Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BK NOVEL கடவுளைச் சந்திக்கும் நாள் - Tamil Novel

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

 
Last edited:

RS DHAR

Member
Vannangal Writer
Messages
31
Reaction score
22
Points
8
183490710_10223410810553025_2615561327604994952_n.jpg


நுழைவதற்கு முன்னால்....



ஜெகந்நாத் - - இந்தியாவில் பிரபலமான இந்து கடவுளான மஹாவிஷ்ணுவின் மற்றொரு பெயர் …….



“ஜக்கர்நாட் (Juggernaut) ” என்ற ஆங்கிலச் சொல் இரக்கமற்ற, அழிவுகரமான மற்றும் தடுத்து நிறுத்த முடியாததாகக் கருதப்படும் ஒரு நேரடி அல்லது உருவக சக்தியாகும். இந்த பயன்பாடு பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தோன்றியது.



சமஸ்கிருத காவியங்களில் காணப்படும் மஹாவிஷ்ணுவின் பெயர்களில் ஒன்றான ஜகத் ("உலகம்") மற்றும் நாதா ("இறைவன்") ஆகியவற்றை இணைத்து சமஸ்கிருத ஜகந்நாத "உலக இறைவன்" என்பதிலிருந்து இந்த வார்த்தை உருவானது.



நம் மஹாவிஷ்ணுவைப் பற்றித் தெரியாத அயல்நாட்டு மக்கள் ஜக்கர்நாட் (Juggernaut) என்ற வார்த்தையை வரையற்ற மாபெரும் சக்தி என்ற பொருளில் குறிப்பிடுகிறார்கள்.

=========================

சுதர்ஸன சக்ரத்தின் வடிவத்தை பண்டைய இந்தியாவின் வட்ட வடிவ ஆயுதங்களிலிருந்து, பகவான் மஹாவிஷ்ணுவின் பல ஆயுத வழிபாட்டு உருவங்கள் வரை, பின்னர் இடைக்காலத்தில் சக்ரம் என்று பல்வேறு வழிகள் மூலம் கண்டறியலாம்.


இந்தக் கதையில் விவரிக்கப்பட்டுள்ள பல சம்பவங்கள் சற்று வித்தியாசமான வடிவத்தில் நிகழ்ந்திருக்கலாம். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி, பகை நன்கு அறியப்பட்ட உண்மை,


எனது புனைகதை முக்கியமாக இந்த இரு நாடுகளிடையே கனன்று கொண்டிருக்கும் மோதலை அடிப்படையாகக் கொண்டது.

=========================


இந்த புத்தகம் இந்து மதத்தை புகழும் கதை இல்லை என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.


அதேபோல, வேறு எந்தவொரு குறிப்பிட்ட மதத்தையும் பாராட்டவோ, இழிவுபடுத்தவோ நான் முற்படவில்லை.



புனைகதையின் ஒரு படைப்பான இந்தக் கதை, சிலரின் சாகசங்களை விவரிக்கிறது, குறிப்பாக கதாநாயகன் அவினாஷ் ஜெகந்நாதனின் சாகசங்கள்.


= == = சாகசம் நாளை தொடங்கும்
 

RS DHAR

Member
Vannangal Writer
Messages
31
Reaction score
22
Points
8
முதல் அத்தியாயம்

சதியின் ஆரம்ப வித்து

தில்லியின் வஸந்த் விஹார் பகுதியில் இருந்த 'காவேரி நர்ஸிங் ஹோம்' நுழைவாயிலில் சின்ன பெயர்ப் பலகையைத் தவிர வேறு அலங்காரங்கள் இல்லை. உள்ளே நுழைந்தவுடன், ரிஸப்ஷன் ஹாலில் இரண்டே பேர் அமர்ந்து அங்கிருந்த செய்தித்தாள்களை நோட்டமிட்டுக் கொண்டிருக்க, உயரே சுவரில் மாட்டப்பட்டிருந்த டிவியில் ஹேமமாலினியை தர்மேந்திரா சப்தமே இல்லாமல் கொஞ்சிக்கொண்டிருந்தார்.


ரிஸப்ஷனிஸ்ட் இளையவளாக, கச்சிதமாக வாரிய தலைமுடியுடன் நகங்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவள் அவினாஷ் நுழைந்தவுடன் அவனைப் பார்த்து சிக்கனமாகப் புன்னகைத்து விட்டு, "எஸ், மே ஐ ஹெல்ப் யூ ?" என்றாள். அவினாஷ் அவளருகே சென்று சன்னமான குரலில் பேசியவுடன், அந்தப் பெண் சட்டென எழுந்து உள்ளே சென்று, சில வினாடிகளில் வெளிவந்து, "யூ மே கோ இன்" என்றாள்.


உள்ளே நுழைந்த அவினாஷைப் பார்த்துவிட்டு, கையிலிருந்த BMJ இதழை மேசை மேல் வைத்த டாக்டர் ஷர்மா, அவனை உட்காரச் சொல்லிவிட்டு, மேசை மேலிருந்த இண்டர்காமை எடுத்து ஒத்தி, "நீர்ஜா, நோ விஸிட்டர்ஸ் ஃபார் அனதர் 20 மினிட்ஸ்" என்று சொல்லி பதிலை எதிர்பார்க்காமல் துண்டித்தார்.


இருக்கையைச் சரி செய்துகொண்டு, "மிஸ்ரா உன்னிடம் விவரம் சொன்னாரா?" என்றார். வயது 60-க்கு மேலிருக்கும் என்றாலும், பிசிறுதட்டாத கம்பீரமான குரல்.


"இல்லை ஸார், உங்களைச் சந்திக்க உடனே செல்லவேண்டும் என்று மட்டுமே எனக்கு அவர் இட்ட கட்டளை"


"நம் ராம் சந்தர் ராவ் பற்றியும் அவருக்கு இருக்கும் அச்சுறுத்தல்கள் பற்றியும் நான் சொல்லவேண்டியதில்லை. உனக்கு என்னைவிட நன்றாகவே தெரிந்திருக்கும். நான் சொல்லப்போவது வேறு சில விஷயங்கள். இவர். தைரியமானவர். மக்கள் நலனுக்குக்காக நிறைய விஷயங்கள் செய்தவர் என்பதெல்லாம் நம்மிருவருக்கும் தெரியும்”.


“முந்தைய பிரதமர் எப்போது காஷ்மீர் விவகாரத்தை ஒழுங்கு செய்தாரோ அதிலிருந்து பிரச்சனைகள் தொடர்கின்றன. விவரம் தெரிந்த உன் போன்ற ஆசாமிகளுக்கு விளக்கம் தேவையில்லை. தற்போதைய பிரதமர் பதவி ஏற்கும் முன்னரே எனக்கு, அவருடைய நெடுநாளைய மருத்துவர் என்ற ரீதியில், சில விஷயங்கள் தெரிய வந்தன. அவருடைய பாதுகாப்புக் கருதி எதையும் சொல்லக்கூடாது என்பது எனக்கு வந்த வேண்டுகோள். கட்டளை என்று கூட வைத்துக் கொள்ளலாம். இதையெல்லாம் செய்தது யார் என்றால் சாட்சாத் மிஸ்ராவேதான்”.


“தற்போதைய பிரதமருக்கு மட்டுமல்ல, உலகின் மிகப் பெரும் பணக்காரர்களில் ஒருவரான ராம் சந்தர் ராவுக்கும் நான்தான் பல வருடங்களாகவே குடும்ப மருத்துவர்" என்ற டாக்டர் ஷர்மா அவினாஷ் எதுவும் பேசாததால் தொடர்ந்தார்.​


"இப்போது அதே மிஸ்ராவிடமிருந்து உன்னை நம்பி நான் சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று நேற்றிரவு தகவல் வந்தது."

"ராம் சந்தர் ராவ் மூன்று சகோதரர்களுடன் பிறந்த ஒரு க்வாட்ருப்லெட் (quadruplet) தெரியுமா? நான்கு பேருமே பயாலாஜிக்கல் க்வாட்ருப்லெட்ஸ். இவர்கள் நால்வரும் பிறந்த ஒரு மணி நேரத்திலேயே இரண்டு குழந்தைகள் இறந்துவிட்டன".


"64---65 வருடங்களுக்கு முன்னர் இப்போது இருப்பது போன்ற மருத்து வசதிகள் எதுவும் இல்லாததால், ஹிமாச்சலப்பிரதேசத்திலுள்ள அந்தக் கிராமத்தில் ஒன்றுமே செய்ய முடியவில்லை. பெற்றோர் அதிகம் விவரம் புரியாத / தெரியாத கிராமத்து விவசாயிகள். எனவே, இரண்டு குழந்தைகள் மட்டுமே பிழைத்தன. சரி, விஷயத்துக்கு வருகிறேன்....."


"அந்த இரு குழந்தைகளில் ஒருவர் நம் ராம் சந்தர் ராவ் என்றால் அவருடைய இன்னொரு சகோதரர் எங்கே? இவர்கள் இருவரும் ஒரே மாதிரியான உருவம் கொண்டவர்கள் என்ற காரணத்தினால் இன்றைய காலகட்டத்தில் உண்மை வெளிவந்திருக்குமே, ஏன் வரவில்லை ? இது யாருக்குமே தோன்றும் கேள்விதான்”.


“இதற்குக் காரணம் இந்தக் குழந்தைகளின் தாய்வழி மாமாதான். அப்போதே பம்பாயில் பெரிய அளவில் வியாபாரம்செய்து வந்தவர், தங்கை மேல் உள்ள பாசத்தினால் செய்தி கேட்டு அந்தக் கிராமத்திற்கு விரைகிறார். இந்தக் குழந்தைகள் பிறப்பு / இறப்பு சமாச்சாரம் அவரைக் அசைத்துவிட்டது”.


“கிராமத்திற்கு சென்று தப்பிப்பிழைத்த இரு குழந்தைகளையும் தான் வளர்ப்பதாக உறுதியளிக்கிறார். இதற்காகவே காத்திருந்தது போல அந்தத் தங்கையும் (குழந்தைகளின் தாய்) உடல்நலக் குறைவால் அடுத்த இரு தினங்களில் இறக்கிறார். இரண்டு பச்சைக் குழந்தைகளுடன் செய்வதறியாமல் நிற்கும் தன் தங்கையின் கணவரையும் அழைத்துக் கொண்டு பம்பாய் வந்துவிடுகிறார்.


“என்ன காரணத்தினாலோ அதில் ஒரு குழந்தை மட்டுமே நன்றாகப் படிக்கிறது. இரு குழந்தைகளையும் வெளியுலகத்தின் கண்ணில் காட்டாமல் வளர்க்கிறார் அந்த தாய் மாமா. ஒரு காலகட்டத்தில் படிப்பதில் ஆர்வம் உள்ள குழந்தை வியாபார உலகில் நுழைந்து, தன் அறிவுக்கூர்மையால் புகழ் பெறுகிறது. நேர்மையான எண்ணத்தினால் விரைவான வளர்ச்சி கண்டு படிப்படியாக வளர்ந்து இன்று இந்திய நாட்டின் மிக முக்கியமான பிஸினஸ் டைகூன் (business tycoon) ஆகிவிட்ட அந்தக் குழந்தைதான் நம்முடைய டாபிக்....."


“இருவரின் தந்தையும் அவர்களது பள்ளிப்படிப்பின் போதே காச நோயால் மறைந்துவிட, இரு சகோதரர்களின் பிணைப்பும் மிக அதிகரித்துவிடுகிறது. ஒருவருக்காக மற்றொருவர் எது வேண்டுமானாலும் செய்யக்கூடியவராகிறார்கள். அவர்களுடைய மாமா இரு சகோதரர்களில் ஒருவரை மற்றொருவரின் நிழலாக்குகிறார். ஸ்ரீனிவாஸ் ராவ், மகிழ்வுடன் தன்னுடைய புத்திசாலி சகோதரன் ராம் சந்தர் ராவின் நிழலாகிறார்.


இதெல்லாவற்றையும் இப்போது நினைக்கும்போது அந்தச் சகோதரர்களின் மாமா எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி என்று தோன்றுகிறது”.


“இரு சகோதரர்கள் என்பது மிகச் சிலருக்கே தெரிந்த விஷயம். தன் சகோதரர் எங்கெல்லாம் சோர்ந்துபோகிறாரோ அங்கெல்லாம் தெளிவாக அவருக்கு மாற்றாக உடனே வருகிறார். மற்றொருவர் இன்று வரை இது தொடர்கிறது. அந்தத் தாய்மாமா சில வருடங்கள் முன் இறந்தபின், அவர் திருமணமே செய்துகொள்ளாத நிலையில் திரளான சொத்து சகோதரர்கள் வசம் வருகிறது....."


"புரிகிறது, டாக்டர், பிஸினஸ் ஆரம்பித்து, கிடுகிடுவென இருபது வருடங்களில் இந்த அசுர வளர்ச்சி. ராம் சந்தர் ராவ் உலகின் நான்காவது பெரிய பணக்காரர் என்று கேள்விப்பட்டேன். இவரும் பில் கேட்ஸ் போல நிறைய ட்ரஸ்ட்கள் அமைத்து இந்தியாவுக்கு, அதன் மக்களுக்கு ஏகமான நன்மைகள் செய்யும்போது, அவரைக் கொல்ல வேண்டும் என்ற வெறி ஏன் டாக்டர்?"


டாக்டர் ஷர்மா அவினாஷை ஒருமுறை நிமிர்ந்து பார்த்து சிரித்தார், "ராம் சந்தர் ராவின் பிஸினஸ் அவர் மாமாவைப் பார்த்து வளர்ந்ததினால் வந்தது என்பதை என்னிடம் பலமுறை சொல்லியுள்ளார். பிஸினஸில் போட்டி உலகமெங்கும் சர்வசாதாரணமாக நடக்கிறது. இண்டஸ்ட்ரியல் எஸ்பினாஜ் (industrial espionage) என்று தொழில் சார்பாக உளவுபார்க்கும் வேலை நடக்காத நாடு உண்டா? பிஸினஸில் போட்டி பொறாமைகள் இல்லாத பிஸினஸ்தான் உண்டா? ராவைப் பொறுத்த வரை எல்லாமே அபவ் போர்ட் (above board). எதிலுமே நேர்மையான, நியாயாமான வேலைகள்தான், திரைமறைவு வேலைகள் கிடையாது”.


“அதனால்தான் அவருக்கு சொத்தோடு புகழும் கேட்காமாலே சேருகிறது. இனி மேற்கொண்டு விவரங்கள் வேண்டாம். விஷயத்துக்கு வருகிறேன். ராம் சந்தர் ராவ் சமீபத்தில் காஷ்மீர் புணரமைப்புக்கு நிதி கிடைக்கும் வகையில் மிகப் பெரிய தொழிற்சாலை ஒன்றை அங்கே தொடங்கவிருப்பது பாகிஸ்தானுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. இந்தத் தொழிற்சாலைக்கு மத்திய அரசின் ஒப்புதலும் கிடைத்துவிட்டது.


இன்னும் சிறிது நாட்களில் அந்தத் தொழிற்சாலையின் முதலாம் யூனிட்டைத் திறக்க மத்திய நிதி அமைச்சரும், பிரதமரும் சேர்ந்து வருகிறார்கள்......" டாக்டர் தொடரும் முன் அவினாஷ் இடையில் வெட்டினான்.


"மன்னிக்க வேண்டும் டாக்டர், இது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு, அந்த ஊரின் மேம்பாட்டுக்கு வரவிருக்கும் ஒரு ஏற்பாடு. இதில் பாகிஸ்தானின் தலையீடு ஏன் ?" என்றான் புரியாமல்.


"நீ பாதுகாப்பு விஷயங்களில் பெரிய ஆள் அவினாஷ். ஆனால், உனக்கு இது தெரியாதென்றால் ஆச்சரியம்தான். இது போன்ற எக்கனாமிக் டீஸ்டெபிலைஸேஷன் (economic destabilization) என்ற பொருளாதார சீர்குலைவு வேலைகளை அவர்கள் தொடர்ந்து செய்தால்தானே அங்கிருக்கும் மக்களுக்கு வேலை வசதி வாய்ப்பு சரிவரக் கிடைக்காது, எல்லை தீவிரவாதம் மேலும் வளரும், அங்குள்ள மக்களுக்கு மத்திய அரசின் மேல் தீராத அதிருப்தி இருந்து கொண்டே இருக்கும். லுக், இது நாள் வரை எப்படியோ, இனி இந்த அரசாங்கம் அதை அனுமதிக்க விடாது...."


"மறுபடியும் குறிக்கிடுகிறேன். இதில் ராம் சந்தர் ராவின் உயிருக்கு எப்போது ஆபத்து வரும்? மேலும் அவர் அவர் சகோதரர் ஸ்ரீனிவாஸ் ராவின் பங்கு இதில் என்ன? எங்களுக்கு இதில் என்ன அஸைண்மென்ட்? தெரிந்து கொள்ள மிக ஆர்வமாக உள்ளேன்" என்றான் அவினாஷ்.


டாக்டர் ஷர்மா புன்னகைத்தார், "வந்துவிட்டேன், அந்த விஷயத்துக்கு வந்துவிட்டேன். அதற்கு முன் உனக்கு இதன் பின்னணி முழுவதும் சொல்ல வேண்டும் என்பது மிஸ்ராவின் அன்புக் கட்டளை. அவ்வளவுதான்”.


“இந்த புதிய தொழிற்சாலையின் திறப்புக்கு முன்னால் நாளை மறுநாள் தில்லியில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு ராம் சந்தர் ராவ் சிறப்பு விருந்தினராக வருகிறார். ஏனென்றால் அதன் ட்ராஃபி அவர்களுடைய வியாபார நிறுவனத்தைச் சார்ந்ததாகும். இந்தியா - இங்கிலாந்து மோதும் போட்டியில், வெற்றி பெரும் அணிக்கு ராவ்தான் பரிசுகளை வழங்குகிறார். பாதுகாப்பு ஏற்பாடுகளை உன் தலைமையில் மிஸ்ரா ஏற்பாடு செய்வதால் முழு போலீஸ் படையும் அன்று உன் கட்டுப்பாட்டில்தான் இருக்கும். இந்தப் போட்டியில் ......." மேலும் ஒரு 20 நிமிடங்கள் முக்கியமான சில விஷயங்களைக் கூறிவிட்டு விடைகொடுத்தார் டாக்டர் ஷர்மா.


புறப்படும் முன் அவினாஷ், "ஒரு முக்கியக் கேள்வி டாக்டர், இதில் ஏன் ராம் சந்தர் ராவ் பங்கு கொள்ள வேண்டும்? அவருக்குப் பதில் அவருடைய இரட்டைச் சகோதரர் ஸ்ரீனிவாஸ் ராவ் பங்கு கொள்ளலாமே?"


தலையாட்டிவிட்டு டாக்டர் ஷர்மா சொன்னார், "இதை ஏற்கனவே மிஸ்ரா பெரியவரிடம் சொல்லிவிட்டார். சில விஷயங்களில் பெரியவர் பிடிவாதம் மிகவும் அதிகமாக இருக்கும். அதில் இதுவும் உண்டு. தான் சென்றே ஆகவேண்டும் என்று அவர் பிடிவாதம் பிடித்ததினால்தான் உன்னிடம் இவ்வளவு உண்மைகளையும் சொல்ல வேண்டியாதாயிற்று."


டாக்டர் ஷர்மாவுடனான சந்திப்புக்குப் பிறகு மிஸ்ராவின் அலுவலகத்தில் பாதுகாப்பு படையினர் சகிதம் தில்லி நகர காவல் துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை வெகு நேரம் நடந்தது. பிறகு, மிஸ்ராவுடன் அரைமணி நேரம் தனியே பேசிவிட்டுக் கிளம்பினான் அவினாஷ்.

=============================​


போட்டி நாள் அன்று கிரிக்கெட் அரங்கில் பாதுகாப்பு அமைப்புகள் பலமாக அமைக்கப்பட்டு, மைதானத்தின் அருகேயுள்ள உயரமான கட்டிடங்களின் மேலெல்லாம் ஸ்னைப்பர்ஸ் எனப்படும் தனிப்பிரிவினர் சக்திவாய்ந்த துப்பாக்கிகளுடன் நிறுத்தப்பட்டார்கள். கிட்டத்தட்ட ஒவ்வொருவரையும் தனித்தனியாகச் சந்தித்து பேசி, ஆலோசனைகள் வழங்கியது அவினாஷின் தலைமையிலான குழு.

================================

= = சாகசம் நாளை தொடரும்
 

RS DHAR

Member
Vannangal Writer
Messages
31
Reaction score
22
Points
8
இரண்டாம் அத்தியாயம்

தீவிரவாதத் தாக்குதல்

185251110_10223424840423763_6440895053649815880_n.jpg

அவினாஷ் சொல்வதை நம்ப முடியாமல் திகைத்தார் கோகுல் மிஸ்ரா.


"நம் ஆப்கானிஸ்தான் ஸோர்ஸ் மிக நம்பகமானதுதான் ஸார், எனக்கு இப்போது ஒரு என்க்ரிப்டட் (encrypted) மின்னஞ்சல் வந்தது. அதுதான் உடன உங்களிடம் வந்தேன்" என்றான் அவினாஷ்.

"எஸ்"ஸிடமிருந்து வந்த செய்தி?

'காப்டனுக்கு அஜீரணம் வர வாய்ப்பிருக்கிறது. கவிஞர் புகைப்பிடிப்பதால் வரும் தொந்தரவு.'

அவ்வளவுதான் செய்தி.

இதைப்போன்ற சங்கேத வார்தைகளை அடிக்கடி படித்துப் படித்து சட்டென புரிந்துகொண்டான் அவினாஷ்.

'காப்டன்' என்பது நிறுவனத் தலைவர்.. 'அஜீரணம்' - அத்துமீறும் செயல் - பொதுவாக உயிர்ச் சேதம்.

'கவிஞர்' என்பது காலித் பற்றியது. இந்தியாவில் உள்ள பிரபல கவிஞரின் பெயரில் உள்ள சர்வதேசக் கொலையாளி. காண்ட்ராக்ட் கில்லர் எனப்படும் காசுக்காக எதையும் செய்யும் ஒரு விபரீதமான பிறவி. 'புகைபிடிப்பது' என்பது - துப்பாக்கி உபயோகிப்பது.


பெரியவர் ராம் சந்தர் ராவிடம் விஷயத்தைச் சொன்னால் உடனே பகவத்கீதை அல்லது ஏதாவது புராணத்திலிருந்து மேற்கோள் காட்டி, "மக்களுக்கு உண்மையாகவே நல்லது செய்ய நினைக்கும்போது இதெல்லாம்எதிர்பார்த்ததுதான்" என்று சொல்லி சிரிப்பார்.

"அவினாஷ், இது தற்சமயம் வேறு யாருக்கும் தெரியவேண்டாம். இந்த செய்தியை நீ நேரில் வந்து சொன்னது நலம். ஃபோன் பரிவர்த்தனைகள் இது பற்றி இனி எப்போதும் வேண்டாம்" என்றார் கோகுல் மிஸ்ரா.

"பாதுகாப்புக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டேன் சார். மேட்ச் நடக்கும் மைதானத்திற்கு நம் பாதுகாப்பு ஆட்களுடன் நானும் இருப்பேன்" என்றான் அவினாஷ்.

"நல்லது. எதுவும் கைமீறிப் போகாமலிருக்க ஆண்டவனை வேண்டிக்கொள்வோம்" என்று சொல்லிப் புன்னகைத்தார். மிஸ்ரா.

=============================

மைதானத்தில் ராம் சந்தர் ராவ் எளிமையான கதர் குர்தா அணிந்து மேடைக்கு வர, அவினாஷ் அவரருகே சென்றான், "ஸார், நீங்கள் பாத்ரூம் செல்வதானால் கூட எங்கள் ஆட்களை உங்களுடன் வர அனுமதியுங்கள். தயவுசெய்து உங்கள் ஒத்துழைப்பு தேவை" என்றவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு புன்னகையுடன் சொன்னார்,


"அவினாஷ், என்னால் உங்கள் அனைவருக்கும் சிரமம். உங்களுக்கு வந்த தகவல் பொய்யாக இருக்கலாம் இல்லையா? அப்படி இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன்" என்றார். அவினாஷ் தலையாட்டினான்.


"உண்மை ஸார்,ஆனால், நாங்கள் ரிஸ்க் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. உங்கள் உயிர் இந்த நாட்டுக்கு மிக்க அவசியம், ஸார்" என்றான் குரலில் உண்மையுடன்.


====================================

குறித்த நேரத்தில் மாட்ச் ஆரம்பிக்க, அவினாஷ் மிஸ்ராவை நோக்கி கட்டை விரலை உயர்த்திக்காட்டினான்.


முதலாவது பவர் ப்ளே இடைவெளியில் ராம் சந்தர் ராவைச் சந்தித்த போது, "தேங்க்ஸ், அவினாஷ், ஐ மீன் இட்" என்றார். "ஸார், இது எங்கள் கடமை" என்று சிரித்தான் அவினாஷ்.

=====================================

பரபரப்பான ஆட்டத்தின் முடிவில், இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிப்பு வர, அவினாஷை நோக்கி இந்திய கேப்டனின் உதவியாளர் வந்தார், "ஸார், ஒரு முக்கிய வேண்டுகோள். இது கேப்டனாக அவருடைய இருபத்தி ஐந்தாவது வெற்றி. தில்லி ரசிகர்கள் சார்பாக ஹெலிகாப்டர் ஒன்று நம் வீரர்கள் மேல் பூ மழை இப்போது பொழியும். இந்த விஷயத்தை மாட்ச் ஆரம்பிக்கும் முன்னரே முக்கிய விருந்தாளியான ராவிடம் சொன்னோம். அவர், 'முதலில் வெற்றி பெறுங்கள் பிறகு பார்க்கலாம்' என்றார். இப்போது வெற்றி பெற்றுவிட்டதால் உங்களிடம் ஒரு வார்த்தை சொல்லலாமென்று....."


அவர் முடிக்கும் முன் அவினாஷ் "டாம்மிட்" என்று வெடித்தான் அழுத்தம் திருத்தமாக.

கூட்டத்தில் நீச்சலடித்து வி.ஐ.பி பாக்ஸ் அருகே சென்றவன் திடுக்கிட்டான், காரணம் இந்திய அணி மேனேஜருடன் சிறிது பேசிக்கொண்டு வெளியே நின்றிருந்தார் ராவ். அவினாஷைப் பார்த்துவிட்டு, "கம் அவினாஷ், லெட்’ஸ் ஸெலிப்ரேட்" என்று சிரித்தார்.


"ஸார், உங்கள் பாதுகாப்புக்காக அந்த வி.ஐ.பி பாக்ஸ் விட்டு வெளியே வரவேண்டாம் என்று சொல்லியிருந்தேனே, ஏனென்றால் அது புல்லட் ப்ரூஃப்..." என்று சொல்லி முடிக்கும் முன் ஏராளமான இரைச்சலுடன் அந்த ஹெலிகாப்டர் மைதானத்தின் நடுவிலிருந்த இந்திய அணி வீரர்கள் மேல் மையம் கொள்ள, ரசிகர்களின் ஆரவாரம் தறிகெட்டுப் போன நிலையில் ஹெலிகாப்டரின் ஒரு பக்கக் கண்ணாடிக் கதவு திறந்து 1800 மீட்டர்கள் வரை குறி தவறாமல் சுடக்கூடிய அமெரிக்காவின் அதிநவீன தயாரிப்பான Barrett M-82 வகை ஸ்னைப்பர் துப்பாக்கி எட்டிப்பார்த்து சடசடவென இவர்கள் பக்கம் சுட ஆரம்பிக்க, சுற்றி நிகழும் எல்லாவற்றையும் மறந்து ராவின் மேல் பாய்ந்தான் அவினாஷ்.


தன் வலது தோளில் தோன்றிய ரத்த மலரையோ, அதனால் ஏற்பட்ட கடுமையான வலியையோ உணரும் முன் அவினாஷ் பார்த்த காட்சி அவனை திடுக்கிட வைத்தது. ஒரு ரத்தப்பூ ராம் சந்தர் ராவின் இடது மார்பின் நடுவே பூத்ததை மிகத் தெளிவாகப் பார்க்கும் போதே மயக்கமானான் அவினாஷ்.

= = சாகசம் நாளை தொடரும்
 

RS DHAR

Member
Vannangal Writer
Messages
31
Reaction score
22
Points
8
மூன்றாம் அத்தியாயம்

தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு



"அவினாஷ்" என்ற மிஸ்ராவின் குரல் கேட்டு கண் விழித்தான்.


ஆஸ்பத்திரியின் தனிப்பட்ட ஏ/ஸி அறையில் இருப்பதை உணர்ந்தான். எதிரே மிஸ்ரா மட்டுமே நின்றிருக்க, "ஸார்" என்றான் குரலில் நிறைய கேள்விகளுடன்.


மிஸ்ரா அவனை ஊடுருவது போல பார்த்துவிட்டு,


"யூ ஆர் லக்கி, அவினாஷ். நேற்று மாலை அடிபட்டு இப்போதுதான் கண் விழித்துள்ளாய். இடைப்பட்ட நேரத்தில் ஏகப்பட்ட கலாட்டா. ஒரு நிமிடம், இங்கே டாக்ட ஷர்மாவையும் அழைக்கிறேன்" என்றார்.


ஷர்மா உள்ளே நுழைந்து அவினாஷைப் பார்த்து விட்டு,


"எஸ், யூ ஆர் வெரி லக்கி. டெக்ஸ்ட்ரோகார்டியா (Dextrocardia) என்றால் என்னவென்று தெரியுமா?" என்று கேட்டார்.


இன்னும் சரிவர என்ன நடக்கிறது என்றே புரியாத அவினாஷ்,


"இல்லை ஸார், ராம் சந்தர் ராவ் எப்படி இருக்கிறார், என்ன ஆயிற்று?" என்றான் குழப்பமாக.


சற்றே புன்னகைத்த டாக்டர் ஷர்மா,


"அதுதான் கேட்டேன். உனக்கும், இன்னும் யாருக்குமே தெரியாத ஒரு விஷயம் ராம் சந்தர் ராவ் டெக்ஸ்ட்ரோகார்டியா கேஸ். அதாவது பிறக்கும் போதே இருதயம் மார்பின் இடது பக்கம் இல்லாமல், வலது பக்கம் இருக்கும் ஒரு அபூர்வ கேஸ். இது மிக, மிக அபூர்வமான மருத்துவ உண்மை”.


"உன் மேல் இரண்டு குண்டுகள்...இரண்டும் உன் தோள்பட்டையில் பாய, மிகச் சரியாக ஒரு குண்டு ராவின் மார்பு மீது - இடது பக்கம்- பாய்ந்து விட, அவரைச் சுற்றியிருந்த உன்னுடைய பாதுகாப்புப் படையினரும், மைதானத்தின் அருகே கூரைகளில் இருந்த பாதுகாப்புப் படையினரும் சரமாரியாகச் சுட்டதில், ஹெலிகாப்டரை மைதானத்தில் அந்த பைலட் இறக்கிவிட, உள்ளே, கையில் துப்பாக்கியுடன் இருந்த காலித் ரத்த வெள்ளத்தில் பிணமாகிவிட்டான்".


"மைதானத்தின் நடுவே ஏகப்பட்ட களேபரம் நடந்தும் காவல் படையினர் நம் கிரிக்கெட் அணியினரை காப்பாற்றி அப்புறப்படுத்திவிட்டார்கள். ராவ் அருகே இருந்த இந்திய அணி மேனேஜருக்கு பலத்த அடி. அவரது கழுத்திலும், தோளிலும் இரண்டு புல்லட்கள்”.


“இப்போது கிடைத்த தகவலின் படி, ராம் சந்தர் ராவ் மற்றும் நம் அணியின் மேனேஜர் இருவருமே உயிர் பிழைத்துவிட்டனர்.. சில பேருக்கு காயம். மற்றப்படி வேறு அசம்பாவிதங்கள் மிகக் குறைவுதான். நீ செய்திருந்த ஏற்பாடுகள் பக்கா என்பதால் நிறைய அசம்பாவிதம் தடுக்கப்பட்டுள்ளது..."


அவரை மேற்கொண்டு பேச விடாமல் கையை உயர்த்தித் தடுத்த அவினாஷ்,


"என்ன பெரிய ஏற்பாடு? நான் இப்படி ஒரு எண்ட்ரியை எதிர்பார்க்கவில்லை. அவர்கள் கைக்கு ஹெலிகாப்ப்டர் எப்படிச் சென்றது?" என்றான் கவலையுடன்.


மிஸ்ரா பதில் சொன்னார்,


"அவினாஷ், விவரங்கள் பிறகு சொல்கிறேன். உலக அரங்கில் இதுதான் இப்போது பிரேக்கிங் நியூஸ்" என்றவர்,


"டாக்டர், அவினாஷ் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்ளட்டும்" என்றார்.


=========================


தன் முன் நிற்கும் அவினாஷ் சொன்ன செய்தியைக் கேட்டு அதிகமாக அதிர்ந்து விட்டார் கோகுல் மிஸ்ரா.


"அவினாஷ், இது தற்சமயம் வேறு யாருக்கும் தெரியவேண்டாம். இந்த செய்தியை நீ நேரில் வந்து சொன்னது நலம். ஃபோன் பரிவர்த்தனைகள் இது பற்றி இனி எப்போதும் வேண்டாம். தி ஸோ கால்ட் ஸெக்யூர்ட் லைன்ஸ் ஆர் நாட் ஆல்வேஸ் ஸெக்யூர்" என்றார்.


"புரிகிறது ஸார். காலித் பற்றிய விவரங்கள் இப்போதுதான் நிறைய நம் நம்பகமான ஸோர்ஸ் "எஸ்" மூலம் கிடைத்தன".


"காலித்தின் இரட்டைப் பிறவி கமால் அவனுடன் நிழல் போல கூடவே இருந்த விஷயம் மிக ரகசியமாகவே, ஆப்கானிஸ்தான் உள் வட்டத்திலேயே, இருந்தது இப்போதுதான் நம் ஸோர்ஸுக்குத் தெரிய வந்துள்ளது...."


தொடரும் முன் அவினாஷை வெட்டினார் மிஸ்ரா.


"அப்போது ஹெலிகாப்டரில் வந்து ராம் சந்தர் ராவை சுட்டது......?"


"தெரியவில்லை ஸார், லெட் மீ செக்" என்றான் அவினாஷ்."


அறையிலிருந்த டிவியில் தீவிரவாதி தாக்குதலில் இருந்து தப்பிய தொழிலதிபர் ராம் சந்தர் ராவ் பேட்டி விரைவில் வரும் என்று அறிவித்துக் கொண்டிருந்தனர்.



= = சாகசம் நாளை தொடரும்
 

RS DHAR

Member
Vannangal Writer
Messages
31
Reaction score
22
Points
8
நான்காவது அத்தியாயம்

சதியாலோசனை


சையத் ஆஸாத் தூக்கக் கலக்கத்தில் வந்த கொட்டாவியை விழுங்கிவிட்டு, அவனது கை கடிகாரத்தைப் பார்த்தான். ஏறக்குறைய நள்ளிரவு ஆகிவிட்டது, அறைக்குள் சதியாலோசனையில் இருந்த பெரிய தலைகள் இன்னும் சிற்றுண்டி செய்து கொண்டிருந்தனர், உள்ளே ஒருவரையொருவர் பாராட்டிக்கொண்டு , வெள்ளமென ஓடிக்கொண்டிருந்த உயர் ரக ரஷ்ய வோட்காவை ரசித்துக் கொண்டிருந்தனர்.


ஆஸாத் தூக்கத்தை உணர்ந்தான். காஷ்மீரின் பிரதான சந்தையில் ஒரு ஆபத்தான வெடிகுண்டை வெடிக்கச் செய்யும் யோசனை மிகவும் பைத்தியக்காரத்தனமானது. இது போன்ற மோசமான யோசனைகளை எப்போதுமே அந்தக் கூட்டத்திலேயே முதியவரான அமானுல்லா கான் தான் கூற முடியும். ஆனால், உண்மை என்னவென்றால், அந்த வயதான பைத்தியக்கார முதியவரைக் கேள்வி கேட்கும் துணிவு அங்கு யாருக்கும் இல்லை, காலித் ஒருவனைத் தவிர. அவனும் அமானுல்லா கான் மீதுள்ள மரியாதையால் அவரைத் தேவையில்லாமல் சீண்ட மாட்டான்.


பரந்த மாளிகையின் உள்ளே, அமானுல்லா கானைத் தவிர வேறு எவராலும் இவ்வளவு பொருத்தமான பெயரிட முடியாத அந்த “போர் அறை” யில் ஐந்து பேர் கொண்ட குழு ஆழ்ந்த விவாதத்தில் இருந்த போது. காலித் தனது வலது கையை உயர்த்தியதால் விவாதம் சட்டென நிறுத்தப்பட்டது.



"நமக்குத் தெரிந்து நம் புதிய பிரதமர் எந்தவொரு செயலையும் செய்வதற்கு ரிஸ்க் எடுப்பதற்கு நிறைய யோசிப்பதால், இந்தியா ஒரு பெரிய அச்சுறுத்தலாக மாறிவிட்டது. இந்தியப் பிரதமர் வயதானவர்தான், ஆனால் புத்திசாலி, மேலும் நம் போன்ற தீவிர இயக்கங்களின் மீது இரக்கமற்றவர். அவருடைய அமைச்சரவையில் இருக்கும் அனைவரின் சிந்தனையும் எப்படி இருக்கும் என்பது அவருக்குத் தெரியும், அதனால், எந்தவொரு அமைச்சரும் ஒரு கூட்டத்தில் கூட அவரை / அவரது கருத்தை ஆட்சேபிக்கத் தயாராக இல்லை. நான் எனது சகோதரர் கமாலை பல முறை எச்சரித்தேன். நம்முடைய புனிதப்போரான ஜிஹாத் மிகவும் முக்கியமானது, ஆனால், அதற்காக பணி முழுவதுமாக முடிவடைவதற்குள் தேவையில்லாமல் நம் வாழ்க்கையை இழப்பது முட்டாள்தனம் ”



காலித் பேசுவதை சிறிது நேரம் பேசுவதை நிறுத்திவிட்டு, தனது வழிகாட்டியான அமானுல்லா கானைப் பார்த்தான். அமானுல்லா கான் தனது கண்பார்வை மூலம் காலித் மேலும் தொடர சைகை காட்டிவிட்டு,



“காலித், கமால் இறந்ததால் ஏற்பட்ட இழப்பு நம் எல்லோருக்குமே பொதுவானது. எனவே, நடந்ததற்கு நீ மட்டுமே காரணம் என்று உன்னை நீயே குற்றம் கூறிக்கொள்ள முயற்சிக்காதே. உன் இரட்டை சகோதரனைப் பற்றி டாக்டர் மிஸ்ராவுக்குத் தெரியாது என்பது உறுதியா? ஒரு வேளை அவருக்குத் தெரிந்திருந்தால் நம்முடைய தாக்குதலில் இருக்கும் எதிர்பாராத தன்மை போய்விட்டது என்றே பொருள். புதுதில்லியில் உள்ள நம் உளவாளிகளிடமிருந்து ஏதாவது செய்தி வந்துள்ளதா ? ” என்று கேட்ட அமானுல்லா கானின் குரல் மிகவும் தெளிவாக இருந்தது.



காலித் தலையை ஆட்டினான். “மிஸ்ராவுக்குத் தெரியாது என்றே நினைக்கிறேன், புதுடில்லியில் இருந்து நமக்கு உபயோகமான தகவல் எதுவும் இதுவரை இல்லை. இப்போது, நம் காஷ்மீர் திட்டத்தை விரைவாகச் செயல்படுத்துவோம், நாளை மாலை, இந்தியாவின் பதிலின் உண்மையான வீரியத்தைக் காண்போம். ” என்றான்.

===================================


"ஸார், உங்களுடன் பகிர்ந்து கொள்ள எனக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது" என்ற அவினாஷை நிமிர்ந்து பார்த்த மிஸ்ரா,


"அவினாஷ் வா, சாப்பிட்டுக் கொண்டே பேசலாம்" என்றார்.


அவினாஷ் "காஷ்மீர் IB (இன்டெலிஜென்ஸ் பீரோ) தகவல் அனுப்பியுள்ளது. ஸ்ரீநகரில் நாளை அல்லது நாளை மறுநாள் ஒரு சக்திவாய்ந்த குண்டு வெடிக்கும் என்று தெரிகிறது. என்ன செய்யப்போகிறோம் ஸார்? " என்றான் கவலையுடன்.


இருவரும் சாப்பிட்டுக்கொண்டே பேசினார்கள். முன்னெப்போதையும் விட இந்தியாவுக்கு எதிராக அமானுல்லா கானின் மோசமான சதிச் செயல்கள் எப்படி அதிகமாகிவிட்டது என்பதை அவர்கள் விவாதித்தனர்.


அவர்கள் இருவரும் விவாதித்த சிறிது நேரத்தில், மிஸ்ராவின் அணியின் சிறப்பு உளவுப் பிரிவில் உள்ள புத்திசாலித்தனமான இரு இளம் அதிகாரிகள் ப்ரியா சதுர்வேதி மற்றும் துஷ்யந்த் ஆகியோர் டெல்லியில் இருந்து ஒரு தனி விமானத்தில் ஸ்ரீநகரை அடைந்தனர்.


==================================


ஸ்ரீநகரில் அந்த இனிமையான காலை வேளையில், குளிருக்கு இதமாக இருந்த இளம்வெயிலில். ஒரு ஜிப்ஸி ஜீப் மெதுவாக ஊர்ந்து அஞ்சல் அலுவலகம் அருகே நின்றது. கமருதீன் வெளியே வந்து ஜீப்பில் ஏறும்போது, உள்ளே இருந்த மாலிக்கை நோக்கித் தலையை அசைத்தான்.


"கமருதீன், நாளை மாலை வாணவேடிக்கைக்கு நீங்கள் தயாரா?" என்று மாலிக் கேட்டான்.


கமருதீன் சில கணங்கள் எதுவும் பேசாமல் அவனைப் பார்த்துவிட்டு, "மாலிக், இங்குள்ள நிலைமை முன்பு போல் இல்லை. பாதுகாப்பு மிகவும் அதிகமாக உள்ளது. காவல்துறையும் சிறப்புப் படையினரும் சிறப்பு ஆயுதப் படைகளில் இருந்து ஏராளமானவர்களைக் கூட்டி வந்துள்ளனர்" என்றான்.


அவர்கள் இருவரும் பேசிக்கொண்டே இருக்க, ஜீப் நிதானமாக இரண்டு தெருக்களைச் சுற்றி வந்தது. கமருதீன் இறங்கும் நேரம் வந்தவுடன், மாலிக் அவனைப் பார்த்து சிரித்தான். "நீங்கள்தான் எங்கள் உள்ளூர் ஹீரோ. நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அது சரியாக, எந்தவித இடையூறும் இன்றி நடக்க, எங்கள் ஆட்கள் உதவுவார்கள். ஆனால், தாமதிக்காதீர்கள், விரைவில் அந்த நாளைக் குறிக்கவும்."


கமருதீனை இறக்கிவிட்டு, அந்த ஜிப்ஸி ஜீப் புகை மூட்டத்துடன் காணாமல் போனது.


=================================


அன்று இரவு பலூசிஸ்தானில் இருந்து சையத் அனுப்பிய ஒரு அவசர செய்தி வந்தது. ‘சந்தையில் உருளைக்கிழங்கு இருப்பு இல்லை. நிலைமை 26 தேதிக்குப் பின்னரே தெரியவரும்".


சையத் உடனடியாக அவினாஷை தனது சாட்டிலைட் ஃ போன் மூலம் தொடர்பு கொண்டு தகவலைத் தெரிவித்தான்.


**********************************


அவினாஷ் குளியலறையிலிருந்து வெளியே தன்னை உலர்த்திக் கொண்ட போது, சையத்தின் அச்சமூட்டும் தகவல் வந்தது. அவனுக்குத் தெரியும், காலித் கணக்கைத் தீர்க்க வருகிறான் என்பது, ஆனால், இப்படியா? .


கிரிக்கெட் ஸ்டேடிய சம்பவத்திற்குப் பிறகு இரண்டு நாட்களிலேயே, இறந்தது கமால் தான், காலித் அல்ல என்பது தெரிந்துவிட்டது.


மிஸ்ராவும், அவினாஷும் தேவையான நடவடிக்கைகளை உடனே எடுத்து, ராம் சந்தர் ராவ் உயிர் பிழைத்த செய்தியை மட்டுமே வெளியே தெரியச் செய்துவிட்டு, அதற்குக் காரணமான டெக்ஸ்ட்ரோகார்டியா சமாச்சாரத்தைத் திறமையாக மறைந்துவிட்டனர்.


அவினாஷுக்குத் தெரிந்து காலித்தின் மனதில், அவனுடைய பரம எதிரியான இந்தியாவும் அதன் உளவாளிகளை அவன் எதிர்பார்த்ததைவிட அதிக சேதத்தை ஏற்படுத்தியிருந்தனர் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.



அவினாஷ் காலித்தின் இரட்டையான கமாலைக் கொன்றதன் மூலம், காலித்தின் மனதில் வெறுப்பை அதிகமாகவே தூண்டிவிட்டு விட்டோம் எனபதை அறிந்திருந்தான். எனவே, பலுசிஸ்தான் இருக்கும் உளவாளி சையத்தின் செய்தி அவினாஷை ஆச்சரியப்படுத்தவில்லை.



மிஸ்ராவைச் சந்தித்து சையத்தின் அதிர்ச்சியான செய்தியைத் தெரிவிக்க விரும்பினான்.


சையத்திடம் இருந்து வந்த ரகசிய குறியீட்டுச் செய்தியிலிருந்து "உருளைக்கிழங்கு" என்ற வார்த்தை அவினாஷைக் கதி கலங்கச் செய்துவிட்டது. .


அவர்களின் உளவுப் பரிபாஷையில் , உருளைக்கிழங்கு என்பது அழுக்குக் குண்டு (Dirty Bomb) எனப்படும் அணுசக்தி செறிவூட்டப்பட்ட ஒரு கொடிய குண்டு .



= = சாகசம் நாளை தொடரும்
 

RS DHAR

Member
Vannangal Writer
Messages
31
Reaction score
22
Points
8
ஐந்தாவது அத்தியாயம்

அழுக்கு குண்டு


அவினாஷின் மனதில், அவனது ஆசிரியர் பரமஹம்ச துரோணாச்சார்யரின் நிபுணத்துவத்தின் கீழ், பாடம் பயின்ற அவனது ஆரம்ப கால பயிற்சி நாட்கள் நினைவுக்கு வந்ததன. ‘அழுக்கு குண்டு’ என்று அழைக்கப்படும் அந்த ஆபத்தான குண்டைப் பற்றி நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.


அவன் அலுவலகத்தை அடைந்து, அந்த சதிச்செயலை முறியடிக்க வழிகளை மிஸ்ராவிடம் ஆலோசித்தபோது, மிஸ்ரா மீண்டுமொருமுறை அந்த ஆயுதத்தைப் பற்றி அவினாஷ் தலைமையிலான குழுவிற்கு விளக்கினார்.


ஒரு "அழுக்கு குண்டு" என்பது ஒரு வகை "கதிரியக்க பரப்பு சாதனம் (RDD)" உலகெங்கிலும் ஒரு பயங்கரவாத ஆயுதமாக பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.


சரியாகச் சொல்லவேண்டுமென்றால் இது ஒரு "அணுகுண்டு" அல்ல. வழக்கமான வெடி பொருட்களைப் பயன்படுத்தும் ஆயுதம் (டைனமைட் அல்லது டி.என்.டி - TNT போன்றவை) கதிரியக்கப் பொருளை சிதறடிக்க அல்லது பரப்புவதற்கு. ஆயுதத்தின் வெடிக்கும் தன்மை பயன்படுமே தவிர, இந்த வகை குண்டுகள் மூலம் மிக ஆபத்தான கதிரியக்கத் தன்மையை பெரிய அளவு பரப்ப முடியாது.


ஆயுதத்தின் நோக்கம் வெடிப்பால் சேதத்தை ஏற்படுத்துவதோடு ஓரளவிற்கு கதிரியக்கத்தன்மை இருப்பதால் பயத்தையும் பீதியையும் பரப்புவதாகும். மிகச் சக்திவாய்ந்த அணுசக்தித் தயாரிக்கும்போது மிஞ்சும் மீதிப் பொருட்களை வைத்து தயாரிக்கப்படுவதாலோ என்னவோ அழுக்கு குண்டு (Dirty Bomb) என்ற பெயர் இதற்கு ஏற்பட்டது.


பெரும்பாலான ஆர்.டி.டி (RDD) க்கள் மக்களைக் கொல்லவோ அல்லது கடுமையான நோயை ஏற்படுத்தவோ போதுமான கதிர்வீச்சை வெளியிடாது . எனினும், ஒரு அழுக்கு வெடிகுண்டு வெடிப்பு அப்பகுதியில் உள்ளவர்களுக்கு குறிப்பிடத்தக்க கால அளவுக்கு, ஆரோக்கியக் கேடுகளை ஏற்படுத்தக்கூடும்,


மேலும், இந்த வெடிப்பிற்குப் பிறகு சம்பவ இடத்தையு, அதன் சுற்றியுள்ள இடத்தையும் சுத்தம் செய்ய ஏற்படும் செலவு காரணமாக அதிக பொருள் இழப்பை ஏற்படுத்தும். கட்டிடங்கள் இடிக்கப்பட்டு குப்பைகள் அகற்றப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட இடத்திலிருந்து மக்களை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். சுருக்கமாகச் சொன்னால் அரசிற்கு பெரும் தலைவலி. .


இந்தியா உட்பட உலகெங்கிலும் பல நாடுகள் தனித் தனியாகவும், ஒன்றாக இணைந்து (GTRI) - Global Threat Reduction Initiative - உலகளாவிய அச்சுறுத்தல் குறைப்பு முயற்சி என்ற பெயரில் ஒரு இயக்கத்தையும் நடத்தி, அதன் மூலம், தகவல் பரிமாற்றம், மற்றும் கதிரியக்கத் தீவிரவாதம் - Radiological Terrorism - என்பதை கட்டுக்குள் வைக்க முயற்சி செய்து வருகின்றன.


உலகிலேயே, மக்கள் தொகை அதிகமுள்ள இரண்டாவது பெரிய நாடு இந்தியா. இதில் ஒவ்வொரு சதுர கிமீலும் இருக்கும் மக்கள் தொகை அதிகம். எனவே, விளைவு பயங்கரமாக இருப்பதோடு அல்லாமல், வெடிப்பிற்குப் பின்னால் ஏற்படும் செலவும், முயற்சிகளும் மிக அதிகம்.


மிஸ்ரா அவருடைய உரையை முடித்துவிட்டு, அவினாஷ் ஒவ்வொருவராக என்னென்ன செய்ய வேண்டும் என்று சொல்லி முடித்து வெளியே வந்தபோது மழை தூறிக்கொண்டிருந்தது. என்ன ஆனாலும் சரி காலித் மற்றும் அமானுல்லா ஆகியோரின் சதியை முறியடிக்க வேண்டும் என்பதே மிஸ்ராவின் விருப்பமாக இருந்தது. குழுவிற்கும் அதைச் சரியான முறையில் சொல்லியிருந்தார் அவர்.

===========================================.


சிறிது நேரத்தில் காஷ்மீரில் இருந்த இந்திய விமானப்படை தலைவர், டெல்லியில் மிஸ்ராவிடமிருந்து தனக்கு வந்த கட்டளையைக் கேட்டு அதிர்ந்து போனார்.

==========================================


நீங்கள் 32,000 அடி உயரத்தில் இருந்து பூமியில் விழும்போது, காற்று கூட உங்கள் எதிரியாக மாறிவிடும்.


குளிர் மைனஸ் - 50 டிகிரியை எட்டிவிடும்.


நீங்கள் பூமிப் பரப்பிற்கு மேலே சென்றதால், புவியீர்ப்பு சக்தி பூமியை விட்டு வெளியேறியதற்காக உங்களை தண்டிக்க விரும்பும். .


அவினாஷ் அசாத்திய வேகத்தில் இரவு வானதைக் கிழித்துக்கொண்டு கீழே வந்துகொண்டிருந்தான். காற்றின் கொந்தளிப்பு அவனது உடலைத் துடிதுடிக்க வைத்தது. அவனது தலைக்கவசத்தில் காற்று அலறியது .


கீ......................ழே காஷ்மீர் பள்ளத்தாக்கு கடல் மை போன்ற நிறத்தில் தகதகத்தது.


அவினாஷ் தனது மணிக்கட்டில் ஜி.பி.எஸ்ஸுடன் பொருத்தப்பட்ட தொலைபேசியில் நிலைமையை சரிபார்த்து, கால்களை மெதுவே அசைத்து, அசைத்து கடலில் நீந்துவது போல காற்றில் நீந்த ஆரம்பித்தான்.


மிகக் கடினமான பாறை நிலப்பரப்பு அவனை நோக்கி அதிவேகமாக வந்து கொண்டிருந்தது.


= = சாகசம் நாளை தொடரும் .
 

RS DHAR

Member
Vannangal Writer
Messages
31
Reaction score
22
Points
8
ஆறாவது அத்தியாயம்

சூறாவளியின் கண்


அவினாஷின் பாராசூட் தரையைத் தொட்ட போது, சத்தமேயில்லாமல் தரையில் இரண்டு முறை உருண்டு, எழுந்து கொண்டு, கீழே கிடந்த பாராசூட்டை எவ்வளவு சுருட்ட முடியுமோ, அவ்வளவு சுருட்டி அருகே இருந்த பள்ளத்தாக்கில் எறிந்தான்.


அவினாஷ் மிகத் தனியாக இருந்தான், கைக்கடிகாரத்தை பார்த்துக்கொண்டான். இப்போது நினைத்தாலும், மிஸ்ராவிடம் அவன் கூறிய யோசனை முற்றிலும் பைத்தியக்காரத்தனமாக இருந்ததை உணர்ந்தான். அவனுடைய யோசனையின் தீவிரத்தை உணர்ந்த மிஸ்ராவை அது வெறுமனே தலையசைக்கச் செய்ததும் அவனுக்கு ஞாபகம் வந்தது.


மரத்திலிருந்து மண்ணிலிருந்து வந்த வித விதமான வாசனைகளை நுகர்ந்து கொண்டே அவினாஷ் நகர்ந்தான். கீழே விழுந்தபோது கைகளை ஊன்றிய வலி அவனுடைய மணிக்கட்டில் தெறித்தது. இந்தக் குளிரில், இரவில், உடல் அசதியில் தூக்கம் வரமாலிருக்க வலி தேவை என்று நினைத்துக்கொண்டான்.


மிஸ்ரா சுருக்கமாகவே அவனுக்குச் சொல்லியிருந்தார். கண்ணில் பட்டவுடன், குறிபார்த்துக் கொன்றுவிடு (Locate - Aim - Kill) என்பதே அவர் சொன்னது. மரங்களின் அடர்த்தியால் வான வெளிச்சம் கூட இல்லாமல் கும்மிருட்டு. இவ்வளவு மரங்களின் நடுவே சிக்கிக்கொள்ளாமல் குதித்துத் தரையை அடைந்ததே பெரிய ஆச்சரியம்தான் என்று நினைத்துக் கொண்டான்.



சத்தமே இல்லாமல் ஒரு சிறிய குன்றின் குன்றின் மீது அமைந்திருந்த அந்தப் பரந்த கட்டிடத்தை நெருங்கியபோது, கட்டிடத்தின் உள்ளே பல விளக்குகள் ஒளிருவதை அவினாஷ் கவனித்தான்.



இந்திய உளவாளி சையத் சொன்னதைப் போலவே காலித் மற்றும் அவனது வழிகாட்டியான அமானுல்லா கான் தவிர மேலும் சிலர் உள்ளே நடந்து கொண்டிருக்கும் ரகசிய சந்திப்பில் இருக்கலாம், இந்த முக்கியமாணவர்களின் பாதுகாப்புக்காக விசுவாசமான உதவியாளர்களின் மிகச் சிறிய குழு மட்டுமே காவலுக்கு இருந்ததையம், நிச்சயம் அவர்கள் தேவைக்கதிகமான ஆயுதங்களுடன் இருக்கலாம் என்பதையும் அவினாஷ் உணர்ந்திருந்தான்.


அந்த கட்டிடத்தின் முன்னே ஒரே ஒரு பெரிய, பழைய மாடல் ராணுவ லாரி நின்றிப்பதைப் பார்த்தான். அந்த ஒரு வாகனத்தைத் தவிர கட்டிடத்தின் வாகன நிறுத்துமிடத்தில் வேறு வண்டிகள் எதுவும் இல்லாமல், அந்த இடம் வெறிச்சோடியிருப்பதையும் கவனித்தான்.


ஒரு சில வினாடிகள் அவினாஷ் நிதானித்தபோது, கழுத்தில் சிலீரென ஒரு முள் போல ஊசி குத்தியதை உணர்ந்தான், அவனுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்று பார்ப்பதற்கு முன்பே, கால்கள் உணர்ச்சியற்றதாக மாறுவதை உணர்ந்தான்.


மெதுவாக, அவனுடைய கட்டுப்பாடு எதுவுமின்றி தரையில் சரிந்தான். முற்றிலும் சுயநினைவின்றி, கீழே விழுந்தபோது அவன் வலது கால் ஒரு முறை துடித்தது. அது தவிர எந்த இயக்கமும் இல்லை.


===========================


அவினாஷ் தரையில் விழுந்ததைச் சுற்றிலும் இயந்திரத் துப்பாக்கிகளுடன் நின்றிருந்த மூன்று பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் எந்த வித உணர்ச்சியுமின்றி பார்த்துக் கொண்டிருந்தார்கள். அருகில் காலித் வருவதை உணர்ந்து சட்டென விறைப்பானார்கள்.



எந்தவித உணர்வுமின்றி கீழே கிடந்த அவினாஷைப் பார்த்த காலித் பெரிதாக சிரித்தான். "ஆஹா, நம் வலையில் சுறாமீனே விழுந்திருக்கிறதே !! பலூசிஸ்தானில் இருக்கும் நம் ஒற்றன் சையத்துக்கு பெரிய சலாம். அவன் சொன்னபடியே இவன் வந்துவிட்டான்? சபாஷ்" என்று மீண்டும் சிரித்தான்.



"நண்பர்களே, அந்த மிஸ்ராவின் நம்பர் ஒன் லெஃப்டினன்ட் மற்றும் இந்திய ராணுவத்தின் இன்டெலிஜன்ஸ் பிரிவின் பெரும்பாலான புலனாய்வு நடவடிக்கைகளுக்குப் பின்னால் இருக்கும் மிகவும் புத்திசாலித்தனமான மூளைக்காரனான அவினாஷ் ஜெகந்நாதனை சந்திக்கவும். ” என்று தன்னைச் சுற்றி இருந்தவர்களிடம் சொல்லிவிட்டு சிரித்தான் காலித்.


பின்னர் அவனது தொனி கனமானது, "மிக முக்கியமாக, என் அன்பான இரட்டை, கமாலை சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் கொலை செய்ததன் பின்னணியில் உள்ள அபார மூளை."


அந்த இடத்தில் சுற்றி இருந்த யாருமே பேசவில்லை. வெளியே இருக்கும் சில்லிட்ட அமைதியைப் போலவே அங்கும் அமைதி நிலவியது.


அமானுல்லா கான் அவினாஷ் பற்றி நிறையவே கேள்விப்பட்டிருக்கிறார். அவினாஷ் மிகச் சிறிய வயதில் தாயையும், பிறகு காஷ்மீரில் - பாகிஸ்தான் கைவரிசையில் - நடந்த ஒரு குண்டுவெடிப்பில் இந்திய ராணுவத்திலிருந்த தந்தையையும் இழந்தவன். உடன்பிறந்தோர் யார் இல்லாமல் கிட்டத்தட்ட அனாதையாக இருந்த அவினாஷ், மிஸ்ராவின் கண்களில் பட்டபிறகே இந்த நிலை வரை உயர்ந்துள்ளான். இதையெல்லாம் மெதுவே அசைபோட்டபடி, காலித்தைப் பார்த்த, அமானுல்லா கான் புன்னகையுடன் கேட்டார்,


"இவனை என்ன செய்யப்போவதாக உத்தேசம்?" என்றார்.


காலித் உடனடியாக பதில் சொல்லவில்லை. சில வினாடிகள் சென்று, அமானுல்லா கானைப் பார்த்துப் புன்னகைத்தவன்,


"நிறைய, நிறைய செய்ய உத்தேசம்" என்றான்.


அவன் குரலில் இருந்த உறுதி அமானுல்லா கானையே அச்சுறுத்தியது.

=============================


கை,கால்கள் மிக இறுக்கமாக கட்டப்பட்டு, வாயில் நிறையத் துணி அடைக்கப்பட்டு, இரண்டாவது மாடியிலிருந்த ஒரு ஸ்டோர் ரூமினுள் அவினாஷ் வீசப்பட்டான்.


ஒரு இன்ச் கூட நகர முடியாதபடி அந்த ஸ்டோர் ரூமிலிருந்த கண்டாமுண்டா சாமான்களிடையே கிடந்த அவினாஷுக்கு நினைவு திரும்பவில்லை.



= = சாகசம் நாளை தொடரும்
 

RS DHAR

Member
Vannangal Writer
Messages
31
Reaction score
22
Points
8
ஏழாவது அத்தியாயம்

மறுபடியும் எழ முடியாத அடி


தரைமட்ட மீட்டிங் ஹாலில், ஸ்ரீநகர் பற்றிய ஸ்லைடுகளை அமானுல்லா கானுக்கும், மற்றவர்களுக்கும், அங்கிருந்த ஸ்லைட் ப்ரொஜெக்டர் மூலம் காட்டுவதில் காலித் மும்முரமாக இருந்தான்.


"இது லால் சௌக், நகர சதுக்கம் (சிவப்பு சதுக்கம் என்று பொருள்), ஸ்ரீநகரின் பிரபலமான ஷாப்பிங் பகுதி, இது பரம்பரையாக ஜம்மு & காஷ்மீரை ஆண்டு வந்த அரசியல்வாதிகள் மற்றும் பாகிஸ்தான் ஆதரவு ஜிஹாதிஸ்ட் (புனித போர்) படைகளால் இந்திய எதிர்ப்பு பிரச்சாரத்தின் அடையாளமாக இருந்தது".



"நான் சொன்னபடி வைக்கப்பட்டுள்ள வெடிகுண்டு ஜீலம் பூங்காவிற்கு அருகிலுள்ள G. P. O Bund அடியில், ஸ்ரீநகரின் பொது தபால் நிலையத்திற்கு மிக அருகில் உள்ளது. இந்த இடம் ஸ்ரீநகரின் நிரந்தர அடையாளமான, அழகிய ஜீலம் நதியிலிருந்து வெகு தொலைவில் இல்லை. காஷ்மீர் முழுவதும், கிட்டத்தட்ட 70 தபால் நிலையங்கள் உள்ளன, அவற்றில் இந்த ஸ்ரீநகர் ஜி.பி.ஓ மிக முக்கியமான ஒன்றாகும். குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் இது லால் சௌக்கிற்கும் மிகவும் அருகில் உள்ளது".



"இப்போது அவினாஷ் நம் காவலின் கீழ் இருப்பதால், புதுதில்லியில் இதற்காகக் காத்துக்கொண்டிருக்கும் நம் ஹுசைன், ஒரு மறக்க முடியாத பாடம் கற்பிக்க இந்திய உளவுத்துறையின் தலைவர் மிஸ்ராவைப் பார்க்கப் போகிறார். அந்த வேலை முடியட்டும். அதன் பிறகு, இந்த இந்திய நாய் அவினாஷை கவனித்துக் கொள்வோம். ”


அமானுல்லா கான் மெதுவாக தலையை ஆட்டிப் பாராட்டினார்.


அருகிருந்த பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த இளைஞன், காலித் அருகில் நின்று, “ஐயா, ஏன் இவ்வளவு ஸ்லைடுகள்? நம் மரியாதைக்குரிய பெரியவர் இந்த இடத்தை பலமுறை பார்த்திருப்பார் அல்லவா? ” என்று அமானுல்லா கானைக் குறிப்பிட்டுச் சொன்னான்.



காலித் புன்னகைத்து, “தம்பி, நீ புதியவன். எனவே, நம் பெரியவரின் சத்தியம் உனக்குத் தெரியாது. காஷ்மீர் மண்ணை இந்தியாவிலிருந்து முழுமையாக சுதந்திரப்படுத்திய பின்னரே அவர் அதில் காலடி எடுத்து வைப்பார். நம்முடைய ஜிஹாத் இதுதான். 2019 ஆம் ஆண்டில் இந்திய அரசியலமைப்பின் 370 வது பிரிவின் (Article 370) கீழ் ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை (Special Status) இந்திய அரசு ரத்து செய்த பின்னர், இந்திய நாடாளுமன்றம் ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தை (Jammu and Kashmir Reorganization Act) நிறைவேற்றியது,



அதில் மாநில அந்தஸ்த்தைக் கலைத்து இரண்டு யூனியன் பிரதேசங்களாக மறுசீரமைக்கும் விதிகள் உள்ளன - மேற்கில் ஜம்மு - காஷ்மீர் மற்றும் கிழக்கில் லடாக், 31 அக்டோபர் 2019 முதல் இது அமலுக்கு வந்தது. இந்தத் துயர சம்பவம் நடக்கும் முன், ஜம்மு-காஷ்மீர் இந்தியாவில் முஸ்லீம் பெரும்பான்மை மக்கள் தொகை கொண்ட ஒரே மாநிலமாக இருந்தது. பல வருட சிறப்பு அந்தஸ்துக்குப் பிறகு, முந்தைய பிரதமர் இதைச் செய்தார்,



இதனால் தற்போதைய நிலைமை, இந்திய மத்திய அரசைச் சார்ந்தது. இந்த முடிவினால், ஆரம்பத்தில் நிலைமை நமது படைகளுக்குப் பெரிய பின்னடைவாக இருந்தது. ஆனால், நாம் மீண்டும் ஒரே குழுவாக இணைந்து விட்டோம், எனவே நமது ஜிஹாத் தொடர்கிறது" என்றான். புன்னகைத்தபடி.


===========================


அவினாஷிடமிருந்து நீடித்த நீண்ட நேர அமைதி குறித்து மிஸ்ரா கோபத்திலிருந்தார். சிறிது நேரத்திற்கு முன்பு ப்ரியா சதுர்வேதி மற்றும் துஷ்யந்திடமிருந்து அவர்கள் சென்ற விமானம் ஸ்ரீநகர் சென்றடைந்தவுடன் கிடைத்த செய்தியை உடனடியாக உறுதிப்படுத்தினார், அவினாஷின் பாதுகாப்பு நிலைமை குறித்த அவரது கவலை அதிகரித்தது.


பாகிஸ்தானுக்குள் நுழையும் அந்த ஆபத்தான பயணத்திற்கு அவினாஷ் எந்த உதவியாளரையும் கூடச் சேர்த்துக் கொள்ளாததில் மிஸ்ராவுக்கு வருத்தமே மிஞ்சியது. .


சில நாட்களுக்கு முன்னர், உள்ளூர் சந்தைக்குச் சென்ற போது, தனது மனைவி விபத்துக்குள்ளானபடியால், அவரது நிலைமை பற்றி அறிந்து வர மிஸ்ராவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி கிருஷ்ணா அனுமதி கேட்டிருந்தார். அவர் மனைவி குணமடைந்து கொண்டிருந்தாலும், கிருஷ்ணாவுக்கு மனைவியைப் பிரிந்து எந்த வேலையும் ஓடவில்லை என்பதை மிஸ்ரா கவனித்தார்.


தலையை அசைத்து கிருஷ்ணாவை அருகே அழைத்த மிஸ்ரா, “கிருஷ்ணா, நீங்கள் சென்று உங்கள் மனைவியைப் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் கவனம் உங்கள் மனைவிக்கு இந்த சமயத்தில் நிச்சயம் தேவை என்பது எனக்கு தெரியும். தயவுசெய்து கவனித்துக் கொண்டு நாளை திரும்பி வாருங்கள். அவினாஷிடமிருந்து இதுவரை எந்த செய்தியும் இல்லாமல், அவனுடைய அழைப்புக்காக காத்திருப்பதைத் தவிர எனக்கு வேறு எதுவும் இல்லை. மேலும், காலையிலிருந்து மிக அதிக மழை பெய்து வருகிறது, எனவே இரவு உணவிற்குப் பிறகு நான் இங்கேயே அதிகாலை வரையில் தூங்குவேன். எப்படியிருந்தாலும், பாதுகாப்பு அணியின் கோவர்த்தனும் முராரியும் இங்கே இருக்கிறார்கள். எனக்கு ஏதாவது தேவைப்பட்டால் அவர்களில் ஒருவரை அழைப்பேன். நாளை பார்க்கலாம். குட் நைட். ” என்றார்.



கிருஷ்ணா 20 வருடங்களுக்கும் மேலாக மிஸ்ராவின் பாதுகாப்பு அதிகாரியாகப் பணி புரிகிறார். மிஸ்ராவின் அசைக்க முடியாத நம்பிக்கைக்குப் பாத்திரமானவர். அவர் மகிழ்ச்சியுடன் புன்னகைத்துவிட்டு, மிஸ்ராவுக்கு மரியாதையுடன் சல்யூட் அடித்துவிட்டு, அறைக்கு வெளியே காவலுக்கு நிற்கும் கோவர்த்தன் மற்றும் முராரியிடம் சில நிமிடங்கள் தெளிவாக கட்டளைகளைப் பிறப்பித்து விட்டு நகன்றார்.


============================


அதிகாலை 4 மணி அளவில், மிஸ்ரா சைலன்ஸர் பொருத்தப்பட்ட, சக்திவாய்ந்த .44 மாக்னம் (Magnum) துப்பாக்கியால் சுடப்பட்டார்.


உலக ஆயுத மார்க்கெட்டில் மாக்னம் மிக நம்பிக்கையான கைத்துப்பாக்கி என்று பெயர் வாங்கியது.


நெற்றிப் பொட்டில் வட்டவடிவத் துளையுடன் மிஸ்ரா தரையில் கிடைக்க, அவரது ரத்தம் சிறிய குட்டையாக மாறி மெதுவே நகர்ந்து கொண்டிருந்தது. மிஸ்ராவின் கண்கள் திறந்திருந்தன.



மழை இரக்கமின்றி விளாசிக் கொண்டிருந்தது.



மிஸ்ராவின் அறைக்கு வெளியே, எதிர்பாராத மயக்க ஊசியின் விளைவால் கோவர்த்தன் மற்றும் முராரி நடந்த எதையும் அறியாமல், தரையில் சுயநினைவற்றுக் கிடந்தனர்.



= = சாகசம் நாளை தொடரும்
 

RS DHAR

Member
Vannangal Writer
Messages
31
Reaction score
22
Points
8
எட்டாவது அத்தியாயம்

தடையறத் தாக்கு


அழைப்பு வந்ததும் ஜெனரல் மிஸ்ராவின் குரலை எதிர்பார்த்து ப்ரியா சதுர்வேதி அலைபேசியை எடுத்தாள்.


ஆனால் அது மிஸ்ராவின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரியான கிருஷ்ணா தான், அவர் குரலில் பயமும், படபடப்பும் தெளிவாகத் தெரிந்தது..


"மேடம், இதை எப்படிச் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. நம் பாஸ் ஜெனரல் மிஸ்ரா சிறிது நேரத்திற்கு முன்பு சில தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார். எனக்கு மிகவும் அவசர வேலை இருந்ததால் நான் வெளியே சென்றிருந்தேன். இங்கு கிட்டத்தட்ட இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நான். அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் வெளியே இருந்திருப்பேன். திரும்பி வரும் வழியில், நம் அலுவலகத்தின் வாசலில் ஒரு பெரிய போலீஸ் படை இருந்தது. நான் வருவதற்கு முன்னரே, எனக்குத் தகவல் தெரிவிக்க போலீஸ் முயன்றுள்ளது.



பல முயற்சிகளுக்குப் பிறகுதான் காவல்துறையினர் எனது எண்ணுக்குத் தொடர்பு கொள்ள முடிந்துள்ளது. நான் தகவல் வந்தபோது அலுவலகத்திற்குத்தான் வந்து கொண்டிருந்தேன். பாதி வழியில் இருந்தேன்".



"பாதுகாப்பு அமைச்சகத்திற்கு அறிவிப்பதற்கு முன்பு மேஜர் அவினாஷிற்குத் தகவல் தர முயற்சித்து, அவருடைய எண் இணைப்பில்லாததால் என்ன செய்வது என்று தெரியாமல். உங்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று நினைத்து முயற்சித்தேன். அதிர்ஷ்டவசமாக, நீங்கள் இணைப்பில் வந்தீர்கள். என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை .... "



மேலும் பேசுவதற்கு முன்பே ப்ரியா குறுக்கிட்டாள்..



"மிஸ்டர் கிருஷ்ணா, மிகவும் கொடூரமான தகவல். என்னால் சுத்தமாக நம்பமுடியவில்லை. து. அவினாஷ் எந்தத் தகவலும் இல்லாமல் ஏன் திடீரென்று தொடர்பிலிருந்து மறைந்துவிட்டார் ? அவர் எங்கே இருக்கிறார் என்று உங்களுக்குத் தெரியுமா?"



"ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி அவருடன் பேச பல முறை நானும் முயற்சித்தேன், என்னால் அவர் எண்ணை அடைய முடியவில்லை. இப்போது இங்கிருந்து மீண்டும் நான் முயற்சி செய்கிறேன் நீங்களும் நமது பாதுகாப்பு அமைச்சகத்தை தொடர்பு கொண்டு, பாதுகாப்பு அமைச்சரிடம் நேரடியாக பேசுங்கள். இதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை… .. ”


ப்ரியாவிற்கு குரல் கமறியது. மிஸ்ராவா? கடவுளே, அந்த நல்லவருக்கா இந்த கதி?


“மேஜர் அவினாஷ் பற்றி எந்த தகவலும் இல்லை. எனக்குத் தெரிந்தவரை அவர் கடந்த இரண்டு நாட்களாக அலுவலகத்திற்கு வரவில்லை. அவரது மொபைல் தொடர்ந்து அணைத்து வைக்கப்பட்டுள்ளது. நீங்கள் சொல்வது போல் செய்கிறேன். நான் உங்களை மீண்டும் அழைக்கிறேன்.ஜெனரல் மிஸ்ராவுக்கு நடந்த கொடூரம் பற்றி என்ன சொல்ல? நான் மிகவும் வருந்துகிறேன். " என்றார் கிருஷ்ணா.


அவரது குரலில் நடுக்கம் இருப்பதை ப்ரியாவால் உணர முடிந்தது.



ப்ரியாவுக்கு கிருஷ்ணாவைப் பற்றி நன்கு தெரியும். ஜெனரல் மிஸ்ராவின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரியாக இருக்கும் அவர், கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக மிஸ்ராவின் கீழ் பணியாற்றி வருகிறார். திருமணம் செய்யாமல் எப்போதும் அலுவலகத்தில் இருப்பதில் புகழ் பெற்ற ஜெனரல் மிஸ்ரா, குடும்பத்துடன் தனக்கு உதவிகள் செய்யும் கிருஷ்ணாவுடன் மிகவும் நல்ல நட்பு பாராட்டியதில் ஆச்சரியமில்லை.



கிருஷ்ணா சொன்னபடி அடுத்த 20 நிமிடங்களில் மீண்டும் அழைத்தார்.



"மேடம், நான் நமது அமைச்சரிடம் பேசினேன். வேலை எவ்வளவு முக்கியமானது என்றாலும், அதை உங்கள் டெபுடி துஷ்யந்திடம் ஒப்படைத்துவிட்டு, உங்களை அழைத்துச் சென்ற அதே விமானத்தில் உடனடியாக டெல்லிக்குத் திரும்புமாறு அமைச்சர் கூறினார். 'இது மிகவும் முக்கியமான விஷயம். ப்ரியா விரைவில் இங்கு வரட்டும்' என்பதுதான் அவர் சொன்னது."



ப்ரியா சதுர்வேதி உடனடியாக டெல்லி திரும்ப வாக்குறுதி அளித்த பின்னர் கிருஷ்ணா இணைப்பைத் துண்டித்தார். .


==============================


ஸ்ரீநகரில் உள்ள லால் சௌக் பகுதி காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்ததும், அவர் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு உடனடியாக தனது உதவி ஆய்வாளரை அழைத்தார். விஷயத்தை அவரிடம் சுருக்கமாகச் சொல்லிவிட்டு இருவரும் ஜீப்பில் ஏறி தலைமை தபால் நிலையத்தை அடைந்தனர்.


அங்குள்ள யாருக்கும் உருப்படியாக எந்தத் தகவலும் தெரியாத நிலையில் அவர்கள் இருவரும் தலைமை போஸ்ட் மாஸ்டர் வருவதற்கு காத்திருக்க வேண்டியிருந்தது ..


தலைமை போஸ்ட் மாஸ்டர் வந்தபோது மாலை நான்கு மணி ஆகிவிட்டது.


மாலை மணி நாலு இருபதற்கு ஜீலம் நதியருகேயிருந்த அந்த 'அழுக்கு குண்டு' வெடித்துச் சிதறியது.



= = சாகசம் நாளை தொடரும்
 
Status
Not open for further replies.
Top Bottom