்கப்பட்ட அறையில் தூங்கி எழுந்தவன் காலை பத்து மணி அளவில் வான நிற டீசர்ட் கருப்பு நிற ட்ராக் என மாடியில் இருந்து வேகமாக இறங்கியதால் முன் நெற்றியில் விழுந்த சிகையை அழகாக கோதியபடி இறங்கி வந்தான். “குட் மார்னிங் அம்மா, குட் மார்னிங் சித்தப்பா, இன்னும் அந்த வாலு எழுந்திருக்கலையா” என்று கேட்டவாறு டைனிங் ஹாலில் நாற்காலியை இழுத்து போட்டவாரு உட்கார போனான்.

“அண்ணாாாா” என்று அந்த வீடே அதிரும் படி ஓடி வந்தாள் வைஷூ. “ஹே குட்டிமா பார்த்து டா” என தன்னை நோக்கி ஓடி வந்த வைஷூவை தட்டாமாலை சுற்றி நெற்றியில் இதழ் பதித்தான். இப்பொழுது தான் தன்னுடைய முதலாம் ஆண்டு மருத்துவ படிப்பை, அதுவும் நல்ல மதிப்பெண் எடுத்திருந்ததால் மதுரையில் படித்துக் கொண்டிருக்கும் சுட்டிப் பெண்.

தன் அண்ணனை பார்த்தால் மட்டுமே இவ்வாறு என்று தெரிந்ததினால் அவர்களின் பாச போராட்டற்குள் நுழையாமல் மன நிறைவோடு பார்த்தனர் கலையரசி மற்றும் அவரின் கணவர்..

என்ன தான் தன் அக்காவின் மகனாக இருந்தாலும் கலையரசியின் மூத்த மகன் தான். அவனும் அது போல் தான். “போதும் போதும் வந்து சாப்டுங்க” என்றபடி தன் மகனை பார்த்து பார்த்து கவனித்தார். அவனோ ஒரு படி மேல போய் தன் தங்கைக்கு ஊட்டி விட்டு சாப்பிட ஆரம்பித்தான்.

“அண்ணா இன்னைக்கு காலேஜ் லீவ் தான், வெளிய போவோமா, அப்டியே பாட்டி வீட்டிற்கும் போய்டு ஜாலியா சுத்திட்டு வரலாம்” என்று முகத்தை பாவம் போல் வைத்து கேட்டும் அவளின் அன்பு அண்ணன் வேண்டாம் என்றா சொல்வான்.

“உன் கூட டூ டேஸ் டைம் ஸ்பெண்ட் பண்ண தான் என்னோட இம்பார்டண்ட் வொர்க் எல்லாத்தையும் விட்டுட்டு வந்திருக்கேன். தீஸ் டூ டேஸ் இஸ் யுவர்ஸ் டா” நீ போய் ரெடி அகிட்டு வா” என்று தன் அறைக்குள் சென்று வெளியே செல்வதற்கு ஏற்றவாரு கிளம்பி பத்தே நிமிடங்களில் இறங்கி வந்தான்.

அண்ணனும் தங்கையும் சேர்ந்து முதலில் மாலிற்கு சென்றனர். இன்று பள்ளி கல்லூரிகளுக்கு பெரும்பாலும் விடுமுறை என்பதால் கூட்டம் அலைமோதியது. தன் அண்ணன் உடன் வரும் சந்தோஷத்துடன் அவனின் கையை இறுக பற்றிய படி சுற்றி கொண்டிருந்தாள்.

கேம் விளையாட என ஸ்மாஷ் ஜோனிற்று சென்றனர். சிறு குழந்தை என ஆர்ப்பாட்டம் செய்து விளையாடிய தங்கையை இவன் ரசித்துக் கொண்டிருக்க வேறு இரு கண்களும் விழிகளாலே இவளை தழுவி கொண்டிருந்தது.

மாலில் கேம் ஜோனிற்கு சென்று கிட்டத் தட்ட ஒரு மணி நேரமாக ஆசை தீர விளையாடி விட்டு கடைசி தளத்தில் இருக்கும் ஃபுட் கோர்ட் சென்றனர். இரண்டு மணி நேரமாக தன்னை ஒருவர் பின் தொடர்கிறார் என்றும் தன்னை அறியாமலே ஒருவரின் கோபத்திற்கு ஆளாகிறோம் என்று அறியாமல் தன் அண்ணனின் கையை பிடித்துக் கொண்டு சுற்றி வந்தாள்.

பின்னர் மாலினை விட்டு வெளியேறி ஒரு மணி நேர பயணத்திற்கு பிறகு தன் பாட்டியின் வீட்டு வாசலில் காரினை நிறத்தினான். இன்று வருவதாக எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் இருந்ததால் வாசலில் கார் சத்தத்தில் பாட்டி வெளியில் வந்தார். தன் பேரனை திடீரென்று பார்த்தவுடன் மிகவும் மகிழ்ந்து போனார்.

“ஹே ராசு வாப்பா, மூனு மாசம் கழுச்சு இப்ப தா என் நெனப்பு வருதாயா” என்று தன் பேரனின் முகத்தை பிடித்து கொஞ்சிக் கொண்டிருந்தார். அவனும் பாட்டியின் உயரத்திற்கு ஏற்ப வாகாக முன்னோக்கி குனிந்த படி நின்றிருந்தான் முகன் எல்லாம் கனிவும் பாசமும் பொங்க.

“பாட்டீடீடீ நானும் தான் வந்துருக்கேன், உனக்கு உன் பேரன பாத்தோனே என்னயலாம் கண்ணு தெரியாதே” என பொய் கோபத்தில் முகத்தை திருப்பினாள்.

பாட்டிக்கு தான் தெரியுமே அண்ணன் மேல் எவ்வளவு பாசம் வைத்திருக்கிறாள், அவனை கொஞ்சியதற்கு எல்லாம் கோபம் கொள்ள மாட்டாள் என. எனவே அவரும் வம்பளந்தவாறே “அதான் வந்துட்டல்ல உள்ள போயி உன்னோட சிநேகிதிய பாரு, அவள பாக்க தான வந்துருப்ப” என்றார்.

“ஆமா கிழவி ஆமா, எங்க அம்முவ? “ என்றாள். “தோட்டத்துல போயி பாரு” என்று பேரன் பக்கம் திரும்பினார். இதை எல்லாம் ராசுவும் புன்சிரிப்புடன் பார்த்தவாறு பாட்டியின் கையை பிடித்துக் கொண்டு பேசியபடி வீட்டிற்குள் சென்றனர்.

“ஹே அம்மு” என்று ஓடி சென்று ஷாலுவை கட்டிக் கொண்டாள் வைஷூ. இருவரும் ஒரு வயது என்பதாலும், ஷாலினிக்கு உடன் பிறந்தவர்கள் இல்லை என்பதாலும் சிறு வயது முதலே நெருங்கிய தோழிகளாகவே பழகினர். அதுவும் இருவரும் சேர்ந்தால் அந்த இடம் அவ்வளவு அல்லோல் படும். குறும்பில் இருவரும் ஒருவரை ஒருவர் சலைத்தவர்கள் இல்லை.

“ஹே வாடி, இன்னைக்கு வரேனு ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்ல, காலேஜ் எல்லாம் எப்டி போகுது” என்றவாறு சலசலத்துக் கொண்டு இருந்தனர். ஷாலினியும் தற்போது தான் தனது பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிறாள்.

இருவரும் அடிக்கடி வாட்ஸப், வீடியோ கால் என பேசினாலும் நேரில் பேசிவது போல் வரும்? தன் நண்பர்கள், கல்லூரியில் நடந்தது என இரண்டு மணி நேரமாக வாயாடிக் கொண்டிருந்தார்கள்.

இரவு ஏழு மணியை நெருங்கியும் வராத தங்கையை அழைத்து செல்ல தோட்டத்திற்கு வந்தான் ராசு. அவனுக்கும் ஷாலினி வந்திருப்பது தெரியும். போகும் போது வருவாள்ல அப்போ சொல்லிக் கொல்லலாம் என்று தான் நினைத்தான்.

இன்னும் இருவரும் வரும் சுவடே தெரியவில்லை என்று தான் இங்கு வந்தான். தோட்டத்தை சுற்றிப் பார்த்தவாறு வந்தவனிற்கு தங்கையின் பேச்சுக் குரலும் அதை தொடர்ந்து வந்த சிரிப்பு சத்ததிலும் பார்வையை திருப்பினான். அப்பொழுது தான் இருள் லேசாக படர ஆரம்பித்திருக்க தோட்ட விளக்கு வெளிச்சத்தில் அதிக வேலைப்பாடு அல்லாத வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிற காட்டன் சுடிதாரும், தலையில் முல்லை பூ சூடி, நெற்றியில் விழுந்த சிறு முடி கற்றையை காதோதரம் ஒதுக்கிய படி கண்களில் குறும்பு புன்னகையுடன் வைஷூவிடம் பேசிக் கொண்டிருக்கும் ஷாலுவை வைத்த கண் எடுக்காமல் பார்த்தான்.

இவன் நின்ற இடத்தில் சிறு வெளிச்சம் பரவியதால் சட்டென்று மரத்தின் பின் மறைந்து கொண்டான். சிறிது நேரம் பார்த்து விட்டு தங்கையின் அலைபேசிக்கு குறுந்தகவல் அனுப்பினான்.

“வைஷூ ஆம் இன் கார்டன் ஒன்லி, பட் இப்போ சட்டுனு திரும்பி பார்க்காத, ஒரு டென் மினிட்ஸ் அப்புறம் நான் இங்க இருந்து வீட்டுக்குள்ள போய்டு நான் கார்ல வெய்ட் பண்றேன். இப்ப ரீசன் கேக்காத போரப்போ சொல்றேன்” என அனுப்பினான்.

தன் அலைபேசியில் மெசேஜ் வந்ததை எடுத்து படித்தவள் குழப்பத்தினூடே ஒரு நிமிடம் அமர்ந்தவள் விஷம சிரிப்புடன் “ஓ ஹோ கத அப்டி போகுதா “ என்றவாறு ஷாலினியின் பேச்சில் கவனமானாள்.

சிறிது நேர பேச்சிற்கு பின் தன் அண்ணன் சொன்னவாறு “சரி டி நாங்க கிளம்புறோம். அண்ணா ரொம்ப நேரம் வெய்ட் பண்றாங்க” என்று கூறி அவளை பார்த்தாள். அவளின் எதிர் பார்ப்பு பொய்யாக்காமல் அவளின் கண்களில் சன்னமான ஒளியும் தோன்றி சடுதியில் மறைந்தது.

இவர்கள் இருவரும் நெருங்கி பழகி இருந்தாலும் அவளின் அண்ணன் மேல் உள்ள ஆசையை சொல்லவில்லை. அவளே இப்போது தானே தன் மனதினை சிறு காலமாக தெரிந்திருக்கிறாள்.

மற்றும் அவள் அண்ணனின் மனதும் தெரியாதே.

இருவரும் தோட்டத்தை விட்டு பேசியபடி வீட்டிற்குள் வந்தனர். “சரி பாட்டி, நாங்க கிளம்புறோம்” என்று நகர்ந்தாள். ஷாலினியும் வீட்டை சுற்றி பார்வையை ஓட்டினாள். அவன் தான் காதல் மன்னனாச்சே. சொன்னபடி காரில் தான் இருந்தான்.

“ஹே அண்ணா எதுக்கு மெசேஜ் பண்ணிட்டு காருக்கு வந்துட்டீங்க” என்று காரில் ஏறி தன் பாட்டியின் வீட்டை விட்டு வெளியேறியதும் அண்ணனை பிடித்துக் கொண்டாள். அவனும் கள்ள சிரிப்புடன் “ஹான், உன் ஃப்ரண்ட உனக்கு அண்ணி ஆக்கனும்னு தான்” என்று தங்கையின் புறம் திரும்பி கண்சிமிட்டி சிரித்தான்.

---------------------------------------------------------

தீக்ஷா பேசி முடித்ததும் “இனி என் பக்கத்தில தான இருக்க போற, உன்ன அப்ப கவனிச்சுக்கிறேன் டி மை பேபி” என்று தனக்குள் கூறிக் கொண்டான்.

அதன் பிறகு பைனல் ரௌண்ட் டெக்னிக்கல் நடைபெற்றது. இந்த சுற்று தனியாக தான் நடைபெறும். ஒவ்வொரு மாணவர்களின் புத்திக் கூர்மையையும், அவர்களின் இன்டராக்ஷன், செயல் என ஒவ்வொன்றாக மானிட்டர் பன்னினான். தீக்ஷாவின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் அவனுள் பதிந்து கொண்டிருந்தது. இன்டர்வியு முடிந்து அனைவரும் வெளியேறினர் ADS group of company staffs.

“ஒரு வழியா இன்டர்வியு முடிஞ்சிருச்சு, எப்டி டி பன்னுனீங்க இன்டர்வியு எல்லாம்” என்று தோழிகளிடம் கேட்டாள் யாழினி.

“ஹம் பன்னிருக்கோம் டி, ரிசல்ட் வரட்டும் பாக்கலாம்” என்றதோடு முடித்தாள் தீக்ஷா.

“சரி டி காலேஜ் முடிய ஜஸ்ட் டூ மன்த்ஸ் தான் இருக்கு. பைனல் எக்ஸாம்ஸ் முடிஞ்சதும் ஒரு ட்ரிப் போடலாமா” என்று ஆரம்பித்தால் யாழினி. இனி யார் யார் எங்கே இருப்போமோ, இதே போல் நினைத்த நேரம் பார்க்க முடியுமா என்று யோசித்து தான் சொன்னாள்.

“சரி டி, வீட்ல கேப்போம், ஒரு டூ ஆர் த்ரி டேஸ் மாதிரி பாப்போம், நா டாட் ட கேட்டு அரென்ஜ் பண்ண முடியுமானு சொல்றேன்” என்றாள் தீக்ஷா.

--------------------------------------------------------

கேம்பஸ் இன்டர்வியு முடிவு அடுத்த ஒரு வாரத்தில் அறிவித்தனர். இன்டர்வியு முடிந்து கல்லூரியில் இருந்து விடை பெறும் பொழுது ஒரு வாரத்தில் முடிவு கல்லூரிக்கு அறிவிக்கப்படுவதாகவும், அதன் பிறகு வேலையில் சேருவதற்கான ஆஃபர் லெட்டர் மற்றும் மற்ற தகவல்கள் மாணவர்களுக்கு ஃபார்மர் மெயில் அனுப்புவதாகவும், கூறியிருந்தனர் ஆதியின் கம்பெணி ஹச்.ஆர்(HR) டிபார்ட்மன்ட். அதன்படி முடிவுகள் மட்டும் முதலில் அறிவிக்கப்பட்டது.

“எதைப் பற்றியும் பிறருக்குக் கற்றுக் கொடுக்க என்னால் முடியாது; அவர்களை சிந்திக்க வைக்க மட்டுமே என்னால் முடியும். -சாக்ரடீஸ்.”

பூக்கும்
 

Revathy Murugan

Saha Writer
Team
Messages
8
Reaction score
6
Points
1
புன்னகை 6:

ஹால் ஷோஃபாவில் அமர்ந்திருந்த தீக்ஷா தன் மொபைலில் மூழ்கி இருந்த நேரம் புது மெயிலிற்கான நோட்டிபிகேஷன் “ADS group of companies” என்ற பெயருடன் வந்தது.

பார்த்தவுடனே புரிந்து போயிற்று. ஆஃபர் லெட்டர் என்று. ஒரு பக்கம் மகிழ்ச்சியும், மறு பக்கம் பெற்றோரை பிரிந்து சென்று வேலை பார்க்க வேண்டும் என்று கவலை ஆகவும் இருந்தது.
அன்று ஞாயிற்று கிழமை என்பதால் அவள் தந்தையும் உடன் இருந்தார். திடிரென மகளின் முகம் வாட “என்னடா, ஏன் டல்லா இருக்க மாதிரி இருக்க” என்றார். தந்தையிடம் வேலையில் சேருவதற்கான விவரம் மற்றும் தேதியை சொன்னாள்.“டாட் கன்பர்மேஷன் மெயில் வந்துருக்கு. மே பர்ஸ்ட் வீக் ஜாய்ன் பண்ண சொல்லிருக்காங்க, ஜஸ்ட் டூ மன்த்ஸ் தான் இருக்கு” என்றாள். சிறு புன் சிரிப்புடன் “இந்தா தான இருக்கு சென்னை, ஒரு டூ இயர்ஸ் தான டா, நீயும் போய் ஜாலியா சுத்திட்டு வரலாம்ல? அப்புறம் நம்ம பிஸனஸ்னு நீ பிஸி ஆகிடுவ. எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கும்” என்றார்.“ஹான் டாட், சொல்ல மறந்துட்டேன் எக்ஸாம்ஸ் முடிஞ்சதும் ஒரு சின்ன டூர் போய்டு வரலாம்னு இருக்கோம் ப்ரண்டஸ் எல்லாரும். நீங்க அரென்ஜ் பண்ண முடியுமா? ஒரு இரண்டு அல்ல மூன்று நாள் மட்டும்” என்றாள்.“அதெல்லாம் ஒன்றும் வேண்டாம், உங்கள மட்டும் தனியா அனுப்பி வச்சுட்டு நாங்க இங்க ஒவ்வொரு நிமிஷமும் பயந்துட்டே இருக்க முடியாது” என்றவாறு வந்தார் திவ்யா.அவ அதெல்லாம் காதல் வாங்கினால் தானே. தந்தையிடம் கண் ஜாடை காட்டிக் கொண்டிருந்தாள். அவரும் “என்ன திவி இப்ப என்ஜாய் பண்ணாம வேற எந்த வயசில பண்ண முடியும், அண்ட் சேஃப்டி பண்ணாம நான் தான் விட்டுருவேனா என்ன? “ என்றார்.“ஓகே டா, எக்ஸாம்ஸ் முடியட்டும் பொல்லாச்சி, கோயம்புத்தூர் சைட் போறது மாதிரி அரென்ஜ் பண்றேன், இன்னும் இரண்டு மாதம் இருக்குல்ல பண்ணிடலாம், எவ்வளவு பேர் போறிங்க எப்ப கிளம்பனும் டீடெய்ல்ஸ் மட்டும் பார்த்துட்டு சொல்லு டா, அதுக்கு ஏத்த மாதிரி பாப்போம்.” என்றார்.“ஓகே டாட்” என்றவாறு மொபைலில் நுழைந்து கொண்டாள்.---------------------------------------------------------“கம் டூ மை கேபின்” என்று வழக்கத்தை விட கடினம் கூடிய குரலில் பி.ஏ ஷர்மிளாவிற்கு கூறிய அடுத்த இரண்டு நிமிடத்தில்,“அய்யோ, என்ன ஆச்சுனு தெரியலயே நார்மளா வர சொன்னால நம்மள அந்த பாடு படுத்துவாரு, இதுல இன்னைக்கு ரொம்பபபபபபபபப நல்ல விதமால கூப்பிடுறாரு, இவருக்கிட்ட வேலை பார்க்குறக்கு எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா குவாளிபிகேஷன்லாம் வேணும் போல” என்று தனக்குள் முனுமனுத்தப்படி அவன் முன் வந்து நின்றாள் அவனின் காரியதரிசி.“ எப்டி நம்ம கைக்கு வர வேண்டிய ப்ராஜெக்ட் அந்த கம்பெணிக்கு போச்சு? நம்ம கிட்ட தான் கான்ட்ராக்ட் சைன் பண்றதா சொன்னாங்க, நம்ம வழக்கமா கோட் பண்ற மாதிரி தான அனுப்புனீங்க, இல்ல நம்ம கிட்ட இருந்து யாரு மூலமாகவும் நியூஸ் போச்சா? இல்ல வேற எதுவும் நடந்துச்சா? என்ன பன்னுவீங்களோ எனக்கு தெரியாது, ஒன் டே தான் டைம், ஒன்னு அந்த ப்ராஜெக்ட் நமக்கு வரனும், இல்ல நம்ம கோட் பண்ண அமௌண்ட யாரு அந்த கம்பெணிக்கு இன்பர்மேஷன் குடுத்தாங்கனு கண்டு பிடிச்சு ஆக்ஷன் எடுங்க“என்று அவள் உள்ளே நுழைந்து ஆசுவாசப் படுத்தக் கூட நேரம் தராது கத்த துவங்கினான் ஆதி.ஒரு ப்ராஜெக்ட் போனதால் வந்த கோபம் இல்லை. ஏனெனில் இது போனால் அடுத்த கான்ட்ராக்ட் உடனே கையெழுத்திடவும் முடியும் அவனால். இது ஏமாற்றப்பட்டோம் என்பதால் வந்த ஆத்திரம்.சென்ற மாதம் ஷர்மிளா அவனின் மெயிலிற்கு வந்த நியூ கான்ட்ராக்ட் பத்தின விவரங்கள், அதில் தங்கள் பட்ஜெட் ஒத்து வருபவை, அதை ஒத்துக் கொண்டாள் எவ்வளவு லாபம் பெற முடியும் என ரிப்போர்ட் தயார் செய்து கொண்டிருந்தாள்.ஆதியை பொறுத்த வரை எந்த ஒப்பந்தம் என்றாலும் அதில் கனிசமான லாபம் மற்றும் தகுதியான ஒப்பந்தம் மட்டுமே அவன் பார்வைக்கு வர வேண்டும். இல்லையெனில் ஒவ்வொன்றும் இவனே ஆராய்ந்து செய்ய வேண்டும் எனில் “ உங்களுக்கு எதுக்கு சம்பளம், நானே பார்த்துக் கொள்வேன்” என்று நக்கல் பேச்சிற்கு ஆளாக வேண்டி வரும் என ஒவ்வொன்றையும் மிக கவனமாக, மிக சிரத்தையுடன் பார்த்து கொண்டிருந்தாள்.அப்பொழுது தேர்வு செய்த இரண்டு ஒப்பந்தங்களில் ஒன்று தான் மௌன்ட் காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் வேலை பார்க்க போவது, இன்னொன்று தான் மருத்துவமனை கட்ட வந்ததற்கான ஒப்பந்தம். அது அனைத்து ஸ்பெஷாலிட்டி உடைய கிட்டத்தட்ட பல கோடிகளை உள் வாங்க போகும் மருத்துவமனை.
அதை ஒப்புக் கொண்டு சரியான நேரத்தில், சரியான பட்ஜெடில் முடித்து குடுத்தாள் இதே போல் அடுத்த ஒப்பந்தங்கள் செய்து கொள்ளலாம் என இருந்தது மெயிலில்.எல்லா விவரங்களையும் சரி பார்த்து விட்டு ஆதியின் மெயிலிற்கு அனுப்பி வைத்தாள் ஷர்மிளா. அடுத்த சில மணி நேரங்களில் ஒப்பந்தத்தை ஒப்பு கொள்வதற்கான மெயில் அந்த உரிமையாளரிற்கு அனுப்புமாறு பணித்தான். அதன்படி அனுப்பிய அந்த வாரத்தில் ஒப்பந்தம் கையெழுத்திடலாம் என பதில் அனுப்பினர்.
“எக்ஸ்யூஸ்மி சார்” என்று கதவை தட்டிய மறு நொடி, “எஸ் கம் இன்” என்ற அவனின் கம்பீர குரலில் வழக்கம் போல் ரசித்தவாறே உள்ளே சென்றாள். “சொல்லுங்க ஷர்மிளா, அந்த ஒப்பந்தம் ஓ.கே ஆகிடுச்சு அடுத்து நம்ம மீட்டிங் அரென்ஜ் பண்ணனும், எப்ப பண்ணலாம்னு கேட்க தான வந்துருக்கீங்க” என்று கணினியில் இருந்து பார்வையை திருப்பாது மிக சரியாக அவளை போலவே கேட்டான்.“எல்லாம் தெரிந்தும் க்ராதகா நா மெயில் பாத்துட்டேன், அடுத்து மூவ் பண்ணுனு சொல்ல வேண்டியது தான, நானும் கிட்டத்தட்ட மூனு மணி நேரமா எந்த பதிலும் இல்லைனு இது கேன்சல் தானு ஓடி வந்தா லந்த பாரு,இதுக்கு அந்த சாரே எவ்வளவோ தேவலை போல” என்று மனதிற்குள் அவனை இன்னும் அதிகமாகவே திட்டிக் கொண்டிருந்தாள்.பின்ன அவளும் எவ்வளவு நேரம் தான் வெய்ட் பண்றதாம். வெளியில் அப்பாவி முக பாவத்தில் “நெக்ஸட் வீக் ஃப்ரைடே ஈவ்னிங் அரென்ஜ் பண்ணிடலாம் சார்” என்று வெளியேறினால். அதே போல் அந்த ஒப்பந்தம் மிக நல்ல விதமாகவே டின்னர் உடன் முடிந்தது.அப்படி இருக்கையில் திடீரென அதற்கென ஏற்பாடுகள் செய்து முடிக்கும் தருவாயில் ஒப்பந்தம் ரத்து செய்து விட்டதாகவும், வேறு கம்பெணி அதை விட குறைந்தபட்ச செலவில் ஏற்று கொள்வதால் அங்கே ஒப்பந்தம் கை மாற்றம் செய்வதாக கூறினால் ஆதியை பொறுத்த வரை அந்த கம்பெணியை சும்மா வி்ட்டு வைப்பதே ஆச்சரியம் தான்.“ஓ.கே சார்” என்று அறையை விட்டு வெளியேறினாள்.அவன் சொன்னது போல் சரியாக மறுநாளே அந்த கான்ட்ராக்ட் இவர்களின் கைக்கு சேர்ந்தது மட்டும் அல்லாமல் ஏமாற்றிய கம்பெணியின் சில பல கான்ட்ராக்ட்களும் பறிக்கப்பட்டது.---------------------------------------------------------“என்ன டாட், எனக்கு எவ்வளவு வொர்க் இருக்கு. அத விட்டுட்டு எப்படி என்னால இப்ப முடியும், ஏற்கனவே கொஞ்சம் நேரம் கூட ரெஸ்ட் இல்லாம ஓடிட்டே இருக்கேன்” என்று தந்தையிடம் போராடிட்டே அலைபேசியில் மிக முக்கியமான வேலையில் ஆழ்ந்திருந்தான். பேஸ்புக்கில் பெண்களிடம் கடலை வறுத்துக் கொண்டிருந்தான்.“ஹாய் ஸ்வீட்டி”“ஹாய் பப்ளி”“ஹாய் பேபி” என்று பலவாரு கொஞ்சிக் கொண்டிருந்தான் (“அடேய் நீ பெரிய பிஸ்னஸ்மேன் டா, அப்டி உன்னைய கொஞ்சம் பில்டப் பண்ணலாம்னு பார்த்தா இப்டி வழியிரியே டா, இது மட்டும் உன்னோட வருங்கால பொண்டாட்டிக்கு தெரிஞ்சது தொலஞ்சடா ராசா” என்று அவன் மனசாட்சி ஏகத்துக்கும் எச்சரிக்கை செய்தது)“அதெல்லாம் என் பொண்டாட்டிய சமாளிக்க எனக்கு தெரியும், உன் வேலைய பார்த்துட்டு இரு, இப்ப நான் என் வேலைய பார்க்க போறேன்” என்று அதை அடக்கியவன் அரட்டையை தொடங்கினான்.“நீ செத்தடா” என்றவாறு மனசாட்சி அவனை பார்த்து தலையில் அடித்துக் கொண்டது.சிறிது நேரம் பொறுத்து பார்த்த அவன் தந்தை “இவன் கிட்ட இப்படி எல்லாம் பேசினா வேலைக்காகது என்று எண்ணி குரலில் முயன்று கடுமையை வரவழைத்து “தர்ஷன் உன்னட்ட ஏற்கனவே சொன்னேன், கண்டிப்பா போயே ஆகனும் எந்த ரீசனும் சொல்ல கூடாதுனு” என்றார். தந்தையை பற்றி நன்கு அறிந்தவன் மொபைலை கீழே வைத்து விட்டு “ஓ.கே வில் ட்ரை டூ கம்” என்று ஏதும் அறியா பிள்ளையாக கள்ளத்தனத்துடன் அந்த இடம் விட்டு அகன்றான். பின்னே இன்னும் சிறிது நேரம் இருந்தாலும் தன்னை தந்தை கண்டு கொள்வார் என்று அறிந்தவன் ஆயிற்றே.“மச்சி டுடே நைட் வழக்கம் போல அதே பப் போகலாம், என்னோட ட்ரீட், ஐ ஆம் சோ ஹாப்பி” என்று தன் நண்பன் அஷ்வினை அழைத்து விட்டு தன் புள்ளட்டில் பறந்து விட்டான்.“நாம் செல்லும் மார்க்கம் நல்லதாக இருந்தால், நம்முடைய இலக்கும் தானாகவே நல்லதாகிவிடும் – காந்திஜி”
பூக்கும்.
 

Revathy Murugan

Saha Writer
Team
Messages
8
Reaction score
6
Points
1
புன்னகை 7:

நாட்கள் வேகமாக நகர இன்னும் ஒரு வாரத்தில் இறுதி ஆண்டு ப்ராஜெக்ட் வை.வா என்ற நிலையில் அனைத்து மாணவர்களும் மிக பிசியாக தங்களின் ரிப்போர்ட் தயார் செய்து கொண்டிருந்தனர்.

“ஹே இன்னைக்காது நம்ம ரெகார்ட் சப்மிட் பண்ணனும் டி, இல்லனா அந்த சிடுமூஞ்சி வச்சு செய்யும். வேணும்னே எதாவது சொன்னாலும் கரெக்சன் பாக்க முடியாது, ஜஸ்ட் த்ரீ டேஸ் தான் இருக்கு, எப்டி முடிக்க முடியுமோ?? ” என்று யாழினி புலம்பிய புலம்பலில் கையில் வைத்திருந்த நோட்டில் நன்றாக மொத்தி எடுத்து விட்டாள் தீக்ஷா.

பின்னே ப்ராஜெக்ட் என்ற பேர் வழியில் நன்றாக ஊர் சுற்ற வைத்து விட்டு இப்போது புலம்பினால்.

“இப்ப என்ன சொன்னேனு அடிக்கிற” என்று சிறு குழந்தை போல் உதட்டை பிதுக்கி சினுங்கினாள்.

“உடனே சினுங்காத டி, டுடே முடிச்சிடலாம், அதான் நானும் கூட இருக்கேன்ல, விடு பார்த்துப்போம். இன்னும் கொஞ்ச நாள் தான் அப்பறம் இவங்களை எல்லாம் பார்ப்போமானு கூட தெரியல” என்று மும்முரமாக முடித்தனர்.

காலேஜ் வை.வா முடிந்து கல்லூரியின் இறுதி ஆண்டு தேர்வும் முடியும் தறுவாயில் உள்ளது. இதோ இதுவே இறுதி தேர்வு என்ற நிலையில் தேர்வு அறையை விட்டு வெளியேறினர் மாணவர்கள்.

சிலர் இத்துடன் கல்லூரி முடிந்தது என சந்தோஷ நிலையிலும், சிலர் இனி இதே போல் ஒரு சூழல் அமையுமோ என்ற கவலையிலும், சிலர் அடுத்தது என்ன என்ற விடை தெரியாத கேள்வியோடும் அந்த கல்லூரி மைதானம்,கேண்டீன், என நிரம்பி இருந்தனர்.

அனைவரும் என்ன தான் தொழில்நுட்பம் வளர்ந்து இருந்தாலும் அந்த ஸ்லாம் புக்கை எழுதி முடிக்காதவர்கள் இருக்க இயலாது. இப்போதும் அப்படி தான் யாழினி மற்றும் சில நண்பிகளும் அலும்பு பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

“சரி டீ போதும், என்னமோ கண் காணாத தேசத்துக்கு போக போற மாதிரி, எப்படியும் நெக்ஸட் மந்த் சேர்ந்து தான வேலை பார்க்க போறோம்” என்றவாறு பேச்சை தொடர்ந்தாள் தீக்ஷா. அவளுக்குமே இனி இதே கல்லூரி வாழ்க்கை கிடைக்குமா என கவலை இருக்க தான் செய்கிறது.

ஆனால் இது தன் வாழ்வில் அடுத்த முக்கியமான கட்டத்தில் காலடி எடுத்து வைக்க போகும் தருணம் என மனதை தேற்றிக் கொண்டு அடுத்து தாங்கள் செல்ல போகும் டூர் பற்றிய பேச்சினை ஆரம்பித்தாள். சரியாக அது தற்பொழுது நண்பர்களின் கவனத்தை திசை திருப்பியது.

“வர்ற புதன் கிழமை நைட் கிளம்பினா வியாழன் இயர்லி மார்னிங் நம்ம உடுமல பேட்டை ரீச் ஆகிடுவோம், அங்க இருந்து ரெஃப்ரஷ் ஆகிட்டு தென் நம்ம ஜர்னிய ஸ்டார்ட் பண்றோம், டாட் நமக்கு ஒரு கைட் அரென்ஜ் பண்ணிருக்காங்க, அகெய்ன் சண்டே நம்ம திருச்சி வந்துருவோம்” என கூறி முடித்தாள்.

“அடுத்து திருச்சிய நல்லா சுத்த போறோம் ஜாலியா” என்று மற்றொரு நண்பன் கேட்டான். “யூ ப்யூபிள் வில் என்ஜாய், எனக்கும், யாழி க்கும் அடுத்து ரொம்ப இம்பார்டண்ட் வொர்க் இருக்கு, அடுத்து ஜாப்ல ஜாய்ன் பண்ற வரைக்கும் ” என கண்களில் ஒருவித கனவுடன் கூறினாள். யாழினி அறிந்த விஷயம் ஆதலால் தோழியை பார்த்து சிமிட்டினாள்.

“சரி ஜஸ்ட் ஒன் டே தான் இருக்கு, எல்லாம் பேக் பண்ணிக்கோங்க, கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துப்போம் அப்ப த்ரீ டேஸ் நல்லா என்ஜாய் பண்ண முடியும்” என்று அனைவரும் கிளம்பினர்.

-----------------------------------------------------------

நல்ல தூக்கத்தில் உதட்டில் சிரிப்புமாக கனவில் தன் கனவு நாயகனுடன் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் போது திடீரென தன் முகத்தில் விழுந்த வெயிலின் உபயத்தால் கண்ணை கசக்கிக் கொண்டே எழுந்து அமர்ந்தாள் ஷாலினி.

கண்ணை திறக்கவும் எதிரில் இருந்த பாட்டியை முறைத்தவாறு எழுந்து அமர்ந்தாள். “ஏய் கிழவி உனக்கு ஒரு தடவ சொன்னா கேக்க மாட்டியோ, இங்க வந்ததுல இருந்து என்னோட கால தூக்கமே போச்சு” என்று சத்தமாக கத்தி விட்டு “நல்ல கனவு வந்துச்சு, என் மாமா கூட, எல்லாம் இந்த கிழவினால” என்று திரும்ப போர்வையை இழுத்து போர்த்தினாள்.

அதை பார்த்து இன்னும் கடுப்பான பாட்டி “அடியேய், பங்குனி வெயில் பல்ல காட்டுது, இதுல இழுத்து போத்திட்டு தூங்குற, இன்னைக்கு உங்க சித்து வீட்டு கோவிலுக்கு போகனும்னு சொன்னல்ல, கிளம்பு, இன்னும் கொஞ்ச நேரத்தில அந்த வாயாடியும் அவ தம்பி காரனும் வந்துருங்க” என்று அறையில் இருந்து வெளியேறினார்.

தனக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சியை அறியாது குளித்து முடித்து டார்க் பர்பிள் நிற காட்டன் சுடிதார் அணிந்து, கோயிலுக்கு செல்வதால் தலையை அழகாக பின்னி அதில் மல்லிகை பூச்சூடி, துப்பட்டாவை வலது புறம் மட்டுமே ஃப்ளோட்டின் விட்டு அழகாக மாடியில் இருந்து கீழ் இறங்கி வந்தாள்.

“ஷாலு… “ என்று வந்து கட்டிக் கொண்டாள் வைஷூ.

“எங்கள எல்லாம் நியாபகம் இருக்கா அம்மு” என்று குரல் வந்த திசையில் திரும்பி பார்த்தாள். “மாமா…”என்று சிணுங்கியபடி வந்து வைஷூவின் தந்தை அருகில் அமர்ந்தாள். “உங்க மருமகளுக்கு நம்மலாம் கண்ணுக்கு தெரிவோமா, அத்த மகள பாத்தோனே கட்டிப்ப பிடிச்சிப்பா, அத்தய நியாபகம் இருக்குமா” என்று வந்தார் கலையரசி வைஷூவின் தாயார்.

“அத்த நீங்களுமா” என்று அத்தையிடம் செல்லம் கொஞ்சனாள். “சரி சரி நேரமாகுது, வெயில் ஏறதுக்குள்ள மலைல அங்க போய் சேரனும்” என்று பாட்டி அனைவரையும் கிளப்பினார்.

“நீங்களும் வாங்கனா கேக்க மாட்டேங்கிறீங்க, இங்க தனியா தான இருக்கனும், அப்பாவும் எங்க கூட கிளம்பிட்டாறு” என்றவாறே பொருட்களை காரில் ஏற்ற உதவினார்.

“எனக்கு வயசு திரும்புதாமா, என்னால எல்லாம் மலை ஏற முடியுமா, நீங்க போய்ட்டு வாங்க” என்றார்.

யுனோவா காரின் பின்புறம் வைஷூ மற்றும் ஷாலுவும், அதன் பின்புறம் கலையரசி மற்றும் அவரின் கணவரும், முன் சீட்டில் விஷ்ணு என அமர்ந்திருந்தனர். ஓட்டுனர் சீட் மட்டும் காலியாக இருந்தது.

அனைவரும் காரில் ஏறியும் இன்னும் தன் மூத்த மகனை காணாது “விஷ்ணு அண்ணன எங்க, ஏற்கனவே நேரம் ஆச்சு, இவன் வேற எப்ப பாரு அந்த போனவே காதுல வச்சிக்கிட்டு” என்று மகனை நினைத்து சலித்துக் கொண்டே விஷ்ணுவிடம் கேட்டார்.

“தெரியலம்மா, நா காருல ஏறும் போது போன் கால் வந்துச்சு, பேசிட்டே நடந்து போனாறு” என்று சொல்லும் போதே காரில் ஏறி இருந்தான். கலையரசி விஷ்ணுவிடம் மூத்த மகனை பற்றி கேட்கும் போதே இன்ப அதிர்ச்சியில், இனம் புறியாத படபடப்புடன் அத்தை மற்றும் மாமா முன் எந்த விதமான முக மாறுதலையும் காட்ட இயலாது அமர்ந்திருந்தாள்.

“அத்தான் வந்துருக்காங்கனு இந்த வைஷூ கூட சொல்லவே இல்ல, இருக்கு அவளுக்கு” என்று திட்டிக் கொண்டிருந்தாள்.

“ஆமா அவ கிட்ட நீ போய் சொன்னியா இதுக்கு முன்னாடி, நா உன் அண்ணன லவ் பண்றேனு, சொல்லிருந்தேனா அவ உன்கிட்ட சொல்லிருப்பா” என்றது அவளின் மனசாட்சி.

“இன்னைக்கு கண்டிப்பா வைஷூ கிட்ட நா லவ் பண்றத சொல்லனும் “ என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள். அதை கண்டு மனசாட்சி தலையில் அடித்துக் கொண்டது “கர்மம் கர்மம், லவ் பண்றத மொத உன் அத்தான் கிட்ட சொல்லு, அத விட்டுட்டு அத்த மக கிட்ட சொல்லுதான்” என்று.

அதற்குள் காரில் ஏறிய கலையரசி “எங்கடா போன, எப்ப பாத்தாலும் போன் தானா, சீக்கிரம் கிளம்பு டா, அப்ப தான் ஒன்பது மணிக்குள்ள அங்க போய் சேர முடியும்” என்றார்.

தூரத்தில் இருந்தே ஷாலுவை பார்த்து விட்டு அவளின் முன் தான் இருக்கும் போது முக மாறுதலையும் காண வேண்டும், தன்னை அடையாளம் கண்டு கொள்வாளா, தன்னை அவளிற்கும் விருப்பம் உள்ளதா என்று பல விதமாக யோசித்து தள்ளி நின்று கொண்டிருந்தான். அனைவரும் காரில் ஏறியும் சிறிது தாமதமாகவே வந்தான்.

அவனின் எண்ணங்களை பொய்யாக்காமல் சிறு எதிர் பார்ப்பும், சிறு அதிர்வு சுமந்த முகமும், கண்ணில் ஒருவித நிம்மதியுடனும் தன்னை பார்த்த அந்த ஓரிரு நிமிடங்களில் அவளின் முக மாறுதலை கண்டான்.

கலையரசி பேசுவதை எல்லாம் காதில் வாங்காது ரிவர்வியூ கண்ணாடியை சரி செய்யும் சாக்கில் அதில் ஷாலுவின் முகம் விழ வைத்து, அவளை பார்த்து வசிகர புன்னகையுடன் கண்சிமிட்டி காரை கிளப்பி திருமங்கலத்தில் இருந்து சுமார் இரண்டு மணி நேர தூரத்தில் மேலூரை தாண்டி உள்ள பிரான் மலையை நோக்கி காரை லாவகமாக செலுத்திக் கொண்டிருந்தான் தர்ஷன்.

“மௌனத்தில் உள்ள வார்த்தைகளையும்
கோபத்தில் உள்ள அன்பையும்
யாரால்
உணர முடிகிறதோ
அவர்களே
நமக்கு கிடைத்த
உன்னதமான உறவு”

பூக்கும்.
 

Revathy Murugan

Saha Writer
Team
Messages
8
Reaction score
6
Points
1
புன்னகை 8:

திகைத்த நிலையில் அமர்ந்திருந்த ஷாலினியை ரிவர்வியூ கண்ணாடியில் கண்டவன் கண்சிமிட்டி விட்டு காரை கிளப்பியவன் கைகளில் சீறிப் பாய்ந்தது. தர்ஷன் தன்னுடைய சந்தோஷம், கோபம், அனைத்தையும் தன் காரின் வேகத்தில் தான் காண்பிப்பான்.

வைஷூவின் பேச்சில் தற்காலிகமாக தன் கவனத்தை செலுத்தினாள். ஆனால் ஓர விழிகளில் தர்ஷனை பார்த்து கொண்டிருந்தாள். இதை வைஷுவும்,தர்ஷனும் கண்டும் காணாமல் கவனித்து கொண்டு தான் இருந்தனர். ஓரளவிற்கு மேல் சோதிக்காமல் வைஷூ தான் அமைதியாக வேண்டியதாகியது.

ஒரு மணி நேர பயணம் முடிந்திருந்த நிலையில் கலையரசி “ராசு கொஞ்சம் கடை பக்கம் காரை நிறுத்து பா, நம்ம அங்க போக இன்னும் ஒரு மணி நேரம் மேல ஆகும், அப்பறம் கோயிலுக்கு மலைல ஏற ஆரம்பிச்சுட்டா சாப்ட இன்னும் நேரம் ஆகிடும்” என்று சொன்னதும் சிறு நிமிடத்தில் காரை நிறத்தினான்.

“அம்மா, இறங்கிக்கோங்க, இத விட்டு அடுத்து கடை கஷ்டம் தான், சரியான காடு” என்று தன் சித்தப்பாவை பார்த்து சொல்லிக் கொண்டே இறங்கினான்.

காரில் இருந்து இறங்கிய கலையரசி,வைஷூ,ஷாலு ஒரு புறமும் மற்றொரு புறம் கலையரசியின் கணவர்,விஷ்னு,தர்ஷன் அமர்ந்திருந்தனர்.

“உங்க தம்பி குடும்பம் கிளம்பிட்டாங்களானு கேட்டீங்களா, எங்க வராங்கனு கேளுங்க” என்றார். “பக்கத்து வந்துட்டாங்களாம், நம்ம அங்க போறதுக்குள்ள வந்துடுவாங்க” என்று கலையரசிக்கு பதில் அளித்து விட்டு அனைவருக்கும் சாப்பிட ஆர்டர் செய்தார்.

வைஷூவிடம் ஓரிரு வார்த்தை பேசியபடி காபியை அருந்திக் கொண்டிருந்த ஷாலுவை கண்டவன் விட்டால் தன் அத்தை மகள் பேசமாட்டாள் என்பதை உணர்ந்து “அம்மு, எப்டி இருக்க,காலேஜ் முடிய போகுதுல, அடுத்ததா என்ன பண்றதா ப்ளான் பண்ணிருக்க” என்றவாறு பேச்சை தொடர்ந்தான்.

“ஹான், நல்லா இருக்கேன் அத்தான், ஆமா, நெக்ஸ்ட் ஜாப் தான் போகனும், இல்லனா மாஸ்டர் டிகிரி போடனும்” என பதில் அளித்து விட்டு பேச்சை தொடர்ந்தாள்.

சிறிது நேரத்தில் சகஜ நிலைக்கு திரும்பி எப்பொழுதும் போல் பேச ஆரம்பித்தாள். அவளின் நேர் எதிரில் அமர்ந்திருந்த தர்ஷன் அவள் பேசும் போது காதணி அசைவும், இடையில் முன் நெற்றியில் விழும் முடியை காதோதரம் ஒதுக்கிய பாங்கும், எதார்த்தமாக தன்னை பார்ப்பதும், தான் பார்ப்பது தெரிந்தவுடன் சட்டென தன் நுனி நாக்கை கடிப்பதும் என அவளின் ஒவ்வொரு அசைவையும் பார்த்தும் பார்க்காத படியும் ரசித்துக் கொண்டிருந்தான்.

ஒரு வழியாக சாப்பிட்டு முடிந்ததும் காரை கிளப்பியவன் அடுத்த ஒரு மணி நேர பயணத்ததை குறைத்து விரைவில் பிரான் மலையை அடைந்தனர்.

“அப்பாடா எவ்வளவு பெருசுசு… .இதுல தான் நம்ம ஏறனுமா” என்று தன் விழிகளை அகல விரித்தாள் ஷாலினி. விவரம் தெரிந்து அவள் வரும் முதல் தடவை இது தான்.

“ஹையோ கொல்றாலே, உன்னய யாருடி இவ்வளவு அழகா இருக்க சொன்னது??” என்று இந்த இரண்டு மணி நேரத்தில் இரண்டாயிரம் தடவை கேட்டிருப்பான்.

“ஆமா டா, பார்க்க தான் பெரிசா இருக்கும் ஆனா ஏறும் போது ஒன்னும் தெரியாது,நீ இப்ப தான முதல் தடவை வர. இந்த கோயில்ல இன்னொரு சிறப்பு என்ன தெரியுமா, நம்ம கோயிலயும் தாண்டி மேல தர்கா இருக்கு, இங்க ஹிந்து வரத விட முஸ்லிம்ஸ் தான் நிறைய வருவாங்க, வந்து நைட் தங்கிட்டு மறு நாள் தான் கிளம்புவாங்க, அப்படி அவங்க தங்குறப்போ என்ன நினைச்சு அவங்க வேண்டிக்கிறாங்களோ அது கண்டிப்பா நடந்துருக்குனு சொல்வாங்க” என்று விளக்கம் சொல்ல ஆரம்பித்தார் கலையரசியின் கணவர்.

தன் மாமா சொல்வதை கேட்டுக்கொண்டே சுற்றிலும் பார்வையை சுழற்றினாள். பச்சை பசேல் என்று வளர்ந்து இருந்த மரங்களும், பத்து அடி தூரம் மட்டுமே சிமெண்ட் போடப்பட்ட படிகளும், அதனை அடுத்து மலை ஏறுவதற்கான பாதை தொடங்கியது. பின்புறம் திரும்பியவள் சிறு பிள்ளை போல் குதூகலித்தாள். “ஹை யா, எவ்வளவு மாங்காய் மரம், தென்னை மரம், செம்மையா இருக்குல” என்று பேசியவாறே திரும்பினாள்.

காரில் இருந்து இறங்கியவன் வலது காலை கீழே ஊன்றி இடது காலை சாய்வாக வலது காலின் புறம் ஊன்றி, கைகளை மார்பின் புறம் குறுக்காக கட்டிக் கொண்டு பார்த்து கொண்டிருந்தான் தரஷன்.

ஒரு நிமிடம் ஜெர்க் ஆனவள் மறுநிமிடமே சகஜ நிலைக்கு திரும்பி, “அங்க போகலாமா, அதான் இன்னும் மாமா எல்லாரும் வரலைல அத்தை” என்று கலையரசியிடம் கேட்டாள்.

“இல்லடா அவங்க பக்கத்துல வந்துட்டாங்க, நம்ம மூணு மணிக்கு எல்லாம் கீழே இறங்கிடுவோம், அதுக்கு அப்பறம் போகலாம்” என்று சொல்லும் போதே வைஷூ தர்ஷனை நோக்கி கண் காட்டினாள். முதலில் புறியாமல் இருந்தாள் புறிந்தவுடன் தர்ஷனிடம் சென்று நின்றாள்.

“அத்தான் அங்க போகலாமா ப்ளீஸ், நீங்க சொன்னா மாமா கண்டிப்பா நோ சொல்ல மாட்டாங்க” என்று கண்ணை சுருக்கி கெஞ்சும் குரலில் கேட்கும் போது மாட்டேன் என்றா சொல்வான். அவள் அழகில் மயங்கி இருந்தவன், காரில் ஏறியதில் இருந்து யாரோ ஒருவரை போல் தயக்கத்துடன் இருந்த பொழுது மனம் சிறிது இருந்த சுனக்கம் இப்பொழுது மறைந்தது.

“மேடத்துக்கு இப்ப தான் இந்த அத்தான் கண்ணுக்கு தெரிரேனா” என்று ஒற்றை புருவத்தை ஏற்றி இறங்கினான். அதற்கு பதில் சொல்லாமல் தலை குனிய போனவளை “அம்மு என் கிட்ட பேசுறதுக்கு என்ன தயக்கம்” என்று கேட்ட நொடி சடாரென நிமிர்ந்தாள்.

“சரி சரி முழிக்காத,எப்பயும் போல இரு அம்மு, எவ்வளவு வயசு வந்துட்டாளும் நா உன்னோட அத்தான் தான், நீ என்னோட அத்தை மகள் தான்” என்று சொன்னான். ஏதோ அவள் தன்னிடம் காட்டும் தயக்கம் பிடிக்கவில்லை.

“கீழ இயங்கும் போது கண்டிப்பா போகலாம், அதுக்கு நான் கேரண்டி” என்றான்.

இங்கு இவர்கள் இருவரையும் கவனித்து கொண்டு இருந்த கலையரசியின் கணவர் “என்னவாம் நானும் வந்ததுல இருந்து பாக்குறேன், உன்னோட பெரிய மகன் பார்வையே சரி இல்லையே, அம்முவ பார்வைலையே முழுங்கிடுவான் போல, இந்த வாலஉ வாலு என்னனா இவன பார்க்குறதுக்கு முன்ன நல்லா இருந்துச்சு, இப்ப பேய் அடுச்ச மாதிரி ஒரு தினுசா இருக்கு” என்று கலையரசியிடம் விசாரித்துக் கொண்டு இருந்தார்.

“நீங்க வேற சும்மா இருங்க அவனுக்கு பாம்பு காது, அப்பறம் உங்கள விட மாட்டான்” என்று சொல்லும் போதே
ஷாலுவிடம் பேசியபடி சித்தப்பாவின் அருகில் வந்தவன் “என்ன ம்மா உங்க லவ்ஸ் இங்கயுமா, கோவில்ல வச்சு ரொமான்ஸ் அதும் பக்கத்துல பிள்ளைங்க இருக்கும் போதே” என்று வம்பை தொடங்கினான்.

“நான் சொன்னேன்ல இவன் கிட்ட மாட்டுனா ஏடா கூடாமா பேசுவானு, அனுபவிங்க” என்பது போல் பார்வையை செலுத்தியவர் காரில் இருந்து பொருட்களை எடுக்கும் சாக்கில் அகன்றார்.

“ஏண்டி இந்த அத்தான் இப்டி மாமாவ பேசுறாரு, அதும் எல்லாரையும் வச்சிக்கிட்டு” என்று வைஷூவின் காதை கடித்தாள் ஷாலு.

“விடுடி சும்மா ஜாலிக்கு தான, அப்பா இதெல்லாம் கண்டுக்க மாட்டாரு” என்று பேசும் பொழுதே சர்ரென ஒரு கார் இவர்களின் அருகில் நின்றது.

காரில் இருந்து இறங்கிய ஐம்பது வயது மதிக்க தக்க ஒரு ஆணும், அவரை விட சில வயது குறைவுள்ள ஒரு பெண்மணியும் இறங்கினர்.

“என்ன அண்ணா ரொம்ப நேரம் ஆகிடுச்சா” என்றபடி இறங்கியவர் கலையரசியின் கணவர் ராஜசேகரின் தம்பி . அவரை தொடர்ந்து வந்த அவரின் மனைவியும் “நல்லா இருக்கீங்களா மாமா, அக்கா” என்று வந்தவரின் கண்கள் ஷாலினியை அளந்தது.

அவரின் பார்வையை புரிந்து கொண்டவர் “இது என்னோட அண்ணா மக, லீவுக்காக வந்துருக்கா, நீங்க சின்ன பிள்ளையா இருக்கும் போது பார்த்துருப்பீங்க” என்று பதில் அளித்தார் கலையரசி.

இறுதியில் காரில் இருந்து இறங்கினான் இருபத்தி ஐந்து வயது மதிக்கத்தக்க அழகான இளைஞன். “என்னடா அங்கயே நின்னுட்டு இருக்க, வா” என்று தன் மகனை அழைத்தார். இறங்கி வந்தவனின் பார்வை ஷாலு மேலே படிவதை உணர்ந்த தர்ஷன் எழுந்த கோபத்தை கட்டுப் படுத்த இயலாது, “வைஷூ, அம்மு வாங்க, நாங்க முன்னாடி நடந்துட்டு இருக்கோம் வாங்க ம்மா நீங்க” என்று நடந்தான்.

“இவன் வருவாங்கனு எனக்கு தெரியாதுடி, ஒரு அண்ணன் மாதிரியா இருக்கான்” என்று வைஷூவும் முன்னால் நடக்க தொடங்கினாள்.

இன்னும் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தவளை “அம்மு உனக்கு தனியா வேற சொல்லனுமா வா போகலாம்” என்று கையை பிடித்தான்.

முதல் ஸ்பரிசம் பெண்ணவளை என்னவோ செய்ய மந்திரத்திற்கு கட்டு பட்டவள் போல் அவனுடன் நடக்க தொடங்கினாள்.

“ஒரு ஆணின் உண்மையான அன்பை ஒரு பெண் உணர்ந்து விட்டாள் என்றாள் அந்த ஆணை விட அதிர்ஷ்டசாலி எவரும் இல்லை”

பூக்கும்.
 
Top Bottom