Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

RD NOVEL சின்ன சின்ன அன்பில் - Tamil Novel

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

Last edited:

ilanthalirvenba

New member
Vannangal Writer
Messages
6
Reaction score
3
Points
3
1- சின்ன சின்ன அன்பில் ..

" உவா .... உனக்கு நான் சொல்ல வரது எதாவது புரியுதா ?? இல்லை .. புரிஞ்சும் புரியாத மாதிரியே நடிக்கிறியா ?? " என்று உச்ச சுருதியில் கத்திக்கொண்டிருந்தான் ரூபேஷ். அவன் என்ன பதில் எதிர்பார்க்கிறானென்று தெரிந்தும் வாயைத் திறக்காமல் அவனது கண்ணின் பரிபாஷைகளை ஆராய்ந்து பார்த்திருந்தாள் அவள்.

" எதுக்காக என்னோட மூஞ்சிய இப்படி பார்க்கணும் ?? என்ன மனசுலே நினைச்சு இப்படியெல்லாம் நடந்துக்கறேன்னு மட்டும் எனக்குப் புரியலை. தாதிஜிகிட்ட நீ அப்படி பேசுவேன்னு நான் சுத்தமா எதிர்பார்க்கவே இல்லை. சும்மா தேவையில்லாத விஷயத்தைப்பத்தி அங்க அவ்ளோ பேசிட்டு இப்போ எதுக்காக இங்க வந்து வாயைக் கம் (பசை) போட்டு ஒட்டி வெச்ச மாதிரி அமைதியா இருக்க. இதையே அங்க செஞ்சிருந்தா இந்த நிலைமை வந்திருக்கவே வந்திருக்குக்காது. தாதிக்கு பிடிக்காம இருந்தும் எனக்காக உன்னை ஏத்துக்க என் குடும்பம் சம்மதிச்சாங்க. அவங்ககிட்ட அப்படி பேசிட்டு இங்க எதுக்காக வாயைமூடிட்டு இருக்க பேவகூப். உன் வீட்டுலே நம்ம காதலுக்கு சம்மதம் சொல்லவே இல்லை. நான் அவ்ளோதூரம் பேசியும் அவங்களுக்கு என்மேல கொஞ்சம் கூட நம்பிக்கை வரலை. ஆனா நான் அவங்களுக்கு மரியாதை கொடுத்துதான் நடந்துக்கிட்டேன். ஆனா, நீ.. எனக்காக நம்ம காதலுக்கு சம்மதம் சொன்ன என்னோட குடும்பத்திலே ரொம்ப முக்கியமானவங்க என் தாதி. அவங்ககிட்டயே அப்படி பேசிற. தமிழ் படத்திலே வரப் பொண்ணுங்களைப் பார்த்து நான் ஏமாந்து போயிருக்கேன். பெரியவங்க முன்னாடி இப்படி பேசுறதுதான் உங்க தமிழ் கலாச்சாரமா ?? எப்படி பெரியவங்ககிட்ட நடந்துக்கணும்னு தெரியலை.. நான் எப்படி இப்போ என் குடும்பத்தோட முகத்திலே முழிப்பேன். இதுக்காகவா உன்னை நான் இங்க இருந்து ஜெய்ப்பூர் கூட்டிட்டு போனேன்? இப்படியெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சிருந்தா கண்டிப்பா உன்னை நான் லவ் பண்ணிருக்க மாட்டேன். இப்போக்கூட நான் கத்திட்டு இருக்கேன்.. நீ உன் இஷ்டத்துக்கு பதில் பேசாம இருக்க. அப் போல்னா (இப்போ பேசு).. " என்று அவன் அவ்வளவு கத்தி ஓய்ந்தபிறகு தான் அவளது உணர்ச்சித்துடைத்த முகத்தை உற்று நோக்கினான். அவனது கண்களை நேருக்கு நேர் பார்த்தவள் ஒரு வார்த்தைக்கூட உதிர்க்காமல் அவ்விடம்விட்டு அகன்றாள்.

இவ்வாறாக அன்று காலை நடந்த இந்தச் சம்பாஷணைகளை மனதுக்குள் உறுபோட்டவாறு அமர்ந்திருந்தாள் நம் நாயகி.

"கீச்.. கீச் .. கீச் .. " என்ற கிளிகளின் அழைப்பில் நினைவுகளைக் கலைந்தவள், தூரத்தில் தெரிந்த ஆலமரத்தின் அடியில் அமர்ந்திருந்த செண்பகத்தை பார்த்ததும் அவரை நோக்கிக் காலடிகளைப் பதிக்கத் தொடங்கினாள் உவா ..

உவா தன்னைநோக்கி வருவதைப் பார்த்தவரின் கண்கள் பாசத்தினை இயல்பாய் பொழிந்தது.

" என்ன டா மா முகம் வாடிப்போய் இருக்கு.. என்ன பிரச்சனை இன்னைக்கு ?? நேத்து சாயுங்காலம் நல்லாதானே வீட்டுக்கு கிளம்பி போன.. அதுக்குள்ள என்னாச்சு ?? ம்ம் ??", என்று அவர் வாஞ்சையாய் கேட்கக் காலையில் ரூபேஷ் அவளிடம் அவ்வளவு காட்டமாகப் பேசும்பொழுது வராத அழுகை இப்பொழுது முட்டிக்கொண்டு வந்தது. அவளது சோர்ந்த கண்களும், யோசனையில் சுருங்கிய நெற்றியும், நெளிந்திருந்த புருவமும், கண்களில் கீழே விழ நல்லநேரம் பார்த்துக்கொண்டிருக்கும் கண்ணீரும் அவருக்கு ஏதோ ஒன்றை புரியவைக்க முயற்சி செய்ய, அதை ஒதுக்கித் தள்ளியவர், பதிலுக்காக அவளது முகத்தை உற்று பார்க்க.. காலையில் ரூபேஷ் பேசியதை சுருக்கமாக சிலவற்றை மறைத்துக் கூறினாள் உவா.

"அடடா .. இவ்ளோ சின்ன விஷயத்துக்காகவா இவ்ளோ சோகமா இருக்க ..??", என்று கேட்கும் அவரை முகம் சுருக்கி அவள் பார்க்க, அவளது பார்வையில் அவரது இதழ்களில் மென்னகை பூத்தது. " சரி விடு.. அங்கே நடந்ததையும் அவனைப் பத்தியும் என்ன நினைக்கிறேனு சொல்லு.. நான் கேட்டுட்டு அதுக்கான தீர்வை சொல்றேன். " என்று அவர் ஆறுதலுக்கு மாற்றாகக் கேள்வியை முன்னிறுத்தினார்.

"எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை செம்பு மா .. அவன்மேலே எவ்ளோ பாசம் எனக்கு இருக்கு.. அதுலே கொஞ்சம்கூட அவனுக்கு இல்லையானு தோணுது. அவனை எப்படி நம்பி கல்யாணம் பண்ணிக்கிறதுனு மனசு பூரா பயம் தான் நிரம்பியிருக்கு. அவன் எப்படி செம்பு மா அவங்க குடும்பத்து ஆளுங்க முன்னாடி என்னை அப்படி விட்டுகொடுக்கலாம் ?? நான் தப்பே செஞ்சிருந்தாலும் அவன் அதைஎடுத்துச் சொல்லிருக்கணும் தானே ?? எவ்ளோ பேசுனான் தெரியுமா காலையிலே.. அவங்க தாதிஜிகிட்ட நான் மரியாதை இல்லாம நடந்துக்கிட்டேனாம். அவங்க என்கிட்ட உன்னோட வீட்டுல இங்க வரேன்னு சொல்லிட்டு வந்தியான்னு கேட்திருந்தாக்கூட பரவாயில்லை.. கல்யாணத்தை முடிச்சுட்டு தமிழ்நாடு கிளம்புங்கனு அவங்க எப்படி செம்பு மா முடிவு பண்ணலாம் ?? என்னோட குடும்பத்திலே இருக்கவங்க ஒருத்தர் கூட இல்லாம நான் எப்படி கல்யாணம் செஞ்சுக்க முடியும் ?? என்னோட வீட்டுலே இருக்குறவங்க சம்மதிக்கலேங்கிற காரணத்துக்குகாக அப்படியே நான் கல்யாணம் பண்ணிட்டு வந்துறணுமா என்ன ?? அவங்க தான் சம்மதிக்கலயே அதுனாலே நீங்க நம்ம சொந்தக்காரங்களை வெச்சு கல்யாணம் முடிச்சுட்டு ரெண்டு நாள் இருந்து மீதி சாங்கியம் சம்பிரதாயம் எல்லாம் முடிச்சுட்டு அதுக்கு பிறகு தமிழ்நாடு போகலாம். அங்க போயிட்டு அவங்ககிட்ட அப்புறம் நம்ம ஆளுங்களை விட்டுப் பேசிக்கலாம்னு அவங்க சொன்னது எந்த விதத்திலே நியாயம்னு இவன் என்கிட்ட இவ்ளோ கோவிச்சுக்குறான்??? என்னை பாத்தா அவனுக்கு எப்படி இருக்கு ?? என் வீட்டுலே கல்யாணத்துக்கு சம்மதிக்கலேன்னு இவ்ளோ நியாயமா தீர்ப்பு சொன்னவங்ககிட்ட நான் ஒன்னும் தப்பா எல்லாம் பேசலைன்னு தான் எனக்குத் தோணுது.. என் வீட்டுலே கல்யாணத்துக்கு மட்டும்தானே சம்மதிக்கல.. ஆனா என்னையும் இதோ உங்க பேரனையும் நம்பித்தானே ஜெய்ப்பூர் வரைக்கும் அனுப்பி விட்டிக்காங்க.. லவ் பண்றேன்னு வீட்டுலே சொல்லியும் எந்த வீட்டிலே லவ் பண்ண பையன் வீடுவரைக்கும் விடுவாங்க?? அதுவும் ஜெய்ப்பூர் ?? .. இன்னும் கொஞ்ச நாள் காத்திருங்க.. என் வீட்டுக்காரங்களை நான் சமாதானப்படுத்தி கல்யாணத்தை முடிச்சுக்கலாம்னு நான் சொன்னதுக்கு அவங்க பாட்டி, அவங்க எப்போ சரினு சொல்லி எப்போ என் பேரனுக்குக் கல்யாணம் பண்றதுனு கேட்டாங்க அதுக்குகூட நான் இன்னும் கொஞ்ச நாள் மட்டும்னு கேட்டேன்.. அதுக்கு ரூபேஷ் எதுவுமே சப்போர்ட் பண்ணலை.. அப்புறம் எதுக்காக என்னை அப்படி ஓர் சூழ்நிலையிலே கொண்டுபோய் நிறுத்தினான் ??? அவன் நின்னுட்டு இருந்த தோரணையை பார்த்தா அவனுக்கு ஏற்கனவே இங்க இப்படியொரு யோசனை நடந்திருக்குனு தெரிஞ்சிருக்கும்னு தான் நினைக்குறேன் செம்பு மா.... எனக்கு வீட்டை விட்டு வந்து கல்யாணம் பண்ணிக்க சுத்தமா இஷ்டம் இல்லைனு அவனுக்குத் தெரியும் செம்பு மா.. அதுனால இப்படி செய்யப் பாத்திருக்கான்.. எனக்கு மனசே கேக்கலை.. அதுவும் நான் முடியாதுனு சொன்னப்போ அவங்க பாட்டி நான் அவனை ஏமாத்தப்பாக்குறேன் அப்டினு சொல்றாங்க..அதை எப்படி செம்பு மா என்னால பொறுத்துக்க முடியும் ???? அவனோட சொத்துக்கு ஆசைப்பட்டேனு சொன்னவுடனே என்னால பொறுத்துக்கவே முடியல.. அவனுக்கு எவ்ளோ சொத்து இருக்குனு எனக்கு இப்போ வரைக்கும் தெரியாது... இன்னைக்குத்தானே முதல் முறை இங்க வந்து பாக்குறேன்.. நான் அவனைச் சொத்துக்காகத்தான் கல்யாணம் பண்ணிக்க நினைச்சிருந்தேனா எப்படி அவனுக்கு என்ன சொத்து எல்லாம் இருக்குனு முன்னாடியே வந்து பாத்திருக்க மாட்டேன் ??? அப்படி பார்த்தா உங்க வீட்டு பையன் எங்க வீட்டுக்கு முன்னாடியே வந்து பாத்துருக்காரு.. அவரு என்னை சொத்துக்காகக் கல்யாணம் முடிச்சுக்க நினைக்குறாருனு நீங்கச் சொல்லுவிங்களானு கேட்டுட்டு அதுக்குமேல அங்க நிக்க முடியாம கிளம்பி வந்துட்டேன்.. இதையே ஒரு பையன் செஞ்சிருந்தா அவனை ஆம்பளை, தன்மானம் உள்ளவன், ஹீரோ இப்படியெல்லாம் சொல்லுவாங்க. ஆனா இதையே ஒரு பொண்ணு செஞ்சிருந்தா அவளை அடங்காபிடாரி, வீட்டுக்கு அடங்காதவ, பெரியவங்களை மதிக்கத்தெரியாதவனு சொல்லுறாங்க.. இதுலே, இவன் என்னவோ பெரிய இவன் மாதிரி நாலு நாளைக்கு அப்பறம் வந்து இப்போ பேசுறான்.. ஏன் நாலு நாளா அவனுக்கு போன் போடக்கூட ஒரு நிமிஷம்கூட கிடைச்சிருக்காதா ???? நாலு நாளிலே முதல் நாள் காத்திருந்தேன்.. இரண்டாவது நாள் யோசிச்சேன்.. மூணாவது நாள் நான் யோசிச்சது சரியா இல்லையானு பாத்தேன்..நாளாவது நாள் நான் எடுத்த முடிவு சரிதான்னு அவனே உறுதிசெஞ்சிட்டு போயிட்டான்...", என்று கண்கள் வானத்தை வெறிக்கப் பார்த்துக் கூறிக்கொண்டிருந்தவளைப் பார்த்துச் செண்பகத்துக்குக்கு கருணை சுரந்தது.

"என்ன முடிவெடுத்துருக்கேன்னு நான் கேட்கமாட்டேன்டா.. எனக்கு நீ என்ன முடிவெடுத்துருக்கேன்னு தெரியும்.. ஏழு வருஷமா பாக்குறேன்.. ஆனா ஒன்னு மட்டும் மனசுலே நல்லா பதிய வெச்சுக்கோ பட்டுமா.. நீ என்ன முடிவு எடுத்தாலும் அதுக்கு சப்போர்ட் பண்ண எப்போவுமே நான் இருப்பேன்.. எப்போவுமே....... இதை எப்போவுமே மறக்காத.... அப்புறம், இப்போ மணி மூணு இப்போ கிளம்புனா நீ உன்னோட மேக்கப் எல்லாம் முடிச்சுட்டு உன்னோட வேலைக்குக் கிளம்ப சரியா இருக்கும்.... ", என்று அவளது கையைப் பிடித்துக்கொண்டு கூற.. விழிகள் விரிய அவரைப் பார்த்த உவா.. "அது எப்படி நான் என்ன முடிவு எடுத்து வெச்சிருக்கேன்னு இப்போ வரைக்கும் சரியா சொல்றிங்க ???? அதுவும் நான் சொல்லாமலே..? ", என்று ஆச்சரியமாக வினவினாள்.

"எனக்கு அதுலாம் தெரியும்.. உன்னோட மேக்கப் முடிச்சு கிளம்பு.. நான் ராபின்க்கு போன் போடறேன்.. அவன் உன்னை இன்னைக்கு பீச்ல இறக்கி விட்ருவான்.. இன்னைக்கு ஒருநாள் அவனைக் கூட வெச்சுக்கோ.. சரியா ?? அப்பறம் நான் நீ ஏதாவது செஞ்சுப்பியோனு பயந்து எல்லாம் அவனை உன்கூட அனுப்புறேன்னு மண்டைக்குள்ள பெருச்சாளி ஓட்ட வேண்டாம்.. இன்னைக்கு ராபின் அப்பா அம்மா இறந்த நாள்.. அவன் நேத்தே சொல்லிட்டு இருந்தான்.. அவனுக்கு உன்கூட இருந்தா கொஞ்சம் நல்லா இருக்கும்னு அனுப்புறேன்.. அவனைப் பத்திரமாமா பாத்துக்கோ.. அப்புறம் நைட் அம்மா அப்பாவை இங்க வரச் சொல்லு.. நீ இனிமேலும் வீட்டுக்குத் தெரியாம இந்தவேலைக்குப் போறது சரி இல்லை.. அவங்களுக்கு பேசி நான் புரிய வெச்சுக்குறேன்.. ராபின் தான் இன்னைக்கு நைட் பார்ட்டி வைக்கலாம்னு சொன்னான். அதுனாலே நைட் எல்லாம் ரெடி பண்ணனும்.. நான் அதுக்கான என்னோட வேலையை எல்லாம் பாக்க போறேன்.. நீ கிளம்பி வந்து இந்த வாண்டுங்களைத் தாண்டி வேலைக்குப் போறதுக்குள்ள மணி 5 ஆகிரும். அதுனாலே கொஞ்சம் சீக்கிரம் கிளம்பு ", என்று சொல்லிச் சென்றார் .

"நான் வந்தே அரைமணி நேரம் ஆவுது.. பேரைச் சொல்லிக் கூப்பிடக்கூட முடியலை.. பேரைப்பாரு .. உவா குவா னு வாந்தி எடுக்குற மாதிரி.. கதவைத் தொறந்துக்குனு சீக்கிரம் வரியா இல்லாங்காட்டி வெளிய நீ வந்தவுடனே மூஞ்சிலயே குத்திருவேன் டி சப்ப மூஞ்சி சீக்கிரம் வாடி ..", என்று வெளிய நின்றுகாட்டு கத்து கத்திக்கொண்டிருந்தான் ராபின்.

*******************************************************************************************

அடுத்து வருவது :

" ஏண்டா மாடு மாதிரி கத்துற ??? வாடிப் போடி எல்லாம் கூப்பிட்டீனா மூஞ்சிய கீய்ச்சிருவேன் பாத்துக்கோ... ஒழுங்கா என்னோட பேரைச் சொல்லிக் கூப்பிட்டுக்கோ...", என்று வெளியே வந்ததும் அவனைப்பார்த்து தன்னால் முடிந்த மட்டும் உவா கத்திக்கொண்டிருக்க.... அதற்குள் " ஹே ............", என்று கத்திக்கொண்டு தன்னைநோக்கி ஓடிவரும் குழந்தைகளைப் பார்த்தவளுக்குள் மகிழ்ச்சி பீறிட்டு எழுவதைப் போன்று உணர்ந்தாள்.

அப்புறம் முதல் எபிசொட் போட்டாச்சு.. வாரத்துக்கு ரெண்டு இல்லைனா மூனு எபிசொட் எதிர்பாக்கலாம் நீங்க.. அப்பறம் உவா உவானு ஹீரோயின் பெயரைச் சொல்லிட்டு இருக்காங்களே... அந்த முழுப்பெயர் என்னென்னு கண்டுபிடிக்க முடிஞ்சா கண்டுபிடிச்சு கமெண்ட் பண்ணுங்க பாப்போம்...
 
ilanthalirvenba

New member
Vannangal Writer
Messages
6
Reaction score
3
Points
3
2- சின்ன சின்ன அன்பில்..
ராபின் வந்து கால் மணிநேரமாக அறையின் வெளியில் நின்று கத்தியும் பலனளிக்காமல் போக.. அங்கிருந்த நாற்காலியை இழுத்து கதவிற்கு நேராகப்போட்டு அமர்ந்துகொண்டான். அவனை மேலும் அரைமணி நேரம் காக்க வைத்து ஒருவழியாக தனது உடையை அணிந்துகொண்டு வெளியே வந்தாள் உவா..
" இன்னாமா குவா .. உனக்கு இந்த டிரஸ் போட்டுகுனு வாரத்துக்கு நாலு மணிநேரம் ஆவுமா ?? எனக்கு நிறைய வேலை இருக்கீது.. சீக்கிரம் வரலங்காட்டி அப்டியே உட்டுனு போயிருப்பேன்.. இந்த ராபினு யாருக்கும் வெயிட் பண்ண மாட்டான்... ஏதோ அம்மா சொன்னாங்கனு உனக்கு எல்லாம் காத்திருக்க வேண்டிருக்கீது... வா போலாம்.. உன்னை அங்க கொண்டுபோய் தள்ளிவுட்டுட்டு நான் சவாரி போவணும்.. பார்ட்டி நைட் எட்டு மணிக்கு... சரியா ? பீச்ல எவகூடவாச்சும் கடலை வறுத்துட்டு பத்து மணிக்கு வாரமா ராத்திரி சீக்கிரமா வூடு(வீடு) வந்து சேரு.. என்னா ??? ", என்று ராபின் அவளை பேசவிடாமல் இறைந்துகொண்டுடிருக்க .... அவளோ ..
" ஏண்டா மாடு மாதிரி கத்துற ??? குவான்னு எல்லாம் கூப்பிட்டீனா மூஞ்சிய கீய்ச்சிருவேன் பாத்துக்கோ... ஒழுங்கா என்னோட பேரைச் சொல்லிக் கூப்பிட்டுக்கோ... அவ்ளோதான் உனக்கு மரியாதை.. ", என்று ரூமிலிருந்து வெளியே வந்ததும் தனது முகமூடிக்குள்ளிருந்து தன்னால் முடிந்த மட்டும் உவா கத்திக்கொண்டிருக்க.... அதற்குள் " ஹே ............", என்று கத்திக்கொண்டு தன்னைநோக்கி ஓடிவரும் குழந்தைகளை தனது முகமூடியிலிருந்த இரண்டு சிறிய ஓட்டைகளின் வழி பார்த்தவளுக்குள் மகிழ்ச்சி பீறிட்டு எழுவதைப் போன்று உணர்ந்தாள்.
அங்கிருந்து வந்த ஒவ்வொரு குழந்தைகளும் அவளைக் கட்டித்தழுவி விளையாட.... இவளுக்கு ஒவ்வொரு முறை அவர்கள் அணைக்கும்பொழுதும் தன்னுள் மகிழ்ச்சியும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிப்பதைப் போன்றதொரு உணர்வில் கண்மூடி நின்றாள். முப்பது குழந்தைகள் கட்டித்தழுவ முற்பட்டதில் தலையிலிருந்த முகமூடி கழண்டு விழுந்தது மட்டுமின்றி அவளையே கீழே உருட்டிவிட்டிருந்தனர் குழந்தைகள்.
இரண்டு கைகால்கள் x வடிவத்தில் விரவிக்கிடக்க , மல்லாக்க விழுந்துகிடந்த அவளை சுற்றி படர்ந்திருந்த குழந்தைகளை விலக்கிவிட்டு ராபின் அவளருகில் சம்மணங்கால்போட்டு அமர்ந்து ஒரு பொய்யான கொட்டாவியை விட்டு சொடக்கிட்டு அவளைப் பார்க்க.. அவளோ தனது வாத்து போன்ற உடையால் எழுந்திரிக்க முடியாமல் அவள் கழுத்தை தூக்கி எழ முயற்சி செய்துகொண்டிருந்தாள். இவனோ ஹாயாக அமர்ந்திருந்தான். " டேய் ராபி.. ஒழுங்கா தூக்கிவிடுடா .. ", கத்திக்கொண்டே எழ முயற்சிசெய்யும் அவளைப் பார்க்க பார்க்க சிரிப்பு பொங்கி வந்தது.. "அடேய் புழு மண்டையா ஒழுங்கா என்னை தூக்கிவிடு.. டைம் ஆவுது.. பீச் போவணும். இப்போ மட்டும் என்னை எழுப்பிவிடலை அப்புறம் அவ்ளோதான் சொல்லிட்டேன்.. நைட் உன் பார்ட்டிக்கு மிக்கி கெட்டப் போட்டு அசத்தலாம்னு நினைச்சேன்.. நீயே என்னை மதிக்கலை.. போடா நான் நைட் வந்து சும்மா சாப்டுட்டு கெளம்பிருவேன்.. " என்று கத்த.. "அப்போகூட சோறு மட்டும் வந்து துண்ணுட்டு போவேன்னு சொல்ற பாத்துகின்னியா ( பார்த்தியா) அங்க நிக்குற குவா.. சரி பாக்குறதுக்கு ரொம்ப பாவமா இருக்க.. எழுந்திரு .." என்று தனது கையை நீட்ட அவனது கையை பிடித்து எழுந்தவள் தனது வாத்து உடையை சரி செய்துகொண்டு திடீரென அவனை கட்டிப்பிடித்து.. " என்ன இருந்தாலும் நீ என் நண்பேன்டா.. இப்போ சமத்தா என்னை பீச் கூட்டிட்டு போ.. அப்பறம் இன்னொன்னு சொல்லணும்.. போன புதன்கிழமை சாயுங்காலம் பீச்சுக்கு டெடி ( கரடி பொம்மை ) கெட்டப் போட்டுட்டு போனேன்.. ஓரு தாத்தா அவரோட வீட்டம்மா பத்தி ரொம்ப பீல் பண்ணி சொல்லிட்டு இருந்தாரு.. நானும் கேட்டுட்டு வீட்டுக்கு கிளம்ப நைட் ஒன்பது மணி ஆகிருச்சு.. அப்போ ஒரு குரூப் என்னையே பார்த்துட்டு இருந்தாங்க. அன்னைல இருந்து அவனுங்க டெய்லி வரானுங்க. என்னவோ பயமா இருக்கு.. இன்னைக்கு மட்டும் என்கூட இரு டா. ப்ளீஸ்.. ", என்று அவனிடம் பொய்யான ஒரு கதையை கூறி அவனை தன்னுடன் இந்த நாள் முழுக்க வைத்துக்கொள்ள அழகாக காய் நகர்த்தினாள் உவா. எதிர்பார்க்காமல் அவள் கட்டிப்பிடித்தவுடன் ஷாக் அடித்ததைப்போன்று உணர்ந்தவன் அவளது நண்பேன்டா என்ற வார்த்தையில் அந்த மாயையிலிருந்து வெளிவந்திருந்தான்.
" உன் மண்டையிலே இருக்க முகமூடியை கலட்டி உன்மூஞ்சியை அவனுங்ககிட்ட காட்டிருந்தீனா அவனுங்க உன்பின்னாடி சுத்தி டைம் வேஸ்ட் பண்ணாம சூப்பர் புள்ளையபார்த்து அவனுங்க வேலையை பாப்பானுங்கல்ல.. ", என்று நக்கலாக கேட்டுவிட்டு முகத்தை வேறுபக்கம் திருப்பி நமட்டு சிரிப்பு சிரித்தான் ராபின்.
"டேய் கொரங்கு.. ரொம்ப பண்ணாத டா.. கூட வா.. நீ என்கூட வந்தினா உன்னை என்னோட ஆளுனு நினைச்சுட்டு தொந்தரவு பண்ண மாட்டானுங்க ..", என்று சொன்னதோடு அல்லாமல் அவனையும் இழுத்துக்கொண்டு குழந்தைகளுடன் சிறிதுநேரம் விளையாடிவிட்டு விடைபெற்றார்கள்.
ஆட்டோவில் ஏறி அமர்ந்து ஆளுமா டோலுமா பாடலை ராபின் ஒலிக்கவிட அதற்கு அமர்ந்தவாறே அப்படி இப்படி கையை ஆட்டிகொண்டு வந்தாள் உவா.. அந்த வாத்து கெட்டப்பில் அவள் ஆலுமா டோலுமா பாடலுக்கு ஆடிகொண்டு வருவதை தனது கண்களால் ராபின் ரசித்துக்கொண்டு கடற்கரையை நோக்கி தனது ஆட்டோவை செலுத்தினான்.
**********
" ஹலோ.. நான் செண்பகம் பேசுறேங்க .. இன்னைக்கு நைட்டு இல்லத்தில் ஒரு விருந்து இருக்குங்க. அதுக்கு கண்டிப்பா நீங்களும் உங்க வீட்டம்மாவும் வந்தீங்கனா நல்லா இருக்கும். பட்டு பத்தி கொஞ்சம் பேசனுங்க. பயப்படாதீங்க.. அவ காதல் கல்யாணம் விஷயத்தில் நான் தலையிட மாட்டேங்க. அவளைப்பத்தி வேற ஒரு விஷயமா பேசணும். அதுக்காக தான் வர சொல்றேன். என்மேல ஏதாவது கோவமா இருந்தாலும் கொஞ்சம் ஒதுக்கி வெச்சுட்டு வாங்க ", என்ற செண்பகம் அந்தப்பக்கமிருந்து வந்த பதிலில் மெலிதான புன்னகையுடன் அழைப்பை அணைத்து வைத்துவிட்டு இரவு உணவுக்கான ஏற்பாடை கவனிக்க சென்றார்.
அவளை பீச்சில் இறக்கிவிட்டவன் ஆட்டோவிலேயே நின்றுகொள்ளலாம் என்று எண்ணியிருக்க அவளோ இவனை விடாமல் அவளுடனே இழுத்துக்கொண்டு சுற்றிக்கொண்டிருந்தாள். அந்த பீச்சிலிருந்த அனைத்து குழந்தைகளையும் அவளது பொம்மை உருவதைக் காட்டி சிரிக்கவைத்து அழகுபார்ப்பதே இவளது வேலை. இதைத்தான் வீட்டிற்கு தெறியாமல் செய்துகொண்டிருக்கிறாள். இதைக் கண்டுபிடித்தால் வீட்டில் விடமாட்டார்கள் என்று முடிவெடுத்தவள்.. செண்பகம் நடத்திவரும் இல்லத்தில் பிள்ளைகளுக்கு படமெடுக்க போகிறேன் என்று வீட்டில் கூறிவிட்டு இங்கு சுத்திக்கொண்டிருக்கும் இவளைப்பற்றி வீட்டிலிருந்து மறைக்கிறோம் என்று செண்பகத்திற்கு ஏக கவலை.
அதிலும் ஒருவனைக் காதலிப்பதாக இவள் கூறியதிலிருந்து வீட்டில் அவ்வளவு ஒன்றாமல் இப்படி இருக்கிறாளே என்று கவலை அவரை அரித்துக்கொண்டிருந்தது. இன்று இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தே ஆகவேண்டுமென்று முடிவெடுத்துதான் உவாவின் அப்பாவையும் அம்மாவையும் இரவு நடக்கும் விருந்திற்கு அழைத்திருந்தார் செண்பகம்.
*****************************************************************************************************************************************************
இரவு ஏழு மணி..
சிதம்பரம் ..
" மனோஜ்.. எல்லாத்தையும் பேக் பண்ணி வெச்சுட்டீங்க தானே ?? நானே நார்வே ரீச் ஆகிட்டு உங்களுக்கு கூப்பிடுறேன். அதுவரைக்கும் என்னை தொல்லை செய்யாம இருங்க. யாரு என்ன கேட்டாலும் எனக்கு தெரியாது. இன்னும் என்கிட்ட பேசலைன்னு சமாளிங்க. உங்களுக்கு ஒரு புது சிம் ஏற்பாடு செஞ்சிருக்கேன். அதையே பயன்படுத்துங்க. அந்த போன் வீட்டிலே மட்டும்தான் இருக்கனும். அம்மாவை நான் தினமும் பார்க்கணும் அதுக்காகத்தான் இந்த ஏற்பாடு. மீதி பிசினஸ் சம்மந்தமா பாத்துக்க வேண்டியது எல்லாம் உங்க பொறுப்பு..", என்று படபடவென பொரிந்துகொண்டிருந்த சித்திக் இன்னும் குழந்தையாக இருக்கிறானோ என்ற சந்தேகம் தோன்றி நொடியில் மறைந்தது.
"சார்.. உங்ககிட்ட கேக்குறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. நான் இந்த ஆபீஸ்ல சேர்ந்து சரியா மூணுமாசம் கூட முடியலை. உங்களைவிட நாலுவருஷம் சின்னவன் நான். என்னை நம்பி இப்படிமாசத்துக்கு கோடி கணக்கிலே விற்பனை ஆகிற பிசினெஸ் பொறுப்பு நீங்க கொடுக்கிறதைப் பார்த்தா எனக்கு சுத்தமா புரியலை. இது ஏன்னு தெரிஞ்சிக்கலைன்னா எனக்கு தலையே வெடிச்சிரும்.. ஏன்னு சொன்னிங்கன்னா நல்லா இருக்கும். அதுவும் இல்லாம நான் உங்களைவிட சின்ன பையன் சார். என்னை வாங்க போங்கன்னு நீங்க கூப்பிடுறது ரொம்ப சங்கடமா இருக்கு. ப்ளீஸ் சார். வா போ னு கூப்பிடுங்க.", என்று கேள்வியும் வேண்டுதலுமாக தன் முன் நிற்கும் சின்னவனைப் பார்த்து புன்னகைத்த சித்திக்.. " சில விஷயம் உங்களுக்கு சொல்லி புரிய வைக்க முடியாது.. பார்த்துதான் தெரிஞ்சிக்கணும்.. ஒரு நிமிஷம் என்றவன் அவனது டேபிளிலிருந்த லப்டோப்பில் எதையோ தேடி எடுத்து அதனை மனோஜ் பார்க்குமாறு திருப்பி வைத்தவன் பார்க்குமாறு கண்ஜாடை வேறு காட்டினான்.
அந்த ஒளிப்பதிவு அவர்களது ஆபீஸ் சி சி டி வி பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டிருந்தது.அதில் அவர்கள் ஆபிசில் வேலை செய்யும் பெண்கள் இருவர் இரவு எட்டு மணிக்கு மேலாக வேலை செய்துகொண்டிருக்க அவர்கள் வேலை செய்து முடிக்கும்வரை அவர்களிடமிருந்து சிறிது இடைவெளிவிட்டு மனோஜ் நின்றுகொண்டிருப்பதைப் போன்றொரு காட்சி இடம்பெற்றிருந்தது. அதைப் பார்த்த மனோஜ் குழப்பத்துடன் சித்திக்கை பார்க்க ..
"எந்த ஒரு பையன் தன் கூட வேலை செய்யுற பொண்ணுங்களை தன்னோட குடும்பத்து பொண்ணுங்களா நடத்துறானோ அவன் அடுத்தவங்க பொருளுக்கோ சொத்துக்கோ என்னைக்கும் ஆசைப்படமாட்டான் மனோஜ்.. ஒரு பார்வையிலே கண்ணியத்தையும் நேர்மையையும் கண்டுபிடிக்க முடியும்.. இது என் தாத்தா நான் ஒரு பொண்ணை எப்படி பார்க்கணும்னு சொல்லிக்கொடுத்தப்போ கத்துக்கிட்டது. அவங்களை பாதுகாக்க நீங்க நின்னுட்டு இருந்தப்போ உங்களோட கண் அசைவுகளை வைச்சு தான் அடுத்த நாளே உன்னை என்னோட மேனேஜர் ஆஹ் ப்ரொமோட் செஞ்சேன். அப்புறம் வாங்க போங்கன்னு கூப்பிட்டு பழகிருச்சு. அது எனக்கு சின்ன வயசுலே ஒரு டீச்சர் வந்தாங்க. பிரேமா அவங்க பெயர். அவங்க எங்களை மாதிரி குட்டி பசங்களையே வாங்க போங்கன்னு கூப்பிடுவாங்க. முதல்லே அவங்க மேல ஒரு ஈர்ப்பு .. அடுத்து அவங்க நம்மளுக்கு எவ்ளோ மரியாதை தராங்கனு ஒரு கர்வம். அது எனக்கும் எல்லாருகிட்டயும் கிடைக்கும்னு ஆசைப்பட்டேன். அதுனாலே நானும் அப்படியே எல்லாரையும் கூப்பிட்டு பழகினேன். அப்பப்போ உங்களை உன்னைனு கூப்பிடுற சூழ்நிலைகள் வரலாம். ஏனா, எந்த ஒரு தோழனையும் வாங்க போங்கன்னு கூப்பிட இந்த உலகத்துல யாராலையும் முடியாது இல்லையா ??", என்று கூறிவிட்டு சிரிக்கும் சித்திக் இவனுக்கு வினோதமாக தெரிந்தான். ஒரு வேலையாளை யாரும் இவ்ளோ நுட்பமா கவனிச்சதா கேள்வி பட்டதும் இல்லை. அந்த கண்ணியத்துக்காகவும் நேர்மையாகவும் அவனை தோழனாக ஏத்துக்குற முதலாளியையும் பார்த்தது இல்லை என்று மனதினூடே யோசித்துக்கொண்டிருக்க அதற்குள்ளாக சித்திக் அந்த வீட்டின் மிக முக்கியமான அறைக்குள் புகுந்திருந்தான்.
உள்ளே போகலாமா வேண்டாமா என்ற அலைப்புறுதலுடன் வெளியே நின்றிருந்தான் மனோஜ்.

.
image

Virus-free. www.avast.com
 
ilanthalirvenba

New member
Vannangal Writer
Messages
6
Reaction score
3
Points
3
3 - சின்ன சின்ன அன்பில்.

வான் நீல நிற விளக்கு ஒரு மூலையிலிருந்து அந்த அறை முழுவதும் வெளிச்சத்தைப் பரப்பிக்கொண்டிருந்தது. உள்ளே சென்ற சித்திக் அங்கிருந்த ஒரு நாற்காலியை இழுத்து மெத்தைக்கு அருகில் போட்டு அமர்ந்துகொண்டான்.

தயக்கத்தைக் கைவிட்ட மனோஜ் உள்ளே செல்ல அங்கு ...

"அம்மா .... நான் நோர்வே கிளம்பப்போறேன். நாளைக்கு சாயுங்காலம் ரீச் ஆகிருவேன். அங்க போனவுடனே நான் போன் பண்ணிருவேன். ஆனா, அங்க போனதுக்கு அப்புறம் சாப்பிட்டேனான்னு கேக்க நீங்க என்கூட பேசுனா மட்டும்தான் முடியும். அதுக்கு ஏன் மா உங்களுக்கு மனசு வர மாட்டிங்குது. அப்பாவுக்கு மட்டும் பார்த்துப் பார்த்துப் பேக் செஞ்சுக் கொடுப்பிங்க. இன்னைக்கு நான் யாருமே உதவிக்கு இல்லாம இருக்கேன். சாப்டியான்னு கேக்க கூட ஆள் இல்லை. ப்ளீஸ் மா. என்னால முடியலை. தயவு செஞ்சு என்கூட பேசவாச்சும் முயற்சி பண்ணுங்க. ", என்று கண்ணீருடன் அவர் கையைப் பற்றிப் பிதற்றிக்கொண்டிருந்தான் சித்திக்.

மனோஜுக்கு அவன் பேசப் பேசக் கண்ணீர் முட்டி நின்றது. "எப்படி இவர் ஏழு வருடங்களாக இதைத் தாங்கிக்கொண்டிருக்கிறார் ? ", என்ற கேள்வி மனதினுள் எழுந்தது. அதுவும் அவன் சாப்பிட்டானா என்று கேட்கக்கூட ஆளில்லாத நிலையை அவரிடம் அவன் விளக்கிய விதம் மனோஜின் மனதை உலுக்கியது.

கால் மணிநேரம் அம்மாவின் கையைப் பிடித்தபடியே அமர்ந்திருந்த சித்திக் எழுந்து வெளியே செல்ல மனோஜ், அங்கு மெத்தையில் படுத்திருந்த அவனது அம்மாவை ஒருமுறை பார்த்தவன் சித்திக்கை பின்தொடர்ந்தான்.

சித்திக் நோர்வே கிளம்பிவிட மனோஜுக்கு நிற்க நேரம் இல்லாமல் சுழட்டி அடித்தது. அன்று இரவு பதினோரு மணிக்குச் சித்திக் வீட்டிற்கு வந்தவன் அவனது அம்மா வசந்தாவின் அறைக்குச் சென்று அவரது நலத்தை உறுதிசெய்துகொண்டவன் அங்கிருந்த செவிலி காவேரியிடம் அம்மாவைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு ஹாலிற்கு சென்று அமர்ந்துகொண்டான்.

சரியாக அதே நேரம் உவாவின் கன்னத்தில் சப்பென்ற அறை விழக் கண்களில் கண்ணீர் திரண்டிருந்தும் புன்னகைத்துக்கொண்டிருந்தாள் உவா. அடித்த மறுகணம் அவளது கைகளைத் தன் கைகளுக்குள் பொதிந்து கொண்ட உவாவின் தந்தை, உனக்கு எங்ககிட்ட எதையுமே சொல்லணும்னு தோணலை இல்லை ?? அப்படி என்ன உனக்கு நாங்க கொடுமைப் படுத்திட்டோம்னு நினைக்குற ?? இதுவரைக்கும் ஒவ்வொன்னையும் உனக்குப் பார்த்துப் பார்த்துச் செஞ்சுட்டு இருக்கேன். ஏதாவது ஒரு விஷயத்துல உனக்கு நான் குறை வெச்சிருக்கேனா உவா ?? எதுக்காக இப்படியெல்லாம் பண்ற ??? பீச்ல சாயங்காலம் அவ்ளோ நேரம் தனியா வேலை செய்யுறேன்னு சொல்றியே உனக்கு ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா நாங்க எப்படி இருப்போம்னு யோசிச்சியா ??? உனக்கு அப்டி என்ன அந்த வேலைக்குப் போகணும்னு இருக்கு ?? அது எல்லாம் ஒரு வேலையா ?? இதுக்காகவா அங்கேயும் இங்கேயும் அலைஞ்சு திரிஞ்சு உன்னை அவ்ளோ படிக்க வெச்சோம் ?? இதையெல்லாம் திமிர்ன்னு எடுத்துக்காம வேற எப்படி எடுத்துக்குறது ?? எதுக்காக இப்படியெல்லாம் அறிவுகெட்டு திரியுறேன்னு எனக்குப் புரியலை. ", என்று பொரிந்துகொண்டிருக்க உவா புன்னகை முகம் மாறாமல் நின்றிருந்தாள்.

" உங்ககிட்ட நான் கொஞ்சம் பேசலாங்களா ?? ", என்று செண்பகம் கேட்க.

"என்ன சொல்லப் போறீங்க நீங்க ???? உங்களையெல்லாம் பெரிய மனுஷினு நம்பி இவளை இங்க அனுப்புனா இது எல்லாம் நடக்குதுன்னு தெரிஞ்சும் எப்படி உங்களால அமைதியா இருக்க முடிஞ்சுது ?? உங்களை நம்பி பொண்ணை அனுப்புனா நல்லா நடந்துக்குறிங்க நீங்க .... முன்ன பின்னக் கஷ்டப்பட்டு ஒரு புள்ளையை பெத்து வளர்ந்திருந்தா என்னோட இந்த வயித்தெரிச்சல் புரிஞ்சிருக்கும்.. ", என்று கோபத்தில் வார்த்தையைவிட.

"அப்பா ....... ", என்று கர்ஜனையாக வெளிவந்த மகளின் குரலில் விதிர்த்துப்போனார் அவர்.

உவாவை அமைதியாக இருக்குமாறு சைகை காட்டிய செண்பகம் பேசமுற்பட.. அதற்குள் அருகில் நின்றிருந்த தனது மனைவியின் கையை இழுத்துக்கொண்டு அங்கிருந்து அகன்றார் அவர்.

செண்பகம் அருகில் சென்றமர்ந்த உவா. "சாரி பட்டு மா. எதுக்காக நான் என் வீட்டுலே சொல்லாம இருக்கேனு இப்போ புரியுதா ?? இவங்ககிட்ட பேசி என்னால புரியவைக்க முடியாது. ஏனா அதை அவங்க கேக்குறதுக்கு கொஞ்சமாவது நினைக்கனும், முயற்சி பண்ணனும். இது ரெண்டுமே என் வீட்டுலே எதிர்பார்க்க முடியாது. உன்னை எவ்ளோ கஷ்டப்பட்டு இன்ஜினியரிங் படிக்க வெச்சேனு தெரியுமான்னு இவ்ளோ வருத்தப்பட்டுட்டு போறாரே. நான் அவருகிட்ட நான் என்ன படிக்கணும்னு கேக்குறதுக்கு கூட வாய்ப்பு கொடுக்காதவர் மா. நிறைய வீட்டுலே பசங்க ஸ்கூல் படிச்சு முடிச்ச உடனே நீ காலேஜ்ல இதுதான் படிக்கணும்னு பெத்தவங்க வற்புறுத்துறாங்கனு கேள்விப்பட்டு இருப்பீங்க. இவங்க ஒரு விதம். ஆனா என் அப்பா வேற விதம். நான் ஒன்பதாவது படிக்கிறப்போதான் என்னென்ன படிக்குறதுக்கு வாய்ப்பு இருக்குனு தெரிஞ்சிக்க ஆரம்பிச்சிருந்த நேரம். அப்போ ஒரு முறை பேசுறப்போ விளையாட்டுக்கு நான் ஏதோ படிக்கப் போறேன்னு சொன்னதுக்கு. அப்போவே அது எல்லாம் நம்ம குடும்பத்துக்குச் செட் ஆகாது. இன்ஜினியரிங் தான் நம்ம குடும்பத்துக்குச் செட் ஆகும்னு ஒன்பதாவதுலே இருந்து பன்னிரெண்டாவது வரைக்கும் வாய் ஓயாம பேசிட்டு ... பன்னிரெண்டாவது முடிச்ச உடனே என் பொண்ணு இன்ஜினியரிங் தான் படிக்க ஆசைப்பட்டா... அவ ஆசைப்பட்டதைத்தானே படிக்க வைக்கணும்னு நானும் அவ விருப்பத்துக்கே படிக்கட்டும்னு செய்திருக்கேன்னு வெளிய சொல்லிட்டு இருக்காங்க. அதுலயே வெறுத்துருச்சு பட்டு மா. நீங்கப் பேசுறதுக்கான வாய்ப்பு வீட்டுலயே கிடைக்காதப்போ எப்படி ஒவ்வொன்னையும் அவங்ககிட்ட பகிர்ந்துக்கணும்னு தோணும் ?? எப்படி நான் அவங்களுக்கு புரிய வைப்பேன் ?? அதுனாலதான் அவங்க ஆசைப்பட்ட வேலைக்கும் போயிட்டு எனக்குப் பிடிச்சதும் என் வாழ்க்கையிலே இருக்கணும்னு முடிவு செஞ்சுதான் இந்த வேலையைச் செய்ய ஆரம்பிச்சேன். என்னால இனிமேலும் இதைப் பொறுத்துக்க முடியாது பட்டு. நான் இன்னைக்கே என்னனு பேசத்தான் போறேன். நான் வீட்டுக்குக் கிளம்புறேன். நாளைக்கு காலையிலே வரேன். " என்று முத்தமிட்டு நகர எத்தனித்தவள் ஒரு நிமிடம் நின்று ராபினிடம் திரும்பி. " ஊரு பூரா பெரிய இவன் மாதிரி சீன் போடுற... என்னவோ பெரிய ரௌடினு உனக்கு மனசுலே நினைப்பு. உன் அம்மாதானே இவங்க. இவங்களை ஒருத்தர் உனக்குப் புள்ளை இல்லைனு தப்பா பேசுறப்போ நீ எதிர்த்துக் கேள்வி கேட்கணும். அப்படி சொன்னவன் எவ்ளோ பெரிய கொம்பனா இருந்தாலும் சரி. அப்டி சொன்னது எங்க அப்பாவா இருந்தாலும் சரி, உங்கிட்ட இருந்து நான் இதை எதிர்பார்க்கலை .... மீதியை நாளைக்கு பேசுறேன் ..." என்று விறுவிறுவென்று வெளியேறிச் சென்றுவிட ... அப்பொழுதும் புன்னகையுடன் அவள் செல்வதைப்பார்த்தவாறு நின்றுகொண்டிருந்தார் செண்பகம்.

"போடி போடி இவளே.. உன்னாலே உங்க அப்பாவை மூஞ்சிக்கு நேரா திட்ட முடியலைன்னு நான் திட்டலேனு சொல்லி சீன் போட்டுட்டு போறா .." என்று மனதினுள் கழுவி ஊற்றியவனுக்கு இப்பொழுது ஆச்சரியமாக இருந்தது. " என்ன மனுஷி இவங்க .... இவங்களைப் பார்த்து அந்த மனுஷன் குழந்தை இல்லாதவங்கனு அந்தப் பேச்சு பேசிட்டு போறாரு. இவங்க என்னடானா இப்டி சாந்தமா சிரிச்சுட்டு நிக்குறாங்க. " என்று எண்ணியதோடு நில்லாமல் அவரிடம் கேட்டும் வைத்தான்.

" ஹாஹா ... நினைச்சேன் ராபு (ராபினின் செல்லப்பெயர்). உன்கிட்ட ஒரு குறை இருக்கப்போ தான் அதை மத்தவங்க உன்னைப்பார்த்து குத்திக்காட்டி பேசுனா மனசு வலிக்கும். எனக்கு 100 புள்ளைங்க 100பெத்தவங்கனு இருக்கப்போ நான் ஏன் மலடினு என்னை ஒருத்தர் சொன்னாங்கனு வருந்தபோறேன் ?? ஹான் ??? இதையே நான் அவரைப் பார்த்து ... என்கிட்ட நூறு புள்ளைங்க இருக்காங்க. எல்லாமே என்னோட புள்ளைங்க... நீங்க மூனு புள்ளைங்க தானே வெச்சுருக்கீங்கனு கேட்டா ??? ", என்று புன்னகைத்துக் கேட்க. ராபின் பெருமையாக இருப்பதுபோல் உணர்ந்தான்.

"இந்த உவா பண்றது பக்குபக்குனு இருக்கு மா. இவ போன வாரம் செவ்வாய்க்கிழமை 9 மணிவரைக்கும் பீச்ல உக்காந்து வேடிக்கைப் பார்த்துட்டு இருக்கா. அங்க ஒரு சவாரி போனேன். அப்போ அந்த வழியா போறப்போ அவளைப்பார்த்துட்டு எனக்குச் செம்ம காண்டு ஆகிருச்சு. ஓங்கி நாலு விடணும்போல இருந்துச்சு. அங்கேயே என்னோட தோஸ்து ரெண்டு பேரு இருப்பானுங்க. அவனுங்களுக்கு போன் போட்டு இவமேல ஒருகண்ணு வெச்சுக்க சொன்னா. அவனுங்க இவளைச் சைட் அடிக்குறாங்கனு என்கிட்ட கம்பளைண்ட் கொடுக்குறா... இவளையெல்லாம் வெச்சுகிட்டு....", என்று சலிப்புடன் கூற.

"அவளை ஏன் ராபின் நீ வெச்சுக்க போற...?? அவளை வேணுன்னா கல்யாணம் கட்டிக்கோ. என்ன நான் சொல்றது சரிதானா ?? ", என்று கண்ணடித்துக் கேட்க ... "வர வர உங்க நடவடிக்கை சுத்தமா சரியில்லை. என்னைப் பத்தி எல்லாம் தெரிஞ்சும் இப்டிலாம் கேக்குறீங்களே.." என்று செண்பகத்திடம் கூறிவிட்டு ஹோமிலிருந்த அவனது அறைக்குச் சென்றுவிட்டான் ராபின்.

"நீ எவ்ளோ மறைச்சாலும் உண்மை ஒருநாள் வெளியே வந்துதான் தீரும் ராபின். ", என்று மனதினுள் எண்ணியவராக அனைத்து குழந்தைகளும் தூங்கிவிட்டனரா என்று பரிசோதித்துவிட்டு ஒவ்வொரு அறையாகச் சென்று விளக்கை அணைத்துவிட்டு இரவு விளக்கை எரியவிட்டு அவரது அறைக்குச் சென்று அக்கடாவென்று படுத்துக்கொண்டார் செண்பகம். அன்றைய நாளில் நடந்தவற்றை மனதினுள் உறுபோட்டவர்.. " ராபின் அவன் காதலை வெளிப்படுத்தக்கூடாதுனு அவகிட்ட அந்தப் பொறி பொறியுறான். ஆனா என்னைக்கு இருந்தாலும் உன் காதல் உன்னையும் மீறி வெளிப்படத்தான்போகுது. ஆனா, அது நல்ல சந்தர்ப்ப சூழ்நிலையிலே நடக்கனும்னு எனக்கு ரொம்ப பயமா இருக்கு.", என்று மனதினுள் உறுபோட்டவாறு உறங்கிப்போனார் செண்பகம்.

*******************************************************************************************

கிளிகளின் கீச் கீச்சென்ற சத்தத்தில் எழுந்து அமர்ந்தான் ராபின். இரவு வெகுநேரம் உவாவின் நினைவில் தூங்காமல் பரிதவித்தவன் விடியற்காலையில் தான் தூங்கவே செய்திருந்தான்.

" இவ இருக்காளே மனுஷனை பேஜாராக்குறதுதான் இவளுக்குப் பொழப்பே. மனுஷனை சாவவும் விடமாட்டா. பொழைக்கவும் விடமாட்டா ... ராத்திரி ஊடு (வீடு) போய்க்கிட்டேன்னு ஒரு போன் போட்டுச் சொல்லாம என்னை நிம்மதியா தூங்கவிடாம டார்ச்சர் பண்றா. ச்சை. இவளையெல்லாம் வெச்சுகிட்டு எப்படித்தான் குப்பைகொட்ட போறேன்னு தெரியலை. ", என்று தன்னையறியாமல் வாய்விட்டுப் புலம்பியவன் கடைசி வரிகளில் நேற்று சென்பகம் சொன்னதை நினைத்துப்பார்த்தவனுக்கு மனதினுள் இனிக்கத்தான் செய்தது. "நீ இருக்க நிலைமையிலே இது ரொம்ப முக்கியம் இல்லை?? ", என்று கேள்விகேட்ட மனதை அடக்கிக் கவிழ்ந்து படுத்துக் கனவுகளைத் தொடர்ந்தான்.

அதே நேரம் நேற்று இரவு நடந்ததை மனதினுள் உறுபோட்டவாறு அமர்ந்திருந்தார் உவாவின் அப்பா.

இரவுப் பன்னிரெண்டு மணிக்கு வீட்டிற்குள் வேகவேகமாக நுழைந்துகொண்டிருந்தாள் உவா.
 
Top Bottom