Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


காதலின் விதியம்மா

Kavi nila

New member
Messages
14
Reaction score
12
Points
3
வணக்கம் நண்பர்களே, நான் நிலா.... நம் தளத்தில் புதிதாக இணைந்து இருக்கும் உறுப்பினர். என்ன பற்றி பொருசா சொல்ல இப்ப எதுவும் இல்லை. கல்லூரி மாணவி இப்ப இவ்வளவு தான்.

லாக்டவுன் எல்லாருக்கும் ஒரு பழக்கத்தை ஏற்படுத்தி இருக்கும். அதே தான் எனக்கும் கதை படிக்கிற பழக்கத்தை ஏற்படுத்தியது. அதன் தாக்கம் இப்ப நான் கிறுக்கிற கதை.

நடை பழகும் குழந்தை போல் தான் இருக்கும் என்னோட தமிழ். பட் என்னால் முடிஞ்ச அளவு பெஸ்டா தரேன்.

உங்கள் கருத்தை மறக்காமல் பதிவு பண்ணுங்க....

சீக்கிரமா காதலின் விதியம்மா கதையோடு உங்களை சந்திக்கிறேன்.

வித் லவ்
நிலா
 

Kavi nila

New member
Messages
14
Reaction score
12
Points
3
காதலின் விதியம்மா டீஸர்


தனது கோபம், கர்வம் மட்டுமே பிரதானமாக கொண்டு யாரையும் அருகிலே சேர்க்காமல் அனைவரையும் தனக்கு கீழே பணிய வைக்கும் நாயகன், பைரவ் வர்மா.

வெளிநாட்டிற்கு படிக்க சென்றவன், திரும்ப மனம் இல்லாமல் அங்கவே பல ஆண்டுகளாக இருக்க ஒற்றை மகனை பிரிந்திருக்க முடியாமல் புலம்பும் தந்தை நாராயண வர்மா தாய் பூமகள்.


தஞ்சாவூரை சொந்தமாக கொண்ட நம் நாயகி தேஜஸ்வினி. பயந்த சுபாவம். கணவில் வரும் பேய் பிசாசை பார்த்து பத்து நாள் காய்ச்சலில் படுத்து கொள்வாள். தந்தை ரகுபதி தாய் பொன்னி. தங்கையை கண்ணில் வைத்து பார்த்து கொள்ளும் தமையன் தேவேஷ்.


காதல் பலருக்கு பலதை கொடுக்கும். பலருக்கு பலதை இழக்க வைக்கும். இங்கே நாயகிக்கு காதல் என்ன கொடுக்க போகிறது? என்ன இழக்க வைக்க போகிறது? கதையின் போக்கில் பார்க்கலாம்.



முன் ஜென்ம கதை மாதிரி முயற்சி செய்து இருக்கிறேன். எதாவது தவறு இருந்தா சொல்லுங்க நண்பர்களே......

நாளைக்கு முதல் அத்தியாயத்துடன் வருகிறேன்.

வித் லவ்
நிலா


.ௌௌுௌௌுௌௌுௌௌௌௌுௌௌுௌௌு
 

Kavi nila

New member
Messages
14
Reaction score
12
Points
3
காதலின் விதியம்மா 1


தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் தஞ்சாவூர் மாவட்டம். தஞ்சை என்று பெயர் வைத்ததால் வயல்கள் மிகுதியாக இருக்கிறதா இல்ல வயல்கள் அதிகம் இருப்பதால் தஞ்சை என்று பெயர் வைக்கப்பட்டதா யாருக்கு தெரியும். விவசாயம் தான் இங்கு பிரதான தொழில்.

களப்பிரர்களில் ஆரம்பித்து சோழர்கள் பாண்டியர்கள் விஜயநகர பேரரசுகள் மராத்தியர்கள் என பலரும் ஆண்டாலும் தஞ்சை என்றாலே முதலில் அனைவருக்கும் நியாபகம் வருவது சோழர்கள் தான்.

மக்களாட்சி நடைமுறையில் இருந்ததாலும் அரச பரம்பரை வாரிசுகள் இன்றும் இந்த நவீன உலகில் வாழ்கிறார்கள்.

சூரிய கதிர்கள் பூமியை ஆக்கிரமித்து தன் ஆளுமைக்கு கொண்டு வர,
நந்தவனம் போல் பூச்செடிகள் பூத்து குலுங்கும் மரங்கள் என அந்த வீடே பூலோக சொர்க்கம் போல் காட்சி அளித்தது. அளவான வீடு அன்பான குடும்பம் என சந்தோசமாக வாழ்ந்து வரும் பாசப் பறவைகள்.

ரகுபதி "பொன்னி தேஜு எங்க" என்றார். "ஏங்க அவ எதோ மனசு சரியில்லாத மாதிரி இருக்குனு பக்கத்தில் இருக்கிற அம்மன் கோவிலுக்கு போயிருக்கா" என

"என்ன ஆச்சு டி மறுபடியும் அதே கனவா" என கவலையாக கேட்க

"தெரியலைங்க ஆனா அது மாதிரி தான் போல .... இந்த நேரத்தில் நீங்க வேற அவ கேட்கிறானு வேலைக்கு வேற போக சொல்லிட்டீங்க அதுவும் சென்னையில் ஏன் இங்க உங்க பொண்ணு வேலை செய்ய மாட்டாலா" என்று தன் கவலையை ஆதங்கமாக கொட்ட,

"அம்மாாாா... என்னோட செல்ல தங்கச்சி எல்லாத்திலும் முதல ம்மா. அவ வாங்கிய மார்க்கை பார்த்து அவங்களே வேலை தருவது எவ்வளவு பெரிய விசயம் தெரியுமா அது எவ்வளவு பெரிய கம்பெனி தெரியுமா" என்று தங்கைக்கு ஆதரவாக பேசிக்கொண்டே வந்தான் தேவேஷ்.


"அவ எல்லாத்திலும் முதல தான் பயத்திலும் கூட. கனவில வருவதுக்கு கூட பயந்து எழுந்ததும் கோவிலுக்கு போயிருக்கா அவளை தனியா எப்படி டா அவ்வளவு தூரம் தனியா விடுறது" என

"அம்மா அவ கொஞ்ச நாள் தனியா இருந்தா தான் அவளோட பயந்த சுபாவம் மாறும் கவலைப்படாத..... அப்பா அம்மா கிட்ட சொல்லி வைங்க அவ கிட்ட தைரியமா பேசலைனா கூட பரவாலை ஆனா இப்படி பேசி பயப்பட வைக்காமல் இருக்க சொல்லுங்க" என்று தாயிடம் ஆரம்பித்து தந்தையிடம் முடித்து அவனது அறைக்கு சென்றான்.

ரகுபதி வங்கியில் மேலாளராக இருக்கிறார். அவரின் தர்ம பத்தினி பொன்னி பொறுப்பான குடும்ப தலைவி. இவர்களின் வாரிசு தேவேஷ் மற்றும் தேஜஸ்வினி.




தேவேஷ், இருபது ஏழு வயதாகும் அன்பான தமையன் மற்றும் பொறுப்பான மகன். பிறரிடம் வேலை பார்க்க பிடிக்காமல் சொந்தமாக தன் நண்பன் ஆரியாவுடன் சேர்ந்து வாகனங்களின் உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்பெனியை நடத்துகிறான். தன் ஆருயிர் நண்பனான ஆரியாவிற்கு தன் தங்கையை மணமுடிக்க எண்ணியுள்ளான்.

தேஜஸ்வினி, இருபதிமூன்று வயதாகும் தேவதை. அனைவரும் விழுந்த அதே பொறியியலில் சிக்கி தற்போது அதிலும் தேறி யாராலும் எளிதில் நுழைய முடியாத வா்மா குருப் ஆப் கம்பெனியில் சேர போகிறாள்.

சூரியனின் தேஜஸ்கள் இருளை போக்குவது போல் அவள் செல்லும் இடம் எல்லாம் அதிர்ஷ்டம் வந்து சேரும். ஆர்ப்பாட்டம் இல்லாத அசர அடிக்கும் அழகு.

கோவிலில்,

"பூசாரி தேஜூ வந்தால" என்று பூசாரியிடம் கேட்டாள் தேஜூவின் தோழி ரம்யா.




"என்ன குழந்த புதுசா கேட்கிறா மாதிரி கேட்கிற அவ எப்பவும் இருக்கிற துர்க்கையம்மன் சன்னதியில் தான் இருப்பா அங்க போய் பாரு" என 'ச்சை.. எல்லா இடத்திலும் தேடிய நாம அவளுக்கு உயிரான இடத்தை மறந்துட்டோம் பாரு அங்க தானே முதல போய் இருக்கனும்' என தலையில் அடித்து கொண்டு அங்கே சென்றாள்.




அங்கே இருக்கும் தன் தோழியின் அழகில் ஒரு நிமிடம் தன்னை மறந்து ரசித்து பின் தன்னை தனியே விட்டு வந்த கோபத்துடன் "ஏய் புள்ள இது உனக்கே நியாயமா தெரியுதா.... நான் தான் வரேன் னு சொன்னேன்ல அதுக்குள்ள என்ன அவரசம் மேடமுக்கு ம்ம்ம்... ஏய் புள்ள இப்படி திரும்பு..... என்னடி கண்ணெல்லாம் கலங்கி இருக்கு என்ன ஆச்சு" என கோபம் மறைந்து வேதனையாக கேட்க

"ரம்யா கணவு வந்துச்சு டி பயமா இருந்துச்சு அதான் சீக்கிரமா வந்துட்டேன்" என கலங்கிய குரலில் சொல்ல,

"அதே கணவா டி" என " இல்ல ரம்யா இந்த முறை யாரோ மலையில் இருந்து விழுகிற மாதிரி வந்துச்சு ஆனா யார் அதுனு தெரியலை மனசு ஒரு மாதிரி இருக்கு" என

"சரி ஒன்னும் இல்ல அது வெறும் கனவு தான்...... சரி நைட் நீ கிளம்பிடுவ அதுக்கு அப்புறம் நாம பார்த்துக்கவே முடியாத" என்ற ரம்யாவை பார்த்து,

"லீவு வந்தவுடனே இங்க ஓடி வந்துடுவேன். என்னால அம்மா அப்பாவை பார்க்காமல் எல்லாம் இருக்க முடியாது" என்று பேசிக்கொண்டே கோவிலை விட்டு வெளியேறி சாலையில் நடந்து வந்தனர்.

காலை நேரத்திலே இருளால் நிரம்பி மரங்கள் அளவுக்கு அதிகமாக வளர்ந்து சூரிய கதிர் புகாமல் இருட்டாக இருந்து அந்த இடம். பிரதான சாலையில் தான் இருக்கிறது இந்த மண்டபம். ஆனால் யாரும் அந்த இடத்திற்கு வரவே மாட்டார்கள். பல பேய் கதைகள் மற்றும் மர்மமான சம்பவங்கள் என அந்த இடத்தை பற்றிய வதந்திகள் அதிகம்.

அந்த இடத்தை கடக்கும் போது எதோ ஒரு சொல்ல முடியாத உணர்வு தேஜூவை தாக்க ரம்யாவை பார்த்து "ரம்யா நா எனக்கு.... எண்ணமோ பண்ணுது நான் அங்க போறேன்" என அவளிடம் அவசரமாக சொல்லிவிட்டு வேகமாக அந்த இடத்தை நோக்கி ஓடினாள்.

அதே நேரத்தில் உலகின் மறு முனையில் ஓர் உயிர் மலையின் இடுக்கில் தன் உயிக்காக போராடிக் கொண்டு இருந்தது.


விதிகள் தொடரும்
நிலா
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
வாழ்த்துக்கள் நிலா
 

Kavi nila

New member
Messages
14
Reaction score
12
Points
3
காதலின் விதியம்மா 2


ரம்யா தன் பின்னால் கத்துவது கூட கேட்காமல் வேகமாக அந்த மண்டபத்தை நோக்கி ஓடினால் தேஜஸ்வினி. அந்த இடத்தை அடைந்ததும் அதுவரை இருந்த கவலை மறைந்து புத்துணர்ச்சி பெற்றது போல் உணர்ந்தாள்.

மண்டபத்தை நோக்கி அடுத்த அடி வைப்பதற்குள் ரம்யா அவளை இழுத்து "பைத்தியம் ஏதாவது பிடிச்சு இருக்கா என்ன.... தைரியமா இருக்கிறவங்க யாருமே இந்த இடத்துக்கு வர மாட்டாங்க நீ சும்மாவே பயப்படுவ இந்த இடத்துக்கு வந்து என்ன பண்ண போற வா டி நைட் சென்னை கிளம்பனும்ல வா அதுக்கு ரெடி பண்ணலாம்" என்று அந்த இடத்தை விட்டு வராதவளை இழுத்து கொண்டு வீடு வந்தால் ரம்யா.

சில மணி நேரங்கள் கழித்து,

ரம்யா "தேஜூ எதுக்கு டி அந்த இடத்துக்கு போன" என்றதும் அமைதியாக இருந்தவள் பின் அவள் முகத்தை பார்த்து "தெரியலை ரம்யா அந்த நேரம் எனக்கு அங்க போகனும் போல இருந்துச்சு. எனக்கு வேண்டியதை காப்பாத்தனும் போல இருந்துச்சு. எனக்காக எதோ ஒன்னு தவிச்சா மாதிரி இருந்துச்சு" என

"என்ன டி என்ன என்னமோ சொல்ற வர வர ரொம்ப சீரியல் பார்த்து கெட்டு போய்ட்ட அதில தான் நீ சொன்னது எல்லாம் வரும்" என்று நொடித்துக் கொள்ள, கல கலவென சிரிக்க ஆரம்பித்தால் தேஜூ.

அவளின் சிரிப்பு சத்தத்தை கேட்டுக் கொண்டே உள்ளே வந்த பொன்னி "என்ன அதிசயம் என் பொண்ணு வாயெல்லாம் பல்லா இருக்கு" என

"அம்மா..... " என்று சிணுங்கி கொண்டே தாயை கட்டிக் கொண்டாள்.

"என் செல்லம் இதே மாதிரி வாழ்க்கை முழுசா சிரிச்சிட்டே இருந்தா போதும் டா எனக்கு..... சரி நைட் கிளம்ப தேவையானதை எல்லாம் எடுத்து வெச்சிக்கிட்டியானு பாரு அம்மாடி ரம்யா கொஞ்சம் புள்ளைக்கு உதவி பண்ணு" என

"அம்மா அதெல்லாம் நேத்தே நானும் அண்ணாவும் எடுத்து வெச்சிட்டோம் இன்னும் இங்க இருக்கிற முக்கியமான பேப்பர்ஸ் மட்டுமே பாக்கி" என்று பையில் அடுக்கி கொண்டே கூற

"நீ குழந்தை எல்லாம் கிடையாது தான் வளர்ந்துட்ட தான் உங்க அண்ணா அப்பா சொல்றா மாதிரி வெளி உலகத்தை பார்க்கனும் தான் எனக்கு எல்லாம் புரியது இருந்தாலும் உன்னை பார்க்காமல் எப்படி இருக்க போறோம்னு தான் தெரியலை" என்று கண்ணீரோடு சொல்ல,

ஒரு நிமிடம் வேலையை தூக்கி போட்டு தாயிடமே இருந்து விடலாமா என்று நினைத்த மனதை கொட்டி வைத்து அடக்கி "அம்மா.... என்ன குழந்த மாதிரி அழுகிற.. . நான் என்ன கண்காணாத ஊருக்கா போறேன் இங்க இருக்கிற சென்னை மா.... கவலைப்படாத தினமும் உன் கூட பேசறேன்.... வீடியோ கால் பண்ணலாம்" என பல சமாதானம் சொல்லி தாயை சமாளித்தாள்.

இரவு, பேருந்து நிலையம் தேவேஷ் "குட்டி பத்திரமா இருக்கனும் எதுக்கும் பயப்பட கூடாது தைரியமா உன்னை நீ தான் பார்த்துக்கனும் ஒழுங்கா சாப்பிடு நேரத்துக்கு தூங்கனும்" என அட்வைஸ் மழையாக பொழிய

"டேய் போதும் நிறுத்து.... என் பொண்ணுக்கு தெரியும் நீ முதல தள்ளு....." என்று தேஜூவிடம் வந்து "உனக்கு நான் எதுவும் சொல்ல வேண்டியது இல்ல இருந்தாலும் ஒன்னே ஒன்னு சொல்றேன் தைரியமா இருக்கனும்" என பேருந்து கிளம்ப தன் தந்தை அண்ணா விற்கு கை அசைத்து தன் வாழ்வின் முக்கிய அத்தியாயத்தை நோக்கி சென்றாள்.

இரண்டு நாள் கழித்து,

கௌசல்யா "தேஜூ ஆல் தி பெஸ்ட்... இன்றைக்கு தான் முதல் நாள். அந்த கம்பெனியில் வேலை கிடைக்கிறது ரொம்ப பெரிய விசயம். கோவிலுக்கு போய்ட்டு போ" என்றால் ஹாஸ்டலில் உடன் தங்கி இருக்கும் தோழி. சென்னை வந்ததும் தேஜூக்கு கிடைத்த முதல் தோழி.

அம்பத்தூர் செல்ல தெரியாமல் வழி மாறி கடைசியாக அம்பத்தூரில் இருக்கும் வர்மா குருப் ஆப் கம்பெனிஸ் க்கு சென்று அந்த ஆறு மாடி கட்டிடத்தில் முதல் அடி எடுத்து வைக்க,

அந்த இடமே பர பரப்பாக அனைவரும் அங்கு இங்கு என்று ஓடிக் கொண்டு, முகத்தில் கவலை அப்பட்டமாக தெரிய ஒன்றும் புரியாமல் மேனேஜர் இருக்கும் அறைக்கு செல்ல,

அங்கு கூடி இருந்த சிலர் "பாவம் நம்ம சர் அவரோட பையன் எங்க இருக்கார்னு தெரியாமல் கஷ்டப்படுறார். அவருக்கு எதுமே ஆக கூடாது" என்று பேசிக்கொண்டே செல்ல,

யாருக்கோ எதே ஆபத்து போல என்று நினைத்து 'துர்காமா அவங்களுக்கு எதுவும் ஆகாமல் நீ தான் காப்பாதனும்' என வேண்டும் சமயத்தில்,

மேனேஜர் மோகன் வேகமாக இந்த நிறுவனத்தின் எம். டி அறைக்கு ஓட எதுவும் புரியாததால் தேஜூவும் அவர் பின்னே சென்றாள்.

நாராயணன் வர்மா, மேனேஜிங் டைரக்டர் என்ற பெயர் பலகையை பார்த்து வெளியே நின்று விட,

மோகன் "சர் தம்பியோட சாப்பர் சிக்னல் கிடைச்சிருக்குனு சொல்றாங்க. சீக்கிரமா தம்பியை கண்டு பிடிச்சிடலாம்" என சந்தோசமாக சொல்ல,

"அப்படியா மோகன்.... மகமாயி என் பையனை பத்திரமா என் கிட்ட கொடுத்திறு" என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டு மேலும் "எங்க இருக்கான் மோகன்" என

"சர் சவுத் அமெரிக்காவில் இருக்கிற எதோ ஒரு மலை அடிவாரத்தில் இருந்து சிக்னல் வருதாம். தம்பிக்கு எதுவும் ஆகாது சர்" என

"உன் கிட்ட சொல்ல என்ன அவன் இந்த தொழிலை பார்த்து கிட்டா எனக்கு நிம்மதியா இருக்கும்.... அவன் நல்லா இருக்கனும்னு தான் அவனை படிக்க யூ. எஸ் அனுப்பினேன் அவன் படிச்சதும் அங்க இருக்கிற நம்ம கம்பெனியை பார்த்து கிட்டான். இப்ப நான் நம்ம ஊருக்கு வாடா என்றால் வரவே மாட்டன்றான்" என்று பேசிக்கொண்டே திரும்ப கதவின் ஓரத்தில் இருந்த தேஜூ அவர் கண்ணில் பட்டாள்.

"இங்க வாமா" என அவளும் அவர் அருகே செல்ல,

மோகன் "யாருமா நீ" என "குட் மார்னிங் சர் நான் நியூ ஜாயினி" என்று அவளின் ஆடரை காட்ட, நாராயணன் "பெயர் என்ன மா" என்றதுக்கு

"தேஜஸ்வினி சர்" என்று தயக்கத்துடன் சொல்ல

நாராயணன் "மோகன் பார்த்துங்க நான் வெளியே கிளம்பறேன் என்னோட இன்றைய எல்லா மீட்டிங்கையும் கன்சல் பண்ண சொல்லிடுங்க" என்று அவர் கிளம்பி விட மோகன் தேஜஸ்வினி யிடம் அவள் வேலை சம்பந்தமாக பேசிக்கொண்டே அவளை அனைவருக்கும் அறிமுகம் செய்து அவளது கேபினை காண்பித்தார்.

வெளியே வந்த நாராயணன் நேராக சென்றது ஒர் ஆசிரமத்திற்கு.

அங்கு தவத்தில் இருந்த சாமியை பார்த்து அவர் எதிரே அமர,

"வா நாராயணா நீ வருவனு நினைச்சேன் சொல்லு என்ன விசயம்" என்று சாந்தமாக கேட்க,

"சாமி இரண்டு நாளா என் பையன் எங்க இருக்கானே தெரியலை சொந்த நாட்டில் இருந்தால் அவன் உயிருக்கு ஆபத்து னு நீ சொன்னதால் தான் அவனை கண்காணாத இடத்திற்கு அனுப்பி இருக்கோம். அவனை திரும்ப இங்க கூப்பிட்டா வரவே இல்லை. ஒத்த பிள்ளை சாமி எங்களை விட்டு ரொம்ப தூரம் போய்ட்டா மாதிரியே இருக்கு" என

"நாராயணா அவன் தாயகம் திரும்பும் நாள் விரைவில் வரும். நான் முன்பே சொன்னது போல் அவனின் முப்பதாவது வயதில் மரண யோகம் உண்டு. அதை அவன் தாண்டும் பட்சத்தில் அவனை வெல்ல யாராலும் முடியாது" என

"சாமி அந்த கண்டத்தில் இருந்து தப்பிக்க எதாவது பரிகாரம் இல்ல அவனை அங்கவே இருக்க சொல்லட்டா" என்று மகனை காப்பாற்றும் நோக்கில் கேட்க,

"நாராயணா இனி நீயே நினைத்தாலும் அவன் அங்கே இருக்க மாட்டான். அவன் உயிரை நோக்கி தாயகம் வருவான். மரண கண்டம் அவனுக்கு விதிக்கப்பட்ட சாபம் ஜென்மங்களாக தொடரும் சாபம்" என

"ஐய்யோ.... சாமி சாபமா அதுக்கு சாமி சாபம்.... அதற்கு பரிகாரம்" என்று கேட்ட நாராயனை பார்த்து,

"ஹா ஹா ஹா கொடுப்பவனும் சிவனே எடுப்பவனும் சிவனே....... தன் மரணத்தோடு போராடி தன்னவன் உயிருக்காக எமனுடன் போராடும் மங்கை வருவாள்" என்று கூறி மீண்டும் கண்களை மூடிக்கொண்டு தியானத்தை தொடர்ந்தார்.

அவரை வணங்கி விட்டு வெளியே ஒரு யோசனையோடு வந்தவரை கைபேசி அழைக்க, எடுத்து பேசியவர் அதில் சொன்ன செய்தியை கேட்டு அதிர்ந்து சிலையாகி விட்டார்.


விதிகள் தொடரும்
நிலா
 

Kavi nila

New member
Messages
14
Reaction score
12
Points
3
காதலின் விதியம்மா 3

வெளியே வந்த நாராயணனின் கைபேசி அழைக்க, அதில் சொன்ன விசயத்தை கேட்டு அதிர்ந்து சிலையானான்.

ஜெயராஜ், நாராயணனின் பி. ஏ "சர் சின்ன சார் கிடைச்சிட்டார். கையில கால கொஞ்ச அடி, அவரை ரெஸ்ட் எடுக்க சொன்னா அவர் இப்பவே இந்தியா வரனும்னு சொல்லாறாம். ரொம்ப பிடிவாதமா இருந்ததுனால அவரை நம்ம பசங்க நம்ம விமானத்தில் கூப்பிட்டு வராங்கலாம் அனேகமாக நாளை மார்னிங் இங்க இருப்பார்" என்று கூற

தன் மகனின் உயிருக்கு ஆபத்து என்பதால் அவனை அங்கவே இருக்க சொல்லலாம் என்று நினைக்க, இதுவரை சும்மா கூட இந்தியா வருவதாக சொல்லாத மகன் அவசரமாக இந்தியா வருவதை கேட்டு தான் அதிர்ந்தார்.

'மகமாயி நான் ஒன்னு நினைக்க நீ ஒன்று பண்ற. உன்னை தான் நம்பியிருக்கேன் என் மகனை காப்பாத்து' என்று கணத்த மனதுடன் தன் இல்லம் நோக்கி சென்றார்.

வர்மா ரெசிடன்சி, நகரின் முக்கிய பகுதியில் இருக்கும் பல அடுக்கு மாளிகை. அனைத்து வேலைகளையும் முடித்து பொறுமையாக தான் ஆசையாக வளர்க்கும் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டு இருந்தார் பூமகள்.

பூமகள், நாற்பதை தாண்டிய குடும்ப தலைவி. பல சொத்துக்களுக்கு சொந்தகாரியாக இருந்தும் யாரையும் அவமதிக்க தெரியாத பூவின் மென்மையான குணம் கொண்டவர்.

நாராயணனின் கார் உள்ளே நுழைவதை பார்த்து, 'என்ன இவங்க போன வேகத்துக்கு திரும்ப வந்துட்டாங்க.. என்னவா இருக்கும்' என சிந்தித்து கொண்டே,

"என்ன மாமா உடம்புக்கு எதாவது பண்ணுதா... இல்ல தலைவலிக்கிதா ஏன் முகம் ஒரு மாதிரி டல்லா இருக்கு" என வீட்டிற்கு நுழைந்து கொண்டே கேட்க,

அவரை பார்த்து "இல்லாமா உடம்புக்கு எதுவும் இல்ல நாளைக்கு பையன் வரான்" என

"மாமா... அவனுக்கு என்ன ஆச்சு ஏன் தீடிரென வரான் எப்பவும் கூப்பிட்டா கூட வர மாட்டான் உங்க முகம் வேற சரியில்ல சொல்லுங்க மாமா என்ன ஆச்சு" என்று கலவரத்துடன் கேட்க,

'எதுமே நான் இன்னும் சொல்லலை அதுக்குள்ள நீ இப்படி பதற உண்மையை சொன்னா நீ தாங்குவியா' என மனதில் நினைத்து "ஒன்னும் இல்லடா லைட்டா அடி போல அதோட உன் பையனுக்கு உன்னை பார்க்கனும் போல இருக்கும் போல அதான் வரான் அனேகமா நாளைக்கு காலை க்குள் வந்திடுவான்" என்று கூற

பல வருடங்கள் கழித்து பார்க்க போகும் மகனை நினைத்து கண் கலங்கி "சந்தோசமா இருக்குங்க இந்த முறை வரட்டும் ஒரு கல்யாணத்தை பண்ணி என் கூடவே வெச்சிக்கிறேன்" என

"இல்லமா அவன் போகனும்னு நினைச்சா போகட்டும்" என்று கூறி விட்டு செல்லும் கணவனை ஆச்சரியமாக பார்த்தார். தன்னை விட மகனுக்காக ஏங்கும் கணவனுக்கு இப்போது என்ன ஆச்சு என்ற யோசனையுடன் அவரும் மறுநாள் வரும் மகனின் அறையை சுத்தம் செய்ய சென்றார்.

மாலை, அனைவரும் கிளம்ப மோகன் "தேஜஸ்வினி முதல் நாள் எப்படி இருந்தது" என

"குட் சர் நான் தஞ்சாவூரில் மூன்று மாசம் ட்ரைனிங் முடிச்சிட்டு தான் வந்ததால் இப்ப பண்ற ப்ராஜெக்ட் ஈசியா புரிஞ்சிடுச்சு" என

"நல்லது மா நான் கூட பயந்தேன் என்னடா வந்ததும் பெரிய ப்ராஜெக்டில் போடுறோம்னு பரவாயில்லை கவனமா இருக்கனும் நாளைக்கு பார்க்கலாம்" என அவர் கிளம்பிவிட
தான் தங்கி இருக்கும் விடுதியை நோக்கி சென்றாள்.


கிழக்கே சிவக்க தோன்றி பின் இருளை மொத்தமாக சுருட்டும் சூரியன் தன் வரவை அனைவருக்கும் தெரிவிக்க, அதை தெரிந்து கொண்டு பறவைகள் அங்கும் இங்கும் பறக்க, தன் காதலனை கண்டதும் வெட்கத்துடன் பூக்கும் பூக்கள் என அனைத்தும் மனதை ரசிக்க வைக்க ஜன்னல் வழியாக சென்னையின் அழகை ரசித்து கொண்டு இருந்த தேஜூவின் முதுகில் கௌசல்யா பளீரென்று ஒரு அடி வைக்க,

"ஆ... அம்மா" என்ற அலறல் உடன் திரும்பி "எதுக்கு டி இப்ப என்னை அடிச்ச" என்று முறைத்து கொண்டே கேட்க,

"எவ்வளவு நேரமா நானும் கூப்பிடறது மேடம் என்னமே கனவு கண்டுகிட்டு, அடிக்கிற வெயிலில் காணாததை கண்டது போல பஸ்ஸையும் லாரி கார் போடுற சத்ததை பார்த்துட்டு இல்ல இல்ல ரசிச்சிட்டு இருக்க அங்க உன் போனு ரொம்ப நேரமா கத்தி்ட்டு இருக்கு" என்று கோபத்தோடு சொல்ல,

"ஐய்யோ" என்று ஓடியவள் போனை பார்த்து "அண்ணா தான் டி ப்ச்.... எடுக்க வேண்டியது தானே" என்று கூறி விட்டு தன் தமையனிடம் பேசிவிட்டு வர

கௌசல்யா "மேடம் காலையிலே என்ன கனவு கண்டுட்டு இருந்திங்க" என்று கிண்டலாக கேட்க,

"கனவு எல்லா இல்ல மனசுக்கு எதோ தோனுது... ஐ மீன் நம்ம கண்ணுக்கு முன்னாடி இருக்கிற காற்றை நம்மால பார்க்க முடியாது பிடிக்க முடியாது ஏன் அது உரிமை கொண்டாட முடியாது இருந்தாலும் அது இல்லைனா உயிர் வாழ முடியாதுல" என

"அடியேய் உனக்கு என்ன ஆச்சு டி... நல்லாதானே இருந்த இப்ப எதோ காத்து... உரிமைனு உளறிட்டு இருக்க" என்று கத்த

"ஸ்ஸ்ஸ்... கௌஸ் பொறுமையா கத்துமா அப்பறம் வலிக்க போது" என கௌசல்யா "உன் காதா" என்ற கேள்விக்கு "இல்ல உன் தொண்டை" என,

அவளின் தலையில் தட்டி, "போ போய் குளிச்சிட்டு கிளம்பு நேரம் ஆகுது" என்றதும் பறந்து விட்டால் தேஜஸ்வினி.

'ராமு சமையல் முடிச்சிட்டியா.... ராமு தம்பி ரூமை சுத்தம் பண்ணியா..... ராமு என்ன ஸ்வீட் பண்ணிருக்க.... ராமு அத பண்ணாத.... ராமு இதை இப்படி பண்ண சொல்லு' என வீட்டில் இருக்கும் அனைவரையும் என்றுமில்லா திருநாளா வேலையை வாங்கி கொண்டு இருக்கும் மனைவியை பார்க்கும் போது வாழ்க்கை நிறைவாக இருந்தது நாராயணனுக்கு.

தீடிரென ஓரு சத்தம் இருவரும் வேகமாக வெளியே வந்தனர். கார் சத்தம் தான்... எவ்வளவு விலை உயர்ந்த காராக இருந்தாலும் அது கருப்பு கலரில் இருந்தால் அதன் கம்பீரம் பல மடங்கு உயர்வது போல் இருந்தது அந்த கருப்பு நிற பேன்ஸ் கார்.

அதில் இருந்து இறங்கினான். ஆறடி உயரம் அவனை போல் யாருக்கு அடங்காத கேசம் கூர்மையான கண்கள் கோபம் எனக்கு அதிகம் என்று அளவிட்டு காட்டும் மூக்கு சிவந்த அழுத்தமான இதழ் என ராஜா கணக்காக வந்து இறங்கினான் நம் ஹீரோ பைரவ் வர்மா.

வலது கையில் பெரிய கட்டு, காலில் சில பல அடி நிற்க கொஞ்சம் கஷ்ட படுவது போல தெரிய இருந்தும் கம்பீரத்துக்கு குறையில்லை.

"கண்ணா..... எப்படி டா இருக்க என்னடா இது கோலம்" என கலங்கிய கண்களுடன் கேட்கும் தாயை அனைத்து கொண்டு,

"சில் மா சின்ன அடி தான் சீக்கிரமா சரியாகிடும்.... ஹாய் டேட் அவ் ஆர் யு" என

"நல்லா இருக்கோம் டா எங்க போன இரண்டு நாளா உன்னை காண்டாக்ட் பண்ணவே முடியலை" என

"சாப்பரில் ஆண்டிஸ் மலை பக்கமா போகும் போது சிக்னல் லாஸ்ட் ஆயிடுச்சு.... அப்பறம் கண்ட்ரோல் மிஸ் ஆகி நான் மலை இடுக்கில் மாட்டி கடைசியா நம்ம பசங்க வந்தாங்க" என தன் சாகசங்களை கூற

"ஏன்டா பத்திரமா இருக்க கூடாதா ஒத்த பிள்ளை டா எங்களுக்கு நீ. இனிமே எங்க கண்ணு முன்னாடியே இரு" என அன்னையை பார்த்து,

"ம்மா... நான் காத்து மாதிரி யாராலும் பார்க்கவும் முடியாது பிடிக்கவும் முடியாது ஆனா எல்லா இடத்திலும் இருப்பேன்" என

நாராயணன் "போதும் நிறுத்துடா காதில் இருந்து ரத்தம் வர போகுது. சரி எப்ப கிளம்ப போற" என்றதுக்கு "இனி இங்க தான்" என்ற மகனை பார்த்து,

"என்ன சடனா" என "சும்மா தோணுச்சு" எனும் போதே நாராயணனுக்கு மோகன் கால் செய்ய,

தள்ளி நின்று "சொல்லு மோகன்" என எதிர் பக்கம் சொன்ன விசயத்தை கேட்டு "அப்படியா... மறந்துட்டேன் மோகன் என்னால இன்றைக்கு ஆபிஸ் வர முடியாது நீங்க வேணா யாரையாவது வீட்டுக்கு பையிலோட அனுப்புங்க நான் சைன் பண்ணி தரேன்"

.......

"வேற யாரும் இல்லையா மோகன்... சரி அனுப்புங்க தேஜஸ்வினி தானே" என்று பேசி விட்டு வைக்க,

மேலே உள்ள தன் அறைக்கு செல்ல கிளம்பிய பைரவ் இந்த பெயரை கேட்டதும் அதே இடத்தில் நின்று,

"டேட் இப்ப என்ன நெம் சொன்னீங்க" என

"தேஜஸ்வினி... நம்ம கம்பெனி ஸ்டாஃப்" என்று வீட்டில் இருக்கும் அலுவல் அறைக்கு செல்ல,

'தேஜ்...'


விதிகள் தொடரும்
நிலா
 

Kavi nila

New member
Messages
14
Reaction score
12
Points
3
காதலின் விதியம்மா 4

நேற்றை போல் இன்றும் தனது டீம் ப்ராஜெக்டை படித்து கொண்டு இருந்த தேஜூவை பியூன் மேனேஜர் கூப்பிடுவதாக அழைக்க அங்கே சென்றாள்.

"சர்" என கதவை தட்ட அவர் "கம் இன்" என்றதும் உள்ளே செல்ல,

"அஸ்வினி ஒரு ஆடரை இன்றைகே அனுப்பனும் ஆனா அதுக்கு எம். டி சார் கையெழுத்து வேண்டும் அவரோட பி ஏ ஆவட் ஆப் சிட்டி நானும் ஃபாரின் டேலிக்கேட்ஸ் கூட ஒரு மீட்டிங் இருக்கு. ஸோ கொஞ்ச சர் வீடு வரைக்கும் போய்ட்டு வர முடியுமா" என

"சர் போகிறதில் பிரச்சனை இல்ல நான் சென்னைக்கு புதுசு வழி தெரியாது" என்று பாவமாக சொல்ல

"கம்பெனி கார் இருக்கு அதில போய்ட்டு வாமா... இது கொஞ்சம் முக்கியமான ஃபயில் அதான்.. நீ தான் வரனு சொல்லிட்டேன்" என அவளும் கிளம்பி அவர்கள் வீட்டுக்கு செல்ல தயாரானாள்.

பைரவ், "ம்மா நான் என்னோட ரூமிற்கு போறேன்" என முதல் தளத்தில் இருக்கும் தன் அறைக்கு சென்றான்.

நாராயணன் தன் அலுவல் அறையில் இருக்க, தேஜஸ்வினி அந்த வீட்டுக்குள் நுழைந்தாள்.

"யூ.... ஃபூல் நான் சொன்னதை மட்டும் செய் அத விட்டுட்டு நீயா ஒன்று பண்ணாத" என கத்தும் சத்தமும் கூடவே கண்ணாடி உடையும் சத்தமும் கேட்க, சத்தம் கேட்க திசையை உடல் நடுங்க பயத்துடன் நோக்கினாள்.

'மேல இருக்கிற ரூமில் தான் சத்தம் வருது தேஜூகுட்டி அந்த பக்கம் மட்டும் போகவே கூடாது முதல சாரை பார்த்து சையின் வாங்கிட்டு போகனும்' என்னும் போதே அங்க வந்த பூமகள்,

"யாரை மா பார்க்கணும்" என்று சாந்தமாக கேட்க,

"சர்.... கையெழுத்து..... ஆபீஸ்.. " என்று பதட்டத்தில் வாய் குளற, பின் தன்னை சமன் செய்து கொண்டு "அம்மா ஆபிஸில் இருந்து வரேன். சார் கிட்ட முக்கியமான பையிலில் சையின் வாங்கனும்" என

அவரும் இவளை பார்த்து மெலிதாக புன்னைத்து கொண்டு "அவரு மேல தான் இருக்காரு போமா" என அவரும் எந்த ரூம் என்று சொல்லவில்லை இவளும் கேட்கவில்லை.

'ஐய்யோ... இதுல எந்த ரூம்னு அவங்க சொல்லவே இல்லையே எதுவா இருக்கும் இதுவா..... இல்லை அதுவா...... ம்ம்ம் இதுல தான் கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி சத்தம் வந்துச்சு கண்டிப்பா இதுல தான் இருப்பாங்க" என

அந்த கதவை தட்டி "சர்" என்று அழைக்க 'என்ன எதுமே சொல்லாம அமைதியா இருக்கு... சரி நம்ம உள்ள போகுவோம் சாரை பார்த்த அவ்வளவு கடுமை மாதிரி எல்லாம் தெரியலை' என குருட்டு தைரியத்தில் உள்ளே சென்று,

"சார்" என்று அழைத்து கொண்டே அவரை தேட 'என்ன யாரையும் காணோம்' என்று திரும்ப பக்கத்து மேஜையில் இருந்த போனை கவனிக்காமல் கையை உதற அந்தோ பாவம் கைபேசி சுக்கு நூறாக உடைந்து.

சரியாக அந்த நேரம் ரெஸ்ட் ரூமில் இருந்து பைரவ் வர, வந்ததும் அவன் கண்ணில் பட்டது உடைந்த அவனின் போன் தான்.

"டாம் இட் கொஞ்சமாச்சு மூளை இருக்கா எவ்வளவு காஸ்லி போன் அதை விட முக்கியமான கால் வேற வரும் ச்சை.... எனக்கு வர கோபத்துக்கு" என எதிரே இருந்தவரை அறைய கை ஓங்க

"சர்... சர்.... சாரி சர் தெரியா பண்ணிட்டேன் சர் நான் வேண்டுமே பண்ணல அடிச்சிடாதிங்க" என பதறிய குரலில் கூற

கோபத்துடன் வேகமாக கையை ஓங்கியவன் அவளின் படப்பட பேச்சில் அவளை நோக்க,

பயத்தில் நடுங்கும் அவளின் செவ்விதழ்யில் அவனின் பார்வை சென்றது. மெதுவாக பார்வையை விலக்க பயத்தில் இறுகி முடிய விழிகள், வெளுத்த முகம் என பயத்திலும் ரதியாக இருந்தவளை கண்டு தடுமாறிய மனதை கட்டுப்படுத்த முடியாமல் தன் கேசத்தை கோதி பின்,

"யாரு நி.. நீங்க எதுக்கு என்னோட ரூமிற்கு வந்த" என்று பொறுமையாக கேட்க நினைத்தாலும் வாயில் இருந்து அதிகாரமாகவே வந்தது.

"சர் சர் ஆபீஸ்ல இருந்து கையெழுத்து வாங்க வந்தேன் சர்...... எம் டி சர் ரூம்னு நினைச்சு வந்துட்டேன் மன்னிச்சிடுங்க சர் உங்க போனை உடைச்சிட்டேன் நானே புது போன் வாங்கி தரேன்" என கண்ணில் இருந்து வடிந்த கண்ணீரை துடைத்து கொண்டே கூற

"ஏய் டேம் இட் முதல டியர்ஸ்சை வைப் பண்ணு சும்மா அழுதா எனக்கு சுத்தமா பிடிக்காது தென் தப்பே பண்ணாலும் தலை குனிந்து பேச கூடாது எதிரில நிற்கிறவங்க முகத்தை பார்த்து பேசு தென் அப்பாவோட ரூம் கடைசியா இருக்கும் போ" என தலையை ஆட்டிக் கொண்டு,

"கண்டிப்பா முதல் மாசம் சம்பளம் வந்ததும் போன் வாங்கி தந்துடுவேன் சர்... எம் டி சர் கிட்ட சொல்லாதிங்க" என்று கூறி விட்டு வேகமாக திரும்பி ஓட ,

"சில்லி கேள்" என உடைந்த ஐ போனை எடுத்து 'பெயரை கேட்காமல் விட்டுட்டோமே' என்று யோசித்து கொண்டே தன் வேலையை கவனித்தான்.

'தூர்காமா இந்த தடவையாவது சரியான ரூமிற்கு போகனும்' என்று வேண்டிக் கொண்டே கதவை தட்டி விட்டு உள்ளே செல்ல,

"வா மா அஸ்வினி உனக்கு தான் வெயிட்டிங் கொடு கொடு.... அப்பறம் முதல் நாள் எப்படி போச்சு..... உன்னோட டீம் லீட் யாரு" என

"டீம் லீட் சாய் சர்..... நல்லா போச்சு சார்... இப்ப ஒரு பெரிய ப்ராஜெக்ட் அசையின் பண்ணி இருக்கு சார்" என

"குட் சாய் நல்ல திறமையான பையன் அவன் கிட்ட இருந்து எவ்வளவு கத்துக்க முடியுமோ எவ்வளவு கத்துக்கோ" என்னும் போதே அந்த அறைக்கு பைரவ் வர,

"வாடா..... அஸ்வினி இவன் தான் என்னோட சன் பைரவ் அண்ட் இவங்க நம்ம கம்பெனியோட நீயூ ஜாயினி தேஜஸ்வினி" என

'ஓ... இவ தான் தேஜஸ்வினியா குட் வேரி குட்' என நினைத்து "டேட் நீங்க ஆசைப்பட்ட மாதிரி நான் நாளையில் இருந்தே நம்ம கம்பெனி பொறுப்புகளை ஏற்றுகிறேன்" என

"அட ரொம்ப சந்தோசம் பா... பார்த்தியா அஸ்வினி நீ வந்த நேரம் எனக்கு ரெஸ்ட் கிடைச்சிடுச்சு" என
'நான் என்ன பண்ணேன்' என்று புரியாமல் அவரை பார்த்து மெலிதாக சிரிக்க,

'கரெக்ட் தான் தேஜ் வந்த நேரம் எனக்கு ஆபிஸ்க்கு வரனும்லாம் தோனுது' என நினைத்து "அப்பா பட் ஒன் கன்டிசன்" என

"என்ன குண்டு டா வெச்சியிருக்க" என்று அதிர்ந்து கேட்க,

"முதல் விசயம் நான் எடுக்கிற எந்த முடிவிலும் நீங்க தலையிட கூடாது... ஒன்ஸ் என் கிட்ட கம்பெனி வந்து விட்டா உங்களுக்கும் கம்பெனிக்கும் நோ ரிலேஷன். தென் நெக்ஸ்ட் என்னோட பிஏ வை நான் தான் செலக்ட் பண்ணுவேன்" என

"முதல சொன்னது ஓகே டா ஆனா என்னோட பிஏ ஜெயராஜை என்ன பண்றது" என

"அதை நான் பார்த்துக்க்றேன்" என்று வந்த வேலையை முடித்து வெளியேறினான்.

தேஜூ "சர் நான் கிளம்பறேன்" என "சரிமா மேனேஜர் கிட்ட சொல்லிடு நாளைக்கு சின்னதா ஒரு ஃபன்ஷன் வைக்க சொல்லு நானும் அவர் கிட்ட சொல்றேன்" என்றதும் இவள் கீழே வந்து சமையலறை சென்று,

"அம்மா நான் கிளம்புறேன்" என "என்னடா அதுக்குள்ள கிளம்பிட்ட சாப்பிட்டு போகலாம்ல" என்ற பூமகளிடம்,

"பரவாலை ஆண்ட்டி" என்று கிளம்பி வாசல் வர,

"தேஜ்" என்ற கம்பீர குரலில் திரும்பி பார்த்தால்,

'ஐய்யோ இந்த சர் இப்ப எதுக்கு கூப்பிடுறாரு' என்ற பீதியில் திரும்ப,
"என்ன சார்" என்று நடுங்கும் குரலில் கேட்க,

'நம்ம என்ன பண்ணிட்டோம்னு இவ இப்படி பயப்படுறா' என்று நினைத்து அவளிடம் "லுக் இன்னொரு முறை கவனத்தோடு இருக்கனும்ல ஸோ உன் கையில் இருக்கிற மோதிரத்தை தா" என்று அவனுடையது போல் கேட்க,

அவன் சொன்னதை கேட்டு பதறி "சர் நான் தெரியாம பண்ணிட்டேன் மன்னிச்சிடுங்க.... ஆனா இந்த மோதிரத்தை மட்டும் கேட்காதிங்க இது எனக்கு என் அப்பா கொடுத்து" என

"சாரி டாலி என் கிட்ட தெய்யாதனு சொன்னா தான் செய்யனும்னு தோனும் ஸோ நீயா கொடுத்திரு" என்று பிடிவாதமாக கேட்க,

'நான் என்ன பண்ணுவேன்... இதை அப்பா கிழட்டவே கூடாதுனு சின்ன வயசில் இருந்தே நூல் சுத்தி எல்லாம் போட்டு விட்டார் ஆனா இந்த சாருக்கு இது தான் வேண்டும்னு பிடிவாதம் பிடிச்சா என்ன செய்ய' என தனக்குள் பேச,

"மேடம் கொஞ்சம் மையின்ட் வாய்ஸ்சை மீயுட் போட்டுட்டு மோதிரத்தை கொடுத்தா நான் கிளம்பிட்டே இருப்பேன்" என்று அவளை நெருங்கி வந்து கேட்க,

மந்திரித்து விட்டது போல் தானாக கிழட்டி கொடுத்துவிட்டு வேகமாக காருக்குள் அமர்ந்து "அண்ணா வண்டியை எடுங்க சீக்கிரமா வேகமா போங்க" என்று தெறித்து ஓடியவளை கண்டு அந்த அழுத்தமான இதழில் சிறு புன்னகை.

காரிருள் மேகம் நிலாவை மறைத்து அந்த காட்டு பங்களாவை இன்னும் பயங்கரமாக காட்ட, இருளில் ஒருவன் கண்கள் சிவப்பாக "வந்துவிட்டாயா.... ஹா ஹா ஹா உன் சாவை தேடி தாயகம் வந்துவிட்டாய் பைரவ்..... உனக்கு சொந்தமான இடத்தில் என் வெறி தீர உன்னை கொல்ல காத்திருக்கிறேன் பல ஆண்டு காலமாக...... இனிமேல் பார்ப்பாய் என் விளையாட்டை இந்த சண்டியின் விளையாட்டை..... விதி முடிந்த இடத்திலே தொடங்கும் உன் மரண ஓலம்..... இந்த ஜென்மத்திலும் சேர மாட்டாய்... ஹா ஹா ஹா" என்று அந்த இடமே அதிர சிரித்தான்.

"அம்மா.... " என்ற அலறலில் அடித்து பிடித்து கௌசல்யா எழுந்து பார்க்க, தூக்கத்தில் தேஜூ "விட மாட்டேன் நான் உள்ள வரை உன்னால் எதுவும் செய்ய முடியாது.... ஐயனே.... " என்று கத்த

தன் படுக்கையில் இருந்த பைரவ் வேகமாக எழுந்து அமர்ந்தான்.

யார் இந்த சண்டி? இந்த முறை விதி இவர்களுக்கு என்ன வைத்துள்ளது.


விதிகள் தொடரும்
நிலா
 

Kavi nila

New member
Messages
14
Reaction score
12
Points
3
காதலின் விதியம்மா 5

மயிலாப்பூரில் புகழ்பெற்ற கபாலீஸ்வரர் ஆலயம் காலை பொழுதின் அழகில் அனைவரும் தங்களை மறந்து இருக்க ஒருவர் முகத்தில் மட்டும் பயம் தாண்டவமாடியது. அவளின் முகத்தில் தோன்றிய உணர்வை புரியாமல் பார்த்து கொண்டு இருந்தால் கௌசல்யா.

"ஓய் அச்சுமா இவ்வளவு டென்சன்.... எதுக்கு நேற்று ராத்திரி அப்படி கத்தின எதேதோ உளறின" என்று கௌசல்யா கேட்க,

தேஜஸ்வினி "உனக்கு என்னோட பயம் சொன்னா புரியாது டி எதோ தப்பா நடக்கிற மாதிரி..... எனக்கு இந்த கனவு வரும் போது கண்டிப்பா எதோ நடக்கும்" என

"எப்படி என்ன கனவு டி" என "எனக்கு சரியா நியாபகம் இல்லை. ஆனா என்னை ஒருத்தர் கத்தியால் குத்திட்டு என் பக்கத்தில் இருந்த வேற யாரையோ அதே கத்தியால் குத்தி்ட்டாங்க. எனக்கு குத்தனது யாரும்னு தெரியாது பக்கத்தில் இருந்தது யாருன்னு தெரியாது முகம் எதுமே சரியா தெரியலை" என

"கவலைப்படாத அச்சு... இந்த முறை பாரு எதுமே தப்பா நடக்காது. நீயே என் கிட்ட சொல்லுவ இதுக்கெல்லாம் பயப்படக்கூடாது.. பீ பிரேவ்" என்று இருவரும் பேசிக்கொண்டே செல்ல தேவேஷ் தேஜுவிற்கு கால் செய்து,

"தங்கக்கட்டி என்ன செய்து" என்று தூங்கி எழுந்தவுடன் பேசுவது தெரிய,

"அண்ணா நான் கோவில் வந்து இருக்கேன்" என்ற குரலில் சிறு நடுக்கம் தெரிந்தது. "என்னடா தங்கம் இவ்வளவு சீக்கிரம் கோவில் போய் இருக்க எதாவது பிரச்சனையா.... இல்ல வேற எதாவது.. ம்ம்... கனவு எதாவது வந்துச்சா" என்று பதட்டமாக கேட்க,

பல கிலோமீட்டர் தொலையில் இருந்தாலும் தன் குரல் கொண்டே தன் நிலையை சரியாக சொல்லும் தமையனை எண்ணி மனம் பூரித்தது போனது. "ஐயோ... அப்படி எதுவும் இல்லனா நான் சும்மா என் ரூம்மட் கூட தான் வந்து இருக்கேன். வேலைக்கு சீக்கிரம் போகணும்ல அதான் காலையே வந்துட்டோம் வேற எதுவும் இல்லனா நீ ஏன் எதுக்கு எடுத்தாலும் பயப்பிடுற நான் பார்த்துகிறேன்" என்று தமையனுக்கு சொல்லுவது போல் தனக்கே சொல்லி கொண்டாள்.

"சரி டா தங்கம் என் செல்லக்குட்டி பெரிய பொண்ணு ஆகிட்டா தான். சரி பார்த்து இருந்துக்கோ நான் போன் வைக்கிறேன். நைட் கால் பண்ணு. பாய் டா" என்று போனை வைத்து விட்டு திரும்ப,

கௌசல்யா "எதுக்கு டி அவங்க கிட்ட பொய் சொல்ற" என்கிறதுக்கு "அண்ணா பதறிடுவாங்க டி" என்று கூறி கொண்டே பிரகாரத்தை சுற்ற யாரோ தன்னை கூப்பிடுவது போல் இருக்க திரும்பினால் தேஜூ.


பூமகள், பைரவின் தாய் இவர்களை நோக்கி வந்தார். "அடடே.... உன்னை இங்க பார்ப்பேன் னு நினைக்கவே இல்லை மா... என்ன இவ்வளவு காலையே கோவில் வந்திருக்க" என

"அது சும்மா தான் மா.... வீட்டில் இருக்கும் போதே பழக்கம் காலையே கோவில் வரது... நீங்களும் இவ்வளவு சீக்கிரமா தான் வந்திருக்கீங்க" என்று சிரித்து கொண்டே சொல்ல,

"கரெக்ட் தான் மா..,. தம்பி இன்றையில் இருந்து கம்பெனி பொறுப்பை எடுத்துக் போறான்" என தெரிந்த விசயம் தான் இருந்தாலும் பதறியது அவள் மனம்.

"அவங்க கையில அடிப்பட்டி இருக்கு. அது சரியானதும் வரலாம்ல" என்று எந்த தைரியத்தில் அவள் இதை சொன்னாலோ சொன்ன அவளுக்கே தெரியவில்லை. சொல்லிவிட்டு முழிக்க,

"நீ சொல்றது வாஸ்தவம் தான் மா இவ்வளவு வருசமா கூப்பிடு வராதவன் இப்ப அவனே வந்து நான் பொறுப்பை எற்றுக்கிறேன்னு சொல்லும் எனக்கு சந்தோசமா இருக்கு மா... நீ அங்க தானே இருப்ப கொஞ்சம் அவனை பார்த்துக்கோமா" என

'என்ன நானா' என்று மனது அலறியதை கட்டுப்படுத்திக் கொண்டு புன்னகைத்தாள். பின், "சரி மா நான் கிளம்புறேன் ஆபீஸ்ல பார்க்கலாம்" என்று கிளம்ப,

"ரொம்ப நல்லா பேசறாங்கல பணத்தோட திமிரு அவங்க பேச்சில் துளி கூட தெரியலை" என்ற கௌசல்யா பார்த்து "ஆமா டி சரி வா நேரத்துக்கு நான் ஆபீஸ் போகணும்" என்று இருவரும் கோவிலை விட்டு கிளம்பினார்.

தங்கள் புதிய முதலாளியை வரவேற்க பல ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டு இருந்தது. பார்க்கிங் ஏரியாவே அலங்காரத்தில் மிக அழகாக இருந்தது. மேடை அதை சுற்றி பூக்கள் சூழ்ந்து இருக்க அதையே மெய் மறந்து பார்த்து கொண்டே ஒரு ஓரத்தில் செல்ல,

யாரோ ஒருவர் "சார் நீங்க சொன்னா மாதிரியே எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டேன். அவனோட சாவை இன்றைக்கு நீங்க கண்டிப்பா பார்ப்பீங்க. நான் செட் பண்ண ஆளு சநைபேரோட எதிர்ல இருக்கிற பில்டிங்ல இருக்கான் அவ பொறுப்பை அதுக்கின அடுத்த நிமிஷம் அவன் உலகத்தில இருக்க மாட்டான். நீங்க அவனோட சாவை சந்தோசமா எதிர் நோக்கி இருங்க" என்றான்.

அவன் முதலில் பேசியதை கேட்டு பயத்தில் நடுங்கியவள் அவன் கடைசியாக யாரை பற்றி பேசுகிறான் என்பதை அறிந்து கோபத்தில் கொதித்தாள்.

பைரவை இப்படி இவள் தனியாக காப்பாற்ற போகிறாள்???


விதிகள் தொடரும்
நிலா
 

Kavi nila

New member
Messages
14
Reaction score
12
Points
3
காதலின் விதியம்மா 6

மேடையின் அலங்காரத்தை ரசித்து கொண்டே வந்தவளின் கால் பிரேக் போட்டது போல ஒரு இடத்தில் நின்று விட்டது.

"சார் நீங்க சொன்னா மாதிரியே எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டேன். அவனோட சாவை இன்றைக்கு நீங்க கண்டிப்பா பார்ப்பீங்க. நான் செட் பண்ண ஆளு எதிர்ல இருக்கிற பில்டிங்ல இருக்கான் அவ பொறுப்பை ஏற்ற அடுத்த நிமிஷம் அவன் உலகத்தில இருக்க மாட்டான். நீங்க அவனோட சாவை சந்தோசமா எதிர் நோக்கி இருங்க" என்றான்.

அவன் முதலில் பேசியதை கேட்டு பயத்தில் நடுங்கியவள் அவன் கடைசியாக யாரை பற்றி பேசுகிறான் என்பதை அறிந்து கோபத்தில் கொதித்தாள்.

'அய்யோ.... பைரவ் சாரை கொல்ல பிளான் பண்றாங்க.... என்ன பண்றது ஒன்னுமே புரியலையே இதை யார் கிட்ட சொல்றது' என ஒன்றும் புரியாமல் நிற்க ஒரு கை தோளை தொட, பதறி திரும்பினாள்.

சாய் "ஓய் எல்லோரும் அங்க இருக்கோம் நீ மட்டும் தனியா இங்க நின்னுட்டு என்ன பண்ற" என

"சாய் சார் இங்க... " என்று தொடங்கியவள் பாதிலே நிறுத்தி 'வேண்டாம் இவங்க கிட்ட சொன்னா விளையாட்டா எடுத்துப்பாங்க' என்று நினைத்து தன்னையே குறுகுறு என்று பார்த்த சாயிடம்,

"சார் ஃபன்ஷன் ஸ்டார்ட் பண்ண இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு" என

"இன்னும் ஒரு மணிநேரம் இருக்கும்.... எதுக்கு இப்ப இதை கேட்குறீங்க" என்ற சாயிடம்,

"எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு சார் நான் ஃபன்ஷன் ஸ்டார்ட் பண்றதுக்குள்ள வர டிரை பண்றேன்" என்று அவரின் மறுமொழியை கூட காதில் விழவில்லை.

வெளியே வந்தவள் 'அய்யோ இப்ப என்ன பண்றது.... யாரை நம்பி இதை சொல்றது நாராயணன் சர் போன் நம்பர் கூட தெரியாதே எதிரில் வேற நிறைய பீல்டிங் இருக்கு இதில் அந்த பீல்டிங்ல இருந்து சுட போறாங்களோ.... எப்படி பைரவ் சாரை காப்பாத்திருத்து.... துர்க்கா மா எதாவது ஒரு வழியை காட்டு' என்று வேண்ட, அவளை யாரே அழைக்கும் சத்தம் கேட்டு திரும்பினாள்.

சரியாக மணி பத்து முப்பது, மூன்று கார்கள் வரிசையாக நிறுவனத்தின் வாயிலாக உள்நுழைந்து.

முதல் மற்றும் கடைசி காரில் இருந்து கருப்பு உடை அணிந்த காவலாளிகள் இறங்கி, இரண்டாவது காரின் கதவை திறக்க,

கருப்பு நிற கோட் சூட் அணிந்து, முகத்தில் ராஜ கம்பிரத்துடன் என்னோடு மோதி சாவை தேடாதே என்ற திமிரும் கர்வமும் விழியில் வழிய இரண்டு நாட்கள் முன் இவன் தான் உயிருக்கு போராடியவனா என்று வியக்கும் வண்ணம் மேடையை நோக்கி வந்தான்.




அவனது தாயும் தந்தையும் பெருமையுடன் முகம் கொள்ளா புன்னகையுடன் அவனை பின் தொடர்ந்தனர்.

சில நிமிட பலரது வரவேற்பு, வாழ்த்துக்கள் பின் அறிமுக உரை என்று நீண்டு கடைசியாக பைரவ் பேசும் முறை,

"ஹலோ எவ்ரிஒன் பிரசன்ட் ஹியர்... இந்த மாதிரி எதுக்கு பெருசா வரவேற்பு எல்லாம்..... இது தான் என்னோட டேட் இந்த ஃபன்ஷனை பற்றி சொல்லும் போது நான் கேட்ட கேள்வி... உண்மையை சொல்லனும்னா எனக்கு இதுல சுத்தமா விருப்பம் இல்லை. நான் என் டேடி மாதிரி பொறுமை நிதானம் எல்லாம் கிடையாது.... அவருக்கு நேர் எதிர் நான். எனக்கு நேரம் ரொம்ப முக்கியம்.... அதே சமயம் செய்ற வேலையை ஒழுங்கா இன்னொருத்தர் குறை சொல்றது போல இருக்க கூடாது... தப்பு யாராவது பண்ணா நான் வார்னிங் மட்டும் பண்ண மாட்டேன் வேலையை விட்டே தூக்கிடுவேன்.... இதை சொல்ல தான் நான் இங்க வந்தேன் இப்ப எல்லாரும் அவங்க அவங்க வேலையை பார்க்க போங்க " என

புதிய முதலாளியை பார்க்க சந்தோசமாக வந்தவர்கள் இவனது பேச்சை கேட்டு அதிர்ச்சியாகி, தங்கள் நிலைமையை எண்ணி நொந்தே போனார்கள்.

சாய் "அஷ்வினி... நீங்க எப்ப வந்திங்க" என

"நான் சார் பே... " என்பதற்குள் உடன் பணி புரியும் காயத்ரி "அவ ஃபன்ஷன் ஸ்டார்ட் பண்ணுறதுக்கு முன்னாடியே வந்துட்டா சார்" என தேஜஸ்வினி அவளை புரியாமல் பார்க்க,

சாய் "ஒகே இரண்டு பேரும் போய் வேலையை பாருங்க" என்று அவன் கிளம்ப

தேஜு "ஏய்... நான் இப்ப தான் பைரவ் சார் பேசும் போது தான் வந்தேன் நீ இதுக்கு அவங்க கிட்ட போய் சொன்ன" என

"அநியாயத்துக்கு உண்மை விளம்பிய இருக்க கூடாது டி. அது சரி இது என்ன டிரஸ் எல்லாம் அழுக்கா இருக்கு" என்று கேட்க, "இது ஒரு பெரிய கதை காயத்ரி" என்று பேசி கொண்டே உள்ளே செல்ல, பியூன் "தேஜஸ்வினி மேம் உங்களை சார் உள்ள கூப்பிட்டாங்க" என

"சரி டி நீ போ" என்று காயத்ரி அவளிடம் சென்றாள். தேஜஸ்வினி மனதில் 'இப்ப என்ன சொல்றதுக்கு அவங்க கூப்பிடங்களோ' என்று கதவை தட்டி "மே ஐ கம் இன் சார்" என

"எஸ் கம் இன்" என்றதும் உள்ளே வந்தாள். நாராயணன் சாரும் அவர் மனைவியும் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் சற்று தைரியமாக அவள் உள்ளே வர அவர்கள் இருவரும் இருந்ததுக்கான அடையாளம் எதுமே இல்லை.

'அய்யோ சார் இருப்பாங்க னு நம்பி வந்தேன் இப்ப இவங்க மட்டும் தான் இருக்காங்க நான் என்ன செய்வேன்' என்று பதட்டத்துடன் கண்கள் அந்த அறையை யாரவது இருப்பார்களா என்று தேட,

"ஹலோ என்ன தேடுறீங்க" என்றதும் "அது... அது நாராயணன் சார் எங்கன்னு பார்த்தேன் சார்" என

"அப்பா வெளியே இருக்காரு இந்தா உன்னோட மோதிரம்" என்று நேற்று அவளிடம் புடுங்கிய மோதிரத்தை கொடுக்க,

அதை ஆச்சிரியமாக பார்க்க அவனோ 'இந்த பொண்ணு கிட்ட மட்டும் நம்ப திமிரு கோபம் எதுமே வர மாட்டேன்து என்னவா இருக்கும் கூட தெரியலை ஆனா கண்டிப்பா என்னவோ இருக்கு பா இந்த பொண்ணு கிட்ட' என்று அவளை கண் எடுக்காமல் பார்க்க,

கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தார். அவரை பார்த்து தேஜஸ்வினி "குட் மார்னிங் சார்" என அவரோ வேண்டா வெறுப்பா "மார்னிங் மார்னிங்" என அதை கவலையோடு பார்த்தாள்.

நாராயணன் "நான் வீட்டுக்கு கிளம்புறேன் டா" என்று அவளிடம் எதுமே சொல்லாமல் கிளம்ப, அஸ்வினி பைரவிடம் "தேங்க் யூ சார்" என்று அவன் பேசும் முன் நாராயணன் பின் சென்றாள்.

"சார் சாரி சார் இனிமே இப்படி பண்ண மாட்டேன் ப்ளீஸ் உங்க வீட்டு பொண்ணா நினைச்சு என்னை மன்னிச்சிடுங்க சார்" என்று கெஞ்ச

"மேடம் எதுக்கு கெஞ்சரிங்க.... மேடம் மனசில் பெரிய வீராங்கனைனு நினைப்பா இல்ல மேடம் கண்ணு அசைத்ததும் சுழலுற பூமி கூட நின்னுடும் போல" என்று கோபமாக நக்கலாக கேட்க,

"சாரி சார் எனக்கு நிச்சமாவே அந்த நேரத்தில் எதுமே புரியலை அவங்களை எப்படி காப்பாத்தறதுனு புரியாம தான் அப்படி பண்ணிட்டேன். என் கிட்ட உங்க நம்பரோ அவர் சார் நம்பர் எதுமே இல்ல. நான் வேலைக்கு வந்தே இரண்டு நாள் தான் ஆகுது யாரை நம்பறதுனு தெரியலை அதான் நானே" என்று தரையை பார்த்து கொண்டு மேதுவாக சொல்ல,

"முகத்தை பார்த்து பேசு. நான் மட்டும் சரியா அங்க என்னோட ஆளை அனுப்பலை என்றால் என்ன ஆகி இருக்கும். எனக்கு என்னோட பையன் உயிர் ரொம்ப முக்கியம் தான் அதுக்காக உன்னோட உயிரை பற்றி கவலை படாமல் இருக்க முடியலை" என்று சற்று நேரம் முன் நடந்த நிகழ்வை நினைத்தான்.

வெளியே வந்த தேஜஸ்வினியை யாரோ கூப்பிட திரும்பினாள். வாட்ச்மன் தான் அவளை கூப்பிட்டார்.

"எங்க என்ன மா பண்ற உள்ள எதோ பன்ஷன் போல நீ இங்க என்ன மா தனியா பண்ற" என்று கேட்க,

"ஒன்னும் இல்லனா சும்மா தான் இருக்கேன் ஒரு விஷயம் கேட்கணும் தப்ப நினைக்காதீங்க. எதிர்ல எவ்வளவு கட்டிடம் இருக்கே ஆனா எதுமே இன்னும் முழுசா கட்டல என்ன ஆச்சு" என்று கேட்க

"அட அதுவா மா எதிர்க்க எதோ கடை வராத இருந்தது மா அதான் நிறைய பெரிய பெரிய கடை எல்லாம் இருக்குமே அது மாதிரி ஆனா எதோ பிரச்சனை போல அதான் பாதிலே நிக்கிறது. இந்த கட்டிடத்தில் மட்டும் தான் ஆள் இருக்காது. மற்ற எல்லாத்திலும் ஒருத்தர் இல்ல கொஞ்சம் பேர் கண்டிப்பா இருப்பாங்க" என

"ஓ ஓ.... சரி எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு கொஞ்ச நேரத்தில் வரேன்" என்று அந்த ஆள் இல்லா கட்டிடத்தை நோக்கி சென்றாள்.

'கண்டிப்பா இங்க தான் இருப்பான் அந்த கில்லர் நம்ப அங்க போய் அவனை தடுக்கணும்' என்று நினைத்து கொண்டே செல்ல

மூன்றாவது மாடி வரை சற்று வேகமாக வந்தவள் பின் மெதுவாக நடந்தால், அவளது உள் மனது இங்கே தான் அந்த கில்லர் இருப்பான் என்று சொல்ல அதனால் மெதுவாக சென்றவள் ஓரத்தில் இருந்த பெரிய துப்பாக்கியை பார்த்து 'அய்யோ எவ்வளவு பெரிய துப்பாக்கி எதோ அசட்டு தைரியத்தில் எவளோ தூரம் வந்துட்டேன் உன்னால கண்டிப்பா முடியும் ஒரு உயிரை காப்பாத்தணும் சரி போலீஸ் க்கு கால் பண்ணலாம்' என்று அவளின் போனை தேட அது இருந்தால் தானே.

'போன் வேற இல்ல இப்ப என்ன பண்றது ச்சை.....உனக்கு அறிவே இல்ல டி இப்படியா வரத்து யார் கிட்டவும் சொல்லாமல் வேற வந்துட்டோம் சரி கடவுள் மேல பாரத்தை போட்டு போவோம்' என்று மேலும் முன்னேற, பக்கத்தில் இருந்த காலி பெயிண்ட் டப்பாவை கால் இடறி கீழே விழ சத்தம் கேட்டு அங்கே அந்த கில்லர் வந்துவிட்டான்.

"ஏய் யார் நீ எப்படி இங்க வந்த" என்று மிரட்டலாக கேட்க அதில் மொத்தமாக பயம் தொற்றி கொண்டு "தெ... தெரியாமல் வந்துட்டேன்.... நான் போயிடுறேன்" என்று அந்த துப்பாக்கியை பார்த்து கொண்டே சொல்ல

"அடடா செல்லத்துக்கு பயமா இருக்க. இரு ஒரு வேலையை முடிச்சிட்டு நம்ப பிரச்சனையை பார்க்கலாம்" என்று பக்கத்தில் இருந்த கயிற்றால் அவளை கட்டி வைத்து விட்டு, தனது sniper ரை சுடுவதற்கு தகுந்த மாதிரி வைத்து விட்டு குறி பார்த்து நின்றான்.

'போச்சு.... சாரயை எப்படி காப்பாத்துறது கடவுளே என்னை ஏன் இப்படி பயந்தாங்கோலியா படைச்ச ப்ச்.... அச்சு.... செத்தா கூட பரவலை இப்படியாவது சாரயை காப்பாத்தணும். யோசி யோசி எதாவது பண்ணனும்' என்று அந்த அறையில் தனக்கு வேண்டியது எதாவது இருக்குமா என்று தேட அவள் கண்ணில் சின்ன கண்ணாடி துண்டு பட்டது.

'கண்ணாடி.... இதை எடுக்கணும்' என்று மெதுவாக அவனின் கவனம் திரும்பா வண்ணம் நகர்ந்து அதை கட்டிய கைகளால் எடுத்து கயிறை அறுக்க முயற்சி செய்தாள்.

சில நேர போராட்டத்துக்கு பின் கயிறை வெற்றிகரமாக அறுத்து விட்டாள். 'நன்றி துர்க்காமா' என்று கடவுளிடம் வேண்டி விட்டு பக்கத்தில் இருந்த ஒரு பெரிய இரும்பு கம்பியை எடுத்து அவன் அருகில் சென்றாள்.

அவள் அடிக்க கையை ஓங்கிய சமயம் அவன் திரும்பி விட அந்த அடி அவன் நெற்றியில் பட்டு ரத்தம் கொட்டியது.

"ஏய்... உன்னை" என்று அவளின் கைகளை பிடிக்க எங்கிருந்து தான் அவ்வளவு பலம் வந்ததோ அவனை தள்ளி விட பக்கத்தில் இருந்த செங்கலில் முட்டி ஒரு நிமிடம் தடுமாற அது தான் சமயம் என்று அவன் வைத்து இருந்த துப்பாக்கியை கீழே போட்டு விட்டு வேகமாக ஓடினாள்.

"ஏய்.... உன்னை சும்மா விட மாட்டேன் என்று அவனும் அவள் பின்னே ஓட சரியாக யாரோ ஒருத்தர் அவனை எட்டி உதைக்க ஏற்கெனவே மயக்கத்தில் இருந்தவன் அவர் அடித்த வேகத்தில் கீழே விழுந்து விட்டான்.

வந்தவர் "டேய்... யாருடா நீ உன்னை யார் அனுப்புனா" என்று கேள்வி கேட்க அவனோ பாதி மயக்கத்தில் இருந்தாலும் தன்னிடம் இருந்த ஒரு குப்பியை வாயில் போட்டு கொண்டான்.

அடுத்த நிமிடம் வாயில் நுரை வந்து அந்த இடத்திலே இறந்து விட்டான். வந்தவர் "மேடம் இவன் பாய்சன் சாப்பிட்டான் நீங்க போங்க கீழ சார் வெயிட் பன்றார். நான் எதை பார்த்துகிறேன்" என்றான்.

'யார் இவர் இவரை யாரு அனுப்பி இருப்பா' என்று யோசித்து கொண்டே கீழே சென்றவள் சத்தியமாக அங்கே நாராயணன் சாரை எதிர் பார்க்க வில்லை.

"சார் நீங்க எப்படி இங்க" என்று ஆச்சிரியமாக கேட்க, "எனக்கு உன் கூட பேச எல்லாம் நேரம் இல்ல அங்க பங்க்ஷன் போய்ட்டு இருக்கு நீ இந்த பக்கம் போனதா வாட்ச்மன் சொன்னார் அதான் பார்க்க வந்தேன். வந்ததும் நல்லதா போச்சு உன்னை யாரு எங்க எல்லாம் வர சொன்னது சரி உன்னை எதுக்கு அவன் கடத்தினான்" என்ற கேள்விக்கு

நடந்ததை சொன்னாள். அவரோ எதுமே சொல்லாமல் செல்ல அவளும் அவர் பின்னே சென்றாள். சரியாக பைரவ் பேசும் போது தான் இருவரும் வந்தனர். ஆனால் பைரவின் பேச்சில் அனைவரது கவனமும் இருக்க யாரும் இவர்களை கவனிக்கவில்லை.

தற்போது நாராயணன் "இங்க பாரு அஸ்வினி முதல எது பண்றதுக்கு முன்னாடியும் யோசிக்கணும். நம்ப யோசிச்சு பண்றது எதுமே தப்பாகாது. புரியுதா நான் இங்க தினமும் வர மாட்டேன் இனி என்னோட பையன் தான் எல்லாத்தையும் பார்த்துப்பான். உன்னை நீ தான் பார்த்துக்கணும் நான் இதுக்கு பின்னாடி யார் இருக்கானு பார்க்க சொல்றேன்" என்று அவளிடம் சொல்லி விட்டு கிளம்பினான்.

அவளும் தன் வேலையை பார்க்க கிளம்பினாள். இருவருக்கும் தெரியவில்லை இவர்கள் பேசியதை ஒரு ஜோடி கண்கள் கோபத்துடன் கேட்டு கொண்டு இருந்தது என்று.

யார் அந்த கண்களுக்கு சொந்தகார்? அதனால் தேஜஸ்வினி வாழ்வில் எதாவது பிரச்சனை வருமா?


விதிகள் தொடரும்
நிலா
 
Top Bottom