Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கரையும் காதலன் - கதை

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
167
Points
43
கரையும் காதலன் கதை பகுதி

கரையும் காதலன் அறிமுகம்

கரையும் காதலன்-1

கரையும் காதலன்-2

கரையும் காதலன்-3

கரையும் காதலன்-4

கரையும் காதலன்-5

கரையும் காதலன்-6

கரையும் காதலன்-7

கரையும் காதலன்-8

கரையும் காதலன்-9
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
167
Points
43
கரையும் காதலன் 32:

வணக்கம் பிரெண்ட்ஸ்.



நோ.

நோ.. கோபம்...

எனக்கும் என் ஸிஸ்டெமுக்கும் குன்ஹா நாளாவே சண்டை தான். அதுகூட என் பேச்சு கேட்க மாட்டேங்குது... என்ன பண்றது?



அதனால, சரியாகிற வரைக்கும் நேரடியா இங்க பதிவிட போறேன்...

****

கரையும் காதலன் 32:



அங்கே நின்றிருந்தது மருதன்.

அவனை கண்டதும் குருதி கொதித்திட கவிந்தமிழன்.

"உனக்கு எவ்வளவு துணிச்சல் இருந்தால் அந்த துரோகியோடு சேர்ந்து கொண்டு எங்கள் அனைவரையும் கொல்ல திட்டமிட்டிருப்பாய்? வயிற்றில் சிசுவை சுமந்திருக்கும் உன் சகோதரியை கூடவா நீ பார்க்கவில்லை? எவ்வளவு கல்மனம் உனக்கு? உயிரோடு விடக்கூடாது" என்று தன் வாளினை உயர்த்த தடுத்தது செந்தமிழனின் குரல்.

"அவன் இல்லை என்றால் இந்நேரம் நாம் அனைவரும் இந்த நஞ்சு கலந்த பாலை அருந்தி மாண்டிருப்போம்" என்றான் செந்தமிழன்.

"என்ன சொல்கின்றீர் அண்ணா?" என்றான் கவிந்தமிழன்.

"ஆமாம் கவி. கனி இவனையும் சேர்த்து தான் கொல்ல திட்டமிட்டிருக்கிறான். இதை ஒற்றர்கள் மூலம் அறிந்த இவன் அந்த துரோகிக்கு உதவி செய்ததை நினைத்து வருந்தி நம்மை காக்க சற்று முன் தான் வந்தான். என்னிடம் கூறியபொழுது நான் நம்ப மறுத்தேன். அந்த ஒற்றன் மூலம் உண்மை என்று அறிந்து இங்கு வந்தேன். சரியான நேரத்திற்கு வந்து தட்டிவிட்டேன் இல்லை என்றால் மலர் அருந்தியிருப்பாள்." என்றான் செந்தமிழன்.

"அண்ணா!" என்று ஓடிவந்து மருதனை அணைத்துக்கொண்டாள்.

அவளின் தலை வருடிவிட்ட மலர், " என்னை மன்னித்துவிடம்மா. பெரும் தவறிழைத்துவிட்டேன் உனக்கு" என்று கண்கலங்கினான் மருதன்

"அந்த கனியழகனை விடமாட்டேன். அவனின் பாவங்கள் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. அண்ணனின் தாரத்தை அன்னையாக நினைக்க மறந்து நீச எண்ணம் கொண்ட அந்த கயவனை இன்றே இந்த உலகை விட்டு அனுப்புகிறேன்" என்று கோபத்தில் கொக்கரித்து செல்ல திரும்பிய கவிந்தமிழனை நிறுத்தினான் மருதன்.

"தங்களின் கரங்களால் அந்த பாவ செயலை செய்ய வேண்டாம். உடன்பிறந்தவனை கொன்றான் கவின்தமிழன் என்ற அவப்பெயர் வேண்டாம். அந்த காரியத்தை நான் செய்து முடித்துவிட்டேன் " என்றான் மருதன்.

"என்ன சொல்கிறாய் மருதா?" என்றான் கவி.

"ஆம்! நமக்கு தர சொன்ன அதே நஞ்சை அவனின் உணவில் கலந்து சிறையிலேயே கொடுக்க வைத்துவிட்டேன். இந்நேரத்திற்கு அந்த பாவியை மரணம் தழுவி இருக்கும்" என்றான் மருதன்.

"அயோ அண்ணா! என்ன காரியம் செய்துவிட்டாய்?" என்றாள் மலர்.

"உனக்கு அவ்வளவு தீங்கு இழைத்தவனுக்காக நீ ஏன் வருத்தப்படுகிறாய் மலர்?" என்றான் மருதன்.

"ஆயிரம் இருந்தாலும் அவர் இவரின் சகோதரன் அல்லவா?" என்றாள் மலர்.

"தேவையில்லை அப்படி ஒரு தம்பி இருந்தான் என்பதை மறந்துவிடவேண்டும்" என்றான் கவி.

எல்லோரும் சிறைக்கு செல்ல அங்கே உயிருக்கு போராடி கொண்டிருந்தான் கனி.

"என் ... வழி..லே..யே.. என்..னை .. இப்படி செய்துவி...ட்டிர்கள் அல்...லவா?" என்றான் கனி.

"நீ இருந்தென்ன பயன் கனி? உறவுகளின் அருமை தெரியவில்லை உனக்கு" என்றான் கவி.

"இதோடு இது முடியப்போவதில்லை கவி. நீங்க இருவரும் எத்தனை பிறவிகள் எடுத்தாலும் இவளை நான் அடையாமல் விடமாட்டேன். அடுத்த பிறவியில் உன் திறமைகளை பெற்று இவளை உரிமையாக்கி உன்னை தனித்து கொல்லவில்லை என்றால் நான் என் குருவிடம் கற்ற அணைத்து கலைகளும் உண்மையில்லை என்றாகும்" என்றபடியே கண்கள் சொருகி உயிர் நீத்தான்.

இதோ இந்தப்பிறவியில் இவர்கள் படும் துன்பத்திற்கு இதுவும் ஒரு காரணமாக...

*******************

அந்த புகைப்படத்தில் முற்பிறவியை கண்ட மதி, "ஷ்ரவன்!" என்று அவனின் கைகளை பிடித்து கொண்டாள்.

"பயபடக்கூடாது" என்று உள்ளே முன்னேறினான்.

மதியும் அவனை தொடர்ந்து முன்னேற.

"மதி அங்க பாரு.. அதோ .." என்று கை நீட்ட, அங்கே பதப்படுத்த பட்ட நிலையில் அவனின் உடல் வைக்கப்பட்டிருந்தது.

"ஷ்ரவன்.. இப்போ நான் என்ன பண்ணனும்?" என்றாள் ஒரு முடிவோடு மதி.

"இங்க தான் அவங்க ரெண்டு பேரும் இருக்காங்க. அவங்க கண்ல படாம அங்க பாரு என் உடல் வைக்க பட்டிருக்க இடத்துக்கு பக்கத்துல ஒரு சிறிய மரப்பெட்டி இருக்கு" என்றான் ஷ்ரவன்.

அவன் கூறிய இடத்தை ஆராய்ந்தவள், "ஆமாம் அங்க இருக்கு." என்று அவனை பார்த்தாள்.

"அந்த பெட்டியில் ஒரு சின்ன நீல குப்பியில் இருக்க கெமிக்கலை என் உடம்பு மேல முழுவதும் தெளிக்கணும்" என்றான் ஷ்ரவன்.

"தெளிச்சா? உடனே நீ வந்துடுவியா?' என்றாள் ஆர்வம் மின்ன மதி.

"அவசரப்படக்கூடாது மதி. இல்ல உடனே நான் வரமாட்டேன். அந்த திரவியத்தை என் மேல தெளிச்சா அது தான் முதல் படி. பின்னர் அதோ பாரு அங்க ஒரு மணி மாலை இருக்கு." என்றான் ஷ்ரவன்.

அந்த மணிமாலையை பார்த்த பின், "ஆமா இருக்கு " என்றாள் மதி.

"அந்த மாலையை எடுத்து என் கழுத்துல போடணும். அந்த மணிமாலை என் குருநாதர் எனக்கு பயிற்சி முடிச்சப்புறம் கொடுத்த பரிசு. அதுக்கு மிக்க ஷக்தி இருக்கு " என்றான் ஷ்ரவன்.

"ஓஹ் " என்றாள் மதி.

"அப்படி அந்த மணிமாலைல என்ன ஷக்தி இருக்கு?" என்றாள் மதி.

"ஆமா மதி . என்னோட சிறப்பு சக்திகளை யாருக்கும் கொடுக்காம பாதுகாக்கும். வேற யாராலயும் அதை எடுக்க முடியாது " என்றான் ஷ்ரவன்.

"அப்படியா?" என்றாள் விழிகள் விரித்து மதி.

"ஆமாம். என்னடி இவ்வளவு சாதாரணமா கேக்குற?" என்றான் ஷ்ரவன்.

"பின்ன வேற எப்படி கேக்கணும்?' என்றாள் குறும்பாய் மதி.

"மதி ஒருவேளை இதுல என் உயிர் திரும்ப வராமா போயிடுச்சுனா என்ன பண்ணுவ?" என்றான் ஷ்ரவன்.

அவன் விழிகளையே சிறிது நேரம் பார்த்து கொண்டிருந்த மதி, நீ இல்லாம இங்க எனக்கு என்ன வேலை உன் கூடயே வந்துடுவேன்." என்றாள் மதி.

"மதி" என்று ஷ்ரவன் பதறினான்.

"என்ன?" என்றாள் மதி.

"ஏண்டி இப்படி பேசுற?" என்றான் கோபமாய் ஷ்ரவன்

"நீ மட்டும் ஏன் தேவையில்லாத கேள்வியெல்லாம் கேக்குற? அப்படியே நீ இல்லன்னு உன் ஞாபகத்துலையே இருக்கேன்னு வை. நம்ம உறவை பத்தி யாருக்கு என்ன தெரிஞ்சிருக்கும்? சாதாரணமா சின்ன வயசா இருக்கு வேற ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கமான்னு சொல்லுவாங்க. மனசுல உன் கூட வாழ்ந்துகிட்டு வேற ஒருத்தன் கூட என்னாலலாம் குடும்பம் நடத்த முடியாது" என்றாள் தீர்மானமாய் மதி.

"மதி! ஐ ஆம் சாரி" என்றான் ஷ்ரவன்.

"சே நீ எதுக்கு ஷ்ரவன் சாரி சொல்ற? நீ என்ன பண்ணுவ?" என்றாள் மதி.

"மதி என்னை எப்படியாவது காப்பாத்திடுடி. எனக்கு உன்கூட ரொம்ப நாள் வாழனும்" என்றான் ஏக்கமாய் ஷ்ரவன்.

"அப்புறம் உன்னைத்தவிர வேற யாராலயும் இப்போ நான் சொன்னதை செய்யமுடியாது. தொடவும் முடியாது " என்றான் ஷ்ரவன்.

"ஏன்? தொடக்கூட முடியாது?" என்றாள் மதி.

"ஆமாம் மதி. என் உயிரில் கலந்தவ நீ மட்டும் தான்" என்று சிரித்தான் ஷ்ரவன்.​
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
167
Points
43
கரையும் காதலன் 33:

"ஹ்ம்ம் இன்னொருத்தர் வந்தா முடியும் " என்று சிரித்தான் ஷ்ரவன்.

'யார்?' என்பது போல் புருவம் உயர்த்தி பார்த்த ஷன்மதி, பின் "கருவன் " என்றாள் முகம் பிரகாசமாய்.

'ஆமா' என்பது போல் தலையசைத்து "எப்படி சொன்ன?" என்றான் ஆச்சரியமாய்.

"நீ உன்னோட கலைகளை சொல்லிக்கொடுத்த ஒரே ஒருத்தர் அவர் தான?" என்றாள் சாதாரணமாக.

"உண்மை தான் . ஆனா அவன் இப்போ இருக்கானான்னு தெரியலையே?" என்றான் ஷ்ரவன் சிறிது சோகமாய்.

"நான் இருக்கேன் ஷ்ரவன். நீ இல்லாம நான் இங்கே இருந்து போகமாட்டேன்." என்றாள் மதி தீர்மானமாக.

"அது அவ்ளோ சுலபம் இல்ல மதி." என்றான் எச்சரிக்கையாய்.

"நிச்சயமா கனியழகன் மட்டும் தான் இருப்பான். என் அண்ணன் இருக்க மாட்டான்" என்றால் மதி.

"இருக்கலாம் மதி. அவன் அப்பாவே நம்மகூட சேர்ந்து இருக்க ஆரம்பிச்சுட்டான்." என்றான் ஷ்ரவன்.

"சரி நான் உள்ள போகட்டா?" என்றாள் மதி.

"இன்னொரு வேலையும் இருக்கு உனக்கு" என்றான் ஷ்ரவன்.

"என்ன?" என்றாள் ஆர்வமாக.

"என் மேல அந்த கெமிக்கல் தெளிச்சப்புறம் என் கை கால் சேர்த்து கட்டு போட்றுக்காங்க பாரு. அதை எடுத்திடனும். அப்டி நீ எடுக்கிறதுக்குள்ள ஏதாவது நடந்துட்டா அவ்ளோ தான். இவ்ளோ நாள் நீ பட்ட கஷ்டம் எல்லாம் வீண். நல்லா கேட்டுக்கோ, ஒரே முறை தான் இதை செய்ய முடியும்." என்றான்.

"புரியுது ஷ்ரவன். எனக்கு நீ வேணும். அதுக்காக எவ்ளோ ரிஸ்க் வேணா எடுப்பேன்" என்றாள் மதி.

"மதி நீ மட்டும் நான் சொன்னதை செய்துட்டா அப்புறம் அந்த திறமைகள் எனக்கு கிடைக்கும் அதோட என்னை என் உடலில் இருந்து அதுக்கப்புறம் பிரிகிறது முடியாத காரியம். ஆனா.." என்று இழுத்தான் ஷ்ரவன்.

"என்ன ஷ்ரவன்?" என்றாள் மதி.

"அது அந்த பெட்டிய அங்க இருந்து உன்னாலமட்டும் தான் எடுக்க முடியும். ஆனா அது எடுத்தப்புறம் உன்கிட்ட இருந்து பறிக்க முடியும். அது இல்லன்னா என் உயிர் இல்ல." என்றான் ஷ்ரவன்.

அவனின் வார்த்தைகள் பயத்தை தந்தாலும் வெளிக்காட்டாமல், "சொல்லிட்டியா? இல்ல இன்னும் இருக்கா?" என்றாள் மதி.

அவளின் விழிகளை ஆழமாக நோக்கியவன். மேனியின் ஸ்பரிசம் இல்லாத அன்பின் ஸ்பரிசத்தில் அணைத்துக்கொண்டான்.

"மதிம்மா! பயமா இருக்காடா?" என்று மிகவும் மென்மையான குரலில் அவளின் உயிரை வருடும்படி கேட்க.

விழிகளில் வழியும் கண்ணீரை துடைத்தபடி, "உன்னோட இந்த அணைப்பு உண்மையாகணும்னு ஏங்கிட்டு இருக்கேன் ஷ்ரவன். " என்று தொடமுடியாத அவனின் முகத்தை வருடி, "இந்த முகத்தை நான் என் கையால ஆசையா தொட்டு பார்க்க போற நேரம் இன்னும் கொஞ்சம் தான் இருக்கு ஷ்ரவன்.." என்று அவனின் நெற்றியில் முத்தமிட.

"உன்னோட அன்பான வார்த்தைகளோட உன் அணைப்பு, தொடுதல், முத்தம், அன்பு. எல்லாமே எனக்கு வேணும் ஷ்ரவன். கண்டிப்பா உன்னை மீட்பேன்" என்றவள் அவன் எதிர் பாராநேரம் மின்னல் வேகத்தில் அவனின் இதழில் தன் இதழை ஒற்றி எடுத்தாள்.

"மதி!" என்றான் மின்னல் தாக்கிய இன்பத்தில் ஷ்ரவன்.

மூடிய விழிகளில் ஒரு துளி கண்ணீர் வழிவது போல் தெரிய "ஹ்ம்ம் என் ஷ்ரவன் ரொம்ப தைரியமானவன். இல்லன்னா இவ்ளோ நடந்தும் நீ உயிரோட வரணும்னு போராடுவியா" என்று சிரித்தாள் மதி.

"நான் உள்ள போறேன் ஷ்ரவன்" என்று திரும்பினாள் மதி.

அவளின் கரம் பற்றி ஒரு நொடி நிறுத்தியவன் "மதி! நான் அங்கே பூஜையரைல இருந்த மதுரை மீனாட்சி அம்மனோட குங்குமத்தை எடுத்துட்டு வரசொன்னேனே எடுத்துட்டு வந்தியா?" என்றான் ஷ்ரவன்.

"எடுத்துட்டு வந்துருக்கேன். இதோ" என்று தன் பையில் இருந்து எடுத்துக்கொடுத்தாள்.

அதிலிருந்து ஒரு துளியை எடுத்து அவளின் நெற்றி வகிட்டில் வைத்தான்.

"இன்னொன்னும் எடுத்து வரசொன்னேனே?" என்று கேட்டான்.

"ஹ்..இருக்கு ஷ்ரவன்" என்று சிரித்தவள் எடுத்து அவன் முன் கொடுக்க.

"இதையெல்லாம் நாம முற்பிறவியில் இருந்த, இந்த இடத்துல தான் என்னால செய்ய முடியும் மதி. " என்று அவளின் கைகளில் இருந்த மங்கல்யத்தை வாங்கி அவளின் கழுத்தினில் கட்டினான்.

"இது நிழல் தான் பொண்டாட்டி. நிஜமாகுறது உன்கிட்ட தான் இருக்கு. இந்த குங்குமம் மங்கல்யமும் இல்லாம அங்க போகமுடியாது மதி உன்னால.. " என்றான் அவளின் நெற்றியோடு நெற்றி மூடி விழிகள்மூடி.

"இது ரெண்டாவது தடவை என் கழுத்துல தாலி கட்டிருக்கடா புருஷா! கண்டிப்பா இந்த தடவை உன்னை என்கிட்ட இருந்து தப்பிக்க விடமாட்டேன் " என்று சிரித்தாள்.

மதியின் பேச்சில் கரைந்து அவனும் சிரித்தான்.

"சரி. நான் போறேன்" என்று கூற இம்முறை தொடுதல் இல்லாமல் அவளின் இதழில் முத்தமொன்றை பதித்து "பத்திரம் மதி. இங்க என்னால எந்த உதவியும் பண்ண முடியாது. ஹ்ம்ம் இந்த குங்குமம் உன்கிட்டயே இருக்கட்டும் ஒருவேளை உன்னை யாராவது நெருங்கினா இதை கொஞ்சம் தூவு. உன்னை காக்கும்" என்று அவளை விடுத்தான் ஷ்ரவன்.​
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
167
Points
43
கரையும் காதலன் 34
அவனிடம் இருந்து விலகிய ஷன்மதி, உள்ளத்தால் நடுங்கியபடி அடியெடுத்து வைக்க, அவளின் மேனியை ஏதோ ஒரு தீய சுவாசம் தீண்டியது போல் உணர்ந்தவள். பையில் இருந்த குங்குமத்தை எடுத்து கையில் வைத்துக்கொண்டாள்.
ஷ்ரவனால் தான் உள்ளே செல்லமுடியாத மந்திரக்கட்டை எண்ணி நொந்து கொண்டிருந்தான்.
'என்ன இது என் மதிக்கு வந்த சோதனை? என்னால் அவளுக்கு உதவி செய்ய முடியவில்லையே' என்று வருந்தினான்.
ஷ்ரவனின் உடலருகே சென்ற மதிக்கு அவனை அந்த நொடியே அணைத்துக்கொள்ள உள்ளம் துடித்தது.
'என்னவனின் உடல் இங்கிருந்தும் என்னால் தொட முடியவில்லையே.' என்று வருந்தினாள்.
அடிமேல் அடிவைத்து விழிகளை அங்கும் இங்கும் சுழட்டிக்கொண்டு ஷ்ரவனின் அருகில் சென்றவள் ஒருநொடி அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
பின் மெல்ல நகர்ந்து அந்த நீல குப்பியை எடுக்க முன்னேறினாள்.
இரண்டடி கூட எடுத்து வைத்திருக்க மாட்டாள்.
அவளின் அருகாமையில் ஓர் குரல் கேட்டது.
"மலர்!" மிக மெதுவாக கேட்டது.
அக்குரலில் அவளின் உயிரினில் ஒரு துளி சில்லிட்டது.
'இந்த குரலை நான் எங்கயோ கேட்ருக்கேன்' என்றது அவளின் மனம்.
"மலர்! என் அன்பே!" என்றது இம்முறை.
"இது... இது... அந்த கனியழகனின் குரல் தானே?' மதியின் எண்ண அலைகள் தாறுமாறாக ஓட தொடங்கியது.
"இரண்டு பிறவிகள் என்ன? இன்னும் எத்தனை பிறவிகள் எடுத்தாலும்... செதுக்கி வைத்த சிற்பம் போலவே ஜொலிப்புடன் திகழ்கிறதே!! எப்பிறவியில் நான் செய்த புண்ணியமோ? இப்பிறவியில் உன் விரல் தீண்ட காத்திருக்கிறேன் கண்ணே! இதோ பார் அந்த கவியின் உடலை இங்கே உனக்காக தான் வைத்திருக்கிறேன். உன் மேனியை தீண்டும் முன் அவன் உயிரை குடித்த காலன் நானே!" என்று அவளின் அருகிலேயே குரல் மட்டும் வந்துகொண்டிருந்தது.
"இங்க பாரு... நான் மலர் இல்ல... நான் ஷன்மதி... சாதாரணமான பொண்ணு. என் புருஷனோட உடலை இங்க எதுக்கு வச்சிருக்க? நீ யாரா இருந்தா எனக்கென்ன? நான் இங்கிருந்து போனா என் புருஷனோட தான் போவேன். நீ போயிடு.." என்றாள் உதறும் உள்ளத்தை வெளிக்காட்டாமல்.
"நீ இந்த பிறவியில் மலர் அல்ல என்பதை நானறிவேன் கண்ணே! அதோடு அந்த கவியின் ஆத்மா உன்னை இங்கு அழைத்துவரும் என்பதும் எனக்கு தெரியும். உன்னை நான் நெருங்க முடியாதபடி அந்த கவிந்தமிழன் அவனறிந்த வித்தைகளை கொண்டு கட்டுகளை போட்டு வைத்தான்." என்று உரக்க சிரித்தான்.
"ஆனால் நானோ அவன் கட்டுகளை உடைக்காமல் என்னை தேடி உன்னை வரவழைத்தேன். இந்த நொடி முதல் நீ எனக்கு உரிமையானவள்" என்ற குரல் இன்னும் அருகில் நெருங்க தீயினில் நிற்பது போல் உணர்ந்தாள் ஷன்மதி.
'ஷ்ரவன்! எனக்கு பயமா இருக்கு.. எங்க இருக்க? நான் என்ன பண்ணனும்? ஷ்ரவன்' என்று மனதிற்குள்ளே பிதற்ற ஆரம்பித்தவளிற்கு ஷ்ரவனின் குரல் ஒலிக்க ஆரம்பித்தது.
'மதிக்குட்டி பயப்படாத... இந்த வாய்ப்பை விட்டுட்டா அவ்ளோ தான் இனி என்னை எப்போதுமே உன்னால மீட்க முடியாது' விருட்டென்று எழுந்தவள் கையில் வைத்திருந்த குங்குமத்தில் சிறு துளி தூவ.
"ஹா .." என்ற அலறல் மட்டும் கேட்டது.
"மலர்! என்ன அது? தூரத்தில் தூக்கி ஏறி" என்று அக்குரல் கூவ, இது தான் சமயம் என வேகமாக அந்த பெட்டியில் இருந்த நீல குப்பியை எடுத்து பிரித்தாள்.
அந்நீரை தெளிக்கும் முன் யாரோ அவளின் கரங்களை பற்றி தடுப்பதை போல் உணர்ந்தவள்.
"யாரு விடுங்க... என் கைய விடுங்க.. " என்று திமிறினாள்.
"எனக்கே உன் வேலையை காட்டுகின்றாயா? மயக்க மருந்து கலந்த பாலை எனக்கு கொடுத்து உறங்க வைத்தவள் தானே நீ" என்று சீறியது அக்குரல்.
எதிர்பாரா நேரம் தன் பலம் கொண்டு திமிறி தன்னை விடுவித்தவள் ஒரு நொடி கூட தாமதியாமல் அந்நீரை தெளித்தாள்.
புயலென ஓடி சென்று அம்மாலையை எடுத்தவள் வேகமாக ஷ்ரவனின் உடலிடம் ஓடி வர, "இம்முறை உன்னால் தப்பிக்க முடியாது மலர்" என்று அம்மாலையை தீண்டாமல் மலரை ஒரு நாற்காலியில் கட்டிப்போட்டது கனியழகன்.
இவற்றையெல்லாம் வெளியில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த ஷ்ரவனின் ஆன்மா அழத்தொடங்கியது.
'அயோ நான் கூறியது போல் நடக்க போகிறது. நீரை தெளித்தவுடன் அக்கட்டுகளை அவிழ்க்க சொன்னேன். மதி மறந்துட்டியே இன்னும் ஒரு நாழிகைக்குள்ள கழுட்டலைன்னா அவ்ளோ தான் என் வாழ்க்கையே முடிஞ்சுது அதோட உன் வாழ்க்கையும்' என்று தனக்குள் புலம்பினான்.
"என்னை எதுக்கு கட்டி போட்ட? என்னை விட்டுடு. நான் ஷ்ரவன் கூட சந்தோஷமா வாழணும். உன்னை கெஞ்சி கேட்டுக்குறேன்" என்று தன் வாழ்வை எண்ணி அழத்தொடங்கினாள்.
"ஷ்ரவன் எங்க இருக்க நீ? வா வந்து என்கூட இரு" என்று கதறினாள்.
"அச்சச்சோ மலர்... ஹ்ம்ம்... மதி... இனி நீ என் பொண்டாட்டி. நான் இந்த பிறவியில் யாருன்னு பார்க்கணுமா?" என்றது அந்த குரல்.
"நீ யாரா இருந்தாலும் உன் எண்ணம் நடக்காது. என்னைக்கும் நான் ஷ்ரவனோட மதி. வேற யாரும் என்னை சொந்தம் கொண்டாட முடியாது." என்று கத்தினாள் மதி.
"ரிலாக்ஸ்... ரிலாக்ஸ்... மதி பே..பி..." என்ற அந்த குரலின் மெல்லிய அழைப்பில் உயிர்நாடி சிலிர்க்க நிமிர்ந்தாள்.
"நீ ... நீ... இந்த குரல்... இந்த குரலை.. நான் கேட்ருக்கேன்... எனக்கு ரொம்ப தெரிஞ்ச குரல்..." என்று தனக்குள் யோசித்தாள் மதி.
"நல்லா யோசி மதி பேபி,.. உனக்கு என்னை நல்லாவே தெரியும்... அதோட இந்த பிறவியில் உன் ஷ்ரவனுக்கும் என்னை தெரியும்... உனக்கு ரொம்ப தெரிஞ்சவன்... ஹா..ஹா. ஹா. இப்போ உனக்கு சொந்தமானவன் ஆக போறேன்." இங்கே அக்குரல் மதியை பார்த்து பேசிக்கொண்டிருந்த நேரம்.
அவ்வுருவமில்லா உயிருக்கு பின்னால் ஷ்ரவனின் உடலில் சிறியதொரு மாற்றம்.
ஷ்ரவனின் குரல் கடவுளின் செவியில் விழுந்தது போல் ஓர் அதிசயம் நடந்தது.
அது ஷ்ரவனையும் மதியையும் இணைத்ததா?
This post was modified 1 year ago by dharshini chimba
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
167
Points
43
கரையும் காதலன் 35:

இங்கே இவர்கள் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் அங்கே எங்கிருந்தோ ஓடிவந்த சிறு எலி வேகமாக ஷ்ரவனின் உடலில் இருந்த கட்டுகளை கடித்து கொண்டிருந்தது.

இதை கவனித்த மதி எதிரில் இருப்பவனின் கவனம் அங்கே திரும்பாமல் இருக்க இன்னும் பேச்சு கொடுத்தாள்.

'ஷ்ரவன்! நான் சொன்ன மாதிரியே பார்த்தியா? என்னை மாதிரி இக்காலத்தில் இருந்து உனக்கு உதவக்கூடிய இன்னொரு நபர் வந்துட்டார். அவரின் உருவம் அவருக்கு மிகவும் உதவியாய் இருக்கும் போல.' என்று உள்ளுக்குள் எண்ணியவள் ஷ்ரவனின் உடலை தப்பி தவறியும் காணவில்லை.

அதற்குள் "நான் யார்னு தெரிஞ்சுக்க ஆசையா இருக்கா மதி பேபி?" என்ற குரல் அவளின் எண்ணத்தை கலைத்தது.

'யாரா இருக்கும்? இந்த குரலை நான் நிறைய தடவை கேட்ருக்கேன். எனக்கு ரொம்ப பழக்கமான குரல்... யாரூ?' என்று அவளின் மனம் தன் நினைவுகளில் தேட முயற்சித்தது.

அதற்குள் அந்த கட்டுக்களை அவிழ்த்த அந்த சிறு எலி, தன் பணி இன்னும் முடியவில்லை என்பது போல் ஓடி மதியின் பின்னால் வந்தது.

இதனை கண்ட மதிக்கு வியர்க்க தொடங்கியது.

உருவமில்லா எதிரில் இருக்கும் எதிரிக்கு தெரிந்துவிடுமோ என்ற பதற்றம் தொற்றி கொண்டது.

'அய்யய்யோ இப்போ எதுக்கு இது இறங்கி என்கிட்ட வருது. மாட்டிக்க போகுதோ? இல்ல எல்லாத்தையும் கெடுக்க போகுதோ?' என்று தனக்குள்ளேயே புலம்பிக்கொண்டிருந்தாள் ஷன்மதி.

"என்ன மதி! ஹ்ம்ம்... மலர்.. நான் யாருன்னு தெரிஞ்சிக்க இவ்ளோ பதட்டமா இருக்க? உனக்கு ரொம்ப தெரிஞ்சவன் தான்.. ஆனா, உனக்காக என்ன வேணாலும் செய்ய கூடியவன்." அவனின் குரலில் இருந்த தீவிரம் இது இப்பொழுது முடியுமா என்ற கேள்வியை எழுப்பியது மதிக்கு.

"நீயாவே உன்னை ரொம்ப பெருமையா நினைச்சிட்டு இருக்க!! ஆனா, அடுத்தவர் மனைவியை கவர நினைக்கும் கயவன் நீ.. ஒன்னு மட்டும் தெரிஞ்சிக்கோ. நடக்காது இருந்தாலும் சொல்றேன். ஒரு வேளை என்னை நீ அடைய நினைச்சு ஒரு அடி எடுத்து வச்சா கூட, என் மேல ஒரு விரல்கூட படவிடமாட்டேன். அதையும் மீறி அப்படி ஒரு நிலைமை வந்தா உயிர் இல்லாத இந்த உடலை தான் உன்னால தொட முடியும். இது என் ஷ்ரவனுக்கு நான் கொடுக்குற பரிசு. அவனுக்கு மட்டும் தான் நான் சொந்தம்" என்றாள் மதி ஷ்ரவனின் முகத்தை மனக்கண்ணில் கண்டு.

"ஒஹ் மதி பேபி! நீ பேசுறது கொஞ்சம் கூட நல்லா இல்ல. அந்த ஷ்ரவன் சாரி சாரி கவிய விட உன்னை ஆயிரம் மடங்கு அதிகமா லவ் பண்றேண்டி. ஒரு ஜென்மம் இல்ல... இதோ தொடர்ந்து மூணு ஜென்மமா உன்னையே சுத்தி வர அளவுக்கு. உனக்கு ஏன்டி புரிய மாட்டேங்குது. எந்த காரணத்துக்காகவும் உன்னை நான் மிஸ் பண்ணவே மாட்டேன். நீ என்னோட மதி." என்றது அந்த குரல்.

எதுவும் சொல்லாமல் சிரித்த மதி அவனை ஆழ்ந்த ஒரு பார்வை செலுத்தி, "நீ சொல்றது போலவே இருக்கட்டும் மிஸ்டர்.கனி. அண்ட் வூஹ் எவர் மே பீ யு? அதை பத்தி எனக்கு கவலை இல்ல.. நீ என் ஷ்ரவனை விட அதிகமா நேசிச்சாலும் உன்னை நான் திரும்பி நேசிக்கனும் அப்போ தான் உன்னோட காதலுக்கு ஒரு அர்த்தம் இருக்கு. ஆனா, நீ சொன்ன இந்த மூணு ஜென்மத்துலையும் என் மனச கவர்ந்துட்டு போனது என் ஷ்ரவன் ஹ்ம்ம் கவி மட்டும் தான்... அப்புறம் அதுவுமில்லாம நீ கனியா இருந்தப்ப நான் உன்னோட அண்ணி... அண்ணிங்கறவ அம்மாக்கு சமானம். ஹ்ம்ம் இந்த பிறவில நீ யாருன்னே இன்னும் உன் முகத்தை என்கிட்டே காட்டலையே? அப்புறம் தான் சொல்லமுடியும் நீ என்ன பண்ணிருக்கன்னு" என்றாள் மிகவும் நிறுத்தி நிதானமாக.

மௌனம் அறையெங்கும் நிலவியிருக்க, "ஆயிரம் பேசினாலும் நீ எனக்கு மட்டும் தான்றது என்னோட ஒவ்வொரு அணுவுளையும் கலந்திருக்கு மலர் . அதை எப்பவும் மாத்த முடியாது. சோ, நீ வீனா பேசி என் மனசை மாத்த முடியும்னு கனவு காணாத" என்றது உருவமில்லா அக்குரல்.

இவர்களின் பேச்சுவார்தைக்குள் அந்த சிறு எலி மதியின் பின்புறம் இருந்து அவளின் கையில் இருந்த மணியை வாங்கி கொண்டு ஷ்ரவனின் உடல் இருக்கும் இடத்திற்கு விரைந்தது.

அம்மாலையை அவனின் உடலில் அணிவித்து அவனருகிலேயே அமர்ந்தது.

மாலையை அணிவித்த அடுத்த அரைமணி நேர காலத்தில் ஷ்ரவனின் உடலில் மாற்றங்கள் நிகழ தொடங்கியது.

மதியின் பேச்சுக்கிடையில் அவளின் விழிகள் ஷ்ரவனின் அசைவுகளை மகிழ்வுடன் பார்த்துக்கொண்டிருந்தது.

"நீ யாரு? உன் முகத்தை காட்டு கனியழகனா இருந்த உன் முகம் இப்ப எப்படி இருக்குன்னு பார்க்கணும்?" என்றாள் மதி.

"அவ்ளோ ஆசையா உனக்கு என்னை பார்க்க? " என்று மெதுவான குரலில் அவளின் செவிகள் அருகே குரல் கேட்க திடுக்கிட்டவள் சற்று விலகினாள்.

"ஒரு பெண்ணோட அனுமதி இல்லாம அவளை நெருங்கியது ரொம்ப தவறு" என்றாள் காட்டமாக.

"ஹ்ம்ம் ஓகே ஓகே.. ஆனா, உன்னை தொடாம நீ எனக்கு சொந்தம்னு மட்டும் காட்டுவேன். நீ கேட்டதுக்காக நான் இந்த பிறவியில் யாருன்னு பாரு.. மதி பேபி!!" என்று அவளின் முன் ஜொலிப்புடன் கூடிய ஒரு உருவம் தெரிய விழிகளை விரித்து பார்த்தவள் தலைசுற்ற அதிர்ந்தாள்.

"நீ ...யா... இல்ல இது மாதிரி நடக்காது." என்றாள் மதி அதிர்வோடு.

 

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
167
Points
43
கரையும் காதலன் 36:

"நானே தான் மதி" என்றான் எதிரில் இருப்பவன்.

"ச்சீ! வாயை மூடு. சரத்!! நீயா இவ்ளோவும் பண்ணது?" என்றாள் மதி மீண்டும் நம்பாமல் ஆத்திரமும் ஆதங்கமும் தாங்கியபடி.

"யா! பேபி!! நானே தான். இன்னும் உனக்கு சந்தேகமா இருக்கா?" என்று நெருங்கி அவளின் கண்ணத்தை தொட முயற்சி செய்ய, வெடுக்கென்று முகம் சுளித்து திருப்பி கொண்டாள்.

"என்னாச்சு மதி? ஒரு காலத்துல நான் உன் கைய புடிச்சு நடந்தா கூட ஒன்னும் சொல்ல மாட்ட? ஆனா, இப்போ என் விரல்கூட படக்கூடாதுனு நினைக்குற?" என்றான் சரத்.

வேகமாக நிமிர்ந்தவள்.

கோபமாய் முறைத்து, "ஆமா! அன்னைக்கு இருந்த சரத் வேற. அதுக்கப்புறம் இருந்த சரத் வேற, இப்போ இருக்க சரத் ரொம்ப வேற" என்றாள் முடிவில் நக்கலாய்.

"அப்டியா சொல்ற மதி பேபி? இல்லையே நான் எப்பவும் ஒரே மாதிரி இருக்க சரத் தான். மே பி உன் கண்ணுக்கு இப்போ நான் அப்படி தான் தெரிவேன்." என்றான் சரத்.

"வாய மூடு! எல்லாமே நாம பார்க்கிற பார்வைல தான் இருக்குனு நினைக்கிறவ நான். ஆனா, உன் விஷயத்துல அப்படி இல்ல..." என்றால் சுள்ளென்று.

"ஓஹ்ஹோ" என்றான் கையை கட்டிக்கொண்டு.

"நீ இவ்ளோ கொடூரமானவனா இருப்பன்னு நினைக்கவே இல்ல..." என்றாள் மதி வேதனையை விழிகளில் காட்டி.

"நானும் முதல்ல இப்படி இல்ல மதி. எல்லாம் காலத்தின் கட்டாயம்.." என்றான் சரத் முகத்தில் எந்தவித பாவத்தையும் காட்டாமல்.

"என்ன கட்டாயம் சரத்? நீ என்னோட நல்ல நண்பன் டா. ஆனா இப்போ?" என்றாள் முகத்தில் கோபம் சூரியனாய் தகிக்க.

"இப்போ என்ன மதி? அதையே தான் நானும் கேட்கிறேன்? நான் உன்னோட நல்ல நண்பன் மட்டும் இல்ல... அது தெரியும்" என்றான் அர்த்தமுள்ள ஒரு பார்வையை வீசி.

"இப்போ என்ன சொல்ல வர? நீ என்னை விரும்பின? ஆனா, நான் உன்னை விரும்பலையே? என்னோட எண்ணத்தை சொன்னப்புறம் நீயும் சரின்னு சொல்லி விலகி தான இருந்த? என் கல்யாணத்துக்கு கூட வந்தியே? அப்போ எல்லாத்தையும் பிளான் பண்ணி தான் என் கல்யாணத்துக்கு வந்தியா?” என்றாள் மதி.

"ஆமா!" எனறு கத்தியவன், அவள் விழிகளை உள்ளத்தின் வலிகளோடு நோக்கினான்.

"நான் எல்லாத்தையும் பிளான் பண்ணிட்டு தான் உன் கல்யாணத்துக்கே வந்தேன்." என்றான் சரத்.

"ஏன்?" என்றாள் உள்ளுக்குள் சென்ற மெதுவான குரலில்.

"ஏன்னா மதி! ஐ லவ் யு! " என்றான்.

அவளின் பார்வையை தாங்காது, "சத்தியமா அப்படி பார்க்காத மதி. நீயும் நானும் மூணு வருஷம் கல்லூரில ஒண்ணா படிச்சோம். அந்த காலத்துல எனக்கு பிறகு தான் மத்த பிரெண்ட்ஸ் எல்லாம் உனக்கு." என்றான் கண்களில் அந்த காலங்களை நினைத்தபடி.

"எப்படி? எப்போ? உன்ன விரும்ப ஆரம்பிச்சிட்டேன். வேற யார்கூடவாவது நீ பேசினா கூட என்னால தாங்கமுடியாது. அப்புறம் கடைசி வருஷம் உன்கிட்ட ஒரு நாள் வந்து என் மனசிலிருக்கிறதை சொன்னேன். அதுக்கப்புறம் எல்லாமே தலை கீழாகிடுச்சி" என்று அவளை பார்த்தான்.

"அதுக்கப்புறம் கூட எதுவும் மாறலை சரத். என் அப்பா அம்மாவும் சம்மதம் சொன்னா பார்க்கலாம்னு சொன்னேன்." என்று நிறுத்தினாள் மது.

"நீ அப்படி சொன்ன மறுநாளே வந்தேன் உன் வீட்டுக்கு பல கனவுகளோட!" என்றான் சரத்.

"எது நடக்கும்னு இருக்கோ அது தான் நடக்கும். நீ வந்த.. எங்கப்பாகிட்ட பேசின.. அவருக்கும் உன்னை பிடிச்சிருச்சு... ஆனா.." என்று நிறுத்தினாள் மதி.

"ஆனா என்ன மதி? சொல்ல உங்கப்பா சொன்ன ஒரே காரணம்? எப்படியோ பேசும்போது தெரிஞ்சிருச்சி கண்டுபிடிக்க முடியாத வகைல நான் சுத்தி வளைச்சு உங்களுக்கு சொந்தக்காரன்னு.." என்று நிறுத்தினான் கோபத்தை கட்டுப்படுத்தமுடியாமல்.

"அது மட்டும் தானா சரத்? இல்ல.. அது இல்ல எங்கப்பா உன்னை வேணாம்னு சொல்ல காரணம். எப்படி தெரிஞ்சாலும் தூரமோ ரொம்ப சொந்தமோ ? சொந்தம்னு வந்தப்புறம் முறையை பார்க்க தான செய்வாங்க? பார்த்தாங்க.." என்று அவள் நிறுத்த.

"என்ன பெரிய முறையை கண்டு பிடிச்சீங்க?" என்று வார்த்தைகளை நிறுத்தினான்.

"ஆமா! முறைன்னா முறை தான். மாமன் முறை வந்திருந்தா இந்நேரத்திற்கு நமக்கு கல்யாணம் நடந்திருக்கும். நீ சொன்ன மாதிரி விதி. யாருக்கு யாருனு கடவுள் முதல்லயே முடிவு பண்ணிட்டார். நான் என் ஷ்ரவனுக்கு மட்டும் தான். நீ ஏதோ ஒரு வகைல எனக்கு சகோதர முறை ஆகிட்ட. அது தெரிஞ்சப்புறம் எப்படி பெத்தவங்க கட்டிக்கொடுப்பாங்க?”என்றாள் மதி காரமாக.

"ஆனா, என்னால மறக்க முடியலையே மதி. நான் எவ்ளோ ஆசை ஆசையா உன்னை காதலிச்சேன். என்னால மறக்க முடியலை. என் மனசுக்கு அது தெரியலை" என்றான் வேதனையாக.

"இங்க பாரு சரத். நாம வாழற சமூகத்துல இது இப்படி தானிருக்கணும்னு ஒரு சில நியாயமான அடிப்படை செயல்களை வகுத்திருக்காங்க. நாம அதை கடைபிடிச்சு தான் ஆகணும். " என்றால் மதி.

"அப்போ உனக்கு என்னை பிடிக்காதா மதி?" என்றான் சரத் ஏக்கமாய்.

"யார் சொன்னா உன்னை எனக்கு பிடிக்காதுன்னு? ரொம்ப பிடிக்கும் ஒரு நல்ல நண்பனா... என்னை எல்லா விதத்துலையும் பாதுகாத்த என் தோழனா? ஆனா, என் கணவனா உன்னை என்னைக்கும் நினைச்சது இல்ல. ஒரு வேளை உன் விருப்பம் சரியாயிருந்தா உனக்கு மனைவியா வந்த அப்புறம் உன்னை கணவனா பிடிச்சிருக்கலாம்... " என்றாள் மதி.

"மதி " என்றான் உடைந்து போன குரலில்.

"சரத்! நீ எப்படி இங்க? நீயா நான் உயிருக்கு உயிரா விரும்பின என் ஷ்ரவனை இவ்ளோ கஷ்ட்டப்படுத்திருக்க?" என்றாள் அழுவும் குரலில்.

"என் மனசை தேத்திகிட்டு தான் இருந்தேன். ஆனா, விதிவசத்தால் ஷ்ரவன் வந்த அதே நேரத்துல நானும் என் நண்பர்களோட இங்க வந்திருந்தேன். அதற்கு பிறகு தான் நான் யார் என்பது எனக்கு தெரிந்தது. யாரென்று தெரியாமலே உன்னை விருமபியவன். நான் எப்படி இருந்தேன்னு தெரிஞ்சப்புறம் எப்படி சும்மா இருப்பேன்? உன்னை என்கிட்டே கொண்டு வர ஒரு வாய்ப்பு இருக்கும் பொழுது நான் சும்மா இருப்பேனா? அதான் ஷ்ரவன் சாரி அந்த கவிய பிளான் பண்ணி இங்க கொண்டு வநதேன். இனி அவன் வரமாட்டான்." என்று சிரித்தான் இறுதியில்.

அவனின் கவனம் முழுக்க மதியின் மேல் இருக்க. ஆனால், அவனுக்கே தெரியாமல் அங்கு ஒன்று நடந்துகொண்டிருந்தது.​
 
Top Bottom