Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BL NOVEL தர்காவில் ஒரு துர்கா - Tamil Novel

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

 
Last edited:

ரேவதி ராமு

New member
Vannangal Writer
Messages
3
Reaction score
8
Points
3
அத்தியாயம் 1

இது பதினைந்து வருடங்களுக்கு முந்தைய கதை. துர்கா அவசர அவசரமாக அலுவலகத்திற்கு கிளம்பி கொண்டிருந்தாள். அட கடவுளே மணி எட்டு ஆகிருச்சே, ஒன்பது மணிக்கு அலுவலகத்துக்குள் இருக்கணுமே, இல்லனா அந்த மேனேஜர் நிக்க வெச்சு ஒரு மணி நேரம் அட்வைஸ் மழை பொழிவாரே! அண்ணி நான் குளிக்க போறேன். என் டிபன் பாக்ஸில் காலை உணவும் மதிய உணவும் சேர்த்து எடுத்து வச்சிருங்க . காலை உணவு சாப்பிட நேரம் இருக்காது நினைக்கிறேன். சரி சரி சீக்கிரம் வா அடுத்து நான் குளிக்கணும். என்று குரல் கொடுத்தாள அவள் அண்ணிஆகிய பார்வதி. நம் கதாநாயகி துர்கா தன் அப்பா பரந்தாமன் , அண்ணன் வாசுதேவன், அண்ணி பார்வதி மற்றும் அவர்களுடைய இரண்டு குழந்தைகள் லாவண்யா. சூர்யாவுடன் இருக்கிறாள். இரு பிள்ளைகளும் பக்கத்தில் உள்ள பள்ளியில் படித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களை ஏழு மணிக்கு ரிக்ஷா மேன் அழைத்துக் கொண்டு போக வந்திடுவான். அதற்குள் இரு குழந்தைகளையும் தயார் செய்ய வேண்டும் .சூர்யா சின்ன பெண் என்பதால் அவளை குளிப்பாட்டி, தலை பின்னி சாக்ஸ் போட்டு, டிபன் ஊட்டி ரிக்ஷா மேன் வருவத்துக்குள் தயார் பண்ண வேண்டியுள்ளது. லாவண்யாவிற்கு தலை மட்டும் பின்னிவிட்டால்

போதும்.மற்றதெல்லாம் அவளே செய்து கொள்வாள். அண்ணி பார்வதியும் வேலைக்கு செல்கிறாள். அண்ணன் வாசுதேவன் எதையும் கண்டு கொள்ள மாட்டார். டிபன் கொடுத்தால் சாப்பிடுவார். லஞ்ச் கொடுத்தா எடுத்துக்கொண்டு ஆபீசுக்கு கிளம்பி விடுவார். வீட்டு வேலை அவருக்கு சுத்தமா தெரியாது. துர்காவும் பார்வதியும் சேர்ந்து தான் பிள்ளைகளை தயார் செய்து பள்ளிக்கு அனுப்ப வேண்டும். பார்வதி தந்தி அலுவலகத்தில் வேலை பார்ப்பதால் அவர்களுக்கு ஷிபிட் டூட்டி. ஒரு வாரம் மதியம் 2மணி முதல் இரவு 9மணி வரை வேலை இருக்கும். ஒரு வாரம் நைட் டூட்டி இருக்கும், துர்கா பார்வதி இல்லாத போது அவளே வீட்டு வேலை எல்லாம் பார்த்துக்கொள்வார். அப்பா பரந்தாமனுக்கு சாப்பாடு போட்டு மாத்திரை கொடுத்து தூங்க சென்ற பிறகு அவள் அண்ணனுக்கும் சாப்பாடு போட்டு குழந்தைகளையும் கவனித்து தூங்க வைத்த பிறகு அவள் தூங்க செல்வாள். இவர்கள் அனைவரும் திருவல்லிக்கேணியில் வசித்து வருகிறார்கள்.அவர்கள் வீட்டின் இடது பக்கத்தில் மசூதியும் வலது பக்கத்தில் சற்று தள்ளி கோவிலும் இருக்கும். அதிகாலை 5.30 மணிக்கு மசூதியில் இருந்து ஓதும் சத்தம் கேட்கும் . 7.00மணிக்கு கோயிலில் இருந்து சுப்ரபாதம் ஒலிக்கும். இரண்டு சத்தங்களும் அவளுக்கு ரொம்ப பிடிக்கும். தினமும் காலையில் அந்த சத்தத்தில் .

தான் கண் முழிப்பாள். இவ்விரு குரல்களும் அவளுக்கு ரம்யமாகவே தோன்றும். காலையில் எழுந்ததிலிருந்து அவளுக்கு வேலை சரியாக இருக்கும். காலையில் பிள்ளைகள் சென்றவுடன் தானும் 8.30 மணிக்கு கிளம்பி பேருந்து நிறுத்தத்திற்கு வந்து விடுவாள். 9.30 மணிக்கு எல்லாம் அலுவலகத்துக்கு வந்து .விடுவாள் பிறகு 5.30 மணிக்கு அலுவலகம் முடிந்தவுடன் விசேஷம் இருந்தால் கோவிலுக்கு செல்லுவாள்.

இல்லையென்றால் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது அவர்களுக்கு இரவு உணவு அளித்து தூங்க வைப்பது என்று நேரம் ஓடி விடும். பார்வதி ஷிபிட் டூட்டி முடிந்து 9,00 மணிக்கு வீட்டுக்கு வருவாள். பாவம் அவளும் களைப்பாக இருப்பாள் என்ன இருக்கிறதோ அதை சாப்பிட்டு விடுவாள். 9,30 மணிக்கு எல்லாம் அனைவரும் தூங்க போய் விடுவோம்.என்ன துர்கா சாப்பாடு எடுத்திண்டியா என்று பார்வதியின் குரல் கேட்கவும், எடுந்துண்டேன் அண்ணி நான் போய்ட்டு வரேன் என்று கூறி பேருந்து நிலையம் நோக்கி நடக்க தொடங்கினாள் நம் கதையின் நாயகி துர்கா மாநிறம், 5 அடி தான்.ஆனால் முகம் பளிச் என்று அழகாக இருக்கும். வட்ட முகத்தில் மான் போன்ற இரு சிறிய கண்கள். கூர் நாசி,சிரித்தால் இடது ஓரத்தில் தெத்து பல் ஒன்று தெரியும். அது அவளின் அழகை மேலும் கூட்டும். ஒல்லியும் இல்ல குண்டும் இல்ல. மிதமான சரீரம். ஒரு முறை பார்த்தால் மறுமுறை பார்க்க தூண்டும் அழகுதான் அவள் எப்போதும் துருதுருவென்று இருப்பாள். அவளுக்கு நெருங்கிய தோழி என்றால் அது பக்கத்து வீட்டில் உள்ள அனீஸ் பாத்திமா தான். இருவரும் சிறு வயதில் இருந்தே ஒன்றாக வளர்த்தவர்கள். அனீஸ் துர்காவுடன் கோவிலுக்கு வருவாள். துர்கா அனீஸுடன் தர்காவுக்கு செல்வாள். துர்கா எப்போதும் அனீஸ் வீட்டில் தான் இருப்பாள்.



துர்கா சிறு வயதிலேயே தாயை இழந்தவள். அவளுடைய தந்தை பரந்தாமன் மறுமணம் புரியாமலேயே துர்காவையும் அவள் அண்ணன் வாசுதேவனையும் வளர்த்து வந்தார். பரந்தாமன் சில நேரங்களில் அலுவலகத்திலிருந்து இரவு வர தாமதமாகிவிட்டால் துர்காவும் அவள் அண்ணனும் அனீஸ் வீட்டில் தான் சாப்பிடுவார்கள். அனீஸ் அவள் அம்மா அப்பாவிற்கு ஒரே பெண். ஆதலால் அனீஸின் அம்மா பாத்திமாவும் அப்பா சம்சுதீனும் துர்காவையும் அவள் அண்ணணனையும் நன்றாக பார்த்துக் கொள்வார்கள் பாத்திமாவிற்கு துர்கா என்றால் பிரியம் அதிகம் தான் ஏனென்றால் துர்கா சிறு வயதில் குண்டு கன்னமும் கள்ளமில்லா சிரிப்புமாக புள்ளி மான் போல துள்ளி விளையாடுவாள். அதை பார்க்க பாத்திமாவிற்கு மிகவும் பிடிக்கும்.அதனால் அனீஸை போலவே துர்காவையும் தன் பெண் போல கவனித்தாள். துர்கா வளர்ந்த பிறகும், அண்ணனுக்கு திருமணம் முடிந்த பிறகும் இரு குடும்பங்களின் நட்பு தொடர்ந்தது. அனீஸ் வீட்டு பிரியாணி துர்கா வீட்டுக்கும் துர்கா வீட்டு சர்க்கரை பொங்கல் அனீஸ் வீட்டுக்கு சென்றது. சிறு வயதில் அனீஸ் ஸும் துர்காவும் மசூதியிலும் கோவிலிலும் ஒன்றாக விளையாடுவார்கள். அதை பார்த்து இரு குடும்பங்களும் சந்தோஷமாக பார்த்து ரசிப்பார்கள். துர்கா மயிலாப்பூரில் இருக்கும் ஒரு தனியார் கம்பனியில் கணக்காளராக வேலை செய்கிறாள்.ஆபீஸ் வந்தவுடன் துர்கா கடிகாரத்தில் மணி பார்த்தாள். 9.00மணி என்று காட்டியது. அப்பாடா சரியான நேரத்துக்கு வந்துவிட்டோம் என்று பெருமூச்செறிந்தாள். மேனேஜர் அவளை பார்த்து புன்முறுவல் புரிந்தார். நான் ஐந்து நிமிஷம் லேட்டா வந்திருந்தா இவர் மூஞ்சி பார்க்கணுமே என்று மனதில் நினைத்துக் கொண்டு பதிலுக்கு புன்னகை புரிந்து வேலையில் மூழ்கினாள் துர்கா இரவு வீட்டை அடைந்ததும் அனீஸ் அவளை வாசலிலே எதிர்கொண்டாள். என்னடி என்னக்காகவா காத்திருக்கே? என்று துர்கா கேட்டதுதான் தாமதம் அனீஸ் ஆமாடி உன் கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் . அதுக்காகத்தான் வெயிட் பண்ணினேன், என்னடி விஷயம் என்றதும் அனீஸ் பேசலானாள். என்னுடைய மாமா பையன் சுஹேல் தெரியுமாடி. சின்ன வயசுல வாரணாசியில் இருந்து எங்க வீட்டுக்கு லீவுக்கு வருவானே நினைவு இருக்காடி என்றாள் ஓ! சிவப்பா ஒல்லியாக இருப்பானே அவனாடி , அவன் தாண்டி என்றாள் அனீஸ். அவன் எம்.பி .பி. எஸ் டெல்லில படிச்சு முடிச்சிட்டு இங்க வந்து கொஞ்ச நாள் பயிற்சி பண்ணிட்டு லண்டன் போய் எம்.எஸ் பண்ண போறனாடி எங்க வீட்டுல தான் தங்க போறதா அம்மா சொன்னாங்க. அடுத்த வாரம் வாரானாடி என்று உற்சாகமாக கூறினாள் அனீஸ். அதை கேட்ட துர்கா கண்களை விரித்து பார்த்து குறும்பு மின்னிட சிரித்தாள். நீ நினைக்கற மாதிரி எல்லாம் இல்லடி, எங்களத்தில அம்மாவின் சகோதரன் அண்ணன் உறவு ஆகுமடி என்றதும் ஓ அப்படியா என்ற துர்கா சின்ன வயசுல சுஹேல் தன்னிடம் அடிக்கடி ஓடி வந்து எனக்கு தமிழ் கத்துக் கொடுடி என்று கெஞ்சுவதும் தான் போடா கத்து கொடுக்க மாட்டேன் என்று மிஞ்சுவதும் நினைவுக்கு வர தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டாள். சுஹேல் வாரணாசியில் பிறந்து வளர்ந்ததால் அவனுக்கு அவ்வளவாக தமிழ் எழுத படிக்க வராது. வீட்டில் தமிழ் பேசுவதால் ஓரளவுக்கு தமிழ் பேசுவான். அதனால்தான் லீவுக்கு வரும் போதெல்லாம் துர்காவை பிடித்து தமிழ் சொல்லித் தா என்று உயிரை எடுத்து விடுவான். அவன் அனீஸிடமும் தன் அண்ணனிடமும் போக மாட்டான். இரண்டு பேருமே அவனைக் கண்டு கொள்ள மாட்டார்கள். துர்கா தான் பாவம் என்று பார்த்து தினமும் கொஞ்ச நேரம் தமிழ் படிக்க எழுத கற்றுக் கொடுப்பாள். அவனின் தமிழ் ஆர்வம் துர்காவுக்கு வியப்பாக இருக்கும். அதனாலேயே அவள் கொஞ்ச நேரம் பிகு பண்ணினாலும் மறக்காமல் தினமும் அரை மணி நேரம் தமிழ் கற்றுக் கொடுப்பாள். அவனை பாத்து பத்து வருடங்களுக்கு மேலாகிறது. இப்போது மருத்துவர் வேறு ஆகிவிட்டான். தன்னிடம் முன்பு போல் பேசுவானோ இல்லையோ என்று நினைத்துக் கொண்டால் துர்கா.
 

ரேவதி ராமு

New member
Vannangal Writer
Messages
3
Reaction score
8
Points
3
அத்தியாயம் 2


அவளுக்கு அப்பொழுது அலுவலகத்தில் ஆடிட்டிங் என்பதால் ஒரு வாரம் சென்றதே தெரியவில்லை. இந்த ஒரு வாரமும் அவளுக்கு அலுவலகத்தில் இரவு 9,00 மணி வரை வேலை இருந்தது. அங்கேயே அவளுக்கு இரவு உணவு தந்து அவர்களது கார்லயே அவளை வீட்டில் விட்டு விடுவதால் துர்காவும் பயமின்றி வேலைக்கு போய் வர முடிந்தது. ஆயிற்று, ஒரு வாரம் கழித்து அன்றுதான் ஆடிட்டிங் முடிந்து வேலையிலிருந்து கொஞ்சம் சீக்கிரமாக வீடு திரும்பினாள் துர்கா. வீட்டின் வாயிலில் அனீஸுடன் ஒருவன் பேசிக் அவன் யார் என்று கொண்டிருப்பதைக் கண்டாள். பின்புறமாக நின்று பேசிக் கொண்டிருந்ததால் துர்காவுக்கு தெரியவில்லை. உயரமாய், நல்ல தேக கட்டுடன் பொன் நிறமாக மின்னினான் அவன்.

தலையை ஒருபுறமாய் கோதிவிட்டு கொண்டே அனீஸுடன் பேசிக் கொண்டிருந்தான். பின்பக்கமாய் என்றாலும் துர்கா அவனை பார்த்தவுடன் அடையாளம் கண்டுக் கொண்டாள். அவள் உள்ளம் பரபரத்தது.

முன்போல் தன்னிடம் பேசாவிட்டாலும் தன்னை யார் என்றாவது தெரிந்து கொள்வானா என்றே தெரியவில்லையே என்று எண்ணியபடியே வீட்டிற்குள் அடியெடுத்து வைக்கும் போது ஆய் துர்கா என்று குரல் வரவே திருப்பினாள். அது அவனேதான். அருகில் வந்து எப்படி இருக்கே துர்கா? என்னை தெரியுதா என்று சிறு புன்னகை ததும்பும் முகத்துடன் வினவினான். துர்கா அந்த புன்னகையில் லைத்தவளாக தன்னை மறந்து ஒரு கணம் நின்றாள். பின்பு சுதாரித்தவளாய் சுஹேல் தானே தெரிகிறது என்று பதில் கூறினாள். அவன் பரவாயில்லையே கொஞ்சம் வளர்ந்து தான் இருக்கிறாய் என்று சிறு குறும்புடன் பேச அவள் நான் இல்லை நீங்கள் தான் என்று கூறி வெட்கத்துடன் வீட்டினுள் சென்றுவிட்டாள். அவள் முகம் குங்கும பூவாய் சிவந்திருக்க அங்கு அவளுடைய பெரிய மருமகள் புத்தகத்தில் ஏதோ கொண்டிருந்தவள் அத்தையை பார்த்தவுடன் அத்தை

என்று கூறி அவள் அருகில் வந்தாள். அவள் முகத்தை பார்த்தவுடன் என்ன அத்தை இப்ப கூட வெளியே வெயில் சுள்ளுனு அடிக்குதா உன் முகம் சிவந்து வேர்த்து வழியுதே என்று பாசத்துடன் வினவ அப்பொழுதுதான் துர்காவிற்கு தன் நிலை புரிய பஸ் ஸ்டாண்டில் இருந்து நடந்து வந்தேன் இல்லையா அதுதான் என்று சமாளித்தவாறு பாத்ரூமுக்குள் சென்று மறைந்தாள். சே! என்ன இது என் முகமே காட்டிக்கொடுத்துடும் போலிருக்கே என்று தன்னையே திட்டிக் கொண்டு முகம் கழுவிக்கொண்டு வெளியே வந்து இரவு வேலைகளை பார்க்கலானாள். இரவு வேலை முடிந்து படுக்கும் போது மீண்டும் அவளுக்கு அவன் நினைவு வந்தது. என்னது இது பைத்தியக்காரத்தனம் என்று மனதை திட்டிக் கொண்டு ரொம்ப நாள் பார்க்கதனால தான் அவன் நினைவு வருகிறது என்று தன்னையே சமாதானம் படுத்திக்கொண்டு கண் அயரலானாள்.



மறுநாள் வழக்கம் போல அலுவலகத்துக்கு பேருந்து நிறுத்தம் வந்தபோது இன்னைக்கு ஏதோ கட்சி ஊர்வலம் பஸ் எல்லாம் தாமதமாகத்தான் வருமாம் என்று பேசிக் கொண்டார்கள். அவளுக்கு மறுபடியும் மேனேஜர் பயம் வந்துவிட்டது. என்ன என்னவோ கேள்வி எல்லாம் கேட்பாரே. ரம்பம் போல் அறுப்பாரே. என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தபோதுதான் துர்கா என்று குரல் அவள் அருகில் குரல் கேட்கவும் திரும்பி பார்க்க அங்கு சுஹேல் பைக்கில் அமர்ந்து இருந்தான். துர்கா இன்று ஒரு மணி நேரத்திற்கு எந்த வண்டியும் வராது. நீ என் பைக்கில் ஏறிக் கொள். நான் கொண்டு போய் விடுகிறேன் என்று சாதாரணமாக கூற துர்காவிற்கு அது பெரும் சங்கடமாக தோன்றிற்று. ஏனென்றால் அவள் இதுவரை பைக்கில் யாருடனும் சென்றதில்லை. அதுவும் ஒரு ஆடவனுடன் செல்வதென்றால் மிகவும் தயக்கமாக இருந்தது. அவள் பேய் முழி முழிப்பதை பார்த்து, என்ன என் கூட எப்படி பைக்கில் வருவது என்று விழிக்கிறாயா? பரவாயில்லை. நான் ஒன்றும் உன்னை தின்று விட மாட்டேன். ஏறு அவன் கூறியதும் அவள் மேலும் தயங்கவே, நான் வேணா உங்க வீட்டுக்கு போய் என் பைக்கில் கூட்டிட்டு போகலாமா வேண்டாமா என்று கேட்டு விட்டு வரட்டுமா என்று குறும்புடன் கூறினான். அவள் அவசரமாக அதெல்லாம் வேண்டாம் என்று கூறி பைக்கில் ஏறி அமர்ந்தாள். எங்கே உன் அலுவலகம் என்று கேட்டபடியே பைக்கை ஸ்டார்ட் செய்தான்.

அவள் முகவரி கூற பைக் சரேலென்று கிளம்பியது. இருவரும் சிறிது நேரம் எதுவும் பேசாமல் சென்றனர். இருவரின் மௌனத்தை கலைத்து முதலில் அவன் தான். இந்த பத்து வருடத்தில் நிறைய மாற்றங்கள் இருக்கு என்று அவன் கூற உடனே அவள் ஆமாம். பாலங்கள் அங்கங்க கட்டி இருக்காங்க. நிறைய பஸ் நிறுத்தம் மாற்றங்கள் வந்திருக்கு என்று பதில் கூறினாள். அதற்கு அவன் நான் சாலையை சொல்லவில்லை. உன்னை சொன்னேன் என்று புன்னகை புரிந்தான். நான் என்ன மாறிட்டேன் அப்படியே தான் இருக்கேன் என்று அவள் பதில் உரைத்தாள். உயரம் அப்படியே தான் இருக்கே ஆனா பழைய பேச்சு அடாவடித்தனம் எல்லாம் மாறிடுச்சு என்று கிண்டலடித்தான். உடனே அவளுக்கு சுள்ளென்று கோபம் ஏறி முகம் சூடாக நான் ஐந்து அடி வளர்ந்திருக்கேன். அப்படி என்ன உங்ககிட்ட அடாவடித்தனம் செய்தேன் என்று படபடத்தாள் அப்பாடா! என்ன கோவன்டா சாமி என்று அவளை பார்த்துக் கொண்டே அம்மா என் பேரு இங்க இல்லம்மா சுஹேல் நீ எப்படி வேணும்னாலும் கூப்பிடலாம்

என்று முறுவலித்தான். எப்படி வேணும்னாலும் கூப்பிடலாம் என்றால் எனக்கு விலங்குகள் என்றால் ரொம்ப பிடிக்கும். அதனால் அந்த பெயர் வைத்து கூப்பிடலாமா என்று கண்கள் மின்னிட கேட்டாள். அவன் சிறு புன்னகை சிந்தி அவளை பார்த்து இப்போதுதான் பழைய துர்காவை பார்க்கிறேன் என்று முறுவலித்தான். அவள் கவனமாக அவனை உரசாமல் சற்று தள்ளி பைக்கின் பின் பகுதியை பிடித்துக்கொண்டு ஜாக்கிரதையாக அமர்ந்திருந்தாள். அவன மேடு பள்ளம் பார்த்து மெதுவாகவே ஓட்டினான். அவள் அலுவலகம் வந்தவுடன் அவள் இறங்கி நன்றி தெரிவித்துவிட்டு நகர நினைக்கையில் அவன் அவளைப் பார்த்து இப்போது கூட என் பேரு சொல்லல நீ. சரி விலங்கு பேர் வைக்கிறேன்னு சொன்னியே அதாவது என்ன பெயர் என்று சொல்லு எனக் கேட்க, ஒட்டகச்சிவிங்கி என்று கூறி ஓட்டமெடுத்தாள். அவன் தனக்குள் புன்னகை புரிந்துக் கொண்டு பைக்கை ஸ்டார்ட் செய்து தான் வேலை செய்யும் மருத்துவமனைக்கு கிளம்பினான். துர்கா மலர்ந்த முகத்துடன் அலுவலகத்திற்குள் நுழைய அங்கிருந்து மேனேஜர் என்னம்மா உங்க இடத்தில் ஊர்வலமாமே ஒரு பஸ் கூட வரலைன்னு சொன்னாங்க, நீ எப்படிம்மா வந்தே என்று கேட்டார். உடனே அவள் தெரிந்தவர் பைக்கில் வந்தேன் சார் என்று பதில் உரைத்தாள்.





அன்று முழுவதும் அவளுக்கு வானத்தில் பறப்பது போல் இருந்தது. அது அவளுக்கு சுறுசுறுப்பு கொடுக்க அவள் அனைத்து வேலைகளையும் விரைவாக முடித்தாள். மாலை வீட்டை அடைந்தவுடன் அவள் கண்கள் தானாகவே அனீஸ் வீட்டின் மீது பட அங்கே வீடு மூடியிருந்தது. துர்கா வழக்கம் போல் இரவு வேளைகளில் ஈடுபட சற்று நேரத்திற்கெல்லாம் அனீஸ் வந்தாள். துர்கா நாங்க ஞாயிற்றுக்கிழமை பீச்க்கு போறதா பிளான். நீயும் வரியா, என்று கேட்க துர்கா ஞாயிற்றுக்கிழமை நிறைய வேலை இருக்கும் அனீஸ். அன்னைக்குத்தான் என் டிரஸ் எல்லாம் தோச்சி ஐயன் பண்ணனும். ஏதாவது ஸ்பெஷல் ஐட்டம் அன்னைக்கு தான் பண்ணுவேன். நேரம் சரியாக இருக்குமேடி என்று லாவகமாக மறுத்தாள். நாம் எல்லாம் வெளியே போய் ரொம்ப நாள் ஆயிருச்சு. போலாம் வாடி என்று வற்புறுத்தினாள். மேலும் நான் ஆன்ட்டி வந்ததும் அவங்க கிட்ட பேசுறேன் என்று கூறி சென்று விட்டாள். அண்ணி வந்த சிறிது நேரத்திற்கெல்லாம் அனீஸ் மீண்டும் வந்தாள். ஆண்ட்டி நாம எல்லாரும் சேர்ந்து வெளியே போய் ரொம்ப நாள் ஆயிடுச்சு ஆண்ட்டி. வர சண்டே நாம எல்லாரும் சேர்ந்து பீச்சுக்கு போலாம் நீங்க ஓகே சொன்னா தான் துர்காவும் வருவா என்று கேட்க. அண்ணி அங்கிளுக்கு அன்னைக்கு ஸ்பெஷல் டூட்டி இருக்குமா, என்று கூற அங்கிள் வீட்டில் இருக்கட்டும். எங்க வாப்பாவும் வரலைன்னு சொல்லிட்டாரு. ரெண்டு பேரும் ஒருவருக்கொருவர் துணையாக இருப்பாங்க. நாம போயிட்டு வரலாம் ஆண்ட்டி என்று வற்புறுத்தவே வேறு வழி இல்லாமல் அண்ணியும் சரி என்று கூறி விடவே பசங்களுக்கு ஒரே கொண்டாட்டம். ஐ ஜாலி ஜாலி என்று குதித்தனர்.

கருத்துகளை கீழே பகிரவும்

 

revathy ramu

Member
Vannangal Writer
Messages
50
Reaction score
56
Points
18
அன்பார்ந்த வாசகர்களே,

என்னுடைய தர்காவில் ஒரு துர்கா 3 மற்றும் 4 அத்தியாயங்களை இங்கு பதிவிட்டுள்ளேன். அனைவரும் படித்து தங்கள் விமர்சனங்களை தெரியப்படுத்தவும்.

உங்களுடைய கருத்துக்களே என்னை போன்றவர்களுக்கு ஊக்க மருந்து.


என்றும் அன்புடன்,

ரேவதி ராமு



w7ATiU0UsSfEeVSSvzLhCAQfBJK7B1YGxxSHRV_pNE-Er_LA-Rpf7IxP8soD9yfKmmjyAup2tIpQjP9yujrNcytyjvISu8r8qY97-xJWsHa1cy18Zacg0SaUMUWGOWFCtvqrNJ6_

தர்காவில் ஒரு துர்கா




அத்தியாயம் 3



ஞாயிற்றுக் கிழமையும் வந்தது. துர்கா கண் விழித்ததும் இன்னைக்கு லீவு தானே கொஞ்சம் நேரம் தூங்கலாம் என்று எண்ணிக்கொண்டே இருக்கும் போது அனீஸ் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. ஓ இன்னைக்கு சாயங்காலம் கடற்கரைக்கு போகணும், சொன்னாளே சீக்கிரமாக எழுந்து தானே வேலை எல்லாம் முடிச்சுட்டு வெளியே செல்ல முடியும் என்று எண்ணியவாறு எழுந்து கழிவறை நோக்கிச் சென்றாள். தயாராகி வந்தவுடன் சமையல் அறைக்குள் நுழைந்து காபி போட்டு தனக்கு ஒரு கோப்பையும் தன்னுடைய அண்ணிக்கு ஒரு கசக்கிட்டா. அது மட்டுமில்லாம என்னுடைய ஹேர் கிளிப்யையும் உடைச்சிட்டா என்று புகார் கூறினாள். உடனே பார்வதி ‘அவ சின்ன குழந்தை மா, அவ ஏதாவது தப்பு செய்தால் நீ தான் பார்த்துக்கனும் ‘ஏன்னா நீ பெரிய பொண்ணு இல்லையா. வேறு உடை எடுத்து போட்டுக்கோ என்று சமாதானம் கூறி அனுப்பி வைத்தாள். லாவண்யா குழந்தையா அவள் குட்டி பிசாசு என்று திட்டிக் கோப்பையும் எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தாள். ஹாலில் பார்வதி இருக்கவே அவள் கையில் நீட்டினாள்.

அவளும் கையில் வாங்கிக் கொண்டு பேசலானாள். ‘இன்னைக்கு சீக்கிரமாக வேலைகளை முடித்தால் தான் நாலு மணிக்காவது தயார் ஆக முடியும்’ என்று கூறிக் கொண்டே காப்பியை அருந்தலானார். ஆமாம் அண்ணி, நாம ரெண்டு பேரும் சேர்ந்து சீக்கிரமாக வேலையை முடிச்சாதான் குழந்தைகளையும் தயார் பண்ண முடியும் என்று கூறியவாறு இரண்டு பேரும் சமயலறைக்குள் நுழைந்தார்கள். வேலைகள் எல்லாம் முடிந்ததும் கடற்கரைக்கு செல்ல தயாராக ஆரம்பித்தார்கள். அப்போது சூர்யா ஓடி வந்து பார்வதியின் முந்தானைக்குள் ஒளிந்துக் கொண்டாள். லாவண்யா அவளை துரத்தியபடியே வந்தாள்.’ என்னடி ஆச்சு?’ என்று பார்வதி கேட்க, உடனே லாவண்யா அம்மா பாருமா சூரியை, நான் கடற்கரைக்கு செல்ல போட வேண்டிய உடையை காலில் மிதித்து கொண்டே வேறு உடையை தேடலானாள்.
இருவரின் சண்டையை பார்த்ததும் துர்காவிற்கு சிரிப்பு வந்தது. தன்னுடைய சிறு வயது அவளுக்கு ஞாபகத்திற்கு வந்தது. அவள் அண்ணன் சிறு வயதில் அவளிடம் சண்டையே போட்டதில்லை. எது தனக்கு கிடைத்தாலும் தனது தங்கைக்கும் பாதி கொடுப்பான். தனக்கு அம்மா ஏதாவது வாங்கினாலும் பாப்பாவுக்கு என்று அவளுக்கும் சேர்த்து வாங்குவான். அவனுக்கு தங்கை மீது பாசம் அதிகம். துர்கா தான் அவனிடம் வம்பு வளர்ப்பாள். அவனுடைய படிக்கும் புத்தகத்தை எடுத்து ஒளித்து வைத்து விடுவாள்., அவனுடய பேனாவை உடைத்து விடுவாள். அவன் நன்றாக தூங்கும் போது காதில் வந்து ஓ வென்று கத்திவிட்டு ஒளிந்துக் கொள்வாள். இதைப் போல் நிறைய சேட்டைகள் செய்வாள். அவன் ஒன்றுக்கும் துர்காவை ஒரு வார்த்தை கூட கண்டித்து பேசமாட்டான்

. தாயின் மறைவுக்கு பின் இன்னும் அதிகமாகவே தங்கையிடம் பாச மழை பொழிந்தான். தினமும் தங்கையிடம் ஒரு வார்த்தையாவது பேசியே ஆக வேண்டும், இல்லையென்றால் அவனுக்கு நிம்மதியாக தூக்கம் வராது. அவளுடைய அண்ணிக்கும் இது தெரியும். ஆனால் அவள் இதையெல்லாம் கண்டு கொள்ள மாட்டாள். பார்வதிக்கு அந்த அளவு பாசம் இல்லையென்றாலும் அவளின் வேலையை துர்கா இழுத்து போட்டுக்கொண்டு செய்வதால் அவள் மீது வெறுப்பு இல்லை. பார்வதி ஏதாவது ஒரு வார்த்தை திட்டினால் கூட துர்கா பதில் ஏதும் சொல்ல மாட்டாள். மௌனமாக இருந்து விடுவாள். இந்த குணம் பார்வதிக்கு பிடித்ததனால் இருவருக்கும் சுமூக உறவே நிலவி இருந்தது. துர்காவின் அப்பாவும் அவள் மீது அதிக பிரியம் வைத்திருந்தார். அவர், துர்கா தன்னை கவனித்துக் கொள்வதைப் பார்த்து உள்ளுக்குள் பூரிப்பு அடைவார். துர்கா, துர்கா என்று தந்தையின் குரல் கேட்கவே தன்னுணர்வு பெற்ற துர்கா ‘என்னப்பா வேணும்?’ என்று கேட்டுக் கொண்டே அவர் அருகில் வந்தாள். எனக்கு பசி அவ்வளவா இல்லை மா! அதனால இரவு பால் மட்டும் போதும் மா. வேறு ஏதும் வேணாம். நீங்க வெளியில போகும் போது பிளாஸ்கில் பால் ஊத்தி மேஜை மேல் வைத்துவிட்டால் நான் படுக்கும் போது குடித்துக் கொள்வேன். வாசு ஆபீஸில் இருந்து வரும்போது இரவு உணவை முடிச்சுட்டு வராத சொல்லிட்டான் மா. அதனால நீங்க கவலை இல்லாமல் பத்திரமா போயிட்டு வாங்க என்று கூறினார். சரிப்பா என்று கூறிய துர்கா கடற்கரைக்கு எடுத்துச் செல்ல தண்ணீர் பாட்டில், அங்கே விரிக்க பெட்ஷீட் , விளையாட பந்து போன்றவற்றை தயார் செய்தாள். ஒரு வழியாக அனைவரும் தயார் ஆன நிலையில் அனீஸ் வந்தாள். ‘எல்லோரும் தயார் ஆகிட்டீங்களா?’ நாங்களும் தயார் ஆகிட்டோம். வாங்க போகலாம்! என்று அனைவரையும் அழைத்துக் கொண்டு வாசலுக்கு வந்தபோது அங்கே பாத்திமாவும் ஸுஹேலும் வந்தார்கள். அவனை பார்த்தவுடன் துர்காவிற்கு ஏனோ மனம் படபடத்தது. சுஹேல் முன்னே வந்து பார்வதியை பார்த்து ஆண்ட்டி நான் நாம போறதுக்கு கால் டாக்ஸி புக் பண்ணியிருக்கேன். ஆட்டோ என்றால் இரண்டு ஆட்டோ பிடிக்க வேண்டி இருக்கும். அதற்கு கால் டாக்ஸி மேல் தானே ஆண்ட்டி. உங்களுக்கு ஓகே தானே?என்று கேட்டான். அவளும் சரியான முடிவு தான் என ஆமோதித்து, செலவில் நானும் பாதியை ஏத்துக்கிறேன் என்று கூறினாள். அதைப்பற்றியெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம், இப்ப டாக்ஸி வந்திடும் எல்லாரும் வெளியே போகலாம் வாங்க என்று அனைவரையும் வழி நடத்தி அழைத்துச் சென்றான். அவனின் கண்கள் பார்வதியிடம் பேசிக் கொண்டே துர்காவை அளவெடுத்தன.
துர்கா அன்றைக்கு மெரூன் நிற காட்டன் சுடிதார் அணிந்திருந்தாள். பார்க்க குட்டி தேவதை போல் இருந்தாள். டாக்ஸி வந்ததும் அனைவரும் டாக்ஸியில் ஏறினார்கள். ஒவ்வொருத்தராக உள்ளே ஏற துர்கா மடியில் சூர்யா அமர்ந்து கொண்டாள். அவள் எப்போதும் அத்தை செல்லம். ஓட்டுநர் பக்கத்தில் சுஹேல் அமர்ந்துக் கொண்டான். டாக்ஸி கடற்கரையை அடைந்தவுடன் லாவண்யா முதலில் இறங்கினாள். அவளை தொடர்ந்து அனைவரும் இறங்கியவுடன் சுஹேல் டாக்ஸிக்கு பணம் கொடுத்து அனுப்பினான். மெதுவாக அந்த மணலில் நடப்பதும், சில்லென்று வீசும் கடற்காற்றும் துர்காவிற்கு மிகவும் ரம்மியமாக இருந்தது. இரண்டு குழந்தைகளும் முன்னே செல்ல அவர்கள் பின்னே பார்வதியும் பாத்திமாவும் செல்ல கடைசியில் துர்கா,அனீஸ் மற்றும் சுஹேல் மூவரும் பேசிக் கொண்டு நடந்து வந்துக் கொண்டிருந்தார்கள்.

அனீஸ் சுஹேலிடம்’’ நீ கங்கையில் குளித்து இருக்கியா?’’என்று கேட்க, அவன் நண்பர்கள் கூட போட் ரைட் போய் இருக்கிறேன். சூரிய ஒளியில் கங்கை நதி பொன் போல மின்னுவதை பார்க்க அழகாக இருக்கும் என்று ரசித்து கூறினான். அதை கேட்ட துர்கா நம்முடைய புனித தலம் அங்கு உள்ளது. நாம் எல்லாம் எங்க போறது! என்று மனதில் நினைத்துக் கொண்டாள். இவர்கள் பேசிக் கொண்டே நடக்கையில் எதிரே இருவர் மிகச் சத்தத்துடன் பேசிக் கொண்டும் விசில் அடித்துக் கொண்டு இருந்தார்கள். அருகில் வந்ததும் அவர்களில் ஒருவன் வேண்டுமென்றே துர்காவை தோள்பட்டையில் இடிக்க துர்கா நிதானம் இழந்தவளாக கீழே விழப்போக பக்கத்தில் இருந்த அனீஸ் அவளை பிடித்து நிறுத்தினாள்












அத்தியாயம் 4



அதை பார்த்ததும் அனீஸிக்கு சுள் என்று கோபம் வந்தது. அவர்களைப் பார்த்து ‘‘அறிவு இருக்கா, இப்படி இடிச்சிட்டு போறீங்க,’’ உங்களுக்கு கண் என்ன மேல இருக்கா? என்று ஆத்திரத்துடன் திட்ட துடங்கினாள். உடனே துர்கா வேண்டாம்டி, வந்த இடத்தில் எதற்கு வீண் சண்டை, பேசாமல் வா என்று அவளை இழுத்துக் கொண்டு நடக்க, அத்தனையும் பார்த்துக் கொண்டிருந்த சுஹேலுக்கு கோபம் உச்சாணியை தொட்டது. உடனே அவன் திரும்பி அவர்களை நோக்கி கண்கள் சிவக்க அடிபட்ட வேங்கை போல் நடக்க, இரு பெண்களும் அவனை மருட்சியுடன் பார்க்க, சுஹேல் அவர்களிடம் சென்று ‘’ஏன்டா பொம்பளைங்க எல்லாம் உங்களுக்கு கிள்ளு கீரைகளா,’ என்று இடித்தவன் மேல் ஆவேசமாய் பாய அவனை கண்டமேனிக்கு அடித்து புரட்டி எடுத்தான். மற்றவன் அவனை பிடித்து விலக்கி விட்டு மன்னிச்சிடுங்க சார். தெரியாம நடந்திருச்சி என்று கூறி அவனையும் இழுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தான்.

துர்காவிற்கு இதை பார்த்ததும் மனதுக்குள் சிறு சந்தோஷம் இருந்தாலும் அவனுடைய கோபத்தை பார்க்கையில் மருட்சி ஏற்பட்டது. அவளுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. ‘’சந்தோஷமாக இருக்க வேண்டிய நேரத்தில் இப்படி ஆயிடுச்சே’’ என்று அவள் மனம் வேதனை அடைந்தது. நல்லவேளை பார்வதியும் பாத்திமாவும் பேசிக்கொண்டும் மற்றும் குழந்தைகள் மீது கவனம் செலுத்தியும் சென்றதால் இதை எதுவும் அவர்களுக்கு தெரியவில்லை. துர்காவின் வேதனையான முகத்தை பார்த்ததும் சுஹேல் அவளிடம், கவலைப்படாதே துர்கா சில பேர்கள் இப்படிதான், இதுகளை எல்லாம் திருத்த முடியாது என்று ஆறுதல் கூறினான். அவனது சொல்லில் மனம் சிறிது அமைதி அடைந்தது. சரி சரி பீச்க்கு வந்துட்டு பட்டாணி சுண்டல் மாங்காய் சாப்பிடலனா என் ஜென்மமே வீணாகி விடாதா? என்று கூறிக்கொண்டு அவளை பார்த்து மென் நகை புரிய அவளும் சற்றே புன்னகை புரிந்தாள். அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு இடத்தில் பெட்ஷீட் விரித்து அதன் மேல் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். சூர்யாவும் லாவண்யாவும் சற்று தள்ளி மணலில் வீடு கட்டி விளையாடிக் கொண்டிருந்தனர். பெரியவர் இருவரும் பேசிக் கொண்டிருக்க அனீஸ், சுஹேல் மற்றும் துர்கா மூவரும் செருப்பை அவர்கள் காவலில் விட்டு கடலுக்கு செல்வதாக கூறி கடலை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். அலைகள் வந்து வந்து போகும் அழகை காண்கயில் துர்காவிற்கு மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. அந்த அலைகள் ஏதோ சொல்வது போல் வருவதும் எதுவும் சொல்லாமல் திரும்புவது போலவும் அவளுக்கு தோன்றியது. அவள் மனமும் அப்போது அப்படித்தான் இருந்தது.


சுகி க்கு ஒரு நன்றி கூட சொல்லவில்லையே, இருந்த கலவரத்தில் மறந்துவிட்டேனே என்று அவள் மனம் நினைத்துக் கொண்டு இருக்கும்போதே பெரிய அலை ஒன்று அவர்களை கீழே தள்ள மூவரும் தண்ணீருக்குள் மூழ்கி சமாளித்துக் கொண்டு எழுந்தனர். இன்னைக்கு பெரிய பெரிய அலையாக வருதில்ல என்று குழந்தைத்தனமாக கேட்க சுஹேல் அவளையே ரசனையோடு பார்த்துக் கொண்டிருந்தான். துர்கா சட்டென்று அவனிடம் நன்றி என்று கூற எதுக்கு நன்றி, பெரிய பெரிய அலைகளை நான் வர சொல்லலையே என்று சாதாரணமாக கூற அவள் மென்னகை புரிந்தாள். மேலும் அவன் ஒட்டகச்சிவிங்கி கெல்லாம் நன்றி சொல்லுவீங்களோ என்று கிண்டலடிக்க துர்காவின் முகம் மாரி தலை குனிந்த வாரே மன்னிச்சிடுங்க சுகி அன்னைக்கு விளையாட்டாய் சொல்லிட்டேன் என்று அவள் வருத்தத்துடன் கூறியதும் என்ன சொன்னே! என்ன சொன்னே! முதல் வரிக்கும் கடைசி வரிக்கும் நடுவில் ஒன்னு சொன்னியே என்று நடிகர் பிரகாஷ்ராஜ் போல நடித்துக் காட்டவும் துர்காவிற்கு சிரிப்பு பொங்கியது. அவள் வாய்விட்டு சத்தமாக சிரித்தாள். அவள் சிரிக்கும் போது அவளது கன்னத்தில் சிறு குழி ஒன்று விழுந்து அவளை மேலும் அழகூட்டியது. அவளது கன்னக் குழியில் சுஹேல் விழுந்து விட்டான். அவன் சிலை போல் செய்வதறியாது அப்படியே நின்றிருக்க, அங்கே வந்த அனீஸ் என்ன ஜோக் துர்கா, என்கிட்டே சொன்ன நானும் சிரிப்பேன் இல்ல என்று கூற துர்கா தங்களுக்குள் நடந்த உரையாடல்களை கூற அனீசும் அவளும் கூட சேர்ந்து நகைத்தாள்.


இருவரின் சிரிப்பு சத்தத்தில் சுஹேல் தன்னுணர்வு பெற்றான். ஒரு பெண்ணின் சிரிப்பு ஆண் மகனை இத்தனை பாதிக்குமா, என்று அவனுள் பல கேள்விகள் எழுந்தது. அவனுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறந்து கொண்டிருந்தன. இன்னும் அவளின் சிரிப்பு ஓலி அவன் காதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது. தூரத்தில் பார்வதியும் பாத்திமாவும் அழைக்க மூவரும் கரையை நோக்கி நடக்கத் தொடங்கினர். அவனுக்கு அவள் அழைத்த சுகி என்ற சொல் சுகமாய் இருக்க திரும்ப திரும்ப அதையே மனதில் நினைத்துக் கொண்டே நடந்தான்.
மூவரும் அங்கு சென்றதும் அவர்களுக்கு பட்டாணி சுண்டல் விநியோகம் செய்யப்பட்டது. சுஹேல் கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்க, பாத்திமா, சுஹேல்! சுஹேல்! இந்தாடா, வாங்கு என்று குரல் ஓங்கி ஒலிக்க அவன் கனவு கலைந்தவனாக அதனை வாங்கி கொண்டான். பாத்திமா அவனிடம் என்னடா யோசனை? என்று கேட்க ஒன்னுமில்லை மாமி என்று லேசாக புன்னகை புரிந்தான். பின் பாத்திமா இங்கு மீன் வறுவல் நல்லா இருக்கோம். சுஹேல், அங்கே மீன் வறுத்துட்டு இருக்காங்க அதை வாங்கிட்டு வாடா என்று தூரத்தில் ஒரு கடையை காட்டினாள். உடனே துர்கா யாருக்கெல்லாம் மீன் வேணும் கையை தூக்குங்க என்று கூற, அனைவரும் கையை தூக்கினார்கள். பார்வதி உடனே இரு குழந்தைகளுக்கு ஒரு மீன் போதும். அவர்களுக்கு சாப்பிட தெரியாது. நான் தான் முள் எடுத்து தரணும். அப்போதான் சாப்பிடுவாங்க என்று கூறினாள். சரி ஆண்டி என்று கூறி சுஹேல் கிளம்பத் தொடங்கியதும் பாத்திமா அனீசைப் பார்த்து ‘’அத்தனையும் ஒருவனே வாங்கிட்டு வர கஷ்டமா இருக்கும்.’’ நீயும் கூட போடி’’ என்று ஏவ அனீஸ் உம்மா எனக்கு ரொம்ப களைப்பா இருக்கு. துர்கா நீ வேணா கூட போயேன் என்று கூற துர்காவிற்கு என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தாள். பாத்திமா உடனே சரி ! சுஹேல் நீ துர்காவை கூட அழைச்சிட்டு போ, பாத்து போயிட்டு வாங்க என்று அனுமதி தரவும் சுஹேல் காற்றில் மிதந்தான்.

இருவரும் மீன் கடை நோக்கி நடந்தார்கள். வழில சுஹேல் நான் மறுபடியும் உன்னை சொல்ல சொன்னேனே, நீ சொல்லவே இல்லையே எனக் கேட்க, துர்காவிற்கு ஒன்றும் புரியவில்லை, என்ன இது தலை புரியாமல் காலும் புரியாமல் என்ன கேட்கிறான் இவன் என்று மனதில் நினைத்துக் கொண்டே புருவத்தை உயர்த்த, போச்சுடா! என் பெயரே இப்போது தான் சொன்னே அதை மறுபடியும் கேட்டா இப்படி புருவத்தை உயர்த்தினால் எப்படிம்மா? என்று அவன் அழுத பாவனையுடன் கூற துர்காவிற்கு மறுபடியும் சிரிப்பு வர புன்னகையுடனே சுஹியா என்று கேட்க. அந்த சிரிப்பில் அவன் மறுபடியும் தன்னை இழந்தான் என்று சொல்லவும் வேண்டுமோ! இருவரும் மீன் வாங்கிக் கொண்டு வந்து அனைவருக்கும் தந்து தானும் உண்டனர். துர்கா பீச்சில் விளையாட பந்து கொண்டு வந்திருந்தாள். அதை வைத்துக் கொண்டு அனைவரும் சிறிது நேரம் விளையாடினார்கள். மணி ஏழை நெருங்கவும், ‘’நேரம் ஆயிடுச்சு வீட்டுக்கு போகலாம்’’ என்று பார்வதியும் பாத்திமாவும் அழைக்க அனைவரும் கிளம்ப ஆயத்தமாயினர்.

சுஹேல் கால் டாக்ஸியை வரவழைக்க அனைவரும் ஏறினர். வழியில் ஒரு நல்ல ஹோட்டலில் நிறுத்தி இரவு உணவை முடித்தனர். பிறகு ஒன்பது மணியளவில் வீட்டை அடைந்தனர். வீட்டில் வாசுதேவன் தூங்காமல் இவர்களுக்காக விழித்திருந்தான். என்ன பீச் எப்படி இருந்துச்சு எனக் குழந்தைகளிடம் கேட்க, அவர்களும், ஜாலியா இருந்துச்சு அப்பா, பட்டாணி, சுண்டல் வாங்கினோம், மீன் சாப்பிட்டோம் என்று குதுகலத்துடன் கூறினார்கள். பரந்தாமன் அவருடைய அறையில் தூங்கி கொண்டிருந்தார். துர்கா அவர் பால் சாப்பிட்டாரா என்று பிளாஸ்க்யை பார்க்க அது காலியாக இருந்தது கண்டு திருப்தியுற்றவளாய் படுக்கச் சென்றாள்.


மறுநாள் விடிந்ததும் துர்காவிற்கு நேற்றைய ஞாபகங்கள் வந்தவுடன் அவள் முகத்தில் சிறு புன்னகை எட்டிப்பார்த்தது. காலைக்கடன்களை முடித்து காபி போட சமையலறைக்குள் சென்றாள்.
 
Last edited by a moderator:

revathy ramu

Member
Vannangal Writer
Messages
50
Reaction score
56
Points
18
அத்தியாயம் 5




அவர்கள் இருந்த வீடு இரண்டு தளங்களைக் கொண்டது. வாசுதேவன் பத்து வருடங்களுக்கு முன்பே அந்த வீட்டை லோன் போட்டு வாங்கி இருந்தான். இவர்கள் கீழே வசித்தனர். முதல் வீடு இவர்களுடையது. பின் அடுத்தடுத்து மூன்று வீடுகள் இதைப்போலவே மேலேயும் இருக்கும். இவர்கள் வீட்டின் சமையல் அறை ஜன்னலில் இருந்து பார்த்தால் வெளியே வருவோர் போவோரை நன்கு காண முடியும். துர்கா காபி போட்டு முடித்து தனக்கு ஒரு கோப்பையை எடுத்துக் கொண்டு வெளியே வரும்போது தான் சுஹேல் பள்ளிவாசலுக்கு போவதை கவனித்தாள். சுஹேல் இவளை கவனிக்கவில்லை. அவனைப் பார்த்ததும் துர்காவிற்கு நேற்றைய ஞாபகம் வர தனக்குள் சிரித்துக் கொண்டு ஹாலுக்கு வந்த போது ஹாலில் அண்ணன் அமர்ந்திருப்பது தெரிந்தது.
அண்ணா உங்களுக்கு காபி கொண்டு வரவா என்று துர்கா கேட்கவும் சரிம்மா என்று வாசுதேவன் கூற அவள் மறுபடியும் சமையலறை நுழைந்து காபி போடலானாள் சிறிது நேரத்தில் பார்வதியும் வரவே இருவரும் சேர்ந்து அன்றைய சமையலை முடித்து குழந்தைகளை தயார் செய்து அவரவர் அலுவலகம் கிளம்பினர்.

இப்படியே நாட்கள் ஓடின. துர்காவிற்கு காலையில் சுஹேல் தொழுவ போகும்போது பார்ப்பதுதான், வேறு எந்த நேரத்திலும் காண முடியவில்லை. ஞாயிற்றுக்கிழமை கூட அவன் வீட்டில் இருப்பதில்லை. அவசர கேஸ் என்று மருத்துவமனைக்கு சென்று விடுகிறான், அவனை காணவே முடியவில்லையே என்று மனதிற்குள் மிகவும் வருந்தினாள். அந்த வருத்தம் அவள் முகத்தில் அப்படியே காட்டியது. வாசுதேவன் கூட தங்கையிடம் விசாரித்த போது ஒன்றுமில்லை என்று மழுப்பினாள். அங்கே சுஹேலுக்கோ வேலை நேரம் தவிர மற்ற நேரங்களில் துர்காவின் ஞாபகமாகவே இருந்தது. அவன் எத்தனையோ பெண்களை துர்காவை விட அழகில் சிறந்தவர்களை பார்த்திருக்கிறான். அப்போதெல்லாம் அவன் மனம் இப்படி இருந்ததில்லை.

சில பெண்கள் வலிய வந்து இவனிடம் பேசினாலும் சிரித்தாலும் அவர்களை எல்லாம் கண்டு கொள்ளமாட்டான். “கழுவுற மீனில் நழுவுற மீன்” போல் நழுவி விடுவான். ஆனால் இப்போது மனம் இப்படி பாடாய் படுகிறதே! என்று அவன் வியந்து தான் போனான். ஒரு மாதம் ஆயிற்று அவளை பார்த்து , வேலை பளு காரணமாக என்னால் அவளை பார்க்க கூட முடியவில்லையே என்று மனதிற்குள் புலம்பினான்.
“அன்று கடல் அலையில் விழுந்த நான் எழுந்துவிட்டேன், ஆனால் கன்னியவள் கன்னக்குழியில் வீழ்ந்த நான் இன்றளவும் எழுந்திரிக்க முடியவில்லையே” என்ன செய்வது என்று சிந்தித்துக் கொண்டிருந்த போது, அட கவிதை எல்லாம் கூட எனக்கு வருதே, தமிழ் கூட சரியாக பேச தெரியாத நான் இன்னும் கொஞ்ச நாளில் கவிதை எல்லாம் எழுதுவேன் போலிருக்கே! என்று தனக்குள் சிரித்துக் கொண்டான்.

சுஹேலின் தந்தை சயீத் ஹுசைன் வாரணாசியில் பெரிய துணி வியாபாரி. மதன்புரா தெருவில் மஸ்லின் துணிகள், காசி பட்டு போன்ற துணிகளை விற்பனை செய்கிறார். பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்.

அவருடைய துணிகளுக்கு அங்கு மவுசு அதிகம். அதனால் அவர்கள் வியாபாரம் நன்றாகவே நடக்கிறது. கடையில் இருந்து வீட்டிற்கு அரை மணி நேரம் பயணம் தான். அதனால் தினமும் வீட்டிற்கு வந்து சாப்பிட்டுவிட்டு போவார். சுஹேலின் அம்மா ஜரீனா அவளுடைய கணவருக்கும் மகனுக்கும் பாத்து பாத்து செய்வாள். அவளுக்கு சுஹேல் என்றால் அதிக பிரியம், பின் ஒரே பிள்ளை ஆயிற்றே!

ஒரே பிள்ளை என்றாலும் கூட அவள் அதிக செல்லம் கொடுத்ததில்லை. கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டித்து, செல்லம் கொடுக்க வேண்டிய இடத்தில் செல்லம் கொடுத்து வளர்த்தாள். நல்ல பண்புகளையும் சொல்லிக் கொடுத்து நல்ல முறையில் வளர்த்தாள். சுஹேலும் அவன் தாய் சொல் கேட்டு வளர்ந்தான். அவனுக்கும் அம்மா என்றால் மிகவும் பிடிக்கும். அவன் தினமும் அம்மாவின் மடியில் படுத்துக்கொண்டு பள்ளியில், பிற்பாடு கல்லூரியில் நடந்த அனைத்து விஷயங்களையும் கூறுவான். அவன் தாயும் பிள்ளை கூறுவதை ரசித்துக் கேட்பாள். சுஹேலுக்கு தந்தை மீது பாசம் தான், இருந்தாலும் தாயிடம் இருப்பது போல தந்தையிடம் செல்ல மாட்டான். ஒரு அடி எட்ட இருந்தே பேசுவான். பயமா, மரியாதையா என்று இதுவரை அவனுக்கே தெரியாது. அவனின் தந்தையும் அவனிடத்தில் பாசம் இருந்தாலும் கொஞ்சி பேச மாட்டார். எது கேட்டாலும் அது தேவையா, இல்லையா என்று யோசித்து பிறகே வாங்கி கொடுத்தார். ஒரே பிள்ளை என்பதால் கண்டதையும் வாங்கி கொடுத்து அவனை கெடுத்து விடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். சுஹேலும் தேவைக்கு மேல் எதுக்கும் ஆசைப்பட மாட்டான். தனக்கு எது கிடைத்ததோ அதுவே போதும் என்று திருப்தி அடையும் மனம் உள்ளவன். சுஹேலின் அப்பாவிற்கு அவரின் தங்கை மீது பாசம் அதிகம். ஏனென்றால் அவள் எப்பொழுதும் அண்ணனின் வார்த்தைக்கு எதிர் வார்த்தை பேசாதவள். அதனால்தான் ஹுசைன் தன் மகனை அவள் வீட்டில் தங்க அனுமதித்தார்.
தன் தொழிலில் நன்கு பயிற்சி பெற்ற பிறகு மேற்படிப்புக்கு லண்டன் அனுப்ப வேண்டி இருக்கும். அதுவரை அங்கிருந்தால் அவனுக்கும் தான் பிறந்த பூமியையும் தாய்மொழியான தமிழும் மறக்காமல் இருக்கும் என்று எண்ணினார்

அன்று ஞாயிற்றுக்கிழமை. சுஹேல் இன்னைக்கு எப்படியாவது துர்காவை பார்த்துவிட வேண்டும் என்று எண்ணினான். அவள் இப்போதைக்கு வெளியே வரமாட்டாள். வேலையே கட்டிக்கொண்டு இருப்பாள். எப்படி பார்ப்பது? என்று சிந்தித்தான். அனீஸிடம் பேச்சுக் கொடுத்தால் ஏதாவது யோசனை தோன்றும் என்று எண்ணி அனீஸை நோக்கி சென்றான். “என்ன அனீஸ் வேலை எல்லாம் முடிச்சிட்டியா?”என்று கேட்க , என்ன சுஹேல் ரொம்ப அக்கறையா விசாரிக்கறே? ஏதாவது வேணுமா? என்று கேட்டாள். சும்மாதான் கேட்டேன். என்றாள். உடனே அனீஸ் நம்பிட்டேன் ப்பா, நம்பிட்டேன் என்று நக்கலாக சிரித்தாள்.

.அவனுக்கு உதவுவது போல் அங்கு வந்த பாத்திமா, அனீஸ் துர்காவிற்கு நான் செய்த பருப்பு பாயசம் என்றால் ரொம்ப பிடிக்கும். இன்னைக்கு செஞ்சி இந்த பாத்திரத்தில் வைத்திருக்கிறேன், கொண்டு போய் அவங்க வீட்டுல கொடுத்திட்டு வாடி என்று கூறிக் கொண்டே பாத்திரத்தை நீட்ட, அனீஸ் அதை வாங்க வரும்போது சுஹேல் வேண்டுமென்றே தன் நீண்ட காலை நீட்ட, அனீஸ் அதை பார்க்காமல் வந்து கால் தடுக்கி கீழே விழுந்தாள். ஆ! என்று அலறிய அனீஸ் ஏன்டா காலை நீட்டினே? என்று கத்தியபடியே எழுந்து நிற்க முயன்றாள்.
உடனே சுஹேல்,” நீ வரதே நான் பாக்கலேடீ” என்று பாவமாய் நடிக்க, ஒன்று சொல்ல முடியாதவளாய் அனீஸ் எழுந்து காலை நீவிக் கொண்டே அவள் அம்மாவிடம் “உம்மா இவனாலே எனக்கு சுண்டு விரலே அடிபட்டு ரத்தம் வருது பாரு “ என்று காட்ட, சரிடி! மருந்து போட்ட சரியாயிடும் என்று அவள் மருந்து பெட்டியை எடுத்துக் கொண்டு வர போக,அனீஸ் சுஹேலை பார்த்து உதட்டை சுழித்து பழிப்பு காட்டினாள். அவள் மருந்து பெட்டியை அனீஸ் இடம் கொடுத்துவிட்டு சுஹேலிடம் திரும்பி” நீ போய் கொடுத்திறியா” என்று வேண்ட, அவன் இதுக்கு தானே இத்தனை நாடகம் செய்தான், சரி மாமி அனீஸுக்காக இது கூட செய்ய மாட்டேனா? என்று அதை வாங்கிக் கொண்டு புன்னகை புரிந்தவாறு துர்காவின் வீட்டை நோக்கி நடந்தான்.

ஹாலில் வாசுதேவன் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டு இருந்தார். பார்வதி உள்ளே தூங்கி கொண்டிருந்தார். துர்கா ஒரு வாரத்திற்கு தேவையான அலுவலகத்துக்கு போட்டு கொண்டு போகும் உடைகளை எல்லாம் இஸ்திரி போட்டுக் கொண்டிருந்தாள். அங்கே சுஹேல் வந்ததும் வாப்பா! , உள்ளே வா! என்று வரவேற்று உள்ளே அழைத்தார் வாசுதேவன். துர்கா திரும்பி பார்த்து புன்னகை புரிந்து வாங்க என்று வரவேற்றாள். சுஹேல் அவளை கண்களாலே பருகினான். அதை உணர்ந்த துர்கா வெட்கி முகம் சிவக்க தலை குனிந்தாள். வாசுதேவன் இதை எதுவுமே கவனித்தான் இல்லை. அவன் சுஹேலிடம் அப்புறம் உங்க வேலை எல்லாம் எப்படி இருக்கு தம்பி? உங்களுக்கு பிடிச்சி இருக்கா? எப்படிப்பட்ட மருத்துவமனை? என்று கேள்வி மேல் கேள்வி எனக் கேட்டுக் கொண்டே செல்ல, சுஹேலும் அவருடைய கேள்விக்கெல்லாம் பதில் கூறிக் கொண்டே அவன் பார்வை முழுவதும் துர்காவின் மீது வைத்திருந்தான். சிறிது நேரம்சென்றவுடன், சூர்யா, அங்கிள்! என்று கூறிக் கொண்டு அவன் பக்கம் வர அவன் அப்போதுதான் சுய உணர்வு பெற்று அவளை தூக்கிக் கொண்டு கொஞ்சினான். பிறகு நினைவு வந்தவனாக தன் கையில் இருக்கும் பாத்திரத்தை வாசுதேவனிடம் நீட்டி இதுலே பருப்பு பாயாசம் இருக்கு. “துர்காவிற்கு பிடிக்குமே என்று மாமி கொடுத்து அனுப்பினாங்க” என்று வந்த விஷயத்தை சொல்ல அடே! அடே! கொடுப்பா, துர்காவிடம் சொல்லி இருந்தால் அவளே வந்து வாங்கி இருப்பாளே, உனக்கேம்பா வீண் சிரமம் என்று கூறவும், அப்புறம் நா என் தேவதையை எப்படி பார்ப்பது என்று மனதில் எண்ணியவனாக பரவாயில்லை அங்கிள் . இதெல்லாம் சிரமம் ஒன்று இல்லை என்று கூறினான். முதலில் அனீஸ் தான் வரதா இருந்தா எனக்கு வெளியில் கொஞ்சம் வேலை இருக்கிறதனாலே நானே கொடுக்கிறதா சொன்னேன் என்று தன்னுடைய கௌரவம் மாறாமல் கூறினான். நன்றி தம்பி என்று கூறிய வாசுதேவன், துர்கா இதை எடுத்து உள்ளே வைமா! என்று துர்காவை ஏவிவிட்டு மீண்டும் தொலைக்காட்சியில் செய்திகளை பார்க்க தொடங்கினார்.


துர்காவிற்கு அவனை கண்டவுடன் ஏற்பட்ட படபடப்பு இன்னும் அடங்கவில்லை. அருகில் சென்று காபி அல்லது குளிர்பானம் ஏதாவது கொண்டு வரவா என்று அவனைப் பார்த்து கேட்க, அதெல்லாம் ஒன்னும் வேண்டாம், இப்போதான் மாமி காபி கொடுத்தாங்க என்று பதில் உரைத்து அவளை விழுங்குவது போல் பார்த்தான். சிறிது நேரத்தில் சூர்யாவும், லாவண்யாவும் வந்துவிட, இருவரும் அவனை பார்த்து மாமா! என்று ஓடி வந்து அவன் மடியில் ஏறிக் கொண்டனர். லாவண்யா தன வரைந்ததை எல்லாம் அவனிடம் காட்டி மகிழ்ந்தாள். அவனும் அதை எல்லாம் பார்த்து ரொம்ப நல்லா இருக்கு என்று உற்சாகப்படுத்தினான். அவனுடைய ஒரு கண் லாவண்யாவின் படத்திலும் மற்றொன்று துர்காவின் மீதும் லயித்திருந்தது. துர்கா துணிகளுக்கு இஸ்திரி போடுவது போல் அவன் பார்க்காத நேரத்தில் அவனை பார்த்தும், அவன் பார்த்த நேரத்தில் வேலையில் மும்முரமாக இருப்பது போலவும் நடித்துக் கொண்டிருந்தாள். அவள் மனமோ சொல்லவொண்ணா ஆனந்தத்தில் திளைத்திருந்தது. மணி ஆரை நெருங்கவே நாம் வந்து இங்கு ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகிவிட்டது. மாமி என்ன நினைப்பார்களோ என்று எண்ணியவாறு துர்காவை விட்டு பிரிய மனம் இல்லாமல், நான் கிளம்பனும் வரேன், என்று அனைவரிடமும் கூறி விடை பெற்றான். துர்காவிடம் மட்டும் கண்களால் கூறி விடை பெற்றான். அவளுக்கு வானத்தில் நடப்பது போல் ஒரு பிரமை ஏற்பட்டது.


அத்தியாயம் 6




சுஹேல் அன்று மருத்துவமனை அடைந்து தன் இருக்கையில் அமர்ந்து தன் கோட், ஸ்டெஸ்கோப் எடுத்துக் கொண்டு நோயாளிகளை பார்க்க தயாரானபோது சிந்து உள்ளே வந்தாள். அவள் அங்கே செவிலியராக மூன்று வருடம் வேலை செய்கிறாள். “டாக்டர் உங்களை தலைமை மருத்துவர் கூப்பிடறார்”, ரௌண்ட்ஸ் முடிச்சிட்டு அவரை வந்து பார்க்க சொன்னார்! என்று சொல்லிவிட்டு போனாள். என்ன விஷயம்? எதனால் என்னை கூப்பிடுறார்? என்று குழப்பத்துடன் தலைமை மருத்துவரின் அறையை அடைந்ததும் கதவை தட்டி உள்ளே வரலாமா? என்று அனுமதி கேட்டுக் கொண்டு உள்ளே நுழைந்தான்.

அங்கே தலைமை மருத்துவர் திரு நரசிம்மன் அவனை புன்னகையோடு வரவேற்றார். “வா! யங் மேன்” வந்து உட்கார்! என்று சொன்னவுடன் அவன் அமர்ந்ததும், சுஹேல் “நீ இங்கு கடுமையாக வேலை செய்யறதா கேள்விப்பட்டேன்.” அனைத்து நோயாளிகளும் “நீங்க தான் பார்க்கணும் கேக்கறாங்களாமே”,என்று சிரிப்புடன் வினவவும், சுஹேல் நான் என் கடமையை தான் செய்யறேன் டாக்டர், நோயாளிகளே தங்கள் நோயுடன் போராடும் போது அவர்களிடம் கடுமையை காட்டுவது அவர்களை மேலும் துன்புறுத்தும். அதனால் அவர்களிடம் கோபம் கொள்ளாமல் அவர்கள் சொல்வதை பொறுமையுடன் கேட்கிறேன், என்னுடைய பதிலை அவர்களுக்கு புரியும் வண்ணம் தெரிவிக்கிறேன். அவ்வளவுதான் டாக்டர்.” பெருசா நான் ஒன்றும் சாதிக்கலை” என்று அடக்கத்துடன் கூறியதும் எதிரே அமர்ந்திருந்த தலைமை மருத்துவர் திரு நரசிம்மன் அவர்கள்” வெல் டன்! மை டியர் பாய்” ! என்று முதுகில் தட்டிக் கொடுத்தார். மேலும் அவர் இப்போ எதுக்கு உங்களை கூப்பிட்டேன் என்றால் உங்களுக்கு புதுசா ஒரு உதவி மருத்துவரை போடலாம் என்று முடிவு பண்ணி இருக்கேன். இன்னைக்கு வேலையில் சேர அவங்களை வரச் சொல்லி இருக்கிறேன். நான் போன வாரமே அவங்களை இன்டர்வியூ பண்ணிட்டேன். such an intelligent girl. உனக்கு மிகவும் உதவியாக இருக்கும். உன்னுடைய பாதி வேலையை அவங்க பாத்துப்பாங்க. இது உங்களுடைய வேலை பளு குறைக்க வேண்டும் என்றுதான் நியமனம் பண்ணி இருக்கிறேன். உனக்கும் கொஞ்சம் ஓய்வு கிடைக்கும் என்று முடித்தார்.

சுஹேலுக்கு டாக்டர் நரசிம்மன் சொல்வதை மறுக்க முடியவில்லை. சரி டாக்டர். நான் என் வேலையை பார்க்க போறேன் என்று எழுந்தான். நீங்க பதில் எதுவும் சொல்லவில்லையே! சுஹேல், என்று கேட்க, “நீங்க செய்தால் அது சரியாத்தான் இருக்கும் டாக்டர்,” எனக்கு ஓகே தான்! என்று புன்னகைத்தவாறு கூற, “ தட்ஸ் மை பாய்”. என்று அவர் தட்டிக் கொடுத்து விடையளித்தார்.

சுஹேல் தன் இருக்கையை அடைந்ததும் வரும் உதவி மருத்துவருக்கு என்ன என்ன வேலை பகிர்ந்து அளிக்க வேண்டும், என்று ஒரு பட்டியலை தயார் செய்தான். சிறிது நேரத்தில் அவன் அருந்தும் க்ரீன் டீ அவன் மேஜை
மேல் வைக்க அவன் அதனை அருந்தியவாறு அடுத்து என்ன என்ன செய்யவேண்டும்? என்ற திட்டம் வகுக்க லானான்.

நோயாளிகளை எல்லாம் பார்த்து முடித்து அவன் இடத்துக்கு திரும்பி வந்து கொண்டிருந்த போது , தன்னுடைய அறைக்கு வெளியே ஒரு பெண் அமர்ந்திருந்ததைப் பார்த்து அவளை உள்ளே வர பணிந்தான். அவள் உள்ளே வந்ததும் இருக்கையை கட்டி அமரச் சொல்லிவிட்டு, சொல்லுமா! உன் பேர் என்ன? என்று கேட்க ஆரம்பித்தான். டாக்டர், என் பெயர் கயல்விழி, நான் வேலூரில் போன மதம் என்னுடைய எம் .பி.பி எஸ் படிப்பை முடித்தேன். டாக்டர் நரசிம்மன், என் தந்தையின் நண்பர், அவர் மூலம் தான் இங்கு வர முடிந்தது. சிபாரிசால் வந்தேன் என்றாலும் என் கடமையை ஒழுங்காக செய்வேன் டாக்டர். நீங்கள் சொன்ன வேலைகளை எல்லாம் தட்டாமல் செய்வேன்! என்று அவள் பேசிக் கொண்டே போக அவன் இடையில் மறித்து, “ கொஞ்சம் மூச்சு விட்டு பேசுறிங்களா?” என்று கேட்டதும் தான், அவளுக்கு உறைத்தது. அவரை பேச விடாமல் தான் மட்டும் பேசிக் கொண்டே இருப்பதை, உடனே என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்க, சுஹேல் சிரித்துக் கொண்டே விட்டால் இன்னைக்கு முழுவதும் பேசிக் கொண்டே இருப்பாய் போலிருக்கே மேடம்! என்று அவன் கூறியதும் சாரி டாக்டர்! என்று கெஞ்சும் பாவனையுடன் அவள் பார்க்க அவன் அவளை அளந்தான். அவள் மிக அழகாகவே இருந்தாள்.சிவந்த நிறம், பெரிய கண்கள், நீண்ட நாசி, அளவான உதடுகள், கொடி போன்ற உடல் என்று பார்ப்போரை மீண்டும் பார்க்க தூண்டும் அழகோடு மிளிருந்தாள்.
உன் பெயர் கயல்விழி தானே. நான் கயல் என்று அழைக்கலாமா? என்று அவன் கேட்க அவள் புன்னகையுடன் சரி என்று தலையாட்டினாள். தன் பெயர் சுஹேல் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அவள் என்ன என்ன வேலைகள் செய்ய வேண்டும் என்று கட்டளைகளை பிறப்பித்து விட்டு தன் கணினியை உயிர்ப்பித்து அதில் மூழ்கலானான்.

கயலுக்கு அந்த மருத்துவமனையை மிகவும் பிடித்துப் போயிற்று. அங்கு வேலை செய்யும் இதர மருத்துவரும் மற்ற பணியாளர்களும் அவளிடம் அன்பாகவே நடந்துகொண்டனர். சுஹேலும் அவளிடம் நல்ல தோழி போல நினைத்து அன்பாக பழகவே கயல் தன் வேலைகளை இன்முகத்துடனும் உற்சாகத்துடனும் செய்யலானாள். அவளுடைய அழகும், கம்பீரமும், இன்முகமும் அனைவரிடத்திலும் அவளுக்கு நல்ல மதிப்பும் அன்பும் ஏற்படுத்தியது.

கயலுக்கு சுஹேலின் மீது எப்போதும் தனி மரியாதை உண்டு. அவன் நோயாளிகளிடம் பழகும் விதம், அவனுடைய மென்மை, நோயாளிகளின் நோயை கண்டறிந்து அதற்கு தகுந்து சிகிச்சை அளிக்கும் முறை போன்றவற்றைப் பார்த்து அவள் பிரமித்து தான் போனாள். அவனை பின்பற்றி நடந்ததால் அவளுக்கும் அங்கு நல்ல பெயர் கிடைத்தது. தலைமை மருத்துவரும் அவளை அழைத்து பாராட்டவே செய்தார். இவையெல்லாம் அவளை மேலும் ஊக்கப்படுத்த அவள் தன் பணியை திறம்பட செய்யலானாள்.

நாட்கள் நகர்ந்தது. அன்று துர்கா இரவு வேலைகளை எல்லாம் சீக்கிரமாக முடித்துவிட்டாள். காற்றாட மாடிக்கு சென்றால் என்ன என்ற எண்ணம் தோன்றவே லாவண்யாவை அழைத்து மேல போறேன் லாவி, நீயும் வரியா? என்று கேட்க அவளும் படித்து முடித்த படியால் வரேன்!அத்தை, என்று கூறி அவளுடன் நடக்க சூர்யாவும் உடன் ஓடி வர மூவரும் பார்வதியிடம் சொல்லிவிட்டு மேல சென்றனர். இருட்டில் விண்மீன்கள் இவர்களை வரவேற்பது போல் மின்ன, சந்திரனோ, சிரித்த முகத்துடன் பிறை போல் வானில் தவழந்து கொண்டிருந்தான். இதமான குளிர் காற்று மேனியை தழுவ துர்காவிற்கு மனமும் உடலும் சற்று இதமாக இருந்தது. திடீரென்று அவள் கண்கள் ஓர் இடத்தில் இமைக்க மறந்து அப்படியே நின்றது. அங்கே சுஹேல் வானத்தை பார்த்தபடி ஏதோ யோசனையில் நின்றிருந்தான். குழந்தைகளின் சத்தத்தில் அவன் திரும்பி பார்த்தவுடன் ஸ்தம்பித்து நின்றான். எதிரே நிலா ஒளியில் கண்கள் பளபளக்க, கன்னங்கள் மின்ன தாமரை போன்ற முகத்தை கண்டவுடன் அவனால் அவள் கன்னங்களை தடவி பார்க்க வேண்டும் என்ற ஆவலை அடக்க முடியவில்லை. மடையா இன்னும் உன் காதலையே அவளிடத்தில் சொல்லலே. அதுக்குள்ள அவசரபட றேயடா! என்று அவன் மனது அவனை அடக்கியது. அவன் அவளை விழுங்குவது போல் பார்க்க, அதை உணர்ந்த அவள் முகம் சிவந்து தலை குனிந்தாள். அங்கே மின்மினி பூச்சி பறக்கவும் குழந்தைகள் இருவரும் அதை துரத்தி கொண்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்தில் தன்னுணர்வு பெற்ற சுஹேல், என்ன சின்ன மேடம் இங்கெல்லாம் கூட வருவீங்களா! என்று கேலி செய்ய உடனே துர்கா ஏன் நாங்க எல்லாம் மொட்டை மாடிக்கு வரக் கூடாதா? என எதிர் கேள்வி கேட்க, வரலாம் அம்மையாரே, தங்கள் வரவு நல்வரவு ஆகட்டும் என குனிந்து கையை நீட்டி வரவேற்றான். துர்கா நகைக்கவே இருவரும் சேர்ந்து சிரித்தனர். சுஹேல் மனதுக்குள் இவள் சிரித்து சிரித்து என்னை கொல்றாளே என்று நினைத்துக் கொண்டான். வேலை எல்லாம் சீக்கிரம் முடிஞ்சு போச்சு, உள்ளே ஒரே வெக்கையாய் இருந்தது அதனால் தான் இங்கு வந்தேன் என்று விளம்பினாள். சுஹேலுக்கு அவள் கூட இருப்பதே ஏதோ அங்கு ஒளி வீசும் நிலா கூட இருப்பது போன்றே பிரமை ஏற்பட்டது. சுஹேல் நீ எப்படிடா இப்படி மாறினே என்று தனக்குள்ளே கேட்டுக் கொண்டான், இவன் ஏதும் சொல்லாமல் அவளையே பார்த்துக் கொண்டிருக்கவும் அவள் என்னாச்சு என்று கேள்வியாய் புருவத்தை உயர்த்தவும் அது கூட அவனை ரசிக்க வைத்தது. ஒன்னுமில்லை என்று தலையை ஆட்டினான். நிலமையை சமாளிக்கும் விதத்தில் எனக்கு இப்போ மருத்துவமனையில் வேலை குறைவு, எனக்கு உதவி செய்ய ஒரு பெண் மருத்துவரை நியமித்திருக்கிறார்கள். அதனால் இப்போ எல்லாம் சீக்கிரம் வீடு திரும்ப முடிகிறது என்று முடித்தான். பெண் மருத்துவர் என அவன் கூறியதும் அவள் மனது பெண் மருத்துவரா?அவள் எப்படிப்பட்டவள், அழகா இருப்பாளா என்று மனதுக்குள் கற்பனை குதிரை வேகமாக ஓடியது. அவள் மன ஓட்டத்தை புரிந்துக் கொண்ட சுஹேல், அந்த பெண் மிக நல்ல குணம் உடையவள். எனக்கு ஒரு நல்ல தோழி என்று உரைக்கவும் அவள் முகம் தெளிவானது. இதனை கண்டு சுஹேல் உள்ளுக்குள் புன்னகை புரிந்தான்.றகு இருவரும் பொதுவான விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்தில் துர்கா நேரம் ஆயிடுச்சு, நாளைக்கு குழந்தைகளுக்கு ஸ்கூல் இருக்கு, நானும் வேலைக்கு போகனும், அதனால் நாங்க தூங்க போறோம் என்று கூறி நீங்க வரலையா எனக் கேட்டாள். அவன் நீங்க போங்க நான் இன்னும் சிறிது நேரம் இங்கே இருந்துட்டு வரேன் என்று பதிலுரைக்கவே பிரிய மனமின்றி துர்கா குழந்தைகளை அழைத்துக் கொண்டு கீழே இறங்கினாள். அவள் சென்றதும் சுஹேல் இவளிடம் எப்படி தன் காதலை சொல்வது என்று யோசித்துக் கொண்டிருந்தான். மறுநாள் அனைவருக்கும் சந்தோஷமாக விடிய துர்காவிற்கு மட்டும் அன்று ஏனோ துக்கம் நிறைந்த நாளாக அமையும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.







அன்று வழக்கம் போல் எழுந்த துர்கா தன் வேலையை கவனித்துக் கொண்டு இருந்தபோது அவள் அண்ணி திடீரென்று துர்கா நான் நேற்றே தயிர் தோய்க்க மறந்திட்டேன், சூர்யாவிற்கு தயிர் சாதம் வேணும். இல்லனா சாப்பிட மாட்டாள். அதனாலே அனீஸ் வீட்டில் போய் பாப்பாவுக்கு கொஞ்சம் தயிர் வாங்கிட்டு வரியா என்று கேட்டதும் துர்காவும் சரி என்று கிளம்பினாள். அவளுக்கு சுஹேலை பார்க்கலாம் என்ற நினைப்பே இனித்தது. சிறு கிண்ணத்தை எடுத்துக் கொண்டு அனீஸ் வீட்டை நோக்கி நடந்தாள். வீட்டை அடைந்ததும் அனீஸ் கையில் ஒரு புகைப்படத்துடன் அவளின் அம்மாவிடம் ஏதோ பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது. துர்காவை பார்த்ததும் வா துர்கா என்று பாத்திமா அழைத்தாள். ஆன்ட்டி சூர்யா குட்டிக்கு கொஞ்சம் தயிர் வேணும் கிடைக்குமா என்று கேட்கவும், பாப்பாவுக்கா, இரும்மா எடுத்துக் கொண்டு வரேன் என்று சமையல் அறைக்குள் நுழைந்தாள். அனீஸ் கையில் இருந்த புகைப்படத்தை பார்த்த துர்கா யார் புகைப்படம் என்று வினவ அனீஸ் உடனே நம்ம வீட்டுல ஒரு வெள்ளை பூனை இருக்குதலே அதுக்கு கல்யாணத்துக்கு பெண் பாக்குறாங்க இது அந்த பொண்ணோட புகைப்படம் நல்லா இருக்காங்களடி என்று காட்ட துர்காவிற்கு சில நொடி ஒன்றுமே புரியவில்லை. யார் சுஹேலுக்கா என்று கலக்கத்துடன் கேட்க அச்சமயம் பாத்திமா வர ஏ வாலு, அவன் டாக்டர், அவனை இப்படியா கிண்டல் பண்றது என்று அதட்டினாள். சுஹேல் அப்பா பொண்ணு பிடிச்சிருக்கான்னு கேட்க சொன்னார் நேத்து தான் தபால்ல வந்துச்சு. சுஹேல் கிட்ட காட்டலாம் பார்த்த நேற்று அவன் வர ரொம்ப தாமதம் ஆயிடிச்சு. காலைல இன்னும் எழவே இல்லை. பொண்ணு பேரு மும்தாஜ், அவங்களும் டாக்டர் தான் என்று கூறி முடித்தாள் பாத்திமா. துர்காவிற்கு இவை ஏதும் காதில் விழுந்ததாகவே தெரியவில்லை. அவள் இதயம் சிறிது நேரம் நின்று பின் துடித்தது. புகைப்படத்தை வாங்கி பார்த்த துர்கா வியந்து போனாள். படத்தில் பெண் மிகவும் அழகாக இருந்தாள். சிவந்த நிறம், இரு புருவங்கள் ஒன்றாக சேர்ந்து முகத்திற்கு அழகு கொடுத்தது. பெரிய கண்கள், கூறிய மூக்கு, கோடி போன்ற உடல் என பார்க்க சினிமா நட்சத்திரம் அமலா போல் இருந்தாள், அவள் கண்களில் ஈரம் எட்டிப் பார்க்கவே அதை மறைக்க அவள் தலையை குனிந்தவாறே படத்தை அனீஸ் கையில் கொடுத்து ஆமாடி ரொம்ப அழகா இருக்காங்க என்று சொல்லியபடியே பாத்திமா கொடுத்த தயிரைக் எடுத்துக் கொண்டு வீட்டை நோக்கி ஓடினாள்.
 

revathy ramu

Member
Vannangal Writer
Messages
50
Reaction score
56
Points
18
அத்தியாயம் 7




அவள் எப்படி தன் வீடு வந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை. வீட்டை அடைந்தவுடன் தயிரை தன் அண்ணியிடம் கொடுத்து விட்டு குளியறைக்குள் நுழைந்து கொண்டாள். அவளுக்கு ஓவென்று அழலாம் போல் இருந்தது. ஏன் என் மனம் இப்படி துடிக்கிறது? அவனுக்கு பெண் பார்த்தால் எனக்கென்ன வந்தது, நான் ஏன் இவ்வளவு துன்பப்படுகிறேன்? நான் அவனை காதலிக்கிறேனா? அது தான் அவனை பார்த்தால் மனதிற்குள் பட்டாம்பூச்சி பறப்பது போல் இருக்கிறதா? இது சரி வருமா? மனமே அடங்கு. என்னால் ஏணி வைத்தால் கூட அவன் உயர்வை அடைய முடியாது. இதை ஏன் என் மனம் ஏற்க மறுக்கிறது? நான் அவனை நினைப்பதே பெரிய தவறு. என் நிலை என்ன அவன் உயர்வு என்ன? கடவுளே என்ன இது சோதனை? என்று மௌனமாக அழுதாள். குளியலறையில் இருந்து வெளியே வந்தவுடன் பார்வதி என்னடி? இவ்வளவு நேரம் குளிக்கிறே? எனக்கும் அலுவலகத்திற்கு நேரம் ஆகுது, நான் குளிக்க வேண்டாமடி என்று புலம்பிக் கொண்டே பாத்ரூமுக்கு குளிக்க சென்றாள். துர்கா அப்போதுதான் மணியை பார்த்தாள், மணி எட்டு ஆகியிருந்தது. முருகா இவ்வளவு நேரம் ஆயிடுச்சு! இன்னைக்கு காலை டிபன் சாப்பிட முடியாது, கொண்டு போய் அலுவலகத்தில் தான் சாப்பிட வேண்டும் என்று நினத்தவளாக அன்று செய்த ரவா உப்புமாவை டப்பாவில் அடைத்து தொட்டுக்கொள்ள, கொஞ்சம் நாட்டு சர்க்கரையும் அதிலேயே வைத்து, மதிய உணவையும் ஒரு டப்பாவில் போட்டு இரண்டையும் எடுத்து வைத்தாள். ஐந்து நிமிடத்தில் தயாராகி, அண்ணியிடம் நான் ஆபீஸுக்கு போயிட்டு வரேன் அண்ணி என்று குரல் கொடுத்தாள். பார்வதி அப்போதுதான் குளித்து விட்டு வெளியே வர, என்னடி டிபன் சாப்பிடலையே? என்று விசாரித்தாள். இல்ல அண்ணி நேரம் ஆயிடுச்சு, சரியான நேரத்திற்கு போகலனா பஸ் போயிடும் என்று கூறிக் கொண்டே வாசலை நோக்கி நடந்தாள். பார்வதிக்கு அவள் டிபன் சாப்பிடாமல் போவது கொஞ்சம் வருத்தமாக இருந்தது. என்ன இந்த பெண் இப்படி இருக்கிறாளே? நிறைய வேலை செய்கிறாள், நேரம் தவறாமல் சாப்பிட வேண்டாமா? நாளையில் இருந்து அவளை சாப்பிடாமல் அனுப்பக்கூடாது என்று மனதிற்குள் நினைத்தவாறே அவள் தன் அலுவலகத்திற்கு கிளம்பினார்.

துர்காவிற்கு அன்று வேலையே ஓடவில்லை மனதில் பாரம் அழுத்தியது. அன்று மேனேஜர் சொல்வதை எல்லாம் இரண்டு முறை கேட்டு தெரிந்து கொண்டாள். அவரே,” என்னம்மா உடம்பு சரியில்லையா?எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பாய்”, இன்னைக்கு என்ன உன் முகமே சரியில்லை என்று விசாரித்தாள். அதெல்லாம் ஒண்ணுமில்லை சார்! பஸ்ஸில் நெரிசல் அதிகம் அதனால்தான் கொஞ்சம் அசதியா இருக்கு, என்று சொல்லி சமாளித்தாள். மாலையில் அலுவலகம் முடிந்தவுடன் பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு சென்றாள். அங்கு வீற்றிருக்கும் ஆண்டவரை பார்க்கும்போது அவள் கண்களில் இருந்து கண்ணீர் ஆறு போல் பெருகியது. ஆண்டவா! என்னை இந்த இக்கட்டில் இருந்து நீ தான் காப்பாற்ற வேண்டும் என்று மனதுருகி வேண்டி கொண்டு வீடு திரும்பினாள்.

அவள் வேண்டுதல் இறைவனை சென்று அடைந்ததோ என்னவோ மறுநாள் மாலை மூன்று மணிக்கு ஆபீஸ் போனில் இருந்து அவளுக்கு அழைப்பு வந்தது. போனிற்கு parallel connection இருந்தது. ஆதலால் அவள் டேபிளில் இருந்தும் எடுக்கலாம். அவள் ஹலோ என்று கூறுகையிலேயே, மறுமுனையில் ஹலோ! துர்கா தானே, நான் சுஹேல் பேசுறேன், என்று குரல் கேட்கவே அவளின் அத்தனை செல்களும் சந்தோஷத்தில் துடித்தது . என்ன சுஹேல் இந்த நேரத்தில் அழைக்கிறாய்?, என்ன விஷயம் ? என்று கேட்க, சுஹேல், உன்னிடம் முக்கியமாக ஒரு விஷயம் பேச வேண்டும், மாலை அலுவலகம் முடிந்ததும் பக்கத்தில் இருக்கும் ரெஸ்டாரன்ட் க்கு வருகிறாயா? நானும் விரைவாக வந்து விடுகிறேன். அங்கு பேசலாம் என்று கூறி போனை வைத்தான். துர்காவிற்கு ஒன்றும் புரியவில்லை. என்ன விஷயம், எதற்காக கூப்பிடுகிறான்? ஒரு வேளை அவனுக்கு பார்த்த பெண் பற்றிய அபிப்ராயம் கேட்க விரும்புகிறானோ, ஆமாம்! அப்படித்தான் இருக்கும், என்று நினைக்கியிலேயே அவள் மனம் கசந்தது. மணி ஐந்தரை அடித்ததும் தன் பையை எடுத்துக் கொண்டு ரெஸ்டாரண்ட்யை நோக்கி விரைவாக சென்றாள்.

அங்கு ஏற்கனவே சுஹேல், இவளுக்காக காத்திருந்தான். இவளை பார்த்ததும், துர்கா இங்கு இருக்கிறேன், என்று கையால் சைகை செய்தான். அவன் இருக்கும் இடம் நோக்கி துர்கா சென்றதும், வா! துர்கா, உட்கார், என்று எதிர் இருக்கையை காட்டி அமரச் சொன்னான். அவள் அமர்ந்ததும் என்ன துர்கா சாப்பிடுற? டிபன் ஏதாவது ஆர்டர் பண்ணவா என்று கேட்டதும், அதெல்லாம் வேண்டாம் பழரசம் சொல்லுங்கள் என்று கூறவும் அவன் பேரரை அழைத்து இரண்டு ஆப்பிள் ஜூஸ் சொல்லிவிட்டு அவளை பார்த்தான். அவள் முகத்தில் சிறிது அசதி தெரிந்தாலும் முகம் அழகுடன் தான் இருந்தது. கொஞ்ச நேரம் மௌனமாகவே சென்றது. அவனே என்ன விஷயம் என்று சொல்லட்டும் என அவள் மௌனம் காத்தாள். ஜூஸ் வந்தவுடன் இருவரும் பருக தொடங்கினர்.
பருகிக் கொண்டே இருக்கும்போது சுஹேல் அவளிடத்தில் ஒரு கார்டை கொடுத்து அவளை படிக்கச் சொன்னான். கார்டின் முகப்பில் சிவப்பு வண்ண ரோஜாக்கள் மின்னின. உள்ளே திறந்து பார்த்தாள். அதில் என்னுயிர் துர்காவிற்கு என ஆரம்பித்து,

எனது உயிரில் கலந்து நீ என்னவளாகிவிட்டாய்
என்று நான் உனை பார்த்தேனோ
அன்றே எனை நான் இழந்தேன்
இன்று என் உயிர் உன்னிடத்தில்
என் உயிரை திருப்பி தருவாயா? அல்லது
என் உயிரை உன்னோடு சேர்ப்பாயா! அன்பே
பதில் உன்னிடத்தில்.

ஆவலுடன் உன் சுஹேல்

என்று கையெழுத்திடப்பட்டு இருந்தது. அதை பார்த்தவுடன் துர்காவிற்கு ஒன்றுமே புரியவில்லை. கண்களில் நீர் தாரை தாரையாய் வழிந்து கொண்டிருந்தது. அதை பார்த்த சுஹேல் அதிர்ந்து விட்டான். என்ன துர்கா நான் உன் மனதை காயப்படுத்தி விட்டேனா? உனக்கு என்னை பிடிக்கவில்லையா? என்று கண்களில் சோகம் ததும்பிய முகத்துடன் கேட்கவும், அவள் அவனது கையைப் பிடித்து அதில் தன் முகத்தைப் பதித்து மீண்டும் அழ தொடங்க, ஸுஹேலுக்கு மிகவும் சங்கடமாக தோன்றியது. அவளின் தலையை வருடிக் கொண்டே எதுனாலும் சொல்லு துர்கா தயவு செய்து அழாதே என்று சுஹேல் கூறியதும், துர்கா தன் அழுகையை நிறுத்திக் கொண்டு, சுகி உங்களுக்கு நான் கொஞ்சம் கூட பொருத்தமானவள் இல்லை. அழகிலும், படிப்பிலும் ,பணத்திலும் என்னால் உங்களுக்கு சமமாக வர முடியாது. என்னிடத்தில் என்ன இருக்கிறதென்று என்னை காதலிக்கிறீர்கள்? நான் உங்களுக்கு ஏற்றவள் இல்லை. இன்று காலையில் அனீஸ் ஒரு புகைப்படத்தை காட்டினாள். அந்த பெண் தான் உங்களுக்கு எல்லா விதத்திலும் பொருத்தமானவள். அவளை நீங்கள் கல்யாணம் செய்து கொண்டால் தான் உங்கள் வாழ்க்கை இனிமையாக இருக்கும். அவள் உங்கள் அப்பா, அம்மா பார்த்த பெண். உங்கள் மதமும் கூட ஆகவே உங்கள் வாழ்க்கை சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால் அந்த பெண்ணை மணப்பது தான் உங்களுக்கும் நல்லது. உங்கள் குடும்பத்திற்கும் சந்தோஷம் கிடைக்கும் என்று அவள் கண்ணீருடன் கூறியதைக் கேட்ட சுஹேல், இறுகிய முகத்துடன் நான் அந்த பெண்ணையும் உன்னையும் ஒப்பிட சொல்லவில்லை. உனக்கு என்னை பிடித்திருக்கிறதா? இல்லையா என்று மட்டும் பதில் சொல். உன் மனதில் நான் இருக்கிறேன் என்று எனக்கு தெரியும். அதை உறுதிப்படுத்த தான் கேட்கிறேன். தயவு செய்து துர்கா உண்மையை சொல்! என்று அவன் கெஞ்சிய பார்வையுடன் கூறவும், துர்காவிற்கு மனம் மிகவும் வருந்தியது. அவள், நம் இரு வீட்டாரின் சம்மதம் கண்டிப்பாக கிடைக்காது சுஹேல். என்னால் என் குடும்பத்தை விட்டு உங்களுடன் வர முடியாது. தாய் இல்லாத என்னை என் அப்பாவும் அண்ணனும் கண்ணும் கருத்துமாக வளர்த்திருக்காங்க, அவங்க மனச நோக வைச்சிட்டு என்னால உங்களை கல்யாணம் செய்துக்க முடியாது. நீங்களும் உங்கள் வீட்டுக்கு ஒரே பிள்ளை. உங்க பெற்றோருக்கும் நிறைய ஆசைகள் இருக்கும். அதனாலே இது ஒத்து வராது சுஹேல், என்று அவள் கூறியதும் சுஹேலின் முகம் கறுத்தது.நான் என்ன கேட்டா, நீ என்ன பதில் சொல்ற, நான் உன்னை விரும்புகிறேன், நீ என்னை விரும்புகிறாயா என்று தானே கேட்டேன், அதற்கு ஆமாம் அல்லது இல்லை என்று பதில் சொல்லு. அதை விட்டு விட்டு மற்றவை எல்லாம் பேசுகிறாய். அதை எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறிக் கொண்டே இருக்கையிலேயே, அவள் மௌனமாக எழுந்து நடக்க ஆரம்பித்தாள். என்ன துரி, இது தான் நீ எனக்கும் என் காதலுக்கும் கொடுக்கும் மரியாதையா? பதில் சொல்! என்றால் மௌனமாக போகிறாய் என்று சற்று உருக்கமாக கூறியதும் என்னை தயவு செய்து கட்டாய படுத்தாதீர்கள், என்று கூறியபடியே விரைந்து பஸ் நிலையம் நோக்கிச் சென்றாள். இதுக்கு மேல் இப்போது இவளிடம் பேசி உபயோகம் இல்லை என்று புரிந்து கொண்ட சுஹேல் அமைதியாய் அவளை போக வழி விட்டான். துர்காவின் மனமோ துக்கத்தில் விம்மியது. நான் விரும்பியவர் என்னை விரும்புகிறார் என்று தெரிந்தும் என்னால் சந்தோஷம் கொள்ள முடியவில்லை என்ற ஏக்கத்தில் கண்ணீர் கொட்டியது. எதிர்காலத்தை எண்ணி அவள் மனம் கலவரம் அடைந்தது.

சுஹேலுக்கோ அழுவதா அல்லது சிரிப்பதா என்றே தெரியவில்லை. அவள் என்னை விரும்புகிறாள். ஆனால் எதிர்காலத்தை எண்ணி கவலைப்படுகிறாள். அவள் மனதில் நான் இருக்கிறேன் என்ற எண்ணமே அவனுக்குள் மகிழ்ச்சியைக் கொடுத்தது. ஆனாலும் அவளின் மறுப்பு அவனை என்னவோ செய்தது. இவளை எப்படி நம் வழிக்கு கொண்டு வருவது என்று யோசித்தவாறே வீட்டை நோக்கி நடந்தான்.

கால் என்னவோ அது போக்கில் நடக்க, மனம் என்னவோ சுஹேலை சுற்றியே வந்துக் கொண்டிருந்தது. வீட்டை அடைந்தவுடன் தான் துர்காவிற்கு தன் உணர்வு வந்தது. ஸுஹேலும் தன்னை நேசிக்கிறான் என்ற நினைப்பே நெஞ்சில் இனித்தாலும் இது எப்படி சாத்தியமாகும் என்ற நினைப்பே அவளுக்குள் ஓங்கி இருந்தது. சிறிது நேரத்தில் அனீஸ் அவள் வீட்டிற்கு வர என்ன துர்கா உடம்பு சரியில்லையா?காலையில் எங்க வீட்டில் இருந்து செல்லும்போதே உன் முகம் சரியில்லை. இப்போது கூட முகமெல்லாம் வீங்கி இருக்கு. என்னாச்சுடி? உனக்கு எங்கிட்ட யாவது சொல்லேன் என்று கேட்கவே “உன் இடத்தில் சொல்லாமல் வேறு யாரு கிட்ட டி என் வேதனையை சொல்ல முடியும் “ என்று சொன்ன துர்கா பார்வதி வருவதை பார்த்து அதற்கு இப்போது நேரம் தோது இல்ல, ஞாயிற்றுக்கிழமை மூன்று மணிக்கு நீயும் நானும் சந்திக்கலாம் அங்கே பேசலாம் என்று தாழ்ந்த குரலில் சொல்லவும் அனீசும் சரிடி , நான் என்னுடைய ஆடையை தைக்க கொடுத்து இருக்கிறேன். அதைப் போய் வாங்கி வருகிறேன் என்று உம்மாவிடம் சொல்லிவிட்டு கிளம்புறேன். நீயும் வந்துவிடு என்று சொல்லிவிட்டு கிளம்பினாள்.

மறுநாள் காலை ஏழு மணிக்கெல்லாம் அனீஸின் வீட்டில் தொலைபேசி மணி அடித்தது. பாத்திமா எடுத்து ஹலோ சொன்னவள் அண்ணா எப்படி இருக்கீக?, மதனி நல்லா இருங்காங்களா? என்று கேட்க மறுமுனையில் நல்லா இருக்கோம். நீ எப்படி இருக்கே? என்று நலம் விசாரித்து விட்டு நான் அனுப்பிய பொண்ணு போட்டோ வந்ததா? சுஹேல் என்னம்மா சொன்னான்? என்று கேட்க, பாத்திமாவும் நேத்தே வந்திச்சி அண்ணா! நான் சுஹேல் கிட்ட கொடுத்திட்டேன். அவன் ஒன்னுமே சொல்லலே. போட்டோவை பார்த்தனா, இல்லையா என கூட தெரியல. நான் அவன்கிட்ட போன் தரேன். அவனேய கேட்டுக்கோ, என்று கூறி சுஹேலை அழைத்து, உன் வாப்பா லைன்ல இருக்கார், பேசுப்பா! என்று கூறி நாசுக்காக சென்று விட்டாள். சுஹேல் போனை எடுத்ததும், அவர் அப்பா, முதல் கேள்வியே என்னடா பொண்ணு பிடிச்சிருக்கா? நிக்காஹ்வை முடிச்சிடலாமா? என்று கேட்டார். சுஹேலுக்கு எரிச்சலாய் வந்தது. இருந்தாலும் அதை மறைத்துக் கொண்டு, என்னப்பா, பொண்ணு எப்படி பட்டவங்கன்னு தெரியல. நான் நேரில் கூட பார்க்கல. அதுக்குள்ள நிஹ்ஹா வச்சிக்கலாமான்னு கேட்டா என்ன அர்தம்பா, எனக்கு இப்போ நிஹ்ஹா வில விருப்பம் இல்ல. நான் லண்டன் சென்று, என்னுடைய மேல் படிப்பை முடிக்கணும். என்று கூறியதைக் கேட்டதும் அவர் அப்பா ஆச்சரியமுடன் என்னடா! நான் இரண்டு வார்த்தை கேட்டா ஒரு வார்த்தை கூட பேசமாட்டே, இப்போ இப்படி பேசறே, சரி ! நிஹ்ஹா இப்போ வேண்டாம். ஒரு உறுதியாவது பண்ணிக்கலாம். நீ படிச்சிட்டு திரும்பி வந்தவுடன் நிஹ்ஹா வச்சிக்கலாம் சரியா? என்று கேட்கவே, சுஹேல் க்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இங்கு துர்காவை எப்படியாவது சம்மதிக்க வைக்கணும், அதுக்கப்புறம் தான் வாப்பாகிட்ட சொல்ல முடியும் என்று யோசித்து என்னாலே இப்போதைக்கு வாரணாசிக்கு வர முடியாது வாப்பா, இங்கு மருத்துவமனையில் நிறைய வேலை இருக்கு. அதனாலே இந்த பேச்சு இப்போதைக்கு வேண்டாம் வாப்பா என்று கூறியதும் மறுபக்கம் போனை படாரென்று வைக்கும் சத்தம் கேட்டது. அந்த சத்தம் அவர் கோபமாக இருக்கிறார் என்று சுஹேலுக்கு உணர்த்தியது. இவரை எப்படி சமாளிப்பது என்று திகைத்தவாறு குளியறைக்கு சென்றான். ரெடியாகி திரும்பி வந்து சாப்பிட உட்காரும்போது பாத்திமா ஆரம்பித்தாள். என்ன சுஹேல் பொண்ணு நல்லாத்தானே இருக்கு. உனக்கு சமமா படிச்சிருக்கு, அழகு இருக்கு, அந்தஸ்து இருக்கு, ஏன் சுஹேல் வேண்டாங்கிறே? என்று கேட்கவும் எனக்கு பிடிக்க வேண்டாமா மாமி? என்று கூறி அதற்கு மேல் பேச்சை தொடரா வண்ணம் எழுந்து கொண்டான். பாத்திமாவுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. இவன் ஏன் நிஹ்ஹா வேண்டாம் என்கிறான், மருத்துவமனையில் வேற யாரையாவது விரும்புகிறானோ? என்று பலவாறு சிந்தித்தபடியே அனீசை சிற்றுண்டி உண்ண அழைத்தாள்.


அத்தியாயம் 8



அன்று ஞாயிற்றுக்கிழமை. துர்காவும் அனீசும் வெளியே சந்திப்பதாக கூறிய நாள். துர்கா அன்று சீக்கிரம் எழுந்து தன் வேலைகளை எல்லாம் விரைவாக முடிக்கலானாள். பார்வதி எழுந்து வந்து என்ன துர்கா? இன்னைக்கு அலுவலகம் விடுமுறை தானே, நிதானமாக எழுந்திருக்க வேண்டியதுதானே, இன்னைக்கு கூட ஏன் சீக்கிரம் எழுந்திக்கிறே? என்று கேட்க, இன்னைக்கு கொஞ்சம் வெளியே போகலாம்னு இருக்கேன் அண்ணி. எங்க அலுவலகத்தில் ஒருத்தருக்கு அடுத்த வாரத்தில் கல்யாணம் வருது, அனைவரும் பணம் போட்டு அவருக்கு நல்ல பரிசு பொருளை வாங்கலாம்னு இருக்கோம். என்னிடத்தில் தான் அனைவரின் பணமும் இருக்கு. அதான் சீக்கிரம் வேலை எல்லாம் முடிச்சிட்டு கடைக்கு போகலாம்னு இருக்கேன். சரி ! எப்போ கிளம்பறே? என்று பார்வதி கேட்டாள். மூன்று மணிக்கு போறேன், அப்பதான் சீக்கிரம் வீட்டுக்கு திரும்ப முடியும் என்று கூறி முடித்தாள். வெளியே வெயில் ஜாஸ்தியா இருக்கு. “வெயில் தாழ போயிட்டு வாம்மா” என்று அக்கறையாய் கூறினாள். அவளுடைய அக்கறையை நினைத்து துர்கா மனதில் மகிழ்ந்தாள். சரி ! என்று தலையாட்டிவிட்டு தன் வேலைகளை வேகமாக முடித்தாள். மணி நான்கை நெருங்கவும் இப்போ போனா சரியா இருக்கும். வெயிலும் அவ்வளவாக இருக்காது என்று எண்ணியபடி தன் பையை எடுத்துக்கொண்டு அண்ணி நான் கடைக்கு போயிட்டு வரேன் என்று சொல்லிக் கொண்டு வேகமாக நடக்கலானாள்.

என்னடி விஷயம்? எனக்கு நீ தனியாக பேசணும் சொன்னதில் இருந்து ஒரே கலக்கமாக இருக்கு. சீக்கிரம் சொல்லுடி, என்றவுடன், உங்கிட்ட சொல்லாம வேற யார் கிட்ட சொல்ல போறேன், ஆனா நீ என்னை தப்பாக நினைக்க கூடாது என்று பீடிகையுடன் ஆரம்பித்தாள் துர்கா. அப்படி தப்பா நினைக்கிற மாதிரி என்ன விஷயம் சொல்ல போற, அனீஸ், சுஹேல் என்னை காதலிக்கிராண்டி! என்று சொன்னதும் அனீஸின் முகத்தில் ஆச்சரியம் தென்பட்டது. “ என்னது அந்த வெள்ளை பூனைக்கு காதலிக்க கூட தெரியுமா?” என்று வாய் பிளக்க, உனக்கு எப்படி தெரியும்? என்று ஆர்வத்துடன் கேட்டாள் அனீஸ். இரண்டு நாட்களுக்கு முன்பு சுஹேல் எனக்கு போன் பண்ணி ரெஸ்டாரன்ட் க்கு வரச் சொன்னான். அங்கதான் தன் காதலை வெளிப்படுத்தினான். "அதனால்தான் மாமா அனுப்பிய பொண்ணோட புகைப்படத்தை பார்க்கவில்லையா?" அது மட்டுமல்ல, இப்போதைக்கு எனக்கு நிக்காஹ் எல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டான். அதைக் கேட்ட துர்காவின் மனதின் ஓரத்தில் சந்தோஷம் இருந்தாலும் இது எதில் கொண்டு போய் முடியுமோ? என்று பயமாகவே இருந்தது. "நீ என்னடி பதில் சொன்ன" என்று அனீஸ் கேட்டதும், இதெல்லாம் ஒத்து வராது! என்று கூறி வந்துட்டேன்டீ என்று தன் கண்ணீரை குனிந்தவாறே மறைக்க முயன்றாள். அனீஸ்,"உண்மையை சொல்லுடீ, உனக்கு சுஹலை பிடிச்சிருக்கா, நீயும் அவனை காதலிக்கிறாய் தானே?" என்று வினவ துர்கா மௌனமாக இருக்க, அப்போ உனக்கும்அவனை பிடிச்சியிருக்கு, ஆனா ஒத்து வராதுன்னு சொல்லிட்டு வந்துட்டே, சரிதானே என்று அவள் குடைந்து குடைந்து கேட்டகவும் துர்காவால் மறைக்க முடியவில்லை. கண்களில் நீர் ததும்ப என் குடும்பத்தை, என்னால் விட்டுக்கொடுக்க முடியாது. முக்கியமாக அவர் வேறு மதம், நான் வேறு மதம், இருவர் வீட்டிலேயும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். அப்புறம் எப்படி எங்க காதல் கல்யாணத்தில் முடியும் என்று வேதனையுடன் கூறினாள். அதெல்லாம் சுஹேல் பார்த்துப்பான். உனக்கு விருப்பம் இருக்கா, இல்லையா மட்டும் சொல். "அதெல்லாம் சரி வராதுடி. இந்த பேச்சை இத்துடன் விட்டு விடுவோம். நீயும் வீட்டில் யார்கிட்டயும் சொல்லக்கூடாது. எனக்கு உன்னிடத்தில் பேசினால் மனசுக்கு ஆறுதல் கிடைக்கும் என்று தான் சொன்னேன். தயவு செய்து யாரிடமும் சொல்லாதே, என்று மன்றாடிக் கேட்டகவும் அனீஸ் மனதிற்குள் கண்டிப்பாக சுஹேல் இடம் இதைப்பற்றி பேச வேண்டும் என்று எண்ணியவளாக, யாரிடமும் சொல்லமாட்டேன் என்று கூறவும், துர்காவிற்கு சற்று நிம்மதியாக இருந்தது.

இருவரும் ஒரு நகை கடைக்குச் சென்றனர். அங்கு பரிசு பொருள் என்ன வாங்கலாம் என்று பார்த்துக் கொண்டே வந்தனர். வெள்ளி பொருட்கள் இருக்கும் திசையில் துர்காவின் கண்கள் சென்றது. அங்கு ஓர் இடத்தில் ஒரு பெரிய தட்டின் நடுவில் சின்னதாக மஹாலக்ஷ்மி சிலையும் இரு பக்கத்தில் குங்குமம் மஞ்சள் வைக்க இரு கிண்ணங்களும் அதற்கு அடுத்து ஊதுபத்தி சொருக இரு துவாரம் உடைய யானை போன்ற சிலையும் பார்க்க மிக அழகாக இருந்தது. துர்கா அதன் எடையும் விலையும் கேட்க, அது தான் கொண்டு வந்த பணத்திற்கு சரியாக இருந்ததால் துர்கா அதை வாங்கி கொண்டாள். அனீஸ் இடம் காட்ட அவளுக்கும் பிடித்துவிட அதுவே பரிசு பொருளாக வாங்கினாள். கடைக்காரர் பரிசு பொருளாக பேக் செய்து தரட்டுமா? என்று கேட்டார். துர்கா வேண்டாம் சார்! அப்படியே ஒரு கவர்ல போட்டு தாங்க, மறக்காம பில்லை அதோடு வைச்சிடுங்க. கடைக்காரரும் அதை அப்படியே செய்து கூடவே ஒரு துணி கைப்பையும் வைத்தார். அது பார்க்க அழகாக இருக்கவே அனீஸ், " துர்கா இது இலவசமாக தானே தராங்க. நான் எடுத்துகிறேண்டி," என்று கூறவும் துர்கா சிரித்துக் கொண்டே அந்தப் பையை அவளிடம் கொடுத்தாள். பிறகு இருவரும் பேருந்து நிலையம் வந்தடைந்தனர். மணி ஆறரை நெருங்கவும் துர்கா அனீஸிடம்," உங்க வீட்ல தேட மாட்டாங்களா ? நீ டெய்லர் கடைக்கு போறேன்னு தானே வந்தே, “ நீ வந்ததும் உம்மாவிற்கு டெய்லர் கடையில் இருந்த போனில் உன் கூட கடைக்கு போறதா சொல்லிட்டேன்.” அதனாலே உம்மா தேட மாட்டாங்க. என்று பதிலுரைத்தாள்.

சுஹேல் அன்றைக்கு சீக்கிரம் தன் பணிகளை முடிக்கவே அவன் வீட்டிற்கு கிளம்பலானான். வழியில் அவனுடன் வேலை பார்க்கும் மருத்துவர்," நான் கார்ல தான் போறேன், வா! சுஹேல், உன்னை ட்ராப் பண்றேன், என்று கேட்க, இல்லப்பா, நான் பைக் கொண்டு வந்திருக்கேன். அதிலேயே போயிடுவேன் என்று கூறவே அவனும் சரி என்று கூறி இருவரும் பார்கிங் இடத்திற்கு வந்தனர். அவன் கார் நிற்கும் இடம் செல்ல சுஹேல் பைக் நிற்கும் இடம் சென்று பார்த்த போது பைக்கின் டயர் பஞ்சர் ஆகி இருந்தது. "எப்படி பஞ்சர் ஆச்சு, வீட்டில் இருந்து வரும் போது நல்ல தான் ஓட்டிட்டு வந்தேன் என்று யோசிக்கையில் பின்பக்கமாக இருந்து ஹார்ன் ஒலி கேட்க, அவன் திருப்பினான். அங்கு அதே டாக்டர் காரை கிளப்பிக்கொண்டு அவன் பக்கம் வந்தார். என்னப்பா, "பைக் ரிப்பேரா?" என் காரில் ஏறு, "நீ இன்னைக்கு என் காரில் தான் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று இருக்கிறது" என்று சிரித்தபடியே அவன் தன் இருக்கைக்கு பக்கத்தில் உள்ள கதவை திறந்து விட்டான், சுஹேல் அதில் ஏறவும் கார் கிளம்பியது.

சுஹேல் காரில் வேடிக்கை பார்த்து கொண்டு வந்த போது வழியில் துர்காவையும் அனீஸையும் பார்த்துவிட்டான். "இருவரும் இங்கே எங்கே?" என்று நினைத்து கொண்டே அந்த டாக்டரை பார்த்து, இங்கு டிராபிக் இல்லாத இடமா பார்த்து கொஞ்சம் நிறுத்து, "நா இறங்கிறேன்!" எனக்கு இங்கு கொஞ்சம் வேலை இருக்கு,"என்று அவசரமாக கூற, அவனும் காரை நிறுத்த சுஹேல் இறங்கிக் கொண்டு, ரொம்ப நன்றி ப்பா என்று கூறி அவனிடம் கழன்று, இருவரையும் நோக்கி சென்றான்.
 

revathy ramu

Member
Vannangal Writer
Messages
50
Reaction score
56
Points
18


இருவரும் என்னடி, ஒரு பஸ் கூட வரமாட்டேங்குது! ஆட்டோவில் போகலாமா? என்று அனீஸ் கேட்க, துர்கா கொஞ்ச நேரம் பாக்கலாம் என்று சொல்லிக் கொண்டிருந்த போதே, அங்கு சுஹேலை கண்டதும் ,ஒரு நொடி அவள் முகத்தில் மின்னல் பளிச்சிட்டு மறைந்தது. சுஹேல் அவர்களை நெருங்கி, "என்ன ரெண்டு பேரும் இங்க நிக்கிறீங்க?, என்று கேட்கவும், அனீஸ் "நீ எங்கே இங்கே?", உங்க மருத்துவமனையை இங்கே மாத்திட்டாங்களா என்ன? என்று கேலி செய்யவும், சுஹேல் அவளை பார்த்து முறைத்தான், ஏ வாலு! இங்கே ஒரு நண்பனை பார்க்கலாம் வந்தேன், வீட்டுக்கு போலாம்னு கிளம்பி பேருந்து நிலையம் வந்த போது தான் உங்களை பார்த்தேன், என்று கூறவும், அனீஸ் நம்பிட்டேன் என்று கிண்டல் அடிக்க, அவன் உண்மை தாண்டி என்று அப்பாவியாக முகத்தை வைக்க, சரி! உன் பைக் எங்கே? என்று அடுத்த கேள்வியை தொடுத்தாள் அனீஸ். பைக் பஞ்சர் ஆயிடுச்சு, மருத்துவமனையிலேயே விட்டு விட்டேன், நாளைக்கு போய் தான் அதை சரி பண்ணனும், நேரம் ஆயிடுச்சு, ஆட்டோவில போலாமா! என்று அவன் கேட்கவும் துர்கா, நீங்க ரெண்டு பேரும் ஆட்டோவில் போங்க, "கொஞ்ச நேரத்தில் பஸ் வந்துரும், அதிலேயே நான் வரேன்!" என்று கூறவும் சுஹேலின் முகம் மாறியது. உடனே அனீஸ் உன்னை மட்டும் தனியாக விட்டுவிட்டு நாங்க போக முடியாது, நீ வந்தா உன்னை ஆட்டோக்காரன் ஏத்திக்க மாட்டேன் என்று சொல்லுவானா? ரொம்ப பிகு பண்ணாதே! மரியாதையாய் வா! என்று அதட்டவும் அவள் மௌனமானாள். சுஹேல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அந்தி மாலை நேரத்து கதிரவன் மறையும் போது வெளிப்படும் கதிர்கள் அவள் மீது பட்டு அவள் முகம் பளபளப்பதைக் கண்டு அவன் இமை கொட்டாமல் பார்த்து ரசித்தான், அனீஸ் இவர்களுக்கு நடுவில் நந்தி போல் அமரக்கூடாது என்று நினைத்து, சுஹேல்! நீ உள்ளே போ, என்று அவனை முதலில் அமரச் செய்தாள், பிறகு அனீஸ், " துர்கா நீ வா!என்று கூறி அவளை அவன் அருகில் அமரச் சொல்ல, துர்கா, "நீ உட்காருடி, "நான் உன் பக்கத்தில் உட்காரேன்" என்று தயங்க, எனக்கு நடுவில் உட்காருவது பிடிக்காது என்று கூறி அவளை அவன் அருகில் அமர வைத்தாள். அவள் அமர்ந்ததும் அவனுக்கு தென்றல் காற்று பக்கத்தில் வீசுவது போல் சில்லென்று இருந்தது. மனமோ குத்தாட்டம் போட்டது. காற்றில் அவளின் துப்பட்டா அவன் மீது பட்டு பட்டு விலகியது, அதிலே மெய் மறந்த அவன் அந்த சுகத்தை முழுவதுமாக அனுபவித்தான். அனீஸ் வழி எல்லாம் பேசிக் கொண்டே வந்தது எதுவுமே அவன் காதில் விழவில்லை. ஆனால் துர்காவிற்கோ இது மிகவும் சங்கடமாக இருந்தது.அவன் முகத்தைப் பார்க்கவே தைரியம் இல்லாமல் கீழே குனித்துக் கொண்டே வந்தாள். திடீரென்று ஆட்டோக்காரன் சடன் பிரேக் போட, துர்கா சரிந்து சுஹேல் மீது விழுந்தாள். ஒரு மெல்லிய பூங்கொத்து தன் மீது விழுவது போல் உணர்ந்தான் சுஹேல். ஆனால் ஆட்டோக்காரனோ," வீட்டிலே சொல்லிட்டு வந்துட்டானா" குறுக்கே புகுந்து நடுவில ஒய்யாரமாய் போறான் பாரு மூதேவி! என்று திட்டிக் கொண்டே வந்தான். இவையெல்லாம் சுஹேலின் காதில் விழுந்தால் தானே!, "அவன் வேறு உலகத்தில் அல்லவா சஞ்சரித்துக் கொண்டு இருந்தான்." சிறிது நேரத்தில் வீடு வரவே மூவரும் இறங்கிக் கொண்டார்கள். துர்கா பணம் கொடுக்க பையை திறந்த போது, சுஹேல் தான் கொடுப்பதாக கூறி ஆட்டோக்காரனுக்கு பேசின பணத்தை விட கூடுதலாகவே கொடுத்தான். ஆட்டோக்காரனுக்கு வாயெல்லாம் பல்லாக சிரித்தபடி நன்றி சார், என்று கூறியபடி வண்டியை எடுத்தான். அனீஸ் ஸுஹேலைப் பார்த்து புன்னகை புரிந்தவாரே, நடக்கட்டும்! நடக்கட்டும்! "நான் எதுவும் பாக்கலப்பா, எதுவும் எனக்கு தெரியாது," என்று பேசிக் கொண்டே தன் வீட்டை நோக்கி நடந்தாள். துர்காவிற்கோ ஒன்றும் விளங்கவில்லை. சுஹேல் ஏ! ராங்கி! நிறுத்து! உன் பேச்சை, சடன் பிரேக் போட்டதாலே பாவம் துர்கா என் மீது விழுந்துட்டா, அதுக்கு ஏண்டி இப்படி கிண்டல் பன்றே! பாவம் துர்கா! என்று போலியான கோபத்துடன் கூறியதும், அனீஸ் ஆமாம்! ஆமாம்! பாவம் தான் துர்கா, "பச்ச புள்ளே பாரு!" ஒன்னுமே தெரியாது, என்று துர்காவை பார்த்து நகைக்க, துர்கா வெட்கம் தாளாமல் தன் வீட்டை நோக்கி வேகமாக ஓடிவிட்டாள். அனீஸ், சுஹேலிடம், "நா உங்கிட்ட ஒரு விஷயம் பேசணும்டா", ராத்திரி நீ மொட்டை மாடியில் இரு. நான் வேலையெல்லாம் முடிச்சிட்டு வரேன், என்று கூறியபடியே வீட்டுக்குள் நுழைந்தாள். சுஹேலுக்கு என்ன விஷயம் என்று ஒரு மாதிரியாய் புரிந்தது. தன்னையும், துர்காவையும் பற்றித் தான் இருக்க வேண்டும் என்று ஓரளவு கணித்து வைத்திருந்தான். அன்று இரவு ஏழு மணிக்கு அனீஸ் சுஹேலை தேடி மொட்டை மாடிக்கு வந்தாள். வந்ததும் வராதுமாக சுஹேலிடம் அனீஸ், "இந்த பூனையும் பால் குடிக்குமா", என்று முகத்தை வைத்துக்கொண்டு என்ன என்ன வேலையெல்லாம் செய்கிறாய்! என்று கிண்டலடித்தபடியே வந்தாள். சுஹேல், "கத்தாதடி", மெல்லமாக பேசு, "நீ கத்தின கத்தில் ஊரே இங்கு கூடிவிடும் போலிருக்கே!",என்று மெல்லமாக அதே சமயம் அழுத்தமாக கூறினான். "என்ன விஷயம்?, சொல்லு! என்று கூறவும், அனீஸ் நா நேரடியாக விஷயத்திற்கு வரேன், "நீ துர்காவை காதலிக்கிறாயா?, அவள் நம்ம மதம் இல்லை என்று தெரிந்தால் உங்க வாப்பாவும் அம்மாவும் சம்மதிப்பாங்களா? எப்படிடா சமாளிக்க போறே? என்று கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டே போக, சுஹேல் நெஞ்சை நிமிர்த்தி அனீசைப் பார்த்து ,"ஆமாம்! "நான் துர்காவை காதலிக்கிறேன்!". எனக்கு நிஹ்ஹா நடந்தால் அது அவள் கூட மட்டும்தான். எனக்கு சாதி, சமயம், மதம் மீது எல்லாம் நம்பிக்கை இல்லை. எனக்கு கடவுள் அன்பு தான். அது துர்காவிடம் நிறைய இருக்கிறது. எங்களுக்குள் நிஹ்ஹா நடந்தால் நாங்கள் ஒருவருக்கொருவர் அன்பாக இல்லறம் நடத்துவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. வாப்பாவும் உம்மாவும் சம்மதித்தாலும் இல்லையென்றாலும் எனக்கு துர்காதான் மனைவி, அவளுக்கு நான் தான் கணவன், என்று திட்டவட்டமாக கூறி முடித்தான். அனீஸ் அவனைப் பார்த்து அப்படியே வாயடைத்து நின்றிருந்தாள், துர்காவிற்கு விருப்பம் இல்லை என்றால் என்னடா பண்ணுவே? என்று கேட்க, இல்லை அனீஸ், அவளும் என்னை காதலிக்கிறாள், ஆனால் அவள் குடுமபத்திற்காக பயப்படுகிறாள். கண்டிப்பாக அவள் என்னிடத்தில் வருவாள். என் காதல் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது, என்று கூறி முடித்தான். என்னவோ எனக்கு பயமா இருக்கு சுஹேல், துர்கா ரொம்ப நல்ல பெண், சிறு வயதிலேயே தாயை இழந்தவள். அதனால் தாய் பாசத்தை அவள் கண்டதில்லை, அவளுடைய அண்ணி நல்லவள் தான், இருந்தாலும் தாயை போல் வருமா? அவள் தன் தந்தைக்கும் அண்ணனுக்கும் கஷ்டம் தரக் கூடாது என்று தான் வேலைக்கு செல்கிறாள். தன் செலவுகளை தானே பார்த்துக் கொள்கிறாள். அவள் தன் தந்தையிடமும் அண்ணனிடமும் வாய் திறந்து எதுவுமே கேட்க மாட்டாள். நான் அவர்களிடம் எதிர்த்து பேசி கூட பார்த்தது கிடையாது. இந்நிலையில் அவள் தன் குடும்பத்தை எதிர்த்துக் கொண்டு உன்னிடத்தில் எப்படி வருவாள்? என்று அனீஸ் கேட்க, துர்கா என்னை தவிர வேறு யாரையும் திருமணம் செய்ய மாட்டாள், எனக்கு அது நன்றாக தெரியும் என்று உறுதியாக கூறினான் சுஹேல். உன் வீட்டில் மதம் மாறிய திருமணத்தை எப்படி சம்மதிப்பார்கள்?, கண்டிப்பான உன் தந்தை இந்த திருமணத்தை எதிர்ப்பார், என்ன செய்ய போகிறாய்? "நான் இதல்லாம் யோசிக்காமல் இல்லை, யார் எதிர்த்தாலும் எனக்கு நிஹ்ஹா ஒன்று நடந்தால் அது துர்காவோடுதான்! இல்லையென்றால் நான் இப்படியே ஏஎன் காலத்தை கழித்திடுவேன், என்று அவன் உறுதியாக கூறியதாக கேட்ட அனீஸ் திகைத்தாள். "நானும் அல்லாவை வேண்டிக்கொள்கிறேன்", உங்கள் காதல் வெற்றி பெற என் துணை எப்போதும் இருக்கும் என்று அனீஸ் கூறியதை கேட்ட சுஹேலுக்கு, மனசுக்குள் சிறு அமைதி ஏற்பட்டது. சரி ! சரி! நேரம் ஆகிவிட்டது, கீழே போகலாம், என்று அனீஸ் கூறவே இருவரும் கீழே இறங்கி நடந்து, துர்கா வீட்டை கடந்தபோது, அவள் கீழே அமர்ந்து பூக்கள் தொடுத்துக் கொண்டிருக்க காலடி சத்தம் கேட்டவுடன் தலை நிமிர்ந்தாள். அங்கே அனீஸ் முன்னே செல்ல, அவள் பின்னே வந்த சுஹேல் துர்காவை பார்த்து கண்ணடித்து புன்னகை புரிந்தவாரே செல்ல அதை பார்த்த துர்காவின் முகம் நாணத்தால் சிவந்தது. இந்த ஒட்டகச்சிவிங்கிக்கு ரொம்ப தான் ஏத்தம், நா அவ்வளவு சொல்லியும் இப்படி நடந்திக்கிறானே?, என்று பொய் கோபம் அவளுள் தோன்றியது. ஆமாம்! பொய் கோபம் தான்! இல்லையென்றால் அவள் ஏன் இப்படி நாணம் கொள்ளவேண்டும்? சுஹி , நீ இல்லாமல் நான் இல்லைதான், ஆனாலும் உன்னை சேர வழி தெரியாமல் தவிக்கிறேன். இதற்கு காலம் தான் பதில் சொல்லவேண்டும், என்று மனதிற்குள் நினைத்தவாறே தன் வேலையை தொடர்ந்தாள் கயல்விழிக்கு அன்றைக்கு இரவு டூட்டி போடப்பட்டிருந்தது. அங்கு அவளும் மற்றும் ஒரு மருத்துவரும், ஒரு செவிலியரும், துப்புரவு ஆட்கள் இருவர் இருந்தார்கள். நோயாளிகளை எல்லாம் பார்த்துவிட்டு தன் இருக்கையில் வந்து அமர்ந்தபோது மணி ஒன்பதை நெருங்கி இருந்தது, அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து மருத்துவ சம்மந்தப்பட்ட புத்தகத்தை எடுத்து படிக்கலானாள். அப்போது ராசா! உனக்கு ஒன்னும் இல்லப்பா! கண்ண திறப்பா! என்று கத்தியவாறு ஒரு நடுத்தர பெண்மணி வர, அவருடனே ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவரும், கூட இரண்டு பெரும் ஸ்ட்ரெச்சரில் ஓர் இளைஞனை ரத்த வெள்ளத்தில் அழைத்துக் கொண்டு வந்திருந்தார்கள். கயல்விழி அவசரமாய் அவர்கள் அருகில் சென்று என்னாச்சு? என்று கேட்டபோது, அந்த அம்மாவிடமிருந்து ஒரே கதறலாக வெளிப்பட்டு அந்த மருத்துவமனையையே நடுங்க செய்தது, அம்மா! என் பிள்ளையை காப்பாத்துமா! பேச்சு மூச்சு இல்லாமல் இருக்காம்மா! இப்போ நீங்க எங்களுக்கு தெய்வம் மாதிரி! என்று அழுது புலம்பினாள். அமைதியாய் இருங்கம்மா! என்னாச்சுன்னு பாக்குறேன்! என்று கூறியபடியே "ICU வை ரெடி பண்ணுங்க", என்று செவிலியருக்கு உத்தரவிட்டு, அம்மா போலீஸுக்கு ஒரு கம்பளைண்ட் குடுத்திடுங்க, எல்லாம் சரியாயிடும், கவலைபடாதீங்க! என்று கூறியபடியே அந்த அடிப்பட்ட மனிதனுடன் ICU க்குள் சென்றாள் கயல். ரெபேக்கா, "நா போய் போலீசுக்கு சொல்லிட்டு வந்திறேன்," நீ நம்ம புள்ளய பார்த்துக்க! என்று சொல்லியபடியே விரைந்தார் ஜேக்கப், ரெபேக்கா விடாமல் அழுத்துக் கொண்டிருக்க , உள்ளே சென்ற கயல் அந்த இளைஞனை பரிசோதனை செய்தாள்.
 

revathy ramu

Member
Vannangal Writer
Messages
50
Reaction score
56
Points
18

தலையில் அடிப்பட்டு ரத்தம் கசிந்துக் கொண்டிருந்தது. கைகள், கால்களில் எல்லாம் சிராய்ப்புகள், வலது கையில் எலும்பு முறிந்து இருந்தது. இ ரத்த வழியும் இடத்தில எல்லாம் சுத்தம் செய்து, மருந்திட்டப்பின், தலையில் அடிபட்ட இடத்தில கட்டுப்போட்டு விட்டு, எலும்பு பிரிவு மருத்துவருக்கு போன் செய்தாள், டாக்டர் செழியனா? வணக்கம் டாக்டர்! இங்கு ஒரு நோயாளிக்கு கையில் அடிப்பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது, ரத்தம் நிறைய சென்றுள்ளது. தாங்கள் இப்போது வர முடியுமா? என்று கேட்கவே, மறுமுனையில் அரை மணி நேரத்திற்குள் வருகிறேன், என்று கூறவே போனை வைத்து விட்டு வெளியே வந்தாள். ரெபேக்கா அங்கு ஓயாமல் அழுதுகொண்டிருக்க, கயல் அவர்களிடம் சென்றாள். "டாக்டர் அம்மா இப்போ என் புள்ள எப்படிம்மா இருக்கான்?' உயிர்க்கு ஒன்னும் ஆபத்து இல்லையே! என்று பதற்றத்துடன் கேட்டாள் ரெபேக்கா. "பயபடாதிங்க! நா முதலுதவி செய்து இருக்கேன்", உயிருக்கு ஒன்றும் ஆபத்து இல்லை", ரத்தம் நெறைய வெளியே போய் இருக்கு. அதனால ரத்தம் ஏத்தி இருக்கேன்.அதில்லாம கையில எலும்பு முறிவு ஏட்பட்டிருக்கு. அதற்குரிய மருத்துவருக்கு போன் பண்ணி இருக்கேன். இன்னும் அரை மணி நேரத்திலே வரதா சொல்லி இருக்காரு. தலையிலே அடிபட்டு இருக்கிறதால MRI ஸ்கேன் எடுக்கணும் என்று கூறவே, "எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை", "எம் புள்ளையை காப்பாத்துங்கம்மா", என்று கதறினாள். இது எப்படி ஆச்சு?, என்று கேட்கவும், பைக்கில் போகும்போது எதிரே வந்த ஜீப் மோதி, பைக்கில் இருந்து எகிறி கீழே விழுந்திட்டான், அவன் பர்ஸில் இருந்த அடையாள அட்டையை மற்றும் விசிட்டிங் கார்டை பார்த்துப் புண்ணியவான் ஒருவன் எங்களுக்கு போன் செஞ்சி, அவனையும் ஒரு காரில் ஏத்தி இங்கு அழைச்சிட்டு வரவும் நாங்க சேதி கேட்டு இங்கு வரவும் சரியாய் இருந்திச்சு, என்று அவள் முடிக்கவும் எலும்பு முறிவு மருத்துவர் செழியன் வரவும் சரியாக இருந்தது. கயல் அவர் பின்னாலே உள்ளே சென்றாள். சரியாக ஒரு மணி நேரம் கழித்து இருவரும் வெளியே வந்தனர். அதற்குள் ஜேக்கப்பும் வர. எப்படி இருக்கான்? எங்க புள்ள, என்று கேட்க, everything alright, கையிலே ஒரு சின்ன ஆபரேஷன் பண்ணியிருக்கேன், ஒரு மாசத்திற்கு கையை தூக்க முடியாது. மேலும் நாளைக்கு MRI ஸ்கேன் எடுத்து ரிப்போர்ட் பார்த்த பிறகு தான் தலையில் அடி எப்படி இருக்கு! என்று சொல்ல முடியும். இப்போ மயக்கமா இருக்கார். ஒரு மணி நேரத்திலே கண் முழிச்சிடுவார், அப்போ நீங்க அவரை தொந்தரவு செய்யாமல் ஒவ்வொருத்தரா போய் பார்க்கலாம், என்று கூறி கயலிடம் திரும்பி ‘ ‘’நான் வீட்டிற்கு செல்கிறேன்’’ கயல், ஏதாவது அவசர தேவை என்றால் என்னை கூப்பிடு! என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். கயல் ரெபேக்கா அருகில் சென்று, "கவலைப்படாதீங்க அம்மா, எல்லாம் சரியாய்விடும் " என்று ஆறுதல் கூற , ரொம்ப நன்றிம்மா! "கடவுள் மாதிரி வந்து எம் புள்ளய காப்பாத்தினீங்க", என்று நெகிழிச்சியாக கூறினாள். "என்னுடைய் கடமையைத்தாம்மா செய்தேன்" , என்று புன்முறுவல் பூத்தவாறே தன் அறைக்குள் சென்றாள் அந்த பூவழகி காயல்விழி. சிறிது நேரம் கழித்து சாம்சனுக்கு மயக்கம் தெளிய முதலில் அவன் அம்மா சென்று பார்த்தார். தம்பி, இப்போ எப்படி இருக்கு?, ரொம்ப வலிக்கிறதா? என்று கண்களில் வேதனையுடன் கேட்பதைப் பார்த்த சாம்சன் மெதுவாக வாயை திறந்து, எனக்கு ஒன்றும் இல்லைம்மா, பயப்படாதிங்க, என்று ஈன குரலில் பேசினான். "உனக்கு ஏதாவது ஆகியிருந்தால் என்னால் தாங்க முடியாதுப்பா", என்று மெல்லிய குரலில் கூறினாள், அவள் கண்களில் கண்ணீர் தாரை தாரையாய் வழிந்தது, அதைப் பார்த்து மனம் தாளாதவனாக சாம்சன், பேச்சை வேறு திசையில் திருப்பினான். பியூலா எங்கம்மா? தனியாவா வீட்டிலே விட்டுவிட்டு வந்தே, என்று கேட்க, பக்கத்து வீட்டில் உள்ள பாட்டி அவளைப் பார்த்துக்கறதான் சொன்னாங்க, அவளுக்கு நாளைக்கு பரீட்சை இல்லையா ! அதுதான் கூட்டிட்டு வரலே, என்று கூறவும், பாவம் பரீட்சையை வச்சிக்கிட்டு என் நிலமை வேறு அவளுக்கு வேதனை தரும், "எனக்கு ஒன்றுமில்லை", பரீட்சையை நல்லா எழுத சொல்லுங்கள்", என்று ஒன்பதாவது படிக்கும் தன் தங்கையின் நிலையை அறிந்து இந்த வேதனையிலும் அவளுக்காக வருந்தினான். பிறகு, சரிம்மா! நீ போஅங்கே பியூலாவிற்கு வேண்டியதை செஞ்சிக் கொடும்மா!, அப்பா என்னை பார்த்துப்பார், என்று கூறவும், அவன் அன்னை போக மனமில்லாமல் இருக்கவே, அங்கு வந்த ஜேக்கப் வா, ரெபி, நான் உன்னை வீட்ல விட்டுவிட்டு வந்திறேன், என்று கூறி அழைத்தான். மகனை பிரிய மனம் இல்லாத அந்த தாய், " நான் நாளைக்கு சீக்கிரமா வந்திறேன்," அதுவரைக்கும் பத்திரமா இருப்பா, என்று கூறி மனமே இல்லாமல் தன கணவனுடன் வீட்டிற்கு புறப்பட்டாள், சிறிது நேரம் கழித்து கயல்விழி அவனை பார்க்க வந்தாள். ஹலோ! , "என் பேரு கயல்விழி", நான் தான் உங்களுக்கு சிகிச்சையளித்த மருத்துவர், நாளைக்கு தலைமை மருத்துவர் வருவார், மற்ற சிகிச்சை பற்றியும், என்ன மருந்துகள் எடுத்துக் கொள்ளவேண்டும் என்பதை பற்றி விளக்கமாக கூறுவார், என்று பேசிக்கொண்டே கயல் அவனை ஆராய்ந்தாள். சற்று மாநிறதிற்கும் கூடுதலான நிறம், ஆனால் கலையான முகம், பிறர் மனதை துளையிடும் கூரிய கண்கள், சுருண்ட கேசம் , நீண்ட மூக்கு, புகை பழக்கம் இல்லை போல் இருக்கிறது, அதனால் தான் அவன் உதடுகள் ரோஸ் நிற வண்ணமாக இருந்தது. உடலையும் கச்சிதமாக வைத்திருந்தான். அவள் அவனையே பார்ப்பதை அந்த நிலையிலும் கண்டு கொண்ட அவன் என்ன டாக்டர் அப்படி பார்க்கிறீங்க? உயிர் போகும் நிலையில் வந்த நான் எப்படி அதிசயமாக பிழைத்து விட்டேன் என்றா? anyway நன்றி டாக்டர், என்று அவன் சிறு புன்னகையுடன் கூற, அவளுக்கு என்னமோ போல் ஆகிவிட்டது. சே! இது என்ன ஒரு ஆண் மகனை, அதுவும் தன்னிடம் சிகிச்சை பெறும் நோயாளியை இப்படியா பார்ப்பது? என்ன கயல்? என்று தனக்குள்ளே கடித்துக் கொண்டு, அப்படி எல்லாம் ஒண்ணுமில்லை மிஸ்டர்.. என்று கூறி நிறுத்த, சாம்சன் என்று முடித்தான் அவன். அவள் மெதுவாக புன்னகைத்து இப்போ எப்படி இருக்கு சாம்சன்?, வலி ரொம்ப அதிகமா இருக்கா, கொஞ்ச நேரத்திலே நர்ஸ் வந்து நீங்க தூங்க ஊசி போடுவாங்க, நல்லா தூங்குங்க! நாளைக்கு கொஞ்சம் better ah feel பண்ணுவீங்க, என்று அவள் சிறு புன்னகையுடன் கூறவும், அவனும் புன்னகை புரிந்தான். அவன் சிரிக்கும் போது முல்லை அரும்பு போல் பல் வரிசையை கண்டதும் கயல் திகைத்து தான் போனாள். "இவன் என்ன மாயக் கண்ணனோ", சிரிப்பாலே என்னை சொக்க வைக்கிறான், என்று ஒரு நொடி நினைத்த போதும், மற்றொரு மனது, "கயல் அடங்குடி!" நீ மருத்துவர், அந்த ஞாபகம் இருக்கா, இல்லையா, இப்படி வருவோர் போவோரை எல்லாம் இப்படி ரசித்தால் உன் தொழிலில் உன் கவனம் எப்படியடி இருக்கும்? என்று கடிந்துரைத்தது. "நான் என்ன எல்லோரையும் இப்படியா பார்க்கிறேன்?", நான் மருத்துவ கல்லூரியில் படிக்கும் போது என் பின்னாடி எத்தனை பேர் பைத்தியமாக சுற்றி திரிந்தனர், ஒருவரிடத்திலாவது நான் பேசி இருக்கிறேனா? ஒருவர் முகத்தியாவது பார்த்திருக்கிறேனா? நான் இந்த காலத்திலும் இப்படித்தான் இருந்திருக்கிறன், என்று பாராட்டியது இன்னொரு மனம். கொஞ்ச நேரத்தில் நர்ஸ் வந்து அவனுக்கு ஊசி போட, சிறிது நேரத்திற்கெல்லாம் அவன் தூக்க மயக்கத்தில் ஆழ்ந்தான். கயலும் தன் அறைக்கு சென்று ஒய்வெடுக்கலானாள். மறுநாள் விடிந்ததும் கயல் தன் டூட்டி நேரம் முடிந்துவிட்டதால், வீட்டிற்கு சென்றாள். அங்கு அவள் அம்மா வாஸந்தி அவளை வரவேற்று அவளிடம் காபி கோப்பையை நீட்ட, கயல் ஆவலுடன் அதை பருகினாள். "என்னம்மா இரவு எல்லாம் ஒரே வேலையா? மிகவும் களைப்பா இருக்கே, என்று அந்த தாயுள்ளம் கரிசனத்துடன் வினவ, ஆமாம்மா! இரவு ஒரு விபத்து கேஸ் வந்தது, பாவம் ! அவங்க அப்பா, அம்மா ரொம்ப பயந்துட்டாங்க, அவங்க பையனை இரத்த வெள்ளத்தில் பார்த்ததாலே ரொம்பவும் கலங்கிட்டாங்க, என்று இரவு நிகழ்ச்சியை தன் கண் முன்னே கொணர்ந்து விளக்கினாள். "அந்த பையனுக்கு அப்புறம் என்னம்மா ஆச்சு? என்று வாஸந்தியும் வருத்தத்துடன் வினவ, சரியான நேரத்திலே கொண்டு வந்ததாலே ஆபத்து இல்லாம போயிடிச்சு, இப்போ அவர் கண் விழிச்சிட்டார், என்று கூறவும் வாஸந்தியின் மனது நிம்மதியானது. வாஸந்தி பெண்கள் கல்லூரியில் தமிழ் ஆசிரியராக பணி புரிகிறார். நல்ல பண்புகளை சுவாரசியமாக தன் மாணவிகளுக்கு சொல்லி கொடுப்பார். அவர் வகுப்பு என்றால் மாணவிகள் அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு வந்து கவனிப்பர். அவர் அவ்வளவு அழகாக பாடம் நடத்துவார். தன் ஒவ்வொரு மாணவிகளையும் தன் பெண்ணை போல தான் நடத்துவார். அவர்களிடம் அன்பாக பேசி அவர்களை ஊக்குவிப்பதும், தவறு புரிந்தால் அவர்களை கண்டிப்பதுமாக இருப்பார். அவர்களுடைய இயல்பான இந்த குணம் அனைத்து மாணவிகளையும் அவர்களிடம் கட்டி போட்டது. தமிழ் செய்யுள் பகுதி நடத்தும் போது, மாணவிகளுக்கு புரியவில்லை என்றால் அவர்களுக்கு பிடித்த பாட்டு மெட்டில், அந்தச் செய்யுளை அவர்கள் மனதில் பதிய வைப்பார். இடையிடையே நல்ல கதைகள் கூறி அவர்களை மகிழ்விப்பார். வீர நங்கையர், விடுதலை போராட்ட வீரர்கள் மற்றும் பல நல்ல கதைகளையும், வரலாறு நிகழ்வுகளையும் சுவை பட விளக்குவார். அவரின் வகுப்பு என்றால் பக்கத்து வகுப்பில் உள்ள மாணவிகளும் வந்து கவனிப்பார்கள், அவ்வளவு திறம்பட பாட நூல்களையும் வாழ்க்கைக்கு தேவையான நல்ல விஷயங்களையும் கூறுவதில் வல்லவர் அவர். தன் கதை, பாடல்கள் மூலம் நல்ல மாணவிகளை உருவாக்குவதே அவருடைய லட்சியமாக இருந்தது. அவர் தன்னுடைய தொழிலை சேவை மனப்பான்மையுடன் செய்து வந்தார். அவள் தன் மகள் கயல்விழியையும் அப்படியே தான் வளர்த்தார். கயலின் அப்பா கமலநாதர் பக்கத்தில் ஒரு மருந்தகம் வைத்துள்ளார். அவருக்கு மருத்துவ தொழில் என்றால் அலாதி பிரியம். தான் நல்ல மதிப்பெண் வாங்கியிருந்தும், தன்னுடைய குடும்பத்தின் வறுமையான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, தன்னுடைய மருத்துவர் ஆசையை துறந்தவர், எனினும் அதன் மீது பற்று இருந்ததால் D. Pharm இரண்டு வருடம் படித்து ஒரு மருந்தகத்தில் சிறிது காலம் வேலை புரிந்து, பிறகு சொந்தமாக மருந்தகம் வைத்து நடத்தி வருபவர். தான் படிக்காத மருத்துவத்தை தன் மகளாவது படிக்க வேண்டும் என்பதற்காக தன் பெண்ணை மருத்துவராக ஆக்கி அழகு பார்ப்பவர். டாக்டர் நரசிம்மன் அவரிடத்தில் மருந்துகள் வாங்கும் பழக்கம் ஆதலால் அவரிடத்திலேயே தன் பெண்ணை வேலைக்குச் சேர்த்துள்ளார், அவர் தன் கடும் உழைப்பால் முன்னுக்கு வந்தவர் என்றால் மிகையாகாது. அவருடைய சிறிய மகன் ராகேஷ் பன்ணிரெண்டாம் வகுப்பு படிக்கிறான். அவனும் படிப்பில் படு சுட்டி தான், எனினும் அவனுக்கு மருத்துவத்தில் ஆர்வம் இல்லை. அவனுக்கு கலை துறையில் தான் விருப்பம் அதிகம். வரைவதிலும், சிற்பங்கள் செதுக்குவதிலும் அவன் மனம் லயித்திருந்தது. மிகப் பெரிய ஓவியனாக வரவேண்டும் என்பது அவனது ஆசை.
 

revathy ramu

Member
Vannangal Writer
Messages
50
Reaction score
56
Points
18


கயல், நான் பள்ளிக்கு செல்கிறேமா, உனக்கும் அப்பாவுக்கும் சிற்றுண்டி மேசை மேல் இருக்கு, நீ சாப்பிட்டுவிட்டு, அப்படியே அப்பா வந்தால் அவருக்கும் எடுத்து வைம்மா, இன்னைக்கு எனக்கு ஒரு கலந்துரையாடல் இருக்கு. நான் அதற்கு சீக்கிரமா போகணும், என்று கூறி விரைந்தாள் வாஸந்தி. சரிம்மா!, என்று கூறிய கயல், சிறிது நேரம் காலை செய்தித்தாளை படித்த பின், குளிக்க சென்றாள். குளித்து முடித்து வந்ததும், அம்மா வைத்த சிற்றுண்டியை ஒரு தட்டில் வைத்து தன் தந்தையின் வரவுக்காக காத்திருந்தாள். கமலநாதர் நடைப்பயிற்சி முடித்து வீட்டிற்கு திரும்பியவுடன் கயலை பார்த்து, பேபிமா! வந்திட்டியா? நீ சாப்பிடுவது தானே! எனக்காக எதுக்கம்மா காத்திருக்கிறாய்? என்று செல்லம் கொஞ்ச கேட்க, " டீச்சரம்மா உங்களுக்கு சாப்பாடு எடுத்து வைக்க சொன்னாங்க," இல்லன்னா என்னை பெஞ்ச் மேல் நிக்க வைக்க மாட்டாங்களா, என்று கிண்டலடிக்க, உங்க அம்மா அப்படிப்பட்டவளாமா? என்று தன் மனைவியை வீட்டுக் கொடுக்காமல் சொன்னார். "உங்க பொண்டாட்டியை ஏதாவது சொன்னா உங்களுக்கு கோபம் வரும்லே", அதை ரசிக்கலாம் அதனால் தான் கொஞ்சம் உங்களை சீண்டினேன், என்று அவள் நகைத்தவாறே தந்தையின் முகத்தை நோக்கினாள். அவரின் முகத்திலும் புன்னகை ததும்ப, வர வர உன் வாலுத்தனம் ஜாஸ்தியாயிடிச்சு! என்று செல்லமாய் அவள் கன்னத்தை தட்டினார். சீக்கிரமாக குளித்து விட்டு வாங்கப்பா! ஒன்றாய் சேர்ந்து சாப்பிடலாம்!என்று தந்தையை ஏவ, அவரும் குளிக்கச் சென்றார். மறுநாள் ரெபேக்கா சீக்கிரமாகவே மருத்துவமனைக்கு தன் மகனை காண வந்துவிட்டாள். சாம்சன் இன்னும் மருந்து மயக்கத்தில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். ரெபேக்கா, தன் மகனின் அருகில் அமர்ந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். எப்படி இருந்த புள்ள, இப்போ கிழிந்த நார் போல படுத்து இருக்கிறானே! என்று நினைத்து கண்ணீர் விட்டாள், அவளுடைய கண்ணீர் துளி அவளுடைய மகனின் கை மேல் விழ, சாம்சன் சட்டென்று கண் விழித்தான். விழித்ததும் தன் தாயைக் கண்டதும் புன்முறுவல் பூக்க, என்ன ராசா! இப்போ எப்படி இருக்கு? வலியெல்லாம் பரவாயில்லையா? என்று கனிவோடு விசாரித்தாள். கொஞ்சம் தேவலமா!, என்று அவள் சிறு புன்னகையோடு கூறினான். அதற்குள் டாக்டர் நரசிம்மன் அங்கு வந்தார். "என்ன மேன்?, " ஆர் யு ஓகே நொவ்"? என்று கேட்ட சாம்சன் மெதுவாக தலை அசைத்தான். உன் மெடிக்கல் ரிப்போர்ட் எல்லாம் பார்த்தேன், தலையிலே பெரிய அடியெல்லாம் ஒன்னும் இல்லை. ரத்தம் நெறைய போனதால கொஞ்சம் பலவீனமா இருக்கே, " கையை அசையாம பார்த்துக்கோ", ஒரு வாரம் இங்கே இருக்கவேண்டியிருக்கும். அதற்கு அப்புறம் வீட்டுக்கு போகலாம், வீட்டுக்கு போனால் கூட சில வாரங்கள் கையை அசைக்கக்கூடாது, பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை இங்கு வந்து கையை காட்டிவிட்டு போகணும், நான் எழுதிக் கொடுக்கிற மாத்திரை, மருந்துகளை தவறாமல் சாப்பிடணும். "you will quickly recover soon", என்று தட்டிக் கொடுத்தார். சிறு புன்னகை பூத்தவாரே அவர் சொல்வதை எல்லாம் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான் சாம்சன். "ரொம்ப நன்றி டாக்டர்", என்று கண்கள் பனிக்க ரெபேக்கா கூறினாள். its ok, டூட்டி டாக்டர் கயல்விழி இன்னும் கொஞ்ச நேரத்திலே வருவாங்க. அவங்க கிட்ட நான் என்ன என்ன மாத்திரைகள் சாப்பிடணும் சொல்லி இருக்கேன், நான் ரெண்டு நாள் கழித்து வந்து பார்க்கிறேன், "Take care" சாம், என்று கூறியபடியே வெளியேறினார். அவர் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் கயல்விழி வந்தாள். அவள் கையில் சிறு பூங்கொத்து இருந்தது. அதை அவனிடம் நீட்டி, '' விரைவாக உடல் நலம் தேர என்னுடைய வாழ்த்துகள்'', என்று வாழ்த்தி, மேலும் இங்கு வரும் எல்லா நோயாளிகளுக்கும் நாங்க இந்த மாதிரி மலர் செண்டை கொடுப்போம், இதனால் அவங்க ரொம்ப சந்தோஷம் அடைவாங்க, இது நோயாளிகளுக்கு ஆறுதலும் தெம்பையும் தரும் என்று கூடுதல் தகவலையும் கூறினாள்.அவன் நேற்று மயக்கத்தால் அவளை சரியாக கவனிக்கவில்லை, இன்று அவளை பார்த்ததும், அவன் அசந்து விட்டான், வெள்ளை நிற சாரியில் ரோஸ் நிற குட்டி குட்டி பூக்கள் போடப்பட்டிருந்தது. அதன் மேல் வெண்ணிற கோட் போட்டிருந்தாள். கையில் மலர்ச்செண்டுடன் பார்த்ததும், ஒரு வேளை நான் இறந்து சொர்கத்திற்கு சென்று விட்டேனா!, அங்கு தான் ஒரு தேவதை என்னை பூக்களுடன் வரவேற்கிறதா? என்ற சந்தேகமே அவனுக்குள் வந்துவிட்டது. ஆனால் தேவதை கோட், ஸ்டெதாஸ்கோப் எல்லாம் அணியமாட்டார்களே!, என்று அவனுக்குள் நினைத்துக் கொண்டு அவளை ஒரு வித பாவனையுடன் பார்க்க, "என்ன சாம் மயக்கம் தெளிந்துடுச்சா?", "இப்போ பரவாயில்லை தானே,"என்று வினவ, அப்போதுதான் அவன் தன் நிலையை உணர்ந்தான். இப்படி ஒரு அழகா? "தங்க சிலை போல் அல்லவா மின்னுகிறாள்!" யார் கொடுத்து வைத்துள்ளானோ இவளை மணம் புரிய? என்று தனக்குள் பெருமூச்சு விட்டு, நன்றி ! என்று புன்னகை புரிந்தான். கயல், அவன் சாப்பிட வேண்டிய மாத்திரைகள், மற்றும் அவைகள் எப்போது சாப்பிடவேண்டும் என்று எழுதி தர அதை ஜேக்கப் வாங்கி கொண்டார். நான் நாளைக்கு வந்து பார்க்கிறேன் என்று அங்கிருந்து விடைபெற்று சென்றாள். ரெபேக்கா மாத்திரைகள் எல்லாம் பக்கத்தில் இருக்கும் மருந்தகத்தில் வாங்கிட்டு வரச் சொல்ல, ஜகோபும் மருந்துச் சீட்டை வாங்கி கொண்டு அங்கிருந்து அகன்றார். ரெபேக்கா சாம்சனிடம்,"இந்த டாக்டரம்மா இல்லன்னா உன்னை இன்னைக்கு உயிரோட பார்த்திருக்க முடியாது", நாங்க நடுநிசியில் உன்னை ரத்த வெள்ளத்தில் இங்கு கொண்டு வந்தபோது எனக்கு ஆறுதல் கூறி சுறுசுறுப்பாக செயல்பட்டாங்க!, "ரொம்ப நல்ல மாதிரி பொண்ணா இருக்காங்க", என்று சாம்சனிடம் கூற அவனுக்கும் அவளின் மீது மரியாதை கூடியிருந்தது. துர்காவிற்கு அன்று விடுமுறை நாள். அன்று தொழிலாளர் தினம் என்று விடுமுறை விட்டிருந்தார்கள். துர்காவிற்கு வீடு, அலுவலகம் என்று மாரி மாரி சென்று வைத்துக் கொண்டிருப்பது அலுப்பாக இருக்கவே, வெளியில் போனால் தேவலாம் என்ற எண்ணம் தோன்ற, அவளுக்கு புத்தக கண்காட்சி நினைவு வந்தது. அவளுக்கு புத்தகம் படிப்பதென்றால் மிகவும் பிடிக்கும். தன்னுடைய ஓய்வு நேரத்தை அவள் பெரும்பாலும் புத்தகத்துடன் தான் கழிப்பாள். இன்னைக்கு கண்டிப்பாக போக வேண்டும் என்று எண்ணியவளாக வேலைகளை எல்லாம் விரைவாக முடிக்கலானாள். மதியம் நான்கு மணிக்கு, அண்ணியிடம் சொல்லிவிட்டு கிளம்பினார், பஸ் நிலையத்திற்கு வந்து பஸ்சை பிடித்து புத்தக கண்காட்சி இருக்குமிடம் அடைந்தாள். அவளுக்கு ஒரே ஆச்சரியம்! அத்தனை புத்தக கடைகள்! அறிவியல், ஜோதிடம், பொதுஅறிவு, மற்றும் தலை சிறந்த எழுத்தாளர்களின் புத்தகங்கள் என்று ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு கடை என்று வரிசையாக கடைகள் அமைந்திருந்தன. எங்கு போவது, எதை வாங்குவது, என்று தெரியாத வண்ணம் அத்தனை கடைகள், அவ்வளவு புத்தகங்கள் என்று வாசிப்போருக்கு ஒரு விருந்தே அங்கு இருந்தது. துர்கா, அனைத்து புத்தக கடைக்கும் சென்று வர வேண்டும் என்று ஆசைப்பட்டாள். ஒவ்வொரு புத்தக கடையாக சென்று வரலானாள். ஒரு கடையில் சங்க இலக்கியங்கள் என்ற பலகை தொங்கியது,அங்கே சென்று ஒவ்வொரு புத்தகமா அலசினாள். அதில் அவளுக்கு பிடித்த திருக்குறளும், ஐம்பெரும்காப்பியமும் இருந்தது. அதை கடைக்காரனிடம் பணம் கொடுத்து பெற்றுக் கொண்டு வெளியே வந்த போது, தற்செயலாக பார்வை அடுத்த கடையிடம் செல்ல, அங்கு நுழைவாயிலில் அவன் நின்றியிருந்தான். ஆம், சுஹேல் தான் அங்கு இருந்தான். அவனைப் பார்த்ததும் மனது படபடக்க, இவன் ஏன் நான் எங்கே போனாலும் அங்கே வருகிறான்? இவனுக்கு மருத்துவமனையில் வேலையே இல்லையா ? என்று பொய் கோபத்துடன் வேகமாக நடக்க, சுஹேல் அவளை பார்த்துவிட்டான், அட, நம்ம ஆளும் இங்க தான் இருக்கா? பார்த்தும் பார்க்காதது போல போறா பார், குட்டி ராட்சசி ! என்று மனதில் திட்டிக் கொண்டேஅவளை பின் தொடர்ந்து வேகமாக சென்றான். அவளை அருகில் கண்டதும் , அப்போதுதான் அவளை பார்ப்பது போல் ஹலோ, துர்கா, இங்கே நீ எப்படி ? நான் இங்கு உன்னை பார்ப்பேன் என்று நினைக்கவே இல்லை, என்று சிறு புன்னகையுடன் கூறவே, துர்காவும் வேறு வழியின்றி நானும் தான், என்று சிரித்து வைத்தாள். பிறகு, உங்களுக்கு மருத்துவமனையில் வேலை இல்லையா? ஜாலியாக இங்கு சுற்றி கொண்டு இருக்கிறீர்கள், என்று கிண்டல் அடிக்க, அவன் மருத்துவம் சம்பந்தமான புத்தகம் வாங்கவே வந்தேன், இங்கு வந்து பார்த்தால் வானத்து தேவதை ஒன்று கீழே இறங்கி வந்து இந்த புத்தக கண்காட்சியில் புத்தகம் வாங்கி கொண்டு இருக்கிறது, என்று அவளைப் பார்த்தவாறு புன்னகைக்கு புரிந்துக் கொண்டே கூற, அவளுக்கு வெட்கத்தில் முகம் சிவந்தது. நான் அந்த தேவதையை பார்க்கவில்லையே! என்று வேண்டுமென்றே பதில் கூற, தேவதைக்கு தான் தேவதை என்றே தெரியவில்லை, என்ன கொடுமை! என்று பொய்யான வருத்தத்துடன் அவன் கூற, துர்காவிற்கு சிரிப்பு வந்தது. அவள் கல, கலவென சிரிக்கவும், அவன் கீழே எதையோ தேட ஆரம்பித்தான். என்ன கீழே தேடுகிறீகள்? ஏதாவது பொருள் தொலைத்து விட்டீர்களா? என்று புரியாமல் கேட்டாள். சுஹேல், சிறிது நேரத்திற்கு முன்பு பாக்கெட்டில் இருந்து சில்லரை விழும் சத்தம் கேட்டது, அதுதான் கீழே சில்லரை எதாவது சிதறி இருக்கிறதா? என்று தேடுகிறேன் என்று அவன் முகத்தை அப்பாவியாய் வைத்துக் கொண்டு கூறவும், துர்கா இதெல்லாம் பழைய படத்தில் வரும் வசனங்கள், நாங்க ஏற்கனவே நிறைய கேட்டிருக்கோம் என்று அவள் கிண்டல் அடித்தாள். Old is gold ம்மா, என்று அவன் மறுபடியும் கூற, இருவரும் சேர்ந்து நகைத்தனர். பேசிக் கொண்டே இருவரும் வெளியே வர, சுஹேல், துர்காவிடம் வா! உன்னை வீட்டில் கொண்டு போய் விடுகிறேன், நீங்கள் என்ன எனக்கு பாதுகாவலரா அல்லது வாகன ஓட்டுனரா? வெளியில் எங்கே சென்றாலும் அங்கே வந்து என்னை அழைத்து செல்கிறீர்கள்? மருத்துவமனையில் ஒழுங்காக வேலை புரியவில்லை என்று நினைக்கிறேன் என்று நாசூக்காக தன் மறுப்பை தெரிவித்தாள். சுஹேல் அப்போதும் விடவில்லை, மருத்துவமனைக்கு தேவையான, முக்கியமான புத்தங்களை வாங்கினேன், இதுவும் மருத்துவமனை வேலை தான், நமக்கு தெரிந்த பெண் தனியாக செல்கிறார்களே, துணையாக செல்லலாம் என்றால் என்னை தவறாக நினைத்து கேலி செய்கிறீர்களே? இது நியாமா? என்று கேட்கவும், துர்காவிற்கு என்னவோ போல் இருந்தது. அதெல்லாம் இல்லை சுஹேல், நீங்கள் பொறுப்பான மருத்துவர், உங்களுடைய சேவை மருத்துவமனைக்கு மிகவும் அவசியம்.ஏன் வீணாக உங்கள் நேரத்தை என்னை வீட்டிற்கு அழைத்து செல்ல செலவிடுகிறீர்கள்? என்று நினைத்து தான் இப்படி பேசினேன், என்னை தவறாக நினைக்க வேண்டாம், அப்படி உங்களுக்கு தோன்றினால் என்னை மணித்துவிடுங்கள் என்று அவள் வருத்தத்துடன் கூறவும், சுஹேல் நான் சும்மா உன்னை கிண்டல் செய்தேன்! அதுக்கு போய் இப்படி வருத்தப்படலாமா?, நான் வீட்டுற்கு போனால் சுட சுட சாப்பிடலாம், அப்படியே உன்னை வீட்டில் விட்ட மாதிரி இருக்கும், அதனால் தான் உன்னை கூப்பிட்டேன், உனக்கு என் மீது நம்பிக்கை இல்லையென்றால் வர வேண்டாம், என்று கூறி நடந்தான். துர்காவிற்கு தர்ம சங்கடமாகிவிட்டது. போகவில்லை என்று கூறினால் தப்பாக எடுத்துக் கொள்வான், என்று நினைத்து, வருகிறேன்! வாங்க போகலாம்! என்று கூறியவாறே பைக் நிற்கும் இடத்திற்கு இருவரும் வந்தனர், பைக்கில் ஏறியதும், துர்கா அவன் மீது படாதவாறு அமர்ந்தாள். அவனுக்கு பைக்கை வானில் ஓடுவதுபோல் பிரமை ஏற்பட்டது. "இவளிடத்தில் ஏதோ மாயம் இருக்கிறது! ", இவள் அருகில் இருந்தால் நான் நானாகவே இல்லை. என்னதான் மாயம் செய்கிறாளோ! என்று தனக்குள் நினைத்தவாறே ஓட்டினான். துர்காவிற்கு சிறு சந்தோஷம் இருந்தாலும் பயமே அதிகம் குடி கொண்டிருந்தது. நான் இவனை பார்க்க வேண்டாம், என்று நினைத்தால் விதி மீண்டும் மீண்டும் சந்திக்க வைக்கிறேதே! என்னதான் செய்வது? என்று நினைத்தவாறே மௌனமாக உட்க்கார்த்திருந்தாள், அவன் பைக்கின் கண்ணாடி வழியாக அவளை பார்த்து, " துர்கா உனக்கு இஞ்சி சாப்பிடுவது பிடிக்குமா?' என்று கேட்க, என்ன இவன் சம்பந்தம் இல்லாமல் எதையோ கேட்கிறான், என்று எண்ணியவளாக, இஞ்சி தனியாக சாப்பிட பிடிக்காது, உணவுடன் கலந்திருந்தால் சாப்பிடுவேன், எதற்காக கேட்கிறீர்கள் ? இல்லை, அதை தின்றால் எதுவுடைய முகமோ எப்படியோ மாறுமாமே? உனக்கு தெரியுமா ? என்று ஒன்னும் தெரியாதவன் போல் கேட்க, துர்காவிற்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை! சிறிது நேரத்திற்கு பின்பு தான் அர்த்தம் புரிந்து, என்னை குரங்கு என்கிறிர்களா? என்று கோபமாக கேட்டாள், நான் அப்படியா சொன்னேன்! ஏன் வாயிலிருந்து குரங்கு என்ற வார்த்தையே வரவில்லையே! நீயே உன்னை கூறி கொண்டால் அதற்கு நான் பொறுப்பாவேனா? என்று கூறவும், துர்காவிற்கு சிரிப்பு வரவே அதை மறைக்கும் வண்ணம் முகத்தை வேறு திசையில் திருப்பிக்கொண்டாள், அதை கண்டு கொண்ட அவன், சிரிப்பு வந்தால் சிரித்து விடவேண்டும் என்று கூறவே துர்கா அவனைப் பார்த்து முறைத்தாள். " நீ கோபமாக இருக்கும்போது கூட அழகு செல்லக்குட்டி தான்" என்று அவன் கொஞ்சவும், அவளுக்கு வெட்கத்தில் முகம் சிவந்தது. அது தெரியாமல் இருக்க தலையை குனிந்துக்கொண்டாள். வீடு வந்ததும் இருவரும் இறங்கினார்கள். நல்ல வேளை துர்காவின் வீட்டில் அப்போது யாரும் வெளியில் இல்லை. அப்பாவும் உள் அறையில் தூங்கிக்கொண்டிருந்தார். தன் கையில் இருந்த சாவி மூலம் வீட்டை திறந்து அவசரமாக உள்ளே நுழைந்தாள், அனீஸ் இருவரும் வருவதை தூரத்தில் இருந்தே பார்த்து விட்டாள். சுஹேல் வந்ததும், அவனருகே சென்று, என்ன சார்! இருவரும் வெளியே உலாவிவிட்டு வருகிறீர்களோ! என்று மெல்லிய குரலில் வினவ, அவன் அவளை முறைத்தான், "உனக்கு ரொம்பத்தாண்டி வாய் நீள...மா ஆயிடுச்சி" என்று பொய்யாக அவளை அடிக்க போக, அவள் முகத்தை இடது வலதுமாக ஆட்டி தோள்பட்டையில் முகவாயை இடித்து, ஹூம் ! என்று சொல்லிவிட்டு சென்றதை பார்த்ததும் சுஹேலுக்கு சிரிப்பு வந்தது.
 
Top Bottom