Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


தஞ்சைப் பெரியகோவிலை கட்டியவர் யார்..?

Messages
30
Reaction score
9
Points
8
தஞ்சைப் பெரியகோவிலை கட்டியவர் யார்..?

பேரரசர் இராஜராஜர் என்பது யாவரும் அறிந்த ஒன்றுதானே. ஆம் இன்று நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

ஆனால் இக்கேள்விக்கு இன்றிலிருந்து 133 ஆண்டுகளுக்கு முன்பு யாருக்கும் பதில் தெரியாது. சற்று பின்னோக்கிச் சென்றால்.

1858 ல். ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி இந்தியாவில் முடிவுக்கு வந்து, பிரிட்டனின் நேரடி ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவில் ஏற்பட்டது. அப்போதைய ஆங்கில அரசால் 1886 ல் இந்தியத் தொல்லியல் துறை உருவாக்கப்பட்டது. Archaeological survey of india ( ASI) .

இத்துறையின் சென்னை மாகாண கல்வெட்டியல் துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டவர், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த Dr. Euger julius theodor Hultzsch. சுருக்கமாய் E.ஹூல்ஸ்.

1886 ல் அசோகரது கல்வெட்டை படியெடுத்தார். 1886 டிசம்பரில் மாமல்புரம் கல்வெட்டைப் படித்தார். 1887 டிசம்பர் மாதம் தஞ்சை பெரியகோவிலுக்கு வருகிறார். கோவிலைக் கட்டியது கரிகால்ச்சோழன், தனக்கு வந்த வியாதி தீர கைங்கரியமாய் கோவிலைக் கட்டினான். மோர் வித்த அழகி என்னும் மூதாட்டி கதை என்று செவிவழிச் செய்திகள் வழக்கத்தில் இருந்த நேரம் அது.

கோவிலுக்கு வருகிறார் ஹுல்ஸ். கோவிலின் அமைப்பும் பிரம்மாண்டமும் அவரை உறைய வைத்தது. தன்னிச்சையாக அவரிடமிருந்து வெளிப்பட்ட வார்த்தை.

கோவிலின் வாயில் முதல் கொண்டு எங்கெங்கு பார்த்தாலும் கல்வெட்டுகள். அழகான தமிழ் எழுத்துக்களில் அமைந்த கல்வெட்டுகள்.

தனக்கு இங்கு நிறையவே வேலை இருக்கிறது என்று முடிவு செய்கிறார். ( பிற்பாடு அவர் எழுதிய கட்டுரை ஒன்றில் இத்தகவல்களை விவரிக்கிறார். )

பொறுமையாகக் கல்வெட்டுகளை வாசிக்கத்தொடங்கிய அவர், கல்வெட்டுகளின் தொடக்கத்தை தேடினார். மிகச்சரியாக ஸ்ரீவிமானத்தின் வடபுறம் சென்றடைந்தார்..

சண்டிகேசர் கோவிலுக்கு எதிரே விமானத்தின் வடபுற அதிஷ்டானத்து பட்டிகை..

அங்குதான் அந்த வரிகள் இருந்தன.

இராஜராஜனின் மெய்கீர்த்தியுடன் தொடங்கும் அக்கல்வெட்டில்,

" பாண்டிய குலாசனி வளநாட்டு தஞ்சாவூர் கூற்றத்து தஞ்சாவூர் நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி இராஜராஜீவரம் "

கோவிலைக் கட்டியது பேரரசன் இராஜராஜன் என்று வெளியுலகிற்கு முதன் முதலாக அறிவிக்கிறார்.

அப்போது .. இராஜராஜனை இவ்வாறு அழைத்தார்.

பிறகு தனது பரிவாரங்களுடன் கோவிலில் முகாமிட்டு அனைத்து கல்வெட்டுகளையும் படியெடுத்து அச்சு நூலாக வெளியிடுகிறார். இவரது பணிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர் இவரது உதவியாளர் வெங்கையா..

1887 - 1891.. நான்கு ஆண்டுகள் கோவிலில் உள்ள கல்வெட்டுகளைப் படியெடுக்கும் வேலை நடந்தது. தென்னிந்தியக் கல்வெட்டுத்தொகுதி எண் 2 ல்... படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் அச்சு நூலாக வெளிவரத் தொடங்கியது..

இராஜராஜேச்சரமும், இராஜராஜனும், பெருவுடையாரும், அனைத்து மக்களின் இதயங்களை ஆக்ரமித்தார்கள்.

மராட்டிய மன்னர்களுக்கு ஏன் முதல் மரியாதை

மராட்டிய மன்னர்களுக்கு ஏன் முதல் மரியாதை என்று தொடர்ச்சியாக பல கேள்விகள் முன்னெடுக்கப்படுகிறது. இந்த கோயிலுக்கு அவர்கள் செய்தது என்ன. வரலாறு விசித்திரமான ஒன்றுதான்.

தஞ்சை சமஸ்தானத்தின் அதிபதியாக இருந்த வாரிசு ஒருவர் அடுத்த வேளை உணவுக்கும் ஆடைக்கும் ஆங்கிலேயரிடம் கைகட்டி நின்ற விசித்திரம்.

ராஜ்ய அதிகாரம் வேண்டாம். கோவில் போதும் .. என்று கோவிலுக்கு தன்னை அர்ப்பணம் செய்த மராட்டிய அரசர்.வட்டிக்கு கடன் வாங்கி லிங்கத்தை பூஜை செய்த சரபோஜி.

தஞ்சையும், பெரியகோவிலும் அந்நியர்களின் தாக்குதலுக்கு பலமுறை உட்படுத்தப்பட்டாலும்...

கி.பி. 1758 ல் .. தஞ்சை பெரியகோவில் மீது பீரங்கி தாக்குதல் தொடங்கியது. இத்தாக்குதல் நடத்தியவன் பிரஞ்சு தளபதி லாலி..

கி.பி. 1771 மற்றும் 1773 ல் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியினரின் தாக்குதலும் பெரியகோவில் மேல் நடைபெற்றது. இக்காலத்திய மராட்டிய அரசர் இரண்டாம் துளஜா.

Robert orme என்னும் ஆங்கிலேய வரலாற்று அறிஞர் தான் எழுதிய

" A History of the military transaction of the British nation in indostan " என்னும் நூலில் தஞ்சை கோவிலின் மீது நடந்த தாக்குதலை வரைபடத்துடன் பதிவு செய்கிறார்.

நவாப் முகமது அலி, ஆங்கிலேயப் படையின் உதவியுடன் 1773 இல் தஞ்சையை கைப்பற்றி தஞ்சையின் மராட்டிய அரசன் துளஜாவை சிறை வைத்தான். அதிகாரம் படைத்த அந்த தஞ்சை அரசனின் அடுத்த வேளை உணவு நிச்சயமில்லை.

1773 - 1776 வரை மூன்று வருடம்.. தஞ்சை பெரியகோவில் ஆற்காடு நவாப் மற்றும் கிழக்கிந்திய கம்பெனியினரின் இரானுவவீரர்கள் தங்கும் படைவீடாக இருந்தது. கோவிலில் துப்பாக்கி சுடும் பயிற்சி. பூஜைகள் வழக்கொழிந்து துப்பாக்கி முழக்கம் கேட்டுக்கொண்டேயிருக்கும்..

இன்றும் பெரியகோவிலில் நாம் அந்தத் தோட்டாத் தடங்களைப் பார்க்கலாம். பெரியகோவிலில் உள்ள முருகன் கோவிலில் " Shelter for 36 person " என்ற எழுத்துப்பொறிப்பு.

கருவறை அர்த்தமண்ட வாயிலில் ARP என்னும் படைக்குறியீடு.. திருச்சுற்றில் ARP WARD. என்ற அடையாளக்குறியீடுகளை இன்றும் நாம் காணலாம். அதன் பிறகு நடந்த பேச்சுவார்த்தையில் ஆங்கிலேய அரசு துளஜாவை விடுவித்தது..

அதற்குப் பிறகு நடந்த அரசியல் உள்ளடி வேலைகள். 1798 ல் தஞ்சை அரசராக இரண்டாம் சரபோஜியை ஆங்கிலேயர்கள் நியமித்தனர்.

வெறும் அரசன் என்னும் அந்தஸ்து மட்டும் உனக்கு.. ஆட்சி அதிகாரம் அனைத்து வரிவசூல் எங்களுக்கு. சம்மதமா என ஆங்கிலேயர்கள் சரபோஜியிடம் கேட்க..சரபோஜியும் ஒரு நிபந்தனை விதித்தார். அனைத்தும் எடுத்துக்கொள்ளுங்கள். பெரியகோவிலை மட்டும் விட்டு விடுங்கள். அங்கு எந்த ஒரு படைப்பிரிவும் தங்கக்கூடாது. கோவிலில் தொடர்ந்து பூஜைகள் நடைபெறவேண்டும்.

சரபோஜியின் நிபந்தனை ஏற்கப்பட்டு, பெரியகோவிலில் மீட்கப்பட்டது. பெரியகோவிலில் பல புனரமைப்பு பணிகளை செய்கிறார் சரபோஜி. ஆங்கிலேயப்படையினரால் சிதைவுற்ற கோவிலை நன்கு சீரமைத்து, செங்கற்களால் தரைத்தளமும் அமைத்தார்.

தஞ்சை அருகே வீரசிங்கம் பேட்டை என்னும் ஊரில் சிதறுண்டும் புதையுண்டும் இருந்த 108 சிவ லிங்கங்களை பத்திரமாக எடுத்து பெரியகோவிலின் திருச்சுற்று மண்டபத்தில் பிரதிட்டை செய்தார். இந்நாள் 1801 மார்ச் 18 .

லிங்கங்களுக்கு தினசரி பூஜை செய்ய 1802 மே 29. இல் சென்னையைச் சேர்ந்த ஹாரிங்டன் என்பவரிடம் 5000 புலி வராகன் கடன் வாங்கி இக்காரியத்தை செய்கிறார்.

இச்செய்திகள் அனைத்தும் சரசுவதி மகால் நூலகத்தில் உள்ள ஆவணத்தில் உள்ளது. ( ஆவண மொழிபெயர்ப்பு Vol 1 no 14 /7 )..

இவ்வாறு தஞ்சை பெரியகோவிலை சீர்படுத்திய, சரசுவதி மகால் நூலகத்தை அமைத்துத் தந்த இரண்டாம் சரபோஜி 1832 மார்ச் 7 ஆம் தேதியில் இறைவனடி சேர்ந்தார்.

இவருக்குப்பிறகு இவரது மகன் இரண்டாம் சிவாஜி தஞ்சை மன்னராக ஆங்கிலேயரால் நியமிக்கப்பட்டார். இவரது ஆட்சி 1832 - 1855 வரை நடந்தது. இதன் பிறகு தஞ்சை ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் முழுவதுமாக ஆட்பட்டது.

இந்த சிவாஜி மன்னர் காலத்தில் 1843 ம் ஆண்டு செப்டம்பர் 7 ம் நாள் தஞ்சை பிரகதிசுவர சுவாமிக்கு சிகரப் பிரதி ஷசை செய்து அஷ்டபந்தனம் முதலான சீரணோத்ரம் கும்பாபிசேகம் செய்தார். இச்செய்தி விமான கலசத்திலும், தஞ்சை சரசுவதி நூலக ஓலைச்சுவடியிலும் ஆவணமாக உள்ளது. 1729 ஆம் ஆண்டும் ஒரு கும்பாபிசேகம் நடந்த தகவலும் உள்ளது.

தஞ்சை பெரியகோவிலை அரும்பாடுபட்டு மீட்டு, இன்றைய நிலைக்கு இருக்க காரணமான சரபோஜி வாரிசை வந்தேறி என்று வசைபாடுவது தவறு. 1729 மேற்றும் 1843 ஆண்டுகளில் நடைபெற்ற வைதீக கும்பாபிசேகத்தை, 300 ஆண்டு வழக்கத்தை, ஆண்டாண்டு கால வழக்கம் எனக்கூறுவதும் தவறு.

சரபோஜிகளின் பிரகதிசுவரர் என்னும் பெயர் பலகை பெரியகோவில் என்றும் பெருவுடையார் கோவில் என்றும் மாறியதைப் போல்.வழக்கம் என்பது 300 ஆண்டுகள் அல்ல.கோவில் வழக்கம் 1000 ஆண்டுகளுக்கும் மேல்..

நன்றி.Malaichamy chinna c​
 
Top Bottom