Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கர்வம் அழிந்ததடி - (நிழல் நிலவு - பாகம் 2)

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
வணக்கம் மக்களே!!
ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கேன்.. எல்லாரும் எப்படி இருக்கீங்க? இன்னிக்கு பிப்ரவரி -14. என்ன நாள்ன்னு உங்களுக்கு தெரியும். இந்த நல்ல நாள்ல ஒரு நல்ல லவ் ஸ்டோரியை தொடங்கினா என்னன்னு தோணிச்சு. தொடங்கிட்டேன். பெரிய பிரேக் எடுத்துட்டேன். நீங்க எல்லாரும் படிச்சு கமெண்ட்ஸ் கொடுத்தாதான் எழுத முடியும். சோ நான் தொடர்ந்து எபிஸோட் போடறது நீங்க எப்படி என்கிட்ட கனெக்டடா இருக்கீங்கங்கறதை பொறுத்துதான் இருக்கு. அதனால படிச்சிட்டு மறக்காம நல்ல கமெண்ட் கொடுத்துட்டு போங்க. 😊😊😊

கர்வம் அழிந்ததடி -(நிழல் நிலவு - பாகம் 2)... Enjoy Reading!!!!

நன்றி,
நித்யா..
 
Last edited:

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
கர்வம் அழிந்ததடி -(நிழல் நிலவு - பாகம் 2)
அத்தியாயம் - 1


நொய்டா பெருநகரத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது அந்த 'பப்'. சிகப்பு, மஞ்சள் ஊதா என்று கலர் கலரான வெளிச்சம் பக்கம் மாற்றி பக்கம் ஒளிர்வதும் மங்குவதுமாக, அங்கே ஒலித்துக் கொண்டிருந்த டிஜே-வின் இசைக்கு ஏற்ப நடனமாடிக் கொண்டிருந்தது. ஆல்கஹாலின் ஆதிக்கம் தலைக்கேறிய இளங்காளைகளும் கன்னிகைகளும் அந்த பெரிய ஹாலில் கூடி இரவை கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்.



திடீரென்று அங்கே சின்ன சலசலப்பு! இளம் பெண் ஒருத்தி ஆக்ரோஷமாகக் கத்திக் கொண்டிருந்தாள். அவளுக்கு எதிரில் நின்றவனின் முகத்தில் அலட்சியம் புன்னகையாக வழிந்தது. அது இன்னும் அவள் ஆத்திரத்தை அதிகப்படுத்த, அதுவரை வாய்வார்த்தையாகக் கத்திக் கொண்டிருந்தவள் கைகலப்பில் இறங்கினாள். அவ்வளவுதான்! அவன் தன் மிருகத்தனத்தை வெளிப்படையாக காட்ட துவங்கினான். அவனோடு அவன் நண்பர்களும் சேர்ந்துகொள்ள மிரண்டு போனாள் அந்த பெண்.



அங்கு ஒரு பெரிய கும்பலே இருந்தது... ஆனால் ஒருவரும் தன்னிலையில் இல்லை. ஆட்டம் பாட்டம் என்று குதூகலித்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஒரு சின்ன பெண்ணின் துன்பமோ, கோபமோ ஆத்திரமோ எதுவும் கண்ணில் படவில்லை.



தனக்கு இங்கு யாரிடமிருந்தும் உதவி கிடைக்கப்போவதில்லை என்பதை உணர்ந்துக் கொண்டவள் எப்படியோ அவர்களிடமிருந்து விலகி கூட்டத்திற்குள் புகுந்து வாயிலை நோக்கி ஓடத் துவங்கினாள். அவர்களும் கூட்டத்தை விலக்கிக்கொண்டு அவளை துரத்திப் பிடித்து, பிரைவேட் ஏரியாவிற்கு இழுத்துச் செல்ல முயன்றார்கள்.



இரத்தத்தில் கலந்திருந்த ஆல்கஹாலோ அல்லது மூளையை ஆக்கிரமித்திருந்த போதை வஸ்துவோ, ஏதோ ஒன்று அவர்களை மூர்கர்களாக மாற்றி இருந்தது.



அந்த பெண் அவர்களை பயங்கரமாக எதிர்த்தாள். அவர்களிடமிருந்து தப்ப முயன்று எதிர் திசையில் விசை கொடுத்து இழுத்தாள். இழுத்த வேகத்தில் அறுபட்ட ரப்பர் பேண்டு போல், தூரத்தில் நின்று கொண்டிருந்த ஒரு மலை மனிதனின் மீது போய் விழுந்தாள்.



ஆறடிக்கும் மேலான உயரம்... அகண்ட உருவம்.. செக்யூரிட்டி கார்டாக இருக்கும், உதவி கேட்கலாம் என்று ஆவலுடன் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தவள் திகைத்தாள்.



அடர்ந்த தாடி மீசைக்குள் செதுக்கி வைத்த கல் போல் புதைந்திருந்தது அவன் முகம். புருவத்திற்கு மேலே பெரிய தழும்பு, சிவந்த கூர்மையான கண்கள்... விடைத்த நேர் நாசி... அழுந்த மூடிய உதடுகள்... துரத்திக் கொண்டு வருபவர்களை விட இவனை பார்க்கப் பயமாக இருந்தது அவளுக்கு.



தப்பிக்க வேண்டும் என்கிற ஒரே எண்ணம் பிரதானமாக இருக்க அவனிடமிருந்தும் விலக முயன்றாள். அதே நேரம் அவளை துரதிக் கொண்டிருந்த மிருகங்களில் ஒன்று அங்கே பாய்ந்து அவள் கையை பிடித்து இழுக்க, தன்னியல்பாக அவள் மீண்டும் அந்த மலை மனிதனிடம் ஒட்டிக் கொண்டு அவன் சட்டையை இறுக்கமாக பற்றிக் கொண்டாள்.



"ஹெல்ப் மீ... ஹெல்ப் மீ... ப்ளீஸ்... " - கத்தினாள்.



ஆனால் அவன் புருவம் சுருங்கிய விதமே அவளுக்கு உதவும் எண்ணமெல்லாம் அவனுக்கு துளியும் இல்லை என்பதை காட்டிவிட, அவள் இன்னும் அவனோடு ஒட்டிக் கொண்டு, "சார் ப்ளீஸ்... ப்ளீஸ்... ப்ளீஸ்... " என்று கெஞ்சினாள்.



அதற்குள் அவளை சூழ்ந்துகொண்ட மிருகக் கூட்டம், "ஹேய் மித்து, நாங்க இருக்கும் போது சார்கிட்ட ஏன் கெஞ்சிகிட்டு இருக்க? வா எங்க கூட" என்று அவளை தங்கள் பக்கம் இழுக்க, இப்போது அந்த மலை மனிதனின் கை அவள் கையை பற்றியிருந்தது. வியப்புடன் அவள் பார்வை அவன் பக்கம் திரும்ப, அவன் முகத்தில் அத்தனை கொடூரம். என்ன நடக்கிறது என்பதை அவள் உணர்வதற்குள், அவள் கையை பிடித்திருந்தவன் பொத்தென்று கீழே விழுந்தான். முகம் எங்கு உடைந்ததோ குபுகுபுவென்று இரத்தம் பெருகியது.



சுற்றியிருந்த கூட்டம் அதிர்ந்து கூச்சலும் குழப்பமுமாக விலகிக் கொள்ள, இவள் பார்வை அவன் பக்கம் மீண்டும் திரும்பியது. கண்களில் வெறியும் ஆக்ரோஷமுமாக கீழே கிடந்தவனை ஓரிரு நொடிகள் பார்த்தவன் பிறகு அவள் முகத்தை ஏறிட்டான். அதுவரை கோபம் கொப்பளித்துக் கொண்டிருந்த அவன் முகத்தில், என்னவென்றே சொல்ல முடியாத ஒரு பாவம்.. அந்த பெண் புரியாமல் அவனை பார்த்தாள்.



"மி..ரு..து..!" - மெல்ல முணுமுணுத்தான். அந்த பெயர் அவன் நெஞ்சுக்குள் ஆயிரம் ஊசிகளாக இறங்கியது. “மிருது?” - மீண்டும் ஒரு முறை உச்சரித்தான். இந்தமுறை கேள்வியாக.



"நோ..” என்று இழுத்தவள், “மித்து... மித்ரா..." என்று பதட்டத்தை மறந்து அவனை படிக்க முயன்றாள்.



அதற்குள் கீழே கிடந்தவனுக்கு சிலர் உதவ, அவனுடைய நண்பர்கள் அந்த முரட்டு மனிதனை சூழ்ந்துகொண்டார்கள். அவ்வளவுதான்... அடுத்த சில நிமிடங்களில் அந்த ஹால் போர்க்களமாக மாறியிருந்தது. சூழ்ந்து நின்ற நண்பர்கள் கூட்டம் சிங்கத்தின் மீது பாயும் ஓநாய்கள் போல அவன் மீது பாய, அனைவரையும் கடித்துக் குதறும் சீற்றம் நிறைந்த வேங்கையாக மாறினான் அவன். ஓரிரு நிமிடங்கள் மட்டுமே நடந்த அந்த யுத்தத்தில் எலும்பு உடைபடாமல் அவனிடமிருந்து ஒருவர் கூட தப்பி இருக்க முடியாது.



திரைப்படத்தில் கடைசி காட்சியில் வரும் போலீஸ் போல, அந்த மனமகிழ் மன்றத்தின் பாதுகாவலர்கள், அவனிடம் சிக்கி சிதைந்து கொண்டிருந்தவர்களை காப்பாற்ற கடைசியாக வந்து சேர்ந்தார்கள். ஒருவருக்கு மூவராக சேர்ந்து இழுத்துப் பிடித்தும் அவனை கட்டுப்படுத்த முடியவில்லை. 'மிருது' என்கிற அவளுடைய அரை பெயரே அவனை முழு மிருகமாக மாற்றி இருந்தது.



எங்கிருந்தோ ஓடிவந்த இன்னும் இரண்டு பாதுகாவலர்களும் சேர்ந்து ஐந்து பேராக அவனை சுற்றி வளைத்து போராடினார்கள். வெகு நேரத்திற்கு பிறகே அவனுடைய சீற்றம் சற்று மட்டுப்பட்டது. அப்போதும் முழுமையாக அவன் அமைதியடைந்து விடவில்லை. பாதுகாவலர்கள் வெகு சிரமப்பட்டு அவனை வெளியே இழுத்துக் கொண்டு வந்தார்கள்.



பெரிய அடிதடிதான்... ஆனால் போலீசுக்கு தெரியப்படுத்த முடியாது. அங்கே அதிகமாக புழங்கும் போதை வஸ்த்து அதற்கு இடம் கொடுக்கவில்லை. முடிந்த அளவுக்கு அவனை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பினார்கள்.



தன் காரில் வந்து அமர்ந்தவனுக்கு நெஞ்சுக்குள் ஏதேதோ செய்தது. மண்டை ஓட்டுக்குள் பின்னிக் கிடைக்கும் நரம்புகள் எல்லாம் தெறித்தன. கார் கதவை இறுக மூடிக் கொண்டு 'ஓ'வென்று பெருங்குரலில் கத்தினான். உள்ளே பிடித்துக் கொண்ட தீ அணைவதாக தெரியவில்லை. அவனே பற்றி எறிந்தான். இதய துடிப்பு அதிகமானது... மூச்சு சீரற்று போனது... கை காலெல்லாம் நடுக்கம் கண்டது. அவசர அவசரமாக டேஷ் போர்டை திறந்து, உள்ளே இருந்த ஏதோ மருந்தையும் சிரஞ்சையும் எடுத்து கையில் ஏற்றி கொண்டான்.



இரண்டே நிமிடம்... அவனுடைய ஆன்சைட்டி என்னும் கட்டுப்பாடற்ற உணர்வு பெருக்கம் மெல்ல மட்டுப்பட்டது. அப்படியே காற்றில் மிதப்பது போல்... லேசாக... கனமில்லாமல்... சுகமாக... கண்கள் சொருகியது... கைகள் வலுவிழந்து துவண்டு விழ... தலை பாரம் தாளாமல் துவள ஸ்டியரிங்கில் கவிழ்ந்து நினைவிழந்தான். ஏற்கனவே அருந்தி இருந்த மது... கூடவே பெயர் சொல்ல முடியாத போதை மருந்து... இரண்டுமாக சேர்ந்து அவன் மூளையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து அவனை நினைவிழக்க செய்துவிட்டது.



*************



இருள்... அடர்ந்த காரிருள்... ஒளியும் ஓசையும் இல்லாத அடர்ந்த அத்துவானம்... அங்கே அவன் மட்டும் தனித்து நின்றான். திக்குத் தெரியாத தனிமை காட்டில் தவித்து நின்றான்... ஓவென்று பெருங்குரலில் கத்தினான்.. ஆனால் அவன் குரல் அவனுக்கே கேட்கவில்லை. கண்களை கசக்கி, விழிகளை அகல விரித்து பார்த்தான். சூழ்ந்திருக்கும் கருமையை விளக்க முடியவில்லை. தூரத்தில் எங்கோ ஒரு குரல்...

'அர்ஜுன்... அ..ர்..ஜு..ன்...' - அவள் குரல்.. மிருதுளாவின் குரல்... மூடியிருந்த இமைகளுக்குள் அவன் விழிகள் உருண்டன. 'மிது... மிதூ....' - உதட்டில் மெல்லிய முணுமுணுப்பு...

"அசைவு தெரியுது... ஏதோ முணுமுணுக்கறார்" - இப்போது ஏதோ ஒரு புது குரல் அவன் செவியை தீண்டியது. இமைகளை பிரித்துப் பார்த்தான். பார்வை தெளிவில்லாமல் காட்சிகள் மங்கி தெரிந்தன. கண்களை மூடி மீண்டும் திறந்தான். இப்போது பார்வை மெல்ல மெல்ல தெளிவு பெற்றது. கையில் இண்டர்காமை பிடித்தபடி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் ஊதா நிற உடை அணிந்திருந்த ஒரு பெண். மருத்துவமனை சீருடை போல் இருந்தது. எங்கிருக்கிறோம் என்று சுற்றும் முற்றும் பார்த்தான். அவன் ஊகம் சரிதான்... பெருமூச்சுடன் மீண்டும் விழிகளை மூடினான்.



"மிஸ்டர் அபிமன்யு. யு ஆர் ஆல்ரைட்... ஸ்டே அவேக்" - ரிசீவரை வைத்துவிட்டு அவனை நோக்கி வந்தாள் அந்த பெண்.



அவன் மீண்டும் இமைகளை பிரித்தான். அவள் அவன் கையை பிடித்து நாடியை சோதித்தாள். கீழ் இமையை இழுத்து கண்களுக்குள் பேனா டார்ச்சை அடித்துப் பார்த்துவிட்டு, "ஸ்டராங் மேன்" என்று கூறி புன்னகையித்தாள். அதற்குள் அறை கதவை திறந்து கொண்டு மருத்துவர் உள்ளே வந்தார்.



கேஸ் ஷீட்டை செவிலியிடமிருந்து வாங்கி பார்த்துவிட்டு அவனை பரிசோதித்தார். கூடவே, "இந்த லக் எப்பவும் கை கொடுக்காது அபி. நீ உன் மேல கொஞ்சமாவது அக்கறை எடுத்துக்கணும்" என்றார் கண்டிக்கும் தொனியில்.



அதே சமயம் மீண்டும் அரை கதவு திறக்கப்பட்டது. அபிமன்யுவின் பார்வை வாயிலை நோக்க, உள்ளே நுழைந்தவர் பிரமிளா... அவனுடைய தாய். முகத்தில் கடுமை டன் கணக்கில் ஏறியிருந்தது. அப்படியே அபிமன்யுவின் முகம். நல்ல உயரம். தொடர் உடற்பயிற்சியால் உறுதி பெற்றிருந்த உடல் அமைப்பு. நேர் கொண்ட பார்வை... நிமிர்ந்த நன்னடை.. அத்தனையும் ஏர்ஃபோர்ஸ் ஆஃபீசருக்கான சிக்னேச்சரஸ்... ஆனால் இப்போது இல்லை... அவர் எக்ஸ்... அதாவது வேலையிலிருந்து ஓய்வு பெற்று எக்ஸ் ஏர்ஃபோர்ஸ் ஆஃபீசர் ஆகி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது.



அவருடைய நிமிர்வுக்கு காரணம் அவர் பார்த்த வேலை மட்டும் அல்ல. அவர் உடலில் ஓடும் ராஜ வம்சத்து இரத்தமும் அதில் கலந்தோடும் கர்வமும் சேர்ந்து அவர் தலையை சற்று கூடுதலாகவே நிமிர்த்தியிருந்தது. கூடவே அவர் தந்தை ஊட்டி வளர்த்த நாட்டுப்பற்று...



அந்த காலத்தில் அத்தனை சொத்துக்கள் இருந்த போதும் அனைத்தையும் ஒதுக்கிவிட்டு, தன் இளம் வயதிலேயே குடும்பத்திலிருந்து விலகி, சுபாஷ் சந்திரபோஸின் சுதந்திர படையில் சாதாரண வீரனாக சேர்ந்து போராடியவர் பிரமிளாவின் தந்தை. சுதந்திரத்திற்கு பிறகே திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு பதினைந்து ஆண்டுகள் கழித்து வெகு தாமதமாக பிறந்தவர் தான் பிரமிளா.



தன் வம்சத்தின் ஒற்றை வாரிசு பெண்ணாக பிறந்த போதும் அவரை நாட்டு சேவைக்கு தயார் படுத்தி ஏர்ஃபோர்ஸில் பணியமர்த்தினார். வீரமும் செருக்கும் மிகுந்த மனிதர். அவருடைய இரத்தம் பிரமிளாவின் மூலம் அபிமன்யு வரை கடத்தப்பட்டிருந்தது.



பிரமிளாவை பார்த்ததும் மருத்துவர் தலையசைக்க, செவிலி மரியாதையுடன் விலகி நின்றாள். அபிமன்யு முகத்தை திருப்பிக் கொண்டான். கத்தி பார்வையால் தன்னை துளைக்கும் தாயை அவனால் எதிர்கொள்ள முடியவில்லை.



அவர் பார்வை இப்போது மருத்துவரிடம் திரும்பியது. "ஹௌ இஸ் ஹி நௌ?" - உணர்வுகள் துடைக்கப்பட்ட குரலில் கேட்டார்.



"கிட்டத்தட்ட இது சூசைட்னு தான் சொல்லணும்... பிழைச்சதே பெரிய விஷயம். மறுபிறப்புன்னு நெனச்சுக்கோங்க" என்றார்.



பிரமிளாவின் முகத்தில் ஒரு சின்ன இறுக்கம்... அவ்வளவுதான்... அதற்கு மேல் அவரிடம் எந்த எதிர்வினையும் இல்லை. ஓரிரு நிமிடங்கள் மகனை மெளனமாக பார்த்துக் கொண்டிருந்தவர், "த்ரீ டேஸ் ஆபிஸர்வேஷன்ல இருக்கட்டும். அப்புறம் என்ன செய்யலாம்னு யோசிக்கலாம்" என்ற மருத்துவரின் குரலில் அவர் பக்கம் திரும்பினார்.



"எனக்கு அபிகிட்ட கொஞ்சம் தனியா பேசணும்" மெல்ல, அதே சமயம் உறுதியாக சொன்னார். அந்த குரலை மறுக்க முடியாமல்,



"இப்போ தான் கான்ஷியஸ் வந்திருக்கு. ரொம்ப ஸ்ட்ரெஸ் கொடுக்க வேண்டாம்" என்று கூறிவிட்டு அறையிலிருந்து வெளியேறினார் மருத்துவர். செவிலியும் அவரை பின்தொடர்ந்து செல்ல, இப்போது அந்த அறையில் தாயும் மகனும் மட்டுமே இருந்தார்கள்.



அபிமன்யு தாயின் பக்கம் திரும்பவே இல்லை. "அபி, நா உன்கிட்ட பேசறதுக்காகத்தான் இங்க நின்னுட்டு இருக்கேன்" - அதட்டலும் கண்டிப்புமாக ஒலித்தது அவர் குரல்.



ஆழ மூச்செடுத்து அவர் பக்கம் திரும்பிய அபிமன்யு, "மாம் ப்ளீஸ், ஐம் டயர்ட். லெட் மீ டேக் எ நாப். நாம அப்புறம் பேசலாம்" என்றான். அவர் முகம் கோபத்தில் சிவந்தது.



"மூணு நாளா தூங்கிட்டு தான் இருந்த" என்றார்.



அவன் திடுக்கிட்டுப் போய் அவரை பார்த்தான். அவர் தன் மொபைலை அவனிடம் திருப்பிக் காட்டினார். தேதியை பார்த்தவன் அதிர்ச்சியுடன் தாயை பார்த்தான். மூன்று நாட்கள் விழிப்பு வராமல் கிடந்திருக்கிறான்... கிட்டத்தட்ட கோமாவில்... அதிர்ச்சி இல்லாமல் எப்படி இருக்கும்!



"இது ஃபர்ஸ்ட் டைம் இல்ல, ஃபோர்த் டைம். நாலு முறையும் செத்து பிழைச்சிருக்க" என்றார் கடுமையாக.



தாய்க்கு சளைத்தவனா மகன்! பத்து வருஷத்துக்கு முன்னாடியே எனக்கு டெத் சர்டிபிகேட் எடுத்தாச்சுமா"என்றான் ஒரு நக்கல் சிரிப்புடன்.



"நீ வார்லயோ இல்ல அசைன்மென்ட்லையோ செத்துருந்தேன்னா சந்தோஷமா ஏத்துக்கிட்டிருப்பேன். ஆனா இப்படி கோழை மாதிரி சூசைட்ல சாக ட்ரை பண்றதை தான் சகிக்க முடியல" என்றார்.



அபிமன்யு விரக்தியாக புன்னகைத்தான். "செத்துருக்கலாம்... இந்த பெயின் இருந்திருக்காது" என்றான்.



"இந்த வலியிலிருந்து தப்பிக்க சாகனுன்னு அவசியம் இல்ல. கரெக்ட்டா உன்னோட புரோட்டோகால்ஸையும் ரூல்ஸையும் ஃபாலோ பண்ணி இருந்தாலே போதும்" என்றார் கடுமையாக.



அபிமன்யு ஆழ மூச்செடுத்தான். "உங்களுக்கு புரியாது மாம். என்னால புரிய வைக்கவும் முடியாது. லீவ் மீ அலோன்" என்றவன் தலையை இடமும் வளமும் உருட்டினான். அவனுக்குள் ஏதோ ஒருவித அழுத்தம் கூடுவதையும் அதை தாக்குப்பிடிக்க முடியாமல் அவன் சிரமப்படுவதையும் உணர்ந்தவர், "ரிலாக்ஸ்... ரிலாக்ஸ் அபி.. ரிலாக்ஸ்" என்றார் அவசரமாக.



வெளியே நின்று உள்ளே நடப்பதை கவனித்துக் கொண்டிருந்தாளோ என்னவோ... சரியான நேரத்தில் செவிலி உள்ளே வந்து, "நான் பார்த்துக்கறேன் மேடம்" என்றாள்.



கூடவே சிரஞ்சில் மருந்தை ஏற்றி அவன் உடம்பில் செலுத்தினாள். மெல்ல மெல்ல அவன் இறுக்கம் தளர்ந்து கண்களை மூடினான். மகனையே ஓரிரு நொடிகள் விழியாகற்றாமல் பார்த்த பிரமிளா திரும்பி வாயிலை நோக்கி நடந்தார்.


 
Last edited:

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
அத்தியாயம் - 2

பெயர் சொன்னால் தெரிய கூடிய அளவுக்கு வெற்றிகரமாக பல தொழில்களை நடத்திக் கொண்டிருக்கும் இந்தியாவின் மிக முக்கியமான தொழிலதிபர் பலராம் நாராயண். பி-ஆர்-என் இண்டஸ்ட்ரீஸ் உருவாக காரணமான பெரிய மனிதர். வெண்ணிற குர்தா பைஜாமா அணிந்து, கையில் லேட்டஸ்ட் மடல் ரோலக்ஸ் வாட்சும், ஹேர் ஜெல்லில் அடங்கியிருந்த சால்ட் அண்ட் பெப்பர் தலை முடியுமாக, அபிமன்யூவின் முக ஜாடையுடன், அந்த மனநல மருத்துவர் முன் அமர்ந்திருந்தார்.



“கால் பண்ணி இருந்தா நானே வந்திருப்பேன் சார்!” என்றார் அந்த துறையில் உச்சத்தில் இருக்கும் அந்த மருத்துவர்.



அவருடைய பணிவை பொருட்படுத்தாமல், "அபியோட கண்டிஷன் இப்போ எப்படி இருக்கு?" என்றார் அமைதியாக.



மருத்துவர் சற்று நேரம் எதுவும் பேசவில்லை. பிறகு, "மெடிகேஷன்ல இருக்கும் போதே இவ்வளவு அக்ராஸிவா ஆயிருக்கார். வீடியோஸ் பார்த்தேன். வயலண்ட் லெவல் ஃபோர். ஒரு பையன் கிட்டத்தட்ட சாகர அளவுக்கு போய்ட்டான். அதுக்கு பிறகும் கூட அபியோட டெம்ப்பர் குறையல. ட்ரக்ஸ் ஓவர் டோஸ் ஆகிறது இது முதல் தரம் இல்ல. திரும்ப ஒருதரம் சாவோட விளிம்புக்கு போயிட்டு வந்திருக்கார். இதுல எதுவுமே குட் சைன் இல்ல. " என்றார் வருத்தத்துடன்.



"நோ..." - பலராம் தலையை குறுக்காக ஆட்டினார். "நீங்க அப்படி சொல்ல கூடாது டாக்டர். யு ஹாவ் டு சேவ் மை சன். யு ஹாவ் டு..." என்றார். கோபம் துக்கம் பிடிவாதம் எல்லாம் இருந்தது அவர் குரலில்.



ஓரிரு நிமிடங்கள் மருத்துவர் எதுவும் பேசவில்லை. பிறகு மெல்ல கேட்டார். "ட்ரிகரிங் பாய்ண்ட் என்னனு தெரிஞ்சதா?"



பலராம் தலையை ஆமோதிப்பாக ஆட்டினார். "அந்த பொண்ணு தான் ட்ரிகரிங் பாய்ண்ட்"



மருத்துவர் புருவத்தை சுருக்கினார். "மிருதுளா... ரைட்? அந்த பொண்ண அன்னைக்கு மீட் பண்ணினாரா!"



"நோ... அந்த பொண்ணு பேரோட சாயல்ல ஒரு பொண்ண மீட் பண்ணி இருக்கான்"



"வாட்!"



"எஸ்... யு ஹியர்ட் மீ ரைட்" என்று கூறி அன்று பப்பில் நடந்த சம்பவத்தை விலக்கிக் கூறினார் பலராம்.



புரிந்துகொண்டது போல் தலையை மேலும் கீழும் அசைத்த மருத்துவர், "நான் கெஸ் பண்ணினதை விட அபியோட காயங்கள் ரொம்ப ஆழமா தெரியுது. நாம நம்மளோட ட்ரீட்மெண்ட் பேட்டனை மாத்தணும்" என்றார்.



"எப்படி?"



"அபியை திரும்ப ஜாப்ல சேர என்கரேஜ் பண்ணுங்க"



"நோ வே... அது ரொம்ப ரிஸ்க்" என்று உடனே மறுத்தார் பலராம்.



"ஐ நோ... அது ரிஸ்க் தான்... ஆனா அபிமன்யு ரொம்ப ஸ்ட்ராங் பர்சனாலிட்டி அவரால முடியும்"



"நாமளே நெனச்சாலும் அவனை இப்போ டிபார்ட்மெண்ட்ல ஜாயின் பண்ண வைக்க முடியாது டாக்டர். ப்ரோடோகால்ஸ் அதுக்கு இடம் கொடுக்காது. அபியோட மெண்டல் ஹெல்த் இம்ப்ரூவ் ஆகாம எப்படி?" என்றார்.



"ப்ரைவேட்டா ஏதாவது பண்ண முடியமா பாருங்க. அலாங் வித் மெடிசன்ஸ், அவருக்கு இப்போ டைவர்ஷன் ரொம்ப முக்கியம்." - மருத்துவர் உறுதியாக கூறிவிட பலராம் அதைப் பற்றி யோசிக்க துவங்கினார்.



**********************



மனநல மருத்துவரிடம் பேசிவிட்டு மகன் அனுமதிக்கப்பட்டிருக்கும் அறைக்கு வந்தார் பலராம் நாராயண். சாதாரண மருத்துவமனை அறை போல் இல்லாமல் ஸ்டார் ஹோட்டல் சூட் போல் இருந்த அந்த அறையின் வரவேற்பு பகுதியில் கையில் ஒரு மேகஸீனோடு அமர்ந்திருந்தார் பிரமிளா. இவர் உள்ளே வந்ததும் அரவம் கேட்டு அவர் நிமிர்ந்து பார்க்க, "எப்படி இருக்கான்?" என்றார் அவர் மகனைப் பற்றி.



அபிமன்யு உள்ளறையில் ஓய்வில் இருந்தான். "கான்ஷியஸ் வந்துடுச்சு. இப்போ தூங்கறான்" என்றார் பிரமிளா.



பலராம் மனைவியிடம் மனநல மருத்துவரின் ஆலோசனையை கூறினார். பிரமிளா எந்த தயக்கமும் இல்லாமல். "ஒர்க் அவுட் ஆக வாய்ப்பு இருக்கு" என்றார் உடனடியாக.



பலராம் மனைவியை இமைக்காமல் பார்த்தார். பத்து வருடங்களுக்கு முன் மகன் டிஃபன்ஸில் சேர்ந்ததும் அவனை அண்டர்கவருக்கு தேர்ந்தெடுத்த போது அவர் தன் விருப்பமின்மையை வெளிப்படையாக கூறினார்.



அபிமன்யு யாரோ ஒரு ராமசாமி மாடசாமியின் மகன் அல்ல. மீடியா மாஃபியா என்று அனைவருடைய பார்வையிலும் பளிச்சென்று படக் கூடிய பணக்கார பெரும்புள்ளி பலராம் நாராயணின் மகன். அவன் அண்டர்கவர் ஆபரேஷனுக்கு அன்ஃபிட்... வெகு சில நாட்களிலேயே மாட்டிக்கொள்வான் என்று திட்டவட்டமாக கூறினார்.



ஆனால் அபிமன்யு பிடிவாதமாக இருந்தான். அந்த நேரத்தில் அவனுக்கு ஆதரவாக பேசியது பிரமிலாதான். பயம் என்பது சிறிதும் இல்லை அவருக்கு. மகன் இறந்துவிட்டான் என்று டெத் சர்டிபிகட் எடுத்து மூன்று வருடங்கள் அவனை உலகத்தின் கண்ணிலிருந்து மறைத்து, ட்ரைனிங் கொடுத்து, அவன் அடையாளத்தை மாற்றி, சிங்கத்தின் குகைக்குள் தனியாக அனுப்ப துணிந்த அசாத்திய பெண்மணி அவர். இப்போதும் அதே மாதிரியான ஒரு முடிவைத்தான் எடுக்கிறார் என்கிற எண்ணத்தில் மனைவியை இமைக்காமல் பார்த்தார் பலராம்.



கணவனின் பார்வையை புரிந்துகொண்ட பிரமிளா, "ஹி வில் பி ஆல்ரைட்" என்றார்.



"டிபார்ட்மெண்ட்ல புரோட்டோகால்ஸ் அலோ பண்ணுமா?"



"அவன் எப்போ புரோட்டோகால்ஸ் ஃபாலோ பண்ணி இருக்கான். ஆனாலும் ஏழு வருஷம் சர்வைவ் பண்ணி இருக்கான். டார்கெட்டை டெஸ்டராய் பண்ணி இருக்கான். இதையும் தாண்டி வருவான்" என்றார் நம்பிக்கையுடன்.



"என்ன பிளான்?"



"நரேன்கிட்ட அனுப்பலாம்"



"அந்தமானுக்கா!"



"எஸ், அவனுக்கு செக்யூரிட்டி பிரச்சனை இருக்கு. அதை இவன் ஹாண்டில் பண்ணட்டும். புது இடம்... பிடிச்ச வேலை... பக்கத்துல இருந்து பார்த்துக்கறதுக்கு நரேன்... வேற என்ன வேணும்? டாக்டர் சொன்ன டைவர்சனுக்கு இதுதான் கரெக்ட்டான இடம் " என்றார் தெளிவாக. பலராம் ஆமோதிப்பாக தலையசைத்தார்.

*****************************************



அவள் பெயர் மித்ரா... மித்து என்று அழைக்கப்படும் மித்ரா. நண்பர்கள் அந்த குட்டி பெயரை இன்னும் குட்டியாக்கி மித்து என்று அழைப்பது வழக்கம். அந்த அழைப்பு அவன் காதில் மிருது என்று விழுந்துவிட, அந்த பெயரின் தாக்கத்தில் தான் அன்று அவன் அந்த பப்பில் சிக்கிய சில்லறைகளை சிதறவிட்டது. அந்த நொடியிலேயிருந்தே அந்த பெண்ணுக்கு அவன் மீது ஈர்ப்பு... ஈர்ப்பு என்று சொல்வதை விட ஒருவித சுவாரஸ்யம்.



இப்படியும் ஒரு முரடான என்று... இந்த முரடன் நமக்காகவா இத்தனை கோபப்பட்டான் என்று... அத்தனை கலவரத்திலும் உள்ளூர ஏதோ சில்லென்று ஒரு உணர்வு!



சண்டை முடிந்து அவன் பப்பிலிருந்து வெளியேறியதும் அவளும் பின்தொடர்ந்து வந்தாள். ஒரு நன்றி சொல்லலாம் என்று... ஆனால் அவனை பிடிக்க முடியவில்லை. சிட்டாக எப்படி கண்ணிலிருந்து மறைந்தான்! எங்கு சென்றான்! என்று சுற்றி முற்றி பார்த்துவிட்டு, கார் பார்க்கிங்கில் தேடி பார்க்கலாம் என்று ஒரு ஊகத்தில்தான் அங்கு வந்தாள்.



ஆனால் அப்படி தேடிப் பார்க்கும் போது அவன் சுய நினைவில்லாமல் கவிழ்ந்து கிடப்பான் என்று அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. உதவிக்கு ஆட்களை அழைத்து ஆம்புலன்ஸை வர சொல்லி அருகில் இருந்த மருத்துவமனையில் அவள் தான் சேர்ந்தாள்.



அவனுடைய பெயர் கூட அவளுக்கு தெரியாது. அவனுடைய அலைபேசியை அன்லாக் செய்யவும் முடியவில்லை. அதனால் அவனுடைய குடும்பத்தினருக்கு தெரியப்படுத்த முடியாமல் அவள் திணறி கொண்டிருந்த போது அவர்களே அந்த மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார்கள்.



அவர்களுடைய மிடுக்கும், தோற்றமும் அவளை இன்னும் ஆச்சரியப்படுத்தியது. 'யார் இவன்!' என்கிற கேள்வி அவள் மனதில் பனை போல் உயரமாக வளர, நடக்கும் அனைத்தையும் சுவாரஸ்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அதிகபட்சம் ஒரு முப்பது நிமிடம் இருக்கும். அதற்குள் அவனை வேறு மருத்துவமனைக்கு மாற்றிவிட்டார்கள்.



"என்னங்கடா இது!" என்று வாயை பிளக்கத்தான் முடிந்தது அவளால்.



அவள் அப்படி திறந்த வாய் மூடாமல் பார்த்துக் கொண்டிருந்த போதுதான் ஒரு மேட்டுக்குடி பெரிய மனிதர் அவளிடம் வந்து, "தேங்க் யூ" என்ற வார்த்தையோடு ஒரு விசிட்டிங் கார்டையும் கொடுத்து, "ஏதாவது தேவைன்னா வந்து பாரும்மா" என்று கூறிவிட்டு சென்றார். ஆனால் அதற்கான அவசியம் ஏற்படவில்லை. மாறாக ஊரை காலி செய்ய வேண்டிய அவசியம் தான் ஏற்பட்டது.




"கியூரியாசிட்டி கில்ஸ்" - இந்த வாசகம் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ! துரு துரு மித்ராவுக்கு மிகவும் பொருந்தும். யாருடைய வாழ்க்கையில் என்ன ரகசியம் இருக்கிறது என்பதை தோண்டி துருவி தெரிந்துகொள்வதில் அவ்வளவு ஆர்வம் அவளுக்கு. அவளுடைய அந்த ஆர்வம் தான் அன்று பப்பில் நடந்த பிரச்சனைக்கு முக்கிய காரணம். அந்த பிரச்சனைக்கும் இந்த கதைக்கும் பெரிதாக எந்த சம்மந்தமும் இல்லை என்பதால் அதற்குள் நாம் செல்ல வேண்டாம். ஆனால் அன்று நடந்த பிரச்னை அவள் வாழ்க்கையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது.



மித்ராவின் சொந்த ஊர் நொய்டா அல்ல. அவள் முதுகலை படிப்புக்காகத்தான் இங்கு வந்து தங்கி இருந்தாள். வந்து ஆறு மதம் தான் ஆகிறது. அதற்குள் அறுபது பிரச்சனையில் சிக்கிவிட்டாள். இந்த முறை அபிமன்யுவின் உபயத்தால் பிரச்சனையின் அளவு சற்று ஓவர் சைஸ் ஆகிவிட்டது.



ஆம், அன்று நடந்த பிரச்சனைக்காக பப்பிலிருந்து போலீஸ் கம்பளைண்ட் எதுவும் கொடுக்கப்படவில்லை. ஆனால் அடிபட்டவர்களும், அவர்களுடைய குடும்பமும் அமைதியாக இருக்குமா என்ன? கேஸ் என்னவோ அபிமானியுவின் மேல் தான். ஆனால் மூலக்காரணம் இவள் தானே! அதனால் இவளும் விசாரணைக்கு அழைக்கப்பட்டாள். அழைத்தவர்கள் இவளை மட்டுமா அழைப்பார்கள். பெற்றோருக்கும் தகவல் சொல்லிவிட, அவர்கள் வந்து பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையை சுமூகமாக முடித்ததோடு, படிப்புக்கு ஒரு முழுக்குப் போட்டுவிட்டு மகளை கையேடு அழைத்துக் கொண்டு... இல்லை இழுத்துக் கொண்டு போய்விட்டார்கள். அவர்கள் போன ஊர் அந்தமான்.



மித்ரா அந்தமான் வந்து முழுதாக மூன்று வாரம் முடியவில்லை. அதற்குள் வீட்டுக்குள் கூண்டு கிளி போல் அடைந்து கிடக்க முடியவில்லை என்று ஆரம்பித்துவிட்டாள்.



ஒரே பெண்... செல்ல பெண்... ஓவர் கண்டிப்பு சாத்தியமில்லை.



"உள்ளூரிலேயே ஏதாவது பண்ணு. படிப்பு வேண்டாம். முடிஞ்சா வேலைக்கு ட்ரை பண்ணு" என்றார் அப்பா.



'இவ படிச்ச லட்சணத்துக்கு எவன் வேலை கொடுப்பான்!' என்பது அவர் எண்ணம்.



'வடை சுட எனக்கு மாவோ அடுப்போ தேவையில்லை... வாயே போதும்' என்று ஒரே மாதத்தில் அப்பாயின்மென்ட் ஆர்ட்டரோடு வந்து நின்றாள் மகள்.



எல்லாம் சரியாகத்தான் சென்றுக் கொண்டிருந்தது. அவள் மண்டைக்குள் குடைந்துக் கொண்டிருந்த அவனை பற்றிய எண்ணங்களை தவிர...



இதை வயது கோளாறு என்பதா அல்லது மேனிஃபாக்ச்சரிங் டிஃபக்ட் என்பதா! மித்ராவின் நடவடிக்கைகள் எல்லாம் அப்படிதான் இருந்தது.



'அவனோட கண்ணு ரொம்ப பவர்ஃபுல் இல்ல! ஷார்ப்பான கத்தி மாதிரி!' தனக்குள் சொல்லிக் கொண்டாள்.



'மூஞ்சி ஃபுல்லா முடியா இருந்தா கண்ணு மட்டும் தானேடி தெரியும். அப்போ அது ஷார்ப்பா இருக்க மாதிரி தான் தோணும்' மனசாட்சி மண்டையில் கொட்டியது.



"ஆமா... பார்க்க பக்கா ரௌடி மாதிரி இருக்கான்"



'இருந்துட்டு போறான். உனக்கென்ன?'



'எனக்கு ஒன்னும் இல்ல... ஆனா அவன் என்ன பார்த்த பார்வையில ஏதோ ஒண்ணு சரியில்ல'



'வேணாடி... இதுக்கு மேல யோசிக்காத... டேஞ்சர் ஜோன்...! டேஞ்சர் ஜோன்...!' - எச்சரித்தது மூளை.



அவளா கேட்பாள்! 'எனக்கென்னவோ நாம அவனோட செத்துப்போன காதலி மாதிரியே இருக்கோமோன்னு தோணுது. அவன் மூஞ்சையும் மூஞ்சி மேல இருக்க முடியையும் பார்த்தா தெரியல? அப்படியே தேவதாஸ் கெட்டப்' - குதிரையின் கடிவாளம் மெல்ல அவிழ்வதை கையாலாகா தனத்துடன் பார்த்துக் கொண்டிருந்த மனசாட்சி, 'ஒருவேளை பிரேக் அப் கூட ஆயிருக்கலாம்ல?' என்று பதில் கேள்வி கேட்டது.



'இவனை பார்த்தா, பிரேக் அப் பண்ணட்டு போற பொண்ண விட்டு வைக்கிற ரகமாவா தோணுது? தூக்கிட்டு வந்திருப்பாண்டி. அந்த பொண்ணு கண்டிப்பா செத்து போயிருப்பா. அதான் இவன் தேவதாஸா சுத்தறான்' - அடித்து சொன்னவள் அதை கன்ஃபாம் செய்துகொள்ள யாரிடம் விசாரிப்பது என்று யோசித்தாள்.



எல்லா கதவுகளும் தான் அடைபட்டுவிட்டதே! ஊரை விட்டே வந்துவிட்டாள். இனி யாரிடம் விசாரிக்க முடியும். மனசாட்சி அவனை பற்றிய எண்ணங்களை முடித்து வைக்க நினைத்தது. ஆனால் கியூரியாசி விடவில்லை.



பலராம் கொடுத்த விசிட்டிங் கார்டை எடுத்து கூகிள் ஆண்டவரின் கதவை தட்டினாள். ஆயிரத்தி எட்டாவது முறை... முதல் நாளிலிருந்து கிடைக்கும் அதே விபரங்கள் தான் இப்போதும் கிடைத்தது. பிசினஸ் மேன்... மனைவி எக்ஸ் ஏர்ஃபோர்ஸ் ஆபீசர்... ஒரே மகன்... ஆனால் அந்த மகன் இந்த மகன் இல்லை... முட்டு சந்தில் முட்டிய ஃபீல்... “யார்ரா நீ!” - அவளுடைய கேள்விக்கு பதில் வரவில்லை... கொட்டாவிதான் வந்தது. கணினியை மூடி வைத்துவிட்டு கவிழ்ந்து படுத்தாள்.
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
அத்தியாயம் – 3

வாழ்க்கையில் எந்த பிடிப்பும் இல்லை. வாழ்வதற்கு காரணமும் இல்லை... இந்த மனநிலை தன்னை எப்படி ஆக்கிரமித்தது என்பது அபிமன்யுவிற்கே புரியாத புதிர்தான்.



காதலா! குற்றஉணர்வா! அல்லது பைத்தியக்காரத் தனமா! பல முறை யோசித்திருக்கிறான். ஆனால் அதற்கெல்லாம் மேல் ஏதோ ஒன்று... வார்த்தையால் சொல்ல முடியாத வலுவான உணர்வு அவனை ஆக்கிரமித்திருந்தது... அடிமைப்படுத்தியிருந்தது. அதனால் தான் அவள் இல்லாதது ஜீவாதாரத்தையே இழந்துவிட்டது போல் அவன் வாழ்க்கையை அர்த்தமற்றதாக்கிவிட்டது.



இந்த வெறுமை அவனை பலமுறை எமலோகத்தின் வாசல் வரை அழைத்துச் சென்று விட்டது. அந்த அனுபவம் கூட அவனை அச்சுறுத்தவில்லை.



'சாவுதானே! வரவேண்டும் என்று இருந்தால் வரட்டும்!' என்று அலட்சியமாகத்தான் எண்ணினான். தன் உயிரை பற்றியே கவலைப்படாதவன், 'தம்பியின் உயிருக்கு ஆபத்து' என்கிற உருட்டுக்கெல்லாம் அசைந்து கொடுப்பானா என்ன? நொய்டாவை விட்டு கிளம்பவே மாட்டேன் என்று முரட்டுப் பிடிவாதம் பிடித்தான்.



பெற்றவர்கள் மாதக்கணக்கில் பிரஷர் போட்டுப் பார்த்தார்கள். அவன் இது போல் எத்தனையோ நெருக்கடிகளை சந்தித்து, கரைத்துக் குடித்தவன் என்பதை வெகு சாதாரணமாக காட்டினான். இதற்கு மேல் முடியாது என்று பலராம் விட்டுவிட்டார். ஆனால் பிரமிளா விடவில்லை. நரேனை தூண்டிவிட்டார்.



தனக்கு உதவி வேண்டும் என்று நரேன் நேரடியாகவே அண்ணனிடம் கேட்க துவங்கினான். ஒரே நாளில் அவனுடைய தொடர்பு எண்ணை பிளாக் லிஸ்டில் போட்டுவிட்டு தன் போக்கில் குடி ட்ரக்ஸ் என்று வாழ்நாளை குறைக்கும் முயற்சியில் மூழ்கினான் அபிமன்யு.



நடப்பை புரிந்துகொண்ட நரேன் ஒருநாள் அலுவலக எண்ணிலிருந்து அண்ணனை தொடர்பு கொண்டு பேசினான்.



"நீ ஒரு செல்ஃபிஷ் டேஷ்டா. ஃபேமிலிக்கே வேல்யூ கொடுக்க மாட்டேங்கிற? அந்த பொண்ண எப்படி ட்ரீட் பண்ணியிருப்ப? யு நோ வாட்... யு டிசர்வ் திஸ் பெயின்… என்ஜாய்..." என்று அவனை பேசவிடாமல் கத்திவிட்டு போனை வைத்தான்.



அவன் கொடுத்த அடி சரியாக வேலை செய்தது. மறுநாளே அபிமன்யு அந்தமானில் இருந்தான்.



அடர்ந்த தாடி மீசையும், பராமரிப்பற்று மண்டிக் கிடைக்கும் கேசமும், அந்த அலுவலகத்திற்கு சற்றும் சம்மந்தம் இல்லாத முரட்டு ஜீன்ஸ் டீஷட்டுமாக ஒருவன் உள்ளே நுழைந்ததும் செக்யூரிட்டி அலர்ட் ஆகி அவனை தடுத்தான். ஒரே அறையில் அவனை கீழே தள்ளிவிட்டு உள்ளே நுழைந்தான் அபிமன்யு.



ரிஷப்ஷனில் இருந்தவர்கள் பதறி எழுந்து, "ஹலோ... ஹூ ஆர் யூ? ஹே மேன்... வெயிட்..." என்று பலவித குரல்களில் கத்தி கொண்டே அவனை பின்தொடர்ந்து ஓடினார்கள். ஆம், அவன் நடக்கும் வேகத்திற்கு மற்றவர்கள் ஓடத்தான் வேண்டியிருந்தது.



இதுவரை அவன் இந்த அலுவலகத்திற்கு வந்ததில்லை. அவனையும் இங்கு யாருக்கும் தெரியாது. நரேனின் அறையை தேடி ஆவேசத்துடன் அங்கும் இங்கும் அவன் சென்றுக் கொண்டிருக்க மற்றவர்கள் அவனை தடுக்க முயன்றார்கள். அங்கே நடக்கும் கலவரத்தை சிசிடிவியில் பார்த்தானோ என்னவோ, நரேன் இண்டர்காமில் தரை தளத்தை தொடர்பு கொண்டு வந்திருப்பவனை மேலே தன்னுடைய அறைக்கு அனுப்ப சொன்னான்.



"நரேன் சார் ரூம், செகென்ட் ஃபிலோர்" என்று கூட்டத்தில் ஒரு குரல் கேட்க, அடுத்த நொடி படிக்கட்டில் தாவி ஏறி கொண்டிருந்தான் அபிமன்யு.



'யாரிவன்!' என்கிற ஆச்சரியத்துடன் ஊழியர்கள் அவனை பார்த்துக் கொண்டிருக்க, 'உனக்கு வந்த எமன்டா நான்' என்பது போல் அவன் தம்பியின் அறைக்குள் நுழைந்தான்.



இந்த பூச்சாண்டிக்கெல்லாம் நரேன் பயப்படுகிறவன் அல்ல. அவன் என்னதான் தந்தையை போல் டீசண்ட் ஃபெலோவாக இருந்தாலும் பிரமிளாவின் இரத்தமும் அவன் உடம்பில் ஓடுகிறதே! அபிமன்யுவின் குணத்தில் பாதியாவது இல்லாமலா போய்விடும்!



அமர்ந்திருந்த சேரிலிருந்து எழ கூட இல்லை அவன். அழுத்தமான பார்வையுடன் அண்ணனை எதிர்கொண்டான். அவனுடைய அந்த நிதானம் அபிமன்யுவின் வேகத்தை சற்று மட்டுப்படுத்தியது. ஆனாலும் கோபம் அடங்கவில்லை.



"வாட் டிட் யு சே? திரும்ப சொல்லு..." என்று வேட்டை மிருகம் போல் உறுமினான்.



எக்குத்தப்பா ஏதாவது சொன்னால் அடுத்த நொடி அவன் தாடை எலும்பை நொறுக்க தயாராக இருந்தது எஃகு போல் இறுகி இருந்த அவன் கை முஷ்ட்டி.



நரேன் எதுவும் சொல்லவில்லை. கணினியின் திரையை அவன் பக்கம் திருப்பி, சற்று முன் கீழே ரிசப்ஷனில் அவன் நடந்துகொண்ட வீடியோ ரெக்கார்டிங்கை அவனிடம் காட்டினான்.



அபிமன்யு பற்களை நறநறத்தான். "என்னடா சொல்ல வர?"



"நா நேத்து போன்ல என்ன சொன்னேனோ அதை நீ இப்போ ப்ரூவ் பண்ணி இருக்க" என்றான்.



அடுத்த நொடி அந்த கணினி திரை தரையில் நொறுங்கி கிடந்தது.



"மைண்ட் யுவர் வோர்ட்ஸ். என்னை விமர்சிக்க உனக்கு எந்த தகுதியும் இல்ல. நா ஒரு சோல்ஜர். இந்த நாட்டுக்காக வேலை செஞ்சிருக்கேன். சாதிச்சிருக்கேன். இப்போ கூட… யு ஆர் பெக்கிங் மீ... டு ஹெல்ப் யு...! டு சேவ் யு...!" என்று கோபமாக ஆரம்பித்து நக்கலாக முடித்தான்.



நரேன் கொஞ்சமும் கோபித்துக்கொள்ளவில்லை. அண்ணனின் பேச்சு உண்மையில் அவனுக்கு பெருமையாகத்தான் இருந்தது.



என்னதான் சொந்த வாழ்க்கையில் நொந்து போயிருந்தாலும், டிஃபன்ஸ்ல் செய்த சர்வீஸ் அவன் தலையை சற்று அதிகப்படியாகவே நிமிர்த்தி வைத்திருந்தது. இந்த குணத்தை அவன் தன் தாயிடமும் பார்த்திருக்கிறான். நல்லதுதான்...



மனதில் தோன்றிய புன்னகையை முகத்தில் காட்டாமல்,, "தென் ஹெல்ப் மீ... நான் உன் தம்பி தானே? சேவ் மீ... அதுவும் உன்னோட டியூட்டி தான்" என்றான் அண்ணன் சொன்ன வாக்கியத்தையே பற்றுக்கோளாக பிடித்துக் கொண்டு.



நரேன் அப்படி இறங்கி வந்தது அபிமன்யுவின் அகங்காரத்தை குறைத்தது.



"அறிவில்ல உனக்கு... மாடு மாதிரி வளர்ந்திருக்க? ஒரு நல்ல செக்யூரிட்டி ஏஜென்சியை ஏற்பாடு செய்துக்க முடியாதா?" என்று கத்தினான். இப்போது அந்த கத்தலில் பிக் பிரதர் ரோல் மேலோங்கி இருந்தது.



"ஏற்பாடு செஞ்சிருக்கேன் அபி. ஆனா அவங்களோட ஒர்க் எவ்வளவு எஃபக்டிவா இருக்கும்னு தெரியல. நீ கொஞ்ச நாள் இங்க இருந்தா எனக்கு ஹெல்ப்பா இருக்கும். ரெண்டு தரம் சீரியஸ் அட்டாக் நடந்திருக்கு மேன். உன் தம்பி உயிரோட இருக்கணுமா வேண்டாமா?" என்று விளையாட்டு போலவே நிலைமையின் தீவிரத்தை எடுத்து சொல்லி அண்ணனை வற்புறுத்தினான்.



அபிமன்யு மறுப்பாக தலையசைத்தான். இப்போது இருக்கும் நிலைமையில் அவனால் வேலையில் கவனம் செலுத்த முடியும் என்று தோன்றவில்லை.



"முடியாது நரேன்... ஐம் லீவிங்... டுநைட்" - கத்தரித்து பேசினான்.



நரேனின் முகம் வாடிவிட்டது. அதை பார்க்கவோ, தன்னுடைய முடிவை மறு பரிசீலனை செய்யவோ அபிமன்யு அந்த அறையில் இல்லை. அவன் தன் முடிவை சொல்லிவிட்டு எப்போதோ வெளியேறிவிட்டான்.






'பிஆர்என் இண்டஸ்ட்ரீஸ்' மீட்டிங் ஹாலில் காத்திருந்தாள் அவள். நரேனோடு மீட்டிங் இருந்தது. கைவிரல்களை நெட்டி எடுப்பதும், நகத்தை கடிப்பதும், பதட்டத்தை கட்டுப்படுத்த கால்களை ஆட்டுவதுமாக நிலைகொள்ளாமல் அமர்ந்திருந்தாள். ஏன்? ஏன் இந்த பதட்டம் அவளுக்கு? நரேனை சந்திக்க போவதாலா? நிச்சயமாக இல்லை.



இந்த ப்ராஜெக்ட் ப்ரபோசல் ஆரம்பித்ததிலிருந்து ஐந்து முறை அவனை சந்தித்துவிட்டாள். முதல் முறை பார்க்கும் பொழுது அதிர்ந்து போனது என்னவோ உண்மைதான்.



அந்த முகமும் கண்களும் அவள் மறக்க நினைக்கும் ஒருவனை நினைவு படுத்தி கொண்டே இருந்தது. அதற்கெல்லாம் அவள் உடைந்து போய்விடவில்லை. கடந்து போன ஐந்து வருடங்கள் அவளை திடப்படுத்தி இருந்தது.



எத்தனை சைக்யார்டிஸ்ட்! எத்தனை கௌன்சிலர்ஸ்! எத்தனை மருந்துகள்! பலன் கொடுக்காமல் போய்விடுமா என்ன! அவனை போல் சாயல் உள்ளவன் என்ன! அவனே நேரில் வந்து நின்றாலும் எதிர்கொள்ளும் திடம் அவளுக்குள் உருவாகி இருந்தது. அதனால் இன்றைய பிரச்சனை நரேன் அல்ல... இது வேறு ஏதோ ஒன்று....



அன்று காலை உறக்கத்திலிருந்து கண்விழிக்கும் போதே மனதில் ஏதோ சங்கடம்... ஏதோ கெட்டது நடக்கப் போவது போல் உள்ளுணர்வு... என்னவென்றே புரியவில்லை. காலையில் மெலிதாக தோன்றிய அந்த உணர்வு நேரம் செல்ல செல்ல அதிகரித்துக் கொண்டே வந்து இப்போது ஒரு இடத்தில் நிலைகொண்டு அமரக் கூட முடியவில்லை.



படபடக்கும் இதயம் ஏசியின் குளிரை கூட உணர முடியாத அளவுக்கு அவள் உடலை உஷ்ணமாக்கியிருந்தது. காய்ந்து போன உதடுகளை நாவால் ஈரப்படுத்திக்கொண்டு மொபைல் கடிகாரத்தையும் சுவர் கடிகாரத்தையும் மாற்றி மாற்றி பார்த்தாள். அந்த அறைக்குள்... அந்த கம்பெனிக்குள்... அந்த காம்பௌண்டிற்குள் இருக்கவே முடியாது என்பது போல், சூழ்ந்திருந்த காற்றின் கணம் கூடி மூச்சு முட்டியது அவளுக்கு.



ஆரம்பத்திலிருந்தே இந்த ப்ராஜெக்டில் அவளுக்கு விருப்பம் இல்லை. அவனை நியாபகப்படுத்தும் நரேனின் முகத்தை பார்த்துக் கொண்டு இங்கு வேலை செய்ய அவளுக்கு துளியும் விருப்பம் இல்லை. ஆனால் நன்றி கடன் அவளை கட்டிப் போட்டிருந்தது.



ஆம், ஐந்து வருடங்களுக்கு முன் அவள் அநாதரவாக தெருவில் நின்ற போது வலிய வந்து உதவி செய்து அவள் வாழ்க்கையை ஓரளவுக்காவது செப்பனிட்ட அங்கிள் ரகோத்தமன் இன்று பெரும் நெருக்கடியில் இருக்கிறார். அவருக்கு இந்த ப்ராஜெக்ட் மூலம் வரும் பணம் பெரும் உதவியாக இருக்கும். தன்னுடைய ஒரு சின்ன சிரமத்திற்காக அதை கெடுக்க அவளுக்கு மனமில்லை.



பல்லை கடித்துக் கொண்டுதான் அங்கு வந்து போய் கொண்டிருந்தாள். ஆனால் என்றும் இல்லாத திருநாளாக இன்று ஏனோ அவள் உள்ளுணர்வு அவளை சல்லடையாக துளைத்துக் கொண்டிருந்தது. இருக்கக் கூடாத இடத்தில் இருப்பது போல்... ஏதோ ஒரு அதிர்வலை!



இதற்கு மேலும் இங்கு தாக்குப் பிடிக்க முடியாது என்று உணர்ந்து சட்டென்று எழுந்து ரிஸப்ஷனை நோக்கிச் சென்றாள். தன்னுடைய இயலாமையின் கோபத்தை ரிசப்ஷனில் இருந்த பெண்ணிடம் கடுமையாகக் காட்டினாள்.



"எக்ஸ்கியூஸ் மீ மிஸ், எனக்கு மிஸ்டர் நரேன் கூட பதினோரு மணிக்கு மீட்டிங். இப்போ ஒரு மணி ஆகப் போகுது. எப்போ தான் வருவாரு?"



"சாரி மேடம், சார் ஒரு எதிர்பாராத மீட்டிங்கில ஸ்டக் ஆயிட்டாங்க. யாரும் டிஸ்டப் பண்ண முடியாது. நானே சார் கால்காக வெயிட் பண்ணிட்டு தான் இருக்கேன். நீங்களும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க மேடம்" - கெஞ்சுதலாக கேட்டாள்.



"எனக்கு வேற வேலை இல்லாம இங்க வந்து உட்கார்ந்துட்டு இருக்கேனா? உங்க ரிஷப்ஷன்ல உட்கார்ந்து டைம் வேஸ்ட் பண்ணறதுக்காக உங்க கம்பெனி எனக்கு பே பண்ணல புரியுதா?" - முகத்தில் அடித்தது போல் கடுமையாக பேசினாள்.



அந்த பெண்ணுக்கு முகம் விழுந்துவிட்டது. "சாரி மேடம், உங்களுக்கு வேணுன்னா மீட்டிங் ரீஸ்கெட்யூல் பண்ணி தரேன்" - மெஷின் போல் உணர்ச்சி துடைத்த குரலில் கூறினாள்.



"ரீஸ்கெட்யூல் பண்ணறது பிரச்சனை இல்ல. சொன்ன நேரத்துல மீட்டிங் நடக்கணும். அதை மைண்ட்ல வச்சுக்கிட்டு, மிஸ்டர் நரேன்கிட்ட பேசிட்டு, எனக்கு டெக்ஸ்ட் பண்ணுங்க. அவர் சொல்ற டைம்ல நான் ஃப்ரியா இருந்தேன்னா மீட்டிங் ரீஸ்கெட்யூல் பண்ணலாம். தேங்க் யூ" - மிளகு வெடிப்பது போல் படபடவென்று வார்த்தைகளை கொட்டிவிட்டு, அணிந்திருந்த ஹீல்ஸ் ஆங்கிரி ரிதமில் 'டொக் டொக்' அலற அங்கிருந்து வெளியேறினாள்.



அவள் அந்த பக்கம் போனதும் ரிஷப்ஷனிஸ்ட் இந்த பக்கம் எரிச்சலுடன் கையிலிருந்த பேனாவை தூக்கி வீசிவிட்டு, "சிரிக்கவே தெரியாத ஜென்மம்...!" என்று முணுமுணுத்தாள் அருகில் இருந்த இன்னொரு பெண்ணிடம்.
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
அத்தியாயம் – 4

‘என்னால் உனக்கு உதவ முடியாது’ என்று பட்டுக் கத்தரித்து போல் தம்பியிடம் வெட்டிப் பேசிவிட்டு வெளியே வந்த அபிமன்யு லிஃப்ட் மூலம் தரை தளத்திற்கு வந்து வரவேற்பு கூடத்தை அடைந்த போது திடீரென்று நெஞ்சுக்குள் ஏதோ ஒரு உணர்வு... அதீத இன்பம்.. அளவில்லா துன்பம்... எல்லாம் கலந்தது போல் ஏதோ ஒரு கலவையான உணர்வு அவன் அடிவயிற்றை பிசைந்தது. அப்படியே நின்றுவிட்டான்.



ஓரிரு நொடிகள் அவனிடம் எந்த அசைவும் இல்லை. பிறகு ஏதோ தோன்ற ஒரு குறிப்பிட்ட திசையில் திரும்பிப் பார்த்தான். அங்கே நின்றவள் அவள்! அவன் வாழ்க்கையை இருட்டடித்துவிட்டு போனவள்! அவன் உயிரை அணுஅணுவாக குறைப்பவள்! வாழ்க்கையை அர்த்தமற்றதாக்கியவள்! நின்றே போய்விட்டது அவன் இதயம்!



‘மிருது!!!’



கண்கள் பொங்கி பெருகியது. கற்தூண் போல் இருகியிருந்த அவன் உடலுக்குள் மெல்லிய நடுக்கம்! தொண்டை உலர்ந்து நெஞ்சு வறண்டது. ஓடி போய் அவளை கட்டிக்கொள்ள வேண்டும் போல்... கன்னம் கன்னமாக அறைய வேண்டும் போல்... 'எங்கடி போன!' என்று கேட்டு அவள் தோள்களை பிடித்து உலுக்க வேண்டும் போல் என்னென்னவோ தோன்றியது.



அதற்குள் அவள் குரல் அவன் முகத்தில் ஒரு ப்ரூட்டல் பஞ்ச் கொடுத்தது. ' எனக்கு வேற வேலை இல்லாம இங்க வந்து உட்கார்ந்துட்டு இருக்கேனா? உங்க ஆபீஸ்ல உட்கார்ந்து டைம் வேஸ்ட் பண்ணறதுக்காக உங்க கம்பெனி எனக்கு பே பண்ணல புரியுதா?' - எங்கோ.. யாரிடமோதான் சொன்னாள்! ஆனால் அந்த குரலில் இருந்த அழுத்தம்! மிருதுளாவா இவள்! - திகைத்துப் போனான். உடல் உணர்வற்று போய்விட அசைய முடியாமல் அப்படியே நின்றான்.



மிருதுளா அந்த பெண்ணிடம் சிடுசிடுத்துவிட்டு அங்கிருந்து வெளியேறும் போது அவனை கடந்துதான் சென்றாள்.



அவள் வாசத்தை அவனால் நுகர முடிந்தது! அவள் சுவாசித்து விட்டுச் சென்ற காற்றை சுவாசிக்க முடிந்தது! ஒரு எட்டு எடுத்த வைத்து கைநீட்டினால் அவளை தொட்டுவிடக் கூட முடியும். ஆனால் முடியவில்லை. அவன்தான் உறைந்து போய் நின்றானே! அவன் மட்டும் அல்ல, அவனை சுற்றி உள்ள உலகம் முழுவதும் உறைந்து போய்விட, அவள் மட்டும் எந்த பாதிப்பும் இல்லாமல் அவனைவிட்டு தூரமாக விலகி சென்றுக் கொண்டிருந்தாள்.



எவ்வளவு நேரம் அப்படியே நின்றானோ தெரியாது. அவள் கண்ணிலிருந்து மறைந்து வெகு நேரம் கழித்தே அவனால் தன்னிலைக்கு மீள முடிந்தது.



'மிருது... மிருது... மிருது...' - இடைவிடாமல் உதடுகள் முணுமுணுத்தன.



தணலில் கிடக்கும் பாறையில் தண்ணீர் தெளித்தது போல் நெஞ்சுக்குள் 'சூர்ர்ர்' என்றிருந்தது. தண்ணீர் ஊற்றிய பிறகும் வெப்பம் குறையாத சுடுபாறை போல், ஏக்கத்தில் வறண்டு போயிருந்த அவன் உள்ளம் அவளை பார்த்த பிறகும் கூட ஆறுதல் அடையவில்லை. கீறிவிடப்பட்ட ரணம் வலித்தது. தாங்க முடியாமல் அப்படியே அங்கே கிடந்த நாற்காலியில் அமர்ந்து கண்களை மூடிக் கொண்டான்.



********************

"ஆர் யு சீரியஸ்?" - நம்ப முடியாத ஆச்சர்யத்துடன் கேட்டான் நரேன்.



அந்தமானில் ஒரு மணி நேரம் கூட தங்கமாட்டேன் என்று பிடிவாதமாக கூறிவிட்டு வெளியே சென்ற அபிமன்யு அடுத்த சில நிமிடங்களிலேயே தன் முன் வந்து, பிஆர்என் இண்டஸ்ட்ரீஸின் பாதுகாப்புக்கு இனி நான் பொறுப்பு என்று சொன்னால் ஆச்சர்யம் தோன்றத்தானே செய்யும்!



தன்னை நம்ப முடியாமல் பார்க்கும் சகோதரனை நேருக்கு நேர் இமைக்காமல் பார்த்த அபிமன்யு,



"நரேன், ஐம் டாம் சீரியஸ்... உன்னோட பாதுகாப்புக்கும், இந்த கம்பெனியோட பாதுகாப்புக்கும் இனி நான் பொறுப்பு” என்று நிறுத்தியவன் “ஒரே ஒரு கண்டிஷன்...” என்றான் பீடிகையாக.



ஏதோ ஏழரையை கூட்டுகிறான் என்கிற எண்ணத்தில் அவனை குழப்பத்துடன் பார்த்த நரேன் "என்ன?" என்றான் மெல்ல.



“என்னோட நேச்சர் ஆஃப் ஒர்க்ல யாரும் தலையிட கூடாது. முக்கியமா நீ" - அழுத்தமாக சொன்னான்.



'ஆரம்பித்துவிட்டான்!' என்று எண்ணியவன், "எந்த பிரச்சனையா இருந்தாலும் நீ லீகலா ஹாண்டில் பண்ணினா எனக்கு எந்த பிரச்சகனையும் இல்ல" என்றான் சுதாரிப்பாக.



"நா எப்படி ஒர்க் பண்ணனும்னு நீ எனக்கு சொல்றதா இருந்தா என்னை எதுக்கு கூப்பிட்ட? நீயே ஹாண்டில் பண்ணியிருக்க வேண்டியது தானே?" - சட்டென்று கோபம் உச்சத்திற்கு செல்ல ஆத்திரத்துடன் சீறினான்.



"ஹேய், டென்சன் ஆகாதடா, ஐம் ஜஸ்ட் கண்ஸண்ட்"



"நோ நீட்... நீ உன் வேலையை பாரு. நான் என் வேலையை பார்க்கறேன்” - சற்றும் கோபம் குறையவில்லை. மீண்டும் அவள் கைநழுவி விடுவாளோ என்ற பயம் அவனை ஆக்கிரமித்திருந்தது.



நரேன் அடங்கிப் போனான். "சரி சரி விடு. நீ என்ன வேணா செய். நா நடுவுல வரமாட்டேன்" என்று வாக்கு கொடுத்தான்.



அதை உறுதி செய்துகொள்ள கம்பெனி லாயரை அழைத்து டாக்குமெண்ட் தயார் செய்ய சொல்லி தம்பியிடம் கையெப்பம் கூட வாங்கி கொண்டான் அபிமன்யு.



‘ஏன் இத்தனை அவசரம்!! கெடுபிடி!’ - நரேனின் புருவம் சுருங்கியது. காரணத்தை அறிந்துகொள்ள, அடுத்து வந்த நாட்களில் அவன் பார்வை அண்ணனை சுற்றி கூடுதல் விழிப்புடன் படரதுவங்கியது.



***********************

மித்ரா வேலையில் சேர்ந்து மாதங்கள் சில ஓடிவிட்டது. கம்பெனி என்னவோ பெத்த கம்பெனிதான். 'பி-ஆர்-என் இண்டஸ்ட்ரீஸ்'. டெசிக்னேஷனுக்கும் குறைச்சல் இல்லை. ஹெச்ஆர் என்று பெரிதாக அடையாள அட்டை அடித்து கொடுத்துவிட்டார்கள். ஆனால் வேலை தான், ஹெச்ஆர் டிபார்ட்மெண்டிற்கு சிக்கிய எடுபிடி அடிமை வேலை. யார் எப்போது கூப்பிட்டாலும், கூப்பிட்ட குரலுக்கு ஓடி ஓடி உழைக்க வேண்டும்.



பிஜி முடிக்க விடாமல் இழுத்துக் கொண்டு வந்த பெற்றோரின் மீது கோபம் கோபமாக வந்தது. என்ன செய்வது. அவளும் கையையும் கைபேசியையும் வைத்துக் கொண்டு ஒழுங்காக இருந்திருக்கலாம்! யார் யாரோடு ரிலேஷன்ஷிப்பில் இருந்தால் அவளுக்கு என்ன? தோண்டல் துருவல் என்று துப்பறியும் சாம்பு வேலை செய்து படிப்பை பாதியில் விட்டது தான் மிச்சம். இப்போது இந்த ஜந்துக்களிடம் மாட்டிக் கொண்டு பாடுபட வேண்டியது விதி!



"மித்ரா, நம்ம கம்பெனி எம்ப்ளாயிஸ் டீடெயில்ஸ் எல்லாம் மிஸ்டர் நரேனுக்கு ஈமெயில் பண்ண சொன்னேனே!" - சீனியர் மேனேஜர் இன்டெர்காமில் அதட்ட, அவர் முடிக்கும் முன், "நேத்தே பண்ணிட்டேன்" என்றாள் மித்ரா.



"நேத்தே பண்ணிட்டேன்னு எனக்கும் தெரியும். சரியா பண்ணியான்னு சொல்லு"



"எஸ் எஸ்… டேட்டாபேஸ்ல இருக்க எல்லா நேம்ஸ் அண்ட் டீடெயில்ஸ் க்ளீயரா எக்ஸெல் ஷீட்ல போட்டு நேத்தே அனுப்பிட்டேன்!"



"ஏதோ டேட்டா மிஸ் ஆகுதாம். போன்ல கத்தறாரு. நீ உடனே பிரிண்ட் அவுட் எடுத்து ஃபைல் பண்ணி அவர் ரூம்க்கு எடுத்துட்டு போ"



" ஓகே.."



"ரூம் எங்க இருக்கு தெரியும்ல? செகென்ட் ஃப்ளோர். ரிஸப்ஷன்ல சொல்லிட்டு உள்ள போ. ஃபைல் வேற யார்கிட்டேயும் கொடுக்க வேண்டாம்" என்று தெளிவாக கட்டளையிட்டார்.



இந்த தொனி மித்ராவுக்கு கொஞ்சமும் பிடிக்காது. ஆனால் வேலை பிடிக்கவில்லை என்று வீட்டில் அமர்வது இதைவிட கொடுமை. பல்லை கடித்துக் கொண்டு அவர் சொன்ன வேலையை செய்தாள்.



'எப்படி இருந்த என்னை இப்படி ஆக்கிட்டியேடா தகரடப்பா மண்டையா! உன்கிட்ட ஒரு ஹெல்ப் கேட்டதுக்கு உன்னால என்ன செய்ய முடியுமோ.. அதை செம்மையா செஞ்சுட்ட! நல்லா இருடா....! ந..ல்..லா.... இரு...!' - பெயர் கூட தெரியாமல் அவள் வாழ்த்திக் கொண்டிருக்கும் அந்த தகரடப்பா மண்டையன், இப்போது அவளுக்காக தான் காத்துக் கொண்டிருந்தான்.



முதல்நாள் ஹெச்ஆர் டிபார்ட்மென்டிலிருந்து வந்திருந்த ஈமெயிலை பிரித்து மேய்ந்து பார்த்துவிட்டான். அதில் மிருதுளாவின் பெயர் இல்லவே இல்லை. அவனுக்கு தெரிந்து அவள் இந்த கம்பெனியில் தான் வேலை பார்க்கிறாள். நரேனோடு அவளுக்கு மீட்டிங் இருந்தது. கழுத்தில் ஐடியை கூட பார்த்தான். அது விசிட்டர்ஸ் ஐடி இல்லை. பிறகு ஏன் பணியாளர்களின் பட்டியலில் அவள் பெயர் இல்லை! மீண்டும் மீண்டும் தேடித் பார்த்ததில் ரெஸ்ட்லஸ் ஆகி அவன் நரேனிடம் கத்த, நரேன் மனிதவள துறை மேலாளரை அழைத்து கடிந்துகொண்டான். அதன் தாக்கம் மித்ராவிடம் வந்து முடிந்திருந்தது. இப்போது அவள் அவசர அவசரமாக பிரிண்ட் அவுட் எடுத்து அதை கோப்பாக சேகரித்து எடுத்துக் கொண்டு இரண்டாம் தளத்திற்கு வந்தாள்.



கையிலிருக்கும் கோப்பை பற்றிய விபரம் சொன்னதுமே நரேனின் செகரட்டரி ராம் வேறு எந்த கேள்வியும் கேட்கவில்லை.



"சீக்கிரம் கொண்டு போ" என்று மட்டும் சொல்லி உள்ளே அனுப்பி வைத்தான்.



இதுவரை மித்ரா அந்த அறைக்குள் நுழைந்ததும் இல்லை... அந்த கம்பெனியின் நிர்வாக இயக்குனர் நரேனை பார்த்ததும் இல்லை. கொஞ்சம் பதட்டம் இருந்தது. தயக்கத்துடன் உள்ளே நுழைந்தவள், அங்கே நிர்வாக இயக்குனர் சேரில் அமர்ந்திருந்த நரேனை பார்த்ததும் திகைத்துப் போய்விட்டாள்.



'அட.. இவனா! இங்க என்ன பண்றான்!' - ஆளை பார்த்ததுமே அடையாளம் கண்டுபிடித்துவிட்டாள். அந்த முரடனை ஆன்லைனில் தேடும் பொழுதெல்லாம் இவன் முகம் தானே முன்னுக்கு வந்து நிற்கும்! ‘இவன் என்ன அடிக்கடி நம்ம லைன்ல க்ராஸ் ஆகறான்!’ - குறுகுறுப்புடன் அவனை பார்த்தாள்.



நரேனுக்கு ஒன்றும் புரியவில்லை. 'இந்த பெண் ஏன் இப்படி நம்மை பார்க்கிறாள்!' - இவன் குழப்பத்துடன் அவளை பார்க்க இருவருக்கும் ஏற்பட்ட ஐ காண்டாக்ட்டில் ஏதோ ஒரு நொடியில் அவர்களுக்குள் ஒரு ஸ்பார்க்.



அவன் கண்கள் சுருங்கியது. இதழ்களில் சின்ன புன்னகை தோன்றியது...



'டேய்.. டேய்... டேய்... என்னடா இப்படி பார்க்கற!' - தடக் தடக் என்று தண்டவாளத்தில் ஓடும் தொடர் வண்டி போல் மண்டைக்குள் ஓடும் கேள்விகளும் நெஞ்சுக்குள் துடிக்கும் இதயமும் சிங்க் ஆகி ஒரு ரிதமோடு பயணிக்க, அவள் முகம் அந்த மனநிலையை அப்படியே படம் போட்டு காட்டியது.



நரேனுக்கு இது புதிது! அவன் ஒன்றும் பெண்களையே பார்க்காதவன் அல்ல. அவனும் அழகான பெண்களை ரசித்திருக்கிறேன். தன்னை ரசிக்கும் பெண்களையும் அறிந்திருக்கிறான். அதெல்லாம் அவ்வப்போது எங்கோ வெளியில் நடக்கும் சின்னச்சின்ன சம்பவங்கள். ஆனால் இப்படி எந்த ஒரு பெண்ணும் அவனுடைய அலுவலகத்திற்கே வந்து அவனுடைய அறைக்குள்ளேயே நுழைந்து... சற்றும் தயக்கம் இல்லாமல் அவனை நேருக்கு நேர் இப்படி ஒரு பார்வை பார்த்ததே இல்லை.



எவ்வளவு தான் உயரத்தில் இருந்தாலும் டிபிக்கல் ஆணாக உள்ளுக்குள் ஒரு அல்ப சந்தோஷம் அவனுக்கு. அதை ப்ரோஃபஷனலிசம் கருதி உள்ளேயே விழுங்கி கொண்டு, "கம் இன் மித்ரா" என்றான்.



'ஹாங்! பேர் சொல்லி கூப்பிடறானே! நம்மளை தெரியுமா!!' - சந்தோஷத்தில் உச்சி குளிர்ந்து போய் குடுகுடுவென்று முன்னே சென்று அவனிடம் ஃபைலை நீட்டினாள். அதை கையில் வாங்காமல், "அங்க கொடுங்க" என்று எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த அபிமன்யுவை கைகாட்டினான் நரேன்.



அதுவரை அந்த அறையில் இருந்த இன்னொருவனை அவள் கவனிக்கவே இல்லை. 'ப்ச்... யாரடா அந்த பூஜைக்குள்ள பூந்த கரடி' என்று திட்டிக் கொண்டே திரும்பிப் பார்த்தவள் எம்பி குதிக்காத குறைதான்.



'ஓ மை காட்!' - கண்கள் கோலி குண்டு போல் உருள அவனை அதீத ஆச்சர்யத்துடன் பார்த்தாள். "இவனா! இங்கேயா!! எப்படி!!" - அவ்வளவு தான்.. நரேனை மறந்துவிட்டாள்.



தினம் தினம் கூகுள் ஆண்டவர் கதவை தட்டியதற்கு நிஜ ஆண்டவர் கண் திறந்துவிட்டாரே... ஆச்சரியகுறி! - அவள் முகத்தில் சர்ப்ரைஸ் சந்தோஷம் எல்லாம் டட் டன்னாய் வழிந்தது. நரேனுக்கு ஊசி குத்திய பலூன் போல் புஸ்சென்று ஆகிவிட்டது.



இருக்காதா பின்ன... தன்னை பார்த்து இப்ரஸ் ஆன ஒரு பெண், அடுத்த நொடியே... அவன் கண் எதிரிலேயே இன்னொரு ஆணை பார்த்து இம்ப்ரஸ் ஆனால்! அது அண்ணனே என்றாலும் கடுப்பாகத்தானே இருக்கும்!



"மித்ரா... ஃபைல்..." - திறந்த வாய் மூடாமல் 'பே!!' என்று அபிமன்யுவை பார்த்துக் கொண்டிருந்தவளை உலுக்கி எழுப்பாத குறையாக தன்னிலைக்கு மீட்டுக் கொண்டுவந்தான் நரேன்.



அப்போதும் கூட அவளுடைய கவனம் நரேனிடம் திரும்பவில்லை



"ஹேய்... ஹலோ!!!" என்று அபிமன்யுவிடம் ஃபைலை நீட்டுவதற்கு பதில் கையை நீட்டினாள்.



நீட்டிய அவள் கையையும், பற்பசை விளம்பர மாடல் போல் பல்லை காட்டிக் கொண்டிருந்த அவள் முகத்தையும் மாறி மாறி பார்த்த அபிமன்யு எரிச்சலை கட்டுப்படுத்த முடியாமல், அவளுடைய இன்னொரு கையிலிருந்த ஃபைலை வெடுக்கென்று பிடிங்கினான். மித்ராவின் முகம் சட்டென்று வாடிவிட்டது.



'மறந்துட்டானா! அதுகுல்லையா! ஒருவேளை அன்னைக்கு நடந்த சண்டையில தலையில ஏதும் அடி பட்டுடுச்சோ! பழசெல்லாம் மறந்து போச்சோ!' - கற்பனை குதிரை ஓட்டத்திற்கு தயாராக, அவள் பார்வை ஆராச்சியுடன் அவன் முகத்தில் படிந்தது.



உண்மையில் அபிமன்யு மித்ராவை மறந்துதான் போயிருந்தான். அவன் மனதில், எண்ணத்தில், நினைவில் என்று எல்லா விதத்திலும் அவனுக்குள் ஊறி போனவள் மிருதுளாவாக இருக்க அவனுக்கு மற்ற பெண்களின் முகம் எப்படி நினைவிருக்கும்!



இந்த சங்கதி புரியாமல் மித்ரா அவனை ஆராய்ச்சியுடன் பார்க்க, நரேன், அவளை ஆராய்ச்சியுடன் பார்த்தான்.
 
Status
Not open for further replies.
Top Bottom