Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


சங்கமம்

Nagaveni A

Member
Vannangal Writer
Messages
45
Reaction score
43
Points
18
சங்கமம் 1


இரவில் அந்த கடற்கரையில் கூட்டமின்றி ஆங்காங்கே மட்டும் சிலர் சிறுசிறு கூட்டமாகவும் ஒரு சில காதல் ஜோடிகள் மட்டும் அமர்ந்திருக்க ஆர்பரிக்கும் அக்கடலின் அலைகளை வெறுமையாய் வெறித்தபடியும் பற்களை கடித்தபடியும் எல்லையில்லா கோபத்துடன் நின்றிருந்தான் நிஷாத்.

"டேய் நிஷாத் சும்மா இருடா ப்ளீஸ்டா அந்த பொண்ணு தெரியாம சொல்லிருச்சுடா ப்ளீஸ்டா வாடா" என பயந்தபடி கூறினான் சரத்.

"என்ன சமாளிக்கிறீயா சரத்? அவள நான் சும்மா விடுறதா இல்ல. எவ்ளோ தைரியம் இருந்தா என்கிட்ட வந்து சொல்லிருப்பா?" என தன் பற்களை கடித்தபடி கூறினான் நிஷாத்.

"சரத் கொடுமைய பாத்தீயா? நாமலும் தான் இந்த எரும கூட சுத்துறோம் நமக்கு எதாவது நல்ல சேதி வந்து வாழ்க்கையில முன்னேற முடியுதா?" என்று சலித்தபடி தன் மன கவலையை கூறினான் சங்கர்.

"சங்கர்...!!!" என கோபத்தோடு பார்த்தான் நிஷாத்.

"கோவபடாதடா நிஷாத்! எல்லாம் என் மன குமுறல் டா. நீயே சொல்லு, நான் சொன்னது உண்மையா? இல்லையா?" என்று கவலையுடன் பாவமாய் கூறினான் சங்கர்.

"அப்டியே போட்டு குத்துனேன்னு வை" என தன் கைகளை மடக்கி சங்கரை குத்த வந்தான் நிஷாத்.

"முதல்ல இரண்டுபேரும் நிறுத்துங்கடா. உங்களோட ஓரே ரோதனையா போச்சு" என கூறி தன் தலையில் அடித்துக் கொண்டான் சரத்.

"இதோ வந்துடாருடா அஞ்சு பைசா மண்ட. இவரு அப்டியே சண்டையே போடாமதான் இருப்பாரு" என்று நக்கலாய் வம்பிலுத்தபடி கூறினான் சங்கர்.

"டேய் பத்து பைசா நீ அமைதியா இரு இல்ல வண்டி ஏத்தி கொன்றுவேன்" என கூறி முறைத்தான் சரத்.

"கூல் அஞ்சு பைசா கோவபடாதீங்க ஹெல்த்துக்கு நல்லது இல்ல" என சமாதனபடுத்தியபடி வம்பிலுத்தான் சங்கர்.

"ச்சீ.. பே" என சரத் பொய் கோத்தோடு கூறினான்.

"நீ ச்சீ.. பே" என சங்கருப் பொய் கோபத்தோடு கூறினான்.

"அடச்சை!! சும்மா இருங்கடா இப்போ முதல்ல என் கூட வரப்போறீங்களா இல்லையாடா? இல்ல நானே போய் அவள இரண்டுல ஒன்னு பாத்துட்டு வரவா?" என அடக்கபட்ட கோபத்தோடு கேட்டான் நிஷாத்.

"இவன் ஒருத்தன் வர லவ் லக்ஷ்மிய விரட்டிவிடுவான். நீயெல்லாம் கடைசி வரைக்கும் ஒன்டி கட்டையாதான் டா இருப்ப" என சாபம் விட்டான் சங்கர்.

"சங்கர் தம்பி நீங்க சாபம் விட்டதுலாம் போதும்.. நீ இப்போ கிளம்பி வறீயா? இல்ல சரத் சொன்ன மாதிரி வண்டி ஏத்தி கொல பண்ணவா?" என நக்கலாய் துவங்கியவன் கோபத்தோடு முடித்தான் நிஷாத்.

சரத் சங்கரைக் கண்டு சிரிக்க துவங்கினான்.

"மனுசனாடா நீங்கலாம்?" என அதிர்ந்தவன் "வாங்க வந்து சேருங்க. இதுல இந்த அஞ்சு பைசா மண்டைக்கு சிரிப்பு வேற" என சரத்தை திட்டியபடி தன் பைக்கை ஸ்டார்ட் செய்தான் சங்கர்.

பின் நிஷாத்தும் சரத்தும் தங்களின் பைக்கை ஸ்டார்ட் செய்து மூவரும் கிளம்பினர்.

"டேய் இந்த வீடுதான் டா" என தன் பைக்கை நிறுத்தி ஒரு வீட்டை காட்டினான் நிஷாத்.

"எப்படி டா சொல்ற?" என சற்று அதிர்ந்தபடி கேட்டான் சரத்.

"அங்க ஸ்கூட்டி நிக்குது பாரு" என தன் கண்களால் அவ்வீட்டின் முன் நின்றிருந்த ஸ்கூட்டியை காட்டினான் நிஷாத்.

"அதுசரி, டேய் அஞ்சு பைசா அவன்கிட்ட சொல்லு டா பாவம் டா அந்த பொண்ணு கேக்குறதுதான் கேக்குறான் அதுக்குன்னு வீட்டுக்கே போய் கேக்கனுமாடா?" என அவ்வீட்டிடம் இறங்கி செல்லும் நிஷாத்தை பார்த்தபடி சரத்திடம் கூறினான் சங்கர்.

"நானா டா அவன்கிட்ட போக சொன்னேன்? இல்ல நாம சொன்னாதான் அவன் கேட்ருவானா?" என இயலாமையுடன் சோர்வாய் கூறினான் சரத்.

"அங்க என்னடா இரண்டு பேருக்குள்ள பேச்சு? வாங்கடா கூட" என திரும்பி இருவரையும் அழைத்தான் நிஷாத்.

"இவன் வேற ஆனா உன்னா பொங்குறான் வறோம்டா பொங்க சோறு" என சலித்தபடி கூறினான் சரத்.

"சரத் பையா கொஞ்சம் பொறுமையா பேசுங்க இல்ல உன்னைய பொங்க வச்சுறுவான்" என பொறுமையாய் சரத்திடம் கூறியபடி நிஷாத்திடம் சென்றான் சங்கர்.

"டேய் gate ahha தொற டா சங்கர்" என்றான் நிஷாத்.

"நீங்கதான தம்பி கேக்க போறீங்க நீங்க தான் தொறக்கனும்" என நக்கலாய் கூறி இருவரிற்க்கும் முதுகு காட்டியபடி நின்றான் சங்கர்.

"டேய் சங்கர் போடா" என்றான் சரத்.

"அடேய் அஞ்சு பைசா நாய் எதாவது இருந்தா என்னடா பண்றது?" என அவர்களின் புறம் திரும்பி பாவமாய் கேட்டான் சங்கர்.

இருவரும் அதிச்சியுடன் கூடிய பயத்துடன் சங்கரின் பின்னால் பார்த்தபடி நின்றனர்.

"என்னங்கடா இரண்டுபேரும் முழிக்கிறீங்க?" என புரியாமல் கேட்டான் சங்கர்.

"டேய் நிஷாத் அப்படியே சைலன்டா பின்னாடி வாடா போய்டலாம்" என பின்னால் அடியெடுத்து வைத்தபடி பொறுமையாய் கூறினான் சரத்.

"சரத் என்னடா நாய் இவ்ளோ பெருசா இருக்கு??" அதிர்ச்சியுடன் பின்னால் அடி எடுத்து வைத்தபடி கேட்டான் நிஷாத்.

"என்னங்கடா நான் உங்ககிட்ட கேட்டா நீங்க என் பின்னாடி பாத்து பேசிட்டு இருக்கீங்க?" என யோசித்தபடி பின்னால் திரும்பி பார்த்தான் சங்கர்.

அங்கு தன் கால் முட்டியின் உயரத்திற்க்கு நாய் ஒன்று இவர்களை பார்த்தபடி நின்றிருப்பதை கண்டதும் சங்கருக்கு பக்கென ஆனது. மெதுவாய் இருவரையும் பயத்துடன் திரும்பி பார்த்தான் சங்கர்.

மூவரும் ஒருவரையொருவர் பார்த்து பயத்தில் முழித்துக் கொண்டனர்.

"எட்றா ஓட்டத்த!" என நிஷாத் கூறி ஓட துவங்க மற்ற இருவரும் ஓட துவங்கினர். அவர்களை பின் தொடர்ந்து அந்த நாயும் அவர்களை துரத்தியபடி ஓடியது.

"அடேய்!! அடேய்!! நில்லுங்கடா நானும் வரேன்" என கத்தியபடி பின்னால் ஓடி வந்தான் சங்கர்.

"வந்து தொலடா சீக்கீரம்" என்றபடி முன்னால் ஓடி கொண்டிருந்தான் சரத்.

"டேய் அஞ்சு பைசா பொங்க சோறு உங்கள நம்பி கூட வந்ததுக்கு இப்டி நாக்குத் தள்ள ஓட விட்டீங்களே டா" என தலைதெறிக்க ஓடி வந்தபடி பாவமாய் கூறினான் சங்கர்.

"பத்து பைசா வேகமா ஓடிவா டா நீதான் கடைசியா ஓடி வர கவ்வுச்சுன்னு வை அவ்ளோதான் நீ" என சங்கரின் பின்னால் பார்த்தபடி கூறினான் நிஷாத்.

'லொள்!! லொள்!!' என நாய் குரைத்தபடி அவர்களின் பின்னால் துரத்திக் கொண்டு ஓடி வந்தது.

"ஆத்தி!! என்னங்கடா விடாம தொறத்துது.." என பயத்துடன் ஓடியபடி கேட்டான் சரத்.

'லொள்!! லொள்!!' என மீண்டும் குரைத்தது நாய்.

"ஓட்றா.. ஓட்றா" என கத்தியபடி ஓடினான் நிஷாத்.

"அய்யோ!! பைக்க விட்டுட்டு வந்துட்டோம் டா" என்றான் சங்கர்.

"உசுரு முக்கியமா? பைக்கு முக்கியமா?" என ஓடியபடி நிஷாத் கேட்டான்.

"அய்யோ உசுருதான்டா முக்கியம் என் பொங்க சோறு!!" என ஓடியபடி கூறினான் சங்கர்.

"அப்போ எடு வேகத்த" என்றான் சரத்.

மூவரும் தலைதெறிக்க ஓடிக் கொண்டிருக்க அவர்களை பின்னால் துரத்தியபடி ஓடி வந்தது நாய்...​

*******
சங்கமிக்கும்...


-
நான் உங்கள் நாகவேணி அழகர் ராஜன்.​
 
Last edited:

Nagaveni A

Member
Vannangal Writer
Messages
45
Reaction score
43
Points
18
சங்கமம் 2


அலறியடித்தபடி ஓடி வந்தவர்கள் மூவரும் ஓர் வீட்டின் முன்பு அமர்ந்தனர்.

"எப்பா முடியலடா சாமி" என தன் கால்கள் இரண்டையும் பிடித்துக் கொடுத்தபடி கூறினான் சங்கர்.

"தண்ணீ.. தண்ணீ வேணும்டா" என சுற்றி பார்த்தபடி கூறினான் சரத்.

"ஆமாடா முடியல தண்ணீ வேணும்டா"என நிஷாத் கூறவும் இருவரும் கோபமாய் திரும்பி பார்த்தனர்.

"பொங்க சோறு டேய் முடியலன்னா சொல்ற? உன்னைய கொல்லாம விடமாட்டேன்டா" என சங்கர் நிஷாத்தை அடிக்க செல்ல அவனை அடிக்கவிடாமல் தடுத்தது சரத்தின் குரல்.

"டேய் பத்து பைசா இப்போ சண்ட போடாம தண்ணீ எங்க இருக்குன்னு தேடுடா போடா" என மூச்சு வாங்கியபடி கூறினான்.

"எல்லாம் உன்னைய சொல்லனும்டா இந்த பொங்க சோறு பேச்ச கேட்டு பொங்கிட்டு வந்தல்ல அனுபவி" என சரத்தை திட்டினான் சங்கர்.

"டேய் தண்ணீடா" என தோய்வாய் கூறினான் நிஷாத்.

"அட இருங்கடா இங்க யாருகிட்ட போய் கேக்குறது எங்கயும் ஒரு பைப் கூட இல்ல இரு அந்த வீட்ல போய் தண்ணீ கேக்கலாம்" என தங்களுக்கு முன் இருந்த வீட்டிற்கு செல்ல சென்றான் சங்கர்.

"இருடா நானும் வறேன்" என சரத் சங்கரின் பின்னால் சென்றான்.

"டேய் பொங்க சோறு நீ மட்டும் என்ன உட்காந்து இருக்க நீயும் வா" என சங்கர் நிஷாத்தை அழைத்தான்.

"பத்து பைசா அவனதான்டா முதல்ல தண்ணீ கேக்க சொல்லனும்" என கோபமாய் கூறினான் சரத்.

"டேய் போங்கடா நீங்க போய் வாங்கீட்டு வாங்கடா என்னால முடியல" என இரு கால்களையும் நீட்டிக் கொண்டு கூறினான் நிஷாத்.

"நல்ல ஓட்டமோ" என சிரித்தபடி ஸ்கூட்டியை மூவருக்கும் இடையில் நிறுத்தினாள் அவள்.

நிஷாத் அவளை முறைத்தபடி அமர்ந்திருந்தான்.

"அது உங்க வீட்டு நாயாம்மா?" என சங்கர் பாவமாய் கேட்க

"இல்ல சங்கர் அண்ணா அது பக்கத்து வீட்டு நாய்" என சிரித்தபடி கூறினாள்.

"சிரிக்காதம்மா பக்கத்து வீட்டு நாயா எங்கள இந்த தொறத்து தொறத்துச்சு நான் கூட உங்க வீட்டு நாய்னு நினச்சேன் " என பாவமாய் கூறினான் சங்கர்.

இப்போது நிஷாத் மூவரையும் முறைத்தபடி அமர்ந்திருந்தான்.

"சரி சிரிக்கல அண்ணா பக்கத்து வீட்டு நாய்ங்குறதால தொறத்துனதோட விட்டுச்சு இதே எங்க வீட்டு நாயா இருந்துச்சுன்னு வைங்க கொத்தோட புடிங்கிட்டு போய்ற்க்கும்" என கூறி சிரித்தாள்.

"ஆத்தா ப்ளீஸ்ம்மா நீ என்ன வேணும்னாலும் பண்ணு ஆனா தய்வு செய்து இப்படி பேயாட்டம் மட்டும் சிரிக்காத" என இரு கைகளையும் கூப்பினான் சங்கர்.

பொய்யாய் முறைத்தவள் "உங்கள சும்மா விட்டுச்சுல்ல எல்லாம் அத சொல்லனும்" என்றாள்.

"ஏன் ஆத்தா உனக்கு இந்த வெறி நாங்க நல்லா இருக்குறது உனக்கு பொறுக்கலயா?" என சரத் கேட்ட விதத்தில் மீண்டும் சிரித்தாள் அவள்.

"ஆத்தா சும்மா இரும்மா அவன் செம்ம கோவத்துல இருக்கான் நீ வேற சிரிச்சு இன்னும் கோவத்த அதிகபடுத்தாத" என பொறுமையாய் கூறினான் சரத்.

"அதையும் பாத்தற்லாம். இருங்க நானே அவன்கிட்ட பேசுறேன்" என ஸ்கூட்டியிலிருந்து இறங்கினாள்.

"அதுசரி நாங்க போய் தண்ணீ தேடி எடுத்துட்டு வறோம்" என சரத் கூறினான்.

"சரத் அண்ணா நீங்க எங்கையும் தேட வேண்டாம் இந்தாங்க" என ஸ்கூட்டியிலிருந்து வாட்டர் பாட்டீல் ஒன்றை எடுத்துக் கொடுத்தவள் மற்றோரு பாட்டீலை எடுத்துக் கொண்டு நிஷாத்திடம் சென்றாள்.

"நாமக் கொஞ்சம் தூரமா போவோம்டா பத்து பைசா" என சங்கரின் தோள் மீது கை போட்டு கூறினான் சரத்.

"வாடா அஞ்சு பைசா போவோம்" என சரத்தின் தோளின் மீது கை போட்டான் சங்கர்.

இருவரும் அங்கிருந்து நகர்ந்ததும் நிஷாத்தை நோக்கி வர அவன் மேலும் அவளை முறைத்தபடி அமர்ந்திருந்தான்.

"ஹலோ சார் என்ன முறைப்பு? பிடிங்க தண்ணீ குடிங்க" என வாட்டர் பாட்டீலை நீட்டிட வேறு புறம் திரும்பி அமர்ந்தான்.

"அடேய.. ப்பா எவ்ளோ கோபம்?! ஆனாலும் அழகாதான் இருக்க" என நக்கலாய் தொடங்கியவள் ரசித்தபடி முடித்தாள்.

அவளின் வார்த்தைகளில் கோபம் தலைக்கேற பல்லை கடித்தபடி முறைத்தான் நிஷாத்.

"மொறச்சாலும் அழகுதான் சிரிச்சாலும் அழகுதான்டா நீ என்ன பண்ணாலும் அழகுதான்" என ரசித்தபடி கூறினாள்.

"ம்ப்ச்.. கடுப்ப கிளப்பிட்டு இருக்காத" என கோபத்துடன் கூற

"திட்டுனாலும் அழகுதான்டா நீ" என தலையை சாய்த்துக் கொண்டு ரசித்தபடி கூறினாள்.

"ஓங்கி அரஞ்சேன்னா?" என நக்கலாய் கோபத்துடன் கேட்க

"அழகுதான்டா என் கோவகார மிளகா" என கூறி தன் செவ்விதழ்களை சுருக்கி பறக்கும் முத்தத்தை கொடுத்தாள்.

அதில் கோபத்தின் எல்லைக்கே சென்றவன் எழுந்து நின்று தன் கோபத்தை கைகளை இறுக முடி கட்டுப்படுத்திக் கொண்டு பேச துவங்கினான்.

"ஏய் நீ ரொம்ப ஓவரா போய்ட்டு இருக்க என் பொறுமைய ரொம்ப சோதிக்காத ஒரு பொண்ண கை நீட்டி அடிக்க கூடாதேன்னு பாக்குறேன் இல்லன்னா நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது"

"பாக்காத அடி" என அவனின் அருகில் நெருங்கிட அவள் அருகில் வந்ததும் சட்டென நகர்ந்து நின்றான்.

"இதுனால தான்டா உன்னைய ரொம்ப பிடிக்குது என் கோவகார மிளகா" என மேலும் ரசித்தபடி கூறினாள்.

"ம்ப்ச்.." என சலித்தக் கொண்டவன் அருகில் உள்ள சிறு கற்களை உதைத்து தள்ளினான்.

"சரி சரி நீ கோபபட்டது வரையுக்கும் போதும் இந்தா இந்த தண்ணீய குடி" என அவனின் கையில் வாட்டர் பாட்டீலை தினித்தாள்.

"எனக்கு ஒன்னும் வேண்டாம் பிடி" என கோபமாய் அவளிடம் நீட்டிட அவள் வாங்க மறுத்து கையை பின்னால் கட்டிக் கொண்டு புருவம் உயர்த்தினாள்.

"ம்ப்ச்.. பிடி இல்லன்னா தூக்கி போட்றுவேன்" என கோபமாய் கூறினான்.

"முடியாது நீ இப்போ குடிக்கலன்னா போன நாய கூப்ட்டு மறுபடியும் ஓட விட்றுவேன்" என சிரித்தபடி கூறவும் நிஷாத் அதிரிந்தபடி அவளை பார்த்தான்.

"என்ன முழிக்கிற பயப்டாத நீ குடிக்கலன்னாதான் கூப்டுவேன்" என கூறி சிரிக்க நிஷாத் மீண்டும் முறைத்தான்.

"சரி.. சரி முறைக்காத சிரிக்கல" என கூறி இரு கைகளால் தன் வாயினை பொற்றிக் கொண்டாள்.

"முடியாது புடி" என கோபமாய் கூறி வாட்டர் பாட்டீலை அவளிடம் நீட்டியவன் வேறு புறம் திரும்பிக் கொண்டான்.

"பேபி...." என அவனின் அருகில் சென்று மெதுவாய் அழைத்திட

அவளின் அழைப்பில் கோபமாய் திரும்பியவன் "ஏய்... யார சொன்ன?" என கேட்டான்.

"நாய்... டா நாய்... நாய கூப்டேன் நாயே நாய் பேரு பேபி நாயே" என தன் சிரிப்பை கட்டுபடுத்திக் கொண்டு கூறிட

நிஷாத் அவள் கூறியதை நினைவுபடுத்தி பார்த்தவன் "ஏய் நாய் சொன்ன சரி... யாரா பாத்து நாயேன்னு சொன்ன?" என கோபத்துடன் சர்ட்டின் கையை மேலே ஏற்றிவிட்டான்.

"நாய தான் நாயே.. ன்னு சொன்னேன் பேபி.. நாய் பேபி.. நாய்" என பாவமாய் கூறியவள் சிரிப்பை அடக்கிக் கொண்டாள்.

"ஏய்...." என மீண்டும் முறைத்திட

"சத்தியமா பேபி பேபின்னு நாய தான் கூப்ட்டேன் நாயே..ன்னும் நாய தான் கூப்ட்டேன்" என தன் தலையில் கை வைத்துக் கூற நிஷாத் முழுவதும் குழம்பிதான் போனான்.

"ஏன்டா.. ஆஞ்சு பைசா நம்ப மூஞ்சிக்குலாம் ஏன்டா ஒரு பொண்ணு கூட செட் ஆகமாட்டேங்குது" என நிஷாத்தையும் அவளையும் பார்த்தபடி வருத்ததுடன் கூறினான் சங்கர்.

"எல்லாம் நம்ப மூஞ்சிடா மூஞ்சி.." என தன் முகத்தையும் சங்கரின் முகத்தையும் வாஞ்சையுடன் வருடி நெட்டி முறித்தான் சரத்.

"இந்த பொண்ண வீட்லலாம் தேடமாட்டாங்களாடா? இப்படி ராத்திரில வெளில வந்துருக்கு?" என சங்கர் கேட்டதும் சரத் அவளை பார்த்தபடி கேட்டான்.

சரத் கூற வருவதற்க்குள் இருவரையும் அழைத்தாள் அவள்.

"சரத் அண்ணா.. சங்கர் அண்ணா..."

"இதோ வறோம்மா.." என இருவரும் வந்தனர்.

"சொல்லும்மா..." என இருவரும் கூற

"தண்ணீ குடிச்சீங்களா?" என இருவரையும் பார்த்து கேட்டாள்.

"குடிச்சுட்டோம்மா.." என்றனர்.

"கால் வலிலாம் பரவால்லயா?" என மீண்டும் கேட்க

"ம்ம்.. பரவால ஆனா வலிக்குது ஆத்தா" என்றான் சரத்.

"ம்ம்... வலிக்குதுல்ல.." என கூறி நிஷாத்தை பார்த்தாள்.

நிஷாத் தனக்கும் இதற்க்கும் சம்பந்தமில்லை என்பதுப் போல் அலட்சியமாய் நின்றுக் கொண்டிருந்தான்.

"ஏன் ஆத்தா வலிக்குதுல்லன்னு.. இழுக்குற..?" என சந்தேகமாய் கேட்டான் சங்கர்.

"இல்ல எனக்கு உங்கள மறுபடியும் தல தெறிக்க ஓடவிடனும்னு ஆசையெல்லாம் இல்ல பட் உங்க உற்ற தோழனுக்கு அந்த ஆசை இருக்குப் போல" என நிஷாத்தை பார்த்தபடி தீர்க்கமாய் கூறினாள்.

இருவருக்கும் பக்கென போக இருவரும் நிஷாத்தை முறைக்க நிஷாத் ஓரக் கண்களால் இருவரையும் பார்த்தான்.

"ஏய் பொங்க சோறு ஏன்டா உனக்கு இந்த ஆசை?" என கோபமாய் கேட்டான் சரத்.

"பொங்க சோறு அப்படி ஏதாவது நடந்துச்சு மவனே நானே உன்னைய நாய்க்கு தூக்கி கொடுத்துடுவேன்" என கூறினான் சங்கர்.

"டேய் முதல்ல நீ நாய பாத்ததும் நிக்கிறீயான்னு பாரு இப்பதான் என்னைய தூக்கி கொடுப்பானாம் போடா பத்து பைசா" என்றான் நிஷாத்.

"பெருத்த அவமானம்..." என கூறி அவள் தன் வாயை பொற்றிக் கொள்ள நிஷாத் அவளை முறைத்தான்.

"நீ சரிபட்டு வரமாட்ட... இரு.." என்றவள் "பே.." என நாயை அழக்க முயல சங்கரும் சரத்தும் கெஞ்சும் பார்வை பார்த்தனர்.

"அப்போ குடிக்க சொலுங்க" என்றதும் இருவரும் நிஷாத்தை முறைக்க மடமடவென தண்ணீரை குடிக்க துவங்கினான்.

"ஏய்.. ஏய்.. எனக்கும் கொஞ்சம் கொடு..டா" என அவள் பதறியபடி கூற தண்ணீர் குடிப்பதை நிறுத்திவிட்டு அவளை புரியாமல் பார்த்தான் நிஷாத்.

"கொடுத்தா எல்லாத்தையும் குடிச்சுடுவியா எனக்கு மிச்சம் கொடுக்கமாட்டியா?" என பாவமாய் பார்க்க சரத்தும் சங்கரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

"ஏன் ஆத்தா நீ என்ன ஃபர்ஸ்ட் நைட்டுக்கா பால கொண்டு வந்து கொடுத்த மிச்சம் கொடுக்க இது உனக்கே ஓவரா தெரியல?" என சங்கர் கேட்டதும் நிஷாத்திற்க்கு பொருள் புரிய மீண்டும் அவளை முறைக்க துவங்கினான்.

"ச்சூ.. கிராஸ் டாக்" என கொசுவை விரட்டுவதுப் போல் கூறினாள் அவள்.

"எது... ச்சூ வா..?" என சங்கரை பார்த்து சிரித்தான் சரத்.

"ஏய் என்ன? பாவமேன்னு குடிச்சா ரொம்ப ஓவரா பண்ற முதல்ல கிளம்பு நைட் டைம்ல வெளிய வந்ததும் இல்லாம இவ்ளோ நேரம் பேசிட்டு இருக்க கிளம்பு முதல்ல" என பொறிந்தான் நிஷாத்.

"ப்பா சார்க்கு ரொம்பதான் அக்கர அவ்ளோ அக்கர இருந்தா கொண்டு வந்து விடுறது" என சலித்தபடி கூறினாள்.

"நான் எதுக்கு கொண்டு வந்துவிடனும் நீயாதான வந்த நீயே போ" என விட்டேத்தியாக கூறினான்.

"டேய் அஞ்சு பைசா இதுங்க இரண்டும். பேசிக்கிறத பாத்தா சண்ட போடுற மாதிரியா தெரியுது?" என சரத்தின் காதில் பொறுமையாய் கேட்டான் சங்கர்.

"அதான்டா தெரியல" என்றான் சரத்.

"எனக்கு தெரியும் நீங்க ஒன்னும் சொல்ல வேண்டாம் பாஸ் அதே மாதிரி நான் ஒன்னும் உங்கள கூட்டிட்டு வந்து விட சொல்லல்ல" என கூறிவிட்டு வேகமாய் தன் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தாள்.

"ஆத்தா ஒரு நிமிசம் உன் பெயர் என்ன?" என கேட்டான் சங்கர்.

" என் பெயர் கூட தெரியாதா?" என அதிர்ச்சியோடு கேட்டாள்.

"தெரியாது சொல்லு" என நிஷாத் கூறவும் சங்கரும் சரத்தும் அதிர்ச்சியோடு அவனை பார்த்தனர்.

"முடியாது போடா சொல்ல முடியாது வேணும்னா தெரிஞ்சுக்கோ" என கூறிவிட்டு காற்றென அங்கிருந்து பறந்திட நிஷாத்தின் உதடுகள் கோபத்தில் ஏதோ முனுமுனுக்க அதை சங்கரும் சரத்தும் உற்று பார்த்தனர்.

"பன்னிங்களா இங்க என்ன கிணறா வெட்டிகிட்டு இருக்கேன் பாத்துட்டு நிக்கிறீங்க வாங்கடா கிளம்பனும்" என கோபத்தில் இருவரின் முதுகிலும் அடித்தான் நிஷாத்.

"மறுபடியும் அங்க போனா பேபி இருக்கும் டா" என முதுகை தேய்த்தபடி சரத் கூறிட பேபி என்றதும் சரத்தை முறைத்தான் நிஷாத்.

"டேய் அது வெறும் பேபி இல்லடா பேபி நாய் நாயே பேபி நாய்" என்றான் சங்கர்.

"டேய் தூக்கி போட்டு மிதிச்சுருவேன் ஒழுங்கு மரியாதையா வந்துடுங்க" என பற்களை கடித்தபடி கூறியவன் முன்னே செல்ல இருவரும் நமட்டு சிரிப்புடன் பின்னே சென்றனர்.

*******

"ஏய் வாடி V3 குட்டச்சி என்ன ஆச்சு? கோவபட்டாரா உன் கோவகார மிளகா?" என வீட்டீன் வாசலின் முன்பு நின்றபடி கேட்டான் அவன்.

"பின்ன என்ன பண்ணுவான் அவன் அப்படியே தூக்கி வச்சு கொஞ்சுவான் பாரு? நானே பயத்த வெளில காட்டாம பேசிட்டு வந்தேன்டா V2" என ஸ்கூட்டியை வீட்டினுள் தள்ளியபடி கூறினாள் அவள்.

"V2 வந்துட்டாளாடா அவ" என்றபடி வீட்டினுலிருந்து வந்தான் மற்றோருவன்.

"ஆஹா... வந்துட்டேன்டா V1" என்றாள் V3.

"குட்டச்சி வாடி.. என்ன ஆச்சு?" என அவளின் தலையில் கொட்டினான் V1.

"எரும மாடுங்களா உங்களால தான்டா நான் வளரவே இல்ல" என சலித்துக் கொண்டு இருவரையும் எக்கியபடி கொட்டு வைக்க முயன்றாள் V3.

பாவம் அவளால் முடியாமல் போகவே பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு இருவரையும் பார்க்க இருவரும் சத்தமாய் சிரித்தனர்.

இவர்கள் மூவரையும் பார்த்தபடி அமைதியாய் அமர்ந்திருந்த அவர்கள் வீட்டு நாயோ V3யின் முகம் வாடி போகவும் குலைக்க துவங்கியது.

"பாருடா... டார்லுக்கு கோபத்த" என்றான் V2.

"என் செல்ல குட்டி டார்லு..." என அதனை முத்தமிட்டவள் இருவரையும் பார்த்து "தடி மாடுங்கள பாரு என் டார்லுக்கு எவ்ளோ பாசம்னு நீங்களும்தான் இருக்கீங்களே" என்றாள்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு "இரு எங்க பாசத்த நாங்க காட்றோம்" என அவளை வீட்டினுள் தூக்கிச் சென்றனர்.

"டேய் தடி மாடுங்களா விடுங்கடா தெரியாம சொல்லிட்டேன்டா.." என V3 கத்த கத்த தூக்கி செல்ல இவர்களின் பின்னால் டார்லுவும் வீட்டினுள் ஓடியது.

*******

சங்கமிக்கும்...
யூடி எப்படி இருக்குன்னு மறக்காமல் சொல்லுங்க தோழமைகளே.​

- நான் உங்கள் நாகவேணி அழகர் ராஜன்.​
 
Last edited:

Nagaveni A

Member
Vannangal Writer
Messages
45
Reaction score
43
Points
18
சங்கமம் 3

V1, V2, V3யை உள்ளே தூக்கி செல்லவும் நம் நாயகர்கள் வருவதற்க்கும் சரியாய் இருந்தது.

"டேய் ஆத்தாவ தூக்கிட்டு போறன்ங்கடா" என பதறியபடி கூறினான் சரத்.

"தூக்கிட்டு தான போறான்ங்க கொல பண்ணலல்ல மூடிட்டு பைக்க எடுத்துட்டு வா" என தன் பைக்கை ஸ்டார்ட் செய்தபடி கூறினான் நிஷாத்.

"என்னடா இவன் இப்படி சொல்றான்?" என சங்கர் அதிர்ந்தபடி கேட்க

"பத்து பேசாம வண்டிய எடுத்துட்டு வா இல்லாட்டி அங்க கொஞ்சம் பாரு பேபி நாய் வெறிக்க வெறிக்க பாத்துட்டு இருக்கு" என V3யின் பக்கத்து வீட்டு நாயை காட்டினான் சரத்.

"ஆத்தாடி பயங்கரமான பார்வையால்ல இருக்கு!!" என்றபடி அவசரஅவசரமாய் பைக்கை எடுத்தான் சங்கர்.

நிஷாத் இறுகிய முகத்தோடு வேகமாய் முன்னே செல்ல சங்கரும் சரத்தும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு நிஷாத்தின் வேகத்திற்க்கு இணையாக பின்னே சென்றனர்.

(இவங்க மூனுபேரும் போகட்டும் நான் உங்களுக்கு இவங்கலாம் யாரு என்னன்னு சொல்றேன்)

நிஷாத்

அழகானவன் அடக்கமானவன் பண்பானவன் பாசமானவன் இப்படி சொல்லிட்டே போகலாம்ஆனா இதுலாம் நமக்கு பத்தாது இல்லையா சோ Detaile ahha சொல்றேன்.

நிஷாத் ஆறடி உயரத்துடனும் அகன்ற மார்புடனும் கட்டுக்கோப்பான உடலுடன் இருப்பவன். எப்போழுதும் புன்னகை குடி கொண்டிருக்கும் அவனது சிவந்த இதழ்களே எவ்வித தீய பழக்கங்களும் அவனுக்கு இல்லையென தெளிவாய் உணர்த்தும் மாநிறத்து அழகன்.

தன்னையறியாமலேயே தன் கண்களால் பார்ப்போரை கவர்ந்திழுக்கும் காந்த கண்களை கொண்டிருப்பவன்.

அவ்விரு காந்த கண்களுக்கு மேல் கருமை நிற அடர்ந்த வனம் போல் காட்சியளிக்கும் புருவங்களோ அக்காந்த கண்களுக்கு மேலும் அழகூட்டியபடி அமைந்திருக்கும்.

நிஷாத்தை பொருத்த வரையில் அவன்கிட்ட பொய்யா வேஷம் போடாம இருக்கனும். ஒரு சின்ன விஷியத்துக்காக பொய் சொன்னாலும் அவன் அத ஏத்துக்கமாட்டான். அதுவும் அவனுக்கு பிடிச்சவங்க பொய் சொன்னா அவங்களுக்கு அவன் தர தண்டனை மிகவும் கடுமையானதா இருக்கும். அதே போல பணிவா சொன்னா எது வேணும்னாலும் பண்ணுவான். இதுவே திமிரா அகங்காரம் ஆணவத்தோடு சொன்னா அதற்க்கு உண்டான பதிலடி மிகவும் மோசமா இருக்கும். யாரிடமும் இலகுவாக பழக்கமாட்டான் பிடித்தால் மட்டுமே பழகுவான் இல்லையேல் பழகமாட்டான். ஆனால் உதவி என்று யார் வறீனும் தயங்காமல் செய்வான்.

நிஷாத் கோபம் கொள்ளும் வேளைகளில் இவனை தனிமையில் விட்டுவிட்டால் நாம் பிழைத்தோம். இல்லையேல் நாம் அவன் கோபத்தில் தூக்கி வீசுப்படும் பொருட்களாலும் சொற்களாலும் ஆற்ற முடியாத காயங்களையும் வலிகளையும் பெற நேரிடும். அது காலம் பல கடந்தாலும் ஆறாத வடுவாகிவிடும்.அவ்வாறு ஆறியது என்றால் அது அதிசயமே.

மற்றோரு முக்கியாமன விஷயம் நான் டிஸ்க்ரிப்ஷன்ல சொன்ன மாதிரி பையனுக்கு லவ்னா சுத்தமா பிடிக்காது. அதற்கான காரணம் போகபோக உங்களுக்கே தெரியும்.

இதுவரைக்கும் போதும்ப்பா ரொம்ப பில்டப் பண்ற மாதிரி இருக்கு சோ நம்ம நெக்ஸ்ட் சரத் பற்றி பார்ப்போம்.

சரத்

சரத் ஆறடிக்கும் சற்றே குறைவான உயரமுடையவன். அகன்ற தோள்களும் பறந்து விரிந்த மார்புடன் பால் வண்ணத்தில் தன் குறுந்தாடிக்கு மேல் அழகாய் புன்னகையுடன் பார்ப்பவர்களை வசிகரிப்பவன். மற்றவர்களை தன் பேச்சினால் வெல்ல கூடியவன்.

பெண்கள் என்றால் தெரித்து ஓடுபவன். பேசுவதற்க்கும் பார்ப்பதர்க்கும் கூச்சப்படுபவன். மற்றபடி ஆண்களிடம் இலகுவாய் நண்பனாகிவிடுவான்.

அடுத்து


சங்கர்


சங்கர் ஆறடி உள்ள மாநிறத்து அழகன். தன்னுடைய கலகலப்பான பேச்சால் அனைவரையும் தன்பால் ஈர்க்க கூடியவன். இவனிற்க்கும் பெண்கள் என்றால் சற்றே பயம்.


நான்: காரணம்? சொல்லுப்பா சங்கர்.


சங்கர்: பேச தெரியாதுங்க அதான் காரணம்.


நான்: ஆமாங்க பையன பொண்ணுங்கள்ட்ட போய் பேச சொன்னா எதாவது பேச தெரியாம பேசி மொக்க வாங்கிட்டு அசிங்கபட்டு வருவாப்பல. அதுக்கு பயந்துட்டே இவன் பெண்கள் என்றால் சற்றே விலகிதான் நிற்ப்பாரு தம்பி.


சங்கர்: வேண்டாம் கூப்ட்டு வச்சு அசிங்கபடுத்த வேண்டாம்.


நான்: ரைட்டு விடு.


சரிங்க பிரண்ட்ஸ் இப்போ நம்ம ஹீரோஸ் எப்படி பிரண்ட்ஸ் ஆனாங்க என்ன பண்ணீட்டு இருக்காங்கன்னு பார்ப்போம் வாங்க..


மூனுபேரும் காலேஜ்லதான் பிரண்ட்ஸ் ஆனாங்க முதல்ல பிரண்ட்ஸா ஆனது என்னமோ சரத்தும் நிஷாத்தும் தான். இருவரும் காலேஜ் முதல் நாளிலேயே நண்பர்களாகிவிட்டனர். காரணம் ஒரே டெஸ்க்கில் அமர்ந்ததனால். முதலில் சரத்தே நிஷாத்திடம் பேசினான். நிஷாத்திற்கு அவனின் பேச்சும் அவனின் பழகிய விதம் பிடித்தமையால் முதலில் பேச துவங்கினான். பின்பு சரத்தின் குணமும் பண்பும் பேச்சு மிகவும் பிடித்து ஈர்த்து நண்பனாக ஏற்றுக் கொண்டான்.


இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆன பிறகே வந்து சேர்ந்தான் சங்கர்.


சங்கர் இவர்களுடன் இணைந்தது எப்பொழுது என்றால் சீனீயர்ஸ் சங்கரை ரேகிங் செய்த போது இவர்கள் இருவரும்தான் அவர்களிடமிருந்து காப்பாற்றினார்கள். பின் சங்கரின் பேச்சால் இருவருமாய் இருந்தவர்கள் மூவராய் கொஞ்சம் கொஞ்சமாய் மாறி எப்பொழுது மூவரும் ஒருவராய் மாறினார்கள் என்று அவர்களுக்கே தெரியாமல் போனது.


மூவரும் ஒருவராய் இருப்பினும் நிஷாத் மட்டும் குணத்தில் சற்றே வித்தியாசமாக இருப்பான். மூவருக்குள் வித்தியாசமின்றி பழகுபவன் வெளியவர்கள் யாரேனும் மூவருக்குமிடையில் வந்து பேசினால் அவர்களுடன் பேசாமல் சிறு புன்னகையுடன் சற்றே விலகி நிற்ப்பான். இந்த குணம் சரத்திற்க்கும் சங்கருக்கும் புதிராகவே இருக்கும்.


மூவரும் படித்து முடித்து அரசு பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிகின்றனர். மூவரின் சொந்த ஊர் வெவ்வேறாகியதால் இங்கு
வாடகைக்கு வீடெடுத்து தங்கிருந்து பணிபுரிகின்றனர்.


இப்போ V1 V2 V3 யாருன்னு பார்ப்போம்.


V1 - விரிஷன்க்

V2 - வாமதேவ்

V3 - விரிஷினி

இவர்கள்தான் அவர்கள். சுருக்கமா சொல்லனும்னா இவங்கள Triple V gangன்னு சொல்லுவாங்க.

மூவரும் சிறுவயதிலிருந்தே நண்பர்கள். மூவருக்கும் தங்கள் தாய் தந்தையர்கள் யாரென தெரியாது. ஆம் மூவருமே ஒரே ஆசரமத்தில் வளந்தவர்கள். அந்த ஆசரமத்தின் இன்சார்ஜ் சாந்தினிதேவி அம்மாதான் மூவருக்கும் தாயாக விளங்குகிறார்.

V1 மற்றும் V2 இருவரும் V3க்கு பல சமயங்களில் தாயாகவும் தந்தையாகவும் அண்ணன்களாகவும் தம்பிகளாகவும் நண்பர்களாகவும் குழந்தை விளையாடும் விளையாட்டு பொருளாக விளங்குவார்கள்.

V1 மற்றும் V2 இருவரும் V3யைவிட இரண்டு வயது பெரியவர்கள். இருவருக்கும் V3 என்றால் கொள்ளை பிரியம். இருவரும் V3யை பிரிந்ததே கிடையாது அவ்வாறு பிரிந்தார்கள் என்றால் பள்ளி கல்லூரி மற்று வேலைக்கு சென்ற நேரங்கள் மட்டுமே.

இருவரும் V3யின் விருப்பத்திற்க்கு மாறாக எதுவும் செய்யமாட்டார்கள். அவளின் சிறு முக சுழிப்பும் அவர்களுக்கு கடலளவு வருத்தம் தருவதாக உணர்வார்கள். மூவருக்குள்ளும் ஒரு சின்ன ஒழிவு மறைவுமின்றி பரிமாறிக் கொள்வார்கள்.

V1 மற்றும் V2 இருவரும் ஆறடி இருக்க V3யோ இருவரைவிடவும் குட்டியாக. நான்கு அடியாக இருப்பாள்.

இடை தாண்டி வளர்ந்திருக்கும் அடர்த்தியான முடியோடு சிறு நெற்றியும் வில் போன்ற புருவங்களுகிடையில் கோபுர பொட்டையும் அதற்கு கீழ் மயிலிறகாய் நொடிக்கொருமுறை சிமிட்டிடும் இமைகள் ஒரு நொடி கூட நிற்க்காமல் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருக்கும் கோலி குண்டு கண்களுக்கு அழகூட்டும் வகையில் அமைந்திருக்கும். கூர் நாசியும் சிவந்த உதடுகளும் அவ்உதடுக்கும் நாசிக்கும் இடையில் திருஷ்டி பட்டுவிடமால் இருக்க அழகாய் அமைந்திருக்கும் மச்சமானது மேலும் அழகூட்டியபடி அமைந்திருக்கும் அந்த வெண்ணிற மெழுகு சிலைக்கு.

V1 மற்றும் V2 இருவரும் படித்து முடித்து சாந்தினிதேவி அம்மாவிட V3யுடன் வெளியில் அழைத்து செல்வதற்காக அனுமதி வாங்கினர். பின் மூவரும் சேர்ந்து வீடெடுத்து தங்குவதற்காக வீடு தேட மூவரையும் கண்டதும் வீடு தர மறுத்துவிட்டனர். பின் சாந்தினி அம்மாவின் உதவியுடன் வீடெடுத்து தங்கியிருக்கின்றனர். அவர்களின் இல்லத்தில் மற்றொருவரும் தங்கியிருக்கிறார் அதுதான் V3யின் டார்லு.

V1 மற்றும் V2 இருவரும் software developer ஆக பணிபுரிந்துக் கொண்டும் V3 BEd கடைசி வருடம் படித்துக் கொண்டிருக்கிறாள்.

இப்பொழுது நிஷாத் சரத் மற்றும் சங்கர் மூவரும் பணிபுரியும் பள்ளியிலேயே V3யும் தன் ட்ரைனிங்கை தொடர்ந்துக் கொண்டிருக்கிறாள்.

இதுவரையில் போதும் வாங்க கதைக்குள்ள போகலாம்.

"V2 ரொம்ப பசிக்குதுடா" என்றாள் V3.

"அடிப்பாவி இப்போதானே 8 தோசைய முழுங்குன சாப்ட்டு முடிச்சு கழுவுன கை கூட இன்னும் காயல அதுக்குள்ள என்னடி பசிக்குதுன்னு சொல்ற?" என ஒரு கையால் தன் தலையில் தலப்பாவாக கட்டியிருந்த துண்டை கழட்டியபடியும் மறுகையில் தோசை திருப்பியுடன் அதிர்ச்சியாக கிட்சனிலிருந்து வெளியே வந்தான் V1.

V2 பாவமாக டார்லுவை பார்க்க டார்லு பாவமாய் V1வை யும் V2வையும் ஏறிட்டது.

"அப்படியே பாவபட்ட மாதிரி நடிக்காத உன் கூட சேர்ந்து சேர்ந்து இந்த டார்லுவும் இல்லாத நடிப்பெல்லாம் நடிக்க கத்துகிச்சு" என இருவரையும் பொய்யாய் முறைத்தபடி தோசையை சாப்பிட்டுக் கொண்டிருந்தான் V2.

அவனையும் தட்டையும் மாறிமாறி பார்த்தவள் "எனக்கு மிளகாச் சட்னியே கொடுக்கவே இல்லையே" என்றாள் உதட்டை பிதுக்கிக் கொண்டு.

"உனக்குதான் உடம்பு சரியில்லல்ல அதுனாலதான் பாலுத்தி சாப்பிட சொன்னோம் இப்போ என்னன்னா நீ மிளாக சட்னி கேக்குற பிச்சுடுவோம். ஒழுங்கா போய் தூங்கு" என தந்தையின் கண்டிப்போடு கூறினான் V1.

"ப்ளீஸ் V1 டூ தோசை மட்டும் மிளாகா வச்சு அதுக்கு மேல நான் கேட்க மாட்டேன்" என சிறு பிள்ளைப் போல் தலையை ஆட்டியபடி கேட்க டார்லுவும் உடன் தலையை ஆட்டியது.

V1 மற்றும் V2 இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு புன்னகைத்துக் கொண்டனர்.

"அப்போ மிளாகா வேணும்னா நீ டாக்டர்கிட்ட ஊசி போட்டுக்க வரனும்" என்றான் V2.

"ரொம்ப பண்ணாதிங்கடா உங்க குட்டச்சி பாவம்ல என்னைய பார்த்தா பாவமா இல்லையா? பால் தொட்டு தோச சாப்டுற வயசாடா எனக்கு?" என இருவரையும் பார்த்து பாவமாக கேட்க டார்லுவோ ஒரு புறம் தலையை சாய்த்து அவளை பாவமாக பார்த்தது.

"பாவமாதான் இருக்கு இருந்தாலும் உனக்கு உடம்பு சரியில்லையே குட்டச்சி!! அதுதான எங்களுக்கு கவலையா இருக்கு" என தாயின் கவலையை தன் முகத்தில் ஏந்திக் கொண்டு கூறினான் V2.

தன் இரு கைகளையும் முகத்தில் தாங்கிக் கொண்டு உதட்டை பிதிக்கி கொண்டு தரையை பார்க்க இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

"சரி போ நான் தோச ஊத்தி தறேன்" என புன்னகையுடன் V1 கூற சந்தேகமாய் இருவரையும் பார்த்தாள் V3.

"நிஜமாதான் குட்டச்சி.. வா இங்க வா" என தன் அருகில் அழைத்தான் V2.

மகிழ்ச்சியாய் V2விடம் ஓடி அமர்ந்துக் கொள்ள அவளுடன் டார்லுவும் ஓடிச் சென்று அவளின் அருகில் அமர்ந்துக் கொண்டது. அவளது மகிழ்ச்சியை கண்டு மகிழந்தவாறு கிட்சனுள் சென்றான் V1.

*******

"சாப்பிட வாடா நிஷாத்" என அழைத்தான் சரத்.

"இல்லடா எனக்கு பசிக்கல நீங்க சாப்டுங்க" என மாடியின் சுவற்றை பற்றிக் கொண்டு அந்த கருமை நிற வானத்தை வெறித்தபடி கூறினான் நிஷாத்.

"ம்ப்ச்... நிஷாத் சொன்னா கேளு வாடா சாப்பிட்டதுக்கப்றம் நீ எவ்ளோ நேரம் வேணுனாலும் வந்து நின்னு வா" என்றான் சங்கர்.

"நீங்க போங்கடா எனக்கு பசிக்கல பசிச்சா நானே வந்து சாப்டுவேன் உங்களுக்குதான் தெரியும்ல நான் எப்பவும் எதுக்காகவும் சாப்டாம இருக்கமாட்டேன்னு போங்க போய் சாப்டுங்க" என இன்னும் ஆழமாய் வானத்தை பார்த்தபடி கூற சரத்தும் சங்கரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு கீழே சென்றனர்.

நிஷாத் வானத்தை ஆழமாய் பார்த்தபடி இருக்க அவன் கவனத்தை தன் புறம் ஈர்த்தது ஒரு குழந்தையின் குரல். குழந்தையின் குரல் வந்த திசையை திரும்பி பார்க்க அங்கு அந்த குழந்தை தன் தாயிடம் சாப்பிடுவதறக்காக அடம் பிடித்துக் கொண்டிருந்தது.

"அம்மா போதும்மா வேண்டாம்மா" என தன் தலையை இடமும் வலமுமாய் ஆட்டியபடி கூறினான் அந்த இரண்டு வயது குழந்தை.

"என் செல்ல குட்டில்ல இதோட அவ்ளோதான் இந்த ஒரு ஆ.. மட்டும் வாங்கிக்கோங்க" என கெஞ்சினார் அக்குழந்தையின் தாய்.

"போ ம்மா.. இப்படிதான் சொன்ன போன ஆ.. க்கும்" என அக்குழந்தை தன் தாயை முறைக்க நிஷாத் அவனின் செய்கையில் புன்னகை புரிந்தான்.

"நிஜமா இந்த ஒரு ஆ.. தான் லாஸ்ட் இத மட்டும் வாங்கிக்கோங்க" என அக்குழந்தையின் தாய் கூற அக்குழந்தையுடன் சேர்ந்து நிஷாத்தும் சரியென தலையசைத்து ஆ.. என வாயை திறக்க நிஷாத்தின் கண்களில் கண்ணீர் தன் தடத்தை பதித்துக் கொண்டிருந்தது.

அதே நேரத்தில் அங்கு விரிஷினி வாமதேவ் மற்றும் விரிஷன்க் ஊட்டும் தோசையை மகிழ்ச்சியோடு வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

*******
சங்கமிக்கும்...
-நான் உங்கள் நாகவேணி அழகர் ராஜன்.
 
Last edited:
Top Bottom