Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


காதல் செய்வீர்

MANI EZHILAN

New member
Messages
11
Reaction score
3
Points
1
காதல் செய்வீர்
இவ்வுலகில்
எதுவும் செய்யலாம்
ஆதலால் காதல் செய்வீர்...
தோல்விகளிலிருந்து
உன்னைத்
துவளாமல்
பாதுகாக்கும்
தடுமாற்றங்களின் போது
உன்னைத்
தாங்கிப் பிடிக்கும்
போராட்டங்களின் போது
உன் வெற்றிக்குத்
தூண்டுகோலாய்
இருக்கும்
குழப்பங்களின் போது
உன்னைத்
தெள்ளத் தெளிவாக்கும்
காதல் என்பது
கணவன்
மனைவியையோ
மனைவி
கணவனையோ
காதலிப்பது மட்டுமல்ல...
நம் ரத்த
சம்பந்தம்
இல்லாத
ஒருவர்
நம் மீது வைத்த
நம்பிக்கையை
நேசிப்பது...
முயற்சி செய்
முன்னேறு
உனக்குப் பின்னே
நானிருக்கேன்
என்று
தன்னம்பிக்கை தந்து
நமக்காக சிந்திக்கும்
அந்த எண்ணங்களை
சுவாசிப்பது
தன் விரல்களால் கூட
நம்மைத் தொடாமல்
தன் உணர்வுகளால்
தட்டிக்கொடுத்து
நம்மைத்
தாங்கிச் செல்லும்
அந்தத் தூண்களில்
வசிப்பது
தூர இருந்தாலும்
இறுக்கம் குறையாத
நெருக்கத்தை
உணர்த்தி
உன்னை
சோர்ந்து போகாமல்
பாதுகாக்கும் பண்பை
மதிப்பது
தோல்வி, கவலை
விரக்தி, வெறுப்பு
சோர்வு, சோம்பல்
துரோகம், குரோதம்
என
துஷ்ட சக்திகளை
விரட்டியடிக்கும்
இஷ்ட தெய்வங்களே
இந்தக் காதல்...
காதல்
உடல் சம்பந்தப்பட்டது
அல்ல
உணர்வு சம்பந்தப்பட்டது
காதல் வெறும்
உணர்வு அல்ல
உற்ற நண்பன்
ஆதலால்
மக்களே
காதல் செய்வீர்...
 

New Threads

Top Bottom