Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


காதலென்பது..... - கார்குழலி

கார்குழலி

Saha Writer
Team
Messages
22
Reaction score
1
Points
1
வணக்கம் friends.....

என்னுடைய முதல் கதையை இந்த தளத்தில் பதிவிடுவதில் மிக்க மகிழ்ச்சி.

முதலில் வெறும் வாசிப்பவராக இருந்த நான் இப்போது எழுதும் ஆசை வந்து அதையும் பார்க்கலாமே என்று அப்பாக்கள் சட்டையை மடக்கிவிட்டுக்கொண்டு சமையலில் இரங்குவது போல்இரங்கி விட்டேன்... என்குறைகளை சுட்டிக்காட்டி என்னை மெருகேற்றும் பொருப்பு உங்களுடையது

இதோ எனது காதலென்பது.... கதையின் முதல் அத்தியாயம்...



நன்றி,

உன் வாழ்க்கையை உனக்கு பிடித்தார் போல் மாற்றிக்கொள்

கார்குழலி
 

கார்குழலி

Saha Writer
Team
Messages
22
Reaction score
1
Points
1
1

“டிரிங்ங்ங்ங்........” என்று அரை வினாடி நிற்காமல் அடித்து ஓய்ந்த எலக்ட்ரானிக் பெல்லின் சத்தத்தை தொடர்ந்து அந்த கல்லூரி வளாகம் அழகிய மான்களின் சரணாலயமானது. கூண்டுக்குள் அடைக்கப்பட்ட மான்கள் யாவும், இரண்டு கால்களால் துள்ளிக்குதித்து வெளியேறும் காட்சி கண்ணை கவர்ந்தது. எல்லா முகங்களிலும் மாறா புன்னகை, இளமையின் துள்ளல், அழகு, வசீகரம் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.


அப்படிப்பட்ட கூட்டத்திலிருந்து, காதில் கைப்பேசியை அழுந்த பொருத்தியபடி தன் இதழ்களை போனோடு ஒற்றியபடி தனித்து நடந்தாள் ஆர்த்தி.


எல்லோரும் கல்லூரியின் வெளிப்புறம் நடக்க அவள் மட்டும் கல்லூரியின் பின்புறம் இருக்கும் ஃபுட்பால் கோர்ட்டிற்கு விரைந்தாள்.


“டேய் எங்கடா இருக்க? நான் கோர்ட்லதான் இருக்கேன்” என்று தன் காதுகளை கூட எட்டாத, ஃபோனுக்கு மட்டுமே கேட்பது போல் அழுத்தமாக முணுமுணுத்தாள். அவளுடைய கண்கள் அந்த பெரிய ஃபுட்பால் கோர்ட்டை சுற்றி அங்கும் இங்கும் அலைந்தது. அதே நேரம் அவளது கண்களை பின்னாலிருந்து ஒரு வலிய கரம் மூடியது.


அந்த ஸ்பரிசத்தில அவளது இதழ்கள் புன்னகையில் விரிய, கன்னங்கள் செம்மை பூசிக் கொண்டன. அவன் தான், அவளது நினைவுகள் முழுக்க நிறைந்தவன், அவளின் உயிர்வரை சென்று சிலிர்க்க வைக்கும் வைப்பவன், அவளுடைய தருண்.

சில நொடி அவனது ஸ்பரிசத்தில் உள்ளுக்குள் குளிர்ந்தவள், பின் ஒற்றை கையால் மெல்ல அவன் கரம் விலக்கி அவன்புறம் திரும்பினாள்.


குறும்பு புன்னகையுடன் அவளுக்கு மிக மிக அருகில் நின்றிருந்தான் தருண். அவனுக்கு நகர தோன்றவேயில்லை. அவளுக்கும் அந்த அருகாமை பிடித்திருந்தது.



இருவரின் கண்களும் ஒன்றோடொன்று தங்களுக்கான பிரத்தியேக மொழியில் பேசிக் கொள்ள சில நொடிகளில் அவளுடைய கண்கள் தரையை நாடியது. அப்போதும் அவன் அவள் முகத்தைத்தான் பார்த்துக் கொண்டிருக்கறான் என்று அவளால் உணர முடிந்தது. அவளது கன்னங்களில் செம்மை ஏறிக்கொண்டே போனது.


அப்போது அந்த மோனநிலையை கலைக்கவென்றே அங்கே ஆஜரானாள் ப்ரியா. மூச்சிறைக்க வந்து நின்றவள், வெடுக்கென்று ஆர்த்தியின் கைகளிலிருந்த போனை பிடுங்கினாள். பிடுங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்தாள்.



“சாரி டி.. எங்க அப்பா வந்துட்டார் அதான் போனை வாங்க வந்தேன் யூ ப்ரொஸீட்....” என்றவளின் குரல் காற்றில் கரைந்து மறைந்தே போனது.

ப்ரியா கண்களிலிருந்து மறைந்ததும், தருணின் முகம் பார்த்தாள் ஆர்த்தி, அங்கே முன்னிருந்த புன்னகை இப்போது சுத்தமாக இல்லை. அதற்கான காரணத்தையும் அவள் அறிவாள். எத்தனையோ முறை போன் வாங்கித்தருவதாக அவன் சொல்லியும் இவள் மறுத்துவிட்டாள், ஆனால் அவன் மீண்டும் அதை சொன்னான்.


“நான் தான் போன் வாங்கித் தரேன்னு சொல்றேன்ல, அதை வாங்கிக்காம, இப்படி ப்ரியா முன்னாடி ஏண்டி என் மானத்த வாங்கிற” என்றவன் அவளை விலக்கிவிட்டு வேகமாக நடக்கலானான்.


அவனுடனே நடந்தவள் “தருண்.. சாரி தருண்....” என்று அவன் கரம் பிடிக்க அவன் அதை உதறிவிட்டு முன்னேறினான். மீண்டும் அவன் கையை பற்ற முயன்றவளின் முயற்சி தோல்வியடைந்தது. அவன் இன்னமும் வேகமாக நடக்கலானான். கிட்டத்தட்ட அவன் பின்னால் ஓடியவள் இப்போது தன் இரு கைகளையும் பிரயோகித்து அவனின் ஒற்றை கரத்தை அழுந்தப் பிடித்தாள்.


அவன் விடுவிக்க முயல்வதற்குள் அவனுடைய புஜங்கங்களில் தன் ஒருகையை கொடுத்து அவன் தோளோடு ஒன்றிக் கொண்டாள். அந்த நெருக்கம் அவனுடைய கோபத்தை லேசாக குறைத்திருக்க வேண்டும். எதிர்ப்பை காட்டாமல் பேசாமல் நடந்தான்.


அவள் இன்னமும் அவனுடன் தன்னை ஒன்றிக் கொண்டு அவன் தோள்களில் தன் தலையை சாய்த்தப்படியே தான் நடந்தாள். அவளால் அவனுடைய கோபத்தை நிச்சயம் தாங்கிக் கொள்ள முடியாது.



“தருண்...” என்றாள் மென்மையாய்.


“..............” - அவன் பதில் பேசவில்லை. “எங்க வீட்டைப் பத்தி தான் உனக்கு தெரியுமே தருண்”என்று இழுத்தாள்.



அப்போதும் அவன் வாய் திறக்கவில்லை. “அதான் சாரி சொல்லிடேனே, இன்னும் கோபமா?”அவளுடைய சோகம் அவள் குரலில் வெளிப்பட்டது. அதற்குள் அவர்கள் கல்லூரி கேண்டீனை நெருங்கிவிட அவசரமாக அவனிடமிருந்து விலகினாள்.


அவர்கள் வழக்கமாக அமரும் டேபிளில் சென்று அவள் அமைதியாய் அமர்ந்துகொள்ள அவளுக்கு பிடித்த சில்லி பரோட்டாவுடன் வந்தான் தருண்.


அவன் கைகளில் சில்லி பரோட்டாவை பார்த்ததும் சோகமான அவளது முகம் பிரகாசமானது. அப்படியென்றால் அவனுடைய கோபம் மறைந்துவிட்டது. கண்கள் மின்ன, முகம் பிரகாசிக்க தேவதையாய் அமர்ந்திருப்பவளை பார்த்தால் கோபம் ஜெட் வேகத்தில் பறந்துவிடாதா என்ன? லேசான சிரிப்புடன் அவளுக்கு எதிரில் சில்லி பரோட்டாவை வைத்துவிட்டு அவனும் அமர்ந்தான். அவள், அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.


“சாப்பிடும்மா.. தாயே” என்றான் உள்ளடக்கிய சிரிப்பில் அவ்வளவுதான் எல்லையில்லா சந்தோஷத்தில் சில்லி பரோட்டாவை ஒரு கை பார்த்தாள் ஆர்த்தி.


அவள் ஆசையோடு சாப்பிடுவதை ரசித்து பார்த்தான் தருண். அவனுடைய மனதிற்கு சந்தோஷம் தரும் மிக சில விஷயங்களில் இதுவும் ஒன்று. ஆர்த்தி விருப்பப்படுவதை நிறைவேற்றி அவள் முகம் சந்தோஷத்தில் திளைப்பதை பார்ப்பது.

பாதி தட்டு காலியான பிறகு தான் தருணை நிமிர்ந்து கேள்வியாக பார்த்தாள்.

“நீ சாப்பிடல?”

“இல்லை” என்பது போல் தலையசைத்தான்.

“ஏன்?”

“நான் இப்போதான் லஞ்சே சாப்பிட்டேன், நீ சாப்பிடு”

“ஏன் இவ்ளோ லேட்டா சாப்பிட்ட?”


“ப்ராஜெக்ட் வொர்க் பண்ணதுல டைம் போனதே தெரியல”


“ரொம்ப படிக்காதடா, மண்ட வீங்கிட போகுது. என்னைப் பார்த்து கொஞ்சமாவது கத்துக்கோ”என்று பேசியவளின் முழு கவனமும் சில்லி பரோட்டாவில் தான் இருந்தது.


“உன்ன மாதிரி நானும் இருந்தா, வருங்காலத்துல புவாக்கு என்ன செய்யறது மேடம், யாராவது ஒருத்தராவது நல்ல வேலைல இருக்கனுமே”


“அட ஆமால... சாப்பாடு பிரச்சனைல, சரி, சரி நீ நல்லா படி, எனக்கும் சேர்த்து படிச்சிரு சரியா?”காதோரம் கலைந்திருந்த முடியை காதிற்கு பின் லாவகமாக ஒதுக்கியவள் உண்பதிலேயே கவனமாக இருந்தாள்.


அவளின் மெல்லிய கோதுமை நிற விரல் அவன் கவனத்தை கவர தன் கரத்தை நீட்டி அவளது இடது கரத்தை தன் கரத்தால் சிறை செய்தான். அதனை எதிர்ப்பார்க்காத ஆர்த்தி “ஏய்... என்ன இது விடு.. இது கேண்டீன். யாராவது ப்ரஃபசர் பார்த்துட போறாங்க” என்று சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே தன் கரத்தை அவனிடமிருந்து விளக்கிக் கொள்ள முயன்றாள்.


ஆனால் அவளின் முயற்சி எடுபடவில்லை. கண்களில் கெஞ்சலாக, “ப்ளீஸ் டா.. விடு டா...” என்று முணுமுணுத்தவளை அவன் சட்டை செய்யவில்லை.

“ஆர்த்தி, என்னால உன்னைவிட்டு ஒரு நிமிஷம் கூட பிரிஞ்சி இருக்க முடியலடி” என்றான் கிறக்கமான குரலில்.


அவனது அந்த குரல் அவளை என்னவோ செய்தது. அவளுக்கும் அதே நிலைதானே. அவனை பார்ப்பதற்காகதானே அவள் கல்லூரி வருவதே!அவளுடைய கண்கள் அவன் கைகளில் சிக்குண்டிருந்த அவளது கையில் நிலைத்திருக்க அவன் தொடர்ந்தான்.


“ப்ளீஸ் மா.. ஃபோன் மட்டும் வாங்கிக்கோ.. பாக்க முடியலனாலும், உங்கிட்ட பேசனும்னு தோணும் போதெல்லாம் பேச முடியும்ங்கற நிம்மதியே எனக்கு போதும். இதோ இன்னும் மூணே மாசம் தான்,ஃபைனல் செமஸ்டர் வந்துடும். அப்புறம் நான் உன்னைப் பார்க்க கூட முடியுமோ என்னவோ!” அவன் பேசிக் கொண்டே போக அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது.

அதனை பார்த்து பதறியவன். தன் கவலையை தன்னுள் புதைத்துவிட்டு “ஏய் ஆர்த்தி.. என்ன இது சின்ன குழந்தை மாதிரி கண்ணைத் துடை” என்றான்.


அவள் அவனையே பார்த்துக் கொண்டிருக்க இது வேலைக்காகாது என்று தன் பாக்கெட்டில் இருந்த கர்சீப்பை எடுத்து அவனே துடைத்துவிட்டான். அவள் சாப்பிட்டு முடிக்கும் வரை வேறு எதுவும் பேசக்கூடாது என்று அமைதி காத்தான். ஆனால் அதற்கு மேல் அவளால் ஒரு வாய் கூட சாப்பிட முடியாமல் வெளியேறினாள்.

அவளை தொடர்ந்து பின்னே நடந்தவன் அவள் கைப்பற்றி வேகமாக அங்கே மரத்தடியில் போடப்பட்டிருந்த சிமெண்ட் பெஞ்சிற்கு இழுத்துச் சென்றான்.


இயந்திரமாய் அமர்ந்திருந்தவளை பார்க்க பாவமாக தான் இருந்தது. அவனுக்கும் அவளை பிரிவது கஷ்டம் தான், ஆனால் நிதர்சனத்தை புரிந்துகொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் வேண்டுமல்லவா. இந்த தடுக்க முடியா பிரிவுக்கு ஆர்த்தியை தயார்படுத்தி தானே ஆக வேண்டும்.


அவளது மிருதுவான கையை எடுத்து அவன் முரட்டு கைகளில் திணித்தவன். அவளுடைய பிரேஸ்லட்டை தடவிக் கொடுத்தான். அது இதயத்தோடு இதயம் கோர்த்தெடுத்தது போல் இருக்கும். அவள் அவனை நினைத்துக் கொண்டு வாங்கிய பிரேஸ்லட் அது. இந்த இதயம் உன்னுடையது இது என்னுடையது”என்று கண்கள் மின்ன அவள் கூறியது இப்போதும் அவன் கண்முன் வந்து சென்றது.


“இங்க பாரு ஆர்த்தி... நான் கேம்பஸ்ல செலக்டாகி இருக்கேன். அதனால வேலை தேடுற கஷ்டம் கூட இல்ல. நேரா ஜாயின் பண்ண வேண்டியது தான். உனக்கு இன்னும் ஒரு வருஷம் தான் படிப்பு, அதுக்குள்ள நான் ஓரளவு செட்டிலாகிடுவேன்.”


“நீ படிப்ப முடிச்சதும், உனக்கு மாப்பிள்ளை தேட ஆரம்பிப்பாங்க. அப்போ நாம பிளான் பண்ண மாதிரி பிரச்சனையை சால்வ் பண்ணிட்டா அப்புறம் பிரிவுங்கிற பேச்சுக்கே இடமில்லை. காலையும், மாலையும் இந்த நிலா முகத்தை பார்த்துக்கிட்டே என் லைப் ஓடிடும்” என்றான், மனதால் அந்த காட்சிகளை கற்பனை செய்துக் கொண்டே. அவளும் கற்பனை செய்திருப்பாள் போலும் அவளுடைய முகத்திலும் சோகம் மறைந்து லேசான புன்னகை மலர்ந்திருந்தது. அவர்களின் கனவில் ஒரு லாரி மண் விழப் போகிறது என்பது தெரியாமல்....



காதலென்பது ....... தொடரும்

நன்றி,

உன் வாழ்க்கையை உனக்கு பிடித்தார் போல் மாற்றிக்கொள்

கார்குலி.
 

கார்குழலி

Saha Writer
Team
Messages
22
Reaction score
1
Points
1
2

அந்த கல்லூரி எப்போதையும் விட அன்று அதிகமான உற்சாக சலசலப்பில் ஆர்பரித்தது. அதற்கான காரணம் அன்று கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. கல்லூரியின் கலை நிகழ்ச்சி என்றால் சாதாரணமாக இருக்காது அது ஒரு போட்டி போல் தான் இருக்கும். ஒவ்வொரு டிபார்ட்மெண்ட்டும் சேர்ந்து போட்டி போடும். மேக்கப் ரூமில் தயாராகிக் கொண்டிருந்தாள் ஆர்த்தி. அவள் நாட்டுபுற குரூப் டான்சில் இருக்கிறாள்.



தருண் அவர்கள் டிபார்ட்மெண்ட் ஆர்கனைசர். மேடையில் அடுத்து தங்கள் அணி என்ன செய்யப் போகிறார்கள் என்பதற்கு இரண்டு மூன்று வரி லீட் கொடுத்து பங்கேற்பவர்களை வரவேற்று உற்சாகப்படுத்த வேண்டும். அதற்கேற்றார் போல் கோட் டை எல்லாம் போட்டு படு டிப்டாப்பாக வளைய வந்தான். பல பெண்கள் அவனை பார்த்து "யூ ஆர் லுக்கிங் ஹான்சம்" என்று பாராட்டிய போதும் ஏனோ அவனுக்கு அதே வார்த்தைகளை ஆர்த்தியின் வாய்வழி கேட்க ஆசையாக இருந்தது.



குரூப் டான்ஸ் மேக்கப் ரூமின் கதவை தட்டினான், லேசாக கதவு திறக்கப்பட்டு ஒரு பெண் தலையை மட்டும் நீட்டி, "என்ன அண்ணா?" என்று கேட்டாள். தன் ஏமாற்றத்தை தனக்குள் மறைத்தவன். வாட்ச்சை குறிப்பாக பார்த்து "இன்னும் டுவன்டி மினிட்ஸ் தான் இருக்கு மகிமா. சீக்கிரம் ரெடியாகுங்க" என்று அவசரப்படுத்தி விட்டு அங்கிருந்து அகன்றான். ஆனால் மனம் முழுக்க ஆசையோடு வந்து அது நடக்காத ஏமாற்றத்தில் சோகமான கால்கள் மெதுவாகவே நடக்க, சில நொடிகளில் கதவு திறக்கப்படும் ஓசை கேட்டது. அவனுக்குள் ஓர் ஊகம் இருந்தது அது சரிதானா என்று தெரிந்து கொள்ள வேகமாக துடிக்கும் தன் இதயத்தை கட்டுப்படுத்த முயன்றான். முன்பை விட மிக மெதுவாக நடந்தான். பின்னால் அடர்ந்த கொலுசின் சத்தம், அந்த சத்தம் அவனை நோக்கித் தான் வந்தது, அவனுள் என்ன நடக்கிறதென்று அவனுக்கே தெரியவில்லை, ஏகப்பட்ட ரசாயன மாற்றங்கள் நிகழ்ந்தது அவனுள்.அப்படி ஒரு எதிர்பார்ப்பு... அது அவனது ஆர்த்தியாகத்தான் இருக்க வேண்டுமென்று இதயம் வேகமாக அடித்துக்கொண்டது.



கொலுசு சத்தம் அவனுக்கு மிக அருகில் வந்துவிட்டது. ஒரு வசீகர வாசம் அவன் நாசியை துளைத்தது. அதனை அவன் அனுபவித்து உள்ளிழுக்கும் பொழுதே அவன் தோள்களை இடித்து விட்டு யாரோ முன்னேறினார்கள்.



"ஓ... சாரி.. தெரியாம இடிச்சிட்டேன்" என்ற குரலுக்கு சொந்தக்காரி அவனுடைய ஆர்த்தியே தான். அவளது உதடுகள் சாரி என்ற வார்த்தையை உச்சரித்திருந்தாலும் அவளது பார்வையில் குறும்பு தேங்கிக் கிடந்தது. அடர்சிவப்பு நிற லிப்ஸ்டிக் போடப்பட்டிருந்த உதடுகளை பிரித்து அழகான பல்வரிசை தெரிய சிரித்தாள். அவளது கண்களோ அவனை தலை முதல் கால் வரை ஆராய்ச்சி செய்ய அவனோ அவளது முகத்தை விட்டு கூட விழிகளை விலக்க முடியாமல் இருந்தான்.



ஒரு வழியாக தன் ஆராய்ச்சி பார்வையை முடித்தவள் "ம்....... செம்ம..... ஸ்மார்ட்டா இருக்க?" என்றாள் விழிகள் மின்ன.



இதற்காகத்தானே ஆசைபட்டான், அவனது சந்தோஷத்தை அவன் கண்களில் படித்தவள் போனஸாக "மாப்பிள்ளை கலையே வந்துடுச்சுடா உனக்கு" என்றாள் சரியாக இருந்த தன் முந்தானையை சரி செய்து கொண்டே.



அப்போது தான் அவன் அவளை ஆராய்ந்தான். நாட்டுப்புற பாடல்களுக்கு ஏற்றார் போல் கோணக் கொண்டையிட்டு பூ சுற்றியிருந்தாள், ரோஸ் பவுடரின் உதவியால் அவளது கோதுமை நிற முகம் ரோஜா நிறமாக மாறியிருந்தது, ஐ லயனர், மஸ்காரா, ஷேட் என்று பல அழகு பொருட்களை பயன்படுத்தி அவளது கண்களை மேலும் வசீகரப்படுத்தியிருந்தார்கள், உதடுகளின் சாயம் அவனுள் ஏதேதோ ஆசைகளை தூண்ட அதிலிருந்து பார்வையை எடுத்தவன் அவளது சங்கு கழுத்து, அழகிய புடவை கட்டு என்று கீழே இறங்கி அந்த அரக்கு நிற புடவையில் பளிச்சென தெரிந்த சிறு இடையிலிருந்து கண்களை விலக்க முடியாமல் தவித்தான். அவனது முகத்தையே ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தவருக்கு அவனது முகமாற்றமும், அதில் தெரிந்த உணர்வுகளும், இன்பத்தையும் வெட்கத்தையும் ஒரு சேர வழங்கின. இறுதியாக அவன் கண்கள் சிக்குண்ட இடம் எதுவென்று புரிந்து போக அவள் மேலும் சிவந்தாள்.



அதற்குள் தன் கட்டுப்பாட்டிற்குள் வந்து விட்ட தருண். "ம்..க்... கும்... ஓ.கே ஆர்த்தி" தலையசைத்து விடைபெறுவது போல் ஏதோ ஒன்றை செய்து விட்டு தப்பித்தோம் பிழைத்தோம் என்று நகர யத்தனிக்க அவனால் அது முடியவில்லை. காரணம் அவனது கைகள் இப்போது கண்ணாடி வளையல்கள் அடுக்கப்பட்டிருந்த ஆர்த்தியின் கைகளில் சிக்குண்டிருந்தது. அந்த வளையல்களின் ஒலி அவனை சிலிர்க்க வைத்தது, அதனை மறைத்து, அவன் கேள்வியாய் அவளை பார்க்க "உன் கெட்டப் எப்படி இருக்குன்னு நான் சொல்லிட்டேன்" என்று அவள் இழுக்க அவள் கண்களோ 'நீ சொல்லாம போனா எப்படி!' என்று சாடியது.



அந்த விழிகளில் தொலைந்து போனவன் அதன் பிறகு அவன் கட்டுப்பாட்டில் இல்லை. பற்றியிருந்த அவளது கையை தன் புறம் வேகமாக இழுக்க ஓர் பூமாலையை போல் அவன் மேல் விழுந்தாள் ஆர்த்தி, அவள் சுதாரித்து விலகுவதற்குள் அவனது மற்றொரு கரம் அவள் இடையை வளைத்து அவனிடமிருந்து விலக விடாமல் சிறை செய்தது. அவனை விட்டு விலக மனமில்லை என்றாலும் சுற்றுப்புறத்தை உணர்ந்து "ப்ளீஸ்டா" என்றாள் கெஞ்சலாக. அந்த வளைவில் வெளிச்சம் அதிகமில்லாதது அவர்களுக்கு வசதியாய் போனது. "நீ தானே கேட்ட நான் எப்படி இருக்கேன் சொல்லுன்னு" என்றான் குறும்பாக அவள் கன்னத்தில் கோலம் போட்டபடி. "நான் எப்போடா கேட்டேன்?" ஒன்றுமே தெரியாதவள் போல் விழி விரித்து சந்தேகம் கேட்டாள். "இதோ இந்த அழகான கண்ணு தான் கேட்டுச்சு அதுக்கு பரிசு கொடுக்க வா, இல்ல நீ ஏன் கேட்கலைன்னு இந்த உதடுக்கு தண்டனை கொடுக்க வா?" என்று பேசிக்கொண்டே அவளது கண் உதடு என்று வருடியவன் அவள் முகம் நோக்கி குனிய, படபடக்கும் இதயத்தோடு அவள் கண்களை மூடிக்கொள்ள "ஹே......" என்ற சத்தம் இருவரையும் பதறி விலக வைத்தது. ஆடிட்டோரியத்திலிருந்து வந்த சத்தம் தான் அது. ஏதோ ஒரு நிகழ்ச்சி முடிந்து எல்லோரும் கைதட்டி ஆர்ப்பரித்தனர். அவ்வளவுதான் ஆர்த்தி தன் அறைக்கு ஓட்டமும் நடையுமாக செல்ல தருண் விசிலடித்துக் கொண்டே ஆடிட்டோரியத்தை நோக்கி நடந்தான்.



**************************



அந்த கல்லூரி வளாகம் முழுவதுமே ஒருவித சோகத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தது. நண்பர்கள் எல்லோரும். ஒருவருக்கொருவர் கை கொடுத்துக் கொண்டும் கட்டிப்பிடித்துக் கொண்டும் தங்கள் அன்பை பரிமாறிக் கொண்டும் இருந்தார்கள்.ஆம் இன்று அந்த காலேஜின் ஃபேர்வெல் டே. ஜூனியர்ஸ் சீனியர்சை உற்சாகப்படுத்த சில கேம் ஷோக்களை ஏற்பாடு செய்திருந்தார்கள். ஸ்லாம்புக் எனப்படும் நினைவு புத்தகம் எல்லோரிடமும் வலம் வந்து கொண்டிருந்தது. அதில் தங்கள் நட்பின் விருப்பு, வெறுப்பு, முகவரி, தொலைபேசி எண் என்று பலதும் பரிமாறப்பட்டிருந்தது. அப்படிபட்ட ஒரு புத்தகத்தை நிரப்பிக் கொண்டிருந்த தருணின் தோளில் சாய்ந்தமர்ந்திருந்தாள் ஆர்த்தி. அவர்கள் எப்பொழுதும் அமரும் ஸ்டோன் பென்ச். அவளுக்கு எதுவுமே பேச தோன்றவும் இல்லை, பிடிக்கவும் இல்லை. தோளில் சாய்ந்திருந்த அவளது தலையில் தன் கன்னத்தை பதித்தபடி தான் தருணும் எழுதிக் கொண்டிருந்தான், அவனுக்கும் அவளிடம் என்ன பேசி விடைபெறுவது என்று தெரியவில்லை, ஏன் எப்படி விடைபெற போகிறோம் என்றும் புரியவில்லை, அவள் தாங்குவாளா? அவள் உடைந்து விட்டால், தனக்கு தானே ஏற்படுத்தியிருந்த திடத்தை இவன் தொலைத்துவிடுவானோ! கடவுளே அந்த நொடி வராமலே இருந்துவிடாதா என்று தான் இருவரின் மனமும் வேண்டிக்கொண்டது. ஆனால் அது தான் சாத்தியம் இல்லையே!

“ஆர்த்தீ....” என்று ப்ரியாவின் குரல் கேட்க தலையை தூக்கி பார்த்தாள்.

சற்று தூரத்திலேயே நின்றிருந்த ப்ரியா “ அண்ணா வந்துட்டார்“ என்றாள் உரக்க....

அந்த நொடி ஆர்த்தியின் உடல் நடுங்கியது. அதனை உணர்ந்த தருண் ஓர் பெருமூச்சுடன் அவளிடமிருந்து விலகி அமர்ந்தான், அவளோ இன்னமும் அவனிடம் நெருங்கி அமர்ந்து அவன் கைகளை இறுக பற்றிக்கொண்டாள்.

அவளது கையை விலக்க முயன்றவனுக்கு அது சுலபமானதாக இல்லை. அவள் அழுந்த தலை சாய்த்திருந்த இடத்தில் அவனால் ஈரத்தை உணர முடிந்தது. அவன் மனமும் கனத்தது.

சில நொடி அமைதியாக இருந்தவன், அவள் சிரம் தொட்டு வாஞ்சையுடன் வருடினான்.

“ஆர்த்திமா..., இங்க பாரு.... நான் தினமும் ப்ரியா போனுக்கு கால் பண்ணுவேன் நிறைய நேரம் பேசலாம். இன்னும் ரெண்டே வருஷம் தான் சீக்கிரம் ஓடிடும். இப்போ கிளம்பு, சந்துரு வெய்ட் பண்றார் பாரு” என்றான் வரவழைத்துக் கொண்ட சாதாரண குரலில்.

அவள் நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள், ஆனால் அவன் தூரத்தில் எங்கோ வெறிந்துக் கொண்டிருந்தான், “ஆர்த்தீ......” ப்ரியாவின் குரல் இப்போது முன்பை விட உறக்க ஒலித்தது.

உடனே தருண் எழுந்து ப்ரியாவை நோக்கி நடக்கலானான். இயந்திரமாய் அவன் கரம் பற்றியிருந்த அவளும் நடந்தாள். அவளை ப்ரியாவிடம் ஒப்படைத்து விட்டு திரும்பியும் பாராமல் வேகமாக நடந்து செடிகளின் பின் மறைந்தே போனான். ஆர்த்தியின் மனம் வலித்ததை எந்த உவமை கொண்டும் விளக்கி விட முடியாது. இனி அவள் தருணை எப்போது பார்ப்பாள்



காதலென்பது தொடரும்........

உன் வாழ்க்கையை உனக்கு பிடித்தார் போல் மாற்றிக்கொள்

கார்குழலி
 

கார்குழலி

Saha Writer
Team
Messages
22
Reaction score
1
Points
1
3

“ப்ளீஸ் அங்கிள், இந்த ஒரே ஒரு தடவை ஆர்த்தியை எங்க கூட அனுப்பி வைங்க அங்கிள்” என்று ப்ரியாவும், வேதாவும் ஆர்த்தியின் தந்தை மணிகண்டனிடம் வேண்டிக் கொண்டிருந்தனர்.

அவர்களை விசித்திரமாக பார்த்து கொண்டிருந்தவர், “அதை ஏன் மா எங்கிட்ட கேட்குறீங்க, ஆர்த்தி வந்தா கூட்டிட்டு போங்க” என்றார்.

“அங்கிள் உங்களுக்கு தெரியாதா அவளைப் பத்தி!எது கேட்டாலும் என் அப்பாவை கேட்கனும், அண்ணனை கேட்கனும்னு புராணம் பாடுறா. அதான் இங்க வந்தோம்” என்றாள் குறை கூறும் குரலில்.

அப்போது மணிகண்டனின் முகம் இன்பமாய் நிமிர்ந்தது, சிறு வயதிலிருந்தே ஆர்த்தி இப்படித்தான் எல்லாம் அப்பா மயம், அப்பா என்ன சொல்கிறாரோ அதை அப்படியே செய்வாள். அதற்கு அடுத்தபடி அவளுடைய அண்ணன் சந்துரு. அவன் அவளது ஆசானும் கூட அவளது படிப்பு, பழக்கவழக்கம், பேச்சு இப்படி எல்லாவற்றையும் நெறிபடுத்தியவன் அவனே.

எப்போதும் எதையும் அப்பாவிடமும், அண்ணனிடமும் கேட்டு கேட்டே பழகியவளால் அதனை எளிதில மாற்றிக் கொள்ள முடியவில்லை.

அப்படி அவர்களை ஆலோசிக்காமல் எதையாவது செய்தால் அவள் தப்பும் தவறுமாக வேறு செய்து வைப்பாள். அதனால் எதற்கு வம்பென்று எதுவானாலும் அப்பா, அண்ணனுக்கு ஓகேன்னா எனக்கும் ஓகேதான் என்கிற பார்முலாவை வகுத்துக் கொண்டாள். அதில் என்ன சேதாரமனாலும் அவர்கள் தானே பொறுப்பு என்பது அவளது எண்ணம்.

இப்போது இந்த அவுட்டிங்கிற்கு அவளாக தன்னிசையாக முடிவெடுக்கலாம். ஆனால் பதினெட்டு வருடமாக உறைந்துவிட்ட பழக்கம் மாற மறுத்தது. அது மட்டுமில்லாமல் அப்படி மாற்றினால் அவர்களது மனம் கவலையுறுமே என்கின்ற வருத்தமும் அவளுக்கு இருந்தது. அதனால் அந்த பார்முலாவை இறுக பிடித்துகொண்டாள்.

மற்ற எல்லாவற்றிலும் அந்த பார்முலா வொர்க் அவுட் ஆனது ஆனால் காதலில்?...........

“அங்கிள் சீக்கிரம் சொல்லுங்க எங்க பிரெண்ட்ஸ் எல்லாரும் பஸ்ஸ்டாப்ல வெயிட் பண்றாங்க” என்று ப்ரியா மணிகண்டனை அவசரப்படுத்தினாள்.

அவரோ உள்நோக்கி, “அம்மாடி ஆர்த்தி..... இங்க வாம்மா” என்றார்

அவளோ பவ்யமாக அப்பாவின் முன் வந்து நின்று “என்னப்பா கூப்பிட்டீங்களா” என்றாள்.

வேதாவோ, “அட! இது நம்ம ஆர்த்தியா?” என்கிற ரேஞ்சில் பார்த்து வைக்க,

அவர்கள் வீட்டிற்கு அவ்வப்போது வரும் ப்ரியாவோ இதெல்லாம் சகஜமப்பா என்பது போல் பார்க்க, “உன் பிரெண்ட்ஸ் எல்லாம் பீச்சுக்கு போறாங்கலாம், நீயும் போறியா?” என்று கேட்டார் மணிகண்டன்.

ஆர்வமாக தோழிகளை பார்த்தாலும், “உங்கள் விருப்பம்ப்பா” என்றன ஆர்த்தியின் உதடுகள். மணிகண்டன் ஆர்த்தியின் கண்களை படித்துவிட்டார்.

“இதுதான் ஃபைனல் இயர். பரீட்சை முடிஞ்சிட்டா ஆளுக்கொரு திசையா பறக்க போறீங்க, அப்புறம் சந்திக்க முடியுமோ? முடியாதோ?! ஒருதரம் தானே போ... போய் ஜாலியா என்ஜாய் பண்ணு” என்று கூறி தோழிகள் மூவர் வயிற்றிலும் பாலை வார்த்தார். அப்படியே ஒரே ஒரு முறைத்தான் என்று அடிக்கோடும் இட்டுவிட்டார்.

அதனை கண்டும் காணாமலும் இந்த முறை விட்டதே போதும் என்பது போல் அடுத்த ஒரு மணி நேரத்தில் மூவரும் ஈசிஆர் சாலை சைட் பீச்சில் நின்றனர்.

அன்று வார நாள் என்பதால் பீச்சில் அதிக கூட்டம் இல்லை, மொத்தமாக ஒரு பத்து பேர் இருந்திருந்தால் ஆச்சர்யம் தான்.

“ஏய் போனை கொடுடி” என்று ப்ரியாவிடமிருந்து பிடுங்காத குறையாக போனை பிடுங்கி தருணிற்கு அழைத்தாள்.

எதிர்முனையில் போனை எடுத்து காதுக்கு கொடுத்த தருண், “இதோ வந்துடேன் .ஃபைவ் மினிட்ஸ், நீ பீச்சுலேயிருந்து வெளிய வந்து மெயின் ரோட்ல நில்லு நான் வந்துடுவேன்.” என்று செல்லை அணைத்தான்.

ப்ரியாவிடம் போனை கொடுத்துவிட்டு “ஏய் ப்ரியா மூணே மணிநேரம் தான் ஓடி வந்துடுவேன் சரியா”என்று சந்தோஷத் துள்ளலுடன் மெயின் ரோட்டை நோக்கி ஓடினாள் ஆர்த்தி.

ஆறு மாதம் கழித்து தருணை சந்திக்க போகிறாள். அவன் வேலைக்கு சேர்ந்த பிறகு முதன்முறையாக அவனை பார்க்க போகிறாள். முன்பே அவன் ஸ்மார்ட்டாக இருப்பான். இப்போது வேலை கிடைத்த பூரிப்பில் மேலும் மெருகேறி எப்படியிருப்பான் என்ற கற்பனையில் தருணின் நினைவுகளோடு நடந்தவளின் அருகில் சடன்பிரேக் போட்டு கிரீச்.... என்ற அலறலுடன் நின்றது ஒரு கருப்பு நிற ஆடி கார்.

காரின் சத்தத்தில் தான் நிகழ்வுலகிற்கு வந்தாள் ஆர்த்தி. அப்போது தான் அவளுக்கு தான் நடுரோட்டில் நிற்கிறோம் என்பதே உறைத்தது.

ஒருவித பயத்துடனும், படபடப்புடனும் காரை ஓட்டி வந்தவனை நிமிர்ந்து பார்த்தவள் அதிர்ந்தாள். ஏனெனில் உள்ளே இருந்தவன் இவளை கொலைவெறியுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனது பார்வையை சந்திக்க பயந்தவள், “ச.... சாரி” என்றாள் சத்தமே எழாமல் கையை உயர்த்தி உதடுகளை பிரித்து.

அவளையே உறுத்து விழித்தவன் பின்னால் நின்ற காரின் ஹாரன் ஒலிக்கு செவி சாய்த்து தன் காரின் கியரில் கரம் பதித்தான். அதற்குள் ஆர்த்தியும் ரோட்டின் ஓரத்தில் வந்து நின்று கொண்டு, குனிந்த தலை நிமிராமல் கண்களை மட்டும் மெல்ல உயர்த்தி அவனை பார்த்தாள்.

இவள் பார்ப்பதை பார்த்தவன் வேகமாக தன் நெற்றிபொட்டில் தன் உள்ளங்கையால் அடித்துக் கொண்டான். அவனது மைன்ட் வாய்ஸ் என்னவாக இருந்திருக்கும் என்று கற்பனை செய்தாள் ஆர்த்தி

“சரியான சாவுகிராக்கி”

“வீட்டுல சொல்லிட்டு வரலையா?”

“எங்கேயிருந்து தான் கிளம்பி வருதுங்களோ” என்று ஏகப்பட்ட சினிமா வசனம் ஒன்றோடு ஒன்று முட்டி மோத, “ச்சே... இவன் கார் டிரைவரை போல தெரியலையே பணக்கார கலை தெரியுதே.” அதனால் இப்படி யோசித்திருக்க மாட்டான், அவனுடைய ஸ்டேட்டஸிற்கு தகுந்தார் போல் ஏதாவது இங்கிலிஷில் திட்டியிருப்பான்.

“இடியட்”

“ஸ்டுபிட்” இப்படி ஏதாவது.. அவளது நினைவுகளை கலைப்பதற்கு அங்கே அவளருகில் தன் டூவீலரை நிறுத்தினான் தருண்.

தருணை பார்த்ததும் மற்றது எல்லாம் மறந்தே போனது. அவள் எதிர்பார்த்தது போலவே அவன் மெருகேறியிருந்தான். டிப்டாப்பாக பார்மலாக உடுத்தியிருந்தான் அவனை முழுமையாக தன் விழிகளுள் சிறை செய்ய முயன்றாள்.

இது எல்லாமே அவனுடைய ஹெல்மெட்டை கழட்ட அவன் எடுத்துக் கொண்ட நேரத்திலேயே முடிந்துவிட்டது. ஹெல்மெட்டை கழட்டியவனும் ஒருமுறை அவளை ஆசை தீர பார்த்தான்.

“எப்படி டி இருக்க?” என்றான் அன்பொழுக.

“அதான் பாக்குறியே, இப்படித்தான் இருக்கேன்”என்றாள் சிறு கோபத்துடன்.

“ஹலோ மேடம், நியாயப்படி நான் தான் மேடம் கோபப்படனும். ஆறு மாசமா உன்ன பாக்காம... எவ்வளவு அவஸ்த்தை தெரியுமா....? அப்புறம் எப்படியோ ப்ரியாகிட்ட பேசி இப்படி ஒரு ஏற்பாடு செஞ்சேன்” என்றான் அவளது கோபத்தின் நியாயம் புரியாமல்.

“நீயெல்லாம் ஒரு ஹீரோன்னு நினைச்சிக்கிட்டு இருக்கேன் பாரு, என்னை சொல்லனும். இப்போ தான் இப்படி ஏதாவது செய்யனும்னு தோணுச்சா? ஆறு மாசம் ஆச்சா உன் மூளை வேலை செய்ய?”என்றாள் கோபத்தை இழுத்துபிடித்து.

“ஓ ஆமால்ல... சாரிடி.. இது எனக்கு முன்னமே தோணலை, அது மட்டுமில்லாம டிரெயினிங்ல பென்டெடுத்துட்டாங்க படிப்பு, படிப்பு, படிப்பு அசைன்மென்ட் செஞ்சே நான் அலுத்து போயிட்டேன் சாரிம்மா” என்றான் தன்னிலை விளக்கமாக.

அவன் கஷ்டப்பட்டான் என்பதை தாங்க முடியாமல் அவசரமாக பைக்கின் பின்னே ஏறியமர்ந்து, அவன் இடையை இறுகப் பற்றிக் கொண்டு அவனோடு ஒட்டி அமர்ந்தாள்.

“சரி கிளம்பு என்ன எங்க கூட்டிட்டு போறங்கிறதே பொறுத்து தான் என் கோபம் குறையுமா குறையாதான்னு தெரியும்” என்றாள் குறும்பான குரலில்.

அவளின் தொடுகையிலேயே முற்றிலும் கரைந்து உருகிக் கொண்டிருந்தவனுக்கு தன்னை நிலைப்படுத்திக் கொள்ளவே சில நொடிகள் தேவைப்பட்டது.

ஓர் பூச்செண்டே அவன் முதுகில் சாய்ந்திருப்பது போல் உணர்ந்தான்.

அந்த அழகிய தருணத்தை ரசித்தபடியே அவனுடைய வண்டி மாயாஜால் காம்ப்ளக்ஸில் நுழைந்தது.

ஆர்த்தியின் கண்கள் விரிந்தன படமா?!!!!.....

அவளுக்கு படம் பார்க்க ரொம்ப பிடிக்கும் ஆனால் அவளுடைய அப்பா கூட்டிச் செல்லவே மாட்டார் வீட்டில் டிவியில் பார்ப்பதோடு சரி. முதல் முறையாக படம் பார்க்க போகிறாள். அதுவும் தருணுடன். அவளது இதயம் இன்பப் படபடப்பில் சிக்கித் தவித்தது.

டூவீலர் நிறுத்தத்தில் கீழே இறங்கி அவன் முன் வந்து நின்ற ஆர்த்தியின் முகத்தை பார்த்ததும் தருணின் மனம் துள்ளிக் குதித்தது. அவளுக்கு இந்த இடம் பிடித்திருக்கிறது என்று மனதிற்குள்ளே விசிலடித்தான்.

அவளுக்கு பேசமுடியவில்லை, முதல்முறை தருணோடு வெளியே வந்திருக்கிறாள், யாரேனும் பார்த்து விடுவார்களோ என்கிற பயம் ஒரு பக்கமும், எல்லையில்லா மகிழ்ச்சி ஒரு பக்கமும் அவளை ஆட்டுவிக்க அவள் வாய் திறக்கவில்லை பேசாமல் அவனை பின் தொடர்ந்தாள்.

ஆர்த்திக்கு அடுத்த இன்ப அதிர்ச்சி என்னவென்றால் அவளுக்கு பிடித்த நடிகர் ஜெயம்ரவியின் படத்திற்கு தான் டிக்கெட் எடுக்கப்பட்டிருந்தது.

“ஹேய்.... தருண்” என்று மகிழ்ச்சியில் அவன் கரம் பிடித்தவள். அவன் கண்களுள் தன்னை தொலைத்தாள்.

“ஹலோ... எக்ஸ்க்யூஸ் மீ” என்ற கடினமான குரலில் தான் தாங்கள் வழியிலேயே நிற்கிறோம் என்பது புரிய அவசரமாக விலகி நின்றனர். அவளின் முகம் கன்றி சிவந்துவிட்டது. ”ச்சே... என்ன நான் பொது இடத்தில் இப்படி வெட்கமேயில்லாமல் நடந்து கொண்டேனே” என்று மனதினுள் மருகினாள்.

அவன் என்ன நினைச்சிருப்பான் என்று கடைக்கண்களால் அவர்களை தாண்டி சென்ற உருவத்தை பார்த்தாள். அங்கே அதே கொலைவெறி பார்வை.

“அய்யோ இவனா? என்ன கொடுமையிது மறுபடியும் இவனா! கடவுளே அவன் என்னைப்பற்றி என்ன நினைத்திருப்பான்?

ஒன்று நடுரோட்டில் ஓடிவந்து உயிரை எடுக்கிறது அல்லது நடுவழியில் ரொமான்ஸ் செய்து உயிரை எடுக்கிறது என்று ஏளனமாக அல்லவா நினைத்திருப்பான்.

அவளின் மனப்போராட்டத்தை பற்றி தெரியாத தருண் அவளின் கைப்பற்றி தியேட்டரினுள் நுழைந்தான்.

கும் இருட்டும், பெரிய திரையும்,திடும் திடும் என்று அலறும் டால்பி சவுண்டும் அந்த திரையில் தெரிந்த அவளுடைய பேவரைட் ஹீரோ ஜெயம்ரவியும் இது எல்லாவற்றையும் விட அவளுடைய தருணின் அருகாமை அவளுக்கு ஒரு புது உலகத்தை காட்டியது. அதில் அவளது மனப்போராட்டம் காணாமலே போனது. ( அப்படியே ஒரு கமண்ட் போட்டுட்டு போங்க ஃபிரண்ட்)



காதலென்பது...... தொடரும் ( next ud monday, Saturday Sunday leave )

உன் வாழ்க்கையை உனக்கு பிடித்தார் போல் மாற்றிக்கொள்

கார்குழலி
 

கார்குழலி

Saha Writer
Team
Messages
22
Reaction score
1
Points
1
4

வேதா, ப்ரியா, ஆர்த்தி மூவரும் ஓர் ஆட்டோவில் ஆர்த்தியின் வீட்டிற்கு அவளை கூட்டி வந்தது போலவே வீட்டில் விட்டு வர சென்று கொண்டிருந்தார்கள்.

"இருந்தாலும் உங்க வீட்ல நீ கொடுக்கிற பில்டப் ரொம்ப அதிகம் டி" என்றாள் வேதா.

"இவ இதை விட அதிகமாவே பில்டப் கொடுப்பாடி, இது தான் முதல் முறைங்கிறதால உனக்கு இது அதிகமா தெரியுது, நான் பாத்து பாத்து டிரெயின் ஆகிட்டேன்" என்றாள் ப்ரியா.

இருவரும் மாற்றி மாற்றி வசை பாடியபடியே வந்தார்கள். எதற்குமே ஆர்த்தியிடமிருந்து எந்த ஒரு எதிர்ப்பும் வரவில்லை.அவள் மனம் தருணுடன் அவள் செலவழித்த நிமிடங்களை ஆசை தீர மீண்டும் மீண்டும் அசை போட்டன. அவனை நினைக்கும் பொழுதெல்லாம் அவள் கன்னங்கள் செம்மை பூசிக் கொண்டு இதழ்களில் ஓர் வெட்கச்சிரிப்பு தோன்றியது.

முதல் முத்தம்...! தருண் கொடுத்த முதல் முத்தம்...! நினைக்கவே மூச்சு முட்டியது, இதழ்கள் இப்போதும் குறுகுறுப்பது போல் இருந்தது சில நொடி முத்தம் தான் ஆனால் அதுவே ஆயுளுக்கும் போதும் என்பது போல் தோன்றியது.

நாம் ஏன் அவனை பிரிந்து வருகிறோம்? அவனுடனே சென்றிருக்கலாமே! என்றெல்லாம் எக்கு தப்பாக நினைத்தது அவள் மனம். ஆனால் நிதர்சனம் அவள் மனதை சுட்டது.

அவள் வீடு வந்ததும் தோழிகள் இருவரும் அவளை அவளுடைய தந்தையிடம் பத்திரமாக ஒப்படைத்துவிட்டு வீடு திரும்பினர்.

இரவெல்லாம் அவளால் துளியும் உறங்க முடியவில்லை விழி மூடினாலே தருணின் முகமும் அவன் பதித்த முத்தமும் தான் கண்முன் தோன்றியது. தருணும் இதே போல் தூக்கம் வராமல் தவிப்பானா? அல்லது கும்பகர்ணன் போல் குறட்டை விட்டு உறங்குவானா?

ச்சே... ப்ரியாவை போல் என்னிடமும் செல்போன் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? ஹூம்..... எத்தனையோ முறை தருண் வாங்கித் தருகிறேன் என்று கெஞ்சினானே! நான்தான் ஒத்துக் கொள்ளவே இல்லையே. ஒழுங்காக அவனிடம் ஃபோனை வாங்கி வைத்திருந்தால் இன்று இந்த தவிப்பு தேவையில்லையே" என்று அவள் தன்னை தானே திட்டிக் கொண்டிருந்த நேரம் அம்மா சவுந்தரி தூக்கக் கலக்கத்தில் எழுந்து பாத்ரூமிற்குள் நுழைந்தார். சட்டென கண்களை மூடி கொண்டாள் ஆர்த்தி, இதயம் வேகமாக அடித்துக் கொண்டது.

“அடியே பயந்தாங்கொள்ளி, இவ்ளோ பயம் இருக்கும் போது நீ செல்போனுக்கு எல்லாம் ஆசைப்படலாமா?” என்று கேட்டது அவள் உள்மனம்.

‘பயமா? பயமெல்லாம் ஒன்னும் இல்ல, இது ஒரு மாதிரியான மரியாதை, அப்பா, அம்மா அண்ணனுக்கு நான் கொடுக்கும் மரியாதை’ என்றாள் துடுக்காக. "அப்போ காதல்?" என்று விடாமல் கேள்வி கேட்டது அவள் மனம். "கா.... கா... காதல் அது... அது... வேற டி..பார்ட்மண்ட்" என்றாள் விவேக் பாணியில். "உன்னை எல்லாம் திருத்தவே முடியாது" என்று ஜகா வாங்கிக் கொண்டது அவள் மனம்.

அவளது கண்கள் தன் கை மோதிர விரலில் ஒய்யாரமாய் அமர்ந்திருந்த ஒற்றை வைரக்கல் பதித்த பிளாட்டினம் மோதிரத்தில் நிலைத்தது. தருண் அவனது சம்பளத்தில் அவளுக்காக வாங்கிய முதல் பரிசு, தியேட்டரில் இதனை அணிவிக்கும் பொழுது தானே அ... அந்த தி...ருட்டு....பயல்' என்று தன் இதழ்களை லேசாக வருடினாள். அவளுக்கு வெட்கம் தாங்கவில்லை பெட்சிட்டை இழுத்து போர்த்திக் கொண்டாள்.

தருணை அவள் முதன் முதலில் சந்தித்தது இவளுடைய பெரியப்பா மகள் திருமணத்தின் போதுதான். தருண் இவளுடைய பெரியம்மாவின் ஒன்று விட்ட சகோதரரின் மகன். திருமணத்தில் பெரியவர்கள் எல்லோரும் தூங்கியதும் சிறுசுகள் மாடியில் கூடின.

அண்ணன் தங்கை முறை அக்கா தம்பி முறை அதாவது பங்காளிகள் எல்லாம் ஒரு புறமும். மாமன், மச்சான், அண்ணி, நாத்தனார் முறை ஆட்கள் எல்லாம் ஒரு புறமும் அமர்ந்து ஒரு கோஷ்டியை மற்றொன்று கேலி செய்து லூட்டியடித்துக் கொண்டிருந்தனர். அப்போதே எதிர் அணியில் இருந்த தருண், ஆர்த்தியை சைட் அடித்தான், அதனை அவளும் உணர்ந்தாள், ஆனால் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை

திருமணத்தில் பலமுறை தருண் அவளிடம் பேச முயற்சித்தான். ஆனால் அவள் அதனை புறக்கணித்து தப்பித்துக் கொண்டேயிருந்தாள். அவனால் அவளிடம் பேச முடியாமலே போனது. ஆனால் தருணை போல் விதி தன் தோல்வியை ஒத்துக் கொள்ள மறுத்தது.

அடுத்து அவர்களது சந்திப்பு அவர்களது கல்லூரியில் தான். முதலாம் ஆண்டு பி.சி.ஏ சேர்கைக்காக ஆர்த்தி அவளுடைய தந்தையுடன் வந்திருந்தாள். அதே கல்லூரியில் எம்சிஏ முதல் ஆண்டு சேர்க்கைக்காக தருண் வந்திருந்தான். இருவருக்கும் முதல் பார்வையிலேயே தங்களின் திருமண மண்டப சந்திப்பு நினைவு வந்து விட்டது. இருவர் கண்களிலும் ஓர் ஆச்சர்யம், அதிர்ச்சி, மகிழ்ச்சி என்று கலவையாக உணர்வுகள் தோன்றி மறைந்ததை இருவருமே உணர்ந்தார்கள் அதன் பிறகு ஒரே கல்லூரி, ஒரே படிப்பு சீனியர், ஜூனியர் என்று இவர்களை விதி அவ்வப்போது சந்திக்க வைத்து தன் பணியை செவ்வனே செய்தது.

ஒரு நாள் காரிடாரில் ஆர்த்தியை மறித்து தருண் நேரடியாகவே தன் காதலை தெரிவித்தான். அப்போது மட்டுமல்ல பிறகு வந்த பல சந்திப்புகளிலும் ஆர்த்தி மெளனமாகவே இருந்தாள்.

ஒரு நாள் அவன் அவள் கைகளையே பிடித்து விட்டான் செய்வதறியாமல் கண்கள் கலங்கிவிட்டது ஆர்த்திக்கு,

"ஏய், இப்போ எதுக்கு அழுவுற?” என்றான் புரியாமல்

"எங்கப்பாக்கு இதெல்லாம் பிடிக்காது" என்றாள் பிடித்திருந்த அவனுடையை கையை பார்த்தபடி. சட்டென சிரித்து விட்டான் தருண். இப்போது இவன் ஏன் சிரிக்கிறான் என்று யோசித்தவளுக்கு தன்னுடைய அடுத்த கேள்வியை பதிலாக்கினான் தருண்.

"அப்போ உனக்கு புடிச்சிருக்கா?" அவ்வளவுதான் வெட்கம் நெட்டித்தள்ள அவள் கையை அவனிடமிருந்து உறுவிக் கொண்டு வேகமாக ஓடி விட்டாள்.

பின் மெல்ல மெல்ல ஆர்த்தியை தன்னவளாக்கிக் கொண்டான். அவள் அவளுடைய அப்பாவை நினைத்து பயப்படும் பொழுதெல்லாம் அவன் அவளை சமாதானம் செய்வான். அவனால் அவளுடைய மனதை புரிந்து கொள்ள முடிந்தது. அதனால் அதற்கேற்றார் போல ஒரு திட்டத்தை சொன்னான்.அவளுக்கு அவளுடைய அப்பா மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தால் குடும்பத்தில் மூத்தவரான அவளுடைய பெரியப்பா காதிற்கு தான் முதலில் விஷயம் தெரிவிக்கப்படும். அது நிச்சயம் பெரியம்மாவிற்கு தெரியாமல் இருக்காது. அதற்கு முன்பாகவே தருணின் தாய் மூலம் பெரியம்மாவின் காதுகளில் இவர்களுடைய காதலை, அதாவது காதல் என்று சொல்லாமல், திருமணத்தில் தருண் பார்த்ததை லேசாக திரித்து, தருணின் தாய் ஆர்த்தியை பார்த்ததாகவும் அவள் தான் தனக்கு மருமகளாய் வர வேண்டும் என்று அவர்கள் தீர்மானித்து விட்டதாகவும் இன்னும் நிறைய விதமாக பேசி பெரியம்மாவை சரிகட்டி, அவர் வாயிலாகவே பெரியப்பாவை நம்ப வைத்து அப்படியே ஆர்த்தியின் தந்தையை சம்மதிக்க வைத்து ஒரு அக்மார்க் பெரியவர்களால் நிச்சயிக்கபட்ட திருமணமாக மாற்றிக் காட்டுவது தன் பொறுப்பு என்றான் தருண். அவனுக்கு அவனுடைய பெற்றோர் மீதிருந்த நம்பிக்கையால் அவனால் ஆர்த்திக்கு நம்பிக்கையூட்ட முடிந்தது. உண்மைதான் தருணின் பெற்றோர் அதிக கெடுபிடியில்லாமல் தங்கள் குழந்தைகளை சுதந்திரமாகவே வளர்த்திருந்தனர். அதே நேரம் பொறுப்பாகவும் வளர்த்திருந்தனர்.

அவர்களின் திட்டத்தின் முதல் கட்டமாக வேலைக்கு சேர்ந்ததுமே தாயிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டான். ஆம் இன்று ஆர்த்தியின் மூன்றாவது சர்ப்ரைஸ் இதுதான். தருணின் அம்மாவின் குரலில். "நீ தாம்மா என் மருமக கவலையேபடாத" என்ற வார்த்தைகளை கேட்டது தான். ஒரே இன்ப அதிர்சிகளாக நிறைந்திருந்த அந்த நாளை அவளாள் ஜீரணிக்க முடியவில்லை. முதல் படம், அவளுக்கு பிடித்த கதாநாயகனின் படம், அத்தையின் ஃபோன் கால் பேச்சு, அழகிய மோதிரம், இறுதியில்... மு...த்....." போர்வைக்குள் தன் முகத்தை இருகைகளால் மூடிக்கொண்டாள்.

சில நொடிகளில் கரத்தை விலக்கி மோதிரத்தில் இதழ் பதித்தாள், நல்லவேளை ப்ரியாவும், வேதாவும் அப்பாவிடம் தருண் சொல்லிக்கொடுத்த அதே கதையை பிசிறில்லாமல் சொல்லிவிட்டார்கள். அப்பாவும் நம்பி விட்டார்.

அதாவது ஆர்த்தியின் பிறந்த நாள் அடுத்த வாரம் வரவிருப்பதால் தோழிகள் எல்லோரும் சேர்ந்து அவளுக்கு வெள்ளியால் ஆன மோதிரம் வாங்கினார்களாம், அதற்கான பில்லையும் அவரிடம் கொடுத்தார்கள். எல்லாம் தருண் முன்னேற்பாடாக பக்காவாக யோசித்து வாங்கியது தான். "பிடிக்கவில்லை என்றால் இந்த பில்லை கொடுத்து மாற்றிக் கொள்ள சொல்லுங்கள் அங்கிள்" என்று எக்ஸ்ட்ரா பிட்டை வேறு போட்டு வைத்தார்கள் ஆர்த்தியின் தோழிகள்.

"எதுக்கும்மா வெள்ளில எல்லாம் வாங்கிகிட்டு, நீங்க படிக்கிற பசங்க அதிகமா செலவு செய்ய கூடாது என்றார் மணிகண்டன் சிறு கண்டிப்போடு

"இல்ல அங்கிள் தலைக்கு அம்பது ரூபா தான். ஷேர் போட்டோம். எங்க கிளாஸ்ல இருபத்தி அஞ்சுபேர் இருக்கோம் அங்கிள் அதனால மோதிரம் கேக் எல்லாம் வாங்க முடிஞ்சது. என்று பேசி அவரை சமாதானப்படுத்தி விட்டு 'அப்பாடா’ எப்படியோ இன்று பிழைத்துவிட்டோம். அம்மா தாயே போயிட்டு வரோம்மா" என்று மனதில் பெரிய கும்பிடு போட்டவர்கள் ஆர்த்தியிடம் கண்களால் விடைபெற்று சென்றார்கள்.

நல்லவேளை அப்பாவும் தோண்டித் துருவி எதுவும் கேட்கவில்லை அதே போல் மோதிரத்தை மாற்றுவது பற்றியும் எதுவும் பேசவில்லை. மீண்டும் ஒரு முறை தன் மோதிரத்திற்கு முத்தமிட்டு “ஐ லவ் யூ தருண், ஐ லவ் யூ தருண்” என்று ஏதோ சுப்ரபாதத்தை முணுமுணுப்பது போல் தனக்குள் சொல்லிக் கொண்டே அவனுடைய நினைவுகளுடன் உறங்கிப் போனாள் ஆர்த்தி

காதலென்பது.......தொடரும்......

உன் வாழ்க்கையை உனக்கு பிடித்தார் போல் மாற்றிக்கொள்

கார்குழலி
 

கார்குழலி

Saha Writer
Team
Messages
22
Reaction score
1
Points
1
5

எல்லாமே தருண், ஆர்த்தி திட்டமிட்டது போலவே செவ்வனே நடந்தது. தருணுடைய போட்டோ மணிகண்டனின் கையில் இருந்தது. சந்துருவிடம் அந்த படத்தை கொடுத்தவர். இந்த பையனை பத்தி கொஞ்சம் விசாரிப்பா. நல்லவனா இருந்தா நம்ம பாப்பாக்கு பேசி முடிக்கலாம். உன்னோட பெரியப்பா சொன்ன வரன் அதனால பிரச்சனை எல்லாம் எதுவும் இருக்க வாய்ப்பில்ல, இருந்தாலும் நம்ம மனசு திருப்திக்கு ஒருமுறை விசாரிச்சிப்போம், அந்த போட்டோ பின்னாடி எல்லா விவரமும் இருக்கு” என்றார்

“சரிப்பா” என்று அமைதியாக கூறியவன் போட்டோவை பெற்றுக் கொண்டான்.

ஆள் பார்க்க அம்சமாக இருக்கிறான் ஆர்த்திக்கு பொருத்தமாகவே இருப்பான் என்று சந்தோஷப்பட்டான் போட்டோவை திருப்பி அவன் விபரம் அறிய விழைந்தான்.

பெயர் – தருண்

படிப்பு- MCA

வேலை- IT Solutions

நிறம்- மாநிறம்

சம்பளம் – 75000

பதவி – IT consultant

உடன்பிறப்பு – ஒரு பெண் (அக்கா)

சொந்த வீடு – உண்டு

தொலைபேசி - *******************

இன்னும் சில குறிப்புகளோடு இருந்தது அந்த போட்டோ

அவன் வேலை பார்க்கும் அந்த பிரபலமான மென்பொருள் நிறுவனத்தின் பெயரை பார்த்ததுமே சந்துருவின் கண்கள் விரிந்தன. சென்னையில் மிகவும் பெயர் போன கம்பெனி. அந்த கம்பெனியில் வேலை கிடைத்துவிட்டால் லைப் பக்கா செட்டில் என்று நண்பர்கள் வட்டாரத்தில் பேசிக் கேட்டிருக்கிறான். ஏனெனில் அவனுடைய நண்பர்கள் மூவர் அந்த கம்பெனியில் தான் வேலை செய்கிறார்கள். அதனால் தருணைப் பற்றி விசாரிப்பது மிக எளிது என்று சந்தோஷப்பட்டவன் துரிதமாக வேலையில் இறங்கினான்.

சந்துரு அடுத்த நாளே நண்பர்களை பார்க்க அந்த கம்பெனிக்கே சென்றான். வெகுநாட்கள் கழித்து பார்த்த நண்பனை மூவரும் சேர்ந்து அருகிலுள்ள டீ கடைக்கு அழைத்து சென்றனர். பேச்சு, சிரிப்பு, சலசலப்பு இடையில் சில பல பஜ்ஜிகளை உள்ளே தள்ளியவர்கள் ஆளுக்கொரு தம், டீயுடன் நின்றிருந்த நேரம் தான் அந்த வெள்ளை மெர்சிடஸ் பென்ஸ் கார் அவர்கள் நின்ற கடைக்கு அருகில் சிக்னலுக்காக நின்றது.

உடனே நண்பர்கள் பரபரப்பாகி தங்களின் முதுகை சாலைக்கு காட்டியபடி நின்று கொண்டனர். என்னாச்சு இவனுங்களுக்கு என்று அவர்களை உற்றுப் பார்த்த சந்துருவிற்கு, “டேய் எங்க எம்.டி டா” என்றான் சரன்.

யார் என்று விளங்காமல் சிக்னலில் நின்ற கார்களை ஆராய்ந்தான் சந்துரு.

“அந்த வெள்ளை பென்ஸ்டா, நேவி புளு கோட்”என்று வேந்தன் தன் நண்பனுக்கு உதவிக்கு வர அப்போது தான் சந்துரு அவனை பார்த்தான்.

பணக்கார கலை என்று சொல்கிறார்களே அது இதுதானா? அவன் அணிந்திருந்த கூலிங்கிளாஸ், அவன் அடிக்கடி பார்த்த வாட்ச், அவன் கோட் எல்லாம் ஏதோ ஒரு பிராண்டின் பெயரை எடுத்துக் காட்டின.

அவன் ஸ்டீரிங் பிடித்திருந்த ஸ்டைலே இவன் பரம்பரை பணக்காரன் என்று சொல்லாமல் சொல்லியது.

அவனை இன்னும் கூர்மையாக உற்றுப் பார்த்தான் சந்துரு. ஆனால் சரியாக அப்போது சிக்னல் விழுந்து விட கார் வேகமெடுத்து பறந்தது.

ஆனால் சந்துருவின் நினைவு அடுக்குகள் வேகமாக வேலை செய்தன. “இவனை எங்கேயோ பார்த்திருக்கோமே எங்க?“ என்று அவனது மூளை குழம்ப, அப்போது ‘அப்பாடா’ என்று நிம்மதி பெருமூச்சுடன் திரும்பின நண்பர்கள் அவனுக்கு உதவி செய்தனர்.

“டேய் , பிரதீபன் சார் நம்மை பார்த்திருக்க மாட்டரே” என்று சந்தேகம் கேட்டான் சரண்.

அதற்கு “பார்த்திருக்க வாய்ப்பில்லை” என்று ஆறுதல் வார்த்தை கூறினான் வேந்தன். சந்துருவிற்கு பல்ப் எரிந்தது “பிரதீபன்.. பிரதீபன்... எஸ் காட் இட்”

போன மாத பிசினஸ் டைம்ஸ் மேகஸினில் பார்த்தான், பிரதீபனை பற்றிய ஆர்டிகல் அண்ட் இன்டர்வியூ, இவனுடைய வெற்றியின் படிக்கட்டுகளை பற்றி பேசியிருந்தான்.

அவனுடைய பேட்டியே ஓர் உத்வேகத்தை ஏற்படுத்தியது. ஏதோ இந்த தன்னம்பிக்கைக்கும் தலைகனத்திற்கும் ஓர் நூலிழை தான் வித்தியாசம் என்று ஒரு வசனம் வருமே, அதுபோல் இருந்தது அவனுடைய பேச்சு. இவன் எந்தப்பக்கம் என்று சிந்திக்கவும் வைத்தது. ஆனால் இவனை பார்த்து இவர்கள் ஏன் இப்படி நடுங்குகிறார்கள்.

இவன் யோசனையாக பார்க்கவும் நண்பர்கள் சகஜநிலை வரவும் சரியாக இருந்தது.

“அவரை பார்த்து நீங்க ஏன்டா இப்படி நடுங்குறீங்க? எம்.டினு பயமா? இல்ல தம் அடிச்சா ஆக்‌ஷன் எடுக்குற அளவு ரொம்ப நல்லவரா?”

“அட போடா, இந்த ஆள் ஒரு டிடோட்டலர், இவனெல்லாம் இவ்ளோ பணத்தை வெச்சு என்னதான் செய்ய போறானோ?! சுத்த வேஸ்ட்”என்றான் அதுவரை வாய் திறக்காத மதன்.

“நம்பவே முடியலையே! இவரை மாதிரி மேல் தட்டு மக்களுக்கு இல்லாத கெட்ட பழக்கமா?” போலீஸ் புத்தி வேலை செய்ய, தன் தாடையை தடவியபடியே தன் நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தினான்.

“அப்படித்தான் நாங்களும் நினைச்சோம். ஆனால் ஆபீஸ் பார்ட்டீஸ்ல கூட “சாரி ஐ டோன்ட் ட்ரிங்க்”என்று ஒதுங்கிக்குவான். சோஷியல் ட்ரிங்கிங்னு கொட்ட மடிப்பவர்கள் மத்தியில் இப்படியும் ஒருத்தன்.

“அது கூட பரவாயில்லை. எங்கள் ஆபீஸில் எந்த பெண்ணையும் கண்ணெடுத்து பார்க்கவும் எல்லோரும் பயப்படுவோம். உமன் ஹராஸ்மென்ட் கம்பளைன்ட் மட்டும் அவர்கிட்ட போச்சு..அவ்ளோதான் மாட்டுனவன் தொலைஞ்சான்” என்று தங்கள் ஆதங்கத்தையும் வருத்தத்தையும் தெரியப்படுத்தி, தங்கள் புண்பட்ட இதயத்தை புகைவிட்டு ஆற்றிக் கொண்டிருந்தார்கள்.

“சரி நீ சொல்லு சந்துரு, என்னவோ விசாரிக்கனும்னு சொன்னியே” என்று கேட்டான் வேந்தன்.

அப்போதுதான் தான் எதற்காக இங்கே வந்தோம் என்பதே உறைத்தது சந்துருவிற்கு.

மானசீகமாக தன்னை தானே குட்டிக் கொண்டு பாக்கெட்டிலிருந்த தருணின் போட்டோவை எடுத்து அவர்களிடம் காண்பித்தவன் அவனைப் பற்றிய விவரங்கள் வேண்டும் என்றான்.

“தோ பாருடா! போலீஸ் நம்மள விசாரிக்க சொல்லுது!” கிண்டலடித்தான் சரண்.

“அதான, என்ன சார் போலீஸ் ஸ்டேஷன்ல தான் உங்க பாச்சா பலிக்குமோ? “ ஒத்து ஊதினான் மதன்.

“டேய் சும்மா இருங்கடா....“ என்று அவர்களை அடக்க விட்டு,

“நீ கவலையேப்படாதே மச்சி அவனோட ஜாதகத்தையே உன்கிட்ட கொடுக்கிறோம் ஜஸ்ட் டூ டேய்ஸ்” என்று நம்பிக்கையூட்டி அனுப்பி வைத்தான் வேந்தன்.

சொன்னது போலவே இரண்டே நாட்களில் தருணைப் பற்றி முழுவிவரமும் சந்துருவிடம் ஒப்படைக்கப்பட்டது.

சரக்கடிக்கும் பழக்கமில்லை, எப்போதாவது தம் அடிப்பதுண்டு, தேவையில்லாமல் தொலைபேசியில் அதிகநேரம் பேசுவதில்லை அப்படியென்றால் அவனுக்கு பெண் தோழியோ அல்லது காதலியோ இருக்க வாய்ப்பில்லை, ஆபீசிலிருந்து நேரே வீட்டிற்கு தான் செல்கிறது தருணின் வண்டி. அவன் குறிப்பிட்டிருக்கும் சம்பளமும் சரியே.

இவனும் தன் பங்கிற்கு தருண் வீட்டு ஏரியா பிரான்ச் போலீஸ் ஸ்டேஷனில் விசாரித்து விட்டான். ஆக மொத்தத்தில் நல்லவன் தான் என்று நிரூபனமானது ( padichavanga apadiyea oru comments pottutu ponga pa)

காதலென்பது.......தொடரும்......

உன் வாழ்க்கையை உனக்கு பிடித்தார் போல் மாற்றிக்கொள்

கார்குழலி
 

கார்குழலி

Saha Writer
Team
Messages
22
Reaction score
1
Points
1
6

பிரியாவோடு கூடத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தாள் ஆர்த்தி. பேச்சு ஒரு பக்கம் இருந்த போதும்பிரியாவின் செல்லில் தருண் வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பிக் கொண்டிருந்தான்.

அதனை படித்து பிரியா ஆர்த்தியிடம் சொல்வதும் அதற்கு அவள் சொல்லும் பதிலை டைப் செய்து பிரியாஅனுப்புவதுமாக ஒரு காதல் கதை அழகாக ஓடிக் கொண்டிருந்தது.

அப்போது அங்கே வந்த மணிகண்டன்ஸீ “என்னம்மா பிரியா எப்போ மா வந்த” என்றார் வரவேற்கும் விதமாக.

சட்டென பதட்டமடைந்தாள் பிரியா

“வ.. வ.. வந்து.. இ... இப்போ தான் அங்கிள் ஒரு அரைமணி நேரம் இருக்கும்” தட்டுத்தடுமாறி பேசினாள்.

“சரிம்மா.. அதுக்கு ஏன்மா எழுந்து நிக்கிற உட்காரு” என்றவர் மகளிடம் திரும்பினார்.

“அம்மாடி” என்று வாஞ்சையோடு அவள் சிரம் தொட்டவர்.

“உனக்கு ஒரு நல்ல இடத்திலிருந்து வரன் வந்திருக்குமா, நானும், உன் அண்ணனும் நல்லா விசாரிச்சிட்டோம், மாப்பிள்ளை வீட்டில் உன் போட்டோவை பார்த்தே எல்லாருக்கும் புடிச்சு போச்சு. மாப்பிள்ளையோட அக்காஅடுத்த மாசம் குடும்பத்தோடு அமெரிக்கா போறாங்களாம். அப்படி போயிட்டா இன்னும் ஒரு வருஷம்வரமுடியாதாம் அதனால அடுத்த மாசத்துக்குள்ள கல்யாணம் வெச்சுக்கலாம்னு சொல்லிட்டாங்க. நீ ஒரு தடவமாப்பிள்ளையை பார்த்து ஓகே சொல்லிட்டா அப்பா ஆக வேண்டியதை பார்ப்பேன்” என்றவர் தன் சட்டைபையிலிருந்து தருணின் போட்டோவை எடுக்க விழைய அவரது கரத்தை பாக்கெட்டிலேயே தடுத்து.

“அப்பா நீங்க எது செஞ்சாலும் எனக்கு சம்மதம் தான். உங்களுக்கு பிடிச்சிருந்தா போதும்” என்றவளை

“அடிப்பாவி உலகமகா நடிகைடி நீ” என்கிற ரேஞ்சில் பார்த்து வைத்தாள் பிரியா.

“என்னம்மா நீ இப்படி சொல்ற, இந்த காலத்து பொண்ணுங்கலாம் மாப்பிள்ளை இப்படி இருக்கனும், அப்படிஇருக்கனும்னு லிஸ்டே போடுறாங்க, நீ போட்டோ கூட பார்க்க மாட்டேங்கிற” என்று ஆச்சர்யப்பட்டார்.

அவரோட பேரையாவது தெரிஞ்சிக்கோமா” என்று அவர் ஆரம்பிக்கும் பொழுதே பிரியாவின் கைப்பற்றிதோட்டத்திற்குள் ஓடி மறைந்தாள் ஆர்த்தி அமகளுக்கு வெட்கம் என்று நினைத்து தனக்கு தானேசந்தோஷப்பட்ட மணிகண்டன் கல்யாண வேலைகளில் மும்முரமானார்.

ஒரே மாதம் தான் இடைவெளி என்பதால் நிச்சயம் வேண்டாம் என்று முடிவு செய்தார்கள். முகுர்த்த புடவைஎடுக்கும் பொழுது தருண் நிச்சயம் வருவான் என்று நினைத்தாள் ஆர்த்தி. ஆனால் அவனுடைய அலுவலகத்தில்ஏற்பட்ட திடீர் பிரச்சனை காரணமாக அவனால் வரமுடியாமல் போனது. உள்ளுக்குள் வருத்தமாக இருந்தாலும்வெளியே காட்டிக் கொள்ளாமல் ஏதோ ஒரு புடவையை எடுத்துக் கொண்டு வந்தாள்.

அதுப்பற்றி பிரியாவின் செல்போனில் சண்டை போட்ட போதோ “நம்ம ஆறுமாசம் கழிச்சு சந்திச்சோமே அந்தநாள் எவ்வளவு சுகமா இருந்த்து “ என்று அந்த நாளின் நினைவில் அவன் கரைய இவளின் முகம் செவ்வானமாய்சிவந்தது.

“அடிக்கடி சந்திச்சா கிக்கே போயிடும் ஆர்த்தி அடுத்து நம்மளோட சந்திப்பு தாலிகட்டும் போது தான்”

“..................” அவன் சொன்ன காட்சி அவள் கண்களில் விரிந்தது.

“அடுத்து எங்க சொல்லு?” குழைவான அவனது குரலே அது என்னவென்று புரியவைத்து விட சட்டென செல்லைஅணைத்து இதயத்தோடு அழுத்திக் கொண்டாள். அவளது இதயம் வெடித்துவிடும் வேகத்தில் அடித்துக்கொண்டிருந்தது. அவன் சொல்லும் சந்திப்பை கற்பனை செய்து பார்க்க கூட அவளால் முடியவில்லை அவ்வளவுவெட்கம் அவள் முகத்தில்.

“அம்மா தாயே உன் மூஞ்சியே உன்னை காட்டிக் கொடுத்துடும் போல போனை இப்படி கொடு” என்று பிடுங்காதகுறையாக போனை வாங்கிய பிரியாவை பார்த்து முறைத்தாள் ஆர்த்தி.

“உன்னோட நல்ல பொண்ணு வேஷம் கலஞ்சிட போகுது. இன்னும் கொஞ்ச நாள் தான், அப்புறம் நீ தருண்வீட்டுக்கு ஓடிடுவ.அப்புறம் நோ கட்டுப்பாடு” என்று கிசுகிசுப்பாக அவள் காதோரம் பேசினாள்.

“அதனால தான்டி நானும் பொறுத்து போறேன், சில நேரம் இந்த நல்ல பொண்ணு வேஷத்தையே நான்வெறுக்கிறேன். ஆனா எல்லாம் திட்டப்படி போகும் போது ஏன் அப்பா மனசை நோகடிக்கனும்.

“ஆனது ஆச்சு இன்னும் கொஞ்ச நாள் தானே இப்படியே ஓட்டிடு” என்று பிரியா சொல்ல அதனை ஆமோதிப்பதுபோல் தலையசைத்தாள் ஆர்த்தி.

அவளது இந்த நல்ல பெண் வேஷத்தால் அவள் இழக்க போகும் விஷயத்தின் வீரியம் தெரியாமல் திருமணநாளை எதிர்நோக்கி ஆவலோடு காத்துக் கொண்டிருந்தாள்.



அந்த பிரமாண்டமான கோல்ப்ஃ கிரவுன்டின் சீராக வெட்டப்பட்ட புல் தரையை பார்த்தாலே மனம் லேசாகிவிடும், அதில் படுத்து புரள வேண்டும் என்று வினோதமான ஆசை மனதில் எழும் மாயாவிற்கு.

ஆனால் அவள் வளர்க்கபட்ட விதம் அதற்கு அனுமதிக்காது.

அங்கே போடப்பட்டிருந்த பெஞ்சில் அமர்ந்திருந்தவள் ஏழாவது முறையாக தன் கடிகாரத்தை பார்த்தாள்.

“வரட்டும், இன்றைக்கு அவனை ஒரு வழி பண்ணாமல் விடுவதில்லை பெரிய பிசினஸ்மேன், பன்சுவாலிட்டியேஇல்ல” சத்தமாகவே திட்டினாள்.

அப்போது அவள் பின்னாலிருந்து வந்தது அவன் குரல்

“சாரி... சாரி... சாரி.. மை டியர் மாயா” என்று பொய்யாய் காதுகளை பிடித்தபடி பவ்யமாக அவள் முன் வந்துநின்றான் பிரதீபன்.

அவன் முகத்தை தவிர்த்து வேறுபுறம் பார்த்தவளின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

“வெரி ஆங்கிரி?”

“................”

“சாரி டியர்” என்றபடி அவள் கையை தொட்டான்.

சட்டென அவன் கைகளை உதறிக் கொண்டு எழுந்தாள் மாயா,

“உனக்கு பிடிச்ச காரை எடுத்துட்டு வந்தேன் டியர் அது பாதியிலேயே மக்கர் பண்ணிடுச்சு.டிரைவருக்கு நல்லடோஸ் விட்டு வேறு கார் அரேஞ் பண்ணி அதை எடுத்து வர லேட் ஆகிடுச்சு” தன்னிலை விளக்கமளித்தான்.

நின்று ஓரக்கண்ணால் அவன் முகம் பார்த்தாள் மாயா கரைந்து கொண்டிருந்த கோபத்தை இழுத்து பிடித்து“ஒன்லி செவன்டி பைவ் மார்க்ஸ் பார் தி ஸ்டோரி” என்று கூறி தன் உதடுகளை காதுவரை இழுத்து வைத்துபளிப்புக் காட்டினாள்.

“ஏய்.... “ என்று எட்டி அவள் கரம் பற்றியவன் அவளை தன் புறம் இழுத்தான்

அந்த எதிர்பாராத தாக்குதலில் நிலைகுலைந்தவள் அவன் மீது ஓர் பூமாலையை போல் சரிந்து விழுந்தாள். அவளது இடையை தன் இடது கையால் வளைத்து தன்னோடு அணைத்து கொண்டு அவள் கண்களுள்ஊடுருவினான்.

அவன் பார்வையின் வீரியம் தாங்காமல் இமை தாழ்த்தினாள் மாயா.

அவளது கன்னங்களில் தன் விரல்களால் கோலம் போட்டபடி “நான் என்ன கதை, திரைக்கதை, வசனம்எழுதுறேனா? நீ மார்க் போடுற!”

அவன் விரல் போட்ட கோலத்தில் செம்மை பூசிய அவளது முகம் அழகிய ரங்கோலியாய் மிளிர்ந்தது.

அதன் அழகில் தன்னிலையிழந்தவன் துடிக்கும் அவள் இதழ் நோக்கி குனிய சட்டென தன்னுணர்வு பெற்றவள்அவன் சுதாரிக்கும் முன் தன் இரு கைகளாலும் அவனை தள்ளிவிட்டு ஓடினாள்..

அவளின் நெருக்கம் அவனிடம் ஒரு வித தளர்வை ஏற்படுத்தியிருக்க அவனும் ஒரு வினாடி அவள் தள்ளியதும் தன்வலுவிழந்து பின் நோக்கி நகர்ந்து விட்டான்.

ஆனால் உடனே சுதாரித்துக் கொண்டு இரெண்டே எட்டில் அவளை தாவிப் பிடித்தான்.

அவளது கையை அவனிடமிருந்து உருவிக் கொள்ள அவள் பெரும்பாடுபட்டாள்.

“ப்ளீஸ் பிரதீப் விடு” என்றாள் கெஞ்சலாக

“ஏன்?” அவள் காதோரம் கிசுகிசுத்தான்.

“.........” அவள் பதில் சொல்லவில்லை

“ம்...சொல்லு” ஊக்குவித்தான்.

“விடுன்னு சொன்னா விடு” தன் கைகளை அவனிடமிருந்து விடுவித்து கொள்ள அரும்பாடுபட்டாள்.

சிறிது நேரம் அவளின் படபடப்பை ரசித்தவன் நிதானமாக அவள் கைகளை விடுவித்தான்.

நிம்மதி பெருமூச்சுடன் அவன் பிடியில் இதுவரை சிக்கியிருந்த மணிக்கட்டை தடவிய படியே

“வா... பிராக்டிஸுக்கு டைம் ஆச்சு” என்று கோர்டிற்குள் நுழைந்தாள்.

அதற்குள் பிரதீபன் இரு ஸ்டிக்கையும் சில பந்துகளையும் எடுத்து வந்து தன் பயிற்சியை ஆரம்பித்தான்.

ஒவ்வொரு ஞாயிறும் பிரதீபனுடைய அட்டவணையில் காலை ஏழு முதல் ஒன்பது வரை கோல்ஃ ப்ராக்டிஸ் தான்.

அவன் மாயாவோடு செலவிடும் நேரமும் அது தான். வாரநாட்களில் அவனை போனில் பிடிப்பது கூட கடினம். காலை குட்மார்னிங் மதிய உணவு நேரம் இரவு குட்நைட் என்று மொத்தம் ஒரு அரைமணி நேரம் எப்படியாவதுஒதுக்கி அவளுடன் பேசிவிடுவான்.

இல்லையானால் அவனுக்கு அந்த நாளே சோகமயமாகிவிடும்.

ஏதேனும் சிறு பிணக்கினால் அவளுடன் பேசாமல் இருந்துவிட்டான் என்றால் அன்று அவனுடையஅலுவலகத்தில் தவறு செய்பவர்கள் துளைந்தார்கள்.

இந்த உலகத்திலேயே தாய்க்கு பிறகு அவன் அதிகம் நேசிக்கும் பெண் மாயா.பிரதீபன் பிறந்தபோது ஏற்பட்டசில சிக்கலால் அவனுடைய தாய் கமலா பலகீனமாகி விட்டதால் ஒற்றை பிள்ளையாகிப்போனான்.

விடுமுறை நாட்களில் மட்டும் தன் அப்பாவின் உடன்பிறந்த தங்கை வீட்டிற்கும், தன் அம்மாவின் உடன்பிறந்தஅக்கா வீட்டிற்கும் செல்வான்

மாயா பிரதீபனின் அத்தை மகள் சிறு வயதிலிருந்தே இருவரையும் இணைத்து பேசிபேசியே அவர்களின் மனதில்திருமண விதையை விதைத்தார்கள் பெரியவர்கள். பெரியவர்களை பொறுத்தவரை சொத்து வேறு யாரிடமும்கைமாறி விடக்கூடாது அவ்வளவே.

பிரதீபனுக்கு மாயாவிற்கும். இடையில் எப்போதும் ஒரு நட்புணர்வு இருந்து கொண்டே இருந்தது. அவர்களதுபருவ வயதில் அது காதலாக மாறியது.

இரு வீட்டிலும் அவர்களது காதலுக்கு தடையேதும் இல்லை என்பதால் மாயாவின் படிப்பு முடிந்ததும் திருமணம்வைத்து கொள்வோம் என்று இருவீட்டு பெரியவர்களும் பேசி முடிவெடுத்தனர்

மாயா இன்னும் இரண்டு வாரத்தில் மேல்படிப்பிற்காக அமெரிக்கா செல்கிறாள். மூன்று ஆண்டுகளுக்கு பிறகுதான் வருவாள்

இன்னும் ஒரே ஒரு ஞாயிறு தான் அவர்களின் இந்த சந்திப்பு எனும்போது இருவருக்கும் மனம் சோர்ந்து தான்இருந்தது.

முகத்தில் முளைத்திருந்த வியர்வை முத்துகளை டவல் கொண்டு ஒற்றிக் கொண்டே மாயா விளையாடும் அழகைரசித்துப் பார்த்தான்.

அவளது ஒரே அடியில் பந்து குழியில் விழுந்ததும் “கிரேட் ஷாட்” என்று கைத்தட்டி அவளைஉற்சாகப்படுத்தினான்.

பின் கடிகாரத்தை பார்த்தவன் விழிவிரித்தான் “காட்..... இட்ஸ் 9:10 நவ்” தனக்குள் பேசிக் கொண்டவன்.

“மாயா.. ஹேய் மாயா.. கமான் பேக் அப், இட்ஸ் டைம் டு கோ” என்று அவளை அவசரப்படுத்தினான்.

மாயாவை அவளது வீட்டில் இறக்கிவிட்டவன்.

“ஈவனிங் சிக்ஸ் ரெடியா இரு, வீ ஆர் கோயிங் அவுட்” என்றான் வசீகர புன்னகையுடன்.

மாயாவிற்கு இன்ப அதிர்ச்சியில் பேச்சே வரவில்லை, விழிகள் விரிந்தன.

அவளது இன்ப அதிர்ச்சி பெரும் இடியாக மாறப் போவது தெரியாமல்.



காதலென்பது.......தொடரும்......

உன் வாழ்க்கையை உனக்கு பிடித்தார் போல் மாற்றிக்கொள்

கார்குழலி
 

கார்குழலி

Saha Writer
Team
Messages
22
Reaction score
1
Points
1
7
"தருண்.. ஏ….. தருண்" எதுக்குடா நீ இந்த வேலை எல்லாம் செய்யற, ஏறங்கு கீழ" என்று கத்திக்கொண்டிருந்தார் விஜயா,

லாப்டிலிருந்து எட்டிப் பார்த்தவன்" இன்னும் கொஞ்சம்தான் மா, இந்த வேண்டாததை எல்லாம் எடுத்து கீழபோட்டுட்டு இறங்கிடறேன்" என்றான்.

"எங்கயாவது மாப்பிள்ளையா லட்சனமா இருக்கியா?" புலம்பியபடியே மகன் எடுத்துக் கொடுக்கும் சாமானைஎல்லாம் வாங்கி கீழே வைத்தார்.
அப்போது
"விஜயா" என்று கூப்பாடு போட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தார் கேசவன்.

"இருடா வரேன் உங்க அப்பா வந்துட்டார், எதையும் உடைக்காம பாத்து பத்திரமா எடு" என்றபடிவெளியேறியவர்,


"காசி கொஞ்சம் தருணுக்கு உதவி செய்" என்று வீட்டு வேலையாளுக்கு உத்திரவிட்டு விட்டு கேசவனைதண்ணீருடன் எதிர்கொண்டார்.


அதனை வாங்கி பருகிய கேசவன் "அப்பாடா" என்று சோபாவில் அமர்ந்தார். வெளிய பயங்கர வெயில் தலகாட்ட முடியல. ஏதாவது ஃபோன் வந்ததா" என்று கேட்டுக் கொண்டே தான் கொண்டு வந்திருந்த பையில்இருந்த பத்திரிக்கைகளை பாயின் மீது வைத்தார்.


“சமையல் ஆள் போன் பண்ணாங்க மளிகை சாமான் வாங்க பணம் அனுப்ப சொன்னாங்க" அவர் எடுத்து வைத்த பத்திரிக்கையை அதற்குரிய இடத்தில் வைத்து விட்டு அவரது செல்போனைஎடுத்து வந்து அவரிடம் நீட்டினார்.

"சரி நான் பேசுறேன்" என்று செல்பேசியை பெற்றுக் கொண்டு எண்களை அழுத்தி காதுக்கு கொடுத்தார்.

ஃபோனை வீட்டில் பெரும்பாலும் மறந்து செல்வது அவரது வழக்கமாகி விட்டது. அதனால் விஜயாவிற்கும் அதுபழகிவிட்டது. ஃபோன் பேசி விட்டு நிமிர்ந்தவரின் முன் பழசாறுடன் நின்ற விஜயாவிடன் ஃபோனைகொடுத்தவர்,


பழசாரை பெற்றுக் கொண்டு "தருண் எங்க??” என்று கேட்டார


" அவன் அவனுடைய ரூமையே தலைகீழா போட்டு சுத்தம் செய்றான் மருமகள் வரும் போது ,இது என்னசொர்க்கமான்னு கேக்கணுமாம்" என்றார் சிரித்துக் கொண்டே ,


அப்போது கேசவனின் உதடுகளிலும் புன்னகை அரும்பியது.


மகனின் சந்தோஷத்தில் அந்த பெற்றோர்களின் சந்தோஷமும் அடங்கியிருந்தது..

நாளை காலை பத்து மணிக்கு அவர்களின் சொந்த ஊரான தஞ்சாவூரிலிருந்து இரண்டு பஸ் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது, மாலை நான்கு மணிக்குள் அவர்கள் மண்டபத்திற்கு வந்துவிடுவார்கள். இவர்களது குடும்பவழக்கப்படி பெண் அழைப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ரிசப்ஷன் எல்லாம் இவர்கள் பழக்கத்தில்இல்லை. பெண்ணும் மாப்பிள்ளையும் மணமேடையில் தான் சந்திக்க வேண்டும் என்பது தான் அவர்களதுபழக்கம்.

அதே போல் இந்த கால ரிசப்ஷன் முறையும் வேண்டும் என்று தருண் ஆசைப்பட்டதால் காலை திருமணம் மாலைரிசப்ஷன் என்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மாலைக்குள் அவன் சொன்னது போலவே அவனது அறையை சொர்க்கமாக மாற்றியிருந்தான் தருண். அந்தஅறையை சுத்தம் செய்யும்் போதே அதில் அவனும் ஆர்த்தியும் கழிக்கப் போகும் பொன்னான தருணங்கள்அவன் மனக்கண்ணில் தோன்றி மறைவதை அவனாலும் கட்டுப்படுத்த முடியவில்லை.

மூவரும் காப்பி சாப்பிட்டுக் கொண்டே கல்யாண ஏற்பாடுகளை பற்றி பேசிக் கொண்டிருக்க வாசலில் கார்சத்தம் கேட்டது.." இதோ .... உங்க சோம்பேறி பொண்ணு வந்துட்டா, சொந்த தம்பிக்கு கல்யாணம், ஏன்இவ்வளவு சீக்கிரம் வந்தா இந்த மகாராணி, முகூர்த்தத்துக்கு வந்தா பத்தாதா?" என்று முகவாயை திருப்பிக்கொண்டாள் விஜயா. கேசவனுக்கு சிரிப்பு தான் வந்தது.


அதற்குள் தருண் வெளியேறியிருந்தான் அக்காவின் மகள் கீர்த்தி வந்திருப்பாளே. வீட்டிற்குள்ளிருந்து விரைந்துவரும் மாமாவை பார்த்து விட்ட கீர்த்தி. "மா....மா...மா...மா... " என்று மழலையில் பேச, ஓடோடி வந்து அவளைதன் கைகளில் ஏந்தி முத்த மழை பொழிந்தான்.

"என்ன மாப்பிள்ளை சார் வரவேற்ப்பெல்லாம் உங்கள் மருமகளுக்கு மட்டும் தானா?" என்றபடி இறங்கிய மாமாகார்த்திக் பொய்யாய் குறைபட


"வாங்க மாமா, வாக்கா" என்றபடி அவர்களது பெட்டியில் ஒன்றை கையில் பிடித்துக் கொண்டு அவர்களோடுபேசியபடி உள்ளே நுழைந்தான். பேத்தியை பார்க்கும் வரை தான் விஜயாவின் கோபம் நிலைத்திருந்தது. அந்தமழலை"தாத்தா பாத்தீ" என்றதும் தன் கோபத்தையெல்லாம் விட்டு விட்டு பேத்தியை நெஞ்சாரத் தழுவி உச்சிமுகர்ந்தார். அதேநேரம் பின்னோடு தன் இடையை வளைத்து தோளில் முகம் புதைந்தாள் மகள் மிருதுளா.

"சாரிமா .... அடுத்த வாரம் அமெரிக்கா கிளம்பறதால அத்தை மாமா எல்லாருக்கும் தேவையானதை செஞ்சுகொடுத்து ,பேங் வேலை ,போஸ்ட் ஆபீஸ் வேலை அப்படி இப்படின்னு வேலையே சரியா இருந்தது. அதான்சீக்கிரம் வரமுடியல சாரிம்மா...சாரி..." என்று விஜயா பேசும் வரை விடாமல் சாரி சொன்னாள்.

ஒருவாறு எல்லோரும் சமரசமாகி விட அங்கே விருந்துபசாரம் அமர்க்களப்பட்டது.

தருணின் அறை அலங்காரத்தில் விழி விரித்த மிருதுளா.என்னடா இது ... பயங்கர மாற்றமா இருக்கே. அழுக்குதுணியை கூட ஒழுங்கா எடுத்து வைக்க மாட்ட உன் ரூமா இது " என்று ஆச்சர்யப்பட்டாள்.


" அது…. அது…. பந்தக்கால் வெச்சதும் வெளிய எங்கயும் போகக் கூடாதுன்னு அம்மா சொல்லிட்டாங்க. அதான் சும்மா டைம் பாஸுக்கு பண்னேன் " என்றான் அசடு வழிந்தபடி.

"போதும் போதும் தொடச்சிக்கோ ரொம்ப வழியுது" என்றாள் மிருதுளா அட போக்கா, சும்மா என்னையேநோண்டிக்கிட்டு, அங்க பாரு மாமா யாரு கூடவோ ரொம்ப நேரம் வாட்ஸ்அப்ல சேட் பண்றாரு, அவர முதல்லகவனி" என்றபடி கீர்த்தியின் பின்னோடு வெளியே போர்ட்டி கோவிற்கு சென்றுவிட்டான். தம்பியின் வெட்கத்தில்சந்தோஷமாக சிரித்தாள் மிருதுளா.
காதலென்பது.......தொடரும்......
உன் வாழ்க்கையை உனக்கு பிடித்தார் போல் மாற்றிக்கொள்
கார்குழலி
 

கார்குழலி

Saha Writer
Team
Messages
22
Reaction score
1
Points
1
8

மாயாவின் அழகில் ஓர் நொடி தன்னையே மறந்தான் பிரதீபன். மெரூன் கலர் கவுன் போன்ற உடை அவளதுகணுக்கால் வரை நீண்டிருந்தது.அவளது வெண்ணிற மேனியை அந்த உடை மேலும் அழகு படுத்தி காண்பித்தது. உடைக்கு ஏற்றார் போல் ரூபியால் ஆன பென் டெண்ட், வைரத்தால் ஆன பிரேஸ்லட், தலையை லூஸ்ஹேராக விட்டு கேர்ல் செய்திருந்தாள். காதில் வைரம் பதித்த இலை வடிவில் ஆன தொங்கல் அவளது முகஅசைவிற்கு ஏற்றார் போல் அழகாக அசைந்தது. உடை துணியிலேயே செய்யப்பட்ட சின்ன மெரூன்கலர் கைப்பை ஆங்காங்கே கற்கள் பதித்து கண்ணை கவர்ந்தது. மொத்தத்தில் அவனுடைய மாயா எத்தனைஅழகு என்று தன்னைதானே "பிரதீப்...அதிர்ஷ்டசாலிடா நீ" என்று மானசீகமாக தட்டிக்கொடுத்துக்கொண்டான்.





வாசல் வரை வந்து இவர்களை வழியனுப்பி விட்டு மனநிறைவுடன் உள்ளே சென்றார்கள் நர்மதா - வினாயகம்தம்பதியினர் (மாயாவின் பெற்றோர்) காரில் அமர்ந்து காரை கிளப்பிக் கொண்டு மெயின் ரோட்டில் ஏறும் வரைபிரதீபன் எதுவும் பேசவில்லை





"யூ ஆர் மைண்ட் புளோயிங்" என்றான் ஒற்றை வரியில்.





."எஸ்... ஐநோ!" என்றாள் உள்ளடக்கிய சிரிப்பில். பதிலுக்கு அவள் அவனைப் பற்றி ஏதாவது சொல்லுவாள்என்று எதிர்பரர்த்தான். ஏனென்றால் அவனும் அன்று அதிக நேரமெடுத்து தன்னை தயார் செய்து கொண்டுவந்திருந்தான். ஆனால் அவள் எதுவும் சொல்லவில்லை.



சிறு முகமாற்றத்திற்கு பிறகு அவன் வேறு எதுவும் பேசவில்லை. மாயா மனதிற்குள் சத்தமாகசிரித்துக்கொண்டாள், ஓரக்கண்னால் பிரதீபனையே பார்த்துக் கொண்டிருந்தாள். சில நிமிடங்களில்அவர்களது கார் ஓர் ஃபைவ்ஸ்டார் ஹோட்டலின் முன் நின்றது. முதலில் இறங்கி காரை சுற்றி வந்து மாயாவின்பக்கக் கதவை திறந்து விட்டான் பிரதீபன். கண்கள் மின்ன ஒயிலாக இறங்கினாள் மாயா. கார் சாவியை அங்கேநின்று கொண்டிருந்தவனிடம் கொடுத்துவிட்டு ஹோட்டலிலுள் மாயாவின் கையை பிடித்தபடியே சென்றான் பிரதீபன்.

அவர்அகளுக்ங்கேகான பிரத்யேக பார்ட்டி ஹால் தயார் நிலையில் இருந்தது . மங்கலான விளக்கொளியில் நாசியை வருடும்மலர் வாசத்தில் மென்மையாக காதுக்குள் தேனாய் பாயும் மெல்லிசையில் இருவருக்குமான டேபிள்போடப்பட்டிருந்தது. சுற்றியும் ஹார்டின் வடிவிலான பலூன்கள். ஆங்காங்கே சிகப்பு ரோஜாக்கள் சுவற்றிலும் ஃபிளவர் வாஷிலும் நிறைந்திருந்தது.அந்த சுற்றுப்புறமே மாயாவின் இதயத்தை லேசாக்கியது.



உள்ளே நுழைந்ததும் தங்களுக்காக போடப்பட்டிருந்த டேபிளில் இருந்த ரோஜா பூக்கள் நிறைந்தபொக்கேவை எடுத்து அவளிடம் நீட்டினான். அதனை இன்முகத்துடன் பெற்றுக் கொண்டவள் டேபிளுக்கருகில்இருந்த திவானில் வைத்தாள்.





டேபிளின் இருபுறமும் அதிக வேலைப்பாடுடன் கூடிய பிரம்மாண்டமான இருக்கை போடப்பட்டிருந்தது. அதனைசேர் என்றும் குஷன் என்றும் சொல்லி விட முடியாது. கிட்டத்தட்ட இருவர் தாராளமாய் அமரும் சோபாவைபோல் இருந்தது. அவளது கைப்பற்றி அழைத்து சென்று அவளது இருக்கையில் அமரவைத்தவன். சுற்றிக்கொண்டு வந்து எதிர் இருக்கையில் அமர்ந்தான்.





வெல்கம் டிரிங் அவர்களுக்காக காத்துக் கொண்டிருந்தது. ஒருவரை ஒருவர் பார்த்தபடியே. அதனை ருசித்துபருகி முடித்தார்கள்.





கைகளை அவள் புறம் நீட்டி "ஷெல் வீ டான்ஸ்" என்றான் மயக்கும் புன்னகையுடன். பதிலேதும் பேசாமல்அவளது கரத்தை அவனுடைய கரத்தின் மேல் வைத்தபடி எழுந்தாள். இசைக்கேற்ப அவர்கள் மெல்லஅசைந்தார்கள். மாயாவின் வலது கையை அவன் இதயத்தில் பதித்தவன். மறுகையை பற்றி அவன் கரத்தோடுகோர்த்துக் கொண்டான்.அவனது மறு கரம் அவள் இடையை சுற்றிவளைக்க. மிக மிக அருகருகில் ,இருவரின்மூச்சுக்காற்றும் ஒன்றறோடு ஒன்று உரச கண்கள் நான்கும் கலக்க, உடலை அசைத்தபடி ஆடினார்கள்.





இருவருக்குள்ளும் இன்ப அதிர்வுகள்,இதுதான் என்று சொல்லி விட முடியாத உணர்வு. அவனது இதயத்துடிப்பைஅவளால் உணரமுடிந்தது, அவளது உடல் சிலிர்ப்பை இவனால் உணர முடிந்தது. நேரமாக ஆக அவள் அவன்நெஞ்சிலேயே சாய்ந்து விட்டாள். இது தான் சொரக்கமா? இவனுக்காகத் தான் நாம் பிறந்தோமா? என்றுஏதேதோ எண்ணங்கள் அவள் மனதில் , அவனும் அவளை தன்னோடு அணைத்துக் கொண்டான்.





இப்போது அவள் கண்களையும் மூடிக் கொண்டு அவனை முழுவதுமாக உணர முயன்றாள். நெஞ்சில்சாய்ந்திருந்த அவளது தலையின் மீது தன் கன்னத்தை வைத்து அவனும் விழி மூடினான்



இசைக்கேற்ப அவர்கள் அசைந்து கொண்டிருந்தனர். எத்தனை நேரம் இப்படியே கழிந்ததோ இருவருக்குமேதெரியாது. அந்த மோன நிலையை கலைத்தவன் பிரதீபன் தான்





அவளை தன்னிடமிருந்து சிறிது விலக்கி நிறுத்தினான் புரியாமல் விழித்தவளின் நெற்றியில் இதழ் பதித்து. தன்இடது கரத்தால் அவளது கரத்தை விட்டு விடாமல் பிடித்தவன் தன் வலகரத்தால் கோட் பாக்கெட்டிலிருந்து சிறுபெட்டியை எடுத்தான்.அதனை பார்த்ததுமே மாயாவின் விழிகள் விரிந்தன. அதிலிருந்த மோதிரத்தை எடுத்தவன்இடது கரத்தை அவள் முன் நீட்டி "மே... ஐ" என்றான் ஒற்றை புருவம் உயர்த்தி. எல்லையில்லா சந்தோஷம்மனதில் பரவ உடனே தன் வலது கரத்தை அவன் கரத்தின் மீது வைத்தாள். வைரங்களால் இழைக்கப்பட்ட ஓர்அழகிய ரிங்கை மாயாவின் மோதிரவிரலில் அணிவித்தான் பிரதீபன். போனசாக அந்த மோதிரத்தில் ஓர்முத்தமும். அவனது மீசை முடிபட்டு குறுகுறுத்த அவளது நெற்றியும் விரலும் அவளை மேலும் சிவக்க வைக்க. இனி இங்கேயே நின்றால் சரிவரது என்பதையுணர்ந்த பிரதீபன் அவள் கைப்பற்றி நடந்து இருக்கையில் அமரவைத்துவிட்டு, தன் கோட்டை கழட்டி இருக்கையின் ஓரத்தில் வைத்து விட்டு அவள் எதிரில் சேப் சோனில் (safe zone) அமர்ந்து கொண்டான்

காதலென்பது.......தொடரும்......

உன் வாழ்க்கையை உனக்கு பிடித்தார் போல் மாற்றிக்கொள்

கார்குழலி
 

கார்குழலி

Saha Writer
Team
Messages
22
Reaction score
1
Points
1
9

கம்பீரமாக தன் எதிரில் அமர்ந்திருப்பவளை பார்த்து இவன் தன்னவன் என்று நினைக்கும் பொழுதே இதயம்தித்தித்தது.

அவன் ஏற்கனவே ஆர்டர் கொடுத்திருந்த உணவு வகைகள் டேபிளில் அணி வகுத்தன..கூடுதலாக மாயாவிற்குஎன்ன வேண்டுமோ அதனை கேட்டு பேரரை கொண்டு வரச் சொன்னான்.

ஒருவரை ஓருவர் பார்த்துக் கொண்டு, இன்னிசையை கேட்டுக் கொண்டு அங்கே இருந்த உணவுகளில் எதைசாப்பிட்டோம் என்பதே தெரியாமல் இருவரும் சாப்பிட்டு முடிக்க, இறுதியாக ஐஸ்கிரீம் அவர்களின் முன்புவைக்கப்பட்டிருந்தது.

ஆனால் இருவருக்குமே அதனை உண்ணத் தோன்றாமல் பார்த்துக் கொண்டிருந்தனர், அந்த விழியீர்ப்புவிசையில் ஈர்க்கப்பட்டவனாக பிரதீபனின் கைகள் அவளது மென்கரத்தை பற்றின அப்போது தான் பதட்டத்தில்அவள் ஒரு தவறை செய்துவிட்டாள்.

இதுபோல் தனியாக டின்னர் சாப்பிட விருப்பப்படுபவ்ர்களை தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காக எந்தஊழியரும் உள்ளே இருக்கமாட்டார்கள்.

அவர்களை கூப்பிட வேண்டும் என்றால் சாப்பாட்டு டேபிளின் பக்கவாட்டில் இருக்கும் ஓர் பட்டனை தட்டினால்போதும் அவர்களுக்கு அவர்கள் பகுதியில் அலாரம் சவுண்ட் கேட்டு உள்ளே வருவார்கள்.

கிறக்கமான பார்வையோடு தன் கரத்தை பிரதீபன் பற்ற பதட்டத்தில் மாயா அந்த பட்டனை தன்னையறியாமல்அழுத்தி விட்டாள். அதனை அழுத்தியதை முதலில் அவள் உணரவேயில்லை. அவள் தான் பிரதீபனிடம்சரணடைந்து விட்டாளே.

“டக்” என்று கதவை திறந்து கொண்டு பேரர் உள்ளே வர பதட்டத்துடன் தன்னிச்சையாக தன் கைகளைஅவனிடமிருந்து உருவி கொண்டாள் மாயா.

அவ்வளவுதான் பிரதீபனின் கோபம் எல்லை மீறியது.

“யூ இடியட் யார் உன்னை இப்போ கூப்பிட்டது.டோன்ட் யூ ஹவ் சென்ஸ், கால் யுவர் மேனேஜர்” என்றுகர்ஜித்தபடி எழுந்துவிட்டான்.

அவன் கத்தியதும் தான் மாயா நடப்பிற்கு வந்தாள். எதிரில் தலைகுனிந்தபடி நின்ற பேரரை பார்க்க பாவமாகஇருந்தது.

சட்டென எழுந்து பிரதீபனின் புறம் நடந்தவள் அவன் புஜத்தை பிடித்து “காம் டவுன் பிரதீப், ப்ளீஸ்” என்றாள்.

“என்ன காம் டவுன், திஸ் இஸ் அவர் பிரைவசி இஸ்யூ” என்றான் கோபம் துளியும் குறையாமல்.

அப்போதும் பேரர் எதுவும் பேசவில்லை.

“சொல்லு.. நீ ஏன் உள்ள வந்த, போன்ல வீடியோ எடுத்தியா? இல்ல போட்டோ” என்று தாறுமாறாகயோசித்தான் பிரதீபன்.

“அய்யோ சார் .. இல்ல சார்” என்றான் முகம் வெளிற.

“அப்போ நான் கூப்பிடமா நீ எப்படி உள்ள வரலாம்:” கர்ஜித்தான்.

“சார் நீங்க கூப்பிட்டுதால தான் சார் நான் வந்தேன்” என்றான் கைகளை பிசைந்தபடி

“என்ன??!!...” அவனை எரித்துவிடுவது போல் பார்த்தான்.

“ஆமாம் சார் அலாரம் அடிச்சதும் தான் நான் வந்தேன்” என்றான் நடுக்கத்துடன்

“வாட் ரப்பிஸ்” முகம் சுளித்தான்.

“கால் யுவர் மேனேஜர்” என்றான் கடுங்கோபத்துடன்.

இதற்குள் மாயாவிற்கு ஓரளவு விளங்கிவிட்டது.

அவள் அப்போது தடுமாற்றத்தில் அழுத்தியது அந்த பட்டனை தானோ என்று யோசிக்கும் போதே அப்படித்தான்இருக்கும் என்பதும் புரிந்தது.

“ஷ்..... ஷ்... காம் டவுன் பிரதீப்... லிசன் டு மீ.” என்றாள்.

“நீ குறுக்க வராத மாயா இவங்களுக்கெல்லாம் எத்திக்ஸ்னா என்னன்னு சொல்லி கொடுக்கனும்.”

“ப்ளீஸ் லிசன் டு மீ பிரதீப் நான் தான் தெரியாம அலாரம் பட்டனை பிரஸ் பண்ணிட்டேன்” என்றாள்சங்கடத்துடன்.

“வாட்!” என்று நம்ப முடியாமல் இவள் புறம் திரும்பினான்.

“ஆமாம் பிரதீப், நான் தான் ஏதோ பதட்டத்துல... தெரியாம”

அவள் பேசமுடியாமல் திணறுவதை அவனால் சகிக்க முடியவில்லை.

“இ.. இட்ஸ்... ஓகே .. மாயா.. நோ பிராப்ளம்” என்று அவள் கைப்பற்றி அவளை சமாதானம் செய்தான்

அப்போதும் அங்கேயே தலைகுனித்து நின்று கொண்டிருந்த பேரரை பார்த்து “யூ கேன் கோ” என்றான்அதிகாரமாக.

“ஒரு நிமிஷம்” என்று அவனை தடுத்த மாயா

“ஐ அம் சாரி.. “என்றபடி அந்த மங்கலான ஒளியிலும் அவனது பேட்ஜை படித்து

“ஐ அம் சாரி ராம்குமார்” என்று வருத்தத்துடன் சொன்னவள் நிமிர்ந்து பிரதீபனை பார்த்தாள்

அவன் நிச்சயம் சாரி சொல்வான் என்று நம்பினாள் ஆனால் அவனோ இறுக்கமாக இதழ் இரெண்டையும்மூடியபடியே நின்றான்.

ராம்குமாருக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை

“ஐ அம் வெரி சாரி மேடம், சாரி சார்” என்று கூறிவிட்டு ஓட்டமும், நடையுமாக அந்த அறையிலிருந்துவெளியேறினான்.

மாயாவை ஒரு முறை முறைத்தவன் வேகமாக நடந்து சேரில் தொங்கிக் கொண்டிருந்த அவனுடைய கோட்டைஎடுத்தான்.

அவன் வெளியேற போகிறான் என்பது புரிய தன் கையை உயர்த்தி அவனை தடுத்தாள்

அவளை கேள்வியாய் அவன் பார்க்க “இப்போ என்ன ஆச்சுன்னு உனக்கு இவ்வளவு கோபம்?”

“...................”

“தப்பு செஞ்சவங்களை கண்டபடி திட்டலாம்னா, இப்போ தப்பு செஞ்சது நான் தான்னு தெரிஞ்சிருச்சுல என்னதிட்டு பிரதீப் ஏன் அமைதியா போற”

“.........” எதுவும் பேசாமல் அவளை விசித்திரமாக பார்த்தான்.

“திட்டு பிரதீப்” அவன் கைகளை பிடித்து உலுக்கினாள்.

“நீயும் அவனும் ஒன்னா?” என்றான் அடக்கப்பட்ட கோபத்துடன்

“இது தான் பிரதீப் பிரச்சனை , இங்க தப்பு, சரி ஒரு இஷ்யூவே இல்ல, யார் செஞ்சதுங்கிறது தான் இஷ்யூ” குரலில் ஒருவித இறுக்கத்துடன் பேசியவள் அவனுக்கு சற்றும் குறையாத கோபத்துடன் பேசி அவனை உற்றுப்பார்த்தாள்.

“நீ அவ்ர்கிட்ட சாரி கேட்டிருக்கனும்” என்றாள் அவனை குற்றம் சாட்டும் தொனியில்.

“வாட்?!!!”

“நம்ம சொசைட்டில பாதி பேருக்கு இதே மென்டாலிட்டி தான் பிரதீப், பட் ஐ ஹேட் இட், உனக்கு என்னை பத்திதெரியும் தானே”

அவள் சொல்வதும் சரிதான் அவனுடைய குடும்பத்தில் மாயா ரொம்பவே வித்தியாசமானவள், நியாய தர்மம், பாவபுண்ணியம் பற்றி அதிகம் பேசுபவள்.

அவளுக்கு ஏதாவது தவறாக நடந்துவிட்டால் தான் யாருக்காவது தெரிந்தோ, தெரியமலோ தவறுசெய்துவிட்டோமோ என்று யோசிக்க ஆரம்பித்துவிடுவாள்.

ஆனால் இதுவரை அவனிடம் அதிகம் இதுபோல் எதிர்பார்த்ததில்லை ஆனால் இப்போது எதிர்பார்க்கிறாள்அதற்கான காரணத்தையும் அவளே விளக்கினாள்.

அவன் கைப்பற்றி அழைத்து சென்று சேரில் அமர வைத்தாள். இப்போது அவனுக்கு எதிரில் அமராமல்அவனருகில் அமர்ந்தாள். அவன் கரத்தை தன் கரத்தோடு இணைத்து கொண்டவள்.

“இங்க பாரு பிரதீப், வீ ஆர் கோயிங் டு டிராவல் டுகெதர் இன் அவர் லைப்” சற்றுமுன் அவன் அணிவித்திருந்தமோதிரத்தை பார்த்தபடியே பேசினாள்.

“இப்போ என்ன அந்த பேரர்கிட்ட சாரி கேக்கனும் அவ்வளவுதான?” அவளது நோக்கம் புரிந்து கேட்டான்.

“ம்..ச்.. இல்ல பிரதீப், நான் சொல்லவரதே வேற தப்பு யாரு செஞ்சாலும் தப்புத்தான், நமக்கு வேண்டப்பட்டவங்கதப்பு செஞ்சா அது சரியாகாது, சோ நம்ம பியூச்சர்லயும் சரி நீ தப்பு பண்ணினா நான் சுட்டிக் காட்டுவேன், நான்தப்பு செஞ்சா நீ சுட்டிக் காட்டனும் சரியா?” என்று தன் குணாதிசயங்களில் நல்லவை என்று அவளுக்குதெரிந்ததை பிற்காலத்தில் மாற்றிக் கொள்ளும் நிலை வந்து விடக்கூடாது என்ற துடிப்புடனும் கவலையுடனும்பேசியவள் ஒரு வித எதிர்பார்ப்புடன் பிரதீப்பை பார்த்தாள்.

அவளுடைய எதிர்பார்ப்பு அவனுக்கு புரிந்தது. அவள் பற்றியிருந்த தனது கையை திருப்பி அவளது கையைஅழுந்தப் பற்றி தன் வசமாக்கியவன்.

:”சரி மாயா” என்றான் புன்னகையுடன்

அவனது புன்னகையிலேயே எல்லா பிரச்சனையும் தீர்ந்து போனது போல் மாயாவின் முகம் பிரகாசமானது.

காதலென்பது.......தொடரும்......

உன் வாழ்க்கையை உனக்கு பிடித்தார் போல் மாற்றிக்கொள்

கார்குழலி
 
Top Bottom