Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


காவலும் காதலும்

Bhagya Lakshmi

Member
Vannangal Writer
Team
Messages
44
Reaction score
18
Points
8
அத்தியாயம் 1
காவலும் காதலும்
“இன்ஸ்பெக்டர் நீங்க அந்த ஏழாவது மாடியிலிருந்து தற்கொலை பண்ணிக்கிட்ட ராகவன் மனைவியை நேரில கூட்டிட்டு வாங்க விசாரிக்கலாம்”
“சார்... எனக்கு என்னமோ அவங்க மேல துளி கூட சந்தேகம் இல்லை… ராகவன் ஏதோ கடன் தொல்லை ல தான் தற்கொலை பன்னியிருக்கணும்”
“லுக் மிஸ்டர் ஆதி நீங்க ட்யூட்டி க்கு புதுசு ,போலிஸ் னா பல ஆங்கில்ல யோசிக்கனும் இப்படி எடுத்தோம் கவுத்தோம்னு முடிவு பண்ண கூடாது புரியுதா.?” அந்த காவல் நிலையத்தின் அசிஸ்டன்ட் கமிஷனர் சொல்ல,
“சரிங்க சார்.” என்று தலையசைத்து கேட்டு கொண்டு நடந்தான் ஆதி!
‘சை! என்ன பிழைப்பு டா இது... இப்படி மேல் அதிகாரிகள் ஏச்சுக்கள் வாங்கி வேகாத வெயிலில் காய்ந்த கருவாடு ஆகி ....ச்ச.....சரி போய் தொலைவோம்’ என்றவன் மனதில் எண்ணி கொண்டே அந்த அடுக்கு மாடி குடியிருப்பிற்கு சென்றான்.
ஏழாவது மாடிக்கு செல்ல லிப்டை பயன்படுத்தாமல் அவன் படியில் ஏறினான். அவன் மூன்றாவது மாடியை நெருங்கிய போது அந்த கதவு எண். 26ல் ஏதோ புகையாக கிளம்பி கொண்டிருந்தது.
"என்ன ஆச்சு? புகையா வருது” என்று யோசித்தவன்,
‘போலாமா வேண்டாமானு’ என்று மனதில் பட்டிமன்றம் நடத்திவிட்டு இறுதியாக, “சரி என்னன்னு போய் பார்ப்போம்” என்று அந்த வீட்டின் கதவை தட்டினான்.
யாரும் திறக்கவில்லை. சில நிமிடங்கள் தட்டி பார்த்தவன் பின் அந்த வீட்டின் முகப்பறை ஹால் பக்கமாக இருந்த ஜன்னலை திறந்து எட்டிப்பார்த்தான்.
அவனை பதற்றம் தொற்றி கொண்டது. பதறி போனவன் அங்கிருந்தவர்களை உதவிக்கு அழைத்து அந்த கதவின் தாழப்பாளை உடைத்தான்.
.உள்ளே ஓர் இளம் பெண் மயங்கிய நிலையில் இருக்க, அதற்குள் அந்த குடியிருப்பு மக்கள் அனைவரும் அங்கே கூடிவிட்டிருந்தனர்.
அதில் ஒரு சிலர் அவள் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்ப அவன் தள்ளி நின்று பார்த்து கொண்டிருந்தான்.
அவர்கள் பதட்டமாக என்ன நடந்தது என்று கேட்கவும், “ஒன்னுல்ல குக்கர் வெடிச்சிருச்சு பயத்துல அப்படியே மயங்கிட்டேன்” என்று அரைமயக்க நிலையிலேயே அவள் பேசினாள்.
அதற்கு பின் அங்கு கூடியிருந்தவர்கள் மெல்ல கலைந்து போக ஒருவர் மட்டும் ஆதியை கை காண்பித்து, “சார் நல்ல நேரத்துல உங்க வீட்டில புகை வர்றத பார்த்து எங்களை எல்லாம் உதவிக்கு கூப்பிட்டாரு” என்று அவனுக்கு புகழுரை பாடிவிட்டு சென்றார்.
அந்த பெண்ணின் பார்வை ஆதியின் மீது விழுந்தது. நல்ல கம்பீரமான தோற்றதோடு கூடிய அந்த காக்கி உடை அவனுக்கு வெகுபொருத்தமாக இருந்தது.
எல்லோரும் சென்றுவிட அவள், "தாங்க்ஸ்” என்றாள்.
“இட்ஸ் ஓகே… இப்போ உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லல்ல… நார்மலாகிட்டுங்களா?” என்று கேட்டான்.
“யா ஐம் பைன்” என்றவள் அவனை சந்தேகமாகவும் குழப்பமாகவும் பார்க்க,
அவள் எண்ணத்தை படித்தவனாக, “ஐயம் இன்ஸ்பெக்டர் ஆதி… ஏழாவது மாடி ல ஒரு சூசைட் கேஸ் விஷயமா விசாரிக்க வந்தேன்” என்றான்.
அவன் மேலும் “ஓகே நான் கிளம்புறேன்… இனிமே வேலை செய்யும் போது கொஞ்சம் கவனமா இருங்க” என்று அவளுக்கு அறிவுரை சொல்லிவிட்டு வெளியே செல்ல எத்தனிக்கும் போது,
“மிஸ்டர் ஆதி… ஒரு நிமிஷம்” என்று அழைத்தாள் அந்த பெண்!
அவன் அவள் புறம் திரும்ப, “ஐம் ரேணுகா... நான் ஒரு ஆர்டிஸ்ட்(ஓவியர்)” என்று தன்னை அறிமுகப்படுத்தி கொண்டாள்.
“ம்ம்ம்.... ஓகே” என்றவன் ‘எதுக்கு இப்போ நம்மகிட்ட இதெல்லாம் சொல்லுது இந்த பொண்ணு’ என்று யோசிக்க,
“சார்… அந்த சூசைட் கேஸ் பத்தி விசாரிக்க வந்ததா சொன்னிங்க இல்ல… ஸோ....எனக்கு தெரிஞ்ச விஷயம் சொல்லலாம் னு நினைக்கிறேன்” என்றதும் அவனை ஆர்வம் பற்றி கொண்டது.
“ஒ எஸ்… சொல்லுங்க” என்றவன் கேட்க,
“அது வந்து” என்று தடுமாறியவள் பின் மெல்ல தொடரந்தாள்.
“அந்த ராகவன் சூசைட் பன்னல அது ஒரு மர்டர் ஆக்ச்சுவலா அவன் பேரு ராகவேந்திரா… எனக்கு தெரிஞ்ச வரைக்கும் குடி பழக்கம் பொண்ணுங்க கிட்ட போறதுனு அவன் கேரக்டரே சரியில்லை” என்றாள்.
ஆதி அவளை கூர்மையாக நோக்கி, “ஓ! இதெல்லாம் நீங்க எப்படி இவ்வளவு தெளிவாக சொல்லுறீங்க” என்று கேட்கவும்,
“அ....அது வந்து ஒரே அபார்ட்மெண்ட் அதான் தெரிஞ்சுது” என்றவள் வார்த்தைகள் தந்தியடித்தன.
“சரி ஓகே” என்று அவள் சொன்னதை கேட்டு கொண்டவன் அவளை ஆழமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, “நான் கிளம்புறேன்” என்றபடி நகர்ந்துவிட்டான்.
அவன் ஏழாவது மாடிக்கு சென்று அந்த வீட்டின் கதவை தட்ட ராகவனின் மனைவி கதவை திறந்தாள்.
"உங்கள விசாரிக்க ஏசி வர சொன்னாரு… கொஞ்சம் என்கூட ஸ்டேஷன் வரைக்கும் வர முடியுமா?” என்று அவன் பணிவாக கேட்க,
“சார் என் புருஷன் தற்கொலை பண்ணதுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை” என்று பதறினாள் அவள்!
“பதறாதீங்க மா… இந்த விசாரணை ஒரு பார்மாலிட்டிக்குதான்” என்றவன் சொன்ன மறுகணம், “ம்ம்ம்.” என்று அந்த பெண்ணும் அவனுடன் புறப்பட்டாள்.
கீழே அவளை அழைத்து கொண்டு செல்வதை ரேணுகா அவளது ஜன்னல் வழியாக பாரத்து,
"ப்பா... செம்மையா இருக்கானே” அவனை ரசித்து கொண்டிருந்தாள்.
***
அந்த பெண்மணியை காவல் நிலையம் அழைத்து வந்தான் ஆதி.
“சார் இவங்க தான் ராகவா மனைவி” என்று ஏசியிடம் சொல்ல,
“ம்ம்ம்... உன் பெயர் என்ன மா” என்றவர் அதிகாரமாக கேட்டார்.
“சந்திரா” என்றவள் பயபக்தியோடு பதில் சொல்ல,
“ம்ம்ம் நீயும் உன் புருஷனும் காதலித்து கல்யாணம் பண்ணீங்களா?” என்று அடுத்த கேள்வி கேட்டார்.
“சார் இது தேவை இல்லாத கேள்வி” என்று ஆதி பட்டென்று தன் மனதில் பட்டதை மேலதிகாரி என்றும் பாராமல் உரைத்துவிட,
அவர் முறைத்த முறைப்பில் அவன் மௌனமானான்.
மீண்டும் விசாரணை துவங்கியது.
“ம்ம்ம்... உங்க இரண்டு பேருக்கும் நடுவுல எதாவது பிரச்சினை இருந்துதா?”
“சார்...அவரும் நானும் சந்தோஷமா தான் வாழ்ந்தோம்… திடீர்னு எங்களுக்கு கடன் அதிகமாகிடுச்சு… அந்த வேதனை தான் அவரை இப்படி பண்ண வைச்சிடுச்சு” என்றவள் தன் விழிகளில் வழிந்த நீரை துடைத்து கொண்டே பேச சில நொடிகள் மௌனமாக யோசித்தவர், “சரி நீங்க போலாம்... ஆதி அவங்கள விட்டுட்டு வந்துரு” என்றார்.
“ம்ம்ம் க்கும்” என்று மனதிற்குள் சலித்து கொண்டவன்,
“மா வாங்க வீட்டில் விட்டுடுறேன்” என்று சந்திராவை அழைத்தான்.
“இல்லை சார் வேண்டாம் நான் நடந்தே போய்கிறேன்” என்றவள் சொல்ல,
“ஏன்?” என்று அவன் புரியாமல் பார்த்தான்.
“இல்லை இப்படி பத்து வாட்டி ஜீப்பில் ஏறி இறங்கினா என் மானம் போகும் நாலு பேரு முன்னாடி” என்றவள் சொன்னது அவனுக்கு சரியென்று தோன்றியது.
“அதுவும் சரிதான் மா நீங்க கிளம்புங்க...அ...அப்புறம் மூன்றாவது மாடி ரேணுகா பற்றி என்ன நினைக்கிறிங்க?” என்று வெளியே வந்து அவளிடம் தனியாக வினவ,
“எதுக்கு சார் கேக்குறிங்க?” என்று அவனை குழப்ப பார்வை பார்த்தாள்.
“சும்மா சொல்லுங்க” என்றான் ஆதி!
“அவ நல்ல பொண்ணு மாதிரி தான் தெரியுது சார்… வேற எதுவும் அவளை பற்றி தெரியாது”
“சரி...மா...உங்க வீட்டு நம்பர் என்ன 21 தானே?”
“ம்ம்ம் ஆமா சார்”
“சரி நீங்க போங்க” என்று ஆதி சொல்ல சந்திரா மனதிற்குள் ஏன் அவன் ரேணுக்காவை பற்றி சம்பந்தமே இல்லாமல் கேட்டான் என்று தோன்றியது. அந்த யோசனையோடே அவள் அங்கிருந்து புறப்பட்டாள்.
*
ஆதியின் வீடு. அன்று இரவு வேலைகள் முடித்துவிட்டு திரும்பியவன் அசதியாக சோபாவில் அமர,
அவனது தாய் காமாட்சி அருகில் அமர்ந்து அவன் தலையை வருடியவாறு, "ஆதி… என்ன டா களைப்பா? சூடா காபி போட்டு தரவா? என்று பரிவாக கேட்டார்.
“அதெல்லாம் வேணா ம்மா கொஞ்சம் தலையை மட்டும் அழுத்தி விடுங்க… வலிக்குது” என்று அப்படியே சாய்ந்து படுத்து கொண்டான்.
“ம்ம்ம் அதுசரி காலாங்காலத்துல கல்யாணம் பன்னா தானே… உனக்கு வயசு 27 ஆச்சு… எவ்வளவு நாள்தான் நானே உனக்கு பணிவிடை பண்ண முடியும்” என்றவர் கேட்க,
“அது சரி… கல்யாணத்துக்கு முன்னே இப்படி பேசவேண்டியது… அப்புறம் மருமக வந்த உடனே மல்லுக்கு நிக்க வேண்டியது” என்று சொன்னவன்,
“பேசாம முதல்ல உன் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணு” என்றான்.
“அவ தான் காலேஜ் படிக்கிறாளே”
“போதும் அவ படிச்சது… காலம் கெட்டு போயிருக்கு முதல்ல வித்யாக்கு மாப்பிள்ளை பாருங்க மா”
“அதுவும் சரி தான் டா கன்னு... உங்க அப்பா இல்லை.... இப்ப நீ தான் உன் தங்கச்சியை அப்பா ஸ்தானத்தில் இருந்து கரை சேர்க்கனும்... அண்ணி னு ஒருத்தி வீட்டில் இருந்தா… வித்யாவுக்கு ஒரு ஆதரவு இருக்கும்... அதுக்கு தான் உனக்கு முதலில் கல்யாணம் பண்ணலாம் னு யோசிக்கிறேன்”
“எனக்கு கால் கட்டு போடணும்னு முடிவு பண்ணிட்ட… சரி செய்… உன் விருப்பம்… நீ எந்த பொண்ணு கழுத்தில் தாலி கட்ட சொல்றீயோ அவளை கட்டிக்கிறேன் போதுமா?” என்றவன் தன் அம்மா மடியில் படுத்து கொள்ள,
“இப்ப தான்டா எனக்கு நிம்மதியாக இருக்கு” என்றார்.
அதோடு நிறுத்தி கொள்ளாமல், “பேசாம உன் மாமன் மக ஆனந்தி யை பேசி முடிக்கட்டுமா?” என்று கேட்க,
“ஆனந்தியா... யாரு அந்த வாய் இல்லா பூச்சியா?” என்று கேலியாக சிரித்தான்.
“ஏன் அவளுக்கு என்ன?” என்று காமாட்சி மகனை ஆழமாக பார்க்க,
“ஒன்னும் இல்ல… நல்ல பொண்ணுன்னு சொல்ல வந்தேன்” என்று சமாளித்துவிட்டான்.
அவர்கள் உரையாடல் இப்படி நீண்டு கொண்டிருக்க, “ம்ம்ம் சரி வா சாப்பிடலாம்” என்று மகனை அழைத்துவிட்டு அவர் செல்ல,
“டேய் அண்ணா சீக்கிரம் வா பசிக்கிது” என்று அவன் தங்கை வித்யா குரல் கொடுத்தாள்.
“ஏய் வாலு இரு வரேன்.” என்று அவன் எழுந்து சென்றான்.
மீனாட்சி சத்தமாக சிரித்துவிட்டு, “உன்னை விட்டு என்னைக்கும் அவ சாப்பிட்டது இல்லை… வாங்க எல்லாம் சேர்ந்து சாப்பிடலாம்” என்று அவர் அமர்ந்து கொண்டு இருவருக்கும் உணவு பரிமாறினார்.
தொடரும்.
 

Bhagya Lakshmi

Member
Vannangal Writer
Team
Messages
44
Reaction score
18
Points
8
2
இரவு சாப்பிட்டு முடித்ததும் நித்திரை அவனை மெதுவாக தழுவ காவலனுக்கு இரவில் கூட உறக்கம் ஏது? எனினும் சற்று கண் அசரலாம் என அவன் தன்னுடைய அறைக்கு செல்ல, அங்கு வித்யா எதையோ அவனது மேஜை ட்ராயரில் தேடிக் கொண்டிருந்தாள்.
இவனை பார்த்த நொடியில் கையை விலக்கிவிட்டு "அண்ணே குட்நைட்… நான் போய் படுக்குறன்” என்று சமாளிக்க, அவனோ அவளது தடுமாற்றத்தை உணர்ந்தவனாய் மேலும் கீழும் பார்த்துவிட்டு,
"ஏய் வாலு என் ரூம்ல உனக்கு என்ன வேலை?” என்று வினவ அவளுக்கு பதில் கூற முற்பட்டபோது அவள் கையிலிருந்த பென்ட்ரைவ் காட்டி கொடுத்துவிட்டது.
"அண்ணா என் பென் ட்ரைவ் காணுமேன்னு தேடினேன்... கிடைச்சிருச்சு… நீ தூங்கு” என்று அவள் கூறிவிட்டு நகர்ந்தாள்.
‘என்ன இவ நடவடிக்கையே சரியில்லையே ம்ம்ம்... என் ரூமுக்கு அனாவசியமாக வரமாட்டா இப்ப என்ன வந்து போறா... டென்ஷனா எதையோ தேடுறா… என்னவா இருக்கும்?’ அவன் இப்படி மனதில் யோசித்து கொண்டிருக்கும் போது அவன் செல்பேசி அழைத்தது. எதிர்முனையிலோ அவன் மாமன் மகள் ஆனந்தி.
“மாமா” என்று மிதமான குரலில் அவள் பேச்சை ஆரம்பிக்க...அவளது மென்மையான குரலில் அவன் மயக்கம் கொண்டான். அவளது குரல் மீண்டும் அவனை தட்டி எழுப்பியது
“ஹலோ... மாமா ஹலோ....” என்று மிஞ்சலாக கொஞ்சம் கொஞ்சலாக!
மெல்ல தெளிந்தவன் "சொல்லுமா ஆனந்தி” என்றான்.

“மாமா... எப்படி இருக்கீங்க?” என்றவள் நலம் விசாரித்த அந்த நொடி அவனது ஒட்டுமொத்த களைப்பும் நீங்கிய உணர்வு. அதுவும் ஏதோ க்ரீன் டீ குடித்துவிட்டு ரெப்ரஷ் ஆனது போல் சுறுசுறுப்பாக பதிலளித்தான்
"நான் நல்லாருக்கேன் நீ எப்படி இருக்க?”
“ஹ்ம்ம் நல்லாருக்கேன் மாமா… அப்புறம் ஊரில் திருவிழா நடக்குது… நான் கோலம்போட்டி ல கலந்துக்க போறேன்… அதான் உங்க எல்லாரையும் கூப்பிடலானு போன் பண்ணேன் கண்டிப்பாக வரனும் மாமா... இது இந்த ஆனந்தியோட ஆர்டர்”
“ஹாஹா ஆர்டர் போடுற அளவு ஆயிட்டீங்க… ம்ம்ம் சரி கண்டிப்பா வரேன் எனக்கும் ரிலாக்ஸேஷன் தேவை படுது வந்து இரண்டு நாள் ஊர்ல தங்கிட்டு போறேன்”
“லீவ் கிடைக்கல னு லாஸ்ட் மினிட் ல வராம விட்டுறாத மாமா” என்று அவள் மீண்டும் அழுத்தி சொல்ல,
“இல்லை,… இந்த தடவை கண்டிப்பா வரேன் டி... எனக்கும் உங்கள் எல்லாரையும் பார்க்கணும் போல இருக்கு” என்று கூறியவுடன்,
"ஆமா என்ன? திடீருன்னு டி எல்லாம் போட்டு பேசுறீங்க நீங்க அப்படி கூப்பிட மாட்டிங்களே” என்றாள்.
"இனிமே… அப்படி கூப்பிட ஆசைப்படுறன்" என்று சொல்லிவிட்டு செல்பேசியில் அவள் எங்கே நம் வெட்கத்தை பார்த்துவிட போகிறாள் என்றபடி ஒரு காவலனுக்கு உரிய கம்பீரத்தை தாண்டி சராசரி இளைஞனாக வெட்கபட்டு நகத்தை கடிக்க, கடிகாரம் நேரம் சரியாக அப்போது பத்து மணி என்று காண்பித்தது.
வந்த தூக்கமும் தலைதெறிக்க ஓடிவிட, ‘இனி எங்க தூங்குறது… சிவராத்திரி தான்’ என்றபடி தன் பேசியை மேஜையில் வைக்க அடுத்த நொடி வேறு ஒரு அழைப்பு வந்தது.
எடுத்து காதில் வைக்க, "ஹலோ... வித்யா! என்னடி பன்ற என்று எதிர்முனையில் யாரோ அழைக்க அது ஒரு பெண்ணின் குரல்.
‘நம்ம போனுக்கு கால் பன்னிட்டு நம்ம தங்கச்சி பேரை சொல்றாங்க.. .ம்ம்ம் யாரு இது?’ என்று யோசித்து கொண்டே மறுபுறம், "ஹலோ மேடம் யார் நீங்க?" என்று கேட்டான்.
“அண்ணா நீங்க ஆதி தானே.. .உங்க நம்பர் வித்யா தான் கொடுத்தா… நான் அவ ப்ரெண்டு… எப்பவாவது பேசணும்னா இந்த நம்பருக்கு கூப்பிடுனு சொன்னா” என்றாள்.
“ஓ... உங்க பெயர் என்ன தெரிஞ்சிக்கலாமா?”
“மல்லிகா”
“எங்கம்மா இருக்க நீ”
“நான் இங்க தான் தாமரை அப்பார்ட்மண்டுல தங்கியிருக்கேன்” என்றதும் அவன் மூளை ராகவாவின் கொலை பற்றி யோசிதத்தவன்,
“நீ எந்த ப்ளோர்ல தங்கி இருக்க?” என்று கேட்டான். போலிஸ் புத்தியாகபட்டது அவனை வரிசையாக அப்படி கேள்வி கேட்க வைத்தது.
அவளோ தட்டுதடுமாறி, “ஆங்...அது எதுக்கு கேக்குறிங்க?” என்றவளின் பேச்சில் ஏதோ பயம் தெரிய,
"மல்லிகா நான் சாதாரணமாக தான் கேட்டேன்… நீ ஏன் மா இவ்வளவு தடுமாற?” என்றவுடன்,
"இல்லை ஏன் நீங்க இப்படியெல்லாம் கேக்குறிங்கன்னு யோசிச்சேன்” என்றாள்.
"மேடம் நீங்க மட்டும் ப்ரண்டோட அண்ணனுக்கு தைரியமா போன் பண்ணுவீங்க… நாங்க எதாச்சும் கேட்டா அதுக்கு இவ்வளவு சீன் போடுவிங்க அப்படிதானே?” என்றதும் அவள் கடுப்பாகி,
“உங்களுக்கு இப்போ என்ன தெரிஞ்சக்கணும்”: என்று ஆரம்பித்தவள்,
“நான் மூணாவது மாடில தங்கியிருக்கேன்… டோர் நம்பர் 6… என் கூட என் அக்கா தங்கியிருக்கா அவ பெயர் ரேணுகா இது போதுமா? இல்ல எதாச்சும் தெரியனுமா?” என்றதும்
“ஏய் ஏய் டென்ஷன் ஆகாத.. ஆமாம் உங்க அக்கா பெயர் என்னன்னு சொன்ன திரும்ப சொல்லு” என்று அழுத்தமாக கேட்க "ரேணுகா "என்று அவள் கூற
“வாட்?” என்று கொஞ்சமாக அதிர்ந்தான்.
“ஐயா சாமி ஆளை விடுங்க… நான் வித்யாகிட்ட நேரலயே பேசிக்கிறேன்” என்று அவள் சலித்துகொள்ள,
"ஓகே ஓகே ரிலாக்ஸ்… நீ கால் பண்ணதை வித்யாவுக்கு சொல்றேன்” என்பதற்குள் அந்த பெண் அழைப்பை துண்டித்துவிட்டாள்.
அவன் ரேணுகா என்ற பெயரை பற்றி யோசிக்க, ஏதோ மனதிற்குள் திரைப்பட காட்சிகள் போல நடந்தவை நினைவுக்கு வந்தன.
‘என் பேர் ரேணுகா… நான் ஒரு ஆர்டிஸ்ட்’
அவன் மூளையை ஏதோ தட்டி எழுப்ப, நேரம் காலமெல்லாம் பார்க்காமல் உடனடியாக பைக்கை கிளப்பி அந்த அடுக்குமாடி குடியிருப்பிற்கு விரைந்தான்.
அவன் செல்லும் போதே எல்லாவற்றையும் ஒருமுறை மனதில் அலசி ஆராய்ந்து கொண்டே வந்தான்.
‘நம்பர்.6 னு மல்லிகா சொல்றா ஆனால் நம்ம பார்த்தபோது 26 னு தானே இருந்தது.
அதுவும் அப்போ மல்லிகா இல்லையே வீட்ல… எனக்கும் யாரும் இல்லாத மாதிரி தானே சொன்னா அந்த பொண்ணு… திடீர் னு மல்லிகா னு ஒருத்தி எப்படி… அதுவும் அவ எப்படி நம்ம தங்கச்சிக்கு ப்ரண்டு? ஒன்னும் புரியலையே முதல்ல அந்த வீட்டின் எண்ணை போய் பார்த்துட்டு வந்திரனும் இல்லைனா மண்டை வெடிக்கும்’
இப்படி பல கேள்விகளும் குழப்பங்களும் அவன் மூளைக்குள் ஃபுட் பால் விளையாடி கொண்டிருந்தன.
இவ்வாறு யோசித்து கொண்டே அந்த அடுக்குமாடி குடியிருப்பிற்குள் நுழைந்து ரேணுகா வீட்டினை நெருங்கினான். முதலில் காலிங் பெல் அழுத்துவதா வேண்டாமா என தயங்கியவன் பின் மெல்ல காலிங் பெல்லை அழுத்திவிட, ரேணுகாவே வந்து கதவை திறந்தாள்.
அதற்குள்ளாக உள்ளே இருந்த மல்லிகா அவனை பார்த்துவிட்டு ஓடி வந்து,
"அண்ணா என்ன இந்த நேரத்தில் எங்க வீட்டுக்கு… வித்யா எதாவது சொல்லி அனுப்புனாளா?” என்று கேட்க, அவன் கவனமும் பார்வையும் ரேணுகாவிடம் நின்றிருந்தது.
மல்லிகா குழப்ப ரேகைகளோடு, “அவ என் அக்கா… நான் போன்ல சொன்ன ல சார்” என்றவள் ரேணுகாவிடமும் திரும்பி,
“ரேணு சார்தான் என் ப்ரண்டு வித்யாவோட அண்ணன்” என்றாள்.
ரேணு அப்போது, “சாரை எனக்கு ஏற்கனவே தெரியும் டி” என்றாள்.
“அப்படியா?” என்று குழப்பமான மல்லிகா, “ஆமா நீங்க என்ன சார் இந்த நேரத்தில என் வீட்டுக்கு” என்று மனதில் எழுந்த சந்தேகத்தை கேட்டாள்.
ஆதி சமாளித்தாக வேண்டுமென யோசித்தவன், “அது… வித்யா உன்கிட்ட ஏதோ நோட்ஸ் குடுத்துருந்தாளாம் அதான் வாங்கிட்டு போலானு வந்தேன்” என்று எதையோ குருட்டாம்போக்கில் சொல்லி வைத்தான்.
"அதானே பார்த்தேன் இந்த நேரத்தில் நீங்க ஏன் வந்திருக்க போறீங்க நாளைக்கு எக்ஸாம் வேற அவளுக்கு” என்று சொல்ல, ஆதிக்கு தப்பித்தோம் என்றிருந்தது.
“மல்லி நீ போய் அவரு கேட்ட நோட்ஸ் எடுத்துட்டுவா” என்று அவளை அனுப்பிவைத்த ரேணுகா ஆதியை பார்க்க அவன் அவள் மீது கோப பார்வையை வீசி, "நான் உங்க கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்” என்றான்.
“ம்ம்ம் சொல்லுங்க”
“உண்மை யை சொல்லு... உன் வீட்டோட நம்பர் 6 இல்ல 26” என்று கேட்ட நொடி ரேணுகாவின் பார்வை நிலைகொள்ளாமல் அலைபாய்ந்தது.
“அ....அ....சார் நான் எதுவும் பன்னல....எனக்கு எதுவும் தெரியாது” என்று பதற, ஆதியின் சந்தேகம் அதிகரித்தது.
“ஓய் போலிஸ் அடி எப்படி இருக்கும் தெரியும் ல லேடி போலிஸ் கான்ஸ்டபிள் வரவைச்சு அடி பிச்சிருவன் ஒழுங்கா உண்மையை சொல்லு”
“என்ன உண்மை மிஸ்டர்? நீங்க உங்க லிமிட் க்ராஸ் பன்றீங்க... இந்த நேரத்தில் என் வீட்டுக்கு வந்து இப்படி விசாரணை பன்றதுக்கு உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தா?”
“ஹலோ தப்பிச்சிக்கலாம் னு பார்க்காத… எனக்கு உன் மேல சந்தேகம் லைட்டா வந்துருக்கு கன்பார்ம் ஆச்சு மவளே களி திங்க வைச்சிருவேன்”
“உண்மை என்னனு தெரியமல் பேசாதீங்க... நான் ஏற்கனவே சொன்ன மாதிரி ராகவா கேஸ் மர்டர்தான்… ஆனால் அதை நான் பன்னல புரியுதா? போலிஸ் தானே நீங்க? நீங்களே கண்டுபிடிங்க.” என்று அவள் தெனாவட்டோடு சொல்ல,
ஆதி அவளை முறைத்தபடி அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.
அவன் மின்தூக்கியில் நுழையவும் அதிலிருந்து 35 வயது மதிக்கதக்க ஒருவர் இறங்கவும் சரியாக இருந்தது.
இருவரது தோள் பட்டையும் இடித்து கொண்டது. “
“சாரி சார்” என்று கரகரத்த குரலில் கூறிவிட்டு அவன் நகர
“யார் இவன்? இவன் ஏன் மூனாவது மாடிக்கு வரான்? சரி நம்ம போவோம்… இந்த போலிஸ் புத்தி எல்லாரையும் சந்தேக படவைக்குது” என்று அவன் தனக்குள் திட்டிக்கொண்டே,
தரைத்தளம் சென்று இறங்கி பைக்கை சாவி போட்டு இயக்கிய அதேநேரம் அந்த லிப்டில் வந்த ஆசாமி தன் காரை கிளப்பி சென்றதை கவனித்தான்.
‘ச்ச...யார்ரா இவன்? ஏன் இப்ப வந்துபோறான்? ஒன்னும் புரியலையே… இவனும் இந்த அப்பார்ட்மெண்ட்ல இருக்கிறவனா… அப்படி தெரியலையே… இவனை பார்த்த நியாபகமே இல்லை… இல்ல நம்ம கவனிக்கலையோ’ என்றபடி கிளம்ப செல்ல எத்தனிதத்தவன் ஏதோ மனதில் தவறாக பட, அவன் மீண்டும் உள்ளே சென்றான். ஆனால் ஏழாவது மாடிக்கு!
ராகவா வீட்டு கதவை தட்டினான். ராகவா வின் மகள் தன் உடையை சரி செய்தவாறு கதவை திறந்தாள்.
"சார் நீங்க யாரு?”
“ம்ம்ம்... நான்” என்றபடி தன் அடையாள அட்டையை நீட்டினான். “இன்ஸ்பெக்டரா நீங்க” என்று தன் கோலிகுண்டு கண்களை அவள் உருட்ட, ”நீ யாரு ராகவன் மகளா?” என்று வினவினான்.
“ம்ம்ம் ஆமா... ஆனா ஏன் இப்போ வந்து இப்படி கேக்குறிங்க?” என்றவள் கொஞ்சம் பயந்தபடி பேசினாள்.
“நான் உங்க அப்பா கேஸ் விஷயமா விசாரணை செய்யும் அதிகாரி… இந்த கேஸ் முடியுற வரைக்கும் கொஞ்சம் இப்படிதான்… நான் எப்பவேணாலும் விசாரிக்க வருவேன்
“ஓ” என்றவள் முகத்தில் அச்சம் தொற்றி கொள்ள,
“ஆமா... நீ இப்ப என்ன படிக்கிற?” என்றவுடன்
“பன்னிரண்டாவது படிக்கிறேன் சார்” என்றாள்.
பதில் சொல்லயவள் சட்டென்று, “ஓகே சார்… உங்கள் நம்பர் வேணும் ஏதாவது ப்ராப்லம்ஸ் னா கூப்பிட வசதியா இருக்கும்”
அவளை ஏறஇறங்க பார்த்தவன் “இதான் என் நம்பர்” என்று அவன் கைப்பேசி எண்ணை எழுதி தர, “தாங்க்ஸ் சார்” என்று பெற்று கொண்டாள்.
“ஆமா அம்மா வீட்டில் இல்ல?”
“அ...அ...அம்மா..அவங்க தங்கச்சி மகனுக்கு கல்யாணம் னு வெளியூர் போயிருக்காங்க”
“அப்போ நீ தனியாக இருக்க அப்படி தானே”
“ஆமா.”
“ம்ம்ம்.... சரி கதவை தாழ்ப்பாள் போட்டு படு”
“ஓகே சார்”
கீழே இறங்கி வந்தான் பைக்கை கிளப்பி தன் வீட்டையடைந்தான். அவன் உள்ளே வந்ததும் வராததுமாக வித்யா பஞ்சாயத்து வைக்க ஆர்மபித்தாள்.
"டேய் அண்ணா… உனக்கு அறிவு இருக்கா இந்த நேரத்தில் ஏன் ரேணுகா அக்காவை பார்க்க போன” என்று தங்கை கத்த ஆரம்பிக்க...
‘இவளுக்கு எப்படி நம்ப அங்கதான் போயிருந்தோம் னு தெரிஞ்சது’ என்று யோசித்தவன் அவளிடம் ஏதேதோ சமாதானங்களை கூறி தப்பி பிழைத்து தன் அறைக்குள் வந்து படுத்து கொண்டான். அவனை ஏகாந்தமாக நித்திரா தேவி தழுவி கொண்டாள்.
 

Bhagya Lakshmi

Member
Vannangal Writer
Team
Messages
44
Reaction score
18
Points
8
3
ச்ச என்ன இந்த இன்ஸ்பெக்டர் நம்பமேல சந்தேக படுறமாதிரியே நடந்துக்குறாரு முதலில் போலிஸ்டேஷன் சென்று இதற்கு ஒரு தீர்வு கட்டனும் "என்று யோசித்து விட்டு மறுநாள் ரேணுகா ஆதி இருக்கும் ஸ்டேஷனுக்கு வந்தாள்...
"இன்ஸ்பெக்டர் சார்.....என்று அவளது அழைப்பில் திரும்பியவன் இவ எதுக்கு ஸ்டேஷன் வரைக்கும் வந்துருக்கா சரி என்னனு கேப்போமே

வாங்க மிஸ் ரேணு....என்று புன்னகையிக்க "ம்ம்ம் க்கும் இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை என்று முனவிக்கொண்டே அவனுக்கு எதிர் இருக்கும் இருக்கையில் அமர்ந்து கொண்டாள் . "டீ காபி எதாவது ?என்று ஆதி வினவ "அதெல்லாம் ஒன்னும் வேணாடாம் உங்கள் கிட்ட கொஞ்சம் பேசனும் என்றதும் "என்ன ஆச்சு இன்னைக்கு எதாவது குக்கர் வெடிச்சுதா மேடம் என்று நக்கலடிக்க அவள் கோபத்தை அடக்கிக்கொண்டு பற்களை கடித்து

"இங்க பாருங்க..... அந்த கேஸ் விஷயமா என்னை மறுபடியும் பார்க்க வீடு பக்கம் வராதிங்க ப்ளீஸ் ....என் தங்கச்சியும் நானும் வயசு பொன்னுங்க இப்ப தான் அவளும் என் வீட்டுக்கு வந்துருக்கா ....இப்படி நீங்க வந்து போறது நல்லா இல்லை. அப்புறம் வீடு நம்பர் 26 எப்படி வந்தது தெரியனுமா??,என்றதும் ஆர்வமான பார்வையை அவளிடம் செலுத்திய ஆதி புருவங்கள் ஏற்றியவாறு சொல்லுங்கள் என்றான் ." நம்பர் போர்டு அடிக்கிறப்ப கார்பென்டர் 26 னு அடிச்சு கொடுத்தான் அது தவறுதலாக நடந்தது...அதை மாற்ற கூட எனக்கு நேரமில்லை வேலைல கொஞ்சம் பிஸி அதான் இந்த குழப்பத்துக்கெல்லாம் காரணம் மற்றபடி நான் எந்த தவறும் செய்யல. என்றவுடன் அப்படியா அப்படினா அதையும் டெட்ஸ்ட் பன்னி பார்த்துருவோம்.என்று சிரிக்க .சற்று நேரம் அவனையே பார்த்தவள்"என்னமோ இது ஆஸ்பத்திரி மாதிரியும் அவரு டாக்டர் மாதிரியும் டெஸ்ட் பன்றேனு சொல்றாரு என்று மனதுக்குள் நினைக்க. மீண்டும் அவன் சிரிக்க

என்ன சார் சிரிப்பு???என்று அவள் கேள்வியை எழுப்ப

ம்ம்ம் கன்பார்ம் நீ எந்த தப்பும் பன்னல அப்படி தானே???ஹலோ சாரதா இங்க வாங்க என்று பெண் கான்ஸ்டபிள் ஒருவரை அழைத்து இவங்க முகத்தை வெறும் கண்கள் மட்டும் தெரியுற மாதிரி கட்டிவிடுங்க

ஏன்????என்று தயக்கத்துடன் ரேணுகா கேற்க

நான் உன் கண்கள் பார்க்கனும். ஆமா உன் கண்கள் மட்டுமே ஆழமா பார்க்கனும்.

ஏட்டு - ஏன் யோவ் 403 இன்ஸ் ஏதோ புது டெக்னிக் வச்சிருக்காரு...
யோவ் ஏட்டு இது புது டெக்னிக் இல்லையா இதெல்லாம் ஏற்கனவே அதே கண்கள் படத்துலையே பார்த்தாச்சு...எனக்கு என்னமோ இன்ஸ் ஏதோ அவளை சைட் அடிக்கிற மாதிரி தோனுது.என்று இருவரும் முனவிக்கொண்டே சிரிக்க

கொஞ்சம் நேரம்...அவ கண்களை கவனித்தவன் அவள் கண்களில் வக்ரம் இல்லை வன்மமும் இல்லை ஏதோ ஒரு பயம் மட்டுமே அவளிடம் பிழை இருக்க வாய்ப்பில்லை. என உணர்ந்தவன் "இன்னும் கொஞ்சநேரம். இப்படியே பார்த்துட்டு இருந்தா நமக்கு லவ் வந்துரும் போல"சரி சரி ஏம்மா சாரதா இவங்களை கிளம்ப சொல்லு.

சார் சிங்கம் சூரியா மாதிரி நைட்டியை எப்படி கழட்டுவ அப்படி இப்படி னு ஏதாவது கேள்வி இருக்கா????என்று ரேணு நக்கலா கேற்க

"ஹாஹா இல்லை நீங்க கிளம்பலா ரேணு...."

ரேணுகா - ப்பா சரியான தொல்லை டா இந்த ஆளு ...நல்லா இருக்கானே னு ப்ரண்டு ஆகிடலானு ...நினைச்சா இது வேலைக்கு ஆவாது போல....

ஆதி - ம்ம்ம் இந்த ரேணு கண்கள் பார்த்தா நமக்கே காதல் வந்துரும் போல...ப்பா....திராட்சை பழம் மாதிரி கண்ணு. ஹாஹா என்று மனதில் அவள் கண்களை பற்றிய ஆராய்ச்சியில் இறங்க. நேரம் ஆகிவிட்ட நிலையில் வீட்டுக்கு புரப்பட்டான்.

..........

அடுத்த இரண்டு நாள் ஆதி லீவு எடுத்துட்டு ஊருக்கு போனான் குடும்பத்துடன் கூட...ஆனந்தி பாவடை தாவனி ல சுத்திட்டு இருந்தா....

"ஹாய் மாம்ஸ்.... "

"ஆனந்தி ...ஹாய் எப்படி டி இருக்க ???"

நல்லாயிருக்கேன் மாம்ஸ்...

வித்யா - வழியாதடி.....

ஆனந்தி - அய்யே...நாத்தனாரே நீங்க... உங்க வேலையை பாருங்க.

ஆதி - ஓ....மேடம் அவ்வளவு...சீக்கிரமே என் தங்கச்சி க்கு அண்ணி...ஆயிட்டிங்களா ???

ஆனந்தி - மாம்ஸ்.... போங்க நான் என்ன பன்றது அத்தை தான் ஆசையை வளத்து விட்டுச்சு .

ஆதி - இந்த வேலை மட்டும் எல்லா அம்மாவும் நல்லா பன்னுதுங்க

------
ஊர் ஜனம்...அத்தனை பேரும் கோலம் போட்டி க்கு ஒன்று கூடிட்டாங்க...ஆதி...ரொம்ப நாள் கழித்து நிம்மதியாக இருந்தான். ஊர் ஜனமே பேசிக்கொண்டது ஆதி தான் ஆனந்திக்கு நல்ல துணை னு.

கோலம் போட்டி ல நம்ப...ஆனந்தி ஜெயிச்சிட்டா அவ மனசுல இருக்கிற சந்தோஷத்த விவரிக்க வார்த்தை இல்லை.

எல்லாருடனும் சிரித்து சந்தோஷமாக இருக்கும் தருணம் கமிஷனர் போன் செய்ய
இவன் போன் கட் பன்னிட்டான்....இரண்டு நாள் போனுக்கும் லீவு அளித்துவிட்டான் ஆதி.

தொடரும்
 

Bhagya Lakshmi

Member
Vannangal Writer
Team
Messages
44
Reaction score
18
Points
8
4

ஊரில் நேரம் போவதே தெரியவில்லை ஆனால் அங்கும் நம் வித்யா அவ்வப்போது செல்போனை நோண்டுவதும் யாருடனோ பேசுவதுமாக இருக்க வித்யாவின் நடவடிக்கை வித்தியாசமாக தெரிந்த ஆதிக்கு அவளை அழைத்து என்னவென்று விசாரிக்க வேண்டும் என்று நினைத்தான். அவளை கூப்பிட்டு வித்யா உனக்கு எதாவது பிரச்சனையா??என்று ஒரு அக்கறையில் கேற்க மலமலவென்று கண்களிலிருந்து நீர் வடிந்தது.
"என்னடி ஆச்சு உனக்கு எதாவது பிரச்சனையா கேற்கிறேன்ல சொல்லேன் டி என்று அவன் மீண்டும் அவள் தோள்பட்டையை உலுக்கி கேற்க
அந்த திடுக்கிடும் தகவல் கிடைத்தது
"அண்ணா என்னை ஒருத்தன் ரொம்ப நாற்களா செக்ஸ் டார்ச்சர் தருகிறான் . என்று அழுது கொண்டே சொல்ல...அதை கேட்டு அவனுக்கு அதிர்ச்சி தொற்றியது .ஒரு அண்ணணாக அவளை மனம் தேற்ற உள்ளுக்குள் இருக்கும் போலிஸ் புத்தி தட்டி எழுப்பியது.."யார் இவளுக்கு செக்ஸ் டார்ச்சர் தந்துருக்கனும் ??எனக்கு வேண்டாதவங்க யாராவது பழிவாங்கும் நோக்கத்தில் செய்கிறார்களா அல்லது யாரா இருக்கும்.
"சரி டா மா...யார் அவன்???எப்படி இருப்பான்?
அவன் கொஞ்சம் கருப்பா உயரமா இருப்பான் மிடில் ஏஜ் ஆளு தான்...
மிடில்... ஏஜ் ??என்னடி சொல்ற??
ம்ம்ம்...ஆமா அண்ணா
ஸோ....எப்படி அவனுக்கு உன்னை தெரியும்??
அது வந்து ... என்று சற்று தயங்கியவாரே பேச்சை துவங்கினாள்
"வாட்ஸ் அப்ல மெஸெஜ் வந்தது சும்மா.. ஒரு ரிசார்ஜ் ஆபர் பற்றி அப்போ கால் பன்னி கேட்டதுக்கு அவன் பேச ஆரம்பித்து கடைசியில் அது இப்படி வந்து முடிந்தது.
ஓ......
அந்த நேரத்தில் ஒரு அண்ணணாக அவளை ஏறிமிதிக்க தோன்றியது "ஏண்டி எவ்வளவு விஷயம் பேப்பர் ல டீவி ல பாக்குறிங்க அப்படி இருந்தும் ஏண்டி இப்படி ஏமாறுறிங்க என்று பளார் னு அறை விட்டான்...ஏய் ரிசார்ஜ் க்கு...ஆசைபட்டு வாழ்க்கை யை தொலைப்பிங்களா டி...???இங்க பாரு கூட படிக்கும் ப்ரண்ட்ஸ் தவிற யார் கிட்ட ஆச்சும் பேசின.....அம்புட்டு தான் சொல்லிட்டேன்....என்று தந்தை ஸ்தானத்தில் இருக்கும் அண்ணணாக அவளை கண்டித்தான்.
சாரி அண்ணா... என்று சொல்லியும் அவளை முறைத்தபடி நிற்க
...மன்னிச்சிரு அண்ணா என்று காலில் விழ அவன் மனது இறங்கியது அவளை எழுப்பி நிற்கவைக்க அதற்குள் "ஏய் நாத்தனாரே "என்று ஆனந்தி கூப்பிடும் குரல் கேற்க
சரி போ....ஆனந்தி கூப்பிடுறா பாரு என்று தன் தங்கையின் தலையை வருடிவிட்டு அனுப்பி வைத்தான்.
...........
சற்று நேரத்தில் அவன் போன் ஸ்விட்ச் ஆன் செய்ய அவனது போனுக்கு...அழைப்பு வந்தது.
"ஆதி அங்கிள்...நான் ராகாவா பொன்னு பேசுறேன்..."
சொல்லுமா....
"அங்கிள் அது வந்து உங்க கிட்ட ஒரு உண்மை சொல்லனும்"என்று புதிர் போட
என்ன???????? என்று கேள்வி எழுப்பினான்
"அங்கிள் அது வந்து.. என்று அவள் பேச்சு இழுக்க
....
நம்பர் அதுக்குள்ள ஸ்விட்ச் ஆப் ஆயிட்டு மீண்டும் முயற்சிக்க அழைப்பு கிடைக்கவில்லை அவனும் திருவிழா பிஸியில் எதையும் கண்டுக்கவே இல்லை....திருவிழாவின் நிகழ்ச்சியில் மூழ்கிவிட்டான். இது அவனுக்கு கிடைத்த பெரும் வாய்ப்பல்லவா இரண்டு நாள் எந்த தொல்லையும் இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம் அல்லவா???
அன்னைக்கு ஆனந்தி வீட்டில் செம்ம விருந்து.... ஆதி நன்றாக ரசிச்சு ருசிச்சு சாப்பிட்டான். என்னவோ சாப்பிடுவதற்கென்றே பிறந்தவன் போல ,அவன் தான் இரண்டு நாள் லீவாச்சே...அப்போ சாப்பாடு உறக்கம் உறவினர்கள் இதைதவிர..மத்தது ஞாபகம் வரும்ஆனால் தங்கச்சி பற்றிய நினைப்பு மட்டும் மனசுல ஓடிட்டே இருந்தது....
தங்கச்சியை டார்ச்சர் பன்னவன் கிடைச்சான் அவன் செத்தான் அந்த அளவு ஆதி உள்ளுக்குள் பொங்கி எழுந்துக்கொண்டிருந்தான். ஆனால் வெளியில் எதையும் காட்டிக்கொள்ளாமல் அனைவரிடமும் சந்தோஷமாக பேசிக்கொண்டு இருந்தான்.அவ்வப்போது தன் மீது தவறு இருந்ததை உணர்ந்து வித்யா தன் அண்ணன் ஆதியிடம் "சாரி சாரி"என்று ஜாடைமாடையில் கேட்டுக்கொண்டிருக்க. தன் தங்கையை குழந்தையாய் பாவிக்கும் ஆதி அவளை இன்முகத்துடன் ஆதரவு சொல்லிக்கொண்டு இருந்தான்.
அண்ணா கிட்ட சொல்லிட்டோம் னு திருப்தியில் வித்யா சந்தோஷமாக இருந்தாள் . ஆனந்தி அவளோட ஆளு ஆதியை சுத்தி சுத்தி வந்தாள்..அவளுக்கு அவ பிரச்சினை இந்த இரண்டு நாள் சாக்கில் அவனை எப்படியேனும் மயக்கிவிட வேண்டுமென்று.
பெரியவங்க ஆனந்தி ஆதியின் கல்யாணம் பற்றி ஆலோசிக்க துவங்கினர். முடிவு என்னவென்றால் இன்னும் இரண்டு மாதத்தில் கல்யாணம்.
செத்தான் டா...சேகரு.என்ற டைலாக் நினைவுக்கு வர ஆதி தன்னை மறந்து சிரிக்கலானான்.
தொடரும்
 

Bhagya Lakshmi

Member
Vannangal Writer
Team
Messages
44
Reaction score
18
Points
8
ஆதி லீவு முடிந்து சென்னைக்கு திரும்பினான்,ஆனந்தியின் நினைவுகளுடனும் திருவிழாவின் சந்தோஷங்களுடனும் வீட்டுக்கு வந்தடைய....வந்ததும் வராததுமாக மூஞ்சியை அவ்வளவு கடுப்பா வைத்துக்கொண்டான் வேலைக்கு போகவேண்டுமென்று.வித்யாவும் கல்லூரிக்கு புரப்பட...
வித்யாவை காலேஜில் விட்டுட்டு ட்யூட்டி போகனும் என்று தயார் ஆகி அவளை விட்டுட்டு வரும் வழியில் ரேணுகா வை பார்த்தான்.....

"ஹாய் ரேணு..."

"ஐயோ இவனா ....?"என்று மனதில் நினைத்துக்கொண்டே

"ம்ம்ம் ஹாய் ஹாய்".இன்ஸ் என்ன சொல்லுங்க???என்று சாதாரணமாக அவள் உரையாட துவங்கினாள்

"சும்மா தான் உங்கள பார்த்தேன் அதான் பேசலாமே என்று உங்களருகில் வந்தேன் ,நீங்க பிஸியாக இருந்தா வேண்டாம் ஃப்ரீயா இருந்தா கொஞ்ச நேரம் பேசலாம்" என்று ஆதி அவளிடம் இயல்பாக கூறிவிட்டு அவள் என்ன சொல்ல முற்படுகிறாள் என்று அவளிடம் எதிர்பாக்க

அவளோ "எனக்கு வேலை இருக்கு நான் போறேன் இன்ஸ் . என்று கூறிவிட்டு அங்கிருந்து ஒரடி எடுத்து வைக்க அவள் தன்னிடம் பழக ஏனோ தயக்கம் கொள்கிறாள் என்பதை உணர்ந்தவன் போகயிருந்த அவளை தடுத்தான்.

"ஏய் நில்லு....என்கிட்ட ஏன் பேசுவதற்கே தயங்குகிறாய்?நான் என்ன உன்னை தின்று விழுங்கிவிடுவேனா என்ன "என்று புருவத்தை உயர்த்தி கேள்வி எழுப்ப

"பின்ன என்ன சும்மா... குரு குருனு போலிஸ் புத்தியை காட்டிட்டு இருந்தால் எப்படி உங்களிடம் நட்பாக பழகத்தோன்றும்? கொஞ்சம் நட்புணர்வோடு பேசினால் தான் என்ன? என்று அவள் வெடுக்கென்று அவன் கண்களை பார்த்து கேட்டுவிட ,அவனக்கு அவள் கேட்ட விதம் சிரிப்பை வரவழைத்தது.

"ஹாஹா.... சரி வா நான் உன்னை பைக்கில் ட்ராப் பன்றேன் எங்க போகனும் னு சொல்லு ரேணுகா என்று வினவ ? ப்பா ஆதி சார் இப்பதான் நீங்க சராசரி ஒரு நண்பனா என் கண்களுக்கு தென்படுறிங்க இனிமேல் நீங்களும் நானும் ஒரு நல்ல ப்ரண்ட்ஸ் ஓகேவா என்றதும் அவனும் ஓகே என்று அவனுடைய கட்டை விரலை உயர்த்தி காட்ட அவளும் தன்னுடைய கட்டைவிரலை உயர்த்தி காட்டிவிட்டு அவனுடன் இருசக்கர வாகனத்தில் ஏறி அமர்ந்து கொண்டாள்.இப்பொழுதாவது எங்க போகனும் னு சொல்லுவியா ரேணுகா என்று அவன் கேட்க

"ஆர்ட் அகாடமி போகனும் ..

"ம்ம்ம் வழி சொல்லு"நான் இதுவரை உங்கள் ஆர்ட் அகாடமிக்கு வந்ததே இல்லை

வண்டியை எடுங்க பாஸ் வழி தானா தெரியும் என்று அவன் தோளை தோழமையோடு அவள் தட்ட இருசக்கரவாகனத்தை கிளப்பி அவள் சொன்ன இடத்துக்கு பறந்தான்.

அவ இறங்குற இடம் வந்தது ....அவளை இறக்கி விட்டவன் அங்கேயே வெளியில் நின்று காத்துக்கொண்டு இருந்தான். என்னமோ தெரியல இன்னைக்கு ஆதிக்கு அவளை பிரிந்து செல்ல மனசு இல்லை அவ கிட்ட நிறைய பேசனும் தோன்றியது. இதுவரை முன்பின் தெரியாத யாரையும் தோழமை ஆக்கியது இல்லை. அது என்னமோ ரேணுகாவிடம் பழகிவிட அவனுக்கு எளிமையாக இருந்தது.

ரொம்ப நேரம் ஆகியும் அவ வெளியே வரவில்லை.இவனே கதவை திறந்து உள்ள போனான்.அங்கு வரவேற்பில் இருந்த பெண் "சார் இங்க யாரும் உள்ள எல்லாம் வரக்கூடாது அனுமதி இல்லாமல் "என்று கூற "மேடம் என் தோழி ரேணுகா ஒரு ஆர்டிஸ்ட் இங்கதான் வேலை செய்கிறாள் என்று கூற"ஓ அவங்களா ,அவங்க வருவாங்க நீங்க வெளியே காத்துட்டு இருங்க சார் என்று கூற "மேடம் இப்ப அவங்கள பார்க்க முடியாத என்ன?? என்று சந்தேகத்துடன் கேற்க "சார் அவங்க அங்க இன்னொரு ஆர்டிஸ்ட்க்கு மாடலா நின்னுட்டு இருக்காங்க"இப்ப நீங்க பார்க்க முடியாது . என்று கூறியும் அவள் பேச்சை மீறி கதவை தட்டினான். கதவை திறப்பதற்கு முன் ரேணுகா அங்கிருந்த ஒரு போர்வையை தன் உடலை சுற்றி போர்த்திக்கொண்டு கதவை திறக்க அவன் அதிர்ந்து போனான். ஒருபக்கம் அவள் அணிந்திருந்த உடை ஒரு ஓரமாக மடித்து வைத்திருந்த நிலையில் அங்கிருந்த ஒரு பெண் ஓவியர் கையில் ப்ரஷ்ஷுடனும் அங்கிருந்த வரைப்படத்தில் ரேணுகாவின் சாயலும் இருக்க "என்ன ரேணு இது ? நீ இங்க ..என்று பேச்சை தடுமாற்றத்துடன் ஆரம்பிக்க அவளோ "அ..ஆமாம் ஆதி நான் இங்கே நிர்வாண படத்திற்கு மாடலா நின்னுட்டு இருக்கேன்" என்று தலை குனிந்து நிற்க

ஆதிக்கு ஆத்திரம் தாங்கவில்லை... அவள் கண்ணத்தில் பளார் என்று ஒரு அறைவிட்டான் சும்மா உச்சி மண்டை வரைக்கும் வலிச்சிருக்கும் அவளுக்கு.

" ஏய் என்ன ரேணு இதெல்லாம்? என்று கொதித்தெழ"

ஆதி இது ஜஸ்ட் ஒரு மாடல் காக நான் இப்படி நிக்கிறேன் அவ்வளவு தான்..... இங்க இருக்கிறது அத்தனை ஓவியர்களும் பெண்கள் தான் அதனால் நீ நினைக்கிற மாதிரி எதுவும் பிரச்சினை இல்லை... இங்க பாருங்க ஆதி....நாங்க ஒரு ஓவிய கலைஞர் ..எங்களுக்கு மாடலா யார் வருவா சொல்லு????நாங்களே எங்களுக்கு மாடலா நின்னுப்போம்
நிர்வாண ஓவியம்க்கு நிர்வாணமா தானே நிக்கனும் ம்ம்ம் ?என்று தலையசைத்து கேட்க

என்னமோ சொல்ற ஆனால் எனக்கு இது கொஞ்சம் கூட பிடிக்கல என்று முகத்தை திருப்பிக்கொண்டான்.

ஆனால் இது எனக்கு ப்ரொபஷன் ஆதி இதுல தவறு என்று குறிப்பிட எதுவும் இல்லை . எங்களை மாதிரி ஓவியக்கலைஞர்களுக்கு உடலமைப்பே ஒரு ஓவியமா தான் தெரியும். என்று சற்று ஆர்டிஸ்ட் என்ற கர்வத்துடன் கூறிவிட்டு

"உனக்கு ஒன்னு தெரியுமா?இன்ஸ்" இதெல்லாம் நான் விருப்பம் பட்டு பன்னுறேனு நினைக்கிறியா??எல்லாம் என் தங்கச்சி யை படிக்க வைக்கனும் னு தான் . ஓவியம் தான் என்னோட துறை ...இதை தவிற வேற எதுவும் எனக்கு தெரியாது. இது மூலமாக நான் வருமானம் ஈட்டினால் தான் உண்டு. என்று கூற

ரேணு ப்ளிஸ்.... இதெல்லாம் என்னால பார்க்க முடியல, உன்கிட்ட எனக்கு ஏதோ ஒரு பொஸஸிவ் இருக்கிறது. உன்கிட்ட தோழமையோடு பழகுகிறேன் என்ற உரிமையில் சிலவற்றை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை

என் மேல ஏன் இவ்வளவு கரிசனம்?காதலா?இ..ல்லை சும்மா தான் கேட்டேன்.என்று அவள் தோளை குலுக்கி கேட்க

ஹாஹா இல்லை....

பின்ன??

நண்பன்.ஒரு நல்ல நண்பனா இருக்க ஆசை படுறேன் ரேணு

ஓ...ஹாஹா... அப்படினா சரி....ஓகே இரு வெயிட் பன்னு வரேன் ..உனக்கு தான் மாடலா இருக்கிறது பிடிக்கல ல... இனி நான் மாடல் பொம்மை யா நிக்கவே மாட்டேன் இது உன்மேல சத்தியம் போதுமா

ம்ம்ம்.... உனக்கு ஒரு வேலை நானே பார்த்து தரேன் ஓகே....ஓவியம் பகுதி நேர கலையா வச்சிக்க. சரியா??

சரி டா சாமி....கொஞ்சம் வெயிட் பன்னு நான் வரேன்.

ஐய்யயோ ....ட்யூட்டி க்கு நேரம் ஆச்சு,உன்கிட்ட பேசிட்டு இருந்ததுல நான் என் ட்யூட்டி மறந்துட்டேன் நான் கிளம்புறன்...என்று அவளிடம் விடைபெற்று சென்றான்.


ரேணுகா - செம்ம கேரக்டர் டா நீ....உன்னை கட்டிக்க போறவ கொடுத்து வச்சிருக்கனும். அந்த ஏழாவது மாடி ராகவா என்கிட்ட தப்பா நடக்க முயற்சி பன்னப்போ....ச்ச ஆம்பள பசங்கள வெறுக்க ஆரம்பிச்சன். ஆனால் முதல் முறை ஒரு நல்ல ஆண்மகனை நான் வாழ்க்கை ல பார்க்கிறேன்....என்னமோ தெரியவில்லை அழுகையா வருது . என்று தன் மனதுக்குள் கூறிக்கொண்டு சுவரில் சாய்ந்து அழுதுகொண்டே இருந்தாள்.

தொடரும்.
 

Bhagya Lakshmi

Member
Vannangal Writer
Team
Messages
44
Reaction score
18
Points
8
6
ஆதி தான் பணியில் இருக்கும் காவல் நிலையத்திற்கு வந்தடைந்தான். இன்று அவனுக்கு வேலை பலு எதுவும் இல்லாததால் பழைய கோப்புகளை எல்லாம் தூசி தட்டிக்கொண்டு இருந்தான்.
"எங்க என்னோட நாய் குட்டி காணும்...ம்ம் அச்சோ பப்பிமா நீ எங்கே ?என்று வினவிக்கொண்டு காவல் நிலையத்திற்கு வந்தடைந்தாள் அந்த சிறுமி...
ஆதி - ஹாஹா என்ன வேணும் செல்லம் உனக்கு?என்று அவளை தூக்கியபடி கேட்க
சிறுமி - மாமா... என் பப்பி மா காணும் தேடி கண்டு பிடிச்சு தாங்க..
ஆதி - அப்படியா குட்டி பாப்பா.. சரி சரி நீ ஏன் தனியாக வந்த?வீட்டில் யாரும் இல்லையா.
சிறுமி - மாமா எனக்கு வீட்டில் யாரும் இல்லை.... நானும் பப்பி மட்டும் தான் எங்க தாய்மாமா தான் என்னை வளர்க்கிறாங்க ...மாமா இரண்டு நாளக்கு ஒரு முறை தான் வரும். எனக்கு சாப்பாடு ல தினமும் ஸ்விகி ல தான் வாங்கி தராங்க மாமா ....
ஆதி- ஓ.....ஸ்விகி ல ஆர்டர் பன்னி சாப்பிடுற அளவு பெரிய ஆளா நீ??
ஹாஹா ஆம்.... சரி மாமா என் பப்பி எனக்கு வேணும் கண்டு பிடி..
ம்ம்ம் சரி வா நான் உன்னை விட்டுரேன் ....தனியாக எப்படி போவ நீ
ஏய் லூசு மாமா...தினமும் நான் ஸ்கூலுக்கு நடந்தே தனியாக தான் போறேன்.
ஹாஹா ரொம்ப தைரியம் ஆன பொன்னு தான் ...சரி வா நான் உன்னை வீட்டில் விட்டுடுறேன்
ஓகே....நோ ப்ராப்ளம்
.....
அவளை அழைத்து கொண்டு வீட்டுக்கு சென்றான் ஆதி...கதவை திறந்து அவள் ஆதியை சோபாவில் அமர சொல்லி தண்ணீர் எடுத்து வந்து தந்தாள்
மாமா தண்ணீர்
போதும் டா செல்லம் நீ குடி.
மாமா... என்னோட பப்பி எனக்கு கிடைக்கும்ல?????
கண்டிப்பா கிடைக்கும்... சரி வா மாமாக்கு உன் வீடு சுத்தி காட்டு.
ம்ம்ம் ஓகே...
மாமா இதான் என்னோட பெட்ரூம் அங்க பாருங்க நான் பப்பி அப்புறம் என் மாமா.
அந்த புகைப்படத்தை உற்று நோக்கியபடி பார்த்து கொண்டிருந்தான்.....அதில் இருக்கும் அவளுடைய மாமா?
அ.....செல்லம் அது உன் மாமா வா???
பின்ன உங்க மாமா வா???என்று சொல்லி கொல்லென்று சிரித்தாள்.
ஏய் வாயாடி என்று அவளை தூக்கி அவள் நெற்றியில் முத்தமிட்டான்...பிறகு நேரம் ஆகிவிட்ட நிலையில் அவன் கிளம்பிவிட்டான்.

வீட்டுக்கு வந்தடைந்ததும் ரேணுகா வீட் அமர்ந்து தன் தங்கையின் தோளில் சாய்ந்தபடி...
"மல்லி....ஏய் மல்லி.....உனக்கு மாப்பிள்ளை பார்க்கவா டி????என்று வினவ
அக்கா....என்ன திடிரென்று? என்று தன் கண்களை உருட்ட
இல்லை எனக்கு என்னமோ வயித்துல நெருப்பு கட்டிட்டு இருக்கிற மாதிரி இருக்கு.... உனக்கு கல்யாணம் பன்னிட்டு அப்புறம் நான் பன்னிக்கிறேன். தயவுசெய்து சீக்கிரம் கல்யாணம் பன்னிக்கோ டி ,என் பாரமும் குறையும்.
ம்ம்ம் அக்கா உன் விருப்பம்... இங்க பாரு நீ எனக்கு அம்மா மாதிரி நீ என்ன சொன்னாலும் நான் கேப்பேன்....
ஹாஹா... அப்போ மாப்பிள்ளை பாத்துற வேண்டியது தான்...
பாரு பாரு....என்று தன் அக்காவை கட்டிக்கொள்ள
திடீரென மழை பொழியும் சத்தம்.......
என்னடா இது இப்படி மழை பெய்து, என்று ரேணுகா வெளியே வந்து எட்டி பார்க்க....ஒரு சின்ன தூரல் கூட இல்லை....
இது என்ன.... சத்தம் மட்டும் எப்படி?என்று அவள் யோசிக்கும் நேரத்திற்குள்.....வலது பக்கம் வந்து அவளுடைய வாயை பொத்தி கண்கள் இரண்டையும் கட்டி போட்டு அவளை காரில் அமர்த்தி கூட்டிச் சென்றான் அந்த ஆசாமி. "அய்யோ அக்கா"என்று பதறினாள் மல்லிகா.
யார் அந்த ஆசாமி.?
தொடரும்
 

Bhagya Lakshmi

Member
Vannangal Writer
Team
Messages
44
Reaction score
18
Points
8
7

காரில் அமர்த்தி நெடுந்தூரம் அழைத்து வந்து அவளது கண்களை திறக்க செய்தான் அந்த ஆசாமி...மெதுவாக தன்
கண்களை திறந்த அவளுக்கு மகிழ்ச்சி எல்லை மீறியது. ஏனெனில் அவளுடன் ஓவியக்கல்லூரியில் ஒன்றாக படித்த பூவரசன் தான் அந்த ஆசாமி.

டேய் நீயா பக்கி...எதுக்கு இந்த திகில்?உன்னை.... ராஸ்கல் என்று செல்லமாக அடிக்க....அடியை வாங்கிய அவன் "ரேணு விடு டி...நான் மென்மையானவன் அப்படிங்கறது னால எங்க அப்பா எனக்கு பூவரசனு பேரு வச்சாரு நீ இந்த பூவை இப்படி அடிக்கிற அப்றம் பூ வாடிபோகாதா" என்று புன்முறுவலுடன் கூற

"ம்ம்ம் பின்ன என்ன ?லூசு இப்படியா பன்னுவது?நான் கொஞ்சம் நேரத்தில் பயந்தே போயிட்டேன் ப்பா....இன்னொரு வாட்டி இந்த விளையாட்டு எல்லாம் வேண்டாம்"

"ஹாஹா.... சும்மா ஒரு ஷாக் தரலாம்னு வேற ஒன்னுமில்லை சரி எப்படி போது டி உன் வாழ்க்கை?"

"ம்ம்ம் அது எங்க டா போது நானே தள்ளிட்டு போறேன்..."

"ஓ....ரொம்ப தள்ளாத விழுந்துற போது"என்று நக்கலடிக்க

"அதான் தாங்கி பிடிக்க நீ வந்துட்டியே இனி எனக்கு என்ன கவலை"

"ஹாஹா.....சரி வா ஒரு காபி சாப்பிடலாம் என்று அவன் எதார்த்தமான குரலில் கூற

"டேய் டைம் 8.30 ஆகுது வீட்டில் தங்கச்சி தனியா இருக்கா ....இப்ப நான் உன் கூட காப்பி குடிக்கிறது ரொம்ப முக்கியமா சொல்லு?"

"முக்கியம் தான் டி எனக்கு ஏன்னா ரொம்ப நாள் கழித்து உன்னை பார்க்கிறேன்ல அப்படியே காபி குடிச்சிட்டே உன்கூட கொஞ்சம் நேரம். பேசாலானு தான்.சரி வா உன் கையால நீயே உன் வீட்டில் போட்டு கொடு என்று மறுகணமே தன் எண்ணத்தை மாற்றியவன் அவளது பதிலுக்கு காத்திருக்க...

அவளோ கண் சிமிட்டியபடி"ம்ம் அது ஓகே" என்று பதிலளிக்க இருவரும் அவனது காரில் பயணித்தனர். தங்களது கடந்த கால கல்லூரி காலக்கட்டத்தில் நடந்த நிகழ்வுகளை அசைப்போட்டபடி. அந்த இரவு நேர கார் பயணம் அதுவும் பழைய கல்லூரி நட்புடன் என்கிற போது இருவருக்கும் ஒரு மட்டற்ற மகிழ்ச்சியை அளித்தது.நட்பு என்றாலே ஒரு சுகம் தானே, எனினும் பூவரசனுக்கு நட்பை தாண்டிய ஒரு காதல் உணர்வு மனதினுள் இருந்தாலும் வெளிப்படையாக கேட்க சற்று தயக்கமும் பயமும் இருந்தாலும் வீட்டில் வைத்து நேரடியாக கேட்க எண்ணினான்.வீட்டினுள் நுழைந்த அந்த நொடி மல்லிகா தன் தமக்கை ரேணுகாவை பார்த்து கட்டி அணைத்து அழத்துவங்கினாள்"அக்கா நீ எங்கே போயிருந்த நான் பயந்தே போயிட்டன்"என்று,உடனே அவளை மெல்ல தேற்றிவிட்டு "இதோ இவர் தான் பூவரசன் என் கல்லூரி நண்பர்"என்று அறிமுகம் செய்துவைக்க "வணக்கம் அண்ணே " என்று அவனுக்கு வணக்கம் வைக்க அவனும் "ஐயோ மச்சினிச்சி நம்பளை அண்ணன் சொல்றாலே என்று பெறுமூச்சு விட..

அவனை வீட்டு முகப்பறையில் அமர வைத்து காபி பறிமாறினாள் ரேணுகா.காப்பி கப்புடன் பேச்சை துவங்கினான் பூவரசன்

"ரேணு உன் கிட்ட நேரடியாவே கேக்குறன் ....நம்ப இரண்டு பேரும் கல்யாணம் பன்னிக்கலாமா?"என்று வெடுக்கென்று கேட்க அவளால் பதில் எதுவும் கூற இயலாது தடுமாறி கையில் இருந்த காபி கப்பை அவள் தவற விட "ஐயோ ஐயம் சாரி டி நீ ஏன் இவ்வளவு பதற்றம் ஆகுற?ரிலாக்ஸ் ஆகு முதலில் அப்றம் பேசிக்கலாம்"என்றவுடன் சுதாரித்து கொண்டு அவனிடம் பேச்சை துவங்கினாள்

"ஏய் என்னடா திடிரென்று ?இப்படி கேட்டா நான் என்ன சொல்றது சொல்லு"

"ஆமா இல்லை இரண்டுல எதாவது சொல்லு "

"என்ன நக்கலா?"

"இல்லை விக்கல் இங்க பாரு...எனக்கு கர்மம் இந்த லவ் ப்ரொபோஸல்...இதெல்லாம் சுட்டு போட்டாலும் வராது .ஆனால் காலேஜ் ல இருந்தே உன்னை ரொம்ப பிடிக்கும் ....நீ அழகா இருக்க அப்படினு இல்லை ...உன்னோட பொறுப்புனர்வு உன்னோட தனியாக வாழ்ற தன்னம்பிக்கை இதெல்லாம் ரொம்ப பிடிக்கும்."

"ஸோ?" என்று புருவத்தை உயர்த்தினாள் ரேணுகா

"ஸோ....ஐ."என்று வார்த்தையை விழுங்கினான்.

"ம்ம்ம்???என்ன டா முழுங்குற ?"

"ஒன்னுல அதான் சொன்ன ல...எனக்கு வராதுனு.."

"ஹாஹா... இங்க பாரு டா நீ சொல்றது புரியுது ஆனால் என் தங்கச்சி க்கு கல்யாணம் பன்னிட்டு தான்."

"ம்ம்ம் க்கும் சரியா போச்சு போ ....இங்க பாரு டி....உன் தங்கச்சி க்கு மாப்பிள்ளை பாக்குறது என் வேலை ஆனால் அதுக்கு முன்பு நீ நானும் புருஷன் பொண்டாட்டி ஆகனும் ..ஆயிட்டா...இரண்டு பேரும் சேர்த்து மாப்பிள்ளை தேடுவோம்....டீலா ?"

"மாம்ஸ் எனக்கு ஓகே...என்று மல்லிகா குரல் கொடுக்க...."

"தாங்க்ஸ் மச்சினிச்சி முதல்ல நீ அண்ணே னு கூப்பிட்ட உடனே மனசு கஷ்டமா போயிடுச்சு இப்ப நீயே புரிஞ்சிக்கிட்ட என்று சிரித்து விட்டு... ரேணுவை பார்த்தபடி அவளது மூக்கை சீண்டிவிட்டு....நான் கிளம்புறன் நல்ல பதிலாக யோசித்து சொல்லுஎன்று விடைப்பெற்று சென்றான்."



மறுநாள் காலை .....சூரியனின் வெளிச்சம் நேரே ஆதியின் முகத்தில் வீச....தூக்கம் களைந்து உடம்பை முறுக்கியபடி எழுந்தான்.
வித்யா அவனை கூப்பிடும் சத்தம் கேட்க ....பால்கனியில் நின்றிருந்த அவளை காண வந்தான்..

"வித்யா...என்ன காலங்காத்தால இப்படி சத்தம் போட்டு கூப்பிடுற?"

"அண்ணன் நான் சொன்னேன் ல ஒருத்தன் செக்ஸ் டார்ச்சர் தந்தானு அவன் அந்த பைக்கில் போறான்... அங்க பாரு அந்த பல்ஸர் ...என்று பதற்றத்துடன் கூற"

உடனே.....அவள் அடையாளம் காட்டிய பைக்கை துறத்த வீட்டிற்கு வெளியே வந்து தன் பைக்கை கிளப்பினான்....மேடு பள்ளம் அங்கும் இங்கும் ஆள் நடமாட்டம் அதையும் மீறி விரைந்து சென்றான்.."

விரைவில் அவனை பிடிப்பான்.
 

Bhagya Lakshmi

Member
Vannangal Writer
Team
Messages
44
Reaction score
18
Points
8
8

பூவரசன் அவகிட்ட அப்படி கேட்டதுல இருந்து ரேணுகா குழப்பமாவே இருந்தாள் ......என்ன செய்றது ????கல்யாணம் பன்னிக்கலாமா வேண்டாமானு யோசிச்சிட்டு இருந்தா...அப்போ மல்லிகா அவளருகே வந்து "அக்கா ......நீ இப்படியே யோசனை பன்னிட்டே இருந்தா அவ்வையார் ஆயிடுவ...இங்க பாரு பூவரசன் மாதிரி ஒரு நண்பன் புருஷனா அமைய நீ கொடுத்து வச்சிருக்கனும் சீக்கிரம் கல்யாணம் பன்ற வழிய பாரு"
"அதுக்கு இல்லை டி...முதலில்.உனக்கு ஒரு வாழ்க்கை அமைஞ்சா நல்லாயிருகக்கும் னு தோனுது ...."
"ம்ம்ம் எனக்கு இப்ப தான் 19 ஆனால்.. உனக்கு ???என்னை விட பெரியவ நீ தான் ......ஸோ.....நீ தான் முதல்ல கல்யாணம் பன்னிக்கனும்."
சரி சரி....எப்பவோ என்கூட படிச்ச பூவரசன் திடிரென்று ஏன் என்னை தேடி வரனும் .?என்று அவள் கேள்வி எழுப்ப அதை கேட்டு நகைத்துவிட்டு
"ஹலோ ஹலோ நீ காலேஜ் முடிச்சு 2 வருஷம் தான் ஆகுது சிஸ்டர்"இரண்டு வருஷமா லவ் எப்படி டா சொல்றது னு யோசிச்சிட்டு இருந்துருப்பான் அதான் வர வச்சிட்டேன்.
"என்ன???வர வச்சியா???"என்று குழம்பியபடி கேட்க
அ...ச்சி ச்சி...வந்தானு சொன்னேன் கா..டங் ஸ்லிப்
"ஓ...எப்படியோ அந்த பூவரசன் ஒருவழியா என் வாழ்க்கை ல வந்துட்டான் வாழ்ந்து தான் பார்ப்போம். என்று அவனது முகத்தை தன் கண் முன்னே கொண்டு வந்தவள் எதையோ நினைத்து வெட்கத்தில் சிரிக்க..."
"ஹாஹா அப்படி போடு "என்று தங்கச்சி விசில் அடிக்க
"என்ன நொப்பிடி போடு.....எங்க நான் உன்னை மாமியார் வீட்டுக்கு அனுப்பிருவேனு பயம் அதான் அவசர அவசரமாக என்னை அவனுக்கு கட்டி வைக்க முயற்சி பன்ற ம்ம்..."
"நான் கண்டிப்பா மாமியார் வீட்டுக்கு போகதான் போறேன் அக்கா ஆனால் அதுக்கு முன்பு நீ மாமியார் வீட்டுக்கு போய் சந்தோஷமா இரு சரியா ஓகேவா மை சிஸ்டர்."
"ம்ம்ம் ...ஏய் மல்லி நீ என் பொன்னு மாதிரி டி...உன் ஆசை தான் என் ஆசையும் நான் கண்டிப்பாக பூவரசனை கட்டிக்கிறேன். "
"ரொம்ப ஹாப்பி கா நானு....வா...இந்த சந்தோஷத்தை கொண்டாட நம்ப இன்னைக்கு ரெஸ்டாரன்ட் போவோமா என்று பாவமான முகப்பாவனை காட்ட"
"போச்சி....செலவு வச்சிட்டியா....?"
"ஐயோ அக்கா...ரொம்ப தான்.... அதான் கடுகு டப்பா ல 500ரூபாய் வச்சிருக்க ல அப்புறம் என்ன?"நான் ஒரு ப்ரைடு ரைஸ் நீ ஒரு சீரா ரைஸ் அவ்வளவு தானே திங்க போறோம் .
"ஹாஹா நல்லா புரிஞ்சி வச்சிருக்க டி..."
"பின்ன....நம்ப என்ன அவ்வளவு பெரிய சோத்து மூட்டை யா ???நமக்கு 500அதிகம் தான்..."
சரி சரி கிளம்பு......போலாம்.
இரண்டு பேரும் ஹோட்டல் போக ..அங்க ஆதியை மீட் பன்னாங்க எதர்ச்சையாக. அவன் பக்கத்து டேபிளில் உக்காந்து சாப்பிட்டு கொண்டே இருந்தான்.
"ஹாய் ஆதி அண்ணன் செம்ம கட்டு கட்டுறீங்க போல.."என்று மல்லிகா வெடுக்கென்று கலாய்க்க..
ரேணுகா அவளை சீண்டிவிட்டு சும்மா இரு டி என்று முனு முனுக்க
ஆதி சற்றும் முகத்தில் எதையும் காட்டிக்கொள்ளாமல்"பேசட்டும் விடு ரேணு.... என் தங்கச்சி ப்ரண்டு தானே ...ஸோ வித்யாவும் ஒன்னுதான் மல்லிகாவும் ஒன்னு தான் எனக்கு."
மல்லிகா அவனை பார்த்து"அண்ணா... அப்போ எனக்கு என்ன பிரச்சனை னாலும் காப்பாத்துவியா அண்ணன்?என்று ஆச்சரிய பார்வை பார்க்க
மல்லி....உனக்கு என்ன ஆச்சு?என்று கேட்க
ஒன்னுல ஆதி அண்ணா சும்மா தான் கேட்டேன்...நீங்க சாப்பிடுங்க ...என்று கூற
ஆதி அவளை பார்த்து" ஓய் வாலு ...நீயும் ரேணுகாவும் என்ன வேணுமோ சாப்பிடுங்க நானே பில் பே பன்னிடுறேன்"என்று செல்லமாக கூற
ரேணு அவனிடம்"அய்யோ ஆதி அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்"என்று நிராகரிக்க
"ஏன் நாங்க பில் பே பன்னா கல்லாவில் இருக்கிறவரு கோச்சிப்பாரா?" என்று சிரிக்க
ஹாஹா சரி ஆதி...என்று அவளும் சிரித்துவிட
அப்பாடா....500 மிச்சம்..... தாங்க்ஸ் ஆதி அண்ணா என்று அவனிடம் கிண்டலுடன் சொல்லிவிட்டு சிரிக்க
ரேணு அவளிடம்"ஏய் லூசு சில்லியா பிகேவ் பன்னாத "என்று கடிந்துக்கொள்ள
மல்லிகா "ச்சி பே அவரு நம்ம ப்ரண்டு தானே"என்று எதார்த்தமான தோரணை யில் கூற
சாப்பிட்டபடி பேசிக்கொண்டு இருக்கையில் அந்த ராகவா கேஸ் பத்தி பேச்சு ஆரம்பிக்க மல்லிகாவிற்கு புரை...ஏறியது.
தொடரும்
 

Bhagya Lakshmi

Member
Vannangal Writer
Team
Messages
44
Reaction score
18
Points
8
9

யார் இந்த பூவரசன்? வாருங்கள் அவனுடைய கடந்த கால நிகழ்வினை பார்ப்போம்.
அழகான குடும்பம் அமைதியான வாழ்க்கை அன்பான தங்கச்சி அவனுக்கு சந்தோஷத்துக்கு அளவே இல்லை ஆனால் என்னைக்கு அவன் தங்கச்சிக்கு அந்த துயர சம்பவம் நடந்ததோ அன்றையிலிருந்து அவனுடைய ஒட்டு மொத்த சந்தோஷமும் இழந்துவிட்டன ஆம் அவனுடைய பெற்றோர் தற்கொலை செய்துகொண்டனர் ஆனால் பூவரசன் எழுந்து நின்றான் கம்பீரமாக வாழ்ந்தாகனும் என்ற கட்டாயத்தில் ...

அன்னைக்கு ஆதி ரோட்டில் நின்றுகொண்டிருந்த போது ஒரு நாய் குட்டி துள்ளி குதித்து ஓடுவதை பார்த்தான் அது அந்த சிறுமி வளர்த்த நாய் போல இருக்கவே அதை பிடிக்க முயன்றான் அது ஓடி ஓடி கடைசியில் தாமரை அப்பார்ட்மண்டுக்கு செல்ல பின் தொடந்தான் அது நேராக 21 ராகவா வீட்டுள் நுழைந்தது ...என்ன டா இது சம்மந்தமே இல்லாமல் அந்த வீட்டை அடைகிறதே என்று குழப்பம் ..உள்ள செல்லவும் சற்று தயக்கம் ஆனால் வேறு வழியின்றி உள்ளே சென்றான் .....

வலதுபுரம் இருக்கும் மாஸ்டர் பெட்ரூமில் "என்னை விடு ...ப்ளீஸ் விடு போதும் விடு ....ஆ...அம்மா என்னால முடியல ...னு கதறல் சத்தம் அந்த கதறல் சத்தம் ராகவா பெண்ணின் குரல் ...அவளை எப்படியாவது காப்பாற்றியாகனும் கதவை உடைக்க முயற்சித்தான் பிறகு அங்கிருந்த இரும்பு ராடினை கொண்டு கதவை பிளக்க முயற்சித்தான் கதவு அவனுக்கு ஏற்றாற்போல் சிரமம் தராமல் பிளந்துகொண்டது,பாவம் அந்த பெண்ணின் அலறல் சத்தம் கதவின் செவிகளுக்கும் கேட்டுவிட்டது போலும்.கதவை உடைத்து உள்ளே சென்றான் ஆதி, அவன் வசமாக சிக்கிக்கொண்டான்.அங்கிருந்த ராகவன் மகள் விலகியிருந்த அவளுடைய சுடிதாரை சரிசெய்து கொண்டு.

"ஆதி அங்கிள் தாங்க்ஸ்..... இவன் ரொம்ப நாளாகவே இப்படி தான் யாரும் இல்லாத நேரம் வந்து என்னை இப்படி படுக்கைக்கு கூப்பிட்டு என்னை சீரழிப்பான்.....எங்க அப்பா இவன் கிட்ட பிஸினஸ் பார்ட்னரா இருந்துருக்காரு ...இவன் கிட்ட கடன் அதிகமா வாங்கிருக்காரு போல...அவர் இறந்த பிறகு அந்த கடனை திருப்ப முடியவில்லை என் தாயாலும் என்னாலும் எனவே அதை ஈடுகட்ட இவன் என்னை படுக்கையில் அதை ஈடுகட்டுமாறு வற்புறுத்தி சீரழிக்கிறான் என்று தேம்பி தேம்பி அழ ஆரம்பிக்க...இதை கேட்ட ஆதியிற்கு காவலன் என்பதை தாண்டி ஒரு சராசரி தங்கைக்கு அண்ணணாக நினைக்க "இவனை சும்மாவே விடக்கூடாது ராஸ்கல்"என்று அவனுடைய நரம்புகள் துடிக்க ஆரம்பித்தது.

அவளை தன் மகள் போல் அரவணைத்து தன் தோளில் சாய்த்தான் ஆதி.....அப்புறம் தன்னுடன்.பணியில் இருக்கும் போலிஸ்காரர்களை வாக்கி டாக்கியில் அழைத்து அங்கு வரும்படி கூற,அவர்களும் உடனே வந்து அவன் கையில் வெளங்கு மாட்டி தர தரன்னு இழுத்துட்டு வந்தனர்.அன்னைக்கு ஊரில் இருக்கிறப்ப இந்த பொன்னு போன் பன்னது இதை சொல்றதுக்கு ஆனால் ஆதி போன் எடுக்கவில்லை அல்லவா ...எடுத்துருந்தா இந்த ராஸ்கல் எப்பவோ மாட்டிருப்பான்.

ஆனால் விசாரணை ல இவனுக்கும் ராகவா கொலைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை னு தெரிந்தாலும். இந்த ஆளு ஒரு பொம்பல பொறுக்கி என்பதும் தெளிவாக தெரிஞ்சது...நம்ப வித்யாவுக்கு செக்ஸ் டார்ச்சர் தந்ததும் இவன் தான் என்று விசாரணையில் தெளிவாக தெரிந்தது...

டேய் எருமை அன்னைக்கு சேஸ் பன்னப்ப தப்பிச்சு ஓடினியே இன்னைக்கு வசமா மாட்டின பத்தியா...சும்மா விடுவேனா உன்னை... ரேப் கேஸ் ல உள்ள தள்ளி தண்டனை வாங்கி தரலை என் பேரு ஆதி இல்லை.....

அப்பாவி மூஞ்சை வச்சிட்டு அந்த சிறுமி வந்தாள் தன் மாமன் கையில் வெளங்கை மாட்டியிருப்பதை கண்டு ஆதியை உலுக்கி
",ஆதி மாமா....நீங்க ஏன் என் மாமாவை புடிச்சு வச்சிருக்க???,

"ஹாஹா உங்க மாமா ,ஒரு பேட் பாய் டா செல்லம் அதான்..."என்று அந்த குழந்தையிடம் கூறினான்.

"அப்போ எனக்கு யாரு இருக்கா?என்று மீண்டும் அப்பாவி தனத்தை காட்ட..."அவளை தூக்கி கொஞ்சியபடி...'அம்மு உனக்கு தான் உன் பப்பி திருப்பி கிடைச்சிருச்சே ...இதோ பாரு"

"ஐ.....என் பப்பி திருப்பி வந்துட்டான்" என்று சிரித்து கொண்டே நாயுடன் விளையாட ஆரம்பித்தாள்...யாரும் இல்லாமல் அனாதையாக இருக்கும் அந்த சிறுமியை அரசு குழந்தைகள் காப்பகத்தில் விட்டுவிட்டான்....ஆனால் அவளுக்கு தேவையான எல்லா உதவிகளையும் ஆதி தன் சொந்த செலவில் செய்து வந்தான்.

தொடரும் ..
 

Bhagya Lakshmi

Member
Vannangal Writer
Team
Messages
44
Reaction score
18
Points
8
ஆதியோட கல்யாண நாள் வந்தாச்சு...இன்ஸ்பெக்டர் ஆதி அவனுடைய ஆனந்திக்கு இனிய ஹஸ்பண்டு ஆகும் நாள் தான் இது. அவனுக்கே உரியவளானாள் ஆனந்தி அவன் கையால் அந்த மஞ்சள் கையிறு ஏறியவுடன்.கல்யாணம் மேடையில் இருவரும் இணைய அந்த நாளை உறவினர்கள் அனைவரும் வாழ்தி மகிழ்ந்தனர்... கல்யாணத்துக்கு வந்த ரேணுகா தன்னுடைய வருங்கால மணக்கோலத்தை ஒரு நிமிடம் மனதில் காட்சியாக ஓட்டி பார்த்தாள். அவளுக்கு உதட்டில் சிரிப்பு ஒட்டிக்கொண்டது.
முதலிரவு ஏற்பாடு அன்றிறவு பெரியவர்களால் ஏற்பாடு.செய்யப்பட்டன
ஆதி அவளுக்காக காத்துக்கொண்டு இருக்க..அவளது வருகை தாமதமானது நிகத்தை கடித்து துப்பி தன் பதற்றத்தை வெளிப்படுத்தினான்.என்னதான் காவலன் என்றாலும் முதலிரவில் சராசரி ஆண்மகனுக்கு ஏற்படும் அதே உணர்வு பதற்றம் தானே இவனுக்கும் இருக்கும். மெல்ல அவள் உள்ளே நுழைந்து தாழிட்டாள்.அவன் டென்ஷனாக இருப்பதை உணர்ந்தவள்.
"ஏய் மாம்ஸ் என்ன ஒரே டென்ஷன்?"
"ஒன்னுல...ஆமா ஏண்டி லேட்" என்று கேட்க
"ம்ம்ம் அது எப்படி சொல்வது உன்கிட்ட" என்று தடுமாறியவள்
"என்ன?" என்று அவனின் கேள்வியில் சிக்கிய மீன் போல உண்மையை உடைத்தாள்.
"ரெஸ்ட்ரும் போய்ட்டு வர லேட் அதான் .."என்று பேச்சை அதோட நிப்பாட்ட நினைத்தாலும் ஆதி அவளை விடுவதாக இல்லை. மீண்டும் அவனிடமிருந்து கேள்வி எழும்பியது.
"ரெஸ்ட்ரும் போயிட்டு வரவா இவ்வளவு நேரம்?"
"ஏய் மாமா அது வந்து எனக்கு இப்போ அந்த நாட்கள் ஆயிடுச்சு.அது இந்த பெருசுங்க கிட்ட சொன்னா என்னைய உள்ள அனுப்பிருக்க மாட்டாங்க அதான் யாருக்கும் தெரியாம விஷயத்தை மறைச்சிட்டு வருவதற்குள் தாமதம் ஆயிடுச்சு".என்று சிரித்தாள்
"ஹாஹா எப்படி இருந்தாலும் இப்பொழுது நான் ஒன்னும் உன்னை பன்ன முடியாது அப்புறம் ஏன் உள்ள வந்த..? என்று குறும்புத்தன பேச்சை ஆரம்பிக்க
"ம்ம்ம் சும்மா உன் கூட பேசாலானு தான்...அது என்ன சினிமாவில் மட்டும் முதலிரவு என்றால் ஆரம்பத்துல கொஞ்சம் நேரம் பேசுறாங்க ,அப்படியிருக்க நிஜத்தில் ஏன் பேசக்கூடாது முதலிலரவு அன்று"என்று வினவ
"அடிப்போடி நான் பர்ஸ்ட் நைட் நினைச்சு எவ்வளவு ஆசை வச்சிருந்தன் இப்படி சொதப்பிருச்சே."என்று தலையில் கைவைத்தபடி தனது நிலையை நினைத்து வேதனை பட.
"விடு மாம்ஸ் இன்னும் த்ரீ டேஸ் தான்.அதுக்கப்புறம் யாரும் உன்னை தடுக்கவே முடியாது ஓகேவா இங்கே பார் கவலை படாதிங்க மாமா"
"போடி..என் கிட்ட வராத ஓடிரு..நான் செம்ம காண்டுல இருக்கேன்" என்று பொய் கோபம் அவளிடம் காட்டினான்.
"ஓய் ரொம்ப தான் உனக்கு...ஏன் மாமா என்கிட்ட எதுவும் பேசமாட்டியா?"
"சரி சரி....எனக்கு தூக்கம் வருது ஆனந்தி நாளைக்கு வேற ப்ரண்டுஸ் க்கு பார்ட்டி வைக்கனும்.வேலை இருக்கு. குட்நைட் என்று கூறிவிட்டு படுக்கையில் ஒருபுரம் சாய்ந்தவாறு படுக்க..
"ச்ச....போயா என்று சினுங்கி அவனிருக்கும் படுக்கையில் இன்னொரு ஓரத்தில் அவளும் சாய்ந்தாள். சிறிது நேரத்தில் அவளுக்கு நித்திரை தழுவியது.
ஆனால் சிறிது நேரத்தில் கண்விழித்து அவனோ அவளிருக்கும் பக்கம் திரும்பி அவளை ரசித்துக்கொண்டே இருந்தான். ஜன்னல் வழியே வரும் காற்றின் அசைவில் அவளது சேலை காற்றில் அசைந்தாடியது,சற்று நேரத்தில் மெதுவாக சேலை இடையை விட்டு சற்று அகல...கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை என்பது போல் அவனது மனம் ஏங்க..திடிரென தூக்கத்தில் இருந்து விழித்தவள் சேலையை சரிசெய்தவாறு.
"மாமா நீ இன்னும் தூங்கலையா?"
"இல்லை... எப்படி டி வரும் தூக்கம்?"
"ஏன் ஒரே பீலிங்ஸா.."என்றாள் சிரித்துக்கொண்டே
"ஹாஹா ஆமா...பயங்கர பீலிங்ஸ் டி. என் பீலிங்ஸ் நாவல் கதையா எழுத ஆரம்பிச்சா ஒரு பத்து அத்தியாயம் எழுதலாம்" என்றவுடன் அவனுடைய ஆசையை புரிந்து கொண்டவளானாலும் அவள் உடலில் இயற்கை தந்த மாற்றத்தை மாற்றமுடியுமா என்ன. அன்றைய இரவு ஏக்கத்துடனே கழிந்தது.

பொழுது விடிந்தது.
ராகவா கேஸ்ஸில் முக்கியமான ஒரு இன்பார்மேஷன் தொலைபேசி மூலம் கிடைத்தது ஆதியிற்கு . அதாவது அவனை கொன்றது அதே அப்பார்ட்மண்டில் இருக்கிறவங்க தான் யாரோ கொன்னுருக்காங்க என்று.ஆனால் ஆதி கல்யாண ஆன புதிது என்பதால் விடுப்பில் இருக்கிறானா. விடுப்பு முடிந்து போனால் தான் அதைப்பற்றி எடுத்து விசாரிக்க முடியும். அது வரைக்கும் கேஸ் பெண்டிங் தான்.
தொடரும்
 
Top Bottom