Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கானல் நீர் காதல் - யாழ் மொழி

யாழ் மொழி

Member
Vannangal Writer
Team
Messages
93
Reaction score
14
Points
8
கானல் நீர் காதல் டீஸர்....



காற்றிலே மெதுமெதுவாக ஈரப்பதம் உலர்ந்து குறைந்து கொண்டே இருந்தது......,



நேற்று கொட்டித்தீர்த்த மழையின் மிச்சம், காற்றில்... ஈரப்பதமாக, இன்னும் உலராமல் நிலைத்துவிட்டது......, அவனின் நினைவுகள் போலவே.....,




அனலன் நேற்று பொழிந்த மழையின் விளைவாய் கொஞ்சமாய் சோம்பல் முறித்து கிழக்கில் தன் கதிர்களை பரப்ப, அந்தத் திருமண மண்டபத்தில் காலை நேர பரபரப்பு தொற்றிக்கொண்டது.



யாழினி வெட்ஸ் ஆனந்தன்



இந்தியாவின் தலைசிறந்த, அதிகாரமிக்க, சீஇஒகளின் பட்டியலில் முதல் இடம் பிடித்த பெண்ணின் திருமணம் என்றால் சும்மாவா, இந்திய கார்ப்பரேட் உலகின், மொத்த கவனமும் ஒருத்தி மேல் இருக்க, அவளின் கவனம் முழுவதும் வேறு ஒருவன் மீது.



கடந்து வந்த ஏழு வருடம், அவளுக்கு சிறை, என்று.?, அவனை விட்டு நீங்கினாலோ, அன்று தொட்டு இன்றுவரை அவன் மட்டுமே அவள் நினைவில், உள்ளம் அவன் நினைவில் ஊமையாக அழுதாலும், கண்கள் சிறிதும் கலங்கவில்லை, கண்களில் ஒரு சொட்டு கண்ணீர் வடித்தாலும் அவன் முன்பு அவள் தோற்றதாக அர்த்தம் ஆகிவிடும், அவன் நினைவுகள் ஒருபுறம் கொன்றாலும், தின்றாலும், உயிரோடு வதைத்தாலும், அவனின் துரோகம் தான் அவளை இந்த நிலைக்கு உயர்த்தியது.



அவள் யாழினி.....



நேற்று மழை துவங்கிய ஷணத்திலிருந்து, அவன் நினைவுகளின் ஓட்டப்பந்தயம் மூளைக்குள் இடைவிடாது யுத்தம் புரிந்தது, இதயம் முழுவதும் அவன் எண்ண ஊர்வலங்கள், உடல்முழுவதும் தீப்பற்றிக் கொண்டது போன்ற ஒரு உணர்வு, இதோ, இப்பொழுது கூட அவன் தொழுகையையும் பரிசத்தையும் அருகில் உணர்கிறாள்.



விடியல் இன்னும் முழுமையாக நிறைவடையாத காலை வேலையில், அவனை மட்டும் நினைவில் கொண்டு சூரியன் உதிப்பதை இமைக்காமல் பார்த்திருந்தாள் யாழினி.




கண்களின் இரவு முழுவதும் ஒரு பொட்டு உறக்கமில்லை, அசையாது ஒரே இடத்தில் வடித்து வைத்த சிலை போன்று கொலுவிருந்தாள், கால்கள் ஒரே இடத்தில் வேர் ஓடிப்போய் இருந்தாலும், மூளை அதனை உணர மறுத்தது.



காதல் வந்தால் அனைத்தும் மாறிவிடுமோ, இதோ அவளும் மாறிவிட்டாள், உணர்ச்சியற்ற ஒரு பொருளாக, உணர்ச்சி.... என்ற ஒன்று, அவனை நீங்கி அன்றே.... மறுத்து, மரணித்து அல்லவா போய்விட்டது...., பின்.... எங்கிருந்து? அதனை உணர்வது.



இன்று நடக்கும் திருமணம் அவளின் தந்தையை ஒட்டி, அவள் அவரின் மனத் திருப்திக்காக மட்டுமே நிகழ்வது, உணர்வு இல்லாத ஜடத்திற்கு திருமணம் நடந்தால் என்ன?? நடக்காமல் நின்று போனால் என்ன ? அனைத்தும் ஒன்றுதான்.




யாழினி யாழினி .... என அவள் அறையின் கதவுகள் பெரும் சத்தத்துடன் தட்டப்பட,



அவன் நினைவிலிருந்து கலைந்து, பெருமூச்சு விட்டபடி அறையின் கதவை திறந்தாள் யாழினி.



அவளை அலங்கரிக்க வந்த பெண்கள் எல்லாம், தங்களுக்குள் சிரித்தபடி, அவளை திருமணத்திற்கு ஆயத்தப்படுத்த ஆரம்பித்தனர்.



கதை மாலை பதிவு செய்யப்படும்.
 

யாழ் மொழி

Member
Vannangal Writer
Team
Messages
93
Reaction score
14
Points
8
கானல் நீர் -1

காற்றிலே மெதுமெதுவாக ஈரப்பதம் உலர்ந்து குறைந்து கொண்டே இருந்தது......,



நேற்று கொட்டித்தீர்த்த மழையின் மிச்சம், காற்றில்... ஈரப்பதமாக, இன்னும் உலராமல் நிலைத்துவிட்டது......, அவனின் நினைவுகள் போலவே.....,



அனலன் நேற்று பொழிந்த மழையின் விளைவாய் கொஞ்சமாய் சோம்பல் முறித்து கிழக்கில் தன் கதிர்களை பரப்ப, அந்தத் திருமண மண்டபத்தில் காலை நேர பரபரப்பு தொற்றிக்கொண்டது.



யாழினி வெட்ஸ் ஆனந்தன்



இந்தியாவின் தலைசிறந்த, அதிகாரமிக்க, சீஇஒகளின் பட்டியலில் முதல் இடம் பிடித்த பெண்ணின் திருமணம் என்றால் சும்மாவா, இந்திய கார்ப்பரேட் உலகின், மொத்த கவனமும் ஒருத்தி மேல் இருக்க, அவளின் கவனம் முழுவதும் வேறு ஒருவன் மீது.



கடந்து வந்த ஏழு வருடம், அவளுக்கு சிறை, என்று...., அவனை விட்டு நீங்கினாலோ, அன்று தொட்டு இன்றுவரை அவன் மட்டுமே அவள் நினைவில், உள்ளம் அவன் நினைவில் ஊமையாக அழுதாலும், கண்கள் சிறிதும் கலங்கவில்லை, கண்களில் ஒரு சொட்டு கண்ணீர் வடித்தாலும் அவன் முன்பு அவள் தோற்றதாக அர்த்தம் ஆகிவிடும், அவன் நினைவுகள் ஒருபுறம் கொன்றாலும், தின்றாலும், உயிரோடு வதைத்தாலும், அவனின் துரோகம் தான் அவளை இந்த நிலைக்கு உயர்த்தியது.



அவள் யாழினி.....



நேற்று மழை துவங்கிய ஷணத்திலிருந்து, அவன் நினைவுகளின் ஓட்டப்பந்தயம் மூளைக்குள் இடைவிடாது யுத்தம் புரிந்தது, இதயம் முழுவதும் அவன் என்ன ஊர்வலங்கள், உடல்முழுவதும் தீப்பற்றிக் கொண்டது போன்ற ஒரு உணர்வு, இதோ, இப்பொழுது கூட அவன் தொடுகையையும் பரிசத்தையும் வெகு அருகில் உணர்கிறாள்.





உதிர்ந்து விழும்

மழைத்துளிகளுக்கு

இடையே நின்

நினைவுகளை

தேடிப் பார்க்கிறேன்....



தேடலின்

விடை

பூஜ்ஜியம்.....



விடியல் இன்னும் முழுமையாக நிறைவடையாத காலை வேலையில், அவனை மட்டும் நினைவில் கொண்டு சூரியன் உதிப்பதை இமைக்காமல் பார்த்திருந்தாள் யாழினி.



கண்களின் இரவு முழுவதும் ஒரு பொட்டு உறக்கமில்லை, அசையாது ஒரே இடத்தில் வடித்து வைத்த சிலை போன்று கொலுவிருந்தாள், கால்கள் ஒரே இடத்தில் வேர் ஓடிப்போய் இருந்தாலும், மூளை அதனை உணர மறுத்தது.



காதல் வந்தால் அனைத்தும் மாறிவிடுமோ, இதோ அவளும் மாறிவிட்டாள், உணர்ச்சியற்ற ஒரு பொருளாக, உணர்ச்சி.... என்ற ஒன்று, அவனை நீங்கிய அன்றே.... மறுத்து, மரணித்து அல்லவா போய்விட்டது...., பின்.... எங்கிருந்து? அதனை உணர்வது.



இன்று நடக்கும் திருமணம் அவளின் தந்தையை ஒட்டி, அவள் அவரின் மனத் திருப்திக்காக மட்டுமே நிகழ்வது, உணர்வு இல்லாத ஒரு ஜடத்திற்கு திருமணம் நடந்தால் என்ன?? நடக்காமல் நின்று போனால் என்ன ? அனைத்தும் ஒன்றுதான்.



யாழினி யாழினி .... என அவள் அறையின் கதவுகள் பெரும் சத்தத்துடன் தட்டப்பட,



அவன் நினைவிலிருந்து கலைந்து, பெருமூச்சு விட்டபடி அறையின் கதவை திறந்தாள் யாழினி.



அவளை அலங்கரிக்க வந்த பெண்கள் எல்லாம், தங்களுக்குள் சிரித்தபடி, அவளை திருமணத்திற்கு ஆயத்தப்படுத்த ஆரம்பித்தனர்.



உருக வைத்த மெழுகு சிலை போன்று, அந்தப் பெண்கள் சொன்ன அனைத்திற்கும், எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்காமல், அவர்களின் கைகளில் மெழுகு எப்படி வளைந்து குழையுமோ அது போல தன் தந்தைக்காக, அவரின் மகிழ்ச்சிக்காக தயாரானாள்.



சர்வ அலங்காரத்துடன், கம்பன் வரித்த, பெண்ணின் இலக்கணத்திற்கு இலக்கியமாக அழகு சேர்த்தாள் யாழினி, கண்களில் உயிர்ப்பு மட்டும் காணாமல் எங்கோ போயிருந்தது....



கண்களில் உயிர்ப்பையும், உயிரையும் கொண்டு வருபவன், அவளை விட்டு வெகு தொலைவில்.....







கண்ணாடியில் தன்னைப் பார்த்த அவளின் உதடுகள், இயலாமையிலும் விரக்தியிலும் ஒருபுறம் வளைந்தது.



இவ்வளவு அழகு இருந்தும் என்ன பயன்? அதனை ஆராதிக்க அவன் என்னுடன் இல்லையே...., மொத்தத்தில் இந்த அழகு எதற்கும் பயனில்லாதது...., என மனதில் எண்ணமிட்டவள், முகத்தில் எந்த வித பாவனையும் காட்டாது மணமேடையில் இறுகிப் போய் அமர்ந்தாள்.



திருமண சடங்குகள் எல்லாம் எந்தவித குறைவும் இன்றி நடக்க, அவளின் கண்கள் தன் தந்தையை தேடியது, தூரத்தில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தவர் இவளின் தேடுதலை கண்டு அவர் வயதையும் மறந்து அவள் அருகில் ஓடோடி வந்தார்.



என்னாச்சு... என கண்களாலே அவர் அவளிடம் வினவ,



கண்களை அழுந்த மூடி, ஒன்றுமில்லை...., என தந்தை ரகு நந்தனுக்கு பதிலளித்தாள் யாழினி.



மகளின் மறுமொழி கேட்ட தந்தையின் முகத்தில் நிம்மதி பரவியது.



யாழினி பிறந்தவுடன், தாய் இறந்துவிட, கிடைப்பதற்கு அரிய வரம் கிடைத்ததைப் போன்று அவளைக் தாயுமானவன் ஆக மாறி தாங்கினார் ரகுநந்தன்.



21 வயதில் மகள் ஒருவனை விரும்புகிறேன் என்று வந்து நின்றதும், எந்தவித எதிர்ப்பும், மறுப்பும்,தெரிவிக்காமல் அவளுக்கு அவன் விரும்பியவனை மணம் முடித்து வைத்தார்.



ஆறு மாதம் கூட கணவனுடன் வாழாத மகள், வயிற்றில் இருந்த சிசுவை இழந்து, வாழ்க்கையை வெறுத்து, விவாகரத்து என வந்து நின்றதும், தன் மகளின் வாழ்க்கை கண்களால் காணக்கிடைக்காத, நிறைவேறாத கானல் நீர் தானோ என எண்ணியவர், அவளுக்கு உற்ற தோழனாக தோள் கொடுத்து, அன்னையாக மடி தாங்கினார்.



ஒருகட்டத்தில் தனது மகளின் எதிர்காலம் குறித்தும், தன் உடல்நிலை குறித்தும், கேள்வி எழ விளைவு திருமணம்.



புரோகிதர் மந்திரம் உச்சாடனம் செய்து, மங்கள நாண்... தன் கழுத்தில் ஏறும் நேரத்தில், வேறு ஒருவனின் முகம் காரணமே இல்லாமல் அவள் கண்களின் முன்பு மின்னி மறைந்தது.





யாழினி தன் மனதையும், எண்ணப் போக்கையும் நினைத்து அதிர்ந்து, மணமகனின் முகத்தை பார்க்க, அப்பொழுதும் அவள் காதலன், அவள் கணவனின் நினைவே....



தன்னால், மற்றொருவனின் வாழ்க்கை வீணாக போவதை விரும்பாமல், மணமகனின் முகத்தை ஆழ்ந்து நோக்கி, தலையை இருபுறமும் அசைத்து இல்லை..... என்று மறுத்தவள், விலுக்கென்று மணவறையில் இருந்து எழுந்து மண்டபத்தின் வாசலை நோக்கி நடந்தாள்.



தன்னை தடுக்க வந்த அனைவரையும், தன் கோப விழிகளால் சுட்டு தன் பாதையிலிருந்து விலகி வைத்தாள்.



வேகமாக நடை பயிற்றவளின், நடை ஒரு வினாடி தடை உற்றது, அவள் எதிரே அவளை வழிமறித்தது அவளின் தந்தை ரகுநந்தன்.



ஒரு நொடி அவர் முகத்தைப் பார்த்தவள்,



"வேண்டாம்பா...." என்ற ஒற்றைச் சொல்லில் அவரை விலக்கி வேகமாக தன் காரிலிருந்து அவ்விடம் விட்டு அகன்றாள்.





அவளின் "அப்பா..." என்ற ஒற்றை அழைப்பு, எப்போதும் தன் தந்தையிடம், தாயின் அரவணைப்பை தேடும்போது வரும் பிரத்தியோக அழைப்பு, மற்ற சமயங்களில் எல்லாம் அவளுக்கு அவர் நந்தன் மட்டுமே....., ஒரு நண்பனை அழைக்கும் விளிப்பு அது.



இம்மையும் புரியாமல், மறுமையும் தெரியாமல், வேகமாக காரை ஓட்டிக்கொண்டு வீட்டிற்கு வந்தவளின், முகம் கோபத்தில் ஜிவ்வு ஜிவ்வு என சிவந்திருந்தது, காரிலிருந்து இறங்கி தன்னவன் மீது இருக்கும் கோபத்தை எல்லாம் காரின் கதவை அடித்து சாத்தி காண்பித்தவளின், கோபம் அப்பொழுதும் மட்டுப்படாமல் போக, தன் கண்களில் அகப்பட்ட பொருட்களை எல்லாம் அடித்து நொறுக்கினாள்.



இத்தனை நாள் கண்களில் உருவாகாத, கண்ணீரின் தடம் இப்பொழுது அவனுக்காக.....



"ஏன்டா...., என்னை விட்டுப் போனாய்..., நான் என்ன தப்பு செய்தேன்.... உன்னை விரும்பினது மட்டும் தான் நான் செய்த மிகப்பெரிய தவறு....."என கத்திக் கூச்சலிட்டவள், தரையில் அப்படியே மடங்கி அமர்ந்து இரு கைகளால் முகத்தை மூடி குலுங்கி அழுதாள்.



அதே நேரத்தில், அவள் தோளில் கரம் ஒன்று விழ, கரத்தில் தொடுகையை வைத்து யார்...என கண்டு கொண்டவள், கண்ணீர் நிறைந்த கண்களை ஊடே, அந்த கரத்தை தன் கரத்தில் பொத்தி வைத்து தன் தந்தையின் மடியில் விழுந்து கதறினாள்.





"7 வருடம் கடந்து போன பின்பும், என்னால் அவனை மறக்க முடியல அப்பா...., ரொம்ப வலிக்குது...., செத்துப் போயிடலாம்னு தோணுது...., நானும் அம்மா மாதிரி உங்கள விட்டு போய்விட்டால்...., நீங்க தனியா இருக்கணும்..., அந்த ஒரு காரணத்திற்காக தான் நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன்....", என்றாள் நலிந்த குரலில்,



"உனக்கு ஒன்னும் இல்லடா...., ஒன்னும் இல்லை...., உனக்கு கல்யாணம் வேண்டாம்...., அவ்வளவு தானே..., விடுடா..., பாத்துக்கலாம்...", மகளின் வாழ்வு நிலைக்காமல் போனதை எண்ணி வருந்தினாலும் மகளைத் தேற்றும் விதத்தில் பேசினார் ரகுநந்தன்.



"நான் திருமணத்திற்கு தயாராகத்தான் இருந்தேன் அப்பா...., மணமேடை வரைக்கும் போனாலும்...., என்னால் அவனை மறக்க முடியவில்லை...., என் கூட இருக்க எல்லாரும் ரொம்ப சந்தோஷமா இருக்காங்க, ஆனா நான் மட்டும் சந்தோஷமா இல்லை..., அவனில்லாமல் நான் சந்தோஷமா இல்லப்பா..., மூச்சு அடைக்குது...., என்னால சரியா சுவாசிக்க முடியல...., ஒரே... ஒரு..... கேள்வி.... ஏழு வருஷமா... என்னை துரத்துது...., தூங்கவிடாமல் செய்யுது, நான் என்ன தப்பு செய்தேன்...., எதுக்காக அவன் என்னை விட்டு விலகி போனான்...., ஏன்??? அவன் என்னை தேடி வரல.....இப்படி நிறைய..... ஏன்? ஏன்? என்ற கேள்விகளுக்கு என்னோட வாழ்நாள் முடியும் போது கூட என்கிட்ட பதில் இல்லை....., இந்தக் கேள்விகள் என்னை தூக்கத்திலும் துரத்தும் போல் அப்பா.... ", என்றவள் ரகுநந்தனை அணைத்து மூச்சுமுட்ட அழுது தீர்த்தாள்.



காதலன் நினைவுகளை கண்ணீரில் கரைக்க முயன்றாலோ என்னவோ....., எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.



"என்னை மன்னிச்சிடுங்க பா...., மன்னிச்சிடுங்க...., என்னால முடியல.... சாரி பா...."



யாழினியை ஆதரவாக அணைத்த நந்தன் "ஒன்றுமில்லை குட்டி....., இங்க பாருங்க.... அப்பாவ பாருங்க...",



"உங்க கூட நான் இருக்கேன்..... எப்பவும்....,



"போதும்டா...., போதும், நீங்க அழுதது எல்லாம் இது வரைக்கும் போதும், என்றபடி அவளை ஆறுதல் படுத்த முயன்றார்.



"இப்போ..., உனக்கு என்ன வேணும் சொல்லு டா...., அப்பா செய்கிறேன், நீ அழாதே...., எனக்கு நீ மட்டும் தான் முக்கியம்...., மற்றவர்கள் என்ன பேசினாலும்....எனக்கு கவலை இல்லை....,சொல்லுடா கண்ணம்மா...., என்க



" அப்பா எனக்கு இந்த இடத்தை விட்டு...., இந்த சூழ்நிலையை விட்டு...., யாருடைய கண்ணுக்கும் படாமல்....., தூரமா போகணும்...., அவனை மறக்கணும்...., மூச்சு முட்டற இந்த நிலைமை மாறனும், ஏழு வருஷம் இல்லாத என்னோட நிம்மதி...., எனக்கு வேணும் பா...., என்றாள்



"அவ்வளவு தானே...., சரிடா...., நான் ஏற்பாடு செய்கிறேன்..., என்றபடி அவளை அணைத்து ஆறுதல் படுத்தி தலைகோதி தூங்க வைத்தார் நந்தன்.



இதோ,புறப்பட்டு விட்டாள், அவளின் விடுதலையை நோக்கி, அவனின் நினைவுகள் இருந்து முக்தி பெற, முற்றும் துறக்க, புறப்பட்டுவிட்டாள் வேறொரு இடம் நோக்கி....





விருப்புக்கும்

வெறுப்புக்கு

இடையில்

எல்லைகொடு

இட்ட

கொண்டு

தள்ளாடும்

இரு

முனை

கொண்ட

கத்தியாய்

நான்.....





பயணம் தொடரும்.....
 

யாழ் மொழி

Member
Vannangal Writer
Team
Messages
93
Reaction score
14
Points
8
புயலடித்து போன கடற்கரை போல இருந்தது ரகுநந்தனின் வீடு, தன் மகனின் உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுத்து, ஆனந்தன் வீட்டில் கூறிய வசவு சொற்களை எல்லாம் தாங்கிக் கொண்டார் நந்தன்.



பிரச்சனை முடிந்த மறு வினாடியே, யாழினியை டெல்லியில் இருக்கும், தன் தோழன் பாலா வீட்டிற்கு அனுப்ப ஏற்பாடு செய்து விட்டார் நந்தன், அங்கு தன் மகளுக்காக காத்திருக்கும் பெரும் பிரளயத்தை அறியாமல்...

மும்பை டு டெல்லி ரயில் பயணம்....



தன் உடமைகளை அதற்குரிய இடத்தில் திணித்துவிட்டு, தனக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்தால் யாழினி.



இதுபோன்ற ஒரு ரயில் பயணத்தின் முடிவில், மழை நாளில் தான், அவனை சந்தித்தது, மழை வெளியில் தன் துயரத்தை கொட்டித் தீர்க்க, யாழினி உள்ளுக்குள் ரயிலின் தடக்....தடக்.... என்ற ஒலிக்கு இணையாக தன்னவன் நினைவுகளுடன்....

இந்த ரயில் பயணம், அவள் வாழ்க்கையின் பாதையை முழுவதுமாக மாற்று போவதை அப்பொழுது அவள் அறிந்திருக்கவில்லை, யாரை வேம்பு என நினைத்து ஒதுக்கி வைத்தாளோ, தன் வாழ்நாளில் இறக்கும் தருவாயில் கூட எந்த முகத்தை காணக்கூடாது என நினைத்தாளோ, அவனை காண போகிறோம் என்பதை அவள் உணரவில்லை, உணரும் பொழுது..... புரியும் போது.... வாழ்க்கை வேறு முகத்தை, பரிமாணத்தை அவளுக்கு காட்டிக் கொண்டிருக்கும்.



வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்விற்கும், ஒரு காரணம் உண்டு, காரியம் உண்டு, நிகழும் நிகழ்வுகளில் ஒரு பரிமாணத்தை, திசையை, கோணத்தை, மட்டும் கொண்டு, எப்பொழுதும், முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடாது.



காணக்கிடைக்காத, மற்றொரு பரிமாணம், உண்மை, வாழ்க்கையின் பாதையை, இயக்கத்தை மாற்றிப் போடும் வல்லமை வாய்ந்தது.



இருள் மறைத்திருக்கும், காணக்கிடைக்காத, மற்றொரு பரிமாணம் வெளிப்படும்போது, வாழ்வதற்கு வாழ்க்கையோ.... இல்லை, நினைப்பதற்கு அழகான நினைவுகளோ..... எஞ்சியிருக்காது.



யாழினியின் வாழ்வும் இதுபோன்ற தான், அவளின் ஒரு பக்க நியாயத்தை மட்டும் கொண்டு வாழ்ந்து வருபவள், அவள் வாழ்வின் காணக்கிடைக்காத மற்றொரு பரிமாணம் வெளிப்படும் போது, வியப்பின் விளிம்பில், கண்ணீர் தடத்துடன், அடுத்து.... செய்வது என்ன...., என புரியாமல் குழம்பி நிற்கப் போகிறாள்.



இப்பொழுதும்...., அவனை..., சந்தித்த கணத்தை நினைக்கும்போது உதடுகளில் மெல்லிய கீற்றாக புன்னகை விரிந்தது...

இரயில்

ஓடும்

தண்டவளத்துக்கு

இணையாக

எனது

இதயமும்

தடதடக்கிறது.....



எப்பொழுது

எனக்காக

பாச கயிறு

வீசப்படும்

என்று......


அவன், அவளின் கனவுகளில் வாழ்பவன், அவளின் காதலன், கணவன் ரிஷிகேஷ்....



அக்மார்க் பஞ்சாபி, கோதுமை விளையும் மாநிலத்தின் பண்புகளுக்கு சிறிதும் பொருந்தாமல், வீரம் விளையும் தமிழ்நாட்டின் திராவிட நிறத்தைக் கொண்டு பிறந்தவன், அவன் சிறப்பே குழி விழும் கன்னமும், நீலநிறக் கண்களும் தான், அந்தக் கன்னக்குழியில் விழுந்தவள் தான் எழவே இல்லை, எழ மனசு இல்லை என்பதுதான் உண்மை, வெறுப்பது போன்று இன்னும் அவனை விரும்பி கொண்டிருக்கும் அவளிடம் யார் இந்த உண்மையை உரைப்பது.



கல்லூரி வாசம் முடிந்து, வேலையில் சேர்ந்த புதிது, அவளின் முதல் ப்ராஜெக்ட் பஞ்சாப் மாநிலத்தில் என முடிவாகி இருந்தது.



கண்களில் கண்ணீரை நிரப்பிக்கொண்டு, மூக்கு சிவக்க தந்தையை விட்டு, பஞ்சாப்பிற்கு ரயில் ஏறினாள் யாழினி.



சுகமான ரயில் பயணம் முடிந்து பஞ்சாபில் தன் முதல் காலடியை வைக்கும்பொழுதே, பத்திரிக்கையாளர்கள் கூட்டம் அவள் இருக்கும் ரயில் பெட்டியை சூழ்ந்துகொண்டது...



பஞ்சாப்பின் புகழ்பெற்ற அரசியல்வாதி, அவள் பயணம் செய்த அதே பெட்டியில் பயணித்து இருந்தார், அம்மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கு தேவையான முக்கிய ஒப்பந்தம் அதற்கு ஒரு நாள் முன்பு தான் கையெழுத்து ஆகியிருந்தது, ஒப்பந்தம் குறித்து பேட்டி எடுக்க தான் இவ்வளவு கூட்டமும்.



தன்னை சூழ்ந்திருக்கும் கூட்டத்தை விலக்கி செல்லமுடியாமல், மருண்டபடி, நின்றுகொண்டிருந்தவளின் வதனத்தை இரு கண்கள் ரசனையுடன், ஒருவித சுவாரஸ்யத்துடன், கேமராவின் வழியே பார்த்துக்கொண்டிருந்ததது.

உன் ஒற்றை

பார்வையில்

என்னை

வீழ்த்தி.....



என் நெஞ்சில்

ஓர் ஆயிரம்

கூர் வாள்களை

பாய்ச்சி சென்றாய்......


கேமரா படத்தை எப்படி பிம்பத்தை உள்வாங்கி, சேமித்து வைத்துக்கொள்கிறதோ அது போல, அவனும் தன்னவளின் பிம்பத்தை தன் மனதில் சேமித்து வைத்துக்கொண்டான்.



"எக்ஸ்க்யூஸ்.... மீ...ப்ளீஸ்..., என்ற படி தன் லக்கேஜ்களை சுமக்க முடியாமல் சுமந்தபடி அந்தப் பெரும் கூட்டத்தில் இருந்து முழி பிதுங்கி, வெளியில் வந்தால் யாழினி.



பெருமூச்சுவிட்டபடி கம்பெனியில் தனக்கு ஒதுக்கப்பட்ட காட்டேஜ் செல்வதற்கு டாக்ஸியை துழாவ....



"ஹாய்...., குலாபு...., வெல்கம் டு பஞ்சாப்...., யாரைத் தேடுகிறாய்....", என்ற கம்பீரமான குரல் அவள் சிந்தையை கலைத்தது.





குரல் வந்த திசையை நோக்கி திரும்பியவள், தன் கண்முன் நிற்கும் ஆடவனை கேள்வியுடன் நோக்கி, "ஐ யம் சாரி...., எனக்கு நீங்க யாருன்னு தெரியாது...., நீங்க வேற யாரோன்னு நினைச்சி என் கிட்ட பேசிட்டு இருக்கீங்க.... நீங்க நினைக்குற ஆள் நான் இல்லை...., அவள் விளக்க முனைய...





" எனக்கும் நீ யாருன்னு தெரியாது.... நோ ப்ராப்ளம்...., இனிமேல் தெரிஞ்சுக்கிறேன்...., ஹான்..., ஃபர்ஸ்ட் .... என்ன பத்தி நான் சொல்லிடறேன்...., மைசெல்ப் ரிஷிகேஷ்...., வயசு 25 ....., "டெய்லி டைம்" என்ற பத்திரிகையில் சீனியர் ரிப்போர்ட்டராக வொர்க் பண்றேன்..., அப்பா இல்ல...., அம்மா மட்டும் தான்...., வீட்டுக்கு ஒரே பையன்...., நோ ரேஸ்டரிக்ஷன்ஸ்...., மந்த்லி சிக்ஸ்டி தோசண்ட் சேலரி வாங்குறேன்...., சோ செட்டில் அகறதுல ப்ராப்ளம் இல்லை...., உன்னைக் கண் கலங்காம உள்ளங்கையில் வச்சு உன்னோட அப்பா எப்படி பார்த்துக்குவாரோ...., அப்படி பாத்துக்குவேன்...., என தன் சுயசரிதையை அவன் அடுக்கிக்கொண்டே போக,





"ஹலோ..., ஸ்டாப் இட்..., இதையெல்லாம் ஏன்? எங்கிட்ட சொல்றீங்க...., உங்க டீடைல்ஸ் எல்லாம் நான் கேட்டேனா...., என அவள் கோபத்தில் பொரிய,



அவனோ சாவதானமாக "காரணம் இல்லாம நான் எதுவும் செய்யமாட்டேன் குலாபு (வடநாட்டில் ரோஜாவை விளிக்கும் பெயர்)...., என்னோட லைஃப் பார்ட்னர் ஆக போற பொண்ணு கிட்ட தான், நான் என்னை பத்தி எல்லாத்தையும் சொல்லிட்டு இருக்கேன்...., என்று அழகாக தன் காதலை அவளிடம் கூறிவிட்டான் ரிஷி.



அவன் கூறியதைக் கேட்டு அவள் அதிர்ந்து விழிக்க,



" நான் இவ்வளவு பேசுறன்..., உன்னைப்பற்றி ஏதாவது சொல்லு குலாபு...., எப்ப வந்து நான் உங்க வீட்ல நம்ம மேரேஜ் பத்தி பேச...., என காரியத்தில் கண்ணாக அவன் கேட்க,



அவன் கேட்ட எந்த கேள்விகளுக்கு யாதொரு மறுமொழியும் உரைக்காது, தன் லக்கேஜ்களை இழுத்து கொண்டு எதிர்ப்பட்ட டாக்ஸியை நிறுத்தி பறந்துவிட்டால் யாழினி.





மறுநாள் துயில் கலைந்து அவள் விழித்தது என்னவோ ரிஷிகேஷில் முகத்தில்தான்.



கண்களைக் கசக்கி, தன் எதிரில் இருக்கும் உருவத்தைப் பார்த்து பயந்தவள், ஆ..... என்ற அலறலுடன் கத்தி கூச்சலிட,



"ரிலாக்ஸ் குலாபு...., ரிலாக்ஸ்...., நான் தான் ரிஷி...., என அவளை அமைதிப்படுத்தினான் ரிஷி.



கண்களைக் கசக்கி மீண்டும் அவனை நோக்க,



முகம் முழுவதும் புன்னகையில் விகசிக்க, அவள் கண்களை நேருக்கு நேர் ஆழ்ந்து நோக்கி, " நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதில் சொல்லல யாழினி...., சே.... எஸ்.... ஆர்....நோ... என கேட்ட,



"என்னோட பெயர் இவனுக்கு எப்படி தெரியும், நேத்துதான் இவனை பார்த்தேன்...., இரண்டு வார்த்தை கூட இவன் கிட்ட நான் முழுசா பேசல..., அப்புறம் எப்படி? இவன் என்ன பத்தி தெரிஞ்சுகிட்டான்...., என மனதிற்குள் நினைத்தவள் வாய்விட்டு தன் சந்தேகங்களை ரிஷியிடம் கேட்டு விட்டாள்.



அவள் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம், தன் புன்னகையையே பதிலாக தந்தான் அந்த கள்வன்.





அவள் கோபத்தில், மீண்டும் அவனை உறுத்து விழிக்க, இரண்டாவது முறையாக அவளின் கருவிழிக்களில் கரைந்து போனான் ரிஷி.



தன் இரு கைகளை தூக்கி, சரண்டர்.... என உடல் மொழியில் பதில் உரைத்தவன்,



அவள் முகத்தை பார்வையால் பருகிய படி, "அது ரொம்ப சுலபம் குலாபு...., என்னோட ரிப்போர்ட்டர் மூளையை யூஸ் பண்ணி..., உன்னோட கம்பெனி..., டேட்டா பேசை ஹேக் பண்ணிட்டேன்...., தட்ஸ் இட்...., எனக்குத் தேவையான..., உன்னோட டீடைல்ஸ் எல்லாம் கிடைச்சிடுச்சு...., என்றான் கூலாக,



அவன் கூறியதை எல்லாம் கேட்டு யாழினி அதிர்ச்சியில் விழியை விரிக்க....,



மீண்டும் அவளை மயக்கும் மோகன புன்னகையை சிந்தினான் அவன்.



அதில் தெளிந்தவள், " யூ..., யூ...., பிராடு...., சீட்டர்..., என வார்த்தைகளால் அவனை அர்ச்சனை செய்ய,



அவளின் அர்ச்சனையையெல்லாம், தன் மீது விழுந்த பூக்கள் போன்று மென்மையாக ஒதுக்கி தள்ளினான்.





"யா...., மீ..., யூவர் லவர்...., என்றவன், அவள் திட்டி கொண்டு இருக்கும் பொழுதே, அவளின் சொற்களுக்கு ஒரு பறக்கும் முத்தத்தை பரிசாக அளித்துவிட்டு அவள் கன்னத்தை தட்டி, "சீக்கிரம் சந்திக்கலாம்.... என்றான்.



இப்பொழுது அதிர்வது யாழினியின் முறையானது.





அதற்கு மறுநாளும், அவனின் முகத்தில் தான் விழித்தாள் யாழினி, அதே மயக்கும் மோகன புன்னகையுடன், கண்களில் குறும்புடன் அவன்.





" காலைல வந்துட்டான் கடங்காரன்...., என மனதில் நினைத்தவள், தன் வேலையை தொடர்ந்தாள்.





அதன் பின்பு வந்த நாட்களில் இதே வாடிக்கையாகிவிட, சூறாவளி சுழன்று அடிக்கும் காற்றை போல, யாழினியின் வாழ்வை தன் கைகளில் எடுத்து கொண்டான் ரிஷிகேஷ், எதற்கும் நேரம் அளிக்காமல் அடுத்த மூன்று மாதத்தில் யாழினியின் தந்தை நந்தனிடம் பேசி தன் திருமணத்தை முடித்து இருந்தான்.





யாழினி ரிஷிகேஷுன் வாழ்க்கை தெளிந்த நீரோடையாக கடந்து போனது, எல்லாம் நன்றாக தான் இருந்தது அந்த கருப்பு நாள் வரும் வரை....





தனக்குள் தன்னவனின் நினைவுகளில் உழன்று கொண்டு இருந்தவளின் கவனத்தை கலைத்தது ஒரு குரல்....



பயணம் தொடரும்...
 

யாழ் மொழி

Member
Vannangal Writer
Team
Messages
93
Reaction score
14
Points
8
கானல் நீர் 3 & 4...





"அம்மா....., சீக்கிரமா வாங்க...., ட்ரெயின் போயிடும்....,



"வரேன் புஜ்ஜி...., அம்மா லக்கேஜ் கொண்டு வர வேண்டாமா...., ஒரே நிமிஷம் குட்டிமா...., என்ற குரல் யாழினியின் சிந்தையை கலைத்தது.



தன் எதிரில் நிற்கும் ஆறு வயது மழலையை பார்க்கும் போது, அவளுக்கு ரிஷியின் முகம் மின்னலாய் தோன்றி மறைந்தது, அதன் கூடவே தன் வாழ்நாளில் மறக்க நினைக்கும், தன் முகம் காண முடியாத மகவின் நிழல் தடம்.



அவள் கைகள், தன் வயிற்றை இறுகப் பற்றிக் கொண்டது, இப்பொழுது...., இந்த நொடி...., தன் முகம் காணாத, நிழல் உருவமாக தான் கண்ட மழலை, உதிரமாக கரைந்து போன கணம், உணர்ந்த வேதனையை, வலியை, உடலிலும் மனதிலும் உணர்ந்தாள் யாழினி.



தன் மகவின் வரவு, தன் வாழ்க்கையை, தங்கள் உறவை, காதலை, அடுத்த நிலைக்கு இட்டுச் செல்லும் என அவள் இருமாந்து இருந்தது எல்லாம், ஒரு நொடியில் கலைந்து, கனவாகிப் போனது.



நீயும்

நானும்

நாம்

ஆவோம்

என

நான்

இறுமாந்து

இருக்க....,



நீ என்றுமே

நீ தான்

என்று

உணர்த்தி

விட்டாய்

உனது

அனிச்சை

செயலால்......





மகவின் மறைவை தவிப்புடன், கண்ணீருடனும், எதிர்கொண்டவளை அரவணைக்க, ஆதரிக்க, கணவன் உடன் இல்லாதது தான் அவளுக்கு பெரும் வலியே.





கரு கலைந்ததற்கு, தான் மட்டுமே காரணம்...., என அவனும், அவன் அன்னை சாரதாவும், இணைந்து அல்லவா அவளை தூற்றினார்கள்...., சாட்சி கூண்டில் குற்றவாளியாக நிற்க வைத்தார்கள்....



வலி என்பது அவனுக்கு மட்டும் தானா, எனக்கு இல்லையா..., குழந்தை குறித்து எத்தனை கனவுகள் ? எத்தனை கற்பனைகள்? அத்தனையும்.... ஒரே நாளில்..., சீட்டுக்கட்டு மாளிகையைப் போல..., மழைநாளில் தோன்றும் வானவில்லாக...., கரைந்து, மறைந்து, அல்லவா விட்டது.



விழிகளில்கண்ணீர் தடத்துடன், கண்மூடி சுற்றம் மறந்தவளின் நினைவை.....



"ஏன்? ஆன்ட்டி... அழாறிங்க...., எங்கேயாவது அடிபட்டு இருக்கா...., வலிக்குதா...., என்ற மழலையின் குரல் நடப்புக்கு இழுத்து வந்தது.



குழந்தையின் முன்பு, தன் கண்ணீரை காட்ட விரும்பாமல் கண்சிமிட்டி மறைத்தவள், குழந்தையிடம் "இல்லடா குட்டி...., கண்ணுல தூசி விழுந்துடுச்சி...., அதான் கண்ணெல்லாம் கலங்கி இருக்கு...., வேற ஒன்னும் இல்ல....,



"பாப்பா ரொம்ப அழகா இருக்கீங்க...., பாப்பா பெயர் என்ன...., எனக் கேட்க



"பாப்பாவோட பேரு புஜ்ஜி ஆன்ட்டி...., என்றது அந்த சின்ன சிட்டு.



அதற்குள் குழந்தையின் தாய் இடையிட்டு" புஜ்ஜி அமைதியா இரு...., முதல்ல சீட்ல உட்காரு...., என அறிவுறுத்தினாள்.



அதற்கு அந்த சின்ன சிட்டு, முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு, தன் இருக்கையில் அன்னையை திட்டிக்கொண்டே அமர்ந்தது.



"ஹாய்...., நான் ஜானகி...., புஜ்ஜியோட அம்மா..., இவ எப்பவும் இப்படித்தான் சரியான வாயாடி...., ஏதாவது வம்பு செய்வா...., மிரட்டி வைக்கல என்றால்...., இன்னும் கொஞ்ச நேரத்தில் உங்களையே பேசி அழ வைப்பாள்....,என்று ஜானகி கூறிய அனைத்திற்கும் சிரிப்பையே பதிலாக உரைத்தவள்,



புஜ்ஜி நோக்கி கையை அசைத்து தன் அருகில் வருமாறு கூற...



அவள் அழைத்த மறுநொடியே, அந்த சில்வண்டும் யாழினியுடன் ஒட்டிக்கொண்டது.



" உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா ஆன்ட்டி...., எனக்கு என்னோட அப்பாவை தான் ரொம்ப பிடிக்கும்...,, அம்மா எப்ப பார்த்தாலும் என்னை...., அடிப்பா..., திட்டுவா..., அப்பாதான் என்னை செல்லம் கொஞ்சுவார்...., என கூறி கிளுக்கி சிரிக்க,



" எனக்கும், என்னோட அப்பானா...., ரொம்ப பிடிக்கும் குட்டிமா...., என மறுமொழி உரைத்தாள் யாழினி.



அதற்குள் ஜானகிக்கு தன் கணவனிடமிருந்து அழைப்பு வர,



"எக்ஸ்கியூஸ் மீ..., ஒரு ரெண்டு நிமிஷம் புஜ்ஜியை பார்த்துக்கோங்க..., நான் இதோ வந்துடறேன்..., எனக் கூற



"போய்ட்டு வாங்க...., நான் பார்த்துக்கிறேன்..., என்றாள் யாழினி.



யாழினி உடன் இழைந்து கொண்டே, ரயில் கம்பிகளுக்கு அப்பால் தன் கண்களுக்கு தெரியும் காட்சிகள் குறித்து கேள்வி எழுப்பியது அந்த சில்வண்டு.



அவள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் கூறி ஓய்ந்து போனாள் யாழினி.



தன் கணவனிடம் பேசிவிட்டு, போனை புஜ்ஜியிடம் கொடுத்த ஜானகி, ரியாவை பார்த்து "ரியா குட்டி...., அப்பா பேசுகிறார்...., பேசுங்க....", எனக்கூற



ரியா என்ற பெயரை கேட்ட யாழினிக்கோ, உயரழுத்த மின்சாரத்தை மிதித்ததை போன்ற ஒரு உணர்வு, இந்தப் பெயர் ...., தன் உணர்விலும், உயிரோடு கலந்தது அல்லவா, கருவறையில் தன் மகவு சூல் கொண்ட நாளிலிருந்து, அவள் கல்லறைக்குப் போனாலும் , மறக்க முடியாத பெயர், அனுதினமும் ஒருமுறையாவது அவள் உச்சரிக்கும் பெயர் ரியா....



அவளின் முதல் எழுத்தையும், அவளின் முதல் எழுத்தையும், சேர்த்து அவர்களின் மகவிற்கு இருவரும் சூட்டிய பெயர்.



சூழ்நிலையின் பாரம் தாங்காது, தான் இருக்கும் ஏசி கூபேயிலிருந்து வெளியில் ஓடி வந்தவள், மூச்சுமுட்ட அழுது கரைந்தாள்.





"எனக்கு மட்டும் ஏன் இந்த இழிநிலை...., காதல்கொண்டு மணந்தாலும் வாழ்க்கை நிலைக்கவில்லை...., ஆசைகொண்டு கருவை சுமந்தாலும்..., அதுவும் தங்கவில்லை...., ஏன் ???எத்தனை உயரம் பறந்தாலும்..., உயர்ந்தாலும்...., வளர்ந்தாலும்..., அவனின் நினைவுகள்..., என்னை கோழை ஆக்குகின்றன...., புரையோடிப்போன காயத்தினை மருந்திட்டு மாற்ற முயற்சித்தாலும்...., மீண்டும் பச்சை ரணத்தை கத்திக்கொண்டு கீறுவது போல... அவனின் நினைவுகள்.... என்னை வதைக்கிறது..., என நினைத்தவளின் கண்களில் கண்ணீர் மட்டும் நின்றபாடில்லை.



ஒருவாறு தன்னை தேற்றி கொண்டவள், முகத்தை தண்ணீர் கொண்டு, அடித்து கழுவி, கண்ணீரின் தடத்தை யாரும் அறியாவண்ணம் மறைத்தாள்.



உணர்ச்சிகளை யாருக்கும் தெரியாமல் மறைப்பது அவளுக்கு ஒன்றும் புதிது இல்லையே, இல்லையெனில் கடந்து வந்த ஏழு வருடமாக தன் தந்தையின் முன்பும், வெளி உலகிற்கும், தன் உணர்வுகளை முகத்தில் காட்டாது மறைத்து, கை தேர்ந்த நடிகையாக நடித்து இருக்க முடியுமா...., அப்படி முடியாதெனில் அவள் இந்தியாவில் அதிகாரமிக்க, சி இ ஓக்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்க முடியாது.



வாழ்க்கையில் தேவையான இடங்களில் உணர்ச்சிகளுக்கு இடம் அளிக்கலாம், ஆனால் அது எல்லா சூழ்நிலைகளுக்கும் பொருந்தாது.



மீண்டும் முகத்தில் புன்னகை என்னும் வாசம் இல்லாத காகித மலர்கள் சூடி கொண்டு மற்றவர்களை எதிர்கொண்டாள் யாழினி.



ஜானகி ரியாவுடன் ஏதோ பேசி விளையாடிக் கொண்டிருக்க, இவள் ரயில் கம்பிகளின் ஊடே தெரிந்த மலை முகடுகளில், தன் பார்வையை பதித்தபடி தனக்குள் உழன்று கொண்டிருந்தாள்.



ஜானகி ரியாவை, உணவு உண்ண சொல்லி அழைக்க, ரியாவோ உணவு உண்ண மறுத்து தன் விளையாட்டு பொம்மைகளுடன் லயித்துவிட்டாள்.



ஜானகி அவளை, அழைத்து, அழைத்து பார்த்து சலித்தபடி, " ரியா...., உனக்கு சாப்பாடு வேண்டுமா? வேண்டாமா? சே... எஸ்... ஆர்... நோ... எனக்கேட்க



யாழினியின் காதுகளில் ரிஷிகேஷ், தன் காதலுக்கு சம்மதம் வேண்டி நின்ற நினைவுகள் நிழல் பிம்பமாக....,





ரயிலின் தடக்... தடக்....என்ற ஓட்டத்துக்கு இணையாக, அவளின் நினைவுகள் அவனை சுற்றியே வட்டமிட்டது.



ரிஷிகேஷ் ~ யாழினி திருமணம் முடிந்த ஆறாவது மாதம், காலையில் எழும் போது யாழினிக்கு தலையை சுற்றிக் கொண்டு வந்தது.



நாட்களைக் கணக்கிட்டவளின், முகத்தில் வெட்கமும் பயமும் ஒருங்கே உதித்தது.



குழந்தையை எப்படி? வளர்க்க போகிறோம் என்ற பயம் ஒருபுறம் ...., சிறுவயதிலிருந்து பெரிய கம்பெனியின் தலைமைப் பொறுப்பை வகிக்க வேண்டும் என்ற கனவு கலைந்து விடுமோ என்ற அச்சம் மறுபுறம்...,



பயத்தையும், அச்சத்தையும் ஒதுக்கித் தள்ளியவள், மறுநொடியே தான் கருவுற்றிருக்கும் செய்தியை ரிஷிகேஷிடம் உரைத்துவிட்டாள்.



கிடைத்த செய்தியை உறுதிப்படுத்திக் கொள்ள இருவரும் மருத்துவமனைக்கு புறப்பட்டனர், தங்கள் மகிழ்ச்சியின் ஆயுட்காலம் மிகக்குறைவு என்பதை அறியாமல்.





யாழினிக்கு அடிப்படை மருத்துவ பரிசோதனைகளை முடித்த அந்த பெண் மருத்துவர், அந்தச் செய்தியை வருத்தத்துடன் அவர்களிடம் உரைத்தார்.



"சாரி மிஸ்டர் அண்ட் மிஸஸ் ரிஷி ...., யாழினியோட கர்ப்பப்பை ரொம்ப வீக்கா இருக்கு...., அவங்களுக்கு இது ஹை ரிஸ்க் பிரேக்னன்ஸி..., எந்த நேரம் எது வேண்டும் என்றாலும் நடக்கலாம்..., பைவ் மந்த் யாழினி பெட் ரெஸ்ட்ல தான் இருக்கணும்...,, மற்றபடி பயப்பட ஒன்றுமில்லை...,, யாழினி பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்..., என சொல்லிவிட்டு தேவையான மருந்துகளை பரிந்துரை செய்தார்.





ரிஷிகேசும் யாழினியை, உள்ளங்கையில் வைத்து தாங்கினான்.



யாழினி கருவுற்று ஒரு வாரம் கடந்திருந்தது, அன்று காலை ஏனோ...., மசக்கை அவளை படுத்தியெடுக்க பெட்டை விட்டு எழ முடியாமல் படுத்து கிடந்தாள். ரிஷிகேஷ் அவளிடம் சொல்லிவிட்டு அலுவலகம் புறப்பட்டுவிட்டான்.



இது தான் சரியான நேரம் என நினைத்த சாரதா அவளை பொரிய ஆரம்பித்து விட்டார்.



யாழினியின் உடல்நிலை குறித்த விஷயம் அவருக்கு தெரிவிக்கப்பட்டாலும், சராசரி மாமியார் போல யாழினி தன் ஒரே மகனை தன்னிடமிருந்து பிரித்து விடுவாள்,



காதலித்து மணந்ததினால், யாழினி தான் தன் மகனை மயக்கி திருமணம் செய்து கொண்டாள் என்பது அவரின் கணிப்பு, உண்மையில் ரிஷிகேஷ் அல்லவா அவளை பாடாய்படுத்தி எடுத்து திருமணம் செய்து கொண்டான்.



திருமணமான புதிதில், எல்லா தாய்மாருக்கும் ஏற்படும், என் மகன் என்னை விட்டு பிரிந்து போய் விடுவான்...ம், மருமகள் அவனை மூளை சலவை செய்து என்னிடம் இருந்து பிரித்து விடுவாள்..., என்ற விதை அவர் மனதில் வலுபெற ஆரம்பித்திருந்தது, விளைவு யாழினிவுடன் ரிஷி திருமணம் முடித்த நாளிலிருந்து இருவருக்கும் ஏழாம் பொருத்தம் தான்.





யாழினி சாரதா கூறும் அனைத்து வசவு சொற்களையும் ஒரு புன்சிரிப்போடு கடந்து விடுவாள், தன்னை அரவணைக்க.... திட்ட... தாய் தான் அருகில் இல்லை...., மாமியாராவது திட்டுகிறார்.... என்பது அவளின் மனநிலை.



அவளின் பொறுமைக்கும், ஒரு எல்லை உண்டு இல்லையா..., அன்று...அவள் பொறுமை எல்லையைக் கடந்து இருந்தது.





மசக்கை ஒருபுறம் படுத்தி எடுக்க, நிலையில்லாமல் நின்று இருந்தவளின் பார்த்து , சாரதா அப்பொழுதுதான் அந்த வார்த்தையை விட்டார்.



"ஊரு ...,உலகத்துல யாரும் மாசமாக இல்லையா...., இவ மட்டும் தான் இருக்கிற மாதிரி என் பிள்ளையயை படுத்தி எடுக்கிறாள்..., , பேசாம இந்த பிள்ளை நிற்காமலே போயிருக்கலாம்..., என அவர் பேசிக் கொண்டே போக,



"

போதும் நிறுத்துங்க மாதாஜி...., என கண்கள் இரண்டும் கோவைப்பழம் என சிவக்க கத்தினாள் யாழினி.



" என்ன வார்த்தை சொல்லி விட்டார்...., யாராவது தன் குல வாரிசைக், மகனின் ரத்தத்தை..., தானே..., அழிக்க சாபம் விடுவார்களா..., இதோ..., இப்படியும் ஒரு தாய் உலகில் இருக்கத்தான் செய்கிறார்..., குழந்தை எனக்கு மட்டுமா சொந்தம்? அவர் மகனுக்கும் தானே சொந்தம் ...., அதனை ஏன்? மறந்தார் நினைத்தவளுக்கு, கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது.



அடிவயிற்றில் சுளீரென்று வலி விரவிப் பரவியது, கால்கள் எல்லாம் நிலையில்லாமல் தள்ளாடி விழுந்து விடுவது போன்ற நிலைமை, கைகளைப் துழாவி பிடிமானத்திற்கு, ஏதேனும் கிடைக்குமா என பார்த்தாள், எதுவும் கிடைக்கவில்லை, வலி உடல் முழுவதும் பரவி தொப் என்ற சத்தத்துடன் மயங்கி சரிந்தாள் யாழினி.



மூளை தன் உணர்வுகளை இழந்து கொண்டிருக்கும் போது, தன் உதிரத்தின் இழப்பினை அவளால் உணர முடிந்தது.



அடிவயிற்றில் இறுக்கிப் பிடித்தது போன்ற வலி, மெதுமெதுவாக தன் உடைகள் ரத்தத்தில் நினைவதை இறுதியாக உணர்ந்தாள் யாழினி.





அவள் மகவு, தன் தாயின் முகம் காணும் முன்பே, மண்ணுலகில் காலடி தடத்தை பதிக்கும் முன்பே, சாரதாவின் கடும் சொற்களால், தன் தாய் தன்னால் அவஸ்தைப்பட வேண்டாம் என நினைத்ததோ...., என்னவோ..., அவளுக்கு கஷ்டத்தை அளிக்காமல் விண்ணுலகம் சென்று விட்டது.



மயங்கி சரியும் தருவாயிலும் "முடிந்தது எல்லாம் முடிந்தது...., என மெதுவாய் முணுமுணுத்தாள் யாழினி.





மறுநாள் மயக்கம் தெளிந்து கண் விழிக்கும் போது மருத்துவமனையில் இருந்தாள், என்ன நடந்தது...., என ஒன்றும் விளங்கவில்லை, மயங்கி சரியும் போது கால்களுக்கு இடையே வழியும் ரத்தத்தை பார்த்தபடி மயங்கி சரிந்தவள், விழிக்கும் பொழுது மருத்துவமனையில் இருந்தாள்.



அடி வயிறு வலியில் இறுக்கிப்பிடிக்க, இப்பொழுது தன் மகவின் இழப்பை, மறைவை அவளால் நன்கு உணர முடிந்தது.



தாயை தேடும் மழலை போல, அருகில் அவள் தந்தையை தேட, அவர் அங்கு இல்லை..., மாறாக அவள் எதிரில், அவள் கணவன் ரிஷிகேஷ்..., உணர்ச்சி துடைத்த முகத்துடன், இறுகிய கற்பாறையை போன்று நின்றிருந்தான், முகத்தில் மருந்துக்குக்கூட வருத்தம் துளியும் இல்லை.

"ரிஷி...., என்ற அலறல் உடன், அவனை அணைத்து கண்ணீர் உகுக்க,



அவனோ அவள் பிடியிலிருந்து விலகி,



" ஏன் இப்படி செய்தாய் யாழினி? எப்படி ?உனக்கு மனசு வந்தது...., நம்மளோட குழந்தையை கொல்ல...., அவ்வளவு கல்நெஞ்சகாரி நீ...,, ச்சீ.... உன்னை பார்க்கும் போது எனக்கு அருவருப்பா இருக்கு..., உன்னை போய் லவ் பண்ணேன் நினைக்கும்போது...., எனக்கு அசிங்கமா இருக்கு...., என விஷம் தோய்ந்த வார்த்தைகளால் அவளை வதைக்க,



" ரிஷி ...., ப்ளீஸ்...., நான் சொல்றதை கேளுங்க..., நான் எப்படி ? நம்ம குழந்தையை கலைப்பேன் என்று...., நீங்க நினைக்கிறீங்க...., நடந்தது வேறு...., உண்மை தெரியாமல் பேசாதீங்க ரிஷி.., என்றாள் வருத்தத்துடன்,



" நீ சொல்லி நான் கேட்டது எல்லாம் போதும் யாழினி..., , அம்மா என்ன நடந்ததுன்னு எல்லாம் சொல்லிட்டாங்க...., இதுக்கப்புறம் பேச ஒன்றுமில்லை..., போதும்..., என்னோட வாழ்க்கையில உனக்கு இனி இடமில்லை..., போயிடு..., என்னை விட்டு விலகி போய்டு...., என்றவன்.



அதன் பிறகு பேசுவதற்கு ஒன்றுமில்லை என்பதை போல விடுவிடுவென்று அங்கிருந்து அகன்று விட்டான்.



" ப்ளீஸ் ரிஷி...., நான் சொல்றதைக் கேளுங்க..., என்ற யாழினி கதறல் எல்லாம் காற்றிலே கரைந்து போனது.



அதன்பின்பு...,, அவனின் வருகைக்காக அவள் தவமிருக்க, அவனிடமிருந்து வந்தது என்னவோ டிவோர்ஸ் நோடிஸ் தான்.



யாழினி அவனிடம் பேச எவ்வளவு முயற்சி செய்தாலும், ரிஷியிடமிருந்து அவளுக்கு மௌனமே பதிலாக கிடைத்தது.



நீ வேண்டாம் என வாழ்க்கையில் இருந்து விலகி செல்பவர்களை, எத்தனை நாளைக்கு கட்டி வைக்க முடியும், யாழினியும் இதே நிலையில் தான் இருந்தாள், இறுதியில் அவனுக்கு தேவையானதை, அளித்தும் விட்டாள் ஆம் ..., விவாகரத்து அளித்துவிட்டாள்.





வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய அடி தவிர்க்க முடியாத இழப்பு, தாங்க முடியாத வலி, பொறுத்துப் போக முயற்சி செய்தாள் யாழினி , முடியவில்லை...., கத்திக் கதறி அழுதாள், கண்ணில் பட்ட பொருட்களை எல்லாம் அடித்து துவம்சம் செய்தாள், கோபமும் வலியும் கண்ணீரும் கொஞ்சமும் மட்டுப்படவில்லை.





நாட்கள் யாருக்கும் காத்திராமல் ரெக்கை கட்டி பறக்க, ஆறுமாதம் கடந்திருந்தது, அன்று மாலை யாழினிக்கு ஏதோ.., ஒரு பார்சல் ரிஷியிடம் இருந்து வந்திருப்பதாக ரகுநந்தன் உரைக்க, நெஞ்சம் முழுவதும் படபடப்புடன், அதனை பிரித்தவள், தீயை தொட்டது போல கையிலிருந்த காகிதங்களை விசிறி அடித்தாள்.



அது ரிஷிக்கும், வேறு ஒரு பெண்ணிற்கும் நிகழவிருந்த திருமணத்திற்கான அழைப்பிதழ் கூடவே ஒரு கடிதமும்,



"என்னாச்சு குட்டிமா..., என்று நந்தன் யாழினிடம் பதற்றத்துடன் கேட்க,



"அவன் என்னை காதலிக்கவே இல்லை அப்பா..., வேறு ஒரு பெண்ணை கல்யாணம் செய்யப் போறானாம்...., அதை எனக்கு தெரியபடுத்த பத்திரிக்கை அனுப்பி இருக்கான்..., கூடவே ஒரு லெட்டரும்...,



அந்த லெட்டரில், தோற்றுப் போன உன்னோட வாழ்க்கைக்கு ...., என்னோட ஆழ்ந்த அனுதாபங்கள் யாழினி...., , நான் உன்னை விரும்பவே இல்லை ...., உன்னோட அழகைப் பார்த்து தான் உன்னை திருமணம் செய்தேன்...., என்னோட தேவை , தீர்ந்து போச்சு...., இனி நீ எனக்கு வேண்டாம்...., நீ என் மேல் வைத்திருக்கும் காதல் தான் உன் பலவீனம்...., என் பலம்...., அதுதான்..., நான் உன்னை ஏமாற்ற..., நெருங்க...., எனக்கு உதவியாக இருந்தது என்று எழுதி இருக்கான் பா..., என இறுகிய முகத்துடன் யாழினி உரைக்க,



"ராஸ்கல்... , என்றபடி தன் கை முஷ்டியை இறுக்கினார் நந்தன், " இப்பவே.. ., அவனை..., என்ன செய்கிறேன்..., பார் மா...., என்று கோபத்துடன் அவர் கூச்சலிட,





"வேண்டாம்பா...., அவன் சரியாதான் இருந்திருக்கிறான்...., நான் தான் அவனை சரியா புரிந்து கொள்ளாமல்...., பெரிய முட்டாளாக இருந்திருக்கேன்...., விடுங்கப்பா...., அவன் நல்லா இருக்கட்டும் ...., தன் காதல் இறந்த பிறகும் அவன் நலனையே பெரிதாக எண்ணினாள் பெண்ணவள், அவன் மீதான அவளின் காதல் அவளை அவ்வாறு எண்ண வைத்தது.



அந்த நொடி, அந்த கணம், முடிவு செய்தாள் யாழினி, எதை நீ...., என் பலவீனமாக சொன்னாயோ...., அதையே என் பலமாக மாற்றிக் காட்டுகிறேன்.., என சூளுரைத்தவளின், வாழ்க்கை பாதை அடியோடு மாறியது.



கையில் இருந்த சேமிப்பு, நகைகள், நந்தனின் சேமிப்பு, பேங்க் லோன், என எல்லா வகையிலும் பணத்தை திரட்டி நஷ்டத்தில் இருந்த ஒரு கம்பெனியில் தன் வசப்படுத்தினாள் யாழினி.



அவன் காதலில் உருகிய மெழுகாக இருந்தவள், எத்தனை அடி அடித்தாலும் இளகாத இரும்பாக தன்னை இறுக வைத்தாள்.



அடி நெஞ்சில் இருக்கும், அவன் மீது அவள் கொண்ட காதல் உயிர்த்து எழும் போதெல்லாம், முழுவதுமாக தன்னை வேலையில் மூழ்கடித்து அவன் மீது எழும் உணர்வை கொன்று புதைத்தாள்.





அதன் பின்பு வந்த நாட்களில், தன்னை ஒரு புதுமைப் பெண்ணாக, அதிகாரமிக்கவளாக உலகின், முன் நிலை நிறுத்தியிருந்தாள் யாழினி.

இதோ இன்று..., மீண்டும் அவள் மறுத்ததாக, மறந்ததாக, அவள் நினைத்த உணர்வுகள், அவளின் காதல்..., அவனுக்காக உயிர்த்து அவளை வதைத்தது, அவன் நினைவுகளை மீட்டிக் கொண்டு கண்ணீர் தடத்துடன் தூங்கிப் போனாள் யாழினி.



நள்ளிரவு 12 மணிக்கு, யாரோ? தட்.... தட்..என சத்தத்துடன் கூபேயின் கதவை தட்ட,



தூக்கக் கலக்கத்துடன் கதவைத் திறந்தவள், எதிரில் இருந்த நபரின் உருவத்தை பார்த்து, ஏதோ காணக் கூடாத ஒன்றை கண்டது போன்று முகமெல்லாம் சிவக்க, உயர் அழுத்த மின்சாரம் உடலில் பாய்வதை போல அதிர்ந்து, பின் உடல் விரைத்து நின்றாள்



எந்த முகத்தை தன் வாழ்நாளில் என்னாலும் காணக்கூடாது...., எந்த முகத்தில் முழிக்க கூடாது என நினைத்தாளோ..., அந்த முகம்..., கண்களின் எதிரில்....,





ஆம்...., அவன்...., தான்...., அவளின் முன்னாள் கணவன்...., காதலன்...., இன்று...., வேறு ஒருவளின் கணவன்...., ரிஷிகேஷ்.



உள்ளத்தின் கோபம் எரிமலை நெருப்பு போன்று கனன்று, எந்த நேரமும் வெடிக்கத் தயாராக இருந்தது, கொஞ்சம் கொஞ்சமாக முகத்தில் கடுமையும், சிவப்பும் எரியது, இதயத்தில் சத்தமே இல்லாமல் ஆயிரம் அணுகுண்டுகள் வெடித்ததை, போல வலியை உணர்ந்தாள் யாழினி.





எதிரில் நின்றவனை கண்களால் அவள் உறுத்து விழிக்க, எதிரிலிருந்த ரிஷிகோ அவளைப்பற்றி, அப்படி எந்த ஒரு உணர்வும் இல்லை போல ...., அவன் சாதாரணமாக "எக்ஸ்க்யூஸ் மீ ...., என்று அவளை விலக்கி அவன் மனைவி ஜானகி எழுப்பினான் கைகளில் பிறந்தநாள் கேக் உடன்,



தன்னை யாரோ உலுக்கி எழுப்புவதை உணர்ந்து, விழித்து எழுந்த ஜானகி, எதிரில் தன் கணவன் நிற்பதைப் பார்த்து இனிமையாக அதிர்ந்தாள்.



"எனக்குத் தெரியும்...., நீங்க வருவீர்கள் என்று...., ஒரு வருஷம் கூட...., நீங்க என்னோட பர்த்டே மிஸ் பண்ணது இல்லை...., தேங்க்யூ ரிஷி....., தேங்க்யூ ...., என்று கூறி, பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாட, அங்கு நடக்கும் அனைத்தையும் உணர்ச்சி துடைத்த முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் யாழினி,





கண்கள் மட்டும் அவனிடம், ஏன் ? இப்படி செய்தாய் ரிஷி..., நான் என்ன தப்பு செய்தேன்...?, நீ குழந்தை மனைவி என்று சந்தோசமாக இருக்கும் பொழுது...., , நான் மட்டும், பைத்தியம் மாதிரி...., உன்னை நினைச்சி ஏழு வருஷமா சுத்திட்டு இருக்கேன்....,



"நான் பட்டமரமாக உடைந்து கிடக்க....,, நீ மட்டும் ஆலமரமாக ...., தழைத்து..., , வளர்ந்து ...., கிளை பரப்பி..., செழித்து இருப்பது... ஏன்? ரிஷி, ஒரு நிமிடம் கூட..., நீ.. , உன்னோட வாழ்க்கையில்...., என்னை நினைத்து பார்க்கவில்லையா...., , நான் உன்னை பாதிக்கவே இல்லையா...., என கேள்வி கேட்டது.



அவளின் எந்த கேள்விக்கும், அவனிடம் எப்பொழுதும் பதிலில்லை, அவன் மீது தவறை வைத்து கொண்டு யாரை குற்றம் சொல்லி என்ன பயன்.



ஜானகி கேக் கொண்ட தட்டை, அவள் முன்பு நீட்ட, வேண்டாம் ....., என மறுத்தவள் தன் இடத்தில் முடங்கி கொண்டாள். தன் கண்முன்பு நடக்கும் அனைத்தையும் மவுனமாக கடக்க முயன்றாள் யாழினி, மௌனம் மட்டுமே அங்கு அவளின் முதன்மை மொழியாக மாறி போனது.





அதற்குள் ரியா, ரிஷியை வெளியில் அழைத்து போக சொல்லி அடம்பிடிக்க, ரிஷி அவளை கைகளில் ஏந்தி கொண்டு வெளியில் சென்றான்.



"உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா யாழினி....,, ரிஷியோட மனைவி நீங்க தான்...., நீங்க மட்டும் தான்..., எனக்கு முன்னாடியே உங்களை பற்றி தெரியும்...., , அவர் உங்களை பற்றி.., நெறய சொல்லிருக்காரு...., என்னோட மகளுக்கு...., ரியானு...., பெயர் வைத்தற்கு அவர் உங்க மேல் வைத்த காதல் தான் காரணம்...., என கூறிக்கொண்டே யாழினியின் முகத்தை பார்க்க, அதில் யாதொரு எதிர் வினையும் இல்லை.



"என்னை பார்த்த எப்படி தெரியுது, மிஸஸ். ஜானகி ரிஷிகேஷ்...., , முட்டாள் மாதிரியா...., ஒரு தடவை, நான் ஏமர்ந்தது...., எல்லாம் போதும்...., இன்னொரு முறை...., இல்லை...., என இருபுறமும் தலையை ஆட்டி மறுத்தாள் யாழினி.



"ப்ளீஸ்.... ப்ளீஸ் நான்... , சொல்வதை முழுசா கேளுங்க ...., அதன்பிறகு நீங்கள் என்ன சொன்னாலும் ... , நான் கேட்டுக்கொள்கிறேன்...., என்றாள் ஜானகி.



"சரி சொல்லுங்க ......, கேட்கிறேன்..., நானும் மிஸ்டர். ரிஷி எவ்வளவு நல்லவருன்னு தெரிந்து கொள்கிறேன்...., என நக்கலாக மொழிந்தவள் மேலே கூறும்படி ஜானகியை ஊக்க,



"இப்பவும்...., அவரோட மனசுலயும்...., வாழ்க்கையிலும்..., நீங்க மட்டும் தான் இருக்கீங்க...., யாழினி எனச் சொல்ல,



" அப்போ நீங்களும்..., உங்கள் மகள் ரியாவும்...., மிஸ்டர்.ரிஷிக்கு..., யாரு? மிஸஸ். ஜானகி...., என எதிர் கேள்வி கேட்டாள் யாழினி,



"நான் அவர் மனைவி இல்லை...., ஃப்ரெண்ட்..., ஜஸ்ட் ஃப்ரென்ட் ...., அவ்வளவுதான், என்றாள் ஜானகி.



"வாவ்...., பொய் சொன்னாலும் பொருந்த சொல்லணும் ஜானகி...., ஊருக்கும், உலகத்துக்கும், தெரியும்....., நீங்க தான்...., மிஸ்டர். ரிஷியோட..., மனைவி என்று..., அப்புறம்... ஏன் இப்படி? பொய் சொல்றீங்க...",



"இல்லை... , நான் பொய் சொல்லல..., யாழினி..., நான் சொல்றது தான் உண்மை...., நீங்களும்..., ஊரும்..., உலகமும் ..., நினைப்பது..., எல்லாம் பொய்...., நான் ரிஷியோட மனைவி இல்லை...., ரியா...., ரிஷியோட பொண்ணு இல்லை....,





" நான்....., நான்...., ஒரு ரேப் விக்டிம்...., எஸ்...., நான் ஒரு ரேப் விக்டிம்..., காதலிச்சவன் என்னை..., அவன் பிரண்ட்ஸோட சேர்த்து, மயக்க மருந்து கொடுத்து கெடுத்துட்டான்....,



"ரிஷி தான் என்னை காப்பாற்றி...., அவர் வீட்டுக்கு அழைச்சிட்டு போனாரு...., , ரிஷியோட அம்மா...., என்னை திட்டும் போது தான் தெரிஞ்சது...., அவங்க தான் உங்க குழந்தை அழிய காரணம் என்று...., இதை அவங்களே...., அவங்க வாயால..., ரிஷிகிட்ட ஒத்துகிட்டாங்க....,



" கொஞ்சநாள் குழந்தையோட நினைவாக இருந்த ரிஷி..., நான் கர்ப்பமானது தெரிஞ்சு...., ரியாவை, தன்னோட குழந்தையாக தத்து எடுத்துக்கொண்டார்...., என்னோட, பழைய வாழ்க்கை....., தெரிஞ்சு..., ஊரும், உலகமும், என்னை தப்பா பேச கூடாதுன்னு...., என்னை அவரோட மனைவி என்றும்...., ரியாவை..., அவளோட மகள் என்றும் அறிமுகம் செய்து வைத்தார்...., ஆனால் எங்க இரண்டு பேருக்குள்ள, நீங்க நினைக்கும்படி, எந்த ஒரு உறவும் இல்லை.... யாழினி என்றாள் ஜானகி.





தன்னை சுற்றும் உலகம் ஒரு நொடி சுழற்சியை நிறுத்தியது போல உணர்ந்தாள் யாழினி, உருவமில்லாத, ஒரு பெரும் வலி அடிவயிற்றிலிருந்து எழுந்து நெஞ்சை அடைத்தது.





"அப்போ அந்த கல்யாண பத்திரிக்கை...., உயிரை தேக்கி வைத்து கேட்க....



"சாரதா அம்மாவோட துரோகம் தெரிஞ்ச...., ரிஷி...., அந்த அம்மா மேல ரொம்ப கோபப்பட்டார்...., தன் தப்பை உணர்ந்து..., உங்களை தேடி வந்த பொழுது தான்..., நீங்க புதுசா கம்பெனி தொடங்கியது அவருக்குத் தெரிந்தது...., அவர் மேல பயங்கர கோபத்தில் இருப்பதும் தெரிந்தது...., உங்களுக்கு அவர் மேல இருக்கிற கோபத்தை இன்னும் கூட்டி..., உங்கள் லட்சியத்தை நீங்க சீக்கிரமா அடைய வேண்டும் என்பது தான் அவரின் நோக்கம்...., நீங்க அவர் மேல் உயிரை வைத்து இருக்கீங்கனு, அவருக்கு நல்லா தெரியும்....,



"சோ...., பொய்யாக..., அந்த பத்திரிகையை உங்களுக்கு அனுப்பினாரு....,, அவர் நினைத்தபடி...., எல்லாம் நடந்தது....,என்று விளக்கினாள் ஜானகி.

தான் எப்படி உணர்கிறோம் என்பது யாழினிக்கு விளங்கவில்லை, ஏழு வருடமாக தன்னை அரித்த கேள்விக்கு எல்லாம், இங்கு காரணமே இல்லாமல் அல்லவா போய்விட்டது.



கடந்து வந்த ஏழு வருடமாக, தான் அனுபவித்த அதே வலியை, அதை விட அதிகமாக வலியை அல்லவா தன்னவன் தனக்காக அனுபவித்து உள்ளான், ஒரே நிமிடத்தில் வாழ்க்கையின் கோணம், பாதை, திசை, காரணகாரியங்கள் அனைத்தும் மாறிவிட்டதே என நினைத்தவள் கண்களில் கண்ணீர் உடன், அதிர்ச்சியில் தொப்பென்று தன் இருக்கையில் அமர்ந்தாள்.







"யோசிச்சி...., முடிவு பண்ணுங்க யாழினி...., என ஜானகி கூறும் பொழுதே உள்ளே நுழைத்தான் ரிஷி.



அவனிடம் இருந்து ரியாவை வாங்கிய ஜானகி, அவனை யாழினியிடம் பேச சொல்லி சைகையில் சொல்லிவிட்டு, அங்கு இருந்து முழுமையாக விலகி சென்றாள், அவர்களின் வாழ்வில் இருந்தும் தான்.







நெடு நேரம், யாழினியை வைத்த கண் வாங்காமல் பார்த்துருந்தான் ரிஷிகேஷ், முன்பை விட அவள் தோற்றத்தில் ஆளுமை கூடியிருந்தது, பார்வையில் எதிரில் இருக்கும் நபரை எடை போடும் திறனும், நிமர்வும் தெரிந்தது.







"ஒரே ஒரு தடவை கூட...., உனக்கு என்னை பார்க்கணும் தோணலையா ரிஷி...., இத்தனை நாட்கள் தன் மனதில் அரித்துக்கொண்டிருந்த கேள்வியைக் கேட்டே விட்டாள் யாழினி.



" வந்தேன் யாழினி... , உன்னை தேடி வந்தேன்...." ஆளுமையோடு உன்னோட கம்பெனியை நீ நிர்வாகம் செய்வதை பார்த்தேன்...., உன்னோட வளர்ச்சிக்கு..., நான் எந்தவிதத்திலும்...., தடையாக இருக்கக்கூடாது என்று விலகி வந்துட்டேன்..., அந்த நிமிஷம்...., செத்துப் போகணும் போல இருந்தது...., உனக்காக எல்லா வலியையும் பொறுத்துக்கொண்டேன்....,



" ஏன் இப்படி ரிஷி ? எனக்கேட்டாள் யாழினி,



" முதல்முறையாக உன்னைப்பற்றி யோசிச்சுதான்..., அப்படி செய்தேன் யாழினி..., உன்னோட சின்னவயசு கனவை பூர்த்தி செய்ய நினைத்தேன்..., ஆல்ரெடி..., உன்னை வலுக்கட்டாயமாக...., கட்டாயப்படுத்தி திருமணம் செய்தேன் ..., குழந்தை கலைந்து போனதற்க்கு, என்னோட அம்மாவோட வார்த்தைகள்...., தான் காரணம் என்ற உண்மை தெரியாமல்..., நானும் உன்னை வார்த்தைகளால் வதைத்தேன்....,,





"உண்மையை உணர்ந்த பிறகுதான், உன்னோட வலி எனக்கு புரிஞ்சுது...., இதன் பிறகும், என்னால்.....,நீ..., கஷ்டப்பட வேண்டாம் என்று நான் விலகிப் போனேன்...., நீ.... உன்னுடைய இலக்கை அடைய...., நான் எப்பொழுதும் தடையாக இருக்கக்கூடாது என்று , உனக்கு டிவோர்ஸ் தந்தேன்...., நீ என்னோட நினைவில்..., உன்னோட வாழ்க்கையை கெடுத்து கொள்ள கூடாது என்று..., எனக்கு கல்யாணம் அப்படினு..., உனக்கு பொய்யாக பத்திரிக்கை அனுப்பினேன்...,



" நான் நினைத்தபடி எல்லாம் நடந்தது...., இதோ...., இன்று..., நீ..., அதிகாரம் மிக்க பெண்களிள் ஒருத்தியாக நிற்கிறாய்...., எனக்கூறி இரு கைகளால் முகத்தை மூடி அழுதான் ரிஷிகேஷ்.



யாழினிக்கு பேச வார்த்தைகள் வரவில்லை, என்னை விட..., என்னவன் அல்லவா மிக கஷ்டத்தை அனுபவித்துள்ளான்...., அவனுக்கு நான்..., என்ன ...., கைமாறு செய்யப் போகிறேன்...,



அவன் உயிராக நினைக்கும்...., ரியாவை...., அவனுடன் தக்க வைப்பது நான்...., அவனுக்கு செய்யும் பிரதி உபகாரம்....,, இப்பொழுது நாங்கள் இணைந்து விட்டால் ரியாவின் நிலைமை, தந்தை இல்லாத, யாரோ ஒருவர் செய்த குற்றத்தில் பிறந்த குழந்தையாக, அவள் வளர வேண்டுமா?





நிச்சயமாக இல்லை...., ஒருநாளும் ரியாவின் பிறப்பு ரகசியம் யாருக்கும் தெரியக்கூடாது...., இந்த சமூகத்தில், ஒரு குழந்தை, தந்தை இல்லாமல் வளர்வது, அவளுக்கு அவப்பெயரை அல்லவா ஏற்படுத்தும், ரியாவிற்காக....., ரிஷியை... , நான்..., விட்டு விலகுவது தான் சரி..., என்று, குழந்தையின் நலனை முதன்மையாக கொண்டு, ஒரு அன்னையாக முடிவு எடுத்தாள் யாழினி.



" உனக்கு ஒரு விஷயம் தெரியுமா ரிஷி...., சின்ன வயசுல அப்பா அடிக்கடி ஒரு கதை சொல்வார்...., இரண்டு பறவைகளோட கதை ..., இரு பறவைகளின் உலகமும், வேறு..., வேறு..., ஒன்று வானத்தில் பறக்கும்..., மற்றொரு பறவைக்கு நீரில் நீந்த மட்டும்தான் தெரியும்...,





ஆனாலும், இரண்டு பறவைகளும்..., காதலித்து ஒரே உலகத்தில் வாழ ஆசை கொண்டதாம்...., எவ்வளவு முயற்சி செய்தாலும், வானத்தில் பறக்கும் பறவையால், நீரில் நீந்த முடியலை..., நீரில் வாழும் பறவைக்கு வானத்தில் பறக்க வழியில்லை....,



இயற்கையோடு, விதிக்கு மாறாக..., எது....., நடந்தாலும்..., அது அழிவுக்கு தான் இட்டுச் செல்லும் ரிஷி...., அது போல தான்..., நீயும் நானும்...,



"நம்ப...., இரண்டு பேரோட பாதை..., வேறு..., வேறு..., ஆனாலும்..., நம் இருவருக்கும் இடையில் இருக்கும் காதல், குறையவே இல்லை...., இத்தனை வருஷம், நான் அனுபவித்த வலி...., வேதனை...., எல்லாம் தீராது ரிஷி..., எல்லாத்தையும் விட..., குழந்தையை இழந்து ..., நான் தனியாக ...., நின்னப்போ..., நீ என்கூட, இல்லாததோட வலி....,, நீ..., என்னை வதைக்க சொன்ன வார்த்தைகள், நான் இறந்தாலும்..., என்னை விட்டுப் போகாது...,



"அதனால ..., நாம ரெண்டு பேரும் பிரிவது தான் சரி..., என்று ரியாவின் நலனை முன்னிட்டு, தன் காதலை இழக்க முடிவு செய்தாள் யாழினி.



"இதுதான்...., உன்னோட முடிவா யாழினி..., என ரிஷிகேஷ் இறுதியாக கேட்க,





" ஆமாம்..., என்ற ஒற்றை சொல்லில், தன் காதலை, தன் வாழ்க்கையை, கணவனின் மகிழ்ச்சிக்காக, ரியா எனும் தான் பெறாத மகளிற்காக, ரிஷி..., ரியாவின் மீது வைத்திருக்கும் பாசத்திற்காக, ஒரு அன்னையாக விட்டுக்கொடுத்தாள் யாழினி.





அதற்குள், ரயில் டெல்லியில் பெரும் சத்தத்துடன் நிற்க, ரிஷி..., ரியா...., ஜானகி... மூவரும் ரயிலிலிருந்து இறங்கி செல்வதை, ஒரு வித திருப்தியுடன், உதடுகளில் உறைந்த புன்னகையுடன் பார்த்திருந்தாள் யாழினி. இப்பொழுது..., அவளுக்கு வலி தெரியவில்லை, மனதில் பெரும் நிம்மதி குடிக்கொண்டது, தன் காதலுக்கு நியாயம் செய்துவிட்ட நிம்மதி.



ரிஷிகேஷ் ~ யாழினி, இருவரின் பாதைகள் வேறு..., பயணங்கள் வேறு..., சில உறவுகள் ரயில் தண்டவாளங்களை போல, அருகில் இருக்க முடியுமே தவிர, இணைந்து வாழ முடியாது..., இருவரும் தம்..., தம்.., பாதைகளில் மட்டுமே வாழ்க்கைப் பயணத்தை பயணிக்க முடியும்.

இணையுடன்..., இணைந்து..., இயைந்து வாழ்வது மட்டும் காதல் இல்லை...,



இணையின் நினைவில், வாழ்வதும்..., காதல்தான்..., . அது கானல் நீர் காதல்....


முற்றும்
 

யாழ் மொழி

Member
Vannangal Writer
Team
Messages
93
Reaction score
14
Points
8
பின் குறிப்பு:-



பாலியல் வன்புணர்ச்சிக்கு அளக்கப்பட்ட பெண்கள் அனுபவிக்கும் வலி, அவர்களின் வாழ்க்கை மிகவும் கொடுமையானது, சமுதாயம் அவர்கள் மீது வெறுப்பை மட்டும் உமிழும், இப்படி ஒரு சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பிறக்கும் குழந்தைக்கு இதே நிலை தான், இது போன்ற பெண் குழந்தைகள் தந்தையின் அரவணைப்பு இல்லாமல் வளர்வது கஷ்டம், சமுதாயம் அவர்களை தூற்றியே அக்குழந்தைகளை வெளியே வர முடியாத படி செய்துவிடும். நீங்கள் கேட்கலாம் யாழினியையும் ரிஷுயையும் இணைத்து வைத்து ரியாவை அவர்களுடன் சேர்த்து வைத்து இருக்கலாம் என, 6 வயது குழந்தை தன்னை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை உட்கிரகிக்கும் திறன் உண்டு, யாழினி ரிஷி இருவரையும் சேர்த்து வைத்தாள் யாழினி தான் தன் தாயை தந்தையிடம் இருந்து பிரித்து வைத்துவிட்டாள் என்னும் எண்ணம் அவள் நெஞ்சில் உருவாக வாய்ப்பு உண்டு, அது பிற்காலத்தில் அவள் வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம் அதனால் தான் இந்த முடிவு,


இக்கதையின் முடிவு என்னை பொறுத்த வரை சரி, ரிஷி யாழினியின் காதலை விட ரியாவின் எதிர்காலமும் பாதுகாப்பும் தான் முக்கியம், ஜானகிக்கு, ரிஷிகேஷ் ஒரு நல்ல நண்பனாக, பாதுகாவலனாக இருப்பான் என நம்புவோமாக......
 
Top Bottom