Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே

writer

Saha Writer
Team
Messages
50
Reaction score
26
Points
8
அத்தியாயம்-1

சுட்டும் விழிச் சுடராய், சூரியன்
சுட்டெரித்துக் கொண்டிருந்த ஒரு
மதியத்திற்கு மேற்பட்ட நேரம்!

மக்கள் போவதும் வருவதுமாக,
சிலர் தனக்கு வேண்டியவர்களுக்காக
ஆனந்தத்துடன் காத்திருக்க, சிலர் தன்
அன்புக்குரியவர்களுக்குக் கனத்த
மனதுடன் விடை கொடுக்க என்று பரபரப்புடன் இயங்கிக் கொண்டு
இருந்தது கோயம்புத்தூர் விமான
நிலையம்.

விமான நிலையம் வந்ததில் இருந்து
ஒரு இடத்தில் நிற்காமல், குறுக்கும்
நெடுக்குமாக நடந்து கொண்டிருந்த
சுந்தரமூர்த்தியைக் கண்டு அவருடைய
மனைவி உமாமகேஸ்வரி மற்றும்
உடன் வந்த உமாமகேஸ்வரியுடைய
தங்கை மகன் வருண் ஒருவரை
ஒருவர் பார்த்து மௌனமாக
நகைத்தனர்.

"என்ன பெரியம்மா, பெரியப்பா காலை
வாக்கிங் செல்ல மறந்துவிட்டாரா?"
என்று உமாமகேஸ்வரியிடம் கேட்டு
தன் பெரியப்பாவை கேலி செய்தான்
வருண்.

"அதை ஏண்டா கேக்குற, இரண்டு
நாட்களாக இரவும் சரியாகத்
தூங்கவில்லை. வீட்டில் எல்லா
வசதிகளும் உள்ளதா? ஏதாவது வாங்க
வேண்டுமா? எல்லாம் சரியாக
உள்ளதா? மது வந்த பிறகு அது
இல்லை இது இல்லை என்று
சொல்லிவிடாதே என்று பேசிப் பேசி
நைநை-ன்னு நச்சரித்துவிட்டார்
என்னை" என்று வருணிடம் சொல்லிச்
சிரித்தார் உமாமகேஸ்வரி.

அவர்கள் சிரிக்கும் போதே
சுந்தரமூர்த்தி அவர்கள் இருவரின்
அருகில் வந்துவிட வருண் தன்
பெரியம்மா சொன்னதைத் தன்
பெரியப்பாவிடம் சொல்லி "அப்படியா
பெரியப்பா?" என்று அங்கு இருந்த
இருக்கையின் மேல் இருகைகளையும்
ஊன்றியபடி நின்றுக் கேட்டான்.

மனைவியை ஓரக்கண்ணால் பார்த்த சுந்தரமூர்த்தி "அப்போது என்னிடம்
ஒரு வாரமாக அது வாங்க வேண்டும்
இது வாங்க வேண்டும் என்று யார்
சொன்னது.. ஒரு வேளை உன்
பெரியம்மா மறந்துவிட்டாளோ" என்று
யோசனை செய்வதுபோல்
மனைவிக்கு ஒரு குட்டு வைத்து
மகனைப் பார்த்தார் சுந்தரமூர்த்தி.

ஏதோ சொல்ல உமாமகேஸ்வரி
வாயெடுக்க, அதற்குள் அவர்கள் மகள்
மதுமிதா வரவிருக்கும் விமான
அறிவிப்பு தெரிவிக்கப்பட்டது.
மூவரும் பேசிக்கொண்டிருந்ததை
மறந்து ஒருவித சந்தோஷமும்
ஆவலுமாக மதுமிதாவை
எதிர்ப்பார்த்துக் காத்திருந்தனர்.

மதுமிதா - 25 வயது நிரம்பிய பெண்.
சுந்தரமூர்த்தி உமாமகேஸ்வரி
தம்பதியருக்குப் பிறந்த ஒரே செல்ல
மகள். முதல் வாரிசு அதுவும் பெண்
பிள்ளை என்பதால் வீட்டில்
அனைவருக்கும் செல்லமாகிப்
போனாவள். பிடிவாதமானப் பெண்..
ஆர்ப்பாட்டம் செய்யும் பிடிவாதம்
இல்லை.. அமைதியான அழுத்தமான
பிடிவாதம். அதே சமயம் தவறு செய்தால் கண்டிப்பும் வீட்டில் உண்டு.
படிப்பில் கெட்டிக்காரி. அதற்கு என்று
படித்துக் கொண்டே இருக்காமல்
அனைவரிடமும் கலகலப்பாக
பழகுபவள். கொஞ்சம் குறும்பானப்
பெண்ணும் கூட. முழுதாக இரண்டு
ஆண்டுகளுக்குப் பிறகு தன்
முதுகலைப் பட்டப்படிப்பை
மருத்துவத்தில் முடித்து விட்டுத் தாய்
நாடு திரும்பிகிறாள்.

மூவரையும் கண்டு ஓடி வந்து
அப்பாவைக் கட்டிக்கொண்டாள்
மதுமிதா.

எப்போதுமே பெண் பிள்ளைகள்
அப்படித்தானே.. என்னதான் விழுந்து
விழுந்து எல்லோரும் கவனித்தாலும்
அப்பாவிற்கே முதல் உரிமை
கொடுப்பார்கள். தந்தையர்களுக்கும்
தன் பெண் குழந்தைகளை
இரண்டாவது அன்னையாகவே
கருதுவர்.

முழுதாக இரண்டு வருடம் கழித்து
பார்த்த பூரிப்பில் மகளின் தலையை
வருடி நெற்றியில் முத்தமிட்டார்
சுந்தரமூர்த்தி. உமாமகேஸ்வரிக்குத்
தான் கண்கள் கலங்கிவிட்டது.
"என்ன அம்மா நான் வந்தது அவ்வளவு
துக்கமா இருக்கா?" என்று அவரின்
தோளின் இருபுறமும் கை வைத்தபடி
கிண்டலாகக் கேட்டாள் மதுமிதா.

"ச்சு..போடி உனக்கு எப்போமே
கிண்டல்தான்" என்ற உமாமகேஸ்வரி
சிரித்துவிட்டார்.

"ம்ம் இப்படி சிரிங்க" என்றபடி
தம்பியிடம் திரும்பியவள், "டேய்
வருண் என்னடா இப்படி வளந்துட்டே?"
என்றபடி அவனை நிமிர்ந்து
பார்த்தாள். அவள் போகும் போது
பத்தாவது முடிவில் இருந்தான்.
அப்போது பார்த்ததுக்கு நெடுநெடு-
ன்னு வளர்ந்திருந்தான்.

"முழுசா இரண்டு வருஷம் கழிச்சு
வந்துட்டு பேசரியா நீ" என்றபடி
தமக்கையின் முடியை பிடித்து
விளையாட்டாக இழுத்தான்.

"சரிசரி கிளம்பலாம் வாங்க" என்று
கூற அனைவரும் ஆளுக்கு ஒரு
பையை எடுத்துக் கொண்டு
பேசியபடியே கார் பார்க்கிங்
ஐ நோக்கி நடந்தனர்.

கார் பார்க்கிங் சென்று லக்கேஜை கார்
டிக்கியில் வைத்துவிட்டு வருணும்
உமாவும் பின்னால் ஏற மதுவும் சுந்தர
மூர்த்தியும் முன்னால் ஏறி அமர்ந்தனர்.
காரை பொள்ளாச்சியை நோக்கி
ஓட்டினார் சுந்தரமூர்த்தி.

'பொருள் ஆட்சி', 'பொழில்வாய்ச்சி'
என்று அழைக்கப்பட்ட ஊர்
காலப்போக்கில் மருவி பொள்ளாச்சி
என்று மாறியது. சோழர் காலத்தில்
'முடிகொண்ட சோழநல்லூர்' என்றும்
அழைக்கப்பட்ட ஊரே நமது
பொள்ளாச்சி.

தன்னையும் தன்னைச் சுற்றி
இருக்கும் சுற்றுலாத் தலங்களான
ஆழியாறு.. ஆனைமலை.. வால்பாறை
என அழகில் குறைவில்லாமல்
அனைவரையும் கவரும் வளமை
உள்ள ஊர். இங்கு நடக்கும் மாட்டுச்
சந்தை.. திரைப்பட படப்பிடிப்புகள்..
தென்னை பொருள் என
அனைத்துக்கும் புகழ் பெற்ற ஊர் நம்
பொள்ளாச்சி.

வழி முழுவதும் நால்வரும் ஒரே
கலகலப்பாக அரட்டை அடித்துக்
கொண்டே சென்றனர். வீடு செல்ல
இரவு ஏழு ஆகிவிட்டது. கார் வரும்
சத்தத்தைக் கேட்டு வீட்டு வாசலுக்கே
வந்துவிட்டனர் உமாமகேஸ்வரியுடைய
தங்கை ராதா மற்றும் உமா
ராதாவுடைய பெற்றோரான சண்முகம்
-ஈஸ்வரி தம்பதி.

காரில் இருந்து இறங்கிய மது, தாத்தா
பாட்டியிடம் சென்று காலில் விழுந்து
வணங்கி எழுந்துவிட்டு, சித்தியிடம்
சென்று அவரை கட்டிக்கொண்டாள்.
சித்தி என்றால் சின்ன வயதில்
இருந்தே தனிப் பிரியம் தான்
மதுமிதாவிற்கு.

"என்ன மது இப்படி மெலிஞ்சுட்ட?"
என்று ராதா கேட்க, ஈஸ்வரி அம்மாவும்
ஆம் என்பது போல் தலை அசைத்தார்.
"அதான் இங்க வந்துட்டல பாட்டி இனி
உங்க சாப்பாட்ல எல்லாம் சரி
ஆகிவிடும்" என்று கூறி கண்
அடித்தவளை கண் குளிர பார்த்தனர்
அனைவரும்.

அனைவருக்கும் மதுவைக் கண்டதில்
துள்ளி எழுந்தது போல இருந்தது.
சண்முகம் ஈஸ்வரி தம்பதியருக்கோ
பத்து வயது குறைந்தது போல
இருந்தது. அவ்வளவு குஷியாகவும்
சுறுசுறுப்பாகவும் திரிந்தனர்.

"சித்தப்பா எங்கே சித்தி?" என்று
வீட்டினுள் நுழைய ராதாவிடம்
கேட்டாள் மது.

"அவர் கோவையில் உள்ள நம்ம
கார்மெண்ட்ஸிற்கு சென்றிருக்கிறார்
மது.. இன்னும் கொஞ்ச நேரத்தில்
வந்துவிடுவார்" என்றுரைத்தவர் "நீ
உன் அறைக்குச் சென்று குளித்து
விட்டு வா மது" என்று மேலே உள்ள
அவள் அறைக்கு மதுவை அனுப்பி
வைத்தார் ராதா.

அவள் துணி இருந்த பேக் ஐ மட்டும்
எடுத்துக் கொண்டு மேலே சென்றவள்
தனது ஜீன்ஸையும் சர்டையும்
அகற்றினாள். குளித்து விட்டுக் கீழே
வர, அவள் சித்தப்பா திருமுருகன்
வரவும் சரியாக இருந்தது.

"இரண்டு வருடம் கழித்து படிப்பை
முடித்துக்கொண்டு வீடு வந்த என்
மதுக்குட்டிக்கு சித்தாப்பாவின் ஒரு
சின்ன பரிசு" என்று ஒரு பெட்டியை
மதுவிடம் தந்தார்.

"தேங்க்யூ சித்தப்பா" என்றபடி பரிசைப்
பிரித்தாள். உள்ளே அழகாக ஒரு
ப்ரேஸ்லட் (bracelet) இருந்தது.
எடுத்துக் கையில் மாட்டி "ரொம்ப
அழகா இருக்கு" சித்தப்பா என்றாள்.
எல்லாருக்கும் சென்று காட்டினாள்.

வருணோ "எனக்கு?" என்று
அப்பாவிடம் பாய்ந்தான்.

"அதான் போன வாரம் லேப்டாப்
வாங்கித் தந்தேனே" என்று
திருமுருகன் சீண்ட, மதுவோ தம்பியை
வெருப்பேற்றுவது போல கண்களை
உருட்டிச் சிரித்தாள்.

அதற்குள் அங்கு வந்த ராதா
அனைவரையும் சாப்பிட அழைக்க
எல்லோரும் ஒன்றாக அமர்ந்து
சாப்பிட்டனர். சாப்பிட்டு விட்டு
அனைவருக்கும் வாங்கி வந்து
இருந்த பொருட்களை எடுத்துக்
கொடுத்தாள் மது. பிறகு எல்லோரும்
ஹாலில் அமர்ந்து பேச ஆரம்பித்தனர்.

சிறிது நேரம் சென்றபின் "அடுத்து
என்ன ப்ளான் மதுமா" என
வினவினார் திருமுருகன்.

"கோயம்புத்தூர்ல ஒரு ஹாஸ்பிடல்ல
ஜாய்ன் பண்ணலாமனு இருக்கேன்
சித்தப்பா.. இன்டர்வியூக்கு
கேட்டுட்டேன் அல்ரெடி" என்று
கூறினாள்.

ஏதோ சொல்ல வாயெடுத்த
உமாமகேஸ்வரி கணவரின்
பார்வையைக் கண்டு எதுவும்
சொல்லவில்லை. கொஞ்ச நேரம்
பேசிச் சிரித்துவிட்டு அனைவரும்
அவரவர் அறைக்குச் புகுந்துவிட்டனர்.

அறைக்குள் நுழைந்து படுக்கையில்
விழுந்த மதுவிற்கு பழைய
நினைவுகள் வந்து அலக்கடித்தன.
திரும்பித் திரும்பிப் படுத்தவளால்
உறங்க முடியவில்லை.. மனதை
வேதனைப்படுத்தவே பழைய
நினைவுகளுக்கு கூட்டிச் சென்றது
மூளை.

எழுந்து அமர்ந்து மனதை ஒரு
நிலைக்குக் கொண்டு வந்தவள்
மீண்டும் உறங்க முயன்று அன்றைய
அலுப்பில் உறங்கியும் போனாள்.
 

writer

Saha Writer
Team
Messages
50
Reaction score
26
Points
8
அத்தியாயம்-2

சண்முகம்-ஈஸ்வரி தம்பதியருக்கு
பொள்ளாச்சியை அடுத்து பதினாறு
கிலோமீட்டர் தொலைவிலுள்ள
அங்கலங்குறிச்சியே சொந்த ஊர்.
மூத்த மகள் உமாமகேஸ்வரி
இளையவள் ராதா. இருவருக்கும்
நான்கு ஆண்டுகள் வித்தியாசம்.

உமா பள்ளிப் படிப்பை முடித்து விட
அவளது இளங்கலை கல்விக்காக
பொள்ளாச்சி வந்து விட்டனர்
குடும்பத்தோடு. சண்முகம் முதலில்
இருந்தே பொள்ளாச்சியில்
ஆசிரியராக இருந்ததால் அவ்வளவு
தொந்திரவாக யாருக்கும்
இருக்கவில்லை. திருமுருகன் ஈஸ்வரி
அம்மாவின் தூரத்து உறவு. சண்முகம்
குடும்பம் பொள்ளாச்சிக்கு வர வீடு
பார்த்துத் தந்தது திருமுருகன் தான்.
உமாவிற்கும் நல்லக் கல்லூரியை
சண்முகத்திற்கு கைகாட்டி விட்டார்
திருமுருகன்.

இந்நிலையில் தான் திருமுருகனின்
உயிர்நண்பன் மற்றும் கார்மெண்ட்ஸ்
தொழிலில் பாட்னரான
சுந்தரமூர்த்தியும் உமாவும் சந்தித்தது.
ஒரு நாள் உமா கல்லூரி செல்லும்
வழியில் தான் சுந்தரமூர்த்தியை
முதன்முதலில் சந்தித்தது. பார்த்த
முதல் சந்திப்பிலேயே இருவரும்
காதலில் விழுந்தனர்.

முதலில் உமா திருமுருகனின் உறவு
என்பதும், சுந்தரமூர்த்தி
திருமுருகனின் நண்பன் என்பதும்
இருவருக்குமே தெரியாது.

ஒருநாள் தான் ஒரு பெண்ணை
காதலிப்பதாகவும் அவளை அறிமுகம்
செய்து வைப்பதாகவும் சுந்தரமூர்த்தி
திருமுருகனை அழைத்துச் சென்ற
போது தான் திருமுருகனும் உமாவும்
ஒருவரை ஒருவர் கண்டு அதிர்ந்தனர்.
விஷயம் அறிந்த சுந்தரமூர்த்தியும்
அதிர்ந்து விட்டார். பின்னர்
திருமுருகன் "உமாவிற்கு மாப்பிள்ளை
பார்க்க ஆரம்பிக்க போது
சொல்லிவிடலாம்" என்று கூற
மூவருமே ஒருவருக்கொருவர்
சமாதானம் ஆயினர்.

ஆனால் திடீரென்று ஒருநாள் "நாளை
நமது உமாவை நிச்சயம் செய்ய
வருகிறார்கள். பையனும் பெரிய இடம்.
கெட்ட பழக்கவழக்கமும் இல்லை" என
விவரம் சொல்ல உமாவிற்கு என்ன
செய்வது என்று தெரியவில்லை.

பெண் பார்க்க வருகிறார்கள் என்றால்
கூடப் பரவாயில்லை. நேராக
நிச்சயமே என்ற போது உமா பயத்தின்
உச்சிக்கே சென்றார். சுந்தரமூர்த்தி
இல்லாமல் வாழ முடியுமா என்ற கேள்விக்கு அவரது மனம் "இல்லை..
உன்னால் முடியாது" என்றே
பதிலளிக்க, இரவு எல்லோரும் தூங்க
உமா வெளியேறிவிட்டார்.

"உமாவைக் காணோம் திருமுருகா"
என்று கலக்கத்துடன் கார்மெண்ட்ஸ்
வந்து நின்றார் சண்முகம்.
சுந்தரமூர்த்தி இன்னும் வரவில்லையே
என்று யோசித்துக் கொண்டிருந்த
திருமுருகன் சண்முகம் சொன்ன
செய்தியைக் கேட்டு திகைத்தார். அவர்
யூகித்து விட்டார்.

இருவரும் சென்று ஒவ்வொரு இடமாக
தேடினர். போலீஸில் புகார்
கொடுக்கலாமா என சண்முகம் கேட்ட
போது, "இன்னும் கொஞ்சம்
பார்ப்போம் மாமா" என்று அவரை
அமைதிப்படுத்தினான். ஏனென்றால்
திருமுருகனின் உதவியை நாடி வந்த
சண்முகம் "இன்று நிச்சயம்
வைத்திருந்தேன்.. எங்கு போனாள்
இந்தப் பெண் என்றுத்
தெரியவில்லையே" என்று புலம்ப
சுந்தரமூர்த்தியுடன் தான் உமா
சென்றிருக்கிறாள் என்பது
திருமுருகனுக்கு உறுதி ஆயிற்று.
மேலும் தெரிந்தே ஏன் போலிஸில்
சொல்ல வேண்டும் என்று தான்
சமாதானம் செய்து வைத்தார்.

ஆனால் மாலை திருமணம்
முடித்துக்கொண்டு உமாவும்
சுந்தரமூர்த்தியும் வந்து வீட்டின் முன்
நின்றபோது சண்முகம்
கொதித்துப்போனார். உமாவை
நோக்கிக் கையை ஓங்கக் கொண்டு
போனவரைத் திருமுருகனும் ஈஸ்வரி
அம்மாவும் தான் தடுத்தனர்.
வீட்டிற்குள் சென்று கதவை அறைந்து
சாத்தினார்.

திருமுருகனுக்கு என்ன செய்வது
என்றே விளங்கவில்லை. ஈஸ்வரி
அம்மாவிடம் சென்று "நீங்கள் அவரை
சமாதானம் செய்யப் பாருங்கள்.. நான்
அடுத்து ஆக வேண்டியதைப் பார்த்துக்
கொள்கிறேன்" என்றுவிட்டு
சுந்தரமூர்த்தியிடம் திரும்பினார்.

"என்ன இப்படி செஞ்சிட்டிங்க?" என்று
கோபமும் வருத்தமும் ஆகக் கேட்டார்
திருமுருகன்.

நடந்ததை அழுது கொண்டே சொல்லி
முடித்தார் உமாமகேஸ்வரி. மேலும்
"நான்தான் இவரை வற்பறுத்தினேன்.
இவர் வீட்டில் பேசுவதாக சொன்னதை
கூடக் கேட்காமல் நான்தான் இன்றே
என்னை திருமணம் செய்து
கொள்ளும் படி அழுதேன்" என்று
விசும்பினார் உமாமகேஸ்வரி.

சுந்தரமூர்த்தியும் திருமுருகனும்
உமாவை சமாதானம் செய்து ,
சுந்தரமூர்த்தியுடைய வீட்டிற்கு
அழைத்துச் சென்றனர்.
சுந்தரமூர்த்தியுடைய வீட்டினரும்
ஒத்துவராததால் சில நாட்களில்
தனியாக வெளியே வந்தனர்.
இந்நிலையில் பெரிய ஆர்டர் ஒன்று
கிடைக்க அயராது உழைத்து வெற்றி
கண்டனர் சுந்தரமூர்த்தியும்
திருமுருகனும். இதைப் பகிர்ந்து
கொள்ள வீட்டிற்கு வந்த போதுதான்,
சுந்தரமூர்த்தியிடம் தான்
கருவுற்றிருப்பதாகக் கூறி மேலும்
சந்தோஷத்தில் தள்ளினார் உமா.
விஷயம் அறிந்து வந்த திருமுருகனும்
வாழ்த்துத் தெரிவித்துத் தன்
மகிழ்ச்சியைப் பகிர்ந்தார்.

"அண்ணி கருவுற்றிருப்பதை அவர்கள்
வீட்டில் சொல்லலாம் சுந்தரமூர்த்தி"
என்றார் திருமுருகன்.

முதலில் தயங்கிய சுந்தரமூர்த்தி
மனைவியின் முகத்தில் இருந்த
ஏக்கத்தை கண்டு சரியென்று
ஒப்புக்கொண்டார்.

சுந்தரமூர்த்தியையும்
திருமுருகனையும் கண்டு முதலில்
முகத்தில் கோபத்தைக் காட்டிய
சண்முகம் பிறகு "வாங்க" என்றுவிட்டு
உள்ளே சென்று அமர்ந்தார்.

உள்ளே சென்று அமர்ந்துவிட்டு தானே
பேச்சைத் தொடங்கினார்
சுந்தரமூர்த்தி, "வந்து... உமா
கருவுற்றிருக்கிராள்" என்று கூறினார்.

உமா வீட்டினர் உருகித்தான் போயினர்.
ஈஸ்வரி "ரொம்ப சந்தோஷம்" என்று
கூற சண்முகம் மட்டும்
அமைதியாகவே இருந்தார். அவரின்
கோபத்திலும் நியாயம் இருந்தது..
சிறிய வயதில் இருந்து சீராட்டி
வளர்த்தச் செல்லப் பெண் உமா.
அவளுக்குப் பெரிய இடத்தில் இருந்து
தானாக சம்மந்தம் வர அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தார். ஆனால்
மகள் அத்தனையையும் பாழாக்கி
விட்டதை அவரால் ஜீரணிக்க
முடியவில்லை.

"நாங்கள் செய்தது தவறு தான்.
உங்களின் கோபம் நியாயமானதும்
கூட. ஆனால் அவள் உங்களைப்
பார்க்க ஆசைப் படுகிறாள். நீங்கள்
வந்தால் மிகவும் சந்தோஷப்படுவாள்..
தயவு பண்ணி அவளிற்காவது வந்து
பாருங்கள்" என்றுக் கேட்ட
சுந்தரமூர்த்தி "மேலும் நடந்த தவறுக்கு
என்னை மன்னித்து விடுங்கள்" என்று இருகைகளையும் கூப்பி மன்னிப்பு
கேட்டார் சுந்தரமூர்த்தி.

அவர் அப்படி கேட்ட உடனே சண்முகம்
சற்று இறங்கி வந்தார். சுந்தரமூர்த்தி
திருமுருகன் கூடவே மூவரும்
கிளம்பிவிட்டனர். உமாவிற்கு
அனைவரையும் கண்டதில் அளவு
கடந்த மகிழ்ச்சி. மதுமிதாவும்
பிறந்தாள். சுந்தரமூர்த்தி
உமாமகேஸ்வரி திருமணத்தில்
கோபமாக இருந்தது சண்முகம் தான்.
ஆனால் பேத்தியைத் தாங்கு தாங்கு
என்று தாங்கியதும் அவர்தான். பெயர்
சூட்டு விழா , காதணி விழா என்று
அனைத்தும் நன்றாக நடந்தன.
பெயருக்காக வந்துவிட்டு சென்றனர்
சுந்தரமூர்த்தியின் உறவினர்கள்.
திருமுருகன்தான் மதுமிதா என்ற
பெயரைப் பரிந்துரைத்ததே. பெயரும்
நன்றாக இருக்கவே அதையே
சூட்டிவிட்டனர்.

திருமுருகனின் பெற்றோர் ஒரு
விபத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பே
மறைந்து விட்டனர். ஒரே மகன்
என்பதால் பெற்றோரை இழந்துத்
தனியாகத் தவித்த திருமுருகனை சுந்தரமூர்த்திதான் ஆறுதல் சொல்லி
தேற்றினார்.

இருவரும் சேர்ந்து தொழில்
தொடங்கினர். மதுவிற்கு நாலு வயது
இருக்கும் போது திருமுருகனுக்கே
ராதாவை கொடுக்க முடிவு செய்து,
கல்யாணம் பெரியவர்களால்
நடத்தப்பட்டது.. அவர்களுக்கு மூன்று
ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த ஒரே
மகன்தான் வருண். மது சித்தப்பா
வீட்டிலேயே கிடப்பாள் தம்பியைக்
கொஞ்சியபடி. வருணிற்கும்
மதுவிற்கும் ஏழு ஆண்டுகள்
வித்தியாசம். வருண் தற்போது
பொறியியல் (டெக்ஸ்டைல் துறையில்)
முதலாம் ஆண்டு
பொள்ளாச்சியிலேயே படித்து
வருகிறான்.

தொழில் சிறப்பாகச் செல்லவே
கோவையிலும் ஒரு கிளையை
நிறுவினர். நாட்கள் கடந்து
சென்றன.மதுவிற்கு பதினொராம்
வயதின் போது வீடு கட்டி எல்லாரும்
ஒன்றாக குடி சென்றனர்.

சண்முகம் அய்யாவும் ஏதாவது அவர்களுடன் சென்று பார்த்து
வருவார். சொல்லப்போனால்
ஆண்களுக்குள் மனஸ்தாபம் வந்ததே
இல்லை. அதற்கு ஏற்ற மாதிரியும்
ஒருவருக்கொருவர் நடந்து
கொண்டனர்.

எல்லாம் மதுவின் விருப்பப்படியே
படிக்க வைத்தனர். அவள் லண்டனில்
இருந்து பொள்ளாச்சி வந்ததும்
மதுவின் திருமணத்தை முடித்து விட
என்று முடிவில் தான் இருந்தனர்.
ஆனால் அது அவ்வளவு எளிதாக
நடக்கப் போவதில்லை என்று
அப்போது யாரும் அறியவில்லை.
 

writer

Saha Writer
Team
Messages
50
Reaction score
26
Points
8
அத்தியாயம்-3

மது வந்து இரண்டு நாட்கள் கழிய
எல்லோரும் அவளை விழுந்து விழுந்து
கவனித்தனர். திருமுருகனும் மாலை
வரும்போது ஏதாவது வாங்கி வந்தார்.
மதுவும் தன் வீட்டில் புத்துணர்ச்சியுடன்
வலம் வந்தாள். அவ்வப்போது மனதில்
எழும் நியாபகங்களை
அப்புறப்படுத்தவும் செய்தாள்.

"என்ன நான் ஒருத்தன் இருப்பதையே
மறந்து விட்டீர்களா? என்னை யாரும்
இப்போது எல்லாம் கண்டு கொள்வதே
இல்லை" என்று ஒரு நாள்
பொய்க்கோபம் காட்டினான் வருண்.

"ஏன் இரண்டு வருடம் அடித்த சேட்டை
பத்தாதா?" என்று திருமுருகன் கூற
ஏதோ புத்தகத்தைப் படித்துக்
கொண்டிருந்த மது சிரித்துவிட்டாள்.

"பாருங்கள் பெரியம்மா இவர்களை"
என்று உமா மகேஸ்வரியின் தோளில்
சாய்ந்து முறையிட்டான் வருண்.

"விடுடா தங்கம் எல்லாம் கொஞ்ச நாள்
தான்" என்று மகனைச் சமாதானம்
செய்து ஓரக்கண்ணால் மகளைப்
பார்த்ததார் உமா.

மதுவோ அந்தப் பேச்சே காதில்
விழாதது போல தன் தந்தையிடம்
பேசிக் கொண்டிருந்தாள். "அப்பா
நாளை கோவையில் ஒரு
ஹாஸ்பிடல்ல எனக்கு இன்டர்வியூ
இருக்கு, நீங்க கார்மெண்ட்ஸ்
போகும்போது என்னை அங்கே
விட்டுட்டு போங்க" எனக் கூறினாள்.

"நாளை உன் சித்தப்பாக்குத் தான்
கோவையில் வேலை மது, நீ
அவனுடனே சென்றுவிடு" எனச்
சுந்தரமூர்த்தி கூற, திருமுருகனும்
"நாளை ஏழு மணிக்குத் தயாராகிவிடு
மதுமா, போகும்போது பிள்ளையார்
கோயில் சென்று தேங்காய்
உடைத்துவிட்டுப் போகலாம்" என்றார்.

"சரி சித்தப்பா" என்று அனைவருக்கும்
பொதுவாக இரவு வணக்கம்
கூறிவிட்டு மாடிப்படி ஏறினாள்.
அறைக்குள் நுழைந்து கதவை
சாத்திவிட்டு பாடுக்கையில்
விழுந்தவளுக்கு தன் அன்னை
சொன்னது காதில் விழாமல் இல்லை.
அம்மா மறைமுகமாக தன் கல்யாணப்
பேச்சை எடுப்பது புரிந்தது. ஏனோ
பயமாக இருந்தது மதுவிற்கு. "முருகா
சரணம்" என்று தன் இஷ்ட
தெய்வமான முருகனை
வேண்டிவிட்டுத் தூங்க ஆரம்பித்தாள்.

மகளின் நடவடிக்கையில் மனம்
நெருடியது உமாவிற்கு.
எதற்கெடுத்தாலும் வாயாடும் மகள் ,
இன்று தன் பேச்சை கேட்காதது
போலச் சமாளித்துவிட்டுப் போனது
அவருக்குச் சரியாகப்படவில்லை.
தான் வீணாக கற்பனை
செய்கிறோமோ என்று கூடத்
தோன்றியது உமாவிற்கு. எதுவாக
இருந்தாலும் காப்பாற்றுப்பா முருகா
என்றுவிட்டு உறங்கச் சென்றார்.
(முருகன் யார் பேச்சைக் கேட்பாரோ
இரண்டு பேர் வேண்டுதலில்).

அடுத்த நாள் மதியம் இன்டர்வியூ
முடிந்து வேலை கிடைத்துவிடப்
பேருந்திலேயே பொள்ளாச்சி வந்து
விட்டாள் மது. வீட்டினுள் நுழைந்த மது
ஹாலில் அமர்ந்திருந்த பாட்டியின்
அருகில் சென்று அமர்ந்து அவரின்
தோளில் வாஞ்சையாகத் தலை
சாய்த்து வேலை கிடைத்ததைத்
தெரிவித்தாள்.

"எனக்கு நேற்றே உனக்கு வேலை
கிடைத்துவிடும் என்று தெரியும்
கண்ணு" என்று பேத்தியின்
நெற்றியில் முத்தமிட்டார் ஈஸ்வரி.
மதுவின் குரல் கேட்டு வெளியே வந்த
பெண்கள் விஷயம்அறிந்து
மகளுக்குச் சுற்றிப் போட்டனர்.
உமாமகாகேசுவரி கேசரி செய்ய
சமையல் அறைக்கு விரைய, ராதா
வீட்டு ஆண்களுக்குத் தகவல்
தெரிவித்தார். சுந்தரமூர்த்தியும்
சண்முகமும் பொள்ளாச்சி
கார்மெண்ட்ஸில் இருந்ததால்
விரைவில் வரவும், வருணும் கல்லூரி
முடிந்து வரச் சரியாக இருந்தது.

தன் பெரியம்மா தந்தக் கேசரியை
விழுங்கிக் கொண்டே "உனக்கு
இவ்வளவு அறிவு என்று நான்
எதிர்பார்க்கவே இல்லை" என்று
வேண்டுமென்றே சீண்டினான் வருண்.

"ஆமாம் உன் அக்கா அல்லவா..
அதனால் தான் அப்படி நினைத்து
இருப்பாய்.. ஆனால் அது தவறு என்று
நிருபித்துவிட்டேன் பார்" என்றுக் கூறி
நாக்கை துருத்திக்காட்டினாள் மது.

"உன்னிடம் பேச்சில் ஜெயிக்க
முடியாதுடி அக்கா" என்று
ஒத்துக்கொண்டான் வருண்.

சுந்தரமூர்த்தி இன்று வெளியே
சென்று சாப்பிட்டு வரலாம் என்று
சொல்ல அனைவரும் கிளம்பினர்.
திருமுருகன் நேரே ஹோட்டல் வந்து
விடுவதாகத் தெரிவித்து விட்டார்.

எல்லோரும் உண்டு முடித்து வீடு வந்து
சேர்ந்தனர். வீடு வந்தவுடன் மாடி ஏறிய
மதுவிடம் "மதும்மா உன்னிடம் சற்று
பேச வேண்டும்டா" என்றார்
சுந்தரமூர்த்தி. எல்லாரும் பொதுவாக
ஹாலில் அமர்ந்தனர்.

"உனக்கும் கல்யாண வயது ஆச்சு
மதுமா. நீயும் மேலே படிக்க வேண்டும்
என்று எம்.பி.பி.ஸ் முடித்தவுடன்
சொன்னதால் நாங்களும் உன்னைத்
தொந்திரவு செய்யவில்லை. இப்போது
மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து
விடலாம் மதுமா" என்று சொல்லி
முடித்தார் மகளைப் பார்த்தார்.

மது இந்தப் பேச்சு வரும் என்று
எதிர்பார்த்தது தான். "எனக்கு
கல்யாணம் வேண்டாம் அப்பா" என்று
மது கூற எல்லாரும் அதிர்ந்து விட்டனர்.

"ஏன்டா எல்லாரும் ஒரு நாள்
கல்யாணம் செய்து கொண்டுதானே
ஆக வேண்டும்" என்றார் சுந்தரமூர்த்தி
பொறுமையாக. அவருக்குப்
பொறுமை சீக்கிரம் பறந்துவிடும்
என்று எல்லோரும் அறிந்ததே.

"........." - அமைதி காத்தாள் மதுவிதா.

"யாரையாவது விரும்புகிராயா மது?"
எனக் கேட்டார் திருமுருகன்.

"எனக்கு கல்யாணமே வேண்டாம்.
நான் உங்களுடனே.." என்று கூறி
முடிப்பதற்குள், "போதும் நிறுத்து மது.
ஒரே பெண் என்று செல்லம்
கொடுத்தது தப்பாகப் போச்சு.
பேச்சைப் பார். கல்யாணமே
வேண்டாமாம். இன்னும் ஒரு
மாதத்தில் ஒரு நல்ல முடிவை நீ
சொல்ல வேண்டும்.. இல்லை என்றால்
என் முடிவுக்குக் கட்டுப்பட்டு தான் ஆக
வேண்டும்" என்று கத்திவிட்டு அவர்
அறைக்குள் நுழைந்துவிட்டார்.

எல்லோருமே சங்கடமாக உணர்ந்து
அவரவர் அறைக்குள் புகுந்தனர்.
மகளை முறைத்தபடியே அறைக்குள்
சென்றார் உமா மகேஸ்வரி.

அன்று மாலை இருந்த மகிழ்ச்சி
யாருக்கும் இரவு இல்லை. எல்லாரும்
தங்கள் யோசனையில் மூழ்கி
விடியற்காலையிலேயே உறங்க
ஆரம்பித்தனர்.

அடுத்து இரண்டு நாட்களில் மது
ஹாஸ்பிடல் சென்று வர
ஆரம்பித்தாள். கண் மருத்துவத்தில்
முதுகலைப் பட்டம் பெற்றிருந்தாள் மது.
அதனால் காலை 9 முதல் மதியம் 3.30
வரையே அவளது பார்வை நேரம்.
ஏதாவது அறுவை சிகிச்சை அல்லது
அவசர சிகிச்சை இருந்தால் மட்டுமே
தாமதம் ஆகும். ஞாயிறும் விடுமுறை.
மது வேலை முடித்து வீடு வந்தால்
சாப்பிட மட்டுமே கீழே வருவது மற்ற
எல்லா நேரமும் அறையிலேயே
கிடந்தாள். அவளுக்குத் தன்
குடும்பத்தாரை முகம் பார்க்கவே
சங்கடமாக இருந்தது.எல்லோரும்
ஒரு வித இறுக்கத்துடையே வலம்
வந்தனர். ஒரு வாரம் கடந்தது.

ஒரு நாள் இரவு உணவிற்கு வந்த
அனைவரையும் அழைத்த சண்முகம்
தாத்தா "நமது ஜோசியரை இன்றுப்
பார்த்தேன். அவரிடம் வீட்டில் உள்ள
நிலையைச் சொன்னப் போது அவர்
நமது காமாட்சி அம்மன் கோயிலில்
ஒரு பரிகாரம் செய்யச் சொன்னார்.."
என்று கூறிவிட்டு, "வர
ஞாயிற்றுக்கிழமை எல்லாருக்கும்
வசதிதானே" என மகள்களைப்
பார்த்துக் கேட்டார் சண்முகம்.

"வருணிற்கும் நாளையுடன் தேர்வு
முடிகிறது அப்பா. அடுத்து ஒரு மாதம்
விடுமுறை தான். மதுவிற்கும் ஞாயிறு
விடுமுறை தான்" என்று தந்தைக்கு
பதிலளித்தார் ராதா.

சாப்பிட்டு முடித்ததும் அவர்கள் வீட்டின்
முன்னால் உள்ள, சிறிய
புல்வெளியுடன் கூடிய
பூந்தோட்டத்திற்கு வந்து,
மரப்பென்ஞ்சில் அமர்ந்தாள் மது.
ஏனோ தாத்தா கோவில் என்று
சொன்னதும் பதட்டமாகவே இருந்தது.

கார்த்திக்கின் நினைவுகள் வந்து
அலக்கழித்தன. சில வருடங்களுக்கு
முன்பு அவனது நினைப்பு
மயிலிறகாய் மனதை வருடிய நினைவு
வந்தது மதுவிற்கு. இதிலிருந்து
வெளியவே வர முடியாதா என்று
தவித்தவள்.. வரவா என்று இருந்த
அழுகையை அடக்கி, எழுந்து உள்ளே
சென்றாள் மது.

ஞாயிற்றுக்கிழமையும் வந்தது.
வழக்கம் போல மது வாக்கிங் சென்று
விட்டுத் திரும்பி வர, திருமுருகன்
புல்வெளியில் உள்ள மரபென்ஞ்சில்
அமர்ந்த படியே மதுவை வரும்படி கை
அசைத்தார். மதுவும் திருமுருகன்
அருகில் சென்று அமர்ந்தாள்.

ஒரு புன்னகையை சிந்தியவர் "எதை
மதுமா மறைக்கிறாய்? எதை
நினைத்து இப்படித் தவிக்கிறாய்க்
கண்ணு?" என்று நேரிடையாகவே
கேட்டுவிட்டார் திருமுருகன்.

ஷூ லேசைக் கட்டிக்கொண்டு
நிமிர்ந்த மது "ஒன்றும் இல்லையே
சித்தப்பா" என்றாள் ஷூவைப்
பார்த்தபடியே.

"அன்று இரவு நீ இங்கு
உட்கார்ந்திருந்ததை நான் பார்த்தேன்
மது. நீ எதையோ நினைத்துக்
கலங்குவதையும் கண்டேன்" தான்
அவளை கவனித்ததைப் பற்றிச்
சொன்னார்.

"இல்லை சித்தப்பா.. நீங்க தவறாக
புரிந்து கொண்டு இருக்கீங்க" என்றவளின் பேச்சை கை உயர்த்தித்
தடுத்தார்.

"ஏன் மதுமா நான் கூட உன்னைப்
புரிந்து கொள்ள மாட்டேன் என்று
நினைக்கிறாயா? எதற்கும் ஒரு
காரணம் இருக்கும் தானே தங்கம்?"
என்று ஒரு மாதிரி அமைதியான
வெற்றுக் குரலில் கேட்டார்.

இதற்கு மேலும் மறைக்க முடியாது
என்று எண்ணியவள் "ஆமாம்
சித்தப்பா நான் ஒருவரைக் காதலிக்கிறேன்" என்று கூறி விட்டாள்.
திருமுருகனுக்கு அதிர்ச்சி தான்..
காதல் விவகாரம் என்று தான்
யூகித்திருந்தார் முதலிலேயே.
ஆனால் மது எப்படி காதலில்? அந்த
மாதிரி நடவடிக்கைகள் கண்டது
இல்லையே.. என்று யோசித்த
திருமுருகன் மதுவிடம் அடுத்த
கேள்வியைக் கேட்டார்.

"பையன் யாரம்மா? பெயர் என்ன?"
என வினவினார் திருமுருகன்.

"ப்ளீஸ் சித்தப்பா அதை மட்டும் கேட்காதீர்கள். எனக்கு மட்டும் பிடித்து
இருந்தால் பத்தாது. அவருக்கும்
என்னைப் பிடிக்க வேண்டும். அதுவும்
இல்லாமல் எ..எனக்கு எனக்கு
கல்யாணமே வேண்டாம் என்று
இருக்கிறது" என்று நடுங்கிய குரலில்
சொல்லிவிட்டு எழுந்தவள் வீட்டிற்குள்
சென்றாள்.

சில நிமிடம் யோசித்து விட்டுத் தானும்
எழுந்து உள்ளே சென்று கோயிலுக்கு
செல்லத் தயாரானார் திருமுருகன்.
 

writer

Saha Writer
Team
Messages
50
Reaction score
26
Points
8
அத்தியாயம்-4

உமாமகேஸ்வரி எவ்வளவு
சொல்லியும் புடவை அணியாமல்
சல்வார் கமீஸ் அணிந்து வந்து
நின்றாள் மதுமிதா. மரகதப் பச்சை
நிறத்தில் கோல்டன் பார்டர் வைத்து
அவளது உடம்பிற்கு கச்சிதமாக
இருந்த சல்வார் கமீஸ் அவளை
எடுத்துக் காண்பித்தது. இடுப்பிற்கு
சற்று மேலாக இருந்த முடியை
ப்ரென்ச் ப்ரெய்ட் (French braid)
போட்டு சில ஒப்பனைகள் செய்து
அழகாக வந்த பேத்தியை கண்டு
நெட்டிமுறித்தார் ஈஸ்வரி.

"அய்யோ பாட்டி எல்லாம் மேக்கப்..
இதுக்கு போய்ய்ய்.. " என்று முகத்தைச்
சுழித்து வருண் நகைத்தான்.

"போடா குரங்கு" என்று எம்பி
தம்பியின் தலையில் குட்டினாள்
மதுமிதா.

"குரங்கின் அக்கா குரங்குதானாம்"
என்று மதுவை மேலும் சீண்டினான்
வருண். அவனுக்கு அக்காவை
வம்பிற்கு இழுப்பதில் அவ்வளவு
சந்தோஷம்.

ஏதோ சொல்ல வாயெடுத்த மதுமிதா
சுந்தரமூர்த்தி வருவதைக் கண்டு
தம்பியிடம் பழிப்புக் காட்டிவிட்டு,
வெளியே வந்து காரில் அமர்ந்தாள்.

தந்தை அன்று தன்னைத் திட்டியதில்
இருந்து அவளிடம் சரிவரப் பேசியதை
நிறுத்தியது அவளுக்கு மிகவும்
கஷ்டமாக இருந்தது.. அதற்காக அவள்
திருமணத்திற்கு சம்மதித்தால் அதை
விடக் கஷ்டப்பட வேண்டுமே என்று
எதுவும் பேசாமல் மனசுக்குள்
அனைத்தையும் போட்டு
மருகிக்கொண்டு இருந்தாள்.

இரண்டு கார்களில் கோயிலை
அடைந்தனர். மதுவிற்கு
படபடப்பாகவே இருந்தது. காமாட்சி
அம்மன் அவர்கள் குலதெய்வம் ஆகும்.
பொள்ளாச்சியிலேயே
மகாலிங்கபுரத்தில் அமைந்திருக்கும்
கோயிலிற்கு சுந்தரமூர்த்தி வாரம் ஒரு
முறை வெள்ளிகளில் வந்துவிடுவார்.
அம்மாவாசை பௌர்ணமிகளில்
குடும்பத்துடன் சென்று வருவது
வழக்கம். பரிகாரத்தை முடித்துவிட்டு
பொங்கல் வைக்கத் தயாராகினர்.
அன்று பௌர்ணமி என்பதால்
கூட்டமும் கொஞ்சம் இருந்தது.
மதுவும் வருணும் முடிந்த உதவியைச்
செய்துவிட்டு அரட்டை அடித்துக்
கொண்டு இருந்தனர்.

"எப்படி இருக்க மது?" என்று கேட்டபடி
வேலுமணி-ஜானகி தம்பதியர் வந்து
நின்றனர். ஜானகி அம்மாளின்
குரலைக் கேட்ட மதுவிற்கு மூச்சே
நின்றுவிடும் போல் இருந்தது.

"நா..நான் நல்லா இருக்கேன் ஆன்ட்டி.
நீங்க எப்படி இருக்கீங்க?" என்று
சிரமப்பட்டு சாதாரண முகத்தோடுக்
கேட்டு முடித்தாள் மது.

ஆண்கள் எல்லாரும் ஒருவரை ஒருவர்
விசாரித்துக் கொள்ள, மதுவிடம்
திரும்பிய ஜானகி "வேலை
கிடைத்துவிட்டது என்று அப்பா
சொன்னார் மது. ரொம்ப சந்தோஷம்.
இனி அடுத்து கல்யாணம் தான்
என்ன?" என்று மதுவிடம்
கேட்டார் ஜானகி.

"எங்கே பிடி கொடுக்க மாட்டேன்
என்கிறாள்" என்று சுந்தரமூர்த்தி
கூறத், தன் அப்பாவை மனதிற்குள்
திட்டினாள் மது.

"ஏன் மது கல்யாணம் பண்ணிக்
கொள்ள வேண்டியது தானே? நம்
நிலா உன்னை விட இரண்டு வயது
சிறியவள் தானே. கல்யாணம் ஆகி
ஒரு வருடம் ஆகிறது. நீயும்
கல்யாணம் செய்து நன்றாக
வாழ்ந்தால் அனைவருக்கும்
மகிழ்ச்சியாக இருக்கும் டா" என்று தன்
மகளைப் பற்றி கூறியவாறே மதுவின்
கையைப் பிடித்தபடி பேசினார் ஜானகி.

என்ன பதில் கூறுவது என்று
தெரியாமல் மது விழிக்க
திருமுருகனோ "பொங்கல்
ஆகிவிட்டது. மது போய்க் காரில்
உள்ள வாழை இலையை எடுத்து
வா"என்று மகளுக்கு உதவினார் .
தப்பித்தோம் என்று மதுவும்
சென்றுவிட்டாள்.

எல்லாம் முடிந்து ஜானகி வேலுமணி
தம்பதியர் கிளம்ப, சுந்தர மூர்த்தியும்
சண்முகமும் ஏதோ கும்பாபிஷேகம்
வேலையாக பங்காளிகளிடம் பேச
வேண்டும் என்று "நீங்கள் எல்லோரும்
வீட்டிற்கு சென்று விடுங்கள், நாங்கள்
இரவு உணவிற்கு வந்து விடுகிறோம்"
என்று மற்றவர்களை திருமுருகனோடு
அனுப்பி வைத்தனர்.

வீடு வந்ததும் உமா சமையல்
அறைக்குச் செல்வதைக் கண்ட
திருமுருகன் ராதாவிடம் திரும்பி "ராதா
என்னுடைய பச்சை ஃபைல் ஒன்றைக்
காணவில்லை. நமது அறையில் தான்
வைத்தேன். தேடி எடுத்து வா" என்று
ஏவினார் மனைவியை.

ராதா உள்ளே செல்ல திருமுருகன்
சமையல் அறைக்குச் சென்று
"அண்ணி உங்களிடம் சற்றுப் பேச
வேண்டும்" என்றார்.

பொதுவாக வீட்டில் ஆண்கள் எந்த
தொழில் தொடர்பான ஃபைலையும்
எடுத்து வருவதில்லை என்பது உமா
நன்கு அறிந்த விஷயம். இந்நிலையில்
திருமுருகன் ராதாவிடம் ஹாலில்
பேசியது உமாவின் காதில் நன்றாக
விழுந்தது. திருமுருகன் உள்ளே
வரவும் ஏதோ விஷயம் என்பதைப்
புரிந்துகொண்டார் உமா.

"சொல்லுங்க என்னவாயிற்று? " எனக்
கேட்டார் உமா. ஏனெனில்
எப்பொழுதும் குடும்பத்தோடு பேசும்
வழக்கத்தை மாற்றி அவர் தனியாக
ஏதோ சொல்ல வருகிறார் என்ற போது
உமாவிற்கு பதட்டம் ஆகத்தான்
இருந்தது.

காலையில் மதுவிற்கும் தனக்கும்
நடந்த உரையாடலை திருமுருகன்
கூறிவிட்டு "தப்பு செய்து விட்டோம்
என்று இப்போது தோன்றுகிரது
அண்ணி" என்று குற்ற உணர்ச்சியில்
சொன்னவர் "மது கல்லூரி சேர்ந்ததில்
இருந்து முதல் இரண்டு வருடம்
சென்னையிலிருந்து இங்கு இரண்டு
வாரத்திற்கு ஒரு முறை வருவாள்.
மூன்றாம் வருடப் பாதியில் இருந்து
அந்தப் பழக்கம் நின்றது. பெரிய
விடுமுறைகளில் கல்லூரி விடுதியில்
ஆள் இல்லாத நாட்களிலிலிலேயே
இங்கு வந்து சென்றாள். நாமும் படிக்க
நிறைய இருக்கிறதோ என்று
விட்டுவிட்டோம். எம்.பி.பி.எஸ் முடித்து
விட்டும் இங்கு வராமல் அங்கேயே
வெளி விடுதியில் தங்கி ஏதோ
நுழைவுத்தேர்வு எழுதி லண்டன்
சென்று விட்டாள். இதையெல்லாம்
பார்க்கும் பொழுது.." என்று அவர்
சொல்லும்போதே ராதா சமையல்
அறைக்குள் நுழைந்தார்.

"அப்படி எந்த ஃபைலும் இல்லைங்க"
என்றபடி உள்ளே நுழைந்தார் ராதா.

தண்ணீர் குடிக்க வந்தது போல
பாவனை செய்து விட்டு "சரி நான்
பார்த்துக் கொள்கிறேன்" என்று
விட்டு ஹாலில் சென்று அமர்ந்தார்
திருமுருகன்.

அதற்குப்பின் ஒரு மணி நேரத்தில்
சுந்தரமூர்த்தியும் சண்முகமும் வர
எல்லாரும் சாப்பிட்டு விட்டு அவரவர்
அறைக்குள் புகுந்தனர். தன்
அறைக்குத் தண்ணீர் பிடித்துச் செல்ல
வாட்டர் பாட்டிலுடன் வந்த திருமுருகன்
உமாமகேஸ்வரி மாடிப்படி ஏறுவதைக்
கவனித்தார். ஒரு பெருமூச்சுடன்
தண்ணீரைப் பிடித்துக் கொண்டு
அறைக்கு சென்று விட்டார்.

யார் இந்நேரத்தில் கதவைத் தட்டுவது
என்று யோசித்தபடியே வந்து கதவைத்
திறந்த மது தன் தாயைக் கண்டுத்
திடுக்கிட்டடாள்.

"உன்னிடம் பேச வேண்டும் மது"
என்றுவிட்டு உள்ளே சென்று
படுக்கையில் அமர்ந்தார் உமா.

அம்மா வந்து உட்கார்ந்த
விதத்திலேயே சித்தப்பா அம்மாவிடம்
சொல்லிவிட்டார் என்று புரிந்து
கொண்டாள் மது. தன் அன்னையின்
அருகில் சென்று எதுவும் பேசாமல்
அமைதியாக அமர்ந்தாள் மது.

"கார்த்திக் தானே மது?" என்று எடுத்த
எடுப்பிலேயே கேட்டு விட்டார்.

தன் அம்மா கேட்ட கேள்வியில்
அதிர்ச்சியின் உச்சிக்கே சென்று
விட்டாள் மது. சித்தப்பாவிடம் பெயர்
சொல்லவில்லையே அம்மாவிற்கு
எப்படித் தெரியும் என்று
யோசனையுடன் அவரை பார்த்தாள்
மது.

"உன்னுடைய முதலாம் ஆண்டு
கல்லூரி நோட்டில் அந்தப் பெயரை
ஒரு முறைப் பார்த்தேன் மது" என்றார்
உமா. அதில் மட்டுமா என்று மதுவின்
மனம் அழுதது.

"அப்போது ஏதாவது ஈர்பாக இருக்கும்.
நீ தவறு செய்ய மாட்டாய் என்று
நம்பிக்கையில் இருந்தேன்.
அதுவும் இல்லாமல் உன்
நடவடிக்கையில் எந்த மாற்றமும்
இல்லை.. ஆனால்..." என்று பேச
முடியாமல் அழுது விட்டார் உமா.

தன் அன்னை அழுவதைப் பார்த்து
அதுவும் தன்னால் அழுவதைப் பார்த்து
தாங்கமுடியாதவளாய் "அழாத அம்மா
ப்ளீஸ்" என்று தன் அன்னையைச்
சமாதானம் செய்ய முயன்றாள் மது.

"பின்னே என்ன மது. எங்கள்
இருவருக்கும் ஒரே பெண் நீ.
எங்களுக்கு மட்டும் இல்லை இந்த
வீட்டில் அனைவருக்கும் செல்லம் நீ.
உன் அப்பா கூட நாம் செய்த
திருமணத்திற்கு மதுவின் கல்யாணம்
தான் நாம் எப்படி வாழ்ந்தோம்
என்பதைக் காட்டும் என்று கூறுவார்
என்னிடம்" என்றார் உமா.

"அம்மா...." என்று ஏதோ சொல்ல வந்த
மகளைத் தடுத்து, "யார் மது கார்த்திக்?
உன் அப்பா சித்தப்பாவிடம் சொல்லி
பேசச் சொல்வோம்" என்று கேட்க மது
பதறிவிட்டாள்.

என்ன விட்டால் போய்ப்
பேசிவிடுவார்கள் போலேயே என்று
நினைத்தவள்.. இது என்ன பிடித்தப்
பொருளா வாங்கிக் கொடுப்பதற்கு
என்றும் எண்ணினாள். இப்பொழுது
அன்னையைச் சமாளித்தால் போதும்
என்று எண்ணியவள் உமாவிடம்
பேசினாள்.

"அம்மா...அப்பா சொன்னது போல ஒரு
மாதம் கழித்துச் சொல்கிறேன்" என்று
அப்போதைக்கு அவரை சமாதானம்
செய்து அனுப்பப் பார்த்தாள்.

எழுந்த உமா "பார் மது என் வாயை நீ
இப்போது மூடிவிடலாம். எல்லாரும்
அமைதியாக இருக்கிறார்கள் என்று
மட்டும் நினைக்காதே.
தாத்தாவிலிருந்து வருண் வரைக்கும்
உன் வாழ்க்கைப் பற்றிய கவலைதான்.
உன் முடிவு யாரையும்
கஷ்டப்படுத்தாது என நம்புகிறேன்"
என்றுவிட்டுத் தன் அறைக்குத்
திரும்பினார்.

அன்னை சென்றதும் கதவைச்
சாத்திவிட்டு அதன் மேலே
சாய்ந்துவிட்டாள் மது. ஏதோ புயல்
அடித்து ஓய்ந்ததைப் போல இருந்தது
அவளுக்கு.

"உனக்காகவே ஏங்கித் தவித்து
நிம்மதியற்று திரிவேன் என்று
தெரிந்திருந்தால்
உன்னைத் திரும்பி கூடப்
பார்த்திருக்க மாட்டேனடா!"


எனக் கதறியது மதுவின் மனம்.

இரண்டு நாட்கள் சென்றன. தினமும்
காலை சித்தப்பாவுடன் சென்று விட்டு
மாலை பேருந்தில் வருவது மதுவின்
வழக்கம் ஆயிற்று. அன்று மாலை மது
வீடு வரும் போது வீட்டின் முன்னால்
ஏதோ புதுக் கார் நிற்பதைக் கண்டு
யோசித்தபடியே உள்ளே சென்றாள்.
உள்ளே நுழைந்தவுடன் ஜானகி
அம்மாவைக் கண்டதும் பக் என்று
இருந்தது மதுவிற்கு. மனதில்
தோன்றியதை முகத்தில் காட்டாமல்
ஜானகி அம்மாவை வரவேற்றுவிட்டு
தன் அறைக்குச் சென்றாள்.

குளித்து முடித்து கீழே இறங்கும்
போதே தன் அப்பாவும் தாத்தாவும்
வந்துவிட்டதைக் கண்டாள். ராதா
குடுத்த டீயைத் தன் அக்காவிடம்
கொடுத்துவிட்டு மது அருகிலேயே
வருணும் அமர்ந்தான்.

"இங்கு ஒரு வேலையாக வந்தேன்.
கும்பாபிஷேகம் வேலை தொடங்க
உள்ளது என்று நேற்று ஐயர்
சொன்னார். அதான் பணத்தை
உங்களிடமே தந்து விடலாம் என்று
வந்தேன்" என்று ஜானகி பத்தாயிரம்
ரூபாயைச் சண்முகம் ஐயா கையில்
கொடுத்தார். சுந்தரமூர்த்தி அதற்கான
ரசீதையும் எழுதிக் கொடுத்தார்.

"வந்து நம் நிலா கருவுற்றிருக்கிறாள்"
என்றார் ஜானகி சந்தோஷமாக.

"ரொம்ப சந்தோஷம்" என்றனர்
அனைவரும்.

"எங்கள் வீட்டில் இந்தப் பேச்சு
எப்போது வரும் என்று இருக்கிறது"
என்று பெருமூச்சு விட்டார்
சுந்தரமூர்த்தி.

"இந்த அப்பாவுக்கு இப்போது
என்னவாம்" என்று மனதினில்
திட்டினாள் மது.

"ஏன் மது நீ இன்னும் சம்மதம்
சொல்லவில்லையா?" என்று மதுவிடம்
கேட்டார் ஜானகி.

சித்தப்பா இப்போது இங்கு
இல்லையே என்று நொந்தபடி "அ...
அது ஆன்ட்...டி" என்று திக்கினாள்
மதுமிதா.

"ஏன் மது? யாரையும் விரும்பறியா?"
என்று ஜானகி கேட்க மதுவிற்கு
வியர்த்துவிட்டது. இவரிடம் என்ன
என்று சொல்வது என்று நினைத்தாள்.

ஏதோ சொல்ல மது வாயெடுக்க
"ஆமாம் யாரையோ ஒருதலையாக
விரும்புகிறாள்,ஆனால் யார் என்று
சொல்ல மாட்டேன் என்கிறாள்" என்று
உடைத்து விட்டார் உமா. அம்மாவை
முறைத்த படியே எழுந்து அறைக்குச்
செல்லத் திரும்பினாள் மதுமிதா.

சுந்தரமூர்த்தியின் பொறுமை
இப்போது சுத்தமாகப் பறந்துவிட்டது.
"நில் மது" என்று சுந்தரமூர்த்தி முழங்க
மது நின்றுவிட்டாள்.

"யார் அந்தப் பையன்?" எனக் கேட்டார்
அவர்.

"......" - பதில் சொல்லாமல் தரையை
வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தாள்
மதுமிதா.

"நான் கேட்பது காதில்
விழவில்லையா?" என்று கத்தினார்.
மகள் இப்படி நிற்பதைப்
பார்த்தவருக்குக் கோபம் தலைக்கு ஏற
கையை ஓங்கினார். மதுவின் மேல்
அடி விழுவதற்குள் அனைவரும்
தடுத்து விட்டனர்.

"விடுங்க என்னை.. இவ்வளவு
கேட்கிறேன்.. வாயைத் திறக்காமல்
நின்றால் என்ன அர்த்தம்.. எந்த
தகப்பன் இந்த அளவு இறங்கி
வருவான்" என்று சத்தம் போட சில
சலசலப்புக்குப் பின் அமைதி ஆனார்.

"......." - மது இப்பவும் அப்படித் தான்
நின்றிருந்தாள். அவளுக்கு பழைய
நினைவுகள் கண் முன்னால் வந்து
போனது.

"சொல்லு தங்கம்.. யாரும் உன்னை
எதும் சொல்ல மாட்டார்கள். உன்
கல்யாணத்தைப் பார்த்து விட்டாள்
நிம்மதியாக கண்ணை மூடி
விடுவேன்.. நீ அடி வாங்குவதைப்
பார்க்கவா எல்லோரும் வளர்த்தோம்..
உன் அப்பாவே உன்னை அதற்காகவா
அவ்வளவு செல்லமாக வளர்த்தார்"
என்றபடி மதுவின் அருகில் வந்து
கைகளைப் பிடித்தார் ஈஸ்வரி அம்மா.
அவரின் கண்களில் நீர்
திரையிட்டிருந்தது.

"அதான் கேட்கிறார்கள் இல்லை
சொல்லு மது. அந்தப் பையன் வீட்டில்
பேசி உனக்கே கல்யாணம் செய்து
வைத்து விடுவார்கள்" என்று ஜானகி
தைரியம் சொல்ல .. அங்கு நின்று
இருந்த ஒவ்வொருவரின் பார்வையும்
மதுவை நெருக்குவது போல இருந்தது.

"நான் சொல்லுகிறேன்.. ஆனால்
கல்யாணப் பேச்சு மட்டும் வேண்டாம்.
அவர் எப்படி எடுத்துக் கொள்வாரோ..
இது நீங்கள் எல்லாம் கேட்பதற்காக
மட்டும் தான் சொல்றேன்" என்று எல்லோரையும் பார்த்தபடி பேசினாள்.
கண்களில் நீர் திரண்டது மதுவிற்கு.

எல்லோரும் யோசனையுடன் பார்க்க
மதுமிதா ஜானகியிடம் திரும்பி
"உங்கள் மகன் கார்த்திக்கைத் தான்
எட்டு வருடங்களாக நான்
காதலிக்கிறேன் ஆன்ட்டி..இப்பவும் "
என்றவள்.. அதற்குள் அழுகை வர தன்
அறையை நோக்கி ஓடினாள்.

எத்தனை நேரம் எல்லோரும் அப்படியே
நின்றார்கள் என்று தெரியவில்லை,
ஜானகி தான் அமைதியைக் கலைத்து
"அப்போ நான் வருகிறேன்" என்றார்.

சண்முகம் ஏதோ சொல்ல வாய் எடுக்க
"எல்லாம் கடவுள் பார்த்துப்பார்"
என்றுவிட்டு ஜானகி கிளம்பிவிட்டார்.
 

writer

Saha Writer
Team
Messages
50
Reaction score
26
Points
8
அத்தியாயம்-5

அறைக்குள் நுழைந்ததில் இருந்து
அழுதுகொண்டே இருந்தாள் மதுமிதா.
நான்கு வருடங்களாக கட்டுப்படுத்தி
வைத்து இருந்த வேதனை எல்லாம்
வெடித்துச் சிதறி கண்ணீராய் அவள்
தலையணையை நனைத்தது.

ஏன் இப்படி நடக்கிறது?
எது நடக்கக்கூடாது என்று
நினைத்தாலோ அதுவே நடந்துவிட்டது.

யாரிடமும் தெரியாமல் மறைக்க
நினைத்ததை அனைவரும் குடுத்த
பிரஷரில் சொல்லிவிட்டாள் தான்.
இருந்தாலும் என்ன
நினைத்திருப்பார்கள் என்ற எண்ணம்
வேறு எழுந்து அவளை வாட்டியது.

ஏன் அவன் தன் வாழ்வில் வந்தான்?
ஏன் அவனிற்காக இப்படித்
தவிக்கிறேன்?
மறக்கவும் முடியாயல் இந்த எட்டு
வருடங்களாக அவள் படும்பாடு
சொல்லி மாளாது.

ஒரு மணி நேரத்தில் 59 நிமிஷம்
அவனின் நினைப்பு தான். எதை
எடுத்தாலும் அவன் நியாபகமே வந்து
நின்று கொன்னது.

நினைவு எட்டு வருடங்களுக்கு
முன்னால் சென்றன. மதுமிதா தன்
வாழ்வில் சந்தோஷங்களை மட்டுமே
பார்த்து வந்த அழகிய நாட்கள்.

அப்போது மது பதினொன்றாம் வகுப்பு
முடித்து கோடை விடுமுறையில்
இருந்தாள். வருணும் நான்காம்
வகுப்பு முடித்து இருந்தான். இருவரும்
வீட்டில் இருந்தால் சண்டை போட்டுக்
கொள்வார்கள் என்று திருமுருகன்,
பெயிண்டிங் கிளாஸ் ஒன்றில்
சேர்த்திவிட்டார் இருவரையும்.
அப்போது தான் ஒருநாள் அவர்களை
அழைத்து வரச் சென்ற சுந்தரமூர்த்தி
கார்த்திக்கின் அம்மா ஜானகியைப்
பார்த்தது.

வேலுமணிக்கு சுந்தரமூர்த்தி தூரத்து
உறவு. அவர்கள் கல்யாணத்தின்
போது சுந்தரமூர்த்தி ஜானகியைப்
பார்த்து இருக்கிறார்.

"ஜானகி நீங்க எப்படிமா இங்கே?" என
யோசைனையுடன் சுந்தரமூர்த்தி
வினவினார்.

"இங்கே என்னோட பெண் நிலா
பெயின்டிங் கிளாஸ் வருகிறாள்
அண்ணா" என்ற ஜானகியை
சுந்தரமூர்த்தி யோசனையாய்ப் பார்க்க
"நாங்கள் வால்பாறையில் இருந்து இங்கு வந்து இரண்டு மாதம் ஆகிறது
அண்ணா" என்று சொல்ல இருவரும்
பேசியபடியே உள்ளே நடந்தனர்.

அங்குதான் மது ஜானகி அம்மாள்
மற்றும் நிலாவைக் கண்டது.
மதுவை விட நிலா இரண்டு வருடம்
சிறியவள்.. அவ்வப்போது நிலாவை
க்ளாசில் பார்த்தவளுக்கு அவள் தன்
உறவினர் என்று சத்தியமாக
எதிர்பார்க்கவில்லை.

அடுத்த நாளில் இருந்து
நிலாவும் மதுவும் நன்றாக பழகினர்.
ஏனோ நிலா மதுமிதாவிடம் நன்று
ஒன்றிப் போனாள். வருணும்
அவர்களுடன் அப்பப்போ சேர்ந்து
கொள்வான் ஏதாவது கலாட்டா
செய்வான்.

ஒரு நாள் சுந்தரமூர்த்தி வீட்டிற்கு
அழைக்க வேலுமணி ஜானகி
தம்பதியர் நிலாவுடன் ஒரு ஞாயிறு
வந்தனர். மதிய உணவை முடித்துக்
கொண்டு பேச உட்கார்ந்த போதுதான்
வேலுமணி வால்பாறையில் உள்ள
எஸ்டேட்டிற்கு ஆள் வைத்து விட்டு
சொந்த ஊருக்கே வந்ததையும்..
கோயம்புத்தூரில் தொழில்
தொடங்கியதையும் கூறினார். மேலும்
நிலாவின் கல்விற்காக என்றும்
கூறினார்.

"உங்களுக்கு ஒரு பையனும்
இருக்கிறான் இல்லை? மகன் என்னப்
படிக்கிறான் ?" என்று சண்முகம்
வேலுமணியிடம் வினவினார். அந்தக்
கேள்வியில் தான் ஒருத்தி தன்
மனதையே ஒருவனிடம் ஒப்படைக்கப்
போகிறாள் என்று யாரும் அப்போது
எதிர்ப்பார்க்கவில்லை.

"கார்த்திக் இப்போது கோயம்பத்தூரில்
பொறியியல் படிக்கிறான். இரண்டாம்
வருடம் போய் விட்டான். போன வாரம்
தான் செமஸ்டர் லீவ் முடிந்து
சென்றான்" என்றார் வேலுமணி.

"அவன் நம் மது, வருண், நிலா படித்த
பள்ளியில் தான் +1,+2 படித்தான்.
பள்ளி ஹாஸ்டலில் தங்கி இருந்து
படித்தான். விளையாட்டில் ரொம்பவே
கெட்டிக்காரன். பாஸ்கட்பால்
(basketball) இல் கூட பள்ளியில் டீம்
கேப்டன் அவன். மாநில அளவு கூட
போய்விட்டு வந்தான்" என்றார்
ஜானகி பெருமையாக. அவர்
சொன்னது யாருக்கு எட்டியதோ
இல்லையோ ஒருவளின் காதுக்குள்
சென்று ஆழமாகப் பதிந்தது.

"அந்த அண்ணாவா? அவர் எனக்கு
ஒரு தடவ பாஸ்கட்பால் விளையாட
சொல்லிக் கொடுத்தார்" என்றான்
வருண். வருண் சொல்ல மேலும்
ஜானகி அம்மாள் தன் மகனின்
புராணத்தை அளந்தார்.

எல்லாவற்றையும் கேட்டுக்
கொண்டிருந்த மதுவிற்கு ஏனோ "யார்
அவன்? இதுவரை நாம் பார்த்தது
இல்லையே?" என்று கார்த்திக்கைப்
பார்க்க ஆவல் வந்து ஒரு ஐடியாவும்
தோன்றியது. மாலை ஆனதும்
வேலுமணி குடும்பத்தார் கிளம்பிச்
சென்றனர்.

கோடை விடுமுறை முடிந்த உடனேயே
பள்ளிக்கு சென்ற மது தனது
நெருங்கிய தோழி ஸ்வேதாவை
அழைத்துக் கொண்டு லன்ச் ஹார்
(lunch hour) இல் பள்ளி விளையாட்டு
அறைக்குச் சென்றாள். அவள் எங்கே
எங்கே என்று கேட்டுப் பார்த்தும் மது
ஒன்றும் சொல்லாமல் அவளின்
கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு
போக ஸ்வேதாவும் அவள் இழுத்த
இழுப்பில் போனாள். ஸ்வேதாவை
வெளியே காவலுக்கு நிறுத்தி விட்டு
உள்ளே சென்றாள் மது.

உள்ளே சென்று கார்த்திக் படித்த
ஆண்டு அச்சடிக்கப்பட்ட புக்லெட்டை
(booklet) தேடினாள். ஒவ்வொரு
ஆண்டாகப் பார்த்தவள் கடைசியில்
அவன் படித்த ஆண்டு புக்லெட்
கண்ணில் சிக்கவும் குஷியாக அதைப்
பிரித்தாள். தேடித்தேடி அவனின்
போட்டோவை கண்டுப் பிடித்தாள்.
அவனின் போட்டோவிற்குக் கீழ் அவன்
பெயருடன் இருக்கவே அவளுக்கு
அவ்வளவு சிரமமாக இருக்கவில்லை.

ஒரு க்ரூப் போட்டோ மற்றும் ஒரு தனி
போட்டோ இருந்தது. சற்று ஒல்லியாக
உயரமாக இருந்தவனைப் பார்த்து
அவளுக்குச் சிரிப்பு தான் வந்தது.
ஆனால் அவனது சிரிப்பு ஏனோ
அவளை ஈர்த்தது. எவ்வளவு நேரம்
போட்டோவைப் பார்த்துக் கொண்டு
இருந்தாள் என்று இன்றும்
நினைவில்லை மதுவிற்கு.

"மது டைம் ஆச்சு" என்ற ஸ்வேதாவின்
குரல் கேட்டு, "அ.. வரேன்" என்றவள்
அதை அங்கு வைக்க
மனமில்லாதவளாய் அவன் இருந்தப்
பக்கத்தை மட்டும் கிழித்துத் தன்
யூனிபார்மில் வைத்தாள். ஸ்வேதா
மதுவிடம் எவ்வளவோ கேட்டும்
சமாளித்து வைத்தாள் தான் தேடி
வந்தது கிடைக்கவில்லை என்று.

வீடு வந்ததும் அறைக்குச் சென்று
கதவைச் சாத்திவிட்டு அவனது
போட்டோவை மீண்டும் எடுத்துப்
பார்த்தாள் மது. ஏனோ
தன்னையறிமால் சிரித்துக் கொண்டே
இருந்தாள். ஏனோ அவனின்
போட்டோவின் மீது தன் விரலை
வைத்துப் பார்க்கையில் தன்னை
அறியாமல் சிலிர்த்து கைகள்
நடுங்கின மதுவிற்கு.

ஆண் பிள்ளைகளிடம் மது பேசவே
மாட்டாள் என்று சொல்ல முடியாது.
பள்ளிகளில் கூட நல்ல ப்ரண்ட் ஆக
இருப்பாள் பையன்களிடம். ஆனால்
எவர் மேலேயும் மதுவிற்கு ஈர்ப்புக் கூட
வந்ததில்லை. இந்த மாதிரி உணர்வு
முதல் முறையாக ஏற்பட்டது கார்த்திக்
மேல்தான். அவனது போட்டோவைப்
பத்திரமாக எடுத்து வைத்துவிட்டு தன்
அறையில் உள்ள ஆளுயரக்
கண்ணாடி முன் நின்றாள். மாநிறம்
தான். ஐந்தரை அடிக்கும்
நெருக்கமான உயரம். துறுதுறு
விழிகளும் செதுக்கிய முக அமைப்பும்
இடை வரை இருந்த கூந்தலும்
அவளை அழகாக காண்பித்தது.

"மது டீ குடிக்க வரலையா?" என்று
கீழிருந்து ராதா குரல் கொடுக்க
விருட்டென சுயநினைவிற்கு வந்தவள்
"வந்துட்டேன் சித்தி..." என்றபடி கீழே
இறங்கி வந்தாள்.

கீழே வந்தும் சிரித்துக் கொண்டே
இருக்க அதை கவனித்த வருண்
"அம்மா, பெரியம்மா, பாட்டி இங்க
ஒருத்திக்கு பைத்தியம் பிடித்து
விட்டதுபோல இருக்கு" என்று வருண்
மதுவை மாட்டி வைத்தான்.

"சும்மா இருடா" என்று மது அவனை
அடிக்க வருணோ அவளது கையை
பிடித்து கடித்துவிட்டான். இருவரும்
சண்டையில் ஒருவரை ஒருவர்
அடித்துக் கொண்டு இருக்க ஈஸ்வரி
அம்மாதான் வந்துத் தடுத்தார்.

வருண் மீண்டும் அவள் சிரித்ததைப்
பற்றி ஈஸ்வரி அம்மாவிடம் மாட்டி
வைக்க தம்பியை முறைத்தாள்
மதுமிதா.

எதற்கு சிரித்தாய் என்று பாட்டி கேட்க
வகுப்பில் நடந்த பழைய கதையைச்
சொல்லி வைத்து தப்பித்தாள்
மதுமிதா.

நாட்கள் செல்லச் செல்ல வேலுமணி
குடும்பமும் சுந்தரமூர்த்தி குடும்பமும்
நெருங்கியது. கோவிலில்
வாராவாரம் சந்தித்தனர். ஜானகி
அம்மாவிற்கு மதுவும் வருணும்
துறுதுறுவென இருப்பதால்
அவர்களை மிகவும் பிடித்துப் போனது.

கார்த்திக்கின் நண்பன் சிவாவின்
தங்கை மிதுனா, மது வகுப்பில் தான்
படித்தாள். மதுவின் தோழியும் கூட.
ஒருநாள் நிலாவும் மதுவும் பள்ளியில்
எதேச்சையாக சந்தித்து ப்ரேக் டைமில்
பேசியதைப் பார்த்த மிதுனா "உனக்கு
கார்த்திக் அண்ணா பேமிலியைத்
தெரியுமா?" என்று கேட்டாள்.

"ம்ம் தெரியுமே..நிலா அப்பா என்
அப்பாக்கு தூரத்து உறவு" என்ற மது
"உனக்கு எப்படித் தெரியும்?" என்று
ஆர்வத்துடன் கேட்டாள் மது. அவளின்
ஆர்வத்தை ஸ்வேதா குறித்துக்
கொண்டாள்.

"என் அண்ணா கூடதான் கார்த்திக்
அண்ணா படித்தார் ஸ்கூல்ல.
அப்பப்போ வீட்டிற்கு கூட வருவார்"
என்றாள் மிதுனா.

"கார்த்திக் எப்படி?" என்று
சாதாரணமாகக் கேட்பது போலக்
கேட்டாள் மது. ஆனால் யார்
நம்புவார்கள் இவள் சாதாரணமாகக்
கேட்டாள் என்று.

"ஓகோ" என்று கோரஸ் பாடினர்
ஸ்வேதாவும் மிதுனாவும்.

"என்ன விஷயம்?" எனக் விழிகளைக்
கூர்மையாக்கிக் கேட்டாள் ஸ்வேதா.

"ஒன்றுமில்லையே" என்று தோளைக்
குலுக்கினாள் மது.

"ஆங் நம்பிட்டோம்" என்று மிதுனா
கூறிச் சிரிக்க ஸ்வேதாவும் அவளுடன்
சேர்ந்து சிரித்தாள்.

"நாங்களும் உன்னை சில நாளாக
பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.
ரொம்ப வித்தியாசமாக அப்பப்போ
பண்ணற.. உண்மையைச் சொல்லு"
என்று பொய்யாக மிரட்டினாள்
ஸ்வேதா.

"உண்மையைச் சொல்ல என்ன
இருக்கிறது..நீங்கள் நினைப்பது தான்
உண்மை..போதுமா" என்றார் மது.

"ஓ அப்ப கூட வாயத் திறந்து சொல்ல
மாட்ட இல்ல" என மதுவைக் கிண்டல்
செய்தால் மிதுனா.

"சரிசரி கார்த்திக்கை பற்றி சொல்லு"
என்று ஆர்வ மிகுதியால் அங்கேயே
வந்து நின்றாள் மது.

"கார்த்திக் அண்ணாவைப் பற்றி
என்ன சொல்ல...நல்ல அண்ணா தான்.
என் அண்ணணோடு சில சமயம்
வீட்டில் பார்த்திருக்கிறேன். பேசியும்
இருக்கிறேன். நல்ல ஜாலி டைப் மது.
ஆனால் கொஞ்சம் கோவக்காரர்"
என்று முடித்தாள்.

"அவ்வளவு தானா? வேற ஏதாவது
இருந்தாலும் சொல்லுடி" என்று
உதட்டைப் பிதுக்கிக் கேட்டாள் மது.

"நீ விட்டா பையோடேட்டாவே கேப்ப டி"
என்று சிரித்தாள் ஸ்வேதா. அதற்குள்
சார் வர அந்தப் பேச்சு அங்கேயே
முடிந்தது.

தினமும் அவனது போட்டோவைப்
பார்ப்பதே அவளுக்கு வழக்கமாயிற்று.
அந்த போட்டோ விஷயமும்
ஸ்வேதாவும் மிதுனாவும் அறிந்து
கொண்டு மதுவைக் கலாய்த்துத்
தள்ளினர்.

"உனை எத்தனை முறை
பார்த்தாலும் சலிப்பதில்லை
என் இரு விழியோ ஒரு
கணமும் இமைப்பதில்லை"

என்ற கண்ணதாசன் பாட்டுத் தோன்ற
மதுவிற்கு கன்னம் எல்லாம் சிவந்து
விட்டது.

மதுவும் தன்னை அறியாமல்
கார்த்திக்கிடம் காதலில் விழுந்தாள்.
ஏன் அவனைப் பிடித்தது என்று இன்று
வரை அவளுக்குத் தெரியவில்லை.
தெரிந்துகொள்ள அவள் அறியவும்
இல்லை.. அவனால் ஏற்பட்ட இந்த
உணர்வை மகிழ்ச்சியுடன் கடந்தாள்.
ஆனால் படிப்பில் கோட்டை விடாமல்
95% எடுத்தாள். அவளுக்குப் பிடித்த
படிப்பான எம்.பி.பி.எஸ் படிப்பிற்கு
அப்ளிகேஷனும் போட்டு வைத்தாள்.

வீட்டில் சும்மா இருக்கப் பிடிக்காமல்
தினமும் கோவையில் உள்ள
ஸ்போக்கன் இங்லிஷ் க்ளாஸ் தன்
சித்தப்பாவுடன் சென்று வந்தாள்.

"மதுமா கதவைத் திற" என்று
மூன்றாவது முறையாக கதவைத்
தட்டினார் திருமுருகன். கோவையில்
இருந்து வந்தவரிடம் ராதா
அனைத்தையும் சொன்னார்.
"சாப்பிடக் கூடக் கீழே வரவில்லை.
உமாவும் சுந்தரமூர்த்தியும் உள்ளே
அறைக்குள் சென்றவர்கள் இன்னும்
வெளிவரவில்லை " என்றபடி ஈஸ்வரி
அம்மா வந்தார். கழுத்தைத் திருப்பி
ஷோபாவில் அமர்ந்திருந்த தன்
மாமனாரையும் மகனையும் பார்த்தார்.

சண்முகமும் ஏதோ யோசித்தபடி
அமர்ந்திருந்தார். வருணும் சோபாவில்
உட்கார்ந்திருந்த படியே தந்தையை
நோக்கினான்.

"சரி சாப்பாடு எடுத்து வைங்க நான்
கூட்டி வருகிறேன்" என்றபடி மாடி
ஏறினார் திருமுருகன்.

கடந்த காலத்தில் மூழ்கி இருந்த மது
சித்தப்பாவின் குரலில் எழுந்து
கண்களைத் துடைத்து விட்டுக்
கதவைத் திறந்தாள்.

அழுதழுது கண்கள் சிவந்து வீங்கி
இருந்தன. திருமுருகனைக் கண்டதும்
"சித்தப்பா.." என்றபடி அவரின்
தோளில் சாய்ந்து விசும்பினாள்.
திருமுரகனுக்கு மது அழுவதைப்
பார்க்கப் பாவமாக இருந்தது.
காலேஜில் தான் ஏதாவது பையனாக
இருக்கும் என்று நினைத்தவர்
உறவுக்காரப் பையன் என்று
நினைக்கவே இல்லை. மது மனதில்
நிறைய இருக்கிறது என்று யூகித்தார்.

"ஸாரி சித்தப்பா...ஸாரி.. எ.. எனக்கு.. "
என்றவளால் மேல முடியவில்லை..
"ஸாரி" என்று அழுதபடியே மீண்டும்
சொன்னாள்.

"எதற்கு தங்கம் ஸாரி.. அதெல்லாம்
சித்தப்பா ஒன்றும் நினைக்கவில்லை.
வந்து சாப்பிடு. நீ சாப்பிடாமல் யாரும்
சாப்பிடவில்லை" என்றபடி கீழே
அழைத்துச் செல்ல அனைவரும் வந்து
அமர்ந்து அமைதியாகச் சாப்பிட்டு
முடித்தனர்.

சாப்பிட்டு முடித்து வந்த மது, 'அந்த
ஸ்போகன் இங்லிஷ் க்ளாஸ் தன்
வாழ்க்கையை இப்படி திருப்பிப்
போட்டு விட்டதே' என்று எண்ணி
மீண்டும் பழைய நினைவுகளில்
மூழ்கினாள்.
 

writer

Saha Writer
Team
Messages
50
Reaction score
26
Points
8
அத்தியாயம்-6
வீடு வந்த ஜானகி உடையைக் கூட
மாற்ற மனமில்லாமல் தனது கணவர்
வேலுமணியிடம் அனைத்தையும்
கூறினார். அனைத்தையுமே கேட்ட
அவருக்குமே அதிர்ச்சி தான். மதுமிதா
நல்ல பெண் தான் என்று அவர்
மனதில் எழுந்ததை அவரால் அடக்க
முடியவில்லை. இருந்தாலும் அதை
முகத்தில் காட்டாமல் தன்
மனைவியின் எண்ணம் என்ன
என்பதை அறிய அவரிடம் பேசினார்
வேலுமணி.

"நீ என்ன சொன்னாய் அவர்களிடம்"
என்று மனைவியைக் கேட்டார்
வேலுமணி.

"நான் என்னத்தைச் சொல்ல
முடியும்.. இவன் எதுவும் வாயே திறக்க
மாட்டேன் என்கிறான் கல்யாண
விஷயத்தில்.." என்றார் குறையாக.
அவர்களின் செல்வபுத்திரன்
கல்யாண விஷயம் பற்றி பேசினாலே
ஏதாவது சொல்லி பேச்சை மாற்றிக்
கொண்டு இருந்தான்.

"நீ என்ன நினைக்கிறாய் ஜானகி?"
என்ற கேள்வியை மனைவியிடம்
வைத்தார்.

"கார்த்திக்கிற்கு சம்மதம் என்றால்
மதுவையே பேசிவிடலாம்.. ஆனால்
அவன் ஒத்துக்கொள்ள
வேண்டுமேங்க.. அந்தப் பெண் வேறு
இவனை எட்டு வருடமாக
காதலிக்கிறாள் என்று சொல்லுகிறாள்.
சொல்லும் போதே சரம் சரமாகக்
கண்ணீர் வேறு. மதுவை நான் இது
வரை மருமகள் ஸ்தானத்தில்
வைத்தது இல்லைதான்.. ஆனால்
இன்றைய நிகழ்விற்குப் பிறகு அவளே
நம் வீட்டிறகு வந்தால் நன்றாக
இருக்கும் என்று தோன்றுகிறது"
என்று முடிக்க வேலுமணிக்கு
மனைவியின் மனம் தெரிந்தது.

"சரி கார்த்திக் வந்த பிறகு அவனிடம் பேசுவோம்" என்ற வேலுமணி டி.வி
யில் மூழ்கினார். இவரால் மட்டும்
எப்படி இப்படி ஜாலியாக இருக்க
முடிகிறதோ என்று சமையல்
வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தார்
ஜானகி.

கார்த்திக் வர அவனுக்குச் சாப்பாட்டை
பரிமாறினார் ஜானகி.. பின் சாப்பிட்டு
முடித்த கார்த்திக் தந்தையிடம் ஏதோ
தொழில் ரீதியாகப் பேசிக் கொண்டு
இருந்தான். பின் அந்தப் பேச்சு முடிய
ஜானகி கார்த்திக்கிடம் மது வீட்டில்
நடந்ததைக் கூறினார்.
எதுவும் பேசாமல்
அமர்ந்திருந்தவனிடம் "பார் கார்த்திக்
மது ரொம்ப நல்லப் பெண்" என்றார்
ஜானகி மகனிடம்.

"எனக்கு இப்போது கல்யாணம்
வேண்டாம் அம்மா. கொஞ்ச நாள்
போகட்டும் என்று அன்றே
சொன்னேனே" என்று சோபாவில் நன்றாக சாய்ந்தபடி சொன்னான்
கார்த்திக்.

"யாரையாவது விரும்பறியா?" எனக்
கேட்டார் ஜானகி.

"இல்லை" என்றான் ஒற்றை
வார்த்தையாக.

"மதுவைப் பிடிக்கவில்லையா" என
மேலும் கேட்டார் ஜானகி.

"அப்படி எதுவும் இல்லை" என்றவன்
"என்னமா நீங்கள் இப்படிக்
கேட்குறீர்கள்" என்று சலித்தான்.

"பாரு கார்த்திக் யாரையும்
காதலிக்கவில்லை என்கிறாய்.
மதுவை மறுக்கவும் காரணம்
இருப்பதாகத் தெரியவில்லை. வேறு
என்னதான் உன் பிரச்சனை" எனக்
கேட்டார் ஜானகி.

"நிலா இருக்கும் வரையில் அவள்
கல்யாணம் முடியட்டும் என்றாய்.
இப்போது என்ன?" என்ற
வேலுமணியை கண்களைக்
கூர்மையாக்கி சிறிய சிரிப்புடன்
பார்த்தான் கார்த்திக்.

"இரண்டு பேரும் முடிவு செய்து விட்டு
தான் என்னிடம் கேக்கறீங்க போல"
என்று கார்த்திக் நக்கலாகக் கேட்டான்.

"அப்படி தான் என்றும் வைத்துக்
கொள்ளேன். உனக்கும் 28
முடியப்போது" என்ற ஜானகியை
இடைமறித்தான் கார்த்திக்.

"அம்மா போதும். நீங்க சொல்றதுலயே
எனக்கு வயசு ஆன மாதிரி இருக்கு.
எதுவா இருந்தாலும் ஒரு வாரம்
கழித்துச் சொல்கிறேன்" என்றபடி
எழுந்து தன் அறைக்குச் செல்ல
மாடிப்படி ஏறினான்.

"உன்னை மது விரும்பியது முன்பே
உனக்குத் தெரியுமா கார்த்திக்?" எனக்
கேட்டார் வேலுமணி.

ஒரு நிமிடம் திரும்பித் தந்தையைப்
பார்த்தவன் "நீங்கள் முதலில்
அவர்களைப் பற்றி வீட்டில்
பேசும்போது கேள்விபட்டது அப்பா"
என்றுவிட்டு அவன் செல்ல,
மகனையே பார்த்தபடி நின்றிருந்தார்
வேலுமணி.

கார்த்திக் 28 வயது நிரம்பிய
இளையன். ஆறடி உயரம்.
கூர்மையான கண்கள். பார்த்தவுடன்
ஒருவரை கனித்துவிடுவான். புத்திக்
கூர்மையும் அதிகம். படிப்பில்
ஆவரேஜ் ஸ்டூடண்ட் என்றாலும்
தொழிலில் கெட்டிக்காரன்.ஆர்கிடெக்ட்
(architect) முடித்து விட்டு தன் அப்பா
கோவையில் தொடங்கிய "கோவை
ஆர்கிடெக்ட் அன் இன்டீரியர் டிசைன்"
ஐ ஏற்று நடத்தினான். மகன்
தொழிலைச் சிறப்பாக நடத்தவே
அப்பப்போ மேற்பார்வை மட்டும்
பார்த்து விட்டு இருந்தார் வேலுமணி.
தந்தையை விடத் தொழிலை
நன்றாகப் பெருக்கி மேலும் தொழிலை
விரிவடையச் செய்திருந்தான். மாதம் ஒரு முறை வார இறுதியில்,
வால்பாறை சென்று எஸ்டேட்டையும்
பார்த்து வருவான் கார்த்திக்.

ஆனால் கல்யாண விஷயத்தில் மகன்
இப்படி இருப்பது அவர்களுக்குத்
திருப்தி இல்லாமல் இருந்தது. தங்கை
கல்யாணம் முடியட்டும் என்று
சொல்லிக் கொண்டு இருந்தவன்
நிலாவின் திருமணம் முடிந்தும்
சாக்குபோக்கு சொல்லி வந்தான்.

ஆனால் இன்று அதற்கும் வழி
கிடைத்தது போல உணர்ந்தார் ஜானகி. மது சொன்னபோது அதிர்ச்சியாகத்
தான் இருந்தது ஜானகிக்கு. சிறிது
கோபம் கூட எட்டிப் பார்த்தது. ஆனால்
மது அழுதுவிட்டு ஓடியது அவருக்குமே
ஒரு மாதிரி ஆகிவிட்டது.. அதுவும்
இல்லாமல் தன் மகனை நினைத்து
இன்னொருவனை மணக்க அவள்
விரும்பவில்லை என்பதும் அவருக்கு
ஒரு கர்வமாகவே இருந்தது. மதுவின்
குடும்பம் வசதி என்றாலும்,
அவர்களை விடவே சற்று வசதிதான்
இவர்கள். ஆனால் அதை ஒரு
பொருட்டாக எண்ணவில்லை ஜானகி..
அதனால் தான் மகனிடம் இன்றே
பேசிவிட வேண்டும் என்று எண்ணி
எதுவும் பேசாமல் மதுவின் வீட்டில்
இருந்து கிளம்பிவிட்டார். அவர்கள்
மாதிரி நல்ல குடும்பம் அமைவது
கஷ்டம் என்பதால் கார்த்திக்கிடம்
இன்று பேசியும் விட்டார். மகன் நல்ல
பதிலைச் சொல்ல வேண்டும் என்று
வேண்டிக் கொண்டார் ஜானகி.

அறைக்கு வந்த கார்த்திக்
பால்கனியில் நின்று சிகரெட் ஒன்றை
புகைத்துக் கொண்டு இருந்தான்.
மதுவிடம் நான்கு வருடங்களுக்கு
முன்னால் பேசியது நினைவு வந்தது.
அவளது குரல் இன்றும் காதில்
எதிரொலித்தது. இல்லை அழுகை.
ஒரு முடிவு எடுத்தவனாக சிகரெட்டை
அணைத்து வீசிவிட்டு வந்து
படுக்கையில் சாய்ந்தான்.

அதேநேரம் சாப்பிட்டு விட்டு வந்து
பால்கனியில் நின்ற மதுவிற்கு
மறுபடியும் கடந்த காலம் நினைவு
வந்தது.

ஒரு நாள் வீட்டிற்கு வந்த ஜானகி
அம்மா "இந்தா மது. இன்று லட்டுப்
பிடித்தேன். உனக்குப் பிடிக்கும் என்று
நிலா சொன்னாள்" என்று மதுவின்
கையில் ஒரு சம்படத்தைத் தந்தார்.

"எப்ப எம்.பி.பி.எஸ் கௌன்ஸிலிங்
மது?" எனக் கேட்டார் ஜானகி.

"இன்னும் ஒரு வாரம் இருக்கு ஆன்ட்டி"
என்றாள் மது. மேலும் ஒரு மணி நேரம்
இருந்து வீட்டுப் பெண்களிடம்
பேசிவிட்டுப் போனார்.

மதுவிற்கு மனம் உறுத்தியது.
இவ்வளவு பாசமாக உள்ளவர், நான்
கார்த்திக்கை நேசிப்பது தெரிந்தால்
என்னை எவ்வாறு நினைப்பார். நிலா
தன்னை எவ்வாறு எண்ணுவாள். ஒரு
நிமிடம் உடல் கூசியது மதுவிற்கு.
மதுவின் மனம் மேலும் பலவற்றை
யோசித்து அவளைப் போட்டுக்
குழப்பியது.

"இரு குடும்பமும் நல்ல உறவில்
உள்ளது. தன்னால் விரிசல் ஏற்பட
வேண்டுமா? மேலும் வசதி வேறு
இடித்தது.. என்னதான் வசதி
இருந்தாலும் அவர்கள் அளவு இல்லை
என்று எண்ணினாள். மேலும் வசதி
உள்ள பையன் அதனால்
பிடித்துவிட்டாயா? என்று ஜானகி
அம்மாள் கேட்டுவிட்டால். அப்படிப்
பட்டவர்கள் இல்லை என்றாலும் தன்
மகன் என்று வரும் போது எப்படி
பேசுவாரோ என்று இருந்தது. கடவுளே
எவ்வளவு பெரிய அவமானம் என்று
எண்ணிக் கலங்கினாள் மது. மேலும்
தன்னால் பிரச்சினை நேர வேண்டுமா?
என்று எண்ணி கார்த்திக்கை மறக்க
முயற்சி செய்தாள். முயற்சி செய்து
முயற்சி செய்து அவளால் சரியாகத்
தூங்க சாப்பிட முடியவில்லை.
அப்போது தான் 'அவனை இவ்வளவு
நேசித்து விட்டோமா' என்றிருந்தது
மதுவிற்கு.

"முகம் பார்க்கும் கண்ணாடி முன்
நின்று என்னைப் பார்த்து என்
அழகையே ரசிக்க வைத்தாய்.
கற்பனைத் தேரில் பறந்தேன், என்
உடன் உன் முகத்தைக் கண்ணாடியில்
பார்த்தபோது.
கண்மூடித் திறக்க எல்லாம் மறையவும்
கண்ணாடி முன் நான் மட்டும்
நிற்க, ரசிக்க மனமில்லை
நீயில்லாது என் பக்கத்தில்!

என்று நினைத்து கட்டுப் படுத்த
முடியாமல் அவளையும் மீறி அழுதாள்.
முக்கியமாக வீட்டில் முகத்தை
மறைப்பதற்கு மிகவும் சிரமப்பட்டாள்.

சரியாக ஒரு வாரம் சென்றது.
எப்போதும் போல ஸ்போக்கன்
இங்லிஷ் க்ளாஸ் முடிந்து எல்லாரும்
செல்ல மது தனது சித்தாப்பாவிற்காக
காத்திருந்தாள். அந்த க்ளாஸ் ஒரு
மெயின் ரோட்டில் உள்ள
காம்ப்ளக்ஸில் இரண்டாவது மாடியில்
இருந்ததால் வேடிக்கை பார்த்தபடி
நின்றிருந்தாள். அன்று அவர் வரத்
தாமதம் ஆனதால் க்ளாசின் முன்னேயே நின்றிருந்தாள் மது.
அவள் நின்றிருந்ததைப் பார்த்த
ஆசிரியர் உள்ளே வந்து அமரச்
சொன்னார். அவள் அமர்ந்ததும்
வெளியே சென்றவர் ஷட்டரை கீழே
இழுத்து விட்டு உள்ளே வந்தார்.

மதுவிற்கு ஏதோ நெருடலாக உணர
எழுந்து "சித்தப்பா வந்து விடுவார்.
நான் வருகிறேன் ஸார்" என்று நகர
முயன்றவளை அவர் கரம் பற்றியதை
உணர்ந்து திடுக்கிட்டுத் திரும்பினாள்.

"எனக்குக் கிடைத்த வாய்ப்பை நான்
விட முடியாது மதுமிதா" என்று
அசிங்கமாய்ச் சிரித்தான் அவன். ஒரு
நிமிடம் நடுங்கினாலும் பின்
சுதாரித்தாள்.

"கையை எடுடா" என்று மது கத்த
அதைப் பொருட்படுத்தாமல் அவன்
மதுவை நெருங்கினான். கையில்
இருந்த நோட்டை அவன் மேல் வீசிய
மது, அந்த அறைக்குள் அவனிடம்
சிக்காமல் ஓடினாள். இருந்தும் வந்து
அவன் மதுவைப் பிடித்து விட மதுமிதா
வெலவெலத்துப் போனாள். ஒரு
நிமிடம் கண் முன் கார்த்திக் வந்து
சென்றது இன்றும் அவளால் மறுக்க
முடியாத உண்மை.

அவன் பிடித்தவுடன் மது கத்த,
மதுவைச் சுவற்றில் வேகமாகத் தள்ளி
மதுவின் வாயில் அவன் கை வைத்து
சத்தம் வெளியே கேட்காதவாறு
பொத்தினான். அவன் மதுவைச்
சுவற்றில் தள்ளிய வேகத்தில் மதுவின்
தலை சுவற்றில் நன்கு மோதியது.
மதுவிற்கு ஒரு நிமிடம் வலி மற்றும்
தலை 'கிர்ர்ர்' என்று சுற்றி விட்டது.
அவன் மது மயக்க நிலையை
அடைந்ததை உணர்ந்து அவளிடம் எல்லை மீறினான். ஆனால் கடவுள்
புண்ணியத்தில் எதுவும் நடக்கும்
முன்னால் சுயநினைவிற்கு வந்த மது
பயமும் கோபமும் ஒன்று சேர அவனை
ஓங்கி அடிவயிற்றிற்கு கீழ் உதைத்து
கீழே தள்ளி விட்டாள் மது.

அவன் அலறியபடி கீழே விழ மது
தப்பித்தோம் பிழைத்தோம் என்று
ஷட்டரை மேலே இழுத்து வெளியே
வந்து கால் போன போக்கில் ஓட
ஆரம்பித்தாள். அந்த கனமான
ஷட்டரை எப்படித் தனியாக திறந்தாள்
என்று அவளுக்கே வியப்பு.
ஷட்டரை திறந்ததும் வெளியே
வந்தவள் கண்மண் தெரியாமல்
பயத்தில் கீழே ஓடினாள். கீழே
சென்றவள் அதே வேகத்தில் ரோட்டை
கடக்க அந்தச் சமயம் வந்த கார் ஒன்று
அவள் மேல் மோதியது. கார்
மோதியதில் மது நாலடி தள்ளிப் போய்
விழுந்தாள். விழுந்ததில் அங்கு
இருந்த மைல் கல்லில் தலை
அடித்துவிட்டது ரத்தம் கசிய கூட்டம்
கூட நின்று அவளை வேடிக்கைப்
பார்த்தது.

ட்ராபிக்கில் மாட்டிக் கொண்ட
திருமுருகன் அங்கு வரும் போது
கூட்டமாக இருக்க கூட்டத்தை
விலக்கிப் பார்த்தார். மதுவை பார்த்த
அவர் திகைத்து அலறிவிட்டார். ரத்தம்
வழிய ரோட்டில் விழுந்து கிடந்த
மகளைப் பார்க்க அவரின் உடல்
நடுங்கியது.

காரை அங்கேயே பூட்டிவிட்டு ஓடியவர்
தன் மகள் தான் என்று கூறி தானும்
ஆம்புலன்ஸில் ஏறிவிட்டார். தலையில்
அடிபட்டு ரத்தம் வழிந்தது. கை காலில்
நன்றாக சிராய்ப்பும் இருந்தது.
ப்ரைவேட் ஹாஸ்பிடலேயே மதுவை
அட்மிட் செய்துவிட்டு வீட்டிற்கு தகவல்
தெரிவித்துவிட்டார் திருமுருகன்.
விஷயம் அறிந்து எல்லோரும்
அரக்கப்பரக்க வந்து சேர்ந்தனர்.

"என்னாச்சு? என் மகள் எங்கே?" என்று
கேட்டபடி அழுக ஆரம்பித்து விட்டார்
உமா.

"அண்ணி அழாதீங்க.. தலையில்
கொஞ்சம் அடி... டாக்டர் பார்த்துட்டு
இருக்கார்" என்று தவித்தபடியே
திருமுருகன் கூற, டாக்டர் வெளியே
வந்தார்.

"தலையில் அடி. தையல்
போட்டிருக்கிறோம். இருந்தாலும்
ஒரு வாரம் அப்சர்வேசன் ல வச்சு தான்
அனுப்ப முடியும். மற்றபடி பயப்படத்
தேவையில்லை" என்று கூறிவிட்டு
கடமையுள்ள டாக்டராகச் சென்றார்.

டாக்டர் உயிருக்கு ஆபத்து இல்லை
என்று சொன்ன பின்தான்
அவர்களால் மூச்சு விட முடிந்தது.
ஆனால் அவள் இப்படி அடிபட்டுக்
கிடப்பது அவர்களால் பார்த்து சகிக்க
முடியவில்லை.

அடுத்த நாள் மதுவிற்கு மருத்தவப்
படிப்பிற்கான கௌன்சலிங் இருந்தது.
அன்று மாலை கிளம்ப இருந்த
சுந்தரமூர்த்தி, மது துணிகளைத் தான்
உமா விபத்து செய்தி அறியும் முன்
பாக் செய்து கொண்டு இருந்தார்.

"என் மகள் ஆசையாக இதில்
இருந்தாலே. இப்படி ஆகிவிட்டதே"
என்று தலையில் கை வைத்தபடி
உட்கார்ந்தார் சுந்தரமூர்த்தி.

"இந்த வருடம் இல்லை என்றால்
அடுத்த வருடம். ஆனால் நாம் தான்
அவளைத் தேற்ற வேண்டும்" என்றார்
சண்முகம்.

இரவு ஒருவர் தான் கூட இருக்க
வேண்டும் என்று டாக்டர் சொல்ல
அன்று இரவு சுந்தரமூர்த்தி
இருந்துவிட்டார். மதுவின் தலையில்
ஐந்து தையல் போட்டிருந்தனர்.
மகளைப் பார்த்த படியே
உட்கார்ந்திருந்த சுந்தரமூர்த்தி
விடியற்காலையிலேயே உறங்கினார்.
எல்லோரும் வீட்டிற்கு சென்று விட்டு
அடுத்த நாள் காலை வந்தனர். மது
மயக்கத்தில் இருந்து விழிக்க
அன்றைய மதியம் தாண்டிவிட்டது.

அவள் விழித்தவுடன் அருகில் சென்ற
உமா "மதுமா" என்றபடி அருகில்
சென்று கையைப் பிடித்தார்.

"அம்மா" என்ற மதுவின் கண்களில்
கண்ணீர் வழிந்தது. அன்று முழுவதும்
அரைமயக்கத்திலேயே இருந்தாள்.

மருந்தின் காரணத்தினால் மது
அயர்ந்தே மூன்று நாட்கள் இருந்தாள்.

"எப்படி மது ஆக்ஸிடென்ட் ஆச்சு?"
என்று மூன்று நாட்களுக்குப் பிறகு
கொஞ்சம் பேச ஆரம்பித்த மதுவிடம்
கேட்டார் திருமுருகன்.

"என் ப்ரண்ட் ரோட்டிற்கு அந்தப் பக்கம்
செல்வது போல் இருந்தது சித்தப்பா.
ரோட்டைப் பாக்காமல் க்ராஸ்
செஞ்சிட்டேன்" என்று கூறினாள் தன்
கைகளை வெறித்தபடி.

"பார்த்துக் க்ராஸ் பண்ண மாட்டாயா"
என்று உமா குமுற "விடுங்கள்
அண்ணி தெரியாமல் சென்று
விட்டாள். நானும் முன்பே
சென்றிருந்தாள் இந்தத் தவறு
நடந்திருத்காது" என்று திருமுருகன்
உமாவைச் சமாதானம் செய்தார்.

ஒரு வாரம் ஹாஸ்பிடலில் இருந்து
விட்டு வீடு திரும்பினாள் மது.
ஜானகியும் நிலாவும் வந்து பார்த்து
விட்டுச் சென்றனர். வீடு வந்ததில்
இருந்து சோர்ந்தே காணப்பட்டாள் மது.

"இந்த வருடம் விட்டுவிடு மதுமா. உன்
மார்க்கிற்கு அடுத்த வருடம் கூட
கிடைக்கும்" என்று எல்லோரும்
அவளைத் தேற்றினர். ஆனால் அவள்
மனதில் இருந்ததை யாரும் அறியவும்
இல்லை.. இவளும் யாரிடமும் வாய்
விட்டுச் சொல்லவில்லை.

அவளது மார்க்கிற்கு கிடைக்கும்
என்று அவளுக்கும் தெரியும். தன்
சந்தோஷம் எல்லாம் பறந்து சென்று
விட்டதை மது உணர்ந்தாள். தினமும்
சாப்பிட்டு விட்டுத் தூங்குகிறேன்
என்று அறைக்குள் புகுந்து விடுவாள்.

ஆனால் அறைக்குள் புகுந்து விட்டு
அழுதே கிடப்பாள். தன்னிடம் ஒருவன்
அதுவும் அவள் அப்பா வயது இருக்கும்
ஒருவன்.. என்று நினைத்து நினைத்து
துடிப்பாள். மதுவின் கலகலப்பு
அப்படியே குறைந்தது. ஏன் இப்படி
என்று யோசித்து மருகினாள்..
அறைக்குள்ளேயே நடந்து நடந்து
சோர்ந்தாள்.. கெட்டக் கெட்ட
கனவுகளும் வேறு வந்து
நிம்மதியாகக் கூட உறங்க முடியாமல்
போனது. மிகவும் அருவெருப்பாக
உணர்ந்தாள்.. சில சமயம் அந்த
சம்பவத்தை நினைத்து வாந்தியும்
எடுத்தாள். இதுவே தொடர்ந்தது. தன்
பலத்தை எல்லாம் இழந்து கொண்டே வந்தாள். மிகவும் இழைத்து
கருத்தவள் சுற்றி என்ன நடக்கிறது
என்று கூட அறியாமல் கிட்டத்தட்ட
பித்துப் பிடித்தவள் போல ஆனாள்.

தன் அப்பா வாங்கிக் கொடுத்த
மொபைலிலும் நாட்டம்
செல்லவில்லை. எல்லோரும்
எவ்வளவு சொல்லியும் அவள்
சமாதானம் ஆகவில்லை.

அவள் மனம் இப்போது
கார்த்திக்கிற்கு அதிகமாக ஏங்கியது.
அவன் அருகில் இருந்து ஆறுதல்
சொன்னால் எல்லாம் சரியாகிவிடும்
என்று தோன்றியது. ஆனால் நடக்கிற
காரியம் இல்லை என்று தோன்ற
மிகவும் சோர்ந்துபோனாள். இனி
அவன் முகத்தைப் பார்க்க முடியுமா
என்று நினைத்து தனக்குள்ளேயே
சுருண்டாள். இரவிலும் தூங்க
முடியாமல் விசித்தாள்.

சொல்ல முடியாத
துயரத்திலும்
தூக்கம் இல்லாத
இரவுகள்
என்னில் எத்தனையோ..
அதை நீ அறிய வாய்ப்பில்லை
உன்னிடம் சொல்லி அழுது
உன் மடியில் தலை சாய்க்க
துடிக்கும் எனக்குள் எத்தனையோ
வலிகள்
உன் முகம் காணாமல் இருந்தாலும்
உன் குரல் கேட்காமல் இருந்தாலும்
என் காயத்திற்கு உரித்தான மருந்து
நீ மட்டும் தான்!


என்றது மதுவின் மனம்

ஒருநாள் மதியம் ஆகியும் மது கீழே
வராமல் இருக்க ராதா கீழ் இருந்தே
குரல் கொடுத்துப் பார்த்தார். பதில்
வராது போகவே மேலே சென்றார்.
கதவைத் தட்டிப் பார்த்து விட்டு உள்ளே
சென்றார். ராதா உள்ளே செல்ல மது
பாத்ரூமிற்கு வெளியில் மயங்கி
கிடப்பதைக் கண்டு "மது" என்று
அலறிவிட்டார்.

"அக்கா, அம்மா" என்று கத்திக் குரல்
கொடுத்தார் ராதா, மதுவை
தூக்கியபடி.

"ராதாவின் குரல் கேட்டு வந்த
ஈஸ்வரியும் உமாவும் பதறிவிட்டனர்.
ராதா ஆம்புலன்ஸிற்கு கூப்பிட்டு
விட்டு சுந்தரமூர்த்திக்கும் தகவல்
கொடுக்க , மதுவை மூவரும் கீழே
தூக்கி வந்தனர்.

ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்குச்
செல்லவும் சுந்தரமூர்த்தி அங்கு
வரவும் சரியாக இருந்தது. எல்லாரும்
நிம்மதி இழந்தது போல இருந்தனர்.
சுந்தரமூர்த்தி முதல் முறையாக
இடிந்து போய் உட்கார்ந்து இருந்தார்.
ஆசையாக கொஞ்சி வளர்த்த மகள்
அல்லவா? தான் எந்த ஜென்மத்தில்
பாவமோ என்று தலையைக்
கைகளால் தாங்கியபடி
அமர்ந்துவிட்டார் சுந்தரமூர்த்தி.

மதுவைப் பரிசோதனை செய்துவிட்டு
வெளியே வந்த டாக்டர், "உங்கள்
பெண்ணின் வயது என்ன?" என்று
கேட்டார்.

"பதினேழு முடியப்போது டாக்டர். ஏன்?
என்ன ஆயிற்று மதுவிற்கு?" என்று
கலங்கிய குரலில் கேட்டார்
சுந்தரமூர்த்தி.

"ஒன்றுமில்லை. உங்கள் பெண் ரொம்பவும் மன அழுத்ததில்
இருக்கிறாள். உடம்பும் ரொம்ப வீக்கா
இருக்கு. அதான் வயதைக் கேட்டேன்"
என்றுவர் "என்னவாயிற்று? அதுவும்
இந்த வயதில் என்ன பிரச்சனை? "
என்றுக் கேட்டார் டாக்டர்.

நடந்ததை சுந்தரமூர்த்தி சொல்ல
"நீங்கள் தான் தைரியம் சொல்ல
வேண்டும். எப்போதும் யாராவது கூட
இருங்கள். ப்ரண்ட்ஸ் யாராவது
இருந்தால் அவர்களுடன் போனில்
பேசச் செல்லுங்கள். மருந்து
மாத்திரைகளை விட மதுமிதா
தேறுவது உங்கள் எல்லோர் கையில்
தான் உள்ளது" என்றுவிட்டு "நீங்கள்
இன்றே மதுமிதாவை வீட்டிற்கு
அழைத்துச் செல்லலாம்" என்றுவிட்டுப்
போனார்.

"நான் பில் கட்டிவிட்டு வரேன். நீங்கள்
எல்லாம் இங்க இருங்க" என்று விட்டு
சுந்தரமூர்த்தி பில் கட்ட சென்றார்.

திருமுருகன் மதுவை டிஸ்சார்ஜ்
செய்யும் சமயத்தில் வந்து சேர்ந்தார்.
அனைவரும் வீட்டிற்கு வந்துவிட்டு
மதுவைத் தூங்க வைத்துவிட்டு கீழே
வந்தனர்.

"மது இதற்கு இவ்வளவு வேதனைப்
படுவாள் என்று எண்ணவில்லை"
என்றார் நிம்மதியற்ற குரலில்
சுந்தரமூர்த்தி.

"போனது போகட்டும். மதுவை
அவளுக்குப் பிடித்த இடத்திற்கு
எங்காவது வெளியில் கூட்டிச்
செல்வோம். மதுவிற்கு பிடித்த
உணவையே தினமும் செய்யுங்கள்.
எதாவது படத்திற்குக் கூடப் போகலாம்
அனைவரும். முக்கியமான அவளைப்
பாவமாகப் பார்க்காதீர்கள்.பழைய
மாதிரியே நடத்துங்கள்" என்றார்
திருமுருகன்.

பின்பு வருணை அழைத்து "வருண்
அக்காவுடன் எப்போதும் போல
விளையாடு.. மாட்டேன் என்றாலும்
அக்காவை அழைத்து ஏதாவது
சப்ஜெக்ட்டில் டவுட் கேளு" என்று
திருமுருகன் சொல்ல கண்ணின் மணி
போல தலையை ஆட்டினான் வருண்.
அவனுக்கு அந்த வயதில்
புரியவில்லை என்றாலும் அக்காவின்
சோர்வு அவனையும் பாதித்தது
உண்மைதான்.

மது தூங்கிவிட்டதாக எண்ணி
அனைவரும் கீழே பேசினர். ஆனால்
கதவைத் தாங்கலாகப் பிடித்தபடி
நின்று அனைத்தையும்
கேட்டுக்கொண்டு இருந்தாள்.

"ச்ச நம்மால் எல்லாருக்கும் எவ்வளவு
கஷ்டம் என்று கண் கலங்கினாள்.
இனி கொஞ்சமேனும் பழையபடி
இருக்க வேண்டும்.. இவர்களுக்காவது
நிம்மதி இருக்கட்டும்" என்று
எண்ணினாள்

எல்லாம் திருமுருகன் சொன்னபடியே
நடந்தது. அவளை பழையபடி
கொண்டுவர எல்லோரும் முயன்றனர்.
அவர்களுடன் இருக்கும் போது சற்று
மகிழ்ச்சியாகவே இருந்தது மதுவிற்கு.
ஆனால் தனி அறையில் இருக்கும்
போதுதான் எல்லா நினைவும் மறுபடியும் தலை தூக்கியது. மீண்டும்
கார்த்திக் இன் நினைவு வேறு வந்து
இம்சித்தது. தூக்கத்தில் கூட
மறுபடியும் கனவு வந்து நடுங்கினாள்.

ஒருநாள் திருமுருகன் "மதுமா கீழே
வா..யார் வந்திருக்காங்க பாரு" என்று
கீழே இருந்து குரல் கொடுத்தார்.

மது கீழே வர மிதுனாவும் ஸ்வேதாவும்
"ஹே..." என்றபடி மதுவை
கட்டிக்கொண்டனர். மதுவிற்கு
அவர்களைக் கண்டதில் ரொம்ப
சந்தோஷம்.

"எப்படி இருக்கீங்க டீ? எப்ப
வந்திங்க? காலேஜ் லீவா? என
இருவரையும் பார்த்துக் கேட்டாள் மது.

"ப்பா... எத்தனை கேள்வி" என்றாள்
மிதுனா.

"மது இவர்களை மேலே உன் ரூமிற்கு
கூட்டிச் சென்று இவர்கள் லக்கேஜை
வைத்துவிட்டு மூவரும் கீழே
வாருங்கள். சாப்பிடலாம்"என்றார்
சுந்தர மூர்த்தி.

அப்போது தான் தோழிகள் இருவரும்
தன்னுடன் இரண்டு நாட்கள் தங்க
வந்திருந்ததை மது
தெரிந்துகொண்டாள். பெட்டியை
வைத்துவிட்டு கீழே வந்த மூவரும்
அரட்டை அடித்தபடியே சாப்பிட்டு
முடித்தனர். பிறகு மேலே வந்து இரவு
உடைக்கு மூவரும் மாறினர்.

"நீங்கள் எப்படி இங்கே?" என்று மது
கேட்டாள்.

"அப்பா சொன்னார் மது" என்றாள்
மிதுனா.

"ஏன் மது இப்படி இருக்க? என்ன
ஆச்சு?" என்று நேரடியாக கேட்டாள்
ஸ்வேதா.

ஸ்வேதாவும் மதுவும் சிறு வயதில்
இருந்தே ஒன்றாக படித்தவர்கள்.
மிதுனா ஆறாவதில் தான் வந்து
இந்தப் பள்ளியில் சேர்ந்தாள். பின்னர்
மூவரும் நெருங்கிய தோழிகள்
ஆயினர். ஒருவரை ஒருவர் நன்கு
அறிந்தவரும் கூட. சிறுவயதில்
இருந்து கூடவே இருந்ததால் ஸ்வேதா
மதுவை எளிதில் கண்டு கொண்டாள்.

"எப்படி இருக்கேன்" என்று திருப்பிக்
கேட்டாள் மது.

"உன்ன சின்ன வயதில் இருந்து
எனக்குத் தெரியும் மது. காலேஜ் போக
முடிலைன்னே இப்படி இருக்க நீ?
ப்ரண்ட்டைப் பார்த்து ரோட் க்ராஸ்
பண்ணியாமே? யாரைப் பார்த்தாய்?
சிங்காநல்லூர் ரோட்டில் நம் கூடப்
படித்தவர்கள் யார் இருக்காங்க?
அப்படியே பார்த்திருந்தாலும் அப்படி
க்ராஸ் பண்ணமாட்ட நீ. என்னனு எங்க
கிட்டயாவது சொல் மது. இப்படி
உள்ளே வெச்சு வெச்சு எப்படி ஆகிட்ட
பார்" என்றாள் ஸ்வேதா அவளின்
தோற்றத்தைப் பார்த்தபடி.

அதுவரை அமைதியாக இருந்த மது,
ஸ்வேதா அப்படி கேட்டவுடன் அப்படியே
அவள் மடியில் புதைந்து அழுக
ஆரம்பித்து விட்டாள். அவள் அழுது
முடிக்கட்டும் என்று விட்டுவிட்டனர்.

அழுது முடித்துவிட்டு எழுந்த மது
அனைத்தையும் ஒரு மூச்சு கூறினாள்.
கார்த்திக்கை மறக்க எண்ணியதையும்
அந்தச் சமயத்தில் அந்த ஆசிரியர்
அவளிடம் தப்பாக நடந்து
கொண்டதையும், அவனிடம் இருந்து
தப்பி வந்த போதுதான் ஆக்ஸிடென்ட்
ஆனது என்பதையும் சொல்லி
அழுதாள்.

"சரி எல்லாத்தையும் மறந்திருடி.
அதான் தப்பித்துவிட்டாயே. ஹாப்பியா
இருக்க ட்ரை பண்ணு" என இருவரும்
மதுவைத் தேற்றினர்.

"......." - உதட்டை கடித்தபடி கண்களில்
நீரைச் சுமந்திருந்தாள் மது.

"என்ன மது?" என்றாள் ஸ்வேதா.

"எனக்கு இப்போது தான் கார்த்திக்
உடன் இருக்க வேண்டும் என்று
இருக்கிறது. கார்த்திக் கூட இருந்தால்
எல்லாம் சரியாகி விடும் என்று
இருக்கிறது..ஆனால் அவன் முகத்தை
நிமிர்ந்து பார்க்க முடியும் என்று
தோன்றவில்லை. ஏதோ பயமாக
தவிப்பாக இருக்கிறது. " என்று மது
கண்ணீர் சிந்தினாள்.

இதற்கு என்ன சொல்லி சமதானம்
செய்வது என்று தெரியாமல் இரு
தோழிகளும் விழித்தனர்.
மூவருக்குமே அது என்ன என்று
புரிந்து கொள்ள வயது பத்தவில்லை.

"கார்த்திக் அண்ணாட்ட பேசனுமா மது?
என்று மிதுனா கேட்டாள்.

"இல்ல... வேண்டாம்" என்று
பதறினாள் மது. என்னவென்று
பேசுவாள்.. இவள் யாரென்று கூடத்
தெரியாதவனிடம்.

"ஏன் மது?" என்று ஸ்வேதாவும்
மிதுனாவும் ஒருசேர வினவினர்.

உடனே பதறியவள் "ஏற்கனவே நான்
நினைத்த காரணம் ஒன்று . அதுவும்
இல்லாமல் இப்போது இ..இந்தச்
சம்பவத்திற்குப் பிறகு கார்த்திக்கைப்
பார்க்க ஒரு.. ஒரு மாதிரி உடல்
கூசுகிறது" என்று மது சொல்லும்
போதே அவள் உடல் நடுங்கியது.

"அப்போ கார்த்திக் அண்ணா கூட
இருக்க வேண்டும் என்று
நினைக்கிறாயே மது" என்று மதுவின்
முதுகைத் தேய்த்துவிட்ட படிக்
கேட்டாள் ஸ்வேதா.

"அது ஏன் என்று எனக்குத்
தெரியவில்லை.. ஆனால்
தோன்றுகிறதே " என்று இரு
கைகளையும் கோர்த்து நெஞ்சின்
மேல் வைத்துப் புரியாமல்
சிறுபிள்ளை அழுத மது.. சிறிது நேரம்
கழித்து "இந்நப் பேச்சு போதும்..மேலே
எதுவும் கேக்காதீங்க, தூங்குவோம்
வாங்க" என்றாள்.

அவர்களும் அவள் இவ்வளவு
சொன்னதே அதிகம் மேலும் கேட்டு
அவளை வருத்தப்பட வைக்காமல்
உறங்கத் தயாரானர்.

இரண்டு நாட்களாக கலகலப்பாக
சென்றது. பின் ஸ்வேதாவும்
மிதுனாவும் அவரவர் வீட்டிற்கு
திரும்பினர்.

மதுவும் வீட்டிலேயே இருக்கப்
பிடிக்காமல் சுந்தரமூர்த்தி அல்லது
திருமுருகனோடு கார்மெண்ட்ஸ்
சென்று வந்தாள். இன்னொன்று,
ஜானகி அம்மா நிலாவைத்
தவிர்க்கவே அப்படிச் செய்தாள்.
எங்கே அவர்கள் கார்த்திகைப் பற்றி
பேசுவார்களோ என்றிருந்தது
அவளுக்கு.மறுபடியும் அதைக் கேட்டு
அவன் நினைவை வளர்க்க அவள்
விரும்பவில்லை.

இப்படியே நாட்கள் செல்ல ஒரு வருடம்
முடிந்தது. மருத்துவப் படிப்பிலேயே
சேர்ந்தாள். கோவையிலேயே சீட்
எடுக்க எல்லாரும் சொல்லியும்
கேட்காமல் சென்னையிலேயே
எடுத்தாள். இருந்தாலும் வீட்டினரைப்
பிரிந்து இருக்க முடியாமல் இரண்டு
வாரத்திற்கு ஒரு முறை வந்து
சென்றாள். அவ்வப்போது
தோழிகளையும் சந்திப்பாள். ஆனால்
அதையும் தான் நிறுத்திக்கொள்ளப்
போவதை அப்போது அவள்
அறியவில்லை.

ஸ்வேதாவின் அழைப்பு மதுவை
நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தது.
நடந்ததை எல்லாம் பால்கனியில்
நின்று நினைத்துக் கொண்டிருந்த மது
மொபைல் சத்தத்தை கேட்டு உள்ளே
சென்றாள். ஸ்வேதா தான். தான்
மாலை குளிக்கப் போகும் முன்
அழைத்தது நினைவு வந்தது.

போனை அட்டென்ட் செய்து "ஈவனிங்
கூப்ட காலிற்கு இப்ப வருது" என்றாள்
மது குத்தலாக.

"இப்பத்தான் மது பாப்பாவை
தூங்க வைத்தேன்" என்று சிரித்தாள்
ஸ்வேதா.

"ஹே விளையாட்டுக்கு சொன்னேன்
டி" என்றுவிட்டு "உன் ஹஸ்பன்ட்,
பாப்பா எல்லாரும் எப்படி இருக்காங்க?
என கேட்டாள் மது.

"எல்லாம் நலம். என்ன குரல் ஒரு
மாதிரி இருக்கு? எனக் கேட்டாள்
ஸ்வேதா.

அன்று நடந்த அனைத்தையும் ஒரு
மூச்சு கூறி முடித்தாள் மது.

"அட்வான்ஸ் வாழ்த்துக்கள்" என்றாள்
ஸ்வேதா.

"எதற்கு?" என்று புரியாமல் கேட்டாள்
மது.

"கூடிய சீக்கிரம் கல்யாண சாப்பாடு
தரப்போரல அதான்" என்றாள்
ஸ்வேதா.

"ஸ்வேதா ப்ளீஸ்.. உனக்கு தான் என்
நிலைமை தெரியும் ல" என்றாள்
ஸ்வேதா.

"எனக்கு என்னமோ எல்லாம்
நல்லபடியாக நடக்கும் என்றுதான்
தோனுது" என்றாள் ஸ்வேதா.

மேலும் சிலநேரம் பொதுவான
விஷயம் பேசிவிட்டு வைத்தனர்
இருவரும்.

போனை வைத்த மது உறக்கம்
வராமல் விடிகாலையிலேயே
கண்களை மூடினாள். அடுத்த நாள்
சரியான உறங்காத காரணத்தாலும்
அழுத்தாலும் கண்கள் நன்கு சிவந்து
இருந்தது. வழக்கம் போல வேலைக்கு
போய் வந்தாள் மது, கூடிய விரைவில்
அவள் அவனைப் பார்க்க நேரிடும்
என்பதை அறியாமல்.
 

writer

Saha Writer
Team
Messages
50
Reaction score
26
Points
8
அத்தியாயம்-7
இரண்டு நாட்கள் செல்ல மது வழக்கம்
போல ஹாஸ்பிடல் சென்று வந்தாள்.
வீடே அமைதியாக இருந்தது. வீட்டினர்
எல்லோரும் கொஞ்சம் தெளிவாக
இருந்தது போலத் தெரிந்ததை மது
கவனித்தாள். ஆனால் எல்லாருமே
அவரவர் யோசனையில் ஆழ்ந்து
இருந்தனர்.
"உனக்கு அந்தப் பையனை ரொம்பப்
பிடிக்குமா கண்ணு" என்று ஒரு நாள்
கிடைத்தத் தனிமையில் மதுவிடம்
கேட்டார் ஈஸ்வரி அம்மாள். இதுவரை
பேத்தி அழுதுப் பார்க்காதவர் அன்று
ஒருவனை எட்டு வருடங்களாக
காதலிக்கிறேன் என்று சொல்லி மூச்சு
இழுத்து அழுதுவிட்டுப் போனது
அவருக்குப் பரிதாபமாக இருந்தது.
"ஆமாம் பாட்டி" என்று அவரின்
முகத்தைப் பார்க்க முடியாமல்
தலையை ஆட்டினாள் மது.
"அந்தப் பையனிற்குத் தெரியுமா?
சொல்லி இருக்கிறாயா?" எனக்
கேட்டார் ஈஸ்வரி அம்மா.
"இல்லை பாட்டி.. அவருக்குத்
தெரியாது" என்று பொய் சொன்னாள்
மது.
"அப்புறம் எதுக்கு வருத்தப்படறே..
உன்னைப் பிடிக்காமல் போகுமா
யாருக்காவது? எதுக்கும்
வருத்தப்படாதே கண்ணு. உன் நல்ல
மனதிற்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும்.." என்று பேத்திக்குத்
தன்னால் முடிந்த தைரியத்தைக்
கூறினார் ஈஸ்வரி.
பாட்டியிடம் பேசிவிட்டு அறைக்கு
வந்த மதுவிற்குத் தான் அவனிடம்
பேசியது நினைவு வந்தது. ஜானகி
அம்மாள் எப்படியும் கார்த்திக்கிடம்
சொல்லி இருப்பார்.. என்ன
நினைத்திருப்பானோ.. முருகாகாகா
என்று இருந்தது மதுமிதாவிற்கு..
வழக்கம் போல மது வேலையை
முடித்துக் கொண்டு நாலு மணிக்கு
கிளம்ப கோயம்பத்தூரில் ஏதோ
மந்திரி அரெஸ்ட் ஆகிவிட்டார் என்று
அவரின் தொண்டர்கள் பிரச்சினை
செய்து கொண்டு இருந்தனர். ஒரு
பஸ்ஸிற்கு வேறு தீ வைத்துவிட்டனர்.
சித்தப்பாவிற்கு போன் செய்யலாம்
என்று எண்ணிய மதுவிற்கு அப்போது
தான் அவர், இன்று தான் ஒரு ஆர்டர்
விஷயமாக திருப்பூர் வரை பதினொரு
மணிக்கு மேல் செல்லவதாகக்
காலையில் வரும்போது சொன்னது
நினைவு வந்தது. என்ன செய்வது
என்று புரியாமல் சுந்தர மூர்த்திக்கு
போனில் கூப்பிட்டு விஷயத்தைச்
சொன்னாள் மது
"நான்தான் உன்னிடம் காலையிலேயே
சொன்னேன்ல மது. எனக்கு இந்த
மாதிரி தகவல் கிடைத்தது, இன்று
செல்ல வேண்டாம் என்று நான்
சொன்னேனா இல்லையா?" என்று
கோபமாகப் பேசினார். அவர் எங்கே
மதுவிடம் சொன்னார்.. ஈகோ பார்த்து
மகளிடம் நேரிடையாகவே
சொல்லாமல் காலையில் அனைவரும்
சாப்பிடும் போது பொதுவாகச்
சொன்னது நினைவு வந்தது
மதுவிற்கு.
மதுவிற்கு கோபம் வந்தது..
இருந்தாலும் பதட்டத்தில் அப்பா
கோபப்படுகிறார் என்று கோபத்தை
அடக்கியவள் "அப்பா.. நான் என்ன
அந்த மாதிரி வேலையிலா இருக்கேன்.
நீங்க சொன்னவுடன் லீவ்
போடுவதற்கு" என்று திருப்பிக்
கொடுத்தாள் மதுமிதா.
சுந்தரமூர்த்தி குடும்பத்தோடு
கோவிலிற்கு வந்திருந்தார். மகள்
போன் செய்து விஷயத்தை சொன்ன
பொழுது அவருக்கும் என்ன செய்வது
என்று தெரியவில்லை. பேசாமல்
தாமே சென்று கூட்டி வரலாம் என்று
நினைத்த பொழுதுதான் ஜானகி
கோயிலிற்கு வந்து சேர்ந்தார்.
அவருக்கும் காமாட்சி அம்மன் இஷ்ட
தெய்வம் என்பதால் அவரும் அங்கு
வாராவாரம் வருவார்.
"என்ன அண்ணா பதட்டமா
இருக்கீங்க?" என்று சாதரணமாகக்
கேட்டபடி வந்து நின்றார் ஜானகி. உமா
விஷயத்தைச் சொல்ல ஜானகிக்கு
ஒரு யோசனைத் தோன்றியது.
"நான் ஒன்று சொன்னால் தப்பா
நினைக்காதீங்க. வேறு வழியும்
இல்லை. கார்த்திக்கும் கோவையில்
தான் இருக்கிறான். அவனை கூட்டி
வரச் சொல்லிவிடலாமா?" என்று
மனதில் தோன்றியதை மறைக்காமல்
கேட்டுவிட்டார் ஜானகி.
எல்லாருக்கும் ஒரு நிமிடம்
திகைப்புதான், அந்தப் பக்கம் போனில்
கேட்ட மதுவிற்கு வியர்த்து விட்டது.
வேறு வழி இல்லை என்பதால் சுந்தர
மூர்த்தியும் சரி என்று விட்டார்.
கார்த்திக்கிற்கு போன் போட்ட ஜானகி
"கார்த்திக் எங்க இருக்கே?
கிளம்பிட்டயா?" எனக் கேட்டார்.
"ஒரு ஐந்து நிமிடத்தில் கிளம்பி
விடுவேன் அம்மா.. ஏன்? ஏதாவது
வாங்கி வர வேண்டுமா?" என்றுத் தன்
டேபிள் மேல் இருந்த பைலை
சரிபார்த்தபடி வினவினான் கார்த்திக்.
"இல்லை கார்த்திக்... வந்து.." என்று
இழுத்தவர் அனைத்தையும் சொல்லி
முடித்தார். "நீதான் கார்த்திக் மதுவைக்
கூட்டி வர வேண்டும்" என்று சிறு
கட்டளைக் குரலில் கூறினார்.
"சரி.. மதுமிதா போன் நம்பரை மட்டும்
அனுப்பி வைங்க" என்று போனை
வைத்துவிட்டான். ஜானகிக்கே
அதிசயம் தான்.. மகன் எரிச்சல்
படுவான் அல்லது ஏதாவது சாக்கு
சொல்லுவான் என்று
நினைத்திருந்தார் ஜானகி.
கார்த்திற்கு மதுவின் நம்பரை அனுப்பி
வைத்தார்.
கார்த்திற்கு மதுவின் நம்பரை அனுப்பி
வைத்த ஜானகி மதுவிற்கும்
கார்த்திக்கின் நம்பரை
சுந்தரமூர்த்தியிடம் சொல்லி
மதுவிற்கும்அனுப்பினர். ஆனால்
அந்த நம்பர் அவளிடம் முன்பே
இருந்ததை யார் அறிவார்?
நம்பரைப் பார்த்த மது அதே நம்பர்
என்று எண்ணி புன்னகை சிந்தினாள்.
மறுநொடியே அந்த நம்பரிலிருந்து
மதுவிற்கு கால் வந்தது. TL என்ற
பெயரில் அவன் நம்பரை பதிவு செய்து
வைத்து இருந்தவள் அதில் இருந்து
கால் வந்தவுடனே ஏதோ தன் இதயம்
1000 மடங்கு அதிகமாகத் துடிப்பதை
உணர்ந்தாள்.
கை நடுங்க அட்டென்ட் செய்து காதில்
வைத்தவளிடம் "எந்த இடத்தில் இருக்க?
என்று நேராக விஷயத்திற்கு வந்து
கேட்டான் கார்த்திக்.
"நீலாம்பூர் பஸ் ஸ்டாப்" என்றாள்
மதுமிதா.
"சரி வருகிறேன்" என்று
வைத்துவிட்டான். கார் நம்பரை
மெசேஜும் அனுப்பினான்.
சொல்லிவிட்டு அவன்
வைத்துவிட்டான். ஆனால் மதுவால்
தான் சரியாக நிற்கக் கூட
முடியவில்லை. எப்படி அவன் முகத்தில்
முழிப்பது என்று இருந்தது.
கைகால்கள் எல்லாம் சில்லிட்ட மாதிரி
ஆகிவிட அப்படி இப்படி என்றும்
டான்ஸ் ஆடியபடி நின்றிருந்தவளை
பக்கத்தில் இருந்த ஒருவர் இவளின்
செய்கையை கவனிக்க மது தன்னைத்
தானே கடிந்தபடி கொஞ்சம்
அமைதியாக நின்றாள். சரியாக பத்து
நிமிடத்தில் வந்து சேர்ந்தான். மது
காரின் பின் கதவைத் திறந்து உள்ளே ஏறி அமரக் கார் நகர ஆரம்பித்தது.
இப்படி ஒரு நாள் வரும் என்று அவள்
நினைத்துப் பார்த்தது கூட இல்லை.
ஐய்யோ முருகாகாகா என்றிருந்தது
மதுவிற்கு. அவன் பார்வையைச்
சந்திக்க மறுத்து முகத்தை வின்டோ
பக்கம் திருப்பி வெளியே பார்த்துக்
கொண்டு வந்தாள். ஆனால் மனம்
முழுதும் அவனின் பிம்பமே வந்து
நின்றது. அவனைப் பார்க்க வேண்டும்
என்று துடித்த மனதை அடக்கினாள்.
'முழுதாக நான்கு ஆண்டுகள் கடந்து
விட்டது அவனைப் பார்த்து..
கடைசியாக திருவிழாவில் பார்த்த
நினைவு..' என்று யோசித்தபடியே
வெளியே பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.
அதே நேரம் கார்த்திக்கும் அவளைத்
தான் காரை ஓட்டியபடி கண்ணாடி
வழியாக கவனித்துக்கொண்டு தான்
வந்தான். கார்த்திக்கிற்கு அன்றைய
நாள் நினைவு வந்தது.
கார்த்திக் அப்போது தான் கல்லூரி
முடித்து அப்பாவுடன் அலுவலகம்
செல்ல ஆரம்பித்த நேரம். கல்லூரியில்
கார்த்திக்கும் கூடப் படித்த சுஜி என்ற
பெண்ணும் காதலித்தனர். அந்தப்
பெண்ணின் அப்பா இவர்களின்
காதலைப் பற்றி அறிந்து கொண்டு
அவரின் உறவில் ஒரு
மாப்பிள்ளையைப் பார்த்து திடீரென
திருமண ஏற்பாடு செய்து விட்டார்.
திருமணத்தின் முதல் நாள் தான்
இந்தச் செய்தியை அறிந்தான்
கார்த்திக். அன்று கார்த்திக் சென்று
அழைத்த போது "வேண்டாம் கார்த்திக்.
என் அப்பா மானமே போய்விடும்.
எல்லாம் கொஞ்ச நாளில் சரியாகி
விடும். நீங்களும் உங்கள்
வாழ்க்கையைப் பாருங்கள்" என்று
அவன் பதிலைக் கூட
எதிர்ப்பார்க்காமல் அவள் சென்று
விட்டாள்.
கார்த்திக் தான் உடைந்து விட்டான்.
ஆனால் யாரிடமும் புலம்பவில்லை.
ஒரு சொட்டு கண்ணீர் கூட கண்ணில்
வரவில்லை. மாறாக இறுகினான்.
கோபம் வேறு முன்பை விட
அதிகமாகத் தென்பட்டது. அப்பாவுடன்
அலுவலகம் சென்று வந்தான்.
அப்பப்போ மிதுனாவின் அண்ணன்
ஆன சிவாவை அடிக்கடி சந்தித்துப்
பேசினான். சிவாவிற்கும் அனைத்தும்
தெரியும். கார்த்திக்கின் மாற்றத்தைக்
கண்டவன் நண்பனை மாற்ற எண்ணி
ஊரில் திருவிழா முடிந்தவுடன்
இன்னும் சில நண்பர்களைக் கூட்டிக்
கொண்டு ஊட்டி சென்றான். அப்போது
தான் கார்த்திக்கிற்கு அந்த போன்
வந்நது.
திருவிழாவில் தோழிகளைப்
பார்த்துவிட்டு அவர்களுடன் அரட்டை
அடித்தபடி நின்றிருந்தாள் மது.
அவர்கள் பக்கத்தில் இருந்த குழந்தை
ஒன்று கையில் ராயல் ப்ளூ கலர்
பலூன் ஒன்றை வைத்திருந்தது. அந்த
கலர் சர்ட் ஒன்றில் கார்த்திக் ஒரு
புகைப்படத்தை முகநூலில்
பதிவிட்டிருந்தான். அதை நினைத்து
புன்னகை செய்தவள், அந்த பலூன்
பறந்து செல்ல அது செல்லும்
திசையையே பார்த்தபடி
நின்றிருந்தாள்.
அந்த பலூன் நகர ஒரு நிமிடம்
உறைந்து விட்டாள். கார்த்திக் தான்
மிதுனா அண்ணா சிவாவோடு
கோவிலை நோக்கி வருவதைப்
பார்த்தாள்.
மூன்றே நொடிதான் கார்த்திக்கைப்
பார்த்திருப்பாள். அவனை அந்த
மூன்று நொடியில் அவனைத் தன்
கண்களால் சிறை பிடித்தவள் அந்த
இடத்தில் இருந்து ஓடி ஒரு கடையின்
பின்னால் நின்று கொண்டாள்.
சட்டென மது ஓடுவதைப் பார்த்த
ஸ்வேதாவிற்கும் மிதுனாவிற்கும்
ஒன்றும் புரியவில்லை. ஆனால்
மிதுனா என்று அழைத்தபடி சிவாவும்
கூடவே கார்த்திக்கும் வருவதைக்
கண்டு இருவருக்கும் புரிந்துவிட்டது.
மிதுனாவிடம் வந்து ஏதோ பேசிய
சிவா, பின் கார்த்திக்குடன் சென்றான்.
அவர்கள் சென்ற உடன் வெளிப்பட்ட
மது வீட்டிற்கு கிளம்புகிறேன்
என்றுவிட்டு, உமாவிற்கு போன்
செய்து அவர்கள் எங்கே
இருக்கிறார்கள் என்று
கேட்டுக்கொண்டு அங்கே சென்றாள்.
அடுத்த நாள் "நான் இரண்டு நாளில்
கிளம்பறேன். இன்னிக்கு நைட்
ஸ்டேக்கு இங்க வாங்க" என்று
தோழிகளை அழைத்தாள் மது.
இருவரும் அடுத்த இரண்டு மணி
நேரத்தில் வந்து சேர்ந்தனர்.
சாப்பிட்டு விட்டு அறைக்குள் புகுந்து
அரட்டை அடித்துக் கொண்டு
இருந்தனர். அப்போது தான் கார்த்திக்
இன் காதல் தோல்வி பற்றி மிதுனா
தெரிவித்தாள். யாரும் இல்லை என்று
சிவாவுடன் கார்த்திக் பேசிக்
கொண்டிருந்தது மிதுனா காதுகளில்
விழுந்திருந்தது. அனைத்தையும்
மிதுனா சொல்ல மது அமைதியாகவே
அமர்ந்திருந்தாள்.
"ஏன் மது நேத்து அப்படி ஓடி ஒழிஞ்ச?"
என்று மிதுனா கேட்டாள்.
"தெரியவில்லை" என்றாள் மது ஒற்றை வார்த்தையாக.
"இன்னும் கார்த்திக் அண்ணாவை
நினைத்துக் கொண்டு இருக்கியா?"
என ஸ்வேதா கேட்க அவளைப் பார்த்து
ஒரு வெற்றுப் புன்னகையை
உதிர்த்தாள் மது.
"நான் எப்போ கார்த்திக்கை மறப்பதா
சொன்னேன்" என்று புருவத்தை
உயர்த்திக் கேட்டாள் மதுமிதா.
"மது ஏன்டி இப்படி இருக்க? ஒன்னு
அண்ணா கிட்ட சொல்லு இல்ல
மறந்துவிடு" என்றாள் மிதுனா.
"ஆமாம் மது. இப்படி இருந்து உனக்கு
கிடைக்கலனா ரொம்ப வருத்தப்படுவ
நீ. பேசாம சொல்லிரு" என்றாள்
ஸ்வேதா.
"இங்க பாருங்க. நான் அவன
நினைச்சுகிட்டு தான் இருக்க..
இல்லைனு சொல்லல. ஆனா எனக்கு
அந்த ஹராஸ்மென்ட் அப்றோ
கல்யாணம் மேல பயமா ஒரு
வெறுப்பாக இருக்கு. அத உங்க
யாராலையும் புரிஞ்சிக்க முடியாது.. அனுப்பவிச்ச எனக்கு மட்டும் தான்
தெரியும்" என்றாள் மது எங்கோ
பார்த்தபடி.
"மேலும் கார்த்திக்கிடம் பேச எனக்கு
ஒரு மாதிரி இருக்கு.. நான் சொல்லி
அவங்க வீட்டிற்கோ அல்லது எங்கள்
வீட்டிற்கோ தெரிந்து விட்டால்..
அசிங்கமாகப் போய்விடும். என்னால்
யார் மூஞ்சியிலும் முழிக்க முடியாது"
என்று மது தன் நிலைமையை
விளக்கினாள்.
"இது மட்டும் தானே மது உன்
பிரச்சினை.. மற்றபடி கார்த்திக்
அண்ணாக் கிட்ட பேச உனக்குப்
பிரச்சினை இருக்கா? அதாவது.. பேச
இஷ்டமில்லாமல்... இல்லை வேறு
ஏதாவது" என்று வினவினாள் மிதுனா.
"இல்லை" என்று தலை ஆட்டினாள் மது.
"அப்போ சொல்லிவிடுடி" என்றார்கள்
இருவரும்.
"சொல்லி கார்த்திக் என்ன தப்பா
நினைச்சுட்டா? வேண்டாம் டி.. அதுக்கு
நான் யாருன்னு தெரியாம
இருக்கிறதே நல்லது" என்றாள் மது
தவிப்பாக.
"மது ஏன்டி கார்த்திக் அண்ணா
விஷயத்துல இவ்வளவு சென்சிடிவ்வா
இருக்க.. மது அந்த பழைய மது எங்க
டி" என்று ஸ்வேதா மதுவை சமாதானம்
செய்ய "உன் பெயரைச் சொல்லாத.
இந்த மாதிரின்னு மட்டும் சொல்லு..
அப்புறம் கட் பண்ணிக்கலாம்"
என்றாள் மிதுனா. மது அரை
மனதோடே சரி என்றாள். சரி
சொல்லிவிட்டால் ஆவது அவன்
நியாபகம் குறையுமோ என்னமோ
என்று நினைத்தாள்.
"கார்த்திக் அண்ணா நம்பர் என்கிட்ட
இல்ல. நாளை அப்பாவின்
மொபைலில் இருந்து எடுத்து
வருகிறேன்" என்றாள் மிதுனா.
"என்னிடம் இருக்கு" என்று மதுமிதா
கூற அவளை கேலியாக இருவரும்
பார்த்தனர்.
அவர்களின் பார்வையை உணர்ந்து
"ஜானகி ஆன்ட்டி போன்ல இருந்து ஒரு
தடவை எடுத்தேன்" என்று நெழிந்தபடி
பதில் அளித்தாள் மதுமிதா.
ஸ்வேதாவின் நம்பரில் இருந்தே
கார்த்திக்கிற்கு கால் செய்தனர்.
மிதுனா பேசினால் கார்த்திக் கண்டு
கொள்வான் என்று ஸ்வேதாவையே
பேசச் சொன்னாள் மது.
கார்த்திக் எப்போதாவது
நண்பர்களுடன் சேர்ந்தால் மது
அருந்தும் பழக்கம் உண்டு. ஆனால்
அளவாகத் தான் அருந்துவான். அப்படி
ஊட்டியில் நண்பர்களுடன் மது
அருந்திக்கொண்டு இருந்த போது
தான் அவனுக்கு அந்நோன்(unknown)
நம்பரில் இருந்து கால் வந்தது.
முதலில் எடுக்க வேண்டாம் என்று
நினைத்தவன் பின்பு அட்டென்ட்
செய்து "ஹலோ" என்றான்.
"கார்த்திக்கா?" என்றாள் ஸ்வேதா.
அவளுக்கே பயம்தான். எங்கே
திட்டிவிடுவானோ என்று. தான்
பயந்தால் மதுவும் பயந்து விடுவாள்
என்று பயத்தை வெளியே காட்டாமல்
இருந்தாள் ஸ்வேதாவும்.
"யெஸ். நீங்க?" என வினவினான்
கார்த்திக்.
"அண்ணா உங்களுக்கு என்னைத்
தெரியாது.. ஆனால் உங்களை
எனக்கு நன்றாகத் தெரியும். ப்ளீஸ்
அண்ணா போனை மட்டும்
வைக்காதீர்கள்" என்றாள் ஸ்வேதா
கெஞ்சும் குரலில்.
போனை கட் செய்ய எண்ணியவன்
பிறகு யோசித்து விட்டு "சரி
சொல்லுங்க. முதலில் யார் நீங்க?"
என்று பாறைக் குரலில் கேட்டான்.
"அண்ணா ப்ளீஸ் கோபப்படாதீங்க..
திட்டாதீங்க.. அண்ணா மறுபடியும்
சொல்றேன், கட் மட்டும்
பண்ணிறாதீங்க" என்றாள் ஸ்வேதா.
"சரி என்ன என்று சொல்லுங்க"
என்றான் கார்த்திக்.
"அண்ணா நான் என் ப்ரண்ட்காகத்
தான் கால் பண்ணிருக்கேன். என்
ப்ரண்ட் உங்களை நான்கு
வருடங்களாக ரொம்ப லவ் பண்றா"
என்று உடைத்துவிட்டாள். மது
இருகைகளையும் கோர்த்து நெஞ்சின்
மேல் வைத்திருந்தாள். என்ன நடக்கப்
போகுதோ என்ற பயத்தில் இருந்தாள்
அவள்.
சற்று நேரம் அமைதியாக இருக்க
போனை வைத்து விட்டானோ என்று
போனைப் பார்த்தாள் ஸ்வேதா.
ஆனால் நண்பர்களிடம் இருந்து
எழுந்து காட்டேஜ் மொட்டை மாடிக்கு
வந்து விட்டான் கார்த்திக்.
மொட்டை மாடிக்கு வந்தவன் "என்ன
சொன்னீங்க? சரியாக கேட்கவில்லை"
எனக் கேட்டான். ஸ்வேதா மறுபடியும்
சொன்னாள்.
"யாரு உங்க ப்ரண்ட்?" எனக் கேட்டான்
கார்த்திக். குரல் இப்போது சற்று
இறுகி இருந்தது.
"இருங்க அண்ணா அவளிடமே தரேன்"
என்று போனைத் தப்பித்தோம்
பிழைத்தோம் மது கையில்
தந்துவிட்டாள் ஸ்வேதா.
போன் வாங்கும் போதே மதுவிற்கு
கை நடுங்கியது. பயம் பதட்டம்
எல்லாம் ஒன்று சேர்ந்து மது ஹலோ
என்று சொல்லும் போதே வார்த்தை
வராமல் தொண்டையில் சிக்கியது.
மூச்சு வேறு வாங்கியது.
"ஹலோ" என்றான் பதிலிற்கு
அமைதியாக.
பேச நினைத்த வார்த்தைகள் எல்லாம்
அவனது குரலில் தூரம் ஆனது போல
உணர்ந்தாள் மது. இனி மறைத்து
வைக்க முடியாது என்று எண்ணியவள்
"எ..எ..னக்கு...ப்ச்.. எனக்கு உங்களை
ரொம்ப பிடிக்கும் கார்த்திக்.. உங்கள
நல்லாத் தெரியும்.. உங்க பேமலியைக்
கூட நன்றாக தெரியும். உங்களுக்கு
லவ் ப்ரேக்அப் ஆயிருச்சுனு கூட
சொன்னாங்க. ஸாரி இந்த
நேரத்தில போன் பண்ணி டிஸ்டர்ப்
பண்றதுக்கு. தப்பா நினைச்சுகாதிங்க"
என்றவள் அழுதே விட்டாள்.
"ஒ ஓகே ஓகே...ஹலோ அழாதிங்க..
கூலா இருங்க" என்றான் கார்த்திக்.
"இல்ல இது வொர்க்ஔட் ஆகதுன்னு
எனக்குத் தெரியும். ஆனா உங்க கிட்ட
ஒரு தடவையாது சொல்லிடனும்
ஆசை. அ.. அதான்" என்ற மதுவாள்
அதற்கு மேல் பேச முடியவில்லை.
"சரிசரி ஓகே புரிகிறது" என்றவன்
"உங்க பெயர் என்ன?" என்று
ஆர்வத்தில் கேட்டுவிட்டான்.
அவன் பெயர் கேட்டவுடன் அவள்
பதறிவிட்டாள். "இ.. இல்ல
கார்த்திக் ப்ளீஸ் அதை மட்டும்
கேட்காதீங்க, நான் உங்ககிட்ட அத
மட்டும் சொல்லிட்டு போனை கட்
பண்ணிட்றேன்" என்றாள் மது.
"ஒகே சொல்லுங்க..ஆனா இவ்ளோ
சொல்றிங்க என்னை பற்றி.. பெயர்
சொன்னீங்க என்றால் ரொம்ப
ஹாப்பியா இருக்கும் எனக்கு"
என்றான் கார்த்திக். அவள் சொல்ல
மாட்டேன் என்று சொல்லும் போது
தான் அவனிற்கு பெயரைத் தெரிந்து
கொள்ள இன்னும் ஆர்வம் எழுந்தது
"இல்ல ப்ளீஸ்... நான் அதை மட்டும்
சொல்லிடறேனே" என்று கெஞ்சும்
குரலில் கண்ணீர் சிந்தியபடி
கேட்டாள்.
"சரி சொல்லுங்கள்" என்றான்...
"வந்து ஐ... என்ன சொல்ல வரன்னு
புரியுதா உங்களுக்கு" என்று
திக்கியவள் "ஐ... ஐ லவ் யூ கார்த்திக்"
என்று பட்டென்று சொல்லிவிட்டாள்
மது. அதைச் சொல்வதற்குள் தயக்கம்,
பயம், பரிதவிப்பு, வெட்கம், அழுகை,
படபடப்பு, உதறல் எல்லாம் மதுவை
சூழ்ந்து கொண்டது. மதுவிற்கு
சொல்லி விட்டோம் என்று
சந்தோஷப்படுவதா அல்லது இவன்
என்ன நினைப்பான் என்று அழுவதா
என்று இருந்தது.
சொல்லி முடித்த சில கணங்கள்
அமைதியே நிலவியது. "ஹலோ"
என்று மது அழைத்த போதுதான்
கார்த்திக் பேசினான்.
"என்ன சொல்றதுனு தெரில, நாலு
வருடமா என்ன லவ் பண்ணறனு
சொல்றீங்க.. தேங்க் யூ தேங்க் யூ சோ
மச்.. எனக்கு வேற என்ன சொல்றதுனு
தெரியல" என்று விட்டு "எனக்கு
லவ்லலாம் இன்ட்ரஸ்ட் இல்ல.. ஹர்ட்
பண்றன்னு நினைக்காதிங்க.. எனக்கு
வேற மாதிரி சொல்லத் தெரியல"
என்றான்.
என்ன இவன் லவ்வ சொன்ன ஆமா
இல்லைனு சொல்லாம தேங்க்யூ
சொல்றான் என்று மது நினைத்தாள்.
அவன் சொன்னதிற்கு "ம்ம்" என்று
மட்டும் சொன்னாள்.
"சரி உங்க ப்ரண்ட் கிட்ட போனைக்
குடுங்க" என கார்த்திக் சொல்ல
ஸ்பீக்கரை ஆன் செய்து ஸ்வேதாவிடம்
போனைத் தந்தாள் மது.
போனை வாங்கி ஹலோ என்ற
ஸ்வேதாவிடம் "ஹலோ.. இங்க
பாருங்கமா நீங்க யாருனே எனக்கு
தெரில. என் நம்பர் கண்டுபுடிச்சு
போன்லாம் பண்ணி பேசிடீங்க. ஆனா
பெயர் மட்டும் சொல்ல மாட்டேன்னு
சொல்றிங்கலே" எனக் கேட்டான்.
ஸ்வேதா மதுவைப் பார்க்க மது
வேண்டாம் என்பது போல தலையை
ஆட்டினாள்.
"அண்ணா வந்து.... அவப்
பயப்படுகிறாள் அண்ணா..ஏதாச்சும்
பிரச்சினை ஆகிருமோனு" என்றாள்
ஸ்வேதா மதுவைப் பார்த்தபடியே.
"என்ன பிரச்னை... அப்போ தெரிஞ்ச
பொண்ணு தான் கரெக்டா?
பேசுவதைப் பார்த்தால் கூடப்
பொள்ளாச்சி பெண்கள் மாதிரி தான்
பேசரிங்க" என்று கார்த்திக் சொல்ல
மூன்று தோழிகளுக்கும் திக் என்று
இருந்தது. ஒருவரை ஒருவர்
திகிலாகப் பார்த்துக் கொண்டனர்.
"அண்ணா.. இல்ல வெளியே
தெரிஞ்சா பிரச்சினை ஆகிவிடும்
என்று பயப்படுகிறாள்" என்றாள்
ஸ்வேதா.
"என்னம்மா ஆகிவிடும்.. நான்
யாரிடமாவது சொல்லி விடுவேன்
என்று பயப்படறாங்களா உங்க
ப்ரண்ட?.. எனக்கு ஒரு தங்கச்சி
இருக்கு.. இதெல்லாம் வெளியே
சொன்னா என்ன ஆகும்னு தெரியாதா
எனக்கு.. என்னப் பத்தி தெரிஞ்சு
தானே போன் பண்ணிற்கீங்க.
இவ்வளவு நேரம் பேசி இருக்கிங்க.
என் மேல கொஞ்சம் கூடவா
நம்பிக்கை இல்லை" என அமைதியாக
அழுத்தமாகக் கேட்டான் கார்த்திக்.
அவன் அப்படி பிடிவாதமாகக் கேட்ட
போது, மதுவின் பிடிவாதம் அங்குத்
தோற்றுதான் போனது.
அவன் அப்படி கேட்டவுடன் மது
ஸ்வேதாவிடம் சொல்லிவிடு
என்று சைகை செய்ய, "மதுமிதா
அண்ணா , உங்க உறவுக்காரப்
பெண்தான் " என்று சொல்லி விட்டாள்
ஸ்வேதா.
"ஒ மதுமிதா.." என்று யோசனையான
குரலில் அவள் பெயரை உச்சரித்தவன்
"எங்கள் அம்மா தங்கை வீட்டில் பேசிக் கேட்டிருக்கிறேன்" என்றான்.
"இங்க பாருங்கமா இந்த மாதிரி உங்க
ப்ரண்ட்ட என்கரேஜ் பண்ணாதீங்க.
அவங்க ஹர்ட் (hurt) ஆகக்கூடாதுன்னு
தான் இவ்வளவு நேரம் பேசினேன்.
வேறு யாராவதாக இருந்திருந்தால் கட்
பண்ணிருப்பேன்... எல்லாரு
படிக்கறிங்கதானே?" என்று கேட்டான்.
"ஆமா அண்ணா" என்றாள் ஸ்வேதா.
"எல்லாரும் படிப்ப முடிச்சுட்டு
பேமிலியப் பாருங்க" என்றான்
கார்த்திக்.
ஒரு நிமிடம் என்று போனை
வாங்கினாள் மது, "நான் உங்க கிட்ட
சொல்லாம இருந்ததுக்குக் காரணம்
நம்ம இரண்டு பேமிலியோட உறவு
தான். என்னால எந்தப் பிரச்னையும்
வேண்டாம் என்று தான் இருந்தேன்.
ஆனால் என்னால சொல்லாம இருக்க
முடியால. இந்தக் குற்ற உணர்வுனால
உங்க அம்மா தங்கச்சிக் கிட்டக் கூட
சரியாகப் பேச முடிவதில்லை.. எங்கே
தெரிந்தால் இதற்காகத்தான்
பழகினேன் என்று தவறாக நினைத்து
விடுவார்களோ என்று..." என்றாள்
கண்களில் கண்ணீருடன்.
"சீச்சீ அதெல்லாம் எது நினைக்காத
மதுமிதா. எப்பவும் போல அவர்களிடம்
பேசு. நானும் யாரிடமும்
சொல்லவில்லை. பர்ஸ்ட் பேமிலியைப்
பார்.. படிச்சு முடிச்சுட்டு உன்
பேமிலியைப் பார். அவ்வளவுதானே?
வேறு ஏதும் பேச இல்ல தானே?"
என்றான் கார்த்திக்.
"ம்" என்று மது சொல்ல
வைத்துவிட்டான்.
அவன் கட் செய்தவுடன் தோழிகள்
இருவரையும் கட்டிக்கொண்டாள் மது.
"தாங்க்ஸ் ஸ்வேதா...தாங்க்ஸ்
மிதுனா" என்று கண்களில்
கண்ணீருடன் சொன்னாள் மது..
பிறகு தூங்கலாம் என்று மூன்று
பேரும் படுக்க.. ஸ்வேதாவும்
மிதுனாவும் தூங்கிவிட்டனர்.
மதுவிற்குத் தான் கண்ணீர் எட்டிப்
பார்த்தது. சிறிது நேரம் கண்ணீர்
சிந்தியவள் நான்கு மணிக்கே
உறக்கத்தை தழுவினாள். அதற்குப்
பிறகு தான் மது இனி எதற்கும் அழுகக்
கூடாது என்று முடிவு செய்தது.
அவர்களும் அவளுடன் இருந்துவிட்டு
அடுத்த நாள் மாலை கிளம்பிச்
சென்றனர். "தைரியமாக இருடி..
எனக்கு என்னமோ இன்னும் ஏதோ
நம்பிக்கை இருக்கு" என்றுவிட்டு
கிளம்பினாள் ஸ்வேதா.
ஆனால் சென்னை சென்ற மதுதான்
அவ்வளவாக வருவதையே நிறுத்தி
விட்டாள். வந்தால் அவன் நியாபகம்
வரும், இல்லை சந்திக்க நேரிடும்
என்பதால்.
கார்த்திக்கிடம் சொல்லி விட்டால்
அவன் நியாபகம் குறையும்
என்றுதான் மது முடிவு செய்து
பேசியது. ஆனால் அதற்கு பிறகுதான்
அவன் நியாபகம் அதிகம் ஆனதே.
திட்டியிருந்தால் கூட சரிதான் போடா
என்று மறந்திருக்கலாம். ஆனால்
அவன் பேசியது அவளை இன்னும்
விழவைத்தது. அவன் மேல்
மரியாதையும் ஏறியது.. வேறு
ஒருவனாக இருந்திருந்தால் ஊருக்கே
பெருமை போல தண்டோரா போட்டு
இருப்பான், ஆனால் இவனோ..
'உன்னிடம் பேசிய அந்த
சில நொடிகளுக்கு மட்டுமே
தெரியும்
நான் உன் மீது கொண்ட
காதலின் உயரம்..
இன்னும் எத்தனை பிறவி
எடுத்தாலும் இந்த நேசத்தை
மறப்பேனா என்பது சந்தேகமே..
நீ அழகாக இருந்தால் தான்
உன்னை விரும்புவேன்
என்பது இல்லை.. நீ எப்படி
இருந்தாலும் உன்னை மட்டும் தான்
விரும்புவேன் என்பதே
என் மனதின் எதிரொலி..
தட்டிக் கொடுக்கவும்
தலை சாய்க்கவும்
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
கட்டி அணைத்து அன்பு செலுத்த
நீ மட்டும் தான் வேண்டும் என்று
குழந்தை போல அழுகிறது
என் இதயம்..
உனக்காக அடம்பிடிக்கும் மனதை
சமாளித்துக் கொண்டு இருக்கிறேன்
இதோ எல்லாம் சரியாகிவிடும் என்று!

அவன் நியாபகம் வரமால் இருக்க
படிப்பில் கவனம் செலுத்தி ஐந்தரை
வருடங்களை முடித்தாள். வீட்டில்
கல்யாணம் செய்து வைத்து
விடுவார்கள் என்று பயந்து தான்
லண்டனில் கண் மருத்துவம்
முதுகலையில் படிக்கச் சென்றது மது.
அங்கு கூட தனிமையில் தவிப்பாகத்
தான் இருந்தது. ஊருக்கு வரக் கூட
ஆசை தான். ஆனால் வருவதற்குத்
தான் அவளுக்கு பிடிக்கவே இல்லை.
யோகா.. உடற்பயிற்சி என்று மனதைக்
கொஞ்சம் கட்டுப் படுத்தினாள்.
இரண்டு வருடம் முடிந்த போதுதான்
எவ்வளவு வேகமாக நாட்கள் சென்று
விட்டது என்று இருந்தது. குடும்பத்தை
பார்க்க போகின்ற ஆசை ஒரு பக்கம்,
எப்படியும் கல்யாணப் பேச்சை
எடுப்பாற்களே என்ற பயம் ஒரு பக்கம்
இருந்தது மதுவிற்கு.
'வருடங்கள் அவனை
மறக்கச் செய்துவிடும் என்று
எண்ணினாள்..
ஆனால் அவனின் நினைப்பிலேயே
வருடங்கள் சென்று விட்டதே...'

என்று நினைத்தாள்.
ஆனாலும் இத்தனை வருடங்களில்
எத்தனை முறை அவன் பெயரை
முணுமுணுத்திருப்பாள்.. 'என்றும்
புதிதாய் தெரிந்தது, பொருள் நிறைந்த
அவனின் பெயர் அவளுக்கு'.
அவனிடம் பேசிய அந்தச் சிறிது
நேரத்தைக் கூட மது நினைத்து
சுகமாக உணர்வாள். அதை
நினைத்துப் பார்த்து சில சமயம்
தன்னையே மறந்து நின்றிருக்கிறாள்.
மதுவின் தனிமையில் தழுவிச்
செல்லும் தென்றலாய் அவன்
நினைவுகள் மனதை வருடிச்
சென்றிருக்கிறது. அப்படியே
நாட்களையும் கடத்தி விட்டாள்.
பழைய யோசனையில் இருந்த மது
கார் நின்றதில் கார்த்திக்கைப் பார்க்க..
அவன் அவளை ரியர் வ்யூ மிரர்
வழியாகப் பார்த்துக் கொண்டு
இருந்தான்.
 

writer

Saha Writer
Team
Messages
50
Reaction score
26
Points
8
அத்தியாயம்-8
அத்தனை நேரம் இருவருமே அவரவர்
கற்பனையில் மூழ்கி இருந்தனர். ஒரு முடிவு செய்த கார்த்திக் கோயம்பத்தூர்
மெரைன் கல்லூரி கடந்தவுடன் காரை
ஒரு ஓரமாக நல்ல மரங்கள் நிறைந்த
சாலையில் நிறுத்தினான்.

கார் நின்றதை உணர்ந்த மது
கார்த்திக்கைப் பார்த்தாள். அவளை
ஒரு கணம் ரியர் வ்யூ மிரர் வழியாகப்
பார்த்தவன் காரை விட்டு இறங்கி
கதவைச் சாத்திவிட்டு, கீழே குனிந்து
"உன்னிடம் பேச வேண்டும் மதுமிதா.
கீழே இறங்கு" என்றுவிட்டு காரை
முன்புறமாகச் சுற்றி வந்து முன்னாள்
இருந்த கதவின் மேல் சாய்ந்தபடி நின்றான்.

சுற்றி வரும் போது தான் அவனை
முழுதாகப் பார்த்தாள் மதுமிதா.
நான்கு வருடங்களுக்கு முன்னால்
பார்த்தவனுக்கும் இப்போது
இருப்பவனுக்கும் நிறைய
வித்தியாசங்கள். அன்று கொஞ்சம்
மெலிதாகவே காணப்பட்டவன் இன்று
கம்பீரமான தோற்றத்துடன் அவன்
தொழிலுக்கே உண்டான நிமிர்வுடன்
இருப்பதைப் பார்த்தவளுக்கு மனம்
ரசிக்கவில்லை என்று சொன்னால்
அவளே நம்ப மாட்டாள்.
"ஏய் சைட் அடிக்கிற நேரமா இது?"
என்று தன் மூளை எச்சரிக்கை செய்ய
சுயநினைவு திரும்பியவள் கார்
கதவைத் திறந்தாள்.

என்ன சொல்லப்போறானோ என்று
நினைத்தபடியே காரை விட்டு கீழே
இறங்கிய மது சற்றுத் தள்ளி, அவன்
முகம் காண சக்தி இல்லாமல் தலை
குனிந்து அவன் புறம் திரும்பி
நின்றிருந்தாள்.

"என்னை இன்னும் லவ் பண்றையா
மதுமிதா?" என்று நேரிடையாகக்
கேட்டு அவளை அதிர வைத்தான்
கார்த்திக்.

திட்டப்போகிறான் அல்லது இந்த
எண்ணத்தை விட்டுவிடு என்று
சொல்லுவான் என அதிகாரக் குரலை
எதிர்ப்பார்த்த மதுவிற்கு இது அதிர்ச்சி
தான். என்ன சொல்லுவது என்று
மதுவிற்கு புரியவில்லை.

"நான் கேட்டால் எனக்கு பதில் வர
வேண்டும் மதுமிதா" என்றான்
அதிகாரக்குரலில் இப்போது.

"ஆமாம்" என்று தலை அசைத்தாள் மது.
காதலித்தாலும் அவள் கல்யாணம்
என்ற ஒன்றே தனக்கு வேண்டாம்
என்று தானே நினைத்தாள்.
"ஆனால்...." என்று மது ஆரம்பிக்க..
அவளது பேச்சைக் கண்டு கொள்ளாது
அவன் தன் பேச்சை ஆரம்பித்தான்.

"அப்போ நான்கு வருடங்களுக்கு
முன்னால் நான் சொன்னது எதையும்
நீ உன் மண்டையில்
ஏற்றிக்கொள்ளவில்லை.
அப்படித்தானே? "என்றான் குத்தலாக.

மதுவிற்கு அவன் குத்தலாகப் பேசியது
புரியாமல் இல்லை. "என்னால் மறக்க
முடியவில்லை. ஆனால் உங்களை
கல்யாணம் செய்ய நான்
நினைக்கவில்லை" என்று எங்கோ
பார்த்தபடி தன் மனதில் உள்ளதைச்
சொல்லிவிட்டாள் மது.

"அப்படி இருக்க ஏன் எல்லாரிடமும்
சொன்னாய்" என மேலும் குத்தினான்.

"நான்...." என்று நிமிர்ந்து அவன்
முகத்தைப் பார்த்தவள் அவன்
பார்வையைத் தாங்காது தன்
விழிகளை அவன் விழிகளில் இருந்து
பிரித்து எங்கோ பார்த்தபடி, அன்று
அவன் அன்னை வந்த போது நடந்த
அனைத்தையும் கூறினாள்.

மேலும் "என்னால் மனதில் ஒருவரை
வைத்துக் கொண்டு
இன்னொருவனுக்கு துரோகம் செய்ய
முடியாது. அதான் உண்மையைச்
சொல்லிவிட்டேன். விஷயம்
தெரிந்தால் என்னை யாரையும்
கல்யாணம் செய்து கொள்ளச்
சொல்லிக் கட்டாயப்படுத்த மாட்டார்கள்.
உங்களைக் கல்யாணம் செய்ய
எண்ணி நான் அதை சொல்லவில்லை.
ஏதோ எல்லோரும் குடுத்த பிரஷரில்
சொல்லிவிட்டேன். என்னை மன்னித்து
விடுங்கள்" என்றாள் மது.

"அப்போ நீ என்னைக் கல்யாணம்
செய்ய எண்ணி எல்லாரின்
முன்னிலையில் என்னைக்
காதலிப்பதாகச் சொல்லவில்லை..
அப்படித்தானே?" எனக் கேட்டான்.

"ஆமாம்" என்று தலையை ஆட்டினாள்
மது.

"சரி. நான் இல்லை என்றாலும்.. உன்
வீட்டில் உனக்கு வேறு யாருடனாவது
கட்டாயக் கல்யாணம் செய்து
வைத்தால்?" என அடுத்தக் கார்த்திக்
கேட்டான்.

"அப்படி என் கை கால்களைக் கட்டி
மணமேடையில் யாராலும் உட்கார
வைக்க முடியாது" எனத் தெளிவானக்
குரலில் மதுவிடம் பதில் வந்தது.
இப்போ எதுக்கு இந்தக் கேள்வி
எல்லாம் கேட்கிறான் என்று மது
நினைக்கவில்லை.

"நம்ம ஊர்ல இந்த எமோஷனல் ப்ளாக்
மெயில்னு ஒன்னு இருக்கு அத
யோசிச்சுப் பாத்தையா?" என்று
கைகளை மார்பிற்கு குறுக்காகக்
கட்டியபடிக் கேட்டான்.

"அப்படி யாரும் என் வீட்டில் என்னைப்
புரிந்து கொள்ளாமல் நடக்க
மாட்டார்கள்.. என்னை
கஷ்டப்படுத்தவும் மாட்டார்கள்"
என்று திடமானக் குரலில் கூறினாள்
மது.

"அப்போ உன் வீட்டினரை நீ புரிந்து
கொள்ளாமல் நடக்கப் போகிறாய்..
அதாவது அவர்களை கஷ்டப்படுத்தப்
போகிறாய்.. அப்படித்தானே" எனக்
கேட்டான்.

"நானா? நீங்க சொல்வது எனக்குப்
புரியவில்லை" என்றாள் அவனை
நேராகப் பார்த்து.

"அதாவது கல்யாணம் பண்ணிக்
கொள்ளாமல் இருந்து உன்
குடும்பத்தினரை கஷ்டப் படுத்தப்
போகிறாய்.. அப்படித்தானே?" என
மதுவிடன் தன் கேள்வியை வைத்து
குழப்பினான்.

மதுவிற்கு அவன் என்ன சொல்ல
வருகிறான் என்பது புரிந்துவிட்டது..
"அதற்காக இஷ்டம் இல்லாத
கல்யாணத்தைச் செய்து கொண்டு
என்னால் நோக முடியாது. அது
எனக்கு மட்டும் இல்லாமல்
அடுத்தவருக்கும் பாதிப்பே.." என்றாள்
மது.

"அப்போது உன் குடும்பத்தினரைப்
பற்றி உனக்குக் கவலை இல்லையா?"
என்று கேட்டான்.

"நீங்க என்னைக் கேள்வி கேட்டே
குழப்பறீங்க" என்றாள் மது
வெடுக்கென.

"நீ ஒன்னும் கன்ப்யூஸ் ஆக வேண்டாம்
மதுமிதா. நேரடியாகவே சொல்றேன்
கேள்.. இப்போ நீ உன் கஷ்டத்தப் பத்தி
மட்டும் யோசிக்கற.. ஆனா நீன்னா நீ
மட்டும் இல்லை. உன்ன சுத்தி
இருக்கவங்க சந்தோஷம் தான் உன்
சந்தோஷம்.. உன் சந்தோஷம் தான்
அவங்க சந்தோஷம்.. சரி உன்
சந்தோஷத்துக்காக அவங்க உன்ன
அப்படியே உன் இஷ்டப்படி
விட்டுவிடுகிறார்கள் என்றே வைத்துக்
கொள்வோம். ஆனால் நமது சமதாயம்
என்று ஒன்று இருக்கிறதே.. அது
நியாபகம் இருக்கிறதா உனக்கு.. உன்
முன்னால் பேசவில்லை என்றாலும் நீ
இல்லாத போது உன்னை ஏசுவார்கள்..
நீ இவ்வளவு நாள் டாக்டர் படிச்சது..
லண்டன்ல படிச்சது எல்லாமே மறந்து
போய் இந்த கல்யாண விஷயத்தைப்
போட்டு அலசிவிடுவார்கள். நீ மட்டும்
இதில் பாதிக்கப்படப் போவதில்லை..
உன் குடும்பமும் உன் குடும்ப
கவுரவமும் தான்" என்று தெளிவாக
மதுவிற்கு விளக்கினான்.

எல்லாவற்றையும் கேட்ட மதுவிற்கு
தலை வலி வராதக் குறைதான்.
"இப்போது நான் என்ன செய்ய
வேண்டும் என்று சொல்ல வரீங்க"
என்று ஒரு பக்கமாகத் தலையைத்
தேய்த்து விட்டுபடிக் கேட்டாள்.

"வேறு வழி இல்லை மதுமிதா.
எனக்கும் உனக்கும் தான் திருமணம்
நடக்கப்போகிறது" என்றான்
அமைதியான குரலில்.

மது அவன் சொன்னதைக் கேட்டு
அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றாள்.
"எ.. என்ன சொல்றீங்க நீங்க?"
என்றாள்.

"ஆமாம்" என்றான் கூலாக.

"நீங்க சொல்றது எனக்கு புரியல?"
என்று விழித்தாள் மது.

"கல்யாணம் வேண்டாம் என்று
சொன்ன நீயும், உங்கள் வீட்டில் என்
அம்மாவின் முன்னால் என்னைக்
காதலிப்பதாக, அதுவும் எட்டு
வருடங்களாக காதலிக்கிறேன் என்று
கூறிவிட்டாய், அதான் சான்ஸ் என்று
கல்யாணத்தைத் தள்ளி போட்டுக்
கொண்டிருந்த என்னிடம், என் அம்மா
இப்போது விடாப்பிடியாக நிற்கிறார்.
நானே இது விஷயமாக உன்னிடம்
பேச வேண்டும் என்று நினைத்துக்
கொண்டிருந்தேன். ஆனால் தானாக
நடந்த இந்த சந்திப்பு சாதகமாகிப்
போனது. இன்னும் யோசித்துப்பார்
உன்னை என்னைவிட்டுக் கூட்டி வரச்
சொல்லி இருக்கிறார்கள். உன்
வீட்டிலும் சரி என் வீட்டிலும் சரி இந்தக்
கல்யாணம் அனைவருக்கும் சம்மதமே.
நான் இரண்டு நாட்களில்
சொல்கிறேன் என்று என் அம்மாவிடம்
சொன்னதால் தான் என் அம்மா உன்
வீட்டில் இன்னும் பேசவில்லை"
என்று தன் செய்த முடிவுகளைச்
சொன்னான்.

"உங்க அம்மா கிட்ட என்ன சொல்லப்
போறிங்க?" என மது கேட்டாள்.

"என் அம்மா என்னை விடமாட்டார்.
அதுவும் இல்லாமல் மறுப்பதற்கும்
காரணம் இருப்பதாகத்
தெரியவில்லை" என்று தோளைக்
குலுக்கியபடி பதில் அளித்தான்.

"ஆனால் என்னால் உங்களுக்கு நல்ல
மனைவியாக இருக்க முடியும் என்று
தோன்றவில்லை" என்று மேல்
உதட்டைக் கடித்தபடி மது சொல்ல
இப்போது அதிர்ச்சி அடைந்தது
கார்த்திக் தான்.

"ஏனோ?" என்றான் கார்த்திக்.
"அது.. என் வாழ்க்கையில் நடந்த சில
சம்பவங்கள் காரணம் ஆயிருச்சு..
அதனால் தான் சொல்கிறேன்.."
என்றாள் மது. தொண்டை வறண்டது
போல உணர்ந்தாள் மது. 'அது மட்டும்
நடக்காமல் இருந்திருந்தால்
இப்போது..' என்று மதுவின் மனம்
நினைத்து ஏங்கியது.

"என்ன நடந்தது மதுமிதா.. நான் தான்
கல்யாணத்தில் பிரச்சினையாக
இருப்பேன் என்று நினைத்தேன்..
ஆனால் இப்போது நீயே வேண்டாம்
என்கிறாய். நீ கல்யாணமே வேண்டாம்
என்று சொல்லும் அளவிற்கு என்ன
ஆயிற்று.. நான் உன்னை பர்ஸ்ட்
வேண்டாம்-ன்னு சொன்ன கோபமா? "
என வினவினான்.

"அதெல்லாம் இல்லை.." என்று கதவை
இடமும் வலமும் ஆட்டியவள் "இல்லை
வேண்டாம்.. கிளம்பலாம்.. காரை
எடுங்க" என்று மது கார் கதவைத்
திறக்க.. கதவைப் பிடித்து கார்த்திக்
சாத்தினான்.

"நீ சொல்லாமல் காரை எடுக்க
மாட்டேன் மதுமிதா.. என்ன என்று
சொல்லு.. அப்படித் தீர்க்க முடியாத
பிரச்சினை என்று எதுவும் இல்லை..
உன்னைக் கட்டாயப் படுத்துகிறேன்
என்று நினைக்காதே.. நீ இன்று
வாயைத் திறந்து சொன்னால் தான்
இதற்கு என்ன தீர்வு என்று சொல்ல
முடியும்" என்று அழுத்தமானக் குரலில்
கூறினான்.

"அ..அது " என்று தயங்கியவள் பின்பு
அந்த ஸ்போக்கன் இங்லீஷ் க்ளாஸில்
நடந்ததைக் கூறினாள். சொல்லி
முடிக்கும் போதுதான் மது கண்களில்
கண்ணீர் உருண்டு ஓடியதை
உணர்ந்தாள். ஒரு வித நடுக்கத்துடன்
சொல்லி முடித்தவள் நிமிர்ந்து
அவனைப் பார்க்க அவன் முகம் இறுகி
இருந்தது.

"எதுவும் நடக்கலனாலும் அந்த
விஷயம் எனக்கு அருவெருப்பு
தந்திருச்சு. எத்தனையோ நாள் அது
கனவில் வந்து தூக்கம் இல்லாமல்
தவித்திருக்கிறேன். இப்போதும் அது
சில நாள் தொடர்கிறது. அதனால
தான் சொல்றேன் புரிஞ்சுக்கோங்க.
எனக்கு பயமாவும் இருக்கு" என்று
தவிப்புடன் கூறினாள் மது.

"புரிகிறது. ஆனால் இப்படி தவிக்கும்
அளவிற்கு ஒன்றும் இல்லை என்று
நான் சொல்ல வரவில்லை. உன்
இடத்தில் இருந்து பார்த்தால் தான்
தெரியும். ஆனால் அதை மறந்து விடு
மதுமிதா. ஒரு வாழ்க்கை இருக்குல
எல்லாருக்கும். அதை நீ வாழ
வேண்டாமா?" என்று புரிய வைக்கும்
எண்ணத்துடன் பேசினான் கார்த்திக்.

"எனக்கு என்று ஒரு வாழ்க்கை
இருக்கு தான். நான் இல்லை என்று
சொல்லவில்லை.. ஆனால் என்னால்
நார்மல் கப்பில்ஸ் மாதிரி இருக்க
முடியும்னு தோனலை" என்று
அவனிடம் கூறினாள்.

"மதுமிதா ஒரு விஷயத்தைப்
புரிஞ்சிக்கோ. நான் உன்ன அந்தக்
கடந்த கால விஷயத்தில்
பாராட்டத்தான் செய்வேன்.. நீ தப்பிச்சு
வந்ததும் இல்லாம அவனை
அடிச்சுட்டுதான் வந்திருக்க.. எனக்கு
புரியுது நீ என்ன மாதிரியான
கஷ்டத்தை அனுபவிச்சிருக்கனு..
என்ன பொருத்த வரைக்கும் இஷ்டம்
இல்லைனா மனைவியா இருந்தாக்
கூடத் தொடக்கூடாது என்று தான்
நினைப்பேன்.. எனக்குத் தெரிந்து உன்
பதினாறு பதினேழு வயதில் அந்த
சம்பவம் நடந்திருக்கு என்று
நினைக்கிறேன்.. முழுதாக விவரம்
தெரியாத வயதிலேயே தப்பித்து
வந்திருக்கிறாய்.. அந்த
நாயை" என்று பல்லைக் கடித்தவன்..
பின் கோபத்தை அடக்கி "அந்தச்
சம்பவத்தை மறந்துவிடு மதுமிதா.."
என்றான் அமைதியான குரலில்.

"தயவு செய்து நான் சொல்ல
வருவதைப் புரிஞ்சுக்கோங்க.
என்னால உ..உங்க கூட...ஒரு ஆணின்
எதிர்பார்ப்புக்கு இருக்க முடியுமானு
தெரியல. என்னால ஓப்பனா சொல்ல
முடியல" என்றாள் மது சங்கடமானக்
குரலில்.

"ஒரு தம்பதி என்றால் தாம்பத்தியம்
என்று மட்டும் இல்லை மதுமிதா..
அதையும் தாண்டி நிறைய உள்ளது.."
என்றான் கார்த்திக்.

"அது எனக்கும் தெரியும்.. ஆனால்
அத்தனைகளில் ஒன்று இல்லை
என்றால் கூட நமது இரண்டு பேரின்
வாழ்க்கையும் முழுமை அடையாது.
அதுவும் இல்லாமல் என்னால் நீங்கள்
அதில் கஷ்டப்பட நேரிடும். எல்லோரும்
சாதாரண மனிதன் தானே. என்
சுயநலத்திற்காக என் குடும்ப
சந்தோஷத்திற்காக நான் ஏன்
உங்களைச் சிரமப்பட வைக்க
வேண்டும் சொல்லுங்க" என்று
அவனுக்குப் புரிய வைக்க முயன்றாள்.

"எனக்கு நீ என்ன சொல்ல வரன்னு
புரியுது மதுமிதா. கல்யாணம் ஆன
உடனே நம்ம வாழ்க்கையைத்
தொடங்க வேணாம். முதலில்
ப்ரண்ட்ஸா இருப்போம். நமக்கு
எப்போ நம்ம வாழ்க்கைய ஸ்டார்ட்
பண்ணனும்னு தோனுதோ அப்ப
வாழலாம்" என்றான் கார்த்திக்.

மது யோசித்தபடியே நிற்க "ஏன்
மதுமிதா என் மேல் அந்த விஷயத்தில்
நம்பிக்கை இல்லையா. உன்னிடம்
கல்யாணத்திற்குப் பிறகு எல்லை
மீறிவிடுவேன் என்று பயப்படுகிறாயா"
என்று கேட்டான்.

"சீச்சீ அதெல்லாம் இல்ல.." என்று
டக்கென்று மது சொல்ல கார்த்திக்கின்
முகம் கொஞ்சம் சாந்தம் அடைந்தது.

மது ஏதோ சொல்ல வாய் எடுக்க "பார்
மதுமிதா. நமக்கு இதைவிட்டா வேற
வழி இல்ல. நம்ம இரண்டு பேமிலி
சந்தோஷத்திற்காக சொல்றேன். நான்
சொன்னபடியே உன்னிடம்
நடந்துகொள்வேன். இப்போது
இரண்டு குடும்பத்தின் மகிழ்ச்சியும்
உன் கையில் தான் உள்ளது" என்றான்
அழுத்தமானக் குரலில்.

ஏதோ சொல்ல வாயெடுத்தவள் அவன்
இரண்டு குடும்பங்களின் மகிழ்ச்சி
என்றதும் அவளால் எதுவும் பேச
முடியவில்லை. கொஞ்ச நேரம்
இருவருமே பேசவில்லை.

"சரி கிளம்பலாம். டைம் இப்பவே
ஐந்திற்கு மேல் ஆச்சு" என்றுவிட்டு
காரை சுற்றி சென்று கார் கதவைத்
திறந்தவன் மது பின் சீட்டின்
கதவைத் திறப்பதைக் கண்டு "நான்
உன் ட்ரைவர் இல்லை மதுமிதா. முன்
சீட்டில் வந்து உட்காரு" என்று
கட்டளையிட மது எதுவும் பேசாமல்
முன்னால் ஏறி அமர்ந்தாள்.

பொள்ளாச்சி செல்லும் வரை
இருவருமே எதுவும் பேசவில்லை.
இருவரும் அவரவர்
சிந்தனைகளிலேயே மூழ்கி
இருந்தனர். பொள்ளாச்சியை
அடைந்தவுடன் "மதுமிதா எல்லாரும்
கோயிலில் இருக்கிறார்கள். நாம்
நேரே அங்கேயே சென்று விடுவோம்.
நீ எதுவும் பேச வேண்டாம். நான்
பேசுவதற்கெல்லாம் 'ஆம்' என்று தலை
ஆட்டிவிடு" என்றான்.

சரி என்று தலையை ஆட்டியவள்,
"பிடிவாதக்காரன்! அன்றும்
அப்படித்தான் பெயரைக் கேட்டு
வாங்கிவிட்டான். இன்றும்
கல்யாணத்திற்கு சம்மதிக்க
வைத்துவிட்டான். நினைத்ததை
சாதித்துவிடுகிறான்" என்று
மனதிற்குள் நினைத்தவள் தானும்
அதற்கு தலை ஆட்டுகிறோமே என்று
அப்போது தான் அவளுக்கு நியாபகம்
வந்தது.

கோயில் வந்ததும் இருவரும் காரில்
இருந்து இறங்கினர். அதற்குள்
பூஜையை முடித்துவிட்டு வெளியே
வந்த இரு குடும்பமும் இருவரையும்
பார்த்துவிட்டது. தன் அம்மாவிடம்
நேரே சென்றவன் "அம்மா எனக்கு
மதுமிதாவை கல்யாணம் செய்து
கொள்ளச் சம்மதம்" என்றான்.
எல்லாரும் ஆனந்தத்தில் மிதந்தனர்.

மேலும் "வந்து ஒரு மாதத்தில்
கல்யாணத்தை வைத்து விடுங்கள்"
என்றான் கார்த்திக். ஒரே மாதத்தில்
கல்யாணம் என்றதும், சற்று
அதிர்ந்தாலும் வெளியே காட்டாமல்
ஏற்கனவே அவன் சொல்லி வைத்தது
போலத் தலையை ஆட்டினாள் மது.
வருண் தனது தமக்கையின் தோளில்
இடித்துக் கேலி செய்ய ஒரு
புன்னகையை மட்டுமே சிந்தினாள்.
சுந்தரமூர்த்தியும் வேலுமணியும்
கைகளைப் பிடித்துக் கொண்டனர்.
பின்னர் கார்த்திக்கும் மதுமிதாவும்
சண்முகம்-ஈஸ்வரி தம்பதியினர்
காலில் விழுந்து ஆசி வாங்கினர்.

"உள்ளே சென்று சாமி கும்பிட்டுவிட்டு
வாங்க" என்று ஜானகி சொல்ல "இல்ல
ஆன்ட்டி ஹாஸ்பிடல்ல இருந்து
அப்படியே வந்துட்ட உள்ள போக
முடியாது" என்றாள் மது.

"சரிசரி ... நாங்கள் நாளை மாலை
வீட்டிற்கு வருகிறோம்" என்று ஜானகி
சொல்ல இருவீட்டாரும் அவரவர்
வீட்டிற்குச் சென்றனர்.

மது வீட்டார் வீடு வந்து சேர்ந்த பிறகே
திருமுருகன் திருப்பூரில் இருந்து வந்து
சேர்ந்தார். விஷயத்தை அறிந்து
ரொம்பவும் மகிழ்ந்தார். போய் தன்
நண்பனும் சகலையும் ஆன
சுந்தரமூர்த்தியை அணைத்தவர் தன்
சந்தோஷத்தைப் பகிர்ந்தார். அன்று
அனைவரும் வெகு நேரம் பேசிவிட்டு
உறங்கச் சென்றனர்.

தன் அறைக்கு வந்த மது
ஸ்வேதாவிற்கும் மிதுனாவிற்கும்
கான்பரன்ஸ் காலில் விஷயத்தை
தெரிவித்தாள் மதுமிதா. தோழிகள்
இருவரும் வாழ்த்துகளைத் தெரிவித்து
விட்டு, ஒரு அரைமணி நேரம்
ஒருவரை ஒருவர் கேலி செய்து
விட்டுப் போனை வைத்தனர்.

தன்னால் அனைவரும் அன்று
மகிழ்ச்சி அடைந்ததை நினைத்து மது
நிம்மதி அடைந்தாள். அந்த
மகிழ்ச்சிக்குக் காரணமானவனை
மனதில் நினைத்து நன்றி சொன்னபடி
உறங்கச் சென்றவள் ஏனோ தூக்கம்
வராமல் படுத்திருந்தாள் மது.

அதே நேரம் மதுவை நினைத்தபடி
அவனது அறை பால்கனியில்
நின்றிருந்தான் கார்த்திக்.
"அழகுதான்" என்று மனதில்
நினைத்தவனுக்கு "ஒரு தடவை
முகநூலில்(facebook) மது ப்ரபோஸ்
செய்த பிறகு அவளது போட்டோவைப்
பார்த்திருக்கிறான்.

அதன் பிறகு முகநூலில் அவளை
ப்ளாக் செய்த நியாபகம் வந்தது
அவனுக்கு. உடனே தன் மொபைலை
எடுத்து முகநூல் சென்று அன்ப்ளாக்
செய்து ப்ரண்ட் ரிக்வஸ்ட் அனுப்பினான். அவளுக்கு ஏன்
தன்னைப் பிடித்தது என்று
யோசித்தவன் பிறகு ஒரு சிகரெட்டைப்
பிடித்துவிட்டு வந்து படுத்துவிட்டான்.

அடுத்த நாள் வழக்கம் போல மது
ஹாஸ்பிடல் சென்று மாலை வீடு
வர, கார்த்திக் மற்றும் அவனது
பெற்றோர் அங்கு இருந்தன.
வந்தவர்களை வரவேற்று விட்டு
டக்கென்று குளித்துவிட்டு ஒரு
சுரிதாரை அணிந்து கீழே வந்தாள் மது.

மது கீழே வரும்போது "அப்போது
வருகிற ஞாயிறு நல்லநாள் தான்
அப்போதே நிச்சயதார்த்தத்தை
வைத்துவிடுவோம்" என்று சுந்தர
மூர்த்தி பேசுவது கேட்டது.

"ம்ம் அதுவும் சரிதான்" என்றார்
வேலுமணி.

கீழே வந்தவளை ராதா சமையல்
அறைக்கு அழைத்துச் செல்ல, உமா
மது கையில் ஒரு காஃபி ட்ரேவைத்
தந்தார்.

"போ மது. போய் எல்லாருக்கும்
கொடுத்துவிட்டு வா" என்றார்.
அன்னை சொன்னது போல
அனைவருக்கும் சிரித்த முகத்துடன்
காஃபியைத் தந்துவிட்டு வந்தவள், ஒரு
போன் வர எடுத்து பேசிவிட்டு கட்
செய்யும் போதுதான் முகநூலில் ஒரு
அறிவிப்பு (notification)
வந்திருந்ததைக் கவனித்தாள்.

கார்த்திக்கைப் ப்ரபோஸ் செய்துவிட்டு
இரண்டு நாட்கள் கழித்து முகநூல்
சென்ற மது அவன் ப்ளாக் செய்ததை
அறிந்தாள். ஆனால் அவனே இன்று
ப்ரண்ட் ரிக்வஸ்ட் அனுப்பியதைப்
பார்த்தவள் அதை அக்சப்ட்
செய்துவிட்டு சிரித்தபடியே வெளியே
ஹாலிற்கு வந்தாள். அதேநேரம்
ஆபிஸிற்கு போனில் ஒரு
குறுஞ்செய்தி அனுப்பிய
கார்த்திக்கிற்கு, அவனது முகநூலில்
மது ப்ரண்ட் ரிக்வஸட் அக்செப்ட்
செய்த அறிவிப்பைப் பார்க்க அவனும்
புன்னகையுடனே உட்கார்ந்திருந்தான்.
மது சிரித்தபடியே வெளியே வர,
போனைப் பார்த்துவிட்டு கார்த்திக்
புன்னகையுடன் நிமிர... இருவருக்கும்
ஒருவரை ஒருவர் பார்க்க தானாக
புன்னகை மலர்ந்தது. இருவருக்கும்
அன்று ஒரு வித நட்பும் உருவானது.

ஞாயிற்றுக்கிழமை வர
நிச்சியதார்த்தம் எளிமையான
முறையில் இருவீட்டார்களோடு மட்டும்
மது வீட்டில் நடத்த முடிவு செய்யப்பட்டு
இருந்தது. மெரூன் கலரில் தங்க
பார்டர் வைத்த பட்டு புடவையில் தங்க
ஜிமிக்கி, ஆரம், வளையல் அணிந்து
மது கீழே இறங்கி வந்தாள். மதுவை
ரொம்ப வருடங்களுக்குப் பிறகு
புடவைக் கட்டி இருந்தாள். கீழே வந்த
மது தன் வீட்டினரே தன்னை
வியப்பாகப் பார்ப்பதை உணர்ந்தாள் நெழிந்தாள். தன் அம்மாவிடம் சென்று
"நல்லா இருக்காமா?" என்று கேட்டாள்.

"மது ரொம்ப அழகா இருக்கே" என்று
மகளைக் கட்டிக் கொண்டார் உமா.

பிறகு நல்ல நேரத்திற்கு
நிச்சயத்தாம்பலத்தோடு வந்து
சேர்ந்தனர் கார்த்திக் வீட்டார்.
மது நினைத்தும் பார்க்கா தருணம்
இது..

நிச்சயதார்த்தம் நன்றாகவே நடந்நு
முடிந்து கல்யாணத் தேதியும்
குறித்தனர். மோதிரம் மாற்றும் போது
கார்த்திக்கும் மதுவும் புன்னகை
மட்டுமே சிந்தினர். பத்திரிகை
அடிப்பது, மண்டபம் பார்ப்பது,
கேட்டரிங்கிற்கு சொல்லுவது என
அனைத்தையும் கலந்து
ஆலோசித்தனர். நிலாவும்
நிலாவுடைய கணவர் அரவிந்தும்
வந்திருந்தனர். அரவிந்தை மதுவிற்கு
அறிமுகம் செய்து வைத்தான்
கார்த்திக். அரவிந்த் கோவை மாநகர
அசிஸ்டெண்ட் கமிஷனராக
இருப்பவன்.

நிச்சய நேரத்தின் போது மதுவால்
நிலாவிடம் சரியாகப் பேச
முடியவில்லை. நிலாவும் தன் அன்னை
ஜானகி சொன்ன வேலையில்
மும்முரமாக இருந்தபடி இருந்தாள்.

"எப்படி இருக்க நிலா? நீ வந்தபோது
சரியாகப் பேச முடியவில்லை.. நீயும்
ஆன்ட்டியிடம் ஏதோ வேலையாக
இருந்தாய்" என்று பேச்சைத்
தொடங்கினாள் மது.

"அதெல்லாம் ஒன்றும் இல்லை
அண்ணி.. நானும் நீங்கள் பிசியாக இருப்பீர்கள்.. மோதிரம் மாத்திய பிறகு
பேசிக் கொள்ளலாம் என்று
இருந்தேன்" என்றாள் நிலா.

"இந்தப் புடவை உங்களுக்கு அழகா
இருக்கு அண்ணி. உங்களைப் பார்த்து
எவ்வளவு வருடம் ஆச்சு. காலேஜ்
சேர்ந்தவுடனே ரொம்ப பிஸி
ஆகிட்டிங்க. ஊரூக்கு கூட அவ்வளவா
வரவே இல்ல" என்ற நிலா "மது
அண்ணியும் நானும் பெயின்டிங்
க்ளாஸ்ல ப்ரண்டஸ் ஆனோம்" என்று
தன் கணவன் அரவிந்த்திடம்
கூறினாள்.

கார்த்திக் தன்னை யோசனையாய்ப்
பார்ப்பதை உணர்ந்த மது "நிலா
இப்போது எத்தனாவது மாதம்?" என்று
பேச்சை மாற்றினாள்.

"இரண்டு மாதம் அண்ணி" என்றாள்
நிலா. கார்த்திக்கிற்கு மது பேச்சை
மாற்றுகிறாள் என்று நன்கு புரிந்தது.
இருக்கட்டும் எவ்வளவு நாள் இப்படியே
இருக்கிறாய் என்று பார்க்கிறேன்
என்று மனதில் நினைத்தான்.
கார்த்திக் அரவிந்த் வருணிடம்
உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்தாலும் மதுவையே கவனித்துக்
கொண்டு இருந்தான். மது நிலாவிடம்
இயல்பாகப் பேசிக் கொண்டு
இருப்பதைக் கண்டவன் 'ஏன்
தன்னிடம் இவ்வாறு முகம் கொடுத்து,
இயல்பாக பேச மாட்டேன்கிறாள்'
என்று எண்ணினான்.

அதற்குள் ராதா வந்து சாப்பிட
அழைக்க அனைவரும் ஒன்றாக
அமர்ந்து சாப்பிட்டனர். சாப்பிட்டு
முடித்துவிட்டு ஜானகி மது அருகில்
வந்து அமர்ந்தார். "அடுத்த வாரம் உப்பு
சர்க்கரை மாற்றி விடலாம்" என்று பேச்சை ஆரம்பித்தார் ஜானகி. சீர்
விஷயம் பேசும் போது வேலுமணியும்
ஜானகியும் உங்கள் பெண்ணிற்கு
எவ்வளவு செய்ய ஆசைப்
படுகிறீர்களோ அதையே செய்யுங்கள்
என்று சொல்லிவிட்டனர். கல்யாணச்
செலவைப் பாதிபாதியாக இரு
குடும்பமும் ஏற்றுக் கொண்டது.

பிறகு ஜானகி அம்மாளிடம் கிடைத்த
தனிமையில் "என் மேல் உங்களுக்கு
கோபம் இல்லையா ஆன்ட்டி" என்று
மது கேட்டாள். மதுவிற்கு இந்த
விஷயம் உறுத்திக் கொண்டே இருந்த
ஒன்று.. அவருக்கு கோபம்
இருந்தாலும் நியாயமானதும் கூட
என்று நினைத்தாள்.

"என்ன கோபம் மது?" என்று முகம்
மாறாமல் கேட்டார் ஜானகி.

"அதான் ஆன்ட்டி.. உங்கள் மகனை
நான் விரும்புவதாகச் சொன்னது.
உங்களுக்கு என்னிடம் கோபம்
வரவில்லையா" என்று கேட்டாள்.

"முதலில் கொஞ்சம் கோபம் வந்தது
மது. அது நான் கார்த்திக்கின் அம்மா
ஸ்தானத்தில் இருந்து பார்த்தபோது.
ஆனால் நீ என் மகனை நினைத்துக்
கொண்டு வேறு கல்யாணமே
வேண்டாம் என்று நினைத்தாய் பார்..
அப்போது என் மகனிற்காக ஒருத்தி
இப்படி இருக்கிறாளே என்று
கொஞ்சம் கர்வமாக இருந்தது...
அதனால் தான் கல்யாணத்தைத்
தள்ளிப் போட்டுக் கொண்டு
இருந்தவனிடம் பிடிவாதமாகப்
பேசினேன். என் மகனிற்கு கல்யாணம்
ஆக வேண்டும் என்ற சுயநலம் என்றும்
வைத்துக் கொள்ளேன்" என்றவர்
"உன்னை விடவும் மனதில்லை மது.. நீ
கார்த்திக்கிறகு ஏற்ற துணையாக
இருப்பாய் என்றும் தோன்றியது "
என்று மருமகளின் கையைப்
பற்றினார்.

"தாங்க்ஸ் ஆன்ட்டி.." என்ற மதுவின்
மனம் உறுத்தல் நீங்கி நிம்மதி
அடைந்தது.

"இப்போது தான் கோபம் வருகிறது"
என்று பொய்க்கோபம் காட்டினார்.

"ஏன் ஆன்ட்டி?" என்றாள் மது
புரியாமல் தன் விழியை விரித்தபடி.

"அதென்ன ஆன்ட்டி.. அத்தை என்று
சொல்ல வேண்டியது தானே" என்றார்
குறையாக.

"சரி அத்தை" என்று டக்கெனச்
சொல்லி மாமியாரைச் சிரிக்க
வைத்தாள். அவரிடம் இன்னமும்
பேசிப் பழகினாள். ஏனோ அவரிடம்
சகஜமாகப் பேச முடிந்தது.
இருவருக்குமான உறவில் நல்ல
பிணைப்பும் ஏற்பட்டதை உணர்ந்தாள்
மது.

ஆனால் கார்த்திக்கோடு எப்போது
இவ்வாறு பழக முடியுமோ என்று
யோசிக்க ஆரம்பித்தது மதுவின் மது.
 

writer

Saha Writer
Team
Messages
50
Reaction score
26
Points
8
அத்தியாயம்-9

கல்யாணத்திற்கு ஒரு மாதமே
இருந்ததால் கல்யாண வேலையை
இரு வீட்டாரும் விரைவாக செய்ய
ஆரம்பித்தனர். பத்திரிகைத் தயாராகி
வர இருவீட்டாரும் உறவுகளுக்குக்
கொடுக்க ஆரம்பிக்க எல்லாம்
பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது..
கார்த்திக் வீட்டில் வேலுமணி-ஜானகி
தம்பதியர் பத்திரிகை தர, மது வீட்டில்
சுந்தரமூர்த்தியும் உமாவும் தர
ஆரம்பித்தனர். திருமுருகன் மண்டபம்,
கல்யாண வேலைகளுக்கு ஆள்
பிடிப்பது எனப் பார்க்க எல்லா
வேலைகளும் சுறுசுறுப்பாக நிற்காமல்
சுழன்று கொண்டு இருந்தது.

மது தான் தன் சிந்தனைகளிலேயே
இருந்தாள். எட்டு வருடங்களுக்கு
முன்னால் அவனிடம் காதல்
வயப்பட்டது எல்லாம் மின்னலாய்ப்
உள்ளே பரவின. அன்று அவனின்
மேல் வைத்த காதல் மனதிற்குள் எழுதி வைத்த சித்திரமாய்
கார்த்திக்கின் நினைவுகளிலேயே மது
உழன்று கொண்டு இருந்தாள். அவன்
அன்று மறுத்ததும் இன்று அவனே
தன்னைச் சம்மதிக்க வைத்ததும் என
அனைத்தையும் நினைத்து தன்னை
அறியாமல் பல நாட்களுக்குப் பிறகு
சிரித்தாள்.

மேலும் ஒரு வாரம் செல்ல அடுத்து
வந்த ஞாயிறு அன்று, கொஞ்சம்
தாமதமாக எழுந்த மது பல் துலக்கி
முகத்தை கழுவிக் கொண்டு டீ
குடிக்கப் படி இறங்கினாள். படி பாதி
இறங்கிய மது ஹாலில் கார்த்திக்
அமர்ந்து இருப்பதைப் பார்த்து
அப்படியே நின்று விட்டாள். தான் இரவு
உடையில் இருப்பதை உணர்ந்தவள்
அப்படியே திரும்பி ஓடி அறைக்குள்
புகுந்துவிட்டாள். ஓடும் சத்தம் கேட்டு
நிமிர்ந்தவன் சத்தம் கேட்ட திசையைப்
பார்க்க மது மறைவது மட்டும் தான்
அவனுக்குத் தெரிந்தது. 'இவள் ஏன்
இப்படி ஓடுகிறாள்' என்று மனதிற்குள்
நினைத்துச் சிரிக்க, அதற்குள்
அவனை வரவேற்று விட்டு உள்ளே
சென்ற உமா சுந்தரமூர்த்தியையும்
திருமுருகனையும் அழைத்து வந்தார்.

"வாங்க மாப்பிள்ளை" என்றபடி
இருவரும் வந்து சோபாவில்
அமர்ந்தனர்.

"என்ன சாப்பட்றீங்க?" என உமாக்
கேட்டார்.

"இல்லை அத்தை. எதுவும் வேண்டாம்.
இப்போது தான் சாப்பிட்டு விட்டு
வந்தேன்" என்றான் கார்த்திக்.

"அப்போ ஒரு ஜூஸ் ஆவது குடிங்க"
என்று திருமுருகன் சொல்ல சரியென்று தலை ஆட்டினான்
கார்த்திக். பின் வருணும் வந்து
சேர்ந்தான்.

பொதுவாக கல்யாண வேலையைப்
பற்றி பேசிக் கொண்டிருக்க, உமா
பழச்சாறை கொண்டு வந்து தந்தார்.

"கல்யாணத்திற்கு ஏதோ நம்
முறைப்படி மதுவிற்கு நகை வாங்க
வேண்டும் என்று அம்மா
சொன்னார்கள். மதுமிதாவை கூட்டிச்
சென்று அவளுக்கு பிடித்த மாதிரி
வாங்கித் தரச் சொன்னார்கள்.
அதனால் உங்களிடம் கேட்டு மதுவை
கோவை வரை அழைத்துச்
செல்லலாம் என்று வந்தேன்" என்று
ஜூஸ் டம்ளரை கையில் வைத்தபடியே
பேசினான்.

முதலில் அனைவரும் ஒருவரை
ஒருவர் பார்க்க அவர்களின் நிலையும்
அவனுக்குப் புரிந்தது. "வந்து நம்ம
வழக்கப்படி இது பழக்கமில்லை தான்
மாமா.. ஆனால் மதுமிதாவைக் கூட்டிப்
போனால் அவளிற்குப் பிடித்த மாதிரி
வாங்கி விடலாம். ஈவ்னிங்குள்ள வந்து
விட்டுவிடுவேன்" என்று கார்த்திக் சொல்ல பெரியவர்களால் மறுக்க
முடியவில்லை.

அனைவரும் சரி என்றுத் தலையாட்ட
"ஜூஸ் எடுத்து குடிங்க. நான் மதுவை
கிளம்பி வரச் சொல்கிறேன்" என்று
உமா மதுவின் அறைக்குச் சென்றார்.

சரி குளித்துவிட்டுக் கீழே செல்லலாம்
என்று குளித்து முடித்து ஒரு பழைய
சுடிதார் செட்டை அணிந்தவள் தன்
அன்னை வந்ததைக் கவனித்து
"என்னமா?" என்று வினவினாள்
மதுமிதா..

"மாப்பிள்ளை வந்து இருக்கிறார்..
ஏதோ முறைப்படி நகை வாங்க
வேண்டுமாம்.. அதான் உன்னைக்
கோவை வரை கூட்டிப் போக
வந்திருக்கிறார்" என்றார் உமா
மகளிடம்.

"அப்பா என்ன சொன்னார்?" என்று
யோசனையாகக் கேட்டாள் மது.

கீழே நடந்த உரையாடலை உமா
மகளிடம் தெரிவிக்க 'பரவாயில்லை
வருங்கால மாமனார் மாமியாரைக்
கூட பேச்சில் கையாலும் சாமர்த்தியம்
இருக்கு.. அதாவது நயமாகப்
பேசிகிறான்' என்று நினைத்தாள் மது.

"சரி துணி மாத்திட்டு வரேன்" என்று
அன்னையை அனுப்பி விட்டு ஒரு ப்ளூ
ஜீன்ஸ் மற்றும் அதற்கு பொருத்தமான
ஒரு வெந்தய நிறக் குர்தா டாப்பை
அணிந்து கீழே வந்தாள். மது
சாப்பிடவில்லை என்று தெரிந்து
அவளை சாப்பிட்டு வரச் சொன்ன
கார்த்திக், சுந்தரமூர்த்தி திருமுருகன்
மற்றும் வெளியே சென்றுவிட்டு வந்த
சண்முகம்-ஈஸ்வரி தம்பதியரோடு
பேசிக்கொண்டிருந்தான்.

மது சாப்பிட்டு விட்டு வர "சரி நாங்க
கிளம்பறோம்" என்று எழுந்தவன்
அனைவரிடமும் விடைபெற்று விட்டு
முன்னால் நடந்து சென்றான். மதுவும்
ஏறிக்கொள்ள காரை எடுத்தான்
கார்த்திக்.

இருவருமே கொஞ்ச நேரம் எதுவும்
பேசவில்லை. கார்த்திக் தான் முதலில்
பேச்சை எடுத்தான் "உன் காதுல
அத்தை என்ன மதுமிதா
சொன்னாங்க" என்று கேட்டான்.

இவன் முன்னே கார் எடுக்க
சென்றபோது அம்மா சொன்னது
இவனுக்கு எப்படித் தெரியும் என்று
நினைத்தவள், "வந்து... ஒரு சுடிதார்
அல்லது சாரி அணிந்து சொல்ல
வேண்டியதுதானே என்றார்கள்" என்று
கை நகத்தைப் பார்த்தபடிக் கூறினாள்.

"ஏன் இதுவே உனக்கு நன்றாக
இருக்கிறதே" என்று சொன்னான்
கார்த்திக் இயல்பாக. மது ஒரு
புன்னகை மட்டும் சிந்தினாளே தவிர
எதுவும் பேசவில்லை.

நகைக்கடையை அடைந்தவுடன் "மது
எந்த நகைப் பிடிக்குதோ அதையே
எடுத்துக்கொள்" என்றான் கார்த்திக்.
காரை பார்க் செய்து விட்டு இருவரும்
உள்ளே சென்றனர். மது ரொம்பவும்
சிறிதும் இல்லாமல் பெரிதும்
இல்லாமல் ஒரு நடுத்தர சைஸ் செட்
நகைகளையேப் பார்த்தாள்.
அவளுக்கும் இந்த மாதிரி வந்து
பார்த்துப் பழக்கம் இல்லை.. சிறிய
வயதில் எப்போதோ அம்மா
சித்தியுடன் வந்து பார்த்த நினைவு..
அதுவும் 'எனக்கு அங்க வந்தால் போர்
அடிக்கும்.. நான் வரல.. நீங்களே
ஏதாவது வாங்கிட்டு வாங்க' என்று
அடுத்த தடவை அழைத்த போது
சொன்னது நினைவு வந்தது
மதுவிற்கு. அப்போதே வந்து
இதெல்லாம் பழகி இருக்க வேண்டும்
என்று தன்னையே திட்டினாள்.

"இதில் எது நல்லா இருக்கு?" என்று
கஷ்டப்பட்டு இரண்டு செட்டைத்
தேர்ந்து எடுத்துக் கார்த்திக்கிடம்
காண்பித்துக் கேட்டாள்.

"இப்படிப் பார்த்தால் எப்படித்
தெரியும்?" என்றவன் எழுந்து அவள்
பின்னால் நின்று அந்த செட்டுகளை
வாங்கி அவள் கழுத்தில் வைத்து,
இருவரின் முன்னால் இருந்த
ஆளுயரக் கண்ணாடியைச்
சாதரணமாகப் பார்த்தான் கார்த்திக்.
அவன் தங்கை கல்யாணத்தின் போது
அம்மாவும் தஙகையும் இப்படிப் பார்த்த
நியாபகம் அதுதான் சாதாரணமாக
மதுவிடம் அப்படி வைத்துப் பார்த்தான்.

மதுதான் அவ்வளவு அருகில் அவன்
நின்றதில் மூச்சடைத்துப் போனாள்.
இவனால் எப்படி இவ்வளவு சாதாரணமாக இருக்க முடிகிறது
என்று எண்ணினாள்.

"இந்த லோட்டஸ் டிசைன் நல்லா
இருக்கு மது" என்று நகையைத்
தேர்ந்து எடுத்தான்.

"சரி இதையே பில் போட்ருங்க" என்று
கடை ஊழியரிடம் தந்து பில்போட்டு
வாங்கி வெளியே வந்தனர்.

அவர்கள் இருவரும் கார்
பார்க்கிங்கிற்கு வர கார்த்திக்கிற்கு
ஒரு போன் கால் வந்தது. அவளைக்
காரில் உட்காரச் சொல்லிவிட்டுப்
போனை எடுத்துப் பேசிக் கொண்டு
இருந்தான்.

காரின் வலது பக்கமாக இருந்த
பில்லரின் மீது சாய்ந்தபடி நின்று
பேசிக் கொண்டு இருந்தான் கார்த்திக்.
காற்றில் ஆடிக் கொண்டிருந்த
அவனது அடத்தியான கேசமும்,
சுறுசுறுப்பான விழிகளும், கம்பீரமான
ஆளுமைத்தனத்துடன் ஒரு கையை
பான்ட் பாக்கெட்டில் விட்டபடி
யாருடனோ பேசிக் கொண்டு
இருந்தவனைக் காணத்
தெவிட்டவில்லை மதுவிற்கு.
மதுவின் பார்வையைக் கண்டவன்
புருவத்தைச் சுருக்க மது டக்கென்று
பார்வையைத் திருப்பி விட்டாள்.

மனம் மறைத்தாலும்
என் செயல் காட்டி
கொடுத்து விடுகிறது
உன் மீதுள்ள
காதலை..
உன் பார்வையைக்
காணும் போதெல்லாம்
ஆனந்த யாழாய்
மாறுகிறது
என் இதயத்துடிப்பு!


என்று மதுவின் மனம் கவிதை
பாடியது.

போனை வைத்துவிட்டு வந்தவன்
"மதுமிதா.. ஒரு சின்ன வேலை.. இங்க
பக்கத்தில் தானே ஒரு மால் இருக்கு..
அங்க போயிட்டு ஒரு பத்து நிமிடத்தில்
கிளம்பி விடலாம்" என்று காரை
ஸ்டார்ட் செய்த படியே சொன்னான்.

"ம்ம்" என்று தலையை ஆட்டினாள் மது.

கார் பார்க்கிங்கில் காரை
நிறுத்திவிட்டு லிப்டில் ஏறினர்
இருவரும்.. முதல் தளம் வர கூட்டம்
கொஞ்சம் சேர்ந்தது.. இரண்டாம்
தளத்தில் இன்னும் மூன்று பேர்
சேர்ந்தனர். கூட்டம் கொஞ்சம் நெருக்க
மது தன்னை அறியாமல்
கார்த்திக்கிடம் நெருங்கி அவன்
கையைப் பற்றியபடி நின்றாள்.
மது தன் கையைப் பிடித்தவடன்
கார்த்திக்கிற்கு ஏனோ
வித்தியாசமான.. மென்மையான
உணர்வு.. கார்த்திக்கும் மதுவின்
கைகளை மென்மையாக அவளுக்கு
வலிக்காதவாறு அழுத்திப் பிடித்தான்.
அவளின் முகத்தைக் கீழ்க்கண்ணால்
அவள் என்ன ரியாக்ட் செய்கிறாள்
என்று பார்த்தான். மதுவோ இந்தக்
கூட்டம் எப்போது செல்லும் என்றபடி
முகத்தை வைத்துக் கொண்டு நேராகப்
பார்த்து நின்று கொண்டு இருந்தாள்.
"இதை எல்லாம் வைத்துக் கொண்டு
கஷ்டம் தான்.. கடவுளே.." என்று
முணுமுணுத்துச் மௌனமாகச்
சிரித்தபடி பெருமூச்சை விட்டான்.

பிறகு நான்காவது தளத்தில் இவர்கள்
லிப்டை விட்டு வெளியே வர மதுவிற்கு
அப்போது தான் 'அப்பாடா' என்று
இருந்தது.

இருவரும் சென்று ஒரு காஃபி
ஷாப்பில் அமர, ஒரு நாற்பது வயது
மதிக்கத்தக்க ஒருவர் வந்து அவர்கள்
இருவரின் எதிரில் அமர்ந்தார்.

"ஹலோ கார்த்திக் சார்" என்றார் அவர்
அமர்ந்தபடி.

"ஹலோ மூர்த்தி சார்.." என்றவன்
"டாக்குமென்ட் ரெடி தானே" என்று
வினவினான்.

"ரெடி சார்.. இந்தாங்க ஒரு தடவை சரி
பார்த்துக்கோங்க" என்று ஒரு
பைலைக் கார்த்திக்கிடம் தந்தார்.

அதை வாங்கிச் சிறிது நேரம் சரி
பார்த்தவன்.. "ஓகே பக்கா.. எல்லாம்
சரியாக இருக்கு.. நாளைக்கு ஆன
சீக்கரமே வந்து விடுங்க.. டைப் செய்து
மெயில் அனுப்பி விடலாம்" என்றான்
கார்த்திக். குரலில் கடினம் இல்லை
என்றாலும் அவனது குரல்
கட்டளையிட்டது போலத் தான்
உணர்ந்தாள் மது.

"மூர்த்தி சார் இதுதான் நான் என்
fiancee மதுமிதா.." என்றவன்
மதுவிடம் திரும்பி "மதுமிதா இது
மூர்த்தி சார். என் பி.ஏ .. அப்பா
காலத்தில் இருந்து நம் ஆபிசில்
வேலையில் இருக்கிறார்" என்று
இருவருக்கும் இருவரையும் அறிமுகம்
செய்து வைத்தான்.

பின் அவரும் எழுந்து கிளம்ப
கார்த்திக்கும் மதுவும் எழுந்து
கிளம்பினர். கீழே வரும் போது
escalator இல் வந்தனர்.. இரண்டாவது
தளத்திற்கு வந்த போது தான் மது
மிதுனாவைப் பார்த்தது. தோழியைக்
கண்டவளுக்கு மிகவும் குஷியாகிப்
போனது.

"ஹே.. மிதுனா" என்றாள் மது. மிதுனா
அங்கு யாருடனோ போனில்
பேசியபடியே திரும்பினாள்.

"ஏய் மது நீ என்னடி இங்க?" என்று
போனை வைத்த மிதுனா மதுவின்
அருகில் கார்த்திக் இருப்பதைப்
பார்த்து விட்டு மதுவைக் கேலியாகப்
பார்த்தாள்.

"இல்லை அவரும் நானும் ஒரு ஜுவல்
வாங்க கோவை வந்தோம்" என்று
சற்று நெளிந்தபடி பதில் கூறினாள்
மதுமிதா.

"ஒ... ஒகேஒகே" என்றாள் மிதுனா.

"ஹாய் அண்ணா" என்றாள்
கார்த்திக்கிடம். கார்த்திக்கிடம் மிதுனா
அவ்வப்போது வீட்டில் வைத்து
பேசுவது உண்டு. அப்படி இருவருக்கும்
ஒரு நல்ல அறிமுகம் இருந்தது.

"ஹாய் மா.. நீயா மிதுனா என்னிடம்
போனில் பேசியது" என்று கேட்டான்
கார்த்திக்.

"அய்யோ அண்ணா.. நான் பேசினால்
நீங்க கண்டுபிடித்து விடுவீர்கள் என்று
ஸ்வேதா தான் பேசினாள்" என்றாள்
மிதுனா அவசரமாக.

"அது யாரு?" என்று மதுவைக்
கேள்வியாகப் பார்த்துக் கேட்டான்
கார்த்திக்.

ஸ்வேதாவைப் பற்றி சொன்ன மது
"அவளை இங்கு கோயம்பத்தூரில்
தான் கல்யாணம் செய்து
தந்திருக்கிறார்கள்.. RS புரத்தில் தான்
அவள் வீடு" என்றாள் மது.

"ஒ.. சரி.. எனக்கு பசிக்கிறது.. லஞ்ச்
சாப்பிடப் போகலாம்" என்றவன் "நீயும்
கூட வா மிதுனா.." என்று கார்த்திக்
அழைக்க "அண்ணா வந்து.." என்று
மிதுனா இழுக்க கார்த்திக் என்ன
என்பதைப் போலப் பார்க்க தன்னால்
சரி என்று ஒத்துக்கொண்டாள் மிதுனா.
தோழி தலையை ஆட்டுவதைப்
பார்த்தவளுக்கு சிரிப்பு தான் வந்தது.

"ஸ்வேதாவையும் அழைப்போமா?"
என்று மது கார்த்திக்கிடம் கேட்க சரி
என்று தலை அசைத்து விட்டுக் காரை
நோக்கி நடந்தான்.

ஸ்வேதாவிடம் பேசிவிட்டு போனை
வைத்த மது "ஆமாம் நீ எங்க இங்கே?"
என்று மிதுனாவிடம் வினவினாள்.

"நான் என் காலேஜ் பிரண்ட்ஸைப்
பார்க்க வந்தேன் டி" என்றாள் மிதுனா.
இருவரும் பேசிய படியே மாலில்
இருந்து வெளியே வர கார்த்திக் காரை
எடுத்துக் கொண்டு வந்தான்.

"ஸ்வேதா நேராக அங்கு விடுவதாக
சொல்லிவிட்டாள்" என்று மது ஏற
மிதுனாவும் பின்னால் ஏறிக்
கொண்டாள்.

இவர்கள் அங்கு சென்ற பதினைந்து
நிமிடங்களில் ஸ்வேதா அங்கு
வந்துவிட்டாள். வந்தவள் மதுவையும்
மிதுனாவையும் கட்டிக்கொண்டாள்.
கிட்டத்தட்ட ஸ்வேதாவை இரண்டு
ஆண்டுகளுக்குப் பிறகு பார்க்கிறாள்
மது. 'தன் இன்பத்திலும் துன்பத்திலும்
எப்போதுமே கூட இருக்கிறாளே..
துன்பத்தில் ஆறுதல் தேற்றி
தூக்கிவிட்டு, இன்பத்தில் தனக்குச்
சமமாக துள்ளி.. இவர்களை மாதிரி
பிரண்ட்ஸ் கிடைக்க குடுத்து வைத்து
இருக்க வேண்டும் என்று
எண்ணினாள் மது.

"வாழ்த்துக்கள் புதுப் பெண்ணே" என்ற
ஸ்வேதா "உங்களுக்கும் அண்ணா"
என்று கார்த்திக்கை பார்த்து தன்
வாழ்த்துகளைத் தெரிவித்தாள்.

பிறகு நால்வரும் ஹோட்டலுக்குள்
நுழைய மிதுனாவும் ஸ்வேதாவும்
ஒருபக்கம் அமர்ந்தனர். அவர்கள்
எதிர்ப்பக்கம் மதுவும் கார்த்திக்கும்
அமர்ந்தனர். சர்வர் வரவும் அவரவர்
ஆர்டர் செய்து விட்டுப் பேச
ஆரம்பித்தனர்.

"ஏன் ஸ்வேதா ஹஸ்பண்டையும்
பாப்பாவையும் கூட்டிட்டு வரல" என்று
குறையாகக் கேட்டாள் மது.

"அவர் ஒரு வேலையாக
காலையிலேயே மேட்டுப்பாளையம்
சென்று விட்டார் டி. பாப்பாவும்
வெளியே வந்தால் அழுவாள். அதான்
தூங்க வைத்து அத்தையிடம்
சொல்லிவிட்டு வந்தேன்" என்ற
காரணத்தை ஸ்வேதா சொன்னாள்.

மேலும் "ஆனால் மது மேடம் என்
கல்யாணத்திற்கே வரவில்லை
அண்ணா" என்று கார்த்திக்கிடம்
சொல்லிவிட்டு "நியாபகம்
இருக்கட்டும்" மதுவை கையை
உயர்த்தி மிரட்டினாள்.

"ஏன்?" எனக் கேட்டான் கார்த்திக்.

"அதான் மேடம் ஊருக்கு அவ்வளவாக
வருவதையே நிறுத்திவிட்டாளே.
நாங்களே கிட்டதட்ட இரண்டரை
வருடம் கழித்துப் பார்க்கிறோம்
அண்ணா" என்றாள் மிதுனா.

கார்த்திக் மூவரையும் கேள்வியாகப்
பார்க்க ஸ்வேதாவோ "அண்ணா
முதலில் இருந்து சொன்னால் தான்
புரியும்" என்று சொல்ல, "வேண்டாம்"
என்றபடி சைகை செய்தாள் மது.
கார்த்திக் மது சைகை செய்ததை
பார்த்துவிட்டான்.

"நீங்க சொல்லுங்க" என்று மதுவை
கேலியாகப் பார்த்தபடி மிதுனா
ஸ்வேதாவிடம் சொன்னான் கார்த்திக்.

பள்ளியில் கேம்ஸ் ரூமில் அவன்
போட்டோ எடுத்தது, அதை அவள்
அறையில் யாருக்கும் தெரியாமல்
வைத்தது. தனியாக அவள் சில சமயம்
சிரித்தது, அவனைப் பற்றி
மிதுனாவிடம் விசாரித்தது, அவனைப்
பார்த்து கோவிலில் ஓடி மறைந்தது.
அடுத்து அவனிடம் போனில் பேசிய
பின்பு அவ்வளவாக ஊருக்கு வராமல்
இருந்துவிட்டு அப்படியே லண்டன்
சென்றது என அனைத்தையும்
சொல்லிவிட்டனர்.

எல்லாவற்றையும் கேட்டு விட்டு
"இவ்ளோ நடந்துச்சா?" என்று
வியப்பாக கேட்டான். அவன் நினைத்தது மது அவன் வேண்டாம்
என்று சொன்ன அன்றே
மறந்திருப்பாள் என்று. மதுவை
திரும்பிக் குறும்பாக ஒரு பார்வை
பார்க்க மது திருதிருவென்று
விழித்தாள்.

அதற்குள் ஆர்டர் செய்த உணவு
வந்துவிட அனைவரும் சாப்பிட
ஆரம்பித்தனர். பழைய கதைகள்
எல்லாம் பேசி சாப்பிட்டு முடித்துவிட்டு
நான்கு பேரும் வெளியே வர
சிலுசிலுவென கோயம்புத்தூர் காத்து
அனைவரையும் தழுவிச் சென்றது.

ரெஸ்ட்ரூம் சென்று வருகிறேன் என்று
பேக்கை கார்த்திக் கையில் குடுத்து
விட்டு மது சென்றாள்.

மது சென்ற பின் "அண்ணா அவ
ரொம்ப கஷ்டப்பட்டுட்டானா. அவ
உங்கள அவ்ளோ லவ் பண்றா. அந்த
ஆக்ஸிடெண்ட் காரணம் உங்க கிட்ட
சொன்னாளா?" என்று ஸ்வேதா
வினவ "ம் சொன்னாமா" என்றான்
கார்த்திக்.

"மது அந்த டைம்ல உங்களைத் தான்
அண்ணா ரொம்ப மிஸ் பண்ணா.
நீங்க கூட இருந்தா எல்லாம்
சரியாகிவிடும் என்று சொல்லி
அழுதாள். ஆனா உங்க முகத்தைப்
பார்க்க முடியாது என்று அவளே
ரொம்ப குழப்பிக்கிட்டாள் அண்ணா.
உண்மையைச் சொல்லனும்னா
எல்லாத்துலையும் ஸ்டாராங்கா
இருக்க மது உங்க விஷயத்துல
ரொம்ப சென்சிட்டிவ்.. அவளை நல்லா
பாத்துக்கோங்க அண்ணா"என்று கூறி
முடித்தாள். அவள் முடிக்கும் போது
மதுவும் வந்து விட்டாள்.

"சரி அண்ணா அப்போ கிளம்பறேன்"
என்றாள் ஸ்வேதா.

"நானே வீட்டில் இறக்கிவிடுகிறேன்"
என்று கார்த்திக்கே ஸ்வேதாவை
வீட்டில் விட்டான். ஸ்வேதா
குழந்தையையும் பார்த்து விட்டு
பதினைந்து நிமிடத்தில் கிளம்பி
விட்டனர்.

"அண்ணா என்னை பஸ் ஸ்டாண்ட்ல
இறக்கி விட்ருங்க" என்றாள் மிதுனா.

"ஏன் மிதுனா.. எங்களுடனே
பொள்ளாச்சி வந்து விடு" என்றான்
கார்த்திக்.

"இல்லை அண்ணா ஒரு வேலை
இருக்கிறது. முடித்து விட்டு
அண்ணாவுடன் வந்துவிடுவேன்"
என்று சொல்ல சரியென்று
இறக்கிவிட்டான்.

கோவையைத் தாண்டும் வரை
இருவரும் பேசவில்லை. ரியர் வ்யூ
மிரரைத் திரும்பித் தன் முகத்தைப்
பார்த்தவன் "என்ன எப்படி மது லவ்
பண்ண? எதுனால பிடித்தது? என்று
ஒரு கையால் தலையைக்
கோதியபடியே மதுவிடம் வினவினான்.

இந்த கேள்வியைக் கேட்பான் என்று
எதிர்பார்க்கவில்லை என்று மதுவால்
சொல்ல முடியாது. தன் தோழிகள்
பண்ணின வேலையால் ஏதாவது
கேள்வி வரும் என்று எதிர்பார்த்து
இருந்தாள் தான். "அ... அது தெரியல"
என்றாள் நேராக ரோட்டைப் பார்த்தபடி.

"சரி என்ன பாத்து எதுக்கு திருவிழால
ஓடின?. பிடித்தவர்களைப் பார்த்தால்
ஓடுவார்களா என்ன?" என
யோசிப்பவன் போலப் பாவனை
செய்து கேட்டான்.

"அது ஏதோ... எனக்குத் தெரியல"
என்று தலைக் குனிந்தபடி பதில்
அளித்தாள் மது.

"அதுசரி.. ஒரு கேள்வி கேக்கறேன்.
அதற்காவது சரியான பதில் சொல்லு"
என்றான் கார்த்திக்.

"ம்ம்" என்றாள் மது.

"எனக்குப் போன் பண்ணி லவ்வ
சொன்னப்போ மட்டும் 'கார்த்திக்' ,
'கார்த்திக்' என்று கூப்பிட்ட. இப்போ
எங்க அதெல்லாம் காணோம்" எனக்
கேட்டான்.

"அது...அ..ப்போ...எனக்கு..." என்று
ஆரம்பித்தவள் திருதிருவென விழித்து

"தெரியவில்லை" என்ற பதிலையே
தந்தாள்.

"ஏன்னு எனக்கு தெரியும்" என்றவன்
ஸ்டியரிங்கில் கையை வைத்தபடி
கண்களால் மௌனமாக சிரித்தான்.

"ஏன்" என்று கேட்ட மதுவிற்கும் ஏதோ
புரிந்த மாதிரிதான் இருந்தது.

"அப்போ லவ்வர் பாயா நினைச்ச,
இப்போ கல்யாணம்
பண்ணிக்கொள்ள போகிறவர்
அதாவது கணவனாகப் போறவன்.
அதான் மரியாதை எல்லாம் பலமா
இருக்குன்னு தோனுது" என்றான்
அவளைப் பார்த்து ஊடுருவும்
பார்வையால்.

மதுவால் மறுக்க முடியாத
உண்மைதான். அவன் சொன்ன
காரணத்தில் மதுவிற்கு முகம் சிவந்து
விட்டது. முகத்தை வெளியே
வேடிக்கைப் பார்ப்பது போலத் திருப்பி
விட்டாள் மது. அவனும் அவளது
செய்கையைக் கண்டு மனதிற்குள்
சிரித்துவிட்டு "மது உனக்கு ஏதாவது
என்னிடம் கேட்க வேண்டுமா?" என்று
சீரியஸாகக் கேட்டான்.

"எதுவும் இல்லை" என்றாள் அவனைப்
பார்த்தபடி.

"எதுவுமே இல்லையா? இந்த
கன்டிஷன் அல்லது ஏதாவது உனக்கு
கேட்க வேண்டும் என்று தோன்றியது.."
என்றவன் "எதுவுமே இல்லையா?"
என்று புருவ முடிச்சுடன் வினவினான்.

"இருக்கு.." என்றாள் மது அமைதியான
குரலில் தலையைக் குனிந்தபடி.

"என்ன மது.. எதுவாக இருந்தாலும்
கேள்" என்று சொன்னான் கார்த்திக்.

"நீங்க உங்க கல்யாணத்தை தள்ளிப்
போட்டதுக்கு ஏதாச்சும் காரணம்
இருக்கா?" என்று கேட்டாள்.

மது இது ரொம்ப நாளாக யோசித்துக்
கொண்டு இருந்த ஒன்று. இன்று
அவனே கேட்க இதுதான் சமயம் என்று
கேட்டுவிட்டாள்.

"என்னக் காரணம்" என்று ஒரு நிமிடம்
யோசிப்பது போல பாவனை
செய்தவன் "அது ஒன்றுமில்லை மது..
உனக்கே தெரியும் நான் பாஸ்ட்
ரிளேசன்ஷிப்ல இருந்தது. அது
போனது அப்புறம் பிசினஸ்ல கவனம்
அதிகப் படுத்துக்கிட்டேன். ஆனால்
கல்யாணம் வேண்டாம் என்று எல்லாம்
முட்டாள் தனமான முடிவு
செய்யவில்லை" என்று
ஓரக்கண்ணால் மதுவை ஒரு நிமிடம்
பார்த்தவன் "இப்போது வேண்டாம்
என்றுதான் இருந்தேன்" என்றான்
கார்த்திக்.

அவன் தன்னை முட்டாள் என்று
சொல்லுவது புரிந்தது மதுவிற்கு. ஒரு
நிமிடம் அவனைப் பொய்க்கோபமாகப்
பார்த்தவள் பின்பு உதட்டைச் சுழித்து
வெளியே பார்த்தபடி திரும்பி விட்டாள்.

மது வீட்டில் அவளை உள்ளே வரை
சென்று விட்டவன் அனைவரிடமும்
சொல்லி விட்டு "பை மது" என்று
விட்டுப் போனான்.

அப்போது தான் போகும் போது
மதுமிதா என்று அழைத்தவன் இப்போ
மது என்று சொல்லுவதை மது
உணர்ந்தாள்.

வீடு வந்த தன் அறையில் புகுந்த
கார்த்திக்கிற்கு மது தன்னிடம் ஒரு
மாதிரி அமைதியாக இருப்பதும்
பிடித்திருந்தது. எல்லாரிடமும் ஏதாவது
திருப்பிப் பேசிபவள் தன்னிடம்
தடுமாறுவதைக் காண சுகமான
அனுபவமாக இருந்தது கார்த்திக்கிற்கு.
போனை எடுத்தவன் "குட் நைட்" என்று
வாட்ஸ்ஆப்பில் மதுவிற்கு
அனுப்பினான். இரண்டு நிமிடம்
கழித்து "குட் நைட்" என்று அதன்
பக்கத்தில் நாக்கை வெளியே
தள்ளியபடி கண்கள் கோனலாக
இருப்பது போன்ற ஒரு
நகைச்சுவையான ஸ்மைலி சிம்பள்
பொம்மையோடு மது அனுப்ப
கார்த்திக் 'அடியேயேயே' என்று
நினைத்தவாறு சிரித்தான்.
'இருக்கட்டும் இந்த வீட்டிற்கு வந்ந
பிறகு உன்னைப் பார்த்துக்
கொள்கிறேன்' என முடிவு செய்தான்.

திருமணம் இன்னும் பதினைந்து நாள்
என்ற நிலையில் இருந்தது.
 

writer

Saha Writer
Team
Messages
50
Reaction score
26
Points
8
அத்தியாயம்-10


நாட்கள் செல்லச் செல்ல அனைவரும்
எதிர்ப்பார்த்த திருமண நாள்
நெருங்கியது. மது திருமணத்திற்கு
முன்பு ஒரு வாரம் அதற்குப் பிறகு ஒரு
வாரம் என மொத்தமாகப் பதினைந்து
நாட்கள் விடுமுறை எடுத்திருந்தாள்.
திருமணத்திற்கு முதல் நாள் ரிசப்ஷன்
அடுத்த நாள் காலையில் பிரம்ம
முகூர்த்தத்தில் முகூர்த்தம் என்று இரு
குடும்பமும் முடிவு செய்து வைத்து
இருந்தனர். மதுவிற்கு ஏனோ
திருமண நாள் நெருங்க நெருங்க
படபட என்று தான் இருந்தது. எதனால் இப்படி என்று யோசித்தவளுக்கு
விடை தான் கிடைக்கவில்லை.
கார்த்திக்கைக் கல்யாண வேலையாக
அவ்வப்போது வீட்டில் சந்தித்த போது
தன்னிடம் இயல்பாக பேசியவனிடம்
பேசினாளேத் தவிர ஏதோ ஒதுங்கியே
இருந்தாள். அவனும் அதைக் கண்டும்
காணாதது போலத் தன்னியல்பில்
அவளை விட்டு இருந்தான்.

திருமணத்திற்கு முந்தைய நாள்
சிறுமுகையில் இருந்து
திருமணத்திற்கு வந்த
கார்த்திக்குடைய தாத்தாவும் பாட்டியும்
மதுவிடம் ப்ரியமாகப் பழகினர்.
மிதுனாவும் ஸ்வேதாவும் தன்
குடும்பத்துடன் வந்திருந்தனர்.

முகூர்த்தம் அன்று காலையில் மது
ரெடி ஆகிவிட்டாளா என்று ராதா
பார்க்கச் சொல்ல ஸ்வேதாவும்
மிதுனாவும் மணப்பெண் அறைக்கு
விரைந்தனர்.

ஸ்வேதா கதவைத் திறந்து உள்ளே
முதலில் உள்ளே செல்ல மிதுனா
ஸ்வேதாவின் பின்னால் சென்றாள்.
கதவு திறக்கும் சத்தம் கேட்டுத் திரும்பிய மதுவின் முகத்தை
ஸ்வேதாவும் மிதுனாவும் பார்க்க மது
பதட்டமாக இருப்பது தெரிந்தது.
ஆனால் முகூர்த்தச் சேலையிலும்
பார்லரில் இருந்து வந்தப் பெண்கள்
செய்த ஒப்பனையிலும் அழகாகத்
தெரிந்தவளைக் கண்டு இருவரும்
கையைத் தூக்கி சூப்பர் என்று
காண்பித்தபடி அருகில் சென்றனர்.

"ஹே... செம டி.. ஆனா ஏன்டி இப்படி
எக்ஸாம் ஹாலிற்கு போற மாதிரி
நிக்கற" என்றபடி ஸ்வேதா
வினவியபடி மதுவின் அருகில்
வர ஸ்வேதாவின் கையைப் பிடித்தாள்
மதுமிதா. வழக்கம் போல சில்லென்று
இருந்த அவளது கையை ஸ்வேதா
உணர்ந்தாள்.

"டிடி ஸ்வேதா.. இவ எக்ஸாம்
ஹாலிற்கு கூட இப்படி பதட்டமாகப்
போய் பார்த்திருக்கிறாயா" என்று
ஸ்வேதா தோளில் கையை மடக்கி
வைத்தபடிக் கேட்க, ஸ்வேதா க்ளுக்
எனச் சிரித்து "ஏன்டி இப்படி நிக்கற"
என்று மறுபடியும் மதுவிடம்
வினவினாள்.

"ஏய் எனக்கு பதட்டமாவே இருக்கு டி..
என்னன்னே தெரியல... ஏதோ
வயிறுலாம் கலக்கற மாதிரி ஒரு
ஃபீலிங்கா இருக்கு" என்று என்று
வயிற்றில் கையை வைத்து
டென்ஷனாகக் கூறினாள் அந்த 25
வயதுப் பாவை.

மிதுனா கேலியாகச் சிரிக்க ஸ்வேதா
அவளை முறைத்துவிட்டு மதுவிடம்
திரும்பினாள். "அது ஒன்னு இல்ல டி...
இது எல்லாருக்குமே இருக்க கல்யாண
டென்ஷன்.. எனக்குக் கூட இப்படித்
தான் இருந்துச்சு.. ரிலாக்ஸா இருடி"
என்று மதுவைச் சமாதானம் செய்தாள்
ஸ்வேதா.

அந்த நேரத்தில் உள்ளே வந்த நிலா
மூவரின் மனதின் திசையையும்
திருப்பினாள். "வாவ் அண்ணி..
செமையா இருக்கீங்க" என்றுத்
தன்அண்ணிக்கு புகழாரம் செய்தவள்
"முகூர்த்த நேரம் வந்துவிட்டது
அண்ணி.. உங்களை அழைத்து வரச்
சொல்கிறார்கள்" என்று மதுவைத்
தன்னுடன் அழைத்துச் சென்றாள்
நிலா.

"மாங்கல்யம் தந்துனானேனா.." என்று
ஐயர் சொல்ல மங்கல
வாத்தியங்கள்யாவும் அந்த
அதிகாலை நேரத்தில் சத்தமாக
முழங்க மதுவின் கழுத்தில் தாலியை
மூன்று முடிச்சிட்டு அணிவித்தான்
கார்த்திக். தாலியைக் கட்டியவன்
மதுவைக் காண மதுவும் அவனைத்
தான் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
ஏனோ மதுவிற்கு கனவா நினைவா
என்று புரியாத் தருணமாக இருந்தது.
ஆனால் மதுவின் கண்கள் பதட்டம்
கலந்தப் புன்னகையைச் சிந்தியது
அவனிற்காக.. கார்த்திக்கிற்கு
மதுவை எதற்காகவும் கலங்க
வைக்கக் கூடாது என்ற எண்ணம்
எழுந்தது. அவளின் இறந்த காலத்தை
மறக்க வைத்து நிகழ்காலத்தில்
வாழ்க்கையைத் தொடங்கி
எதிர்காலத்தில் சிறக்கும்படி
ஒருவருக்கொருவர் புரிந்து வாழ
வேண்டும் என்று எண்ணம் மனதில்
விருட்சம் கொண்டது'. 'தைரியமாக
இரு' என்று வாயில் சொல்லாமல்,
கைகளைப் பற்றி மதுவிற்கு செயலில்
உணர்த்தினான்.

மதுவிற்கோ ஏதோ இனம் புரியாத
உணர்வு தான். நேரம் சீக்கிரமாகச்
சென்று அந்த மங்கல நாளில்
கார்த்திக்கின் மனைவியாய் அவன்
அருகில் அவன் கட்டிய தாலியோடு
நிற்பதை ஆச்சரியத்தோடு
உணர்ந்தாள் மது. அவன் கட்டிய
தாலியைத் தொட்டுப் பார்த்துவிட்டு
அவனைப் பார்க்க, அவன் பட்டு
வேஷ்டி சட்டையில் அவளது
செய்கையைத் தான்
கவனித்துக்கொண்டு இருந்தான்.

"ஏன் மது கரெக்டா தானே
கட்டிருக்கேன்?" என்று கேலியாக
ஒற்றை புருவத்தைத் தூக்கி அவள்
காதின் அருகில் சென்று வினவினான்.

பட்டு வேஷ்டியில் தன் அருகில்
கம்பிரமாக நின்று காதில்
கிசுகிசுத்தவனைக் கண்டு மனம்
ரசிக்கத் தான் செய்தது மதுவிற்கு. "ம்
பரவாயில்லை.. காலங்காத்தால
தூங்கி விழாமல் கரெக்ட்டா கட்டீடிங்க"
என்று புன்னகைத்தவளிடம் நிலா
ஏதோ கேட்க வர அவளிடம்
திரும்பினாள் மதுமிதா.

அன்று வரை சுடிதாரிலும் ஜீன்ஸிலும்
வலம் வந்தவள் இன்று மாம்பழ
நிறத்தில்...ரோஸ் ரெட் பார்டர் வைத்த
சேலையில் அவன் கட்டிய தாலியோடு
பார்த்தவனுக்கு அவள் அன்று
பெண்மையின் முழு உருவமாக காட்சி
தர, அன்று வரை செய்தக் கேலிகள்
மறந்து வேறு விதமான எண்ணங்கள்
மனதில் எழ ஆரம்பித்தன.

மதுவின் நண்பர்கள் கார்த்திக்கின்
நண்பர்கள் மற்றும் உறவினர்கள்
என்று அனைவரும் திருமணத்திற்கு
வந்து சென்றனர்.

எல்லா சம்பிரதாயமும் முடிந்து மாலை
ஆனதும் இருவரையும் நல்ல நேரம்
பார்த்து மாப்பிள்ளை வீட்டிற்கு
அழைத்துச் சென்றனர். கார்த்திக்கின்
வீட்டில் வலது காலை எடுத்து
வைக்கும் போது ஒருநாள் நிலாவுடன்
பெயிண்டிங் க்ளாஸ் முடித்து வந்தது
நினைவு வந்தது மதுவிற்கு.

கேலிகளுக்கும், கோட்டாக்களுக்கம்
நடுவில் மதுவை அன்றைய
இரவிற்குத் தயார் செய்தனர். மது தன்
இதயத் துடிப்பு நிமிடத்திற்கு நிமிடம்
அதிகம் ஆவதை உணர்ந்தாள்.
கார்த்திக்கின் அறையைத் தயார் செய்து விட்டு வந்த நிலாவின்
கணவன் அரவிந்த் நிலாவைப் பார்த்து
மௌனமாகச் சிரித்தான். நிலாவும்
கணவனின் சிரிப்பைப் புரிந்து
கொண்டு உதட்டை மடக்கிச் சிரித்தாள்.

இதை கவனித்த மதுவிற்குத் தான்
'ஐய்யோ முருகா..இதுக வேற
சம்பந்தமே இல்லாம நடுவுல கலாட்டா
பண்றாங்களே" என்று இருந்தது. நிலா
மதுவைத் தயார் செய்து விட்டு
எதற்கோ வெளியே சென்றாள்.

ரெடி ஆகி நின்ற மதுவிடம் உமாவும்
ராதாவும் ஏதோ பேச வந்தார். தன்
அம்மா என்ன சொல்ல வருகிறார்
என்று மதுவிற்கு புரிந்தது. "பாரு
மது..." என்று உமா ஆரம்பிக்க.. "ஐயோ
அம்மா சித்தி எதுவும் சொல்லதீங்க..
எனக்கு என்ன சொல்ல வரீங்கன்னு
புரியுது.. எல்லாம் நான்
பாத்துக்கறேன்" என்று இரு
காதுகளையும் கையால் வைத்துப்
பொத்தியபடி சொன்னாள். உமாவும்
ராதாவும் ஒருவரை ஒருவர் பார்த்துச்
சிரித்துக் கொள்ள நிலா வந்து
மதுவை கார்த்திக் அறைக்கு
அழைத்துச் சென்றாள். மதுவின்
குடும்பத்தார் நாளை வருகிறோம்
என்று கார்த்திக்கின் குடும்பத்திடம்
விடைப்பெற்றுச் சென்றது.

மதுவை கார்த்திக் அறைக்கு அனுப்பி
வைத்துவிட்டு நிலா சிரித்தபடியே கீழே
திரும்பி விட்டாள். உள்ளே வந்து நின்ற
மதுவிற்கு தான் வயிற்றிக்குள் ஏதோ
எலி ஓடுவதைப் போல உணர்ந்தாள்.

பால்கனி கதவைச் சாத்திவிட்டு வந்த
கார்த்திக், பாலிகாட்டனில் ராயல் ப்ளூ
நிறப் புடவையில் மது நிற்பதைக்
கண்டதும் ஸ்தம்பித்து மூச்சடைத்து
தான் போனான். கையில்
பால்செம்பை வைத்துக் கொண்டு
ஏற்ற உடையிலும் எடையிலும்
நின்றவளைக் கண்டு அவனது
ஆண்மை விழிக்கத் தான் செய்தது.
திருதிருவென்று விழித்துக் கொண்டு
நின்றவளைக் கண்டவனுக்கு சிரிப்பும்
எழுந்தது.

உடனே சுயநினைவிற்கு வந்தவன்
"ஏன் மது அங்கேயே நின்னுட்ட? வந்து
உட்கார்" என்றபடி அவள் அருகில்
வந்தவன் அவள் கையில் இருந்த பால்
செம்பை வாங்கி டேபிளில் வைத்து
விட்டுக் கட்டிலில் அமர்ந்தான். அவன்
அமர்ந்ததும் சற்று தள்ளி அமர்ந்தாள்
மது. மதுவிற்கு என்ன செய்வது என்று
புரியாமல் இரு கைகளையும் இறுக
கோர்த்துக் கொண்டு உட்கார்ந்து
இருந்தாள்.

"இப்போது என்ன செய்வது.. இவன்
என்ன நினைக்கிறான்.. எப்படி
ஆரம்பிப்பது.. ஐய்யோ இவன்
மூஞ்சிய வேற பாத்தா பேச வேற
வராதே" என்று அவள் நினைத்துக்
கொண்டு இருந்தாள்.

"வந்து எனக்கு ரொம்ப
நெர்வஸா(nervous) இருக்கு. இது
எல்லாம் புதுசா இருக்கு. வந்து"
என்று கார்த்திக் சொல்ல, என்ன நாம
சொல்ல வேண்டியதை இவர்
சொல்றார் என்று நினைத்த மது
நிமிர்ந்து கார்த்திக்கைப் பார்த்தாள்.

அவள் நிமிர்ந்து குழப்பமாக பார்க்க
கார்த்திக் வாய்விட்டுச் சிரித்து
விட்டான். "என்ன இதைத்தானே
சொல்ல வந்த மது" என்று கிண்டலாக
கேட்டான்.

அவன் அப்படி இயல்பாகக் கேட்கவும்
மதுவும் கொஞ்சம் இயல்பிற்கு
வந்தாள். "நான் முன்னால் சொன்னது
தான் மது. நமக்கு எப்போ நம்ம
வாழ்க்கைய ஸ்டார்ட் பண்ணனும்னு
தோனுதோ அப்ப ஸ்டார்ட் பண்ணலாம்.
அதுவரைக்கும் நல்ல ப்ரண்ட்ஸா
இருப்போம். ஆனா இது நமக்குள்ளயே
இருக்கட்டும் வெளில சாதரணத்
தம்பதி மாதிரியே இருந்துப்போம்"
என்று தெளிவானக் குரலில் கார்த்திக்
கூறி முடித்தான். பிறகு சிறிது நேரம்
பேசிவிட்டு இருவரும் உறங்கினர்.

அடுத்த நாள் காலை எழுந்து குளித்து
விட்டு தலையைத் துடைத்தபடியே
ட்ரெஸிங் டேபிள் கண்ணாடி முன்
வந்து நின்ற மதுவிற்கு,
கண்ணாடியில் தன்னையும் தாண்டி
கட்டிலில் அமைதியாக உறங்கிக்
கொண்டு இருந்த கார்த்திக்கின் முகம்
தென்பட்டது. திரும்பி நின்று
அவனைப் பார்த்தாள். அடர்த்தியான
புருவத்தையும், நேரான
நெற்றியையும், செதுக்கினாற்
போன்ற முக அமைப்பையும் கண்டு
சைட் அடித்தவள் அந்த தாடையில்
இருந்த அழுத்தத்தைக் கண்டு பிடிவாதக்காரன் என்று நினைத்து
சிரித்தாள். முதலில் இருந்த மன
அழுத்தம் எல்லாம் குறைந்தது போல
உணர்ந்தாள் மது. எல்லாத்திற்கும்
என்ன காரணம் என்று யோசித்த
போது கார்த்திக்கையே மதுவின்
மனம் கை காட்டியது. ஏனோ சற்று
முன் கண்ணாடியில் கண்ட தன் முகம்
மிகவும் சற்றுத் தெளிவாக இருந்தது
போல உணர்ந்தாள்.

'இமை அசைவால் என்
எண்ணத்தை மாற்றி
இதழ் அசைவால் என்
பிடிவாதத்தை வீழ்த்தி
குறுஞ்சிரிப்பில் முன்பை விட
மனம் பறித்த என்னவனே..
எதார்த்தமான உன் பார்வையில் கூட
எனக்குள் பட்டாம்பூச்சி பறக்கின்றன..
என் கண்களுக்குள் உயிர்
என் இதயத்திற்குள் துடிப்பு
என் உயிருக்குள் வெளிச்சம்
என் வார்த்தைகளுக்குள் இனிமை
என் வாழ்க்கைக்கு அர்த்தம்
இவை அனைத்தும் நீயே!

என்று எண்ணி அவனைப்
பார்த்தபடியே நின்று கொண்டு
இருந்தாள் மது. பின் அவனிடம் சிறிது
அசைவு தெரிய கீழே சென்றுவிட்டாள்.

மது கீழே வந்து நேராக சமையல்
அறைக்குச் சென்றாள். அவள்
வந்ததைக் கவனித்த ஜானகி "வா மது..
இந்த காஃபியைக் குடித்துவிட்டு
கார்த்திக்கிற்கும் எடுத்துச் செல்"
என்ற ஜானகியிடம் "ஏதாவது ஹெல்ப்
வேணுமா அத்தை" என்று கேட்டாள்.

"என்ன மருமகளே.. வீட்டுக்கு வந்த
அடுத்த நாளே வேலை செய்யனுமா?
அதெல்லாம் நிறைய இந்த மாமியார் உனக்காக வைத்திருக்கிறேன்..
ஆனால் ஒரு வாரம் கழித்து.. இப்போ
கொஞ்சம் எல்லாம் ரிலாக்ஸ்
ஆகிக்கோங்க" என்று கண்களை
உருட்டி பொய்யாய் மிரட்ட மது
சிரித்துவிட்டாள்.

காஃபியைக் குடித்துவிட்டு தன்
கணவனுக்கு மது காஃபியை எடுத்துக்
கொண்டு செல்ல அவனும் பல்
துலக்கி முகத்தை துடைத்துக்
கொண்டு பாத்ரூமிலிருந்து வெளியே
வர சிரியாக இருந்தது.

"குட் மார்னிங் மது" என்றவன் அவள்
கையில் இருந்த காஃபியைப் பார்த்து
"ஓ பார்ரா... எனக்காக
வேலையெல்லாம் செய்யற மது, வீட்ல
எல்லாரையும் வேலை வாங்குவாய்
என்றல்லவா கேள்விப்பட்டேன்" என்று
யோசிக்கும் பாவனையில் மதுவிடம்
கேட்டுக் கொண்டே மதுவின் கையில்
இருந்த காஃபியை வாங்கிக்
கொண்டான்.

"அப்படி என்று யார் சொன்னது?"
என்று உதட்டைச் சுழித்தபடிக் கேட்டாள்
மது.

"யார் சொன்னால் என்ன?...
உண்மையைத்தானே சொல்லி
இருக்காங்க" என்று மேலும் மதுவை
சீண்டினான்.

"ஓ அப்படியா... அப்போ இனிமேல்
இங்கேயும் செய்யலை.. நீங்களே
எனக்கு டெய்லி மார்னிங் காஃபி
கொண்டு வாங்க" என்றாள் மது
மிடுக்காக.

"செய்து விட்டால் போகிறது" என்று
மதுவிடம் காலியான காஃபி கப்பை
வைத்து விட்டு, துணியை எடுத்துக்
கொண்டு குளியல் அறைக்குள்
புகுந்துவிட்டான்.

வெருப்பேறுவான் அல்லது
கோபப்படுவான் என்று நினைத்துத்
தான், மது இனிமேல் நீங்க காஃபி
எடுத்து வாங்க என்றது. ஆனால்
கூலாகப் பேசிவிட்டுப் போகிறானே
என்று நினைத்தாள். இவனைப்
புரிந்து கொள்வது கஷ்டம் தான் என்று
நினைத்தவள் ஒரு பெருமூச்சை
விட்டுவிட்டுக் கீழே வந்துவிட்டாள்.

ரெடியாகி கீழே வந்த கார்த்திக்கிற்கு
மதுவும் நிலாவும் டைனிங் ஹாலில்
பேசிக்கொண்டு இருந்தது காதில்
விழுந்தது.

"அண்ணா கல்யாணத்தைத் தள்ளிப்
போட்டுக் கொண்டு இருந்தது எங்கள்
எல்லாருக்கும் ரொம்ப வருத்தமாக
இருந்தது அண்ணி. பிடியே
கொடுத்துப் பேசமால் இருந்தது
எங்களுக்கு பயமாகக் கூட இருந்தது.
ஆனால் உங்களைப் பற்றி அம்மா
சொன்ன போது தான் அண்ணா
இரண்டு நாளில் சொல்கிறேன் என்று
சொல்லி சம்மதம் சொன்னார்.
அண்ணன் உங்களை கல்யாணம்
செய்யக் குடுத்து வைத்திருக்க
வேண்டும்" என்றாள் நிலா.

ஆனால் மதுவின் மனம் இல்லவே
இல்லை என்று மதுவிடம் சொல்லியது.
இத்தனை பேரின் சந்தோஷத்திற்குக்
காரணம் அவன் தானே.. என்ன தான்
அவனைக் காதலிப்பதாகச்
சொன்னாலும் அவனிடம் கல்யாணம்
வேண்டாம் என்று தானே சொன்னேன்
நான். அப்படி இருந்தவளின்
எண்ணத்தை மாற்றி இப்படி
எல்லோரின் முகத்திலும்
மகிழ்ச்சியைத் தவழச் செய்த
கணவனை நினைத்துப்
பெருமையாகத் தான் இருந்தது
மதுவிற்கு.

"அதெல்லாம் இல்லை. உன்
அண்ணன் மாதிரி ஒருத்தரை மணக்க
நான்தான் குடுத்து வைத்திருக்க
வேண்டும் நிலா" என்று மனதில்
நினைத்தை சொன்னாள் மது.
மனைவியின் பதிலைக் கேட்டக்
கார்த்திக்கின் முகத்தில் அவனை
அறியாமல் புன்னகை இழையோடியது.

"ஆஹா.... கணவரை விட்டுக்
கொடுக்காம பேசறீங்கலே" என்று
கண்ணடித்து கேலி செய்தாள் நிலா.

"ஏய் என்ன? என் பொண்டாட்டியை
வம்பிழுக்கற" என்றபடி டைனிங்
ஹாலிற்கு வந்தான் கார்த்திக்.

"என்ன அண்ணா நீயும் அண்ணியை
விட்டுக் கொடுக்காமல் பேசுகிறாய்"
என்று நிலா சிரிக்க "என்ன மச்சான்..
ஒரே நாள்ல தங்கச்சி கிட்ட சரண்டர்
ஆகிட்டிங்க போல" என்று நகைத்தபடி
அவர்களோடு அங்கு வந்த அரவிந்த்
சேர்ந்துகொண்டான்.

"ஆமாம் என் தங்கையிடம் நீங்கள்
சரண்டர் ஆன மாதிரி" என்று
அரவிந்தின் காலை வாரினான்
கார்த்திக்.

"ஓஹோ.. அண்ணா நடக்கட்டும்"
என்று பொய்யாய் முறைத்தாள் நிலா.

பிறகு மது வீட்டார் வந்து சேர்ந்தனர்.
அனைவரும் அமர்ந்து காலை
உணவை முடித்தனர். ஆண்கள்
எல்லோரும் அமர்ந்து அரசியல்,
விளையாட்டு என்று பேச பெண்கள்
எல்லாரும் வேறொரு அறைக்கு வந்து
அமர்ந்து பல கதைகளைப் பேசினர்.
ஆனால் கார்த்திக்கிற்கும் மதுவிற்கும்
மனம் உடன் இருந்தவர்களின் பேச்சில்
இல்லை.. ஏனோ இருவரும்
அவரவரோடு இருக்க விரும்பினர்.

பிறகு கிளம்ப அனைவரும் எழுந்து
ஹாலிற்கு வந்தனர். தன்
குடும்பத்தினர் அனைவரும் கிளம்பிச்
செல்ல நின்றபோது தான் மதுவிற்கு
முகம் வாடிவிட்டது. ஏனோ மொத்தக்
குடும்பத்தையும் ஒன்றாகக்
கிளம்புகிறோம் என்று நின்ற போது
கஷ்டமாக இருந்தது.

அவளது முகவாட்டத்தைக் கண்ட
சுந்தரமூர்த்தி "என்னமா ஊருக்குள்ளே
தானே இருக்கிறோம். வாரந்தோறும்
அத்தையோடு கோவிலுக்கு வந்தால்
எங்களைப் பார்க்க போகிறாய்" என்று
அருகில் வந்து மகளின் தலையை
வருடிச் சமாதானம் செய்தார்.

"இனி மது உங்கள் பொறுப்பு" என்று
மருமகனையும் சம்பந்தியையும்
பார்த்துச் சொன்னார்.

பிறகு நிலா-அரவிந்த் மற்றும்
கார்த்திக்கின் தாத்தா பாட்டி என
அனைவரும் கிளம்பிச் சென்றனர்.

கல்யாணம் முடிந்து ஒரு வாரம் முடிய
மது வேலைக்குச் செல்ல
ஆரம்பித்தாள். அந்த ஒரு வாரத்தில்
தாலி பிரித்துக் கோர்ப்பது.. மறுவீடு
என்று அனைத்தையும் முடித்து
விட்டனர். காலையில் கார்த்திக்குடனே
சென்று விட்டுவாள். 'தனியாகத்
திரும்ப வேண்டாம்..ஆபிஸ் வந்துவிடு
நாம அங்க இருந்து ஒன்றாக சென்று
விடுவோம்' என்று கார்த்திக்
சொன்னதால் அவளது ட்யூட்டி
முடிந்தவுடன் கார்த்திக்கின்
ஆபிஸிற்கு சென்று அவன் தனி
அறையில் பொழுதைக் கழிப்பாள்.

அப்புறம் இருவருமாக அரட்டை அடித்த
படியே வீட்டிற்கு வந்து சேர்வர். வீடு
வந்தவுடன் குளித்து முடித்து கீழே
வந்து ஜானகி அம்மாவிற்கு ஏதாவது
உதவி செய்வாள் மது. மதுவிற்கு
ஏதாவது தெரியவில்லை என்று
கேட்டால் முகம் சுளிக்காமல் கற்றுத்
தந்தார் ஜானகி. வீட்டில் வேலைக்கு
ஆள் எதில் வைத்தாலும் சமையலிற்கு
வைக்கக் கூடாது என்று ஜானகி
மதுவிடம் அறிவுறுத்தி இருக்கிறார்.
அவரது மாமியார் அவருக்கு சொன்ன
அறிவுரை என்றும் கூறுவார். பிறகு
சாப்பிட்டு விட்டு கொஞ்ச நேரம்
உட்கார்ந்து பேசிவிட்டு நான்கு பேரும்
அவரவர் அறைக்குள் புகுந்துவிடுவர்.
கார்த்திக் உடன் ஏதாவது பழைய
கதையை பேசுவாள். அவனும்
ஏதாவது சொல்ல சிரிப்பும்
அரட்டையுமாக இருந்து விட்டு
உறங்கிவிடுவர்.

இப்பொழுதெல்லாம் மது எந்த
தயக்கமும் இல்லாமல் கார்த்திக்கிடம்
பேசினாள். அவனும் அவளை
அப்பப்போ வம்பிற்கு இழுத்தான்.

ஒரு நாள் சாப்பிடும் போது "என்ன
இது.. சட்னி இப்படி இருக்கு..
நல்லாவே இல்லை.. மிக்சியில்
அரைத்ததா? அம்மா நாளையில்
இருந்து மதுவை வீட்டின் பின் உள்ள
ஆட்டுக்கல்லில் சட்னி ஆட்டச்
சொல்லுங்கள்" என்று தன் எதிரில்
உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டு
இருந்த மதுவை வம்பிற்கு இழுத்தான்.

அவன் பேசும் போதே சமையல்
அறையில் இருந்து வெளியே வந்த
ஜானகி, தன் கையில் தோசைத்
திருப்பியோடு கொண்டு வந்த
தோசையை 'டொக்' என்று தன்
மகனின் தட்டில் வைத்தார்.

கார்த்திக் யோசனையாக தன்
அன்னையைப் பார்க்க "சட்னி நான்
அரைத்தது" என்று சொல்ல, மதுவோ
தண்ணீர் எடுத்துப் பருகியபடியே
நக்கலாக உதட்டைச் சுழித்துச்
சிரித்தாள்.

'அடிப்பாவி நான் பேசும்போது அம்மா
செய்தது என்று சொல்வதற்கு என்ன"
என்று கார்த்திக் நினைக்க, அதற்குள்
மகனின் பேச்சை மட்டும்
அரைகுறையாகக் கேட்டு அங்கு வந்த
வேலுமணி "ஆமாம் ஆட்டுக்கல்லில்
ஆட்டுங்கள்.. அந்தக் காலத்தில்
எல்லாம் என் அம்மா பாட்டி எல்லாம்
அப்படி தான் செய்வார்கள்.. நன்றாக
இருக்கும்" என்று பழைய நினைவில்
அவர் சொல்ல.. கார்த்திக் நெற்றியில்
கை வைத்தபடி 'அய்யோ இந்த அப்பா
வேற நேரம் காலம் தெரியாமல் வந்து
பேசறாரே' என்று மூச்சை விட்டான்.

அவர் சொன்னதில் கோபமான
ஜானகி "வேண்டும் என்றால் அப்பனும்
மகனும் உட்கார்ந்து ஆட்டுங்கள்..
நாங்கள் எல்லாம் செய்ய முடியாது"
என்று இடுப்பில் கை வைத்தபடி
சொல்லிவிட்டு அடுத்த தோசையை
எடுக்கச் சென்று விட்டார்.

மேலே தங்கள் அறைக்கு வந்தவன்
"நான் மாட்டுவது அவ்வளவு சிரிப்பாய்
இருக்கா.. அம்மா செஞ்சதுனு சொல்ல
மாட்டியா" என்று ஸ்டெத்தை எடுத்துக்
கொண்டு இருத்தவளிடம் கேட்டான்.

"என் வாயில் தான் தோசை இருந்ததே..
அப்புறம் எப்படிப் பேசுவது.. சாப்பிடும்
போது பேசக் கூடாது என்று என் பாட்டி
சொல்லுவார்கள்" என்று முகத்தை
அப்பாவித் தனமாக வைத்துச்
சொன்னாள் மது.

"ஏய் ப்ராடு... உன்ன பத்தித்
தெரியாதா" என்று கையில் இருந்த
பைலை வைத்து அவளை அடித்தான்.
அன்றிலிருந்து மது முன்பை விட
கார்த்திக்கிடம் நன்கு பழக ஆரம்பித்து
விட்டாள். இப்படியே நாட்கள் சென்றது.

வழக்கம் போல ஒரு நாள் மாலை மது
கார்த்திக்கின் ஆபிஸ் அறையில்
அமர்ந்து விகடனைப் புரட்டிக்
கொண்டு இருந்தாள். அப்போது
யாரோ கதவை திறக்க மது கார்த்திக்
என்று நினைத்துப் புன்னகையோடு
நிமிர்ந்தாள். ஆனால் யாரோ ஒரு
பெண் மாடல் போன்று வந்து
நின்றதைப் பார்த்த மதுவிற்கு
யோசனையில் புருவங்கள்
முடிச்சிட்டன.

"கார்த்திக் இல்லை?" எனக் கேட்டபடி
வந்து சேரில் அமர்ந்தாள்.

மதுவிற்கு முதல் பார்வையிலேயே
அவளைப் பிடிக்கவில்லை. முதலில்
கதவைத் தட்டாமல் மேனர்ஸ்
இல்லாமல் உள்ளே நுழைந்தது.
இரண்டு மது முன்னாடியே கார்த்திக்
என்று உரிமை உள்ளவள் போல
சொன்னது.

வந்த கோவத்தை அடக்கிக் கொண்டு
"நீங்கள் யார்?" என்று முடிந்த அளவு
புன்னகையுடன் வினவினாள் மது.

"நீ யார்? நான் கார்த்திக் எங்கே என்று
கேட்டால் என்னையே கேள்வி
கேட்கிறாய்" என்று ஒருமையில் கேட்டு,
குரலை உயர்த்தினாள்.

"நான் Mrs.கார்த்திக்" என்று முன்னால்
கைகளைக் கட்டியபடி அவளை
நேராகப் பார்த்து தெளிவானக்
குரலில் சொன்னாள்.

"வாட்" என்று எழுந்து விட்டாள் அவள்.
அவள் அடைந்த அதிர்ச்சிக்கு
மறுபடியும் அவ்வாறு சொல்ல
வேண்டும் என்று மதுவிற்கு
தோன்றியது.

"யெஸ்.. Mrs.கார்த்திக்.." என்றாள் மது
தோளைக் குலுக்கியபடி.

அதேநேரம் வெளியே சென்றிருந்த
கார்த்திக் மதுவை கூட்டிச் செல்ல
ஆபிஸ் வர "ஹே..மாயா எப்ப வந்த?"
என்றபடி உள்ளே வர பெண்கள்
இருவரும் திரும்பினர்.

"ஹாய் கார்த்திக்..இப்போ தான்
வந்தான்" என்று பதில் அளித்தாள்
அவள். கார்த்திக்கிடம் அவள் குரல்
தாழ்ந்திருந்தது. அதை மதுவும்
கவனித்தாள்.

"ஓ ஸாரி... உனக்கு சொல்ல
மறந்துவிட்டேன் பார். இதான் என்
மனைவி மதுமிதா" என்று மாயாவிற்கு
மதுவை அறிமுகம் செய்து வைத்தான்.

"ம் தெரியும்..இப்போது தான்
சொன்னார்கள்" என்று மாயா சொல்ல
மது வெளியில் சென்று விட்டாள்.

மாயாவிடம் பேசி அவளை அனுப்பி
விட்டு வந்தக் கார்த்திக் மது
தன்னுடையத் தனி அறையில் தான்
இருப்பாள் என்று அங்கு சென்றான்.

அறைக்குள் நுழைந்தவன்
"கிளம்பலாம்" என்று மட்டும்
சொல்லிவிட்டுச் சென்று காரை எடுக்க
மதுவும் காரில் அமர்ந்தாள்.

காரில் சற்று தூரம் சென்ற பிறகு
"இந்த பிகேவியர் சரி இல்லை மது"
என்று கோபமானக் குரலில்
கூறினான்.

மாயாவை மதுவிற்கு சுத்தமாகப்
பிடிக்கவில்லை. அந்தக் கடுப்பில்
இருந்தவள் அவன் இப்படி
சொன்னவுடனே "எந்த பிகேவியர்?"
என்று வெடுக்கெனக் கேட்டாள்.

"எதற்கு அப்படி மூஞ்சியைத் திருப்பிக்
கொண்டு போனாய்?" என
எரிச்சலுடன் வினவினான்.

மது நடந்ததைச் சொல்லி முடித்தவுடன்
"திஸ் இஸ் ஸில்லி மது" என்றவன்
"பார் மது.. அவள் அப்பாவுடைய
நண்பருடைய மகள். சிறுவயதில்
இருந்தே என்னுடைய ப்ரண்ட். சின்ன
வயதில் இருந்தே அம்மா இல்லை..
எங்க வீட்டில் தான் கிடப்பாள்..
அவளும் எனக்கு நிலா போலத்தான்..
அதான் அப்படி உள்ளே வந்திருப்பாள்.
அங்கிளும் அவளும் யூ.எஸ் சென்ற
பின் ஐந்து வருடங்களுக்குப் பிறகு
இப்போது தான் வருகிறாள். நம்
கல்யாணத்திற்கு ஒரு மாதமே
இருந்ததால் அங்கிளால் வர
முடியவில்லை.. மாயாவிற்குத்
தெரிந்தால் வருத்தப்படுவாள்
என்பதால் அங்கிள் அவளிடம் சொல்ல
வேண்டாம் என்று செல்லி விட்டார்.
அதனால் தான் அவள் அப்படி ஷாக்
ஆயிருக்கா.. எதுவும் தெரியாமல்
இப்படி மூஞ்சியை காட்டி விட்டு
வந்துட்ட. அவ பீல் பண்ணா மது.
உன்கிட்ட ஸாரியும் சொல்லச்
சொன்னாள்" என்று மதுவின் மீது
கோபத்தைக் காட்டினான். அவன்
கோபமாகப் பேச மதுவிற்கு முகம்
சுருங்கிவிட்டது.

அதன் பிறகு வீடு வரும் வரை
இருவரும் பேசவில்லை. வீடு வந்த
பின் "கார்த்திக் நாளை மது வீட்டில்
விருந்து இருக்கிறது. நியாபகம்
இருக்கிறதல்லவா?" என்று வேலுமணி
கேட்டார்.

"ம்ம்" என்று ஷூவைக் கழட்டியபடி
தலையை மட்டும் ஆட்டினான்.

"நைட்டிற்கு என்ன செய்ய?" என்றபடி
வந்த ஜானகியிடம் "எனக்கு எதுவும்
வேண்டாம்" என்று விட்டு மேலே
சென்றுவிட்டான்.

யோசனையாய் ஜானகி மதுவைப்
பார்க்க, "வரும்போதே இருவரும்
வழியில் சாப்பிட்டோம் அத்தை.
அதான் வேண்டாம் என்கிறார்.
எனக்கும் வேண்டாம் அத்தை" என்று
ஒரு பொய்யைச் சொல்லிவிட்டு
அவருக்கு சமையலில் உதவி செய்து
விட்டுத், தன் அன்னைக்கு போன்
போட்டவள் அனைவரிடமும் பேசிவிட்டு
ஒன்பது மணிக்கே போனை
வைத்தாள். மாடிப்படி ஏறும்போதே
என்ன சொல்லுவானோ இந்தக்
கட்டபொம்மன் என்று யோசித்தபடி
படி ஏறினாள் மது.
 
Top Bottom