Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


சிறையெடுத்தாயோ உனதன்பில்...

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
167
Points
43
"சீக்கிரம் ரெடியாகு. நேரமாகுது" என்று வெளியே சென்ற தன் அத்தையை மனதில் வசை பாடியவள்.

"மாமா! ப்ளீஸ். எங்க இருக்கீங்க? என்னை இங்க இருந்து கூட்டிட்டு போவேன்னு வாக்கு கொடுத்துருக்கிங்க" என்று தனக்கு மட்டும் கேட்கும் குரலில் வேண்டியவள் கடமையென்று ரெடியானாள் இசைத்தமிழ்.

திடிரென்று போன் அடிக்கவும் யாரென்று பார்த்ததும் வியர்வை துளிகள் அரும்ப வேறு வழியில்லாமல் எடுத்தாள்.

எதுவும் பேசாமல் மௌனமாய் இருக்க எதிர்முனையில் இருந்து மட்டும் குரல் வந்தது.

"ஹேய்! பொண்டாட்டி. ரெடியா இரு. இந்த அஞ்சு வருஷம் தப்பிச்ச மாதிரி இன்னைக்கு தப்பிக்க முடியாது. இனி என்கிட்ட இருந்து நீ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது. உன்னை யாரும் காப்பாத்தவும் மாட்டாங்க." என்ற வார்த்தைகளில் உள்ளுக்குள் உதறல் எடுத்தாலும் நிச்சயம் தப்பிக்க வழி இருக்கும் என்று நம்பினாள்.

அவளின் மனம் ஐந்து வருடங்களுக்கு முன் சென்றது.

ஒரு உறவினர் வீட்டு திருவிழாவிற்கு சென்று திரும்புகையில் நடந்த எதிர்பாரா விபத்தில் பெற்றவர்கள் இருவரும் இறந்துவிட, பின் சீட்டில் உறங்கி கொண்டு வந்தவள் லேசான காயங்களோடு மீண்டிருந்தாள் இசைத்தமிழ்.

மருத்துவமனையில் மூன்று மணி நேரம் கழித்து கண் விழித்தவள் முதலில் கேட்டது "அம்மா அப்பா எங்க?" என்பது தான்.

அவளின் கேள்வியை தாள முடியாமல் அணைத்து கொண்டு தலைக்கோதினார் அவளின் தாய்மாமா கதிரேசன்.

"அம்மாவும் அப்பாவும் வேற ரூம்ல இருக்காங்கடா. வந்துருவாங்க" என்றார் கண்ணீர் நிறைந்த முகத்துடன்.

மற்றவர்கள் இவர்களை கண்டு ஒதுங்கி நின்றாலும் யாருக்கும் கதிரேசன் குடும்பம் இங்கு இருப்பது பிடிக்கவில்லை என்பது தான் உண்மை.

பொறுமையாக தன் தங்கையும் மாப்பிள்ளையும் இறந்துவிட்டார்கள் என்பதை எடுத்து கூற, அதிர்ச்சியில் உறைந்து அழூவதை கூட நிறுத்தி கொண்டது அந்த இளங்குறுத்து.

"அம்மாடி உனக்கு யாருமில்லைன்னு நினைக்காதடா. இந்த மாமா இருக்கிறேன் உனக்கு. மனசு விட்டு அழுதுடுடா செல்லம். இப்படி இருக்காத" என்று எவ்வளவு கூறியும் சிலையாக மாறியிருந்தாள் இசைத்தமிழ்.

கதிரேசன் தன்னுடன் அவளை கூட்டி செல்வதாய் கூற பூகம்பம் வெடித்தது.

"அதெப்படிங்க முடியும்? நாங்க அப்பலர்ந்து இப்போ வரைக்கும் கூட்டு குடும்பமா தான் இருக்கோம். அப்போ குழந்தை எங்க கூட தான இருக்கணும்? என் தம்பி பொண்ணை என் இன்னொரு பொண்ணா வளர்க்கிறேன். உங்க கூட எல்லாம் அனுப்ப முடியாது" என்றார் அவளின் பெரியப்பா விஷ்ணு.

அந்த ஊரிலேயே சொத்தும் செல்வாக்கும் மிக்க குடும்பமென்பதால் யாரும் தலையிடாமல் அனைவரும் அமைதியாய் நின்றனர்.

"என் தங்கச்சி பொண்ண உங்ககிட்ட விட முடியாது. நான் கூட்டிட்டு போக தான் போறேன்" என்றார் பணத்திலும் அந்தஸ்த்திலும் சற்றும் குறையாத அவளின் மாமா கதிரேசன்

ஒருவர் மாற்றி ஒருவர் பேச வாக்குவாதம் அதிகமானது. இறுதியில் நீதிமன்றம் செல்வேன் என்பது வரை வந்து நின்றது.

"என்னங்க போதும். அவளுக்கு பதினெட்டு வயசு ஆகுற வரைக்கும் இங்க இருக்கட்டும். கோர்ட் கேஸ்னு போனா தேவையில்லாம குழந்தைக்கு இன்னும் மன உளைச்சல் அதிகமாகும்." என்று கூறும் மனைவியை சில நொடிகள் கூர்ந்து கவனித்தவர் பின் மெதுவாய் தலையாட்டினார்.

"செல்லம்! எனக்கு இங்க உன்னை விட்டுட்டு போக பிடிக்கலை. ஆனா, கொஞ்ச நாளைக்கு நீ இங்க தான் இருக்கணும். அப்போ தான் உன்னை நிரந்தரமா என்கூட கூட்டிட்டு போக முடியும்" என்று அவளின் நெற்றியில் முத்தமிட எந்த உணர்ச்சியும் இல்லாமல் அவளின் அறையில் அமர்ந்திருந்தாள்

யாரும் இவர்களை ஒரு பொருட்டாய்கூட மதிக்காமல் அவரவர்களின் வேலையை கவனித்து கொண்டிருந்தனர்.

அமைதியாய் உள்ளே வந்த கதிரேசனின் மகனான தரன், அவளைவிட ஐந்து வயது பெரியவன்.

அவளின் அருகில் மெல்ல அமர்ந்தவன்.

"அம்மு!" என்றான்.

அவனின் குரலில் தலைநிமிர்ந்தவள் அவனை கண்டதும் அதற்கு மேல் முடியாது என்பது போல் கதறி கொண்டே அவனின் நெஞ்சில் சாய்ந்தாள்.

தன் சிறுவயதில் இருந்து உடனிருக்கும் உற்ற ஸ்நேகிதனும் மாமனும் அவனே அல்லவா?

"மாமா! இப்படி ரெண்டு பேரும் என்னை விட்டுட்டு போயிட்டாங்க. ஒரே நாள்ல நான் யாரும் இல்லாத அனாதையா ஆகிட்டேன்" என்று கதறுபவளை இறுக்கி அணைத்தவன் தானும் கண்ணீரில் கரைந்தான்.

தன்னிடமிருந்து பிரித்து அவளின் முகத்தை பார்த்தவன்.

"ஏன்மா அப்படி சொல்ற? உனக்கு அப்பா இருக்காரு, அம்மா இருக்காங்க, ஏன் நான் இருக்கேன் டா உனக்கு. உன்னோட பதினெட்டாவது பிறந்த நாள் அன்னைக்கு இங்க உன்னை கூட்டிட்டு போக முதல் ஆளா இருப்பேன். அதுவரைக்கும் நீ ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். சரியா? அப்பப்போ நான் உன்கிட்ட பேசுறேன்." என்று அவளின் நெற்றியில் நெற்றி முட்டி சிரித்தான்.

"சரி" என்றாள் சற்று தெளிந்தவளாய். அன்று சென்றவன் தான் அவள் மனம் துவளும் போதெல்லாம் புரிந்துகொண்ட நாயகனாய் அவளிடம் பேசி கலங்கிய மனதை சரி செய்வான்.

இவர்களின் குடும்பம் இந்த ஐந்து வருடங்களாக இவளை எவ்வளவு பாடுபடுத்தியும் அத்தனையும் கடந்து வந்திருக்கிறாள் என்றாள் அதற்கு அவன் கொடுத்த வார்த்தைகள் தான் முக்கிய காரணம்.

அந்த வீட்டில் அவளின் அத்தை மகன் பல முறை இவளை தொந்தரவு செய்ய முயலும் போதெல்லாம் எப்படியாவது தப்பித்து விடுவாள்.

ஆனால், அவளின் பெரியப்பாவும் அத்தையும் சேர்ந்து அவளை வெளியே அனுப்ப கூடாது என்பதில் திண்ணமாய் இருந்தனர்.

அந்த வீட்டில் அவளுக்கு உதவும் ஒரே நபர் அவளின் பெரியப்பா மகளான தங்கை வனிதா தான்.

அவளுடைய சொத்தின் பாகம் வெளியே சென்று விடக்கூடாது என்பதில் இருவரும் உறுதியாய் இருந்தனர்.

"அண்ணா! அவளுக்கு பதினெட்டு வயசு முடிஞ்சுது அவ்ளோ தான் அவங்க வந்து கூட்டிட்டு போய்டுவாங்க. அதோட இவளும் அவிழ்த்து விட்ட கழுதையாட்டம் வெளிய போய்டுவா. போக கூடாது. அதுக்காகவா இவ்ளோ நாள் கஷ்ட பட்டோம்?" என்றார் இசைத்தமிழின் அத்தை.

"இல்லை. அதுமாதிரி நடக்க விடக்கூடாது. இந்த சொத்து என்கிட்ட இருந்து வெளிய போகவா ஆக்ஸிடென்டை உருவாக்குனேன். ஒருவேளை அன்னைக்கே இவ தப்பிச்சிருந்தா விட்டிருப்பேன். அதுக்கப்புறமும் போட்டு தள்ள தான் முடிவெடுத்தேன். ஆனா, அதுக்குள்ள அவளோட முட்டா மாமன் அவ உயிருக்கு ஆபத்து இருக்குன்னு போலீஸ்ல கம்பலைன்ட் கொடுத்திருக்கான். அதான் போகட்டும் சனியன்னு விட்டுட்டேன். இத்தனை வருஷம் வளர்த்துட்டு இன்னைக்கு இவ வெளிய போக விட்டிருவேணா? நிச்சயமா முடியாது" என்றார் இசைத்தமிழின் பெரியப்பா.

"அப்போ என்ன பண்ணபோற அண்ணா?" என்றார் அத்தை திட்டம் தீட்டுவதற்க்கு உடந்தையாய்.

"ஹ்ம் அதான் இருக்கானே உன் மகன் என் மருமகன். ஏற்கனவே அவ பின்னாடி நாயாட்டம் அலையறது எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா? எல்லாம் எனக்கு தெரியும்? என் காதுக்கு பலமுறை எட்டிருச்சு. இருந்தும் எதுக்கு கண்டிக்காம இருக்கேன்? அவனுக்கு அவள் தான்னு முடிவு பண்ணிட்டேன். அவளோட குடுமி அவன்கிட்ட கொடுத்த புறம் என்ன பிரச்சனை வரபோகுது? சொத்து நம்மளை விட்டு எங்கும் போகாது" என்று குரூரமாய் சிரித்தார் பெரியப்பா விஷ்ணு.

"சரியான முடிவு தான் அண்ணா எடுத்திருக்க" என்று சிரித்தார் அவளின் அத்தையும் உடன் சேர்ந்து.

"ஆனா ஒண்ணு உன் பையன்ங்கிட்ட சொல்லி கல்யாணம் முடிஞ்ச வுடனே என்கிட்ட ஏதாவது வாலாட்டினான் அப்புறம் அவனுக்கும் ஒரு பொங்கல் வச்சிருவேன். புரியுதா?" என்றார் எச்சரிக்கும் விதமாய்.

"அண்ணே! கவலைய விடுன்னே அவன் நம்ம பையண்ணா" என்றார் அவரும் புன்னகைத்து.

இவை எல்லாவற்றையும் அந்த வழியாக இசைத்தமிழ் வெளியே இருந்து கேட்டுவிட, மூச்சுக்கூட விடமுடியாமல் வேதனையில் ஆழ்ந்து தன் அறைக்குள் வேகமாய் தஞ்சம் புகுந்தாள்.

எவ்வளவு நேரம் அழுதாளோ தெரியாது? கண்ணீர் வற்றும் வரை அழ முடிந்ததே தவிர வேதனை குறையவில்லை.

'இவங்களா என் அப்பா அம்மாவை கொன்னாங்க? இவங்க எல்லாம் மனுஷங்களா இல்ல மிருகங்களா? சொத்துக்காக கூட பிறந்தவர் குடும்பத்தையே கொலை செய்துருக்காங்க? அப்பா அம்மா ஏன் இந்த நரகத்தில் என்னை விட்டு சென்றீர்கள்? என்னையும் உங்களோடு அழைத்து சென்றிருக்கலாம் அல்லவா? இவ்வளவு நாள் இவர்கள் கொடுத்த வேலை சுமை எதுவுமே பெரிதாக படவில்லை. அதை விட பலமடங்கு வலி தந்து இன்று அவள் கேட்டது. இவ்வளவு கொடூரமான வேலை செஞ்சுட்டு எப்படி இவங்களால இவ்ளோ நிம்மதியா இருக்க முடியுது? இல்ல இவங்க நிம்மதியை உடைக்கிறது தான் என் வேலை இனி. இவங்க என் குடும்பத்துக்கு பண்ண துரோகத்துக்கு தண்டனை அனுபவிச்சே ஆகணும்' என்று தனக்குள் உறுதி பூண்டவள் வேறெங்கு செல்வாள்.

அவளின் ஆப்த்பாந்தவனாய் விளங்கும் அவளின் மாமன் மகனிடம் தான் பேச சென்றாள்.

இரவு பதினொரு மணி வரை காத்திருந்தாள்.

பின் குளியலறைக்குள் சென்றவள் தரன் அவளுக்காக யாருக்கும் தெரியாமல் கொடுத்துவிட்டு சென்ற போனை எடுத்து அவனுக்கு போன் செய்தாள்.

வேறு எந்த நேரத்திலும் பேசமுடியாது. தெரிந்தால் அவ்வளவு தான் அவளுக்கென தனியாய் கொடுத்திருக்கும் அறையை கூட பிடுங்கிக்கொண்டு நடுகூடத்தில் படுக்க வைத்து விடுவார்கள் பாவிகள்.

"ஹலோ!" என்ற தரனின் குரல் கேட்டதும் மடை திறந்த வெள்ளமென மௌனமாய் அழ தொடங்கினாள். இவளை நன்கு அறிந்தவன் என்பதால், "இப்போ எதுக்கு அழற? என்ன ஆச்சு? அந்த கேடு கெட்ட தடியன் ஏதாவது பண்ணானா?" என்றான் கோபமாய்.

"இல்ல மாமா" என்று கேவியபடி.

"வேற என்னடா? இரு அம்மா பேசனுமா? தரேன் " என்று தன் அன்னையிடம் கொடுக்க, "ஹலோ! குட்டிமா. எப்படி டா இருக்க?" என்ற அவளின் அத்தையின் குரல் கேட்டதும் மேலும் அழுகையை நிறுத்த முடியாமல் போனது.

அவளின் மாமா கதிரேசன் வேகமாக வாங்கி, "இசை! எதுவா இருந்தாலும் முதல்ல அழறதை நிறுத்துடா. என்னன்னு சொல்லு? அந்த தடியனுக்கு ஏற்கனவே வேணும் வேணும்ன்ற அளவுக்கு நிறைய கொடுத்தேனே இன்னுமா அடங்கலை அவன்?" என்றதும் சிரித்துவிட்டாள்.

"மாமா! போன வாரம் கைய உடைச்சிட்டு வந்து கீழ விழுந்துட்டேன்னு சொன்னது உங்க வேலை தானா?" என்றாள் லேசான புன்னகையுடன்.

"நானே அது நானே" என்றார் அவர் ராகமாய்.

"அயோ! என் செல்ல மாமா. இந்தாங்க என் முத்தம் பறந்து வருது பிடிச்சிக்கோங்க" என்றாள் உற்சாகமாய்.

இவளின் குழந்தை தனத்தில் நெகிழ்ந்து போன கதிரேசன்.

"அம்மாடி! இப்போ சொல்லுங்க. என் தங்கம் எதுக்கு அழுதாங்க? என்ன கொடுமைன்னாலும் இன்னும் ரெண்டு வாரம் தான். முடிஞ்ச வுடனே நீ நம்ம வீட்ல ராணியாட்டம் இருக்கலாம்டா. அதுக்கான எல்லா ஏற்பாட்டையும் தரன் செஞ்சுட்டான்" என்றார் கரிசனமாய்.

மீண்டும் நெஞ்சை பாரம் தாக்க, அழ தொடங்கினாள்.

"மாமா! இவங்க எல்லாம் மனுஷங்களே இல்ல மாமா. நாம நினைச்சதை விட கெட்டவங்களா இருக்காங்க" என்றாள் தேம்பி.

"நீ முதல்ல அழறதை நிறுத்து டா. எதுவா இருந்தாலும் மாமா இருக்கேன். என்ன நடந்தது சொல்லு?" என்றார் கதிரேசன் உள்ளுக்குள்ளே பதட்டமானாலும்.

"மாமா! இவங்க தான் சொத்துக்காக அப்பா, அம்மா, என்னையும் கொல்றதுக்கு ஏற்பாடு பண்ணிருக்காங்க. அதிர்ஷ்டவசமா இல்ல துரதிஷ்டமோ நான் தப்பிசுட்டேன். அதான் என்னை வெளியே அனுபாம வீட்டுக்குள்ளயே வச்சிருக்காங்க. சீக்கிரமே அந்த தடிமாடுக்கும் எனக்கும் கல்யாணம் பண்ணி வைக்க திட்டம் போட்ருக்காங்க. அப்போ தான் சொத்து வெளிய போகாதாம். அப்படி மட்டும் ஏதாவது நடந்துச்சு அவன் என்னை நெருங்குறதுக்கு முன்னாடியே என் உயிர் போயிடும் சொல்லிட்டேன். ஆனா, அவங்க செஞ்சதுக்கு தண்டனை தந்தே ஆகணும்" என்றாள் இசைதமிழ்.

எல்லாவற்றையும் கேட்ட கதிரேசன் அதிர்ச்சியில் பொத்தென்று தரையில் அமர்ந்து விட, அணைத்தையும் கேட்டு கொண்டிருந்த தரன் போனை வாங்கினான்.

"அம்மா அப்பாவை பார்த்துக்கோங்க." என்று தனதறைக்குள் நுழைந்தான்.

"ஹேய் தமிழ்! நீ இந்த முடிவு எடுக்கவா இத்தனை வருஷமா நான் உன்கூட இருக்கேன்? எது நடந்தாலும் நான் இருக்கேன். நான் சொன்ன படி வருவேன். உன்னை என்கூட கூட்டிட்டு போக. புரியுதா?" என்றான் சற்று கண்டிப்பாய்.

"புரியுது மாமா" என்றாள் இசை.

"நான் சொல்ற மாதிரி செய். மீதியை நான் பார்த்து கொள்கிறேன். சரி, அந்த வீட்ல உனக்கு ஹெல்ப் பன்றது உன் தங்கச்சி தான?" என்றான் தரன்.

"ஆமா" என்றாள் இசை.

"அவளையும் ஹெல்ப்புக்கு கூஃப்பிட்டுக்க. ஆனா, கல்யாண விஷயத்துல மட்டும் தான். வேற எதை பத்தியும் அவகிட்ட மூச்சு விடக்கூடாது. புரியுதா?" என்றான் தரன்.

"சரி" என்றாள் இசை.

அவன் கூறியபடி தனக்கு முக்கியமான டாக்குமெண்ட்ஸ் மற்றும் சில பொருட்கள் எல்லாவற்றையும் அவளின் தங்கை மூலம் தரனின் கைகளுக்கு கிடைக்க செய்தாள்.

பின், இரண்டு நாள் கடந்திருக்கும் அவளின் பெரியப்பா அவள் அறைக்கு வரும்பொழுது பேச்சை ஆரம்பித்தாள்.

"இசை! உன்கிட்ட கொஞ்சம் பேசணும் மா. என்ன தான் நீ என் தம்பி பொண்ணுன்னாலும் இத்தனை வருஷம் உன்னை என் பொண்ணா நினைச்சு தான் வளர்த்துட்டு வரேன். இப்போ உனக்கு எது நல்லதோ அதை நான் செய்யனும். அதனால உன் அத்தை பையனுக்கும் உனக்கும் உன்னோட பதினெட்டாவது பிறந்த நாள் அன்னைக்கு கல்யாணம் பண்ணலாம்னு முடிவு பண்ணிருக்கோம் எல்லோரும்" என்றார் விஷ்ணு.

"சரி பெரியப்பா. உங்க விருப்பப்படியே செய்ங்க. ஆனா, ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்லுங்க" என்றாள் இசைதமிழ்.

முகத்தில் பூரிப்புடன், "என்னம்மா?" என்றார் விஷ்ணு.

"எதுக்காக என் அப்பா அம்மாவை கொன்னிங்க?" என்றதும் அதிர்ச்சியாய் பார்க்கும் அவரிடம், "எதையும் சொல்லி சமாளிக்க வேண்டாம் உண்மைய சொல்லுங்க? நீங்க அத்தைகிட்ட பேசிட்டு இருந்ததை கேட்டுட்டேன். அதனால எதையும் மறைக்காதீங்க. இவ்ளோ கேவலமானவங்களா நீங்க எல்லாம்? சொத்துக்காக கூட பிறந்தவன் குடும்பத்தையே சிதைச்சிட்டிங்க?" என்றாள் கோபமாய்.

அதுவரை சாந்தமாய் இருந்தவர் முகம் மாற, தன் பெல்ட்டை எடுத்து இசையை அடிக்க தொடங்கினார்.

"அனாதை நாயே! ஒட்டு கேக்குறியோ? உனக்கு எவ்ளோ திமிர் இருந்தா என்கிட்ட இந்த கேள்வியை கேட்ப?" என்று அடித்து முடித்ததும், "ஆமாடி நான் தான் உங்கப்பன் உங்காத்தாளை கொலை பண்ணேன். இப்போ என்ன அதுக்கு? என்ன பண்ண போற? உன்னால ஒண்ணும் கிழிக்க முடியாது." என்று மீண்டும் அடிக்க அவ்வளவு அடிகளையும் வாய் திறக்காமல் வாங்கிக்கொண்டாள் இசை.

"சொத்துக்காக மட்டும் கொலை செஞ்சேன்னு நினைச்சியா? அதுதான் இல்லை. உங்கப்பன் தேவையில்லாதுதல எல்லாம் தலையிட்டான். அதனால இந்த ஊர் எம்.எல்.ஏ உங்கப்பனை கொல்ல திட்டம் போட்டான். அதனால நான் அந்த வேலையை முடிச்சிட்டு அதுக்கு பணமும் வாங்கிட்டேன். சொத்தும் கிடைச்சுது கூடவே அவங்களை கொலை பண்ணதுக்கு பணமும் கிடைச்சுது." என்று சிரித்தார் விஷ்ணு.

"இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்க தான் போகுது. எதாவது ஏடாகூடமாய் பண்ணணும்னு நினைச்ச அவ்ளோ தான் உன்னையும் உங்க அப்பா அம்மா போன இடத்துக்கே அனுப்பிடுவேன்." என்று வெளியே சென்றுவிட, எழுந்து நடக்க திராணி இல்லாமல் தவழ்ந்து சென்று கதவை தாழிட்டவள், பின் மறைத்து வைத்திருந்த போனை எடுத்து அந்த வீடியோவை தரனுக்கு அனுப்பி வைத்தாள்.

சிறிது நேரத்தில் அவனிடம் இருந்து போன் வர, எழுந்து நடக்க முடியாததால் அங்கேயே எடுத்தாள்.

எதுவும் பேசாமல் அமைதியாய் இருக்க, "தமிழ்! அவன் என்ன காட்டுமிராண்டியா? நான் வரேன் இப்போ. அவனை கொல்லாம விடபோறதில்லை." என்றான் மிககோபமாய் தரன்.

"மாமா! நீங்க வரக்கூடாது. அப்புறம் எல்லாம் கெட்டுடும். அதுக்காகவா இவ்ளோ அடியையும் வாங்கிக்கிட்டேன். அந்த வீடியோவை வைத்து நீங்க என்ன செய்யனுமோ செய்ங்க. ஆனா, ஊர் மக்கள் முன்னாடி அவங்க முகத்திரையை நான் கிழிக்கனும்" என்றாள் இசை.

"தமிழ்! நான் சொல்றதை கேளு. இனி நீ அங்க இருக்க வேண்டாம். நாளைக்கே வெளிய வந்துடு. நான் உன்னை கூட்டிட்டு வந்துடுறேன்." என்றான் தரன்.

"இல்லை! நாம ஏற்கனவே பிளான் போட்ட மாதிரி எல்லாமே அன்னைக்கு தான் நடக்கணும்" என்றாள் இசை முடிவாய்.

"சரி. நீ ரொம்ப பத்திரமாய் இரு." என்றான் தரன்.

"அதை நான் பார்த்துக்குறேன் மாமா. நீங்க எல்லா ஏற்பாட்டையும் செய்துடுங்க" என்று வைத்தாள்.

அதனால், இதோ இன்று அவளுக்கு விருப்பம் இல்லாமல் அவளின் பதினெட்டாவது பிறந்தநாளன்று அத்தை மகனுக்கும் அவளுக்கும் திருமணம் செய்ய முடிவு செய்திருந்தனர்.

சரியாக மணமகன் தாலி கட்டும் நேரத்தில், "நிறுத்துங்க!" என்று உள்ளே நுழைந்தான் தரன்.

"இந்த கல்யாணம் நடக்க கூடாது. ஏன்னா இசை என்னை தான் விரும்புறா" என்றான்.

விழிகள் விரிய நடப்பவற்றை கவனித்து கொண்டிருந்த இசைக்கு ஒன்றும் புரியவில்லை.

தனக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் எப்படி இவனுக்கு தெரியும் என்று யோசித்தாள்.

"என்ன உளர்ற? அப்படி எல்லாம் எதுவுமில்லை. பிரச்சனை பண்ணாம போய்டு" என்றார் விஷ்ணு மிரட்டும் குரலில்.

அவரை எரித்துவிடுவது போல் முறைத்தவன், "இசை! எழுந்திரு இங்க வா" என்றான் மேடையின் கீழ் நின்று.

சமயத்திற்காக காத்திருந்தவள் வேகமாய் எழ முயல, இசையின் கரத்தை பிடித்து நிறுத்தினான் மணமகனான அத்தை மகன்.

"எங்கடி போற?" என்றான் ஆத்திரமாக.

"ஹ்ம்ம் நான் எங்க இருக்கனமோ அங்க போறேன். என் கையை விடுடா" என்று உதறியவள் ஓங்கி பளாரென அறைந்தாள்.

"இது இத்தனை வருஷமா என்கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணதுக்கு." என்று மீன்றும் ஒரு அரை கொடுத்தாள்.

"இது எனக்கு உன்னை பிடிக்கலைன்னு தெரிஞ்சும் கட்டாய படுத்தி கல்யாணம் பண்ண முயற்சி பண்ணதுக்கு" என்று கூட்டத்தின் முன் திரும்பியவள்.

"என்னடா இது? இவ இப்படி அடிக்கிறாளேன்னு பார்க்காதீங்க. இவங்க குடும்பமும் எனக்கு கொடுத்த அடிகளையும் வலிகளையும் எண்ண முடியாது. எல்லாத்தையும்கூட மன்னிச்சிடுவேன். ஆனா, இவங்க எனக்கு பண்ணதுலேயே மிகவும் கொடுமை என்னை பெத்தவங்களை கொன்னது தான்" என்றதும் அனைவரும் அதிர்ச்சியாய் நோக்க, "நான் உண்மையை தான் சொல்றேன்" என்று நகர போனவளின் கூந்தலை பற்றி இழுத்தான் மணமகன்.

"எங்கடி போற?" என்றான்.

"அவளை விடுடா" என்றான் தரன்.

"யாரும் தப்பா நினைச்சுக்காதீங்க. இவளுக்கு அவங்க அப்பா அம்மா இறந்ததில் இருந்து புத்தி பேதலிச்சிடுச்சு. அதனால தான் கல்யாணம் பண்ணா டாக்டர் சரியாகிடும்னு சொல்லிருக்கார். என் தங்கச்சி மகன் பெரிய மனசு பண்ணி நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிருக்கான்" என்றார் விஷ்ணு.

"உக்காருடி. இன்னைக்கு உன் கழுத்துல நான் தான் தாலி கட்றேன்" என்று அவளை இழுக்க, இம்முறை வேறு குரல் கேட்டது.

"அவளை விடு டா" என்று காக்கி உடையில் வந்து நின்றார் இன்ஸ்பெக்டர்.

"மிஸ்டர்.விஷ்ணு உங்களையும் உங்க தங்கச்சியையும் இன்னும் சம்பந்த பட்டிருக்க எல்லோரையும் அரெஸ்ட் பண்றேன்" என்று விளங்குடன் நின்றார்.

"என்ன?" என்றார் அதிர்ச்சியாய் விஷ்ணு.

அந்த போனில் இருந்த வீடியோவை காட்டினார்.

மேடையில் இருந்து கீழே இறங்கி வந்த இசை ஓங்கி இரண்டு முறை அறைந்தாள் விஷ்ணுவை.

"உன்னையெல்லாம் தொடுறதுகூட பாவம்." என்று தரனின் கைகளை பிடித்துக்கொண்டு நடக்க முயல, நகராமல் நின்றான் அவன்.

"என்ன?" என்பது போல் அவள் பார்க்க.

வேகமாக அவளை மணமேடைக்கு அழைத்து சென்றவன், அங்கிருந்த மங்கல்யத்தை அவள் கழுத்தினில் கட்டினான்.

அதிர்ச்சியாய் இசை பார்க்க, "சும்மா அப்படி பார்க்காத. நீ என்னை விரும்புறதும் தெரியும். அதே போல நானும் உன்னை விரும்புறேன்" என்றான் மெல்ல புன்னகையுடன்.

"அதில்லை அத்தை மாமா..." என்று இழுத்தாள்.

"அதோ பாரு..." அவன் கரம் நீட்ட அங்கே அவனின் பெற்றோர் இருவரும் மலர் தூவி வாழ்த்தினர்.

"இனி உன்னை யார் தொட்டாலும் அவ்ளோ தான். தொலைச்சிருவேன்" என்றான் அருகே இருந்தவர்களை பார்த்து.

அவர்கள் செய்த தப்புக்கு ஆயுட்கால சிறை தண்டனை கொடுக்க பட்டது.

இசைத்தமிழை திருமணம் செய்து கொண்டானே தவிர, அவளுக்கு பிடித்த படிப்பில் கல்லூரியில் சேர்த்து படிக்க சொன்னான்.

அவனும் பிசினசில் கவனம் செலுத்தி கொண்டிருந்தாலும் அவ்வப்பொழுது இசைத்தமிழ் தவற விட்ட சந்தோஷங்களை திருப்பி கொடுக்க ஆரம்பித்திருந்தான்.

"ம்ப்ச்... தள்ளி போ. நான் படிக்கணும்" என்று எழுதி கொண்டிருப்பவளை அருகில் அமர்ந்து அவளின் கவனம் தன்னிடம் திரும்பும்படி சேட்டை செய்து கொண்டிருந்தான் தரன்.

"அதெல்லாம் முடியாது. புருஷன்காரன் பகலெல்லாம் வேலைக்கு போய்ட்டு வரானே.. நாம அவனுக்கு ஹெல்ப் பண்ணுவோம்னு இல்லாம. நைட் பன்னெண்டு மணிக்கு பேய்ங்க கூட உக்கார்ந்து படிக்கிறியே? இது நியாயமாடி" என்று பொய்யாய் புலம்பினான்.

"போதும் போடா அந்த பக்கம்" என்றாள் இசை சிரித்துக்கொண்டு.

"அடிப்பாவி மாமா மாமான்னு சுற்றினியே இப்போ போடான்னு கூப்பிட்றயே?" என்றான் சோகமாய்.

"மாம்மா" என்றாள் இசை மெலிதாய்.

"என்னம்மா?" என்றான் அவளின் குரலில் தடுமாறி, மெல்ல அவன் நெற்றியில் இதழ் பதித்தவள் தரணை இறுக அணைத்து கொண்டாள்.

"தமிழ்!" என்றான் தரன் மென்மையாய்.

"ஹ்ம்ம்" என்றாள் விழிகள்மூடி.

"இன்னும் கொஞ்சநேரம் நீ இப்படி நின்னா? நடக்கிற எதுக்கும் நான் பொறுப்பில்லை. இது உன் கல்லூரி முதல் வருஷம். அப்புறம் அடுத்த வருஷமே எங்க அப்பா அம்மாக்கு விளையாட பேரன் பேத்தி வந்துடுவாங்க. உனக்கு பரவாயில்லையா?" என்றான் கள்ள சிரிப்புடன்.

முதலில் புரியாமல் ங்கே என்று விழித்தவள் பின் புரிந்ததும் அவனை தள்ளிவிட்டு ஓட்டம் பிடித்தாள் வெளியே.

அவளை விடாமல் துரத்திட்டது அவனுடைய கல கல சிரிப்பு.

சின்ன சின்ன சீண்டல்களும், கெஞ்சல்களும் கொஞ்சல்களும் தொடர்ந்து கொண்டுதானிருந்தது இவர்களுக்குள்.

இனிதே இவர்கள் வாழ்க்கை அமை வாழ்த்துவோம்.​
 
Top Bottom